Tamil Nadu · 2003 · Act 38

The Tamil Nadu Prohibition of Charging Exorbitant Interest Act, 2003

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

2003 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மிகை வட்டி வசூலித்தல்‌ தடைச்‌ சட்டம்‌. சட்ட எண்‌. 38/2003 பொருளடக்கம்‌. 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌. 3. மிகை வட்டி வசூலித்தலைத்‌ தடை செய்தல்‌. 4. தண்டம்‌. 5. நீதிமன்றத்தில்‌ பணத்தை வைப்பீடு செய்தல்‌ மற்றும்‌ மனுவை முன்னிலைப்படுத்துதல்‌ மற்றும்‌ அதற்கான நடைமுறை. 6. சொத்தை மீண்டும்‌ கையுடைமையாக்குதல்‌. 7. தன்னிச்சையாக வெளிப்படுத்தல்‌. 8. வட்டியை சரிசெய்தல்‌. 9. தற்கொலைக்குத்‌ தூண்டுதல்‌. 140. நீதிமன்றக்‌ கட்டணங்கள்‌. 11. பிற சட்டங்களைத்‌ திறக்குறைவு செய்யும்‌ வகையில்‌ சட்டம்‌ இருத்தல்‌ கூடாது. 12. தமிழ்நாடு பணக்கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்‌ பொருந்துகை. 13. நீக்கறவும்‌ காப்புரையும்‌. 2003 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மிகை வட்டி வசூலித்தல்‌ தடைச்‌ சட்டம்‌. சட்ட எண்‌. 38/2003 எந்தவொரு நபரும்‌, மிகை வட்டி வஞுலிப்பதையும்‌, அதனுடன்‌ தொடர்புடைய பொருட்பாடுகளையும்‌ தடை செய்வதற்கானதொரு சட்டம்‌. இந்தியக்‌ குடியரசின்‌ ஐம்பத்து நாண்காம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றத்தால்‌ பின்வருமாறு சட்டம்‌ இயற்றப்படுவதாகுக:- 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 2003 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மிகை வட்டி வசூலித்தல்‌ தடைச்‌ சட்டம்‌ என்று வழங்கப்பெறும்‌. (2) இது, தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதும்‌ அளாவி நிற்கும்‌. (3) இது, 2003 ஆம்‌ ஆண்டு ஜூன்‌ மாதம்‌ 9 ஆம்‌ தேதி அன்று நடைமுறைக்கு வந்ததாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌, தறுவாய்‌ வேறுபொருள்‌ குறித்தாலன்றி.- (1) "தினைரி வட்டி" என்பது, பணக்‌ கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டத்தின்‌ 7 ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ அரசால்‌ நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமான வட்டி விகிதத்திற்கு இட்டுச்‌ செல்லும்‌ தினசரி வட்டி என்று பொருள்படும்‌; (2) "கடனாளி" என்பது, அதிகப்படியான வட்டிக்குக்‌ கடன்‌ பெறும்‌ நபர்‌ ஒருவர்‌ என்று பொருள்படும்‌; (3) "மிகை வட்டி" என்பது, தினசரி வட்டி, மணி நேர வட்டி, கந்து வட்டி, மீட்டர்‌ வட்டி மற்றும்‌ தண்டல்‌ ஆகியவற்றை உள்ளடக்கியது; (4) "மணி நேர வட்டி" என்பது, பணக்‌ கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டத்தின்‌ 7 ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ அரசால்‌ நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமான வட்டி விகிதத்திற்கு இட்டுச்‌ செல்லும்‌ மணி நேரத்தின்‌ அடிப்படையிலான வட்டி என்று பொருள்படும்‌; (5) "கந்து வட்டி" என்பது, பணக்‌ கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டத்தின்‌ 7 ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ அரசால்‌ நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமான வட்டி விகிதத்திற்கு இட்டுச்‌ செல்லும்‌ வட்டி என்று பொருள்படும்‌; (6) "கடன்‌" என்பது, தினசரி வட்டி, மணி வட்டி, கந்து வட்டி, மீட்டர்‌ வட்டி அல்லது தண்டல்‌ ஆகியவற்றுக்கான முன்பணம்‌ என்று பொருள்படும்‌. (7) "மீட்டர்‌ வட்டி" என்பது, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்‌ செலுத்தப்படாத கடன்‌ தொகைக்கு ஒவ்வொரு நாளும்‌, பணக்‌ கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டத்தின்‌ 7 ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ அரசால்‌ நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமான வட்டி விகிதத்திற்கு இட்டுச்‌ செல்லும்‌ வட்டி என்று பொருள்படும்‌; (8) "பணக்‌ கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டம்‌" என்பது, 1957 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பணக்‌ கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டம்‌ என்று பொருள்படும்‌; (9) "தண்டல்‌" என்பது, பணக்‌ கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டத்தின்‌ 7 ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ அரசால்‌ நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமான வட்டி விகிதத்திற்கு இட்டுச்‌ செல்லும்‌, கடன்‌ தொகையின்‌ பகுதியுடன்‌ சேர்த்து தினமும்‌ வசூலிக்கப்பட வேண்டிய வட்டி என்று பொருள்படும்‌; (10) இந்தச்‌ சட்டத்தில்‌ பயன்படுத்தப்படும்‌, ஆனால்‌ பொருள்‌ வரையறை செய்யப்படாத சொற்கள்‌ மற்றும்‌ சொற்றொடர்கள்‌, பணக்‌ கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டத்தில்‌ அவற்றிற்கு ஒதுக்கப்பட்டுள்ள அதே பொருளைக்‌ கொண்டிருக்கும்‌. 3. மிகை வட்டி வசூலித்தலைத்‌ தடை செய்தல்‌.- எந்தவொரு நபரும்‌ தான்‌ வழங்கும்‌ எந்தவொரு கடனுக்கும்‌ மிகை வட்டியை வசூலித்தல்‌ கூடாது. 4. தண்டம்‌. பணக்‌ கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டத்தில்‌ அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும்‌, 3 ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளை மீறுகின்ற அல்லது எந்தவொரு கடனையும்‌ வளுலிப்பதற்காக எந்தவொரு கடனாளியையும்‌ துன்புறுத்துகின்ற அல்லது அவ்வாறு துன்புறுத்துபவருக்கு உடந்தையாக இருக்கின்ற எவரொருவரும்‌, மூன்று ஆண்டுகள்‌ வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலஅளவிற்கான சிறைத்தண்டனையுடன்‌ முப்பதாயிரம்‌ ரூபாய்‌ வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதமும்‌ விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுத்தல்‌ வேண்டும்‌. 5. நீதிமன்றத்தில்‌ பணத்தை வைப்பிடு செய்தல்‌ மற்றும்‌ மனுவை முன்னிலைப்படுத்துதல்‌ மற்றும்‌ அதற்கான நடைமுறை.- (1) கடனாளி ஒருவர்‌ எந்தவொரு நபரிடமிருந்தும்‌ தான்‌ பெற்ற கடன்‌ தொடர்பாக செலுத்த வேண்டிய பணத்தை , பணக்‌ கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டத்தின்‌ 7 ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ அரசால்‌ நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில்‌ வட்டியுடன்‌ சேர்த்து, பெற்ற கடனுக்கான நீதிமன்ற அதிகார வரம்பைக்‌ கொண்ட நீதிமன்றத்தில்‌ வைப்பீடு செய்யலாம்‌, மேலும்‌ வைப்பீடு செய்யப்பட்ட தொகை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, நேர்விற்கேற்ப, வட்டியுடன்‌ சேர்த்து உள்ளது என்பதைப்‌ பதிவுசெய்வதற்காக ஒரு மனுவுடன்‌ நீதிமன்றத்தில்‌ முணன்னிலைப்படுத்துவைத்தன்‌ மூலம்‌ அக்கடனைத்‌ தீர்க்கலாம்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவின்‌ கீழ்‌ மனு ஒன்றைப்‌ பெற்றவுடன்‌, நீதிமன்றம்‌ மனுவின்‌ நகலை மனுவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கு அனுப்பி, நீதிமன்றத்தால்‌ வழங்கப்படக்கூடிய பதினைந்து நாட்கள்‌ காலஅளவிற்குள்‌ வழக்கில்‌ தனது தரப்பு விளக்கத்தை அளிக்குமாறு அவருக்குக்‌ கட்டளையிடும்‌. நீதிமன்றம்‌, உரிய விசாரணைக்குப்‌ பிறகும்‌, தரப்பினர்களின்‌ விளக்கங்களைப்‌ பரிசீலனை செய்த பிறகும்‌, கடன்‌ மற்றும்‌ அதற்கான வட்டியை, நேர்விற்கேற்ப . முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தீர்ப்பதைப்‌ பதிவு செய்வதற்கான ஆணைகளைப்‌ பிறப்பிக்கலாம்‌. 6. சொத்தை மீண்டும்‌ கையுடைமையாக்குதல்‌.-- கடனாளியால்‌ மனு ஒன்று தாக்கல்‌ செய்யப்பட்டதன்‌ பேரில்‌, கடன்‌ அல்லது அதன்‌ வட்டியைத்‌ திருப்பிச்‌ செலுத்துவதற்காக நபர்‌ எவராலும்‌ வலுக்கட்டாயமாக எடுத்துக்‌ கொள்ளப்பட்ட அசையும்‌ அல்லது அசையா சொத்தை மீண்டும்‌ கையுடைமையாக்குவதற்கு நீதிமன்றம்‌ ஆணையிடலாம்‌. 7. தன்னிச்சையாக வெளிப்படுத்தல்‌-- மிகை வட்டியை வளுலிக்கும்‌ எந்தவொரு நபரும்‌, 2003 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மிகை வட்டி வசூலித்தலைத்‌ தடை செய்யும்‌ அவசரச்‌ சட்டமானது, (தமிழ்நாடு அவசரச்‌ சட்ட எண்‌.2/2003) தமிம்நாடு அரசிகழில்‌ வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள்‌, அவர்‌ வழங்கிய கடனுக்கு பணக்‌ கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டத்தின்‌ 7 ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ அரசால்‌ நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தை மட்டுமே வசூலிக்கும்‌ தனது நோக்கத்தை வெளிப்படுத்தும்‌ ஒரு மனுவை நீதிமன்றத்தில்‌ தாக்கல்‌ செய்யலாம்‌. மேலும்‌, அத்தகைய வெளிப்படுத்தலின்‌ பேரில்‌, அத்தகைய கடன்‌ தொடர்பான வட்டி, பணக்‌ கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டத்தின்‌ 7 ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ அரசால்‌ நிர்ணயிக்கப்பட்டவாறு இருக்கும்‌, மேலும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ கீழான குற்றச்செயல்களுக்காக அத்தகைய கடன்‌ தொடர்பாக எந்தவொரு குற்ற வழக்கும்‌ தொடரப்படாது. 8. வட்டியை சரிசெய்தல்‌.- கடனாளியால்‌ அதற்கான வட்டி உட்பட கடனைத்‌ தீர்க்கக்‌ கோரி தாக்கல்‌ செய்யப்பட்ட மனுவின்‌ பேரில்‌, பணக்‌ கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டத்தின்‌ 7 ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ அரசால்‌ நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தை விட அதிகமான வட்டி விகிதத்தில்‌, வட்டி ஏதேனும்‌ செலுத்தப்பட்டிருப்பின்‌, கடனுக்கான வட்டியை சரிசெய்ய நீதிமன்றம்‌ ஆணை ஒன்றைப்‌ பிறப்பிக்கலாம்‌, 9. தற்கொலைக்குத்‌ தூண்டுதல்‌.-- கடனாளி ஒருவர்‌ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்‌ எவரேனும்‌ தற்கொலை செய்துகொள்ளுமிடத்து, அத்தகைய தற்கொலைக்கு உடனடி முன்பு, கடனாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்‌ எவரேனும்‌ ஒருவரால்‌ துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தால்‌, கடன்‌ கொடுத்த நபர்‌, அதற்கு மாறாக மெய்ப்பிக்கவில்லையெனில்‌, அத்தகைய தற்கொலையை செய்துகொள்ள அவரைத்‌ தூண்டியதாக கடன்‌ கொடுத்த நபர்‌ கருதப்படுவார்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கத்திற்காக, "குடும்ப உறுப்பினர்‌" என்பது, வாழ்க்கைத்‌ துணை, திருமணமாகாத மகள்‌ அல்லது திருமணமாகாத மகன்‌ என்று பொருள்படும்‌. 10. நீதிமன்றக்‌ கட்டணங்கள்‌. அப்போதைக்கு நடைமுறையில்‌ உள்ள பிற சட்டம்‌ எதிலும்‌ அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ ஒரு மனுவைப்‌ பொறுத்தவரை செலுத்த வேண்டிய நீதிமன்றக்‌ கட்டணம்‌ நூறு ரூபாயாக இருத்தல்‌ வேண்டும்‌. 11. பிற சட்டங்களைத்‌ திறக்குறைவு செய்யும்‌ வகையில்‌ சட்டம்‌ இருத்தல்‌ கூடாது.- இந்தச்‌ சட்டத்தின்‌ கீழான குற்றச்செயல்களைப்‌ பொறுத்தவரை, பணக்‌ கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டத்தின்‌ 12 ஆம்‌ பிரிவின்‌ வகை முறைகள்‌ பொருந்துதல்‌ ஆகாது. இந்தச்‌ சட்டத்தின்‌ வகை முறைகள்‌ அப்போதைக்கு நடைமுறையில்‌ உள்ள பிற சட்டம்‌ எதனின்‌ வகை முறைகளையும்‌ திறக்குறைவு செய்யும்‌ வகையில்‌ இல்லாமல்‌ கூடுதலாக இருத்தல்‌ வேண்டும்‌. 12. தமிழ்நாடு பணக்‌ கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்‌ பொருந்துகை. - இந்தச்‌ சட்டத்தின்‌ வகை முறைகளுக்கு உட்பட்டு, பணக்கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளானது, பணக்கடன்‌ வழங்குபவர்களுக்கு எந்த அளவிற்குப்‌ பொருந்துமோ அந்த அளவிற்கு, இந்தச்‌ சட்டத்தின்‌ 3 ஆம்‌ பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள ஒரு நபருக்கு தேவையான மாற்றங்களுடன்‌ பொருந்தும்‌. விளக்கம்‌.- ஒரு நபரின்‌ செயலானது, இந்தச்‌ சட்டத்தின்‌ கீழும்‌ பணக்கடன்‌ வழங்குபவர்கள்‌ சட்டத்தின்‌ கீழும்‌ குற்றச்செயல்களை உருவாக்குமிடத்து, அவர்‌ மீது இந்தச்‌ சட்டத்தின்‌ கீழும்‌ குற்ற வழக்குத்‌ தொடரப்படும்‌. 13. நீக்கறவும்‌ காப்புரையும்‌.- (1) 2003 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மிகை வட்டி வசூலித்தல்‌ தடைச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு அவசரச்‌ சட்டம்‌ 272003) ஈங்கிதனால்‌ நீக்கறவு செய்யப்படுகிறது. (2) அவ்வாறு நீக்கறவு இருந்த போதிலும்‌, 2003 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மிகை வட்டி வசூலித்தல்‌ தடைச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு அவசரச்‌ சட்டம்‌ 272003) கீழ்‌ செய்யப்பட்ட எதுவும்‌ அல்லது எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ செய்யப்பட்டதாக அல்லது எடுக்கப்பட்டதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts