Tamil Nadu · 1961 · Act 55

THE TAMIL NADU PRIVATE FORESTS (ASSUMPTION OF MANAGEMENT) ACT (LV OF 1961)

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1961 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தனியார்‌ காடுகள்‌ (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்‌) சட்டம்‌. சட்ட எண்‌.0/719641 பொருளடக்கம்‌. 1. குறுந்தலைப்பு, பொருந்துகை மற்றும்‌ தொடக்கம்‌. 2. பொருள்‌ வரையறை. 3. தனியார்‌ காட்டின்‌ மேலாண்மையை எடுத்துக்‌ கொள்ளுதல்‌. 4. அரசால்‌ மேலாண்மையை எடுத்துக்‌ கொள்ளுவதால்‌ குறித்தசில விளைவுகள்‌. 5. அரசின்‌ அதிகாரம்‌. 6. தனியார்‌ காடுகளை மேலாண்மையிலிருந்து விடுவித்தல்‌. 7. கைவசத்தில்‌ உள்ள காலத்திற்கான இழப்பீடு. 8. மேம்பாட்டிற்கான மதிப்பினை அரசால்‌ மேலாண்மையிலிருந்து விடுவிக்கப்பட்டதன்‌ பேரில்‌ அரசுக்கு செலுத்துதல்‌. 9. மேல்முறையீடு. 10. தண்டத்தொகைகள்‌. 11. நில வருவாய்‌ நிலுவைத்‌ தொகையாக வசூலிக்கப்பட வேண்டிய தொகைகள்‌. 12. விசாரணைகளின்‌ நடைமுறை மற்றும்‌ அதிகாரங்கள்‌. 13. தனியார்‌ காட்டில்‌ நுழைவதற்கு அதிகாரம்‌. 14. தகவல்‌ பெறுவதற்கு அதிகாரம்‌. 15. நில வருவாய்‌, தீர்வைகள்‌ மற்றும்‌ மேல்வரிகளுக்கான கடப்பாடுகள்‌ தொடர்ந்திருத்தல்‌. 16. பிறச்‌ சட்டங்களின்‌ செயல்பாடுகள்‌ பாதிக்காது. 17. நல்லெண்ணத்தில்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பு. 18. உரிமையியல்‌ நீதிமன்றங்களின்‌ அதிகாரவரம்புக்குத்‌ தடை. 19. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. 20. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌. 1961 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தனியார்‌ காடுகள்‌ (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்‌) சட்டம்‌. சட்ட எண்‌.0/719641 தமிழ்நாடு மாநிலத்தில்‌ குறித்தசில பரப்பிடத்தில்‌ உள்ள தனியார்‌ காடுகளின்‌ மேலாண்மையை எடுத்துக்கொள்வதற்காக சட்டத்தில்‌ வகைசெய்துள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில்‌ குறித்தசில பரப்பிடத்தில்‌ உள்ள தனியார்‌ காடுகளின்‌ மேலாண்மையைப்‌, பொது நலனிற்கு அல்லது அத்தகைய காட்டிற்கு உரிய மேலாண்மையைப்‌ பெறுவதன்‌ பொருட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அரசால்‌ எடுத்துக்‌ கொள்ளப்படுவதற்கு வகைசெய்வது உகந்தது என்பதாலும்‌; இந்திய குடியரசின்‌ இருபதாமாண்டு பின்வருமாறு இங்கு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. குறுந்தலைப்பு, பொருந்துகை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 1961 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தனியார்‌ காடுகள்‌ (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்‌) சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. (2) நீலகிரி மாவட்டத்தின்‌ கூடலூர்‌ மற்றும்‌ உதகமண்டல வட்டத்தில்‌ அமைந்துள்ள தனியார்‌ காடுகளுக்கு இவை பொருந்தும்‌. (3) அரசால்‌ அறிவிக்கையில்‌ குறித்திடலாகும்‌ அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 2. பொருள்‌ வரையறை.- இந்தச்‌ சட்டத்தில்‌, தறுவாயின்‌ தேவை வேறானாலன்றி.,- (1) "ஆட்சியர்‌" என்பது நீலகிரி மாவட்டத்தின்‌ ஆட்சியர்‌ என்று பொருள்படும்‌; (2) "காடு" என்பது தரிசு அல்லது விளைநிலத்தில்‌ அடங்கியுள்ள மரங்கள்‌ மற்றும்‌ புதர்‌ செடி, மேய்ச்சல்‌ நிலம்‌ மற்றும்‌ அரசு இதன்‌ சார்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கையின்‌ மூலம்‌ காடு என விளம்புகை செய்யப்பட்ட ஏதேனும்‌ பிற நிலத்தின்‌ வகை ஆகியவற்றை உள்ளடக்கும்‌; வரம்புரையாக: உரிமையியல்‌ வழக்கு அல்லது தீர்ப்பாணையை நிறைவேற்றுவதற்கான விண்ணப்பம்‌ எதனின்‌ வரம்பு காலத்தைக்‌ கணக்கிடுகையில்‌, அத்தகைய நடவடிக்கை, பற்றுகைக்கான உறுத்து கட்டளை, ஆணை அல்லது கோருரிமை எதையும்‌ செயல்படுத்துவதில்‌ இந்த உட்பிரிவின்கீழ்‌ தடைசெய்யப்பட்ட காலத்தினை நீக்குதல்‌ வேண்டும்‌. (3) அரசு, தனியார்‌ காட்டின்‌ மேலாண்மையிலிருந்து கிடைக்கும்‌ (காட்டு விளைபொருளிலிருந்து கிடைக்கின்ற வருமானம்‌ உட்பட) இலாபம்‌ மற்றும்‌ வாடகைகள்‌ அனைத்தையும்‌ பெறுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ தனியார்‌ காடு மேலாண்மையின்‌ முழுச்‌ செலவுத்கொகையையும்‌ வழங்குதல்‌ வேண்டும்‌. விளக்கம்‌: ஒரு காடு, அதன்‌ ஒரு பகுதியில்‌ ஆட்சியரின்‌ அனுமதியுடன்‌ அல்லது அனுமதியின்றி மரங்கள்‌ அல்லது புதர்கள்‌ வெட்டப்பட்டுள்ளது அல்லது நிலத்தில்‌ பயிரிடப்பட்டுள்ளது அல்லது பாறைகள்‌, சாலைகள்‌, குளங்கள்‌, ஆறுகள்‌ அல்லது அதுபோன்றவை இருக்கின்றது என்ற காரணத்தினால்‌ மட்டும்‌ அற்றுப்போகாது. (4) "காடு விளைபொருள்‌" என்பது, 1882 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வனச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ V/1882) 2 ஆம்‌ பிரிவில்‌ குறித்தளிக்கப்பட்ட அதே பொருளைக்‌ கொண்டிருக்கும்‌ ; (5) "அரசு" என்பது மாநில அரசு என பொருள்படும்‌. (6)_ காடுகளுடன்‌ தொடர்புடையவற்றில்‌ "உரிமையாளர்‌" என்பது, அடைமானம்‌ பெற்றவர்‌, குத்தகைதாரர்‌ அல்லது காட்டினை உடைமையில்‌ அல்லது அனுபவத்தில்‌ வைத்திருக்க உரிமை கொண்டுள்ள பிற நபரையும்‌ உள்ளடக்கும்‌; (7) "நபர்‌" என்பது, இந்து கூட்டுக்‌ குடும்பம்‌, ஒரு மருமக்கள்‌ தாய தர்வாத்‌ குடும்பம்‌ அல்லது தாய்வழி மற்றும்‌ ஒர்‌ அலியாசந்தனா குடும்பம்‌ அல்லது அதன்‌ கிளையினை உள்ளடக்கும்‌; (8) "தனியார்‌ காடு" என்பது 1882 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வனச்‌ சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம்‌ V/1882) அமைக்கப்பட்ட காப்பு காடுகள்‌ அல்லாத காடுகள்‌ எனப்‌ பொருள்படும்‌; ஆனால்‌ அந்தச்‌ சட்டத்தில்‌ பொருள்‌ வரையறை செய்யப்பட்டவாறு அரசால்‌ நிறைவேற்றப்பட்ட நிலம்‌ எதையும்‌ உள்ளடக்காது. 3. தனியார்‌ காடுகளின்‌ மேலாண்மையை எடுத்துக்‌ கொள்ளுதல்‌.- (1) எப்போதெல்லாம்‌, அரசுக்கு எந்தவொரு தனியார்‌ காட்டின்‌ மேலாண்மையைப்‌ பொது நலன்‌ அல்லது அதன்‌ உரிய மேலாண்மையைக்‌ கிடைக்க செய்யும்‌ பொருட்டு, அதன்‌ மேலாண்மையை எடுத்துக்‌ கொள்வது தேவையானது எனத்‌ தோன்றுகிறதோ, அது புணித லாரல்‌ கோட்டை அரசிதழில்‌ அறிவிப்பு ஒன்றை வெளியிடலாம்‌, அரசு பெறப்படலாகும்‌ ஆட்சேபனைகள்‌ அல்லது கருத்துகள்‌ எதனையும்‌ அறிவிப்பில்‌ குறிப்பிடப்படும்‌ காலத்திற்குள்‌, அது பரிசீலனை செய்தல்‌ வேண்டுமென்று அத்தகைய அறிவிப்பில்‌ குறிப்பிடுதல்‌ வேண்டும்‌; அறிவிப்பின்‌ நகல்கள்‌ உரிமையாளர்‌ அல்லது தனியார்‌ காட்டை உடைமையில்‌ வைத்துள்ள பிற நபர்‌ எவருக்கும்‌ சார்வு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (2 1) ஆம்‌ உட்பிரிவின்படி அறிவிப்பில்‌ குறிப்பிடப்பட்ட அத்தகைய காலஅளவு முடிவுறுவதற்கு முன்பு பெறப்படலாகும்‌ அத்தகைய ஆட்சேபனைகள்‌ மற்றும்‌ கருத்துகளைப்‌ பரிசீலனை செய்த பிறகு, மற்றும்‌ அத்தகைய காலஅளவு முடிந்த பிறகு அரசு, அறிவிக்கை வாயிலாக, அந்த அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய தேதியிலிருந்தும்‌ பத்தாண்டிற்கு மிகாத அத்தகைய காலஅளவிற்கும்‌ தனியார்‌ காடுகளின்‌ மேலாண்மையை அரசு, எடுத்துக்கொள்ளுதல்‌ வேண்டும்‌ என விளம்புகை செய்யலாம்‌. (3) (2 ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அறிவிக்கையில்‌ குறிப்பிடப்பட்ட தேதியன்றும்‌. அது முதற்கொண்டும்‌, தனியார்‌ காட்டின்‌ மேலாண்மையானது அரசிடம்‌ உற்றமைந்திருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ ஆட்சியர்‌ அல்லது இதன்பொருட்டு அவரால்‌ அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்‌ எவரும்‌ அதிலுள்ள எந்தவொரு தடையையும்‌ நீக்கிய பிறகு, உள்ளே நுழைவதன்‌ பேரில்‌ உடனடியாக தனியார்‌ காடுகளின்‌ அனுபோகத்தையும்‌ மற்றும்‌ அதனுடைய மேலாண்மைக்காக அரசிற்கு தேவைப்படலாகும்‌ அனைத்து கணக்குப்‌ புத்தகங்கள்‌, பதிவேடுகள்‌, வரைபடங்கள்‌, திட்டப்படம்‌ மற்றும்‌ அதன்‌ தனியார்‌ காடு தொடர்பான பிற ஆவணங்களையும்‌ உடைமையில்‌ பெறலாம்‌. (4) (2 ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அறிவிக்கையின்‌ நகல்களானது, தனியார்‌ காட்டின்‌ உரிமையாளர்‌ அல்லது அனுபோகத்தில்‌ உள்ள பிற நபர்‌ எவருக்கும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ சார்வு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 4. அரசால்‌ மேலாண்மை எடுத்துக்‌ கொள்ளப்படுவதன்‌ குறித்தசில விளைவுகள்‌.- (1) ஏதேனும்‌ தனியார்‌ காட்டின்‌ மேலாண்மையை 3 ஆம்‌ பிரிவின்படி எடுத்துக்‌ கொள்கிறவிடத்து, அத்தகைய மேலாண்மை அரசிடம்‌ உற்றமைந்திருக்கும்‌ காலம்‌ வரையில்‌, (ஐ உரிமையாளரால்‌ அல்லது தனியார்‌ காட்டில்‌ நலன்‌ கொண்டுள்ள நபர்‌ எவராலும்‌ தனியார்‌ காடுகளில்‌ அல்லது அதன்‌ மீது உருவாகும்‌ அனைத்து உரிமைகள்‌ மற்றும்‌ நலன்களானது, அரசுக்கு எதிராக செயற்படுத்துதல்‌ ஆகாது; (b) உரிமையாளர்‌ அல்லது தனியார்‌ காட்டின்‌ நலன்‌ கொண்ட நபர்‌ எவரும்‌, தனியார்‌ காடு அல்லது காட்டு விளைபொருள்‌ மீது கோருரிமை எதனையும்‌ கொண்டுள்ள நபர்‌ எவரும்‌, அத்தகைய மேலாண்மை காலத்தின்போது அதிலிருந்து கிடைக்கப்பெற்ற (காட்டு விளைபொருள்‌ உட்பட) வாடகைகள்‌ மற்றும்‌ இலாபத்தை பெற உரிமையுடையவர்‌ ஆகார்‌. ஆனால்‌ 7 ஆம்‌ பிரிவில்‌ வகைசெய்யப்பட்டவாறு இழப்பீடுகளுக்கு மட்டும்‌ உழிமையுடையவர்‌ ஆவார்‌; () அத்தகைய தனியார்‌ காடு, நீதிமன்றம்‌ எதனின்‌ அல்லது பிற அதிகாரஅமைப்பின்‌ தீர்ப்பாணை அல்லது ஆணை எதனையும்‌ செயல்படுத்துவதில்‌ எதுவாயினும்‌ எந்த முறையிலும்‌ அதன்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படுதல்‌ ஆகாது மற்றும்‌ அத்தகைய மேலாண்மை எடுத்துக்‌ கொள்ளப்பட்ட தேதியில்‌ தொடர்ந்திருக்கும்‌ அத்தகைய தனியார்‌ காட்டைப்‌ பொருத்து பாதுகாவலர்‌ ஒருவரை அமர்த்துவதற்காக எந்தவொரு ஆணைகள்‌ அல்லது பற்றுகை அல்லது உறுத்து கட்டளை எதுவும்‌ செயல்‌ விளைவு அற்றுப்போகும்‌; மற்றும்‌ (1) அத்தகைய தனியார்‌ காட்டைப்‌ பொறுத்து, எந்தவொரு நபரின்‌. கோருரிமைகளும்‌, தீர்ப்பாணையைச்‌ செயல்படுத்துவதற்கு அல்லது அரசுக்கு எதிராக பிறவாறு அல்லது அரசின்‌ கீழாக அத்தகைய தனியார்‌ காடுகளை வைத்திருக்கும்‌ எந்தவொரு நபருக்கும்‌ எதிராக எந்தவொரு நீதிமன்றத்திலும்‌ செயல்படுத்தப்படுதல்‌ ஆகாது. 5. அரசின்‌ அதிகாரம்‌.- (1) இதன்பொருட்டு செய்யப்படலாகும்‌ அத்தகைய விதிகளுக்கு உட்பட்டு, 3 ஆம்‌ பிரிவின்படி அத்தகைய மேலாண்மை எடுத்துக்‌ கொள்ளப்பட்ட ஏதேனும்‌ தனியார்‌ காட்டைப்‌ பாதுகாக்கவும்‌ நிருவகிக்கவும்‌ பேணுவதற்கும்‌ மேலாண்மை செய்யும்‌ நோக்கத்திற்காக. அரசு தேவையென அல்லது உகந்தது எனக்‌ கருதுகிற அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ அடங்கியுள்ள வகைமுறைகளின்‌ பொதுபாங்கிற்கு குந்தகமின்றியும்‌ அத்தகைய அதிகாரங்கள்‌, (ஐ தனியார்‌ காட்டில்‌ உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு; (௦) வெட்டு மரம்‌ மற்றும்‌ பிற காட்டு விளைபொருளை ஏலம்‌ மூலம்‌ அல்லது பிறவாறான விற்பனைக்கு; (c) மரங்களை வெட்டுவதற்கு மற்றும்‌ அப்புறப்படுத்துவதற்கு ஒப்பந்தத்தில்‌ ஈடுபடுவதற்கு; (0) பயிர்‌ செய்தலைத்‌ தொடங்குவதற்கு; (6) செடி நடுதல்‌ அல்லது பிறவாறு தனியார்‌ காட்டை மேம்படுத்துவதற்கு; மற்றும்‌ (0). தனியார்‌ காட்டில்‌ அத்தும்றி நுழைவதை மற்றும்‌ காட்டு விளைபொருள்‌ எதனையும்‌ முறைகேடாக அகற்றுவதைத்‌ தடுப்பதற்கு அல்லது தனியார்‌ காட்டில்‌ சேதம்‌ எதனையும்‌ செய்வதைத்‌ தடுப்பதற்கான, அதிகாரத்தை உள்ளடக்கும்‌. 6. தனியார்‌ காடு மேலாண்மையிலிருந்து விடுவித்தல்‌.- (1) 3 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்படியான அறிவிக்கையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள காலஅளவு முடிவுற்றதன்பேரில்‌ அல்லது அதற்கு முன்னதாக, 3 ஆம்‌ பிரிவின்படி எடுத்துக்‌ கொள்ளப்பட்ட தனியார்‌ காடுகளின்‌ மேலாண்மையைத்‌ தொடர்வதற்கு இனிமேலும்‌. தேவை இருக்காது என அரசு கருதுமானால்‌, அரசு 3 ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ எடுத்துக்கொண்ட தனியார்‌ காடு மீதான அதன்‌ மேலாண்மையை விடுவித்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ மேலாண்மையின்‌ சாதாரணப்‌ போக்கில்‌ அல்லது உழவுத்‌ தொழில்‌ மற்றும்‌ தடை செய்ய முடியாத ஆற்றலால்‌ ஏற்பட்ட மாற்றங்களுக்கு மட்டும்‌ உட்பட்டு, தனியார்‌ காட்டை உடைமையில்‌ எடுத்துக்‌ கொள்ளும்போது இருந்ததைப்‌ போலவே நல்ல நிலையில்‌ மீட்டெடுத்தல்‌ வேண்டும்‌, (2) அரசால்‌. மேலாண்மையிலிருந்து தனியார்‌ காடு எதுவும்‌ விடுவிக்கப்படுகிறவிடத்து, அரசு, வகுத்துரைக்கப்படும்‌ முறையில்‌ விசாரணை ஒன்றைச்‌ செய்த பிறகு, அறிவிக்கையின்‌ வாயிலாக எந்தத்‌ தேதியன்று மற்றும்‌ எந்த நபருக்கு அத்தகைய தனியார்‌ காட்டை வழங்க வேண்டும்‌ என்று குறிப்பிடுதல்‌ வேண்டும்‌: வரம்புரையாக: தனியார்‌ காடுகளின்‌ உரிமையாளருக்கு அறிவிப்பு வழங்கப்படாத வரையில்‌ அல்லது அவர்‌ இறந்திருந்தால்‌ அவரது வாரிசுகளுக்கு அல்லது சட்டப்பூர்வ பிரதிநிதிகளுக்கு மற்றும்‌ அவரது அல்லது அவர்களது பிரதிநிதித்துவம்‌ ஏதேனும்‌ இருக்கிறது என அரசால்‌ கருதப்பட்டாலன்றி, தனியார்‌ காட்டை உடைமையில்‌ கொண்டுள்ள நபரல்லாத பிற நபர்‌ எவரையும்‌ குறிப்பிடு ற, இந்த உட்பிரிவின்படி அறிவிக்கையை வெளியீடு செய்வது ஆகாது. (3) (2) ஆம்‌ உட்பிரிவின்படியான அறிவிக்கையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள தேதியன்று பேரில்‌ தனியார்‌ காட்டின்‌ உடைமையானது அரசால்‌ அளிக்கப்பட்டிருப்பதாக கருதப்படுதல்‌ வேண்டும்‌. (2) ஆம்‌ உட்பிரிவின்படியான அறிவிக்கையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள நபருக்குத்‌ தணியார்‌ காட்டின்‌ உடைமை ஒப்படைப்பானது, உரிய சட்ட செயல்முறையின்‌ மூலம்‌ பிற நபர்‌ எவருக்கும்‌ உரிமையுள்ள தனியார்‌ காடு தொடர்பான அனைத்து பொறுப்பிலிருந்தும்‌ அரசை முழுமையாக விடுவித்தல்‌ வேண்டும்‌; தனியார்‌ காடுகள்‌ எந்த நபருக்கு உடைமையாக வழங்கப்படுகிறதோ அந்த நபருக்கு எதிராகச்‌ செயல்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 7. உடைமை காலத்திற்கான இழப்பீடு (1) 3 ஆம்‌ பிரிவின்கீழ்‌ எந்தவொரு தனியார்‌ காட்டின்‌ மேலாண்மையும்‌ எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தால்‌, அவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து 6 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்படியான அறிவிக்கையில்‌ குறிப்பிடப்பட்ட தேதி வரையில்‌, ஒவ்வொரு பன்னிரெண்டு மாதம்‌ நிறைவடைந்ததன்‌ பேரில்‌ ஆட்சியர்‌, அத்தகைய முடிவு தேதியில்‌ இருந்து முப்பது நாள்‌ முடிவுற்ற பிண்பு ஆணையின்‌ வழி (4) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள கோட்பாடுகளுக்கு இணங்க, தனியார்‌ காட்டைப்‌ பொறுத்துவரை செலுத்தக்கூடிய இழப்பீட்டை தீர்மானித்தலும்‌ (3) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்ட முறையில்‌ அத்தகைய முறையில்‌ பகிர்ந்தளித்தலும்‌ வேண்டும்‌. (2) இழப்பீடு அல்லது அதன்‌ பகுதி எதையும்‌ கோருகிற நபர்‌ ஒவ்வொருவரும்‌, (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்ட முப்பது நாள்‌. காலஅளவிற்குள்‌ ஆட்சியர்‌ தனது உளத்தேர்வின்படி முப்பது நாளுக்கு மிகாத மேலுமான அத்தகைய காலஅளவிற்குள்‌ ஆட்சியரிடம்‌ விண்ணப்பித்தல்‌ வேண்டும்‌. (3) ஆட்சியர்‌, (2) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ விண்ணப்பித்த அனைத்து நபர்களுக்கும்‌ மற்றும்‌ அவர்‌, உரிமைகொண்டவர்கள்‌ எனக்‌ கருதும்‌ பிற நபர்‌ எவருக்கும்‌ அறிவிப்பு கொடுத்த பின்பு மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய விசாரணையைச்‌ செய்த பிறகு, உரிமையாளர்‌, தனியார்‌ காட்டில்‌ நலன்‌ கொண்ட நபர்கள்‌ மற்றும்‌ தனியார்‌ காட்டின்‌ மீது கோருரிமை பெற்றுள்ள பிற நபர்‌ (காட்டு விளைபொருள்‌ உட்பட) கூடுமான அளவில்‌ சாத்தியமான, அவரவர்களுக்குரிய நலன்‌ அல்லது கோருரிமைகள்‌ மதிப்புடன்‌ இணங்கி, அவர்களிடையே இழப்பீட்டினைப்‌ பகிர்ந்தளித்தல்‌ வேண்டும்‌. (4) பன்னிரெண்டு மாதம்‌ நிறைவடைகிற எந்தவொரு தனியார்‌ காட்டிற்காக செலுத்த வேண்டிய இழப்பீட்டுத்‌ தொகையானது- (ஐ) தனியார்‌ காட்டின்‌ மொத்த பரப்பிடத்தில்‌ ஆண்டொன்றிற்கு, ஓர்‌ ஏக்கருக்கு ஒரு ரூபாய்‌ வீதம்‌ எனக்‌ கணக்கிடப்பட்ட ஒரு தொகை; மற்றும்‌ (௦) கூறப்பட்ட பண்னிரெண்டு மாத காலஅளவில்‌, அரசால்‌ தனியார்‌ காடு மேலாண்மையிலிருந்து திரள்கிற நிகர இலாபம்‌ ஏதேனும்‌ இருப்பின்‌. செலுத்துதப்படுதல்‌ வேண்டும்‌. (5) நிகர இலாபத்தைக்‌ கணக்கீடும்‌ நோக்கத்திற்காக, தனியார்‌ காட்டின்‌: மேலாண்மையின்‌ பேரில்‌ செலவிடப்பட்ட மொத்த செலவினத்தையும்‌ (இந்நோக்கத்திற்காக பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்‌ தொகுதியினரின்‌ சம்பளம்‌ மற்றும்‌ படித்தொகைகள்‌ மற்றும்‌ தனியார்‌ காட்டைப்‌ பொறுத்த ஏதேனும்‌ வரி பொதுக்‌ கட்டணங்கள்‌ மற்றும்‌ பிற நிலுவைகள்‌. செலுத்தியது ஆகிய தொகை உட்பட) மேலாண்மையிலிருந்து கணக்கிடும்‌ தேதி வரையிலான மொத்த வருமானத்திற்கு எதிராக சரிகட்டப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ தொகைகளில்‌ ஏதாவது பற்றாக்குறை ஏற்பட்டால்‌, வகுத்துரைக்கப்படும்‌ வட்டி விதத்துடன்‌ ஓர்‌ ஆண்டிலிருந்து மற்றொரு ஆண்டிற்கு அத்தகைய தொகை வரும்‌ வரை மற்றும்‌ உபரி ஏற்படும்‌ வரை முன்னோக்கி கொண்டு செல்லுதல்‌ வேண்டும்‌. (6) (5) ஆம்‌ உட்பிரிவின்‌ நோக்கத்திற்காக, (a) மொத்த செலவினங்கள்‌, (4) ஆம்‌ உட்பிரிவின்‌ (ஐ) கூறின்கீழ்‌ அரசால்‌ செலுத்தப்பட்ட தொகை உள்ளடங்குதல்‌ வேண்டும்‌; ஆனால்‌, மேம்பாட்டின்‌ பேரில்‌ அரசால்‌ செலவிடப்பட்ட மூலதன செலவினங்கள்‌ உள்ளடங்காது, 8 ஆம்‌ பிரிவின்படி அதன்‌ மதிப்பை அரசுக்குச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (b) மொத்த வருமானத்தில்‌ அத்தகைய மேம்பாட்டின்‌ விளைவாக தனியார்‌ காட்டிலிருந்து திரட்டப்பட்ட இலாபங்களை உள்ளடக்காது. (7) (1) ஆம்‌ உட்பிரிவின்படி தீர்மானிக்கும்‌ இழப்பிட்டுத்‌ தொகையானது, உரிமையுள்ள நபர்‌ அல்லது நபர்களுக்கு, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய வடிவத்திலும்‌ முறையிலும்‌, அத்தகைய நேரம்‌ அல்லது காலங்களில்‌ மற்றும்‌ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைமுறைகளில்‌ அரசால்‌, செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 8. அரசால்‌ மேலாண்மையிலிருந்து விடுவிப்பதன்பேரில்‌ அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய மேம்பாட்டு மதிப்பு.-- தனியார்‌ காடுகள்‌ எதுவும்‌, அரசால்‌ மேலாண்மையிலிருந்து விடுவிக்கப்படுமிடத்து, உரிமையாளர்‌ மற்றும்‌ தனியார்‌ காடுகளில்‌ நலன்கொண்ட அல்லது அதனை உடைமையில்‌ கொண்டுள்ள நபரெவரும்‌, காடுகளில்‌ முறையாக பயிரிடூவதன்‌ அல்லது தனியார்‌ காடுகளை விவசாயத்தில்‌ அதிக செயல்திறனையும்‌ பெறுவதற்கோ தனியார்‌ காட்டை மேம்படுத்துவதற்காக செய்யப்படும்‌ எதற்காகவும்‌, தனியார்‌ காடுகளின்‌ மதிப்பிற்கு சமமான தொகையை அரசிற்கு செலுத்த கடமைப்பட்டவர்களாக இருப்பர்‌; ஆட்சியர்‌, அத்தகைய தொகையை ஆணையின்‌ மூலம்‌ தீர்மானித்தல்‌ வேண்டும்‌, இதன்பொருட்டு ஆட்சியரால்‌ எழுத்து மூலமாக கோரப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள்‌ அத்தகைய உரிமையாளர்‌ அல்லது நபரால்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. வரம்புரையாக: உரிமையாளர்‌ அல்லது யாரால்‌ தொகை அவ்வாறு செலுத்தப்படுகிறதோ அந்த நபர்‌, கூறப்பட்ட ஒரு மாதத்திற்குள்‌, ஆட்சியருக்கு எழுத்து மூலமான அறிவிப்பை சார்வு செய்து, கூறப்பட்ட தேதியிலிருந்து ஆண்டுக்கு ஆறு சதவிதம்‌ என்ற விதத்தில்‌, மேற்சொன்ன தொகையை அதன்‌ வட்டியுடன்‌ சேர்த்து, அறிவிப்பில்‌ குறிப்பிடப்படலாகும்‌ பத்திற்கு மேற்படாத ஆண்டிற்கு சமமான அத்தகைய எண்ணிக்கையிலான தவணைகளில்‌ செலுத்துவதற்கு தேர்வு செய்யலாம்‌, அதன்‌ முதல்‌ தவணையானது, கூறப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டிற்குள்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 9. மேல்முறையீடு.- (1) 7 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி அல்லது 8 ஆம்‌ பிரிவின்படி ஆட்சியரின்‌ ஆணை ஒன்றின்‌ பேரில்‌ குறையுற்ற நபர்‌ எவரும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய காலத்திற்குள்‌ மற்றும்‌ அத்தயை முறையில்‌ வருவாய்‌ வாரியத்துக்கு மேல்முறையீட்டினை செய்யலாம்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எது எவ்வாறு இருந்தபோதிலும்‌ மேல்முறையீட்டாளர்‌, மேல்முறையீட்டு காலத்திற்குள்‌ முன்ணனிடுவதிலிருந்து தடுக்கப்பட்டதற்கான போதிய காரணம்‌ இருக்கிறது என வருவாய்‌ வாரியம்‌ திருப்தியுற்றால்‌ வருவாய்‌ வாரியம்‌, அதில்‌ குறிப்பிடப்பட்ட காலஅளவுக்கு பிறகு செய்யப்பட்ட ஒரு மேல்முறையீட்டினை அனுமதிக்கலாம்‌. (3) இந்தப்‌ பிரிவின்படி மேல்முறையீட்டின்‌ பேரில்‌ வருவாய்‌ வாரியத்தின்‌ ஆணை அல்லது (1) ஆம்‌ உட்பிரிவின்படி அல்லது 8 ஆம்‌ பிரிவின்படி ஆட்சியரின்‌ ஆணை, இந்தப்‌ பிரிவின்படி வருவாய்‌ வாரியத்திற்கு மேல்முறையீடு செய்யாத போது, இறுதியானதாக இருக்கும்‌. 10. தண்டத்தொகைகள்‌.- உரிமையாளர்‌ எவரும்‌ அல்லது உரிமையாளராக நம்பப்படும்‌ நபரோ அல்லது தனியார்‌ காட்டினை உடைமையில்‌ வைத்துள்ள நபரோ அல்லது பிற நபர்‌ எவரும்‌ இந்தச்‌ சட்டத்தினால்‌ அல்லது அதன்படி அளிக்கப்பட்ட அத்தகைய அலுவலருக்கு எந்தவொரு கடமையையும்‌ நிறைவேற்றுவதில்‌ அல்லது ஒப்படைக்கப்பட்ட எந்தவொரு செயற்பணிகளையும்‌ செயல்படுத்துவதில்‌ அலுவலர்‌ எவருக்கும்‌ வழங்கப்பட்ட அதிகாரம்‌ எதனையும்‌ செயல்படுத்துவதை எதிர்த்தால்‌ அல்லது தடுத்தால்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகையங்கள்‌ எதனையும்‌ அல்லது இதன்படி செய்யப்பட்ட விதிகள்‌ எதனையும்‌, இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட ஆணை எதனையும்‌ அல்லது கொடுக்கப்பட்ட பணிப்புரை எதனையும்‌. ம்றுகையில்‌, ஓராண்டு வரை நீடிக்கலாகும்‌ ஒரு காலஅளவுக்கு சிறைத்தண்டனை அல்லது ஓராயிரம்‌ ரூபாய்‌ வரை நீட்டிக்கலாகும்‌ பணத்தண்டத்துடன்‌ அல்லது இரண்டும்‌ விதித்து அவர்‌ தண்டிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 11. நில வருவாய்‌ நிலுவைத்‌ தொகையாக வசூலிக்கப்பட வேண்டிய தொகைகள்‌. 3 ஆம்‌ பிரிவின்படி மேலாண்மையை எடுத்துக்‌ கொள்ளப்பட்ட தனியார்‌ காட்டைப்‌ பொறுத்து அரசுக்குச்‌ செலுத்த வேண்டிய அல்லது அரசால்‌ வசூலிக்கக்கூடிய அனைத்து தொகைகளும்‌, நில வருவாய்‌ நிலுவைத்‌ தொகைகளை வசூலிப்பது போல வசூலிக்கப்படலாம்‌. 12. விசாரணைகளின்‌ நடைமுறை மற்றும்‌ அதிகாரங்கள்‌. இந்தப்‌ பிரிவின்படி ஓர்‌ விசாரணையைச்‌ செய்வதற்கு அதிகாரம்‌ கொண்டுள்ள 10 எந்தவொரு அதிகாரஅமைப்பும்‌, 1893 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வருவாய்‌ விசாரணைகள்‌ சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்டம்‌ V/1893) வகைசெய்யப்பட்டுள்ள முறையில்‌ விசாரணை செய்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அந்தச்‌ சட்டத்தினால்‌ அல்லது 1869 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வருவாய்‌ அழைப்பாணைகள்‌ சட்டத்தினால்‌ (தமிழ்நாடு சட்டம்‌ ॥,ா1869) வருவாய்‌ அலுவலர்களுக்கு உற்றமைந்திருக்கலாகும்‌ அனைத்து அதிகாரங்களையும்‌ பெற்றிருக்கும்‌. 13. தனியார்‌ காட்டில்‌ நுழைவதற்கு அதிகாரம்‌.- ஆட்சியர்‌ அல்லது அவரால்‌ இதன்பொருட்டு எழுத்து மூலமாக அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்‌ எவரும்‌ அவர்‌ தேவையானதாக கருதும்‌ அத்தகைய பிற அலுவலர்கள்‌ அல்லது நபர்கள்‌ தனியார்‌ காடு எதற்குள்ளும்‌ நுழையலாம்‌; மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கத்தினைச்‌ செயற்படுத்துவதற்கு தேவையான அனைத்தையும்‌ செய்யலாம்‌. 14. தகவல்‌ பெறுவதற்கு அதிகாரம்‌.-- அரசு அல்லது ஆட்சியர்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கத்தினைச்‌ செயற்படுத்துவதன்‌ பொருட்டு ஆணையினால்‌, நபர்‌ எவரும்‌ ஆணையில்‌ குறிப்பிடலாகும்‌ அத்தகைய அலுவலருக்கு 3 ஆம்‌ பிரிவின்படி மேலாண்மையை எடுத்துக்‌ கொள்ளப்பட்ட அல்லது எடுத்துக்‌ கொள்ள உட்நோக்கம்‌ கொண்டுள்ள தனியார்‌ காட்டிற்குத்‌ தொடர்புடையவற்றைக்‌ குறிப்பிடப்படலாகும்‌ அவரது உடைமையில்‌ உள்ள அத்தகைய தகவல்களை அளிக்க கோரலாம்‌. 15. நில வருவாய்‌, தீர்வைகள்‌ மற்றும்‌ மேல்வரிகளுக்கான கடப்பாடுகள்‌ தொடர்ந்திருத்தல்‌.- 3 ஆம்‌ பிரிவின்படி ஒரு தனியார்‌ காட்டின்‌ மேலாண்மையை எடுத்துக்‌ கொள்வது, அத்தகைய மேலாண்மையை எடுத்துக்‌ கொள்ளப்பட்ட தேதிக்கு முன்போ அல்லது பின்போ எந்தவொரு காலஅளவிற்காகவும்‌ அத்தகைய தனியார்‌ காட்டைப்‌ பொறுத்து நில வருவாய்‌, தீர்வை அல்லது மேல்‌ வரியை செலுத்த வேண்டிய எந்தவொரு நபரின்‌ கடப்பாடுகளைப்‌ பாதிக்கும்‌. 16. பிற சட்டங்களின்‌ செயல்பாடுகள்‌ பாதிக்காது.- இந்தச்‌ சட்டத்தின்‌ வகையங்கள்‌ காடு தொடர்பாக தற்பொழுது நடைமுறையில்‌ உள்ள பிற சட்டம்‌ எதற்கும்‌ கூடுதலாக மற்றும்‌ திறக்குறைவு செய்யாமலும்‌ இருக்கும்‌. 17. நல்லெண்ணத்தில்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப்‌ பாதுகாப்பு.- இந்தச்‌ சட்டத்தின்படி அல்லது அதன்படி செய்யப்பட்ட விதி எதன்படியும்‌, நல்லெண்ணத்தில்‌ செய்த அல்லது செய்ய கருதிய எதற்காகவும்‌ எந்தவொரு அலுவலர்‌ அல்லது பிற அதிகாரஅமைப்புக்கு எதிராக உரிமை வழக்கு, குற்றவியல்‌ வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள்‌ எதுவும்‌ தொடரப்படுதல்‌ ஆகாது. 18. உரிமையியல்‌ நீதிமன்றங்களின்‌ அதிகாரவரம்புக்குத்‌ தடை.- இந்தச்‌ சட்டத்தினால்‌ அல்லது அதன்படி தீர்மானிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள 11 பொருட்பாடு எதனையும்‌ பொறுத்தமட்டில்‌, உரிமையியல்‌ நீதிமன்றம்‌ எதுவும்‌ அதிகாரவரம்பு உடையது ஆகாது; மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தினால்‌ அல்லது அதன்படி வழங்கப்பட்ட அதிகாரம்‌ எதனையும்‌ தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனையும்‌ பொறுத்தமட்டில்‌, நீதிமன்றம்‌ அல்லது பிற அதிகாரஅமைப்பு எதனாலும்‌ உறுத்துக்‌ கட்டளை எதுவும்‌ வழங்கப்படுதல்‌ ஆகாது. 19. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக அனைத்தையும்‌ அல்லது எதனையும்‌ நிறைவேற்றுவதற்காக அரசு விதிகளைச்‌ செய்யலாம்‌. (2) குறிப்பாகவும்‌, மேற்சொன்ன அதிகாரத்தின்‌ பொதுப்பாங்கிற்கு குந்தகமின்றியும்‌, அத்தகைய விதிகள்‌, பின்வரும்‌ பொருட்பாடுகள்‌ அனைத்திற்கும்‌ அல்லது எதற்கும்‌ வகைசெய்யலாம்‌,- (ஐ) தனியார்‌ காடுகளின்‌ உடைமையினை எடுத்துக்‌ கொள்வதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்‌; (௦) தனியார்‌ காடுகளின்‌ பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும்‌ மேலாண்மை; (6) அறிவிப்பு மற்றும்‌ பிறவற்றை வழங்கும்‌ முறை; (0) அரசால்‌ எடுத்துக்‌ கொள்ளப்பட்ட தனியார்‌ காட்டின்‌ வருமானத்தை முறையாக வசூலித்தல்‌ மற்றும்‌ தணியார்‌ காடு மேலாண்மையில்‌ ஏற்பட்ட செலவினங்கள்‌; (ஐ) தனியார்‌ காடுகளின்‌ மேலாண்மை தொடர்பான கணக்குகளை அந்த முறையில்‌ பராமரிக்க மற்றும்‌ தணிக்கை செய்யப்பட வேண்டும்‌; (1) வகுத்துரைக்கப்பட வேண்டிய அல்லது வகுத்துரைக்கப்படலாகும்‌. எந்தப்‌ பிற பொருட்பாடு எதுவும்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌ அனைத்தும்‌ புணிக வார்ஸ்‌ கோட்டை அரசிகழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அவை குறிப்பிட்டதொரு நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டுமென வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி ஒவ்வொன்றும்‌, செய்யப்பட்ட பின்னர்‌, கூடிய விரைவில்‌, சட்டமன்றப்‌ பேரவையின்‌ முன்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர்‌ அல்லது அடுத்த கூட்டத்தொடர்‌ முடிவடைவதற்கு முன்னர்‌, அத்தகைய விதி எதிலும்‌ மாறுதல்‌ எதனையும்‌ சட்டமன்றப்‌ பேரவையானது செய்ய ஒத்துக்கொள்ளுமாயின்‌ அல்லது 12 விதி எதுவும்‌ செய்யப்படுதல்‌ கூடாது என சட்டமன்றப்‌ பேரவை முடிவு செய்யுமாயின்‌, விதி அதன்‌ பின்னர்‌, அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தின்‌. பேரில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌; அல்லது, நேர்விற்கேற்ப, நடைமுறைக்கு வராது போதல்‌ வேண்டும; எனினும்‌, அவ்வாறான மாறுதல்‌ அல்லது நீக்கம்‌ எதுவும்‌ அந்த விதியின்படி முன்னதாகச்‌ செய்யப்பட்ட செயல்‌ ஏதொன்றின்‌ செல்லுந்தன் மைக்கும்‌ குந்தகமின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 20. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌.- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளைச்‌ செயற்படுத்துவதில்‌, இடர்ப்பாடு ஏதேனும்‌ எழுமானால்‌, அரசு, நேர்விற்கேற்ப ஆணையின்‌ வாயிலாக, அந்த நோக்கத்திற்காக அல்லது இடர்ப்பாடுகளை நீக்குவதற்கு அவர்களுக்குத்‌ தேவையானதாக தோன்றுகிற எதனையும்‌ செய்யலாம்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றும்‌ பிறப்பிக்கப்பட்ட பின்னர்‌, கூடிய விரைவில்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அது, அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர்‌ அல்லது அடுத்த கூட்டத்தொடர்‌ முடிவடைவதற்கு முன்பு, அத்தகைய ஆணை எதிலும்‌ மாறுதல்‌ எதனையும்‌ சட்டமன்றப்‌ பேரவையானது செய்ய ஒத்துக்கொள்ளுமாயின்‌ அல்லது ஆணை எதுவும்‌ செய்யப்படுதல்‌ கூடாது என சட்டமன்றப்‌ பேரவை முன்‌ ஒத்துக்கொள்ளுமாயின்‌, ஆணை அதன்‌ பின்னர்‌, அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌; அல்லது, நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல்‌ வேண்டும்‌; எனினும்‌, அவ்வாறான மாறுதல்‌ அல்லது நீக்கம்‌ எதுவும்‌ அந்த ஆணையின்படி முன்னதாகச்‌ செய்யப்பட்ட செயல்‌ ஏதொன்றின்‌ செல்லுந்தன்மைக்கும்‌ குந்தகமின்றி இருத்தல்‌ வேண்டும்‌.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts