Tamil Nadu · 2017 · Act 19

THE TAMIL NADU GOODS AND SERVICES TAX ACT, 2017

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

தமிழ்நாடு சட்ட எண்‌.19/2017 2017-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டம்‌. =y ௨ ௧ ௦ 10. 11. 12. 13. 14. 15. 16. கூறுகளின்‌ வகைபாடுகள்‌. அத்தியாயம்‌ | முன்னுரை. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌. பொருள்‌ வரையறைகள்‌. அத்தியாயம்‌ 1l நிருவாகம்‌. இந்தச்‌ சட்டத்தின்‌ கழான அலுவலர்கள்‌. அலுவலர்களின்‌ அமர்த்துகை. அலுவலர்களின்‌ அதிகாரங்கள்‌. ஒரு சில சூழ்நிலைகளில்‌ உரிய அலுவலராக மைய வரி அலுவலர்களுக்கு அதிகாரம்‌ அளித்தல்‌. அத்தியாயம்‌ ॥ வரிவிதித்தல்‌ மற்றும்‌ வஞுலித்தல்‌. வழங்குகையின்‌ வீச்சு. கூட்டு மற்றும்‌ கலப்பு வழங்குகைகளின்‌ மீதான வரிக்‌ கடப்பாடு. வரி விதித்தல்‌ மற்றும்‌ வசூலித்தல்‌. இணக்க வரிவிதிப்பு. வரியிலிருந்து விலக்களிப்பு வழங்குவதற்குள்ள அதிகாரம்‌. அத்தியாயம்‌ [V வழங்குகையின்‌ காலம்‌ மற்றும்‌ மதிப்பு. சரக்குகளின்‌ வழங்குகை காலம்‌. சேவைகளின்‌ வழங்குகையின்‌ காலம்‌. சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ வழங்குகைப்‌ பொறுத்து வரி வீதத்தில்‌ மாற்றம்‌. வரிவிதிக்கத்தக்க வழங்குகையின்‌ மதிப்பு. அத்தியாயம்‌ V உள்ளிட்டு வரி வரவு. உள்ளிட்டு வரி வரவிணை எடுப்பதற்கான தகுமை மற்றும்‌ நிபந்தனைகள்‌. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. 30. 31. 32. 33. 34. வரவு மற்றும்‌ முடக்கிய வரவுகளைப்‌ பகிர்ந்தளித்தல்‌. சிறப்பு சூழ்நிலைகளில்‌ வரவு கிடைக்கத்தக்க தண்மை. சில்லறை வேலைக்காக அனுப்பப்படும்‌ உள்ளீடுகளையும்‌ மற்றும்‌ மூலதனச்‌ சரக்குகளையும்‌ பொறுத்து உள்ளீட்டு வரி வரவு எடுத்தல்‌. உள்ளிட்டுச்‌ சேவை விநியோகிப்பவரால்‌ வரவினைப்‌ பகிர்ந்தளிக்கும்‌ முறை. மிகையாகப்‌ விநியோகிக்கப்பட்ட வரவினை வனளுலிக்கும்‌ முறை. அத்தியாயம்‌ VI பதிவு பெறுதல்‌. பதிவு பெறுவதற்கு கடப்பாடுடைய நபர்கள்‌. பதிவு பெறுவதற்கு கடப்பாடற்ற நபர்கள்‌. குறித்த சில நேர்வுகளில்‌ கட்டாயப்‌ பதிவு. பதிவு பெறுவதற்கான நடைமுறை. பதிவு பெற்றதாக கருதப்படுதல்‌. தற்செயல்‌ வரிவிதிக்கத்தக்க நபர்‌ மற்றும்‌ குடியிராத வரிவிதிக்கத்தக்க நபர்‌ குறித்தான சிறப்பு வகைமுறைகள்‌. பதிவிற்கு திருத்தம்‌. பதிவினை ரத்து செய்தல்‌. பதிவு ரத்தினை திரும்பப்‌ பெறுதல்‌. அத்தியாயம்‌ Vil வரி விலைப்பட்டியல்‌, வரவு மற்றும்‌ பற்றுக்‌ குறிப்புகள்‌. வரி விலைப்பட்டியல்‌. அனுமதியற்ற வரி வஞுலிப்பைத்‌ தடை செய்தல்‌. வரி விலைப்பட்டியலில்‌ மற்றும்‌ பிற ஆவணங்களில்‌ சுட்டிக்காட்டப்பட வேண்டிய வரித்‌ தொகை. வரவு மற்றும்‌ பற்றுக்‌ குறிப்புகள்‌. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. 44. 4௪ 46. 47. 48. 49. 5௦0. 51. 52. 53. 54. 55. அத்தியாயம்‌ Vil கணக்குகள்‌ மற்றும்‌ பதிவுருக்கள்‌. கணக்குகளும்‌ பிற பதிவுருக்களும்‌. கணக்குகளை நிறுத்தி வைத்துக்‌ கொள்வதற்கான கால அளவு. அத்தியாயம்‌ 1X அறிக்கைகள்‌. வெளிப்புற வழங்குகைகள்‌ பற்றிய விவரங்களை அளித்தல்‌. உள்வரு வழங்குகைகள்‌ பற்றிய விவரங்களை அளித்தல்‌. அறிக்கைகள்‌ அளித்தல்‌. முதல்‌ அறிக்கை. உள்ளிட்டு வரி வரவுக்கான கோரிக்கையும்‌ மற்றும்‌ அதனைத்‌ தற்காலிகமாக ஏற்றலும்‌. உள்ளீட்டு வரி வரவினை ஒத்திசைவு செய்தல்‌, எதிர்மாறாக்குதல்‌ மற்றும்‌ மீளக்‌ கோருதல்‌. ஒத்திசைவு, திருப்புதல்‌ மற்றும்‌ வெளியீட்டு வரி கடப்பாட்டில்‌ குறைப்பினை திரும்பப்‌ பெறுதல்‌. ஆண்டறிக்கை. இறுதி அறிக்கை. அறிக்கை அளிக்க தவறுபவருகளுக்கான அறிவிப்பு. தாமதக்‌ கட்டணம்‌ விதித்தல்‌. சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி தொழிலாற்றுநர்கள்‌. அத்தியாயம்‌ X வரி செலுத்தம்‌. வரி, வட்டி, தண்டத்‌ தொகை மற்றும்‌ பிற தொகைகளின்‌ செலுத்தம்‌. தாமதமான வரி செலுத்தத்தின்‌ மீது வட்டி. ஆதாரத்தில்‌ வரி பிடித்தம்‌. ஆதாரத்தில்‌ வரி வசூலித்தல்‌. உள்ளிட்டு வரி வரவு மாற்றம்‌. அத்தியாயம்‌ 36 திருப்பிக்கொடுத்தல்கள்‌. வரித்‌ திருப்பிக்‌ கொடுத்தல்‌. குறித்த சில நேர்வுகளில்‌ திருப்பிக்‌ கொடுத்தல்‌. 56. 57. 58. 59. 60. 61. 62. 63. 64. 65. 66. 67. 68. 69. 70. . 72. 73. காலதாமத திருப்பிக்‌ கொடுத்தலுக்கு வட்டி. நுகர்வோர்‌ நல நிதியம்‌. நிதியத்தைப்‌ பயன்படுத்துதல்‌. அத்தியாயம்‌ 301 வரிக்கணிப்பு. சுய வரிக்கணிப்பு. தற்காலிக வரிக்கணிப்பு. அறிக்கைகளை கூர்ந்தாய்வு செய்தல்‌. அறிக்கைகளை தாக்கல்‌ செய்யாதவர்களின்‌ வரிக்கணிப்பு. பதிவு பெறாத நபர்களின்‌ வரிக்கணிப்பு. குறித்த சில சிறப்பு நேர்வுகளில்‌ சுருக்கு முறை வரிக்கணிப்பு. அத்தியாயம்‌ Xl தணிக்கை. வரிவிதிக்கும்‌ அதிகார அமைப்புகளால்‌ தணிக்கை. சிறப்புத்‌ தணிக்கை. அத்தியாயம்‌ XIV ஆய்வு, தேடுதல்‌, கைப்பற்றுதல்‌ மற்றும்‌ கைது செய்தல்‌. ஆய்வு, தேடுதல்‌ மற்றும்‌ கைப்பற்றுதலுக்கான அதிகாரம்‌. ஏற்றிச்செல்லப்படும்‌ சரக்குகளை ஆய்வு செய்தல்‌. கைது செய்வதற்கு அதிகாரம்‌. சான்றினை அளிப்பதற்கு மற்றும்‌ ஆவணங்களை முன்னிலைப்படுத்துவதற்கு நபர்களுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு அதிகாரம்‌. வணிக வளாகங்களுக்குள்‌ நுழைதல்‌. உரிய அலுவலர்களுக்கு உதவி செய்வதற்கான அலுவலர்கள்‌. அத்தியாயம்‌ XV கேட்புகள்‌ மற்றும்‌ வசூலிப்பு. மோசடியாக அல்லது வேண்டுமென்றே தவறான விவர அறிக்கை எதுவும்‌ அல்லது உண்மைகளை மறைப்பது அல்லாத பிற காரணம்‌ எதற்காகவும்‌ வரியை செலுத்தாதிருத்தல்‌ அல்லது குறைவாக செலுத்துதல்‌ அல்லது 74. 75. 76. 77. 78. 79. 80. 81. 82. 83. 84. 85. 86. 87. 88. தவறுதலாக திருப்பிக்‌ கொடுத்தல்‌ அல்லது உள்ளீட்டு வரி வரவினை தவறுதலாக துய்த்தல்‌ அல்லது பயன்படுத்துதல்‌ ஆகியவற்றை தீர்மானித்தல்‌. மோசடியாக அல்லது வேண்டுமென்றே தவறான விவர அறிக்கை எதையும்‌ அல்லது உண்மைகள்‌ மறைக்கப்பட்டிருப்‌- பதன்‌ காரணம்‌ எதற்காகவும்‌ வரி செலுத்தாதிருத்தல்‌ அல்லது குறைவாக செலுத்துதல்‌ அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுத்தல்‌ அல்லது உள்ளீட்டு வரி வரவினை தவறுதலாக துய்த்தல்‌ அல்லது பயன்படுத்துதல்‌ ஆகியவற்றை தீர்மானித்தல்‌. வரியைத்‌ தீர்மாணிப்பது தொடர்பான பொது வகைமுறைகள்‌. வரி வளுலிக்கப்பட்டு ஆனால்‌ அரசுக்கு செலுத்தப்படாமல்‌ இருத்தல்‌. வரி தவறுதலாக வளுலிக்கப்பட்டு. மைய அரசுக்கு அல்லது மாநில அரசுக்கு செலுத்தியிருத்தல்‌. வரி வசூல்‌ நடவடிக்கைகளை தொடங்குதல்‌. வரியை வளுலித்தல்‌. தவணை முறைகளில்‌ வரியை மற்றும்‌ பிற தொகையைச்‌ செலுத்துதல்‌. குறித்த சில நேர்வுகளில்‌ சொத்து உரிமை மாற்றம்‌ இல்லாநிலையதாகும்‌. வரியானது சொத்தின்‌ மீது முதல்‌ பொருட்பிணைப்‌ பொறுப்பாக இருக்கும்‌. குறித்த சில நேர்வுகளில்‌ வருவாயை பாதுகாப்பதற்கு தற்காலிக பற்றுகை. குறித்த சில வசூல்‌ நடவடிக்கைகளின்‌ தொடர்ச்சி மற்றும்‌ செல்லுந்தன்மை. அத்தியாயம்‌ XVI குறித்த சில நேர்வுகளில்‌ செலுத்துவதற்கு கடப்பாடு. வணிகத்தை உரிமை மாற்றம்‌ செய்யும்‌ நேர்வில்‌ கடப்பாடு. முகவர்‌ மற்றும்‌ முதல்வரின்‌ கடப்பாடு. நிறுமங்களை ஒன்றாக சேர்க்கும்‌ அல்லது இணைக்கும்‌ நேர்வில்‌ கடப்பாடு. கலைப்பிலுள்ள நிறுமத்தை பொறுத்த நேர்வில்‌ கடப்பாடு. 89. 90. 9. 92. 93. 94. 9. 96. 97. 9௧. 99. 100. 101. 102. 103. 104. 105. 106. 107. தனியார்‌ நிறுமத்தின்‌ இயக்குநர்களின்‌ கடப்பாடு. வரியை செலுத்துவதற்கு நிறுவகத்தின்‌ கூட்டாளிக்கு உள்ள கடப்பாடு. காப்பாளர்கள்‌, பொறுப்புக்‌ கட்டளையர்கள்‌ முதலானவர்களின்‌ கடப்பாடு. நீதிமன்ற காப்பாளர்கள்‌ முதலானவர்களின்‌ கடப்பாடு, ஆகியவை. குறித்த சில நேர்வுகளில்‌ வரி, வட்டி அல்லது தண்டத்‌ தொகை செலுத்துவது குறித்த கடப்பாடு தொடர்பான சிறப்பு வகைமுறைகள்‌. பிற நேர்வுகளில்‌ கடப்பாடு. அத்தியாயம்‌ 36/1 முன்னதாகத்‌ தீர்மானித்தல்‌. பொருள்‌ வரையறைகள்‌. முன்னதாக தீர்மானிக்கும்‌ அதிகார அமைப்பினை அமைத்தல்‌. முன்னதாக தீர்மானிப்பதற்கான விண்ணப்பம்‌. விண்ணப்பத்தைப்‌ பெற்றதன்‌ பேரில்‌ நடைமுறை. முன்‌ தீர்மானத்திற்கான மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அமைக்கப்படுதல்‌. மேல்முறையீட்டு அதிகார அமைப்பிடம்‌ செய்யப்படும்‌ மேல்முறையீடு. மேல்முறையீட்டு அதிகார அமைப்பின்‌ ஆணைகள்‌. முன்‌ தீர்மானத்தினை திருத்தி அமைத்தல்‌. முன்‌ தீர்மானத்தின்‌ பொருந்துகை. குறித்த சில நேர்வுகளில்‌ முன்‌ தீர்மானம்‌ இல்லா நிலையதாகுதல்‌. அதிகார அமைப்பின்‌ மற்றும்‌ மேல்முறையீட்டு அதிகார அமைப்பின்‌ அதிகாரங்கள்‌. அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பின்‌ நடைமுறை. அத்தியாயம்‌ XVII மேல்முறையீடுகள்‌ மற்றும்‌ சீராய்வு. மேல்முறையீட்டு அதிகார அமைப்பிற்கு செய்யப்படும்‌ 108. 109. 110. 111. 112. 113. 114. 115. 116. 117. 118. 119. 120. 121. 122. 123. 124. 125. 126. 127. 128. மேல்முறையீடுகள்‌. சீராய்வு அதிகார அமைப்பின்‌ அதிகாரங்கள்‌. மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌ மற்றும்‌ அதன்‌ நீதியர்‌ ஆயங்கள்‌. மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தின்‌ தலைவர்‌ மற்றும்‌ உறுப்பினர்கள்‌, அவர்களுடைய தகுதி, அமர்த்துகை, பணி வரைக்கட்டுகள்‌, முதலியன. மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தின்‌ முன்புள்ள நடைமுறை. மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தில்‌ மேல்முறையீடு செய்தல்‌. மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தின்‌ ஆணைகள்‌. மாநிலத்‌ தலைவரின்‌ நிதி மற்றும்‌ நிர்வாக அதிகாரங்கள்‌. மேல்முறையீட்டை அனுமதிப்பதற்காக செலுத்தப்பட்ட தொகையின்‌ திருப்பி செலுத்துகைக்கு வட்டி. அதிகாரம்‌ அளிக்கப்பட்ட பிரதிநிதி மூலம்‌ முன்னிலையாதல்‌. உயர்ந்திமன்றத்தில்‌ மேல்முறையீடு செய்தல்‌. உச்சந்திமன்றத்தில்‌ மேல்முறையீடு செய்தல்‌. மேல்முறையீடுகள்‌ முதலியவை இருந்தபோதிலும்‌ செலுத்தப்பட வேண்டிய தொகைகள்‌, முதலியவை. ஒரு சில நேர்வுகளில்‌ தாக்கல்‌ செய்யப்பட வேண்டாத மேல்முறையீடு. மேல்முறையீடு செய்யத்தக்கவை அல்லாத முடிவுகள்‌ மற்றும்‌ ஆணைகள்‌. அத்தியாயம்‌ XIX குற்றங்கள்‌ மற்றும்‌ தண்டனைகள்‌. ஒரு சில குற்றச்சாட்டுகளுக்கான தண்டனை. தகவல்‌ அறிக்கையை அளிப்பதற்கு தவறுவதற்கான தண்டத்‌ தொகை. புள்ளி விவரங்களை அளிப்பதற்கு தவறுகைக்கான அபராதம்‌. பொதுவான தண்டத்தொகை. அபராதம்‌ தொடர்பான பொது ஒழுங்கமைவு. குறிப்பிட்ட இனங்களில்‌ தண்டத்‌ தொகை விதிக்கும்‌ அதிகாரம்‌. தண்டத்‌ தொகை அல்லது கட்டணம்‌ அல்லது இரண்டையும்‌ தள்ளுபடி செய்யும்‌ அதிகாரம்‌. 129. 130. 131. 132. 133. 134. 135. 136. 137. 138. 139. 140. 141. 142. 143. 144. 145. 146. 147. 148. 149. 150. போக்குவரத்தில்‌ உள்ள சரக்குகள்‌ மற்றும்‌ வாகனங்களை நிறுத்தி வைத்தல்‌, கைப்பற்றுதல்‌ மற்றும்‌ விடுவித்தல்‌. சரக்குகள்‌ அல்லது வாகனங்களை பறிமுதல்‌ செய்தல்‌ மற்றும்‌ தண்டத்‌ தொகை விதித்தல்‌. பறிமுதல்‌ அல்லது தண்டத்‌ தொகையானது பிற தண்டனையோடு குறுக்கீடு செய்யாதிருத்தல்‌. ஒரு சில குற்றங்களுக்கான தண்டனை. அலுவலர்களின்‌ மற்றும்‌ ஒரு சில பிற நபர்களின்‌ கடப்பாடு. குற்றங்களை விசாரணைக்கு எடுத்துக்‌ கொள்ளுதல்‌. குற்றமுறு மனநிலையை அனுமானித்தல்‌. ஒருசில சூழ்நிலைகளின்கீழ்‌ விவரவுரைகளின்‌ தொடர்புடைமை. நிறுமங்களால்‌ செய்யப்படும்‌ குற்றங்கள்‌. குற்றங்களை சமரசமாகத்‌ தீர்த்தல்‌. அத்தியாயம்‌ XX மாறுதற்கால வகைமுறைகள்‌. இருந்துவரும்‌ வரி செலுத்துநர்களின்‌ வலசை பெயர்தல்‌. உள்ளிட்டு வரி வரவுக்கான மாறுதற்கால ஏற்பாடுகள்‌. சில்லறைப்‌ பணிகள்‌ தொடர்பான மாறுதற்கால வகைமுறைகள்‌. பல்வகைப்பட்ட மாறுதற்கால வகைமுறைகள்‌. அத்தியாயம்‌ XXI பல்வகைப்பட்டவை. சில்லறை வேலை நடைமுறை. குறித்த சில நேர்வுகளில்‌ ஆவணங்கள்‌ பற்றிய அனுமானம்‌. நுண்ணிய படங்கள்‌, ஆவணங்களின்‌ உருவ நேர்படிகள்‌ மற்றும்‌ கணினி அச்சு வெளியீடுகள்‌ ஆவணங்களாக மற்றும்‌ சான்றாக ஏற்றுக்‌ கொள்ளக்கூடியவையாக இருத்தல்‌. பொது வலைதள முகவரி. ஏற்றுமதிகள்‌ செய்யப்பட்டதாக கருதப்படுதல்‌. குறித்த சில செயல்முறைகளுக்கான சிறப்பு நடைமுறை. சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி இணக்க மதிப்பீடு. தகவல்‌ அறிக்கையை அளிப்பதற்குரிய கடமைப்‌ பொறுப்பு. 151. 152. 153. 154. 155. 156. 157. 158. 159. 160. 161. 162. 163. 164. 165. 166. 167. 168. 169. 170. 171. 172. 173. 174. புள்ளி விவரங்களை திரட்டுவதற்கான அதிகாரம்‌. தகவலை தெரியப்படுத்துவதற்குத்‌ தடை. வல்லுநரிடமிருந்து உதவியைப்‌ பெறுதல்‌. மாதிரிகளை எடுப்பதற்கு அதிகாரம்‌. மெய்ப்பிக்கும்‌ சுமை. அரசு ஊழியர்களாக கொள்ளப்பட வேண்டிய நபர்கள்‌. சட்டத்தின்‌ கீழ்‌ நடவடிக்கைகளின்‌ மீதான பாதுகாப்பு. அரசு ஊழியர்‌ தகவலை வெளிப்படுத்துதல்‌. குறித்த சில நேர்வுகளில்‌ நபர்கள்‌ பொறுத்த தகவல்‌ வெளியிடுதல்‌. சில காரணங்களினால்‌ வரிக்கணிப்பு நடவடிக்கைகள்‌, முதலியவை செல்லாததாக இருத்தல்‌ கூடாது. பதிவுருவில்‌ தெளிவாகத்‌ தெரிகின்ற பிழைகளை நீக்குதல்‌. உரிமையியல்‌ நீதிமன்றங்களின்‌ அதிகார வரம்பிற்குத்‌ தடை. கட்டணம்‌ விதித்தல்‌. விதிகளை செய்வதற்கான அரசின்‌ அதிகாரம்‌. ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. விதிகள்‌, ஒழுங்குமுறை விதிகள்‌ மற்றும்‌ அறிவிக்கைகளை முன்‌ வைத்தல்‌. அதிகாரங்களின்‌ ஒப்படைவு. அறிவுறுத்தல்‌ அல்லது பணிப்புரைகளை வழங்குவதற்கான அதிகாரம்‌. குறித்த சில சூழ்நிலைகளில்‌ அறிவிப்பு சார்வு செய்தல்‌. வரி முதலியவற்றை முழு தொகையாக்கல்‌. இலாப நோக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள்‌. இடர்பாடுகளை அகற்றுதல்‌. குறித்த சில சட்டங்களை திருத்தம்‌ செய்தல்‌. நீக்கறவு மற்றும்‌ காப்பு. 1-ஆம்‌ இணைப்புப்‌ பட்டியல்‌. ॥-ஆம்‌ இணைப்புப்‌ பட்டியல்‌. ॥-ஆம்‌ இணைப்புப்‌ பட்டியல்‌. தமிழ்நாடு சட்ட எண்‌.19/2017 2017-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டம்‌. தமிழ்நாடு மாநிலத்தினால்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டையும்‌ மாநிலத்திற்குள்‌ வழங்குவதன்‌ மீது வரிவிதிப்பதற்கும்‌ அதனை வசூலிப்பதற்கும்‌ மற்றும்‌ அதனுடன்‌ தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்கும்‌ வகைசெய்வதற்கானதொரு சட்டம்‌. இந்திய குடியரசின்‌ அறுபத்து எட்டாம்‌ ஆண்டில்‌, தமிழ்நாடு மாநிலத்தின்‌ சட்டமன்றப்‌ பேரவையினால்‌ பின்வருமாறு சட்டம்‌ இயற்றப்படுவதாகுக:- அத்தியாயம்‌ | முன்னுரை. 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 2017-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டம்‌ என்று வழங்கப்பெறும்‌. (2) இது தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதும்‌ அளாவி நிற்கும்‌. (3) இது மாநில அரசினால்‌ அறிவிக்கை வாயிலாகக்‌ குறிக்கக்கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வெவ்வேறு வகைமுறைகளுக்காக வெவ்வேறு தேதிகள்‌ குறிக்கப்படலாம்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கம்‌ குறித்து அத்தகைய வகைமுறை எதிலுமுள்ள சுட்டுகை எதுவும்‌ அத்தகைய வகைமுறை நடைமுறைக்கு வருவது குறித்த சுட்டுகையாகப்‌ பொருள்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌, தறுவாயின்‌ தேவை வேறானாலன்றி,- 1) "வழக்குத்‌ தொடர்வதற்குரிய கோரிக்கை" என்பது, 1882-ஆம்‌ ஆண்டு சொத்து உரிமை மாற்றச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 471882) 3-ஆம்‌ பிரிவில்‌ அதற்கு குறித்தளிக்கப்பட்ட அதே பொருளினை உடையதாகும்‌; (2) "ஒப்படைவு முகவரி" என்பது, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டையும்‌ ஒப்படைப்பதற்காக பதிவு பெற்ற நபரால்‌ வழங்கப்பட்ட வரி விலைப்பட்டியலில்‌ சுட்டிக்காட்டப்பட்ட அத்தகைய சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ பெற்றுக்கொள்பவரின்‌ முகவரி என்று பொருள்படும்‌; 10 (3) "பதிவுருவிலுள்ள முகவரி" என்பது, வழங்குபவரின்‌ பதிவுருக்களில்‌ கிடைக்கக்கூடியவாறான பெற்றுக்கொள்பவரின்‌ முகவரி என்று பொருள்படும்‌; (4) நீதிமுறையில்‌ தீர்மானிக்கும்‌ அதிகார அமைப்பு" என்பது, இந்தச்‌ சட்டத்தின்‌ கழ்‌ ஆணை அல்லது முடிவு எதனையும்‌ பிறப்பிப்பதற்கு அமர்த்தப்பட்ட அல்லது அதிகாரமளிக்கப்பட்ட யாதொரு அதிகார அமைப்பு என்று பொருள்படும்‌. ஆனால்‌, ஆணையர்‌, சீராய்வு செய்யும்‌ அதிகார அமைப்பு, முண்ணதாகத்‌ தீர்மானிக்கும்‌ அதிகார அமைப்பு, முண்ணதாகத்‌ தீர்மானிக்கும்‌ மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, மேல்முறையீட்டு அதிகார அமைப்பு மற்றும்‌ மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌ இதில்‌ உள்ளடங்காதவராவர்‌; (5) "முகவர்‌" என்பது, எந்நபர்‌ தரகு வணிகர்‌, தரகர்‌, தரகு முகவர்‌, ஆர்கட்டி, பிணைய முகவர்‌, ஏலமிடுபவர்‌ அல்லது பிற வணிக முகவர்‌ எவரும்‌, என எந்தப்‌ பெயரில்‌ அழைக்கப்பட்டாலுமே, அவர்‌ மற்றொருவர்‌ சார்பாக சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ வழங்குதல்‌ மற்றும்‌ பெறுதல்‌ தொழிலை நடத்தி வருகிற அந்த நபர்‌ என்று பொருள்படும்‌; (6) "ஒட்டுமொத்த விற்பனை அளவு" என்பது, அனைத்திந்திய அடிப்படையில்‌ கணக்கிடப்படக்கூடிய அதே நிரந்தர கணக்கு எண்‌ கொண்டுள்ள நபர்களின்‌, (எதிரிடை கட்டண அடிப்படையில்‌ நபர்‌ ஒருவரால்‌ வரி செலுத்தத்தக்க உள்வரும்‌ வழங்குகைகளின்‌ மதிப்பு நீங்கலாக) அனைத்து வரிவிதிக்கத்தக்க வழங்குகைகள்‌, விலக்களிக்கப்பட்ட வழங்குகைகள்‌, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ ஏற்றுமதிகள்‌ மற்றும்‌ இடைமாநில வழங்குகைகளின்‌, ஆனால்‌, மைய வரி, மாநில வரி, யூணியன்‌ பிரதேச வரி, ஒருங்கிணைக்கப்பட்ட வரி மற்றும்‌ மேல்வரி நீங்கலாக, ஒட்டுமொத்த மதிப்பு என்று பொருள்படும்‌; (7) "உழவர்‌" என்பது,- (அ) தாமே உழைப்பதன்‌ மூலம்‌, அல்லது (ஆ) தம்முடைய குடும்பத்தினர்‌ உழைப்பதன்‌ மூலம்‌, அல்லது (இ) தம்முடைய நேரடி மேற்பார்வை அல்லது குடும்பத்தின்‌ உறுப்பினர்‌ எவரின்‌ நேரடி மேற்பார்வையின்‌ கீழ்‌ பணமாகவோ அல்லது பொருளாகவோ வழங்கத்தக்க கூலியின்‌ பேரறிலான பணியாளர்கள்‌ மூலம்‌ அல்லது வாடகைக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்கள்‌ மூலம்‌ நிலத்தைப்‌ பயிர்‌ செய்வதை மேற்கொள்கிற தனி நபர்‌ அல்லது இந்து கூட்டுக்‌ குடும்பம்‌ என்று பொருள்படும்‌; (8) "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்பது, 1௦07-ஆம்‌ பிரிவில்‌ சுட்டப்பட்டவாறு மேல்முறையீடுகளை விசாரணை செய்வதற்காக அமர்த்தப்பட்ட அல்லது அதிகாரமளிக்கப்பட்ட ஒரு அதிகார அமைப்பு என்று பொருள்படும்‌; 11 (9) "மேல்முறையீட்டு தீர்ப்பாயம்‌ என்பது, 10௦9-ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ அமைத்துருவாக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம்‌ என்று பொருள்படும்‌; (10) "குறித்திட்ட நாள்‌" என்பது, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ நடைமுறைக்கு வந்த தேதி என்று பொருள்படும்‌; (11) "வரிக்கணிப்பு" என்பது, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரி செலுத்தும்‌ கடப்பாட்டை முடிவு செய்தல்‌ என்று பொருள்படும்‌, மற்றும்‌ சுய வரிக்கணிப்பு, மறு வரிக்கணிப்பு, தற்காலிக வரிக்கணிப்பு, சுருக்குமுறை வரிக்கணிப்பு மற்றும்‌ நியாயமான முறையில்‌ ஆய்வு செய்து வரிக்கணித்தல்‌ என்று பொருள்படும்‌; (12) "கூட்டு நிறுவனங்கள்‌" என்பது, 1961-ஆம்‌ ஆண்டு வருமானவரிச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 43/1961) 92& பிரிவில்‌ அதற்குக்‌ குறித்தளிக்கப்பட்ட அதே பொருளினை உடையதாகும்‌; (13) "தணிக்கை" என்பது, விளம்பப்பட்ட விற்பனை அளவு, செலுத்தப்பட்ட வரிகள்‌, கோரப்பட்ட திருப்பிக்‌ கொடுத்தல்‌ மற்றும்‌ துய்க்கப்பட்ட உள்ளீட்டு வரி வரவின்‌ உண்மைத்‌ தன்மையினை சரிபாழ்த்தல்‌, மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்படியான விதிகளின்‌ கீழான வகைமுறைகளுக்கு உடன்படுவதை மதிப்பீடு செய்ய, இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்படியான விதிகளின்‌ கீழ்‌ அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம்‌ எதனின்‌ கீழும்‌ பதிவு பெற்ற நபரால்‌ பேணி வரப்படும்‌ அல்லது அளிக்கப்படும்‌ பதிவுருக்கள்‌, அறிவிக்கைகள்‌ மற்றும்‌ பிற ஆவணங்களை ஆய்வு செய்தல்‌, என்று பொருள்படும்‌; (14) "அங்கீகரிக்கப்பட்ட வங்கி" என்பது, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செலுத்தப்பட வேண்டிய வரி அல்லது தொகை ஏதேனும்‌ வளுலிப்பதற்கு மைய அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட ஒரு வங்கி அல்லது ஒரு வங்கியின்‌ ஒரு கிளை என்று பொருள்படும்‌; (15) "அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி என்பது, 1146-ஆம்‌ பிரிவின்கீழ்‌ சுட்டப்பட்டவாறான பிரதிநிதி என்று பொருள்படும்‌; (16) "வாரியம்‌" என்பது, 1963-ஆம்‌ ஆண்டு மைய வருவாய்‌ வாரியங்கள்‌ சட்டத்தின்கீழ்‌ (மையச்‌ சட்டம்‌ 54,1963) அமைத்துருவாக்கப்பட்ட மைய சுங்க மற்றும்‌ ஆயத்தீர்வை வாரியம்‌ என்று பொருள்படும்‌; (17) "வணிகம்‌" என்பது கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியதாகும்‌- (அ) பணப்பயனுக்குரியதாக இருந்தாலும்‌ அல்லது இல்லாவிட்டாலும்‌ வாணிகம்‌, பெருவாணிகம்‌, உற்பத்தி, பிழைதொழில்‌, வாழ்தொழில்‌, துணிச்சல்‌ வாணிபம்‌, பகடைப்பந்தயம்‌, அல்லது அதேபோன்ற பிற ஏதேனும்‌ நடவடிக்கை எதனையும்‌; (ஆ) உட்கூறு (அ) தொடர்பான அல்லது இடைவிளைவான அல்லது துணையான செயற்பாடு அல்லது நடவடிக்கை எதனையும்‌; 12 (இ) உட்கூறு (அ) தண்மையிலான செயற்பாடு அல்லது நடவடிக்கை எதனையும்‌, அத்தகைய நடவடிக்கையின்‌ அளவு, எண்ணிக்கை அளவு, தொடர்ச்சி அல்லது முறைமை ஆகியவை இருந்தாலும்‌ அல்லது இல்லாவிட்டாலும்‌; () வணிகத்தின்‌ தொடக்கம்‌ அல்லது அதனை மூடிவிடுதல்‌ தொடர்பான மூலதனச்‌ சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ உள்ளடங்கலான சரக்குகள்‌ வழங்குகை அல்லது கையகப்படுத்துகை; (௨) (பங்களிப்பு சந்தா அல்லது பிற ஏதேனுமான மறுபயனுக்காக) குழாம்‌, கழகம்‌, சங்கம்‌ அல்லது அதே போன்ற அமைப்பு எதனினாலும்‌ தன்னுடைய உறுப்பினர்களின்‌ வசதிகள்‌ அல்லது நலன்களுக்கான வழங்குகை; (ஊ) வளாகம்‌ எதிலும்‌ நபர்களை மறுபயனுக்காக அனுமதித்தல்‌; (௭) அலுவலகம்‌ ஒன்றினை ஏற்றுக்‌ கொண்டிருக்கும்‌ நபரால்‌, அவருடைய வணிகம்‌, பிழைதொழில்‌ அல்லது வாழ்தொழிலின்போது அல்லது அவற்றை மேல்நடத்தும்‌ வகையில்‌ வழங்கப்படும்‌ சேவைகள்‌; (ஏ) குதிரைப்‌ பந்தய குழாமிலுள்ள பந்தய விவரங்களைப்‌ பதிவு செய்யும்‌ கருவி அல்லது அத்தகைய குழுவின்‌ உரிமம்‌ ஒன்றினை பெற்ற பணயக்‌ கணக்கர்‌ மூலமாக வழங்கப்படும்‌ சேவைகள்‌; மற்றும்‌ (ஐ) பொது அதிகார அமைப்புகள்‌ என்ற வகையில்‌ ஈடுபட்டுள்ள மைய அரசு, மாநில அரசு அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்பு எதனாலும்‌ மேற்கொள்ளப்படும்‌ செயற்பாடு அல்லது நடவடிக்கை எதுவும்‌; (18) "செங்குத்து வணிகம்‌" என்பது, பிற செங்குத்து வணிகங்களிலிருந்து வேறுபட்டு, இலாப நஷ்டத்திற்கிணங்க, தனிப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது தொடர்புடைய சரக்குகள்‌ அல்லது சேவைகளின்‌ தொகுப்பின்‌ வழங்குகை தொழிலில்‌ ஈடுபட்டுள்ள கூட்டு நிறுவனத்தின்‌ ஒரு தனிப்பட்ட அங்கம்‌ என்று பொருள்படும்‌; விளக்கம்‌.- இந்தக்கூறின்‌ நோக்கங்களுக்காக, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ தொடர்புடையனவா என்று தீர்மானிக்கையில்‌ கருத்தில்‌ கொள்ள வேண்டிய காரணிகள்‌ என்பது கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கும்‌,- (அ) சரக்குகள்‌ அல்லது சேவைகளின்‌ தன்மை; (ஆ) தயாரிப்பு முறைகளின்‌ தன்மை; (இ) சரக்குகள்‌ அல்லது சேவைகளுக்கான வாடிக்கையாளர்களின்‌ பிரிவு அல்லது வகை; (F) சரக்குகளை விநியோகிப்பதற்கு அல்லது சேவைகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும்‌ முறைகள்‌; மற்றும்‌ 13 (௨) வங்கித்‌ தொழில்‌, காப்பீடு அல்லது பொதுப்‌ பயனுடைய பணிகள்‌ உள்ளடங்கலான (பொருந்தக்கூடிய இடத்தெல்லாம்‌) ஒழுங்குமுறை சூழலின்‌ தன்மை ஆகியவற்றை உள்ளடக்கும்‌; (19) "மூலதன சரக்குகள்‌" என்பது, உள்ளிட்டு வரி வரவினைக்‌ கோருகிற நபரின்‌ வரவு-செலவுப்‌ புத்தகத்தில்‌ மூலதனமாக்கப்பட்டதன்‌ மதிப்புள்ள மற்றும்‌ வணிகத்தின்போது அல்லது அவ்வணிகத்தினை மேல்நடத்தும்‌ வகையில்‌ பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தக்‌ கருதப்பட்ட சரக்குகள்‌ என்று பொருள்படும்‌; (20) "தற்செயல்‌ வரிவிதிக்கத்தக்க நபர்‌" என்பது, எந்நபர்‌ நிலையான வணிக இம்‌ எதுவும்‌ வரிவிதிக்கத்தக்க ஆட்சிப்‌ பரப்பில்‌ கொண்டிராதவிடத்து, முதல்வராக, முகவராக அல்லது ஏதேனும்‌ பிற நிலையிலாயினும்‌ வணிகத்தின்போது அல்லது அவ்வணிகத்தினை மேல்நடத்தும்‌ வகையில்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ வழங்குவதை உள்ளடக்கிய நடவடிக்கைகளை எப்போதாவது மேற்கொள்கிறாரோ அந்நபர்‌ என்று பொருள்படும்‌; (21) "மைய வரி" என்பது, மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி சட்டத்தின்‌ 9-ஆம்‌ பிரிவின்கீழ்‌ விதிக்கப்படும்‌ மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி என்று பொருள்படும்‌; (22) "மேல்‌ வரி" என்பது, சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி (மாநிலங்களுக்குரிய நஷ்டஈடு) சட்டத்தில்‌ அதற்குக்‌ குறித்தளிக்கப்பட்ட அதே பொருளினை உடையதாகும்‌; (23) "பட்டயக்‌ கணக்கர்‌" என்பது, 1949-ஆம்‌ ஆண்டு பட்டயக்‌ கணக்கர்கள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 38/1949) 2-ஆம்‌ பிரிவின்‌: (1)-ஆம்‌ உட்பிரிவின்‌ (௦)-கூறில்‌ பொருள்‌ வரையறை செய்யப்பட்டவாறான பட்டயக்‌ கணக்கர்‌ என்று பொருள்படும்‌; (24) "ஆணையர்‌" என்பது, 3-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அமர்த்தப்பட்ட மாநில வரி ஆணையர்‌ என்று பொருள்படும்‌ மற்றும்‌ 3-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அமர்த்தப்பட்ட மாநில வரி முதன்மை ஆணையரை அல்லது தலைமை ஆணையரை உள்ளடக்கும்‌; (25) "வாரியத்திலுள்ள ஆணையர்‌" என்பது, மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்‌ 168-ஆம்‌ பிரிவின்படி சுட்டப்பட்ட ஆணையர்‌ என்று பொருள்படும்‌; (26) "பொது வலைதள முகவரி" என்பது, 146-ஆம்‌ பிரிவில்‌ சுட்டப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி மின்னணுவியல்‌ பொது வலைதள முகவரியில்‌ என்று பொருள்படும்‌; (27) "பொது பணி நாட்கள்‌" என்பது, மைய அரசால்‌ அல்லது தமிழ்நாடு அரசால்‌ அரசிதழ்‌ பதிவு பெற்ற விடுமுறை நாட்களாக விளம்பப்படாத நாட்களை அடுத்தடுத்துவரும்‌ அத்தகைய நாட்கள்‌ என்று பொருள்படும்‌; 14 (28) "நிறுமச்‌ செயலாளர்‌" என்பது, 1980-ஆம்‌ ஆண்டு நிறுமச்‌ செயலாளர்கள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 561980) 2-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்‌ (௦)-கூறில்‌ பொருள்‌ வரையறை செய்யப்பட்டவாறான நிறுமச்‌ செயலாளர்‌ என்று பொருள்படும்‌; (29) "தகுதியுள்ள அதிகார அமைப்பு" என்பது, அரசினால்‌ அறிவிக்கை செய்யப்படலாகும்‌ அத்தகைய அதிகார அமைப்பு என்று பொருள்படும்‌; (30) "கூட்டு வழங்குகை" என்பது, வரிவிதிக்கத்தக்க நபரால்‌ பெற்றுக்‌ கொள்பவருக்கு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ கொண்ட வரிவிதிக்கத்தக்க வழங்குதல்‌, அல்லது அதன்‌ ஒன்று சேர்ந்தவை எவற்றிலும்‌, அதில்‌ ஒன்றை முதன்மையான வழங்குகையாக கொண்டு, அவை வழக்கமாக சிப்பமிடப்பட்டு மற்றும்‌ ஒன்றோடு ஒன்று இணைத்து வழக்கமான வணிகத்தின்போது வழங்குகை செய்கிறவாறு, மேற்கொள்ளப்படும்‌ வழங்குகை என்று பொருள்படும்‌; எடுத்துக்காட்டு: சரக்குகள்‌ சிப்பமிடப்பட்டு, காப்பீட்டுடன்‌ அனுப்பப்படுமிடத்து, சரக்குகளின்‌ வழங்குகை, சிப்பமிடும்‌ பொருட்கள்‌, போக்குவரத்து மற்றும்‌ காப்பீடானது கூட்டு வழங்குகையாக இருக்கும்‌ மற்றும்‌ சரக்குகளின்‌ வழங்குகை முதன்மை வழங்குகையாக இருக்கும்‌. (31) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை தொடர்பாக "மறுபயன்‌" என்பது- (அ) பெற்றுக்கொள்பவரால்‌ அல்லது பிற எவரேனும்‌ நபரால்‌, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை பொறுத்து, அதன்‌ பொறுப்பினை ஏற்க அல்லது அதனைப்‌ பெறுவதை தான்‌ பெறுவதற்காக, பணமாகவாயினும்‌ அல்லது பிறவாறாயினும்‌ செய்யப்படும்‌ அல்லது செய்யப்பட வேண்டிய செலுத்துகை ஆகும்‌, ஆனால்‌ மைய அரசால்‌ அல்லது மாநில அரசால்‌ வழங்கப்படும்‌ ஊக்க உதவித்தொகை எதனையும்‌ உள்ளடக்குதல்‌ ஆகாது; (ஆ) பெற்றுக்கொள்பவரால்‌ அல்லது பிற எவரேனும்‌ நபரால்‌, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை பொறுத்து, அதன்‌ பொறுப்பினை ஏற்க அல்லது அதனைப்‌ பெறுவதை தான்‌ பெறுவதற்காக, செயல்‌ எதனின்‌ பணமதிப்பு அல்லது தேவைமறுத்தல்‌ எதுவும்‌, ஆனால்‌ மைய அரசால்‌ அல்லது மாநில அரசால்‌ வழங்கப்படும்‌ ஊக்க உதவித்தொகை எதனையும்‌ உள்ளடக்குதல்‌ ஆகாது: வரம்புரை: ஆனால்‌, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை பொறுத்து செய்யப்படும்‌ வைப்பீடு, மேற்சொன்ன வழங்குகைக்கான மறுபயணாக அத்தகைய வைப்பீட்டினை வழங்குநர்‌ பயன்படுத்தினாலன்றி அத்தகைய வழங்குகைக்காக செய்யப்படும்‌ செலுத்தமாக கருதப்படமாட்டாது. 15 (32) "சரக்குகளின்‌ தொடர்ச்சியான வழங்குகை" என்பது, ஒப்பந்தத்தின்படி தொடர்ச்சியாக அல்லது மறுபடியும்‌ நிகழ்தல்‌ அடிப்படையில்‌ வழங்கப்பட்ட அல்லது வழங்கப்படுவதற்கு ஒத்துக்கொள்ளப்பட்ட, மின்கம்பி, மிண்வடம்‌, குழாய்‌ வழி அல்லது பிற குழாய்‌ வழியாகவாயினும்‌ அல்லது இல்லாவிடினும்‌, மற்றும்‌ அதற்காக பெற்றுக்கொள்பவருக்கு முறையாக அல்லது காலமுறை அடிப்படையில்‌ வழங்குநரால்‌ அனுப்பப்பட்ட சரக்குகளின்‌ விலைப்பட்டிகளினை அளித்தல்‌ சரக்குகளின்‌ வழங்குகை ஆகும்‌, மற்றும்‌ அரசால்‌ அறிவிக்கை வாயிலாக குறித்துரைக்கக்கூடிய அத்தகைய நிபந்தனைகளுக்கு இணங்க, அத்தகைய சரக்குகளின்‌ வழங்குகையும்‌ உள்ளடக்கும்‌; (33) "சேவைகளின்‌ தொடர்ச்சியான வழங்குகை" என்பது, காலமுறை செலுத்துகை கடமைப்‌ பொறுப்புடன்‌ மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட கால அளவிற்கு, ஒப்பந்தத்தின்படி தொடர்ச்சியாக அல்லது மறுபடியும்‌ நிகழ்தல்‌ அடிப்படையில்‌ வழங்கப்பட்ட அல்லது வழங்கப்படுவதற்கு ஒத்துக்கொள்ளப்பட்ட சேவைகளின்‌ வழங்குகை மற்றும்‌ அரசால்‌ அறிவிக்கை வாயிலாக குறித்துரைக்கக்கூடிய அத்தகைய நிபந்தனைகளுக்கு இணங்க, அத்தகைய சேவைகளின்‌ வழங்குகையும்‌ உள்ளடக்கும்‌; (34) "வாகனம்‌" என்பது, கலம்‌, வானூர்தி மற்றும்‌ ஊர்தியை உள்ளடக்கும்‌; (35) "விலை மதிப்பீட்டுக்‌ கணக்கர்‌" என்பது, 1959-ஆம்‌ ஆண்டு விலை மற்றும்‌ பணி மதிப்பீட்டு கணக்கர்கள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 23/1959) 2-ஆம்‌ பிரிவின்‌ (1-ஆம்‌ உட்பிரிவின்‌ (௦)-கூறில்‌ பொருள்‌ வரையறை செய்யப்பட்டவாறான விலை மதிப்பீட்டுக்‌ கணக்கர்‌ என்று பொருள்படும்‌; (36) "மன்றம்‌" என்பது, அரசியலமைப்பின்‌ 279A உறுப்பின்படி நிறுவப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி மன்றம்‌ என்று பொருள்படும்‌; (37) "வரவுக்குறிப்பு" என்பது, 34-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பதிவு பெற்ற நபரால்‌ வழங்கப்பட்ட ஆவணம்‌ என்று பொருள்படும்‌; (38) "பற்றுக்குறிப்பு என்பது, 34-ஆம்‌ பிரிவின்‌ (3)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பதிவு பெற்ற நபரால்‌ வழங்கப்பட்ட ஆவணம்‌ என்று பொருள்படும்‌; (39) "ஏற்றுமதி செய்யப்பட்டதாக கருதப்படுதல்‌" என்பது, 147-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அறிவிக்கை செய்யப்படலாகும்‌ அத்தகைய சரக்குகளின்‌ வழங்குகை என்று பொருள்படும்‌; (40) "சுட்டியமர்த்தப்பட்ட அதிகார அமைப்பு" என்பது, ஆணையரால்‌ அறிவிக்கை செய்யப்படலாகும்‌ அத்தகைய அதிகார அமைப்பு என்று பொருள்படும்‌; (41) "ஆவணம்‌" என்பது, 2000-ஆம்‌ ஆண்டு தகவல்‌ தொழில்நுட்ப சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 21/2000) 2-ஆம்‌ பிரிவின்‌ (0-கூறில்‌ பொருள்‌ வரையறை ௬சய்யப்பட்டவாறு எவ்வாறாயினுமான எழுத்து வடிவிலான அல்லது அச்சு வடிவிலான பதிவுரு, மிண்ணணு பதிவுரு ஆகியவற்றை உள்ளடக்கும்‌; 16 (42) இந்தியாவில்‌ உற்பத்தி செய்யப்பட்டு மற்றும்‌ ஏற்றுமதி செய்யப்படும்‌ சரக்குகள்‌ எவையேனும்‌ தொடர்பாக, "திரும்பப்பெறு" என்பது, அத்தகைய சரக்குகளை உற்பத்தி செய்வதில்‌ பயன்படுத்தப்படும்‌ இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடுகள்‌ அல்லது உள்நாட்டு உள்ளீடுகள்‌ அல்லது உள்ளீட்டு சேவைகள்‌ மீது விதிக்கத்தக்க தீர்வை, வரி அல்லது மேல்வரியினை தள்ளுபடி செய்து திருப்பிக்‌ கொடுத்தல்‌ என்று பொருள்படும்‌; (43) "மின்னணு பணப்பேரேடு" என்பது, 49-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்ட மின்னணு பணப்பேரேடு என்று பொருள்படும்‌; (44) "மின்னணு வணிகம்‌" என்பது, இலக்கமுறை தயாரிப்புகள்‌ உள்ளடங்கலாக சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ இலக்கமுறை அல்லது மின்னணு வலையமைப்பு மூலமான வழங்குகை என்று பொருள்படும்‌; (45) "மின்னணு வணிகம்‌ இயக்குபவர்‌" என்பது, இலக்கமுறை அல்லது மின்னணு வசதி அல்லது மின்னணு வணிக இயக்க அமைப்பு முறையை சொந்தமாகக்‌ கொண்டிருக்கிற, இயக்குகிற அல்லது மேலாண்மை செய்கிற நபர்‌ எவரும்‌ என்று பொருள்படும்‌; (46) "மின்னணு வரவுப்பேரேடு" என்பது, 49-ஆம்‌ பிரிவின்‌ (2)-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்ட மின்னணு வரவுப்பேரேடு என்று பொருள்படும்‌; (47) "விலக்களிக்கப்பட்ட வழங்குகை" என்பது, ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்‌ 6-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது இச்சட்டத்தின்‌ 11-ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ வரியிலிருந்து முழுவதும்‌ விலக்களிக்கப்பலான அல்லது வரி வீதம்‌ இல்லா வரியை ஈர்க்கிற சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை என்று பொருள்படும்‌ மற்றும்‌ வரிவிதிப்பில்லாத வழங்குகையையும்‌ உள்ளடக்கும்‌; (48) "தற்போதுள்ள சட்டம்‌" என்பது, சட்டம்‌, அறிவிக்கை, ஆணை, விதி அல்லது ஒழுங்குமுறை விதியைச்‌ செய்வதற்கு அதிகாரமுடைய நபர்‌ எவராலும்‌ அல்லது அதிகார அமைப்பு எதனாலும்‌ அல்லது சட்டமன்றத்தால்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்திற்கு முன்பு இயற்றப்பட்ட அல்லது செய்யப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ மீதும்‌ தீர்வை அல்லது வரி விதித்தல்‌ மற்றும்‌ வசூலித்தல்‌ தொடர்பான சட்டம்‌, அறிவிக்கை ஆணை, விதி அல்லது ஒழுங்குமுறை விதி எதுவும்‌ என்று பொருள்படும்‌; (49) "குடும்பம்‌" என்பது,- (i) நபரின்‌ வாழ்க்கைத்துணை மற்றும்‌ குழந்தைகள்‌, மற்றும்‌ (i) நபரின்‌ பெற்றோர்‌, பெற்றோரின்‌ பெற்றோர்‌, சகோதரர்கள்‌ மற்றும்‌ சகோதரிகள்‌, மேற்சொன்ன நபரை முழுவதும்‌ அல்லது பெரும்பாலும்‌ சார்ந்திருப்பாராணால்‌, அவர்கள்‌ என்று பொருள்படும்‌; 17 (50) "நிலையான தொழிலகம்‌" என்பது, சேவைகளை வழங்குவதற்கு அல்லது தம்முடைய சொந்த தேவைகளுக்காக சேவைகளைப்‌ பெறுவதற்கும்‌ பயன்படுத்துவதற்கும்‌ போதுமான அளவுக்கு நிலைத்த மற்றும்‌ தகுந்த தண்மையுடைய மனித மற்றும்‌ தொழில்நுட்ப வளங்களைக்‌ கொண்டுள்ள (பதிவு செய்யப்பட்ட வணிக இம்‌ அல்லாத) இடம்‌ என்று பொருள்படும்‌; (51) "நிதியம்‌" என்பது, 57-ஆம்‌ பிரிவின்கீழ்‌ நிறுவப்பட்ட நுகர்வோர்‌ நல நிதியம்‌ என்று பொருள்படும்‌; (52) "சரக்குகள்‌" என்பது, பணம்‌ மற்றும்‌ காப்புறுதி ஆவணங்கள்‌ அல்லாத பிற அசையும்‌ சொத்தின்‌ வகை ஒவ்வொன்றும்‌ என்று பொருள்படும்‌. ஆனால்‌, வழங்குவதற்கு அல்லது ஒப்பந்தப்படி வழங்குவதற்கு முன்பு பிரிக்கப்படுவதற்கு ஒத்துக்கொள்ளப்பட்ட நிலத்துடன்‌ சேர்ந்துள்ள அல்லது அதன்‌ பகுதியாக அமைந்துள்ள வளரும்‌ பயிர்கள்‌, புல்‌ மற்றும்‌ பொருட்கள்‌, நடவடிக்கைக்குரிய கேட்புரிமையும்‌ உள்ளடக்கும்‌; (53) "அரசு" என்பது, தமிழ்நாடு அரசு என்று பொருள்படும்‌; (54) "சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி (மாநிலங்களுக்குரிய நஷ்டஈடு) சட்டம்‌" என்பது 2017-ஆம்‌ ஆண்டு சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி (மாநிலங்களுக்குநிய நஷ்டஈடு) சட்டம்‌ (மையச்‌ சட்டம்‌ 15/2017) என்று பொருள்படும்‌; (55) "சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி தொழிலாற்றுநர்‌" என்பது, அத்தகைய தொழிலாற்றுநராக செயற்படுவதற்கு 48-ஆம்‌ பிரிவின்கீழ்‌ ஒப்புதலளிக்கப்பட்டுள்ள நபர்‌ எவரும்‌ என்று பொருள்படும்‌; (56) "இந்தியா" என்பது, அரசியலமைப்பின்‌ 1-ஆம்‌ உறுப்பில்‌ சுட்டப்பட்ட இந்திய ஆட்சிப்‌ பரப்பு, 1976-ஆம்‌ ஆண்டு நாடு சார்ந்த கடற்பகுதிகள்‌, கண்டத்திட்டு, தனித்த பொருளாதார மண்டலம்‌ மற்றும்‌ பிற கடல்‌ சார்ந்த மண்டலங்கள்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 801976) சுட்டப்பட்ட அதன்‌ நாடு சார்ந்த கடற்பகுதிகள்‌, கடற்படுகை மற்றும்‌ அத்தகைய கடலுக்கடியில்‌ ஆழ்‌ அடிமண்‌, கண்டத்திட்டு, தனித்த பொருளாதார மண்டலம்‌ அல்லது பிற கடல்‌ சார்ந்த மண்டலம்‌, மற்றும்‌ நாடு சார்ந்த கடற்பகுதிகள்‌ மற்றும்‌ அதன்‌ ஆட்சி பரப்புக்கு மேலேயுள்ள வான்வெளி என்று பொருள்படும்‌; (57) "ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டம்‌" என்பது, 2017-ஆம்‌ ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டம்‌ (மையச்‌ சட்டம்‌ 132017) என்று பொருள்படும்‌; (58) "ஒருங்கிணைக்கப்பட்ட வரி" என்பது, ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்படி விதிக்கப்படும்‌ ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி என்று பொருள்படும்‌; 18 (59) உள்ளீடு" என்பது, வணிகத்தின்போது அல்லது அதனை மேல்நடத்தும்‌ வகையில்‌ வழங்குநரால்‌ பயன்படுத்தப்படும்‌ அல்லது பயன்படுத்தப்படுவற்கு கருதப்பட்ட மூலதனச்‌ சரக்குகள்‌ அல்லாத பிற சரக்குகள்‌ எவையும்‌ என்று பொருள்படும்‌; (60) "உள்ளீடு சேவை" என்பது, வணிகத்தின்‌ போது அல்லது அதனை மேல்நடத்தும்‌ வகையில்‌ வழங்குநரால்‌ பயன்படுத்தப்படும்‌ அல்லது பயன்படுத்தப்படுவதற்கு கருதப்பட்ட சேவை எதுவும்‌ என்று பொருள்படும்‌; (61) ஈள்ளீடு சேவை விநியோகிப்பவர்‌" என்பது, உள்ளீட்டு சேவைகளைப்‌ பெறும்‌ நோக்கில்‌ 31-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வழங்கப்பட்ட வரி விலைப்பட்டியல்களைப்‌ பெறும்‌ மற்றும்‌ மேற்சொன்ன அலுவலகத்தின்‌ அதே நிரந்தர கணக்கு எண்‌ கொண்ட வரிவிதிக்கத்தக்க சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குநருக்கு மேற்சொன்ன சேவைகளின்பேரில்‌ செலுத்தப்பட்ட மைய வரி, மாநில வரி, ஒருங்கிணைக்கப்பட்ட வரி அல்லது யூணியன்‌ பிரதேச வரியின்‌ வரவை விநியோகிக்கும்‌ நோக்கங்களுக்காக வகுத்துரைக்கப்பட்ட ஆவணத்தை வழங்கும்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டையும்‌ வழங்குநரின்‌ அலுவலகம்‌ என்று பொருள்படும்‌; (62) பதிவு பெற்ற நபர்‌ தொடர்பாக "உள்ளீட்டு வரி" என்பது, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை எதன்‌ மீதும்‌ விதிக்கப்படும்‌ மைய வரி, மாநில வரி, ஒருங்கிணைக்கப்பட்ட வரி அல்லது யூணியன்‌ பிரதேச வரி என்று பொருள்படும்‌ மற்றும்‌ கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கும்‌- (அ) சரக்குகளின்‌ இறக்குமதியின்‌ மீது விதிக்கப்படும்‌ ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி, (ஆ) 9-ஆம்‌ பிரிவின்‌ (3) மற்றும்‌ (4-ஆம்‌ உட்பிரிவுகளின்‌. வகைமுறைகளின்கீழ்‌ செலுத்தத்தக்க வரி, (௫) ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்‌ 5- ஆம்‌ பிரிவின்‌ (3) மற்றும்‌ (4)-ஆம்‌ உட்பிரிவுகளின்‌ வகைமுறைகளின்கீழ்‌ செலுத்தத்தக்க வரி, (FF) மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்‌ 9-ஆம்‌ பிரிவின்‌ (3) மற்றும்‌ (4)-ஆம்‌ உட்பிரிவுகளின்‌ வகைமுறைகளின்கீழ்‌ செலுத்தத்தக்க வரி, ஆனால்‌, இணக்க வரிவிதிப்பின்‌ கீழ்‌ செலுத்தப்பட்ட வரியை உள்ளடக்காது; (63) "உள்ளிட்டு வரி வரவு" என்பது, உள்ளிட்டு வரியின்‌ வரவு என்று பொருள்படும்‌; 19 (64) "மாநிலத்திற்குள்‌ சரக்குகள்‌ வழங்குதல்‌" என்பது, ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்‌ 8-ஆம்‌ பிரிவில்‌ அதற்குக்‌ குறித்தளிக்கப்பட்ட அதே பொருளினை உடையதாகும்‌; (65) "மாநிலத்திற்குள்‌ சேவைகள்‌ வழங்குதல்‌" என்பது, ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்‌ 8-ஆம்‌ பிரிவில்‌ அதற்குக்‌ குறித்தளிக்கப்பட்ட அதே பொருளினை உடையதாகும்‌; (66) "சரக்கு விலைப்பட்டியல்‌" அல்லது "சரக்குகளின்‌ வரி விலைப்பட்டியல்‌" என்பது, 31-ஆம்‌ பிரிவில்‌ சுட்டப்பட்ட வரி விலைப்பட்டியல்‌ என்று பொருள்படும்‌; (67) நபர்‌ ஒருவர்‌ தொடர்பாக "உள்வரு வழங்குகை" என்பது, மறு பயணுடனோ அல்லது இல்லாமலோ, கொள்முதல்‌, கையகப்படுத்துகை அல்லது பிற வழிவகை எதன்படியும்‌, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ பெறுதல்‌ என்று பொருள்படும்‌; (68) "சில்லறை வேலை" என்பது, பதிவு பெற்ற மற்றொரு நபருக்குச்‌ சொந்தமான சரக்குகள்‌ மீது ஒரு நபரால்‌ மேற்கொள்ளப்படும்‌ நடத்துமுறை அல்லது செய்முறை எதுவும்‌ என்று பொருள்படும்‌, மற்றும்‌ "சில்லறை வேலையாள்‌" என்ற சொற்றொடர்‌ அவ்வாறே பொருள்கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌; (69) "உள்ளாட்சி அதிகார அமைப்பு" என்பது கீழ்க்கண்டுள்ளவை என்று பொருள்படும்‌- (அ) அரசியலமைப்பின்‌ 243-ஆம்‌ உறுப்பின்‌ (0)-கூறில்‌ பொருள்‌ வரையறை செய்யப்பட்டவாறான "ஊராட்சி", (ஆ) அரசியலமைப்பின்‌ 243 உறுப்பின்‌ (6)-கூறில்‌ பொருள்‌ வரையறை செய்யப்பட்டவாறான "நகராட்சி", (க) நகராட்சிக்‌ குழு, மாவட்ட நிருவாகம்‌, மாவட்ட வாரியம்‌, மற்றும்‌ நகராட்சி அல்லது உள்ளாட்சி நிதியினை மேலாண்மை அல்லது கட்டுப்பாடு செய்ய மைய அரசு அல்லது மாநில அரசால்‌ அதிகாரமளிக்கப்பட்ட அல்லது சட்டப்படி உரிமையுடைய பிற ஏதேனுமான அதிகார அமைப்பு, (FF) 2006-ஆம்‌ ஆண்டு பாளையங்கள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 41/2006) 3-ஆம்‌ பிரிவில்‌ பொருள்‌ வரையறை செய்யப்பட்டவாறான பாளைய வாரியம்‌, (௨) அரசியலமைப்பின்‌ ஆறாம்‌ இணைப்புப்‌ பட்டியலின்‌ கீழ்‌ அமைத்துருவாக்கப்பட்ட மண்டல மன்றம்‌ அல்லது மாவட்ட மன்றம்‌, (ஊ) அரசியலமைப்பின்‌ 371-ஆம்‌ உறுப்பின்கீழ்‌ அமைத்து உருவாக்கப்பட்ட வளர்ச்சி வாரியம்‌, (௭) அரசியலமைப்பின்‌ 371& உறுப்பின்‌ கீழ்‌ அமைத்துருவாக்கப்பட்ட மண்டல மன்றம்‌; (70) "சேவைகளைப்‌ பெற்றுக்கொள்பவரின்‌ அமைவிடம்‌" என்பது, கீழ்க்கண்டுள்ளவை என்று பொருள்படும்‌- 20 (அ) பதிவு செய்து பெறப்பட்டுள்ள வணிக இடத்தில்‌ வழங்குகை பெற்றுக்‌ கொள்ளப்படுகிறவிடத்து, அத்தகைய வணிக இடத்தின்‌ அமைவிடம்‌, (ஆ) பதிவு செய்து பெறப்பட்டுள்ள வணிக இடம்‌ அல்லாத (வேறு எங்கேனும்‌ உள்ள நிலையான தொழிலகம்‌) பிற இடத்தில்‌ வழங்குகை பெற்றுக்‌ கொள்ளப்படுகிறவிடத்து, அத்தகைய நிலையான நிறுவனத்தின்‌ அமைவிடம்‌, (இ) வழங்குகையானது ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலகத்தில்‌ பெற்றுக்‌ கொள்ளப்பட்டவிடத்து, வணிக இடமாக இருப்பினும்‌ அல்லது நிலையான தொழிலகமாக இருப்பினும்‌, வழங்குகையை பெறுவதில்‌ மிகவும்‌ நேரடியாக தொடர்புடைய தொழிலகத்தின்‌ அமைவிடம்‌, (௬) அத்தகைய இடங்கள்‌ இல்லாதிருக்கையில்‌ பெற்றுக்கொள்பவரின்‌ வழக்கமான குடியிருப்பிடத்தின்‌ அமைவிடம்‌; (71) "சேவைகள்‌ வழங்குநரின்‌ அமைவிடம்‌" என்பது, கீழ்க்கண்டுள்ளவை என்று பொருள்படும்‌- (அ) பதிவு செய்து பெறப்பட்டுள்ள வணிக இடத்தில்‌ வழங்குகை மேற்கொள்ளப்படுகிறவிடத்து, அத்தகைய வணிக இடத்தின்‌ அமைவிடம்‌, (ஆ) பதிவு செய்து பெறப்பட்டுள்ள வணிக இடம்‌ அல்லாத (வேறு எங்கேனும்‌ உள்ள நிலையான தொழிலகம்‌) பிற இடத்தில்‌ வழங்குகை மேற்கொள்ளப்படுகிறவிடத்து, அத்தகைய நிலையான தொழிலகத்தின்‌ அமைவிடம்‌, (க) வழங்குகையானது ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலகத்தில்‌ மேற்கொள்ளப்பட்டவிடத்து, வணிக இடமாக இருப்பின்‌ அல்லது நிலையான தொழிலகமாக இருப்பினும்‌, வழங்குகையை மேற்கொள்வதில்‌ மிகவும்‌ நேரடியாக தொடர்புடைய தொழிலகத்தின்‌ அமைவிடம்‌, (F) அத்தகைய இடங்கள்‌ இல்லாதிருக்கையில்‌ வழங்குபவரின்‌ வழக்கமான குடியிருப்பிடத்தின்‌ அமைவிடம்‌; (72) "உற்பத்தி" என்பது, மூலப்பொருட்களை அல்லது உள்ளீடுகளை எந்த முறையிலும்‌ செய்முறை செய்து, அதன்‌ விளைவாக தனிப்பட்ட பெயர்‌, குணாதிசயம்‌ மற்றும்‌ பயண்பாடு கொண்ட புதிய உற்பத்தி பொருளாக தோன்றுதல்‌ என்று பொருள்படும்‌, மற்றும்‌ "உற்பத்தி செய்பவர்‌" என்ற சொல்‌ அவ்வாறே பொருள்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌; (73) "சந்தை மதிப்பு" என்பது, பெற்றுக்கொள்பவர்‌ மற்றும்‌ வழங்குபவர்‌ தொடர்பு இல்லாதிருக்கிறவிடத்து, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ அதே போன்று வகை மற்றும்‌ தரமுடைய, அதே நேரத்திலோ அல்லது தறுவாயிலோ மற்றும்‌ அதே வணிக அளவில்‌ பெற்றுக்‌ கொள்ளும்‌ பொருட்டு, வழங்குகையை பெற்றுக்‌ கொள்பவரால்‌ செலுத்தப்பட வேண்டிய முழுத்‌ தொகை என்று பொருள்படும்‌; 21 (74) "கலப்பு வழங்குகை” என்பது, அத்தகைய வழங்குகை கூட்டு வழங்குகையாக அமைந்திராதவிடத்து, ஒற்றை விலைக்கு வரிவிதிக்கத்தக்க நபரால்‌ ஒன்றோடொன்று இணைத்து மேற்கொள்ளப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகளின்‌ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிப்பட்ட வழங்குகைகள்‌, அல்லது அதன்‌ ஒன்று சேர்ந்தவை எவற்றிலும்‌ என்று பொருள்படும்‌; எடுத்துக்காட்டு: டப்பாக்களில்‌ அடைக்கப்பட்ட உணவுகள்‌, இனிப்புகள்‌, சாக்லெட்ஸ்‌, கேக்குகள்‌, உலர்ந்த பழங்கள்‌, காற்றுஈட்டப்பட்ட பானங்கள்‌ மற்றும்‌ பழச்சாறுகள்‌ ஆகியவை அடங்கிய சிப்பத்தின்‌ வழங்குகை ஒரே விலைக்கு வழங்கப்படும்போது, கலப்பு வழங்குகை ஆகும்‌. இந்த இனங்கள்‌ ஒவ்வொன்றும்‌ தனித்தனியாக வழங்கப்படும்‌ மற்றும்‌ பிற எதனையும்‌ சார்ந்திராது. இந்த இனங்கள்‌ தனித்தனியாக வழங்கப்படுமானால்‌, அது கலப்பு வழங்குகை ஆகாது; (75) "பணம்‌" என்பது, இந்திய சட்டமுறைச்‌ செலாவணிப்‌ பணம்‌ அல்லது அயல்நாட்டு நாணயம்‌ எதுவும்‌, காசோலை, கடனுறுதிச்‌ சீட்டு, மாற்றுச்சீட்டூு, வாணிக உறுதிக்‌ கடிதம்‌, வரைவோலை, பண வழங்குகை ஆணை, பயணிப்பவர்‌ காசோலை, பணவிடை, அஞ்சலக அல்லது மின்னணு செலுத்துகை அல்லது இந்தியச்‌ சட்டமுறைச்‌ செலாவணிப்‌ பணத்தின்‌ கடமைப்‌ பொறுப்பினை தீர்ப்பதற்கு அல்லது அதனை மாற்றுவதற்கு மறுபயணாக பயன்படுத்தப்படும்போது இந்திய ரிசர்வ்‌ வங்கியினால்‌ ஏற்பிசைவளிக்கப்பட்ட பிற முறையாவணம்‌ எதுவும்‌ என்று பொருள்படும்‌, ஆனால்‌ அதன்‌ நாணய மதிப்பிற்காக வைத்திருக்கும்‌ நாணயம்‌ எதனையும்‌ உள்ளடக்காது; (76) "இயக்கூர்தி" என்பது, 1988-ஆம்‌ ஆண்டு இயக்கூர்திகள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 597988) 2-ஆம்‌ பிரிவின்‌ (28)-ஆம்‌ கூறில்‌ அதற்கு குறித்தளிக்கப்பட்ட அதே பொருளினை உடையதாகும்‌; (77) "குடியிராத வரிவிதிக்கத்தக்க நபர்‌ என்பது, முதல்வராக அல்லது முகவராக அல்லது பிற முறை எதிலாயினும்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை உள்ளடக்கிய நடவடிக்கைகளை எப்போதாவது செய்கிற நபர்‌ எவரும்‌, ஆனால்‌ இந்தியாவில்‌ நிலையான வணிக இடம்‌ அல்லது குடியிருப்பிடம்‌ கொண்டிராதவர்‌, என்று பொருள்படும்‌; (78) "வரி விதிக்கத்தக்கதல்லாத வழங்குகை" என்பது, இந்த சட்டத்தின்கீழ்‌ அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ வரி விதிக்கக்கூடியதல்லாத சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை என்று பொருள்படும்‌; (79) "வரி விதிக்கத்தக்கதல்லாத ஆட்சிப்பரப்பு என்பது, வரிவிதிக்கத்தக்க ஆட்சிப்பரப்புக்கு வெளியேயுள்ள ஆட்சிப்பரப்பு என்று பொருள்படும்‌; (80) "அறிவிக்கை" என்பது, அதிகாரமுறை அரசிதழில்‌ வெளியிடப்பட்ட அறிவிக்கை என்று பொருள்படும்‌ மற்றும்‌ "அறிவி அல்லது "அறிவிக்கை 22 செய்யப்பட்ட என்ற சொற்றொடர்கள்‌ அவ்வாறே பொருள்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌; (81) "பிற ஆட்சிப்பரப்பு" என்பது, மாநிலத்தில்‌ அடங்கியுள்ளதல்லாத பிற மற்றும்‌ (114)-ஆம்‌ கூறின்‌ (அ) முதல்‌ (௨) வரையிலான உட்கூறுகளில்‌ சுட்டப்பட்ட ஆட்‌ சிப்பரப்புகள்‌ என்று பொருள்படும்‌; (82) வரி விதிக்கத்தக்க நபர்‌ தொடர்பாக "வெளியீட்டு வரி" என்பது, தம்மால்‌ அல்லது தம்முடைய முகவர்‌ மூலம்‌ செய்யப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வரிவிதிக்கத்தக்க வழங்குகை மீது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வசூலிக்கத்தக்க வறி என்று பொருள்படும்‌, ஆனால்‌, எதிரிடை கட்டண அடிப்படையில்‌ அவரால்‌ செலுத்தத்தக்க வரி நீங்கலாக; (83) வரி விதிக்கத்தக்க நபர்‌ தொடர்பாக "வெளிப்புற வழங்குகை" என்பது, விற்பனை, மாற்றல்‌, பண்டமாற்று, பரிமாற்றம்‌, உரிமம்‌, வாடகை, குத்தகை அல்லது முடிவுறல்‌ அல்லது பிற ஏதேனும்‌ வகையில்‌, வணிகத்தின்போது அல்லது அதனை மேல்நடத்தும்‌ வகையில்‌ அத்தகைய நபரால்‌ செய்யப்பட்ட அல்லது செய்யப்படுவதற்கு ஒத்துக்கொள்ளப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை என்று பொருள்படும்‌; (84) நபர்‌” என்பது கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கும்‌,- (அ) தனிநபர்‌; (ஆ) இந்து கூட்டுக்‌ குடும்பம்‌; (க) நிறுவனம்‌; () நிறுவகம்‌; (௨) வரையறுக்கப்பட்ட கடப்பாடுடைய கூட்டாண்மை; (ஊ) இந்தியாவில்‌ அல்லது இந்தியாவிற்கு வெளியே கூட்டுக்‌ குழுமமாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும்‌ அல்லது இல்லாவிட்டாலும்‌, நபர்களின்‌ கழகம்‌ அல்லது தனிநபர்களின்‌ குழுமம்‌; (௭) மையச்‌ சட்டம்‌, மாநிலச்‌ சட்டம்‌ அல்லது மாகாணச்‌ சட்டம்‌ எதனின்‌ கீழோ அல்லது அதன்‌ வழியாகவோ நிறுவப்பட்ட கூட்டுக்‌ குழுமம்‌ எதுவும்‌ அல்லது 2013- ஆம்‌ ஆண்டு நிறுவனங்களின்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 1872013) 2-ஆம்‌ பிரிவின்‌ (45)-ஆம்‌ கூறில்‌ பொருள்‌ வரையறை செய்யப்பட்டவாறான ஒரு அரசு நிறுவனம்‌; (ஏ) இந்தியாவிற்கு வெளியேயுள்ள நாட்டின்‌ சட்டங்களின்‌&ழோ அல்லது அவற்றின்‌ வழியாகவோ கூட்டுக்‌ குழுமமாகப்‌ பதிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு எதுவும்‌; (ஐ) கூட்டுறவு சங்கங்கள்‌ தொடர்பான சட்டம்‌ எதனின்கீழ்‌ பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கம்‌; 23 () உள்ளாட்சி அதிகார அமைப்பு; (ஓ) மைய அரசு அல்லது மாநில அரசு; (ஒள) 1860-ஆம்‌ ஆண்டு சங்கங்கள்‌ பதிவுச்‌ சட்டத்தின்கீழ்‌ (மையச்‌ சட்டம்‌ 21/1860) பொருள்‌ வரையறை செய்யப்பட்ட சங்கம்‌; (அ௮அ) அறக்கட்டளை; (அஆ) மேலேயுள்ள எதனின்‌ கீழும்‌ வராத செயற்கையான சட்டபூர்வமான நபர்‌ ஒவ்வொருவரும்‌; (85) "வணிக இடம்‌" என்பது, கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கும்‌- (அ) வழக்கமாக வணிகம்‌ நடந்து வரும்‌ இடம்‌ மற்றும்‌ பண்டக சாலை, கிடங்கு அல்லது வரிவிதிக்கத்தக்க நபர்‌ தம்முடைய சரக்குகளை சேமித்து வைக்கும்‌, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ வழங்கும்‌ அல்லது பெறும்‌ பிற இடம்‌ ஒன்றை, அல்லது (ஆ) வரிவிதிக்கத்தக்க நபர்‌ தம்முடைய கணக்குப்‌ புத்தகங்களை வைத்து வரும்‌ இடம்‌ ஒன்றை, அல்லது (இ) வரிவிதிக்கத்தக்க நபர்‌, எந்தப்‌ பெயரில்‌ அழைக்கப்பட்டாலும்‌, முகவர்‌ மூலம்‌ வணிகத்தில்‌ ஈடுபட்டுள்ள இடம்‌ ஒன்றை, (86) "வழங்குகை இடம்‌" என்பது, ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்‌ ॥-ஆம்‌ அத்தியாயத்தில்‌ சுட்டப்பட்டவாறு வழங்குகை இம்‌ என்று பொருள்படும்‌; (87) "வகுத்துரைக்கப்பட்ட" என்பது, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளில்‌ வகுத்துரைக்கப்பட்ட என்று பொருள்படும்‌; (88) "முதல்வர்‌" என்பது, எந்த நபர்‌ ஒருவர்‌ எவர்‌ சார்பாக முகவராகயிருந்து வழங்கல்‌ அல்லது சரக்குகளை அல்லது சேவைகளை அல்லது இரண்டினையும்‌ பெறும்‌ வணிகத்தில்‌ செயற்படுகிறாரோ அந்த நபர்‌ என்று பொருள்படும்‌; (89) "முதன்மை வணிக இடம்‌" என்பது, பதிவுச்‌ சான்றிதழில்‌ முதண்மை வணிக இடமாக குறித்துரைக்கப்பட்ட முதன்மை வணிக இடம்‌ என்று பொருள்படும்‌; (90) "முதன்மை வழங்குகை" என்பது, கூட்டு வழங்கலின்‌ முக்கியக்‌ கூறாக அமைகிற மற்றும்‌ கூட்டு வழங்கலின்‌ பகுதியாக அமைகிற பிற வழங்கல்‌ எதுவும்‌ துணையானதாக இருக்கிற சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ வழங்குகை என்று பொருள்படும்‌; (91) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ நிறைவேற்றப்பட வேண்டிய அலுவற்பணி எதனின்‌ தொடர்பாக "உரிய அலுவலர்‌" என்பது, ஆணையர்‌ அல்லது ஆணையரால்‌ அலுவற்பணி குறித்தளிக்கப்பட்ட மாநில வரி அலுவலர்‌ என்று பொருள்படும்‌; 24 (92) "காலாண்டு" என்பது, தொடர்ச்சியாக வருகிற மூன்று ஆங்கில மாதங்கள்‌ அடங்கிய மற்றும்‌ ஆங்கில ஆண்டின்‌ மார்ச்‌. ஜுன்‌, செப்டம்பர்‌ மற்றும்‌ டிசம்பரின்‌ கடைசி நாளில்‌ முடிவடைகிற கால அளவு என்று பொருள்படும்‌; (93) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகையையும்‌ "பெற்றுக்கொள்பவர்‌" என்பது,- (அ) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ வழங்குவதற்காக மறுபயன்‌ செலுத்தத்தக்கதாக இருக்கிறவிடத்து, அந்த மறுபபணை செலுத்த கடப்பாடுடைய அந்த நபர்‌; (ஆ) சரக்குகள்‌ வழங்குகைக்கு மறுபயன்‌ செலுத்தத்தக்கதாக இல்லாதவிடத்து, எந்த நபரிடம்‌ சரக்குகள்‌ ஒப்படைக்கப்பட வேண்டுமோ அல்லது கிடைக்கத்தக்கதாக இருக்குமோ, அல்லது எவரிடம்‌ சரக்குகளின்‌ உடைமை அல்லது பயன்பாடு கொடுக்கப்பட்டுள்ளதோ அல்லது கிடைக்கக்கூடியதாக இருக்குமோ அந்த நபர்‌; (இ) சேவைகள்‌ வழங்குகைக்கு மறுபயன்‌ செலுத்தத்தக்கதாக இல்லாதவிடத்து, எந்த நபரிடம்‌ சேவை செய்யப்பட்டதோ, மற்றும்‌ எந்த நபருக்கு வழங்குகை செய்யப்பட்டதோ அந்த நபர்‌ குறித்த சுட்டுகை எதுவும்‌, வழங்குகையை பெற்றுக்கொள்பவருக்கான சுட்டுகையாக பொருள்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ வழங்கப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டும்‌ தொடர்பாக பெற்றுக்கொள்பவர்களாக செயற்படும்‌ அத்தகைய முகவரை உள்ளடக்கும்‌; (94) "பதிவு பெற்ற நபர்‌" என்பது, 25-ஆம்‌ பிரிவின்கீழ்‌ பதிவு பெற்ற நபர்‌ என்று பொருள்படும்‌, ஆனால்‌, தனித்த அடையாள எண்ணைக்‌ கொண்டுள்ள நபரை உள்ளடக்காது; (95) "ஒழுங்குமுறை விதிகள்‌" என்பது, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அரசால்‌ செய்யப்படும்‌ ஒழுங்குமுறை விதிகள்‌ என்று பொருள்படும்‌; (96) சரக்குகள்‌ தொடர்பாக "நீக்குதல்‌" என்பது கீழ்க்கண்டுள்ளவை என்று பொருள்படும்‌.- (அ) வழங்குநரால்‌ அல்லது அத்தகைய வழங்குநர்‌ சார்பாக செயற்படும்‌ பிற நபர்‌ எவராலும்‌ ஒப்புவிப்பதற்கான சரக்குகளின்‌ அனுப்புகை, அல்லது (ஆ) பெற்றுக்கொள்பவரால்‌ அல்லது அத்தகைய பெற்றுக்கொள்பவர்‌ சார்பாக செயற்படும்‌ பிற நபர்‌ எவராலும்‌ சரக்குகளை சேகரித்தல்‌; (97) "அறிக்கை" என்பது, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்கீழ்‌ அளிக்கப்பட வேண்டிய வகுத்துரைக்கப்பட்ட அல்லது பிறவாறு வேண்டுறுத்தப்படும்‌ அறிக்கை எதுவும்‌ என்று பொருள்படும்‌; (98) "எதிரிடை கட்டணம்‌" என்பது, ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்‌ 9-ஆம்‌ பிரிவின்‌ (3)-ஆம்‌ உட்பிரிவின்‌ அல்லது (4)- 25 ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அல்லது 5-ஆம்‌ பிரிவின்‌ (3)-ஆம்‌ உட்பிரிவின்‌ அல்லது (4)- ஆம்‌ உட்பிரிவின்கழ்‌ அத்தகைய சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டையும்‌ வழங்குபவருக்குப்‌ பதிலாக சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ பெற்றுக்கொள்பவரால்‌ வரி செலுத்துவதற்குரிய கடப்பாடு என்று பொருள்படும்‌; (99) "சீராய்வு செய்யும்‌ அதிகார அமைப்பு" என்பது, 1408-ஆம்‌ பிரிவில்‌ சுட்டப்பட்டவாறு முடிவு அல்லது ஆணைகளை சீராய்வு செய்வதற்காக அமர்த்தப்பட்ட அல்லது அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு என்று பொருள்படும்‌; (10௦0) "இணைபப்புப்பட்டியல்‌" என்பது, இந்தச்‌ சட்டத்துடன்‌ இணைக்கப்பட்ட இணைப்புப்‌ பட்டியல்‌ என்று பொருள்படும்‌; (101) "காப்புறுதிகள்‌" என்பது, 1956-ஆம்‌ ஆண்டு காப்புறுதிகள்‌ ஒப்பந்தங்களின்‌ (ஒழுங்குமுறைப்படுத்துதல்‌) சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 421956) 2-ஆம்‌ பிரிவின்‌ (-கூறில்‌ குறித்தளிக்கப்பட்ட அதே பொருளினை உடையதாகும்‌; (1௦2) "சேவைகள்‌" என்பது, சரக்குகள்‌, பணம்‌ மற்றும்‌ காப்புறுதிகள்‌ அல்லாத பிற எதுவும்‌ என்று பொருள்படும்‌, ஆனால்‌, பணப்பயன்பாடு அல்லது அதனை ரொக்கமாக மாற்றுதல்‌ அல்லது பிற எந்த வகையிலாயினும்‌ நாணயத்தின்‌ அல்லது அதன்‌ பிரிவின்‌ ஒரு வடிவத்திலிருந்து நாணயம்‌ அல்லது அதன்‌ பிரிவின்‌ மற்றொரு வடிவத்திற்கு மாற்றுவதற்காக தனியாக வசூலிக்கப்பட்ட மறுபயவனை உள்ளடக்கும்‌; (103) மாநிலம்‌" என்பது, தமிழ்நாடு மாநிலம்‌ என்று பொருள்படும்‌; (104) மாநில வரி" என்பது, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ விதிக்கப்படும்‌ வரி என்று பொருள்படும்‌; (105) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ தொடர்பாக, "வழங்குநர்‌" என்பது, மேற்சொன்ன சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ வழங்குகிற நபர்‌ என்று பொருள்படும்‌, மற்றும்‌ வழங்கப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டும்‌ தொடர்பாக அத்தகைய வழங்குநர்‌ சார்பாக செயற்படும்‌ முகவரை உள்ளடக்கும்‌; (1௦6) "வரி கால அளவு" என்பது, அளிக்கப்பட வேண்டுறுத்தப்படும்‌ அறிக்கைக்கான கால அளவு என்று பொருள்படும்‌; (1௦7) "வரிவிதிக்கத்தக்க நபர்‌" என்பது, 22-ஆம்‌ பிரிவின்‌ அல்லது 24-ஆம்‌ பிரிவின்கீழ்‌ பதிவு பெற்ற அல்லது பதிவு பெறுவதற்கு கடப்பாடூடைய நபர்‌ என்று பொருள்படும்‌; (108) "வரிவிதிக்கத்தக்க வழங்குகை" என்பது, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரி விதிக்கத்தக்க சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை என்று பொருள்படும்‌; 26 (1௦9) "வரிவிதிக்கத்தக்க ஆட்சிப்பரப்பு என்பது, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ பொருந்தக்கூடிய ஆட்சிப்பரப்பு என்று பொருள்படும்‌; (114௦) "தொலைத்தொடர்பு சேவை" என்பது, (மின்னஞ்சல்‌, குரல்‌ அஞ்சல்‌, தரவு சேவைகள்‌, கேட்பு வாசக சேவைகள்‌, காணொலி வாசக சேவைகள்‌, வானொலி அகவி மற்றும்‌ அலைபேசி சேவைகள்‌ உள்ளடங்கலாக) எவ்வாறு விவரிக்கப்பட்ட சேவையாயிருப்பினும்‌, அவை கம்பி, வாணொலி, பார்க்கக்கூடிய அல்லது பிற மின்காந்த வழிகள்‌ மூலம்‌ குறிகள்‌, சமிக்ஞைகள்‌, எழுத்துகள்‌, உருவங்கள்‌ மற்றும்‌ ஒலிகள்‌ அல்லது உளவுச்‌ செய்தி அனுப்புகை அல்லது பெறுதல்‌ ஏதேனும்‌ வழிகள்‌ மூலம்‌ பயன்படுத்துநர்களுக்கு கிடைக்கக்கூடியதாகச்‌ செய்தல்‌ என்று பொருள்படும்‌; (144) மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டம்‌" என்பது, 2017-ஆம்‌ ஆண்டு மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டம்‌ (மையச்‌ சட்டம்‌ 12/2017) என்று பொருள்படும்‌; (112) "மாநிலத்தில்‌ விற்பனை அளவு" அல்லது "யூணியன்‌ பிரதேச விற்பனை அளவு" என்பது, (எதிரிடை கட்டண அடிப்படையில்‌ நபர்‌ ஒருவரால்‌ வரி செலுத்தத்தக்க உள்வரும்‌ வழங்குகைகளின்‌ மதிப்பு நீங்கலாக) வரிவிதிக்கத்தக்க வழங்குகைகளின்‌ ஒட்டுமொத்த மதிப்பு மற்றும்‌ வரிவிதிக்கத்தக்க நபரால்‌ மாநிலத்திற்குள்‌ அல்லது யூணியன்‌ பிரதேசத்திற்குள்‌ செய்யப்படும்‌ விலக்களிக்கப்பட்ட வழங்குகைகள்‌, அத்தகைய வரிவிதிக்கத்தக்க நபரால்‌ மாநிலத்தில்‌ இருந்தோ அல்லது யூனியன்‌ பிரதேசத்தில்‌ இருந்தோ செய்யப்படும்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ ஏற்றுமதிகள்‌ மற்றும்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ இடைமாநில வழங்குகைகள்‌, ஆனால்‌, மைய வரி, மாநில வரி, யூணியன்‌ பிரதேச வரி, ஒருங்கிணைக்கப்பட்ட வரி மற்றும்‌ மேல்வரி நீங்கலாக, என்று பொருள்படும்‌; (143) "வழக்கமாக குடியிருந்து வருமிடம்‌" என்பது கீழ்க்கண்டுள்ளவை என்று பொருள்படும்‌- (அ) தனிநபராக இருக்கும்‌ நேர்வில்‌, அவர்‌ வழக்கமாகக்‌ குடியிருந்து வருமிடம்‌; (ஆ) பிற நேர்வுகளில்‌, அந்த நபர்‌ கூட்டு குழுமமாகப்‌ பதிவு செய்யப்பட்ட அல்லது பிறவாறு சட்டப்படி நிறுவப்பட்ட இடம்‌; (114) யூனியன்‌ பிரதேசம்‌" என்பது கீழ்க்கண்டுள்ளவை என்று பொருள்படும்‌- (அ) அந்தமான்‌ மற்றும்‌ நிக்கோபார்‌ தீவுகள்‌, (ஆ) லட்சத்‌ தீவு, (&) தாத்ரா மற்றும்‌ நாகர்‌ ஹவேலி, (FF) டாமன்‌ மற்றும்‌ டையூ, (உ) சண்டிகர்‌ ஆட்சிப்பரப்பு, மற்றும்‌ (ஊ) பிற ஆட்சிப்பரப்பு; 27 விளக்கம்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, (அ) முதல்‌ (ஊ) வரையிலா உட்கூறுகளில்‌ குறித்துரைக்கப்பட்ட ஆட்சிப்பரப்புகள்‌ ஒவ்வொன்றும்‌ தனிப்பட்ட யூனியன்‌ பிரதேசமாக கருதப்படுதல்‌ வேண்டும்‌; (115) "யூணியன்‌ பிரதேச வரி" என்பது, யூனியன்‌ பிரதேச சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ விதிக்கப்படும்‌ யூணியன்‌ பிரதேச சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி என்று பொருள்படும்‌; (116) "யூணியன்‌ பிரதேச சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டம்‌" என்பது, 2017-ஆம்‌ ஆண்டு யூனியன்‌ பிரதேச சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டம்‌ (மையச்‌ சட்டம்‌ 14/2017) என்று பொருள்படும்‌; (117) "செல்லுந்தன்மையுடைய அறிக்கை" என்பது, எந்த அறிக்கை 39-ஆம்‌ பிரிவின்‌ (1-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அளிக்கப்பட்டு, அதன்‌ மீது சுய வரிக்கணிப்பு செய்து வரி முழுவதும்‌ செலுத்தப்பட்டுள்ளதோ அந்த அறிக்கை என்று பொருள்படும்‌; (118) "செலவுச்‌ சீட்டு” என்பது, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகைக்கான மறுபயனாக அல்லது பகுதி மறுபயனாக ஏற்றுக்கொள்ளப்படுகிற மற்றும்‌ வழங்கப்பட வேண்டிய சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ அல்லது அவற்றின்‌ ஆற்றல்‌ வாய்ந்த வழங்குநர்களின்‌ அடையாளங்களையும்‌ ஒன்று அந்த ஆவணத்திலேயோ அல்லது அதன்‌ தொடர்புடைய ஆவணத்திலோ சுட்டிக்காட்டப்பட கடப்பாடுடைய மற்றும்‌ அத்தகைய ஆவணத்தினைப்‌ பயன்படுத்துவதற்கான வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகள்‌ உள்ளடங்கலான ஆவணம்‌ என்று பொருள்படும்‌; (149) "பணி ஒப்பந்தம்‌" என்பது, கட்டடம்‌, கட்டுமானம்‌, கட்டுருவாக்குதல்‌, முடிவடைதல்‌, நிறுவுதல்‌, அமர்த்துதல்‌, பொருத்துதல்‌, மேம்படுத்துதல்‌, மாற்றியமைத்தல்‌, பழுதுபார்த்தல்‌, பராமரித்தல்‌, புதுப்பித்தல்‌, மாற்றுதல்‌ அல்லது அசையாச்‌ சொத்து எதனையும்‌ பொருத்துதல்‌ ஆகியவற்றிற்கான ஒப்பந்தம்‌ என்று பொருள்படும்‌, அதில்‌ சரக்குகளின்‌ சொத்து உரிமை மாற்றம்‌ (சரக்குகள்‌ அல்லது பிற சில வடிவத்தில்‌) அத்தகைய ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில்‌ உள்ளடங்கியிருத்தல்‌ என்று பொருள்படும்‌; (120) இந்தச்‌ சட்டத்தில்‌ பயன்படுத்தப்பட்டு மற்றும்‌ பொருள்‌ வரையறை செய்யப்படாத சொற்கள்‌ மற்றும்‌ சொற்றொடர்கள்‌, ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ வரிச்‌ சட்டம்‌, மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டம்‌, யூனியன்‌ பிரதேச சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டம்‌ மற்றும்‌ சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி (மாநிலங்களுக்கு நஷ்டஈடு வழங்குதல்‌) சட்டத்தில்‌ பொருள்‌ வரையறை செய்யப்பட்டிருக்குமேயானால்‌, அந்தச்‌ சட்டங்களில்‌ அவற்றிற்கு குறித்தளிக்கப்பட்ட அதே பொருள்களை உடையனவாகும்‌. 28 அத்தியாயம்‌ ॥ நிருவாகம்‌. 3. இந்தச்‌ சட்டத்தின்‌ கீழான அலுவலர்கள்‌.- அரசு, அறிவிக்கை வாயிலாக, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக பின்வரும்‌ அலுவலர்களின்‌ வகையினரை அமர்த்துதல்‌ வேண்டும்‌, அவர்களாவர்‌:-- (அ) மாநில வழி ஆணையர்‌, (ஆ) மாநில வரி கூடுதல்‌ ஆணையர்கள்‌, (இ) மாநில வரி இணை ஆணையர்கள்‌, (௬) மாநில வரி துணை ஆணையர்கள்‌, (௨) மாநில வரி உதவி ஆணையர்கள்‌, மற்றும்‌ (ஊ) அது தக்கதெனக்‌ கருதலாகும்‌ அலுவலர்களின்‌ பிற வகையினர்‌ எவரும்‌: வரம்புரை: ஆனால்‌, 2006-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 32/2006) அமர்த்தப்பட்ட அலுவலர்கள்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்கீழ்‌ அமர்த்தப்பட்ட அலுவலர்களாகக்‌ கருதப்படுவர்‌. 4. அலுவலர்களின்‌ அமர்த்துகை.- (1) அரசு, 3-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அறிவிக்கப்படலாகும்‌ அலுவலர்களுக்குக்‌ கூடுதலாக, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அலுவலர்களாக இருப்பதற்கு அது பொருத்தமெனக்‌ கருதலாகும்‌ அத்தகைய நபர்களை அமர்த்தலாம்‌. (2) ஆணையர்‌ மாநிலம்‌ முழுவதற்கும்‌ அதிகாரவரம்பு கொண்டிருப்பார்‌, கூடுதல்‌ ஆணையர்‌, அவருக்கு குறித்தளிக்கப்பட்ட அலுவற்பணிகள்‌ அனைத்தையும்‌ அல்லது அவற்றில்‌ எதனையும்‌ பொறுத்து, மாநிலம்‌ முழுவதற்கும்‌ அல்லது மாநில அரசு அவ்வாறு பணிக்கிறவிடத்து அதன்‌ வட்டாரப்‌ பரப்பிடம்‌ எதன்‌ மீதும்‌ அதிகார வரம்பு கொண்டிருப்பார்‌, மற்றும்‌ பிற அலுவலர்கள்‌ அனைவரும்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மாநிலம்‌ முழுவதற்கும்‌ அல்லது ஆணையர்‌, ஆணை வாயிலாக, குறித்துரைக்கலாகும்‌ வட்டார பரப்பிடங்கள்‌ மீது அதிகார வரம்பு கொண்டிருப்பர்‌. 5. அலுவலர்களின்‌ அதிகாரங்கள்‌.- (1) ஆணையரால்‌ சுமத்தப்படும்‌ அத்தகைய நிபந்தனைகள்‌ மற்றும்‌ வரம்புகளுக்கு உட்பட்டு, மாநில வரி அலுவலர்‌ ஒருவர்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை செலுத்தலாம்‌ மற்றும்‌ அவருக்கு வழங்கப்பட்ட அல்லது சுமத்தப்பட்ட கடமைகளை ஆற்றலாம்‌. (2) மாநில வரி அலுவலர்‌ ஒருவர்‌, தமக்கு கீழ்நிலையிலுள்ள பிற மாநில வரி அலுவலர்‌ எவர்‌ மீதும்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வழங்கப்பட்ட அதிகாரங்களைச்‌ செலுத்தலாம்‌, மற்றும்‌ வழங்கப்பட்ட அல்லது சுமத்தப்பட்ட கடமைகளை ஆற்றலாம்‌. (3) ஆணையர்‌, தம்மால்‌ இதன்பொருட்டு குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகள்‌ மற்றும்‌ வரம்புகளுக்கு உட்பட்டு, தமக்குக்‌ 29 கழ்நிலையிலுள்ள பிற அலுவலர்‌ எவருக்கும்‌ தமது அதிகாரங்களை ஒப்படைவு செய்யலாம்‌. (4) இந்தப்‌ பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, மேல்முறையீட்டு அதிகார அமைப்பானது, பிற மாநில வரி அலுவலர்‌ எவருக்கும்‌ வழங்கப்பட்ட அதிகாரங்களைச்‌ செலுத்துதல்‌ ஆகாது அல்லது அவருக்கு வழங்கப்பட்ட அல்லது சுமத்தப்பட்ட கடமைகளை ஆற்றுதல்‌ ஆகாது. 6. ஒரு சில சூழ்நிலைகளில்‌ உரிய அலுவலராக மைய வரி அலுவலர்களுக்கு அதிகாரம்‌ அளித்தல்‌- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு பாதகமில்லாமல்‌, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, அரசால்‌, அறிவிக்கை வாயிலாக குறித்துரைக்கக்கூடிய அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ அமர்த்தப்பட்ட அலுவலர்கள்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக உரிய அலுவலர்களாக இருப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளனர்‌. (2) (1-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு 2 1 u (5.~ (அ) உரிய அலுவலர்‌ எவரும்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ ஆணை ஒன்றினை பிறப்பிக்கிறவிடத்து, அவர்‌, மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ ஆணை ஒன்றினை, மேற்சொன்ன சட்டத்தால்‌ அதிகாரமளிக்கப்பட்டவாறு அதிகார வரம்புடைய மைய வரி அலுவலருக்கு தகவல்‌ தெரிவித்து, பிறப்பித்தல்‌ வேண்டும்‌; (ஆ) மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கழான உரிய அலுவலர்‌ பொருட்பாடு ஒன்றின்‌ மீது நடவடிக்கைகள்‌ எவற்றையும்‌ தொடங்கியுள்ளவிடத்து, அதே பொருட்பாடு மீது இந்தச்‌ சட்டத்தின்கழான உரிய அலுவலரால்‌ நடவடிக்கைகள்‌ எவையும்‌ தொடங்குதல்‌ ஆகாது. (3) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அமர்த்தப்பட்ட அலுவலரால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனின்‌ திருத்தியமைப்பு, மேல்முறையீடு மற்றும்‌ சீராய்வு ஆகியவற்றிற்கான நடவடிக்கைகள்‌ எவையும்‌, பொருந்தத்தக்கவிடத்தெல்லாம்‌, மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ அமர்த்தப்பட்ட அலுவலர்‌ முன்பு தொடருதல்‌ ஆகாது. அத்தியாயம்‌ ॥ வரிவிதித்தல்‌ மற்றும்‌ வஞூலித்தல்‌. 7. வழங்குகையின்‌ வீச்சு.- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, "வழங்குகை" என்ற சொற்றொடர்‌ கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கும்‌- (அ) வணிகத்தின்போது அல்லது அதனை மேல்நடத்தும்‌ வகையில்‌ நபர்‌ ஒருவரால்‌ மறுபயனுக்காக செய்யப்படும்‌ அல்லது செய்யப்படுவதற்கு ஒத்துக்கொள்ளப்படும்‌ விற்பனை, உரிமை மாற்றம்‌, பண்டமாற்று, மாற்றல்‌, உரிமம்‌, 30 வாடகை, குத்தகை அல்லது அகற்றல்‌ என்ற முறையில்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ அனைத்து வகையான வழங்குகை, (ஆ) வணிகத்தின்போது அல்லது அதனை மேல்நடத்தும்‌ வகையில்‌ இருந்தாலும்‌ அல்லது இல்லாவிட்டாலும்‌ மறுபயனுக்கான சேவைகளின்‌ இறக்குமதி, (&) மறுபயனின்றி செய்யப்பட்ட அல்லது செய்யப்படுவதற்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஆம்‌ இணைபப்புப்பட்டியலில்‌ குறித்துரைக்கப்பட்ட செயற்பாடுகள்‌, மற்றும்‌ (FF) ॥டஆம்‌ இணைபப்புப்பட்டியலில்‌ சுட்டப்பட்டவாறு சரக்குகளின்‌. வழங்குகையாக அல்லது சேவைகளின்‌ வழங்குகையாக பாவிக்கப்படும்‌ செயற்பாடுகள்‌; (2 0-ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌,-- (அ) ॥-ஆம்‌ இணைபப்புப்பட்டியலில்‌ குறித்துரைக்கப்பட்ட செயற்பாடுகள்‌ அல்லது நடவடிக்கைகள்‌, அல்லது (ஆ) மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌ அரசால்‌ அறிவிக்கப்படலாகும்‌, மைய அரசால்‌, மாநில அரசால்‌ அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்பு எதனாலும்‌ அவை பொது அதிகார அமைப்புகளாக ஈடுபட்டு மேற்கொள்ளப்படும்‌, அத்தகைய செயற்பாடுகள்‌ அல்லது நடவடிக்கைகள்‌, சரக்குகள்‌ வழங்குகையாகவோ அல்லது சேவைகள்‌ வழங்குகையாகவோ பாவிக்கப்படுதல்‌ ஆகாது. (3) (1) மற்றும்‌ (2)-ஆம்‌ உட்பிரிவுகளின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, அரசு, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, அறிவிக்கையின்‌ வாயிலாக, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை குறித்துரைக்கும்‌- (அ) சரக்குகளின்‌ வழங்குகையாக பாவிக்கப்பட வேண்டும்‌ மற்றும்‌ சேவைகளின்‌ வழங்குகையாக பாவிக்கப்படுதல்‌ ஆகாது; அல்லது (ஆ) சேவைகளின்‌ வழங்குகையாக பாவிக்கப்பட வேண்டும்‌, மற்றும்‌ சரக்குகளின்‌ வழங்குகையாக பாவிக்கப்படுதல்‌ ஆகாது. 8. கூட்டு மற்றும்‌ கலப்பு வழங்குகைகளின்‌ மீதான வரிக்‌ கடப்பாடு.- கூட்டு அல்லது கலப்பு வழங்குகையின்‌ மீதான வரி கடப்பாடானது பின்வரும்‌ முறையில்‌ தீர்மானிக்கப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- (அ) இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட வழங்குகைகள்‌ கொண்ட கூட்டு வழங்குகையில்‌, ஒன்று முதன்மை வழங்குகையாக இருக்கிறவிடத்து, அத்தகைய முதன்மை வழங்குகையின்‌ வழங்குகையாக அது பாவிக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (ஆ) இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட வழங்குகைகள்‌ கொண்ட கலப்பு வழங்குகையில்‌, உயர்வீத வரியை ஈர்க்கும்‌ அந்த குறிப்பிட்ட வழங்குகையின்‌ வழங்குகையாக அது பாவிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 31 9. வரி விதித்தல்‌ மற்றும்‌ வளுலித்தல்‌- (1) (2-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, மனித நுகர்வுக்கான மதுபான வழங்குகை தவிர, மாநிலத்திற்குள்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகையின்மீது தமிழ்நாடு சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி என்று அழைக்கப்படும்‌ வரியானது, 15-ஆம்‌ பிரிவின்கீழ்‌ மதிப்பு தீர்மானிக்கப்பட்டதன்பேரில்‌ மற்றும்‌ மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌ அரசால்‌ அறிவிக்கப்படலாகும்‌, இருபது விழுக்காட்டிற்கு மேற்படாத, அத்தகைய விதங்களில்‌ விதிக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ வளுலிக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ வரி விதிக்கத்தக்க நபரால்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. (2) செம்மையாக்கப்படாத பெட்ரோலியம்‌, உயர்வேக மசல்‌, மோட்டார்‌ சாராவி (பொதுவாக பெட்ரோல்‌ என்று அறியப்படும்‌), இயற்கை எரிவாயு, வானூர்தி இயக்க எரிபொருள்‌ ஆகியவற்றின்‌ வழங்குகை மீது, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌ அரசால்‌ அறிவிக்கப்படலாகும்‌ அத்தகைய தேதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறு மாநில வரி விதிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) அரசு, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, அறிவிக்கை வாயிலாக, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகையின்‌ வகைகளை குறித்துரைக்கலாம்‌, அவற்றின்‌ மீதான வரி அத்தகைய சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ பெற்றுக்கொள்பவரால்‌ எதிரிடைக்‌ கட்டண அடிப்படையில்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ அனைத்தும்‌, அத்தகைய சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை தொடர்பாக வரி செலுத்துவதற்கு கடப்பாடு உள்ள நபராக அவர்‌ இருக்கிறவிடத்து, அத்தகைய பெற்றுக்கொள்பவருக்கும்‌ பொருந்தும்‌. (4) பதிவு பெற்ற நபருக்கு, பதிவு பெறாத வழங்குநரால்‌ வரி விதிக்கத்தக்க சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை பொறுத்த மாநில வரி, பெற்றுக்கொள்பவராக எதிரிடைக்‌ கட்டண அடிப்படையில்‌ அத்தகைய நபரால்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ அனைத்தும்‌, அத்தகைய சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை தொடர்பாக வரி செலுத்துவதற்கு கடப்பாடு உள்ள நபராக அவர்‌ இருக்கிறவிடத்து, அத்தகைய பெற்றுக்கொள்பவருக்கும்‌ பொருந்தும்‌. (5) அரசு, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, அறிவிக்கை வாயிலாக, சேவைகளின்‌ வகைகளை குறித்துரைக்கலாம்‌, அத்தகைய சேவைகள்‌ மின்னணு வணிகம்‌ இயக்குபவர்‌ மூலமாக வழங்கப்படுமானால்‌, மாநிலத்திற்குள்‌ செய்யப்படும்‌ அதன்‌ வழங்குகைகள்‌ மீதான வரி அவரால்‌ செலுத்தப்பட வேண்டும்‌, மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ அனைத்தும்‌, அத்தகைய சேவைகள்‌ வழங்குகை தொடர்பாக வரி செலுத்துவதற்கு கடப்பாடுடைய வழங்குநராக அவர்‌ இருக்கிறவிடத்து, அத்தகைய மின்னணு வணிகம்‌ இயக்குபவருக்கும்‌ பொருந்தும்‌: 32 வரம்புரை: ஆனால்‌, மின்னணு வணிகம்‌ இயக்குபவர்‌ வரி விதிக்கத்தக்க ஆட்சிப்பரப்பில்‌ நேரடி இருப்பில்லாதவிடத்து, வரி விதிக்கத்தக்க ஆட்சிப்பரப்பில்‌ நோக்கம்‌ எதற்காகவும்‌ அத்தகைய மின்னணு வணிகம்‌ இயக்குபவர்‌ சார்பான நபர்‌ எவரும்‌ வரி செலுத்துவதற்கு கடப்பாடுடையவராதல்‌ வேண்டும்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, மிண்ணணு வணிகம்‌ இயக்குபவர்‌ வரி விதிக்கத்தக்க ஆட்சிப்பரப்பில்‌ நேரடி இருப்பில்லாதவிடத்து மற்றும்‌ மேற்சொன்ன ஆட்சிப்பரப்பில்‌ பிரதிநிதி எவரையும்‌ கொண்டிருக்காதவிடத்து, அத்தகைய மின்னணு வணிகம்‌ இயக்குபவர்‌ வரி செலுத்தும்‌ நோக்கத்திற்காக வரி விதிக்கத்தக்க ஆட்சிப்பரப்பில்‌ நபர்‌ ஒருவரை நியமித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய நபர்‌ வரி செலுத்துவதற்கு கடப்பாடுடையவராதல்‌ வேண்டும்‌. 10. இணக்க வரிவிதிப்பு- (1) இந்தச்‌ சட்டத்தில்‌ முரணாக என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, ஆனால்‌, 9-ஆம்‌ பிரிவின்‌ (3) மற்றும்‌ (4) ஆகிய உட்பிரிவுகளின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, பதிவு பெற்ற நபர்‌, அவருடைய முந்தைய நிதியாண்டின்‌ ஒட்டுமொத்த விற்பனை அளவு ஐம்பது லட்ச ரூபாய்க்கு மேற்படாமல்‌ இருக்கையில்‌, அவரால்‌ செலுத்தத்தக்க வரிக்குப்‌ பதிலாக, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய விதத்தில்‌ கணக்கிடப்படும்‌ தொகையைச்‌ செலுத்துவதற்கு தெரிவு செய்து கொள்ளலாம்‌, ஆனால்‌,- (அ) உற்பத்தியாளரைப்‌ பொறுத்தவரை, மாநிலத்திற்குள்ளான விற்பனை அளவில்‌ ஒரு விழுக்காட்டிற்கு. (ஆ) 1-ஆம்‌ இணைப்புப்பட்டியலின்‌ 6-ஆம்‌ பத்தியின்‌ (ஆ)-கூறில்‌ சுட்டப்பட்ட வழங்குகைகளை செய்வதில்‌ ஈடுபட்டுள்ள நபர்களைப்‌ பொறுத்தவரை, மாநிலத்திற்குள்ளான விற்பனை அளவில்‌ இரண்டரை விமழுக்காட்டிற்கு, (இ) பிற வழங்குநர்களைப்‌ பொறுத்தவரை, மாநிலத்திற்குள்ளான விற்பனை அளவில்‌ அரை விழுக்காட்டிற்கு. வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகள்‌ மற்றும்‌ கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, மேற்படுதல்‌ ஆகாது: வரம்புரை: ஆனால்‌, அரசு, அறிவிக்கை வாயிலாக, மேற்சொன்ன வரம்பான ஐம்பது இலட்ச ரூபாயை, ஒரு கோடி ரூபாய்க்கு மேற்படாத, மன்றத்தினால்‌ பரிந்துரைக்கப்படும்‌ அத்தகைய உயர்‌ தொகைக்கு அதிகரிக்கலாம்‌. (2) பதிவு பெற்ற நபர்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கழ்‌ தெரிவுரிமைக்கு பின்வருவனவற்றைப்‌ பொருத்து தகுதியுடையவராவர்‌- (அ) ॥_ஆம்‌ இணைபப்புப்பட்டியலின்‌ 6-ஆம்‌ பத்தியின்‌ (ஆ)-கூறில்‌ சுட்டப்பட்ட வழங்குகைகள்‌ அல்லாத சேவைகள்‌ வழங்குகைகளில்‌ அவர்‌ ஈடுபடாதிருப்பாரானால்‌, 33 (ஆ) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரிவிதிக்கத்தக்கதல்லாத சரக்குகளின்‌ வழங்குகை எதனையும்‌ செய்வதில்‌ அவர்‌ ஈடுபடாதிருப்பாரானால்‌, (இ) மாநிலங்களுக்கிடையேயான சரக்குகளின்‌ வெளிப்புற வழங்குகைகள்‌ எதனையும்‌ செய்வதில்‌ அவர்‌ ஈடுபடாதிருப்பாரானால்‌, (") 52-ஆம்‌ பிரிவின்கீழ்‌ மூலத்தில்‌ வரி வசூலிக்க வேண்டுறுத்துகிற மின்னணு வணிகம்‌ இயக்குபவர்‌ மூலம்‌ சரக்குகளின்‌ வழங்குகை எதனையும்‌ செய்வதில்‌ அவர்‌ ஈடுபடாதிருப்பாரானால்‌, மற்றும்‌ (௨) மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌ அரசால்‌ அறிவிக்கப்படலாகும்‌ அத்தகைய சரக்குகளின்‌ உற்பத்தியாளராக அவர்‌ இல்லாதிருப்பாரானால்‌: வரம்புரை: ஆனால்‌, ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு பெற்ற நபர்‌ (1961-ஆம்‌ ஆண்டு வருமான வரிச்‌ சட்டத்தின்படி (மையச்‌ சட்டம்‌ 431961) வழங்கப்பட்ட) அதே நிரந்தர கணக்கு எண்‌ கொண்டிருக்கிறவிடத்து, பதிவு பெற்ற நபர்‌, (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழான திட்டத்திற்கு, அத்தகைய பதிவு பெற்ற அனைத்து நபர்களும்‌ அந்த உட்பிரிவின்‌ கீழ்‌ வரி செலுத்த தெரிவு செய்திருந்தாலன்றி, தெரிவு செய்ய தகுதியுடையவராக மாட்டார்‌. (3) 1-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பதிவு பெற்ற நபரால்‌ பயன்படுத்தப்படும்‌ தெரிவுரிமை, நிதியாண்டில்‌ அவருடைய ஒட்டுமொத்த விற்பனை அளவு (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ குறித்துரைக்கப்பட்ட வரம்பினை மிகும்‌ நாளிலிருந்து நடைமுறைக்கு வருமாறு காலாவதி ஆகிவிடும்‌. (4) (1-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகள்‌ பொருந்தக்கூடிய வரிவிதிக்கத்தக்க நபர்‌, தம்மால்‌ செய்யப்பட்ட வழங்குகைகளுக்கு பெற்றுக்கொள்பவரிடமிருந்து வரி எதனையும்‌ வஞுலித்தல்‌ ஆகாது; உள்ளீட்டு வரிக்கான வரவு எதுவும்‌ பெறுவதற்கு உரிமையுடையவராக மாட்டார்‌. (5) உரிய அலுவலரிடம்‌, வரி விதிக்கத்தக்க நபர்‌ தகுதியுடையவராக இல்லாதிருப்பினும்‌, (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வரி செலுத்திவிட்டார்‌ என்று நம்புவதற்கு காரணங்கள்‌ பெற்றிருப்பாரானால்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ பிற வகைமுறைகள்‌ எதன்படியும்‌ அவரால்‌ செலுத்தக்கூடியதாகும்‌ என்ற வரி எதற்கும்‌ கூடுதலாக, அத்தகைய நபர்‌ தண்டத்தொகை செலுத்த கடப்பாடுடையவராதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ 73-ஆம்‌ பிரிவின்‌. அல்லது 74-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகள்‌, அவசியமான மாறுதல்களோடு, வரி மற்றும்‌ தண்டத்தொகையினை தீர்மானிப்பதற்கு பொருந்தும்‌. 11. வரியிலிருந்து விலக்களிப்பு வழங்குவதற்குள்ள அதிகாரம்‌.