Tamil Nadu · 1996 · Act 24
The Tamil Nadu Specified Commodities Markets (Regulation of Location) Act, 1996
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு குறித்துரைக்கப்பட்ட வணிகப்பொருள் சந்தைகள்
(அமைவிடத்தை முறைப்படுத்துதல்) சட்டம்
தமிழ்நாடு சட்ட எண் 241996
பிரிவுகளின் அமைப்பு
அத்தியாயம் |
முன்னுரையாக
பிரிவு
1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும் தொடக்கம்.
2. பொருள் வரையறைகள்.
அத்தியாயம் ॥
சந்தைப் பரப்பிடம் என்று விளம்புதல் மற்றும் சந்தைக் குழுவையும்
சந்தையையும் நிறுவுதல்
3. சந்தைப்பரப்பிடம் என்று விளம்புவதற்கான எண்ணத்தை அறிவிக்கை
செய்தலும், சந்தைப் பரப்பிடம் என்று விளம்பும் பொருட்டு உள்ளாட்சி
அதிகார அமைப்பு அரசுக்குப் பரிந்துரை செய்தலும்.
4. சந்தைப் பரப்பிடம் என்று விளம்புதல்.
5. சந்தைக் குழுவினை நிறுவுதல்.
6. ॥4894 மற்றும் 11914 மையச் சட்டங்களின் நோக்கங்களுக்காக
சந்தைக்குழு ஓர் உள்ளாட்சி அதிகார அமைப்பாகவிருத்தல்.
7. சந்தைப் பரப்பிடம் முதலானவற்றை மாற்றியமைத்தல்.
8. சந்தைக்குழுவை அமைத்துருவாக்குதல்.
9. சந்தைக்குழுத்தலைவரின் மற்றும் துணைத்தலைவரின் பெயர் குறித்த
நியமனம்.
1௦. சந்தைக்குழுவின் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள்
ஆகியோருடைய பெயர்களை வெளியிடுதல்.
11. சந்தைக்குழுவின் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள்
ஆகியோரின் தகுதிக்கேடு.
12. தலைவர், துணைத்தலைவர் உறுப்பினர்கள் ஆகியோரது பதவிக்கால
அளவு.
13. ஒரு சில நேர்வுகளில் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ள நபர்கள்.
உறுப்பினராக இருப்பது அற்றுப்போதல்.
14. சந்தைக்குழு உறுப்பினர்களின் பதவி விலகல்.
15. சந்தைக்குழுவின் தலைவர் மற்றும் துணைத்தலைவரின் பதவி விலகல்.
16.சந்தை குழுவொன்றின் தலைவரையும் துணைத்தலைவரையும்
நீக்குதல்.
17. சந்தைக் குழுவின் கூட்டங்கள்.
18. சந்தைகளை நிறுவுதல்.
19. தனிச் சந்தைகளை நிறுவுதல்.
அத்தியாயம் [Nl
உரிமத்தின்படி உள்ள சந்தைப் பரப்பிடத்தில் குறித்துரைக்கப்பட்ட
வணிகப்பொருள் குறித்து மொத்த விற்பனை வணிகர்களையும் மொத்த
விற்பனை வணிகத்தினையும் பதிவு செய்தல்.
20. மொத்த வியாபாரிகளைப் பதிவு செய்தல்.
21. சந்தைப் பரப்பிடத்தில், வகுத்துரைக்கப்பட்ட வணிகப்பொருளின் மொத்த
விற்பனை வணிகத்தை உரிமத்தின் மூலம் ஒழுங்குமுறைப்படுத்துதல்.
22. சந்தைக் குழுவானது சந்தையில் உள்ள மொத்த விற்பனை
வணிகர்களின் மாற்று வணிக வசதிகளுக்கு வகை செய்தல் வேண்டும்.
அத்தியாயம் [V
சந்தைக் குழுவின் அதிகாரங்களும் கடமைகளும்.
23. சந்தைக்குழுவின் அதிகாரங்களும் கடமைகளும்.
24. சந்தைக்குழுவிற்கு கட்டணங்களை விதிப்பதற்குள்ள அதிகாரம்.
25. சந்தைக்குழுவின் அசையாச் சொத்து உரிமைமாற்றம் குறித்த
வகைமுறைகள்.
26. சந்தைக்குழுவினால் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுதல்.
27. 1894 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி நிலத்தை
கையகப்படுத்துவதற்கான அதிகாரம்.
28. நிலத்தைக் கையகப்படுத்தல்.
29. சந்தைக்குழுவின் அலுவலர்களும் பணியாளர்களும்.
30. தலைமை நிருவாக அலுவலரின் அதிகாரங்களும் கடமைகளும்.
31. முறைகேடு, காலியிடம் முதலியனவற்றால் சந்தைக்குழுவின்.
செயல்கள் செல்லத்தகாததாக ஆக்கப்படுதல் ஆகாது.
அத்தியாயம் V
சந்தைக்குழுவின் நிதியமும் நிதியும்.
32. சந்தைக்குழு நிதியம்.
33. சந்தைக்குழு நிதியமானது எந்த நோக்கங்களுக்காகச் செலவிடப்படுதல்
வேண்டும் என்பது.
34. கடன் பெறுவதற்கான அதிகாரம்.
35. வரவு-செலவுத் திட்டம்.
36. கணக்குகளில் ஆண்டுத் தணிக்கை.
37. சொத்து, நிதியம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல்.
அத்தியாயம் VI
சந்தைக் குழுக்களைக் கட்டுப்படுத்துதல்.
38. ஆய்வு செய்தல், விசாரணை செய்தல், விவரவுரை அளித்தல் முதலியன.
39. உள்ளாட்சி அதிகார அமைப்பிற்கு அலுவலர்கள், பணியாளர்கள் அல்லது
உறுப்பினர்கள் தகவல் அளிப்பதற்கான கடமை.
40. கணக்குப் புத்தகங்களையும் பிற ஆவணங்களையும் கைப்பற்றுதல்.
41. சந்தைக் குழுவினைக் கலைத்துக் கைக்கொள்ளுதல்.
42. தனி அலுவலரின் அமர்த்துகை.
43. தனி அலுவலரின் அதிகாரங்கள்.
44. சந்தைக் குழுவின் பதிவுருக்கள் மற்றும் சொத்துக்களின்
உடைமையினை ஒப்படைத்தல்.
அத்தியாயம் VIl
மேல்முறையீடுகளும் மேலாய்வுகளும்.
45. மேல்முறையீடு.
46. மேலாய்வு.
அத்தியாயம் VI
குற்றச்செயல்களும், தண்டனைகளும்.
47. தண்டங்கள்.
48. கட்டணம் அல்லது பிறதொகை செலுத்துவதற்கு குற்றம்
சாட்டப்பட்டவரின் கடப்பாடு.
49. குற்றச்செயல்களை இணக்கமாகத் தீர்த்துக்கொள்ளுதல்.
50. கட்டணம் அல்லது பிற தொகையினை மொத்தமாக வளசூலிப்பதற்காக
குற்றவியல் நடுவருக்குள்ள அதிகாரம்.
51. குற்றச்செயலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்.
52. நிறுமங்களால் செய்யப்படும் குற்றச்செயல்கள்.
அத்தியாயம் 156
பல்வகை
53. குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்குத் தடை.
54. தலைவர், துணைத்தலைவர் மற்றும் தலைமை நிருவாக அலுவலர்
ஆகியோர் பொதுப் பணியாளர்களாக இருப்பர்.
55. குறிப்பிடப்பட்ட சில வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகள்
தொடர்வதற்கான காலவரம்பு.
56. தொகைகளை வளுலித்தல்.
57. சந்தைக்குழுவின் சார்பாக எழுதப்பட்ட ஆவணத்தைப் பதிவு செய்தல்.
58. சில நடவடிக்கைகள் முதலியவற்றில் தடைக்கட்டளை வழங்குதல்
ஆகாது.
59. இழப்பு, சேதாரம் அல்லது தவறாகப் பயன்படுத்தலுக்கு தலைவர்,
துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகியோர் கடப்பாடு.
60. விலக்களித்தல்.
61. இணைப்புப்பட்டியலைத் திருத்துவதற்கான அதிகாரம்.
62. வசூலிக்கப்பட இயலாத தொகை முதலியனவற்றைத் தள்ளுபடி
செய்வதற்கான அதிகாரம்.
63. இந்தச் சட்டம் மற்ற சட்டங்களுக்கு மேலோங்கி இருத்தல்.
64. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
65. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
66. துணை விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
67. விதிகள், அறிவிக்கைகள் மற்றும் ஆணைகள் சட்டமன்றத்தின் முன்பு
வைக்கப்படுதல் வேண்டும்.
இணைபப்புப்பட்டியல்.
1996ஆம் ஆண்டு தமிழ்நாடு குறித்துரைக்கப்பட்ட வணிகப்பொருள் சந்தைகள்
(அமைவிடத்தை முறைப்படுத்துதல்) சட்டம்
தமிழ்நாடு சட்ட எண் 241996
சென்னை பெருநகர் அமைப்புத் திட்டப் பரப்பிடத்திலும், பிற உள்ளாட்சிப்
பரப்பிடங்களிலும் உள்ள குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருள்களைப் பொதுச்
சந்தைப் பரப்பிடங்களின் அமைவிடத்தையும், மொத்த விற்பனைச் சந்தைகளையும்
முறைப்படுத்துவதற்கும், வெவ்வேறு குறித்துரைக்கப்பட்ட
வணிகப்பொருள்களுக்காக வெவ்வேறு சந்தைப் பரப்பிடங்களில் நிறுவப்படவுள்ள
சந்தைகளை நிருவகித்துக் கட்டுப்பாடு செய்து வருவதற்கான சந்தைக்
குழுக்களை நிறுவுவதற்கும், அது தொடர்பானவையாகவோ அதற்கு
இடைவிளைவானவையாகவோ உள்ள பொருட்கூறுகளுக்கு வகை
செய்வதற்குமானதொரு சட்டம்.
மக்கள் தொகையும். வணிக நடவடிக்கைகளும் வேகமாகப்
பெருகிவருவதுடன், நெரிசலும் அதன் விளைவாக போக்குவரத்து, இடவசதி
மற்றும் பிற பிரச்சனைகளும் சென்னை பெருநகர் அமைப்புத் திட்டப்
பரப்பிடத்திலும் பிற உள்ளூர் பரப்பிடங்களிலும் மிகுந்த அளவில்
அதிகரித்துவருகின்றன என்பதாலும்;
அத்தகைய நெரிசலையும் அதன் விளைவாக போக்குவரத்தையும்
கருத்தில்கொண்டு, அத்தகைய பரப்பிடங்களின் குறிப்பிட்ட ஒரு சில
பகுதிகளிலுள்ள நெரிசலைக் குறைப்பதும், எத்தனை வணிக நடவடிக்கைகளை
அத்தகைய பகுதிகளுக்கு வெளியேயுள்ள இடங்களுக்கு மாற்ற இயலுமோ
அத்தனை வணிக நடவடிக்கைளை அவ்வாறு மாற்றுவதும், பொதுநலன் கருதி
தேவையாயிருக்கின்றது என்பதாலும்; அதன்மூலம் அத்தகைய பரப்பிடங்களின்
திட்டமிட்ட வளர்ச்சிக்கும் இன்னமும் சிறந்த மக்கள் நல்வாழ்வுக்கும் அது
வழிவகுக்கும் என்பதாலும்;
மேற்சொன்ன நோக்கத்தை எய்தும்பொருட்டு, சந்தைப் பரப்பிடங்களை
விளம்புகை செய்வதும் அதில் குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருள்களின்
மொத்த வியாபாரத்திற்காகவென உள்ளாட்சிப் பரப்பிடங்களில் தக்க
அமைவிடங்களில் சந்தைக் குழுக்களையும் சந்தைகளையும் நிறுவுவதும்
தேவையானதாக இருப்பதாலும்;
இந்தியக் குடியரசின் நாற்பத்து ஏழாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
அத்தியாயம் |
முன்னுரையாக
1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும் தொடக்கம்.- (1) இந்தச் சட்டம், 1996 ஆம்
ஆண்டு தமிழ்நாடு குறித்துரைக்கப்பட்ட வணிகப்பொருள் சந்தைகள்
(அமைவிடத்தை முறைப்படுத்துதல்) சட்டம் என வழங்கபெறும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.
(3) இது, சென்னைப் பெருநகர் திட்டமிடும் பரப்பிடத்தில் உடனடியாகவும்,
பிற உள்ளாட்சிப் பரப்பிடம் எதிலும் அரசு அறிவிக்கையின் மூலம்
குறித்துரைக்கக்கூடிய தேதியிலும் நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்பதோடு,
வெவ்வேறு உள்ளாட்சிப் பரப்பிடங்களுக்காகவென வெவ்வேறு தேதிகளும்
குறிக்கப்படலாம்.
2. பொருள் வரையறைகள்.- இந்தச் சட்டத்தில், சூழ்நிலைக்கேற்ப வேறுபொருள்
கொள்ளவேண்டியிருந்தாலன்றி,-
(1) "துணை விதிகள்" என்றால், 66 ஆம் பிரிவின்படி சந்தைக் குழுவொன்று
இயற்றியுள்ள துணை விதிகள் என்று பொருள்படும்;
(2) ""லைமை நிருவாக அலுவலர்" என்றால், சந்தைக் குழுவொன்றில் 29
ஆம் பிரிவின்படி அரசு நியமித்துள்ள தலைமை நிருவாக அலுவலர் என்று
பொருள்படும்;
(3) "அரசு" என்றால், மாநில அரசு என்று பொருள்படும்;
(4) உள்ளாட்சிப் பரப்பிடம் என்றால்,- (ஐ 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு
நகரமைப்பு மற்றும் ஊரமைப்புத் திட்டச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 351972) 2
ஆம் பிரிவின் (23-௨8) எனும் கூறில் பொருள் வரையறுக்கப்பட்டவாறான,
சென்னைப் பெருநகர் திட்டமிட்ட பரப்பிடத்தின், அல்லது
(b) 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம்
151971) பொருள் வரையறுக்கப்பட்டவாறான மதுரை மாநகரின், அல்லது
(c) 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்தில் (தமிழ்நாடு
சட்டம் 251981) பொருள் வரையறுக்கப்பட்டவாறான கோயம்புத்தூர் மாநகரின்,
அல்லது
(0) 1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்தில் (தமிழ்நாடு
சட்டம் 271994) பொருள் வரையறுக்கப்பட்டவாறான திருச்சிராப்பள்ளி மாநகரின்,
அல்லது
(6) 1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்தில் (தமிழ்நாடு
சட்டம் 28/1994) பொருள் வரையறுக்கப்பட்டவாறான திருநெல்வேலி மாநகரின்,
அல்லது
(1) 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம்
29/1994) பொருள் வரையறுக்கப்பட்டவாறான சேலம் மாநகரின், அல்லது
Q) அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம் எதன்படியும்
அமைத்துருவாக்கப்படக்கூடிய பிற மாநகராட்சி எதனின், அல்லது
(h) 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி
(தமிழ்நாடு சட்டம் V/1920) அமைத்துருவாக்கப்பட்டுள்ள நகராட்சி எதனின்
எல்லைக்குள் உள்ள பரப்பிடம் என்று பொருள்படும்.
(5) உள்ளாட்சி அதிகார அமைப்பு" என்றால்,
(ஐ 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகரமைப்பு மற்றும் ஊரமைப்புத்
திட்டச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 354971), 9-A எனும் பிரிவின்படி
நிறுவப்பட்டுள்ள சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் என்று; அல்லது
(b) மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம்
மாநகராட்சிகள் அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம்
எதன்படியும் அமைத்துருவாக்கப்பட்டுள்ள பிற மாநகராட்சி எதுவும் என்று,
அல்லது
(௦) 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி
(தமிழ்நாடு சட்டம் ௩71920) அமைத்துருவாக்கப்பட்டுள்ள ஒரு நகராட்சி
மன்றம் என்று
பொருள்படும்;
(6) "சந்தை என்றால், 18 ஆம் பிரிவின்படி, சந்தைப் பரப்பிடம் எதிலும்
நிறுவப்பட்டுள்ள சந்தை எதுவும் என்று பொருள்படும் என்பதோடு, 19 ஆம்
பிரிவின்படி நிறுவப்பட்டுள்ள தனிவகைச் சந்தையொன்றையும் உள்ளடக்கும்;
ஆனால் 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் வாணிக
(முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் 271989) நிறுவப்பட்டுள்ள
சந்தைகளை உள்ளடக்காது;
(7) "சந்தைப் பரப்பிடம் என்றால், சந்தைப் பரப்பிடமொன்றாக 4 ஆம்
பிரிவின்படி விளம்பப்பட்டுள்ள பரப்பிடம் எதுவும் என்று பொருள்படும்;
(8) "சந்தைக் குழு" என்றால், 5 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி
நிறுவப்பட்டுள்ள குழு என்று பொருள்படும்;
(9) "பதிவேடு" என்றால், 20 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி
பேணிவரப்படும் பதிவேடு என்று பொருள்படும்;
(10) "பதிவுபெற்ற மொத்த விற்பனை வணிகர்" என்றால், எந்தவொரு மொத்த
விற்பனை வணிகரின் பெயரானது, 20 ஆம் பிரிவின்படி பதிவேட்டில்
அப்போதைக்குப் பதிவு செய்யப்படுகிறதோ அந்த மொத்த விற்பனை வணிகர் என்று
பொருள்படும்;
(11) "விற்பனை" என்றால், அதற்குள்ள இலக்கண வேறுபாடுகளுடனும்
அந்த வகைச் சொற்றொடர்களுடனும் சேர்த்து, ரொக்கத்திற்காகவோ
காலந்தாழ்த்திச் செலுத்தப்படும் பணத்திற்காகவோ அல்லது மதிப்புடைய பிற
மறுபயன் எதற்காகவுமோ, நபரொருவர் பிறிதொருவருக்குச் செய்வதாகக்
குறித்துரைக்கப்பட்ட வணிகப்பொருள் ஏதொன்றின் விற்பனை என்று
பொருள்படும்; மற்றும் தவணை முறையில் வாங்குவதன் பேரிலோ, தவணைகளில்
விலையைச் செலுத்துகின்ற பிற முறையின் பேரிலோ அல்லது தரகுக்கோ பிற
மறுபயனுக்கோ வேறொரு நபரின் சார்பாக முகவரொருவர் செய்யும்
விற்பனையொன்றின் பேரில் வணிகப்பொருள் எதனையும் உரிமைமாற்றம்
செய்வதையும் உள்ளடக்கும்;
(12) "இணைப்புப் பட்டியல்" என்றால், இந்தச் சட்டத்தின்
இணைபப்புப்பட்டியல் என்று பொருள்படும்;
(13) "குறித்துரைக்கப்பட்ட வணிகப்பொருள்" என்றால், இந்த
இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள வணிகப்பொருள் எதுவும் என்று
பொருள்படும்;
(14) "மொத்த விற்பனை வணிகம்" என்றால், விலைக்கு வாங்குபவர்
நேரடியாக நுகர்வதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கோ அல்லாமல் பிற
நோக்கங்களுக்காக, குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருள் ஏதொன்றையும்
விற்பனை செய்தல் அல்லது விலைக்கு வாங்குதல் என்று பொருள்படும்; மற்றும்
அது, சரக்கிருப்புகளை வைத்துவருவதையோ சந்தைப் பரப்பிடத்தில் உள்ள இடம்
எதிலும் அத்தகைய குறித்துரைக்கப்பட்ட வணிகப்பொருளை பண்டகசாலையில்
வைத்து வருவதையோ உள்ளடக்கும்; (ஆனால், அத்தகைய குறித்துரைக்கப்பட்ட
வணிகப்பொருளின் தொடக்கநிலை உற்பத்தியாளர் அல்லது நேர்விற்கேற்ப,
சில்லறை வணிகர் எவரும் செய்கின்ற விற்பனை அல்லது விலைக்கு வாங்குகை
எதனையும் உள்ளடக்காது); மற்றும் அத்தகைய விற்பனையாளர், விலைக்கு
வாங்குபவர், சரக்கிருப்பை வைத்துவருபவர் அல்லது பண்டகசாலைக் காப்பாளர்,
"இமொத்த விற்பனை வணிகரொருவராகக்" கொள்ளப்படுவார்;
(15) இந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டு ஆனால் பொருள்
வரையறுக்கப்பட்டிராத சொற்களும் சொற்றொடர்களும், 1971 ஆம் ஆண்டு
நகரமைப்பு மற்றும் ஊரமைப்புத் திட்டச் சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் 354972)
அவற்றிற்கு குறித்தளிக்கப்பட்டுள்ள பொருள்களையே பெற்றிருப்பவையாகும்.
அத்தியாயம் |
சந்தைப்பரப்பிடம் என்று விளம்புதல் மற்றும் சந்தைக் குழுவையும் சந்தையையும்
நிறுவுதல்.
3. சந்தைப் பரப்பிடம் என்று விளம்புவதற்கான எண்ணத்தை அறிவிக்கை
செய்தலும், சந்தைப் பரப்பிடம் என்று விளம்பும் பொருட்டு உள்ளாட்சி அதிகார
அமைப்பு அரசுக்குப் பரிந்துரை செய்தலும்.- (1) உள்ளாட்சிப் பரப்பிடம் ஏதொன்றின்.
உள்ளாட்சி அதிகார அமைப்பொன்று அவ்வுள்ளாட்சிப் பரப்பிடத்தின் பகுதி
ஏதொன்றின் நெரிசலைக் குறைக்கின்ற நோக்கத்திற்காக, குறித்துரைக்கப்பட்ட
வணிகப்பொருள் எதனையும் பொறுத்த வணிக நடவடிக்கைகளை அத்தகைய
பகுதிகளுக்கு வெளியேயுள்ள இடங்களுக்கு மாற்றுவது தேவையாயிருக்கிறது
என்று கருதுகின்றபோது, அத்தகைய உள்ளாட்சி அதிகாரஅமைப்பு,
அறிவிக்கையின் மூலமாக, அத்தகைய அறிவிக்கையில்
குறித்துரைக்கப்படுகிறவாறு அத்தகைய உள்ளாட்சிப் பரப்பிடத்திற்குள் உள்ள பிற
பரப்பிடம் எதொன்றையும் அத்தகைய குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருளைப்
பொறுத்த சந்தைப் பரப்பிடமொன்றாக விளம்புவதற்கு அரசுக்குப்
பறிந்துரைப்பதற்கான தனது எண்ணத்தைக் குறித்துரைக்கலாம்.
(2) (ஐ) அந்த அறிவிக்கையானது, அந்த உள்ளாட்சி அதிகார அமைப்பினால்
அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கப்படும் கால அளவுக்குள் பெறப்படக்கூடிய
ஆட்சேபணை அல்லது ஆலோசனை ஏதொன்றும், அதனால் பரிசீலனை
செய்யப்படும் என்று எடுத்துரைத்தல் வேண்டும்.
(b) அந்த அறிவிக்கையின் படியொன்றை வகுத்துரைக்கக்கூடிய பிற
முறையில் வெளியிடுதலும் வேண்டும்.
(3) (2) ஆம் உட்பிரிவின்படி அறிவிக்கையில் குறித்துரைத்த காலஅளவு
முடிவடைந்த பின்னரும், அவ்வாறு முடிவடைவதற்கு முன்னர் பெறக்கூடிய
ஆட்சேபணைகளையும், ஆலோசனைகளையும் பரிசீலனை செய்த பின்னரும்,
மேலும் அத்தகைய குறித்துரைக்கப்பட்ட வணிகப்பொருளில் வணிகம் செய்து
வருகின்ற மொத்த வியாபாரிகளின் உரித்தத்தையும் அத்தகைய பிற
காரணக்கூறுகள் எவையேனுமிருப்பின் அவற்றையும் கூட பரிசீலனை செய்த
பின்னரும், உள்ளாட்சி அதிகாரஅமைப்பானது, குறித்துரைக்கப்பட்ட
வணிகப்பொருளைப் பொறுத்தமட்டில் (1) ஆம் உட்பிரிவின்படி அறிவிக்கையில்
குறித்துரைக்கப்பட்டவாறு உள்ளாட்சிப் பரப்பிடத்தில் உள்ள அத்தகைய பரப்பிடம்
சந்தைப் பரப்பிடமொன்றாக இருக்கும் என்று விளம்புவதற்கு அரசுக்குப் பரிந்துரை
செய்தல் வேண்டும்:
வரம்புரை: ஆனால், அந்த உள்ளாட்சி அதிகாரஅமைப்பு, அதே பரப்பிடம்
ஒன்றுக்கு மேற்பட்ட குறித்துரைக்கப்பட்ட வணிகப்பொருளைப்
பொறுத்தமட்டிலுங்கூட சந்தைப் பரப்பிடமொன்றாக இருக்கும் என்று
விளம்புவதற்கு, இந்தப் பிரிவில் வகை செய்யப்பட்டுள்ள முறையில் பரிந்துரை
செய்யலாம்.
4. சந்தைப் பரப்பிடம் என்று விளம்புதல்.- (1) (ஐ 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு
வேளாண் விளைபொருள் வாணிக (முறைப்படுத்துதல்) சட்டத்தில் (தமிழ்நாடு
சட்டம் 27/1989) என்ன அடங்கியிருந்தபோதிலும், 3 ஆம் பிரிவின் (3) ஆம்
உட்பிரிவின்படி உள்ளாட்சி அதிகாரஅமைப்பின் பரிந்துரையைப் பெற்றதன்பேரில்,
அரசு, அறிவிக்கையின் மூலம், அவ்வறிவிக்கையில் குறித்துரைக்கப்படும்.
பரப்பிடம், அத்தகைய குறித்துரைக்கப்பட்ட வணிகப்பொருளைப் பொறுத்தமட்டில்
சந்தைப் பரப்பிடமாக இருக்கும் என்று விளம்பலாம்.
(௦) அறிவிக்கையின் படியொன்றை வகுத்துரைக்கக்கூடிய பிற முறையில்
வெளியிடுதலும் வேண்டும்.
(2) 3 ஆம் பிரிவின்படியோ (1) ஆம் உட்பிரிவின்படியோவான
அறிவிக்கையானது, அத்தகைய அறிவிக்கையை வெளியிடுதல் முறைகேடு
அல்லது குறைபாடு எதுவும் இருந்தபோதிலும், முழு ஆற்றலையும்
செல்திறனையும் பெற்றதாக இருக்கும்.
5. சந்தைக் குழுவினை நிறுவுதல்.- (1) ஒவ்வொரு சந்தைப்
பரப்பிடத்திற்காகவுமென ஒரு சந்தைக்குழுவை அரசு நிறுவுதல் வேண்டும். இந்தச்
சட்டத்தின் வகைமுறைகளையும் இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்டுள்ள
விதிகளையும், துணை விதிகளையும் அத்தகைய சந்தைப் பரப்பிடத்தில்
நடைமுறைப்படுத்துவது என்பது அச்சந்தைக் குழுவின் கடமையாகும்.
(2) ஒவ்வொரு சந்தைக் குழுவும் அரசு குறித்துரைக்கக்கூடிய பெயரிலான
ஒரு கூட்டமைப்பாக இருந்துவரும்; அது நிலையான தொடர்பாட்டுரிமையையும்.
பொது இலச்சினையொன்றையும் பெற்றிருக்கும்; மேலும் அது தன்னுடைய
கூட்டமைப்பின் பெயரில் மட்டுமே வழக்கிடுதலும் வழக்கிடப்படுதலும் வேண்டும்;
மேலும் இந்தச் சட்டத்தின்படியாகவோ அதனடியாகவோ விதிக்கப்படும்
வரைக்கட்டுகளுக்கு உட்பட்டு, அசையும் மற்றும் அசையாச் சொத்து ஆக
இரண்டினையும் ஈட்டி. வைத்துவருவதற்கு மற்றும் தன்னிடம்
மேவியிருக்கக்கூடிய அல்லது தான் ஈட்டியிருக்கக் கூடிய அசையும் அல்லது
அசையாச் சொத்து ஏதொன்றையும் விற்பதற்கு, குத்தகைக்கு விடுவதற்கு அல்லது
மற்றப்படி உரிமைமாற்றம் செய்வதற்கு மற்றும் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு
மற்றும் எந்த நோக்கத்திற்காக அது நிறுவப்பட்டிருக்கிறதோ, அந்த
நோக்கங்களுக்குத் தேவையான பிற செயல்கள் அனைத்தையும் செய்வதற்கு
தகுதியுடையதாக இருக்கும்:
முதலாம் வரம்புரை: ஆனால், இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக
தேவைப்படக்கூடிய நிலம் எதுவும், இந்தச்சட்டத்தின் 28 ஆம் பிரிவில்
வகைசெய்யப்பட்டுள்ளவாறு, 1894 ஆம் ஆண்டு நிலத்தினைக் கையகப்படுத்துதல்
சட்டத்தின் (மையச் சட்டம் ।1894) வகைமுறைகளின்படி கையகப்படுத்தப்படுதல்
வேண்டும்:
இரண்டாம் வரம்புரை: ஆனால், அசையாச் சொத்து எதனையும் (சந்தைக்
குழுவொன்று) அரசின் முன் ஒப்பளிப்பு இல்லாமல், விற்பனை அல்லது
குத்தகையின் வாயிலாகவோ மற்றப்படியாகவோ உரிமைமாற்றம் செய்தலாகாது.
(3) 1) ஆம் உட்பிரிவின்படி சந்தைக் குழுவொன்றை நிறுவிய பின்னர்,
வேறு குறித்துரைக்கப்பட்ட வணிகப்பொருள் ஏதொன்றையும் பொறுத்தமட்டில்
அந்தச் சந்தைப் பரப்பிடம் தொடர்பாக 4 ஆம் பிரிவின்படி விளம்புகை எதுவும்
செய்யப்படுமிடத்து, அச்சந்தைக் குழு அக்குறித்துரைக்கப்பட்ட வணிகப்
பொருளைப் பொறுத்தமட்டில் கூட நிறுவப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுதல்
வேண்டும்.
6.1/1894 மற்றும் 11914 மையச் சட்டங்களின் நோக்கங்களுக்காக சந்தைக் குழு
ஓர் உள்ளாட்சி அதிகார அமைப்பாகவிருத்தல்.- சந்தைக் குழு ஒவ்வொன்றும்,
1894 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் (மையச் சட்டம் 1/1894)
மற்றும் 1914 ஆம் ஆண்டு உள்ளாட்சி அதிகாரஅமைப்புகள் கடன்கள் சட்டத்தின்
(மையச் சட்டம் 171914) நோக்கங்களுக்காக ஓர் உள்ளாட்சி அதிகாரஅமைப்பாக
இருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
7. சந்தைப்பரப்பிடம் முதலானவற்றை மாற்றியமைத்தல். (1) அரசு
அறிவிக்கையின் மூலமாக, அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கப்படக்கூடிய
தேதியிலும் அது முதற்கொண்டும்,-
(a) சந்தைப் பரப்பிடம் எதிலும், பரப்பிடம் எதனையும் உள்ளடக்கலாம்.
அல்லது அதிலிருந்து பரப்பிடம் எதனையும் விலக்கலாம்;
(b) சந்தைப் பரப்பிடம் எதனையும், இரண்டு அல்லது அவற்றிற்கு
மேற்பட்ட தனித்தனி சந்தைப் பரப்பிடங்களாகப் பிரிக்கலாம்;
(6) கூண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட சந்தைப் பரப்பிடங்களை
ஒரே சந்தைப் பரப்பிடமாக ஒருங்கிணைக்கலாம்;
(0) சந்தைப் பரப்பிடம் எதிலும் குறித்துரைக்கப்பட்ட வணிகப்
பொருளின் மொத்த வியாபாரம் அற்றுப்போதல் வேண்டும் என்றோ,
இதுவரையில் செய்துவராத குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருள்
ஏதொன்றின் மொத்த வியாபாரத்தைச் சந்தைப் பரப்பிடம் எதிலும்
செய்துவருதல் வேண்டும் என்றோ விளம்பலாம்:
வரம்புரை.-- ஆனால், சந்தைப் பரப்பிடம் அல்லது குறித்துரைக்கப்பட்ட
வணிகப்பொருள்: ஏதொன்றின் தொடர்பாகவும், இந்தப் பிரிவினால்
வழங்கப்பட்டுள்ள அதிகாரம் 3 ஆம் மற்றும் 4 ஆம் பிரிவுகளின்
வகைமுறைகளுக்கு உட்பட்டிருத்தல் வேண்டும்.
(2) எந்தச் சந்தைப் பரப்பிடத்திற்காகலவென சந்தைக் குழுவொன்று
நிறுவப்படுகிறதோ அந்தச் சந்தைப் பரப்பிடத்தின் எல்லைகள், (1) ஆம்
உட்பிரிவின்படி மாற்றப்படுகிறபோது, அறிவிக்கையில் குறித்துரைக்கப்படக்கூடிய
தேதியிலும் அது முதற்கொண்டும், பின்வரும் விளைவுகள் தொடர்வனவாகும்.
அதாவது:
(ஐ அச்சந்தைக் குழு கலைக்கப்பட்டதாகிவிடும் என்பதோடு அதன்.
உறுப்பினர்கள் அத்தகைய உறுப்பினர்களாகவுள்ள அவர்களது பதவிகளை
விட்டு காலி செய்தலும் வேண்டும்;
(௦) புதிய சந்தைப் பரப்பிடத்திற்காகவென 5 ஆம் மற்றும் 8 ஆம்
பிரிவுகளின் வகைமுறைகளுக்கிணங்க, புதியதொரு சந்தைக் குழுவை
நிறுவி அமைத்துருவாக்குதல் வேண்டும்;
(௦9) கலைக்கப்பட்ட சந்தைக் குழு அளித்திருந்த உரிமம்
ஏதேனுமிருப்பின் அதனை, அதிகார வரம்பு பெற்றிருக்கின்ற புதிய சந்தைக்
குழு அளித்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் என்பதோடு, எவ்வளவு
கால அளவிற்கு அது அளிக்கப்பட்டிருந்ததோ, அவ்வளவு காலஅளவின்
எஞ்சியுள்ள பகுதிக்கு அதன்படியே தொடர்ந்து செல்லாற்றலில் இருந்து
வருதலும் வேண்டும்;
(0) கலைக்கப்பட்ட சந்தைக் குழுக்களினுடைய நிதியங்கள் மற்றும்
சொத்துடைமைகளில், கடன்கள் மற்றும் கடமைப் பொறுப்புகளில்,
ஆணையின் மூலம் அரசு பணிக்கக்கூடிய பகுதியைப் புதிய சந்தைக்
குழுவிற்கு மாற்றுதல் வேண்டும்; மற்றும் புதிய சந்தைக் குழுவின் அதிகார
வரம்பிற்குள் உள்ள சந்தைப் பரப்பிடத்தின் பகுதி எதிலும், உரிமையியல்
மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள், ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள்
மற்றும் பிற ஒவ்வொரு பொருட்பாடு அல்லது பொருளும் பொறுத்து
எழுகின்ற கலைக்கப்பட்ட சந்தைக் குழுவின் உரிமைகளும்,
கடப்பாடுகளும் புதிய சந்தைக் குழுவிடம் மேவியிருத்தல் வேண்டும்.
8. சந்தைக் குழுவை அமைத்துருவாக்குதல்.- சந்தைக் குழு ஒவ்வொன்றும் ஒரு
தலைவர், துணைத்தலைவர் பின்வரும் உறுப்பினர்கள் ஆகியோரைக்
கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-
(ஐ அச்சந்தைப் பரப்பிடத்தில் மொத்த வியாபாரத்தைச் செய்து
வருவதற்காக செல்லத்தக்க உரிமங்களை வைத்திருக்கின்ற மொத்த
வியாபாரிகளுக்கிடையேயிருந்து அரசு பெயர் குறித்து நியமிக்கின்ற மூன்று
பிரதிநிதிகள்;
(b) அச்சந்தைப் பரப்பிடத்தில் உள்ளாட்சி அதிகாரஅமைப்பால்
ஏற்பளிக்கப்பட்டுள்ள வணிகச்சங்கங்களின்
உறுப்பினர்களுக்கிடையேயிருந்து அரசு பெயர் குறித்து நியமிக்கின்ற
மூன்று பிரதிநிதிகள்;
(௦9) உள்ளாட்சி அதிகார அமைப்புடன் கலந்தாலோசித்து அரசு
நியமிக்கின்ற அரசு அலுவரல்லாத இருவர்;
(0) (i) செண்னைப் பெருநகர் திட்டப் பரப்பிடத்தில்,-
(A) சென்னை மாநகராட்சி ஆணையர், பதவி வழியாக அல்லது
அவரின் நியமன அதிகாரி;
(8) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை திட்ட
அதிகாரி, பதவி வழியாக; மற்றும்
(C) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைமைச்
செயலாட்சி அலுவலர், பதவி வழியாக; மற்றும்
(i) பிற உள்ளாட்சிப் பரப்பிடம் எதிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி
அதிகார அமைப்பின் ஆணையர் மற்றும் செயலாட்சி அதிகார அமைப்பு,
பதவி வழியாக;
(6) வேளாண் வாணிப இயக்குநர், பதவி வழியாக அல்லது வேளாண்
வாணிப துணை இயக்குநரின் படிநிலைக்குக் கீழல்லாத அவருடைய
நியமன அதிகாரி;
() உள்ளாட்சி அதிகார அமைப்புடன் கலந்தாலோசித்து அரசு
நியமிக்கின்ற அலுவலர்கள் இருவர்; மற்றும்
(9) தலைமை நிருவாக அலுவலர், பதவி வழியாக:
வரம்புரை: ஆனால், இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்குப் பின்னர், முதல்
சந்தைக் குழு (ஐ மற்றும் (2) எனும் கூறுகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள
உறுப்பினர்கள் இல்லாமலேயே அமைத்துருவாக்கப்படுதல் வேண்டும்; மற்றும்
சந்தை முதல் குழுவினால் மொத்த வியாபாரிகளுக்கு உரிமங்கள்:
வழங்கப்பட்டவுடனேயும் அச்சந்தைப் பரப்பிடத்தில் வணிகச் சங்கங்கள்:
அமைக்கப்பட்டவுடனேயும், இந்தப் பிரிவின் வகைமுறைகளுக்கு இணங்க
மீண்டும் அமைத்துருவாக்கப்படுதல் வேண்டும்.
9. சந்தைக் குழுத் தலைவரின் மற்றும் துணைத் தலைவரின் பெயர் குறித்த
நியமனம்.- (1) அரசு, வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில்,
வகுத்துரைக்கப்படக்கூடிய தகுதிப்பாடுகளைக் கொண்டிருக்கிற நபர் எவரையும்,
சந்தைக் குழு ஏதொன்றின் தலைவராகவோ துணைத்தலைவராகவோ
இருப்பதற்கு பெயர் குறித்து நியமிக்கலாம்.
(2) தலைவரும் துணைத்தலைவரும், சந்தைக்குழுவின் உறுப்பினர்களாக
இருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் என்பதோடு, சந்தைக் குழுவின்
உறுப்பினர்களாக வாக்களிக்கின்ற மற்றும் பிற உரிமைகளை பெற்றிருப்பார்கள்.
10. சந்தைக் குழுவின் தலைவர், துணைத் தலைவர் உறுப்பினர்கள்
ஆகியோருடைய பெயர்களை வெளியிடுதல்.-- 8 ஆம் பிரிவின்படியும் 9 ஆம்
பிரிவின்படியும், பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள சந்தைக் குழுவின்
உறுப்பினர்கள், தலைவர், துணைத்தலைவர் ஆகியோருடைய பெயர்கள் தமிழ்நாடு
அரசிதழில் அறிவிக்கையின் மூலம் அரசினால் வெளியிடப்படுதல் வேண்டும்.
11. சந்தைக் குழுவின் தலைவர், துணைத் தலைவர் உறுப்பினர்கள் ஆகியோரின்.
தகுதிக்கேடு.- நபர் ஒருவர் சந்தைக் குழுவொன்றின் தலைவராகவோ,
துணைத்தலைவராகவோ உறுப்பினரொருவராகவோ நியமிக்கப்படுவதற்கு மற்றும்
அத்தகையவராக இருந்து வருவதற்கு.-
(ஐ அவர் உரியவயதடையாதவராகவோ மனச் சீர்கேடுற்றவராகவோ
இருப்பாரானால்;
(b) அவர் நொடிப்புநிலையராக தீர்ப்பளிக்கப்படுவதற்கான
விண்ணப்பதாரொருவராக இருப்பாரானால் அல்லது விடுவிக்கப்பெறாத நொடுப்பு
நிலையராக இருப்பாரானால்;
(6) சட்டம் ஏதொன்றின்படியும் தண்டிக்கப்படத்தக்க ஒழுக்கக்கேட்டை
உள்ளடக்கியிருக்கின்ற குற்றம் எதற்காகவும், ஜராண்டிற்கும் அதற்கு
மேலாகவுமான சிறைத்தண்டனை விதித்து தண்டனைத்தீர்ப்பு
அளிக்கப்பட்டிருந்து அத்தகைய தண்டனை அறவு செய்யப்படாதிருந்து, அந்தத்
தண்டனை முடிவடைந்த தேதியிலிருந்து ஐந்தாண்டுக் காலஅளவு
கழிவடையாமல் இருப்பாரானால்:
(0) அந்தச் சந்தைக் குழுவிற்கு சரக்குகள் வழங்கப்படுவதற்காகவோ அந்தச்
சந்தைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் எவற்றையும் நிறைவேற்றித்
தருவதற்காகவோ அவருடைய வணிக அல்லது வியாபாரப் போக்கில் அச் சந்தைக்
குழுவுடன் அவரால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமொன்று இருந்து வருமானால்
மற்றும் எவ்வளவு காலம் இருந்து வருமோ அவ்வாறு காலம் வரையில்;
விளக்கம்.- இந்தக் கூறின் நோக்கங்களுக்காக எந்த நபரால் அச் சந்தைக்
குழுவுடன் ஒப்பந்தமொன்று செய்துகொள்ளப்பட்டிருக்கின்றதோ, அந்த நபரால்
அந்த ஒப்பந்தமானது. முழுவதுமாகவோ பகுதியாகவோ தன் பங்கிலான
ஒப்பந்தத்தை முழுவதுமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றவிடத்து, அந்தச்
சந்தைக்குழு, நிறைவேற்றியிருக்கவில்லை என்ற காரணத்தினால் மட்டுமே அந்த
ஒப்பந்தமானது, இருந்து வருவதாகக் கொள்ளப்படுதலாகாது.
(6) சந்தைக் குழுவிற்குக் கொடுபடவேண்டிய கட்டணம் எதனையுமோ பிற
தொகை எதனையுமோ செலுத்தத் தவறுவதன் மூலம் அது சம்பந்தமாக அவருக்கு
கேட்பு அல்லது அறிவிப்பு சார்வு செய்யப்பட்டிருக்கின்ற தேதியிலிருந்து
பதினைந்து நாட்களுக்கும் மேற்பட்டதொரு காலஅளவிற்கு அவர் செலுத்தாது
இருப்பாரானால்;
0. சந்தைக் குழுவின் சார்பா கவோ அதற்கெதிராகவோ சட்டத்
தொழிலாற்றுநராக அவர் வேலைக்கமர்த்தப்பட்டிருப்பாரானால்; அல்லது
(ஐ சந்தைக் குழு ஏதொன்றின் தலைமை நிருவாக அலுவலரல்லாத பிற
சம்பளம் பெறும் அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ அவர் இருப்பாரானால்,
தகுதிக்கேடுற்றவராவார்.
12. தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரது பதவிக்கால அளவு.-
(1) சந்தைக் குழுவொன்றின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் பதவி வழி
உறுப்பினர்களல்லாத பிற உறுப்பினர்களின் பதவிக்கால அளவானது, 10 ஆம்
பிரிவின்படி தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து
மூன்று ஆண்டுகளாகும்; மற்றும் அத்தகைய தலைவர், துணைத்தலைவர் மற்றும்
உறுப்பினர்கள் மற்றுமொரு மூன்று ஆண்டுக் கால அளவுக்கு பெயர்குறித்து
நியமிக்கப்படுவதற்கு தகுதியுடையவராவார்கள்:
வரம்புரை.- ஆனால், இந்த உட்பிரிவின் நோக்கங்களுக்காக, ஓராண்டீற்குக்
குறையாததொரு கால அளவிற்கு, தற்செயல் காலியிடமொன்றில் பதவி வகித்து
வந்துள்ள நபரொருவர், மூன்று ஆண்டுகளைக் கொண்டதொரு முழுக்கால
அளவுக்கு பதவி வகித்துவந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்:
வரம்புரை.- மேலும், தலைவரோ, துணைத் தலைவரோ, ஓர் உறுப்பினரோ,
அவரது பதவிக் கால அளவு முடிவடைந்திருந்தபோதிலும், அவருக்கு பதவியில்
அடுத்துவருபவர் பெயர் குறித்து நியமிக்கப்படும் வரையிலோ அல்லது மூன்று
திங்கள் கால அளவுக்கோ இவற்றில் எது முந்தி நிகழ்கிறதோ அதுவரையில், அச்
சந்தைக் குழுவின் தலைவராகவோ, துணைத் தலைவராகவோ அல்லது
நேர்விற்கேற்ப உறுப்பினரொருவராகவோ தொடர்ந்து பதவி வகித்துச் செயல்பட்டு
வருதல் வேண்டும்:
வரம்புரை.- அதோடு, அரசு அறிவிக்கையின் மூலம், சந்தைக்
குழுவொன்றின் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரின்
பதவிக் காலஅளவு முடிவடைவதன் பேரில் அல்லது அதற்கு முன்னர், போதிய
காரணத்திற்காக, ஒட்டு மொத்தமாக அத்தகைய சந்தைக் குழுவின் தலைவர்,
துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரின் பதவிக் கால அளவு, எந்த ஒரு
நேரத்திலும், ஆறு திங்களுக்கு மேற்படாமல் ஆனால் மொத்தத்தில் ஓராண்டிற்கு
மேற்படாமல் அதில் குறித்துரைக்கக்கூடிய கால அளவுக்கு நீட்டிக்கப்படுதல்
வேண்டும் என்று பணிக்கலாம்.
(2) சந்தைக் குழு ஒவ்வொன்றின் பதவி வழி உறுப்பினர் அல்லது 8 ஆம்
பிரிவில் () எனும் கூறின்படி பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள்
அல்லாத பிற தலைவரோ, துணைத்தலைவரோ அல்லது உறுப்பினரொருவரோ,
குறைவெண் வரம்பு இல்லாமையினால் நடத்தப்பட முடியாததாயிருந்த அச்சந்தைக்
குழுவின் கூட்டங்கள் உள்ளடங்கலாக உள்ள தொடர்ச்சியான மூன்று
கூட்டங்களுக்கு அவர் வராமலிருப்பாரானால், பதவி வகித்துவருவது
அற்றுப்போதல் வேண்டும்.
(b) (a) எனும் கூறின் நோக்கங்களுக்காக, தலைவரோ, துணைத்தலைவரோ,
உறுப்பினரொருவரோ வராமலிருந்த அச்சந்தைக் குழுவின் கூட்டம் எதுவும்,
அக்கூட்டத்தைப் பற்றிய உரிய அறிவிப்பு அவருக்குக்
கொடுக்கப்படவில்லையாயின், அவருக்கு எதிராக கணக்கிலெடுத்துக்
கொள்ளப்படுதலாகாது.
(3) நபரொருவர் (2) ஆம் உட்பிரிவின்படி தலைவராகவோ,
துணைத்தலைவராகவோ, ஓர் உறுப்பினராகவோ இருப்பது
அற்றுப்போயுள்ளவிடத்து, தலைமை நிருவாக அலுவலர், உடனடியாக அதனை
எழுத்துவடிவில் அத்தகைய நபருக்குத் தெரிவித்து, அரசிடம் அது குறித்து
அறிக்கை கொடுத்தல் வேண்டும்; அரசினர் தாமோ அல்லது அத்தகைய தகவலை
அத்தகைய நபர் பெற்றுக்கொண்ட பதினைந்து நாட்களுக்குள் அவரால் செய்து
கொள்ளப்பட்ட விண்ணப்பமொன்றின் பேரறிலோ, தலைவராகவோ, துணைத்
தலைவராகவோ அல்லது நேர்விற்கேற்ப உறுப்பினராகவோ அவரைப் பதவியில்
திரும்பவும் அமர்த்தலாம்:
வரம்புரை.- ஆனால், தலைவரோ, துணைத் தலைவரோ, ஓர் உறுப்பினரோ
அவருடைய பதவிக்கால அளவின் போது, இரு முறைகளுக்கு மேல் அவ்வாறு
மீண்டும் பதவியில் அமர்த்தப்படுதலாகாது.
(4) சந்தைக் குழுத் தலைவரின் அல்லது துணைத் தலைவரின் அல்லது
உறுப்பினர் எவரொருவரின் பதவியில் உள்ள தற்செயல் காலியிடம்
ஒவ்வொன்றும், வழக்கமாக அக்காலியிடம் ஏற்பட்ட தேதியிலிருந்து மூன்று
திங்களுக்குள், வகுத்துரைக்கப்பட்ட முறையில் பெயர் குறித்துச் செய்யப்படும்
புதியதொரு நியமனத்தின் மூலம் நிரப்பப்படுதல் வேண்டும்:
வரம்புரை.- ஆனால், எந்தத் தலைவரின் அல்லது துணைத் தலைவரின்.
அல்லது உறுப்பினரின் பதவியில் தற்செயல் காலியிடம் ஏற்பட்டுள்ளதோ, அந்தத்
தலைவரின் அல்லது துணைத் தலைவரின் அல்லது உறுப்பினரின் பதவிக்
காலஅளவு முடிவடைவதற்கு முன்னர் உள்ள நான்கு திங்களுக்குள் தற்செயல்
காலியிடம் எதுவும் நிரப்பப்படுதலாகாது.
(5) (4) ஆம் உட்பிரிவின்படி தற்செயல் காலியிடமொன்று
நிரப்பப்படுவதற்காக பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ள தலைவரோ, துணைத்
தலைவரோ, உறுப்பினரோ, எந்தத் தலைவரின் அல்லது துணைத் தலைவரின்
அல்லது உறுப்பினரின் இடத்தில் அவர் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளாரோ
அந்தத் தலைவர் அல்லது துணைத் தலைவர் அல்லது உறுப்பினர் காலியிடம்
ஏற்படாதிருந்தால் எவ்வளவு கால அளவுக்குப் பதவி வகித்திருக்கக் கூடுமோ
அவ்வளவு காலஅளவுக்கு மட்டுமே பதவி வகித்து வருதல் வேண்டும்.
விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக "தற்செயல் காலியிடம்"
என்றால், காலக் கழிவினால் அல்லாமல் மற்றப்படி ஏற்படுகின்ற ஒரு தற்செயல்
காலியிடம் என்று பொருள்படும்.
(6) உறுப்பினரொருவராக தன்னால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ள நபர்
எவரும், பதவிக்கு தகுதியற்றவராக அவர் தம்மைக் காட்டிக்கொண்டுள்ளார்
என்றோ அவர் பதவியிலிருந்து விலக்கப்படுவதை உகந்ததாக்குகின்ற தவறான
நடத்தை அல்லது கவனமின்மை என்னும் குற்றத்தை அவர் புரிந்துள்ளார் என்றோ
அரசுக்கு எந்தச் சமயத்திலும் தோன்றுமானால், அரசு, அக்கருத்துக்கு எதிராக தமது
தரப்பை எடுத்துரைப்பதற்கு அவருக்கு வாய்ப்பொன்றைக் கொடுத்த பின்னர்,
அறிவிக்கையின் மூலமாக, அத்தகைய நபரைப் பதவியிலிருந்து விலக்கலாம்.
13. ஒரு சில நேர்வுகளில் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ள நபர்கள் உறுப்பினராக
இருப்பது அற்றுப்போதல்.- குறிப்பிட்ட அமைப்பொன்றின் உறுப்பினரொருவராக
அல்லது 21 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி உரிமமொன்றை
வைத்திருப்பவராக தம் தகுதியில் 8 ஆம் பிரிவின் (ஐ எனும் கூறின்படியோ (b)
எனும் கூறின்படியோ பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ள நபர் எவரும், மூன்று
திங்களுக்கு மேற்பட்டதொரு கால அளவுக்கு அவர் அந்த அமைப்பின்
உறுப்பினரொருவராக இருப்பது அற்றுப்போகுமானால் அல்லது நேர்விற்கேற்ப,
அவர் அந்த உரிமத்தை வைத்திருப்பது அற்றுப்போகுமானால், அவர் சந்தைக்
குழுவின் உறுப்பினராக இருப்பதும் அற்றுப்போதல் வேண்டும்.
14. சந்தைக் குழு உறுப்பினர்களின் பதவி விலகல்.- 8 ஆம் பிரிவின் (ஐ) எனும்
கூறின்படியோ, (b) எனும் கூறின்படியோ, (௦) எனும் கூறின்படியோ பெயர் குறித்து
நியமிக்கப்பட்டுள்ள சந்தைக் குழுவின் உறுப்பினர் எவரும், தலைமை நிருவாக
அலுவலரிடம் எழுத்து வடிவில் தமது பதவி விலகலைக் கொடுப்பதன்மூலம், தமது
பதவியிலிருந்து விலகிக்கொள்ளலாம்; மற்றும் அத்தகைய பதவி விலகலானது,
தலைமை நிருவாக அலுவலரால் அது பெறப்பட்டவுடன் நடைமுறைக்கு வருதல்
வேண்டும்.
15. சந்தைக் குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் பதவி விலகல்.-
சந்தைக் குழுவொன்றின் தலைவரொருவரோஅல்லது துணைத் தலைவரோ, தம்
பதவி விலகலை எழுத்துருவில் அரசிடம் அளிப்பதன் மூலம் தனது
பதவியிலிருந்து விலகலாம்; மற்றும் அப்பதவி விலகலானது, அரசுக்கு
வரப்பெற்றதன் பேரில், செயல்விளைவு கொள்வதாக இருத்தல் வேண்டும்.
16. சந்தைக் குழுவொன்றின் தலைவரையும் துணைத் தலைவரையும் நீக்குதல்.-
ஒரு சந்தைக் குழுவின் தலைவர் அல்லது துணைத் தலைவர் தனது பதவிக்குத்
தான் தகுந்தவரல்லர் எனத் தானே காண்பித்துக்கொண்டுள்ளார் என்று எந்தத்
தருணத்திலும் அரசிற்குத் தோன்றுமாயின், அல்லது தனது பதவி நக்கலை
உகந்ததாக்குகிற தவறான நடத்தை அல்லது அசட்டை எனும் குற்றம்
புரிந்துள்ளவராயின், அரசானது, அத்தகைய கருத்துருவிற்கு எதிராகத் தம்
தரப்பினை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பொன்றினை நல்கியதற்குப் பின்பு,
அறிவிக்கையின் வாயிலாக, அந்தத் தலைவரையோ அல்லது நேர்விற்கேற்ப,
துணைத் தலைவரையோ பதவியிலிருந்து நீக்கலாம்.
17. சந்தைக் குழுவின் கூட்டங்கள்.- சந்தைக் குழுவின் கூட்டங்கள்,
குறைவெண் வரம்பு மற்றும் நடைமுறையானது, இதன்பொருட்டு செய்யப்பட்ட
துணைவிதிகளுக்கிணங்கிய வகையில் ஒழுங்குமுறைப்படுத்தப்படுதல் வேண்டும்.
18. சந்தைகளை நிறுவுதல்.- ஒவ்வொரு சந்தைக் குழுவும், குறித்துரைக்கப்பட்ட
வணிகப் பொருளின் மொத்த விற்பனை வணிகத்திற்காக, அரசானது, அவ்வப்போது
பணிக்கக்கூடிய வசதிகளுக்கு வகை செய்கின்ற எண்ணிக்கை கொண்ட
சந்தைகளைச் சந்தைப் பரப்பிடத்தில் நிறுவலாம்.
19. தனிச் சந்தைகளை நிறுவுதல்- 18 ஆம் பிரிவில் என்ன
அடங்கியிருந்தபோதிலும், புத்தம் புதிய பழங்கள், பசுமையான காய்கறிகள், வாடா
மலர்கள் அல்லது பிற அழுகு பொருட்கள் போன்றதான குறித்துரைக்கப்பட்ட
வணிகப் பொருள் எதனின், மொத்த விற்பனை வணிகத்தின் தனித்துவத்
தன்மையின் காரணமாக, அத்தகைய சந்தைப் பரப்பிடத்தில் அத்தகைய
குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருளின் மொத்த விற்பனை வணிகத்தை
திறமையாக ஒழுங்கு முறைப்படுத்துவதை உறுதி செய்வது உகந்ததென சந்தைக்
குழுவானது மனநிறைவுறுமாயின், சந்தைக் குழுவானது அத்தகைய சந்தைப்
பரப்பிடத்தில் அத்தகைய குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருளுக்காக, தனிச்
சந்தையை நிறுவலாம்.
அத்தியாயம் ॥
உரிமத்தின்படி உள்ள சந்தைப் பரப்பிடத்தில் குறித்துரைக்கப்பட்ட
வணிகப்பொருள் குறித்து மொத்த விற்பனை வணிகர்களையும் மொத்த விற்பனை
வணிகத்தினையும் பதிவு செய்தல்.
20. மொத்த வியாபாரிகளைப் பதிவு செய்தல். (1) ஒவ்வொரு சந்தைக் குழுவின்
தலைமை நிருவாக அலுவலரும், மொத்த விற்பனை வணிகர்களைப் பதிவு
செய்வதற்கான ஒவ்வொரு குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருளுக்கும் ஒரு
பதிவேட்டினை வகுத்துரைக்கப்படக்கூடிய படிவத்திலும், முறையிலும் பேணி
வருதல் வேண்டும்.
(2) குறித்துரைக்கப்பட்ட வணிகப்பொருள் எதற்குமான சந்தைப்
பரப்பிடமொன்றாக பரப்பிடம் எதுவும் விளம்பப்பட்டதற்குப் பின்பு தலைமை
நிருவாக அலுவலரானவர், உள்ளாட்சிப் பரப்பிடத்தில் உள்ள அத்தகைய
குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருளின் மொத்த விற்பனை வணிகத்தில்
மும்முரமாக ஈடுபட்டுள்ள மொத்த விற்பனை வணிகர்கள் அனைவரையும், சந்தைக்
குழுவில் அவர்களை பதிவு செய்து கொள்ளுமாறு விண்ணப்பிப்பதற்கு அழைப்பு
விடுகின்ற அறிவிப்பொன்றை வகுத்துரைக்கப்படக் கூடிய படிவத்தில் பிறப்பித்து
அத்தகைய முறையில் அதை வெளியிடுதலும் வேண்டும். 4 ஆம் பிரிவின் (1) ஆம்
உட்பிரிவின்படியான அறிவிக்கையொன்று வெளியிடப்பட்ட தேதிக்கு உடனடி
முன்பாக, உள்ளாட்சிப் பரப்பிடத்தில் அத்தகைய குறித்துரைக்கப்பட்ட மொத்த
விற்பனை வணிகத்தில் மும்முரமாக விண்ணப்பதாரர்கள் ஈடுபட்டுள்ளதாக
சாட்சியமளிப்பதற்கு விண்ணப்பதாரர்களை அழைக்கின்ற அத்தகைய
விண்ணப்பங்கள், வகுத்துரைக்கப்படக்கூடிய காலஅளவிற்குள்ளாக
வரவேற்கப்படுதல் வேண்டும்.
(3) சந்தைப் பரப்பிடம் எதிலும், அத்தகைய குறித்துரைக்கப்பட்ட வணிகப்
பொருளின் மொத்த விற்பனை வணிகத்தைச் செய்வதற்குக் கருதுகிற (2) ஆம்
உட்பிரிவில் சுட்டப்பட்ட நபர்களல்லாத பிற ஒவ்வொரு நபரும் கூட, அவரது
பெயரைச் சந்தைக் குழுவில் பதிவு செய்வதற்குத் தலைமை நிருவாக
அலுவலருக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.
(4) அத்தகைய பதிவிற்கான விண்ணப்பமானது, வகுத்துரைக்கப்படக்கூடிய
படிவத்திலிருத்தலும், அத்தகைய கட்டணங்கள் மற்றும் ஆவணங்களுடன் சேர்த்து
அனுப்பப்படுதலும் வேண்டும்.
(5) தம்மால் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும், முதன்மை
நிருவாக அலுவலரானவர், பரிசீலித்தல் வேண்டும். தான் தக்கதெனக் கருதும்
மேலுமான அத்தகைய விசாரணை ஏதேனுமிருப்பின் அதனைச் செய்ததன் பேரில்,
விண்ணப்பதாரரொருவர், மொத்த விற்பனை வணிகத்தில் மும்முரமாக
ஈடுபட்டிருந்தார் அல்லது அதனைச் செய்யக் கருதியிருந்தார் என
மனநிறைவுறுவாரானால், தம்மால் (1) ஆம் பிரிவின்படி பேணிவரப்படும்
பதிவேட்டில், அவரது பெயரைச் சேர்த்தல் வேண்டும்; மற்றும் அதன்படியே
விண்ணப்பதாரருக்கு அதனை அறிவித்தல் வேண்டும். அவ்வாறான ஒவ்வொரு
பதிவு பெற்ற மொத்த விற்பனை வணிகரும், 21 ஆம் பிரிவில் வகை:
செய்யப்பட்டவாறு உரிமமொன்றைப் பெறுவதற்கு உரிமைத் தகுதியுடையவராவார்.
(6) அதற்கென விண்ணப்பித்துள்ள நபரெவரின் பெயரையும் பதிவு
செய்வதற்கு தலைமை நிருவாக அலுவலரானவர் மறுப்பாரானால், அத்தகைய
நபருக்கு அவர் தம் முடிவினை அதற்கான காரணங்களுடன் எழுத்துருவில்
தெரிவித்தல் வேண்டும்:
வரம்புரை: ஆனால், தம் தரப்பினைக் கேட்பதற்கு, நியாயமான
வாய்ப்பொன்றினை தொடர்புள்ள நபருக்கு வழங்கினாலன்றி, இந்தப்
பிரிவின்படியான ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல் ஆகாது.
(7) தலைமை நிருவாக அலுவலர் அவருக்குச் செய்யப்பட்ட
விண்ணப்பத்தின், அல்லது அவரால் பெறப்பட்ட தகவலின் பேரில், அல்லது தன்
முயற்சியின் பேரில், தாம் பொருத்தமெனக் கருதும் விசாரணைக்குப் பின்பு,
பதிவேடு எதிலுமுள்ள பதிவு எதனையும் விவரம் எதுவும் தவறாக அல்லது
குறைபாடாக இருக்கிறதென்றோ அல்லது அத்தகைய குறித்துரைக்கப்பட்ட
வணிகப் பொருளின் மொத்த விற்பனை வணிகத்தைச் செய்வதை, தொடர்புள்ள
நபர் நிறுத்தியிருந்தார் என்பதன் காரணமாக விட்டுவிடப்படுதல் வேண்டுமென்றோ
மனநிறைவுறுவாரானால், பாதிக்கப்பட்ட நபரொருவருக்கு, அவர் தம் தரப்பினைக்
கேட்பதற்கு நியாயமான வாய்ப்பொன்றினை நல்கியதற்குப் பின்பு,
அப்பதிவேட்டிலுள்ள பதிவு எதனையும் திருத்தலாம் அல்லது விட்டுவிடலாம்.
(8) பதிவு செய்தலுக்கு மறுத்தல் அல்லது பதிவேட்டில் தனது பெயரின் பதிவு
எதிலும் திருத்தம் செய்தல் அல்லது எதனையும் விட்டுவிடுதல் ஆகியவற்றைப்
பொறுத்த தலைமை நிருவாக அலுவலரின் முடிவு எதனாலும் குறையுற்ற நபர்
எவரும், வகுத்துரைக்கப்பட்ட கால அளவிற்குள், உள்ளூர் அதிகார அமைப்பிற்கு
எழுத்து மூலமாக மேல்முறையீடொன்றைச் செய்து கொள்ளலாம்.
(9) அந்தப் பதிவு செய்தலைப் பொறுத்து, தலைமை நிருவாக அலுவலரின்.
முடிவு, மற்றும் அந்த முடிவிற்கு எதிராக மேல்முறையிடொன்று செய்து
கொள்ளப்பட்டிருப்பின் உள்ளாட்சி அதிகார அமைப்பின் முடிவு, அறுதியானதாக
இருத்தல் வேண்டும்.
21. சந்தைப் பரப்பிடத்தில் வகுத்துரைக்கப்பட்ட பொருளின் மொத்த விற்பனை
வணிகத்தை உரிமத்தின் மூலம் ஒழுங்குமுறைப்படுத்துதல்.- (1) (இதன் பின்பு
இந்தப் பிரிவில் அறிவிக்கை செய்யப்பட்ட தேதி எனக்குறிப்பிடுவதான)
அறிவிக்கையொன்றின் வாயிலாக, உள்ளாட்சி அதிகார அமைப்பினால்
குறித்துரைக்கப்பட்ட தேதியிலும் அதற்குப் பின்னரும் நபரெவரும், சந்தைப்
பரப்பிடமொன்றிற்குள்.,-
(ஐ குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருள் எதிலும் மொத்த விற்பனை
வணிகத்தை அமைத்தல், நிறுவுதல் அல்லது பயன்படுத்துதல் அல்லது தொடருதல்
அல்லது தொடருதலை அனுமதித்தல் ஆகாது; அல்லது
(௦) குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருளின் மொத்த விற்பனை வணிகம்
தொடர்பாக எடையிடுபவர், அளவாளர், வணிகர், கிடங்கு பாதுகாப்பாளர், ஆகியோர்
போன்றோ அல்லது ஏதேனும் பிற நிலையிலோ செயற்படுதல் ஆகாது;
(6) குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருள் எதிலும், மொத்த விற்பனை
வணிகம் எதனையும் நடத்திவரும் பொருட்டு, இந்தச் சட்டத்தின்படி சந்தைக்
குழுவால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமமொன்றின்படி தவிர அல்லது எந்த
நிபந்தனைகளின்கீழ் அவ்வுரிமம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதோ
அவற்றிற்கிணங்கிய வகையில் தவிர, சந்தை அல்லது நேர்விற்கேற்ப, தனிச்
சந்தையில்லாத பிற சந்தைப் பரப்பிடத்தில் எந்த ஒரு இடத்திலும்
குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருள் எதிலும் மொத்த விற்பனை வணிகம்
எதனையும் நடத்திவருதல் ஆகாது;
வரம்புரை: ஆனால்,-
(i) உரிமமொன்றினை வழங்குகின்ற, புதுப்பிக்கின்ற வழங்குவதற்கு
மறுக்கின்ற அல்லது புதுப்பித்தலுக்கு மறுக்கின்ற, இரத்து செய்கின்ற அல்லது
தற்காலிகமாக நிறுத்திவைக்கின்ற ஆணைகள் அனைத்தும் எழுத்துருவில்
இருத்தல் வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட நபருக்கு அவருடைய வழக்கை
எடுத்துரைப்பதற்கு போதுமானகதொரு வாய்ப்பு அளிக்கப்படாமல்,
உரிமமொன்றினை வழங்குவதற்கு மறுக்கின்ற அல்லது புதுப்பித்தலுக்கு
மறுக்கின்ற அல்லது இத்து செய்கின்ற அல்லது தற்காலிகமாக
நிறுத்திவைக்கின்ற ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல் ஆகாது;
(i) உரிமமொன்றினை அவ்வாறு மறுத்தல், இரத்து செய்தல், அல்லது
தற்காலிகமாக நிறுத்தி வைத்தலுக்கான காரணங்களை எழுத்துருவில் பதிவு
செய்தல் வேண்டும்;
00% பதிவு பெற்ற மொத்த விற்பனை வணிகர் எவருக்கும் தொடக்க நிலை
உரிமமொன்றினை வழங்குவதற்கு சந்தைக் குழு மறுத்தல் ஆகாது.
(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், சேமிப்பிற்காக ஒப்புக்கொள்ளப்பட்ட
ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருள் எதனையும் சேமித்துவைத்தல்,
எடை போடுதல் அல்லது அளவிடுதல் ஆகியவற்றைப் பொறுத்தமட்டில், மைய
அல்லது மாநில அரசால் நிறுவப்பட்டு அல்லது பராமரிக்கப்பட்டு வரப்படுகின்ற
சேமிப்புக் கிடங்குக் கழகமொன்றிற்கோ அல்லது 1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு
சேமிப்புக் கிடங்குகள் சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் XV/1951) உரிமம் பெற்ற
சேமிப்புக் கிடங்குப் பாதுகாப்பாளரொருவருக்கோ பொருந்துதல் ஆகாது.
(3) (8) நபரெவருடைய உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்து மற்றும் அவ்வாறு
ரத்து செய்யப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுக்கால அளவு முடிவடையாமல்
இருக்கிறதோ; அல்லது
(௦) நபரெவர் குற்றச் செயலொன்றினைப் புரிந்துள்ளதாக தண்டனைத் தீர்ப்பு
அளிக்கப்பட்டிருந்து அந்தக் குற்றச்செயலானது அவருடைய தொழில் அல்லது
வணிகர் என்ற முறையில் அவருடைய தொழில் நாணயம் தொடர்பாக
இருக்கின்றதோ, அல்லது
(6) நபரொருவர், எந்த நபருக்கு (ஐ அல்லது (௦) எனும் கூறின்படி உரிமம்
வழங்கப்படுதல் மறுக்கப்படக்கூடியதாகவுள்ளதோ அந்த நபருக்கு பெயரிரவலராக
அல்லது அந்த நபருடன் கூட்டாளியாக இருக்கின்றார் என, சந்தைக் குழுவானது
தான் போதுமானதென கருதக்கூடிய விசாரணையினை நடத்திய பின்பு தெளிவுறக்
காணுகிறதோ
அந்த நபருக்கு (1) ஆம் உட்பிரிவின்கீழ் உரிமமொன்று வழங்கப்படுவது
மறுக்கப்படலாம்.
(4) ஒரு சந்தைக் குழுவானது இதன்பொருட்டு தனக்கு குறிப்பீடு எதுவும்
சாட்டியனுப்பப்பட்டதன் பேறிலோ அல்லது மற்றபடியோ,-
(ஐ (1) ஆம் உட்பிரிவின்கீழ் வழங்கப்பட்ட உரிமமானது, திரித்துக்
கூறுவதன் வாயிலாகவோ அல்லது மோசடியின் பேரிலோ பெறப்பட்டுள்ளது
என்றோ, அல்லது
(௦) உரிமத்தை வைத்திருப்பவர், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளில்
அல்லது இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அல்லது துணை
விதிகள் அல்லது உரிமத்திற்கான நிபந்தனைகளில் எதனையும் மீறியுள்ளார்
என்றோ அல்லது இணங்கி நடப்பதற்குத் தவறியுள்ளார் என்றோ,
தெளிவுறக் காணுமாயின், உரிமத்தை வைத்திருப்பவர் இந்தச் சட்டத்தின்படி
உள்ளாகக்கூடிய தண்டம் எதற்கும் குந்தகமின்றி, சந்தைக் குழுவானது, இதன்
பொருட்டு செய்யப்படக்கூடிய விதிகளுக்குட்பட்டு, உரிமத்தினை ரத்து செய்தல்
அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைத்தலுக்கெதிராக வழக்கை எடுத்துரைக்க
நியாயமான வாய்ப்பினைக் கொடுத்த பின்னர், உரிமத்தை ரத்து செய்யலாம் அல்லது
தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.
(5) (ஐ உரிமம் வழங்குவதற்கு மறுக்கின்ற; அல்லது
(௦) உரிமத்தை ரத்து செய்கின்ற அல்லது தற்காலிகமாக நிறுத்திவைக்கின்ற
சந்தைக் குழுவின் முடிவால் குறையுற்ற நபர் எவரும், வகுத்துரைக்கப்படக்கூடிய
காலஅளவிற்குள், உள்ளாட்சி அதிகாரஅமைப்பிற்கு மேல் முறையீடு செய்யலாம்
மற்றும் அந்த உள்ளாட்சி அதிகாரஅமைப்பானது, அந்நேர்வில் தான்
பொருத்தமானதென்று கருதக்கூடியஆணையை பிறப்பிக்கலாம்.
(6) (1) ஆம் உட்பிரிவின்படி வழங்கப்பட்ட உரிமமானது, மூன்று ஆண்டு
காலஅளவிற்குச் செல்லத்தக்கதாக இருத்தல் வேண்டும்; மற்றும் அவ்வப்போது
புதுப்பித்து வரப்படலாம் மற்றும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள், கூடிய
வரையில், உரிமம் வழங்கப்படுதலுக்கு அவை பொருந்தி வருவன போன்றே உரிமம்
புதுப்பிக்கப்படுதலுக்கும் பொருந்திவருதல் வேண்டும்.
(7) (1) ஆம் உட்பிரிவின்படி உரிமம் வழங்கப்பெற்ற நபர் ஒவ்வொருவரும்,
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கும், இந்தச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட
விதிகள் மற்றும் துணை விதிகளுக்கும், உரிமத்தில் வகுத்துரைக்கப்பட்டுள்ள
நிபந்தனைகளுக்கும் இணங்கி நடத்தல் வேண்டும்.
(8) (a) அப்போது நடைமுறையிலுள்ள சட்டம் எதிலும் என்ன
அடங்கியிருந்தபோதிலும், சந்தைப் பகுதியின்மீது அதிகாரவரம்பு
பெற்றிருக்கின்றதும் 1949 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தின்படி
(தமிழ்நாடு சட்டம் 074919) அமைத்துருவாக்கப்பட்டதுமான சென்னை மாநகராட்சி
உள்ளடங்கலான உள்ளூர் அதிகாரஅமைப்பு எதுவும், அறிவிக்கை செய்யப்பட்ட
தேதியிலிருந்தும் அதற்கு பின்னரும், சந்தையாகவுள்ள சந்தைப் பரப்பிடம்
உள்ளடங்கலான உள்ளாட்சிப் பரப்பிடத்தில் உள்ள இடமெதனையும்,
குறித்துரைக்க்ப்பட்ட வணிகப்பொருள்: எதனையும் பொறுத்தமட்டில்
சந்தையொன்றாகவோ அல்லது மொத்த விற்பனை வணிகத்தினை
நடத்திவருவதற்கான இடமொன்றாகவோ நிறுவப்படுதல், அதிகாரமளிக்கப்படுதல்
அல்லது தொடரப்படுதல் அல்லது நிறுவப்படுவதற்கு, அதிகாரமளிக்கப்படுவதற்கு
அல்லது தொடரப்படுவதற்கு அனுமதியளிக்கப்படுதல் ஆகாது; மற்றும் உள்ளாட்சி
அதிகாரஅமைப்பினால் ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதி அல்லது உரிமமானது,
அறிவிக்கை செய்யப்பட்ட தேதியில் ரத்து செய்யப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
(௦) அந்த அனுமதி அல்லது உரிமம் ரத்து செய்யப்படுவதன் பேரில் (8) எனும்
கூறில் குறித்துரைக்கப்பட்ட இடமொன்றில் குறித்துரைக்கப்பட்ட
வணிகப்பொருள் எதனையும் பொறுத்து, மொத்த விற்பனை வணிகத்தை அந்த
அனுமதி அல்லது உரிமத்தை பெற்றிருப்பவர் நிறுத்துவதற்கு மறுப்பாரேயானால்,
சந்தைக் குழுவானது, எழுத்துருவிலான அறிவிப்பின் வாயிலாக, ஒரு
திங்களுக்குள்ளாகவோஅல்லது அதில் குறித்துரைக்கப்படக்கூடிய மேலுமொரு
கால அளவிற்குள்ளாகவோ அத்தகைய இடத்தில் மொத்த விற்பனை வணிகத்தை
நடத்திவருவதனை நிறுத்திவிடுமாறு அந்த நபரைப் பணிக்கலாம்.
(6) (b) எனும் கூறின் கீழ் பிறப்பிக்கப்பட்ட பணிப்புரை எதற்கும் இணங்கி
நடக்காமல் இருப்பின், அறிவிப்பில் குறித்துரைக்கப்பட்ட கால அளவிற்குள்,
சந்தைக் குழுவானது, இந்தப் பிரிவின் வகைமுறைகளை மீறுவதற்காக
விதிக்கப்படக்கூடிய தண்டம் எதற்கும் குந்தகமின்றி, அந்தப் பணிப்புரையை அதன்
சொந்த செலவில் நடைமுறைப்படுத்தி பணம் கட்டத் தவறுபவரிடமிருந்து
நிலவருவாய் நிலுவையை வசூலிக்கும் அதே முறையில், அந்தத் தொகையை
வசூலிக்கலாம்.
(0) ஏதேனும் அனுமதி அல்லது உரிமம் எதுவும் ரத்து செய்ய்ப்படுவதன்
பேரில், அந்த அனுமதி அல்லது உரிமத்தை வைத்திருப்பவர், இழப்பீடு எதனையும்
கோரிப் பெறுவதற்கு உரிமைத்தகுதியுடைவராதல் ஆகாது. ஆனால், அனுமதி
அல்லது உரிமத்தில் முடிவு பெறாத கால அளவின் விதத்திற்கேற்ப அவரால்
செலுத்தப்பட்ட கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தொகையைப்
பெறுவதற்கான உரிமைக்கோரிக்கைக்கு உரிமைத்தகுதியுடைவராவார்.
22. சந்தைக் குழுவானது சந்தையில் உள்ள மொத்த விற்பனை வணிகர்களின்
மாற்று வணிக வசதிகளுக்கு வகை செய்தல் வேண்டும்.- (1) பதிவு செய்த மொத்த
விற்பனை வணிகர் ஒவ்வொருவரும், சந்தையில் தமது மொத்த விற்பனை
வணிகத்தொழிலைச் செய்வதற்கு இயல்விக்கும் வகையில், சந்தைக்குழு
தீர்மானிக்கக்கூடிய தன்மையிலும் அளவிலும் வரையறைகள் மற்றும்
நிபந்தனைகளின் பேரிலும், சந்தையில் அது தீர்மானிக்கக்கூடிய இடங்களில், தக்க
மாற்று வசதிகளுக்குச் சந்தைக் குழுவானது வகை செய்தல் வேண்டும் என்பது
சந்தைக் குழுவைச் சார்ந்த கடப்பாடாகும்:
வரம்புரை: ஆனால், அத்தகைய நபரெவரும் வகுத்துரைக்கப்படக்கூடிய கால
அளவிற்குள்ளாக அவ்வாறு வகை செய்யப்பட்ட மாற்று வசதிகளைப்
பயன்படுத்திக்கொள்ள தவறுவாராயின், அத்தகைய வசதிகளுக்கு வகை
செய்வதற்கான சந்தைக் குழுவின் கடப்பாடானது முடிவுற்றுப்போகும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படி சந்தைக் குழுவினால் செய்யப்பட்ட எதனாலும்
குறையுள்ள பதிவுபெற்ற மொத்த விற்பனை வணிகர் எவரும்,
வகுத்துரைக்கப்படக்கூடிய கால அளவிற்குள்ளாக, உள்ளாட்சி
அதிகாரஅமைப்பிற்கு மேல்முறையீடு செய்து கொள்ளலாம்; மற்றும் அத்தகைய
மேல்முறையீட்டின் மீதான அந்த உள்ளாட்சி அதிகார அமைப்பின் ஆணையானது
அறுதியானதாகும்:
வரம்புரை: ஆனால், மொத்த விற்பனை வணிகர் எவருக்கும் எதிரான
அத்தகைய மேல்முறையீட்டின் பேரில் அவர் தம் தரப்பினைக் கேட்பதற்கு
நியாயமான வாய்ப்பொன்றினை நல்காமல், உள்ளாட்சி அதிகாரஅமைப்பானது
ஆணை எதனையும் பிறப்பித்தலாகாது.
அத்தியாயம் IV
சந்தைக்குழுவின் அதிகாரங்களும் கடமைகளும்.
23. சந்தைக் குழுவின் அதிகாரங்களும் கடமைகளும்.- இந்தச் சட்டத்தினாலோ
அதன்படியோ, ஒரு சந்தைக் குழுவிடம் அளிக்கப்பட்ட அதிகாரங்களின் மற்றும்
அதன் மீது விதிக்கப்பட்ட கடமைகளின் பொதுப்பாங்கிற்குக் குந்தகமின்றி,
சந்தைக் குழுவானது,
(1) சந்தைப் பரப்பிடத்திலுள்ள கட்டடங்கள் அல்லது கட்டமைப்புகளைக்
கட்டமைத்துருவாக்கலாம், பேணிவரலாம் மற்றும் மேலாண்மை செய்து வரலாம்.
(2) சந்தையில் தேவைப்படக்கூடிய கருவிகள் அல்லது சாதனங்கள்:
எதற்கும் வகைசெய்யலாம், எதனையும் பேணிவரலாம் மற்றும் மேலாண்மை செய்து
வரலாம்.
(3) சந்தையில், மொத்த விற்பனை வணிகத்தொழிலை நடத்தி
வருவதற்கான உரிமங்களை வழங்கி வரலாம், புதுப்பித்து வரலாம், மறுக்கலாம்,
தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம்.
(4) சந்தைப் பரப்பிடத்திற்குள்ளாக வாகனப் போக்குவரத்து
நுழைவுப்பாதையினை ஒழுங்குமுறைப்படுத்தலாம் மற்றும் தேவைப்படக்கூடிய
இடத்தில் அல்லது இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைக்கலாம் அல்லது
வேகத்தடைக்கரைகளை எழுப்பலாம் அல்லது இரண்டினையும் செய்யலாம்.
(5) குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருள்களை விளைவித்தல், விற்பனை
செய்தல், சேமித்தல், பதனஞ்செய்தல், விலை விவரம், விற்பனை நிலவரம்
ஆகியவற்றைப் பொறுத்த வரையிலான செய்திகளைச் சேகரிக்கலாம் அல்லது
பேணிவரலாம், பரவலாக அனுப்பிவைக்கலாம் மற்றும் வழங்கலாம்.
(6) உரிமதாரர்களுக்கும் மற்றும் சந்தைக்கு வருகின்ற பிற நபர்களுக்கும்
போக்குவரத்து, தரநிலை நிர்ணயித்தல், எடையிடுதல், சிற்றுண்டிச் சாலைகள்,
பெட்ரோல் பம்புகள் மற்றும் சந்தைக்கு வருகின்ற நபர்களுக்குத் தற்காலிகமான
இருப்பிட வசதி ஆகியவற்றிற்கு வகை செய்யலாம்.
(7) இந்தச் சட்டத்தின், அதன்கீழ்ச் செய்யப்பட்ட விதிகளின் துணை
விதிகளின் வகைமுறைகளையும், மற்றும் இந்தச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட
உரிமங்களின் நிபந்தனைகளையும் செயல்முறைப்படுத்தலாம், மற்றும்
(8) சந்தையைப் பேணிவருகின்ற அல்லது மேலாண்மை செய்துவருகின்ற
நோக்கத்திற்காக அவ்வப்போது, தேவையானதாகவோ அல்லது உகந்ததாகவோ
இருக்கக்கூடிய பணிகளையும் கடமைகளையும் ஆற்றிவரலாம்.
24. சந்தைக் குழுவிற்கு கட்டணங்களை விதிப்பதற்குள்ள அதிகாரம்.- (1) (a) 25
ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்குட்பட்டு, விற்பனைச்
சாவடிகள், அலுவலகங்கள், கடைகள், கிடங்குகள் மற்றும் சந்தைப்
பரப்பிடத்திலுள்ள பிற திறந்தவெளிகள் ஆகியவற்றுக்கும்,
(b) உரிமங்களை வழங்குவதற்கும் புதுப்பிப்பதற்கும்,
(6) சந்தைக் குழுவினால் வகைசெய்யப்பட்ட அல்லது ஏற்பாடு செய்யப்பட்ட
பொதுவான பணிகள், வசதிகள், வாய்ப்புதலன்கள் ஆகியவற்றுக்கும்,
(0) சந்தைப் பரப்பிடத்திற்குள்ளாக வருகிற ஊர்திகள் மற்றும் பொருள்களின்
நுழைவிற்கும்,
(6) வேறெந்தப் பொருளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட
வேண்டுமோ அல்லது வசூலிக்கப்படக்கூடமோ அப்பொருள் எதற்கும்
துணை விதிகளில் விதிக்கப்பட்ட முறையிலும், வீதங்களிலும் கட்டணங்களை
விதிப்பதற்கும், வசூலிப்பதற்கும் ஒரு சந்தைக் குழுவானது தகுதிவாய்ந்ததாக
இருத்தல் வேண்டும்.
(2) இந்தச் சட்டத்தின்படி செலுத்தப்படத்தக்க கட்டணம் அல்லது பிற
தொகையைத் தீர்மானிக்கின்ற ஆணையானது, குற்றவழக்கு அல்லது பிற
நடவடிக்கைகள் எதிலுமோ முடிவானகதொரு சாட்சியமாக இருத்தல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின்டிபடி விதிக்கப்பட்ட அல்லது வசூலிக்கப்பட்ட
கட்டணம் அல்லது பிற தொகை எதனின் செல்லுந்தன்மையானது, அல்லது
அவ்வாறு கணிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட கட்டணம் அல்லது பிற தொகை:
எதற்குமான நபரெவரின் கடப்பாடானது, இந்தச் சட்டத்தின்படியாகவோ அல்லது
பிறவாறாகவோ குற்றவியல் நீதிமன்றம் எதிலும் குற்றவழக்கு அல்லது பிற
நடவடிக்கை எதிலும் ஆட்சேபம் செய்யப்படுதல் ஆகாது.
25. சந்தைக் குழுவின் அசையாச் சொத்து உரிமை மாற்றம் குறித்த வகை
முறைகள். (1) 5 ஆம் பிரிவின் (2) ஆம் கூறில் என்ன அடங்கியிருந்தபோதிலும்,
ஒரு சந்தைக் குழுவானது, உள்ளாட்சி அதிகார அமைப்பின் ஒருங்கிசைவும்
அரசின் முன் ஒப்பளிப்பும் இல்லாமல், அதனிடம் உற்றமைந்துள்ள அல்லது
அதனால் கையகப்படுத்தப்பட்டுள்ள மற்றும் சந்தைப் பரப்பிடத்தில் அமைந்துள்ள
நிலம் அல்லது கட்டடம் எதனையும் விற்பனை, குத்தகை, மாற்றீடு, அடைமானம்
வாயிலாகவோ அல்லது வேறெந்த வகையிலோ உரிமைமாற்றஞ்செய்தல் ஆகாது.
(2) (1) ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்குட்பட்டு, சந்தைக்குழுவானது,
கட்டடம், விற்பனைச் சாவடி, கடை, நிலையம், அடைப்பிடம் அல்லது நிலத்துடன்
இணைக்கப்பட்டுள்ள எப்பொருளுடனும் நிரந்தரமாகவே இணைப்புகள் அல்லது
பொருள்கள் அல்லது இணைக்கப்பட்டுள்ள சேர்ந்த, பொருத்தியிருத்தி
வைக்கப்பட்ட பொருள்கள் ஆகியவற்றை, இவற்றின் பொருட்டு செய்யப்பட்ட
விதிகளால் தீர்மானிக்கக்கூடிய நிபந்தனைகளுக்கும் வரம்புகளுக்கும் உட்பட்டு,
விற்பனை, குத்தகை, மாற்றீடு, அடைமானம் ஆகியவற்றின் வாயிலாகவோ அல்லது
வேறெந்தவகையிலோ தீர்முடிவு செய்யலாம்.
26. சந்தைக் குழுவினால் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுதல்.- (1) சந்தைக்
குழுவினால் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தம் ஒவ்வொன்றும், எழுத்துருவில்
இருத்தல் வேண்டும் மற்றும், சந்தைக் குழுவின் சார்பில், அதன் தலைவர்,
தலைமை நிருவாக அலுவலர் மற்றும் சந்தைக் குழுவின் மற்ற உறுப்பினர்களில்
ஒருவர் ஆகியோரால் கையொப்பமிடப்படுதல் வேண்டும், அல்லது சந்தைக்
குழுவொன்றைப் பொறுத்தவரையில், 42 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவின்படி
தனி அலுவலரொருவர் நியமிக்கப்பட்டுள்ளவிடத்து, அத்தகைய தனி
அலுவலராலும், தலைமை நிருவாக அலுவலராலும் கையொப்பமிடப்படுதல்
வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவால் வகைசெய்யப்பட்டுள்ளவாறு நிறைவேற்றப்பட்ட
ஒப்பந்தம் நீங்கலாக, பிற ஒப்பந்தம் எதுவும், சந்தைக் குழுவைக் கட்டுப்படுத்தாது.
27. 1894 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி நிலத்தை
கையகப்படுத்துவதற்கான அதிகாரம்.- இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்காகக்
கையகப்படுத்தப்படும் நிலம் எதுவும், 1894 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல்
சட்டத்தின் (மையச் சட்டம் 174894) பொருள் வரையறையின்படி, பொது
நோக்கத்திற்காகத் தேவைப்படக்கூடியதொரு நிலம் என்று கருதப்படுதல்
வேண்டும்; மற்றும் அத்தகைய நிலமானது மேற்சொன்ன சட்டத்தின்படி
கையப்படுத்தப்படலாம்.
28. நிலத்தைக் கையகப்படுத்துதல்.- (1) இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக
நிலம் எதுவும் தேவைப்படுமிடத்து, சந்தைக் குழுவானது, 1894 ஆம் ஆண்டு நிலம்
கையகப்படுத்துதல் சட்டத்தின்படி (மையச் சட்டம் 171894) அத்தகைய நிலத்தைக்
கையகப்படுத்துவதற்கு அரசிற்கு விண்ணப்பமொன்றைச் செய்து கொள்ளலாம்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படியான விண்ணப்பமொன்று பெறப்பட்டதன்
பேரில், விண்ணப்பத்தில் குறித்துரைக்கப்பட்ட நிலமானது, அதில்
குறித்துரைக்கப்பட்ட ஒரு பொது நோக்கத்திற்காகத் தேவைப்டபடுகிறதென அரசு
மனநிறைவு கொள்ளுமானால், அத்தகைய நிலத்தை 1894 ஆம் ஆண்டு நிலம்
கையகப்படுத்துதல் சட்டத்தின் (மையச் சட்டம் 171894) வகைமுறைகளுக்கு
இணங்கிய வகையில், அரசு கையகப்படுத்தலாம்.
29. சந்தைக் குழுவின் அலுவலர்களும் பணியாளர்களும்.- (1) ஒவ்வொரு சந்தைக்
குழுவிற்கும் அரசினால் நியமிக்கப்படக்கூடிய ஒரு தலைமை நிருவாக அலுவலர்
இருப்பார்.
(2) சந்தைக் குழுவானது, உள்ளாட்சி அதிகாரஅமைப்பின் ஒப்புதலளிப்புடன்,
அதன் அலுவற்பணிகளைத் திறம்பட ஆற்றுவதற்குத் தேவைப்படக்கூடிய சம்பளம்
பெறும் அலுவலர்களையும் பணியாளர்களையும் நியமிக்கலாம்.
(3) சந்தைக் குழுவின் தலைமை நிருவாக அலுவலரும், சம்பளம் பெறும் பிற
அலுவலர்களும் பணியாளர்களும் முழுநேர அரசுப் பணியாளர்களாதல் வேண்டும்.
(4) தலைமை நிருவாக அலுவலர் மற்றும் சந்தைக் குழுவின் சம்பளம்
பெறும் பிற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் சம்பளங்கள், படித்தொகைகள்,
ஓய்வூதியத்தொகைகள், பிற உழைப்பூதியம் ஆகியவை முதற்கண்
மாநிலத்தொகுதி நிதியத்திலிருந்து வழங்கப்படுதல் வேண்டும்; மற்றும் சந்தைக்
குழுவானது, இந்த உட்பிரிவின்படி அரசினால் செலுத்தப்பட்ட தொகைகளை,
சந்தைக் குழு நிதியத்திலிருந்து திரும்பச் செலுத்துதல் வேண்டும்.
(5) இந்தச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்தபோதிலும், அரசமைப்பின்
3114ஆம் உறுப்பின் வகைமுறைகளுக்குட்பட்டு, அரசானது, சந்தைக் குழுவின்
தலைமை நிருவாக அலுவலரின் மற்றும் சம்பளம் பெறும் பிற அலுவலர்களின்
மற்றும் பணியாளர்களின் பணி பற்றிய நிபந்தனைகளை
ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு விதிகளைச் செய்யலாம்.
30. தலைமை நிருவாக அலுவலரின் அதிகாரங்களும் கடமைகளும்.- (1) சந்தைக்
குழுவின் மேற்பார்வை, பணிப்புரை, கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு உட்பட்டு, சந்தைக்
குழுவின் நிருவாக அலுவற்பணிகள் அனைத்தும், தலைமை நிருவாக
அலுவலரால் செயற்படுத்தப்படுதல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கு குந்தகமின்றி, தலைமை
நிருவாக அலுவலரானவ,--
() சந்தைக் குழுவின் நிதி மற்றும் செயலாட்சி நிருவாகத்தினை
மேற்பார்வை செய்தல் வேண்டும்; மற்றும் இந்தச் சட்டத்தினால் அல்லது
அதன்படிச் செய்யப்பட்ட விதிகளால் அவருக்கு வழங்கப்பட்ட அல்லது
விதிக்கப்பட்ட அதிகாரங்களைச் செலுத்திவருதல் வேண்டும், மற்றும்
அத்தகைய கடமைகளையும் அலுவல்களையும் ஆற்றிவருதலும் வேண்டும்,
மற்றும்,
(il) சந்தைக் குழுவிற்குச் சேரவேண்டிய அனைத்துத் தொகைகளை
வசூலித்துவருவதற்கும் சந்தைக் குழுவினால் செலுத்தப்படத்தக்க
அனைத்துத் தொகைகளை ுசலுத்திவருவதற்கும் கடப்பாடூுடையவர்
ஆவார்.
31. முறைகேடு, காலியிடம் முதலியனவற்றால் சந்தைக் குழுவின் செயல்கள்
செல்லத்தகாததாக ஆக்கப்படுதல் ஆகாது.- இந்தச் சட்டத்தின்படி, சந்தைக்
குழுவினால் செய்யப்பட்ட செயல் எதுவுமோ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை
எதுவுமோ,-
(a) சந்தைக் குழுவின் அமைப்பில் காலியிடமோ அல்லது
அமைத்துருவாக்குவதில் உள்ள குறைபாடு எதனின் காரணமாகவோ; அல்லது
௦) அதன் உறுப்பினரொருவராகச் செயற்படுகிற நபரொருவரின்
நியமனத்தில் உள்ள குறைபாடு அல்லது முறைகேடு எதனின் காரணமாகவோ;
அல்லது
(6) வழக்கின் தகுதிப்பாடுகளைப் பாதிக்கின்ற வகையில் அத்தகைய செயல்
அல்லது நடவடிக்கையில் உள்ள குறைபாடு அல்லது முறைகேடு எதனின்
காரணமாகவோ செல்லத்தகாததாக
ஆக்கப்படுதல் ஆகாது.
அத்தியாயம் V
சந்தைக் குழுவின் நிதியமும் நிதியம்.
32. சந்தைக் குழு நிதியம்-- (1) சந்தைக் குழுவொன்றால் பெறப்படும் அனைத்துப்
பணவகைகளும் "சந்தைக் குழு நிதியம்" என வழங்கப்பெறக்கூடிய
நிதியமொன்றில் செலுத்தப்படுதல் வேண்டும். இந்தச் சட்டத்தின்படி அல்லது
இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, சந்தைக்குழு ஏற்க நேர்ந்த அனைத்துச்
செலவுகளும் இந்த நிதியத்திலிருந்து கொடுத்துத் தீர்க்கப்படுதல் வேண்டும்;
அத்தகைய செலவு எதிர்கொள்ளப்பட்டதற்குப் பிறகு, உபரியாக எஞ்சியுள்ள
தொகை எதுவும், வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில் முதலீடு செய்யப்படுதல்
வேண்டும்.
(2) (ஐ) சந்தைப் பரப்பிடத்தில் இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு
செயல்வடிவம் கொடுப்பதற்காக, ஒவ்வொரு சந்தைக் குழுவும் அரசினால், சந்தைக்
குழுவுடன் கலந்தாய்வு செய்து பணியிலமர்த்தப்படுகின்ற தனி அல்லது கூடுதல்
பணியாளர் தொகுதி எதற்கும் ஆகும் செலவினை 29 ஆம் பிரிவின் (4) ஆம்
உட்பிரிவின்படி செலுத்தப்படத்தக்க தொகைகளுக்கும் கூடுதலாக, சந்தைக் குழு
நிதியத்திலிருந்து ஒவ்வொரு சந்தைக் குழுவும் அரசுக்குச் செலுத்துதல் வேண்டும்.
(b) அரசானது தனி அல்லது கூடுதல் பணியாளர் தொகுதிக்கு ஆகும்
செலவினைத் தீர்மானித்தல் வேண்டும்; மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தைக்
குழுவின் நோக்கங்களுக்காக, பணியாளர் தொகுதி நியமிக்கப்படுமிடத்து, அவை
பொருத்தமென நினைக்கக்கூடிய முறையில் தொடர்புள்ள சந்தைக்
குழுக்களுக்கிடையே அத்தகைய செலவினைப் பங்கீடு செய்து கொள்ளுதல்
வேண்டும். சந்தைக்குழு எதனாலும் செலுத்தப்படத்தக்க தொகையினைத்
தீர்மானிக்கின்ற அரசின் முடிவே அறுதியானதாகும்.
(3) சந்தைக் குழுவின் வரவில் வைக்கும் வகையில் பெறப்படும் தொகை:
அனைத்தும், வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில் வைக்கப்படுதலோ அல்லது
முதலீடு செய்யப்படுதலோ வேண்டும்.
33. சந்தைக் குழு நிதியமானது எந்த நோக்கங்களுக்காகச் செலவிடப்படுதல்
வேண்டும் என்பது.- 32 ஆம் பிரிவின் வகைமுறைகளுக்குட்பட்டு, சந்தைக்
குழுவின் வரவுக் கணக்கில் இருந்துவருகின்ற தொகை, பின்வருகின்ற
அனைத்து அல்லது அவற்றில் ஏதேனும் நோக்கங்களுக்காகச் செலவிடப்படுதல்
வேண்டும், அதாவது:-
(ஐ சந்தைக்குழுவானது, எந்த நோக்கங்களுக்காக நிறுவப்பட்டதோ அந்த
நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக மனை அல்லது கட்டடம் எதனையும்
கையகப்படுத்துவதற்காக அல்லது கோரிப் பெறுவதற்காக அல்லது சந்தைக்
குழுவிற்கென பிற சொத்திருப்பு வாங்குவதற்காக;
(b) சந்தைகளை நிறுவுதல், பேணிவருதல் மற்றும் மேம்படுத்துதல், மற்றும் 18
ஆம் பிரிவின்படி அரசு பணிக்கக்கூடியவாறான வசதிகளுக்குச் சந்தையில் வகை
செய்தலுக்காக;
(9) அத்தகைய சந்தைகளின் நோக்கங்களுக்காகவும், அவற்றைப்
பயன்படுத்துகிறவர்களின் நல்வாழ்வு, வசதி மற்றும் பாதுகாப்பிற்காகவும்,
தேவைப்படக்கூடிய கட்டடங்களைக் கட்டுதல் மற்றும் பழுது பார்த்தலுக்காக;
(0) தரமான எடைக் கற்களுக்கும் அளவுக்கோல்களுக்கும் வகை செய்தல்
மற்றும் பேணி வருதலுக்காக;
(ஐ) 29 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின்படி அரசுக்குத் தொகைகள்
செலுத்தப்படு தலுக்காக;
(f) 42 ஆம் பிரிவின் (6) ஆம் உட்பிரிவின்படி தொகை செலுத்துதலுக்காக;
(ஐ எந்தக் காரணங்களுக்காக சந்தைக் குழுவானது நிறுவப்பட்டதோ
அவற்றை நிறைவேற்றுவதற்கு சந்தைக் குழுவினால் திரட்டப்படக்கூடிய
கடன்களின் மீது வட்டி செலுத்துதல் மற்றும் அத்தகைய கடன்களைப்
பொறுத்தவரையில், கடன்தீர் நிதியமொன்றுக்கு வகைசெய்தலுக்காக;
(h) குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருள்களைப் பொறுத்தமட்டில், மொத்த
விற்பனை வணிகம் தொடர்பான புள்ளியியல் மற்றும் செய்தியைச் சேகரித்தல்,
மற்றும் பரப்புதலுக்காக;
(i) சந்தையில், தீ, திருட்டு, வெள்ளம் மற்றும் அது போன்றவற்றுக்கு எதிராக,
சேமிப்புக் கிடங்குகளிலும் வாணிகச் செயற் கொட்டில்களிலும் வைக்கப்பட்டுள்ள
அல்லது கையாளப்பட்டுள்ள சரக்கு இருப்புகளுக்கான காப்பீட்டு பத்திரத்தின்
மீதான காப்பீட்டுக் கட்டணம் செலுத்துவதற்காக; அல்லது
0 பொது அல்லது தணிடயொரு ஆணையின் மூலமாக இதன்பொருட்டு
அரசினால் அதிகாரமளிக்கப்படக் கூடியவாறான பிற நோக்கங்களுக்காக.
34. கடன் பெறுவதற்கான அதிகாரம்.- (1) சந்தைக் குழு ஒவ்வொன்றும் அரசின்
முன் ஒப்பளிப்புடன், அது எந்த நோக்கங்களுக்காக நிறுவப்பட்டதோ அந்த
நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படும் பணத் தொகைகளை
சந்தைக் குழுவிடம் உற்றமைந்துள்ள அல்லது அதற்குச் சொந்தமாக உள்ள
சொத்து எதனின் மற்றும் இந்தச் சட்டத்தினால் அல்லது இந்தச் சட்டத்தின்படி
சந்தைக் குழுவினால் விதிக்கப்படத்தக்க கட்டணம் அல்லது பிற தொகை எதனின்
பிணையத்தின் பேரில், திரட்டலாம்;
(2) சந்தைக் குழுவானது, சந்தையை நிறுவுவதற்காகத் தேவைப்படக்கூடிய
நிலங்கள், கட்டடங்கள் மற்றும் கருவிகளின் செலவினை எதிர்கொள்ளும்
நோக்கங்களுக்காக, அரசிடமிருந்து கடன் பெறலாம்.
35. வரவு-செலவுத் திட்டம்.- (1) தலைமை நிருவாக அலுவலர் ஒவ்வோராண்டும்,
வருகிற நிதியாண்டினைப் பொறுத்த வரையில், சந்தைக் குழுவின் வரவு மற்றும்
செலவு ஆகியவற்றையும், சந்தைக்குழு நிதியத்தின் தொடக்கக் கணக்குத்
தொகையையும், முடிவு கணக்குத் தொகையையும் காட்டுகின்ற ஆண்டு வரவு-
செலவு மதிப்பீிடொன்றைத் தயாரித்தல் வேண்டும்; மற்றும் அதனை
வகுத்துரைக்கப்படக்கூடிய தேதிக்கு முன்பாக சந்தைக் குழுவிற்கு அனுப்புதல்
வேண்டும்.
(2) சந்தைக் குழுவானது, வகுத்துரைக்கப்படக்கூடிய தேதிக்குள்ளாக, அது
தேவையானதெனக் கருதக்கூடிய திருத்தங்களுடன்: வரவு-செலவு
மதிப்பிட்டினை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
(3) தலைமை நிருவாக அலுவலர், வகுத்துரைக்கப்படக்கூடிய தேதிக்கு
முன்பாக, அவரால் தயாரிக்கப்பட்ட வரவு-செலவு திட்டத்தின் மற்றும் சந்தைக்
குழுவினால் ஒப்புதலளிக்கப்பட்ட வரவு-செலவு திட்டத்தின் படிகளை உள்ளாட்சி
அதிகார அமைப்பிற்கு அதன் ஏற்பளிப்பிற்காக அனுப்பிவைத்தல் வேண்டும்.
(4) சந்தைக் குழுவானது, காரணம் எதற்காகவும், வகுத்துரைக்கப்படக்கூடிய
தேதிக்குள்ளாக, வரவு-செலவுத் திட்டத்தை ஏற்கத்தவறுமேயானால், தலைமை
நிருவாக அலுவலர், வகுத்துரைக்கப்படக்கூடிய தேதிக்கு முன்பாக, அவரால்
தயாரிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தை உள்ளாட்சி அதிகார அமைப்பிற்கு
ஏற்பளிப்பதற்காக அனுப்பி வைத்தல் வேண்டும்.
(5) உள்ளாட்சி அதிகார அமைப்பானது, வகுத்துரைக்கப்படக்கூடிய தேதிக்கு
முன்பாக, அது தேவையானதெனக் கருதக்கூடிய திருத்தங்களுடன், அத்தகைய
வரவு-செலவுத் திட்டத்திற்கு ஏற்பளித்தல் வேண்டும்.
(6) தலைமை நிருவாக அலுவலரானவர், ஏற்பளிக்கப்பட்ட வரவு-செலவுத்
திட்டத்தின் படியொன்றை அரசிற்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
36. கணக்குகளின் ஆண்டுத் தணிக்கை.- (1) சந்தைக் குழுவின் கணக்குகள்,
ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒரு முறை உள்ளாட்சி நிதியக் கணக்கு ஆய்வாளரால்
ஆய்வு செய்யப்பட்டு தணிக்கை செய்யப்படுதலும் வேண்டும்.
(2) சந்தைக் குழுவின் கணக்குகள், உள்ளாட்சி நிதியக் கணக்கு
ஆய்வாளரால் சான்றொப்பமிடப்பட்டவாறு, சந்தைக் குழுவின் குறிப்புரைகளுடன்
கூடிய தணிக்கை அறிக்கையுடன் சேர்த்து வகுத்துரைக்கப்படக்கூடிய கால
அளவிற்குள்ளாக, அரசுக்கு அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும்.
(3) அரசானது, எழுத்துருவிலான ஆணையயொன்றின் வாயிலாக
தணிக்கையின் விளைவாக வெளிக்கொணரப்பட்டு அதில்
குறித்துரைக்கப்படக்கூடிய குறைபாடுகள் ஏதேனுமிருப்பின்,
குறித்துரைக்கப்படக்கூடிய காலஅளவிற்குள் அக்குறைபாடுகளுக்குத்
தீர்வழிக்காண்பதற்கான, அவ்வாணையில் குறித்துரைக்கப்படக்கூடிய
நடவடிக்கையினை எடுக்குமாறு சந்தைக் குழுவைப் பணிக்கலாம்; மற்றும்
அச்சந்தைக் குழுவானது, அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி நடத்தல்
வேண்டும்.
37. சொத்து, நிதியம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல்.- அனைத்து சொத்துக்களும்,
சந்தைக் குழு நிதியமும் மற்றும் சந்தைக் குழுவிற்குச் சொந்தமாகவோ அல்லது
சந்தைக்குழுவுடன் உற்றமைந்ததாகவோவுள்ள பிற சொத்திருப்புக்கள்:
அனைத்தும், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கும் நோக்கங்களுக்கும்
உட்பட்டு, அதன் உடைமையில் வைத்து வரப்பட்டு பொருத்தமாகப் பயன்படுத்திக்
கொள்ளப்படுதல் வேண்டும்.
அத்தியாயம் VI
சந்தைக் குழுக்களை கட்டுப்படுத்துதல்.
38. ஆய்வு செய்தல், விசாரணை செய்தல், விவரவுரை அளித்தல் முதலியன.- (1)
உள்ளாட்சி அதிகார அமைப்போ அல்லது இதன் பொருட்டு பொது அல்லது தனி
ஆணையடயான்றின் மூலம் அதிகாரமளிக்கப்பெற்ற அலுவலர் எவருமோ,-
(ஐ சந்தைக் குழு ஒன்றின் கணக்குகளையும், அலுவலகங்களையும்,
சந்தைக் குழுவின் கட்டுப்பாட்டிலுள்ள பிற நிறுவனம் எதையும் ஆய்வு செய்யலாம்
அல்லது ஆய்வு செய்விக்கும்படி செய்யலாம்;
(௦) சந்தைக் குழுவின் அலுவல்கள் குறித்து விசாரணை நடத்தலாம்;
(6) சந்தைக் குழுவிடமிருந்து தேவையானதாக இருக்கக்கூடிய
விவரஅறிக்கை, விவரவுரை, கணக்குகள் அல்லது அறிக்கை எதனையும் கோரித்
தருவிக்கலாம்;
(1) சந்தைக் குழு ஒன்றின் நடவடிக்கைகளை கோறித் தருவித்து
பரிசீலிக்கலாம்; மற்றும்
(6) வகுத்துரைக்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச் செலுத்தி வரலாம்.
(2) இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுகின்ற நோக்கத்திற்காக,
சந்தைக் குழுவிற்குத் தேவையானதாயிருக்கக் கூடிய பணிப்புரைகளை
உள்ளாட்சி அதிகார அமைப்பானது பிறப்பிக்கலாம்; மற்றும் சந்தைக் குழுவானது
அப்பணிப்புரைக்கு இணங்கி நடப்பதற்கு தவறுமானால், உள்ளாட்சி
அதிகாரஅமைப்போ அல்லது அதனால் அதிகாரமளிக்கப்பெற்ற பிற அலுவலரோ,
அப்பணிப்புரைக்கு இணங்கி செயல்படும்படி தலைமை நிருவாக அலுவலரை
பணிக்கலாம்; மற்றும் அந்த தலைமை நிருவாக அலுவலரானவர், அப்பணிப்புரைக்கு
உடனடியாக இணங்கி நடத்தல் வேண்டும்.
39. உள்ளாட்சி அதிகார அமைப்பிற்கு அலுவலர்கள், பணியாளர்கள் அல்லது
உறுப்பினர்கள் தகவல் அளிப்பதற்கான கடமை.- (1) சந்தைக் குழுவொன்றின்
(தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளடங்கலாக) அலுவலர், பணியாளர்
அல்லது உறுப்பினர் எவரும், சந்தைக் குழுவின் அலுவல்கள் அல்லது
நடவடிக்கைகள் ஏதொன்றின் தொடர்பாகவும் அவரது கைவசம் உள்ள தகவலை,
உள்ளாட்சி அதிகார அமைப்போ அல்லது, நேர்விற்கேற்ப அதனால்
அதிகாரமளிக்கப்பெற்ற எந்த ஒரு அலுவலரோ அரசால் அதிகாரமளிக்கப்பெற்ற
அலுவலர் எவருமோ அளிக்குமாறு கோரினால், அவ்வாறே செய்தல் வேண்டும்.
(2) 38 ஆம் பிரிவின்படி சந்தைக் குழுவின் அலுவல்கள் குறித்து
விசாரணை நடத்துகிற அல்லது நடவடிக்கைகளை ஆய்வு செய்கிற அலுவலர்
ஒருவர் பின்வரும் பொருட்கூறுகள் தொடர்பான உரிமை வழக்கொன்றை
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுகையில், 1908 ஆம் ஆண்டு உரிமை வழக்கு
விசாரணை முறைத் தொகுப்புச் சட்டத்தின்படி (மையச் சட்டம் 71908)
நதிமன்றமொன்றிடம் மேவியிருக்கின்ற அதே அதிகாரங்களைப் பெற்றிருப்பார்,
அதாவது:--
(a) கண்டுபிடித்தல் மற்றும் ஆய்வு செய்தல்;
(b) நபர் எவரொருவரின் வருகையையும் வலியுறுத்தி,
உறுதிமொழியின்பேரில் அவரை விசாரித்தல்;
(69) கணக்குப் புத்தகங்களையும் பிற ஆவணங்களையும் தாக்கல்
செய்யும்படி கட்டாயப்படுத்துதல்; மற்றும்
(0) பணிப்பாணைகளை பிறப்பித்தல்.
40. கணக்குப் புத்தகங்களையும் பிற ஆவணங்களையும் கைப்பற்றுதல்.-
உள்ளாட்சி அதிகார அமைப்போ அல்லது அதனால் அதிகாரமளிக்கப்பெற்ற
அலுவலர் எவருமோ, சந்தைக் குழுவொன்றின் புத்தகங்களும், பதிவுருக்களும்
திரித்து மாற்றப்படவுள்ளன என்றோ, அல்லது அழிக்கப்படவுள்ளன என்றோ
அல்லது சந்தைக் குழுவொன்றின் நிதியங்களோ அல்லது சொத்தோ
கையாடப்படவுள்ளனலவவென்றோ அல்லது தவறாக
பயன்படுத்தப்படவுள்ளனவென்றோ நம்புவதற்கு காரணங்கொண்டிருப்பின்,
உள்ளாட்சி அதிகாரஅமைப்போ அல்லது அதனால் அதிகாரமளிக்கப்பெற்ற
அலுவலரோ, அச்சந்தைக் குழுவின் அத்தகைய புத்தகங்கள் மற்றும்
பதிவுருக்களையும், நிதியங்கள் மற்றும் சொத்தினையும் கைப்பற்றித் தன்
கையுடைமையில் வைத்துக் கொள்ளலாம்; மற்றும் அத்தகைய புத்தகங்களையும்,
பதிவுருக்களையும் நிதியங்களையும், சொத்தினையும் பாதுகாப்பதற்குப் பொறுப்பு
வாய்ந்தவர்களான சந்தைக் குழுவின் (தலைவர் மற்றும் துணைத் தலைவர்
உள்ளடங்கலாக) அலுவலர்கள், பணியாளர்கள் அல்லது உறுப்பினர்கள், உள்ளாட்சி
அதிகார அமைப்பிடம் அல்லது அவ்வாறு அதிகாரமளிக்கப் பெற்ற அலுவலரிடம்
அவற்றை ஒப்படைத்தல் வேண்டும்.
41. சந்தைக் குழுவினைக் கலைத்துக் கைக்கொள்ளுதல்.- பிற அரசானது, தாமே
முற்பட்டோ அல்லது உள்ளாட்சி அதிகாரஅமைப்பின் பரிந்துரையின் பேரிலோ, ஒரு
சந்தைக் குழுவானது, இந்தச் சட்டத்தினால் அதற்கு விதிக்கப்பட்ட கஉமைகளை
ஆற்றிவருவதற்குத் தகுதியற்றதாக இருக்கிண்றதென்றோ அல்லது அத்தகைய
கடமைகளை ஆற்றிவருவதில் தொடர்ந்து தவறிவருகின்றதென்றோ அல்லது
சந்தைக் குழுவின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டிருக்கின்றதென்றோ அரசு
கருத்துக் கொள்ளுமாயின் ஆணைடயொன்றின் வாயிலாக, அச்சந்தைக்
குழுவினைக் கலைத்துக் கைக்கொள்ளலாம்:
வரம்புரை: ஆனால், அத்தகைய ஆணை எதுவும், கேட்கப்படுவதற்குரிய
வாய்ப்பொன்று சந்தைக் குழுவிற்கு வழங்கப்படாமல், அரசால் பிறப்பிக்கப்படுதல்
ஆகாது.
42. தனி அலுவலரின் அமர்த்துகை.- (1) 44 ஆம் பிரிவின்படி சந்தைக்
குழுவொன்று கலைத்துக் கைக்கொள்ளப்படுகின்றபோது, அரசானது,
ஆணைடயான்றின் வாயிலாக, புதியதொரு சந்தைக் குழுவை
அமைத்துருவாக்குவது அல்லது, நேர்விற்கேற்ப, புதியதொரு சந்தைக் குழு
பதவியேற்பது முடிவுறா நிலையிலிருக்கையில், சந்தைக் குழுவின் அலுவல்களை
மேற்கொள்வதற்கான ஓராண்டிற்கு மேற்படாததொரு காலஅளவிற்கு தனி
அலுவலர் ஒருவரை அமர்த்துதல் வேண்டும்:
வரம்புரையாக: தனிக் காரணங்களுக்காக அரசால் எழுத்துருவில் பதிக்கப்பட
வேண்டியதும், அத்தகைய ஆணையில் குறித்துரைக்கப்படக்கூடியதுமான கால
அளவானது, அவ்வப்போது, நீட்டிக்கப்பட்டு வரப்படலாம்; ஆனால் அந்த
ஆணையானது, மொத்தத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில்
இருந்து வருதல் ஆகாது.
(2) அரசு, ஆணையின் வாயிலாகக் குறித்துரைக்கக்கூடிய ஒன்று அல்லது
அதற்கு மேற்பட்ட சந்தைக் குழுவிற்கு (1) ஆம் உட்பிரிவின்படி தனி அலுவலர்
ஒருவர் அமர்த்தப்படலாம்.
(3) (1) ஆம் உட்பிரிவின்படி தணி அலுவலர் ஒருவரை அமர்த்துகின்ற
ஆணையொன்று பிறப்பிக்கப்பட்டதன் பேரில், பின்வரும் விளைவுகள் நிகழுறுதல்
வேண்டும், அதாவது:-
(ஐ இந்தச் சட்டத்தின்படி அமைத்துருவாக்கப்பட்ட சந்தைக் குழுவின்
தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளடங்கலான அனைத்து
உறுப்பினர்களும், அத்தகைய ஆணையின் தேதியிலிருந்து அவர்களது
பதவியை விட்டு விலகிவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்: மற்றும்
(௦) சந்தைக் குழுவிடம் உற்றமைந்துள்ள சொத்துக்களனைத்தும்,
அனைத்துக் கடப்பாடுகளுக்கும் உட்பட்டு, அரசிடம் உற்றமைதல்
வேண்டும்.
(4) அரசானது, ஆணையொன்றின் வாயிலாக, உரிமை மாற்றம்
செய்யக்கூடிய தேதியில் உள்ள சந்தைக் குழுவின் சொத்திருப்புக்கள் மற்றும்
கடப்பாடுகளை, (1) ஆம் உட்பிரிவின்படி அமர்த்தப்பட்ட தணி அலுவலர்களுக்கு
உரிமை மாற்றம் செய்யலாம்.
(5) (1) ஆம் உட்பிரிவின்படி தனி அலுவலரொருவர்
அமர்த்தப்படுகின்றவிடத்து, அரசால் குறித்துரைக்கப்படக்கூடிய
பொருட்கூறுகளில் தனி அலுவலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக
ஆலோசனைக் குழுமமொன்றினை அமர்த்தலாம்; மற்றும் அந்த ஆலோசனைக்
குழுமமானது, கீழ்க்கண்ட உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்,
அதாவது-
(ஐ சந்தைப் பரப்பிடத்தில், 21 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி
உரிமம் பெற்ற மூன்று நபர்கள்.
(௦) அச்சந்தைப் பரப்பிடத்தின் மீது அதிகார வரம்பு கொண்ட வேளாண்
சந்தை துணை இயக்குநர்.
(6) அரசின் பிற அலுவலர்கள் இருவர்.
(௦9). (1) ஆம் உட்பிரிவின்படி அமர்த்தப்பட்ட தனி அலுவலருக்கு
வழங்கப்படத்தக்க ஊதியத்தினை அரசு நிர்ணயிக்கலாம்; மற்றும் அவ்வாறு
நிர்ணயிக்கப்பட்ட ஊதியத் தொகையையும், அரசால் ஒப்புதலளிக்கப்படக்கூடிய
தனி அலுவலரின் நியமனக் கால அளவின்போது, சந்தைக் குழுவினை
மேலாண்மை செய்வதற்கு இடைவிளைவான பிற செலவினமும், சந்தைக் குழு
நிதியத்திலிருந்து வழங்கப்படுதல் வேண்டும்.
(7) (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட காலஅளவு முடிவடைவதற்கு
முன்னர் எந்த ஒரு நேரத்திலும், அரசானது, 8 ஆம் பிரிவிற்கிணங்கிய வகையில்
புதியதொரு சந்தைக் குழுவினை அமைத்துருவாக்கி, உரிமை மாற்றுத் தேதியில்
உள்ள சொத்திருப்புக்களையும் கடப்பாடுகளையும் அதற்கு உரிமை மாற்றம்
செய்யலாம்.
43. தனி அலுவலரின் அதிகாரங்கள்.- 42 ஆம் பிரிவின்படி அமர்த்தப்பட்டுள்ள
போது தனி அலுவலரொருவர், அவரது பதவிக் காலத்தின் போது, இந்தச் சட்டத்தின்
படியாகவோ அல்லது அதனடியாகவோ அல்லது அப்போதைக்கு
நடைமுறையிலுள்ள பிற சட்டம் ஏதொன்றின் மூலமாகவோ சந்தைக் குழுவிடமும்,
தலைவரிடமும், துணைத் தலைவரிடமும் உற்றமைந்திருக்கின்ற
அதிகாரங்களனைத்தும் அல்லது அதனால் அல்லது அவர்களால்
செலுத்தப்படத்தக்க அதிகாரங்களனைத்தும் மற்றும் அதன் மீது அல்லது
அவர்களின் மீது விதிக்கப்பட்ட கடமைகள் மற்றும் செயற்பணிகள் அனைத்தும்,
தனி அலுவலரிடம் உற்றமைந்து இருத்தல் வேண்டும் என்பதோடு, அவரால்
செலுத்தி வரப்படுதல் வேண்டும் அல்லது, நேர்விற்கேற்ப, ஆற்றிவரப்படுதலும்
வேண்டும்.
(2) தனி அலுவலரானவர், தலைமை நிருவாக அலுவலருக்கு தாம்
தேவையானதெனக் கருதக்கூடிய அதிகாரங்களை ஒப்படைவு செய்யலாம் மற்றும்
அத்தகைய கடமைகளையும் செயற்பணிகளையும் ஆற்றும் பொறுப்பை
ஒப்படைக்கலாம்.
44. சந்தைக் குழுவின் பதிவுருக்கள் மற்றும் சொத்துக்களின் உடைமையினை
ஒப்படைத்தல்.- (42 ஆம் பிரிவின்படி தனி அலுவலரொருவர்
நியமிக்கப்பட்டிருந்து, அந்தத் தனி அலுவலர் சந்தைக் குழுவின் புத்தகங்கள்,
கணக்குகள், ஆவணங்கள், ஈட்டுறுதி ஆவணங்கள், ரொக்க பணம் மற்றும் (இதன்
பின்பு, இந்தப் பிரிவில், சந்தைக் குழுவின் மற்றும் பதிவுருக்கள் மற்றும்
சொத்துக்கள் என குறிப்பிடப்படும்) அசையும் சொத்தாகவோ அல்லது அசையாச்
சொத்தாகவோ இருக்கின்ற பிற சொத்துக்களின். உடைமையினைப்
பெறுவதிலிருந்து இந்தச் சந்தைக் குழுவின் பதிவுருக்கள் மற்றும் சொத்துக்களை
உடைமையில் வைத்திருப்பதற்கு உரிமைத் தகுதியற்ற எந்த ஒரு நபராலும்
எதிர்க்கப்படுகின்றவிடத்து அல்லது தடுக்கப்படுகின்றவிடத்து, எந்தப் பெருநகரக்
குற்றவியல் நடுவர் அல்லது முதல் வகுப்பு நீதித்துறை குற்றவியல் நடுவரின்
அதிகார வரம்பிற்குள் சந்தைக் குழுவின் அலுவலகம் அமைந்திருக்கின்றதோ
அல்லது பதிவுருக்கள் மற்றும் சொத்துக்கள் வைக்கப்பட்டிருக்கின்றனவோ அந்தப்
பெருநகரக் குற்றவியல் நடுவர் அல்லது முதல் வகுப்பு நீதித்துறை குற்றவியல்
நடுவர் எவரும், தனி அலுவலரின் நியமன ஆணையும், வகுத்துரைக்கப்பட்ட
படிவத்தில், சந்தைக் குழுவிற்குச் சொந்தமான பதிவுருக்கள் மற்றும் சொத்துக்கள்.
என்று எடுத்துக் காட்டுகின்ற உள்ளாட்சி அதிகாரஅமைப்பின் சான்றிதழொன்றும்,
தாக்கல் செய்யப்படுவதன் பேரில், சந்தைக் குழுவின் பதிவுருக்கள் மற்றும்
சொத்துக்களின் உடைமையினை தனி அலுவலரின் கைவசம் ஒப்படைக்குமாறு
பணித்தல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படியான விண்ணப்பம் ஒவ்வொன்றும், 42 ஆம்
பிரிவின் (1), (4) ஆகிய உட்பிரிவுகளின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணைகளின்.
நகலுடன் சேர்த்து செய்யப்படுதல் வேண்டும்.
(3) (1) ஆம் உட்பிரிவின்படியான விண்ணப்பம் பெறப்பட்டதன் பேரில்
பெருநகரக் குற்றவியல் நடுவரானவர் அல்லது, நேர்விற்கேற்ப, முதல் வகுப்பு
நீதித்துறை குற்றவியல் நடுவரானவர், சந்தைக் குழுவின் பதிவுருக்கள் மற்றும்
சொத்துக்கள் வைக்கப்பட்டுள்ள அல்லது வைகப்பட்டுள்ளதாக நம்பக்கூடிய
இடமெதிலும் நுழைந்து சோதனையிட்டு அத்தகைய பதிவுருக்கள் மற்றும்
சொத்துக்களை கைப்பற்றுவதற்கு காவல்துறை துணை ஆய்வாளரின்
படிநிலைக்குக் குறையாததொரு காவல்துறை அலுவலருக்கு
பிடியாணையொன்றின் வாயிலாக அதிகாரமளித்தல் வேண்டும்; மற்றும் அவ்வாறு
கைப்பற்றப்பட்ட பதிவுருக்களும், சொத்துக்களும் தனி அலுவலரிடம் கைமாற்றித்
தரப்படுதல் வேண்டும்.
(4) இந்தப் பிரிவின்படி நடத்தப்படும் சோதனைகள் மற்றும் கைப்பற்றுகைகள்
அனைத்தும், குற்றவியல் நடுவரொருவரால் பிறப்பிக்கப்பட்டதொரு
பிடியாணையொன்றின் அதிகாரத்தின்படி செய்யப்படும் சோதனை அல்லது
கைப்பற்றுகை தொடர்பாக, 1973 ஆம் ஆண்டு குற்றவியல் விசாரணை முறைத்
தொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம் 271914) வகைமுறைகளுக்குக்கிணங்கிய
வகையில் செய்யப்படுதல் வேண்டும்.
அத்தியாயம் VII
மேல்முறையீடுகளும் மேலாய்வுகளும்.
45. மேல்முறையீடு.-- (1) இந்தச் சட்டத்தில் வேறுவிதமாக வகை
செய்யப்பட்டுள்ளவாறு தவிர, இந்தச் சட்டத்தின்படியோ அல்லது அதனடியொற்றிச்
செய்யப்பட்ட விதிகள் அல்லது துணை விதிகளின்படியோ பிறப்பிக்கப்பட்ட மூல
ஆணையிலிருந்து,-
() அந்த ஆணையானது, தலைமை நிருவாக அலுவலராலோ அல்லது
சந்தைக் குழுவின் பிற அலுவலர் எவராலோ பிறப்பிக்கப்பட்டிருக்குமானால்,
சந்தைக் குழுவிற்கு மேல்முறையீடு செய்து கொள்ளுதல் வேண்டும்;
0 அந்த ஆணையானது, சந்தைக் குழுவினால்
பிறப்பிக்கப்பட்டிருக்குமானால், உள்ளாட்சி அதிகார அமைப்பிடம் மேல்முறையீடு
செய்து கொள்ளுதல் வேண்டும்;
(i) அந்த ஆணையானது உள்ளாட்சி அதிகார அமைப்பினால்
பிறப்பிக்கப்பட்டிருக்குமானால் அரசிடம் மேல்முறையீடு செய்து கொள்ளுதல்
வேண்டும்.
(2) மேல்முறையீட்டில், சந்தைக் குழுவால் அல்லது உள்ளாட்சி அதிகார
அமைப்பால் ஆணையொன்று பிறப்பிக்கப்பட்டதன் நேர்வில், இரண்டாம்
மேல்முறையீடொன்றை அரசிடம் செய்து கொள்வதற்கு இடமுண்டு.
(3) மேல்முறையீடோ அல்லது இரண்டாம் மேல்முறையீடோ
வகுத்துரைக்கப்படும் கால அளவிற்குள் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலன்றி, அது
ஏற்றுக் கொள்ளப்படுதல் ஆகாது;
(4) மேல்முறையீடு அல்லது இரண்டாம் மேல்முறையீடு எதிலும்
தொடர்புடைய தரப்பினருக்குக் கேட்கப்படுவதற்கான வாய்ப்பொன்று
வழங்கப்பட்டிருந்தாலன்றி, நபரெவருக்கும் குந்தகமான ஆணை எதுவும்
பிறப்பிக்கப்படுதல் ஆகாது.
46. மேலாய்வு.- (1) அரசானது, எந்த ஒரு சந்தைக் குழு அல்லது உள்ளாட்சி
அதிகாரஅமைப்பின் நடவடிக்கை எதுவும் தொடர்பாக, அந்த நடவடிக்கையின்
முறைமை குறித்தோ அல்லது எடுக்கப்பட்ட முடிவு அல்லது அதில்
பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனின் சீர்மை, சட்டமுறைமை அல்லது
பொருத்தமுடைமை குறித்தோ தாம் மனநிறைவுறக் காண்பதற்காக, அந்த சந்தைக்
குழுவின் அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்பு எதனின் பதிவுக்கட்டினை
எந்தச்சமயத்திலும் தருவித்து ஆய்வு செய்யலாம்; மற்றும் எந்த நேர்விலேனும்,
அத்தகைய தீர்முடிவு அல்லது ஆணை எதுவும் மாற்றியமைக்கப்படுதல் வேண்டும்,
ரத்துசெய்யப்படுதல் வேண்டும், எதிர்மாறாக்கப்படுதல் வேண்டும் அல்லது
மறுபரிசீலனைக்காகத் திருப்பியனுப்பி வைக்கப்படுதல் வேண்டுமென்று
அரசிற்குத் தோன்றுமாயின், அது அதற்கிணங்கி வகையில் ஆணைகளைப்
பிறப்பிக்கலாம்:
வரம்புரை: ஆனால், அந்த உட்பிரிவின்படி ஆணை எதுவும் பிறப்பிப்பதற்கு
முன்னர், அரசானது,
(ஐ அந்த ஆணையானது, நபரெவருக்கும் பெரும்பாலும் குந்தகமாக
இருக்குமானால், அந்த நபர் தன் தரப்பினை எடுத்துரைப்பதற்கு நியாயமானதொரு
வாய்ப்பினை நல்குதல் வேண்டும்; மற்றும்
(௦) தாம் பொருத்தமெனக் கருதக் கூடிய அதிகார அமைப்பினையோ அல்லது
அலுவலரையோ கலந்தறியலாம்.
(2) அரசானது, அத்தகைய முடிவு அல்லது ஆணை எதையும்
செயற்படுத்துவதற்கு, அது தொடர்பாக (1) ஆம் உட்பிரிவில் தன் அதிகாரத்தைச்
செலுத்துவதற்குட்பட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.
அத்தியாயம் VI
குற்றச்செயல்களும், தண்டனைகளும்.
47. தண்டங்கள்.- (1) (ஐ) இந்தச் சட்டத்தின் மூலம் அல்லது இந்தச் சட்டத்தின்படி
அவரிடமிருந்து கொடுபட வேண்டியதாகவுள்ள கட்டணம் எதனையும் அல்லது
தொகை எதனையும் செலுத்துவதிலிருந்து ஏய்க்கின்ற; அல்லது
(௦) இந்தச் சட்டத்தினால் அல்லது இந்தச் சட்டத்தின்படி விவரவுரை
எதனையும் விடுக்குமாறு அல்லது தகவல் எதனையும் அளிக்குமாறு
கோரப்படும்போது, பொருட்கூறு பற்றிய விவரம் எதிலும், பொய் என தான்
அறித்திருக்கின்ற அல்லது பொய்யாக இருக்குமென அல்லது உண்மையற்றதாக
இருக்குமென நம்புவதற்கு நியாயமான காரணம் கொண்டிருக்கிற விவரவுரை
எதனையும் விடுக்கின்ற அல்லது தகவல் அளிக்கின்ற, அல்லது
(6) குறித்துரைக்கப்பட்ட பொருள் எதனையும் ஏற்றிச் செல்கின்ற அல்லது
ஏற்றிச் செல்வதாக நம்பக்கூடிய ஊர்தி, படகு அல்லது பிற போக்குவரத்துச்
சாதனத்தை ஆய்வு செய்வதிலிருந்து அல்லது ஒப்பாய்வு,
சோதனையிடுவதிலிருந்து அல்லது கைப்பற்றுவதிலிருந்து சந்தைக் குழுவின்
அலுவலர் அல்லது பணியாளர் எவரொருவரையும் தடுக்கின்ற அல்லது தடை
செய்கின்ற; அல்லது
(0) 21 ஆம் பிரிவின்படி வகைமுறைகளில் எதனையும் மீறுகின்ற அல்லது
இந்தச் சட்டத்தினால் அல்லது இந்தச் சட்டத்தின்படி, குறித்துரைக்கப்பட்ட
பொருள் எதனின் மொத்த வியாபாரத்திற்கு தேவைப்படக்கூடிய
உரிமமொன்றினைப் பெறுவதற்குத் தவறுகின்ற அல்லது அத்தகைய உரிமம்
எதனின் வரையறைகள் மற்றம் நிபந்தனைகளில் எதனையும் ம்றுகின்ற
எவரொருவரும், தண்டனைத் தீர்ப்பின் பேரில், ஐந்நூறு ரூபாய்க்குக்
குறையாமல் ஆனால் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் வரை நீடிக்கக்கூடியதொரு
பணத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுதல் வேண்டும்; மற்றும், தொடர்ந்து
அவ்வகை முறைகளை மீறிவருகின்ற நேர்வில், தண்டனைத் தீர்ப்பிற்குப் பின்,
அவ்வாறு தொடர்ந்து மீறுகின்றபோது, ஒவ்வொரு நாளுக்கும், ஐந்நூறு ரூபாய்வரை
நீடிக்கக்கூடிய மேலுமொரு பணத் தண்டத்துடன் சேர்த்துத் தண்டிக்கப்படுதல்
வேண்டும்.
(2) இந்தச் சட்டத்தின் வகை முறை எதனையும் அல்லது விதி எதனையும்
அல்லது துணை விதி எதனையும் மீறுகின்ற எவரொருவரும், இந்தச் சட்டத்தின்
அல்லது விதிகளில் அல்லது துணை விதிகளில் எங்கேயும் அவ்வாறு மீறுகைக்காக
பிற தண்டம் எதற்கும் வகை செய்யப்படவில்லையானால், தண்டனைத் தீர்ப்பின்
பேரில், ஓராயிரத்து ஐந்நூறு ரூபாய் வரை நீடிக்கக் கூடியதொரு பணத்தண்டம்
விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.
48. கட்டணம் அல்லது பிற தொகை செலுத்துவதற்கு குற்றம் சாட்டப்பட்டவரின்
கடப்பாடு.-- 47 ஆம் பிரிவின்படி தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்ற
ஒவ்வொரு நபரும், கட்டணத்தை அல்லது இந்தச் சட்டத்தின்படி அல்லது
விதிகளின்படி அல்லது துணை விதிகளின்படி அவரிடமிருந்து கொடுபடவேண்டிய
பிற தொகையைச் செலுத்தாது விட்டுவிட்டார் எனக் குற்றவியல் நடுவர்
தெளிவுறக் காணும் வகையில் மெய்ப்பிக்கப்பட்டதன் பேரில், அந்தக் கட்டணம்
அல்லது பிற தொகையின் காரணமாக கொடுபட வேண்டியதாக இருக்கக்கூடிய
தொகையினைச் சந்தைக் குழுவிற்குச் செலுத்துவதற்குக் கடப்பாடுடையவராதல்
வேண்டும்.
49. குற்றச்செயல்களை இணக்கமாகத் தீர்த்துக் கொள்ளுதல்.- இந்தச்
சட்டத்திற்கெதிராக அல்லது துணை விதிகளுக்கெதிராக குற்றச்
செயலொன்றினைச் செய்துள்ள அல்லது செய்துள்ளதாக நியாயமான முறையில்
ஐயப்படுவதற்குரிய நபரெவரிடமிருந்தும், அந்தக் குற்றச்செயலை இணக்கமாகத்
தீர்த்துக்கொள்வதன் வாயிலாக.-
(ஐ) அந்தக் குற்றச் செயலானது, இந்தச் சட்டத்தின் அல்லது விதிகளின்
அல்லது துணை விதிகளின்படி வசூலிக்கப்படத்தக்க கட்டணம் அல்லது பிற
தொகையினைச் செலுத்துவதிலிருந்து தவறுகின்ற அல்லது ஏய்க்கின்ற செயல்
தொடர்பாக இருக்கின்றவிடத்து, அவ்வாறு வசூலிக்கப்படத்தக்க கட்டணம்
அல்லது பிற தொகையுடன் சேர்த்து, ஓராயிரம் ரூபாய்க்கு மேற்படாததொரு
தொகையினை அல்லது கட்டணம் அல்லது பிற தொகை, அதாவது, இதில் எது
குறைவாக உள்ளதோ அதன் இரட்டிப்புத் தொகையொன்றைச் சந்தைக்
குழுவானது பெற்றுக் கொள்ளலாம்: மற்றும்
(௦) மற்ற நேர்வுகளில், ஓராயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு மேற்படாததொரு
தொகையினைப் பெற்றுக் கொள்ளலாம்.
50. கட்டணம் அல்லது பிற தொகையினை மொத்தமாக வசூலிப்பதற்காகக்
குற்றவியல் நடுவருக்குள்ள அதிகாரம்.- (1) இந்தச் சட்டத்தின்படி அல்லது
விதிகள் அல்லது துணை விதிகளின்படி நபரெவரும், குற்றச் செயலைச்
செய்திருக்கின்றார் எனக் குற்றத் தீர்ப்பு வழங்கப்படுகின்றபோதெல்லாம்,
குற்றவியல் நடுவரால் விதிக்கப்படக்கூடிய பணத் தண்டம் எதற்கும் கூடுதலாக,
இந்தச் சட்டத்தின்படி அல்லது விதிகள் அல்லது துணைவிதிகளின்படி
அவரிடமிருந்து கொடுபட வேண்டிய கட்டணத் தொகை அல்லது பிற தொகையை
மொத்தமாக வசூலித்து சந்தைக் குழுவிற்குச் செலுத்துதல் வேண்டும்; மற்றும்
தமது உளத் தேர்வின்படி குற்றவியல் வழக்குச் செலவு என்று தாம்
நிர்ணயிக்கக்கூடிய தொகை, ஏதேனுமிருப்பின், அந்தத் தொகையையும் கூட
சேர்த்து வசூலித்து சந்தைக் குழுவிற்குச் செலுத்தலாம்.
(2) இந்தச் சட்டத்தின்படி நதிமன்றமொன்றால் விதிக்கப்பட்ட
பணத்தண்டங்கள் அனைத்தும், அவை வசூலிக்கப்பட்டதன்பேரில் மாநில
வருவாய்க் கணக்கில் வரவு வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் எந்த ஒரு
நிதியாண்டின் போதும் அவ்வாறு வரவில் வைக்கப்பட்ட மொத்தத்தொகையானது,
அரசினால் சந்தைக் குழுவின் நிதியத்திற்குச் செலுத்தப்படுதல் வேண்டும்.
51. குற்றச் செயலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுதல்.- (1) இந்தச்
சட்டத்தின்படி அல்லது ஏதேனும் விதி அல்லது துணைவிதியின்படி
தண்டிக்கப்படத்தக்க குற்றச் செயல் எதுவும், பெருநகர் குற்றவியல் நடுவரின்
அல்லது முதல் வகுப்பு நீதித்துறை குற்றவியல் நடுவரின் படிநிலைக்குக் கீழ்
நிலையிலுள்ள நீதிமன்றம் எதனாலும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுதல்
ஆகாது.
(2) நீதிமன்றம் எதுவும், இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்க குற்றச்
செயல் எதையும், தலைமை நிருவாக அலுவலரால் அல்லது உள்ளாட்சி
அதிகாரஅமைப்பால் இதன்: பொருட்டு தனி ஆணையொன்றினால்
அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் எவராலும் எழுத்துருவின் வாயிலாகச்
செய்யப்பட்ட முறையிடொன்றின்பேறில் தவிர, விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளுதல் ஆகாது.
52. நிறுமங்களால் செய்யப்படும் குற்றச் செயல்கள்.-- (1) இந்தச் சட்டத்தின் வகை
முறைகள் எதற்கும், அல்லது அதன்படி செய்யப்பட்ட விதி எதற்கும் அல்லது
துணை விதி எதற்கும் எதிராக குற்றச்செயலொன்று ஒரு நிறுமத்தால்
செய்யப்பட்டிருக்கின்றவிடத்து அக்குற்றச் செயல் செய்யப்பட்ட காலத்தில்,
அந்நிறுமத்தின் அலுவலை நடத்தி வருகின்ற பொறுப்பையும், அந்நிறுமத்தின்
பொறுப்பையும் சேர்த்து வகிக்கின்ற நபர் ஒவ்வொருவரும், அவருக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கிணங்கிய வகையில் தண்டிக்கப்படுவதற்கும்
கடப்பாடுடையவர் ஆவார்:
வரம்புரை: ஆனால், இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அத்தகைய
நபரெவரையும், அக்குற்றச் செயலானது தமக்குத் தெரியாமலேயே
செய்யப்பட்டிருக்கின்றது என்றோ அல்லது அக்குற்றச் செயல் செய்யப்படுவதைத்
தடுப்பதற்கான உரிய முயற்சி அனைத்தையும் தாம் மேற்கொண்டிருந்தார் என்றோ
அவர் மெய்ப்பிப்பாராயின், தண்டனை எதற்கும் உள்ளாக்காது.
(2) (1) ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், அத்தகைய
குற்றச் செயல் எதுவும் நிறுமம் ஒன்றினால் செய்யப்பட்டிருந்து, அந்தக் குற்றச்
செயல் எதுவும் இயக்குநர், மேலாளர், செயலர் அல்லது அந்த நிறுமத்தின் பிற
அலவலர் ஆகியவர்களின் இசைவுடனோ அல்லது மறைமுக ஆதரவுடனோ
அல்லது ஏதேனும் கவனக் குறைவின் காரணமாக செய்யப்பட்டுள்ளது என
மெய்ப்பிக்கப்படு கின்றவிடத்து அந்த இயக்குநர், மேலாளர், செயலர் அல்லது பிற
அலுவலர் ஆகியவர்களும் கூட அந்தக் குற்றச் செயலைச் செய்த
குற்றவாளியெனக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் அவர்களுக்கெதிராக
நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கிணங்கிய வகையில் தண்டிக்கப்படுதல்
வேண்டும்.
விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக,
(a) நிறுமம்! என்றால் ஒரு கூட்டமைப்பு என்று பொருள்படுவதோடு,
ஒரு நிறுவகம் அல்லது தனி நபர்களின் கூட்டமைப்பு எதனையும்
உள்ளடக்கும்; மற்றும்
(௦) ஒரு நிறுவகம் தொடர்பாக "இயக்குநர்" என்றால், நிறுவகத்தில்
உள்ள ஒரு கூட்டாளி என பொருள்படும்.
அத்தியாயம் 106
பல்வகை
53. குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்குத் தடை.- (1) இந்தச் சட்டத்தின்படி
செய்யப்பட்ட செயல் எதற்காகவும் அல்லது செய்யப்படவுள்ளதாகப் புலப்படுகின்ற
எதற்காகவும், சந்தைக் குழுவிற்கு எதிராக, உரிமை வழக்கு தொடரப்படுதலோ
அல்லது பிற நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுதலோ ஆகாது.
(2) (ஐ இந்தச் சட்டத்தின்படி அல்லது இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட
விதி, துணை விதி அல்லது அதன்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை எதனின்படி
நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட எதற்காகவும்,
சந்தை குழுவின் தலைவர், அல்லது துணைத் தலைவர், அல்லது தலைமை
நிருவாக அலுவலர் அல்லது அலுவலர் அல்லது பணியாளர் எவருக்கும் எதிராக
உரிமைவழக்கு, குற்றவியல் வழக்கு தொடரப்படுதலோ அல்லது பிற
நடவடிக்கைகள் எடுக்கப்படுதலோ ஆகாது.
(b) தலைவர் அல்லது துணைத் தலைவர் அல்லது தலைமை நிருவாக
அலுவலர் அல்லது பிற அலுவலர் அல்லது பணியாளர் எவரும், இந்தச் சட்டத்தின்
வாயிலாக அல்லது அதன்படி அவருக்கு குறித்தளிக்கப்பட்ட கடமைகளை
நிறைவேற்றுவதில் அல்லது செயற்பணிகளை ஆற்றிவருவதில்
நல்லெண்ணத்துடன் செயல் எதுவும் செய்யப்பட்டு இருப்பின், உரிமையியல்
அல்லது குற்றவியல் நடவடிக்கை எதிலும் அந்தச் செயல் எதற்கும் உள்ளாகார்.
54. தலைவர், துணைத் தலைவர் மற்றும் தலைமை நிருவாக அலுவலர் ஆகியோர்
பொதுப் பணியாளர்களாக இருப்பர்.- இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின்
(மையச் சட்டம் XLV/1861) 21 ஆம் பிரிவின் பொருள் வரையறைக்குட்பட்டு,
சந்தைக் குழுவின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் தலைமை நிருவாக
அலுவலர் ஆகியோர் பொதுப் பணியாளர்களாகக் கருதப்படுதல் வேண்டும்.
55. குறிப்பிடப்பட்ட சில வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகள்
தொடர்வதற்கான காலவரம்பு.-- 59 ஆம் பிரிவில் வேறுவிதமாக வகை
செய்யப்பட்டிருந்தால் தவிர, இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது
செய்யப்படவுள்ளதாகப் புலப்படுகின்ற செயல் எதற்காகவும், சந்தைக் குழுவின்
தலைவர் அல்லது துணைத் தலைவர் அல்லது தலைமை நிருவாக அலுவலர்
அல்லது அலுவலர் அல்லது பிற பணியாளர் எவருக்கும் எதிராக, உரிமை வழக்கு,
குற்றவியல் வழக்கு, அல்லது பிற நடவடிக்கையினை, அச்செயலைப் பற்றி
முறையீடு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஆறு திங்கள் கால அளவிற்குள், அந்த
உரிமை வழக்கோ, குற்றவியல் வழக்கோ அல்லது பிற நடவடிக்கையோ
தொடரப்பட்டு அல்லது எடுக்கப்பட்டிருந்தாலன்றி, தொடரப்படுதலோ அல்லது
எடுக்கப்படுதலோ ஆகாது.
56. தொகைகளை வனளூலித்தல்.- சந்தைக் குழுவிடமிருந்து அரசுக்குக்
கொடுபடவேண்டியதாகவுள்ள அனைத்துத் தொகைகளும், மற்றும் இந்தச்
சட்டத்தின்படி விதிகளின் அல்லது துணை விதிகளின்படி கட்டணமாக அல்லது
வேறுவகையில், சந்தைக் குழுவிற்குக் கொடுபடவேண்டியதாகவுள்ள அனைத்துத்
தொகைகளும், நில வருவாய் நிலுவைகளை வசூல் செய்கின்ற அதே
போன்றதொரு முறையில் வசூல் செய்யப்படுதல் வேண்டும்.
57. சந்தைக் குழுவின் சார்பாக எழுதப்பட்ட ஆவணத்தைப் பதிவு செய்தல். (1)
1908 ஆம் ஆண்டு பதிவு சட்டத்தில் (மையச் சட்டம் XVI/1908) என்ன
அடங்கியிருந்தபோதிலும், ஒரு சந்தைக் குழுவின் தலைவர் அல்லது உறுப்பினர்
அல்லது அலுவலர் அல்லது பணியாளர் எவருமோ அல்லது 42 ஆம் பிரிவின்படி
நியமனம் செய்யப்பட்ட தனி அலுவலரோ பதிவு அலுவலகத்தில் அவரால் தனது
அலுவல் முறையில் எழுதிக் கொடுக்கப்பட்ட முறையாவணம் எதனையும் பதிவு
செய்தல் தொடர்பான நடவடிக்கை எதிலும், நேர்முகமாகவோ அல்லது முகவர்
மூலமாவோ முன்னிலையாவதோ அல்லது அந்தச் சட்டத்தின் 58 ஆம் பிரிவில்
வகை செய்யப்பட்டிருக்கின்றவாறு கையெழுத்திடுவதோ தேவை இல்லை.
(2) முறையாவணம் எதுவும் அவ்வாறு எழுதிக் கொடுக்கப்படுகின்றவிடத்து,
பதிவு செய்வதற்காக அம்முறையாவணம் எந்தப் பதிவு அலுவலரிடம்
முன்னிடப்படுகின்றதோ அந்தப் பதிவு அலுவலர் அவர் பொருத்தமெனக்
கருதுவாராயின், அதைப் பொறுத்த தகவலுக்காக தலைவர், உறுப்பினர், அலுவலர்,
பணியாளர் அல்லது தனி அலுவலருக்குச் சாட்டி அனுப்பலாம்; மற்றும் அவ்வாறு
எழுதப்பட்டமையைப் பொறுத்து மனநிறைவு அடைவாராயின், முறையாவணத்தை
பதிவு செய்யலாம்.
58. சில நடவடிக்கைகள் முதலியவற்றில் தடைக் கட்டளை வழங்குதல் ஆகாது.-
1908 ஆம் ஆண்டு உரிமையியல் வழக்கு விசாரணை முறைத் தொகுப்புச்
சட்டத்தில் (மையச் சட்டம் V/1908) அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள
பிற சட்டம் எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், இந்தச் சட்டத்தின்படி, பெயர்
குறித்து நியமனம் செய்கின்ற நோக்கத்திற்காக 21 ஆம் பிரிவின்கீழ் உரிமம்
வழங்கப்பட்ட நபர்களின் பட்டியல் எதையும் தயாரித்தல் அல்லது வெளியிடுதல்
உள்ளடங்கலாக, பெயர் குறித்து நியமனம் செய்தல் அல்லது நியமனம் செய்தல்
தொடர்பாக, எந்த முறையிலும், நிலையான அல்லது தற்காலிகத் தடை எதனையும்
அல்லது இடைக்காலத் தடை ஆணை எதனையும் நீதிமன்றம் எதுவும் வழங்குதல்
ஆகாது.
59. இழப்பு, சேதாரம் அல்லது தவறாகப் பயன்படுத்துதலுக்கு தலைவர், துணைத்
தலைவர் மற்றம் உறுப்பினர் ஆகியோரின் கடப்பாடு. (1) சந்தைக் குழுவின்
தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர் ஒவ்வொருவரும், சந்தைக்
குழுவிற்கு சொந்தமாகவுள்ள அல்லது சந்தைக் குழுவிடம் உற்றமைந்துள்ள
பணத்தொகை அல்லது பிற சொத்து எதனின் இழப்பு, சேதாரம் அல்லது தவறாகப்
பயன்படுத்துகையானது., அவருடைய கவனக்குறைவு அல்லது தவறான
நடத்தையின் நேரடி விளைவாக இருக்குமாயின், அந்த இழப்பு, சேதாரம் அல்லது
தவறாகப் பயன்படுத்துதலுக்கு கடப்பாடுடையவர்களாவர்; மற்றும் இழப்பிட்டிற்காக
உரிமை வழக்கொன்று, அவருக்கெதிராக, தகுதிவாய்ந்த அதிகார வரம்பினைக்
கொண்டிருக்கின்ற நீதிமன்றமெதிலும் தொடரப்படலாம்.
(2) நடவடிக்கைக்கான காரணம் எழுந்த தேதிக்குப் பிண்னர், மூன்று
ஆண்டுக்கால அளவிற்குள் அத்தகைய உரிமை வழக்கு ஒவ்வொன்றும்
தொடரப்படுதல் வேண்டும்.
60. விலக்களித்தல்.- இந்தச் சட்டத்திலுள்ள எதுவும், மைய அரசு அல்லது மாநில
அரசு எதனாலும் செய்யப்படும் வகுத்துரைக்கப்பட்ட வணிகப்பொருள் எதனின்
மொத்த விற்பனை வணிகத்திற்குப் பொருந்துதல் ஆகாது.
61. இணைப்புப் பட்டியலைத் திருத்துவதற்கான அதிகாரம்.-- (1) அரசு,
அறிவிக்கையொன்றின்: மூலமாக, ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட
வணிகப்பொருள் எதனையும் உட் சேர்ப்பதற்காகவும் அல்லது அதிலிருந்து
குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருள் எதனையும் நீக்குவதற்காகவும் அல்லது
அதில் உள்ள குறித்துரைக்கப்பட்ட வணிகப் பொருள் விவரத்தை
மாற்றுவதற்காகவும் இணைப்புப் பட்டியலைத் திருத்தலாம்.
(2) அவ்வாறு இணைப்புப் பட்டியல் திருத்தப்படுகின்றபோது, இந்தச்
சட்டத்திற்கான இணைபப்புப்பட்டியல் பற்றிய சுட் கை எதுவும், அவ்வாறு
திருத்தப்பட்டபடியான இணைப்புப்பட்டியலுக்கான சுட்டுகையாகப் பொருள்
கொள்ளப்படுதல் வேண்டும்.
62. வசூலிக்கப்பட இயலாத தொகை முதலியனவற்றைத் தள்ளுபடி
செய்வதற்கான அதிகாரம்.- ஒரு சந்தைக் குழுவானது, ஒப்பந்தப்படி அல்லது
மற்றப்படி அதற்குக் கொடுபடவேண்டிய தொகை எதுவும் அல்லது அது
தொடர்பாகச் செலுத்தப்பவேண்டிய தொகை எதுவும், தமது கருத்தின்படி
வசூலிக்கப்பட இயலாததாக இருக்கின்றதாயின், அந்த தொகை அல்லது பணம்
எவ்வளவாக இருந்தாலும் அதனைத் தள்ளுபடி செய்துவிடலாம்:
வரம்புரை: ஆனால், சந்தைக் குழுவானது-
(i) தள்ளுபடி செய்யக்கூடிய தொகை அல்லது பணமானது, ஐயாயிரம்
ரூபாய்க்கு மேற்பட்டு, ஆனால் பத்தாயிரம் ரூபாய்க்கு மேற்படாமல் இருக்கின்ற
ஒவ்வொரு நேர்விலும், உள்ளாட்சி அதிகாரஅமைப்பின் முன் ஒப்பளிப்பைப்
பெறுதல் வேண்டும்; மற்றும்
(0 தள்ளுபடி செய்யக்கூடிய தொகை அல்லது பணமானது, பத்தாயிரம்
ரூபாய்க்கு மேற்படுகின்ற ஒவ்வொரு நேர்விலும், அரசின் முன் ஒப்பளிப்பைப்
பெறுதல் வேண்டும்.
63. இந்தச் சட்டம் மற்றச் சட்டங்களுக்கு மேலோங்கி இருத்தல். (1) 1987 ஆம்
ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் வாணிகச்
(ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 271989) அல்லது
அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதிலும் முரணாக அதில் என்ன
அடங்கியிருந்தபோதிலும், இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் (நெரிசலைக்
குறைக்கின்ற நோக்கம் தொடர்பாக மட்டுமே) செயல் விளைவு பெறுதல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவில் வேறுவிதமாக வகை செய்யப்பட்டிருந்தால் தவிர,
இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் ஏதேனும் பிற சட்டத்திற்கு கூடுதலாக மற்றும்
செயற்கேடு இல்லாமல் அமைந்திருத்தல் வேண்டும்.
64. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.- இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பதில் இடர்ப்பாடு எதுவும்
எழுமாயின், அரசானது, தமிழ்நாடு அரசிகழில் வெளியிடப்படும் ஆணைடுயான்றின்
வாயிலாக, அவ்விடர்ப்பாட்டினை நீக்குவதற்குத் தேவையானவையென்றோ
அல்லது உகந்தவையென்றோ தமக்குத் தோன்றக்கூடிய ஆனால், இந்தச்
சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகைமுறைகளைச்
செய்யலாம்:
வரம்புரை: ஆனால், அத்தகைய ஆணை எதுவும், இந்தச் சட்டத்தின்
தொடக்கத் தேதியிலிருந்து இரண்டாண்டுகள் முடிவடைந்ததற்குப் பின்பு,
பிறப்பிக்கப்படுதலாகாது.
65. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.-- (1) அரசானது, ஏதேனும் சந்தைப்
பரப்பிடம் அல்லது பரப்பிடங்களுக்கு பொதுவாக அல்லது தனிப்பட்ட முறையில்,
இந்தச் சட்டத்தின் அனைத்து அல்லது ஏதேனும் நோக்கங்களை
நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம்.
(2) குறிப்பாகவும் மேலே கண்ட அதிகாரத்தின் பொதுப்பாங்கிற்குக்
குந்தகமின்றியும் அத்தகைய விதிகள்,
(ஐ பெயர் குறித்து நியமனம் மற்றும் சந்தைக் குழுவின்
உறுப்பினர்களை விலக்கிக்கொள்ளுதல் அல்லது நேர்விற்கேற்ப, சந்தைப்
பகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த விற்பனை வணிகர்கள் மற்றும் 21 ஆம்
பிரிவின்கீழ் உரிமம் வழங்கப்பட்ட நபர்களின் பட்டியல்களைத் தயாரித்தல்
மற்றும் வெளியிடுதல் மற்றும் அதனை திருத்தியமைத்தல்.
(b) சந்தைக் குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவரின்
தேர்தல்முறை அவர்களுடைய அதிகாரங்கள் மற்றும் செயற்பணிகள்;
(c) சந்தைக் குழுவின் தலைவர், துணைத் தலைவர் அல்லது
உறுப்பினர் பதவியில் தற்செயல் காலியிடங்களை நிரப்புதல்;
(0) சந்தைக் குழுவின் கூட்டங்களைக் கூட்டுதல்;
(6) 21 ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட
உரிமங்களைப் பொறுத்தமட்டில் சந்தைக் குழுவால் விதிக்கப்படக்கூடிய
கட்டணங்கள்; மற்றும் அந்தக் கட்டணங்களை வசூலித்தல்;
() கட்டணங்களைத் தீர்மானிப்பதற்கான நடைமுறை மற்றும்
அதற்கான வசூலிப்பின் முறை;
@ 21 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ், உரிமம்
வழங்கப்படக்கூடிய அல்லது புதுப்பிக்கப்படக்கூடிய படிவம் மற்றும்
உட்படக்கூடிய நிபந்தனைகள்;
(h) சந்தைக் குழுவின் செலவில் மொத்தமாக அல்லது பகுதியாகக்
கட்டுவதற்கு கருதப்பட்ட கட்டுமானப் பணிகளுக்கான திட்டங்கள் மற்றும்
மதிப்பிடுகளைத் தயாரித்தல் மற்றும் அந்தத் திட்டங்கள் மற்றும்
மதிப்பிடுகளுக்கு ஒப்பளிப்பு வழங்குதல்;
(i) எந்த முறையில் மற்றும் எந்த வரையறைகள் மற்றும்
வரைக்கட்டுகளுக்குட்பட்டு, சந்தைக் குழுவினால் செலவு செய்ய
நேரிடலாம் என்பது உள்ளடங்கலாக, பொதுவாக நிதிப் பொருட்கூறுகளைப்
பொறுத்தமட்டில் சந்தைக் குழுவால் பின்பற்றப்படவேண்டிய நடைமுறை;
0 சந்தைக் குழுவின் கணக்குகள் வைத்திருக்கப்பட வேண்டிய
படிவம், அந்தக் கணக்குகளின் தணிக்கை மற்றும் வெளியிடுகை மற்றும்
அந்த தணிக்கைக்காகச் செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள்
ஏதேனுமிருப்பின், அவை குறித்து;
(k) வரவு - செலவு ஆண்டுக் கணக்கு தயாரித்து ஒப்பதலளிப்புக்கு
அனுப்புதல் மற்றம் அறிக்கைகள் மற்றும் சந்தைக் குழுவின் தலைமை
நிருவாக அலுவலரால் அளிக்கப்படவேண்டிய அறிக்கைகள் மற்றும் விவர
அறிக்கைகள்.
() சந்தைக் குழுவின் மிகையாக உள்ள நிதியத்தினை முதலீடு
செய்தலும் முடிவு செய்தலும்;
(M) சந்தைக் குழுவின் தலைமை நிருவாக அலுவலர், அலுவலர்கள்,
பிற பணியாளர்கள் ஆகியவர்களின் பணியிலமர்த்துவதற்கான முறையும் பணி
நிபந்தனைகளும்;
(n) சந்தைக் குழுவின் உறுப்பினர்கள், அலுவலர்கள், மற்றும் பிற
பணியாளர்களுக்குச் செலுத்தப்படக்கூடிய பயண மற்றும் பிற படித்
தொகைகள்;
(௦) சந்தைக் குழுவானது, எந்த முறையில் ஆய்வு செய்யப்படுதல்
வேண்டும் என்பது குறித்து;
(ஐ சந்தைக் குழு நிதியத்தின் வரவுகள், செலவுகள் மற்றும் அவை
தொடர்பான பொருட்பாடுகளைப் பொறுத்தமட்டில் பின்பற்றப்படவேண்டிய
நடைமுறை; மற்றும்
(0) வகுத்துரைக்கப்படவுள்ள அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய பிற
பொருட்கூறு எதுவும் பற்றி.
(3) இந்தப் பிரிவின்படி செய்யப்பட்ட எந்த விதியும் அதனையோ அல்லது
இந்தச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட உரிம நிபந்தனைகளில் எதனையுமோ
மீறுகின்றபோது, ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்வரை நீடிக்கக்கூடிய
பணத்தண்டத்துடன் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்று வகை செய்யலாம்.
66. துணை விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.- (1) 65 ஆம் பிரிவின்படி
அரசினால் செய்யப்பட்ட விதிகளுக்குட்பட்டு, சந்தைக் குழுவானது, அரசின் முன்
ஒப்புதலளிப்புடன், அது எதற்காக நிறுவப்பட்டதோ அந்த சந்தைப் பரப்பிடத்தினைப்
பொறுத்தமட்டில், அப்பரப்பிடத்தில் ஒப்புதலளிப்புடன் வணிகத்தை மற்றும் அதன்
வியாபார நிபந்தனைகளை முறைப்படுத்தவும் மற்றும் சந்தை உள்ளடங்கலான,
சந்தைகளின் நிருவாகத்தை நாள்தோறும் ஒழுங்குமுறைப்படுத்துதல் மற்றும்
நிருவகித்தல் தொடர்பான பிற பொருட்கூறுகளுக்காகவும், பிற கட்டணங்கள்.
மற்றும் துணை விதிகளில் வகைமுறை செய்யப்படவேண்டிய அல்லது
செய்யப்படக்கூடிய ஏதேனும் பிற பொருட்கூறுகளுக்காகவும், துணை விதிகளைச்
செய்யலாம்:
வரம்புரை: ஆனால், 8 ஆம் பிரிவின்படி சந்தைக் குழுவால்
அமைத்துருவாக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு திங்கள் கால அளவிற்குள் இந்த
உட்பிரிவின்படி துணைவிதிகளைச் செய்ய சந்தைக் குழுவானது
தவறுகின்றவிடத்து, அரசின் முன் ஒப்பளிப்புடன் உள்ளாட்சி
அதிகாரஅமைப்பானது, அது பொருத்தமானதென நினைக்கக்கூடிய துணை
விதிகளைச் செய்து கொள்ளலாம்; மற்றும் அவ்வாறு செய்யப்பட்ட துணை விதிகள்
சந்தைக் குழுவால் செய்யப்பட்ட துணை விதிகளாகக் கருதப்படுதல் வேண்டும்;
மற்றும் அரசின் முன் ஒப்பதலளிப்புடன், உள்ளாட்சி அதிகாரஅமைப்பால் அல்லது
சந்தைக் குழுவால் அத்துணை விதிகள் திருத்தம் செய்து கொள்ளப்படலாம்
அல்லது மாற்றியமைத்துக் கொள்ளப்படலாம்.
(2) இந்தப் பிரிவின்படி செய்யப்பட்ட எந்தத் துணை விதியும், அதன்
மீறுகைக்கு முன்னூறு ரூபாய் வரை நீடிக்கக்கூடிய பணத்தண்டத்துடன்
தண்டிக்கப்படுவதற்கு வகைசெய்யலாம்.
67. விதிகள், அறிவிக்கைகள் மற்றும் ஆணைகள் சட்டமன்றத்தின் முன்பு
வைக்கப்படுதல் வேண்டும்.- (1) (ஐ) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அனைத்து
விதிகளும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும்; மற்றும் அவை
குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென
வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு
வெளியிடப்பட்ட தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(௦) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அனைத்து அறிவிக்கைகளும்,
அவை, ஒரு குறிப்பிட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென
வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு
வெளியிடப்பட்ட தேதி முதல் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(2) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட விதி
அல்லது ஆணை அல்லது அறிவிக்கை ஒவ்வொன்றும், அது செய்யப்பட்ட
அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்பு, கூடிய விரைவில், சட்டமன்றப் பேரவையின்
முன்னர் வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அவ்வாறு வைக்கப்பட்ட
கூட்டத்தொடரோ அல்லது அடுத்த கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்னர்,
அந்த விதியிலோ அல்லது ஆணையிலோ அல்லது அறிவிக்கையிலோ மாற்றம்
எதையேனும் அச் சட்டமன்றப் பேரவை செய்யுமாயின் அல்லது அந்த விதியோ
அல்லது ஆணையோ அல்லது அறிவிக்கையோ செய்யப்படுதலோ,
பிறப்பிக்கப்படுதலோ அல்லது வெளியிடப்படுதலோ ஆகாது என்று சட்டமன்றப்
பேரவையானது முடிவு செய்யுமாயின், அந்த விதியோ அல்லது ஆணையோ
அல்லது அறிவிக்கையோ, அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே
செயல் விளைவு பெறுதல் வேண்டும், அல்லது நேர்விற்கேற்ப செயல் விளைவு
பெறாது போதல் வேண்டும்; எனினும், அத்தகைய மாற்றம் அல்லது அழித்தறவு
எதுவும், அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கையின்படி முன்பே
செய்யப்பட்ட எதனின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.
இணைபப்புப்பட்டியல்
(2012), 2013), 61 ஆகிய பிரிவுகளைக் காண்க.)
வரிசை குறித்துரைக்கப்பட்ட வணிகப்பொருள்.
எண்.
(1) (2)
1. காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் பிற அழுகுப் பொருட்கள்.
2. துணி வகைகள்.
3. இரும்பு மற்றும் எஃகுப் பொருட்கள்.
4. உணவுத் தானியங்கள்.
5. மரத்தடி வகைகள்.
6. பழைய பிசிர் இரும்புப் பொருட்கள்.