Tamil Nadu · 1954 · Act 5

The Tamil Nadu Indebted Agriculturists (Temporary Relief) Act, 1954

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1954 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடண்பெற்ற விவசாயிகள்‌ (தற்காலிக நிவாரணச்‌) சட்டம்‌. சட்ட எண்‌. V/ 1954. பொருளடக்கம்‌. 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌. 3. உரிமையியல்‌ வழக்குகள்‌ தொடர்வதற்கும்‌, விண்ணப்பங்கள்‌ செய்வதற்கும்‌ தடை. 4. நடவடிக்கைகளுக்கு இடைக்காலத்‌ தடை. 5. காலவரம்புக்கான காலத்தை விலக்குதல்‌. 6. கடனாளியால்‌ அசையா சொத்து மாற்றப்படுவதன்‌ விளைவு. 7. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. 8. மெட்ராஸ்‌ அவசரச்‌ சட்ட எண்‌. V/1953 இன்‌ நீக்கறவு. 1954 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடண்பெற்ற விவசாயிகள்‌ (தற்காலிக நிவாரணச்‌) சட்டம்‌. சட்ட எண்‌./71954. கடன்பெற்ற விவசாயிகளுக்கு தற்காலிக நிவாரணம்‌ வழங்குவதற்கு வகை: செய்வற்கானதொரு சட்டம்‌. தொடர்ச்சியான பல ஆண்டுகள்‌ வறட்சிக்குப்‌ பிறகு, இயற்கையின்‌ அருளால்‌ இந்த ஆண்டு போதுமான மழை பெய்து வருவதாலும்‌, விவசாயிகள்‌ பயிர்‌ சாகுபடியில்‌ விடாமுயற்சியுடன்‌ ஈடுபடுவதாலும்‌; மேலும்‌, வறட்சியான ஆண்டுகளின்‌ போது விவசாயிகள்‌ கடன்‌ வாங்கியிருப்தாலோ அல்லது தங்கள்‌ கடனில்‌ சேர்த்திருப்பதாலோ, கடன்‌ வழங்குபவர்களின்‌ அழுத்தத்திலிருந்து சிறிது காலத்திற்கு விடுபட்டால்‌, அவர்களால்‌ தங்களை மறுவாழ்வு செய்து கொள்ள இயலும்‌ என்பதாலும்‌; மேலும்‌, தற்போதைய காலக்கட்டத்தில்‌, விவசாயிகள்‌ தங்கள்‌ கடன்‌ வழங்குநர்களால்‌ தொடங்கப்படும்‌ வழக்குகளில்‌ ஏற்படும்‌ கவனச்சிதறல்கள்‌ மற்றும்‌ செலவினங்களிலிருந்து விடுபடுவது பொதுமக்களின்‌ நலன்களுக்காக இருப்பதால்‌, உணவுப்‌ பயிர்களின்‌ உற்பத்தி பொருட்பாடுகளில்‌ அரசிற்கு அதிகபட்ச நன்மை கிடைக்கும்‌ வகையிலும்‌; பின்வருமாறு சட்டம்‌ இயற்றப்படுவதாகுக.- 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 1954 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடண்பெற்ற விவசாயிகள்‌ (தற்காலிக நிவாரணச்‌) சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. (2) இது, தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதும்‌ அளாவி நிற்கும்‌. (3) இது, உடனடியாக செல்லாற்றலுக்கு வரும்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌, தறுவாய்‌ வேறுபொருள்‌ குறித்தாலன்றி,- (@) "விவசாயி" என்பது, விவசாய நிலத்தில்‌ உரிமை நலன்‌ ஒன்றைக்‌ கொண்டிருக்கும்‌ நபர்‌ ஒருவர்‌ என்று பொருள்படும்‌; மேலும்‌, அத்தகைய உரிமை நலன்‌ காரணமாக, அத்தகைய நிலத்தைக்‌ கையுடைமையில்‌ வைத்திருப்பவர்‌ அல்லது அதிலிருந்து வரும்‌ வாடகை அல்லது இலாபத்தைப்‌ பெறுபவர்‌ மற்றும்‌ குத்தகைதாரர்‌ ஒருவரையும்‌ உள்ளடக்கும்‌; ஆனால்‌,- () 1932 ஆம்‌ ஆண்டு இந்தியக்‌ கூட்டாண்மைச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்ட எண்‌. 06 7 1932) கீழ்‌ பதிவுசெய்யப்பட்ட ஒரு கூட்டுருமம்‌ அல்லது 1913 ஆம்‌ ஆண்டு இந்திய நிறுமங்கள்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்ட எண்‌ 17 1913) வரையறுக்கப்பட்டுள்ள ஒரு நிறுமம்‌ அல்லது ஐக்கிய முடியரசின்‌ நாடாளுமன்றச்‌ சட்டம்‌ அல்லது ஏதேனும்‌ சிறப்பு இந்தியச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ உருவாக்கப்பட்ட ஒரு நிறுவகத்தையோ; அல்லது (i) 1951-52, 1952-53 மற்றும்‌ 1953-54 ஆகிய ஆண்டுகளில்‌ ஏதேனும்‌ ஒரு ஆண்டில்‌, இந்திய வருமான வரிச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்ட எண்‌.2021922) கீழ்‌ வருமான வரி செலுத்த மதிப்பிடப்பட்ட எந்தவொரு நபரையோ, உள்ளடக்காது. விளக்கம்‌.- ஒரு இந்துக்‌ கூட்டுக்‌ குடும்பம்‌ அல்லது ஒரு தார்வாட்‌, தவழி, குடும்பா அல்லது கவாரு, ஒரு விவசாயியாக இருக்குமிடத்து, தார்வாட்‌, தவழி, குடும்பா அல்லது கவாருவின்‌ கூட்டுப்பங்குரிமையாளர்‌ அல்லது உறுப்பினர்‌ ஒவ்வொரும்‌, 1951-52, 1952-53, 1953-54 ஆகிய ஆண்டுகளில்‌ வருமான வரிக்கு மதிப்பிடப்படுவதற்கு, அவர்‌ வகை செய்யப்படவில்லையெனில்‌, அவர்‌ ஒரு விவசாயியாகக்‌ கருதப்படுவார்‌; (b) "கடன்‌" என்பது, ஒரு ஒப்பந்தத்தின்‌ கீழ்‌ (வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ) பெறப்பட்ட மறுபயனுக்காக, செலுத்த வேண்டிய எந்தவொரு பணத்‌ தொகையும்‌ என்று பொருள்படும்‌; மற்றும்‌ விவசாய நிலத்தின்‌ சட்டப்படியான பயன்பாடு மற்றும்‌ ஆக்கிரமிப்பு தொடர்பாக ஒரு நபர்‌ செலுத்த வேண்டிய அல்லது வழங்க வேண்டிய, ரொக்க அல்லது அதே வகையிலான வாடகையையும்‌ உள்ளடக்கும்‌. விளக்கம்‌.- அடைமானம்‌ அல்லது கட்டணத்தை கட்டாயப்டுத்தும்‌ போது சொத்தை விற்பனை செய்வதன்‌ மூலம்‌ மட்டுமே தொகை அல்லது விளைபொருளை மீட்டெடுக்க முடியும்‌ என்பதோ அல்லது ஒப்பந்தம்‌ அந்த நபரின்‌. உரிமை மூலத்தையுடைய மூதாதையரால்‌ அல்லது இந்துக்‌ கூட்டுக்‌ குடும்பத்தின்‌ மேலாளரால்‌ அல்லது தார்வாட்‌ அல்லது தவழியின்‌ குடும்பத்‌ தலைவரால்‌ (காரணவான்‌) அல்லது அத்தகைய நபர்‌ உறுப்பினராக இருந்த அல்லது உறுப்பினராக இருக்கும்‌ குடும்பா அல்லது கவாரு குடும்பத்தின்‌ தலைவரால்‌ (யஜமான்‌) மேற்கொள்ளப்பட்டது என்பதோ முக்கியமல்ல. விதிவிலக்கு-- "கடன்‌" என்பது, கீழ்க்கண்டவற்றை உள்ளடக்காது- () வீட்டுச்‌ சொத்தின்‌ பயன்பாடு மற்றும்‌ ஆக்கிரமிப்புக்கான வாடகை அல்லது இழப்பீடு; (0 1953 ஆம்‌ ஆண்டு மாதம்‌ 31 ஆம்‌ தேதிக்குப்‌ பிறகு சேர வேண்டிய, அசையா சொத்தின்‌ பயன்பாடு மற்றும்‌ ஆக்கிரமிப்புக்காண வாடகை அல்லது இழப்பீடு; (1) நம்பிக்கை மோசடியால்‌ எழும்‌ பொறுப்பு எதுவும்‌; (iv) பராமரிப்பு தொடர்பான பொறுப்பு எதுவும்‌; (v) வருவாய்‌, வரி, மேல்வரி அல்லது கடன்‌ அல்லது பிறவாறாக, மாநில அரசிற்கு அல்லது மைய அரசிற்கு அல்லது உள்ளாட்சி அதிகாரஅமைப்பிற்கு செலுத்த வேண்டிய தொகை எதுவும்‌; (vi) 1932 ஆம்‌ ஆண்டு மெட்ராஸ்‌ கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ சட்டத்தின்‌. (மெட்ராஸ்‌ சட்ட எண்‌1932) கீழ்‌ பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்டதாகக்‌ கருதப்படும்‌ நில அடைமான வங்கி உட்பட, எந்தவொரு கூட்டுறவுச்‌ சங்கத்திற்கும்‌ செலுத்த வேண்டிய எந்தவொரு தொகையும்‌, வரம்புரையாக, 1953 ஆம்‌ ஆண்டு அக்டோபர்‌ மாதம்‌ 1 ஆம்‌ தேதிக்குப்‌ பிறகு செய்யப்பட்ட ஒரு ஒப்படைப்பின்‌ காரணமாக அந்தத்‌ தொகையை மீட்டெடுக்கும்‌ உரிமை சங்கத்திற்கு இல்லை என்றால்‌; ரி) சம்பளமாக அல்லது பிறவாறாக வழங்கப்பட்ட சேவைக்காக, செலுத்த வேண்டிய கூலிகள்‌ அல்லது ஊதியம்‌; (c) "நிலம்‌" என்பது, விவசாயம்‌ அல்லது தோட்டக்கலைக்குப்‌ பயன்‌ படுத்தப்படும்‌ நிலம்‌, குடியிருப்புக்‌ கட்டடத்திற்கு துணை நிலமாக இல்லாதது என்று பொருள்படும்‌; (0) "அவசரச்‌ சட்டம்‌" என்பது, 1953 ஆம்‌ ஆண்டு மெட்ராஸ்‌ கடன்‌ பெற்ற விவசாயிகள்‌ (தற்காலிக நிவாரண) அவசரச்‌ சட்டம்‌ (மெட்ராஸ்‌ சட்ட எண்‌ ./71953) என்று பொருள்படும்‌; (8) "செலுத்துதல்‌ என்பது, அதன்‌ இலக்கண மாறுபாடுகளுடன்‌, ஒப்படைவையும்‌ உள்ளடக்கும்‌; (0). "உரிமையியல்‌ வழக்கு அல்லது "விண்ணப்பம்‌" என்பது, ஒரு உரிமையியல்‌ வழக்கில்‌ அல்லது விண்ணப்பத்தில்‌ பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணை அல்லது ஆணையிலிருந்து மேல்முறையீட்டை, அல்லது சீராய்வு அல்லது மறுஆய்வுக்கான விண்ணப்பத்திலிருந்து மேல்முறையீட்டை உள்ளடக்காது. 3. உரிமையியல்‌ வழக்குகள்‌ தொடர்வதற்கும்‌ விண்ணப்பங்கள்‌ செய்வதற்கும்‌ தடை.- கடனை வசூலிப்பதற்கான எந்தவொரு உரிமையியல்‌ வழக்கும்‌ தொடரப்படுதலாகாது மற்றும்‌ கடனை வசூலிப்பதற்கான வழக்கில்‌ பிறப்பிக்கப்பட்ட பணத்தை செலுத்துவதற்கான தீர்ப்பாணையை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு விண்ணப்பமும்‌ செய்யப்படுதலாகாது, மேலும்‌ கடனை செலுத்தாததன்‌ காரணமாக ஒரு குத்தகைதாரரை வெளியேற்றுவதற்கான எந்தவொரு உரிமையியல்‌ வழக்கும்‌ அல்லது விண்ணப்பமும்‌, எந்தவொரு விவசாயிக்கும்‌ எதிராக, 1955 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ மாதம்‌ 1 ஆம்‌ தேதி முடிவதற்கு முன்பு, எந்தவொரு உரிமையியல்‌ நீதிமன்றத்திலும்‌ அல்லது வருவாய்‌ நீதிமன்றத்திலும்‌, தொடரப்படவோ அல்லது செய்யப்படவோ கூடாது. விளக்கம்‌ ட "உரிமையியல்‌ வழக்கு" என்பது, ஒரு விவசாயியால்‌ தொடரப்பட்ட உரிமையியல்‌ வழக்கில்‌ செய்யப்படும்‌ ஒரு சரியீட்டுக்‌ கோரிக்கையை உள்ளடக்காது. விளக்கம்‌ ॥- ஒரு விவசாயியானவர்‌, ஒரு விவசாயி அல்லாதவருடன்‌ கூட்டாகவோ அல்லது கூட்டாகவும்‌ தனித்தனியாகவும்‌ கடனை செலுத்த வேண்டியிருக்கும்‌ போது, இந்தப்‌ பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள தன்மையிலான எந்தவொரு உரிமையியல்‌ வழக்கும்‌ அல்லது விண்ணப்பமும்‌, இந்தப்‌ பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள தேதி முடிவதற்கு முன்பு, விவசாயி அல்லாதவருக்கு எதிராகவோ அல்லது விவசாயிக்கு எதிராகவோ தொடரப்படவோ அல்லது செய்யப்படவோ கூடாது. விளக்கம்‌ ஈட ஒரு உரிமையியல்‌ வழக்கில்‌ பிற நிவாரணங்கள்‌: கோரப்பட்டிருந்த போதிலும்‌, அத்தகைய உரிமையியல்‌ வழக்கு, ஒரு கடன்‌ மீட்புக்கான வழக்காகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌, மேலும்‌, ஒரு தீர்ப்பணையானது, அத்தகைய தீர்ப்பணையால்‌ பிற நிவாரணங்கள்‌ வழங்கப்பட்டிருந்த போதிலும்‌, அத்தகைய வழக்கில்‌ பணத்தைச்‌ செலுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பணையாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரையாக, நிலத்தை உடைமையாக்குவதற்கான ஒரு உரிமையியல்‌ வழக்கானது , அத்தகைய உரிமையியல்‌ வழக்கில்‌ இடைக்கால வருமானமும்‌ கோரப்படுவதால்‌ மட்டுமே கடனை மீட்டெடுப்பதற்கான ஒரு உரிமையியல்‌ வழக்காகக்‌ கருதப்படாது. 4. நடவடிக்கைகளுக்கு இடைக்காலத்‌ தடை.- (1) ஒரு விவசாயிக்கு எதிராக நிவாரணம்‌ கோரப்படும்‌ 3 ஆம்‌ பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள தண்மையிலான உரிமையியல்‌ வழக்கு மற்றும்‌ விண்ணப்பங்களில்‌ உள்ள அனைத்து மேல்‌ நடவடிக்கைகளும்‌, வாதங்களைத்‌ திருத்துவதற்கான அல்லது தரப்பினர்களைச்‌ சேர்ப்பது, மாற்றுவது அல்லது நீக்குவதற்கான நடவடிக்கைகளாக இல்லாமல்‌, ஆனால்‌ மேல்முறையீடுகள்‌, திருத்த மனுக்கள்‌ அல்லது மறுஆய்வுக்கான விண்ணப்பங்களில்‌ செய்யப்பட்ட ஆணைகள்‌ அல்லது தீர்ப்பாணைகளின்‌ விளைவாக ஏற்படும்‌ நடவடிக்கைகளை உள்ளடக்கிய பிற நடவடிக்கைகள்‌, அடுத்த உட்பிரிவுக்கு உட்பட்டு, 1955 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ மாதம்‌ 4 ஆம்‌ தேதி வரை நிறுத்தி வைக்கப்படும்‌: வரம்புரையாக, பற்றுகை செய்யப்பட்ட சொத்துக்களைப்‌ பொறுத்தவரை, நீதிமன்றம்‌ சொத்தின்‌ காவல்‌ அல்லது பாதுகாப்பிற்கு அல்லது அது விரைவான அல்லது இயற்கையான சிதைவுக்கு உட்பட்டால்‌ அத்தகைய சொத்தை விற்பனை செய்வதற்கு அல்லது காவல்‌ அல்லது பாதுகாப்பிற்கான செலவுகள்‌ அதிகமாகக்‌ கருதப்பட்டால்‌ அதைப்‌ பொறுத்தவரை அவசியமெனக்‌ கருதும்‌ ஆணைகளைப்‌ பிறப்பிக்கலாம்‌. (2) நேர்விற்கேற்ப, பிரதிவாதி அல்லது எதிர்மனுதாரர்‌ அல்லது அனைத்து பிரதிவாதிகள்‌ அல்லது அனைத்து எதிர்மனுதாரர்கள்‌ செய்யும்‌ விண்ணப்பத்தின்‌ பேரில்‌, ஒரு உரிமையியல்‌ வழக்கு அல்லது விண்ணப்பத்தில்‌ வகை முறைகள்‌ விதிக்கப்பட்ட இடைக்காலத்‌ தடை கலைக்கப்படும்‌, மேலும்‌ உரிமையியல்‌ வழக்கு அல்லது விண்ணப்பத்தில்‌ மேலும்‌ நடவடிக்கைகள்‌ நிறுத்தப்பட்டபோது, அது அடைந்துள்ள நிலையிலிருந்து உரிமையியல்‌ வழக்கு அல்லது விண்ணப்பமானது தொடரப்படுதல்‌ வேண்டும்‌. (3) 3 ஆம்‌ பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள தன்மையிலான, ஒரு விவசாயிக்கு எதிராகத்‌ தொடரப்பட்ட அல்லது செய்யப்பட்ட வழக்குகள்‌ அல்லது விண்ணப்பங்களின்‌ நேர்வில்‌, 1949 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு குத்தகைதாரர்கள்‌. மற்றும்‌ குடியானவர்கள்‌ பாதுகாப்புச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌. XXIV/1949) வகை முறைகள்‌, அல்லது 1951 ஆம்‌ ஆண்டு மலபார்‌ குத்தகை திருத்தச்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌. 02௦0171951) 54 ஆம்‌ பிரிவு அல்லது 55 ஆம்‌ பிரிவானது, (1) ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுடன்‌ முரணாக இருக்கும்‌ வரை, மேற்கூறிய வகைமுறைகள்‌ செல்திறம்‌ கொண்டிருக்காது. 5. காலவரம்புக்கான காலத்தை விலக்குதல்‌.- (1) ஒரு கடனை மீட்டெடுப்பதற்கான உரிமையியல்‌ வழக்கு அல்லது அத்தகைய உரிமையியல்‌ வழக்கில்‌ பிறப்பிக்கப்பட்ட ஒரு தீர்ப்பாணையை நிறைவேற்றுவதற்கான விண்ணப்பத்திற்கு, நிர்ணயிக்கப்பட்ட காலஅளவின்‌ வரம்பு அல்லது காலக்கெடுவைக்‌ கணக்கிடும்‌ போது, உரிமையியல்‌ வழக்கைத்‌ தொடர்வதில்‌ அல்லது விண்ணப்பம்‌ செய்வதில்‌ 3 ஆம்‌ பிரிவால்‌ தடைசெய்யப்பட்ட காலம்‌ அல்லது வாதி அல்லது அவரது முன்னோடி உரிமையாளரால்‌ 3 ஆம்‌ பிரிவானது அத்தகைய உரிமையியல்‌ வழக்கிற்கு அல்லது அத்தகைய விண்ணப்பத்திற்குப்‌ பொருந்தும்‌ என்று நல்லெண்ணத்தில்‌ நம்பி, அத்தகைய வழக்கைத்‌ தொடங்குவதிலிருந்தோ அல்லது அத்தகைய விண்ணப்பம்‌ செய்வதிலிருந்தோ விலக்கிய காலமானது, விலக்கப்படும்‌. விளக்கம்‌.- "நல்லெண்ணம்‌" என்பது, 1897 ஆம்‌ ஆண்டு பொது வகையங்கள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்ட எண்‌. 367 1897) 3 ஆம்‌ பிரிவின்‌ (22) ஆம்‌ கூறில்‌ அதற்கு ஒதுக்கப்பட்ட பொருளைக்‌ கொண்டிருக்கும்‌. (2) ஒரு உரிமையியல்‌ வழக்கில்‌ அல்லது விண்ணப்பத்தில்‌, (1) ஆம்‌ உட்பிரிவின்‌ கீழ்‌ கால அவகாசம்‌ விலக்கு அளிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழும்‌ போது, பிரதிவாதி அல்லது எதிர்மணுதாரர்‌, அல்லது பிரதிவாதிகளில்‌ அல்லது எதிர்மனுதாரர்களில்‌ ஒருவர்‌, கேள்வி எழுப்பப்பட்டவர்‌ ஒரு விவசாயியாக இருந்திருப்பார்‌, ஆனால்‌ 1951-52, 1952-53, 1953-54 ஆம்‌ ஆண்டுகளில்‌ அவருக்கு, வருமான வரிச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்ட எண்‌. XI/1922) கீழ்‌ வருமான வரி விதிக்கப்பட்டிருந்தால்‌, வழக்கைத்‌ தொடருவதிலிருந்தோ அல்லது விண்ணப்பம்‌ செய்வதிலிருந்தோ விலகியிருப்பதன்‌ மூலம்‌ , கடன்‌ வழங்குபவர்‌ அத்தகைய பிரதிவாதி அல்லது எதிர்மனுதாரர்‌, ஒரு விவசாயி என்று நல்லெண்ணத்தில்‌ நம்பினார்‌ என்று உறுதியாகக்‌ கருதப்படும்‌. 6. கடனாளியால்‌ அசையா சொத்து மாற்றப்படுவதன்‌ விளைவு.- இந்த அவசரச்‌ சட்டம்‌ தொடங்கிய தேதிக்குப்‌ பின்பும்‌, 1955 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ மாதம்‌ 1 ஆம்‌ தேதிக்கு முன்பும்‌, 3 ஆம்‌ பிரிவு அல்லது 4 ஆம்‌ பிரிவின்‌ நற்பலனைப்‌ பெறும்‌ உரிமையுள்ள கடனாளியால்‌ செய்யப்படும்‌ அசையா சொத்தின்‌ ஒவ்வொரு உரிமைமாற்றமும்‌, அத்தகைய உரிமை மாற்றம்‌ தொடர்பான எந்தவொரு உரிமையியல்‌ வழக்கு அல்லது பிற நடவடிக்கையிலும்‌, மாறாக நிரூபிக்கப்படும்‌ வரை, உரிமைமாற்றம்‌ செய்பவரின்‌ கடன்‌ வழங்குநர்களைத்‌ தோற்கடிக்கும்‌ அல்லது தாமதப்படுத்தும்‌ நோக்கத்துடன்‌ செய்யப்பட்டதாகக்‌ கருதப்படும்‌. 7. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, மாநில அரசு விதிகளை உருவாக்கலாம்‌. 8. மெட்ராஸ்‌ அவசரச்‌ சட்ட எண்‌. V/1953 இன்‌ நீக்கறவு.- 1953 ஆம்‌ ஆண்டு மெட்ராஸ்‌ கடன்பெற்ற விவசாயிகள்‌ (தற்காலிக நிவாரணம்‌) அவசரச்‌ சட்டம்‌ (மெட்ராஸ்‌ அவசரச்‌ சட்ட எண்‌ு/1953) இதன்‌ மூலம்‌ ந்க்கறவு செய்யப்படுகிறது.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts