Tamil Nadu · 1987 · Act 37

The Tamil Nadu Medical University Act, 1987

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகம்‌ சட்டம்‌. சட்ட எண்‌.37/1987. கூறுகளின்‌ வரிசையமைப்பு கூறுகள்‌ : அத்தியாயம்‌ 1. முன்னுரையாக. 1. குறுந்தலைப்பு, அளாவுகை, பொருந்துகை மற்றும்‌ தொடக்கம்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌. அத்தியாயம்‌ ॥. பல்கலைக்கழகம்‌. 3. பல்கலைக்கழகம்‌. 4. இப்பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்கள்‌. 5. பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரங்கள்‌. 6. பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ அமைந்துள்ள கல்லூரிகள்‌, பிற பல்கலைக்கழகம்‌ எதனோடும்‌ இணைக்கப்படுதலாகாது என்பதும்‌, பல்கலைக்கழகத்தால்‌ கல்வி நிலையங்களுக்கு ஏற்பிசைவு (அங்கீகாரம்‌) அளிக்கப்படுதலும்‌. அத்தியாயம்‌ ॥. அலுவலர்கள்‌. 7. பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்கள்‌. 8. வேந்தர்‌. 9. இணை வேந்தர்‌. 10. துணை வேந்தர்‌. 11. துணை வேந்தருக்குள்ள பணிவரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌. 12. துணை வேந்தரின்‌ அதிகாரங்களும்‌ அலுவல்களும்‌. 13. பதிவாளர்‌. 14. நிதி அலுவலர்‌. 15. நிதி அலுவலரின்‌ அதிகாரங்கள்‌, அலுவல்கள்‌ மற்றும்‌ கடமைகள்‌. 16. தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌. அத்தியாயம்‌ 1V. அதிகாரஅமைப்புகள்‌. 17. பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகள்‌. 18. ஆட்சிப்‌ பேரவை. 19. இப்பல்கலைக்கழகத்தின்‌ விரிவான கொள்கைகளையும்‌ திட்டங்களையும்‌ ஆட்சிப்‌ பேரவை ஆய்வு செய்தல்‌. 20. ஆட்சிப்‌ பேரவையின்‌ கூட்டங்கள்‌. 21. ஆட்சி மன்றம்‌. 22. ஆட்சி மன்றத்தின்‌ அதிகாரங்கள்‌. 23. ஆட்சி மன்றத்தின்‌ கூட்டங்கள்‌. செயல்‌ 24. உறுப்பினர்கள்‌ ஊதியத்திற்கு (remuneration) உரிமையுடையவராக மாட்டார்கள்‌ என்பது. 25. உறுப்பினர்களின்‌ பதவி விலகல்‌. 26. ஆட்சிமன்றம்‌ ஆண்டறிக்கையைத்‌ தயாறித்தல்‌. 27. ஆட்சி மன்றம்‌ ஆண்டு கணக்குகளைப்‌ பணிந்தனுப்புதல்‌. 2௧. நிதிக்குழு. 29. கல்வி நிலைக்‌ குழு. 30. கலையியல்கள்‌. 31. திட்டமிடும்‌ குழு. 32. பாடத்‌ திட்டக்‌ குழுக்கள்‌. 33, பிற அதிகார அமைப்புகளின்‌ அமைப்பு. அத்தியாயம்‌ V. பல்கலைக்கழக நிதியங்கள்‌. 34. பொது நிதியங்கள்‌. அத்தியாயம்‌ VI. மாணவர்களைச்‌ சேர்த்துக்‌ கொள்ளுதல்‌. 35. பல்கலைக்கழக படிப்புப்‌ பிரிவுகளுக்கு மாணவர்களைச்‌ சேர்த்துக்‌ கொள்ளுதல்‌. 36. பல்கலைக்கழகத்‌ தேர்வுகளுக்கு ஏற்றுக்‌ கொள்ளப்படுதல்‌. அத்தியாயம்‌ VI பணியாளர்‌ தொகுதியும்‌ பணி நிபந்தனைகளும்‌. 37. அலுவலர்கள்‌, துறைத்‌ தலைவர்கள்‌ முதலானவர்களின்‌ நியமனம்‌. 38. பணி நிபந்தனைகள்‌. 39. ஓய்வூதியம்‌ மற்றும்‌ பணிக்கொடை முதலானவை. 40. துறைத்‌ தலைவர்களின்‌ பணி வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகள்‌. 41. பல்கலைக்கழகத்‌ துறைகளின்‌ ஒருங்கிணைப்பாளர்‌ மற்றும்‌ மாணவர்‌ நலப்‌ பொறுப்புத்‌ தலைவர்‌ ஆகியோரின்‌ பணி பற்றிய வரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌. அத்தியாயம்‌ VIl நிலை விதிகள்‌, அவசர விதிகள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகள்‌. 42. நிலை விதிகள்‌. 43. அவசர விதிகள்‌. 44. ஒழுங்குமுறை விதிகள்‌. 45. ஆட்சிப்‌ பேரவை மற்றும்‌ ஆட்சிமன்றம்‌ ஆகியவற்றின்‌. உறுப்பினர்களின்‌ பதவிக்‌ காலம்‌. அத்தியாயம்‌ 1X. உறுப்பினர்‌ பதவிக்கான தகுதிக்கேடு. 46. உறுப்பினர்‌ பதவிக்கான தகுதிக்கேடு. 47. முதல்‌ துணை வேந்தரின்‌ நியமனம்‌. 48. முதல்‌ பதிவாளரின்‌ நியமனம்‌. 49. முதல்‌ துணை வேந்தரின்‌ மாறுதற்கால அதிகாரங்கள்‌. 50. முறைப்படியான காலியிடங்களை நிரப்புதல்‌. அத்தியாயம்‌ X. பல்வகை. 51. தற்செயல்‌ காலியிடங்களை நிரப்புதல்‌. 52. பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு அல்லது அமைப்பின்‌ நடவடிக்கைகள்‌ காலியிடங்கள்‌ காரணமாக செல்லாதவையாக ஆக்கப்படுதல்‌ ஆகாது. 53. உறுப்பினர்‌ பதவியிலிருந்து நீக்குதலும்‌, பல்கலைக்கழகத்தின்‌ பட்டம்‌, அல்லது பட்டயம்‌ அல்லது பிற கல்விச்‌ சிறப்புகளை திரும்பப்‌ பெறுதலும்‌. 54. தேர்தல்‌ அல்லது நியமனம்‌ குறித்த தகராறுகள்‌. 55. அதிகாரஅமைப்புகள்‌ குழுக்கள்‌ அமைத்தலும்‌ அதிகாரங்களை ஒப்படைவு செய்தலும்‌. 56. தகவல்‌ பெறுவதற்கான அதிகாரம்‌. 57. சென்னைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ குறிப்பிட்ட சில பணியாளர்களை மருத்துவப்‌ பல்கலைக்கழகத்திற்கு மாற்றுதல்‌. 58. வருங்கால வைப்பு நிதியம்‌ மற்றும்‌ பிற அதுபோன்ற நிதியத்தில்‌ சேர்ந்துள்ள தொகைகளை மாற்றுதல்‌. 59. சென்னைப்‌ பல்கலைக்கழகத்தினால்‌ சில குறிப்பிட்ட தொகை வழங்கப்படுதல்‌. 60. மேற்பார்வைத்‌ தேர்வாய்‌. 61. நூலகர்‌. 62. சிறப்பு நியமன முறை. 63. இணைக்கப்பட்ட கல்லூரிகளின்‌ மீதான அறிக்கை. 64. தெரிவுக்‌ குழு. 65. துணை வேந்தரும்‌ பிற அலுவலர்கள்‌ முதலானோரும்‌ பொது ஊழியர்களாக இருப்பவர்‌ என்பது. 66. இணைப்புப்பட்டியலைத்‌ திருத்துவதற்கான அதிகாரம்‌. 67. சில குறிப்பிட்ட சட்டங்கள்‌ பொருந்தா என்பது. 68. இடர்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌. இணைபப்புப்பட்டியல்‌. 1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகம்‌ சட்டம்‌. சட்ட எண்‌.37/1987. தமிழ்நாடு மாநிலத்தில்‌ மருத்துவப்‌ பல்கலைக்கழகமொன்றை நிறுவியமைப்பதற்கு வகைசெய்வதற்கானதொரு சட்டம்‌. இந்திய குடியரசின்‌ முப்பத்தெட்டாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையினால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக.- அத்தியாயம்‌ 1. முன்னுரை. 1. குறுந்தலைப்பு, அளாவுகை, பொருந்துகை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌ 1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. (2) இது, தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதையும்‌ அளாவி நிற்கும்‌. (3) இது.- (ஐ) இணைப்புப்பட்டியலில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள கல்லூரி மற்றும்‌ கல்வி நிலையம்‌ ஒவ்வொன்றுக்கும்‌, (b) இந்தச்‌ சட்டத்தின்படி இப்பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ளவையாக அல்லது அதனால்‌ ஒப்புதலளிக்கப்பட்டுள்ளவையாகக்‌ கொள்ளப்படும்‌ அனைத்துக்‌ கல்லூரிகளுக்கும்‌. கல்வி நிலையங்களுக்கும்‌, (6). இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ அமைந்துள்ளவையும்‌ மருத்துவ இந்தச்‌ சட்டத்தின்‌, அதன்‌ கீழ்ச்‌ செய்யப்பட்ட நிலை விதிகள்‌ மற்றும்‌ அவசர விதிகளின்‌, மற்றும்‌ அதன்‌ கீழ்ச்‌ செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதிகளின்‌. வகைமுறைகளுக்கிணங்க இப்பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ள அல்லது அதனால்‌ ஒப்புதலளிக்கப்பட்டுள்ளவையுமான பிற கல்லூரி அல்லது கல்வி நிலையம்‌ ஒவ்வொன்றுக்கும்‌, மற்றும்‌ (0) இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ அமைந்துள்ளதும்‌ மருத்துவ முறை எதிலு பட்டம்‌, பட்டயம்‌ அல்லது பிற கல்வி சிறப்புகள்‌: இப்பல்கலைக்கழகத்தால்‌ அளிக்கப்படுவதற்கு தகுதியுடையதாக்கக்கூடிய தொடர்கோவைப்‌ படிப்பு எதனையும்‌ நடத்தி வருகிற அல்லது தொடர்கோவைப்‌ பயிற்சி எதையும்‌ அளித்து வருகிற கல்லூரி மற்றும்‌ கல்வி நிலையம்‌ ஒவ்வொன்றுக்கும்‌ பொருந்தும்‌. (4) இந்தப்‌ பிரிவும்‌ 2, 3, 4, 5, 6,7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 31, 34, 46, 47, 48, 49, 57, 60, 61, 65, 66, 67, 68 ஆகிய பிரிவுகளும்‌ உடனடியாக நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ எஞ்சியவை அரசு, அறிவிக்கையின்‌ மூலம்‌ குறிக்கக்கூடிய தேதியன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌. இந்தச்‌ சட்டத்தில்‌, தறுவாய்‌ வேறு பொருள்‌ குறித்தாலன்றி,- (ஐ "இணைக்கப்பெற்ற கல்லூரி" என்பது, இப்பல்கலைக்கழகத்துப்‌ பட்டப்‌ படிப்புகள்‌, பட்டயப்‌ படிப்புகள்‌, பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றுக்கான தேர்வுகளுக்கு ஏற்றுக்‌ கொள்ளப்படுவதற்காக மருத்துவ அறிவியலில்‌ தொடர்கோவைப்‌ படிப்புகளுக்கு வகைடுசய்கின்ற இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ அமைந்து, இப்பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ள கல்லூரி எதுவும்‌ அல்லது கல்வி நிலையங்கள்‌ எவையும்‌ என்று பொருள்படும்‌; மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்படி பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படுவதாகக்‌ கொள்ளப்படும்‌ கல்லூறியொன்றையும்‌ உள்ளடக்கும்‌; மற்றும்‌ தன்னாட்சிக்‌ கல்லூரியொன்றையும்‌ உள்ளடக்கும்‌; (௦) "ஒப்புதலளிக்கப்பட்ட கல்வி நிலையம்‌” என்பது, இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ அமைந்து,- () இப்பல்கலைக்கழகத்தால்‌ ஒப்புதலளிக்கப்பட்டிருக்கின்ற; மற்றும்‌ (0 இப்பல்கலைக்கழகத்துப்‌ பட்டப்‌ படிப்புகளுக்கும்‌, பட்டயப்‌ படிப்புகளுக்கும்‌ பிற கல்விச்‌ சிறப்புகளுக்குமான தேர்விற்கு ஏற்றுக்‌ கொள்ளப்படுவதற்காக பயிற்சிக்கு வகைசெய்கின்ற மருத்துவமனை, மையம்‌ அல்லது பிற கல்வி நிலையம்‌ எதுவும்‌ என்று பொருள்படும்‌; (6) "தன்னாட்சிக்‌ கல்லூரி என்பது, நிலை விதிகளாலோ அல்லது அவற்றின்படியோ ஒரு தன்னாட்சிக்‌ கல்லூரியெனப்‌ பெயர்‌ குறிக்கப்பட்டுள்ள கல்லூரி எதுவும்‌ என்று பொருள்படும்‌; (0) "கல்லூரி" என்பது, இப்பல்கலைக்கழகத்தினால்‌ பேணி வரப்படும்‌ அல்லது அதனோடு இணைக்கப்பட்டுள்ளதும்‌ இப்பல்கலைக்கழகத்துப்‌ பட்டப்‌ படிப்புகள்‌, பட்டயப்‌ படிப்புகள்‌, பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றுக்கான தேர்வுகளுக்கு ஏற்றுக்‌ கொள்ளப்படுவதற்காக மருத்துவ அறிவியலில்‌ தொடர்கோவைப்‌ படிப்புகளுக்கு அல்லது பயிற்சிக்கு வகை செய்கின்றதுமான கல்லூரி எதுவும்‌ அல்லது கல்வி நிலையங்கள்‌ எவையும்‌ என்று பொருள்படும்‌; (e) "இந்தியப்‌ பல்‌ மருத்துவக்‌ கழகம்‌" என்பது 1948 ஆம்‌ ஆண்டு பல்‌ மருத்துவர்கள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 611948) 3 ஆம்‌ பிரிவின்படி அமைக்கப்பட்டுள்ள இந்திய பல்‌ மருத்துவக்‌ கழகம்‌ என்று பொருள்படும்‌; (1) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்‌; (ற "மாணவர்‌ இல்லம்‌" என்பது மாணவர்களுக்காக இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கிணங்க இப்பல்கலைக்கழகத்தால்‌ பேணிவரப்படும்‌ அல்லது ஒப்புதலளிக்கப்படும்‌, குடியிருப்புப்‌ பிரிவு என்று பொருள்படும்‌; (h) "கல்வி நிலையம்‌" என்பது இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டப்‌ படிப்புகள்‌, பட்டயப்‌ படிப்புகள்‌, பிற கல்வி சிறப்புகள்‌ ஆகியவற்றுக்கான தேர்வுகளுக்கு ஏற்றுக்‌ கொள்ளப்படுவதற்கான பயிற்சிக்கு வகைசெய்கின்ற மருத்துவமனை, மையம்‌ அல்லது பிற கல்வி நிலையம்‌ எதுவும்‌ என்று பொருள்படும்‌; () இந்திய மருத்துவக்‌ கழகம்‌" என்பது, 1956 ஆம்‌ இந்திய மருத்துவக்‌ கழகச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 102/1956) 3 ஆம்‌ பிரிவின்படி அமைக்கப்பட்டுள்ள இந்திய மருத்துவக்‌ கழகம்‌ என்று பொருள்படும்‌; 0 "அறிவிக்கை செய்யப்பட்ட தேதி" என்பது 1 ஆம்‌ பிரிவின்‌ (4) ஆம்‌ உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்பட்ட தேதி என்று பொருள்படும்‌; (k) "இந்திய செவிலிமைக்‌ கழகம்‌" என்பது, 1947 ஆம்‌ இந்திய செவிலிமைச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ XLVIIA947) 3 ஆம்‌ பிரிவின்படி அமைக்கப்பட்ட இந்திய செவிலிமைக்‌ கழகம்‌ என்று பொருள்படும்‌; 0) "இந்திய மருந்தாக்கக்‌ கலைக்‌ கழகம்‌" என்பது, 1948 ஆம்‌ ஆண்டு மருந்தாக்கக்‌ கலைச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ VI/1948) 3 ஆம்‌ பிரிவின்படி அமைக்கப்பட்ட இந்திய மருந்தாக்கக்‌ கலைக்‌ கழகம்‌ என்று பொருள்படும்‌; (M) "வகுத்துரைக்கப்பட்ட என்பது இந்தச்‌ சட்டத்தினால்‌ அல்லது நிலைவிதிகள்‌, அவசர விதிகள்‌ அல்லது ஒழுங்குமுறை விதிகளினால்‌ வகுத்துரைக்கப்பட்ட என்று பொருள்படும்‌; (ற "முதல்வர்‌" அல்லது "துறைத்‌ தலைவர்‌" என்பது கல்லூரியொன்றின்‌. அல்லது கல்லூரி மற்றும்‌ மருத்துவமனையொன்றின்‌ தலைவர்‌ என்று பொருள்படும்‌; (௦) "நிலை விதிகள்‌", "அவசர விதிகள்‌" மற்றும்‌ "ஒழுங்குமுறை விதிகள்‌" என்பவை முறையே இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது தொடர்ந்து நடைமுறையிலிருந்து வருகின்ற இப்பல்கலைக்கழகத்தின்‌ நிலைவிதிகள்‌, அவசர விதிகள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகள்‌ என்று பொருள்படும்‌; ) "ஆசிரியர்கள்‌" என்பது பல்கலைக்கழக ஆய்வுக்கூடங்கள்‌. உள்ளடங்கலாக இப்பல்கலைக்கழகத்தில்‌ இணைக்கப்பட்ட கல்லூரிகளில்‌ அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்‌ ஆசிரியர்களென நிலைவிதிகளால்‌ விளம்பப்படக்கூடிய விரிவுரையாளர்கள்‌, சிறப்புப்‌ பேராசிரியர்கள்‌: உதவிப்‌ பேராசிரியர்கள்‌, இணை பேராசிரியர்கள்‌, பேராசிரியர்கள்‌ மற்றும்‌ கல்வி கற்பிக்கின்ற பிற நபர்கள்‌ எவர்களும்‌ மற்றும்‌ நூலகர்‌ என்று பொருள்படும்‌; (1) "பல்கலைக்கழகம்‌" என்பது தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகம்‌ என்று பொருள்படும்‌; () "பல்கலைக்கழகப்‌ பரப்பிடம்‌” என்பது 1928 ஆம்‌ ஆண்டு அண்ணாமலைப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 11929) 2 ஆம்‌ பிரிவின்‌ (8) கூறில்‌ பொருள்‌ வரையறை செய்யப்பட்டவாறான அண்ணாமலை நகர்‌ நீங்கலாக 1 ஆம்‌ பிரிவில்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்படி இந்தச்‌ சட்டம்‌ அளாவி நிற்கின்ற பரப்பிடம்‌ என்று பொருள்படும்‌; (5) "பல்கலைக்கழகக்‌ கல்லூரி " என்பது இப்பல்கலைக்கழகத்தால்‌ நிறுவப்பட்டதாயினும்‌ அல்லவாயினும்‌; அதனால்‌ பேணிவரப்படுவதும்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டப்‌ படிப்புக்கு, பட்டயப்‌ படிப்புக்கு அல்லது பிற கல்விச்‌ சிறப்புக்கு வழிகோலுகின்ற தொடர்கோவைப்‌ படிப்புக்கோ, பயிற்சிக்கோ வகைசெய்கிறதுமான ஒரு கல்லூரி என்று பொருள்படும்‌; (1) "பல்கலைக்கழக மானிய ஆணைக்‌ குழு" என்பது, 1956 ஆம்‌ ஆண்டு பல்கலைக்கழக மானிய ஆணைக்‌ குழு சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 37 1956) 4 ஆம்‌ பிரிவினால்‌ நிறுவப்பட்ட ஆணைக்‌ குழு என்று பொருள்படும்‌; (ம "பல்கலைக்கழக ஆய்வுக்கூடம்‌" என்பது, இப்பல்கலைக்கழகத்தால்‌ நிறுவப்பட்டதாயினம்‌: அல்லவாயினும்‌ ஆராய்ச்சிப்‌ பணியைச்‌ செய்துவருவதற்காகவென கருதி அதனால்‌ பேணிவரப்படும்‌ ஓர்‌ ஆய்வுக்கூடம்‌ என்று பொருள்படும்‌; (V) "பல்கலைக்கழக விரிவுரையாளர்‌", "பல்கலைக்கழக சிறப்புப்‌ பேராசிரியர்‌", "பல்கலைக்கழகப்‌ பேராசிரியர்‌" அல்லது "பல்கலைக்கழக ஆசிரியர்‌" என்பது, இப்பல்கலைக்கழகத்தால்‌ முறையே நியமனஞ்‌ செய்யப்பட்ட விரிவுரையாளர்‌, சிறப்புப்‌ பேராசிரியர்‌, பேராசிரியர்‌ அல்லது ஆசிரியர்‌ என்று பொருள்படும்‌; (W) "பல்கலைக்கழக நூலகம்‌! என்பது இப்பல்கலைக்கழகத்தால்‌ நிறுவப்பட்டதாயினும்‌ அல்லவாயினும்‌, அதனால்‌ பேணிவரப்படும்‌ ஒரு நூலகம்‌ என்று பொருள்படும்‌. அத்தியாயம்‌-॥. பல்கலைக்கழகம்‌. 3. பல்கலைக்கழகம்‌.- (1) "தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகம்‌" என்ற பல்கலைக்கழகமொன்று இருத்தல்‌ வேண்டும்‌. (2) இப்‌ பல்கலைக்கழகம்‌ ஒரு கூட்டு நிறுவன அமைப்பாக இருத்தல்‌ வேண்டும்‌ என்பதோடு, தொடர்‌ வழிமுறையுரிமையும்‌ ஒரு பொது இலச்சினையும்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ மேற்சொன்ன பெயரில்‌ வழக்காடுதலும்‌. வழக்காடப்படுதலும்‌ வேண்டும்‌. (3) இப்பல்கலைக்கழகத்தின்‌ தலைமையகமானது 1971 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகர மற்றும்‌ ஊர்‌ அமைப்புச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 357972) 2 ஆம்‌ பிரிவின்‌ (23-ஐ) கூறில்‌ பொருள்‌ வரையறை செய்யப்பட்டவாறான சென்னைப்‌ பெருநகர்‌ அமைப்புப்‌ பரப்பிடத்தின்‌ எல்லைக்குள்‌ அமைந்திருத்தல்‌ வேண்டும்‌. 4. இப்பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்கள்‌.- இப்பல்கலைக்கழகம்‌ பின்வரும்‌ நோக்கங்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. அதாவது,- 1) மருத்துவ அறிவியல்‌ துறையில்‌ அது தீர்மானிக்கக்கூடிய கல்வி கற்கும்‌ பிரிவுகளில்‌ கல்வி கற்பிப்பதற்கும்‌, பயிற்றுவிப்பதற்கும்‌ வகை செய்தல்‌; (2) மருத்துவ அறிவியல்‌ துறையில்‌ ஆராய்ச்சிக்கும்‌ மற்றும்‌ அறிவை மேம்படுத்துவது மற்றும்‌ பரப்புவதற்கும்‌ வகை செய்தல்‌; (3) பட்டங்கள்‌, பட்டயங்கள்‌, பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றை நிறுவுதல்‌; (4) இப்பல்கலைக்கழகத்திற்குத்‌ தேவைப்படும்‌ விரிவுரையாளர்‌ பதவிகள்‌, மற்றும்‌ பிற ஆசிரியர்‌ பதவிகளை ஏற்படுத்துதலும்‌ அத்தகைய விரிவுரையாளர்‌ பதவிகள்‌, சிறப்புப்‌ பேராசிரியர்‌ பதவிகள்‌, பேராசிரியர்‌ பதவிகள்‌, பிற ஆசிரியர்‌ பதவிகள்‌ ஆகியவற்றுக்கு நபர்களை நியமித்தலும்‌; (5 நிலைவிதிகளுக்கு இணங்க, பட்டதாரி உதவித்‌ தொகைகள்‌, படிப்புதவித்‌ தொகைகள்‌, மாணவ உதவித்‌ தொகைகள்‌, உதவிச்‌ சம்பளங்கள்‌, ஆதரவுப்‌ படித்தொகைகள்‌, பதக்கங்கள்‌, பரிசுகள்‌ ஆகியவற்றை ஏற்படுத்தி வழங்குதல்‌; (6) ஆராய்ச்சிப்‌ பதவிகளை ஏற்படுத்துதலும்‌, அத்தகைய பதவிகளுக்கு நபர்களை நியமித்தலும்‌; (7) அவ்வப்போது உயர்‌ படிப்புகளுக்கும்‌ ஆராய்ச்சி திட்டங்களுக்கும்‌ ஏற்பாடு செய்தல்‌; (8) தொடர்‌ மருத்துவக்‌ கல்வித்‌ திட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல்‌; (9) ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துதல்‌; மற்றும்‌ (10) பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ உள்ள கல்லூரிகள்‌, பல்கலைக்கழக ஆய்வுக்கூடங்கள்‌, மருத்துவமனைகள்‌, கல்வி நிலையங்கள்‌. ஆகியவற்றிற்கிடையே ஒத்துழைப்பை ஊக்குவித்தலும்‌ இப்பல்கலைக்கழகம்‌ தீர்மானிக்கக்கூடிய முறையிலும்‌ நோக்கங்களுக்காகவும்‌ பிற பல்கலைக்கழகங்களுடனும்‌ பிற அதிகாரஅமைப்புகளுடனும்‌ ஒருங்கிணைந்து செயற்படுதலும்‌. 5. பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரங்கள்‌.- இப்பல்கலைக்கழகம்‌ பின்வரும்‌ அதிகாரங்களைப்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. அதாவது:- (1) ஐ) கல்லூரி அல்லது பல்கலைக்கழக ஆய்வுக்கூடமொன்றில்‌ அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட கல்வி நிலையமொன்றில்‌ ஒப்புதலளிக்கப்பட்ட தொடர்‌ கோவைப்‌ படிப்பொன்றையோ பயிற்சியையோ, நிலை விதிகளால்‌ வகுத்துத்துரைக்கப்பட்ட முறையில்‌ அதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தாலன்றி, மேற்கொள்ள வேண்டியிருந்து இப்பல்கலைக்கழகத்தால்‌ குறித்துரைக்கப்பட்ட தேர்வுகளில்‌ தேறவேண்டியவராயிருக்கிற; அல்லது (௦) நிலைவிதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி ஆராய்ச்சியை நடத்த வேண்டியவராயிருக்கிற, நபர்‌ எவருக்கும்‌ தேர்வுகளை நடத்துதலும்‌ அவருக்குப்‌ பட்டங்கள்‌, பட்டயங்கள்‌, பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றை வழங்குதலும்‌. (2) தன்னாட்சிக்‌ கல்லூரியொன்றில்‌, ஒப்புதலளிக்கப்பட்ட தொடர்‌ கோவைப்‌ படிப்பையோ பயிற்சியையோ அல்லது ஆராய்ச்சியையோ மேற்கொள்ள வேண்டியிருக்கின்ற நபர்களுக்கு பட்டங்கள்‌, பட்டயங்கள்‌, பிற கல்விச்‌ சிறப்புகள்‌: ஆகியவற்றை அளித்தல்‌; (3) வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி மதிப்புறு பட்டங்களை அல்லது பிற கல்வி சிறப்புகளை அளித்தல்‌; (4) இப்பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத்‌ தேவையான ஆராய்ச்சி நிலையங்கள்‌, பல்கலைக்கழகக்‌ கல்லூரிகள்‌, துறைகள்‌, ஆய்வுக்கூடங்கள்‌, மருத்துவமனைகள்‌, நூலகங்கள்‌, அருங்காட்சியகங்கள்‌, பிற கல்வி நிலையங்கள்‌ ஆகியவற்றை நிறுவுதலும்‌, பேணிவருதலும்‌, நிருவகித்தலும்‌; (5 வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ இணைக்கப்பெற்ற கல்லூரிகளாக இப்பல்கலைக்கழகத்தோடு கல்லூரிகளை இணைத்தல்‌ மற்றும்‌ அவ்வாறு இணைப்பு வழங்கியதை திரும்பப்‌ பெற்றுக்கொள்ளுதல்‌; (6) அரசின்‌ ஒப்புதலளிப்புடன்‌ அரசுக்‌ கல்லூரி எதையும்‌ அல்லது கல்வி லையங்கள்‌ எவற்றையும்‌ மேற்கொள்ளுதல்‌; ளூ (7) இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டங்கள்‌, பட்டயங்கள்‌, பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றுக்கான தேர்வுகளுக்கு ஏற்றுக்‌ கொள்ளப்படுவதற்காக பயிற்சி அளிக்கின்ற கல்வி நிலையங்களுக்கு வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி ஒப்புதலளித்தல்‌ மற்றும்‌ அத்தகைய ஒப்புதலளிப்பை திரும்பப்‌ பெற்றுக்‌ கொள்ளுதல்‌; (8) வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி அரசின்‌ முன்‌ இசைவுடன்‌ கல்லூரி எதையும்‌ ஒரு தன்னாட்சிக்‌ கல்லூரியெனக்‌ குறிப்பிடுதல்‌ மற்றும்‌ அவ்வாறு குறிப்பிட்டதை அறவு செய்தல்‌; (9) மாணவர்‌ இல்லங்களை நிறுவி, பேணி, நிருவகித்தல்‌; இப்பல்கலைக்கழகத்தால்‌ பேணி வரப்பட்டு வராத மாணவர்‌ இல்லங்களுக்கு வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி ஏற்பிசைவு அளித்தல்‌ மற்றும்‌ அவ்வாறு ஏற்பிசைவளித்ததைத்‌ திரும்பப்‌ பெற்றுக்கொள்ளுதல்‌; (10) இப்பல்கலைக்கழக மாணவர்களது உடல்‌ நலம்‌ மற்றும்‌ பொதுவான நலம்‌, ஒழுக்கம்‌ ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்ற வகையில்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ கல்வி நிலையங்கள்‌ வாயிலாக அவர்கள்‌ மீது கட்டுப்பாடு செலுத்துதல்‌; (14) இப்பல்கலைக்கழகத்தின்‌ நிலைக்‌ கொடைகளையும்‌ பிற சொத்துக்களையும்‌ நிதியங்களையும்‌ வைத்துவருதலும்‌ நிருவகித்தலும்‌; (12) இப்பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களுக்காக இப்பல்கலைக்கழகச்‌ சொத்தின்‌ பிணையத்தின்‌ பேரில்‌, அரசின்‌ ஒப்புதலளிப்புடன்‌ பணத்தைக்‌ கடன்‌ வாங்குதல்‌; (13) கட்டணங்களைத்‌ தீர்மானித்தலும்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய கட்டணங்களைக்‌ கோரிப்‌ பெற்றுக்கொள்ளுதலும்‌; (14) தேசிய மாணவர்ப்படை, தேசியச்‌ சேவைத்‌ திட்டம்‌ அல்லது பிற அதைப்போன்ற அமைப்புகளைப்‌ பேணிவருவதற்காக, இப்பல்கலைக்கழகத்தின்‌ நிதியங்களிலிருந்து மானியங்கள்‌ வழங்குதல்‌; மற்றும்‌ (15) இப்பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அவசியமாயிருக்கக்கூடிய அல்லது விரும்பத்தக்கதாயிருக்கக்கூடிய பிற செயல்களைச்‌ செய்தல்‌ மற்றும்‌ நடவடிக்கைகளை எடுத்தல்‌. 6. பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ அமைந்துள்ள கல்லூரிகள்‌ பிற பல்கலைக்கழகம்‌ எதனோடும்‌ இணைக்கப்படுதல்‌ ஆகாது என்பதும்‌, பல்கலைக்கழகத்தால்‌ கல்வி நிலையங்களுக்கு ஏற்பிசைவு (அங்கீகாரம்‌) அளிக்கப்படுதலும்‌.- (1) இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்குள்‌ உள்ள கல்லூரி எதுவும்‌ அல்லது கல்வி நிலையங்கள்‌ எவையும்‌, தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகம்‌ அல்லாத பிற பல்கலைக்கழகம்‌ எதனோடும்‌ இணைக்கப்படுதலாகாது. (2) தமிழ்நாடு மாநிலத்திற்குள்ளேயாயினும்‌ அல்லது வெளியேயாயினும்‌ பிற பல்கலைக்கழகம்‌ எதனோடும்‌ இணைக்கப்பட்டுள்ள அல்லது தொடர்பு கொண்டுள்ள அல்லது அதனால்‌ பேணி வரப்படும்‌ கல்வி நிலையம்‌ எதற்கும்‌, அரசு மற்றும்‌ தொடர்புடைய பல்கலைக்கழகம்‌ ஆகியவற்றின்‌ முன்‌ ஒப்புதலளிப்புடனின்றி, எந்த நோக்கத்திற்காகவும்‌ இப்பல்கலைக்கழகத்தால்‌ ஏற்பிசைவு அளிக்கப்படுதலாகாது. அத்தியாயம்‌ ॥. அலுவலர்கள்‌. 7. பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்கள்‌.- இப்பல்கலைக்கழகம்‌ பின்வரும்‌ அலுவலர்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. அதாவது:- (1) வேந்தர்‌; (2) இணை வேந்தர்‌; (3) துணை வேந்தர்‌; (4) பதிவாளர்‌; (5) நிதி அலுவலர்‌; (6) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌; மற்றும்‌ (7) இப்பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்களென நிலை விதிகளால்‌ விளம்பப்படக்கூடிய மற்றவர்கள்‌. 8. வேந்தர்‌.- (1) தமிழ்நாடு ஆளுநர்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ வேந்தராக இருப்பார்‌. அவர்‌, தம்முடைய பதவியின்‌ காரணமாக, இப்பல்கலைக்கழகத்தின்‌ தலைவராக இருப்பார்‌: மற்றும்‌ அவர்‌ வருகை தந்திருக்கும்போது இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டமளிப்பு விழா எதிலும்‌ தலைமை வகித்துப்‌ பட்டங்கள்‌, பட்டயங்கள்‌ அல்லது பிற கல்விச்‌ சிறப்புகள்‌ அவற்றைப்‌ பெறுவதற்குத்‌ தகுதியுடையவர்களுக்கு அளித்தல்‌ வேண்டும்‌. (2) இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகளுக்கு நபர்களை நியமனஞ்‌ செய்வதற்கு, அதிகாரமானது வேந்தருக்கு வழங்கப்படுமிடத்து, வேந்தர்‌ தேவையான அளவிற்கு, மற்றபடி போதிய அளவு சார்பாண்மை பெற்றிராத பிரிவினர்களுக்குச்‌ சார்பாளராக விளங்கும்‌ வகையில்‌ நபர்களைப்‌ பெயர்‌ குறித்து நியமனஞ்‌ செய்தல்‌ வேண்டும்‌. (3) வேந்தர்‌, தாமாக முற்பட்டோ, அல்லது விண்ணப்பத்தின்‌ பேரிலோ, எந்த நடவடிக்கையையும்‌ பொறுத்து, அத்தகைய நடவடிக்கைகளின்‌ முறைமை குறித்தோ அல்லது அவற்றில்‌ பிறப்பிக்கப்பட்ட முடிவு அல்லது செய்யப்பட்ட ஆணை ஏதொன்றின்‌ சீர்மை, சட்ட முறைமை அல்லது பொறுத்தமுடைமை குறித்தோ தாம்‌ நிறைவுறுதி கொள்வதற்காக, இப்பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்‌ எவரின்‌ அல்லது அதிகாரஅமைப்பு எதனின்‌ பதிவுக்கட்டையும்‌ தருவித்துப்‌ பரிசீலனை செய்யலாம்‌; மற்றும்‌, எந்த நேர்விலேனும்‌, அத்தகைய முடிவு அல்லது ஆணை எதுவும்‌ மாற்றியமைக்கப்படவோ அறவு செய்யப்படவோ, எதிர்மாறானதாக்கப்படவோ அல்லது மறுபரிசீலனைக்காகத்‌ திருப்பியனுப்பப்படவோ வேண்டும்‌ என்று வேந்தருக்குத்‌ தோன்றுமானால்‌, அதன்படியே அவர்‌ ஆணைகளைப்‌ பிறப்பிக்கலாம்‌: வரம்புரை: இந்தப்‌ பிரிவின்படியான அதிகாரங்களைச்‌ செலுத்துவதற்காக வேந்தருக்குச்‌ செய்துகொள்ளப்படும்‌ விண்ணப்பம்‌ ஒவ்வொன்றும்‌, அந்த விண்ணப்பம்‌ தொடர்புடையதாயிருக்கிற நடவடிக்கைகள்‌, முடிவு அல்லது ஆணை பற்றி அந்த விண்ணப்பதாரருக்குத்‌ தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌: மேலும்‌ வரம்புரை: எவருக்கேனும்‌ ஊறு விளைவிக்கின்ற ஆணை எதுவும்‌, தமது பக்கத்தை எடுத்துரைப்பதற்கு நியாயமானதொரு வாய்ப்பு அத்தகைய நபருக்குக்‌ கொடுக்கப்பட்டிருந்தாலன்றி பிறப்பிக்கப்படுதலாகாது. (4) வேந்தர்‌, இந்தச்‌ சட்டத்தினால்‌ அல்லது அதன்படி தமக்கு வழங்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச்‌ செலுத்துதலும்‌ பிற அலுவல்களைப்‌ புரிதலும்‌ வேண்டும்‌. 9. இணை வேந்தர்‌.- (1) தமிழ்நாடு மாநிலத்தில்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அமைச்சர்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ இணை வேந்தராக இருப்பார்‌. (2) வேந்தர்‌ வராதபோது, அல்லது வேந்தர்‌ செயற்படுவதற்கு இயலாதபோது, இணை வேந்தர்‌, வேந்தரின்‌ அனைத்து அதிகாரங்களைச்‌ செலுத்துதலும்‌ அனைத்து அலுவல்களைப்‌ புரிதலும்‌ வேண்டும்‌. (3) இணை வேந்தர்‌, இந்தச்‌ சட்டத்தினால்‌, அல்லது அதன்படி தமக்கு வழங்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச்‌ செலுத்துதலும்‌, பிற அலுவல்களைப்‌ புரிதலும்‌ வேண்டும்‌. 10. துணை வேந்தர்‌.- (1) துணை வேந்தரின்‌ ஒவ்வொரு நியமனமும்‌, (2) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள குழுவினால்‌ பரிந்துரைக்கப்பட்ட தலை சிறந்த மூன்று மருத்துவ அறிவியலாளர்களின்‌ பெயர்களைக்‌ கொண்ட பட்டியல்‌ ஒன்றிலிருந்து வேந்தரால்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. அத்தகைய பெயர்‌ பட்டியலில்‌ மேற்சொன்ன குழுவின்‌ உறுப்பினர்‌ எவருடைய பெயரும்‌ அடங்கியிருத்தல்‌ ஆகாது. (2) (1) ஆம்‌ உட்பிரிவின்‌ நோக்கத்திற்காக, அக்குழுவானது மூவரைக்‌ கொண்டிருக்க வேண்டும்‌; அவர்களில்‌ ஒருவர்‌ அரசால்‌ பெயர்குறித்து நியமனஞ்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌; ஒருவர்‌ ஆட்சிப்‌ பேரவையால்‌ பெயர்குறித்து நியமனஞ்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌; ஒருவர்‌ ஆட்சி மன்றத்தால்‌ (Governing பாவி) பெயர்குறித்து நியமனஞ்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: அவ்வாறு பெயர்குறித்து நியமனஞ்‌ செய்யப்பட்டவர்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகளில்‌ ஏதொன்றின்‌ உறுப்பினராகவும்‌ இருத்தலாகாது. (3) துணை வேந்தர்‌ மூன்றாண்டு கால அளவுக்கு பதவி வகித்தல்‌ வேண்டும்‌; மேற்கொண்டு மூன்றாண்டு காலஅளவுக்கு மறு நியமனத்திற்கு உரிமையுடையவராவார்‌. வரம்புரை: எவரும்‌ துணை வேந்தரின்‌ பதவியை மொத்தத்தில்‌ ஆறாண்டிற்கு மேல்‌ அல்லது அறுபத்தைந்து வயதை எய்திய பின்னர்‌ வகித்தல்‌ ஆகாது; (4) (3) ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, வெளியேறுகின்ற துணை வேந்தரின்‌ பதவிக்கால அளவு முடிவடைந்ததை அடுத்துப்‌ பின்னர்‌ துணை வேந்தரொருவரை நியமனம்‌ செய்ய முடியவில்லை என்று வேந்தர்‌ கருதுமிடத்து வெளியேற்றுகின்ற துணை வேந்தரை மொத்தத்தில்‌ ஓராண்டுக்கு மேற்படாமல்‌ பணிப்புரையில்‌ குறிப்பிடக்கூடிய காலஅளவிற்குப்‌ பதவியில்‌ தொடர்ந்து இருந்துவருமாறு அவர்‌ பணிக்கலாம்‌; (5) துணை வேந்தர்‌, வேந்தருக்கு முகவரியிட்டுத்‌ தாம்‌ கையொப்பமிட்டு எழுத்து வாயிலாகவும்‌, இரண்டு மாத அறிவிப்புக்‌ கொடுத்ததற்குப்‌ பின்பும்‌, தமது பதவியை விட்டுவிலகலாம்‌. (6) துணை வேந்தரின்‌ பதவியில்‌ தற்காலிகக்‌ காலியிடம்‌ ஏதேனும்‌ ஏற்படும்போது, அல்லது அத்துணை வேந்தர்‌ வராத காரணத்தாலோ ஏதேனும்‌ பிற காரணத்தாலோ தம்முடைய பதவியின்‌ அதிகாரங்களைச்‌ செலுத்தவும்‌, அலுவல்களைப்‌ புரிந்து வரவும்‌ இயலாதிருப்பாரானால்‌, இப்பல்கலைக்கழகத்தில்‌ மிக்க முதுநிலைப்‌ பேராசிரியர்‌ துணை வேந்தரின்‌ அதிகாரங்களை செலுத்துவதற்கும்‌, அலுவல்களைப்‌ புரிந்துவருவதற்கும்‌ தேவைப்படும்‌ ஏற்பாடுகளை ஆட்சி மன்றம்‌ செய்கின்ற வரையிலும்‌, துணை வேந்தரின்‌ அதிகாரங்களைச்‌ செலுத்திவருதலும்‌, கடமைகளைப்‌ புரிந்துவருதலும்‌ வேண்டும்‌. 11. துணை வேந்தருக்குள்ள பணி வரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌.- (1) துணை வேந்தர்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ முழுநேர அலுவலராக இருத்தல்‌ ஆகும்‌; மற்றும்‌ அவருடைய ஊதியங்களும்‌ பணி குறித்த வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைககளும்‌ பின்வரும்‌ உட்பிரிவுகளில்‌ குறித்துரைக்கப்பட்டவாறு வேண்டும்‌. (2) துணை வேந்தருக்கு, (i) மாதமொன்றுக்கு ரூ.5,000 (ரூபாய்‌ ஐந்தாயிரம்‌ மட்டும்‌) சம்பளமும்‌ மாதமொன்றுக்கு ரூ.2,500 (ரூபாய்‌ இரண்டாயிரத்து ஐந்நூறு மட்டும்‌) தொழிலாற்றாமைப்‌ படித்தொகையும்‌ அல்லது அவ்வப்போது அரசினால்‌ தீர்மானிக்கப்படக்கூடிய உயர்‌ சம்பளமும்‌ தொழிலாற்றாமைப்‌ படித்தொகையும்‌; (il) நிலை விதிகளால்‌ தீர்மானிக்கப்படக்கூடிய பிற மேல்‌ வருமானங்களும்‌ கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) துணை வேந்தர்‌, அவ்வப்போது வேந்தரின்‌ ஒப்புதலளிப்புடன்‌ ஆட்‌ சிமன்றத்தால்‌ தீர்மானிக்கப்படக்கூடிய பணி முடிவு நிலை நன்மைகளும்‌ (terminal benefits) நிலை நன்மைகளையும்‌ பெறுவதற்கு உரிமையுடையவாராவர்‌: வரம்புரை: (ஐ இப்பல்கலைக்கழகத்தின்‌; அல்லது (b) வேறேதேனும்‌ பல்கலைக்கழகத்தின்‌. அல்லது அந்தப்‌ பல்கலைக்கழகத்தால்‌ பேணி வரப்படும்‌ அல்லது அதனோடு இணைக்கப்பட்டுள்ள கல்லூரி அல்லது நிறுவனத்தில்‌, பணியாளரொருவர்‌ துணை வேந்தராக நியமிக்கப்படுமிடத்து, அவர்‌ தொகையளிப்புச்‌ செய்பவராக உள்ள வருங்கால வைப்பு நிதியத்திற்கு தொடர்ந்து தொகையளிக்க அவர்‌ அனுமதிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மேலும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பங்களிப்பானது, துணை வேந்தராக அவர்‌ நியமிக்கப்படுவதற்கு அடுத்து முன்பு அவர்‌ பங்களித்திருந்த அளவுக்கு மட்டுப்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌; (4) துணை வேந்தர்‌, ஆட்சி மன்றத்தால்‌ தீர்மானிக்கப்படக்கூடிய வீதங்களில்‌ பயணப்படிகளுக்கு உரிமையுடையவராவார்‌; (5) துணை வேந்தர்‌, பணியிலிருக்கையில்‌ தம்மால்‌ பணியில்‌ செலவழிக்கப்பட்ட கால அளவில்‌ பதினொன்றில்‌ ஒரு பங்குக்கு முழுச்‌ சம்பளத்துடன்‌ கூடிய ஈட்டிய விடுப்புக்கு உரிமையுடையவராவார்‌; (6) துணை வேந்தர்‌, தம்முடைய பதவிக்‌ காலம்‌ முடிவடைந்ததன்‌ பேரில்‌ அல்லது தம்முடைய பதவியைத்‌ துறந்ததன்‌ பேரில்‌, பெரும்‌ அளவு (உயர்ந்த பட்சம்‌) நூற்று எண்பது நாட்களுக்கு உட்பட்டு, தம்முடைய கணக்கிலுள்ள ஈட்டிய விடுப்பைப்‌ பொறுத்து விடுப்புச்‌ சம்பளத்திற்குச்‌ சம மதிப்புள்ள பணத்தைப்‌ பெறுவதற்கு உரிமையுடையவராவார்‌: (7) துணை வேந்தர்‌, தம்முடைய பதவிக்‌ காலத்தின்‌ போது மூன்று மாதத்திற்கு மேற்படாததொரு காலஅளவுக்கு மருத்துவக்‌ காரணங்களின்‌ பேரில்‌ சம்பளத்துடன்‌ கூடிய விடுப்புக்கு, உரிமையுடையவராவார்‌; 18. துணை வேந்தரின்‌ அதிகாரங்களும்‌, அலுவல்களும்‌.- (1) துணை வேந்தர்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ கல்வித்‌ தலைவராகவும்‌ முதன்மை நிருவாக அலுவலராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ வேந்தரும்‌, இணை வேந்தரும்‌ வருகை தராதபோது, இப்பல்கலைக்கழகத்துப்‌ பட்டமளிப்பு விழா எதிலும்‌ தலைமை வகித்துப்‌ பட்டங்கள்‌, பட்டயங்கள்‌ அல்லது பிற கல்விச்‌ சிறப்புகள்‌, அவற்றைப்‌ பெறுவதற்கு உரிமையுடையவர்களுக்கு வழங்குதல்‌ வேண்டும்‌. அவர்‌, ஆட்சிப்‌ பேரவை, ஆட்‌ சிமன்றம்‌, கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழு, நிதிக்குழு, திட்டமிடும்‌ குழு ஆகியவற்றின்‌ பதவிவழி உறுப்பினராகவும்‌, தலைவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்பு ஏதொன்றின்‌ கூட்டமெதிலும்‌ வந்திருப்பதற்கும்‌ உரை நிகழ்த்துவதற்கும்‌ உரிமையுடையவராயிருத்தல்‌ வேண்டும்‌; ஆனால்‌ தொடர்புடைய அதிகாரஅமைப்பின்‌ ஓர்‌ உறுப்பினராக அவர்‌ இருந்தாலன்றி, அதில்‌ வாக்களிக்க அவர்‌ உரிமையுடையவராகமாட்டார்‌. (2) இந்தச்‌ சட்டம்‌, நிலை விதிகள்‌ (Statues), அவசர விதிகள்‌ (Ordinance), ஒழுங்குமுறை விதிகள்‌ (Regulations) ஆகியவற்றின்‌ வகைமுறைகள்‌ கடைப்பிடிக்கப்படுவதையும்‌ நிறைவேற்றப்படுவதையும்‌ உறுதிப்படுத்திக்‌ கொள்வது துணை வேந்தரின்‌ கடமையாகும்‌; மற்றும்‌ இந்த நோக்கத்திற்காகத்‌ தேவையான அனைத்து அதிகாரங்களையும்‌ அவர்‌ செலுத்தலாம்‌. (3) துணை வேந்தர்‌, ஆட்சிப்‌ பேரவை, ஆட்சி மன்றம்‌, கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழு, நிதிக்குழு ஆகியவற்றின்‌ கூட்டங்களைக்‌ கூட்டுவதற்கு அதிகாரம்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. (4) துணை வேந்தர்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ அலுவல்கள்‌ தொடர்பாக எப்பொருள்‌ குறித்தும்‌ நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம்‌ பெற்றிருப்பார்‌; மற்றும்‌, தாம்‌ தேவை கருதக்கூடிய நடவடிக்கையை எடுத்தல்‌ வேண்டும்‌; ஆனால்‌ அதன்‌ பின்னர்‌ கூடியவிரைவில்‌ அப்பொருள்‌ குறித்து இயல்பாக நடவடிக்கை எடுத்திருக்கக்கூடிய அலுவலருக்கு அல்லது அதிகாரஅமைப்பிற்கு அல்லது குழுமத்திற்கு (Body) எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கையைப்‌ பற்றி அறிக்கை செய்தல்‌ வேண்டும்‌. வரம்புரை: அத்தகைய ஆணை எதுவும்‌, பெரும்பாலும்‌ அதனால்‌ ஊறுபடக்கூடியவருக்கு (பாதிக்கப்படக்கூடியவருக்கு) கேட்கப்படுவதற்கான நியாயமானதொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, பிறப்பிக்கப்படுதலாகாது. (5) (4) — ஆம்‌ உட்பிரிவின்படி துணை வேந்தரால்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கை இப்பல்கலைக்கழகப்‌ பணியிலுள்ள எவரையேனும்‌ ஊறுபடுத்துகிறபோது, அத்தகையவர்‌ அத்தகைய நடவடிக்கை குறித்து அவர்‌ அறிவிப்பு பெற்ற தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்‌ ஆட்சி மன்றத்திடம்‌ மேல்முறையீடொன்றை முன்னிடுவதற்கு உரிமையுடையவராவார்‌. துணை வேந்தர்‌, அத்தகைய மேல்முறையீட்டின்பேரில்‌ ஆட்சி மன்றத்தால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணைவயைச்‌ செயற்படுத்துதல்‌ வேண்டும்‌. (6) துணை வேந்தர்‌, ஆட்சி மன்றத்தின்‌ முடிவுகளுக்‌ செயல்‌ வடிவம்‌ கொடுப்பதற்கான அதிகாரத்தைப்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. (7) துணை வேந்தர்‌ இப்பல்கலைக்கழகத்து அலுவல்களின்மீது கட்டுப்பாட்டதிகாரத்தைச்‌ செலுத்துவதற்கு அதிகாரம்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தில்‌ உரியவாறு ஒழுங்குமுறை பேணிவரப்படுவதற்கு பொறுப்புடையவராயிருத்தல்‌ வேண்டும்‌. (8) துணை வேந்தர்‌, கற்பித்தல்‌ மற்றும்‌ ஆராய்ச்சி விரிவாக்க கல்வி மற்றும்‌ பாடத்‌ திட்ட மேம்பாடு ஆகியவற்றுக்கான ஒத்திசைவிற்கும்‌ (Co—ordination) ஒருங்கிணைப்பிற்கும்‌ பொறுப்புடையவராயிருத்தல்‌ வேண்டும்‌. (9) துணை வேந்தர்‌, நிலை விதிகளினால்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச்‌ செலுத்துதலும்‌ பிற அலுவல்களைப்‌ புரிந்துவருதலும்‌ வேண்டும்‌. 13. பதிவாளர்‌.- (1) பதிவாளர்‌, ஆட்சி மன்றத்தால்‌ அந்த ஆட்சி மன்றம்‌ தீர்மானிக்கக்கூடிய வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்‌ பேரில்‌ நியமிக்கப்படும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ சம்பளம்‌ பெறும்‌ ஒரு முழுநேர அலுவலராக இருத்தல்‌ வேண்டும்‌. (2) பதிவாளர்‌. (ஐ) மருத்துவ அறிவியல்‌ துறையில்‌ ஐந்தாண்டு பட்டறிவுப்‌ பெற்றுள்ள பேராசிரியரொருவரின்‌ படிநிலைக்கு கீழல்லாத ஒரு கல்வியாளராகவோ; அல்லது (b) அரசுத்‌ துணைச்‌ செயலாளரொருவரின்‌ படிநிலைக்குக்‌ கீழல்லாத ஓர்‌ அலுவலராகவோ இருத்தல்‌ வேண்டும்‌. (3) பதிவாளர்‌ மூன்றாண்டு கால அளவுக்குப்‌ பதவி வகித்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ மேலுமொரு மூன்றாண்டிற்கு மறு நியமனம்‌ செய்யப்படுவதற்குத்‌ தகுதியுடையவராவார்‌. வரம்புரை: பதிவாளராக நியமனஞ்‌ செய்யப்பட்டவரெவரும்‌ ஐம்பத்தெட்டு வயதினை எய்தியதும்‌ பதவி வகித்தல்‌ ஆகாது. (4) பதிவாளர்‌ ஆட்சிப்‌ பேரவை, ஆட்சி மன்றம்‌, கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழு, கலையியல்கள்‌ ஆகியவற்றின்‌ பதவிவழிச்‌ செயலாளராக இருத்தல்‌ வேண்டும்‌; ஆனால்‌ இந்த அதிகாரஅமைப்புகளில்‌ ஏதொன்றின்‌ உறுப்பினராகவும்‌ கொள்ளப்படுதலாகாது. (5) பதிவாளரின்‌ பதவி காலியாக இருக்கும்போது, அல்லது பதிவாளர்‌ நோய்‌, பணிக்கு வாராமை அல்லது பிற காரணம்‌ எதனாலேனும்‌ தம்முடைய பதவி அலுவல்களைப்‌ புரிவதற்கு அல்லது கடமைகளை ஆற்றுவதற்கு இயலாதவராக இருக்கும்போது, பதிவாளரின்‌ பதவி அலுவல்கள்‌ மற்றும்‌ கடமைகள்‌, அந்த நோக்கத்திற்காக துணை வேந்தரால்‌ குறிப்பிடப்படக்கூடியவரால்‌ புரிந்து வரப்படுதலும்‌ ஆற்றி வரப்படுதலும்‌ வேண்டும்‌. (6) (a) நிதிக்‌ குழு, ஆட்சி மன்றம்‌ ஆகியவற்றின்‌ முடிவுக்கிணங்க அறக்கட்டளை மற்றும்‌ நிலைக்‌ கட்டளைச்‌ சொத்து உள்ளடங்கலாக இப்பல்கலைக்கழகத்தின்‌ சொத்து, முதலீடு ஆகியவற்றை நிருவகித்தலும்‌; (௦) பதிவு கட்டுகளுக்கும்‌ பொது இலச்சினைக்கும்‌ மற்றும்‌ ஆட்சி மன்றம்‌ அவருடைய பொறுப்புக்கு அனுப்பி வைக்க வேண்டிய இப்பல்கலைக்கழகத்தின்‌. பிற சொத்துகளுக்கும்‌ பாதுகாவலராக இருப்பது; மற்றும்‌ (6) ஆட்சிப்‌ பேரவையின்‌, ஆட்சி மன்றத்தின்‌, கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழுவின்‌, கலையியல்களின்‌ (8600௦5), பாடக்‌ குழுக்களின்‌, தேர்வாளர்‌ குழுக்களின்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகளினால்‌ நியமிக்கப்பட்ட குழு ஏதொன்றின்‌ கூட்டங்களையும்‌ கூட்டுகிற அறிவிப்புகள்‌: அனைத்தையும்‌ அனுப்புவது, பதிவாளரின்‌ கடமையாக இருத்தல்‌ வேண்டும்‌. (7) பதிவாளர்‌ ஆட்சி மன்றத்தால்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச்‌ செலுத்திவருதலும்‌ பிற அலுவல்களைப்‌ புரிந்துவருதலும்‌ கடமைகளை ஆற்றிவருதலும்‌ வேண்டும்‌. (8) இப்பல்கலைக்கழகத்தினால்‌ அல்லது அதற்கு எதிராகத்‌ தொடரப்படும்‌ உரிமைவழக்குகள்‌ மற்றும்‌ எடுக்கப்படும்‌ பிற சட்ட நடவடிக்கைகள்‌ அனைத்திலும்‌, வாதுரைகள்‌ (Pleadings) பதிவாளரால்‌ கையொப்பமிடப்பட்டு உண்மையென உறுதிமொழி அளிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌, அத்தகைய உரிமை வழக்குகளிலும்‌ நடவடிக்கைகளிலும்‌ நீதிமுறைக்‌ கட்டளைகள்‌ (700655) அனைத்தும்‌ பதிவாளருக்குப்‌ பிறப்பிக்கப்பட்டு அவருக்குச்‌ சார்வு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 14. நிதி அலுவலர்‌.- (1) நிதி அலுவலர்‌, அரசினால்‌ பரிந்துரை செய்யப்படும்‌. மூன்று பெயர்களைக்‌ கொண்ட பட்டியல்‌ ஒன்றிலிருந்து ஆட்சி மன்றத்தில்‌ நியமிக்கப்படும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ சம்பளம்‌ பெறும்‌ ஒரு முழுநேர அலவலராக இருத்தல்‌ வேண்டும்‌. அவர்‌ அந்த ஆட்சி மன்றத்தால்‌ குறித்துரைக்கப்படக்கூடிய வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளுக்குட்பட்டு மூன்றாண்டு கால அளவுக்கு பதவி வகித்தல்‌ வேண்டும்‌. (2) நிதி அலுவலரின்‌ ஊதியங்களும்‌, பணி குறித்த வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளும்‌ ஆட்சி மன்றத்தால்‌ வகுத்துரைக்கப்படக்கூடியவையாக இருத்தல்‌ வேண்டும்‌. (3) நிதி அலுவலர்‌, ஐம்பத்தெட்டு வயதினை எய்தியதன்‌ பேரில்‌, ஓய்வு பெறுதல்‌ வேண்டும்‌. (4) நிதி அலுவலரின்‌ பதவி காலியாக இருக்கும்போது அல்லது நிதி அலுவலர்‌, நோய்‌ காரணமாகவோ அல்லது பிற வாராமை காரணமாகவோ அல்லது பிற காரணம்‌ எதனாலேனுமோ தம்முடைய பதவி அலுவல்களைப்‌ புரிந்துவருவதற்கு அல்லது கடமைகளை ஆற்றிவருவதற்கு இயலாதவராக இருக்கும்போது, நிதி அலுவலர்‌ பதவிக்கான அலுவல்களும்‌ கடமைகளும்‌ அந்த நோக்கத்திற்காக துணை வேந்தரால்‌ குறிப்பிடப்படக்கூடியவரால்‌ ஆற்றிவரப்படுதல்‌ வேண்டும்‌. (5) நிதி அலுவலர்‌ நிதிக்‌ குழுவின்‌ பதவிவழிச்‌ செயலாளராக இருத்தல்‌ வேண்டும்‌. ஆனால்‌, அத்தகைய குழுவின்‌ உறுப்பினராகக்‌ கொள்ளப்படுதல்‌ ஆகாது. 15. நிதி அலுவலரின்‌ அதிகாரங்கள்‌, அலுவல்கள்‌ மற்றும்‌ கடமைகள்‌.- (1) நிதி அலுவலர்‌,- (ஐ இப்பல்கலைக்கழகத்தின்‌ நிதியங்கள்‌ மீது பொதுவான கண்காணிப்புச்‌ செலுத்திவருதல்‌ வேண்டும்‌ மற்றும்‌, பல்கலைக்கழகத்தின்‌ நிதிக்கொள்கை குறித்து அதற்கு ஆலோசனை வழங்குதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (௦) ஆட்சி மன்றத்தால்‌ தமக்கு குறித்தளிக்கப்படக்கூடிய அல்லது நிலை விதிகளாலோ அவசர விதிகளாலோ வகுத்துரைக்கப்படக்கூடிய அதிகாரங்களை செலுத்துதலும்‌ பிற நிதிசார்ந்த அலுவல்களைப்‌ புரிந்துவருதலும்‌ வேண்டும்‌. வரம்புரை: நிதி அலுவலர்‌ நிலைவிதிகளின்லோ அவசர விதிகளினாலோ வகுத்துரைக்கப்படக்கூடிய தொகைக்கு மேற்படும்‌ செலவு எதையும்‌ அல்லது முதலீடு எதையும்‌ ஆட்சி மன்றத்தின்‌ முன்‌ ஒப்புதலளிப்புடனின்றி செய்தல்‌ ஆகாது. (2) ஆட்சி மன்றத்தின்‌ கட்டுப்பாட்டதிகாரத்திற்குட்பட்டு நிதி அலுவலர்‌, (ஐ) ஓராண்டிற்கான தொடர்‌ மற்றும்‌ தொடராச்‌ செலவினங்களுக்காக ஆட்சி மன்றத்தால்‌ தீர்மானிக்கப்பட்ட வரம்புகள்‌ மேற்படாதவாறும்‌, பணங்கள்‌ அனைத்தும்‌ அவை வழங்கப்பட்ட அல்லது குறித்தொதுக்கப்பட்ட நோக்கங்களுக்காச்‌ செலவிடப்படுவதையும்‌ உறுதி செய்துகொள்ள வேண்டும்‌; (௦) இப்பல்கலைக்கழகத்தின்‌ ஆண்டு கணக்குகள்‌, நிதி மதிப்பீடுகள்‌, வரவு-செலவுத்‌ திட்டம்‌ ஆகியவற்றைத்‌ தயாரிப்பதற்கும்‌, நிதிக்‌ குழுவிடமும்‌, ஆட்சி மன்றத்திடமும்‌, அவற்றை அளிப்பதற்கும்‌ பொறுப்புடையவராதல்‌ வேண்டும்‌; (௦) பணம்‌ (ரொக்கம்‌) மற்ற வங்கி இருப்புகளையும்‌ முதலீடுகளையும்‌ இடைவிடாது கண்காணித்து வருதல்‌ வேண்டும்‌; (0) வருவாய்‌ வசூலின்‌ (தண்டலின்‌) வளர்ச்சியைக்‌ கண்காணித்து, வசூல்‌ (தண்டல்‌) செய்வதற்குப்‌ பயன்படுத்தப்படும்‌ முறைகள்‌ குறித்து ஆலோசனை வழங்குதல்‌ வேண்டும்‌; (8) கட்டடங்கள்‌, நிலம்‌, அறைகலன்‌ (furniture), சாதனம்‌ ஆகியவற்றின்‌ பதிவேடுகள்‌ நாளதுவரையிலான விவரங்கள்‌: அடங்கியவையாக. வைத்துவரப்படு வதையும்‌, இப்பல்கலைக்கழகத்தால்‌ பேணிவரப்படும்‌. அலுவலகங்கள்‌, மையங்கள்‌, ஆய்வுக்கூடங்கள்‌, கல்லூரிகள்‌ ஆகிய அனைத்திலுமுள்ள சாதனங்கள்‌ மற்றும்‌ பிற நுகரத்தக்க பொருள்களைப்‌ பொறுத்து இருப்பு நிலை சரிபார்க்கும்‌ பணி நடத்தப்படுவதையும்‌ உறுதி செய்துகொள்ளுதல்‌ வேண்டும்‌; (9) அதிகாரமளிக்கப்படாத செலவினம்‌ ஏதேனும்‌ செய்யப்பட்டிருந்தால்‌ அல்லது பிற நிதிசார்‌ முறைகேடு ஏதேனும்‌ நிகழ்ந்திருந்தால்‌ அதுபற்றித்‌ துணை வேந்தர்‌ கவனத்திற்குக்‌ கொண்டு வருதல்‌ வேண்டும்‌: மற்றும்‌ தவறு செய்துள்ளவர்‌ மீது எடுக்கப்படவேண்டிய உரிய நடவடிக்கை குறித்து யோசனை கூறுதலும்‌ வேண்டும்‌; (ஐ) இப்பல்கலைக்கழகத்தினால்‌ பேணிவரப்படும்‌ அலுவலகம்‌, மையம்‌, ஆய்வுக்கூடம்‌, கல்லூரி ஆகிய எதிலிருந்தும்‌ தம்முடைய அலுவல்களைப்‌ புரிவதற்காகவும்‌ கடமைகளை ஆற்றுவதற்காகவும்‌ தாம்‌ தேவையெனக்‌ கருதக்கூடிய தகவல்‌ அல்லது விவர அறிக்கை எதையும்‌ தருவித்தல்‌ வேண்டும்‌; 16. தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌.- (1) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்‌ மருத்துவ அறிவியல்‌ துறையில்‌ ஒரு கல்வியாளராகவும்‌, ஆட்சி மன்றத்தால்‌ தீர்மானிக்கப்படக்கூடிய வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்பேரில்‌ அவ்வாட்சி மன்றத்தால்‌ நியமிக்கப்படும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ ஒரு முழுநேர அலுவலராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. (2) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ மூன்றாண்டு காலஅளவுக்குப்‌ பதவி வகித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ மேலும்‌ மூன்றாண்டு காலஅளவுக்கு மறு நியமனஞ்‌ செய்யப்படுவதற்கு தகுதியுடையவராவார்‌; வரம்புரை: தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலராக நியமிக்கப்பட்ட எவரும்‌ ஐம்பத்தெட்டு வயதை எய்தியதும்‌ பதவி வகித்தல்‌ ஆகாது. (3) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, நிலை விதிகளில்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய அதிகாரங்களைச்‌ செலுத்தி வருதலும்‌ அலுவல்களைப்‌ புரிந்துவருதலும்‌ கடமைகளை ஆற்றிவருதலும்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ 1V. அதிகாரஅமைப்புகள்‌. 17. பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகள்‌.- (1) ஆட்சிப்‌ பேரவை; (2) ஆட்சி மன்றம்‌; (3 நிதிக்‌ குழு; (4) கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழு; (5) கலையியல்கள்‌; (6) பாடக்‌ குழுக்கள்‌; (7) திட்டமிடும்‌ குழு; (8) இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளென ஆகியவை நிலை விதிகளால்‌ விளம்பப்படக்கூடிய பிற அதிகாரஅமைப்புகள்‌ ஆகியவை இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகளாக இருத்தல்‌ வேண்டும்‌. 18. ஆட்சிப்‌ பேரவை.- (1) ஆட்சிப்‌ பேரவை, பதவிவழி உறுப்பினர்களையும்‌ பிற உறுப்பினர்களையும்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌, (2) (6) வேந்தர்‌; (b) இணை வேந்தர்‌; (6) துணை வேந்தர்‌; (0) மருத்துவக்‌ கல்வி இயக்குநர்‌; (6) மருத்துவப்‌ பணி மற்றும்‌ குடும்ப நலத்துறை இயக்குநர்‌; (f) பொதுச்‌ சுகாதாரம்‌ மற்றும்‌ நோய்த்‌ தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர்‌; (ஐ இந்திய மருத்துவம்‌ மற்றும்‌ ஹோமியோபதி துறை இயக்குநர்‌; 0 இப்பல்கலைக்கழகப்‌ பாட மற்றும்‌ ஆராய்ச்சி துறைகளின்‌ தலைவர்கள்‌; (i) அனைத்து மருத்துவக்‌ கல்லூரிகளின்‌ துறைத்‌ தலைவர்கள்‌ அல்லது முதல்வர்கள்‌; () இந்திய மருத்துவமுறை மற்றும்‌ ஹோமியோபதிக்‌ கல்லூரிகளின்‌ துறைத்‌ தலைவர்கள்‌ அல்லது முதல்வர்கள்‌; (k) மேற்பட்டப்‌ படிப்பு பல்‌ மருத்துவக்‌ கல்லூரிகளின்‌ முதல்வர்கள்‌; () மேற்பட்ட படிப்பு செவிலிமைக்‌ கல்லூரிகளின்‌ முதல்வர்கள்‌; (m) மேற்பட்டப்‌ படிப்பு மருந்தாக்கக்‌ கல்லூரிகளின்‌ துறைத்‌ தலைவர்கள்‌ அல்லது முதல்வர்கள்‌; (ற தமிழ்நாடு மாநில மருத்துவக்‌ கழகத்தின்‌ தலைவர்‌; (௦) தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக்‌ கழகத்தின்‌ தலைவர்‌; (ஐ தமிழ்நாடு இந்திய மருத்துவ வாரியத்தின்‌ தலைவர்‌; (@ மற்றபடி ஆட்சிப்‌ பேரவையின்‌ உறுப்பினர்களாயில்லாத ஆட்சி மன்றத்தின்‌ உறுப்பினர்கள்‌; மற்றும்‌ (N இப்பல்கலைக்கழக நூலகத்தின்‌ நூலகர்‌ ஆட்சிப்‌ பேரவையின்‌ பதவிவழி உறுப்பினர்களாவர்‌. விளக்கம்‌.- (ஏ) கூறின்‌ காரணமாக ஆட்சிப்‌ பேரவை உறுப்பினரொருவராக இருக்கிற மக்கள்‌ நல்வாழ்வு மற்றும்‌ குடும்பநலத்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌, அல்லது நிதித்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌ அல்லது கல்வித்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌ அல்லது சட்டத்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌ எக்காரணத்திற்காகவேனும்‌ ஆட்சிப்‌ பேரவைக்‌ கூட்டம்‌ எதிலேனும்‌ கலந்துகொள்ள இயலாது போனால்‌, அவர்‌, அக்கூட்டத்தில்‌ கலந்துகொள்வதற்கு அரசுத்‌ துணைச்‌ செயலாளரின்‌ படிநிலைக்கு கீழல்லாத தம்முடைய துறை அலுவலரெவரையும்‌ அனுப்பி வைக்கலாம்‌. அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட அலுவலர்‌ அக்கூட்டத்தி கலந்துரையாடல்களில்‌ பங்கேற்கும்‌ உரிமையைப்‌ பெற்றிருத்தலும்‌ வேண்டும்‌; மற்றும்‌ வாக்களிக்கும்‌ உரிமையைப்‌ பெற்றிருத்தலும்‌ வேண்டும்‌. (3) (லு இணைக்கப்பட்ட மருத்துவக்‌ கல்லூரி ஒவ்வொன்றின்‌ ஆசிரியர்களாலும்‌ தங்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பேராசிரியர்‌; (b) இணைக்கப்பட்ட அனைத்துப்‌ பல்‌ மருத்துவ கல்லூரிகளின்‌ ஆசிரியர்களாலும்‌ தங்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பேராசிரியர்‌; (c) இணைக்கப்பட்ட அனைத்துச்‌ செவிலிமைக்‌ கல்லூரிகளின்‌ ஆசிரியர்களாலும்‌ தங்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பேராசிரியர்‌; (0) இணைக்கப்பட்ட அனைத்து மருந்தாக்கக்‌ கல்லூரிகளின்‌ ஆசிரியர்களாலும்‌ தங்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பேராசிரியர்‌; (e) தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையின்‌ உறுப்பினர்களால்‌ தங்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள்‌; (0). இந்திய மருத்துவக்‌ கழகத்தின்‌ தலைவரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்ட ஓர்‌ உறுப்பினர்‌; (ஐ இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்‌ கழகத்தின்‌ தலைமை இயக்குநரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்ட ஓர்‌ உறுப்பினர்‌; (h) (i) வணிக மன்றங்கள்‌ (Chambers of Commerce); (i) பொறியியல்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்பம்‌ உள்ளடங்கலான தொழில்கள்‌; 0) சமூக அறிவியல்கள்‌; (iv) பிற அறிவியல்கள்‌; மற்றும்‌ (V) சட்டம்‌. ஆகியவற்றில்‌ ஒவ்வொரு துறைக்கும்‌ சார்பாளராக வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்ட ஒவ்வோர்‌ உறுப்பினர்‌ மற்றும்‌. (i) (A) பட்டியல்‌ சாதியினர்‌ மற்றும்‌ பட்டியல்‌ பழங்குடியினர்‌; மற்றும்‌ (8) விளையாட்டுத்‌ துறை ஆகிய ஒவ்வொன்றுக்கும்‌ சார்பாண்மை பெற்றுத்‌ தருவதற்காக இணை வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்ட ஒவ்வோர்‌ உறுப்பினர்‌ ஆகியோர்‌ ஆட்சிப்‌ பேரவையின்‌ பிற உறுப்பினர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. 149. இப்பல்கலைக்கழகத்தின்‌ விரிவான கொள்கைகளையும்‌ செயல்‌ திட்டங்களையும்‌ ஆட்சிப்பேரவை ஆய்வு செய்தல்‌.- இச்சட்டத்தின்‌ பிற வகைமுறைகளுக்குட்பட்டு, ஆட்சிப்‌ பேரவை பின்வரும்‌ அதிகாரங்களையும்‌ அலுவல்களையும்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌, அதாவது:- (ஐ இப்பல்கலைக்கழகத்தின்‌ விரிவான கொள்கைகளையும்‌ செயல்‌ திட்டங்களையும்‌ அவ்வப்போது ஆய்வு செய்து இப்பல்கலைக்கழகத்தின்‌ மேம்பாட்டிற்கும்‌ வளர்ச்சிக்குமான நடடிக்கைகளை யோசனை கூறுதல்‌; (b) ஆலோசனைக்காக வேந்தரால்‌ குறித்தனுப்பப்படக்கூடிய எப்பொருள்‌ குறித்தும்‌ அவருக்கு ஆலோசனை கூறுதல்‌; மற்றும்‌ (c) நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய பிற அதிகாரங்ளைச்‌ செலுத்துவதும்‌, பிற அலுவல்களைப்‌ புரிந்து வருதலும்‌. 20. ஆட்சிப்‌ பேரவையின்‌ கூட்டங்கள்‌. (1) ஆட்சிப்‌ பேரவை, துணை வேந்தரால்‌ தீர்மானிக்கப்பட வேண்டிய தேதிகளில்‌ ஒவ்வொரு ஆண்டிலும்‌ குறைந்தது இருமுறையேனும்‌ கூடுதல்‌ வேண்டும்‌. அத்தகைய கூட்டங்களுள்‌ ஒன்று, ஆண்டு கூட்டம்‌ என வழங்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) ஆட்சிப்‌ பேரவையின்‌ உறுப்பினர்களின்‌ மொத்த எண்ணிக்கையில்‌ மூன்றில்‌ ஒரு பகுதி ஆட்சிப்‌ பேரவையின்‌ கூட்டமொன்றுக்காகத்‌ தேவைப்படும்‌ குறைவெண்வரம்பாகும்‌ (Quorum); வரம்புரை: அத்தகைய குறைவெண்‌ வரம்பு இப்பல்கலைக்கழகத்தின்‌. பட்டமளிப்பு விழா ஒன்றிற்குத்‌ தேவைப்படுதல்‌ ஆகாது. (3) துணை வேந்தர்‌, தாம்‌ பொருத்தமென நினைக்கிற போதெல்லாம்‌ ஆட்சிப்‌ பேரவையின்‌ சிறப்புக்‌ கூட்டத்தைக்‌ கூட்டலாம்‌: மற்றும்‌ ஆட்சிப்‌ பேரவையின்‌ மொத்த உறுப்பினர்களில்‌ ஐம்பது விழுக்காட்டிற்குக்‌ குறையாதவர்களால்‌ கையொப்பமிடப்பட்டுச்‌ செய்யப்படும்‌ எழுத்துருவிலான வேண்டுகோள்‌ ஒன்றின்‌. பேரில்‌, ஆட்சிப்‌ பேரவையின்‌ சிறப்புக்‌ கூட்டத்தை கூட்டுதல்‌ வேண்டும்‌. 21. ஆட்சி மன்றம்‌ (governing council).— (1) வேந்தர்‌, 47 ஆம்‌ பிரிவின்படி முதல்‌ துணை வேந்தர்‌ நியமிக்கப்பட்டதற்குப்‌ பின்பு, கூடிய விரைவில்‌ ஆட்சி மன்றத்தை அமைத்தல்‌ வேண்டும்‌. (2) அவ்வாட்சி மன்றம்‌ துணைவேந்தரோடு கூட பதவிவழி உறுப்பினர்களையும்‌ பிற உறுப்பினர்களையும்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. (3) (ஐ மக்கள்‌ நல்வாழ்வு மற்றும்‌ குடும்பநலத்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (௦) நிதித்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (௦) கல்வித்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (0) சட்டத்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (6) மருத்துவக்‌ கல்வி இயக்குநர்‌; (N மருத்துவப்‌ பணி மற்றும்‌ குடும்ப நல இயக்குநர்‌; மற்றும்‌ (9) இந்திய மருத்துவ மற்றும்‌ ஹோமியோபதி மருத்துவ இயக்குநர்‌; ஆகியோர்‌ ஆட்சி மன்றத்தின்‌ பதவிவழி உறுப்பினர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- எக்காரணத்தினாலேனும்‌ (ஐ, (0௦), (6) அல்லது (0) கூறில்‌ சுட்டப்பட்ட ஆட்சி மன்றத்தின்‌ பதவிவழி உறுப்பினர்‌ எவரேனும்‌ ஆட்சி மன்றத்தின்‌ கூட்டம்‌ எதிலும்‌ கலந்து கொள்ள இயலாது போனால்‌, அவர்‌ அத்தகைய கூட்டத்தில்‌ கலந்து கொள்வதற்கு அரசுத்‌ துணைச்‌ செயலாளரின்‌ படிநிலைக்குக்‌ கீழளல்லாத தம்முடைய துறை அலுவலர்‌ எவரையும்‌ அனுப்பி வைக்கலாம்‌. அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட அலுவலர்‌ அக்குழுக்‌ கலந்துரையாடல்களில்‌ பங்கேற்கும்‌ உரிமையைப்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ வாக்களிக்கும்‌ உரிமையைப்‌ பெற்றிருத்தலும்‌ வேண்டும்‌. (4) (a) ஆட்சிப்‌ பேரவையால்‌ தன்னுடைய உறுப்பினர்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள்‌; (௦) மருத்துவ அறிவியல்‌ தொடர்க்கோவைப்‌ படிப்பிற்கும்‌ பயிற்சிக்கும்‌ வகைசெய்கின்ற இணைக்கப்பட்ட கல்லூரிகளின்‌. தலைவர்களாலோ, முதல்வர்களாலோ தங்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள்‌; (c) இப்பல்கலைக்கழகத்தின்‌ பேராசிரியர்களால்‌ தங்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர்‌ உறுப்பினர்‌; மற்றும்‌ (0) துணைவேந்தரின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ வேந்தரால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்ட மருத்துவக்‌ கல்வி வல்லுநர்‌ ஒருவர்‌, ஆகியோர்‌ ஆட்சிமன்றத்தின்‌ பிற உறுப்பினர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. 22. ஆட்சிமன்றத்தின்‌ அதிகாரங்கள்‌.- (a) ஆட்சிமன்றம்‌, பின்வரும்‌ அதிகாரங்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. அதாவது,- 1) நிலைவிதிகளைச்‌ செய்தல்‌ மற்றும்‌ அந்நிலை விதிகளைத்‌ திருத்துதல்‌ அல்லது அறவு செய்தல்‌; (2) அவசர விதிகளைச்‌ செய்தல்‌ மற்றும்‌ அவற்றைத்‌ திருத்துதல்‌ அல்லது அறவு செய்தல்‌; (3) இப்பல்கலைக்கழகத்தின்‌ சொத்துகளையும்‌, நிதியங்களையும்‌ வைத்துவருதலும்‌, கட்டுப்பாடு செய்தலும்‌, நிருவகித்து வருதலும்‌; (4) மருத்துவ அறிவியலில்‌ தான்‌ பொருத்தமென நினைக்கக்கூடிய கல்விப்‌ பிரிவுகளில்‌ கற்பிப்பதற்கும்‌ பயிற்றுவிப்பதற்கும்‌ வகைசெய்தல்‌; (மருத்துவ அறிவியலில்‌ தான்‌ பொருத்தமெனக்‌ கருதக்கூடிய கல்விப்‌ பிரிவுகளில்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பாடத்‌ துறைகளை ஏற்படுத்துதல்‌; (6) மருத்துவ அறிவியலில்‌ ஆராய்ச்சிக்கும்‌ அறிவை மேம்படுத்துவதற்கும்‌ பரப்புவதற்கும்‌ வகைசெய்தல்‌; (7) விரிவுரையாளர்‌ பதவிகள்‌, சிறப்புப்‌ பேராசிரியர்‌ பதவிகள்‌, பேராசிரியர்‌ பதவிகள்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்திற்கு தேவைப்படும்‌ பிற ஆசிரியர்ப்‌ பதவிகளை ஏற்படுத்துதல்‌; (8) இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட வேண்டிய வல்லுநர்‌ குழுக்களுடன்‌ கலந்தாய்வு செய்து, இப்பல்கலைக்கழகத்துடன்‌ கல்லூரிகளை இணைத்தலுக்கான அல்லத இப்பல்கலைக்கழகத்தால்‌ கல்வி நிலையங்களுக்கு ஏற்பிசைவு அளிக்கப்படுவதற்கான மற்றும்‌ அவ்வாறு இணைப்பு வழங்கியதை அல்லது ஏற்பிசைவு அளித்ததைத்‌ திரும்பப்‌ பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை வகுத்துரைத்தல்‌; (9) பட்டங்கள்‌, பட்டயங்கள்‌, பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றை ஏற்படுத்துதல்‌; (10) (ஐ கல்லூரி அல்லது பல்கலைக்கழக ஆய்வுக்கூடமொன்றில்‌ அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட கல்வி நிலையமொன்றில்‌ ஒப்புதலளிக்கப்பட்ட தொடர்கோவைப்‌ படிப்பை அல்லது பயிற்சியை, நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ அதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தாலன்றி, மேற்கொண்டிருக்க வேண்டியவர்களாகவிருந்து, இப்பல்கலைக்கழகத்தால்‌ வகுத்துரைக்கப்பட்ட தேர்வுகளில்‌ தேறவேண்டியவர்களாக இருக்கின்ற; அல்லது (b) நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி ஆராய்ச்சி நடத்தி இருக்க வேண்டியவர்களாக இருக்கின்ற நபர்கள்‌ எவருக்கும்‌ பட்டங்கள்‌, பட்டயங்கள்‌ மற்றும்‌ பிற கல்விச்‌ சிறப்புகளை அளித்தல்‌; (11) மூன்றில்‌ இரண்டு பங்குக்குக்‌ குறையாத தனது உறுப்பினர்களின்‌ பரிந்துரையின்பேரில்‌, மதிப்புறு (கெளரவப்‌) பட்டங்களை அல்லது பிற மதிப்புறு கல்விச்‌ சிறப்புகளை அளித்தல்‌; (12) ஆண்டறிக்கை, ஆண்டு கணக்குகள்‌, நிதிசார்‌ மதிப்பீடுகள்‌: ஆகியவற்றிற்காகத்‌ தான்‌ பொருத்தமெனக்‌ கூடிய நடவடிக்கையைப்‌ பரிச்லனை செய்தலும்‌ மேற்கொள்ளுதலும்‌; (13) இப்பல்கலைக்கழகத்‌ துறைகளிலும்‌ இப்பல்கலைக்கழகக்‌ கல்லூரிகளிலும்‌ இணைக்கப்பட்ட கல்லூரிகளிலும்‌ உள்ள ஆசிரியர்களின்‌ தகுதிப்பாடுகளை நிலைவிதிகளில்‌ வகுத்துரைத்தல்‌; (14) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்‌, பேராசிரியர்கள்‌, சிறப்புப்‌ பேராசிரியர்கள்‌, ஆசிரியர்கள்‌ ஆகியோரை இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட வல்லுநர்கள்‌ தேர்வுக்குழுவின்‌ பரிந்துரையின்பேரில்‌ நியமித்தல்‌; அவர்களது ஊதியங்களைத்‌ தீர்மானித்தல்‌ அவர்களுடைய கடமைகளையும்‌ அவர்களது பணிகள்‌ குறித்த நிபந்தனைகளையும்‌ வரையறுத்தல்‌; மற்றும்‌ தற்காலிகக்‌ காலியிடங்களை நிரப்புவதற்கு வகைசெய்தல்‌; (15) நிருவாகப்‌ பதவிகளுக்கும்‌ பிற பதவிகளுக்கும்‌ நபர்களை நியமிக்கின்ற முறையைக்‌ குறித்துரைக்கின்ற நிலைவிதிகளைச்‌ செய்தல்‌: தற்காலிகக்‌ காலியிடங்களை நிரப்புவதற்கு வகைசெய்தல்‌; மற்றும்‌ அவர்களுடைய கடமைகளையும்‌, பணி நிபந்தனைகளையும்‌ வரையறுத்தல்‌; (16) நிலைவிதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ பல்கலைக்கழகப்‌ பேராசிரியர்கள்‌, சிறப்புப்‌ பேராசிரியர்கள்‌, விரிவுரையாளர்கள்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பிற பணியாளர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்தல்‌; மற்றும்‌ அந்நிலை விதிகளில்‌ குறித்துரைக்கப்படக்கூடிய தண்டனைகளை விதித்தல்‌ மற்றும்‌ விசாரணை நடப்பிலிருக்கையில்‌ அவர்களைத்‌ தற்காலிகப்‌ பணி நீக்கத்தில்‌ வைத்தல்‌; (17) இப்பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்ட அல்லது இணைக்கப்படவுள்ள கல்லூரிகள்‌, மருத்துவமனைகள்‌ மற்றும்‌ பிற கல்வி நிலையங்கள்‌ அனைத்தும்‌ ஆய்வு செய்யப்படுமாறு செய்வித்தல்‌; மற்றும்‌ தேவையெனக்‌ கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகளை எடுத்தல்‌; (18) கல்வி அலுவல்‌ நிலைக்‌ குழுவுடன்‌ கலந்தாய்வு செய்து ஒரு கல்லூரியோ கல்வி நிலையமோ எந்த முறையிலும்‌ எந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டும்‌ ஒரு தன்னாட்சிக்‌ கல்லூரியாக அல்லது ஒரு கல்வி நிலையமாகக்‌ குறிப்பிடப்படலாம்‌ என்பதையும்‌ அவ்வாறு குறிப்பிடப்பட்டது அறவு செய்யப்டலாம்‌ என்பதையும்‌ வகுத்துரைத்தல்‌; (19) அரசின்‌ இசைவுடன்‌, கல்லூரி எதனையும்‌ ஒரு தன்னாட்சிக்‌ கல்லூரியாகக்‌ குறிப்பிடுதல்‌ மற்றும்‌ அவ்வாறு குறிப்பிட்டதை அறவு செய்தல்‌; (20) ஆய்வு குழுவின்‌ அறிக்கையின்‌ பேரில்‌ இப்பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்திற்கு வெளியேயுள்ள கல்லூரி அல்லது கல்வி நிலையம்‌ எதற்கும்‌ ஏற்பிசைவு அளித்தல்‌; (21) மைய அரசிடமிருந்து அல்லது மாநில அரசு எதனிடமிருந்தும்‌ அல்லது மைய அரசுக்கு அல்லது மாநில அரசு எதற்கேனும்‌ சொந்தமான அல்லது அதன்‌ கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனம்‌ எதனிடமிருந்தும்‌ அல்லது பொது மக்களிடமிருந்து இப்பல்கலைக்கழகத்தின்‌ சார்பாகக்‌ கடன்கள்‌ பெறுதல்‌; (22) இப்பல்கலைக்கழகச்‌ சொத்தின்‌ பிணையத்தின்‌ பேரில்‌, அரசின்‌ ஒப்புதலளிப்புடன்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களுக்காக பணத்தைக்‌ கடன்‌ வாங்குதல்‌; (23) பாடக்‌ குழுக்களின்‌ பரிந்துரையின்பேரில்‌ தேர்வாளர்களை நியமித்தல்‌ மற்றும்‌ அவர்களது ஊதியத்தை தீர்மானித்தல்‌; (24) நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய கட்டணங்களை விதித்தலும்‌ வசூலித்தலும்‌; (25) இப்பல்கலைக்கழகம்‌ தேர்வுகளை நடத்துதலும்‌ அத்தேர்வுகளின்‌ முடிவுகளை ஏற்றுக்‌ கொள்ளுதலும்‌ வெளியிடுதலும்‌; (26) பாடக்‌ குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமித்தல்‌; (27) இப்பல்கலைக்கழகத்தில்‌ மாணவர்களைச்‌ சேர்த்துக்‌ கொள்வது தொடர்பாக, அல்லது பல்கலைக்கழகத்‌ தேர்வுகளுக்குச்‌ சமமானவையாக ஏற்பிசைவு அளிக்கப்பட வேண்டிய தேர்வுகளை வகுத்துரைக்கின்ற அவசர விதிகளைச்‌ செய்தல்‌; (28) மாணவர்‌ இல்லங்களை அமைத்தலும்‌ பேணி வருதலும்‌; (29) இப்பல்கலைக்கழகத்தால்‌ பேணி வரப்படாத மாணவர்‌ இல்லங்களுக்கு ஏற்பிசைவு அளித்தல்‌ மற்றும்‌ அத்தகைய மாணவர்‌ இல்லத்திற்கு எந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏற்பிசைவு அளிக்கப்பட்டதோ அந்த நிபந்தனைகளுக்கிணங்க நடத்தப்‌ பெறாத மாணவர்‌ இல்லம்‌ எதனின்‌ ஏற்பிசைவையும்‌ தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்‌ அல்லது திரும்பப்‌ பெற்றுக்‌ கொள்ளுதல்‌; (30) இப்பல்கலைக்கழக மாணவர்களின்‌ இருப்பிடத்தைக்‌ கண்காணித்தல்‌; மற்றும்‌ அவர்களின்‌ உடல்‌ நலத்தையும்‌ பொது நலத்தையும்‌ உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளைச்‌ செய்தல்‌; (31) நிலை விதிகளுக்கிணங்க பட்டதாரி உதவித்‌ தொகைகள்‌, பட்டதாரி பண உதவித்‌ தொகைகள்‌, மாணவ உதவித்‌ தொகைகள்‌, பதக்கங்கள்‌, பரிசுகள்‌ ஆகியவற்றை அளித்தல்‌; (32) இப்பல்கலைக்கழகத்தால்‌ நிறுவப்பட்ட நூல்‌ வெளியீட்டுக்‌ கழகம்‌, வேலை வாய்ப்புக்‌ கழகம்‌, பல்கலைக்கழக விளையாட்டு அல்லது உடற்பயிற்சிக்‌ கழகங்கள்‌ எவற்றையும்‌ நிருவகித்தல்‌; (33) இப்பல்கலைக்கழகத்தின்‌ படிப்பையும்‌ கற்பித்தலையும்‌ ஆய்வு செய்தல்‌; (34) இப்பல்கலைக்கழகத்திற்குள்‌' ஆராய்ச்சியை வளர்த்தலும்‌ அத்தகைய ஆராய்ச்சி பற்றி அவ்வப்போது அறிக்கைகளைக்‌ கோருதலும்‌; (35) குறிப்பிட்ட நோக்கங்களுக்காக இப்பல்கலைக்கழகத்தின்‌ பொறுப்பில்‌ விடப்பட்டுள்ள சொத்துகள்‌, நிதியங்கள்‌ ஆகிய அனைத்தையும்‌ நிருவகித்தல்‌; மற்றும்‌ (36) இப்பல்கலைக்கழகத்திற்குச்‌ செய்யப்பட்ட நிலைக்‌ கொடைகள்‌, விருப்ப ஆவண வழிக்‌ கொடைகள்‌, நன்கொடைகள்‌, மானியமளிப்புகள்‌ மற்றும்‌ அசையும்‌ மற்றும்‌ அசையாச்‌ சொத்தொன்றின்‌ உரிமை மாற்றங்கள்‌ ஆகியவற்றை இப்பல்கலைக்கழகத்தின்‌ சார்பாக ஏற்றுக்கொள்ளுதல்‌. 23. ஆட்சி மன்றத்தின்‌ கூட்டங்கள்‌.- (1) ஆட்சிமன்றம்‌ நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய காலங்களிலும்‌ இடங்களிலும்‌ கூடுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (2), (3) ஆகிய உட்பிரிவுகளின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு கூட்டங்களின்‌ குறைவெண்‌ வரம்பு உள்ளடங்கலாக நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய நடைமுறை விதிகளைக்‌ கடைப்பிடித்தல்‌ வேண்டும்‌. (2) துணை வேந்தர்‌ அல்லது அவர்‌ வராதபோது, வந்திருக்கும்‌ உறுப்பினர்களால்‌ தெரிந்தெடுக்கப்படும்‌ உறுப்பினர்‌ எவரும்‌ ஆட்சிமன்றத்தின்‌ கூட்டமொன்றுக்கு தலைமை வகித்தல்‌ வேண்டும்‌. (3) ஆட்சிமன்றத்தின்‌ கூட்டம்‌ எதிலும்‌ எழும்‌ அனைத்து கேள்விகளும்‌, வந்திருந்து வாக்களிக்கின்ற உறுப்பினர்களின்‌ வாக்கி பெரும்பான்மையினால்‌ முடிவு செய்யப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ வாக்குகள்‌ சமமானவையாக அமையும்‌ நேர்வில்‌, துணை வேந்தரோ அல்லது நேர்விற்கேற்ப தலைமை வகிக்கின்ற உறுப்பினரோ இரண்டாவது அல்லது அறுதிவாக்கு (Casting vote) ஒன்றைப்‌ பெற்றிருத்தலும்‌ செலுத்துதலும்‌ வேண்டும்‌. (4) (ஐ) ஆட்சி மன்றம்‌, கலந்தாலோசிக்கும்‌ நோக்கத்திற்காக பரிசீலனையில்‌ உள்ள பொருள்‌ எதிலும்‌ சிறப்பு அறிவையோ நடைமுறைப்‌ பட்டறிவையோ பெற்றிருக்கின்ற எவரையும்‌ கூட்டம்‌ எதற்கும்‌ வருகை தருமாறு அழைப்புவிடுக்கலாம்‌. அத்தகையவர்‌ அத்தகைய கூட்டத்தின்‌ நடவடிக்கைகளில்‌ பேசலாம்‌. மற்றப்படி பங்கேற்கலாம்‌; ஆனால்‌ வாக்களிப்பதற்கு உரிமையுடையவராகமாட்டார்‌; (b) அவ்வாறு அழைக்கப்பட்டவர்‌ ஆட்சிமன்றத்தின்‌ உறுப்பினர்‌ ஒருவருக்கு அனுமதிக்கத்தக்ககான நாட்படி மற்றும்‌ பயணப்படிகளுக்கு உரிமையுடையவராயிருத்தல்‌ வேண்டும்‌. 24, உறுப்பினர்கள்‌. ஊதியத்திற்கு (remuneration) உரிமையுடையவராகமாட்டார்கள்‌ என்பது.- ஆட்சிமன்றத்தின்‌ உறுப்பினர்கள்‌. நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய நாட்படி மற்றும்‌ பயணப்படிகள்‌ தவிர இப்பல்கலைக்கழகத்திடமிருந்து ஊதியம்‌ எதையும்‌ பெறுவதற்கு உரிமையுடையவராகமாட்டார்கள்‌. வரம்புரை: இந்தப்‌ பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌ உறுப்பினர்‌ எவரையும்‌ தாம்‌ வகிக்கின்ற பதவியின்‌ காரணமாக தாம்‌ உரிமையுடையவராயிருக்கிற தம்முடைய ஊதியங்களைப்‌ பெறுவதை தடை செய்தலாகாது. 25. உறுப்பினர்களின்‌ பதவி விலகல்‌.- ஆட்சிமன்றத்தின்‌ பதவிவழி உறுப்பினர்களல்லாத பிற உறுப்பினர்‌ ஒருவர்‌ தம்முடைய பதவிக்கால அளவு முடிவடைவதற்கு முன்பு எந்தச்‌ சமயத்திலும்‌ தம்முடைய உறுப்பினர்‌ பதவி விலகலைக்‌ கொடுக்கலாம்‌. அத்தகைய பதவி விலகலானது வேந்தருக்கு அவ்வுறுப்பினரால்‌ எழுத்துருவிலான கடிதமொன்றின்‌ மூலம்‌ தெரிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அப்பதவி விலகலானது வேந்தரால்‌ அது ஏற்கப்படும்‌ தேதியிலிருந்து நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 26. ஆட்சி மன்றம்‌ ஆண்டறிக்கையைத்‌ தயாரித்தல்‌.- (1) இப்பல்கலைக்கழகத்தின்‌ ஆண்டறிக்கை ஆட்சி மன்றத்தால்‌ (Governing Council) தயாரிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய தேதியிலோ அதற்கு முன்போ ஆட்சிப்‌ பேரவையின்‌ (8௯46) முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌: மற்றும்‌ ஆட்சிப்‌ பேரவையினால்‌ அடுத்து நடக்கும்‌ அதன்‌ ஆண்டு கூட்டத்தில்‌ பரிசீலனை செய்யப்படுதல்‌ வேண்டும்‌. ஆட்சிப்‌ பேரவை அதன்‌ மீது தீர்மானம்‌ நிறைவேற்றி அதை ஆட்சி மன்றத்திற்குத்‌ தெரியப்படுத்தலாம்‌. (2) ஆட்சிமன்றம்‌ ஆட்சிப்பேவையால்‌ நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்‌. மீது தன்னால்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கைப்‌ பற்றி ஆட்சிப்‌ பேரவையின்‌ பிந்திய ஒரு கூட்டத்தில்‌ அதனிடம்‌ தெரிவித்தல்‌ வேண்டும்‌. (3) அந்த ஆண்டு அறிக்கையின்‌ படியொன்றும்‌ ஆட்சிப்‌ பேரவையால்‌ நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்‌ படியொன்றும்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய குறிப்புடன்‌ சேர்த்து தகவலுக்காக ஆட்‌ சிமன்றத்தால்‌ அரசுக்குப்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 27. ஆட்சிமன்றம்‌ ஆண்டு கணக்குகளைப்‌ பணிந்தனுப்புதல்‌.- (1) இப்பல்கலைக்கழகத்தின்‌ ஆண்டு கணக்குகள்‌, அரசு பணிக்கக்கூடிய பரிச்லனைக்காகவும்‌, தணிக்கைக்காகவும்‌ ஆட்சிமன்றத்தால்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. (2) ஆட்சிமன்றம்‌ அத்தகைய தணிக்கையில்‌ எழுப்பப்பட்ட மறுப்புகளை (ஆட்சேபணைகளை) முடிவு செய்வதோடு, அத்தணிக்கை அறிக்கையின்‌ பேரில்‌ நிலை விதிகளில்‌ வகுத்துரைக்கப்பட்டவாறு அரசினால்‌ பிறப்பிக்கப்படக்கூடிய அறிவுறுத்தல்களை நிறைவேற்றுதலும்‌ வேண்டும்‌. (3) கணக்குகள்‌, தணிக்கை செய்யப்பட்டதும்‌, அவசர விதிகளால்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ முறையில்‌ ஆட்சி மன்றத்தால்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதன்‌ படிகள்‌ ஆட்சிப்‌ பேரவைக்கு அதன்‌ அடுத்த கூட்டத்திலும்‌ அரசக்கு அத்தகைய வெளியீட்டிலிருந்து மூன்று மாதத்திற்குள்ளாகவும்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 28. நிதிக்‌ குழு- 1) நிதிக்குழு பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌, அதாவது:- (8) துணை வேந்தர்‌; (b) நிதித்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள நிதித்‌ துறை அரசுச்‌ செயலாளர்‌; (மக்கள்‌ நல்வாழ்வு மற்றும்‌ குடும்பநலத்‌ துறை அரசுச்‌ செயலாளர்‌; மற்றும்‌ (0) ஆட்சிமன்றத்தால்‌ தன்னுடைய உறுப்பினர்களுக்‌ டையேயிருந்து பெயர்‌ குறிக்கப்படும்‌ மூன்று உறுப்பினர்கள்‌. (2) எக்காரணத்தினாலேனும்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்‌ (b) கூறிலோ (௦ கூறிலோ குறிப்பிடப்பட்ட உறுப்பினர்‌ நிதிக்குழுக்‌ கூட்டம்‌ எதற்கும்‌ வருவதற்கு இயலாதிருப்பாரானால்‌, அவர்‌ அரசு துணைச்‌ செயலாளரின்‌ படிநிலைக்குக்‌ குறையாத தொடர்புடைய தம்முடைய துறையின்‌ அலுவலர்‌ எவரையேனும்‌ அத்தகைய கூட்டத்திற்கு வருகை புரிவதற்கு அவ்வாறு அனுப்பி வைக்கப்படும்‌ அலுவலர்‌ அந்த நிதிக்குழுவின்‌ விவாதங்களில்‌ பங்கேற்க உரிமை பெற்றிருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ வாக்களிப்பதற்கும்‌ உரிமை பெற்றிருத்தலும்‌ வேண்டும்‌; (3) துணை வேந்தர்‌ நிதிக்‌ குழுவின்‌ பதவி வழித்‌ தலைவராகவும்‌ நிதி அலுவலர்‌ பதவி வழிச்‌ செயலாளராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. (4) ௫) ஆம்‌ உட்பிரிவின்‌ (0) கூறின்படி ஆட்சி மன்றத்தால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்‌ மூன்றாண்டு கால அளவிற்குப்‌ பதவி வகித்து வருதல்‌ வேண்டும்‌. (5) தயாரிக்கப்பட்ட, இப்பல்கலைக்கழகத்தின்‌ ஆண்டு கணக்குகள்‌ நிதி அலுவலரால்‌ பரிசீலினைக்காகவும்‌ கருத்துரைகளுக்காகவும்‌ நிதிக்‌ குழுவின்‌ முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதன்‌ பின்பு ஒப்புதலளிப்பிற்காக. ஆட்‌ சிமன்றத்திற்குப்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. (6) நிதி அலுவலரால்‌ தயாரிக்கப்பட்ட இப்பல்கலைக்கழக ஆண்டு நிதி மதிப்பீடுகள்‌ பரிசீலனைக்காகவும்‌ கருத்துரைகளுக்காகவும்‌ நிதிக்‌ குழுவின்‌ முன்பு வைக்கப்படுதல்‌: வேண்டும்‌. நிதிக்‌ குழுவினால்‌ மாற்றியமைக்கப்பட்ட மேற்சொன்ன மதிப்பீடுகள்‌ அதற்குப்‌ பின்பு பரிசலனைக்காக ஆட்சி மன்றத்தின்‌ முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. ஆட்சி மன்றம்‌ தான்‌ பொருத்தமெனக்‌ கருதும்‌ மாறுதல்களுடன்‌ அந்நிதி மதிப்பீடுகளுக்கு ஒப்புதலளிக்கலாம்‌. (7) நிதிக்‌ குழு- (a) கணக்குகளைப்‌ பரிசீலனை செய்வதற்கும்‌ மற்றும்‌ செலவினத்திற்கான கருத்துருகளை கூர்ந்தாய்வு செய்வதற்குமாக குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒரு முறையேனும்‌ கூடுதல்‌ வேண்டும்‌; (b) அவ்வப்போது பல்கலைக்கழகத்தின்‌ நிதி நிலைமையை ஆய்வு செய்தல்‌ வேண்டும்‌; (69) ஆண்டு நிதி மதிப்பீடுகளில்‌ வகைமுறை எதுவும்‌ செய்யப்பட்டிராத முதலீடு அல்லது செலவினத்தை உள்ளடக்கியுள்ள அல்லது ஆண்டு நிதி மதிப்பீடுகளில்‌ வகைசெய்யப்பட்டுள்ள தொகைக்கும்‌ மிகுதியாக உள்ள செலவினத்தை உள்ளடக்கியுள்ள கருத்துரு ஒவ்வொன்றின்‌ பேரிலும்‌ ஆட்சி மன்றத்திற்குப்‌ பரிந்துரை செய்தல்‌ வேண்டும்‌; (0) இப்பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ கல்லூரிகள்‌ ஆகியவற்றின்‌. கணக்குகளை வைத்து வருவதற்கான வழிகளையும்‌ நடைமுறையையும்‌ படிவங்களையும்‌ வகுத்துரைத்தல்‌ வேண்டும்‌; (ஐ இப்பல்கலைக்கழக நிதி தொடர்பான அனைத்துப்‌ பொருள்களின்‌: (விஷயங்களின்‌) பேரிலும்‌ ஆட்சி மன்றத்திற்கு பரிந்துரை செய்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ 0 நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ பிற அலுவல்களைப்‌ புரிந்துவருதல்‌ வேண்டும்‌. 29. கல்வி நிலைக்குழு.-- (1) இப்பல்கலைக்கழகத்தின்‌ கல்வி நிலைக்‌ குழுவொன்று இருத்தல்‌ வேண்டும்‌; அது இந்தச்‌ சட்டம்‌, நிலைவிதிகள்‌ மற்றும்‌ அவசர விதிகள்‌: ஆகியவற்றின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு, இப்பல்கலைக்கழகத்தின்‌ கல்வி சார்ந்த அலுவல்களை ஒருங்கிணைத்தலும்‌ அவற்றின்‌ மீது பொதுவான கண்காணிப்பைச்‌ செலுத்துதலும்‌ வேண்டும்‌. (2) கல்வி நிலைக்‌ குழு பின்வரும்‌ பதவிவழி உறுப்பினர்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌, அதாவது:- (a) துணை வேந்தர்‌; (b) மருத்துவக்‌ கல்வி இயக்குநர்‌; (௦) மருத்துவப்‌ பணிகள்‌ மற்றும்‌ குடும்பநல இயக்குநர்‌; (6) பொது சுகாதாரம்‌ மற்றும்‌ நோய்த்‌ தடுப்பு மருத்துவ இயக்குநர்‌; (e) இந்திய மருத்துவம்‌ மற்றும்‌ ஹோமியோபதி இயக்குநர்‌; (f) இப்பல்கலைக்கழக கலையியல்களின்‌ தலைவர்கள்‌; மற்றும்‌ (ஐ இப்பல்கலைக்கழக பாடக்குழுக்களின்‌ தலைவர்கள்‌. (3) இந்தச்‌ சட்டம்‌, நிலைவிதிகள்‌, அவசர விதிகள்‌ ஆகியவற்றின்‌. வகைமுறைகளுக்குட்பட்டு, கல்வி நிலைக்குழு பின்வரும்‌ அதிகாரங்களைப்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌, அதாவது;- (8) ஒழுங்கு விதிகளைச்‌ செய்தல்‌ மற்றும்‌ திருத்துதல்‌ அல்லது அவற்றை அறவு செய்தல்‌; (b) இப்பல்கலைக்கழகத்தில்‌ ஆராய்ச்சியினை மேம்படுத்துவதற்காக ஆட்‌ சிமன்றத்திற்கு ஆலோசனை வழங்குதல்‌; மற்றும்‌ (c) கல்வி அலுவல்‌ மற்றும்‌ ஆராய்ச்சித்‌ திட்டங்களில்‌ திருத்தங்கள்‌. மற்றும்‌ புதுமைகளுக்கான நடவடிக்கைகளுக்கு யோசனை கூறுதல்‌. (4) கல்வி நிலைக்குழுவானது வழக்கமாக ஓர்‌ ஆண்டில்‌ இருமுறை கூட வேண்டும்‌, ஆயினும்‌ ஆட்சி மன்றத்தால்‌ முடிவு செய்யப்படலாகும்‌ பிற தருணங்களிலும்‌ இக்குழு கூடலாம்‌. (5 கல்வி நிலைக்‌ குழுவின்‌ உறுப்பினர்களின்‌ மொத்த எண்ணிக்கையில்‌ மூன்றில்‌ ஒரு பகுதியானது, கல்வி நிலைக்‌ குழுவின்‌ கூட்டமொன்றுக்காகத்‌ தேவைப்படும்‌ குறைவெண்‌ வரம்பாகும்‌. (6) துணை வேந்தர்‌, கல்வி நிலைக்‌ குழுவின்‌ எல்லாக்‌ கூட்டங்களுக்கும்‌ தலைமை வகித்தல்‌ வேண்டும்‌. எக்காரணத்தாலேனும்‌ கல்வி நிலைக்‌ குழுவின்‌ கூட்டமொன்றிற்கு துணை வேந்தர்‌ வருகை தர இயலாமற்போனால்‌, வந்திருக்கும்‌ உறுப்பினர்கள்‌ தங்களுக்குள்‌ ஒரு தலைவரைத்‌ தெரிந்தெடுக்கலாம்‌. 30. கலையியல்கள்‌ (Faculties).— (1) இப்பல்கலைக்கழகம்‌ பின்வரும்‌ கலையியல்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. அதாவது:- (ஐ) அடிப்படை மருத்துவ அறிவியல்களுக்கான கலையியல்‌; (b) மருந்தியல்‌, குழந்தை நோய்‌ மருத்துவம்‌ மற்றும்‌ மருத்துவச்‌ சிறப்பு பிரிவுகளுக்கான கலையியல்கள்‌; (6) அறுவை மருத்துவம்‌, மகப்பேறு மருத்துவம்‌ மற்றும்‌ மகளிர்‌ நோயியல்‌, மற்றும்‌ அறுவை சிறப்புப்‌ பிரிவுகளுக்கான கலையியல்‌; (0) சமூக நல்வாழ்வு, சமூக அறிவியல்கள்‌ மற்றும்‌ மருந்தியல்‌ வரலாற்றுக்கான கலையியல்‌; (8) பல்‌ மருத்துவம்‌, மருந்தாக்கக்கலை (Pharmacy) மற்றும்‌ செவிலிமைக்கான கலையியல்‌; மற்றும்‌ (f) நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ பிற கலையியல்‌ எதுவும்‌. (2) இக்கலையியல்களின்‌ அமைப்பு மற்றும்‌ அலுவல்கள்‌ பிற எல்லா வகைகளிலும்‌, ஒழுங்குமுறை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படக்கூடியதாக இருத்தல்‌ வேண்டும்‌. (3) (2) ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌ கல்வி நிலைக்‌ குழு, ஆட்சி மன்றத்தின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ ஆசிரியர்‌ எவரையும்‌ கலையியல்‌ ஒன்றின்‌ உறுப்பினராக நியமிக்கலாம்‌. 31. திட்டமிடும்‌ குழு-- (1) திட்டமிடும்‌ குழு ஒன்று அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌; அது இப்பல்கலைக்கழகத்தின்‌ திட்டமிடல்‌ மற்றும்‌ வளர்ச்சி குறித்து பொதுவாக ஆலோசனை வழங்குதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அது இப்பல்கலைக்கழகத்தில்‌ கல்வி தரங்கள்‌ மற்றும்‌ ஆராய்ச்சியை அவ்வப்போது ஆய்வு செய்து வருதல்‌ வேண்டும்‌. (2) திட்டமிடும்‌ குழு பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌, அதாவது;- (a) துணை வேந்தர்‌; அவர்‌ அக்குழுவின்‌ தலைவராக இருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (b) ஆட்சி மன்றத்தால்‌ பெயர்குறித்து நியமிக்கப்பட்ட எண்மருக்கு மேற்படாத உயர்‌ கல்வியாளர்கள்‌. (3) திட்டமிடும்‌ குழு, இந்தச்‌ சட்டத்தினால்‌ அதனிடம்‌ ஒப்படைக்கப்பட்டுள்ள பிற அதிகாரங்கள்‌ அனைத்தினோடும்கூட, கல்விப்‌ பொருள்‌ எதுபற்றியும்‌ ஆட்சி மன்றத்திற்கும்‌ மற்றும்‌ கல்வி நிலைக்‌ குழுவிற்கும்‌ ஆலோசனை கூறுவதற்கு உரிமை பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. (4) திட்டமிடும்‌ குழுவில்‌ பெயர்குறித்து நியமனம்‌ செய்யப்பட்ட உறுப்பினர்களின்‌ பதவிக்காலம்‌ மூன்று ஆண்டு ஆகும்‌; மற்றும்‌ தங்கள்‌: பதவிக்காலம்‌ முடிந்த பின்‌ அவர்கள்‌ பெயர்‌ குறித்து மறுநியமனம்‌ செய்யப்படுவதற்கு உரிமையுடையவர்களாவர்‌. 32. பாடத்திட்டக்‌ குழுக்கள்‌.- (1) பாடத்‌ திட்ட அல்லது ஆராய்ச்சித்துறை ஒவ்வொன்றுடனும்‌ இணைந்த பாடக்‌ குழுக்கள்‌ இருத்தல்‌ வேண்டும்‌. (2) இப்பாடக்‌ குழுக்களின்‌ அமைப்பு மற்றும்‌ அதிகாரங்கள்‌ நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌. 33. பிற அதிகாரஅமைப்புகளின்‌ அமைப்பு- நிலை விதிகளில்‌ வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ தேவைப்படலாகும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பிற அதிகாரஅமைப்புகளை ஆட்சிமன்றம்‌ அமைக்கலாம்‌. அத்தியாயம்‌ V. பல்கலைக்கழக நிதியங்கள்‌. 34. பொது நிதியங்கள்‌.- இந்தப்‌ பல்கலைக்கழகம்‌ பொது நிதியம்‌ ஒண்றைப்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌, அந்நிதியத்தில்‌,- (ஐ) கட்டணங்கள்‌, மானியங்கள்‌, நன்கொடைகள்‌, கொடைகள்‌ ஆகியவை எவையேனும்‌ இருப்பின்‌ அவற்றிலிருந்து பெறப்படும்‌ வருமானத்தை; (b) மைய அரசிடமிருந்து அல்லது மாநில அரசு எதனிடமிருந்தும்‌ அல்லது உள்ளாட்சி அதிகாரஅமைப்பு எதினிடமிருந்தும்‌ அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்‌ குழுவிடமிருந்து அல்லது அது போன்ற அதிகாரஅமைப்பு எதனிடமிருந்தும்‌ அல்லது மைய அல்லது மாநில அரசுக்குச்‌ சொந்தமான அல்லது அதன்‌ கட்டுப்பாட்டிலுள்ள கூட்டு நிறுவனம்‌ எதனிடமிருந்தும்‌ பெறப்படும்‌ பங்களிப்பு அல்லது மானியம்‌ எதையும்‌; மற்றும்‌. (2 நிலைக்கொடைகளையும்‌ பிற வரவுகளையும்‌ வரவு வைத்தல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ VI. மாணவர்களைச்‌ சேர்த்துக்‌ கொள்ளுதல்‌. 35. பல்கலைக்கழக படிப்புப்‌ பிரிவுகளுக்கு மாணவர்களைச்‌ சேர்த்துக்கொள்ளுதல்‌.- (1) கல்லூறி அல்லது பல்கலைக்கழக ஆய்வுக்‌ கூடமொன்றில்‌ அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட கல்வி நிலையமொன்றில்‌ பட்டம்‌, பட்டயம்‌ (Diploma) அல்லது பிற கல்விச்‌ சிறப்பு அளிக்கப்படும்‌ பொருட்டு இப்பல்கலைக்கழகத்தால்‌ நடத்தப்படும்‌ தேர்வு எதையேனும்‌ எழுதுவதற்காக இப்பல்கலைக்கழகத்‌ தொடர்கோவைப்‌ படிப்பு அல்லது பயிற்சி ஒன்றிற்கு எவரும்‌- (a) அவர்‌, அதற்காக இப்பல்கலைக்கழகத்தால்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்பட்ட தகுதித்‌ தேர்வில்‌ தேறியிருந்தாலன்றியும்‌; (b) அவர்‌, ஒழுங்கு விதிகளால்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ பிற நிபந்தனைகளை நிறைவு செய்தாலன்றியும்‌, சேர்த்துக்கொள்ளப்படுதல்‌ ஆகாது. (2) ஆட்சி மன்றம்‌, கல்வி நிலைக்‌ குழுவின்‌ பரிந்துரை பேரில்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ பரப்பெல்லைக்கு வெளியே அமைந்துள்ள கல்லூரி அல்லது கல்வி நிலையம்‌ எதிலும்‌, சமமான படிப்புப்‌ பிரிவொன்றை பயின்ற அல்லது பயிற்சியினை முடித்திருக்கின்ற தேர்வு நாடுநர்‌ (Candidate) எவரொருவருக்கும்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளிலிருந்து விலக்களிக்கலாம்‌; (3) அத்தேர்வு நாடுநர்‌, சமமாண படிப்புப்‌ பிரிவு அல்லது பயிற்சியை முடித்திருக்கின்றாரா என்னும்‌ கேள்வியானது பாடத்‌ திட்டம்‌, படிப்பின்‌ உள்ளடக்கம்‌ மற்றும்‌ படிப்பு அல்லது பயிற்சியின்‌ கால அளவு ஆகியவற்றை வைத்துக்‌ கல்வி நிலைக்குழுவால்‌ முடிவு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 36. பல்கலைக்கழகத்‌ தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படுதல்‌.- (1) தேர்வு நாடுநர்‌ எவரும்‌,- (ஐ பல்கலைக்கழக கல்லூரி, பல்கலைக்கழக ஆய்வுக்கூடம்‌, இணைக்கப்பட்ட கல்லூரி அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட கல்வி நிலையமொன்றின்‌ உறுப்பினராக அவர்‌ பதிவு செய்யப்பட்‌ டிருந்தாலன்றியும்‌; மற்றும்‌ (௦) ஒழுங்குமுறை விதிகளினால்‌ வகுத்துரைக்கப்பட்ட வருகைப்பதிவு குறித்த தேவைப்பாடுகளை அவர்‌ நிறைவு செய்திருந்தாலன்றியும்‌, பல்கலைக்கழகத்‌ தேர்வு எதற்கும்‌ ஏற்றுக்கொள்ளப்படுதல்‌ ஆகாது. (2) ஆட்சி மன்றம்‌, கல்வி நிலைக்‌ குழுவின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌, தான்‌ பொருத்தமெனக்‌ கருதலாகும்‌ நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தேர்வு நாடுநர்‌ எவருக்கும்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளிலிருந்து விலக்களிக்கலாம்‌. அத்தியாயம்‌ VI பணியாளர்‌ தொகுதியும்‌, பணி நிபந்தனைகளும்‌. 37. அலுவலர்கள்‌, துறைத்‌ தலைவர்கள்‌ முதலானோரின்‌ நியமனம்‌.- இப்பல்கலைக்கழகம்‌ நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளை நிறைவேற்றுகின்ற நோக்கத்திற்காக அவசியமாயிருக்கக்கூடிய எண்ணிக்கையில்‌ அலுவலர்களை, துறைத்‌ தலைவர்களை, பேராசிரியர்களை, சிறப்புப்‌ பேராசிரியர்களை, விரிவுரையாளர்களை, ஆசிரியர்களை, நூலகர்களை மற்றும்‌ பிற பணியாளர்களை நியமிக்கலாம்‌. 38. பணி நிபந்தனைகள்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு, இப்பல்கலைக்கழகத்தில்‌ பணியிலமர்த்தப்பட்டுள்ள அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, மற்ற நபர்கள்‌ ஆகியோரின்‌ நியமனம்‌, அவர்களைத்‌ தெரிவு செய்வதற்கான நடைமுறை, அவர்களின்‌ சம்பளம்‌ மற்றும்‌ படித்‌ தொகைகள்‌ மற்றும்‌ பிற நிபந்தனைகள்‌, நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கத்திற்காக, "அலுவலர்கள்‌" என்னும்‌ சொல்‌, வேந்தரையும்‌ இணை வேந்தரையும்‌ உள்ளடக்குதல்‌ ஆகாது. 39. ஓய்வூதியம்‌ மற்றும்‌ பணிக்கொடை முதலானவை. (1) இப்பல்கலைக்கழகம்‌, இப்பல்கலைக்கழகத்தால்‌ பணியிலமர்த்தப்பட்ட தன்‌ அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, மற்ற நபர்கள்‌ ஆகியோரின்‌ நன்மைக்காக, நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ முறையிலும்‌ நிபந்தனைகளுக்குட்பட்டும்‌ தான்‌ பொருத்தமெனக்‌ கருதலாகும்‌ ஓய்வூதியம்‌, பணிக்கொடை, காப்பீடு, வருங்கால வைப்பு நிதியம்‌ ஆகியவற்றை ஏற்படுத்துதல்‌ வேண்டும்‌. (2) இப்பல்கலைக்கழகம்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி வருங்கால வைப்பு நிதியம்‌ ஒன்றை அவ்வாறு ஏற்படுத்தியுள்ளவிடத்து, இப்பல்கலைக்கழகம்‌ ஓர்‌ உள்ளாட்சி அமைப்பாகவும்‌, அந்நிதியம்‌ ஓர்‌ அரசு வருங்கால வைப்பு நிதியமாகவும்‌ இருந்தாற்‌ போன்றே 1925 ஆம்‌ ஆண்டு வருங்கால வைப்பு நிதியங்கள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ XIX/1925) வகைமுறைகள்‌ அந்நிதியத்திற்குப்‌ பொருந்துதல்‌ வேண்டும்‌ என்று அரசு விளம்பலாம்‌. (3) இப்பல்கலைக்கழகம்‌, நிதிக்‌ குழுவைக்‌ கலந்தாய்வு செய்து தான்‌ தீர்மானிக்கலாகும்‌ முறையில்‌ அவ்வருங்கால லைப்பு நிதியத்‌ தொகையை முதலீடு செய்யலாம்‌. 40. துறைத்‌ தலைவர்களின்‌ பணி வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகள்‌.- (1) இப்பல்கலைக்கழகத்தின்‌ ஒவ்வொரு துறையும்‌ தலைவர்‌ ஒருவரைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌; அவர்‌ ஒரு பேராசிரியராகவோ இயக்குநராகவோ இருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அவருடைய அலுவல்கள்‌ மற்றும்‌ கடமைகளும்‌ நியமன வரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌ நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌. வரம்புரை: துறை எதிலேனும்‌ ஒருவருக்கு மேற்பட்ட பேராசிரியர்கள்‌ இருப்பார்களானால்‌, அந்தத்‌ துறையின்‌ தலைவர்‌ நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ நியமிக்கப்படுதல்‌ வேண்டும்‌. மேலும்‌ வரம்புரை: பேராசிரியர்‌ எவரும்‌ இல்லாத துறையொன்றில்‌ துணைப்‌ பேராசிரியர்‌ ஒருவர்‌ அல்லது சிறப்புப்‌ பேராசிரியர்‌ (Reader) ஒருவர்‌ நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ துறையின்‌ தலைவராக நியமிக்கப்படலாம்‌. (2) துறைத்‌ தலைவராக நியமிக்கப்பட முன்‌ வந்ததை ஏற்க மறுத்துவிடுவதற்கு ஒரு பேராசிரியருக்கு அல்லது துணைப்‌ பேராசிரியருக்கு அல்லது சிறப்புப்‌ பேராசிரியருக்கு உரிமையுண்டு. (3) துறைத்‌ தலைவராக நியமிக்கப்பட்ட ஒருவர்‌ மூன்றாண்டு கால அளவிற்கு அத்தகையவராகப்‌ பதவி வகித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ மறு நியமனத்திற்கு தகுதியுடையவராக இருத்தல்‌ வேண்டும்‌. (4) துறைத்‌ தலைவரொருவர்‌, தம்முடைய பதவிக்‌ காலஅளவின்‌ போது எந்த நேரத்திலும்‌ தம்முடைய பதவியை விட்டு விலகலாம்‌. (5 துறைத்‌ தலைவரொருவர்‌, நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய அலுவல்களைப்‌ புரிந்து வருதலும்‌ கடமைகளை ஆற்றி வருதலும்‌ வேண்டும்‌. 41. பல்கலைக்கழகத்‌ துறைகளின்‌ ஒருங்கிணைப்பாளர்‌(௦00பிஈ80ா) மற்றும்‌ மாணவர்‌ நலப்‌ பொறுப்புத்‌ தலைவர்‌ (Dean of Student) ஆகியோரின்‌ பணி பற்றிய வரையறைகளும்‌ நிபந்தனைகளும்‌. (1) பல்கலைக்கழகத்‌ துறைகளின்‌ ஒருங்கிணைப்பாளர்‌ (coordinator) ஒருவர்‌ இருத்தல்‌ வேண்டும்‌; அவர்‌ துணை வேந்தருக்கும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ துறைத்‌ தலைவர்களுக்குமிடையே தொடர்பு அலுவலராகச்‌ (Liaison Officer) செயலாற்றுதல்‌ வேண்டும்‌. அவர்‌ நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அலுவல்களை புரிந்து வருதலும்‌ கடமைகளை ஆற்றி வருதலும்‌ வேண்டும்‌. (2) இப்பல்கலைக்கழகத்தில்‌, மாணவர்‌ நலப்‌ பொறுப்புத்‌ தலைவர்‌ (Deen) ஒருவர்‌ இருத்தல்‌ வேண்டும்‌; அவர்‌ மாணவர்களின்‌ நலனுக்கும்‌ மற்றும்‌. அவர்களுக்கிடையே ஒழுங்குமுறைக்கும்‌ பொறுப்பாளராக இருத்தல்‌ வேண்டும்‌. அவர்‌, நிலை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அதிகாரங்களைச்‌ செலுத்தி வருதலும்‌ அலுவல்களைப்‌ புரிந்து வருதலும்‌, கடமைகளை ஆற்றி வருதலும்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ VIl நிலை விதிகள்‌, அவசர விதிகள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகள்‌. 42. நிலை விதிகள்‌.- (1) ஆட்சி மன்றம்‌, அவ்வப்போது நிலை விதிகளை இயற்றலாம்‌ மற்றும்‌ திருத்தலாம்‌ அல்லது அறவு செய்யலாம்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு, அந்நிலை விதிகள்‌: பின்வருவனவற்றிற்கு வகை செய்யலாம்‌. (ஐ பட்டங்களையும்‌ கல்விச்‌ சிறப்புகளையும்‌ வழங்குவதற்காக பட்டமளிப்பு விழாவை நடத்துதல்‌; (௦) மதிப்புறு (கெளரவப்‌) பட்டங்களையும்‌ மதிப்புறு கல்விச்‌ சிறப்புப்‌ பட்டங்களையும்‌ வழங்குதல்‌; (௦) இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளின்‌ அமைப்பு அதிகாரங்கள்‌ மற்றும்‌ அலுவல்கள்‌; (d) இப்பல்கலைக்கழகத்து அதிகாரஅமைப்புகளின்‌ உறுப்பினர்களுக்கிடையே ஏற்படும்‌ காலியிடங்களை நிரப்புகின்ற முறை; (ஐ) இப்பல்கலைக்கழகத்து அதிகாரஅமைப்புகள்‌ மற்றும்‌ அவற்றின்‌. குழுக்களின்‌ உறுப்பினர்களுக்குச்‌ செலுத்தப்பட வேண்டிய படித்‌ தொகைகள்‌; () அதிகாரஅமைப்புகளின்‌ கூட்டங்களில்‌ அலுவல்‌ நடப்பிற்கான குறைவெண்‌ வரம்பு (பெளஎமா) உள்ளடங்கலாக அத்தகைய கூட்டங்களில்‌ பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை; (ற இப்பல்கலைக்கழகத்து அதிகாரஅமைப்புகளின்‌ முடிவுகள்‌ பற்றிய ஆணைகளுக்கு உறுதியொப்பமளித்தல்‌; (h) இப்பல்கலைக்கழகத்தில்‌ ஆராய்ச்சிக்கான துறைகளை உருவாக்குதல்‌; () வேந்தர்‌ மற்றும்‌ துணை வேந்தர்‌ அல்லாத இப்பல்கலைக்கழகத்தின்‌ மற்ற அலுவலர்களின்‌ பதவிக்கால அளவும்‌ நியமன முறைகளும்‌ மற்றும்‌ பணி பற்றிய நிபந்தனைகளும்‌; () இப்பல்கலைக்கழகம்‌, இணைக்கப்பட்ட கல்லூரிகள்‌ அல்லது கல்வி நிலையங்களால்‌ பணியில்‌ அமர்த்தப்படும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பிற நபர்களின்‌ தகுதிப்பாடுகள்‌; (k) இப்பல்கலைக்கழகத்தினால்‌ பணியில்‌ அமர்த்தப்படும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பிற நபர்களை வகைப்படுத்துதல்‌; அவர்களின்‌ நியமன முறை மற்றும்‌ அவர்களின்‌ பணி பற்றிய வரையறைகளையும்‌ நிபந்தனைகளையும்‌ தீர்மானித்தல்‌; () இப்பல்கலைக்கழகத்தினால்‌ பணியிலமர்த்தப்படும்‌ அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பிற நபர்களின்‌ நண்மைக்காக ஓய்வூதியம்‌, பணிக்கொடை, காப்பீடு அல்லது வருங்கால வைப்பு நிதியத்தை ஏற்படுத்துதல்‌; (m) பட்டதாரி உதவித்தொகைகள்‌, பட்டதாரி பண உதவித்‌ தொகைகள்‌, படிப்புதவித்‌ தொகைகள்‌, மாணவ உதவித்‌ தொகைகள்‌, உதவிச்‌ சம்பளங்கள்‌, ஆதரவுப்படித்‌ தொகைகள்‌, பதக்கங்கள்‌, பரிசுகள்‌ ஆகியவற்றை ஏற்படுத்தலும்‌ அவற்றை அளிப்பதற்கான நிபந்தனைகளும்‌; (ற இப்பல்கலைக்கழகத்துடன்‌ கல்லூரிகளை இணைப்பதற்கான நிபந்தனைகள்‌; (0) ஒரு கல்லூரி எந்த முறையிலும்‌ எந்த நிபந்தனைகளுக்குட்பட்டும்‌ தன்னாட்சிக்‌ கல்லூரறியெனக்‌ குறிப்பிடப்படலாம்‌; மற்றும்‌ அவ்வாறு குறிப்பிடப்பட்டதை எந்த நிபந்தனைகளுக்குட்பட்டு அழித்தறவு (இரத்து) செய்யலாம்‌ என்பதும்‌; மற்றும்‌ கல்லூரியில்‌ கல்வி அலுவல்குழு, பாடத்திட்டக்‌ குழுக்கள்‌ மற்றும்‌ தேர்வாளர்‌ குழுக்கள்‌ ஆகியவற்றை அமைத்தல்‌, மாற்றியமைத்தல்‌ அவற்றின்‌ அதிகாரங்கள்‌ மற்றும்‌ கடமைகள்‌ ஆகியவை உள்ளடங்கலாக தன்னாட்சிக்‌ கல்லூரிகளின்‌ நிருவாகம்‌ சார்ந்த பொருள்களும்‌ (விஷயங்களும்‌); (ற கூடங்கள்‌, மாணவர்‌ இல்லங்கள்‌, ஆய்வுக்கூடங்கள்‌ ஆகியவற்றை நிறுவுதலும்‌ பேணிவருதலும்‌; (@) இப்பல்கலைக்கழகத்தினால்‌ பேணி வரப்படுபவை அல்லாத பிற மாணவர்‌ இல்லங்களுக்கு ஏற்பிசைவு அளிப்பதற்கான நிபந்தனைகள்‌; (ற கூடங்களிலும்‌ மாணவர்‌ இல்லங்களிலும்‌ இப்பல்கலைக்கழக மாணவர்கள்‌ தங்கியிருப்பதற்கான நிபந்தனைகளும்‌ மற்றும்‌ அவ்வாறு தங்கியிருப்பதற்கான கட்டணங்கள்‌ மற்றும்‌ பிற தொகைகளை விதித்தலும்‌; (s) இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகளிடம்‌ அல்லது அலுவலர்களிடம்‌ மேவியுள்ள அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்‌; மற்றும்‌ (0 நிலைவிதிகளால்‌ வகுத்துரைக்கப்படத்‌ தேவைப்படுகின்ற அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய பிற பொருள்‌ எதுவும்‌. (3) ஆட்சிமன்றத்தால்‌ நிறைவேற்றப்பட்ட நிலைவிதி ஒன்று வேந்தருக்கு பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌; அவர்‌ அதற்கு இசைவளிக்கலாம்‌ அல்லது தமது இசைவை அளிக்காது நிறுத்தி வைக்கலாம்‌. ஆட்சிமன்றத்தால்‌ நிறைவேற்றப்பட்ட நிலைவிதி ஒன்று வேந்தரால்‌ இசைவளிக்கப்படுகின்ற வரையில்‌ செல்லுந்தன்மை எதையும்‌ பெற்றிருத்தலாகாது. 43. அவசர விதிகள்‌ (Ordinances).— (1) ஆட்சிமன்றம்‌, அவ்வப்போது, அவசர விதிகளை இயற்றலாம்‌ மற்றும்‌ திருத்தலாம்‌ அல்லது அறவு (இரத்து) செய்யலாம்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ நிலைவிதிகளின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு, அந்த அவசர விதிகள்‌ பின்வருவனவற்றிற்கு வகை: செய்யலாம்‌. (ஐ இப்பல்கலைக்கழகத்திலும்‌ அதன்‌ இணைக்கப்பட்ட கல்லூரிகளிலும்‌ மாணவர்களைச்‌ சேர்த்துக்‌ கொள்ளுதலும்‌ மற்றும்‌ பல்கலைக்கழகம்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ பல்கலைக்கழக ஆய்வுக்‌ கூடங்களில்‌ சேர்த்துக்‌ கொள்வதற்கு கட்டணங்களை விதித்தலும்‌; (௦) இப்பல்கலைக்கழகத்தின்‌ அனைத்துப்‌ பட்டங்கள்‌, பட்டயங்கள்‌, பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றைப்‌ பெறுவது வரை செல்கின்ற படிப்புப்‌ பிரிவுகள்‌; (௦) எந்த நிபந்தனைகளின்‌ கீழ்‌ இப்பல்கலைக்கழகம்‌ பட்டங்கள்‌, பட்டயங்கள்‌ பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றைப்‌ பெறுவது வரை செல்கின்ற படிப்புப்‌ பிரிவுகளுக்கு மாணவர்கள்‌ சேர்த்துக்‌ கொள்ளப்பட வேண்டும்‌ என்பது; (0) இப்பல்கலைக்கழகத்தின்‌ தேர்வுகளை நடத்துதலும்‌ மற்றும்‌ எந்த நிபந்தனைகளுக்குட்பட்டு அத்தகைய தேர்வுகளுக்கு மாணவர்கள்‌ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்‌ என்பது; (6) தேர்விற்கு மாணவர்களை ஏற்றுக்கொள்ளுதல்‌ தொடர்பாக எந்த முறையில்‌, விலக்கு அளிக்கப்படலாம்‌ என்பது; (f) தேர்வுக்‌ குழுக்கள்‌ மற்றும்‌ தேர்வாளர்களின்‌, நியமன நிபந்தனைகள்‌ மற்றும்‌ நியமன முறை மற்றும்‌ அவர்களுடைய கடமைகள்‌; (9) இப்பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே ஒழுங்கு நடத்தையைப்‌ பேணி வருதல்‌; (h) படிப்புப்‌ பிரிவுகள்‌, ஆராய்ச்சி, சோதனை மற்றும்‌ நடைமுறைப்பயிற்சி ஆகியவற்றிற்காகவும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பட்டங்கள்‌, பட்டயங்கள்‌ (Diplomas) மற்றும்‌ பிற கல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றிற்கான தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகவும்‌ விதிக்கப்பட வேண்டிய கட்டணங்கள்‌; மற்றும்‌ () இந்தச்‌ சட்டத்தினாலோ நிலை விதிகளின்லோ வெளிப்படையாக கோரப்படும்‌ அல்லது அனுமதிக்கப்படும்‌ பிற பொருள்‌ எதுவும்‌. (3) அவசர விதிகளைச்‌ செய்யுங்கால்‌ ஆட்சிமன்றம்‌,- (a) தேர்வாளர்களின்‌ நியமனம்‌, கடமை ஆகியவை தொடர்பான பொருள்களில்‌ (விஷயங்களில்‌) பாடத்திட்டக்‌ குழுக்களையும்‌; மற்றும்‌ (௦) தேர்வுகள்‌ நடத்தப்படுவது அல்லது அவற்றின்‌ தரம்‌ ஆகியவை தொடர்பான பொருள்களில்‌ (விஷயங்களில்‌) கல்வி நிலைக்குழுவையும்‌, கலந்தாய்வு செய்தல்‌ வேண்டும்‌. (4) ஆட்சிமன்றத்தால்‌ செய்யப்பட்ட அவசர விதிகள்‌ அனைத்தும்‌ அந்த ஆட்சிமன்றம்‌ பணிக்கக்கூடிய தேதியிலிருந்து நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அவ்வாறு செய்யப்பட்ட அவசர விதி ஒவ்வொன்றும்‌ கூடிய விரைவில்‌ வேந்தரிடமும்‌ ஆட்சிப்பேரவையிடமும்‌ தகவலுக்காக, பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌; 44, ஒழுங்குமுறை விதிகள்‌.- (1) கல்வி நிலைக்குழுவானது இந்தச்‌ சட்டம்‌, நிலை விதிகள்‌ மற்றும்‌ அவசர விதிகள்‌ ஆகியவற்றிற்கு ஒவ்விய வகையில்‌, அவற்றின்‌ கழ்‌ தனக்குக்‌ குறித்தளிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்காக, ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்யலாம்‌. (2) அத்தகைய ஒழுங்குமுறை விதிகள்‌ அனைத்தும்‌ கல்வி நிலைக்குழு குறித்துரைக்கலாகும்‌ தேதியிலிருந்து நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவ்வாறு செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதி ஒவ்வொன்றும்‌ ஆட்சிமன்றத்தின்‌ முன்பு, தகவலுக்காக வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. 45. ஆட்சிப்பேரவை (5816) மற்றும்‌ ஆட்சிமன்றம்‌ (Govering Council) ஆகியவற்றின்‌ உறுப்பினர்களின்‌ பதவிக்‌ காலம்‌.- (1) ஆட்சி பேரவை மற்றும்‌ ஆட்‌ சிமன்றம்‌ ஆகியவற்றின்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும்‌ பெயர்‌ குறித்து நியமன செய்யப்பட்ட உறுப்பினர்‌ ஒவ்வொருவரும்‌ மூன்றாண்டு காலஅளவிற்குப்‌ பதவி வகித்து வருதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அத்தகைய உறுப்பினர்‌; மற்றுமொரு மூன்றாண்டுக்‌ காலஅளவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது பெயர்‌ குறித்து நியமனஞ்‌ செய்யப்படுவதற்கு உரிமையுடையவராதல்‌ வேண்டும்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரஅமைப்புகளில்‌ எதிலேனும்‌ தொடர்ந்து இருமுறை மூன்றாண்டு கால அளவினை முடித்திருக்கின்ற எவரொருவரும்‌, அவர்‌ அத்தகைய உறுப்பினராக இருப்பது அற்றுப்போன தேதியிலிருந்து மூன்றாண்டு காலஅளவு கழிந்த பின்பு, மேலுமொரு மூன்றாண்டு கால அளவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது பெயர்குறித்து நியமனஞ்‌ செய்யப்படுவதற்கு உரிமையுடையவராதல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கத்திற்காக, (1) ஆம்‌ உட்பிரிவில்‌ சொல்லப்பட்ட அதிகாரஅமைப்புகளில்‌ ஏதொன்றிலேனும்‌ தற்செயல்‌ காலியிடமொன்றில்‌, ஒராண்டுக்கு குறையாத கால அளவிற்குப்‌ பதவியினை வகித்திருக்கின்ற ஒரு நபர்‌ அந்த அதிகாரஅமைப்பில்‌ மூன்றாண்டு காலத்திற்குப்‌ பதவியினை வகித்துள்ளதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (3) அதிகாரஅமைப்புகளில்‌ ஏதொன்றின்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர்‌ குறித்து நியமனஞ்செய்யப்பட்ட உறுப்பினரொருவர்‌, வேறு ஏதேனும்‌ அதிகாரஅமைப்பின்‌ பதவிவழி உறுப்பினராக இருப்பதற்கு உரிமையுடையவராய்‌ இருக்கக்லகூடிய அந்தப்‌ பதவிகளில்‌ ஏதொன்றிற்கேனும்‌ தற்காலிகமாக நியமிக்கப்படுமிடத்து, அவர்‌ தமது நியமனத்தைப்‌ பொறுப்பேற்றுக்‌ கொண்ட தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள்ளாக, தம்மால்‌ கையொப்பமிடப்பட்டு, துணை வேந்தருக்குத்‌ தெரிவிக்கப்பட்ட எழுத்துருவிலான அறிவிப்பின்‌ மூலம்‌, தமது தேர்தல்‌ அல்லது பெயர்‌ குறித்த நியமனம்‌ மூலமாக எந்த அதிகாரஅமைப்பிற்கு தாம்‌ தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அல்லது பெயர்‌ குறித்து நியமனஞ்‌ செய்யப்பட்டாரோ அந்த அதிகாரஅமைப்பின்‌ உறுப்பினராக அவர்‌ தொடர்ந்து இருப்பதற்கு விரும்புகிறாரா, அல்லது அத்தகைய உறுப்பினராக இருக்கும்‌ பதவியைக்‌ காலி செய்துவிட்டு, தம்முடைய நியமனத்தின்‌ காரணமாக. வேறேதேனும்‌. அதிகாரஅமைப்பின்‌ பதவி வழி உறுப்பினராக ஆவதற்கு விரும்புகிறாரா என்பதைத்‌ தெரிவு செய்தல்‌ வேண்டும்‌; அத்தகைய விருப்பத்‌ தெரிவே (choice) அறுதியானதாகும்‌. அத்தகைய விருப்பத்‌ தெரிவை செய்யத்‌ தவறியதன்‌ பேரில்‌, தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர்‌ குறித்து நியமனஞ்‌ செய்யப்பட்ட உறுப்பினராக. உள்ள தம்முடைய பதவியை அவர்‌ காலி செய்திருப்பதாக கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (4) அதிகாரஅமைப்பு ஏதொன்றின்‌ உறுப்பினராய்‌ இருக்கின்ற ஒருவர்‌, அத்தகைய உறுப்பினர்ப்‌ பதவியின்‌ காரணமாக அவர்‌ பிற அதிகாரஅமைப்பு எதனின்‌ அல்லது அதிகாரஅமைப்புகள்‌ எவற்றின்‌ உறுப்பினராகவேனும்‌ இருந்து எந்தக்‌ காரணத்தினாலேனும்‌ அவர்‌ முதலில்‌ சொல்லப்பட்ட அதிகாரஅமைப்பின்‌. உறுப்பினராய்‌ இருப்பது அற்றுப்போவாரானால்‌ அவர்‌ பிற அதிகாரஅமைப்பின்‌ அல்லது அதிகாரஅமைப்புகளின்‌ உறுப்பினராய்‌ இருப்பதும்‌ கூட அற்றுப்போதல்‌ வேண்டும்‌. (5 ௫-ஆம்‌ உட்பிரிவில்‌ உள்ள எதுவும்‌, (i) லு கூறில்‌ குறிப்பிடப்பட்ட மற்றப்படி ஆட்சிப்‌ பேரவையின்‌. உறுப்பினர்களாயில்லாத ஆட்சிமன்ற உறுப்பினர்கள்‌ உட்படாத, 18 ஆம்‌ பிரிவின்‌. (2) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்ட பதவிவழி உறுப்பினர்களையும்‌ மற்றும்‌ (i) 21 ஆம்‌ பிரிவின்‌ (3) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்ட பதவிவழி உறுப்பினர்களையும்‌, பொறுத்த அளவில்‌ பொருந்துதல்‌ ஆகாது. அத்தியாயம்‌ 1X. உறுப்பினர்‌ பதவிக்கான தகுதிக்கேடு. 46. உறுப்பினர்‌ பதவிக்கான தகுதிக்கேடு.-- (1) நபர்‌ எவரும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்புகளுள்‌ ஏதொன்றின்‌ உறுப்பினர்‌ ஒருவரால்‌ பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்படுவதற்கோ அல்லது தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ அவ்வாறு பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்படும்‌ அல்லது தேர்ந்தெடுக்கப்படும்‌ தேதியில்‌, அவர்‌- (a) மனச்சீர்கேடுற்றவராகவோ அல்லது ஒரு செவிட்டு ஊமையாகவோ இருப்பாரானால்‌; அல்லது (௦) ஷொடித்த ஒருவராக அல்லது விடுவிக்கப்படாத நொடித்த ஒருவராக ர்ப்பளிக்கப்படுவதற்கான விண்ணப்பதாரரொருவராக இருப்பாரானால்‌; அல்ல து (௦ ஒழுக்கக்கேட்டை உள்ளடக்கிய குற்றம்‌ எதற்காகவும்‌ குற்ற வழக்கு நீதிமன்றமொன்றால்‌ சிறைத்‌ தண்டனை விதிக்கப்பட்டுள்ளவராக இருப்பாரானால்‌; அல்லது (d) அறுபத்தைந்து வயதை எய்தியவராக இருப்பாரானால்‌ தகுதியுடையவராகமாட்டார்‌. (2) தகராறு அல்லது ஐயம்‌ இருக்கின்ற நேர்வில்‌, நபரொருவர்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி தகுதிக்கேடுற்றவரா என்பது குறித்து ஆட்சிமன்றம்‌ தீர்மானித்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அதன்‌ முடிவே அறுதியானதாகும்‌. 47. முதல்‌ துணை வேந்தரின்‌ நியமனம்‌.- 10 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, இந்தச்‌ சட்டமானது தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படும்‌ தேதியில்‌ இருந்து மூன்று மாதத்திற்குள்ளாக, முதல்‌ துணை வேந்தரானவர்‌, அரசினால்‌, மூன்றாண்டுக்கு மேற்படாததொரு கால அளவிற்கு, அதனால்‌ தீர்மானிக்கப்படும்‌ சம்பளத்தின்‌ பேறிலும்‌ அது பொருத்தமெனக்‌ கருதலாகும்‌ பிற நிபந்தனைகளின்‌ பேரிலும்‌ நியமிக்கப்படுதல்‌ வேண்டும்‌; வரம்புரை: முதல்‌ துணை வேந்தராக நியமிக்கப்பட்டவர்‌ அவருடைய பதவிக்‌ காலத்தின்‌ போது அறுபத்தைந்து வயதை அவர்‌ எய்துவாரானல்‌ பதவியிலிருந்து ஓய்வு பெறுதல்‌ வேண்டும்‌. 48. முதல்‌ பதிவாளரின்‌ நியமனம்‌.- 13 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, இந்த சட்டமானது தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படும்‌ தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்ளாக, முதல்‌ பதிவாளரானவர்‌, அரசினால்‌, மூன்றாண்டுக்கு மேற்படாததொரு கால அளவிற்கு, அதனால்‌ தீர்மானிக்கப்படும்‌ சம்பளத்தின்‌ பேரிலும்‌ அது பொருத்தமெனக்‌ கருதலாகும்‌ பிற நிபந்தனைகளின்‌ பேரிலும்‌ நியமிக்கப்படுதல்‌ வேண்டும்‌; 49. முதல்‌ துணை வேந்தரின்‌ மாறுதற்கால அதிகாரங்கள்‌.- (1) அறிவிக்கை செய்யப்பட்ட தேதியிலிருந்து இரண்டாண்டுக்குள்‌, ஆட்சிப்‌ பேரவை, ஆட்சிமன்றம்‌, கல்வி நிலைக்‌ குழு மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பிற அதிகாரஅமைப்புகள்‌ ஆகியவற்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளைச்‌ செய்ய வேண்டியது முதல்‌ துணை வேந்தரின்‌ கடமையாகும்‌. (2) முதல்‌ துணை வேந்தரானவர்‌, அரசினைக்‌ கலந்தாலோசித்து, இப்பல்கலைக்கழகம்‌ செயற்படுவதற்குத்‌ தேவைப்படலாகும்‌ விதிகளைச்‌ செய்தல்‌ வேண்டும்‌. (3) (1) ஆம்‌ உட்பிரிவின்படி அமைக்கப்பட்ட அதிகாரஅமைப்புகள்‌, அரசு, இதன்‌ பொருட்டு அறிவிக்கை மூலம்‌ குறித்துரைக்கலாகும்‌ தேதி முதற்கொண்டு அவற்றின்‌ அலுவல்களைப்‌ புரிந்து வருதல்‌ வேண்டும்‌. (4) தேவைப்படலாகும்‌ நிலை விதிகள்‌, அவசர விதிகள்‌, ஒழுங்குமுறை விதிகள்‌ ஆகியவற்றை வரைவு செய்து, அவற்றை முடிவு செய்வதற்காக, அவை பற்றி நடவடிக்கை எடுக்கத்‌ தகுதி வாய்ந்த அந்தந்த அதிகாரஅமைப்புகளுக்கு அவற்றைப்‌ பணிந்தனுப்ப வேண்டியது, முதல்‌ துணை வேந்தரின்‌ கடமையாகும்‌. அத்தகைய நிலை விதிகள்‌, அவசர விதிகள்‌, ஒழுங்குமுறை விதிகள்‌ ஆகியவை உருவாக்கப்பட்டவுடன்‌, தமிநற்நாடு அரசிகழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌. (5) இந்தச்‌ சட்டத்திலும்‌, நிலை விதிகளிலும்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, மற்றும்‌ அதிகாரஅமைப்பு ஒன்று உரியவாறு அமைக்கப்படும்‌ காலம்‌ வரையிலும்‌, முதல்‌ துணை வேந்தரானவர்‌, இந்தச்‌ சட்டம்‌ மற்றும்‌ நிலை விதிகளின்படி அத்தகைய அதிகார அமைப்பின்‌ அதிகாரங்கள்‌, அலுவல்கள்‌ மற்றும்‌ கடமைகளுள்‌ எவற்றையும்‌ செலுத்தி வருவதற்கும்‌ புரிந்து வருவதற்கும்‌ ஆற்றி வருவதற்கும்‌ தற்காலிகமாக அலுவலர்‌ எவரையும்‌ நியமிக்கலாம்‌ அல்லது குழு எதனையும்‌ அமைக்கலாம்‌. 50. முறைப்படியான காலியிடங்களை (regular vacancies) நிரப்புதல்‌.- இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்பு எதனின்‌ அல்லது பிற அமைப்பு எதனின்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கிடையே காலக்‌ கழிவினால்‌ காலியிடம்‌ ஏதேனும்‌ எழுகின்றவிடத்து அத்தகைய காலியிடமானது துணை வேந்தரால்‌ தீர்மானிக்கப்படக்கூடிய தேர்தல்‌ மூலம்‌ நிரப்பப்படுதல்‌ வேண்டும்‌. வரம்புரை: அத்தகைய தேர்தலானது, காலியிடம்‌ ஏற்படுகின்ற தேதியிலிருந்து இரண்டு மாதத்திற்கு முன்னதாக நடத்தப்படுதல்‌ கூடாது. அத்தியாயம்‌ X. பல்வகை. 51. தற்செயல்‌ காலியிடங்களை நிரப்புதல்‌. இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்பு எதனின்‌ அல்லது பிற அமைப்பு எதனின்‌ (பதவிவழி உறுப்பினர்களல்லாத பிற) உறுப்பினர்களுக்கிடையேயான தற்செயல்‌ காலியிடங்கள்‌ அனைத்தும்‌ எவ்வளவு விரைவில்‌ இயலுமோ அவ்வளவு விரைவில்‌ எந்த உறுப்பினருடைய பதவியிடம்‌ காலியாக ஆகியுள்ளதோ அந்த உறுப்பினரை பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்த அல்லது தேர்ந்தெடுத்த நபரால்‌ அல்லது அமைப்பால்‌ நிரப்பப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ தற்செயல்‌ காலியிடமொன்றுக்கு பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்டவர்‌ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்‌ எவருடைய பதவியிடத்தை அவர்‌ நிரப்புகிறாரோ அவர்‌ ஓர்‌ உறுப்பினராய்‌ இருந்திருக்கக்கூடிய கால அளவில்‌ எஞ்சிய பகுதிக்கு அத்தகைய அதிகார அமைப்பின்‌ அல்லது அமைப்பின்‌ ஓர்‌ உறுப்பினராக இருத்தல்‌ வேண்டும்‌. வரம்புரை: தற்செயல்‌ காலியிடம்‌ எதுவும்‌, இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்பு எதனின்‌ அல்லது பிற அமைப்பு எதனினுடைய உறுப்பினரின்‌ பதவிக்‌ காலம்‌ முடிவடையும்‌ தேதிக்கு முன்‌ ஆறு மாதத்திற்குள்ளாக அத்தகைய காலியிடம்‌ ஏற்படுமானால்‌, நிரப்பப்படுதலாகாது. 52. பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு அல்லது அமைப்பின்‌ நடவடிக்கைகள்‌ காலியிடங்கள்‌. காரணமாக செல்லாதவையாக ஆக்கப்படுதல்‌ ஆகாது. இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்பு எதனின்‌ அல்லது பிற அமைப்பு எதனின்‌ செயல்‌ அல்லது நடவடிக்கை எதுவும்‌ காலியிடம்‌ ஏதேனும்‌ இருக்கின்ற காரணத்தால்‌ மட்டுமே அல்லது இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு எதனின்‌ அல்லது பிற அமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ ஒருவரின்‌ தேர்தலில்‌ அல்லது நியமனத்தில்‌ குறைபாடு அல்லது முறைகேடு உள்ள காரணத்தால்‌ மட்டுமே அல்லது நேர்வுக்குள்‌ தகுதிகளை ஊறுபடுத்தாத (பாதிக்காத) அத்தகைய செயல்‌ அல்லது நடவடிக்கையில்‌ குறைபாடு அல்லது முறைகேடு உள்ள காரணத்தால்‌ மட்டுமே, அல்லது எந்த ஆண்டிலேனும்‌ ஆட்சிப்‌ பேரவை இரு முறை கூடவில்லை என்னும்‌ காரணத்தால்‌ மட்டுமே செல்லத்தக்கதாக ஆக்கப்படுதலாகாது. 53. உறுப்பினர்‌ பதவியிலிருந்து நீக்குதலும்‌ பல்கலைக்கழகத்தின்‌ பட்டம்‌, அல்லது பட்டயம்‌ அல்லது பிற கல்விச்‌ சிறப்புகளை திரும்பப்‌ பெறுதலும்‌.- (1) ஆட்சி மன்றமானது,- (ஐ இப்பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரஅமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ எவரேனும்‌, ஆட்சிமன்ற கருத்தின்படி, ஒழுக்கக்கேட்டை உள்ளடக்கியதாகவுள்ள ஒரு குற்றத்திற்காக குற்ற வழக்கு நீதிமன்றமொன்றால்‌ தண்டணைத்‌ தீர்ப்பு வழங்கப்பட்‌ டிருப்பாரானால்‌, அல்லது கடுந்தவறான நடத்தை (Gross misconduct) குற்றத்தை இழைத்த குற்றவாளியாக இருப்பாரானால்‌, ஆட்சி மன்றத்தின்‌ மொத்த உறுப்பினர்களின்‌ பெரும்பான்மையால்‌ நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின்‌ மூலமாகவும்‌, கூட்டத்திற்கு வருகை தந்து வாக்களிக்கும்‌ உறுப்பினர்களின்‌ மூன்றில்‌ இரண்டு பங்குக்கு குறைந்ததல்லாத பெரும்பான்மையாலும்‌, இதன்‌ பொருட்டு பிறப்பிக்கப்பட்ட எழுத்துருவிலான ஆணை ஒன்றின்‌ மூலம்‌ அத்தகைய நபரை, இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ பதவியிலிருந்து நீக்கம்‌ செய்யலாம்‌: மற்றும்‌ (b) அதே காரணங்களுக்காக, இப்பல்கலைக்கழகத்தால்‌ அந்த நபருக்கு அளிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட பட்டம்‌, பட்டயம்‌ மற்றும்‌ பிற கல்விச்‌ சிறப்புகள்‌ எதனையும்‌ திரும்பவும்‌ பெறலாம்‌. (2) இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு எதனின்‌ உறுப்பினரானவர்‌, மனச்‌ சீர்கேடுற்றவராகவோ அல்லது ஒரு செவிட்டு ஊமையாகவோ ஆகியிருந்தால்‌, அல்லது நொடித்த ஒருவராக நீதித்‌ தீர்ப்பு பெறுவதற்கு மனுச்‌ செய்து கொண்டிருந்தால்‌ அல்லது நொடித்த ஒருவராக ந்தி தீர்ப்பு அளிக்கப்‌ பெற்றிருந்தால்‌ இதன்‌ பொருட்டுப்‌ பிறப்பிக்கப்பட்ட எழுத்துருவிலான ஆணைடுயொன்றின்‌ மூலம்‌ ஆட்சிமன்றமானது, இப்பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ பதவியிலிருந்தும்‌ அவரை நீக்கம்‌ செய்யலாம்‌. நபரெவருக்கும்‌ எதிராக, - (3) எடுக்கக்‌ கருதியுள்ள நடவடிக்கைக்கு எதிராகக்‌ காரணம்‌ காட்டுவதற்கு அவருக்கு நியாயமான வாய்ப்பொன்று கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, இந்தப்‌ பிரிவின்‌ கீழ்‌ நடவடிக்கை எதுவும்‌ எடுக்கப்படுதல்‌ ஆகாது. (4) ௫-ஆம்‌ உட்பிரிவு அல்லது நேர்விற்கேற்ப (2) ஆம்‌ உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றின்‌ படி (நகல்‌) ஒன்றினை அது அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட பின்னர்‌ கூடிய விரைவில்‌ ஒழுங்கு விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ தொடர்புடைய நபருக்குத்‌ தெரிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 54. தேர்தல்‌ அல்லது நியமனம்‌ குறித்த தகராறுகள்‌.- இப்பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின்‌ அல்லது இப்பல்கலைக்கழக பிற அமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ ஒருவராக எவரேனும்‌ உரியவாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரா அல்லது நியமனம்‌ செய்யப்பட்டுள்ளாரா அல்லது உறுப்பினராயிருப்பதற்கு உரிமையுடையவராயிருக்கிறாரா என்பது குறித்து வினா ஏதேனும்‌ எழுமானால்‌, அவ்வினா, வேந்தருக்குக்‌ குறித்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌; அவருடைய முடிவே இறுதியானதாகும்‌. 55. அதிகாரஅமைப்புகள்‌, குழுக்களை அமைத்தலும்‌ அதிகாரங்களை ஒப்படைவு செய்தலும்‌.- இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகள்‌ அனைத்தும்‌, குழுக்களை அமைப்பதற்கும்‌ அல்லது மாற்றியமைப்பதற்கும்‌ மற்றும்‌ தங்களுடைய அதிகாரங்களுள்‌ தாங்கள்‌ பொருத்தமெனக்‌ கருதுகிறவற்றை அவைகளிடம்‌ ஒப்படைவு செய்வதற்கும்‌ அதிகாரம்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. அத்தகைய குழுக்கள்‌, மற்றபடி வகைசெய்யப்பட்டுள்ளவாறு தவிர, தொடர்புடைய அதிகாரஅமைப்பின்‌ உறுப்பினர்களையும்‌, அவ்வதிகார அமைப்பு பொருத்தமெனக்‌ கருதக்கூடிய பிற நபர்‌ எவரேனும்‌ இருப்பின்‌ அவரையும்‌, உள்ளடக்கியிருத்தல்‌ வேண்டும்‌. 56. தகவல்‌ பெறுவதற்கான அதிகாரம்‌.- இந்தச்‌ சட்டத்திலோ அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம்‌ எதிலுமோ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, அரசு எழுத்துருவிலான ஆணையின்‌ மூலமாக, இப்பல்கலைக்கழக அலுவல்கள்‌ தொடர்பான பொருள்‌ எதையும்‌ பற்றி, இப்பல்கலைக்கழகத்திடமிருந்து தகவல்‌ எதையும்‌ கேட்டுப்‌ பெறலாம்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகம்‌ அத்தகைய தகவல்‌ தன்னிடம்‌ இருக்குமானால்‌, அத்தகைய தகவலை நியாயமானதொரு கால அளவுக்குள்‌ அரசுக்கு அளித்தல்‌ வேண்டும்‌. வரம்புரை: இப்பல்கலைக்கழகம்‌ மந்தணமானதெனக்‌ கருதுகிற தகவலைப்‌ பொறுத்த வரையில்‌, இப்பல்கலைக்கழக துணை வேந்தரானவர்‌ அதை வேந்தர்‌ முன்பு அவர்‌ முடிவுக்காக வைக்கலாம்‌. 57. சென்னைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ குறிப்பிட்ட சில பணியாளர்களை மருத்துவப்‌ பல்கலைக்கழகத்திற்கு மாற்றுதல்‌- (1) (ஐ அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்குப்‌ பிண்னர்‌, எவ்வளவு விரைவில்‌ இயலுமோ அவ்வளவு விரைவில்‌ அரசானது, சென்னைப்‌ பல்கலைக்கழகம்‌, தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகம்‌ ஆகியவற்றின்‌ துணை வேந்தர்களையும்‌ கலந்தாலோசித்த பின்னர்‌, பொது அல்லது தனி ஆணை மூலம்‌, சென்னை தரமணியிலுள்ள அடிப்படை மருத்துவ அறிவியல்‌ பட்டமேற்படிப்புக்‌ கல்வி நிலையத்தில்‌ பணி புரிந்து வருகின்ற சென்னைப்‌ பல்கலைக்கழகப்‌ பணியாளர்கள்‌ அத்தகைய ஆணையில்‌ குறிப்பிடப்படும்‌ தேதியன்றும்‌, அது முதற்கொண்டும்‌ தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகத்தின்‌ அலுவல்கள்‌ தொடர்பாகப்‌ பணியாற்றுவதற்கு ஒதுக்கியளிக்கப்பட்டவராதல்‌ வேண்டும்‌ என்று பணிக்கலாம்‌; வரம்புரை: அத்தகைய பணிப்புரை எதுவும்‌, எந்த நபரைப்‌ பொறுத்தும்‌, அத்தகைய ஒதுக்கீட்டிற்கு அவரது இசைவு இல்லாமல்‌ பிறப்பிக்கப்படுதல்‌ ஆகாது. (b) வ - கூறின்படியான ஆணையில்‌ குறித்துரைக்கப்பட்ட தேதியிலும்‌, அது முதற்கொண்டும்‌, அத்தகைய ஆணையில்‌ குறித்துரைக்கப்பட்ட நபர்கள்‌ தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகப்‌ பணியாளர்களாக ஆதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அவர்கள்‌ சென்னைப்‌ பல்கலைக்கழகப்‌ பணியாளர்களாக இருப்பது அற்றுப்போதல்‌ வேண்டும்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிட்ட நபர்‌ ஒவ்வொருவரும்‌ இந்தச்‌ சட்டம்‌ நிறைவேற்றப்படாதது போன்று, (1) ஆம்‌ உட்பிரிவின்‌ (ஐ கூறின்படியான ஆணையில்‌ குறித்துரைக்கப்பட்ட தேதியன்று அவர்‌ பெறுவதற்கு உரிமையுடையராயிருந்திருக்கக்‌ கூடியவற்றைவிடக்‌ குறைந்த அனுகூலம்‌ உடையவையாக இருக்கக்கூடாத பதவிக்‌ கால அளவு ஊதியம்‌ மற்றும்‌ ஓய்வூதியம்‌ அல்லது பணிக்கொடை ஏதேனுமிருப்பின்‌ அது குறித்த வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகள்‌ மற்றும்‌ சிறப்புரிமைகள்‌ மற்றும்‌ பிற பொருள்கள்‌ (விஷயங்கள்‌) ஆகியவற்றின்பேரில்‌, தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கீழ்ப்‌ பதவி வகித்தல்‌ வேண்டும்‌. (3) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்ட நபர்களுக்கு ஓய்வூதியம்‌ மற்றும்‌ பணிக்கொடை ஆகியவற்றை வழங்குவதற்கான கடப்பாடானது தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கடப்பாடாக இருத்தல்‌ வேண்டும்‌. 58. வருங்கால வைப்பு நிதியம்‌ மற்றும்‌ பிற அதுபோன்ற நிதியத்தில்‌ சேர்ந்துள்ள தொகைகளை மாற்றுதல்‌. 57 ஆம்‌ பிரிவில்‌ (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்ட நபர்கள்‌ தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகப்‌ பணியாளர்களாக ஆகின்ற தேதியன்று, அவர்களின்‌ வருங்கால வைப்பு நிதியக்‌ கணக்குகளில்‌ வரவு இருப்பில்‌ உள்ள தொகைகள்‌ தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌, மேற்சொல்லப்பட்ட வருங்கால வைப்பு நிதியக்‌ கணக்குகள்‌ பொறுத்த கடப்பாடானது, தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின்‌ கடப்பாடாக இருத்தல்‌ வேண்டும்‌. (2) சென்னைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ வயது முதிர்வு ஓய்வு நிதியம்‌ மற்றும்‌ அதுபோன்ற பிற நிதியங்கள்‌ எவையேனுமிருப்பின்‌, அவற்றில்‌ சேர்ந்துள்ள தொகைகளிலிருந்து 57 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்ட நபர்களின்‌ சார்பாக வயது முதிர்வு நிதியம்‌ அல்லது அதுபோன்ற நிதியங்கள்‌ எவையேனுமிருப்பின்‌, அவற்றில்‌ வரவு வைக்கப்பட்டிருக்கிண்ற தொகைகளை தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகத்திற்கு வழங்குதல்‌ வேண்டும்‌. அவ்வாறு வழங்கப்பட்ட தொகையானது, தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகத்தால்‌ அதன்‌ பணியாளர்களின்‌ நலனுக்காக நிறுவப்படக்கூடிய வயது முதிர்வு ஓய்வு நிதியம்‌ அல்லது அதுபோன்ற பிற நிதியங்கள்‌ எவையேனுமிருப்பின்‌ அவற்றின்‌ பகுதியாக அமைதல்‌ வேண்டும்‌. 59. சென்னைப்‌ பல்கலைக்கழகத்தினால்‌ சில குறிப்பிட்ட தொகை வழங்கப்படுதல்‌.-- (1) சென்னைப்‌ பல்கலைக்கழகமானது, அறிவிக்கை செய்யப்பட்ட தேதியன்று உள்ள தனது நிதியங்களிலிருந்து, செண்னைப்‌ பல்கலைக்கழகத்துடன்‌ கலந்தாலோசித்து அரசு குறித்துரைக்கக்கூடிய தொகையினை தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகத்திற்கு வழங்குதல்‌ வேண்டும்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவின்படி வழங்கப்பட வேண்டிய தொகையானது, 57 ஆம்‌ பிரிவின்படி சென்னைப்‌ பல்கலைக்கழகத்தால்‌ தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தொகையுடன்‌ கூட அமைந்ததாக இருத்தல்‌ வேண்டும்‌. 60. மேற்பார்வைத்‌ தேர்வாய்வு (visitation).— (1) இப்பல்கலைக்கழகம்‌, அதன்‌. கட்டடங்கள்‌, ஆய்வுக்கூடங்கள்‌, நூலகங்கள்‌, அருங்காட்சியகங்கள்‌, பட்டறைகள்‌ மற்றும்‌ தளவாடங்கள்‌ ஆகியவற்றையும்‌, இப்பல்கலைக்கழகத்தால்‌ பேணி வரப்படும்‌ அதனால்‌ ஏற்பிசைவளிக்கப்பெற்ற அல்லது ஒப்புதலளிக்கப்பெற்ற அல்லது அதனுடன்‌ இணைக்கப்பெற்ற கல்வி நிலையங்கள்‌ எவற்றையும்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தால்‌ நடத்தப்படும்‌ அல்லது செய்யப்படும்‌ தேர்வுகளையும்‌ கற்பித்தலையும்‌ மற்றும்‌ பிற பணியினையும்‌ குறித்து, தான்‌ பணிக்கலாகும்‌ நபரால்‌ அல்லது நபர்களால்‌ ஆய்வு நடத்தப்பட அல்லது விசாரணை செய்யப்படச்‌ செய்விப்பதற்கும்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகம்‌ தொடர்பான எந்தப்‌ பொருள்‌ குறித்தும்‌ விசாரணை ஒன்று செய்யப்படச்‌ செய்விப்பதற்கும்‌ அரசு உரிமையினைப்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. அரசு, ஒவ்வொரு நேர்விலும்‌, அத்தகைய ஆய்வு நடத்தப்பட அல்லது விசாரணை செய்யப்படச்‌ செய்விக்கவிருக்கின்ற தன்‌ கருத்தினைக்‌ குறித்து இப்பல்கலைக்கழகத்திற்கு அறிவிப்பு கொடுத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இப்பல்கலைக்கழகமானது அத்தகைய ஆய்வில்‌ அல்லது விசாரணையில்‌ தன்‌ பக்கத்தை எடுத்துரைக்க உரிமை பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. (2) அரசானது, அத்தகைய ஆய்வு அல்லது விசாரணை முடிவு குறித்த தனது கருத்துகளை ஆட்சி மன்றத்திற்கு தெரிவித்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அதன்‌ பேரில்‌ ஆட்சி மன்றத்தின்‌ கருத்தினை கண்டறிந்த பின்பு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இப்பல்கலைக்கழகத்திற்கு அறிவுரை வழங்கலாம்‌; மற்றும்‌ அத்தகைய நடவடிக்கை எடுப்பதற்கான காலவரம்பொன்றை நிர்ணயிக்கலாம்‌. (3) ஆட்சி மன்றமானது, அத்தகைய ஆய்வு அல்லது விசாரணை முடிவின்‌ அடிப்படையில்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கையினைப்‌ பற்றி அரசுக்கு அறிக்கை செய்தல்‌ வேண்டும்‌. அத்தகைய அறிக்கையானது, அரசு பணிக்கலாகும்‌. காலத்திற்குள்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. (4) ஆட்சிமன்றமானது, அரசு மனநிறைவு கொள்ளும்‌ வகையில்‌ நியாயமான காலத்திற்குள்‌ நடவடிக்கை எடுக்காதவிடத்து அரசானது ஆட்சிமன்றத்தால்‌ அளிக்கப்பட்ட விளக்கம்‌ அல்லது செய்யப்பட்ட முறையீடு எதனையும்‌ கருதிப்‌ பார்த்த பின்பு, தான்‌ பொருத்தமென நினைக்கலாகும்‌ பணிப்புரைகளை பிறப்பிக்கலாம்‌; மற்றும்‌ ஆட்சி மன்றமானது அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி நடத்தல்‌ வேண்டும்‌. இதன்பொருட்டு அரசால்‌ நிர்ணயிக்கப்படக்கூடிய காலத்திற்குள்‌ அத்தகைய பணிப்புரைகளுக்கு ஆட்சிமன்றம்‌ இணங்கி நடக்காத நிகழ்வில்‌, அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி நடப்பதற்கு நபரெவரையும்‌ அல்லது அமைப்பு எதையும்‌ நியமிப்பதற்கும்‌ அதன்‌. செலவிற்காக தேவைப்படக்கூடிய ஆணைகளைப்‌ பிறப்பிப்பதற்கும்‌ அரசு அதிகாரம்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. 61. நூலகர்‌.- (1) நூலகர்‌, இந்நோக்கத்திற்காக அமைக்கப்படும்‌ தேர்வுக்குழுவின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய கால அளவுக்கும்‌ வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்‌ பேரிலும்‌ ஆட்சிமன்றத்தால்‌ நியமிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின்‌ ஒரு முழு நேர அலுவலராக இருத்தல்‌ வேண்டும்‌. (2) நூலகர்‌, ஆட்சிமன்றத்தால்‌ அவருக்கு குறித்தளிக்கப்படக்கூடிய அதிகாரங்களைச்‌ செலுத்தி வருதலும்‌, கடமைகளைப்‌ புரிந்து வருதலும்‌ வேண்டும்‌. 62. சிறப்பு நியமன முறை. (1) ஆட்சிமன்றம்‌, தான்‌ பொருத்தமெனக்‌ கருதுகிற வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்‌ பேரில்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பேராசிரியர்‌ பதவி ஒன்றை ஏற்றுக்கொள்ளுமாறு, உயர்‌ கல்விச்‌ சிறப்பையும்‌ தொழில்முறைத்‌ தேர்ச்சிப்‌ பேறுகளையும்‌ பெற்றுள்ள ஒருவரை அழைக்கலாம்‌; மற்றும்‌ அவர்‌ ஏற்றுக்கொண்ட பேரில்‌, அவரைப்‌ அப்பதவிக்கு நியமிக்கலாம்‌. (2) ஆட்சிமன்றம்‌, அவசர விதிகளில்‌ விதிக்கப்பட்டுள்ள முறையில்‌ கூட்டுத்‌ திட்டமொன்றை மேற்கொள்வதற்காக பிற பல்கலைக்கழகம்‌ அல்லது அமைப்பு எதிலேனும்‌ பணிபுரிகிற, ஆசிரியர்‌ ஒருவரையோ கல்விப்‌ பணியாளர்த்‌ தொகுதியின்‌ பிற உறுப்பினர்‌ எவரையுமோ நியமிக்கலாம்‌. 63. இணைக்கப்பட்ட கல்லூரிகளின்‌ மீதான அறிக்கை.- ஆட்சி மன்றமானது, அறிவிக்கை செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒவ்வொரு ஐந்தாண்டின்‌ முடிவிலும்‌ பல்கலைக்கழகப்‌ பரப்பிற்குள்‌ உள்ள இணைக்கப்பட்ட கல்லூரிகளின்‌ மற்றும்‌ ஒப்புதலளிக்கப்பட்ட கல்வி நிலையங்களின்‌ நிலையைப்‌ பற்றி அரசிற்கு அறிக்கையொன்றை பணிந்தனுப்புதல்‌ வேண்டும்‌. அரசு, அவ்வறிக்கையின்‌ மீது தான்‌ பொருத்தமெனக்‌ கருதும்‌ நடவடிக்கையினை எடுத்தல்‌ வேண்டும்‌. 64. தெரிவுக்‌ குழு.-- (1) இப்பல்கலைக்கழகத்தால்‌ பேணிவரப்படும்‌ பேராசிரியர்‌, உதவிப்‌ பேராசிரியர்‌, சிறப்புப்‌ பேராசிரியர்‌, விரிவுரையாளர்‌, நூலகர்‌ ஆகிய பதவிக்கு நியமனம்‌ செய்ய, ஆட்சிமன்றத்திற்கு பரிந்துரைகள்‌ செய்வதற்காகத்‌ தெரிவுக்‌ குழு ஒன்று இருத்தல்‌ வேண்டும்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள அப்பதவிகளுக்கு நியமனம்‌ செய்வதற்கான தெரிவுக்‌ குழுவானது, துணை வேந்தரையும்‌ தொடர்புடைய கல்விக்‌ குழுவின்‌ தலைவரையும்‌ மற்றும்‌ எந்தப்‌ பாடப்‌ பொருளில்‌ நியமனம்‌ செய்யப்படவிருக்கிறதோ அந்தப்‌ பாடப்‌ பொருளில்‌ வல்லுநர்களாக உள்ள ஆட்சி மன்றத்துடன்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படும்‌ இருவருக்குக்‌ குறையாத ஆனால்‌ நால்வருக்கு மேற்படாத நபர்களையும்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌; வரம்புரை: குறைந்தது இரண்டு வல்லுநர்களாவது தெரிவுக்‌ குழுக்‌ கூட்டத்தில்‌ வந்திருத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌ வரம்புரை: சிறப்புப்‌ பேராசிரியர்கள்‌ மற்றும்‌ விரிவுரையாளர்கள்‌: ஆகியோரின்‌ பதவி நியமனத்திற்கான தெரிவினைப்‌ பொறுத்த அளவில்‌ வல்லுநர்களில்‌ ஒருவர்‌, அப்பாடப்‌ பொருள்‌ ஒன்று இருக்குமாயின்‌ அப்பாடப்‌ பொருளில்‌ பல்கலைக்கழகப்‌ பேராசிரியராயும்‌ துறைத்‌ தலைவராகவும்‌, உள்ளவராக இருத்தல்‌ வேண்டும்‌. 65. துணை வேந்தரும்‌ பிற அலுவலர்கள்‌ முதலானோரும்‌ பொது ஊழியர்களாக இருப்பர்‌ என்பது.- துணை வேந்தர்‌, பதிவாளர்‌, நிதி அலுவலர்‌, தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, மற்றும்‌ இப்பல்கலைக்கழகத்தின்‌ பிற பணியாளர்கள்‌ ஆகியோர்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளில்‌ எதனையும்‌ ஒட்டிச்‌ செயற்படுகின்ற போது அல்லது செயற்படுவதாகப்‌ புலப்படுகின்றபோது இந்தியத்‌ தண்டனைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ XLV/1860) 21 ஆம்‌ பிரிவின்‌ பொருளின்படி பொது ஊழியர்களாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 66. இணைப்புப்பட்டியலைத்‌ திருத்துவதற்கான அதிகாரம்‌.- அரசு அறிவிக்கையின்‌ மூலமாக, இணைப்புப்பட்டியலில்‌ கல்லூரி, கல்வி நிலையம்‌ அல்லது மையம்‌ எதனையும்‌ அதில்‌ சேர்ப்பதற்காகவோ, அல்லது கல்லூரி, கல்வி நிலையம்‌ அல்லது மையம்‌ எதனையுமோ அதிலிருந்து நீக்கிவிடுவதற்காகவோ திருத்தம்‌ செய்யலாம்‌; மற்றும்‌ அத்தகைய அறிவிக்கை வெளியிடப்பட்டதன்‌ பேரில்‌, அத்தகைய கல்லூரி, கல்வி நிலையம்‌ அல்லது மையமானது இணைப்புப்பட்டியலில்‌ சேர்க்கப்படுவதாகவோ அல்லது நேர்விற்கேற்ப அதிலிருந்து நீக்கிவிடப்படுவதாகவோ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 67. சில குறிப்பிட்ட சட்டங்கள்‌ பொருந்தா என்பது.- (1) (2) முதல்‌ (7) வரையிலான உட்பிரிவுகளின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு, 1923 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ VI/1923), 1965 ஆம்‌ ஆண்டு மதுரை காமராசர்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ (குமிழ்நாடு சட்டம்‌ 33/1965), 1981 ஆம்‌ ஆண்டு பாரதியார்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 171982), 1981 ஆம்‌ ஆண்டு பாரதிதாசன்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ (குமிழ்நாடு சட்டம்‌ 271982) (இதன்‌ பின்பு இந்தப்‌ பிரிவில்‌ மேற்சொல்லப்பட்ட சட்டங்கள்‌ எனக்‌ குறிப்பிடப்படுவது) ஆகியவை அறிவிக்கை செய்யப்பட்ட தேதியிலிருந்து அது முதற்கொண்டும்‌ இந்தச்‌ சட்டம்‌ பொருந்துகிற கல்லூரி மற்றும்‌ கல்வி நிலையம்‌ ஒவ்வொன்றையும்‌ பொறுத்து பொருந்துவது அற்றுப்போதல்‌ வேண்டும்‌. (2) அவ்வாறு அற்றுப்‌ போவதானது (Cessor),— (ஐ (0-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள கல்லூரிகள்‌ மற்றும்‌ கல்வி நிலையங்களைப்‌ பொறுத்து மேற்சொல்லப்பட்ட சட்டங்கள்‌. முன்னர்‌ செயற்பாட்டில்‌ இருந்தததையோ; அல்லது (௦) மேற்சொல்லப்பட்ட சட்டங்களின்‌ கீழ்ப்‌ புரியப்பட்ட குற்றம்‌ எதனின்‌ தொடர்பாக அடைந்த தண்டம்‌, தண்ட இழப்பு அல்லது தண்டனை எதனையுமோ; அல்லது (௦) அத்தகைய தண்டம்‌, தண்ட இழப்பு அல்லது தண்டனை தொடர்பான புலனாய்வு, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி (பரிகாரம்‌) எதையும்‌ பாதிக்கலாகாது; மற்றும்‌ இந்தச்‌ சட்டம்‌ நிறைவேற்றப்பட்டிராததுபோன்று அத்தகைய புலனாய்வு சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி (பரிகாரம்‌) எதுவும்‌ தொடுக்கப்படலாம்‌, தொடர்ந்து நடத்தப்படலாம்‌ அல்லது நிறைவேற்றப்படலாம்‌; மற்றும்‌ அத்தகைய தண்டம்‌, தண்ட இழப்பு அல்லது தண்டனை எதுவும்‌ விதிக்கப்படலாம்‌. (3) (1) ஆம்‌ உட்பிரிவி என்ன அடங்கியிருந்த போதிலும்‌, மேற்சொல்லப்பட்ட சட்டங்களின்‌ கீழ்‌ செய்யப்பட்டவையும்‌ மற்றும்‌ அறிவிக்கை செய்யப்பட்ட தேதியில்‌ நடைமுறையில்‌ உள்ளவையுமான நிலை விதிகள்‌, அவசர விதிகள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகள்‌ அனைத்தும்‌ அவற்றிற்குப்‌ பதிலாக இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செய்யப்படும்‌ நிலை விதிகள்‌, அவசர விதிகள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகள்‌ ஆகியவை அமைகின்ற வரையிலும்‌ அவை எந்த அளவுக்கு இந்தச்‌ சட்டத்துடன்‌ ஒவ்வாதனவாக இல்லாதிருக்கின்றனவோ அந்த அளவுக்கு இப்பல்கலைக்கழகப்‌ பரப்பில்‌ அமைந்துள்ள மேற்சொன்ன (1) ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள கல்லூரிகள்‌ மற்றும்‌ கல்வி நிலையங்கள்‌ பொறுத்து தொடர்ந்து நடைமுறையில்‌ இருந்துவருதல்‌ வேண்டும்‌. (4) இந்தச்‌ சட்டத்தில்‌ அல்லது (3) ஆம்‌ உட்பிரிவின்படி தொடர்ந்து நடைமுறையில்‌ இருந்துவரச்‌ செய்யப்பட்டுள்ள அல்லது இந்தச்‌ சட்டத்தின்கீழ்ச்‌ செய்யப்பட்ட நிலைவிதிகள்‌, அவசர விதிகள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகளில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌ அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு அடுத்து முன்னர்‌, சென்னை, மதுரை-காமராசர்‌, பாரதியார்‌ மற்றும்‌ பாரதிதாசன்‌ பல்கலைக்கழகங்களுடன்‌ இணைக்கப்பட்ட அல்லது அவற்றால்‌ ஏற்பிசைவளிக்கப்பெற்ற அல்லது அவற்றால்‌ பேணி வரப்படுகின்ற இப்பல்கலைக்கழகப்‌ பரப்புக்குள்‌ இருக்கின்ற கல்லூரி ஒன்றின்‌ மாணவராய்‌ இருந்திருக்கின்ற அல்லது மேற்சொல்லப்பட்ட பல்கலைக்கழகங்களின்‌ மருத்துவ அறிவியல்‌ தேர்வுகளில்‌ எதற்கும்‌ முன்னிலையாவதற்கு தகுதி வாய்ந்தவராக இருந்திருக்கின்ற ஒவ்வொரு நபரும்‌ முறையே அந்தந்தப்‌ பல்கலைக்கழகங்களில்‌ உள்ள தொடர்கோவைப்‌ படிப்பிற்கிணங்க, தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகத்தால்‌ தீர்மானிக்கபடக்கூடிய மாணவர்கட்கு தீர்மானிக்கப்படக்கூடிய கால அளவுக்கு மற்றும்‌ தீர்மானிக்கப்படக்கூடிய பயிற்றுவித்தல்‌, கற்பித்தல்‌, மற்றும்‌ பயிற்சிக்கு தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகம்‌ ஏற்பாடு செய்தல்‌ வேண்டும்‌; மேலும்‌ அத்தகைய மாணவர்கள்‌ அந்தக்‌ கால அளவின்போது, முறையே அந்தந்தப்‌ பல்கலைக்கழகங்களால்‌ வைக்கப்படும்‌ அல்லது நடத்தப்படும்‌ தேர்வுகளை ஏற்றுக்கொள்ளுதல்‌ வேண்டும்‌. மற்றும்‌ அத்தகைய தேர்வுகளின்‌ முடிவின்‌ பேரில்‌, தகுதி பெற்ற மாணவர்கட்கு நேரிணையான அப்பல்கலைக்கழகங்களின்‌ பட்டம்‌, பட்டயம்‌ அல்லது பிற கல்விச்‌ சிறப்புகள்‌ தொடர்புடைய பல்கலைக்கழகங்களால்‌ அளிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (5) சென்னை, தரமணியில்‌ உள்ள பல்கலைக்கழக வளாகத்தில்‌ சென்னைப்‌ பல்கலைக்கழகம்‌ அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு அடுத்து முன்னர்‌ சொந்தமாய்ப்‌ பெற்றிருந்த அல்லது அதனிடம்‌ ஒப்படைக்கப்பட்டு மேவியிருந்த அல்லது பொறுப்பாட்சி (Trust) வகையில்‌ அது வைத்திருந்த நிலங்கள்‌, கட்டடங்கள்‌, தளவாடங்கள்‌, புத்தகங்கள்‌ மற்றும்‌ நூலகம்‌ உள்ளடங்கலாக அசையும்‌ அல்லது அசையாச்‌ சொத்து அனைத்தும்‌ எந்த வகையையும்‌ சேர்ந்த உரிமைகள்‌ அனைத்தும்‌ மற்றும்‌ அந்த வளாகத்தில்‌ அந்தப்‌ பல்கலைக்கழகத்திற்கு எதிராக சட்டப்படியாக நிகழ்நிலையிலுள்ள கடப்பாடுகளும்‌, தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்படுவதாதலும்‌ மற்றும்‌ அதனிடம்‌ ஒப்படைக்கப்பட்டு மேவி நிற்றலும்‌ வேண்டும்‌. (6) அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு அடுத்து முன்னர்‌, (ஐ தொடர்ந்து, சென்னை, மதுரை-காமராசர்‌, பாரதியார்‌ மற்றும்‌ பாரதிதாசன்‌ பல்கலைக்கழகங்களுடன்‌ இணைக்கப்பட்டவையாக இருக்கின்ற அல்லது அவற்றால்‌ ஏற்பிசைவு அளிக்கப்பட்டவையாக (அங்கீகரிக்கப்பட்டதாக) இருக்கின்ற; மற்றும்‌ (b) ௫) கூறில்‌ குறித்துரைக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின்‌ பட்டங்கள்‌ மற்றும்‌ பட்டயங்களுக்கான தேர்வுக்கு ஏற்றுக்‌ கொள்ளப்படுவதற்கான தொடர்‌ கோவைப்‌ படிப்புகளை அளிக்கின்ற, பல்கலைக்கழகப்‌ பரப்புக்குள்‌ உள்ள மருத்துவ, பல்‌ மருத்துவ செவிலிமை மற்றும்‌ மருந்தாக்கக்‌ கலைக்‌ கல்லூரிகள்‌ அனைத்தும்‌, இந்தச்‌ சட்டத்தின்படி, தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்பட்ட கல்லூரிகளாகக்‌ கருதிப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ எந்த அளவுக்கு இயலுமோ அந்த அளவுக்கு அதன்படியே பொருந்துதல்‌ வேண்டும்‌. (7) (2) உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு, ஆனால்‌ (3) முதல்‌ (6) வரையிலான உட்பிரிவுகளின்‌ வகைமுறைகளுக்கு ஊறில்லாமல்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ பொருந்துகின்ற பரப்பு எதுவும்‌ பொறுத்து மேற்சொல்லப்பட்ட சட்டங்களின்‌. வகைமுறைகள்‌ எவற்றின்படியேனும்‌. அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு முன்னர்‌ செய்யப்பட்ட எதுவும்‌ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ நேரிணையான வகைமுறைகளின்படி செய்யப்பட்டிருப்பதாகவோ அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகவோ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ நேரறிணையான வகைமுறையின்படி செய்யப்பட்ட செயல்‌ எதனாலும்‌ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனாலும்‌ தள்ளிவைக்கப்பட்டாலன்றியும்‌ மற்றும்‌ தள்ளிவைக்கப்படுகின்றவரையிலும்‌ (Superseded) அதன்படியே தொடர்ந்து செயல்திறன்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. 68. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌.- அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்குப்‌ பின்பு இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு எதையேனும்‌ முதன்முதலில்‌ அமைத்தல்‌ அல்லது மாற்றியமைத்தல்‌ குறித்தோ அல்லது மற்றப்படி இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளைச்‌ செயற்படுத்துதல்‌ குறித்தோ இடர்ப்பாடு ஏதேனும்‌ எழுமானால்‌, அரசு, அறிவிக்கையின்‌ மூலமாக அந்த இடர்பாட்டை நீக்குவதற்காக தேவையானதென்று அல்லது உகந்ததென்று தனக்கு தோன்றக்கூடிய, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு ஒவ்வாதவையாயிராத வகைமுறையைச்‌ செய்யலாம்‌. வரம்புரை: அத்தகைய அறிவிக்கை எதுவும்‌, 3 ஆம்‌ பிரிவின்படி இப்பல்கலைக்கழகம்‌ நிறுவப்பட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டு முடிவடைந்ததற்குப்‌ பின்பு, பிறப்பிக்கப்படுதலாகாது. (2) (1) ஆம்‌ உட்பிரிவின்படியோ இந்தச்‌ சட்டத்தின்‌ பிற வகைமுறைகள்‌ எவற்றின்படியுமோ பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும்‌ அது பிறப்பிக்கப்பட்ட பின்பு நடைமுறைக்கு இயன்ற வரையில்‌ சட்டமன்றப்‌ பேரவையின்‌ முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்படும்‌ கூட்டத்தொடர்‌ அல்லது அடுத்த கூட்டத்தொடர்‌ முடிவடைதற்கு முன்பு, அத்தகைய அறிவிக்கை எதிலும்‌ மாறுதல்‌ எதையேனும்‌ சட்டமன்றப்‌ பேரவையானது செய்யுமானால்‌, அல்லது இந்த அறிவிக்கை பிறப்பிக்கப்படுதலாகாது என்று சட்டமன்றப்‌ பேரவை முடிவு செய்யுமானால்‌, அந்த அறிவிக்கையானது அதன்‌ பின்பு அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில்‌ மட்டுமே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌; அல்லது நேர்விற்கேற்ப, நடைமுறைக்கே வராது போகும்‌; எனினும்‌, அத்தகைய மாறுதல்‌ அல்லது நீத்தறவு (இரத்து) எதுவும்‌, அந்த அறிவிக்கையின்படி முன்னதாக செய்யப்பட்ட ஏதொன்றின்‌ செல்லுந்தன்மைக்கும்‌ ஊறின்றி இருத்தல்‌ வேண்டும்‌. இணைபப்புப்பட்டியல்‌. [1(3) (ஐ பிரிவையும்‌ 66 ஆம்‌ பிரிவையும்‌ காண்க] கல்வி நிலையங்கள்‌ பட்டியல்‌. |. அரசு மருத்துவ கல்லூரிகள்‌ - மருத்துவ கல்வி இயக்குநரின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழுள்ளவை. 1. சென்னை மருத்துவ கல்லூரி, சென்னை-3. 2. ஸ்டேன்லி மருத்துவ கல்லூரி, சென்னை-1. 3. கீழ்ப்பாக்கம்‌ மருத்துவ கல்லூரி, சென்னை-10. 4. மதுரை மருத்துவ கல்லூரி, மதுரை. 5. தஞ்சாவூர்‌ மருத்துவ கல்லூரி, தஞ்சாவூர்‌. 6. கோயம்புத்தூர்‌ மருத்துவ கல்லூரி, கோயம்புத்தூர்‌. 7. திருநெல்வேலி மருத்துவ கல்லூரி, திருநெல்வேலி. 8. செங்கற்பட்டு மருத்துவ கல்லூரி, செங்கற்பட்டு. தனியார்‌ மருத்துவ கல்லூரிகள்‌ 1. கிருத்துவ மருத்துவ கல்லூரி, வேலூர்‌. 2. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, சென்னை. 3. பி. எஸ்‌. ஜி. மருத்துவ அறிவியல்‌ கல்வி நிலையம்‌, கோயம்புத்தூர்‌. ॥. அரசு மருத்துவ கல்லூரிகள்‌ - இந்திய மருத்துவ இயக்குநரின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழுள்ளவை. 1. அரசு சித்த மருத்துவ கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி. 2. அரசு சித்த மருத்துவ கல்லூரி, பழனி. 3. அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி, திருமங்கலம்‌, மதுரை மாவட்டம்‌. 4. அரசு யுனானி மருத்துவ கல்லூரி, சென்னை. தனியார்‌ மருத்துவ கல்லூரிகள்‌ 1. வெங்கடரமண ஆயுர்வேத கல்லூரி, சென்னை. 2. ஆயுர்வேத கல்லூரி, கோயம்புத்தூர்‌. ॥॥. அரசு பல்‌ மருத்துவ கல்லூரி 1.சன்னை பல்‌ மருத்துவ கல்லூரி, சென்னை. V. அரசு மருந்தாக்கக்‌ கலையியல்‌ கல்லூரி (8. Pharm) 1. சென்னை மருத்துவ கல்லூரி, சென்னை. 2. மதுரை மருத்துவ கல்லூரி, மதுரை. தனியார்‌ மருந்தாக்கக்‌ கலையியல்‌ கல்லூரிகள்‌ (B. Pharm) 1. சி. எல்‌. பெய்ட்‌ மேத்தா மருந்தாக்கக்‌ கலையியல்‌ கல்லூரி, துரைப்பாக்கம்‌, சென்னை. 2. ஜே. எஸ்‌.எஸ்‌. மருந்தாக்கக்‌ கலையியல்‌, கல்லூரி, ராக்‌ லேண்டு, உதகை மண்டலம்‌-|.. 3. கே. எம்‌. மருந்தாக்கக்‌ கலையியல்‌ கல்லூரி, மேலூர்‌ சாலை, ஊத்தன்குடி, மதுரை. V. அரசு செவிலிமைக்‌ கல்லூரி சென்னை மருத்துவ கல்லூரி, சென்னை. தனியார்‌ செவிலிமைக்‌ கல்லூரி கிருத்துவ மருத்துவ கல்லூரி, வேலூர்‌. VI. அரசு இயன்‌ மருத்துவ கல்லூரி 1. உடற்குறை சீரமைப்பு மருத்துவ நிலையம்‌, கே. கே. நகர்‌, சென்னை. 2. இராஜாஜி அரசு எலும்புருக்கி மருத்துவமனை வளாகத்தில்‌ உள்ள இயன்‌ மருத்துவ கல்லூரி, திருச்சிராப்பள்ளி. ௩7. முதுநிலை பட்டப்‌ படிப்புகளையும்‌ பட்டயப்‌ படிப்புகளையும்‌ நடத்திவருகின்ற தனியார்‌ கல்வி நிலையங்கள்‌. 1. புற்றுநோய்‌ நிலையம்‌, அடையார்‌, சென்னை. 2. சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி கட்டளை கல்லூரி சாலை, சென்னை-6. 3. புனித ஜோசப்‌ மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி. 4. அரவிந்தர்‌ கண்‌ மருத்துவமனை, மதுரை. 5. நீரிழிவு நோய்க்கான எம்‌.வி. மருத்துவமனை, சென்னை-13. 6. காந்திகிராம்‌ ஊரக மக்கள்‌ நல்வாழ்வு மற்றும்‌ குடும்பநலத்‌ திட்ட நிலையம்‌. 7. கிருத்துவ சமூக மக்கள்‌ நல்வாழ்வு மையம்‌, அம்பிலிக்கை.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts