Tamil Nadu · 1989 · Act 42
THE TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY ACT 1989
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மற்றும் மருத்துவ மற்றும் விலங்கின
அறிவியல் பல்கலைக்கழகச் சட்டம்.
சட்ட எண்.42/1989
பொருளடக்கம்.
கூறுகள்.
அத்தியாயம்-।॥
முன்னுரை.
1. குறுந்தலைப்பு, அளாவுகை, பொருந்துகை மற்றும் தொடக்கம்.
2. பொருள் வரையறைகள்.
அத்தியாயம்-॥
பல்கலைக்கழகம்
3. பல்கலைக்கழகம் நிறுவப்படுதல்.
4. புதிய கல்லூரி நிறுவப்படு தலும் கல்வி நிலையத்திற்கு
இப்பல்கலைக்கழகத்தால் ஏற்பளிக்கப்படுதலும்.
5. இப்பல்கலைக்கழகத்தின் குறிக்கோள்.
6. இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரங்களும் அலுவல்களும்.
7. இப்பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ளுதல்.
அத்தியாயம்-॥
இப்பல்கலைக்கழகத்தில் அலுவலர்கள் .
8. பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள்.
9. வேந்தர்.
10. இணை வேந்தர்.
11. துணை வேந்தர்.
12. துணை வேந்தரின் அதிகாரங்களும் கடமைகளும்.
13. பதிவாளர்.
14. நிதி அலுவலர்.
15. முதன்மையர்கள்.
16. இயக்குநர்கள்.
அத்தியாயம் V.
இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகள்.
17. இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகள்.
18. மேலாண்மைக்குழு.
19. குழுமத்தின் அதிகாரங்கள்.
20. குழுமத்தின் கூட்டங்கள்.
21. கல்வி மன்றம்.
22. கல்வி மன்றத்தின் அமைப்பு.
23. கல்வி மன்றத்தின் அதிகாரங்களும் அலுவல்களும்.
24, புலங்கள்.
25. பாடக்குழுமங்கள்.
26. திட்டமிடும் குழு.
27. நிதிக்குழு.
28. பிற அதிகாரஅமைப்புகளை அமைத்துருவாக்குதல்.
அத்தியாயம் V.
ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கக் கல்வி அமைப்புகள்.
29. கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு.
30. கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல் விரிவாக்கக் கல்வி
அமைப்பு.
அத்தியாயம் VI
நிதியங்களும் கணக்குகளும்.
31. பொது நிதியம்.
32. பிற நிதியங்கள்.
33. நிதியங்களை நிருவகித்தல்.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
மானியங்கள்.
ஆண்டு கணக்குகள்.
அத்தியாயம் VI
பணி நிபந்தனைகள்.
ஓய்வூதியம், பணிக்கொடை முதலானவை.
பணி நிபந்தனைகள்.
அத்தியாயம் VI
நிலைமுறை விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள்.
நிலைமுறை விதிகள்.
நிலைமுறை விதிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பது.
ஒழுங்குமுறை விதிகள்.
அத்தியாயம் 16.
கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்கள் பணியாளர்கள், நிதியங்கள்
ஆகியற்றை மாற்றுதல்.
குறித்த சில கல்லூரிகளையும் கல்வி நிலையங்களையும்
இப்பல்கலைக்கழகத்திற்கு மாற்றுதல்.
மாணவர்களுக்கான தனி வகைமுறைகள்.
குறித்த சில பணியாளர்களின் பணியை மாற்றுதல்.
வருங்கால வைப்பு நிதியத்திலும் மற்றும் அதுபோன்ற நிதியங்களிலும்.
சேர்ந்துள்ள தொகைகளை மாற்றுதல்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல்
பல்கலைக்கழகத்திற்கு குறித்தசில பணத்தொகை வழங்கப்படுதல்.
அத்தியாயம் X.
இடைப்படுகால வகைமுறைகள்.
முதல் துணை வேந்தரின் நியமனம்.
முதல் பதிவாளரின் நியமனம்.
முதல் துணை வேந்தரின் இடைப்படுகால அதிகாரங்கள்.
அத்தியாயம் 30.
பல்வகை.
49. பணித்துறை மேற்பார்வை.
50. தகவல் பெறுவதற்கான அதிகாரம்.
51. ஆண்டு அறிக்கை.
52. இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்பு மற்றும் பிற அமைப்புகளின்
அமைத்துருவாக்கம் குறித்து எழும் பூசல்கள்.
53. உறுப்பினர் பதவி வகிக்க முடியாததற்கான தகுதிக்கேடு.
54. தற்செயல் காலியிடங்களை நிரப்புதல்.
55. பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு எதனின் உறுப் னர்
பதவியிலிருந் நீக்குதல்.
56. குழுக்களை அமைத்துருவாக்குதலும் அதிகாரங்களை ஒப்படைவு
செய்தலும்.
57. செயல்களையும் நடவடிக்கைகளையும் செல்லத்தக்கனவாக்குதல்.
58. துணை வேந்தர் மற்றும் பிற அலுவலர்கள் முதலானோர் பொது
ஊழியர்களாக கருதப்படுவர் என்பது.
59. இணைப்புப்பட்டியலை திருத்துவதற்கான அதிகாரம்.
60. 871971 எனும் எண் கொண்ட தமிழ்நாடு சட்டம் பொருந்தா என்பது.
61. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
62. நீக்கமும் காப்பும்.
இணைபப்புப்பட்டியல்
1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மற்றும் மருத்துவ மற்றும் விலங்கின
அறிவியல் பல்கலைக்கழகச் சட்டம்.
சட்ட எண்.42/1989
தமிழ்நாடு மாநிலத்தில் கால்நடை மருத்தவ மற்றும் விலங்கின அறிவியல்
பல்கலைக்கழகமொன்றை நிறுவியமைத்துருவாக்குவதற்கும் அது தொடர்பான
பொருட்பாடுகளுக்கும் வகைசெய்வதற்கானடதொரு சட்டம் .
கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியலின் வளர்ச்சிக்காகவும்,
கால்நடை மற்றும் விலங்கின அறிவியல் கல்வி பெறுவதை மற்றும் அதில்
ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வருவதை மேலும் மேம்படுத்துவதற்காகவும்
தனிப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவுவது விரும்பத்தக்கதாக இருப்பதாலும்;
இந்தியக் குடியரசின் நாற்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
அத்தியாயம்-।॥
முன்னுரை.
1. குறுந்தலைப்பு, அளாவுகை, பொருந்துகை மற்றும் தொடக்கம். (1) இந்தச்
சட்டம், 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மற்றும் மருத்துவ மற்றும்
விலங்கின அறிவியல் பல்கலைக்கழகச் சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.
(3) இது,-
(2) இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கும்
கல்வி நிலையங்களுக்கும்; மற்றும்
(௦) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கும் அதன் கீழ்ச் செய்யப்படும்
நிலைமுறை விதிகளுக்கும் ஒழுங்குமுறை விதிகளுக்கும் இணங்க
இப்பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ளப்படக்கூடிய அல்லது அதனால்
நிறுவப்படக்கூடிய அல்லது பேணிவரப்படக்கூடிய கல்லூரிகள் மற்றும் கல்வி
நிலையங்கள் அனைத்திற்கும்
பொருந்தும்.
(4) இந்தப் பிரிவும் மற்றும் 2, 3, 4, 5, 6, 8, 9,10, 11,12, 13, 14, 15, 16, 17, 26,
32, 33, 41, 42, 43, 44, 46, 47, 48, 49, 58, 59, 60, 61 ஆகிய பிரிவுகளும், 1989-
ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 20-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாக
கொள்ளப்படுதல் வேண்டும்; 62-ஆம் பிரிவு நீங்கலாக, இந்த சட்டத்தில் எஞ்சிய
பகுதிகள், அரசு, அறிவிக்கையின் மூலமாக குறிக்கக்கூடிய தேதியில்
நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. பொருள் வரையறைகள்.- இந்தச் சட்டத்தில் தறவாய் வேறுபொருள்
குறித்தாலன்றி.-
(@) "கல்வி மன்றம்" என்றால், இப்பல்கலைக்கழகத்தின் கல்வி மன்றம் என்று
பொருள்படும்;
(b) "இணைக்கப்பெற்ற கல்லூரி என்றால், இப்பல்கலைக்கழகத்தில்
இணைக்கப்பெற்றதும் இப்பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளுக்கான
பட்டயப்படிப்புகளுக்கான அல்லது பிற கல்வி சிறப்புகளுக்கான தேர்வுகளுக்கு
ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக வேண்டி குறித்தகாலப் படிப்புப் பிரிவுகளுக்கு
வகைசெய்வதுமான கல்லூரி எதுவும் என்று பொருள்படும்;
(6) "விலங்கு" அல்லது "பழக்கு விலங்கினம்" (Live stock) என்பதில்,
பறவைகள், மீல், வன விலங்குகள், ஊர்வன ஆகியவை உள்ளடங்கும்;
(0) "குறிக்கப்பட்ட நாள்" என்றால், 1989-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள்
20-ஆம் நாள் என்று பொருள்படும்;
(8) குழுமம்" என்றால், இப்பல்கலைக்கழகத்தின் நிருவாகக் குழுமம் என்று
பொருள்படும்;
(7) "கல்லூரி" என்றால், இப்பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புகளுக்கும்
பட்டயப்படிப்புகளுக்கும் பிற கல்விச் சிறப்புகளுக்குமான தேர்வுகருக்கு ஏற்றுக்
கொள்ளப்படுவதற்காக, கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியலில்
குறித்தகாலப் படிப்புப் பிரிவுகளுக்கோ, பயிற்சிக்கோ வகைசெய்கின்ற அல்லது
அவற்றில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருவதற்கு வகைசெய்கின்ற அல்லது
அவற்றில் விரிவாக்க கல்விக்கு வகைசெய்கின்ற, இப்பல்கலைக்கழகத்தால்
நிறுவப்பட்டுள்ள அல்லது பேணிவரப்பட்டுள்ள அல்லது இப்பல்கலைக்கழகத்தில்
இணைக்கப்பெற்றுள்ள கல்லூரி அல்லது கல்வி நிலையம் எதுவும் என்று
பொருள்படும்;
(9) "மூலாதாரக் கல்லூரி" (constituent college) என்றால், சென்னையிலுள்ள,
சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்லிலுள்ள கால்நடை
மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மற்றும் தூத்துக்குடியிலுள்ள
மீன்வளக் கல்லூழி ஆகியவை என்று பொருள்படுவதோடு, அத்தகையதென
அவ்வப்போது குழுமத்தினால் விளம்பப்படக்கூடிய பிறிதொரு கல்லூரியையும்
உள்ளடக்கும்;
(h) "முதன்மையர் " (Dean) என்றால், கல்லூரி ஒவ்வொன்றினுடைய
முதன்மையர் என்று பொருள்படுவதோடு புலம் ஒவ்வொன்றின் முதன்மையரையும்
உள்ளடக்கும்;
(i) "விரிவாக்கக் கல்வி" என்றால் பழக்கு விலங்கினப் பண்ணை வைத்து
நடத்துபவர்களுக்கும் காப்பகங்கள் வைத்து நடத்துபவர்களுக்கும் விலங்குகளை
நோயுறாமல் பார்த்துக்கொள்வதும், அல்லது அதன் நலத்தைப் பேணிவருதல்
அல்லது கால்நடை வளர்ப்பு குறித்து மேம்பட்ட பயில்முறைகள் இவற்றில்
ஏதொன்றுடனும் தொடர்புடைய பிற பிரிவினர்களுக்கும் பயிற்சியளிப்பது என்றும்
விலங்கினப் பெருக்கத்தையும் விலங்கை வைத்து வணிகம் செய்வதைப் பற்றிய
அறிவியல் நுணுக்கங்களின் பல்வேறு நிலைகள் தொடர்பான கல்விசார்
நடவடிக்கைகள் என்றும் பொருள்படும்; மேலும் புதிய தொழில் நுணுக்கங்களையும்
கண்டுபிடிப்புகளையும் கால்நடை வளர்ச்சித் துறை, மீன்வளத் துறை மற்றும் அவை
போன்ற அரசுத் துறைகளின் மூலமாகவும் பழக்கு விலங்கினப் பண்ணைகளுக்கும்
பண்ணையகங்களுக்கும் கொண்டு சென்று காட்டுவதற்கான செய்முறைப்
பயிற்சியையும் உள்ளடக்கும்;
(0 புலம்" (faculty) என்றால், இப்பல்கலைக்கழகத்தி புலமொன்று என்று
பொருள்படும்;
(k) "அரசு" என்றால் மாநில அரசு என்று பொருள்படும்;
(1) “விடுதி” என்றால், இப்பல்கலைக்கழகத்தால் பேணிவரப்படுகின்ற அல்லது
ஏற்பிசைவளிக்கப்படு கின்ற, இப்பல்கலைக்கழகத்து மாணவர்களுக்கான ஒரு
குடியிருப்புப் பிரிவு என்று பொருள்படும்;
(£) அறிவிக்கப்பட்ட நாள் என்றால், 1-ஆம் பிரிவின் (4-ஆம்
உட்பிரிவின்படி பிறப்பிக்கப்படும் அறிவிக்கையில் குறித்துரைக்கப்படும் தேதி
என்று பொருள்படும்;
() "வகுத்துரைக்கப்பட்டா என்றால், இந்தச் சட்டத்தின் கீழ்ச் செய்யப்படும்
நிலைமுறை விதிகளின்லோ ஒழுங்குமுறை விதிகளின்லோ
வகுத்துரைக்கப்பட்ட என்று பொருள்படும்;
(௦) "ஒழுங்குமுறை விதிகள்" மற்றும் "நிலைமுறை விதிகள்" என்பது
முறையே இந்தச் சட்டத்தில் கீழ்ச் செய்யப்படும் ஒழுங்குமுறை விதிகள் என்றும்
நிலைமுறை விதிகள் என்றும் பொருள்படும்;
P) "இணைபப்புப்பட்டியல்" என்றால், இந்தச் சட்டத்திற்கான
இணைபப்புப்பட்டியல் என்று பொருள்படும்;
(ய) "பல்கலைக்கழகம்" என்றால், 3-ஆம் பிரிவின் கீழ் நிறுவப்பட்டுள்ள,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல் பல்கலைக்கழகம்
என்று பொருள்படும்;
() "கால்நடை மருத்துவம்" என்றால் கால்நடை அறுவை சிகிச்சைக் கலை
மற்றும் அறிவியலும் என்றும் கால்நடை மருத்துவம் என்று பொருள்படுவதோடு,
(i) விலங்குகளிடமுள்ள நோயினையும் அவற்றிற்கு ஏற்படுகின்ற
காயங்களையும் ஆய்ந்து அறுதியிடு வதையும்;
(il) அவ்வாறு ஆய்ந்து அறுதியிட்டதன் அடிப்படையில், ஆலோசனை
வழங்குவதையும்; மற்றும்
(i) விலங்குகளுக்கு மருத்துவ முறையிலோ அறுவை சிகிச்சை
முறையிலோ சிகிச்சையளிப்பதையும் உள்ளடக்கும்.
அத்தியாயம்-॥
பல்கலைக்கழகம்
3. பல்கலைக்கழகம் நிறுவப்படுதல்.- (1) கால்நடை மருத்துவ மற்றும்
விலங்கின அறிவியல் வளர்ச்சிக்காகவும், கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கின
அறிவியலில் கல்வி பெறுவதை, ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வருவதையும்
மேலும் மேம்படுத்துவதற்காகவுமென்றே "தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும்
விலங்கின அறிவியல் பல்கலைக்கழகம் என்ற பெயரில் பல்கலைக்கழகமொன்று
குறிக்கப்பட்ட நாளன்றும் அது முதற்கொண்டும் நிறுவப்படுதல் வேண்டும்.
(2) இப்பல்கலைக்கழகம் ஒரு கட்டமைப்பாக இருக்கும் என்பதோடு,
நிலையான கதொடருரிமையும் தனித்த இலச்சினையும் பெற்றிருக்கும்; மற்றும்
மேற்சொன்ன பெயரில்தான் வழக்கிடுதலும் வழக்கிடப்படுதலும் வேண்டும்.
(3) இப்பல்கலைக்கழகத்தின் தலைமையகம் தமிழ்நாடு மாநிலத்திற்குள்
உள்ள, இதன்பொருட்டு அரசு குறித்துரைக்கூடிய இடத்தில் அமைந்திருக்கும்.
4. புதிய கல்லூரி நிறுவப்படுதலும் கல்வி நிலையத்திற்கு
இப்பல்கலைக்கழகத்தால் ஏற்பளிக்கப்படுதலும்-- (1) இப்பல்கலைக்கழகம்
உருவாவதற்கு மூலக் கல்லூரியாகவிருந்த அல்லது இப்பல்கலைக்கழகத்துடன்
இணைக்கப்பெற்றதான ஒரு கல்லூரியாகத் தவிர, கால்நடை மருத்துவ மற்றும்
விலங்கின அறிவியல் கல்வி கற்பிக்கின்ற புதிய கல்லூரி எதுவும், குறிக்கப்பட்ட
நாளிலும் அது முதற்கொண்டும் நிறுவப்படுதலாகாது.
(2) பிற பல்கலைக்கழகம் எதனோடும் இணைக்கப்பெற்றுள்ள அல்லது
தொடர்புடையதான அல்லது அதனால் பேணிவரப்படுவதான கல்வி நிறுவனம்
எதற்கும் அது தமிழ்நாடு மாநிலத்திற்குள் அமைந்துள்ளதாயினும் அல்லது
தமிழ்நாடு மாநிலத்திற்கு வெளியே அமைந்து ளதாயினும், அரசின் மற்றும்
தொடர்புடைய அப்பல்கலைக்கழகத்தில் முன் ஒப்புதலளிப்பின்றி எந்த
நோக்கத்திற்காகவும் இப்பல்கலைக்கழகத்தால் ஏற்பிசைவளிக்கப்படுதலாகாது.
5. இப்பல்கலைக்கழகத்தின் குறிக்கோள்.- இப்பல்கலைக்கழகம் பின்வரும்
நோக்கங்களைக் கொண்டிருக்கும், அதாவது:-
(ஐ இப்பல்கலைக்கழகம் தீர்மானிக்கக்கூடியவாறு கால்நடை மருத்துவ
மற்றும் விலங்கின அறிவியலின் வெவ்வேறு பிரிவுகளில் கல்வியைக் கற்பித்தல்;
(b) கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியலில் கல்வி
பெறுவதையும் அதில் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்துவதையும் மேலும்
மேம்படுத்துதல்; மற்றும்
(6) தொடர்புடைய அரசுத் துறைகளுடன் ஒத்துழைத்து ஊரக மக்களுக்கு
எட்டுகின்ற வகையில் அத்தகைய அறிவியல்களை விரிவுபடுத்தும் பணியை
மேற்கொள்ளுதல்.
6. இப்பல்கலைக்கழகத்தின். அதிகாரங்களும் அலுவல்களும்.-
இப்பல்கலைக்கழகம் பின்வரும் அதிகாரங்களையும் அலுவல்களையும்
பெற்றிருக்கும், அதாவது,-
(ஐ) கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியலில் கற்பித்தல், பயிற்சி
ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு வகைசெய்தல்;
(௦) ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளையும் தொழில்நுட்பத் தகவல்களையும்
விரிவாக்கக் கல்வியின் மூலமாகப் பரப்புவதற்கு வகைசெய்தல்;
(6) கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியலில் பட்டங்கள்,
பட்டயங்கள் மற்றும் பிற கல்விச் சிறப்புகள் ஆகியவற்றை நிறுவப்படுவதற்கு
வகைசெய்தல்;
(0) () வகுத்துரைக்கப்பட்ட குறித்தகாலப் படிப்புப் பிரிவினைத் தொடர்ந்து
படித்து முடித்துள்ளவர்களுக்கு:; அல்லது
(i) வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி இப்பல்கலைக்கழகத்தில்
ஆராய்ச்சி செய்துள்ளவர்களுக்குத் தேர்வுகளை நடத்தி பட்டங்கள், பட்டயங்கள்,
பிற கல்விச் சிறப்புகள் ஆகியவற்றை வழங்குதல்;
(6) வகுத்துரைக்கப்பட்ட முறையிலும் வரைகட்டுகளின்படியும் மதிப்புறு
பட்டங்களையோ பிற சிறப்புகளையோ வழங்குதல்;
(f) களப்பணியாளர்கள்: பழக்கு விலங்கினப் பணியாளர்கள்,
இப்பல்கலைக்கழகத்தில் முறையாக மாணவர்களாகப் பதிவு செய்யப்பெறாத பிற
நபர்கள் ஆகியோருக்கு விரிவுரைகள் அளிக்கப்படுவதற்கும் கல்வி
கற்பிக்கப்படுவதற்கும் வகைசெய்தல், தேவையாயின் அவர்களுக்குச் சான்றிதழ்
வழங்குதல்;
(9) இதனை தான் தீர்மானிக்கக்கூடிய முறையிலும் நோக்கங்களுக்காகவும்
பிற பல்கலைக்கழகங்களுடனும் அதிகாரஅமைப்புகளுடனும் ஒத்துழைத்தல்;
(h) கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல் தொடர்பான
கல்லூரிகளையும் கல்வி நிலையங்களையும் நிறுவிப் பேணிவருதல்;
0) வகுத்துரைக்கப்பட்ட வரைகட்டுகளின்படி கல்லூரிகளை
இப்பல்கலைக்கழகத்தோடு இணைத்தலும் அவ்வாறு அக்கல்லூரிகளுக்கு
வழங்கப்பட்ட இணைப்பை விலக்கிக்கொள்ளுதலும்;
() கல்வி கற்பித்தல், ஆராய்ச்சி செய்தல், விரிவாக்கக் கல்வியளித்தல்
ஆகியவற்றிற்கான ஆராய்ச்சிக் கூடங்கள். நூலகங்கள், ஆராய்ச்சி நிலையங்கள்,
ஆருங்காட்சியகங்கள் ஆகியவற்றை நிறுவிப் பேணிவருவதல்;
(k) கல்வி கற்பித்தல், ஆராய்ச்சி, விரிவாக்கக் கல்வி ஆகியவற்றிற்கான
பதவியிடங்களை ஏற்படுத்தி, அத்தகைய பதவிகளில் நபர்களை நியமனம் செய்தல்;
) நிருவாகப் பதவிகளையும் பிற பதவிகளையும் ஏற்படுத்தி அத்தகைய
பதவிகளில் நபர்களை நியமனஞ்செய்தல்;
(m) நிலைமுறை விதிகளுக்கிணங்க ஆராய்ச்சி உதவித் தொகைகள்,
படிப்புதவித் தொகைகள், மாணவர் உதவித் தொகைகள், மானிய உதவித்
தொகைகள், பரிசுத் தொகைகள், பதக்கங்கள், வெகுமதிகள் ஆகியவற்றை
ஏற்படுத்தி வழங்குதல்;
(n) மாணவர் விடுதிகளை நிறுவிப் பேணிவருதல், இப்பல்கலைக்கழகத்தால்
பேணிவரப்படாத மாணவர் விடுதிகளுக்கு ஏற்பிசைவளித்தல்; மற்றும் அவ்வாறு
அளிக்கப்பட்ட ஏற்பிசைவினை விலக்கிக்கொள்ளுதல்;
(௦) இப்பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கான குடியிருப்பிட வசதிகளை
ஏற்படுத்திப் பேணிவருதல்;
(2) வகுத்துரைக்கப்படக்கடிய கட்டணங்களையும் பிற தொகைகளையும்
நிர்ணயித்தலும் கோரிப் பெறுதலும்;
(@ மாணவர் விடுதிகளைக் கண்காணித்துக் கட்டுப்பாட்டின்கீழ்
வைத்திருப்பது மற்றும் இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஒழுங்கு
நடத்தையை முறைப்படுத்தி வலியுறுத்துதல் மற்றும் அவர்களது உடல் நலத்தையும்
நலனையும் வளர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்;
(1) மேற்சொன்ன அதிகாரங்கள் மற்றும் அலுவல் விளைவானவையாக
இருந்தாலும் இல்லாவிட்டாலும், இப்பல்கலைக்கழகத்தின் நோக்கங்களை
நிறைவேற்றுவதற்குத் தேவையானவையாகவோ விரும்பத்தக்கனவாகவோ
இருக்கக்கூடிய எல்லாச் செயல்களையும் செய்கைகளையும் செய்தல்.
7. இப்பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ளுதல்.- (1) இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்கும் நிலைமுறை விதிகளுக்கும். உட்பட்டு,
இப்பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.
(2) 0-ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ளது எதுவும்,-
(8) வகுத்துரைக்கப்பட்ட கல்வித் தகுதியோ தரநிலையோ பெற்றிராத நபர்
எவரையும் குறித்தகாலப் படிப்புப் பிரிவு எதிலும் சேர்த்துக்கொள்ளுமாறோ;
(b) பட்டமொன்றோ, பட்டயமொன்றோ அல்லது பிற கல்விச் சிறப்போ
வழங்கப்படுவதற்குத் தேவையான குறைந்தபட்சத் தரநிலைக்கும் கீழே கல்வித்
தகுதியைப் பெற்றுள்ள மாணவர் எவரையும் இப்பல்கலைக்கழகப்
பெயர்ப்பட்டியலில் தொடர்ந்து இருந்துவரச் செய்யுமாறோ;
(2 எந்த நபரின். அல்லது மாணவரின் நடத்தையானது,
இப்பல்கலைக்கழகத்தின் நலனுக்கோ அல்லது பிற மாணவர்களின் மற்றும்
பணியாளர்களின் உரிமைகளுக்கும் சிறப்புபிமைகளுக்குமோ கேடு
விளைவிக்கத்தக்கதாகவுள்ளதோ அந்த நபர் எவரையும் சேர்த்துக்கொள்ளுமாறோ
அல்லது அந்த மாணவர் எவரையும் தொடர்ந்து இருந்துவரச் செய்யுமாறோ; அல்லது
(0) வகுத்துரைக்கப்பட்டுள்ள அளவிற்கு அதிகமான எண்ணிக்கையில்
மாணவர்களைக் குறித்தகாலப் படிப்புப் பிரிவு எதிலும் சேர்த்துக்கொள்ளுமாறோ,
இப்பல்கலைக்கழகத்தைக் கோருதலாகாது.
(3) (2)-ஆம் உட்பிரிவின்: வகைமுறைகளுக்குட்பட்டு, அரசு,
பணிப்பாணையின் மூலமாக அப்பணிப்பாணையில் குறித்துரைக்கப்படக்கூடிய
பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்,
பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்காக அதில்
நூற்றுக்கு எத்தனை விழுக்காடு அளவு என்று அப்பணிப்பாணையில்
குறித்துரைக்கப்படுகிறதோ அந்த அளவில் இடங்களை இப்பல்கலைக்கழகம்
ஒதுக்கீடு செய்தல் வேண்டும் என்று பணிக்கலாம்; மேலும் அவ்வாறு
பணிக்கப்பட்டிருக்குமிடத்து, இப்பல்கலைக்கழகமானது அதன்படியே இட ஒதுக்கீடு
செய்தல் வேண்டும்.
அத்தியாயம்-॥
இப்பல்கலைக்கழகத்தில் அலுவலர்கள் .
8. பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள்.- இப்பல்கலைக்கழகம், பின்வரும்
அலுவலர்களைக் கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-
(1) வேந்தர்;
(2) இணை வேந்தர்;
(3) துணை வேந்தர்;
(4) பதிவாளர்;
(5) நிதி அலுவலர்;
(6) முதன்மையர்கள் (Deans);
(7) ஆராய்ச்சி இயக்குநர்;
(8) மருத்துவ நிலைய இயக்குநர்;
(9) விரிவாக்கக் கல்வி இயக்குநர்;
(10) விலங்கு நலஆய்வு மைய இயக்குநர்;
(11) விலங்கு இனப்பெருக்க ஆய்வு மைய இயக்குநர்; மற்றும்
(12) இப்பல்கலைக்கழகத்தின் அலுவலர்களென நிலைமுறை
விதிகளால் விளம்பப்படும் பிற நபர்கள்.
9. வேந்தர்.- (1) தமிழ்நாடு ஆளுநர், இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக
இருந்து வருவார்.
(2) வேந்தர், இப்பல்கலைக்கழகத்தின் தலைவராக இருப்பதுடன்,
இப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா எதற்கும் வந்திரு அதற்குத்
தலைமை வகித்தலும் பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்விச் சிறப்புகளைப்
பெறுவதற்குத் தகுதியுடையவர்களுக்கு அவற்றை வழங்குவார்.
(3) இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகளுக்கு நபர்களைப்
பெயர்குறித்து நியமிப்பதற்கான அதிகாரம் வேந்தருக்கு
வழங்கப்பட்டிருக்கிறவிடத்து, மற்றப்படி போதிய அளவு பிரதிநிதித்துவம் பெற்றிராத
பிரிவுகளைச் சேர்ந்தவர்களில் நலன்களுக்குச் பிரநிதித்துவமாக அமையும்
பொருட்டு தேவையான அளவுக்கு அப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை வேந்தர் பெயர்
குறித்து நியமித்தல் வேண்டும்.
(4) வேந்தர் தாமே முற்பட்டோ அல்லது விண்ணப்பத்தின் மீதோ,
நடவடிக்கை எதனையும் பொறுத்து, அத்தகைய நடவடிக்கையின் முறைமை
குறித்தோ, அதில் எடுக்கப்பட்ட முடிவு அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை
ஏதொன்றின் சீர்மை, சட்டமுறைமை அல்லது பொருத்தமுடைமை குறித்தோ,
தான் தெளிவுற உறுதிப்படுத்திக்கொள்ளும்பொருட்டு, இப்பல்கலைக்கழகத்தின்
அலுவலர் எவரின் அல்லது அதிகாரஅமைப்பு ஏதொன்றின் பதிவுக்கட்டினையும்
தருவித்து ஆய்வு செய்யலாம்; மற்றும் எந்நேர்விலேனும், அத்தகைய முடிவு
அல்லது ஆணை எதுவும் மாற்றி அமைக்கப்படவோ, அறவு செய்யப்படவோ
எதிர்மாறாக்கப்படவோ அல்லது மறுபரிசீலனைக்காகத் திருப்பி
அனுப்பிவைக்கப்படவோ வேண்டும் என்று வேந்தருக்குத் தோன்றுமானால், அவர்,
அதன்படியே ஆணைகளைப் பிறப்பிக்கலாம்.
வரம்புரை: இந்தப் பிரிவிண்படியான அதிகாரங்களைச் செலுத்துமாறு
வேந்தரிடம் செய்துகொள்ளப்படும் விண்ணப்பம் ஒவ்வொன்றும், அந்த
விண்ணப்பம் தொடர்புடையதாகவிருக்கிற நடவடிக்கை, முடிவு அல்லது ஆணை
எந்தத் தேதியில் அவ்விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்பட்டதோ அந்தத்
தேதியிலிரு மூன்று திங்களுக்குள் செய்துகொள்ளப்படுதல் வேண்டும்:
மேலும் வரம்புரை: எந்த நபருக்கும் ஊறுவிளைவிக்கத்தக்ககான ஆணை
எதுவும் தன் தரப்பை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பொன்று அத்தகையவருக்குக்
கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, பிறப்பிக்கப்படுதலாகாது.
(5) வேந்தர் இந்தச் சட்டத்தினாலோ அல்லது அதனை அடியொற்றியோ
தமக்கு வழங்கப்படக்கூடிய அதிகாரங்களைச் செலுத்திவருதலும் அல்லது பிற
கடமைகளைப் புரிந்துவருதலும் வேண்டும்.
10. இணை வேந்தர்.- (1) தமிழ்நாடு மாநிலத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும்
மீன்வளத் துறையைத் தம் பொறுப்பில் கொண்டுள்ள அமைச்சர்,
இப்பல்கலைக்கழகத்தி இணை வேந்தராக இருந்து வருவார்.
(2) இணை வேந்தர் இந்தச் சட்டத்தினாலோ அல்லது அதனை
அடியொற்றியோ தமக்கு வழங்கப்படக்கூடிய அதிகாரங்களைச் செலுத்திவருதலும்
அல்லது பிற கடமைகளைப் புரிந்துவருதலும் வேன்டும்.
11. துணை வேந்தர்.- (1) வேந்தர், துணை வேந்தரை நியமிக்கும் ஒவ்வொரு
நேர்விலும் (2) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்படும் குழுவினால்
பரிந்துரைக்கப்பட்டதும் கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல்
துறையில் சிறந்து விளங்குகின்றவர்களின் மூன்று பெயர்களைக் கொண்டதுமான
பட்டியல் ஒன்றிலிருந்து நியமித்தல் வேண்டும்; மற்றும் அத்தகைய
பெயர்ப்பட்டியலில், மேற்சொன்ன குழுவின் உறுப்பினர் எவருடைய பெயரும்
அடங்கியிருத்தல் கூடாது.
(2) (0-ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அக்குழுவானது மூவரைக்
கொண்டிருக்கும்; அவர்களில் ஒருவரை, வேந்தர் பெயர்குறித்து நியமனம்
செய்வார்; ஒருவரை குழுமம் பெயர் குறித்து நியமனம் செய்யும்; ஒருவரை கல்வி
மன்றம் பெயர்குறித்து நியமனம் செய்யும்:
வரம்புரை: அவ்வாறு பெயர்குறித்து நியமனம் செய்யப்படுபவர்
இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகளுள் ஏதொன்றின்
உறுப்பினரொருவராகவும் இருத்தலாகாது.
(3) துணை வேந்தர், மூன்றாண்டு காலஅளவுக்குப் பதவி வகிப்பார்;
மேற்கொண்டு மூன்றாண்டு காலஅளவுக்கு மீண்டும் நியமிக்கப்படுவதற்குத்
தகுதியுடையவராவார்:
முதலாம் வரம்புரை: துணை வேந்தரின் பதவியை எவரொருவரும்
மொத்தத்தில் ஆறாண்டுக்கு மேல் வகித்தல் கூடாது:
இரண்டாம் வரம்புரை: மற்றும்,
(a) தம் பதவிக்காலம் முடிவடையப் பெற்றுள்ள துணை வேந்தர் ஒருவர்
மொத்தத்தில் ஓறாண்டுக்கு மேற்படாமல் பணிப்பாணையில் குறித்துரைக்கப்படும்
காலஅளவிற்குப் பதவியில் தொடர்ந்து இருந்து வருவார் என வேந்தர் பணிக்கலாம்;
(b) துணை வேந்தர், வேந்தருக்குத் தாமே கையொப்பமிட்டு எழுத்து
மூலமாக இரண்டு திங்கள் காலமுன்னறிவிப்பு கொடுத்ததற்குப் பின்பு, தமது
பதவியை விட்டு விலகலாம்:
மூன்றாம் வரம்புரை: துணை வேந்தராக நியமிக்கப்பட்ட ஒருவர் தம்முடைய
பதவிக்கால அளவின் போதோ அது நீட்டிக்கப்பட்டுள்ளபோதோ அறுபத்தைந்து
வயதினை அவர் நிறைவெய்துவாரானால், பதவியிலிருந்து ஓய்வு பெறுதல்
வேண்டும்.
(4) துணை வேந்தரின் பதவியில் தற்காலிகக் காலியிடம் ஏதேனும்
ஏற்படும்போது அல்லது நோய், பணிக்கு வாராமை என்கின்ற காரணத்தாலோ,
அல்லது ஏதேனும் பிற காரணத்தாலோ அத்துணை வேந்தர் தம்முடைய பதவியின்
அதிகாரங்களைச் செலுத்திவரவும், கடமைகளைப் புரிந்துவரவும்
இயலாதிருப்பாரானால், துணை வேந்தரின் அதிகாரங்களைச் செலுத்தி
வருவதற்கும் கடமைகளைப் புரிந்துவருவதற்கும் தேவைப்படும் ஏற்பாடுகளைக்
குழுமம் செய்கின்ற வரையிலும், பதிவாளர், அத்துணை வேந்தரின்
அதிகாரங்களைச் செலுத்தி வருதலும், கஉமைகளைப் புரிந்துவருதலும் வேண்டும்.
(5) துணை வேந்தர் இப்பல்கலைக்கழகத்தின் முழு நேர அலுவலராக
இருந்துவருவார்; அவருடைய ஊதியங்களும் பணி குறித்த பிற வரையறைகளும்
வரைகட்டுகளும் பின்வருவனவாக இருக்கும்:-
0) துணை வேந்தர், வகுத்துரைக்கப்படக்கூடிய சம்பளம் பெறுவதற்கு
தகுதியுடையவராவார்;
(ii) துணை வேந்தர் தம்முடைய பதவிக்காலம் முழுவதும்,
அறைகலன்களுடனான குடியிருப்பொன்றை வாடகைச் செலுத்தமின்றிப்
பயன்படுத்துவதற்கு தகுதியுடையவராவார்;
மேலும், அத்தகைய குடியிருப்பைப் பேணிவருவது பொறுத்த செலவுப்
பொறுப்பு எதுவும் தனிப்பட்ட முறையில் அத்துணை வேந்தரைச் சார்தல் ஆகாது;
0) துணை வேந்தர், அவ்வப்போது வேந்தரின் ஒப்புதலளிப்புடன், குழுமம்
நிர்ணயிக்கக்கூடிய பணிமுடிவு நிலை நன்மைகளுக்கும், படித்தொகைகளுக்கும்
தகுதியுடையவராவார்.
வரம்புரை: (8) இப்பல்கலைக்கழகத்தில்; அல்லது
(0௦) வேறேதேனும் பல்கலைக்கழகத்தில் அல்லது அந்தப்
பல்கலைக்கழகத்தால் பேணிவரப்படுகின்ற அல்லது அதனோடு
இணைக்கப்பட்டுள்ள கல்லூரி அல்லது கல்வி நிலையத்தின்
பணியாளரொருவர் துணை வேந்தராக நியமிக்கப்படுமிடத்து,
அவர் தொகையளிப்புச் செய்பவராக உள்ள வருங்கால வைப்பு
நிதியத்திற்குத் தொடர்ந்து தொகையளிக்க அவர் அனுமதிக்கப்படுதல்
வேண்டும்; மேலும் இப்பல்கலைக்கழக பங்களிப்பானது, துணை வேந்தராக
அவர் நியமிக்கப்படுவதற்கு அடுத்து முன்பு அவர் பங்களித்து வந்திருந்த
அளவுக்கு மட்டுப்படுத்தப்படுதல் வேண்டும்;
(iv) துணை வேந்தர் குழுமம் நிர்ணயிக்கின்ற வீதங்களில் பயணப்படிக்குத்
தகுதியுடையவராவார்;
(v) துணை வேந்தர் செயலார்ந்த பணியிலிருக்கையில் அவரால் பணியில்
செலவழிக்கப்பட்ட காலஅளவுகளில் பதினொன்றில் ஒரு பங்குக்கு முழுச்
சம்பளத்துடன் கூடிய ஈட்டிய விடுப்புக்கு, அவர் தகுதியுடையவராவார்:
வரம்புரை: தம்முடைய பதவிக்காலம் முடிவடையும் தேதிக்கு முன்பு
போதுமான காலத்திற்குள் அத்துணை வேந்தர் விண்ணப்பித்துக் கொண்ட ஈட்டிய
விடுப்பானது இப்பல்கலைக்கழகத்தி நலன் கருதி வேந்தரால்
மறுக்கப்படுகிறபோதும், தம்முடைய பதவிக் காலம் முடிவடையும் தேதிக்கு முன்பு
அவ்விடுப்பினை அவர் பயன்படுத்திக்கொள்ளாமலிருக்கும்போதும் பெரும அளவு
(உயர்ந்த பட்சம்) இருநூற்று நாற்பது என்னும் பெரும் அளவிற்கு உட்பட்டு,
தம்முடைய கணக்கில் இருப்பில் உள்ள ஈட்டிய விடுப்பைப் பொருத்து, தம்முடைய
பதவியைத் துறந்த பின்பு விடுப்புச் சம்பளத்திற்குச் சமமதிப்புள்ள பணத்தைப்
பெறுவதற்கு அவர் தகுதியுடையவராவார்;
i) துணை வேந்தர், தம்முடைய பதவிக் காலத்தின் போது மருத்துவக்
காரணங்களின் பேரிலோ மற்றப்படியோ மூன்று திங்களுக்கு மேற்படாததொரு
காலஅளவுக்குச் சம்பளமில்லாத விடுப்புக்குத் தகுதியுடையவராவார்:
வரம்புரை: (v) ஆம் கூறின்படி எந்த அளவுக்கு ஈட்டிய விடுப்புக்கு அவர்
தகுதியுடையவராயிருக்கின்றாரோ அந்த அளவுக்கு அத்தகைய விடுப்பானது,
முழுச் சம்பளத்துடன் கூடிய விடுப்பாக மாற்றிக்கொள்ளப்படலாம்.
12. துணை வேந்தரின் அதிகாரங்களும் கடமைகளும்.- (1) துணை வேந்தர்,
கல்வித் தலைவராகவும் இப்பல்கலைக்கழகத்தின் முதன்மை நிருவாக
அலுவலராகவும் இருந்து வருவார்; மற்றும், வேந்தரும், இணை வேந்தரும் வருகை:
தராதபோது, இப்பல்கலைக்கழகத்துப் பட்டமளிப்பு விழா எதிலும் தலைமை வகித்துப்
பட்டங்களை, பட்டயங்களை அல்லது பிற கல்விச் சிறப்புகளைப் பெறுவதற்கான
தகுதியுடையவர்களுக்கு அவற்றை அவர் வழங்குதல் வேண்டும். குழுமம், கல்வி
மன்றம், திட்டமிடும் குழுமம், நிதிக் குழு ஆகியவற்றின் பதவிவழி
உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்து வருவார்; இப்பல்கலைக்கழகத்தின்
அதிகாரஅமைப்பு ஏதொன்றின் கூட்டத்திற்கும் வந்திருப்பதற்கும் அதில் உரை
நிகழ்த்துவதற்கும் தகுதியுடையவராவார்; ஆனால், தொடர்புடைய
அதிகாரஅமைப்பின் உறுப்பினரொருவராக அவர் இருந்தாலன்றி, அதில்
வாக்களிப்பதற்கு தகுதியுடையவராகமாட்டார்.
(2) துணை வேந்தர், இப்பல்கலைக்கழகத்து அலுவல்களின் மீது
கட்டுப்பாட்டு அதிகாரத்தைச் செலுத்துதல் வேண்டும்; மற்றும்
இப்பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு நடத்தை உரியவாறு பேணி வரப்படுவதற்குப்
பொறுப்புடையவராயிருத்தல் வேண்டும்.
(3) துணை வேந்தர், குழுமத்தின், கல்வி மன்றத்தின் கூட்டங்களைக்
கூட்டுதல் வேண்டும்.
(4) துணை வேந்தர், இந்தச் சட்டம், நிலைமுறை விதிகள் ஒழுங்குமுறை
விதிகள்: ஆகியவற்றின் வகைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு
நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இந்த
நோக்கத்திற்காகத் தேவையான அனைத்து அதிகாரங்களையும் அவர்
செலுத்தலாம்.
(5) துணை வேந்தர், எப்பொருள் குறித்தும் நடவடிக்கை எடுப்பதற்கு
அதிகாரம் பெற்றவராவார் ஆணையின் மூலமாக தாம் தேவையெனக்
கருதக்கூடிய நடவடிக்கையை எடுத்தல் வேண்டும்; ஆனால் எடுக்கப்பட்ட அந்த
நடவடிக்கைக்குப் பின்பு அப்பொருள் குறித்து இயல்பாக நடவடிக்கை
எடுத்திருக்கக்கூடிய அலுவலருக்கு அல்லது அதிகாரஅமைப்பிற்கு அல்லது பிற
அமைப்பிற்கு அந்நடவடிக்கைகளைப் பற்றி கூடிய விரைவில் அறிக்கை தருதல்
வேண்டும்:
வரம்புரை: அத்தகைய ஆணை எதுவும் பெரும்பாலும்
ஊறுபடக்கூடியவருக்கு (பாதிக்கப்படக்கூடியவருக்கு) கேட்கப்படுவதற்கான
நியாயமானதொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தாலன்றி பிறப்பிக்கப்படுதலாகாது.
(6) (௮-ஆம் உட்பிரிவின்படியான துணை வேந்தரின் ஆணை
எதனாலேனும் குறையுற்றுள்ள நபர் எவரும், எந்தத் தேதியில் அத்தகைய ஆணை
அவருக்கு தெரிவிக்கப்படுகிறதோ அந்தத் தேதியிலிரு முப்பது நாட்களுக்குள்:
குழுமத்திடம் மேல்முறையீடொன்றைச் செய்து கொள்ளலாம்; மற்றும் துணை
வேந்தர் அத்தகைய மேல்முறையீடு மீது குழுமத்தால் பிறப்பிக்கப்படும்
ஆணைக்குச் செயல்வடிவம் கொடுத்தல் வேண்டும்.
(7) துணை வேந்தர், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி, விரிவாக்கக் கல்வி மற்றும்
பாடத்திட்ட மேம்பாடு ஆகியவற்றிற்கான ஒத்திசைவிற்கும் ஒருங்கிணைப்பிற்கு
பொறுப்புடையராவார்.
(8) துணை வேந்தர் நிலை விதிகளின் மூலம் வகுத்துரைக்கப்படக்கூடிய பிற
அதிகாரங்களைச் செலுத்தி வருதலும் பிற கடமைகளைப் புரிந்து வருதலும்
வேண்டும்.
13. பதிவாளர்.- (1) பதிவாளர், வகுத்துரைக்கப்படும் வரையறைகளின் மற்றும்
வரைகட்டுகளின் பேரில் குழுமத்தின் ஒப்புதலளிப்புடன் துணை வேந்தரால்
நியமிக்கப்பட்டு இப்பல்கலைக்கழகத்தின் சம்பளம் பெறும் முழு நேர அலுவலராக
இருப்பார்.
(2) பதிவாளர்.
(ஐ) கால்நடை மற்றும் விலங்கில அறிவியல் துறையில் உள்ள
பல்கலைக்கழகப் பேராசிரியரொருவரின் படிநிலைக்குக் கீழ் இல்லாத ஒரு
கல்வியாளராகவோ; அல்லது
(௦) அரசுத் துணைச் செயலாளரின் படிநிலைக்குக் கீழ் இல்லாத அரசு
அலுவலர் ஒருவராகவோ இருந்து வருவார்.
(3) பதிவாளர், மூன்றாண்டு கால அளவிற்குப் பதவி வகிப்பார் என்பதோடு,
மேலுமொரு மூன்றாண்டு காலஅளவிற்கு மீண்டும் நியமிக்கப்படுவதற்குத் தகுதி
உடையவராவார்:
வரம்புரை: பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ள ஒருவர் தம்முடைய பதவிக்
காலத்தின்போது ஐம்பத்தெட்டு வயதினை நிறைவெய்துவாரானால்,
பதவியிலிருந்து அவர் ஓய்வு பெறுதல் வேண்டும்.
(4) பதிவாளரானவர் குழுமம், கல்வி மன்றம், புலங்கள் ஆகியவற்றுக்கான
பதவிவழிச் செயலாளராக இருந்து வருவார்.
(5) பதிவாளரின் பதவி காலியாக இருக்கும்போது அல்லது பதிவாளர் நோய்,
பணிக்கு வாராமை என்கிற காரணத்தாலோ அல்லது பிற காரணம் எதனாலுமோ
தம்முடைய பதவிக்கான அதிகாரங்களைச் செலுத்திவரவும் அலுவல்களைப்
புரிந்துவருவும் கடமைகளை ஆற்றிவரவும் இயலாதவராக இருக்கும்போது,
பதிவாளரின் அதிகாரங்களும் அலுவல்களும் கடமைகளும் அதற்காகத் துணை
வேந்தரால் குறிப்பிடப்படக்கூடியவரால் செலுத்திவரப்படுதலும் புரிந்துவரப்படுதலும்
ஆற்றிவரப்படுதலும் வேண்டும்.
(6) (a) பொறுப்பாட்சிச் சொத்தும் நிலைக் கொடைச் சொத்தும் உள்ளிட்ட
இப்பல்கலைக்கழகத்தின் சொத்து மற்றும் முதலீடுகளை நிதிக்குழுவின் மற்றும்
குழுமத்தி முடிவிற்கு இணங்கிய வகையில் நிருவகித்து வருவதும்;
(௦) பல்கலைக்கழகத்தி பதிவுக் கட்டுகளுக்கும், முத்திரைச்
சின்னத்திற்கும் மற்றும் குழுமம் தம்முடைய பொறுப்பில் விடுகின்ற பிற
சொத்துக்களுக்கும் பாதுகாவலராக இருப்பதும்; மற்றும்.
(௦) குழுமத்தின், கல்வி மன்றத்தின், புலங்களின், பாடக் குழுமங்களின்
தேர்வாளர் குழுமங்களின் மற்றும் திட்டமிடும் குழுமத்தின் மற்றும்
இப்பல்கலைக்கழகத்து அதிகாரஅமைப்புகளினால் நியமிக்கப்படும் குழு
ஏதொன்றில் கூட்டங்களையும் கூட்டுகின்ற அறிவிப்புகள் அனைத்தையும்
அனுப்புவதும்
பதிவாளரின் கடமையாகும்.
(7) இப்பல்கலைக்கழகத்தினாலோ அல்லது அதற்கு எதிராகவோ
தொடரப்படும் உரிமை வழக்குகள், எடுக்கப்படும் பிற சட்ட நடவடிக்கைகள் ஆகிய
அனைத்திலும் உள்ள வாதுரைகளில் பதிவாளர் கையொப்பமிடுதலும் அவை
உண்மையானவையென்று உறுதியொப்பமிடுதலும் வேண்டும்; மற்றும் அத்தகைய
உரிமை வழக்குகளிலும் நடவடிக்கைகளிலும் நீதிமுறைக் கட்டளைகள்
அனைத்தும் பதிவாளரின் பதவிப்பெயரில் பிறப்பிக்கப்பட்டு அவருக்குச் சார்வு
செய்யப்படுதல் வேண்டும்.
(8) பதிவாளர் குழுமம் வகுத்துரைக்கும் அதிகாரங்களைச்
செலுத்திவருதலும் பிற அலுவல்களைப் புரிந்துவருதலும் பிற கடமைகளை
ஆற்றிவருதலும் வேண்டும்.
14. நிதி அலுவலர்.- (1) நிதி அலுவலர், அரசினால் பரிந்துரைக்கப்பட்ட
மூவரது பெயர்களைக் கொண்ட பட்டியல் ஒன்றிலிருந்து குழுமத்தால்
நியமிக்கப்படும் இப்பல்கலைக்கழகத்தின் சம்பளம் பெறும் முழு நேர அலுவலராக
இருப்பார்.
(2) நிதி அலுவலர் குழுமம் குறித்துரைக்கும் வரையறைகளுக்கும்,
வரைகட்டுகளுக்கும் உட்பட்டு மூன்றாண்டு காலஅளவிற்குப் பதவி வகித்து
வருவார்:
வரம்புரை: நிதி அலுவலராக நியமிக்கப்பட்டவர் தம்முடைய பதவிக்
காலத்தின் போது ஐம்பத்தெட்டு வயது நிறைவெய்துவாரானால், பதவியிலிருந்து
அவர் ஓய்வு பெறுதல் வேண்டும்.
(3) நிதி அலுவலறின் ஊதியங்களும் அவரது பணி குறித்த பிற
வரையறைகளும் வரைகட்டுகளும் வகுத்துரைக்கப்பட்டனவாக இருத்தல்
வேண்டும்.
(4) நிதி அலுவலரின் பதவி காலியாக இருக்கும்போது, அல்லது நிதி
அலுவலர் நோய், பணிக்கு வாராமை என்கிற காரணத்தாலோ அல்லது பிற காரணம்
எதனாலுமோ தம்முடைய பதவி அதிகாரங்களைச் செலுத்திவருவதற்கும்
அலுவல்களைப் புரிந்துவருவதற்கும். கடமைகளை ஆற்றிவருவதற்கும்
இயலாதவராக இருக்கும்போது, அவரது பதவிக்காக அதிகாரங்களையும்
அலுவல்களையும் கடமைகளையும் அதற்காக துணை வேந்தரால்
குறிப்பிடப்படுபவர் முறையே செலுத்திவரவும் புரிந்துவரவும் ஆற்றிவரவும்
வேண்டும்.
(5) நிதி அலுவலர், நிதிக் குழுவின் பதவிச் செயலாளராக இருந்து வருவார்.
(6) நிதி அலுவலர்,-
(ஐ இப்பல்கலைக்கழகத்தின் நிதியங்களின் மீது பொதுவான
மேற்பார்வையைச் செலுத்திவருதல் வேண்டும் என்பதோடு அதன் நிதிக்கொள்கை
குறித்து இப்பல்கலைக்கழகத்திற்கு ஆலோசனை வழங்குதலும் வேண்டும்; மற்றும்
(b) வகுத்துரைக்கப்படும் அல்லது குழுமத்தால் தனக்கு
குறித்தளிக்கப்படும் பிற அதிகாரங்களைச் செலுத்திவருதலும் பிற நிதிசார்
அலுவல்களைப் புரிந்துவருதலும் வேண்டும்:
வரம்புரை: நிதி அலுவலர் குழுமத்தின் முன் ஒப்புதலளிப்பு இல்லாமல்
வகுத்துரைக்கப்படும் தொகைக்கு மேற்பட்டு செலவு செய்வதோ முதலீடு
செய்வதோ கூடாது.
(7) குழுமத்தின் கட்டுப்பாட்டு அதிகாரத்திற்குட்பட்டு, நிதி அலுவலர்.-
(ஐ) ஜஓராண்டிற்கான தொடர் மற்றும் தொடராச் செலவினங்கள் குழுமம்
நிர்ணயித்த வரம்புகளுக்கு மேற்படாமலிருப்பதையும், பணங்கள் அனைத்தும்
அவை வழங்கப்பட்ட அல்லது குறித்தொதுக்கப்பட்ட நோக்கங்களுக்காகச்
செலவிடப்படுவதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்;
(௦) இப்பல்கலைக்கழகத்தின் ஆண்டு கணக்குகள் நிதி மதிப்பீடுகள், வரவு
செலவுத் திட்டம் ஆகியவற்றைத் தயாரிப்பதற்கும் நிதிக் குழுவிடமும்
குழுமத்திடமும் அவற்றை அளிப்பதற்கும் பொறுப்புடையவராவார்;
(6) பணம் மற்றும் வங்கி இருப்புகளையும் முதலீடுகளையும் இடைவிடாது
கண்காணித்து வருதல் வேண்டும்;
(d) வருவாய் வசூலிக்கப்படும் நிலையைக் கண்காணித்து, வசூலிக்கப்
பயன்படுத்தப்படும் முறைகள் குறித்து ஆலோசனை வழங்குதல் வேண்டும்;
(6) கட்டடங்கள், நிலம், அறைகலன், சாதனங்கள் ஆகியவற்றின்.
பதிவேடுகள் நாளது வரை வைத்துப் பேணிவரப்படு வதையும்
இப்பல்கலைக்கழகத்தால் பேணிவரப்படும் அலுவலகங்கள், ஆய்வுக் கூடங்கள்,
கல்லூரிகள், கல்வி நிலையங்கள் ஆகிய அனைத்திலும் உள்ள சாதனங்கள்:
மற்றும் பிற நுகரத்தக்க பொருள்கள் இருப்பு நிலையைச் சரிபார்க்கும் பணி
நடத்தப்படுவதையும் உறுதி செய்து கொள்ளுதல் வேண்டும்;
() அதிகாரம் அளிக்கப்படாத செலவினம் எதையும் பற்றி அல்லது பிற
நிதிசார் முறைகேடு பற்றி துணை வேந்தரின் கவனத்திற்குக் கொண்டுவருதல்
வேண்டும்; மற்றும் தவறு செய்துள்ளவர் மீது எடுக்கப்பட வேண்டிய உரிய
நடவடிக்கை குறித்து யோசனை கூறுதலும் வேண்டும்; மற்றும்
(ஐ தம்முடைய அதிகாரங்களைச் செலுத்திவருவதற்காக தம்முடைய
அலுவல்களைப் புரிந்துவருவதற்காக அல்லது தம்முடைய கடமைகளை ஆற்றி
வருவதற்காக, தாம் தேவையெனக் கருதும் தகவல் அல்லது விவர அறிக்கைகளை
இப்பல்கலைக்கழகத்தினால் பேணிவரப்படும் அலுவலகம், ஆய்வுக்கூடம், கல்லூரி
அல்லது கல்வி நிலையம் எதிலிருந்தும் தருவித்தல் வேண்டும்.
15. முதன்மையர்கள்-- (1) கல்லூரி ஒவ்வொன்றும், முதண்மையர் (dean)
ஒருவரைப் பெற்றிருத்தல் வேண்டும்; அவர் வகுத்துரைக்கப்படும் வரையறைகள்
மற்றும் வரைகட்டுகளின் பேரில் குழுமத்தின் ஒப்புதலளிப்புடன், துணை வேந்தரால்
நியமிக்கப்படும் இப்பல்கலைக்கழகத்தின் சம்பளம் பெறும் ஒரு முழு நேர
அலுவலராவார்.
(2) முதன்மையர் வகுத்துரைக்கப்படும் அதிகாரங்களைச் செலுத்திவருதலும்
கடமைகளைப் புரிந்துவருதலும் வேண்டும்.
16. இயக்குநர்கள்.- (1) ஆராய்ச்சி இயக்குநர், சோதனைக்கூட இயக்குநர்,
விரிவாக்கக் கல்வி இயக்குநர், விலங்கு நல ஆய்வு மைய இயக்குநர், விலங்கு
இனப்பெருக்க ஆய்வு மைய இயக்குநர் ஆகியோர், வகுத்துரைக்கப்படும்
வரையறைகள் மற்றும் வரைகட்டுகளின் பேரில் குழுமத்தின் ஒப்புதலளிப்புடன்
துணை வேந்தால் நியமிக்கப்படும் இப்பல்கலைக்கழகத்தின் சம்பளம் பெறும்
முழுநேர அலுவலர்களாவார்கள்.
(2) ஆராய்ச்சி இயக்குநர், சோதனைக்கூட இயக்குநர், விரிவாக்கக் கல்வி
இயக்குநர், விலங்கு நல ஆய்வு மைய இயக்குநர், விலங்கு இனப்பெருக்க ஆய்வு
மைய இயக்குநர் ஆகியோர், வகுத்துரைக்கப்படும் அதிகாரங்களைச்
செலுத்திவருதலும், கஉமைகளைப் புரிந்துவருதலும் வேண்டும்.
அத்தியாயம் 1V.
இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகள்
17. இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகள்.-- மேலாண்மைக்
குழுமம், கல்வி மன்றம், புலங்கள், பாடக்குழுமங்கள், திட்டமிடும் குழுமம், நிதிக்குழு
ஆகியவையும் இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகளென நிலைமுறை
விதிகளால் விளம்பப்படும் இப்பல்கலைக்கழகத்தின் பிற அமைப்புகளும்,
இப்பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளாகும்.
18. மேலாண்மைக்குழு.- (1) 46-ஆம் பிரிவின்படி முதல் துணை வேந்தர்
நியமிக்கப்பட்டதற்குப் பிண்ணர், வேந்தர், கூடிய விரைவில், மேலான்மைக்
குழுமத்தை அமைத்துருவாக்குதல் வேண்டும்.
(2) அக்குழுமம் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்; அதாவது:-
வகை - | - பதவி வழி உறுப்பினர்கள்.
(a) துணை வேந்தர்;
(௦) கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறையைப் பொறுப்பில்
கொண்டுள்ள அரசுச் செயலாளர்;
(௦) நிதித் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;
(0) சட்டத் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;
(6) கால்நடை வளர்ப்பு இயக்குநர்;
() மீன்வளத் துறை இயக்குநர்; மற்றும்
(9) பதிவாளர்.
வகை - ॥- பிற உறுப்பினர்கள்
(ஐ கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கின அறிவியல் துறையில்
ஆராய்ச்சி செய்வதிலும் பயிற்றுவிப்பதிலும் விரிவாக்கக் கல்வி
அளிப்பதிலும் சிறப்பு அறிவையோ நடைமுறைப் பட்டறிவையோ
பெற்றிருக்கின்ற அறிவியலாளர் ஒருவர்; அவர் வேந்தரால் பெயர்குறித்து
நியமிக்கப்படுவார்;
(௦) பழக்கு விலங்குப் பண்ணையாளர் ஒருவர்; அவர் அரசினால்
பெயர்குறித்து நியமிக்கப்படுவார்;
(6) கால்நடை வளர்ப்பு அல்லது மீன்வளம் தொடர்பான தொழில்களின்
சார்பாளர் ஒருவர்; அவர் வேந்தரால் பெயர்குறித்து நியமிக்கப்படுவார்;
(0) சமூக சேவகி ஒருவர்; அவர் வேந்தரால் பெயர்குறித்து
நியமிக்கப்படுவார்;
(6) _ கல்வியாளர் ஒருவர்; அவர் வேந்தரால் பெயர்குறித்து
நியமிக்கப்படுவார்;
() இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தில் நியமனதாரர் ஒருவர்;
(9) தமிழ்நாடு கால்நடை மருத்துவ மன்றத்தின் நியமனதாரர் ஒருவர்;
(h) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களால்
தங்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் ஒருவர்;
வரம்புரை: அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் எவரும்,
சட்டமன்றப் பேரவை உறுப்பினராக இருந்து வருவதற்கு
தகுதிக்கேடுடையவராகமாட்டார்.
(3) கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறையையோ நிதித் துறையையோ
அல்லது சட்டத் துறையையோ தம் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்
எந்தக் காரணத்தினாலேனும் குழுமத்தில் கூட்டங்களுக்கு வர இயலாமற்
போனால், அரசுத் துணைச் செயலாளரின் படிநிலைக்குக் குறையாமல் உள்ள தமது
துறையின் அலுவலர் எவரையும் அக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு அவர்
அதிகாரமளித்து அனுப்பி வைக்கலாம். அவ்வாறு அதிகாரமளித்து அறுப்பி
வைக்கப்பட்ட அலுவலர் அக்கூட்டத்தில் விவாதங்களில் பங்கேற்பதற்கான
உரிமையைப் பெற்றிருப்பார் என்பதுடன், அதில் வாக்களிப்பதற்கான
உரிமையையும் பெற்றிருப்பார்.
(4) துணை வேந்தர், குழுமத்தில் பதவிவழித் தலைவராக இருந்து வருவார்,
பதிவாளர், குழுமத்தின் பதவிவழிச் செயலாளராக இருந்து வருவார்.
(5) பதவி வழி உறுப்பினர்களல்லாத குழுமத்தின் பிற உறுப்பினர்களின்
பதவிக் காலஅளவு மூன்றாண்டாகும்.
6) குழும உறுப்பினர்கள் வகுத்துரைக்கப்படும் நாட்படி மற்றும்
பயணப்படிகள் தவிர, இப்பல்கலைக்கழகத்திடமிருந்து ஊதியம் எதையும்
பெறுவதற்கு தகுதியுடையவர்களாகமாட்டார்கள்.
வரம்புரை: இந்தக் கூறில் அடங்கியுள்ள எதுவும், உறுப்பினர் எவரையும் தாம்
வகிக்கின்ற பதவியின் காரணமாக தாம் பெறுவதற்குத் தகுதியுடையவராயிருக்கிற
தம்முடைய இயல்பான ஊதியம் எதையும் பெறுவதைத் தடை செய்தலாகாது.
(7) பதவிவழி உறுப்பினர் அல்லாத குழுமத்தின் பிறிதோர் உறுப்பினர், தமது
பதவி முடிவடைகிற காலஅளவிற்கு முன்பு எந்தச் சமயத்திலும் தம்முடைய
உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள முனையலாம்: அத்தகைய பதவி
விலகலானது, வேந்தருக்கு எழுத்துருவிலான கடிதமொன்றில் மூலமாக
அவ்வுறுப்பினரால் தெரிவிக்கப்படுதல் வேண்டும்: மற்றும் அப்பதவி விலகலானது,
வேந்தரால் அது ஏற்கப்படும் தேதியிலிருந்து செயல்வடிவம் கொள்ளுதல்
வேண்டும்.
19. குழுமத்தின் அதிகாரங்கள்.- குழுமம், பின்வரும் அதிகாரங்களைக்
கொண்டிருக்கும்; அதாவது-
(1) நிலைமுறை விதிகளைச் செய்தல் மற்றும் அந்நிலைமுறை விதிகளைத்
திருத்துதல் அல்லது நீக்குதல்;
(2) இப்பல்கலைக்கழகத்தின் நிதித் தேவைப்பாடுகள் குறித்துப் பரிசீலித்து
ஆய்வு செய்தல்; மற்றும் அதன் ஆண்டு நிதி மதிப்பிடுகளுக்கு ஒப்புதலளித்தல்;
(3) இப்பல்கலைக்கழகத்தின் பொறுப்பில் விடப்பட்ட நிதியங்கள், கருதப்பட்ட
நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதற்கு வகைசெய்தல்;
(4) இப்பல்கலைக்கழகத்தின் நிதியங்களை முதலீடு செய்வதற்கும் திரும்பப்
பெறுவதற்கும் ஏற்பாடு செய்தல்;
(5) இப்பல்கலைக்கழகத்தின் சொத்துப் பிணையத்தின்பேரில் அரசின்
ஒப்புதலளிப்புடன் இப்பல்கலைக்கழகத்தின் நோக்கங்களுக்காகப் பணத்தைக்
கடன் வாங்குதல்; மற்றும், அது திருப்பிச் செலுத்தப்படுவதற்கான தக்க
ஏற்பாடுகளைச் செய்தல்;
(6) இப்பல்கலைக்கழகத்தின் சொத்துக்களை வைத்துவருதலும், கட்டுப்பாடு
செய்தலும், நிருவகித்து வருதலும்;
(7) இப்பல்கலைக்கழகத்திற்கென்றே உள்ள தனித்த இலச்சினையின்
வடிவத்தைத் தீர்மானித்தலும், அதன் பாதுகாப்பிற்கு வகைசெய்தலும், அதன்
பயன்பாட்டினை முறைப்படுத்துதலும்;
(8) தான் தேவையெனக் கருதக்கூடிய நிலைக் குழுக்களையோ தற்காலிகக்
குழுக்களையோ நியமித்தல்; மற்றும் இந்தச் சட்டத்தில் மற்றும் நிலைமுறை
விதிகளில் வகைமுறைகளுக்கு உட்பட்டு, எந்தெந்தப் பொருள்கள் குறித்து
அவற்றிடம் சுட்டியனுப்ப என்பதைக் குறித்துரைத்தல்;
(9 இந்தச் சட்டத்தின் மற்றும் நிலைமுறை விதிகளின்
வகைமுறைகளுக்கு இணங்க, இப்பல்கலைக்கழகம் தொடர்பான கொள்கைப்
பிரச்சினைகள் அனைத்தையும் தீர்மானித்தல் மற்றும் அவற்றை முறைப்படுத்துதல்;
(10) கல்வி மன்றத்தால் தீர்மானிக்கப்படும் கல்விப் பிரிவுகளிலும்
குறித்தகாலப் பாடப் பிரிவுகளிலும் பயிற்றுவித்தல், கற்பித்தல், ஆராய்ச்சி செய்தல்,
அறிவை மேம்படுத்துதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றின் நிதிக்கு வகைசெய்தல்;
(11) கல்லூரிகள், மாணவர் விடுதிகள், சோதனைக் கூடங்கள், சோதனை
பழக்கு விலங்குப் பண்ணைகள் ஆகியவற்றை நிறுவிப் பேணிவருவதற்கும், இந்தச்
சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையானவையாகவுள்ள பிற
வசதிகளுக்கும் வகை செய்தல்;
(12) பட்டங்கள், பட்டயங்கள், பிற கல்விச் சிறப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்தி
வழங்குவதற்கு வகைசெய்தல்;
(13) படிப்புதவித் தொகைகள், பட்டதாரி உதவித் தொகைகள், மாணவர்
உதவித்தொகைகள், உதவிச் சம்பளங்கள், ஆதரவுப் படித்தொகைகள், பதக்கங்கள்.
பரிசுகள் ஆகியவற்றை ஏற்படுத்திப் பேணிவருவதற்கு வகைசெய்தல்;
(14) தன்னிடம் அளிக்கப்படக்கூடிய பொறுப்பாட்சிச் சொத்து, அல்லது
உயில்வழிக்கொடை, நன்கொடை, அசையும் அல்லது அசையாச் சொத்து
ஏதொன்றின் உரிமைமாற்றம் ஆகியவற்றை இப்பல்கலைக்கழகத்தின் சார்பாக
ஏற்றுக்கொள்தல்;
(15) இப்பல்கலைக்கழகத்தி சார்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளுதல்;
மற்றும்
(16) இந்தச் சட்டத்தின் அல்லது நிலைமுறை விதிகளின்
வகைமுறைகளுக்கு ஒவ்வாதனவாயிராத வகையில் இந்தச் சட்டத்தின்
நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையாயிருக்கும் பிற அதிகாரங்களைச்
செலுத்திவருதல்.
20. குழுமத்தின் கூட்டங்கள்.- (1) குழுமம், வகுத்துரைக்கப்படக்கூடிய
காலங்களிலும் இடங்களிலும் கூடுதல் வேண்டும்; மற்றும் (2), (3) ஆகிய
உட்பிரிவுகளில் வகைமுறைகளுக்குட்பட்டு, தன் கூட்டங்களில் குறைவெண்
வரம்பு உள்ளடங்கலாக, அக்கூட்டங்களில் அலுவல் நடத்துவது தொடர்பாக
வகுத்துரைக்கப்படும் நடைமுறை விதிகளைக் கடைப்பிடித்தல் வேண்டும்:
வரம்புரை: குழுமம், குறைந்தது ஒவ்வொரு மூன்று திங்களுக்கும்
ஒருமுறையேனும் கூடுதல் வேண்டும்.
(2) துணை வேந்தரோ அல்லது அவர் வராதபோது, வந்திருக்கும்
உறுப்பினர்களால் தெரிந்தெடுக்கப்படும் உறுப்பினர் எவராலுமோ, குழுமத்தி
கூட்டமொன்றிற்குத் தலைமை வகிப்பார்.
(3) குழுமத்தில் கூட்டம் எதிலும் எழும் அனைத்துக் கேள்விகளும்,
வந்திருந்து வாக்களிக்கின்ற உறப்பினர்களின் பெரும்பான்மையினரால் முடிவு
செய்யப்படுதல் வேண்டும்: மற்றும் வாக்குகள் சமமானவையாக அமைகின்ற
நேர்வில், துணை வேந்தரோ அல்லது நேர்விற்கேற்ப தலைமை வகிக்கின்ற
உறுப்பினரோ இரண்டாவது அல்லது அறுதிவாக்கு ஒன்றைப் பெற்றிருத்தலும்
அதைச் செலுத்துதலும் வேண்டும்.
(4) (ஐ குழுமம், பரிசீலனையில் உள்ள பொருள் எதிலும் சிறப்பு அறிவையோ
அல்லது நடைமுறைப் பட்டறிவையோ பெற்றிருக்கின்ற எவரையும் கலந்தாய்வு
நோக்கத்திற்காக, கூட்டம் எதற்கும் வருகை தருமாறு அழைப்பு விடுக்கலாம்.
அத்தகையவர் அத்தகைய கூட்டங்களின் நடவடிக்கைகளில் பேசவும் மற்றப்படி
பங்கேற்கவும் செய்யலாம்: ஆனால் வாக்களிப்பதற்குத் தகுதியுடையவராகமாட்டார்.
(௦) அவ்வாறு அழைக்கப்பட்டவர் குழுமத்தின் உறுப்பினர் ஒருவருக்கு
அனுமதிக்கத்தக்கதான நாட்படி மற்றும் பயனப்படிக்கு தகுதியுடையவராவார்.
21. கல்வி மன்றம்.- கல்வி மன்றம், இப்பல்கலைக்கழகத்தின் கல்விசார்
அதிகாரஅமைப்பாக இருக்கும். அது இந்தச் சட்டத்தின் மற்றும் நிலைமுறை
விதிகளின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, இப்பல்கலைக்கழகத்தில்
பயிற்றுவித்தல், தேர்வு ஆகியவை குறித்துக் கட்டுப்பாட்டுநிமையையும், பொதுவாக
அவற்றை முறைப்படுத்துகின்ற உரிமையையும் பெற்றிருக்கும்; மேலும் அவற்றின்
தரங்களைப் பேணிவருவதற்குப் பொறுப் டையதாகும்.
22. கல்வி மன்றத்தின் அமைப்பு-- (1) கல்வி மன்றம், பின்வரும்
உறுப்பினர்களைக் கொண்டிருக்கும், அதாவது:-
வகை - | - பதவிவழி உறுப் னர்கள்
(a) துணை வேந்தர்;
(௦) கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறையைப் பொறுப்பில்
கொண்டுள்ள அரசுச் செயலாளர்;
(6) கால்நடை வளர்ப்புத் துறை இயக்குநர்;
(0) மீன்வளத் துறை இயக்குநர்;
(8) கல்லூரி ஒவ்வொன்றின் முதன்மையர்;
(0) புலம் ஒவ்வொன்றின் முதன்மையர்;
(ஓ ஆராய்ச்சி இயக்குநர்;
(h) பயிற்சி மருத்துவ இயக்குநர்;
(i) விரிவாக்கக் கல்வி இயக்குநர்;
(J) விலங்கு நல ஆய்வு மைய இயக்குநர்;
09 விலங்கு இனப்பெருக்க ஆய்வு மைய இயக்குநர்; மற்றும்
(1) பதிவாளர்.
வகை - ॥- பிற உறுப்பினர்கள்
(ஐ) துறைத் தலைவர்களுக்கிடையேயிருந்து பத்து உறுப்பினர்கள்;
துணை வேந்தர் இவர்களைச் சுற்றுமுறை அடிப்படையில் பெயர்குறித்து
நியமிப்பார்;
(b) கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியலின் பல்வேறு
கூறுகளில் சிறப்பு அறிவையோ நடைமுறைப் பட்டறிவையோ
பெற்றிருக்கின்ற மூவர்; இவர்களை துணை வேந்தர் பெயர்குறித்து
நியமிப்பார்.
(2) துணை வேந்தர், கல்வி மன்றத்தின் பதவிவழித் தலைவராக இருந்து
வருவார்; பதிவாளர், கல்வி மன்றத்திற்குப் பதவிவழிச் செயலாளராக இருந்து
வருவார்.
(3) கல்வி மன்றத்தின் பதவிவழி உறப்பினர்களல்லாத பிற உறுப்பினர்களின்
பதவிக் காலஅளவு மூன்றாண்டாக இருக்கும்.
(4) கல்வி மன்றத்தின் உறுப்பினர்கள், வகுத்துரைக்கப்படக்கூடிய
நாட்படிகளையும் பயணப்படிகளையும் தவிர இப்பல்கலைக்கழகத்திடமிருந்து
ஊதியம் எதனையும் பெறுவதற்குத் தகுதியுடையவராகமாட்டார்கள்:
வரம்புரை: இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், தாம் வகித்து வருகின்ற
பதவியின் காரணத்தால் தாம் பெறுவதற்குத் தகுதியுடையவராயிருக்கிற
தம்முடைய இயல்பான பணி ஊதியங்களைப் பெற முடியாமல் உறுப்பினர்
எவரையும் தடை செய்தலாகாது.
(5 கல்வி மன்றத்தின் பதவிவழி உறுப்பினரல்லாத பிற உறுப்பினரொருவர்
தம்முடைய பதவிக்கால அளவு முடிவடைவதற்கு முன்னர் எந்தச் சமயத்திலும்
தம்முடைய உறுப்பினர் பதவியை விட்டுவிலகிக் கொள்ள முற்படலாம். அது
எழுத்துருவிலான கடிதமொன்றின் மூலமாக வேந்தருக்கு அவ்வுறுப்பினரால்
தெரியப்படுத்தப்படுதல் வேண்டும்; மற்றும் அப்பதவிவிலகலானது, வேந்தரால்
ஏற்கப்படும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.
23. கல்வி மன்றத்தின் அதிகாரங்களும் அலுவல்களும்.- கல்வி மன்றத்தின்
அதிகாரங்களும் அலுவல்களம் பின்வருவனவாகும்:-
(ஐ பயிற்றுவிப்பது மற்றும் பிற கல்வித் திட்டங்களின் மீறு பொதுவான
கட்டுப்பாட்டதிகாரத்தைச் செலுத்திவருவது மற்றும் அவற்றின் தரங்களைப் பேணி
மேம்படுத்துவது;
(௦) ஒழுங்குமுறை விதிகளைச் செய்வது மற்றும் அதனைத் திருத்துவது
அல்லது நீக்குவது;
(29) () இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது,
சேர்த்துக்கொள்ளப்படவேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவை
குறித்தும்,
(i) பட்டங்கள், பட்டயங்கள், பிற கல்விச் சிறப்புகள் ஆகியவற்றைப்
பெறுவதற்கு வழிவகுக்கின்ற குறித்தகாலப் பாடப்பிரிவுகள் குறித்தும், மற்றும்
(i) தேர்வுகளை நடத்துவது மற்றும் கல்வித் தரங்களைப் பேணி
மேம்படுத்துவது குறித்தும்
ஒழுங்குமுறை விதிகளைச் செய்வது;
(0) நூலகங்களின் மீது கட்டுப்பாட்டதிகாரம் செலுத்தி அவற்றை நிருவகித்து
வருவது உள்ளிட்ட கல்வி தொடர்பான அனைத்துப் பொருள்களிலும் குழுமத்திற்கு
ஆலோசனை வழங்குவது;
(e) பேராசிரியர்ப் பதவி, இணை பேராசிரியர்ப் பதவி, சிறப்புப் பேராசிரியர்ப்
பதவி, உதவிப் பேராசிரியர்ப் பதவி மற்றும் பயிற்றுவித்தல், ஆராய்ச்சி செய்தல்,
விரிவாக்கக் கல்வி ஆகியவற்றிற்கான பிற பதவிகள் ஆகியவற்றை
ஏற்படுத்துவதற்கும் அவற்றி கடமைகள் தொடர்பாக குழுமத்திடம் பரிந்துரை
செய்வது;
) பயிற்றுவித்தல், ஆராய்ச்சி செய்தல், விரிவாக்கக் கல்வி ஆகிய
துறைகளை அமைத்து உருவாக்குவதற்கான அல்லது புதிதாக மாற்றி
அமைத்துருவாக்குவதற்கான திட்டங்களை உருவாக்குவது, மாற்றியமைப்பது
அல்லது திருத்தியமைப்பது;
(9) பட்டமேற்படிப்பில் பயிற்றுவித்தல், ஆராய்ச்சி செய்தல், விரிவாக்கக்
கல்வி ஆகியவை குறித்துக் குழுமத்திடம் பரிந்துரை செய்தல்;
(h) பயிற்றுவித்தல், ஆராய்ச்சி செய்தல், விரிவாக்கக் கல்வி ஆகியவை
தொடர்பாக இப்பல்கலைக்கழகத்தின் உள்ள பதவிகளில் அமர்த்தப்படுவதற்கு
வகுத்துரைக்கப்பட வேண்டிய தகுதிப்பாடுகள் எவை என்பது குறித்துக்
குழுமத்திடம் பரிந்துரை செய்வது;
() மதிப்புறு பட்டங்களையோ பிற சிறப்புகளையோ வழங்குவது குறித்து
குழுமத்திடம் பறிந்தரை செய்வது; மற்றும்
() நிலைமுறை விதிகளினால் வகுத்துரைக்கப்படக்கூடிய பிற
அதிகாரங்களைச் செலுத்தி வருதலும் பிற அலுவல்களைப் புரிந்து வருதலும்.
24. புலங்கள்.- (1) இப்பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவ மற்றும்
விலங்கின அறிவியல், அடிப்படை அறிவியல், மீன்வளம் ஆகிய புலங்களையும்,
நிலைவிதிகளின் மூலம் வகுத்துரைக்கப்படக்கூடிய பிற புலங்களையும்
உள்ளடக்கியதாகும்.
(2) புலம் ஒவ்வொன்றும் முதண்மையர் ஒருவரைப் பெற்றிருக்கும்: அவர்,
வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில் நியமிக்கப்படுவார்.
(3) புலம் ஒவ்வொன்றும் வகுத்துரைக்கப்படக்கூடிய
குறிப்பிட்டொதுக்கப்பட்ட பாடப் பொருள்களைப் பெற்றிருக்கின்றதும்
வகுத்துரைக்கப்படக்கூடிய பயிற்றுவித்தல் முறைகளைக் கொண்டிருக்கும்;
மற்றும் துறை ஒவ்வொன்றும், தலைவர் ஒருவரைப் பெற்றிருக்கும்; அவர் அந்தத்
துறையை முறையாக அமைத்துச் செயற்படச் செய்வதைப் பொறுத்தளவில்
முதன்மையருக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டவராவார்.
(4) புலங்களின்: அமைப்பும் அலுவல்களும், பிற அனைத்துப்
பொருள்களையும் பொறுத்தமட்டில், வகுத்துரைக்கப்படக்கூடியவையாக
இருக்கும்.
25. பாடக்குழுமங்கள்.- புலம் ஒவ்வொன்றுக்குமாகப் பாடக்குழுமம் ஒன்று
இருத்தல் வேண்டும்; அதன் அமைப்பும் அலுவல்களும்,
வகுத்துரைக்கப்படக்கூடியவையாக இருத்தல் வேண்டும்.
26. திட்டமிடும் குழு- (1) இப்பல்கலைக்கழகத்தில் திட்டமிடும்
குழுமமொன்று அமைக்கப்படுதல் வேண்டும்; அது இப்பல்கலைக்கழகத்தின்
திட்டமிடூுகை மற்றும் மேம்பாடு குறித்துப் பொதுவாக ஆலோசனை வழங்கும்
என்பதுடன், இப்பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம், ஆராய்ச்சி ஆகியவற்றைத்
தனது ஆய்வின்கீழ் வைத்து வரும்.
(2) திட்டமிடும் குழுமம், பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்;
அதாவது:-
(i) துணை வேந்தர் அவர் திட்டமிடும் குழுமத்தின் பதவிவழித் தலைவராக
இருப்பார்; மற்றும்
(i) நிருவாகக் குழுமத்தால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள, உயர்கல்வி
நிலையடைந்த எண்மருக்கு மேற்படாதவர்கள்;
(3) திட்டமிடும் குழுமத்திற்குப் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட
உறுப்பினர்களின் பதவிக் காலஅளவு மூன்றாண்டாக இருக்கும்.
(4) திட்டமிடும் குழுமமானது, இந்தச் சட்டத்தின் மூலமாகத் தன்னிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள பிற அனைத்து அதிகாரங்களோடுகூட, கல்வி தொடர்பான
பொருள் எது குறித்தும் நிருவாகக் குழுமத்திற்கும் கல்வி மன்றத்திற்கும்
ஆலோசனை வழங்குவதற்கான உரிமையைப் பெற்றிருக்கும்.
27. நிதிக்குழு- (1) குழுமம், பின்வரும் உறுப்பினர்களைக்
கொண்டிருக்கின்ற நிதிக்குழுவொன்றை நியமித்தல் வேண்டும்: அதாவது:-
(2) துணை வேந்தர்;
(௦) கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறையைப் பொறுப்பில்
கொண்டுள்ள அரசுச் செயலாளர்;
(௦) நிதித் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;
(0) தனது அலுவலர்களல்லாத பிற உறப்பினர்களுக்கிடையேயிருந்து
குழுமத்தால் தெரிந்தெடுக்கப்படும் உறுப்பினர் ஒருவர்; மற்றும்
(6) நிதி அலுவலர்.
(2) கால்நடை வளர்ப்பு மற்றும் மன்வளத்துறையையோ நிதித்துறையையோ
பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர் எக்காரணத்தினாலேனும்
நிதிக்குழுவின் கூட்டங்களுக்கு வருவதற்கு இயலாதிருப்பாரானால், அவர் அரசுத்
துணைச் செயலாளரின் படிநிலைக்குக் கீழல்லாத தம் துறையின் அலுவலர்
எவரையும் அத்தகைய கூட்டங்களுக்கு வருகை தருவதற்காக
அனுப்பிவைக்கலாம். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும். அலுவலர்,
அக்கூட்டங்களின் விவாதங்களில் பங்கேற்பதற்கு உரிமை பெற்றிருப்பார்
என்பதுடன், வாக்களிப்பதற்கான உரிமையையும் பெற்றிருப்பார்.
(3) துணை வேந்தர், நிதிக்குழுவின் பதவிவழித் தலைவராக இருந்து
வருவார். நிதி அலுவலர் நிதிக்குழுவின் பதவிவழிச் செயலாளராக இருந்து
வருவார்.
(4) நிதிக்கு -
(ஐ இப்பல்கலைக்கழகத்தின் ஆண்டு கணக்குகளையும் ஆண்டு நிதி
மதிப்பீடுகளையும் பரிச்லனை செய்தலும் அவற்றின் மீது குழுமத்திற்கு
ஆலோசனை வழங்குதலும் வேண்டும்;
(௦) அவ்வப்போது, இப்பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமையை ஆய்வு
செய்தல் வேண்டும்;
(©) ஆண்டு நிதி மதிப்பீடுகளில் வகைமுறை எதுவும் செய்யப்பட்டிராத
செலவினத்தை உள்ளடக்கியுள்ள, அல்லது ஆண்டு நிதி மதிப்பீடுகளில் வகை:
செய்யப்பட்டுள்ள தொகைக்கும் மிகையாக உள்ள செலவினத்தை உள்ளடக்குகிற
கருத்துரு ஒவ்வொன்றின் பேரிலும் குழுமத்திற்குப் பரிந்துரை செய்தல் வேண்டும்;
(0) இப்பல்கலைக்கழக நிதிகள் தொடர்பான அனைத்துப் பொருள்களின்.
பேரிலும் குழுமத்திற்குப் பரிந்துரை செய்தல் வேண்டும்; மற்றும்
(6) வகுத்துரைக்கப்படக்கடிய பிற அலுவல்களைப் புரிந்துவருதல்
வேண்டும்.
28. பிற அதிகாரஅமைப்புகளை அமைத்துருவாக்குதல்.- குழுமமானது,
தேவையாயிருக்கும் இப்பல்கலைக்கழகத்தின் பிற அதிகாரஅமைப்புகளை
நிலைமுறை விதிகளில் வகுத்துரைக்கப்பட்டுள்ள முறையில்
அமைத்துருவாக்கலாம்.
அத்தியாயம் V.
ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கக் கல்வி அமைப்புகள்.
29. கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல் ஆராய்ச்சி
அமைப்பு.-- (1) இந்தச் சட்டத்தின் மற்றும் நிலைமுறை விதிகளின்
வகைமுறைகளுக்கு உட்பட்டு, இப்பல்கலைக்கழகம், கால்நடை பராமரிப்பு மற்றும்
மீன்வளம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு, முதண்மையாகக்
கால்நடை மருத்துவம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம் மற்றும் அவற்றோடு
தொடர்புடைய பொருள்களின் பிரச்சனைகள் குறித்து அடிப்படை ஆராய்ச்சி
செய்வதற்காகக் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கின அறிவியல் ஆராய்ச்சி
அமைப்பொன்றை நிறுவுதல் வேண்டும்; மற்றும் இந்த நோக்கத்திற்காக, அரசின்
கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மீன்வளத்துறை, ஆராய்ச்சி நிலையங்கள்
ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தேவையாயிருக்கக்கடிய எண்ணிக்கையில்
கால்நடை, பழக்கு விலங்கு மற்றும் மன்வள ஆராய்ச்சி நிலையங்களை நிறுவுதல்
வேண்டும்.
(2) கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல் ஆராய்ச்சி
அமைப்பானது, ஆராய்ச்சி இயக்குநரின் வழிகாட்டு நெறியில் மேம்படுத்தப்படுதல்
வேண்டும்.
30. கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல் விரிவாக்கக் கல்வி
அமைப்பு.-- (1) இந்தச் சட்டத்தில் மற்றும் நிலைமுறை விதிகளில்
வகைமுறைகளுக்கு உட்பட்டு, இப்பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவ மற்றும்
விலங்கின அறிவியல் விரிவாக்கக் கல்வி அமைப்பொன்றை நிறுவுதல் வேண்டும்;
அது, ஆராய்ச்சி அடிப்படையில் பெற்ற தகவலை மாணவர்கள் விரிவாக்கப்
பணியாளர்கள், பழக்கு விலங்குப் பண்ணை வைத்து நடத்துபவர்கள், மீன் பண்ணை
வைத்து நடத்துபவர்கள், மீனவர்கள் ஆகியோருக்குக் கிடைக்குமாறு செய்தல்
வேண்டும்: மற்றும், தொடர்புடைய அரசுத் துறைகளின் ஒத்துழைப்போடு
அத்தகையவர்களின் நலனுக்காக செய்முறை விளக்க நிகழ்ச்சியையும் பயிற்சித்
திட்டத்தையும் நடத்துதல் வேண்டும்.
(2) இப்பல்கலைக்கழகம்,
(a) கிராமப்புற வாழ்க்கை நிலைகளை உயர்த்துவதற்கு
இன்றியமையாதவையாகவுள்ள மேம்படுத்தப்பட்ட பயில்முறைகளின்
கண்டுபிடிப்புகளையும் அவற்றின் மீதான ஆராய்ச்சி மேம்பாடுகளையும் பழக்கு
விலங்குப் பண்ணை வைத்து நடத்துபவர்கள், மீன் பண்ணை வைத்து
நடத்துபவர்கள், மீனவர்கள் ஆகியோருக்குத் தெரியப்படுத்துவதற்கும்
செய்முறையில் காண்பிப்பதற்கும்;
(b) உணவு உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்குச் சிறப்பு முக்கியத்துவம்
அளித்து, விலங்கு இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கும்; மற்றும்
(6) கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல் ஆராய்ச்சி
அமைப்பினால் உருவாக்கப்பட்ட அல்லது அறிமுகப்படுத்தப்பட்ட புதுவகை:
உயிரினங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மரபுவழி இனங்களைப் பெருக்குவதற்கும்
தேவையான, கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல் விரிவாக்கக்
கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
(3) கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல் வழிகாட்டு
நெறியின்படி மேம்படுத்தப்படுதல் வேண்டும்.
அத்தியாயம் "0.
நிதியங்களும் கணக்குகளும்.
31. பொது நிதியம்.- இப்பல்கலைக்கழகம் பொது நிதியமொன்றைக்
கொண்டிருக்கும், அதில்,-
(ஐ கட்டணங்கள், நிலைக்கொடைகள், மானியங்கள், நண்கொடைகள்,
விருப்பக்கொடைகள் ஆகியவற்றின் மூலமான வருமானம் ஏதேனுமிருப்பின்
அதையும்;
(b) மைய அரசு, மாநில அரசு எதனாலுமோ 1956-ஆம் ஆண்டு
பல்கலைக்கழக மானிய ஆணையச் சட்டத்தின்படி (மையச் சட்டம் 31956)
நிறுவப்பட்ட பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் அல்லது அதுபோன்ற
அதிகார அமைப்பினால் அல்லது உள்ளாட்சி அதிகாரஅமைப்பு எதனாலுமோ
அல்லது அத்தகைய அரசுக்குச் சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டில்
கீழுள்ள நிறுவனம் எதனாலுமோ செய்யப்படும் நிதியளிப்பு அல்லது மானியமளிப்பு
எனையும்; மற்றும்
(6) பிற வருவாய்களையும்,
வரவு வைத்தல் வேண்டும்.
32. பிற நிதியங்கள்.- இப்பல்கலைக்கழகம், நிலைமுறை விதிகளால்
வகுத்துரைக்கப்படக்கூடிய பிற நிதியங்களைக் கொண்டிருக்கலாம்.
33. நிதியங்களை நிருவகித்தல்.- இப்பல்கலைக்கழகத்தின் நிதியங்கள்
மற்றும் பணங்கள் அனைத்தும், வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில்
நிருவகிக்கப்படுதல் வேண்டும்.
34. மானியங்கள்.- (1) அரசு, ஒவ்வோர் ஆண்டும் இப்பல்கலைக்கழகத்திற்கு,
பின்வருமாறு காலக் கழிவுறா ஒட்டுமொத்த மானியத் தொகைகளை வழங்குதல்
வேண்டும்:
(a) கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல் மற்றும் அவைச்
சார்ந்த அறிவியல் தொடர்பான கல்வி நிலையங்கள் இப்பல்கலைக்கழகத்திற்கு
மாற்றப்பட்டுள்ள கால்நடை மருந்துவ மற்றும் விலங்கின அறிவியல் மற்றும்
அவைச் சார்ந்த அறிவியல் தொடர்பான பிற அரசுத் துறைகள் ஆகியவற்றின்
நடவடிக்கைகளைப் பொறுத்து அந்த ஆண்டில் செலவிட நேர்ந்த நிகர
செலவிற்குக் குறையாத மானியமொன்றையும்;
(௦) இப்பல்கலைக்கழகத்தின் பணியாளர் தொகுதிக்கான சம்பளம் மற்றும்
படித்தொகைகள், எதிர்பாராச் செலவுகள், வழங்கீடுகள் மற்றும் பணிச்சேவைகள்
ஆகியவற்றிற்கான மதிப்பிடப்பட்ட செலவுகளுக்குக் குறைவாக இல்லாத
மானியமொன்றையும்; மற்றும்
(2 இப்பல்கலைக்கழகம் உரியவாறு செயற்படுவதற்கு அரசு
தேவையெனக் கருதும் தொடர் மற்றும் தொடராக் கூடுதல் செலவினங்களை
எதிர்கொள்வதற்கான மானியமொன்றையும்
வழங்குதல் வேண்டும்.
(2) இப்பல்கலைக்கழகம், அரசினால் வழங்கப்பட்ட மானியம் தொடர்பாகவும்
அது பயன்படுத்தப்பட்டது தொடர்பாக அரசு கோரக்கூடிய விவர அறிக்கைகள்,
கணக்குகள், அறிக்கைகள், பிற விவரங்கள் ஆகியவற்றை அளித்தல் வேண்டும்.
35. ஆண்டு கணக்குகள்.- (1) நிதி அலுவலரால் தயாரிக்கப்படும் ஆண்டு
கணக்குகள். அரசு பணிக்கக்கூடிய பரிசீலனைக்கும் தணிக்கைக்கும்
அனுப்பப்படுதல் வேண்டும்: மற்றும் ஆண்டு கணக்குகளின் மற்றும் தணிக்கை
அறிக்கைப்படியொன்று அரசுக்குப் பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்.
(2) இப்பல்கலைக்கழகம் அத்தணிக்கையில் எழுப்பப்பட்ட மறுப்புகளைத்
தீர்த்து முடிவு செய்தல் வேண்டும் என்பதோடு, தணிக்கை அறிக்கையின் மீது
அரசினால் பிறப்பிக்கப்படக்கூடிய பணிப்பாணைகளை நிறைவேற்றுதலும்
வேண்டும்.
(3) அரசு, ஆண்டு கணக்குகளையும் தணிக்கை அறிக்கையையும் தம்
கருத்துரைகளுடன் சேர்த்துச் சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுமாறு
செய்வித்தல் வேண்டும்.
(4) நிதி அலுவலர், அடுத்து வருகின்ற ஆண்டிற்கான ஆண்டு நிதிசார்
மதிப்பீடுகளை, நிலைமுறை விதிகளால் வகுத்துரைக்கப்படக்கூடிய தேதிக்கு
முன்னர் தயாரித்தல் வேண்டும்.
(5) நிதி அலுவலரால் தயாரிக்கப்பட்ட ஆண்டு கணக்குகளும் ஆண்டு
நிதிசார் மதிப்பீடுகளும் நிதி குழுவின் கருத்துரைகளுடன் சேர்த்து குழுமத்தி
முன்பு அதன் ஆண்டு கூட்டத்தில், ஒப்புதலளிப்பிற்காக வைக்கப்படுதல் வேண்டும்:
மற்றும் குழுமம் அது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றி அதனை நிதி
அலுவலருக்குத் தெரிவிக்கலாம்: அவரும் அதற்கிணங்க நடவடிக்கைகளை
எடுத்தல் வேண்டும்.
அத்தியாயம் VI
பணி நிபந்தனைகள்.
36. ஓய்வூதியம், பணிக்கொடை முதலானவை.- (1) இப்பல்கலைக்கழகம்
தன் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்ற பணியாளர்கள் ஆகியோரின் நலனுக்காக,
வகுத்துரைக்கப்படக்கூடிய முறையிலும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, தான்
பொருத்தமெனக் கருதக்கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை, காப்பீடு, வருங்கால
வைப்பு நிதியம் ஆகியவற்றை ஏற்படுத்துதல் வேண்டும்.
(2) இப்பல்கலைக்கழகம், (1)-ஆம் உட்பிரிவின்படி வருங்கால வைப்பு
நிதியமொன்றை அவ்வாறு ஏற்படுத்தியுள்ளவிடத்து, இப்பல்கலைக்கழகம் ஓர்
உள்ளாட்சி அதிகாரஅமைப்பாகவும் அந்நிதியம் ஓர் அரசு வருக்கால வைப்பு
நிதியமாகவும் இருந்தாற்போன்றே 1925-ஆம் ஆண்டு வருங்கால லைப்பு
நிதியங்கள் சட்டத்தின் (மையச் சட்டம் XIX/1925) வகைமுறைகள்
அந்நி யத்திற்குப் பொருந்துதல் வேண்டும் என்று அரசு விளம்பலாம்.
(3) இப்பல்கலைக்கழகம், நிதிந்குழுவுடன் கலந்தறிந்து, தான் முடிவு
செய்யக்கூடிய முறையில் அவ்வருங்கால வைப்பு நிதியத்தொகையை முதலீடு
செய்யலாம்.
விளக்கம்.- இந்தப் பிரிவின் மற்றும் 37-ஆம் பிரிவி நோக்கங்களுக்காக,
"அலுவலர்" என்னும் சொல், இப்பல்கலைக்கழகத்தின் வேந்தரையும் இணை:
வேந்தரையும் உள்ளடக்குதலாகாது.
37. பணி நிபந்தனைகள்.- இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு பட்டு,
இப்பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள், ஆசிரியர்கள், மற்ற பணியாளர்கள்
ஆகியோரின் நியமனம் அவர்களைத் தெரிவு செய்வதற்கான நடைமுறை,
அவர்களின் சம்பளம் மற்றும் படித்தொகைகள் மற்றும் பிற பணி நிபந்தனைகள்
ஆகியவை வகுத்துரைக்கப்படுவனவாக இருத்தல் வேண்டும்.
அத்தியாயம் VIl
நிலைமுறை விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள்.
38. நிலைமுறை விதிகள்.- இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குட்பட்டு,
நிலைமுறை விதிகள் பின்வரும் பொருள்கள் அனைத்திற்கும் அல்லது அவற்றில்
எதற்கும் வகை செய்யலாம்; அதாவது:-
(ஐ எந்த நிபந்தனைகளின்படி இப்பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நடத்தி
வரப்படலாம் என்பதற்கு;
(b) எந்த முறையிலும் எந்த நிபந்தனைகளின் படியும் மதிப்புறு பட்டங்களும்
பிற கல்விச் சிறப்புகளும் வழங்கப்படலாம் என்பதற்கு;
(6) கட்டணங்களும் பிற விதிப்புக் கட்டணங்களும் இன்னவென்று
நிர்ணயித்தல், அவற்றைச் செலுத்துதல், பெறுதல் ஆகியவற்றிற்கு;
(1) இப்பல்கலைக்கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான கல்வித்
தகுதியையும் தரத்தையும் வகுத்துரைப்பதற்கு;
(e) எந்த வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, பதிவாளர்
நியமிக்கப்படலாம் என்பதற்கும், அவருடைய அதிகாரங்கள், அலுவல்கள்,
கடமைகள் ஆகியவை இன்னவையென்பதற்கும்;
) எந்த வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, நிதி
அலுவலர் நியமிக்கப்படலாம் என்பதற்கும் அவருடைய அதிகாரங்கள், அலுவல்கள்,
கடமைகள் ஆகியவை இன்னவையென்பதற்கும்;
(9) எந்த வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, கல்லூரி
ஒவ்வொன்றில் முதன்மையரும் நியமிக்கப்படலாம் என்பதற்கும் அவருடைய
அதிகாரங்கள், அலுவல்கள், கடமைகள் ஆகியவை இன்னவையென்பதற்கும்;
0) எந்த வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, ஆராய்ச்சி
இயக்குநர், பயிற்சி மருத்துவ இயக்குநர், விரிவாக்கக் கல்வி இயக்குநர், விலங்கு
நல ஆய்வு மைய இயக்குநர், விலங்கு இனப்பெருக்க ஆய்வு மைய இயக்குநர்
ஆகியோர் நியமிக்கப்படலாம் என்பதற்கும் அவருடைய அதிகாரங்கள், அலுவல்கள்,
கடமைகள் ஆகியவை இன்னவையென்பதற்கும்;
0. இப்பல்கலைக்கழகக் குழுமத்தின், கல்வி மன்றத்தி , பிற
அதிகாரஅமைப்புகளின் மற்றும் அவற்றில் குழுக்களில் உறுப்பினர்களுக்கு
செலுத்தப்பட வேண்டிய நாள் மற்றும் பயணப்படிகளுக் ;
) புலம் ஒவ்வொன்றுக்குமான பாடப்பொருள்கள்.
குறித்தொதுக்கப்படுவதற்கு;
(k) புலங்களின் அமைப்பிற்கும் அலுவல்களுக்கும்;
() பாடக் குழுமங்களில் அமைப்பிற்கும் அலுவல்களுக்கும்;
(M) இப்பல்கலைக்கழகத்து பிற அதிகார அமைப்புகளின் அமைப்பிற்கும்
அதிகாரங்களுக்கும் அலுவல்களுக்கும்;
(n) எந்த முறையில் புலம் ஒவ்வொன்றின். முதன்மையரும்
நியமிக்கப்படலாம் என்பதற்கு;
(௦) இப்பல்கலைக்கழகத்து நிதியங்களும் பணங்களும் ஏற்படுத்தப்படுவதற்கு
நிருவகிக்கப்படுவதற்கும்;
(ற தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் எந்த முறையில் வெளியிடப்பட
வேண்டும் என்பதற்கு;
(@ 42-ஆம் பிரிவில் குறிப்பிடப்படும் மாணவர்களுக்காக எவ்வளவு
காலஅளவிற்கும் எந்த முறையிலும் பயிற்றுவித்தல், கல்வி கற்பித்தல்,
பயிற்சியளித்தல் வேண்டும் மற்றும் தேர்வுகள் நடத்தப்படுதல் வேண்டும் என்பதற்கு;
மற்றும்
(N நிலைமுறை விதிகளால் வகுத்துரைக்கப்பட வேண்டுமென்றோ
வகுத்துரைக்கப்படலாகுமென்றோ கோரப்படும். பிற பொருள் எதற்கும்
வகைசெய்யலாம்.
39. நிலைமுறை விதிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பது. (1)
குழுமம், இந்தப் பிரிவில் இதன்பின்பு வகைசெய்யப்பட்டுள்ள முறையில்
அவ்வப்போது, நிலைமுறை விதிகளைச் செய்யலாம்; மற்றும் அந்நிலைமுறை
விதிகளைத் திருத்தலாம் அல்லது நீத்தறவு செய்யலாம்.
(2) கல்வி மன்றம் குழுமத்தால் நிறைவேற்றப்பட வேண்டிய நிலைமுறை
விதி எதனின் அல்லது நிலைமுறை விதியொன்றின் திருத்தம் அல்லது நீக்கம்
எதனின் வரைவையும் குழுமத்திடம் முன்மொழியலாம்; மற்றும் அத்தகைய
வரைவானது, குழுமத்தால் அதன் அடுத்த கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படுதல்
வேண்டும்:
வரம்புரை: கல்வி மன்றம், கல்வி சார்ந்த அலுவல்கள் அல்லாத பிற
பொருட்களைப் பற்றிய நிலைமுறை விதி எதனின் அல்லது நிலைமுறை
விதியொன்றின் திருத்தம் அல்லது நீக்கம் எதனின் வரைவையும் மூன்
மொழிதலாகாது.
(3) குழுமம், (2-ஆம் உட்பிரிவின்படி, கல்வி மன்றத்தால்
முன்மொழியப்பட்ட வரைவைப் பரிசீலனை இுசய்யலாம்; மற்றும் அது
அவ்வரைவினை நிறைவேற்றலாம் அல்லது மறுத்துத் தள்ளிவிடலாம் அல்லது
திருத்தத்துடனோ இல்லாமலோ அதை மறுபரிசீலனைக்காகக் கல்வி
மன்றத்திற்குத் திருப்பியனுப்பலாம்.
(4) (a) குழுமத்தின் உறுப்பினர் எவரும், நிலைமுறை விதியொன்றின்
வரைவொன்றினைக் குழுமத்திற்கு முன்மொழியலாம்; மற்றும் குழுமம்,
அவ்வரைவை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது அது கல்வி மன்றத்தின்
உள்ளிட்டெல்லைக்குள் வராத பொருள் ஒன்றைப் பற்றியதாக இருக்குமானால்,
அதை மறுத்துத் தள்ளிவிடலாம்.
(b) அத்தகைய வரைவு கல்வி மன்றத்தின் உள்ளீட்டெல்லைக்குள்
வருகின்ற பொருள் ஒன்றைப் பற்றியதாக இருக்கின்ற நேர்வில், பரிச்லனை
செய்வதற்காக குழுமம் கல்வி மன்றத்திற்குக் குறித்தனுப்புதல் வேண்டும்:
அம்மன்றம் அவ்வரைவிற்குத் தான் ஒப்புதலளிக்கவில்லையென்று குழுமத்திற்கு
அறிக்கை கொடுக்கலாம், அல்லது கல்வி மன்றம் ஒப்புதலளிக்கும் வடிவில்
குழுமத்திற்கு அவ்வரைவைப் பணிந்தனுப்பலாம்; மேலும் அக்குழுமம்
அவ்வரைவைத் திருத்தத்துடனோ இல்லாமலோ நிறைவேற்றலாம் அல்லது
மறுத்துத் தள்ளிவிடலாம்.
(5) குழுமத்தினால் நிறைவேற்றப்பட்ட நிலைமுறை விதி ஒன்று
வேந்தருக்குப் பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்: அவர், அதற்கு ஏற்பிசைவு
அளிக்கலாம் அல்லது தமது ஏற்பிசைவை அளிக்க மறுக்கலாம் குழுமத்தினால்
நிறைவேற்றப்பட்ட நிலைமுறை விதி ஒன்று, வேந்தரால் அதற்கு
ஏற்பிசைவளிக்கப்படாத வரையிலும் செல்லுந்தன்மை கொண்டிருத்தல் ஆகாது.
40. ஒழுங்குமுறை விதிகள்.- (1) இந்தச் சட்டத்தில் மற்றும் நிலைமுறை
விதிகளில் வகைமுறைகளுக்கு உட்பட்டு, இப்பல்கலைக்கழகத்தின்
அதிகாரஅமைப்புகள் பின்வரும் பொருள்கள் அனைத்திற்குமோ அல்லது
அவற்றில் எதற்குமோ வகைசெய்வதற்கான ஒழுங்குமுறை விதிகளைச்
செய்யலாம், அதாவது:-
(ஐ) இப்பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள்
ஆகியோரின் நலனுக்காக எந்த முறையிலும் எந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டும்
ஓய்வூதியம், பணிக்கொடை, காப்பீடு, வருங்கால வைப்பு நிதியம் ஆகியவற்றை
ஏற்படுத்தலாம் என்பதற்கும்;
(௦) இப்பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள்
ஆகியோரின் நியமனம் அவர்களைத் தெரிவு செய்வதற்கான நடைமுறை,
அவர்களின் சம்பளம் மற்றும் படித்தொகைகள், பணி குறித்த பிற நிபந்தனைகள்
ஆகியவற்றிற்கும்;
(29) இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகளில் ஏதொன்றின்
உறுப்பினர்களுக்கும் அறிவிப்புக் கொடுத்தல், கூட்டத் தேதிகள்,
அக்கூட்டங்களில் நடத்தப்பட வேண்டிய அலுவல்கள், அக்கூட்ட
நடவடிக்கைகளில் பதிவுருவொன்றை வைத்துவருதல் ஆகியவற்றிற்கும்;
(0) கூட்டங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைக்கும் குறைவெண்
வரம்பு அமைவதற்குத் தேவைப்படுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை
எவ்வளவு என்பதற்கும்; மற்றும்
(6) ஒழுங்குமுறை விதிகளால் வகுத்துரைக்கப்பட வேண்டுமென்றோ
வகுத்துரைக்கப்படலாகுமென்றோ கோரப்படும் பிற பொருள் எதற்கும்,
வகை செய்யலாம்.
(2) கல்வி மன்றம், நிலைமுறை விதிகளின் வகைமுறைகளுக்கு உட்பட்டு,
குறித்தகாலப் பாடப்பிரிவுகள், தேர்வு முறைகள் ஆகியவை குறித்தும்
இப்பல்கலைக்கழகத்தின் பட்டங்கள், பட்டயங்கள், பிற கல்விச் சிறப்புகள்
ஆகியவை குறித்ததுமான வரைவுகளை தொடர்புடைய பாடக்
குழுமங்களிடமிருந்து பெற்ற பின்னர் அவற்றிற்கு வகைசெய்கின்ற
ஒழுங்குமுறை விதிகளைச் செய்யலாம்.
(3) குழுமம், ஒழுங்குமுறை விதி ஏதொன்றையும் திருத்துவதற்கு
தொடர்புடைய அதிகார அமைப்பிற்கு, தான் பொருத்தமென நினைக்கும்
பணிப்பாணைகளைப் (directions) பிறப்பிக்கலாம்.
அத்தியாயம் X,
கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்கள் பணியாளர்கள், நிதியங்கள் ஆகியற்றை
மாற்றுதல்.
41. குறித்த சில கல்லூரிகளையும் கல்வி நிலையங்களையும்
இப்பல்கலைக்கழகத்திற்கு மாற்றுதல்.-- (1) 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகச் சட்டத்திலோ அதன்கீழ்ச் செய்யப்பட்ட
நிலைமுறை விதிகள், ஒழுங்குமுறை விதிகள், பிற ஆணைகள் ஆகியவற்றிலோ
என்ன அடங்கியிருந்தபோதிலும், குறிக்கப்பட்ட நாளன்றும் அது முதற்கொண்டும்
(ஐ) அந்த நாளுக்கு அடுத்து முன்பு வரையில் தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளாகவும் கல்வி நிலையங்களாகவும் இருந்து வந்த
சென்னையிலுள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்லிலுள்ள
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடியிலுள்ள
மீன்வளக் கல்லூரி ஆகியவையும், இணைப்புப்பட்டியலில் 1-ஆம் பகுதியில்
குறித்துரைக்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களும்; மற்றும்
(௦) அத்தகைய நாளுக்கு அடுத்து முன்பு வரையில், அரசின் கால்நடை
பராமரிப்பு துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தவையும் இணைப்புப்பட்டியலில்
॥டஆம் பகுதியில் குறித்துரைக்கப்பட்டுள்ளவையுமான கல்வி நிலையங்களும்,
இப்பல்கலைக்கழகத்தின் மூலக் கல்லூரிகளாகவும் கல்வி
நிலையங்களாகவும் இப்பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டு அதனால்
பேணிவரப்படுதல் வேண்டும்.
(2) குறிக்கப்பட்ட நாளன்றும் அது முதற்கொண்டும், (1)-ஆம் உட்பிரிவில்
குறித்துரைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் மற்றும் கல்வி நிலையங்களின்
கட்டுப்பாடும் நிருவாகமும், அவை தொடர்பான தமிழ்நாடு வேளாண்
பல்கலைக்கழகத்தின் மற்றும் அரசின் சொத்துக்கள், உடைமைகள், கடப்பாடுகள்
ஆகியவை அனைத்தும் இப்பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டவையாக
அதனிடம் மேவிநிற்றல் வேண்டும்.
(3) அரசு, குறிக்கப்பட்ட நாளுக்குப் பின்னர், எந்தச் சமயத்திலும், தான்:
பொருத்தமெனக் கருதுகின்ற வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்
இப்பல்கலைக்கழகத்தி பயன்பாட்டிற்கென தனது நிலங்களில் எதனையும்
அதனிடம் மாற்றலாம்.
(4) அரசு, குறிக்கப்பட்ட நாளுக்குப் பின்னர், எந்தச் சமயத்திலும், தான்:
பொருத்தமெனக் கருதுகின்ற வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்,
தனது கல்லூரிகளில் அல்லது கல்வி நிலையங்களில் ஏதொன்றின்
கட்டுப்பாட்டையும் நிருவாகத்தையும் இப்பல்கலைக்கழகத்திடம் மாற்றலாம்.
(5) இம்மாநிலத்தில் பல்கலைக்கழகமொன்று நிறுவப்படுவது தொடர்பான
பிற சட்டம் எதிலுமோ அதன்கீழ்ச் செய்யப்பட்ட நிலைமுறை விதிகள் நெறிமுறை
விதிகள், ஒழுங்குமுறை விதிகள், ஆணைகள் ஆகியவற்றிலோ என்ன
அடங்கியிருந்தபோதிலும், அரசினால் குறித்துரைக்கப்படும் தேதியன்றும் அது
முதற்கொண்டும், (4)-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரிகளோ கல்வி
நிலையங்களோ, அவ்வாறு குறித்துரைக்கப்பட்ட தேதிக்கு அடுத்து முந்திய
தேதிவரையில் அவை எந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்
பெற்றிருந்தனவோ அந்தப் பல்கலைக்கழகத்தி இணைபப்பிலிருந்து நீக்கப்படுதல்
வேண்டும் என்பதுடன் இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்றுள்ள
கல்லூரிகளாகவோ கல்வி நிலையங்களாகவோ இருப்பனவாகக் கருதப்படுதலும்
வேண்டும்; மேலும் இந்தச் சட்டத்தில் வகைமுறைகள் எந்த அளவுக்குக் கூடுமோ
அந்த அளவுக்கு அதன்படியே பொருந்துதல் வேண்டும்.
42. மாணவர்களுக்கான தனி வகைமுறைகள்.- இந்தச் சட்டத்திலோ,
நிலைமுறை விதிகளிலோ, ஒழுங்குமுறை விதிகளிலோ என்ன
அடங்கியிருந்தபோதிலும், குறிக்கப்பட்ட நாளுக் அடுத்து முன்னர், 41-ஆம்
பிரிவின் (1)-ஆம் உட்பிரிவில் (ஐ கூறில் குறித்துரைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில்
படித்து வந்த அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் வைக்கப்பட்ட
அல்லது நடத்தப்பட்ட தேர்வு எதற்கும் அனுமதிக்கப்படுவதற்குத்
தகுதியுடையவராயிருந்த மாணவர் ஒவ்வொருவரும் தம் குறித்தகாலப் படிப்புப்
பிரிவை அவர் படித்து முடிப்பதற்கு அனுமதிக்கப்படுதல் வேண்டும் அல்லது
இப்பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கு ஏற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும்.
இப்பல்கலைக்கழகம்,-
(ஐ தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழகத்தில் உள்ள குறித்தகாலப் படிப்புப்
பிரிவிற்கிணங்கி வகையில் முதல் துணை வேந்தரால் தீர்மானிக்கப்படும்
காலஅளவுக்கும் அவரால் தீர்மானிக்கப்படும் முறையிலும் அத்தகைய
மாணவருக்காக, பயிற்றுவித்தல், கற்பித்தல், பயிற்சி அளித்தல், தேர்வு
நடத்தப்படுதல் ஆகியவற்றிற்கும்,
(b) அத்தகைய தேர்வில் முடிவாகத் தகுதிபெற்ற மாணவருக்கு அதற்கு
இணையான இப்பல்கலைக்கழகத்தின் பட்டம், பட்டயம் அல்லது பிற கல்விச் சிறப்பு
வழங்கப்படுவதற்குமான ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும்.
43. குறித்த சில பணியாளர்களின் பணியை மாற்றுதல். (1) குறிக்கப்பட்ட
நாளுக்கு அடுத்து முன்னர், இணைப்புப்பட்டியலின் ।1-ஆம் பகுதியில்
குறித்துரைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தி
கல்லூரிகளிலும் கல்வி நிலையங்களிலும் பணியாற்றி வந்த நபர் ஒவ்வொருவரும்,
மேற்சொன்ன நாள்: முதற்கொண்டு, இப்பல்கலைக்கழகத்தி
பணியாளசரொருவராக ஆதல் வேண்டும் என்பதுடன் தமிழ்நாடு வேளாண்
பல்கலைக்கழகத்தின் பணியாளசரொருவராக இருப்பது முடிவுற்று போதலும்
வேண்டும்.
(2) (ல குறிக்கப்பட்ட நாளுக்குப் பின்னர் கூடியவிரைவில் அரசு, தமிழ்நாடு
வேளாண் பல்கலைக்கழகத்தின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும்
விலங்கின அறிவியல் பல்கலைக்கழகத்தி துணை வேந்தர்களுடன் கலந்தாய்வு
செய்தபின்பு, பொது அல்லது சிறப்பு ஆணையின் மூலமாக, அத்தகைய
ஆணையில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறான,-
() இணைப்புப்பட்டியலில் ॥-ஆம் பகுதியில் குறித்துரைக்கப்பட்டுள்ள
கல்வி நிலையங்களில் குறிக்கப்பட்ட நாளுக்கு அடுத்து முன்னர் பணியாற்றி
வந்திருக்கின்ற பணியாளர்களும்
(0 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தி பணியாளர்களும்
அத்தகைய ஆணையில் குறித்துரைக்கப்படும் தேதியன்றும் அது
முதற்கொண்டும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல்
பல்கலைக்கழகத்தின். அலுவல்கள் தொடர்பாகப் பணியாற்றுவதற்கு
குறித்தொதுக்கப்பட்டவர்களாவர்:
வரம்புரை: அத்தகைய ஆணை எதுவும், அத்தகைய பணியாளரெவரையும்
பொறுத்த அளவில், அவ்வாறு குறித்தொதுக்கப்படுவதற்கான அவருடைய
இசைவில்லாமல் பிறப்பிக்கப்படுலாகாது.
(b) லு கூறிப்படியான ஆணையில் குறித்துரைக்கப்பட்டுள்ள
தேதியன்றும் அது முதற்கொண்டும், அத்தகைய ஆணையில்
குறித்துரைக்கப்பட்டுள்ள நபர்கள் தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும்
விலங்கின அறிவியல் பல்கலைக்கழகத்தி பணியாளர்களாக ஆதல் வேண்டும்
என்பதோடு, அரசுப் பணியாளர்களாகவோ அல்லது நேர்விற்கேற்ப தமிழ்நாடு
வேளாண் பல்கலைக்கழகத்தின். பணியாளர்களாகவோ இருப்பது
முடிவுற்றுப்போதலும் வேண்டும்.
(3) (1), (2) ஆகிய உட்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் ஒவ்வொருவரும்,
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிரமாலிருந்திருந்தால் குறிக்கப்பட்ட நாளிலோ
அல்லது (2)-ஆம் உட்பிரிவின் (ஐ எனும் கூறி படியான ஆணையில்
குறித்துரைக்கப்பட்ட தேதியிலோ அவர் வகித்திருந்திருக்கக்கூடிய பதவிக்கால
அளவைப் போன்ற அதே பதவிக்கால அளவிற்கும் பெற்றிருத்திருக்கக்கூடிய
ஊதியத்தைப் போன்ற அதே ஊதியத்திற்கும், ஓய்வூதியம் அல்லது பணிக்கொடை
ஏதேனுமிருப்பின் அது குறித்தும் பிற பொருள்கள் குறித்தும் அவருக்கிருந்து வந்த
உரிமை மற்றும் சிறப்புதிமைகள் போன்ற அதே உரிமைகளுடனும்
சிறப்புநிமைகளுடனும் இப்பல்கலைக்கழகத்தில் பதவி வகித்து வருவார்.
) 1 (2) ஆகிய உட்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு
ஓய்வூதியத்தையும் பணிக்கொடையையும் கொடுப்பதற்கான கடப்பாடானது,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல்
பல்கலைக்கழகத்தின் கடப்பாடாக இருத்தல் வேண்டும்.
44. வருங்கால வைப்பு நிதியத்திலும் மற்றும் அதுபோன்ற நிதியங்களிலும்
சேர்ந்துள்ள தொகைகளை மாற்றுதல்.- (1) குறிக்கப்பட்ட நாளில் 43-ஆம் பிரிவின்.
(1)-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களில் வருங்கால வைப்பு நிதியக்
கணக்குகளிலும் மேற்சொன்ன (2)-ஆம் உட்பிரிவில் (ஐ) எனும் கூறின்படியான
ஆணையில் குறித்துரைக்கப்பட்டுள்ள தேதியன்று அந்தப் பிரிவின் (2)-ஆம்
உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் அதுபோன்று வருங்கால வைப்பு நிதியக்
கணக்குகளிலும் வரவிலுள்ள தொகைகள், இப்பல்கலைக்கழகத்திடம்
மாற்றப்படுதல் வேண்டும்; மற்றும் அந்த மேற்சொன்ன வருங்கால வைப்பு நிதியக்
கணக்குகளைப் பொறுத்த கடப்பாடானது, இப்பல்கலைக்கழகத்தில் கடப்பாடாக.
இருத்தல் வேண்டும்.
(2) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் அல்லது நேர்விற்கேற்ப
அரசின் பணிமுதிர்வு ஓய்வூதிய நிதியத்திலோ அல்லது அதைப்போன்ற பிற
நிதியங்கள் எவையேனுமிருப்பின் அவற்றிலோ சேர்ந்துள்ள தொகைகளிலிருந்து,
43-ஆம் பிரிவில் (1), (2) ஆகிய உட்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின்.
சார்பாகப் பணிமுதிர்வு ஓய்வூதிய நிதியத்திலோ அல்லது அதைப்போன்ற பிற
நிதியங்கள் எவையேனுயிருப்பி அவற்றிலோ வரவு வைக்கப்பட்டிருக்கின்ற
தொகைகள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல்
பல்கலைக்கழகத்திடம் வழங்கப்படுதல் வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்ட
தொகைகள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல் பல்க
பல்கலைக்கழகத்தால் அதன் பணியாளர்களின் நலனுக்கென நிறுவப்படக்கூடிய
பணிமுதிர்வு ஓய்வூதிய நிதியத்தி அல்லது அதைப்போன்ற பிற நிதியங்கள்
எவையேனுமிருப்பின் அவற்றின் பகுதியாக அமைதல் வேண்டும்.
45. தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கின அறிவியல்
பல்கலைக்கழகத்திற்கு குறித்தசில பணத்தொகை வழங்கப்படுதல்.- (1) தமிழ்நாடு
வேளாண் பல்கலைக்கழகத்துடன் கலந்தாய்வு செய்து, அரசு குறித்துரைக்கக்கூடிய
தொகையை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் குறிக்கப்பட்ட நாளில்
இருக்கின்றவாறான தனது நிதியங்களிலிருந்து, இப்பல்கலைக்கழகத்திற்கு
வழங்குதல் வேண்டும்.
(2) ௫௬-ஆம் உட்பிரிவின்படி வழங்கப்படத்தக்க தொகையானது, 44-ஆம்
பிரிவின்படி மாற்றப்பட்டுள்ள தொகைக்குக் கூடுதலாக அமைந்ததாக இருத்தல்
வேண்டும்.
அத்தியாயம் X.
இடைப்படுகால வகைமுறைகள்.
46. முதல் துணை வேந்தரின் நியமனம்.- 14-ஆம் பிரிவின் (1)-ஆம்
உட்பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும் குறிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு
திங்களுக்குள்ளாக, அரசினால், அது நிர்ணயிக்கும் சம்பளத்தின்பேரிலும்,
மூன்றாண்டுக்கு மேற்படாததொரு காலஅளவிற்கும் மற்றும் அது பொருத்தமெனக்
கருதும் பிற நிபந்தனைகளின் பேரிலும் முதல் துணை வேந்தர் நியமிக்கப்படுதல்
வேண்டும்:
வரம்புரை: முதல் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள நபர், தமது பதவிக்
காலத்தின்போது அறுபத்தைந்து வயதினை அவர் நிறைவெய்துவாரானால்,
பதவியிலிருந்து ஓய்வு பெறுதல் வேண்டும்.
47. முதல் பதிவாளரின் நியமனம்.- 13-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவில்
என்ன அடங்கியிருந்தபோதிலும், குறிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று
திங்களுக்குள்ளாக, அரசினால், அது நிர்ணயிக்கும் சம்பளத்தின்பேரிலும்,
மூன்றாண்டுக்கு மேற்படாததொரு காலஅளவிற்கும் மற்றும் அது பொருத்தமெனக்
கருதும் பிற நிபந்தனைகளின் பேரிலும் முதல் பதிவாளர் நியமிக்கப்படுதல்
வேண்டும்:
வரம்புரை: முதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ள நபர், தமது
பதவிக்காலத்தின் போது ஐம்பத்தெட்டு வயதினை அவர் நிறைவெய்துவாரானால்,
பதவியிலிருந்து ஓய்வு பெறுதல் வேண்டும்.
48. முதல் துணைவேந்தரின் இடைப்படுகால அதிகாரங்கள்.-- (1)
குறிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு திங்களுக்குள்ளாகவோ அல்லது அரசு
அறிவிக்கையின் மூலம் அனுமதிக்கும் ஓராண்டிற்கு மேற்படாத நீட்டிக்கப்பட்ட
காலஅளவுக்குள்ளாகவோ நிருவாகக் குழுமத்தையும், கல்வி மன்றத்தையும் 17
ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகத்தின் பிற
அதிகாரஅமைப்புகளையும் அமைத்துருவாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது,
முதல் துணை வேந்தரின் கடமையாகும்.
(2) முதல் துணை வேந்தர், அரசுடன் கலந்தாய்வு செய்து,
இப்பல்கலைக்கழகம் செயற்படுவதற்குத் தேவையானவையாயிருக்கும்
விதிகளைச் செய்தல் வேண்டும்.
(3) 0-ஆம் உட்பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட அதிகாரஅமைப்புகள்
அரசு அறிவிக்கையின் மூலம் குறிந்துரைக்கக்கூடிய தேதியிலோ அல்லது
தேதிகளிலோ தங்கள் அதிகாரங்களைச் செலுத்தவும் தங்கள் அலுவல்களை
ஆற்றவும் தொடங்குதல் வேண்டும்.
(4) வேந்தரின் ஒப்புதலளிப்புடன், தேவையானவையாயிருக்கும் நிலைமுறை
விதிகளையும், ஒழுங்குமுறை விதிகளையும் செய்வதும் அவற்றை நிறைவேற்றி
முடிப்பதற்காக அவை குறித்து நடவடிக்கை எடுப்பதற்குத் தகுதிவாய்ந்த அந்தந்த
அதிகாரஅமைப்புகளிடம் அவற்றை அனுப்பி வைப்பதும், முதல் துணை வேந்தரின்
கடமையாகும். அத்தகைய நிலைமுறை விதிகளும் ஒழுங்குமுறை விதிகளும்
உருவாக்கப்பட்டவுடன் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும்.
(5) இந்தச் சட்டத்திலும் நிலைமுறை விதிகள், ஒழுங்குமுறை விதிகள்:
ஆகியவற்றிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும் அதிகாரஅமைப்பொன்று
உரியவாறு அமைத்துருவாக்கப்படுகின்ற காலம் வரையிலும் முதல் துணை வேந்தர்
இந்தச் சட்டம் நிலைமுறை விதிகள், ஒழுங்குமுறை விதிகள் ஆகியவற்றின்கீ
அத்தகைய அதிகாரஅமைப்பிற்குள்ள அதிகாரங்களில் ஏதொன்றையும் செலுத்தி
வருவதற்கும் அலுவல்களில் ஏதொன்றை ஆற்றி வருவதற்குமெனத்
தற்காலிகமாக அலுவலர் எவரையும் நியமிக்கலாம் அல்லது குழு எதனையும்
அமைத்துருவாக்கலாம்.
அத்தியாயம் 30.
பல்வகை.
49. பணித்துறை மேற்பார்வை.- (1) வேந்தர், தாம் பணிக்கக்கூடிய நபராலோ
நபர்களாலோ,-
(a) இப்பல்கலைக்கழகம் அதன் கட்டடங்கள், ஆய்வுக்கூடங்கள்,
நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பணிமனைகள், தளவாடங்கள் ஆகியவற்றை;
(௦) இப்பல்கலைக்கழகத்தால் பேணிவரப்படும் கல்லூரி, கல்வி நிலையம்
அல்லது மாணவர் விடுதி எதையும்;
(6) இப்பல்கலைக்கழகத்தால் கல்வி கற்பிக்கப்படுவதை அல்லது பிற பணி
செய்யப்படுவதை; அல்லது
(0) இப்பல்கலைக்கழகத்தால் வைக்கப்படும் தேர்வு எதுவும் நடத்தப்படுவதை
ஆய்வு செய்யப்படுமாறு செய்விப்பதற்கான உரிமையைப் பெற்றிருப்பார்.
(2) இப்பல்கலைக்கழகத்தின் நிருவாகம் அல்லது நிதி தொடர்பான எதையும்
பொறுத்து, வேந்தர், தாம் பணிக்கக்கூடிய நபராலோ அல்லது நபர்களாலோ,
விசாரணை செய்யப்படுமாறு செய்விப்பதற்கான உரிமையையும் பெற்றிருப்பார்.
(3) வேந்தர், ஒவ்வொரு நேர்விலும், ஆய்வு அல்லது விசாரணை
செய்யப்படுவதைச் செய்விப்பதற்குத் தாம் கருதியுள்ளது குறித்து
இப்பல்கலைக்கழகத்திற்கு அறிவிப்புக் கொடுத்தல் வேண்டும்; மற்றும்
இப்பல்கலைக்கழகம் அத்தகைய ஆய்விலோ விசாரணையிலோ தன் தரப்பை
எடுத்துரைப்பதற்கு உரிமைத் தகுதியுடையதாகும்.
(4) வேந்தர், அத்தகைய ஆய்வில் அல்லது விசாரணையின் முடிவு குறித்து
தம் கருத்துகளை இப்பல்கலைக்கழகத்திற்குத் தெரிவித்தல் வேண்டும்: மற்றும்
அதன் பேரிலோன இப்பல்கலைக்கழகத்தின் கருத்தினை கேட்டறிந்த பின்னர்
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இப்பல்கலைக்கழகத்திற்கு
ஆலாசனை வழங்குவதோடு அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதற்கான
காலவரம்பையும் நிர்ணயிக்கலாம்.
(5) இப்பல்கலைக்கழகம், அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பிற்குள்ளாக,
வேந்தரால் அளிக்கப்பட்ட ஆலோசனையின்பேரில் எடுக்கப்பட்டுள்ள அல்லது
எடுக்கக் கருதப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வேந்தருக்கு அறிக்கை மூலம்
தெரிவித்தல் வேண்டும்.
(6) நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பிற்குள் இப்பல்கலைக்கழகம் நடவடிக்கை
எடுக்கவில்லையென்றாலோ அல்லது இப்பல்கலைக்கழகத்தால் எடுக்கப்பட்ட
நடவடிக்கையானது வேந்தரின் கருத்தின்படி நிறைவளிப்பதாக
இல்லையென்றாலோ, வேந்தர், இப்பல்கலைக்கழகத்தால் அளிக்கப்பட்ட விளக்கம்
அல்லது எடுத்துரைக்கப்பட்ட அதன் தரப்புக் கருத்து எதனையும் பரிசீலனை
செய்ததற்குப் பின்னர், தாம் பொருத்தமெனக் கருதும் பணிப்பானையைப்
பிறப்பிக்கலாம் மற்றும் இப்பல்கலைக்கழகம் அத்தகைய பணிப்பாணைக்கு
இணங்கி நடத்தல் வேண்டும்.
(7) இப்பல்கலைக்கழகம் வேந்தரால் அதன்பொருட்டு நிர்ணயிக்கப்படும் கால
அளவுக்குள்ளாக அத்தகைய பணிப்புரைக்கு இணங்கி நடக்கவில்லையெனில்,
அத்தகைய பணிப்புரைக்கு இணங்கி நடக்கும் பொருட்டு நபர் எவரையுமோ
அல்லது அமைப்பு எதனையுமோ நியமிப்பதற்கான அதிகாரத்தை வேந்தர்
பெற்றிருப்பதோடு, அதற்கான செலவுகளுக்குத் தேவைப்படும் ஆணையை அவர்
பிறப்பித்தலும் வேண்டும்.
50. தகவல் பெறுவதற்கான அதிகாரம்.- இந்தச் சட்டத்திலோ அல்லது
அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதிலுமோ என்ன
அடங்கியிருந்தபோதிலும், அரசு எழுந்து மூலமான ஆணையின் வாயிலாக
இப்பல்கலைக்கழகத்தின் அலுவல்கள் தொடர்பான பொருள் எதையும் குறித்த
தகவல் எதனையும் இப்பல்கலைக்கழகத்திடமிருந்து கேட்டுப் பெறலாம்;
இப்பல்கலைக்கழகமும், அத்தகைய தகவல் தன்னிடம் இருக்குமெனில்,
நியாயமான காலஅளவுக்குள்ளாக அத்தகைய தகவலை அரசுக்கு அளித்தல்
வேண்டும்:
வரம்புரை: மறைபொருளானதென இப்பல்கலைக்கழகம் கருதுகிற
தகவலைப் பொருத்த அளவில், இப்பல்கலைக்கழகம் அதனை வேந்தரின் முன்பும்
இணை வேந்தரின் முன்பும் வைக்கலாம்.
51. ஆண்டு அறிக்கை.- (1) இப்பல்கலைக்கழகத்தின் ஆண்டு அறிக்கை
துணை வேந்தரின் பணிப்புரையின்படி தயாரிக்கப்படுவதோடு, அது பரிசீலனை
செய்யப்பட வேண்டியுள்ள ஆண்டு கூட்டத்திற்குக் குறைந்தது ஒரு திங்களுக்
முன்னர் குழுமத்திடம் பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்.
(2) குழுமம், ஆண்டு அறிக்கையைப் பரிசீலனை செய்த பின்னர் அதன்
படியொன்றை அரசுக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
(3) ஆண்டு அறிக்கையின் படியொன்றைப் அத்தகைய
பெற்றுக்கொண்டவுடன் அரசு, அத்தகைய அறிக்கையின் படியொன்றை அதன்.
மீதான தனது குறிப்புரைகளுடன் சேர்த்துச் சட்டமன்றப் பேரவையின் முன்பு
வைக்கப்படுமாறு செய்வித்தல் வேண்டும்.
52. இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்பு மற்றும் பிற அமைப்புகளின்
அமைத்துருவாக்கம் குறித்து எழும் பூசல்கள்.- நபர் எவரும், இப்பல்கலைக்கழக
அதிகாரஅமைப்பு அல்லது இப்பல்கலைக்கழகத்தின் பிற அமைப்பு ஏதொன்றின்
உறுப்பினரொருவராக உரியவாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரோ அல்லது பெயர்
குறித்து நியமிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்தோ அல்லது அவ்வாறிருப்பதற்கு
உரிமைத்தகுதி பெற்றுள்ளாரா என்பது குறித்தோ கேள்வி எதுவும் எழுமானால்,
அக்கேள்வியானது வேந்தரின் முடிவுக்கு விடப்படுதல் வேண்டும்: அதன்பேரிலான
அவரது முடிவே அறுதியானதாகும்.
53. உறுப்பினர் பதவி வகிக்க முடியாததற்கான தகுதிக்கேடு.- (1) நபர்
எவரேனும், இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளில் ஏதொன்றின்
உறுப்பினராகவும் பெயர்குறித்து நியமிக்கப்படுகிற அல்லது தேர்ந்தெடுக்கப்படுகிற
தேதியில்,-
(a) மனச்சீர்கேடுற்றவராகவோ, செவிட்டு ஊமையராகவோ இருப்பாரானால்;
அல்லது
(௦) நொடிப்பு நிலையராக நீதிமுறையில் தீர்மானிக்கப்படவேன்டிய ஒரு
விண்ணப்பதாரராகவோ அல்லது விடுவிக்கப்படாத நொடிப்பு நிலையராகவோ
இருப்பாரானால்; அல்லது
(௦) ஒழுக்கக்கேட்டை உள்ளடக்கிய குற்றச்செயல் எதற்காகவேனும்
குற்றவழக்கு நீதிமன்றமொன்றினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுத்
தண்டிக்கப்பட்டிருப்பாரானால்,
அவர் அவ்வாறு பெயர்குறித்து நியமிக்கப்படுவதற்கோ
தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ தகுதியுடையவராகமாட்டார்.
(2) நபரொருவர் (1)-ஆம் உட்பிரிவின்படி தகுதிக்கேடுற்றவரா என்பது
குறித்து சிக்கலோ ஐயமோ எழும் நேர்வில், குழுமம் அதனை வேந்தரின் முடிவுக்கு
விடுதல் வேண்டும்: அதன் பேரிலான அவரின் முடிவே அறுதியானதாகும்.
54. தற்செயல் காலியிடங்களை நிரப்புதல்-- இப்பல்கலைக்கழக
அதிகாரஅமைப்பு எதனின் அல்லது பிற அமைப்பு எதனின் (பதவிவழி
உறுப்பினர்களல்லாத பிற) உறப்பினர்களுக்கிடையே எழும் தற்செயல்
காலியிடங்கள் அனைத்தும், எந்த உறுப்பினருடைய பதவியிடம் காலியாக
ஆகியுள்ளதோ அந்த உறுப்பினரைப் பெயர்குறித்து நியமனம் செய்த அல்லது
தேர்ந்தெடுத்த நபரைக் கொண்டோ அமைப்பினைக் கொண்டோ எவ்வளவு
விரைவில் கூடுமோ அவ்வளவு விரைவில் நிரப்பப்படுதல் வேண்டும்: மற்றும்
தற்செயல் காலியிடமொன்றுக்குப் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட அல்லது
தேர்ந்தெடுக்கப்பட்ட எவருடைய இடத்தை அவர் நிரப்புகிறாரோ அவர் ஓர்
உறுப்பினராக இருந்திருக்கக்கூடிய காலஅளவின் எஞ்சிய பகுதிக்கு அத்தகைய
அதிகாரஅமைப்பு அல்லது பிற அமைப்பின் உறுப்பினராக இருந்துவருதல்
வேண்டும்:
வரம்புரை: இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்பு எதனின் அல்லது பிற
அமைப்பு எதனின் உறுப்பினரின் பதவிக் காலஅளவு முடிவடையும் தேதிக்கு
முந்திய ஆறு திங்களுக்குள்ளாக அத்தகைய காலியிடம் ஏற்படுமாயின் அத்தகைய
காலியிடம் எதுவும் நிரப்பப்படுதலாகாது.
55. பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு எதனின் உறுப்பினர்
பதவியிலிருந் நீக்குதல்.- (1) இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு எதனின்
உறுப்பினர் எவரேனும், குழுமத்தி கருத்தின்படி ஒழுக்கக்கேட்டை
உள்ளடக்கியதாகவுள்ள ஒரு குற்றச் செயலுக்காகக் குற்றவழக்கு
நீதிமன்றமொன்றினால் தண்டனைத் தீர்ப்புத் வழங்கப்பட்டிருப்பாராயின் அல்லது
கடுந்தவறான நடத்தைக் குற்றம் இழைத்த குற்றவாளியாக இருப்பாராயின்
குழுமத்தின் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மையினராலும் கூட்டத்திற்கு
வருகை தந்து வாக்களிக்கும் குழும உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு
பங்குக்குத் குறைந்ததல்லாத பெரும்பான் மையினராலும் நிறைவேற்றப்பட்ட ஒரு
தீர்மானத்தின் மூலமாக, இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு எதனின்
உறுப்பினர்ப் பதவியிலிருந்தும் இதன்பொருட்டுப் பிறப்பிக்கப்பட்ட
எழுத்துருவிலான ஆணை ஒன்றின் மூலம், அத்தகைய நபரை குழுமம் நீக்கம்
செய்யலாம்; மற்றும் இப்பல்கலைக்கழகத்தால் அந்த நபருக்கு அளிக்கப்பட்ட
அல்லது வழங்கப்பட்ட பட்டம் அல்லது பட்டயம் அல்லது பிற கல்விச் சிறப்பு
எதனையும் மேற்சொன்ன அதே காரணத்திற்காக குழுமம் திரும்பப் பெறலாம்.
(2) நபர் எவரேனும் மனச்சீர்கேடுற்றவராகவோ அல்லது ஒரு செவிட்டு
ஊமையாராகவோ ஆகியிருக்கின்றார், அல்லது நொடித்த ஒருவராக
இருப்பாராயின் நீதித்தீர்ப்புப் பெறுவதற்கு விண்ணப்பித்துக் கொண்டிருக்கி றா,
அல்லது நொடித்த ஒருவராக ந்தித்தீர்ப்பு அளிக்கப்பெற்றிருக்கின்றார் என்கின்ற
காரணத்தினாலுங்கூட இதன் பொருட்டுப் பிறப்பிக்கப்பட்ட எழுத்துருவிலான
ஆணையொன்றின் மூலம் குழுமமானது, இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு
எதனின் உறுப்பினர்ப் பதவியிலிருந்தும் அவரை நீக்கஞ்செய்யலாம்.
(3) எடுக்கக் கருதியுள்ள நடவடிக்கைக்கு எதிராகக் காரணம் காட்டுவதற்கு
அவருக்கு நியாயமான வாய்ப்பொன்று கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, இந்தப்
பிரிவின்படி நபரெவருக்கும் எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுதலாகாது.
(4) ௬-ஆம் உட்பிரிவு அல்லது நேர்விற்கேற்ப (2)-ஆம் உட்பிரிவின்படி
பிறப்பிக்கப்பட்டட ஆணை ஒவ்வொன்றின்படி ஒன்றினை, அது அவ்வாறு
பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடியவிரைவில், வகுத்துரைக்கப்பட்ட முறையில்
தொடர்புடைய நபருக்குத் தெரிவிக்கப்படுதல் வேண்டும்.
56. குழுக்களை அமைத்துருவாக்குதலும் அதிகாரங்களை ஒப்படைவு
செய்தலும்.- இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகள் அனைத்தும் குழுக்களை
அமைத்துருவாக்குவதற்கும் அல்லது மாற்றியமைப்பதற்கும் மற்றும் தங்களுடைய
அதிகாரங்களுள் தாங்கள் பொருத்தமெனக் கருதுகிறவற்றை அவற்றிடம்
ஒப்படைவு செய்வதற்கும் அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டும். அத்தகைய
குழுக்கள், வேறுவிதமாக வகைசெய்யப்பட்டுள்ளவாறு தவிர தொடர்புடைய
அதிகாரஅமைப்பில் உறுப்பினர்களையும் அவ்வதிகாரஅமைப்பு ஒவ்வொரு
நேர்விலும் பொருத்தமெனக் கருதக்கூடிய பிற நபர்கள் எவரேனுமிருப்பின்
அவர்களையும் உள்ளடக்கியனவாயிருத்தல் வேண்டும்.
57. செயல்களையும் நடவடிக்கைகளையும் செல்லத்தக்கனவாக்குதல்.-
இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்பு ஏதொன்றின் அல்லது பிற குழுமம்
ஏதொன்றின் செயல் அல்லது நடவடிக்கை எதுவும், இப்பல்கலைக்கழகத்தின்
அதிகாரஅமைப்பு ஏதொன்றிலும் அல்லது பிற அமைப்பு ஏதொன்றிலும் காலியிடம்
ஏதேனும் உள்ளது, அல்லது அதன் உறுப்பினரொருவரை நியமனஞ்செய்ததில்
குறைபாடு அல்லது முறைகேடு ஏதேனும் நேர்ந்துள்ளது, அல்லது நேர்வின்
தகுதிகளைப் பாதிக்காத வகையில், அத்தகைய செயல் அல்லது நடவடிக்கை
எதிலும் குறைபாடு அல்லது முறைகேடு ஏதேனும் நேர்ந்துள்ளது என்கின்ற
காரணத்தைக்கொண்டு மட்டுமோ, அல்லது ஒவ்வொரு மூன்று திங்களுக்கும்
ஒருமுறை குழுமம் கூடவில்லை என்கின்ற காரணத்தைக்கொண்டு மட்டுமோ,
செல்லாததாக ஆக்கப்படுதலாகாது.
58. துணை வேந்தர் மற்றும் பிற அலுவலர்கள் முதலானோர் பொது
ஊழியர்களாக கருதப்படுவர் என்பது.- துணை வேந்தர், பதிவாளர், நிதி அலுவலர்,
முதன்மையர்கள், ஆராய்ச்சி இயக்குநர், விரிவாக்கக் கல்வி இயக்குநர், விலங்கு
நல ஆய்வு மைய இயக்குநர், விலங்கு இனப்பெருக்க ஆய்வு மைய இயக்குநர்
மற்றும் இப்பல்கலைக்கழகத்தின் பிற பணியாளர்கள் ஆகியோர், இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளில் ஏதொன்றையுமொட்டி செயற்படுகின்றபோதோ அல்லது
செயற்படுவதாகப் புலப்படுகிண்றபோதோ, இந்தியத் தண்டனைத் தொகுப்புச்
சட்டத்தின் (மையச் சட்டம் XLV/1860) 21-ஆம் பிரிவின் பொருளின்படி பொது
ஊழியர்களாக இருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.
59. இணைப்புப்பட்டியலை திருத்துவதற்கான அதிகாரம்.- அரசு,
அறிவிக்கையின் மூலம், இணைப்புப்பட்டியலை மாற்றியமைக்கலாம்,
திருத்தியமைக்கலாம் அல்லது அதில் கல்லூரி அல்லது கல்வி நிலையம்
எதனையும் புதிதாகச் சேர்க்கலாம், அல்லது அந்த இணைப்புப்பட்டியலில்
குறித்துரைக்கப்பட்டுள்ள கல்லூரி அல்லது கல்வி நிலையம் எதனையும்
நீக்கிவிடலாம்; மற்றும் அத்தகைய அறிவிக்கை வெளிவிடப்பட்டதன்பேரில், அந்த
இணைப்புப்பட்டியலில் அதன்படியே திருத்தப்பட்டிருப்பதாகக் கருதப்படுதல்
வேண்டும்.
60. 8/1971 எனும் எண் கொண்ட தமிழ்நாடு சட்டம் பொருந்தா என்பது- (1)
குறிக்கப்பட்ட நாளன்றும் அது முதற்கொண்டும், (இதன்பின்பு இந்தப் பிரிவில்
மேற்சொன்ன சட்டம் குறிப்பிடப்படுவதான) 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு
வேளாண் பல்கலைக்கழகச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 81971) வகைமுறைகள்
இந்தச் சட்டம் பொருந்துவதாயுள்ளவையும் இணைப்புப்பட்டியலில் ।-ஆம்
பகுதியில் குறித்துரைக்கப்பட்டுள்ளவையுமான கல்லூரிகளையும் கல்வி
நிலையங்களையும் பொறுத்த அளவில் பொருந்தாமற்போதல் வேண்டும்.
(2) அவ்வாறு பொருந்தாமற் போவதானது,-
(8) மேற்சொன்ன சட்டம் முன்னர் செயற்பாட்டில் இருந்ததையோ:
அல்லது
(௦) மேற்சொன்ன சட்டத்திற்கெதிராகப் புரியப்பட்ட குற்றச்செயல்
எதனையும் பொறுத்த அளவில் ஏற்க நேரிட்ட தண்டனைத் தொகை (penalty)
அல்லது இழப்புத் தண்டனை (forfeiture) அல்லது தண்டனை (punishment)
எதனையுமோ; அல்லது
(௦9) அத்தகைய தண்டனைத் தொகை, தண்ட இழப்பு, தண்டனை
தொடர்பான புலணாய்வு, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி (பரிகாரம்) எதையும்
பாதித்தலாகாது; மற்றும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படாதது போன்றே அத்தகைய
புலனாய்வு, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி (பரிகாரம்) எதுவும்
தொடுக்கப்படலாம், தொடர்ந்து நடத்தப்படலாம் அல்லது நிறைவேற்றப்படலாம்;
மற்றும் அத்தகைய தண்டனைத் தொகை, இழப்புத் தண்டனை அல்லது
தண்டனை எதுவும் விதிக்கப்படலாம்.
(3) ௫-ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், மேற்சொன்ன
சட்டத்தின் கீழ் செய்யப்பட்டவையும் குறிக்கப்பட்ட நாளில் செயல்வடிவம்
பெற்றுள்ளவையுமான நிலைமுறை விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள்
அனைத்தும், இந்தச் சட்டத்தின்கீழ் செய்யப்படும் நிலைமுறை விதிகளாலும்
ஒழுங்குமுறை விதிகளாலும் அவை அறவு செய்யப்படுகின்ற வரையிலும் இந்தச்
சட்டத்தின் வகைமுறைகளுடன் அவை எந்த அளவுக்கு ஒவ்வாதனவாக
இல்லாதிருக்கின்றனவோ அந்த அளவுக்கு, தொடர்ந்து செயல்வடிவம் பெற்று
வருதல் வேண்டும்.
61. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.- (1) குறிக்கப்பட்ட நாளுக்கு
அல்லது நேர்விற்கேற்ப அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்குப் பின்பு
இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு எதையேனும் முதன்முதலில்
அமைத்துருவாக்குதல் குறித்தோ அல்லது மாற்றி அமைத்துருவாக்குதல்
குறித்தோ, அல்லது மற்றப்படி இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச்
செயற்படுத்துதல் குறித்தோ இடர்ப்பாடு ஏதேனும் எழுமாயின், அரசு,
அறிவிக்கையின் மூலமாக, அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்காகத்
தேவையானகதென்றோ உகந்ததென்றோ தனக்குத் தோன்றக்கூடிய
வகைமுறையை இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு ஒவ்வாததாக இல்லாத
வகையில் செய்யலாம்:
வரம்புரை: அத்தகைய அறிவிக்கை எதுவும் குறிக்கப்பட்ட நாளிலிருந்து
ஐந்தாண்டு முடிவடைவதற்குப் பின்பு பிறப்பிக்கப்படுதலாகாது.
(2) (0-ஆம் உட்பிரிவின்படியோ, இந்தச் சட்டத்தின் பிற வகைமுறைகள்
எவற்றின்படியுமோ பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும் அது
பிறப்பிக்கப்பட்ட பின்பு எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக,
சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்: மற்றும் அது அவ்வாறு
வைக்கப்படும் கூட்டத்தொடர் அல்லது அடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு
முன்பு, அத்தகைய அறிவிக்கை எதையேனும் சட்டமன்றப் பேரவையானது
மாற்றியமைக்குமாயின் அல்லது அந்த அறிவிக்கை பிறப்பிக்கப்படுதலாகாது என்று
சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமாயின், அந்த அறவிக்கையானது அதன்பின்பு
அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே செயல்வடிவம் பெறுதல்
வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப செயல்வடிவம் பெறாது போதல் வேண்டும்.
எனினு அவ்வாறு மாற்றியமைப்பது அல்லது செயல்வடிவம் பெறாமல் போகச்
செய்வதெதுவும் அந்த அறிவிக்கையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட
ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.
62. நீக்கமும் காப்பும்.- (1) 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ
மற்றும் விலங்கின அறிவியல் பல்கலைக்கழக அவசரச் சட்டமானது, இதன்மூலம்
நீக்கப்படுகிறது.
(2) அவ்வாறு நீக்கப்படுகின்றபோதிலும், மேற்சொன்ன அவசரச்
சட்டத்தின்படி செய்யப்பட்ட செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை
எதுவும் இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாகவோ அல்லது
எடுக்கப்பட்டிருப்பதாகவோ கருதப்படுதல் வேண்டும்.
இணைபப்புப்பட்டியல்
[1(3): 2 (p), 41 (1), 43 (1) மற்றும் (2), 59 ஆகிய பிரிவுகளைக் காணவும்]
பகுதி - |
கல்லூரிகளும் கல்வி நிலையங்களும்.
கல்லூரிகள்:
(1) சென்னையிலுள்ள, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி.
(2) நாமக்கல்லிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும்
ஆராய்ச்சி நிலையம்.
(3) தூத்துக்குடியிலுள்ள, மீன்வளக் கல்லூரி.
கல்வி நிலையங்கள்:
(1) சென்னையிலுள்ள, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில்
அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிரிவுகள் அனைத்தும்.
(2) நாமக்கல்லிலுள்ள, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும்
ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிரிவுகள்:
அனைத்தும்.
(3) தூத்துக்குடியிலுள்ள மீன்வளக் கல்லூரியில் அமைந்துள்ள
ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிரிவுகள் அனைத்தும்.
(4) சென்னை நந்தனத்திலுள்ள கோழிப்பண்ணை ஆராய்ச்சி
நிலையம் மற்றும் அங்குள்ள ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்கப் பிரிவுகள்:
அனைத்தும்.
(5) காட்டுப்பாக்கத்திலுள்ள, பழக்கு விலங்கு ஆராய்ச்சி நிலையம்
மற்றும் அங்குள்ள ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்கப் பிரிவுகள்:
அனைத்தும்.
(6) உதகமண்டலத்தில் சானண்டிநல்லா என்னும் இடத்திலுள்ள, ஆடு
வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் மற்றும் அங்குள்ள ஆராய்ச்சி, கல்வி மற்றும்
விரிவாக்கப் பிரிவுகள் அனைத்தும்.
(7) சேலம் மாவட்டத்தில் பொத்தனேரியிலுள்ள மேச்சேரி ஆடு வளர்ப்பு
ஆராய்ச்சி நிலையம் மற்றும் அங்குள்ள ஆராய்ச்சி, கல்வி மற்றும்
விரிவாக்கப் பிரிவுகள் அனைத்தும்.
(8) திருத்சிராப்பள்ளியிலுள்ள, வாத்து ஆராய்ச்சி மற்றும் வளர்ப்பு
மையம்.
(9) அருப்புக்கோட்டையிலுள்ள ஆடு ஆராய்ச்சி மற்றும் வளர்ப்பு
மையம்.
(10) தருமபுரி, ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோயில் ஆகிய
இடங்கிளிலுள்ள பழக்கு விலங்கு ஆராய்ச்சி மற்றும் வளர்ப்பு மையங்கள்.
(11) வேலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர்
மதுரை, இராசபாளையம் ஆகிய இடங்களிலுள்ள கோழிப் பண்ணை
ஆராய்ச்சி மற்றும் வளர்ப்பு மையங்கள்.
(12) புதுக்கோட்டை, ஒசூர் ஆகிய இடங்கிளிலுள்ள, உழவர் பயிற்சி
மையங்கள்.
(13) ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலுள்ள, கருச்சிதைவுக்
கட்டுப்பாட்டு மையங்கள்.
(14) கோயம்புத்தூரிலுள்ள வெள்ளாட்டுக் ௧௬ மாற்றுத் திட்ட
நிலையங்கள்.
(15) கால்நடை மருத்துவ மற்றும் மீன்வளர்ப்புப் புலங்களின் ஆராய்ச்சி
மற்றும் கல்வி தொடர்பான வளர்ச்சித் திட்டங்கள்.
(16) கோயம்புத்தூரிலுள்ள, (விலங்கின அறிவியல்கள்) ஆராய்ச்சி
இயக்ககம்.
பகுதி -॥
கல்வி நிலையங்கள்.
(1) ஒசூரிலுள்ள மாவட்ட பழக்கு விலங்குப் பண்ணை உழவர் பயிற்சி
மையம் அமைப்பதற்காக 3௦ ஏக்கர் நிலம்.
(2) ஈச்சங்கோட்டை என்னும் இடத்திலுள்ள அயல் திணை கால்நடை
வளர்ப்புப் பண்ணை பழக்கு விலங்கு ஆராய்ச்சித் திட்டங்களை
நிறைவேற்றுவதற்காக 800 ஏக்கர் நிலம்.
(3) அபிஷேகப்பட்டி என்னும் இடத்திலுள்ள மாவட்டப் பழக்கு
விலங்குப் பண்ணை உழவர் பயிற்சி மையம் அமைப்பதற்காக 30 ஏக்கர்
நிலம்.
(4) காட்டுப்பாக்கத்திலுள்ள கோழி வளர்ப்புப் பண்ணை.
(5) நாமக்கல்லிலுள்ள கால்நடை மருத்துவமனை.
Rules, notifications and orders under this Act
Listed from India Code. Each opens there.