Tamil Nadu · 1975 · Act 48

The Tamil Nadu Indebted Persons (Temporary Relief) Act, 1975

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1975 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடண்பெற்ற நபர்கள்‌ (தற்காலிக நிவாரணச்‌) சட்டம்‌. சட்ட எண்‌. 48/1975. பொருளடக்கம்‌. 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌. 2. பொருள்‌ வரையறை. 3. குறித்தசில கடன்களும்‌ பொறுப்புகளும்‌ பாதிக்கப்படுதல்‌ கூடாது. 4. உரிமையியல்‌ வழக்குகள்‌ தொடர்வதற்கும்‌ விண்ணப்பங்கள்‌ செய்வதற்கும்‌ தடை. 5. நடவடிக்கைகளுக்கு இடைக்காலத்‌ தடை. 6. காலவரம்புக்கான காலத்தை விலக்குதல்‌. 7. கடன்‌ பெற்ற நபரால்‌ அசையா சொத்து மாற்றப்படுவதன்‌ விளைவு. 8. குறித்தசில கடன்கள்‌ தொடர்பாக வட்டி சேராதிருத்தல்‌. 9. பிற சட்டங்கள்‌, ஒப்பந்தங்கள்‌ போன்றவற்றிற்கு இந்தச்‌ சட்டம்‌ மேலோங்கி இருத்தல்‌. 10. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. 11. ௦06 12. 000 13. நீக்கறவு. 1975 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடண்பெற்ற நபர்கள்‌ (தற்காலிக நிவாரணச்‌) சட்டம்‌. சட்ட எண்‌. 48/1975. தமிழ்நாடு மாநிலத்தில்‌ குறித்தசில கடன்பெற்ற நபர்களுக்கு, தற்காலிக நிவாரணம்‌ வழங்குவதற்கு வகை செய்வற்கானதொரு சட்டம்‌. இந்தியக்‌ குடியரசின்‌ இருபத்தாறாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையினால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 1975 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடன்பெற்ற நபர்கள்‌ (தற்காலிக நிவாரணச்‌) சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. (2) இது, தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதையும்‌ அளாவி நிற்கும்‌. (3) இது, 1975 ஆம்‌ ஆண்டு ஜூலை மாதம்‌ 22 ஆம்‌ நாளன்று செல்லாற்றலுக்கு வந்துவிட்டதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. மேலும்‌, 1976 ஆம்‌ ஆண்டு ஜனவரி மாதம்‌ 15 ஆம்‌ நாள்‌ வரை செல்லாற்றலில்‌ இருக்கும்‌. 2. பொருள்‌ வரையறை.- இந்தச்‌ சட்டத்தில்‌, தறுவாய்‌ வேறுபொருள்‌ குறித்தாலன்றி,- (1) "கடன்‌" என்பது, அது பிணையமுடனோ அல்லது பிணையமின்றியோ இருந்தாலும்‌, உரிமையியல்‌ நீதிமன்றத்தின்‌ அல்லது வருவாய்‌ நீதிமன்றத்தின்‌ தீர்ப்பாணையின்படியோ அல்லது ஆணையின்படியோ அல்லது பிறவாறாகவோ செலுத்த வேண்டியதாக இருந்தாலும்‌, கடன்பட்ட நபரிடமிருந்து பெற வேண்டிய ரொக்கம்‌ அல்லது அதே வகையிலான எதுவும்‌ என்று பொருள்படும்‌; ஆனால்‌,- () (6) ஆம்‌ கூறில்‌ பொருள்‌வரையறுக்கப்பட்டுள்ள வாடகை; (01975 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடன்பெற்ற விவசாயிகள்‌ (தற்காலிக நிவாரணச்‌) சட்டம்‌, (தமிழ்நாடு சட்டம்‌ 1௦1975) பொருந்தக்கூடிய கடன்‌ எதுவும்‌, இதில்‌ அடங்காது; (2) "கடன்‌ பெற்ற நபர்‌" என்பது, எந்தவொரு கடனையும்‌ செலுத்த வேண்டிய நபர்‌ எவரும்‌ என்று பொருள்படும்‌; வரம்புரையாக, ஒரு நபர்‌ ,— (i) அவர்‌, 1974 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ 31 ஆம்‌ தேதி மற்றும்‌ 1975 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ 31 ஆம்‌ தேதி ஆகிய தேதிகளில்‌ முடிவடைந்த இரண்டு நிதியாண்டுகளிலும்‌, 1961 ஆம்‌ ஆண்டு வருமான வரிச்‌ சட்டம்‌, (மையச்‌ சட்ட எண்‌. 431961) அல்லது ஏதேனும்‌ ஒரு வெளிநாட்டில்‌ நடைமுறையில்‌ உள்ள வருமான வரிச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ வருமான வரி மதிப்பீடு செய்யப்பட்டிருந்தால்‌; அல்லது (0 அவர்‌, 1974 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ 31 ஆம்‌ தேதி மற்றும்‌ 1975 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ 31 ஆம்‌ தேதி ஆகிய தேதிகளில்‌ முடிவடைந்த இரண்டு நிதியாண்டுகளிலும்‌, 1959 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரிச்‌ சட்டம்‌, (தமிழ்நாடு சட்ட எண்‌. 11959) அல்லது 1956 ஆம்‌ ஆண்டு மைய விற்பனை வரிச்‌ சட்டம்‌, (மையச்‌ சட்ட எண்‌. 741956) ஆகியவற்றின்‌ கீழ்‌ விற்பனை வரி மதிப்பிடு செய்யப்பட்டிருந்தால்‌; அல்லது (i) 1978 ஆம்‌ ஆண்டு ஏப்ரல்‌ 1 ஆம்‌ தேதிக்கு உடன்‌ முந்தைய நான்கு அரையாண்டுகளிலும்‌, 1920 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ சட்டம்‌, (தமிழ்நாடு சட்ட எண்‌ஃ/71920), 1919 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சிச்‌ சட்டம்‌, (தமிழ்நாடு சட்ட எண்‌ஃ71919), 1971 ஆம்‌ ஆண்டு மதுரை மாநகராட்சிச்‌ சட்டம்‌, (தமிழ்நாடு சட்ட எண்‌. 15 71971), 1958 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்‌ சட்டம்‌, (தமிழ்நாடு சட்ட எண்‌. XXXV/ 1958), 1924 ஆம்‌ ஆண்டு பாளையச்‌ சட்டம்‌, (மையச்‌ சட்ட எண்‌ .।,/1924) அல்லது இந்த மாநிலத்தில்‌ அல்லது இந்தியாவில்‌ உள்ள வேறு எந்த மாநிலம்‌ அல்லது ஒன்றியத்து ஆட்சி நிலவரையில்‌ உள்ள நகராட்சி அல்லது உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும்‌ எந்தவொரு சட்டத்தின்‌ கீழும்‌, விவசாய நிலங்கள்‌ அல்லாத கட்டடங்கள்‌ அல்லது நிலங்கள்‌ தொடர்பாக சொத்து வரி அல்லது வீட்டு வரி விதிக்கப்பட்டிருப்பின்‌ ; மேலும்‌, வாடகைக்கு விடப்பட்டிருந்தாலும்‌ அல்லது உரிமையாளரின்‌ வசம்‌ இருந்தாலும்‌, அத்தகைய கட்டடங்கள்‌ மற்றும்‌ நிலங்களின்‌ மொத்த ஆண்டு வாடகை மதிப்பு இரண்டாயிரத்து நானூறு ரூபாய்க்குக்‌ குறையாமல்‌ இருப்பின்‌, அவர்‌ கடன்பட்ட நபராகக்‌ கருதப்படமாட்டார்‌, விளக்கம்‌.- (i) ஆம்‌ வரம்புரையின்‌ நோக்கங்களுக்காக , எந்தவொரு கட்டடம்‌ அல்லது நிலத்தின்‌ ஆண்டு வாடகை மதிப்பானது,- 1) மதிப்பிடானது ஆண்டு வாடகை மதிப்பின்‌ அடிப்படையில்‌ செய்யப்படும்போது, அத்தகைய மதிப்பாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌; (2) மதிப்பிடானது மூலதன மதிப்பின்‌ அடிப்படையில்‌ செய்யப்படும்போது, மூலதன மதிப்பில்‌ ஐந்து விழுக்காடாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (3) பிற நேர்வு எதிலும்‌ , வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ நிர்ணயிக்கப்பட்ட மதிப்பாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌: மேலும்‌ வரம்புரையாக, 1938 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு விவசாயக்‌ கடன்‌ நிவாரணச்‌ சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌. ॥//1938) பொருள்‌ வரையறை செய்யப்பட்டுள்ளவாறு, ஒரு நபர்‌ விவசாயியாக இருந்து, அந்தச்‌ சட்டத்தின்‌ பயன்களைப்‌ பெறத்‌ தகுதியுடையவராக இருப்பின்‌, அவர்‌ கடன்பட்ட நபராகக்‌ கருதப்படமாட்டார்‌; (3) "வட்டி" என்பது, கடன்‌ வாங்கப்பட்ட அசல்‌ தொகை அல்லது பணக்‌ கடப்பாட்டை விட அதிகமாக செலுத்தப்பட்ட அல்லது செலுத்தத்தக்க ஏதேனும்‌ தொகை அல்லது பிற பொருள்‌, அல்லது அத்தகைய தொகை அல்லது பொருள்‌ என்று எந்தப்‌ பெயரில்‌ அழைக்கப்பட்டாலும்‌ , அவ்வாறு கடன்‌ வாங்கப்பட்டதை விட கூடுதலாக ஏதேனும்‌ பொருளாகக்‌ கடன்‌ வாங்கப்பட்டிருந்தால்‌, மற்றும்‌ அது முழுமையாக பணமாகவோ அல்லது முழுமையாக அல்லது பகுதியளவு பணமாகவும்‌, பகுதியளவு பொருளாகவும்‌ செலுத்தப்பட்டதா அல்லது செலுத்தப்படுகிறதா என்பதையும்‌, அது ஆவணம்‌ அல்லது ஒப்பந்தம்‌ எவையேனுமிருப்பின்‌ அதில்‌ வெளிப்படையாகக்‌ குறிப்பிடப்பட்டிருப்பினும்‌ அல்லது இல்லாதிருப்பினும்‌, எந்தவொரு தொகையும்‌ அல்லது பிற பொருளையும்‌ குறிக்கிறது. (4) "செலுத்துதல்‌" என்பது, அதன்‌ இலக்கண மாறுபாடுகளுடன்‌, ஒப்படைவையும்‌ உள்ளடக்கும்‌; (5) "நபர்‌ என்பது, ஒரு தனிநபர்‌ என்று பொருள்படும்‌; மேலும்‌ அது ஒரு பிரிக்கப்படாத இந்துக்‌ குடும்பம்‌, ஒரு மருமக்கத்தாயம்‌ அல்லது அலியசந்தான தர்வாடு அல்லது தவாழி ஆகியவற்றை உள்ளடக்கும்‌, ஆனால்‌ அது ஒரு கூட்டுருமக்‌ குழுமம்‌, ஒரு அறப்பணி நிறுவனம்‌ அல்லது சமய நிறுவனம்‌ அல்லது ஒரு பதிவு செய்யப்படாத நிறுமம்‌ அல்லது கழகம்‌ அல்லது 1932 ஆம்‌ ஆண்டு இந்தியக்‌ கூட்டாண்மைச்‌ சட்டத்தில்‌ (சட்ட எண்‌. 9/1932) பொருள்‌ வரையறை செய்யப்பட்டுள்ள எந்தவொரு நிறுவகத்தையும்‌ உள்ளடக்காது; (6) "வாடகை" என்பது, எந்தவொரு வாடகைதாரரும்‌ அவர்‌ வசிக்கும்‌ கட்டடம்‌ அல்லது அதன்‌ பகுதிக்காக, அத்தகைய கட்டடம்‌ அல்லது அதன்‌ பகுதியின்‌ உரிமையாளருக்கு, அத்தகைய வாடகைதாரரால்‌ செலுத்தப்பட வேண்டிய வாடகை என்று பொருள்படும்‌: விளக்கம்‌.- இந்தக்‌ கூறின்‌ நோக்கங்களுக்காக, "கட்டடம்‌" என்ற சொல்லிற்கு, 1960 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கட்டடங்கள்‌ (குத்தகை மற்றும்‌ வாடகைக்‌ கட்டுப்பாடு) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌. 181960) 2 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ கூறில்‌ உள்ள அதே பொருளையே கொண்டிருக்கும்‌. (7) "உரிமையியல்‌ வழக்கு" அல்லது "விண்ணப்பம்‌" என்பது, ஒரு உரிமையியல்‌ வழக்கில்‌ அல்லது விண்ணப்பத்தில்‌ பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணை அல்லது ஆணையிலிருந்து மேல்முறையீட்டை அல்லது சீராய்வு அல்லது மறுஆய்வுக்கான விண்ணப்பத்திலிருந்து மேல்முறையீட்டை உள்ளடக்காது. 3. குறித்தசில கடன்களும்‌ பொறுப்புகளும்‌ பாதிக்கப்படுதல்‌ கூடாது.- இந்தச்‌ சட்டத்தில்‌ உள்ள எதுவும்‌, பின்வரும்‌ தலைப்புகளின்‌ கீழ்‌ வரும்‌ எந்தவொரு கடன்பட்ட நபரின்‌ கடன்கள்‌ மற்றும்‌ பொறுப்புகளைப்‌ பாதிக்காது:- (ஐ மாநில அரசிற்கு செலுத்த வேண்டிய வருவாய்‌, வரி அல்லது மேல்வரி எதுவும்‌ அல்லது கடன்‌ அல்லது பிறவாறாக அவர்களுக்கு செலுத்த வேண்டிய பிற தொகை எதுவும்‌; (b) மைய அரசிற்கு செலுத்த வேண்டிய வருவாய்‌, வரி அல்லது மேல்வரி எதுவும்‌ அல்லது கடன்‌ அல்லது பிறவாறாக அவர்களுக்கு செலுத்த வேண்டிய பிற தொகை எதுவும்‌; (6) உள்ளாட்சி அதிகாரஅமைப்பிற்கு செலுத்த வேண்டிய வருவாய்‌, வரி அல்லது மேல்வரி எதுவும்‌ அல்லது கடன்‌ அல்லது பிறவாறாக அவர்களுக்கு செலுத்த வேண்டிய பிற தொகை எதுவும்‌; (0) 1961 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ சட்டத்தின்‌. (தமிழ்நாடு சட்ட எண்‌. 53/1961) கீழ்‌ பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்டதாகக்‌ கருதப்படும்‌ நில அடைமான வங்கி உட்பட, எந்தவொரு கூட்டுறவுச்‌ சங்கத்திற்கும்‌ செலுத்த வேண்டிய எந்தவொரு தொகை தொடர்பான பொறுப்பு எதுவும்‌: வரம்புரையாக, இந்தக்‌ கூறில்‌ குறிப்பிடப்பட்டுள்ள பொறுப்பானது, அத்தகைய ஏதேனும்‌ ஒரு கூட்டுறவுச்‌ சங்கத்திற்கு உரிமை மாற்றம்‌ செய்யப்பட்டதன்‌ காரணமாக எழும்போது, அந்த உரிமை மாற்றம்‌ 1975 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ மாதம்‌ 15 ஆம்‌ தேதிக்கு முன்னர்‌ நிகழ்ந்திருக்க வேண்டும்‌ அல்லது அது போன்ற மற்றொரு கூட்டுறவுச்‌ சங்கத்தால்‌ வழங்கப்பட்ட கடனை அத்தகைய ஒரு கூட்டுறவுச்‌ சங்கத்திற்கு உரிமை மாற்றம்‌ செய்வதாக இருக்க வேண்டும்‌. (6) நம்பிக்கை மோசடியால்‌ எழும்‌ பொறுப்பு எதுவும்‌; () நீதிமன்றத்‌ தீர்ப்பாணையின்‌ கீழ்‌ அல்லது பிறவாறான, பராமரிப்பு தொடர்பான பொறுப்பு எதுவும்‌; (g) சம்பளமாக அல்லது பிறவாறாக வழங்கப்பட்ட சேவைக்காக, செலுத்த வேண்டிய கூலிகள்‌ அல்லது ஊதியம்‌ தொடர்பான பொறுப்பு எதுவும்‌ ; 0 (௩1956 ஆம்‌ ஆண்டு நிறுமங்கள்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்ட எண்‌. 1/ 1956) வரையறுக்கப்பட்டுள்ள எந்தவொரு பொது நிறுமம்‌; (8) 1949 ஆம்‌ ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச்‌ சட்டம்‌ (மையச்‌ சட்ட எண்‌. X/1949) எந்தவொரு வங்கி நிறுமம்‌; (0) 1955 ஆம்‌ ஆண்டு பாரத ஸ்டேட்‌ வங்கி சட்டத்தின்‌ (மையச்‌ சட்ட எண்‌. XXI/1955) கீழ்‌ நிறுவப்பட்ட பாரத ஸ்டேட்‌ வங்கி; (D) 1959 ஆம்‌ ஆண்டு பாரத ஸ்டேட்‌ வங்கி (துணை வங்கிகள்‌) சட்டத்தின்‌ (மையச்‌ சட்ட எண்‌. 38/1959) 2 ஆம்‌ பிரிவின்‌ (k) கூறில்‌ வரையறுக்கப்பட்டுள்ள எந்தவொரு துணை வங்கி; (E) 1970 ஆம்‌ ஆண்டு வங்கி நிறுமங்கள்‌ (கையகப்படுத்துதல்‌ மற்றும்‌ நிறுவனங்களை மாற்றுதல்‌) சட்டத்தின்‌ (மையச்‌ சட்ட எண்‌. 5/1970) 2 ஆம்‌ பிரிவின்‌ (0) கூறில்‌ வரையறுக்கப்பட்டுள்ள எந்தவொரு தொடர்புடைய புதிய வங்கி; (F) மைய அரசிற்கு அல்லது மாநில அரசு எதற்கும்‌, சொந்தமான அல்லது அதனால்‌ கட்டுப்படுத்தப்படும்‌ எந்தவொரு நிறுமமும்‌ அல்லது கூட்டுருமம்‌; (6) போருக்குப்‌ பிந்தைய சேவைகள்‌ புனரமைப்பு நிதி மற்றும்‌ முன்னாள்‌ படைவீரர்களின்‌ புனரமைப்பு மற்றும்‌ மறுவாழ்வுக்கான சிறப்பு நிதியின்‌, ஒருங்கிணைந்த தமிழ்நாடு பங்குகளை நிர்வகிப்பதற்கான குழு; (H) தமிழ்நாடு அரசிகழில்‌, மாநில அரசால்‌ அறிவிக்கப்பட்ட வேறு எந்த நிதி நிறுவனம்‌, ஆகியவற்றிற்கு செலுத்தப்பட வேண்டிய எந்தவொரு கதொகை தொடர்பான பொறுப்பு எதுவும்‌; 4. உரிமையியல்‌ வழக்குகள்‌ தொடர்வதற்கும்‌ விண்ணப்பங்கள்‌: செய்வதற்கும்‌ தடை.- இந்தச்‌ சட்டம்‌ தொடங்கிய தேதியிலும்‌, 1976 ஆம்‌ ஆண்டு ஜனவரி 16 ஆம்‌ தேதிக்கு முன்பும்‌, எந்தவொரு உரிமையியல்‌ நீதிமன்றத்திலும்‌ அல்லது வருவாய்‌ நீதிமன்றத்திலும்‌ கடனை வசூலிப்பதற்கான எந்தவொரு உரிமையியல்‌ வழக்கும்‌ கடன்பட்ட நபருக்கு எதிராக தொடரப்படுதலாகாது மற்றும்‌ கடனை வசூலிப்பதற்கான வழக்கில்‌ பிறப்பிக்கப்பட்ட பணத்தை செலுத்துவதற்கான தீர்ப்பாணைையை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு விண்ணப்பமும்‌ கடன்பட்ட நபருக்கு எதிராக செய்யப்படுதலாகாது. விளக்கம்‌ ட "உரிமையியல்‌ வழக்கு" என்பது, ஒரு விவசாயியால்‌ தொடரப்பட்ட உரிமையியல்‌ வழக்கில்‌ செய்யப்படும்‌ ஒரு சரியீட்டுக்‌ கோரிக்கையை உள்ளடக்காது. விளக்கம்‌ ॥- ஒரு உரிமையியல்‌ வழக்கில்‌ பிற நிவாரணங்கள்‌: கோரப்பட்டிருந்தாலும்‌ அத்தகைய உரிமையியல்‌ வழக்கு, ஒரு கடன்‌ மீட்புக்கான வழக்காகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌, மேலும்‌, ஒரு தீர்ப்பணையானது, அத்தகைய தீர்ப்பணையால்‌ பிற நிவாரணங்கள்‌ வழங்கப்பட்டிருந்தாலும்‌, அத்தகைய வழக்கில்‌ பணத்தைச்‌ செலுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பணையாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரையாக, நிலத்தை உடைமையாக்குவதற்கான ஒரு உரிமையியல்‌ வழக்கானது, அத்தகைய உரிமையியல்‌ வழக்கில்‌ இடைக்கால வருமானமும்‌ கோரப்படுவதால்‌ மட்டுமே கடனை மீட்டெடுப்பதற்கான ஒரு உரிமையியல்‌ வழக்காகக்‌ கருதப்படாது. 5. நடவடிக்கைகளுக்கு இடைக்காலத்‌ தடை.-- (1) ஒரு விவசாயிக்கு எதிராக நிவாரணம்‌ கோரப்படும்‌ 4 ஆம்‌ பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள இயல்புடைய உரிமையியல்‌ வழக்கு மற்றும்‌ விண்ணப்பங்களில்‌ உள்ள அனைத்து மேல்‌ நடவடிக்கைகளும்‌, வாதுரையைத்‌ திருத்துவதற்கான அல்லது தரப்பினர்களைச்‌ சேர்ப்பது, மாற்றுவது அல்லது நீக்குவதற்கான நடவடிக்கைகளாக இல்லாமல்‌, ஆனால்‌ மேல்முறையீடுகள்‌, திருத்த மனுக்கள்‌ அல்லது மறு ஆய்வுக்கான விண்ணப்பங்களில்‌ செய்யப்பட்ட ஆணைகள்‌ அல்லது தீர்ப்பாணைகளின்‌ விளைவாக ஏற்படும்‌ நடவடிக்கைகளை உள்ளடக்கிய மற்றபடி, இந்தச்‌ சட்டம்‌ 1976 ஆம்‌ ஆண்டு ஜனவரி 16 ஆம்‌ தேதி வரை அடுத்த உட்பிரிவிற்கு உட்பட்டு தடை செய்யப்படும்‌: வரம்புரையாக, பற்றுகை செய்யப்பட்ட சொத்துக்களைப்‌ பொறுத்தவரை, நீதிமன்றம்‌ சொத்தின்‌ காவல்‌ அல்லது பாதுகாப்பிற்கு அல்லது அது விரைவான அல்லது இயற்கையான சிதைவிற்கு உட்பட்டால்‌ அத்தகைய சொத்தை விற்பனை செய்வதற்கு அல்லது அதன்‌ காவல்‌ அல்லது பாதுகாப்பிற்கான செலவுகள்‌ அதிகமாகக்‌ கருதப்பட்டால்‌ அதைப்‌ பொறுத்தவரை, அவசியமெனக்‌ கருதும்‌ ஆணைகளைப்‌ பிறப்பிக்கலாம்‌: (2) நேர்விற்கேற்ப, பிரதிவாதி அல்லது எதிர்மனுதாரர்‌ அல்லது அனைத்து பிரதிவாதிகள்‌ அல்லது அனைத்து எதிர்மனுதாரர்கள்‌ செய்யும்‌ விண்ணப்பத்தின்‌ பேரில்‌, ஒரு உரிமையியல்‌ வழக்கு அல்லது விண்ணப்பத்தில்‌ (1) ஆம்‌ பிரிவால்‌ விதிக்கப்பட்ட இடைக்காலத்‌ தடை கலைக்கப்படும்‌, மேலும்‌ உரிமையியல்‌ வழக்கு அல்லது விண்ணப்பத்தில்‌ மேலும்‌ நடவடிக்கைகள்‌ நிறுத்தப்பட்டபோது, அது அடைந்துள்ள நிலையிலிருந்து, உரிமையியல்‌ வழக்கு அல்லது விண்ணப்பமானது தொடரப்படுதல்‌ வேண்டும்‌. 6. காலவரம்புக்கான காலத்தை விலக்குதல்‌.- ஒரு கடனை மீட்டெடுப்பதற்கான உரிமையியல்‌ வழக்கு அல்லது அத்தகைய உரிமையியல்‌ வழக்கில்‌ பிறப்பிக்கப்பட்ட ஒரு தீர்ப்பாணையை நிறைவேற்றுவதற்கான விண்ணப்பத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட காலஅளவின்‌ வரம்பு அல்லது காலக்கெடுவைக்‌ கணக்கிடும்‌ போது, உரிமையியல்‌ வழக்கைத்‌ தொடர்வதில்‌ அல்லது விண்ணப்பம்‌ செய்வதில்‌ 4 ஆம்‌ பிரிவால்‌ தடைசெய்யப்பட்ட காலம்‌ அல்லது வாதி அல்லது அவரது முன்னோடி உரிமையாளரால்‌ 4 ஆம்‌ பிரிவானது அத்தகைய உரிமையியல்‌ வழக்கிற்கு அல்லது அத்தகைய விண்ணப்பத்திற்குப்‌ பொருந்தும்‌ என்று நல்லெண்ணத்தில்‌ நம்பி, அத்தகைய வழக்கைத்‌ தொடங்குவதிலிருந்தோ அல்லது அத்தகைய விண்ணப்பம்‌ செய்வதிலிருந்தோ விலக்கிய காலமானது , விலக்கப்படுதல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- "நல்லெண்ணம்‌" என்பது, 1897 ஆம்‌ ஆண்டு பொது வகையங்கள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்ட எண்‌. 101897) 3 ஆம்‌ பிரிவின்‌ (22) ஆம்‌ கூறில்‌ அதற்கு ஒதுக்கப்பட்ட பொருளைக்‌ கொண்டிருக்கும்‌. 7. கடன்பெற்ற நபரால்‌ அசையா சொத்து மாற்றப்படுவதன்‌ விளைவு.- இந்தச்‌ சட்டம்‌ தொடங்கிய தேதிக்கு பின்பும்‌, 1976 ஆம்‌ ஆண்டு ஜனவரி 16 ஆம்‌ தேதிக்கு முன்பும்‌, 4 ஆம்‌ பிரிவு அல்லது 5 ஆம்‌ பிரிவின்‌ நற்பலனைப்‌ பெற உரிமையுடைய கடன்பட்ட நபரால்‌ செய்யப்படும்‌ அசையா சொத்தின்‌ ஒவ்வொரு உரிமை மாற்றமும்‌, அத்தகைய உரிமை மாற்றம்‌ தொடர்பான எந்தவொரு உரிமையியல்‌ வழக்கு அல்லது பிற நடவடிக்கையிலும்‌, இதற்கு மாறானது மெய்ப்பிக்கப்படும்‌ வரை, உரிமை மாற்றம்‌ செய்பவரின்‌ கடன்‌ வழங்குநர்களைத்‌ தோற்கடிக்கும்‌ அல்லது தாமதப்படுத்தும்‌ நோக்கத்துடன்‌ செய்யப்பட்டதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 8. குறித்த சில கடன்கள்‌ தொடர்பாக வட்டி சேராதிருத்தல்‌-- இந்தச்‌ சட்டம்‌ செயல்பாட்டில்‌ உள்ள காலத்தின்‌ போது, 1975 ஆம்‌ ஆண்டு ஜூலை 22 ஆம்‌ தேதி அன்று, ஒரு கடன்பட்ட நபரால்‌ செலுத்தப்பட வேண்டிய கடனுக்கு வட்டி சேருதல்‌ கூடாது. ஆனால்‌, மேற்கூறிய தேதிக்குப்‌ பிறகு ஒரு கடன்பட்ட நபரால்‌ பெறப்பட்ட எந்தவொரு கடனுக்கும்‌ வட்டி சேருதல்‌ வேண்டும்‌. 9. பிற சட்டங்கள்‌, ஒப்பந்தங்கள்‌ போன்றவற்றிற்கு இந்தச்‌ சட்டம்‌ மேலோங்கி இருத்தல்‌.- 1908 ஆம்‌ ஆண்டு உரிமையியல்‌ நடைமுறைச்‌ சட்டத்‌ தொகுப்பு (மையச்‌ சட்ட எண்‌.)/71908), அல்லது தற்போது நடைமுறையில்‌ உள்ள பிற எந்தச்‌ சட்டத்திலும்‌, அல்லது ஏதேனும்‌ வழக்கம்‌, வழக்காறு அல்லது ஒப்பந்தம்‌, அல்லது நீதிமன்றம்‌ அல்லது பிற அதிகாரஅமைப்பின்‌ தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலும்‌ முரணாக அதில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌. வகைமுறைகள்‌ செயல்‌ விளைவைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. 10. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, மாநில அரசு விதிகளை உருவாக்கலாம்‌. (2) இந்தப்‌ பிரிவின்‌ கீழ்‌ செய்யப்பட்ட அனைத்து விதிகளும்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படும்‌; மேலும்‌ அவை ஒரு குறிப்பிட்ட நாளில்‌ நடைமுறைக்கு வரும்‌ என்று வெளிப்படையாக சொல்லப்படாத போது, அவை அவ்வாறு அரசிதழில்‌ வெளியிடப்பட்ட நாளில்‌ நடைமுறைக்கு வரும்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ செய்யப்பட்ட விதி ஒவ்வொன்றும்‌ அது அவ்வாறு செய்யப்பட்ட பிண்ணர்‌, கூடிய விரைவில்‌ ௬ அவைகளிலும்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர்‌ அல்லது அதனை அடுத்த கூட்டத்தொடர்‌ முடிவடைவதற்கு முன்னர்‌ அத்தகைய விதி எதிலும்‌ மாறுதல்‌ எதனையும்‌ இரு அவைகள்‌ பேரவை ஒப்புக்கொண்டு செய்யுமாயின்‌ அல்லது அத்தகைய விதி எதுவும்‌ செய்யப்படுதல்‌ கூடாது என இர அவைகள்‌ முடிவு செய்யுமாயின்‌, அந்த விதியானது. அதன்‌. பின்னர்‌ அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல்‌ வேண்டும்‌; எனினும்‌ அவ்வாறான மாறுதல்‌ அல்லது நீக்கம்‌ எதுவும்‌, அந்த விதியின்படி முண்னரே செய்யப்பட்ட செயல்‌ ஏதொன்றின்‌ செல்லுந்தன்மைக்கும்‌ குந்தகமின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 11. [இந்தப்‌ பிரிவால்‌ செய்யப்பட்ட கிராத்தம்‌ ஏற்கனவே முதன்மைச்‌ சட்டத்தில்‌, அதாவது, 1943 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு அடகு வைப்போர்‌ சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌. 1001719843) இணைக்கப்பட்டுள்ளது!] 12. [இந்தப்‌ பிரிவால்‌ செய்யப்பட்ட திருத்தம்‌ ஏற்கனவே முதன்மைச்‌ சட்டத்தில்‌, அதாவது, 1975 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடண்பெற்ற விவசாயிகள்‌: (குற்காவிக நீி/வாரணச்‌) சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌. 10/1975) இணைக்கப்பட்டுள்ளது!] 13. நீக்கறவு .- 1975 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடன்‌ பெற்ற நபர்கள்‌ (தற்காலிக நிவாரணம்‌) அவசரச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு அவசரச்‌ சட்டம்‌ 81975) மற்றும்‌ 1975 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடன்பெற்ற நபர்கள்‌ (தற்காலிக நிவாரணம்‌) திருத்த அவசரச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு அவசரச்‌ சட்டம்‌ 971975), இதன்‌ மூலம்‌ ந்க்கறவு செய்யப்படுகின்றன.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts