Tamil Nadu · 1994 · Act 21
The Tamil Nadu Panchayats Act,1994
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
தமிழ்நாடு 1994-ஆம் ஆண்டு ஊராட்சிகள் சட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையினால் இயற்றப்பட்டு ஆளுநரால் 1994 ஆம்
ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்ட இச்சட்டம் பொது
தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
(தமிழ்நாடு சட்டம் 21,1994)
1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை நீக்கிவிட்டு திருப்பி
இயற்றப்பட்ட சட்டம்.
ஊராட் சிகளை, பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கக்கூடிய தன்னாட்சி
அமைப்புகளாகச் செயல்படுத்துவதற்காகவும், ஊரக வளர்ச்சித் திட்டங்களை,
இன்னும் திறம்பட நிறைவேற்றி முடிப்பதற்காகவும், 1992-ஆம் ஆண்டு
அரசமைப்பு (எழுபத்து மூன்றாம் திருத்தச்) சட்டத்திற்கிணங்கிய வகையில்,
ஊராட்சிகள் தொடர்பாக கிராம நிலையிலும், இடைப்பட்ட நிலையிலும், மாவட்ட
நிலையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளாக மூன்று படிநிலைகளைக்
கொண்ட ஊராட்சி அமைப்பு முறையொன்றை நிறுவுவதற்காக வேண்டி, 1958
ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை நீக்கிவிட்டு மறு
சட்டமியற்றுவதற்கு உகந்ததாய் இருக்க;
இந்தியக் குடியரசின் நாற்பத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு இச்சட்டமியற்றபட்டது.
1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்.
அத்தியாயம் 1
முன்னுரை
1. குறுந்தலைப்பும் எல்கையும் தொடக்கமும்
2. சொற்களின் பொருள் விளக்கங்கள்.
அத்தியாயம் 2
கிராமசபை
3. கிராம சபை
அத்தியாயம் 3
ஊராட்சிகளையும், வட்டார ஊராட்சி மன்றங்களையும் மாவட்ட ஊராட்சிகளையும்
அமைத்தல்
4. ஊராட்சிகளை அமைத்தல்
5. 1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் பிரிவுகள்
அல்லது அதன் கீழ் செய்த விதிகளையும் விரிவுபடுத்துவது.
6. ஊராட்சிகளை அமைத்தலும் அவற்றை நிறுமங்களாகப் பதிவு செய்தலும்
7 ஊராட்சி கிராமங்களின் பாகுபாட்டினை மாற்றியமைத்தல்
8. ஊராட்சி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை
9. ஊராட்சிகளின் ஆட்சிக் காலம்
10. ஊராட்சிக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தல்
11. இட ஒதுக்கீடு
12. ஊராட் சியை தொகுதிகளாகப் பிரித்தல்
13. உறுப்பினர்களின் பதவிக்காலம்.
14. ஊராட் சிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள்
வட்டார ஊராட்சி மன்றங்கள்
15. வட்டார ஊராட்சியை அமைத்தல்
16. வட்டார ஊராட்சி மன்றங்களை அமைத்தலும் அவற்றை நிறுமங்களாக பதிவு
செய்தலும்
17. வட்டார ஊராட்சி மன்றத்தின் அமைப்பும், உறுப்பினர்களின் எண்ணிக்கையும்
18. வட்டார ஊராட்சி மன்றத்தின் ஆட்சிகாலம்
19. வட்டார ஊராட்சி மன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல்
20. இ ஒதுக்கீடு
21. வட்டார ஊராட்சியை தொகுதிகளாக பிரித்தல்
22. உறுப்பினர்களின் பதவிக்காலம்.
23. வட்டார ஊராட்சிக்கான வாக்காளர் பட்டியல்
மாவட்ட ஊராட்சிகள்
24. மாவட்ட ஊராட்சியை அமைத்தலும் அவற்றை நிறுமங்களாக பதிவு செய்தலும்.
25. மாவட்ட ஊராட் சியை அமைத்துருவாக்குதல்
26. உறுப்பினர்களின் தேர்தல்
27. மக்கள் தொகை கணக்கீட்டிற்குப் பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்களைத் தீர்மானித்தல்
28. மண்டலத் தொகுதிகளின் எல்லை வரையறுத்தல்
29. உறுப்பினர்களின் பதவிக்காலம்
30. மாவட்ட ஊராட் சிக்கான வாக்காளர் பட்டியல்
31. மாவட்ட ஊராட்சிகளின் ஆட்சிகாலம்
32. இட ஒதுக்கீடு
உறுப்பினர்களின் தகுதி, தகுதியின்மை முதலியன
33. வேட்பாளர்களின் தகுதி
34. அரசு உள்ளாட்சி அமைப்புகள் முதலானவற்றில் அலுவலர்களின் மற்றும்
பணியாளர்களின் தகுதியின்மை
35. தேர்தல் குற்றங்களுக்காக, குற்றவாளியெனத் தீர்மானிக்கப்பட்டவர்களின்
தகுதியின்மை
36. வாக்காளர்களின் தகுதியின்மை
37. வேட்பாளர்களின் தகுதியின்மை
38. உறுப்பினர்களின் தகுதியின்மை
39. உறுப்பினர்களை பதவியில் மீண்டும் சேர்த்தல்
40. உறுப்பினர்களால் செய்யப்பட வேண்டிய உறுதி ஏற்பு அல்லது உறுதியளிப்பு
41. உறுப்பினர்களின் தகுதியின்மை தொடர்பான பிரச்சனையை முடிவு செய்யும்
அதிகார அமைப்பு
ஊராட்சியின் தலைவர் மற்றும் துணைத்தலைவர்
42. ஊராட்சியின் தலைவரும் துணைத்தலைவரும்
43. தலைவரைத் தேர்ந்தெடுத்தல்
44. துணைத் தலைவரின் தேர்தல்
45. தலைவர், துணைத் தலைவர் என்கின்ற பதவி முடிவுற்றுப் போதல்
46. தலைவரின் அலுவல்கள்
47. தலைவரின் அலுவல்கள் வந்தடைதலும் அதிகார ஒப்படைப்பு செய்யப்படுதலும்.
மற்றும் தலைவரின் பதவியில் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புதலும்.
48. தலைவரின் அலுவல்களை ஒப்படைப்பு செய்தல்
49. வட்டார ஊராட்சி மன்றத்தின் தலைமையரும் துணைத்தலைமையரும்
50. வட்டார ஊராட்சி மன்றத்தின் தலைமையரின் தேர்தல்
51. வட்டார ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைமையருக்கான தேர்தல்
52. தலைமையரின் அலுவல்கள்
53. வட்டார ஊராட்சியின் தலைமையர் மற்றும் துணைத் தலைமையரின் பதவி
முடிவுற்று போதல்
54. வட்டார ஊராட்சி மன்றம் ஒன்றில் தலைமையரின் அலுவல்கள்
வந்தடைதலும், ஒப்படைப்பு செய்யப்படுதலும் மற்றும் தலைமையரின் பதவியில்
ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புதலும்
55. மாவட்ட ஊராட்சியின் தலைமையரும் துணைத் தலைமையரும்
56. மாவட்ட ஊராட்சியின் தலைமையரின் மற்றும் துணைத் தலைமையரின்.
தேர்தல்
57. தலைவர், தலைமையர் முதலிய பதவிகளில் இட ஒதுக்கீடு
அத்தியாயம் 4.
தேர்தல் தொடர்பான குற்றச்செயல்கள்
58. தேர்தல் இரகசியத்தை மீறுதல்
59. தேர்தலொன்றில் ஆள் மாறாட்டம் செய்ததற்காகக் குறைந்தது எவ்வளவு
தண்டனை அளிக்கப்படுதல் என்பது
60. தேர்தல் தொடர்பாக வகுப்பினர்களுக்கிடையே பகைமையை வளர்த்தல்
61. தேர்தல் நாளுக்கு முந்திய நாளும் தேர்தல் நாள் அன்றும் பொதுக்கூட்டங்கள்
நடத்துவதற்குத் தடை
62. தேர்தல் கூட்டங்களில் கலவரங்கள்
63. துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் முதலானவற்றை அச்சிடூவதன் மீதான
கட்டுப்பாடுகள்
64. தேர்தல்களில் அலுவலர்கள்: முதலானோர் வேட்பாளர்களுக்காக.
செயல்படுவதோ அல்லது வாக்களிப்பதில் செல்வாக்கைப் பயன்படுத்துதலோ
கூடாது.
65. வாக்குச் சாவடிகளிலோ அதற்கு அருகாமையிலோ வாக்கு திரட்டுவதில்
தமக்கு ஆதரவாக வாக்கு திரட்டுவதைத் தடைசெய்தல்.
66. வாக்குச் சாவடிகளிலோ அதற்கு அருகாமையிலோ முறையற்று
நடந்தமைக்கான தண்டனை
67. வாக்கு சாவடியில் தவறாக நடந்தமைக்கான தண்டனை
68. தேர்தல்களில் போக்குவரத்து சாதனத்தைச் சட்டத்திற்கு முரணாக வாடகைக்கு
அமர்த்துவதற்கோ அல்லது முயன்று பெறுவதற்கோவான தண்டனை.
69. தேர்தல் தொடர்பான அலுவல் கடமையை ம்றுதல்
70. வாக்குச் சாவடியில் இருந்து வாக்குச் சீட்டுகளை அப்புறப்படுத்துவது ஒரு
குற்றச் செயலாக இருத்தல்
71. பிற குற்றச் செயல்களும் அவற்றிற்கான தண்டனைகளும்
72. ஒரு சில தேர்தல் சார்ந்த குற்றச் செயல்களை செயலாட்சி வரம்பிற்கு எடுத்துக்
கொள்ளுதல்
73.
தேர்தல் நோக்கங்களுக்காகச் சொத்தினைக் கோரிப் பெறுதல்
தேர்தல் நோக்கங்களுக்கான வளாகங்கள், ஊர்திகள் முதலனாவற்றைக்
கோரிப்பெறுதல்
74.
75
76.
77.
78.
79.
80.
தொகை செலுத்துதல்
தகவல் பெறுவதற்கான அதிகாரம்
வளாகத்தினுள் நுழைதல் மற்றும் சோதனை இடுதல் பற்றிய அதிகாரம்.
கோரிப்பெற்ற வளாகத்திலிருந்து வெளியேற்றுதல்
வளாகத்தை கோரிப் பெறுவதனின்று விடுவித்தல்.
கோரிப்பெறுவது தொடர்பாக அரசின் அலுவலை ஒப்படைவு செய்தல்
கோரிப்பெறுகின்ற ஆணை எதனின் மீறுகைக்குமான தண்டனை
81. தனித்தனியாக உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்குமான உரிமைகள்
82. தலைவர், துணைத் தலைவர், தலைமையர், துணைத் தலைமையர் அல்லது
உறுப்பினர் எவரும் ஊதியம் பெறுதல் கூடாது என்பது
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
அத்தியாயம் 5
செயல் அலுவலரின் அதிகாரங்களும் கடமைகளும்
ஊராட்சி செயல் அதிகாரி
செயல் அலுவலரின் செய்கடமைகள்
ஆணையர்
ஆணையர்
செயல் அலுவலர் மற்றும் ஆணையரின் நெருக்கடிக்கால அதிகாரங்கள்
தலைமைச் செயல் அலுவலர்
தலைமைச் செயல் அலுவலர்
தலைமைச் செயல் அலுவலரின் செய்கடமை, அதிகாரம் மற்றும் அலுவல்கள்
அத்தியாயம் 6
நடைமுறை
ஊராட்சிக் கூட்டங்களில் தலைமையேற்பு
ஊராட்சியின் கூட்டங்கள்:
9. உறுப்பினர்கள். எப்போது விவாதங்களில் பங்கேற்பதினின்றும்
வாக்களிப்பதினின்றும் விலகியிருப்பது என்பது
92. நடவடிக்கைகளின் நிகழ்ச்சி குறிப்புகள்
93. பதிவுருக்களைத் தருவிப்பதற்கு, ஊராட்சிக்கு உள்ள அதிகாரம்
94. ஊராட்சிகள், வட்டார ஊராட்சி மன்றங்கள், மாவட்ட ஊராட்சிகள் மற்றும்
குழுக்களின் நடவடிக்கைகள்.
95. கூட்டுக் குழுக்களை நியமித்தல்
96. குழுக்கள்
97. நிலைக்குழுக்கள்
நிர்வாக அறிக்கைகள்
98. ஊராட்சிகளின் நிர்வாக அறிக்கைகள்
99. வட்டார ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் நிருவாக
அறிக்கை
நடவடிக்கைகளைச் செல்லத்தக்கதாக்குதல்
100. ஊராட்சி, வட்டார ஊராட்சி மன்றம் மற்றும் மாவட்ட ஊராட்சி
முதலியனவற்றின் செயல்கள், குறைபாடு, காலியிடம் முதலியவற்றின்.
காரணமாகச் செல்லாதவை ஆக்கப்படுதல் ஆகா என்பது.
அத்தியாயம் 7
ஊராட் சிகளின் பணியமைப்பு அவற்றின் அதிகாரங்களும் அலுவல்களும்
101. ஊராட்சிகளை நிறுவுதல்
102. ஊராட்சிகளின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பணி நிபந்தனைகள்
1403. பொதுவிலுள்ள அலுவலர்களைப் பணியமர்த்தம் செய்தல்
104. ஊராட்சி மற்றும் வட்டார ஊராட்சி மன்றங்களின் அலுவலர்களையும்
பணியாளர்களையும் இடமாற்றம் செய்தல்
1405. மாவட்ட ஊராட்சியின் அலுவலர்களையும் பணியாளர்களையும் இடமாற்றம்
செய்வதற்கு அரசிற்கு உள்ள அதிகாரம்.
106. அலுவலர்களையும் பணியாளர்களையும் தண்டிப்பதற்கான அதிகாரம்.
107. குறித்த சில பணிப்பாணைகள் மக்கள் நல்வாழ்வு நிறுவனங்களுக்குப்
பொருந்துதல்
108. வட்டார ஊராட்சி பள்ளிகளிலுள்ள தலைமையாசிரியர்கள் உள்ளடங்கலான
ஆசிரியர்களும் அடிப்படைப் பணியாளர்களும் அரசுப் பணியாளர்களாக இருப்பர்
என்பது.
109. வட்டார ஊராட்சி மன்றங்களிலுள்ள மக்கள் நல்வாழ்வு அமைப்புகளிலுள்ள
நல்வாழ்வு உதவியாளர்கள், துணைச் செவிலியர், மருத்துவச்சிகள் மற்றும்
பேறுகால உதவியாளர்கள் ஆகியோர் அந்தப் பணியாளர்களாக இருப்பர் என்பது.
அத்தியாயம் 8
ஊராட்சிகள், வட்டார ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின்.
அலுவல்கள் அதிகாரங்கள் மற்றும் சொத்து
1140. குறித்த சில பொருட்பாடுகளுக்கு வகைசெய்வதற்கு ஊராட்சிகளுக்குள்ள
கடமை
111. குறித்த சில பிற பொருட்பாடுகளுக்கு வகைசெய்வதற்கு ஊராட்சிக்குள்ள
அதிகாரம்.
112. குறித்த சில பொருட்பாடுகளுக்கு வகைசெய்வதற்கு வட்டார ஊராட்சி
மன்றத்திற்குள்ள கடமை
113. சமூக மேம்பாட்டிற்கான தேசிய விரிவாக்க பணித் திட்டத்தை
நிறைவேற்றுவதை வட்டார ஊராட்சி மன்றங்களிடம் ஒப்படைத்தல்
114. குறித்த சில செயல்திட்டங்களை வட்டார ஊராட்சி மன்றங்களிடம்
ஒப்படைத்தல்
115. குறித்த சில பொருட்பாடுகளுக்கு வகைசெய்வதற்கு வட்டார ஊராட்சி
மன்றத்திற்குள்ள அதிகாரம்.
116. பொதுவான இடுகாடுகள் மற்றும் சுடுகாடுகள் முதலியன.
117. பொதுச் சாலைகளிலும் பொது இடங்களிலும் விளக்குவசதி செய்தல்.
118. பொதுவான மருந்தகங்கள், குழந்தை நல மையங்கள் முதலியவற்றைப்
பேணிவருதல்.
119. அசையாச் சொத்து நிறுவனங்களின் மேலாண்மை பணிகளை
நிறைவேற்றுதல் அல்லது பேணிவருதல் முதலியவற்றை ஊராட்சி ஒன்றிற்கு
மாற்றம் செய்தல்.
120. ஒதுக்கீடு செய்யப்படாத காடுகளையும் பிற நிறுவனங்களை அல்லது
பணிகளை ஊராட்சிக்கு மாற்றம் செய்தல்
121. ஊராட்சியிடம் உரிமை நிலை பெற்றுள்ள ஒதுக்கப்படாத காடுகளின்
அனுபோக உரிமையை மீட்க அரசுக்குள்ள அதிகாரம். இழப்பீடு கொடுத்தல்
முதலியன.
122. நிலைக்கட்டளைகளின் அல்லது இனாம்களின் கட்டுப்பாட்டை மாற்றம்
செய்வதற்கு அல்லது திரும்ப கைக்கொள்வதற்கு நில நிருவாக
ஆணையருக்குள்ள அதிகாரம்.
123. வட்டார ஊராட்சி மன்றத்தின் அலுவல்களைக் கூடுதலாக்க அரசிற்குள்ள
அதிகாரம்.
124. நன்கொடைகளையும், அறப்பொறுப்புகளையும் ஏற்றுகொள்வதற்குள்ள
அதிகார வரம்பு.
125. பொது சாலைகளை ஊராட்சிகளிடம் ஒப்படைத்தல்
126. வட்டார ஊராட்சி மன்றங்களிடம் பொதுச் சாலைகளை ஒப்படைப்பது.
127. இச்சட்டத்தின் செயற்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ள பொதுச் சாலைகள்
குறித்து ஊராட்சிக்குள்ள கடமை
128. அபாயகரமான கட்டிட அமைப்புகளின் நேர்வில் முன்னெச்சரிக்கை
ஏற்பாடுகள்
129. அபாயகரமான மரங்களை பற்றிய முன்னெச்சரிக்கைகள்
130. கட்டிடங்கள் அல்லது நிலத்திற்கு வேலியிடுதல் மற்றும் புதர்செடிகளையும்
மரங்களையும் வெட்டி சரிசெய்தல்.
131. பொதுச் சாலைகளில் அல்லது அவற்றின் மீதான இடையூறுகளுக்குத் தடை
விதித்தல்
132. ஊர் பொது சொத்து அல்லது வருமானம் ஊராட்சிக்கு சேர்த்தல்
1433. நீர்ப்பாசனப் பணிகளை பராமரித்தல், குடிமராமத்தை நிறைவேற்றுதல்
முதலியன.
134. இரயத்துவாரி நிலப்பரப்புகளிலுள்ள குறித்த சில புறம்போக்குகளைப்
பயன்படுத்துவதை ஊராட்சி முறைப்படுத்துதல்.
135. தமிழ்நாடு 1908-ஆம் ஆண்டு எஸ்டேட்டுகள் நிலச் சட்டத்தின்
ஆளுகைக்குட்டப்பட்ட பண்ணை தோட்டத்திலுள்ள சில பொது நிலங்களின்
உபயோகத்தை ஊராட்சி முறைப்படுத்துதல்.
136. சேகரிக்கப்பட்ட கழிவு முதலியன ஊராட்சியை சேர்ந்தது.
137. ஊராட்சிகளுக்கும், வட்டார ஊராட்சி மன்றங்களுக்கும் தேவைப்படும்
அசையாச் சொத்துகளை 1894-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்
கழ் கையகப்படுத்துதல்
138. வழிபாட்டு தலங்களை நிருவகிக்கும் நபர்களிடமிருந்து பங்களிப்புகள்
பெறுதல்
139. கேளிக்கைகளுக்கான இடங்களை மூட உத்திரவிட அதிகாரம்
140. அபாயகரமான நோயால் அல்லலுறும் சிறார்களைப் பள்ளிக்குச் செல்ல
தேவையில்லை என்பது
141. கட்டாய அம்மை குத்துதல்
142. பெரியம்மை, காலரா நோய்களைப் பற்றிய செய்திகளை அறிவிக்கும் கடமை
143. அபாயகரமான குளங்கள், கிணறுகள் குழிகள் முதலியவற்றைப் பொறுத்த
அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
144. நிலங்கள் மற்றும் கட்டிடங்களிலிருந்து குப்பை கூளங்கள், நச்சுச் செடிகளை
அகற்றல்
145. அபாயகரமான கட்டுமானங்களை அகற்றியதில் கிடைத்த பொருள்களை
உபயோகிக்க அல்லது விற்க ஆணையர் அல்லது செயல் அலுவலருக்கு உள்ள
அதிகாரம்.
146. ஈட்டுத்தொகைக்கான வரம்பு
147. பொதுச் சந்தைகள்
148. தனியார் சந்தைகளுக்கு உரிமம் அளித்தல்
149. எந்த இடங்கள் சந்தைக்கானதாக இருத்தல் வேண்டும் என்பது குறித்த
பூசல்களுக்கான முடிவு
150. உரிமம் பெற்றில்லாத தனியார் சந்தைகள் முதலியவற்றில் விற்பனையை
தடை செய்தல்.
151. பொதுச் சாலைகளில் விற்பனை செய்வதற்கு எதிரான தடை
152. சந்தைகளை வகைப்படுத்துதல்.
153. தனியார் சந்தைகளை வைத்திருப்பதற்கான நபர்களின் உரிமையினைக்
கையகப்படுத்துதல்.
154. பொது இறங்கும் இடங்கள் மற்றும் வண்டி நிறுத்தங்கள் முதலியன.
155. தனியார் வண்டி நிறுத்தங்கள்.
156. பொது இறைச்சிக் கொட்டில்கள்
157. கால்நடைகளை வெட்டுவதற்கான இடங்கள் பயன்படுத்தப்படுவதையும்,
இறைச்சிக் கொட்டில்களுக்கான உரிமத்தையும் தடை செய்தல் அல்லது
ஒழுங்குமுறைப்படுத்துதல்.
158. கட்டிடங்களுக்கு இலக்கமிடுதல் அல்லது பெயர் சூட்டுதல் முதலியன
159. எந்தெந்த நோக்கங்களுக்காக உரிம௰ின்றி இடங்கள்
பயன்படுத்தப்படக்கூடாது என்பது.
160. தொழிற்சாலைகளை கட்டுவதற்கும் இயந்திரங்களை நிறுவுவதற்கும்
அனுமதி அளித்தல்.
161. உரிமங்களையும் அனுமதிகளையும் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் பொறுத்து
விதிகளைச் செய்வதற்கு அரசிற்குள்ள அதிகாரம்.
162.
10
1888 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுமக்கள் கூடுமிடங்கள் சட்டத்தைத்
திருத்துதல்.
163.
164.
165.
166.
167.
168.
169.
170.
மாவட்ட ஊராட்சியின் அலுவல்கள்
மாவட்ட ஊராட்சியின் பொதுவான அதிகாரங்கள்
மாவட்ட ஊராட்சியின் ஆண்டறிக்கை
மாவட்ட ஊராட்சியின் விவர உரைகளும், அறிக்கைகளும்.
அத்தியாயம் 9
வரி விதிப்பு மற்றும் நிதி
உள்ளூர்த் தீர்வை
உள்ளூர்த் தீர்வை மேல்வரி
உள்ளூர்த் தீர்வை வசூலிப்பது தொடர்பான விதிகள்.
நிலவரி ஒப்படைவு செய்தல்
171. ஊராட்சிகளால் விதிக்கப்படத்தக்க வரிகள்
172.
173.
174.
175
176.
177.
நில
178.
179.
180.
வீட்டு வரி
வாகன வரி
வரி விதிப்பிற்கு எதிரான மேல்முறையீடுகள்
சொத்துரிமை மாற்றத்தின் மீது தீர்வை
விலக்களிப்பு
ஊராட்சிக்குச் சேரவேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை வளூலிக்குமாறு
வருவாய்ப் பணியாளர்களைக் கோருவதற்கான அதிகாரம்
வசூலிக்க இயலாத தொகைகளைக் கணக்கிலிருந்து தள்ளுபடி செய்தல்.
உள்ளூர் கல்வி மானியம்
உள்ளூர்த் தீர்வை மேல்வரிக்கு ஈடான மானியம்
181. ஊராட்சி வளர்ச்சி வட்டாரங்களின் வகைப்பாடு
182.
183.
184.
185.
186.
உள்ளூர் சாலைகள் மானியம்
கிராம வீட்டுவரிக்கு ஈடான மானியம்
குறித்த சில நேர்வுகளில் மானியத்திலிருந்து கழிவு செய்தல்
வட்டார ஊராட்சி நிதி மற்றும் ஊராட்சி நிதியையும் அமைத்தல்
வட்டார ஊராட்சி (பொது) நிதி
11
187. வட்டார ஊராட்சி (கல்வி) நிதி
188. ஊராட்சி நிதி
189. மாவட்ட ஊராட்சி (பொது) நிதியம்
1490. பெறப்பட்ட பணங்களைப் பயன்படுத்துதலும் நிதிகளிலிருந்து செலவு
செய்தலும்
191. ஊராட்சி நிதி மற்றும் வட்டார ஊராட்சி நிதியிலிருந்து செலவு
192. வரவு செலவுத் திட்டங்கள் தயாரித்தலும் அதற்கு ஒப்பளிப்பு வழங்குதலும்,
193. தணிக்கையாளர்களை அமர்த்துதல்
194. பிற உள்ளாட்சி அதிகார அமைப்புகளிலான செலவினங்களுக்குப் பங்களிப்பு
195. அரசால் அளிக்கப்பட்ட கடன்களையும் முன்பணங்களையும் வசூலித்தல்
196. மாவட்ட ஊராட்சிக்கு இந்தச் சட்டத்தின் குறித்த சில பிரிவுகளின்
பொருந்துகை
197. அரசால் அறிவிக்கை செய்யப்பட வேண்டிய மாவட்ட ஊராட்சியின் குறித்த
சில அதிகாரங்களும், பணிகளும்.
198. நிதி ஆணையம்.
அத்தியாயம் 1௦
கட்டுப்பாடு செய்யும் அதிகார அமைப்புகள்
199. ஊராட்சிகளைக் கண்காணிப்பதற்காக அலுவலர்களை நியமித்தல்.
200. ஆய்வுசெய்யும் அலுவலர்களின் அதிகாரங்கள்.
201. கட்டுப்பாடு செய்யும் நோக்கத்திற்காக அலுவலரின் அதிகாரங்கள்
202. இந்தச் சட்டத்திண்படியான தீர்மானம் முதலியவற்றை நிறுத்திவைப்பதற்கு
அல்லது நீக்கம் செய்வதற்கு அதிகாரம்.
203. ஆட்சியர் மற்றும் ஆய்வாளருக்கு அவசரகால அதிகாரங்கள்
204. ஊராட்சித் தலைவர் அல்லது செயல் அலுவலர் முதலியோர் கடமையை
செய்ய தவறுகையில் நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம்.
205. தலைவரை பதவியிலிருந்து நீக்குதல்.
206. துணைத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்குதல்.
207. வட்டார ஊராட்சி மன்றத்தின் தலைமையரைப் பதவியிலிருந்து நீக்குதல்.
208. வட்டார ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைமையரைப் பதவியிலிருந்து
நீக்குதல்.
12
209. மாவட்ட ஊராட்சித் தலைமையரைப் பதவியிலிருந்து நீக்குதல்.
210. மாவட்ட ஊராட்சித் துணைத் தலைமையரைப் பதவியிலிருந்து நீக்குதல்.
211. ஊராட்சி துணைத் தலைவர் மீது நம்மபிக்கையில்லாத் தீர்மானம்
212. வட்டார ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைமையர் மீதான
நம்மபிக்கையில்லாத் தீர்மானம்
213. மாவட்ட ஊராட்சி துணைத் தலைமையர் மீதான நம்பிக்கையில்லாத்
தீர்மானம்.
214. ஊராட்சியைக் கலைத்தல்
215. வட்டார ஊராட்சி மன்றங்களைக் கலைத்தல்
216. மாவட்ட ஊராட்சியைக் கலைத்தல்.
217. ஊராட்சியின் சார்பாகச் செயல்படுகின்ற அலுவலர்களின் அதிகாரங்களும்
இழப்பீடு செலுத்துதற்கான கடப்பாடும்.
218. அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்.
219. மேலாய்வுகள்
அத்தியாயம் 11
பொது மற்றும் பல்வகை உரிமங்களும் அனுமதிகளும்
220. உரிமம் மற்றும் அனுமதிகள் தொடர்பான பொதுவான வகைமுறைகள்.
221. அரசும், சந்தைக் குழுக்களும் உரிமம் மற்றும் அனுமதிகளைப் பெற
வேண்டியதில்லை என்பது.
அறிவிப்புகள், ஆணைகள் முதலானவற்றை வலியுறுத்தி
நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் முதலானவை.
222. அறிவிப்பு ஆணை முதலானவற்றிற்கு கட்டுப்பட்டு நடப்பதற்கான காலம்
மற்றும் தவறுகையில் வலியுறுத்தி நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம்.
223. நுழைவதற்கும் ஆய்வு செய்வதற்குமான அதிகாரம்.
224. எடைகளையும் அளவைகளையும் சோதனையிடுதல்
225. கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து தகவலைக் கேட்டுப் பெறுவதற்கான
அதிகாரம்.
226. கொடுபடவேண் டியவற்றை வசூலிப்பதற்கான காலவரம்பு
குற்றவழக்குகள், உரிமைவழக்குகள் முதலானவை.
227. குற்றவழக்குகள் தொடுப்பதற்கு அதிகாரமளிக்கப் பெற்ற நபர்கள்.
228. குற்றச் செயல்களை இணக்கமாக தீர்த்துக்கொள்தல்.
13
229. குற்ற வழக்குகள் மற்றும் இணக்கங்கள், வட்டார ஊராட்சி அல்லது மாவட்ட
ஊராட்சிக்கு அறிக்கை செய்யப்பட வேண்டும்.
230. குற்றவழக்குத் தொடர ஒப்பளிப்பு.
231. ஊராட்சிக்கு எதிரான செயல் பற்றிய அறிவிப்பு
232. தலைமையர், தலைவர் மற்றும் அலுவரின் நல்லெண்ணத்தின் பேரறிலான
செய்கைக்குப் பாதுகாப்பு
233. தேர்தல் நடவடிக்கைகளில் உறுத்துக்கட்டளைகள் வழங்கப்படக்கூடாது
எனல்.
234. சொத்து இழப்பு, வீணடிப்பு, தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றில்
தலைவருக்கும் செயல் அலுவலருக்கும் உறுப்பினர்களுக்குமான கடப்பாடு .
235. வரிக்கணிப்பு முதலானவற்றிற்காகக் குற்றஞ்சாட்டப்படுதலாகாது.
236. பொதுச் சாலைகள், சந்தைகள், கிணறுகள் முதலானவை அனைவருக்கும்.
பொதுவாக இருத்தல் என்பது.
237. கட்டணம் வசூலிக்கும் உரிமையைக் குத்தகைக்கு விடுவதற்கான அதிகாரம்.
238. உள்ளூர் அதிகார அமைப்புகளுக்கு இடையேயான பூசல்களை ந்திமுறையில்
தீர்த்தல்.
239. மாநிலத் தேர்தல் ஆணையம்.
240. வளர்ச்சித் திட்டத்தைத் தயாறித்தல்.
241. மாவட்ட திட்டமிடும் குழு.
விதிகள்
242. விதிகளைச் செய்வதற்கு அரசுக்குள்ள அதிகாரம்.
அத்தியாயம் 12
தண்டனைகள்
243. விதிகளை மீறுகைக்கான தண்டனைகள்
244. துணை விதிகள் மற்றும் அவற்றை மீறுகைக்ககான தண்டனைகள்
245. இணைப்புப் பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனைகள் தொடர்பான
பொது வகைமுறைகள்
246. தகுதியின்மையாகும்போது ஊராட்சியில் உறுப்பினராக தலைவராக அல்லது
துணைத் தலைவராக அல்லது வட்டார ஊராட்சி அல்லது மாவட்ட ஊராட்சியின்
உறுப்பினராக தலைமையராக அல்லது துணைத் தலைமையராகச்
செயல்படுவதற்கான தண்டனை.
14
247. ஒப்பந்தப்பணியில் உரிமையை வைத்துக் கொள்ளும் அதிகாரி அல்லது
பணியாளர் ஒருவருக்கு குற்றத் தண்டனை.
248. செயல் அலுவலர் அல்லது ஆணையர் அல்லது தலைமைச் செயல் அலுவலர்
அல்லது அவரது சார்பாளரை சட்ட முறையற்ற வகையில் தடுத்து நிறுத்தல்.
249. ஊராட்சிகளுக்கு எதிராகத் தடங்கல் செய்வது தடை செய்யப்படுகிறது.
250. அறிவிப்பை அகற்றுதல் தெளிவில்லாமல் செய்தல் ஆகியவற்றைத் தடை
செய்தல்.
251. தகவல் அளிக்காமை அல்லது தவறான தகவலளித்தமைக்கான தண்டம்.
அத்தியாயம் 13
பல்வகை
252. ஊராட்சிகள் முதலானவற்றைச் சுட்டும் கட்டுகைக்குப் பொருள் கொள்ளுதல்
253. புதிதாக அமைத்துருவாக்கப்பெற்ற ஊராட்சிகள் தொடர்பான தனி
வகையங்கள்.
254. 1920 ஆம் ஆண்டு சென்னை உள்ளாட்சி வாரியங்கள் சட்டம்
முதலானவற்றைச் சுட்டுகைக்குப் பொருள் கொள்ளுதல்.
255. நீக்கமும் காப்பும்
256. ஐயப்பாடுகளை அகற்றுவதற்கான அதிகாரம்.
257. ஊராட்சிகளின் அதிகாரம், அதிகார அமைப்பு மற்றும் பொறுப்புகள்.
தேர்தல் குறித்த தகராறு
258. தேர்தல் மனுக்கள்
259. தேர்தல்களை செல்லத்தக்கதல்ல என அறிவிப்பதற்கான ஆதாரங்கள்:
260. ஊழல் நடவடிக்கைகள்
261. இடைப்படுகால வகை:
262. சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படவேண்டிய விதிகள்
அறிவிக்கைகள் மற்றும் ஆணைகள்
15
அத்தியாயம்-1
முன்னுரை
1. குறுந்தலைப்பும், எல்கையும், தொடக்கமும்.- (1) இந்தச் சட்டம், 1994-ஆம்
ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் என அழைக்கப்படும்.
(2) இது, கீழ்க்கண்ட பகுதிகள் தவிர, தமிழ்நாடு மாநிலம் முழுவதற்கும்
பொருந்தும்.
(i) சென்னை மாநகர்;
(i) 1971-ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்தின்படி
அமைத்துருவாக்கப்பட்ட மதுரை மாநகர்; (தமிழ்நாடு சட்டம் 15/1971)
0) 1984-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்தின்படி
அமைத்துருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் மாநகர்; (தமிழ்நாடு சட்டம் 251981)
0) 1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்
சட்டத்தின்படி அமைத்துருவாக்கப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள்
மற்றும் தொழில் நகரியங்கள்; மற்றும் (தமிழ்நாடு சட்டம் V/1920)
(V) 1924-ஆம் ஆண்டு இராணுவ முகாமிடக்கூடிய பரப்பிடங்கள்.
(Cantonments) சட்டத்தின்படி அமைத்துருவாக்கப்பட்ட இராணுவ
ஆட்சிக்குரிய முகாம்கள் (மையச் சட்டம் 11/11924).
(3) இது, அரசு, அறிவிக்கையின் மூலம் குறிக்கக்கூடிய தேதி முதல்
நடைமுறைக்கு வரும்.
2. சொற்களின் பொருள் விளக்கங்கள். இந்தச் சட்டத்தில்,
சந்தர்ப்பத்திற்கேற்ப வேறுபொருள் கொள்ளப்பட வேண்டியிருத்தாலன்றி:-
(1) "கட்டடம்! என்பது, இல்லம், புற-மனை, கூடாரம், தொழுவம், கழிப்பிடம்,
கொட்டில், குடிசை (2.5 மீட்டர் உயரத்திற்கு மேற்படாத எல்லைச்சுவர் அல்லாத
பிற) சுவர் ஒன்றையும் மற்றும் கல் தச்சுவேலையினாலோ, செங்கற்களாலோ,
மரத்தாலோ, மண்ணாலோ, உலோகத்தாலோ அல்லது எந்த வகையாயினும் பிற
பொருளாலோ கட்டப்பட்ட கட்டிட அமைப்புகளும் அடங்கும்;
(2) தற்செயலாக ஏற்பட்ட காலியிடம் என்றால் காலம் முடிவதால் அன்று
மற்றப்படியாக எழுகின்ற ஒரு காலியிடம் என்று பொருள்படும்; மற்றும் தற்செயலாக
நடத்தப்படும் தேர்தல் என்றால் தற்செயல் காலியிடம் ஒன்றை நிரப்புவதற்காக
நடத்தப்படும் ஒரு தேர்தல் என்று பொருள்படும்;
(3) 'தலைமையர்! என்றால், வட்டார மன்றத்தின்: அல்லது
சந்தர்ப்பத்திற்கேற்ப மாவட்ட ஊராட்சியின் தலைமையர் என்று பொருள்படும்;
(4) தலைமைச் செயல் அலுவலர்! என்றால், மாவட்ட ஊராட்சி ஒன்றின்.
தலைமைச் செயல் அலுவலர் என்று பொருள்படும்;
16
(5) 'ஆட்சியர்' என்றால், ஒரு வருவாய் மாவட்டத்தின் ஆட்சியர் என்று
பொருள்படும்;
(6) ஆணையர்! என்றால், ஒரு வட்டார ஊராட்சி மன்றத்தின் ஆணையர்
என்று பொருள்படும்;
(7) நிறுமம்! என்றால், 1956 ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தில் பொருள்
வரையறுக்கப்பட்டுள்ளபடி ஒரு நிறுமம் என்று பொருள்படும்: மற்றும் அது, அந்தச்
சட்டத்தின் 5981-ஆம் பிரிவின் பொருள் வரையறைக்குட்பட்ட அன்னிய நிறுமம்
ஒன்றையும் உள்ளடக்கும் (மையச் சட்டம் 174956):
(8) மாவட்டம்! என்றால், ஒரு வருவாய் மாவட்டம் என்று பொருள்படும்;
(9) மாவட்ட ஊராட் சி! என்றால், 24 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி
அமைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி என்று பொருள்படும்;
(10) 'வடிகால்! என்றால், மழைநீர் அல்லது வெள்ளநீர் வடிகால் மற்றும் சுவர்
கசிவுகள் சாய்ந்ரோடைகள் மற்றும் தெரு, பாலம் அல்லது கடப்புவழி எதனின் மீதும்
விழுகின்ற மழைநீரை வடித்து வெளியேற்றுவதற்கென்றே தனியாக
அமைந்துள்ள பக்க வடிகால் என்று பொருள்படும்; ஆனால், அது, 1978-ஆம்
ஆண்டு சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றுச்
சட்டத்தின் பொருளின் படியான ஒரு வடிகாலையோ அல்லது கழிவுநீர்காலையோ
(சாக்கடையையோ) உள்ளடக்காது; (தமிழ்நாடு சட்டம் 281978);
(11) செயல் அலுவலர்” என்றால், 83-ஆம் பிரிவின்படி அரசினால்
நியமிக்கப்பட்ட அலுவலர் என்று பொருள்படும்;
(12) 'அரசு' என்றால், மாநில அரசு என்று பொருள்படும்;
(13) "கிராம சபை என்றால் தொடர்புடைய ஊராட்சியின் பரப்பிடத்திற்குள்
அடங்கியுள்ள ஊரொன்றின் தொடர்பான வாக்காளர் பட்டியல்களில் பதிவு
செய்யப்பெற்றுள்ள நபர்களைக் கொண்டிருக்கின்ற ஓர் அமைப்பு என்று
பொருள்படும்;
(14) இல்லம்! என்றால், ஒரு குடியிருப்பிடமாகவோ அல்லது
மற்றப்படியாகவோ, பொதுப்பாதையிலிருந்து முதன்மையானதொரு
நுழைவாயிலைத் தனியாகக் கொண்டிருக்கின்ற மனிதர் வசிப்பதற்குப்
பொருத்தமானகதொரு கட்டடம் என்று பொருள்படும்; மற்றும் அது கடை,
தொழிற்கூடம் அல்லது சேமிப்பிடம் (கிடங்கு) எதையும், அல்லது பேருந்துகளை
நிறுத்திப் பழுதுபார்ப்பதற்காகவோ நிறுத்தி வைப்பதற்காகவோ அல்லது பேருந்து
நிலையமாகவோ பயன்படுத்தப்படும் கட்டடம் என்பதும் இதில் அடங்கும்;
(15) குடிசை! என்றால், மரம், மண், இலைகள், வைக்கோல் அல்லது
ஓலைகளை முதன்மைப் பொருட்களாகக் கொண்டு கட்டப்பட்டிருக்கின்ற
கட்டடம் எனப் பொருள்படும்; மற்றும் அது, இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக,
ஒரு குடிசை என்று ஊராட்சியால் விளம்பப்படக்கூடிய, எந்த அளவினதாயினும்
17
தற்காலிகக் கட்டுமானம் எதையும் அல்லது எந்தப் பொருட்களால்
செய்யப்பட்டிருந்தாலும் சிறிய கட்டடம் எதையும் உள்ளடக்கும்;
(16) ஆய்வாளர் என்றால், இந்தச் சட்டத்தின்படி ஆய்வாளரின்
அதிகாரங்களில் எதையும் செலுத்தி வருவதற்கோ அல்லது கடமைகளில் எதையும்
புரிந்து வருவதற்கோ அரசால், மாவட்ட ஆட்சியரின் நிலைக்குக் குறையாமல்
நியமிக்கப்பட்டுள்ள அலுவலர் எவரையும் குறிக்கும்;
(17) கழிப்பிடம்” என்பது, மலசலக் கழிப்பிடம் (Privy), தண்ணீர் வசதியுடன்
கூடிய சிறுநீர் கழிப்பிடம் (Water 06, சிறுநீர் கழிப்பிடம் (Urinal) ஆகியவற்றையும்
உள்ளடக்கும்;
(18) உறுப்பினர்! என்றால், ஊராட்சியின், வட்டார ஊராட்சி மன்றத்தின்
அல்லது சந்தர்ப்பத்திற்கேற்ப ஒரு மாவட்ட ஊராட்சியின் உறுப்பினர் ஒருவர்
என்று பொருள்படும்;
(19) சாதாரணமான காலியிடம் என்றால், காலக் கெடுவினால் ஏற்படக்கூடிய
ஒரு காலியிடம் என்று பொருள்படும்; மற்றும் சாதாரணமான தேர்தல்! என்றால்,
சாதாரணமான காலியிடமொன்றை நிரப்புவதற்காக நடத்தப்படும் ஒரு தேர்தல்
என்று பொருள்படும்;
(20) சொந்தக்காரர்! என்றால்,
(ஐ) ஒரு நபரானவர், தம் பொருட்டோ அல்லது ஒரு முகவராக அல்லது
பொறுப்பாட்சியராக அல்லது பாதுகாப்பாளராக அல்லது மேலாளராக அல்லது
சொத்துப் பேணுநராக வேறொரு நபரின் சார்பாகவோ அல்லது சமய அல்லது
அற நோக்கத்திற்காகவோ, எந்தச் சொத்தின் தொடர்பாக அந்தச் சொல்
பயன்படுத்தப்படுகின்றதோ அந்தச் சொத்தின் வாடகைத் தொகைகளையோ
அல்லது ஆதாயங்களையோ அப்போதைக்குப் பெற்றுவருகின்ற அல்லது
பெறத் தகுதியுடையவராகவுள்ள நபரையும்; மற்றும்
(b) எந்த விலங்கு அல்லது ஊர்தியின் தொடர்பாக அந்தச் சொல்
பயன்படுத்தப்படுகின்றதோ அந்த விலங்கையோ அல்லது ஊர்தியையோ
அப்போதைக்கு தன் பொறுப்பில் வைத்துள்ள நபரையும், உள்ளடக்கும்;
(21) ஊராட்சி! என்றால், இந்தச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ஓர் ஊராட்சி,
ஒரு வட்டார ஊராட்சி மன்றம் அல்லது ஒரு மாவட்ட ஊராட்சி என்று
பொருள்படும்;
(22) ஊராட்சி வளர்ச்சி வட்டாரம் என்றால், இந்தச் சட்டத்தின்.
நோக்கத்திற்காக ஓர் ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக, அரசால், அவ்வப்போது
விளம்பப்படும் பரப்பிடம் என்று பொருள்படும்;
(23) 'வட்டார ஊராட்சி! என்றால், இந்தச் சட்டத்தின்படி ஓர் வட்டார
ஊராட்சியென விளம்பப்பட்ட உள்ளூர்ப் பரப்பிடம் என்று பொருள்படும்;
18
(24) 'வட்டார ஊராட்சி மன்றம்! என்றால், இந்தச் சட்டத்தின்படி ஓர் வட்டார
ஊராட்சியை நிருவகிப்பதற்காக அமைத்துருவாக்கப்பட்ட அமைப்பு என்று
பொருள்படும்;
(25) ஊராட்சி கிராமம்! என்றால், எந்த ஓர் உள்ளாட்சிப் பரப்பிடத்தின் மீது ஓர்
ஊராட்சியானது அதிகார வரம்பு பெற்றிருக்கின்றதோ, அந்த உள்ளாட்சிப் பரப்பிடம்
என்று பொருள்படும்;
(26) தலைவர்! என்றால், ஊராட்சி ஒன்றின் தலைவர் என்று பொருள்படும்.
(27) 'தனியார் சாலை! என்றால், பொதுச் சாலையல்லாத தெரு, சாலை,
சதுக்கம், முற்றம், குறுந்தெரு, செல்லும் வழி, வண்டிப்பாதை, நடைபாதை,
சவாரிப்பாதை என்று பொருள்படும்; ஆனால், வளாகத்தின் சொந்தக்காரர்
ஒருவரால், அந்த வளாகத்திற்குப் போய் வருவதற்காகவோ அல்லது அந்த
வளாகத்தை வசதியாகப் பயன்படுத்துவதற்காகவோ அவரால் தன் சொந்த நிலத்தின்
மீது அமைக்கப்பட்ட ஒரு நடைபாதை வழியை உள்ளடக்காது;
(28) 'பொதுச்சாலை' என்றால், ஒரு பொது வழியாக இருந்தாலும்
இல்லையென்றாலும், பொது மக்கள் கடந்துச் செல்லுவதற்கான ஓர் உரிமையைப்
பெற்றிருக்கின்ற தெரு, சாலை, சதுக்கம், முற்றம், குறுந்தெரு, செல்வழி,
வண்டிப்பாதை, நடைபாதை அல்லது சவாரிப்பாதை என்று பொருள்படும்; மற்றும்
அது பின்வருவனவற்றை உள்ளடக்கும்:-
(ஐ பொதுப்பாலம் எதனின் மேலேயும் உள்ள சாலை வழி அல்லது
கடப்புவழி;
(b) அத்தகைய சாலை, பொதுப் பாலம் அல்லது கடப்பு வழி எதனுடனும்
இணைக்கப்பட்டுள்ள நடைபாதை வழி; மற்றும்
(௦9) பக்கத்திலுள்ள சொத்தானது தனியாருக்குச் சொந்தமான
சொத்தாக இருந்தாலும் அல்லது மாநில அரசிற்கு அல்லது மைய அரசிற்குச்
சொந்தமானதாக இருந்தாலும், அதன் எல்லைகள் வரையில் சாலை
வழிகளில் எந்தப் பக்கத்தில் அமைந்துள்ளதாயினுமான நடைபாதை,
தாழ்வாரம் அல்லது பிற கட்டுமானம் எதனாலும் மூடப்பட்டதாயிருந்தாலும்
இல்லையென்றாலும் அத்தகைய சாலை, பொதுப்பாலம் அல்லது
கடப்புவழியுடன் இணைக்கப்பட்ட வடிகால்கள்.
(29) நபரொருவர் இல்லம் எதிலும், அதன் பகுதி எதனையும்
உறங்குவதற்கான இடமாக சில சமயங்களில் தாம் பயன்படுத்தி வருவாரேயாயின்,
அந்த இல்லத்தில் தம்முடைய குடியிருப்பிடத்தை கொண்டுள்ளதாகவோ அல்லது
அதில் குடியிருப்பதாகவோ கருதப்படுவார், மற்றும் அவர் அத்தகைய இல்லத்திற்கு
தனது விருப்பம்போல் எந்தச் சமயத்திலும் திரும்பி வருகின்ற உரிமையைப்
பெற்றிருப்பவராகவும், திரும்ப வரக்கூடிய நோக்கத்தினை அவர்
கைவிட்டுவிடவில்லை என்றும் இருக்குமாயின், அந்த இல்லத்திற்கு அவர்
வராமலிருக்கிறார் அல்லது வேறெங்கோ வேறொரு வசிப்பிடத்தில்
19
குடியிருக்கின்றார் என்கின்ற காரணத்தால் மட்டுமே அந்த இல்லம் எதிலும் அவர்
குடியிருப்பது முடிவுற்றுப் போனதாகக் கருதப்பட மாட்டார்;
(30) வருவாய் மாவட்டம்! என்றால், பின்வருவனவற்றில் சேர்க்கப்பட்டுள்ள
அனைத்துப் பரப்பிடங்களையும் நீக்கியதற்குப் பிண்ணர், வருவாய் நிருவாக
நோக்கங்களுக்காக ஒரு மாவட்ட ஆட்சியரின் கீழுள்ள உள்ளாட்சிப் பரப்பிடம்
எதுவும் என்று பொருள்படும்; அதாவது;
(8) சென்னை மாநகர்,
(b) 1971-ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்தின்படி
அமைந்துருவாக்கப்பட்ட மதுரை மாநகர், (தமிழ்நாடு சட்டம் 154971)
(௦) 1981-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்தின்படி
அமைத்துருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் மாநகர், (தமிழ்நாடு சட்டம் 251981)
(0)1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி
அமைத்துருவாக்கப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தொழில்
நகரியங்கள்; மற்றும் (குமிழ்நாடு சட்டம் 071920)
(6) 1924-ஆம் ஆண்டு இராணுவ முகாமுக்குரிய பரப்பிடங்கள்.
சட்டத்தின்படி அமைத்துருவாக்கப்பட்ட இராணுவ முகாம்கள், (மையச்
சட்டம் 111924)
(31) பட்டியல் சாதியினர் என்பது, அரசமைப்புச் சட்டத்தில் பொருள்
வரையறுக்கப்பட்டுள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும்;
(32) பட்டியல் பழங்குடியினர் என்பது, அரசமைப்புச் சட்டத்தில் பொருள்
வரையறுக்கப்பட்டுள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும்;
(33) "மாநிலத் தேர்தல் ஆணையம்! என்றால், 239-ஆம் பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ள மாநிலத் தேர்தல் ஆணையம் என்று பொருள்படும்;
(34) மாநிலத் தேர்தல் ஆணையர்! என்றால், 239-ஆம் பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ள மாநிலத் தேர்தல் ஆணையர் என்று பொருள்படும்.
(35) 'ஒதுக்கப்படா வனம்! என்றால், 1882-ஆம் ஆண்டு தமிழ்நாடு
வனச்சட்டத்தின் 4-ஆம் பிரிவில் அறிவிக்கை செய்யப்படாததொரு வனம் என்று
பொருள்படும்; மற்றும் அது அரசின் செயற்முடிவுக்குட்பட்டுள்ள ஒதுக்கப்படாத
நிலத்தையும் உள்ளடக்கும்; (தமிழ்நாடு சட்டம் (71882)
(36) "கிராமம்! என்றால், 4-ஆம் பிரிவின், (1)-ஆம் உட்பிரிவின்படி ஊராட்சி
என விளம்பப்பட்டிருக்கின்ற உள்ளாட்சிப் பரப்பிடம் எதுவும் என்று பொருள்படும்;
மற்றும் 'வருவாய் கிராமம்" என்றால், கீழ்க்கண்டவற்றில் சேர்க்கப்பட்டுள்ள
எதையும் நீக்கிய பின்பு, அரசு வருவாய்க் கணக்குகளில் கிராமம் ஒன்றாக
அங்கீகரிக்கப்பட்டுள்ள உள்ளாட்சிப் பரப்பிடம் எதுவும் என்று பொருள்படும்.
அதாவது:-
(8) சென்னை மாநகர்,
20
(b) 1971-ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்தின்படி
அமைத்துருவாக்கப்பட்ட மதுரை மாநகர், (தமிழ்நாடு சட்டம் 151971)
(௦) 1981-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்தின்படி
அமைத்துருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் மாநகர், (தமிழ்நாடு சட்டம் 251918)
(0)1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி
அமைத்துருவாக்கப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தொழிற்
நகரியங்கள்; மற்றும் (குமிழ்நாடு சட்டம் V/1920)
(6) 1924-ஆம் ஆண்டு இராணுவ முகாமுக்குரிய பரப்பிடங்கள்.
சட்டத்தின்படி அமைத்துருவாக்கப்பட்ட இராணுவ முகாம்கள் (மையச்
சட்டம் 111924)
(37) ஊராட்சி! என்றால், 6-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி
ஊராட்சி ஒன்றாக அமைத்துருவாக்கப்பட்ட ஓர் ஊராட்சி;
(38) நீரோடை! என்பது, இயற்கையானதாயினும் அல்லது
செயற்கையானதாயினும் ஆறு, ஓடை அல்லது வாய்க்கால் எதையும் உள்ளடக்கும்;
(39) 'ஆண்டு' என்றால், 'நிதியாண்டு' என்று பொருள்படும்.
அத்தியாயம்-2
கிராம சபை
3. கிராம சபை.- (1) ஒவ்வொரு ஊராட்சியின் எல்லைக்குள் அடங்கியுள்ள
கிராமங்கள் தொடர்பான வாக்காளர் பட்டியலில் உள்ள நபர்களைக் கொண்ட
ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு கிராம சபை இருக்கும்.
(2) அரசின் ஆணைக்குட்பட்டு, இக்கிராம சபை ஓராண்டில் குறைந்தது
மூன்று முறையேனும் கூட வேண்டும்; ஆனால், எந்த இரண்டு கூட்டங்களுக்கு
இடையேயும் ஆறு மாத இடைவெளியிருத்தல் ஆகாது. ஊராட்சியானது, கிராம
சபையைக் கூட்டுவதற்குத் தவறினால் ஆய்வாளர் கிராம சபையினைக் கூட்டுதல்
வேண்டும்.
(3) (ஐ இக்கிராம சபையானது:
() கிராம திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல் வேண்டும்;
0) ஆண்டிற்கான கிராம வரவு-செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல்
அளித்தல் வேண்டும்; மற்றும்
(i) ஊராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட எல்லா திட்டங்களையும்
நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்தல்
வேண்டும்.
(௦) அரசு, பிற அலுவல்களை, அறிவிப்பின் வாயிலாக, இக்கிராம
சபையிடம் ஒப்படைக்கலாம்.
21
(4) இக்கிராம சபையின் பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும்
ஊராட்சி உரியவாறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்
(5) இக்கிராம சபையின் கூட்டமொன்றிற்கான குறைவெண் வரம்பு கிராம
சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பாகமாகும்; மற்றும்
அக்கிராம சபையினைக் கூட்டுவதற்கும், நடத்தி வருவதற்குமான
நடைமுறையானது, வரையறுக்கப்படக்கூடியவாறு இருத்தல் வேண்டும்.
(6) இக்கிராம சபையின் கூட்டத்திற்குத் தலைவர் தலைமை வகித்தல்
வேண்டும். அவர் வராதபோது துணைத் தலைவரும், தலைவர், துணைத்தலைவர்
ஆகிய இருவருமே வராத நிலையில், அக்கூட்டத்திற்கு வந்துள்ள
உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர் ஒருவர் தலைமை
வகித்தல் வேண்டும்.
அத்தியாயம்-3
ஊராட்சிகளையும் வட்டார ஊராட்சி மன்றங்களையும் மாவட்ட ஊராட்சிகளையும்
அமைத்தல்
ஊராட்சிகள்
4. ஊராட்சிகளை அமைத்தல்.- (1) ஆய்வாளரானவர்,-
(ஐ) அறிவிக்கையின் மூலம் ஐநூறுக்கும் குறையாமல் இருக்குமென
மதிப்பிடப்பட்டுள்ள மக்கள்தொகையுடைய ஒரு வருவாய்க் கிராமத்தை அல்லது
கிராமங்களை, அல்லது ஒரு வருவாய்க் கிராமத்தில் பகுதியை அல்லது இரண்டு
அல்லது அதற்கு மேற்பட்ட வருவாய்க் கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளைக்
கொண்டுள்ள உள்ளாட்சியின் எல்லை ஒவ்வொன்றையும் இந்தச் சட்டத்தின்
நோக்கங்களுக்காக, ஊராட்சி கிராமம் என்று வகைப்படுத்தி அறிவித்தல்
வேண்டும்; மற்றும்
(b) அறிவிக்கை வாயிலாக அந்த ஊராட்சி கிராமம் என்ன பெயருடன்.
விளங்குதல் வேண்டும் என்று குறிப்பிட வேண்டும்.
(2) (a) ஆய்வாளர் அறிவிக்கையின் வாயிலாக, ஊராட்சியில் அடங்கியுள்ள
பரப்பிடம் எதனையும் நீக்கிவிடலாம்; ஆனால், அவ்வாறு நீக்கி வைக்கப்பட்ட பின்பு,
அந்த ஊராட்சியின் மக்கள்தொகை ஐந்நூறுக்கும் குறைவாக இருத்தல் கூடாது.
(0௦) வ-கூறின்படி நீக்கி வைக்கப்பட்ட பரப்பிடம் எதனையும்
பொறுத்தவரை ஆய்வாளர் (1)-ஆம் உட்பிரிவின்படியான அறிவிப்பின் வாயிலாக
அந்தப் பகுதியானது. ஐந்நூறுக்கும் குறையாத மக்கள்தொகையினைப்
பெற்றிருக்குமாயின், அதனை, ஓர் ஊராட்சி கிராமம் என்று குறிப்பிடுதல்
வேண்டும்; மற்றும் அதன் மக்கள்தொகையானது ஐநூறுக்கும் குறைவாக
இருக்குமாயின், அதன் பக்கத்திலுள்ள ஊராட்சி கிராமம் ஏதொன்றினுடனும் (௦0)
எனும் உட்பிரிவின் படி அதைச் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
(6) ஆய்வாளர் அறிவிக்கையின் வாயிலாக-
22
() ஊராட்சி கிராமம் ஒன்றுடன், அதனை ஒட்டியுள்ள உள்ளாட்சி
பரப்பிடம் எதனையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம்; அல்லது
(i) ௫-ஆம் உட்பிரிவின்படி குறிப்பிட்ட அறிவிக்கையை நீக்கி
வைக்கலாம்; அல்லது மாற்றியமைக்கலாம்; அல்லது
(0) ௫-ஆம் உட்பிரிவின்படி குறிப்பிட்ட ஊராட்சி கிராமத்தின் பெயர்
எதையும் மாற்றியமைக்கலாம்:
(0) மேலே குறிப்பிட்டுள்ள (1) ஆம் உட்பிரிவுடன் சேர்த்து (ஐ) அல்லது (b)
அல்லது (௦) கூறுகளின் கீழ் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன் ஆய்வாளர்
அப்படிப்பட்ட அறிவிக்கை வெளியிடுவதால் ஏதாவது மறுப்பு இருப்பின் அதை
தெரிவிப்பதற்கு நியாயமான வாய்ப்பு அளிக்க வேண்டியதுடன் அப்படிப்பட்ட
ஊராட்சி அல்லது ஊராட்சிகளின் யாதொரு விளக்கங்களையும்
ஆட் சேபனைகளையும் கவனிக்க வேண்டும்.
(3) அப்படிப்பட்ட பரப்பிடத்தின் வரி செலுத்துபவரோ, குடியிருப்பவரோ
அல்லது சம்பந்தப்பட்ட ஊராட்சி (1) அல்லது (2) ஆம் உட்பிரிவின்கீழ் செய்யப்பட்ட
யாதொரு அறிவிக்கையையும் ஆட்சேபித்தால் விதிக்கப்படும் காலத்திற்குள்:
அரசாங்கத்திடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.
(4) ஆய்வாளர்-
(ஐ) இயங்காமற்போன ஓர் ஊராட்சியின் பொறுப்பில் இருந்த
உடைமையைப் பங்கீடு செய்வது பற்றியும், அதனுடைய கடன்
பொறுப்புகளிலிருந்து அதை விடுவிப்பது பற்றியும்;
(b) ஓர் ஊராட்சி தன் ஆட்சிப் பொறுப்பிலிருந்து யாதொரு உள்ளூர்
வட்டாரத்தின் மேல் தன் அதிகாரம் இயங்காது நின்று போகும்போது அதனிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள உடைமையின் யாதொரு பகுதியைப் பங்கீடு செய்வது
பற்றியும், அந்த உடைமை அல்லது அப்படிப்பட்ட உள்ளூர் வட்டாரத்திலிருந்து
எழும் கடன் பொறுப்புகளிலிருந்து அதை விடுவிப்பது பற்றியும் தான் தகுதி என்று
கருதும் ஆணையைப் பிறப்பிக்கலாம்.
(5. ௫) ஆம் உட்பிரிவின்கீழ் பிறப்பிக்கும் ஆணையானது அதற்குத்
துணையாக சார்பாக விளைவாக அவசியம் என்று கருதும் ஏற்பாடுகளைத்
தன்னகத்தே கொண்டிருக்கலாம்.
மேலும் குறிப்பாக அது-
() குறிப்பிட்ட ஊராட்சிக்கு சேர வேண்டிய வரி, கட்டணம் அல்லது வேறு
தொகையையும் அல்லது ஓர் ஊராட் சியின் அதிகாரம் இயங்காமல் நிண்று போன
உள்ளூரிலிருந்து வரவேண்டிய வரி, கட்டணம் அல்லது வேறு தொகையையும்
அந்த உத்தரவில் குறிப்பிடுகிற அதிகாரியிடம் செலுத்த வேண்டும் என்றும்,
(i) அந்த வரி, கட்டணம் அல்லது தொகை சம்பந்தமான
மேல்முறையீடுகள், மனுக்கள் அல்லது இதர விண்ணப்பங்கள் எவையும் ஓர்
ஊராட்சி இயங்காமல் நின்றுபோன தேதியில் அல்லது குறிப்பிட்ட உள்ளூர்
23
பரப்பிடத்தில் அதன் ஊராட்சியின் அதிகாரம் நின்றுபோன தேதியில் முடிவு
பெறாதிருந்தாலும் அந்த உத்தரவில் குறிப்பிடப்படும் அதிகாரிகளால் விசாரித்து
முடிவு செய்யப்படவேண்டும் என்றும் கட்டளையிடலாம்.
5. 1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் பிரிவுகள்
அல்லது அதன் கீழ் செய்த விதிகளை விரிவுபடுத்துவது.- (1) ஆய்வாளர்
ஊராட்சியின் வேண்டுகோளின் பேரிலோ அல்லது அறிவிக்கையின் மூலமோ
ஆய்வாளர், தலைவர் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் 1920-ன்
(தமிழ்நாடு சட்டம் 1920) யாதொரு பிரிவையும் அல்லது அதன் கீழ் ஏற்படுத்திய எந்த
விதிகளையும் அந்த ஊராட்சிக்கோ அல்லது குறிப்பிடும் பகுதிக்கோ விரிவாக்கம்
செய்து நடைமுறைக்கு வருமென்று அறிவிப்புச் செய்யலாம்.
(2) அப்படி அறிவிக்கை செய்யப்படும் பிரிவுகள் அந்த ஊராட்சிக்கோ
அல்லது அதில் குறிப்பிடப்படும் பகுதிக்கோ ஏற்றபடியாக்குவதன் பொருட்டு
அல்லது அந்தப் பகுதியில் செயலாற்றுவதற்குத் தேவைப்படும் மாறுதல்களுடன்
பொருள் கொள்ளப்பட வேண்டும். ஆனால், அப்பிரிவுகளின் உட்கருத்திற்கு
மாறுபாடாகப் பொருள் கொள்ளக் கூடாது.
(3) மேலேயுள்ள பிரிவின் பொதுத் தன்மைக்குப் பாதகமின்றி அறிவிக்கை
செய்யப்பட்ட பிரிவுகளில் உள்ள ஒரு நகராட்சி மன்றம் அல்லது அதன் தலைவர்
அல்லது நிருவாக அதிகாரியைப் பற்றி எல்லா குறிப்பீடுகளும், ஓர் ஊராட்சி, அதன்
தலைவர் அல்லது நிருவாக அதிகாரியையும் நகராட்சி மன்றத்தின் யாதொரு
அதிகாரி அல்லது ஊழியரையும் பற்றி எல்லா குறிப்பீடுகளும், அதற்கு இணையான
ஊராட்சி அதிகாரி அல்லது ஊழியரையும் நகர எல்லைகளைப் பற்றிய எல்லா
குறிப்பீடுகளும் அந்தக் கிராமம் அல்லது நகரம் அல்லது அதில் குறிப்பிடும்
வட்டாரத்தையும் குறிக்கும் குறிப்பீடுகள் என்று சந்தர்பத்திற்கேற்ப பொருள்
கொள்ள வேண்டும்.
6. ஊராட்சிகளை அமைத்தலும் அவற்றை நிறுமங்களாக பதிவு செய்தலும்.-
(1) ஆய்வாளரால் அதன் பொருட்டு வெளியிடப்படும் அறிவிக்கையில்
அறிவிக்கக்கூடிய தேதி முதற்கொண்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட
எண்ணிக்கையுடைய உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்ற ஊராட்சி ஒன்று.
ஊராட்சி கிராமம் ஒவ்வொன்றிற்குமாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(2) இந்தச் சட்டத்தின் வரைமுறைகளுக்குட்பட்டு, ஊராட்சி கிராமத்தின்
நிருவாகம் ஊராட் சியிடம் இருக்கும். ஆனால், இவ்வூராட்சியானது இந்தச் சட்டம்
அல்லது பிற சட்டத்தின் மூலமோ அல்லது அதன்படியோ, அதன் தலைவருக்கோ,
அல்லது வட்டார ஊராட்சி மன்றம் எதற்குமோ அல்லது மாவட்ட ஊராட்சிக்கோ
அல்லது பிற அதிகார அமைப்பு எதற்குமோ வெளிப்படையாகக் குறிப்பாக
ஒப்படைக்கப்பட்ட செயற்பணிகளைச் செய்வதற்கு உரிமையுடையது ஆகாது.
(3) ஒவ்வொரு ஊராட்சியும் 4-ஆம் பிரிவின்கீழ் வெளியிடப்படும்
அறிவிக்கையில் குறிப்பிடப்படும் கிராமத்தின் பெயரால் இடைவிடாது
வழியுரிமையுடைய ஒரு சங்கமாகவும் ஒரு பொதுவான முத்திரை உடையதாகவும்
இருக்கும். மேலும் இந்தச் சட்டத்தினால் அல்லது மற்றெந்தச் சட்டத்தினால்
24
அல்லது அவற்றின்கீழ் ஏற்படும் வரையறைக்கும் அல்லது
கட்டுத்திட்டங்களுக்கும் உட்பட்டு அதன் கூட்டுப்பெயரில் நீதிமன்றங்களில்
வழக்குத் தொடரவும், வழக்குத் தொடரப்படவும் அசையும் அல்லது அசையா
உடைமைகளை உரிமை கொள்ளவும், உடையதாயிருக்கவும் உரிமை மாற்றவும்
ஒப்பந்தங்கள் செய்யவும் அது எந்தக் காரியங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளதோ
அவற்றின் பொருட்டுத் தேவையான, ஒழுங்கான, தகுதியான எல்லாவற்றையும்
செய்வதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டதாகும்.
7. ஊராட்சி கிராமங்களின் பாகுபாட்டினை மாற்றியமைத்தல்.- (1) 4-ஆம்
பிரிவின் (1)-ஆம் உட்பிரிவில் குறிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஊராட்சி
கிராமம் நிறைவு செய்து வருகின்றதாக, அல்லது நிறைவு செய்யாமல்
போய்விட்டதாக அரசு கருதுமாயின், அது அந்த உட்பிரிவின்படி அறிவிக்கை
செய்த வகைப்பாடு எதையும் மாற்றியமைக்கலாம்.
(2) இந்தச் சட்டத்தின்படி அரசினால் எடுக்கப்பட்ட முடிவு எதையும்
நீதிமன்றத்தில் ஆட்சேபிக்க முடியாது.
8. ஊராட்சி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை.- (1) இந்தச்
சட்டத்தின் 12-ஆம் பிரிவில் அல்லது இந்தச் சட்டத்தின் பிற பிரிவுகள்
வகைமுறை எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும் ஊராட்சி ஒன்றின்
உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை (அதன் தலைவர் நீங்கலாக) எவ்வளவு
இருக்க வேண்டுமென்பது வெளியிடப்பட்டுள்ள கடைசி மக்கள் தொகை
அடிப்படையில் விதிக்கப்படும் அளவுகோலுக்கு இணங்கியபடி ஆய்வாளரால்
அறிவிக்கப்பட வேண்டும்.
(2) ஆய்வாளரானவர் (1)-ஆம் உட்பிரிவின்படி அறிவிக்கை செய்யப்பட்ட
ஊராட்சி ஒன்றின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையினை அவ்வப்போது
அறிவிக்கையின் வாயிலாக மாற்றியமைக்கலாம்.
(3) (0-ஆம் உட்பிரிவின்படி அறிவிக்கை செய்யப்பட்ட எண்ணிக்கையோ
அல்லது (2-ஆம் உட்பிரிவின்படியான அறிவிக்கையின் வாயிலாக
மாற்றியமைக்கப்பட்ட எண்ணிக்கையோ, ஐந்திற்குக் குறைவாகவோ அல்லது
பதினைந்திற்கு மேற்பட்டோ இருக்க கூடாது.
9. ஊராட்சிகளின் ஆட்சிக்காலம்.- (1) ஊராட்சி ஒவ்வொன்றும் குறித்த
காலத்திற்கு முன்னரே கலைக்கப்பட்டாலன்றி சாதாரண தேர்தல்
ஒவ்வொன்றிக்குப் பின்பு அதன் முதல் கூட்டத்திற்கென குறிக்கப்பட்ட
தேதியிலிருந்து ஐந்தாண்டு காலஅளவு வரையில் தொடர்ந்திருத்தல் வேண்டும்;
ஆனால் அதற்கு மேலாக இருத்தல் கூடாது.
(2) மேற்சொன்ன ஐந்தாண்டு கால அளவானது முடிவடைவதற்கு முன்னர்
ஓர் ஊராட்சி கலைக்கப்படுமாயின் அந்த ஊராட்சியை அமைப்பதற்கான
தேர்தலானது 214-ஆம் பிரிவில் கண்டபடி கூடிய விரைவிலும், ஆனால் எந்த
நேர்விலும் அவ்வாறு கலைக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத கால அளவு
முடிவடைவதற்கு முன்னர் நடத்தி முடிக்கப்படுதல் வேண்டும்.
25
வரம்புரை: மேற்சொன்ன ஐந்தாண்டு காலஅளவு முடிவடைவதற்கு முற்பட்ட
ஆறு மாத கால அளவிற்குள் ஊராட்சி ஒன்று கலைக்கப்படுமாயின் அந்த
ஊராட்சிக்குத் தேர்தல் எதையும் நடத்துவதோ அல்லது மாற்றி அமைப்பதோ
தேவையற்றது.
10. ஊராட்சிக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல். குறிப்பிடக்கூடிய
முறைப்படி ஊராட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
வரம்புரை: நபர் எவரும் அதே ஊராட்சியில் ஒன்றுக்கும் மேற்பட்ட
தொகுதிகளில் உறுப்பினராகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஊராட்சிகளின்
உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியுடையவராக மாட்டார்.
11. இட ஒதுக்கீடு- (1) ஊராட்சி ஒவ்வொன்றிலும் பட்டியல் சாதியினர்,
பட்டியல் பழங்குடியினருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்தல் வேண்டும். அவ்வாறு
செய்யப்படும் ட ஒதுக்கீட்டின் எண்ணிக்கை அவ்வூராட்சியில் நேரடியாக
தேர்ந்தெடுக்கப்பட உள்ள மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் மேற்படி
சாதியினர் மக்கள் தொகை, ஊராட்சி மக்கள் தொகையில் எந்த விதத்தில்
அமைந்திருக்கிறதோ அதே விதத்தில் கிட்டத்தட்ட இயன்ற அளவிற்கு
நிருணயித்து அதற்கேற்ப இடங்கள் நிரப்பப்பட வேண்டும்
வரம்புரை: இந்தச் சட்டம் தொடங்கப்பட்டதற்கு பின்னர் ஊராட்சிக்கு
நடத்தப்பட வேண்டிய முதல் தேர்தலுக்காக, 1991-ஆம் ஆண்டு மக்கள் தொகை:
கணக்கெடுப்பில் வெளியிடப்பட்ட தற்காலிக மக்கள் தொகை எண்ணிக்கையே
அந்த ஊராட்சி மக்கள் தொகையாக கருத வேண்டும்.
(2) பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கென்று
ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல்
பழங்குடியினரைச் சார்ந்த பெண்களுக்கான இட ஒதுக்கீடு செய்யப்படுதல்
வேண்டும். அவ்வாறு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டின் எண்ணிக்கையானது
பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கென்று ஒதுக்கப்பட்ட
மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்குக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
(3) ஊராட்சிகளில் பெண்களுக்கென்று இட ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.
அவ்வாறு பெண்களுக்காக செய்யப்பட்ட இட ஒதுக்கீடு எண்ணிக்கை கிட்டத்தட்ட
முடிந்த அளவிற்கு ஊராட்சியில் உள்ள மொத்த இட எண்ணிக்கையில் மூன்றில்
ஒரு பங்காக இருக்க வேண்டும். (இந்த ஒதுக்கீட்டில் பட்டியல் சாதியினர் ம)
பட்டியல் பழங்குடியினரைச் சார்ந்த பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட
இடங்கள் உள்ளடங்கும்).
வரம்புரை: பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் ஆய்வாளர்
அறிவிக்கையின் வாயிலாக குறிப்பிட்ட முறையில் வெவ்வேறு தொகுதிகளுக்கு
சுழற்சி முறையில் ஒதுக்கப்படுதல் வேண்டும்.
(34) (0) மற்றும் (2) ஆம் உட்பிரிவுகளின்படி செய்யப்படும் இட ஒதுக்கீடானது
அரசமைப்புச் சட்டத்தின் 334-ஆம் பிரிவில் குறித்துள்ள காலஅளவு முடிவடையும்
வரை நடைமுறையில் இருக்கும்.
26
12. ஊராட் சியை தொகுதிகளாகப் பிரித்தல்-- ஊராட்சிக்கு
உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க அந்த ஊராட்சியினைக் கலந்தாலோசித்த பின்பு
அறிவிக்கையின் மூலம் அந்த ஊராட்சி கிராமத்தைத் தொகுதிகளாக பிரித்து
விதிக்கப்படும் அளவையின்படி ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட
வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஆய்வாளர் தீர்மானிப்பார்.
13. உறுப்பினர்களின் பதவிக்காலம்.- (1) சாதாரண தேர்தல்களில்
தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியின் உறுப்பினர்களின் பதவிக்காலம் சாதாரண
தேர்தலுக்குப் பின்பு அத்தகைய ஊராட்சியின் முதற்கூட்டத்திற்கென
குறிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டாக இருக்கும்.
(2) ஊராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் சாதாரண
காலியிடங்கள் சாதாரண தேர்தல்களின் மூலம் நிரப்பப்படுதல் வேண்டும்; அந்தத்
தேர்தல்கள், சாதாரண காலியிடங்கள் எழுவதற்கு முன்னர் ஆறு மாதத்திற்குள்:
மாநிலத் தேர்தல் ஆணையர் தான் பொருத்தமானதென நினைக்கக்கூடிய
நாளிலோ அல்லது நாட்களிலோ, நடைபெறுமாறு நிருணயிப்பார்.
(3) ஊராட்சி தற்செயல் காலியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஓர்
உறுப்பினர் உடனே பதவி ஏற்பார். ஆனால், எவருடைய இடத்தில் அவர்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரோ அந்தக் காலியிடம் ஏற்பட்டிராவிடில்
பதவியிலிருந்திருக்க அவருக்கு உரிமையுடைய அப்படிப்பட்ட காலம் வரையில்
மட்டுமே பதவியிலிருப்பார்.
14. ஊராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல்.- (1) (2) ஆம் உட்பிரிவின்
வரைமுறைகளுக்குட்பட்டு, ஊராட்சி கிராமத்தில் அப்போதைக்கு நடைமுறையில்
உள்ள வட்டார ஊராட்சி மன்றத்தின் வாக்காளர் பட்டியலே அந்த ஊராட்சிக்கான
வாக்காளர் பட்டியலாகக் கருதப்படும்.
(2) ஊராட்சி தொகுதி எதிலும் தேர்தல் ஒன்றிற்காக வேட்பு மனு தாக்கல்
செய்வதற்கான கடைசி தேதிக்குப் பின்பும் அந்தத் தேர்தல் நடந்து முடிவதற்கு
முன்பும், வட்டார ஊராட்சி மன்றத்தின் வாக்காளர் பட்டியலில் திருத்தம்,
இடமாற்றம் அல்லது நீக்கம் எதுவும் அந்தத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின்
ஒரு பகுதியாக சேர்க்கக்கூடாது.
(3) ஊராட்சியின் செயல் அலுவலர் வகுத்துரைக்கப்பட்ட முறையில்
ஊராட்சி கிராமத்தின் தொகுதி ஒவ்வொன்றிற்குமான வாக்காளர் பட்டியல்
ஒன்றினைப் பராமரித்து வருதல் வேண்டும்.
வட்டார ஊராட் சி மன்றங்கள்.
15. வட்டார ஊராட்சியை அமைத்தல்.- (1) அரசானது-
(ஐ) தேசிய விரிவாக்கப் பணித்திட்டம் மற்றும் சமுதாய வளர்ச்சி
நோக்கங்களுக்காக அமைகின்ற வளர்ச்சி வட்டார பரப்பிடம் எதையும் ஓர் ஊராட்சி
வளர்ச்சி வட்டாரம் என்று அறிவிக்கலாம்.
27
(b) அந்த ஊராட்சி வளர்ச்சி வட்டாரம் ஒவ்வொன்றிற்கும் ஓர் வட்டார
ஊராட்சியை அமைத்து உருவாக்குவதற்கு தனது எண்ணத்தைப் பற்றிய
அறிவிப்பை அவ்வப்போது வெளியிடலாம்.
(2) எந்த ஓர் உள்ளாட்சி பரப்பை பொறுத்து, அத்தகைய அறிவிப்பு எதுவும்
வெளியிடப்பட்டுள்ளதோ, அந்தப் பரப்பில் குடியிருந்து வருகின்ற எவரும் எந்த
அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து ஆறு வாரத்திற்குள், அந்த அறிவிப்பில்
அடங்கியுள்ளவற்றிற்கான மறுப்பினை எழுத்து மூலம் அரசிற்கு அனுப்பி
வைக்கலாம்; அரசானது அத்தகைய மறுப்புகளனைத்தையும் பரிசீலனைக்கு
எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
(3) அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து ஆறு வாரம் கழிந்த பின்பு
அனுப்பிவைக்கப்பட்டுள்ள மறுப்புகள் ஏதேனுமிருப்பின், அவற்றைப்
பரிசீலித்ததற்குப் பின்பும், அரசு அறிக்கையின் வாயிலாக
(ஐ அந்த உள்ளாட்சிப் பரப்பிடத்தை ஓர் ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக
அறிவிக்கலாம்.
(b) மேற்சொன்ன ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தை ஓர் வட்டார
ஊராட் சியாக இருக்குமென்று அறிவிக்கலாம்; மற்றும்
(௦ அவ்வட்டார ஊராட் சியின் பெயரினைக் குறிக்கலாம்.
(4) அரசானது அறிக்கையின் மூலமாக
() ஓர் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து அதில் அடங்கியுள்ள
பகுதி அல்லது கிராமம் எதையும் நீக்கி வைக்கலாம்; அல்லது
(i) ஓர் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தில், அதை ஒட்டியுள்ள பகுதி
எதையும் சேர்த்துக் கொள்ளலாம்; அல்லது
(i) (3) ஆம் உட்பிரிவின்படி வெளியிடப்பட்ட
அறிவிக்கையொன்றினை நீக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ
செய்யலாம்; அல்லது
(1) ஓர் வட்டார ஊராட் சியின் பெயரை மாற்றியமைக்கலாம்.
(5) (4) ஆம் உட்பிரிவின்படி அறிவிக்கையொன்றை வெளியிடுவதற்கு
முன்பு, தொடர்புடைய மாவட்ட ஊராட்சியைக் கலந்தறிந்து, அந்த அறிவிப்பினை
வெளியிடுவதன் மூலம் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய வட்டார ஊராட்சி மன்றத்திற்கு
அல்லது வட்டார ஊராட்சி மன்றங்களுக்கும் மற்றும் ஊராட்சிக்கும் அல்லது
ஊராட்சிகளுக்கும், அந்தக் கருத்துருவிற்கெதிராக காரணங்காட்டுவதற்குரிய
நியாயமானதொரு வாய்ப்பினை வழங்குதல் வேண்டும்; மற்றும் அவற்றின்.
விளக்கங்களும் மறுப்புகளும் எவையேனுமிருப்பின், அவற்றை பரிசீலித்தலும்
வேண்டும்.
(6) அரசானது, தான் பொருத்தமானதென நினைக்கக்கூடியஆணைகளைப்
பின்வருவனவற்றிற்காகப் பிறப்பிக்கலாம். அதாவது:
28
(ஐ வட்டார ஊராட்சி மன்றம் முடிவுற்று செயலற்றுப்போனால்
அம்மன்றத்தின் உடமை இருப்புகளையும் அல்லது அதற்கு சொந்தமான
நிலையங்களையும் அல்லது அதன் தொடர்பாக, அந்த வட்டார ஊராட்சி
மன்றத்தின்: கட்டுப்பாடுகள் எவையேனுமிருப்பின். அவற்றை தீர்த்து
வைப்பதற்காகவும்; அல்லது
(b) ஊராட்சி வளர்ச்சி வட்டாரம் எதனின் மீதும் தான் அதிகார வரம்பு
செலுத்தி வருவதிலிருந்து முடிவுற்றுப்போன வட்டார ஊராட்சி மன்றத்தின்
உடைமை இருப்புகள் அல்லது அதற்குச் சொந்தமான நிலையங்களின் பகுதி
எதையும் குறித்து செயல்முடிவு எடுப்பதற்காகவும், அத்தகைய உடைமைகள்
அல்லது நிலையங்கள் தொடர்பாக அந்த வட்டார ஊராட்சி மன்றத்தின்
கட்டுப்பாடுகள் எவையேனுமிருப்பின் அவற்றைத் தீர்த்து வைப்பதற்காகவும்,
ஆணைகளைப் பிறப்பிக்கவும்.
(7) (6) ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணையொன்றில் அரசு
தேவையென கருதக்கூடிய துணையான, இடைநிகழ்வான மற்றும்
பின்விளைவான வகைமுறைகள் அடங்கியிருக்கலாம் மற்றும் குறிப்பாக அது
() அந்த வட்டார ஊராட்சி மன்றத்திற்குக் கொடுக்கப்பட வேண்டிய வரி,
கட்டணம் அல்லது பிற தொகை எதுவும், அல்லது ஓர் வட்டார ஊராட்சி
மன்றமானது எந்த ஓர் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தின் மீதும் அதிகார வரம்பு
செலுத்தி வருவது இல்லாமல் போகுமிடத்து அந்த வட்டாரம் தொடர்பாக,
அவ்வட்டார ஊராட்சி மன்றத்திற்குக் கொடுக்கப்பட வேண்டிய வரி, கட்டணம்
அல்லது பிற தொகையானது, அந்த ஆணையில் குறித்துரைக்கப்படக்கூடிய
அதிகார அமைப்புகளிடம் செலுத்தப்பட வேண்டியவனவாக இருத்தல் வேண்டும்
என்றும்;
(i) எந்தத் தேதியில் அந்த வட்டார ஊராட்சி மன்றம்
இல்லாமற்போனதோ அந்தத் தேதியில் அல்லது நேர்விற்கேற்ப, எந்தத் தேதியில்
அவ்வட்டார ஊராட்சி மன்றமானது அந்த ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தின் மீது
அதிகார வரம்பு செலுத்தி வருவது இல்லாமற்போனதோ அந்தத் தேதியில்
நிலுவையாக இருக்கின்ற வரி, கட்டணம் அல்லது தொகை எதையும் குறித்து
மேல்முறையீடு மனுக்களையோ அல்லது பிற விண்ணப்பங்களையோ, பொறுத்த
அளவில் அந்த ஆணையில் குறித்துரைக்கக்கூடிய அதிகார அமைப்புகளால்
செயல் முடிவு எடுக்கப்படுதல் வேண்டும் என்றும் பணிக்கலாம்.
16. வட்டார ஊராட்சி மன்றங்களை அமைத்தலும் அவற்றை நிறுமங்களாக
பதிவு செய்தலும்.- (1) ஊராட்சி வட்டார மன்றம் ஒன்று வட்டார ஊராட்சி
ஒவ்வொன்றிற்குமான அரசால் அதன் பொருட்டு வெளியிடப்படும் அறிக்கையில்
குறித்துள்ள தேதி முதற்கொண்டு அமைத்தல் வேண்டும்.
(2) இந்தச் சட்டத்தின் வரைமுறைகளுக்குட்பட்டு வட்டார ஊராட்சி
நிருவாகமானது வட்டார ஊராட்சி மன்றத்திற்குற்பட்டிருக்க வேண்டும்; ஆனால்
வட்டார ஊராட்சி மன்றமானது, இந்தச் சட்டம் அல்லது பிற சட்டம் எதனாலுமோ
அல்லது அதன்படியோ அதன் தலைவருக்கோ அல்லது ஆணையருக்கோ
29
அல்லது ஊராட்சிக்கோ அல்லது மாவட்ட ஊராட்சிக்கோ அல்லது பிற அதிகார
அமைப்பு எதற்குமோ வெளிப்படையாக குறிப்பாக ஒதுக்கப்பட்ட செயல்களை
செய்வதற்கு உரிமை இல்லை.
வரம்புரையாக: வட்டார ஊராட்சி எல்லைக்குள் ஏதாவது ஒரு பகுதியில்
ஊராட்சி இல்லையென்றால், அப்படி இல்லாதவகையில் வட்டார ஊராட்சி
மன்றமே வரி விதித்தல் உட்பட எல்லா அதிகாரங்களையும் செயற்படுத்தும், எல்லா
கடமைகளையும் செய்யும். ஊராட்சியின் வேலைகளை நடத்தி அதற்கு
வரவேண்டியதை பெறவும், செலுத்த வேண்டியதை செலுத்தவும் அதற்கு உரிமை
உண்டு. ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தின் அந்தப் பகுதியில் வட்டார ஊராட்சி
மன்றத்தின் தலைவரும் ஆணையரும் முறையே ஊராட்சி தலைவருடைய
வேலைகளையும் நிருவாக அதிகாரியின் வேலைகளையும் செய்ய வேண்டும்.
(3) ஒவ்வொரு வட்டார ஊராட்சி மன்றமும் 15 ஆம் பிரிவின்படி வெளியிட்ட
அறிக்கையில் கண்டவாறு வட்டார ஊராட்சியின் பெயரால் ஒரு நிறுவனமாகும்.
காலத்திற்கும் வழிவழியான ஒருமையோடும் ஒரு பொது முத்திரையோடும் இந்தச்
சட்டத்தின்ஃழோ அல்லது பிறிதொரு சட்டத்தின் கீழோ விதிக்கப்பட்ட
கட்டுப்பாட்டு தகுதிகளுக்குட்பட்டு இந்நிறுவனம் இருக்கும். அதன் பெயரால்
வழக்கு தொடரவும் வழக்கை எதிர்க்கவும் அசையும் மற்றும் அசையாச் சொத்துகள்
வாங்கவும் அனுபவிக்கவும் மாற்றவும் ஒப்பந்தங்கள் செய்யவும் இந்த நிறுவனம்
எதற்கு அமைக்கப்பட்டதோ அதற்கு பொருத்தமான, தேவையான எந்தச்
செயல்களையும் செய்யும் உரிமை உடையதாகும்.
17. வட்டார ஊராட்சி மன்றத்தின் அமைப்பும் உறுப்பினர்களின்
எண்ணிக்கையும்.- வட்டார ஊராட்சி எதற்காகவும் அமைத்துருவாக்கப்பட்ட ஜர்
வட்டார ஊராட்சி மன்றமானது 19 ஆம் பிரிவின்படி அறிவிக்கை
செய்யப்பட்டவாறான எண்ணிக்கை அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
18. வட்டார ஊராட்சி மன்றத்தின் ஆட்சிக் காலம்.- (1) வட்டார ஊராட்சி
மன்றம் ஒவ்வொன்றும், குறித்த காலத்திற்கு முன்னரே கலைக்கப்பட்டாலன்றி
சாதாரண தேர்தல் ஒவ்வொன்றிற்குப் பின்பு அதன் முதற் கூட்டத்திற்குக்
குறிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டு காலம் அளவு வரையில்
தொடர்ந்திருத்தல் வேண்டும்; ஆனால் அதற்குமேல் அன்று
(2) மேற்சொன்ன ஐந்தாண்டு கால அளவு முடிவடைவதற்கு முன்னர்
வட்டார ஊராட்சி மன்றமொன்று கலைக்கப்படுமிடத்து அந்த வட்டார ஊராட்சி
மன்றத்தினை மறுபடியும் அமைப்பதற்கான தேர்தல் 215-ஆம் பிரிவின்
வகைமுறைகளுக்கிணங்க கூடிய விரைவிலும் அல்லது ஆறு மாத கால அளவு
முடிவடைவதற்கு முன்னரும் நடத்தி முடிக்கப்படுதல் வேண்டும்.
வரம்புரையாக: மேற்சொன்ன அந்த ஐந்தாண்டு கால அளவு
முடிவடைவதற்கு முற்பட்ட ஆறு மாத கால அளவிற்குள்ளாக வட்டார ஊராட்சி
மன்றமொன்று கலைக்கப்படுமாயின் அந்தக் கால அளவிற்கு அந்த வட்டார
ஊராட்சி மன்றத்திற்குத் தேர்தல் எதையும் நடத்துவது தேவையானதாக ஆகாது.
30
149. வட்டார ஊராட்சி மன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல்.
வட்டார ஊராட்சி மன்றமொன்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின்.
எண்ணிக்கையானது, தொடர்புடைய இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ள கடைசி
மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து கண்டறியப்பட்டவாறான வட்டார ஊராட்சி
பரப்பிடத்தின் ஒவ்வோர் ஐந்தாயிரம் மக்கள் தொகைக்கும் கிட்டத்தட்ட
இயலுமளவிற்கு ஓர் உறுப்பினர் என்கிற வீதத்தில் அரசினால் அவ்வப்போது
அறிவிக்கைச் செய்யப்படக்கூடிய வட்டார ஊராட்சியின் சிற்றொகுதிகளிலிருந்து
(Ward) தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
வட்டார ஊராட்சி பரப்பிடத்தின் அத்தகையதொரு சிற்றொகுதியானது,
சிற்றூராட்சியின் ஒரு முழு சிற்றொகுதியையோ அல்லது சிற்றூராட்சிகளின்
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிற்றொகுதிகளையோ கொண்டிருக்கலாம்.
முதலாம் வரம்புரை: நபரொருவர், இந்தச் சட்டத்தின்படி, அதே வட்டார
ஊராட்சி மன்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிற்றொகுதிகளின் உறுப்பினராகவோ,
அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றங்களின் உறுப்பினராகவோ வட்டார
தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியுடையவராக மாட்டார்.
இரண்டாம் வரம்புரை: வட்டார ஊராட்சி மன்றத்தின் உறுப்பினராகத்
தேர்தலில் போட்டியிடும் நபரொருவர், ஒரு சிற்றூராட்சியின் ஓர் உறுப்பினராகவோ,
ஒரு சிற்றூராட்சியின் தலைவராகவோ அல்லது ஒரு மாவட்ட ஊராட்சியின் ஓர்
உறுப்பினராகவோ தேர்தலில் போட்டியிடும் தகுதியுடையவராக மாட்டார்.
மூன்றாம் வரம்புரை: ஓர் வட்டார ஊராட்சி மன்றத்தின் உறுப்பினர் எவரும்,
ஒரு சிற்றூராட்சியின் ஓர் உறுப்பினராகவோ ஒரு சிற்றூராட்சியின்
தலைவராகவோ அல்லது ஒரு மாவட்ட ஊராட்சியின் ஓர் உறுப்பினராகவோ,
தேர்தலில் போட்டியிடும் தகுதியுடைவராக மாட்டார்.
20. இடஒதுக்கீடு- (1) வட்டார ஊராட்சி மன்றம் ஒவ்வொன்றிலும் பட்டியல்
சாதியினர் மற்றும் பழங்குடியினர்களுக்கு இட ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.
அவ்வாறு செய்யப்படும் இட ஒதுக்கீட்டின் எண்ணிக்கை வட்டார ஊராட்சி மொத்த
உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மேற்படி பட்டியல் சாதியினர் மற்றும்
பழங்குடியினரின், வட்டார ஊரட்சியின் மொத்த மக்கள் தொகையின்
விகிதாச்சாரப்படி நேரடி தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டிய மொத்த இடங்களின்.
எண்ணிக்கைக்கேற்ப அமைதல் வேண்டும்.
வரம்புரையாக: இந்தச் சட்டம் தொடங்கப்பட்டதற்கு அடுத்துப் பின்னர்
வட்டார ஊராட்சி மன்றத்திற்கு நடத்தப்பட வேண்டிய முதல் தேர்தலுக்காக 1991-
ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட வட்டார
ஊராட்சியின் தற்காலிக மக்கள் தொகை இலக்கங்களையே, அந்த வட்டார
ஊராட்சியின் தற்காலிக மக்கள் தொகையளவாகக் கருதுதல் வேண்டும்.
(2) பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரைச் சார்ந்த
ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து பட்டியல் சாதியினரையும் பட்டியல்
பழங்குடியினரையும் சார்ந்த பெண்களுக்கான இட ஒதுக்கீடு செய்யப்படுதல்
வேண்டும்; அது பட்டியல் சாதியினருக்கும் பட்டியல் பழங்குடியினருக்கும்
31
ஒதுக்கப்பட்ட இடங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றிலொரு பங்கிற்கு
குறைவானதாக இருத்தல் கூடாது.
(3) வட்டார ஊராட்சி மன்றத்தில், பெண்களுக்கென இடங்கள்
ஒதுக்கப்படுதல் வேண்டும் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின்
எண்ணிக்கையானது (பட்டியல் சாதியினரையும் மற்றும் பட்டியல்
பழங்குடியினரையும் சார்ந்த பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களின்
எண்ணிக்கை உள்ளடங்கலாக) வட்டார ஊராட்சி மன்றத்திலுள்ள இடங்களின்
மொத்த எண்ணிக்கையில் மூன்றிலொரு பாகத்திற்கும் குறையாமல் இருத்தல்
வேண்டும்.
வரம்புரையாக: பெண்களுக்கென, ஒதுக்கீடு செய்யப்படும் அத்தகைய
இடங்கள் ஆய்வாளர், அறிவிக்கையின் வாயிலாக பணிக்கக்கூடிய முறையில்
வெவ்வேறு தொகுதிகளுக்கு (வார்டுகளுக்கு) சுழற்சி முறையில் ஒதுக்கப்படுதல்
வேண்டும்.
4) (1) மற்றும் (2) ஆம் உட்பிரிவுகளின்படியமைந்த இடங்களின்
ஒதுக்கீடானது அரசமைப்புச் சட்டத்தின் 334-ஆம் உறுப்பில் குறித்த கால அளவு
நடைமுறையில் இருக்கும்.
21. வட்டார ஊராட்சியை தொகுதிகளாகப் பிரித்தல்.- (1) வட்டார ஊராட்சி
மன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கத்திற்காக, ஆய்வாளர்,
வட்டார ஊராட்சி மன்றத்தைக் கலந்தாய்வு செய்ததற்குப் பின்பு, அறிவிக்கையின்
வாயிலாக, வட்டார ஊராட்சி பரப்பிடத்தை தொகுதிகளாகப் (வார்டுகளாகப்) பிரித்து
வகுத்துரைக்கப்படக்கூடிய அளவுகளுக்கிணங்கிய வகையில், தேர்ந்தெடுக்கப்பட
வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்தல் வேண்டும்.
(2) ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒரே ஓர் உறுப்பினர் மட்டுமே
தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.
22. உறுப்பினர்களின் பதவிக்காலம்.- (1) இந்தச் சட்டத்தில் வேறு விதமாக
வகை செய்யப்பட்டுள்ளவாறு தவிர ஒரு சாதாரண தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட
வட்டார ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலஅளவிற்கு பதவி
வகிப்பார்கள்.
(2) சாதாரண தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்கால
அளவானது, வட்டார ஊராட்சி மன்றத்தின் முதற் கூட்டத்திற்கெனக்
குறிக்கப்பட்ட தேதியன்று தொடங்குதல் வேண்டும்.
(3) வட்டார ஊராட்சி மன்றத்தின் தற்செயல் காலியிடத்திற்கு
தேர்ந்தெடுக்கப்படும் ஓர் உறுப்பினர் உடனே பதவி ஏற்பார். ஆனால் எந்த
உறுப்பினரின் காலி இடத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரோ அந்த
உறுப்பினர் அந்தக் காலியிடம் ஏற்படாவிடில் பதவியில் இருந்திருக்க அவருக்கு
உரிமையுடைய அப்படிப்பட்ட காலம் வரையில் மட்டுமே பதவியிலிருப்பார்.
23. வட்டார ஊராட் சிக்கான வாக்காளர் பட்டியல்.- (1) (2) ஆம் உட்பிரிவின்:
வகைமுறைக்கு உட்பட்டு அத்தகைய வட்டார ஊராட்சியின் பகுதியில்
32
அப்போதைக்கு நடப்பிலுள்ள மாவட்ட ஊராட்சி வாக்காளர் பட்டியலானது அந்த
வட்டார ஊராட்சி மன்றத்திற்கான வாக்காளர் பட்டியலாகக் கருதப்படுதல்
வேண்டும்.
(2) வட்டார ஊராட்சி மன்றத் தொகுதி எதிலும், ஒரு தேர்தலுக்காக வேட்பு
மனுக்களைச் செய்து கொள்வதற்கான கடைசி தேதிக்குப் பின்பும், அத்தகைய
தேர்தல் நடத்தி முடிக்கப்படுவதற்கு முன்பும் மாவட்ட ஊராட்சிக்கான வாக்காளர்
பட்டியலை திருத்துவது, இடம் மாற்றியமைப்பது அல்லது நீக்குவது அத்தகைய
தேர்தலுக்கான வாக்களர் பட்டியலின் பகுதியாக அமைதல் ஆகாது.
(3) வட்டார ஊராட்சி ஒன்றிய மன்றத்தின் ஆணையர், வட்டார
ஊராட்சியிலுள்ள ஒவ்வொரு தொகுதிக்குமான வாக்காளர் பட்டியலொன்றை
வரையறுக்கப்பட்டபடி பேணி வருதல் வேண்டும்.
மாவட்ட ஊராட்சிகள்
24. மாவட்ட ஊராட்சியை அமைத்தலும் அவற்றை நிறுமங்களாக பதிவு
செய்தலும்.- (1) நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி மற்றும் இராணுவ முகாமிற்குரிய
பரப்பிடங்களை நீக்கி அரசு அறிவிப்பின் மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும்
மேற்படி அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தேதி முதல் அம்மாவட்டம் முழுவதிலுமாக
அதிகார வரம்பு கொண்டிருக்கிற மாவட்ட ஊராட்சி ஒன்றினை அமைக்கும்.
(2) ஒவ்வொரு மாவட்ட ஊராட்சியும் மாவட்டத்தின் பெயரால் ஒன்று
சேர்க்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். காலத்திற்கும் வழிவழியான உரிமையோடும்
ஒரு பொது முத்திரையோடும் இந்தச் சட்டத்தின்£ழோ அல்லது பிறிதொரு
சட்டத்தின்கீழோ விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுத் தகுதிகளுக்குட்பட்டும்
இந்நிறுவனமிருக்கும். ஒன்று சேர்க்கப்பட்ட பெயரால் வழக்குத் தொடரவும்
வழக்கை எதிர்க்கவும், அசையும், அசையாச் சொத்துகள் வாங்கவும், அனுபவிக்கும்
மாற்றவும், ஒப்பந்தங்கள் செய்யவும், இந்த நிறுவனம் எதற்கு அமைக்கப்பெற்றதோ
அதற்கு பொருத்தமோ தேவையோ ஆன எந்தச் செயல்களைச் செய்யவும்
உரிமையுடையதாகும்.
25. மாவட்ட ஊராட்சியை அமைத்துருவாக்குதல்.- (1) ஒவ்வொரு மாவட்ட
ஊராட்சியும்,
(ஐ) 27-ஆம் பிரிவின்படி தீர்மானிக்கப்பட்டவரான, தேர்ந்தெடுக்கப்பட்ட
அனைத்து உறுப்பினர்கள்;
(௦) அம்மாவட்டத்திற்குள் தங்களது தொகுதி அமையப்பெற்றிருந்து
அம்மாவட்டத்திற்குள்: ஒரு பகுதியையோ அல்லது முழுமையையோ
பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலச்
சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள்;
(௦) அம்மாவட்டத்திற்குள்ளாக, வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ள
மாநிலங்களவையின் உறுப்பினர் ஆகியோரைக் கொண்டிருக்கும்.
33
(2) (1) ஆம் உட்பிரிவின் (2), (9) ஆகிய கூறுகளில் குறிப்பிடப்பட்ட
மக்களவையின் மாநிலச் சட்டமன்றப் பேரவையின், மாநிலங்களவையின்
உறுப்பினர்கள் மாவட்ட ஊராட்சியின் கூட்ட நடவடிக்கைகளில் பங்கு கொள்ள
உரிமையுடைவர்களாவர், ஆனால் அக்கூட்டங்களில் அவர்கள் வாக்களிக்க
உரிமை கிடையாது.
26. உறுப்பினர்களின் தேர்தல். மாவட்ட ஊராட்சியொன்றின்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையானது, கடைசியாக
எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் மாநில அரசினால் அவ்வப்போது
அறிவிப்பு செய்யப்படக்கூடியவாறு மாவட்ட ஊராட் சியிலுள்ள
தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டதாயிருக்கும்.
வரம்புரையாக: எவரும் அதே மாவட்ட ஊராட்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட
தொகுதிகளின் உறுப்பினராகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்ட
ஊராட்சியின் உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்படுவதற்குத்
தகுதியுடையவராகமாட்டார்.
27. மக்கள்தொகை கணக்கீட்டிற்குப் பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்களைத் தீர்மானித்தல்.- ஒரு மாவட்ட ஊராட்சியின்
தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கடைசியாக எடுக்கப்பட்ட
மக்கள் தொகையின் கணக்கெடுப்பின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட
விகிதத்திற்கிணங்கிய வகையில் தீர்மானித்தல் வேண்டும்.
முதலாம் வரம்புரை: மேற்சொன்னவாறு உறுப்பினர்களைத் தீர்மானிக்க
அப்போது பதவியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம்
முடிவடையும் வரையிலும், அப்போதைய ஊராட்சியின் அமைப்பைப் பாதித்தல்
கூடாது.
இரண்டாம் வரம்புரை: இந்தச் சட்டம் தொடங்கியதற்கு பின்பு, உடனே
நடைபெற வேண்டிய, மாவட்ட ஊராட்சிக்கான முதலாம் தேர்தலுக்காக, 1991-ஆம்
ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மாவட்ட ஊராட்சிக்கான
தற்காலிகமான மக்கள் தொகைக் கணக்கீட்டு இலக்கங்கள் அம்மாவட்ட
ஊராட்சியின் மக்கள் தொகையாகக் கருதப்படுதல் வேண்டும்.
28. மண்டல தொகுதிகளின் எல்லை வரையறுத்தல்.- அரசு
அறிவிக்கையின் வாயிலாக-
(ஐ) ஒவ்வொரு மாவட்ட ஊராட்சியின் அதிகார எல்லைக்குள்ள
அத்தகைய மாவட்ட ஊராட்சி தேர்தல் நோக்கத்திற்காக 26-ஆம் பிரிவின்படி
தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒற்றை
உறுப்பினர் மண்டலத் தொகுதிகளாகப் பிரித்தல் வேண்டும்.
(b) ஊராட்சி கிராமமாக அல்லது வட்டார ஊராட் சியாக அல்லது ஊராட்சி
கிராமத்தின் அல்லது வட்டார ஊராட்சியின் பகுதியாக இருக்க வேண்டிய
ஒவ்வொரு மண்டலத் தொகுதியின் பரப்பளவைத் தீர்மானித்தல் வேண்டும்.
34
(6) பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பெண்கள்.
ஆகியோருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மண்டலத் தொகுதியையோ
அல்லது தொகுதிகளையோ தீர்மானித்தல் வேண்டும்.
29. உறுப்பினர்களின் பதவிக்காலம். (1) இந்தச் சட்டத்தில் வேறுவிதமாக
வகைசெய்யப்பட்டுள்ளவாறு தவிர சாதாரணமான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட
மாவட்ட ஊராட்சியின் உறுப்பினர்கள், ஐந்தாண்டு காலம் பதவி வகிப்பர்.
(2) ஒரு சாதாரண தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின்
பதவிக்காலம், மாவட்ட ஊராட்சியின் முதற்கூட்டத்திற்கெனக் குறிக்கப்பட்ட
தேதியன்று தொடங்குதல் வேண்டும்.
(3) ஒரு தற்காலிகக் காலியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட
ஊராட்சியின் உறுப்பினர் உடனடியாகப் பதவியை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்;
ஆனால் எந்த உறுப்பினரின் இடத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரோ அந்த
உறுப்பினர், அக்காலியிடமானது ஏற்படாதிருந்திருந்தால், எவ்வளவு காலத்திற்குப்
பதவியை வகிக்க உரிமைத் தகுதியுடையவராய் இருந்திருப்பாரோ அவ்வளவு
காலத்திற்கு மட்டுமே பதவியை வகித்தல் வேண்டும்.
30. மாவட்ட ஊராட்சிக்கான வாக்காளர் பட்டியல்.- (1) ஒரு மாவட்ட
ஊராட்சியின் வாக்காளர் பட்டியல் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வாக்களர்
பட்டியலைப் போன்றவாறே இருத்தல் வேண்டும் ஆனால், அம்மாவட்டத்தில்
அப்போதைக்கு நடைமுறையில் உள்ள சட்டத்தின் வகைமுறைகளுக்கு இணங்க
தயாரிக்கப்பட்டுத் திருத்தப்பட்டதும் மற்றும் (2) ஆம் உட்பிரிவின்
வகைமுறைகளுக்கு இணங்கிய வகையில் திருத்தப்பட்டு மாற்றம் செய்யப்பட்டு
நாளது வரையிலான விவரங்கள் திரட்டப்பட்டு வெளியிடப்பட்டதுமாக இருக்கும்.
(2) மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்புக்கும் பணிக்கும்
கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டு, வாக்காளர் பட்டியலானது வரையறுக்கப்பட்ட
முறையில் இதன்பொருட்டு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் பதவிப் பெயரிட்டு
குறித்துக் காட்டப்படக்கூடிய அலுவலரால் திருத்தப்பட்டு, மாற்றம் செய்யப்பட்டு,
நாளது வரையிலான விவரங்கள் திரட்டப்பட்டு வெளியிடப்பட வேண்டும்.
(3) மாவட்ட ஊராட்சி தொகுதி எதிலும் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை
முன்னிடுவதற்கான கடைசி தேதிக்கு பின்பும் அத்தகைய தேர்தல்
தொடங்குவதற்கு முன்பும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வாக்காளர்
பட்டியலில் உள்ள பதிவு எதனையும் திருத்துவது, இடம் மாற்றுவது அல்லது
விட்டுவிடுவதானது இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக அத்தகைய தேர்தலுக்கான
வாக்காளர் பட்டியலின் பகுதியாக அமைதல் ஆகாது.
31. மாவட்ட ஊராட்சியின் காலஅளவு.-- (1) இந்தச் சட்டத்தின்படி
உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்ட ஊளராட்சியும் குறிப்பிட்ட காலத்திற்கு
முன்னதாகவே கலைக்கப்பட்டாலன்றி சாதாரண தேர்தல் ஒவ்வொன்றிற்கும் பின்பு
அதன் முதற்கூட்டத்திற்கென குறிக்கப்பட்ட தேதியிலிருந்து
35
ஐந்தாண்டிற்குத்தான் தொடர்ந்திருத்தல் வேண்டுமேயன்றி அதற்கு மேற்பட்டு
அன்று.
(2) மேற்சொன்ன ஐந்தாண்டு காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே ஒரு
மாவட்ட ஊராட்சி கலைக்கப்பட்டால் அத்தகைய மாவட்ட ஊராட்சியை மறுபடியும்
அமைத்துருவாக்குவதற்கான தேர்தல் கூடியவரையில் அவ்வாறு கலைக்கப்பட்ட
தேதியிலிருந்து ஆறுமாத காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே, நடத்தி
முடிக்கப்படுதல் வேண்டும்.
வரம்புரையாக: ஒரு மாவட்ட ஊராட்சியானது, மேற்சொன்ன ஐந்தாண்டு
காலம் அளவனாது முடிவடைவதற்கு ஆறு மாதத்திற்கு முன்னதாகவே
கலைக்கப்பட்டால் அத்தகைய மாவட்ட ஊராட்சிக்கு தேர்தல் எதனையும்
நடத்துவது தேவையானதாக இருக்காது.
32. இட ஒதுக்கீடு- (1) ஒவ்வொரு மாவட்ட ஊளராட்சியிலும் பட்டியல்
சாதியினர் மற்றும் பழங்குடியினர்களுக்கு இட ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.
அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்ட ஊராட் சி பரப்பிடத்திற்குட்பட்ட பட்டியல்
சாதியினர் மற்றும் பழங்குடியினரின் மக்கள் தொகையானது அந்த மாவட்ட
ஊராட்சி எல்லையின் மொத்த மக்கள் தொகையின் விகிதாச்சாரப்படி
நிருணயிக்கப்பட்டு அம்மாவட்ட ஊராட்சியில் நேரடித் தேர்தலின் மூலம் நிரப்பப்பட
வேண்டிய இடங்களில் மொத்த எண்ணிக்கைக்கு ஏற்ப அமைதல் வேண்டும்.
வரம்புரையாக: இந்தச் சட்டம் தொடங்கியதற்கு அடுத்துப் பின்பு நடைபெற
வேண்டிய மாவட்ட ஊராட்சிக்கான முதலாம் தேர்தலுக்காக 1991-ஆம் ஆண்டின்
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட மாவட்ட ஊராட்சி
பரப்பிடத்தின் மக்கள் தொகையளவாகக் கருதப்படுதல் வேண்டும்.
(2) பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரைச் சார்ந்த
நபர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து, பட்டியல் சாதியினரையும் பட்டியல்
பழங்குடியினரையும் சார்ந்த பெண்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுதல் வேண்டும்.
அது பட்டியல் சாதியினருக்கும் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்ட
இடங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றிலொரு பங்கிற்கு குறைவானதாக
இருத்தல் கூடாது.
(3) மாவட்ட ஊராட்சியில் பெண்களுக்கென இடங்கள் ஒதுக்கப்படுதல்
வேண்டும் மற்றும் பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை
(பட்டியல் சாதியினரையும் மற்றும் பட்டியல் பழங்குடியினரையும் சார்ந்த
பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எண்ணிக்கை உள்ளடங்கலாக) மாவட்ட
ஊராட்சியிலுள்ள இடங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றிலொரு
பாகத்திற்கு குறையாமல் இருத்தல் வேண்டும்.
வரம்புரையாக: பெண்களுக்கென ஒதுக்கீடு செய்யப்படும் அத்தகைய
இடங்கள் அரசு, அறிவிக்கையின் வாயிலாகப் பணிக்கக்கூடிய முறையில்
வெவ்வேறு தொகுதிகளுக்குச் சுழற்சி முறையில் ஒதுக்கப்படுதல் வேண்டும்.
36
(4) (1) மற்றும் (2) ஆம் உட்பிரிவுகளின் படியான இடங்களின் ஒதுக்கீடானது
அரசமைப்புச் சட்டத்தின் 334-ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ள கால அளவு
முடிவுற்றதன்பேரில் நடைமுறையில் இருப்பது அற்றுப்போகும்.
(5) இந்தப் பிரிவின் அடிப்படையில் அல்லது 11 மற்றும் 20 ஆம் பிரிவுகளின்
அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்வது அரசினாலோ அல்லது அரசினால்
பொறுப்பளிக்கப்பட்ட அலுவலராலோ செய்யப்படும்.
(6) இந்தப் பிரிவின் அடிப்படையிலோ அல்லது 11 மற்றும் 2௦ ஆம்
பிரிவுகளின் அடிப்படையிலோ ஊராட்சிகளில் அல்லது வட்டார ஊராட்சிகளில்
அல்லது மாவட்ட ஊராட்சிகளில் இட ஒதுக்கீடு கணக்கிடும்பொழுது பின்னங்கள்:
கருத்தில் கொள்ளப்படமாட்டாது.
உறுப்பினர்களின் தகுதி, தகுதியின்மை முதலியன.
33. வேட்பாளர்களின் தகுதி.- நபரெவரும்,
() தொடர்புடைய ஊராட்சியின் வாக்காளர் பெயர் பட்டியலில் தண் பெயர்
இருந்தாலன்றி; மற்றும்
(i) அவர் இருபத்தொரு வயதை எய்தியிருந்தாலன்றி ஊராட்சி
உறுப்பினர் அல்லது தலைவர் தேர்தலுக்கு தகுதி உடையவராக மாட்டார்.
34, அரசு, உள்ளாட்சி அமைப்புகள் முதலானவற்றில் அலுவலர்களின்:
மற்றும் பணியாளர்களின் தகுதியின்மை. ஊர் நிருவாக அலுவலர் அல்லது ஊர்ப்
பணியாள் எவரும் மற்றும் மாநில அல்லது மைய அரசின் ஓர் ஊராட் சியின் ஒரு
வட்டார ஊராட்சி மன்றத்தின் மாவட்ட ஊராட்சியின் நகராட்சி மன்றத்தின்
அல்லது சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளின் அல்லது
அப்போதைக்கு நடைமுறையில் உள்ள சட்டம் எதன்படியேனும்
அமைக்கப்படக்கூடிய பிற மாநகராட்சி அல்லது தொழிற் நகரியம் அல்லது
இராணுவப் பகுதி, முகாமுக்குழிய அல்லது மாநில மைய அரசிற்குச் சொந்தமான
அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தின் பிற அலுவலர் அல்லது
பணியாளர் எவரும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ, உறுப்பினராக
பதவி வகிப்பதற்கோ தகுதியுடைவராகார்.
(2) ஒரு தேர்தலுக்கு முன்போ அல்லது பின் போ, நபர் எவரும் இப்பிரிவின்படி
தகுதியுள்ளவரா, அல்லது தகுதியற்றவரா என்னும் பிரச்சனை எழுகிற போது,
அப்பிரச்சினையை அரசுக்கு தெரிவிக்கப்படுதல் வேண்டும்; அதன் முடிவே
இறுதியானதாகும்.
(3) அத்தகைய பிரச்சனையின் பேரில், முடிவு எதனையும் எடுப்பதற்கு
முன்பாக அரசானது, மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கருத்தினைப் பெற்று,
அத்தகைய கருத்துரைக்கு இணங்கிய வகையில் செயல்படுதல் வேண்டும்.
35. தேர்தல் குற்றங்களுக்காக குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டவர்களின்.
தகுதியின்மை. இந்தச் சட்டத்தின் 58 முதல் 71 வரையிலான பிரிவுகளின்படியோ
அல்லது 1860-ஆம் ஆண்டு இந்தியத் தண்டனை இதொகுப்புச் சட்டத்தின் IX-A
37
எனும் அத்தியாயத்தின்படியோ தண்டிக்கப்படத்தக்க குற்றமொன்றுக்காகக்
குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்ட அல்லது, அவர் மாநிலச் சட்டமன்றப்
பேரவைக்கான தேர்தல் நோக்கங்களுக்காக அப்போதைக்கு நடைமுறையில்
உள்ள சட்டம் எதனாலும் அல்லது எதன்படியேனும் அவ்வாறு
தகுதியிழந்திருக்கின்ற அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம்
எதன்படியேனும் தகுதியிழந்திருக்கின்ற நபர் ஒவ்வொருவரும், அவர்
வாக்களிப்பதற்கு அல்லது இந்தச் சட்டம் பொருந்துகிற தேர்தல் எதிலும்
தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, அல்லது, ஊராட்சியொன்றின் தலைவர் அல்லது
உறுப்பினர் பதவியை அல்லது வட்டார ஊராட்சி மன்றமொன்றின் அல்லது
மாவட்ட ஊராட்சியின் தலைவர் அல்லது உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு, அவர்
குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டு காலஅளவிற்கு
தகுதியிழந்தவராவார்.
36. வாக்காளர்களின் தகுதியின்மை. மனநிலை குன்றியவராயிருந்து
அவ்வாறாகவேயிருப்பதாக தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால்
விளம்பப்பட்டவராயுமுள்ள நபரெவரும், மற்றும் 35-ஆம் பிரிவின்படி
தகுதியிழந்தவராயிருக்கிற நபரெவரும், அத்தகுதியின்மையானது எவ்வளவு
காலத்திற்கு தொடர்ந்து நீடிக்கின்றதோ அவ்வளவு காலத்திற்கு வாக்களிக்க
தகுதியுடைவராகமாட்டார்.
37. வேட்பாளர்களின் தகுதியின்மை. (1) ஒழுக்கக்கேட்டினை
உள்ளடக்கிய குற்றம் எதற்காகவும் குற்ற வழக்கு நீதிமன்றமொன்றினால்
சிறைத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்பட்ட நபரொருவர் (அத்தண்டனையானது
எதிர்மாறாக்கப்படாத நிலையில்) அத்தண்டனையை அனுபவிக்கின்றபொழுதும்,
அது முடிவடைகிற நாளிலிருந்து ஐந்தாண்டிற்கு, உறுப்பினரொருவராகத்
தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியிழந்தவராதல் வேண்டும்.
(2) 1955-ஆம் ஆண்டு குடிமையியல் உரிமைகள் பாதுகாப்புச்
சட்டத்தின்படி (மைய சட்டம் XXII/1955) தண்டிக்கப்படத்தக்க
குற்றச்செயலொன்றுக்காகத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நபரொருவர்,
அவ்வாறு தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட தேதியலிருந்து, ஐந்தாண்டு காலம்
உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியற்றவராவார்.
(3) நபரெவரும், வேட்பாளர் மனுவைத் தாக்கல் செய்வதற்கான கடைசி
தேதியில் அல்லது நடக்கும் தேதியில்;
(a) மனநிலை குன்றியவராயின் அல்லது செவிட்டு
ஊமையாகயிருப்பராயின்;
(௦) நொடிப்பு-நிலையரென நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட வேண்டிய
விண்ணப்பதாரராகவோ, அல்லது விடுவிக்கப்படாத நொடிப்பு நிலையராகவோ
இருப்பாரயின்;
(6) நிறுவனமொன்றின் (இயக்குநர் அல்லாத பிற) பங்குதாரர் நீங்கலாக,
ஊராட்சி எதற்காகவும் அதனுடன் செய்யப்பட்டு தற்போது இருந்து வருகிற
38
ஒப்பந்தம் எதிலும், அல்லது அதற்காகச் செய்யப்பட்டு வருகின்ற பணி எதிலும்.
உரிமை நலன் கொண்டவராக இருப்பாராயின்;
(4) அந்த ஊராட்சியின் சார்பிலான ஊதியம் பெறும் சட்டத்
தொழிலாற்றுவராகவோ, அல்லது அந்த ஊராட்சிக்கு எதிரான சட்டத்
தொழிலாற்றுவராகவோ பணியிலிருப்பாராயின்;
(6) தம் பதவிக்காலம் தாம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதானது
செயல்விளைவு கொள்வதற்கு முன்பாக, முடிவடையாது என்கிற நிலையில்,
ஏற்கனவே ஊராட் சியொன்றின் உறுப்பினரொருவராக இருப்பவராயின், அல்லது
ஏற்கெனவே அவர் ஊராட் சியொன்றின்: உறுப்பினரொருவராக
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்து, அவர் தம் பதவிக்கால அளவு தொடங்கப்பெறாத
நிலையில் இருப்பவராயின், அல்லது;
() பொறுப்பாளர் என்ற தகுதியில் இல்லாமல் பிறவாறாக முந்தைய
ஆண்டு வரையிலும் அது (அவ்வாண்டு) உள்ளடங்கலாகவும், ஊராட்சிக்கு அவர்
கொடுக்க வேண்டிய எவ்வகையிலுமான நிலுவையை வைத்திருப்பவராயின்
உறுப்பினரொருவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியிழந்தவராவார்.
3௧. உறுப்பினர்களின் தகுதியின்மை 41-ஆம் பிரிவின்:
வகைமுறைகளுக்கு உட்பட்டு, உறுப்பினரொருவர்:
(ஐ 37-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள குற்றச்
செயலுக்காக, அதில் விவரிக்கப்பட்டுள்ள தண்டனையானது குற்ற வழக்கு
நீதிமன்றமொன்றினால் விதிக்கப்பட்டவராயிருப்பின்;
(b) 1955-ஆம் ஆண்டு- குடிமையியல் உரிமைகள் பாதுகாப்புச்
சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்க குற்றம் செய்துள்ளதாக அவர் தண்டனை
பெற்றவராயின்:
(c) மனச்சீர்கேடுற்றவராக, அல்லது செவிட்டு ஊமையாக
ஆகியிருப்பாராயின்.
(0) நொடிப்பு நிலையரெனத் தீர்ப்பளிக்க வேண்டி விண்ணப்பம்
செய்துள்ளவராயிருப்பின், அல்லது ஒரு நொடிப்பு நிலையரென நீதிமன்றத்தால்
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளவராயிருப்பின்;
(e) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகளினால்
அனுமதிக்கப்பட்டவாறு நிறுவனமொன்றின் (இயக்குநர் அல்லாத பிற) பங்குதாரர்
நீங்கலாக ஊராட்சி அதனுடன் செய்து கொள்ளப்பட்டு தற்போது இருந்து வருகிற
ஒப்பந்தம் எதிலும் அல்லது அவ் ஊராட்சிக்காக செய்யப்படும் பணி எதிலும் உரிமை
நலன் எதனையும் கொண்டவராக இருப்பாராயின்;
() ஊராட்சி எதனின் சார்பாகவும் சட்டத் தொழிலாற்றுநராக
ஊதியத்திற்கு பணியிலிருப்பவராக, அல்லது ஊராட்சி எதற்கும் எதிராக சட்டத்
தொழிலாற்றுநராகப் பணியை ஒப்புக் கொண்டவராக இருப்பாராயின்;
39
(ஐ இந்தச் சட்டத்தின்படி அலுவலரொருவராகவோ அல்லது
பணியாளராகவோ இருப்பாராயின்;
0 கிராமத்திலோ வட்டார ஊராட்சியிலோ அல்லது நேர்விற்கேற்ப
மாவட்டத்தில் குடியில்லாமலிருப்பாராயின்;
(i) (பொறுப்பாளர் என்ற தகுதி இல்லாமல் பிறவாறாக) ஊராட்சிக்கு அவர்
கொடுக்க வேண்டிய எவ்விதமான நிலுவையை அத்தகைய நிலுவைகள்
கொடுக்கப்படவேண்டிய காலத்திற்கு பின்பு மூன்று மாதங்களுக்குள்ளாக
கொடுக்கத் தவறியிருப்பாராயின்;
() அவரது பதவிக் காலம் தொடங்கிய தேதிலிருந்து, அல்லது அவர்
கடைசியாக வருகை புரிந்துள்ள கடைசி கூட்டத் தேதியிலிருந்து அல்லது 39 ஆம்
பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி அவர் தம் பதவியில் மீண்டும் சேர்த்துக்
கொள்ளப்பட்ட தேதியிலிருந்து தொடர்ந்து மூன்று மாத காலம் ஊராட்சியின்.
கூட்டங்களுக்கு அவர் வராதிருப்பாராயினும் அல்லது அக்கால அளவிற்குள்.
மூன்றுக்கும் குறைவான கூட்டங்கள் நடைபெற்றிருந்து மேற்சொன்ன தேதிக்குப்
பின்னர், தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கும் அவர் வராதிருப்பாராயின்;
அவர் பதவி வகிப்பதாவது அற்றுப்போதல் வேண்டும்:
வரம்புரையாக: () அவருக்கு கூட்டத்தைப் பற்றிய உரிய அறிவிப்பு
கொடுக்கப்படாதிருந்தால்; அல்லது
(i) ஒரு சாதாரண கூட்டத்திற்கு குறைவான கால அளவில்
அறிவிப்பனைக் கொடுத்த பின்பு, அக்கூட்டமானது நடைபெற்றிருக்குமானால்,
அல்லது
(0 கூட்டமானது உறுப்பினர்களின். வேண்டுகோளின்படி
நடத்தப்பட்டிருந்தால்,
இந்தக் கூற்றின்படி, உறுப்பினரொருவர் வாராதிருந்த கூட்டம்
எதனையும் அவருக்கு எதிராகக் கணக்கிடுதல் கூடாது.
39. உறுப்பினர்களை பதவியில் மீண்டும் சேர்த்தல்- (1) 35-ஆம் பிரிவின்
அல்லது 38-ஆம் பிரிவின் (௨) அல்லது (௦) கூறின்படி உறுப்பினராக இருப்பது
முடிவுற்று குற்றத்தீர்ப்பு அல்லது தண்டனையானது மேல்முறையீட்டிலோ அல்லது
சீராய்விலோ, நீக்கம் செய்யப்படுகையில், அத்தகைய நபரை, அப்பதவியில் மீண்டும்
சேர்க்கப்படுதல் வேண்டும். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட கால அளவில் எவ்வளவு
பகுதி, அவ்வாறு அவர் மீண்டும் சேர்க்கப்படும் தேதியன்று முடிவுறாமல் எஞ்சி
நிற்கின்றதோ அந்தக் காலப்பகுதிக்கு அவர் மீண்டும் சேர்க்கப்படுதல் வேண்டும்;
மற்றும் மேற்சொன்னவாறு அவர் மீண்டும் சேர்க்கப்படுவதன் பேரில்
இடைக்காலத்தில் அக்காலியிடத்தை நிரப்புவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட
நபரெவரும் அப்பதவியை விட்டு நீங்குதல் வேண்டும்.
(2) நபரொருவர் 38-ஆம் பிரிவின். ம் எனுங்கூறின்படி,
உறுப்பினரொருவராக இருப்பது அற்றுப்போகிறவிடத்து, செயல் அலுவலர் அல்லது
40
ஆணையர் அல்லது தலைமைச் செயல் அலுவலர் அச்செய்தியினை உடனே
அத்தகைய நபருக்கு, எழுத்து மூலம் தெரிவித்து, அதனை ஊராட்சிக்கு அடுத்த
கூட்டத்தில் அறிவித்தல் வேண்டும். அதன் அடுத்த கூட்டத் தேதியன்றோ அல்லது
அத்தேதிக்கு முன்னரோ அல்லது அத்தகைய தகவலை அவர் பெற்றுக்
கொண்டதிலிருந்து பதினைந்து நாட்களுக்குள்ளாகவோ, அத்தகைய நபரை
மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு தாமாகவே விண்ணப்பித்தால், அந்த
ஊராட்சியானது., அவ்விண்ணபத்தினைப் பெற்றதற்கு அடுத்து நடைபெறும்
கூட்டத்தில் அவரை உறுப்பினர் பதவியில் மீண்டும் சேர்க்கலாம்.
வரம்புரையாக: உறுப்பினரொருவர் தம் பதவிக் கால அளவின்போது இரண்டு
முறைக்கு மேற்பட்டு, மீண்டும் சேர்க்கப்படுதல் கூடாது.
40. உறுப்பினர்களால் செய்யப்பட வேண்டிய உறுதி ஏற்பு அல்லது
உறுதியளிப்பு-- (1) 1969-ஆம் ஆண்டு உறுதியேற்புச் சட்டத்தில் என்ன
அடங்கியிருந்தபோதிலும், உறுப்பினராக இருக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள,
அல்லது உறுப்பினராக ஆகின்ற ஒவ்வோர் உறுப்பினரும், தம் பதவியை ஏற்றுக்
கொள்வதற்கு முன்பு ஊராட்சியின் கூட்டமொன்றில் பின்வரும் படிவத்திலமைந்த
உறுதியேற்பை அல்லது உறுதியளிப்பைச் செய்தல் வேண்டும். அதாவது;
"இந்த ஊராட்சியின்? வட்டார ஊராட்சி மன்றத்தின் / மாவட்ட ஊராட்சியின்
உறுப்பினரொருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள/' உறுப்பினரொருவராக
ஆகியுள்ள &, 8 என்கிற நான், சட்டத்தின்படி அமைக்கப்பட்டவரான இந்திய
அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றார்வமும் கொண்டு
இயங்குவேன். என்றும், இந்தியாவின் இறையாண்மையையும்,
ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் ஏற்கவிருக்கும்
கடமையினை உண்மையாக ஆற்ற வருவேன் என்றும், கடவுள் பெயரால் உறுதி
கூறுகிறேன் / உளமாற உறுதியளிக்கிறேன்".
(2) உறுப்பினரொருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவராயுள்ள/அல்லது,
ஆகியுள்ள நபரெவரும், அவரது பதவிக் காலம் தொடங்குகிற தேதியிலிருந்து
மூன்று திங்களுக்குள்ளாகவோ அல்லது மேற்சொன்ன தேதிக்குப் பின்பு
நடைபெற்ற முதல் மூன்று கூட்டங்களில் ஒன்றிலோ அவற்றுள் எது பிந்தியதோ
அதற்குள்ளாக (1)-ஆம் உட்பிரிவில் விதிக்கப்பட்டுள்ள உறுதியேற்பை அல்லது
உறுதியளிப்பைச் செய்யத் தவறுகிறபோது அவர் பதவி வகிப்பது அற்றுப்போகும்;
மற்றும் அவரது இடம் காலியாகி விட்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.
(3) உறுப்பினரொருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அல்லது
உறுப்பினரொருவராக ஆகியுள்ள நபரெவரும், (1-ஆம் உட்பிரிவில்
விதிக்கப்பெற்றுள்ள உறுதியேற்பை அல்லது உறுதியளிப்பைச்
செய்திருந்தாலன்றி, ஊராட்சியின் கூட்டமொன்றில், தம் பதவியை ஏற்கவோ,
அல்லது அத்தகைய உறுப்பினர் என்ற முறையில் செயல் எதனையும் செய்யவோ
கூடாது.
41
(4) (3) ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும்,
உறுப்பினரொருவராக உறுதியேற்காதுள்ள அல்லது உறுதியளிக்காதுள்ள
தலைவரோ, அல்லது தலைமையரோ இந்தச் சட்டத்தின்படி
அமைத்துவருவாக்கப்பட்ட குழுவொன்றின் உறுப்பினரோ, அத்தகைய
தலைவராகவோ அல்லது உறுப்பினராகவோ செயற்படுவதற்கு
உரிமையுடைவராவார். ஆனால், அவர், தலைவராகவோ, அல்லது நேர்விற்கேற்ப
உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அல்லது நியமிக்கப்பட்டதற்குப் பின்பு
அல்லது அவர்களில் அலுவல்களைப் புரிவதற்கு நியமிக்கப்பட்டதற்குப் பின்பு,
அல்லது அவர்களில் அலுவலர்களைப் புரிவதற்கு தகுதியுடையவரான பின்பு,
இரண்டு மாதங்களுக்குள்ளாக அவர் கலந்து கொள்கிற ஊராட்சியின் முதல்
கூட்டத்தில், அவர் பதவியை ஏற்றுக் கொண்டு அவர் அந்த உறுதியேற்பை
அல்லது உறுதியளிப்பைச் செய்திருக்க வேண்டும்.
விளக்கம்: இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக,
(i) தலைவர்" என்றால் 47ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் அல்லது
(2) ஆம் உட்பிரிவின்படி தலைவருடைய அலுவல்களைப் புரிகின்ற துணைத்
தலைவரையும், அந்தப் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்படி நியமிக்கப்பட்ட
தற்காலிகத் தலைவரையும் உள்ளடக்கும், மற்றும்
0 "தலைமையர்" என்றால் 54 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்
அல்லது (5) ஆம் உட்பிரிவின்படி, தலைமையரின் அலுவல்களைப் புரிகின்ற
துணைத் தலைமையரையோ அல்லது அந்தப் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்படி,
பதவிவழி தலைமையராக உள்ள வருவாய் கோட்ட அலுவலரையோ உள்ளடக்கும்.
41. உறுப்பினர்களின் தகுதியின்மை தொடர்பான பிரச்சினையை முடிவு
செய்யும் அதிகார அமைப்பு-- (1) ஊராட்சியொன்றின் உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அல்லது ஊராட்சியின் உறுப்பினராக ஆகியுள்ள
நபரெவரும் தகுதியினைப் பெறாதவர் என்றோ, அல்லது 33, 35, 37, 38, 40 ஆகிய
பிரிவுகளின்படி தகுதியில்லாதவராகியுள்ளார் என்றோ சாட்டப்பட்டிருக்கும்
போதெல்லாம் செயல் அலுவலரானவர் அல்லது ஆணையரானவர் அல்லது
தலைமைச் செயல் அலுவலரானவர் அல்லது எழுத்துருவிலான அறிவிப்பின்
மூலம் அக்கட்டுரையை அத்தகைய உறுப்பினருக்குத் தெரியப்படுத்தல் வேண்டும்;
மற்றும் தொடர்புள்ள ஊராட்சியின் அடுத்த கூட்டத்தில் இந்த விஷயத்தை
வைத்தல் வேண்டும். அந்த அறிவிப்பு பெறப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாதம்
முடிவடைந்ததற்கு முன்பாக, அத்தகைய உறுப்பினர் (2) ஆம் உப்பிரிவின்படியான
வகுத்துரைக்கப்பட்ட நீதிமுறை அதிகார அமைப்பிடம் விண்ணப்பித்துக்
கொள்ளவில்லையென்றால், மேற்சொன்ன இரண்டு மாதம் முடிவடைந்த
தேதியிலிருந்து மன்ற உறுப்பினர் தகுதி இழந்தவராவார்.
(2) ஊராட்சியால் அல்லது மாநிலத் தேர்தல் ஆணையரால் பணிக்கப்பட்டால்,
செயல் அலுவலர்; அல்லது ஆணையர் அல்லது நேர்விற்கேற்ப தலைமைச் செயல்
அலுவலர், வகுத்துரைக்கப்பட்ட நீதிமுறை அதிகார அமைப்பிற்கு விண்ணப்பம்
செய்துகொள்ளுதல் வேண்டும்: மற்றும் அத்தகைய உறுப்பினர் எவரும் அல்லது
42
பிற உறுப்பினர் எவரும் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்; அத்தகைய
சாட்டுரையின்மீது அதன் முடிவே இறுதியானதாகும்.
(3) (2 ஆம் உட்பிரிவின்படி ஒரு விண்ணப்பம் செய்யப்பட்டிருக்குமிடத்து,
அத்தகைய விண்ணப்பத்தின்மீது முடிவு செய்யப்படுவதற்குட்பட்டு,
அவ்வுறுப்பினரானவர் அவர் தகுதியுள்ளவராக அல்லது தகுதியில்லாதவராக
இருந்தாற்போன்றே, செயல்புரிவதற்கு தகுதியுடைவராவார்.
(4) இந்தப் பிரிவில் அடங்கியுள்ள எதுவும் 39-ஆம் பிரிவின்படி
வகைமுறைகளைப் பாதிப்பதாக கொள்ளப்படுதல் கூடாது.
ஊராட் சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
42. ஊராட்சியின் தலைவரும் துணைத் தலைவரும். ஒவ்வொரு
ஊராட்சிக்கும், ஒரு தலைவரும் ஒரு துணைத் தலைவரும் இருப்பார்கள்.
43. தலைவரை தேர்ந்தெடுத்தல்.- (1) (ஐ ஊராட்சிக்கான வாக்களிப்போர்
பெயர் பட்டியலில் எவரொருவருடைய பெயர்கள் காணப்படுகின்றனவோ
அந்நபர்கள் தங்களுக்கிடையேயிருந்து தலைவரை வகுத்துரைக்கப்படக்கூடிய
நடைமுறைக்கிணங்கிய வகையில் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
(b) சாதாரண அல்லது தற்செயலான தேர்தலில், தலைவர் எவரும்
தேர்ந்தெடுக்கப்படவில்லையானால், புதிதாகத் தேர்தல் நடத்தப்படுதல் வேண்டும்.
முதலாம் வரம்புரை: தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நிற்கிற
நபரொருவர், உறுப்பினரொருவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நிற்க
தகுதியுடைவராகமாட்டார்.
இரண்டாம் வரம்புரை: உறுப்பினரரொருவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு
நிற்கிற நபரொருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நிற்க உரிமைத்
தகுதியுடைவராகமாட்டார்.
மூன்றாம் வரம்புரை: உறுப்பினராக இருப்பவர் எவரும் தலைவர் தேர்தலுக்கு
நிற்பதற்கு தகுதி உடையவர் அல்லர்.
(2) ஊராட்சியின் உறுப்பினர்களின் சாதாரண தேர்தல்கள் போன்று
வழக்கமான அதே நேரத்திலும் மற்றும் அதே இடங்களிலும் தலைவர் தேர்தலும்
நடத்தப்படலாம்.
(3) இச்சட்டத்தில் பிறவாறு வெளிப்படையாக
வகைசெய்யப்பட்டிருந்தாலன்றி சாதாரண ஒரு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
தலைவரின் பதவிக்காலமானது வழக்கமான காலியிடம் ஏற்பட்ட நாளின்
நண்பகலில் தொடங்கி ஐந்தாண்டாக இருக்கும்.
(4) தலைவரின் பதவியில் ஏற்படும் தற்செயல் காலியிடம் எதுவும் புதிய
தேர்தலின் மூலம் நிரப்பப்படுதல் வேண்டும்; அத்தகைய காலியிடம் எதற்கும்
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரொருவர், உடனடியாகப் பதவியை ஏற்றுக்
கொள்ளுதல் வேண்டும்; ஆனால் எந்த நபரின் காலியிடத்திற்கு அவர்
43
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரோ அந்த நபர், அக்காலியிடமானது
ஏற்படாதிருந்திருந்தால் எவ்வளவு காலத்திற்குப் பதவியை வகிக்க
தகுதியுடைவராய் இருந்திருப்பாரோ அவ்வளவு காலத்திற்கு மட்டுமே பதவியை
வகித்தல் வேண்டும்.
(5) மாநிலத் தேர்தல் ஆணையர் வேறுவிதமாகப் பணித்தாலன்றி, தலைவர்
பதவியில் உள்ள காலியிடம் எதையும் (1) ஆம் உட்பிரிவின்படி, தலைவரின்
சாதாரண தேர்தல், நடைபெற வேண்டியதாகவுள்ள தேதிக்கு முற்பட்ட ஆறு
மாதத்திற்குள்ளாக நிரப்புதல் கூடாது.
(6) 34-ஆம் பிரிவு முதல் 41-ஆம் பிரிவு வரையிலான (இரண்டு பிரிவுகளும்
உள்ளடக்கமாக) வகைமுறைகள், ஊராட் சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினரொருவரின் பதவி தொடர்பாகப் பொருந்துவன போன்றே
இயலுமளவிற்கு தலைவரின் பதவி தொடர்பாகவும் பொருந்துதல் வேண்டும்.
(7) தலைவரானவர், ஊராட்சியின் பதவி வழி உறுப்பினராக இருத்தல்
வேண்டும் மற்றும் அவர் ஊராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
ஒருவருக்குள்ள உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் பெற்றிருத்தல் வேண்டும்.
44. துணைத் தலைவரின் தேர்தல்.- (1) துணைத் தலைவர் ஊராட் சியால்
அதன் உறுப்பினர்களுக்கிடையேயிருந்து வகுத்துரைக்கப்படக்கூடிய
நடைமுறைக்கிணங்கிய வகையில் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.
(2) (0-ஆம் உட்பிரிவின்படி நடைபெற்ற தேர்தலொன்றில் துணைத்
தலைவரானவர் தேர்ந்தெடுக்கப்டவில்லை எனில் புதிய தேர்தலொன்றை
நடத்துதல் வேண்டும்.
45. தலைவர், துணைத் தலைவர் என்கின்ற பதவி முடிவுற்று போதல்.-
தலைவரோ, துணைத் தலைவரோ, பதவி வகிப்பதானது,-
(a) தலைவரைப் பொறுத்தவரையில் பதவி வகிப்பதற்கு
தகுதியின்மையரானதாலோ, அல்லது பதவியிலிருந்து விலக்கப்பட்டதாலோ
அல்லது அவரது பதவிக்காலம் முடிவுற்றநன் பேறிலோ, அல்லது மற்றபடி
தலைவராக இருப்பது அற்றுப் போனதன் பேரறிலோ
(b) துணைத் தலைவரை பொறுத்த அளவில் உறுப்பினராக அவர் தம்
பதவிக்காலம் முடிவுற்றதன் பேரிலோ அல்லது மற்றபடி உறுப்பினராக இருப்பது
அற்றுப் போனதன் பேரிலோ அற்றுப் போதல் வேண்டும்.
46. தலைவரின் அலுவல்கள். (1) தலைவரானவர்,
(ஐ ஊராட்சியின் கூட்டங்களைக் கூட்டுதல் வேண்டும்.
(b) ஊராட்சியின் பதிவுருக்களைக் காண முழுமையாக அணுகுரிமை
பெற்றிருத்தல் வேண்டும்.
44
(6) இந்தச் சட்டத்தின்படி தலைவரின் மீது திட்டவட்டமாக விதிக்கப்பட்ட
கடமைகளை ஆற்றுவதும் மற்றும் அளிக்கப்பட்ட அதிகாரங்களைச் செலுத்தி
வருதல் வேண்டும்.
(2) ஊராட்சிக்கும் அரசுக்குமிடையே அலுவலர்முறைச் செய்தித்
தொடர்பானது. தலைவரின் மூலமாக அன்றி மற்றபடி நடத்துதல் கூடாது.
தலைவரானவர், அவர் மூலமாக, செயல் அலுவலர் அனுப்புகிற தகவல்
தொடர்புகளை அரசுக்கும், அரசு அனுப்புகிற தகவல் தொடர்புகளைச் செயல்
அலுவலருக்கும் அனுப்பக்கட்டுப்பட்டவராவார்.
47. தலைவரின் அலுவல்கள் வந்தடைதலும் அதிகார ஒப்படைப்பு
செய்யப்படுதலும் மற்றும் தலைவரின் பதவியில் ஏற்பட்ட காலி இடத்தை
நிரப்புதலும்.-- (1) தலைவரின் பதவியானது காலியாகிறபோது, துணைத்
தலைவரானவர் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு பதவி
ஏற்கும் வரையிலும் தலைவரின் அலுவல்களைப் புரிந்துவருதல் வேண்டும்.
(2) தலைவரானவர், தம் அதிகாரவரம்பு பரப்பில் தொடர்ந்து முப்பது
நாட்களுக்கும் மேலாக இல்லாதிருப்பாரானால், அல்லது தகுதியற்றவராக
ஆக்கப்பட்டிருப்பாரானால், அவ்வாறு இல்லாதிருக்கும்போது அல்லது
தகுதியற்றவராக ஆக்கப்பட்டிருக்கும்போது, அவரது அலுவல்கள்,
வகுத்துரைக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் தவிர, துணைத் தலைவரிடம்
வந்தடையும்.
(3) தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவியானது காலியாகிறபோது
அல்லது தலைவர் அல்லது துணைத் தலைவர் தம் பரப்பில் தொடர்ந்து முப்பது
நாளுக்கு மேலாக இல்லாமலிருக்கும்போதும் அல்லது தகுதியற்றவராக
ஆக்கப்பட்டி போதும் தலைவரின் அலுவல்கள், ஆய்வாளரால்
நியமிக்கப்பட்ட ஊராட்சியின் உறுப்பினரொருவரிடம் ஒப்படைக்கப்படும் மற்றும்
ஊராட்சியின் உறுப்பினர் எவரும் இல்லையெனில் ஆய்வாளரால் நியமிக்கப்படும்
ஒரு நபரிடம் ஒப்படைக்கப்படும்.
(தற்காலிக தலைவரென அழைக்கப்படும்) ஊராட்சியின் அந்த உறுப்பினர்
அல்லது அவ்வாறு நியமிக்கப்பட்ட அந்த நபர், வரையறுக்கப்பட்ட
கட்டுப்பாடுகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, புதிய தலைவர் அல்லது
துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு பதவி ஏற்கிற
வரையிலும், அல்லது அவர்கள் அதிகார வரம்பு பரப்பிற்கு திரும்பி வருகிற
வரையிலும், அல்லது தகுதியின்மையிலிருந்து மீளுகிற வரையிலும், தலைவரின்
அலுவல்களைப் புரிந்துவருதல் வேண்டும்.
(4) தலைவர் பதவியில் எழும் காலியிடம் எதுவும் மாநிலத் தேர்தல்
ஆணையருக்கு வரையறுக்கப்படக்கூடிய நபராலும் கால அளவிற்குள்ளாகவும்,
தெரிவிக்க வேண்டும் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையரால், தலைவரின்
தேர்தலுக்கான ஏற்பாடு செய்யப்படுதல் வேண்டும்.
45
(5) (2-ஆம் உட்பிரிவின்படி துணைத் தலைவரிடம் வந்தடைந்த
அலுவல்கள் எவற்றையும் அவர் செலுத்துவதை அல்லது ஆற்றுவதைக்
கட்டுப்படுத்துவதற்கு அல்லது திருத்தியமைப்பதற்கு தலைவர் அதிகாரம்
பெற்றிருப்பார்.
48. தலைவரின் அலுவல்களை ஒப்படைவு செய்தல்.-
வரையறுக்கப்படக்கூடிய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு எழுத்து மூலமான
ஆணைடொன்றினை தலைவரானவர் தம் அலுவல்களில் எதனையும் துணைத்
தலைவரிடம் மற்றும் துணைத் தலைவர் இல்லாதபோது வேறு உறுப்பினர்
எவரிடமும் ஒப்படை செய்யலாம். ஆனால் அவ்வாறு ஒப்படை செய்யப்பட்ட
அலுவல்கள் எவற்றையும் புரிந்து வருவதானது அல்லது ஆற்றி வருவதானது,
தலைவரால் விதிக்கப்படக்கூடிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருத்தலும்
மற்றும் அவரது கட்டுப்பாட்டிற்கும் மறு ஆய்விற்கும் உட்பட்டதாகவும் இருத்தல்
வேண்டும்.
வரம்புரை: தாம் ஒப்படை செய்வதை ஊராட்சி வெளிப்படையாக தடை
செய்கிற அலுவல் எதனையும் அவர் ஒப்படை செய்தல் ஆகாது.
தலைமையரும் துணைத்தலைமையரும்
49. வட்டார ஊராட்சி மன்றத்தின் தலைமையரும் துணைத்
தலைமையரும்.- வட்டார ஊராட்சி மன்றம் ஒவ்வொன்றிற்கும், தலைமையர்
ஒருவரும் துணைத் தலைமையர் ஒருவருமாக இருப்பர்.
50. வட்டார ஊராட்சி மன்றத்தின் தலைமையரின் தேர்தல்- (1)
தலைமையரானவர், வட்டார ஊராட்சி மன்றத்தால் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்களுக்கிடையேயிருந்து வரையறுக்கப்பட்ட நடைமுறைக்கிணங்க
தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படி நடத்தப்பட்ட தேர்தலொன்றில் தலைமையர்
எவரும் தேர்ந்தெடுக்கப்பவில்லையெனில் தலைமையராக ஒருவரை புதிய
தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
51. வட்டார ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைமையருக்கான தேர்தல்.-
1) துணைத் தலைமையரானவர், வட்டார ஊராட்சி மன்றத்தால் அதன்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கிடையேயிருந்து வரையறுக்கப்படக்கூடிய
நடைமுறைகளுக்கிணங்க தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.
(2) ௬-ஆம் உட்பிரிவின்படி நடத்தப்பட்ட தேர்தலொன்றில் துணைத்
தலைமையர் எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லையாயின், துணைத் தலைமையர்
ஒருவரைத் தேர்ந்தெடுக்க புதிய தேர்தலொன்றை நடத்துதல் வேண்டும்.
52. தலைமையரின் அலுவல்கள்.- (1) தலைமையரானவர்,
(ஐ வட்டார ஊராட்சி மன்றத்தின் கூட்டங்களைக் கூட்டுதல் வேண்டும்;
மற்றும்
46
(௦) இந்த சட்டத்தின்படியும் இதன்படி செய்யப்பட்ட விதிகளின்படியும்
தலைமையரின் மீது திட்டவட்டமாக விதிக்கப்பட்ட கடமைகளை ஆற்றியும்
அளிக்கப்பட்ட அதிகாரங்களைச் செலுத்திவருதலும் வேண்டும்.
(2) தலைமையர் வட்டார ஊராட்சி மன்றத்தின் ஆவணங்களைக் காண
முழு அதிகாரம் பெற்றிருப்பார் மற்றும் மன்றத்திற்கும் அரசுக்குமிடையே அலுவலக
கடித தொடர்பு தலைமையர் மூலமாக அன்றி மற்றப்படி நடத்தப்படுதல் கூடாது.
தலைமையர், தம் மூலமாக அனுப்பப்பட்டிருக்கும் ஆணையரின் கடிதத்
தொடர்புகளை அரசுக்கும், அரசின் கடிதத் தொடர்புகளை ஆணையருக்கும்
அனுப்பக் கட்டுப்பட்டவராவார்.
53. வட்டார ஊராட்சியின் தலைமையர் மற்றும் துணைத் தலைமையரின்
பதவி முடிவுற்று போதல்.- (ஐ வட்டார ஊராட்சி மன்ற தலைமையரைப் பதவி
வகிப்பதிலிருந்து தகுதியின்மையராக அல்லது பதவியிலிருந்து விலக்கியதன்.
பேரில் அல்லது அவரது பதவிக்காலம் முடிவடைந்ததன் பேரில் அல்லது அவர்
மற்றப்படி தலைமையராக இருப்பது அற்றுப்போனதன் பேரில்.
(b) துணைத் தலைமையரைப் பொறுத்தமட்டில் வட்டார ஊராட்சி
மன்றத்தின் உறுப்பினர் என்ற முறையில் அவர்தம் பதவிக்காலம் முடிவடைந்ததன்
பேரில் அல்லது மற்றப்படி வட்டார ஊராட்சி மன்றத்தின் உறுப்பினரொருவராக
இருப்பது முடிவடைந்ததன் பேரில் வட்டார ஊராட்சி மன்றமொன்றின்
தலைமையரும் துணைத் தலைமையரும் பதவி வகிப்பதானது அற்றுப்போதல்
வேண்டும்.
54. வட்டார ஊராட்சி மன்றம் ஒன்றில் தலைமையரின் அலுவல்கள்
வந்தடைதலும் ஒப்படைப்பு செய்யப்படுதலும் மற்றும் தலைமையரின் பதவியில்
ஏற்பட்ட காலி இடங்களை நிரப்புதலும்.- (1) தலைமையரின் பதவியானது
காலியாகிறபோது துணைத் தலைமையரானவர் புதிய தலைமையரொருவர்
பதவியேற்கும் வரையில் தலைமையரின் அலுவல்களைக் கவனித்து வருவார்.
(2) தலைமையர் அல்லது துணைத் தலைமையர் பதவி காலியாகிறபோது
அல்லது தம் அதிகார வரம்பு எல்லைக்குள் முப்பது நாளுக்கு மேலாக
இல்லாதிருக்கும்போது அல்லது தகுதியற்றவராக ஆக்கப்பட்டிருக்கும்போதும்,
மற்றும் புதிய தலைமையரோ துணைத் தலைமையரோ தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி
ஏற்கும் வரையிலோ, அல்லது துணைத் தலைமையர் அதிகார வரம்பு எல்லைக்குத்
திரும்பி வருகிற வரையிலோ அல்லது நேர்விற்கேற்ப தகுதியிண்மையிலிருந்து
மீளுகிற வரையிலும் இந்தச் சட்டத்தில் அல்லது அதன்படி பிறப்பிக்கப்பட்ட
விதிகள் அல்லது அறிவிக்கைகளில் என்ன அடங்கியிருந்தபோதிலும், வருவாய்க்
கோட்ட அலுவலரானவர், வட்டார ஊராட்சி மன்றத்தின் பதவி வழி
உறுப்பினராகவும் தலைமையராகவும் இருத்தல் வேண்டும்.
(3) பதவியிலிருந்து நீங்குகிற தலைமையரோ அல்லது துணைத்
தலைமையரோ மறுமுறை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியுடையவராவார்.
47
(4) தலைமையர் எழுத்துருவிலான ஆணைடுயொன்றின் மூலம் தம்
அலுவல்களில் எதனையும் துணைத் தலைமையருக்கு ஒப்படை செய்யலாம்.
வரம்புரை: தாம் ஒப்படைவு செய்வதை வட்டார ஊராட்சி மன்றம்
வெளிப்படையாக தடுக்கிற அலுவல் எதனையும் அவர் ஒப்படை செய்தல் கூடாது.
(5) தலைமையர் தொடர்ந்து முப்பது நாளுக்கும் மேலாக அதிகார வரம்பின்
எல்லைக்குள் இல்லாதிருப்பாரானால் அல்லது தகுதியற்றவராய் இருப்பாரானால்
அவ்வாறு அவர் இல்லாதபோது அல்லது அவரது தகுதியின்மையின் போது அவரது
அலுவல்கள் வகுத்துரைக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் தவிர துணைத்
தலைமையரிடம் வந்தடையும்.
(6) துணைத் தலைமையரும் அதிகார வரம்பிற்குள் தொடர்ந்து முப்பது
நாளுக்கு மேல் இல்லாதிருப்பாரானால் அல்லது தகுதியற்றவராய் இருப்பாரானால்
அல்லது துணைத் தலைமையரின் பதவியானது காலியாக இருந்தால் தலைமையர்
ஆணையின் மூலமாக தம் அலுவல்கள் எவற்றையும் வட்டார ஊராட்சி மன்றத்தின்
உறுப்பினர் எவருக்கும் ஒப்படை செய்யலாம்: அவர் அத்தகைய ஒப்படை
காலத்தின்போது ""லைமையரின் பேராளர்" என்று அழைக்கப்படுவார்;
வரம்புரை: () இந்த உட்பிரிவின்படியான ஒப்படை ஆணையானது
நடைமுறையில் இருக்கிறபோது அலுவல் எதனையும் மேலும் ஒப்படைக்கிற
ஆணை எதனையும் எந்த உறுப்பினரின் பேரில் நடைமுறையில் உள்ள
ஆணையானது பிறப்பிக்கப்பட்டதோ அவர் நீங்கலாக வேறு நபர் எவரின் பேரிலும்
பிறப்பிக்கப்படுதல் கூடாது.
(i) வட்டார ஊராட்சி மன்றத்தின் தணி ஒப்புதலின்றி ஆண்டு எதிலும்
மொத்தத்தில் தொண்ணூறு நாளுக்கு மேற்படாத கால அளவு எதற்கும் இந்த
உட்பிரிவின்படி ஒப்படை செய்யப்படக்கூடாது.
(i) இந்த உட்பிரிவின்படி செய்யப்பட்ட ஆணை ஒவ்வொன்றும் வட்டார
ஊராட்சி மன்றத்திற்கு அதன் அடுத்த கூட்டத்தில் தெரிவிக்கப்படுதல் வேண்டும்.
(7) இந்தப் பிரிவின்படி ஒப்படை செய்யப்பட்ட பணிகள் எவற்றையும் புரிந்து
வருவது அல்லது ஆற்றி வருவது தலைமையரால் விதிக்கப்படக்கூடிய
வரம்புகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டதாயிருத்தல் வேண்டும்.
55. மாவட்ட ஊராட்சிகள் தலைமையரும் துணைத் தலைமையரும்.-
மாவட்ட ஊராட்சி ஒவ்வொன்றிற்கும் ஒரு தலைமையர் ஒருவரும் துணைத்
தலைமையர் ஒருவரும் இருப்பர்.
56. மாவட்ட ஊராட்சியின் தலைமையறின் மற்றும் துணைத்
தலைமையரின் தேர்தல்.-- (1) மாவட்ட ஊராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள் கூடிய விரைவில் அவர்களுக்கிடையேயிருந்து இரண்டு
உறுப்பினர்களை முறையே தலைமையராகவும் துணைத் தலைமையராகவும்
தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
48
(2) 52,53, 54 ஆகிய பிரிவுகளின் வரைமுறைகள், அவை வட்டார ஊராட்சி
மன்றத்தின் தலைமையருக்கும் துணைத் தலைமையருக்கும் பொருந்துவன
போன்றே இயலுமளவிற்கு மாவட்ட ஊராட்சியின் தலைமையர் மற்றும் துணைத்
தலைமையரின் பதவிகளுக்கும் பொருந்தும்; மற்றும் மேற்சொன்ன பிரிவுகளில்
வட்டார ஊராட்சி மன்றத்தை அல்லது ஆணையரைக் குறிக்கும் அறிவிப்பு எதுவும்
அது மாவட்ட ஊராட்சி தலைமையர் மற்றும் துணைத் தலைமையரின் பதவிக்கு
எந்த அளவிற்கு பொருந்துகிறதோ அந்த அளவிற்கு மாவட்ட ஊராட்சியை
அல்லது தலைமைச் செயல் அலுவலரைக் குறிக்கும் அறிவிப்பாக கொள்ளுதல்
வேண்டும்.
57. தலைவர், தலைமையர் முதலிய பதவிகளில் இட ஒதுக்கீடு.- (1)
ஊராட்சியின் தலைவர்கள், வட்டார ஊராட்சி மன்றத்தின் தலைமையர்கள்,
மாவட்ட ஊராட்சியின் தலைமையர்கள் ஆகியோரின் பதவிகள், பட்டியல்
சாதியினர் மற்றும் பழங்குடியினரைச் சார்ந்த நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுதல்
வேண்டும். அம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் உள்ள பட்டியல்
சாதியினறின் அல்லது பழங்குடியினரின் மக்கள் தொகையானது எந்த
விகிதாச்சாரப்படி அமைந்துள்ளதோ இயலுமளவிற்கு அதே விகிதத்தில் அவ்வாறு
ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களின் எண்ணிக்கையானது மாநிலத்தில் உள்ள
மொத்த பதவியிடங்களுக்கேற்ப ஏறக்குறைய அமைந்திருத்தல் வேண்டும்.
முதலாம் வரம்புரை: இம்மாநிலத்தில் ஊராட்சியின் தலைவர்கள், வட்டார
ஊராட்சி மன்றத்தின் தலைமையர்கள், மாவட்ட ஊராட்சியி தலைமையர்கள்
ஆகியோரின் பதவியின் மொத்த எண்ணிக்கையில் மூன்றிலொரு பங்கிற்குக்
குறையாமல் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.
இரண்டாம் வரம்புரை: இந்தப் பிரிவின்படி பதவிகளின் ஒதுக்கீடானது,
வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில் ஒவ்வொரு மட்டத்திலும் வெவ்வேறு
ஊராட்சிகளுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.
(2) ஊராட்சித் தலைவர், வட்டார ஊராட்சி மன்றத் தலைமையர் மேலும்
மாவட்ட ஊராட்சி தலைமையர் பதவிகளில் இட ஒதுக்கீடு அரசினாலோ அல்லது
அரசினால் இதற்கென பொறுப்பளிக்கப்பட்ட அலுவலராலோ மேற்கொள்ளப்படும்.
(3) ஊராட்சி தலைவர், வட்டார ஊராட்சி தலைமையர் மேலும் மாவட்ட
ஊராட்சி தலைமையர் ஆகிய பதவிகளுக்கு (1) ஆம் உட்பிரிவின்படி பட்டியல்
இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்குச் செய்யப்படும் இட ஒதுக்கீடு
அரசமைப்பு சட்டம் 333 ஆம் பிரிவில் குறித்த காலம் வரை மட்டும்தான் இருக்கும்.
(4) (1) ஆம் உட்பிரிவின்படி ஊராட்சி தலைவர், வட்டார ஊராட்சி மன்ற
தலைமையர் மேலும் மாவட்ட ஊராட்சி தலைமையர் பதவிகளுக்கான இடங்களை
ஒதுக்கீடு செய்ய கணக்கிடும் போது பின்னங்கள் வருமேயானால் அவற்றை
கணக்கில் கொள்ள தேவையில்லை.
49
அத்தியாயம் 4.
தேர்தல் தொடர்பான குற்றச் செயல்கள்.
58. தேர்தல் இரகசியத்தை மீறுதல்.- சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரு சில
காரணங்களுக்காகத் தவிர, வாக்காளர் எவரும் எந்தவொரு வேட்பாளருக்கு
வாக்களித்துள்ளார் என்பதை நேரடியாகவோ மறைமுகமாகவோ காட்டுகின்ற
தகவல் எதனையும் நபர் எவருக்கும் தெரிவிக்கின்ற அல்லது தேர்தலொன்றில்
வாக்குகள் பதிவு செய்வது அல்லது எண்ணுவது தொடர்பான கடமை எதையும்
புரிந்து வருகின்ற அலுவலர், எழுத்தர், முகவர் அல்லது பிற நபர் ஒவ்வொருவரும்
முறையற்ற வழிகள் எவற்றின் மூலமாகவேனும் அத்தகைய தகவல் எதையும்
முயன்று பெறுகிற நபர் ஒவ்வொருவரும் ஆறு மாதம் வரை நீடிக்கக்கூடிய சிறைத்
தண்டனையோ அல்லது பணத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதித்துத்
தண்டிக்கப்படுதல் வேண்டும்.
59. தேர்தல் ஒன்றில் ஆள் மாறாட்டம் செய்ததற்காக குறைந்தது எவ்வளவு
தண்டனை அளிக்கப்படுதல் என்பது.- இந்தியத் தண்டனைத் தொகுப்புச்
சட்டத்தின் 171-F எனும் பிரிவில் என்ன அடங்கி இருந்தபோதிலும் இந்தச்
சட்டத்தின்படி தேர்தலொன்று தொடர்பாக அந்தப் பிரிவின்படி தண்டிக்கப்படத்தக்க
ஆள் மாறாட்டக் குற்றச் செயலொன்றைச் செய்கிற நபர் எவரும் ஆறு மாதத்திற்கு
குறையாமலும் மற்றும் இரண்டாண்டுக்கு மேற்படாமலும் சிறைத் தண்டனையுடன்
அபராதமும் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.
60. தேர்தல் தொடர்பாக வகுப்பினர்களுக்ிகிடையே பகைமையை
வளர்த்தல்.- இந்தச் சட்டத்தின்படி தேர்தல் ஒன்று தொடர்பாக சமயம், இனம், சாதி,
சமூகம் அல்லது மொழி அடிப்படையில் இந்தியக் குடிமக்களின் பல்வேறு
வகுப்பினர்களுக்கிடையே பகைமை அல்லது வெறுப்பு உணர்வுகளை வளர்த்து
வருகிற அல்லது வளர்க்க முயலுகிற நபர் எவரும், மூன்றாண்டு வரை
நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ
விதித்துத் தண்டிக்கப்படத்தக்கவராவார்.
61. தேர்தல் நாளுக்கு முந்திய நாளும் தேர்தல் நாளன்றும்
பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குத் தடை.- (1) வட்டார ஊராட்சியில்
அடங்கியுள்ள உள்ளூர் பரப்பிடம் எதிலும் வாக்கெடுப்பு முடிவடைகின்ற தேதிக்கு
முன்னர் நாற்பத்தெட்டு மணிநேரத்திற்குள் அல்லது அந்த ஊராட்சியில் தேர்தல்
ஒன்றுக்காக வாக்கெடுப்பு நடத்தப்படுகிற தேதி அல்லது தேதிகளில்
பொதுக்கூட்டம் எதனையும் நபர் எவரும் கூட்டுதலோ நடத்துதலோ அல்லது அதில்
கலந்து கொள்ளுதலோ கூடாது.
(2) (1) ஆம் உட்பிரிவின் வரைமுறைகளை மீறுகின்ற நபர் எவரும்
இருநூற்று ஐம்பது ரூபாய் வரை அபராதம் விதித்து தண்டிக்கத்தக்கவராவார்.
62. தேர்தல் கூட்டங்களில் கலவரம்.- (1) இந்தப் பிரிவு பொருந்துகின்ற
பொதுக்கூட்டம் ஒன்றில் எந்த அலுவலுக்காக அந்தக் கூட்டம் கூட்டப்பட்டதோ
அந்த அலுவல் நடத்துவதைத் தடுக்கின்ற காரணத்திற்காக முறையற்ற வகையில்
50
செயல்படுகின்ற அல்லது மற்றவர்களை செயல்படுமாறு தூண்டுகிற நபருக்கு
இருநூற்று ஐம்பது ரூபாய் வரை அபராதம் விதித்துத் தண்டிக்கப்படத்தக்கவராவார்.
(2) தேர்தல் ஒன்றுக்கான வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் செய்து
கொள்ளப்படுகின்ற மிக முந்திய தேதிக்கும் அத்தகைய தேர்தல் நடத்தப்படுகின்ற
தேதிக்கும் இடையே வட்டார ஊராட்சியில் அடங்கியுள்ள உள
Rules, notifications and orders under this Act
Listed from India Code. Each opens there.