Tamil Nadu · 1997 · Act 7

The Tamil Nadu Prohibiton of Ragging Act, 1997

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1997ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேலிவதை செய்தலைத்‌ தடுத்தல்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌ 7/1997) (2023, அக்டோபர்‌ 31 அன்று இருந்தவாறு) The Tamil Nadu Prohibition of Ragging Act, 1997 (Tamil Nadu Act No.7 of 1997) (as on 31% October, 2023) தமிழாக்கம்‌ : தமிழ்நாடு மாநிலச்‌ சட்ட ஆட்சிமொழி ஆணையம்‌ சென்னை தமிழ்நாடு அரசுக்காகத்‌ தமிழ்நாடு அரசு எழுதுபொருள்‌ அச்சுத்துறை ஆணையரால்‌ அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. 2023 1997ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேலிவதை செய்தலைத்‌ தடுத்தல்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌ 71997) பிரிவு பொருளடக்கம்‌ 1. குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும்‌ தொடக்கம்‌. 2. பொருள்வரையறைகள்‌. கேலிவதை செய்தலைத்‌ தடுத்தல்‌. கேலிவதை செய்வதற்குத்‌ தண்டனை. 5. மாணவரைக்‌ கல்வி நிறுவனத்திலிருந்து நீக்குதல்‌. 6. மாணவரைக்‌ கல்வி நிறுவனத்திலிருந்து தற்காலிகமாக நீக்கி வைத்தல்‌. 7. உடந்தையெனக்‌ கருதப்படுதல்‌. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. நீக்கமும்‌ காப்பும்‌. 1 1997ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேலிவதை செய்தலைத்‌ தடுத்தல்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌ 71997) [தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையின்‌ பின்வரும்‌ சட்டமானது, 1997ஆம்‌ ஆண்டு பிப்ரவறி திங்கள்‌ 14ஆம்‌ நாளன்று ஆளுநரின்‌ ஏற்பிசைவைப்‌ பெற்று பொதுத்‌ தகவலுக்காகத்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்பட்டது] தமிழ்நாடு மாநிலத்தில்‌ உள்ள கல்வி நிறுவனங்களில்‌ கேலிவதை செய்தலைத்‌ தடுப்பதற்கான ஒரு சட்டம்‌. இந்தியக்‌ குடியரசின்‌ நாற்பத்து எட்டாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையால்‌ இயற்றப்பட்ட சட்டம்‌ பின்வருமாறு: - 1. குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 1997ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேலிவதை செய்தலைத்‌ தடுத்தல்‌ சட்டம்‌ என வழங்கப்படும்‌. 2 இது, தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதையும்‌ பரவி நிற்கும்‌. (3) இது, 1996 ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ திங்கள்‌ 19ஆம்‌ நாளன்றே நடைமுறைக்கு வந்ததாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 2. பொருள்வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌ தறுவாய்‌ வேறுபொருள்‌ குறித்தாலன்றி, "கேலிவதை செய்தல்‌" என்பது, கல்வி நிலையம்‌ எதிலும்‌ உள்ள மாணவர்‌ ஒருவருக்கு எதிராக இரைச்சலுடன்‌ கூடிய, ஒழுங்குமுறையற்ற நடத்தையை வெளிப்படுத்துவது என்றும்‌, அவருக்கு உடல்‌ அளவில்‌ அல்லது மன அளவிலான கேட்டினை அல்லது அவருக்குப்‌ பீதியை 2 அல்லது பயத்தினை அல்லது அவமானத்தினை அல்லது மனக்குழப்பத்தினை உண்டாக்குவது அல்லது பெரும்பாலும்‌ உண்டாக்குவது என பொருள்படும்‌; மற்றும்‌ அது,- (@) அத்தகைய மாணவரை சிறுகுறும்பு செய்து வெறுப்பூட்டுவதை, அவரிடம்‌ தகாத சொற்களைப்‌ பயன்படுத்துதை, அவரிடம்‌ செயற்குறும்பு செய்து விளையாடுவதை, அல்லது அவருக்குக்‌ காயத்தை உண்டாக்குவதை; அல்லது (b) புதிய மாணவரை, செயல்‌ எதனையும்‌ செய்யுமாறு அல்லது சாதாரண நிலையில்‌ அத்தகைய மாணவர்‌ விரும்பிச்‌ செய்யாத செயல்‌ எதையும்‌ செய்யுமாறுக்‌ கேட்பதை, உள்ளடக்கும்‌. 3. கேலிவதை செய்தலைத்‌ தடுத்தல்‌.- கல்வி நிறுவனம்‌ எதற்குள்ளுமோ அல்லது வெளியேயோ "கேலிவதை செய்தல்‌" தடை செய்யப்படுகிறது. 4. கேலிவதை செய்வதற்குத்‌ தண்டனை. கல்வி நிறுவனம்‌ எதற்குள்ளுமோ அல்லது வெளியேயோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கேலிவதை செய்கின்ற, அதில்‌ பங்குகொள்கின்ற, அதற்கு உடந்தையாக இருக்கின்ற அல்லது அதனைப்‌ பரப்புகின்ற நபர்‌ எவரும்‌ , இரண்டு ஆண்டு வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலஅளவிற்குச்‌ சிறைத்தண்டனை விதித்துத்‌ தண்டிக்கப்படுதல்‌ வேண்டும்‌ என்பதோடு அவர்‌ ரூபாய்‌ பத்தாயிரம்‌ வரை நீட்டிக்கப்படக்கூடிய பணத்தண்டத்திற்கும்‌ உள்ளாக்கப்படுதல்‌ வேண்டும்‌. 3 5. மாணவரைக்‌ கல்வி நிறுவனத்திலிருந்து நீக்குதல்‌.- பிரிவு 4இன்படியான குற்றச்செயலைச்‌ செய்துள்ளதாகத்‌ தண்டனைத்‌ தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மாணவர்‌ எவரும்‌, கல்வி நிறுவனத்திலிருந்து நீக்கப்படுதலும்‌ வேண்டும்‌; மற்றும்‌ அத்தகைய மாணவர்‌ கல்வி நிறுவனம்‌ எதிலும்‌ சேர்த்துக்‌ கொள்ளப்படுதல்‌ கூடாது. 6. மாணவரைக்‌ கல்வி நிறுவனத்திலிருந்து தற்காலிகமாக நீக்குதல்‌.- (1) முன்சொன்ன வகைமுறைகளுக்கு ஊறின்றி, கல்வி நிறுவனம்‌ ஒன்றின்‌ தலைவரிடமோ அல்லது அக்கல்வி நிலையத்தின்‌: மேலாண்மையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள நபர்‌ எவரிடமோ, மாணவர்‌ எவரும்‌ கேலிவதை செய்வது குறித்து முறையீடு செய்கிறபோதெல்லாம்‌, அத்தகைய கல்வி நிறுவனத்தின்‌ தலைவரானவர்‌ அல்லது அக்கல்வி நிறுவனத்தின்‌: மேலாண்மையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள நபரானவர்‌, அது குறித்து உடனடியாக விசாரணை செய்தல்‌ வேண்டும்‌ என்பதோடு அது, உண்மையானதென அறியப்படுமாயின்‌ அக்குற்றச்செயலைச்‌ செய்துள்ள மாணவரை அக்கல்வி நிறுவனத்திலிருந்து தற்காலிகமாக நீக்கிவைத்தலும்‌ வேண்டும்‌. (2) உட்பிரிவு (1) இன்படி மாணவர்‌ எவரும்‌ கேலிவதை உசய்வதில்‌ ஈடுபட்டுள்ளார்‌ என்னும்‌ நிலையில்‌, கல்வி நிறுவனத்‌ தலைவரின்‌ அல்லது கல்வி நிறுவனத்தின்‌. மேலாண்மையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள நபர்‌ ஒருவரின்‌ முடிவானது இறுதியானதாகும்‌. 7. உடந்தையெனக்‌ கருதப்படுதல்‌.-- கேலிவதை செய்தல்‌ குறித்த முறையீடு ஒன்று செய்யப்படுகிற போது, 4 கல்வி நிறுவனத்தின்‌ தலைவரானவர்‌ அல்லது அக்கல்வி நிறுவனத்தின்‌. மேலாண்மையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள நபரானவர்‌, பிரிவு 6இன்‌ உட்பிரிவு (1)இல்‌ குறித்துரைக்கப்பட்ட முறையில்‌ நடவடிக்கை எடுப்பதற்கு தவறுவாராணனால்‌ அல்லது அது குறித்து அசட்டையாக இருப்பாரானால்‌, "கேலிவதை செய்தல்‌" எனும்‌ குற்றச்செயலைச்‌ செய்வதற்கு அத்தகைய நபரானவர்‌ உடந்தையாக இருந்தாரெனக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவர்‌ பிரிவு 4இல்‌ வகை செய்யப்பட்டுள்ளவாறு தண்டிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 8. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- (1) மாநில அரசானது, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்கள்‌ அனைத்தையும்‌ அல்லது அவற்றுள்‌ எதனையும்‌ நிறைவேற்றுவதற்காக விதிகளைச்‌ செய்யலாம்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்படிச்‌ செய்யப்பட்ட விதிகள்‌ அனைத்தும்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவை ஒரு குறிப்பிட்ட நாளில்‌ நடைமுறைக்கு வரும்‌ என வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்படும்‌ நாளிலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்படிச்‌ செய்யப்பட்ட விதி ஒவ்வொன்றும்‌, அது செய்யப்பட்ட பின்பு, கூடிய விரைவில்‌, சட்டமன்றப்‌ பேரவையில்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌, அது அவ்வாறு வைக்கப்படும்‌ கூட்டத்தொடரோ அல்லது அடுத்துவரும்‌. கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்பு, அப்பேரவை, அந்த விதியில்‌ மாற்றம்‌ எதனையும்‌ செய்யுமாயின்‌ அல்லது அப்பேரவை, அந்த விதி செய்யப்படக்கூடாது என்று முடிவு செய்யுமாயின்‌, அவ்விதி, அவ்வாறு மாற்றம்‌ செய்யப்பட்ட வடிவத்தில்‌ மட்டுமே நடைமுறைக்கு வரும்‌ அல்லது நிகழ்விற்கேற்ப நடைமுறைக்கு வராமலே போகும்‌, 5 எனினும்‌, அத்தகைய மாற்றம்‌ அல்லது நீக்கம்‌ அந்த விதியின்படி முன்னதாகச்‌ செய்யப்பட்ட எதனின்‌ செல்லும்‌ தன்மைக்கு ஊறின்றியும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. 9. நீக்கமும்‌ காப்பும்‌- (1) 1996ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேலிவதை செய்தலைத்‌ தடுத்தல்‌ அவசரச்‌ சட்டமானது (தமிழ்நாடு அவசரச்சட்டம்‌ 10/1996), இதன்‌ மூலம்‌ நீக்கம்‌ செய்யப்படுகிறது. (2) அவ்வாறு நீக்கம்‌ செய்யப்பட்டு இருக்கின்றபோதிலும்‌, மேற்சொன்ன அவசரச்‌ சட்டத்தினால்‌ திருத்தப்பட்ட முதன்மைச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட செயல்‌ எதுவும்‌ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தினால்‌ திருத்தப்பட்ட முதன்மைச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்டுள்ளதாகவோ அல்லது எடுக்கப்பட்டுள்ளதாகவோ கருதப்படுதல்‌ வேண்டும்‌.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts