Tamil Nadu · 1966 · Act 25

THE TAMILNADU ANCIENT AND HISTORICAL MONUMENTS AND ARCHAEOLOGICAL SITES AND REMAINS ACT,1966

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1966 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தொன்மையான மற்றும்‌ வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்‌ சின்னங்கள்‌, தொல்பொருள்‌ ஆய்விடங்கள்‌ மற்றும்‌ சிதைவுகள்‌ சட்டம்‌. (சட்ட எண்‌. 25/1966) பொருளடக்கம்‌. முன்னுரை. 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌. தொன்மையான நினைவுச்‌ சின்னங்கள்‌, தொல்பொருள்‌ ஆய்விடங்கள்‌ மற்றும்‌. சிதைவுகளைப்‌ பாதுகாத்தல்‌. 3. தொன்மையான நினைவுச்சின்னங்கள்‌ முதலியவற்றை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களாகவும்‌ பரப்பிடங்களாகவும்‌ விளம்புகை செய்வதற்கு அரசிற்குள்ள அதிகாரம்‌. பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னங்கள்‌. 4. பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னத்திற்குள்ள உரிமைகளைக்‌ கோருதல்‌. 5. பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை உடன்பாட்டின்‌ வாயிலாகப்‌ பேணிகாத்தல்‌. 6. ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்‌ தொடர்பாக, அதன்‌ உரிமையாளர்‌ இயலாமை நிலையில்‌ இருக்கும்போது அல்லது அது ஒரு கிராமச்‌ சொத்தாக இருக்கும்போது, 5 ஆம்‌ பிரிவின்கீழ்‌ உரிமையாளரின்‌ அதிகாரங்களைப்‌ பயன்படுத்தத்‌ தகுதிவாய்ந்த நபர்கள்‌. 7. பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்‌ ஒன்றைப்‌ பழுதுபார்ப்பதற்கு நிலைக்கொடையைப்‌ பயன்படுத்துதல்‌. ® . உடன்பாடு ஒன்றைச்‌ செய்துகொள்வதற்குத்‌ தவறுதல்‌ அல்லது மறுத்தல்‌. © 5 ஆம்‌ பிரிவின்படியான உடன்பாட்டை மீறுவதைத்‌ தடை செய்கிற ஆணையைப்‌ பிறப்பிப்பதற்கான அதிகாரம்‌. 10. உடன்பாடுகளைச்‌ செயற்படுத்துதல்‌. 11. குறித்தசில விற்பனைகளில்‌, விலைக்கு வாங்குபவர்களும்‌ உரிமையாளர்‌ மூலம்‌ உரிமைகோருகிற நபர்களும்‌, உரிமையாளரால்‌ எழுதிக்கொடுக்கப்பட்ட முறையாவணத்திற்குக்‌ கட்டுப்பட்டவர்களாவர்‌. 12. பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னங்களைக்‌ கையகப்படுத்துதல்‌. 13. குறித்தசில பாதுக்கப்பட்ட நினைவுச்‌ சின்னங்களைப்‌ பேணுதல்‌. 14. தம்விருப்பான பங்களிப்புகள்‌. 15. வழிபாட்டு இடம்‌ தவறாகப்‌ பயன்படுத்தப்படுவதிலிருந்துப்‌ பாதுகாத்தல்‌. 16. ஒரு நினைவுச்‌ சின்னத்தில்‌ அரசிற்குள்ள உரிமைகளைக்‌ கைவிட்டுவிடுதல்‌. 17. பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னங்களை அணுகுவதற்கான உரிமை. 18. 19. பாதுகாக்கப்பட்ட பரப்பிடங்கள்‌. பாதுகாக்கப்பட்ட பரப்பிடங்களின்‌ சொத்துரிமையைத்‌ துய்ப்பதற்கான கட்டுப்பாடுகள்‌. பாதுகாக்கப்பட்ட ஒரு பரப்பிடத்தைக்‌ கையகப்படுத்துவதற்கான அதிகாரம்‌. தொல்பொருளியல்‌ அகழாய்வுகள்‌. 20. பாதுகாக்கப்பட்ட பரப்பிடங்களில்‌ அகழாய்வுகள்‌. 21. பாதுகாக்கப்பட்ட பரப்பிடங்களாக இல்லாத பிற பரப்பிடங்களில்‌ அகழாய்வுகள்‌. 22. அகழாய்வு நடவடிக்கைகளின்‌ போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள்கள்‌ முதலியவற்றைக்‌ கட்டாயமாக விலைக்கு வாங்குதல்‌. 23. தொல்பொருளாய்வு நோக்கங்களுக்கான அகழாய்வுகள்‌ முதலியன. தொல்பொருள்களுக்குப்‌ பாதுகாப்பு. 24. தொல்பொருள்கள்‌ அகற்றப்படுவதைக்‌ கட்டுப்பாடு செய்வதற்கு அரசிற்குள்ள அதிகாரம்‌. 25. தொல்பொருள்கள்‌ அரசால்‌ வாங்கப்படுதல்‌. சரியீட்டு நெறிமுறைகள்‌. 26. இழப்பு அல்லது சேதத்திற்கான சரியீடு. 27. சந்தைவிலை மதிப்பை அல்லது சரியீட்டை மதிப்பிடுதல்‌. பல்வகை. 28. அரசால்‌ அதிகார ஒப்படைவு செய்யப்படுதல்‌. 29. தண்டத்தொகைகள்‌. 30. 31. குற்றவியல்‌ நீதிமன்றங்களின்‌ அதிகாரவரம்பு. குறித்தசில குற்றச்செயல்கள்‌ கைது செய்தற்குழியன. 32. அபராதம்‌ குறித்த சிறப்பு வகைமுறை. 33. நிறுமங்களால்‌ செய்யப்படும்‌ குற்றங்கள்‌. 34. அரசிற்குக்‌ கொடுபட வேண்டிய தொகைகளை வனகுலித்தல்‌. 35. 36. 37. 38. 39 40, தொன்மையான நினைவுச்‌ சின்னங்கள்‌, முதலியன, இனி பாதுகாக்கப்பட வேண்டிய தேவையில்லை. தவறுகள்‌ முதலியவற்றைத்‌ திருத்துவதற்கான அதிகாரம்‌. இந்தச்‌ சட்டத்தின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப்‌ பாதுகாப்பு. விதிகளை வகுப்பதற்கான அதிகாரம்‌. . விதிகளை வெளியிடுதல்‌, விதிகள்‌ மற்றும்‌ அறிவிக்கைகளின்‌ தொடக்கம்‌ மற்றும்‌ விதிகள்‌ மற்றும்‌ அறிவிக்கைகள்‌ சட்டமன்றத்தின்‌ முன்பு வைக்கப்படுதல்‌. . நீக்கறவுகளும்‌ காப்புரைகளும்‌. 1966 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தொன்மையான மற்றும்‌ வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்‌ சின்னங்கள்‌, தொல்பொருள்‌ ஆய்விடங்கள்‌ மற்றும்‌ சிதைவுகள்‌ சட்டம்‌. (சட்ட எண்‌. 25/1966) தேசிய முக்கியத்துவம்‌ வாய்ந்த தொன்மையான மற்றும்‌ வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னங்கள்‌, தொல்பொருள்‌ ஆய்விடங்கள்‌ மற்றும்‌ சிதைவுகளைப்‌ பேணிக்காப்பதற்கும்‌, தொல்பொருள்‌ அகழாய்வுகளை ஒழுங்குபடுத்துவதற்கும்‌, சிற்பங்கள்‌, செதுக்குவேலைகள்‌ மற்றும்‌ அதையொத்த பிற பொருள்களைப்‌ பாதுகாப்பதற்கும்‌ வகை செய்வதற்கானதொரு சட்டம்‌. இந்தியக்‌ குடியரசின்‌ பதினேழாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையினால்‌ பின்வருமாறு சட்டம்‌ இயற்றப்படுவதாகுக:- முன்னுரை. 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 1966 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தொன்மையான மற்றும்‌ வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னங்கள்‌, தொல்பொருள்‌ ஆய்விடங்கள்‌ மற்றும்‌ சிதைவுகள்‌ சட்டம்‌ என வழங்கப்படும்‌. (2) இது, தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதும்‌ அளாவி நிற்கும்‌. (3) இது, மாநில அரசு, அறிவிக்கையின்‌ வாயிலாகக்‌ குறித்திடலாகும்‌ அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌ தறுவாய்‌ வேறுபொருள்‌ குறித்தாலன்றி,- (ஐ "தொன்மையான நினைவுச்சின்னம்‌" என்பது, வரலாற்று சிறப்புமிக்க, தொல்பொருள்‌ ஆய்வு அல்லது கலையியல்‌ சிறப்பு வாய்ந்ததும்‌ ஒரு நூற்றாண்டுக்குக்‌ குறையாமல்‌ இருந்து வந்திருப்பதுமான கட்டமைப்பு, கட்டுமானம்‌ அல்லது நினைவுச்சின்னம்‌ அல்லது எந்தவொரு மண்மேடு அல்லது புதைக்குழி இடம்‌ அல்லது குகை, பாறைச்‌ சிற்பம்‌, கல்வெட்டு அல்லது ஒற்றைக்கல்‌ எதுவும்‌ என்று பொருள்படும்‌; மேலும்‌ இதில்‌,- (i) தொன்மையான நினைவுச்சின்னம்‌ ஒன்றின்‌ சிதைவுகள்‌, (il) தொன்மையான நினைவுச்சின்னம்‌ ஒன்றின்‌ இடம்‌, (i) தொன்மையான நினைவுச்சின்னம்‌ ஒன்றை அடுத்துள்ள நிலத்தில்‌ அத்தகைய நினைவுச்‌ சின்னத்திற்கு வேலியிடுவதற்கு அல்லது அதனைக்‌ காப்பிடூுவதற்கு அல்லது பிறவாறு பேணிக்காப்பதற்கு வேண்டுறுத்தப்படலாகிற அத்தகைய நிலப்‌ பகுதி, (iv) தொன்மையான நினைவுச்சின்னம்‌ ஒன்றை அணுகுவதற்கும்‌ அதனை வசதியாகப்‌ பார்வையிடுவதற்குமான வழி, ஆகியனவும்‌ உள்ளடங்கும்‌. ஆனால்‌, நாடாளுமன்றத்தால்‌ இயற்றப்பட்ட சட்டத்தினால்‌ அல்லது சட்டத்தின்படி தேசிய முக்கியத்துவம்‌ வாய்ந்ததாக விளம்புகை செய்யப்பட்ட தொன்மையான அல்லது வரலாற்று சிறப்புமிக்க சின்னம்‌ எதனையும்‌ இது உள்ளடக்காது; (b) "தொல்பொருள்‌" என்பது, நூற்றாண்டுகளுக்குக்‌ குறையாமல்‌ இருந்து வந்திருக்கும்‌.- (i) நாணயம்‌, சிற்பம்‌, கையெழுத்துப்பிரதி, கல்வெட்டு அல்லது பிற கலை அல்லது கைவினைத்திறன்‌ வேலைப்பாடு எதனையும்‌, (i) கட்டடம்‌ அல்லது குகை ஒன்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட உருப்படி, பொருள்‌ அல்லது சாதனம்‌ எதனையும்‌, 0) பண்டைய காலத்து அறிவியல்‌, கலை, கைத்தொழில்‌, இலக்கியம்‌, சமயம்‌, மரபு வழக்கங்கள்‌, ஒழுக்கநெறி, அல்லது அரசியலை எடுத்துக்காட்டக்கூடிய உருப்படி, பொருள்‌ அல்லது சாதனம்‌ எதனையும்‌. (iv) வாலாற்றுச்‌ சிறப்பு வாய்ந்த உருப்படி, பொருள்‌ அல்லது சாதனம்‌ எதனையும்‌, (V) இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, அரசால்‌ அறிவிக்கை மூலம்‌ தொல்பொருள்‌ என விளம்புகை செய்யப்பட்ட உருப்படி, பொருள்‌ அல்லது சாதனம்‌ எதனையும்‌, உள்ளடக்கும்‌. (29) "தொல்பொருளாய்வு அலுவலர்‌" என்பது, இந்தச்‌ சட்டத்தின்‌. நோக்கங்களுக்காக, அறிவிக்கையில்‌ குறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய அத்தகைய பரப்பிடத்திற்கு, அரசால்‌ அறிவிக்கை மூலம்‌ நியமிக்கப்பட்ட அலுவலர்‌ எவரும்‌ என்று பொருள்படும்‌; (d) "தொல்பொருள்‌ ஆய்விடம்‌ மற்றும்‌ சிதைவுகள்‌" என்பது, ஒரு நூற்றாண்டுக்குக்‌ குறையாமல்‌ இருந்து வந்திருக்கின்ற, வரலாற்று சிறப்புமிக்க அல்லது தொல்பொருளாய்வு முக்கியத்துவம்‌ வாய்ந்த அழிபாடுகள்‌ அல்லது எச்சக்‌ கூறுகளைக்‌ கொண்டுள்ள அல்லது கொண்டுள்ளதாக தகுமான அளவில்‌ நம்பப்படுகிற பரப்பிடம்‌ எதுவும்‌ என்று பொருள்படும்‌; மற்றும்‌ (i) அந்தப்‌ பரப்பிடத்திற்கு வேலியிடுவதற்கு அல்லது அதனைக்‌ காப்பிடுவதற்கு அல்லது பிறவாறு பேணிக்காப்பதற்கு வேண்டுறுத்தப்படலாகிற அதனை அடுத்துள்ள நிலத்தின்‌ அத்தகைய பகுதி, மற்றும்‌ (1) அந்தப்‌ பரப்பிடம்‌ ஒன்றை அணுகுவதற்கும்‌, அதனை வசதியாகப்‌ பார்வையிடுவதற்குமாகிய வழியையும்‌ உள்ளடக்கும்‌. ஆனால்‌, நாடாளுமன்றத்தால்‌ இயற்றப்பட்ட சட்டத்தினால்‌ அல்லது சட்டத்தின்படி தேசிய முக்கியத்துவம்‌ வாய்ந்ததாக விளம்புகை செய்யப்பட்ட தொல்பொருள்‌ ஆய்விடம்‌ மற்றும்‌ சிதைவுகள்‌ எதனையும்‌ இது உள்ளடக்காது; (e) "இயக்குநர்‌" என்பது, தொல்பொருளாய்வு இயக்குநர்‌ என்று பொருள்படும்‌; மேலும்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ இயக்குநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப்‌ பயன்படுத்தவும்‌, அவர்‌ மீது சுமத்தப்பட்ட கடமைகளை நிறைவேற்றவும்‌ அரசால்‌ அறிவிக்கை மூலம்‌ அதிகாரமளிக்கப்பட்டுள்ள அலுவலர்‌ எவரையும்‌ உள்ளடக்கும்‌; (f) " அரசு" என்பது, மாநில அரசு என்று பொருள்படும்‌; (9) "பேணுதல்‌" என்பது, அதன்‌ இலக்கண வேறுபாடுகளுடனும்‌ அதன்‌ குடும்பத்தைச்‌ சேர்ந்த சொற்றொடர்களுடனும்‌, பாதுகாக்கப்பட்ட ஒரு நினைவுச்‌ சின்னம்‌ ஒன்றிற்கு வேலியிடுதல்‌, காப்பிடுதல்‌, அதைப்‌ பழுதுபார்த்தல்‌, புதுப்பித்தல்‌, தூய்மைச்செய்தல்‌ ஆகியவற்றை உள்ளடக்கும்‌; மற்றும்‌ பாதுகாக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னத்தைப்‌ பேணிப்பாதுகாக்கிற அல்லது அதை வசதியாக அணுகுவதற்கு வழி செய்கிற நோக்கத்திற்காக, தேவைப்படும்‌ செயல்‌ எதனையும்‌ செய்வதையும்‌ உள்ளடக்கும்‌: (h) "உரிமையாளர்‌" என்பது- () தம்‌ சார்பாகவும்‌, பிற கூட்டு உரிமையாளர்கள்‌ சார்பாகவும்‌ மேலாண்மை அதிகாரங்கள்‌ அளிக்கப்பட்டுள்ள ஒரு கூட்டு உரிமையாளரையும்‌ அத்தகைய உரிமையாளர்‌ எவரின்‌ உரிமை மூலப்‌ பின்னவரையும்‌, (i) மேலாண்மை அதிகாரங்களைச்‌ செலுத்துகிற மேலாளர்‌ அல்லது பொறுப்புக்கட்டளையர்‌ எவரையும்‌, அத்தகைய மேலாளர்‌ அல்லது பொறுப்புக்‌ கட்டளையர்‌ எவரின்‌ பதவியில்‌ பிண்ணவரையும்‌ உள்ளடக்கும்‌: (i) "பாதுகாக்கப்பட்ட பரப்பிடம்‌" என்பது, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பாதுகாக்கப்பட்ட பரப்பிடமாக விளம்புகை செய்யப்பட்டுள்ள தொல்பொருள்‌ ஆய்விடம்‌ மற்றும்‌ சிதைவுகள்‌ எவையும்‌ என்று பொருள்படும்‌; (J) "பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்‌" என்பது, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக விளம்புகை செய்யப்பட்டுள்ள தொன்மையான நினைவுச்சின்னம்‌ எதுவும்‌ என்று பொருள்படும்‌. தொன்மையான நினைவுச்‌ சின்னங்கள்‌, தொல்பொருள்‌ ஆய்விடங்கள்‌ மற்றும்‌ சிதைவுகளைப்‌ பாதுகாத்தல்‌. 3. தொன்மையான நினைவுச்சி னங்கள்‌ முதலியவற்றை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களாகவும்‌ பரப்பிடங்களாகவும்‌ விளம்புகை செய்வதற்கு அரசிற்குள்ள அதிகாரம்‌.-- (1) தொன்மையான நினைவுச்சின்னம்‌ அல்லது தொல்பொருள்‌ ஆய்விடங்கள்‌ மற்றும்‌ சிதைவுகள்‌ எதற்கும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று அரசு கருதினால்‌, அத்தகைய தொன்மையான நினைவுச்சின்னம்‌ அல்லது தொல்பொருள்‌ ஆய்விடங்கள்‌ மற்றும்‌ சிதைவுகளை, நேர்விற்கேற்ப, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகவோ அல்லது பாதுகாக்கப்பட்ட பரப்பிடமாகவோ விளம்புவதற்கு தனக்குள்ள உட்கருத்துக்‌ குறித்து, அவர்கள்‌ அறிவிக்கை மூலம்‌ இரண்டு மாதக்‌ கால அறிவிப்புக்‌ கொடுக்கலாம்‌ மேலும்‌, அத்தகைய ஒவ்வொரு அறிவிக்கையின்‌ நகலும்‌, நேர்விற்கேற்ப அந்த நினைவுச்சின்னம்‌ அல்லது தொல்பொருள்‌ ஆய்விடங்கள்‌ மற்றும்‌ சிதைவுகளுக்கு அருகிலுள்ள எடுப்பானதோர்‌ இடத்தில்‌ ஒட்டப்படுதல்‌ வேண்டும்‌. (2) அத்தகைய தொன்மையான நினைவுச்சின்னம்‌ அல்லது தொல்பொருள்‌ ஆய்விடம்‌ மற்றும்‌ சிதைவுகள்‌ எதிலும்‌ உரித்தமுடைய நபர்‌ எவரும்‌, அந்த அறிவிக்கைப்‌ பிறப்பிக்கப்பட்ட பின்பு இரண்டு மாதத்திற்குள்‌, அந்த நினைவுச்சின்னம்‌ அல்லது தொல்பொருள்‌ ஆய்விடம்‌ மற்றும்‌ சிதைவுகள்‌, நேர்விற்கேற்ப, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகவோ அல்லது பாதுகாக்கப்பட்ட பரப்பிடமாகவோ விளம்பப்படுவதை மறுக்கலாம்‌. (3) கூறப்பட்ட இரண்டு மாதக்‌ காலஅளவு கழிவுற்றதன்பேரில்‌, அவர்களால்‌ பெறப்பட்ட மறுப்புரைகள்‌ எவையேனும்‌ இருப்பின்‌, அரசானது, அவற்றை ஓஜர்வு செய்த பின்பு, அந்தத்‌ தொன்மையான நினைவுச்சின்னம்‌ அல்லது நேர்வுக்கேற்ப, தொல்பொருள்‌ ஆய்விடம்‌ மற்றும்‌ சிதைவுகள்‌, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகவோ அல்லது பாதுகாக்கப்பட்ட பரப்பிடமாகவோ அறிவிக்கை மூலமாக வாயிலாக விளம்பலாம்‌. (4) (3) ஆம்‌ உட்பிரிவின்படி வெளியிடப்பட்ட ஓர்‌ அறிவிக்கையானது, அவை விலக்கிக்கொள்ளப்பட்டாலன்றியும்‌ விலக்கிக்கொள்ளப்படுகிறவரையிலும்‌, அது எந்தத்‌ தொன்மையான நினைவுச்சின்னம்‌ அல்லது தொல்பொருள்‌ ஆய்விடம்‌ மற்றும்‌ சிதைவுகளுடன்‌ தொடர்புடையதாயிருக்கிறதோ, அந்தத்‌ தொன்மையான நினைவுச்சின்னம்‌ அல்லது தொல்பொருள்‌ ஆய்விடம்‌ மற்றும்‌ சிதைவுகள்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்‌ அல்லது பாதுகாக்கப்பட்ட பரப்பிடம்‌ என்னும்‌ பொருண்மைக்கு அறுதியான சான்றாகும்‌. பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னங்கள்‌. 4. பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னத்திற்குள்ள உரிமைகளைக்‌ கோருதல்‌.-- (1) இயக்குநர்‌, அரசின்‌ ஒப்பளிப்புடன்‌ பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னம்‌ எதையும்‌ விலைக்கு வாங்கலாம்‌, குத்தகைக்கு எடுக்கலாம்‌ அல்லது கொடையாக அல்லது உயில்‌ வழிக்கொடையாக ஏற்றுக்கொள்ளலாம்‌. (2) பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னம்‌ ஒன்றிற்கு உரிமையாளர்‌ ஒருவர்‌ இல்லாதிருக்குமிடத்து, இயக்குநர்‌, அறிவிக்கை வாயிலாக, அந்த நினைவுச்‌ சின்னத்தின்‌ காப்பாண்மையை மேற்கொள்ளலாம்‌. (3) பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னம்‌ எதனின்‌ உரிமையாளர்‌, எழுத்து வடிவிலான முறையாவணத்தின்‌ வாயிலாக, இயக்குநரை அந்த நினைவுச்‌ சின்னத்தின்‌ காப்பாளராக அமர்த்தலாம்‌ மற்றும்‌ இயக்குநர்‌ அரசின்‌ ஒப்பளிப்புடன்‌, அத்தகைய காப்பாண்‌ மையை ஏற்றுக்‌ கொள்ளலாம்‌. (4) (3) ஆம்‌ உட்பிரிவின்படியான நினைவுச்‌ சின்னம்‌ ஒன்றின்‌ காப்பாண்‌்மையை இயக்குநர்‌ ஏற்றுக்கொண்டிருக்கும்போது, உரிமையாளர்‌ இந்தச்‌ சட்டத்தில்‌ வெளிப்படையாக வகைசெய்யப்பட்டுள்ளவாறு தவிர, அந்த நினைவுச்சின்னத்திற்கு இயக்குநர்‌ ஒரு காப்பாளராக அமர்த்தப்பட்டிராதது போன்றே, அதிலுள்ளதும்‌ அதற்கானதுமான அதே சொத்துரிமையை, உரிமையை, உரிமை மூலத்தை மற்றும்‌ உரித்தத்தை உடையவராக இருப்பார்‌; மேலும்‌, 5 ஆம்‌ பிரிவின்படி எழுதிக்கொடுக்கப்பட்ட உடன்பாடுகளைப்‌ பொறுத்த இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌, (3) ஆம்‌ உட்பிரிவின்படி செய்துகொள்ளப்பட்ட எழுத்து வடிவிலான உடன்பாடுகளுக்குப்‌ பொருந்துதல்‌ வேண்டும்‌. (5) இந்தப்‌ பிரிவில்‌ உள்ள எதுவும்‌, பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னம்‌ எதுவும்‌ வழக்காற்றுச்‌ சமய முறைபாடுகளுக்குப்‌ பயன்படுத்தப்படுவதைப்‌ பாதித்தல்‌ ஆகாது. 5. பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னத்தை உடன்பாட்டின்‌ வாயிலாகப்‌ பேணிகாத்தல்‌.- (1) அரசால்‌ அவ்வாறு பணிக்கப்படும்‌ போது, இயக்குநர்‌, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்‌ ஒன்றின்‌. உரிமையாளரை, அந்த நினைவுச்சின்னத்தைப்‌ பேணிவருவதற்காக அரசுடன்‌ உடன்பாடு ஒன்றை குறித்துரைக்கப்பட்ட ஒரு காலஅளவிற்குள்‌ செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்‌. (2) இந்தப்‌ பிரிவின்படியான உடன்பாடு ஒன்று, பின்வரும்‌ பொருட்பாடுகள்‌ அனைத்திற்குமோ அல்லது அவற்றுள்‌ எவற்றிற்குமோ வகைசெய்யலாம்‌; அவையான,- (ஐ அந்த நினைவுச்சின்னத்தின்‌ பேணுகை: (b) அந்த நினைவுச்சின்னத்தை பாதுகாப்பில்‌ வைத்திருத்தலும்‌, அதைக்‌ காத்து நிற்பதற்காக அமர்த்தப்படலாகும்‌ நபர்‌ எவரின்‌ கடமைகளும்‌: @© நோக்கம்‌ எதற்காகவும்‌, நினைவுச்சின்னத்தைப்‌ பயன்படுத்துவதற்கு, (ii) நினைவுச்சின்னத்தில்‌ நுழைவதற்காக அல்லது பார்வையிடுவதற்காகக்‌ கட்டணம்‌ எதையும்‌ விதிப்பதற்கு, 0) நினைவுச்சின்னத்தை அழிப்பதற்கு அகற்றுவதற்கு, மாற்றியமைப்பதற்கு அல்லது உருக்குலைப்பதற்கு , அல்லது (iv) நினைவுச்சின்ன இடத்தின்‌ மீது அல்லது அதன்‌ அருகில்‌ கட்டடம்‌ கட்டுவதற்கு, உரிமையாளருக்கு உள்ள உரிமையின்‌ கட்டுப்பாடு: (0) பொதுமக்களுக்கு அல்லது அவர்களில்‌ எந்தப்‌ பிரிவினருக்கும்‌ அல்லது தொல்பொருள்‌ஆய்வு அலுவலர்களுக்கு அல்லது உரிமையாளரால்‌ அல்லது தொல்பொருள்‌ ஆய்வு அலுவலரால்‌ அல்லது அரசால்‌ அதிகாரமளிக்கப்பட்டுள்ள பிற அலுவலரால்‌ அல்லது அதிகாரஅமைப்பால்‌, அதிகாரமளித்து அனுப்பப்பட்டுள்ள நபர்களுக்கு, அந்த நினைவுச்‌ சின்னத்தைப்‌ பார்வையிடு வதற்காக அல்லது பேணிவருவதற்காக அனுமதிக்கப்பட வேண்டிய அணுகும்‌ வசதிகள்‌; (e) அந்த நினைவுச்சின்னமானது, எந்த நிலத்தில்‌ அமைந்திருக்கிறதோ அந்த நிலம்‌ அல்லது அதனை அடுத்துள்ள நிலம்‌ எதுவும்‌, உரிமையாளரால்‌ விற்பனை செய்ய முனையைப்படும்‌ நேர்வுகளில்‌, அரசிற்குக்‌ கொடுக்கப்பட வேண்டிய அறிவிப்பு, அத்தகைய நிலத்தின்‌ அல்லது அத்தகைய நிலத்தின்‌ குறித்துரைக்கப்பட்ட பகுதி எதையும்‌, அதன்‌ சந்தை விலை மதிப்பில்‌ கொள்வினை செய்வதற்கு அரசிற்கு ஒதுக்கப்பட வேண்டிய உரிமை; () நினைவுச்‌ சின்னத்தைப்‌ பேணுவது தொடர்பாக, உரிமையாளரால்‌ அல்லது அரசால்‌ செய்யும்படி நேர்ந்த செலவுகள்‌ எவற்றையும்‌ செலுத்துதல்‌; (9) நினைவுச்‌ சின்னத்தைப்‌ பேணுவது தொடர்பாக அரசு, செலவுகள்‌ எவையேனும்‌ செய்ய நேரிடும்போது. அந்த நினைவுச்‌ சின்னத்தைப்‌ பொறுத்து, அரசிடம்‌ உற்றமைந்து இருக்கவேண்டிய உடைமைஉரிமைகள்‌ அல்லது பிற உரிமைகள்‌; (h) அந்த உடன்பாட்டிலிருந்து எழுகிற பூசல்‌ எதனையும்‌ தீர்வு செய்வதற்கு அதிகார அமைப்பு ஒன்றை அமர்த்துதல்‌; மற்றும்‌ () உரிமையாளருக்கும்‌ அரசிற்குமிடையிலான உடன்பாட்டின்‌ உரிய பொருளாக இருக்கிற நினைவுச்‌ சின்னத்தைப்‌ பேணுவது தொடர்பான பொருட்பாடு எதுவும்‌. (3) இந்தப்‌ பிரிவின்படி ஓர்‌ உடன்பாடு எழுதிக்‌ கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள்‌ முடிவடைந்த பின்பு, எந்த நேரத்திலும்‌, அரசு அல்லது உரிமையாளர்‌, மற்றத்‌ தரப்பினருக்கு எழுத்துவடிவிலான ஆறு மாதக்கால அறிவிப்புக்‌ கொடுப்பதன்‌ பேரில்‌, அதை முடிவுறுத்தலாம்‌: வரம்புரையாக: உடன்பாடானது. உரிமையாளரால்‌ முடிவுறுத்தப்படுமிடத்து, அந்த உடன்பாடு முடிவுறுத்தப்படுவதற்கு அடுத்து முந்திய ஐந்தாண்டுகளின்போது அல்லது அந்த உடன்பாடானது அதற்குக்‌ குறைந்த காலஅளவுக்குச்‌ செல்லாற்றிலில்‌ இருந்து வந்திருக்குமாயின்‌, செல்லாற்றிலில்‌ இருந்த காலத்தின்‌. போது, நினைவுச்‌ சின்னத்தைப்‌ பேணுவதற்கு அரசால்‌ செய்யும்படி நேர்ந்த செலவுகள்‌, எவையேனுமிருப்பின்‌ அவற்றை அரசிற்கு அவர்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌. (4) இந்தப்‌ பிரிவின்படியான ஓர்‌ உடன்பாடானது, எந்த ஒரு நினைவுச்‌ சின்னத்தைப்‌ பொறுத்தாயுள்ளதோ அந்த நினைவுச்‌ சின்னத்தின்‌. உரிமையாளரென எந்தத்‌ தரப்பினரால்‌ அல்லது எவர்‌ சார்பாக அந்த உடன்பாடு எழுதிக்கொடுக்கப்பட்டதோ அந்தத்‌ தரப்பினர்‌ ஒருவரிடமிருந்து அல்லது அவர்‌ வாயிலாக அல்லது அவரது ஏவலின்‌ படி, உரிமை கோருகிற நபர்‌ எவரையும்‌ கட்டுப்படுத்துவதாகும்‌. 6. ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்‌ தொடர்பாக, அதன்‌ உரிமையாளர்‌ இயலாமை நிலையில்‌ இருக்கும்போது அல்லது அது ஒரு கிராமச்‌ சொத்தாக இருக்கும்போது, 5 ஆம்‌ பிரிவின்கீழ்‌ உரிமையாளரின்‌ அதிகாரங்களைப்‌ பயன்படுத்தத்‌ தகுதிவாய்ந்த நபர்கள்‌.- (1) பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னம்‌ ஒன்றின்‌ உரிமையாளர்‌, உரிய அகவை வராததன்‌ காரணமாக அல்லது பிற இயலாமையின்‌ காரணமாக, தாமாகவே செயற்பட முடியாமல்‌ இருப்பாராயின்‌, அவர்‌ சார்பாகச்‌ செயற்படுவதற்குச்‌ சட்டப்படி தகுதிறமுடைய நபர்‌, 5 ஆம்‌ பிரிவின்‌ மூலம்‌ ஒரு உரிமையாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைச்‌ செலுத்தலாம்‌. (2) பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னம்‌ ஒன்று ஊர்ச்‌ சொத்தாக இருக்கும்‌ நேர்வில்‌, அத்தகைய சொத்தின்‌ மீது மேலாண்மை அதிகாரங்களைச்‌ செலுத்திவருகிற நாட்டாண்மைக்காரர்‌ அல்லது பிற ஊர்‌ அலுவலர்‌, 5 ஆம்‌ பிரிவின்‌ மூலம்‌ உரிமையாளர்‌ ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைச்‌ செலுத்தலாம்‌. (3) எந்த நபர்‌ சார்பாக, நபர்‌ ஒருவர்‌ செயற்படுகிறாரோ அந்த நபர்‌ சார்ந்துள்ள அதே சமயத்தைச்‌ சார்ந்திராத நபர்‌ எவருக்கும்‌, அந்தச்‌ சமய வழிபாட்டுக்காக அல்லது முறைப்பாடுகளுக்காக எந்தப்‌ பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னம்‌ அல்லது அதன்‌ பகுதி எதுவும்‌, குறிப்பிட்ட காலங்களில்‌ பயன்படுத்தப்படுகிறதோ, அந்த நினைவுச்‌ சின்னத்தைப்‌ பொறுத்து உடன்பாடு ஒன்றைச்‌ செய்துகொள்வதற்கு அல்லது எழுதிக்கொடுப்பதற்கு இந்தப்‌ பிரிவிலுள்ள எதுவும்‌ அதிகாரமளிப்பதாகக்‌ கொள்ளப்படுதல்‌ ஆகாது. 7. பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னம்‌ ஒன்றைப்‌ பழுதுபார்ப்பதற்கு நிலைக்கொடையைப்‌ பயன்படுத்துதல்‌.- (1) பாதுகாக்கப்பட்ட ஒரு நினைவுச்‌ சின்னத்தைப்‌ பேணிவருவதற்கு, 5 ஆம்‌ பிரிவின்படி உடன்பாடு ஒன்றைச்‌ செய்து கொள்வதற்குத்‌ தகுதிறமுடைய உரிமையாளர்‌ அல்லது பிற நபர்‌ எவரும்‌, அத்தகைய உடன்பாடு ஒன்றைச்‌ செய்துகொள்வதற்கு மறுக்கிறார்‌ அல்லது தவறுகிறார்‌ எனில்‌, மற்றும்‌ அத்தகைய நினைவுச்‌ சின்னத்தைச்‌ செம்மையாக வைத்துவரும்‌ நோக்கத்திற்காக அல்லது பிற நோக்கங்களோடு அந்த நோக்கத்திற்காக நிலைக்கொடை எதுவும்‌ ஏற்பட்டிருக்குமாயின்‌, அரசு, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்‌ மாகாண நகரத்தில்‌ அமைந்திருந்தால்‌, சென்னைப்‌ பெருநகர உரிமையியல்‌ நீதிமன்றத்திலும்‌, அந்த நினைவுச்சின்னம்‌ வேறு ஏதேனும்‌ இடத்தில்‌ அமைந்திருந்தால்‌, மாவட்ட நீதிமன்றத்திலும்‌ வழக்குத்‌ தொடரலாம்‌; அல்லது, நினைவுச்சின்னத்தைப்‌ பழுதுபார்ப்பதற்காக மதிப்பிடப்பட்ட செலவு ஆயிரம்‌ ரூபாய்க்கு மேற்படாதிருக்குமாயின்‌, அத்தகைய நிலைக்கொடையை அல்லது அதன்‌ ஒரு பகுதியை முறையாகப்‌ பயன்படுத்துவதற்காக, நேர்விற்கேற்ப சென்னைப்‌ பெருநகர உரிமையியல்‌ நீதிமன்றத்திலோ அல்லது மாவட்ட நீதிமன்றத்திலோ விண்ணப்பம்‌ ஒன்றைச்‌ செய்யலாம்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவின்படியான விண்ணப்பம்‌ ஒன்றை விசாரணை செய்வதின்‌ பேரில்‌, சென்னைப்‌ பெருநகர உரிமையியல்‌ நீதிபதி அல்லது மாவட்ட நீதிபதி, அந்த உழிமையாளரையும்‌, எந்த நபருடைய சாட்சி தேவையெனத்‌ தமக்குத்‌ தோன்றுகிறதோ அந்த நபர்‌ எவரையும்‌ முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பி அவரை விசாரணை செய்யலாம்‌, மற்றும்‌ நிலைக்கொடையை அல்லது அதன்‌ பகுதி எதனையும்‌ உரியவாறு பயன்படுத்துவதற்கான ஆணைடஐயொன்றைப்‌ பிறப்பிக்கலாம்‌, மற்றும்‌ அத்தகைய ஆணை எதுவும்‌, அது உரிமையியல்‌ நீதிமன்றம்‌ ஒன்றின்‌ தீர்ப்பாணையாக இருந்தாற்போன்றே, நிறைவேற்றப்படலாம்‌. 8. உடன்பாடு ஒன்றைச்‌ செய்துகொள்வதற்குத்‌ தவறுதல்‌ அல்லது மறுத்தல்‌.- (1) பாதுகாக்கப்பட்ட ஒரு நினைவுச்‌ சின்னத்தைப்‌ பேணுவதற்கு 5 ஆம்‌ பிரிவின்படி உடன்பாடு ஒன்றைச்‌ செய்துகொள்வதற்குத்‌ தகுதிறமுடைய உரிமையாளர்‌ அல்லது பிற நபர்‌ எவரும்‌, அத்தகைய உடன்பாடு ஒன்றைச்‌ செய்து கொள்வதற்கு மறுக்கிறார்‌ அல்லது தவறுகிறார்‌ எனில்‌, 5 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள பொருட்பாடுகள்‌ அனைத்திற்கும்‌ அல்லது அவற்றில்‌ எவற்றிற்கும்‌ வகைசெய்கிற ஆணை ஒன்றை அரசு பிறப்பிக்கலாம்‌, மற்றும்‌ அத்தகைய ஆணையானது, அந்த உரிமையாளரை அல்லது அத்தகைய பிற நபரை மற்றும்‌ அந்த உரிமையாளரிடமிருந்தோ அல்லது அத்தகைய பிற நபரிடமிருந்தோ, அவர்‌ வாயிலாகவோ அல்லது அவரது ஏவலின்படியோ அந்த நினைவுச்‌ சின்னத்திற்கு உரிமைகோருகிற நபர்‌ ஒவ்வொருவரையும்‌ கட்டுப்படுத்தும்‌. (2) ஓர்‌ உடன்பாட்டைச்‌ செய்துகொள்வதற்குச்‌ தகுதிறமுடைய உரிமையாளரால்‌ அல்லது பிற நபரால்‌, நினைவுச்சின்னம்‌ பேணப்படுதல்‌ வேண்டுமென (1) ஆம்‌ உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணையொன்று வகைசெய்கிறவிடத்து, அந்த நினைவுச்‌ சின்னத்தைப்‌ பேணுவதற்கான தகுமான செலவுத்தொகைள்‌ அனைத்தும்‌, அரசிற்குச்‌ செலுத்தப்படத்தக்கனவாகும்‌. (3) (1) ஆம்‌ உட்பிரிவின்படியான ஆணை எதுவும்‌, கருதியுள்ள ஆணைக்கெதிராக எழுத்துவடிவிலான உரையீடு ஒன்றைச்‌ செய்வதற்கு அந்த உரிமையாளருக்கு அல்லது பிற நபருக்கு வாய்ப்பு ஒன்று அளிக்கப்பட்டிருந்தாலன்றி, பிறப்பிக்கப்படுதல்‌ ஆகாது. 9. 5 ஆம்‌ பிரிவின்படியான உடன்பாட்டை மீறுவதைத்‌ தடை செய்கிற ஆணையைப்‌ பிறப்பிப்பதற்கான அதிகாரம்‌.- (1) 5 ஆம்‌ பிரிவின்படியான ஓர்‌ உடன்பாட்டின்‌ வரையுரைகளுக்கு மீறுகையாக, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்‌ ஒன்றை அழிப்பதற்கு, அகற்றுவதற்கு, மாற்றியமைப்பதற்கு, உருக்குலைப்பதற்கு, ஆபத்துக்குள்ளாக்குவதற்கு அல்லது தவறாகப்‌ பயன்படுத்துவதற்கு அல்லது அதன்‌ மனையில்‌ அல்லது அதன்‌ அருகில்‌ கட்டடம்‌ கட்டுவதற்கு, அந்த நினைவுச்‌ சின்னத்தின்‌ உரிமையாளர்‌ அல்லது கையுடைமையாளர்‌ கருதுகிறார்‌ என இயக்குநர்‌ அச்சத்துடன்‌ எதிர்பார்ப்பாராயின்‌, அவர்‌, எழுத்துவடிவிலான உரையிடொன்றைச்‌ செய்வதற்கு உரிமையாளருக்கு அல்லது அதன்‌ கையுடைமையாளருக்கு வாய்ப்பொன்றை நல்கிய பின்பு, அந்த உடன்பாட்டின்‌ மீறுகை எதனையும்‌ தடை செய்கிற ஆணை ஒன்றைப்‌ பிறப்பிக்கலாம்‌: வரம்புரையாக: அவ்வாறு செய்வது உகந்தாகவோ அல்லது நடைமுறைக்கு ஏற்றதாகவோ இல்லை என்று பதிவுசெய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக, இயக்குநர்‌ மனநிறைவுக்‌ கொள்ளும்‌ நேர்வு எதிலும்‌, அத்தகைய வாய்ப்பு எதுவும்‌ அளிக்கப்படாமல்‌ இருக்கலாம்‌. (2) இந்தப்‌ பிரிவின்படியான ஆணை ஒன்றினால்‌ குறையுற்ற நபர்‌ எவரும்‌, குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையிலும்‌, அத்தகைய காலத்திற்குள்ளும்‌, அரசிற்கு மேல்முறையீடு செய்யலாம்‌. மேலும்‌ இதில்‌ அரசின்‌ முடிபே அறுதியானதாகும்‌. 10. உடன்பாடுகளைச்‌ செயற்படுத்துதல்‌.- (1) 5 ஆம்‌ பிரிவின்படி நினைவுச்‌ சின்னம்‌ ஒன்றைப்‌ பேணுவதற்கான உடன்பாடு ஒன்றுக்குக்‌ கட்டுப்பட்ட ஜர்‌ உரிமையாளர்‌ அல்லது பிற நபர்‌, அந்த நினைவுச்‌ சின்னத்தைப்‌ பேணுவதற்கு இயக்குநரின்‌. கருத்தில்‌ தேவையான செயல்‌ எதையும்‌, அவர்‌ நிருணயிக்கலாகின்ற காலத்திற்குள்‌ செய்வதற்கு மறுக்கிறார்‌ அல்லது தவறுகிறார்‌ எனில்‌, இயக்குநர்‌, அத்தகைய செயல்‌ எதனையும்‌ செய்வதற்கு நபர்‌ எவருக்கும்‌. அதிகாரம்‌ அளிக்கலாம்‌; மற்றும்‌ அத்தகைய செயல்‌ எதனையும்‌ செய்வதற்கான செலுவுத்தொகைகளை அல்லது அந்த உடன்பாட்டின்படி அந்த உரிமையாளர்‌ செலுத்துவதற்கு உள்ளாகும்‌ செலவுத்தொகைகளின்‌ பகுதியை, அந்த உரிமையாளர்‌ அல்லது பிற நபர்‌ செலுத்துவதற்குக்‌ கடப்பாடுடையவராதல்‌ வேண்டும்‌. (2) அந்த உரிமையாளரால்‌ அல்லது பிற நபரால்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி செலுத்தப்படத்தக்க செலவுத்தொகை தொடர்பான பூசல்‌ எதுவும்‌ எழுமாயின்‌, அது பற்றி அரசிற்குக்‌ குறித்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌; இதில்‌ அதன்‌ முடிபே அறுதியானதாகும்‌. 11. குறித்தசில விற்பனைகளில்‌, விலைக்கு வாங்குபவர்களும்‌ உரிமையாளர்‌ மூலம்‌ உரிமைகோருகிற நபர்களும்‌, உரிமையாளரால்‌ எழுதிக்கொடுக்கப்பட்ட முறையாவணத்திற்குக்‌ கட்டுப்பட்டவர்களாவர்‌.- நில வருவாய்‌ நிலுவைக்கான அல்லது அரசிற்குச்‌ சேர வேண்டிய பிற தொகை எதற்காகவுமான ஒரு விற்பனையில்‌, 4 ஆம்‌ பிரிவின்படி அல்லது 5 ஆம்‌ பிரிவின்படி அந்த உரிமையாளரால்‌ முறையாவணம்‌ எதுவும்‌, எந்த நினைவுச்‌ சின்னத்தைப்‌ பொறுத்து அப்போதைக்கு எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அந்த நினைவுச்‌ சின்னம்‌ அமைந்திருக்கின்ற நிலம்‌ எதையும்‌ விலைக்கு வாங்குகின்ற ஒவ்வொரு நபரும்‌, அத்தகைய முறையாவணம்‌ எதையும்‌ எழுதிக்கொடுத்த உரிமையாளர்‌ ஒருவரிடமிருந்தோ, அவர்‌ வாயிலாகவோ அல்லது அவரது ஏவலின்படியோ நினைவுச்‌ சின்னம்‌ ஒன்றிற்கு உரிமைகோருகிற நபர்‌ ஒவ்வொருவரும்‌, அத்தகைய முறையாவணத்திற்குக்‌ கட்டுப்பட்டவராவர்‌. 12. பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னங்களைக்‌ கையகப்படுத்துதல்‌. பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னம்‌ ஒன்று அழிக்கப்படுகிற, கேடுறுத்தப்படுகிற, தவறாகப்‌ பயன்படுத்தப்படுகிற அல்லது சீர்‌ கேடுறுவதற்கு அனுமதிக்கப்படுகிற நிலைமையில்‌ இருக்கிறதென அரசு அச்சத்தோடு எதிர்பார்க்குமாயின்‌, அதனால்‌, 1894 ஆம்‌ ஆண்டு நிலம்‌ கையகப்படுத்துதல்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 11894) பொருளின்படி, அந்தப்‌ பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னத்தைப்‌ பேணுவது ஒரு பொது நோக்கமாக இருந்தாற்போன்றே, அந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி அந்தப்‌ பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னம்‌ கையகப்படுத்தப்படலாம்‌. 13. குறித்தசில பாதுக்கப்பட்ட நினைவுச்‌ சின்னங்களைப்‌ பேணுதல்‌.- (1) 12 ஆம்‌ பிரிவின்படி கையகப்படுத்தப்பட்டிருக்கிற நினைவுச்‌ சின்னம்‌ ஒவ்வொன்றையும்‌ அல்லது எந்த நினைவுச்‌ சின்னத்தைப்‌ பொறுத்து 4 ஆம்‌ பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளும்‌ எதுவும்‌ ஈட்டப்பட்டிருக்கிறதோ, அந்த நினைவுச்‌ சின்னம்‌ ஒவ்வொன்றையும்‌, அரசானது, பேணி வருதல்‌ வேண்டும்‌. (2) நினைவுச்சின்னம்‌ ஒன்றின்‌ காப்பாண்மையை, 4 ஆம்‌ பிரிவின்படி இயக்குநர்‌ மேற்கொள்ளும்போது, அத்தகைய நினைவுச்சின்னத்தைப்‌ பேணிவரும்‌. நோக்கத்திற்காக, அவர்‌, தம்மாலும்‌ தம்முடைய முகவர்கள்‌, கீழமைந்தவர்கள்‌ மற்றும்‌ வேலையாட்கள்‌ வாயிலாகவும்‌, அந்த நினைவுச்‌ சின்னத்தைப்‌ பார்வையிடும்‌ நோக்கத்திற்காகவும்‌ அதனைப்‌ பேணுவதற்காகவும்‌, தாம்‌ தேவையானகதெனவோ அல்லது விரும்பத்தக்கதெனவோ கருதலாகிற பொருட்களைக்‌ கொண்டுவரும்‌ மற்றும்‌ செயல்களைச்‌ செய்யும்‌ நோக்கத்திற்காக, அந்த நினைவுச்‌ சின்னத்தை அனைத்துத்‌ தகுமான நேரங்களிலும்‌ அணுகும்‌ வாய்ப்பினைப்‌ பெற்றிருப்பார்‌. 14. தம்விருப்பான பங்களிப்புகள்‌.- இயக்குநர்‌, பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னம்‌ ஒன்றைப்‌ பேணுவதற்கான செலவுத்‌ தொகைக்காக, தம்‌ விருப்பான பங்களிப்புகளைப்‌ பெற்றுக்கொள்ளலாம்‌; மற்றும்‌ அவரால்‌ அவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியங்கள்‌ எவற்றின்‌, மேலாண்மை மற்றும்‌ பயன்பாடு குறித்து ஆணைகளைப்‌ பிறப்பிக்கலாம்‌: வரம்புரையாக: இந்தப்‌ பிரிவின்படி பெற்றுக்கொள்ளப்பட்ட பங்களிப்பு எதுவும்‌, அது எந்த நோக்கத்திற்காகப்‌ பங்களிப்புச்‌ செய்யப்பட்டதோ அந்த நோக்கம்‌ அல்லாத பிற நோக்கம்‌ எதற்காகவும்‌, பயன்படுத்தப்படுதல்‌ ஆகாது. 15. வழிபாட்டு இடம்‌ தவறாகப்‌ பயன்படுத்தப்படுவதிலிருந்துப்‌ பாதுகாத்தல்‌.- வழிபாட்டு இடமாகவோ அல்லது திருக்கோயிலாகவோ இருக்கிறதும்‌, இந்தச்‌ சட்டத்தின்படி அரசால்‌ பேணிவரப்பட்டு வருகிறதுமான பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னம்‌ ஒன்று, அதன்‌ தன்மைக்கு முரணான நோக்கம்‌ எதற்காகவும்‌ பயன்படுத்தப்படுதல்‌ ஆகாது. 16. ஒரு நினைவுச்சின்னத்தில்‌ அரசிற்குள்ள உரிமைகளைக்‌ கைவிட்டுவிடுதல்‌.- அரசின்‌ ஒப்பளிப்புடன்‌, இயக்குநர்‌, (ஐ நினைவுச்சின்னம்‌ எதனையும்‌ பொறுத்த உரிமைகள்‌, இந்தச்‌ சட்டத்தின்படி இயக்குநரால்‌, விற்பனை, குத்தகை, கொடை அல்லது விருப்புறுதி எதனின்‌ அடிப்படையிலும்‌ ஈட்டப்பட்டிருக்கிறவிடத்து, அந்த உரிமைகள்‌ ஈட்டப்படாதிருக்குமாயின்‌, எந்த நபர்‌ அப்போதைக்கு அந்த நினைவுச்சின்னத்தின்‌ உரிமையாளராகி இருந்திருப்பாரோ அந்த நபருக்கு, அவ்வாறு ஈட்டப்பட்ட அத்தகைய உரிமைகளை அறிவிக்கை வாயிலாக, விட்டுவிடலாம்‌: அல்லது 0) எந்த நினைவுச்சின்னத்திற்கு அவர்‌ இந்தச்‌ சட்டத்தின்படி காப்பாண்மையை மேற்கொண்டிருக்கிறாரோ, அந்த நினைவுச்‌ சின்னத்தின்‌ காப்பாண்மையை விட்டுவிடலாம்‌. 17. பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னங்களை அணுகுவதற்கான உரிமை. இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌ எவற்றிற்கும்‌ உட்பட்டு, பொதுமக்கள்‌ பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்‌ எதனையும்‌ அணுகும்‌ உரிமையைப்‌ பெற்றிருப்பர்‌. பாதுகாக்கப்பட்ட பரப்பிடங்கள்‌. 148. பாதுகாக்கப்பட்ட பரப்பிடங்களின்‌ சொத்துரிமையைத்‌ துய்ப்பதற்கான கட்டுப்பாடுகள்‌.- (1) பாதுகாக்கப்பட்ட ஒரு பரப்பிடத்தின்‌ உரிமையாளர்‌ அல்லது கையுடைமையாளர்‌ உள்ளடங்கலாக நபர்‌ எவரும்‌, பாதுகாக்கப்பட்ட அந்தப்‌ பரப்பிடத்திற்குள்‌ கட்டடம்‌ எதையும்‌ கட்டுதலோ, அல்லது அந்தப்‌ பரப்பிடத்தில்‌ சுரங்கம்‌ தோண்டுதல்‌, கல்லுடைத்தல்‌, அகழ்தல்‌, வெடிவைத்துத்‌ தகர்த்தல்‌ எதனையும்‌ அல்லது அத்தகைய தன்மையதான நடவடிக்கை எதனையும்‌ மேற்கொள்ளுதலோ அல்லது அரசின்‌ அனுமதியில்லாமல்‌ பிற எந்த முறையிலும்‌ அந்தப்‌ பரப்பிடத்தை அல்லது அதன்‌ பகுதி எதனையும்‌ பயன்படுத்துதலோ ஆகாது : வரம்புரையாக: அத்தகைய பரப்பிடம்‌ அல்லது அதன்‌ பகுதி எதனையும்‌, பயிர்‌ செய்வதானது மேற்பரப்பிலிருந்து 0.5 மீட்டருக்கு மேற்போகாமல்‌ மண்ணைத்‌ தோண்டுவதை உள்ளடக்காமலிருக்குமாயின்‌ அதனைப்‌ பயிர்‌ செய்யும்‌ நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை இந்த உட்பிரிவில்‌ உள்ள எதுவும்‌, தடை செய்வதாகக்‌ கொள்ளப்படுதல்‌ ஆகாது. (2) பாதுகாக்கப்பட்ட ஒரு பரப்பிடத்தினுள்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கு மீறுகையாக நபர்‌ எவராலும்‌ கட்டப்பட்ட கட்டடம்‌ எதுவும்‌, குறித்துரைக்கப்படும்‌ கால அளவிற்குள்‌ அகற்றப்படவேண்டு மென அரசு, ஆணை வாயிலாகப்‌ பணிக்கலாம்‌, மற்றும்‌ அந்த ஆணைக்கு இணங்கி நடப்பதற்கு, அந்த நபர்‌ மறுக்கிறார்‌ அல்லது தவறுகிறார்‌ எனில்‌, இயக்குநர்‌, அந்தக்‌ கட்டடத்தை அகற்றும்படிச்‌ செய்யலாம்‌; மற்றும்‌ அவ்வாறு அகற்றுவதற்கான செலவுத்தொகையைச்‌ செலுத்துவதற்கு, அந்த நபர்‌ கடப்பாடுடையவராதல்‌ வேண்டும்‌. 19. பாதுகாக்கப்பட்ட ஒரு பரப்பிடத்தைக்‌ கையகப்படுத்துவதற்கான அதிகாரம்‌.- பாதுகாக்கப்பட்ட பரப்பிடம்‌, எதுவும்‌, தேசிய முக்கியத்துவமும்‌ சிறப்பும்‌ வாய்ந்த தொன்மையான நினைவுச்சின்னம்‌ ஒன்றையோ அல்லது தொல்பொருள்களையோ கொண்டிருக்கிறது என்று அரசு கருதுமாயின்‌, 1894 ஆம்‌ ஆண்டு நிலம்‌ கையகப்படுத்துதல்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 171894) பொருளின்படி அந்தப்‌ பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னத்தைக்‌ கையகப்படுத்துவது பொது நோக்கம்‌ ஒன்றிற்காக இருந்தாற்போன்றே, அந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி அந்தப்‌ பரப்பிடம்‌ கையகப்படுத்தப்படலாம்‌. தொல்பொருளியல்‌ அகழாய்வுகள்‌. 20. பாதுகாக்கப்பட்ட பரப்பிடங்களில்‌ அகழாய்வுகள்‌.- 1958 ஆம்‌ ஆண்டு தொன்மையான நினைவுச்‌ சின்னங்கள்‌, தொல்பொருள்‌ ஆய்விடங்கள்‌ மற்றும்‌ சிதைவுகள்‌ சட்டத்தின்‌ (மைய சட்டம்‌ 241958) 24 ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, தொல்பொருளாய்வு அலுவலர்‌ ஒருவர்‌ அல்லது அவரால்‌ இதற்கென அதிகாரமளிக்கப்பட்டுள்ள அலுவலர்‌ ஒருவர்‌ அல்லது இந்தச்‌ சட்டத்தின்படி இதற்கென வழங்கப்பட்டுள்ள ஓர்‌ உரிமத்தைக்‌ கொண்டிருக்கிற (இதன்பின்பு இதில்‌ உரிமம்‌ பெறுநர்‌ எனச்‌ சுட்டப்படும்‌) நபர்‌ எவரும்‌ இயக்குநருக்கும்‌ உரிமையாளருக்கும்‌ எழுத்துவழி அறிவிப்புக்‌ கொடுத்த பின்பு, பாதுகாக்கப்பட்ட பரப்பிடம்‌ எதிலும்‌ நுழைந்து அகழாய்வுகள்‌ செய்யலாம்‌. 21. பாதுகாக்கப்பட்ட பரப்பிடங்களாக இல்லாத பிற பரப்பிடங்களில்‌ அகழாய்வுகள்‌.- 1958 ஆம்‌ ஆண்டு தொன்மையான நினைவுச்‌ சின்னங்கள்‌, தொல்பொருள்‌ ஆய்விடங்கள்‌ மற்றும்‌ சிதைவுகள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 24/1958) 24 ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, பாதுகாக்கப்பட்ட ஒரு பரப்பிடமாக இல்லாத பரப்பிடம்‌ எதுவும்‌, வரலாற்று சிறப்புமிக்க அல்லது தொல்பொருளியல்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்த அழிபாடுகளை அல்லது வரலாற்றுச்‌ சின்னங்களின்‌ எச்சக்‌ கூறுகளைக்‌ கொண்டிருக்கிறதென நம்புவதற்குத்‌ தொல்பொருளாய்வு அலுவலர்‌ ஒருவர்‌ காரணம்‌ உடையவராயிருக்கிறவிடத்து. அவர்‌ அல்லது இதற்கென அவரால்‌ அதிகாரமளிக்கப்பட்டுள்ள ஓர்‌ அலுவலர்‌, இயக்குநருக்கும்‌ உரிமையாளருக்கும்‌ எழுத்துவழி அறிவிப்புக்‌ கொடுத்த பின்பு, அந்தப்‌ பரப்பிடத்தில்‌ நுழைந்து அகழாய்வுகள்‌ செய்யலாம்‌. 22. அகழாய்வு நடவடிக்கைகளின்‌ போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள்கள்‌ முதலியவற்றைக்‌ கட்டாயமாக விலைக்கு வாங்குதல்‌.- (1) 20 ஆம்‌ பிரிவின்படி அல்லது 21 ஆம்‌ பிரிவின்படி பரப்பிடம்‌ எதிலும்‌ செய்யப்பட்ட அகழாய்வுகள்‌ எவற்றின்‌ விளைவாக, தொல்பொருள்கள்‌ எவையேனும்‌ கண்டுபிடிக்கப்படுமிடத்து, தொல்பொருளாய்வு அலுவலர்‌ அல்லது, நேர்வுக்கேற்ப, உரிமம்‌ பெறுநர்‌,- (a) நடைமுறையில்‌ கூடுமான விரைவில்‌, அத்தகைய தொல்பொருள்களை ஆய்வுசெய்து, குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ குறித்துரைக்கப்படலாகும்‌. அத்தகைய விவரங்களைக்‌ கொண்டிருக்கிற அறிக்கை ஒன்றை அரசிற்குப்‌ பணித்தனுப்புதல்‌ வேண்டும்‌; (௦) அகழாய்வு நடவடிக்கைகளின்‌ இறுதியில்‌, எந்த நிலத்தில்‌ அந்தத்‌ தொல்பொருள்கள்‌. கண்டுபிடிக்கப்பட்டனவோ அந்த நிலத்தின்‌ உரிமையாளருக்கு அத்தகைய தொல்பொருள்களின்‌ தன்மை குறித்து, எழுத்துவழி அறிவிப்புக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌. (2) அத்தகைய தொல்பொருள்கள்‌ எவற்றையும்‌ (3) ஆம்‌ உட்பிரிவின்படி கட்டாயமாக கையகப்படுத்துவதற்கான ஆணையொன்று பிறப்பிக்கப்படும்‌ வரையில்‌, தொல்பொருளாய்வு அலுவலர்‌ அல்லது, நேர்வுக்கேற்ப, உரிமம்பெறுநர்‌, அவற்றைத்‌ தாம்‌ பொருத்தமெனக்‌ கருதுகிற சேமப்‌ பாதுகாப்பில்‌ வைத்திருத்தல்‌ வேண்டும்‌. (3) (1) ஆம்‌ உட்பிரிவின்படியான ஓர்‌ அறிக்கையைப்‌ பெறுவதன்‌ பேரில்‌, அத்தகைய தொல்பொருள்கள்‌ எவற்றையும்‌ கட்டாயமாகக்‌ கையகப்படுத்துவதற்கான ஆணைடுயாொன்றை அரசு பிறப்பிக்கலாம்‌. (4) தொல்பொருள்கள்‌ எவற்றையும்‌ கட்டாயமாகக்‌ கையகப்படுத்துவதற்காக, (3) ஆம்‌ உட்பிரிவின்படடி ஆணையொன்று பிறப்பிக்கப்படும்போது, அத்தகைய தொல்பொருள்கள்‌ அந்த ஆணைத்‌ தேதியிலிருந்து அரசின்‌ பொறுப்பில்‌ இருத்தல்வேண்டும்‌. 23. தொல்பொருளாய்வு நோக்கங்களுக்கான அகழாய்வுகள்‌ முதலியன.- 20 ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, 21 ஆம்‌ பிரிவு மற்றும்‌ 22 ஆம்‌ பிரிவில்‌ வகை செய்யப்பட்டுள்ளதைத்‌ தவிர்த்து, எந்தவொரு தொல்பொருளாய்வு அலுவலரோ அல்லது பிற அதிகார அமைப்போ, அரசின்‌ முன்‌ ஒப்பேற்புடன்‌, இதற்கெனச்‌ செய்யலாகும்‌ அல்லது பிறப்பிக்கலாகும்‌ விதிகள்‌ அல்லது பணிப்புரைகள்‌ எவையேனுமிருப்பின்‌, அவற்றுக்கு இணங்கியவாறு அல்லாமல்‌, பாதுகாக்கப்பட்ட ஒரு பரப்பிடமாக இல்லாதிருக்கிற பரப்பிடம்‌ எதிலும்‌, தொல்பொருளாய்வு நோக்கங்களுக்காக, அகழாய்வு எதனையும்‌ அல்லது அது போன்ற நடவடிக்கை எதனையும்‌ மேற்கொள்ளுதலோ, மேற்கொள்ளுவதற்கு நபர்‌ எவருக்கும்‌ அதிகாரமளித்தலோ ஆகாது. தொல்பொருள்களுக்குப்‌ பாதுகாப்பு. 24. தொல்பொருள்கள்‌ அகற்றப்படுவதைக்‌ கட்டுப்பாடு செய்வதற்கு அரசிற்குள்ள அதிகாரம்‌.- (1) தொல்பொருள்கள்‌ அல்லது தொல்பொருள்களின்‌ வகை எதுவும்‌, அவை எந்த இடத்தில்‌ உள்ளனவோ அந்த இடத்திலிருந்து, அரசின்‌ ஒப்பளிப்பின்றி அகற்றப்படுதலாகாதென அரசு கருதுமாயின்‌, அறிவிக்கை வாயிலாக அத்தகைய தொல்பொருள்‌ எதுவும்‌ அல்லது அத்தகைய தொல்பொருள்களின்‌ வகை எதுவும்‌, இயக்குநரின்‌ எழுத்து வடிவிலான அனுமதியுடன்‌ அல்லாமல்‌, அகற்றப்படுதல்‌ கூடாதென அரசு பணிக்கலாம்‌. 2 1) ஆம்‌ உட்பிரிவின்படியான அனுமதிக்கான விண்ணப்பம்‌ ஒவ்வொன்றும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்தில்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய விவரங்களைக்‌ கொண்டதாக இருத்தல்‌ வேண்டும்‌. (3) (1) ஆம்‌ உட்பிரிவின்படியான அனுமதி மறுக்கிற ஆணை ஒன்றினால்‌ குறையுற்ற நபர்‌ எவரும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய காலத்திற்குள்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ அரசிற்கு மேல்முறையீடு செய்யலாம்‌; இதில்‌ அரசின்‌ முடிபே அறுதியானதாக இருக்கும்‌. 25. தொல்பொருள்கள்‌ அரசால்‌ வாங்கப்படுதல்‌.- (1) 24 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஓர்‌ அறிவிக்கையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள தொல்பொருள்‌ எதுவும்‌ அழிக்கப்படுகிற அகற்றப்படுகிற, கேடுறுத்தப்படுகிற, தவறாகப்‌ பயன்படுத்தப்படுகிற, அல்லது சீர்கேடுறுவதற்கு அனுமதிக்கப்படுகிற இடர்நிலையில்‌ இருக்கிறதென அரசு அச்சத்தோடு எதிர்பார்க்கிறது அல்லது ஒரு பொது இடத்தில்‌ உள்ள அத்தகைய தொல்பொருளை அதன்‌ வரலாற்று சிறப்புமிக்க அல்லது தொல்பொருளியல்‌ முக்கியத்துவம்‌ காரணமாகப்‌ பாதுகாப்பது விரும்பத்தக்கதெனக்‌ கருதுகிறதெனில்‌, அரசு, அத்தகைய தொல்பொருளைக்‌ கட்டாயமாகக்‌ கையகப்படுத்துவதற்கு ஆணையொன்றைப்‌ பிறப்பிக்கலாம்‌; அதன்‌ பேரில்‌, இயக்குநர்‌ கையகப்படுத்தப்பட வேண்டிய தொல்பொருளின்‌ உரிமையாளருக்கு அறிவிப்புக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌. (2) தொல்பொருள்‌ எதனையும்‌ பொறுத்து, (1) ஆம்‌ உட்பிரிவின்படி கட்டாயமாகக்‌ கையகப்படுத்துவதற்கு அறிவிப்பு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்குமிடத்து, அந்த அறிவிப்புத்‌ தேதியிலிருந்து, அந்தத்‌ தொல்பொருள்கள்‌ அரசின்‌ பொறுப்பில்‌ இருத்தல்‌ வேண்டும்‌. (3) இந்தப்‌ பிரிவின்படி அளிக்கப்பட்டுள்ள கட்டாயமாகச்‌ கையகப்படுத்துவதற்கான அதிகாரம்‌, உண்மையான சமய முறைபாடுகளுக்காக நல்லெண்ணத்தில்‌ உள்ளபடியே பயன்படுத்தப்படுகிற உருவச்சிலை அல்லது சின்னம்‌ எதனையும்‌ அளாவுதலாகாது. சரியீட்டு நெறிமுறைகள்‌. 26. இழப்பு அல்லது சேதத்திற்கான சரியீடு.-- நிலத்தில்‌ நுழைதல்‌, ஏதொன்றின்‌ அல்லது அதில்‌ அகழாய்வுகள்‌ செய்தலின்‌ காரணமாக அல்லது இந்தச்‌ சட்டத்தின்படி அளிக்கப்பட்ட அதிகாரம்‌ எதனையும்‌ செலுத்துவதன்‌ காரணமாக இழப்பு அல்லது சேதம்‌ எதற்கும்‌ அல்லது அந்த நிலத்திலிருந்தான ஆதாயக்‌ குறைவு எதற்கும்‌ ஆளாகியிருக்கிற நிலத்தின்‌ உரிமையாளர்‌ அல்லது கையுடைமையாளர்‌ எவருக்கும்‌, அத்தகைய இழப்பு, சேதம்‌ அல்லது ஆதாயக்‌ குறைவிற்காக அரசால்‌, சரியீடு வழங்கப்படுதல்‌ வேண்டும்‌. 27. சந்தைவிலை மதிப்பை அல்லது சரியீட்டை மதிப்பிடுதல்‌.- இந்தச்‌ சட்டத்தின்படி எந்தச்‌ சொத்தினைச்‌ சந்தைவிலை மதிப்பில்‌ கொள்வினை செய்வதற்கு அரசிற்கு அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறதோ அந்தச்‌ சொத்தின்‌ சந்தை மதிப்பு, அல்லது இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட எதனையும்‌ பொறுத்து அரசால்‌ வழங்கப்பட வேண்டிய சரியீடானது, அந்தச்‌ சந்தைவிலை மதிப்பை அல்லது சரியீட்டைப்‌ பொறுத்துப்‌ பூசல்‌ எதுவும்‌ எழுமிடத்து, 1894 ஆம்‌ ஆண்டு நிலம்‌ கையகப்படுத்தல்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 1/1894) பிரிவுகள்‌ 3, 5, 8 முதல்‌ 34 வரையுள்ளவை, பிரிவுகள்‌ 45 முதல்‌ 47 வரையுள்ளவை, பிரிவுகள்‌ 51 மற்றும்‌ 52 ஆகியவற்றில்‌ வகைசெய்யப்பட்டுள்ள முறையில்‌, அவற்றைப்‌ பொருந்தத்தக்கதாகச்‌ செய்யக்கூடிய அளவிற்கு மதிப்பிடுதல்‌ வேண்டும்‌. (2 (1) ஆம்‌ உட்பிரிவில்‌ அல்லது 1894 ஆம்‌ ஆண்டு நிலம்‌ கையகப்படுத்துதல்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ ॥71894) என்ன அடங்கி இருந்தபோதிலும்‌, 22 ஆம்‌ பிரிவின்‌ (3) ஆம்‌ உட்பிரிவின்படி அல்லது 25 ஆம்‌ பிரிவின்‌. (1) ஆம்‌ உட்பிரிவின்படி கட்டாயமாகக்‌ கையகப்படுத்தும்‌ ஆணையொன்று பிறப்பிக்கப்பட்டது தொடர்பாக, எந்தவொரு தொல்பொருளின்‌ சந்தை மதிப்பையும்‌ நிர்ணயிப்பதில்‌, அது வரலாற்று சிறப்புமிக்கதாக அல்லது தொல்பொருள்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்ததாக இருக்கும்‌ காரணத்தால்‌ தொல்பொருளின்‌ மதிப்பில்‌ ஏற்படும்‌ எந்தவொரு அதிகரிப்பும்‌ கருத்தில்‌ கொள்ளப்படுதல்‌ கூடாது. பல்வகை. 28. அரசால்‌ அதிகார ஒப்படைவு செய்யப்படுதல்‌.- (1) அரசானது, அறிவிக்கையின்‌ மூலம்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ எதனின்‌ கீழும்‌ விதிகளை உருவாக்கும்‌ அதிகாரத்தைத்‌ தவிர்த்து, எந்தவொரு அலுவலருக்குகோ அல்லது அதற்குக்‌ கீழமைந்துள்ள அதிகார அமைப்பிற்கோ, இந்தச்‌ சட்டத்தின்‌ மூலமாகவோ அல்லது இந்தச்‌ சட்டத்தின்படியோ, தங்களிடம்‌ உற்றமைந்துள்ள அதிகாரங்களில்‌ ஏதேனும்‌ ஒன்றையோ அல்லது அதற்கு மேற்பட்டவற்றையோ செயல்படுத்துவதற்கான அதிகாரத்தை அளிக்கலாம்‌, மேலும்‌ அதே போன்று அத்தகைய அதிகாரத்தைப்‌ பெறலாம்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவின்‌ கீழ்‌ வழங்கப்பட்ட அதிகாரங்கள்‌ எதனையும்‌ செயல்படுத்துவதானது, அறிவிக்கையில்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அல்லது குறிப்பிடப்படலாகும்‌. அத்தகைய வரையுறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளுக்குட்பட்டது. மேலும்‌ அரசின்‌ அல்லது இதன்‌ சார்பாக அதிகாரம்‌ அளிக்கப்பட்ட அத்தகைய அலுவலரின்‌ அல்லது அவர்களுக்குக்‌ கீழமைந்துள்ள அதிகார அமைப்பின்‌ கட்டுப்பாட்டிற்கும்‌ சீராய்விற்கும்‌ உட்பட்டது. அரசானது , அவ்வாறு அதிகாரம்‌ அளிக்கப்பட்ட எந்தவொரு அலுவலரின்‌ அல்லது அதிகார அமைப்பின்‌ செயல்கள்‌ அல்லது நடவடிக்கைகளைக்‌ கட்டுப்படுத்தவும்‌ திருத்தவும்‌ அதிகாரம்‌ கொண்டிருக்கும்‌ - 29. தண்டத்தொகைகள்‌.- (1) () பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னம்‌ ஒன்றை அழிக்கிற, அகற்றுகிற, கேடுறுத்துகிற, மாற்றியமைக்கிற, உருக்குலைக்கிற, ஆபத்துக்குள்ளாக்குகிற அல்லது தவறாகப்‌ பயன்படுத்துகிற அல்லது அத்தகைய நினைவுச்சின்னம்‌ அல்லது அதன்‌ இடத்தை ஆக்கிரமிக்கிற அல்லது அதில்‌ கட்டுகிற, அல்லது (i) பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னம்‌ ஒன்றின்‌ உரிமையாளராக அல்லது கையுடைமையாளராக இருந்து, 8 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படியோ அல்லது 9 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படியோ பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்றை மீறுகிற, அல்லது (i) _ பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னம்‌ ஒன்றிலிருந்து சிற்பம்‌, செதுக்குவேலை, உருவச்சிலை, புடைப்பு ஒவியம்‌, கல்வெட்டு எதையும்‌ அல்லது அதைடுயாத்த பிற பொருளை அகற்றுகிற, அல்லது (iv) 18 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவிற்கு மறுகையான செயல்‌ எதையும்‌ செய்கிற, எவரொருவரும்‌, மூன்று மாதங்கள்‌ வரை நீட்டிக்கலாகும்‌ சிறைத்தண்டனையோ, அல்லது ஐந்தாயிரம்‌ ரூபாய்‌ வரை நீட்டிக்கலாகும்‌ அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்துத்‌ தண்டிக்கப்படத்தகக்கவராவார்‌. (2) 24 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒன்றுக்கு மீறுகையாகத்‌ தொல்பொருள்‌ எதையும்‌ அகற்றுகிற நபர்‌ எவரும்‌, ஐந்தாயிரம்‌ ரூபாய்வரை நீட்டிக்கலாகும்‌. அபராதம்‌ விதித்துத்‌ தண்டிக்கப்படத்தக்கவராவார்‌; மற்றும்‌ அத்தகைய மறுகை எதற்காகவும்‌. நபர்‌ ஒருவருக்குக்‌ குற்றத்தீர்ப்பு வழங்குகின்ற நீதிமன்றமானது, அந்தத்‌ தொல்பொருள்‌ எந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டதோ அந்த இடத்தில்‌ அதனை மீண்டும்‌ வைத்துவிடும்படி அத்தகைய நபருக்கு ஆணை வாயிலாகப்‌ பணிக்கலாம்‌. 30. குற்றவியல்‌ நீதிமன்றங்களின்‌ அதிகாரவரம்பு.-- ஒரு மாகாணக்‌ குற்றவியல்‌ நடுவருடைய அல்லது முதல்‌ வகுப்புக்‌ குற்றவியல்‌ நடுவருடைய நீதிமன்றத்திற்குக்‌ கீழ்நிலையிலுள்ள நீதிமன்றம்‌ எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தின்படியான குற்றச்செயல்‌ எதனையும்‌ விசாரித்தல்‌ ஆகாது. 31. குறித்தசில குற்றச்செயல்கள்‌ கைது செய்தற்குரியன.- 1898 ஆம்‌ ஆண்டு குற்றவியல்‌ நடைமுறை சட்டத்தொகுப்பில்‌ (மையச்‌ சட்டம்‌ V/1898) அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, 29 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்‌ (i) ஆம்‌ கூறு அல்லது (i) ஆம்‌ கூறின்படியான ஒரு குற்றச்செயலானது, அந்தச்‌ சட்டத்தொகுப்பின்‌ பொருளின்படி கைது செய்வதற்குரிய ஒரு குற்றச்‌செயலாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 32. அபராதம்‌ குறித்த சிறப்பு வகைமுறை.- 1898 ஆம்‌ ஆண்டு குற்றவியல்‌ நடைமுறை சட்டத்தொகுப்பின்‌ 32 ஆம்‌ பிரிவில்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, இந்தச்‌ சட்டத்தின்படி இரண்டாயிரம்‌ ரூபாய்க்கு மேற்பட்ட அபராதம்‌ விதித்து தண்டிக்கப்படத்தக்க ஒரு குற்றச்செயலுக்காக குற்றத்தீர்ப்பு அளிக்கப்பட்ட நபர்‌ ஒருவருக்கு, இரண்டாயிரம்‌ ரூபாய்க்கு மேற்பட்டதொரு அபராதத்தை விதிப்பது, மாநில அரசால்‌ இதற்கெனச்‌ சிறப்பாக அதிகாரம்‌ அளிக்கப்பட்டுள்ள முதல்‌ வகுப்புக்‌ குற்றவியல்‌ நடுவர்‌ எவருக்கும்‌, மாகாணக்‌ குற்றவியல்‌ நடுவர்‌ எவருக்கும்‌, சட்ட முறையானதாக இருக்கும்‌. 33. நிறுமங்களால்‌ செய்யப்படும்‌ குற்றங்கள்‌.- (1) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ குற்றம்‌ எதுவும்‌ நிறுமத்தால்‌ செய்யப்பட்டிருப்பின்‌, அக்குற்றத்திண்போது, அந்நிறுமத்தின்‌ அலுவல்‌ நடைபெறுவதற்கு அந்நிறுமத்தின்‌ பொறுப்பிலிருந்த மற்றும்‌ பொறுப்பைக்‌ கொண்டிருந்த நபர்‌ ஒவ்வொருவரும்‌, மற்றும்‌ அந்நிறுமமும்‌ அக்குற்றத்தைச்‌ செய்திருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவும்‌ அதற்கிணங்க தண்டிக்கப்படவும்‌ வேண்டும்‌: வரம்புரையாக, இந்த உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌, அத்தகைய நபர்‌ எவரும்‌, அக்குற்றம்‌ தமக்குத்‌ தெரியாமலேயே செய்யப்பட்டிருப்பதாக அல்லது அத்தகைய குற்றத்தைத்‌ தடுக்க தம்மால்‌ இயன்ற அனைத்தையும்‌ செய்ததாக மெய்ப்பித்தால்‌, அத்தகைய நபருக்கு தண்டனை எதுவும்‌ விதித்தல்‌ ஆகாது. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ குற்றம்‌ எதனையும்‌ நிறுமமொன்று செய்திருக்கிறவிடத்து, அந்த குற்றமானது, அந்நிறுமத்தின்‌ இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌ அல்லது பிற அலுவலர்‌ எவரின்‌ அனுமதியுடன்‌ அல்லது உடந்தையுடன்‌ அல்லது அவருடைய கவனமின்மை காரணமாக செய்யப்பட்டிருப்பதாக மெய்ப்பிக்கப்பட்டால்‌, அத்தகைய இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌, அல்லது பிற அலுவலர்‌ அந்த குற்றத்தைச்‌ செய்திருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவும்‌ அதற்கிணங்க தண்டிக்கப்படவும்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, (ஐ) "நிறுமம்‌ என்பது, எந்தவொரு கூட்டு நிறுவனம்‌ என்று பொருள்படும்‌; மற்றும்‌ ஒரு நிறுவகம்‌ அல்லது பிற தனி நபர்களின்‌ கழகத்தையும்‌ உள்ளடக்கும்‌; மற்றும்‌ (௦) "இயக்குநர்‌" என்பவர்‌, ஒரு நிறுவகத்தைப்‌ பொறுத்தவரையில்‌, நிறுவகத்தில்‌ ஒரு பங்குதாரர்‌ ஆவார்‌. 34. அரசிற்குக்‌ கொடுபட வேண்டிய தொகைகளை வகூலித்தல்‌.- இந்தச்‌ சட்டத்தின்படி நபர்‌ எவரிடமிருந்தும்‌ அரசிற்குக்‌ கொடுபட வேண்டிய தொகை: எதுவும்‌. இயக்குநரால்‌ அல்லது அவரால்‌ இதற்கென அதிகாரம்‌ அளிக்கப்பட்டுள்ள தொல்‌ பொருளாய்வு அலுவலர்‌ ஒருவரால்‌ அளிக்கப்பட்ட சான்றிதழ்‌ ஒன்றின்‌ பேரில்‌, நில வரி நிலுவை ஒன்றைப்‌ போன்றே அதே முறையில்‌ வசூலிக்கப்படலாம்‌. 35. தொன்மையான நினைவுச்‌ சின்னங்கள்‌, முதலியன, இனி பாதுகாக்கப்பட வேண்டிய தேவையில்லை.- இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி தொன்மையான நினைவுச்சின்னம்‌ அல்லது தொல்பொருள்‌ ஆய்விடம்‌ மற்றும்‌ சிதைவுகள்‌ இனி பாதுகாக்கப்பட வேண்டிய தேவையில்லை என்று அரசு கருதுமாயின்‌, அது அறிவிக்கை வாயிலாக, தொன்மையான நினைவுச்சின்னம்‌ அல்லது தொல்பொருள்‌ ஆய்விடம்‌ மற்றும்‌ சிதைவுகள்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னகமாகவோ அல்லது நேர்விற்கேற்ப, பாதுகாக்கப்பட்ட பரப்பிடமாகவோ இல்லாமல்‌ போய்விட்டதாக அறிவிக்கையின்‌ மூலம்‌ விளம்பலாம்‌. 36. தவறுகள்‌ முதலியவற்றைத்‌ திருத்துவதற்கான அதிகாரம்‌.- இந்தச்‌ சட்டத்தின்படி பாதுகாக்கப்பட வேண்டியவையென விளம்பப்பட்டுள்ள தொன்மையான நினைவுச்‌ சின்னம்‌ அல்லது தொல்‌ பொருளாய்விடம்‌ மற்றும்‌ சிதைவுகள்‌ எதனின்‌ விவரிப்பிலுள்ள எழுத்தர்‌ தவறு, வெளிப்படையான பிழை அல்லது தற்செயலான பிசகிலிருந்தோ விடுகையிலிருந்தோ எழுகிற பிழை எதுவும்‌, அரசால்‌, அறிவிக்கையின்‌ வாயிலாக, எந்த நேரத்திலும்‌ திருத்தப்படலாம்‌. 37. இந்தச்‌ சட்டத்தின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப்‌ பாதுகாப்பு.-- இந்தச்‌ சட்டத்தால்‌ அளிக்கப்பட்ட அதிகாரம்‌ எதையும்‌ செலுத்தும்‌ போது, நல்லெண்ணத்தில்‌ செய்யப்பட்ட அல்லது செய்வதற்குக்‌ கருதப்பட்ட செயல்‌ எதையும்‌ பொறுத்து, பொதுப்‌ பணியாளர்‌ எவருக்கும்‌ எதிரான சரியீட்டிற்காக உரிமைவழக்கு எதுவும்‌ தொடரப்படுதலும்‌, குற்றவியல்‌ நடவடிக்கை எதுவும்‌ எடுக்கப்படுதலும்‌ ஆகாது. 38. விதிகளை வகுப்பதற்கான அதிகாரம்‌ (1) அரசு, இந்தச்‌ சட்டத்தின்‌. நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக விதிகளை வகுக்கலாம்‌. (2) குறிப்பாகவும்‌, மேலே கண்ட அதிகாரத்தின்‌ பொதுப்‌ பாங்கிற்குக்‌ குந்தகமின்றியும்‌, பின்வரும்‌ பொருட்பாடுகள்‌ அனைத்திற்கும்‌ அல்லது அவற்றுள்‌ எதற்கும்‌ அத்தகைய விதிகள்‌ வகைசெய்யலாம்‌; அவையாவன:- (ஐ பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னம்‌ ஒன்றிற்கு அருகில்‌ சுரங்கம்‌ தோண்டுவதை, கல்லுடைப்பதை, அகழ்வதை, வெடி வைத்துத்‌ தகர்ப்பதை அல்லது அத்தகைய தன்மையதான நடவடிக்கை எதனையுமோ, அல்லது அத்தகைய நினைவுச்சின்னத்தை அடுத்துள்ள நிலத்தில்‌ கட்டடங்களைக்‌ கட்டுவதையோ அதிகாரமளிக்கப்படாத கட்டடங்களை அகற்றுவதையோ தடை செய்தல்‌, அல்லது உரிமம்‌ வழங்குவதன்‌ வாயிலாகவோ அல்லது பிறவாறாகவோ ஒழுங்குபடுத்துதல்‌; (b) பாதுகாக்கப்பட்ட பரப்பிடங்களில்‌ தொல்பொருள்‌ ஆய்வு நோக்கங்களுக்காக, அகழாய்வுகள்‌ செய்வதற்கு உரிமங்களும்‌ அனுமதிகளும்‌ வழங்குதல்‌, அத்தகைய உரிமங்கள்‌ எவரால்‌, எந்தக்‌ கட்டுப்பாடுகளுக்கும்‌ வரைக்கட்டுகளுக்கும்‌ உட்பட்டு வழங்கப்படலாகும்‌ என்பது, உரிமம்‌ பெறுநர்களிடமிருந்து அல்லது அத்தகைய அனுமதிகள்‌ வைத்திருப்பவர்களிடமிருந்து காப்புறுதிகள்‌ பெற்றுகொள்ளுதல்‌, மற்றும்‌ அத்தகைய உரிமங்கள்‌ மற்றும்‌ அனுமதிகளுக்காக வசூலிக்கப்படலாகும்‌. கட்டணங்கள்‌: (௦) பாதுகாக்கப்பட்ட நினைவுச்‌ சின்னம்‌ ஒன்றை அணுகுவதற்கு பொது மக்களுக்குள்ள உரிமை, மற்றும்‌ அதற்கென வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம்‌ ஏதேனும்‌ இருப்பின்‌, அந்தக்‌ கட்டணம்‌: (0) 22 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்‌ (ஐ கூறினண்படியான தொல்பொருளாய்வு அலுவலர்‌ ஒருவரின்‌ அல்லது உரிமம்‌ பெறுநர்‌ ஒருவரின்‌, அறிக்கையின்‌ படிவம்‌ மற்றும்‌ உள்ளடக்கங்கள்‌: (6) 18 ஆம்‌ பிரிவின்படியான அல்லது 4 ஆம்‌ பிரிவின்படியான அனுமதிக்காக, எந்தப்‌ படிவத்தில்‌ விண்ணப்பங்கள்‌ செய்யப்படலாகுமோ அந்தப்‌ படிவம்‌ மற்றும்‌ அவற்றில்‌ அடங்கியிருக்க வேண்டிய விவரங்கள்‌; (0). இந்தச்‌ சட்டத்தின்படி மேல்முறையீடுகளைச்‌ செய்வதற்கான வடிவமும்‌ முறையும்‌ மற்றும்‌ அவை எந்தக்‌ காலத்திற்குள்‌ செய்யப்படலாகுமோ அந்தக்‌ காலம்‌; (ற இந்தச்‌ சட்டத்தின்படியான ஆணை அல்லது அறிவிப்பு எதையும்‌ சார்வு செய்யும்‌ முறை; (h) தொல்பொருள்‌ ஆய்வு நோக்கங்களுக்காக, அகழாய்வுகளும்‌ அதைப்‌ போன்ற பிற நடவடிக்கைகளும்‌, எந்த முறையில்‌ மேற்கொள்ளப்படலாகுமோ அந்த முறை; () வகுத்துரைக்கப்பட வேண்டிய அல்லது வகுத்துரைக்கப்படலாகும்‌. பிற பொருட்பாடு எதுவும்‌. (3) இந்தப்‌ பிரிவின்படி வகுக்கப்பட்ட விதி எதுவும்‌, அதன்‌ மீறுகையானது,- i) (2) ஆம்‌ உட்பிரிவின்‌ (ஐ) கூறு குறித்து வகுக்கப்பட்ட விதி ஒன்றைப்‌ பொறுத்தமட்டில்‌, மூன்று மாதங்கள்‌ வரை நீட்டிக்கப்படலாகும்‌. சிறைத்தண்டனையோ அல்லது ஐந்தாயிரம்‌ ரூபாய்‌ வரை நீட்டிக்கப்படலாகும்‌ அபராதமோ அல்லது இரண்டுமோ; (i) (2) ஆம்‌ உட்பிரிவின்‌ (௦) கூறு குறித்து வகுக்கப்பட்ட விதி ஒன்றைப்‌ பொறுத்தமட்டில்‌, ஐந்தாயிரம்‌ ரூபாய்‌ வரை நீட்டிக்கப்படலாகும்‌. அபராதமோ; (i) (2) ஆம்‌ உட்பிரிவின்‌ (௦) கூறு குறித்து வகுக்கப்பட்ட விதி ஒன்றைப்‌ பொறுத்தமட்டில்‌, ஐந்நூறு ரூபாய்‌ வரை நீட்டிக்கப்படலாகும்‌. அபராதமோ, விதித்துத்‌ தண்டிக்கப்படத்தக்கதென வகை செய்யலாம்‌. 39. விதிகளை வெளியிடுதல்‌, விதிகள்‌ மற்றும்‌ அறிவிக்கைகளின்‌ தொடக்கம்‌ மற்றும்‌ விதிகள்‌ மற்றும்‌ அறிவிக்கைகள்‌ சட்டமன்றத்தின்‌ முன்பு வைக்கப்படுதல்‌.- (1) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட அனைத்து விதிகளும்‌ தமிழ்நாடு அரசிகழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அவை குறிப்பிட்டதொரு நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டுமென வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட தேதியில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்படி வெளியிடப்பட்ட அனைத்து அறிவிக்கைகளும்‌, அவை குறிப்பிட்டதொரு நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டுமென வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட தேதியில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட விதி அல்லது அறிவிக்கை ஒவ்வொன்றும்‌, அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்பு, கூடிய விரைவில்‌, சட்டமன்றப்‌ பேரவையின்‌ முன்னர்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடரோ அல்லது அடுத்த கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்னர்‌, அந்த விதியிலோ அல்லது அறிவிக்கையிலோ மாற்றம்‌ எதையேனும்‌ அச்சட்டமன்றப்‌ பேரவை செய்யுமாயின்‌ அல்லது அந்த விதியோ அல்லது அறிவிக்கையோ செய்யப்படுதலோ, பிறப்பிக்கப்படுதலோ அல்லது வெளியிடப்படுதலோ ஆகாது என்று சட்டமன்றப்‌ பேரவையானது முடிவு செய்யுமாயின்‌, அந்த விதியோ அல்லது அறிவிக்கையோ, அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில்‌ மட்டுமே செயல்விளைவு பெறுதல்‌ வேண்டும்‌, அல்லது நேர்விற்கேற்ப, செயல்விளைவு பெறாது போதல்‌ வேண்டும்‌; எனினும்‌, அத்தகைய மாற்றம்‌ அல்லது அழித்தறவு எதுவும்‌, அந்த விதி அல்லது அறிவிக்கையின்படி முன்பே செய்யப்பட்ட எதனின்‌ செல்லுந்தன்மைக்கும்‌ ஊறின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 40. நீக்கறவுகளும்‌ காப்புரைகளும்‌.- (1) 1960 ஆம்‌ ஆண்டு ஆந்திரப்‌ பிரதேச தொன்மையான மற்றும்‌ வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்‌ சின்னங்கள்‌, தொல்பொருள்‌ ஆய்விடங்கள்‌ மற்றும்‌ சிதைவுகள்‌ சட்டம்‌ (ஆந்திரப்‌ பிரதேச சட்டம்‌ ௩960) (இதன்பின்னர்‌ இந்தப்‌ பிரிவில்‌ தொடர்புடைய சட்டம்‌ என்று குறிப்பிடப்படுகிறது) உட்பட, இந்தச்‌ சட்டம்‌ தொடங்குவதற்கு முன்பு இணைக்கப்பட்ட ஆட்சிநிலவரைப்‌ பகுதிகளில்‌ நடைமுறையில்‌ உள்ள இந்தச்‌ சட்டத்துடன்‌ தொடர்புடைய எந்தவொரு சட்டமும்‌, அத்தகைய தொடக்கத்திலேயே நீக்கறவு செய்யப்படு கிறது. (2) 1904 ஆம்‌ ஆண்டு தொன்மையான நினைவுச்சின்னங்கள்‌ பேணிக்காத்தல்‌ சட்டமானது (மையச்‌ சட்டம்‌ 174904), இந்தச்‌ சட்டம்‌ தொடங்குவதற்கு முன்பு செய்யப்பட்ட அல்லது செய்யாமல்‌ விட்டுவிடப்பட்ட விவரங்களைத்‌ தவிர்த்து, பாதுகாக்கப்பட வேண்டிய நினைவுச்சின்னங்கள்‌. அல்லது பாதுகாக்கப்பட வேண்டிய பரப்பிடங்கள்‌ என இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ விளம்புகை செய்யப்பட்ட தொன்மையான நினைவுச்சின்னங்கள்‌, தொல்பொருள்‌ ஆய்விடங்கள்‌ மற்றும்‌ சிதைவுகள்‌ தொடர்பாக செயல்படுவதை நிறுத்திவிடும்‌. (3) தொடர்புடைய சட்டத்தின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்‌ மூலம்‌ நீக்கறவு செய்வது, () தொடர்புடைய சட்டத்தின்‌ முந்தைய செயல்பாடு அல்லது அதன்‌. கழ்‌ முறையாகச்‌ செய்யப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட எதையும்‌; அல்லது (i) தொடர்புடைய சட்டத்தின்‌ கீழ்‌ பெறப்பட்ட, திரட்டப்பட்ட அல்லது ஏற்பட்ட எந்தவொரு உரிமை, சிறப்புரிமை, கடப்பாடு அல்லது பொறுப்பையும்‌; அல்லது (i) தொடர்புடைய சட்டத்திற்கு எதிராக செய்யப்பட்ட எந்தவொரு குற்றம்‌ தொடர்பாக உள்ளாகும்‌ எந்தவொரு தண்டத்தொகை, பறிமுதல்‌ அல்லது தண்டனையையும்‌; அல்லது (iv) மேற்கூறிய எந்தவொரு உரிமை, சிறப்புரிமை, கடப்பாடு, பொறுப்பு, தண்டத்தொகை, பறிமுதல்‌ அல்லது தண்டனை தொடர்பாக எந்தவொரு விசாரணை, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வையும்‌, பாதிக்காது. மேலும்‌ அத்தகைய புலணாய்வு, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வு எதுவும்‌ தொடரப்படலாம்‌, தொடர்ந்து நடத்தப்படலாம்‌ அல்லது செயல்படுத்தப்படலாம்‌ மற்றும்‌ அத்தகைய தண்டத்தொகை , பறிமுதல்‌ அல்லது தண்டனையானது, இந்தச்‌ சட்டம்‌ பிறப்பிக்கப்படாததைப்‌ போன்று விதிக்கப்படலாம்‌. (4) தொடர்புடைய சட்டத்தின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்‌ மூலம்‌ நீக்கறவு செய்யப்பட்ட போதிலும்‌, தொடர்புடைய சட்டத்தின்‌ கீழ்‌ பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்‌ அல்லது பாதுகாக்கப்பட்ட பரப்பிடங்களாக விளம்பப்பட்ட அனைத்து தொன்மையான நினைவுச்சின்னங்கள்‌ அல்லது தொல்பொருள்‌ ஆய்விடங்கள்‌ மற்றும்‌ சிதைவுகளானது, இந்தச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்‌ அல்லது பாதுகாக்கப்பட்ட பரப்பிடங்களாக விளம்பப்பட்ட தொன்மையான நினைவுச்சின்னங்கள்‌ அல்லது தொல்பொருள்‌ ஆய்விடங்கள்‌ மற்றும்‌ சிதைவுகளாகக்‌ கருதப்படும்‌. (5 (3) ஆம்‌ மற்றும்‌ (4) ஆம்‌ உட்பிரிவுகளின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு, இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்திற்கு முன்பு, தொடர்புடைய சட்டத்தின்கீழ்‌ செய்யப்பட்ட எதுவும்‌ அல்லது எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செய்யப்பட்டதாக அல்லது எடுக்கப்பட்டதாகக்‌ கருதப்படும்‌, மேலும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ செய்யப்பட்ட எதுவும்‌ அல்லது எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும்‌ அதை மாற்றியமைக்கும்‌ வரை, அதற்கிணங்கவே தொடர்ந்து செயல்படும்‌. (6) இணைக்கப்பட்ட ஆட்சிநிலவரைகளில்‌, இந்தச்‌ சட்டத்தைப்‌ பயன்படுத்துவதை எளிதாக்கும்‌ நோக்கத்திற்காக, எந்தவொரு ந்திமன்றமோ அல்லது பிற அதிகாரஅமைப்போ இந்தச்‌ சட்டத்தை, நீதிமன்றம்‌ அல்லது பிற அதிகாரஅமைப்பின்‌ முன்பு உள்ள பொருட்பாட்டிற்கேற்ப மாற்றியமைக்கத்‌ தேவையான அல்லது பொருத்தமான, கருத்துரையைப்‌ பாதிக்காத அத்தகைய மாற்றங்களுடன்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. (7) இந்தச்‌ சட்டம்‌ தொடங்கப்பட்ட பிண்னர்‌ இணைக்கப்பட்ட ஆட்சி நிலவரைகளில்‌, தொடர்ந்து நடைமுறையில்‌ இருக்கும்‌ எந்தவொரு சட்டத்திலும்‌ தொடர்புடைய சட்டம்‌ குறித்த எந்தவொரு சுட்டுகையும்‌, அந்த ஆட்சிநிலவரைகள்‌ தொடர்பாக, இந்தச்‌ சட்டத்திற்கான சுட்டுகையாகப்‌ பொருள்கொள்ளப்படும்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கத்திற்காக, "இணைக்கப்பட்ட ஆட்சிநிலவரைகள்‌" என்ற சொற்றொடர்‌, 1959 ஆம்‌ ஆண்டு ஆந்திரப்‌ பிரதேசம்‌ மற்றும்‌ சென்னை (எல்லைகளை மாற்றுதல்‌) சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 567 1959) இரண்டாவது இணைபப்புப்பட்டியலில்‌ குறிப்பிடப்பட்டுள்ள ஆட்சி நிலவரைகள்‌ என்று பொருள்படும்‌.

Rules, notifications and orders under this Act

Listed from India Code. Each opens there.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts