Tamil Nadu · 1959 · Act 22
THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS ACT, 1959
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம்
சட்ட எண்.22/1959
பொருளடக்க அட்டவணை
அத்தியாயம் |
முன்னுரை
பிரிவுகள்
1. குறுந்தலைப்பு, அளாவுகை, பொருந்துகை மற்றும் தொடக்கம்.
2. சமண சமய நிறுவனங்களுக்கும், நிலைக்கொடைகளுக்கும் இந்தச்
சட்டத்தை நீட்டிப்பதற்கு அதிகாரம்.
3. அறநிலைக்கொடைகளுக்கு இந்தச் சட்டத்தை நீட்டிப்பதற்கு அதிகாரம்.
4. விலக்களிப்புகள்.
5. குறித்தசில சட்டங்கள் இந்து சமய நிறுவனங்கள் மற்றும்
நிலைக்கொடைகளுக்குப் பொருந்தாது.
6. பொருள் வரையறைகள்.
7. அறிவுரைக் குழுவினை அமைத்தல்.
7-&. மாவட்டக்குழுவினை அமைத்தல்.
7-EE. கோயில் நிருவாகக் குழு தலைமையரின் சிறப்பு அதிகாரங்கள்.
7-£. கோயில் நிருவாகக் குழுவின் அல்லது மாவட்ட குழுவின்
உறுப்பினர்களுக்கான தகுதிக்கேடுகள்.
அத்தியாயம் ॥
ஆணையயர் மற்றும் கட்டுப்பாடு செய்யும் பிற அதிகாரிகள்
8. இந்தச் சட்டத்தின்படியான அதிகாரிகள்.
9. ஆணையர், முதலானவரை அரசு அமர்த்துதல்.
10. ஆணையர், முதலானோர் இந்துவாக இருத்தல்.
11. ஆணையர் தணியோர் உரிமைபெற்ற கூட்டுருமமாக இருத்தல்.
12. ஆணையர் முதலானோர் அரசுப் பணியாளர்களாக இருத்தல்.
13. கூடுதல் ஆணையருக்கு, இணை ஆணையர்களுக்கு அல்லது துணை
ஆணையர்களுக்கு அதிகார ஒப்படைவு.
13-&. கூடுதல் ஆணையரின் மற்றும் இணை ஆணையரின்
அதிகாரங்களும் கடமைகளும்.
14. உதவி ஆணையர்களின் ஆட்சி நிலவரை அதிகாரவரம்பும்
அதிகாரங்களும் கடமைகளும்.
15-20. [விட்டு விடப்பட்டது]
21. பதிவணங்களைத் தருவித்து ஆணைகள் பிறப்பிக்க ஆணையரின்
அதிகாரங்கள்.
21-A. பதிவணங்களைத் தருவித்து ஆணைகள் பிறப்பிக்க இணை அல்லது
துணை ஆணையரின் அதிகாரங்கள்
22. ஆணையரின் பிற அதிகாரங்கள்.
அத்தியாயம் ॥
சமய நிறுவனங்கள்-பொது வகைமுறைகள்
23. கோயில்கள் மற்றும் சமய நிலைக் கொடைகளைப் பொறுத்து
ஆணையரின் அதிகாரங்களும் கடமைகளும்.
24. சமய நிறுவனங்களில் நுழைவதற்கு அதிகாரம்.
25. ஆணையர் முதலானோர் உரிய வினைமுறைகளையும் சடங்குகளையும்
கடைப்பிடித்தல்.
26. அறங்காவலர்களின் தகுதிகள்.
27. இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணைகளுக்குக் கீழ்ப்படிய
அறங்காவலர் கட்டுப்பட்டவர்.
28. அறங்காவலருக்குத் தேவைப்படும் கவனமும் அவருடைய
அதிகாரங்களும்.
29. அனைத்து நிறுவனங்களுக்கும் பதிவேடு தயாரித்தல்.
30. பதிவேட்டினை ஆண்டுதோறும் சரிபார்த்தல்.
31. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை பதிவேட்டை அனுப்புதல்.
32. அறங்காவலர் கணக்குகள், விவரக் குறிப்புகள் முதலானவற்றை
அனுப்புதல்.
33.
34.
சொத்தினையும் ஆவணங்களையும் ஆய்வு செய்தல்.
பொறுப்புக் கட்டளையின் அசையாச் சொத்தினை பிறர்க்குரிமை மாற்றம்
செய்தல்.
34-A. குத்தகை வாடகை நிர்ணயித்தல்.
34-B. அசையாச் சொத்தின் குத்தகை முடிவுறுத்தம்.
34-06. தொகை வழங்குதல்.
34-D. உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குத் தடை.
35.
36.
புனிதப் பயணியர் மற்றும் வழிபடுபவர்களின் உடல்நலம் முதலானவற்றை
உறுதி செய்வதற்காகவும், அர்ச்சகர்கள் முதலானோர்க்குப்
பயிற்சியளிக்கவும் செலவு செய்வதற்கு அறங்காவலருக்குள்ள
அதிகாரம்.
மிகை நிதியங்களைப் பயன்படுத்துதல்.
36-&. மிகை நிதியங்களை இந்துத் திருமணங்களுக்குப் பயன்படுத்துதல்.
36-8. ஏழைகளுக்கு உணவளிக்கும் நோக்கம் முதலானவற்றிற்காக நிதியம்
37.
38.
39.
40.
41.
42.
எதற்கும் பங்களிப்புச் செய்வதற்காக மிகை நிதியங்களைப்
பயன்படுத்துதல்.
மேல்முறையீடுகள்.
குறித்தசில நேர்வுகளில் பணி அல்லது அறப்பணி செய்வதை
வலியுறுத்துதல்.
குறித்த வகை நிலைக்கொடைகளின் அறங்காவலர்களின்மீது மடம்
அல்லது கோயிலின் அறங்காவலரின் அதிகாரம்.
ஒரு கோயிலில் பணிசெய்தல் வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு
ஒரு தேவதாசியால் வைத்துவரப்படும் நிலங்கள் முதலானவற்றிற்குத்
தன்னுரிமையளித்தல்.
அறப்பணி அல்லது பணி எதனையும் செய்வதற்காக அளிக்கப்பட்ட
இனாமைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுதலும் திரும்ப அளித்தலும்.
சமயநிறுவனத்தில் பதவிவகிப்பவர்களும் பணியாளர்களும் நகைகள்
முதலியவற்றை நிபந்தனைகளின்படியன்றி உடைமையில்
வைத்திருத்தல் ஆகாது.
43. சட்டநடவடிக்கைகளின் இணக்கத்தீர்விற்கு ஆணையர் ஒப்பளிப்புச்
செய்தல்.
43-A. மடங்களின்கீழுள்ள கோயில்களில் நிருவாக அலுவலர்களை
அமர்த்துதலும் அவர்தம் கடமையும்.
மடங்கள் அல்லது அவற்றுடன் இணைக்கப்பட்ட குறித்தவகை
நிலைக்கொடைகள் அல்லாத வேறு சமய நிறுவனங்கள்
44. 45 முதல் 58 வரையிலான பிரிவுகள் மடங்களுக்கு அல்லது
மடங்களுடன் இணைக்கப்பட்ட குறித்தவகை நிலைக்
கொடைகளுக்குப் பொருந்தாது.
45. நிருவாக அலுவலர்களை அமர்த்துதலும் அவர்தம் கடமைகளும்.
46. குறித்தசில நிறுவனங்களின் பட்டியலை ஆணையர் வெளியிடுதல்.
46-A. [விட்டுவிடப்பட்டது.]
47. அறங்காவலர்கள் மற்றும் அவர்களுடைய எண்ணிக்கையும்
பதவிக்காலமும்.
47-&. அரசு, அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்.
48. தலைவர்.
49. அறங்காவலர்களையும் தக்கார்களையும் அமர்த்துவதற்கு உதவி
ஆணையருக்குள்ள அதிகாரம்.
49-A. 46 ஆம் பிரிவிண்படியான பட்டியலில் முதலில் சேர்க்கப்பட்ட சமய
நிறுவனங்களைப் பொறுத்தவரை இருந்துவரும் அறங்காவலர்கள் பதவி
வகிப்பது அற்றுப்போதல்.
49-B. குறித்தசில நேர்வுகளில் அறங்காவலரின் அல்லது அறங்காவலர்கள்.
குழுமத்தின் ஆணையினை அல்லது தீர்மானத்தினைச்
செயற்படுத்தாமல் இருப்பதற்கு நிருவாக அலுவலருக்கும் அறங்காவலர்
குழுமத்தின் தலைவருக்குமுள்ள அதிகாரம்.
50. திட்டத்தின் வகைமுறைகள் எப்படியிருந்தபோதிலும், 47, 49 மற்றும்
49-௯௩ பிரிவுகளின் படியான அதிகாரம் செலுத்தத்தக்கதாகும்.
51. அறங்காவலர்களாக இருப்பதற்குக் குறித்த சிலரின் கோருரிமைகள்.
52. இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்று பதவி வகித்துவரும் பரம்பரை
வழியல்லாத அறங்காவலர்கள்.
53. அறங்காவலர்களை இடைந்க்கம் செய்ய, நீக்க அல்லது விலக்க
அதிகாரம்.
54. பரம்பரை அறங்காவலரின் பதவியிலுள்ள காலியிடங்களை நிரப்புதல்.
55. சமய நிறுவனங்களில் பதவி வகிப்பவர்களையும் பணியாளர்களையும்
அமர்த்துதல்.
56. சமய நிறுவனங்களில் பதவி வகிப்பவர்களுக்கும் பணியாளர்களுக்கும்
தண்டனை அளித்தல்.
57. பணிகள் முதலானவற்றிற்காகக் கட்டணங்களை நிருணயிப்பதற்கும்
அவற்றைப் பங்கீடு செய்வதை முடிவு செய்வதற்கும் அதிகாரம்.
58. நிலையான செலவு விதங்களை நிருணயித்தல்.
அத்தியாயம் IV
மடங்கள்
59. மடம் அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட குறித்தவகை
நிலைக்கொடையின் அறங்காவலர்களை நீக்குவதற்கான உரிமை
வழக்கு.
60. காலியிடங்கள் ஏற்படும்போது செய்யவேண்டிய ஏற்பாடுகள்.
61. நிலையான செலவு விதங்களை நிருணயித்தல்.
62. பாதகாணிக்கையைச் செலவழிப்பதற்கு அதிகாரம்.
அத்தியாயம் V
விசாரணைகள்
63. குறித்தசில பூசல்கள் மற்றும் பொருட்பாடுகளை இணை அல்லது
துணை ஆணையர் முடிவு செய்தல்.
64. திட்டங்களை அறுதி செய்வதற்கு இணை ஆணையர் அல்லது துணை
ஆணையருக்குள்ள அதிகாரம்.
65. திட்டங்களை அறுதி செய்வதற்கு ஆணையரின் அதிகாரம்.
66. நிலைக்கொடைகளைப் பயன்படுத்துதல்.
67. செயற்படாத சமய நிறுவனங்களின் சொத்துக்களையும் நிதியங்களையும்
தீர்மானித்தலும் பயன்படுத்துதலும்.
68.
69.
70.
இணை ஆணையர் அல்லது துணை ஆணையர் படிகளை அனுப்புதல்.
ஆணையருக்கு மேல்முறையீடு.
உரிமை வழக்குகளும் மேல்முறையீடுகளும்.
அத்தியாயம் VI
அறிவிக்கை செய்யப்பட்ட சமய நிறுவனங்கள்.
71. நிறுவனம் ஏன் அறிவிக்கை செய்யப்படக்கூடாது என்பதற்கான காரணம்
காட்டும்படி அறிவிப்பு அனுப்புதல்.
72. மறுப்புரைகள் எவையேனுமிருப்பின், அவற்றைப் பரிசீலனை செய்தலும்
நிறுவனத்தை அறிவிக்கை செய்தலும்.
73.
74.
75.
அறிவிக்கையின் பேரில் திட்டம் காலாவதியாதல்.
சம்பளம் பெறும் நிருவாக அலுவலரை அமர்த்துதல்.
அறிவிக்கை செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு 64 ஆம் பிரிவு
பொருந்துதல் ஆகாது.
75-A. ॥ா1927 சென்னை சட்டத்தின் VI-A அத்தியாயத்தின்படியான
அறிவிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருத்தல்.
75-B. ॥ 827 சென்னை சட்டத்தின் VI-A அத்தியாயத்திண்படியான
அறிவிக்கைகள் மேலும் தொடர்ந்து நடைமுறையில் இருத்தல்.
75-C. உரிமைவழக்குத் தொடருவதற்கு உரிமை.
76.
77.
78.
79.
காப்புரை.
அத்தியாயம் VII
ஆக்கிரமிப்புகள்:
சிறப்புநேர்வுகள் நீங்கலாக, சமய நிறுவனங்களைச் சார்ந்த அல்லது
அவற்றிற்கு அடுத்துள்ள நிலங்களை உரிமை மாற்றம் செய்வதைத்
தடைசெய்தல்.
அற அல்லது சமயநிறுவனம் அல்லது நிலைக்கொடைக்குச்
சொந்தமான நிலம் அல்லது கட்டடத்தின்மீது ஆட்களின்
ஆக்கிரமிப்புகளும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதலும்.
இணை ஆணையரால் பணிக்கப்பட்டவாறு ஆக்கிரமிப்பினை
அகற்றுவதற்குத் தவறுவதன் பேரில், வெளியேற்றும் முறை.
79-A. அற, சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலத்தின்மீது
ஆட்களின் தொகுதியினால் ஆக்கிரமிப்பு செய்யப்படுதல் மற்றும்
அவர்களை வெளியேற்றுதல்.
79-8. ஆக்கிரமிப்பு தொடர்பான குற்றங்களுக்குத் தண்டனை.
79-C. சமய நிறுவனத்திற்குக் கொடுபடவேண்டிய பணத்தை நிலவருவாய்
நிலுவைகள் போன்று வசூலித்தல்.
80. குறித்தசில நேர்வுகளில் குத்தகை எடுப்பவர்களை, உரிமம்
பெற்றவர்களை அல்லது உடமையுடன் அடைமானம் பெற்றவர்களை
வெளியேற்றுதல்.
81. 80 ஆம் பிரிவின்படி இணை ஆணையர் அல்லது துணை ஆணையரின்
ஆணைகளுக்கு எதிரான மேல்முறையீடுகள்.
82. சரியீடு செலுத்துதல்.
83. தீர்ப்பாயங்களை அமைத்தல்.
84. தீர்வத்திற்கு எதிரான உரிமை வழக்குகள்.
85. இந்த அத்தியாயத்தின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
அத்தியாயம் VI
வரவு- செலவுத் திட்டங்கள், கணக்குகள் மற்றும் தணிக்கை
86. சமயநிறுவனங்களின் வரவு-செலவுத் திட்டங்கள்.
87. கணக்குகளும் தணிக்கையும்.
88. தணிக்கை அறிக்கை அனுப்பப்படவேண்டிய அதிகாரி.
89. தணிக்கை அறிக்கையின் உள்ளடக்கங்கள்.
90. தணிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட குறைகளை செம்மைப்படுத்துதலும்
அறங்காவலர் முதலியோருக்கு எதிராகத் தண்டக் கட்டணத்திற்கு
ஆணையிடுதலும்.
91. திட்டத்தில் வகைசெய்யப்பட்டிருந்த போதிலும், இந்த அத்தியாயம்
பொருந்துதல்.
அத்தியாயம் 106
நிதி
92. சமயநிறுவனங்கள் ஆண்டு பங்குத்தொகை ஒன்றை அரசுக்குச்
செலுத்துதல்.
93. சட்டநடவடிக்கையின் பேரில் உள்ளான செலவுகளையும் செலவுத்
தொகை வளுலித்தல்.
94. பங்குத்தொகைகள், செலவுகள், கட்டணங்கள் மற்றும் செலவுத்
தொகைகளை மதிப்பீடு செய்தலும் வசூலித்தலும்.
95. குறித்த சில நேர்வுகளில் பங்களிப்புகள் விதிக்கப்படுதலாகாது.
அத்தியாயம் 36
நிலைக்கொடைகள் நிருவாக நிதியம்
96. சமய மற்றும் அறநிலைக்கொடைகள் நிருவாக நிதியம்.
97. இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் பொது நல நிதியத்தை
ஏற்படுத்துதல்.
அத்தியாயம் X-A
திருக்கோயில் நிதியம்
97-&. ஒன்றாகச் சேர்க்கப்பட்ட திருக்கோயில்களை திருக்கோயில்
நிதியத்திலிருந்து, பேணிவருதல்.
97-B. திருக்கோயில் நிதியம்.
97-60. திருக்கோயில் மிகை நிதியமும் அதன் நிருவாகமும்.
97-D. திருக்கோயில் சொத்துக்கள்.
97-E. ஒன்றாகச் சேர்க்கப்படாத திருக்கோயில்கள்.
அத்தியாயம் 34
பல்வகைப்பட்டவை
98. குறித்தசில ஆவணங்களிலிருந்து படிகளை அல்லது எடுகுறிப்புகளை
அரசு அலுவலர்கள் வழங்குதல்.
99. ஆய்வு செய்வதற்கான அதிகாரம்.
1400. சமய நிறுவனத்தின் நலப்பயனுக்காக உயிலின்படி உயில்
வழிக்கொடை..
104. அறங்காவலரின் அல்லது நிருவாக அலுவலரின் கையுடைமையில்
வைத்திருத்தல்.
102. நடவடிக்கைகள் முதலானவற்றின் செலவுத்தொகைகள்.
1403. அறங்காவலர் ஒப்பளிப்பின்றி பணங்களைக் கடன்கொடுத்தலோ
அல்லது பெறுதலோ ஆகாது.
104. இணைப்புப்பட்டியலில் வகுத்துரைக்கப்பட்டவாறு நீதிமன்றக்
கட்டணங்களைச் செலுத்துதல்.
105. காப்புரை.
1406. பிரசாதங்கள் அல்லது தீர்த்தங்கள் வழங்குவதில் வேற்றுமை
காட்டுவதை அகற்றுதல்.
107. இந்தச் சட்டம், அரசமைப்பின் 26ஆம் உறுப்பின்படியான
உரிமைகளைப் பாதித்தலாகாது.
108. சமய நிறுவனங்கள் முதலானவற்றின் நிருவாகம் அல்லது
மேலாண்மை பொறுத்து உரிமைவழக்கு தொடர்வதற்குத் தடை.
109. மையச்சட்டம் 361963, சமய நிறுவனத்தின் சொத்துக்களை ம்ளப்
பெறுவதற்குப் பொருந்தாது.
110. ॥ மற்றும் VI ஆம் அத்தியாயங்களின்படியான விசாரணைகளின்
நடைமுறையும் அதிகாரங்களும்.
114. இந்தச் சட்டத்தின்படியான அறிவிக்கைகள், ஆணைகள் முதலானவை
நீதிமன்றத்தில் எதிர்த்து வாதிடப்படுதலாகாது.
112-113. [விட்டுவிடப்பட்டது.]
113-A. ஆணையர் முன்பு முடிவுறாநிலையில் இருக்கிற மேல்முறையீடு
அல்லது சீராய்வு நீதித் துறை அலுவலர் ஒருவரால் முடிக்கப்பட
பணிப்பதற்கு அரசின் அதிகாரம்.
114. பதிவுக்கட்டுகளைத் தருவித்து ஆணைகளைப் பிறப்பிக்க அரசின்
அதிகாரம்.
114-&. மறுஆய்வு செய்வதற்கு அரசின் அதிகாரம்.
115. காலவரம்பு.
116. விதிகள் வகுப்பதற்கான அதிகாரம்.
அத்தியாயம் XIl
மாறுதற்காலத்திற்குரியவை
117. குழுமம், தலைவர் அல்லது ஆணையர் என்ற சுட்டுகையின்
பொருள்கோள்.
118. நீக்கறவுகளும் காப்புரைகளும்.
119. குறித்தசில ஆட்களின் பணி நிபந்தனைகள்.
119-A. பரம்பரை கரண்மா பணியினர்மீது அறங்காவலர்கள் குழுமத்தின்
கட்டுப்பாடு.
120. குறித்தசில பணத்தொகைகளை ஆணையர் அரசுக்குத் திருப்பிச்
செலுத்துதல்.
120-&. | ஆம் இணைபப்புப்பட்டியலைத் திருத்தம் செய்வதற்கு, மாற்றம்:
செய்வதற்கு அல்லது அதனுடன் சேர்க்கப்படுவதற்கு அதிகாரம்.
121, 122. [விட்டுவிடப்பட்டது.]
இணைபப்புப்பட்டியல் |
இணைபப்புப்பட்டியல் ॥
இணைபப்புப்பட்டியல் I
1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம்
சட்ட எண். 22/1959
(2008, மார்ச் 31 அன்று இருந்தவாறு)
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள இந்து சமய மற்றும் அற நிறுவனங்கள் மற்றும்
அறநிலைக்கொடைகளின் நிருவாகம் மற்றும் ஆளுகை தொடர்பான சட்டத்தைத்
திருத்தம் செய்து ஒருங்கிணைப்பதற்கானதொரு சட்டம்.
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள இந்து சமய மற்றும் அற நிறுவனங்கள் மற்றும்
அறநிலைக்கொடைகளின் நிருவாகம் மற்றும் ஆளுகை தொடர்பான சட்டத்தைத்
திருத்தம் செய்து ஒருங்கிணைப்பது உகந்ததாக இருப்பதால்,
இந்தியக் குடியரசின் பத்தாம் ஆண்டில் பின்வருமாறு சட்டம்
இயற்றப்படு வதாகுக:-
அத்தியாயம் 1
முன்னுரை
1. குறுந்தலைப்பு, அளாவுகை, பொருந்துகை மற்றும் தொடக்கம்.- (1) இந்தச் சட்டம்,
1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம்
என்று வழங்கப்பெறும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முமுவதையும் அளாவி நிற்கும்.
(3) இது, ஒன்றாகச் சேர்க்கப்பட்ட திருக்கோயில்கள் மற்றும் ஒன்றாகச்
சேர்க்கப்படாத திருக்கோயில்கள் உள்ளடங்கலாக இந்து பொது சமய நிறுவனங்கள்
மற்றும் நிலைக்கொடைகள் அனைத்திற்கும் பொருந்தும்.
விளக்கம்.- இந்த உட்பிரிவில், இந்து பொது சமய நிறுவனங்கள் மற்றும்
நிலைக்கொடைகளானவை, சமய நிறுவனங்கள் மற்றும் நிலைக்கொடைகளை
உள்ளடக்காது.
(4) (a) () 92 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் வகைமுறைகள், அந்த
உட்பிரிவு, கலந்தாய்வுக்குழுக்கள் மற்றும் அவற்றின் உட்குழுக்களுடன் எந்த
அளவுக்குத் தொடர்புடையதோ அந்த அளவுக்குத் தவிர, மற்றும்
(i) 16 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் 0௦0) (ஆ) கூறின்
வகைமுறைகள் தவிர, இந்தச் சட்டத்தின் வகைமுறைகள், அரசு அறிவிக்கை
வாயிலாகக் குறித்திடலாகும் தேதியன்று நடைமுறைக்கு வரும்; மற்றும்
வெவ்வேறு வரையிடங்களுக்காகவும் இந்தச் சட்டத்தின் வெவ்வேறு
வகைமுறைகளுக்காகவும் வெவ்வேறு தேதிகள் குறித்திடப்படலாம்.
(௦) கலந்தாய்வுக் குழுக்கள் மற்றும் அவற்றின் உட்குழுக்களுடன் எந்த
அளவுக்கு 92 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவு தொடர்புடையதாயிருக்கிறதோ
அந்த அளவுக்கு, அந்த உட்பிரிவின் வகைமுறைகளும், 116 ஆம் பிரிவின் (2) ஆம்
உட்பிரிவின் 0௦4) (ஆ) கூறின் வகைமுறைகளும், 1958, நவம்பர் 28 ஆம்
நாளன்று நடைமுறைக்கு வந்ததாகக் கொள்ளப்படும்.
2. சமண சமய நிறுவனங்களுக்கும் நிலைக்கொடைகளுக்கும் இந்தச் சட்டத்தை
நீட்டிப்பதற்கு அதிகாரம். (1) இந்தச் சட்டத்தின் மற்றும் அதன்படி வகுக்கப்பட்ட
விதிகள் எவற்றின் வகைமுறைகள் அனைத்தையும் அல்லது அவற்றில்
எவற்றையும், சசகணப் பொது சமய நிறுவனங்களுக்கும் நிலைக்கொடைகளுக்கும்,
அரசு அறிவிக்கை வாயிலாக நீட்டிக்கலாம், மற்றும் அதன்பேரில், அவ்வாறு
நீட்டிக்கப்பட்ட வகைமுறைகள் அத்தகைய நிறுவனங்களுக்கும்.
நிலைக்கொடைகளுக்கும் பொருந்தும்:
வரம்புரையாக: அத்தகைய அறிவிக்கையை வெளியிடுவதற்கு முன்பு, அரசு
அவ்வாறு செய்வதற்கான தன் கருத்து பற்றிய அறிவிப்பை தொடர்புடைய
நிறுவனங்களிலும் நிலைக்கொடைகளிலும் உரித்தமுடையவர்களுக்கு அந்த
அறிவிக்கை வெளியிடப்பட்டதற்கு எதிராகக் காரணம் காட்டுவதற்காக, அந்த
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குக் குறையாத
காலஅளவினை நிருணயித்து பணிக ஜாறீல்கோட்டை அரசிதழில் வெளியிட்டு
அவர்களுடைய மறுப்புரைகள், எவையேனுமிருப்பின், அவற்றைப் பரிச்லனை
செய்தல் வேண்டும்.
(2) இந்தச் சட்டத்தில், 'இந்து' என்னும் சொல் வருமிடங்களில் எல்லாம், (1)
ஆம் உட்பிரிவின்படி, இந்தச் சட்டத்தின் வகைமுறைகள், நீட்டிக்கப்பட்டுள்ள
சமணப் பொது சமய நிறுவனங்களையும். நிலைக்கொடைகளையும்
பொறுத்தவரையில், இடத்திற்கேற்ப பொருள் மாறுபட்டாலன்றி, "மணா என்று
பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.
3. அறநிலைக்கொடைகளுக்கு இந்தச் சட்டத்தை நீட்டிப்பதற்கு அதிகாரம்.- (1)
இந்து அல்லது சமணப் பொது அறநிலைக்கொடை எதுவும், தவறாக
நிருவகிக்கப்படுகிறது என்று அரசு நம்புவதற்குக் காரணம் பெற்றிருக்குமிடத்து,
அத்தகைய அறநிலைக்கொடையின் அலுவல்களை ஆணையர் விசாரணை
செய்து அல்லது இதற்கென அவரால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் எவராலும்.
விசாரணை செய்யப்படுமாறு செய்து, அத்தகைய அறநிலைக்கொடையின்
நிருவாகத்தின் நலன் கருதி, இந்தச் சட்டத்தின் மற்றும் அதன்படி வகுக்கப்பட்ட
விதிகள் எவற்றின் வகைமுறைகள் அனைத்தையும் அல்லது அவற்றில்
எவற்றையும் அதற்கு நீட்டிக்கச் செய்வது தேவையானதா என்பதைத் தனக்கு
அறிக்கை செய்யும்படி ஆணையரை அரசு பணிக்கலாம்.
(2) ஆணையர் அல்லது (1) ஆம் உட்பிரிவின்படி அவரால்
அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர், அந்த உட்பிரிவின்படி விசாரணை செய்கையில்,
1908 ஆம் ஆண்டு உரிமையியல் நெறிமுறைத் தொகுப்புச் சட்டத்தின்படி (மையச்
சட்டம் V/1908) சாட்சிகள் முன்னிலையாதலை வற்புறுத்தும் மற்றும் அத்தகைய
அறநிலைக்கொடைக்குச் சொந்தமான அல்லது அதன் பொறுப்பிலுள்ள
புத்தகங்கள், கணக்குகள், ஆவணங்கள், பிணையங்கள், ரொக்கம் மற்றம் பிற
சொத்துக்களை முன்னிலைப்படுத்துவதை கட்டாயப்படுத்தும் நோக்கங்களுக்காக,
உரிமையியல் நீதிமன்றத்தின் அனைத்து அதிகாரங்களையும் உடையவர் ஆவார்
மற்றும் சான்றினைப் பதிவு செய்வதையும், தரப்பினரைக் கேட்பதையும் குறித்து
அந்தத் தொகுப்புச் சட்டத்தின்படி பொருந்துகிற நெறிமுறையைப் பின்பற்றுதல்
வேண்டும்.
(3) (1) ஆம் உட்பிரிவின்படி ஆணையரால் பணிந்தனுப்பப்பட்ட
அறிக்கையைப் பரிசீலனை செய்த பின்பு, அத்தகைய அறநிலைக்கொடை தவறாக
நிருவகிக்கப்படுகிறது என்றும், அத்தகைய அறநிலைக்கொடையின் நிருவாக
நலன்களுக்காக, இந்தச் சட்டத்தின் மற்றும் அதன்படி வகுக்கப்பட்ட விதிகள்:
எவற்றின் வகைமுறைகள் அனைத்தையும் அல்லது அவற்றில் எவற்றையும்
அதற்கு நீட்டிப்பது தேவையானது என்றும் அரசு தெளிவுறக்காணுமாயின், அது
அத்தகைய அறநிலைக்கொடைக்கு மேற்சொன்ன அந்த வகைமுறைகளை
அறிவிக்கை வாயிலாக நீட்டிக்கலாம், மற்றும் அதன்பேரில், அந்த
அறநிலைக்கொடையானது, குறித்தவகை நிலைக்கொடையாக
இருந்தாற்போன்றே, அவ்வாறு நீட்டிக்கப்பட்ட வகைமுறை, அத்தகைய
அறநிலைக்கொடைக்குப் பொருந்தும்.
வரம்புரையாக: அத்தகைய அறிவிக்கையை வெளியிடுவதற்கு முன்பு, அரசு,
அவ்வாறு செய்வதற்கான தன் கருத்தைப் பற்றிய அறிவிப்பை தன்னால்
எடுக்கப்படுவதற்கு கருதப்பட்ட நடவடிக்கைக்கான காரணங்களைக்
குறித்துரைக்கும் தொடர்புடைய நிலைக்கொடையில் உரித்தமுடையவர்கள் அந்த
அறிவிக்கை வெளியிடப்படுவதற்கு எதிராகக் காரணங்காட்டுவதற்காக, அந்த
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குக் குறையாத
ஒரு காலஅளவை நிருணயித்தும் பணிக லாரல் கோட்டை அரசிதழில் வெளியிட்டு,
அவர்களுக்கு மறுப்புரைகள், எவையேனுமிருப்பின், அவற்றைப் பரிசீலனை
செய்தல் வேண்டும்.
(4) இந்தப் பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், அரசு, இந்து அல்லது
சமணப் பொது நிலைக்கொடை எதனின் அறங்காவலரால் அல்லது ஒன்றுக்கு
மேற்பட்ட அறங்காவலர்கள் இருக்குமிடத்து, அந்த அறங்காவலர்களால் அல்லது
அவர்களில் பெரும்பான்மையோரால், செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பேரிலும்,
அந்த விண்ணப்பத்தைச் செய்கிற அறங்காவலர் அல்லது அறங்காவலர்களின்.
ஒருங்கிசைவுடனும், அத்தகைய அறநிலைக் கொடைக்கு, இந்தச் சட்டத்தின்
மற்றும் அதன்படி வகுக்கப்பட்ட விதிகள் எவற்றின் வகைமுறைகள்
அனைத்தையும் அல்லது அவற்றில் எவற்றையும் அறிவிக்கை வாயிலாக
நீட்டிக்கலாம் மற்றும் அதன்பேரில், அத்தகைய அறநிலைக்கொடையானது, ஒரு
குறித்தவகை நிலைக்கொடையாக இருந்தாற்போன்றே, அவ்வாறு நீட்டிக்கப்பட்ட
வகைமுறைகள், அத்தகைய அறநிலைக்கொடைக்கும் பொருந்தும்.
4. விலக்களிப்புகள்.- அரசு, அறிவிக்கை வாயிலாக இந்தச் சட்டத்தின் அல்லது
அதன்படி வகுக்கப்பட்ட விதிகள்: எவற்றின் வகைமுறைகளின்
செயற்பாட்டிலிருந்து சமயநிறுவனம் அல்லது சமய அல்லது அறநிலைக்கொடை
எதற்கும் பிண்மேவு அல்லது முன்மேவு செல்திறம் பெறுமாறு விலக்களிக்கலாம்
அல்லது அத்தகைய விலக்கு எதனையும் மாற்றலாம் அல்லது அறவு செய்யலாம்:
வரம்புரையாக: அத்தகைய விலக்களிப்பு, மாற்றப்படுவதற்கு அல்லது அறவு
செய்யப்படுவதற்கு முன்பு, அத்தகைய மாற்றம் அல்லது அறவு செய்தலுக்கு
எதிராகக் காரணம் காட்டுவதற்கு பாதிக்கப்பட்டவருக்கு நியாயமான வாய்ப்பு
அளிக்கப்படுதல் வேண்டும்.
5. குறித்த சில சட்டங்கள் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் நிலைக்
கொடைகளுக்கு பொருந்தாது.- பின்வரும் சட்டங்கள், இந்து சமய நிறுவனங்கள்
மற்றும் நிலைக்கொடைகளுக்குப் பொருந்துவது அற்றுப்போகும்; அவையாவன:-
(ஐ 1817 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலைக்கொடைகள் மற்றும் வாரிசு
இன்மையால் அரசு பொருள்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் (தமிழ்நாடு ஒழுங்குறுத்தும்.
சட்டம் VI/1817).
(௦) 1863 ஆம் ஆண்டு சமய நிலைக்கொடைகள் சட்டம் (மையச் 331863).
() 1890 ஆம் ஆண்டு அறநிலைக்கொடைகள் சட்டம் (மையச் 171890).
(0) 1920 ஆம் ஆண்டு அற மற்றும் சமயக் கட்டளைகள் சட்டம் மற்றும்
(மையச் சட்டம் XIV/1920) மற்றும்
(6) 1908 ஆம் ஆண்டு உரிமையியல் நெறிமுறைத் தொகுப்புச் சட்டத்தின்
92, 93 ஆகிய பிரிவுகள் (மையச் சட்டம் V/1908).
6. பொருள் வரையறைகள்.- இந்தச் சட்டத்தில் இடத்திற்கேற்ப பொருள்
மாறுபட்டாலன்றி,-
(1) "கூடுதல் ஆணையர்" என்பது, 9 ஆம் பிரிவின்படி அமர்த்தப்பட்ட கூடுதல்
ஆணையர் என்று பொருள்படும்;
(1-A) "அறிவுரைக்குழு" என்பது, 7 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி
அரசால் அமைக்கப்பட்ட குழு என்று பொருள்படும்;
(2)
(3) "உதவி ஆணையர்" என்பது, 9 ஆம் பிரிவின்படி அமர்த்தப்பட்ட உதவி
ஆணையர் என்று பொருள்படும்;
(4) "குழுமம்" என்பது, 1926 ஆம் ஆண்டு சென்னை இந்து சமய மற்றும்
அறநிலைக்கொடைகள் சட்டத்தின் (சென்னை சட்டம் 1/1927) 10 ஆம் பிரிவால்
அமைத்துருவாக்கப்பட்ட குழுமம் என்று பொருள்படும்.
(5) "அறநிலைக்கொடை என்பது, ஓய்வு இல்லங்கள், சத்திரங்கள்,
பாடசாலைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வறியவர்களுக்கு உணவளிக்கிற
இல்லங்கள், மற்றும் கல்வி மேம்பாடு, மருத்துவ உதவி, மக்கள் நல்வாழ்வு
ஆகியவற்றுக்கான நிறுவனங்கள் அல்லது இத்தகையதான பிற நோக்கங்கள்:
ஆகியவை போன்று இந்து அல்லது சமண சமூகம் அல்லது அதன் பிரிவு எதற்கும்
பயன்படுவது போன்ற நோக்கங்களுக்கு ஆதரவாக அல்லது அவற்றைப்
பேணுவதற்காக, மேற்சொன்ன சமூகம் அல்லது பிரிவு எதனின் நலனுக்கு அல்லது
அதனால் உரிமையோடு பயன்படுத்துவதற்குக் கொடுக்கப்பட்ட அல்லது
நிலைக்கொடையாக அளிக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் என்று
பொருள்படும்; மற்றும் தொடர்புடைய நிறுவனத்தையும் உள்ளடக்கும்.
(6) "ஆணையர்" என்பது, 9 ஆம் பிரிவின்படி அமர்த்தப்பட்ட ஆணையர்
என்று பொருள்படும்;
(7) நீதிமன்றம்" என்பது-
(i) மாகாணத்தலைநகரில் அமைந்துள்ள மடம் அல்லது கோயில்
தொடர்பாக, சென்னை மாநகர் உரிமையியல் நீதிமன்றம் என்று
பொருள்படும்;
(il) வேறெங்காவது அமைந்துள்ள மடம் அல்லது கோயில் தொடர்பாக
அந்த மடம் அல்லது கோயில் அமைந்துள்ள வரையிடத்தின்மீது
அதிகாரவரம்பு கொண்டுள்ள சார்நிலை நீதிபதியின் நீதிமன்றம் என்று
பொருள்படும், அல்லது அத்தகைய நீதிமன்றம் எதுவும் இல்லாவிடில்,
அத்தகைய அதிகாரவரம்பு கொண்டுள்ள மாவட்ட நீதிமன்றம் என்று
பொருள்படும்;
(0) ஒரு மடம் அல்லது கோயிலுடன் இணைக்கப்பட்ட குறித்தவகை
நிலைக்கொடை தொடர்பாக மடம் அல்லது கோயிலின் மீது
மேற்சொன்னவாறு அதிகாரவரம்பு கொண்டிருக்கக்கூடிய நீதிமன்றம்
என்று பொருள்படும்;
0) இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மடங்கள் அல்லது
கோயில்களுடன் இணைக்கப்பட்ட குறித்தவகை நிலைக்கொடை
தொடர்பாக அத்தகைய மடங்கள் அல்லது கோயில்களில் ஏதேனும் ஒன்று
அல்லது எவை தொடர்பாகவும் மேற்சொன்னவாறு அதிகாரவரம்பு
கொண்டிருக்கக்கூடிய நீதிமன்றம் எதுவும் என்று பொருள்படும்;
(8) துணை ஆணையர் என்பது, 9 ஆம் பிரிவின்படி அமர்த்தப்பட்ட துணை
ஆணையர் என்று பொருள்படும்;
(8-A)
(9) "நிருவாக அலுவலர்" என்பது, இந்தச் சட்டத்தின் அல்லது அதன்படி
வகுக்கப்பட்ட விதியாலோ அல்லது அதன் வழியாலோ அல்லது இந்தச்
சட்டத்தின்படி ஏற்பாடு செய்யப்பட்ட திட்டம் அல்லது ஏற்பாடு செய்யப்பட்டதாகக்
கொள்ளப்படும் திட்டம் எதனாலும் குறித்தளிக்கப்பட்டு சமயநிறுவன
நிருவாகத்தைச் சார்ந்திருக்கிற அத்தகைய அதிகாரங்களைச் செலுத்துவதற்கும்
அத்தகைய கடமைகளை ஆற்றுவதற்கும் அமர்த்தப்பட்டவர் என்று பொருள்படும்;
(10) "அரசு" என்பது, மாநில அரசு என்று பொருள்படும்;
(11) "பரம்பரை அறங்காவலர்" என்பது, எந்தப் பரம்பரை அறங்காவலரது
பதவிக்கான வழியுரிமையானது, பரம்பரை உரிமையாக வந்தடைகிறதோ அல்லது
வழக்கத்தினால் முறைப்படுத்தப்படுகிறதோ அல்லது நிறுவனரால்
குறித்துரைக்கப்பட்டமுறையில் வகைசெய்யப்படு கிறதோ, அத்தகைய
வழியுரிமைத்திட்டம் நடைமுறையில் இருக்கும்வரை, சமயநிறுவனத்தின் அந்த
அறங்காவலர் என்று பொருள்படும்;
(12) "ஒன்றாகச் சேர்க்கப்பட்ட திருக்கோயில்" என்பது, | ஆம்
இணைபப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட திருக்கோயில் என்று பொருள்படும்.
(12-84) "ஆய்வாளர்" என்பது, இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள்
நிருவாகத்துறையிலுள்ள ஆய்வாளர் என்று பொருள்படும்;
(12-B) "இணை ஆணையர்" என்பது, 9 ஆம் பிரிவின்படி அமர்த்தப்பட்ட
இணை ஆணையர் என்று பொருள்படும்;
(13) "மடம் என்பது, அதனுடன் இணைக்கப்பட்ட சொத்துக்களுடன்
கூடியதும் மற்றும் ஒரு நிறுவகத்தின் நிறுவனரின் பணிப்புரைக்கு இணங்க,
எவருடைய பதவியானது வழியுரிமையால் வந்தடைகிறதோ அல்லது
வழக்கத்தினால் முறைப்படுத்தப்படுகிறதோ, மற்றும்-
() சமயப் போதனை வழங்குவதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதை
அல்லது ஆன்மீகப் பணி செய்வதைக் கடமையாகக் கொண்டிருக்கிறாரோ,
அல்லது
(i) சீடர் குழுவிற்கு ஆன்ம்கத் தலைமை ஏற்றிருக்கிறாரோ, அல்லது
ஏற்றிருப்பதாக உரிமை கொண்டிருக்கிறாரோ
அவருடைய தலைமையில் உள்ள ஓர் இந்து சமயநிறுவனம் என்று
பொருள்படும்; மேலும், அந்த நிறுவனம் தொடர்பான சமய வழிபாட்டு அல்லது
போதனை இடங்களையும் உள்ளடக்கும்;
விளக்கம்.- மடத்தின் தலைமையிடம் மாநிலத்திற்கு வெளியிலிருந்து அந்த
மடத்தின் சொத்துக்கள் அந்த மாநிலத்திற்குள் அமைந்துள்ளவிடத்து,
மாநிலத்திற்குள் அமைந்துள்ள மடத்தின். சொத்துக்கள்
தொடர்புடையதாயிருக்குமளவுக்கு, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு
இணங்க மடத்தின் மீது கட்டுப்பாடு செய்யப்படுதல் வேண்டும்;
(14) "பரம்பரை வழியல்லாத அறங்காவலர்" என்பது, பரம்பரை அறங்காவலராக
இல்லாத அறங்காவலர் என்று பொருள்படும்;
(15) "ரித்தமுடையவர்" என்பது,-
(8) மடத்தைப் பொறுத்தவரையில், அந்த மடத்தின் சீடர் அல்லது மடம்
சார்ந்திருக்கிற சமயக்கோட்பாட்டை பின்பற்றுகிறவர் என்று பொருள்படும்;
(௦) கோயிலைப் பொறுத்தவரை, கோயிலில் வழிபாடு அல்லது பணியை
நிறைவேற்றுவதற்காக வந்திருப்பதற்கு உரிமை கொண்ட அல்லது
வந்திருக்கும் வழக்கமுடைய அல்லது அவற்றில் அளிக்கப்படும் பொருள்கள்
வழங்குவதிலே ஏற்படும் நன்மையில் பங்கு கொள்வதற்கு உரிமை
கொண்டவர் அல்லது பங்கு கொள்ளும் வழக்கமுடையவர் என்று
பொருள்படும்;
(௦ குறித்தவகை நிலைகொடையைப் பொறுத்தவரை, பணி அல்லது
அறப்பணியை நிறைவேற்றும்போது வந்திருக்கும் உரிமைகொண்ட அல்லது
வந்திருக்கும் வழக்கமுடைய அந்த அறத்திற்குரிய நன்மையில் பங்கு
கொள்வதற்கு உரிமைகொண்டவர் அல்லது பங்குகொள்ளும்
வழக்கமுடையவர் என்று பொருள்படும்;
(16) "சமய அறப்பணி என்பது, அது மடம் அல்லது கோயிலுடன்
தொடர்புடையதாக இருப்பினும் அல்லது இல்லாவிடினும், இந்துப் பண்டிகையுடன்
அல்லது சமயத்தன்மையதான சடங்குகளை கடைப்பிடிப்பதுடன் தொடர்புடைய
பொது அறப்பணி என்று பொருள்படும்;
(17) "சமயநிலைக்கொடை" அல்லது "நிலைக்கொடை" என்பது, மடங்கள்
அல்லது கோயில்களுக்குச் சொந்தமாக இருக்கிற அல்லது அவற்றைப்
பேணுவதற்காக அளிக்கப்பட்ட அல்லது நிலைக்கொடையாக வழங்கப்பட்ட
அல்லது அவற்றோடு தொடர்புடைய பொதுத் தண்மையதான பணி அல்லது
அறப்பணி எதனையும் அல்லது பிற சமய அறப்பணி எதனையும் செய்வதற்காக
அளிக்கப்பட்ட அல்லது நிலைக்கொடையாக வழங்கப்பட்ட சொத்துக்கள்
அனைத்தும் என்று பொருள்படும்; மற்றும் தொடர்புடைய நிறுவனத்தையும் அதன்
இடங்களையும்கூட உள்ளடக்கும்; ஆனால், சமய நிறுவனத்தின் அர்ச்சகருக்கு,
பூசைப்பணி உதவியாளருக்கு அல்லது பிற வேலையாளுக்குச்
சொந்தப்பயன்பாட் டிற்காக கொடையாக அளிக்கப்பட்ட நன்கொடைச் சொத்தினை
உள்ளடக்காது.
விளக்கம் (1): சமய நிறுவனத்தில் அல்லது அதற்குத் தொடர்பான பணி
அல்லது அறப்பணி எதனையும் புரிவதற்காக ஒரு சமய நிறுவனத்தின்
அர்ச்சகருக்கு, பூசைப்பணி உதவியாளருக்கு அல்லது பிற வேலையாளுக்கு
அளிக்கப்பட்ட இனாம் எதுவும், அந்த அர்ச்சகருக்கு, பூசைப் பணி உதவியாளருக்கு
அல்லது பிற வேலையாளுக்குச் சொந்தப் பயன்பாட்டிற்கான கொடையாகக்
கொள்ளப்படுதல் ஆகாது, ஆனால், சமய நிலைக்கொடையாகக் கொள்ளப்படுதல்
வேண்டும்.
விளக்கம் (2): சமய நிறுவனத்திற்குச் சொந்தமாயிருந்த அல்லது
அதைப்பேணுவதற்காக அளிக்கப்பட்டிருந்த அல்லது நிலைக்கொடையாக
வழங்கப்பட்டிருந்த அல்லது அதனுடன் தொடர்புடைய பொதுத் தண்மையதான
பணி அல்லது அறப்பணி எதனையும் அல்லது பிற சமய அறப்பணி எதனையும்
புரிவதற்காக அளிக்கப்பட்டு அல்லது கொடையாக வழங்கப்பட்டிருந்த
சொத்துக்கள் அனைத்தும், இந்தச் சட்டத்தின் தொடக்கத்தேதிக்கு முன்பு அல்லது
பின்பு, அந்தச் சமயநிறுவனம் இல்லாது போயிருந்தபோதிலும் அல்லது சமய
வழிப்பாட்டு அல்லது சமயபோதனை இடமாகப் பயன்படுத்தப்படாதிருந்த போதிலும்
அல்லது பணி அல்லது அறப்பணி புரியப்படுவது நிறுத்தப்பட்டிருந்த போதிலும்,
இந்தப் பொருள்வரையறை பொருள்தருவது போல, சமயநிலைக் கொடையாக
அல்லது நிலைக் கொடையாகக் கொள்ளப்படுதல் வேண்டும்:
வரம்புரையாக: இந்த விளக்கம், 1951, செப்டம்பர் 3௦க்கு முன்பு ஆள்
எவரிடமும் மேவிநிற்கிற சொத்து எதைப் பொறுத்தும், காலவரம்புச் சட்டத்தின்
செயற்பாட்டின் மூலம் பொருந்துவதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.
(18) "சமய நிறுவனம்" என்பது, மடம், கோயில் அல்லது குறித்தவகை
நிலைக்கொடை என்று பொருள்படும்;
(19) "குறித்தவகை நிலைக்கொடை" என்பது, மடம் அல்லது கோயிலில்
குறித்தவகைப் பணி அல்லது அறப்பணி எதனையும் புரிவதற்காக அல்லது பிற சமய
அறப்பணி எதையும் புரிவதற்காக நிலைக்கொடையாக வழங்கப்பட்ட சொத்து
அல்லது பணம் எதுவும் என்று பொருள்படும்; ஆனால், (17) ஆம் கூறின் (1) ஆம்
விளக்கத்தில் விவரிக்கப்பட்ட தன்மையதான இனாமை உள்ளடக்காது;
விளக்கம் (1) : பொது அறங்காவலரிடம் நிருவாகம் மேவிநிற்கிற அல்லது
இந்தச் சட்டத்தின்படி ஏற்பாடு செய்யப்பட்ட அல்லது ஏற்பாடு செய்யப்பட்டதாகக்
கொள்ளப்பட்ட பொதுத்திட்டத்தின்படி மேலாண்மை செய்யப்படுகிற இந்தக் கூறில்
குறித்துரைக்கப்பட்ட தன்மையான இரண்டு அல்லது அவற்றிற்கும் மேற்பட்ட
நிலைக்கொடைகள், இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக ஒரே குறித்தவகை
நிலைக்கொடையாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.
விளக்கம் (2) : மடம் அல்லது கோயிலுடன் இணைக்கப்பட்ட குறித்தவகை
நிலைக்கொடை ஒரு பகுதி மாநிலத்திற்குள்ளும் ஒரு பகுதி மாநிலத்திற்கு
வெளியிலும் அமைந்திருக்குமிடத்து, மாநிலத்திற்குள் அமைந்துள்ள குறித்தவகை
நிலைக்கொடையின் பகுதியின்ம்தான கட்டுப்பாடு, இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்கு இணங்கச் செய்யப்படுதல் வேண்டும்.
(20) "கோயில்" என்பது, அது எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், சமயப்
பொது வழிபாட்டு இடமாகப் பயன்படுத்தப்படுகிறதும், இந்துச் சமுதாயம் அல்லது
அதன் பிரிவு எதற்கும் சமயப் பொது வழிபாட்டு இடமாக காணிக்கையாக்கப்பட்டதும்
அல்லது அதன் நலனுக்கானதுமான அல்லது அதனால் உரிமையோடு
பயன்படுத்தப்பட்டதுமான இடம் என்று பொருள்படும்;
விளக்கம்: மாநிலத்திற்கு வெளியே அமைந்துள்ள கோயிலுக்கு
மாநிலத்திற்குள் சொத்துக்கள் அமைந்திருக்குமிடத்து, உரிய மாநிலத்திற்குள்:
அமைந்துள்ள கோயில் சொத்துக்களைப் பொறுத்தவரையில், அந்தக் கோயிலின்
மீதான கட்டுப்பாடு இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு இணங்கச்
செலுத்தப்படுதல் வேண்டும்;
(20-A)
(21) "உரிமைமாற்றம் செய்யப்பட்ட ஆட்சிநிலவரை" என்பது, கன்னியாகுமரி
மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம் என்று
பொருள்படும்;
(22) "அறங்காவலர்" என்பது, சமயநிறுவனத்தின் நிருவாகம் எந்த ஆளிடம்
அல்லது குழுமம் எதனிடம் மேவி நிற்கிறதோ அவர் அல்லது அது எந்தப் பெயரில்
அழைக்கப்பட்டாலும் சரி அந்த ஆள் எவரும் அல்லது குழுமம் எதுவும் என்று
பொருள்படும்; மற்றும் எந்த ஆள் அல்லது குழுமம் அறங்காவலராக
இருந்தாற்போன்று கடப்பாடுடையதாக இருக்கிறாரோ அல்லது இருக்கிறதோ அந்த
ஆள் அல்லது குழுமத்தை உள்ளடக்கும்.
(23) "ஒன்றாகச் சேர்க்கப்படாத திருக்கோயில்" என்பது, இணைப்புப் பட்டியல்
॥ இல் குறிப்பிடப்பட்ட திருக்கோயில் என்று பொருள்படும்.
அத்தியாயம் 1-A விட்டுவிடப்பட்டது
7. அறிவுரைக்குழுவினை அமைத்தல்.- (1) அரசு, பின்வரும் உறுப்பினர்களைக்
கொண்ட அறிவுரைக்குழு என்று அழைக்கப்படும் ஒரு குழுவினை, தமிழ்நாடு
மாநிலத்திற்காக அமைக்கும்:-
(ஐ) முதலமைச்சர், பதவிவழியில் தலைவராக இருப்பார்;
(௦) இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் துறையின் பொறுப்பைக்
கொண்டுள்ள அமைச்சர், பதவி வழியில் துணைத்தலைவராக இருப்பார்;
(6) இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் துறையின் பொறுப்பைக்
கொண்டுள்ள அரசு செயலர், பதவிவழியில் உறுப்பினராக இருப்பார்;
(0) இந்து சமயத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டு அரசால்
நியமிக்கப்படும் அலுவல் சார்பற்ற உறுப்பினர்கள், அவர்களில் ஓர் உறுப்பினர்,
பட்டியல் சாதியினரை அல்லது பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்தவராக இருப்பார்;
(e) ஆணையர், பதவி வழியில் உறுப்பினர்-செயலராக இருப்பார்;
(2) அலுவல்சார்பற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம், மூன்றாண்டுகள்:
ஆகும், மற்றும் அறிவுரைக்குழு தொடர்பான பிற பொருட்பாடுகள்
அனுமதிக்கப்படலாகுமாறு இருக்கும்.
(3) அரசு, காரணங்காட்டுவதற்கான அறிவிப்பு கொடுத்த பின்பு,
பொதுநலனின் பொருட்டு, அறிவுரைக் குழுவின் அலுவல் சார்பற்ற உறுப்பினர்கள்.
அனைவரையும் அல்லது அவர்களில் எவரையும் நீக்கலாம்.
ரத
7-௨. கோயில் நிருவாகக் குழுவின் தலைமையரின் சிறப்பு அதிகாரங்கள்.-
இந்தச் சட்டத்தில் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளில் அடங்கியுள்ள எது
எவ்வாறிருப்பினும், கோயில் நிருவாகக் குழுவின் தலைமையர்,-
(a) சமய நிறுவனம் எதனையும் பொறுத்து, மதிப்பு ஓர் இலட்சம் ரூபாய்க்கு
மேற்படுகிற அல்லது ஐம்பது இலட்சம் ரூபாய்க்கு மேற்படாத பணி எதனையும்
நிறைவேற்றுவதற்கான கருத்துருவிற்கு ஒப்பேற்பளிப்பதற்கு;
(b) தலைமையர் பொருத்தமெனக் கொள்ளலாகும் மாற்றமைவுகளுக்கும்
வரைக்கட்டுகளுக்கும் உட்பட்டு, அத்தப் பணிக்கான திட்டவரைபடங்களுக்கும்
மதிப்பீடுகளுக்கும் ஒப்பளிப்பதற்கும்;
(6) அந்தப் பணியை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு
ஒப்பேற்பளிப்பதற்கு;
தகுதியுடைய அதிகாரியாக இருப்பார்.
விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக "பணி" என்பது,-
(ஐ ஒரு சமய நிறுவனத்தின் வளாகங்கள் அல்லது நீர்ப்பாசனத்தை
எளிதாக்குவதற்கு அல்லது நீர்ப்பாசன வசதிகளை அதிகரிப்பதற்கான பணி
உள்ளடங்கலாக, சமய நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான கட்டடம் அல்லது பிற
அமைப்பு எதனையும் கட்டுதல், பழுதுபார்த்தல், மாற்றுதல், பாதுகாத்தல் அல்லது
புதுப்பித்தல் தொடர்பான பணி எதனையும்;
(௦) ஒரு சமய நிறுவனத்தைப் பொறுத்து, கோபுரம், விமானம், கல்மண்டபம்
அல்லது காரையால் செய்த வேலைப்பாட்டுடன் கூடிய பிற கல்லாலான அமைப்பு
தொடர்பான பணி எதனையும்
உள்ளடக்கும்.
7-F. கோயில் நிருவாகக் குழுவின் அல்லது மாவட்டக் குழுவின்
உறுப்பினர்களுக்கான தகுதிக் கேடுகள்.
ஒருவர் -
(a) அவர் இந்து சமயத்தை வெளிப்படையாக ஏற்றுக்
கொள்ளாதிருப்பாராயின்,
(௦) அவர் விடுவிப்பு பெறாத நொடிப்பு நிலையராக இருப்பாராயின்,
(6) கோயில் நிருவாகக் குழு அல்லது மாவட்டக்குழுவின் உறுப்பினருடைய
பதவிப்பணிகளைப் புரிவதற்கும், உறுப்பினரின் கடமைகளை ஆற்றுவதற்கும்
அவரைத் தகுதியற்றவராக ஆக்கக்கூடிய அளவிற்கு மனச்சீர்கேடுடையவராக
இருப்பாராயின் அல்லது பிறமனநலக்குறைவினால் அல்லது மனத்தளர்ச்சியால்
துன்புறுவாராயின்,
(1) சமய நிறுவனத்தின் குத்தகையிலுள்ள சொத்து எதிலும் அல்லது
அதனுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் அல்லது அதற்காகச் செய்யப்படும் பணி
எதிலும் உரித்தமுடையவராக இருப்பாராயின் அல்லது அத்தகைய சமய நிறுவனம்
அல்லது நிலைக்கொடைக்கு எந்தவகையான நிலுவைத் தொகையும் அவரால்
கொடுபட வேண்டியதாக இருக்குமாயின்,
(e) அவர் சமய நிறுவனத்தின் சார்பாக அல்லது அதற்கு எதிராக ஊதியம்
பெறும் சட்டத்தொழிலாற்றுநராக பணியமர்த்தப்படு வாராயின்,
() மைய அரசாங்கத்தின் அல்லது மாநில அரசாங்கம் எதனின் அல்லது
வட்டார அதிகாரஅமைப்பு எதனின் கீழுள்ள பணியிலிருந்து நீக்கப்படுவாராயின்
அல்லது பணியறவு செய்யப்படுவாராயின்,
(ஐ அவருக்கு ஒழுக்கத் தவற்றினை உள்ளடக்கிய குற்றச்செயல்
ஒன்றிற்காக குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்து,
அத்தகைய தண்டனைத் தீர்ப்பு எதிர்மாறாக்கப்படாமல் அல்லது அந்தக்
குற்றச்செயலுக்கு மண்ணிப்பு அளிக்கப்படாமல் இருக்குமாயின்,
(h) அவர் நிறுவனத்தின் நலன்களுக்கு எதிராகச் செயற்படுவாராயின்,
அவர் கோயில் நிருவாகக்குழுவின் அல்லது மாவட்டக்குழுவின் உறுப்பினராக
நியமிக்கப்படுவதற்கும் உறுப்பினராக இருப்பதற்கும் தகுதிக்கேடு உடையவர்
ஆவார்.
அத்தியாயம் ॥
ஆணையர் மற்றும் கட்டுப்பாடு செய்யும் பிற அதிகாரிகள்.
8. இந்தச் சட்டத்தின்படியாண அதிகாரிகள்.- இந்தச் சட்டத்தின்படி பின்வரும்
வகையைச் சார்ந்த அதிகாரிகள் இருப்பர் -
(8) ஆணையர்;
(88) கூடுதல் ஆணையர்;
(b) இணை ஆணையர்கள்;
(C) துணை ஆணையர்கள்; மற்றும்
(d) உதவி ஆணையர்கள்.
9. ஆணையர் முதலானவரை அரசு அமர்த்துதல் (1) அரசு ஆணையரையும்,
கூடுதல் ஆணையரையும் தான் பொருத்தமென கருதும் எண்ணிக்கையிலான
இணை, துணை மற்றும் உதவி ஆணையர்களையும் அமர்த்துதல் வேண்டும்.
(2) (9) ஆணையர் பதலியிடத்திற்கான அமர்த்துகை-
() தமிழ்நாடு மாநில உயர்நிலை நீதித்துறை பணியின் அல்லது
தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியின் அல்லது பிற பணி எதனின்
உறுப்பினர்களிடையேயிருந்து மாற்றல் வாயிலாக, அல்லது
(il) கூடுதல் ஆணையரிலிருந்து பதவி உயர்வு வாயிலாக, அல்லது
(iii) நேடி ஆள் சேர்ப்பு வாயிலாக,
செய்யப்படுதல் வேண்டும்.
(aa) கூடுதல் ஆணையர் பதவியிடத்திற்கான அமர்த்துகை இணை
ஆணையரிலிருந்து பதவி உயர்வு வாயிலாகச் செய்யப்படுதல் வேண்டும்;
(aaa) இணை ஆணையர் பதவியிடத்திற்கான அமர்த்துகை துணை
ஆணையரிலிருந்து பதவி உயர்வு வாயிலாகச் செய்யப்படுதல் வேண்டும்;
(b) துணை ஆணையர் பதவியிடத்திற்கான அமர்த்துகை-
(i) தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியின் அல்லது பிற பணி எதனின்
உறுப்பினர்களிடையேயிருந்து மாற்றல் வாயிலாக, அல்லது
(0) உதவி ஆணையர்களிலிருந்து பதவி உயர்வு வாயிலாக, அல்லது
(1) நேரடி ஆள் சேர்ப்பு வாயிலாக, அல்லது
(iv) உடன்பாடு அல்லது ஒப்பந்தம் வாயிலாக
செய்யப்படுதல் வேண்டும்.
(©) (%)
10 ஆணையர் முதலானோர் இந்துவாக இருத்தல்.- இந்தச் சட்டத்தின்
நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அமர்த்தப்பட்ட ஆணையர், கூடுதல்
ஆணையர், இணை அல்லது துணை அல்லது உதவி ஆணையர்
ஒவ்வொருவரும், மற்றும் வேறு அலுவலர் அல்லது பணியாளர் ஒவ்வொருவரும்,
எவரால் அமர்த்தப்பட்டிருந்தாலும். இந்து சமயத்தை வெளிப்படையாக
ஏற்றுக்கொண்ட ஒருவராக இருத்தல் வேண்டும் மற்றும் அந்தச் சமயத்தை
வெளிப்படையாக ஏற்றுக்கொண்டிருப்பதை விட்டுவிடும்போது அவ்வாறு பதவி
வகிப்பதையும் விட்டுவிடுதல் வேண்டும்.
11. ஆணையர், தணியோர் உரிமைபெற்ற கூட்டுருமமாக இருத்தல்.- ஆணையர்,
தனியோர் உரிமைபெற்ற கூட்டுருமமாக இருப்பார் மற்றும் தொடர்ந்த
நிலைப்பாட்டையும் தனியுறு இலச்சினையையும் உடையவர் ஆவார் மற்றும்
தம்முடைய கூட்டுருமத்தின் பெயரில் வழக்கிடலாம் மற்றும் வழக்கிடப்படலாம்.
12. ஆணையர் முதலானோர் அரசுப் பணியாளர்களாக இருத்தல். (1) இந்தச்
சட்டத்தின் நோக்கங்களுக்காகப் பணியமர்த்தப்பட்ட ஆணையர், கூடுதல்
ஆணையர், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள்
மற்றும் சமய நிறுவனத்தின் நிருவாக அலுவலர்கள் உள்ளடங்கலாக வேறு
அலுவலர்களும் பணியாளர்களும், அரசுப் பணியாளர்களாக இருப்பார்; மற்றும்
அவர்களுடைய சம்பளங்கள், படித்தொகைகள், ஓய்வூதியங்கள் மற்றும் பிற
பணியூதியம் ஆகியவை முதற்படியாக மாநிலத்தின் திரள்நிதியத்திலிருந்து
வழங்கப்படுதல் வேண்டும். சமய நிறுவனங்களின் கணக்குத் தணிக்கை செலவுத்
தொகை முதற்படியாக மாநிலத்தின் திரள்நிதியத்திலிருந்து வழங்கப்படுதல்
வேண்டும்.
(2) (a) ஆணையர், தமிழ்நாடு இந்து சமய அறநிலையக் கொடைகள் நிருவாக
நிதியத்திலிருந்து (1) ஆம் உட்பிரிவின்படி அரசால் வழங்கப்பட்ட தொகைகளை
அரசுக்குத் திருப்பிக் கொடுத்தல் வேண்டும்.
()
(2) () இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியை அடுத்து முன்பு பணிபுரிந்து,
அந்தத் தேதியன்று அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெறுகிற நிருவாக அலுவலர்
எவருக்கும் கொடுக்கத்தக்க ஓய்வூதியம் அல்லது பிற பணியூதியத்தின் பொருட்டு,
வகுத்துரைக்கப்படலாகும் வரைக்கட்டுகளுக்கு உட்பட்டு அந்தத் தேதிக்கு
முந்தைய அத்தகைய அலுவலரின் பணியை அரசின் கணக்கில் எடுத்துக்
கொள்ளலாம்.
(il இந்தச் சட்டத்தின் தொடக்கத்தேதிக்கு முன்பு, உட்கூறு () இல்
குறிப்பிடப்பட்ட நிருவாக அலுவலரின் பணிக்கு சாட்டத்தக்க ஓய்வூதியம் அல்லது
பிற பணியூதியத்தின் பகுதியையும் கூட தொடர்புடைய சமயநிறுவனத்திடமிருந்து
ஆணையர் பெறலாம்.
13. கூடுதல் ஆணையருக்கு இணை ஆணையர்களுக்கு அல்லது துணை
ஆணையர்களுக்கு அதிகார ஒப்படைவு.-- (1) ஆணையர் அரசினர் முன்
ஒப்பேற்புடன், இந்தச் சட்டத்தினால் அல்லது அதன்படி வகுக்கப்பட்ட
விதிகளினால் இணை ஆணையர்கள் அல்லது துணை ஆணையர்கள் என்னும்
முறையில் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும், சுமத்தப்பட்ட
கடமைகளையும், ஒன்றுக்கு மேற்பட்ட இணை ஆணையர் அல்லது துணை
ஆணையர் இருப்பாராயின், அவர்கள் ஒவ்வொருவரும் எந்த வரையிடத்தில்
செலுத்தவேண்டுமோ மற்றும் ஆற்றவேண்டுமோ அந்த வரையிடத்தைக்
குறித்துரைத்தல் வேண்டும்.
(2) ஆணையர், இந்தச் சட்டத்தினால் அல்லது அதன்படி வகுக்கப்பட்ட
விதிகளினால் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் அல்லது சுமத்தப்பட்ட
கடமைகள் எவற்றையும் 14 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் வரம்புரையின்படி
ஆணையரால் செலுத்தப்படலாகும் உதவி ஆணையரின் அதிகாரங்களும்
கடமைகளும் உள்ளடங்கலாக, ஆனால் 21, 22, 46, 47, 59, 69. 72 ஆகிய
பிரிவுகளின் அல்லது 92 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்படியான
ஆணையரின் அதிகாரங்களையும் கடமைகளையும் உள்ளடக்காமல், வரையிடம்
எதனைப் பொறுத்தும் அல்லது மாநிலத்தின் அல்லது அதிலுள்ள வரையிடம்
எதிலும் உள்ள நிறுவனங்களின் வகை அல்லது தொகுப்பு எதனைப் பொறுத்தும்,
அரசு பொது அல்லது சிறப்பு ஆணை வாயிலாக விதிக்கலாகும் வரம்புகளுக்கும்
நிபந்தனைகளுக்கும் உட்பட்டும், ஒப்படைவு ஆணையில்
குறித்துரைக்கப்படலாகும் வரம்புகள் மற்றும் நிபந்தனைகள், எவையேனுமிருப்பின்,
அவற்றுக்கு உட்பட்டும் கூடுதல் ஆணையருக்கு இணை ஆணையருக்கு
அல்லது துணை ஆணையருக்கு ஒப்படைவு செய்யலாம்.
(13-A). கூடுதல் ஆணையரின் மற்றும் இணை ஆணையரின் அதிகாரங்களும்
கடமைகளும்.- ஆணையரின் நிருவாக ஆளுகைக்கு உட்பட்டு, கூடுதல்
ஆணையர் அல்லது நேர்வுக்கேற்ப இணை ஆணையர் அரசால் அவ்வப்போது,
தீர்மானிக்கப்படலாகும் ஆணையரின் அதிகாரங்களைச் செலுத்துதலும்,
கடமைகளை ஆற்றுதலும் வேண்டும். மற்றும் அத்தகைய அதிகாரங்களைச்
செலுத்துகையிலும், கடமைகளை ஆற்றுகையிலும் கூடுதல் ஆணையரால்
அல்லது நேர்வுக்கேற்ப இணை ஆணையரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை எதுவும்
அல்லது எடுக்கப்பட்டநடவடிக்கைகள் எவையும், இந்தச் சட்டத்தின்.
நோக்கங்களுக்காக ஆணையரின் ஆணையாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
14. உதவி ஆணையர்களின் ஆட்சிநிலவரை அதிகாரவரம்பும், அதிகாரங்களும்,
கடமைகளும்.- (1) ஆணையர், அரசின் முன் ஒப்பேற்புடன் மாநிலத்தைக்
கோட்டங்களாகப் பிரித்தல் வேண்டும், ஒவ்வொரு கோட்டமும் ஓர் உதவி
ஆணையரின் பொறுப்பில் இருத்தல் வேண்டும்.
(2) உதவி ஆணையர், தம்முடையக் கோட்டத்தைப் பொறுத்தவரை, இந்தச்
சட்டத்தினால் அல்லது அதன்படி வகுக்கப்பட்ட விதிகளினால் தமக்கு
வழங்கப்பட்ட அதிகாரங்களைச் செலுத்துதலும் சுமத்தப்பட்ட கடமைகளை
ஆற்றுதலும் வேண்டும்.
வரம்புரையாக: ஆணையர், எழுத்துவடிவிலான ஆணையின் வாயிலாக,
அத்தகைய அதிகாரங்கள், கடமைகள் அனைத்தையும் அல்லது அவற்றில்
எவற்றையும் செலுத்துவதும், ஆற்றுவதும் ஆணையில் குறித்துரைக்கப்படலாகும்
விதிவிலக்குகள், வரம்புகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டிருத்தல்
வேண்டும் என்று விளம்புகை செய்யலாம் மற்றும் அவ்வாறு விலக்களிக்கப்பட்ட
அதிகாரம் அல்லது கடமை எதனையும் தாமே செலுத்தலாம் அல்லது ஆற்றலாம்.
(2-&) (2) ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்குக் குந்தகமின்றி, ஓர்
உதவி ஆணையர்,
(i) தம் கோட்டத்தில் அமைந்திருந்து, 46 ஆம் பிரிவின்படி
வெளியிடப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட கோயில்கள் அல்லாத வேறு
கோயில்கள் அனைத்தையும்:
(i) கோயில்களுடன் இணைக்கப்பட்டு, 46 ஆம் பிரிவின்படி
வெளியிடப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட குறித்தவகை
நிலைக்கொடைகள் அல்லாத வேறு குறித்தவகை நிலைக்கொடையை;
மற்றும்
(i) 3 ஆம் பிரிவின்படி இந்தச் சட்டத்தின் வகைமுறைகள்
நீட்டிக்கப்பட்டுள்ள தம் கோட்டத்திலுள்ள அறநிலைக் கொடைகளைப்
பொறுத்து இந்தச் சட்டத்தினால் அல்லது அதன்படி வகுக்கப்பட்ட விதிகளினால்
அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைச் செலுத்துதலும் சுமத்தப்பட்ட
கடமைகளை ஆற்றுதலும் வேண்டும்:
வரம்புரையாக: இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட உதவி
ஆணையர்களின் அதிகாரவரம்பிற்குள் அடங்கியுள்ள இரண்டு அல்லது
அவற்றிற்கு மேற்பட்ட கோயில்களுக்கு ஒரு குறித்தவகை நிலைக்கொடை
இணைக்கப்பட்டிருக்குமிடத்து அல்லது 3 ஆம் பிரிவின்படி இந்தச் சட்டத்தின்
வகைமுறைகள் நீட்டிக்கப்பட்டுள்ள ஓர் அறநிலைக்கொடை இரண்டு அல்லது
அவற்றிற்கு மேற்பட்ட உதவி ஆணையர்களின் அதிகாரவரம்பிற்குள்:
அமைந்துள்ள சொத்துகளைக் கொண்டதாக இருக்குமிடத்து, உதவி
ஆணையர்களில் எவர் அத்தகைய குறித்தவகை நிலைக்கொடை அல்லது
அறநிலைக்கொடை பொறுத்த அதிகாரங்களைச் செலுத்துதலும் கடமைகளை
ஆற்றுதலும் வேண்டும் என்று ஆணையர் முடிவு செய்தல் வேண்டும்:
மேலும் வரம்புரையாக: குறித்தவகை நிலைக்கொடை, 46 ஆம் பிரிவின்படி
வெளியிடப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
கோயில்களுடன் ஒரு பகுதியும், அவ்வாறு சேர்க்கப்படாத ஒன்று அல்லது அதற்கு
மேற்பட்ட கோயில்களுடன் ஒரு பகுதியும் இணைக்கப்பட்டிருக்குமிடத்து,
அத்தகைய குறித்தவகை நிலைக்கொடையைப் பொறுத்தவரை, ஆணையர்
மட்டுமே அதிகாரங்களைச் செலுத்தலும், ககமைகளை ஆற்றுதலும் வேண்டும்.
(3) ஆணையர், 21, 22, 46, 47, 59, 69, 72 ஆகிய பிரிவுகளில் அல்லது 92
ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட அதிகாரங்கள் மற்றும் கடமைகள்
அல்லாத வேறு இந்தச் சட்டத்தினால் அல்லது அதன்படி வகுக்கப்பட்ட
விதிகளினால் ஆணையருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் அல்லது
சுமத்தப்பட்ட கடமைகளில் எவற்றையும் உதவி ஆணையரின் கோட்டத்தைப்
பொறுத்து அல்லது நிறுவனம் எதனையும் அல்லது அந்தக் கோட்டத்திலுள்ள
நிறுவனங்களின் வகை அல்லது தொகுதி எதனையும் பொறுத்து, அரசு பொது
அல்லது சிறப்பு ஆணையின் வாயிலாக விதிக்கலாகும் வரையறைகள், கட்டுப்பாடு
இவற்றிற்கு உட்பட்டும், ஒப்படைவு ஆணையில் குறித்துரைக்கப்படலாகும்
வரம்புகள் மற்றும் நிபந்தனைகள், எவையேனுமிருப்பின், அவற்றிற்கு உட்பட்டும்,
உதவி ஆணையருக்கு ஒப்படைவு செய்யலாம்.
(4) ஆய்வாளர், வகுத்துரைக்கப்படலாகும் சமய நிறுவனங்கள் பொறுத்து
இந்தச் சட்டத்தின் அல்லது அதன்படி வகுக்கப்பட்ட விதிகளின்படி, ஒன்று பொது
ஆணை வாயிலாகவோ அல்லது சிறப்பு ஆணை வாயிலாகவோ ஆணையரால்
அவருக்குக் குறித்தளிக்கப்படலாகும் கஉகமைகளை ஆற்றுதல் வேண்டும்.
15, 16, 17, 18, 19 மற்றும் 20 ஆகிய பிரிவுகள்]
21. பதிவணங்களைத் தருவித்து ஆணைகள் பிறப்பிக்க ஆணையரின் அதிகாரம்.-
(1) ஆணையர் இந்தச் சட்டத்தினால் நீதிமன்றத்திற்கு உரிமைவழக்கு அல்லது
மேல்முறையீட்டிற்கு வகைசெய்யப்பட்டிருக்கிறது பொறுத்தும், அல்லது இணை
அல்லது துணை ஆணையருக்கு பிரிவு 21-& பிரிவின்படி மேலாய்வுக்காக ஒரு
விண்ணப்பம் செய்யப்பட்டு, அவரால் முடிவு செய்யப்படாமல் இருப்பது
பொறுத்துமான நடவடிக்கை அல்லாத இந்தச் சட்டத்தின்படியான நடவடிக்கை
எதைப் பொறுத்தும், அத்தகைய நடவடிக்கையின் முறைமை குறித்து அல்லது
அதில் செய்யப்பட்ட முடிவு அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனின் சீர்மை,
சட்டசீலம் அல்லது பொருத்தமுடைமை குறித்து தாம் தெளிவுறக்காணும்
வகையில், இணை அல்லது துணை அல்லது உதவி ஆணையர் எவரின் அல்லது
ஒரு மடம் அல்லாத வேறு சமய நிறுவனத்தின் அல்லது ஒரு மடத்துடன்
இணைக்கப்பட்ட குறித்தவகை நிலைக்கொடையின் அறங்காவலர் எவரின்.
பதிவணங்களைத் தருவித்து ஆய்வு செய்யலாம்.
(2) இணை அல்லது துணை அல்லது உதவி ஆணையர் எவராலும் அல்லது
மடம் அல்லாத வேறு சமயநிறுவனத்தின் அல்லது மடத்துடன் இணைக்கப்பட்ட
குறித்தவகை நிலைக்கொடையின் மற்றும் 46 ஆம் பிரிவின்படி வெளியிடப்பட்ட
பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒன்று அல்லாத பிறவற்றின் அறங்காவலரால் முடிவு
எதுவும் செய்யப்பட்டிருந்து அல்லது ஆணை எதுவும் பிறப்பிக்கப்பட்டிருந்து, முடிவு
அல்லது ஆணை மாற்றமைவு செய்யப்பட, அழித்தறவு செய்யப்பட,
எதிர்மாறாக்கப்பட அல்லது மறு பரிசீலனைக்காகத் திருப்பி அனுப்பப்பட
வேண்டுமென்று ஆணையருக்குத் தோன்றுமாயின், அதற்கிணங்க அவர்
ஆணைகள் பிறப்பிக்கலாம்.
(3) (@) [xxx] 46 ஆம் பிரிவின்படி வெளியிடப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட
சமய நிறுவனம் எதனின் அறங்காவலரால் அத்தகைய முடிவு எதுவும்
செய்யப்பட்டிருக்குமாயின் அல்லது ஆணை எதுவும்
பிறப்பிக்கப்பட்டிருக்குமாயின், ஆணையர், தாம் பொருத்தமெனக் கருதும், அந்த
முடிவு அல்லது ஆணையின் ஆணையின் மறு பரிசீலனைக்காகவும்,
ஆணையரால் இதற்கெனக் குறித்துரைக்கப்படவேண்டிய காலஅளவிற்குள்
அவருக்கு அறிக்கை செய்வதற்காகவும் அதைப்பற்றிய தம் கருத்துக்களுடன்
இந்தப் பொருட்பாட்டை அறங்காவலருக்குத் திருப்பியனுப்பலாம்;
(b) அத்தகைய அறிக்கை கிடைத்ததன் பேரிலும், அதன் மறுபரிசீலனைக்குப்
பின்பும், அந்த முடிவு அல்லது ஆணையை, அவ்வாறு மறுபரிசீலனை செய்யப்பட்ட
பின்பு திருத்தியமைக்கப்பட்டபடி, நேர்வுக்கேற்ப, மாற்றமைவு செய்ய, அழித்தறவு
செய்ய அல்லது எதிர்மாறாக்க ஆணையருக்கு உரிமை உண்டு;
(69) அந்த அறிக்கையானது, குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் அல்லது
ஆணையரால் அனுமதிக்கப்படலாகும் மேலுமான காலத்திற்குள் அவரால்
பெறப்படவில்லையாயின், ஆணையர், அறங்காவலரின் முடிவு அல்லது
ஆணையை மாற்றமைவு செய்யலாம். அறவு செய்யலாம் அல்லது
எதிர்மாறாக்கலாம்.
(4) (ஐ ஆணையர், இந்தச் சட்டத்தால் நீதிமன்றத்திற்கு உரிமைவழக்கு
அல்லது மேல்முறையீட்டிற்கு வகைசெய்யப்பட்டுள்ளது பற்றிய
நடவடிக்கையாயிராத இந்தச் சட்டத்தின்படியான நடவடிக்கை எதைப்பற்றியும்
அதில் செய்யப்பட்ட முடிவு அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனின் சட்ட
சீலத்தைப் பற்றி தான் தெளிவுறக்காணும் வகையில், ஒரு மடத்தின் அல்லது ஒரு
மடத்துடன் இணைக்கப்பட்ட குறித்தவகை நிலைக்கொடையின் அறங்காவலர்
எவருடைய பதிவணத்தையும் தருவித்து ஆய்வு செய்யலாம்;
(b) ஒரு மடத்தின் அல்லது ஒரு மடத்துடன் இணைக்கப்பட்ட குறித்தவகை
நிலைக்கொடையின் அறங்காவலரால் சட்டத்திற்கு முரணாக அத்தகைய முடிவு
எதுவும் செய்யப்பட்டிருந்து அல்லது ஆணை எதுவும் பிறப்பிக்கப்பட்டிருந்து, அந்த
முடிவு அல்லது ஆணை மாற்றமைவு செய்யப்பட, அறவு செய்யப்பட,
எதிர்மாறாக்கப்பட அல்லது மறுபரிசீலனைக்காகத் திருப்பி அனுப்பப்பட
வேண்டுமென்று ஆணையருக்குத் தோன்றுமாயின், அதற்கிணங்க, அவர்,
ஆணைகள் பிறப்பிக்கலாம்.
(5) ஆணையர் (2) ஆம் உட்பிரிவின்படி அல்லது (3) ஆம் உட்பிரிவின் (௦)
அல்லது (௦) கூறின்படி அல்லது (4) ஆம் உட்பிரிவின் (௦) கூறின்படி, தரப்பினர்
எவருக்கும் குந்தகம் விளைவிக்கும் ஆணை எதுவும், அவர் கேட்கப்படாமல்
அல்லது அவர் கேட்கப்படுவதற்கு நியாயமான வாய்ப்பு கொடுக்கப்படாமல்
பிறப்பிக்கப்படுதல் ஆகாது.
(6) ஆணையர், (1) ஆம் உட்பிரிவில் அல்லது (4) ஆம் உட்பிரிவின் (a)
கூறில் சுட்டப்பட்ட தண்மையதான முடிவு அல்லது ஆணை எதனையும்,
அதைப்பொறுத்து (2) ஆம் உட்பிரிவின் அல்லது (3) ஆம் உட்பிரிவின் படியான
அல்லது (4) ஆம் உட்பிரிவின் (௦) கூறின் படியான தம் அதிகாரங்களைச்
செலுத்துகிற வரையில், நிறைவேற்றுவதை நிறுத்திவைக்கலாம்.
(7) இந்தப் பிரிவின்படி ஆணையரின் அதிகாரங்களைச் செலுத்துவதற்காக
அவருக்குச் செய்யப்படும் விண்ணப்பம் ஒவ்வொன்றும், அந்த விண்ணப்பம்
தொடர்பான ஆணை அல்லது நடவடிக்கை விண்ணப்பதாரருக்கு அனுப்பப்பட்ட
தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் முன்னிடப்படுதல் வேண்டும்.
21-A. பதிவணங்களைத் தருவித்து ஆணைகள் பிறப்பிக்க இணை அல்லது
துணை ஆணையரின் அதிகாரங்கள் (1) இணை அல்லது துணை ஆணையர்,
நீதிமன்றத்திற்கு உரிமை வழக்கு அல்லது மேல்முறையீட்டிற்காக இந்தச்
சட்டத்தினால் வகைசெய்யப்பட்டது பற்றிய நடவடிக்கையாயிராத இந்தச்
சட்டத்தின்படியான நடவடிக்கை எதனைப் பொறுத்தும், அத்தகைய
நடவடிக்கையின் முறைமை அல்லது அதில் செய்யப்பட்ட முடிபு அல்லது
பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனின் சீர்மை, சட்டசீலம் அல்லது பொருத்தமுடைமை
குறித்து, தாம் தெளிவுறக் காணும் வகையில், உதவி ஆணையர் எவரின்
பதிவணத்தையும் தருவித்து ஆய்வு செய்யலாம்.
(2) உதவி ஆணையர் எவராலும் அத்தகைய முடிபு எதுவும்
செய்யப்பட்டிருந்து அல்லது ஆணை எதுவும் பிறப்பிக்கப்பட்டிருந்து, அந்த முடிபு
அல்லது ஆணை மாற்றியமைக்கப்பட, அழித்தறவு செய்யப்பட, எதிர்மாறாக்கப்பட
அல்லது மறு பரிசீலனைக்காக திருப்பி அனுப்பப்பட வேண்டுமென்று இணை
அல்லது துணை ஆணையருக்குத் தோன்றுமாயின், அதற்கிணங்க அவர்,
ஆணைகளைப் பிறப்பிக்கலாம்.
(3) (2) ஆம் உட்பிரிவின்படி தரப்பினர் எவருக்கும் குந்தகம் விளைவிக்கும்
ஆணை எதுவும், அவர் கேட்கப்படாமல் அல்லது அவருக்குக் கேட்கப்படுவதற்கு
நியாயமான வாய்ப்பு கொடுக்கப்படாமல் இணை அல்லது துணை ஆணையரால்
பிறப்பிக்கப்படுதல் ஆகாது.
(4) இணை அல்லது துணை ஆணையர், (1) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட
தன்மையதான முடிபு அல்லது ஆணை எதனையும், அதனைப் பொறுத்து (2) ஆம்
உட்பிரிவின்படி தம் அதிகாரங்களைச் செலுத்துகிறவரையில், நிறைவேற்றுவதை
நிறுத்திவைக்கலாம்.
(5) இந்தப் பிரிவின்படி இணை அல்லது துணை ஆணையரின்
அதிகாரங்களைச் செலுத்துவதற்காக அவருக்குச் செய்யப்படும் விண்ணப்பம்
ஒவ்வொன்றும், அந்த விண்ணப்பம் தொடர்பான முடிபு அல்லது ஆணை
விண்ணப்பதாரருக்கு அனுப்பப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்:
முன்னிடப்படுதல் வேண்டும்.
22. ஆணையரின் பிற அதிகாரங்கள்.- (1) ஆணையர்-
(ஐ) இணை அல்லது துணை அல்லது உதவி ஆணையரின் முன்பு முடிவுறா
நிலையிலுள்ள நடவடிக்கை எதனையும் தன் சொந்தக் கோப்பிற்கு மாற்றல்
செய்துகொண்டு தானே முடிவு செய்வதற்கு, அல்லது
(௦) முடிவு செய்யப்படுவதற்காக பிறிதோர் இணை அல்லது துணை அல்லது
உதவி ஆணையருக்கு மாற்றல் செய்வதற்கு,
எந்தக் கட்டத்திலும் அதிகாரம் உடையவர் ஆவார்.
(2) ஓர் இணை அல்லது துணை அல்லது உதவி ஆணையர், அவர் செலுத்த
வேண்டிய அதிகாரம் எதனையும் செலுத்துவதற்கு அல்லது கடமை எதனையும்
ஆற்றுவதற்குத் தவறியிருக்கிறார் என்பதாக ஆணையர் தெளிவுறக்
காண்பாராயின், ஆணையர், தாமே அத்தகைய அதிகாரத்தைச் செலுத்தலாம்
அல்லது அத்தகைய கடமையை ஆற்றலாம்.
3)
(4) இந்தச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்தபோதிலும், இணை அல்லது
துணை அல்லது உதவி ஆணையரின் பதவி காலியாக இருக்கிறவிடத்து,
ஆணையர், அந்தக் காலியிடம் நிரப்பப்படுகிறவரை-
(ஐ இந்தச் சட்டத்தினால் அல்லது அதன்படி வகுக்கப்பட்ட விதிகளால்
இணை அல்லது துணை அல்லது உதவி ஆணையருக்கு வழங்கப்பட்ட
அதிகாரங்களைத் தாமே செலுத்தலாம் மற்றும் சுமத்தப்பட்ட கடமைகளைத்
தாமே ஆற்றலாம், அல்லது
(b) மேற்சொன்ன அதிகாரங்களைச் செலுத்தவும், மேற்சொன்ன
கடமைகளை ஆற்றவும் பிறிதோர் இணை அல்லது துணை அல்லது உதவி
ஆணையருக்கு அதிகாரமளிக்கலாம்.
(5) எந்த ஆணையை எதிர்த்து, இந்தச் சட்டத்தில் நீதிமன்றத்தில் உரிமை
வழக்கு தொடுக்க அல்லது மேல்முறையீடு செய்ய வகை செய்யப்பட்டிருக்கிறதோ
அந்த ஆணையாக இல்லாத, ஆணையரின், (1) (ஐ. (2) அல்லது (4) (a)
உட்பிரிவுகளின்படியான ஓர் ஆணையால் குறையுற்ற தரப்பினர் எவரும். அவரால்
அந்த ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அரசுக்கு
மேல்முறையீடு செய்யலாம்.
வரம்புரையாக: தரப்பினர் எவரும், தமது வாதத்தை எடுத்துரைப்பதற்கு
நியாயமான வாய்ப்பு ஒன்றைப் பெற்றிருந்தாலன்றி, அவருக்கு
குந்தகமானதாகவுள்ள ஆணை எதனையும் அரசு பிறப்பித்தலாகாது.
அத்தியாயம் ॥
சமய நிறுவனங்கள்
பொது வகைமுறைகள்
23. கோயில்கள் மற்றும் சமய நிலைக்கொடைகனைப் பொறுத்து ஆணையரின்
அதிகாரங்களும் கடமைகளும்.- இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு
உட்பட்டு, கோயில்கள் அனைத்தும் அதனுடன் இணைக்கப்பட்ட குறித்தவகை
நிலைக்கொடைகள் உள்ளடங்கலாக மற்றும் சமயநிலைக் கொடைகள்
அனைத்தும் ஆணையரின் பொதுக்கண்காணிப்பிற்கும் கட்டுப்பாட்டிற்கும்
உட்பட்டிருக்கும் மற்றும் அத்தகைய கண்காணிப்பும் கட்டுப்பாடும். அத்தகைய
கோயில்களும் நிலைக்கொடைகளும் உரியவாறு நிருவகிக்கப்படுகின்றன
என்பதையும், அவற்றின் வருமானங்கள், அவை எந்த நோக்கங்களுக்காக
அமைக்கப்பட்டனவோ அல்லது இருந்து வருகின்றனவோ அந்த
நோக்கங்களுக்காக உரியவாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும்
உறுதிசெய்து கொள்வதற்குத் தேவையெனக் சுருதலாகும் ஆணைகள்
எவற்றையும் பிறப்பிப்பதற்கான அதிகாரத்தை உள்ளடக்கும்:
வரம்புரையாக: ஆணையர், கோயில் அல்லது நிலைக்கொடை எதற்கும்,
தொடர்புடைய அறங்காவலர்கள் தங்களது வாதத்தினை எடுத்துரைப்பதற்கு
நியாயமான வாய்ப்பு ஒன்றைப் பெற்றிருந்தாலன்றி, அவற்றிற்குக் குந்தகமாக
உள்ளஆணை எதனையும் பிறப்பித்தல் ஆகாது.
24, சமய நிறுவனங்களில் நுழைவதற்கு அதிகாரம்.-- (1) ஆணையர் அல்லது
கூடுதல் அல்லது இணை அல்லது துணை அல்லது உதவி ஆணையர், அல்லது
ஆணையரால் அல்லது கூடுதல் அல்லது இணை அல்லது துணை ஆணையரால்
அல்லது உதவி ஆணையரால் இதன் பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்
எவரும், இந்தச் சட்டத்தினால் அல்லது அதன்படி வகுக்கப்பட்ட விதிகளினால்
வழங்கப்பட்ட அதிகாரம் எதனையும் செலுத்துகின்ற அல்லது சுமத்தப்பட்ட கடமை
எதனையும் ஆற்றுகின்ற நோக்கத்திற்காக, வழிபாட்டிடம் எதனின்
வளாகத்திற்குள்ளும் நுழைவதற்கு அதிகாரம் உடையவர் ஆவார்.
(2) அத்தகைய அதிகாரத்தைச் செலுத்துகையில் அல்லது அத்தகைய
கடமையை ஆற்றுகையில், அத்தகைய அலுவலர் எவரும் தடை
செய்யப்படுவாராயின், அதிகாரவரம்புடைய குற்றவியல் நடுவர், அத்தகைய
அலுவலரின் எழுத்து வடிவிலான கோரிக்கையின்பேரில் அந்த அலுவலர்
அத்தகைய அதிகாரத்தைச் செலுத்துவதற்கு அல்லது அத்தகைய கடமைகளை
ஆற்றுவதற்குத் தேவையாகலாகும் உதவியை அளிக்குமாறு துணை ஆய்வாளரின்
படிநிலைக்குக் குறையாத காவல் அலுவலர் எவரையும் பணித்தல் வேண்டும்.
(3) கருவறைக்குள் அல்லது பூஜை இடத்திற்குள் அல்லது ஒரு சமய
நிறுவனத்தின் அல்லது வழிபாட்டிடத்தின் வளாகத்திற்குள் உள்ள சிறப்பான புனித
இடமாகக் கொள்ளப்படும் வேறு பகுதி எதிலும் நுழைவதற்கு முன்பு, (1) ஆம்
உட்பிரிவினாலோ அதன் வழியாலோ அதிகாரமளிக்கப்பட்டவர் அல்லது (2) ஆம்
உட்பிரிவால் சுட்டப்பட்ட காவல் அலுவலர், அறங்காவலருக்கு அல்லது அந்த
நிறுவனத்தின் தலைவருக்கு நியாயமான அறிவிப்பைக் கொடுத்தல் வேண்டும்
மற்றும் அந்த நிறுவனத்தின் சமய நடைமுறைக்கு அல்லது வழக்கத்திற்கு உரிய
மதிப்புக் கொடுத்தல் வேண்டும்.
(4) இந்தப் பிரிவில் சுட்டப்பட்ட வளாகங்களில் அல்லது இடம் அல்லது
அதன் பகுதி எதற்குள்ளும் இந்துவாக இல்லாத ஆள் எவரும் நுழைவதற்கு, இந்தப்
பிரிவில் உள்ள எதுவும் அதிகாரமளிப்பதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.
(5) நிறுவனத்தின் சமய நடைமுறை அல்லது வழக்கமானது, கருவறைக்குள்
அல்லது பூஜை அறைக்குள் அல்லது ஒரு சமயநிறுவனத்தில் அல்லது
வழிபாட்டிடத்தின் வளாகத்திற்குள் சிறப்பான புணித இடமாகக் கொள்ளப்படும் பிற
பகுதி எதிலும் (3) ஆம் உட்பிரிவில் சொல்லப்பட்டுள்ள ஆள் அல்லது காவல்
அலுவலர் நுழைவதைத் தடைசெய்கிறதா என்ற வினா எதுவும் எழுமாயின், அந்த
வினாவானது, ஆணையரின் முடிபுக்காகக் குறித்தனுப்பப்படுதல் வேண்டும்.
அத்தகைய வினா எதனையும் குறித்து முடிபு எதனையும் செய்வதற்கு முன்பு,
ஆணையர் தான் பொருத்தமெனக் கருதும் விசாரணையைச் செய்யலாம்.
(5) உட்பிரிவு (5) இன்படி ஆணையரின் முடிபினால் குறையுற்றவர் எவரும்,
முடிபின் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் அரசுக்கு மேல் முறையீடு செய்யலாம்:
வரம்புரையாக: அரசு, தரப்பினர் எவரும், தமது வாதத்தை எடுத்துரைப்பதற்கு
நியாயமான வாய்ப்பு ஒன்றைப் பெற்றிருந்தாலன்றி, அவருக்குக் குந்தகமாகவுள்ள
ஆணை எதனையும் பிறப்பித்தல் ஆகாது.
25௧. ஆணையர் முதலானோர் வினைமுறைகளையும் சடங்குகளையும்
கடைப்பிடித்தல்.- ஆணையர், கூடுதல் ஆணையர் அல்லது இணை ஆணையர்
அல்லது துணை ஆணையர் அல்லது உதவி ஆணையர் மற்றும் இந்தச்
சட்டத்தின்படி கண்காணிப்பு அல்லது கட்டுப்பாடு செய்யும் அதிகாரங்களைச்
செலுத்துகின்ற வேறு ஆள் ஒவ்வொருவரும், எந்தச் சமய நிறுவனத்தைப்
பொறுத்து அத்தகைய அதிகாரங்கள் செலுத்தப்படுகின்றனவோ அந்தச் சமய
நிறுவனத்திற்கு உரிய வினைமுறைகளையும் சடங்குகளையும் இயன்ற அளவு
கடைப்பிடித்தலும், ஒரு மடத்தைப் பொறுத்தவரை, மடத்தின் தலைவருடன்
ஈடுபடுகின்ற தனது நடவடிக்கைகளில் மடத்தின் வழக்கங்களுக்கு இணங்கச்
செயற்படுதலும் வேண்டும்.
26. அறங்காவலரின் தகுதிகள். (1) ஒருவர்-
(a) அவர் இந்து சமயத்தை வெளிப்படையாக ஏற்றுக்
கொள்ளாதிருப்பாராயின்,
(aa) அவர், இந்தியக் குடிமகனாக இல்லாதிருப்பாராயின்;
(௦) பரம்பரை அறங்காவலரைப் பொறுத்தவரை தவிர, அவர் இருபத்து ஐந்து
வயதிற்குக் குறைந்தவராக இருப்பாராயின்,
(6) அவர் விடுவிப்புப் பெறாத தொடிப்புநிலையராக இருப்பாராயின்,
(d) அறங்காவலருடைய பதவிப்பணிகளைப் புரிவதற்கும் கடமைகளை
ஆற்றுவதற்கும் அவரைத் தகுதியற்றவராக ஆக்கக்கூடிய அளவிற்கு
மனச்சீர்கேடுற்றவராக இருப்பாராயின் அல்லது வேறு மனநலக்குறைவினால்
அல்லது மனத் தளர்ச்சியினால் துன்புறுவாராயின் அல்லது தொழுநோயினால்
அல்லது பிற அருவெறுக்கத்தக்க நோய் எதனாலும் துன்புறுவாராயின்;
(6) சமய நிறுவனத்தின் குத்தகையிலுள்ள சொத்து எதிலும் அல்லது
அதனுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் அல்லது அதற்காகச் செய்யப்படும் பணி
எதிலும் உரித்தமுடையவராக இருப்பாராயின் அல்லது அத்தகைய சமயநிறுவனம்
அல்லது நிலைக்கொடைக்கு எந்த வகையான நிலுவைத் தொகையும் அவரால்
கொடுபட வேண்டியதாக இருக்குமாயின்;
() அவர், சமய நிறுவனத்தின் சார்பாக அல்லது அதற்கு எதிராக ஊதியம்
பெறும் சட்டத்தொழிலாற்றுநராக பணியமர்த்தப்படு வாராயின்;
(ff) அவர், மைய அரசின் அல்லது மாநில அரசு எதனின் அல்லது வட்டார
அதிகாரஅமைப்பு எதனின் கீழுமுள்ள பணியிலிருந்து நீக்கப்படுவாராயின் அல்லது
பணியறவு செய்யப்படு வாராயின்;
(ற அவருக்கு ஒழுக்கத்தவற்றினை உள்ளடக்கிய குற்றத்திற்காக
குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டனைத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்து, அத்தகைய
தண்டனைத்தீர்ப்பு எதிர் மாறாக்கப்படாதிருப்பின் அல்லது அந்தக் குற்றம்
மன்னிக்கப்படாமல் இருக்குமாயின்;
(h) அவர் நிருவாகத்தின் நலன்களுக்கு எதிராகச் செயற்படுவாராயின்:
சமய நிறுவனம் எதனின் அறங்காவலராக அமர்த்தப்படுவதற்கும் அறங்காவலராக
இருப்பதற்கும் தகுதியற்றவர் ஆவார்,
(2) ஓர் அறங்காவலர்-
@ (1) ஆம் உட்பிரிவில் சொல்லப்பட்டுள்ள தகுதியின்மைகளில்
எதற்கும் உட்படுவாராயின்; அல்லது
() () உதவி ஆணையரால் அமர்த்தப்பட்ட அறங்காவலரைப்
பொறுத்தவரையில், உதவி ஆணையருக்கு;
101] இணைதுணை ஆணையரால் அமர்த்தப்பட்ட
அறங்காவலரைப் பொறுத்தவரையில், இணை/துணை ஆணையருக்கு;
மற்றும்
(1) பிற நேர்வு எதிலும், ஆணையருக்கு
தம் கையொப்பமிட்டு எழுத்துவழி தெரிவித்து, தண்ணுடைய
பதவியிடத்தை விட்டு விலகுவாராயின், அவருடைய பதவியிடம்
அதன்பேரில் காலியாகி விடும்.
(3) (1) ஆம் உட்பிரிவில் சொல்லப்பட்ட தகுதியிண்மைகளில் எதற்கும் ஓர்
அறங்காவலர் உட்பட்டிருக்கிறாரா என்ற வினா எதுவும் எழுமாயின், அந்த வினா
இணை/துணை ஆணையரின் முடிபிற்காகக் குறித்தனுப்பப்படுதல் வேண்டும்.
(4) பரம்பரை அறங்காவலர் ஒருவர், (1) ஆம் உட்பிரிவில் சொல்லப்பட்டுள்ள
தகுதியின்மைகளில் எதற்கும் உட்பட்டிருப்பாராயின், இணை ஆணையர் அல்லது
நேர்வுக்கேற்ப துணை ஆணையர், அறங்காவலரைப் பதவியிலிருந்து
நீக்கிவிடலாம்.
(5 ௫ ஆம் உட்பிரிவு அல்லது (4) ஆம் உட்பிரிவின்படியான இணை/
துணை ஆணையரின் ஆணையினால் பாதிக்கப்பட்டவர் எவரும், அவரால்
ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள், அந்த ஆணையை
எதிர்த்து ஆணையருக்கு மேல்முறையீடு செய்யலாம்.
(6) எந்தச் சமய நிறுவனத்திற்காக அறங்காவலர்கள் குழுமம்
அமைக்கப்பட்டுள்ளதோ அந்த நிறுவனத்தின் அறங்காவலர் இரண்டு மாத
காலஅளவிற்குள், அத்தகைய அறங்காவலர்கள் குழுமத்தின். மூன்று
கூட்டங்களுக்குத் தொடர்ந்து வாராதிருப்பாராயின், அவர் பதவியிலிருப்பது
அற்றுப்போகும்:
வரம்புரையாக: அவ்வாறு வாராதிருந்ததன் காரணமாக, அறங்காவலர்
பதவியிலிருப்பது அற்றுப்போன ஆள் ஒருவர், மூன்று கூட்டங்களில், கடைசி
கூட்டத் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் மீண்டும் பதவியமர்த்தம் பெற
விண்ணப்பிக்கிறபோது, அறங்காவலர்கள் குழு அத்தகைய விண்ணப்பத்தைப்
பெற்ற பின்பு அடுத்துவரும் கூட்டத்தில், அறங்காவலர் பதவியில் அவரை மீண்டும்
அமர்த்தலாம், ஆனால் அறங்காவலர் ஒருவர், அவரது பதவிக் காலத்தின் போது ஒரு
முறைக்கு மேலாக அவ்வாறு மீண்டும் பதவியமர்த்தம் செய்யப்படுதல் ஆகாது.
விளக்கம்:- குறைவெண் இன்மையால் ஒத்திப்போடப்பட்ட கூட்டமானது,
இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக ஒரு கூட்டமாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
27. இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணைகளுக்குக் கீழ்ப்படிய
அறங்காவலர் கட்டுப்பட்டவர்.- ஒரு சமய நிறுவனத்தின் அறங்காவலர், அரசால்,
ஆணையரால், கூடுதல் ஆணையரால், இணை ஆணையரால், துணை
ஆணையரால் அல்லது உதவி ஆணையரால் இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளின்படி பிறப்பிக்கப்பட்ட சட்டப்படியான ஆணைகள்
அனைத்திற்கும் கீழ்ப்படியக் கட்டுப்பட்டவர் ஆவார்.
28. அறங்காவலருக்குத் தேவைப்படும் கவனமும் அவருடைய அதிகாரங்களும்.--
(1) 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கோயில் நுழைவு அதிகாரமளிப்புச் சட்டத்தின்
(தமிழ்நாடு சட்டம் ௩71947) வகைமுறைகளுக்கு உட்பட்டு, ஒவ்வொரு சமய
நிறுவனத்தின். அறங்காவலரும், கட்டளையின் வரையுரைகளுக்கும்
நிறுவனத்தின் வழக்கத்திற்கும், அவற்றைப் பொறுத்து தகுதிறமுடைய அதிகாரி
பிறப்பிக்கலாகும் சட்டப்படியான பணிப்புரைகள் அனைத்திற்கும் இணங்கவும்.
அதன் அலுவல்களும், நிதியங்களும், சொத்துக்களும், ஒரு சாதாரண நுண்ணறிவு
உடைய ஒரு மனிதனுக்குச் சொந்தமாக இருக்குமாயின், அவர் அதனை
எத்துணை கவனத்துடன் கையாளுவாரோ அதே கவனத்துடனும், நிருவகிக்கவும்
பயன்படுத்தவும் கட்டுப்பட்டவர் ஆவார்.
(2) அறங்காவலர், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு,
சமயநிறுவனத்தின் எதிர்கால நோக்குடையதாகவும், நலப்பயன்தரக்கூடிய
வகையிலும் நிருவகிப்பதற்கு சார்வுறுவான அதிகாரங்கள் அனைத்தையும்
செலுத்துவதற்கும். அவர்மீது சுமத்தப்பட்ட கடமைகளை உரியவாறு புரிவதற்கும்,
தேவையான செயல்கள் அனைத்தையும் செய்வதற்கும் உரிமை கொண்டவர்
ஆவார்.
(3) அறங்காவலர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படுவதற்கான அல்லது
அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான உரிமைவழக்கு.
மேல்முறையீடு அல்லது விண்ணப்பம் அல்லது பிற நடவடிக்கை எதிலும் அவர்
செய்ய நேர்ந்த செலவுத்தொகைகள், செலவுகள் அல்லது செலவினங்கள்
எவற்றையும் ஏற்பதற்கு, சமய நிறுவனத்தின் நிதியங்களைச் செலவு செய்வதற்கு
அறங்காவலர் உறிமைகொண்டவர் ஆகார்:
வரம்புரையாக: அறங்காவலர், அத்தகைய செலவுத்தொகைகள், செலவுகள்
அல்லது செலவினங்களைப் பொறுத்து, 102 ஆம் பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஓர்
ஆணையினால் ஈடு செய்துகொள்ளுமாறு குறிப்பாக அவர்
அனுமதிக்கப்படுவாராயின், அவர் அவ்வாறு செய்யலாம்.
29. அனைத்து நிறுவனங்களுக்கும் பதிவேடு தயாரித்தல்.- (1) சமயநிறுவனம்:
ஒவ்வொன்றும், ஆணையர் பணிக்கின்ற படிவத்தில் பின்வருவனவற்றைக்
காட்டும் ஒரு பதிவேட்டைத் தயார்செய்து, வைத்துவருதல் வேண்டும்.
(8) நிறுவனத்தின் தோற்றமும் வரலாறும், முண்ணைய மற்றும் இப்போதைய
அறங்காவலர்களின் பெயர்கள், அறங்காவலர் பதவிக்கு வாரிசுரிமை பற்றிய
வழக்கம் குறித்த விவரங்கள்;
(௦) நிருவாகத் திட்டமுறை குறித்த விவரங்கள் மற்றும் செலவுத் திட்டம்
அல்லது விகிதப்பாடு குறித்த விவரங்கள்;
(6) ஊதியம், பதவியூதியம் அல்லது இடை ஆதாயங்கள் எவையும். எந்தப்
பதவி பொறுத்தனவோ அந்தப் பதவிகள் அனைத்தின் பெயர்கள் மற்றும்
ஒவ்வொரு நேர்விலும், பணியின் தண்மை, காலம் மற்றும் நிபந்தனைகள்;
(0) எடைகளுடனும் மதிப்பிடப்பட்ட பெறுமானத்துடனும்,
நிறுவனங்களுக்குச் சொந்தமான நகைகள், தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த
கற்கள், கலங்கள், பாத்திரங்கள் மற்றும் பிற அசையும் பொருட்கள்;
(6) நிறுவனத்தின் பிற நிலைக்கொடைகள் அனைத்தும் மற்றும்
உரிமைமூல ஒப்பாவணங்கள், மற்றும் பிற் ஆவணங்கள் அனைத்தும் பற்றிய
விவரங்கள்;
) நிறுவனத்தில் உள்ள அல்லது அதனோடு தொடர்புடைய சிலைகள்
மற்றும் பிற படிமங்கள், அவை வழிபாட்டிற்காகக் கருதப்பட்டனவாயினும்
ஊர்வலங்களில் எடுத்துச் செல்வதற்காகக் கருதப்பட்டனவாயினும், அவை பற்றிய
விவரங்கள்;
(று சுருக்கமான உள்ளடக்கங்களுடன் தொன்மையான அல்லது வரலாற்றில்
புகழ்பெற்ற பதிவணங்கள் பற்றிய விவரங்கள்;
(h) ஆணையரால் வேண்டுறுத்தப்படலாகும் பிற விவரங்கள்.
(2) தொடர்புடைய நிறுவனத்தின் அறங்காவலரால் அல்லது அவரால்
அதிகாரமளிக்கப்பட்ட முகவரால், பதிவேடு தயார் செய்யப்பட்டு,
கையொப்பமிடப்பட்டு உண்மையென உறுதியளிக்கப்பட்டு. ஒரு மடத்தைப்
பொறுத்த வரையில் நேரடியாகவும், பிற நேர்வுகளில் உதவி ஆணையர்
வாயிலாகவும், இந்தச் சட்டத்தின் தொடக்கத்தேதியிலிருந்து அல்லது,
நேர்வுக்கேற்ப இந்த நிறுவனம் அமைக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று
மாதங்களுக்குள் அல்லது ஆணையரால் அல்லது உதவி ஆணையரால்
அனுமதிக்கப்படலாகும் மேலுமான காலத்திற்குள் ஆணையருக்கு அவரால்
பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்:
வரம்புரையாக: அவ்வாறு கையொப்பமிடப்பட்டு, உண்மையென
உறுதியளிக்கப்பட்ட பதிவேடானது-
(i) 1951, செப்டம்பர் 30-க்கு முன்பு வாரியத்திற்கும்; மற்றும்
(i) 1951, செப்டம்பர் 3௦க்கு பின்பும் இந்தச் சட்டத்தின் தொடக்கத்தேதிக்கு
முன்பும் ஆணையருக்கும்
பணிந்தனுப்பப்படுகிறவிடத்து, இந்த உட்பிரிவானது பொருந்தாது.
(3) உதவி ஆணையர், தேவையெனக் கருதலாகும் விசாரணையைச் செய்த
பின்பு, பதிவேடு அவர் வழியாகப் பணிந்தனுப்பப்படுமாயின், அவர் தாம்
தேவையெனக் கருதலாகும் மாற்றங்களை, விடுகைகளை அல்லது சேர்ப்புகளை
பதிவேட்டில் செய்யுமாறு பரிந்துரை செய்யலாம்.
(4) ஆணையர், பதிவேட்டினையும், அது குறித்த உதவி ஆணையரின்
பரிந்துரைகளையும் பெற்றுக்கொண்டபின்பும், தாம் தேவையெனக் கருதலாகும்
மேலுமான விசாரணையைச் செய்தபின்பும், தாம் தேவையெனக் கருதலாகும்
மாற்றங்களை, விடுகைகளை அல்லது சேர்ப்புகளைப் பதிவேட்டில் செய்யுமாறு
அறங்காவலரைப் பணிக்கலாம்.
(5) அறங்காவலர், ஆணையரின் ஆணைகளை நிறைவேற்றுதலும்,
அதன்பின்பு, ஆணையரின் ஒப்புதலளிப்புக்காக, திருத்தப்பட்ட பதிவேட்டின்
மூன்று படிகளைப் பணிந்தனுப்புதலும் வேண்டும்.
(6) ஆணையரால் ஒப்புதலளிக்கப்பட்டவாறான பதிவேட்டின் ஒரு படி
அறங்காவலருக்கும், மற்றொருபடி தொடர்புடைய உதவி ஆணையருக்கும்
அளிக்கப்படுதல் வேண்டும்.
30. பதிவேட்டினை ஆண்டுதோறும் சரிபார்த்தல்.- அறங்காவலர், அல்லது அவரால்
அதிகாரமளிக்கப்பட்ட முகவர், ஒவ்வோர் ஆண்டும் பதிவேட்டிலுள்ள பதிவுகளைக்
கூர்ந்தாய்வு செய்து, பதிவேட்டில் தேவைப்படுகிற மாற்றங்கள், விடுகைகள்
அல்லது சேர்ப்புகளைக் காட்டுகிற ஒரு சரிபார்க்கப்பட்ட விவர அறிக்கையை
நேர்விற்கேற்ப, நேரடியாக அல்லது உதவி ஆணையர் வாயிலாக ஒப்புதலுக்காக
ஆணையவருக்குப் பணிந்தனுப்புதல் வேண்டும், மற்றும் 29 ஆம் பிரிவின் (3) முதல்
(6) வரையிலான உட்பிரிவுகளின் வகைமுறைகள், ஒரு பதிவேட்டிற்குப்
பொருந்துவனபோன்றே, அத்தகைய விவர அறிக்கைக்குப் பொருந்தும்.
31. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை பதிவேட்டை அனுப்புதல்.- அறங்காவலர்
அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட முகவர் ஆணையருடைய ஒப்புதலுக்காக,
29 ஆம் பிரிவின்படி அனுப்பப்பட்ட பதிவேட்டில் செய்யப்பட்ட அல்லது
செய்யப்படவேண்டுமென்று வேண்டுறுத்தப்பட்ட மாற்றங்கள், விடுகைகள்,
சேர்ப்புகள் அனைத்தையும், அதில் ஒன்றாகச் சேர்த்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு
பதிவேட்டை 29 ஆம் பிரிவின்படி வேண்டுறுத்தப்பட்ட பதிவேடு முதலில்
பணிந்தனுப்பப்பட்ட ஆண்டிலிருந்து தொடங்குகிற பத்தாண்டுகளுக்கு ஒருமுறை,
நேர்வுக்கேற்ப, நேரடியாகவோ அல்லது உதவி ஆணையர் வழியாகவோ அனுப்புதல்
வேண்டும். மற்றும் அந்தப் பிரிவின் வகைமுறைகள், அந்தப் பிரிவின்படி
பணிந்தனுப்பப்பட்ட பதிவேடாக அது இருந்தாற்போன்று, அத்தகைய
ஒருங்கிணைக்கப்பட்ட பதிவேட்டிற்குப் பொருந்தும்.
32. அறங்காவலர் கணக்குகள், விவரக் குறிப்புகள் முதலானவற்றை அனுப்புதல்.-
(1) சமயநிறுவனம் ஒவ்வொன்றின் அறங்காவலர், ஆணையர்
வேண்டுறுத்தலாகிறவாறு, நிறுவனத்தின் நிருவாகம், அதனுடன் தொடர்புடைய
அதன் நிதியங்கள், சொத்து அல்லது வருமானம் அல்லது தொகைகள் அல்லது
அவற்றின் பயன்பாடு பற்றிய கணக்குகள், விவரக்குறிப்புகள், அறிக்கைகள்:
அல்லது பிற தகவலை ஆணையருக்கு அவர் பணிக்கலாகும் காலத்திலும்
படிவத்திலும் அளித்தல் வேண்டும்.
2 (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள வகைமுறைகளுக்குக்
குந்தகமில்லாமல், ஒரு மடம் அல்லாத வேறு சமய நிறுவனம் எதனையும்
பொறுத்தவரை, ஓர் உதவி ஆணையர், அத்தகைய சமய நிறுவனத்தின்
அறங்காவலரை நிறுவனத்தின் நிருவாகம், அதனுடன் தொடர்புடைய அதன்
நிதியங்கள், சொத்து அல்லது வருமானம் அல்லது தொகைகள் அல்லது அவற்றின்
பயன்பாடு தொடர்பான கணக்குகள், விவரக்குறிப்புகள், அறிக்கைகள் அல்லது பிற
தகவலைத் தாம் பணிக்கலாகும் காலத்திலும் படிவத்திலும் அளிக்குமாறு
லேண்டுறுத்தலாம்.
33. சொத்தினையும் ஆவணங்களையும் ஆய்வு செய்தல்.-- (1) ஆணையர் அல்லது
அவரால் இதன் இதன்பொருட்டு அதிகாரமளித்து அனுப்பப்பட்ட அலுவலர்
அல்லது வேறு எவரும், நிறுவனத்தின் சமய நடைமுறை அல்லது வழக்கத்திற்கு
உரிய மதிப்பளித்து, சமய நிறுவனம் எதற்கும் சொந்தமான அசையும் மற்றும்
அசையாச் சொத்துக்கள் அனைத்தையும், அதனுடன் தொடர்புடைய பதிவணங்கள்,
கடிதப்போக்குவரத்து, அமைப்புப் படங்கள் கணக்குகள் மற்றும் பிற ஆவணங்களை
ஆய்வு செய்யலாம்.
(2) (1) ஆம் உட்பிரிவை ஒட்டிச் செய்யப்படும் ஆய்வு எதைக் குறித்தும்
தேவைப்படலாகும் அல்லது நியாயமானதாக வேண்டுறுத்தப்படலாகும் உதவி
மற்றும் வசதிகள் அனைத்தையும் அளிப்பதும், அத்துடன் (1) ஆம் உட்பிரிவில்
சுட்டப்பட்ட அசையும் சொத்து அல்லது ஆவணம் எதனையும் ஆய்வு
செய்வதற்காக முன்னிலைப்படுத்துவதும், அத்தகைய ஆய்வு தொடர்பாகத்
தேவைப்படும் தகவல் வேண்டுறுத்தப்படுமாயின், கொடுப்பதும், தொடர்புடைய
நிறுவனத்தின் அறங்காவலருடைய மற்றும் அவர்கீழ் பணியாற்றுகிற அலுவலர்கள்
மற்றும் பணியாளர்கள் அனைவரின், நிறுவனத்தின் நிருவாகத்தில் அக்கறை
கொண்டுள்ள அவருடைய முகவர் மற்றும் ஆள் எவரின் கடமையாகும்.
(3) அத்தகைய ஆய்வு நடைபெறுகையில், தொடர்புடைய நிறுவனத்தின்
அறங்காவலர், அல்லது அவர்கீழ் பணியாற்றுகிற அலுவலர்களில் அல்லது
பணியாளர்களில் எவரும், நிறுவனத்தின் நிருவாகத்தில் அக்கறை கொண்டுள்ள
அவருடைய முகவர் அல்லது வேறு ஆள் எவரும், முன்பிருந்தவர்களாலும் அல்லது
தற்போதுள்ளவர்களாலும், பணத்தொகை அல்லது பிறசொத்து எதனையும்
கையாடல் செய்திருக்கிறார் அல்லது மோசடியாக இருத்தி வைத்துக்கொண்டு
இருக்கிறார் அல்லது முறைகேடான, சட்டமுரணான அல்லது முறையற்ற செலவு
செய்திருக்கிறார் என்பதாகத் தோன்றுகிறவிடத்து, ஆணையர், தொடர்புடைய
அறங்காவலருக்கு அல்லது ஆளுக்கு, அவருக்கு எதிராகத் தணிக்கை ஏற்புறாச்
செலவை ஈடுசெய்யுமாறு ஏன் ஓர் ஆணை பிறப்பித்தல் ஆகாது என்பதற்குக்
காரணம் காட்டும்படி அறிவிப்புக் கொடுத்தபின்பும், அவருடைய விளக்கம்,
ஏதேனுமிருப்பின், அதை ஆய்வு செய்தபின்பும், அவ்வாறு இழந்த தொகைக்கு
ஆணையின் வழியாக சான்றளிக்கலாம் மற்றும் அத்தகைய தொகையை
நிறுவனத்தின் நிதியிலிருந்து செலுத்தாமல் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள்
தாமே செலுத்தும்படி அத்தகைய அறங்காவலர் அல்லது அத்தகைய ஆளைப்
பணிக்கலாம்.
90 ஆம் பிரிவின் (3) முதல் (7) வரையிலான உட்பிரிவுகளில்
விதிக்கப்பட்டுள்ள நெறிமுறையானது, தணிக்கை ஏற்புறாத்தொகையைத் திரும்பப்
பெறுவதற்குப் பொருந்தும்.
34. பொறுப்புக் கட்டளையின் அசையாச் சொத்தினை பிறருக்குரிமை மாற்றம்
செய்தல்-- (1) சமய நிறுவனம் எதற்கும் சொந்தமான அல்லது அதன்
நோக்கங்களுக்காக கொடுக்கப்பட்ட அல்லது நிலைக்கொடையாக அளிக்கப்பட்ட
அசையாச் சொத்து எதனின் பரிமாற்றம், விற்பனை அல்லது அடைமானம் எதுவும்,
மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படுகிற கால அளவுக்கான குத்தகை எதுவும்,
நிறுவனத்திற்குத் தேவையானது அல்லது நன்மை பயக்கக்கூடியது என்று
ஆணையரால் ஒப்பளிக்கப்பட்டாலன்றி, முற்றிலும் இல்லாநிலையதாகிவிடும்:
வரம்புரையாக: அத்தகைய ஒப்பளிப்பை அளிப்பதற்கு முன்பு, கருதப்பட்ட
நடவடிக்கை தொடர்பான விவரங்கள், அது பொறுத்த மறுப்புரைகளையும்
குறிப்புரைகளையும் வரவேற்று வகுத்துரைக்கப்படலாகும் முறையில்
வெளியிடப்படுதல் வேண்டும்; அறங்காவலரிடமிருந்து அல்லது உரித்தமுடைய
வேறு ஆட்களிடமிருந்து பெற்ற அனைத்து மறுப்புரைகளும் குறிப்புரைகளும்
ஆணையரால் உரியவாறு பரிசீலனை செய்யப்படுதல் வேண்டும்:
மேலும் வரம்புரையாக: ஆணையர், அரசின் முன் ஒப்பேற்பின்றி அத்தகைய
ஒப்பளிப்பினை வழங்குதல் ஆகாது.
விளக்கம்.- மேலே சொல்லப்பட்ட சொத்தின் குத்தகை எதுவும்,
ஐந்தாண்டுகளுக்கு மேற்படாத கால அளவுக்கு இருந்தபோதிலும், மொத்தத்தில்
ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்கும் வகையில் மேலுமான ஒரு கால
அளவுக்குப் புதுப்பிப்பதற்கான வகைமுறைகளைக் கொண்டதாயிருக்குமாயின்,
நிபந்தனை எதற்கும் உட்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், ஐந்து
ஆண்டுகளுக்கு மேற்படுகிற ஒரு கால அளவிற்கான குத்தகையாகக்
கொள்ளப்படுதல் வேண்டும்.
(2) அத்தகைய ஒப்பளிப்பை அளிக்கும்போது, நடவடிக்கையின் வாயிலாகப்
பெறப்பட்ட தொகையினைப் பயன்படுத்துவது. அதனை முதலீடு செய்வது மற்றும்
ஓர் அடைமானத்தைப் பொறுத்தவரையில், நியாயமான கால அளவுக்குள் அதனை
மீட்டல் தொடர்பாக அவர் தேவையெனக் கருதலாகும் பணிப்புரைகளை ஆணையர்
பிறப்பிக்கலாம்.
(3) இந்தப் பிரிவின்படி ஆணையரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி
ஒன்று, அரசுக்கும் அறங்காவலருக்கும் அனுப்பப்படுதல் வேண்டும், மற்றும்.
வகுத்துரைக்கப்படலாகும் முறையில் வெளியிடப்படுதல் வேண்டும்.
(4) அறங்காவலர், ஆணையின் படி ஒன்றைப் பெற்ற தேதியிலிருந்து
மூன்று மாதத்திற்குள்ளும், உரித்தமுடையவர் எவரும், ஆணை வெளியிடப்பட்ட
தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்ளும், ஆணையை மாற்றமைவு செய்ய
அல்லது ஒதுக்கறவு செய்ய நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யலாம்.
(4-A) அரசு, சமய நிறுவனம் எதற்கும் சொந்தமான, அல்லது அதன்
நோக்கத்திற்காகக் கொடுக்கப்பட்ட அல்லது நிலைக்கொடையளிக்கப்பட்ட
அசையாச் சொத்து எதனின் பரிமாற்றம், விற்பனை, அடைமானம் அல்லது
அத்தகைய எதனையும் பொறுத்து தேவையென அவர்கள் கருதுகிறவாறு
ஆணையருக்கு அத்தகைய பணிப்புரைகளை வழங்கலாம் மற்றும் ஆணையர்
அத்தகைய பணிப்புரைகள் அனைத்திற்கும் செல்திறம் கொடுத்தல் வேண்டும்.
(5) இந்தப் பிரிவில் அடங்கியுள்ள எதுவும், 41 ஆம் பிரிவில் சுட்டப்பட்டுள்ள
இனாம்களுக்கு பொருந்தாது.
34-A. குத்தகை வாடகை நிர்ணயித்தல். (1) சமய நிறுவனம் எதற்கும் சொந்தமான,
அல்லது அதன் நோக்கத்திற்காகக் கொடுக்கப்பட்ட அல்லது
நிலைக்கொடையாக்கப்பட்ட அசையாச் சொத்தின் குத்தகைக்காக வழங்கத்தக்க
குத்தகை வாடகையானது, சமய நிறுவனத்தின் இணை ஆணையர், நிருவாக
அலுவலர் அல்லது அறங்காவலர் அல்லது, நேர்வுக்கேற்ப அறங்காவலர் குழுவின்
தலைவர் மற்றும் தொடர்புடைய மாவட்டத்திலுள்ள பதிவுத்துறை மாவட்டப்
பதிவாளர் அடங்கிய குழு ஒன்றினால், வகுத்துரைக்கப்படலாகிறவாறு நிலவும்
நிலவர வாடகை மதிப்பையும், வழிகாட்டு நெறிகளையும் கணக்கில்
எடுத்துக்கொண்டு நிர்ணயிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய குத்தகை
வாடகையானது மேற்சொன்ன குழுவினால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை
அதே போன்ற முறையில் மறு நிர்ணயம் செய்யப்படுதல் வேண்டும்.
விளக்கம்: இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, "நிலவும் நிலவர வாடகை
மதிப்பு என்பது, சமய நிறுவனத்தின் சொத்து அமைந்துள்ள வட்டாரத்தில்
அமைந்துள்ள அதேபோன்று வகைகளிலுள்ள சொத்துக்களுக்கு வழங்கப்பட்ட
வாடகைத் தொகை என்று பொருள்படும்.
(2) தொடர்புடைய சமய நிறுவனத்தின், நேர்வுக்கேற்ப, நிருவாக அலுவலர்
அல்லது அறங்காவலர் அல்லது அறங்காவலர்கள் குழுவின் தலைவர், குத்தகை
வாடகையினை நிர்ணயித்து ஆணை ஒன்றைப் பிறப்பித்து, எந்தக் காலத்திற்குள்:
அத்தகைய குத்தகை வாடகை வழங்கப்பட வேண்டுமோ அந்தக் காலம் ஒன்றைக்
குறித்துரைத்து, அதனை குத்தகை எடுத்தவருக்குத் தகவலளித்தல் வேண்டும்.
(3) (2) ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்றினால்
குறையுற்ற நபர் எவரும், அத்தகைய ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து முப்பது
நாள் காலஅளவு ஒன்றுக்குள், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும்
அத்தகைய முறையிலும் ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
(4) ஆணையர், குறையுற்ற நபருக்கு, விசாரிக்கப்படுவதற்கான வாயப்பு
ஒன்று கொடுத்த பின்பு. தாம் பொருத்தமெனக் கருதும் ஆணையைப்
பிறப்பிக்கலாம்.
(5) ௫) ஆம் உட்பிரிவின்படி ஆணையரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை
ஒன்றினால் குறையுற்ற நபர் எவரும், அத்தகைய ஆணை பெறப்பட்ட
தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள், உயாந்திமன்றத்திடம் சீராய்வு மனு
ஒன்றைக் கொணரலாம்:
வரம்புரையாக: (3) ஆம் உட்பிரிவின்படியோ அல்லது, நேர்வுக்கேற்ப, (5) ஆம்
உட்பிரிவின்படியோ, மேல்முறையீடு அல்லது சீராய்வு எதுவும், அவ்வாறு நிர்ணயம்
செய்யப்பட்ட அல்லது மறுநிர்ணயம் செய்யப்பட்ட குத்தகை வாடகையினை
தொடர்புடைய சமய நிறுவனத்தின் கணக்கில் வைப்பிடு செய்வதற்கான
மனநிறைவான மெய்ப்பிப்புடன் சேர்த்தனுப்பப்பட்டிருந்தாலன்றி,
ஏற்றுக்கொள்ளப்படுதலாகாது மற்றும் அத்தகைய தொகையானது,
மேல்முறையீட்டில் அல்லது நேர்வுக்கேற்ப, சீராய்வில் பிறப்பிக்கப்பட்ட
ஆணையின்படி குத்தகை எடுத்தவரால் வழங்கத்தக்க குத்தகைத் தொகையின்
பொகுட்டு நேரமைவு செய்யப்படுதல் வேண்டும்.
34-B. அசையாச் சொத்தின் குத்தகை முடிவுறுத்தம்.- (1) சமய நிறுவனம் எதற்கும்
சொந்தமான அல்லது அதனின் நோக்கத்திற்காகக் கொடுக்கப்பட்ட அல்லது
நிலைக்கொடையாக்கப்பட்ட அசையாச் சொத்தின் குத்தகையானது, குத்தகை
வாடகை வழங்காததன் பேரில், விசாரிக்கப்படுவதற்கான தகவானடதொரு வாய்ப்பு
நல்கிய பின்பு, முடிவுறுத்தப்படுவதற்கு உள்ளாதல் வேண்டும்.
(2) குத்தகையை முடிவுறுத்துவதற்கான நடவடிக்கை எதுவும்-
() 34-& பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்படியோ அல்லது (5) ஆம்
உட்பிரிவின்படியோவான மேல்முறையீடு அல்லது சீராய்வுக்கான காலம்
கழிவுறாதிருக்குமாயின், அல்லது
(i) ஆணையானது, அந்தப் பொருட்பாடு தீர்வு செய்யப்படும் வரை,
அத்தகைய மேல்முறையீட்டிற்கு அல்லது சீராய்விற்கு உட்பட்டு
பிறப்பிக்கப்பட்டிருக்குமாயின்.
தொடரப்படுதலாகாது.
(3) (1) ஆம் உட்பிரிவின்படி குத்தகை முடிவுறுத்தத்தின் பேரில்
சொத்தானது தொடர்புடைய சமய நிறுவனத்தில் அனைத்து வில்லங்கங்களும்
இல்லாமல் மேவியிருத்தல் வேண்டும் மற்றும் அத்தகைய சமய நிறுவனத்தின்.
நிருவாக அலுவலர், அறங்காவலர் அல்லது நேர்வுக்கேற்ப, அறங்காவலர்கள் குழுத்
தலைவர், கட்டடம், மேல்கட்டமைப்பு மற்றும் மரங்கள், எவையுமிருப்பின், அவை
உள்ளடங்கலான சொத்தினைக் கையுடைமையில் எடுத்துக்கொள்ளுதல்
வேண்டும்.
34-C. தொகை வழங்குதல்.-- (1) 34-8 பிரிவின்படி சமய நிறுவனத்தில்
உற்றமைந்துள்ள சொத்தின் மீது குத்தகை எடுத்தவரால், உடன்பாட்டு
வரையுரைகளின்படியோ அல்லது. ஆணையரின் அனுமதியுடனோ எழுப்பப்பட்ட
அல்லது நடப்பட்ட கட்டடம், மேல்கட்டமைப்பு மற்றும் மரங்கள், எவையுமிருப்பின்,
அவற்றிற்காக, குத்தகை எடுத்தவருக்கு தொகை ஒன்று வழங்கப்பட்டு இருத்தல்
வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள தொகையானது, சமய
நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் அதிகாரவரம்பு கொண்டுள்ள இணை
ஆணையர், பொதுப் பணித்துறை நிருவாகப் பொறியாளர் (கட்டடங்கள்),
தொடர்புடைய கோட்டப் பொறியாளர் (இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள்)
மற்றும் சமய நிறுவனத்தின் நிருவாக அலுவலர் அல்லது அறங்காவலர் அல்லது
நேர்வுக்கேற்ப, அறங்காவலர்கள் குழுவின் தலைவர் அடங்கிய ஒரு குழுவினால்
தீர்மானிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய சமய நிறுவனத்தால்
வகுத்துரைக்கப்படலாகும் முறையில் வழங்கப்படுதல் வேண்டும்.
(3) அந்த தொகையினைத் தீர்மானிக்கையில், குழுவானது, 1894 ஆம்
ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் (மையச் சட்டம் 1894) 23, 24ஆம்
பிரிவுகளில் அடங்கியுள்ள வகையங்களாலும் பிற தொடர்புடைய வகையங்களாலும்
வழிகாட்டப்படுதல் வேண்டும்.
(4) நிருவாக அலுவலர் அல்லது அறங்காவலர் அல்லது நேர்வுக்கேற்ப,
அறங்காவலர்கள் குழுத்தலைவர், கொடுபடவேண்டிய குத்தகை வாடகை,
எதுவுமிருப்பின் அதனை நேரமைவு செய்த பின்பு, (1) ஆம் உட்பிரிவின்படி
வழங்கத்தக்க தொகையினைக் குறித்துரைத்து ஆணை ஒன்றைப் பிறப்பித்தல்
வேண்டும்.
(5) (4) ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்றினால்
குறையுற்ற நபர் எவரும், அத்தகைய ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து முப்பது
நாள் காலஅளவுக்குள், வகுத்துரைக்கப்படலாகும் படிவத்திலும் முறையிலும்,
ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
(6) ஆணையர், மேல்முறையீட்டாளருக்கு விசாரிக்கப்படுவதற்கான வாய்ப்பு
ஒன்றை நல்கிய பின்பு, தாம் பொருத்தமெனக் கருதும் ஆணையைப்
பிறப்பிக்கலாம்.
(7) (6) ஆம் உட்பிரிவின்படி ஆணையரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை
ஒன்றினால் குறையுற்ற நபர் எவரும், அத்தகைய ஆணை பெறப்பட்ட
தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள், உயர்நீதிமன்றத்திடம் சீராய்வு மனு
ஒன்றைக் கொணரலாம்.
34-D. உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குத் தடை-- 34-& அல்லது
34-C பிரிவுகளில் பிறவாறாக வகைசெய்யப்பட்டவாறல்லாமல், 34-& அல்லது 34—
B அல்லது நேர்வுக்கேற்ப, 34-6 பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்று
பொறுத்து, நீதிமன்றம் எதிலும் உரிமை வழக்கோ அல்லது பிற சட்ட
நடவடிக்கையோ, தொடரப்படுதலாகாது.
35. புனிதப் பயணியர் மற்றும் வழிபடுபவர்களின் உடல்நலம் முதலானவற்றை
உறுதிசெய்வதற்காகவும், அர்ச்சகர்கள் முதலானோர்க்குப் பயிற்சியளிக்கவும்
செலவு செய்வதற்கு அறங்காவலருக்குள்ள அதிகாரம்.-- (1) ஒரு மைய
நிறுவனத்தின் அறங்காவலர் பொறுப்பிலிருக்கிற நிதியங்களிலிருந்து, 86 ஆம்
பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட நோக்கங்களுக்காக, போதிய
வகைமுறை செய்த பின்பு
(8) அந்தச் சமய நிறுவனத்திற்கு வந்து போகிற சீடர்கள், புணிதப் பயணியர்
அல்லது வழிபடுபவர்களின் உடல்நலம், பாதுகாப்பு அல்லது வசதியை
உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளுக்காகவும்,
(b) அர்ச்சகர்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகர்கள், ஓதுவார்கள்
ஆகியோரின் பயிற்சிக்காகவும்,
செலவுகளைச் செய்யலாம்.
(2) அத்தகைய செலவினங்களைச் செய்யும்போது, மடம் அல்லது மடத்துடன்
இணைக்கப்பட்ட குறித்தவகை நிலைக்கொடை அல்லாத வேறு
சமயநிறுவனத்தின் அறங்காவலர், ஆணையரால் பிறப்பிக்கப்படலாகும் பொது
அல்லது சிறப்பு ஏவுரைகளால் வழி நடத்தப்படுதல் வேண்டும்.
36. மிகை நிதியங்களைப் பயன்படுத்துதல்.- ஆணையரின் முன் ஒப்பளிப்புடன்,
வகுத்துரைக்கப்படலாகும் நிபந்தனைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டும்,
ஒரு சமய நிறுவனத்தின் அறங்காவலர், 66 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்
குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களில் எதற்காகவும்-
(i) அத்தகைய நிறுவனத்தில் சேர்ந்துள்ள மிகைத்தொகையின் பகுதி
எதனையும், மற்றும்
(i) 86 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட
நோக்கங்களுக்காகவும், 35 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட
ஏற்பாடுகள் மற்றும் பயிற்சிக்காகவும், போதுமான வகைமுறை செய்த பின்பு, எந்த
ஒரு ஆண்டிலும் நிறுவனத்தின் வருமானத்தில் மிகைத்தொகை இருக்குமாயின்,
அத்தகைய மிகையின் பகுதி எதனையும்
பயன்படுத்திக்கொள்ளலாம்:
வரம்புரையாக: அறங்காவலர், இந்தப் பிரிவின்படி மிகைத் தொகையைப்
பயன்படுத்திக்கொள்ளுகையில், 66 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (௨) முதல்
(ஐ வரையுள்ள இனங்களில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்கு முன்னுரிமை
அளித்தல் வேண்டும்.
மேலும் வரம்புரையாக: இந்தப் பிரிவின்படி ஒப்பளிப்பு அளிப்பதற்கு முன்பு,
ஆணையர், அறங்காவலரின் செயற்குறிப்புத்திட்டம் தொடர்பான விவரங்களை
வகுத்துரைக்கப்படலாகும் முறையில் வெளியிட்டு அதைப் பொறுத்த
மறுப்புரைகளையும் அறிவுரைகளையும் வரவேற்று,
உரித்தமுடையவர்களிடமிருந்து பெறப்பட்ட மறுப்புகள் மற்றும் அறிவுரைகள்
அனைத்தையும் ஆய்வு செய்தல் வேண்டும்;
இன்னும் வரம்புரையாக: மேற்சொன்ன ஒப்பளிப்பானது, வகுத்துரைக்கப்
படலாகும் முறையில் வெளியிடப்படுதல் வேண்டும்:
பின்னும் வரம்புரையாக: இந்தப் பிரிவில் உள்ள எதுவும், ஒரு மடத்தின்
அல்லது மடத்துடன் இணைக்கப்பட்ட குறித்தவகை நிலைக்கொடையின்
அறங்காவலரைத் தாம் பொருத்தமெனக் கருதுகிற முறையில் இந்தப் பிரிவில்
சுட்டப்பட்ட மிகைத்தொகையைப் பயன்படுத்துவதிலிருந்து தடைசெய்தல் ஆகாது.
36-A. மிகை நிதியங்களை இத்து திருமணங்களுக்குப் பயன்படுத்துதல்.- 36 ஆம்
பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், மற்றும் வகுத்துரைக்கப்படலாகும்
நிபந்தனைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டும், ஒரு சமய நிறுவனத்தின்
அறங்காவலர், அந்தப் பிரிவில் சொல்லப்பட்டுள்ள நோக்கங்களுக்குக் கூடுதலாக,
ஏழையாக அல்லது உதவி தேவைப்படும் சூழ்நிலைகளில் உள்ள
இந்துக்களுக்கிடையே இந்து திருமணங்களை நடத்துவதற்காக, 36 ஆம் பிரிவில்
சுட்டப்பட்ட மிகை நிதியத்தின் பகுதி எதனையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
36-8. ஏழைகளுக்கு உணவளிக்கும் நோக்கம் முதலானவற்றிற்காக நிதியம்
எதற்கும் பங்களிப்புச் செய்வதற்காக மிகை நிதியங்களைப் பயன்படுத்துதல்.- 36,
36-A ஆகிய பிரிவுகளிலும், இந்தச் சட்டத்தின் பிற வகைமுறை எதிலும் எண்ன
அடங்கியிருந்தபோதிலும், மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் பிற
நிபந்தனைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டும், ஒரு சமய நிறுவனத்தின்
அறங்காவலர் 36, 36-A ஆகிய பிரிவுகளில் சொல்லப்பட்ட நோக்கங்களுக்குக்
கூடுதலாக,
(i) எழைகளுக்கு உணவளிப்பதற்காக, அல்லது
(i) ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக கட்டடம், கொட்டகை அல்லது
மையம் எதனையும் கட்டுவதற்காக,
உருவாக்கப்பட்ட நிதியம் எதற்கும் பங்களிப்பு எதனையும் செய்வதற்காக, 36 ஆம்
பிரிவில் சுட்டப்பட்ட மிகைநிதியத்தின் பகுதி எதனையும் பயன்படுத்தலாம்.
37. மேல்முறையீடுகள்.- 36 ஆம் பிரிவின்படி ஆணையரின் முடிபினால்
குறையுற்றவர் எவரும், முடிபின் தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள்
அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம்.
38. குறித்த சில நேர்வுகளில் பணி அல்லது அறப்பணி செய்வதை வலியுறுத்துதல்.-
(1) ஒரு மடத்துடன் அல்லது கோயிலுடன் இணைக்கப்பட்ட குறித்தவகை
நிலைக்கொடையானது. சொத்தின் மீதான பொறுப்புிமையை மட்டுமே
கொண்டிருந்து, பணி அல்லது அறப்பணியை உரியவாறு செய்வதில் தவறுகை
ஏற்பட்டிருக்குமிடத்து, தொடர்புடைய மடம் அல்லது கோயிலின் அறங்காவலர்,
அந்தப் பணி அல்லது அறப்பணி பிறவாறு செய்யப்படுமாறு செய்வதில்,
செலவிடப்பட்ட அல்லது பெரும்பாலும் செலவிடப்படவேண்டிய செலவுத்
தொகைகளைச் செலுத்துமாறு, எந்தச் சொத்தின்மீது அந்த நிலைக்கொடை
பொறுப்புரிமையாகச் சுமத்தப்பட்டுள்ளதோ அந்தச் சொத்தினை உடைமையில்
கொண்டுள்ளவரைக் கோரலாம். அத்தகையவர் கோரப்பட்டவாறான தொகையைச்
செலுத்தத் தவறுகையில், மடத்துடன் இணைக்கப்பட்ட குறித்தவகை
நிலைக்கொடையைப் பொறுத்தவரை, ஆணையரும், கோயிலுடன்
இணைக்கப்பட்டுள்ள குறித்தவகை நிலைக்கொடையைப் பொறுத்தவரை, இணை
ஆணையர் அல்லது நேர்வுக்கேற்ப துணை ஆணையர், அறங்காவலறரின்
விண்ணப்பத்தின் பேரிலும், அது தொடர்பாகத் தம் மறுப்புரைகளைத்
தெரிவிப்பதற்கு சொத்தினை உடைமையில் கொண்டுள்ளவருக்கு நியாயமான
வாய்ப்பு அளித்த பின்பும், அறங்காவலருக்கு கொடுக்கவேண்டிய தொகையை
ஆணை வாயிலாக முடிவு செய்யலாம்.
(2) நிலைக்கொடையானது, பொறுப்புரிமை சுமத்தப்பட்டுள்ள சொத்தினை
உடைமையில் கொண்டுள்ள ஒருவர் பணியை அல்லது அறப்பணியைச்
செய்வதற்கு சட்டப்படி பொறுப்பானவராயில்லாதிருந்து. உடைமையில்
கொண்டுள்ளவரால் தொகை எதுவும் செலுத்தப்பட்டுள்ளவிடத்து அல்லது
அவரிடமிருந்து பெறப்பட்டுள்ளவிடத்து, ஒரு மடத்துடன் இணைக்கப்பட்டுள்ள
குறித்தவகை நிலைக்கொடையைப் பொறுத்தவரை, ஆணையர் அல்லது
கோயிலுடன். இணைக்கப்பட்டுள்ள குறித்தவகை. நிலைக்கொடையைப்
பொறுத்தவரை, இணை ஆணையர் அல்லது நேர்வுக்கேற்ப துணை ஆணையர்,
சொத்தினை உடைமையில் கொண்டுள்ளவரின் விண்ணப்பத்தின் பேரிலும், அது
தொடர்பாகத் தம் மறுப்புரைகளைத் தெரிவிப்பதற்குச் சட்டப்படி
பொறுப்புடையவருக்கு நியாயமான வாய்ப்பு அளித்த பின்பும், சொத்தினை
உடைமையில் கொண்டுள்ளவருக்கு அவ்வாறு செலுத்தப்பட்ட அல்லது
திரும்பப்பெறப்பட்ட தொகையைச் செலுத்துமாறு சட்டப்படி பொறுப்புடையவரைக்
கோரலாம்.
(3) (1) ஆம் உட்பிரிவு அல்லது (2) ஆம் உட்பிரிவின்படியான ஆணையரின்
அல்லது இணை ஆணையரின் அல்லது துணை ஆணையரின் ஆணையை
எதிர்த்து, அறங்காவலர் அல்லது பாதிக்கப்பட்டவர் அவரால் ஆணை பெறப்பட்ட
தேதியிலிருந்து இரண்டு மாதத்திற்குள் அரசுக்கு அல்லது, நேர்வுக்கேற்ப,
ஆணையருக்கு மேல் முறையீடு செய்யலாம்.
அரசால் அல்லது ஆணையரால் மேல்முறையீட்டின்பேரில், பிறப்பிக்கப்பட்ட
ஆணையானது, அறுதியானதாகும்.
(4) (1) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட சொத்து அமைந்துள்ள மாவட்டத்தின்
ஆட்சியருக்கு அறங்காவலரால் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பேரில், அல்லது,
நேர்வுக்கேற்ப, சட்டப்படி பொறுப்புடையவரின் சொத்து எதுவும் அமைந்துள்ள
மாவட்டத்தின் ஆட்சியருக்கு சொத்தினை உடைமையில் கொண்டுள்ளவரால்
செய்யப்படும் விண்ணப்பத்தின்பேரில், ஆட்சியர் சொத்தினை உடைமையில்
கொண்டுள்ளவரிடமிருந்து அல்லது, நேர்வுக்கேற்ப, சட்டப்படி
பொறுப்புடையவரிடமிருந்து, மேல்முறையீட்டில் மாற்றி அமைக்கப்பட்டபடி,
ஆணையரின் அல்லது இணை ஆணையரின் அல்லது துணை ஆணையரின்
ஆணையில் குறித்துரைக்கப்பட்ட தொகை, ஏதேனுமிருப்பின், அதையும் அவ்வாறு
வசூலிப்பதற்கான செலவுகளையும், அவை நிலவருவாய் நிலுவையாக
இருந்தாற்போன்று, வசூல் செய்து, அறங்காவலர்களுக்கு அல்லது, நேர்வுக்கேற்ப,
சொத்தினை உடைமையில் கொண்டுள்ளவருக்கு, கொடுபட வேண்டிய
தொகையை அவருக்குச் செலுத்துதல் வேண்டும்.
39. குறித்த வகை நிலைக் கொடைகளின் அறங்காவலர்களின் மீது மடம் அல்லது
கோயிலின் அறங்காவலரின் அதிகாரம்.- மடம் அல்லது கோயில் தொடர்பான பணி
அல்லது அறப்பணி எதனையும் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட குறித்தவகை
நிலைக்கொடையின் அறங்காவலர், அந்த மடத்தின் அல்லது கோயிலின்
அறங்காவலருடைய பொதுக் கண்காணிப்புக்கு உட்பட்டு, அந்தப் பணியை அல்லது
அறப்பணியைச் செய்தல் வேண்டும், மற்றும் அவரால் பிறப்பிக்கப்படும்
சட்டப்படியான ஆணைகள் அனைத்திற்கும் கீழ்ப்படிதல் வேண்டும்.
40. ஒரு கோயிலில் பணிசெய்தல் வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு ஒரு
தேவதாசியால் வைத்து வரப்படும் நிலங்கள். முதலானவற்றிற்குத்
தன்னுரிமையளித்தல்.- (1) (ஐ டு ஒரு கோயிலில் ஒரு தேவதாசியால்
செய்யப்படவேண்டிய பணி எதற்காகவுமான பணியூதியமானது, அத்தகைய
பணிக்காக அரசால் அளிக்கப்பட்ட அல்லது தொடர்ந்து விட்டு வைத்திருக்கப்பட்ட
அல்லது அத்துடன் இணைக்கப்பட்ட நிலங்களை உள்ளடக்கியதாயிருக்குமிடத்து,
அரசானது, மேற்சொன்ன அந்த நிலங்களை பணிக்கான நிபந்தனையிலிருந்து
நீக்கி, விடுவிப்பதன் மூலம் அவற்றிற்குத் தண்ணுரிமையளித்தல் வேண்டும்.
(i) அத்தகைய பணிக்கான பணியூதியம், அவ்வாறு அளிக்கப்பட்ட அல்லது
தொடர்ந்து விட்டுவைக்கப்பட்ட நிலவருவாயின் உரிமையளிப்பை
உள்ளடக்கியதாயிருக்குமிடத்து, அரசானது அத்தகைய நிலவருவாயின்
உரிமையளிப்பை பணி நிபந்தனையிலிருந்து நீக்கி தன்னுரிமையளித்தல்
வேண்டும்:
வரம்புரையாக: இந்த உட்கூறின்படி நடவடிக்கைகள் எடுக்கும் காலத்தில்
நிலவருவாய் உரிமையளிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களின் சொந்தக்காரராக
தேவதாசியே இருக்குமிடத்து, (1) ஆம் உட்பிரிவில் விதிக்கப்பட்ட முறையில்
தன்னுரிமையளிப்பு செய்யப்படுதலும், விடுவரி விதிக்கப்படுதலும் வேண்டும்.
0) அத்தகைய பணிக்கான பணியூதியம், பகுதி நிலங்களையும் பகுதி
நிலவருவாய் உரிமையளிப்பையும் உள்ளடக்கியதாயிருக்குமிடத்து, நிலங்களின்.
தன்னுரிமையளிப்பானது, (1) ஆம் உட்கூறில் விதிக்கப்பட்ட முறையிலும்,
நிலவருவாயின் உரிமையளிப்பு (i) ஆம் உட்பிரிவில் விதிக்கப்பட்ட முறையிலும்
செய்யப்படுதல் வேண்டும்.
விளக்கம்.- இந்தக் கூறின் நோக்கங்களுக்காக, (i) ஆம் உட்கூறின்
வரம்புரையில் குறித்துரைக்கப்பட்ட காலத்தில், பிரச்சினையிலுள்ள நிலங்களின்
சொந்தக்காரராக தேவதாசியே இல்லாத அனைத்து நேர்வுகளிலும்,
கொடையளிப்பானது, நிலவருவாய் உரிமையளிப்பை உள்ளடக்கியிருப்பதாகக்
கொள்ளப்படுதல் வேண்டும்.
(b) (a) கூறின் படியான தன்னுரிமையளிப்பானது, இதன்பொருட்டு அரசு
வகுக்கலாகும் விதிக்கிணங்கச் செய்யப்படுதல் வேண்டும், மற்றும் அது
குறிக்கலாகும் தேதியிலிருந்தும் அது முதற்கொண்டும் நடைமுறைக்கு வரும்.
(2) அத்தகைய பணிக்கான பணியூதியமானது, (1) ஆம் உட்பிரிவின் கீழ் வராத
நிலங்களை அல்லது நிலங்களிலிருந்தான விற்றுமுதலை முழுவதுமாகவோ
அல்லது பகுதியாகவோ உள்ளடக்கியிருக்குமிடத்து, பிரச்சினையிலுள்ள
நிலங்களின் அல்லது விளைபொருளின் பேரில் செலுத்தத்தக்க குத்தகைத்
தொகையைத் தீர்மானிக்குமாறு அரசானது, மாவட்ட ஆட்சியரைப் பணித்தல்
வேண்டும், மாவட்ட ஆட்சியர், அதன்பேரில் தொடர்புடைய தரப்பினருக்கு
அறிவிப்புக் கொடுத்தபின்பும், அரசால் வகுத்துரைக்கப்படலாகும் விசாரணையை
நடத்திய பின்பும், ஆணை வாயிலாக, குத்தகைத் தொகையை முடிவு செய்தல்
வேண்டும், அவ்வாறு செய்கையில்,
(8) அதே கிராமத்தில் அல்லது அருகிலுள்ள கிராமங்களில் அதேபோன்றே
விவரிப்பையும் அதே நலன்களையும் உடைய நிலங்களின் குத்தகைதாரர்களால்
செலுத்தத்தக்க தொகையையும்,
(b) அந்த நிலங்கள். தொடர்பாக, தேவதாசியால் செய்யப்பட்ட
மேம்பாடுகளையும்,
உரியவாறு கவனத்திற்கொள்ளுதல் வேண்டும். அத்தகைய ஆணையானது,
தொடர்புடைய தரப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படுதலும், அதோடு
வகுத்துரைக்கப்பட்ட முறையில் வெளியிடப்படுதலும் வேண்டும்.
(3) (2) ஆம் உட்பிரிவின்படி மாவட்ட ஆட்சியரால் நிருணயிக்கப்பட்ட
குத்தகைத் தொகையானது, மேற்சொன்ன உட்பிரிவின்படி ஆணை
வெளியிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் வருவாய் வாரியத்திடம்
முன்னிடப்பட்ட மனுவின்மூலம் எதிர்த்து வாதிடப்படலாம். ஆனால், அந்த
மனுவின் விளைவுக்குட்பட்டு, (2) ஆம் உட்பிரிவின்படி குந்தகைத் தொகையைக்
குறிக்கிற மாவட்ட ஆணையரின் ஆணையானது அறுதியானதாகும் மற்றும்
நீதிமன்றம் எதிலும் எதிர்த்து வாதிடப்படுதல் ஆகாது:
வரம்புரையாக: எனினும் வருவாய் வாரியம், மூன்று மாத கால அளவு
முடிவடைந்தபின்பு முன்னிடப்பட்ட மனுவை போதியகாரணங்களின்.
அடிப்படையில் ஏற்றுக்கொள்வதற்கு அதிகாரம் உடையது ஆகும்.
(4) (2) ஆம் உட்பிரிவின்படி குத்தகையை முடிவுசெய்கையில், மாவட்ட
ஆட்சியர் எந்தத் தேதியிலிருந்து ஆணை நடைமுறைக்கு வருமோ அந்தத்
தேதியைக் குறித்தல் வேண்டும், மற்றும் அத்தகைய நிலங்கள் அல்லது
விளைபொருள் அவ்வாறு குறிக்கப்பட்ட தேதியன்றும், அது முதற்கொண்டும் பணி
வரைக்கட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கொள்ளப்படும்.
(5) நிலம் எதனின் கொடையளிப்பு அல்லது நிலவருவாய் உரிமையளிப்பு
அல்லது நிலத்தினின்று பெற்ற விற்றுமுதல் காரணமாக, தேவதாசி எவரும், எந்தக்
கோயிலுக்கு உட்பட்டவராயிருக்கிறாரோ அந்தக் கோயில் எதன் தொடர்பான பணி
எதனையும் செய்வதற்கான கடமைப்பொறுப்பு எதுவும். இதில் இதற்கு முன்பு
வகைசெய்யப்பட்ட முறையில், அத்தகைய நிலம் உரிமையளிப்பு அல்லது
விளைபொருள், தன்னுரிமையளிப்பு செய்யப்பட்டிருக்கிற போது அல்லது,
நேர்வுக்கேற்ப, விடுவிக்கப்பட்டிருக்கிறபோது செயற்படுத்தத்தக்கது ஆகாது.
(6) (1), (2) அல்லது (3) ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை
எதுவும் நேர்வுக்கேற்ப, நிலத்தை அல்லது நிலவருவாய் உரிமையளிப்பை அல்லது
நிலத்திலிருந்து பெற்ற விளைபொருளைத் துய்ப்பதற்கான உரிமை தொடர்பான
உரிமை வழக்கை அல்லது எழுவினாவை விசாரிப்பதற்குத் தடையாகச்
செயற்படாது.
(7) (a) (1) ஆம் உட்பிரிவின்படி விதிக்கப்பட்ட விடுவரியானது, தொடர்புடைய
கோயிலுக்குச் செலுத்தத்தக்கதாக இருத்தல் வேண்டும்.
(b) (1) ஆம் உட்பிரிவின்படி தன்னுரிமையளிப்பு செய்யப்பட்ட நிலவருவாய்
அளிப்பு அல்லது, நேர்வுக்கேற்ப, (2) மற்றும் (3) ஆம் உட்பிரிவுகளின்படி
குறிக்கப்பட்ட குத்தகை, தொடர்புடைய தேவதாசிக்கு அவருடைய வாழ்நாளின்
போதும் அவருடைய மரணத்திற்குப் பின்பு தொடர்புடைய கோயிலுக்கும்
செலுத்தத்தக்கதாக இருத்தல் வேண்டும்.
(8) கோயிலில் ஒரு தேவதாசியால் செய்யப்படும் பணிக்குத் துணையானதாக
உள்ள ஒரு பணிக்காக இனாம் எதுவும் வழங்கப்பட்டிருக்குமிடத்து, அத்தகைய
இனாமானது, அது தேவதாசி இனாமாக இருந்தாற்போன்று தன்னுரிமையளிப்பு
செய்தலோ பணி வரைக்கட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுதலோ வேண்டும், மற்றும்
(1) முதல் (7) வரையிலான உட்பிரிவுகளின் வகைமுறைகள், அதற்கிணங்கப்
பொருந்துதல் வேண்டும்.
(9) இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக "தேவதாசி" என்பது, கோயிலில்
பணிசெய்வதற்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ள திருமணமாகாத இந்து பெண்
எவரும் என்று பொருள்படும்.
41. அறப்பணி அல்லது பணி எதனையும் செய்வதற்காக அளிக்கப்பட்ட
இனாமை திரும்பப் பெற்றுக்கொள்ளுதலும் திரும்ப அளித்தலும்.- (1) ஒரு சமய
நிறுவனத்திற்கு ஆதரவாக அல்லது அதனைப் பேணுவதற்காக அல்லது
அதனுடன் தொடர்புடைய அறப்பணி அல்லது பணியைச் செய்வதற்காக
அளிக்கப்பட்டு, அரசால் ஏற்படுத்தப்பட்ட உறுதிசெய்யப்பட்ட அல்லது
அங்கீகரிக்கப்பட்ட இனாம் எதுவும் முழுவதுமாக அல்லது அதன் பகுதி எதனின்,
பரிமாற்றம், நன்கொடை, விற்பனை அல்லது அடைமானம் எதுவும் மற்றும்
ஐந்தாண்டுகளுக்கு மேற்படுகிற கால அளவுக்கான குத்தகை எதுவும் முற்றிலும்.
இல்லாநிலையதாகும்:
வரம்புரையாக: மேற்சொன்ன தன்மையதான (நன்கொடை அல்லாத)
நடவடிக்கை எதுவும், நிறுவனத்திற்குத் தேவையானகதென அல்லது
நன்மையானதென அரசால் ஒப்பளிக்கப்படலாம்.
விளக்கம்.- இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், 1908 ஆம் ஆண்டு தமிழ்நாடு
நிலப்பண்ணைச் சொத்துக்கள் சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் 171908) பொருள்
வரையறை செய்யப்பட்டவாறான குடிவாரமுறை நிலமாக இருக்கிற நிலம்
எதனையும் பொறுத்து, நில உடமையாளர் மற்றும் குத்தகைதாரரின்
உரிமைகளையும் கடமைப்பொறுப்புகளையும் பாதிக்காது அல்லது குறைவுறச்
செய்யாது.
(2) (8) ஆட்சியர், தாமாகவோ அல்லது சமய நிறுவனத்தின் அறங்காவலரின்.
அல்லது ஆணையரின், அல்லது அத்தகைய அறங்காவலரின் அல்லது
ஆணையரின் சம்மதத்தைப் பெற்றுள்ளவரும், அந்த நிறுவனத்தில்
உரித்தமுடையவருமான ஆள் எவரின்: விண்ணப்பத்தின் பேரிலோ,
பின்வருவனவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களுக்காகவோ,
அத்தகைய இனாம் எதனையும் முழுவதுமாகவோ அல்லது அதன் பகுதி
எதனையுமோ ஆணையின் மூலம் திரும்பக் கைக்கொள்ளலாம், அதாவது:-
0 (1) ஆம் உட்பிரிவின் வரம்புரையில் சுட்டப்பட்ட நேர்வில் தவிர
அத்தகைய இனாமை அல்லது அதன் பகுதியை வைத்திருப்பவர் அல்லது
நிறுவனத்தின் அறங்காவலர், அத்தகைய இனாம் அல்லது அதன் பாகம்
அல்லது அதன் பகுதி எதனின் பரிமாற்றத்தை, நன்கொடையை,
விற்பனையை அல்லது அடைமானத்தைச் செய்திருந்தார் அல்லது ஐந்து
ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு காலஅளவுக்கு அந்த இனாமின் அல்லது
அதன் பகுதி எதனின் குத்தகையை அளித்திருக்கிறார் என்பது; அல்லது
(i) சமய நிறுவனமாக இருப்பது அற்றுப் போய்விட்டது அல்லது
பிரச்சினையிலுள்ள அறப்பணியை அல்லது பணியை எந்த வகையிலும்
செய்ய இயலாததாகி விட்டது என்பது; அல்லது
(i) எந்த அறப்பணியை அல்லது பணியைச் செய்வதற்காக அந்த
இனாம் மேற்சொன்னபடி ஏற்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டதோ அல்லது
அங்கீகரிக்கப்பட்டதோ, அந்த அறப்பணியை அல்லது பணியை அல்லது,
நேர்வுக்கேற்ப, மேற்சொன்ன அந்த அறப்பணியின் அல்லது பணியின் பகுதி
எதையும் நிறுவனத்தின் பழக்கம் அல்லது வழக்கத்திற்கு இணங்க
புரிவதற்கோ அல்லது செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளைச்
செய்வதற்கோ அத்தகைய இனாமை அல்லது பகுதியை வைத்திருப்பவர்
தவறினார் என்பது,
இந்தக் கூறின்படி ஓர் ஆணையைப் பிறப்பிக்கும்போது ஆட்சியர், அத்தகைய
இனாம் அல்லது, நேர்வுக்கேற்ப அத்தகைய பகுதியை உள்ளடக்கிய இனாமானது,
மேல்வாரம் மற்றும் குடிவாரம் இரண்டுக்குமான மானியமா அல்லது
மேல்வாரத்திற்கு மட்டுமேயான மானியமா என்பதை முடிவு செய்தல் வேண்டும்:
வரம்புரையாக: மாறான சான்று இல்லாதிருக்கையில், சிறு இனாம் எதுவும்
மேல்வாரம் மற்றும் குடிவாரம் இரண்டுக்குமான மானியம் என்று ஆட்சியர் துணிபு
கொள்ளுதல் வேண்டும்.
(b) (a) கூறின்படி ஓர் ஆணையைப் பிறப்பிப்பதற்கு முன்பு, ஆட்சியர்,
அறங்காவலருக்கு, ஆணையருக்கு, தொடர்புடைய இனாம்தாரருக்கு, அவர்
இனாம்தாரராக இல்லாதவிடத்து, அந்த இனாமை உடைமையில்
கொண்டுள்ளவருக்கு மற்றும் இனாமின் உரிமைமாற்றம் பெறுபவருக்கு
அறிவிப்புக்கொடுத்தல் வேண்டும்; ஆட்சியர், அத்தகைய அறிவிப்பின்படியை
வகுத்துரைக்கப்படலாகும் முறையில் வெளியிடுதலும் வேண்டும் மற்றும்
அத்தகைய வெளியீடானது, அத்தகைய ஆணையால் பெரும்பாலும்
பாதிக்கப்படக்கூடிய வேறு ஆள் ஒவ்வொருவருக்கும், போதிய அறிவிப்பாக
இருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும், மற்றும் ஆட்சியர், அத்தகைய அறிவிப்பு
கொடுக்கப்படுகிற அல்லது கொடுக்கப்பட்டதாகக் கொள்ளப்படுகிற ஆட்களின்
மறுப்புரைகளைக் கேட்டு, வகுத்துரைக்கப்படலாகும் விசாரணையைச் செய்தல்
வேண்டும்.
விளக்கம்.- இனாமின் ஒரு பகுதி மட்டுமே பாதிக்கப்படுகிறவிடத்து,
அத்தகைய பகுதியை வைத்திருப்பவருக்கும், அதோடு கூட மற்றபகுதியை அல்லது
பகுதிகளை வைத்திருப்பவர் அல்லது வைத்திருப்பவர்களுக்கும், ஒருவர்
வைத்திருப்பவராக இல்லாவிட்டால் அத்தகைய ஒவ்வொரு பகுதியையும்
உடைமையில் கொண்டுள்ளவருக்கும் அத்தகைய பகுதி ஒவ்வொன்றின்
உரிமைமாற்றம் பெற்றவருக்கும் அறிவிப்புக் கொடுக்கப்படுதல் வேண்டும், மற்றும்
அத்தகைய ஆட்கள் அனைவரின் மறுப்புகளும் ஆட்சியரால் கேட்கப்படுதல்
வேண்டும்.
(6) (a) கூறின்படி பிறப்பிக்கப்பட்ட ஒவ்வோர் ஆணையின் படியும் (0) கூறில்
சொல்லப்பட்ட ஆட்கள் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்படுதல் வேண்டும், மற்றும்.
வகுத்துரைக்கப்பட்டமுறையில் வெளியிடப்படுதல் வேண்டும்.
(d) (i) (a) கூறின்படியான ஆணையால் குறையுற்ற தரப்பினர் எவரும்,
வகுத்துரைக்கப்படலாகும் காலத்திற்குள் மாவட்ட ஆட்சியருக்கு மேல்முறையீடு
செய்யலாம் மற்றும் அத்தகைய மேல்முறையீட்டின்பேரில் மாவட்ட ஆட்சியர்,
ஆணையவருக்கும் (D) கூறில் சொல்லப்பட்டுள்ள ஆட்கள் ஒவ்வொருவருக்கும்
அறிவிப்புக் கொடுத்த பின்பும், வகுத்துரைக்கப்படலாகும் விசாரணையைச்
செய்தபின்பும் ஆட்சியரின் ஆணையை உறுதிசெய்தோ, மாற்றியமைத்தோ
அல்லது அறவு செய்தோ ஓர் ஆணையைப் பிறப்பிக்கலாம்;
(i) அத்தகைய மேல்முறையீட்டின் பேரில், மாவட்ட ஆட்சியரின்:
ஆணை அல்லது வகுத்துரைக்கப்பட்ட காலத்திற்குள் மாவட்ட ஆட்சியருக்கு (1)
ஆம் உட்பிரிவின்படி, மேல்முறையீடு எதுவும் செய்யப்படாதவிடத்து, (௨)
கூறின்படியான ஆட்சியரின் ஆணை, அறுதியானதாக இருக்கும்:
வரம்புரையாக: (i) ஆம் 2 ' கூறின்படி ஒரு மேல்முறையீடு
செய்யப்பட்டிருந்து, மாவட்ட ஆட்சியரால் அது முடிவு செய்யப்பட்டிருக்குமிடத்து,
அல்லது மாவட்ட ஆட்சியருக்கு மேல்முறையீடு எதுவும் செய்யப்பட்டிராது.
மேல்முறையீடு செய்வதற்கான காலம் முடிவடைந்தவிடத்து, மாவட்ட ஆட்சியரின்,
அல்லது, நேர்வுக்கேற்ப ஆட்சியரின் அறுதியான ஆணையால் குறையுற்ற
தரப்பினர் எவரும், அந்த இனாமானது, மேல்வாரம் மற்றும் குடிவாரம் இரண்டையும்
உள்ளடக்கியதா அல்லது மேல்வாரத்தை மட்டும் கொண்டதா என்பதை முடிவு
செய்வதற்காக, ஓர் உரிமை வழக்கு நீதிமன்றத்தில் ஓர் உரிமைவழக்கு தாக்கல்
செய்யலாம். அத்தகைய உரிமை வழக்கானது, 0) ஆம் உட்கூறின்படி ஒரு
மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறவிடத்து அந்த மேல்முறையீட்டின் மீதான
ஆட்சியருடைய ஆணையின் தேதியிலிருந்து, அல்லது மேல்முறையீடு எதுவும்
செய்யப்பட்டிராதவிடத்து, மாவட்ட ஆட்சியருக்கு மேல்முறையீடு செய்வதற்காக (i)
ஆம் உட்கூறின்படி வகுத்துரைக்கப்பட்ட காலஅளவு கழிவுறும் தேதியிலிருந்து
தொடுக்கப்படுதல் வேண்டும்.
(6) (d) கூறில் பிறவாறு வகைசெய்யப்பட்டிருந்தாலன்றி, இந்தப் பிரிவின்படி
பிறப்பிக்கப்பட்ட திரும்பக் கைக்கொள்வதற்கான ஓர் ஆணை நீதிமன்றம் எதிலும்
மறுத்து வாதிடப்படுதல் ஆகாது.
() இந்தப் பிரிவின்படி இனாம் எதுவும் அல்லது இனாம் எதனின் பகுதி
அல்லது கூறு எதுவும் திரும்பக் கைக்கொள்ளப்பட்டவிடத்து, ஆட்சியர், அல்லது,
நேர்வுக்கேற்ப, மாவட்ட ஆட்சியர் அத்தகைய இனாம் அல்லது பகுதியை-
() தொடர்புடைய சமய நிறுவனத்திற்கு நிலைக்கொடையாக அல்லது
(i) சமய நிறுவனமாக இருப்பது அற்றுப்போய்விட்டது அல்லது
பிரச்சனையிலுள்ள அறப்பணி அல்லது பணி எந்த வகையிலும் செய்ய
இயலாததாகிவிட்டது என்ற காரணத்தின்பேரில் திரும்பக்
கைக்கொள்ளப்படும்போது ஆணையர் பரிந்துரைக்கும்படியான சமய, கல்வி
அல்லது அற நிறுவனத்திற்கான நிலைக்கொடையாக.
ஆணை வாயிலாக மறுபடியும் அளித்தல் வேண்டும்.
@ () கூறின்படி பிறப்பிக்கப்பட்ட மறுஅளிப்பு ஆணையானது,
வகுத்துரைக்கப்பட்ட காலத்திற்குள்: ஆட்சியருக்குச் செய்யப்பட்ட
விண்ணப்பத்தின் பேரில், வகுத்துரைக்கப்பட்ட முறையில் அவரால்
நிறைவேற்றப்படுதல் வேண்டும்.
(h) இந்தப் பிரிவில் உள்ள எதுவும், 40 ஆம் பிரிவின் செயற்பாட்டினைப்
பாதித்தல் ஆகாது.
42. சமய நிறுவனத்தில் பதவி வகிப்பவர்களும் பணியாளர்களும் நகைகள்
முதலியவற்றை நிபந்தனைகளின் படியன்றி உடைமையில் வைத்திருத்தல்
ஆகாது.- இந்தச் சட்டத்தின்படி ஏற்பாடு செய்யப்பட்ட அல்லது ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாகக் கொள்ளப்பட்ட திட்டம் எதிலும், அல்லது நீதிமன்றத்தின்
தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலும் அல்லது மாறான பழக்கம் அல்லது வழக்கம்
எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், ஒரு சமய நிறுவனத்தில் பதவி வகிப்பவர்
அல்லது பணியாளர் அல்லது வேறு ஆள் எவரும், சமய நிறுவனத்திற்குச்
சொந்தமான நகைகள் அல்லது வேறு மதிப்புள்ள பொருள்களை உடைமையில்
வைத்திருப்பதற்கு ஆணையர், பொது அல்லது சிறப்பு ஆணை வாயிலாக
பணிக்கலாகும் நிபந்தனைகள் அல்லது காப்பாணைகளின்படி அன்றி, உரிமை
கொண்டவர் ஆகார்.
43. சட்ட நடவடிக்கைகளின் இணக்கத் தீர்விற்கு ஆணையர் ஒப்பளிப்புச்
செய்தல்.-- ஒரு சமய நிறுவனம் தரப்பினராக உள்ள ஒரு நீதிமன்றத்தின் முன்பு
முடிவுறா நிலையிலுள்ள உரிமை வழக்கு, விண்ணப்பம் அல்லது மேல்முறையீடு
எதுவும், ஆணையரின் முன் ஒப்பளிப்புடன் அன்றி, நிறுவனத்தின்
அறங்காவலரால் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுதலோ இணக்கத்தீர்வு செய்து
கொள்ளப்படுதலோ ஆகாது.
43-A. மடங்களின் கீழுள்ள கோயில்களில் நிருவாக அலுவலர்களை அமர்த்துதலும்
அவர்தம் கடமையும்.- (1) 45 ஆம் பிரிவில் அல்லது இந்தச் சட்டத்தின் பிற
வகைமுறையில் என்ன அடங்கியிருந்தபோதிலும், வகுத்துரைக்கப்படலாகும்
நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆணையர், ஒரு மடத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள
கோயில் எதற்கும் ஒரு நிருவாக அலுவலரை அமர்த்தலாம்.
(2) அந்த நிருவாக அலுவலர் மடத்தின் அறங்காவலருடைய
கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருத்தல் வேண்டும், மற்றும் வகுத் ரைக்கப்படலாகும்
அதிகாரங்களைச் செலுத்துதலும் கஉகமைகளை ஆற்றுதலும் வேண்டும்.
(3) ஆணையர், சரியானதும் போதியதுமான காரணத்திற்காக, நிருவாக
அலுவலரை வேலையிலிருந்து இடைந்க்கம் செய்யலாம், நீக்கலாம் அல்லது
விலக்கலாம்.
மடங்கள் அல்லது அவற்றுடன் இணைக்கப்பட்ட குறித்தவகை
நிலைக்கொடைகள் அல்லாத வேறு சமய நிறுவனங்கள்
44. 45 முதல் 58 வரையிலான பிரிவுகள், மடங்களுக்கு அல்லது மடங்களுடன்
இணைக்கப்பட்ட குறித்தவகை நிலைக்கொடைகளுக்குப் பொருந்தாது.- 45
முதல் 58 வரையிலான பிரிவுகளின் வகைமுறைகள், மடங்களுக்கு அல்லது
மடங்களுடன் இணைக்கப்பட்ட குறித்தவகை நிலைக்கொடைகளுக்குப்
பொருந்தாது.
45. நிருவாக அலுவலர்களை அமர்த்துதலும் அவர்தம் கடமைகள். (1) இந்தச்
சட்டத்தில் என்ன அடங்கியிருந்தபோதில
Rules, notifications and orders under this Act
Listed from India Code. Each opens there.