Tamil Nadu · 1949 · Act 20

The Tamil Nadu Sugar Factories Control Act, 1949

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1949 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சர்க்கரை ஆலைகள்‌ கட்டுப்பாட்டுச்‌ சட்டம்‌ சட்ட எண்‌.271949 பொருளடக்கம்‌ 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌. 3. ஆலோசனைக்‌ குழு அமைத்தல்‌. 4. கரும்பு ஆணையாளர்‌. 5. ஆய்வாளர்களை நியமித்தல்‌. 6. கரும்பு அரைவைக்கான உரிமம்‌. 7. உரிமத்தின்‌ நிபந்தனைகள்‌. 8. ஆலைகளுக்குத்‌ தேவைப்படும்‌ கரும்பின்‌ அளவினை மதிப்பீடு செய்தல்‌. 9. ஒதுக்கப்பட்ட பரப்பிடத்திற்கான விளம்புகை. 10. பயிரிடுபவருடன்‌ கரும்பு விற்பனைக்கான ஒப்பந்தம்‌. 11. ஒதுக்கப்பட்ட பரப்பிடத்தில்‌ குறித்தசில நடவடிக்கைகளின்‌ தடை. 11-A. குறித்தசில பயிரிடுபவரால்‌ கரும்பினை அரவை அல்லது விற்பனை செய்வதற்கான அதிகாரம்‌. 12. விலையை நிர்ணயம்‌ செய்வதற்கு அரசுக்கான அதிகாரம்‌. 13. தண்டத்தொகைகள்‌. 14. தீர்வை விதித்தல்‌. 15. கூட்டு நிறுவனங்களால்‌ செய்யப்படும்‌ குற்றங்கள்‌. 16. இந்தச்‌ சட்டத்தின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பு. 17. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. 18. நீக்கறவு. 1949 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சர்க்கரை ஆலைகள்‌ கட்டுப்பாட்டுச்‌ சட்டம்‌ சட்ட எண்‌.271949 சர்க்கரை ஆலைகளுக்கு உரிமம்‌ வழங்குவதற்கும்‌ அத்தகைய ஆலைகளில்‌ பயன்படுத்தப்படும்‌ கரும்பினை வழங்குதல்‌ மற்றும்‌ விலையை ஒழுங்குப்படுத்துவதற்கும்‌ மற்றும்‌ பிற இடைவிளைவான பொருட்பாடுகளுக்கும்‌ வகைசெய்வதற்கானதொரு சட்டம்‌. சர்க்கரை ஆலைகளுக்கு உரிமம்‌ வழங்குவதற்கும்‌ அத்தகைய ஆலைகளில்‌ பயன்படுத்தப்படும்‌ கரும்பினை வழங்குதல்‌ மற்றும்‌ விலையை ஒழுங்குப்படுத்துவதற்கும்‌ மற்றும்‌ பிற இடைவிளைவான பொருட்பாடுகளுக்கும்‌ வகைசெய்வது, உகந்ததாய்‌ இருப்பதால்‌; இது, பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 1949 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சர்க்கரை ஆலைகள்‌ கட்டுப்பாட்டுச்‌ சட்டம்‌ எனப்‌ வழங்கப்பெறும்‌. (2) இது, தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதையும்‌ அளாவி நிற்கும்‌. (3) இந்தப்‌ பிரிவு, உடனடியாக நடைமுறைக்கு வரும்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ அனைத்து அல்லது எஞ்சியுள்ள வகைமுறைகளானது, அரசு, அவ்வப்போது அறிவிக்கையின்‌ வாயிலாக, குறித்திடலாகும்‌ அத்தகைய தேதி அல்லது தேதிகளில்‌ இருந்து தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதற்கும்‌ அல்லது எந்தவொரு பகுதிக்கும்‌, பொருந்தச்‌ செய்யலாம்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ தறுவாய்‌ அல்லது பொருளில்‌ முரண்பாடு எதுவும்‌ இருந்தாலன்றி, (a) "ஆலோசனைக்‌ குழு" என்பது, 3 ஆம்‌ பிரிவின்படி அமைக்கப்பட்ட குழு எனப்‌ பொருள்படும்‌; (88) "கூட்டுறவு சங்கம்‌" என்பது, 1932 ஆம்‌ ஆண்டு மெட்ராஸ்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ சட்டத்தின்‌ (மெட்ராஸ்‌ சட்டம்‌ ௩17932) பொருளின்படி, பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கமாகும்‌. அதன்‌ உறுப்பினர்களால்‌ வளர்க்கப்பட்ட கரும்புகளை விற்பனை செய்வது அதன்‌ நோக்கங்களில்‌ ஒன்றாக இருக்கும்‌; (b) "அரைவைப்‌ பருவம்‌" என்பது, எந்தவொரு ஆண்டிலும்‌ நவம்பர்‌ 1 ஆம்‌ தேதியன்று தொடங்கி, அடுத்து வரும்‌ ஜீன்‌ 30 ஆம்‌ தேதியன்று முடிவடையும்‌ கால அளவாகும்‌; வரம்புரையாக: அரசு, பொதுவாகவோ அல்லது குறிப்பிட்ட ஆலை எதனையும்‌ பொறுத்து, மேற்சொன்ன ஜீன்‌ 30 ஆம்‌ தேதிக்கு மேற்பட்ட காலத்திற்கு அறிவிக்கையின்‌ வாயிலாக நீட்டிக்கலாம்‌. (௦9) "ஆலை" என்பது, பத்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள்‌: பணிபுரிகின்ற அல்லது முந்தைய பன்னிரெண்டு மாதத்தில்‌ எந்த நாளிலும்‌ பணிபுரிந்த மற்றும்‌ வெற்றிட கொதிகலன்‌ மூலம்‌ சர்க்கரை உற்பத்தியுடன்‌ தொடர்புடைய எந்தவொரு உற்பத்தி செயல்முறையும்‌ மேற்கொள்ளப்படும்‌ அல்லது வழக்கமாக மின்சாரத்தின்‌ உதவியுடன்‌ மேற்கொள்ளப்படும்‌ அதன்‌ பகுதி எதிலும்‌ உள்ள எந்தவொரு பிரிவு உள்ளடங்கலான ஏதேனும்‌ வளாகம்‌ எனப்‌ பொருள்படும்‌; (0) "அரசு" என்பது, மாநில அரசு எனப்‌ பொருள்படும்‌; (dd) "வளர்ப்பவர்‌" என்பது, அவரால்‌ அல்லது அவரது சொந்த பணியாளர்களால்‌ அல்லது கூலிக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களால்‌ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களால்‌ அல்லது அவரது குத்தகைதாரர்களால்‌ கரும்பு சாகுபடி செய்கிற நபர்‌ எனப்‌ பொருள்படும்‌; மற்றும்‌ ஐ) கூறில்‌ வரையறுக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களை உள்ளடக்கும்‌ ஆனால்‌ அதன்‌ உறுப்பினரை உள்ளடக்காது; (6) "ஆய்வாளர்‌" என்பது, 5 ஆம்‌ பிரிவின்படி ஆய்வாளராக அமர்த்தப்படும்‌ ஒரு நபர்‌ எனப்‌ பொருள்படும்‌; (0. "அறிவிக்கை என்பது, புணித ஜாறீம்‌ கோட்டை அரசிதழில்‌ வெளியிடப்படும்‌ ஓர்‌ அறிவிக்கை எனப்‌ பொருள்படும்‌; (ஐ "ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருப்பவர்‌" என்பது, ஆலையின்‌ மேலாண்மைக்கான பொறுப்பைக்‌ கொண்டிருக்கும்‌ மேலாண்மை முகவர்‌ அல்லது பிற பொறுப்புள்ள நபரை உள்ளடக்கும்‌; (99) எந்தவொரு உள்ளூர்‌ பரப்பிடம்‌ தொடர்பாக "நடவுப்‌ பருவம்‌" என்பது, அத்தகைய பரப்பிடம்‌ பொறுத்து அரசால்‌ அவ்வப்போது அறிவிக்கப்படலாகும்‌ அத்தகைய காலஅளவு அல்லது காலஅளவுகள்‌ எனப்‌ பொருள்படும்‌; (h) "வகுத்துரைக்கப்பட்டா என்பது, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்டது எனப்‌ பொருள்படும்‌; () கரும்பு ஆணையாளர்‌" என்பது, 4 ஆம்‌ பிரிவின்படி கரும்பு ஆணையாளராக அமர்த்தப்பட்ட அலுவலர்‌ எனப்‌ பொருள்படும்‌; 3. ஆலோசனைக்‌ குழு அமைத்தல்‌.- இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்கீழ்‌ குழுவுடன்‌ கலந்தாலோசிப்பது கட்டாயமாக உள்ள அனைத்து பொருட்பாடுகள்‌ மீது மற்றும்‌ அரசிடம்‌ அனுப்பப்படும்‌ அத்தகைய பிற பொருட்பாடுகள்‌ மீதும்‌ அரசிற்கு ஆலோசனை வழங்கும்‌ நோக்கத்திற்காக, தொடர்புடைய அனைத்து நலன்களையும்‌ கூடுமானவரையில்‌ பிரதிநிதித்துவம்‌ கொண்டிருக்கும்‌ ஓர்‌ ஆலோசனைக்‌ குழுவை, வகுத்துரைக்கப்படலாகும்‌. அத்தகைய முறையில்‌, அரசு, அறிவிக்கையின்‌ மூலம்‌, அமைத்தல்‌ வேண்டும்‌. 4. கரும்பு ஆணையாளர்‌.- அரசு, அதன்‌ அலுவலர்களில்‌ ஒருவரை பெயர்‌ குறித்து அல்லது அவர்களது நிருவாக கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, அவ்வப்போது எந்த அலுவலகத்திலும்‌ பதவியில்‌ இருக்கும்‌ அலுவலரை, கரும்பு ஆணையாளராக நியமிக்கலாம்‌ மற்றும்‌ அவர்‌, இந்தச்‌ சட்டத்தினால்‌ அல்லது அதன்கீழ்‌ கரும்பு ஆணையருக்கு வழங்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட அதிகாரங்களைச்‌ செயல்படுத்தவும்‌ மற்றும்‌ கடமைகளைப்‌ புரியவும்‌ வேண்டும்‌. 5. ஆய்வாளர்களை நியமித்தல்‌.- (1) அரசு, இந்தச்‌ சட்டத்தின்‌: நோக்கங்களுக்காக அதனால்‌ குறிப்பிடலாகும்‌ அத்தகைய வட்டார வரம்புகளுக்குள்‌, அவர்களின்‌ பெயர்குறித்து அல்லது அவர்களது பதவியின்‌ அடிப்படையில்‌, அது, தேவையெனக்‌ கருதும்‌ எண்ணிக்கையிலான நபர்களை ஆய்வாளர்களாக நியமிக்கலாம்‌. (2) ஆய்வாளர்கள்‌, கரும்பு ஆணையாளருக்கு சார்‌ நிலையராக இருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தினால்‌ அல்லது அதன்கீழ்‌ அவர்களுக்கு வழங்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட அத்தகைய அதிகாரங்களைச்‌ செயல்படுத்தவும்‌ மற்றும்‌ அத்தகைய கடமைகளைப்‌ புரியவும்‌ வேண்டும்‌. 6. கரும்பு அரைவைக்கான உரிமம்‌.- (1) அரசு, அறிவிக்கை வாயிலாக இதன்‌. பொருட்டு குறித்திடும்‌ அத்தகைய தேதியன்று மற்றும்‌ அதன்‌ பிறகு அரசிடமிருந்து அந்த ஆலை தொடர்பாக, கரும்பு அரைவை நோக்கத்திற்காக ஓர்‌ உரிமம்‌ பெறப்பட்டாலன்றி, கரும்பு எதனையும்‌ எந்தவொரு ஆலையிலும்‌ அரைவை செய்தல்‌ ஆகாது. (2) (1) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ உரிமத்திற்கான விண்ணப்பம்‌ ஒவ்வொன்றும்‌. அரசிடம்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்தில்‌ செய்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ ஆயிரம்‌ ரூபாய்க்கு மிகாத அத்தகைய கட்டணத்துடன்‌ சேர்த்து இருத்தல்‌ வேண்டும்‌. (3) (1) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியன்று தொழிற்சாலை இருந்திருந்தால்‌ அல்லது அந்த தேதிக்கு முன்பு அதன்‌ கட்டுமானம்‌ தொடங்கப்பட்டு அல்லது அதற்கான இயந்திரத்தின்‌ அனுப்பாணை செய்யப்பட்டு இருக்குமானால்‌, அரசு, அவ்விண்ணப்பத்திற்கு உரிமம்‌ வழங்குதல்‌ வேண்டும்‌; பிற நேர்வுகளில்‌ அரசு, உரிமத்தை வழங்கலாம்‌ அல்லது எழுத்து மூலமாக தெரிவிக்கப்பட வேண்டிய காரணங்களுக்காக, அதன்‌ வழங்க மறுக்கலாம்‌: வரம்புரையாக: அத்தகைய வழங்க மறுத்தலுக்கு எதிராக விளக்கம்‌ கேட்பதற்கு விண்ணப்பதாரருக்கு ஒரு வாய்ப்பினை வழங்கினாலன்றி மற்றும்‌ ஆலோசனைக்‌ குழு அதன்‌ தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டாலன்றி உரிமம்‌ எதுவும்‌ மறுக்கப்படுதல்‌ ஆகாது. (4) இந்தப்‌ பிரிவின்கீழ்‌ வழங்கப்பட்ட உரிமம்‌, பத்தாண்டு காலஅளவிற்கு செல்லுந்தன்மையுடன்‌ இருத்தல்‌ வேண்டும்‌. ஆனால்‌ (5) ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, அதன்‌ நடப்பிலுள்ள கடைசி ஆண்டில்‌, ஒவ்வொரு சூழ்நிலையிலும்‌, பத்தாண்டு காலஅளவிற்கு, அரசால்‌ அவ்வப்போது புதுப்பிக்கப்படலாம்‌. (5) அரசானது, உரிமம்‌ பெற்றவர்‌ அவரது உரிமத்தின்‌ நிபந்தனைகள்‌ எதனையும்‌ மீறிய அல்லது இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ எதனையும்‌ மீறிய குற்றத்தைச்‌ செய்திருக்கிறார்‌ என்ற காரணத்தின்‌ பேரில்‌, எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டிய காரணத்திற்காக உரிமத்தை புதுபிக்க மறுக்கலாம்‌. வரம்புரையாக: அத்தகைய வழங்க மறுத்தலுக்கு எதிராக விளக்கம்‌ அளிப்பதற்கு உரிமதாரருக்கு, ஒரு வாய்ப்பினை வழங்குதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ ஆலோசனை குழு அதன்‌ தொடர்பாக கலந்தாலோசிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 7. உரிமத்தின்‌ நிபந்தனைகள்‌.- (1) 6 ஆம்‌ பிரிவின்படி வழங்கப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட ஓர்‌ உரிமமானது, அது வழங்கப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட நேரத்திலோ அல்லது அது நடப்பிலுள்ள எந்த நேரத்திலோ பின்வரும்‌ அனைத்து பொருட்பாடுகளில்‌ அல்லது அதில்‌ எவற்றையும்‌ பொறுத்து, ஆலோசனைக்‌ குழுவிடம்‌ கலந்தாலோசித்த பின்பு, அரசு, விதிக்கலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்படுதல்‌ வேண்டும்‌. (ஐ ஒவ்வொரு ஆண்டும்‌ அரைவை பருவத்தின்‌ போது, அரவை செய்திட வேண்டிய கரும்பின்‌ குறைந்த அளவு; (௦) ஆலையில்‌ தயாரிக்கப்பட்ட சர்க்கரையானது விற்பனைக்காக தரம்‌ பிரித்தல்‌, குறியிடுதல்‌, கட்டி வைத்தல்‌ அல்லது சேமித்து வைக்க வேண்டிய முறை; (௦) வகுத்துரைக்கப்படலாகும்‌ எந்தவொரு பிற பொருட்பாடுகளும்‌. (2) 6 ஆம்‌ பிரிவின்படி வழங்கப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட உரிமம்‌ எதனையும்‌ பொறுத்து, அந்த உரிமம்‌ வழங்கப்பட்ட நிபந்தனைகளில்‌ ஏதேனும்‌. மீறல்‌ நடந்துள்ளது என அரசு, மனநிறைவடைந்தால்‌, அது, 13 ஆம்‌ பிரிவின்படி அத்தகைய மீறல்‌ தொடர்பாக ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருப்பவருக்கு விதிக்கப்படும்‌ எந்தவொரு தண்டனைக்கும்‌ பாதகமின்றி, எழுத்து மூலமாக பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்‌ அல்லது இரத்து செய்யலாம்‌. வரம்புரையாக: அத்தகைய தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்‌ அல்லது இரத்து செய்தலுக்கு எதிராக விளக்கம்‌ அளிப்பதற்கு உரிமை பெறுபவருக்கு ஒரு வாய்ப்பினை வழங்குதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ ஆலோசனை குழு அதன்‌ தொடர்பாக கலந்தாலோசிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) 2 ஆம்‌ உட்பிரிவின்படி ஓர்‌ உரிமம்‌ தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு அல்லது இரத்து செய்யப்பட்டிருக்கிறவிடத்து, அத்தகைய உரிமத்தைப்‌ பொறுத்து, அத்தகைய தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்‌ அல்லது இரத்து செய்தலிலிருந்து எழும்‌ இழப்பு அல்லது சேதம்‌ எதனின்‌ காரணத்தின்‌ பேரில்‌ அரசிடமிருந்து எந்தவொரு இழப்பீடு எதுவும்‌ அல்லது அரசுக்கு செலுத்தப்பட்ட கட்டணம்‌ எதவும்‌ திரும்ப பெறுவதற்கு நபர்‌ எவரும்‌ உரிமையற்றவர்‌ ஆவார்‌. 8. ஆலைகளுக்குத்‌ தேவைப்படும்‌ கரும்பின்‌ அளவினை மதிப்பிடு செய்தல்‌.-- ஒவ்வொரு ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருப்பவரும்‌, உடனடியாக தொடர்ந்துவரும்‌ கரும்பு அரைவை பருவத்தின்போது, அந்த ஆலைக்குத்‌ தேவைப்படும்‌ கரும்பு அளவின்‌ மதிப்பீட்டை வகுத்துரைக்கப்பட்ட வடிவம்‌ மற்றும்‌ முறையில்‌ இதன்‌ பொருட்டு, கரும்பு ஆணையரால்‌ குறிப்பிடப்பட்டுள்ள தேதியன்றோ அல்லது அந்தத்‌ தேதிக்கு முன்னரோ, அவரிடம்‌ சமர்ப்பித்தல்‌ வேண்டும்‌. 9. ஒதுக்கப்பட்ட பரப்பிடத்திற்கான விளம்புகை.- (1) கரும்பு ஆணையர்‌, 8 ஆம்‌ பிரிவின்படி அவருக்குச்‌ சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பிடு ஏதேனும்‌ இருந்தால்‌ மற்றும்‌ அறிவிக்கையின்‌ மூலம்‌ அவர்‌ முக்கியமெனக்‌ கருதக்கூடிய பிற சூழ்நிலைகள்‌ எதனையும்‌ கருத்தில்‌ கொண்டு, எந்தவொரு பரப்பிடத்தையும்‌, அத்தகைய ஆலைக்கு ஒதுக்கப்பட்ட பரப்பிடமாக, அறிவிக்கையில்‌ குறித்திடலாகும்‌ அத்தகைய அரைவை பருவம்‌ அல்லது பருவங்களில்‌ விளம்புகை செய்யலாம்‌. (2) கரும்பு ஆணையர்‌, (1) ஆம்‌ உட்பிரிவின்படி வழங்கப்பட்ட அறிவிக்கை எதனையும்‌, எந்த நேரத்திலும்‌ அறிவிக்கை வாயிலாக மாற்றம்‌ அல்லது இரத்து செய்யலாம்‌. வரம்புரையாக: அவ்வாறு செய்வதற்கு முன்பு, ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருப்பவருக்கும்‌ தொடர்புடைய கரும்பு பயிரிடுபவருக்கும்‌, அது தொடர்பாக, அவர்களது விளக்கங்கள்‌ ஏதேனும்‌ இருப்பின்‌ அதனை அளிப்பதற்கு, நியாயமான வாய்ப்பை அவர்‌ வழங்குதல்‌ வேண்டும்‌. (3) (1) ஆம்‌ உட்பிரிவு அல்லது (2) ஆம்‌ உட்பிரிவின்படி, கரும்பு ஆணையாளரின்‌ ஓர்‌ ஆணையினால்‌ இடருற்ற நபர்‌ எவரும்‌, வகுத்துரைக்கப்பட்ட நேரத்திற்குள்‌, அரசிடம்‌ மேல்முறையீடு செய்யலாம்‌ மற்றும்‌ அரசு, அத்தகைய மேல்முறையீட்டின்பேரில்‌ அது, பொருத்தமென கருதலாகும்‌ அத்தகைய ஆணைகளை வழங்கலாம்‌. 140. பயிரிடுபவருடன்‌ கரும்பு விற்பனைக்கான ஒப்பந்தம்‌- (1) (a) ஒதுக்கப்பட்ட பரப்பிடத்தில்‌ உள்ள பயிரிடுபவர்‌ எவரும்‌, ஒவ்வொரு நடவு பருவம்‌ முடிவதற்கு முன்பு, ஒதுக்கப்பட்ட அந்த பரப்பிடத்தில்‌ உள்ள ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டவருக்கு உடனடியாக தொடரும்‌ அரைவை பருவத்தில்‌ அரைவைக்காக, பயிரிடுபவர்‌ குறிப்பிடும்‌ அளவிற்கு, அவர்‌ பயிரிட்ட கரும்பின்‌ அத்தகைய அளவு (அல்லது பயிரிடுபவர்‌ ஒரு கூட்டுறவு சங்கமாக இருப்பின்‌, அதன்‌ அனைத்து உறுப்பினர்களாலும்‌ பயிரிடப்பட்ட கரும்பின்‌ அளவு) விற்பனை செய்ய முன்வரலாம்‌, ஆனால்‌ கரும்பு ஆணையாளர்‌ அல்லது இதன்‌ பொருட்டு அவரால்‌ அதிகாரமளிக்கப்பட்ட ஓர்‌ ஆய்வாளரால்‌ அத்தகைய பருவத்தைப்‌ பொறுத்து, அத்தகைய பயிரிடுபவருக்கு குறிப்பிட்ட அளவு ஏதேனுமிருப்பின்‌, அதனைவிட அதிகமாக இருத்தல்‌ ஆகாது. (௦) முன்வரவானது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய தேதி அன்றோ அல்லது முன்போ, அத்தகைய வடிவத்தில்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (2) அத்தகைய ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருப்பவர்‌, (1) ஆம்‌ உட்பிரிவுக்கு இணங்கி, பயிரிடுபவர்‌ வழங்கும்‌ அனைத்து கரும்புகளையும்‌ வாங்குவதற்காக, அவருடன்‌ ஓர்‌ ஒப்பந்தத்தில்‌ ஈடுபடுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ ஒப்பந்தம்‌ அத்தகைய வடிவத்தில்‌ இருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய தேதியன்றோ அல்லது முன்போ எழுதிக்‌ கொடுக்க வேண்டும்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய வரையறைகளையும்‌ நிபந்தனைகளையும்‌ கொண்டிருக்கும்‌: வரம்புரையாக ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருப்பவர்‌, அத்தகைய காலத்தின்போது ஆலையால்‌ நுகரப்படக்கூடிய அதிகபட்ச அளவிற்கு சமமான அளவிலான கரும்பை வாங்குவதற்காக, ஒதுக்கப்பட்ட பரப்பிடத்தில்‌ பயிரிடுபவருடன்‌ ஏற்கனவே ஒப்பந்தத்தில்‌ ஈடுபட்டுள்ள அந்தக்‌ காலஅளவிற்குள்‌. கரும்பு வழங்கப்படும்போது, அத்தகைய ஓர்‌ ஒப்பந்தத்தில்‌ ஈடுபட மறுத்துவிடலாம்‌. (3) (2) ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளின்படி, ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருப்பவர்‌ ஓர்‌ ஒப்பந்தத்தில்‌ ஈடுபட மறுப்பதற்கு எதிராக, கரும்பு ஆணையாளரிடம்‌ மேல்முறையீடு செய்யப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அத்தகைய மேல்முறையீட்டின்‌ மீது கரும்பு ஆணையாளரால்‌ எடுக்கப்படும்‌ முடிவு இறுதியானதாகும்‌. (4) ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருப்பவர்‌.- (i) (1) ஆம்‌ உட்பிரிவின்படி அவரிடம்‌ கரும்பு விற்பனைக்கு முன்வந்த அனைத்து பயிரிடுபவர்‌ எவரையும்‌; மற்றும்‌ (i) அத்தகைய முன்வருதலை கையாளும்‌ முறையைக்‌ காட்டுகின்ற பதிவேட்டினை வகுத்துரைக்கப்படலாகும்‌ வடிவத்திலும்‌ மற்றும்‌ முறையிலும்‌ பராமரித்தல்‌ வேண்டும்‌. 11. ஒதுக்கப்பட்ட பரப்பிடத்தில்‌ குறித்தசில நடவடிக்கைகளின்‌ தடை.- (1) 9 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி செய்யப்பட்ட அறிவிக்கை அல்லது அந்தப்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்படி மாற்றம்‌ செய்யப்பட்டவை நடைமுறையில்‌ இருக்கும்‌ வரையில்‌, அந்தப்‌ பிரிவின்‌ செல்லாற்றலில்‌ எஞ்சியுள்ளவை ஆய்வாளருக்கு எழுத்து மூலமாக பெற்ற முந்தைய அனுமதியை தவிர்த்து இருக்கும்‌ வரை. (@ அத்தகைய அறிவிக்கையில்‌ ஒதுக்கப்பட்ட பரப்பிடம்‌ என அறிவிக்கப்பட்ட பரப்பிடம்‌ எதிலும்‌, பயிரிடப்படும்‌ கரும்பு எதனையும்‌, அதில்‌ குறித்துரைக்கப்பட்ட ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டுள்ளவர்‌ 10 ஆம்‌ பிரிவின்‌. (2) ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளின்படி கரும்பினை வாங்க மறுத்தால்‌ அன்றி, அத்தகைய ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருப்பவரைத்‌ தவிர வேறு யாருக்கும்‌ விற்பனை செய்யக்கூடாது; அத்தகைய மறுத்தல்‌, அந்தப்‌ பிரிவின்‌ (3) ஆம்‌ உட்பிரிவின்படி மேல்முறையீட்டின்பேரில்‌ இரத்து செய்யப்படாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌. (b) ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருப்பவர்‌, 10 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி அவருக்கு விற்பனை செய்ய முன்வந்த எந்தவொரு கரும்பினையும்‌ அந்தப்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளில்‌ குறிப்பிடப்பட்ட நேர்வினைத்‌ தவிர, வாங்குவதற்கு மறுத்தல்‌ கூடாது. (௦) (a) கூறின்படி, ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருப்பவர்‌ அல்லாத பிற நபருக்கு, கரும்பினை விற்பனை செய்ய அனுமதி பெறப்பட்ட இடத்தை தவிர, கரும்பு எதனையும்‌, ஒதுக்கப்பட்ட பரப்பிடத்திற்கு அப்பால்‌, நபர்‌ எவரும்‌ ஏற்றுமதி செய்தல்‌ ஆகாது. (0) ௮9 கூறின்படி, அனுமதிக்கப்பட்ட வேறு சில ஒதுக்கப்பட்ட பரப்பிடத்திலிருந்து கரும்பினை ஏற்றுமதி செய்வது, அத்தகைய பிற பரப்பிடத்திற்கும்‌ பொருந்துகிற இடத்துக்கான நேர்வினைத்‌ தவிர, ஒதுக்கப்பட்ட பரப்பிடத்திற்குள்‌ எந்தவொரு கரும்பினையும்‌ நபர்‌ எவரும்‌ இறக்குமதி செய்தல்‌ ஆகாது. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்ட அனுமதியை வழங்க மறுக்கும்‌ ஆய்வாளரின்‌ ஆணை எதற்கும்‌ எதிராக, கரும்பு ஆணையாளருக்கு வகுத்துரைக்கப்படும்‌ காலத்திற்குள்‌ மேல்முறையீடு செய்தல்‌ வேண்டும்‌; அத்தகைய மேல்முறையீட்டின்‌ மீது அவர்‌ பொருத்தமானது என கருதும்‌ அத்தகைய ஆணையிடலாம்‌. (3) அத்தகைய ஆணையின்‌ சட்டத்தன்மை அல்லது தகுதி டைமை குறித்து தாமாக மனநிறைவடையும்‌ நோக்கத்திற்காக அல்லது அத்தகைய நடவடிக்கையின்‌ ஒழுங்குமுறைக்காக, கரும்பு ஆணையர்‌ பிறப்பித்த எந்தவொரு ஆணை அல்லது அவர்‌ பதிவு செய்த எந்தவொரு நடவடிக்கையின்‌ பதிவணத்தையும்‌, அரசு, தாமாக முன்வந்து அல்லது விண்ணப்பத்தின்‌ பேரில்‌ கோரலாம்‌ மற்றும்‌ ஆய்வு செய்யலாம்‌, மேலும்‌ அது, பொருத்தமெனக்‌ கருதும்‌ அத்தகைய ஆணையைப்‌ பிறப்பிக்கலாம்‌. 11-&. குறித்தசில பயிரிடுபவரால்‌ கரும்பினை அரவை அல்லது விற்பனை செய்வதற்கான அதிகாரம்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌ ஒதுக்கப்பட்ட பரப்பிடத்தில்‌ 5 ஏக்கருக்கு மிகாத கரும்பு பயிரிடும்‌ நிலம்‌ சொந்தமாக வைத்துள்ள (கூட்டுறவு சங்கம்‌ தவிர) எந்தவொரு பயிரிடுபவருக்கும்‌, அதே ஒதுக்கப்பட்ட பகுதிக்குள்‌ வெல்லம்‌ தயாறிக்கும்‌ நோக்கத்திற்காக, அவர்‌ பயிரிட்ட கரும்பை தானே அரவை செய்வது அல்லது அந்த நோக்கத்திற்காக அவர்‌ பயிரிட்ட கரும்பை விற்பனை செய்வது தடையற்றதாக இருக்கும்‌. 12. விலையை நிர்ணயம்‌ செய்வதற்கு அரசுக்கான அதிகாரம்‌.- (1) அரசு, அரவைப்‌ பருவம்‌ தொடங்குவதற்கு முன்பாக எந்த நேரத்திலும்‌ ஆலோசனை குழுவுடன்‌ கலந்தாலோசித்த பிறகு, அறிக்கையின்‌ வாயிலாக, பொதுவாக அல்லது ஆலை எதனையும்‌ பொறுத்து. ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருப்பவர்‌, பருவத்தின்போது அவரால்‌ வாங்கப்பட்ட கரும்பு எதற்காகவும்‌ கட்டாய செலுத்த வேண்டிய தொகை அல்லது அத்தகைய விலையை கணக்கீடு செய்யும்‌ முறை ஆகிய இரண்டில்‌ ஒன்றை குறிப்பிடலாம்‌. வரம்புரையாக: அரசு, பல்வேறு கரும்பின்‌ வகைக்கான பல்வேறு விலைகளை அல்லது விலைகள்‌ கணக்கீட்டின்‌ பல்வேறு முறைகளை குறிப்பிடலாம்‌. (2) அரசு, எந்த நேரத்திலும்‌ ஆலோசனை குழுவுடன்‌ கலந்தாலோசித்த பிறகு, அறிவிக்கை வாயிலாக, (1) ஆம்‌ உட்பிரிவின்படி குறித்திடும்‌ எந்தவொரு விலை அல்லது கணக்கிடும்‌ முறையை மாற்றலாம்‌. வரம்புரையாக: அத்தகைய அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பு, ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருப்பவரால்‌ வாங்கப்பட்ட கரும்பு எதற்கும்‌, அத்தகைய அறிவிக்கை பொருந்துதல்‌ ஆகாது. (3) அரசு, ஆலோசனை குழுவுடன்‌ கலந்தாலோசித்த பிறகு, அறிவிக்கையின்‌ வாயிலாக, இந்தப்‌ பிரிவின்படி ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருப்பவரால்‌ செலுத்தத்தக்க விலையினை அத்தகைய அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய எண்ணிக்கையில்‌ தவணைகளில்‌, செலுத்த அனுமதிக்கலாம்‌. (4) ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருப்பவர்‌, இந்தப்‌ பிரிவுடன்‌ இணங்கி, அவரால்‌ செலுத்தத்தக்க விலையிலிருந்து, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகையவற்றை தவிர, கழிவுகள்‌ எதனை செய்தல்‌ ஆகாது. 13. தண்டத்தொகைகள்‌.- (1) 6 ஆம்‌ பிரிவின்படி வழங்கப்படும்‌ உரிமம்‌ எதுவுமின்றி, ஆலை எதிலும்‌ கரும்பு அரவை செய்யப்படுமாயின்‌ அல்லது அந்தப்‌ பிரிவின்படி ஆலை எதற்கும்‌ உரிமம்‌ வழங்கப்பட்டு, அந்த உரிமத்தின்‌ நிபந்தனைகளில்‌ ஏதேனும்‌ ஒன்று மீறப்பட்டிருப்பின்‌, அவ்வாறு கரும்பு அரவை செய்யப்படும்‌ அல்லது மீறல்‌ தொடரும்‌ ஒவ்வொரு நாளுக்கும்‌ தொடர்புடைய ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருப்பவர்‌, ஐந்தாயிரம்‌ ரூபாய்‌ வரை நீட்டிக்கலாகும்‌ தண்டத்தொகையுடன்‌ தண்டிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) ஆலையின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருப்பவர்‌,- (அ) 11 ஆம்‌ பிரிவை மீறி, கரும்பு எதனையும்‌ வாங்குவதற்கு மறுத்தால்‌; அல்லது (ஆ) அவரால்‌ வாங்கப்பட்ட கரும்பு எதற்காகவும்‌ 12 ஆம்‌ பிரிவிற்கு இணங்க, செலுத்தவேண்டிய விலையை செலுத்த மறுத்தால்‌ அல்லது அந்தப்‌ பிரிவை மீறி அத்தகைய விலையிலிருந்து ஏதேனும்‌ கழிவைச்‌ செய்தால்‌, அவர்‌, ஆறு மாதம்‌ வரை நீட்டிக்கலாகும்‌ சிறைத்தண்டனை அல்லது இரண்டாயிரம்‌ ரூபாய்‌ வரை நீட்டிக்கலாகும்‌ தண்டத்தொகை அல்லது இரண்டும்‌ விதித்து தண்டிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) நபரெவரும்‌, 11 ஆம்‌ பிரிவை மீறி கரும்பு எதனையும்‌ இறக்குமதி அல்லது ஏற்றுமதி அல்லது விற்பனை செய்வாராயின்‌ அல்லது 11-& பிரிவை மீறி அவரால்‌ பயிரிடப்பட்ட அல்லது வாங்கப்பட்ட கரும்பு எதனையும்‌ அரவை அல்லது விற்பனை செய்வாராயின்‌, அவர்‌ ஆறு மாதம்‌ வரை நீட்டிக்கலாகும்‌ சிறைத்தண்டனை அல்லது இரண்டாயிரம்‌ ரூபாய்க்கு நீட்டிக்கலாகும்‌ தண்டத்தொகை அல்லது இரண்டும்‌ விதித்து தண்டிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (4) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ எதனையும்‌ மீறுகின்ற நபர்‌ எவருக்கும்‌, (1) முதல்‌ (3) வரையுள்ள உட்பிரிவுகளில்‌ அதற்கான தண்டனை வழங்கப்படவில்லையாயின்‌, இரண்டாயிரம்‌ ரூபாய்‌ வரை நீட்டிக்கலாகும்‌ ப தண்டத்தொகையுடன்‌ தண்டிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 14. தீர்வை விதித்தல்‌.- (1) அரசு, ஆலோசனை குழுவுடன்‌ கலந்தாலோசித்த பிறகு, அறிவிக்கையின்‌ வாயிலாக, 1939 ஆம்‌ ஆண்டு எடை தரநிலைச்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 1௦1939) வரையறை செய்யப்பட்டவாறு, நுகர்வு, பயன்பாடு அல்லது விற்பனைக்காக அத்தகைய அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்பட்ட வட்டாரப்‌ பரப்பிடம்‌ எதற்குள்ளும்‌, கொண்டுவரப்பட்ட கரும்பின்‌ மீது ஒரு மணங்கிற்கு நான்கு அணாவிற்கு மிகாமல்‌ தீர்வை விதிக்கலாம்‌. (2) மேற்சொன்ன மேல்வரைக்கு உட்பட்டு, அரசு, ஆலோசனை குழுவுடன்‌ கலந்தாலோசித்த பிறகு, அறிவிக்கை வாயிலாக, அவ்வப்போது அத்தகைய தீர்வையை விதிப்பதன்‌ வீதத்தை மாற்றலாம்‌. (3) அரசு, அத்தகைய ஆணையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள கரும்பு எதனையும்‌ பொறுத்து, இந்தப்‌ பிரிவின்படி செலுத்திய அல்லது செலுத்தவேண்டிய தீர்வை எதனையும்‌ முழுவதுமாக அல்லது பகுதியாக குறைக்க ஆணையிடலாம்‌. (4) அரசு, ஆலோசனை குழுவுடன்‌ கலந்தாலோசித்த பிறகு, இந்தப்‌ பிரிவின்படி விதிக்கப்பட்ட தீர்வையானது, அதிகாரஅமைப்புகளால்‌ எந்த நபரிடமிருந்து மற்றும்‌ எந்த முறையில்‌ வசூலிக்கப்பட வேண்டும்‌ என்பதைக்‌ குறிப்பிடும்‌ விதிகளைச்‌ செய்யலாம்‌. (5 இந்தப்‌ பிரிவின்படி செலுத்த வேண்டிய எந்த தொகையும்‌, நில வருவாயின்‌ நிலுவைத்‌ தொகைப்‌ போல வசூலிக்கலாம்‌. 15. கூட்டு நிறுவனங்களால்‌ செய்யப்படும்‌ குற்றங்கள்‌.- இந்தச்‌ சட்டத்தின்படி தண்டிக்கப்படக்கூடிய குற்றம்‌ எதனையும்‌ செய்துள்ள நபர்‌ ஒருவர்‌, ஒரு நிறுவனம்‌ அல்லது ஒரு சங்கம்‌ அல்லது நபர்களின்‌ குழுவாக, கூட்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டதாக அல்லது செய்யப்படாவிட்டாலும்‌ இருக்கிறவிடத்து அத்தகைய நிறுவனம்‌, சங்கம்‌ அல்லது குழுவின்‌ விவகாரங்களை நிருவகிக்கும்‌ மேலாளர்‌, செயலாளர்‌, முகவர்‌ அல்லது பிற முதன்மை அலுவலர்‌ அத்தகைய குற்றத்தை செய்ததாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 16. இந்தச்‌ சட்டத்தின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பு.- (1) இந்தச்‌ சட்டம்‌ அல்லது அதன்படிச்‌ செய்யப்பட்ட விதிகளின்படி நல்லெண்ணத்தில்‌ செய்யப்பட்ட அல்லது செய்யக்‌ கருதப்பட்ட எதற்காகவும்‌, அரசுக்கு எதிராகவோ அல்லது எந்தவொரு அதிகார அமைப்பு, அலுவலர்‌ அல்லது நபர்‌ எவருக்கும்‌ எதிராகவோ உரிமைவழக்கு, குற்றவியல்‌ வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவும்‌ தொடரப்படுதல்‌ ஆகாது. (2) இந்தச்‌ சட்டத்தால்‌ அல்லது அதன்படி வழங்கப்பட்ட அதிகாரம்‌ அல்லது விருப்புரிமை எதனையும்‌ செயல்படுத்துவதில்‌, அரசு அல்லது கரும்பு ஆணையாளர்‌ அல்லது ஆய்வாளர்‌ எவரின்‌ முடிவானது, எந்தவொரு நீதிமன்றத்திலும்‌ கேள்விக்குள்ளாக்கப்படுவதாக இருக்காது. 17. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- (1) அரசு, இந்தச்‌ சட்டத்தின்‌. நோக்கங்களை செயல்படுத்துவதற்கு விதிகளைச்‌ செய்யலாம்‌. (2) குறிப்பாகவும்‌, முன்சென்ற அதிகாரத்தின்‌ பொதுப்பாங்கிற்கு குந்தகம்‌ இன்றியும்‌, அத்தகைய விதிகளானது- (a) ஆலோசனை குழுவின்‌ அமைப்பு அதன்‌ உறுப்பினர்களின்‌ பதவிக்‌ காலம்‌, அவர்களிடையே எழும்‌ தற்செயல்‌ காலியிடங்களை நிரப்பப்படும்‌ முறை மற்றும்‌ அதன்‌ அலுவல்களை நடத்துவதற்கான நடைமுறை; (௦) 6 ஆம்‌ பிரிவின்படி ஓர்‌ உரிமத்தை வழங்க அல்லது புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தின்‌ படிவம்‌ மற்றும்‌ அத்தகைய விண்ணப்பம்‌ ஒவ்வொன்றினுடனும்‌ இணைக்கப்பட வேண்டிய கட்டணம்‌; (6) 9 (3) ஆம்‌ பிரிவு அல்லது 11 (2) ஆம்‌ பிரிவின்படி மேல்முறையீடு முன்னிடப்படக்கூடிய காலம்‌; (0) கரும்பை சரியாக எடைபோடுதல்‌, எடைபோடுவதற்கான வசதிகள்‌ மற்றும்‌ எடைபோடுவதை மற்றும்‌ எடைபோடும்‌ நேரங்களைச்‌ சரிபார்ப்பதற்காக வகைசெய்தல்‌; (6) கரும்பிலிருந்து சர்க்கரையை எடுக்குக்கூடிய சதவீதத்தை தீர்மானிக்கும்‌ முறை; (00 வைத்திருக்க வேண்டிய பதிவேடுகள்‌ மற்றும்‌ விவர உரையைச்‌ செய்ய வேண்டிய வடிவம்‌ மற்றும்‌ 14 ஆம்‌ பிரிவின்படி தீர்வை செலுத்துவதற்கு கடமைப்பட்டுள்ள நபர்களால்‌ அளிக்கப்பட வேண்டிய தகவல்‌; (ஐ கரும்பினை சேமித்து வைக்க அல்லது எடுத்து செல்வதற்கு பயன்படுத்தப்படும்‌ அல்லது பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படுகிற வாகனம்‌ அல்லது எந்தவொரு இடத்தையும்‌ ஆய்வு செய்தல்‌ அல்லது தேடுதல்‌; 0 இந்தச்‌ சட்டத்தால்‌ வகுத்துரைக்கப்படும்‌ வெளிப்படையாக வேண்டப்படும்‌ அல்லது அனுமதிக்கப்படும்‌ எந்தவொரு பிற பொருட்பாடுகளும்‌. (3) (1) அல்லது (2) ஆம்‌ உட்பிரிவுகளின்படி எந்தவொரு விதியையும்‌ செய்கையில்‌ அரசு, அதற்கான மீறல்களுக்கு, இரண்டாயிரம்‌ ரூபாய்‌ வரை நீட்டிக்கலாகும்‌ தண்டத்தொகை விதித்து த்‌ தண்டிக்கப்பட வகைசெய்யலாம்‌. 18. நீக்கறவு.- 1934 ஆம்‌ ஆண்டு கரும்புச்‌ சட்டம்‌ (மையச்‌ சட்டம்‌ XV/1934), தமிழ்நாடு மாநிலத்திற்கு எதுவரை பொருந்துமோ அதுவரை ஈங்கிதனால்‌ நீக்கறவு செய்யப்படுகிறது.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts