Tamil Nadu · 1994 · Act 34
THE TAMIL NADU OIL PALM (REGULATION OF PRODUCTION AND PROCESSING) ACT, 1994
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு எண்ணெய்ப்பனை
(உற்பத்தி மற்றும் பதனிடுதலை ஒழுங்குபடுத்துதல்)
சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 341994)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
The Tamil Nadu Oil Palm (Regulation 01 Production and
Processing) Act, 1994
(Tamil Nadu Act No. 34 of 1994)
(as on 31 October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
சென்னை
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
i
1994ஆம் ஆண்டு தமிழ்நாடு எண்ணெய்ப்பனை
(உற்பத்தி மற்றும் பதனிடுதலை ஒழுங்குபடுத்துதல்)
சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 341994)
பிரிவு பொருளடக்கம்
1. குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும்
தொடக்கம்.
2. பொருள்வரையறைகள்.
3. திட்ட மேலாண்மைக் குழுவினை அமைத்தல்.
4. திட்ட மேலாண்மைக் குழுவின்.
செயற்பணிகள்.
5. மண்டலக் குழுக்களை அமைத்துருவாக்குதல்.
6. மண்டலக் குழுவின் அதிகாரங்களும்
அலுவல்களும்.
7. மண்டலக் குழு நிதி.
8. எண்ணெய்ப்பனை ஆணையரின் நியமனம்.
9. எண்ணெய்ப்பனை ஆய்வாளர்.
10. எண்ணெய்ப்பனை பயிரிடுபவர்களின்
மற்றும் எண்ணெய்ப்பனை பயிரிடுவோர்
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவேடு.
11. ஆலை மண்டலப்பகுதியை விளம்புதல்.
12... எண்ணெய்ப்பனை பழக்குலைகளை
வாங்கத் தவறுகை.
13. விலைகளை நிர்ணயிப்பதற்கான அதிகாரம்.
14. எண்ணெய்ப்பனை விலைக்கான பணச்
செலுத்தம்.
15. வாங்கப்படும் எண்ணெய்ப்பனை
பழக்குலைகளின் மீது வரிவிதிப்பு.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
i
பதிவுருவைப் பேணுதல் மற்றும் ஆய்வு
செய்தல்.
தண்டனைகள்.
குற்றச்செயல்கள். எதனையும்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்.
குற்றச்செயல்களை இணக்கமாகத் தீர்த்தல்.
நல்லெண்ணத்துடன் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்காக
ஆலையின் அனுபவத்தில் இருப்பவரை
நிர்ணயித்தல்.
பணிப்புரையை வழங்குவதற்கான அதிகாரம்.
அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்.
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
1
1994ஆம் ஆண்டு தமிழ்நாடு எண்ணெய்ப்பனை
(உற்பத்தி மற்றும் பதனிடுதலை ஒழுங்குபடுத்துதல்)
சட்டம்
தமிழ்நாடு சட்ட எண் 34,1994
[தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது, 1994ஆம்
ஆண்டு ஜுன் திங்கள் 28ஆம் நாளன்று ஆளுநரின்
ஏற்பிசைவைப் பெற்று, பொதுத் தகவலுக்காகத் தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்பட்டது.
எண்ணெய்ப்பனை பயிரிடுதலை ஒழுங்கு
படுத்துவதற்காகவும், முறைப்படி
வளர்ப்பதற்காகவும், அவற்றின் பழக்குலைகளைப்
பதனிடுதலுக்காகவும் மற்றும் அது தொடர்பாண
விவரங்களுக்காகவும் வகைசெய்வதற்கான ஒரு
சட்டம்.
இந்தியக் குடியரசின் நாற்பத்து ஐந்தாம் ஆண்டில்
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால்
இயற்றப்பட்டச் சட்டம் பின்வருமாறு:-
1. குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும்
தொடக்கம்.- (1) இந்தச் சட்டம், 1994 ஆம் ஆண்டு
தமிழ்நாடு எண்ணெய்ப்பனை (உற்பத்தி மற்றும்
பதனிடுதலை ஒழுங்குபடுத்துதல்) சட்டம் என
வழங்கப்படும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் பரவி
நிற்கும்.
(3) இது, அரசு, அறிவிக்கை மூலமாகக்
குறித்திடும் தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்;
மற்றும் வேறுபட்ட பகுதிகளுக்கும்; வேறுபட்ட வகை:
முறைகளுக்கும் வேறுபட்ட தேதிகளைக் குறித்திடலாம்.
2
2. பொருள்வரையறைகள்.- இந்தச் சட்டத்தில்,
தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-
(@) "ஆலை என்பது, இயந்திர சக்தியின்
உதவியுடன் எண்ணெய்ப்பனை பழக்குலைகளைப் (FFB)
பதனிடுதல் தொடர்பான தயாரிப்பு முறை எதனையும்
செய்து வரக்கூடிய சுற்றுப்புற இடங்கள் உள்ளிட்ட
வளாகங்கள் மற்றும் அதன் பகுதி எதுவும் எனப்
பொருள்படும்;
(b) "ஆலை மண்டலப் பகுதி" என்பது,
பிரிவு 11இன்படி ஆலை ஒன்றுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு
பகுதி எனப் பொருள்படும்;
(9) "அரசு" என்பது, மாநில அரசு எனப்
பொருள்படும்;
(0) "ஆலையின் அனுபவத்தில் இருப்பவர்”
என்பது, அந்த ஆலை விவகாரங்களில் (அலுவல்களில்)
இறுதி கட்டுப்பாட்டு அதிகாரத்தினைக் கொண்டுள்ள நபர்
அல்லது அதிகாரஅமைப்பு எனப் பொருள்படும்; மற்றும்
மேற்சொன்ன விவகாரங்கள் செயலாளர், மேலாளர்,
மேலாண்மை இயக்குநர், நிருவாக இயக்குநர் அல்லது
தலைமை நிருவாக இயக்குநர் ஒருவரிடம்
ஒப்படைக்கப்படுகின்றபோது, அந்தச் செயலாளர், மேலாளர்,
மேலாண்மை இயக்குநர், நிருவாக இயக்குநர் அல்லது
தலைமை நிருவாக இயக்குநர் ஆலையின் அனுபவத்தில்
இருப்பவராகக் கருதப்படுதல் வேண்டும்;
(6) "எண்ணெய்ப்பனை" என்பது, க்ளாசிஸ்
(clacis) இனத்தைச் (genus) சார்ந்ததாகும்.
எண்ணெய்ப்பனை க்ளாசிஸ் கினீன்சிஸ் (clacis guineensis
species) வகை மற்றும் அதன் கலப்பினங்களைக்
குறிப்பதாகும்;
3
(0) "எண்ணெய்ப்/னை ஆணையர்" என்பது,
பிரிவு 8இன்படி நியமிக்கப்பட்ட அல்லது பதவி
அமர்த்தப்பட்ட எண்ணெய்ப்/னை ஆணையர் எனப்
பொருள்படும்;
(9) "எண்ணெய்ப்பனை பழக்குலை" (0)
என்பது, பதனிடப்படாத புதிய எண்ணெய்ப்பனை
பழக்குலை எனப் பொருள்படும்; மற்றும் அதன் உதிர்ந்த
பழங்களையும் அது உள்ளடக்கும்;
(h) "எண்ணெய்ப்பனை பயிரிடுபவர்” என்பது,
தாமாகவோ அல்லது தனது சொந்தப் பணியாட்கள்
மூலமாகவோ, கூலியாட்களின் மூலமாகவோ அல்லது
தனது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ அல்லது தன்
குத்தகைதாரர்கள் மூலமாகவோ எண்ணெய்ப்பனை
பயிரிடுகிண்ற நபர் ஒருவர் மற்றும் எண்ணெய்ப்பனை
பயிரிடுபவர்கள் கூட்டுறவுச் சங்கத்தை, சங்கங்களின்:
ஒன்றியம் அல்லது சங்கங்களின் கூட்டமைப்பை
உள்ளடக்கும். ஆனால் அதன் ஒரு உறுப்பினரையோ
1956ஆம் ஆண்டு நிறுமங்கள் (மையச் சட்டம் 11956)
சட்டத்தின் பிரிவு 3இல் பொருள்வரையறை செய்யப்பட்ட
ஒரு நிறுமத்தையோ உள்ளடக்காது;
(i) "எண்ணெய்ப்பனை பயிரிடூபவர்கள்
கூட்டுறவுச் சங்கம்” என்பது, 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு
கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம்
30/1983) பதிவு செய்யப்பட்டு, அதன் உறுப்பினர்களால்
எண்ணெய்ப்பனையை பயிரிடுதல் மற்றும்
பழக்குலையினை (FFB) விற்பனை செய்தல்
ஆகியவற்றை, அதன் செயற்பணிகளின் நோக்கம்
ஒன்றாகக் கொண்டுள்ள ஒரு சங்கம் எனப் பொருள்படும்;
மற்றும் அது, அத்தகைய சங்கங்களின் ஒன்றியம்,
சங்கங்களின் கூட்டமைப்பையும் உள்ளடக்கும்;
4
() "எண்ணெய்ப்பனை ஆய்வாளர்” என்பது,
பிரிவு 9இன்படி நியமிக்கப்பட்ட அல்லது பதவி
அமர்த்தப்பட்ட எண்ணெய்ப்பனை ஆய்வாளர் எனப்
பொருள்படும்;
(k) "எண்ணெய்ப்பனை உற்பத்திப் பொருள்"
என்பது, எண்ணெய்ப்பனையிலிருந்து நேரடியாகப்
பெறப்படும் பொருள் எதுவும் எனப் பொருள்படும்; மற்றும்
அது பனை எண்ணெய், பனங்கொட்டை, பனங்கொட்டை
புண்ணாக்கு, பனைக்கொழுப்பு அமிலங்கள்,
எண்ணெய்ப்பனை வித்துக்கள், எண்ணெய்ப்பனை
நாற்றுகள், பனணங்கொட்டை எண்ணெய் ஆகியவற்றை
உள்ளடக்கும்;
0) "திட்ட மேலாண்மைக் குழு" என்பது,
பிரிவு 3இன்படி அமைத்துருவாக்கப்பட்ட தமிழ்நாடு
எண்ணெய்ப்பனை திட்ட மேலாண்மைக் குழு எனப்
பொருள்படும்;
(m) "மண்டலக் குழு" என்பது, பிரிவு 5இன்படி
அமைத்துருவாக்கப்பட்ட ஒரு மண்டலக் குழு எனப்
பொருள்படும்.
3. திட்ட மேலாண்மைக் குழுவினை அமைத்தல்.-
(1) இந்தச் சட்டம், தொடங்கப்பட்டதற்குப் பின்பு கூடிய
விரைவில், அரசு, அறிவிக்கை மூலமாக,
இம்மாநிலத்திற்காக தமிழ்நாடு எண்ணெய்ப்பனைத் திட்ட
மேலாண்மைக் குழு என்று வழங்கப்படும் ஒரு குழுவினை
அமைத்தல் வேண்டும்.
(2) இத்திட்ட மேலாண்மைக் குழுவானது
பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருத்தல்
வேண்டும்:-
5
(a) வேளாண்மைத் துறையைப் பொறுப்பில்
கொண்டுள்ள அரசு செயலாளர், பதவிவழி தலைவராக
இருத்தல் வேண்டும்;
0) நிதித் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள
அரசு செயலாளர், பதவிவழி;
(29) திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையைப்
பொறுப்பில் கொண்டுள்ள அரசு செயலாளர், பதவிவழி;
(0) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர்
பாதுகாப்புத் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசு
செயலாளர், பதவிவழி;
(6) தொழில் துறையைப் பொறுப்பில்
கொண்டுள்ள அரசு செயலாளர், பதவிவழி;
) புது தில்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சி
மன்றத்தின் பிரதிநிதி ஒருவர்;
@ இந்திய அரசின் வேளாண் மற்றும்
கூட்டுறவுத் துறையின் (எண்ணெய் வித்துக்கள் மற்றும்
பயறுவகைகள் தொழில் நுட்ப முனைவு மையம்) பிரதிநிதி
ஒருவர்;
(h) வேளாண் மற்றும் தேசிய ஊரக வளர்ச்சி
வங்கியின் பிரதிநிதி ஒருவர்;
0) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்,
துணைவேந்தரால் பெயர் குறித்து நியமிக்கப்படக்கூடிய
பிரதிநிதி ஒருவர்;
() அரசால் பெயர் குறித்து
நியமிக்கப்படக்கூடிய எண்ணெய்ப்பனை பதனிடு
ஆலைகளின் பிரதிநிதி ஒருவர்;
(k) அரசால் பெயர்குறித்து
நியமிக்கப்படக்கூடிய எண் ணெய்ப்பனை
பயிரிடுவோர்களிலிருந்து ஒருவர்;
() வேளாண்துறை இயக்குநர், அவர் பதவிவழி
உறுப்பினர் செயலாளராக இருப்பார்.
(3 திட்ட மேலாண்மைக் குழுவின்:
காலஅளவானது மூன்று ஆண்டுகளாகும், ஆனால்,
அரசானது, எழுத்து வடிவில், பதிவு செய்யப்படக்கூடிய
காரணங்களுக்காக அக்காலஅளவு முடிவடைவதற்கு
முன்னர் எந்தக் காலத்திலும் அக்குழுவினை மீண்டும்
அமைத்துருவாக்கலாம்.
(4) பதவிவழி உறுப்பினராக இருக்கின்ற அரசு
செயலாளர் காரணம் எதற்காகவும் திட்ட மேலாண்மைக்
குழுவின். கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு
இயலாதபோது அரசு துணைச் செயலாளரின்
படிநிலைக்குக் குறையாத தமது துறையின் அலுவலர்
எவரொருவரையும் அக்கூட்டத்தில்: கலந்துக்
கொள்வதற்காக தனக்குப் பதிலாக அனுப்பி வைக்கலாம்.
4. திட்ட மேலாண்மைக் குழுவின் செயற்பணிகள்.-
அரசிற்கு பின்வரும் விவரங்களில் ஆலோசனை வழங்க
வேண்டியது திட்ட மேலாண்மைக் குழுவின்.
கடமையாகும், அவையாவன:-
(8) எண்ணெய்ப்பனை பயிரிடும் பகுதிகளை
விரிவாக்குதல்;
(b) எண்ணெய்ப்பனை பயிரிடுதல் தொடர்பான
பிரச்சனைகள்;
(9) எண்ணெய்ப்பனை பதனிடு தொழிலில்
எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகள்;
7
(0) எண்ணெய்ப்பனை பயிரிடுவோர்களுக்கும்
மற்றும் எண்ணெய்ப்பனை தொழில் புரிவோருக்கும்
இடையே எழக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும்
தீர்த்து வைத்து ஒருங்கிணைத்தல்;
(6) எண்ணெய்ப்பனை பயிரிடுதல் மற்றும்
எண்ணெய்ப்பனைத் தொழிலின் முறையான வளர்ச்சிக்கு
உதவக்கூடிய நடவடிக்கைகள் எதையும் அரசின்
கவனத்திற்குக் கொண்டு வருதல்;
() வகுத்துரைக்கப்படும் பிற விவரங்கள்.
5. மண்டலக் குழுக்களை அமைத்துருவாக்குதல்.-
(1) அரசு, அறிவிக்கை மூலமாக, பதணிடு ஆலை
ஒன்றுடன் இணைந்த குறிப்பிடப்பட்ட பகுதி
ஒவ்வொன்றையும் (இதன் பின்பு ஓர் ஆலை மண்டலப்
பகுதி எனக் குறிப்பிடப்படுவதான) மண்டலம் ஒன்றாக
விளம்புகை செய்யலாம்; மற்றும் எண்ணெய்ப்பனை
ஆணையர், அத்தகைய மண்டலப் பகுதி
ஒவ்வொன்றிற்கும் எண்ணெய்ப்பனை மண்டலக் குழு
ஒன்றை அமைத்துருவாக்கலாம்:
வரம்புரை: இந்தச் சட்டத்தின் நோக்கங்களைத்
திறம்பட நிறைவேற்றுவதில் அக்கறை தேவை எனக்
கருதும் நிலையில், எண்ணெய்ப்பனை ஆணையர்
அரசின் அனுமதியுடன், ஒன்றுக்கு மேற்பட்ட ஆலை
மண்டலத்திற்கு ஒரு மண்டலக் குழுவையோ அல்லது
ஒரு ஆலை மண்டலத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட
மண்டலக் குழுக்களையோ அமைத்துருவாக்கலாம்.
(2) உட்பிரிவு (1)இன்படி அமைத்துருவாக்கப்பட்ட
மண்டலக் குழுவானது, பின்வரும் உறுப்பினர்களைக்
கொண்டிருத்தல் வேண்டும்:-
8
@ அந்த ஆலை மண்டலப் பகுதியில்
குடியிருக்கிற, எண்ணெய்ப்பனையை
பயிரிடுபவர்களிலிருந்து அரசின். ஒப்புதலுடன்
எண்ணெய்ப்/னை ஆணையரால் பெயர் குறித்து
நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர்;
(b) ஆலை மண்டலப் பகுதியில் அமைந்துள்ள
தொடர்புடைய ஆலையின் மேலாண்மை இயக்குநரால்
பெயர் குறித்து நியமிக்கப்பட வேண்டிய ஆலையைப்
பிரதிநிதித்துவம் செய்கின்ற நபரொருவர்;
(c) எண்ணெய்ப்பனையை பயிர் செய்பவர்-
களிலிருந்து, எண்ணெய்ப்பனை ஆணையரால்
பெயர்குறித்து நியமிக்கப்பட வேண்டிய நான்கு நபர்கள்;
(0) அப்பகுதியைப் பிரதிநிதித்துவம் செய்கிற,
வேளாண் இணை இயக்குநர், வேளாண் உதவி இயக்குநர்
மற்றும் செயற்பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல்);
(6) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தரால் பெயர் குறித்து நியமிக்கப்பவேண்டிய
பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி ஒருவர்;
) குழுவின் உறுப்பினர் செயலாளராக
இருக்கவேண்டிய தொடர்புடைய எண்ணெய்ப்பனை
ஆய்வாளர்:
வரம்புரை: கூறு (இல் குறிப்பிடப்பட்ட
உறுப்பினர்களுக்கு, மண்டலக் குழுவின் கூட்டங்களில்
பங்கேற்பதற்கு உரிமை உண்டு; ஆனால், அவர்கள்
அத்தகைய கூட்டங்களில் வாக்களிப்பதற்கு உரிமை
இல்லை.
(3) மண்டலக் குழுவானது ஒரு தொடர்
வழியுரிமையும் பொது இலச்சினையும் கொண்டதும்,
9
சொத்தினை ஈட்டுவதற்கும், வைத்திருப்பதற்கும் மற்றும்
ஒப்பந்தங்கள் செய்வதற்கும், அதிகாரம் பெற்ற
கூட்டமைப்பாக இருத்தல் வேண்டும் மற்றும் அது
மேற்சொன்ன பெயரில் வழக்கிடுதலும் வழக்கிடப்படுதலும்.
வேண்டும்.
(4) மண்டலக் குழுவின் பதவி காலஅளவானது
மூன்று ஆண்டுகளாகும் அது முடிவடைந்த பின்னர்,
குழுவானது, உட்பிரிவு (1)இன் வகைமுறைகளுக்கு
இணங்கிய வகையில், மீண்டும் அமைத்துருவாக்கப்படுதல்
வேண்டும்:
வரம்புரை: எண்ணெய்ப்பனை ஆணையர், அவ்வாறு
செய்வது தேவையானது என மனநிறைவடைகிற போது,
அக்குழுவின் காலஅளவு முடிவடைவதற்கு முன்பாக
அரசின் ஒப்புதலுடன் ஆணையின் மூலமாக அந்தக்
குழுவினைக் கலைக்கலாம்:
மேலும் வரம்புரை: முறையீட்டினைச் செய்து
கொள்வதற்கு அந்தக் குழுவிற்கு வாய்ப்பு
அளித்திருந்தாலன்றி எண்ணெய்ப்பனை ஆணையர்
அத்தகைய ஆணை எதனையும் பிறப்பித்தல் கூடாது.
(5) ஒரு மண்டலக் குழுவானது
கலைக்கப்படுகிறபோது, பின்வரும் விளைவுகள் தொடர்ந்து
வரும்:-
(@) உறுப்பினர்களாக மீண்டும் பெயர் குறித்து
நியமிப்பதற்கான உரிமைக்கு ஊறின்றி, அனைத்து
உறுப்பினர்களும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்ட
தேதியன்று தம் பதவிகளைவிட்டு நீங்குதல் வேண்டும்.
(b) கலைக்கப்பட்டதிலிருந்து மூன்று
மாதங்களுக்குள்ளாக, எண்ணெய்ப்பனை ஆணையரால்
10
பிரிவு (1)இன் வகைமுறைகளுக்கு இணங்கிய
வகையில்,குழுவானது மீண்டும் அமைத்துருவாக்கப்படுதல்
வேண்டும்.
(9) குழுவானது மீண்டும்
அமைத்துருவாக்கப்படும் வரை அக்குழுவின்
அதிகாரங்களும் அலுவல்களும், அந்த ஆணையில்
குறிப்பிடப்படும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, உறுப்பினர்
செயலாளரால் செலுத்தப்படுதலும் ஆற்றப்படுதலும்
வேண்டும்.
(6) எண்ணெய்ப்பனை ஆணையர், அரசின்
ஒப்புதலுடன் தலைவர் உள்ளிட்ட மண்டலக் குழுவின்
உறுப்பினர் எவரையும், நீக்குவதற்கான காரணங்களை
எழுத்துவடிவில் பதிவு செய்ததற்குப் பின்பு
பதவியிலிருந்து நீக்கலாம்:
வரம்புரை: அத்தகைய உறுப்பினருக்கு தம்
முறையீட்டினைச் செய்வதற்கான வாய்ப்பு
கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, உறுப்பினர் ஒருவரை
நீக்குகிற ஆணை எதுவும் எண்ணெய்ப்பனை
ஆணையரால் பிறப்பிக்கப்படுதல் கூடாது.
(7) இந்தச் சட்டத்தின் அல்லது அதன்படிச்
செய்யப்பட்ட விதி எதனின் வகைமுறைகளுக்கும்
உட்பட்டு, மண்டலக் குழுவானது, ஆணையின் மூலமாக,
கூட்டம் நடத்துவது பற்றிய நடைமுறையை
ஒழுங்குபடுத்தலாம்.
6. மண்டலக் குழுவின். அதிகாரங்களும்
அலுவல்களும்.- (1) மண்டலக் குழுவின் பணிகள்:-
(ஐ) ஆலை மண்டலப் பகுதியில், எண்ணெய்ப்பனையைப்
பயிரிடுவதை மேம்படுத்துவதற்கான திட்டத்தைப்
பரிசீலனை செய்தல்;
11
(b) ஆலையால் அல்லது பயிரிடுவோரால்,
பயிரிடுதல், போக்குவரத்து மற்றும் பதனிடுதல்
ஆகியவற்றில் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளை
ஆராய்தல்;
(9) குழுவிடம் இருக்கும் நிதி வசதிகளைக்
கொண்டு பிரச்சனைகளை நீக்குவதற்குத் திட்டம்
தீட்டுதல் மற்றும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத்
தேவைப்படும் நடவடிக்கையை எடுக்குமாறு அரசுக்குப்
பரிந்துரைத்தல்;
(0) பயிரிடும் மையங்களிலிருந்து ஆலை
மண்டலப் பகுதிக்கு செல்லும் கிளைச் சாலைகள்
உள்ளிட்ட சாலைகளை மேம்படுத்துவதற்கும், பேணி
வருவதற்கும் உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைகள்
மற்றும் ஊரகப் பணி மற்றும் பொதுப்பணிக்கான அரசுத்
துறைகளுக்குப் பரிந்துரைத்தல்;
(e) எண்ணெய்ப்பனை நோய்களைத்
தடுப்பதற்கும் எண்ணெய்ப்பனையைப் பாதிக்கின்ற
பூச்சிகளைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும்,
நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும்
எண்ணெய்ப்பனையைப் பயிரிடுவதை
மேம்படுத்துவதற்காக இயன்ற அனைத்து வகையான
உதவிகளையும் செய்தல்;
(9) பயிரிடுபவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கும்
மற்றும் குழுவின் நிதி வசதிகளைக் கொண்டு
எண்ணெய்ப்பனை தொடர்பான பணியை
விரிவுபடுத்துவதற்குமானத் திட்டங்களைத் தீட்டுதல்;
(9) போக்குவரத்து, எண்ணெய்ப்பனை
பழக்குலைகளை வாங்குதல் மற்றும் எண்ணெய்ப்பனை
பயிரிடுபவர்களுக்கு ஆலையால் செலுத்தப்படும் விலை
12
குறித்த குறையீடுகளையும் முறையீடுகளையும் பரிசீலனை
செய்தல்; மற்றும்
(h) இருக்கக்கூடிய நிதியை நிருவாகம்
செய்தல்.
(2) அரசோ அல்லது எண்ணெய்ப்பனை
ஆணையரோ, அனைத்து ஆலை மண்டலப்
பகுதிகளுக்கும் பொதுவான பிரச்சனைகள் குறித்து
ஆராய்வதற்கு அனைத்து மண்டலக் குழுக்களின்.
தலைவரையும் உறுப்பினர்களையும் கொண்ட
கூட்டத்தைக் கூட்டலாம்.
7.மண்டலக் குழு நிதி.-- (1) மண்டலக் குழுவிடம்
ஒப்படைக்கப்பட்ட பல்வேறு அலுவல்களைப் புரிவதற்காக,
அதன் வசம் நிதி ஒன்று இருத்தல் வேண்டும்.
(2) குழுவின் நிதிகள் பின்வருவனவற்றைக்
கொண்டிருத்தல் வேண்டும்:-
(@) குழுவின் அலுவல்களைப் புரிவதற்கு,
பொதுவான நோக்கத்திற்காகவோ அல்லது குறிப்பிட்ட
நோக்கத்திற்காகவோ, அரசினால் கொடுக்கப்பட்ட
மானியங்கள்;
(b) எண்ணெய்ப்பனை பயிரிடுவது மற்றும்
பதனிடூவது குறித்த மேம்பாட்டில் அக்கறையுடைய
ஆலைகளாலும், எண்ணெய்ப்பனை பயிரிடுபவர்களாலும்
எண்ணெய்ப்பனை பயிரிடுவோர் கூட்டுறவுச்
சங்கங்களினாலும் அல்லது பிற அமைப்புகளாலும்
செய்யப்படும் பங்களிப்புகள்.
8. எண்ணெய்ப்பனை ஆணையரின் நியமனம்.-
இதன் பொருட்டுச் செய்யப்படும் விதிகளுக்குட்பட்டு, அரசு
கூடுதல் வேளாண்மை இயக்குநரின் படிநிலைக்குக்
13
குறையாத, வேளாண்மைத் துறை அலுவலர் எவரையும்
இந்தச் சட்டத்தின்படி எண்ணெய்ப்பனை ஆணையரின்
அதிகாரங்களைச் செலுத்தி வரும் பொருட்டும்
அலுவல்களைப் புரிந்து வரும் பொருட்டும்
எண்ணெய்ப்பனை ஆணையராக நியமிக்கவோ பெயர்
குறித்து பணியமர்த்தவோ வேண்டும்.
9. எண்ணெய்ப்பனை ஆய்வாளர்.- (1) இதன்
பொருட்டுச் செய்யப்படும் விதிகளுக்குட்பட்டு, அரசு,
இந்தச் சட்டத்தின்படி எண்ணெய்ப்பனை ஆய்வாளருக்கு
உரிய அதிகாரங்களைச் செலுத்தி வருவதற்கும்,
அலுவல்களைப் புரிந்து வருவதற்கும் குறிப்பிடப்படும்
பகுதிகளுக்கு என எண்ணெய்ப்பனை
ஆய்வாளர்களாக வேளாண்மை உதவி இயக்குநரின்:
படிநிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அரசு
அலுவலர்களை நியமிக்கலாம்
(2) உட்பிரிவு (இல் என்ன
அடங்கியிருந்தபோதிலும், அரசு, இந்தச் சட்டத்தின்படி
எண்ணெய்ப்பனை ஆய்வாளர்களின் அதிகாரங்களைச்
செலுத்தி வருவதற்கும், அலுவல்களைப் புரிந்து
வருவதற்கும் எண்ணெய்ப்பனை ஆய்வாளர்களாக
வேளாண்மை உதவி இயக்குநரின் படிநிலையில்
குறிப்பிட்ட எண்ணிக்கையில் அரசு அலுவலர்களைப்
பெயர்குறித்து அமர்த்தலாம்.
10. எண்ணெய்ப்பனை பயிரிடுபவர்களின் மற்றும்.
எண்ணெய்ப்பனை பயிரிடுவோர் கூட்டுறவுச் சங்கங்களின்
பதிவேடு.- ஒவ்வோர் ஆலை மண்டலப் பகுதியிலுள்ள
ஆலையின் அனுபவத்திலிருப்பவர் வகுத்துரைக்கப்படும்
படிவத்திலும், முறையிலும், பிரிவு 11இன்
வகைமுறைகளுக்கு இணங்க, அந்த ஆலையோடு
இணைந்துள்ள மண்டலத்தில் எண்ணெய்ப்பனை
14
பயிரிடுபவர்களின் பதிவேடு ஒன்றைப் பேணிவருதல்
வேண்டும். அந்தப் பதிவேடானது அன்றன்று எழுதப்பட்டு
எப்போதும் எண்ணெய்ப்பனை ஆய்வாளராலோ அரசினால்
அல்லது எண்ணெய்ப்பனை ஆணையரால்
இதன்பொருட்டு அதிகாரமளிக்கப்படும் பிற
அதிகாரஅமைப்பு எதனாலுமோ ஆய்வு
செய்யப்படுவதற்காக ஆலை அலுவலகத்தில்
கிடைக்கத்தக்கதாய் இருத்தல் வேண்டும். அனுபவத்தில்
இருப்பவர் சம்மந்தப்பட்ட மண்டலத்திலுள்ள பதிவேட்டில்
உள்ள எண்ணெய்ப்பனை பயிரிடுபவர்களின் மற்றும்
எண்ணெய்ப்பனை பயிரிடுவோர் கூட்டுறவுச் சங்கங்களின்
பெயர்ப்பட்டியலின் நகல் ஒன்று மண்டலக் குழுவிற்கு
கிடைக்கத்தக்கதாக இருக்கும்படி மேற்சொன்ன
அனுபவத்தில் இருப்பவர் செய்தல் வேண்டும். ஆய்வு
செய்கின்ற அதிகாரஅமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்ட
அறிக்கையின் பேரில் இந்தப் பிரிவின்படி, பேணிவரப்படும்
பதிவேட்டில் தான்: பொருத்தம் எனக் கருதும்
திருத்தங்களைச் செய்யுமாறு ஆணையிடுவதற்கு
எண்ணெய்ப்பனை ஆணையருக்குத் தகுதி உண்டு.
11. ஆலை மண்டலப் பகுதியை விளம்புதல்.- (1)
இந்த நோக்கத்திற்காகக் குறிப்பிட்ட ஆலைக்கு
எண்ணெய்ப்பனை பழக்குலைகளை வழங்குகின்ற
நோக்கத்திற்காகவோ அல்லது எண்ணெய்ப்பனை
பழக்குலைகளையும் பிற எண்ணெய்ப்பனை உற்பத்திப்
பொருள்கள் எவற்றையும் ஆலை வாங்குகின்ற
நோக்கத்திற்காகவோ பகுதி எதனையும் ஆலை மண்டலப்
பகுதியாக அறிவிக்கையின் மூலம் விளம்புவதற்கு அரசு
அதிகாரம் பெற்றதாகும்.
(2) குறிப்பிட்ட ஒரு பகுதி உட்பிரிவு (1) இன்படி
ஆலை மண்டலப் பகுதியாக விளம்பப்படும்போது, அந்தப்
பகுதியிலுள்ள எண்்ணெய்ப்பனை பயிரிடுபவர்கள் அந்தப்
15
பகுதியில் பயிரிடப்பட்டுள்ள எண்ணெய்ப்பனை
தோட்டங்களிலிருந்து கிடைக்கும் பழக்குலைகளை அந்த
ஆலை மண்டலப் பகுதி எந்த ஆலையோடு
இணைக்கப்பட்டுள்ளதோ அந்த ஆலைக்கு மட்டுமே
வழங்கி வருதல் வேண்டும்.
(3) குறிப்பிட்ட ஒரு ஆலை மண்டலப் பகுதி
இந்தச் சட்டத்தின்படி விளம்புகை செய்யப்படும்போது
எண்ணெய்ப்பனை பயிரிடுபவர்களாலோ அவர்களது
கூட்டுறவுச் சங்கங்களாலோ அந்த ஆலை மண்டலப்
பகுதியில் தங்களால் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு
அளிக்கப்படுகின்ற எண்ணெய்ப்பனை பழக்குலைகள்
அனைத்தையும், இச்சட்டத்தின்படி விலையை
நிர்ணயிப்பதற்கு அதிகாரம் பெற்ற அதிகாரஅமைப்பினால்
நிர்ணயிக்கப்படும் விலையைக் காட்டிலும் குறையாத ஒரு
விலையில் ஆலை மண்டலப் பகுதி என
விளம்பப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ஆலை மண்டலப்
பகுதியில் உள்ள ஆலையின் அனுபவத்தில் இருப்பவர்
வாங்குதல் வேண்டும்.
12. எண்ணெய்ப்பனை பழக்குலைகளை வாங்கத்
தவறுகை.- (1) விளம்புகை செய்யப்பட்டுள்ள ஆலை
மண்டலப் பகுதியில் பயிரிடுபவர்களிடமிருந்து
எண்ணெய்ப்பனை பழக்குலைகள் அனைத்தையும் அந்த
ஆலையின் அனுபவத்தில் இருப்பவர் தகுந்த காரணம்
எதுவுமின்றி வாங்கத் தவறுகின்றபோது, ஆலையின்
அனுபவத்தில் இருப்பவர் பிரிவு 17இல் குறிப்பிடப்படும்
பணத்தண்டம் விதிக்கப்படுவதுடன் அந்த ஆலையினால்
எண்ணெய்ப்பனை பழக்குலைகள் வாங்கப்படாததன்
காரணத்தால் பயிரிடூவோருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய
இழப்பினை ஈடு செய்வதற்கும் கடமைப்பட்டவராவார்.
16
(2) ஆலை ஒன்றின் அனுபவத்தில் இருப்பவர்
பயிரிடுபவரிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்ட
எண்ணெய்ப்பனை பழக்குலைகளின் குறிப்பிட்ட ஒரு
சரக்கையோ சரக்குகளையோ வாங்க மறுக்கும்போது, அவர்
எழுத்து வடிவில் அதற்கான காரணங்களை அளித்தல்
வேண்டும்:
வரம்புரை: திறமையற்ற ஆலை இயக்கம், இயந்திரத்
தொகுதி பழுதடைதல், முழு ஆற்றலைப் பயன்படுத்தத்
தவறுதல் மற்றும் பிற எந்தப் பிரச்சனைகளும்
எண்ணெய்ப்பனை பழக்குலை சரக்குகளை
மறுப்பதற்கானத் தகுந்த காரணங்களாகாது; மற்றும் உட்பிரிவு
(1)இன் நோக்கங்களுக்காக அந்த ஆலை
எண்ணெய்ப்பனை பழக்குலைகளை வாங்கத்
தவறியதாகவே கருதப்படுதல் வேண்டும்:
மேலும் வரம்புரை: எண்ணெய்ப்பனை ஆணையர்,
எண்ணெய்ப்பனை பழக்குலைகளை வாங்கத்
தவறியதற்கானத் தகுந்த காரணங்கள் இருக்கின்றனவா
இல்லையா என்பதை முடிவு செய்வதற்கு
அதிகாரமுடையவராவார் என்பதோடு அது குறித்து அவரது
முடிவே அறுதியானதாகும்.
13. விலைகளை நிர்ணயிப்பதற்கான அதிகாரம்.-
(1) அரசு தானாகவே முற்பட்டு எண்ணெய்ப்பனை
பழக்குலைகளின் குறைந்தபட்ச விலையை
நிர்ணயிக்கலாம் அல்லது அவ்வப்போது அது தொடர்பாக
வழங்கப்படும் வழிக்காட்டு நெறிமுறைகளுக்கு இணங்க.
விலை நிர்ணயம் செய்துகொள்ளுமாறு
எண்ணெய்ப்பனை ஆணையருக்கு அதிகாரமளிக்கலாம்.
(2) ஆலையால் வாங்கப்பட வேண்டிய
எண்ணெய்ப்பனை பழக்குலைகளின் விலைகளை
நிர்ணயிப்பதற்கு எண்ணெய்ப்பனை ஆணையருக்கு
17
அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கின்றபோது அவர்,
ஆலைகளினால் அந்த எண்ணெய்ப்பனை பழக்குலைகள்
வாங்கப்பபவேண்டிய குறைந்தபட்ச விலை இவ்வளவு
என்று அரசினால் பணிக்கப்படக்கூடிய கால
இடைவெளிகளில் வெளியிட்டு வருதல் வேண்டும்.
14. எண்ணெய்ப்பனை விலைக்கான பணச்
செலுத்தம்.- (1) எண்ணெய்ப்பனை ஆணையருக்கு
மனநிறைவளிக்கும் விதத்தில் எண்ணெய்ப்/னை ஆலை
ஒன்றின் அனுபவத்தில் இருப்பவர் அல்லது அதன்
உரிமையாளர் அந்த ஆலைக்கு வழங்கப்படும்.
எண்ணெய்ப்பனை பழக்குலைகளின் விலைக்கான
தொகையைச் செலுத்துவதற்குத் தக்க வழிவகைகளைச்
செய்தல் வேண்டும்.
(2) எண்ணெய்ப்பனை பழக்குலைகளை
ஒப்படைத்ததின் பேரில் ஆலை ஒன்றின் அனுபவத்தில்
இருப்பவர் அல்லது அதன் உரிமையாளர் அவ்வாறு
வழங்கப்பட்ட எண்ணெய்ப்பனை பழக்குலைகளின்'
விலையை அத்தகைய ஒப்படைப்புத் தேதியிலிருந்து
பதினான்கு நாட்களுக்குள் செலுத்துவதற்கு
கடமைப்பட்டவராவார்.
(3) உட்பிரிவு (2)இல் குறிப்பிடப்பட்ட காலஅளவு
முடிவடைந்ததின்பேரில் செலுத்தப்படாமல் எஞ்சியுள்ள
எண்ணெய்ப்பனை பழக்குலைகளுக்கான விலையானது,
எண்ணெய்ப்பனை பழக்குலைகள் ஒப்படைக்கப்பட்ட
தேதியிலிருந்து ஆண்டொன்றுக்கு நூற்றுக்கு பதினைந்து
விழுக்காடு என்னும் விதத்தில் வட்டி சேர்ந்ததாக
இருத்தல் வேண்டும்; மற்றும் அது நில வருவாய் நிலுவை
ஒன்றைப் போல வசூலிக்கப்படுதல் வேண்டும்.
(4) ஆலை ஒன்றின் அனுபவத்தில் இருப்பவர்
அல்லது உரிமையாளர் எவரும் உட்பிரிவு (2)இன்
18
வகைமுறைகளுக்கிணங்க, தமக்கு விற்கப்பட்ட
எண்ணெய்ப்பனை பழக்குலைகளின் விலையை அல்லது
உட்பிரிவு (3)இன்படி செலுத்தப்படத்தக்க வட்டியைச்
செலுத்தத் தவறுவாரானால், அவர், நிலவருவாய்
நிலுவையைப் போல அவரிடமிருந்து வசூலிக்கப்படுகின்ற
மேற்சொன்ன விலையோடு அல்லது வட்டியோடு
1955ஆம் ஆண்டு இன்றியமையாப் பண்டங்கள்
சட்டத்தின் (மையச் சட்டம் 71955) பிரிவு 3இன்
உட்பிரிவு (4)இன் கூறு ()இன்படி வகைசெய்யப்பட்டுள்ள
பணத்தண்டத்தை, அந்தக் கூறின்படி பிறப்பிக்கப்பட்டுள்ள
பணிப்புரை ஒன்றை அவர் மீறியுள்ளதைப் போன்றே
செலுத்துவதற்குக் கடமைப்பட்டவராவார்.
(5) மேற்சொன்ன உட்பிரிவுகளின்.
வகைமுறைகளுக்கு முரணாக இல்லாமல், ஆலை
ஒன்றின் உரிமையாளர் அல்லது அனுபவத்தில் இருப்பவர்
அல்லது அதற்குத் தகுதியுடைய பிற நபர் எவரும், அந்த
ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது உற்பத்தி
செய்யப்படவுள்ள பனைஎண்ணெயின் பிணையத்தின்:
பேரில் எந்த உடன்படிக்கையின்படி முன்பணம் தர வங்கி
ஒன்று உடன்படுகிறதோ, அந்த உடன்படிக்கையில்
எண்ணெய்ப்பனை பயிரிடூபவர் அல்லது கூட்டுறவுச்
சங்கங்களிடம் இருந்து அல்லது அவற்றின் மூலமாக, அந்த
ஆலைக்காக வாங்கப்பட்ட அல்லது வாங்கப்படவுள்ள,
எண்ணெய்ப்பனை பழக்குலைகளுக்காக
எண்ணெய்ப்பனை பயிரிடுபவர்களுக்கு அல்லது பிற
கூட்டுறவுச் சங்கங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய
தொகை, அதற்கான வட்டி, மற்றும் கூட்டுறவுச்
சங்கங்களின் தரகு கிடைக்கத் தக்க வகையில்
குறிப்பிடப்பட்ட மொத்த முன் பணத்தொகையில்
நூற்றுக்கு ஐம்பது விழுக்காட்டிற்குக் குறையாத தொகை
ஒதுக்கி வைக்கப்படும் விதத்தில் அத்தகைய
உடன்படிக்கையில் வகை செய்தல் வேண்டும்.
19
(6) மேற்சொல்லப்பட்ட அத்தகைய
அனுபவத்தில் உள்ளவர், உரிமையாளர் அல்லது பிற நபர்
ஒவ்வொருவரும் அத்தகைய உடன்படிக்கை ஒன்றின்
நகல் ஒன்றை அது செய்துகொள்ளப்பட்டத் தேதியிலிருந்து
ஒரு வாரத்திற்குள் எண்ணெய்ப்பனை ஆணையருக்கு
அனுப்பி வைத்தல் வேண்டும்.
15. வாங்கப்படும் எண்ணெய்ப்பனை
பழக்குலைகளின் மீது வரிவிதிப்பு. (1) அரசு,
அறிவிக்கையின். மூலமாக ஆலை ஒன்றில்
பயன்படுத்துவதற்காக, நுகர்வதற்காக அல்லது விற்பனை
செய்வதற்காகத் தேவைப்படும் பழக்குலைகளின் மீது
மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூபாய் நூறுக்கு மேற்படாத ஒரு
விதத்தில் வரி ஒன்றை விதிக்கலாம்.
(2) அரசு அறிவிக்கையின் மூலமாக அத்தகைய
அறிவிக்கையில் குறிப்பிடப்படும் நோக்கம் எதற்காகவும்
ஆலை ஒன்றில் பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தக்
கருதப்பட்ட பழக்குலைகளைப் பொறுத்து வரி
முழுவதையுமோ அல்லது அதன் பகுதியையோ தள்ளுபடி
செய்யலாம்.
(3) உட்பிரிவு (1) இன்படி விதிக்கப்பட்ட
வரியானது ஆலையின் உடைமையாளரிடம் அல்லது
எண்ணெய்ப்பனை பழக்குலைகளைப் பெறுகின்ற
நபரிடமிருந்து அல்லது எண்ணெய்ப்பனையைப்
பதப்படுத்துகின்ற ஆலைகளிடமிருந்து
வகுத்துரைக்கப்படும் முறையில் அதிகாரஅமைப்பினால்
வசூலிக்கப்படுதல் வேண்டும்.
16. பதிவுருவைப் பேணுதல் மற்றும் ஆய்வு
செய்தல்.- (1) ஆலையின் அனுபவத்தில் இருப்பவர்
ஒவ்வொருவரும் அரசின் ஒப்புதலுடன் எண்ணெய்ப்பனை
ஆணையரால் வகுத்துரைக்கப்பட்ட அல்லது
20
குறிப்பிடப்பட்ட ஆவணங்களைப் பராமரித்து வருதல்
வேண்டும்.
(2) எண்ணெய்ப்பனை ஆய்வாளர் ஒருவர் எந்த
நேரத்திலும் ஆலையினை ஆய்வு செய்யலாம் மற்றும்
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை உரியவாறு
செயல்படுத்துவது தொடர்பாக தேவைப்படக்கூடிய
பதிவுருக்கள், அறிக்கைகள், விவரஅறிக்கைகள் மற்றும்
பதிவேடுகள் ஆகியவற்றைச் சரிபார்க்கலாம் மற்றும்.
தன்னுடைய சரிபார்த்தலுக்காக ஆலையின் அனுபவத்தில்
இருப்பவர் அவற்றை தாக்கல் செய்யுமாறு பணிக்கலாம்.
(3) உட்பிரிவு (2)இன்கீழ் உள்ள அதிகாரங்கள்,
எண்ணெய்ப்/னை ஆணையரால் பொது அல்லது தனி
ஆணை மூலமாக இதற்கென அங்கீகரிக்கப்பட்ட
அலுவலர் எவராலும் செலுத்தப்படலாம்.
(43) ஆலையின் அனுபவத்தில். இருப்பவர்
ஒருவர், இந்தப் பிரிவின்படி வைக்கப்பட வேண்டிய
ஆவணங்களை வைக்கத் தவறினால் அல்லது இந்தச்
சட்டத்தின்படி அதிகாரஅமைப்பினால் கொண்டு வரும்படி
கேட்கப்படும்போது, அவற்றை கொடுக்க மறுக்கும்போது
அல்லது தவறும்போது பிரிவு 17இன்கீழ் தண்டிக்கப்படுதல்
வேண்டும்.
17. தண்டனைகள்.- (1) ஒவ்வொரு நபரும்
அல்லது ஆலையின் அனுபவத்தில் இருப்பவர் எவரும்,
பிரிவு 11ஓன் வகைமுறைகளை மீறினால் பத்தாயிரம்
ரூபாய் அளவிற்கு நீட்டிக்கப்படக்கூடிய ஒரு
பணத்தண்டமோ அல்லது மேற்சொன்ன பிரிவின்
வகைமுறைகளைத் தொடர்ந்து மீறி வந்தால் அவ்வாறு
மீறுதல் செய்யப்பட்ட ஒவ்வொரு நாளுக்கும் ஆயிரம்
ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய கூடுதல் பணத்தண்டம்
விதிக்கப்படுதல் வேண்டும்.
21
(2) எந்த நபரும் அல்லது ஆலையின்:
அனுபவத்தில் இருப்பவர் எவரும் இந்தச் சட்டத்தின்
வகைமுறைகள், அல்லது விதி அல்லது அதன்கீழ்
செய்யப்பட்ட ஆணை ஆகியவற்றை மீறும்போது
உட்பிரிவு (1)இல் தண்டனை எதுவும்
வகைசெய்யப்படவில்லையானால் ஐந்தாயிரம் ரூபாய் வரை
நீட்டிக்கப்படக்கூடிய ஒரு பணத்தண்டத்துடன்
தண்டிக்கப்படுதல் வேண்டும்.
18. குற்றச்செயல்கள் எதனையும் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளுதல்.- (1) எண்ணெய்ப்பனை ஆணையர்
அல்லது ஏதேனும் அதிகாரஅமைப்பு இது தொடர்பாக
அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் ஒருவரால் எழுத்து மூலமாக
புகார் செய்யப்பட்டிருந்தாலன்றி, இந்தச் சட்டத்தின் கீழ்
தண்டிக்கப்படக்கூடிய எந்தவொரு குற்ற வழக்கையும்
எந்த நீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளுதல்
கூடாது.
(2) பெருநகர் குற்றவியல் நடுவர் அல்லது
முதல்நிலை குற்றவியல் நீதித்துறை நடுவருக்குக்
குறைவான எந்த ஒரு நீதிமன்றமும் இந்தச் சட்டத்தின்கீழ்
தண்டிக்கப்பட வேண்டிய எந்தவொரு குற்ற வழக்கையும்
விசாரணை செய்தல் கூடாது.
19. குற்றச்செயல்களை இணக்கமாகத் தீர்த்தல்.-
இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட
விதி அல்லது ஆணையின்படி குற்றம் சுமத்தப்பட்ட ஒரு
நபர், எண்ணெய்ப்/பனை ஆணையர் அல்லது அவரால்
இதற்கென அங்கீகரிக்கப்பட்ட அதிகாரஅமைப்பு எதற்கும்
அல்லது அலுவலர் எவருக்கும் விண்ணப்பிக்கையில்,
எந்த நிலையிலும் பத்தாயிரம் ரூபாய்க்கு மிகாத
தொகையினை இணக்கக் கட்டணமாக விதித்து
இணக்கமாகத் தீர்வு செய்யலாம்.
22
20. நல்லெண்ணத்துடன் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.-- (1) இந்தச் சட்டத்தின்படி
அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட ஏதேனும் விதி அல்லது
ஆணையின்படி செய்யப்படும் அல்லது செய்யக்
கருதப்படும் எதற்காகவும் நபர் எவருக்கும் எதிராக
உரிமையியல் வழக்கோ, குற்றவியல் வழக்கோ அல்லது
பிற சட்ட நடவடிக்கை எதுவுமோ தொடுக்கப்படுதல்
கூடாது.
(2) இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்கீழ்
செய்யப்பட்ட ஏதேனும் விதி அல்லது ஆணையின்படி
நல்லெண்ணத்துடன் செய்யப்படும் அல்லது செய்யக்
கருதப்படும் எதனாலேனும் அல்லது இந்தச் சட்டத்தின்.
வகைமுறை எதனின் விளைவாக விளைவிக்கப்படும்
அல்லது பெரும்பாலும் விளைவிக்கப்படக்கூடிய சேதம்
எதற்காகவும், அரசுக்கு எதிராக உரிமையியல் வழக்கோ
அல்லது பிற சட்ட நடவடிக்கையோ தொடுக்கப்படுதல்
கூடாது.
21. இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்காக ஆலையின்.
அனுபவத்தில் இருப்பவரை நிர்ணயித்தல். (1)
எண்ணெய்ப்பனை ஆலையின் அனுபவத்தில் இருப்பவர்,
ஒரு நிருவகம் அல்லது தனி நபர்களின் சங்கமாகவோ
இருந்தால், ஏதேனும் ஒருவரோ அல்லது அதற்கு
அதிகமான கூட்டாளிகள் அல்லது அவற்றின்.
உறுப்பினர்கள் ஆகியவர்களை ஏதேனும் குற்றத்திற்காக
ஆலையின் அனுபவத்தில் இருப்பவர் அல்லது
உரிமையாளர் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவதுபோல்
குற்ற வழக்கு தொடரப்படுதலும். மற்றும்
தண்டிக்கப்படுதலும் வேண்டும்:
வரம்புரை: இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்காக
நிருவகம் அல்லது சங்கத்தின் கூட்டாளிகள் அல்லது
23
உறுப்பினர்களில் ஒருவர் ஆலையின் அனுபவத்தில்
இருப்பவர் என பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக
எண்ணெய்ப்/னை ஆணையருக்கு அறிவிப்பு மூலமாக
தெரிவிக்கலாம். அப்படிப்பட்ட தனி நபர்கள் இச்சட்டத்தின்:
நோக்கத்திற்காக, நிகழ்விற்கேற்ப அவருடைய பெயர்
குறித்த நியமனம் நீக்கப்பட்டுள்ளதாக வேறு அறிவிப்பு
எதுவும் எண்ணெய்ப்/பனை ஆணையரால் வரப்பெறாத
வரையில் அல்லது அவர், அந்த நிருவாகம் அல்லது
சங்கத்தின் கூட்டாளி அல்லது உறுப்பினர் இல்லை என
ஆகிற வரையில் ஆலையின் அனுபவத்தில் இருப்பவர்
எனக் கருதப்படுதல் வேண்டும்.
(2) ஆலையின் அனுபவத்தில் இருப்பவர் ஒரு
நிறுமம் அல்லது கூட்டுறவுச் சங்கம் என்று
இருக்கும்போது, ஏதேனும் ஒரு அல்லது அதற்கு
அதிகமான இயக்குநர்கள் அல்லது தனியார் நிறுமமாக
இருந்தால் ஏதேனும் ஒரு அல்லது அதிகமான
பங்குதாரர்கள் இந்தச் சட்டத்தின்படி ஏதேனும்
குற்றத்திற்காக ஆலையின் அனுபவத்தில் இருப்பவர்
தண்டிக்கப்படுவதைப் போல் குற்றவழக்கு தொடரப்பட்டு
தண்டிக்கப்படுதல் வேண்டும்:
வரம்புரை: நிறுமம் அல்லது கூட்டுறவுச் சங்கம் ஓர்
இயக்குநரை பெயர் குறித்து நியமித்துள்ளதாக
எண்ணெய்ப்/னை ஆணையருக்கு அறிவிப்பு மூலம்
தெரிவிக்கலாம் மற்றும் தனியார் நிறுமம், தண்ணுடைய
பங்குதாரர் ஒருவர் ஆலையின் அனுபவத்தில் இருப்பவர்
என பெயர்குறித்து நியமிக்கப்பட்டிரூப்பதாக அந்த
மேற்சொன்ன அலுவலருக்கு இச்சட்டத்தின்
நோக்கத்திற்காக அறிவிக்கையின். மூலமாகத்
தெரிவிக்கலாம். மற்றும் இந்தச் சட்டத்தின்.
நோக்கத்திற்காக நிகழ்விற்கேற்ப இயக்குநர் அல்லது
பங்குதாரர் என்ற அவருடைய பெயர் குறித்த நியமன
24
நீக்கம் பற்றிய அறிவிப்பை எண்ணெய்ப்பனை ஆணையர்
வரப்பெறாத வரையில் அல்லது இயக்குநர் அல்லது
பங்குதாரர் என்ற நிலை இல்லாதுபோகும் வரையில் அவர்
ஆலையின் அனுபவத்தில் இருப்பவர் எனக் கருதப்படுதல்
வேண்டும்.
22. பணிப்புரைகளை வழங்குவதற்கான
அதிகாரம்.- அரசு, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு
உட்பட்டு. ஆணையின் மூலமாக எண்ணெய்ப்பனை
ஆணையர் அல்லது ஏதேனும் பிற அலுவலருக்கு
விசாரணை செய்ய அல்லது இச்சட்டத்தின் கீழ் தக்க
நடவடிக்கை எடுக்க பணிப்புரை வழங்கலாம். மற்றும்.
ஆணையில் குறிப்பிடப்பட்ட ஏதேனும் விவரம் தொடர்பாக
எண்ணெய்ப்பனை ஆணையர் அல்லது பிற அலுவலரால்
விசாரணை செய்யப்பட்ட பின்பு எடுக்கப்பட்ட முடிவு
அல்லது அவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் பற்றிய
அறிக்கையை அரசுக்கு அனுப்புதல் வேண்டும்.
23. அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்.- அரசு
அறிவிக்கையின் மூலமாக இந்தச் சட்டத்தின் கீழ்
அனைத்து அல்லது பிரிவு24ஐ தவிர, ஏதேனும்
அதிகாரங்களை ஏதேனும் நபருக்கு அல்லது அதற்கு
கீழுள்ள அதிகாரஅமைப்பிற்கு அறிவிக்கையில்
குறிப்பிடப்படும். கட்டுப்பாடுகளுக்கும், நிபந்தனை-
களுக்கும் உட்பட்டு ஒப்படைவு செய்யலாம் மற்றும்.
அவ்வாறு ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள்
எதனையும் திரும்பப் பெறவும் செய்யலாம்.
24. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.- (1)
இந்தச் சட்டத்தின் அனைத்து அல்லது ஏதேனும்
நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அரசு விதிகளைச்
செய்யலாம்.
25
(2) குறிப்பாகவும், முன்சொன்ன அதிகாரத்தின்:
பொதுத்தன்மைக்கு ஊறின்றியும், அத்தகைய விதிகள்,
பின்வரும் விவரங்கள் அனைத்திற்கும் அல்லது
ஏதொன்றிற்கும் வகைசெய்யலாம், அவையாவன:-
(@) ஆலை மண்டலப் பகுதியாக விளம்புகை
செய்தலை நெறிப்படுத்துகின்ற நிபந்தனைகள், அதற்கான
திருத்தங்கள் அல்லது நீக்கம்;
(௦) பயிரிடுவோர்கள் அல்லது நிகழ்விற்கேற்ப
நிறுமங்களால் எண்ணெய்ப்பனை பழக்குலைகளை
பறித்தல், சேகரித்தல் மற்றும் விநியோகம் செய்தல் மற்றும்
எண்ணெய்ப்பனை ஆணையரால் சேகரிப்பு மையங்கள்
வகுத்துரைக்கப்படுதல்;
(9) இந்தச் சட்டத்தின் விதிகளால் வகை
செய்யப்பட இருக்கிற அல்லது வகைசெய்யப்படக்கூடிய
பிற விவரம் எதுவும் குறித்து.
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி
அல்லது ஆணை ஒவ்வொன்றும் அல்லது
வெளியிடப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும், அது
செய்யப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட பின்பு கூடிய
விரைவில், சட்டமன்றப் பேரவையின் முன்பு
வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு
வைக்கப்பட்ட கூட்டத் தொடரோ அதற்கு அடுத்துவரும்
கூட்டத் தொடரோ முடிவடைவதற்கு முன்பு, அத்தகைய
விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை எதிலும்
சட்டமன்றப் பேரவையானது மாற்றம் எதையேனும்
செய்யுமானால் அல்லது அந்த விதி அல்லது ஆணை
செய்யப்படுதலோ அல்லது அந்த அறிவிக்கை
வெளியிடப்படுதலோ கூடாது என அப்பேரவை முடிவு
செய்யுமானால், அதன்பின்பு அந்த விதி அல்லது ஆணை
அல்லது அறிவிக்கை அவ்வாறு மாற்றம் செய்த
26
வடிவத்தில் மட்டுமே செயல்வடிவம் பெறும் அல்லது
செயல் வடிவம் பெறாது போகும். எனினும், அத்தகைய
மாற்றம் அல்லது நீக்கம் எதுவும் அந்த விதியிண்படியோ,
ஆணையின்படியோ, அறிவிக்கையின்படியோ
முன்னதாகச் செய்யப்பட்ட எதனின்
செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.