Tamil Nadu · 2012 · Act 9

The Tamil Nadu National Law University Act,2012

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

2012ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌ 9/2012) (2023, அக்டோபர்‌ 31 அன்று இருந்தவாறு) THE TAMIL NADU NATIONAL LAW UNIVERSITY ACT, 2012 (Tamil Nadu Act No. 9 of 2012) (as on 31% October, 2023) தமிழாக்கம்‌ : தமிழ்நாடு மாநிலச்‌ சட்ட ஆட்சிமொழி ஆணையம்‌ சென்னை தமிழ்நாடு அரசுக்காகத்‌ தமிழ்நாடு அரசு எழுதுபொருள்‌ அச்சுத்துறை ஆணையரால்‌ அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. 2023 பிரிவு 10. 11. 12. 13. 1 2012ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌. 9/2012) பொருளடக்கம்‌ அத்தியாயம்‌ | முன்னுரை குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும்‌. தொடக்கம்‌. பொருள்வரையறைகள்‌. அத்தியாயம்‌ ॥ பல்கலைக்கழகம்‌ பல்கலைக்கழகத்தை நிறுவுதல்‌. பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்கள்‌. பல்கலைக்கழகத்தின்‌. அதிகாரங்களும்‌ செயற்பணிகளும்‌. பல்கலைக்கழகத்தில்‌ சேர்த்துக்கொள்ளுதல்‌ . மேற்பார்வை. அத்தியாயம்‌ Nl பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்கள்‌. பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்கள்‌. வேந்தர்‌. இணைவேந்தர்‌. துணைவேந்தர்‌. துணைவேந்தரை நீக்குதல்‌. துணைவேந்தரின்‌ அதிகாரங்களும்‌ கடமைகளும்‌ 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. 30. பதிவாளர்‌. நிதி அலுவலர்‌. தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌. அத்தியாயம்‌ IV பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகள்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌. உறுப்பினர்‌ பதவிக்கான தகுதிக்கேடு. பொது மன்றத்திற்கும்‌ நிருவாக மன்றத்திற்கும்‌ கல்வி மன்றத்திற்கும்‌ தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவதற்கான தகுதிக்கேடு. துணைவேந்தர்‌ மற்றும்‌ பிற அலுவலர்கள்‌. முதலானோர்‌ பொதுப்‌ பணியாளர்களாக இருப்பர்‌. பொது மன்றம்‌. பொது மன்றத்தின்‌ அதிகாரங்கள்‌. பொது மன்றத்தின்‌ கூட்டங்கள்‌. நிருவாக மன்றம்‌. நிருவாக மன்றத்தின்‌ அதிகாரங்கள்‌. நிருவாக மன்றத்தின்‌ கூட்டங்கள்‌. உறுப்பினர்கள்‌. ஊதியத்திற்கு உடையவராகமாட்டார்கள்‌. கல்வி மன்றம்‌. கல்வி மன்றத்தின்‌ அதிகாரங்கள்‌: செயற்பணிகள்‌. கல்வி மன்றத்தின்‌ கூட்டங்கள்‌. உரிமை மற்றும்‌ 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. 44. 17 நிதிக்குழு. பாடத்திட்டக்‌ குழு. பிற அதிகாரஅமைப்புகளை அமைத்தல்‌. குழுக்களை அமைத்தலும்‌ அதிகாரங்களை ஒப்படைவு செய்தலும்‌. புலங்களை அமைத்தலும்‌ அவற்றின்‌. செயற்பணிகளும்‌. அத்தியாயம்‌ V ஒழுங்கு விதிகள்‌. ஒழுங்குவிதிகள்‌. ஒழுங்குவிதிகள்‌ எவ்வாறு செய்யப்படுகின்றன. அத்தியாயம்‌ VI மாணவர்களின்‌ சேர்க்கை மற்றும்‌ அவர்களின்‌ தங்குமிடம்‌ பல்கலைக்கழகத்தின்‌. பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை. பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களைத்‌ தெரிவு செய்தலும்‌ சேர்த்துக்‌ கொள்ளுதலும்‌. மாணவர்களின்‌ தங்குமிடங்கள்‌. அத்தியாயம்‌ VI பல்கலைக்கழகத்தின்‌ நிதிகள்‌, ஆண்டு அறிக்கை மற்றும்‌ கணக்குகள்‌ பொது நிதி. பிற நிதிகள்‌. நிதிகளை மேலாண்மை செய்தல்‌. ஆண்டறிக்கை. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. 54. 5 56. 57. 58. 59. iv ஆண்டுக்‌ கணக்குகள்‌. அத்தியாயம்‌ VIl பணி நிபந்தனைகள்‌: ஓய்வூதியம்‌, பணிக்கொடை முதலியன பணி நிபந்தனைகள்‌. தெரிவுக்‌ குழு. துறைத்‌ தலைவர்களின்‌ நியமனம்‌ பற்றிய வரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌. புலங்களின்‌ முதல்வர்கள்‌. அத்தியாயம்‌ 1X இடைக்காலத்திற்கான வகைமுறைகள்‌ முதல்‌ துணை வேந்தரின்‌ நியமனம்‌. முதல்‌ பதிவாளரின்‌ நியமனம்‌. இடைக்‌ காலத்திற்கான முதல்‌ துணைவேந்தரின்‌ அதிகாரங்கள்‌. அத்தியாயம்‌ X பல்வகை. கெளரவப்‌ பட்டம்‌. பட்டத்தைத்‌ திரும்பப்பெறுதல்‌. ஒழுக்கக்‌ கட்டுப்பாடு. நிதியுதவி திட்டங்கள்‌. தற்செயல்‌ காலியிடங்களை நிரப்புதல்‌. பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளின்‌ நடவடிக்கைகள்‌ காலியிடங்கள்‌ இருப்பதன்‌. காரணமாக செல்லாதவையாக ஆக்கப்படுதல்‌ கூடாது. 60. 61. 62. 63. 64. 65. 66. பல்கலைக்கழகத்தின்‌ உறுப்பினர்‌ பதவியிலிருந்து நீக்கப்படுதல்‌. பல்கலைக்கழக அதிகார அமைப்புகளுக்கும்‌ பிற அமைப்புகளுக்கும்‌ தேர்ந்தெடுத்தல்‌ அல்லது பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்தல்‌ குறித்த பூசல்கள்‌. தகவல்‌ பெறுவதற்கான அதிகாரம்‌. நூலகர்‌. நியமனத்திற்கான தனி முறை. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌. பணிப்புரைகள்‌. வழங்க அரசுக்கு உள்ள அதிகாரம்‌. 1 2012ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு! [தேசிய சட்டப்‌ பல்கலைக்கழகச்‌] சட்டம்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌ 9/2012) [தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையின்‌ பின்வரும்‌ சட்டமானது, 2012ஆம்‌ ஆண்டு பிப்ரவரி திங்கள்‌ 23ஆம்‌ நாளன்று ஆளுநரின்‌ ஏற்பிசைவைப்‌ பெற்று பொதுத்தகவலுக்காகத்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்பட்டது] தமிழ்நாடு மாநிலத்தில்‌ தரமான சட்டக்கல்வியை வழங்குவதற்காக தேசிய சட்டப்‌ பல்கலைக்கழகம்‌ ஒன்றை நிறுவியமைப்பதற்கு வகை செய்வதற்கான ஒரு சட்டம்‌. சட்டக்‌ கல்வியானது, சமூக, அரசியல்‌ மற்றும்‌ பொருளாதார மாற்றத்திற்கான ஒரு கருவியாகும்‌ என்பதாலும்‌; உலகமயமாதல்‌ மூலம்‌ கொண்டு வரப்படும்‌ சவால்களை எதிர்கொள்வதற்காக, உலகளாவிய சூழ்நிலையின்‌ காட்சி மாற்றத்திற்கேற்ப, அதற்கு ஈடுகொடுத்து இணைந்து செல்லும்‌ வகையில்‌ சட்டத்தைக்‌ கற்றல்‌, சட்ட அறிவு பெறுதல்‌, சட்டவழிமுறைகளை அறிந்து கொள்ளுதல்‌, வழக்காடும்‌ திறமை, நீதி நிருவாகத்தில்‌ திறமையைப்‌ பளிச்சிடச்‌ செய்தல்‌ ஆகியவற்றைச்‌ சட்டக்கல்வியின்‌ மூலம்‌ மேம்படுத்திப்‌ பரப்புவதற்கு வகை செய்வதற்காக, இம்மாநிலத்தில்‌ தேசிய அளவிலான நிறுவனம்‌ ஒன்றை அமைத்துருவாக்குவது என மாநில அரசானது முடிவு செய்துள்ளது என்பதாலும்‌; 1. 2018ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி (திருத்தம்‌) சட்டத்தின்‌. (தமிழ்நாடு சட்ட எண்‌ 34/2018) பிறிவு 2ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது. 2 இந்தியக்‌ குடியரசின்‌ அறுபத்து மூன்றாம்‌ ஆண்டில்‌, தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையால்‌ இயற்றப்பட்ட சட்டம்‌ பின்வருமாறு:- அத்தியாயம்‌ | முன்னுரை 1. குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) 1குந்தச்‌ சட்டம்‌, 2012ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ என வழங்கப்படும்‌.] (2) இது தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதையும்‌ பரவி நிற்கும்‌. (3) இது, அரசு அறிவிக்கையின்‌ வாயிலாகக்‌ குறிப்பிடப்படக்கூடிய தேதியன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 2. பொருள்வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌ தறுவாய்‌ வேறுபொருள்‌ குறித்தாலன்றி,- (@ "கல்வி மன்றம்‌" என்பது பல்கலைக்கழகத்தின்‌ கல்வி மன்றம்‌ எனப்‌ பொருள்படும்‌; (௦) "குறிப்பிடப்பட்ட தேதி" என்பது அரசானது, பிரிவு 1இன்‌, உட்பிரிவு (3)இன்படி, அறிவிக்கை வாயிலாகக்‌ குறிப்பிடக்கூடிய தேதி எனப்‌ பொருள்படும்‌; (©) "தலைவர்‌" என்பது பொது மன்றத்தின்‌ தலைவர்‌ எனப்‌ பொருள்படும்‌; (0) "வேந்தர்‌" என்பது, இந்தப்‌ பல்கலைக்கழகத்தின்‌ வேந்தர்‌ எனப்‌ பொருள்படும்‌; 1. 2018ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி (திருத்தம்‌) சட்டத்தின்‌. (தமிழ்நாடு சட்ட எண்‌ 34/2018) பிரிவு 3ஆல்‌ மாற்றாக அமைக்கப்பட்டது. 3 (68) "நிருவாக மன்றம்‌" என்பது, இந்தப்‌ பல்கலைக்கழகத்தின்‌. நிருவாக மன்றம்‌. எனப்‌ பொருள்படும்‌; (f) "புலம்‌" என்பது, இந்தப்‌ பல்கலைக்கழகத்தின்‌ புலம்‌ ஒன்று எனப்‌ பொருள்படும்‌; (ஐ "பொது மன்றம்‌" என்பது இப்பல்கலைக்கழகத்தின்‌. பொது மன்றம்‌. எனப்‌ பொருள்படும்‌; 0 "அரசு" என்பது, மாநில அரசு எனப்‌ பொருள்படும்‌; () "மாணவர்‌ விடுதி என்பது இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு இணங்க, பல்கலைக்கழகத்தால்‌ பேணிவரப்படுகிற அல்லது அனுமதிக்கப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகத்தின்‌. மாணவர்கள்‌ தங்கியிருப்பதற்கான ஓர்‌ இடம்‌ எனப்‌ பொருள்படுவதோடு, இந்தச்‌ சட்டத்தின்படி இப்பல்கலைக்கழகத்தால்‌ அங்கிகரிக்கப்பட்டிருப்பதாகக்‌ கருதப்படும்‌ மாணவர்‌ விடுதி ஒன்றையும்‌ உள்ளடக்கும்‌; (i) "வகுத்துரைக்கப்படும்‌" என்பது, ஒழுங்கு விதிகளில்‌ வகுத்துரைக்கப்படும்‌ எனப்‌ பொருள்படும்‌; 09 "பதிவாளர்‌" என்பது, இந்தப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பதிவாளர்‌ எனப்‌ பொருள்படும்‌; ) "ஒழுங்குவிதிகள்‌" என்பது, இந்தச்‌ சட்டத்தின்படிச்‌ செய்யப்பட்ட, இந்தப்‌ பல்கலைக்கழகத்தின்‌ ஒழுங்குவிதிகள்‌. எனப்‌ பொருள்படும்‌; (m) 11௦௦4 1. 2018ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி (திருத்தம்‌) சட்டத்தின்‌. (தமிழ்நாடு சட்ட எண்‌ 34/2018) பிரிவு 4ஆல்‌ விட்டுவிடப்பட்டது. 4 (ஙு "மாநிலம்‌" என்பது தமிழ்நாடு மாநிலம்‌ எனப்‌ பொருள்படும்‌; (0) "ஆசிரியர்கள்‌" என்பது இந்தப்‌ பல்கலைக்கழகத்தின்‌. துறைகளிலோ அல்லது ஆய்வகங்களிலோ அல்லது மாணவ விடுதிகளிலோ கற்பிக்கின்ற உதவிப்‌ பேராசிரியர்கள்‌, இணைப்‌ பேராசிரியர்கள்‌, பேராசிரியர்கள்‌, இயக்குநர்கள்‌, நூலகர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ என ஒழுங்கு விதிகளினால்‌ விளம்பப்படக்கூடிய இது போன்ற பிற நபர்கள்‌ எனப்‌ பொருள்படும்‌; 1௦௦) "பல்கலைக்கழகம்‌" என்பது, தமிழ்நாடு தேசிய சட்டப்‌ பல்கலைக்கழகம்‌" எனப்‌ பொருள்படும்‌.] 0) "துணைவேந்தர்‌" என்பது இந்தப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ எனப்‌ பொருள்படும்‌. அத்தியாயம்‌ ॥ பல்கலைக்கழகம்‌ 3. பல்கலைக்கழகத்தை நிறுவுதல்‌.- (1) மாநிலத்தில்‌, "தமிழ்நாடு தேசிய சட்டப்‌ பல்கலைக்கழகம்‌" என்ற பெயரில்‌ பல்கலைக்கழகம்‌ ஒன்று நிறுவப்பட்டு இருத்தல்‌ வேண்டும்‌. (2) பல்கலைக்கழகம்‌, நிலையான வழியுரிமையும்‌ தனித்த இலச்சினையும்‌ கொண்டு, இந்தச்‌ சட்டத்தின்‌. வகைமுறைகளுக்கு உட்பட்டு, சொத்தினை ஈட்டுவதற்கும்‌, வைத்திருப்பதற்கும்‌, ஒப்பந்தம்‌ செய்து கொள்வதற்குமான அதிகாரத்துடன்‌ ஒரு கூட்டுருமக்‌ குழுமமாக இருத்தல்‌ வேண்டும்‌ என்பதோடு மேற்சொன்ன பெயரில்‌ வழக்கிடுதலும்‌ வழக்கிடப்படுதலும்‌ வேண்டும்‌. 1. 2018 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி (திருத்தம்‌) சட்டத்தின்‌. (தமிழ்நாடு சட்ட எண்‌ 34/2018) பிரிவு 4ஆல்‌ புகுத்தப்பட்டது. 5 (3) பல்கலைக்கழகத்தின்‌. தலைமையகம்‌, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள, ஸ்ரீரங்கம்‌ வட்டத்தில்‌ இருத்தல்‌ வேண்டும்‌. 4. பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்கள்‌.- சட்டம்‌ மற்றும்‌ சட்ட நடைமுறைகளின்‌ கல்வி மற்றும்‌ அறிவினைப்‌ பெறுதல்‌ மற்றும்‌ தேசிய வளர்ச்சியில்‌ அவற்றின்‌ பங்கினை மேம்படுத்துதல்‌ மற்றும்‌ பரப்புதல்‌, மாணவர்‌ மற்றும்‌ ஆராய்ச்சிக்‌ கல்வியாளர்களிடம்‌, வழக்குரைத்தல்‌, வாதாடுதல்‌, சட்டச்‌ சேவைகள்‌, சட்டமியற்றுதல்‌, சட்ட சீர்திருத்தங்கள்‌ மற்றும்‌ அவை போன்றவைத்‌ தொடர்பாக திறமைகளை வளர்த்துக்‌ கொண்டு சட்டத்துறையில்‌ சமூகத்திற்கு சேவை செய்யும்‌ பொறுப்புணர்வை வளர்த்தல்‌, சட்ட அறிவை மேம்படுத்தவும்‌, சட்டம்‌ மற்றும்‌ சட்ட வழிமுறைகளை சமூக வளர்ச்சிக்கான ஆற்றல்மிக்க கருவிகள்‌ ஆக்கவும்‌, விரிவுரைகள்‌, கருத்தரங்குகள்‌, விவாத அரங்குகள்‌ மற்றும்‌ மாநாடுகளுக்கு ஏற்பாடு செய்தல்‌, பட்டம்‌ மற்றும்‌ பிற கல்விச்‌ சிறப்புகளை வழங்குவதற்கான தேர்வுகள்‌ நடத்துதல்‌ மற்றும்‌ பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்கள்‌. அனைத்தையும்‌ அல்லது எதையும்‌ அடைவதற்கு இடைவிளைவான, தேவையான அல்லது அதற்கு இணக்கமான அத்தகைய அனைத்துச்‌ செயல்களையும்‌ செய்தல்‌ ஆகியவை பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்கள்‌ ஆகும்‌. 5. பல்கலைக்கழகத்தின்‌. அதிகாரங்களும்‌. செயற்பணிகளும்‌.- (i) பல்கலைக்கழகத்தையும்‌, பல்கலைக்‌ கழகத்தின்‌. குறிக்கோள்களை மேம்படுத்துவதற்குத்‌ தேவையான ஆராய்ச்சி, கல்வி மற்றும்‌ கற்பித்தலுக்கான 6 மையங்களை நிருவகித்தல்‌ மற்றும்‌ மேலாண்மை செய்தல்‌; (00 பல்கலைக்கழகம்‌ பொருத்தம்‌ எனக்‌ கருதக்கூடிய சட்டம்‌ சார்ந்த அனுபவ அறிவு மற்றும்‌ பாடப்‌ பிரிவுகளில்‌ கற்பித்தலுக்கு வகைசெய்தல்‌ மற்றும்‌ சட்டக்‌ கல்வியில்‌ ஆராய்ச்சிக்கும்‌, சட்ட அறிவை மேம்படுத்திப்‌ பரப்புவதற்கும்‌ வகை செய்தல்‌; 0) பல்கலைக்கழகத்திற்கு வெளியே நிகழ்த்தப்படுகிற கற்பித்தல்‌ மற்றும்‌ விரிவாக்க சேவைகளை முன்னெடுத்தல்‌ மற்றும்‌ மேற்கொள்ளுதல்‌; 9) பல்கலைக்கழகம்‌ தீர்மானிக்கக்கூடிய நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்‌ தேர்வுகளை நடத்தி, பட்டங்கள்‌ அல்லது பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றை வழங்குதல்‌ மற்றும்‌ அவ்வாறான பட்டங்கள்‌ அல்லது பிற கல்விச்‌ சிறப்புகள்‌ எவற்றையும்‌ சரியான மற்றும்‌ தகுந்த காரணங்களுக்காகத்‌ திரும்பப்பெறுதல்‌; (1) ஒழுங்குவிதிகளில்‌ குறிப்பிடப்பட்ட வழிமுறைகளின்படி கெளரவப்‌ பட்டங்கள்‌ அல்லது பிற சிறப்பு விருதுகளை அளித்தல்‌; (Vi) கட்டணங்களையும்‌ பிற கட்டணத்‌ தொகைகளையும்‌ நிர்ணயித்தல்‌, கோருதல்‌ மற்றும்‌ பெறுதல்‌; (vii) மாணவர்‌ கூடங்களையும்‌, மாணவர்‌ விடுதிகளையும்‌ நிறுவிப்‌ பேணி, நிருவகித்து வருதல்‌ மற்றும்‌ பல்கலைக்கழகத்தின்‌, 7 மாணவர்களுக்கான தங்குமிடங்களுக்கு ஒப்புதல்‌ அளித்தல்‌ மற்றும்‌ தங்குமிடம்‌ எதற்கும்‌ வழங்கப்பட்ட ஒப்புதலை விலக்கிக்‌ கொள்ளுதல்‌; (ரி பல்கலைக்கழகம்‌ தன்‌ குறிக்கோள்களை மேம்படுத்துவதற்குத்‌ தேவை எனக்‌ கருதுகிற, ஆராய்ச்சிக்கும்‌ பயிற்சிக்குமான சிறப்பு மையங்கள்‌, தனித்துவப்‌ படிப்பு மையங்கள்‌ அல்லது பிற பிரிவுகளை அமைத்தல்‌; (பல்கலைக்கழக மாணவர்கள்‌. தங்குமிடத்தைக்‌ கண்காணித்துக்‌ கட்டுப்பாடு செய்துவருதல்‌ மற்றும்‌ பல்கலைக்கழக மாணவர்களின்‌ ஒழுங்கு மற்றும்‌ கட்டுப்பாட்டை முறைப்படுத்துதல்‌ மற்றும்‌ அவர்களின்‌ உடல்‌ நலத்தை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச்‌ செய்தல்‌; 00 மாணவிகளைப்‌ பொறுத்த அளவில்‌, அவர்களுக்கான தங்குமிடம்‌, ஒழுக்கக்‌ கட்டுப்பாடு, கற்பித்தல்‌ ஆகியவற்றைப்‌ பொருத்து ஏற்பாடுகளைச்‌ செய்துவருதல்‌; (xi) கல்வி, தொழில்‌ நுட்பம்‌, நிருவாகம்‌, மற்றும்‌ அலுவலகப்‌ பணிகளுக்கான பிற பதவியிடங்களை உருவாக்கி அவற்றில்‌ நியமனங்களைச்‌ செய்து வருதல்‌; 00) பல்கலைக்கழகத்தின்‌ பணியாளர்களுக்கு இடையே ஒழுங்குக்‌ கட்டுப்பாட்டை முறைப்படுத்துதல்‌, செயல்படுத்தி வருதல்‌ மற்றும்‌ தேவை எனக்‌ கருதும்‌ ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்தல்‌; 8 (0) பேராசிரியர்‌ பதவிகள்‌, இணைப்‌ பேராசிரியர்‌ பதவிகள்‌, உதவிப்‌ பேராசிரியர்‌ பதவிகள்‌, விரிவுரையாளர்‌ பதவிகள்‌ மற்றும்‌ பல்கலைக்கழகத்திற்குத்‌ தேவைப்படும்‌ கற்பித்தலுக்கான, கல்வி சார்ந்த அல்லது ஆராய்ச்சிக்கான பிற பதவிகள்‌ எவற்றையும்‌ ஏற்படுத்துதல்‌; 009) பல்கலைக்கழகத்தின்‌ பேராசிரியர்களாக, இணைப்‌ பேராசிரியர்களாக, உதவிப்‌ பேராசிரியர்களாக, பிற ஆசிரியர்களாக மற்றும்‌ ஆராய்ச்சியாளர்களாக நபர்களை நியமித்தல்‌; (xv) சிறப்பு மேலாய்வு உதவித்தொகைகள்‌, கல்வி உதவித்‌ தொகைகள்‌, பரிசுகள்‌ மற்றும்‌ பதக்கங்கள்‌ ஆகியவற்றை ஏற்படுத்துதல்‌, மற்றும்‌ வழங்குதல்‌; (xvi) ஆராய்ச்சி மற்றும்‌ பிற பணிகளைப்‌ பொறுத்த அளவில்‌ அச்சிடுவதற்கு, மறு பதிப்புச்‌ செய்வதற்கு மற்றும்‌ வெளியிடுவதற்கு வகை செய்தல்‌, மற்றும்‌ கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்தல்‌; பரி சட்டம்‌, நீதி மற்றும்‌ சமூக மேம்பாட்டுக்‌ கூறுகள்‌ அனைத்திலும்‌ ஆராய்ச்சிக்கு ஒத்துழைத்தல்‌ மற்றும்‌ மேற்கொள்ளுதல்‌; பரி) பல்கலைக்கழகம்‌ அவ்வப்போது தீர்மானிக்கக்கூடிய வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்‌. பேரிலும்‌, உடன்‌ இணைந்த நோக்கங்களுக்காகவும்‌, சட்டம்‌, நீதி, சமூக மேம்பாடு, அவை சார்ந்த விவரங்கள்‌ ஆகியவற்றில்‌ கல்வி கற்பித்தல்‌, பயிற்சி அளித்தல்‌, ஆராய்ச்சி (xix) (xx) (xxi) 9 செய்தல்‌ ஆகியவை தொடர்பாகப்‌ பிற அமைப்பு எதனுடனும்‌ ஒத்துழைத்தல்‌; பொதுவான குறிக்கோள்களுக்கு உகந்த முறையில்‌ ஆசிரியர்களையும்‌ அறிஞர்களையும்‌ மாற்றிக்‌ கொள்வதன்‌ மூலம்‌ இந்தப்பல்கலைக்கழகத்தின்‌. குறிக்கோள்களை ஒத்த பிற குறிக்கோள்களை முழுவதுமாகவோ பகுதியாகவோ பெற்றிருக்கின்ற உலகத்தின்‌ பகுதி எதிலும்‌ உள்ள உயர்‌ கல்வி நிலையங்களுடன்‌ ஒத்துழைத்தல்‌; பல்கலைக்கழகத்தின்‌ செலவினத்தை முறைப்படுத்துதல்‌ மற்றும்‌ அதன்‌ கணக்குகளை மேலாண்மை செய்தல்‌; பல்கலைக்கழக வளாகங்களுக்கு உள்ளேயோ, வேறெங்கேனுமோ இந்தப்‌ பல்கலைக்கழகம்‌ தேவை எனக்‌ கருதக்கூடிய வகுப்பறைகளையும்‌ கல்விக்‌ கூடங்களையும்‌ நிறுவிப்‌ பேணிவருதல்‌, மற்றும்‌ அவற்றில்‌ போதிய அளவு அறைகலன்களை வழங்குதல்‌ மற்றும்‌ பல்கலைக்கழகத்திற்கு உகந்ததாகவோ தேவையானதாவோ தோன்றக்கூடிய நூலகங்களையும்‌ படிப்பதற்கான அறைகளையும்‌ அமைத்துப்‌ பேணிவருதல்‌; பரி பல்கலைக்கழகத்தின்‌. நோக்கத்திற்காக, எந்தக்‌ குறிக்கோள்களுக்காகப்‌ பல்கலைக்கழகம்‌ நிறுவப்பட்டுள்ளதோ அந்தக்‌ குறிக்கோள்களுக்கு இணங்கிய வகையில்‌ மானியங்கள்‌, உதவித்‌ தொகைகள்‌, சந்தா தொகைகள்‌, 10 நன்கொடைகள்‌, கொடைகள்‌ ஆகியவற்றைப்‌ பெறுதல்‌; பரி) பல்கலைக்கழகத்தின்‌. நோக்கத்திற்குத்‌ தேவையானது அல்லது உகந்தது மற்றும்‌ பொருத்தமானது மற்றும்‌ முறையானது எனக்‌ கருதக்கூடிய வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்‌ பேரில்‌, நிலம்‌ அல்லது கட்டடம்‌ எதனையுமோ அல்லது கட்டமைப்புகள்‌ எவற்றையுமோ விலைக்கு வாங்குதல்‌, குத்தகைக்கு எடுத்தல்‌, நன்கொடையாக அல்லது பிறவாறாக அவற்றை ஏற்றுக்கொள்ளுதல்‌; மற்றும்‌ அத்தகைய கட்டடம்‌ அல்லது கட்டமைப்பு எதனையும்‌ கட்டுதல்‌ அல்லது மாற்றியமைத்தல்‌ மற்றும்‌ அதனைப்‌ பேணிவருதல்‌; (XXIV) பல்கலைக்கழகத்தின்‌ நலனுக்கும்‌. செயற்பாடுகளுக்கும்‌ ஊறின்றி, அது பொருத்தம்‌ எனவும்‌ முறையானது எனவும்‌ கருதக்கூடிய வரையறைகளின்‌ பேரில்‌, பல்கலைக்கழகத்தின்‌ அசையும்‌ அல்லது அசையாச்‌ சொத்துகள்‌ அனைத்தையுமோ அவற்றின்‌ பகுதி எஈனையுமோ விற்பனை செய்தல்‌, பரிமாற்றம்‌ செய்தல்‌, குத்தகைக்கு விடுதல்‌ அல்லது பிறவாறு முடிவு செய்தல்‌; (xxv) கடனுறுதிச்‌ சீட்டுகள்‌, மாற்றுச்‌ சீட்டுகள்‌, காசோலைகள்‌ அல்லது பிற மாற்று முறையாவணங்களை எழுதுதல்‌, ஏற்றுக்கொள்ளுதல்‌, ஆக்குதல்‌, மேற்குறிப்பு செய்தல்‌, தள்ளுபடி செய்தல்‌ மற்றும்‌ மாற்றிக்‌ கொடுத்தல்‌; 11 பேரி பல்கலைக்கழகத்திற்குச்‌ சொந்தமான (xxvii) அல்லது பல்கலைக்கழகத்தின்‌ நோக்கத்திற்காக ஈட்டப்படவுள்ள அரசு கடனீட்டுப்‌ பத்திரங்கள்‌ உள்ளிட்ட, அசையும்‌ அல்லது அசையாச்‌ சொத்தைப்‌ பொறுத்த அளவிலான உடைமை மாற்றங்கள்‌, உரிமை மாற்றங்கள்‌, மறு உடைமை மாற்றங்கள்‌, அடைமானங்கள்‌, குத்தகைகள்‌, உரிமங்கள்‌ மற்றும்‌ உடன்பாடுகள்‌ ஆகியவற்றை எழுதிக்‌ கொடுத்தல்‌; பல்கலைக்கழகத்தின்‌ வகுப்பு அல்லது துறை எதனையும்‌ நடத்தி வருவதை விட்டுவிடுதல்‌ மற்றும்‌ நிறுத்தி விடுதல்‌; (xxviii) மானியங்களைப்‌ பெறுவதற்காக மத்திய (xxix) (xxx) அரசுடனோ, மாநில அரசுகளுடனோ, பல்கலைக்கழக மானிய ஆணையக்‌ குழுவுடனோ, பிற அதிகார அமைப்புகளுடனோ உடன்பாடு எதனையும்‌ செய்துகொள்ளுதல்‌; உகந்தது எனக்‌ கருதக்கூடிய வரையறைகளின்‌ பேரில்‌, எந்த வகையிலுமான பண அளிப்புகள்‌, கடனீட்டுப்‌ பத்திரங்கள்‌ அல்லது சொத்தினை ஏற்றுக்கொள்ளுதல்‌; பிணைமுறிகள்‌, அடைமானங்கள்‌, கடனுறுதிச்‌ சீட்டுகள்‌ அல்லது பிற கடமைப்‌ பொறுப்புகளின்‌ பேறிலோ, பிணையங்களின்‌ பேரிலோ பல்கலைக்கழகத்தின்‌ சொத்துகள்‌ மற்றும்‌ உடைமைகள்‌ அனைத்தின்‌ மீதும்‌ அல்லது அவற்றில்‌ ஏதொன்றின்‌ மீதும்‌ (xxxi) (xxxii) (xxxii) 12 அல்லது பிணையங்கள்‌ எவையும்‌ இன்றி, அது பொருத்தமெனக்‌ கருதக்கூடிய வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்‌ பேரில்‌ பணத்தைப்‌ பெறுதல்‌ மற்றும்‌ கடன்‌ வாங்குதல்‌ மற்றும்‌ பல்கலைக்கழகத்தின்‌ நிதிகளிலிருந்து பணத்தினைப்‌ பெறுதல்‌ மற்றும்‌ கடன்‌ வாங்கப்பட்ட பணம்‌ எதனையும்‌ திருப்பிச்‌ செலுத்துதல்‌ மற்றும்‌ மீட்டுக்‌ கொள்ளுதல்‌ (திரும்பப்‌ பெறுதல்‌) குறித்து ஏற்பட்ட இடைவிளைவான செலவுகள்‌ அனைத்தையும்‌ கொடுத்துத்‌ தீர்த்தல்‌; பல்கலைக்கழகத்தின்‌ நிதிகளை அல்லது பல்கலைக்கழகத்திற்கு ஒப்படைக்கப்பட்ட பணத்தை அது பொருத்தம்‌ எனக்‌ கருதக்கூடிய கடனீட்டுப்‌ பத்திரங்களில்‌, அது பொருத்தமெனக்‌ கருதக்கூடிய முறையில்‌ முதலீடு செய்தல்‌ மற்றும்‌ அவ்வப்போது முதலீடு எதனையும்‌ இடம்‌ மாற்றுதல்‌; பல்கலைக்கழகத்தின்‌ அலுவல்களையும்‌ மேலாண்மையையும்‌ முறைப்படுத்துவதற்கு அவ்வப்போது தேவை எனக்‌ கருதக்கூடிய ஒழுங்கு விதிகளைச்‌ செய்தல்‌ அவற்றை மாற்றியமைத்தல்‌, திருத்தியமைத்தல்‌ மற்றும்‌ தள்ளுபடி செய்தல்‌; கல்விசார்‌, தொழில்நுட்ப, நிருவாக மற்றும்‌. பிற பணியாளர்‌ தொகுதியின்‌ நலனுக்கு என, ஒழுங்கு விதிகளால்‌ வகுத்துரைக்கப்படும்‌ முறையிலும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டும்‌ 13 அது பொருத்தம்‌ எனக்‌ கருதக்கூடிய ஓய்வூதியங்கள்‌, காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை ஆகியவற்றை நிறுவுதல்‌ மற்றும்‌ பல்கலைக்கழகத்தின்‌. பணியாளர்‌ எவரின்‌ நலனுக்காகவும்‌ அது பொருத்தம்‌ எனக்‌ கருதக்கூடிய அத்தகைய மாணியங்களை அளித்தல்‌; (XXXIV) பல்கலைக்கழகம்‌ அதன்‌ அதிகாரங்கள்‌ அனைத்தையும்‌ அல்லது அவற்றுள்‌ எவற்றையும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌. துணைவேந்தரிடமோ அல்லது குழு எதனிடமோ அல்லது உட்குழு எதனிடமோ அல்லது அக்குழுவின்‌ உறுப்பினர்களில்‌ எவரொருவரிடமோ அல்லது ஒருவருக்கு மேற்பட்ட உறுப்பினர்களிடமோ அல்லது அதன்‌ அலுவலர்களிடமோ ஒப்படைவு செய்தல்‌; மற்றும்‌ (XXXV) பல்கலைக்கழகம்‌ மேற்சொன்ன குறிக்கோள்களை அல்லது அவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்றை அடைவதற்கு அல்லது விரிவுபடுத்துவதற்குத்‌ தேவையானதாகவோ, இணக்கமானதாகவோ, இடைவிளைவான- தாகவோ இருப்பதாகப்‌ பல்கலைக்கழகம்‌ கருதக்கூடிய அத்தகைய பிற செயல்கள்‌ மற்றும்‌ பிற விவரங்கள்‌ அனைத்தையும்‌ செய்தல்‌. 6. பல்கலைக்கழகத்தில்‌ சேர்த்துக்‌ கொள்ளுதல்‌.- (1) பல்கலைக்கழகம்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ ஒழுங்குவிதிகளின்‌. வகைமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து நபர்களுக்கும்‌ பொதுவானதாக இருத்தல்‌ வேண்டும்‌. 14 (2). உட்பிரிவு (1)இல்‌ அடங்கியுள்ள எதுவும்‌,- (8) வகுத்துரைக்கப்படும்‌ கல்வித்‌ தகுதியையோ, தரத்தையோ பெற்றிராத நபர்‌ எவரையும்‌ குறித்தகாலப்‌ படிப்பு எதற்கும்‌ சேர்த்துக்‌ கொள்ளுமாறோ; (b) பட்டம்‌ அல்லது பிற கல்விச்‌ சிறப்பு ஒன்று வழங்கத்‌ தேவையான குறைந்த அளவு தரத்திற்கும்‌ குறைவான கல்வித்‌ தகுதியைப்‌ பெற்றிருக்கின்ற மாணவர்‌ எவரையும்‌ பல்கலைக்கழகத்தின்‌. பெயர்ப்பட்டியலில்‌ வைத்திருக்குமாறோ; அல்லது (9) பல்கலைக்கழகத்தின்‌ நலனுக்கோ பிற மாணவர்களின்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ உரிமைகளுக்கும்‌. சிறப்புரிமைகளுக்கும்‌. ஊறு விளைவிக்கத்தக்க நடத்தையை உடைய நபர்‌ எவரையும்‌ சேர்த்துக்‌ கொள்ளுமாறோ அல்லது மாணவர்‌ எவரையும்‌ இருத்தி வைத்துக்‌ கொள்ளுமாறோ, பல்கலைக்கழகத்தைக்‌ கோருதல்‌ கூடாது. (3) உட்பிரிவு (1) மற்றும்‌ (2)இன்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, அரசு, ஆணையின்‌ மூலம்‌ அத்தகைய விழுக்காட்டளவு இடங்களைப்‌ பல்கலைக்கழகம்‌ ஒதுக்கீடு செய்தல்‌ வேண்டும்‌ எனப்‌ பணிக்கலாம்‌. 0) அந்த ஆணையில்‌ குறிப்பிடப்படும்‌ தமிழ்நாட்டில்‌ குடியிருக்கும்‌. மாணவர்களுக்கும்‌; (i) அந்த ஆணையில்‌ குறிப்பிடப்படும்‌ அருந்ததியர்கள்‌ உள்ளிட்ட பட்டியல்‌ சாதியினர்‌, பட்டியல்‌ பழங்குடியினர்‌, சீர்மரபினர்‌ உள்ளிட்ட மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ மற்றும்‌ 15 பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்‌ இனத்தவர்‌ மற்றும்‌ அத்தகைய பிற சிறப்பு இனங்களைச்‌ சார்ந்த மாணவர்களுக்கும்‌; அத்தகைய பணிப்புரை வழங்கப்பட்டிருக்கின்ற போது, பல்கலைக்கழகம்‌ அதற்கிணங்கிய வகையில்‌ இடங்களை ஒதுக்கீடு செய்தல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கத்திற்காகத்‌, "தமிழ்நாட்டில்‌ குடியிருக்கும்‌ மாணவர்‌" என்றால்‌,- 0) தகுதித்‌ தேர்வை ஒட்டி முன்னதாக நான்கு ஆண்டுகளுக்குக்‌ குறையாத ஒரு கால அளவுக்கு இந்த மாநிலத்தில்‌ குடியிருந்திருக்கிற மாணவர்‌ ஒருவரையோ அல்லது அவ்வாறு குடியிருந்திருக்கிற நபரைத்‌ தம்‌ பெற்றோர்களில்‌ ஒருவராகக்‌ கொண்ட மாணவர்‌ ஒருவரையோ குறிக்கும்‌; அல்லது (i) தகுதித்‌ தேர்விற்கு வழிவகுக்கிற நான்கு ஆண்டுகளுக்குக்‌ குறையாத ஒரு கால அளவிற்கு இந்த மாநிலத்திலுள்ள கல்வி நிறுவனங்கள்‌. ஏதொன்றிலும்‌ படித்திருக்கிற மாணவர்‌ ஒருவரைக்‌ குறிக்கும்‌. 7. மேற்பார்வை.- (1) வேந்தர்‌ தான்‌ பணிக்கக்‌ கூடிய அத்தகைய நபர்‌ அல்லது நபர்களால்‌: பல்கலைக்கழகம்‌, அதன்‌. கட்டடங்கள்‌, அருங்காட்சியகங்கள்‌, பணிக்கூடங்கள்‌, தளவாடங்கள்‌ ஆகியவற்றையும்‌, பல்கலைக்கழகத்தால்‌ பேணிவரப்படுகிற, அங்கீகாரம்‌ அளிக்கப்பட்டுள்ள, அல்லது 16 ஒப்புதலளிக்கப்பட்டுள்ள கல்வி நிலையம்‌ எதனையும்‌, மற்றும்‌ பல்கலைக்கழகத்தால்‌ நடத்தப்படும்‌ அல்லது செய்யப்படும்‌, தேர்வு, கற்பித்தல்‌ மற்றும்‌ பிற பணிகள்‌. குறித்தும்‌ ஆய்வு செய்ய ஆவன செய்வதற்கான மற்றும்‌ பல்கலைக்கழகம்‌ தொடர்பான விவரம்‌ எதனையும்‌ பொறுத்து விசாரணை செய்ய ஆவன செய்வதற்கான உரிமை பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. வேந்தர்‌ ஒவ்வொரு நிகழ்விலும்‌ அத்தகைய ஆய்வையோ, விசாரணையையோ செய்ய ஆவன செய்வதற்கான தன்‌ உட்கருத்து பற்றிய அறிவிப்பை இப்பல்கலைக்கழகத்திற்குக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌; மேலும்‌ பல்கலைக்கழகம்‌ அதில்‌ அதன்‌ தரப்பிலான கருத்தினை எடுத்துரைப்பதற்கு உரிமை உடையதாகும்‌. (2) வேந்தர்‌, அத்தகைய ஆய்வு அல்லது விசாரணையின்‌ முடிவுகள்‌ குறித்த தன்‌ கருத்துக்களை நிருவாக மன்றத்திற்குத்‌ தெரியப்படுத்துதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதன்‌ மீதான நிருவாக மன்றத்தின்‌ கருத்தை உறுதிப்படுத்திக்‌ கொண்ட பின்னர்‌, எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்துப்‌ பல்கலைக்கழகத்திற்கு ஆலோசனை கூறலாம்‌. என்பதோடு அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான காலவரம்பு ஒன்றையும்‌ நிர்ணயிக்கலாம்‌. (3) நிருவாக மன்றம்‌, அத்தகைய ஆய்வு அல்லது விசாரணையின்‌ விளைவாக எடுக்கக்‌ கருதியுள்ள அல்லது எடுக்கப்பட்டிருக்கிற நடவடிக்கை ஏதேனுமிருந்தால்‌, அது குறித்துத்‌ துணைவேந்தர்‌ மூலமாக வேந்தருக்கு அறிக்கை அனுப்புதல்‌ வேண்டும்‌. அத்தகைய அறிக்கையானது, வேந்தர்‌ பணிக்கக்கூடிய அத்தகைய காலத்திற்குள்ளாகப்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. (4) நிருவாக மன்றமானது, நியாயமான ஒரு கால அளவிற்குள்‌. வேந்தர்‌ மனநிறைவு கொள்ளும்‌ 17 வகையில்‌ நடவடிக்கை எடுக்காதபோது, வேந்தர்‌ நிருவாக மன்றத்தால்‌ அளிக்கப்பட்ட விளக்கம்‌ அல்லது செய்யப்பட்ட முறையீடு எதனையும்‌ பரிசீலனை செய்த பின்னர்‌, தாம்‌ பொருத்தம்‌ எனக்‌ கருதுகிற பணிப்புரை களைப்‌ பிறப்பிக்கலாம்‌; மற்றும்‌ நிருவாக மன்றமானது, அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி நடத்தல்‌ வேண்டும்‌. நிருவாக மன்றமானது வேந்தரால்‌ அதற்கென நிர்ணயிக்கப்படக்கூடிய காலத்திற்குள்ளாக அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி நடக்காத தருணத்தில்‌, அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி நடக்கும்‌ பொருட்டு, நபர்‌ எவரையுமோ அல்லது அமைப்பு எதனையுமோ நியமிப்பதற்கும்‌ அதன்‌ செலவுகளுக்காகத்‌ தேவையான ஆணைகளைப்‌ பிறப்பிப்பதற்கும்‌ வேந்தர்‌ அதிகாரமுடையவர்‌. அத்தியாயம்‌ 1l பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்கள்‌ 8. பல்கலைக்கழகத்தின்‌. அலுவலர்கள்‌.- பல்கலைக்கழகம்‌, பின்வரும்‌ அலுவலர்களைக்‌ கொண்டதாக இருக்கும்‌, அதாவது:- 0) வேந்தர்‌; (2) இணைவேந்தர்‌; (3) துணை வேந்தர்‌; (4) பதிவாளர்‌; (5) நிதி அலுவலர்‌; (6) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌; மற்றும்‌ (7) இப்பல்கலைக்கழக அலுவலர்கள்‌ என, ஒழுங்குவிதிகளினால்‌ விளம்பப்படக்கூடிய பிற நபர்கள்‌. 18 9. வேந்தர்‌.- (1) சென்னை உயர்நீதி மன்றத்தின்‌ தலைமை நீதிபதி, இப்பல்கலைக்கழகத்தின்‌ வேந்தராக இருந்து வருவார்‌. வரம்புரை: தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றத்தின்‌ நீதிபதி ஒருவரை இப்பல்கலைக்கழகத்தின்‌. வேந்தராகப்‌ பெயர்குறித்து நியமிக்கலாம்‌. (2) வேந்தர்‌ தமது பதவியின்‌ காரணமாக இப்பல்கலைக்கழகத்தின்‌ தலைவராக இருப்பார்‌; மற்றும்‌ பொது மன்றத்தின்‌ கூட்டங்கள்‌ எவற்றுக்கும்‌ வந்திருக்கும்‌ போது, பொது மன்றத்தின்‌ கூட்டங்களில்‌ தலைமை வகிப்பார்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டமளிப்பு விழா எதற்கும்‌ வந்திருக்கும்‌ போது, தலைமை வகித்து தகுதியுடையவர்களுக்குப்‌ பட்டங்கள்‌ அல்லது பிற கல்விச்‌ சிறப்புகளை வழங்குவார்‌. (3) அதிகார அமைப்புகளுக்கு நபர்களைப்‌ பெயர்குறித்து நியமிப்பதற்கான அதிகாரம்‌ வேந்தருக்கு வழங்கப்பட்டிருக்கிற போது, வேந்தர்‌, துணைவேந்தருடன்‌ கலந்தாலோசனை செய்து, போதிய அளவு பிரதிநிதித்துவம்‌ பெற்றிராத பிரிவுகளைச்‌ சேர்ந்தவர்களின்‌ நலன்களுக்குத்‌ தேவையான நபர்களைப்‌ பிரிதிநிதிகளாகப்‌ பெயர்‌ குறித்து நியமித்தல்‌ வேண்டும்‌. (4) வேந்தர்‌, தானே முன்னெடுத்த, அல்லது விண்ணப்பத்தின்‌ மீதான நடவடிக்கைகள்‌ எவற்றையும்‌ பொறுத்து, அத்தகைய நடவடிக்கைகள்‌ சரியானதா என்பது குறித்தோ, அவற்றில்‌ எடுக்கப்பட்ட முடிவு அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை ஏதொன்றும்‌ சரியானதா, சட்டமுறைமை உடையதா அல்லது பொருத்தமுடையதா என்பது குறித்தோ, தான்‌ தெளிவுற உறுதிப்படுத்திக்கொள்ளும்‌ பொருட்டு, இப்பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்கள்‌ எவரின்‌ அல்லது 19 அதிகாரஅமைப்பு ஏதொன்றின்‌ பதிவுக்கட்டினையும்‌ தருவித்து ஆய்வு செய்யலாம்‌; மற்றும்‌ எந்த நிகழ்விலும்‌ அத்தகைய நடவடிக்கை, முடிவு அல்லது ஆணை எதுவும்‌ திருத்தியமைக்கப்படவோ, நீக்கம்‌ செய்யப்படவோ, எதிர்மாறாக்கப்டவோ, அல்லது மறுபரிசீலனைக்காகத்‌ திருப்பி அனுப்பிவைக்கப்படவோ வேண்டும்‌ என்று வேந்தருக்குத்‌ தோன்றுமானால்‌, அவர்‌, அதன்படியே ஆணைகளைப்‌ பிறப்பிக்கலாம்‌: வரம்புரை: இந்த உட்பிரிவின்படியான அதிகாரங்கள்‌ செலுத்தப்படுவதற்காக, வேந்தரிடம்‌ செய்து கொள்ளப்படும்‌ ஒவ்வொரு விண்ணப்பமும்‌, அந்த விண்ணப்பம்‌ தொடர்புடைய நடவடிக்கை, முடிவு அல்லது ஆணை எந்தத்‌ தேதியில்‌ அவ்விண்ணப்பதாரருக்குத்‌ தெரிவிக்கப்பட்டதோ அந்தத்‌ தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்‌ செய்துகொள்ளப்படுதல்‌ வேண்டும்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, எந்த நபருக்கும்‌ கேடு விளைவிக்கத்தக்க ஆணை எதுவும்‌, தன்‌: முறையீடுகளைச்‌ செய்து கொள்வதற்கான வாய்ப்பு ஒன்று அத்தகைய நபருக்குக்‌ கொடுக்கப்பட்டிருந்தாலன்றிப்‌ பிறப்பிக்கப்படுதல்‌ கூடாது. (5) வேந்தர்‌, இந்தச்‌ சட்டத்தின்படியோ அதன்‌ வகைமுறைகளின்‌ படியோ தமக்கு வழங்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச்‌ செலுத்தி வருவதோடு பிற கடமைகளையும்‌ ஆற்றி வருவார்‌. 10. இணைவேந்தர்‌.- (1) இம்மாநிலத்தில்‌ சட்டத்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அமைச்சர்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ இணைவேந்தராக இருந்து வருவார்‌. (2) வேந்தர்‌ வராத போது, அல்லது வேந்தர்‌ செயல்படுவதற்கு இயலாதபோது, இணைவேந்தர்‌, 20 வேந்தரின்‌ அதிகாரங்கள்‌ அனைத்தையும்‌ செலுத்தி வருவார்‌; மற்றும்‌ செயற்பணிகள்‌ அனைத்தையும்‌ ஆற்றி வருவார்‌. (3) இணைவேந்தர்‌, இந்தச்‌ சட்டத்தினாலோ அல்லது அதன்‌ விதிகளாலோ தமக்கு வழங்கப்படும்‌ அதிகாரங்களைச்‌ செலுத்தி வருதலும்‌, செயற்பணிகளை ஆற்றி வருதலும்‌ வேண்டும்‌. 11. துணைவேந்தர்‌. (1) உட்பிரிவு (2)இல்‌ குறிப்பிடப்பட்டுள்ள குழுவினால்‌ பரிந்துரைக்கப்பட்ட மூன்று பெயர்களைக்‌ கொண்ட பெயர்ப்பட்டியல்‌ ஒன்றிலிருந்து துணைவேந்தரின்‌ ஒவ்வொரு நியமனமும்‌ வேந்தரால்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அத்தகைய பெயர்ப்‌ பட்டியலில்‌ மேற்சொன்ன குழுவின்‌ உறுப்பினர்‌ எவரது பெயரும்‌ அடங்கியிருத்தல்‌ கூடாது: வரம்புரை: வேந்தர்‌ அக்குழுவினால்‌ அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பெயர்ப்‌ பட்டியலிலுள்ள நபர்களில்‌ எவரையும்‌ ஏற்கவில்லை என்றால்‌, வேறு மூன்று பெயர்களைக்‌ கொண்ட புதிய பெயர்ப்பட்டியல்‌ ஒன்றை அளிப்பதற்காக அவர்‌ உட்பிரிவு (2)க்கு இணங்க மற்றொரு குழுவினை அமைத்துருவாக்குவதற்கு நடவடிக்கைகள்‌ எடுக்கலாம்‌; மற்றும்‌ அந்தப்‌ புதிய பெயர்ப்பட்டியலில்‌ பெயர்‌ குறிப்பிடப்பட்டுள்ள நபர்களில்‌ ஒருவரைத்‌ துணைவேந்தராக அவர்‌ நியமனம்‌ செய்தல்‌ வேண்டும்‌. (2) உட்பிரிவு (1)இன்‌ நோக்கத்திற்காக, அக்குழுவானது மூன்று நபர்களைக்‌ கொண்டிருக்கும்‌; அவர்களில்‌ ஒருவர்‌ வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படுதல்‌ வேண்டும்‌; ஒருவர்‌, அரசினால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ ஒருவர்‌ பொது மன்றத்தினால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படுதல்‌ வேண்டும்‌: 21 வரம்புரை: அவ்வாறு பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்ட நபர்‌, இந்தப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌ எதிலும்‌ ஓர்‌ உறுப்பினராக இருத்தல்‌ கூடாது. (3) துணைவேந்தர்‌ மூன்றாண்டு காலஅளவுக்குப்‌ பதவி வகிப்பார்‌. மேலும்‌ மூன்றாண்டு கால அளவுக்கு மீண்டும்‌. நியமிக்கப்படுவதற்கும்‌. தகுதி உடையவராக இருப்பார்‌. வரம்புரை: நபர்‌ எவரும்‌, மொத்தத்தில்‌ ஆறு ஆண்டுகளுக்கு மேல்‌ துணைவேந்தர்‌ பதவியை வகித்தல்‌ கூடாது: கூடுதல்‌ வரம்புரை: கூண்டு மாத கால முன்அறிவிப்புக்‌ கொடுத்ததற்குப்‌ பின்பு, துணைவேந்தர்‌, வேந்தருக்கு முகவரியிட்டு, எழுத்துவடிவில்‌ தாம்‌ கையொப்பமிட்டு அனுப்புவதன்‌ மூலமாகத்‌ தமது பதவியை விட்டு விலகலாம்‌: இன்னும்‌ வரம்புரை: அதோடும்‌ கூட, துணைவேந்தராக நியமிக்கப்பட்ட ஒருவர்‌, தம்முடைய பதவிக்‌ காலத்தின்‌ போது எழுபது வயதினை] நிறைவு செய்வாரானால்‌, பதவியிலிருந்து ஓய்வு பெறுதல்‌ வேண்டும்‌. (4) துணைவேந்தரின்‌ பதவியில்‌ தற்காலிகக்‌ காலியிடம்‌ ஏதேனும்‌ ஏற்படும்போது, அல்லது நோய்‌, பணிக்கு வாராமை என்கின்ற காரணத்தினாலோ, அல்லது ஏதேனும்‌ பிற காரணத்தினாலோ, துணைவேந்தர்‌ தம்முடைய பதவியின்‌ அதிகாரங்களைச்‌ செலுத்திவரவும்‌, கடமைகளை ஆற்றி வரவும்‌ இயலாத போது, துணைவேந்தரின்‌. அதிகாரங்களைச்‌ செலுத்தி 1. 2012ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி திருத்தச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌ 50/2012) பிரிவு 2ஆல்‌ மாற்றாக. அமைக்கப்பட்டது. 22 வருவதற்கும்‌, கடமைகளை ஆற்றி வருவதற்கும்‌ தேவைப்படும்‌ ஏற்பாடுகளை நிருவாக மன்றமானது செய்கின்ற வரையிலும்‌, பல்கலைக்கழகத்தின்‌ மூத்த முதுநிலைப்பேராசிரியர்‌, அத்துணைவேந்தரின்‌ அதிகாரங்களைச்‌ செலுத்தி வருவதோடு கடமைகளையும்‌ ஆற்றிவருவார்‌. (5) துணைவேந்தர்‌, பல்கலைக்கழகத்தின்‌ முழுநேர அலுவலர்‌ ஆவார்‌. அவருடைய ஊளதியங்களும்‌ பிற பணி வரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌ பின்‌: வருவனவாக இருக்கும்‌:- (ஐ துணைவேந்தருக்கு, மாதம்‌ ஒன்றுக்கு எழுபத்தைந்தாயிரம்‌ ரூபாய்‌ அறுதியிட்ட சம்பளத்துடன்‌ மாதம்‌ ஒன்றுக்கு ஐந்தாயிரம்‌ ரூபாய்‌ தணிப்படியோ அல்லது அவ்வப்போது அரசினால்‌ நிர்ணயிக்கப்படக்கூடிய அத்தகைய அதிகப்படியான சம்பளம்‌ வழங்கப்படுவதோடு, அவர்‌ அறைகலன்களுடன்‌ கூடிய குடியிருப்பு ஒன்றை வாடகைத்‌ தொகை செலுத்தாது பயன்படுத்துவதற்கும்‌. உரிமை உடையவராவார்‌, மற்றும்‌ அத்தகைய குடியிருப்பினைப்‌ பராமரிக்கும்‌ பொறுப்பு எதுவும்‌ துணைவேந்தரைச்‌ சார்தல்‌ கூடாது. ஒழுங்குவிதிகளால்‌ வகைசெய்யப்படக்கூடிய பிற இடை ஆதாயங்களைப்‌ பெறுவதற்கும்‌ அவர்‌ உரிமை உடையவராவார்‌; (௦) துணைவேந்தர்‌, அவ்வப்போது வேந்தரின்‌ ஒப்புதலுடன்‌, நிருவாக மன்றத்தினால்‌ நிர்ணயிக்கப்படக்‌ கூடிய, அத்தகைய பணி முதிர்வுக்கால நலன்களுக்கும்‌. படித்தொகைகளுக்கும்‌ உரிமை உடையவராவார்‌. வரம்புரை: பல்கலைக்கழகத்தின்‌ பணியாளர்‌ ஒருவர்‌ துணைவேந்தராக நியமிக்கப்படும்‌ போது, அவர்‌ தொகை அளிப்பவராக இருக்கிற வருங்கால வைப்பு நிதிக்குத்‌ தொடர்ந்து தொகை அளித்துவர அனுமதிக்கப்படுவார்‌, 23 மேலும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌. பங்களிப்பானது, துணைவேந்தராக அவர்‌ நியமிக்கப்படுவதற்கு முன்பு அவர்‌ பங்களித்திருந்த அளவுக்கு மட்டுப்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌; (௦9) துணைவேந்தர்‌, நிருவாக மன்றத்தினால்‌ நிர்ணயிக்கப்படக்கூடிய வீதத்தில்‌ பயணப்படித்‌ தொகைகளுக்கு உரிமை உடையவராவார்‌; (0) துணைவேந்தர்‌, பணியிலிருக்கும்‌ போது அவரால்‌ பணியில்‌ செலவழிக்கப்பட்ட கால அளவுகளில்‌ பதினொன்றில்‌ ஒரு பங்கு கால அளவுக்கான முழுச்‌ சம்பளத்துடன்‌ கூடிய ஈட்டிய விடுப்புக்கு உரிமை உடையவராவார்‌; வரம்புரை: ஆனால்‌, அவரது பதவிக்கால அளவு முடிவடைகிற தேதியில்‌, அவர்‌ ஈட்டிய விடுப்பை தம்‌ பதவிக்காலம்‌ முடிவடைகிற தேதிக்கு முன்னர்‌ பயன்படுத்தி இருக்கவில்லை என்றால்‌, தம்‌ பதவியை விட்டு நீங்கியதற்குப்‌ பின்பு, இருநூற்று நாற்பது நாட்கள்‌ என்கின்ற அளவிற்கு உட்பட்டுத்‌ தம்‌ இருப்பில்‌ உள்ள ஈட்டிய விடுப்பைப்‌ பொறுத்து விடுப்புச்‌ சம்பளத்திற்கு நிகரான மதிப்புள்ள பணத்தைப்‌ பெறுவதற்கு அவர்‌ உரிமை உடையவராவார்‌, (6) துணைவேந்தர்‌, தம்‌ பதவிக்‌ காலத்தின்‌ போது, மருத்துவக்‌ காரணங்களுக்காகவோ மற்றப்படியோ, மூன்று மாதங்களுக்கு மேற்படாத ஒரு கால அளவிற்குச்‌ சம்பளமில்லா விடுப்புக்கு உரிமை உடையவர்‌ ஆவார்‌. வரம்புரை : (0) கூறின்படி எந்த அளவிற்கு ஈட்டிய விடுப்புக்கு அவர்‌ உரிமை தகுதியுடையவரோ, அந்த அளவிற்கு அத்தகைய விடுப்பினை, முழுச்‌ சம்பளத்துடனான விடுப்பாக மாற்றிக்‌ கொள்ளலாம்‌. 24 12. துணைவேந்தரை நீக்குதல்‌.- (1) துணைவேந்தர்‌, வேண்டுமென்றே இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளை நிறைவேற்றாமல்‌ விட்டுவிடுகிறார்‌ அல்லது மறுக்கிறாரென்றோ, அவருக்கு உரிய அதிகாரங்களைத்‌ தவறாகப்‌ பயன்படுத்துகிறார்‌ என்றோ, தவறாக நடக்கிறார்‌ என்றோ, தவறாக நிருவகிக்கிறார்‌ என்றோ அவரது நடத்தை ஒழுக்கக்‌ கேட்டை உள்ளடக்கியதாக இருக்கிறதென்றோ வேந்தர்‌ கருதுவாரானால்‌ அல்லது துணைவேந்தர்‌ அவரது பதவியில்‌ தொடர்ந்திருப்பது இப்பல்கலைக்கழகத்தின்‌: நலனுக்கு ஊறுவிளைவிக்கும்‌ என்று வேந்தருக்குத்‌ தோன்றுமானால்‌, வேந்தர்‌, அந்த விவரம்‌ குறித்து விசாரணை செய்வதற்காக மூன்று உறுப்பினர்களுக்குக்‌ குறையாத குழு ஒன்றை அமைக்கும்‌ படியும்‌, அக்குழுவின்‌ அறிக்கையை வேந்தரின்முன்‌ வைக்கும்‌ படியும்‌ இணைவேந்தரைப்‌ பணிக்கலாம்‌. (2) வேந்தர்‌, அக்குழுவின்‌ அறிக்கையைப்‌ பரிசீலனை செய்த பின்பு, துணைவேந்தர்‌ அவரது பதவியில்‌ தொடர்ந்திருப்பது இப்பல்கலைக்கழகத்தின்‌ நலனுக்கு ஊறு விளைவிக்கும்‌ என்று மன நிறைவு அடைவாரானால்‌ அல்லது அவர்‌ மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள்‌ அனைத்தையும்‌ அல்லது அதில்‌ ஏதொன்றையும்‌ செய்துள்ள குற்றவாளியாக அவர்‌ காணப்படுவாரானால்‌, துணைவேந்தரை ஆணையின்‌ மூலமாகப்‌ பதவியிலிருந்து நீக்கலாம்‌: வரம்புரை: ஆனால்‌, அவரது தரப்பினைக்‌ கேட்பதற்கு. நியாயமான வாய்ப்பு ஒன்று துணைவேந்தருக்கு அளிக்கப்பட்டாலன்றி, இந்தப்‌ பிரிவின்படியான ஆணை எதுவும்‌ பிறப்பிக்கப்படுதல்‌ கூடாது. 25 13. துணைவேந்தரின்‌ அதிகாரங்களும்‌. கடமைகளும்‌.- (1) துணைவேந்தர்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌. கல்வித்‌ தலைவராகவும்‌ முதன்மை நிருவாக அலுவலராகவும்‌ இருப்பார்‌. (2) துணைவேந்தர்‌, வேந்தரும்‌ இணைவேந்தரும்‌ வருகை புரியாத, பொது மன்றக்‌ கூட்டத்திலும்‌ மற்றும்‌ பல்கலைக்கழகப்‌ பட்டமளிப்பு விழாவிலும்‌ தலைமையேற்றுத்‌ தகுதியுடைய நபர்களுக்குப்‌ பட்டங்கள்‌ மற்றும்‌ பிற கல்விச்‌ சிறப்புகளையும்‌ வழங்குதல்‌ வேண்டும்‌. (3) துணைவேந்தர்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌. அலுவல்களின்‌. ம்து அதிகாரக்‌ கட்டுப்பாட்டைச்‌ செலுத்திவருவார்‌, மேலும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ ஒழுங்குநெறி முறையாகப்‌ பேணிவரப்படுவதற்குப்‌ பொறுப்புடையவராவார்‌. (4) துணைவேந்தர்‌, இந்தச்‌ சட்டத்தின்‌. வகைமுறைகள்‌, அவற்றின்படிச்‌ செய்யப்படும்‌ ஒழுங்கு விதிகள்‌ ஆகியவை கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அந்த நோக்கத்திற்குத்‌ தேவையான அதிகாரங்கள்‌ அனைத்தையும்‌ அவர்‌ செலுத்தி வரலாம்‌. (5) துணைவேந்தர்‌, பல்கலைக்கழக ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பிற பணியாளர்களை நியமனம்‌ செய்வது, தற்காலிகப்‌ பணி நீக்கம்‌ செய்வது, பணி நீக்கம்‌ செய்வது ஆகியவை தொடர்பான நிருவாக மன்றத்தின்‌ ஆணைகளையும்‌, நிருவாக மன்றத்தின்‌ பிற முடிவு எதனையும்‌ செயற்படுத்துதல்‌ வேண்டும்‌. (6) உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது தேவையானது என்று துணைவேந்தர்‌ கருதுகிற நெருக்கடி நிலை எதிலும்‌, அவர்‌, தாம்‌ தேவை எனக்‌ கருதும்‌ நடவடிக்கையை எடுத்தல்‌ வேண்டும்‌; மேலும்‌, அவர்‌, 26 உடனடியாக கிடைக்கின்ற வாய்ப்பைப்‌ பயன்படுத்தி, அந்தப்‌ பொருளின்‌ மீது அதன்‌ வழக்கமான நடவடிக்கை எடுத்திருக்கக்‌ கூடிய அலுவலருக்கு, அதிகார அமைப்பிற்கு அல்லது அமைப்பிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்புதல்‌ வேண்டும்‌: வரம்புரை: அத்தகைய ஆணை எதுவும்‌, அதனால்‌ பெரும்பாலும்‌ பாதிக்கப்படக்கூடிய நபருக்கு அவரது தரப்பை எடுத்துரைப்பதற்கான நியாயமான வாய்ப்பு ஒன்று கொடுக்கப்பட்டிருந்தாலன்றி பிறப்பிக்கப்படுதல்‌ கூடாது. (7) உட்பிரிவு (6)இன்படி துணைவேந்தரின்‌ ஆணை எதனாலும்‌ குறையுற்ற நபர்‌ எவரும்‌, அத்தகைய ஆணை தமக்குத்‌ தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்ளாகப்‌ பொது மன்றத்திற்கு மேல்முறையீடு ஒன்றைத்‌ தாக்கல்‌ செய்து கொள்ளலாம்‌; மேலும்‌, துணைவேந்தர்‌, அத்தகைய மேல்முறையீட்டின்‌ மீது, பொது மன்றத்தினால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணைக்குச்‌ செயல்‌ வடிவம்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌. (8) துணைவேந்தர்‌, நிருவாக மன்றத்தின்‌ மற்றும்‌ நிதிக்குழுவின்‌ பதவிவழித்‌ தலைவராவர்‌. துணைவேந்தர்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌. அதிகார அமைப்பு அல்லது பிற அமைப்பு ஏதொன்றின்‌ கூட்டம்‌ எதிலும்‌ வந்திருப்பதற்கும்‌ உரை நிகழ்த்துவதற்கும்‌, உரிமை உடையவராக இருப்பார்‌. ஆனால்‌ அத்தகைய அதிகாரஅமைப்பின்‌ அல்லது அமைப்பின்‌ உறுப்பினர்‌ ஒருவராக அவர்‌ இருந்தாலன்றி, அதில்‌ வாக்களிக்க உரிமை உடையவராக மாட்டார்‌. (9) துணைவேந்தர்‌, பொது மன்றம்‌, நிருவாக மன்றம்‌, கல்வி மன்றம்‌, நிதிக்குழு ஆகியவற்றின்‌ கூட்டங்களைக்‌ கூட்டுவதற்கான அதிகாரங்களைப்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. 27 (10) துணைவேந்தர்‌, கற்பித்தல்‌, ஆராய்ச்சி, விரிவாக்கக்‌ கல்வி மற்றும்‌ பாடத்திட்ட மேம்பாடு ஆகியவற்றுக்கான ஒருங்கிணைப்பிற்கும்‌. ஒத்திசைவிற்கும்‌, பொறுப்புடையவராக இருப்பார்‌. (11) துணைவேந்தர்‌, ஒழுங்குவிதிகளால்‌ வகுத்துரைக்கப்படும்‌ பிற அதிகாரங்களைச்‌ செலுத்தி வருவதோடு, பிற கடமைகளையும்‌ ஆற்றிவருவார்‌. 14. பதிவாளர்‌.- (1) நிருவாக மன்றத்தினால்‌ நியமிக்கப்படும்‌ பல்கலைக்கழகத்தின்‌ சம்பளம்‌ பெறும்‌ பதிவாளர்‌, முழுநேர அலுவலராக இருந்து வருவார்‌, (2) பதிவாளரின்‌ பணி குறித்த வரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌ பின்வருமாறு இருத்தல்‌ வேண்டும்‌:- (ஐ பதிவாளர்‌ பதவியை வகிப்பவர்‌, அரசு சட்டக்கல்லூரி முதல்வரின்‌ அல்லது பல்கலைக்கழகம்‌ ஒன்றின்‌ பேராசிரியர்‌ படிநிலைக்குக்‌ குறையாத, சட்டம்‌ சார்ந்த துறையில்‌ ஒரு கல்வியாளராக, மூன்று ஆண்டுகளுக்குக்‌ குறையாத அத்தகைய தகுதியில்‌ பணிபுரிந்துள்ளவராகவோ அல்லது சட்டத்துறை அரசு துணைச்செயலாளரின்‌ படிநிலைக்குக்‌ குறையாத ஒரு அரசு அலுவலராகவோ இருத்தல்‌ வேண்டும்‌; (b) பதிவாளர்‌, மூன்றாண்டுக்‌ காலஅளவுக்குப்‌ பதவி வகிப்பார்‌, மேலும்‌ மறுநியமனம்‌ செய்யப்படுவதற்குத்‌ தகுதியுடையவர்‌ ஆவார்‌: வரம்புரை: அவர்‌ அரசுப்‌ பணியாளராக இருந்தால்‌, ஐம்பத்தெட்டு வயதை அடைந்ததும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌. பேராசிரியராக இருந்தால்‌ அறுபது வயதை அடைந்ததும்‌ ஓய்வு பெறுதல்‌ வேண்டும்‌. (6) பதிவாளரின்‌ ஊதியங்களும்‌ பணி குறித்த பிற வரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌. வகுத்துரைக்கப்படும்‌ விதத்தில்‌ இருக்கும்‌; 28 (0) பதிவாளரின்‌ பதவி காலியாக இருக்கும்‌ போது அல்லது நோய்‌, பணிக்கு வாராமை அல்லது பிற காரணம்‌ எதனாலும்‌ பதிவாளர்‌ தம்முடைய பதவிக்‌ கடமைகளை ஆற்றுவதற்கு இயலாத போது, பதிவாளரின்‌: கடமைகள்‌ அந்த நோக்கத்திற்காகத்‌ துணைவேந்தரால்‌ குறிப்பிடப்படக்கூடிய நபரால்‌ ஆற்றி வரப்படுதல்‌ வேண்டும்‌. (3)(a) பதிவாளர்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌. ஆசிரியர்கள்‌ மற்றும்‌ கல்விசார்‌ பணியாளர்கள்‌ நீங்கலாக, நிருவாக மன்றத்தின்‌ ஆணைகளில்‌ குறிப்பிடப்படும்‌ பணியாளர்கள்‌ ம்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும்‌, விசாரணை நடத்தப்படுவதற்கும்‌. இடையே அவர்களைத்‌ தற்காலிகப்‌ பணி நீக்கம்‌ செய்வதற்கு மற்றும்‌ அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு அல்லது அவர்கள்‌ மீது கண்டனத்‌ தண்டனை விதிப்பதற்கு அல்லது சம்பள உயர்வை நிறுத்தி வைப்பதற்குமான அதிகாரத்தைப்‌ பெற்றிருப்பார்‌: வரம்புரை: சம்மந்தப்பட்ட நபருக்கெதிராக எடுக்கக்‌ கருதியுள்ள நடவடிக்கைக்கு எதிரான காரணம்‌ காட்டுவதற்கு, நியாயமான ஒரு வாய்ப்பு அவருக்குக்‌ கொடுக்கப்பட்டிருந்தாலன்றி தண்டனை எதுவும்‌ விதிக்கப்படுதல்‌ கூடாது. (b) கூறு (ஐஇல்‌, குறிப்பிடப்பட்ட தண்டனைகளில்‌ எதையும்‌ விதிக்கின்ற பதிவாளரின்‌. ஆணை ஒன்றுக்கு எதிராகத்‌ துணைவேந்தரிடம்‌ மேல்முறையீடு ஒன்றைச்‌ செய்து கொள்வதற்கு சம்பந்தப்பட்ட நபருக்கு உரிமை உண்டு. (6) பதிவாளரின்‌ அதிகாரங்களுக்கு மேற்பட்ட தண்டனையை விதிப்பது தேவையானது என்று, அந்த விசாரணை வெளிப்படுத்துகிற நிலை எதிலும்‌, பதிவாளர்‌, அந்த விசாரணை முடிவடைந்ததன்‌ பேரில்‌, அறிக்கை ஒன்றைத்‌ தம்முடைய பரிந்துரை களோடு சேர்த்துத்‌ 29 துணைவேந்தருக்குக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ துணைவேந்தர்‌ தாம்‌ பொருத்தம்‌ எனக்‌ கருதும்‌ ஆணையைப்‌ பிறப்பித்தல்‌ வேண்டும்‌: வரம்புரை: தண்டனை எதையும்‌ விதிக்கின்ற துணைவேந்தரின்‌ ஆணை ஒன்றுக்கு எதிராக நிருவாக மன்றத்திடம்‌ மேல்முறையீடு ஒன்றைச்‌ செய்து கொள்வதற்குச்‌ சம்பந்தப்பட்ட நபருக்கு உரிமை உண்டு. (0) கூறு ௦)இன்படி அல்லது கூறு (௦9இன்படியான மேல்முறையீடு எதுவும்‌, எந்த ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டதோ அந்த ஆணையை மேல்முறையீட்டாளர்‌ பெற்ற தேதியிலிருந்து அறுபது நாட்கள்‌ முடிவடைந்த பின்பு தாக்கல்‌ செய்யப்படுதல்‌ கூடாது. (4) இந்தச்‌ சட்டத்தில்‌ பிறவாறு வகை செய்யப்பட்டிருந்தால்‌ தவிர, பதிவாளரானவர்‌, பொது மன்றம்‌, நிருவாக மன்றம்‌, கல்வி மன்றம்‌, புலங்கள்‌ மற்றும்‌ பாடக்குழுக்கள்‌ ஆகியவற்றின்‌ பதவிவழிச்‌ செயலாளராக இருந்துவருவார்‌, ஆனால்‌ இந்த அதிகாரஅமைப்புகளில்‌ ஏதொன்றிலும்‌ உறுப்பினராக இருப்பதாகக்‌ கருதப்படமாட்டார்‌. (5 பதிவாளரின்‌ கடமைகள்‌ பின்வருமாறு, (@) அவரது பொறுப்பில்‌ நிருவாக மன்றம்‌ ஒப்படைக்கிற இப்பல்கலைக்கழகத்தின்‌. பதிவுக்கட்டுகளுக்கும்‌, தனித்த இலச்சினைக்கும்‌, பிற சொத்துக்களுக்கும்‌ பாதுகாவலராக இருப்பது; (௦) பொது மன்றம்‌, நிருவாக மன்றம்‌, கல்வி மன்றம்‌, புலங்கள்‌, பாடத்திட்டக்குழுக்கள்‌, தேர்வாளர்‌ குழுக்கள்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளினால்‌ நியமிக்கப்படும்‌ குழு ஏதொன்றின்‌: 30 கூட்டங்களுக்கான அறிவிப்புகள்‌ அனைத்தையும்‌ அனுப்புவது; (6) பொதுமன்றம்‌, நிருவாக மன்றம்‌, கல்வி மன்றம்‌, புலங்கள்‌, பாடத்திட்டக்குழுக்கள்‌, தேர்வாளர்‌ குழுக்கள்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளினால்‌ நியமிக்கப்படும்‌ குழு ஏதொன்றின்‌: கூட்ட நடவடிக்கைகள்‌ அனைத்தையும்‌ பற்றிய நடவடிக்கைக்‌ குறிப்பேடுகளைப்‌ பேணி வருவது; (0) பொதுமன்றத்தின்‌ அலுவலகக்‌ கடிதத்‌ தொடர்பை நடத்திவருவது; (ஐ) இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளின்‌ கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலின்‌: நகல்கள்‌ வெளியிடப்பட்டவுடன்‌ அவற்றையும்‌ கூட்ட நடவடிக்கைகளின்‌: குறிப்புகளையும்‌ வேந்தருக்கு வழங்குவது; மற்றும்‌ M) ஒழுங்குவிதிகளில்‌ குறிப்பிடப்படும்‌ அல்லது பொது மன்றத்தினாலோ நிருவாக மன்றத்தினாலோ அல்லது துணைவேந்தராலோ அவ்வப்போது கோரப்படக்கூடிய பிற அதிகாரங்களைச்‌ செலுத்தி வருவதும்‌ பிற கடமைகளை ஆற்றி வருவதுமாகும்‌. (6) இப்பல்கலைக்கழகத்தால்‌ அல்லது அதற்கு எதிராகத்‌ தொடரப்படும்‌ உரிமைவழக்குகள்‌ மற்றும்‌ எடுக்கப்படும்‌ பிற சட்ட நடவடிக்கைகள்‌ அனைத்திலும்‌, வாதுரைகள்‌ பதிவாளரால்‌ கையொப்பமிடப்பட்டு உண்மை என உறுதிமொழி அளிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அத்தகைய உரிமை வழக்குகளிலும்‌ நடவடிக்கைகளிலும்‌. செயல்முறைக்‌ கட்டளைகள்‌ அனைத்தும்‌ பதிவாளருக்குப்‌ பிறப்பிக்கப்பட்டு அவருக்குச்‌ சார்வு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 31 15. நிதி அலுவலர்‌.- (1) நிதி அலுவலர்‌, இதன்‌ பொருட்டு நிருவாக மன்றத்தால்‌ குறிப்பிடப்படக்கூடிய கால அளவுக்கு, அந்த நிருவாக மன்றத்தினால்‌ நியமிக்கப்படும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ சம்பளம்‌ பெறும்‌ முழுநேர அலுவலராக இருந்துவருவார்‌. (2) நிதி அலுவலரின்‌ நியமனம்‌, அரசினால்‌ பறிந்துரை செய்யப்படும்‌ மூண்று பெயர்களைக்‌ கொண்ட பட்டியல்‌ ஒன்றிலிருந்து நிருவாக மன்றத்தால்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (3) நிதி அலுவலரின்‌ ஊதியங்களும்‌, பணி குறித்த பிற வரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌, ஒழுங்குவிதிகளின்‌. மூலம்‌ வகுத்துரைக்கப்படுதல்‌ வேண்டும்‌. (4) நிதி அலுவலர்‌, ஐம்பத்தெட்டு வயதை அடைந்ததன்‌ பேரில்‌ அல்லது உட்பிரிவு (1)இன்படி நிருவாக மன்றத்தால்‌ குறிப்பிடப்படும்‌ கால அளவு முடிவடைவதன்‌ பேரில்‌, இவற்றில்‌ எது முந்தியதோ அதன்‌ பேரில்‌ ஒய்வு பெறுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: நிதி அலுவலர்‌ ஐம்பத்தெட்டு வயதை அடைந்திருந்த போதிலும்‌, அவரைத்‌ தொடர்ந்து பதவிக்கு பதில்‌ஆள்‌ நியமிக்கப்பட்டு, அவர்‌ பதவி ஏற்கின்ற வரையில்‌, அல்லது ஓராண்டுக்காலம்‌ முடிவடையும்‌ வரையில்‌ இவற்றில்‌ எது முந்தியதோ அதுவரையில்‌, தொடர்ந்து பதவியில்‌ இருந்து வருவார்‌. (5) நிதி அலுவலரின்‌. பதவி காலியாக இருக்கும்போது அல்லது நோய்‌, பணிக்கு வாராமை அல்லது பிற காரணம்‌ எதனாலேனும்‌, நிதி அலுவலர்‌ தம்முடைய கடமைகளை ஆற்றுவதற்கு இயலாத போது, நிதி அலுவலரின்‌: பணிகள்‌, அந்த நோக்கத்திற்காகத்‌ துணைவேந்தரால்‌ நியமிக்கப்படக்கூடிய நபரால்‌ ஆற்றி வரப்படுதல்‌ வேண்டும்‌. 32 (6) _ நிதி அலுவலர்‌, நிதிக்குழுவின்‌ பதவிவழிச்‌ செயலாளராக இருந்து வருவார்‌, ஆனால்‌ அத்தகைய குழுவின்‌ உறுப்பினராக இருப்பதாகக்‌ கருதப்படமாட்டார்‌. (7) நிதி அலுவலர்‌, (8) இப்பல்கலைக்கழகத்தின்‌ நிதிகளின்‌ மீது பொதுவான கண்காணிப்பினைச்‌ செலுத்துதலும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ நிதிக்கொள்கை தொடர்பாக ஆலோசனை வழங்குதலும்‌ வேண்டும்‌; மற்றும்‌. (b) நிருவாக மன்றத்தாலோ அல்லது நிதிக்குழுவினாலோ அவருக்கு அளிக்கப்படும்‌ அல்லது ஒழுங்குவிதிகளால்‌ வகுத்துரைக்கப்படும்‌ பிற அதிகாரங்களைச்‌ செலுத்தி வருதலும்‌, பிற நிதி சார்ந்த செயற்பணிகளை ஆற்றி வருதலும்‌ வேண்டும்‌: வரம்புரை: நிதி அலுவலர்‌, நிருவாக மன்றத்தின்‌ முன்‌: அனுமதியின்றிச்‌ செலவு எதையும்‌ செய்தலோ வகுத்துரைக்கப்படும்‌ தொகைக்கு மேற்படும்‌ முதலீடு எதையும்‌ செய்தலோ கூடாது. (8) நிருவாக மன்றத்தின்‌. கட்டுப்பாட்டு அதிகாரத்திற்குட்பட்டு, நிதி அலுவலர்‌,- (ஐ பொறுப்பாட்சி மற்றும்‌ நிலைக்கொடைச்‌ சொத்து உள்ளிட்ட, இப்பல்கலைக்கழகத்தின்‌ சொத்துக்களையும்‌, முதலீடுகளையும்‌ வைத்து வருவதோடு நிருவகித்து வருதலும்‌ வேண்டும்‌; (௦) ஜராண்டிற்கான தொடர்‌ மற்றும்‌ தொடராச்‌ செலவினங்களுக்காக நிருவாக மன்றத்தால்‌ நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேற்படாத, தொகைகள்‌ அனைத்தும்‌ அவை வழங்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நோக்கங்களுக்காகச்‌ செலவிடப்படுவதையும்‌ உறுதி செய்துகொள்ளவேண்டும்‌; 33 (c) இப்பல்கலைக்கழகத்தின்‌. ஆண்டுக்‌ கணக்குகள்‌, நிதி மதிப்பிடு. வரவு-செலவுத்‌ திட்டம்‌ ஆகியவற்றைத்‌ தயாரிப்பதற்கும்‌, பொது மன்றத்திடம்‌ அவற்றை முன்னிடுவதற்கும்‌ பொறுப்புடையவராவார்‌; (0) பணம்‌ மற்றும்‌ வங்கி இருப்புகளையும்‌, முதலீடுகளையும்‌ இடைவிடாது கண்காணித்து வருதல்‌ வேண்டும்‌; (8) வருவாய்‌ வசூலின்‌ முன்னேற்றத்தைக்‌ கண்காணித்து, வசூல்‌ செய்வதற்குப்‌ பயன்படுத்தப்படும்‌ முறைகள்‌ குறித்த ஆலோசனை வழங்குதல்‌ வேண்டும்‌. (0). கட்டடங்கள்‌, நிலங்கள்‌, அறைகலன்கள்‌, தளவாடங்கள்‌ ஆகியவற்றின்‌ பதிவேடுகள்‌. நாளதுதேதிவரை வைத்துப்‌ பேணி வரப்படுவதையும்‌, இப்பல்கலைக்கழகத்தால்‌ பேணி வரப்படும்‌ அலுவலகங்கள்‌, சிறப்பு மையங்கள்‌ ஆகிய அனைத்திலும்‌ உள்ள தளவாடங்கள்‌ மற்றும்‌ பிற நுகரத்தக்க பொருள்களின்‌: இருப்பு-நிலையைச்‌ சரிபார்க்கும்‌ பணி நடத்தப்படுவதையும்‌ உறுதி செய்து கொள்ளுதல்‌ வேண்டும்‌; (ஐ அதிகாரமளிக்கப்படாத செலவினம்‌ குறித்து அல்லது பிற நிதிசார்‌ முறைகேடு எதையும்‌ குறித்துத்‌ துணைவேந்தரின்‌ கவனத்திற்குக்‌ கொண்டு வருதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ தவறு செய்துள்ளவர்‌ மீது எடுக்கப்படவேண்டிய உரிய நடவடிக்கை குறித்து ஆலோசனை கூறுதலும்‌ வேண்டும்‌; மற்றும்‌ (h) தம்முடைய கடமைகளை ஆற்றி வருவதற்குத்‌ தேவை எனக்‌ கருதும்‌ தகவல்‌ அல்லது விவர அறிக்கை எதையும்‌, இப்பல்கலைக்கழகத்தால்‌ பேணிவரப்படும்‌ அலுவலகத்திலிருந்து அல்லது மையத்திலிருந்து கோரிப்பெறுதல்‌ வேண்டும்‌. 34 (9) இப்பல்கலைக்கழகத்திற்குச்‌ செலுத்தத்தக்க பணம்‌ எதற்காகவும்‌ நிதி அலுவலராலோ அல்லது நிருவாக மன்றத்தால்‌ இதற்கு என அதிகாரமளிக்கப்பட்ட நபர்‌ அல்லது நபர்களாலோ அளிக்கப்படும்‌ பற்றுச்சீட்டானது, அத்தகைய பணம்‌ செலுத்தப்பட்டதற்கான போதிய சான்றாக இருத்தல்‌ வேண்டும்‌. 16. தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌.- (1) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலரின்‌ பதவியை வகிப்பவர்‌, பேராசிரியர்‌ ஒருவரது படிநிலைக்குக்‌ குறையாத, சட்டம்‌ பற்றிய துறையில்‌ ஒரு கல்வியாளராக இருத்தல்‌ வேண்டும்‌. (2) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, வகுத்துரைக்கப்படும்‌ அத்தகைய கால அளவுக்கும்‌, அத்தகைய வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்‌ பேரிலும்‌, நிருவாக மன்றத்தால்‌ நியமிக்கப்படும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ ஒரு முழுநேர அலுவலராக இருந்துவருதல்‌ வேண்டும்‌. (3) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, வகுத்துரைக்கப்படும்‌ அதிகாரங்களைச்‌ செலுத்தி வருவதோடு, கடமைகளையும்‌ ஆற்றி வருதல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ [V பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகள்‌' 17. பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகள்‌.- பொது மன்றம்‌, நிருவாக மன்றம்‌, கல்வி மன்றம்‌, நிதிக்குழு, பாடத்திட்டக்குழுக்கள்‌, புலங்கள்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌. அதிகாரஅமைப்பு என ஒழுங்குவிதிகளின்‌ மூலம்‌ விளம்பப்படும்‌ பிற 35 அதிகாரஅமைப்புகள்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளாக இருக்கும்‌. 18. உறுப்பினர்‌ பதவிக்கான தகுதிக்கேடு.- (1) நபர்‌ எவரும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌. அதிகார அமைப்புகளில்‌ ஏதொன்றிற்கும்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌ அல்லது தேர்ந்தெடுக்கப்படும்‌ தேதியன்று, (ஐ அவர்‌ மனச்‌ சீர்கேடுற்றவராக இருப்பார்‌ என்றால்‌; அல்லது (b) நொடிப்பு நிலையராக நீதிமுறையில்‌ தீர்மானிக்கப்பட்ட நபர்‌ ஒருவராகவோ இருப்பார்‌ என்றால்‌; அல்லது விடுவிக்கப்படாத நொடிப்பு நிலையராக இருப்பார்‌ என்றால்‌; அல்லது (௦) ஒழுக்கக்‌ கேட்டினை உள்ளடக்கிய குற்றச்‌ செயலுக்காக, நீதிமன்றம்‌ ஒன்றினால்‌ குற்றவாளி எனத்‌ தீர்ப்பளிக்கப்பட்டவராக இருப்பார்‌ என்றால்‌, அவ்வாறு பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவதற்கோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ தகுதியுடையவராகமாட்டார்‌. (2) நபர்‌ ஒருவர்‌, உட்பிரிவு (1)இன்படி தகுதிக்கேடுற்றவரா என்பது குறித்துப்‌ பூசல்‌ அல்லது ஐயம்‌ ஏதேனும்‌ இருக்கும்‌ போது, நிருவாக மன்றம்‌ அதனைத்‌ தீர்மானித்தல்‌ வேண்டும்‌; அதன்‌ முடிவே இறுதியானதாகும்‌. 19. பொதுமன்றத்திற்கும்‌ நிருவாக மன்றத்திற்கும்‌ கல்வி மன்றத்திற்கும்‌ தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவதற்கான தகுதிக்கேடு.- (1). பிரிவு 21, 24 மற்றும்‌ 28இல்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, பல்கலைக்கழகத்தின்‌ பின்வரும்‌ அதிகாரஅமைப்புகளின்‌: அதாவது:- 36 (i) பொது மன்றம்‌; 0) நிருவாக மன்றம்‌; மற்றும்‌. 00 கல்வி மன்றம்‌, ஆகியவற்றில்‌ ஏதாவது ஒன்றில்‌ அல்லது அதற்கு மேற்பட்டவற்றில்‌ மொத்தம்‌ ஆறு ஆண்டுக்கால அளவுக்கு உறுப்பினராகப்‌ பதவி வகித்து வந்திருந்த நபர்‌ எவரும்‌, மேற்சொன்ன மூன்று அதிகாரஅமைப்புகளில்‌ ஏதொன்றிற்கும்‌ தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவதற்குத்‌ தகுதியுடையவர்‌ ஆகமாட்டார்‌. (2) உட்பிரிவு (1)இல்‌ உள்ள எதுவும்‌ பிரிவுகள்‌: 21, 24, மற்றும்‌ 28இல்‌ குறிப்பிடப்பட்ட பதவி-வழி உறுப்பினர்களுக்குப்‌ பொருந்துதல்‌ கூடாது. 20. துணைவேந்தர்‌ மற்றும்‌ பிற அலுவலர்கள்‌ முதலானோர்‌ பொதுப்‌ பணியாளர்களாக இருப்பர்‌.- துணைவேந்தர்‌, பதிவாளர்‌, நிதி அலுவலர்‌, தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌. பிற பணியாளர்கள்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளில்‌ எதனின்படியும்‌ செயல்படுகிறபோது அல்லது செயல்படுவதாகப்‌ புலப்படுகின்றபோது இந்தியத்‌ தண்டனைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்சட்டம்‌ XLV/1860) பிரிவு 21 இன்‌: பொருளின்படி பொதுப்பணியாளர்களாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. பொது மன்றம்‌ 21. பொது மன்றம்‌.- (1) பொது மன்றமானது, இப்பல்கலைக்கழகத்தின்‌. தலைமை ஆலோசனைக்‌ குழுவாகும்‌. (2) வேந்தர்‌, பிரிவு 51இன்படி, முதல்‌ துணைவேந்தர்‌ நியமிக்கப்பட்டதற்குப்‌ பின்பு, 37 கூடியவிரைவில்‌, பொது மன்றத்தை அமைத்தல்‌ வேண்டும்‌. (3) பொது மன்றமானது வேந்தர்‌, இணைவேந்தர்‌, துணைவேந்தரோடு பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌ அதாவது:- வகை | - பதவி வழி உறுப்பினர்கள்‌. (8) தமிழ்நாடு அரசுத்‌ தலைமை வழக்குரைஞர்‌; (௦) தமிழ்நாடு வழக்குரைஞர்‌ மன்றத்‌ தலைவர்‌; (6) தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்கழகத்‌ துணைவேந்தர்‌; (0) சட்டத்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (6) உயர்‌ கல்வித்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (9) நிதித்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌. வகை ॥ - பிற உறுப்பினர்கள்‌. (8) வேந்தரால்‌ பெயர்குறித்து நியமிக்கப்படும்‌, சென்னை உயர்‌ நீதிமன்றத்தின்‌ பணியில்‌ இருக்கும்‌ நீதிபதி ஒருவர்‌ மற்றும்‌ ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர்‌, (b) துணைவேந்தரால்‌ பெயர்குறித்து நியமிக்கப்படும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ இரண்டு பேராசிரியர்கள்‌; (௦9) வேறு பல்கலைக்கழகத்தில்‌ சட்டப்‌ புலத்தில்‌ இருபது ஆண்டுகளுக்குக்‌ குறையாத கற்றித்தல்‌ 38 அனுபவமுடைய, துணைவேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌ இரண்டு பேராசிரியர்கள்‌; (0) வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌, இந்திய வழக்குரைஞர்‌ மன்றத்தின்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌; (6) வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌ முதுநிலை வழக்குரைஞர்‌ ஒருவர்‌. (4) வேந்தர்‌ பொதுமன்றத்தின்‌ தலைவராக இருப்பார்‌. (5 (a) வேறுவிதமாக வகைசெய்யப்படாத நிலையில்‌, பதவிவழி உறுப்பினர்கள்‌ அல்லாத பொது மன்றத்தின்‌ பிற உறுப்பினர்கள்‌, மூன்றாண்டுக்‌ காலம்‌ பதவி வகித்து வருவர்‌, மற்றும்‌ அத்தகைய உறுப்பினர்கள்‌, மேலும்‌ மூன்றாண்டுக்கு மேற்படாத காலஅளவிற்கு மண்டும்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவதற்குத்‌ தகுதியுடையவர்கள்‌ ஆவர்‌. 0) உறுப்பினர்‌ ஒருவர்‌, பொது மன்றத்தின்‌ தற்காலிகக்‌ காலியிடம்‌ ஒன்றுக்குப்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படுகிற போது, அத்தகைய உறுப்பினர்‌ எவராலும்‌ ஓராண்டுக்குக்‌ குறையாமல்‌ வகித்து வரப்பட்ட பதவியின்‌: கால அளவானது முழு மூன்றாண்டுக்‌ காலஅளவாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: குறிப்பிட்ட வாக்காளர்‌ தொகுதியின்‌: அல்லது அமைப்பின்‌ உறுப்பினர்‌ என்ற அல்லது குறிப்பிட்ட நியமனம்‌ ஒன்றை வகிக்கிறவர்‌ என்ற தம்‌ தகுதியில்‌ பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள பொது மன்றத்தின்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌, அவர்‌ அந்த வாக்காளர்‌ தொகுதியின்‌ அல்லது அமைப்பின்‌ உறுப்பினராக அல்லது அந்த நியமனத்தை வகித்து வருபவராக இருப்பது அற்றுப்போகிற தேதியிலிருந்து, பொது மன்றத்தின்‌ உறுப்பினராக இருப்பதும்‌ அற்றுப்போகும்‌: 39 மேலும்‌ வரம்புரை: மேலும்‌, பொதுமன்றத்தின்‌ பெயர்குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்‌ ஒருவர்‌, பொது மன்றத்தின்‌ பதவிவழி உறுப்பினராக இருப்பதற்கு உரிமையுடையவர்‌ என்ற காரணத்தால்‌ பதவிகளில்‌ எதற்கும்‌ தற்காலிகமாக நியமிக்கப்படுகிற போது, தாம்‌ தேர்ந்தெடுக்கப்பட காரணமான அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்பட காரணமான பொதுமன்றத்தின்‌ உறுப்பினராகத்‌ தாம்‌ தொடர்ந்து இருப்பதற்கு. விரும்புகிறாரா அல்லது அத்தகைய உறுப்பினராக இருக்கும்‌ பதவியை விட்டு நீங்கித்‌ தாம்‌ நியமிக்கப்பட்டதன்‌ காரணமாகப்‌ பதவிவழி உறுப்பினராக ஆவதற்கு விரும்புகிறாரா எண்பதை அவர்‌ தன்‌ நியமனப்பொறுப்பை மேற்கொள்கின்ற தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள்ளாகத்‌ துணைவேந்தருக்குத்‌ கையொப்பமிடப்பட்டு எழுத்து மூலமாகத்‌ தெரிவிக்கப்பட்ட அறிவிப்பின்‌ வாயிலாக விருப்பத்‌ தெரிவு செய்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அந்த விருப்பத்தெரிவு அறுதியானதாகும்‌. அத்தகைய விருப்பத்தெரிவைச்‌ செய்யத்‌ தவறுவதன்‌ பேரில்‌, தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர்குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினராக உள்ள தம்முடைய பதவியை விட்டு நீங்கியதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. (6) _ நபர்‌ ஒருவர்‌ பொது மன்றத்தின்‌ உறுப்பினராக இருப்பது அற்றுப்போகும்போது, அவர்‌ பொது மன்றத்தில்‌ உறுப்பினராக இருப்பதனால்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌. அதிகாரஅமைப்புகள்‌: எதிலும்‌ உறுப்பினராக இருந்திருக்கக்கூடிய நிலையும்‌ அற்றுப்போகும்‌. (7) பதவி வழி உறுப்பினர்‌ அல்லாத பொது மன்றத்தின்‌ ஓர்‌ உறுப்பினர்‌, தமது பதவிக்காலம்‌ முடிவதற்கு முன்பு எந்த நேரத்திலும்‌, தமது உறுப்பினர்‌ பதவியிலிருந்து பதவி விலகலைக்‌ கொடுக்கலாம்‌; அத்தகைய பதவி விலகலானது எழுத்து வடிவிலான 40 கடிதம்‌ ஒன்றின்‌ வாயிலாக வேந்தருக்குத்‌ தெரிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அப்பதவி விலகலானது, வேந்தரால்‌ ஏற்கப்படும்‌ தேதியிலிருந்து செயல்விளைவு பெறுதல்‌ வேண்டும்‌. 22. பொதுமன்றத்தின்‌ அதிகாரங்கள்‌.- பொது மன்றமானது, பின்வரும்‌ அதிகாரங்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌, அவையாவன:- (8) இப்பல்கலைக்கழகத்தின்‌. விரிவான கொள்கைகளையும்‌, செயற்திட்டங்களையும்‌, அவ்வப்போது ஆய்வு செய்தல்‌; மற்றும்‌ பல்கலைக்கழகத்தின்‌. மேம்பாட்டிற்கும்‌ வளர்ச்சிக்குமான நடவடிக்கைகளுக்கு ஆலோசனை கூறுதல்‌; 0) ஆண்டறிக்கைகள்‌, நிதி மதிப்பீடுகள்‌ மற்றும்‌ கணக்குகளின்‌ மீதான தணிக்கை அறிக்கைகள்‌ ஆகியவற்றை பரிசீலனை செய்து அவற்றின்‌ மீது தீர்மானங்களை நிறைவேற்றுதல்‌; மற்றும்‌. (௦9) இப்பல்கலைக்கழகத்தின்‌ செயற்‌ பாட்டிற்கும்‌, நிருவாகத்திற்கும்‌ தேவை என அது கருதுகிற பிற செயற்பணிகளைச்‌ செய்தல்‌. 23. பொதுமன்றத்தின்‌ கூட்டங்கள்‌.- (1) பொது மன்றம்‌, குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறையேனும்‌ கூடுதல்‌ வேண்டும்‌. குறிப்பிட்ட ஆண்டு எதையும்‌ பொறுத்து, பொது மன்றத்தினால்‌ வேறு தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தாலன்றி, பொது மன்றத்தின்‌: ஆண்டு கூட்டம்‌ ஒன்று நிருவாக மன்றத்தினால்‌ நிர்ணயிக்கப்படும்‌ தேதியில்‌ நடத்தப்படுதல்‌ வேண்டும்‌. (2) ஆண்டுக்‌ கூட்டத்தில்‌, வரவுகள்‌ மற்றும்‌ செலவினங்களின்‌ விவரவுரை, தணிக்கை செய்யப்பட்ட ஐந்தொகைக்குறிப்பு மற்றும்‌ நிதி மதிப்பீடுகளுடன்‌ சேர்த்து, முந்தைய ஆண்டின்‌ போதான பல்கலைக்கழகத்தின்‌ பணி 41 குறித்த அறிவிக்கை துணைவேந்தரால்‌ பொது மன்றத்தின்‌ முன்வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) பொது மன்றத்தின்‌ கூட்டங்கள்‌, தலைவரால்‌ அல்லது அவர்‌ வராதபோது துணைவேந்தரால்‌, அவராக முற்பட்டோ, பொதுமன்றத்தின்‌ உறுப்பினர்களில்‌ பத்திற்குக்‌ குறையாதவர்களின்‌ கோரிக்கையின்‌ பேறிலோ கூட்டப்படுதல்‌ வேண்டும்‌. (4) பொது மன்றத்தின்‌ கூட்டம்‌ ஒவ்வொன்றிற்கும்‌ பதினைந்து நாட்கள்‌ அறிவிப்பு கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌. (5) பொது மன்றத்தின்‌ மூன்றில்‌ ஒரு பங்கு உறுப்பினர்கள்‌ குறைவெண்‌ வரம்பாக இருத்தல்‌ வேண்டும்‌. (6) உறுப்பினர்‌ ஒவ்வொருவரும்‌ ஒரு வாக்கினைக்‌ கொண்டிருப்பார்கள்‌: மற்றும்‌ பொது மன்றத்தினால்‌ தீர்மானிக்கப்படவேண்டிய பிரச்சினை எதிலும்‌ வாக்குகள்‌ சமமாக இருக்குமானால்‌, தலைவர்‌ அல்லது கூட்டத்திற்குத்‌ தலைமை வகிக்கும்‌ நபர்‌, கூடுதலாக அறுதி செய்யும்‌ வாக்கு ஒன்றைக்‌ கொண்டிருப்பார்‌. (7) உறுப்பினர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கும்‌ போது பெரும்பாண்மையினரின்‌ கருத்து மேலோங்கி இருக்கும்‌. (8) பொதுக்குழுவினால்‌ அவசர நடவடிக்கை எடுக்கப்படுவது தேவையானால்‌, தலைவர்‌, பொது மன்றத்தின்‌ உறுப்பினர்களுக்கு இது குறித்து விவரங்கள்‌ அடங்கிய தாள்களைச்‌ சுற்றுக்கு அனுப்புவதன்‌ வாயிலாக அலுவல்‌ நடத்தப்படுவதற்கு அனுமதிக்கலாம்‌. கருதப்பட்ட நடவடிக்கை எதுவும்‌, பொது மன்றத்தின்‌ உறுப்பினர்களில்‌ பெரும்பான்மை 42 ஒன்றினால்‌ ஏற்றுக்கொள்ளப்பாத போது, எடுத்துக்‌ கொள்ளப்படுதல்‌ கூடாது. அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை பொது மன்றத்தின்‌. உறுப்பினர்கள்‌ அனைவருக்கும்‌. உடனடியாகத்‌ தெரிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இது குறித்த விவரத்‌ தாள்கள்‌ உறுதி செய்யப்படுவதற்காகப்‌ பொது மன்றத்தின்‌ அடுத்த கூட்டத்தில்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. நிருவாக மன்றம்‌ 24. நிருவாக மன்றம்‌. (1) நிருவாக மன்றமானது பல்கலைக்கழகத்தின்‌ தலைமை நிருவாகக்‌ குழுமமாக இருக்கும்‌. (2) பல்கலைக்கழகத்தின்‌ நிருவாகம்‌, மேலாண்மை, கட்டுப்பாடு மற்றும்‌ அதன்‌ வருவாய்‌ நிருவாக. மன்றத்திடம்‌ அமைந்திருக்கும்‌. அதுவே பல்கலைக்கழகத்தின்‌. சொத்து மற்றும்‌ நிதிகளை கட்டுப்படுத்தவும்‌ நிருவகிக்கவும்‌ செய்யும்‌. (3) நிருவாக மன்றமானது, பின்வரும்‌ பதவிவழி மற்றும்‌ பிற உறுப்பினர்களைக்‌ கொண்டிருக்கும்‌, அதாவது:- வகை | - பதவி வழி உறுப்பினர்கள்‌. (a) துணை வேந்தர்‌; (௦) தமிழ்நாடு அரசுத்‌ தலைமை வழக்குரைஞர்‌; (C) பல்கலைக்கழகத்‌ துறைகளின்‌. தலைவர்கள்‌; (0) சட்டத்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசு செயலாளர்‌. 43 வகை ॥ - பதவி வழி உறுப்பினர்கள்‌. (8) வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌, சென்னை உயர்ந்திமன்றத்தின்‌ பணியிலிருக்கும்‌ நீதிபதி ஒருவர்‌ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர்‌; (b) வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌, தமிழ்நாடு வழக்குரைஞர்‌ மன்றத்தின்‌ உறுப்பினர்‌ இருவர்‌; (0) புகழ்‌ பெற்ற முதுநிலை வழக்குரைஞர்களுக்கு இடையேயிருந்து வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌ உறுப்பினர்கள்‌ இருவர்‌; (0) தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவை உறுப்பினர்களுக்கு இடையேயிருந்து அரசால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌; (6) பல்கலைக்கழகத்தின்‌ கல்வி கற்பிக்கும்‌ பணியாளர்களில்‌ இருந்து அவர்களால்‌ தேர்ந்தெடுக்கப்படும்‌. பேராசிரியர்கள்‌ மூவர்‌. (4) (ஐ வேறுவிதமாக வகைசெய்யப்படாத போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர்‌ குறித்து நியமனம்‌: செய்யப்பட்ட நிருவாக மன்றத்தின்‌ உறுப்பினர்கள்‌: மூன்றாண்டுக்‌ கால அளவிற்குப்‌ பதவி வகித்து வருவர்‌; மற்றும்‌ அத்தகைய உறுப்பினர்கள்‌, மேலும்‌ ஒரு மூன்றாண்டுக்‌ காலத்திற்கு மிகாத கால அளவிற்குமீண்டும்‌ தேர்ந்தெடுக்கப்படுவற்கு அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்படுவதற்குத்‌ தகுதியுடையவர்கள்‌ ஆவர்‌. (b) உறுப்பினர்‌ ஒருவர்‌, நிருவாக மன்றத்திற்கான தற்காலிகக்‌ காலியிடத்திற்குத்‌ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்டிருக்கிற போது, அத்தகைய உறுப்பினர்‌ எவராலும்‌ ஓராண்டுக்குக்‌ குறையாமல்‌ வகித்துவரப்பட்ட 44 பதவியின்‌ கால அளவு முழு மூன்றாண்டுக்‌ காலஅளவாகக்‌ கருதப்படும்‌: வரம்புரை: குறிப்பிட்ட வாக்காளர்‌ தொகுதியின்‌: அல்லது அமைப்பின்‌ உறுப்பினர்‌ என்ற அல்லது குறிப்பிட்ட நியமனம்‌ ஒன்றை வகிக்கிறவர்‌ என்கிற தம்‌ தகுதியில்‌ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அல்லது பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள நிருவாக மன்றத்தின்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌, அவர்‌ அந்த வாக்காளர்‌ தொகுதியின்‌ அல்லது அமைப்பின்‌ உறுப்பினராக அல்லது, அந்த நியமனத்தை வகித்து வருபவராக இருப்பது அற்றுப்போகிற தேதியிலிருந்து, நிருவாக மன்றத்தின்‌ உறுப்பினராக இருப்பதும்‌ அற்றுப்போகும்‌. மேலும்‌ வரம்புரை: மேலும்‌, நிருவாக மன்றத்தின்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர்குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்‌ ஒருவர்‌, எந்தப்‌ பதவியின்‌: காரணமாக நிருவாக மன்றத்தின்‌ பதவிவழி உறுப்பினராக இருப்பதற்கு அவர்‌ உரிமை உடையவராக இருக்கின்றாரோ அந்தப்‌ பதவிகளில்‌ எதற்கேனும்‌. தற்காலிகமாக நியமிக்கப்படுகிற போது, தாம்‌ தேர்ந்தெடுக்கப்பட்டதன்‌ காரணமாக அல்லது பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்டதன்‌ காரணமாக, நிருவாக மன்றத்தின்‌ உறுப்பினராகத்‌ தொடர்ந்து இருப்பதற்கு விரும்புகிறாரா அல்லது உறுப்பினராக இருக்கும்‌ பதவியை விட்டு நீங்கித்‌ தாம்‌ நியமிக்கப்பட்ட பதவிவழி உறுப்பினராக ஆவதற்கு விரும்புகிறாரா என்பதை, அவர்‌ நியமனப்பொறுப்பை மேற்கொள்கின்ற தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள்ளாக தம்மால்‌ கையொப்பமிடப்பட்டு துணை வேந்தருக்குத்‌ தெரிவிக்கப்பட்ட எழுத்து மூலமான அறிவிப்பின்‌ வாயிலாகத்‌ விருப்பத்‌ தெரிவு செய்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அந்த விருப்பத்தெரிவு அறுதியானதாகும்‌. அத்தகைய விருப்பத்தெரிவைச்‌ செய்யத்‌ தவறுவதன்பேரில்‌, தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது 45 பெயர்குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினராக உள்ள தம்முடைய பதவியைவிட்டு அவர்‌ நீங்கியிருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. (5) நபர்‌ ஒருவர்‌ நிருவாக மன்றத்தின்‌ உறுப்பினராக இருப்பது அற்றுப்போகும்போது, அவர்‌ நிருவாக மன்றத்தில்‌ உறுப்பினராக இருப்பதால்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளில்‌ எதிலேனும்‌. உறுப்பினராக இருந்திருக்கக்கூடிய நிலையும்‌ அற்றுப்போகும்‌. (6) நிருவாக மன்றத்தின்‌: உறுப்பினர்கள்‌, வகுத்துரைக்கப்படும்‌ நாள்படிகள்‌ மற்றும்‌ பயணப்படிகள்‌: தவிர, பல்கலைக்கழகத்தின்‌. ஊதியம்‌ எதையும்‌ பெறுவதற்கு உரிமை உடையவர்கள்‌ ஆக மாட்டார்கள்‌: வரம்புரை : இந்த உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌, உறுப்பினர்‌ எவரையும்‌ தாம்‌ வகிக்கிற பதவியின்‌: காரணமாக, தன்வழக்கமான ஊதியங்களைப்‌ பெறுவதைத்‌ தடை செய்தல்‌ கூடாது. (7) நிருவாக மன்றத்தின்‌ பதவிவழி உறுப்பினர்‌ அல்லாத பிற உறுப்பினர்‌ ஒருவர்‌, தமது பதவி முடிவடைகிற காலத்திற்கு முன்பு எந்தச்‌ சமயத்திலும்‌ தம்முடைய உறுப்பினர்‌ பதவியைவிட்டு விலகலாம்‌. அத்தகைய பதவி விலகலானது, அந்த உறுப்பினரால்‌ வேந்தருக்கு எழுத்து மூலமான கடிதம்‌ ஒன்றின்‌. வாயிலாகத்‌ தெரிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அப்பதவி விலகலானது, வேந்தரால்‌ அது ஏற்கப்படும்‌ தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்‌. 25. நிருவாக மன்றத்தின்‌ அதிகாரங்கள்‌.- நிர்வாக மன்றத்தின்‌ அதிகாரங்கள்‌ பின்வருமாறு ,- (@) ஒழுங்குவிதிகளைச்‌ செய்தல்‌ மற்றும்‌ அந்த ஒழுங்குவிதிகளைத்‌ திருத்துதல்‌ அல்லது நீக்குதல்‌; 46 0) பல்கலைக்கழகத்தின்‌ சொத்துகள்‌ மற்றும்‌ நிதிகளை வைத்துவருதல்‌, கட்டுப்பாடு செய்தல்‌, நிருவகித்து வருதல்‌; (9) தான்‌ பொருத்தம்‌ எனக்‌ கருதும்‌ பல்வேறு சட்டப்புலங்களில்‌ அத்தகைய கல்விப்‌ பிரிவுகளில்‌ கற்பிப்பதற்கும்‌ பயிற்றுவிப்பதற்கும்‌ வகை செய்தல்‌; (0) தான்‌ பொருத்தம்‌ எனக்‌ கருதக்கூடிய பல்வேறு சட்டப்புலங்களின்‌ அத்தகைய கல்விப்‌ புலப்‌ பாடத்‌ துறைகளை பல்கலைக்கழகத்தில்‌ ஏற்படுத்துதல்‌; (6) சட்டத்தின்‌ பல்வேறு புலங்களில்‌ ஆராய்ச்சி செய்வதற்கும்‌, மேம்பாடு செய்வதற்கும்‌, அறிவைப்‌ பரப்புவதற்கும்‌ வகை செய்தல்‌; (f) பல்கலைக்கழகத்திற்குத்‌ தேவைப்படும்‌ பேராசிரியர்‌ பதவிகள்‌ மற்றும்‌ பிற ஆசிரியப்‌ பதவிகளை ஏற்படுத்துதல்‌; (ற) பட்டங்கள்‌ மற்றும்‌ பிற கல்விச்‌ சிறப்புகள்‌: ஆகியவற்றை ஏற்படுத்துதல்‌; (h) பட்டங்கள்‌ மற்றும்‌ பிற கல்வி சிறப்புகள்‌: ஆகியவற்றை, (i) கல்லூரி ஒன்றில்‌ அல்லது அங்கீகாரம்‌ பெற்றுள்ள கல்வி நிலையம்‌ ஒன்றில்‌ அங்கீகாரம்‌ பெற்ற குறித்தகாலப்‌ படிப்பு அல்லது பயிற்சியைத்‌ தொடருவதிலிருந்து ஒழுங்குவிதிகளால்‌ விலக்களிக்கப்பட்டிருந்தாலன்றி, பல்கலைக்கழகத்தால்‌ வகுத்துரைக்கப்பட்டுள்ள தேர்வுகளில்‌ தேர்ச்சிப்‌ பெற்றுள்ள நபர்களுக்கு; அல்லது 47 (i) ஒழுங்குவிதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி ஆராய்ச்சி செய்து வருகின்ற நபர்களுக்கு வழங்குதல்‌; (i) பொது மன்றத்தின்‌ உறுப்பினர்களில்‌ மூன்றில்‌ இரண்டு பங்கிற்குக்‌ குறையாதவர்களின்‌. பரிந்துரையின்‌ பேரில்‌, கெளரவப்‌ பட்டங்கள்‌ அல்லது பிற கெளரவச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றை வழங்குதல்‌; 0). ஆண்டு அறிக்கை, ஆண்டுக்‌ கணக்குகள்‌, நிதி மதிப்பீடுகள்‌ ஆகியவற்றைப்‌ பரிச்லனை செய்தல்‌ மற்றும்‌ அவற்றின்‌ மீது அது தக்கது எனக்‌ கருதும்‌ நடவடிக்கைகளை எடுத்தல்‌; 0) பல்கலைக்கழகத்தின்‌ துறைகளில்‌ உள்ள ஆசிரியர்களுக்கான தகுதிகளை வகுத்துரைத்தல்‌; 0) பல்கலைக்கழகத்தின்‌ ஆசிரியர்களை நியமிக்கின்ற நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்‌ தேர்வுக்‌ குழுவின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ அவர்களை நியமித்தல்‌ மற்றும்‌ அவர்களுடைய ஊதியங்களை நிர்ணயித்தல்‌, அவர்களுடைய கடமைகளையும்‌, பணி நிபந்தனைகளையும்‌ வரையறுத்தல்‌ மற்றும்‌ தற்காலிகக்‌ காலியிடங்களை நிரப்புவதற்கு வகை: செய்தல்‌; (m) நிருவாக மற்றும்‌ அது போன்ற பிற பதவிகளுக்கான நியமன முறையைக்‌ குறித்து ஒழுங்குவிதிகளைச்‌ செய்தல்‌; தற்காலிகக்‌ காலியிடங்களை நிரப்புவதற்கு வகைசெய்தல்‌; மற்றும்‌ அவற்றின்‌ கடமைகளையும்‌ பணி வரையறைகளையும்‌ நிபந்தனைகளையும்‌ வரையறுத்தல்‌; 48 (ற பல்கலைக்கழகத்தின்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பிற பணியாளர்களுக்கு எதிராக, ஒழுங்குவிதிகளால்‌ வகுத்துரைக்கப்படும்‌ முறையில்‌ ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல்‌, ஒழுங்குவிதிகளில்‌ குறிப்பிடப்படக்கூடிய அத்தகைய தண்டனைகளை விதிக்கவும்‌, விசாரணை நிலுவையில்‌ இருக்கையில்‌ அவர்களை தற்காலிகப்‌ பணி நீக்கம்‌ செய்தல்‌; (௦) பல்கலைக்கழகத்தின்‌ துறைகள்‌ அனைத்திலும்‌ ஆய்வு செய்வதற்கு தேவை எனக்‌ கருதும்‌ நடவடிக்கையை எடுத்தல்‌; (ற மத்திய அல்லது மாநில அரசு எதனிடமிருந்தோ அல்லது மத்திய அல்லது மாநில அரசு எதற்கேனும்‌ சொந்தமான அல்லது அதன்‌. கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனம்‌ எதனிடமிருந்தோ அல்லது பொது மக்களிடமிருந்தோ பல்கலைக்கழகத்தின்‌ சார்பாக, கடனாகப்‌ பணத்தைத்‌ திரட்டுதல்‌; (1) பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களுக்காக, இப்பல்கலைக்கழகத்தின்‌ சொத்து பிணையத்தின்‌ பேரில்‌, அரசின்‌ ஒப்புதலுடன்‌ பண கடன்‌ வாங்குதல்‌; N பாடக்குழுக்களின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌, தேர்வாளர்களை நியமித்தல்‌, அவர்களுடைய ஊதியங்களை நிர்ணயித்தல்‌; (5) ஒழுங்குவிதிகளால்‌ வகுத்துரைக்கப்படக்‌ கூடிய அத்தகைய கட்டணங்களை விதித்தல்‌ மற்றும்‌ வசூலித்தல்‌; (0) பல்கலைக்கழகத்தின்‌. தேர்வுகளை நடத்துதல்‌, அத்தேர்வு முடிவுகளுக்கு ஒப்புதல்‌ வழங்குதல்‌, வெளியிடுதல்‌; (ம பாடக்‌ குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமித்தல்‌; 49 (V) பல்கலைக்கழகத்தின்‌. மாணவர்களைச்‌ சேர்த்துக்‌ கொள்வது தொடர்பாக பல்கலைக்கழகத்‌ தேர்வுகளுக்குச்‌ சமமாக உள்ளது என அங்கீகாரம்‌ அளிக்கப்பட வேண்டிய தேர்வுகளுக்கான ஒழுங்குவிதிகளைச்‌ செய்தல்‌; 0) மாணவர்‌ விடுதிகளை நிறுவி பேணி வருதல்‌; (0) பல்கலைக்கழக மாணவர்களின்‌. இருப்பிடத்தைக்‌ கண்காணித்தல்‌ அவர்களின்‌ உடல்‌ நலத்தையும்‌ சுகாதாரத்தையும்‌ பேணுவதற்கான ஏற்பாடுகளைச்‌ செய்தல்‌; ) சிறப்பு மேலாய்வு உதவித்‌ தொகைகள்‌, சிறப்பு மேலாய்வு பயண உதவித்தொகைகள்‌, மாணவர்‌ உதவித்‌ தொகைகள்‌, பதக்கங்கள்‌ மற்றும்‌ பரிசுகளை ஒழுங்குவிதிகளுக்கு இணங்கிய வகையில்‌ வழங்குதல்‌; (2) பல்கலைக்கழகத்தால்‌ நிறுவப்பட்ட நூல்வெளியீட்டுக்‌ கழகம்‌, வேலை வாய்ப்புக்‌ கழகம்‌, பல்கலைக்கழக விளையாட்டுகள்‌ அல்லது தடகள சங்கங்கள்‌ ஆகியவற்றை மேலாண்மை செய்தல்‌; (88) பல்கலைக்கழகத்தின்‌. பயிற்றுவித்தலையும்‌ கற்பித்தலையும்‌ மறு ஆய்வு செய்தல்‌; (bb) பல்கலைக்கழகத்திற்குள்‌ ஆராய்ச்சியை வளர்த்தல்‌ அத்தகைய ஆராய்ச்சி பற்றி அவ்வப்போது அறிக்கைகளைக்‌ கோருதல்‌; (௦௦) குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பல்கலைக்கழகத்தின்‌ பொறுப்பில்‌ விடப்பட்டுள்ள சொத்துகள்‌, நிதிகள்‌ அனைத்தையும்‌ நிருவகித்தல்‌; (00) பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்படும்‌ நிலைக்‌ கொடைகள்‌, உயில்‌ வழிக்கொடைகள்‌, நன்கொடைகள்‌, மானியங்கள்‌, மற்றும்‌ உரிமை மாற்றங்கள்‌ 50 மூலமாக அளிக்கப்படும்‌. அசையும்‌ அல்லது அசையாச்‌ சொத்துக்களை பல்கலைக்கழகத்தின்‌ சார்பாக ஏற்றுக்கொள்ளுதல்‌; (66) தன்‌ அதிகாரங்களில்‌ எதையும்‌ துணைவேந்தருக்கோ, அல்லது தன்‌ உறுப்பினர்களின்‌: குழு ஒன்றிற்கோ அல்லது ஒழுங்குவிதிகளுக்கு இணங்க நியமிக்கப்பட்ட குழு ஒன்றிற்கோ ஒப்படைவு செய்தல்‌. 26. நிருவாக மன்றத்தின்‌ கூட்டங்கள்‌.- (1) நிருவாக மன்றமானது, அத்தகைய காலங்களிலும்‌ இடங்களிலும்‌, குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையேனும்‌ கூடுதல்‌ வேண்டும்‌. மற்றும்‌ உட்பிரிவுகள்‌ (2) மற்றும்‌ (3)ஆம்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, ஒழுங்குவிதிகளில்‌ வகுத்துரைக்கப்படும்‌ கூட்டங்களின்‌ குறைவெண்‌் உள்ளிட்ட அதன்‌ கூட்டங்களின்‌ அலுவல்களை நடத்துவது குறித்த நடைமுறைவிதிகளைக்‌ கடைப்பிடித்தல்‌ வேண்டும்‌. (2) துணைவேந்தர்‌ அல்லது அவர்‌ வராத போது, வந்திருக்கும்‌ உறுப்பினர்களால்‌. தெரிந்தெடுக்கப்படும்‌ உறுப்பினர்‌ எவரும்‌ நிருவாக மன்றக்‌ கூட்டத்திற்குத்‌ தலைமை வகித்தல்‌ வேண்டும்‌. (3) நிருவாக மன்றத்தின்‌ கூட்டம்‌ எதிலும்‌ உள்ள பிரச்சினைகள்‌ அனைத்தும்‌, வந்திருந்து வாக்களிக்கும்‌ உறுப்பினர்களின்‌ பெரும்பாண்மையால்‌ முடிவு செய்யப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ வாக்குகள்‌ சமமாக இருக்கும்‌ போது, துணைவேந்தர்‌ அல்லது தலைமை வகிக்கும்‌ உறுப்பினர்‌, இரண்டாம்‌ அல்லது அறுதி செய்யும்‌ வாக்கு ஒன்றைப்‌ பெற்றிருப்பதோடு அதனைப்‌ பயன்படுத்துதல்‌ வேண்டும்‌. @ பதவி வழி உறுப்பினராக இருக்கிற, சட்டத்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசு 51 செயலாளர்‌, ஏதாவது காரணத்தால்‌ நிருவாக மன்றத்தின்‌ கூட்டத்திற்கு வருகை தர இயலாத போது அரசு துணைச்‌ செயலாளரின்‌ படிநிலைக்குக்‌ குறையாத, அவருடைய துறையைச்‌ சேர்ந்த அலுவலர்‌ ஒருவரை அக்கூட்டத்திற்கு வருகை தர அனுப்பி வைக்கலாம்‌; மற்றும்‌ அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட அலுவலர்‌, கூட்ட நடவடிக்கைகளில்‌ பங்கேற்பதற்கு உரிமை கொண்டவராகவும்‌, வாக்களிப்பதற்கு உரிமை கொண்டவராகவும்‌ இருப்பார்‌. (5) நிருவாக மன்றமானது, கலந்தாய்வு செய்யும்‌ நோக்கத்திற்காக, பரிசலனையிலுள்ள பொருள்‌ எதிலும்‌, சிறப்பறிவு அல்லது நடைமுறை அனுபவ அறிவு உடைய நபர்‌ எவரையும்‌, கூட்டம்‌ எதற்கும்‌ வருகை தருமாறு அழைக்கலாம்‌. அத்தகைய நபர்‌ கூட்ட நடவடிக்கைகளில்‌ பேசலாம்‌, மற்றும்‌ பங்கெடுத்துக்‌ கொள்ளலாம்‌; ஆனால்‌, வாக்களிப்பதற்கு உரிமை உடையவர்‌ ஆகமாட்டார்‌. அவ்வாறு அழைக்கப்பட்ட நபர்‌ நிருவாக மன்றத்தின்‌: உறுப்பினர்‌ ஒருவருக்கு அனுமதிக்கப்படத்தக்க அத்தகைய நாள்படிகள்‌ மற்றும்‌ பயணப்படிகளுக்கு உரிமை உடையவர்‌ ஆவார்‌. 27. உறுப்பினர்கள்‌ ஊதியத்திற்கு உரிமை உடையவராகமாட்டார்கள்‌.- நிருவாக மன்றத்தின்‌ உறுப்பினர்கள்‌ ஒழுங்குவிதிகளால்‌ வகுத்துரைக்கப்‌ படக்கூடிய பயணப்படிகள்‌ மற்றும்‌ நாள்படிகள்‌. தவிர பல்கலைக்கழகத்தின்‌ ஊதியம்‌ எதையும்‌ பெறுவதற்கு உரிமை உடையவராகமாட்டார்கள்‌: வரம்புரை: இந்தப்‌ பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌, உறுப்பினர்‌ எவரையும்‌, தாம்‌ வகிக்கின்ற பதவியின்‌: காரணமாகத்‌ தனக்கு உரிமையான தம்முடைய ஊதியங்களைப்‌ பெறுவதைத்‌ தடை செய்தல்‌ கூடாது. 52 கல்வி மன்றம்‌ 28. கல்வி மன்றம்‌.-- கல்வி மன்றமானது, பின்வரும்‌ பதவிவழி உறுப்பினர்களையும்‌ பிற உறுப்பினர்களையும்‌ கொண்டிருக்கும்‌. அவர்களாவர்‌- வகை |- பதவிவழி உறுப்பினர்கள்‌ (a) துணைவேந்தர்‌; (௦) புல முதல்வர்கள்‌; (C) பல்கலைக்கழகத்தின்‌. அனைத்துத்‌ துறைகளின்‌ தலைவர்கள்‌; (0) பல்கலைக்கழகத்தின்‌. அனைத்துப்‌ பேராசிரியர்கள்‌; (6) பல்கலைக்கழக நூலகத்தின்‌ நூலகர்‌. வகை ॥-பிற உறுப்பினர்கள்‌ (௨) வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌, இந்திய வழக்குரைஞர்‌ மன்றத்தின்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌; (b) வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌, தமிழ்நாடு வழக்குரைஞர்‌ மன்றத்தின்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌; (9) துணைவேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌, பல்கலைக்கழகத்தின்‌ இணைப்‌ பேராசிரியர்களையும்‌ உதவிப்‌ பேராசிரியர்களையும்‌ பிரதிநிதித்துவம்‌ செய்யும்‌ இரண்டு உறுப்பினர்கள்‌; (0) துணைவேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌, தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ பேராசிரியர்‌ ஒருவர்‌; (e) துணைவேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌, இந்தியாவிலுள்ள தேசிய சட்டப்‌ பல்கலைக்‌ கழகங்களில்‌ ஏதாவது ஒன்றிலிருந்து முதுநிலை சட்டப்‌ பேராசிரியர்‌ ஒருவர்‌; 53 (0) துணைவேந்தரால்‌ நியமிக்கப்படும்‌, பல்கலைக்கழகத்தால்‌ வகுத்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி வழங்கப்படும்‌ சட்டமல்லாத பிற படிப்புகள்‌ ஒவ்வொன்றுக்கும்‌ ஆசிரியர்‌ ஒருவர்‌; (9) வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌ நீதித்துறையில்‌ புகழ்‌ வாய்ந்த நபர்‌; 0) துணை வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌, தென்னிந்திய வணிக மற்றும்‌ தொழில்‌ கழகத்தின்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌; மற்றும்‌ 0) துணை வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌ சமூகப்‌ பணியில்‌ புகழ்‌ வாய்ந்த நபர்‌ ஒருவர்‌. 29. கல்வி மன்றத்தின்‌ அதிகாரங்கள்‌ மற்றும்‌ செயற்பணிகள்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ ஒழுங்குவிதிகளின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு கல்வி மன்றம்‌ அதற்கு உரிய அனைத்து அதிகாரங்களுக்கும்‌. கூடுதலாகப்‌ பின்வரும்‌ அதிகாரங்களையும்‌ கொண்டிருக்கும்‌. அவையாவன:- (8) பொது மன்றத்தால்‌ அல்லது நிருவாக மன்றத்தால்‌ குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ள அல்லது அதனிடம்‌ ஒப்படைவு செய்யப்பட்டுள்ள பிற விவரம்‌ எதன்‌ மீதும்‌ அறிக்கை செய்தல்‌; (b) பல்கலைக்கழகத்தின்‌ ஆசிரியர்‌ பதவிகளை உருவாக்குதல்‌, நீக்குதல்‌ அல்லது வகைப்படுத்துதல்‌ குறித்தும்‌ அதனோடு இணைந்த ஊதியங்கள்‌ மற்றும்‌ கடமைகள்‌ குறித்தும்‌ நிருவாக மன்றத்திற்குப்‌ பரிந்துரைகள்‌ செய்தல்‌; (6) பாடப்‌ புலங்களை அமைப்பதற்கான திட்டங்களை உருவாக்குவதற்கு, மாற்றியமைப்பதற்கு அல்லது திருத்தியமைப்பதற்கு மற்றும்‌ அத்தகைய பாடப்புலங்களுக்கு பாடங்களை ஒதுக்கியளிப்பதற்கு, 54 மற்றும்‌ பாடப்‌ புலம்‌ எதனையும்‌ நீக்குவது அல்லது உட்பிரிவு செய்வது அல்லது ஒரு பாடப்‌ புலத்தை மற்றொன்றுடன்‌ சேர்ப்பது உகந்தது என்பது குறித்து, நிருவாகக்‌ குழுவிற்கு அறிக்கை செய்தல்‌; (0) பல்கலைக்கழகத்தின்‌ பதிவு செய்த நபர்கள்‌ அல்லாத பிற நபர்களுக்கான வழிகாட்டுதல்‌ மற்றும்‌ தேர்வுக்கான ஏற்பாடுகளை ஒழுங்குவிதிகள்‌ மூலமாகச்‌ செய்தல்‌; (6) பல்கலைக்கழகத்தின்‌ ஆராய்ச்சியை மேம்படுத்துதல்‌ மற்றும்‌ அத்தகைய ஆராய்ச்சிகளின்‌. அடிப்படையில்‌ அவ்வப்போது அறிக்கைகளைக்‌ கோருதல்‌; ) புலங்களின்‌ பேராசிரியர்கள்‌ மற்றும்‌ விரிவுரையாளர்களால்‌ பணிந்தனுப்பப்பட்ட கருத்துருக்களைப்‌ பரிசீலனை செய்தல்‌; (ஐ பல்கலைக்கழகச்‌ சேர்க்கைக்கான குழுக்களை நியமனம்‌ செய்தல்‌; (h) பிற பல்கலைக்கழகங்கள்‌. மற்றும்‌ நிறுவனங்களின்‌ பட்டயங்களை மற்றும்‌ பட்டங்களை ஏற்பது மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டங்கள்‌ தொடர்பாக அவற்றின்‌ சம மதிப்பைத்‌ தீர்மானித்தல்‌; (0) பொது மன்றத்தினால்‌ ஏற்கப்பட்ட நிபந்தனை எதற்கும்‌ உட்பட்டு, சிறப்பு மேலாய்வு உதவித்‌ தொகைகள்‌, படிப்பு உதவித்‌ தொகைகள்‌ மற்றும்‌ பரிசுகளுக்கான போட்டியின்‌ காலம்‌, முறை மற்றும்‌ நிபந்தனைகளை நிர்ணயித்தல்‌; மற்றும்‌ அவற்றை வழங்குதல்‌; (j) தேர்வாளர்களை நியமனம்‌ செய்தல்‌, தேவைப்பட்டால்‌ அவர்களை நீக்குதல்‌ மற்றும்‌ அவர்களுக்கான கட்டணங்கள்‌, ஊதியங்கள்‌, பயணம்‌ 55 மற்றும்‌ பிற செலவினங்களை நிர்ணயிப்பதற்கு நிருவாக மன்றத்திற்கு பரிந்துரைகளைச்‌ செய்தல்‌; (k) தேர்வுகளை நடத்துவதற்கும்‌ அதற்கான தேதிகளை நிர்ணயிப்பதற்கும்‌ ஏற்பாடு செய்தல்‌; 0) பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிடுதல்‌ அல்லது அவ்வாறு செய்வதற்கு குழுக்கள்‌: அல்லது அலுவலர்களை நியமித்தல்‌ மற்றும்‌ பட்டங்கள்‌, கெளரவப்‌ பட்டங்கள்‌, உரிமங்கள்‌, விருது மற்றும்‌ கெளரவச்‌ சின்னங்கள்‌ ஆகியவற்றை அளித்தல்‌ அல்லது வழங்குதல்‌ குறித்த பறிந்துரைகளைச்‌ செய்தல்‌; m) உதவித்‌ தொகைகள்‌, படிப்புதவித்‌ தொகைகள்‌, பதக்கங்கள்‌, பரிசுகள்‌ ஆகியவற்றை வழங்குதல்‌ மற்றும்‌ பிற விருதுகளையும்‌ ஒழுங்கு விதிகளுக்கு இணங்கவும்‌, விருதுகளுடன்‌ இணைந்த நிபந்தனைகளுக்கு இணங்கவும்‌ வழங்குதல்‌; (ா) வகுத்துரைக்கப்பட்ட அல்லது பரிந்துரை செய்யப்பட்ட பாடப்‌ புத்தகங்களின்‌ பட்டியல்களை வெளியிடுதல்‌; மற்றும்‌ வகுத்துரைக்கப்பட்ட குறித்தகாலப்‌ படிப்புப்‌ பிரிவுகளுக்கான பாடத்‌ திட்டங்களை வெளியிடுதல்‌; (0) ஒழுங்குவிதிகளால்‌ அவ்வப்போது வகுத்துரைக்கப்பட்ட படிவங்களையும்‌ பதிவேடுகளையும்‌ தயாரித்தல்‌; மற்றும்‌ (ஐ) கல்விசார்‌ விவரங்கள்‌ தொடர்பாக, இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ ஒழுங்கு விதிகளின்‌ வகைமுறைகளை முறைப்படி நிறைவேற்றுவதற்குத்‌ தேவையான அனைத்துக்‌ கடமைகளையும்‌ ஆற்றுதல்‌ மற்றும்‌ அனைத்துச்‌ செயற்பாடுகளையும்‌ செய்தல்‌. 30. கல்வி மன்றத்தின்‌ கூட்டங்கள்‌.- (1) கல்வி மன்றமானது, துணைவேந்தரால்‌ நிருணயிக்கப்படும்‌ 56 தேதிகளில்‌, ஆண்டு ஒன்றிற்கு இருமுறையாவது கூடுதல்‌ வேண்டும்‌. அத்தகைய கூட்டங்களில்‌ ஒன்று ஆண்டுக்கூட்டம்‌ என்று வழங்கப்படுதல்‌ வேண்டும்‌. கல்வி மன்றம்‌ அவ்வப்போது அது தீர்மானிக்கக்கூடிய பிற நேரங்களிலும்‌ கூடலாம்‌. (2) கல்வி மன்றத்தின்‌: மொத்த உறுப்பினர்களின்‌ எண்ணிக்கையில்‌ மூன்றில்‌ ஒரு பகுதி எண்ணிக்கையானது, கல்வி மன்றத்தின்‌ கூட்டம்‌ ஒன்றுக்குக்‌ கோரப்படும்‌ குறைவெண்‌ வரம்பாக இருக்கும்‌: வரம்புரை: பட்டங்கள்‌, விருதுகள்‌ அல்லது பிற சிறப்புக்‌ கல்வித்‌ தகுதிகள்‌ ஆகியவற்றை வழங்கும்‌ நோக்கத்திற்காக நடத்தப்படும்‌ பல்கலைக்கழகத்தின்‌. பட்டமளிப்பு விழா ஒன்றுக்கு அல்லது கல்வி மன்றத்தின்‌ கூட்டம்‌ ஒன்றுக்கு அத்தகைய குறைவெண்‌ கோரப்படுதல்‌ கூடாது. (3) துணைவேந்தர்‌, தாம்‌ பொருத்தம்‌ எனக்‌ கருதும்‌ போது அல்லது கல்வி மன்றத்தின்‌ மொத்த உறுப்பினர்களில்‌ நூற்றுக்கு ஐம்பது விழுக்காட்டிற்குக்‌ குறையாத உறுப்பினர்களால்‌ கையொப்பமிடப்பட்டுச்‌ செய்யப்படும்‌ எழுத்து வடிவிலான வேண்டுகோள்‌ ஒன்றின்பேரில்‌, கல்விமன்றத்தின்‌ சிறப்புக்‌ கூட்டம்‌ ஒன்றைக்‌ கூட்டலாம்‌. 31. நிதிக்குழு- 1) நிதிக்குழு பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்டதாக இருக்கும்‌, அதாவது:- (a) துணைவேந்தர்‌; (௦) நிதித்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (9) சட்டத்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; மற்றும்‌ 57 (0) நிருவாக மன்றத்தால்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ இந்திய பட்டயக்‌ கணக்கர்கள்‌ நிறுவனத்தின்‌ தென்னிந்திய மண்டல மன்றத்தின்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌. (2). உட்பிரிவு (1)இன்‌ (0௦) அல்லது (௦) கூறுகளில்‌ குறிப்பிடப்பட்ட அலுவலர்‌ எவரும்‌ ஏதேனும்‌ காரணத்தினால்‌ நிதிக்குழுக்‌ கூட்டத்திற்கு வருவதற்கு இயலாத போது, அவர்‌ அரசுத்‌ துணைச்‌ செயலாளரின்‌ படிநிலைக்குக்‌ குறையாத தம்‌ துறையின்‌ அலுவலர்‌ ஒருவரை அத்தகைய கூட்டத்திற்கு அனுப்பி வைக்கலாம்‌; அவ்வாறு அனுப்பி வைக்கப்படும்‌ அலுவலர்‌, நிதிக்குழுவின்‌ விவாதங்களில்‌ பங்கேற்க உரிமை பெற்றிருப்பார்‌ மற்றும்‌ வாக்களிப்பதற்கும்‌ உரிமை பெற்றிருப்பார்‌. (3) துணைவேந்தர்‌, நிதிக்குழுவின்‌ பதவிவழித்‌ தலைவராக இருந்து வருவார்‌ மற்றும்‌ நிதி அலுவலர்‌, நிதிக்குழுவின்‌ பதவிவழிச்‌ செயலாளராக இருந்து வருவார்‌. (4), உட்பிரிவு (1) இன்‌, (கூறின்படி, நிருவாக மன்றத்தால்‌ நிதிக்‌ குழுவிற்குப்‌ பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்படும்‌ உறுப்பினர்‌, மூன்றாண்டுக்‌ காலஅளவிற்குப்‌ பதவி வகிப்பார்‌. (5) நிதி அலுவலரால்‌ தயாரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின்‌. ஆண்டுக்‌ கணக்குகள்‌. பரிச்லனைக்காகவும்‌, கருத்துரைகளுக்காகவும்‌ நிதிக்‌ குழுவின்‌ முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌; அதன்‌ பின்பு ஒப்புதலுக்காக நிருவாக மன்றத்திற்குப்‌ பணிந்தனுப்பப்‌ படுதல்‌ வேண்டும்‌. (6) நிதி அலுவலரால்‌ தயாரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின்‌. நிதி மதிப்பீடுகள்‌, பரிச்லனைக்காகவும்‌ கருத்துரைகளுக்காகவும்‌ நிதிக்‌ குழுவின்‌. முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. 58 நிதிக்குழுவினால்‌ மாற்றியமைக்கப்பட்ட மேற்சொன்ன மதிப்பீடுகள்‌, அதன்‌ பின்பு பரிச்லனைக்காக நிருவாக மன்றத்தின்‌ முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. நிருவாக. மன்றம்‌ நிதி மதிப்பிடுகளுக்குத்‌ தாம்‌ பொருத்தம்‌ எனக்‌ கருதுகிற அத்தகைய மாற்றங்களுடன்‌ ஒப்புதல்‌ அளிக்கலாம்‌. (7) நிதிக்குழுவானது, பல்கலைக்கழகத்தின்‌ வருமானம்‌ மற்றும்‌ வள ஆதாரங்கள்‌ ஆகியவற்றின்‌. அடிப்படையில்‌, ஆண்டிற்கான தொடரும்‌ செலவினம்‌ மற்றும்‌ தொடரா செலவினம்‌ ஆகியவற்றின்‌ வரம்புகளைப்‌ பறிந்துரைத்தல்‌ வேண்டும்‌. அத்தகைய வரம்புகள்‌, ஆக்கப்பூர்வமான பணிகளைப்‌ பொறுத்த நிலையில்‌, கடன்களிலிருந்து பெறும்‌ தொகையை உள்ளடக்கியதாக இருக்கலாம்‌. (8) நிதிக்‌ குழு- (ஐ கணக்குகளைப்‌ பரிசீலனை செய்வதற்கும்‌. மற்றும்‌ செலவினத்திற்கான முன்மொழிவுகளைக்‌ கூர்ந்தாய்வு செய்வதற்கும்‌ குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது கூடுதல்‌ வேண்டும்‌; (b) அவ்வப்போது பல்கலைக்கழகத்தின்‌ நிதி நிலையை ஆய்வு செய்தல்‌ வேண்டும்‌; (௦9) ஆண்டு நிதி மதிப்பீடுகளில்‌ வகைமுறை எதுவும்‌ செய்யப்பட்டிராத முதலீடு அல்லது செலவினத்தை உள்ளடக்குகிற அல்லது ஆண்டு நிதி மதிப்பீடுகளில்‌ வகை: செய்யப்பட்டுள்ள தொகைக்கு மேற்பட்ட செலவை உள்ளடக்கிய முன்மொழிவு ஒவ்வொன்றின்‌ பேரிலும்‌, நிருவாக மன்றத்திற்குப்‌ பரிந்துரை செய்தல்‌ வேண்டும்‌; (0) பல்கலைக்கழகத்தின்‌ கணக்குகளைப்‌ பேணிவருவதற்கான முறையையும்‌ நடைமுறையையும்‌ படிவங்களையும்‌ வகுத்துரைத்தல்‌ வேண்டும்‌; 59 (6) பல்கலைக்கழகத்தின்‌. நிதிகள்‌. தொடர்பான அனைத்து விவரங்களின்‌ பேரிலும்‌ நிருவாக மன்றத்திற்குப்‌ பரிந்துரை செய்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ N ஒழுங்குவிதிகளால்‌ வகுத்துரைக்கப்‌ படக்கூடிய பிற பணிகளைப்‌ புரிந்து வருதல்‌ வேண்டும்‌. 32. பாடத்திட்டக்குழு.-- (1) கற்பிக்கின்ற அல்லது ஆய்வு செய்கின்ற துறை ஒவ்வொன்றுடனும்‌. பாடத்திட்டக்குழு ஒன்று இணைக்கப்பட்டு இருக்கும்‌. (2) பாடத்திட்டகுழுவை அமைத்தலும்‌ அதன்‌ அதிகாரங்களும்‌ வகுத்துரைக்கப்படும்‌ விதத்தில்‌ இருக்கும்‌. 33. பிற அதிகார அமைப்புகளை அமைத்தல்‌.- நிருவாக மன்றமானது ஒழுங்குவிதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ தேவையான பல்கலைக்கழகத்தின்‌ பிற அதிகார அமைப்புகளை அமைக்கலாம்‌. 34. குழுக்களை அமைத்தலும்‌ அதிகாரங்களை ஒப்படைவு செய்தலும்‌.- பல்கலைக்கழகத்தின்‌. அதிகார அமைப்புகள்‌: அனைத்தும்‌, குழுக்களை அமைத்தலுக்கும்‌ அல்லது மாற்றி அமைத்தலுக்கும்‌ மற்றும்‌ அவை தக்கது எனக்‌ கருதும்‌ அத்தகைய அதிகாரங்களை அவற்றுக்கு ஒப்படைவு செய்வதற்கும்‌, அதிகாரம்‌ உடையது ஆகும்‌; அத்தகைய குழுக்கள்‌ வேறுவிதமாக வகை செய்யப்படாத போது, தொடர்புடைய அதிகார அமைப்பின்‌ உறுப்பினர்களையும்‌, ஒவ்வொரு நிலையிலும்‌ அதிகார அமைப்பு தக்கது எனக்‌ கருதும்‌ பிற நபர்கள்‌. எவரேனும்‌ இருந்தால்‌, அவர்களையும்‌ கொண்டதாக இருக்கும்‌. 35. புலங்களை அமைத்தலும்‌ அவற்றின்‌ செயற்பணிகளும்‌.- (1) பல்கலைக்கழகமானது, அதன்‌. நோக்கங்களையும்‌ செயற்பணிகளையும்‌ 60 கருத்திற்கொண்டு வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில்‌ புலங்களை அமைக்கலாம்‌. (2) புலங்களை அமைத்தலும்‌ அவற்றின்‌ செயற்பணிகளும்‌ பிற அனைத்து வகைகளிலும்‌. வகுத்துரைக்கப்படும்‌ விதத்தில்‌ இருக்கும்‌. (3) புலம்‌ ஒவ்வொன்றும்‌ வகுத்துரைக்கப்படும்‌ கற்பித்தல்‌ துறைகளைக்‌ கொண்டதாக இருக்கும்‌. அத்தியாயம்‌ V ஒழுங்குவிதிகள்‌ 36. ஒழுங்குவிதிகள்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌. வகைமுறைகளுக்கு உட்பட்டு ஒழுங்குவிதிகள்‌, பின்வரும்‌ விவரங்கள்‌ அனைத்திற்கும்‌ அல்லது அவற்றில்‌ எதற்கும்‌ வகை செய்யலாம்‌, அதாவது:- (ஐ) பட்டங்களையும்‌ பிற கல்விச்‌ சிறப்புத்தகுதிகளையும்‌ வழங்குவதற்காகப்‌ பட்டமளிப்பு விழாக்களை நடத்துதல்‌; (b) கெளரவ பட்டங்களையும்‌ பிற சிறப்புத்‌ தகுதிகளையும்‌ வழங்குதல்‌; (9) பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளை அமைத்தல்‌ அவற்றின்‌: அதிகாரங்கள்‌. மற்றும்‌ செயற்பணிகள்‌; (0) பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளின்‌ உறுப்பினர்களுக்கு இடையேயான காலியிடங்களை நிரப்புவதற்கான முறை: (6) பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளின்‌ மற்றும்‌ அவற்றின்‌ குழுக்களின்‌ உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய படித்‌ தொகைகள்‌; 61 (f) பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளின்‌ கூட்டங்களில்‌ அலுவல்‌ நடத்துவதற்கான குறைவெண்‌ வரம்பு உள்ளிட்ட கூட்டங்களின்‌ நடைமுறைகள்‌; (@) பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளின்‌ ஆணைகள்‌ அல்லது முடிவுகளுக்கு உறுதி ஒப்பமிடுதல்‌; 0) பல்கலைக்கழகத்தின்‌ ஆராய்ச்சிக்கான துறைகளை உருவாக்குதல்‌; (i) வேந்தர்‌ மற்றும்‌ இணை வேந்தர்‌ நீங்கலாக, இப்பல்கலைக்கழகத்தின்‌ பிற அலுவலர்களின்‌: பதவிக்கான காலஅளவு, மற்றும்‌ நியமன முறைகள்‌ மற்றும்‌ பணி நிபந்தனைகள்‌; () பல்கலைக்கழகத்தால்‌ பணியில்‌: நியமிக்கப்படும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பிற நபர்களின்‌: தகுதிகளைத்‌ தீர்மானித்தல்‌; 09 பல்கலைக்கழகத்தால்‌ பணியில்‌ அமர்த்தப்படும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பிற நபர்களை வகைப்படுத்துதல்‌; அவர்களின்‌ நியமனமுறை மற்றும்‌ அவர்களின்‌ பணி வரையறைகளையும்‌ நிபந்தனைகளையும்‌ தீர்மானித்தல்‌; 0) பல்கலைக்கழகத்தால்‌ பணியில்‌ அமர்த்தப்படும்‌ அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பிற நபர்களின்‌ நன்மைக்காக ஓய்வூதியம்‌, பணிக்கொடை, காப்பீடு அல்லது வருங்கால வைப்பு நிதியை ஏற்படுத்துதல்‌; m) சிறப்பு மேலாய்வு உதவித்தொகைகள்‌, சிறப்பு மேலாய்வு பயண உதவித்‌ தொகைகள்‌, படிப்பு உதவித்‌ தொகைகள்‌, மாணவர்‌ உதவித்‌ தொகைகள்‌, உதவிச்‌ சம்பளங்கள்‌, கண்காட்சிகள்‌, பதக்கங்கள்‌, பரிசுகள்‌. ஆகியவற்றை ஏற்படுத்துதல்‌ அவற்றை வழங்குவதற்கான நிபந்தனைகளை ஏற்படுத்துதல்‌; 62 (1) கூடங்கள்‌, மாணவர்‌ விடுதிகள்‌. ஆகியவற்றை நிறுவுதல்‌ மற்றும்‌ பேணி வருதல்‌; (0) பல்கலைக்கழகத்தால்‌ பேணி வரப்படுபவை அல்லாத பிற மாணவர்‌ விடுதிகளை ஒழுங்குப்படுத்துவதற்கான நிபந்தனைகள்‌ ஏற்படுத்துதல்‌; (ற கூடங்களிலும்‌ மாணவர்‌ விடுதிகளிலும்‌ பல்கலைக்கழக மாணவர்கள்‌ தங்கியிருப்பதற்கான நிபந்தனைகள்‌ மற்றும்‌ அவ்வாறு தங்கியிருப்பதற்கான கட்டணங்கள்‌ மற்றும்‌ பிற தொகைகளை விதித்தல்‌; @ பட்டதாரிகள்‌: பதிவு செய்து கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளை ஏற்படுத்துதல்‌ மற்றும்‌ அதற்கான பதிவேட்டைப்‌ பேணி வருதல்‌; (r) பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளிடம்‌ அல்லது அலுவலர்களிடம்‌ அமைந்துள்ள அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்‌; மற்றும்‌ (5) ஒழுங்குவிதிகளால்‌ வகுத்துரைக்கப்படத்‌ தேவைப்படுகின்ற அல்லது வகுத்துரைக்கப்படக்‌ கூடிய பிற விவரம்‌ எதுவும்‌. 37. ஒழுங்குவிதிகள்‌: எவ்வாறு செய்யப்படுகின்றன .- 1) இந்தச்‌ சட்டத்தின்‌. வகைமுறைகளுக்கு உட்பட்டு, நிருவாக மன்றமானது, அதற்கு உரிய அதிகாரங்கள்‌ அனைத்திற்கும்‌ கூடுதலாக, பல்கலைக்கழகத்தின்‌ நிருவாகம்‌ மற்றும்‌ மேலாண்மைக்கு வகை செய்வதற்காக ஒழுங்கு விதிகளை உருவாக்குவதற்கு அதிகாரம்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌: வரம்புரை: கருதப்படும்‌ மாற்றத்தின்‌ பேரில்‌ நிருவாக மன்றத்தால்‌ எழுத்து வடிவிலான கருத்து ஒன்றை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலன்றி, பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு எதனின்‌ தகுதி, அதிகாரங்கள்‌ அல்லது அமைப்பினைப்‌ பாதிக்கின்ற 63 ஒழுங்குவிதி எதனையும்‌, அத்தகைய அதிகாரஅமைப்பு, செய்தல்‌ கூடாது; மற்றும்‌ அவ்வாறு வெளியிடப்பட்ட கருத்து எதுவும்‌, நிருவாக மன்றத்தால்‌ பரிச்லனை செய்யப்படுதல்‌ வேண்டும்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, கல்வி மன்றத்தின்‌ முன்‌அனுமதி இல்லாமல்‌, நிருவாக மன்றமானது, பின்வரும்‌ விவரங்கள்‌ எதனையும்‌ அல்லது அனைத்தையும்‌ பாதிக்கின்ற ஒழுங்குவிதி எதனையும்‌ செய்வதோ, அதில்‌ திருத்தம்‌ செய்வதோ அல்லது நீக்கம்‌ செய்வதோ கூடாது, அவையாவன:- (a) கல்வி மன்றத்தின்‌: அமைப்பு, அதிகாரங்கள்‌ மற்றும்‌ கடமைகள்‌; (b) இப்பல்கலைக்கழகத்தின்‌ குறித்தகாலப்‌ பாடப்‌ பிரிவுகள்‌ மற்றும்‌ கல்வித்‌ திட்டங்களுடன்‌ தொடர்புடைய கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்வதற்குப்‌ பொறுப்புடைய அதிகாரஅமைப்புகள்‌; (௦9) பட்டங்கள்‌, சான்றிதழ்கள்‌. அல்லது கல்விச்‌ சிறப்புகளைத்‌ திரும்பப்‌ பெறுதல்‌; (0) கல்விப்‌ புலங்கள்‌, துறைகள்‌, கல்விக்கூடங்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களை நிறுவுதல்‌ மற்றும்‌ கலைத்தல்‌; (6) பட்டதாரி உதவித்‌ தொகைகள்‌, படிப்பு உதவித்‌ தொகைகள்‌, மாணவர்‌ உதவித்‌ தொகைகள்‌, ஆதரவு தொகைகள்‌, பதக்கங்கள்‌ மற்றும்‌ பரிசுகளை ஏற்படுத்துதல்‌; (f) தேர்வாளர்களை நியமிப்பதற்கான அல்லது தேர்வுகளை நடத்துவதற்கான அல்லது அவற்றின்‌ தரநிலைக்கான அல்லது பிற குறித்தகால பாடப்பிரிவுகளுக்கான நிபந்தனைகளும்‌ முறைகளும்‌; 64 (9) மாணவர்களைப்‌ பதிவு செய்வதற்கான அல்லது சேர்த்துக்‌ கொள்வதற்கான முறை; (h) இப்பல்கலைக்கழகத்தின்‌ தேர்வுகளுக்குச்‌ சமமானவை என ஏற்கப்பட வேண்டிய தேர்வுகள்‌; (2) கல்வி மன்றமானது, உட்பிரிவு (இன்‌ (@) முதல்‌ 0) வரையிலான கூறுகளில்‌ குறித்துரைக்கப்‌ பட்டுள்ள விவரங்கள்‌ அனைத்தின்‌ மீதும்‌ மற்றும்‌ அவற்றுக்கு இடைவிளைவானதும்‌. அவற்றோடு தொடர்புடையதுமான விவரங்கள்‌ குறித்தும்‌ ஒழுங்குவிதிகளை முன்மொழிவதற்கு அதிகாரம்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. (3) கல்வி மன்றத்தினால்‌ முன்மொழியப்பட்ட ஒழுங்குவிதி ஒன்றின்‌ வரைவை நிருவாக மன்றமானது ஏற்க மறுக்கிறபோது, கல்வி மன்றமானது, வேந்தருக்கு மேல்முறையீடு செய்யலாம்‌; மற்றும்‌ கருதப்பட்ட ஒழுங்குவிதியானது பொதுக்குழுவின்‌ அடுத்த கூட்டத்தில்‌, அதனுடைய ஒப்புதலுக்காக வைக்கப்படுதல்‌ வேண்டும்‌ என வேந்தர்‌ ஆணையின்‌ வாயிலாகப்‌ பணிக்கலாம்‌ மற்றும்‌ பொதுக்குழுவின்‌ ஒப்புதலுக்காக நிலுவையில்‌ இருக்கும்‌ போது, அது, அந்த ஆணையால்‌ குறிப்பிடப்படக்கூடிய அத்தகைய தேதியிலிருந்து செயல்விளைவு கொள்ளுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: பொது மன்றத்தினால்‌ அத்தகைய கூட்டத்தில்‌ ஒப்புதல்‌ அளிக்கப்படவில்லை என்றால்‌, ஒழுங்குவிதியானது. செயல்விளைவு அற்றுப்போதல்‌ வேண்டும்‌. @) நிருவாக மன்றத்தினால்‌ செய்யப்படும்‌ ஒழுங்குவிதிகள்‌. அனைத்தும்‌, கூடியவிரைவில்‌ ஒப்புதலுக்காக வேந்தருக்கு மற்றும்‌ பொது மன்றத்திற்கு அதன்‌. அடுத்த கூட்டத்தில்‌ வைத்தலுக்காகப்‌ பணிந்தனுப்பப்படுதல்‌: வேண்டும்‌; மற்றும்‌ பொது 65 மன்றமானது, வந்திருக்கும்‌ உறுப்பினர்களில்‌ மூன்றில்‌ இரண்டு பங்கிற்குக்‌ குறையாதவர்களின்‌ பெரும்பான்மை ஒன்றினால்‌ நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்‌ வாயிலாக, நிருவாகக்‌ குழுவினால்‌ செய்யப்பட்ட ஒழுங்குவிதி எதையும்‌ நீக்கம்‌ செய்வதற்கு அதிகாரம்‌ கொண்டிருக்கும்‌, மற்றும்‌ அத்தகைய ஒழுங்குவிதியானது., அத்தகைய தீர்மானத்தின்‌ தேதியிலிருந்து செயல்விளைவு அற்றுப்‌ போதல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ VI மாணவர்களின்‌ சேர்க்கை மற்றும்‌ அவர்களின்‌: தங்குமிடம்‌ 38. பல்கலைக்கழகத்தின்‌ பாடப்‌ பிரிவுகளுக்கான சேர்க்கை.- நபர்‌ எவரும்‌,- (ஐ) அதற்கென வகுத்துரைக்கப்பட்ட தேர்வில்‌ தேர்ச்சி பெறவில்லை என்றால்‌; மற்றும்‌ (௦) வகுத்துரைக்கப்படக்கூடிய பிற நிபந்தனைகளை நிறைவு செய்யவில்லை என்றால்‌, அவர்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டங்கள்‌ அல்லது பிற கல்விச்சிறப்புகளுக்கான தேர்வுகளுக்கு ஏற்றுக்‌ கொள்ளப்படுவதற்காக, இப்பல்கலைக்கழகத்தின்‌ குறித்த காலப்‌ பாடப்‌ பிரிவு ஒன்றில்‌ சேர்த்துக்கொள்ளப்படுதல்‌ கூடாது. 39. பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களைத்‌. தெரிவு செய்தலும்‌ சேர்த்துக்‌ கொள்ளுதலும்‌.- பிரிவு 38 இல்‌ அல்லது இந்தச்‌ சட்டத்தில்‌ பிறவாறு எண்ண அடங்கியிருந்தபோதிலும்‌, அரசானது குறித்த காலப்‌ பாடப்‌ பிரிவுகளுக்கு மாணவர்களைச்‌ சேர்ப்பதற்காக அவர்களைத்‌ தெரிவு செய்வதற்கான கொள்கை, வழிகாட்டுநெறிகள்‌, முறை மற்றும்‌ நடைமுறைகளை பொது அல்லது சிறப்பு ஆணையின்‌ மூலமாகக்‌ குறிப்பிடலாம்‌. 66 40.மாணவர்களின்‌ தங்குமிடங்கள்‌.- இப்பல்கலைக்‌ கழத்தின்‌ மாணவர்‌ ஒவ்வொருவரும்‌, பல்கலைக்‌ கழகத்தால்‌ பேணிவரப்படும்‌ அல்லது ஒப்புதல்‌ அளிக்கப்பட்ட விடுதி ஒன்றில்‌ அல்லது ஒழுங்குவிதிகளால்‌ வகுத்துரைக்கப்படும்‌ அத்தகைய நிபந்தனைகளின்படி தங்கியிருத்தல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ VI பல்கலைக்கழகத்தின்‌ நிதிகள்‌, ஆண்டு அறிக்கை மற்றும்‌ கணக்குகள்‌: M. பொது நிதி. - பல்கலைக்கழகம்‌, பொது நிதி ஒன்றைப்‌ பெற்றிருக்கும்‌; அந்நிதியில்‌,- (8) கட்டணங்கள்‌, மானியங்கள்‌, நன்கொடைகள்‌, கொடைகள்‌ ஆகியவற்றிலிருந்து பெறும்‌ வருமானம்‌ எவையேனும்‌ இருந்தால்‌ அவற்றையும்‌; (b) மைய அரசாலோ, மாநில அரசு எதனாலுமோ, இந்திய வழக்குரைஞர்‌ மன்றத்தாலோ, தமிழ்நாடு வழக்குறைஞர்‌ மன்றத்தாலோ அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்பு எதனாலுமோ பல்கலைக்கழக மானிய குழுவாலோ, மைய அரசுக்கு அல்லது மாநில அரசு ஏதொன்றுக்கும்‌ சொந்தமான அல்லது அதனால்‌ கட்டுப்பாடு செய்யப்பட்டு வரும்‌ அது போன்ற பிற அமைப்பு எதனாலுமோ அல்லது கழகம்‌ எதனாலுமோ அளிக்கப்படும்‌ பங்களிப்புத்‌ தொகை அல்லது மானியம்‌ எதனையும்‌; (௦) நிலைக்கொடைகளையும்‌ பிற வரவுகளையும்‌: மற்றும்‌ (d) அதனால்‌ கடன்‌ வாங்கப்பட்ட பணத்தையும்‌ வரவு வைத்தல்‌ வேண்டும்‌. 67 42. பிற நிதிகள்‌.- பல்கலைக்கழகம்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய பிற நிதிகளைப்‌ பெற்றிருக்கலாம்‌. 43. நிதிகளை மேலாண்மை செய்தல்‌.- இப்பல்கலைக்கழகத்தின்‌. நிதிகளையும்‌ அனைத்துத்‌ தொகைகளையும்‌ வகுத்துரைக்கப்படும்‌ முறையில்‌ மேலாண்மை செய்தல்‌ வேண்டும்‌. 44. ஆண்டறிக்கை. இப்பல்கலைக்கழகத்தின்‌ ஆண்டறிக்கை, நிருவாக மன்றத்தால்‌ தயாறரிக்கப்படுதலும்‌, வகுத்துரைக்கப்படும்‌ தேதியன்று அல்லது அதற்கு முன்பு பொதுக்குழுவிற்கு பணிந்தனுப்பப்படுதலும்‌ வேண்டும்‌; மற்றும்‌ பொதுக்‌ குழுவினால்‌ அதனுடைய அடுத்த ஆண்டுக்‌ கூட்டத்தில்‌ பரிசீலனை செய்யப்படுதல்‌ வேண்டும்‌. பொதுக்குழு, அதன்பேரில்‌ தீர்மானங்களை நிறைவேற்றி நிருவாக மன்றத்திற்குத்‌ தெரிவிக்கலாம்‌; அது அதற்கு இணங்க நடவடிக்கை எடுத்தல்‌ வேண்டும்‌. நிருவாக மன்றமானது, அதனால்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கையைப்‌ பொது மன்றத்திற்குத்‌ தெரிவித்தல்‌ வேண்டும்‌. அதன்‌ பேரிலான அறிக்கையின்‌ நகல்‌ ஒன்று, பொது மன்றத்தின்‌ தீர்மானம்‌ எதுவும்‌ இருந்தால்‌ அதன்‌ நகல்‌ ஒன்றுடன்‌ சேர்த்து அரசுக்குப்‌ பணிந்தனுப்பப்படுதல்‌: வேண்டும்‌. 45. ஆண்டுக்‌ கணக்குகள்‌. (1) பல்கலைக்‌ கழகத்தின்‌ ஆண்டுக்‌ கணக்குகள்‌, அரசு பணிக்கக்கூடிய அத்தகைய ஆய்வுக்காகவும்‌, தணிக்கைக்காகவும்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ ஆண்டுக்‌ கணக்குகள்‌ மற்றும்‌ தணிக்கை அறிக்கையின்‌ நகல்‌ ஒன்று அரசுக்குப்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. (2) பல்கலைக்கழகம்‌, அத்தகைய தணிக்கையில்‌ எழுப்பப்பட்டுள்ள மறுப்புரைகளைத்‌ தீர்த்துவைத்தல்‌: வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய தணிக்கை அறிக்கையின்‌ 68 ம்து அரசால்‌ வழங்கப்படக்கூடிய அறிவுரைகளை நிறைவேற்றுதல்‌ வேண்டும்‌. (3) கணக்குகள்‌, தணிக்கை செய்யப்பட்டபோது, வகுத்துரைக்கப்படும்‌ முறையில்‌ நிருவாக மன்றத்தால்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அதன்‌ நகல்கள்‌: பொது மன்றத்திற்கு அதனுடைய அடுத்த கூட்டத்தில்‌ வைப்பதற்குப்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அத்தகைய வெளியீட்டின்‌ தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்‌ அரசுக்கும்‌ பணிந்தனுப்பப்படுதல்‌: வேண்டும்‌. (4) அரசானது, தணிக்கை செய்யப்பட்ட ஆண்டுக்‌ கணக்குகள்‌ மற்றும்‌ ஆண்டறிக்கையை அதனுடைய கருத்துரைகளுடன்‌ சேர்த்து சட்டமன்றப்‌ பேரவையின்‌ முன்பு வைப்பதற்கு ஆவன செய்தல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ VIl பணி நிபந்தனைகள்‌: 46. ஓய்வூதியம்‌ பணிக்கொடை முதலியன.- பல்கலைக்கழகம்‌, தன்‌ அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, பல்கலைக்கழகத்தால்‌ பணியில்‌ அமர்த்தப்பட்டுள்ள பிற நபர்கள்‌ ஆகியோரின்‌ நண்மைக்காக, வகுத்துரைக்கப்படும்‌. முறையிலும்‌ நிபந்தனைகளுக்கு உட்பட்டும்‌, தான்‌ பொருத்தம்‌ எனக்‌ கருதக்கூடிய ஓய்வூதியம்‌, பணிக்கொடை, காப்பீடு. வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றை ஏற்படுத்துதல்‌ வேண்டும்‌. 47. பணி நிபந்தனைகள்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, இப்பல்கலை கழகத்தில்‌ பணியில்‌ அமர்த்தப்பட்டுள்ள அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, பிறநபர்கள்‌ ஆகியோரின்‌ நியமனம்‌, அவர்களைத்‌ தெரிவு செய்வதற்கான நடைமுறை, அவர்களின்‌ சம்பளம்‌ மற்றும்‌ படித்தொகைகள்‌ மற்றும்‌ பிற பணி நிபந்தனைகள்‌ 69 ஆகியவை வகுத்துரைக்கப்படும்‌ விதத்தில்‌ இருத்தல்‌ வேண்டும்‌. வரம்புரை: இப்பல்கலைக்கழகத்தால்‌ செய்யப்படும்‌. நியமனங்களைப்‌ பொறுத்தவரையில்‌, அரசின்‌. கழ்வருகின்ற பணிகளில்‌ செய்யப்படும்‌ நியமனங்களுக்குப்‌ பொருந்தும்‌, இடஒதுக்கீடு விதி முறையானது பின்பற்றப்படுதல்‌ வேண்டும்‌. விளக்கம்‌ ,- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கத்திற்காக, "அலுவலர்கள்‌! எனும்‌ சொல்‌, வேந்தரையும்‌ இணைவேந்தரையும்‌ உள்ளடக்காது. 48. தெரிவுக்குழு.-- (1) பல்கலைக்கழகத்தின்‌. பேராசிரியர்‌, இணைப்‌ பேராசிரியர்‌, உதவிப்‌ பேராசிரியர்‌, நூலகர்‌ ஆகிய பதவிகளுக்கு நியமனம்‌ செய்ய, பொது மன்றத்திற்குப்‌ பரிந்துரைகளைச்‌ செய்வதற்காகத்‌ தெரிவுக்‌ குழு ஒன்று இருத்தல்‌ வேண்டும்‌. (2. உட்பிரிவு (1)இல்‌ குறித்துரைக்கப்படும்‌ பதவிகளுக்கு நியமனம்‌ செய்வதற்கான தெரிவுக்‌ குழுவானது, துணைவேந்தரையும்‌, வேந்தரின்‌ நியமனதாரர்‌ ஒருவரையும்‌, அரசின்‌: நியமனதாரர்‌ ஒருவரையும்‌, ஒழுங்குவிதிகளால்‌ வகுத்துரைக்கப்படும்‌ பிற நபர்களையும்‌ கொண்டிருக்கும்‌: வரம்புரை: அத்தகைய நியமனத்திற்காக தெரிவுக்‌ குழுவினால்‌ செய்யப்படும்‌ தெரிவானது, பல்கலைக்கழக மானிய ஆணையக்‌ குழுவாலோ, அத்தகைய நியமனம்‌ தொடர்பான பிற முகவாண்மை அமைப்புகளினாலோ வழங்கப்படக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்கிய வகையில்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (3) தெரிவுக்குழு ஒன்றின்‌. கூட்டங்கள்‌, துணைவேந்தரால்‌ கூட்டப்படுதல்‌ வேண்டும்‌. 70 (4) பரிந்துரை செய்கையில்‌ தெரிவுக்குழு ஒன்றினால்‌ பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறையானது. ஒழுங்குவிதிகளில்‌ விதிக்கப்பட்டிருத்தல்‌ வேண்டும்‌. (5) நிருவாக மன்றமானது, தெரிவுக்குழு ஒன்றினால்‌ செய்யப்பட்ட பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதற்கு இயலாத போது, அது, அதற்கான காரணங்களைப்‌ பதிவு செய்து, அந்த விவரத்தினை, இறுதி ஆணைகளுக்காக வேந்தருக்குப்‌ பணிந்தனுப்புதல்‌ வேண்டும்‌. (6) தற்காலிகப்‌ பதவிகளுக்கான அல்லது காலியிடங்களுக்கான நியமனங்கள்‌. கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையில்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (@) தற்காலிகக்‌ காலியிடமானது கல்விசார்‌ பருவம்‌ குறித்த காலஅளவைவிட அதிகமாக இருந்தால்‌ முன்சொன்ன வகைமுறைகளில்‌ குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு இணங்கிய வகையில்‌, தெரிவுக்குழுவின்‌ ஆலோசனையின்‌ பேரில்‌ நிரப்பப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: துணைவேந்தர்‌, காலியிடத்தினை நிரப்புவது பணியின்‌ நலனுக்குத்‌ தேவையானதாக இருக்கிறது என மனநிறைவு அடைந்தால்‌, ஆறு மாதங்களுக்கு மேற்படாத ஒரு காலஅளவிற்கு, உட்கூறு (௦)இல்‌ குறிப்பிடப்பட்டுள்ள உள்ளமைந்த்‌ தெரிவுக்குழு ஒன்றினால்‌ தற்காலிக அடிப்படையில்‌ பணி நியமனம்‌: செய்யப்படலாம்‌; (௦) தற்காலிகக்‌ காலியிடம்‌ ஓர்‌ ஆண்டிற்கும்‌. குறைவான ஒரு கால அளவுக்கானதாக இருக்குமானால்‌, அத்தகைய காலியிடத்திற்கான நியமனமானது, தொடர்புடைய கல்விப்‌ புலத்தின்‌ முதல்வரையும்‌, துறைத்‌ தலைவரையும்‌, துணைவேந்தரின்‌ நியமனதாரர்‌ 71 ஒருவரையும்‌ கொண்டுள்ள உள்ளமைந்த தெரிவுக்குழு ஒன்றின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஒரே நபர்‌, கல்விப்புலத்தின்‌ புலமுதல்வர்‌ பதவியையும்‌, துறைத்‌ தலைவர்‌ பதவியையும்‌ வகித்து வருவாரானால்‌, தெரிவுக்குழுவானது, துணை வேந்தரின்‌ நியமனதாரர்கள்‌ இருவரைக்‌ கொண்டிருக்கலாம்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, இறப்பு அல்லது பிற காரணம்‌ எதனாலும்‌ ஆசிரியர்‌ பதவிகளில்‌ திமீர்‌ தற்காலிகக்‌ காலியிடங்கள்‌ ஏற்படுகிற போது, கல்விப்‌ புலத்தின்‌ புல முதல்வர்‌, தொடர்புடைய துறையின்‌ தலைவருடன்‌ கலந்தாய்வு செய்து ஒரு மாதத்திற்கான தற்காலிக நியமனம்‌ ஒன்றைச்‌ செய்தலும்‌, அத்தகைய நியமனம்‌ குறித்து துணைவேந்தர்‌ மற்றும்‌ பதிவாளருக்கு அறிவிப்பு செய்தலும்‌ வேண்டும்‌. (29) தற்காலிகமாக பணி நியமனம்‌ செய்யப்பட்ட ஆசிரியர்‌ எவரும்‌, அவர்‌ இந்தச்‌ சட்டத்தின்படி நியமனம்‌ செய்யப்படுவதற்கான முறையான தெரிவுக்குழு ஒன்றினால்‌ பரிந்துரை செய்யப்படாதவராக இருந்தால்‌, தற்காலிக அல்லது நிரந்தர நியமனம்‌: ஒன்றுக்காக உள்ளமைந்த தெரிவுக்குழு அல்லது முறையான தெரிவுக்குழு ஒன்றினால்‌ அதன்பின்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலன்றி, அத்தகைய தற்காலிக நியமனத்தின்‌ பேரில்‌ பணியில்‌ தொடர்ந்து இருத்தல்‌ கூடாது. 49. துறைத்‌ தலைவர்களின்‌ நியமனம்‌ பற்றிய வரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌.- 1) பல்கலைக்கழகத்தின்‌ துறை ஒவ்வொன்றும்‌ தலைவர்‌ ஒருவரைக்‌ கொண்டிருக்கும்‌; அவர்‌ பேராசிரியராக இருத்தல்வேண்டும்‌; அவரது கடமைகளும்‌ செயற்பணிகளும்‌ மற்றும்‌ நியமனத்திற்கான 72 வரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌ வகுத்துரைக்கப்படும்‌. விதத்தில்‌ இருத்தல்‌ வேண்டும்‌: வரம்புரை : துறை எதிலேனும்‌ ஒன்றிற்கு மேற்பட்ட பேராசிரியர்கள்‌ இருப்பார்களானால்‌, வகுத்துரைக்கப்படும்‌. முறையில்‌ அத்துறையின்‌ தலைவர்‌ நியமனம்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌: மேலும்‌ வரம்புரை : மேலும்‌, துறை ஒன்றில்‌ பேராசிரியர்‌ எவரும்‌ இல்லாத போது, இணைப்‌ பேராசிரியர்‌ ஒருவர்‌ அல்லது உதவிப்‌ பேராசிரியர்‌ ஒருவர்‌, வகுத்துரைக்கப்படும்‌ முறையில்‌ துறைத்‌ தலைவராக நியமனம்‌ செய்யப்படலாம்‌. (2) துறைத்‌ தலைவராக நியமனம்‌ செய்யப்‌ படுவதை ஏற்க இயலாது என மறுப்பதற்குப்‌ பேராசிரியர்‌ அல்லது இணைப்பேராசிரியர்‌ அல்லது உதவிப்‌ பேராசிரியருக்கு உரிமையுண்டு. (3) துறைத்‌ தலைவராக நியமனம்‌ செய்யப்பட்ட நபர்‌ ஒருவர்‌, மூன்றாண்டுக்‌ காலத்திற்குப்‌ பதவி வகிப்பார்‌, மேலும்‌ அவர்‌ மறுநியமனத்திற்கும்‌ தகுதியுடையவர்‌ ஆவார்‌. (4) துறைத்‌ தலைவர்‌ ஒருவர்‌ தம்‌ பதவிக்‌ காலத்தின்போது எந்த நேரத்திலும்‌ தமது பதவியை விட்டு விலகிக்கொள்ளலாம்‌. 5 துறைத்‌ தலைவர்‌ ஒருவர்‌, வகுத்துரைக்கப்படும்‌ செயற்பணிகளைப்‌ புரிந்துவருதல்‌ வேண்டும்‌. 50. புலங்களின்‌ முதல்வர்கள்‌.- (1) புல: முதல்வர்‌ ஒவ்வொருவரும்‌, அந்தப்‌ புலத்தின்‌. பேராசிரியர்களுக்கு இடையேயிருந்து துணைவேந்தரால்‌ மூன்றாண்டுக்‌ காலஅளவிற்கு நியமனம்‌ செய்யப்படுதல்‌ 73 வேண்டும்‌; மேலும்‌ அவர்‌ மறு நியமனத்திற்கும்‌ தகுதியுடையவர்‌ ஆவார்‌: வரம்புரை: புலமுதல்வர்‌ ஒருவர்‌ அறுபது வயது நிறைவடைவதன்‌ பேரில்‌ அவர்‌ அவ்வாறு பதவி வகிப்பது அற்றுப்போதல்‌ வேண்டும்‌. கூடுதல்‌ வரம்புரை: மேலும்‌, புலம்‌ ஒன்றில்‌ பேராசிரியர்‌ எவரும்‌ இல்லாத எந்த நேரத்திலும்‌, துணைவேந்தர்‌, அப்புலத்தில்‌ புல முதல்வருக்கான அதிகாரங்களைச்‌ செலுத்தி வருதல்‌ வேண்டும்‌. (2) முதல்வரின்‌: பதவி காலியாக இருக்கிறபோது, அல்லது முதல்வர்‌ நோய்‌, வாராமை அல்லது எதன்‌ காரணமாகவும்‌ அவரது பதவிக்கான கடமைகளை ஆற்றுவதற்கு இயலாதபோது, அவரது பதவிக்கான கடமைகள்‌ துணைவேந்தரால்‌ அந்நோக்கத்திற்காக நியமனம்‌ செய்யப்படக்கூடிய நபரால்‌ ஆற்றிவரப்படுதல்‌ வேண்டும்‌. (3) முதல்வர்‌, புலத்தின்‌ தலைவராக இருந்து வருவார்‌, மற்றும்‌ அப்புலத்தில்‌ கற்பித்தலுக்கும்‌ ஆய்வு நடத்துவதற்கும்‌ மற்றும்‌ அதன்‌ தரநிலைகளைப்‌ பேணி வருவதற்கும்‌ அவர்‌ பொறுப்புடையவராக இருந்து வருவார்‌. முதல்வர்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய பிற செயற்பணிகளையும்‌ ஆற்றி வருதல்‌ வேண்டும்‌. (4) பாடதிட்டக்‌ குழுக்கள்‌ அல்லது நிகழ்விற்கேற்ப புலம்‌ குறித்த குழுக்களின்‌ கூட்டம்‌ எதற்கும்‌ முதல்வர்‌ வந்திருக்கவும்‌, அதில்‌ பேசுவதற்கும்‌ உரிமை கொண்டவராக இருப்பார்‌ ஆனால்‌, அதன்‌. உறுப்பினராக அவர்‌ இருந்தாலன்றி, அதில்‌ வாக்களிப்பதற்கு உறிமையுடையவர்‌ ஆகமாட்டார்‌. 74 அத்தியாயம்‌ 06 இடைக்காலத்திற்கான வகைமுறைகள்‌ 51. முதல்‌ துணைவேந்தரின்‌ நியமனம்‌.- பிரிவு 11இன்‌ உட்பிரிவு (1)இல்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாக, அரசினால்‌, மூன்றாண்டுகளுக்கு மேற்படாத ஒரு காலஅளவிற்கு அது பொருத்தம்‌ எனக்‌ கருதக்கூடிய பிற நிபந்தனைகளின்‌ பேரில்‌ முதல்‌ துணைவேந்தர்‌ நியமிக்கப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: முதல்‌ துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர்‌, அவருடைய பதவிக்காலத்தின்‌ போது அறுபத்தைந்து வயதை எய்துவாரானால்‌ அவர்‌ பதவியிலிருந்து ஓய்வு பெறுதல்‌ வேண்டும்‌. 52. முதல்‌ பதிவாளரின்‌ நியமனம்‌.- பிரிவு 14இன்‌: உட்பிரிவு (1)இல்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாக, அரசினால்‌ மூன்றாண்டுகளுக்கு மேற்படாத ஒரு காலஅளவிற்கும்‌. அதனால்‌ நிர்ணயிக்கப்படும்‌ சம்பளத்தின்‌ பேரிலும்‌ மற்றும்‌ அது பொருத்தம்‌ எனக்‌ கருதக்கூடிய பிற நிபந்தனைகளின்‌: பேரிலும்‌ முதல்‌ பதிவாளர்‌ நியமிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 53. இடைக்காலத்திற்கான முதல்‌ துணைவேந்தரின்‌ அதிகாரங்கள்‌.- (1) முதல்‌ துணைவேந்தர்‌ நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்‌ அல்லது அறிவிக்கையின்‌ மூலம்‌ அரசு குறிப்பிடக்கூடிய ஓராண்டுக்கு மேற்படாத கால அளவிற்குள்‌, பொது மன்றம்‌, நிருவாக மன்றம்‌, கல்வி மன்றம்‌, நிதிக்குழு மற்றும்‌ பல்கலைக்கழகத்தின்‌ பிற அதிகார அமைப்புகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளைச்‌ செய்யவேண்டியது அவரது கடமையாக இருத்தல்‌ வேண்டும்‌. 75 (2) முதல்‌ துணைவேந்தர்‌ அரசைக்‌ கலந்தாலோசித்து, பல்கலைக்கழகம்‌ செயல்படுவதற்குத்‌ தேவையான விதிகளைச்‌ செய்தல்‌ வேண்டும்‌. (3) உட்பிரிவு (1)இன்படி அமைக்கப்பட்ட அதிகாரஅமைப்புகள்‌, அரசு இதன்பொருட்டு அறிவிக்கையின்‌ வாயிலாகக்‌ குறிப்பிடும்‌ தேதியில்‌ அவற்றின்‌ செயற்பணிகளை ஆற்றத்‌ தொடங்குதல்‌ வேண்டும்‌. (4) தேவைப்படும்‌ அத்தகைய ஒழுங்குவிதிகளை வரைவு செய்து, அவை குறித்து முடிவு செய்வதற்காகத்‌, தகுதி வாய்ந்த அந்தந்த அதிகார அமைப்புகளுக்குப்‌ பணிந்தனுப்ப வேண்டியது துணைவேந்தரின்‌ முதல்‌ கடமையாக இருத்தல்‌ வேண்டும்‌. அத்தகைய ஒழுங்குவிதிகள்‌ இயற்றப்பட்டவுடன்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌. (5 இந்தச்‌ சட்டத்திலும்‌ ஒழுங்குவிதிகளிலும்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, மற்றும்‌ அதிகார அமைப்பு ஒன்று உரியவாறு அமைக்கப்படும்‌ காலம்‌. வரையிலும்‌, முதல்‌ துணைவேந்தர்‌, இந்தச்‌ சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்குவிதிகளின்படி அத்தகைய அதிகார அமைப்பின்‌ அதிகாரங்களைச்‌ செலுத்தி வரவும்‌ மற்றும்‌ கடமைகள்‌ எதனையும்‌ ஆற்றி வரவும்‌ தற்காலிகமாக அலுவலர்‌ எவரையும்‌ நியமிக்கலாம்‌ அல்லது குழு எதையும்‌ அமைக்கலாம்‌. அத்தியாயம்‌ X பல்வகை 54. கெளரவப்‌ பட்டம்‌:- கல்வி மன்றத்தின்‌. மூன்றில்‌ இரண்டு பங்கிற்குக்‌ குறையாத உறுப்பினர்கள்‌, அவர்‌ தம்‌ கருத்தில்‌ நபர்‌ எவருக்கும்‌, அவர்‌ புகழ்‌ வாய்ந்த நிலையை அடைந்ததன்‌ காரணமாகவும்‌ சிறப்பான 76 நிலையில்‌ இருப்பதன்‌ காரணமாகவும்‌, பட்டம்‌ அல்லது கல்விச்‌ சிறப்புத்‌ தகுதியைப்‌ பெறுவதற்குப்‌ பொருத்தமானவராகவும்‌ தகுதியானவராகவும்‌ இருக்கிறார்‌ என்பதன்‌ பேரிலும்‌ கெளரவப்‌ பட்டம்‌ அல்லது கல்விச்‌ சிறப்பு தகுதி ஒன்று வழங்கப்படலாம்‌ என்று பரிந்துரை செய்தால்‌, பொது மன்றமானது, தீர்மானம்‌ ஒன்றின்‌ வாயிலாக, பரிந்துரை செய்யப்பட்ட நபருக்கு அது வழங்கப்படலாம்‌ என முடிவு செய்யலாம்‌. 55. பட்டத்தைத்‌ திரும்பப்பெறுதல்‌.- (1) பொது மன்றமானது, நிருவாகக்‌ குழுவின்‌: பரிந்துரையின்‌ பேரில்‌, நபர்‌ எவருக்கும்‌ வழங்கப்பட்ட அல்லது அளிக்கப்பட்ட சிறப்புத்‌ தகுதி அல்லது பட்டம்‌ எதனையும்‌, பொது மன்றத்தின்‌ மொத்த உறுப்பினர்களின்‌ பெரும்பான்மையினால்‌ மற்றும்‌ பொது மன்றத்தின்‌: கூட்டத்தில்‌ வந்திருந்து வாக்களிக்கும்‌ உறுப்பினர்களில்‌ மூன்றில்‌ இரண்டு பங்கிற்கும்‌ குறையாத பெரும்பான்மை ஒன்றினால்‌ இயற்றப்பட்ட தீர்மானம்‌ ஒன்றின்‌ வாயிலாக, அத்தகைய நபர்‌, பொது மன்றத்தின்‌ கருத்தில்‌, ஒழுக்கக்கேட்டினை உள்ளடக்கிய குற்றச்செயல்‌ ஒன்றிற்காக நீதிமன்றம்‌ ஒன்றினால்‌ குற்றவாளி எனத்‌ தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார்‌ என்றால்‌ அல்லது அவர்‌ கடும்‌. நடத்தைக்கேடு எனும்‌ குற்றத்தைப்‌ புரிந்துள்ளாரானால்‌, திரும்பப்‌ பெறலாம்‌. (2) எடுக்கப்படவிருக்கும்‌ நடவடிக்கைக்கு எதிராகக்‌ காரணம்‌ காட்டுவதற்கு அவருக்கு வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டிருந்தாலன்றி, இந்தப்‌ பிரிவின்படி நடவடிக்கை எதுவும்‌, நபர்‌ எவருக்கும்‌ எதிராக எடுக்கப்படுதல்‌ கூடாது. (3) பொது மன்றத்தால்‌ நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்‌ நகல்‌ ஒன்று, சம்பந்தப்பட்ட நபருக்கு உடனடியாக அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 77 (4) பொது மன்றத்தினால்‌ எடுக்கப்பட்ட முடிவினால்‌ குறையுற்ற நபர்‌ எவரும்‌, தீர்மானம்‌ பெறப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்க

Rules, notifications and orders under this Act

Listed from India Code. Each opens there.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts