Tamil Nadu · 2014 · Act 27
The Tamil Nadu Local Bodies Ombudsman Act, 2014
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
சட்ட எண் 27/2014.
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும்
உள்ளாட்சி அமைப்புகளின்: கீழ் பணி செய்து கொண்டிருக்கும் அலுவலர்கள். மற்றும்
பணியாளர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுகளின் மீதான விசாரணைக்காக முறைமன்ற
நடுவர் அமைப்பை ஏற்படுத்துவதற்கு வகை செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு மற்றும்
அதனுடன் தொடர்புடைய மற்றும் அதன் இடைவிளைவான பொருட்பாடுகளுக்கும் வகை:
செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக்குடியரசின் அறுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால்:
பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1 (இந்தச் சட்டம், 2014-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்
சட்டம் என அழைக்கப்பெறும்.
(2) இது, 2014 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்து
விட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
2. இந்தச் சட்டத்தில் தறுவாயின் தேவை வேறானாலன்றி,-
() “நடவடிக்கை'” என்பது முடிவு, பரிந்துரை, தீர்மானம் அல்லது கண்டறிந்தவை அல்லது
அதனின் நிறைவேற்றுகையில் அல்லது நிர்வாகத்தைப் பயன்படுத்துகையில் அல்லது பிற எந்த
முறையிலும் சட்ட செயற்பணிகளின் வாயிலாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பொருள்படும்
மற்றும் வேண்டுமென்றே நடவடிக்கை எடுப்பதில் தவறுதல் அல்லது செயற்படாமல் விட்டுவிடுதல்:
ஆகியவையும் உள்ளடங்கும் மற்றும் அத்தகைய நடவடிக்கை தொடர்பான அனைத்து பிற
சொற்றொடர்கள் உள்ளடங்கலானவை அதன்படி பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்;
(2) “குற்றச்சாட்டு'” என்பது,-
குறுந்தலைப்பும்
தொடக்கமும்.
பொருள்
வரையறைகள்.
(8) பொதுப் பணியாளர் ஒருவர் தொடர்பாக, அத்தகைய பொதுப் பணியாளர்-
() அவருக்கு அல்லது பிற நபர் எவருக்கும் லாபம் அடையும் வகையில் அல்லது
சாதகமாக இருக்கும் வகையில் அல்லது பிறநபர் எவருக்கும் எல்லையற்ற தீங்கு அல்லது சிரமத்தை
விளைவித்தல் போன்றவற்றிற்காக அவருடைய பதவியைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்;
(0 தனிப்பட்ட நலன் அல்லது முறையற்ற அல்லது ஊழல் குறிக்கோளுடன் பொதுப்
பணியாளர் அவருடைய செயற்பணிகளை செய்து முடிக்கையில் செயல்பட்டிருந்தார்;
(i) ஊழல், சாதகமாகச் செயற்படுதல், உறவினர்களுக்கு தனிச்சலுகை அளித்தல்
அல்லது நேர்மைக் குறைபாடு உடையவராயிருக்கிறார்;
(9) பொதுப் பணியாளராக இருந்து செய்த செயல், உள்ளாட்சி அமைப்புகளின்
நிதியம் அல்லது பிற சொத்துக்கு இழப்பு எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்புகளாக அல்லது
காரணிகளாக இருக்கிறது என்ற குற்றமுடையவராயிருக்கிறார்; அல்லது
V) பொதுப்பணியாளர்களில் அவர் எந்த வகையைச் சேர்ந்தவராக இருக்கின்றாரோ
அதற்கேற்ப அவரால் தானாக கடைப்பிடிக்கப்பபவேண்டியதான நேர்மை விதிமுறைகள் மற்றும்
நன்னடத்தைக்கு இணங்கிய வகையில் செயற்படுவதற்கு தவறியிருக்கிறார்;
என்று உறுதி செய்யப்பட்டிருப்பது எதுவும் என்று பொருள்படும்;
(b) உள்ளாட்சி அமைப்பொன்று தொடர்பாக, அத்தகைய உள்ளாட்சி அமைப்பு
சட்டத்தால் அதனிடம் கொடுக்கப்பட்டுள்ள அதனுடைய செயற்பணிகளை செய்து முடிக்கையில்
அல்லது அரசின் ஆணைகள் மற்றும் பணிப்புரைகளை செயற்படுத்துவதில் தவறியிருக்கிறது
அல்லது அதனுடைய அதிகாரங்களை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறது என்று உறுதி
செய்யப்பட்டிருப்பது எதனையும் உள்ளடக்கும் என்று பொருள்படும்;
@) “முறையீடு” என்பது பொதுப்பணியாளர் ஒருவரின் அல்லது உள்ளாட்சி அமைப்பு
ஒன்றின் ஊழல் அல்லது சீர்கேடான நிர்வாகம் பற்றிய குற்றச் சாட்டின் விவரவுரை ஒன்று எனப்
பொருள்படும் மற்றும் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக அரசால் தன்னிச்சையாக
செய்யப்படவிருக்கிற விசாரணை அல்லது விசாரணைக்காகப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிற
சுட்டுகை எதனையும் உள்ளடக்கும்;
(6) “ஊழல்?” என்பது இந்திய தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் |3-ஆவது
அத்தியாயத்தின்படி அல்லது 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி தண்டிக்கத்தக்க
எதனையும் உள்ளடக்கும்;
6) “அரசு'” என்பது மாநில அரசு என்று பொருள்படும்;
(6) “திறமையின்மை” என்பது நபர் ஒருவரின் உடலளவிலான அல்லது மனதளவிலான
பாதிப்பு அல்லது மற்றபடி அவருடைய செயற்பணிகளை செய்து முடிப்பதற்கு இயலாதவராய்.
இருப்பது என்று பொருள்படும்;
(9) உள்ளாட்சி அமைப்பு” என்பது,-
() சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம்,
திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சி அல்லது
தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள சட்டம் எதன்படியும் அமைத்துருவாக்கப்படலாகும் பிற
மாநகராட்சி; அல்லது
(i) 1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி
அமைத்துருவாக்கப்பட்ட ஒரு நகராட்சி மன்றம்; அல்லது
(01) 1994-, ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி
அமைத்துருவாக்கப்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சி;
என்று பொருள்படும்;
(6) “சீர்கேடான நிர்வாகம்” என்பது,-
() அத்தகைய நடவடிக்கை, நிர்வாக நடைமுறை அல்லது அத்தகைய
நடவடிக்கையை நிர்வகிக்கும் வழக்கம் காரணத்துடன் இல்லாமல், நீதியற்றதாக, ஒடுக்குவதாக,
வேற்றுமை பாராட்டுவதாக அல்லது உறவினர்களுக்கு காட்டும் தனிச் சலுகையாக இருத்தல்
மற்றும் சட்டப்படியல்லாமல் ஈட்டக்கூடிய லாபம் அல்லது இழப்பு அல்லது தகுதியுடைய
நற்பயன்களைச் செய்ய மறுத்தல்; அல்லது
மையச் சட்டம்
XLV/18
மையச் சட்டம்
49/1988.
தமிழ்நாடு சட்டம்
'//1920.
தமிழ்நாடு
சட்டம் 21/1994.
தமிழ்நாடு சட்டம்
11919.
தமிழ்நாடு சட்டம்
15/1971.
தமிழ்நாடு சட்டம்
25/1981.
தமிழ்நாடு சட்டம்
27/1994.
தமிழ்நாடு சட்டம்
28/1994.
தமிழ்நாடு சட்டம்
29/1994.
தமிழ்நாடு சட்டம்
7/2008.
தமிழ்நாடு சட்டம்
8/2008.
தமிழ்நாடு சட்டம்
26/2008.
(i) வேண்டுபென்றே செய்த கவனமின்மை அல்லது அத்தகைய நடவடிக்கையை
எடுப்பதில் உண்டான காலதாமதம் அல்லது அத்தகைய நடவடிக்கையை
ஒழுங்குழுறைப்படுத்தும் நிர்வாக நடைமுறை அல்லது முறையினால் ஏற்படும் எல்லையற்ற
தாமதம் மற்றும் நெறி தவறிய நடவடிக்கை அல்லது சட்டப்படியான அதிகாரத்தைத் தவறாகப்
பயன்படுத்துவதால் எடுக்கப்படும் நடவடிக்கை: மூலம் ஏற்படும் இழப்பு அல்லது வேண்டாதவை
அல்லது நிதியம் தவறாகப் பயன்படுத்தப்படுதல் உள்ளடங்குவதாக இருக்கின்றவிடத்தான
நேர்வு எதிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்லது நிர்வாக செயற்பணியினைச்
செயலுறுத்துகையில் எடுக்கக் கருதப்பட்ட நடவடிக்கை எதுவும் என்று பொருள்படும்;
9) “தவறான நடத்தை” என்பது, இந்திய அரசால் அல்லது மாநில அரசால் அல்லது இந்திய
அரசின் அல்லது மாநில அரசின் சார்பாக செய்யப்பட்ட ஒப்பந்தம். அல்லது | உடன்படிக்கை எதிலும்
எந்த விதத்திலும் முறைமன்ற நடுவர் தொடர்புடையவராக அல்லது அக்கறை கொண்டவராக.
இருக்கிறார் அல்லது ஆகியிருக்கிறார் அல்லது கூட்டுருமமாக பதிவு செய்யப்பட்ட நிறுமம் ஒன்றின்
உறுப்பினர் ஒருவராக மற்றும் பொதுவாக பிற உறுப்பினர்களுடன் இல்லாபல் மற்றபடி அதிலிருந்து
அதனின் லாபத்தில் எந்த விதத்திலும் முறைமன்ற நடுவர் பங்கெடுத்திருக்கிறார் அல்லது பலன்
அல்லது ஊதியம் பெற்றிருக்கிறார் என்றால் தவறான நடத்தை என்று பொருள்படும்;
(10) “முறைமன்ற நடுவர்'” என்றால் உள்ளாட்சி அமைப்புகளால் அல்லது உள்ளாட்சி
அமைப்புகளின் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொதுப் பணியாளர்களால் தொடர்புடைய
சட்டத்தின். வகைமுறைகளுக்கிணங்க நிர்வாகச் செயற்பணிகளை செய்து முடிக்கையில்
செய்யப்படும் ஊழல் அல்லது சீர்கேடான நிர்வாகம் அல்லது முறைகேடுகள் எதன் பேரிலுமான
குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளைச் செய்வதற்கான அல்லது அத்தகைய
முறையீட்டை தீர்வு செய்வதற்கான அதிகார அமைப்பு ஒன்று எனப் பொருள்படும்;
(1) “பொதுப் பணியாளர்'” என்றால் தலைமையர் அல்லது துணைத்தலைமையர், மேயர்
அல்லது துணைமேயர் உள்ளடங்கலாக உள்ளாட்சி அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினரொருவர் என்று பொருள்படும் மற்றும் உள்ளாட்சி அமைப்பின்கீழ் பணி செய்து
கொண்டிருக்கும் அலுவலர்களை மற்றும் பணியாளர்களை உள்ளடக்கும்;
(2) “தொடர்புடைய சட்டம்” என்பது,-
டு சென்னை மாநகராட்சி என்கின்ற நேர்வில் 1919-ஆம் ஆண்டு சென்னை
மாநகராட்சிச் சட்டம்;
(மதுரை மாநகராட்சி என்கின்ற நேர்வில் 1971-ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச்
சட்டம்;
(1) கோயம்புத்தூர் மாநகராட்சி என்கின்ற நேர்வில் 1981-ஆம் ஆண்டு
கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டம்;
(1) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி என்கின்ற நேர்வில் 1994-ஆம் ஆண்டு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டம்;
(V) திருநெல்வேலி மாநகராட்சி என்கின்ற நேர்வில் 1994-ஆம் ஆண்டு
திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டம்;
(Vi) சேலம்மாநகராட்சி என்கின்ற நேர்வில் 1994-ஆம் ஆண்டு சேலம்மாநகராட்சிச்
சட்டம்;
(ரி) திருப்பூர் மாநகராட்சி என்கின்ற நேர்வில் 2008-ஆம் ஆண்டு திருப்பூர்
மாநகராட்சிச் சட்டம்;
(0) ஈரோடு மாநகராட்சி என்கின்ற நேர்வில் 2008-ஆம் ஆண்டு ஈரோடு
மாநகராட்சிச் சட்டம்;
(9 வேலூர் மாநகராட்சி என்கின்ற நேர்வில் 2008-ஆம் ஆண்டு வேலூர்
மாநகராட்சிச் சட்டம்;
(9 தூத்துக்குடி மாநகராட்சி என்கின்ற நேர்வில் 2008-ஆம் ஆண்டு தூத்துக்குடி
மாநகராட்சிச் சட்டம்;
64) தஞ்சாவூர் மாநகராட்சி என்கின்ற நேர்வில் 2013-ஆம் ஆண்டு தஞ்சாவூர்
மாநகராட்சிச் சட்டம்;
தமிழ்நாடு சட்டம்
27/2008.
தமிழ்நாடு சட்டம்
24/2013.
முறைமன்ற
நடுவரின்
பணியமர்த்தம்.
முறைமன்ற
நடுவரின்.
அலுவலகக்காலம்
மற்றும்
பணிக்கான.
வரைக்கட்டுகள்.
முறைமன்ற
நடுவரை
நீக்குதல்.
(41) திண்டுக்கல் மாநகராட்சி என்கின்ற நேர்வில் 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல்.
மாநகராட்சிச் சட்டம்;
60) நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் என்கின்ற நேர்வில் 1920-ஆம் ஆண்டு
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம்) மற்றும்
(xiv) மாவட்ட ஊராட்சிகள் என்கின்ற நேர்வில் 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு
ஊராட்சிகள் சட்டம்;
எனப் பொருள்படும்;
(13) “செயலாளர்” என்பது 6-ஆம் பிரிவில் சுட்டப்பட்டுள்ள செயலாளர்
எனப் பொருள்படும்;
(4) “மாநிலம்” என்பது தமிழ்நாடுமாநிலம் எனப் பொருள்படும்.
3. (1) “முறைமன்ற நடுவர்” என அறியக்கூடிய, உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகார
அமைப்பு ஒன்று மாநில அளவில் இருத்தல் வேண்டும்.
(2) ஆளுநர், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில், தமிழ்நாடு அரசின் முதன்மைச்
செயலாளரின் படி நிலைக்குக் குறையாத அரசு அலுவலராக இருந்திருக்கிற நபர் ஒருவரை
(முறைமன்ற நடுவராக பணியமர்த்தம் செய்யவேண்டும்.
(9) முறைமன்ற நடுவர் ஒருவராகப் பணியமர்த்தம் செய்யப்பட்ட நபரொருவர் அவருடைய
அலுவலகத்திற்குச் சென்று பதவியில் அமர்வதற்கு முன் ஆளுநரின் முன்பாக அல்லது அதற்குப்
பதிலாக அவரால் பணியமர்த்தம் செய்யப்பட்ட பிற நபரின் (முன்பாக இணைப்புப்பட்டியலில்
கொடுக்கப்பட்டுள்ள படிவத்திற்கு இணங்க உறுதிமொழி அல்லது மெய்யுறுதி செய்யவேண்டும்.
4.() முறைமன்ற நடுவராகப் பணியமர்த்தம் செய்யப்பட்ட நபரொருவர், அவருடைய
அலுவலகத்தில் பதவியேற்றதிலிருந்து மூன்று ஆண்டு காலத்திற்கு அப்பதவியிலிருக்கலாம்:
வரம்புரை:
(8) முறைமன்ற நடுவரொருவராகப் பணியரமர்த்தம் செய்யப்பட்டுள்ள நபர்
ஆளுநருக்கு முகவரியிட்டு தன் கைப்பட எழுதும் கடித்தின் மூலம் எந்த நேரத்திலும் அவருடைய
பதவியைத் துறக்கலாம்;
(0) முறைமன்ற நடுவரொருவராகப் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ள நபர்,
5-ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள முறையில் அவருடைய பதவியிலிருந்து நீக்கப்படலாம்;
மறறும்
(9 முறைமன்ற நடுவராகப் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ள நபர் அவருடைய
பதவியிலிருக்கும் காலத்தின்போது எழுபது வயதினை முடித்திருக்கிறாரென்றால்
அலுவலகத்திலிருந்து ஒய்வு பெற வேண்டும்.
(2) முறைமன்ற நடுவர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருக்கு
அனுமதிக்கப்படலாகிறவாறான ஊதியத்தை மற்றும் படிகளைப் பெறுவதற்கு உரிமையுடையவராக.
இருத்தல் வேண்டும்.
5. (0 நிரூபிக்கப்பட்ட முறையற்ற நடத்தை அல்லது திறமையின்மை காரணத்தின் பேரில்
அத்தகையநீக்கத்திற்காக சட்டமன்றப் பேரவையின் உறுப்பினர்கள் வருகை தந்து வாக்களிக்கும்
பெரும்பான்மையொன்றினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குப் பின்னர், ஆளுநரால்
பிறப்பிக்கப்படும் ஆணையொன்றினால் தவிர, முறைமன்ற நடுவர், அவருடைய
அலுவலகத்திலிருந்து நீக்கப்படுதலாகாது.
(2) முறைமன்ற நடுவரின் முறையற்ற நடத்தை அல்லது திறமையின்மையின்
புலனாய்விற்காக மற்றும் நிரூபிப்பதற்கான சான்றிற்காக (௫-ஆம் உட்பிரிவின்படியான உரையினை
அளிப்பதற்கான நடைமுறை அரசால் இந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட விதிகளின்
வகைமுறைகளுக்கிணங்கிய வகையில் இருத்தல் வேண்டும்.
(9.0-ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும், முறைமன்ற நடுவர்,-
(8) ஒரு நொடிப்புநிலையராக நீதிமன்றத்தில் அறிவிக்கப் பட்டிருக்கிறாரென்றால்;
அல்லது
தமிழ்நாடு சட்டம்
25/2013.
தமிழ்நாடு சட்டம்
v/1920.
தமிழ்நாடு சட்டம்
21/1994.
முறைமன்ற
நடுவரின்
அதிகாரங்கள்.
(ட அவருடைய அலுவலகக் காலத்தின்போது அவருடைய அலுவலகக் கடமைகள்
தவிர்த்து ஊதியம் பெறக்கூடிய பிற எந்தப் பணியிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறாரென்றால்;
அல்லது
(0) ஒழுக்கக்கேட்டினை உள்ளடக்கிய குற்றம் ஒன்றிற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்
மற்றும் சிறைத்தண்டனையடைந்துள்ளார் என்றால்;
அவர், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில், ஆளுநரால், அவருடைய
அலுவலகத்திலிருந்து நீக்கப்படுதல் வேண்டும்.
6. () முறைமன்ற நடுவர் இந்தச் சட்டத்தின்படி அவருடைய அதிகாரங்களைச்
செயலுறுத்துவதற்கு மற்றும். அவருடைய செயற்பணிகளைச் செய்து முடிப்பதற்கு, அவருக்கு
உதவியாக, அரசால் முறைமன்ற நடுவருடன். கலந்தாலோசித்த பிறகு, நிர்ணயிக்கப்படலாகிறவாறு
செயலாளர் ஒருவரையும் மற்றும் அத்தகைய பிற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களையும்
கொண்டிருக்க வேண்டும்.
(2) செயலாளர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பணியரமர்த்தம் மற்றும்
பணிவரைக்கட்டுகள் வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.
(8. ()-ஆம் உப்பிரிவில் சுட்டப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்கள்
முறைமன்ற நடுவரின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருத்தல் வேண்டும்.
(8). ௫-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்குக் குந்தகமின்றி, முறை மன்ற நடுவர், இந்தச்
சட்டத்தின்படியான விசாரணையை நடத்தும் நோக்கத்திற்காக,-
(6) அரசின் அலுவலர் அல்லது புலனாய்வு முகவாண்மை எதனின்;
(பிற மாநில முகவாண்மை எதனின்
பணியினையும் பயன்படுத்தலாம்.
௫ முறைமன்ற நடுவர் அவர் முன் வைக்கப்படும் பிரச்சனைகளை முடிவு செய்வதற்கு,
குறிப்பிட்ட துறை எதிலும் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைக் கொண்டிருக்கும் நபர் எவரின்
பணியுதவிகளைக் கேட்கலாம்.
7. முறைமன்ற நடுவர் பின்வரும் செயற்பணிகள் அனைத்தையும் அல்லது எதனையும்
செய்யவேண்டும், அதாவது,-
() பொதுப்பணியாளர் அல்லது உள்ளாட்சி அமைப்பொன்று ஊழல் அல்லது சீர்கேடான
நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளது என, அரசிடமிருந்து பெறப்பட்ட அல்லது முறைமன்ற நடுவரிடம்
வந்திருக்கிற எழுத்து வடிவிலான முறையீடு எதனையும் விசாரணை செய்தல்;
(நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், பின்வரும் முறையில் ஆணையொன்றினைப்
பிறப்பித்தல், அதாவது:-
(&) பொதுப் பணியாளர் ஒருவரால் செய்யப்பட்டுள்ள முறைகேடு, குற்றவியல் குற்றமாக
இருக்கிறவிடத்து, அந்தப் பொருட்பாடு உரிய புலனாய்வு அமைப்பிற்கு தக்க நடவடிக்கைக்காக
சுட்டியனுப்பப்படுதல் வேண்டும்;
(0) உள்ளாட்சி அமைப்பின் நிதியத்திற்கு இழப்பினை ஏற்படுத்தியிருக்கின்ற
முறைகேடாக இருக்கின்றவிடத்து, அத்தகைய முறைகேடுகளுக்கு பொறுப்பானவர்களிடமிருந்து
அத்தகைய இழப்பை திரும்பப் பெறுவதற்கு ஆணையிட வேண்டும்;
(9 உள்ளாட்சி அமைப்பொன்றின் அலுவலர் அல்லது பணியாளர் எவரின் கடமையும்
வேண்டுமென்றே செய்த கவனமின்மையால் அல்லது மோசமாக செய்ததன் பொருட்டு முறைகேடு.
நடந்திருக்கின்றவிடத்து தொடர்புடைய விதிகளின்கீழ் உரிய அதிகார அமைப்பால் துறை
நடவடிக்கை எடுப்பதற்காக பரிந்துரை செய்யப்படவேண்டும்.
8. (1) முறைமன்ற நடுவர், விசாரணை எதனின் நோக்கத்திற்காக, 1908-ஆம் ஆண்டு
குற்றவியல் நடைமுறை தொகுப்புச் சட்டத்தின்படி உரிமை வழக்கு ஒன்றினை விசாரணை செய்யும்
உரிமையியல் நீதிமன்றமொன்றின் மற்றும், குறிப்பாக, பின்வரும் பொருட்பாடுகள் தொடர்பாக,
அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருப்பார், அதாவது:-
முறைமன்ற
நடுவரின்.
அலுவலர்கள்.
மற்றும்
பணியாளர்கள்.
முறைமன்ற
நடுவரின்.
செயற்பணிகள்.
மையச் சட்டம்
1980.
அரசுத்துறையின்
பணி,
விசாரணை,
(8) முறையீட்டாளரை அல்லது சாட்சி அளிப்பவர்களை வருகை தருமாறு
அழைப்பதற்கு மற்றும் கட்டாயப்படுத்துவதற்கு மற்றும் அவரை உறுதிமொழியின் பேரில்
விசாரிப்பதற்கு;
(b) தொடர்புடைய மற்றும் தேவைப்படும் ஆவணம் எதனையும் கண்டுபிடிப்பதற்கு
மற்றும் முன்னிலைப் படுத்துமாறு கேட்பதற்கு;
(9 உறுதி ஆவணங்களின் பேரில் சான்றினைப் பெறுவதற்கு;
(0) பொதுப் பதிவுரு எதனையும், அல்லது அதனின் நகலை நீதிமன்றம் அல்லது
அலுவலகம் எதிலிருந்தும் கேட்டுப்பெறுவதற்கு;
(8) சாட்சி அளிப்பவரை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக
பணிப்பாணையை வழங்குதல்; மற்றும்
() வகுத்துரைக்கப்படலாகிறவாறான பொருட்பாடு எதுவும்.
இழுறைமன்ற நடுவர் முறையீடு ஒன்றில் அடங்கியுள்ள குற்றச்சாட்டில் பொருள் எதுவுமில்லை.
என்று கண்டுணர்கிறவிடத்து அவர் ஆணையொன்றினால், செலவினமாகக் குறிப்பிடப்பட்டுள்ள
தொகையொன்றினை எதிர் தரப்பினருக்கு வழங்குமாறு முறையீட்டாளரைப் பணிக்கலாம்.
(6) எழுத்து வடிவிலான முறையீடு ஒன்றில் அடங்கியுள்ள குற்றச்சாட்டில் உள்ளாட்சி.
அமைப்புநிதியத்தின் இழப்பு பற்றியதாக. இருக்கிறவிடத்து, முறைமன்ற நடுவர், விசாரணையின்
போது, சான்றினை சேகரித்து இழப்பினை நிச்சயிக்கலாம் மற்றும் அந்த இழப்பை ஏற்படுத்தியதற்கு
பொறுப்பாகவுள்ள நபரிடமிருந்து அந்தத்தொகையினைப் பெறுவதற்கு அவருடைய ஆணையில்
பணிக்கலாம்.
@). 9-ஆம் உட்பிரிவின்படி அல்லது (9-ஆம் உட்பிரிவின்படி முறைமன்ற நடுவரால்
பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி செலுத்தத்தக்க தொகை, அவரால் குறிப்பிடப்பட்டுள்ள
காலத்திற்குள் செலுத்தப்படாமல் இருக்கிறதென்றால், அந்தத்தொகை, 1864-ஆம் ஆண்டு
தமிழ்நாடு வருவாய் வசூலித்தல் சட்டத்தின்படி நிலவருவாய் பாக்கி இருந்தாற்போன்று
வசூலிக்கப்படுதல் வேண்டும்.
9. அரசு, முறைமன்ற நடுவரின் கோரிக்கைக்கேற்ப, காவலர்கள் உள்ளடங்கலாக அரசின்
அலுவலர்களின் மற்றும் பணியாளர்களின் பணி, முறைமன்ற நடுவர் விசாரணையை
நடத்துவதற்கு உதவியாக இருக்கும் வகையில் கிடைப்பதற்கு இருக்குமாறு செய்யலாம்.
10. () இந்தச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும், உள்ளாட்சி அமைப்பொன்றிற்கு
அல்லது பொதுப் பணியாளர் ஒருவருக்கு எதிரான ஊழல் அல்லது சீர்கேடான நிர்வாகம் குறித்து
அரசு அறிந்த அல்லது அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டு எதனையும்
முறைமன்ற நடுவரின் கவனத்திற்கு சுட்டி அனுப்பலாம் மற்றும் முறைமன்ற நடுவர், இந்தச்
சட்டத்தின்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள முறையீடு ஒன்று இருந்தாற்போன்றே அதனை விசாரிக்க.
வேண்டும்.
@) முறைமன்ற நடுவர், முறையீட்டினைப் பெற்றுக் கொண்டதன்பேரில், முறையீட்டினை
மற்றும் ஆதாரமாக உள்ள ஆவணச் சான்றினை ஆய்வு செய்யலாம் மற்றும் அங்கே மேலி ரன
வழக்காதாரம் இருக்கின்றவிடத்து அவர் விசாரணை செய்யலாம்.
@) முறைபன்ற நடுவர்.-
(8) அரசால் ஆணையிடப்பட்டிருக்கிற முறைப்படியான மற்றும் பொது விசாரணை
எதன் தொடர்பான பொருட்பாடு எதனையும்;
(b) 1952-ஆம் ஆண்டு விசாரணைகளின் ஆணையச் சட்டத்தின்படி
ஆணையிடப்பட்டிருக்கிற விசாரணை ஒன்றின் தொடர்பான பொருட்பாடு எதனையும் அல்லது
நீதிமன்றமொன்றின் முன்புநிலுவையிலுள்ள பொருட்பாடு எதனையும்;
(9) முறையீட்டில் கூறப்பட்டுள்ள நிகழ்வு நடைபெற்ற தேதியிலிருந்து ஐந்து
ஆண்டுகள் முடிவடைந்த பின்பு தாக்கல் செய்யப்பட்டுள்ள முறையீடு எதனையும்
தமிழ்நாடு.
சட்டம் ।/1864.
மையச் சட்டம்
LX/1952.
தமிழ்நாடு
சட்டம் 1111864,
பணிப்புரையை
வழங்குவதற்கு
அதிகாரம்.
இடர்ப்பாடுகளை:
நீக்குவதற்கான.
அதிகாரம்
தொடர்பான பொருட்பாடுகளில் விசாரணை செய்தல் கூடாது.
(4) விசாரணை ஒன்றினைச் செய்ததன் பின்பு, முறைமன்ற நடுவர்,-
(8) முறையீடு அற்பத்தனமானது அல்லது தொந்தரவு தரக்கூடியதான அல்லது
நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டதல்ல; அல்லது
(0) நடவடிக்கைகளைத் தொடருவதற்கு அதில் போதிய அடிப்படை ஆதாரம்
இல்லை; அல்லது
(9 முறையீடு செய்துள்ளவருக்கு பிற தீர்வுகள் கிடைக்கத்தக்கதாக இருக்கும்
போது மற்றும் வழக்கின் சூழ்நிலைகளின் நோக்கில் அத்தகைய தீர்வுகளைப் பெறுவது முறையீடு.
செய்துள்ளவருக்கு அதிகப்படியான நலனை தரக்கூடியதாக இருக்கும்,
என்று அவர் திருப்தியடைந்திருக்கிறாரென்றால், அவருடைய கண்டுபிடிப்புகளைப் பதிவு
செய்த பின்பு காரணத்தைக் குறிப்பிட்டு, முறையீட்டினை தள்ளுபடி செய்யலாம் மற்றும் அதனை:
முறையீடு செய்தவருக்கு தெரியப்படுத்தலாம்.
(9) முறைமன்ற நடுவர், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு மற்றும் அதன்படி
செய்யப்பட்ட விதிகளுக்குட்பட்டு, அதனுடைய நடைமுறையை ஒழுங்குமுறைப் படுத்துவதற்கு
அமரும் நேரம் மற்றும் இடத்தினை முடிவு செய்வதற்கு அதிகாரம் கொண்டிருக்க வேண்டும்.
11. () விசாரணை ஒன்றிற்குப் பிறகு, முறை மன்ற நடுவர், பொதுப் பணியாளர் ஒருவர்
குற்றவியல் குற்றமொன்றில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்கிற மேலிடரன வழக்காதாரம்
இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறாரென்றால், முறை மன்ற நடுவர் முறையீட்டினை மற்றும்
கண்டுபிடிப்புகளை பரிந்துரையுடன் உரிய புலனாய்வு அமைப்பிற்கு சுட்டியனுப்பலாம்.
(2) உரிய புலனாய்வு அமைப்பு, புலனாய்வு முடிந்ததன் । பேரில், தகுதி வாய்ந்த அதிகார
அமைப்பிடமிருந்துஇசைவாணையைப் பெற்ற பின்பு சட்டநடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.
12. () முறைமன்ற நடுவர், குற்றவியல் குற்றங்கள் உள்ளடங்கிய முறையீடுகள் தவிர பிற
முறையீடுகளைப் பின்வரும் முறையில் தீர்த்து வைக்கக் கருதலாம்; அதாவது:-
(@) உள்ளாட்சி அமைப்பிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு பொறுப்புடைய நபரிடமிருந்து அதனைத்
திரும்பப்பெறுவதற்கு ஆணையிடலாம்;
(0) குற்றஞ்சாட்டப்பட்டவரிடமிருந்து இழப்பினை திரும்பப் பெறுவதற்கு ஆணையிடலாம்;
அது கிடைக்கத் தவறும் பட்சத்தில் 1864-ஆம் ஆண்டு தமிழ்நாடு வருவாய் வசூலித்தல்
சட்டத்தின்படி நிலவருவாய் பாக்கி இருந்தாற்போன்று அத்தொகையை வசூலிப்பதற்கு
ஆணையிடலாம்;
(9 உள்ளாட்சி அமைப்பின்: அலுவலர் அல்லது பணியாளர் எவரின் பணியும்
வேண்டுமென்றே செய்த கவனமின்மையானதாக அல்லது மோசமானதாக இருந்ததற்காக ஒழுங்கு
நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அதிகார அமைப்பிற்கு முறையீட்டினை சுட்டியனுப்பலாம்;
(0) வழக்கின் பொருண்மைகள் பற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பிற
தேவையான தீர்வு நடவடிக்கைகளுக்கு ஆணையிடலாம்;
(8 முறைமன்ற நடுவர், உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகம் தொடர்பான. நடைமுறை
அல்லது நடைமுறை வழக்கம் முறையீட்டிற்கான. இடம் அளிக்கிறது என்று
கண்டுபிடிக்கின்றவிடத்து, அவர், அத்தகைய முறையீடு திரும்பத் திரும்ப வருவதை
தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்குத் தொடர்புடைய ஆலோசனைகளை அரசுக்கு அல்லது
உள்ளாட்சி அமைப்புக்கு அளிக்கலாம்.
(2) முறைமன்ற நடுவர், இந்தச் சட்டத்தின்கீழ் அவருடைய செயற்பணிகளை செய்து
முடித்தல் தொடர்பான ஆண்டு அறிக்கை ஒன்றினை அரசுக்கு சமர்ப்பிக்கவேண்டும் மற்றும் அரசு,
விளக்கக் குறிப்பு ஒன்றுடன் அதனை சட்ட மன்றப் பேரவை முன்பு வைக்கவேண்டும்.
13. இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளின்படி,
நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட அல்லது செய்யக்கருதப்பட்ட செயல் எதற்காகவும் நபர்
எவருக்கும் எதிராக உரிமை வழக்கு, விசாரணை அல்லது பிற சட்ட நடைமுறை
இருத்தலாகாது.
14. அரசு, அவ்வப்போது, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு செல்திறம் அளிப்பதற்காக,
பொருத்தமெனத் தோன்றலாகிறவாறான அத்தகைய பணிப்புரைகளை வழங்கலாம்.
சட்ட
நடவடிக்கையைத்
தொடங்குதல்.
முறையீடுகள்.
தீர்வு
செய்யப்படுதல்.
எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப்
பாதுகாப்பு.
15. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு செல்திறம் அளிப்பதில் எழுகிற இடர்ப்பாடுகள்
எதுவும் இருக்கிறதென்றால், அரசு, அத்தகைய இடர்ப்பாட்டினை நீக்குவதற்காக அவர்களுக்குத்
தேவையான அல்லது உகந்ததெனத் தோன்றலாகிறவாறான, தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடப்படும் ஆணையின் வாயிலாக, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக
இல்லாத அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்:
வரம்புரை: ஆனால் இந்தச் சட்டம் தொடங்கிய தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள்.
முடிவடைந்த பிறகு அத்தகைய ஆணை எதுவும் செய்யப்படுதலாகாது.
அதிகளைச் 16. ) அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக விதிகளைச்
செய்வதற்கு செய்யலாம். அதிகாரம்.
(2) குறிப்பாக மற்றும் முந்தைய அதிகாரத்தின். பொதுப்பாங்கிற்குக் குந்தகமின்றி,
அத்தகைய விதிகள் பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்காகவும் அல்லது எதற்காகவும்
ஏற்படுத்தப்படலாம், அதாவது:-
(8) முறைமன்ற நடுவரின் செயலர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின்.
பணி வரைக்கட்டுகள்;
(முறைமன்ற நடுவர் முன்பு முறையீடுகளைத் தாக்கல் செய்யும் படிவம் மற்றும்
முறை
(9) விசாரணையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை, அது,
முடிந்தவரையில் சுருக்கமுறை நடவடிக்கைகளாக இருக்க வேண்டும்;
(0) முறைமன்ற நடுவரின் ஆணையை நிறைவேற்றும் முறை;
(6) அரசுக்கு, வகுத்துரைப்பதற்குத் தேவையெனத் தோன்றலாகும் பிற
பொருட்பாடு எதுவும்.
(6) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாளன்று செல்லாற்றலுக்கு வரும் என்று
தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அது அவ்வாறு வெளியிடப்பட்ட நாளன்று செல்லாற்றலுக்கு வருதல்.
வேண்டும்.
@) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி ஒவ்வொன்றும் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை
ஒவ்வொன்றும் மற்றும் செய்யப்பட்ட ஆணை ஒவ்வொன்றும், அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது
பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில், சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும்;
மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அதனையடுத்த கூட்டத்தொடர்
முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி, அல்லது அறிவிக்கை. அல்லது. ஆணை எதிலும்
மாறுதல் எதனையும் சட்டமன்றப்பேரவையானது செய்யுமாயின் அல்லது அத்தகைய விதியோ
அல்லது அறிவிக்கையோ அல்லது ஆணையோ செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ
கூடாது என சட்டமன்றப்பேரவை முடிவு செய்யுமாயின், அதன்பின்பு அந்த விதியானது, அல்லது
அறிவிக்கையானது அல்லது ணையானது அதன் பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட
வடிவத்திலேபேசெல்திறம் பெறும், அல்லது, நேர்விற்கேற்ப செல்திறம் பெறாது போகும்; எனினும்,
அத்தகைய மாற்றமைவு அல்லது அழித்தறவு எதுவும், அந்த விதியின்படி, அல்லது
அறிவிக்கையின்படி அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல் எதனின்
செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.
காப்புரை, 17. இந்தச் சட்டத்தில் அடங்கியிருப்பது எதுவும், பொதுப் பணியாளர்களுக்கு
தொடர்புடையதாக இருக்கிற தொடர்புடைய சட்டங்களின் வகைமுறைகளைப் பாதிக்காது.
றவு மற்றம். 8.௫) 2014ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் அவசரச்
காப்பு. சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்பட்டது.
@ அவ்வாறு நீக்கம் செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் மேற்சொன்ன அவசரச் தமிழ்நாடு
சட்டத்தின்படி செய்யப்பட்ட செயல் எதுவுமோ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவுமோ அல்லது இறட
கொடுக்கப்பட்ட பணிப்புரை எதுவுமோ இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்டிராப்பதாகவோ
எடுக்கப்பட்டிருப்பதாகவோ கொடுக்கப்பட்டிருப்பதாகவோ கொள்ளப் படுதல் வேண்டும்.
இணைப்புப் பட்டியல்.
(8-ஆம்பிரிவைப்பார்க்க)
உள்ளாட்சி அமைப்புகளுக்காக முறைமன்ற நடுவராகப் பணியரமர்த்தம் செய்யப்பட்டிருக்கிற
நான் .. , இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு உண்மையான
நம்பிக்கைக்குரியவனாகவும் மற்றும் பற்றுள்ளவனாகவும் இருப்பேன் என்றும், இந்தியாவின்
இறையாண்மையை மற்றும் நேர்மையைப் பேணிக்காப்பேன் என்றும், நான் முறையுடன் மற்றும்
உண்மையுடன் மற்றும் எனது சிறந்த திறமையுடன், அறிவுடன், நீதியுடன் பயமின்றி அல்லது
சார்பின்றி, பற்றின்றி அல்லது பகைமை எண்ணம் இன்றி என்னுடைய அலுவலகக் கடமைகளை
ஆற்றுவேன் என்றும் மற்றும் அரசமைப்புச் சட்டம் மற்றும் சட்டங்களை மதித்து நடப்பேன் என்றும்
கடவுளின் பெயராலும் / உளப்பூர்வமாகவும் உறுதி மொழி அளிக்கிறேன்.
Rules, notifications and orders under this Act
Listed from India Code. Each opens there.