Tamil Nadu · 2008 · Act 56
The Tamil Nadu Laws (Special Provisions) Act, 2008
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது, 2008-ஆம் ஆண்டு
நவம்பர் திங்கள் 29-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது;
மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 56/2008.
சென்னைப் பெருநகரத் திட்டப் பரப்பிடத்திற்கு ஓராண்டுக் கால அளவிற்குத்
தனி வகை முறைகளைச் செய்வதற்கும், அதனோடு தொடர்ுடைய அல்லது
அவற்றுக்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்கும் வகை
செய்வதற்குமானதொரு சட்டம்.
தற்போது நடைமுறையில் உள்ள சென்னைப் பெருநகர திட்டப் பரப்பிடத்திற்கான முதல்
பெரும் திட்டம், அதில் அடங்கியுள்ள மேம்பாட்டு கட்டுப்பாடு விதிகள் மற்றும் கட்டட விதிகள்,
ஒழுங்குமுறை விதிகள் மற்றும் துணைமுறை விதிகள் ஆகியவற்றுக்கு இணங்கிய வகையில்
அல்லாமல், அதிகாரமளிக்கப்படாத கட்டமைப்பு வளர்ச்சிகளுக்கு வழி கோலுகிற வகையில்
சென்னைப் பெருநகர திட்டப் பரப்பிடத்தில் உள்ள நிலங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீது
தாக்கத்தை ஏற்படுத்துகிற வகையில், தொழில்மயமாக்கல், மக்கள் ஒர் இடத்திலிருந்து இன்னோர்
இடத்திற்குக் குடிபெயர்தல் மற்றும் பல்வேறு பிற காரணங்களால் மக்கள் தொகையில் அதிவேகமான
வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதாலும்;
மேலும், மேம்பாட்டுக்கான அனைத்துக் கூறுகளையும் ஆய்ந்து பார்க்குமாறும்..
1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்-ஊரமைப்புச் சட்டத்திற்கு (தமிழ்நாடு சட்டம் 35/1972)
தேவையான மாறுதல்களைச் செய்வதற்கு ஆலோசனை வழங்குமாறும் ஓய்வுபெற்ற உச்ச நீதி மன்ற
நீதிபதி ஒருவரின் தலைமையில் குழு ஒன்றை அரசானது அமைத்துருவாக்கியுள்ளதாலும்;
மேலும், மேற்சொன்ன குழுவின் பரிந்துரைகளானவை, 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு
நகர்-ஊரபைப்புச் சட்டத்திற்குப் கமிழ்நாடு சட்டம் 35/1972) பெருமளவிலான திருத்தங்களை:
உள்ளடக்கக் கூடும் என்பதோடு, அவற்றுள் சிலவற்றுக்கு, அதிலும் குறிப்பாக மேற்சொன்ன
சட்டத்தின்படி தற்போதுள்ளவாறான முறையை மாற்றுகிற வகையில் வளாகங்களைக் கட்டுதல்
மற்றும் பயன்படுத்துதல் தொடர்பான வகைமுறைகளுக்கு, முன்தேதியிட்டு செயல்விளைவு கொடுக்க
வேண்டியிருக்கும், என்பதாலும்:
மேலும், சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமமானது சென்னைப் பெருநகர-திட்டப்
பரப்பிடத்திற்கு, 2026-ஆம் ஆண்டினைத் தொலைநோக்கு எல்லை ஆண்டாகக் கொண்டு
நகர்ப்புற வளர்ச்சி எழுகிற புதிய பரிமாணங்களைக் கருத்தில்கொண்டு 1-ஆம் பெரும் திட்டத்தின்
வரைவு ஒன்றினைத் தயாரித்து 81-8-2007 வரையிலான கால அளவினைக் கொடுத்து,
பொதுமக்களிடமிருந்து மறுப்புரைகள் அல்லது ஆலோசனைகளைப் பெறுவதற்காக அது
வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் பெரும் திட்டத்தின் வரைவானது மக்களுடனான கலந்தாய்விற்குப்
பின்னரும் அரசினால் ஆலோசனை வழங்கப்பட்டவாறான மாற்றங்களைச் செய்த பின்னரும்,
2008-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 29-ஆம் நாளன்று அரசுக்கு மறுபடியும் பணிந்தனுப்பப்பட்டது;
அரசானது, 2026-ஆம் ஆண்டுக்கான சென்னை பெருநகர் திட்டப் பரப்பிடத்திற்கான ॥-ஆம்
பெரும் திட்ட வரைவிற்கு ஏற்பளிப்பு வழங்கியுள்ளது; மற்றும் அது 2008-ஆம் ஆண்டு செப்டம்பர்
திங்கள் 2-ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டது.
மேலும், சென்னைப் பெருநகரப்பரப்பிடத்தில் குடிசைப் பகுதிகளை மேம்பாடு செய்வதற்காகவும்
தேவைப்படும்போதெல்லாம் குடிசைப் பகுதியில் உள்ள மக்களை மறு குடியமர்வு செய்வதற்கு
விரிவானதொரு கொள்கையினை உருவாக்க மாநில அரசானது கருதியுள்ளதூலும்;
மேலும், /-ஆம் பெரும் திட்டத்தின் வரையறைகளின்படி பொதுத் தெருக்களில் விற்பனை:
செய்பவர்களின் செயற்பாட்டையும் மற்றும் கூவி விற்பவர்களின் செயற்பாட்டையும்
ஒழுங்குபடுத்துவதற்கான செயல்திட்டம் ஒன்றை உருவாக்கும் நோக்குடன் அவர்களால் செய்யப்படும்
அதிகாரமற்ற கையுடைமை தொடர்பான பிரச்சனைகள் குறித்து விரிவானதொரு ஆய்வினைச்
செய்யக் கருதப்பட்டுள்ளதாலும்;
மேலும், தற்போது நடைமுறையிலுள்ள சென்னைப் பெருநகர திட்டப்பரப்பிடத்திற்கான முதலாம்
பெரும் திட்டத்தின் மற்றும் அதில் அடங்கியுள்ள மேம்பாட்டு கட்டுப்பாட்டு விதிகளின்
வகைமுறைகளை மீறுவதற்கான நடவடிக்கையை, அரசினால் இந்தப் பொருட்பாடு குறித்து இறுதியான
கருத்து எய்தப்படுவதற்கு முன்பாக, எடுப்பதானது சிறிய வணிகர்கள் உள்ளடங்கலான பெருமளவிலான
மக்களுக்குத் தவிர்க்க இயலாத துன்பத்தையும் சரி செய்ய இயலாத இழப்பினையும் ஏற்படுத்தக்
கூடும் என்பதாலும்;
மேலும், 2007-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டங்கள் (குனி வகைமுறைகள்) அவசரச்
சட்டத்திற்குப் (குமிழ்நாடு அவசரச் சட்டம் 1/2007) பதிலாக அமைக்கப்பட்ட 2007-ஆம் ஆண்டு
தமிழ்நாடு சட்டங்கள் (குனி வகைமுறைகள்) சட்டமானது ுமிழ்நாடு சட்டம் 39/2007) சென்னை
குறுந்தலைப்பு
அளாவுகை
தொடக்கம்
மற்றம் கால
அளவு.
பொருள்
வரையறைகள்.
உயர்நீதிமன்றத்தின் முன்பு எதிர்க்கப்பட்டது; மற்றும் அது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஈராயம்
ஒன்றினால் செல்லுபடியாகாதென நீக்கப்பட்டதூலும்;
மேலும், மேற்சொன்ன தமிழ்நாடு அவசரச் சட்டம் 12007, மேற்சொன்ன தமிழ்நாடு சட்டம்
39/2007 ஆகியவற்றைச் செல்லுபடியாகாதென நீக்கம் செய்த, சென்னை உயர் நீதிமன்றத்தின்
மேற்சொன்ன தீர்ப்பிற்கு எதிராக, இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்பு தாக்கல் செய்யப்பட்ட தனி
அனுமதி மனுக்களில் உச்ச நீதிமன்றமானது, மேலும் ஆணைகள் பிறப்பிக்கப்படுவது வரையிலும்,
14-12-2007 அன்று இருந்தபடியான நிலையானது பேணி வரப்படுதல் வேண்டும் எனவும்
மனுதாரர்கள் அதற்கு இடையில் ஒழுங்குழுறைப்படுத்துவதற்கான ஆணை எதனையும் பிறப்பித்தல்
கூடாது எனவும் ஆணையிட்டுள்ளதூலும்;
மேலும், மேற்சொன்ன 39/2007 எனும் எண்ணிட்ட தமிழ்நாடு சட்டத்தின் செல்லும் தன்மை
குறித்த வழக்கானது இந்திய உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் இருந்து வருவதாலும்; மேற்சொன்ன
39/2007-எனும் எண்ணிட்ட தமிழ்நாடு சட்டமானது 2008-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள்
27-ஆம் நாள் முதற்கொண்டு செயல் விளைவுகொள்வது அற்றுப்போகும் என்பதாலும்;
மேலும், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து இயக்கத்திற்கான தேவைப்பாடுகளை:
விட்டுக்கொடுக்காமல் அதே நேரத்தில், நீதிமன்றத் தீர்ப்புக்களின் உயிர்ப்புத் தன்மையையும்
அவற்றின் வாசகங்களையும் கருத்திற்கொண்டும் சரிசமமான நிலையிலும் நேரிய நிலையிலும்
அமைந்த சிறிய அல்லது பெரிய இயல்பினதான மீறுகைகளைப் பொறுத்த அளவில் வகைமுறைகளைச்
செய்வது தேவையானதாக இருப்பதாலும் ;
மேலும், பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றை முழுவதுமாக உருவாக்க வணிக மற்றும் கடைகளைக்.
கொண்ட மையங்களில் முன்னெச்சரிக்கையாகத் தீயணைப்புப் பாதுகாப்பிற்கான நவீன
தேவைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய, திட்டமிடும் அதிகார
அமைப்பிற்குத் தக்கவாறு அதிகாரம் அளிப்பதற்கு வகைமுறைகளைச் செய்யவேண்டியிருப்பதாலும் ;
மேலும், ஒய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் அமைந்த குழுவின்.
அறிக்கையைப் பரிசீலனை செய்வதற்கு அரசுக்கு மேலும் காலம் தேவைப்படும் என்பதாலும் மற்றும்
அதிகாரமளிக்கப்படாத கட்டடங்களுக்கு எதிராகச் செயல்முறை நடவடிக்கை எடுப்பதைத்
தள்ளிவைக்கவேண்டியது உடனடித் தேவையாகியிருப்பதாலும்;
மேலும், 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டங்கள் (குனி வகைமுறைகள்) சட்டத்தின்
நோக்கமும் குறிக்கோளும் தற்போது பயனுள்ள வகையில் இல்லாததாலும், 2009ஆம் ஆண்டு
ஜூலைத் திங்கள் 26ஆம் நாள் வரையிலான கால அளவிற்குள்ளாக மேலே குறிப்பிடப்பட்ட
பல்வேறு நடவடிக்கைகளையும் முடிவு செய்யவேண்டியிருப்பதாலும், அந்தக் கால அளவிற்கு
அவ்வாறான நடவடிக்கைக்கு எதிராக சென்னைப் பெருநகர திட்டப் பரப்பிடத்திலுள்ள மக்களுக்குத்
தற்காலிக நிவாரணம் வழங்குவதற்குச் சட்டம் ஒன்றை இயற்றுவது உசந்ததாயிருப்பதாலும்;
மேலும், சிறிய வணிகர்கள் உள்ளடங்கலான பெருமளவிலான மக்களுக்குத் தற்காலிக
நிவாரணம் வழங்குவதற்கும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய தவிர்க்க இயலாத துன்பத்தையும் சரி
செய்ய இயலாத இழப்பினையும் குறைப்பதற்கும் ஒர் ஆண்டுக் கால அளவு ஒன்றுக்குச் சட்டம்
ஒன்றை இயற்றுவது உகந்ததாக இருப்பதாலும்;
இந்தியக் குடியரசின் ஜம்பத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:
1. () இந்தச் சட்டமானது, 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டங்கள் (குனி வகைமுறைகள்)
சட்டம் என வழங்கப்பெறும்.
@ இது, சென்னைப் பெருநகர திட்டப் பரப்பிடத்தை அளாவி நிற்கும்.
(6) இது, 2008-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 27-ஆம் தேதியன்று நடைமுறைக்கு
வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
@ இது, இதன் தொடக்கத் தேதியிலிருந்து ஒர் ஆண்டு முடிவடைவதன் பேரில்
செயல்விளைவு கொள்வது அற்றுப்போதல் வேண்டும்; அவ்வாறு அற்றுப்போவதற்கு முன்பாக
செய்யப்பட்ட அல்லது செய்யாமல் விடப்பட்ட செயற்பாடுகளைப் பொறுத்த வரையில் அல்லாமல்
அற்றுப்போதல் வேண்டும். மற்றும் அவ்வாறு அற்றுப்போவதன் பேரில், இந்தச் சட்டமானது
தமிழ்நாடு சட்டம் ஒன்றினால் நீக்கம் செய்யப்பட்டிருந்தாற்போன்றே, 1891-ஆம் ஆண்டு தமிழ்நாடு
பொதுக் கூறுகள் சட்டத்தின் 8-ஆம் பிரிவானது பொருந்துதல் வேண்டும்.
2 () இந்தச் சட்டத்தில் தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றிட-
@ “கட்டட விதிகள், ஒழுங்குமுறை விதிகள், துணைமுறை விதிகள்” என்றால்
கட்டடங்கள் தொடர்பாக 1919-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டம், 1920-ஆம் ஆண்டு
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், நேர்விற்கேற்ப 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்
குமிழ்நாடு
சட்டம் 1189.
தமிழ்நாடு சட்டம்
ய.
தமிழ்நாடு சட்டம்
Vf1920.
தமிழ்நாடு சட்டம்
1094.
தமிழ்நாடு சட்டம்
351072.
தமிழ்நாடு சட்டம்
351072.
தமிழ்நாடு சட்டம்
ஙு.
தமிழ்நாடு சட்டம்
V/1020.
தமிழ்நாடு சட்டம்
211094.
தமிழ்நாடு சட்டம்
35072.
தமிழ்நாடு சட்டம்
351072.
தமிழ்நாடு சட்டம்
351072.
தமிழ்நாடு சட்டம்
35/1972.
தமிழ்நாடு சட்டம்
171919.
தமிழ்நாடு சட்டம்
71920.
தமிழ்நாடு சட்டம்
21/1994.
சட்டம் ஆகியவற்றின்கீழ் செய்யப்பட்ட விதிகள், ஒழுங்குமுறை விதிகள், துணைமுறை விதிகள்.
ஆகியன எனப் பொருள்படும்;
(9 “சென்னைப் பெருநகர திட்டப் பரப்பிடம்” என்றால், 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு
நகர்-ஊரபைப்புச் சட்டத்தின் 2-ஆம் பிரிவின் (23-௮) எனும் கூறின்கீழ் குறித்துரைக்கப்பட்ட
சென்னைப் பெருநகர திட்டப் பரப்பிடம் எனப் பொருள்படும்;
(9 “விரிவான மேம்பாட்டுத் திட்டம்” என்றால், சென்னைப் பெருநகர திட்டப்பரப்பிடத்தின்கீழ்
உள்ளடங்குகிற பரப்பிடம் எதனையும் பொறுத்த அளவில் 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு
நகர்-ஊரபைப்புச் சட்டத்தின்கீழ் ஏற்பளிக்கப்பட்ட விரிவான மேம்பாட்டுத் திட்டம் ஒன்று
எனப் பொருள்படும்;
(@ “மேம்பாட்டு கட்டுப்பாட்டு விதிகள்” என்றால், சென்னைப் பெருநகரப் பரப்பிடத்திற்கான
மேம்பாட்டு கட்டுப்பாட்டு விதிகள் எனப் பொருள்படும்;
(8 “அரசு” என்றால் மாநில அரசு எனப் பொருள்படும்;
(௫ “ உள்ளாட்சி அதிகார அமைப்பு” என்றால், தமது அதிகார வரம்புகளின்கீழ் உள்ள
பரப்பிடங்களைப் பொறுத்த அளவில் சட்டப்படியான கட்டுப்பாட்டினைச் செலுத்துவதற்கு உரிமைத்
தகுதியுள்ளவாறு, 1919-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட
சென்னை மாநகராட்சி அல்லது 1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்கீழ்
அமைக்கப்பட்ட (சென்னைப் பெருநகர திட்டப் பரப்பிடத்திற்குள்ளாக அமைந்து நகராட்சிகள்.
அல்லது பேரூராட்சிகள் அல்லது 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்கீழ்
அமைக்கப்பட்ட (சென்னைப் பெருநகர திட்டப் பரப்பிடத்திற்குள்ளாக அமைந்து ஊராட்சி ஒன்றியங்கள்.
அல்லது சிற்றூராட்சிகள் அல்லது 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊபைப்புச் சட்டத்தின்கீழ்
அமைக்கப்பட்ட சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் எனப் பொருள்படும்;
@ “பெரும் திட்டம்” என்றால் 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்-சணமைப்புச்
சட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட சென்னைப் பெருநகர திட்டக் குழுமத்திற்கான பெரும் திட்டம்
எனப் பொருள்படும்;
(9 “பொதுத் தெரு” என்றால், 1974-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்-களரமைப்புச்
சட்டத்தின் 2-ஆம் பிரிவின் (87)-ஆம் கூறில் பொருள் வரையறை செய்யப்பட்டவாறான பொதுத்
தெரு எனப்பொருள்படும்;
ட “தண்டனை நடவடிக்கை” என்றால், நீதிமன்ற ஆணைகளைத் தொடர்ந்து அல்லது
பிறவாறு செய்யப்படும் கட்டட இடிப்பு உள்ளடங்கலாக அதிகாரமற்ற மேம்பாட்டுக்கு எதிராக,
தொடர்புள்ள சட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர திட்டப் பரப்பிடத்திற்குள்ளாக உள்ளாட்சி
அதிகார அமைப்பினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனப் பொருள்படும்;
() தொடர்பான சட்டம் என்றால்
ட) சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நேர்வில், 1971-ஆம் ஆண்டு
தமிழ்நாடு நகர்-கணரமைப்புச் சட்டம் எனவும்;
(i) சென்னை மாநகராட்சியின் நேர்வில், 1919-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச்
சட்டம் எனவும்;
(i) நகராட்சிகளையும், பேரூராட்சிகளையும் பொறுத்த நேர்வில், 1920-ஆம் ஆண்டு
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் எனவும்--
(9 ஊராட்சி ஒன்றியங்களையும், சிற்றூராட்சிகளையும் பொறுத்த நேர்வில்,
1994-ஆம் ஆண்டு ஊராட்சிகள் சட்டம் எனவும்: பொருள்படும்.
(9 அதிகாரமற்ற மேம்பாடு என்றால்.
() திட்ட அனுமதி அல்லது கட்டட அனுமதி எதிலிருந்தும் மீறிய வகையில்; அல்லது
(i) திட்ட அனுமதி அல்லது கட்டட அனுமதி எதையும் பெறாமல்; அல்லது
(9) பெரும் திட்டத்தின்படி அல்லது ஏற்பளிக்கப்பட்ட விரிவான வளர்ச்சித் திட்டத்தின்படி
வகைப்படுத்தப்பட்ட நிலப் பயன்பாட்டிற்கு மீறிய வகையில்; அல்லது
(V) சென்னைப் பெருநகர திட்டப் பரப்பிடத்திற்கான மேம்பாடுக் கட்டுப்பாட்டு
விதிகளை மீறிய வகையிலும் சென்னைப் பெருநகர திட்டப் பரப்பிடத்திற்குள்ளாக இருக்கின்ற
பரப்பிடங்களுக்குப் பொருந்தக்கூடிய கட்டட விதிகள், ஒழுங்குமுறை விதிகள், துணைமுறை
விதிகள் ஆகியவற்றை மீறிய வகையிலும் பயன்படுத்தப்பட்ட நிலம் எதுவுமோ அல்லது
கட்டடம் எதுவுமோ அல்லது மேற்கொள்ளப்படும் கட்டடம் எதனையும் கட்டுவது எனப் பொருள்படும்;
நெறிமுறைகள்,
கொள்கை
வழிகாட்டு
நெறிமுறைகள்
முதலானவற்றை
அரசு முடிவு
செய்தல்.
இந்த சட்டத்தின்
வகை
முறைகள்
ஒரு சில.
நேர்வுகளில்
பொருந்தாது.
எனல்.
மற்றும் அது பொதுத் தெருக்களிலுள்ள கூவி விற்பவர்களாலும் அத்தெருக்களில் விற்பனை.
செய்பவர்களாலும் மற்றும் குடிசைப் பகுதிகளில் உள்ள மக்களாலும் செய்யப்படும் அதிகாரமற்ற
கையுடைமையையும் உள்ளடக்கும்;
(இ இதில் பயன்படுத்தப்பட்டுள்ள, ஆனால் பொருள் வரையறை செய்யப்படாத சொற்களும்,
சொற்றொடர்களும் அவற்றுக்கு முறையே 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் -ஊரமைப்புச்
சட்டத்திலும், 1919-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்திலும் 1920-ஆம் ஆண்டு
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திலும், 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்
சட்டத்திலும் குறித்தளிக்கப்பட்டுள்ள பொருள்களையே கொண்டிருக்கும்.
3. () தொடர்பான சட்டம் எதிலுமோ அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகள்,
ஒழுங்குமுறை விதிகள் அல்லது துணைமுறை விதிகள் எவற்றிலுமோ என்ன அடங்கியிருந்தபோதிலும்,
அரசானது இந்தச் சட்டம் தொடங்கிய தேதியிலிருந்து ஓராண்டுக் கால அளவிற்குள்ளாக,
சென்னைப் பெருநகர திட்டப் பரப்பிடத்தின் மேம்பாடுகள் தொடர்ந்து திட்டமிட்டமுறையில்
நடைபெறும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வகைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு அதிகாரமற்ற
மேம்பாடுகளினால் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக நெறிமுறைகள், கொள்கை வழிகாட்டு
நெறிமுறைகள் இயலக்கூடிய ஆயத்தவியூக ஏற்பாடுகள் ஆகியவற்றை முடிவு செய்வதற்குச்
சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து இயலக்கூடிய அனைத்து
நடவடிக்கைகளையும் எடுத்தல் வேண்டும், அதாவது.--
(@ பெரும் திட்டம், விரிவான மேம்பாட்டுத் திட்டங்கள் அல்லது திட்ட அனுமதி எதற்கும்
இணங்கிய வகையில் அல்லாது பயன்படுத்தப்படும் நிலம்;
B திட்ட அனுமதியை அல்லது கட்டட அனுமதியை மீறிய வகையில் அல்லது அதன்
எல்லைகளுக்கு அப்பால் செய்யப்படும் கட்டுமானம்;
(9 திட்ட அனுமதி அல்லது கட்டட அனுமதி இல்லாமல் செய்யப்படும் மேம்பாடு;
(9) பொதுத் தெருக்களில் கூவி விற்பவர்கள். சாலை வணிகர்கள், குடிசைப் பகுதியில்
உள்ள மக்கள் ஆகியோரால் செய்யப்படும் அதிகாரமற்ற கையுடைமை;
@ ௫-ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள வகைமுறைகளுக்கு உட்பட்டு, மற்றும் நீதிமன்றம்
எதனின் திர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், இந்தச்
சட்டம் தொடங்கிய தேதியன்று இருந்தவாறான நிலை, () ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட
அதிகாரமற்ற மேம்பாட்டு வகைகளைப் பொறுத்த அளவில் பேணி வரப்படுதல் வேண்டும்.
(3 2007-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாளுக்கு முன்னதாக ()-ஆம் உட்பிரிவில்
குறிப்பிடப்பட்ட அதிகாரமற்ற மேம்பாட்டு வகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத்
தொடங்குவதற்கு, தொடர்பான சட்டத்தின்கீழ் அதிகாரமளிக்கப்பட்ட உள்ளாட்சி அதிகார அமைப்பு
அல்லது அதிகார அமைப்பு எதனாலும் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுதல் வேண்டும். மற்றும் மேற்சொன்ன ஓராண்டு
கால அளவின்போது தண்டனை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுதல் கூடாது.
@ இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள பிற வகைமுறை எதுவும் என்னவாக இருந்தபோதிலும்
அரசானது எந்த நேரத்திலும் அந்த ஓராண்டு முடிவடைவதற்கு முன்பாக (]-ஆம் உட்பிரிவில்
குறிப்பிடப்பட்ட அதிகாரமற்ற மேம்பாட்டு வகைப்பாடுகளைப் பொறுத்த அளவில்
தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் அறிவிக்கையின் மூலமாக (9) ஆம் உட்பிரிவிலோ
அல்லது நேர்விற்கேற்ப 68)ஆம் உட்பிரிவிலோ கொடுக்கப்பட்ட சலுகையை மீளப் பெறலாம்.
4. இந்தச் சட்டத்தின் செயற்பாட்டுக் கால அளவின்போது பின்வரும் அதிகாரமற்ற மேம்பாடு
வகைப்பாடுகளைப் பொறுத்த அளவில் 3 ஆம் பிரிவின்கீழ் தீர்வழி எதுவும் வழங்கப்படுதல்
கூடாது.
(9) 2007-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 27-ஆம் நாளன்றோ அல்லது அதற்கு
பின்னரோ தொடங்கப்பட்ட அல்லது தொடரப்பட்ட அதிகாரமற்ற மேம்பாடு எதுவும்;
(இ பெரும் திட்டம் அல்லது விரிவான மேம்பாட்டுத் திட்டம் எதனின் வகைமுறைகளை:
மிறிய வகையில் அல்லது 2007-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள்
27-ஆம் நாளன்றோ அல்லது அதற்கு பின்னரோ சென்னைப் பெருநகர திட்டப் பரப்பிடத்தில்
எவ்விடத்திலும் செயற்பாடு எதனையும் தொடங்குதல்;
© 3-ஆம் பிரிவின் (9-ஆம் உட்பிரிவில் (6) கூறின்கீழ் வரும் அத்தகைய நேர்வுகள்.
நீங்கலாக, பொதுத் தெருக்களில் செய்யப்படும் அதிகாரமற்ற கையுடைமை மற்றும்
தமிழ்நாடு சட்டம்
35/1972.
தமிழ்நாடு சட்டம்
ஙா.
தமிழ்நாடு சட்டம்
71920.
தமிழ்நாடு சட்டம்
211994.
தமிழ்நாடு.
அவசர சட்டம்
42008.
@ பொதுத் திட்டம் எதற்காகவும் தேவைப்படும் நிலத்தைப் பெறுவதற்காக அரசின்.
கொள்கைகளுக்கு இணங்கிய வகையில் குடிசைப் பகுதி மக்களை, கூவி விற்பவர்களை மற்றும்
தெருக்களில் விற்பனை செய்பவர்களை அகற்றுதல்.
5. இந்த சட்டத்தின் வகைமுறைகள், அப்போதைக்கு நடைமுறையில் உள்ள இம்மாநிலச்
சட்டமன்றத்தால் செய்யப்பட்ட பிற சட்டம் எதிலும் அதற்கு முரணாக என்ன அடங்கியிருந்தபோதிலும்
செயல்விளைவு கொள்ளுதல் வேண்டும்.
6. அரசானது, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காக,
தொடர்பான சட்டம் எதனின் கீழும் அமைந்த உள்ளாட்சி அதிகார அமைப்பு எதற்குமோ அல்லது
பிற அதிகார அமைப்பு எதற்குமோ தாம் தக்கதெனக் கருதக்கூடிய அத்தகைய பணிப்புரைகளை:
அவ்வப்போது பிறப்பிக்கலாம், மற்றும், அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி நடப்பது அத்தகைய
உள்ளாட்சி அதிகார அமைப்பு அல்லது பிற அதிகார அமைப்பின் கடமையாக இருத்தல்
வேண்டும்.
7. () 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டங்கள் (தனி வகைமுறைகள்) அவசரச்
சட்டமானது இதன் மூலம் நீக்கம் செய்யப்படுகிறது.
@ அவ்வாறு நீக்கம் செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், மேற்சொன்ன அவசரச்
சட்டத்தின்படி செய்யப்பட்ட செயல் எதுவுமோ எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவுமோ அல்லது
கொடுக்கப்பட்ட பணிப்புரை எதுவுமோ, இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்டுள்ளதாகவோ
எடுக்கப்பட்டுள்ளதாகவோ அல்லது கொடுக்கப்பட்டுள்ளதாகவோ கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
௪. தீனதயாளன்,
அரசுச் செயலாளர்,
சட்டத் துறை.
(குமிழாக்கம்)
௪. சந்திரசேகரன்,
இயக்குநர்,
தமிழ்ப்பிரிவு, சட்டத் துறை.
பணிப்புரைகளை
வதற்கான.
அதிகாரம்.
நீக்கமும்
காப்பும்.