Tamil Nadu · 1986 · Act 4

The Tamil Nadu Patta Pass Book Act, 1983

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1983 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பட்டா கணக்கு புத்தகச்‌ சட்டம்‌. சட்ட எண்‌: 41986. பொருளடக்கம்‌. 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌. 3. பட்டா கணக்கு பத்தகம்‌ வழங்குதல்‌. 4. பட்டா கணக்கு புத்தகத்தில்‌ பதிவுகளின்‌ பிழையின்மைக்கான அனுமானம்‌. 5. பட்டா கணக்கு புத்தகத்தில்‌ மாற்றாக்கம்‌ அல்லது உரிமைமாற்ற பதிவுகளை பதிவு செய்தல்‌. 6. பட்டா கணக்கு புத்தகத்தில்‌ உள்ள பதிவுகள்‌, உரிமை மூலத்திற்க்கு முதல்‌ நோக்குச்‌ சாட்சியமாக இருத்தல்‌. 7. உரிமைகளை பெறுதல்‌ குறித்து அறிக்கை செய்தல்‌. 8. சான்றளிக்கப்பட்ட நகல்கள்‌. 9. கடன்‌ முகமை முன்பு பட்டா கணக்கு புத்தகத்தை முன்னிடல்‌. 10. பட்டா கணக்கு புத்தகத்தில்‌ பதிவுகளின்‌ திருத்தம்‌. 11. தகவல்‌ அளிக்கும்‌ நபர்கள்‌. 12. மேல்முறையீடு. 13. சீராய்வு. 14. உரிமை வழக்குகளுக்குத்‌ தடை. 15. விண்ணப்பம்‌ அல்லது வாதுரையில்‌ இணைக்கப்பட வேண்டிய பதிவேடுகளின்‌ சான்றளிக்கப்பட்ட நகல்கள்‌. 16. தகவல்‌ அளிப்பதற்கு தவறியதற்கான தண்டம்‌. 17. தவறான தகவல்‌ அளிப்பதற்கான தண்டம்‌. 18. குற்றங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்‌. 19. நல்லெண்ணத்தில்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப்‌ பாதுகாப்பு. 20. விலக்களிப்பு. 21. இச்சட்டமானது அனைத்து பிற சட்டங்களை விட மேலோங்கியிருத்தல்‌. 22. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. 23. வீட்டு மனைக்கு பட்டா கணக்கு புத்தகம்‌ வழங்குதல்‌. 24. இடர்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌. 1983 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பட்டா கணக்கு புத்தகச்‌ சட்டம்‌. சட்ட எண்‌: 41986. விவசாய நிலங்களின்‌ உடைமையாளர்களுக்கு பட்டா கணக்கு புத்தகம்‌ வழங்குவதற்காக வகை ெய்வதற்கானதொரு சட்டம்‌. இந்திய குடியரசின்‌, முப்பத்து நான்காம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 1983 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பட்டா கணக்கு புத்தகச்‌ சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. (2) இது, தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதையும்‌ அளாவி நிற்கும்‌. (3) இது, அரசு அறிவிக்கை வாயிலாக குறித்திடலாகும்‌ அத்தகையை தேதியன்று மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வெவ்வேறு வகைமுறைகளுக்காக மற்றும்‌ வெவ்வேறு பரப்பிடத்திற்காக குறித்திடலாகும்‌ வெவ்வேறு தேதிகளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌. இந்தச்‌ சட்டத்தில்‌ தறுவாய்‌ தேவைகள்‌ வேறுபொருள்‌ குறித்தலான்றி.- (1) "வேளாண்மை" என்பது, (8) தோட்டக்கலை; (5) பயிர்கள்‌, புற்கள்‌ வளர்ப்பு அல்லது தோட்ட விளைச்சல்‌; (௦9) ஓர்‌ விவசாயி அவரால்‌ வைத்திருக்கும்‌ நிலத்தை அல்லது அதன்‌ ஒரு பகுதியை மேய்ச்சலுக்காக பயன்படுத்துதல்‌; d) உரப்பயிர்கள்‌ வளர்ப்பதின்‌ நோக்கத்திற்காக எந்தவொரு நிலத்தையும்‌ பயன்படுத்தப்படுத்துதல்‌; (6) பால்பண்ணை; () கோழிப்பண்ணை; (9) கால்நடை வளர்ப்பு: (h) மாங்கள்‌ வளர்ப்பு; உள்ளடங்கலான மற்றும்‌ "வேளாண்மை" சார்ந்தவைக்கு இணங்கி பொருட்கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (2) "கடன்முகமை" என்பது எந்தவொரு தனிநபர்‌, எந்தவொரு பெயரில்‌ அழைக்கப்பட்டாலும்‌, நிலவள வங்கி, வணிக வங்கி, தனியார்‌ வங்கி அல்லது கடன்‌ வழங்குவதை முக்கிய நோக்கமாக கொண்ட எந்தவொரு பிறமுகமை உள்ளடங்கலான கூட்டுறவு கடன்‌ சங்கம்‌ எனப்‌ பொருள்படும்‌. (3) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்‌. (4) "நிலம்‌" என்பது வேளாண்மை நிலம்‌ என்று பொருள்படும்‌, அதாவது வேளாண்மை நோக்கத்திற்காகவோ அல்லது அதில்‌ விளைவிக்கிற நோக்கத்திற்காகவோ பயன்படுத்தப்படும்‌ அல்லது பயன்படுத்தக்கூடிய நிலம்‌ மற்றும்‌ மாநிலத்திற்குள்‌ நிலவருவாய்க்கு கணக்கிடப்படும்‌ அல்லது அரசு அலுவலரால்‌ கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும்‌ உள்ளூர்‌ விகிதத்திற்கு உட்பட்டது மற்றும்‌ தோட்டக்கலை நிலம்‌, வனநிலம்‌, தோட்ட நிலம்‌ மற்றும்‌ தோட்டப்‌ பயிர்‌ ஆகியவற்றை உள்ளடக்கும்‌, ஆனால்‌ வீட்டு மனையை உள்ளடக்காது; (5) "வரையறுக்கப்பட்ட உரிமையாளர்‌" என்பவர்‌, எந்த ஒரு நிலத்திலும்‌ வாழ்நாள்‌ உரிமை கொண்டுள்ள எந்தவொரு நபர்‌ எனப்‌ பொருள்படும்‌ மற்றும்‌ அவர்‌ வழியாக உரிமைகளை பெறும்‌ நபர்களை உள்ளடக்கும்‌. விளக்கம்‌: ஒரு நபர்‌ அவரது வாழ்நாளின்‌ போது நிலத்தை அனுபவிக்க உரிமை கொண்டுள்ள எவரும்‌, அந்நிலத்தை உரிமை மாற்றம்‌ செய்ய அதிகாரமற்றவராக இருப்பினும்‌, அவர்‌ வரையறுக்கப்பட்ட உரிமையாளராக கருதப்படுவார்‌. (6) "உரிமையாளர்‌" என்பவர்‌, ஒரு இரயத்துவாரி ஏற்பாட்டின்படி பொதுவாகவோ அல்லது இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ அல்லது எந்த வழியிலும்‌ அரசிற்கு நேரடியாக வருவாயை செலுத்துவதற்கு உட்பட்டு நிலம்‌ வைத்திருக்கும்‌ எந்தவொரு நபரும்‌ என்று பொருள்படும்‌; மேலும்‌ ஒரு முழு உரிமையாளர்‌ அல்லது வரையறுக்கப்பட்ட உரிமையாளரை உள்ளடக்கும்‌, ஆனால்‌ அடைமானம்‌ வைத்தவர்‌, குத்தகைதாரர்‌ அல்லது வாடகைத்தாரரை உள்ளடக்காது. (7) "பட்டா கணக்கு புத்தகம்‌" என்பது 3 ஆம்‌ பிரிவின்படி வழங்கப்பட்ட பட்டா கணக்கு புத்தகம்‌ என்று பொருள்படும்‌. (8) "நபர்‌" என்பது நிறுமம்‌, எந்தவொரு தொழில்‌ நிறுவகம்‌, சங்கம்‌ அல்லது தனி நபர்களின்‌ கழகம்‌ கூட்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டிருப்பினும்‌ இல்லாவிடினும்‌; அல்லது தனியார்‌ அறக்கட்டளை அல்லது பொது அறக்கட்டனை எதனையும்‌ உள்ளடக்கும்‌. (9) "பதிவு செய்யும்‌ அலுவலர்‌" என்பது 1908 ஆம்‌ ஆண்டு பதிவுச்‌ சட்டத்தின்‌ படி (மையச்‌ சட்டம்‌ XVI/1908) அமர்த்தப்பட்ட பதிவு செய்யும்‌ அலுவலர்‌ எனப்‌ பொருள்படும்‌. (1௦) "வட்டாட்சியர்‌" என்பவர்‌, நிலம்‌ அமைந்துள்ள பரப்பிடத்தின்‌ மீது அதிகார வரம்பு கொண்டுள்ள வட்டாட்சியர்‌ அல்லது அரசு, அறிவிக்கையின்‌ வாயிலாக, அந்த அறிவிக்கையில்‌ குறிப்பிடப்படலாகும்‌, அத்தகைய பரப்பிடத்திற்கான வட்டாட்சியருக்கு இந்தச்‌ சட்டத்தின்படி வழங்கப்பட்ட அதிகாரத்தைச்‌ செயல்படுத்துவதற்கு மற்றும்‌ விதிக்கப்பட்ட கடமைகளை ஆற்றுவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள துணை வட்டாட்சியர்‌ தர நிலைக்கு குறையாத வருவாய்‌ துறையின்‌ பிற அலுவலர்‌ எவரும்‌ எனப்‌ பொருள்படும்‌. 3. பட்டா கணக்கு பத்தகம்‌ வழங்குதல்‌.-- (1) ஒவ்வொரு உரிமையாளருக்கும்‌ அவரால்‌ உரிமை கொண்டுள்ள நிலத்தினை பொறுத்து அவரால்‌ செய்யப்படும்‌ விண்ணப்பம்‌ ஒன்றின்‌ பேரில்‌ வட்டாட்சியர்‌ பட்டா கணக்கு புத்தகம்‌ வழங்குவார்‌. இப்பிரிவின்‌ படி பெறப்படும்‌ விண்ணப்பம்‌ எதுவும்‌, வட்டாட்சியர்‌ அல்லது இதன்‌ பொருட்டு அவரால்‌, அதிகாரம்‌ அளிக்கப்பட்ட பிற அலுவலர்‌ எவராலும்‌ ஒப்புகை அளிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) வட்டம்‌, பட்டா கணக்குப்‌ புத்தகம்‌ வழங்கும்‌ அலகாக இருத்தல்‌ வேண்டும்‌. (3) (@) 1 ஆம்‌ பிரிவின்‌ (3) ஆம்‌ உட்பிரிவின்படி, ஒரு பரப்பிடத்தில்‌, இந்தப்‌ பிரிவை நடைமுறைக்கு கொண்டுவரும்‌ அறிவிக்கை வெளியிடப்பட்ட பிறகு, பட்டா கணக்கு புத்தகம்‌ வழங்குவது தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு, வட்டாட்சியர்‌ அந்தப்‌ பகுதியில்‌ உள்ள ஒவ்வொரு கிராமத்திலும்‌ ஓர்‌ அறிவிப்பை வெளியிடுதல்‌ வேண்டும்‌. அதில்‌ இந்தச்‌ சட்டத்தின்படி ஒவ்வொரு உரிமையாளருக்கும்‌ பட்டா கணக்குப்‌ புத்தகம்‌ வழங்கப்பட வேண்டும்‌ என்றும்‌, அத்தகைய உரிமையாளர்‌ இந்தப்‌ பிரிவின்கீழ்‌ வகைசெய்யப்பட்டவாறு, பட்டா கணக்கு புத்தகத்தை வழங்க விண்ணப்பித்தல்‌ வேண்டுமென பொதுமக்களுக்கு கூடுமான வரையில்‌ தெரிவித்தல்‌ வேண்டும்‌. (b) அறிவிக்கையானது மேலும்‌ சில விவரங்களை கொண்டிருக்க வேண்டும்‌ மற்றும்‌ குறித்துறைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ வெளியிடப்பட வேண்டும்‌. 4) (1) ஆம்‌ உட்பிரிவின்படி விண்ணப்பமானது, அத்தகைய வடிவில்‌ இருத்தல்‌ வேண்டும்‌ அத்தகைய உறுதிமொழி மற்றும்‌ விவரங்களை கொண்டிருக்க வேண்டும்‌ மேலும்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ அத்தகைய காலத்திற்குள்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (5) எந்த ஒரு நிலத்தைப்‌ பொறுத்தும்‌, (4) உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள கால வரம்பிற்குள்‌ எந்தவோர்‌ உரிமையாளராலும்‌ விண்ணப்பம்‌ எதுவும்‌ செய்யப்படாத நேர்வில்‌, வட்டாட்சியர்‌, அவரது அலுவலகத்தில்‌ உள்ள பதிவேடுகளில்‌ செய்யப்பட்ட பதிவுகளின்‌ அடிப்படையில்‌, அவர்‌ தனது ஆய்விற்காக ஏதேனும்‌ தகவலை வழங்க வேண்டும்‌ அல்லது எந்தவொரு ஆவணத்தையும்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌ என்றும்‌, அவரால்‌ பராமரிக்கப்படும்‌ பட்டா கணக்குப்‌ புத்தகப்‌ பதிவேட்டில்‌ தொடர்புடைய நிலத்திற்கு தேவையான பதிவுகளைச்‌ செய்வதற்கும்‌, பட்டா கணக்கு புத்தகத்தை வழங்கும்‌ நோக்கத்திற்கும்‌, தனது முறையீடு ஏதேனுமிருப்பின்‌, அவற்றை எழுத்து மூலமாக அளிக்க வேண்டும்‌ என்றும்‌, தொடர்புடைய நிலத்தின்‌ உரிமையாளருக்கு ஓர்‌ அறிவிப்பை அனுப்புதல்‌ வேண்டும்‌. (6) (a) (5) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அறிவிப்பு சார்வு செய்யப்பட்ட எந்தவொரு உரிமையாளரும்‌, அந்த அறிவிப்பில்‌ குறிப்பிடலாகும்‌ அத்தகைய காலத்திற்குள்‌ அல்லது வட்டாட்சியர்‌ தனது உளத்தேர்வின்படி அனுமதிக்கும்‌ முப்பது நாட்களுக்கு மிகாத மேலுமான அத்தகைய காலத்திற்குள்‌ வட்டாட்சியரின்‌ அத்தகைய ஆய்விற்காக அளிக்க அல்லது தாக்கல்‌ செய்ய கடமைப்பட்டவராவார்‌, மேலும்‌ தொடர்புடைய நிலத்தைப்‌ பொறுத்தவரை, பட்டா கணக்கு புத்தக பதிவேட்டில்‌ தேவையான பதிவுகளைச்‌ செய்வதற்கு அல்லது பட்டா கணக்கு புத்தகத்தை வழங்கும்‌ நோக்கத்திற்காக தேவையான அனைத்த தகவல்கள்‌ அல்லது ஆவணங்கள்‌, அவரது அறிவிற்கு எட்டிய வரையில்‌ அல்லது அவரது உடைமையில்‌ அல்லது அதிகாரத்தில்‌ இருக்கலாம்‌. (b) (5) ஆம்‌ உட்பிரிவின்‌ படி அறிவிப்பி இணங்கி, எந்தவொரு தகவலும்‌ அளிக்கப்பட்டு அல்லது எந்தவொரு ஆவணமும்‌ தாக்கல்‌ செய்யப்பட்டு இருப்பின்‌, வட்டாட்சியர்‌ அல்லது இதன்‌ பொருட்டு அவரால்‌ அதிகாரமளிக்கப்பட்ட எந்தவொரு அலுவலரும்‌, அதை அளித்த அல்லது வழங்கப்பட்ட நபருக்கு, எழுத்து மூலமான ஒப்புதலை வழங்க வேண்டும்‌. மேலும்‌ அத்தகைய ஆவணத்தை தாக்கல்‌ செய்ததன்‌ பொருண்மை மற்றும்‌ தேதியைக்‌ குறிப்பிடும்‌ ஒரு குறிப்பில்‌ தனது கையொப்பத்தை ட வேண்டும்‌. (7) (1) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ விண்ணப்பம்‌ பெறப்பட்டதின்‌ பேரில்‌ அல்லது (6) ஆம்‌ உட்பிரிவின்‌ (b) கூறின்கீழ்‌ வட்டாட்சியரால்‌ பெறப்பட்ட தகவல்‌ அடிப்படையின்‌ பேரில்‌, வட்டாட்சியர்‌, வகுத்துரைக்கப்பபலாகும்‌ அத்தகைய நடைமுறையை பின்பற்றுதல்‌ வேண்டும்‌, மேலும்‌ நிலத்தில்‌ உரித்தம்‌ கொண்டுள்ள நபர்கள்‌, எழுத்துப்பூர்வமாக அல்லது வாய்மொழியாக அவர்களது தரப்பினை எடுத்துரைப்பதற்கான நியாயமான வாய்ப்பு அளிக்க வேண்டும்‌. நிலத்தில்‌ உரித்தம்‌ கொண்டுள்ள நபர்களின்‌ கோரிக்கைகளை பரிசீலனை செய்து, வட்டாட்சியர்‌, யாருக்கு பட்டா கணக்கு புத்தகம்‌ வழங்கப்பட வேண்டும்‌ என்பதை தீர்மானிக்க வேண்டும்‌; மேலும்‌ அதற்கிணங்க, சம்பந்தப்பட்ட நில உரிமையாளருக்கு ஒரு பட்டா கணக்கு புத்தகம்‌ வழங்கப்பட வேண்டும்‌. வரம்புரையாக, (1) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ ஒரு விண்ணப்பமானது, உரிமையாளர்‌ எவராலும்‌ செய்யப்படாத நேர்விலும்‌, மற்றும்‌ அவர்‌ பொறுத்து, (5) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ ஓர்‌ அறிவிப்பு யாருக்கு சார்வு செய்யப்பட்ட நேர்விலும்‌, சம்பந்தப்பட்ட உரிமையாளரால்‌ வட்டாட்சியர்‌ முன்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ வடிவில்‌ உறுதிமொழி தாக்கல்‌ செய்யப்பட்டாலன்றி, வட்டாட்சியரால்‌ பட்டா கணக்கு புத்தகம்‌ எதுவும்‌ வழங்கப்படுதல்‌ ஆகாது. மேலும்‌ வரம்புரையாக, எந்தெவொரு நிலத்திற்கும்‌ உழிமையாளராக இல்லாத நபர்‌ எவரும்‌, பட்டா கணக்கு புத்தகத்திற்காக விண்ணப்பித்து அல்லது உரிமை கோரும்‌ நேர்வில்‌, வட்டாட்சியர்‌ மனநிறைவு அடைந்தால்‌, அத்தகைய நிலத்தினை பொறுத்து பட்டா கணக்கு புத்தகம்‌ வழங்கவதற்கான விண்ணப்பத்தை அல்லது உரிமை கோரலை எழுத்து பூர்வமான காரணங்களுடன்‌ பதிவு செய்து அதனை, அவர்‌ நிராகரித்தல்‌ வேண்டும்‌. (8) பட்டா கணக்கு புத்தகமானது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய வடிவில்‌ மற்றும்‌ பின்வரும்‌ விவரங்களை கொண்டிருத்தல்‌ வேண்டும்‌, அவையாவன: (a) நிலத்தின்‌ சர்வே எண்‌ அல்லது உட்பிரிவு எண்‌, பரப்பு மற்றும்‌ உள்ளுர்‌ பெயர்‌ ஏதேனும்‌ இருப்பின்‌, (b) உரிமையாளரின்‌ பெயர்‌ மற்றும்‌ முகவரி; (௦) வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற விவரங்கள்‌. (9) இந்தப்‌ பிரிவின்‌: பட்டா கணக்கு புத்தகம்‌ வழங்குகையில்‌, அத்தகைய பட்டா கணக்கு புத்தகத்தில்‌ அடங்கியுள்ள அனைத்து பதிவுகள்‌ மற்றும்‌ விவரங்களை, வட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ பராமரிக்கப்படும்‌ பட்டா கணக்கு புத்தகப்‌ பதிவேட்டில்‌ வட்டாட்சியரால்‌ சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌. பட்டா கணக்கு புத்தகப்‌ பதிவேடு, பதிவு செய்யும்‌ நோக்கத்திற்காக அத்தகைய வடிவில்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ பராமரிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (10) இந்தப்‌ பிரிவின்கீழ்‌, பட்டா கணக்கு புத்தகமானது வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய கட்டணத்தை செலுத்துவதன்‌ பேரில்‌, வழங்கப்படுதல்‌ வேண்டும்‌. 4. பட்டா கணக்கு புத்தகத்தில்‌ பதிவுகளின்‌ பிழையின்மைக்கான அனுமானம்‌.- பட்டா கணக்கு புத்தகத்தில்‌ உள்ள பதிவுகள்‌ மற்றும்‌ பட்டா கணக்கு புத்தகத்தில்‌ உள்ள பதிவுகளின்‌ சான்றிட்ட நகலானது, முரண்பாடு நிரூபிக்கப்படாத வரையிலோ அல்லது அதில்‌ புதிய பதிவு சட்டப்பூர்வமாக மாற்றீடு செய்யப்படாத வரையிலோ, உண்மையானது மற்றும்‌ சரியானது என அனுமானிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 5. பட்டா கணக்கு புத்தகத்தில்‌ மாற்றாக்கம்‌ அல்லது உரிமைமாற்ற பதிவுகளை பதிவு செய்தல்‌.- (1) விற்பனை, கொடை, அடைமானம்‌, பறிமாற்றம்‌, ஏற்பாடு அல்லது பிறவாறு எந்தவொரு நில உரிமை மாற்றம்‌ தொடர்பான ஆவணம்‌ எதுவும்‌, அத்தகைய நிலம்‌ தொடர்பான பட்டா கணக்கு புத்தகத்தை அத்தகைய பதிவு செய்யும்‌ அலுவலரிடம்‌ தாக்கல்‌ செய்தாலன்றி, பதிவுசெய்யும்‌ அலுவலரால்‌ பதிவு செய்யப்படுதல்‌ கூடாது. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்ட ஆவணம்‌ எதுவும்‌, பதிவுக்‌ கட்டணத்தை செலுத்த வேண்டிய நபர்‌, பட்டா கணக்கு புத்தகத்தில்‌ அத்தகைய உரிமைமாற்றம்‌ தொடர்பான தேவையான பதிவுகளைச்‌ செய்ய, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய கட்டணத்தை பதிவு செய்யும்‌ அலுவலரிடம்‌ செலுத்தினாலன்றி, பதிவு செய்யும்‌ அலுவலர்‌ பதிவு செய்தல்‌ ஆகாது. ஆவணத்தைப்‌ பதிவு செய்ததும்‌, பட்டா கணக்கு 10 புத்தகத்தில்‌ தேவையான பதிவுகளைச்‌ செய்த பிறகும்‌, பதிவுசெய்யும்‌ அலுவலர்‌ அத்தகைய பதிவிற்கான அறிக்கையை தயார்‌ செய்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ கூறப்பட்ட பதிவுகளின்‌ சான்றளிக்கப்பட்ட சுருக்கத்தை வட்டாட்சியருக்கு அனுப்புதல்‌ வேண்டும்‌. (3) அத்தகைய உரிமைமாற்றம்‌ தொடர்பான பதிவுகளின்‌ சான்றளிக்கப்பட்ட சுருக்கத்தை பெறுவதன்‌ பேரில்‌, வட்டாட்சியர்‌, அவரால்‌ பராமரிக்கப்படும்‌ பட்டா கணக்கு புத்தகப்‌ பதிவேட்டில்‌ தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுதல்‌ வேண்டும்‌; மேலும்‌ 3 ஆம்‌ பிரிவின்படி ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டா கணக்கு புத்தகத்தில்‌ தேவையான மாற்றங்கள்‌ மேற்கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌, அல்லது நேர்வி கேற்ப, தேவை ஏற்படின்‌ உட்பிரிவு செய்த பின்பு, வகுத்துரைக்கப்படலாகும்‌, அத்தகைய காலத்திற்குள்‌ அத்தகைய கட்டணத்தை வளுலித்ததன்‌ பேரில்‌, ஒரு புதிய பட்டா கணக்கு புத்தகத்தை வழங்குதல்‌ வேண்டும்‌. 6. பட்டா கணக்கு புத்தகத்தில்‌ உள்ள பதிவுகள்‌, உரிமை மூலத்திற்க்கு முதல்‌ நோக்குச்‌ சாட்சியமாக இருத்தல்‌- 3 ஆம்‌ உட்பிரிவின்படி வட்டாட்சியரால்‌ வழங்கப்பட்ட பட்டா கணக்கு புத்தகத்தில்‌ உள்ள பதிவுகள்‌, பட்டா கணக்கு புத்தகத்தில்‌ பதிவு செய்யப்பட்ட நிலப்‌ பகுதிகளுக்கு யாருடைய பெயரில்‌ பட்டா கணக்கு புத்தகம்‌ வழங்கப்பட்டிருக்கிறதோ, அந்நபரின்‌ உரிமை மூலத்தின்‌ முதல்‌ நோக்குச்‌ சான்றாக அதில்‌ பிறவாறு குறிப்பிடப்பட்டாலன்றி, முந்தைய எந்தவொரு வில்லங்கமும்‌ இல்லை என்றிருத்தல்‌ வேண்டும்‌. 7. உரிமைகளை பெறுதல்‌ குறித்து அறிக்கை செய்தல்‌.- (1) இறங்குரிமை, எஞ்சுநர்‌ உரிமை, மரபுரிமை, பாகப்பிரிவினை, விலைக்கு வாங்குதல்‌ அல்லது தீர்ப்பாணை அல்லது ஒரு நீதிமன்ற ஆணை அல்லது அரசின்‌ ஆணை அல்லது பிற அதிகாரத்தின்‌ மூலம்‌ எந்தவொரு நிலத்திலும்‌ அல்லது அதன்மீது ஜர்‌ உரிமையாளராக உரிமை பெற்ற எந்த ஒரு நபரும்‌, அத்தகைய உரிமையை அவர்‌ பெற்றுக்‌ கொண்டதற்காக, அவ்வாறு பெற்றுக்‌ கொண்ட நாளிலிருந்து மூன்று 11 மாதத்திற்குள்‌ அல்லது வகுத்துரைக்கப்படலாகும்‌ கூடுதல்‌ காலத்திற்குள்‌ வட்டாட்சியரிடம்‌ எழுத்து மூலமாக அறிவித்தல்‌ வேண்டும்‌. மேலும்‌, அக்குறிப்பிட்ட அலுவலர்‌ அறிக்கையை பெற்றதற்கான எழுத்து மூலமான ஒப்புதலை, அதைச்‌ செய்த நபருக்கு வழங்குதல்‌ வேண்டும்‌. வரம்புரையாக, அவ்வுரிமையை பெறும்‌ நபர்‌ ஒரு இளவராக அல்லது பிறவாறு தகுதியற்றவராக இருந்தால்‌, அவரின்‌ பாதுகாவலர்‌ அல்லது அவரின்‌ சொத்தில்‌ பற்று கொண்ட பிற நபர்‌, வட்டாட்சியருக்கு அறிக்கை செய்ய வேண்டும்‌. மேலும்‌ வரம்புரையாக, ஒரு பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின்‌ வாயிலாக உரிமை பெற்ற எந்தவொரு நபரும்‌, வட்டாட்சியருக்கு அறிக்கை அளிக்கும்‌ கடமையிலிருந்து விலக்களிக்கப்படுதல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.-- எந்த நபருக்கு சாதகமாக ஒரு அடைமான பொறுப்பு நிறைவேற்றப்பட்டதோ அல்லது தீர்க்கப்பட்டதோ அந்த நபர்‌, இப்பிரிவின்‌ உள்ளான பொருளின்படி உரிமை பெறுகிறார்‌. (2) 1 ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அறிக்கை பெறப்பட்டதன்‌ பேரில்‌, வட்டாட்சியர்‌, அவரால்‌ பராமரிக்கப்படும்‌ பட்டா கணக்கு புத்தகப்‌ பதிவேட்டில்‌ தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுதல்‌ வேண்டும்‌, மேலும்‌ 3 ஆம்‌ பிரிவின்படி ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டா கணக்கு புத்தகத்தில்‌ தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுதல்‌ வேண்டும்‌ அல்லது நேர்விற்கேற்ப உட்பிரிவு செய்த பின்னர்‌, தேவை ஏற்படின்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌, அத்தகைய காலத்திற்குள்‌ அத்தகைய கட்டணத்தை வளூலித்ததன்‌ பேரில்‌, ஒரு புதிய பட்டா கணக்கு புத்தகத்தை வழங்குதல்‌ வேண்டும்‌. வரம்புரையாக, அத்தகைய மாற்றம்‌ மேற்கொள்வதற்கு அல்லது, அத்தகைய புதிய பட்டா கணக்கு புத்தகம்‌ வழங்குவதற்கு முன்பு, வட்டாட்சியர்‌ 3 ஆம்‌ பிரிவின்‌, (7) ஆம்‌ உட்பிரிவில்‌ சொல்லப்பட்ட நடைமுறையை பின்பற்ற வேண்டும்‌. 12 8. சான்றளிக்கப்பட்ட நகல்கள்‌.- பட்டா கணக்கு புத்தகப்‌ பதிவேட்டில்‌ உள்ள பதிவுகளின்‌ சான்றளிக்கப்பட்ட நகல்களுக்கான விண்ணப்பத்தை வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ வசூலிப்பதன்‌. பேரில்‌, வட்டாட்சியரிடம்‌ தாக்கல்‌ செய்யலாம்‌, மேலும்‌ அவர்‌, அத்தகைய நகல்களை வழங்கலாம்‌. 9. கடன்‌ முகமை முன்பு பட்டா கணக்கு புத்தகத்தை முன்னிடல்‌.- (1) நிலத்தின்‌ பிணயத்தின்‌ பேரில்‌, எந்தவொரு கடன்‌ முகமையிடமிருந்தும்‌ கடன்‌ அல்லது பண உதவி பெறும்‌ ஒவ்வொரு நில உரிமையாளரும்‌, தனது நிலம்‌ தொடர்பான பட்டா கணக்கு புத்தகத்தினை, அத்தகைய கடன்‌ முகமையிடம்‌ தாக்கல்‌ செய்ய வேண்டும்‌. கடன்‌ முகமை, அத்தகைய நிதி உதவி அல்லது கடன்‌ பற்றிய விவரங்கள்‌ மற்றும்‌ நிலம்‌ தொடர்பான உரிமையாளரால்‌ செலுத்தப்பட்ட கட்டணம்‌ அல்லது ஏற்படுத்தப்பட்ட அடைமானம்‌ ஆகியவற்றை பட்டா கணக்கு புத்தகத்தில்‌ வழங்கப்பட்ட அந்தந்த நெடுவரிசைகளில்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌, பட்டா கணக்கு புத்தகத்தில்‌ தேவையான பதிவுகள்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. மேற்சொன்ன பதிவுகளின்‌ சுருக்கத்தின்‌ நகலை, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய காலத்திற்குள்‌ கடன்‌ முகமையால்‌ வட்டாட்சியருக்கு அனுப்பப்பட வேண்டும்‌, அத்தகைய சுருக்கத்தின்‌ நகலைப்‌ பெற்றவுடன்‌, வட்டாட்சியர்‌, தான்‌ பராமரிக்கும்‌ பட்டா கணக்கு புத்தக பதிவேட்டில்‌, அந்நிலம்‌ தொடர்பாக வழங்கப்பட்ட நிதியுதவி அல்லது கடன்‌ மற்றும்‌ கட்டணம்‌ அல்லது அடைமானம்‌ பற்றிய தேவையான பதிவுகளைச்‌ செய்வார்‌. 10. பட்டா கணக்கு புத்தகத்தில்‌ பதிவுகளின்‌ திருத்தம்‌.- (1) 3 ஆம்‌ பிரிவின்படி ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டா கணக்கு புத்தகத்தில்‌, பதிவு எதனையும்‌, நபர்‌ ஒருவரின்‌ மரணம்‌ காரணத்தினால்‌ அல்லது நிலத்தில்‌ உரித்தம்‌ கொண்டுள்ளதை உரிமைமாற்றம்‌ செய்யும்‌ காரணத்தினால்‌ அல்லது சூழ்நிலைகளில்‌ ஏற்படும்‌ வேறு ஏதேனும்‌ பிந்தைய மாற்றத்தின்‌ காரணத்தினால்‌ பட்டா திருத்தம்‌ தேவையென 13 நபரெவரும்‌ கோரினால்‌, அவரது பட்டா கணக்கு புத்தகத்தில்‌ உள்ள தொடர்புடைய பதிவுகளை திருத்துவதற்காக வட்டாட்சியரிடம்‌ விண்ணப்பம்‌ செய்தல்‌ வேண்டும்‌. (2 ௫ ஆம்‌ உட்பிரிவின்படி விண்ணப்பமொன்று, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய விவரங்களை கொண்டிருத்தல்‌ வேண்டும்‌, மேலும்‌ தனது கோரிக்கையை ஆதரிக்கும்‌ நம்பகத்தகுந்த ஆதாரம்‌ ஏதேனும்‌ இருப்பின்‌, அவ்விண்ணப்பத்தாரரால்‌, அதை ஆவணத்துடன்‌ மூலம்‌ சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) (ஐ (1) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ ஒரு விண்ணப்பத்தின்‌ பேரில்‌ ஓந்‌ ஆணை பிறப்பிப்பதற்கு முன்‌, வட்டாட்சியர்‌, குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்‌, மேலும்‌ சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ அவர்களது தரப்பினை எடுத்துரைப்பதற்கு நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும்‌. வட்டாட்சியர்‌, முடிவுசெய்கிறார்‌ எனில்‌, பட்டா கணக்கு புத்தகத்தில்‌ உள்ள பதிவுகளைப்‌ பொறுத்து எந்தவொரு திருத்தங்களையும்‌ செய்ய வேண்டுமென்று, அதற்கிணங்க அவர்‌ ஜர்‌ ஆணையைப்‌ பிறப்பித்தல்‌ வேண்டும்‌, மற்றும்‌ ஆணைக்கு செயல்விளைவு கொடுப்பதற்காக, தேவையானது என அவருக்கு தோன்றும்‌, அத்தகைய விளைவுசார்‌ திருத்தங்களை பட்டா கணக்கு புத்தகத்தில்‌ செய்தல்‌ வேண்டும்‌. 0) பட்டா கணக்கு புத்தகத்தில்‌ உள்ள பதிவுகளில்‌ எந்தவொரு திருத்தங்களையும்‌ மேற்கொள்வதற்கு, எந்தவொரு வாய்ப்பும்‌ இல்லை என வட்டாட்சியர்‌ முடிவுசெய்கிறவிடத்து, அவர்‌ விண்ணப்பத்தை நிராகரித்தல்‌ வேண்டும்‌. (9) (a) கூறு அல்லது ௦) கூறின்படி, ஓர்‌ ஆணையானது, அத்தகைய ஆணைக்கான காரணங்களை கொண்டிருத்தல்‌ வேண்டும்‌, மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தைகைய முறையில்‌ சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்‌. 14 11. தகவல்‌ அளிக்கும்‌ நபர்கள்‌.- (1) இச்சட்டத்தின்படி, எந்தவொரு பட்டா கணக்கு புத்தகத்திலும்‌ உரிமைகள்‌ அல்லது நலன்கள்‌ உள்ளிடப்பட வேண்டிய அல்லது உள்ளிடப்பட்ட நபர்‌ எவரும்‌, பட்டா கணக்கு புத்தகத்தில்‌ உள்ள பதிவுகளை தயாரிப்பதில்‌ அல்லது மாற்றியமைப்பதில்‌ ஈடுபட்டுள்ள வட்டாட்சியரின்‌ கோரிக்கையின்‌ பேரில்‌, அத்தகைய கோரிக்கையில்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய காலத்திற்குள்‌ அல்லது வட்டாட்சியர்‌ தன்‌ விருப்பப்படி அனுமதிக்கலாகும்‌ அத்தகைய கூடுதல்‌ காலத்திற்குள்‌, அவரின்‌ அதிகாரத்தில்‌ அல்லது உடைமையில்‌ அல்லது அது பற்றி அவரின்‌ அறிவுக்கு எட்டியவாறு முறையாக தயாரிக்க அல்லது திருத்தியமைக்க தேவையான அத்தகைய தகவல்‌ அல்லது ஆவணங்கள்‌ அனைத்தையும்‌ அளிக்க அல்லது சமர்பிக்க கட்டுப்பாடு கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ உள்ள கோரிக்கையின்படி, ஏதேனும்‌ தகவல்‌ வழங்கப்பட்டாலோ அல்லது ஏதேனும்‌ ஆவணம்‌ தாக்கல்‌ செய்யப்பட்டாலோ, வட்டாட்சியர்‌ அல்லது அவரால்‌ இதன்பொருட்டு அதிகாரம்‌ அளிக்கப்பட்ட அலுவலர்‌ எவரும்‌, அதை அளிக்கும்‌ அல்லது தாக்கல்‌ செய்யும்‌ அந்நபருக்கு அது பற்றி எழுத்துப்பூர்வ ஒப்புதலை வழங்க வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய ஆவணத்தை தாக்கல்‌ செய்ததன்‌ பொருண்மை மற்றும்‌ தேதியைக்‌ குறிப்பிடும்‌ ஒரு குறிப்பில்‌ தனது கையொப்பத்தை இடுதல்‌ வேண்டும்‌. 12. மேல்முறையீடு. இந்தச்‌ சட்டத்தின்படி வட்டாட்சியரால்‌ செய்யப்பட்ட ஓர்‌ ஆணையால்‌ பாதிக்கப்பட்ட நபரெவரும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய அதிகார அமைப்பிடம்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய காலஅளவிற்குள்‌ மேல்முறையீடு செய்யலாம்‌. மேலும்‌, அத்தகைய மேல்முறையீட்டின்‌ பேரில்‌ அத்தகைய அதிகார அமைப்பின்‌ முடிவானது, 13 ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, இறுதியானதாக இருத்தல்‌ வேண்டும்‌. 15 13. சீராய்வு.- அரசால்‌, அறிவிக்கையின்‌ வாயிலாக இதன்‌ பொருட்டு, அதிகாரமளிக்கப்பட்ட மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ படி நிலைக்கு குறையாத வருவாய்த்துறை அலுவலர்‌ எவரொருவரும்‌, அறிவிக்கையில்‌ குறிப்பிடப்படலாகும்‌ அத்தகைய பகுதியில்‌, இச்சட்டத்தின்படி நடவடிக்கை எதனையும்‌ பொறுத்து, தாமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினரின்‌ விண்ணப்பத்தின்‌ பேறிலோ தனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட வட்டாட்சியர்‌ அல்லது மேல்முறையீட்டு அலுவலரின்‌ ஆவணங்களை வரவழைத்து ஆய்வு செய்யலாம்‌; மற்றும்‌ தான்‌ பொருத்தமெனக்‌ கருதும்‌ ஆணைகளைப்‌ பிறப்பிக்கலாம்‌. வரம்புரையாக, எந்தவொரு நபருக்கும்‌, அவரது தரப்பினை எடுத்துரைப்பதற்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டாலன்றி, அவருக்கு குந்தகமான ஆணை எதுவும்‌ பிறப்பிக்கப்படுதல்‌ கூடாது. 14. உரிமை வழக்குகளுக்குத்‌ தடை.- இந்தச்‌ சட்டத்தின்படி பராமரிக்கப்படும்‌ எந்தவொரு பட்டா கணக்கு புத்தகத்திலும்‌, பதிவைச்‌ சேர்க்கவோ, நீக்கவோ அல்லது திருத்தம்‌ செய்யவோ கோருவது தொடர்பாக அரசுக்கு எதிராக அல்லது எந்தவொரு அரசு அலுவலருக்கு எதிராக எந்தவொரு வழக்கும்‌ தொடரப்படாது. வரம்புரையாக, இச்சட்டத்தின்‌ படி பட்டா கணக்கு புத்தகத்தில்‌ பதிவு செய்ததன்‌ மூலம்‌ நபரெவரும்‌ அவரின்‌ உடைமையில்‌ உள்ள உரிமை எதுவும்‌ பாதிக்கப்படுமிடத்து, 1963 ஆம்‌ ஆண்டு குறித்தவகை தீருதவிச்‌ சட்டத்தின்‌ (மையச்சட்டம்‌ 47,1963) VI ஆம்‌ அத்தியாயத்தின்‌ கீழ்‌ அவரின்‌ உரிமைகளை அறிவிப்பதற்காக, அவரின்‌ உரிமை மூலத்திலுள்ள அத்தகைய உரிமையை மறுக்கும்‌ அல்லது நலனை மறுக்கும்‌ நபர்‌ எவருக்கும்‌ எதிராக, அவர்‌ ஓர்‌ உரிமை வழக்கு தொடுக்கலாம்‌, மேலும்‌ பட்டா கணக்கு புத்தகத்தில்‌ உள்ள பதிவு, அத்தகைய அறிவிப்பு எதனின்படியும்‌ திருத்தப்படுதல்‌ வேண்டும்‌. 16 15. விண்ணப்பம்‌ அல்லது வாதுரையில்‌ இணைக்கப்பட வேண்டிய பதிவேடுகளின்‌ சான்றளிக்கப்பட்ட நகல்கள்‌.- இந்தச்‌ சட்டம்‌ பொருந்துகின்ற பகுதி எதிலும்‌ அமைந்துள்ள நிலம்‌ தொடர்புடைய, இங்கு இதன்பின்பு பொருள்‌ வரையறுக்கப்பட்டபடி, ஒவ்வொரு உரிமை வழக்கிலும்‌ அல்லது விண்ணப்பத்திலும்‌ வாதி அல்லது விண்ணப்பத்தாரர்‌, அத்தகைய நிலம்‌ தொடர்பான பட்டா கணக்கு புத்தகம்‌ அல்லது பட்டா கணக்கு புத்தக பதிவேட்டில்‌ உள்ள பதிவின்‌ சான்றளிக்கப்பட்ட நகல்‌ ஒன்றையும்‌, வாதுரை அல்லது விண்ணப்பத்துடன்‌ இணைத்தல்‌ வேண்டும்‌. (2) நீதிமன்றம்‌ போதுமெனக்கருதும்‌ எந்தவொரு காரணத்திற்காகவும்‌, வாதி அல்லது மனுதாரர்‌ அவ்வாறு செய்யத்தவறினால்‌, நீதிமன்றத்தால்‌ நிர்ணயிக்கப்படும்‌ நியாயமான காலத்திற்குள்‌ அத்தகைய சான்றளிக்கப்பட்ட நகலை, அவர்‌ சமர்ப்பித்தல்‌ வேண்டும்‌. மேலும்‌ அத்தகைய சான்றளிக்கப்பட்ட நகலானது இணைக்கப்படவில்லை அல்லது சமர்ப்பிக்கப்படவில்லை எனில்‌, வாதுரை அல்லது விண்ணப்பம்‌ தள்ளுபடி செய்யப்படுதல்‌ வேண்டும்‌; ஆனால்‌, அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டது, சான்றளிக்கப்பட்ட நகலுடன்‌ இணைக்கப்பட்டு, அதே வழக்கு மூலத்திற்காக ஒரு புதிய வாதுரை அல்லது அதே பொருண்மைக்கூறோடு தொடர்புடைய புதிய விண்ணப்பத்தை தாக்கல்‌ செய்வதைத்‌ தன்னிச்சையாக தடை ஏற்படுத்தாது. (3) இப்பிரிவில்‌ (ஐ "உரிமை வழக்கு" என்பது 1908 ஆம்‌ ஆண்டு உரிமையியல்‌ நடைமுறை தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மைய சட்டம்‌ V/1908) வகைமுறைகள்‌ பொருந்தும்‌ ஓர்‌ உரிமை வழக்கு என்று பொருள்படும்‌. (b) "விண்ணப்பம்‌" என்பது,- 17 () உரிமை வழக்கொன்றில்‌ ஆணை அல்லது தீர்ப்பாணை ஒன்றை நிறைவேற்றுவதற்காக; (1) மேற்சொன்ன உரிமையியல்‌ நடைமுறை தொகுப்பு சட்டத்தின்கீழ்‌ வழக்கு ஒன்றில்‌ நீதிமன்றத்தின்‌ கருத்தை உரைத்து உடன்படிக்கை ஒன்றை தாக்கல்‌ செய்வதற்காக; (i) 1940 ஆம்‌ ஆண்டு பொதுவர்‌ தீர்ப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 10/1940) 20-ஆம்‌ பிரிவின்கீழ்‌ பொதுவர்‌ தீர்ப்பு முறைக்கு பரிந்துரைக்கப்படும்‌ உடன்படிக்கை ஒன்றை தாக்கல்‌ செய்வதற்காக; (iv) மேற்சொன்ன இசைவுத்‌ தீர்ப்பு முறை சட்டத்தின்‌ 14 ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ தீர்ப்பு ஒன்றை தாக்கல்‌ செய்வதற்காக; ) இப்பிரிவு பொருந்தும்‌ என அரசு, அறிவிக்கை வாயிலாக பணிபுரைக்கும்‌ வேறு எந்த வகையிலுமான ஒரு விண்ணப்பம்‌ என்று பொருள்படும்‌; (c) ஒரு விண்ணப்பம்‌ எந்தத்‌ தீர்ப்பாணை அல்லது பிற பொருட்பாடு தொடர்பாகச்‌ செய்யப்படுகிறதோ, அந்தத்‌ தீர்ப்பு அல்லது பிற பொருட்பாடு நிலம்‌ சார்ந்தது எனில்‌, அந்த விண்ணப்பமும்‌ நிலம்‌ தொடர்பானதாகவே கருதப்படுதல்‌ வேண்டும்‌. 16. தகவல்‌ அளிப்பதற்கு தவறியதற்கான தண்டம்‌.- 3 ஆம்‌ பிரிவின்‌ (5) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அல்லது 11 ஆம்‌ பிரிவின்கீழ்‌ வேண்டுறுத்தப்பெறும்‌ ஆவணங்கள்‌ எதனையும்‌ தாக்கல்‌ செய்வதற்கு அல்லது தகவல்‌ எதனையும்‌ அளிப்பதற்கு, அப்பிரிவின்‌ கீழ்‌ குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக அல்லது அப்பிரிவின்கீழ்‌ வட்டாட்சியரால்‌ அனுமதிக்கப்படும்‌ கூடுதல்‌ காலம்‌ ஏதேனுமிருப்பின்‌, அக்காலத்திற்குள்ளாக, அளிப்பதற்கு தவறிய நபரெவரும்‌, இரு நூறு ரூபாய்‌ வரை நீட்டிக்கப்படலாகும்‌ அபராதம்‌ விதித்துத்‌ தண்டிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 18 17. தவறான தகவல்‌ அளிப்பதற்கான தண்டம்‌.- இச்சட்டத்தின்கீழ்‌ தகவல்‌ எதனையும்‌ அளிக்க வேண்டிய நபர்‌ எவரும்‌, தான்‌ அளிக்கும்‌ தகவல்‌ தவறானது என தெரிந்தே அல்லது அது தவறானது என்று நம்புவதற்கு போதுமான காரணம்‌ இருந்தும்‌ அத்தகைய தகவலை அளித்தால்‌, அவர்‌ மூன்று மாதங்கள்‌ வரை நீட்டிக்கப்படலாகும்‌ ஒரு காலஅளவிற்கு சிறைத்‌ தண்டனை அல்லது ஆயிரம்‌ ரூபாய்‌ வரை நீட்டிக்கப்படலாகும்‌ அபராதம்‌ விதித்துத்‌ தண்டிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 18. குற்றங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்‌.- இச்சட்டத்தின்கீழ்‌ தண்டனைக்குரிய குற்றம்‌ எதனையும்‌, அரசால்‌ இதன்‌ பொருட்டு அதிகாரம்‌ அளிக்கப்பட்ட அலுவலர்‌ ஒருவரால்‌ செய்யப்படும்‌ எழுத்துப்பூர்வ புகாரின்றி, நீதிமன்றம்‌ எதுவும்‌ விசாரணைக்கு எடுத்துக்‌ கொள்ளக்கூடாது. 19. நல்லெண்ணத்தில்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப்‌ பாதுகாப்பு.- இச்சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதி எதனையும்‌ நல்லெண்ணத்தில்‌ செய்யப்பட்ட அல்லது செய்ய கருதப்பட்ட எதற்காகவும்‌ அலுவலர்‌ அல்லது அதிகார அமைப்புக்கு எதிராக உரிமை வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவும்‌ தொடரப்படுதல்‌ ஆகாது. 20. விலக்களிப்பு. இச்சட்டத்தில்‌ அடங்கியுள்ள எதுவும்‌, மைய அரசு அல்லது எந்தவொரு மாநில அரசு அல்லது எந்தவொரு உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமான எந்தவொரு நிலத்திற்கும்‌ பொருந்தாது. 21. இச்சட்டமானது அனைத்து பிற சட்டங்களை விட மேலோங்கியிருத்தல்‌.- ஏதேனும்‌ பிற சட்டம்‌, வழக்காறு, வழக்கம்‌ அல்லது உடன்படிக்கை ஏதொன்றிலும்‌ அதற்கு முரணாக என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, இச்சட்டத்தின்‌ வகைமுறைகளானது செயல்பாட்டில்‌ இருத்தல்‌ வேண்டும்‌. 22. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- (1) அரசானது, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளை நிறைவேற்றுவதற்கான விதிகளைச்‌ செய்யலாம்‌. 19 (2) இச்சட்டத்தின்‌ கீழ்‌ செய்யப்பட்ட விதிகள்‌ அனைத்தும்‌ தமிழ்நாடு அரசிகழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌ மேலும்‌ அவை ஒரு குறிப்பிட்ட நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டுமென வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டாலன்றி, அவை வெளியிடப்பட்ட அன்னாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்‌ படி செய்யப்பட்ட விதிகள்‌ ஒவ்வொன்றும்‌ அது செய்யப்பட்ட பின்‌ கூடிய விரைவில்‌ சட்டமன்ற பேரவையின்‌ இரு அவைகளின்‌ முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடரோ அதற்கு அடுத்து வரும்‌ கூட்டத்தொடரோ முடிவதற்கு முன்பு அத்தகைய விதி எதிலும்‌ பேரவையானது மாறுதல்‌ எதையேனும்‌ செய்யுமானால்‌ அல்லது அந்த விதி எதுவும்‌ செய்யப்படுதல்‌ கூடாது என அப்பேோரவை முடிவு செய்யுமாணால்‌ அதன்‌ பின்‌ அந்த விதி எதுவும்‌ அவ்வாறு மாறுதல்‌ செய்த வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌; அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல்‌ வேண்டும்‌; எனினும்‌, அத்தகைய மாற்றமைவு அல்லது நீக்கறவு எதுவும்‌, அந்த விதியின்படி முன்னரே செய்யப்பட்ட செயல்‌ எதனின்‌ செல்லு தன்மைக்கும்‌ குந்தகமின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 23. வீட்டு மனைக்கு பட்டா கணக்கு புத்தகம்‌ வழங்குதல்‌. ஒவ்வொரு உரிமையாளருக்கும்‌, அவர்‌ உரிமைக்‌ கொண்டுள்ள வீட்டுமனையை பொறுத்து, வட்டாட்சியர்‌ ஒரு பட்டா கணக்கு புத்தகம்‌ வழங்குதல்‌ வேண்டும்‌. (2) இந்தச்‌ சட்டத்தில்‌ பிறவாறாக வகை செய்யப்பட்டாலான்றி, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளும்‌ அதன்படி செய்யப்பட்ட விதிகளும்‌, இந்தப்‌ பிரிவின்படி வீட்டுமனைக்கான பட்டா கணக்குப்‌ புத்தகம்‌ வழங்குவதற்கு எவ்வாறு பொருந்துமோ, அவ்வாறே, இந்தச்‌ சட்டத்தின்படி நிலத்திற்கு பட்டா கணக்கு புத்தகம்‌ வழங்குதற்கும்‌ பொருந்துதல்‌ வேண்டும்‌. விளக்கம்‌:- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கத்திற்காக, 20 (a) "வீட்டுமனை" என்பது, கட்டிட நோக்கத்திற்காக வைத்திருக்கப்படும்‌ ஒரு நிலத்தின்‌ மனை, அதாவது அதன்மீது ஏதேனும்‌ கட்டிடம்‌ அமைக்கப்பட்டிருந்தாலும்‌ அல்லது இல்லாவிட்டாலும்‌ வீட்டுமனை என்று பொருள்படும்‌, மேலும்‌ அத்தகைய கட்டிடத்தைச்‌ சுற்றியுள்ள திறந்தவெளி அல்லது அதனுடன்‌ ஒட்டியுள்ள முற்றம்‌ ஆகியவையும்‌ இதில்‌ அடங்கும்‌; ஆனால்‌ 2 ஆம்‌ பிரிவின்‌ (4) ஆம்‌ கூறில்‌ வரையறுக்கப்பட்ட நிலத்தை உள்ளடக்காது; (b) "உரிமையாளர்‌" என்பது வீட்டுமனையில்‌ தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ அல்லது பொதுவாகவோ முழு உரிமையாளராக அல்லது வரையறுக்கப்பட்ட உரிமையாளராக உடைமையிலுள்ள நபர்‌ எவரும்‌ என்று பொருள்படும்‌; ஆனால்‌ வாடகைதாரர்‌, குத்தகைதாரர்‌ அல்லது அடைமானதாரரை உள்ளடக்காது; (௦) "பட்டா கணக்கு புத்தகம்‌" என்பது இந்த பிரிவின்படி வழங்கப்பட்ட பட்டா கணக்கு புத்தகம்‌ என்று பொருள்படும்‌. 24. இடர்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌.- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளைச்‌ செயற்படுத்துவதில்‌ இடர்பாடுகள்‌ எதுவும்‌ எழுமானால்‌, அரசு, தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படும்‌ ஆணை ஒன்றின்‌ மூலமாக, அந்த இடர்பாட்டை நீ்க்குவதற்குத்‌ தேவையான அல்லது உகந்தவையாக தனக்குத்‌ தோன்றுகிற இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகையில்‌ அத்தகைய வகைமுறைகளைச்‌ செய்யலாம்‌. வரம்புரையாக, அத்தகைய ஆணை எதுவும்‌, தமிரற்தாடு அரசிதழில்‌ இச்சட்டம்‌ வெளியிடப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டு கால அளவு முடிந்த பின்னர்‌ செய்யப்படலாகாது. 21 (2) இந்தப்‌ பிரிவின்கீழ்‌ செய்யப்பட்ட ஒவ்வொரு ஆணையும்‌, அது செய்யப்பட்ட பின்பு கூடிய விரைவில்‌, சட்டப்‌ பேரவையின்‌ இரு அவைகளின்‌ முன்பு வைக்கப்பட வேண்டும்‌.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts