Tamil Nadu · 1975 · Act 27
THE TAMIL NADU SOCIETIES REGISTRATlON ACT, 1975
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம்
சட்ட எண்.27/1975
தமிழ்நாடு மாநிலத்தில், இலக்கிய, அறிவியல், சமய, அறநிலைய மற்றும் பிற
சங்கங்களைப் பதிவு செய்தலுக்கு வகைசெய்வதற்கான ஒரு சட்டம்.
இந்தியக் குடியரசின் இருபத்தாறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தின்.
சட்டமன்றத்தால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக:-
அத்தியாயம் |
முன்னுரை
1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும் தொடக்கம்.- (1) இந்தச் சட்டம், 1975 ஆம்
ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.
(3) இது அரசு அறிவிக்கை வாயிலாகக் குறிக்கலாகும் தேதியில்
நடைமுறைக்கு வரும்; மற்றும் வெவ்வேறு பகுதிகளுக்கும், இந்தச் சட்டத்தின்
வெவ்வேறு வகைமுறைகளுக்கும் வெவ்வேறு தேதிகள் குறிக்கப்படலாம்:
ஆனால், அத்தகைய வகைமுறை எதிலுமுள்ள, இந்தச் சட்டத்தின்
தொடக்கம் பற்றிய சுட்டுகை எதுவும், எந்தப் பகுதியையும் பொறுத்தவரையில்,
அந்தப் பகுதியில் அந்த வகைமுறை நடைமுறைக்கு வருவது பற்றிய ஒரு
சுட்டுகையாகப் பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்.
2. பொருள் வரையறைகள்.- இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறுபொருள்
குறித்தாலன்றி.-
(அ) "குழு" என்பது, பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு சங்கத்தின்
ஆட்சிக்குழுமத்தினிடம் அதனுடைய அலுவல்கள்
ஒப்படைக்கப்பட்டிர௬ றனவோ அந்த ஆட்சிக்குழுமம் என்று பொருள்படும்;
(ஆ) "நீதிமன்றம்" என்பது, மாகாணத் தலைநகரத்தில் சென்னை மாநகர
உரிமை வழக்கு நீதிமன்றம் என்றும், மற்ற இடங்களில் மாவட்ட நீதிமன்றம்
என்றும் பொருள்படும்:
(க) "மாவட்டம்" என்பது, 1908 ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தின் (மையச்
சட்டம் 671308) 5 ஆம் பிரிவின்படி அமைக்கப்பட்ட மாவட்டம் என்று
பொருள்படும்;
(௩) "நிதியாண்டு" என்பது, பதிவுசெய்யப்பட்ட சங்கத்தின் துணை
விதிகளின்படி எந்தப் பண்ணிரண்டு திங்கள் காலஅளவிற்கான கணக்குகளைத்
தயாரிக்க வேண்டுறுத்தப்படுகிறதோ அந்தப் பன்னிரண்டு திங்கள் காலஅளவு
என்றும், அவ்வாறு துணை விதிகள் வகைசெய்யாவிட்டால் ஒவ்வொரு ஆண்டும்
மார்ச்சு முப்பத்தோராம் நாளுடன் முடிவடைகிற பன்னிரண்டு திங்கள் கொண்ட
காலஅளவு என்றும் பொருள்படும்;
(உ) "அரசு" என்பது, மாநில அரசு என்று பொருள்படும்;
(ஊ) "அமைப்பு விதிக்குறிப்பு' என்பது, இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்கிணங்க வகுக்கப்பட்டு, அவ்வப்போது திருத்தப்பட்டப் படியான
பதிவுசெய்யப்பட்ட ஒரு சங்கத்தின் சங்க அமைப்பு விதிக்குறிப்பு என்று
பொருள்படும்;
(௭) "அலுவலர்" என்பது, பொறுப்புக் கட்டளையர், இயக்குநர், மேலாளர்,
பொருளாளர், செயலாளர், உதவிச் செயலாளர் அல்லது குழு உறுப்பினர் எவரையும்
அல்லது பதிவுசெய்யப்பட்ட சங்கத்தின் துணை விதிகளால் பதிவுசெய்யப்பட்ட
சங்கத்தின் சொத்து, உரிமை அல்லது உரிமைக்கோரிக்கை எதையும் குறித்த
அல்லது பொறுத்த வழக்கு அல்லது வேறு சட்ட நடவடிக்கை எதையும்
கொண்டுவர அல்லது எதிர்வழக்காட அல்லது கொண்டுவரச் செய்ய அல்லது
எதிர்வழக்காடச் செய்ய இதன் பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட எவரையும்,
அல்லது பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் துணை விதிகளால் அதன் அலுவலைப்
பொறுத்துப் பணிப்புரைகள் பிறப்பிக்க அதிகாரம் அளிக்கப்பெற்ற வேறு எவரையும்
உள்ளடக்கும்;
(ஏ) "பதிவு செய்யப்பட்ட சங்கம்" என்பது, இந்தச் சட்டத்தின்படி
பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவுசெய்யப்படுவதாகக் கொள்ளப்பட்ட ஒரு சங்கம்
என்று பொருள்படும்;
(ஐ) "பதிவாளர் என்பது, 1908 ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தின் (மையச்
சட்டம் XVI/1908) 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி அமர்த்தப்பட்ட
ஆணைப் பதிவுத்துறைத் தலைவர் அல்லது அந்தச் சட்டத்தின் 6 ஆம் பிரிவின்படி
அமர்த்தப்பட்ட ஒரு மாவட்டப் பதிவாளர் அல்லது இந்தச் சட்டத்தின்படி
பதிவாளரின் அதிகாரங்கள் எல்லாவற்றையுமோ எவற்றையுமோ செலுத்துவதற்கு
அரசால் அதிகாரமளிக்கப்பட்ட ஆள் எவரும் என்று பொருள்படும்;
(@) "சிறப்புத் தீர்மானம்" என்பது, சிறப்புத் தீர்மாணமாக ஒரு தீர்மானத்தை
முன்மொழியும் கருத்தைக் குறித்துரைத்து வருத்துரைக்கப்படலாகும்
காலஅளவுக்குக் குறையாத காலஅளவிற்கு அறிவிப்பு ஒன்று உரியவாறு
கொடுக்கப்பட்டுள்ள பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் நேரில்
வந்திருந்தோ அல்லது பதிலாள் வாயிலாகவோ வாக்களிக்க (யதிலாட்கள்
அனுமதிக்கப்படுமிடத்து) உரிமை பெற்றுள்ள அந்தச் சங்கத்தின் உறுப்பினர்களில்
நான்கில் மூன்று பங்கிற்குக் குறையாத பெரும்பாண்மையினரால்
நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் என்று பொருள்படும்;
ஆனால், அத்தகைய கூட்டம் எதிலும் வாக்களிக்கும் உரிமை பெற்ற
உறுப்பினர்கள். எல்லாரும் உடன்படுவார்களானால், இந்தக் கூறின்படி
வகுத்துரைக்கப்பட்ட காலஅளவிற்குக் குறையாத ஒரு காலஅளவிற்கு அறிவிப்பு
கொடுக்கப்பட்ட ஒரு கூட்டத்தில் ஒரு தீர்மானமானது சிறப்புத் தீர்மானமாக
நிறைவேற்றப்படலாம்;
(@) "மாற்றப்பட்ட நிலப்பரப்பு என்பது, கண்ணனியாகுமரி மாவட்டமும்,
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை வட்டமும் என்று பொருள்படும்.
அத்தியாயம் ॥
அமைப்பும், பதிவும்
3. பதிவு செய்யப்படலாகும் சங்கங்கள்.- (1). (2) ஆம் உட்பிரிவில்
வகைமுறைகளுக்கு உட்பட்டு, கல்வி, இலக்கியம், அறிவியல், சமயம், அறம்,
சமூகச் சீர்திருத்தம், கலை, கைத்தொழில்கள், குடிசைத் தொழில்கள்.
உடற்பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் (மனையக விளையாட்டுகள்
உள்ளடங்கலாக) பொழுதபோக்கு, மக்கள் நல்வாழ்வு, சமூகப் பணி, பண்பாட்டு
நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மேம்படுத்தும், பயனுள்ள அறிவைப் பரப்பும்
நோக்கத்தைக் கொண்டிருக்கிற அல்லது வகுத்துரைக்கப்படலாகும் வேறு எந்தப்
பயனுள்ள நோக்கம் குறித்து மாநிலச் சட்டமன்றம் மாநிலத்திற்காகச் சட்டம்
இயற்றுவதற்கு அதிகாரம் கொண்டுள்ளதோ அந்த நோக்கத்தைக் கொண்டிருக்கிற
சங்கம் எதுவும், இந்தச் சட்டத்தின்படி பதிவு செய்யப்படலாம்.
(2). (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும் எப்படியிருந்த போதிலும்,
வேலையாட்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதைத் தனது நோக்கமாகக்
கொண்டிருக்கிற கழகம் எதுவும், வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க
வகைசெய்கிற எதிர்பாரா வாய்ப்பு விளையாட்டுகள் விளையாடப்படுகிற குழாம்
எதுவும், மற்றும் குறைந்தது ஏழு ஆட்களைக் கொண்டிராத சங்கம் எதுவும் இந்தச்
சட்டத்தின்படி பதிவு செய்யப்படுதல் ஆகாது.
4. சில சங்கங்களைக் கட்டாயமாக பதிவு செய்தல்.- (1), (3), (4) ஆகிய
உட்பிரிவுகளின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, இந்தச் சட்டத்தின் தொடக்கத்
தேதியன்று அல்லது அதற்குப் பிறகு அமைக்கப்பட்டதும், 3 ஆம் பிரிவில்
சொல்லப்பட்ட அல்லது வகுத்துரைக்கப்பட்ட நோக்கம் எதையும் தன் நோக்கமாகக்
கொண்டிருக்கிறதும்.-
(அ) இருபதுக்குக் குறையாத உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறதாக,
அல்லது
(ஆ) இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்குப் பிறகு எந்த நிதியாண்டிலும்
மொத்த ஆண்டு வருமானம் அல்லது செலவு பத்தாயிரம் ரூபாய்க்குக்
குறையாததாக
உள்ளதுமான ஒவ்வொரு சங்கமும் இந்தச் சட்டத்தின்படி
வகுத்துரைக்கப்படலாகும் காலஅளவிற்குள் பதிவு செய்யப்படுதல் வேண்டும்.
(2) இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்று, 3 ஆம் பிரிவில் சொல்லப்பட்ட
அல்லது அதன்படி வகுத் ரைக்கப்பட்ட நோக்கம் எதையும் தன் நோக்கமாக
கொண்டிருக்கிறதும் 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி(மையச்
சட்டம் XXI/1860) அல்லது 1955 ஆம் ஆண்டு திருவாங்கூர்-கொச்சி இலக்கிய,
அறிவியல், அறச்சங்கங்கள் பதிவுச் சட்டம் (திருவாங்கூர்-கொச்சி சட்டம்
207955) உள்ளடங்கலாக இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்கு ஒட்டி முந்தி
மாற்றப்பட்ட நிலப்பரப்பில் நடைமுறையிலிருக்கும் இந்தச் சட்டத்திற்கு
நேரிணையான சட்டம் எதன்படியும் பதிவு செய்யப்பட்டிராததும்
() இருபதுக்குக் குறையாத உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறதாக,
அல்லது
(0 இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்குப் பிறகு எந்த ஒரு நிதியாண்டிலும்
மொத்த ஆண்டு வருமானம் அல்லது செலவு, பத்தாயிரம் ரூபாய்க்குக்
குறையாததாக, அல்லது
00 இந்தச் சட்டத்தில் தொடக்கத் தேதிக்கு முன்னதான கால அளவு எதிலும்
மொத்த வருமானம் அல்லது செலவு, வகுத்துரைக்கப்படலாகும் தொகைக்கு,
அதாவது, அவ்வாறு வகுத்துரைக்கப்படுகிற காலஅளவும், பன்னிரண்டு திங்களும்
எந்த விகிதத்தில் இருக்கின்றணவோ அதே விகிதத்தில் அவ்வாறு
வகுத்துரைக்கப்பட்ட தொகையும் ரூபாய் பத்தாயிரமும் இருக்கும்படியான
அத்தகைய தொகைக்குக் குறையாததாக உள்ள ஒவ்வொரு சங்கமும், இந்தச்
சட்டத்தின்படி வகுத்துரைக்கப்படலாகும் காலஅளவிற்குள் பதிவு செய்யப்படுதல்
வேண்டும்.
(3) இந்தப் பிரிவிலுள்ள எதுவும், சமயத்தில், உடற்பயிற்சியின் அல்லது
விளையாட்டுப் போட்டியின் மனையக விளையாட்டுகள் உள்ளடங்கலாக)
மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட சங்கம் எதற்கும் பொருந்தாது.
(4) இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும், வேறு எந்தச் சட்டத்தின்படியும்
அமைக்கப்பட்ட, நிறுவப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அல்லது கூட்டு நிறுவனமாகப்
பதிவு செய்யப்பட்ட சங்கம் எதையும் இந்தச் சட்டத்தின்படி பதிவு செய்ய
வேண்டுறுத்துவதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.
5. தெரிவு முறைப் பதிவு.-- (அ) சமயத்தை, உடற்பயிற்சியை அல்லது
விளையாட்டுப் போட்டிகளை (மனையக விளையாட்டுகள் உள்ளடங்கலாக)
மேம்படுத்துவதைத் தனது நோக்கமாகக் கொண்டிருக்கிற அல்லது
(ஆ) 3 ஆம் பிரிவில் சொல்லப்பட்ட அல்லது அதன்படி வகுத்துரைக்கப்பட்ட
வேறு எந்த நோக்கத்தையும் தனது நோக்கமாகக் கொண்டிருக்கிறதும், 4 ஆம்
பிரிவின் வகைமுறைகள் பொருந்தாதுமான
சங்கம் எதுவும், அதன் தெரிவின்பேரில், இந்தச் சட்டத்தின்படி பதிவு
செய்யப்படலாம்.
6. அமைப்பு விதிக் குறிப்பு துணை விதிகள் முதலானவை பதிவாளரிடம்
முன்னிடப்படுதல்.- ஒரு சங்கத்தைப் பதிவு செய்யும் நோக்கத்திற்காக, எந்த
மாவட்டத்தில் அந்தச் சங்கம் அமைக்கப்பட்டிருக்கிறதோ அந்த மாவட்டத்தின்.
பதிவாளரிடம் அந்தச் சங்கத்தின் குழு உறுப்பினர் ஒருவரால் அல்லது அந்தக்
குழுவினால் இதற்கென உரியவாறு அதிகாரமளிக்கப்பட்ட ஆள் எவராலும்-
(1) (அ) அச்சங்கத்தின் பெயர்,
(ஆ) அச்சங்கத்தின் நோக்கங்கள், மற்றும்
(க) குழு உறுப்பினர்களின் பெயர்கள், முகவரிகள், தொழில்கள்,
ஆகியவற்றைக் குறித்துரைக்கும் ஓர் அமைப்பு விதிக் குறிப்பும்.
(2) சங்கத்தின் துணை விதிகளும் முன்னிடப்படுதல் வேண்டும்.
7. அமைப்பு விதிக் குறிப்பும் துணை விதிகளும் அச்சிடப்பட்டு அல்லது
தட்டச்சிடப்பட்டு, கையொப்பமிடப்பட்டு இருத்தல் வேண்டும்.- (1) சங்கத்தின்
அமைப்பு விதிக்குறிப்பும், துணை விதிகளும் அச்சிடப்பட்டோ, தட்டச்சிடப்பட்டோ
இருத்தல் வேண்டும்.
(2) அந்த அமைப்பு விதிக்குறிப்பானது குறைந்தது ஏழு உறுப்பினர்களால்
கையொப்பமிடப்படுதல் வேண்டும். அவர்கள் குறைந்தது ஒரு சான்றாளரின்
முன்னிலையில் தங்கள் முகவரிகளையும் தொழிலையும் இணைத்தல் வேண்டும்.
அந்தச் சான்றாளர் கையொப்பங்களுக்குச் சான்றொப்பமிடுதல் வேண்டும்.
(3) அந்தத் துணை விதிகள் அமைப்பு விதிக் குறிப்பில்
கையொப்பமிட்டவர்களால் கையொப்பமிடப்படுதல் வேண்டும்.
8. துணை விதிகள்.- துணை விதிகள் வகுத்துரைக்கப்படலாகும் பொருட்பாடுகள்.
தொடர்பான வகைமுறைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
9. சங்கத்தின் பெயர்.- (1) பதிவாளரின் கருத்தில் விரும்பத்தகாததாயிருக்கும் ஒரு
பெயரில், சங்கம் எதுவும் பதிவு செய்யப்படுதல் ஆகாது.
விளக்கம்.- இந்த உட்பிரிவின் நோக்கங்களுக்காக, ஒரு சங்கத்தின்
பெயராவது, அந்தப் பெயர்-
(அ) இடக்கரானதாக அல்லது நற்பாங்கிற்கும் நயநடத்தைக்கும் எதிரானதாக
இருந்தால், அல்லது
(ஆ) வெவ்வேறு சமய, இன, மொழி அல்லது வட்டாரத் தொகுதியினர்
அல்லது சாதியினர் அல்லது சமூகத்தினரிடையே, ஒற்றுமையின்மையை அல்லது
பகை உணர்ச்சியை அல்லது வெறுப்பை அல்லது கெட்ட எண்ணத்தை
உண்டாக்கக்கூடியதாக இருந்தால், அல்லது
(க) முன்னதாகப் பதிவு செய்யப்பட்டு இருந்துவருகிற ஒரு சங்கத்தின் அதே
பெயரைக் கொண்டிருந்தால் அல்லது அதை மிக நெருக்கமாக ஒத்திருந்தால்
அது விரும்பத்தகாததென்று கொள்ளப்படுதல் வேண்டும்.
(2) அரசின் எழுத்து மூலமான முன் ஒப்பளிப்போடு தவிர, எந்தச் சங்கமும்
பின்வரும் சொற்களில் எவற்றையும் கொண்டிருக்கும் ஒரு பெயரால் பதிவு
செய்யப்படுதல் ஆகாது; அவையாவன-
(அ) "கூட்டுறவு" அல்லது "நில மேம்பாடு";
(ஆ) "சேம வங்கி";
(இ) "இணையம்" அல்லது "மாநிலம் அல்லது மைய அரசின் அல்லது
ஏதேனும் மாநில அரசின் ஒப்பளிப்பு, ஒப்புதலளிப்பு அல்லது ஆதரவு இருப்பதாக
வெளிப்படையாகவோ உட்கிடையாகவோ குறிக்கிற சொல் எதுவும்; மற்றும்
(ஈ) "நகராட்சி" அல்லது "பட்டய" அல்லது நகராட்சி அல்லது வேறு
உள்ளாட்சி மன்றம் எதனுடனும் தொடர்பிருப்பதாகக் குறிப்பாக உணர்த்துகிற
அல்லது குறிப்பாக உணர்த்தத் திட்டமிடப்பட்ட சொல் எதுவும்;
ஆனால், இந்த உட்பிரிவிலுள்ள எதுவும் இந்தச் சட்டத்தின் தொடக்கத்
தேதிக்கு முன்னர் 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி (மையச்
சட்டம் XXI/1860), பதிவு செய்யப்பட்ட சங்கங்களுக்குப் பொருந்தாது.
10. பதிவு செய்ததற்கான சான்றிதழ்.- (1) ஒரு சங்கமானது, இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்கும் பதிவு செய்தல் தொடர்பாக அதன்படி செய்யப்பட்ட
விதிகளுக்கும் இணங்கி நடத்திருப்பதாகப் பதிவாளர் மனநிறைவு கொள்வதன்
பேரில், அவர் அந்தச் சங்கத்திற்குப் பதிவு செய்ததற்கான ஒரு சான்றிதழை
வழங்குதல் வேண்டும்: மற்றும் அந்தச் சான்றிதழானது, அச்சங்கத்தின் பதிவு அறவு
செய்யப்பட்டிருக்கிறது என்று மெய்ப்பிக்கப்பட்டாலன்றி, அதில் சொல்லப்பட்ட
சங்கம் உரியவாறு பதிவு செய்யப்பட்டதற்கு அறுதியான சான்றாகும்.
(2) ஒரு சங்கத்துக்குப் பதிவுச் சான்றிதழ் ஒன்றை வழங்கிய பிறகு, பதிவாளர்
அதற்கெனக் குறிக்கப்பட்டுள்ள ஒரு பதிவேட்டில் வகுத்துரைக்கப்படலாகும்
விவரங்களைப் பதிதல் வேண்டும்.
11. பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் பெயரை மாற்றுதல்.- (1) பதிவு செய்யப்பட்ட
சங்கம் எதுவும், சிறப்புத் தீர்மானத்தின் மூலமாகவும், பதிவாளரின் எழுத்து மூலமான
ஒப்புதலளிப்புடனும் தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம்:
ஆனால், ஒரு சங்கம் உரிய கவனமின்மையினாலோ வேறெந்த
வகையிலேனுமோ முன்னதாகப் பதிவு செய்யப்பட்டு இருந்துவருகிற ஒரு
சங்கத்தின் அதே பெயரில் அல்லது ஏமாற்றத் திட்டமிடப்படும் வகையில் அதைப்
போலவே மிக நெருக்கமாக உள்ள ஒரு பெயரில், பதிவு செய்யப்பட்டிருந்தால்,
முதலில் சொல்லப்பட்ட சங்கமானது, பதிவாளரின் எழுத்து மூலமான
ஒப்புதலளிப்புடன், தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம்.
(2) பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கமானது, மேற்கூறியவாறு தனது பெயரை
மாற்றிக்கொள்ளுமிடத்து, பதிவாளர், முந்திய பெயருக்குப் பதிலாகப் பதிவேட்டில்
புதிய பெயரைப் பதிதல் வேண்டும் மற்றும் தேவையான மாற்றங்களைத் தன்னில்
உள்ளடக்கிய ஒரு பதிவுச் சான்றிதழை வழங்குதல் வேண்டும்; மற்றும் அந்தப்
பெயர் மாற்றமானது அத்தகைய சான்றிதழ் வழங்கப்பட்டதன்பேரில் மட்டுமே
முழுமையானதாகவும், செயற்பாடுடையதாகவும் இருக்கும். பதிவாளர் பதிவு
செய்யப்பட்ட சங்கத்தின் அமைப்பு விதிக்குறிப்பில் தேவைப்படுகிற திருத்தத்தைச்
செய்தலும் வேண்டும்.
(3) (அ) பெயர் மாற்றம் எதுவும், பதிவு செய்யப்பட்ட அந்தச் சங்கத்தின்
அல்லது அதன் உறுப்பினர் எவரின் உரிமை, கடப்பாடு எதற்கும் ஊறு செய்தல்
ஆகாது; அல்லது பதிவு செய்யப்பட்ட அச்சங்கத்தின் சொத்து, உரிமை, உரிமைக்
கோரிக்கை எதையும் குறிக்கிற அல்லது அவற்றிற்குத் தொடர்பான சட்ட
நடவடிக்கை எதையும் குறைபாடுடையதாக ஆக்காது:
(ஆ) 20 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள குழுவினாலோ,
அக்குழுவிற்கெதிராகவோ அல்லது அலுவலராலோ, அலுவலர்க்கெதிராகவோ
தொடர்ந்து நடத்தப்பெற்றிருக்கக்கூடிய அல்லது தொடங்கப்பெற்றிருக்கக்கூடிய
வழக்கு அல்லது வேறு சட்ட நடவடிக்கை எதுவும் சங்கத்தின் பெயரானது
மாற்றப்பட்டிராதது, போன்றே தொடர்ந்து நடத்தப்பெறலாம் அல்லது
தொடங்கப்பெறலாம்.
12. அமைப்பு விதிக்குறிப்பிலும் துணை விதிகளிலும் திருத்தம்- (1) பதிவு
செய்யப்பட்ட ஒரு சங்கம், சிறப்புத் தீர்மானத்தின் மூலமாக பதிவு செய்யப்பட்ட
அந்தச் சங்கத்தின் நோக்கங்கள் தொடர்பான தனது அமைப்பு விதிக்குறிப்பின்
வகைமுறைகளை-
(அ) பதிவு செய்யப்பட்ட அந்தச் சங்கத்தின் செயலாட்சியை மேலும்
சிக்கனமாகவோ, திறம்படவோ நடத்துவதற்கு, அல்லது
(ஆ) அதன் முக்கிய நோக்கத்தைப் புதிய அல்லது செம்மையாக்கப்பட்ட
வழிகள் மூலம் அடைவதற்கு, அல்லது
(க) பதிவு செய்யப்பட்ட வேறெந்தச் சங்கத்துடனும் இணைவதற்கு, அல்லது
(௩) தன்னை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சங்கங்களாகப்
பிரித்துக்கொள்வதற்கு,
எந்த அளவுக்குத் தேவைப்படுகிறதோ அந்த அளவுக்குத் திருத்தம் செய்து
கொள்ளலாம்.
(2) பதிவு செய்யப்பட்ட சங்கம் ஒன்று, சிறப்புத் தீர்மானத்தின் மூலமாக அதன்
துணை விதிகளில் திருத்தம் செய்து கொள்ளலாம்.
(3) அமைப்பு விதிக் குறிப்பின் அல்லது துணை விதிகளின் திருத்தம் பதிவு
செய்யப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு பதிவுசெய்யப்பட்டதன் பேரில் சிறப்புத்
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து செயற்பாட்டிற்கு வருதல் வேண்டும்.
(4) பதிவாளர், அமைப்பு விதிக் குறிப்பு அல்லது துணை விதி எதுவும் இந்தச்
சட்டத்தின் வகைமுறைகளுக்கு அல்லது அதன்படிச் செய்யப்பட்ட விதிகளுக்கு
முரணாக இல்லை என்று மனநிறைவு கொள்வாரானால், அவர் அந்தத்
திருத்தத்தைப் பதிவு செய்யலாம். பதிவாளர், அமைப்பு விதிக் குறிப்பின் அல்லது
துணை விதிகளின் திருத்தமொன்றைப் பதிவு செய்யும்போது, பதிவு செய்யப்பட்ட
அந்தச் சங்கத்திற்குத் தண்ணால் உறுதிச் சான்றளிக்கப்பட்ட திருத்தத்தின்படி
ஒன்றை வழங்குதல் வேண்டும். அதுவே அந்தத் திருத்தத்தை உரியவாறு பதிவு
செய்திருப்பதற்கு அறுதியான சான்றாகும்.
அத்தியாயம் ॥
மேலாண்மையும் செயலாட்சியும்
13. பதிவு செய்யப்பட்ட அலுவலகம்.- பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சங்கமும்-
(1) எல்லாக் கடிதங்களையும், அறிவிப்புகளையும் முகவரியிட்டு அதற்கு
அனுப்பக்கூடியதான ஒரு பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தைக் கொண்டிருத்தல்
வேண்டும்; மற்றும், அத்தகைய அலுவலகம் இருக்குமிடத்தை குறிக்கும்
அறிவிப்பையும் அதில் மாற்றமேதேனும் இருப்பின் அதையும், சங்கம் பதிவு
செய்யப்பட்ட தேதிக்குப் பிறகு அல்லது நேர்விற்கேற்ப, மாற்றம் செய்யப்பட்ட
தேதிக்குப் பிறகு, வகுத்துரைக்கப்படலாகும் காலஅளவிற்குள் பதிவாளரிடம்
முன்னிடுதல் வேண்டும்.
(2) பதிவு செய்யப்பட்ட அதன் அலுவலகத்திற்கு வெளியே எடுப்பான ஜர்
இடத்தில் தெளிவான எழுத்துகளில், அதன் பெயரைப் பலர் காண வைத்தல்
வேண்டும்: மற்றும், அதற்காகப் பயன்படுத்தப்படுகிற எழுத்துகள் தமிழில்
இல்லாவிட்டால், அந்தப் பெயர் தமிழ் எழுத்துகளிலும் இருத்தல் வேண்டும்.
14. உறுப்பினர்களின் பதிவேடு.- (1) பதிவு செய்யப்பட்ட சங்கம் ஒவ்வொன்றும்.
அதன் உறுப்பினர்களின் பெயர்கள், முகவரிகள், தொழில்கள் ஆகியவற்றைக்
கொண்ட ஒரு பதிவேட்டை வைத்து வருதல் வேண்டும்.
(2) உறுப்பினர்களின் பதிவேடானது, அலுவல் நேரங்களின் போது கட்டணம்
எதுவுமின்றி உறுப்பினர் எவருடைய ஆய்வுக்கும் கிடைக்குமாறு செய்தல்
வேண்டும் மற்றும் எந்த உறுப்பினரும் அதிலிருந்து எடுகுறிப்புகளை
எடுத்துக்கொள்ளலாம்.
15. குழு-- (1) பதிவு செய்யப்பட்ட சங்கம் ஒவ்வொன்றும் அதன் அலுவல்களைச்
செயலாட்சி செய்வதற்கு மூன்று உறுப்பினர்களுக்குக் குறையாத ஒரு குழுவைக்
கொண்டிருத்தல் வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சங்கமும், 14 ஆம்
பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி அதனால் வைத்துவரப்படுகிற பதிவேட்டின்படி
ஒன்றைப் பதிவாளரிடம் முன்னிடுதல் வேண்டும்: மற்றும், அவ்வப்போது குழுவின்
உறுப்பினர்களிடையே ஏற்படும் மாறுதல் எதையும் பற்றிய அறிவிப்பையும்
பதிவாளரிடம் முன்னிடுதல் வேண்டும்.
(2) சங்கம் பதிவு செய்யப்படுகிற சமயத்திலோ அல்லது முதன் குழுவின்
உறுப்பினர்கள் அமர்த்தப்பட்டதிலிருந்து வகுத்துரைக்கப்படலாகும் கால
அளவிற்குள்ளோ பதிவேட்டின்படி ஒன்று முன்னிடப்படுதல் வேண்டும் மற்றும்,
சங்கத்தின் அல்லது குழுவின் உறுப்பினர்களிடையே ஏற்படும் மாறுதல் எதையும்
பற்றிய அறிவிப்பும் அத்தகைய மாறுதல் செய்யப்பட்ட தேதியிலிருந்து
வகுத்துரைக்கப்படலாகும் கால அளவிற்குள் முன்னிடப்படுதல் வேண்டும்.
(3) குழுவின் உறுப்பினர்கள், சங்கத்தின் கூட்டமொன்றிற்கு வந்திருந்து
அதில் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ள உறுப்பினர்களில்
பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்படும் தீர்மானம் ஒன்றின் மூலம்
அமர்த்தப்படுதல் வேண்டும்.
1) குழு உறுப்பினர்களின் பதவிக் காலம், அவர்கள் அமர்த்தப்பட்ட
தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மேற்படுதல் ஆகாது.
(5 குழுவின் உறுப்பினர்கள். மீண்டும் அமர்த்தப்படுவதற்கு
உரிமையுடையவர்கள் ஆவர்.
16. கணக்குகளும் தணிக்கையும்.-- (1) பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சங்கமும்,
சரியான கணக்குப் புத்தகங்களை வைத்து வருதல் வேண்டும். மேலும், ஒவ்வொரு
நிதியாண்டு முடிவடையும் போதும் ஒரு வரவு-செலவுக் கணக்கையும் ஜர்
ஐந்தொகைக் குறிப்பையும் தயார் செய்து, அந்தப் பதிவு செய்யப்பட்ட சங்கத்தினால்
அமர்த்தப்பட்டு. வகுத்துரைக்கப்பட்ட தகுதிகளைப் பெற்றிருக்கிற ஒரு
தணிக்கையாளரால் அல்லது பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் (குழுவின்
உறுப்பினர்கள் அல்லாத) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களால்
தணிக்கை செய்யப்படுமாறு செய்தல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படி அமர்த்தப்பட்ட தணிக்கையாளர் அல்லது
உறுப்பினர்கள், அந்தப் பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் எல்லா புத்தகங்களையும்
கணக்குகளையும் பார்வையிட வாய்ப்புப் பெற்றிருத்தல் வேண்டும்; மேலும், வரவு-
செலவுக் கணக்குகளையும், ஐந்தொகை குறிப்புகளையும் ஆய்வு செய்து
அவற்றிற்குத் தொடர்பான கணக்குகளுடனும் செலவுச் சீட்டுகளுடனும் சரி
பார்த்தல் வேண்டும்; மற்றும் அவரால் அல்லது அவர்களால் சரியாக இருப்பதாகக்
காணப்படுகின்றன என்றும் உரிய செலவுச் சீட்டுகள் பெறப்பட்டுள்ளன என்றும்,
சட்டத்திற்கு இணங்கியனவாக இருக்கின்றன என்றும் கையொப்பமிடூதலோ
அல்லது எந்த வகைகளில் அவருக்கு அல்லது அவர்களுக்குச் சரியாக
இல்லையென்று அல்லது செலவுச் சீட்டு இல்லாதனவாக இருக்கின்றனவென்று
அல்லது சட்டத்திற்கு இணங்க இல்லை என்று காணப்படுகின்றன என்று பதிவு
செய்யப்பட்ட சங்கத்திற்குத் தனிப்பட்ட அறிக்கை தருதலோ வேண்டும்.
(3) பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சங்கமும்-
(அ) ஒவ்வொரு நிதியாண்டும் முடிவடைந்த பிறகு,
வகுத்துரைக்கப்படலாகும் காலஅளவிற்குள், சங்கத்தின் பேரவைக் கூட்டத்தின்
முன்பு வரவு-செலவுக் கணக்கையும், ஐந்தொகைக் குறிப்பையும்
தணிக்கையாளரால் அல்லது (1) ஆம் உட்பிரிவின்படி அமர்த்தப்பட்ட
உறுப்பினர்களால் மற்றும் குழுவின் உறுப்பினர்களால் உரியவாறு
கையொப்பமிடப்பட்ட (2) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள அறிக்கையுடன்
வைத்தல் வேண்டும்: மற்றும்,
(ஆ) அத்தகைய சங்கப் பேரவைக் கூட்டத் தேதிக்குப் பிறகு
வகுத்துரைக்கப்படலாகும் காலஅளவுக்குள், பதிவாளரிடம் —
() அத்தகைய வரவு-செலவுக் கணக்கு, ஐந்தொகைக் குறிப்பு,
அறிக்கை ஆகியவற்றின் உறுதியொப்பமிடப்பட்ட ஒரு படியையும்,
00 அந்த நிதியாண்டு முடிவடையும் போது அந்தப் பதிவு செய்யப்பட்ட
சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்தவர்களின் பெயர்கள், முகவரிகள்,
தொழில்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு விவர உரையையும்,
(i) அந்த நிதியாண்டில், அந்தச் சங்கம் அலுவல் நடத்தி வந்தது
அல்லது செயற்பாட்டில் இருந்து வந்தது என்னும்படிக்கு ஒரு
விளம்புகையையும் முன்னிடுதல் வேண்டும்.
17. உறுப்பினர்களுக்குத் துணை விதிகள் முதலானவற்றின் படிகளை
வழங்குதல்.- பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சங்கமும், உறுப்பினர் எவருக்கும்
விண்ணப்பத்தின். பேரிலும், வகுத்துரைக்கப்படலாகும் கட்டணம்
செலுத்தப்படுவதன் பேரிலும்,
(i) அதன் துணை விதிகள்,
(i) வரவு- செலவுக் கணக்கு,
00 ஐந்தொகைக் குறிப்பு
ஆகியவற்றின் படி ஒன்றை வழங்குதல் வேண்டும்.
18. பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் சொத்துகள் மேவி நிற்றல் எவ்வாறு.- பதிவு
செய்யப்பட்ட ஒரு சங்கத்துக்குச் சொந்தமான, அசையும் மற்றும் அசையாச்
சொத்துகள் அனைத்தும், அவை பதிவு செய்யப்படுவதற்கு முன்னர்
ஈட்டப்பட்டிருந்தாலும், பின்னர் ஈட்டப்பட்டிருந்தாலும் பொறுப்புக்
கட்டளையர்களிடம் மேவியிராவிட்டால், குழுவிடம் மேவிநிற்றல் வேண்டும்;
மற்றும், அத்தகைய சொத்து எதுவும், சட்ட நடவடிக்கை எதிலும் குழுவின்
சொத்தாகச் சுட்டப்படலாம்.
19. குற்றங்கள் புரிந்த உறுப்பினர்கள் அயலாரைப் போன்றே தண்டிக்கப்படுதல்.-
பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் பணம் அல்லது வேறு சொத்து எதையும் திருடுகிற,
களவாடுகிற அல்லது கையாடல் கய்கிற அல்லது சொத்து எதையும்
வேண்டுமென்றே அல்லது வன்மமாக அழித்துவிடுகிற அல்லது அதற்குக் கேடு
செய்கிற அல்லது ஆவணம், முறி, பணத்துக்கான காப்புறுதி ஆவணம், வரவுச் சீட்டு
அல்லது வேறு முறையாவணம் எதையும் மோசடியாகப் பொய்ப்புனைவு செய்து,
அதனால் பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் நிதியத்தை இழப்பிற்கு உள்ளாகுமாறு
செய்கிற பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் உறுப்பினர் எவரும், அதே போன்ற
குற்றத்துக்கு உறுப்பினர் அல்லாத ஒருவர் எந்த வகையான குற்ற வழக்கு
தொடரப்படுவதற்கு உள்ளாவாரோ, மற்றும் குற்றவாளி என்று தீர்ப்பு செய்யப்பட்டால்
எந்த வகையில் தண்டிக்கப்படுவாரோ அதே வகையில் உள்ளாக்கப்பட்டு,
தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.
20. பதிவு செய்யப்பட்ட சங்கங்களினால் அல்லது அவற்றிற்கெதிராக
கொண்டுவரப்படும் சட்ட நடவடிக்கை. (1) பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் துணை
விதிகளால் இதற்கென அதிகாரமளிக்கப்பட்ட குழு அல்லது அலுவலர் எவரும்,
பதிவு செய்யப்பட்ட சங்கத்தில் சொத்து, உரிமை அல்லது உரிமைக் கோரிக்கை
எதையும் குறித்தோ அல்லது எதன் தொடர்பாகவுமோ, வழக்கு அல்லது வேறு சட்ட
நடவடிக்கை எதையும் முன்னிடலாம் அல்லது முன்னிடும்படி செய்யலாம்: அல்லது
எதிர்த்து வழக்காடலாம் அல்லது எதிர் வழக்காடச் செய்யலாம்: மற்றும், அத்தகைய
சொத்து, உரிமை அல்லது உரிமைக் கோரிக்கை எதன் தொடர்பாகவும்
வழக்கிடலாம் அல்லது குழு அல்லது அலுவலர்மீது வழக்கிடப்படலாம்.
(2) வழக்கு அல்லது சட்ட நடவடிக்கை எதுவும், பதிவு செய்யப்பட்ட
சங்கத்தின் அலுவலர் எவரும் இறந்துவிட்டதன், பதவி விலகியதன் அல்லது
பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் காரணமாக அற்றுப்போதலோ, தொடராது
விடப்படுதலோ ஆகாது.
21. தீர்ப்புரையை நிறைவேற்றுதல்.- (1) 20 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்
சுட்டப்பட்ட அலுவலர் எவருக்கும் எதிராக ஒரு தீர்ப்புரை வழங்கப்பட்டிருந்தால்,
அத்தகைய தீர்ப்புரையானது, அந்த அலுவலரின் அசையும் அல்லது அசையாச்
சொத்திற்கெதிராகவோ அல்லது அந்த ஆளுக்கெதிராகவோ நிறைவேற்றப்படுதல்.
ஆகாது. ஆனால், பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் சொத்திற்கெதிராக
நிறைவேற்றப்படுதல் வேண்டும்.
(2) நிறைவேற்றுவதற்கான மனுவானது தீர்ப்புரையையும் எந்த
ஆளுக்கெதிராக அது வழங்கப்பட்டிருக்கிறதோ அவர் பதிவு செய்யப்பட்ட
சங்கத்துக்காக வழக்குத் தொடர்ந்த அல்லது, நேர்விற்கேற்ப அவர் மீது வழக்குத்
தொடரப்பட்ட பொருண்மையையும் எடுத்துக்காட்டி, தீர்ப்புரையைப் பதிவு
செய்யப்பட்ட சங்கத்தின் சொத்துக்கெதிராக நிறைவேற்றக் கோருதல் வேண்டும்.
22. தண்டத்தைத் தண்டல் செய்வதற்கு உரிமை வழக்கு.- பதிவு செய்யப்பட்ட ஒரு
சங்கத்தின் துணை விதி எதுவும், அதன் மீறுகை எதற்காகவேனும், பணவகையான
தண்டம் எதையும் விதிக்க வகை செய்கிறவிடத்து, அத்தகைய தண்டம்
வந்தடைந்தபோது, எதிர்வாதி குடியிருக்கிற அல்லது பதிவு செய்யப்பட்ட
சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் எங்கு உள்ளதோ அந்த இடத்தின் மீது
அதிகார வரம்பு கொண்ட நீதிமன்றத்தில் முண்னிடப்பட்ட ஓர் உரிமை வழக்கு
மூலமாகத் தண்டல் செய்யப்படலாம்.
23. உறுப்பினர்கள், அயவலார்களைப் போன்றே வழக்குத் தொடர்வுக்கு உள்ளாதல்.-
(1) பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் "துணை விதிகளுக்கிணங்க, தாம் செலுத்தக்
கட்டுப்பட்டுள்ள உறுப்பினர் கட்டணம் எதையும் செலுத்தாது நிலுவையாக
வைத்திருக்கிற, அல்லது பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் சொத்து எதையும் துணை
விதிகளுக்கு முரணான ஒரு முறையில், அல்லது ஒரு காலத்திற்குத் தம்
உடைமையில் வைத்திருக்கிற அல்லது நிறுத்தி வைத்துக்கொள்கிற அல்லது
பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் சொத்து எதற்கும் கேடு செய்கிற அல்லது அது
எதையும் அழித்துவிடுகிற பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கத்தின் உறுப்பினர்
எவர்மீதும், அத்தகைய நிலுவைக்காக அல்லது அவ்வாறு தம் உடைமையில்,
வைத்திருத்தல் நிறுத்தி வைத்துக்கொள்ளுதல், கேடு செய்தல், அழித்துவிடுதல்
காரணமாக வந்தடைகிற இழப்புக்காக இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள
முறையில் வழக்குத் தொடரப்படலாம்.
(2) எதிர்வாதி, பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் சார்பாக, தம்மீது
கொண்டுவரப்பட்ட அத்தகைய வழக்கு அல்லது வேறு நடவடிக்கை எதிலும்
வெற்றி பெற்று, செலவுத்தொகையைத் தண்டல் செய்துகொள்ளும்படியாகத்
தீர்ப்பளிக்கப்பட்டிருக்குமிடத்து, அத்தகைய தீர்ப்புரைக்கு 21 ஆம் பிரிவின்
வகைமுறைகள் பொருந்தும்.
24, நிதியங்களை முதலீடு செய்தல்.- பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கமானது,
உடனடியாகத் தேவைப்படாத அதன் நிதியங்களின் பகுதி எதையும் அவ்வப்போது
துணை விதிகளால் இசைவளிக்கப்படலாகும். அளவுக்கும்,
இசைவளிக்கப்படலாகும் வரைக்கட்டுகளின்படியும்-
(1) அசையாச் சொத்துகளின் பேரில், அல்லது
(2) அரசுக் காப்புறுதி ஆவணங்களில் அல்லது தேசிய சேமிப்பு உறுதிச்
சான்றுகளில், அல்லது இந்திய அரசின் வேறு காப்புறுதி ஆவணங்களில்,
(3) அஞ்சல் நிலையச் சேமிப்பு வங்கிக் கணக்கில், அல்லது
(4) (அ) 1970 ஆம் ஆண்டு வங்கி நிறுமங்கள் (நிறுவனங்களைக்
கையகப்படுத்துதல் மற்றும் உரிமை மாற்றம் செய்தல்) சட்டத்தில் (மையச் சட்டம்
51970) பொருள் வரையறை செய்யப்பட்டுள்ளவாறான நேரிடையான புதிய
வங்கியில், அல்லது
(ஆ) வங்கித் தொழில் நடவடிக்கையை அடிப்படை நோக்கமாக அல்லது
முக்கியத் தொழிலாகக் கொண்ட 1961 ஆம் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள்:
சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் 531961) பதிவு செய்யப்பட்டுள்ள அல்லது பதிவு
செய்யப்பட்டதாகக் கொள்ளப்படும் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட சங்கத்தால் அந்த
நோக்கத்திற்கெனத் தொடங்கப்பெற்ற ஒரு சிறப்புக் கணக்கில், அல்லது
(5) வகுத்துரைக்கப்படும் வேறு வகையான முதலீட்டில் முதலீடு செய்யலாம்
அல்லது வைப்பீடு செய்யலாம்.
25. பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கத்தின் நிதிகளைப் பயன்படுத்துதல்.- (1) பதிவு
செய்யப்பட்ட ஒரு சங்கம், அதன் நிதியங்களிலிருந்து, இந்தச் சட்டத்தினால்
அல்லது துணை விதிகளினால் அதிகாரமளிக்கப்பெற்ற நோக்கங்களுக்கு, அது
தக்கதெனக் கருதும் தொகைகளைச் செலவழிக்க அதிகாரம் கொண்டிருக்கும்.
(2) பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கத்தின் நிதியத்தின் பகுதி எதுவும்
(இறந்துபோனஅல்லது ஊனமுற்ற ஓர் உறுப்பினரைச் சார்த்திருப்பவருக்கு வகை
செய்யும் நோக்கத்திற்காகக் குறித்து ஒதுக்கி வைக்கப்பட்ட நிதியங்களைத் தவிர)
உறுப்பினர்களிடையே மேன் தொகையாக அல்லது ஆதாய ஈவாக அல்லது வேறு
முறையில் பகிர்ந்தளிக்கப்படுதல் ஆகாது.
ஆனால், பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் இறந்துபோன அல்லது ஊனமுற்ற
உறுப்பினரைச் சார்ந்திருப்பவருக்கு, துணை விதிகள் மூலம் குறிக்கப்பட்ட
வரம்புகள் எவையேனும், இருப்பின், அவற்றிற்கு உட்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்ட
அத்தகைய நிதியத்திலிருந்து செலுத்தம் செய்யப்படலாம்.
விளக்கம்.- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக,-
() "சார்ந்திருப்பவர்" என்னும் சொல் இறந்துபோன அல்லது ஊனமுற்ற
உறுப்பினர் ஒருவரின் பின்வரும் உறுப்பினர்கள் என்று பொருள்படும்;
அவர்களாவர்: ஒரு மனைவி, கணவன், பெற்றோர், குழந்தை, உரிய வயது
அடையாத உடன்பிறந்தவன், திருமணமாகாத உடன்பிறந்தவள் மற்றும்
இறந்துபோன மகனின் கைம்பெண்ணும், குழந்தையும் மற்றும் இறந்துபோன
அல்லது ஊனமுற்ற உறுப்பினருக்குப் பெற்றோர் எவரும் உயிருடன்
இல்லாதிருக்குமிடத்து தந்தைவழிப் பாட்டன் பாட்டி;
(i) "ஊனமுற்ற உறுப்பினர்" என்னும் சொற்றொடர் எந்த ஒருவித
வேலையானது, அவரது காயம், நோய் அல்லது பிறவி ஊனமுடைமை
இல்லாமலிருந்தால் அவரது வயது, பட்டறிவு, தகுதி ஆகியவற்றுக்கு ஏற்றதாக
இருந்திருக்குமோ அந்த வேலையை, காயம், நோய் அல்லது பிறவி ஊனமுடைமை
காரணமாகத் தேடிக் கொள்வதற்கோ, அதில் தொடர்ந்து இருப்பதற்கோ அல்லது
தாமாக மேற்கொள்வதற்கோ பெருமளவில் வாய்ப்பு இல்லாமல் இருக்கிற அந்த
உறுப்பினர் என்று பொருள்படும் மற்றும் இந்தக் கூறில், "நோய்" என்னும் சொல்
ஏதேனும் உறுப்பின் குறையுடைய வளர்ச்சியிலிருந்து எழுகின்ற உடல் அல்லது
மனநிலையை உள்ளடக்குவதாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.
(3) (2) ஆம் உட்பிரிவில் வகை செய்யப்பட்டுள்ளவாறல்லாமல், பதிவு
செய்யப்பட்ட ஒரு சங்கத்தின் நிதியத்திலிருந்து, அந்தச் சங்கத்தின் தலைவருக்கு
அல்லது வேறு எந்த அலுவலருக்கும், சங்கத்துக்கு அவரால் ஆற்றப்படும் பணி
எதற்காகவும், மதிப்பூதியமாகத் தொகை எதுவும் கொடுக்கப்படுதல் ஆகாது.
26. ஆண்டு பேரவைக் கூட்டங்கள்.- (1) ஒவ்வொரு நிதியாண்டிலும், பதிவு
செய்யப்பட்ட சங்கத்தில் பேரவைக் கூட்டம் குறைந்தது ஒன்றாவது நடத்தப்படுதல்
வேண்டும்.
(2) அத்தகைய பேரவைக் கூட்டம் ஒவ்வொன்றையும் பற்றிய, அறிவிப்பு,
பதிவு செய்யப்பட்ட சங்கத்தினால் அதன் உறுப்பினர்களுக்கு கூட்டத்திற்காக
குறிக்கப்பட்ட நாளுக்கு முன்னர் வகுத் ரைக்கப்படலாகும் காலஅளவிற்குள்.
கொடுக்கப்படுதல் வேண்டும்.
(3) அறிவிப்பானது, கூட்டம் நடக்கும் நாள், நேரம், இடம் ஆகியவற்றையும்
கூட்டத்தின் நோக்கத்தையும் குறித்துரைத்தல் வேண்டும் மற்றும் அமைப்பு
விதிக்குறிப்பில் அடங்கியுள்ளவாறான, சங்கத்தின் ஒரு துணை விதிக்கு அல்லது
நோக்கங்களுக்குத் திருத்தம் எதுவும் கொண்டு வரக் கருதப்பட்டால், அத்தகைய
ஒவ்வொரு திருத்தத்தின்படி ஒன்றையும் கொண்டிருத்தல் வேண்டும்.
(4) பதிவாளர் தமக்குக் கீழமைந்துள்ள ஓர் அலுவலரை அத்தகைய
பேரவைக் கூட்டத்திற்கு வந்திருப்பதற்கு அமர்த்தலாம்.
27. சிறப்புத் தீர்மானத்தை முன்னிடுதல்.-- இந்தச் சட்டத்தில் சொல்லப்பட்ட
நோக்கங்களில் எதற்குமான சிறப்புத் தீர்மானம் ஒவ்வொன்றின்படியும், இதன்
துணை விதிகளில் இதற்கென அதிகாரமளிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட
சங்கத்தி அலுவலர் ஒருவரால் கையொப்பமிடப்பட்டு, அத்தீர்மானம்
நிறைவேற்றப்பட்டதிலிருந்து வகுத்துரைக்கப்படலாகும் கால அளவிற்குள்,
பதிவாளரிடம் முன்னிடப்படுதல் வேண்டும்.
28. சிறப்புப் பேரவைக் கூட்டம்.- (1) குழுவானது எந்தச் சமயத்திலும் பதிவு
செய்யப்பட்ட சங்கத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டம் ஒன்றைக் கூட்டலாம்: மற்றும்.
பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் துணை விதிகளால் மொத்த உறுப்பினர்களின்.
எண்ணிக்கையில் குறித்துரைக்கப்படலாகும். விகிதத்தைக் கொண்ட
எண்ணிக்கையையுடைய உறுப்பினர்களிடமிருந்து எழுத்து மூலமான ஒரு
கோரிக்கையைப் பெற்ற பிறகு, வகுத்துரைக்கப்படலாகும் காலஅளவிற்குள்.
அத்தகைய சிறப்புப் பேரவைக் கூட்டம் ஒன்றைக் கூட்டுதல் வேண்டும்.
(2) அத்தகைய கோரிக்கைக்கிணங்கச் சிறப்புப் பேரவைக் கூட்டம் ஒன்று
கூட்டப்படாவிட்டால், கோரிக்கையாளர்கள், தாங்களே அத்தகைய கூட்டத்தைக்
கூட்ட அதிகாரம் பெற்றிருப்பார்கள்.
(3) சிறப்புப் பேரவைக் கூட்டம் எதுவும் 26 ஆம் பிரிவின் (2), (3) ஆகிய
உட்பிரிவுகளில் வேண்டுறுத்தப்படுகிறவாறு பதிவு செய்யப் பட்ட சங்கத்தின்
உறுப்பினர்களுக்கு, அதைப் பற்றிய அறிவிப்பைக் கொடுத்திராவிட்டால்,
உரியவாறு கூட்டப்பட்டதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.
29. பதிவு செய்யப்பட்ட சங்கத்தினுடைய பேரவைக் கூட்டத்தின் மற்றும் அதன்
குழுவின் நடவடிக்கை குறிப்புகள்.- (1) பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சங்கமும்
அதன் பேரவைக் கூட்டங்களின் மற்றும் அதன் குழுவின் எல்லா
நடவடிக்கைகளின் குறிப்புகளையும் அந்த நோக்கத்திற்காக வைத்து வரப்படுகிற
புத்தகங்களில் எழுதும்படிச் செய்வித்தல் வேண்டும்.
(2) அத்தகைய நடவடிக்கைக் குறிப்பு எதுவும், எந்தக் கூட்டத்தில்
நடவடிக்கைகள் நடத்தப்பெற்றனவோ அந்தக் கூட்டத்தின் தலைவரால் அல்லது
தொடர்ந்து நடந்த அடுத்த கூட்டத்தின் தலைவரால்
கையொப்பமிடப்பட்டி ருக்கிறதாகப் புலப்பட்டால், அந்நடவடிக்கைகளின்
சான்றாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(3) பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் மேற்சொல்லப்பட்ட குறிப்புகளைக்
கொண்டிருக்கும் புத்தகங்களும், கணக்குப் புத்தகங்களும், பதிவு செய்யப்பட்ட
அலுவலகத்தில் வைத்து வரப்படுதல் வேண்டும்; மற்றும் அலுவலக
நேரங்களின் போது, உறுப்பினர் எவராலும் கட்டணமின்றிப் பார்வையிடக்கூடியதாக
இருத்தல் வேண்டும்.
30. பதிவு செய்யப்பட்ட சங்கங்களை இணைத்தலும் பகுத்தலும்.- (1) கூண்டு
அல்லது அவற்றிற்கு மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சங்கங்கள், பதிவு செய்யப்பட்ட
அத்தகைய சங்கங்கள் இரண்டின் அல்லது அனைத்தின் சிறப்புத் தீர்மானம்
மூலமாகப் பதிவாளரின் முன் ஒப்புதலளிப்புடன், பதிவு செய்யப்பட்ட அந்தச்
சங்கங்களை அல்லது அவற்றில் எவற்றையும் கலைத்துவிட்டோ அல்லது
கலைக்காமலோ அல்லது அச்சங்கங்களின் அல்லது அவற்றில் எவற்றின்
நிதியங்களையும் பிரித்துக்கொண்்டோ அல்லது பிரிக்காமலோ ஒரே சங்கமாக
இணைத்துக் கொள்ளலாம்.
(2) பதிவு செய்யப்பட்ட சங்கம் எதுவும் பதிவாளரின் முன் ஒப்புதலளிப்புடன்
சிறப்புத் தீர்மானத்தில் மூலமாக இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட
சங்கங்களாகத் தன்னைப் பிரித்துக் கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட சங்கத்தின்.
சொத்திருப்புகளையும் கடப்பாடுகளையும் அதை எந்தப் புதிய சங்கங்களாகப்
பிரிக்கக் கருதப்பட்டிருக்கிறதோ அந்தச் சங்கங்களுக்கிடையே பிரிப்பதற்கான
செயற்குறிப்புகளை அந்தத் தீர்மானம் கொண்டிருந்தல் வேண்டும்; மேலும் புதிய
சங்கம் ஒவ்வொன்றும் செயற்படும். பகுதியையும் கொண்டிருக்கும்
உறுப்பினர்களையும் குறித்துரைத்தல் வேண்டும்.
(3) (1) ஆம் உட்பிரிவின்படி அல்லது, நேர்விற்கேற்ப (2) ஆம்
உட்பிரிவின்படி, பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கத்தின் இணைப்போ பகுப்போ அந்தப்
புதிய சங்கமோ சங்கங்களோ, அது அல்லது அவை இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்கிணங்க உரியவாறு பதிவு செய்யப்படும் வரையிலும் பதிவு
செய்யப்பட்டிருந்தாலன்றியும் செயற்பாடு எதுவும் கொண்டிருத்தலாகாது.
(4) புதிய சங்கம், அல்லது நேர்விற்கேற்ப. சங்கங்கள் பதிவு செய்யப்பட்டதின்.
பேரில், முதலாவதாகப் பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் அல்லது சங்கங்களின்
சொத்திருப்புகளும் கடப்பாடுகளும், 18 ஆம் பிரிவின் வகைமுறைகளுக்கு
உட்பட்டு, புதிய சங்கத்திற்கு அல்லது சங்கங்களுக்கு மாற்றல் செய்யப்பட்டு, (1)
ஆம் உட்பிரிவில் அல்லது நேர்விற்கேற்ப, (2) ஆம் உட்பிரிவில் சொல்லப்பட்ட
சிறப்புத் தீர்மானத்தில் குறித்துரைக்கப்பட்ட முறையில் புதிய சங்கத்தின் அல்லது
சங்கங்களின் சொத்துகளாகவும் கடப்பாடுகளாகவும் இருக்கும்.
31. கடன் தருநரின் உரிமைகளுக்குப் பாதுகாப்பு.- 30 ஆம் பிரிவுக்கிணங்கச்
செய்யப்படும் ஓர் இணைப்பு அல்லது பகுப்பு அத்தகைய இணைப்பில் பங்கு பெற்ற
பதிவு செய்யப்பட்ட ஏதேனும் சங்கத்தின் அல்லது அத்தகைய பகுப்பிற்கு உட்பட்ட
பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் கடன் தருநரின் உரிமை எதற்கும் ஊறு செய்தல்
ஆகாது.
32. பதிவு செய்யப்படாவிட்டால் சில அடைமானங்களும் பொறுப்புரிமைகளும்
செல்லாததாகிவிடுதல்.-- (1) பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கத்தால் இந்தச் சட்டத்தின்
தொடக்கத் தேதியன்று அல்லது அதற்குப் பிறகு உண்டாக்கப்பட்டதும்.-
(அ) கடனீட்டு ஆவணங்கள் எவையும் வழங்கப்படுவதற்குப் பிணையமாக
இருக்கும் பொருட்டான ஓர் அடைமானமாக அல்லது பொறுப்புரிமையாக
இருப்பதாக, அல்லது
(ஆ) அசையாச் சொத்து எதுவும் அது எங்கிருந்தாலும் அதன் மீது அல்லது
அதில் உள்ள உரித்தம் எதன் மீதுமான ஓர் அடைமானமாக அல்லது
பொறுப்புரிமையாக இருப்பதாக
உள்ளதுமான அடைமானம் அல்லது பொறுப்புரிமை ஒவ்வொன்றும், பதிவு
செய்யப்பட்ட சங்கத்தின் சொத்து அல்லது நிறுவனத்தின் பேரில் இதன் மூலம்
பிணையம் எதுவும் அளிக்கப்படும் அளவுக்கு, அடைமானத்தின் அல்லது
பொறுப்புரிமையின் வகுத்துரைக்கப்பட்ட விவரங்களும் அவை உண்டாக்கப்பட்ட
அல்லது அவற்றிற்குச் சான்றளிக்கும் முறையாவணம் ஏதேனுமிருந்தால்
அத்துடன் அல்லது வகுத்துரைக்கப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட்ட அதன்படி
ஒன்றுடன் சேர்த்து, அந்தப் பதிவு செய்யப்பட்ட சங்கத்தினால் இதற்கென
அதிகாரமளிக்கப்பட்டிருக்கும் ஆள் எவராலும் அது உண்டாக்கப்பட்ட தேதிக்குப்
பிறகு குறிக்கப்படும் குறிக்கப்படும் கால அளவிற்குள் பதிவு செய்யப்படுவதற்காகப்
பதிவாளரிடம் முன்னிடப்பட்டாலன்றி, பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் கலைப்பாளர்
அல்லது கடன் தருநர் எவருக்கும் எதிராகச் செல்லாததாகும்: மற்றும் இந்த
உட்பிரிவின்படி, ஓர் அடைமானமோ பொறுப்புரிமையோ செல்லாததாகிவிட்டால்,
அதனால் பிணையமளிக்கப்பட்ட பணமானது உடனடியாகச்
செலுத்தப்படத்தக்கதாகும்.
ஆனால்,
() இந்தியாவுக்கு வெளியே ஏற்படுத்தப்பட்டதும், இந்தியாவுக்கு வெளியே
அமைந்துள்ள சொத்து மட்டுமே அடங்கியுள்ளதுமான ஓர் அடைமானத்தை
அல்லது பொறுப்புரிமையைப் பொறுத்தவரையில், இந்த உட்பிரிவின்படி
குறிக்கப்பட்ட கால அளவு, உரியவாறான அஞ்சல் மூலமும் உரிய முயற்சியுடனும்
அனுப்பப்பட்டிருந்தால் அந்த முறையாவணம் அல்லது படி இந்தியாவில் எந்தத்
தேதியில் கிடைத்திருக்கக்கூடுமோ அந்தத் தேதியிலிருந்து கணக்கிடப்படுதல்
வேண்டும்; மற்றும்
0) அடைமானம் அல்லது பொறுப்புரிமை இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டு,
ஆனால் அடைமானச் சொத்து இந்தியாவிற்கு வெளியே அமைந்திருக்குமிடத்து,
அந்தச் சொத்து அமைந்திருக்கிற நாட்டின் சட்டத்திற்கிணங்க அடைமானத்தை
அல்லது பொறுப்புரிமையைச் செல்லத்தக்கதாக்குவதற்கு அல்லது திறன்
வாய்ந்ததாகச் செய்வதற்கு மேற்கொண்டு நடவடிக்கைகள்
தேவைப்படக்கூடியவையாக இருந்தபோதிலும் அடைமானத்தை அல்லது
பொறுப்பு/ிமையை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்துவதாகப் புலப்படுத்தும்.
முறையாவணங்கள் அல்லது அவற்றின் படி ஒன்று வகுத்துரைக்கப்பட்ட
முறையில் சரிபார்க்கப்பட்டு, பதிவு செய்வதற்காக முன்னிடப்படலாம்.
(2) பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கம், ஓர் அடைமானத்திற்கு அல்லது
பொறுப்புரிமைக்கு உட்படுத்தப்பட்ட சொத்தினை ஈட்டி அந்த அடைமானம்
அல்லது பொறுப்புரிமையானது, அந்தப் பதிவு செய்யப்பட்ட சங்கத்தினால் அந்தச்
சொத்தினை ஈட்டிய பிறகு ஏற்படுத்தப்பட்டிருத்தால், (1) ஆம் உட்பிரிவின்படி பதிவு
செய்ய வேண்டுறுத்தப்பட்டிருக்குமிடத்து, அந்தப் பதிவு செய்யப்பட்ட சங்கமானது
அந்த அடைமானத்தின் அல்லது பொறுப்புரிமையின் வகுத்துரைக்கப்பட்ட
விவரங்களை, அந்த அடைமானம் அல்லது பொறுப்புரிமை ஏற்படுத்தப்பட்ட
அல்லது அதற்கு சான்றளிக்கிற முறையாவணம் எதுவும் இருந்தால், அதன்
(வகுத்துரைக்கப்பட்ட முறையில் சரியான படி என்று உறுதி சான்றளிக்கப்பட்ட)
படி ஒன்றுடன் சேர்த்து, சொத்தினை ஈட்டுவதானது எந்தத் தேதியில்
முடிவடைகிறதோ அதற்குப் பிறகு, வகுத்துரைக்கப்படலாகும் காலஅளவுக்குள்:
அந்தப் பதிவு செய்யப்பட்ட சங்கம் பதிவு செய்யப்படுவதற்காகப் பதிவாளரிடம்
முன்னிடப்படும்படி செய்தல் வேண்டும்:
ஆனால், இந்தியாவுக்கு வெளியே அந்தச் சொத்து அமைந்திருந்து, அந்த
அடைமானம் அல்லது பொறுப்புரிமை இந்தியாவுக்கு வெளியே
ஏற்படுத்தப்பட்டிருந்தால், இந்த உட்பிரிவின்படி வகுத் ரைக்கப்பட்ட கால
அளவானது முறையாவணத்தின் படி உரியவாறு அஞ்சலில் மற்றும் உரிய
முயற்சியுடன் அனுப்பப்பட்டால் எந்தத் தேதியில் இந்தியாவில் கிடைத்திருக்கக்
கூடுமோ அந்தத் தேதியிலிருந்து கணக்கிடப்படுதல் வேண்டும்.
33. அடைமானம் அல்லது பொறுப்புரிமை தீர்க்கப்பட்டதைப் பதிவு செய்தல்.- 32
ஆம் பிரிவின்படி பதிவு செய்ய வேண்டுறுத்தப்படுகிற அடைமானம் அல்லது
பொறுப்புரிமை எதற்காகவும் செலுத்தப்படும் கடைசி தொகைக்கான அல்லது
முழுவதையும் தீர்த்துவிடுதலுக்கான அறிவிப்பை, தொகை செலுத்தப்பட்ட அல்லது
தீர்த்துவிட்ட தேதியிலிருந்து வகுத்துரைக்கப்படலாகும் கால அளவிற்குள்.
பதிவாளரிடம் முன்னிட வேண்டியது பதிவு செய்யப்பட்ட சங்கம் ஒவ்வொன்றிற்கும்
கடமையாகும்.
34. பதிவாளர் தஃவலோ விளக்கமோ கோருவதற்கு அதிகாரம்.- (1) இந்தப் பிரிவின்.
வகைமுறைகளின்படி பதிவு செய்யப்பட்ட பதிவாளர் ஒரு சங்கத்தால், பதிவாளரிடம்
முன்னிட வேண்டுறுத்தப்படும் ஆவணம் எதையும் பார்வையிட்டதன் பேரில், அவர்
அந்த ஆவணம் தொடர்புடையதாகப் புலப்படுகிற பொருட்பாடு எதனையும்
பொறுத்து தகவல் அல்லது விளக்கம் எதுவும் தேவையென்று கருதும்போது, அவர்
எழுத்து மூலமான ஓர் ஆணை வாயிலாக, அந்த ஆவணத்தை முன்னிடுகிற பதிவு
செய்யப்பட்ட சங்கத்தை, தம் ஆணையில் தாம் குறித்துரைக்கலாகும்
காலத்துக்குள், அத்தகைய தகவலை அல்லது விளக்கத்தைத் தருமாறு கோரலாம்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படி ஆணை ஒன்றைப் பதிவு செய்யப்பட்ட சங்கம்
ஒன்று பெற்றதன்பேறில், தங்களது ஆற்றலுக்கு ஏற்ற வகையில் அத்தகைய
தகவலையோ விளக்கத்தையோ தருவது அதில் வேலை செய்கிற அல்லது வேலை
செய்து வந்த எல்லா அலுவலர்களுக்கும் கடமையாகும்.
(3) அத்தகைய தகவலையும் விளக்கத்தையும் பெற்றதன்பேரில், அவற்றைப்
பதிவாளர் தம்மிடம் முன்னிடப்பட்ட மூல ஆவணத்துடன் இணைக்கலாம்; மேலும்,
அவரால் அவ்வாறு இணைக்கப்பட்ட கூடுதல் ஆவணம் எதுவும் ஆய்வு மற்றும்
படிகள் எடுத்தல் குறித்த வகைமுறைகளுக்கு மூல ஆவணம்
உட்பட்டிருக்கிறவாறே உட்பட்டிருத்தல் வேண்டும்.
அத்தியாயம் IV
ஆய்வு, விசாரணை, அறவு செய்தல், முடிவுறுத்துதல் மற்றும் மேல்முறையீடு .
35. புத்தகங்களை ஆய்வு செய்தல்.- பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சங்கத்தின்
புத்தகங்களும், தகவான எல்லா தேரங்களிலும், பதிவாளரால் அல்லது அவரால்
இதற்கென அதிகாரமளிக்கப்பெற்ற ஆள் எவராலும், ஆய்வு செய்யப்படுவதற்குக்
கிடைக்கும்படி செய்தல் வேண்டும்.
36. பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் அலுவல்களை விசாறிப்பதற்குப்
பதிவாளருக்குள்ள அதிகாரம்.- (1) பதிவாளர், தாமாகவோ அல்லது பதிவு
செய்யப்பட்ட ஒரு சங்கத்தின் குழு உறுப்பினர்களின் பெரும்பான்மையினரின்.
விண்ணப்பத்தின் பேறிலோ, அல்லது பதிவு செய்யப்பட்ட அந்தச் சங்கத்தின்
உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாதவர்களின்.
விண்ணப்பத்தின் பேரிலோ, அல்லது மாவட்ட ஆட்சியரால் அவ்வாறு
கோரப்பட்டாலோ, பதிவு செய்யப்பட்ட அந்தச் சங்கத்தின் அமைப்பு, செயற்பாடு,
நிதிநிலை ஆகியவை பற்றிய ஒரு விசாரணையை நடத்தலாம்; அல்லது
இதற்கெனப் பதிவாளரால் எழுத்து மூலமான ஆணையின்படி
அதிகாரமளிக்கப்பட்ட எவரொருவரையும் விசாரணையை நடந்துமாறு
பணிக்கலாம்.
2 1) ஆம் உட்பிரிவின்படி பதிவாளருக்குச் செய்யப்படும் ஒரு
விண்ணப்பமானது, விண்ணப்பதாரர்கள் விசாரணை ஒன்றிற்காக விண்ணப்பம்
செய்யச் சரியான காரணம் பெற்றிருக்கிறார்கள் என்று காட்டுவதற்காகப் பதிவாளர்
வேண்டுறுத்தலாகும் சான்றின் வாயிலாக ஆதாரமளிக்கப்படுதல் வேண்டும்.
(3) பதிவாளர், விசாரணை நடைபெறுவதற்கு முன்பு, நடத்தப்படவிருக்கும்
விசாரணைக்கு ஆகும் செலவுக்காக, அவர் பொருத்தமெனக் கருதும் பிணையம்
வழங்குமாறு, (1) ஆம் உட்பிரிவின்படி விண்ணப்பதாரர்களை வேண்டுறுத்தலாம்.
(4) விசாரணைக்கான எல்லாச் செலவுகளும், அதற்கு இணையுறு அல்லது
முதற்படியான செலவுகளும், அந்த விசாரணையானது,-
(அ) விண்ணப்பத்தின். பேரில் நடத்தப்படுமிடத்து, அதற்கான
விண்ணப்பதாரர்களாலோ அல்லது பதிவு செய்யப்பட்ட சங்கத்தின்
சொத்துகளிலிருந்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் உறுப்பினர்கள்
அல்லது அலுவலர்களாலோ பதிவாளர் எழுத்து மூலமான ஓர் ஆணை வாயிலாகப்
பணிக்கலாகும் விகிதத்தில் செலுத்தப்படுதல் வேண்டும்; மற்றும்,
(ஆ) மாவட்ட ஆட்சியர் அல்லது பதிவாளர் தாமாகவே முற்படுவதன் பேரில்
நடத்தப்படுமிடத்து, பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் சொத்துகளிலிருந்து
செலுத்தப்படுதல் வேண்டும் மற்றும் நிலவரி நிலுவையைப் போன்றே அது தண்டல்
செய்யப்படத்தக்கதாகும்.
(5) (4) ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஓர் ஆணையானது,
விண்ணப்பத்தின் பேறில், வட்டார அதிகார வரம்பு கொண்டிருக்கிற உரிமை
வழக்கு நீதிமன்றம் எதனாலும், அத்தகைய நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பாணையைப்
போன்ற அதே முறையில் செயற்படுத்தப்படுதல் வேண்டும்.
(6) இந்தப் பிரிவின்படி ஒரு விசாரணையை நடத்துகிற ஓர் ஆள் தகவான
எல்லா நேரங்களிலும், பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் புத்தகங்கள், கணக்குகள்,
ஆவணங்கள் ஆகிய அனைத்தையும் எளிதில் அணுகுவதற்கு உரிமை
பெற்றிருப்பார் மற்றும், பதிவு செய்யப்பட்ட சங்கத்தையும், பதிவு செய்யப்பட்ட
சங்கத்தின் அலுவலர்களையும், அவர் பணிக்கலாகும் புத்தகங்கள், கணக்குகள்,
ஆவணங்கள் ஆகியவற்றை முன்னிடும் படி செய்வதற்கு, மற்றும் அதன் அலுவல்
தொடர்பான விவர உரைகளையும், பிற தகவல்களையும் தரும்படி கோருவதற்கு
அதிகாரம் பெற்றிருப்பார்.
(7) பதிவு செய்யப்பட்ட சங்கம் தொடர்பானதும், தங்களுடைய பாதுகாப்பில்
அல்லது அதிகாரத்திலிருப்பதுமான புத்தகங்கள், கணக்குகள், ஆவணங்கள்
அனைத்தையும், விசாரணை அலுவலரிடம் கொடுக்க வேண்டியது பதிவு
செய்யப்பட்ட சங்கத்தின் அலுவலராக இருக்கிற அல்லது அலுவலராக
இருந்துவந்த எல்லோருக்கும் கடமையாகும்.
(8) இந்தப் பிரிவின்படி விசாரணை நடத்துகிற ஓர் ஆளுக்கு பதிவு
செய்யப்பட்ட சங்கத்தின் அலுவல்கள் எவற்றைப் பற்றியும் தெரிந்திருப்பதாக தாம்.
நம்ப காரணம் பெற்றிருக்கிற ஆள் எவரையும் முன்னிலையாகுமாறு ஆணை
பிறப்பிக்கலாம். ஆணையுறுதியின் பேரில் அத்தகைய ஆளை விசாரிக்கலாம்
மற்றும் விசாரணை நடத்துகிறவர் ஆள் எவருக்கும் சொந்தமான அல்லது அவரது
பாதுகாப்பிலுள்ள புத்தகங்கள், கணக்குகள் அல்லது ஆவணங்கள் எவற்றிலும்,
பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பான பதிவுகள் எவையும்
அடங்கியிருப்பதாகத் தாம் நம்புவதற்குக் காரணம் பெற்றிருந்தால் அத்தகைய
புத்தகங்களை, கணக்குகளை, ஆவணங்களை முன்னிடுவதற்கு
முன்னிலையாகுமாறு பணிக்கலாம்.
(9) விசாரணையின் முடிவு, பதிவு செய்யப்பட்ட சங்கத்திற்கும்
விண்ணப்பதாரர்கள் எவரேனும் இருப்பின் அவர்களுக்கும் தெரியப்படுத்தப்படுதல்
வேண்டும்.
37. பதிவை அறவு செய்தல். 36 ஆம் பிரிவின்படி விசாரணை ஒன்று
நடத்தப்பட்டிருக்கும் போது, பதிவாளர்-
(அ) பதிவு செய்யப்பட்ட சங்கம், இந்தச் சட்டத்தில் அல்லது அதன்படிச்
செய்யப்பட்ட விதிகளில் வகைமுறைகள் எவற்றையேனும் மீறியிருக்கிறது என்று,
அல்லது
(ஆ) பதிவு செய்யப்பட்ட சங்கம் நொடித்துப் போய்விட்டது அல்லது
கட்டாயமாக அவ்வாறு நொடித்துவிடும் என்று, அல்லது
(இ) அத்தகைய பதிவு செய்யப்பட்ட சங்கம் ஏதொன்றின் அலுவலானது
மோசடியாக, அல்லது 6 ஆம் பிரிவின்படி பதிவாளரிடம் முண்ணிடப்பட்ட துணை
விதிகளுக்கு அல்லது விவரக் குறிப்பில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்கு
இணங்கியவாறு அல்லாமல் நடத்தப்படுகிறது என்று மனநிறைவு கொள்வாரானால்,
கருதப்பட்ட அறவு செய்தல் பற்றிய காரணங்களைச் சுருக்கமாகக் குறித்துரைக்கும்
முன் அறிவிப்பை எழுத்து மூலம் அவர் தக்கதெனக் கருதும் முறையில் பதிவு
செய்யப்பட்ட சங்கத்திற்குக் கொடுத்த பின்பும், பதிவு செய்யப்பட்ட சங்கத்திற்கு ஏன்:
அறவு செய்யக்கூடாது என்பதற்குக் காரணம் காட்டுவதற்கு ஒரு வாய்ப்பினைக்
கொடுத்த பின்பும், பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் பதிவை அறவு செய்யலாம்;
மேலும், பதிவு செய்யப்பட்ட சங்கத்திற்கு உடனடியாகப் பதிவு அஞ்சல் மூலம் அறவு
செய்யும் ஆணையை அனுப்பலாம்.
38. சட்ட முரணான செயல்களைச் செய்து கொண்டிருக்கிற சங்கத்தின் பதிவை
அறவு செய்தல்.- (1) பதிவு செய்யப்பட்ட சங்கம் எதுவும் சட்ட முரணான செயல்
எதையும் செய்து கொண்டிருக்கிறது என்று அல்லது அந்தச் சங்கத்தின்
கட்டுப்பாட்டின் கீழுள்ள இடம் எதிலும் சட்ட முரணான செயல் செய்யப்படுவதற்கு
இசைவளிக்கிறது என்று பதிவாளருக்குத் தோன்றுமானால் பதிவாளர், அத்தகைய
சங்கத்தின் செயல்களைப் பற்றி விசாரணை நடத்தலாம்; மற்றும் அத்தகைய
விசாரணை ஒவ்வொன்றையும் பொறுத்து, பதிவாளர் 36 ஆம் பிரிவின் (6), (7). (8)
ஆகிய உட்பிரிவுகளில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறான அதே அதிகாரங்களைக்
கொண்டிருக்கும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படி விசாரணை நடத்தப்பட்டதன் பேரில்
சட்டமுரணான செயல் எதையும் அத்தகைய சங்கம் எதுவும் செய்து
கொண்டிருக்கிறது என்று அல்லது அந்தச் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள
இடம் எதிலும் சட்டமுரணான செயல் எதுவும் செய்யப்படுவதற்கு
இசைவளித்திருக்கிறறு என்று பதிவாளர் மனநிறைவு கொள்வாரானால்
அச்சங்கத்தின் பதிவு ஏன் அறவு செய்யப்படக்கூடாது என்று காரணம் காட்டுமாறு
அந்தச் சங்கத்திற்குத் ததவான அறிவிப்பைக் கொடுத்த பின்பும், அச்சங்கத்தில்
சார்பாகத் தெரிவிக்கப்படும் முறையீடுகள் எவையேனும் இருப்பின், அவற்றைக்
கருதிப் பார்த்த பின்பும், அச்சங்கத்தின் பதிவை ஆணையின் வாயிலாக அவர் அறவு
செய்தல் வேண்டும். பதிவாளர். அறவு செய்தல் ஆணையைப் பதிவு செய்யப்பட்ட
சங்கத்திற்கு உடனடியாக அனுப்புதல் வேண்டும்.
விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக, அப்போதைக்கு
நடைமுறையிலுள்ள சட்டத்தின். வகைமுறை எதன்படியும் ஒரு
நடவடிக்கையானது தண்டிக்கப்படத்தக்க ஒரு குற்றமாக இருக்குமானால், அந்த
நடவடிக்கை சட்ட முரணானதாகத் கொள்ளப்படுதல் வேண்டும்.
39. பதிவை அறவு செய்தலின் விளைவு. (1)பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கத்தின்
அறவு செய்யப்படுமிடத்து பதிவாளர் அறவு செய்யும் ஆணையின் தேதியிலிருந்து
குறிக்கப்பட்ட காலஅளவிற்குள் 39 ஆம் பிரிவின்படி சங்கம் நடவடிக்கை எதையும்
எடுக்கவில்லை என்றால் அச்சங்கத்தை முடிவுறுத்த ஒரு கலைப்பாளரை
அமர்த்தலாம்.
(2) கலைப்பாளர், பதிவாளரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு,
(அ) தம்முடைய பதவிப் பெயரால், பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் சார்பாக
நடவடிக்கை அல்லது வேறு சட்ட நடவடிக்கை எதையும் தொடர அல்லது
எதிர்வாதம் செய்யவும்,
(ஆ) பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் சொத்திருப்புகளுக்குப் பதிவு
செய்யப்பட்ட சங்கத்தின் உறுப்பினர்களால் முறையே கொடுக்கப்பட வேண்டிய
அல்லது கொடுக்கப்பட வேண்டியிருக்கிற பங்குத் தொகையை அவ்வப்போது
தீர்மானிக்கவும்,
(ஐ) பதிவு செய்யப்பட்ட சங்கத்திற்கு எதிராக உரிமைக் கோரிக்கைகள்
அனைத்தையும் புலனாய்வு செய்யவும், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு
உட்பட்டு உரிமை கோருபவர்களிடையே எழும் முந்துரிமை குறித்த வினாப்
பொருளைத் தீர்மானிக்கவும்,
(FF) கலைப்புக்கான செலவுகளை எந்த ஆட்கள் எந்த விகிதத்தில் ஏற்றுக்
கொள்வது என்பதைத் தீர்மானிக்கவும்,
(உ) பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் அலுவல்களை முடிவுறுத்துதலுக்குப்
பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் சொத்திருப்புகளைத் தண்டல் செய்து பகிர்வு
செய்தலைப் பொறுத்துத் தேவையென்று அவருக்குத் தோன்றுகிற
பணிப்புரைகளைப் பிறப்பிப்பதற்கும்
அதிகாரம் பெற்றிருப்பார்.
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட நடைமுறை விதிகள் எவற்றிற்கும்
உட்பட்டு, இந்தப் பிரிவின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு எந்த அளவுக்கு
அதிகாரங்கள் தேவைப்படுகின்றனவோ அந்த அளவுக்கு, ஓர் உரிமை வழக்கு
நீதிமன்றத்தைப் பொறுத்து 1908-ஆம் ஆண்டு உரிமை வழக்கு விசாரணை
முறைத் தொகுப்புச் சட்டத்தினால் (மையச் சட்டம் 14908)
வகைசெய்யப்பட்டுள்ளவாறான அதே வழியிலும், அதே முறையிலும். இயன்ற
அளவுக்கு, சான்றாளர்களை முன்னிலையாகுமாறு பணிக்கவும், அவர்கள்
முன்னிலையாவதைக் கட்டாயப்படுத்தவும் ஆவணங்களை முன்னிடு படிக்
கட்டாயப்படுத்தவும் ஒரு கலைப்பாளர் அதிகாரம் பெற்றிருப்பார்.
(4) இந்தப் பிரிவின்படி செய்யப்பட்ட ஓர் ஆணையானது, வட்டார அதிகார
வரம்பு கொண்டிருக்கும் உரிமை வழக்கு நீதிமன்றம் எதனாலும்,
விண்ணப்பத்தின் பேரில், அத்தகைய நீதிமன்றத்தின் தீர்ப்பாணையைப் போன்று
அதே முறையில் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.
41. பதிவு செய்யப்பட்ட சங்கங்களை கலைத்தல் மற்றும் அதன் அலுவல்களை
சரிக்கட்டுதல்.- (1) ஒரு பதிவு செய்யப்பட்ட சங்கம், அது கலைக்கப்படுதல்
வேண்டும் என்று சிறப்புத் தீர்மானத்தின் வாயிலாகத் தீர்மானிக்கலாம் மற்றும்,
அதன் பேரில் அது உடனேயே அல்லது தீர்மானத்தில் குறித்துரைக்கப்பட்ட
காலத்தின்போது கலைக்கப்படுதல் வேண்டும்: மேலும், பதிவு செய்யப்பட்ட
சங்கத்தின் சொத்துக்கும், பதிவு செய்யப்பட்ட அந்தச் சங்கத்தின் துணை விதிகள்.
எவையேனுமிருப்பின், அவற்றுக்கிணங்கவும் துணை விதிகள்:
எதுவுமில்லையென்றால் குழு அல்லது (2) ஆம் உட்பிரிவின்படி, ஒரு சிறப்புத் குழு
அமர்த்தப்பட்டிருக்குமிடத்து, அந்தச் சிறப்புக் குழு உகந்ததெனக் கருதுகிறவாறும்,
அதன் உரிமைக் கோரிக்கைகளுக்கும் கடப்பாடுகளுக்கும் வகை செய்வதற்கும்
அறுதியீடு செய்வதற்கும் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தல்
வேண்டும்.
(2) ஒரு பதிவு செய்யப்பட்ட சங்கம், (1) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட சிறப்புத்
தீர்மானத்தினை நிறைவேற்றும்போது பதிவு செய்யப்பட்ட சங்கத்தின்.
அலுவல்களின் முடிவுறுத்துதலுக்கான தீர்மானத்தில் குறித்துரைக்கப்படலாரும்
எண்ணிக்கையுள்ள உறுப்பினர்கள் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை அமர்த்தலாம்.
(3) பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் குழுவின் அல்லது சிறப்புக் குழு
ஏதேனுமிருப்பின் அதன் உறுப்பினர்களுக்கிடையே பூசல் எதுவும் எழுந்தால், பதிவு
செய்யப்பட்ட சங்கத்தின் அலுவல்களைச் சரிக்கட்டுதலை, நீதிமன்றத்திற்குச்
சாட்டியனுப்புதல் வேண்டும்; மேலும், நீதிமன்றம் இந்தப் பொருட்பாடு குறித்துத்
தான் பொருத்தமெனக் கருதும் ஆணையைப் பிறப்பித்தல் வேண்டும்.
ஆனால், பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் சிறப்புத் தீர்மானத்தின் பேரில்
குழுவால் அல்லது சிறப்புக் குழு ஏதேனுமிருப்பின், அதனால் முடிவு செய்யப்பட்ட
எந்தப் பொருட்பாடும், இந்த உட்பிரிவின் பொருளின்படி பூசலிலுள்ள
பொருட்பாடாகக் கொள்ளப்படுதல் ஆகாது.
(4) மைய அரசு அல்லது மாநில அரசு எதுவும் பதிவு செய்யப்பட்ட சங்கம்
ஏதொன்றின் உறுப்பினராகவோ அல்லது பங்களிப்பாளராகவோ அல்லது
மற்றப்படியாக அக்கறை கொண்டதாகவோ இருந்தால், மைய அரசின் அல்லது
தொடர்புடைய மாநில அரசின் இசைவின்றி, (1) ஆம் உட்பிரிவின்படி அத்தகைய
சங்கம் கலைக்கப்படுதல் ஆகாது.
42. கலைக்கப்பட்டதன்பேறில் உறுப்பினர் எவரும் ஆதாயத்தைப் பெற்று
கொள்ளுதல் ஆகாது.- பதிவு செய்யப்பட்ட சங்கம் எதுவும் கலைக்கப்பட்டதன்
பேரில் அதன் கடன்கள் மற்றும் கடப்பாடுகள் அனைத்தும் தீர்க்கப்பட்ட பின்னர்,
ஏதேனும் சொத்து எஞ்சியிருக்குமானால், அது, சொல்லப்பட்ட சங்கத்தின்
உறுப்பினர்களுக்கு அல்லது அவர்களுள் எவருக்கும் கொடுக்கப்படுதலோ
பகிர்ந்தளிக்கப்படுதலோ ஆகாது; ஆனால், ஒரு சிறப்புத் தீர்மானத்தால் அல்லது அது
தவறினால் நீதிமன்றத்தின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டிய அத்தகைய பதிவு
செய்யப்பட்ட சங்கத்தின் அதே நோக்கங்களை அல்லது அவை போன்ற
நோக்கங்களைக் கொண்டிருக்கும் பதிவு செய்யப்பட்ட வேறு சங்கம் எதற்கும்
அல்லது ஆட்களின் கழகம் எதற்கும் கொடுக்கப்படுதல் வேண்டும்.
ஆனால், ஒரு கூட்டு மூலதனப் பங்கு நிறுவனத்தின் தன்மையுள்ள
பங்குதாரர்களின் பங்களிப்புகளின் மூலம் அமைக்கப்பட்டிருக்கிற அல்லது
நிறுவப்பட்டிருக்கிற சங்கம் எதற்கும் இந்தப் பிரிவு பொருந்தாது.
43. பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் முடிவுறுத்தலுக்குப் பின்பு கலைப்பாளர் விவர
அறிக்கையைத் தயாரித்தல்.- (1) பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கத்தின் அலுவல்கள்
முற்றிலுமாக முடிவுறுத்தப்பட்ட உடனேயே, முடிவுறுத்துதல் எவ்வாறு
நடத்தப்பட்டது என்பதையும், பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் சொத்துக்கு எவ்வாறு
வகை செய்யப்பட்டது என்பதையும் தெரிவிக்கிற முடிவுறுத்தம் பற்றிய விவர
அறிக்கையைக் கலைப்பாளர் தயாரித்தல் வேண்டும் மற்றும் பதிவு செய்யப்பட்ட
சங்கத்தின் முன்பு அந்த விவர அறிக்கையை வைப்பதன் பொருட்டும், அதனைப்
பொறுத்து விளக்கம் எதையும் கொடுப்பதன் பொருட்டும் அதன் பேரவைக்
கூட்டத்தைக் கூட்டுதல் வேண்டும்.
(2) கூட்டம் நடந்த பிறகு வகுத்துரைக்கப்படலாகும் காலஅளவிற்குள் அந்த
விவர அறிக்கையின் படியைப் பதிவாளருக்குக் கலைப்பாளர் அனுப்புதல்
வேண்டும்: மற்றும், கூட்டம் நடத்தியதைப் பற்றியும் அதன் தேதி பற்றியும்
அவருக்கு ஒரு விவரக்குறிப்பை அனுப்புதல் வேண்டும்.
(3) மேற்சொன்ன கூட்டத்திற்குக் கோரெண் இல்லாவிட்டால், (2) ஆம்
உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள விவரக்குறிப்பிற்குப் பதிலாக கலைப்பாளர், கூட்டம்
உரியவாறு கூட்டப்பட்டதென்றும், அதில் கோரெண் வரவில்லை என்றும்
தெரிவிக்கும் ஒரு விவரக் குறிப்பை அனுப்புதல் வேண்டும்.
44. செயற்படாத பதிவு செய்யப்பட்ட சங்கங்களை நீக்கிவிடுதல்.-- (1) பதிவு
செய்யப்பட்ட ஒரு சங்கமானது அலுவலை நடத்தவில்லை என்று அல்லது
செயற்படவில்லை என்று பதிவாளர் நம்புவதற்குத் தகவான காரணமிருக்குமிடத்து,
அவர் அந்தச் சங்கமானது அலுவலை நடத்திக் கொண்டிருக்கிறதா அல்லது
செயற்படுகிறதா என்று விசாரணை செய்யும் கடிதம் ஒன்றைப் பதிவு அஞ்சல்
மூலம் பதிவு செய்யப்பட்ட அந்தச் சங்கத்திற்கு அனுப்புதல் வேண்டும்.
(2) பதிவு செய்யப்பட்ட சங்கத்திடமிருந்து, அது அலுவலை நடத்தவில்லை
என்று அல்லது செயற்படவில்லை என்று பதிவாளருக்கு மறுமொழி வருகிறது,
அல்லது கடிதத்தை அனுப்பிய பிறகு வகுத்துரைக்கப்படலாகும் கால அளவிற்குள்.
மறுமொழி எதுவும் வரவில்லை என்றால் அவர் தமிழ்நாடு அரசிதழில் ஓர்
அறிவிப்பை, அந்த அறிவிப்பின். வெளியீட்டுத் தேதியிலிருந்து
வகுத்துரைக்கப்படலாகும் காலஅளவு முடிவடைவதன்பேரில், மாறாகக் காரணம்
காட்டப்பட்டாலன்றி, அந்த அறிவிப்பில் சொல்லப்பட்ட பதிவு செய்யப்பட்ட
சங்கத்தின் பெயர் பதிவேட்டிலிருந்து அடித்துவிடப்படு மென்றும், பதிவு
செய்யப்பட்ட சங்கம் கலைக்கப்படுமென்றும் வெளியிட்டு, பதிவு அஞ்சல் மூலம்
பதிவு செய்யப்பட்ட சங்கத்திற்கு அனுப்புதல் வேண்டும்.
(3) பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கமானது.-
(அ) முடிவுறுத்தப்படுமிடத்து, கலைப்பாளர் எவரும் செயற்படவில்லை என்று
அல்லது பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் அலுவல்கள் முழுவதும்
முடிவுறுத்தப்பட்டுவிட்டது என்று பதிவாளர் நம்புவதற்குத் தகவான காரணம்
பெற்றிருந்தால், அல்லது
(ஆ) 16 ஆம் பிரிவின் 3 ஆம் உட்பிரிவின் (ஆ) கூறில் சுட்டப்பட்டுள்ள
ஆவணங்கள் அனைத்தையும் அல்லது அவற்றுள் எதனையும் தொடர்ச்சியாக
மூன்று நிதியாண்டுகளுக்கு முன்னிடாதிருந்தால் எந்த நேர்விலும், பதிவாளர்
இந்தப் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் வகை செய்யப்பட்டுள்ளவாறு ஓர்
அறிவிப்பைத் தமிழ்நாடு அரசிகழில் வெளியிட்டு, பதிவு அஞ்சல் மூலம் பதிவு
செய்யப்பட்ட சங்கத்திற்கு அனுப்புதல் வேண்டும்.
(4) (2) ஆம் உட்பிரிவில் அல்லது (3) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள
அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ள காலம் முடிவடைந்த பின்பு, பதிவு செய்யப்பட்ட
சங்கத்தினால், மாறான காரணம் முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி,
பதிவாளர், பதிவேட்டிலிருந்து அதன் பெயரை அடித்துவிடலாம் மற்றும் அது
குறித்து தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு வெளியிடுதல் வேண்டும்; மற்றும்
அத்தகைய அறிவிப்பு வெளியிடப்படுவதன் பேரில், பதிவு செய்யப்பட்ட அச்சங்கம்
கலைக்கப்பட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
ஆனால், பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் அலுவலர் மற்றும் உறுப்பினர்
ஒவ்வொருவருக்கும் கடப்பாடு ஏதேனுமிருப்பின் அது தொடர்ந்து இருந்துவரும்;
மற்றும் பதிவு செய்யப்பட்ட அச்சங்கம் கலைக்கப்படாதிருந்தது போன்றே
நிறைவேற்றப்படுதல் வேண்டும்.
(5) (அ) பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கத்தின் பெயர் பதிவேட்டில்
அடித்துவிடப்பட்டதால், பதிவு செய்யப்பட்ட அச்சங்கம் அல்லது அதன் உறுப்பினர்
அல்லது கடன் தருநர் எவரும் குறையுற்றால், பதிவு செய்யப்பட்ட அச்சங்கத்தின்
பெயர் அடிக்கப்பட்டது பற்றிய அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட
தேதியிலிருந்து வகுத்துரைக்கப்படலாகும் காலஅளவிற்குள் அத்தகைய பதிவு
செய்யப்பட்ட சங்கம், உறுப்பினர் அல்லது கடன் தருநர்,-
() ஆவணப் பதிவுத்துறைத் தலைவரால் பதிவு செய்யப்பட்ட சங்கத்தின்
பெயர் அடிக்கப்பட்டிருக்குமிடத்து, அரசிற்கும்
(i) வேறு எந்த நேர்விலும், ஆவணப் பதிவுத்துறைத் தலைவருக்கும்
மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.
(ஆ) பெயர் அடிக்கப்பட்ட சமயத்தில், பதிவு செய்யப்பட்ட சங்கமானது
அலுவல் நடத்திக் கொண்டிருந்தது அல்லது செயற்பட்டுக் கொண்டிருந்தது
அல்லது மற்றப்படி பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் பெயரைப் பதிவேட்டில் மீண்டும்
சேர்ப்பது நேரியதும் முறையானதும் ஆகும் என்று அரசு அல்லது ஆவணப்
பதிவுத்துறைத் தலைவர் மனநிறைவு கொண்டால், அவ்வாறு மீண்டும் சேர்ப்பதற்கு
ஆணையிடலாம்.
(6) (5ஆம் உட்பிரிவின்படியான அரசின் அல்லது ஆவணப் பதிவுத்துறைத்
தலைவரின் ஆணையால் பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கம் அல்லது அதன்
உறுப்பினர் அல்லது கடன் தருநர் எவரும் குறையுற்றால், அத்தகைய பதிவு
செய்யப்பட்ட சங்கம், உறுப்பினர் அல்லது கடன் தருநர் அத்தகைய ஆணையைப்
பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து, வகுத்துரைக்கப்படலாகும் காலஅளவிற்குள்,
அத்தகைய பதிவு செய்யப்பட்ட சங்கம், உறுப்பினர் அல்லது கடன் தருநர் செய்து
கொள்ளும் விண்ணப்பத்தின் பேரிலும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட சங்கத்தின்.
பெயரை மீண்டும் சேர்ப்பது நேரியதும் முறையானதும் ஆகும் என்று மனநிறைவு
கொள்வதன் பேரிலும், அவ்வாறு மீண்டும் சேர்ப்பதற்கு நீதிமன்றம் ஆணையுரை
பிறப்பிக்கலாம்.
(7) (ஆம் உட்பிரிவின்படி, அல்லது (6) ஆம் உட்பிரிவின்படி பதிவேட்டில்
எந்தப் பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறதோ
அந்தச் சங்கமானது. அதன் பெயர் அடிக்கப்படாதது போன்றே தொடர்ந்து
இருந்துவருவதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும், நேர்விற்கேற்ப, அரசு
அல்லது ஆவணப் பதிவுத்துறைத் தலைவர் அல்லது நீதிமன்றம், ஆணை
வாயிலாகப் பதிவு செய்யப்பட்ட அச்சங்கத்தின் பெயர் அடிக்கப்படாதது போன்றே
பதிவு செய்யப்பட்ட அச்சங்கத்தையும், மற்ற ஆட்கள் அனைவரையும், எந்த
அளவுக்குக்கூடுமோ அந்த அளவுக்கு அதே நிலையில் வைப்பதற்கு நேரியதெனத்
தோன்றுகிற பணிப்புரைகளைப் பிறப்பிக்கலாம்; மற்றும் வகைமுறைகளைச்
செய்யலாம்.
45. மேல்முறையீடுகள்.- (1) (அ) ஒரு சங்கத்தைப் பதிவு செய்ய அல்லது ஒரு
சங்கத்தின் விவரக்குறிப்பில் அல்லது துணை விதியில் திருத்தம் எதையும் செய்ய
மறுக்கிற, அல்லது
(ஆ) பதிவு செய்யப்பட்டஒரு சங்கத்தின் பதிவை அறவு செய்கிற, அல்லது
(க) 36 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஓர்
ஆணையினால் குறையுற்ற ஆள் எவரும், அத்தகைய ஆணையானது.-
() ஆவணப் பதிவுத்துறைத் தலைவருடையதானால், அரசிற்கும்;
அல்லது
(i) வேறு ஆள் எவருடையதானாலும் ஆவணப் பதிவுத்துறைத்
தலைவருக்கும்
மேல்முறையீடு செய்யலாம்.
(2) ஒரு கலைப்பாளரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனாலும் குறையுற்ற
ஆள் எவரும் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யலாம்.
(3) இந்தச் சட்டத்தில் வெளிப்படையாக வகைசெய்யப்பட்டவாறல்லாமல்,
இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட ஆணைகள் இறுதியானவையும்
அறுதியானவையும் ஆகும்.
விளக்கம்.- (1), (2) ஆகிய உட்பிரிவுகளின் நோக்கங்களுக்காக, "குறையுற்ற
ஆள்" என்பது, பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கத்தையும் உள்ளடக்கும்.
அத்தியாயம் V
குற்றங்களும் நடைமுறையும்.
46. இச்சட்டத்திற்கு இணங்கி நடக்காததற்குத் தண்டம்.- (1) 4 ஆம் பிரிவின் (1)
ஆம் உட்பிரிவின்படி, அல்லது (2) ஆம் உட்பிரிவின்படி கட்டாயமாகப் பதிவு
செய்யப்பட வேண்டிய ஒரு சங்கம், பதிவுக்காகக் குறித்துரைக்கப்பட்ட கால
அளவிற்குள் தண்னை பதிவு செய்துகொள்ளத் தவறுகிறவிடத்து, அத்தகைய
சங்கத்தின் உறுப்பினராக இருக்கிற ஆள் ஒவ்வொருவரும் ஐம்பது ரூபாய் வரை
நீடிக்கலாகும் பணத்தண்டமும் தொடர்ந்து வருவதான தவறுகையாக இருக்கும்
நேர்வில், தவறுகை தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் ஐந்து ரூபாய் வரை
நீடிக்கலாகும் பணத்தண்டமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவராவார்.
(2) இந்தச் சட்டத்தின் வேண்டுறுத்தல்களுள் எதற்கும் இணங்கி நடக்கத்
தவறுகிற, அல்லது அதன் வகைமுறைகளுள் எதனையும் மீறுகிற பதிவு
செய்யப்பட்ட சங்கம் எதுவும், அந்தத் தவறுகையில் அல்லது மீறுகையில் தெரிந்தே
பங்கு கொண்டிருக்கிற அதன் அலுவலர் ஒவ்வொருவரும், நூறு ரூபாய் வரை
நீடிக்கலாகும் பணத்தண்டமும், தொடர்த்து வருவதான தவறுகையாக அல்லது
ம்றுகையாக இருக்கும் நேர்வில், அத்தவறுகை அல்லது மறுகை தொடரும்
ஒவ்வொரு நாளுக்கும் ஐம்பது ரூபாய் வரை நீடிக்கலாகும் பணத்தண்டமும்
விதித்துத் தண்டிக்கப்படத்தக்கவராவார்.
47. ஆவணங்களைப் பொய்யாக உருவாக்குவதற்கான தண்டம்.- பதிவு
செய்யப்பட்ட சங்கத்தால் இந்தச் சட்டத்தின்படி வைத்துவர வேண்டுறுத்தப்படுகிற
பதிவேடு, கணக்கு, ஐந்தொகைக் குறிப்பு அல்லது பிற ஆவணம் எதிலும் பொய்யான
பதிவு எதையும் அல்லது அதிலிருந்து விடுகை எதையும் வேண்டுமென்றே
செய்கிற அல்லது வேண்டுமென்றே செய்விக்கிற ஆள் எவரும், ஐந்நூறு ரூபாய்
வரை நீடிக்கலாகும் பணத்தண்டம் விதித்துத் தண்டிக்கப்படத்தக்கவராவார்.
48. பொய்யான தகவல் கொடுப்பதற்கு அல்லது அழைப்பாணை, கோரிக்கை, பிற
சட்டப்படியான ஆணைக்கு அல்லது பணிப்புரைக்கு கீழ்படியாமைக்கான தண்டம்.-
வேண்டுமென்றே பொய்யான அறிக்கையை அளிக்கிற அல்லது பொய்யான
தகவலைத் தருகிற பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் குழு அல்லது ஓர் அலுவலர்,
வேலைபெறுநர் அல்லது ஒரு சம்பளம் பெறும் பணியாளர் அல்லது சங்கத்தின்
உறுப்பினர் எவரும், அல்லது இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்படி
பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணை, கோரிக்கை அல்லது பிற சட்டப்படியான ஆணை
அல்லது பணிப்புரை எதற்கும் வேண்டுமென்றே அல்லது தகவான காரணம் எதுவும்
இல்லாமல் கீழ்ப்படியாமல் இருக்கிற அல்லது இந்தச் சட்டத்தின்.
வகைமுறைகளின்படி இதற்கென அதிகாரமளிக்கப்பட்ட ஆள் ஒருவரால்
தம்மிடமிருந்து சட்டப்படியாக வேண்டுறுத்தப்படுகிற தகவல் எதையும்
வேண்டுமென்றே நிறுத்திவைத்துக்கொள்கிற அல்லது கொடுக்கத் தவறுகிற ஆள்
எவரும், ஐந்நூறு ரூபாய் வரை நீடிக்கலாகும் பணத்தண்டம் விதித்துத்
தண்டிக்கப்படத்தக்கவராவார்.
49. சில நேர்வுகளில் காலத்தாழ்வை மன்னிப்பதற்குப் பதிவாளருக்குள்ள
அதிகாரம்.- பதிவாளர், தம் உளத்தேர்வின்படியும், 4 ஆம் பிரிவின்படி (1) ஆம்
உட்பிரிவின்படி அல்லது (2) ஆம் உட்பிரிவின்படி, 13 ஆம் பிரிவின் (1) ஆம்
கூறின்படி, 15 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்படி, 16 ஆம் பிரிவின் (3) ஆம்
உட்பிரிவின்படி அல்லது 27 ஆம் பிரிவின்படி வகுத்துரைக்கப்படலாகும்
காலஅளவிற்குள் சங்கம் எதனாலும் அல்லது, நிலவரத்துக்கேற்ப, பதிவு
செய்யப்பட்ட சங்கம் எதனாலும் செய்யப்பட்ட எழுத்து மூலமான ஒரு
விண்ணப்பத்தின் பேரிலும், மேற்சொன்ன வகைமுறைகளுள் எதற்கும் இணங்கி
நடப்பதற்கு அத்தகைய சங்கத்துக்கு வகுத்துரைக்கப்படலாகும் காலஅளவிற்கு
மேற்படாத ஒரு கூடுதல் காலத்திற்கு இசைவளிக்கலாம்.
50௦. குற்றங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுதல்.-- ஒரு பெருநகர்க்
குற்றவியல் நடுவருக்கு அல்லது ஒரு நீதித்துறை முதல் வகுப்புக் குற்றவியல்
நடுவருக்குக் கீழ்ப்பட்ட நீதிமன்றம் எதுவும் இந்தச் சட்டத்தின்படியான குற்றம்
எதையும் விசாரித்தல் ஆகாது.
அத்தியாயம் VI
கட்டணங்களும் கண்காணிப்பும்
51. கட்டணங்கள்.- (1) பதிவாளருக்கு இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட
பல்வேறு பொருட்களைப் பொறுத்து அதில் குறித்துரைக்கப்பட்ட கட்டணங்கள்
செலுத்தப்படுதல் வேண்டும்.
(2) அரசு, தன் உளத்தேர்வின்படி, இந்தச் சட்டத்தின்படி செலுத்தப்படத்தக்க
கட்டணம் எதையும் முழுமையாகவோ பகுதியாகவோ குறைக்கலாம்.
(3) (2) ஆம் உட்பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகாரத்தைச்
செலுத்துவதற்கு அரசு, அறிவிக்கை வாயிலாக, ஆவணப் பதிவுத்துறைத்
தலைவருக்கு அல்லது அவருக்குக் கீழமைந்த அலுவலர் எவருக்கும் அதிகாரம்
அளிக்கலாம்; மேலும் அதே முறையில் அத்தகைய அதிகாரத்தைத் திரும்பப்
பெறலாம்.
(4) 3 ஆம் பிரிவின்படி ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரத்தைச்
செலுத்துவதானது அறிவிக்கையில் குறித்துரைக்கப்படலாகும்.
கட்டுப்பாடுகளுக்கும் வரைக்கட்டுகளுக்கும் மற்றும் அரசின் அல்லது இதற்கென
அரசால் அதிகாரம் அளிக்கப்படலாகும் அலுவலரின் கட்டுப்பாட்டுக்கும்
சீராய்விற்குங்கூட உட்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு அதிகாரமளிக்கப்பட்ட
எவரேனும் அலுவலரின் செயல்களை அல்லது நடவடிக்கைகளைக்
கட்டுப்படுத்தவும் சீராய்வு செய்யவுங்கூட அரசு அதிகாரம் பெற்றிருக்கும்.
(5) இந்தச் சட்டத்தையொட்டிப் பதிவாளரிடம் செலுத்தப்பட்ட கட்டணங்கள்
அனைத்திற்கும் அரசிற்குக் கணக்குக் காட்டப்படுதல் வேண்டும்.
52. ஆவணப் பதிவுத்துறைத் தலைவரின் அதிகாரங்கள்.- (1) ஆவணப்
பதிவுத்துறைத் தலைவர், இந்தச் சட்டத்தின்படி இயங்கிவரும் வேறு எல்லாப்
பதிவாளர்களையும் கண்காணித்து வருவார்.
(2) ஆவணப் பதிவுத்துறைத் தலைவரின் எழுத்து மூலமான முன் ஒப்பளிப்பு
இல்லாமல், குற்றவழக்கு எதுவும் இந்தச் சட்டத்தின்படி தொடரப்படுதல் ஆகாது.
அத்தியாயம் VII
பலவகைப்பட்டவை
53. இருந்துவரும் பதிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கு இச்சட்டம் பொருந்துதல்.-
1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படியாகவோ (மையச் சட்டம் XXI/
1860) அல்லது 1955 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி இலக்கிய அறிவியல்
மற்றும் அறச்சங்கங்கள் பதிவுச் சட்டம் உள்ளடங்கலாக (திருவிதாங்கூர் கொச்சி
சட்டம் 30,1955) இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்கு ஒட்டி முன்பு மாற்றம்
செய்யப்பட்ட நிலப்பரப்பில் நடைமுறையில் இருக்கும் இந்தச் சட்டத்திற்கு
நேரிணையான சட்டம் எதன்படியாகவுமோ, பதிவு செய்யப்பட்ட சங்கம்
ஒவ்வொன்றும், இந்தச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட சங்கமாக
கொள்ளப்படுதல் வேண்டும். மேலும் அத்தகைய சங்கத்தின் துணை விதிகள்.
இந்தச் சட்டத்தின் வகைமுறை எதற்கும் முரணாக இல்லாதிருக்கிற அளவுக்கு
அவை மாற்றப்படுகிற அல்லது அறவு செய்யப்படுகிற வரையில் தொடர்ந்து
நடைமுறையில் இருந்துவரும்.
54. விலக்களிப்பு.- அரசு, பின்னுற இயங்கும் அல்லது முன்னுற இயங்கும் பொது
அல்லது சிறப்பு ஆணை வாயிலாக-
(1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அனைத்திலிருந்தும் அல்லது
அவற்றில் எதிலிருந்தும், அல்லது இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி
எதிலிருந்தும் விலக்களிக்கலாம்; அல்லது
(2) அத்தகைய வகைமுறை எதுவும் அல்லது அத்தகைய விதி எதுவும்
ஆணையில் குறித்துரைக்கப்படலாகும் மாறுதல்களுடன், சங்கம் அல்லது பதிவு
செய்யப்பட்ட சங்கம் அல்லது சங்கங்களின் வகை அல்லது பதிவு செய்யப்பட்ட
சங்கங்களின் வகை எதற்கும் பொருந்தும் என்று பணிக்கலாம்.
55. பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் செயல்கள் முதலானவை சில
குறைபாடுகளால் செல்லாததாக்கப்படுதல் ஆகாது.- ஒரு பதிவு செய்யப்பட்ட
சங்கத்தின் அல்லது ஏதேனும் குழுவின் அல்லது சங்கத்தின் எவரேனும்
அலுவலரின் செயல் அல்லது நடவடிக்கை எதுவும்.-
(அ) அச்சங்கத்தை அமைப்பதில் அல்லது பேரவையை உருவாக்குவதில்
அல்லது குழுவை அமைப்பதில், காலியிடம் அல்லது குறைபாடு எதுவும்
இருக்கிறதென்ற காரணத்தின் பேரில் மட்டுமோ,
(ஆ) குழுவின் உறுப்பினர் ஒருவரின் தேர்தலில் அல்லது சங்கத்தின்
அலுவலர் ஒருவரின் அமர்த்துகையில் ஏதேனும் குறைபாடு அல்லது முறைகேடு
உள்ளது என்ற காரணத்தின் பேரில் மட்டுமோ அல்லது,
(௫) நேர்வின் தகுதிப்பாடுகளுக்கு ஊறு செய்யாத செயலில் அல்லது
நடவடிக்கையிலுள்ள ஏதேனும் குறைபாடு அல்லது முறைகேட்டின் காரணத்தின்
பேரில் மட்டுமோ
செல்லாததாகக் கொள்ளப்படுதல் ஆகாது.
56. விதிகள் செய்ய அதிகாரம்.- (1) இந்தச் சட்டத்தின் நோக்கங்களை
நிறைவேற்றுவதற்கு அரசு விதிகள் செய்யலாம்.
(2) குறிப்பாகவும், முன்சொன்ன அதிகாரத்தின் பொதுப்பாங்கிற்கு
ஊறின்றியும், அந்த விதிகள் பிண்வருவனவற்றுக்கு வகை செய்யலாம்.
(அ) 3 ஆம் பிரிவின் நோக்கத்திற்காக ஏற்பிசைவளிக்கப்படும்
குறிக்கோள்கள்;
(ஆ) எந்தப் பொருட்பாடுகளைப் பொறுத்து ஒரு சங்கம் துணை விதிகள்:
செய்யக்கூடுமோ அல்லது செய்தல் வேண்டுமோ அந்தப் பொருட்பாடுகள், மற்றும்
துணை விதிகளைச் செய்வதில், அவற்றை மாற்றுவதில் அல்லது அறவு
செய்வதில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்; மற்றும் அவ்வாறு
செய்வதற்கு, மாற்றுவதற்கு அல்லது அறவு செய்வதற்கு முன்பு நிறைவேற்றப்பட
வேண்டிய வரைக்கட்டுகள்;
(இ) சங்கங்களைப் பதிவு செய்யும் நோக்கங்களுக்காகவும், இந்தச்
சட்டத்தின்படி முன்னிடும்படி வேண்டுறுத்தப்பட்ட அல்லது முன்னிடுவதற்கு
அதிகாரமளிக்கப்பட்ட ஆவணங்களை முன்னிடுவதற்காகவும் பயன்படுத்தப்பட
வேண்டிய படிவங்கள்;
() இந்தச் சட்டத்தால் வேண்டுறுத்தப்பட்ட கணக்குகள், விவர
அறிக்கைகள், பதிவேடுகள் ஆகியவற்றின் படிவம் மற்றும் அத்தகைய கணக்குகள்,
விவர அறிக்கைகள் அல்லது பதிவேடுகள் எவையும் சரிபார்க்கப்பட வேண்டிய
முறை;
(௨) 32-ஆம் பிரிவின்படி, பதிவாளரிடம் முண்ணிடப்படட வேண்டிய
அடைமானம் அல்லது பொறுப்புரிமை பற்றிய விவரங்களின் தன்மை;
(ஊ) 16-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி அமர்த்தப்பட்ட
தணிக்கையாளர்கள் மற்றும் உறுப்பினர்களில் மற்றும் 36-ஆம் பிரிவின்படி
விசாரணை நடந்த அதிகாரமளிக்கப்பட்ட ஆட்களின் தகுதிகள்;
(௭) இந்தச் சட்டத்தின்படி கலைப்பாளர்களால் பின்பற்றப்பட வேண்டிய
நடைமுறை;
(ஏ) பதிவாளரால் வைத்துவரப்படும் ஆவணங்களைப் பார்வையிடுதல் மற்றும்
அவற்றின் படிகளைக் கொடுத்தல்;
(ஐ) பதிவாளர் அலுவலகத்தில் உள்ள புத்தகங்கள், தாள்கள், ஆவணங்கள்
ஆகியவற்றின் பாதுகாப்பு: மற்றும் மேற்கொண்டு வைத்துவரத் தேவையில்லாத
புத்தகங்கள், தாள்கள், ஆவணங்கள் ஆகியவற்றை அழித்துவிடுதல்;
(ஒ) 45-ஆம் பிரிவின்படி மேல்முறையீடுகள் எந்தக் காலத்துக்குள்:
முன்னிடப்பட வேண்டுமோ அந்தக் காலம்;
(ஓ) வகுத்துரைக்கப்பட வேண்டியதாயிருக்கிற வகுத்துரைக்கப்படலாகும்
வேறேதேனும் பொருட்பாடு.
57. நீத்தறவுகளும் காப்புரைகளும்.-- (1) 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச்
சட்டம் (மையச் சட்டம் XXI/1860), (இதற்குப் பிறகு இந்தப் பிரிவில் "சொல்லப்பட்ட
சட்டம்" என்று சுட்டப்படுவது) தமிழ்நாடு மாநிலத்திற்கு எந்த அளவு
பொருத்துகிறதோ அந்த அளவுக்கு இதன் மூலம் நீத்தறவு செய்யப்படுகிறது.
(2) அவ்வாறு நீத்தறவு செய்யப்பட்ட போதிலும்,-
() 1954-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று தொடங்கி 1955-
ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதியுடன் முடிவடையும் காலத்தின்போது
எந்தச் சமயத்திலும் 1908-ஆம் ஆண்டு பதிவுச் சட்டம் (மையச் சட்டம்
XVI/1908) 6-ஆம் பிரிவின்படி அமர்த்தப்பட்ட மாவட்டப் பதிவாளர்களால்,
(00 1954-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று தொடங்கி
1955-ஆம் ஆண்டு மே மாதம் 27-தேதியுடன் முடிவடையும்
காலத்தின்போது எந்தச் சமயத்திலும் 1908-ஆம் ஆண்டு பதிவுச் சட்டம்
(மையச் சட்டம் 5017908) 7-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின்படி
பதிவாளர்களின் அலுவலகங்களுடன் எந்தச் சார்பதிவாளர்களின்:
அலுவலகங்கள் இணைக்கப்பட்டனவோ அந்தச் சார்பதிவாளர்களால்,
சொல்லப்பட்ட சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் அனைத்தும்,
செய்யப்பட்ட செயல்கள் அனைத்தும் சொல்லப்பட்ட காலத்தின்போது ()-ஆம்
கூறில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டப் பதிவாளர்களும், 0) ஆம் கூறில்
குறிப்பிடப்பட்டுள்ள சார்பதிவாளர்களும் அத்தகைய சங்கங்களைப் பதிவு செய்யவும்
அத்தகைய செயல்களைச் செய்யவும் அதிகாரம் பெற்றிருந்தாற்போன்று
செல்லத்தக்கதாக இருக்கிறதாகவும், எப்பொழுதும் செல்லத்தக்கதாக இருந்து
வந்ததாகவும், கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் அதற்கிணங்க அவர்களால்
சொல்லப்பட்ட சட்டத்தின்படி செய்யப்பட்ட பதிவு எதுவும் செய்யப்பட்ட செயல்
எதுவும் பதிவு செய்யப்பட்ட அல்லது செயல் செய்யப்பட்ட சமயத்தில் அத்தகைய
செயல்களைச் செய்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் கிடையாது என்ற
காரணத்தினால் மட்டுமே மறுத்துரைக்கப்படுதல் ஆகாது;
ஆனால், 1959-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மற்றும் சென்னை
(எல்லைகளை மாற்றியமைத்தல்) சட்டத்தின் (மையச் சட்டம் 561959)
இரண்டாவது இணைப்புப் பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள நிலப்பரப்புகள்
தொடர்பாக இந்த உட்பிரிவின் (0)-ஆம் கூறானது, "1954-ஆம் ஆண்டு செப்டம்பர்
முதல் தேதி" மற்றும் "1955-ஆம் ஆண்டு மார்ச்சு 241 என்னும்
சொற்றொடர்களுக்குப் பதிலாக, "1954-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி"
மற்றும் 1956-ஆம் ஆண்டு ஆகஸ்டு 22" என்ற சொற்றொடர்களில் முறையே
அமைக்கப்பட்டன போன்று பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.
(3) 1955 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி இலக்கியம், அறிவியல்
மற்றும் அறச்சங்கங்கள் பதிவுச் சட்டம் (திருவிதாங்கூர் கொச்சி சட்டம் 01955)
(இதற்குப் பிறகு இந்தப் பிரிவில் நேரிணையான சட்டம் என்று குறிப்பிடப்படு வது)
உள்ளடங்கலாக, இந்தச் சட்டத்தில் தொடக்கத்திற்கு ஒட்டி முன்பு மாற்றல்
செய்யப்பட்ட நிலப்பரப்பில் நடைமுறையிலுள்ள இந்தச் சட்டத்திற்கு
நேரிணையான சட்டம் எதுவும், அத்தகைய தொடக்கத் தேதியன்று நீத்தறவு
செய்யப்பட்டுவிடும்.
(4) நேரிணையான சட்டத்தின் (3) ஆம் உட்பிரிவினால் செய்யப்படும்
நீத்தறவானது.-
(அ) நேரிணையான சட்டத்தின் முந்திய செயற்பாட்டை அல்லது அதன்படி,
உரியவாறு செய்யப்பட்ட எதையும் அல்லது அதற்கு உட்படுத்தப்பட்ட எதற்கும்;
அல்லது
(ஆ) நேரிணையான சட்டத்தின்படி ஈட்டப்பட்ட உரிமை எதையும்,
வந்தடைந்த சிறப்புரிமை எதையும் மேற்கொண்ட கடப்பாடு அல்லது கடமைப்
பொறுப்பு எதற்கும்; அல்லது
(க) நேரிணையான சட்டத்திற்கு எதிராகச் செய்யப்பட்ட குற்றம் எதையும்
பொறுத்து உள்ளான பணத்தண்டம், தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை
எதற்கும்; அல்லது
(ஈ) மேற்சொன்ன அத்தகைய உரிமை, சிறப்புரிமை, கடப்பாடு, கடமைப்
பொறுப்பு, பணத்தண்டம், தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை எதையும்
பொறுத்த புலன் விசாரணை, சட்டப்படியான நடவடிக்கை அல்லது தீர்வழி எதற்கும்
ஊறு செய்தல் ஆகாது; மற்றும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படாதது போன்றே
அத்தகைய புலன் விசாரணை, சட்டப்படியான நடவடிக்கை அல்லது தீர்வழி எதுவும்
தொடரப்படலாம்; மேல்நடத்தப்படலாம் அல்லது செயற்படுத்தப்படலாம்; மற்றும்.
அத்தகைய பணத்தண்டம், தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை எதுவும்
விதிக்கப்படலாம்.
(5 4-ஆம் பிரிவின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, நேரிணையான
சட்டத்தின்படி செய்யப்பட்ட அமர்த்துகை, ஒப்படைக்கப்பட்ட அதிகாரம்,
பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை, ஆணை, அறிவுறுத்தல்கள் அல்லது பணிப்புரை
எதுவும் அல்லது இயற்றப்பட்ட விதி, ஒழுங்குமுறை விதி, படிவம் அல்லது துணை
விதி எதுவும், அளிக்கப்பட்ட சான்றிதழ், அல்லது செய்யப்பட்ட பதிவு
உள்ளடங்கலாக செய்யப்பட்ட செயல் எதுவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும்,
இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்டதாக அல்லது எடுக்கப்பட்டதாகக்
கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட எதனாலும்.
அல்லது நடவடிக்கை எதனாலும் செய்யப்பட்டிருந்தாலன்றியும், மற்றும் அறவு
செய்யப்படுகிற வரையிலும், அதற்கிணங்க தொடர்த்து நடைமுறையில் இருத்தல்
வேண்டும்.
(6) மாற்றல் செய்யப்பட்ட நிலப்பரப்பிற்கு இந்தச் சட்டம் பொருந்துவதற்கு
வசதி செய்யும் பொருட்டு, நீதிமன்றம் அல்லது அதிகார ஆயம் எதுவும்,
நீதிமன்றத்தின் அல்லது அதிகார ஆயத்தின் முன்னுள்ள பொருட்பாட்டின்
சாரத்திற்கு ஊறு செய்யாமல் பொருந்தச் செய்வதற்குத் தேவைப்படுகிற அல்லது
முறையானதான மாறுதல்களுடன் இந்தச் சட்டத்திற்குப் பொருள் கொள்ளலாம்.
(7) இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்குப் பிறகு மாற்றல் செய்யப்பட்ட
நிலப்பரப்பில் தொடர்ந்து நடைமுறையிலிருக்கும் சட்டம் எதிலும் நேரிணையான
சட்டம் பற்றிய சுட்டுகை எதுவும், அந்த நிலப்பரப்பு பொறுத்தவரையில், இந்தச்
சட்டம் பற்றிய ஒரு சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.
58. விதிகளை வெளியிடுதல்களின் விதி மற்றும் அறிவிக்கைகளின் தொடக்கம்
மற்றும் அவற்றை சட்டமன்றத்தின் முன்பு வைத்தல்.- (1) இந்தச் சட்டத்தின்படி
செய்யப்படும் எல்லா விதிகளும், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல்
வேண்டும்; மற்றும் ஒரு குறிப்பிட்ட நாளன்று அவை நடைமுறைக்கு வருமென்று
இயம்பப்பட்டாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளன்று நடைமுறைக்கு
வரும்.
(2) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட எல்லா அறிவிக்கைகளும் ஒரு
குறிப்பிட்ட நாளன்று அவை நடைமுறைக்கு வருமென்று
தெரிவிக்கப்பட்டாலன்றி, அவை வெளியிடப்பட்ட அந்த நாளன்று நடைமுறைக்கு
வருதல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட ஒவ்வொரு விதியும் பிறப்பிக்கப்பட்ட
ஒவ்வோர் அறிவிக்கையும், அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்பு
கூடிய விரைவில், சட்டமன்றத்தின் இரு அவைகளின் முன்பும் வைக்கப்படுதல்
வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு
முன்பு, அல்லது அடுத்த கூட்டத்தொடரில், அந்த விதி அல்லது அறிவிக்கை
எதிலும் மாறுதல் எதையும் செய்ய இரு அவைகளும் ஒத்துக் கொண்டால் அல்லது
அந்த விதி அல்லது அறிவிக்கை செய்யப்படலாகாது அல்லது பிறப்பிக்கப்படலாகாது
என்பதை ௬ அவைகளும் ஒத்துக் கொண்டால், அதன் அந்த விதி அல்லது
அறிவிக்கை மாற்றி அமைக்கப்பட்ட மட்டுமே நடைமுறைக்கு வருதல் வேண்டும்
அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராதிருத்தல் வேண்டும். எனினும்
அத்தகைய மாறுதல் அல்லது அழித்தறவு எதுவும், அந்த விதியின்படி அல்லது
அந்த அறிவிக்கையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட எதனுடைய
செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.
இணைப்புப் பட்டியல்
[51 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவைக் காண்க]
பதிவாளரிடம் செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களின் அட்டவணை.
ஒரு சங்கத்தைப் பதிவு செய்வதற்கு
இந்தச் வேண்டுறுத்தப்பட்ட
அல்லது முன்னிடப்படுவதற்கு
அதிகாரமளிக்கப்பட்ட அமைப்பு விதிக்குறிப்பு
அல்லாத வேறு ஆவணம் எதையும்
முன்னிடுவதற்கு
ஒரே தொடர்பாகப் பதிவாளரின்
பாதுகாப்பிலுள்ள ஆவணங்களில்
(ஒன்றானாலும் அல்லது அதற்கு மேற்பட்ட
தானாலும்) ஆய்வு ஒவ்வொன்றுக்கும்
பதிவு உறுதிச் சான்று அல்லது பெயர்
மாற்றத்தின்மீது உறுதிச்சான்று
வழங்குவதற்கு
சட்டத்தால்
சங்கம்
பதிவாளரின் பாதுகாப்பிலுள்ள ஆவணம்
ஏதொன்றின் படி அல்லது எடுகுறிப்பு
ஒவ்வொன்றுக்கும்
சங்கத்தைப் பதிவு செய்த ஆண்டு
விண்ணப்பத்தில் கொடுக்கப்படவில்லை
என்றால் 3 முதல் 5 வரையுள்ள இனங்களின்:
குறிப்பிடப்பட்ட ஆவணங்களைத்
தேடுதலுக்கு
44 ஆம் பிரிவின்:
உட்பிரிவின்படியான ஒரு
முறையீட்டீற்கு அல்லது
உட்பிரிவின்படியான ஒரு
விண்ணப்பத்திற்கு அல்லது 45 ஆம்
பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படியான ஒரு
மேல்முறையீட்டீற்கு
(5) ஆம்
மேல்
(6) ஆம்
ஐம்பது ரூபாய்
இரண்டு ரூபாய்
நான்கு ரூபாய்
நான்கு ரூபாய்
படி எடுக்கப்பட
தேவைப்படும் நூறு
சொற்கள் அல்லது
அதன் பினண்னப்பகுதி
ஒவ்வொன்றுக்கும்
எழுபத்தைந்து காசு
மூன்று ரூபாய்
பத்து ரூபாய்
Rules, notifications and orders under this Act
Listed from India Code. Each opens there.