Tamil Nadu · 2018 · Act 33
The Tamil Nadu Lokayukta Act, 2018
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
2018ஆம் ஆண்டு தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 33/2018)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
The Tamil Nadu Lokayukta Act, 2018
(Tamil Nadu Act No. 33 of 2018)
(ason 31% October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
சென்னை
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
i
2018ஆம் ஆண்டு தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 33/2018)
பிரிவு பொருளடக்கம்.
அத்தியாயம் -
முன்னுரை
1. குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
2. பொருள்வரையறைகள்.
அத்தியாயம் -॥
லோக் ஆயுக்தாவை நிறுவுதல் மற்றும்
கட்டமைத்தல்
3. லோக் ஆயுக்தாவை நிறுவுதல் மற்றும்
கட்டமைத்தல்.
4. தெரிவுக் குழுவின் பரிந்துரையின் பேரில் தலைவர்
மற்றும் உறுப்பினர்களைப் பணி அமர்த்துதல்.
5. தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம்.
6. தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஊதியம்,
படித்தொகைகள் மற்றும் பிற பணிவரையறைகள்.
7. பதவிக்காலம் முடிவுற்ற பின்னர் தலைவர் மற்றும்
உறுப்பினர்கள் பணி அமர்த்தப்படுவதற்குத் தடை.
8. குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் உறுப்பினர்
தலைவராக செயல்படுதல் அல்லது தலைவருடைய
செயற்பணிகளை ஆற்றுதல்.
9. லோக் ஆயுக்தாவின் செயலாளர், பிற அலுவலர்கள்.
மற்றும் பணியாளர்கள்.
10.
11.
12.
13.
14.
15.
16.
17
18.
i
அத்தியாயம் -॥
விசாரணைப் பிரிவு
விசாரணைப் பிரிவு.
அத்தியாயம் -1V
லோக் ஆயுக்தாவின் செலவினங்கள் மாநிலத்
தொகுப்பு நிதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுதல்.
லோக் ஆயுக்தாவின் செலவினங்கள் மாநிலத்
தொகுப்பு நிதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுதல்.
அத்தியாயம் -V
லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பு
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு
அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை
உள்ளடக்கிய லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பு.
விசாரணைக்கு உட்படாத விவரங்கள்.
நீதிமன்றம் அல்லது குழுவின். அல்லது
அதிகாரஅமைப்பு எதனின் முன்பு விசாரணைக்கு
நிலுவையில் உள்ள விவரங்கள் பாதிக்கப்படாது.
லோக் ஆயுக்தாவின் அமர்வு மன்றங்களை
அமைத்துருவாக்குதல்.
அமர்வு மன்றங்களுக்கிடையே பணிகளைப்
பகிர்ந்தளித்தல்..
வழக்குகளை மாறுதல் செய்வதற்கு தலைவரின்:
அதிகாரம்.
பெரும்பான்மையினரால் முடிவு செய்யப்படுதல்.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
iii
அத்தியாயம் VI
முதல்நிலை விசாரணை மற்றும் விரிவான
விசாரணை தொடர்பான நடைமுறை
புகார்கள் மற்றும் முதல்நிலை விசாரணை மற்றும்
விரிவான விசாரணை தொடர்பான வகைமுறைகள்.
பாகுபாடு பார்த்தலால் பாதிக்கப்படக்கூடிய
நபர்களின் தரப்பைக் கேட்டறிதல்.
லோக் ஆயுக்தா, தகவல் முதலியவற்றை
அளிக்குமாறு பொதுப் பணியாளர் அல்லது பிற நபர்
எவரையும் வேண்டலாம்.
விசாரணைக்கு முன்அனுமதி தேவையில்லை.
அத்தியாயம் —Vil
லோக் ஆயுக்தாவின் அதிகாரங்கள்
லோக் ஆயுக்தாவின்: மேற்பார்வையிடும்
அதிகாரங்கள்.
குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் லோக் ஆயுக்தா
உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரங்களைப்
பெற்றிருக்கும்.
அரசு அலுவலர்களின் சேவையைப்
பயன்படுத்திக்கொள்வதற்கான லோக் ஆயுக்தாவின்.
அதிகாரம்.
ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பொதுப்
பணியாளரை இடமாற்றம் செய்யவும் பணி
இடைந்க்கம் செய்யவும் பரிந்துரைப்பதற்கு லோக்
ஆயுக்தாவின் அதிகாரம்.
முதல்நிலை விசாரணையின்போது ஆவணங்களை
அழிப்பதைத் தடை செய்ய பணிப்புரைகள்.
பிறப்பிப்பதற்கான லோக் ஆயுக்தாவின் அதிகாரம்.
ஒப்படைவு செய்வதற்கான அதிகாரம்.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
iv
அத்தியாயம் —VII
லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்கள்.
மற்றும் அலுவலர்களுக்கு எதிரான புகார்கள்
லோக் ஆயுக்தாவின்: தலைவர் மற்றும்
உறுப்பினர்களை பணி நீக்கம் செய்தல் மற்றும்
பணியிடை நீக்கம் செய்தல்.
லோக் ஆயுக்தாவின் அலுவலர்களுக்கு எதிரான
புகார்கள்.
அத்தியாயம் —1X
நிதி, கணக்குகள் மற்றும் தணிக்கை
வரவு செலவுத் திட்டம்.
அரசால் அளிக்கப்படும் மானியங்கள்.
கணக்குகளின் ஆண்டறிக்கை.
அரசுக்கு விவர அறிக்கைகள் முதலியவற்றை
அனுப்புதல்.
அத்தியாயம் -6
பொய்ப் புகாரின் மீதான நடவடிக்கை
பொதுப் பணியாளருக்கு எதிராகப் பொய்ப் புகார்
அளித்ததற்காக இழப்பீடு வழங்குதல்
முதலியவற்றிற்காக வழக்கு தொடருதல்.
சங்கம் அல்லது நபர்களின் குழுமம் அல்லது
பொறுப்புக்கட்டளையால் செய்யப்படும் பொய்ப் புகார்.
அத்தியாயம் -34
பல்வகைப்பட்டவை
பொதுப் பணியாளர் எவராலும் நல்லெண்ணத்தில்
எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
38.
39.
40.
41.
42.
43.
45.
46.
v
பிற நபர்களால் நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்கள், அலுவலர்கள்.
மற்றும் பணியாளர்கள் பொதுப் பணியாளர்களாகக்
கருதப்படுவர்.
காலவரம்பின் பொருந்தும் தன்மை.
அதிகார வரம்பிற்குத் தடை.
சட்ட உதவி.
சட்டத்தின் மேலோங்கும் தண்மை.
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
ஒழுங்குவிதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
1
2018ஆம் ஆண்டு தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்
தமிழ்நாடு சட்ட எண் 33/2018
[தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது
2018ஆம் ஆண்டு ஜுலை திங்கள் 13ஆம் நாளன்று ஆளுநரின்
ஏற்பிசைவைப் பெற்று பொதுத்தகவலுக்காகத் தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்பட்டது.
பொதுப் பணியாளர்கள் சிலருக்கு எதிரான ஊழல்
குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு தமிழ்நாடு
மாநிலத்திற்காக லோக் ஆயுக்தாவை நிறுவுவதற்கான
மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது அதனுடன்
இணைந்த விவரங்களுக்கு வகைசெய்வதற்கான ஒரு
சட்டம்.
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில்
தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால்
இயற்றப்பட்ட சட்டம் பிண்வருமாறு:-
அத்தியாயம்-।
முன்னுரை
1. குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.- (1) இந்தச்
சட்டமானது, 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு லோக் ஆயுக்தா
சட்டம் என வழங்கப்படும்.
(2) இச்சட்டமானது அரசு அறிவிக்கையின்.
வாயிலாகக் குறிப்பிடும் தேதியன்று நடைமுறைக்கு
வருதல் வேண்டும்.
2. பொருள்வரையறைகள்.- (1) இந்தச் சட்டத்தில்
தறுவாயின் தேவை வேறானாலன்றி,-
(ஐ) "அமர்வு மன்றம்" என்பது, லோக்
ஆயுக்தாவின் அமர்வு மன்றம் எனப் பொருள்படும்;
2
(b) "தலைவர்" என்பது, லோக் ஆயுக்தாவின்
தலைவர் எனப் பொருள்படும்;
(9) "தகுதிவாய்ந்த அதிகாரஅமைப்பு" என்பது,-
@)
(i)
(iif)
[ம]
)
முதலமைச்சருக்கு, ஆளுநர்;
ஓர் அமைச்சருக்கு, முதலமைச்சர்;
அமைச்சரைத் தவிர்த்து மாநிலச்
சட்டமன்றப் பேரவை
உறுப்பினர்களுக்கு, சட்டமன்றப்
பேரவைத் தலைவர்;
ஏதேனும் ஒரு துறையின்
அலுவலருக்கு, அரசு;
நாடாளுமன்றத்தில் அல்லது மாநிலச்
சட்டமன்றப் பேரவையில் இயற்றப்பட்ட
சட்டத்தின்படி நிறுவப்பட்ட அல்லது
அமைக்கப்பட்ட அல்லது அரசால்
முழுவதுமாக அல்லது பகுதியளவில்
நிதியளிக்கப்பட்ட அல்லது அதன்.
கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு
அல்லது வாரியம் அல்லது நிறுவனம்:
அல்லது அதிகாரஅமைப்பு அல்லது
நிறுமம் அல்லது சங்கம் அல்லது
தன்னாட்சி அமைப்பின். (எந்தப்
பெயரால் அழைக்கப்பட்டாலும்)
தலைவர் அல்லது உறுப்பினர்களுக்கு,
நிகழ்விற்கேற்ப அத்தகைய அமைப்பு
அல்லது வாரியம் அல்லது நிறுவனம்:
அல்லது அதிகாரஅமைப்பு அல்லது
நிறுமம் அல்லது சங்கம் அல்லது
தன்னாட்சி அமைப்பின்:
3
பொறுப்பிலுள்ள அமைச்சர் அல்லது
முதலமைச்சர்;
(Vi) நாடாளுமன்றத்தில் அல்லது மாநிலச்
சட்டமன்றப் பேரவையில் இயற்றப்பட்ட
சட்டத்தின்படி நிறுவப்பட்ட அல்லது
அமைக்கப்பட்ட அல்லது அரசால்
முழுமையாக அல்லது பகுதியளவில்
நிதியளிக்கப்பட்ட அல்லது அதன்.
கட்டுபாட்டில் உள்ள அமைப்பின்.
அல்லது வாரியத்தின் அல்லது
நிறுவனத்தின்: அல்லது அதிகார
அமைப்பின் அல்லது நிறுமத்தின்
அல்லது சங்கத்தின் அல்லது
தன்னாட்சி அமைப்பின். (எந்தப்
பெயரால் அழைக்கப்பட்டாலும்)
அலுவலருக்கு, நிகழ்வுக்கேற்ப
அத்தகைய அமைப்பின் அல்லது
வாரியத்தின் அல்லது கழகத்தின்:
அல்லது அதிகாரஅமைப்பின் அல்லது
நிறுமத்தின் அல்லது சங்கத்தின்
அல்லது தன்னாட்சிக் குழுமத்தின்.
தலைமை;
(vii) மேற்சொன்ன (i) முதல் (vi)
வரையிலான உட்கூறுகளின் கீழ்
வராத பிற நிகழ்வு எதிலும், அரசானது
அறிவிக்கையில் குறிப்பிடப்படும்,
அத்தகைய துறை அல்லது
அதிகாரஅமைப்பு,
எனப் பொருள்படும்.
வரம்புரை: (V) அல்லது (Vi) ஆம் உட்கூறில்
குறிப்பிடப்பட்டுள்ள நபர் எவரும், மாநிலச் சட்டமன்றப்
4
பேரவையின் உறுப்பினராக இருப்பாரானால், தகுதிவாய்ந்த
அதிகாரஅமைப்பாக, சட்டமன்றப் பேரவைத் தலைவர்
இருத்தல் வேண்டும்;
(0)
(5)
)
(©]
()
0)
()
09
"புகார்" என்பது, 1988ஆம் ஆண்டு ஊழல்
தடுப்புச் சட்டத்தின்படி (மையச் சட்டம்
49/1988) தண்டனைக்குரிய குற்றம்
ஒன்றினை, பொதுப் பணியாளர் ஒருவர்
செய்ததாகக் கூறப்பட்டு,
வகுத்துரைக்கப்படும் அத்தகைய
படிவத்தில், அளிக்கப்பட்டுள்ள புகார் எனப்
பொருள்படும்;
"அரசு" என்பது, மாநில அரசு எனப்
பொருள்படும்;
"நீதித்துறை உறுப்பினர்" என்பது, லோக்
ஆயுக்தாவின் நீதித்துறையைச் சார்ந்த
உறுப்பினர் எனப் பொருள்படும்;
லோக் ஆயுக்தா” என்பது, பிரிவு 3இன்படி
நிறுவப்பட்டுள்ள ஓர் அமைப்பு எனப்
பொருள்படும்;
"உறுப்பினர்" என்பது, லோக் ஆயுக்தாவின்
உறுப்பினர் எனப் பொருள்படும்;
"அமைச்சர்" என்பது, அரசின் அமைச்சர்
எனப் பொருள்படும். மற்றும்
முதலமைச்சரையும் உள்ளடக்கும்;
"வகுத்துரைக்கப்பட்ட என்பது, இந்தச்
சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகளால்
வகுத்துரைக்கப்பட்டது எனப் பொருள்படும்;
"பொதுப் பணியாளர்" என்பது, பிரிவு 12இன்:
உட்பிரிவு (1) இன் (ஐ) முதல் (o)
வரையிலான கூறுகளில்
5
குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நபர் எனப்
பொருள்படும்;
0) "ஒழுங்குவிதிகள்" என்பது, இந்தச்
சட்டத்தின்படிச் செய்யப்பட்ட ஒழுங்கு
விதிகள் எனப் பொருள்படும்;
(m) "மாநிலம்" என்பது, தமிழ்நாடு மாநிலம் எனப்
பொருள்படும்.
(2) இந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டு ஆனால்
பொருள்வரையறை செய்யப்பாத ஆனால் 1988ஆம்
ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தில் (மையச் சட்டம்
49/1988) மற்றும் 1973ஆம் ஆண்டு குற்றவியல்
நடைமுறைச் சட்டத்தில் (மையச் சட்டம் 21974) பொருள்
வரையறை செய்யப்பட்டுள்ள சொற்களும்
சொற்றொடர்களும் அந்தச் சட்டங்களில் அவைகளுக்கு
முறையே குறிப்பிடப்பட்டுள்ள அதே பொருளைக்
கொண்டிருத்தல் வேண்டும்.
அத்தியாயம்-॥
லோக் ஆயுக்தாவை நிறுவுதல் மற்றும் கட்டமைத்தல்
3. லோக் ஆயுக்தாவை நிறுவுதல் மற்றும்
கட்டமைத்தல்.- (1) இதன் பொருட்டு அரசால் அறிவிக்கை
செய்யப்படும் தேதியன்றும் மற்றும் அது முதற்கொண்டும்
"லோக் ஆயுக்தா என்று அழைக்கப்படுகின்ற ஒரு
அமைப்பானது நிறுவப்படுதல் வேண்டும்.
(2) லோக் ஆயுக்தாவானது,-
(ஐ உயர்ந்திமன்ற நீதிபதியாக இருக்கின்ற
அல்லது இருந்துள்ள அல்லது ஊழல் தடுப்புக் கொள்கை,
பொது நிருவாகம், விழிப்புப் பணி, நிதி மற்றும் சட்டம்
ஆகியவற்றில் இருபத்தைந்து ஆண்டுகள்
6
முன்அனுபவத்தைப் பெற்றுள்ள நபர் தலைவராகவும்;
மற்றும்
0) நீதித்துறையின் உறுப்பினர்கள் இருவர்
உள்ளிட்ட நான்கு உறுப்பினர்களையும் கொண்டிருத்தல்
வேண்டும்.
(3) நபர் ஒருவர்-
(ஐ அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக
இருப்பாரானால் அல்லது இருந்துள்ளாரானால்
அல்லது மாநில நீதித்துறையில் குறையற்ற
நிலையில் இருபத்தைந்து ஆண்டு
முன்்அனுபவத்தைக் கொண்டிருப்பாரானால்,
நீதித்துறை உறுப்பினராகவும்;
0) அவர் ஊழல் தடுப்புக் கொள்கையில்,
பொது நிருவாகத்தில், விழிப்புப் பணியில், நிதி
மற்றும் சட்டத்தில் இருபத்தைந்து ஆண்டுகள்
முன்்அனுபவத்தைக் கொண்டிருப்பாரானால்,
நீதித்துறை சாரா உறுப்பினராகவும்,
பணியில் அமர்த்தப்படுவதற்குத் தகுதியுடையவர் ஆவார்.
(4) தலைவர் அல்லது உறுப்பினர்,
(a) நாடாளுமன்றத்தின் ஓர்
உறுப்பினராகவோ அல்லது மாநிலம் அல்லது
மைய அரசின் ஆட்சிப் பகுதி ஒன்றின் சட்டமன்ற
உறுப்பினராகவோ;
(b) குற்றம் எதற்காகவும் தண்டிக்கப்பட்ட
நபராகவோ;
(௦9) நிகழவுக்கேற்ப தலைவர் அல்லது
உறுப்பினராக பணி ஏற்றுக் கொள்ளும்
தேதியன்று நாற்பத்தைந்து வயதிற்கு குறைவாக
இருக்கின்ற நபராகவோ;
7
(0) ஏதேனும் ஒரு ஊராட்சி அல்லது
நகராட்சியின் உறுப்பினராகவோ;
(6) மைய அல்லது மாநிலப் பணியிலிருந்து
அகற்றப்பட்ட அல்லது நீக்கம் செய்யப்பட்ட
நபராகவோ; மற்றும்
(f) பொறுப்புக்கட்டளை (தலைவராகவோ
அல்லது உறுப்பினராகவோ இருப்பதைத்
தவிர்த்து) அல்லது ஆதாயம் தரும் பிற பதவி
எதையும் வைத்திருக்கும் அல்லது அரசியல் கட்சி
எதனுடனும் தொடர்பு வைத்திருக்கும் அல்லது
வணிகம் எதையும் செய்யும் அல்லது பதவி
எதையும் ஆற்றும் நபர் ஒருவராகவோ
இருத்தல் கூடாது.
(5) நிகழவுக்கேற்ப, தலைவர் அல்லது
உறுப்பினராக அமர்த்தப்பட்ட நபர் ஒருவர் அவருடைய
பணியில் சேருவதற்கு முன்பாக,
(௨) பொறுப்புக்கட்டளை அல்லது ஆதாயம்
தரும் பதவி எதையும் வைத்திருப்பாரானால், அத்தகைய
பதவியிலிருந்து அவர் பதவி விலகுதல் வேண்டும்;
அல்லது
(b) வணிகம் எதையும் அவர் செய்வாரானால்,
அத்தகைய வணிகம் நடத்துதல் மற்றும் மேலாண்மையின்
தொடர்பிலிருந்து அவர் விலகிக் கொள்ளுதல் வேண்டும்;
அல்லது
(9) அவர் தொழில் எதையும் செய்வாரானால்
அத்தகைய தொழில் புரிவதை நிறுத்திக் கொள்ளுதல்
வேண்டும்.
8
4. தெரிவுக் குழுவின் பரிந்துரையின் பேரில்
தலைவர் மற்றும் உறுப்பினர்களைப் பணி அமர்த்துதல்.- (1)
தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆளுநரால் பணி
அமர்த்தப்படுதல் வேண்டும்.
(2) பணியமர்த்துதல், பின்வரும் உறுப்பினர்கள்:
உள்ளிட்ட தெரிவுக் குழுவின் பரிந்துரையின் பேரில்
இருத்தல் வேண்டும்,-
(ஐ) முதலமைச்சர் - தலைவராக;
(b) சட்டமன்றப் பேரவைத் தலைவர் -
உறுப்பினராக;
(6) எதிர்கட்சித் தலைவர் அல்லது
சட்டமன்றப் பேரவையில் எதிரணியில் பெரும்பான்மை
உறுப்பினர்களை உடைய கட்சியின் தலைவர் -
உறுப்பினராக.
(3) தெரிவுக் குழுவானது. தலைவர் மற்றும்
உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நோக்கங்களுக்காக,
பணியமர்த்தத்திற்குக் கருதப்படவேண்டிய நபர்களின்
பெயர்ப்பட்டியலைத் தயார் செய்வதற்காகவும், ஊழல்
தடுப்புக் கொள்கையில், பொது நிருவாகத்தில்,
விழிப்புப்பணியில், நிதியில் மற்றும் சட்டத்தில் சிறப்பு
அறிவாற்றலும் நிபுணத்துவமும் பெற்றுள்ள மூன்று
நபர்களை உள்ளடக்கிய தேடுதல் குழுவினை அமைத்துத்
தேர்வு செய்யலாம்.
(4) தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தெரிவு
செய்வதற்காகத் தெரிவுக் குழுவானது அதன் சொந்த
நடைமுறையை வெளிப்படையானதாக இருக்கும்
வகையில் ஒழுங்குபடுத்தலாம்.
(5 உட்பிரிவு (3)இல் குறிப்பிடப்பட்டுள்ள
தேடுதல் குழு அமைக்கப்பட்டால் அதன் பணிக்காலம்,
அதன்: உறுப்பினர்களுக்கு செலுத்தப்படக்கூடிய
9
கட்டணங்கள் மற்றும் படித்தொகைகள் மற்றும் பெயர்ப்
பட்டியல்களைத் தெரிவு செய்யும் முறை
வகுத்துரைக்கப்படும் விதத்தில் இருத்தல் வேண்டும்.
5. தலைவர் மற்றும் உறுப்பினர்களின்
பதவிக்காலம்.- தலைவர் மற்றும் உறுப்பினர்
ஒவ்வொருவரும் தெரிவுக் குழுவின் பரிந்துரையின் பேரில்
ஆளுநரால், அவரது கையொப்பமிடப்பட்ட ஆணை மற்றும்
இலச்சினையினால் பணி அமர்த்தப்படுதல் வேண்டும்;
மற்றும் அவர் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து ஐந்து
ஆண்டு காலத்திற்கு அல்லது அவர் எழுபது வயதினை
அடையும் வரை இதில் எது முந்தியதோ அதுவரை பதவி
வகித்தல் வேண்டும்:
வரம்புரை: அவர்,-
(@) தன் கைப்பட எழுத்துப் பூர்வமாக
ஆளுநருக்கு முகவரியிட்டுத் தெரிவிப்பதண் மூலமாக
பதவி விலகலாம்; அல்லது
(௦) இந்தச் சட்டத்தில் வகை
செய்யப்பட்டுள்ள முறையில் அவர் பதவியிலிருந்து
நீக்கப்படலாம்.
6. தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஊதியம்,
படித்தொகைகள் மற்றும் பிற பணிவரையறைகள்.-
ஊதியம், படித்தொகைகள் மற்றும் பிற
பணிவரையறைகளானது,-
(8) தலைவருக்கு, உயர்ந்திமன்ற தலைமை
நீதிபதிக்கு வழங்கப்படுவதற்கு நிகரானதாக இருத்தல்
வேண்டும்;
0) பிற உறுப்பினர்களுக்கு உயர்நீதிமன்ற
நீதிபதிக்கு வழங்கப்படுவதற்கு நிகரானதாக இருத்தல்
வேண்டும்.
10
வரம்புரை: தலைவர் அல்லது உறுப்பினர், இந்திய
அரசின்கீழ் அல்லது ஏதேனும் மாநில அரசின் கீழ்
முந்தைய பணி எது தொடர்பாகவும் ஓய்வூதியத்தை
(ஊனமுற்றோர் ஓய்வூதியத்தைத் தவிர்த்து) அவருடைய
பணி அமர்த்தலிண்போது பெறுவாரானால், நிகழ்வுக்கேற்ப
தலைவராக அல்லது உறுப்பினராக அவரது பணி
தொடர்பான அவருடைய ஊதியத்திலிருந்து,-
() அந்த ஓய்வூதியத் தொகையை; மற்றும்
(i) அவர், அத்தகைய பணி அமர்த்தலுக்கு
முன்பு அத்தகைய முந்தைய பணி
தொடர்பாக அவருக்கு நிலுவையாக
உள்ள ஓய்வூதியப் பகுதித் தொகையை
மொத்தமாக பெற்றிருப்பாரானால்
ஓய்வூதியத்தின் அப்பகுதித் தொகையை,
கழித்து விடுதல் வேண்டும்:
மேலும் வரம்புரை: தலைவர் அல்லது உ றுப்பினருக்கு
செலுத்தப்படக்கூடிய ஊதியம், படித்தொகைகள் மற்றும்
ஓய்வூதியம் மற்றும் பிற பணிவரையறைகள் அவருடைய
பணி அமர்த்தலுக்குப் பின்பு அவருக்கு பாதிப்பை
ஏற்படுத்தக்கூடிய வகையில் மாற்றப்படுதல் கூடாது.
7. பதவிக்காலம் முடிவுற்ற பின்னர், தலைவர்
மற்றும் உறுப்பினர்கள் பணி அமர்த்தப்படுவதற்குத் தடை.-
(1) பதவிக் காலம் முடிவுற்ற பிறகு தலைவர் மற்றும்
உறுப்பினர் ஒவ்வொருவரும்,-
(@) லோக் ஆயுக்தாவிற்கு தலைவராக அல்லது
உறுப்பினராக மீண்டும் அமர்த்தப்படுவதற்கோ;
சட்டத்தின்படி ஆளுநரால் செய்யப்பட
தேவையான பிற செயல் அல்லது பணி அமர்த்தம்
எதையும் செய்வதற்கோ;
11
(9) இந்திய அரசு அல்லது மாநில அரசு
எதனின்கீழும் ஆதாயம் தரும் பதவி எதிலும் மேலும்
பணி அமர்த்தப்படுவதற்கோ,
தகுதியற்றவர் ஆகிறார்.
(2) உட்பிரிவு (இல் அடங்கியுள்ள எது
எவ்வாறிருப்பினும், உறுப்பினராக மற்றும் தலைவராக
அவர் பணியின் மொத்தக் காலம் ஐந்து ஆண்டுகளுக்கு
மிகாது இருக்குமானால் அவ்வுறுப்பினர் தலைவராக
அமர்த்தம் செய்யப்படு வதற்குத் தகுதியுடையவர் ஆவார்.
விளக்கம்:- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக
உறுப்பினரை ஒரு தலைவராக அமர்த்தம் செய்கிறபோது
அவருடைய பதவிக்காலம் உறுப்பினராக மற்றும்
தலைவராக செயல்படுவது மொத்தத்தில் ஐந்து
ஆண்டுகளுக்கு மிகாது இருத்தல் வேண்டும்.
8. குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் உறுப்பினர்
தலைவராக செயல்படுதல் அல்லது தலைவருடைய
செயற்பணிகளை ஆற்றுதல்.- (1) தலைவருடைய இறப்பு,
பதவி விலகல் அல்லது பிற காரணத்தினால் அவரது
பணியில் காலியிடம் எதுவும் ஏற்படுகின்றபோது, ஆளுநர்,
அறிவிக்கையின் வாயிலாக அத்தகைய காலியிடத்தை
நிரப்புவதற்கு புதிய தலைவரை அமர்த்தும் வரையில்
மிகவும் மூத்த உறுப்பினருக்குத் தலைவராக
செயல்படுவதற்கு அதிகாரமளிக்கலாம்.
(2) விடுப்பு அல்லது பிற காரணத்தால் தலைவர்,
அவருடைய செயற்பணிகளை ஆற்ற முடியாது
இருக்கும்போது, ஆளுநர், அறிவிக்கையின் வாயிலாக,
இதன்பொருட்டு அதிகாரமளிக்கும் மூத்த உறுப்பினர்,
தலைவர் அவருடைய கடமைகளை மீண்டும் ஆற்றும்
வரையில், தலைவருடைய செயற்பணிகளை ஆற்றுதல்
வேண்டும்.
12
9. லோக் ஆயுக்தாவின்: செயலாளர், பிற
அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்.- (1) அரசின் துணைச்
செயலாளர் படிநிலைக்குக் குறையாதவர் லோக்
ஆயுக்தாவின் செயலாளராக இருத்தல் வேண்டும் மற்றும்
அவர், அரசால் அனுப்பப்படும் பெயர்ப்பட்டியலிலிருந்து
தலைவரால் பணி அமர்த்தப்படுதல் வேண்டும்.
(2) அரசின் துணைச் செயலாளர் படிநிலைக்குக்
குறையாதவர் விசாரணை இயக்குநராக இருத்தல்
வேண்டும் மற்றும் அவர் அரசால் அனுப்பப்படும்.
பெயர்ப்பட்டியலிலிருந்து தலைவரால் பணி
அமர்த்தப்படுதல் வேண்டும்.
(3) லோக் ஆயுக்தாவானது, தடையின்றி
செயல்படுவதற்கு, தேவைப்படும் அலுவலர்கள் மற்றும்
பணியாளர்களின் பணியமர்த்தமானது அரசால்
வகுத்துரைக்கப்படும் விதத்தில் இருத்தல் வேண்டும்.
(4) லோக் ஆயுக்தாவின் செயலாளர் மற்றும் பிற
அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின்
பணிவரையறைகளானது அவ்வப்பொழுது
வகுத்துரைக்கப்படும் விதத்தில் இருத்தல் வேண்டும்.
அத்தியாயம் -॥
விசாரணைப் பிரிவு
10. விசாரணைப் பிரிவு-- (1) நடைமுறையில் உள்ள
பிற சட்டம் எதிலும் அடங்கியுள்ள எது எவ்வாறு
இருப்பினும், பொதுப் பணியாளர் ஒருவர் செய்துள்ளதாகக்
கூறப்பட்ட குற்றம் எதையும் செய்யும் நோக்கத்திற்காக,
இயக்குநரின் தலைமையிலான விசாரணைப் பிரிவு
ஒன்றினை லோக் ஆயுக்தாவானது அமைத்துருவாக்குதல்
வேண்டும்:
13
வரம்புரை: லோக் ஆயுக்தாவானது விசாரணைப் பிரிவினை
அமைக்கும் காலம் வரையில், அரசானது, இந்தச்
சட்டத்தின்படி விசாரணையை நடத்துவதற்காகத்
தேவைப்படும் எண்ணிக்கையில் அலுவலர்கள் மற்றும் பிற
பணியாளர்களை அதனுடைய துறைகளில் இருந்து ஏற்பாடு
செய்தல் வேண்டும்.
(2) இந்தச் சட்டத்தின்படி விசாரணையை
நடத்துவதில் லோக் ஆயுக்தாவிற்கு உதவி செய்யும்
நோக்கங்களுக்காக, விசாரணைப் பிரிவின் அலுவலர்கள்
பிரிவு 24இன்படி லோக் ஆயுக்தாவிற்கு
குறிப்பிடப்பட்டுள்ள அதே அதிகாரங்களைக்
கொண்டிருத்தல் வேண்டும்.
அத்தியாயம் -1V
லோக் ஆயுக்தாவின் செலவினங்கள் மாநிலத்
தொகுப்பு நிதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுதல்
11. லோக் ஆயுக்தாவின் செலவினங்கள் மாநிலத்
தொகுப்பு நிதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுதல்.-
லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்கள், செயலாளர்,
பிற அலுவலர்கள் அல்லது பணியாளர்களுக்கு செலுத்தப்
படக்கூடிய அனைத்து ஊதியங்கள், படித்தொகைகள்
மற்றும் ஓய்வூதியங்கள் உள்ளிட்ட லோக் ஆயுக்தாவின்
நிருவாகச் செலவினங்கள், மாநிலத் தொகுப்பு
நிதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும்
லோக் ஆயுக்தாவினால் வசூலிக்கப்பட்ட கட்டணங்கள்
மற்றும் எடுத்துக்கொள்ளப்பட்ட பிற தொகைகள் எதுவும்
அந்நிதியின் ஒரு பகுதியாக இருத்தல் வேண்டும்.
14
அத்தியாயம் -V
லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பு
12. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,
அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய
லோக் ஆயுக்தாவின் அதிகாரவரம்பு:-- (1) இந்தச்
சட்டத்தின் பிற வகைமுறைகளுக்கு உட்பட்டு, லோக்
ஆயுக்தாவானது பின்வரும் அனைத்து இனங்களின் மீதும்
அதிகார வரம்பினைக் கொண்டிருக்கும். அதாவது:-
(ஐ மாநிலத்தின் அமைச்சராக இருக்கின்ற
அல்லது இருந்துள்ள நபர் எவரும்;
(b) சட்டமன்றப் பேரவை உறுப்பினராக
இருக்கின்ற அல்லது இருந்துள்ள நபர் எவரும்;
(c) 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச்
சட்டத்தின் பிரிவு 2 இன் கூறு (௦)இன் உட்கூறு (i) மற்றும்
கல் பொருள்வரையறை செய்யப்பட்டுள்ள பொதுப்
பணியாளர்களுக்கு இடையேயிருந்து, அரசின் அலுவல்கள்
தொடர்பாக பணியாற்றுகின்ற அல்லது பணியாற்றியுள்ள
மாநில அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்.
அனைவரும்;
(0) நாடாளுமன்றத்தில் அல்லது மாநிலச்
சட்டமன்றப் பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி
நிறுவப்பட்ட அல்லது அரசால் முழுவதுமாக அல்லது
பகுதியளவில் நிதியளிக்கப்பட்ட அல்லது அதன்.
கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பில் அல்லது வாரியத்தில்
அல்லது நிறுவனத்தில் அல்லது அதிகாரஅமைப்பில்
அல்லது நிறுமத்தில் அல்லது சங்கத்தில் அல்லது
பொறுப்புக் கட்டளைக்கு அல்லது தன்னாட்சி அமைப்பில்
(எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும்) கூறு (௦இல்
குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அலுவலர்கள் மற்றும்
பணியாளர்களுக்குச் சமமான அலுவலர்கள் மற்றும்
பணியாளர்கள் அனைவரும்:
15
வரம்புரை: கூறு (௦) மற்றும் ()இல் குறிப்பிடப்பட்ட
மைய அரசு அல்லது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்
உள்ள ஒன்றியத்தில் அல்லது அமைப்பில் அல்லது
வாரியத்தில் அல்லது நிறுவனத்தில் அல்லது
அதிகாரஅமைப்பில் அல்லது நிறுமத்தில் அல்லது
சங்கத்தில் அல்லது பொறுப்புக் கட்டளையில் அல்லது
தன்னாட்சி அமைப்பின் அலுவல்கள் தொடர்பாக
பணியாற்றுகின்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைப்
பொறுத்த நிகழ்வில் மைய அரசின் ஒப்புதலைப் பெற்ற
பின்பு மட்டுமே லோக் ஆயுக்தா மற்றும் அதனுடைய
விசாரணைப் பிரிவின் அலுவலர்கள் இந்தச் சட்டத்தின்படி
அத்தகைய அலுவலர்கள் தொடர்பாக அதிகார
வரம்பினைக் கொண்டிருத்தல் வேண்டும்;
(6) அரசால் முழுமையாகவோ அல்லது பகுதி
அளவிலோ நிதியளிக்கப்பட்ட அல்லது உதவி
செய்யப்பட்ட மற்றும் அரசால் அறிவிக்கையின் வாயிலாக
குறித்துரைக்கப்படும் அத்தகைய தொகைக்கும் அதிகமான
ஆண்டு வருவாய் கொண்டுள்ள. (அப்போதைக்கு
நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதனின்படி பதிவு
செய்யப்பட்ட அல்லது செய்யப்படாத) சங்கம் அல்லது
நபர்களின் குழுமம் அல்லது பொறுப்புக் கட்டளை (எந்தப்
பெயரால் அழைக்கப்பட்டாலும்) எதனின் இயக்குநர்,
மேலாளர், செயலாளர் மற்றும் பிற அலுவலர்கள் எவரும்.
(2) உட்பிரிவு ()இல் உள்ளடங்கிய எது
எவ்வாறிருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்
அமைப்பு விதி 194இன் கூறு (2)இல் உள்ளடங்கிய
வகைமுறைகளின்படி மாநிலச் சட்டமன்றப் பேரவையில்
அல்லது அதனுடைய குழு எதிலும் சட்டமன்றப் பேரவை
உறுப்பினரால் கூறப்பட்ட எதுவும் அல்லது அவரால்
அளிக்கப்பட்டுள்ள வாக்கு தொடர்பாக அவருக்கு எதிராக
ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ள அல்லது அதிலிருந்து
எழுகின்ற அல்லது அதனுடன் தொடர்புடைய விவரம்
16
எதையும் லோக் ஆயுக்தாவானது விசாரணை செய்தல்
கூடாது.
(3) உட்பிரிவு (1)இன் கீழ் குறிப்பிடப்பட்ட
நபருக்கு எதிராக 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச்
சட்டத்தின் (மையச் சட்டம் 491988) கீழான ஊழல்
குற்றச்சாட்டு எதுவும் தொடர்பாக ஊழலுக்கு தூண்டுதல்
அல்லது கையூட்டு அளித்தல் அல்லது கையூட்டு பெறுதல்
அல்லது கூட்டுச்சதி ஆகிய செயல்களில் அத்தகைய நபர்
ஈடுபட்டிருந்தால், உட்பிரிவு (1)இல் குறிப்பிடப்பட்ட அந்த
நபர்களைத் தவிர நபர் எவரின் செயல் அல்லது நடத்தை
எதையும் லோக் ஆயுக்தாவானது விசாரணை செய்யலாம்:
வரம்புரை: ஒன்றிய அரசின் அலுவல்கள் தொடர்பாக
பணிபுரியும் நபரைப் பொறுத்த நிகழ்வில் மைய அரசின்:
ஒப்புதலின்றி இந்தப் பிரிவின்படி நடவடிக்கை எடுத்தல்
கூடாது.
13. விசாரணைக்கு உட்படாத பொருட்கள்.- (1)
இதில் வகை செய்யப்பட்ட விதம் தவிர, பின்வரும் விவரம்
எதன் தொடர்பான நடவடிக்கை எதுவும் இருக்குமானால்,
அந்த நடவடிக்கை தொடர்பாக புகார் செய்யப்பட்ட
சூழலில், லோக் ஆயுக்தாவானது, விசாரணை எதையும்
நடத்துதல் கூடாது:-
(௨) அரசின் பாதுகாப்பு தொடர்பான குற்றத்தை
புலன் விசாரணை செய்யும் நோக்கத்திற்காக எடுக்கப்படும்
நடவடிக்கை;
(b) விவகாரத்தை நீதிமன்றமானது விசாரணை
செய்யுமா அல்லது செய்யாதா என்பதைத் தீர்மானிப்பது
தொடர்பான நடவடிக்கை;
(௦9) ஒப்பந்தப் பொறுப்பை நிறைவு செய்வதில்
அலைக்கழிக்கப்படுதல் அல்லது மிகையான காலதாமத
குற்றச்சாட்டை புகார்தாரர் வைப்பதைத் தவிர,
17
வாடிக்கையாளர்களுடன் அல்லது வழங்குபவர்களுடன்
நிருவாகத்தின் முழுமையான வணிகத் தொடர்பை
கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தின் வரையறைகளிலிருந்து
எழுகின்ற விவரங்களில் எடுக்கப்படுகின்ற நிருவாக
நடவடிக்கை;
(0) பொதுப் பணியாளர்களின் பணி நியமனம்,
பணி மாறுதல் மற்றும் பணி அமர்த்தம், பணி நீக்கம், சம்பளம்,
நடத்தை, பணி ஓய்வு, ஓய்வூதியம், பணிக்கொடை,
வருங்கால வைப்பு நிதிக்கான உரிமைக் கோரிக்கை
அல்லது பணி ஓய்வின், பணி முடிவுறுத்தத்தின் அல்லது
பணி முடிவுறுத்தத்தின் அல்லது பொது ஊழியர்களின் பணி
நிபந்தனைகள் தொடர்பான பிற பொருட்களின் பேரில்
எழும் உரிமை கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட
நடவடிக்கைகள்;
(6) வழங்கப்படும் வெகுமதிகள் மற்றும்
பரிசுகள்;
(9) லோக் ஆயுக்தாவின் முன் அனுமதியுடன்
முறையான மற்றும் பொது விசாரணைக்கு
ஆணையிடப்பட்ட நடவடிக்கை எதுவும்;
(1) 1952ஆம் ஆண்டு விசாரணை ஆணையச்
சட்டத்தின்படி (மையச் சட்டம் 60/1952) விசாரணைக்கு
குறித்தனுப்பப்பட்ட விவரம் தொடர்பான நடவடிக்கை
எதுவும்;
(h) 2014ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி
அமைப்புகள் நடுவர் மன்றச் சட்டத்தின் (குமிழ்நாடு சட்டம்
27/2014) பிரிவு 3இன்படி அமைக்கப்பட்ட குறைகேள்.
அதிகாரியின் அதிகார எல்லையின் கீழ் உள்ள நபர்
அல்லது உள்ளாட்சி அமைப்பு தொடர்பான நடவடிக்கை
எதுவும்.
18
(2) உளத் தேர்வு முறையற்ற வகையில்
பயன்படுத்தப்பட்டுள்ளதாக முதல் நோக்கில் கருதப்படும்.
புகார் எதணின் போதும் தவிர, உளத் தேர்வினை
பயன்படுத்தக்கூடிய நிருவாக நடவடிக்கை எதிலும் உளத்
தேர்வினைப் பயன்படுத்துதல் குறித்த கருத்துக்கள்
எதையும் வினவ லோக் ஆயுக்தாவிற்கு இந்தச் சட்டத்தில்
அதிகாரம் எதுவும் அளிக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுதல்
கூடாது.
விளக்கம்: ஐயங்களை அகற்றுவதற்காகப் பொது
ஊழியர் என்ற நிலையில் தான் செயல்படுகின்ற அல்லது
செயலாற்றுகின்ற காலம் வரையில் மட்டுமே இந்தச்
சட்டத்தின்படி புகாரானது இருத்தல் வேண்டும் என
விளம்புகை செய்யப்படுகிறது.
14. நீதிமன்றம் அல்லது குழுவின் அல்லது
அதிகார அமைப்பு எதனின் முன்பும் விசாரணைக்கு
நிலுவையில் உள்ள விவரங்கள் பாதிக்கப்படாது.
1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி (மையச்
சட்டம் 491988) ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விவரம்
அல்லது நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தின்.
தொடக்கத்திற்கு முன்பு அல்லது இந்தச் சட்டத்தின்
தொடக்கத்திற்குப் பின்பு விசாரணை 618601 651
தொடக்கத்திற்கு முன்பு, நீதிமன்றம் அல்லது சட்டமன்றக்
குழு அல்லது பிற அதிகார அமைப்பு எதிலும் நிலுவையில்
இருக்கின்ற நிகழ்வில், அத்தகைய விவரம் அல்லது
நடவடிக்கையானது அத்தகைய நீதிமன்றத்தில், குழுவில்
அல்லது அதிகார அமைப்பில் தொடர்ந்திருத்தல்
வேண்டும்.
15. லோக் ஆயுக்தாவின் அமர்வு மன்றங்களை
அமைத்துருவாக்குதல்.- (1) இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்கு உட்பட்டு.
19
(@) லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பிணை
அதனுடைய அமர்வு மன்றங்களால் செயல்படுத்தலாம்;
(b) தலைவர், தான் பொருத்தம் எனக்
கருதுகிற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
உறுப்பினர்களுடன் அமர்வு மன்றம் தலைவரால்
அமைக்கப்படலாம்;
(c) அமர்வு மன்றம். ஒவ்வொன்றும்
சாதாரணமாக குறைந்தது ஒரு நீதித்துறை உறுப்பினரை
உள்ளடக்கியிருத்தல் வேண்டும் மற்றும் அந்த அமர்வு
மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஆயத்திற்கு தலைமை
வகித்தல் வேண்டும்;
(1) அமர்வு மன்றம் தலைவரை
உள்ளடக்கியிருக்கிற நிலையில், அந்த அமர்வு
மன்றத்திற்குத் தலைவர் தலைமை வகித்தல் வேண்டும்.
(2) லோக் ஆயுக்தாவானது, லோக் ஆயுக்தாவின்.
அமர்வு மன்றம் ஒவ்வொன்றிற்கும் அதிகார வரம்பினை
செலுத்தும் பரப்பிடங்களை அறிவிக்கை செய்தல்
வேண்டும்.
(3). உட்பிரிவு (2)இல் உள்ளடங்கிய எது
எவ்வாறிருப்பினும் தலைவர், அவ்வப்பொழுது அமர்வு
மன்றங்களை அமைப்பதற்கு அல்லது மீண்டும்.
அமைப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டிருப்பார்.
(4) வழக்கு அல்லது விவரம் எதனின்
விசாரணையின் எந்த நிலையிலும், வழக்கு அல்லது
விவரமானது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட
உறுப்பினர்களை உள்ளடக்கிய அமர்வு மன்றத்தால்
விசாரணை செய்யப்பட வேண்டிய தன்மையுடையது
என்று தலைவருக்கு அல்லது உறுப்பினருக்குத்
தோன்றுமானால், மாறுதல் செய்வதற்காக அவருக்கு
குறித்து அனுப்பப்பட்ட வழக்கு அல்லது விவரம்
20
நிகழ்வுக்கேற்ப தலைவர், பொருத்தம் எனக் கருதும்,
அத்தகைய அமர்வு மன்றத்திற்கு தலைவரால் மாற்றம்
செய்யப்படலாம்.
16. அமர்வு மன்றங்களுக்கிடையே பணிகளைப்
பகிர்ந்தளித்தல்.- அமர்வு மன்றங்களை அமைக்கிறபோது,
தலைவர் அவ்வப்பொழுது, அறிவிக்கையின் வாயிலாக
அமர்வு மன்றங்களுக்கு இடையே லோக் ஆயுக்தாவின்:
பணிகளைப் பகிர்ந்தளித்தல் குறித்து வகைமுறைகளைச்
செய்யலாம் மற்றும் ஒவ்வொரு அமர்வு மன்றத்தாலும்
கையாளப்பட வேண்டிய விவரங்களுக்காக மேலும்
வகைமுறைகளைச் செய்யலாம்.
17. வழக்குகளை மாறுதல் செய்வதற்கு
தலைவரின் அதிகாரம்.- புகார்தாரர் அல்லது பொதுப்
பணியாளரால் மாறுதல் கோரி செய்யப்பட்ட
விண்ணப்பத்தின் பேரில், தலைவர், நிகழ்வுக்கேற்ப
புகார்தாரருக்கு அல்லது பொது ஊழியருக்கு
கேட்பதற்கான நியாயமான வாய்ப்பு ஒன்றினை அளித்த
பின்பு, ஒரு அமர்வு மன்றத்தில் நிலுவையில் உள்ள
வழக்கு எதையும் முடிவிற்காக பிற அமர்வு மன்றத்தில்
எதற்கும் மாற்றம் செய்யலாம்.
18. பெரும்பான்மையினரால் முடிவு
செய்யப்படுதல்.- இரட்டைப்படை எண்ணிக்கையிலான
உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அமர்வு மன்றத்தின்
உறுப்பினர்களுக்கு பொருள் எதுவும் குறித்து கருத்து
வேறுபாடு இருக்குமானால், அவர்கள் மாறுபடுகின்ற அந்தப்
பொருள் அல்லது பொருட்கூறுகள் குறித்து குறிப்பிடுதல்
மற்றும் தலைவருக்கு குறித்து அனுப்புதல் வேண்டும்.
தலைவர், தானே பொருள் அல்லது பொருட்கூறுகளை
விசாரணை செய்யலாம் அல்லது அத்தகைய பொருள்
அல்லது பொருட்கூறுகள் குறித்து ஒன்று அல்லது
அதற்கு மேற்பட்ட லோக் ஆயுக்தாவின். பிற
21
உறுப்பினர்களுக்கு வழக்கினைக் குறித்தனுப்பலாம்.
மற்றும் அத்தகைய பொருள் அல்லது பொருட்கூறுகளை
முதலில் விசாரணை செய்த உறுப்பினர் உள்ளிட்ட
வழக்கினை விசாரணை செய்த லோக் ஆயுக்தாவின்
பெரும்பான்மை உறுப்பினர்களின். கருத்திற்கு
இணங்கியவாறு முடிவு செய்தல் வேண்டும்.
அத்தியாயம் VI
முதல்நிலை விசாரணை மற்றும் விரிவான
விசாரணை தொடர்பான நடைமுறை
19 . புகார்கள் மற்றும் முதல்நிலை விசாரணை
மற்றும் விரிவான விசாரணை தொடர்பான
வகைமுறைகள்.- (1) லோக் ஆயுக்தாவானது, புகாரை
பெற்றுக் கொண்டதன் பேரில், முதலில் விவகாரத்தின்
விசாரணையை தொடரலாமா அல்லது அதை முடித்து
விடலாமா என்பதை முடிவு செய்தல் வேண்டும் மற்றும்
லோக் ஆயுக்தாவானது மேலும் விசாரணை தொடர முடிவு
செய்யுமானால் அது,-
(@) விவகாரத்தில் நடவடிக்கைக்கான
முதல்நோக்கு வழக்கு உள்ளதா என்பதை
உறுதிசெய்வதற்கு விசாரணைப் பிரிவில் அல்லது அரசின்
முகவாண்மை எதனாலும் பிரிவு 12இன் உட்பிரிவு (1) இன்:
கூறுகள் (a), (௦) மற்றும் (6)இல் குறிப்பிடப்பட்டுள்ள பொதுப்
பணியாளர் எவருக்கும் எதிராக முதல்நிலை
விசாரணைக்கு ஆணையிடுதல் வேண்டும்;
0) விவகாரத்தில் நடவடிக்கைக்கான
முதல்நோக்கு வழக்கு இருக்கின்றதா என்பதை உறுதி
செய்வதற்கு, பிரிவு 12இன் உட்பிரிவு (1)இன் கூறுகள் (C)
மற்றும் (4)இல் உள்ள A, B, 6 மற்றும் D தொகுதிகளைச்
சார்ந்த பொதுப் பணியாளர்கள் தொடர்பாக முதல்நிலை
விசாரணையை நடத்துவதற்காக விழிப்புப்பணி
ஆணையயத்திற்குப் புகாரினை அனுப்புதல் வேண்டும்:
22
வரம்புரை: விழிப்புப் பணி ஆணையமானது, இந்தக்
கூறின்படி அதற்குக் குறிப்பிடப்பட்டுள்ள புகார்கள்:
தொடர்பாக & மற்றும் 8 தொகுதிகளைச் சார்ந்த பொதுப்
பணியாளர்கள் தொடர்பாக முதல்நிலை விசாரணை செய்த
பின் உட்கூறு (2)இல் உள்ளடங்கிய வகைமுறைகளுக்கு
இணங்கியவாறு அதனுடைய அறிக்கையை லோக்
ஆயுக்தாவிடம் சமர்ப்பித்தல் வேண்டும்; 6௦ மற்றும் D
தொகுதிகளைச் சார்ந்த பொதுப் பணியாளர்களைப்
பொறுத்த நிகழ்வில் ஆணையமானது நடைமுறையில்
உள்ள நெறிமுறைகள் மற்றும் ஆணைகளுக்கு
இணங்கியவாறு நடவடிக்கையைத் தொடருதல் வேண்டும்.
(2) உட்பிரிவு (1)இல் குறிப்பிடப்பட்டுள்ள
முதல்நிலை விசாரணையை, நிகழ்வுக்கேற்ப,
விசாரணைப் பிரிவு அல்லது அரசின் முகவாண்மை
அல்லது விழிப்புப்்பணி ஆணையமானது மேற்கொள்ளுதல்
வேண்டும் மற்றும் சேகரிக்கப்பட்ட பொருள்கள், தகவல்
மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் பொதுப்
பணியாளர்கள். மற்றும் தகுதி வாய்ந்த
அதிகாரஅமைப்பிடமிருந்து புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள
குற்றச்சாட்டுகள் குறித்த குறிப்புரைகளைக் கோருதல்
வேண்டும் மற்றும் தொடர்புடைய பொதுப் பணியாளர்
மற்றும் தகுதிவாய்ந்த அதிகார அமைப்பிடமிருந்து
குறிப்புரைகளைப் பெற்ற பின்பு, குறிப்புரையினைப்
பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள்:
லோக்ஆயுக்தாவிற்கு அறிக்கையினைத் தாக்கல் செய்தல்
வேண்டும்;
(3) விழிப்புப்பணி ஆணையம், முதல்நிலை
விசாரணை செய்யும் நோக்கத்திற்காக நடைமுறையில்
உள்ள நெறிமுறைகள் மற்றும் ஆணைகளுக்கு
இணங்கியவாறு உரிய முகவாண்மையின் சேவையைப்
பயன்படுத்திக் கொள்ளலாம்.
23
(4) லோக் ஆயுக்தாவின் மூன்றுக்குக் குறையாத
உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஆயமானது,
விசாரணைப்பிரிவு அல்லது அரசின் முகவாண்மை எதுவும்
அல்லது விழிப்புப் பணி ஆணையத்திடமிருந்து, உட்பிரிவு
(2)இன்படி பெற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு
அறிக்கையையும் கருத்தில்கொள்ளுதல் வேண்டும்
மற்றும் பொதுப் பணியாளருக்கு கேட்பதற்கான நியாயமான
வாய்ப்பு ஒன்றினை வழங்கிய பின்பு, முதல்நோக்கு வழக்கு
இருக்கிறதா என்பது குறித்து முடிவு செய்து பின்வரும்
நடவடிக்கைகளைத் தொடருதல் வேண்டும். அதாவது:-
(ஐ பிரிவு 128601 உட்பிரிவு (இல்
குறிப்பிடப்பட்டுள்ள பொதுப் பணியாளர்கள் தொடர்பாக (௦
மற்றும் D தொகுதிகளைச் சார்ந்த பொதுப்
பணியாளர்களைத் தவிர்த்து) அதனுடைய விசாரணைப்
பிரிவால் அல்லது அரசு முகவாண்மையால் விரிவான
விசாரணைக்கு ஆணையிடலாம்;
0) A மற்றும் B தொகுதிகளைச் சார்ந்த பொதுப்
பணியாளர்கள் தொடர்பாக துறை நடவடிக்கைக்குப்
பரிந்துரை செய்யலாம்;
(௦9) பொதுப் பணியாளருக்கு எதிரான
நடவடிக்கைகளை முடிவுறுத்தலாம் மற்றும் பிரிவு
35இன்படி புகார்தாரருக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கலாம்.
(5) புகாரின் மீது விரிவான விசாரணையைத்
தொடர வேண்டும் என்று லோக்ஆயுக்தா முடிவு செய்கிற
போது, அதன் ஆணையின் தேதியிலிருந்து ஆறு மாத
காலத்திற்குள் கூடியவிரைவில் விசாரணை மேற்கொள்ள
அது விசாரணைப் பிரிவு அல்லது அரசு முகவாண்மை
எதற்கும் பணிப்புரையைப் பிறப்பித்தல் வேண்டும்:
வரம்புரை: எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட
வேண்டிய காரணங்களுக்காக ஒரு சமயத்தில் ஆறு மாத
24
காலங்களுக்கு மிகாத கூடுதல் காலத்தை லோக்
ஆயுக்தாவானது நீட்டிக்கலாம்.
(6) அவ்வாறு பணிக்கப்பட்ட விசாரணைப் பிரிவு
அல்லது அரசு முகவாண்மையானது, லோக்ஆயுக்தாவால்
அதற்கு குறிப்பிடப்பட்ட வழக்குகள் தொடர்பாக லோக்
ஆயுக்தாவிற்கு விரிவான விசாரணை அறிக்கை
ஒன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
(7) லோக் ஆயுக்தாவின் மூன்றுக்கு குறையாத
உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அமர்வு மன்றம்
ஒன்று, உட்பிரிவு 6இன்படி அவ்வாறு பணிக்கப்பட்ட
விசாரணைப் பிரிவு அல்லது முகவாண்மையிடமிருந்து
அதனால் பெறப்பட்ட ஒவ்வொரு அறிக்கையையும்
கருத்தில் கொள்ளவேண்டும், மற்றும்,
(ஐ) பிரிவு 12இன், உட்பிரிவு (1)இல்
குறிப்பிடப்பட்டுள்ள பொதுப் பணியாளர்கள் தொடர்பாக (௦
மற்றும் D தொகுதிகளைச் சார்ந்த பொது ஊழியர்களைத்
தவிர) உரிய நடவடிக்கைக்காக தகுதிவாய்ந்த அதிகார
அமைப்பிற்கு அறிக்கையை அனுப்பலாம்;
(b) புகாரை முடிப்பதற்கான ஆணை
பிறப்பிக்கலாம்.
(8) லோக் ஆயுக்தாவானது, முதல்நிலை
விசாரணை அல்லது விரிவான விசாரணையின் போது,
அதற்கு பொருத்தம் எனக் கருதுகிற முதல்நிலை
விசாரணை அல்லது விரிவான விசாரணை தொடர்பான
ஆவணங்களின் பொறுப்புக்காக உறிய ஆணைகளைப்
பிறப்பிக்கலாம்.
(9) அவ்வப்போது மற்றும் ஒழுங்குவிதிகளால்
குறிப்பிடப்படும் முறையில் நிலுவையிலுள்ள அல்லது
முடிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கையின் நிலை
25
குறித்து லோக் ஆயுக்தாவின் வலைதளம் பொதுமக்கள்
பார்வைக்கு வைக்கப்படுதல் வேண்டும்.
(10) லோக் ஆயுக்தாவானது, முதல்நிலை
விசாரணை அல்லது விரிவான விசாரணை
நடவடிக்கையில் தேவைப்படக்கூடிய அசல்
பதிவுருக்களை மற்றும் சான்றுகளைத் தக்க
வைத்துக்கொள்ளலாம் அல்லது தக்க வைத்துக்கொள்ளச்
செய்யலாம்.
1) பிறவாறு வகைசெய்யப்பட்டாலன்றி, இந்தச்
சட்டத்தின்படி முதல்நிலை விசாரணை அல்லது விரிவான
விசாரணையை நடத்தும் முறை மற்றும்
நடைமுறையானது (பொதுப் பணியாளருக்கு
கிடைக்கக்கூடிய அத்தகைய சான்றுப்பொருட்கள் மற்றும்
ஆவணங்கள் உள்ளிட்ட) குறித்துரைக்கப்படும் விதத்தில்
இருத்தல் வேண்டும்.
20. பாகுபாடு பார்த்தல் பாதிக்கப்படக்கூடிய
நபர்களின் தரப்பைக் கேட்டறிதல்.- நடவடிக்கையின் எந்த
நிலையிலும் லோக் ஆயுக்தாவானது, -
(@) யார் மீது புகார் செய்யப்பட்டிருக்கிறதோ
அந்த நபரைத் தவிர பிற நபர் எவரின் நடத்தையை
விசாரிக்க வேண்டியது தேவையாக இருக்கிறது என்று
அது கருதுமானால்; அல்லது
0) எந்த நபருக்கு எதிராக புகார் தாக்கல்
செய்யப்பட்டிருக்கிறதோ அந்த நபரைத் தவிர பிற நபரின்.
விசாரணையினால் அவருடைய புகழ் பாதிக்கப்படும் எனக்
கருதப்படும் போது, லோக் ஆயுக்தாவானது அந்த நபருக்கு
விசாரணையில் அவர் தரப்புச் வாதத்தைக் கேட்பதற்கான
நியாயமான வாய்ப்பு ஒன்றினை இயற்கை நதிகளுக்கு
இணங்கியவாறு அளிக்க வேண்டும் மற்றும் அவர் தரப்பு
சான்றுகளை முன்னிலைப்படுத்த அனுமதிக்க வேண்டும்.
26
21. லோக் ஆயுக்தா. தகவல் முதலியவற்றை
அளிக்குமாறு பொதுப் பணியாளர் அல்லது பிற நபர்
எவரையும் வேண்டலாம். இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்குட்பட்டு, முதல்நிலை விசாரணை
அல்லது விரிவான விசாரணை 618601 651
நோக்கத்திற்காகவும், லோக் ஆயுக்தா அல்லது விசாரணை
இயக்குநர், முதல்நிலை விசாரணைக்கு அல்லது விரிவான
விசாரணைக்கு தொடர்புடைய தகவலை அளிப்பதற்கு
அல்லது ஆவணங்களை முன்னிலைப்படுத்துவதற்கு
தகுதியுடையவராக இருக்கிறார் என்று அதற்குத்
தோன்றுகிற பொதுப் பணியாளரை அல்லது பிற நபர்
எவரையும் தகவலை அனுப்புவதற்கு அல்லது ஆவணம்
எதனையும் முன்னிலைப்படுத்துவதற்குக் கோரலாம்.
22. விசாரணைக்கு முன்: அனுமதி
தேவையில்லை.- பொதுப் பணியாளர் எவருக்கும் எதிராக
லோக் ஆயுக்தாவிடம். விசாரணைக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ள புகாரின் பேரில், விசாரணைப் பிரிவால்
அல்லது விழிப்புப்பணி ஆணையத்தால் அல்லது அரசின்:
முகவாண்மை எதனாலும் முதல்நிலை விசாரணையை
அல்லது விரிவான விசாரணையைச் செய்யும்
நோக்கத்திற்காக லோக் ஆயுக்தா அதிகாரஅமைப்பு
எதனிடமும் அனுமதி அல்லது ஒப்புதல் எதுவும்
வேண்டப்படுதல் கூடாது.
அத்தியாயம் —Vil
லோக் ஆயுக்தாவின் அதிகாரங்கள்
23. லோக் ஆயுக்தாவின் மேற்பார்வையிடும்
அதிகாரங்கள். அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற
சட்டம் எதிலும் அடங்கியுள்ள எது எலவ்வாறிருப்பினும்,
இந்தச் சட்டத்தின்படி விசாரணைக்கு எந்த அளவிற்கு
தொடர்புடையதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதன்:
விவரங்கள் தொடர்பாக விசாரணை இயக்குநரை
27
கண்காணிப்பதற்கும் மற்றும் அறிவுரை வழங்குவதற்கும்
லோக் ஆயுக்தாவானது அதிகாரங்களைப் பெற்றிருத்தல்
வேண்டும்.
24. குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் லோக் ஆயுக்தா
உரிமையியல் நீதிமன்றத்தின். அதிகாரங்களைப்
பெற்றிருக்கும்.- (1) இந்தப் பிரிவின்:
வகைமுறைகளுக்குட்பட்டு, விசாரணையின் எந்த
நோக்கத்திற்காகவும், லோக் ஆயுக்தாவின் விசாரணைப்
பிரிவானது பின்வரும் பொருட்கள் தொடர்பாக உரிமை
வழக்கொன்றை விசாரணை செய்யும் பொழுது, 1908 ஆம்
ஆண்டு உரிமையியல் நடைமுறை தொகுப்புச்
சட்டத்தின்படி (மையச் சட்டம் V/1908) ஓர் உரிமையியல்
நீதிமன்றம் கொண்டிருக்கும் அனைத்து
அதிகாரங்களையும் கொண்டிருத்தல் வேண்டும்,
அதாவது:-
(8) நபர் எவருக்கும் அழைப்பாணை விடுத்தல்
மற்றும் அவரது வருகையைக் கட்டாயப்படுத்துதல் மற்றும்
அவரை உறுதிமொழியின் பேரில் விசாரணை செய்தல்;
(b) ஆவணம் எதனையும் கண்டறிதல் மற்றும்
முன்னிலைப்படுத்துமாறு கோருதல்;
(9) உறுதி மொழி ஆவணங்களின் பேரில்
சான்றினைப் பெறுதல்;
(0) பொது பதிவுரு அல்லது அதன் நகல்
எதனையும் நீதிமன்றம் அல்லது அலுவலகம்
எதனிடமிருந்தும் கேட்டுப் பெறுதல்;
(6) சாட்சியங்கள் அல்லது ஆவணங்களை
ஆய்வு செய்வதற்கு ஆணையர் நியமனத்திற்கான
பணிப்பாணைகளை வழங்குதல்:
வரம்புரை: லோக் ஆயுக்தாவின் நடவடிக்கையில்
வருகை தரமுடியாத நிலையில் சாட்சி இருக்கின்றார்
28
என்று லோக் ஆயுக்தா கருதினால், அந்த சாட்சியைப்
பொறுத்து மட்டும் ஆணையருக்கான
பணிப்பாணைகளுக்கு வகை செய்யலாம்; மற்றும்
(1) வகுத்துரைக்கக்கூடிய பிற விவரங்கள்.
(2) லோக் ஆயுக்தாவின் முன் உள்ள நடவடிக்கை
எதுவும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின்
(மையச் சட்டம் XLV/1860) பிரிவு 193இன் பொருளின்படி
ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் கருதப்படுதல் வேண்டும்.
25. அரசு அலுவலர்களின் சேவையைப்
பயன்படுத்திக் கொள்வதற்கான லோக் ஆயுக்தாவின்
அதிகாரம்.- (1) லோக் ஆயுக்தாவானது, முதல்நிலை
விசாரணை அல்லது விரிவான விசாரணை எதனையும்
நடத்தும் நோக்கத்திற்காக, அரசின் ஒப்புதலுடன் அரசு
அலுவலர் எவரின் அல்லது அரசு முகவாண்மை எதனின்
சேவையையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
(2) முதல்நிலை விசாரணை அல்லது விரிவான
விசாரணை நோக்கத்திற்காக, உட்பிரிவு (1)இன்படி
யாருடைய சேவைகள் பயன்படுத்தப்படுகின்றனவோ அந்த
அலுவலர் அல்லது முகவாண்மை எதுவும் லோக்
ஆயுக்தாவின் பணிப்பாணை மற்றும் கட்டுப்பாட்டிற்கு
உட்பட்டு,
(8) நபர் எவருக்கும் அழைப்பாணை
விடுக்கலாம். மற்றும் அவரது வருகையைக்
கட்டாயப்படுத்தலாம் மற்றும் அவரை விசாரணை
செய்யலாம்;
(b) ஆவணம் எதனையும் கண்டறிய மற்றும்
முன்னிலைப்படுத்துவதற்கு வேண்டலாம்; மற்றும்
() அலுவலர் எவரிடமிருந்தும். பொது
ஆவணங்களை அல்லது அதன் நகலைத் தருமாறு
கோரலாம்;
29
(3) உட்பிரிவு (1)இன்படி யாருடைய சேவைகள்
பயன்படுத்தப்படுகின்றனவோ அந்த அலுவலர் அல்லது
முகவாண்மை முதல்நிலை விசாரணை அல்லது விரிவான
விசாரணை தொடர்பான விவரம் எதனையும் விசாரிக்க
வேண்டும் மற்றும் இது சம்பந்தமாக அதனால்
குறிப்பிடப்படும் காலத்திற்குள் லோக் ஆயுக்தாவிற்கு
அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்ய வேண்டும்.
26. ஊழல் குற்றச்சாட்டூடன் தொடர்புடைய
பொதுப் பணியாளரை இடமாற்றம் செய்யவும் பணி
இடைநீக்கம் செய்யவும் பறிந்துரைப்பதற்கு லோக்
ஆயுக்தாவின் அதிகாரம்.- (1) லோக் ஆயுக்தாவானது,
ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முதல்நிலை
விசாரணை ஒன்றைச் செய்கிறபோது, சான்றின்
அடிப்படையில் முதல் நோக்கில் ஆதாரம் இருக்கிறது
என்று மனநிறைவு அடைகிறபோது, அதாவது,-
(@) முதல்நிலை விசாரணை நடந்து
கொண்டிருக்கும்போது பிரிவு 12இன் உட்பிரிவு
(இன் கூறு (6) அல்லது (0)இல் குறிப்பிடப்பட்டுள்ள
பொதுப் பணியாளர் அவருடைய பதவியில்
தொடர்ந்திருப்பதபு முதல்நிலை விசாரணையைப்
பாதிக்கக்கூடும் என்றால்; அல்லது
(b) மேலே (கூறில் குறிப்பிடப்பட்டுள்ள பொது
ஊழியர், சான்றினை எந்த வகையிலும்
அழிக்கக்கூடும் அல்லது எந்த வகையிலும்
மறைக்கக்கூடும் அல்லது சாட்சிகளை
தன்வசப்படுத்தக்கூடும் என்றால்,
அதன்பின்பு லோக் ஆயுக்தாவானது. ஆணையில்
குறிப்பிடப்படும் காலம் வரை பதவியிலிருக்கும் பொதுப்
பணியாளரை இடமாறுதல்: செய்வதற்கு அல்லது
தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்வதற்கு அரசுக்குப்
பரிந்துரை செய்யலாம்.
30
(2) அரசு, நிருவாகக் காரணங்களுக்காக, அவ்வாறு
செய்வதற்கு இயலாமல் இருக்கின்றபோது, எழுதி பதிவு
செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காகத் தவிர லோக்
ஆயுக்தாவின். பரிந்துரையை அரசு சாதாரணமாக ஏற்க
வேண்டும்.
27. முதல்நிலை விசாரணையின் போது
ஆவணங்களை அழிப்பதைத் தடை செய்ய பணிப்புரைகள்
பிறப்பிப்பதற்கான லோக் ஆயுக்தாவின் அதிகாரம்.- லோக்
ஆயுக்தாவானது, இந்தச் சட்டத்தின்படி அதனுடைய
செயற்பணிகளை ஆற்றுகையில், ஆவணம் அல்லது
பதிவுரு எதனையும் தயார் செய்வதற்கு அல்லது வைத்து
வருவதற்கு ஒப்படைக்கப்பட்ட பொதுப் பணியாளர்
ஒருவருக்கு.-
(ஐ) அத்தகைய ஆவணம் அல்லது பதிவுரு
அழிக்கப்படுவதிலிருந்து அல்லது
சேதப்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கு;
அல்லது
(b) பொதுப் பணியாளர் அத்தகைய ஆவணம்
அல்லது பதிவுருவைத் திருத்தம் செய்வதை
அல்லது மறைத்து வைப்பதைத் தடுப்பதற்கு;
அல்லது
(9) ஊழல் மூலம் அவரால் தவறான வழியில்
பெறப்பட்டதாகக் கருதப்படும் சொத்துக்களை
உரிமை மாற்றம் அல்லது பாராதீனம்
செய்வதிலிருந்து பொதுப் பணியாளரை
தடுப்பதற்கு,
உரிய பணிப்புரைகளை வழங்கலாம்.
28. ஒப்படைவு செய்வதற்கான அதிகாரம்.- லோக்
ஆயுக்தாவானது, எழுத்துபூர்வமான பொது அல்லது சிறப்பு
ஆணை வாயிலாக, அதில் குறிப்பிடப்படக்கூடிய
31
நிபந்தனைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டு,
அதனிடம் வழங்கப்பட்டுள்ள நிர்வாகம் அல்லது நிதி
அதிகாரம் எதனையும், அந்த ஆணையில்
குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய உறுப்பினர்களால் அல்லது
அலுவலர்களால் அல்லது பணியாளர்களால்
செயல்படுத்தப்படலாம் அல்லது செய்து ஆற்றப்படலாம்
என்று பணிப்புரை பிறப்பிக்கலாம்.
அத்தியாயம் -Vl
லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும்
அலுவலர்களுக்கு எதிரான புகார்கள்:
29. லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும்
உறுப்பினர்களை பணி நீக்கம் செய்தல் மற்றும் பணியிடை
நீக்கம் செய்தல்.- (1) லோக் ஆயுக்தாவானது, அதன்
தலைவர் அல்லது உ றுப்பினர்களுக்கு எதிராக
அளிக்கப்பட்ட புகார் எதனையும் விசாரித்தல் கூடாது.
(2)உட்பிரிவு (4)இன் வகைமுறைகளுக்கு உட்பட்டு,
சட்டப்பேரவையின் நாற்பத்தைந்து உறுப்பினர்களுக்கு
குறையாதவர்களால் கையொப்பமிட்ட மனுவின் பேரில்,
ஆளுநரால் செய்யப்படும் குறிப்புரையின் பேரில்,
உயர்நீதிமன்றத்தால் நடத்தப்பட்ட விசாரணையில்,
நிகழ்வுக்கேற்ப தலைவர் அல்லது அத்தகைய உறுப்பினர்
நடத்தைக்கேட்டின்: காரணத்தினால் நீக்கப்பட
வேண்டுமென உயர்ந்திமன்றமானது அறிவித்த பின்பு,
தலைவர் அல்லது உறுப்பினர் எவரும், ஆளுநரின்
ஆணைப்படி பதவியிலிருந்து நீக்கப்படுதல் வேண்டும்.
(3) இது தொடர்பாக உயர்ந்திமன்றத்தால்
செய்யப்பட்ட பரிந்துரை அல்லது இடைக்கால
ஆணையினை பெற்றுக்கொண்டதன். பேரில்,
குறிப்புரையின் மீது உயர்ந்திமன்றத்தின் இறுதி
அறிக்கையைப் பெற்று ஆளுநர் ஆணை பிறப்பிக்கும்
வரையில் உட்பிரிவு (2)இன்படி உயர்நீதிமன்றத்திற்கு
32
செய்யப்பட்ட குறிப்புரையுடன் தொடர்புடைய தலைவர்
அல்லது உறுப்பினர் எவரையும் ஆளுநர் பணியிடைந்க்கம்
செய்யலாம்.
(4) உட்பிரிவு (2)இல் அடங்கியிருக்கும் எது
எவ்வாறிருப்பினும், நிகழ்வுக்கேற்ப தலைவர் அல்லது
உறுப்பினர்,
(ஐ நொடிப்பு நிலையர் என்று
தீர்ப்பளிக்கப்பட்டவராக இருக்கின்றார் என்றால்;
அல்லது
(b) அவருடைய பதவிக் காலத்தின்போது
அவருடைய பதவிக் கடமைகளை தவிர, சம்பளம்
பெறும் வேறு பணியில் ஈடுபட்டு பணியாற்றிக்
கொண்டிருக்கிறார் என்றால்; அல்லது
(ஆளுநரின் கருத்தில் மூளைக் குறைபாடு
அல்லது உடல் நலக்குறைபாடு காரணங்களினால்
அவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவதற்குப்
பொருத்தமற்றவர் என்றால்,
ஆளுநர் தன் ஆணை வாயிலாக நிகழ்வுக்கேற்ப தலைவர்
அல்லது உறுப்பினரை பதவி நீக்கம் செய்யலாம்.
(5 தலைவர் அல்லது உறுப்பினர் எவரும், இந்திய
அரசால் அல்லது தமிழ்நாடு அரசால் அல்லது அதன்
பொருட்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை
எதிலும் எந்த வகையிலும் தொடர்புடையவராக அல்லது
ஆர்வமுடையவராக இருக்கிறார் அல்லது ஆகிறார்
என்றால் அல்லது கூட்டுருமான நிறுமத்தின் பிற
உறுப்பினர்களின் பொதுவான ஒரு உறுப்பினராக
இல்லாமல், பிறவாறு கிடைக்கும் இலாபம் எதிலும்
அல்லது ஆதாயம் அல்லது ஊதியம் எதிலும் எந்த
வகையிலும் பங்கெடுத்துக் கொள்பவராக இருக்கிறார்
என்றால் உட்பிரிவு (2)இன் நோக்கங்களுக்காக அவர்
33
நடத்தைக்கேடைச் செய்திருக்கிறார் என்று கருதப்படுதல்
வேண்டும்.
30. லோக் ஆயுக்தாவின் அலுவலர்களுக்கு
எதிரான புகார்கள்.- (1) 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச்
சட்டத்தின்படி (மையச் சட்டம் 49/1988)
தண்டிக்கப்படக்கூடிய குற்றம் அல்லது தவறான செயல்
ஒன்றிற்காக லோக் ஆயுக்தாவுடன் இணைக்கப்பட்ட
அல்லது அதன் கீழுள்ள அலுவலர் அல்லது பணியாளர்கள்.
அல்லது முகவாண்மை எதற்கும் எதிராக செய்யப்பட்ட
குற்றச்சாட்டு அல்லது புகாரானது, இந்தப் பிரிவின்:
வகைமுறைகளுக்கு இணங்கி நடவடிக்கை
எடுக்கப்படுதல் வேண்டும்.
(2) லோக் ஆயுக்தாவானது, புகார் பெறப்பட்ட
தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் செய்யப்பட்ட புகார்
அல்லது குற்றச்சாட்டை விசாரணை செய்து முடித்தல்
வேண்டும்.
(3) லோக் ஆயுக்தாவின் அலுவலர் அல்லது
பணியாளர்எவருக்கும் அல்லது லோக் ஆயுக்தாவுடன்:
இணைக்கப்பட்ட அல்லது ஈடுபடுத்தப்பட்ட முகவாண்மை
எதற்கும் எதிரான புகாரின் மீதான விசாரணை ஒன்றை
மேற்கொள்ளும்போது, கிடைக்கக்கூடிய சான்றின்.
அடிப்படையில் முதல் நோக்கிலேயே மனநிறைவு
அடையுமானால், அதாவது, -
(a) விசாரணையை நடத்தும் போது லோக்
ஆயுக்தாவின் அலுவலர் அல்லது பணியாளர் அல்லது
பணியில் இணைக்கப்பட்ட அல்லது ஈடுபடுத்தப்பட்ட
முகவாண்மையானது. தொடர்ந்து பணியாற்றுவது
அத்தகைய விசாரணையை எதிர்மறையாக பாதிக்கக்
கூடுமோ; அல்லது
(b) லோக் ஆயுக்தாவின் அலுவலர் அல்லது
பணியாளர் அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட
34
அல்லது ஈடுபடுத்தப்பட்ட முகவாண்மையானது,
சான்றினை எந்த வகையிலும் மாற்றுவது அல்லது
அழிப்பது அல்லது சாட்சிகளை தன்வசப்படுத்திக்
கொள்வது ஆகியவற்றை செய்யக் கூடுமானால்,
லோக் ஆயுக்தாவானது ஆணை ஒன்றினால், லோக்
ஆயுக்தாவின். அலுவலர் அல்லது ஊழியரை
பணியிடைந்க்கம் செய்யலாம் அல்லது லோக்
ஆயுக்தாவுடன் இணைக்கப்பட்ட அல்லது ஈடுபடுத்தப்பட்ட
அத்தகைய முகவாண்மையின் அனைத்து அதிகாரங்கள்
மற்றும் பொறுப்புகளையும் செயல்படுத்தப்படுவதற்கு முன்:
திரும்பப்பெறலாம்..
(4) விசாரணை முடிக்கப்பட்டதன்பேரில்,
1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி (மையச்
சட்டம் 491988) குற்றம் அல்லது தவறான செயல்
செய்யப்பட்டிருப்பதற்கான முதல் நோக்குச் சான்று
இருப்பதாக லோக் ஆயுக்தா மனநிறைவு அடைந்தால்,
அத்தகைய விசாரணை முடிவடைந்து பதினைந்து
நாட்களுக்குள், லோக் ஆயுக்தாவின் அலுவலர் அல்லது
பணியாளர் அல்லது அதனுடன் ஈடுபட்டிருக்கும் அல்லது
இணைந்திருக்கும் அத்தகைய அலுவலர் அல்லது
பணியாளர் அல்லது முகவாண்மை மீது உரிய நடவடிக்கை
எடுப்பதற்காக மாநிலத்தின் விழிப்புப்பணி ஆணையத்திற்கு
அதனுடைய அறிக்கையை அனுப்புதல் வேண்டும் மற்றும்
தொடர்புடைய அலுவலர்களுக்கு எதிராக ஒழுங்கு
நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்:
வரம்புரை: அத்தகைய ஆணை எதுவும் அவ்வாறு
ஈடுபட்டுள்ள அல்லது இணைந்து செயல்பட்டுள்ள லோக்
ஆயுக்தாவின் அத்தகைய அலுவலருக்கு அல்லது
பணியாளருக்கு அல்லது முகவாண்மைக்கு
அவர்களுடைய தரப்பு வாதத்தை கேட்பதற்கான வாய்ப்பு
ஒன்றைக் கொடுக்காமல் பிறப்பிக்கப்படுதல் கூடாது.
35
அத்தியாயம் —1X
நிதி, கணக்குகள் மற்றும் தணிக்கை
31. வரவு செலவுத் திட்டம்.- லோக் ஆயுக்தாவின்.
மதிப்பிடப்பட்ட வரவுகள் மற்றும் செலவுகளைக் காட்டும்
அடுத்த நிதி ஆண்டிற்கான அதணுடைய வரவு செலவுத்
திட்டத்தை வகுத்துரைக்கப்படும் விதத்தில் ஒவ்வொரு
நிதி ஆண்டிலும் அத்தகைய படிவத்தில் மற்றும்
அத்தகைய காலத்திலும் தயார் செய்தல் வேண்டும் மற்றும்.
அவற்றை அரசுக்குப் பணிந்தனுப்புதல் வேண்டும்.
32. அரசால் அளிக்கப்படும். மானியங்கள்.-
அரசானது, இது தொடர்பாக மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் சட்டப்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட உரிய
நிதி ஒதுக்கீட்டிற்குப் பின்பு, லோக் ஆயுக்தாவின்.
அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்குச்
செலுத்தத்தக்கதாக இருக்கக்கூடிய சம்பளங்கள்,
படித்தொகைகள் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட அதன்
தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குச் செலுத்தத்தக்க
சம்பளங்கள் படித்தொகைகள் மற்றும் நிருவாகச்
செலவினங்களுக்காகத் தேவைப்படும் தொகைகளை
லோக் ஆயுக்தாவிற்கு வழங்கலாம்.
33. கணக்குகளின் ஆண்டறிக்கை.- (1) லோக்
ஆயுக்தாவானது, தமிழ்நாட்டின்: தலைமைக்
கணக்காயரின் ஆலோசனையுடன் வகுத்துரைக்கப்படும்.
படிவத்தில் கணக்குகளின் ஆண்டறிக்கை ஒன்றைத்
தயார் செய்ய வேண்டும் மற்றும் உரிய முறையில்
கணக்குகளை மற்றும் பிற தொடர்புடைய பதிவுருக்களைப்
பராமரித்தல் வேண்டும்.
(2) லோக் ஆயுக்தாவின். கணக்குகள்.
தமிழ்நாட்டின் தலைமைக் கணக்காயர் மூலம் அவரால்
குறித்துரைக்கப்படும் கால இடைவேளைகளில் தணிக்கை
செய்யப்படுதல் வேண்டும்.
36
(3) தமிழ்நாட்டின் தலைமைக் கணக்காயர் அல்லது
இந்தச் சட்டத்தின்படி லோக் ஆயுக்தாவின் கணக்குகளை
தணிக்கை செய்வது தொடர்பாக பொதுவாக அவரால்
பணியமர்த்தம் செய்யப்பட்ட நபர் எவரும், அரசின்
கணக்குகளை தணிக்கை செய்வது தொடர்பாக
தமிழ்நாட்டின் தலைமைக் கணக்காயர் பெற்றிருக்கும்
அதே உரிமைகளை, சலுகைகளை மற்றும்
அதிகாரங்களை கொண்டிருத்தல் வேண்டும்; மற்றும்
குறிப்பாக லோக் ஆயுக்தாவின் புத்தகங்கள், கணக்குகள்,
தொடர்புடைய செலவுச் சீட்டுகள் மற்றும் பிற
ஆவணங்களைக் கேட்டுப் பெறுவதற்கான உரிமை மற்றும்
அலுவலகங்கள் எதனையும் ஆய்வு செய்வதற்கான
உரிமையும் கொண்டிருத்தல் வேண்டும்;
(4) தமிழ்நாட்டின் தலைமைக் கணக்காயரால்
சான்றளிக்கப்பட்ட லோக் ஆயுக்தாவின் கணக்குகள்
அல்லது இதன் பொருட்டு பணியமர்த்தம் செய்யப்பட்ட பிற
நபர் எவரின் தணிக்கை அறிக்கையுடன் சேர்த்து அரசுக்கு
ஆண்டுதோறும் அனுப்பப்படுதல் வேண்டும் மற்றும்
அரசானது, மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையின் முன்பு
அதனை வைத்தல் வேண்டும்.
34. அரசுக்கு விவர அறிக்கைகள் முதலியவற்றை
அனுப்புதல்.- லோக் ஆயுக்தாவானது வகுத்துரைக்கப்படும்.
நேரத்தில், படிவத்தில் மற்றும் முறையில் அல்லது அரசால்
கோரப்படுகிற, அரசால் அவ்வப்பொழுது கோரப்படும் லோக்
ஆயுக்தாவின் அதிகார வரம்பின்படியான விவரம் எதற்கும்
தொடர்பான அறிக்கைகள், விவர அறிக்கைகள் மற்றும்
குறிப்புகளை அரசுக்கு அளித்தல் வேண்டும்.
37
அத்தியாயம் -6
பொய்ப் புகாரின் மீதான நடவடிக்கை
38. பொதுப் பணியாளருக்கு எதிராகப் பொய்ப் புகார்
அளித்ததற்காக இழப்பீடு வழங்குதல் முதலியவற்றிற்காக
வழக்கு தொடருதல்.- (1) இந்தச் சட்டத்தில்
அடங்கியிருக்கும் எது எவ்வாறிருப்பினும், இந்தச்
சட்டத்தின்படி பொய்யான, அற்பமான அல்லது
அலைக்கழிக்கும் வகையில் புகார் செய்கிறவர் எவராக
இருந்தாலும், தண்டனைத் தீர்ப்பின் பேரில் ஓர் ஆண்டு
காலம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலத்திற்கு சிறை
தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை
நீட்டிக்கப்படக்கூடிய பணத்தண்டமும் விதித்துத்,
தண்டிக்கப்படுதல் வேண்டும்.
(2) பொய்யான, அற்பமான அல்லது
அலைக்கழிக்கும் வகையில் தனக்கு எதிராக புகார்
செய்யப்பட்ட நபர் ஒருவரால் அல்லது லோக் ஆயுக்தாவால்
அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் ஒருவரால் தவிர
உட்பிரிவு (1)இன்படி குற்றம் ஒன்றை நீதிமன்றம் எதுவும்
நடவடிக்கைக்கு எடுத்தல் கூடாது.
(3) உட்பிரிவு (1)இனண்படி குற்றம் தொடர்பான
வழக்கானது அரசு குற்ற வழக்குரைஞரால் நடத்தப்படுதல்
வேண்டும் மற்றும் அத்தகைய வழக்கு தொடருதல்
தொடர்பான அனைத்து செலவுகளும் அரசால் ஏற்றுக்
கொள்ளப்படுதல் வேண்டும்.
(4) இந்தச் சட்டத்தின்படி தவறான புகாரை
அளித்ததற்காக தனிநபர் அல்லது சங்கம் அல்லது
நபர்களின் குழுமம் அல்லது (பதிவு செய்யப்பட்ட அல்லது
பதிவு செய்யப்படாத) பொறுப்புக்கட்டளையாக உள்ள நபர்
எவரும் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சூழலில்,
பொய்ப் புகாரானது. எந்தப் பொதுப்பணியாளர் மீது
அளிக்கப்பட்டதோ அத்தகைய பொதுப் பணியாளரால்
வழக்கை எதிர்கொள்வதற்கான வழக்கு செலவுகளுடன்:
38
சேர்த்து நீதிமன்றம் தீர்மானிக்கும் இழப்பீட்டினையும்
பொதுப் பணியாளருக்கு செலுத்துவதற்கு
பொறுப்புடையராதல் வேண்டும்.
(5) இந்தப் பிரிவில் அடங்கியிருக்கும் எதுவும்
நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட புகார்களுக்குப்
பொருந்தாது.
விளக்கம்.- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக
"நல்லெண்ணம்" எனும் சொற்றொடரானது 1860ஆம்
ஆண்டு இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின்.
(மையச் சட்டம் 071860) பிரிவு 79இன் கீழ் உரிய
கவனம், எச்சரிக்கை மற்றும் பொறுப்புணர்வுடன் அல்லது
அவர் தாம் சரியென நம்பி நல்லெண்ணத்தில் தவறுதலாக
நபர் ஒருவரால் செய்யப்பட்ட அல்லது செய்யப்பட்டதாகக்
கருதப்பட்ட செயல் எதுவும் என்று பொருள்படும்.
36. சங்கம் அல்லது நபர்களின் குழுமம் அல்லது
பொறுப்புக்கட்டளையால் செய்யப்படும் பொய்ப் புகார்.-- (1)
சங்கம் அல்லது நபர்களின் குழுமம் அல்லது (பதிவு
செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத)
பொறுப்புக்கட்டளை எதனாலும் பிரிவு 35இன் உட்பிரிவு
(1)இன்படி குற்றம் ஒன்று செய்யப்பட்டிருக்கின்றபோது,
குற்றம் செய்யப்பட்டிருந்த நேரத்தில் பொறுப்புடையவராக.
இருந்திருக்கும் அந்தச் சங்கம் அல்லது நபர்களின் குழுமம்
அல்லது பொறுப்புக்கட்டளையின் தொழில் அல்லது
அலுவல்கள் அல்லது நடவடிக்கைகளுக்காக சங்கம்
அல்லது நபர்களின். குழுமம் அல்லது
பொறுப்புக்கட்டளைக்கு நேரடி பொறுப்பிலுள்ள மற்றும்.
பொறுப்புடையவராக இருக்கும் ஒவ்வொரு நபரும் மற்றும்
அத்தகைய சங்கம் அல்லது நபர்களின் குழுமம் அல்லது
பொறுப்புக்கட்டளையும் அந்தக் குற்றச்செயலை
செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும்
39
அவற்றிற்கு எதிராக நடவடிக்கைக்கும் அதற்கு இணங்கிய
வகையில் தண்டனைக்கு உள்ளாக்குதலும் வேண்டும்:
வரம்புரை: நபர் எவரும், குற்றம் அவருடைய
அறிவுக்கு எட்டாத வகையில் நடந்திருக்கிறது அல்லது
அத்தகைய குற்றம் நடைபெறாமல் தடுப்பதற்கான
அனைத்து உரிய முயற்சிகளை மேற்கொண்டதாக
நிரூபித்தால், இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும்
இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளபடி தண்டனை
எதற்கும் அவரை உள்ளாக்குதல் கூடாது.
(2) உட்பிரிவு (1)இல் அடங்கியுள்ள எது
எவ்வாறிருப்பினும், சங்கம் அல்லது நபர்களின் குழுமம்
அல்லது (அது பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு
செய்யப்படாத) பொறுப்புக்கட்டளையால் இந்தச்
சட்டத்தின்படி குற்றமானது செய்யப்பட்டிருக்கிறபோது
மற்றும் அத்தகைய சங்கம் அல்லது நபர்களின் குழுமம்
அல்லது பொறுப்புக்கட்டளையின் இயக்குநர், மேலாளர்,
செயலாளர் அல்லது பிற அலுவலர் எவரின் அனுமதியுடன்
அல்லது மறைமுக ஆதரவுடன் அல்லது கவனமின்மை
காரணமாய் இருந்தது என நிரூபிக்கப்பட்டால், அத்தகைய
இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர்
அந்தக் குற்றத்தைச் செய்துள்ளவராகக் கருதப்படுதல்
வேண்டும் மற்றும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கப்பட்டு அதற்கு இணங்க தண்டணைக்கு
உள்ளாக்குதல் வேண்டும்.
அத்தியாயம்-34
பல்வகைப்பட்டவை
37. பொதுப்பணியாளர் எவராலும்.
நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப்
பாதுகாப்பு.-- பொதுப் பணியாளர் எவரும், அவரது
செயற்பணிகளை ஆற்றும் போது அல்லது
அதிகாரங்களைச் செலுத்தும்போது நல்லெண்ணத்தில்
40
செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட எதையும்
பொறுத்து, அவருக்கு எதிராக இந்தச் சட்டத்தின்கீழ்
உரிமைவழக்கு, குற்றவழக்கு அல்லது பிற சட்ட
நடவடிக்கைகள் எதுவும் தொடரப்படுதல் கூடாது.
38. பிற நபர்களால் நல்லெண்ணத்தில்
எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.- இந்தச்
சட்டத்தில் அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகள்
அல்லது ஒழுங்கு விதிகளின் கீழ் நல்லெண்ணத்தில்
செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட எதனையும்
பொறுத்து லோக் ஆயுக்தாவிற்கு எதிராக அல்லது
அலுவலர், பணியாளர், முகவாண்மை எதற்கும் அல்லது
நபர் எவருக்கும் எதிராக உரிமைவழக்கு, குற்ற வழக்கு
அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எதுவும் தொடரப்படுதல்
கூடாது.
39. லோக் ஆயுக்தாவின். உறுப்பினர்கள்,
அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொது
பணியாளர்களாகக் கருதப்படுவர்.- லோக் ஆயுக்தாவின்:
தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பிற
பணியாளர்கள் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள்:
எதற்கும் இணங்க செயல்படும்போது அல்லது செயல்படக்
கருதும்பொழுது 1860ஆம் ஆண்டு இந்தியத் தண்டனைத்
தொகுப்புச் சட்டத்தின் பிரிவு 21இன் பொருளின்படி
பொதுப் பணியாளர்களாகக் கருதப்படுவர்.
40. காலவரம்பின்: பொருந்தும் தண்மை.
அத்தகைய புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றம்
நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ள தேதியிலிருந்து நான்கு
ஆண்டுகள் கால அளவிற்குள். புகார்
அளிக்கப்படாவிட்டால், லோக் ஆயுக்தாவானது அத்தகைய
புகாரின் மீது விசாரணை செய்தல் கூடாது.
441. அதிகார வரம்பிற்குத் தடை.:- இந்தச்
சட்டத்தினால் அல்லது அதன்படி, லோக் ஆயுக்தாவிற்கு
41
அதிகாரமளிக்கப்பட்ட விவரம் எதன் தொடர்பாகவும்,
தீர்மானிக்க உரிமையியல் நீதிமன்றம் எதுவும் அதிகார
வரம்பினைக் கொண்டிருக்காது.
42. சட்ட உதவி. லோக் ஆயுக்தாவானது இந்தச்
சட்டத்தின்படி அதன் முன்பு எவருக்கு எதிராக புகார்
அளிக்கப்பட்டிருக்கின்றதோ அந்த நபர்
ஒவ்வொருவருக்கும் லோக் ஆயுக்தாவின் முன்பு அவர்
தரப்புக்காக வாதாடுவதற்காக சட்ட உதவியானது
கோரப்பட்டால், அத்தகைய உதவிக்கு வகை செய்தல்
வேண்டும்.
43. சட்டத்தின் மேலோங்கும் தண்மை.- மாநில
சட்டமன்றப் பேரவையினால் இயற்றப்பட்டு அப்போது
நடைமுறையில் உள்ள பிறச் சட்டங்கள் எதிலும் முரணாக
அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், இந்தச் சட்டத்தின்
வகைமுறைகள் செயல்திறம் பெற்றிருத்தல் வேண்டும்.
44. விதிகளைச் செய்வதகான அதிகாரம்.-- (1)
அரசானது, அறிவிக்கையின் மூலம் இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளை நிறைவேற்றுவதற்கான விதிகளைச்
செய்யலாம்.
(2) குறிப்பாக மற்றும் முந்தைய அதிகாரங்களின்:
பொதுத்தன்மைக்கு ஊறின்றி அத்தகைய விதிகள்:
பின்வரும் விவரங்கள் அனைத்திற்காகவும் அல்லது
அவற்றில் எதற்காகவும் வகை செய்யலாம், அதாவது:-
(@) பிரிவு 2இன் உட்பிரிவு (1)இன் கூறு (0)இல்
குறிப்பிடப்பட்டுள்ள புகாரின் படிவம்;
(௦) பிரிவு 4இன், உட்பிரிவு (5)இன்படி தேடுதல்
குழுவின் காலம் மற்றும் பெயர்ப்பட்டியலைத் தெரிவு
செய்யும்முறை மற்றும் அதனுடைய
உறுப்பினர்களுக்கு செலுத்தப்படத்தக்க கட்டணம்
மற்றும் படித்தொகைகள்;
42
(0) பிரிவு 9இன், உட்பிரிவு (கன்
வகைமுறையின்படி பதவி அல்லது பதவிகள்:
தொடர்பான பணியமர்த்தம்;
(0) பிரிவு 9இன், உட்பிரிவு (4)இன்படி லோக்
ஆயுக்தாவின் செயலாளர் மற்றும் பிற அலுவலர்கள்.
மற்றும் பணியாளர்களின் பணி நிபந்தனைகள்;
(6) பிரிவு 24இன், உட்பிரிவு (1)இன் கூறு
(இன்படி எந்தப் பிற விவரங்களுக்காக உரிமையியல்
நீதிமன்றம் ஒன்றின் அதிகாரங்களை லோக்
ஆயுக்தாவானது பெற்றிருக்கிறதோ, அந்தப் பிற
விவரங்கள்;
) பிரிவு 31இன்படி லோக் ஆயுக்தாவின்:
மதிப்பிடப்பட்ட வரவுகள் மற்றும் செலவுகளைக்
காட்டும் அடுத்த நிதி ஆண்டிற்கான வரவுசெலவுத்
திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் தயாரிப்பதற்கான
படிவம் மற்றும் காலம்;
@ பிரிவு 33இன், உட்பிரிவு (1)இன்படி
கணக்குகள் மற்றும் தொடர்புடைய பிற பதிவுருக்களை
பராமரிப்பதற்கான படிவம் மற்றும் கணக்குகளின்.
ஆண்டறிக்கையின் படிவம்;
(h) பிரிவு 34இன்படி குறிப்புகளுடனான விவர
அறிக்கை மற்றும் அறிக்கைகளைத் தயாரிப்பதற்கான
படிவம், முறை மற்றும் காலம்;
(i) வகுத்துரைக்கப்படும் பிற விவரம் எதுவும்.
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அனைத்து
விதிகளும் மற்றும் அறிவிக்கைகளும் அரசிதழில்
வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்ட
நாளன்று நடைமுறைக்கு வரும் என்று
சொல்லப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு
43
வெளியிடப்பட்ட நாளன்று நடைமுறைக்கு வருதல்
வேண்டும்.
(4) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட விதி,
அறிவிக்கை அல்லது செய்யப்பட்ட ஆணை
ஒவ்வொன்றும், அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது
பிறப்பிக்கப்பட்ட பிண்ணர், கூடியவிரைவில், சட்டமன்றப்
பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும் மற்றும்
அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அடுத்தக்
கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய
விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை
ஏதொன்றிலும் மாற்றம் எதையும் சட்டமன்றப் பேரவை
செய்யுமானால் அல்லது அந்த விதி அல்லது அறிவிக்கை
அல்லது ஆணை செய்யப்படுதல் கூடாது அல்லது
பிறப்பிக்கப்படுதல் கூடாது என சட்டமன்றப் பேரவை
முடிவு செய்யுமானால் அந்த விதி அல்லது அறிவிக்கை
அல்லது ஆணை, அதன் பின்னர் அவ்வாறு மாற்றம்
செய்யப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல்
வேண்டும் அல்லது நடைமுறைக்கு வராது போதல்
வேண்டும். எனினும் அத்தகைய மாற்றம் அல்லது நீக்கம்
எதுவும், அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது
ஆணையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட செயல்
எதனின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல்
வேண்டும்.
45. ஒழுங்குவிதிகளைச் செய்வதற்கான
அதிகாரம்.- (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் மற்றும்
அதன்படிச் செய்யப்பட்ட விதிகளுக்குட்பட்டு லோக்
ஆயுக்தாவானது அறிவிக்கையினால் இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளை நிறைவேற்றுவதற்கான
ஒழுங்குவிதிகளைச் செய்யலாம்.
(2) குறிப்பாகவும் மற்றும் முந்தைய
அதிகாரங்களின் பொதுத் தன்மைக்கு ஊறின்றியும்
44
பின்வரும் அனைத்திற்காகவும் அல்லது எதற்காகவும்
வகை செய்யப்படலாம். அதாவது:-
(ஐ பிரிவு 19இன், உட்பிரிவு (9)இன்படியான
குறிப்புரைடன் நிலுவையில் உள்ள அனைத்து புகார்களின்:
நிலை அல்லது பதிவுருக்கள் மற்றும் சான்றுடன்:
முடிவுகளை லோக் ஆயுக்தாவின் வலைதளத்தில் காட்சிப்
படுத்துவதற்கான முறை; மற்றும்
௦) இந்தச் சட்டத்தின்படி தேவையான
குறிப்பிடப்பட்ட பிற விவரம் எதுவும்.
46. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.-
(1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச்
செயற்படுத்துவதில் இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால்,
அரசு, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணை
ஒன்றின் மூலமாக, இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகையில்,
அத்தகைய இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவையானவை
என்றோ உகந்தவை என்றோ தனக்குத் தோன்றுகின்ற
அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்:
வரம்புரை: அத்தகைய ஆணை எதுவும், இந்தச்
சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள்
முடிவடைந்த பின்னர் செய்யப்படுதல் கூடாது.
(2) இந்தப் பிரிவிண்படி செய்யப்பட்ட ஆணை
ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட பின்பு கூடிய விரைவில்
சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல்
வேண்டும்.
Rules, notifications and orders under this Act
Listed from India Code. Each opens there.