Tamil Nadu · 1969 · Act 21
The Tamil Nadu Relief Undertakings (Special Provisions) Act, 1969
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
தமிழ்நாடு சட்டம் 21,1969.
1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிவாரண தொழில் நிறுவனங்கள் (சிறப்பு
வகைமுறைகள்) சட்டம்.
[1969 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 21 ஆம் நாளன்று குடியரசுத் தலைவரின்
ஏற்பிசைவைப் பெற்றது; முதலில் 1969 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 24 ஆம்
நாளன்று புனித ஜார்ஜ் கோட்டை சிறப்பிதழில் வெளியிடப்பட்டது,
(கார்த்திகை 2,1891)]
வேலையின்மையைத் தடுப்பதற்கான அல்லது அதற்கு எதிராக நிவாரணம்
வழங்குவதற்கான நடவடிக்கைக்கு, இன்றியமையாததாகக் கருதப்படும் தொழில்
நிறுவனங்கள் தொடர்பான தொழில் உறவுகள், நிதிக் கடமைகள் மற்றும் இது போன்ற
பிற பொருட்பாடுகளைப் பொறுத்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சிறப்பு
வகைமுறைகளைச் செய்வதற்கு அரசுக்கு அதிகாரமளிப்பதற்கானதொரு சட்டம்.
இந்திய குடியரசின் இருபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றத்தால்
பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும் தொடக்கம்.- (1) இச்சட்டம், 1969 ஆம்
ஆண்டு தமிழ்நாடு நிவாரண தொழில் நிறுவனங்கள் (சிறப்பு வகைமுறைகள்) சட்டம்
என வழங்கப்பெறும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.
(3) இது, அரசு அறிவிக்கை வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. பொருள் வரையறைகள்.- இந்தச் சட்டத்தில், தறுவாயின் தேவை
வேறானாலன்றி,-
(1) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;
(2) "அரசு நிறுமம்" என்பது, செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் ஐம்பத்தோர்
விழுக்காட்டிற்குக் குறையாமல் அரசால் வைத்திருக்கப்படும் எந்தவொரு நிறுமமும்
என்று பொருள்படும், மேலும் அத்தகைய அரசு நிறுமம் எதனின் துணை நிறுமமும்
இதில் அடங்கும்.
விளக்கம்.- இந்த கூறில், நிறுமம்" என்பது 1956 ஆம் ஆண்டு நிறுமங்கள்
சட்டத்தில் (மையச் சட்டம் 171956) வரையறுக்கப்பட்டுள்ளவாறான நிறுமம் என்று
பொருள்படும்;
(3) "தொழில்" என்பது எந்தவொரு வணிகம், வர்த்தகம், பொறுப்பு நிறுவனம்,
உற்பத்தி செய்தல் அல்லது தொழில்தருநரை அழைத்தல் என்று பொருள்படும்
மற்றும், தொழிலாளர்களின் எந்தவொரு அழைப்பு, சேவை, வேலைவாய்ப்பு,
கைவினைத் தொழில் அல்லது தொழில்துறை பணி அல்லது வாழ்க்கைத் தொழில்
ஆகியவற்றையும் உள்ளடக்கும், மேலும் "தொழில்துறை" என்ற சொல் அதற்கேற்ப
பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்;
(4) "நிவாரண தொழில் நிறுவனம்" என்பது 3 ஆம் பிரிவின்கீழ் ஓர் அறிவிப்பு
நடைமுறையில் உள்ள ஓர் அரசு தொழில் நிறுவனம்" என்று பொருள்படும்;
(5) அரசு தொழில் நிறுவனம்" என்பது-
(a) எந்தவொரு சட்டம் அல்லது ஒப்பந்தத்தின் கழ் தொடங்கப்பட்ட அல்லது
அது அல்லது அதன் மேலாண்மையானது அரசால் அல்லது ஓர் அரசு நிறுமத்தால்
பெறப்பட்டு அல்லது பிறவாறாக கையகப்படுத்தப்பட்டு மற்றும் அரசால் அல்லது ஓர்
அரசு நிறுமத்தால் அல்லது அதன் அதிகார அமைப்பினாலோ அதன்்கீழோ நடத்தப்படும்
அல்லது நடத்த முன்மொழியப்பட்டுள்ள; அல்லது
(௦) ஏதேனும் கடன், முன்பணம் அல்லது மானியம் வழங்கப்பட்டிருந்தால்,
அல்லது எந்தவொரு கடன் தொடர்பாகவும், அரசு அல்லது ஓர் அரசு நிறுமத்தால்
உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள,
ஒரு தொழில் நிறுவனம் என்று பொருள்படும்.
3. நிவாரண தொழில் நிறுவனத்தின் அறிவிப்பு.-- வேலையின்மையைத்
தடுக்கும் அல்லது வேலையின்மைக்கு எதிரான நிவாரணம் வழங்கும்
நடவடிக்கையாக, ஒரு மாநிலத் தொழில் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு
அல்லது மீண்டும் தொடங்குவதற்கு இயலச் செய்யும் நோக்கத்துடன், பொது
நலனுக்காக அவ்வாறு செய்வது அவசியமானது அல்லது உகந்தது என்று அரசு
மனநிறைவடைந்தால், அறிவிக்கை செய்வதன் மூலம், மாநிலத் தொழில்
நிறுவனமானது, அறிவிப்பில் குறிப்பிடப்படக்கூடிய அத்தகைய தேதியில் மற்றும்
அத்தகைய காலத்திற்கு நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு நிவாரண தொழில்
நிறுவனமாக இருக்கும்:
வரம்புரையாக, அவ்வாறு குறித்துரைக்கப்பட்ட காலஅளவானது,
முதற்கட்டமாக, ஓராண்டுக்கு மேற்படுதல் ஆகாது. ஆனால், அவ்வப்போது அத்தகைய
அறிவிக்கை வாயிலாக, எந்த நேரத்திலும் ஓராண்டுக்கு மேற்படாத காலஅளவு
எதற்கும் நீட்டிக்கப்படலாம் எவ்வாறாயினும், இந்தப் பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட
அறிவிக்கை எதுவும், எவ்வகையிலும், மொத்தத்தில் பத்தாண்டுகளுக்கு மேற்பட்டு
நடைமுறையில் இருந்திருத்தல் ஆகாது.
4. குறித்தசில சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் முதலியவை
நிவாரண தொழில் நிறுவனத்திற்குப் பொருந்துதல்.-- 3 ஆம் பிரிவில்
குறித்துரைக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக அவ்வாறு செய்வது அவசியசமானது
அல்லது உகந்தது என்று அரசு மனநிறைவடைந்தால், அறிவிக்கை வாயிலாக,
(a) நிவாரண தொழில் நிறுவனம் எதுவும் தொடர்பாக, இணைப்புப் பட்டியலில்
குறித்துரைக்கப்பட்டுள்ள அனைத்து சட்டங்கள் அல்லது அவற்றுள் எதுவும்
பொருந்துதல் ஆகாது அல்லது அத்தகைய அறிவிக்கையில் மாற்றமைவுகள்,
சேர்த்தல் அல்லது விட்டுவிடுதலின் மூலமாகவோ, அல்லது அத்தகைய
மாற்றமைவுகளுடனோ பொருந்துதல் வேண்டும்;
(b) எந்தவொரு நிவாரணத்திற்கும் ஒரு தரப்பினராக இருக்கக்கூடிய அல்லது
எந்தவொரு நிவாரண தொழில் நிறுவனத்திற்கும் பொருந்தக்கூடிய அனைத்து
அல்லது ஏதேனும் ஒப்பந்தங்கள், சொத்து உத்தரவாதங்கள், உடன்படிக்கைகள்,
தீர்வுகள், தீர்ப்புகள், நிலை ஆணைகள் அல்லது நடைமுறையில் உள்ள பிற
முறையாவணங்களும், நிவாரண தொழில் நிறுவனமாக அறிவிக்கப்பட்ட தேதியன்று
மற்றும் அதிலிருந்து நடைமுறைக்கு வரும் தேதிக்கு உடனடி முன்பு, ஒரு நிவாரண
தொழில் நிறுவனம், செயற்பாட்டில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுதல் வேண்டும்
அல்லது மேற்சொன்ன தேதிக்கு முன்னர் அதன்கீழ் கூடியுள்ள அல்லது அதன்கீழ்
எழுகின்ற உரிமைகள், சிறப்புரிமைகள், கடப்பாடுகள் மற்றும் பொறுப்புகள்
அனைத்தும் அல்லது அவற்றில் எவையும், அத்தகைய மாற்றமைவுகளுடன்
அத்தகைய அறிவிக்கையில் குறித்துரைக்கப்படும் முறையில் தற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்படுதல் வேண்டும் அல்லது நடைமுறைப்படுத்தத்தக்கதாக இருக்கும்,
என்று பணிக்கலாம்.
5. 4 ஆம் பிரிவின் கீழ் அறிவிக்கையின் மேலோங்கும் தண்மை.- 4 ஆம்
பிரிவின்கீழ் ஓர் அறிவிக்கையானது, ஏதேனும் பிற சட்டம், உடன்படிக்கை அல்லது
முறையாவணம் அல்லது நீதிமன்றம், தீர்ப்பாயம், அலுவலர் அல்லது பிற அதிகார
அமைப்பின் எந்தவொரு தீர்ப்புரை அல்லது ஆணையில் அடங்கியுள்ள எதையும்
மேலோங்கும் தன்மையைக் கொண்டிருக்கும்.
6. குறித்தசில தீர்வுகள், உரிமைகளை இடைநிறுத்துதல் அல்லது
மாற்றியமைத்தல் முதலியவை, நடவடிக்கைகளை நிறுத்திவைத்தல், அவற்றை
புதுப்பித்தல் மற்றும் தொடர்தல்.- 4 ஆம் பிரிவின் (௩) கூறில் குறிப்பிடப்பட்டு, அந்தப்
பிரிவின்படியான அறிவிக்கையின் மூலம், இடைநிறுத்தப்பட்ட அல்லது
மாற்றியமைக்கப்பட்ட ஏதேனும் உரிமை, சிறப்புரிமை, கடமை அல்லது பொறுப்பை
நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவொரு தீர்வும், அறிவிக்கையின்
விதிமுறைகளுக்கு இணங்க, இடைநிறுத்தப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும்
மற்றும் அது தொடர்பாக ஏதேனும் நீதிமன்றம், தீர்ப்பாயம், அலுவலர் அல்லது பிற
அதிகார அமைப்பின் முன்பும் நிலுவையில் இருக்கும் அனைத்து நடவடிக்கைகளும்
அதற்கிணங்க நிறுத்தி வைக்கப்பட வேண்டும் அல்லது அத்தகைய மாற்றத்திற்கு
உட்பட்டு தொடரப்பட வேண்டும், இருப்பினும், அறிவிக்கையின் செயல்விளைவு
அற்றுப்போதல் வேண்டும் -
(a) அவ்வாறு இடைநிறுத்தப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட எந்தவொரு
உரிமை, சிறப்புரிமை, கடமை அல்லது பொறுப்பு புதுப்பிக்கப்பட்டு அறிவிக்கை
ஒருபோதும் வெளியிடப்படாதது போல் செயல்படுத்தப்படும்; மற்றும்
(b) அவ்வாறு நிறுத்திவைக்கப்பட்ட எந்த நடவடிக்கையும், அந்த நடவடிக்கை
நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலிருந்து அப்போது நடைமுறையில் இருக்கக்கூடிய
சட்டம் எதனுடைய வகைமுறைகளுக்கும் உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுதல்
வேண்டும்.
7. கால வரையறை.- 4 ஆம் பிரிவின் (௦) கூறில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும்
உரிமை, சிறப்புரிமை, கடமை அல்லது பொறுப்பை நடைமுறைப்படுத்துவதற்கான கால
வரையறையை கணக்கிடுகையில், அது அல்லது அதன் நடைமுறைக்கான தீர்வு
இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதி விலக்கப்படும்.
இணைபப்புப் பாட்டியல்.
[4 ஆம் பிரிவின் (ஐ) கூறைக் காண்க]
1. 1946 ஆம் ஆண்டு தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையாணைகள்)
சட்டம், (மையச் சட்டம் 551946).
2. 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறு சட்டம், (மையச் சட்டம் XIV/1947).
3. 1948 ஆம் ஆண்டு குறைந்தபட்ச கூலிச் சட்டம், (மையச் சட்டம் 071948).
4. 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம்,
(தமிழ்நாடு சட்டம் 35361 7 1947).