Tamil Nadu · 2022 · Act 14

The Tamil Nadu Public Service Commission (Additional Funcitons) Act, 2022

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணைய (கூடுதல்‌ செயற்பணிகள்‌) சட்டம்‌ (குமிழ்நாடு சட்ட எண்‌ 14/2022) (2023அக்டோபர்‌ 31 அன்று இருந்தவாறு) The Tamil Nadu Public Service Commission (Additional Functions) Act, 2022 (Tamil Nadu Act No. 14 of 2022) (as on 31% October, 2023) தமிழாக்கம்‌ : தமிழ்நாடு மாநிலச்‌ சட்ட ஆட்சிமொழி ஆணையம்‌ சென்னை தமிழ்நாடு அரசுக்காகத்‌ தமிழ்நாடு அரசு எழுதுபொருள்‌ அச்சுத்துறை ஆணையரால்‌ அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. 2023 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணைய (கூடுதல்‌ செயற்பணிகள்‌) சட்டம்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌ 14/2022) பிரிவு பொருளடக்கம்‌ 1. குறுந்தலைப்பு மற்றும்‌ தொடக்கம்‌. 2. பொருள்வரையறைகள்‌. 3. ஆள்சேர்ப்புக்கான கோரிக்கை. 4. ஆணையத்தின்‌ மூலம்‌ ஆள்சேர்ப்பு. 5. விண்ணப்பதாரர்களின்‌ பணியமர்த்தம்‌. 6. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌. 7. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. 1 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணைய (கூடுதல்‌ செயற்பணிகள்‌) சட்டம்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌ 14/2022) [தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையின்‌ பின்வரும்‌ சட்டமானது, 2022ஆம்‌ ஆண்டு சனவரி திங்கள்‌ 31ஆம்‌ நாளன்று ஆளுநரின்‌ ஏற்பிசைவைப்‌ பெற்று பொதுத்தகவலுக்காகத்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்பட்டது.) அரசுக்குச்‌ சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள்‌, மாநிலக்‌ கழகங்கள்‌, சட்டப்பூர்வ வாரியங்கள்‌ மற்றும்‌ அதிகாரஅமைப்புகளில்‌ குறித்த சில பதவிகளைப்‌ பொறுத்து, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்திற்குக்‌ கூடுதல்‌ செயற்பணிகளை ஒப்படைவு செய்வதற்கான ஒரு சட்டம்‌. இந்தியக்‌ குடியரசின்‌ எழுபத்தி இரண்டாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்பேரவையால்‌ இயற்றப்பட்ட சட்டம்‌ பிண்வருமாறு:- 1. குறுந்தலைப்பு மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 2022ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணைய (கூடுதல்‌ செயற்பணிகள்‌) சட்டம்‌ என வழங்கப்படும்‌. (2) இது, மாநில அரசு அறிவிக்கையின்‌: வாயிலாகக்‌ குறிக்கக்கூடிய தேதியன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 2. பொருள்வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌, தறுவாய்‌ வேறு பொருள்‌ குறித்தாலன்றி,- (ஐ "ஆணையம்‌" என்பது தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ எனப்‌ பொருள்படும்‌; (b) "அரசு" என்பது மாநில அரசு எனப்‌ பொருள்படும்‌; 2 (9) "அமைப்பு" என்பது அரசின்‌: கட்டுப்பாட்டின்‌. கீழுள்ள அரசுக்குச்‌ சொந்தமான பொதுத்துறை நிறுவனம்‌, அரசுக்‌ கழகங்கள்‌ அல்லது சட்டப்பூர்வ வாறியம்‌ அல்லது அதிகாரஅமைப்பு எனப்‌ பொருள்படும்‌; (0) "வகுத்துரைக்கப்பட்ட என்பது இந்தச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ உருவாக்கப்பட்ட விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்டது எனப்‌ பொருள்படும்‌; (e) "காத்திருப்புப்‌ பட்டியல்‌" என்பது தேர்வு பட்டியலில்‌ பொதுப்பிரிவினர்‌ உள்ளடங்கலாக ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப்‌ பிரிவின்‌ விண்ணப்பதாரர்களின்‌. இருபத்தைந்து விழுக்காட்டிற்கும்‌ குறையாத விண்ணப்பதாரர்களைக்‌ கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு பட்டியல்‌ எனப்‌ பொருள்படும்‌; (1) "மாநிலம்‌" என்பது தமிழ்நாடு மாநிலம்‌ எனப்‌ பொருள்படும்‌. 3. ஆள்சேர்ப்புக்கான கோரிக்கை.- தற்போது நடைமுறையிலுள்ள மாநிலச்‌ சட்டத்தில்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, எந்தவோர்‌ அமைப்பும்‌, அந்த அமைப்பில்‌ பணியமர்த்துவதற்காக, விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பதற்கு வகுத்துரைக்கப்படும்‌ படிவத்தில்‌ ஆணையத்தைக்‌ கோரலாம்‌: வரம்புரை: 2016ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்கள்‌ (பணி நிபந்தனைகள்‌) சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 142016), ஓட்டுநர்‌ பதவி மற்றும்‌ பிரிவு D ஆக வகைப்படுத்தப்பட்ட பதவிகள்‌ தொடர்பாக அத்தகைய கோரிக்கையானது இருத்தல்‌ கூடாது. 4. ஆணையத்தின்‌ மூலம்‌ ஆள்சேர்ப்பு- (1) ஆணையமானது, அவ்வப்போது பிரிவு 3இன்‌ கீழ்ப்‌ பெறப்பட்ட கோரிக்கைகளை ஒருங்கிணைத்து 3 ஓராண்டிற்கு இரண்டுமுறை ஆட்சேர்ப்புகளை நடத்தி, விண்ணப்பத்தாரர்களை தேர்ந்தெடுத்து மற்றும்‌ 2046ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்கள்‌ (பணி நிபந்தனைகள்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 142016), பிரிவு 27இல்‌ குறிப்பிடப்பட்டுள்ள பணி அமர்த்தலுக்கான இடஒதுக்கீட்டுக்‌ கொள்கையைப்‌ பின்பற்றி ஒவ்வொரு பதவிக்கான காத்திருப்புப்‌ பட்டியல்‌ ஒன்றினையும்‌ தேர்வுப்‌ பட்டியல்‌ ஒன்றினையும்‌ தயார்‌ செய்து தொடர்புடைய அமைப்புகளுக்குத்‌ தேர்வுப்‌ பட்டியலை மேலனுப்புதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆணையமானது அமைப்பு எவற்றிலுமிருந்து சிறப்பு சூழ்நிலைகளின்படியான கோரிக்கையின்‌ பேரில்‌ எந்த நேரத்திலும்‌ ஆட்சேர்ப்பு நடத்தலாம்‌. (2) காத்திருப்புப்‌ பட்டியலானது, தேர்வுப்‌ பட்டியலினை மேலே அனுப்பிய நாளிலிருந்து ஓராண்டு காலத்திற்குள்‌ அல்லது அதைத்தொடர்ந்து தேர்வுப்‌ பட்டியல்‌ வரைவு செய்யப்படும்‌ வரை, இவற்றில்‌ எது முந்தையதோ, அதுவரையில்‌ நடைமுறையில்‌ இருத்தல்‌ வேண்டும்‌. 5. விண்ணப்பதாரர்களுக்கான பணியரமர்த்தம்‌.- (1) தேர்வுப்‌ பட்டியலினைப்‌ பெற்றுக்கொண்டதன்‌ பேரில்‌, அமைப்பானது தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குப்‌ பணியமர்த்த ஆணைகளை வழங்குதல்‌ வேண்டும்‌. (2) தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்‌ எவரேனும்‌ பணியமர்த்த ஆணை பெறப்பட்ட நாளிலிருந்து மூன்று மாத காலத்திற்குள்‌, அமைப்பில்‌ பணியில்‌ சேர தவறினால்‌, அவர்‌ பணி அமர்த்தலுக்கான உரிமையை இழத்தல்‌ வேண்டும்‌: 4 வரம்புரை: அமைப்பானது, சிறப்புச்‌ சூழ்நிலைகளில்‌, பணியில்‌ சேர்வதற்கு மூன்று மாதங்களுக்கு மிகாத மேலுமொரு கால அவகாசத்தை வழங்கலாம்‌. (3) கூறப்பட்ட காலத்திற்குள்‌ விண்ணப்பதாரர்‌ பணியில்‌ சேரத்‌ தவறுவதன்‌ பேரில்‌ அமைப்பானது, பணி அமர்த்தத்திற்கான காத்திருப்புப்‌ பட்டியலிலிருந்து ஒரு விண்ணப்பதாரரை அனுப்புமாறு ஆணையத்திடம்‌ கோரலாம்‌. 6. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளை செயற்படுத்துவதில்‌ இடர்ப்பாடு ஏதேனும்‌ எழுமானால்‌, அரசு, தமிழ்நாடு அரசிதழில்‌ ஆணை ஒன்றை வெளியிடுவதன்‌ மூலம்‌ அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத்‌ தேவையானதாகவோ அல்லது உகந்ததாகவோ தனக்குத்‌ தோன்றுகிற, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத, அத்தகைய வகைமுறைகளைச்‌ செய்யலாம்‌: வரம்புரை: அத்தகைய ஆணை எதுவும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌. தொடக்கத்தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள்‌ காலஅளவு ஒன்று முடிவடைந்ததற்குப்‌ பின்னர்‌ செய்யப்படுதல்‌ கூடாது. 7. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- (1) அரசு, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளை நிறைவேற்றுவதற்காக விதிகளைச்‌ செய்யலாம்‌. (2) (வ) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌ அனைத்தும்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்பட வேண்டும்‌ மற்றும்‌ ஒரு குறிப்பிட்ட நாளன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டுமென வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளான்றே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 5 (௦) இந்தச்‌ சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள்‌ அனைத்தும்‌ ஒரு குறிப்பிட்ட நாளன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ என வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளன்றே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (3) இந்தச்‌ சட்டத்திண்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும்‌ அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்பு கூடிய விரைவில்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்படும்‌ கூட்டத்தொடரோ அல்லது அதற்கு அடுத்துவரும்‌ கூட்டத்‌ தொடரோ முடிவடைவதற்கு முன்பு அப்பேரவை அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதிலும்‌ மாறுதல்‌ எதனையும்‌ செய்யுமாயின்‌ அல்லது அப்பேரவை அந்த விதி அல்லது ஆணை செய்யப்படுதல்‌ கூடாது அல்லது பிறப்பிக்கப்படுதல்‌ கூடாது என்று முடிவு செய்யுமாயின்‌ அவ்விதி அல்லது அந்த அறிவிக்கை அல்லது அவ்வாணை அதற்குப்‌ பின்னர்‌ அவ்வாறு மாறுதல்‌ செய்யப்பட்ட வடிவத்தில்‌ மட்டுமே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ அல்லது நிகழ்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல்‌ வேண்டும்‌. எனினும்‌, அத்தகைய மாறுதலோ, நீக்கமோ அந்த விதி, அல்லது அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னர்‌ செய்யப்பட்ட எதனின்‌ செல்லுந்தன்மைக்கும்‌ ஊறின்றி இருத்தல்‌ வேண்டும்‌.

Rules, notifications and orders under this Act

Listed from India Code. Each opens there.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts