Tamil Nadu · 1992 · Act 11
The Tamil Nadu Wakf Board (Appointment of Special Officer) Act, 1991
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 1992 ஆம்
ஆண்டு மார்ச் திங்கள் ௦6 ஆம் நாளன்று குடியரசுத் தலைவரின் ஏற்பிசைவைப்
பெற்றது, மற்றும் பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண் 111992.
தமிழ்நாடு மாநிலத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கென பொதுநலன் கருதி,
தனி அலுவலரை நியமிப்பதற்கு வகைசெய்வதற்கானதொரு சட்டம்.
தமிழ்நாடு வக்ஃபு வாரியம், வக்ஃபு சட்டத்தின்படியோ அல்லது அதன் கீழோ
அதன் மீது விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற தொடர்ந்து தவறுகின்றது
மற்றும் அவற்றை நிறைவேற்ற இயலவில்லை என்றும், அதன் அதிகாரத்தை
மீறுகிறது மற்றும் தவறாக பயன்படுத்துகிறது. என்றும் மாநில அரசின்
கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாலும்;
மேலும், தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தற்போதைய உறுப்பினர்கள் மேற்படி
வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை நிர்வகிப்பதில் கடுமையான
முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்று மாநில அரசின் கவனத்திற்குக்
கொண்டு வரப்பட்டுள்ளதாலும்;
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தற்போதைய நிர்வாகத்தை நீடிப்பது பொது
நலனுக்கு உகந்ததல்ல என்றும், வக்ஃபுகளின் நலனுக்கும் நோக்கங்களுக்கும்
தீங்கு விளைவிக்கும் என்றும் மாநில அரசிடம் முறையிடப்பட்டுள்ளதாலும்;
மாநில அரசு, கவனமாகப் பறிசீலணை செய்த பின்பு, தமிழ்நாடு வக்ஃபு
வாரியத்தின் மேலாண்மைப் பொறுப்பை மக்கள் நலன் கருதி, தமிழ்நாடு வக்ஃபு
வாரியத்தின் முறையான மேலாண்மையை பாதுகாக்கும் பொருட்டு, ஒரு
குறிப்பிட்ட காலத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும்,
இந்நோக்கத்திற்காக, மேற்கூறிய காலத்திற்குள் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு
ஒப்படைக்கப்பட்ட அனைத்து சொத்துக்களும் மாநில அரசிடம் உற்றமையவும்,
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தால் புறியப்படும் மற்றும் ஆற்றப்படும் அதிகாரங்கள்,
கடமைகள் மற்றும் செயல்பாடுகளானது, மாநில அரசால் நியமிக்கப்படும் தனி
அலுவலரால் செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும்
கொள்கை முடிவு எடுத்துள்ளது.
இந்திய குடியரசின் நாற்பத்தி இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தின்
சட்டமன்ற பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும் தொடக்கம்.- (1) இந்தச் சட்டம், 1991
1
ஆம் ஆண்டு தமிழ்நாடு வக்ஃபு வாரியம் (தணி அலுவலர் நியமனச்) சட்டம், என
வழங்கப்பெறும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.
(3) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. பொருள் வரையறைகள்.- இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறு பொருள்
குறித்தாலன்றி,-
(ஐ "குறித்திட்ட நாள்" என்பது இச்சட்டம் நடைமுறைக்கு வரும் தேதி
என்று பொருள்படும்;
(b) "அரசு" என்பது மாநில அசு என்று பொருள்படும்;
(6) "வக்ஃப் சட்டம்" என்பது 1954 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் என்று
பொருள்படும்;
(0) "வக்ஃபு வாரியம்" என்பது வக்ஃபு சட்டத்தின் 9 ஆம் பிரிவின் (1) ஆம்
உட்பிரிவின் கீழ் நிறுவப்பட்ட தமிழ்நாடு வக்ஃபு வாரியம் என்று பொருள்படும்;
(ஐ) இச்சட்டத்தில் பயன்படுத்தப்பட்டு, வரையறை செய்யப்படாத, ஆனால்
வக்ஃபு சட்டத்தில் வரையறை செய்யப்பட்ட சொற்களும் சொற்றொடர்களும்,
அந்தச் சட்டத்தில் அவற்றுக்கு முறையே குறித்தளிக்கப்பட்ட பொருளைக்
கொண்டிருத்தல் வேண்டும்.
3. வக்ஃபு வாழிய உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைதல்.-
வக்ஃபு சட்டத்திலோ அல்லது அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள வேறு
ஏதேனும் சட்டத்திலோ அல்லது ஏதேனும் நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது பிற
அதிகார அமைப்பின் தீர்ப்பாணை அல்லது ஆணையில் அடங்கியுள்ள எது
எவ்வாறிருப்பினும், வக்ஃபு வாரியத்தின் தலைவர் உட்பட வக்ஃபு வாரியத்தின்
உறுப்பினர்களின் பதவிக்காலம் குறித்திட்ட நாளுக்கு உடனடி முன்பு முடிவுறும்
என்பதுடன், அத்தகைய உறுப்பினர்கள், குறித்திட்ட நாளன்றும் அதிலிருந்தும்
தங்கள் பதவியை விட்டு விலகுதல் வேண்டும்.
4. தனி அலுவலறின் நியமனம் மற்றும் வக்ஃபு வாறியத்தின் சொத்துக்களை
அரசிடம் உற்றமைதல்.- (1) வக்ஃபு சட்டத்திலோ அல்லது அப்போதைக்குச்
செல்லாற்றலிலுள்ள வேறு ஏதேனும் சட்டத்திலோ அல்லது ஏதேனும் நீதிமன்றம்,
தீர்ப்பாயம் அல்லது பிற அதிகார அமைப்பின் தீர்ப்பாணை அல்லது ஆணையில்
அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், குறித்திட்ட நாளன்றும் அதிலிருந்தும்,
வக்ஃபு வாரியத்தின் அலுவல்களை நிர்வகிக்க முஸ்லிம் ஒருவரை தனி
2
அலுவலராக அரசு நியமித்தல் வேண்டும் மற்றும் வக்ஃபு வாரியத்திடம்
உற்றமைந்துள்ள அனைத்து சொத்துக்களும், (5) ஆம் உட்பிரிவின்கீழ் வக்ஃபு
வாரியம் மறுசீரமைக்கப்படும் வரை, அரசிடம் உற்றமைதல் வேண்டும்.
(2 1) ஆம் உட்பிரிவின்கீழ் நியமிக்கப்படும் தணி அலுவலர், ஓராண்டு
காலத்திற்கு அல்லது அரசு, அறிவிக்கை வாயிலாகக் குறித்துரைக்கும்
அத்தகைய முந்தைய காலத்திற்கு பதவி வகிப்பார்:
வரம்புரையாக, தனி அலுவலர் பதவியில் காலியிடம் எதுவும் எழுமாயின்,
அந்தக் காலியிடம் அரசால் நிரப்பப்படுதல் வேண்டும், அந்தக் காலியிடத்தில்
அவ்வாறு அமர்த்தப்பெறுபவர், கூறப்பட்ட காலஅளவின் எஞ்சிய காலத்திற்குப்
பதவி வகிப்பார்.
(3) 1) ஆம் உட்பிரிவின்கீழ் நியமிக்கப்படும் தணி அலுவலர், அரசின்
கட்டுப்பாட்டிற்கும். அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் பணிப்புரைக்கும்
உட்பட்டு, வக்ஃபு சட்டத்தின் வகைமுறைகளால் அல்லது அதன்கீழ் வக்ஃபு
வாரியத்தால் அல்லது அதன் சார்பாக செயல்படுத்தப்படக்கூடிய மற்றும்
நிறைவேற்றப்படக்கூடிய அனைத்து அதிகாரங்களையும் செலுத்துவார் மற்றும்
அனைத்து கடமைகளையும் புரிவார்.
(4) (1) ஆம் உட்பிரிவின்கீழ் நியமனம் செய்யப்படும் தனி அலுவலருக்கு
வழங்கப்படும் ஊதியத்தை அரசு நிர்ணயிக்கலாம், அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட
ஊதியத் தொகை மற்றும் அரசால் ஒப்புதல் அளிக்கப்படும் தணி அலுவலர்
நியமனக் காலத்தில், வக்ஃபு வாறியத்தின் மேலாண்மைக்கு ஏற்படும் பிற
செலவினங்கள், வக்ஃபு நிதியிலிருந்து செலுத்தப்பட வேண்டும்.
(5) தனி அலுவலர் நியமனக் காலம் முடிவடைந்தவுடன், வக்ஃபு
வாரியத்தின் புதிய உறுப்பினர்கள் பதவிக்கு வரும் வகையில், வக்ஃபு சட்டத்தின்
10 ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளவாறு வக்ஃபு வாரியத்தை அரசு மாற்றி அமைக்க
வேண்டும்.
5. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு.- (1)
இந்தச் சட்டத்திற்கிணங்க, நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக்
கருதப்பட்ட எதற்காகவும், எவருக்கும் எதிராக உரிமை வழக்கு, குற்ற வழக்கு
அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவும் தொடர்தல் ஆகாது.
(2) இந்தச் சட்டத்திற்கிணங்க, நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது
செய்யக் கருதப்பட்ட எதனாலும், ஏற்பட்ட அல்லது ஏற்பட வாய்ப்புள்ள
எந்தவொரு சேதத்திற்காகவும் அரசிற்கு எதிராக எந்த உரிமை வழக்கும் அல்லது
பிற சட்ட நடவடிக்கையும் தொடர்தல் ஆகாது.
3