Tamil Nadu · 1992 · Act 40
The Tamil Nadu State Council for Higher Education Act, 1992
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
1992ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில
உயர் கல்வி மன்றச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 401992)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
The Tamil Nadu State Council for
Higher Education Act, 1992
(Tamil Nadu Act No.40 of 1992)
(as 231 October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
சென்னை
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
i
1992ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில உயர் கல்வி
பிரிவு
o
A
0
N
மன்றச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 40/1992)
பொருளடக்கம்
குறுந்தலைப்பு, பரப்பெல்லை, பொருந்துகை
மற்றும் தொடக்கம்.
பொருள்வரையறைகள்.
உயர்கல்விக்கான மன்றத்தை நிறுவுதல்.
மன்றம், எவர்எவரைக் கொண்டிருக்கும்.
மன்றத்தின் உறுப்பினராக இருப்பதற்குத்
தகுதிக்கேடு.
துணைத்தலைவர், நியமன உறுப்பினர் மற்றும்.
இசைவு உறுப்பினர்களுக்கான
பணிவரையுரைகளும் நிபந்தனைகளும்.
உறுப்பினர் செயலாளரின் பணி
வரையுரைகளும் நிபந்தனைகளும்.
மன்ற உறுப்பினரைப் பதவியிலிருந்து
நீக்குதல்.
தற்செயல் காலிப் பணியிடத்தை நிரப்புதல்.
மன்றத்தின் அதிகாரங்களும் பணிகளும்.
மன்றத்தின் கூட்டங்கள்.
மன்றத்தின் பணியாளர் தொகுதி.
மன்ற வரவு-செலவுத் திட்டம்.
மன்றத்தின் நிதியங்கள்.
ஆண்டுக் கணக்குகளும் தணிக்கையும்.
ஆண்டறிக்கை.
பணிப்புரை களை வழங்குவதற்கான
அதிகாரம்.
18.
19.
20.
21.
22.
23.
i
குறைபாடுகளால் இம்மன்றத்தின்
நடவடிக்கைகள் செல்லத்தகாதவையாக
ஆக்கப்படுதல் கூடாது.
இம்மன்றத்தின் உறுப்பினர்களும்.
பணியாளர்களும் பொது ஊழியர்களாக.
இருப்பர்.
நல்லெண்ணத்துடன் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
ஒழுங்குவிதிகளைச் செய்வதற்கான
அதிகாரம்.
இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
1
1992ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில உயர் கல்வி
மன்றச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 40/1992)
[தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது, 1992ஆம்
ஆண்டு ஜுலை திங்கள் 10ஆம் நாளன்று ஆளுநரின்
ஏற்பிசைவைப் பெற்று பொதுத் தகவலுக்காகத் தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்பட்டது]
தமிழ்நாடு மாநிலத்தில் உயர்கல்விக்கான மாநில மன்றம்
ஒன்றை நிறுவுதலுக்கும், அதன் தொடர்பான மற்றும்
அதன் இடைவிளைவான விபரங்களுக்கும் வகை:
செய்வதற்கான ஒரு சட்டம்.
இந்திய அரசின் 1986ஆம் ஆண்டு தேசியக்
கல்விக் கொள்கையானது, மாநில அளவில்
உயர்கல்விக்குத் திட்டமிடுவதையும்,
ஒருங்கிணைப்பதையும் மாநில உயர்கல்வி மன்றங்களின்
மூலம் செய்தல் வேண்டும் என்கிற பரிந்துரையைக்
கொண்டுள்ளதாலும்;
மேற்சொன்ன தேசியக் கொள்கைக்கு இணங்க
உயர் கல்விக்கான மாநில மன்றங்களை அமைப்பது
குறித்தப் பறிந்துரைகளைச் செய்வதற்காகக் குழு
ஒன்றைப் பல்கலைக்கழக மானிய ஆணையமானது
அமைத்துருவாக்கியிருப்பதாலும்;
மேற்சொன்ன குழுவானது, மாநில
அளவில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்கும்
ஒருங்கிணைப்பதற்கும் மாநில அளவிலான திட்டங்களைப்
பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் திட்டங்களுடன்
ஒருங்கிணைப்பதற்கும் பயன் தரக்கூடிய அமைப்பு
ஒன்றை ஏற்படுத்துவது இன்றியமையாததொரு
தேவையாக இருக்கிறதென்று மேற்சொன்ன குழு
பரிந்துரை செய்துள்ளதாலும்;
மேற்சொன்ன குழுவினால் பரிந்துரைக்கப்படும்
உயர் கல்விக்கான மாநில மன்றங்களை அமைப்பதற்கான
2
வழிகாட்டு நெறிமுறைகளைப் பல்கலைக்கழக மானிய
ஆணையமானது வகுத்துள்ளதாலும்;
அதற்கிணங்க மாநில அரசு, மைய அரசின் தேசியக்
கல்விக் கொள்கையிலும், பல்கலைக்கழக மானிய
ஆணையத்தாலும். பரிந்துரைக்கப்பட்டவாறு,
உயர்கல்விக்கான மாநில மன்றம் ஒன்றை நிறுவுவது என
முடிவு செய்துள்ளதாலும்;
இந்தியக் குடியரசின் நாற்பத்து மூன்றாம் ஆண்டில்
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் இயற்றப்பட்ட
சட்டம் பின்வருமாறு:-
1. குறுந்தலைப்பு, பரப்பெல்லை, பொருந்துகை
மற்றும் தொடக்கம்.- (1) இந்தச் சட்டம், 1992ஆம் ஆண்டு
தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றச் சட்டம் என
வழங்கப்படும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் பரவி
நிற்கும்.
1[(3) இது, 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்
தொழில்நுட்பக் கல்வி மன்றச் சட்டத்தில் பொருள்
வரையறை செய்யப்பட்டுள்ளவாறான தொழில்நுட்பப்
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி தவிர, அனைத்துப்
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி
நிறுவனங்களுக்குப் பொருந்தும்];
(4) இது, அரசு அறிவிக்கையின் மூலமாக
குறிப்பிடும் நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. பொருள்வரையறைகள்.- இந்தச் சட்டத்தில்,
தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி,-
1. 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக் கல்வி மன்றச்
சட்டத்தின் (சட்டளஎண் 4/2010), 2௧ஆம் பிரிவினால் மாற்றாக
அமைக்கப்பட்டது.
3
(a) "கல்லூரி என்பது, ஏதேனும் பல்கலைக்
கழகத்தால் பேணி வரப்படுகிற அல்லது அதனால் ஒப்புதல்
அளிக்கப்பட்டுள்ள அல்லது அதனோடு இணைக்கப்
பெற்றுள்ள மற்றும் அத்தகைய பல்கலைக்கழகத்தின்
தேர்விற்கு அனுமதிக்கப்படுவதற்கான, குறித்த காலப்
படிப்புப் பிரிவுகளை அளிக்கின்றதுமான கல்லூரி எதுவும்
எனப் பொருள்படுவதோடு, தன்னாட்சிக் கல்லூரியையும்
உள்ளடக்கும்;
(௦) மன்றம்" என்பது, பிரிவு 3இன்படி நிறுவப்பட்ட
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் எனப் பொருள்படும்;
(2) "பட்டம் என்பது, கலையியல், அறிவியல்,
வணிகவியல், போதனையியல், '[கீழ்த்திசை மொழிகள்],
சட்டவியல் எதிலும் பெறும் ஒரு பட்டம், அல்லது
பல்கலைக்கழகம் எதனாலும் ஏற்பளிக்கப்பட்ட பிற பட்டம்
எனப் பொருள்படுவதோடு, முதுநிலைப் பட்டத்தினையும்
உள்ளடக்கும்;
(0) "பட்டயம்" என்பது, ஏதேனும்
பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிற பட்டயம் எனப்
பொருள்படும் ஆனால், அது சான்றிதழ் ஒன்றை
உள்ளடக்காது;
(e) "அரசு" என்பது, மாநில அரசு எனப்
பொருள்படும்;
(0. உயர்கல்வி என்பது, அது தொழிற்
கல்வியாயினும் அல்லது வேறு கல்வியாயினும் (2010ஆம்
ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக் கல்வி மன்றச்
சட்டத்தில் பொருள் வரையறை செய்யப்பட்டவாறான
தொழில்நுட்பக் கல்வி அல்லாத பிற)] ஒரு
1. 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக் கல்வி மன்றச்
சட்டத்தின் (சட்டளஎண் 4/2010), 2௧ஆம் பிரிவினால் மாற்றாக
அமைக்கப்பட்டது.
4
பல்கலைக்கழகம் எதிலிருந்தும் பட்டம் அல்லது பட்டயம்
ஏதேனும் ஒன்றைப் பெறுவதற்கு வழிகோலுகின்ற கல்வி
எனப் பொருள்படும்;
(@ "உயர் கல்வி நிறுவனம்" என்பது,
உயர்கல்வியில் குறித்த காலப் படிப்புப் பிரிவு எதையேனும்
நடத்தி வருகின்றதும், இம்மன்றத்துடன் கலந்தாலோசனை
செய்து ஓர் உயர்கல்வி நிறுவனம் என அரசினால்
ஏற்பளிக்கப்பட்ட ஒரு கல்வி நிறுவனம் எனப்
பொருள்படும்;
(h) "உறுப்பினர்" என்பது, இம்மன்றத்தின் ஓர்
உறுப்பினர் எனப் பொருள்படுவதோடு, அது தலைவரையும்,
துணைத்தலைவரையும், உறுப்பினர் செயலாளரையும் ,
இசைந்து சேர்த்துக் கொள்ளப்பட்ட உறுப்பினரையும்
உள்ளடக்கும்;
() "ஒழுங்கு விதிகள்" என்பது, இந்தச்
சட்டத்தின்படி இம்மன்றத்தால் செய்யப்பட்ட ஒழுங்கு
விதிகள் எனப் பொருள்படும்;
() "பல்கலைக்கழகம்" என்பது, சென்னைப்
பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், '[***], பாரதியார்
பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழ்
பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர்
பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம்,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அல்லது
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம்
எதன்படியேனும் தமிழ்நாடு மாநிலத்தில் நிறுவப்
படக்கூடியதும், 1956ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணிய
ஆணையச் சட்டம் (மையச் சட்டம் 31956)
1. 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக் கல்வி மன்றச்
சட்டத்தின். (சட்டஎண்: 4/2010), 28ஆம் பிரிவினால்
விட்டுவிடப்பட்டது.
5
பொருந்தக்கூடியதுமான '[ஆனால், 2010ஆம் ஆண்டு
தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக் கல்வி மன்றச்
சட்டத்தில் பொருள் வரையறை செய்யப்பட்டுள்ளவாறான
தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றை உள்ளடக்காத]
பிற பல்கலைக்கழகம் எதுவும் எனப் பொருள்படும்;
09 "பல்கலைக்கழக மானிய ஆணையம்" என்பது,
1956ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானிய ஆணையச்
சட்டத்தின் (மையச் சட்டம் 374956) பிரிவு 4இன்படி
நிறுவப்பட்ட பல்கலைக்கழக மானிய ஆணையம் எனப்
பொருள்படும்.
3. உயர்கல்விக்கான மன்றத்தை நிறுவுதல்.-
1) "தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்" என்ற
பெயரில் மன்றம் ஒன்று நிறுவப்படுதல் வேண்டும்.
(2) இம்மன்றமானது, தொடர்நிலை வழியுழிமை
பெற்றதாகவும் தனி இலச்சினை ஒன்று உடையதாகவும்
உள்ள ஒரு கூட்டமைப்பாக இருத்தல் வேண்டும்
என்பதோடு, மேற்சொன்ன பெயரில் வழக்கிடுதலும்,
வழக்கிடப்படுதலும் வேண்டும்.
(3) இம்மன்றத்தின் தலைமையகம், சென்னையில்
அமைந்திருத்தல் வேண்டும்.
4. மன்றம், எவர்எவரைக் கொண்டிருக்கும்.-
இம்மன்றமானது, பின்வரும் உறுப்பினர்களைக்
கொண்டதாக இருத்தல் வேண்டும், அதாவது:-
(ஐ கல்வித் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள
அமைச்சர், இம்மன்றத்தின் பதவிவழித் தலைவராக
இருப்பார்;
(௦) துணைத்தலைவர், கல்வி புலத்தில்
அனுபவம்பெற்ற நபர்களிடையேயிருந்து அரசால்
அமர்த்தப்படுவார்;
1. 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக் கல்வி மன்றச்
சட்டத்தின் (சட்டஎண் 4/2010), 2௧ஆம் பிரிவினால் சேர்க்கப்பட்டது.
6
1௬௦) ஆளுநரின் செயலாளர், பதவிவழி]
(c) கல்வித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள
அரசுச் செயலாளர், பதவிவழி;
(ம நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள
அரசுச் செயலாளர் பதவிவழி;
(ஐ) பல்கலைக்கழக மானிய ஆணையத்தின்.
செயலாளர் அல்லது அவரால் பெயர்குறித்து
நியமிக்கப்படுபவர், பதவிவழி;
(H கல்லூரிக் கல்வி இயக்குநர், பதவிவழி:
@ 1
0 புகழ்பெற்ற கல்வியாளர்களுக்கு
இடையேயிருந்து அல்லது கல்வித்துறை நிருவாகிகளுக்கு
இடையேயிருந்து அரசினால் பெயர் குறித்து
நியமிக்கப்படும் உறுப்பினர் ஒருவர்;
0 புகழ்பெற்ற அறிவியலாளர்களுக்கு
இடையேயிருந்து அல்லது பொறியியலாளர்களுக்கு
இடையேயிருந்து அரசினால் பெயர் குறித்து
நியமிக்கப்படும் உறுப்பினர் ஒருவர்;
() உயர்கல்விக்காகத் தொண்டாற்றியுள்ள
புகழ்பெற்ற தொழிலதிபர்களுக்கு இடையேயிருந்து
அரசினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் உறுப்பினர்
ஒருவர்;
09 இம்மாநிலத்திலுள்ள மையப்
பல்கலைக்கழகங்கள் ஏதேனும் இருப்பின் அதன் துணை
வேந்தர்கள் உள்ளடங்கலாக பல்கலைக்கழகங்களின்.
1. சட்டஎண் 34/1999 இன், 2ஆம் பிரிவினால் (17.06.4999 முதல்
செல்திறம் பெறுமாறு) உட்புகுத்தப்பட்டது.
2. 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக் கல்விமன்றச்
சட்டத்தின்(சட்டஎண்4/2010), 2௧ஆம் பிரிவினால் விட்டுவிடப்பட்டது.
7
துணை வேந்தர்களுக்கிடையேயிருந்து அரசினால்
பெயர்குறித்து நியமிக்கப்படும் உறுப்பினர்கள் இருவர்;
[0} இம்மன்றத்தால் இசைந்து சேர்த்துக்
கொள்ளப்படும், மூவருக்கு மேற்படாத, புகழ் பெற்ற
கல்வியாளர்கள்; மற்றும்
(m) அரசினால் நியமிக்கப்படும். முழுநேர
உறுப்பினர்- செயலாளர் ஒருவர்.
5. மன்றத்தின் உறுப்பினராக இருப்பதற்குத்
தகுதிக்கேடு.-
நபரொருவர்,-
(ஐ மனச்சீர்கேடுற்றவராக. இருப்பார்
என்றால்;
(b) நொடித்த நிலையராக நீதிமுறையில்
தீர்மானிக்கப்படுவதற்கான ஒரு விண்ணப்பதாரராகவோ
அல்லது விடுவிக்கப்படாத நொடித்த நிலையராகவோ
இருப்பார் என்றால்;
(9) எந்தச் சட்டத்தின்படியேனும்
சிறைத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்படத்தக்கதான
ஒழுக்கக்கேட்டை உள்ளடக்கிய குற்றச்செயல்
எதற்காகவேனும். அவருக்குத் தண்டனை
விதிக்கப்பட்டிருந்து, அத்தகைய தண்டனை
நீக்கப்படாமலும் மற்றும் அந்தத் தண்டனை முடிவடைந்த
தேதியிலிருந்து ஐந்தாண்டுக் காலஅளவு
முடிவடையாமலும் இருக்கும் என்றால்;
(0) இம்மன்றத்தின் ஊதியம்பெறும்.
அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ இருப்பார்
என்றால்; அல்லது
(e) அரசினால் வகுத்துரைக்கப்படும்
தகுதிக்கேட்டிற்கு உள்ளானவராக இருப்பார் என்றால்,
இம்மன்றத்தின் துணைத் தலைவராக
அமர்த்தப்படுவதற்கோ உறுப்பினராகப் பெயர்குறித்து
நியமிக்கப்படுவதற்கோ, இசைந்து சேர்த்துக்
கொள்ளப்படுவதற்கோ அல்லது துணைத் தலைவராக
அல்லது பெயர்குறித்து நியமிக்கப்பட்டவராக அல்லது
இசைந்து சேர்த்துக் கொள்ளப்பட்டவராக இருப்பதற்கோ
தகுதிக் கேடுற்றவர் ஆவார்.
6. துணைத் தலைவர், நியமன உறுப்பினர்கள்
மற்றும் இசைவு உறுப்பினர்களுக்கான
பணிவரையுரைகளும் நிபந்தனைகளும்.-
(1) துணைத்தலைவர், பெயர்குறித்து நியமிக்கப்பட்ட
ஒவ்வோர் உறுப்பினரும் மற்றும் இசைந்து
சேர்த்துக்கொள்ளப்பட்ட ஒவ்வோர் உறுப்பினரும்,
மூன்றாண்டுக் காலத்திற்குப் பதவி வகித்தல் வேண்டும்;
மேலும் மூன்றாண்டுக் காலத்திற்கு மறுநியமனம்
செய்யப்படுவதற்கு அல்லது மீண்டும் பெயர்குறித்து
நியமனம் செய்யப்படுவதற்கு அல்லது இசைந்து சேர்த்துக்
கொள்ளப்படுவதற்குத் தகுதியுடையவர் ஆவார்:
வரம்புரையாக: இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக,
தற்செயல் காலிப்பணியிடம் ஒன்றில் ஜஓராண்டிற்குக்
குறையாத காலஅளவுக்கு துணைத் தலைவர்
பெயர்குறித்து நியமிக்கப்பட்டவராக அல்லது இசைந்து
சேர்த்துக்கொள்ளப்பட்டவராக பதவி வகித்த உறுப்பினர்
ஒருவர், அப்பதவியின் முழுமையான கால அளவிற்குப்
பதவி வகித்துள்ளவராகக் கருதப்படுதல் வேண்டும்.
(2) துணைத்தலைவர், பெயர் குறித்து
நியமிக்கப்பட்ட அல்லது இசைந்து சேர்த்துக்
கொள்ளப்பட்ட உறுப்பினர் ஒருவர், தண் கைப்பட எழுத்து
மூலமாக அரசுக்கு அல்லது நிகழ்விற்கேற்ப,
மன்றத்திற்குத் தெரிவிப்பதன் மூலமாக தனது
பதவியிலிருந்து விலகலாம்; ஆனால் தனது பதவி விலகல்
9
அரசால் அல்லது நிகழ்விற்கேற்ப, மன்றத்தால்
ஏற்றுக்கொள்ளப்படும் வரையில், அவர் பதவியில்
தொடர்ந்து இருந்துவருதல் வேண்டும்.
(3) இந்தப் பிரிவின் வகைமுறைகளுக்கு
உட்பட்டு, துணைத்தலைவர், பெயர் குறித்து
நியமிக்கப்பட்ட மற்றும் இசைந்து சேர்த்துக்கொள்ளப்பட்ட
உறுப்பினர்களின் பணி வரையுரைகளும் நிபந்தனைகளும்,
வகுத்துரைக்கப்படும் விதத்தில் இருத்தல் வேண்டும்.
(4) துணைத்தலைவர் வகுத்துரைக்கப்படும்
அதிகாரங்களைச் செலுத்துதலும், செயற்பணிகளைப்
புரிதலும் வேண்டும்.
7. உறுப்பினர் செயலாளரின் பணிவரையுரைகளும்.
நிபந்தனைகளும்.- [6] உறுப்பினர்-செயலாளரின்:
பதவிக்கான பணி வரையுரைகளும் நிபந்தனைகளும்,
வகுத்துரைக்கப்படும் விதத்தில் இருத்தல் வேண்டும்.
(2) உறுப்பினர் செயலாளரானவர், இந்தச்
சட்டத்தின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களையும்
விதிக்கப்பட்ட அலுவல்களையும் மற்றும்
வகுத்துரைக்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச்
செலுத்திவருதலும், அலுவல்களைப் புரிந்துவருதலும்
வேண்டும்.
8. மன்ற உறுப்பினரைப் பதவியிலிருந்து
நீக்குதல்-- துணைத்தலைவர் அல்லது பெயர்குறித்து
நியமிக்கப்பட்ட அல்லது இசைந்து சேர்த்துக்கொள்ளப்பட்ட
உறுப்பினர் ஒருவர் தம்மைப் பதவியிலிருந்து நீக்கக்கூடிய
அளவுக்குத் தன்னுடைய பதவிக்குத் தன்னைப்
பொருத்தமற்றவராக வெளிப்படுத்திக் கொள்கின்றார்
என்றோ, தவறான நடத்தை அல்லது அசட்டைக் குற்றம்
எதையேனும் புரிந்த குற்றவாளியாக இருக்கின்றார்
என்றோ, அரசுக்கு எந்தச் சமயத்திலேனும்
தோன்றுமானால், அரசு, நிகழ்விற்கேற்ப துணைத்தலைவர்
10
அல்லது அத்தகைய பெயர்குறித்து நியமிக்கப்பட்ட
அல்லது இசைந்து சேர்த்துக்கொள்ளப்பட்ட
உறுப்பினருக்குக் காரணங்காட்டக் கோருகின்ற
நியாயமான வாய்ப்பு ஒன்றினைக் கொடுத்தப் பின்பு,
அறிவிக்கை மூலமாக, நிகழ்விற்கேற்ப துணைத்தலைவர்
அல்லது அத்தகைய பெயர்குறித்து நியமிக்கப்பட்ட
அல்லது இசைந்து சேர்த்துக்கொள்ளப்பட்ட உறுப்பினரைப்
பதவியிலிருந்து நீக்கலாம்.
9. தற்செயல் காலிப் பணியிடத்தை நிரப்புதல்.-
மரணம், பதவி விலகல், பதவி நீக்கம் என்கிற
காரணத்தாலோ அல்லது மற்றபடியோ துணைத்தலைவர்,
பெயர்குறித்து நியமிக்கப்பட்ட அல்லது இசைந்து
சேர்த்துக்கொள்ளப்பட்ட உறுப்பினரின் பதவியில்
தற்செயல் காலிப் பணியிடமொன்று ஏற்படுமானால்,
அத்தகைய காலிப் பணி இடமானது, கூடியவிரைவில்,
அரசினால் அல்லது நிகழ்விற்கேற்ப மன்றத்தினால்
நிரப்பப்படுதல் வேண்டும்; மற்றும் துணைத்தலைவர்
அல்லது பெயர்குறித்து நியமிக்கப்பட்ட அல்லது இசைந்து
சேர்த்துக்கொள்ளப்பட்ட உறுப்பினர், எவருடைய இடத்தை
அவர் நிரப்புகிறாரோ அவர் எஞ்சிய எவ்வளவு காலத்திற்கு
நிகழ்விற்கேற்ப துணைத்தலைவர் அல்லது பெயர்குறித்து
நியமிக்கப்பட்ட அல்லது இசைந்து சேர்த்துக்கொள்ளப்பட்ட
உறுப்பினராக இருந்திருப்பாரோ அவ்வளவு காலத்திற்கு
மட்டுமே பதவி வகிப்பார்.
10. மன்றத்தின் அதிகாரங்களும் பணிகளும்.-
(1) அவ்வப்போது பல்கலைக்கழக மாணிய
ஆணையத்தால் பிறப்பிக்கப்படும் வழிகாட்டுநெறிகளுக்கு
இணங்க, உயர்கல்விக்கான நிறுவனங்களில் அல்லது
[ஆராய்ச்சி மற்றும் அறிவியல் நிறுவனங்களில்] பணிகளை
1. 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக் கல்வி மன்றச்
சட்டத்தின் (சட்டளஎண் 4/2010), 2௧ஆம் பிரிவினால் மாற்றாக
அமைக்கப்பட்டது.
11
ஒருங்கிணைப்பதும் அவற்றின் தரங்களை முடிவு
செய்வதும், இம்மன்றத்தின் பணிகளாக இருக்கும்.
(2) உட்பிரிவு (1)இன் வகைமுறைகளுக்கு உட்பட்டு,
இம்மன்றமானது'
(ஐ இம்மாநிலத்தின் உயர் கல்விக்கான
ஒட்டுமொத்த முன்னுரிமை அடிப்படையிலான
தேவைகளையும் வாய்ப்புகளையும், பல்கலைக்கழக மாணிய
ஆணையத்தால் பிறப்பிக்கப்படும் வழிக்காட்டு
நெறிகளையும் கருத்தில் கொண்டு, இம்மாநிலத்தில் உயர்
கல்வித்துறையில் ஒருங்கிணைந்த செயல் திட்டங்களைத்
தயாரித்தலும் அவற்றை நிறைவேற்றுவதில் உதவுதலும்
வேண்டும்;
0) கல்வித் தரங்களை முடிவு
செய்வதையும் பேணிவருவதையும் பொறுத்த அளவில்,
பல்கலைக்கழக மானிய ஆணையத்திற்கு உதவுதலும்
மற்றும் தேவைப்படும் போது தீர்வு நடவடிக்கை
எடுக்கப்படுவதற்கு யோசனைக் கூறுதலும் வேண்டும்;
(c) இம்மாநிலத்தில் உயர் கல்வி
வளர்ச்சிக்கான வாய்ப்புத் திட்டங்களை உருவாக்குதல்
வேண்டும்;
(d) இம்மாநிலத்திலுள்ள பல்கலைக்
கழகங்களின், கல்லூரிகளின், உயர்கல்வி
நிறுவனங்களின் வளர்ச்சி செயல் திட்டங்களை தன்.
கருத்துரைகளுடனும், பரிந்துரைகளுடனும் சேர்த்துப்
பல்கலைக்கழக மானிய ஆணையத்திற்கு அனுப்பி
வைத்தல் வேண்டும்; மற்றும் அத்தகைய வளர்ச்சி செயல்
திட்டங்களை நிறைவேற்றுவதில்: ஏற்பட்டுள்ள
முன்னேற்றத்தைக் கண்காணித்து வருதல் வேண்டும்;
(6) உயர் கல்வி நிறுவனங்களுக்கிடையே
12
ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் வளர்த்தலும்,
தொழில் பிரிவு மற்றும் தொடர்புடைய பிற
அமைப்பிற்குமிடையே ஒன்றுக்கொன்று இணைந்து
செயல்படுவதற்கான வாய்ப்பினைக் கண்டறிதலும்
வேண்டும்;
(f) அரசினாலும், பல்கலைக்கழக மானிய
ஆணையத்தாலும் பிறப்பிக்கப்படும்
வழிக்காட்டுநெறிகளுக்கு இணங்க உயர்கல்விக்கான
புதிய கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கான
கொள்கை நெறிகளை உருவாக்குதல் வேண்டும்;
(ற) இம்மாநிலத்தில் உயர் கல்விக்கான கூடுதல்
வளவசதிகளைப் பெருக்குவதற்கான வழிமுறைகளுக்கு
யோசனைக் கூறுதல் வேண்டும்;
(h) பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்,
உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின். பாடத்
திட்டங்களைப் புணைமைத்து, நவினப்படுத்தி, கல்விசார்
வளர்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து
வளர்த்துவருதல் வேண்டும்;
(i) பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின்.
செயல் திட்டங்களை வளர்த்தலும், ஒருங்கிணைத்தலும்,
அதனைக் கண்காணித்து வருவதற்குமான அமைப்பு
ஒன்றை ஏற்படுத்துதலும், அது நிறைவேற்றப்படுவதைக்
கண்காணித்து வருதலும் வேண்டும்;
() பல்கலைக்கழகங்களாலும். தன்னாட்சி
பெற்ற கல்லூரிகளாலும் நடத்தப்படும் தேர்வுகளின்
தரங்களை மேம்படுத்து வதற்கான வழிமுறைகளையும்,
நடவடிக்கை களையும் வகுத்தமைத்தலும், தேவையான
சீர்திருத்தங்களுக்கு யோசனைக் கூறுதலும் வேண்டும்;
09 பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும்
உள்ள ஆசிரியர்கள் பயிற்சி பெறுவதற்கு வழிசெய்தலும்,
13
ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் மூலமாக ஆசிரியர்
பயிற்சிக் கல்லூரிகள்: செயல்பட்டுவருவதைக்
கண்காணித்து வருதலும், மற்றும் தரமான பாடப்புத்தகங்கள்,
தனி வரைவு நூல்கள், பார்வைப் புத்தகங்கள் ஆகியவை
வெளியிடப்படுவதை வளர்த்தலும் வேண்டும்;
0) பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிலுள்ள
புலங்களுக்கிடையே பயனுள்ள வகையிலான கல்விப்
பிரிவு ஒத்துழைப்பிற்கும் ஒன்றுக்கொன்று இயைந்த
செயற்பாட்டுக்குமான செயல்திட்டங்களை
உருவாக்குதலும், இந்த மாநிலத்திற்குள்ளேயும்
வெளியேயும் ஆசிரியர்களும் மாணவர்களும் எளிதாக
இடம் மாறுவதற்கு வகைசெய்தலும் வேண்டும்;
(M) பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்,
உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் சேர்த்துக்
கொள்ளப்படுவதை முறைப்படுத்துதல் வேண்டும்;
(n) பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும்,
விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டுக்கள்,
உடற்பயிற்சிக் கல்வி, பண்பாட்டு நடவடிக்கைகள்
ஆகியவற்றை ஊக்குவித்தல் வேண்டும்;
(௦) விரிவாக்க நடவடிக்கைகளை
ஊக்குவித்தலும், பல்கலைக் கழகங்களுக்குத்
தொடர்புடைய சிறப்புத் துறைகளிலுள்ள செயலார்ந்த
ஆலோசனைப் பிரிவுகளின்: மூலமாக பல்கலைக்
கழகங்களும், தொழிற் பிரிவுகளும் தங்களுக்கிடையே
ஒன்றோடொன்று இணைந்து செயல்படுவதையும், வட்டார
வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்துதலும் வேண்டும்;
() கல்லூரிகள் செயல்பட்டு வருவதின் மீது
கண்காணிப்பு அறிக்கை ஒன்றைத் தயாரித்தலும், அந்த
அறிக்கையின் படிநகல் ஒன்றைப் பல்கலைக்கழக மானிய
ஆணையத்திற்கு அனுப்பிவைத்தலும் வேண்டும்;
14
@ பல்கலைக்கழகங்களிலுள்ள தனிச்சிறப்பு
மையங்களை அடையாளம் காணுதலும், முதன்மைப்
பிரிவுகளில் அறிவியல் [ வளர்ச்சிக்கு உள்நாட்டு
அளவிலும் பன்னாட்டு அளவிலும் இணைப்பிற்கு
வகைசெய்தலும் வேண்டும்.
(r) பல்கலைக்ழகங்களில் அறிவியல்
ஆராய்ச்சியை வளர்க்கும் பொருட்டு, உள்நாட்டு
அளவிலும் பண்ணாட்டு அளவிலும் ஆராய்ச்சிக்கான நிதி
அளிப்பை ஒருங்கிணைத்தல் வேண்டும்;
(5) “பல்கலைக்கழக அமைப்பிற்கு உள்ளேயோ
அல்லது வெளியேயோ முதன்மை அறிவுசார் துறைகளில்
சிறப்புமிகு நிறுவனங்களைத் தோற்றுவித்தல் வேண்டும்];
(0 ஒட்டுமொத்தப் பராமரிப்பு மானியத்திற்கான
தக்க வழிகாட்டுநெறிகளை வகுத்தமைப்பதன் மூலமாக,
பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வி
நிறுவனங்களுக்கும் அத்தகைய மானியங்கள் எவ்வளவு
என்பதை முடிவு செய்வதில் மாநில அரசுக்கு யோசனைக்
கூறுதல் வேண்டும்;
(ம அறிவியல் ஆராய்ச்சிக்கான மாநில
மையத்தை அமைத்தலும், பல்கலைக்
கழகங்களுக்கிடையே ஆராய்ச்சி நடவடிக்கைகளை
ஒருங்கிணைத்தலும் வேண்டும்;
ட) இம்மாநிலத்திலும் பல்கலைக்கழகங்களின்
நிலைவிதிகள், அவசரவிதிகள், ஒழுங்குவிதிகள்:
ஆகியவற்றைப் பரிசீலனை செய்து, கல்விசார் பயில்
முயற்சிகளில் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு ஊறின்றி,
1. 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக் கல்வி மன்றச்
சட்டத்தின். (சட்டஎண்: 4/2010), 28ஆம் பிரிவினால்
விட்டுவிடப்பட்டது.
2. 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக் கல்வி மன்றச்
சட்டத்தின் (சட்டளஎண் 4/2010), 2௧ஆம் பிரிவினால் மாற்றாக.
அமைக்கப்பட்டது.
15
நிர்வாகத்தில்: ஒரு சீர்மையைப் பேணுவதற்கான
மாறுதல்களுக்கு யோசனைக் கூறுதல் வேண்டும்;
W) புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவது
தொடர்பான சட்டங்கள் உள்ளடங்கலாக,
பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டங்களுக்கான
மேம்பாடுகள் குறித்து அரசிற்கு யோசனைகள் கூறுதல்
வேண்டும்;
00) தலைசிறந்த [அறிவியலாளர்கள் மற்றும்
கல்வியாளர்கள்] ஆகியோருக்கு அவரவர் துறைகளில்
அவரவர் ஆற்றியுள்ள தொண்டிற்காக, மதிப்புமிக்க
விருதுகளை நிறுவுதல் வேண்டும்;
டு) பல்கலைக்கழகங்களுக்கு அரசிடமிருந்து
பெறும் உதவி மானியங்களை நிருவகித்து வருதலும்,
அவற்றை அளித்து வருதலும் வேண்டும்;
(2) தொழிற்பிரிவுகள், கல்விநிறுவனங்கள்,
உள்நாட்டு மற்றும் பன்னாட்டு அமைப்புகள்
ஆகியவற்றிற்கு ஆலோசனை வழங்குதல் போன்ற
பணிச்சேவைகளிலிருந்து தானாகவே பெருகுகின்ற
நிதிகளின் மூலமாக தொடர் வளர்ச்சிக்கான புதிய
செயல்திட்டங்களை அடையாளம் கண்டு நிருவகித்து
வருதல் வேண்டும்;
(aa) உள்நாட்டு மற்றும் பன்னாட்டு
நிதியளிப்பு நிறுவனங்களிடமிருந்து
பெற்ற ஆராய்ச்சி நிதிகளை
நிருவகித்து வருதலும் அவற்றை
அளித்து வருதலும் வேண்டும்;
1. 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக் கல்வி மன்றச்
சட்டத்தின் (சட்டளஎண் 4/2010), 2௧ஆம் பிரிவினால் மாற்றாக
அமைக்கப்பட்டது.
16
(ஸு
(ac) அரசுக்கோ, பல்கலைக்கழகம் அல்லது
கல்லூரி எதற்குமோ, அல்லது
உயர்கல்வி நிறுவனம் எதற்குமோ,
இம்மன்றத்திடம் அவை குறிப்பிட்டு
அனுப்பக்கூடிய உயர்கல்வி மற்றும்.
ஆராய்ச்சி தொடர்பான பிற
பொருட்பாடுகள் எதன்மீதும்
ஆலோசனைக் கூறுதல் வேண்டும்;
மற்றும்
(80) உயர்கல்வியிலும், அறிவியல்
ஆராய்ச்சியிலும். மேன்மையை
வளர்ப்பதற்காக வகுத்துரைக்கப்
படக்கூடிய தேவையான பிற
அலுவல்களைப் புரிந்து வருதல்
வேண்டும்.
11. மன்றத்தின் கூட்டங்கள்.- இம்மன்றமானது,
தேவையாக இருக்கக்கூடிய அளவிற்கு,
ஒழுங்குவிதிகளில் வகை செய்யப்படக்கூடிய நேரத்திலும்,
இடத்திலும் கூடுதல் வேண்டும் என்பதோடு,
குறிப்பிடப்படக்கூடிய நடைமுறை விதிகளையும் பின்பற்றி
வருதல் வேண்டும்:
வரம்புரையாக: இம்மன்றமானது குறைந்தது மூன்று
மாதங்களுக்கு ஒருமுறையாவது கூடுதல் வேண்டும்.
12. மன்றத்தின். பணியாளர் தொகுதி.-
இம்மன்றமானது தனது அலுவல்களைத் திறம்படப் புரிந்து
வரும் பொருட்டு, தேவையான எண்ணிக்கையில்
1. 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக் கல்வி மன்றச்
சட்டத்தின். (சட்டஎண்: 4/2010), 28ஆம் பிரிவினால்
விட்டுவிடப்பட்டது.
17
பணியாளர்களை நியமித்தல் வேண்டும்; இம்மன்றத்தின்:
பணியாளர்களின் பணி பற்றிய வரைக்கட்டுகளும்,
நிபந்தனைகளும், ஒழுங்குவிதிகளில் வகை
செய்யப்படக்கூடிய வகையில் இருத்தல் வேண்டும்.
13. மன்ற வரவு - செலவுத் திட்டம் .-
இம்மன்றமானது மதிப்பிடப்பட்ட வரவு-செலவைக்
காட்டுகின்ற அடுத்த நிதியாண்டைப் பொறுத்த
அளவிலான வரவு-செலவுத் திட்டம் ஒன்றை,
வகுத்துரைக்கப்படும் வடிவத்திலும் நேரத்திலும் தயாரித்தல்
வேண்டுமென்பதோடு, அந்த வரவு-செலவுத் திட்டத்தின்.
படிருகல்)ஒன்றை அரசுக்கு அனுப்பி வைத்தலும்
வேண்டும்.
14. மன்றத்தின் நிதியங்கள்.- (1) இம்மன்றமானது,
தனக்கென சொந்த நிதியத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்;
மற்றும் அவ்வப்போது அரசினால் தனக்கு
வழங்கப்படக்கூடிய தொகைகள் அனைத்தையும் (மைய
அரசு, பல்கலைக்கழக மாணிய ஆணையம், அல்லது பிற
அதிகார அமைப்பு எதுவும் அல்லது நபர் எவரும்
இம்மன்றத்திடம் கொடுக்கக்கூடிய தொகை எதுவும்
உள்ளிட்ட) இம்மன்றத்தின் வரவுகள் அனைத்தும்
அத்தகைய நிதியத்தின் வரவில் சேர்க்கப்படுதல் வேண்டும்.
(2) (@ அரசு, ஒவ்வொரு நிதியாண்டிலும்
ஒட்டுமொத்தத் தொகுதி மானியங்கள், வளர்ச்சி
மானியங்கள், ஈடுசெய் மானியங்கள் ஆகியவற்றையும்,
இந்தச் சட்டத்தின்படி இம்மன்றத்தின் அலுவல்களைப்
புரிந்து வருவதற்காக அரசு தேவையெனக் கருதக்கூடிய
பல்கலைக்கழகங்களுக்காகவே உள்ள பிற
தொகைகளையும் இம்மன்றத்திற்கு வழங்குதல் வேண்டும்.
(b) இம்மன்றம் செயல்படுவதற்குத்
தேவையெனக் கருதக்கூடிய தொகைகளை ஒவ்வொரு
நிதியாண்டிலும் இம்மன்றத்திற்கு அரசு வழங்கலாம்;
18
(3) இந்தச் சட்டத்தின்படியோ அல்லது அதன்
நோக்கங்களுக்காகவோ இம்மன்றத்திற்கு நேருகிற
செலவுகள் அனைத்தும், மேற்சொன்ன நிதியத்திலிருந்து
செலவிடப்படுதல் வேண்டும் என்பதோடு, அத்தகைய
செலவைச் செய்த பின்னர் எஞ்சியுள்ளவை
வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில் முதலீடு
செய்யப்படுதல் வேண்டும்.
15. ஆண்டுக் கணக்குகளும் தணிக்கையும் .~
(1) இம்மன்றத்தின் கணக்குகள் வகுத்துரைக்கப்படும்.
முறையிலும் படிவத்திலும் பேணிவரப்படுதல் வேண்டும்.
இம்மன்றம், வகுத்துரைக்கப்படும் படிவத்தில்
ஆண்டுக்கணக்கு விவர அறிக்கை ஒன்றைத் தயாரித்தல்
வேண்டும்.
(2) இம்மன்றத்தின். கணக்குகள்,
இதன்பொருட்டு அரசு நியமிக்கலாகும் தணிக்கையாளரால்,
குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறையேனும் தணிக்கை
செய்யப்படுதல் வேண்டும்.
(3) உட்பிரிவு (2)இன்படி நியமிக்கப்பட்ட
தணிக்கையாளர் அத்தகைய தணிக்கையின்
நோக்கங்களுக்காக, வகுத்துரைக்கப்படும் உரிமைகள்,
சிறப்புநிமைகள் மற்றும் அதிகார உரிமை ஆகியவற்றைப்
பெற்றிருத்தல் வேண்டும்.
(3) இம்மன்றத்திற்கான உறுப்பினர்-
செயலாளர், தணிக்கையாளரின் அறிக்கையினை அச்சிடச்
செய்தலும் அதன் அச்சிடப்பட்ட படிரகல்) ஒன்றினை
ஒவ்வொரு உறுப்பினருக்கும் அனுப்புதல் வேண்டும்;
மற்றும் இம்மன்றத்தின் அடுத்தக் கூட்டத்தில்,
பரிச்லனைக்காக அத்தகைய அறிக்கையை வைத்தல்
வேண்டும்.
(5 இம்மன்றமானது, தணிக்கை
அறிக்கையில் சுட்டிக்காட்டப்படும் குறைகள் அல்லது
19
முறைகேடு எதனையும் தீர்வு செய்வதற்கு உரிய
நடவடிக்கையை உடனடியாக எடுத்தல் வேண்டும்.
(6) தணிக்கையாளரால் சான்றிடப்பட்ட
இம்மன்றத்தின் கணக்குகள், தணிக்கை அறிக்கையுடனும்
அதன் மீதான இம்மன்றத்தின் குறிப்புரைகளுடனும்.
சேர்த்து, வகுத்துரைக்கப்படும் காலத்திற்குள் அரசுக்கு
அனுப்பப்படுதல் வேண்டும்.
(7) அரசானது, எழுத்து வடிவிலான ஆணை
மூலம், அதில் குறிப்பிடப்படும் காலத்திற்குள், தணிக்கை
அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட குறைபாடுகள்
எவையேனும் இருப்பின் அவற்றை சரி செய்ய, அந்த
ஆணையில் குறிப்பிடப்படும் நடவடிக்கையினை
எடுக்குமாறு இம்மன்றத்தினைப் பணிக்கலாம்; மற்றும்
இம்மன்றம் அத்தகைய பணிப்புரைக்கு இணங்கி நடத்தல்
வேண்டும்.
16. ஆண்டறிக்கை.- இம்மன்றமானது, கூடிய
விரைவில், ஒவ்வொரு நிதியாண்டின் இறுதிக்குப் பின்பும்,
முந்தைய ஆண்டின் போதான தன்னுடைய
நடவடிக்கைகளைப் பற்றிய விவரங்களைத் தருகின்ற
அறிக்கை ஒன்றை வகுத்துரைக்கப்படக்கூடிய
தேதிக்குள்ளாகவும் வகுத்துரைக்கப்படக்கூடிய
படிவத்திலும் தயாரித்து அரசுக்குப் பணிந்தனுப்புதல்
வேண்டும். மேலும், அந்த அறிக்கையானது, அடுத்த
நிதியாண்டில் இம்மன்றத்தினால் பெரும்பாலும்
மேற்கொள்ளப்படவிருக்கின்ற நடவடிக்கைகள்
எவையேனும் இருப்பின். அவற்றைப் பற்றிய
விவரங்களையும் தருதல் வேண்டும். அரசானது,
அத்தகைய அறிக்கை ஒவ்வொன்றையும், அது
வரப்பெற்றதற்குப் பின்பு கூடிய விரைவில், சட்ட மன்றப்
பேரவையின் முன்பு வைக்கப்படுமாறு செய்வித்தல்
வேண்டும். அந்த ஆண்டு அறிக்கையின் படிருகல்) ஒன்று,
20
பல்கலைக்கழக மானிய ஆணையத்திற்கும் அனுப்பி
வைக்கப்படுதல் வேண்டும்.
17. பணிப்புரைகளைப் வழங்குவதற்கான
அதிகாரம்.- அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை
நிறைவேற்றுவதற்குத் தேவையானவைமயென அல்லது
உகந்தவையெனத் தான் கருதும் பணிப்புரைகளை
இம்மன்றத்திற்கு வழங்கலாம்; மற்றும் இம்மன்றமானது,
அத்தகைய பணிப்புரைகள் அனைத்திற்கும் செயல்வடிவம்
கொடுத்தல் வேண்டும்.
18. குறைபாடுகளால் இம்மன்றத்தின்
நடவடிக்கைகள் செல்லத்தகாதவையாக ஆக்கப்படுதல்
கூடாது.- உறுப்பினர் பதவியில் காலியிடம் ஏதேனும்
இருந்த போதிலும் அல்லது இம்மன்றத்தின்.
அமைப்புருவாக்கத்தில் குறைபாடு ஏதேனும்
இருந்தபோதிலும், இம்மன்றம் செயலாற்றுவதற்கான
அதிகாரத்தைப் பெற்றிருக்கும்; மற்றும் உறுப்பினராக
இருப்பதற்கு உரிமைத்தகுதி உடையவராக இல்லாத
எவரேனும் ஒருவர், இம்மன்றத்தின் நடவடிக்கைகளில்
அமர்ந்தார் அல்லது வாக்களித்தார் அல்லது மற்றபடி
பங்குபெற்றார் என்கிண்றபோதிலும், இம்மன்றத்தின்
நடவடிக்கைகள் செல்லத்தக்கனவான இருக்கும்.
19. இம்மன்றத்தின் உறுப்பினர்களும்
பணியாளர்களும் பொது ஊழியர்களாக. இருப்பர்.-
இம்மன்றத்தின் தலைவர், துணைத்தலைவர்,
உறுப்பினர்கள், உறுப்பினர் செயலாளர், பிற பணியாளர்கள்
ஆகியோர், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளில்
ஏதொன்றையும் அல்லது இந்தச் சட்டத்தின்படி
செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட விதி அல்லது
ஒழுங்கு விதி அல்லது ஆணை அல்லது பணிப்புரை
ஏதொன்றையும் தொடர்ந்து செயல்படும்போது அல்லது
செயல்படுவதாகப் புலப்படும்போது, இந்தியத் தண்டனைச்
21
சட்டத்தொகுப்பின் (மையச் சட்டம் 451860) பிரிவு 21 இன்
பொருளின்படி பொது ஊழியர்களாக இருப்பதாகக்
கருதப்படுதல் வேண்டும்.
20. நல்லெண்ணத்துடன் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.-- இந்தச் சட்டத்தையோ
அல்லது இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது
பிறப்பிக்கப்பட்ட விதி, ஒழுங்குவிதி ஆணை அல்லது
பணிப்புரை ஏதொன்றையுமோ தொடர்ந்து,
நல்லெண்ணத்துடன் செயல்படும் அல்லது செய்யக்
கருதப்படும் எதனைப் பொறுத்தும், அரசு, மன்றம் அல்லது
அதன் உறுப்பினர் எவருக்கும் எதிராகவோ அல்லது அரசு
அல்லது மன்றத்தின் பணிப்புரையின்படிச் செயல்படுகின்ற
பணியாளர் அல்லது நபர் எவருக்கும் எதிராகவுமோ,
உரிமையியல் வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை
எதுவும் தொடரப்படுதல் கூடாது.
21. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.-
(1) அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை
நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.
(2) இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும் விதி.
ஒவ்வொன்றும் அல்லது பிரிவு 23இன்படி பிறப்பிக்கப்பட்ட
ஆணை ஒன்று, அது பிறப்பிக்கப்பட்டதற்குப் பின்பு கூடிய
விரைவில், சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல்
வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும்
கூட்டத்தொடர் அல்லது அடுத்த கூட்டத்தொடர்
முடிவடைவதற்கு முன்பு, அப்பேரவையானது அந்த விதி
அல்லது ஆணையில் மாறுதல்: எதையேனும்.
செய்யுமாயின், அல்லது அவ்விதி அல்லது ஆணையானது
பிறப்பிக்கப்பவே கூடாது என்று அப்பேரவை முடிவு
செய்யுமாயின் அவ்விதி அல்லது ஆணையானது,
அதற்குப் பின்பு அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட
வடிவத்தில் மட்டுமே செயல்வடிவம் பெற்றதாயிருக்கும்;
22
அல்லது நிகழ்விற்கேற்ப, செயல்வடிவம் பெறாது போகும்;
எனினும், அவ்வாறு மாற்றியமைத்தது அல்லது நீக்கம்
செய்தது எதுவும், அந்த விதி அல்லது ஆணையின்படி
முன்னதாகச் செய்யப்பட்ட எதனின். செல்லுந்
தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.
22. ஒழுங்கு விதிகளைச் செய்வதற்கான
அதிகாரம்.- இம்மன்றமானது, அரசினால் செய்யப்படும்.
விதிகளுக்குட்பட்டும், அரசின் முன் ஒப்புதலுடன், இந்தச்
சட்டத்தின்படி இம்மன்றத்திற்குள்ள அதிகாரங்களையும்
அலுவல்களையும் நிறைவேற்றுவதற்கான ஒழுங்கு
விதிகளைச் செய்யலாம்.
23. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.-
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குச் செயல்வடிவம்
கொடுப்பதில், இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால், இந்தச்
சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத
வகையில், அரசு, அந்த இடர்ப்பாடுகளை நீக்குவதற்குத்
தேவையானதென அல்லது உகந்ததெனத் தமக்குத்
தோன்றுகின்ற எதையும், தறுவாயின் தேவைக்கேற்றவாறு,
ஆணையின் மூலம் செய்யலாம்:
வரம்புரையாக: அத்தகைய ஆணை எதுவும், இந்தச்
சட்டத்தின். தொடக்கத் தேதியிலிருந்து இரண்டு
ஆண்டுகள் முடிவடைந்ததற்குப் பிறகு, பிறப்பிக்கப்படுதல்
ஆகாது.