Tamil Nadu · 2008 · Act 7
The Tiruppur City Municipal Corporation Act, 2008
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சி சட்டம்.
(தமிழ்நாடு சட்ட எண் 77 2008)
பொருளடக்கம்.
பிரிவுகள்.
1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும் தொடக்கம்.
2. பொருள் வரையறைகள்.
3. திருப்பூர் மாநகரத்திற்கென மாநகராட்சியை அமைத்தல்.
4. நகராட்சிய அதிகார அமைப்புகள்.
5. மன்றத்தை அமைததுருவாக்குதல்.
6. மாநகராட்சியின் காலஅளவு.
7. 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் பொருந்தாது
எனல்.
8. 1981 ஆம் ஆண்டுச் சட்டத்தின் வகைமுறைகள் மாநகராட்சிக்குப்
பொருந்துதல்.
9. மாறும் இடைக்காலத்திற்கான வகைமுறைகள்.
10. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
11. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
12. நீக்கறவு மற்றும் காப்புரை.
2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சி சட்டம்.
(தமிழ்நாடு சட்ட எண் 26/ 2008)
இந்தியக் குடியரசின், ஐம்பத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும் தொடக்கம்.-- (1) இந்தச் சட்டம், 2008
ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சி சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது திருப்பூர் நகரம் முழுவதையும் அளாவி நிற்கும்.
(3) இது, 2008 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 1 ஆம் நாளன்று
நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
2. பொருள் வரையறைகள்.- (1) இந்தச் சட்டத்தில் தறுவாய் வேறு பொருள்
குறித்தாலன்றி.-
(வ) " திருப்பூர் மாநகரம்" அல்லது மாநகரம்" என்றால், திருப்பூர் நகராட்சியில்
அடங்கியுள்ள உள்ளாட்சிப் பரப்பிடம் என்று பொருள்படும் மற்றும் எந்த
உள்ளாட்சிப் பரப்பிடம், இந்தச்சட்டத்தின் தொடக்க தேதிக்குப் பின்பு,
மாநகரத்துடன் சேர்க்கப்பட்டிருந்து. ஆனால், இந்தச் சட்டத்தின் அத்தகைய
தொடக்க தேதிக்குப் பின்பு, மாநகரத்திலிருநது நீக்கப்பட்டிருக்கிற உள்ளாட்சிப்
பரப்பிடம் எதிலும் சேர்க்கப்படாதிருக்கிற்தோ அந்த உள்ளாட்சிப் பரப்பிடம்
எதனையும் உள்ளடககும்.
(௦) "மாநகராட்சி" என்றால், 3 ஆம் பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட
திருப்பூர் மாநகராட்சி எனப் பொருள்படும்;
(௦) "மன்றம்" என்றால், திருப்பூர் மாநகராட்சி மன்றம் எனப் பொருள்படும்;
(0) "இந்தச் சட்டம் தொடங்கிய தேதி" என்றால், 1 ஆம் பிரிவின் (3) ஆம்
உட்பிரிவின்படி குறித்துரைக்கப்பட்ட தேதி எனப் பொருள்படும்:
(ஐ) "அரசு என்றால், மாநில அரசு எனப் பொருள்படும்:
() "நகராட்சி மன்றம்" என்றால், திருப்பூர் நகராட்சி மன்றம் எனப்
பொருள்படும்:
(9) "நகராட்சி" என்றால், திருப்பூர் நகராட்சி எனப் பொருள்படும்:
(h) "பட்டியலில் கண்ட சாதிகள் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடிகள்"
என்றால், அரசமைப்புச் சட்டத்தின் 366 ஆம் உறுப்பின் (24) மற்றும் (25) ஆம்
கூறுகளில் அவற்றுக்கு முறையே குறித்தளிக்கப்பட்டுள்ள பொருள்களையே
கொண்டிருத்தல் வேண்டும்.
(2) இந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டு பொருள் வரையறை செய்யப்படாத
ஆனால், (இதன் பின்பு இதில் 1981 ஆம் ஆண்டு சட்டம் எனக குறிப்பிடப்படுவதான
1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டத்தில் (குமிழ்நாடு சட்டம்
251981) பொருள் வரையறை செய்யப்பட்டுள்ள சொற்களும், சொற்றொடர்களும்
1981 ஆம் ஆண்டுச் சட்டத்தில் அவற்றுக்கு முறையே குறித்துரைக்கப்பட்டுள்ள
அதே பொருள்களையே கொண்டிருத்தல் வேண்டும்.
3. திருப்பூர் மாநகரத்திற்கென மாநகராட்சியை அமைத்தல். (1) இந்தச்
சட்டம் தொடங்கிய தேதியன்றும் அது முதற்கொண்டும் செயல்விளைவு
கொள்ளும் வகையில் இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, திருப்பூர்
நகராட்சியில் உள்ளடங்கியுள்ள உள்ளாட்சி பரப்பிடமானது திருப்பூர் மாநகரமாக
அமைதல் வேண்டும்; மற்றும் இந்தச் சட்டம் தொடங்கிய அத்தகைய
தேதியிலிருந்து மேற்சொன்ன மாநகரத்திற்கென திருப்பூர் மாநகராட்சி என்ற
பெயரில் மாநகராட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
வரம்புரையாக: அரசு. அவ்வப்போது மாநகராட்சியுடன் கலந்தாலோசித்த
பின்னர் அறிவிக்கையின் வாயிலாக, அந்த அறிவிக்கையில்
குறித்துரைககப்பட்டுள்ள பரப்பிடங்களை அதில் உள்ளடக்கும் வகையிலோ
அல்லது அதிலிருந்து விலக்கும் வகையிலோ இந்த உட்பிரிவின்படி
அமைததுருவாக்கப்பட்ட மாநகரத்தின் எல்லை வரம்புகளை மாற்றியமைக்கலாம்:
மேலும் வரம்புரையாக: இந்த உட்பிரிவின்படியான அறிவிக்கையொன்றைப்
பிறப்பிப்பதற்கான அதிகாரமானது முந்தைய வெளியீட்டிற்கு உட்பட்டிருத்தல்
வேண்டும்.
(2) இம்மாநகராட்சியானது. மேற்சொன்ன பெயருடன் தொடர்
வழியுரிமையையும் பொதுவான இலச்சினையையும் பெற்று, சொத்துகளை
வாங்குவதற்கு, வைத்திருப்பதற்கு மற்றும் அதனை முடிவு செய்வதற்கான மற்றும்
ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஒரு
கூட்டமைப்பாக இருத்தல் வேண்டும்; மற்றும் அதணுடைய கூட்டமைப்பின்
பெயரில் வழக்கிடலாம் மற்றும் வழக்கிடப்படலாம்.
(3) இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்கு உடனடி முன்னதாகச்
செயற்பட்டுக் கொண்டிருந்த திருப்பூர் நகராட்சியானது, இந்தச் சட்டம்
தொடங்கப்பட்ட அத்தகைய தேதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக கொள்ளப்படுதல்
வேண்டும்.
4. நகராட்சிய அதிகார அமைப்புகள்.- இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை
நிறைவேற்றுவதற்குப் பின்வரும் நகராட்சிய அதிகார அமைப்புகள்
பொறுப்புடையனவாக இருத்தல் வேண்டும்.-
(1) ஒரு மேயர்;
(1a) ஒரு மன்றம்;
(2) ஒரு நிலைக்குழு:
(3) ஒரு சிற்றொகுதிகள் குழு; மற்றும்
(4) ஓர் ஆணையர்.
5. மன்றத்தை அமைததுருவாக்குதல்.- (1) (2) ஆம் உப்பிரிவில் பிறவாறாக.
வகைசெய்யப்பட்டுள்ளவாறு தவிர, மற்றும் அரசினால் அவ்வப்போது
அறிவிக்கையின் மூலமாக நிரணயிக்கப்படக்கூடியவாறு, இந்தச் சட்டத்தில்
விதிக்கப்பட்டுள்ள முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தகைய
எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும், ஆயினும்
மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையானது எழுபத்து இரண்டிற்கு
மேற்படாமல் இருத்தல் வேண்டும்.
(2) மன்றத்தில் பின்வரும் நபர்களும் சார்பாற்றம் செய்யப்படுதல் வேண்டும்.
அதாவது.-
(ஐ) மாநகராட்சியின் பரப்பிடத்தை முழுமையாக அல்லது பகுதியாகக்
கொண்டிருக்கிற தொகுதிகளைச் சார்பாற்றம் செய்கின்ற மக்களவை
உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சியின் பரப்பிடத்திற்குள்ளாக வாக்காளர்களாகப்
பதிவு செய்துள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள்:
(௦) மாநகராட்சியின் பரப்பிடத்தை முழுமையாக அல்லது பகுதியாகக்
கொண்டிருக்கிற தொகுதிகளைச் சார்பாற்றம் செய்கின்ற தமிழ்நாடு சட்டமன்ப்
பேரவையின் அனைதது உறுப்பினர்கள்.
(3) (2) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள நபர்கள் மன்றத்தின்.
நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொள்ள உரிமைத் தகுதி பெற்றிருத்தல்
வேண்டும். ஆனால் மன்றக் கூட்டங்களில் வாக்களிப்பதற்கு உரிமை
பெற்றிருத்தல் கூடாது.
(4) மன்றத்தில், பட்டியலில் கண்ட சாதிகள் மற்றும் பட்டியலில் கண்ட
பழங்குடிகளைச் சேர்ந்த நபர்களுக்கு பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுதல்
வேண்டும்; மற்றும் அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் பதவியிடங்களின்
எண்ணிக்கையானது, அம்மாநகரததிலுள்ள பட்டியலில் கண்ட சாதிகள் அல்லது
அம்மாநகரத்தில் உள்ள பட்டியலில் கண்ட பழங்குடிகளின் மக்கள் தொகையானது.
அம்மாநகரத்தின் மொத்த மக்கள் தொகைக்கு எந்த விதத்தில்
அமைந்திருக்கின்றதோ அதே விதத்தில் கிட்டத்தட்ட இயலுமளவிற்கு மன்றத்தில்
நேரடித் தேந்தலின் மூலம் நிரப்பப்பட வேண்டிய மொத்த பதவியிடங்களின்
எண்ணிக்கைக்கேற்ப அமைந்திரு தல் வேண்டும்.
(5) பட்டியலில் கண்ட சாதிகள் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடிகளைச்
சேர்ந்த நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவியிடங்களிலிருந்து பட்டியலில்
கண்ட சாதிகள் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடிகளைச் சேர்ந்த
பெண்களுக்காக பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும். அது
பட்டியலில் கண்ட சாதிகள் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடிகளைச் சேர்ந்த
நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கையில்
மூன்றில் ஒரு பங்கிற்குக குறைவாக இருத்தல் கூடாது.
(6) மன்றத்தில் பெண்களுக்கென பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுதல்
வேண்டும்: மற்றும் பெண்களுக்கென ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களின்
எண்ணிக்கையானது, மன்றத்தில் உள்ள பதவி இடங்களின் மொத்த
எண்ணிக்கையில், பட்டியலில் கண்ட சாதிகள் மற்றும் பட்டியலில் கண்ட
பழங்குடிகளைச் சேர்ந்த பெண்களுக்காக ஓதுககீடு செய்யப்படும்
பதவியிடங்களின் எண்ணிக்கை உள்ளடங்கலாக, மூன்றில் ஒரு பங்கிற்குக
குறைவாக இருத்தல் கூடாது.
(7) (க ஆம் மற்றும் (5) ஆம் உட்பிரிவுகளின்படி ஒதுக்கீடு செய்யப்படும்
பதவியிடங்களானவை அரசமைப்புச் சட்டத்தின் 334 ஆம் உறுப்பில்
குறித்துரைககப்பட்ட கால அளவு முடிவடைவதன் பேரில் செயல்விளைவு
கொள்வது அற்றுப்போதல் வேண்டும்.
6. மாநகராட்சியின் காலஅளவு.-- (1) மாநகராட்சி, குறித்த காலத்திற்கு
முன்னரே கலைக்கப்பட்டாலன்றி, வழக்கமான ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்பும்
அதனுடைய முதல் கூட்டத்திற்கென குறிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து
ஆண்டுக் கால அளவு வரையில் தொடர்ந்திருத்தல் வேண்டும், ஆனால் அதற்கு
மேலாக அன்று: மற்றும் மேற்சொன்ன ஐந்தாண்டுக் காலஅளவானது
மாநகராட்சியைக் கலைப்பதாகச் செயற்படும்.
(2) மாநகராட்சியை அமைததுருவாக்குவதற்கான தேர்தல் ஒன்று.-
(ஐ (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள அதனுடைய கால அளவு
முடிவடைவதற்கு முன்னதாக; அல்லது
0௦) அது கலைக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத கால அளவு
முடிவடைவதற்கு முன்னதாக
நடத்தி முடிக்கப்படுதல் வேண்டும்:
வரம்புரையாக: கலைக்கப்பட்ட மாநகராட்சி தொடர்ந்திருக்கக்கூடிய எஞ்சிய
கால அளவானது ஆறு மாத காலத்திற்குக் குறைவாக இருநதிருக்குமிடத்து,
அத்தகைய கால அளவிற்கென மாநகராட்சியை அமைத்துருவாக்குவதற்காக இந்த
உட்பிரிவின்படி தேர்தல் எதனையும் நடத்துவது தேவையானதாக இருத்தல்
கூடாது.
7. 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் பொருந்தாது
எனல்.- (1) (2) ஆம் மற்றும் (3) ஆம் உட்பிரிவுகளின் வகைமுறைகளுக்கு
உட்பட்டு (இதன் பின்பு மாவட்ட நகராட்சிகள் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான)
1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டமானது (தமிழ்நாடு சட்டம்
௩74920), இந்தச் சட்டம் தொடங்கிய தேதியிலிருந்தும் அது முதற்கொண்டும்
திருப்பூர் மாநகரத்திற்குள் அடங்கியிருக்கும் உள்ளாட்சிப் பரப்பிடங்களுக்குப்
பொருந்துவது அற்றுப்போதல் வேண்டும்.
(2) அவ்வாறு அற்றுப்போதலானது.-
(வ) திருப்பூர் மாநகரததிற்குள் அடங்கியிருக்கிற உள்ளாட்சிப்பரப்பிடம்
எதனையும் பொறுத்த அளவில் மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் முந்தைய
செயற்பாட்டினை பாதித்தல் ஆகாது;
(௦) மாவட்ட நகராட்சிகள் சட்டத்திற்கு எதிராகப் புரியப்பட்ட குற்றச்செயல்
எதனையும் பொறுத்து உள்ளான தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை
எதனையும் பாதித்தல் ஆகாது; அல்லது
(C) அத்தகைய தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை தொடர்பான
புலணாய்வு, சட்ட நடவடிக்கைகள் அல்லது தீர் வழி எதனையும் பாதித்தல் ஆகாது:
மற்றும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படாதிருந்தாற்போன்று அத்தகைய தண்டம்,
தண்ட இழப்பு அல்லது தண்டனை எதுவும் விதிக்கப்படலாம்.
(3) 1) ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், மாவட்ட
நகராட்சிகள் சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது வழங்கப்பட்ட அல்லது
அளிக்கப்பட்ட மற்றும் இந்தச் சட்டம் தொடங்கிய தேதியன்று நடைமுறையில்
இருக்கும் அனைத்து நியமனங்கள், அறிவிக்கைகள், அறிவிப்புகள், விதிகள்,
துணைவிதிகள், ஒழுங்குமுறைகள், ஆணைகள், பணிப்பாணைகள் உரிமங்கள்,
அனுமதிகள், திட்டங்கள் படிவங்கள், அதிகாரங்கள் ஆகியன எந்த அளவிற்கு
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாமல் இருக்கின்றனவோ
அந்த அளவுக்கு இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட பிறப்பிக்கப்பட்ட அல்லது
வழங்கப்பட்ட நியமனங்களால், அறிவிக்கைகளால், அறிவிப்புகளால், விதிகளால்,
துணைவிதிகளால், ஒழுங்குமுறைகளால், ஆணைகளால், பணிப்பாணைகளால்,
உரிமங்களால், அனுமதிகளால், திட்டங்களால், படிவங்களால் மற்றும்
அதிகாரங்களால் அவை பதிலாக அமைக்கப்படுவது வரையிலும் திருப்பூர்
மாநகரத்திற்குள் அடங்கியுள்ள உள்ளாட்சிப் பரப்பிடத்தில் நடைமுறையில்
தொடர்ந்திருத்தல் வேண்டும்.
8. 1981 ஆம் ஆண்டுச் சட்டத்தின் வகைமுறைகள் மாநகராட்சிக்குப்
பொருந்துதல்.- (1) மற்றபடி இதில் வெளிப்படையாக வகை செய்யப்பட்டுள்ளவாறு
தவிர, வரி அல்லது கட்டணம் விதிப்பது மற்றும் வசூலிப்பது தொடர்பான
வகைமுறைகள் உள்ளடங்கலாக 1984 ஆம் ஆண்டுச்சட்டத்தின் அனைத்து
வகைமுறைகளும் இதன்மூலம் மாநகராட்சிக்கு நீட்டிக்கப்பட்டு தேவையான
மாறுதலுடன் பொருந்துதல் வேண்டும்: மற்றும் 1981 ஆம் ஆண்டுச் சட்டத்தின்
பகுதியாக இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அமைககப்பட்டிருந்தாற்போன்று
1981 ஆம் ஆண்டுச் சட்டமானது மாநகராட்சியைப் பொறுத்த அளவில்
படிக்கப்பட்டுப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.
(2) மாநகராட்சிக்கு, 1981 ஆம் ஆண்டுச் சட்டத்தின் வகைமுறைகளைப்
பொருந்தச் செய்வதை எளிதாக்கும் நோக்கத்திற்காக அரசு, அறிவிக்கையின்
வாயிலாக, தேவைப்படக்கூடிய அல்லது உகந்ததாக இருக்கக்கூடிய
வகைமுறைகள் எவற்றையும் நீக்குதல், திருத்துதல் அல்லது தற்காலிகமாக
நிறுத்தி வைத்தல் மூலமாக 1981 ஆம் ஆண்டு சட்டம் மற்றும் அதன்படிச்
செய்யப்பட்ட விதிகள், துணைவிதிகள் ஆகியவற்றுக்குத் தழமுவமைவுகளை
அல்லது மாற்றங்களைச் செய்யலாம், மற்றும் அதன்பேரில் 1981 ஆம் ஆண்டுச்
சட்டமும் அதன்படிச் செய்யப்பட்ட விதிகளும் அவ்வாறு செய்யப்பட்ட
தழுவமைவுகளுக்கும், மாற்றங்களுக்கும் உட்பட்டு மாநகராட்சிக்குப் பொருந்துதல்
வேண்டும்.
(3) 1981 ஆம் ஆண்டுச் சட்டத்தின் அல்லது அதன்படிச் செய்யப்பட்ட
விதிகளின் அல்லது துணைவிதிகளின் வகைமுறைகளைத் தழுவியமைகிற
முறையில் வகைமுறை செய்யப்படாமல் அல்லது (2) ஆம் உட்பிரிவின்படி
செய்யப்பட்டிருக்கிற வகைமுறை போதுமானதாக இல்லாத நிலையில் இருந்த
போதிலும், இந்த வகைமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரப்பட்ட அல்லது
நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது
அதிகார அமைப்பு எதுவும், மாநகராட்சிக்கு அவற்றை பொருந்த செய்வதை
எளிமையாக்கும் நோக்கத்திற்காக இந்த வகைமுறைகளை ந்திமன்றம், தீர்ப்பாயம்
அல்லது அதிகார அமைப்பின் முன்பாக உள்ள பொருட்பாட்டினைக்
கருத்திற்கொண்டு அதன் பொருள் பாதிக்காத வகையில் தேவைப்படக்கூடிய
அல்லது தக்கதென இருக்கக்கூடிய அத்தகைய முறையில் பொருள் கொள்ளலாம்.
(34) திருப்பூர் மாநகரததிற்கு நீட்டிக்கப்பட்டு பொருந்துமாறு செய்யப்படும்
1981 ஆம் ஆண்டுச் சட்டத்தில்.-
(ஐ) கோயம்புத்தூர் மாநகருக்கும், கோயம்புத்தூர் நகராட்சிக்குமான சுட்டுகை
எதுவும், இந்தச் சட்டத்தின் காரணமாக முறையில் திருப்பூர் மாநகருக்கும் திருப்பூர்
நகராட்சிக்குமான சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும்
(b) கோயம்புத்தூர் மாநகராட்சி, கோயம்புத்தூரின் மாநகராட்சி, கோயம்புத்தார்
நகராட்சிய மாநகராட்சி ஆகியவற்றுக்கான சுட்டுகை எதுவும், இந்தச் சட்டத்தின்
காரணமாக முறையே திருப்பூர் மாநகராட்சி, திருப்பூர் யிண் மாநகராட்சி மற்றும்
திருப்பூர் நகராட்சிய மாநகராட்சிக்கான சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படுதல்
வேண்டும்.
9. மாறும் இடைக்காலத்திற்கான வகைமுறைகள்.- (1) நகராட்சி
மன்றத்தால், பயன்படுத்தப்பட்ட, துய்க்கப்பட்ட அல்லது கையுடைமையில்
வைத்திருக்கப்பட்ட எவ்வகையினதுமான சொத்து அனைத்தும், உரிமைகள்
அனைத்தும் மற்றும் நகராட்சி மன்றத்தால் சொந்தமாக வைத்திருக்கப்பட்ட
அல்லது நகராட்சி மன்றத்திடம் உற்றமைந்துள்ள அல்லது நகராட்சி மன்றத்தால்
அல்லது நகராட்சி மன்றத்திற்காக பொறுப்பில் வைத்து வரப்படும்
எவ்வகையினதுமான உரித்தங்கள் அனைத்தும், கூறப்பட்ட நகராட்சி மன்றத்தால்
பயன்படுத்தப்பட்ட துய்க்கப்பட்ட அல்லது. கையுடைமையில் வைத்திருக்கப்பட்ட
எவ்வகையினதுமான உரிமைகள் அனைத்துடனும், கூறப்பட்ட நகராட்சி
மன்றத்திற்கு எதிராக இருந்துவரும் சட்டமுறைவான கடப்பாடுகள் அனைத்துடன்
கூடவும், இந்தச் சட்டத்தின் தொடக்க தேதியன்றும் அது முதற்கொண்டும், மற்றும்
அரசு, பொது அல்லது தனி ஆணையின் வாயிலாக இதற்கென வழங்கலாகும்
அத்தகைய பணிப்புரைகளுக்கு உட்பட்டு, மாநகராட்சியிடம் உற்றமைந்திருக்கும்.
(2) அத்தகைய தொடக்கத் தேதியன்று உள்ளவாறான வரிகளின் அனைத்து
நிலுவைகளை, வரியை இணக்கமான முறையில் தீர்த்துக்கொள்வதற்கான பிற
தொகை சசெலுத்தங்கள் அல்லது செலவுகளுக்குக் கொடுபட வேண்டிய
தொகையை, இழப்பீட்டை அல்லது பிறவாறு நகராட்சி மன்றத்திற்குக் கொடுபட
வேண்டிய தொகையை அத்தகைய மாநகராட்சிக்குச் சேர்ந்து வரவேண்டிய
தொகையாகக் கருதி மேற்சொன்ன நிலுவைகளோ அல்லது செலுத்தங்களோ
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்படி கொடுபட வேண்டிய
தொகைகளாகியிருப்பது போன்று வசூலிக்கப்படலாம்.
(3) இந்தச் சட்டம் தொடங்கிய தேதிக்கு உடனடி முன்பாக மேற்சொன்ன
நகராட்சி மன்றத்தால் விதிக்கப்பட்டு வந்த அனைத்து வரிகளும் கட்டணங்களும்.
தீர்வைகளும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்படி மாநகராட்சியால்
விதிக்கப்பட்டு வந்திருப்பதாகக கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் அத்தகைய
வரிகள், கட்டணங்கள் மற்றும் தீர்வைகள் இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட
எதனாலும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனாலும் மாற்றியமைக்கப்படுவது,
நீக்கப்படுவது அல்லது கலைத்து கைக்கொள்ளப்படுவது வரையிலும்
அதற்கிணங்கிய வகையில் நடைமுறையில் தொடர்ந்து இருத்தல் வேண்டும்.
(4) மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி நகராட்சி மன்றத்தால் அல்லது
நகராட்சி மன்றத்திற்கு எதிராக அல்லது அதிகார அமைப்பால் அல்லது அதிகார
அமைப்பிற்கு எதிராக அல்லது நபரெவராலும் அல்லது நபரெவருக்கு எதிராக
எடுக்கப்பட்ட அனைத்துச் செயல் நடவடிக்கைகளும், மேற்சொன்ன செயல்
நடவடிக்கைகள் இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்படி
தொடங்கியிருந்தாற்போன்று மாநகராட்சி, அதிகார அமைப்பு அல்லது நபரால்
அல்லது அதற்கு அல்லது அவருக்கு எதிராகத் தொடரப்படலாம்.
(5) அத்தகைய தொடக்கத் தேதிக்கு முன்னர் அதிகார அமைப்பு எதனாலும்
மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச்
சட்டம் நடைமுறையில் இருநதிருந்தாற்போன்று இந்தச் சட்டத்தின்படி அத்தகைய
நடவடிக்கையை எடுப்பதற்கு உரிய அதிகார அமைப்பால் எடுக்கப்பட்டிருப்பதாகக
கொள்ளப்படுதல் வேண்டும்.
(6) இந்தச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்தபோதிலும் இந்தச் சட்டத்தின்
தொடக்கத் தேதிக்கு உடனடி முன்பாக நகராட்சியில் பணியில் இருந்த அலுவலர்
அல்லது பணியாளர் ஒவ்வொருவரும் அத்தகைய தொடக்கத் தேதியன்றும் அது
முதற்கொண்டும் மாநகராட்சியின். அலுவலரொருவராக அல்லது
பணியாளரொருவராகக கொள்ளப்படுதல் வேண்டும்.
வரம்புரையாக:
(ஐ மாநகராட்சியின் பணியில் அவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டதன்.
விளைவாக அத்தகைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொருந்தத்தக்க
வரையுறைகளும் நிபந்தனைகளும் அத்தகைய தொடக்கத் தேதிக்கு உடனடி
முன்பாக அத்தகைய பணியாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் மற்றும் படிகள்,
விடுப்பு, ஓய்வூதியம், பணிக்கொடை, வருங்கால வைப்புநிதியம், ஓய்வுபெறும் வயது
வரம்பு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் பொருந்தக்கூடிய அத்தகைய
வரையுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் குறைவுபடாது இருத்தல் வேண்டும்;
மற்றும்
(௦) அத்தகைய தொடக்கத் தேதி வரையிலும் நகராட்சியின் கீழ் அத்தகைய
அலுவலர் அல்லது பிற பணியாளர் எவராலும் செய்யப்பட்ட பணியானது,
மாநகராட்சியின் கழ் செய்யப்பட்ட பணியாகக் கொள்ளப்படுதல் வேண்டும், மற்றும்
அவர் ஊதிய உயர்வுகள், விடுப்பு, ஓய்வூதியம், வருங்கால வைப்புநிதியம்,
பணிக்கொடை ஆகியவற்றின் நோக்கத்திற்காக அந்தப் பணியைக்
கணக்கிலெடுத்துக்கொள்ளும் உரிமைத்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்:
மேலும் வரம்புரையாக: நகராட்சிப் பணிபுரிந்து கொண்டிருக்கும் அலுவலர்
அல்லது பிற பணியாளர் எவரும், வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய
காலத்திற்குள்ளும் அத்தகைய முறையிலும் மாநகராட்சிப் பணியில்
எடுத்துக்கொள்ளும்படியாகவோ அல்லது மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 73 &
எனும் பிரிவில் சுட்டப்பட்ட பணிக்கு மாற்றீடு செய்யும் படியாகவோ அல்லது
வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய ஆட்குறைப்புப் பலன்களின்பேரில்
நகராட்சியின் பணியிலிருநது நீக்கும் படியாகவோ தமது விருப்பத்தைத் தெரிவிக்க
விருப்பத் தெரிவு ஒன்று கொடுக்கப்படுதல் வேண்டும்.
(7) மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி திருப்பூர் நகராட்சியில்
சிற்றொகுதிகளாகப் பிரிக்கப்பட்ட மற்றும் இந்தச் சட்டத்தின் தொடக்கத்
தேதியன்று நடைமுறையில் உள்ள சிற்றொகுதி எதுவும் அது
மாற்றியமைக்கப்படாதவரையிலும் மாநகராட்சியின். கோட்டமாகவே
கொள்ளப்படுதல் வேண்டும்.
(8) மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி திருப்பூர் நகராட்சிக்காகத்
தயாரிக்கப்பட்டு இந்தச் சட்டம் தொடங்கிய தேதியன்று நடைமுறையில் இருக்கும்
வாக்காளர் பட்டியலானது, புதிய வாக்களார் பட்டியல் தயாரிக்கப்பட்டு
வெளியிடப்படுவது வரையிலும், மாநகராட்சிக்குரிய வாக்காளர் பட்டியலாகக
கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் நகராட்சியின் ஒவ்வொரு சிற்றொகுதி
தொடர்பான மேற்சொன்ன வாக்காளர் பட்டியலின் பகுதியானது, மாநகராட்சியின்.
நேரிணையான கோட்டத்திற்கான வாக்காளர் பட்டியலின் பட்டியாகக்
கொள்ளப்படுதல் வேண்டும்.
(9) இந்தச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும் இந்தச் சட்டத்தின்
தொடக்கத் தேதிக்கு உடனடி முன்பாக அவ்வாறு தேரந்தெடுக்கப்பட்டு பதவி
வகிக்கிற திருப்பூர் நகராட்சியின் தலைமையாளர். துணைத் தலைமையாளர்
மற்றும் மன்ற உறுப்பினர்கள் இந்தச் சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பூர்
மாநகராட்சியின் மேயராக, துணை மேயராக மற்றும் மன்ற உறுப்பினர்களாகக்
கொள்ளப்படுதல்வேண்டும்; மற்றும் அத்தகைய மேயர், துணை மேயர் மற்றும்
மன்ற உறுப்பினர்கள் இது குறித்து அரசினால் அறிவிக்கையின் வாயிலாக
நிர்ணயிக்கக்கூடிய அத்தகைய தேதிவரையிலும் பதவியைத் தொடர்ந்து வகித்தல்
வேண்டும் அல்லது அத்தகைய தேதி எதுவும் நிர்ணயிக்கப்படாமலிருக்கும்
நேர்வில், மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி அவர்களுடைய பதவிக்காலம்
முடிவடையும் தேதி வரையிலும் பதவி வகித்தல் வேண்டும் மற்றும் அத்தகைய
மேயர், துணை மேயர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் இந்தச் சட்டத்தினால் அல்லது
இந்தச் சட்டத்தின்படி மேயருக்கு, துணை மேயருக்கு மற்றும் மன்ற
உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் செலுத்துதல்
வேண்டும் மற்றும் அனைத்து பணிகளையும் ஆற்றுதல் வேண்டும்.
10. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.-- (1) அரசானது, இந்தச்
சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம்.
(2) ௮9) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில்
நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத்
தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே
நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(௦) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும்,
அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று
சொல்லப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே
நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
10
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட
அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும், அது அவ்வாறு செய்யப்பட்ட
அல்லது பிறப்பிக்கப்பட்ட பிண்னர் கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில்
வைக்கப்படுதல் வேண்டும், மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர்
அல்லது அதனையடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய
விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும்
சட்டமன்றப் பேரவையானது செய்யுமாயின் அல்லது அத்தகைய விதி அல்லது
அறிவிக்கை அல்லது ஆணை எதுவும் செய்யப்படுதலோ அல்லது
பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமாயின், அந்த
விதியானது அல்லது அறிவிக்கையானது அல்லது ஆணையானது அதன் பின்னர்
அவ்வாறு மாற்றியமைககப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல்
வேண்டும் அல்லது நேரவிற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல் வேண்டும்;
எனினும் அவ்வாறான மாறுதல் அல்லது நீக்கம் எதுவும், அந்த விதியின்படி
அல்லது அறிவிக்கையின்படி அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்ட
செயல் ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
11. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.- இந்தச் சட்டத்தின்.
வகைமுறைகளைச் செயற்படுத்துவதில் இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால் அரசு,
தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணையின் வாயிலாக அந்த
இடர்ப்பாட்டை நீக்குவதற்குத தேவையானதாகவோ அல்லது உகந்ததாகவோ
அதற்குத் தோன்றுகிற, இந்தச் சட்டத்திற்கு முரணாக இல்லாத அத்தகைய
வகைமுறைகளைச் செய்யலாம்:
வரம்புரையாக: இந்தச் சட்டம் தொடங்கிய தேதியிலிருந்து இரண்டாண்டுக்
கால அளவு முடிவடைந்த பின்னர் அத்தகைய ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல்
கூடாது.
12. நீக்கறவு மற்றும் காப்புரை-- 2007 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சி
அவசரச் சட்டமானது (தமிழ்நாடு அவசரச்சட்டம் 872000) ஈங்கிதனால் நீக்கறவு
செய்யப்படுகிறது.
(2) அத்தகைய நீக்கறவில் என்ன அடங்கியிருந்தபோதும், கூறப்பட்ட
அவசரச்சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட எதுவும், எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்லது
கொடுவாங்கப்பட்ட பணிப்புரைகளானவை இந்தச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட,
எடுக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்டதாகவே கருதப்படுத்தல் வேண்டும்.
11