Tamil Nadu · 2007 · Act 18
The Tamil Nadu Welfare Board for the Disabled Persons Act, 2007
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
2007ஆம் ஆண்டு தமிழ்நாடு மாற்றுத்திறனுடைய
நபர்களுக்கான நல வாரியச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 18/2007)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
The Tamil Nadu Welfare Board for the Disabled
Persons Act, 2007
(Tamil Nadu Act No. 18 of 2007)
(as on 31* October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
சென்னை
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
2007ஆம் ஆண்டு தமிழ்நாடு மாற்றுத்திறனுடைய
பிரிவு
௯
N
o
w
A
W
N
-
e
12.
13.
14.
15.
16.
17.
நபர்களுக்கான நல வாரியச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 18/2007)
பொருளடக்கம்
குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும்.
தொடக்கம்.
பொருள்வரையறைகள்.
வாரியத்தை நிறுவுதல்.
வாரியத்தின் செயற்பணிகள்.
குழுக்கள்.
நிதியம்.
கணக்குகளும் தணிக்கைகளும்.
தகுதிக்கேடுகளும் நீக்கமும்.
உறுப்பினரின் பதவி விலகல்.
காலியிடங்களை நிரப்புதல்.
காலியிடங்கள் நடவடிக்கைகளை
செல்லத்தகாதது ஆக்காது
வாரியத்தின் செயற்பாட்டில் விசாரணை.
வாரியத்தைக் கலைத்து மாற்றியமைத்தல்.
நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
இச்சட்டமானது பிற சட்டம் எதற்கும் கூடுதலாக.
இருக்க வேண்டுமேயன்றி அதனைக்
குறைவுபடுத்துதல் கூடாது.
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
1
2007ஆம் ஆண்டு தமிழ்நாடு மாற்றுத்திறனுடைய
நபர்களுக்கான நல வாறியச் சட்டம்
தமிழ்நாடு சட்ட எண் 18/2007
[தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் பின்வரும் சட்டமானது 2007ஆம்
ஆண்டு ஜுன் திங்கள் 07ஆம் நாளன்று ஆளுநரின்
ஏற்பிசைவைப் பெற்று பொதுத்தகவலுக்காகத் தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு மாநிலத்தில் மாற்றுத்திறணுடைய நபர்களின்
நலனுக்காக வாரியம் ஒன்றை நிறுவுவதற்கு
வகைசெய்வதற்கான ஒரு சட்டம்.
இந்தியக் குடியரசின் ஐம்பத்து எட்டாம் ஆண்டில்
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால்
இயற்றப்பட்ட சட்டம் பின்வருமாறு :-
1. குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும் தொடக்கம்.-
(1) இந்தச் சட்டம், 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு
மாற்றுத்திறனுடைய நபர்களுக்கான நல வாரியச் சட்டம்
என வழங்கப்பெறும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் பரவி
நிற்கும்.
(3) இது, மாநில அரசு, அறிவிக்கை வாயிலாகக்
குறிப்பிடக்கூடிய தேதியன்று நடைமுறைக்கு வருதல்
வேண்டும்.
2. பொருள்வரையறைகள்.- இந்தச் சட்டத்தில்,
தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி,-
(@) "வாரியம் என்பது, பிரிவு 3இன் படி
நிறுவப்பட்ட வாரியம் எனப் பொருள்படும்.
0) "மாற்றுத்திறன்", என்பது,-
(i) பார்வைக் குறைபாடு
2
0) பார்வைக் குறைவு;
(0) செவிப்புலன் குறைபாடு;
(iv) இடம்பெயரும் ஆற்றல் குறைபாடு;
(V) மனவளர்ச்சிக் குன்றிய நிலை;
(Vi) மனநோய்;
ரி) தொழுநோய் குணமடைந்த நிலை;
(viil) மூளைவாதம்;
0௦ புற உலகச் சிந்தனைக் குறைபாடு;
(X) பல உறுப்புக் குறைபாடுகள்;
எனப் பொருள்படும்.
(௦9) "மாற்றுத்திறனுடைய நபர், என்பது,
குறைபாடு எதனாலும் நாற்பது விழுக்காடுக்குக்
குறையாமல் பாதிக்கப்படுகிற ஒரு நபர் எனப்
பொருள்படும்.
(0) "நிதியம்" என்பது, பிரிவு 6இன் படி
அமைக்கப்பட்ட ஒரு நிதியம் எனப் பொருள்படும்.
(6) "அரசு" என்பது, மாநில அரசு எனப்
பொருள்படும்.
(9) உறுப்பினர் செயலாளர்" என்பது,
வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் எனப் பொருள்படும்.
(ஐ "வகுத்துரைக்கப்பட்ட" என்பது,
விதிகளினால் வகுத்துரைக்கப்பட்ட எனப் பொருள்படும்.
3. வாரியத்தை நிறுவுதல்.- (1) அரசு,
அறிவிக்கையின். வாயிலாக மாற்றுத்திறனுடைய
நபர்களுக்காகப் பல்வேறு நல நடவடிக்கைகளை
நடைமுறைப்படுத்துவதற்காகவும் நிருவகிப்பதற்காகவும்,
3
"தமிழ்நாடு மாற்றுத்திறனுடைய நபர்களுக்கான நல
வாரியம்" எனப்படும் வாரியம் ஒன்றை நிறுவலாம்.
(2) வாரியம், மேற்சொல்லப்பட்ட பெயரில் ஒரு
கூட்டுருமமாக இருத்தல் வேண்டும், நிலையான
தொடர்வழி உரிமையையும் பொது இலச்சினையும்
பெற்றிருப்பதோடு, சொத்தினை ஈட்டுவதற்கும், வைத்து
வருவதற்கும் மற்றும் தீர்வு செய்வதற்கும், ஒப்பந்தம் செய்து
கொள்வதற்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் மற்றும்
அதன் பெயரில் வழக்கிடலாம் அல்லது வழக்கிடப்படலாம்.
(3) வாரியம், உடற்குறைபாடு சார்ந்த
செயற்களத்தில் வல்லுநர்களையும் அல்லது
நிபணர்களையும் மாற்றுத்திறனாளிகளின் உடற்குறைபாடு
தொடர்புடைய அரசு சாரா அமைப்புகளையும்,
சங்கங்களையும், அரசையும் பிரதிநிதித்துவம்.
செய்கிறவகையில் அரசால் அவ்வப்போது பெயர்க்குறித்து
நியமிக்கப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டிருக்கும்.
(4) வாரியத்தின் தலைவர், சமூகநலத் துறையைப்
பொறுப்பில் கொண்டுள்ள அமைச்சராகவும், வாரியத்தின்.
துணைத்தலைவர், சமூக நலம் மற்றும் சத்துணவுத்
திட்டத்துறை அரசுச் செயலாளராகவும் இருப்பார்கள்.
மாற்றுத்திறனுடைய நபர்களுக்கான மாநில ஆணையர்,
அரசை பிரதிநிதித்துவம் செய்யும் வாரியத்தின் உறுப்பினர்
செயலாளராகவும் இருப்பார்.
(5 வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களையும்
பெயர்குறித்து நியமித்த பின்னர், அரசானது,
அறிவிக்கையின் வாயிலாக, வாரியத்தின் அனைத்து
உறுப்பினர்களின் பெயர்களையும் வெளியிடுதல்
வேண்டும்.
(6) வாரியத்தின் உறுப்பினர்களின். பதவிக்
காலஅளவானது, வகுத்துரைக்கப்படும் விதத்தில் இருத்தல்
வேண்டும்.
4
(7) வாரியத்தின் கூட்டங்கள் மற்றும் இந்த
நோக்கத்திற்காக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்
மற்றும் அதனுடன் இணைந்த அல்லது அதற்குத்
துணையான பொருட்பாடுகள் தொடர்புடைய
அனைத்தையும், அரசின் ஏற்புக்குட்பட்டு, வாரியம் தானாக
ஒழுங்குபடுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
4. வாரியத்தின் செயற்பணிகள்.- (1) கிடைக்கக்கூடிய
நிதிகளுக்குட்பட்டு, வாரியம்.-
(8) மருத்துவ சேவை உள்ளடங்கலான
மாற்றுத்திறனுடைய நபர்களின். நலனுக்காக
வகைசெய்தல் வேண்டும்;
(b) மனவளர்ச்சி குன்றிய நபர்களைக்
கவனித்துப் பராமரிக்க முன்வருகிற அரசு சாரா
அமைப்புகளுக்கும் சங்கங்களுக்கும் நிதியுதவி அளித்தல்
வேண்டும்;
(9) பொது இடங்கள், பணி இடங்கள், பள்ளிகள்,
கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்கள் ஆகியவற்றில்
தடையில்லாச் சூழல்களுக்கு வகைசெய்தல் வேண்டும்;
(0) மாற்றுத்திறனுடைய குழந்தைகள்
பள்ளிகளை அணுகும் வகையில், சிறப்புக் கல்வி
தேவைப்படுவோருக்குத் தணியார் துறையில் சிறப்புப்
பள்ளிகளை நிறுவுவதற்கான வசதிகளை அளித்தல்
வேண்டும்;
(8) அரசு சாரா அமைப்புகளினாலும்.
சங்கங்களினாலும். மாற்றுத்திறனுடைய நபர்களுக்கு
பயிற்சியளிப்பதற்கு வகை செய்தல் வேண்டும்;
) மாற்றுத்திறனுடைய நபர்களை வேலையில்
அமர்த்துகிற வேலை தருபவர்களுக்குத் தேவையான
உதவித்தொகையினை வழங்க வகைசெய்தல் வேண்டும்;
(ஐ அரசினால் வகுத்துரைக்கப்படும்
அத்தகைய பிற செயற்பணிகளைப் புரிதல் வேண்டும்.
(2) வாரியமானது, மார்ச் மாதம் முப்பத்தோராம்
நாளன்று முடிவடைகின்ற முந்தைய ஆண்டினுடைய
வாரியத்தின் நடவடிக்கைகளின் பேரிலான
ஆண்டறிக்கையினை, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் திங்கள்
முதலாம் நாளுக்குப் பிண்ணர், கூடியவிரைவில் அரசுக்குப்
பணிந்து அனுப்புதல் வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட
அறிக்கை ஒவ்வொன்றும், பெறப்பட்டதற்குப் பின்னர்,
கூடியவரையில் சட்டமன்றப்பேரவையின் கூட்டத்தொடர்
நடைபெற்றுக் கொண்டிருந்தால், அந்தக்
கூட்டத்தொடரிலோ அல்லது அந்த அறிக்கை பெறப்பட்ட
தேதியைத் தொடர்ந்து உடனடியாக நடைபெறும்
கூட்டத்தொடரிலோ சட்டமன்றப்பேரவை முன்பு
வைக்கப்படுதல் வேண்டும்.
(3) வாரியம், அதன் செயற்பணிகளை ஆற்றுவதில்,
அதற்கு அவ்வப்போது எழுத்து வடிவில் கொடுக்கக்கூடிய
காரணங்களுக்காக, அரசின்: அத்தகைய
பணிப்புரைகளுக்குக் கட்டுப்பட்டிருத்தல் வேண்டும்.
5. குழுக்கள்.- (1) அரசானது, ஆணையின்
மூலமாக, வாரியத்தினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட
உறுப்பினர்களைக் கொண்டு, ஒன்று அல்லது அதற்கு
மேற்பட்ட குழுக்களை அமைத்துருவாக்கலாம் மற்றும்.
அத்தகைய குழுக்கள் அரசினால் பெயர் குறித்து
நியமிக்கப்பட்ட அலுவலர் ஒருவரால் தலைமை
வகிக்கப்படுதல் வேண்டும்.
(2) அக்குழுவானது, அவ்வப்போது வாரியத்தினால்
ஒப்படைக்கப்படக்கூடிய அத்தகைய கடமைகளைப் புரிதல்
வேண்டும்.
6. நிதியம்.- (1) "தமிழ்நாடு மாற்றுத்திறனுடைய
நபர்களுக்கான நல நிதியம்" என்ற பெயரிலும் முறையிலும்
6
நிதியம் ஒன்று அமைத்துருவாக்கப்பட்டு இருந்து வருதல்
வேண்டும். கீழே குறிப்பிடப்பட்ட வருவாய்
ஆதாரங்களிலிருந்து பெறப்படும். பணத்தொகைகள்
அனைத்தும் அத்தகைய நிதியத்தில் வரவு வைக்கப்படுதல்
வேண்டும், அவையாவன:-
(ஐ வாரியத்தின் செயற்பணிகளை
நிறைவேற்றும் நோக்கங்களுக்காக அரசிடமிருந்து
பெறப்படும் மானியங்கள்;
0) பல்வேறு நிறுவனங்களிடமிருந்தும்
மனித நேயர்களிடமிருந்தும் பெறப்பட்ட நன்கொடைகள்
மூலமாகவும், பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு
செய்வதன் மூலமாகவும் திரட்டப்படும் நிதிகள்; மற்றும்.
(9). வகுத்துரைக்கபடக்கூடிய பிற வருவாய்
ஆதாரங்கள் எவற்றிலிருந்தும் பெறப்படும் நிதிகள்.
(2) வாறியமானது, அந்த நிதியை அரசின்:
அறிவுறுத்தல்களின்படி ஏதேனும் ஒரு
தேசீயமயமாக்கப்பட்ட வங்கியில் வைத்து வருதல்
வேண்டும். அத்தகையதொரு கணக்கானது வாரியத்தின்:
கையொப்பமிட அதிகாரம் அளிக்கப்பட்டவர்களுள்
எவரேனும் இருவரால் கூட்டாகச் செயற்படுத்தப்படுதல்
வேண்டும், அவர்களுள் ஒருவர் உறுப்பினர் செயலாளராக
இருத்தல் வேண்டும்.
(3) மாற்றுத்திறனுடைய நபர்களின் நலன்
தொடர்பான எதிர்பாராச் செலவினங்கள் உள்ளடங்கலான
அனைத்துச் செலவினங்களும் அந்த நிதியத்திலிருந்து
எதிர்கொள்ளப்படுதல் வேண்டும்.
7. கணக்குகளும், தணிக்கைகளும்.- (1)
வாரியமானது, தக்க கணக்குகளையும் பிற தொடர்பான
பதிவுருக்களையும் பராமரித்து வருதல் வேண்டும் மற்றும்
வகுத்துரைக்கப்படும் படிவத்தில் ஐந்தொகை (இருப்பு
7
நிலைக்) குறிப்பேடு உள்ளடங்கலான ஆண்டுக்கணக்கு
விவரவுரை ஒன்றைத் தயாரித்தல் வேண்டும்.
(2) வாரியத்தின் கணக்குகள், அரசால் இது
குறித்து நியமிக்கப்படக்கூடிய அத்தகைய தகுதிவாய்ந்த
நபரால் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்படுதல்
வேண்டும்.
(3) தணிக்கையாளர், அனைத்து நியாயமான
காலங்களிலும் வாரியத்தின் கணக்குப் புத்தகங்களையும்
பிற ஆவணங்களையும் பார்வையிடுவதற்கு அணுகும்.
உரிமை பெற்றிருத்தல் வேண்டும்; மற்றும் அந்தத்
தணிக்கையின் நோக்கங்களுக்காகத் தமக்குத் தேவையாக
இருக்கக்கூடிய அத்தகைய விளக்கங்களையும்
தகவல்களையும் கோரிப் பெறலாம் அல்லது வாரியத்தின்:
உறுப்பினர் அல்லது அலுவலர் எவரையும் விசாரிக்கலாம்.
(4) தணிக்கையாளரால் சான்றளிக்கப்பட்ட
வாரியத்தின் கணக்குகள், அதன்மீதான தணிக்கை
அறிக்கையுடன் சேர்த்து, இதுகுறித்து அரசு
குறிப்பிடப்படக்கூடிய தேதிக்கு முன்பாக ஆண்டுதோறும்
அரசுக்கு மேற்குறிப்பு செய்து அனுப்புதல் வேண்டும்.
(5) வாரியமானது, தணிக்கையாளரின்
அறிக்கையைப் பார்வையிட்ட பின்னர், அரசானது
பிறப்பிக்கக் கருதும் அத்தகைய பணிப்புரைகளுக்கு
இணங்கி நடத்தல் வேண்டும்.
(6) தணிக்கைக்கான செலவு, நிதியத்திலிருந்து
செலுத்தப்படுதல் வேண்டும்.
8. தகுதிக்கேடுகளும் நீக்கமும்.- (1) நபர் எவரும்,
அவர்-
(8) வாரியத்தின் சம்பளம் பெறும் அலுவலராக
இருப்பார் என்றால்; அல்லது
8
(b) நொடித்தநிலையர் என தற்போது அல்லது
எப்போதாவது தீர்ப்பளிக்கப்பட்டு இருப்பார் என்றால்;
அல்லது
(9) பித்தராகக் காணப்பட்டால் அல்லது
மனச்சீர்கேடு உள்ளவர் என்றால்; அல்லது
(0) ஒழுக்கக்கேட்டினை உள்ளடக்கிய
குற்றச்செயல் எதற்காகவும் தற்போது அல்லது
எப்போதாவது தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பார்
என்றால்,
வாரியத்தின்: உறுப்பினர் ஒருவராகத் தெரிவு
செய்யப்படுதலோ அல்லது உறுப்பினராகத் தொடர்ந்து
இருத்தலோ கூடாது.
(2)அரசு,-
(ஐ) உட்பிரிவு (1) இல் குறிப்பிடப்பட்ட
தகுதிக்கேடுகளில் எதற்கும் உட்பட்டுள்ள அல்லது
உள்ளாகியிருக்கிற உறுப்பினர் எவரையுமோ; அல்லது
(b) தொடர்ந்தாற்போல் மூன்றிற்கு மேற்பட்ட
வாரியத்தின் கூட்டங்களுக்கு வாரியத்தின்.
அனுமதியில்லாமல் வாராதிருக்கிற உறுப்பினர்
எவரையுமோ; அல்லது
(9) தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி
இருக்கிற உறுப்பினர் எவரையுமோ,
பதவியிலிருந்து நீக்கலாம்.
9. உறுப்பினரின் பதவி விலகல்.- வாரியத்தின்.
உறுப்பினர் எவரும், எந்த நேரத்திலும், அரசுக்கு
முகவரியிட்டு தன் கைப்பட எழுதி தன் பதவியை விட்டு
விலகலாம், அரசால் அப்பதவி விலகல் ஏற்றுக்
கொள்ளப்பட்டதன்பேரில், அவரது பதவி காலியாகுதல்
வேண்டும்.
9
140. காலியிடங்களை நிரப்புதல். இறப்பு, விலகல்,
தகுதிக்கேடு அல்லது நீக்கம் அல்லது மற்றபடியான
காரணத்தினால் ஏற்படுகின்ற காலியிடம் எதையும்
பொறுத்தநிகழ்வில், வாரியமானது, அவ்வாறு ஏற்பட்ட
காலியிடத்தை அரசுக்கு உடனடியாகத் தெரிவித்தல்
வேண்டும் மற்றும் காலியிடம் ஏற்பட்ட தொண்ணூறு
நாட்களுக்கு மிகாமல் அவ்விடம் நிரப்பப்படுதல் வேண்டும்
மற்றும் அக்காலியிடத்தை நிரப்புவதற்காகப் பெயர்குறித்து
நியமிக்கப்பட்டவர் அந்தக் காலியிடம் ஏற்படாதிருந்தால்,
எவருடைய காலியிடத்தில் அவர் நியமிக்கப்பட்டாரோ,
அவர் பதவி வகிக்கும் அக்காலஅளவு வரையில் புதிதாக
நியமிக்கப்பட்டவர் பதவி வகித்தல் வேண்டும்:
வரம்புரை: அத்தகைய காலியிடம் உள்ளபோது
தொடர்ந்து இருக்கும் உறுப்பினர்கள், காலியிடம் எதுவும்
ஏற்படாதது போன்றே செயல்படலாம்.
11. காலியிடங்கள் நடவடிக்கைகளைச்
செல்லத்தகாதது ஆக்காது.- வாரியத்தின் செயல் அல்லது
நடவடிக்கைகள், அதனுடைய உறுப்பினர் பதவியில்
காலியிடம் இருக்கிறது என்பதான அல்லது அதனுடைய
அமைப்பில் குறைபாடு எதுவும் இருக்கிறது என்பதான
காரணத்தால் மட்டுமே மறுத்து வாதிடப்படுதலோ அல்லது
செல்லத்தகாதது ஆக்கப்படுதலோ கூடாது.
12. வாரியத்தின் செயற்பாட்டில் விசாரணை.- (1)
அரசானது, எந்த நேரத்திலும் வாரியத்தின் பணியினைப்
புலன் விசாரணை செய்வதற்கோ அல்லது விசாரணை
செய்வதற்கோ நபர் எவரையும் அமர்த்தலாம் மற்றும் அதன்
பொருட்டு அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்கலாம்.
(2) வாரியமானது, அவ்வாறு அமர்த்தப்பட்ட
நபருக்கு உரியவாறு புலன் விசாரணையை அல்லது
விசாரணையை உரியமுறையில் செய்வதற்காக
அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தல் வேண்டும்;
10
மற்றும் அவர் கோரும் வாரியத்தின் வசம் உள்ள
அத்தகைய ஆவணங்கள், கணக்குகள் அல்லது தவலை
அவருக்கு அளித்தல் வேண்டும்.
13. வாரியத்தைக் கலைத்து மாற்றியமைத்தல்.- (1)
அரசானது, பிரிவு 12 உட்பிரிவு (1)இல் குறிப்பிடப்பட்ட
அறிக்கையை பரிசீலனை செய்ததன் பேரிலோ அல்லது
மற்றபடியோ,-
(ஐ வாரியம், அதன் அலுவற்பணிகளை
நிறைவேற்ற இயலவில்லை என்று கருதினாலோ அல்லது
(௦) வாரியம் அதன். அலுவற்பணிகளை
ஆற்றுவதில் இடைவிடாது தவறிழைக்கிறது அல்லது
அதன் அதிகார வரம்பை மீறுகிறது அல்லது அதன்.
அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்று
கருதினாலோ
அரசு, அறிவிக்கை வாயிலாக வாரியத்தை கலைத்து
மாற்றியமைக்கலாம். மற்றும் அது கலைக்கப்பட்ட
தேதியிலிருந்து பண்ணிரண்டு மாத கால அளவிற்குள்
வகுத்துரைக்கப்பட்ட முறையில் மாற்றியமைக்கலாம்.
கலைத்து மாற்றியமைப்பதற்கான காலஅளவானது, போதிய
காரணங்களுக்காக, அதுபோன்ற அறிவிக்கை ஒன்றால்
ஆறுமாதங்களுக்கு மிகாது நீட்டிக்கப்படலாம்:
வரம்புரை: இந்த உட்பிரிவின்படியான அறிவிக்கை
ஒன்றை வெளியிடும்முன், அரசு, அது ஏன் கலைத்து
மாற்றியமைக்கப்படக்கூடாது என்பதற்கான
காரணம்காட்டுமாறு நியாயமான வாய்ப்பு ஒன்றினை
வாரியத்துக்கு வழங்குதல் வேண்டும் மற்றும் வாரியத்தின்:
விளக்கங்கள் மறுப்புரைகள். எவையேனுமிருப்பின்
அவற்றைச் சமர்ப்பித்தால் அவற்றைப் பரிசீலனை செய்தல்
வேண்டும்.
11
(2) வாரியம் கலைக்கப்பட்ட பின்னர், அது மறுபடி
அமைத்துருவாக்கப்படும் வரையில், இச்சட்டத்தின்படியான
வாரியத்தின் அலுவல் பணிகள் அரசாலோ அல்லது
இந்நோக்கத்திற்காக அறிவிக்கையின் வாயிலாக அரசால்
அமர்த்தப்படும் அலுவலரால் அல்லது அலுவலர்களால்
ஆற்றப்படுதல் வேண்டும்.
(3) வாரியமானது கலைத்து மாற்றியமைக்கப்படும்
போது, பின்வரும் விளைவுகள் நடைமுறைக்கு வரும்,
அவையாவன:-
(8) வாரியத்தின் உறுப்பினர்கள் அனைவரும்
உட்பிரிவு (1)இன்படிஅறிவிக்கையானது வெளியிடப்பட்ட
தேதியிலிருந்து, அவர்களது பதவியைவிட்டு விலகுதல்
வேண்டும்.
(b) வாரியத்தால் ஆற்றப்படலாகும் அனைத்துப்
பணிகளும், கலைத்து மாற்றியமைக்கப்பட்ட காலத்தில்
அரசினாலோ அல்லது உட்பிரிவு (2)இன்படி இந்த
நோக்கத்திற்காக அமர்த்தப்பட்ட அலுவலராலோ அல்லது
அலுவலர்களாலோ ஆற்றப்படுதல் வேண்டும்; மற்றும்,
(௦9) வாரியம் கலைத்து மாற்றியமைக்கப்பட்ட
காலத்தில் அதனிடம் உள்ள நிதிகள் மற்றும் பிற
சொத்துக்கள் அனைத்தும் அரசிடம் வந்தடைதல்
வேண்டும் மற்றும் வாரியம் மறுபடி திருத்தி
அமைக்கப்பட்டதன் பேரில், அத்தகைய நிதிகளும்
சொத்துக்களும் மறுபடியும் வாரியத்திடம் சென்றடைய
வேண்டும்.
14. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.-- இச்சட்டத்தின்படியோ,
அல்லது அதன்கீழ்ச் செய்யப்பட்ட விதி அல்லது ஆணை
எதன்படியோ நல்லெண்ணத்தில் செய்யப்படும் அல்லது
செய்யக்கருதப்படும் ஏதொன்றிற்காகவும், அரசு அல்லது
வாரியம் அல்லது தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்
12
செயலாளர் அல்லது வாரியம் அல்லது குழுவின்
உறுப்பினர் எவருக்கும் அல்லது வாரியத்தின் பிற
அலுவலர்கள் எவருக்கும், எதிராகவோ உரிமைவழக்கு
குற்றவழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எவையும்
தொடரப்படுதல் கூடாது.
15. இச்சட்டமானது பிற சட்டம் எதற்கும் கூடுதலாக
இருக்க வேண்டுமேயன்றி அதனைக் குறைவுபடுத்துதல்
கூடாது.- இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அல்லது
அதன்படி செய்யப்பட்ட விதிகளானவை
மாற்றுத்திறனுடைய நபர்களின். நலப்பயனுக்காக
இயற்றப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட அப்போதைக்கு
நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதற்குமோ அல்லது
அதன்கீழ் பிறப்பிக்கப்பட்ட விதிகள், ஆணைகள்
எதற்குமோ அல்லது அதன்கீழ் பிறப்பிக்கப்பட்ட
அறிவுறுத்தல்கள் எவற்றுக்குமோ கூடுதலாக
இருக்கவேண்டுமேயன்றி அதனைக் குறைவுபடுத்துதல்
கூடாது.
16. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.- (1)
அரசு, இச்சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையுமோ
அல்லது அவற்றுள் ஏதொன்றையுமோ
நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.
(2) (a) இச்சட்டத்திண்படி செய்யப்பட்ட விதிகள்
அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல்
வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாளில் அவை
நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று
கூறப்பட்டாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட
நாளன்றே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b) இச்சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட
அறிவிக்கைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட
நாளில் அவை நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று
13
கூறப்பட்டாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட
நாளன்றே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(3) இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி
அல்லது ஆணை அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை
ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது
வெளியிடப்பட்ட பிண்னர், கூடியவிரைவில் சட்டமன்றப்
பேரவை முன்பு வைக்கப்படுதல் வேண்டும். அவ்வாறு
வைக்கப்பட்ட அல்லது அடுத்த கூட்டத்தொடர்
முடிவடைதற்கு முன்பு சட்டமன்றப்பேரவை அத்தகைய
விதி, ஆணை அல்லது அறிவிக்கையில் மாற்றம் எதையும்
செய்யுமானால் அல்லது அந்த விதி அல்லது அறிவிக்கை
அல்லது ஆணை செய்யப்படக்கூடாது என்று அல்லது
பிறப்பிக்கக்கூடாது என்று சட்டமன்றப்பேரவை முடிவு
செய்யுமானால், அதற்குப் பின் அந்த விதி அல்லது ஆணை
அல்லது அறிவிக்கை அவ்வாறு மாற்றப்பட்ட வடிவில்தான்:
நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது
நிகழ்வுக்கேற்ப அது செல்திறன் பெறாது போதல்
வேண்டும். ஆயினும் அத்தகைய மாற்றமோ அல்லது
செல்திறன் பெறாது போவதோ அந்த விதியின்படி அல்லது
ஆணையின்படி அல்லது அறிவிக்கையின்படி
முன்னதாகச் செய்யப்பட்ட ஏதொன்றின்
செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.
17. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.-
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச்
செயல்படுத்துவதில் இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால்,
அரசு, சூழ்நிலைக்கு ஏற்ப ஆணைமூலமாக, இந்தச்
சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத, அந்த
இடர்ப்பாட்டை நீக்கும் நோக்கத்திற்குத் தேவையானதென
அல்லது உகந்ததெனத் தோன்றும் எதையும் செய்யலாம்:
14
வரம்புரை: அத்தகைய ஆணை எதுவும் இந்தச்
சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து இரண்டாண்டுகள்
காலஅளவு முடிவடைந்த பின்னர்ச் செய்யப்படுதல் கூடாது.