Tamil Nadu · 1994 · Act 15
The Tamilnadu Palm products Development Board Act 1994
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
1994ஆம் ஆண்டு தமிழ்நாடு பனைப்பொருட்கள்
வளர்ச்சி வாரியச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 15,1994)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
The Tamil Nadu Palm Products Development Board
Act, 1994
(Tamil Nadu Act No. 15 of 1994)
(as on 31 October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
சென்னை
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
1994ஆம் ஆண்டு தமிழ்நாடு பனைப்பொருட்கள்
பிரிவு
10.
i
வளர்ச்சி வாரியச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 15/1994)
பொருளடக்கம்
அத்தியாயம்-।
முன்னுரை
குறுந்தலைப்பும், பரப்பெல்லையும்
தொடக்கமும்.
பொருள்வரையறைகள்.
அத்தியாயம் - ॥
தமிழ்நாடு பனைப் பொருட்கள் வளர்ச்சி
வாரியம்.
வாரியத்தை நிறுவுதல்.
உறுப்பினர் பதவியிலிருந்து
விலகிக்கொள்ளுதல்.
பதவியிலுள்ள காலியிடங்கள் முதலியவை,
இவ்வாரியத்தின் செயல்களையும்
நடவடிக்கைகளையும் செல்லாதவை
ஆக்குதல் கூடாது.
குறிப்பிட்ட நோக்கங்களுக்காக, நபர்கள்
வாரியத்தோடு இணைந்து செயற்படுதல்.
வாரியக் கூட்டங்கள்.
துணைத் தலைவர், தலைமைச் செயல்
அலுவலர், பிற உறுப்பினர்கள் ஆகியோரின்:
பதவிக் காலஅளவு, பணி வரையறைகள்
மற்றும் நிபந்தனைகள்.
வாரியத்தின். அலுவலர்களும்
பணியாளர்களும்.
நிலையான நிதிக் குழு.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
i
அத்தியாபம் -l
வாரியத்தின் செயற்பணிகள்.
வாரியத்தின் செயற்பணிகள்.
வாரியத்தின் பொதுவான அதிகாரங்கள்.
பணிப்புரைகளைப் பிறப்பிப்பதற்கு.
அரசிற்குள்ள அதிகாரம்.
அத்தியாயம் IV
சொத்து, நிதி, கணக்குகள், தணிக்கை
மற்றும் அறிக்கைகள்
வாரியத்திற்குச் சொத்தினை உரிமை
மாற்றம் செய்தல்.
வாரியத்தின் நிதி.
வாரியத்திற்கு. வழங்கப்படும்.
உதவித்தொகைகளும், கடன்களும்,
மானியங்களும்.
செலவு செய்வதற்கான வாரியத்தின்.
அதிகாரம்.
வரவு-செலவுத் திட்டம்.
பணம் கடன் வாங்குதல்.
கணக்குகள் மற்றும் தணிக்கை.
செயல்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கான
அதிகாரம்.
ஒரு சில செயல் திட்டங்கள், திட்டங்கள்,
பணிகள் ஆகியவற்றுக்கு அரசின் முன்:
ஒப்புதல் பெறுதல்.
அரசு ஒரு சில ஒப்பந்தங்களை முடிவு
செய்தல்.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
iii
வசூலிக்கப்பட முடியாத தொகையினைத்
தள்ளுபடி செய்வதற்கான அதிகாரம்.
நிலுவைகளை வனூலித்தல்.
விவர உரைகளும் அறிக்கைகளும்.
அத்தியாயம் - V
பல்வகை.
வாரியத்தைக் கலைத்தல்.
ஆண்டுச் செயல்திட்டங்களையும், நிறுவனப்
பணியாளர் பட்டியல்களையும் தயாரித்து
அளித்தல்.
வாரியத்தின் உறுப்பினர்கள், அலுவலர்கள்,
பிற பணியாளர்கள் ஆகியோர் பொதுப்
பணியாளர்களாக இருப்பர்.
நல்லெண்ணத்துடன் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
ஒழுங்குவிதிகளைச் செய்வதற்கான
அதிகாரம்.
இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
தமிழ்நாடு சட்டம் 181959 பொருந்தாது.
பிற சட்டங்களின் செயற்பாடு பாதிக்கப்படாது
என்பது,
1
1994ஆம் ஆண்டு தமிழ்நாடு பனைப்பொருட்கள்
வளர்ச்சி வாரியச் சட்டம்
தமிழ்நாடு சட்ட எண் 15/1994
[தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது,
1994ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 3ஆம் நாளன்று ஆளுநரின்:
ஏற்பிசைவைப் பெற்று பொதுத்தகவலுக்காகத் தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்பட்டது]
பனைப்பொருட்கள் தொழிலின் வளர்ச்சிக்காகவும்,
அதனுடன் தொடர்புடைய விவரங்களுக்காகவும்,
தமிழ்நாடு மாநிலத்தில், வாரியம் ஒன்றை
நிறுவுவதற்கு வகை செய்வதற்கான ஒரு சட்டம்.
கிட்டத்தட்ட ஐந்து கோடிப் பனை மரங்களையும்
பெரும் எண்ணிக்கையில் பனைவகை சார்ந்த பிற
மரங்களையும் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு மாநிலமானது,
பனைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம்
அந்நியச் செலாவணியை ஈர்க்கக்கூடிய வகையில் பெரும்
அளவிற்குப் பனைப்பொருட்கள் தொழிலைப் பெருக்கி
வளர்ப்பதற்கான உள்ளார்ந்த ஆற்றல் வாய்ந்த ஒரு
மையமாக விளங்குகின்றது என்பதாலும்;
பனைப்பொருள்கள் தொழில் போட்டியிடக்
கூடியவையாகவும், தொழில் வகையில் ஈர்க்கக்
கூடியவையாகவும் செய்வதற்காக வேண்டி
பனைப்பொருட்கள்: தொழிலில் நவினத் தொழிற்
கோட்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டியதும்,
பனைப்பொருட்கள்: தொழிலின் வளர்ச்சிக்காகவும்,
பனைப்பொருட்களைச் சிறந்த முறையில்
பயன்படுத்துவதற்காகவும் ஆராய்ச்சியை ஆதரித்து
ஊக்குவிக்க வேண்டியதும் தேவையானதாகவுள்ளது
என்பதாலும்;
2
ஊர்ப்புறங்களில் பனைப்பொருட்கள் தொழிலைச்
செய்து வருகின்ற வேலையாட்களின் வறுமையைக்
குறைக்கின்ற சமூக நோக்கத்தை அடைவது
அத்தியாவசியமாக இருப்பதாலும்;
மேற்சொன்ன நோக்கங்களுக்காகவும் அதனுடன்
தொடர்புடைய விவரங்களுக்காகவும். தமிழ்நாடு
மாநிலத்தில் வாரியம் ஒன்றை நிறுவ வகைசெய்வதற்கு
உகந்ததாய் இருப்பதாலும்:
இந்தியக் குடியரசின் நாற்பத்து நான்காம் ஆண்டில்
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால்
இயற்றப்பட்டச் சட்டம் பின்வருமாறு:-
அத்தியாயம் |
முன்னுரை
1. குறுந்தலைப்பும், பரப்பெல்லையும் தொடக்கமும்.-
1) இந்தச் சட்டம், 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு
பனைப்பொருட்கள் வளர்ச்சி வாறியச் சட்டம் என
வழங்கப்படும் .
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் பரவி
நிற்கும்.
(3) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல்
வேண்டும்.
2. பொருள் வரையறைகள்.- இந்தச் சட்டத்தில்,
தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-
(ஐ) "வாரியம்" என்பது, பிரிவு 3இன் உட்பிரிவு
(1)இன்படி நிறுவப்பட்ட தமிழ்நாடு பனைப்பொருட்கள்
வளர்ச்சி வாரியம் எனப் பொருள்படும்;
(b) "தலைமைச் செயல் அலுவலர்" என்பது,
3ஆம் பிரிவின் (2)ஆம் உட்பிரிவின்
3
(ஐ எனும் கூறின்படி அமர்த்தப்பட்ட இவ்வாரியத்தின்:
செயல் அலுவலர் எனப் பொருள்படும்;
(c) "அரசு" என்பது, மாநில அரசு எனப்
பொருள்படும்;
(0) "கதர்-கிராமத் தொழில் ஆணையம்"
என்பது, 1956ஆம் ஆண்டு கதர்-கிராமத் தொழில்
ஆணையச் சட்டத்தின் (மையச் சட்டம் 614956) பிரிவு
4இன்படி நிறுவப்பட்ட கதர்-கிராமத் தொழில் ஆணையம்
எனப் பொருள்படும்;
(6) "உறுப்பினர்" என்பது, இவ்வாரியத்தின் ஜர்
உறுப்பினர் எனப் பொருள்படும்; மற்றும் அது
தலைவரையும் உள்ளடக்கும்;
() "பனைப்பொருட்கள்" என்பது, பனைமரம்,
தென்னை, பேரீச்ச மரம், சவ்வரிசிப் பனை மரம் உள்ளிட்ட
மரங்களின் கூறுகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள்
எனப் பொருள்படும்;
(ஐ "பனைப்பொருட்கள் தொழில்" என்பது,
பனைசார்ந்த பொருட்கள் தொடர்பான தொழில் எனப்
பொருள்படும்;
(h) "தலைவர்" என்பது, இவ்வாரியத்தின்
தலைவர் எனப் பொருள்படும்;
() "ஒழுங்குமுறைவிதி என்பது, இந்தச்
சட்டத்தின்படி வாரியத்தால் செய்யப்பட்ட
ஒழுங்குமுறைவிதி எனப் பொருள்படும்;
(J) "துணைத் தலைவர்" என்பது,
வாரியத்தின் துணைத் தலைவர் எனப் பொருள்படும்.
4
அத்தியாயம் -॥
தமிழ்நாடு பனைப்பொருட்கள் வளர்ச்சி வாரியம்
3. வாரியத்தை நிறுவுதல்.- (1) அரசு,
அறிவிக்கையின். வாயிலாக, இதன்பொருட்டுக்
குறிப்பிடப்படும் தேதியிலிருந்தும் அது முதற்கொண்டும்,
தமிழ்நாடு பனைப் பொருட்கள் வளர்ச்சி வாரியம் என்று
வழங்கப்படும் வாரியம் ஒன்றை நிறுவுதல் வேண்டும்.
அது, சொத்தினை ஈட்டவும், உடைமையில்
வைத்திருக்கவும் மற்றும் விற்பனை போன்ற வகையில்
முடிவு காண்பதற்கும் மற்றும் ஒப்பந்தம் செய்து
கொள்வதற்குமான அதிகாரத்துடன் கூடிய, நிலையான
தொடர் வழியுரிமையும், ஒரு பொது இலச்சினையும்
பெற்றிருக்கின்ற ஒரு கூட்டுரும் அமைப்பாக இருத்தல்
வேண்டும், அதன் பெயரில் வழக்கிடலாம் மற்றும்
வழக்கிடப்படலாம்.
(2) இந்த வாரியமானது, பின்வரும்
உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-
(ஐ பனைப்பொருட்கள் தொழில் துறையைத்
தன்பொறுப்பில் கொண்டிருக்கும் அமைச்சர்; பதவி வழி
தலைவராக இருத்தல் வேண்டும்;
(b) பனைமரங்களையும், பனை வகையைச்
சார்ந்த பிற மரங்களையும் அதிக அளவில் கொண்டுள்ள
பின்வரும் மாவட்டங்களிலிருந்து, அரசால் அமர்த்தப்
படவேண்டிய அரசு அலுவலர் அல்லாதவர்களான ஒன்பது
உறுப்பினர்கள், அதாவது:-
(i) கன்னியாகுமரி ஒருவர்
(1) திருநெல்வேலி - தூத்துக்குடி ஒருவர்
00 கீராமநாதபுரம் ஒருவர்
(0) விருதுநகர், சிவகங்கை மற்றும் ஒருவர்
மதுரை
5
) திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஒருவர்
மற்றும் புதுக்கோட்டை
(vi) சேலம் மற்றும் தருமபுரி ஒருவர்
(Vii) திருவண்ணாமலை ஒருவர்
(ரி) கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஒருவர்
(ix) காஞ்சிபுரம் ஒருவர்
(9) பனைப்பொருட்கள் தொழில்துறையைத்
தன் பொறுப்பில் கொண்டிருக்கும் அரசு செயலாளர், பதவி
வழி;
(0) நிதித்துறையை தன் பொறுப்பில்
கொண்டிருக்கும் அரசு செயலாளர், பதவி வழி, அல்லது
அந்தத் துறையின் அரசு துணைச் செயலாளரின்
படிநிலைக்குக் கீழ் அல்லாத, அவரால் பெயர் குறித்து
நியமிக்கப்படுபவர்;
(ஐ) காவல்துறைத் தலைமை ஆய்வாளர்
(மதுவிலக்கு), பதவி வழி;
() 1959ஆம் ஆண்டு தமிழ்நாடு கதர்-கிராமத்
தொழில் வாரியச் சட்டத்தின் (குமிழ்நாடு சட்டம் 18/1959)
பிரிவு 3இன்படி நிறுவப்பட்ட தமிழ்நாடு கதர்- கிராமத்
தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர், பதவி
வழி;
(ஐ அரசால் நியமிக்கப்படும் தலைமைச் செயல்
அலுவலர்.
(3) துணைத் தலைவர், அரசு அலுவலர்
அல்லாதவர்களான உறுப்பினர்களுக்கிடையேயிருந்து
தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.
6
4, உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்
கொள்ளுதல்.- அரசு அலுவலர் அல்லாதவரான
உறுப்பினர் எவரும், அரசிற்கு எழுத்து வடிவில் அறிவிப்பு
கொடுப்பதன் மூலம், தன் பதவியிலிருந்து
விலகிக்கொள்ளலாம்; மற்றும் அப்பதவி விலகல் ஆனது
அரசால் தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை
செய்யப்பட்டதும், அந்த உறுப்பினர் தம் பதவியைவிட்டு
நீங்கியிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.
5. பதவியிலுள்ள காலியிடங்கள். முதலியவை
இவ்வாரியத்தின் செயல்களையும் நடவடிக்கைகளையும்
செல்லாதவை ஆக்குதல் கூடாது.- இவ்வாரியத்தின்.
செயல் அல்லது நடவடிக்கைகள் எதுவும், அதன்
உறுப்பினர்களின் பதவிகளிடையே காலியிடம் ஏதேனும்
இருந்து வருகின்றது அல்லது (வாரியத்தை)
அமைத்துருவாக்கியதில் குறைபாடு ஏதேனும்
இருக்கின்றது என்கின்ற காரணத்தால் மட்டுமே
செல்லாதவை ஆக்குதல் கூடாது.
6. குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நபர்கள்
வாரியத்தோடு இணைந்து செயற்படுதல். (0)
இவ்வாரியமானது, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளில்
எதற்கேனும் இணங்கிச் செயல்படுகையில், எந்த நபரின்.
உதவியை அல்லது ஆலோசனையைப்
பயன்படுத்திக்கொள்ள விரும்பக்கூடுமோ, அந்த நபரை,
தான் விரும்பக்கூடிய முறையிலும், தான் விரும்பக்கூடிய
நோக்கங்களுக்காகவும் இணைத்துக்கொள்ளலாம்.
(2) எந்த நோக்கத்திற்காகவும் உட்பிரிவு (1)இன்படி
இவ்வாரியத்துடன் செயல்பட இணைத்துக்கொள்ளப்படும்.
நபர் எவரும், அந்த நோக்கத்திற்குத் தொடர்புடைய
இவ்வாரியத்தின் கலந்துரையாடல்களில் பங்குகொள்ளும்
உரிமைப் பெற்றவர் ஆவார்; ஆனால், வாக்களிப்பதற்கான
7
உரிமை அற்றவர் மற்றும் வேறெந்த நோக்கத்திற்காகவும்
ஓர் உறுப்பினராக இருத்தலும் கூடாது.
(3) அரசானது, ஆணையின் வாயிலாக,
இவ்வாரியத்தின் கூட்டங்கள் எதிலும்.
கலந்துகொள்வதற்காகவும், இவ்வாரியத்தின்.
கலந்துரையாடல்களில் பங்குகொள்வதற்காகவும் ஒன்று
அல்லது அதற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களை
அனுப்பி வைக்கலாம்; ஆனால், அந்த அலுவலரோ அல்லது
அலுவலர்களோ, வாக்களிப்பதற்கான உரிமையினைப்
பெற்றிருத்தல் கூடாது.
7. வாரியக் கூட்டங்கள்.- (1) இவ்வாரியமானது,
ஒழுங்குவிதிகளால் வகைசெய்யப்படும் காலங்களிலும்.
இடங்களிலும் கூடுதல் வேண்டும்; மற்றும் உட்பிரிவுகள்(2)
முதல் (4) வரையிலான வகைமுறைகளுக்கு உட்பட்டு,
(கூட்டங்கள் குறைவெண் வரம்பு உள்ளிட்ட) அதன்.
கூட்டங்கள் அலுவல் நடத்துவது தொடர்பான நடைமுறை
விதிகளைக் கடைப்பிடித்தல் வேண்டும்:
வரம்புரை: இவ்வாரியமானது குறைந்தது மூன்று
மாதங்களுக்கு ஒரு முறையேனும் கூடுதல் வேண்டும்;
(2) தலைவர், தாம் பொருத்தம் என நினைக்கின்ற
போதெல்லாம், இவ்வாரியத்தின் சிறப்புக் கூட்டங்களைக்
கூட்டலாம்;
(3) தலைவரோ, அல்லது அவர்
வரவில்லையென்றால் துணைத் தலைவரோ அல்லது
அவரும் வரவில்லையென்றால், வந்துள்ள
உறுப்பினர்களிடையேயிருந்து அந்த உறுப்பினர்களால்
தெரிவு செய்யப்படும் உறுப்பினர் ஒருவரே இவ்வாரியத்தின்
கூட்டம் ஒன்றிற்குத் தலைமை வகித்தல் வேண்டும்;
8
(4) இவ்வாரியத்தின் கூட்டம் ஒன்றில் எழும்
அனைத்து பிரச்சனைகளும், வந்திருந்து வாக்களிக்கின்ற
உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் முடிவு
செய்யப்படுதல் வேண்டும்; மற்றும் வாக்குகள் சமநிலையில்
அமைகின்ற நிலையில், தலைவரோ அல்லது அவர்
வராதபோது, தலைமை வகிக்கின்ற நபரோ இரண்டாம்.
வாக்கினை அல்லது அறுதி வாக்கினைப் பெற்று இருப்பார்.
(5) இவ்வாரியத்தின் கூட்ட நடவடிக்கைகளை,
ஒவ்வொரு கூட்டம் நடந்ததிலிருந்து பதினைந்து
நாட்களுக்குள் அரசிற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
8. துணைத் தலைவர், தலைமைச் செயல் அலுவலர்,
பிற உறுப்பினர்கள் ஆகியோரின் பதவிக் காலஅளவு, பணி
வரையறைகள் மற்றும் நிபந்தனைகள்.- துணைத்
தலைவர், தலைமைச் செயல் அலுவலர், பிற
உறுப்பினர்கள் ஆகியோரின் பதவிக்கால அளவும்
பணிவரையறைகளும் நிபந்தனைகளும்.
வகுத்துரைக்கப்படும் விதத்தில் இருத்தல் வேண்டும்.
9. வாரியத்தின் அலுவலர்களும் பணியாளர்களும்.-
(1) தலைமைச் செயல் அலுவலர் வகுத்துரைக்கப்படும்
விதத்தில் அரசாலோ அல்லது தலைவராலோ அவ்வப்போது
அவருக்கு ஒப்படைவு செய்யப்படக்கூடிய அதிகாரங்களைச்
செலுத்தி வருதலும், ககமைகளை ஆற்றி வருதலும்
வேண்டும்.
(2) இவ்வாரியமானது, தன் செயற்பணிகளைத்
திறம்படப் புரிந்து வருவதற்கு வேண்டி, தான்
தேவையானது எனக் கருதுகின்ற பிற அலுவலர்களையும்
பணியாளர்களையும், இதன்பொருட்டுச் செய்யப்பட்ட
ஒழுங்குவிதிகளுக்கு இணங்கிய வகையில் பணி
அமர்த்திக் கொள்ளலாம்.
9
10. நிலையான நிதிக்குழு.- இவ்வாரியமானது,
துணைத் தலைவரையும், நான்கு உறுப்பினர்களுக்கு
மேற்படாத உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்ற
நிலையான நிதிக்குழு ஒன்றை அமைந்துருவாக்கலாம்.
மற்றும் அவர்களில் ஒருவர் பிரிவு 3உட்பிரிவு (2)இன் (0)
எனும் இனத்தில் குறிப்பிடப்பட்ட உறுப்பினராக இருப்பார்.
துணைத் தலைவரே இக்குழுவின் தலைவராக இருத்தல்
வேண்டும். இக்குழுவானது, வாரியத்தின் நிதிகள்
தொடர்பான, ஒழுங்குவிதிகளால் வகுத்துரைக்கப்படும்.
அதிகாரங்களைச் செலுத்தி வருதலும், செயற்பணிகளைப்
புரிந்து வருதலும் வேண்டும்.
அத்தியாயம் -॥
வாரியத்தின் செயற்பணிகள்.
11. வாரியத்தின். செயற்பணிகள்.- (1) இந்தச்
சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, பொதுவாக,
இவ்வாரியத்தின் செயற்பணிகள், பனைப்பொருட்கள்
தொழில் வளர்ச்சிக்கான செயல்களைத் திட்டமிடுதலும்
ஒருங்கிணைத்தலும் மற்றும் நிறைவேற்றுதலும்
வேண்டும்.
(2) இவ்வாரியமானது, குறிப்பாகவும், முன்சொன்ன
அதிகாரத்தின் பொதுத்தன்மைக்கு ஊறின்றியும், தான்:
பொருத்தமானது எனக் கருதக்கூடிய
பின்வருவனவற்றிற்காக,-
(8) பனைப்பொருட்கள் தொழிலைத்
தொடங்குவதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும்,
அவற்றிற்கு உதவுவதற்காகவும் அவற்றை
நடத்துவதற்காகவும்;
(b) பனைப்பொருட்கள் தொழிலை அமைத்து
ஏற்பாடு செய்வதன் மூலம், தகுதி வாய்ந்த நபர்களுக்கு
10
அவர்களது இல்லங்களில் இலாபகரமான வேலை
வாய்ப்பினை அளிப்பதற்காகவும்;
(௦9) பனைப்பொருட்கள் தொழிலின்
வளர்ச்சிக்காகக் கடன்களை வழங்குவதற்காகவும் பிற
உதவிகளை அளிப்பதற்காகவும்;
(0) பனைப்பொருட்கள் தொழிலுக்காகக்
கூட்டுறவுச் சங்கங்களை அமைப்பதற்காகவும்;
(e) பனைப்பொருட்கள் தொழில் பயிற்சி
மையங்களை நடத்துவதற்காகவும், அந்த மையங்களிலோ
அல்லது தமிழ்நாடு மாநிலத்திற்கு வெளியேயுள்ள பிற
மையங்களிலோ நபர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காகவும்;
() பனைப்பொருட்கள் தொழிலுக்காக மூலப்
பொருட்களையும், கருவிகளையும், துணைக்
கருவிகளையும் வழங்குவதற்கும் பனைப்பொருட்களை
விற்பனை செய்வதற்குமான ஏற்பாடு செய்வதற்காகவும்;
(ற பண்டகச் சாலைகளையும், கடைகளையும்,
பண்டகப் பெருநிலையங்களையும்,
பொருட்காட்சிகளையும் மற்றும் அவை போன்றவற்றையும்
திறப்பதன் மூலம் பனைப்பொருட்களை விளம்பரப்படுத்தி
அவற்றை பொதுமக்கள் பரவலாக அறியுமாறு ஏற்பாடு
செய்வதற்காகவும்;
(h) பனைப் பொருட்கள் தொழிலுக்கு முன்
உரிமை தருவதற்கும், பனைப்பொருட்களைப்
பயன்படுத்துவதற்குமான கருத்தை பொது மக்களிடையே
விதைத்து ஓர் விழிப்புணர்வை ஊட்டி வளர்ப்பதற்காகவும்;
0) வல்லுநர்களின் ஆலோசனையையும்,
பொது வழிகாட்டுதலையும் விரும்பிப் பெறுவதற்காகவும்;
11
0) பனைப்பொருட்கள் தயாரிப்புத் தொழில்நுட்ப
உத்தியிலோ அல்லது பனைப்பொருட்கள் தொழில்
வளர்ச்சியிலோ ஆராய்ச்சியை ஊக்குவித்து
ஆதரிப்பதற்காகவும்;
(k) பனைப்பொருட்கள் தொழில் தொடர்பான
பிரச்சினைகள் குறித்து ஓர் ஆராய்ச்சிக்கான வசதிகளுக்கு
வகைசெய்வதற்காகவும்;
() பனைநார், பனைஓலைப் பொருட்கள்,
பதப்படுத்தப்பட்ட நுங்கு மற்றும் உணவாக கொள்ளத்தக்க
மற்றும் உணவாக கொள்ளத்தகாத பிற பனை சார்ந்த
பொருட்கள் ஆகியவற்றை அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி
செய்தல்; மற்றும்
(m) ஊர்ப்புறங்களில் பனைப்பொருள்
உற்பத்தித் தொழிலைச் செய்து வருகின்ற
தொழிலாளர்களுக்கு இடையே உள்ள வறுமையைத்
தணிக்கின்ற சமூக நோக்கத்தை வளர்த்து
வருவதற்காகவும்,
நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
12. வாரியத்தின். பொதுவான அதிகாரங்கள்.-
இவ்வாரியமானது, இந்தச் சட்டத்தின்படியான அதன்
செயற்பணிகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக,
பின்வரும் அதிகாரங்களை, அதாவது:-
(@) அது தேவையானது எனக் கருதக்கூடிய
அசையும் மற்றும் அசையாச்சொத்தினை ஈட்டி
உடைமையில் வைத்திருப்பதற்கும், மற்றும் அத்தகைய
சொத்து எதனையும் குத்தகைக்கு விடுவதற்கும்,
விற்பனை செய்வதற்கும், அல்லது மற்றபடி உரிமை
மாற்றம் செய்வதற்கும்:
12
வரம்புரை: இவ்வாரியத்திற்குச் சொந்தமான அசையாச்
சொத்து எதையும், கதர்-கிராமத் தொழில் ஆணையம்
அல்லாத பிற நபர் எவருக்கும் அல்லது அதிகார அமைப்பு
எதற்கும் செய்யப்படும் குத்தகை விற்பனை அல்லது பிற
உரிமை மாற்றம் எதுவும், அரசால் அதற்கு அனுமதி
வழங்கப்பட் டிருந்தாலன்றி, இல்லா நிலையதாகி விடுதல்
வேண்டும்:
(௦) அதன் செயற்பணிகளைத் திறம்படப்
புரிந்துவரவும், குறிப்பாக, தொடர்புடைய உள்ளூர்ப்
பகுதியின் தேவைகளை உரிய கவனத்திற்கொண்டு
அந்தச் செயற்பணிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி
செய்து கொள்வதற்காகவும், ஒரு குழுவையோ அல்லது
குழுக்களையோ நியமிப்பதற்கும்;
(௦) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை
நிறைவேற்றுகின்ற நோக்கத்திற்காக அது தேவையானது
எனக் கருதக்கூடிய அல்லது அரசால் அதனிடம்
ஒப்படைக்கப்படக்கூடிய செயற்திட்டங்களை
வகுப்பதற்கும் நிறைவேற்றுவதற்குமான செலவுகளைச்
செய்வதற்காகவும், இம்மாநிலத்தில் உள்ள எந்தப்
பகுதியிலும் எந்தப் பணியையும் மேற்கொள்வதற்கும்
மற்றும்
(0) ஒப்பந்தம் எதையும் செய்து கொள்வதற்கும்
மற்றும் இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காகத்
தேவையான அனைத்தையும் செய்வதற்கும் பெற்றிருத்தல்
வேண்டும்.
13. பணிப்புரை களைப் பிறப்பிப்பதற்கு அரசிற்குள்ள
அதிகாரம்.- இந்தச் சட்டத்தின்படி அதன் செயற்பணிகளை
நிறைவேற்றுகையில், இவ்வாரியமானது, அரசு அதன்மீது
பிறப்பிக்கக்கூடிய பணிபுரைகளுக்குக் கட்டுப்பட்டதாக
இருத்தல் வேண்டும்.
13
அத்தியாயம் - IV
சொத்து, நிதி, கணக்குகள், தணிக்கை மற்றும்
அறிக்கைகள்.
14. வாறியத்திற்குச் சொத்தினை உரிமை மாற்றம்
செய்தல்.- அரசு, தன்னால் விதிக்கப்படக்கூடிய
நிபந்தனைகளின் பேரிலும், வரம்புகளுக்கு உட்பட்டும்,
இவ்வாரியத்தின் பயன்பாட்டிற்காகவும் மற்றும் அதனால்
நிருவகிக்கப்படுவதற்காகவும், கட்டடம், நிலம் அல்லது பிற
அசையும் அல்லது அசையாச் சொத்து எதையும்,
இவ்வாரியத்திற்கு உரிமைமாற்றம் செய்யலாம்.
15. வாரியத்தின் நிதி.- (1) பனைப்பொருட்கள்
தொழில் நிதி என்று வழங்கப்படும் நிதி ஒன்றை
இவ்வாரியம் பெற்றிருத்தல் வேண்டும்; மற்றும் பனைப்
பொருட்கள் தொழில் வளர்ச்சியின் நோக்கத்திற்காக,
இந்நிதிக்கு அரசால், அவ்வப்போது அளிக்கப்படும்,
மானியங்கள் மற்றும் முன்பணங்கள் அனைத்தும், மற்றும்
இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்திற்காகவும்
அல்லது அவற்றில் ஏதொன்றிற்காகவும், மைய
அரசிடமிருந்தோ அல்லது மாநில அரசு எதனிடமிருந்தோ
அல்லது கதர்-கிராமத் தொழில் ஆணையத்திடமிருந்தோ
அல்லது உள்ளாட்சி அதிகாரஅமைப்பு எதனிடமிருந்தோ
அல்லது கூட்டுரு அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டு
இருந்தாலும் இல்லையென்றாலும் அமைப்பு அல்லது
நிறுவன அமைப்பு எதனிடமிருந்துமோ அல்லது தனிநபர்
எவரிடமிருந்துமோ பெறப்படும். பிற மானியங்கள்,
உதவித்தொகைகள், நன்கொடைகள், கொடைகள் மற்றும்
கடன்கள் ஆகிய அனைத்தும், இப்பனைப் பொருட்கள்
தொழில் நிதிக்குச் செலுத்தப்படு தல். வேண்டும்,
இப்பனைப்பொருட்கள் தொழிலுக்காகவோ அல்லது
அதைப் பொறுத்த வகையிலோ இவ்வாரியத்தால்:
14
செய்யப்படும் செலுத்தங்கள் அனைத்தும்
இந்நிதியத்திலிருந்து வழங்கப்படுதல் வேண்டும்.
(2) அரசால் மற்றபடி பணிக்கப்பட்டுள்ளவிதம்.
தவிர, இந்நிதிக்குச் சொந்தமான அனைத்துப் பணங்களும்,
அரசு பொது அல்லது தனி ஆணையின் மூலம்
பணிக்கக்கூடிய முறையில் வைப்பீடு செய்யப்படுதல்
வேண்டும் அல்லது அரசால் ஒப்புதல் அளிக்கப்படக்கூடிய
கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுதல்
வேண்டும்.
16. வாரியத்திற்கு வழங்கப்படும் உதவித்.
தொகைகளும், கடன்களும், மானியங்களும்.- (1) அரசு,
ஒவ்வொரு நிலையிலும், தான் தீர்மானிக்கக்கூடிய
வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில், இந்தச்
சட்டத்தின் நோக்கங்களுக்காக, இவ்வாரியத்திற்கு,
உதவித்தொகைகளையும், மானியங்களையும்,
அவ்வப்போது வழங்கி வரலாம்.
(2) அரசு, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு
முரணாக இல்லாத வகையில், தீர்மானிக்கக்கூடிய
வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்,
இவ்வாரியத்திற்கு அவ்வப்போது கடன்களை வழங்கி
வரலாம்.
17. செலவு செய்வதற்கான வாரியத்தின் அதிகாரம்.-
பிரிவுகள் 18, 22 மற்றும் 23 இன் வகைமுறைகளுக்கு
உட்பட்டு, இவ்வாரியம், இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்கு
பொருத்தமானது எனக் கருதக்கூடிய தொகைகளைச்
செலவு செய்வதற்கான அதிகாரத்தைப் பெற்றிருத்தல்
வேண்டும்:
வரம்புரை: தமிழ்நாடு மாநிலத்திற்கு வெளியே
அத்தகைய நோக்கம் எதனின் பேரிலும், அரசின் முன்
15
அனுமதியுடன். பொருத்தம் என நினைக்கும்.
தொகைகளை, இவ்வாரியம் செலவு செய்வதை, இந்தப்
பிரிவில் உள்ள எதுவும் தடுப்பதாகக் கருதப்படுதல் கூடாது.
18. வரவு-செலவுத் திட்டம்.- (1) இவ்வாறியம்,
ஒவ்வோர் ஆண்டிலும் வகுத்துரைக்கப்படும்
தேதிக்குள்ளாக, அடுத்த நிதியாண்டின்போது பனைப்
பொருட்கள் தொழிலைப் பொறுத்த அளவில்
நேரிடக்கூடிய மதிப்பீடு செய்யப்பட்ட வரவு-செலவுகளைக்
காட்டுகின்ற ஒரு வரவு-செலவுத் திட்டத்தை (நிதிநிலை
அறிக்கையை) வகுத்துரைக்கப்பட்ட படிவத்தில் தயாரித்து,
ஒப்புதலுக்காக அரசிற்கு அனுப்புதல் வேண்டும்.
(2) உட்பிரிவுகள் (3) மற்றும் (4) இன்
வகைமுறைகளுக்கு உட்பட்டு, செலவினம் எதுவும்,
அரசால் அனுமதிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில்
உள்ள திட்டவட்டமான ஒரு வகைமுறைக்குள்.
உள்ளடங்கி இருந்தாலன்றி தொகை எதுவும்
இவ்வாரியத்தாலோ அல்லது அதன் சார்பாகவோ அந்தச்
செலவினத்திற்காக செலவு செய்யப்படுதல் கூடாது.
(3 இவ்வாரியம், வரவு-செலவுத் திட்டத்தின்
வரம்பிற்குட்பட்டு, ஒரு செலவினத் தலைப்பிலிருந்து
வேறொரு செலவினத் தலைப்பிற்கோ அல்லது ஒரு
செயற்திட்டத்திற்காக செய்யப்பட்ட ஒரு
வகைமுறையிலிருந்து வேறொரு வகைமுறைக்கோ
மறுநிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் வழங்கலாம்:
வரம்புரை: வரவு-செலவுத் திட்டத்தில் "கடன்"
என்கின்ற தலைப்பிலிருந்து வேறெந்த செலவினத்
தலைப்பிற்கும் மற்றும் எதிர் மாறாகவோ செய்யப்படும்
மறுநிதி ஒதுக்கீடு எதற்கும், அரசின் மற்றும் கதர்-கிராமத்
தொழில் ஆணையத்தின் முன் அனுமதி இல்லாமல்,
இவ்வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்படுதல் கூடாது.
16
(4) இவ்வாரியம், வகுத்துரைக்கப்படும்
வரம்புகளுக்குள்ளாகவும், நிபந்தனைகளுக்கு உட்பட்டும்,
ஏதேனும் செலவினத் தலைப்பு ஒன்றின்கீழும் அரசால்
அனுமதிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில்
வகைசெய்யப்பட்டுள்ள வரம்பிற்கு மேற்பட்டு அல்லது
குறிப்பிட்ட எந்த ஒரு செயற்திட்டம் தொடர்பாகவும்,
அரசால் அனுமதிக்கப்பட்ட வரவு-செலவுத்
திட்டத்திலுள்ள கூட்டு மொத்தத் தொகைக்கு
மேற்படாமலிருக்கும் வரையில் செலவு செய்யலாம்.
19. பணம் கடன் வாங்குதல்.- பனைப்பொருட்கள்
தொழில் நிதி அல்லது பிற சொத்திருப்பு எதையும், எந்த
நோக்கத்திற்காகப் பயன்படுத்தலாமோ அந்த
நோக்கத்திற்காக அந்த நிதி அல்லது சொத்திருப்பின்:
பிணையத்தின் பேரில், அரசால் இதன்பொருட்டு
செய்யப்படக்கூடிய விதிகளுக்குட்பட்டு, கடன்
வாங்குவதற்கான அதிகாரத்தை இவ்வாரியம்
பெற்றிருத்தல் வேண்டும்.
20. கணக்குகள் மற்றும் தணிக்கை.- (1) இவ்வாரியம்
கணக்குகளையும், தொடர்புடைய பிற பதிவுருக்களையும்
பேணி வருவதுடன், வகுத்துரைக்கப்படும் படிவத்தில்:
ஆதாய-இழப்புக் (இலாப- நட்ட) கணக்கு மற்றும்
ஐந்தொகைக் கணக்குக் குறிப்பு உட்பட ஆண்டுக்
கணக்கு விவரஅறிக்கை ஒன்றையும் தயாரித்தல்
வேண்டும்.
(2) இவ்வாரியத்தின். கணக்குகள், இதன்
பொருட்டு அரசால் அமர்த்தப்படக்கூடிய நபரால் தணிக்கை:
செய்யப்படுதல் வேண்டும்.
(3) உட்பிரிவு (2)இன்படி பணி அமர்த்தப்பட்ட
நபரானவர் அந்தத் தணிக்கை தொடர்பாக,
வகுத்துரைக்கப்படும் உரிமைகளையும்,
17
சிறப்புரிமைகளையும் அதிகாரத்தையும் பெற்றிருத்தல்
வேண்டும்; மற்றும் குறிப்பாக, அந்த நபர் புத்தகங்களையும்,
கணக்குகளையும், தொடர்புடைய செலவுச் சீட்டுகளையும்,
பிற ஆவணங்களையும் முன்னிலைப்படுத்தக்
கோருவதற்கும், இவ்வாரியத்தின்: அலுவலகங்களில்
எதையும் ஆய்வு செய்வதற்குமான உரிமையினையும்
பெற்றிருத்தல் வேண்டும்.
(4) உட்பிரிவு (2)இன்படி பணிஅமர்த்தப்பட்ட
நபரால் சான்றளிக்கப்பட்ட இவ்வாரியத்தின் கணக்கானது,
அதன்மீதான தணிக்கை அறிக்கையுடன் சேர்த்து, அரசு
இதன் பொருட்டு குறிப்பிடும் தேதிக்கு முன்னர்,
அரசிற்கும் கதர்-கிராமத் தொழில் ஆணையத்திற்கும்,
ஆண்டுதோறும் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
(5). உட்பிரிவு (2)இன்படி பணி அமர்த்தப்பட்ட
நபரின் அறிக்கையினைப் பார்வையிட்ட பின்னர்,
அரசானது, பொருத்தமானது எனத் தான் நினைத்துப்
பிறப்பிக்கும் பணிப்புரைகளுக்கு இவ்வாரியம் இணங்கி
நடத்தல் வேண்டும்.
21. செயல்திட்டத்தை மாற்றி. அமைப்பதற்கான
அதிகாரம்.- இவ்வாரியம் , செயற்திட்டம் எதற்கும்
அனுமதி வழங்கப்பட்ட மொத்தக் கூட்டுத் தொகைக்கு
மேற்படாமலிருக்கின்ற வரையில், அந்தச் செயற்திட்டம்
எதிலும், கதர்-கிராமத் தொழில் ஆணையத்தின்.
முன்அனுமதியுடன் மாற்றம் எதனையும் செய்யலாம்.
22. ஒரு சில செயல்திட்டங்கள், திட்டங்கள், பணிகள்:
ஆகியவற்றுக்கு அரசின் முன் ஒப்புதல் பெறுதல் :- (1)
இவ்வாரியம், அது தொடர்பான செயல் திட்டங்கள்,
திட்டங்கள் அல்லது ஒரு சில செயல் பணிகளுக்கான
செலவானது,
18
(ஐ) தற்போது செய்யப்பட்டு வருகின்ற
பணிகளுக்கோ முன்பு பயன்பாட்டில் இருந்து வந்த
பணிகளுக்கோ செய்யப்படும் விரிவாக்கங்கள், அளவுப்
பெருக்கங்கள் அல்லது கூடுதல் சேர்க்கைகள் இல்லாத
பதிலமைப்புகள், மறுகட்டுமானங்கள், கட்டமைப்பு
மாற்றங்கள், திருத்தங்கள், உருமாற்றங்கள், மேம்பாட்டு
இணைப்புகள், இணைப்புப் பொருள்கள், கருவிகள்:
ஆகியவற்றையும் மற்றும் பிற மேம்பாட்டு பணிகளையும்
பொறுத்த அளவில் இருபத்தைந்து லட்சம் ரூபாய்க்கு;
அல்லது
(௦) தற்போது செய்யப்பட்டு வருகின்ற
பணிகளுக்கோ முன்பு பயன்பாட்டில் இருந்து வந்த
பணிகளுக்கோ, செய்யப்படும் விரிவாக்கங்கள், அளவுப்
பெருக்கங்கள், கூடுதல் சேர்க்கைகள் உள்ளிட்ட புதிய
பணிகளைப் பொறுத்த அளவில் இருபத்தைந்து லட்சம்
ரூபாய்க்கு,
செயல்திட்டங்கள், திட்டங்கள் அல்லது பிற
பணிகளின் செலவுத் தொகையானது மேற்படுமானால்
அல்லது பெரும்பாலும் மேற்படக்கூடுமானால், அரசின்
முன் ஒப்புதல், பெற்றிருந்தால் தவிர, வாறியமானது,
அத்தகைய செயல்திட்டம் அல்லது திட்டம் எதையும்
ஏற்றுக்கொள்ளுதலோ நிறைவேற்றுதலோ அல்லது
அதோடு தொடர்புடைய பிற பணிகள் எதையும்
மேற்கொள்ளுதலோ கூடாது.
(2) உட்பிரிவு (1)இல் என்ன
அடங்கியிருந்தபோதிலும், இவ்வாரியம், செயல் திட்டம்,
திட்டம் அல்லது பிற பணியின் செலவானது அரசினால்
அளிக்கப்படும் நிதிகளிலிருந்து செய்யப்படுவதானால்
அல்லது செய்யப்பட இருப்பதானால், அரசின் முன்:
அனுமதி இல்லாமல், அத்தகைய செயல்திட்டம் அல்லது
திட்டம் எதனையும் ஏற்றுக்கொளுதலோ, நிறைவேற்றி
வருதலோ கூடாது.
19
23. அரசு ஒரு சில ஒப்பந்தங்களை முடிவு செய்தல்.-
இந்தச் சட்டத்தில் எண்ன அடங்கியிருந்தபோதிலும், செயல்
திட்டம், திட்டம் அல்லது பிற பணி எதனையும்
நிறைவேற்றுவதற்கான அல்லது பொருட்கள் அல்லது
சரக்குகள் எவற்றையும் வழங்குவதற்கான ஏதேனும்
ஒப்பந்தம் ஒன்றின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு
மேற்படுகிறபோது, இந்த வாரியம், அத்தகைய
ஒப்பந்தத்தைப் பொறுத்த ஒப்பந்தப்புள்ளிகளைப் பெற்றதன்
பேரில், அந்த ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தையும் கருத்தில்
எடுத்துக்கொண்டதன் பேரில், அந்த ஒப்பந்தப்புள்ளிகள்
அனைத்தையும் அரசின் முன்பு வைத்தல் வேண்டும்; அரசு,
சூழ்நிலைகள் அனைத்தையும் கருத்தில்
எடுத்துக்கொண்டதன். பேரில், மிக்க நன்மை
பயக்கத்தக்கதாக தனக்குத் தோன்றுகிற ஒப்பந்தப்புள்ளி
எதற்கும் ஒப்புதலளிக்கலாம்; மற்றும் அதன் பேரில்,
இவ்வாரியம் அவ்வாறு அனுமதிக்கப்பட்ட
ஒப்பந்தப்புள்ளியை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
24. வசூலிக்கப்பட முடியாத தொகையினைத்
தள்ளுபடி செய்வதற்கான அதிகாரம்.- இவ்வாரியம், ஓர்
ஒப்பந்தத்தின்படியோ அல்லது மற்றபடியோ அதற்கு
கொடுக்கப்பவேண்டிய பெருந்தொகை எவ்வளவாக
இருந்தாலும் அந்தப் பெருந்தொகை எதையும் அல்லது
அதன் தொடர்பாகச் செலுத்தப்படவேண்டிய தொகை:
எதையும், தன் கருத்தின்படி அந்தப் பெருந்தொகையோ
அல்லது தொகையோ வசூலிக்கப்பட முடியாததாக
இருக்குமானால், அதைத் தள்ளுபடி செய்துவிடலாம்:
வரம்புரை: இவ்வாரியம், பத்தாயிரம் ரூபாய்க்கு
மேற்படுகின்ற பெருந்தொகை அல்லது தொகை எதையும்
தள்ளுபடி செய்வதற்கான முன்பு, அரசின் ஒப்பதலைப்
பெறுதல் வேண்டும்.
20
25. நிலுவைகளை வனூலித்தல்.- ஓர் ஓப்பந்தத்தின்.
வரையறைகளுக்கிணங்கிய வகையிலோ மற்றபடியோ
இவ்வாரியத்திற்குக் கொடுபட வேண்டிய பெருந்தொகை
எதுவும் அல்லது அதன் தொடர்பானச் செலுத்தப்பட
வேண்டிய தொகை: எதுவும் செலுத்தப்படாமல்:
இருக்குமானால், இவ்வாரியமானது, சட்டத்தால்
வகைசெய்யப்பட்டுள்ள பிற தீர்வழி எதற்கும் ஊறின்றி,
அந்தப் பெருந்தொகையை அல்லது தொகையை,
நிலவருவாய் நிலுவையைப் போன்று வசூலிக்கலாம்.
26. விவர வரைகளும் அறிக்கைகளும்-- (1)அரசு,
அவ்வப்போது கோரக்கூடிய விவர அறிக்கைகளையும்
விவர உரைகளையும், பனைப்பொருட்கள் தொழிலை
ஊக்குவிப்பதற்கும், வளர்ப்பதற்குமாகக் கருதப்பட்டுள்ள
அல்லது தற்போது இருந்து வருகின்ற செயல்திட்டம் எதன்
தொடர்பான விவரங்களை, வகுத்துரைக்கப்படும்
காலத்திலும், படிவத்திலும், முறையிலும் அல்லது அரசு
பணிக்கக்கூடிய வகையில், வாரியமானது, அரசிற்கு
அளித்து வருதல் வேண்டும்.
(2) உட்பிரிவு (1)இன் வகைமுறைகளுக்கு
ஊறின்றி, வாரியம் ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிற்குப்
பின்பும் எவ்வளவு விரைவில் இயலுமோ அவ்வளவு
விரைவில், முந்தைய நிதியாண்டின் போதான் அதன்:
நடவடிக்கைகள், கொள்கை, செயல்திட்டம் ஆகியவை
பற்றிய ஓர் உண்மையான மற்றும் முழுமையான
விவரத்தை அளிக்கின்ற ஓர் அறிக்கையினை
வகுத்துரைக்கப்படும் படிவத்திலும், தேதிக்கு முன்பும்
அரசிற்கு அளித்தல் வேண்டும்.
(3) உட்பிரிவு (1) இன்படி இவ்வாரியத்தால்
அரசிற்கு அளிக்கப்பட்ட விவர அறிக்கைகள்,
விவரவுரைகள், விவரங்கள் ஆகியவை அனைத்தும்,
21
அவை அவ்வாறு அளிக்கப்பட்ட பின்பு, எவ்வளவு
விரைவில் இயலுமோ அவ்வளவு விரைவில், சட்டமன்றப்
பேரவையின் முன்னர் வைக்கப்படுதல் வேண்டும்.
அத்தியாயம் - V
பல்வகை
27. வாறியத்தைக் கலைத்தல்.- (1) எந்தக்
காலத்திலேனும், அரசானது,
(ஐ இந்தச் சட்டத்தின் மூலமாகவோ அல்லது
கடமைகளை ஆற்றி வருவதில் அல்லது அதன்.
செயற்பணிகளைப் புரிந்து வருவதில் இவ்வாரியம்
நியாயமான காரணமோ அல்லது விளக்கமோ இன்றி,
தவறியுள்ளது என்றோ அல்லது அதன்.
அதிகாரங்களை மீறிச் செயல்பட்டுள்ளது என்றோ,
அல்லது தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்றோ,
அல்லது
(௦) இந்தச் சட்டத்தின்படியான அதன்.
கடமைகளை ஆற்றி வருவதற்கோ அதன்.
செயற்பணிகளைப் புரிந்து வருவதற்கோ இயலாத
நிலைக்கு இவ்வாரியம் உள்ளாக்கப்பட்டுள்ளது
அல்லது உள்ளாக்கப்படக்கூடும் என்கிற அளவிற்கு
சூழ்நிலைகள் எழுந்துள்ளன என்றோ, அல்லது
(6) இவ்வாரியத்தினைக் கலைப்பது என்பது,
மற்றபடி உகந்ததாகவோ அல்லது
தேவையானதாகவோ இருக்கின்றதென்றோ,
தெளிவுறக் காணுமானால்,
அரசானது, அறிவிக்கையின் வாயிலாக ஓராண்டிற்கு
மேற்படாமல் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படக்கூடிய
காலஅளவிற்கு இவ்வாரியத்தைக் கலைத்துவிடலாம்;
மற்றும் அவ்வாறு கலைக்கப்பட்ட காலஅளவின் போது,
22
இவ்வாரியத்தின் கடமைகளையும் அதிகாரங்களையும்
செயற்பணிகளையும் அந்த அறிக்கையில்
குறித்துரைக்கப்படும். நபராலோ அல்லது
அதிகாரஅமைப்பாலோ ஆற்றி வரப்படுதலும், செலுத்தி
வரப்படுதலும், புரிந்து வரப்படுதலும் வேண்டும் என்று
விளம்பலாம்:
வரம்புரை: அரசானது, இவ்வாரியத்தினைக்
கலைப்பதற்கு முன்பு, எடுக்கக் கருதப்பட்டுள்ள
நடவடிக்கைக்கு எதிராகக் காரணம் காட்டுவதற்கு
நியாயமானதொரு வாய்ப்பினை (வாரியத்திற்கு) வழங்குதல்
வேண்டும்.
(2) அரசானது, கலைக்கப்பட்ட காலஅளவு
முடிவடைவதற்கு முன்பு, பிரிவு 3 இன்
வகைமுறைகளுக்கு இணங்கிய வகையில்,
இவ்வாரியத்தை மாற்றியமைத்தல் வேண்டும்.
(3) அரசானது, இந்தப் பிரிவின்.
வகைமுறைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகத்
தனக்குத் தேவையானது எனத் தோன்றக்கூடிய
இடைவிளைவான மற்றும் பின்விளைவான
வகைமுறைகளை, இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகையில்
அரசானது ஆணையின் வாயிலாகச் செய்து கொள்ளலாம்.
(4) அரசால் இந்தப் பிரிவிண்படி வெளியிடப்பட்ட
அறிவிக்கை அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை எதுவும்,
உரிமைவழக்கு நீதிமன்றம் எதிலும் எதிர்க்கப்படுதல்
கூடாது.
(5) இவ்வாரியமானது, உட்பிரிவு (1) இன்படி
கலைக்கப்படுவதன் பேரில்,-
23
() இவ்வாரியத்திடம் அமைந்துள்ள நிதி
மற்றும் பிற சொத்துக்கள் அனைத்தும்,
அரசிடம் அமைந்திருத்தல் வேண்டும்;
மற்றும்
(i) இவ்வாரியத்தினால் அல்லது
இவ்வாரியத்திற்கு எதிராகச் சட்டப்படியாக
நிகழ்நிலையிலிருக்கின்றவையும்
சட்டப்படி செயற்படுத்தப்படக்
கூடியவையுமான (ஏதேனும் ஒப்பந்தத்தின்.
படியான, கடமைகள் உள்ளிட்ட)
உரிமைகள், கடமைப் பொறுப்புகள் மற்றும்
கடப்பாடுகள் அனைத்தும், அரசின்.
உரிமைகளாகவும், பொறுப்புகளாகவும்,
கடப்பாடுகளாகவும் ஆதல் வேண்டும்.
28. ஆண்டுச் செயல்திட்டங்களையும், நிறுவனப்
பணியாளர் பட்டியல்களையும் தயாரித்து அளித்தல்.- (1)
ஒவ்வோர் ஆண்டிலும், இதன்பொருட்டு அரசால்
நிர்ணயிக்கப்படக்கூடிய தேதியன்று அல்லது அதற்கு
முன்பே, இவ்வாரியமானது, வகுத்துரைக்கப்படும்
படிவத்தில், பின்வருவனவற்றைத் தயாரித்து அரசிற்கு
அனுப்பி வைத்தல் வேண்டும், அதாவது,
(8) பனைப்பொருட்கள் தொழிலை
ஊக்குவிப்பதற்கான ஒரு செயல்திட்டம்; மற்றும்
(௦) ஏற்கெனவே பணியில் அமர்த்தப்பட்டுள்ள
மற்றும் அடுத்த ஆண்டின் போது பணியில்
அமர்த்தப்படவுள்ள அலுவலர்கள், பணியாளர்கள்
ஆகியோரின் தொகுப்புப் பட்டியல்.
24
(2) பனைப்பொருட்கள் தொழிலை
ஊக்குவிப்பதற்கான செயல்திட்டத்தில் பின்வருவன
உள்ளடங்கியிருத்தல் வேண்டும்,-
(@) அடுத்த ஆண்டின்போது, பகுதிஅளவிலோ
அல்லது முழுமையாகவோ இவ்வாரியம் நிறைவேற்றக்
கருதியுள்ள செயல்திட்டம் பற்றிய விவரங்கள்;
(b) இவ்வாரியமானது, இந்தச்
சட்டத்தின்படியான அதன் செயற்பணிகளைப் புரிகின்ற
நோக்கத்திற்காக, அடுத்த ஆண்டின்போது, அது
நிறைவேற்றக் கருதியுள்ள பணி எதனையும் பற்றிய
அல்லது அது அமைத்துருவாக்கக் கருதியுள்ள நிறுவனம்:
எதனையும் பற்றிய விவரங்கள்;
(6) வகுத்துரைக்கப்படும் பிற விவரங்கள்.
(3) அரசானது, உட்பிரிவு (1)இன்படி தனக்கு
அனுப்பப்பட்ட செயல்திட்டத்தையும், அலுவலர்கள் மற்றும்
பணியாளர்களின் தொகுப்புப்பட்டியலையும், தான்:
பொருத்தமானது எனக் கருதக்கூடிய மாற்றங்களுடன்
ஏற்று, அவற்றிற்கு ஒப்புதல் வழங்கலாம்.
(4) இவ்வாரியமானது, பனைப்பொருட்கள்
தொழிலை ஊக்குவிப்பதற்காக ஒரு துணை வரவு-
செலவுத் திட்டத்தினையும் துணைச்
செயல்திட்டத்தினையும் வகுத்துரைக்கப்படும்
படிவத்திலும், தேதிக்கு முன்பும் அரசின் ஒப்புதலுக்காக.
அனுப்பி வைக்கலாம்; மற்றும் முறையே பிரிவு 18இன் (1)
முதல் (3) வரையிலான உட்பிரிவுகளின் வகைமுறைகள்,
அந்தத் துணை வரவு செலவுத் திட்டத்திற்கும்
செயல்திட்டத்திற்கும் பொருந்துதல் வேண்டும்.
25
29. வாரியத்தின் உறுப்பினர்கள், அலுவலர்கள், பிற
பணியாளர்கள் ஆகியோர் பொதுப் பணியாளர்களாக
இருப்பர்.- இவ்வாரியத்தின். உறுப்பினர்களையும்,
அலுவலர்களையும், பிற பணியாளர்களையும், இந்தியத்
தண்டனைத் கதொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம்
XLV/1860) பிரிவு 21இன் பொருளின்படி பொதுப்
பணியாளர்களாகக் கருதுதல் வேண்டும்.
30. நல்லெண்ணத்துடன் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு-- (1) இந்தச் சட்டத்தினைத்
தொடர்ந்து, நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டுள்ள
அல்லது செய்யக் கருதப்பட்டுள்ள எதற்காகவும்
இவ்வாரியத்தின் தலைவர், துணைத் தலைவர், தலைமைச்
செயல் அலுவலர் அல்லது பிற உறுப்பினர் எவருக்கும்
அல்லது இவ்வாரியத்தில் பணியில் உள்ள நபர் எவருக்கும்
எதிராக உரிமையியல் வழக்கோ, குற்றவியல் வழக்கோ
அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவுமோ
தொடுக்கப்படுதல் கூடாது.
(2) இந்தச் சட்டத்தில் வெளிப்படையாக மற்றபடி
வகைசெய்யப்பட்டுள்ளவாறு தவிர, இந்தச் சட்டத்தின்படி
நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டுள்ள அல்லது செய்யக்
கருதப்பட்டுள்ள எதனாலேனும் ஏற்படுத்தப்பட்ட சேதம்
அல்லது பெரும்பாலும் ஏற்படுத்தப்படக்கூடிய சேதம்
எதற்காகவும், இவ்வாரியத்திற்கு எதிராக உரிமையியல்
வழக்கோ அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவுமோ
தொடுக்கப்படுதல் கூடாது.
31. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.- (1)
அரசானது, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குச்
செயல்வடிவம் கொடுப்பதற்காக விதிகளைச் செய்யலாம்.
(2) குறிப்பாகவும், மேற்சொன்ன அதிகாரத்தின்.
பொதுத் தண்மைக்கு ஊறின்றியும், அந்த விதிகளானவை,
26
பின்வருகின்ற விவரங்கள் அனைத்திற்கும் அல்லது
அவற்றில் ஏதொன்றிற்கும் வகைசெய்யலாம், அதாவது:-
(ஐ இவ்வாரியத்தின். அலுவலகம் எந்த
இடத்தில் அமைக்கப்படுதல் வேண்டும்;
(௦) இவ்வாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம்,
மற்றும் உறுப்பினர்களிடையே எழும் தற்காலிக
காலியிடங்களை நிரப்புகின்ற முறை மற்றும்
இவ்வாரியத்தின் துணைத் தலைவர், தலைமைச்
செயல்அலுவலர், அரசு அலுவலர் அல்லாதவர்களான பிற
உறுப்பினர்கள் ஆகியோருக்கு வழங்கப்படவேண்டிய
சம்பளங்கள் மற்றும் படிகள் மற்றும் அவர்கள் பெறக்கூடிய
பயண மற்றும் தினப் படிகள் உள்ளிட்ட, அவர்களின் பணி
வரையறைகள் மற்றும் நிபந்தனைகள்;
(6) இவ்வாரிய உறுப்பினர் பதவி வகிப்பதற்கான
தகுதிக்கேடுகள் மற்றும் தகுதிக்கேடு எதற்கும்
உட்பட்டவராக இருக்கின்ற அல்லது உட்பட்டவராக
ஆகின்ற அரசு அலுவலர் அல்லாத உறுப்பினர் ஒருவரை
நீக்குவதற்காகப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை;
(0) செயற்பணிகளைப் புரிந்து வருகையில்
இவ்வாரிய உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய
நடைமுறை;
(e) தலைமைச் செயல் அலுவலரால்
செலுத்தப்பட்டு வரவேண்டிய மற்றும் புரிந்து
வரப்படவேண்டிய அதிகாரங்களும் கடமைகளும்;
() வரவு-செலவுத் திட்டமும், துணை வரவு-
செலவுத் திட்டமும் எந்தத் தேதிக்குள்ளாகவும், எந்தப்
படிவத்திலும்,பிரிவு 18 இன்படியும், பிரிவு 28 இன் உட்பிரிவு
27
(4)இன்படியும் ஒவ்வோர் ஆண்டிலும் தயாரித்து அனுப்பி
வைக்கப்பட வேண்டும்;
(ஐ பனைப்பொருட்கள் தொழில் நிதியை
இவ்வாரியத்தின் உடைமையில் வைப்பதற்குப்
பிண்பற்றப்பட வேண்டிய நடைமுறை;
(h) பணம் கடன் வாங்குவதற்கும் மற்றும் கடன்
வழங்குவதற்கும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளும்,
கடைபிடிக்கப்பட வேண்டிய நிபந்தனைகளும்;
0) எந்த நிபந்தனைகளுக்குட்பட்டும் எந்த
முறையிலும் இவ்வாரியத்தாலோ அல்லது அதன்
சார்பாகவோ ஒப்பந்தங்கள் செய்துகொள்ளலாம்;
() இவ்வாரியத்தின் கணக்குகள் பிரிவு 20
இன்படி, எந்தப் படிவத்திலும், முறையிலும் பேணி
வரப்படுதல் வேண்டும் என்பது;
(k) எந்தப் படிவத்திலும், எந்த முறையிலும்
விவர அறிக்கைகள், அறிக்கைகள், அல்லது
விவரவுரைகள் பிரிவு 25 இன்படி அனுப்பப்படுதல்
வேண்டும் மற்றும்
() வகுத்துரைக்கப்படவேண்டிய அல்லது
வகுத்துரைக்கப்படக்கூடிய பிற விவரம் எதுவும்,
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது
பிறப்பிக்கப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட விதி அல்லது
ஆணை அல்லது அறிவிக்கை ஒவ்வொன்றும், அது
செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட அல்லது
வெளியிடப்பட்ட பின்பு, எவ்வளவு விரைவில் இயலுமோ
அவ்வளவு விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன்னர்
வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அவ்வாறு
வைக்கப்பட்ட கூட்டத்தொடரோ அல்லது அடுத்த கூட்டத்
28
தொடரோ முடிவடைவதற்கு முண்ணர் அந்த விதியிலோ
அல்லது ஆணையிலோ அல்லது அறிவிக்கையிலோ
மாற்றம் எதையேனும். அச்சட்டமன்றப் பேரவை
செய்யுமானால், அல்லது அந்த விதியோ அல்லது
ஆணையோ அல்லது அறிவிக்கையோ செய்யப்படுதலோ,
பிறப்பிக்கப்படுதலோ அல்லது வெளியிடப்படுதலோ கூடாது
என்று சட்டமன்றப் பேரவையானது முடிவு செய்யுமானால்,
அந்த விதியோ அல்லது ஆணையோ அல்லது
அறிவிக்கையோ, அதன் பின்பு நிகழ்விற்கேற்ப, அவ்வாறு
மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே
செயல்விளைவு பெறுதல் வேண்டும், அல்லது செயல்
விளைவு பெறாது போதல் வேண்டும்; எனினும், அத்தகைய
மாற்றம் அல்லது அழித்தறவு எதுவும், அந்த விதி அல்லது
ஆணை அல்லது அறிவிக்கையின்படி முன்பே
செய்யப்பட்ட எதனின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி
இருத்தல் வேண்டும்.
32. ஒழுங்குவிதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.-
1) இவ்வாரியம், இந்தச் சட்டத்தின்படியான செயல்
பணிகளைப் புரிந்துவர ஏதுவாக, இந்தச் சட்டத்திற்கும்
அதன்படி செய்யப்பட்ட விதிகளுக்கும் முரணாக இல்லாத
வகையில், அரசின் முன் அனுமதிடன், அறிவிக்கையின்
வாயிலாக ஒழுங்குவிதிகளைச் செய்யலாம்.
(2) குறிப்பாகவும், முன்சொன்ன அதிகாரத்தின்.
பொதுத்தன்மைக்கு ஊறின்றியும், அந்த ஒழுங்குமுறை
விதிகளானவை, பின்வருகின்ற விவரங்கள்
அனைத்திற்கும் அல்லது அவற்றில் யாதொன்றுக்கும்.
வகைசெய்யலாம், அதாவது:-
(ஐ தலைமைச் செயல்அலுவலர் அல்லாத
இவ்வாரியத்தின் பிற அலுவலர்கள் மற்றும்
பணியாளர்களின் அமர்த்தம் மற்றும் பணி வரையறைகள்
29
மற்றும் நிபந்தனைகள், சம்பள ஏற்றமுறை மற்றும் படிகள்
ஆகியவை குறித்து இந்தச் சட்டத்தின்.
நோக்கங்களுக்காக, அத்தகைய அலுவலர்களாலும்.
பணியாளர்களாலும். மேற்கொள்ளப்பட்ட பயணங்கள்.
தொடர்பான பயண மற்றும் தினப்படிகள் உள்ளிட்டவை ;
(௦) இவ்வாரியக் கூட்டங்கள் நடத்தப்பட
வேண்டிய காலம் மற்றும் இடம், அந்தக் கூட்டங்கள்
அலுவல் நடத்துவது தொடர்பாகப் பின்பற்றப்பட வேண்டிய
நடைமுறை மற்றும் ஒரு கூட்டத்தில் அந்த அலுவல்
நடத்துவதற்கு தேவையான குறைவெண் வரம்பு;
(௦) இவ்வாரியத்தின். நிலையான நிதிக்
குழுவிற்கு அல்லது தலைமைச் செயல் அலுவலருக்கு
அல்லது பிற பணியாளர் எவருக்கேனும்
அதிகாரங்களையும், கடமைகளையும் ஒப்படைவு செய்தல்;
(0) இவ்வாரியக் கூட்டங்களின் நிகழ்ச்சிக்
குறிப்புகளைப் பேணிவருதல், மற்றும் அதன் படிகளை
அரசிற்கு அனுப்பி வைத்தல்;
(6) இவ்வாரியத்தின் சார்பாக எந்த நபர்களால்
மற்றும் எந்த முறையில் பணச் செலுத்தங்கள், வைப்பீடுகள்:
மற்றும் முதலீடுகள் செய்யப்படலாம்;
) இவ்வாரியத்தின் நடப்புச் செலவிற்குத்
தேவைப்படக்கூடிய தொகைகளின் பாதுகாப்பு மற்றும்.
அவ்வாறு தேவைப்படாத தொகைகளை முதலீடு செய்தல்;
(ஐ கணக்குகளைப் பேணிவருதல்.
(3) அரசானது, அறிவிக்கையின். வாயிலாக
இந்தப் பிரிவின்படி செய்யப்பட்ட ஒழுங்குவிதி எதையும்,
அறவு செய்யலாம் மற்றும் அதன் பேரில், அந்த
30
ஒழுங்குமுறைவிதி நடைமுறையில் இருப்பது முடிவுற்றுப்
போதல் வேண்டும்.
33. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.-
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குச் செயல்வடிவம்
கொடுப்பதில் இடர்ப்பாடு எதுவும் எழுமேயானால், அரசானது
தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஓர் ஆணையின்
வாயிலாக அந்த இடர்ப்பாட்டினை நீக்குவதற்குத்
தேவையானது என்றோ அல்லது உகந்தது என்றோ
தனக்குத் தோன்றுகின்ற வகைமுறைகளை இந்தச்
சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத
வகையில் செய்து கொள்ளலாம்:
வரம்புரை: அத்தகைய ஆணை எதுவும், இந்தச்
சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து இரண்டாண்டுக்
காலஅளவு முடிவடைந்த பின்பு செயல்படுதல் கூடாது.
34. தமிழ்நாடு சட்டம் 181959 பொருந்தாது, 1959
ஆம் ஆண்டு தமிழ்நாடு கதர்-கிராமத் தொழில் வாரியச்
சட்டமானது, (தமிழ்நாடு சட்டம் 181959) பிரிவு 3இன்
உட்பிரிவு (1)இன்படி அரசால் அறிவிக்கையின்.
வாயிலாகக் குறிக்கப்பட்ட தேதியிலிருந்தும் அது
முதற்கொண்டும், பனைப் பொருட்கள் தொழிலைப்
பொறுத்த அளவில் பொருந்துவது என்பது முடிவுற்றுப்
போதல் வேண்டும்.
35. பிற சட்டங்களின் செயற்பாடு பாதிக்கப்படாது
என்பது.- பிரிவு 34 பிறவாறு வகைசெய்யப்பட்டிருந்தால்
தவிர, இந்தச் சட்டத்தின் வகைமுறைகள்,
பனைப்பொருட்கள் தொழில் தொடர்பான அப்போதைக்கு
நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதற்கும் கூடுதலாக
இருக்குமே அன்றி, அதைக் குன்றச் செய்வதாக
இருக்காது.