- (1) அரசு, பொது நலன்‌ கருதி அவ்வாறு செய்வது அவசியமென திருப்தி கொள்கிறவிடத்து, அது, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, அறிவிக்கை வாயிலாக, பொதுவாக, ஒன்று முற்றிலுமாக அல்லது அதில்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய 34 நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டில்‌ எதனின்‌ குறித்துரைக்கப்பட்ட விவரிப்பிற்கு அத்தகைய அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ தேதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறு அதன்மீது விதிக்கத்தக்க வரி முழுவதற்கும்‌ அல்லது பகுதி எதற்கும்‌, விலக்களிக்கலாம்‌. (2) அரசு, பொது நலன்‌ கருதி அவ்வாறு செய்வது அவசியமென திருப்தி கொள்கிறவிடத்து, அது, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, ஒவ்வொரு நேர்விலும்‌ சிறப்பு ஆணை வாயிலாக, அத்தகைய ஆணையில்‌ குறிப்பிடப்பட வேண்டிய விதிவிலக்கான தன்மையின்‌ சூழ்நிலைகளின்கீழ்‌, வரி விதிக்கத்தக்க சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கலாம்‌. (3) அரசு, (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை எதனின்‌ அல்லது (2)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணையின்‌ வீச்சு அல்லது பொருந்துகையின்‌ தெளிவுறுத்தும்‌ நோக்கத்திற்காக அவ்வாறு செய்வது அவசியமானது. அல்லது உகந்தது என அது கருதுமானால்‌, அத்தகைய அறிவிக்கையில்‌ அல்லது, நேர்விற்கேற்ப ஆணையில்‌, விளக்கம்‌ ஒன்றை (1)-ஆம்‌ உட்பிரிவின்கழான அறிவிக்கை அல்லது (2)-ஆம்‌ உட்பிரிவின்கழான ஆணை வெளியான ஜஓராண்டிற்குள்‌, அறிவிக்கை வாயிலாக, எந்த நேரத்திலும்‌ புகுத்தலாம்‌, மற்றும்‌ அத்தகைய விளக்கம்‌ ஒவ்வொன்றும்‌, அத்தகைய முதலாம்‌ அறிவிக்கையின்‌ அல்லது, நேர்விற்கேற்ப ஆணையின்‌, பகுதியாக எப்போதும்‌ இருந்தாற்போன்றே செயல்திறம்‌ பெறும்‌. (4) மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ 11-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, மைய அரசால்‌ பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை எதுவும்‌ அல்லது மேற்சொன்ன பிரிவின்‌ (2)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணையானது, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையாக அல்லது, நேர்விற்கேற்ப ஆணையாக கருதப்படுதல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இூண்டினையும்‌ பொறுத்து அவற்றின்‌ மீது விதிக்கத்தக்க வரி முழுவதும்‌ அல்லது பகுதிக்கு முற்றிலும்‌ விலக்களிப்பு வழங்கப்படுகிறவிடத்து, அத்தகைய சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ வழங்கும்‌ பதிவு பெற்ற நபர்‌ அத்தகைய சரக்குகளின்‌ அல்லது சேவைகளின்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகையின்‌ மீது செயலுக்கு வந்துள்ள வீதத்திற்கு மிகையாக வரி வசூலித்தல்‌ ஆகாது. 35 அத்தியாயம்‌ IV வழங்குகையின்‌ காலம்‌ மற்றும்‌ மதிப்பு. 12. சரக்குகளின்‌ வழங்குகை காலம்‌.- (1) சரக்குகள்‌ மீது வரி செலுத்துவதற்குரிய கடப்பாடு, இந்தப்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கு இணங்க தீர்மானிக்கப்பட்டவாறு, வழங்குகை காலத்தில்‌, தொடங்குதல்‌ வேண்டும்‌. (2) சரக்குகளின்‌ வழங்குகை காலம்‌, பின்வரும்‌ தேதிகளில்‌ முன்னதாக இருத்தல்‌ வேண்டும்‌, அவையாவன:- (அ) வழங்குநரால்‌ விலைப்பட்டியல்‌ வழங்கப்பட்ட தேதி அல்லது வழங்குகை பொறுத்து விலைப்பட்டியல்‌ வழங்குவதற்கு 31-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அவர்‌ வேண்டுறுத்தப்படுகிற கடைசி தேதி; அல்லது (ஆ) வழங்குகை பொறுத்து செலுத்துகையை வழங்குநர்‌ பெறும்‌ தேதி: வரம்புரை: ஆனால்‌, வரி விலைப்பட்டியலில்‌ சுட்டிக்காட்டப்பட்ட தொகைக்கு மிகையாக ஓராயிரம்‌ ரூபாய்‌ வரையிலான தொகையை வரிவிதிக்கத்தக்க சரக்குகளின்‌ வழங்குநர்‌ பெறுமிடத்து அத்தகைய மிகைத்‌ தொகையின்‌ அளவுக்கான வழங்குகைக்‌ காலமானது, மேற்சொன்ன வழங்குநரின்‌ தெரிவின்‌ பேரில்‌, அத்தகைய மிகைத்‌ தொகை பொறுத்த விலைப்பட்டியல்‌ வழங்கும்‌ தேதியாக இருத்தல்‌ வேண்டும்‌. விளக்கம்‌ 1.~ (அ) மற்றும்‌ (ஆ)-கூறுகளின்‌ நோக்கங்களுக்காக, "வழங்குகை" என்பது, விலைப்பட்டியலினால்‌ அல்லது, நேர்விற்கேற்ப செலுத்துகையினால்‌ உள்ளடக்கப்படுகிற அளவிற்கு செய்யப்பட்டுள்ளதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. விளக்கம்‌ 2.-- (ஆ)-கூறின்‌ நோக்கங்களுக்காக, "வழங்குநர்‌ செலுத்துகையைப்‌ பெற்ற தேதி" என்பது, அவருடைய கணக்குப்‌ புத்தகங்களில்‌ பதிவு செய்யப்பட்ட செலுத்துகைத்‌ தேதி அல்லது செலுத்துகை அவருடைய வங்கிக்‌ கணக்கில்‌ வரவுவைக்கப்பட்ட தேதி, இதில்‌ எது முந்தியதோ, அந்த தேதி. (3) வரி செலுத்தப்பட்ட அல்லது எதிரிடைக்‌ கட்டண அடிப்படையில்‌ செலுத்தப்படுவதற்கு கடப்பாடுடைய வழங்குகைகள்‌ பொறுத்தவரை, வழங்குகையின்‌ காலம்‌, பின்வரும்‌ தேதிகளில்‌ முந்தியதாக இருக்கும்‌, அவையாவன:- (அ) சரக்குகளின்‌ பெறுகைத்‌ தேதி; அல்லது (ஆ) பெறுநரின்‌ கணக்குப்‌ புத்தகங்களில்‌ பதிவு செய்யப்பட்டவாறான செலுத்துகைத்‌ தேதி அல்லது அவரது வங்கிக்‌ கணக்கில்‌ செலுத்துகை பற்று வைக்கப்பட்ட தேதி, இதில்‌ எது முந்தியதோ, அந்த தேதி; அல்லது (இ) வழங்குநரால்‌, விலைப்பட்டியல்‌ அல்லது அதற்குப்‌ பதிலாக பிற ஆவணம்‌ எதுவும்‌, எந்தப்‌ பெயரில்‌ அழைக்கப்பட்டாலும்‌, வழங்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்கு அடுத்து பின்வரும்‌ தேதி: 36 வரம்புரை: ஆனால்‌, (அ)-கூறின்கீழ்‌ அல்லது (ஆ)-கூறின்கீழ்‌ அல்லது (இ)- கூறின்கீழ்‌ வழங்குகைக்‌ காலத்தை தீர்மானிக்க இயலாதிருக்கிறவிடத்து, வழங்குகைக்‌ காலம்‌, வழங்குகையை பெற்றுக்கொள்பவரின்‌ கணக்குப்‌ புத்தகங்களில்‌ பதியப்பட்ட தேதியாக இருக்கும்‌. (4) வழங்குநரால்‌ வழங்கப்படும்‌ சான்றுச்‌ சீட்டுகளைப்‌ பொறுத்தவரை, வழங்குகைக்‌ காலம்‌ என்பது- (அ) அந்தச்‌ சமயத்தில்‌ வழங்குகையானது அடையாளம்‌ காணக்கூடியதாக இருக்குமானால்‌, சான்றுச்‌ சீட்டு வழங்கப்பட்ட தேதியாக இருக்கும்‌; அல்லது (ஆ) பிற நேர்வுகள்‌ அனைத்திலும்‌, சான்றுச்‌ சீட்டின்‌ மீட்புத்‌ தேதியாக இருக்கும்‌. (5) (9-ஆம்‌ உட்பிரிவின்‌ அல்லது (3)-ஆம்‌ உட்பிரின்‌ அல்லது (4)-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளின்கழான வழங்குகைக்‌ காலத்தை தீர்மானிக்க இயலாதிருக்கிறவிடத்து, வழங்குகைக்‌ காலம்‌ என்பது- (அ) காலமுறை அறிக்கை தாக்கல்‌ செய்யப்படுவதான நேர்வில்‌, அத்தகைய அறிக்கை தாக்கல்‌ செய்யப்படுகிற தேதியாக இருக்கும்‌; அல்லது (ஆ) பிற நேர்வு எதிலும்‌, வரி செலுத்தப்பட்ட தேதியாக இருக்கும்‌. (6) மறுபயன்‌ எதற்காகவும்‌ காலந்தாழ்த்தி செலுத்தப்படுவதற்கான வட்டி, தாமதக்‌ கட்டணம்‌ அல்லது தண்டத்‌ தொகை என்ற வகையில்‌ வழங்குகையின்‌ மதிப்பிற்குக்‌ கூடுதலாக, அதன்‌ பொறுத்து தொடர்புடைய அளவுக்கான வழங்குகைக்‌ காலம்‌, அத்தகைய கூடுதல்‌ மதிப்பை வழங்குநர்‌ பெறும்‌ தேதியாக இருக்கும்‌. 13. சேவைகளின்‌ வழங்குகையின்‌ காலம்‌.-- (1) சேவைகளின்‌ பேரில்‌ வரி செலுத்துவதற்குரிய கடப்பாடு, இந்தப்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கிணங்க தீர்மானிக்கப்‌-படுகிறவாறு வழங்குகைக்‌ காலத்தின்‌ போது தொடங்குதல்‌ வேண்டும்‌. (2) சேவைகள்‌ வழங்குகைக்‌ காலம்‌, பின்வரும்‌ தேதிகளில்‌ முன்னதாக இருத்தல்‌ வேண்டும்‌, அவையாவன:- (அ) 31-ஆம்‌ பிரிவின்‌ (2)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வகுத்துரைக்கப்பட்ட கால அளவிற்குள்‌ விலைப்பட்டியல்‌ அளிக்கப்படுமானால்‌, வழங்குநரால்‌ விலைப்பட்டியல்‌ வழங்கப்பட்ட தேதி அல்லது செலுத்துகை பெறப்பட்ட தேதி, இதில்‌ எது முந்தியதோ, அந்த தேதி; அல்லது (ஆ) 34-ஆம்‌ பிரிவின்‌ (2)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வகுத்துரைக்கப்பட்ட கால அளவிற்குள்‌ விலைப்பட்டியல்‌ அளிக்கப்படாதிருக்கு-மானால்‌, சேவை வழங்க வழிவகை செய்யப்பட்ட தேதி அல்லது செலுத்துகை பெறப்பட்ட தேதி, இதில்‌ எது முந்தியதோ, அந்த தேதி; அல்லது (இ) (அ) அல்லது (ஆ)-கூறுகளின்‌ வகைமுறைகள்‌ பொருந்தாதவிடத்தான நேர்வில்‌, பெறுநர்‌ தமது கணக்குப்‌ புத்தகத்தில்‌ சேவைகள்‌ பெற்றதைக்‌ காட்டுகிற தேதி: 37 வரம்புரை: ஆனால்‌, வரி விலைப்பட்டியலில்‌ சுட்டிக்காட்டப்பட்ட தொகைக்கு மிகையாக ஓராயிரம்‌ ரூபாய்‌ வரையிலான தொகையை வரிவிதிக்கத்தக்க சேவையின்‌ வழங்குநர்‌ பெறுகிறவிடத்து, அத்தகைய மிகை தொகையின்‌ அளவுக்கான வழங்குகைக்‌ காலமானது, மேற்சொன்ன வழங்குநரின்‌ தெரிவினண்பேரில்‌, அத்தகைய மிகைத்‌ தொகை தொடர்பாகாதொரு விலைப்பட்டியல்‌ வழங்கும்‌ தேதியாக இருத்தல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- (அ) மற்றும்‌ (ஆ) ஆகிய கூறுகளின்‌ நோக்கங்களுக்காக- (i) வழங்குகையானது, விலைப்பட்டியல்‌ அல்லது, நேர்விற்கேற்ப, செலுத்துகையினால்‌ உள்ளடக்கப்படுகிற அளவிற்கு செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுதல்‌ வேண்டும்‌; 0) "செலுத்துகை பெற்ற தேதி" என்பது, வழங்குநரின்‌ கணக்குப்‌ புத்தகங்களில்‌ பதியப்பட்ட செலுத்துகை தேதி அல்லது அவருடைய வங்கி கணக்கில்‌ செலுத்துகை வரவு வைக்கப்பட்ட தேதி, இதில்‌ எது முந்தியதோ, அந்த தேதி. (3) வரி செலுத்தப்பட்ட அல்லது எதிரிடை கட்டண அடிப்படையில்‌ செலுத்தப்படுவதற்கு கடப்பாடுடைய வழங்குகைகளைப்‌ பொறுத்தவரை, வழங்குகையின்‌ காலம்‌, பின்வரும்‌ தேதிகளில்‌ முந்தியதாக இருக்கும்‌, அவையாவன:-- (அ) பெறுநரின்‌ கணக்குப்‌ புத்தகங்களில்‌ பதிவு செய்யப்பட்டவாறான செலுத்துகைத்‌ தேதி அல்லது அவரது வங்கிக்‌ கணக்கில்‌ செலுத்துகைப்‌ பற்று வைக்கப்பட்ட தேதி, இதில்‌ எது முந்தியதோ, அந்த தேதி; அல்லது (ஆ) வழங்குநரால்‌, விவரப்பட்டியல்‌ அல்லது அதற்குப்‌ பதிலாக பிற ஆவணம்‌ எதுவும்‌, எந்தப்‌ பெயரில்‌ அழைக்கப்பட்டாலும்‌, வழங்கப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்கு அடுத்துப்‌ பின்வரும்‌ தேதி: வரம்புரை: ஆனால்‌, (அ)-கூறின்கீழ்‌ அல்லது (ஆ)-கூறின்கீழ்‌ வழங்குகைக்‌ காலத்தை தீர்மானிக்க இயலாதிருக்கிறவிடத்து, வழங்குகைக்‌ காலம்‌, வழங்குகையைப்‌ பெற்றுக்கொள்பவரின்‌ கணக்குப்‌ புத்தகங்களில்‌ பதியப்பட்ட தேதியாக இருக்கும்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, கூட்டு நிறுவனங்களால்‌ செய்யப்படும்‌ வழங்குகையைப்‌ பொறுத்தவரை, சேவை வழங்குநர்‌ இந்தியாவிற்கு வெளியே குடியிருக்கிறவிடத்து, வழங்குகைக்‌ காலமானது, வழங்குகைப்‌ பெறுநரின்‌ கணக்குப்‌ புத்தகங்களில்‌ பதியப்பட்ட தேதி அல்லது செலுத்துகைத்‌ தேதி, இதில்‌ எது முந்தியதோ, அந்த தேதியாக இருத்தல்‌ வேண்டும்‌. (4) வழங்குநரால்‌ அளிக்கப்படும்‌ சான்றுச்‌ சீட்டுகளைப்‌ பொறுத்தவரை, வழங்குகைக்‌ காலம்‌ என்பது-- (அ) அந்த சமயத்தில்‌ வழங்குகையானது அடையாளம்‌ காணக்கூடியதாக இருக்குமானால்‌, சான்றுச்‌ சீட்டின்‌ வழங்கப்பட்ட தேதியாக இருக்கும்‌; அல்லது 38 (ஆ) பிற நேர்வுகள்‌ அனைத்திலும்‌, சான்றுச்‌ சீட்டின்‌ மீட்புத்‌ தேதியாக இருக்கும்‌. (5 (2-ஆம்‌ உட்பிரிவின்‌ அல்லது (3)-ஆம்‌ உட்பிரிவின்‌ அல்லது (4)-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளின்கீழ்‌ வழங்குகைக்‌ காலத்தை தீர்மானிக்க இயலாதிருக்கிறவிடத்து, வழங்குகைக்‌ காலம்‌ என்பது-- (அ) காலமுறை அறிக்கை தாக்கல்‌ செய்யப்படுவதான நேர்வில்‌, அத்தகைய அறிக்கை தாக்கல்‌ செய்யப்படுகிற தேதியாக இருக்கும்‌; அல்லது (ஆ) பிற நேர்வு எதிலும்‌, வரி செலுத்தப்பட்ட தேதியாக இருக்கும்‌. (6) மறுபயன்‌ எதற்காகவும்‌ காலந்தாழ்த்தி செலுத்தப்படுவதற்கான வட்டி, தாமதக்‌ கட்டணம்‌ அல்லது தண்டத்‌ தொகை என்ற வகையில்‌ வழங்குகையின்‌ மதிப்பிற்குக்‌ கூடுதலாக, அதன்‌ பொறுத்து தொடர்புடைய அளவுக்கான வழங்குகைக்‌ காலம்‌, அத்தகைய கூடுதல்‌ மதிப்பை வழங்குநர்‌ பெறும்‌ தேதியாக இருக்கும்‌. 14. சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ வழங்குகைப்‌ பொறுத்து வரி விதத்தில்‌ மாற்றம்‌.- 12-ஆம்‌ பிரிவில்‌ அல்லது 13-ஆம்‌ பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ பொறுத்து வரி விதத்தில்‌ மாற்றம்‌ இருக்கிறவிடத்து, பின்வரும்‌ முறையில்‌ வழங்குகைக்‌ காலம்‌ தீர்மானிக்கப்படுதல்‌ வேண்டும்‌, அவையாவன:- (அ) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டும்‌, வரி வீதத்தில்‌ மாற்றம்‌ ஏற்படுவதற்கு முன்பு வழங்கப்பட்டுள்ள நேர்வில்‌,- ட அதற்கான விலைப்பட்டியல்‌ அளிக்கப்பட்டுள்ளவிடத்து மற்றும்‌ செலுத்துகையானதும்‌ வரிவிதத்தில்‌ மாற்றம்‌ ஏற்பட்டபின்பு பெறப்படுகிறவிடத்து, வழங்குகைக்‌ காலமானது, செலுத்துகை பெற்ற தேதியாக அல்லது விலைப்பட்டியல்‌ வழங்கப்பட்ட தேதியாக, இதில்‌ எது முந்தியதோ, அந்த தேதியாக இருக்கும்‌; அல்லது (0) விலைப்பட்டியல்‌ வரிவிதத்தில்‌ மாற்றம்‌ ஏற்படுவதற்கு முன்பு அளிக்கப்பட்டுள்ளவிடத்து, ஆனால்‌, செலுத்துகையானது, வரிவிதத்தில்‌ மாற்றம்‌ ஏற்பட்ட பின்பு பெறப்படுமிடத்து, வழங்குகைக்‌ காலமானது, விலைப்பட்டியல்‌ வழங்கப்பட்ட தேதியாக இருக்கும்‌; அல்லது (i) செலுத்துகையானது, வரிவிதத்தில்‌ மாற்றம்‌ ஏற்படும்‌ முன்பு பெறப்பட்டுள்ளவிடத்து, ஆனால்‌, வரிவிதத்தில்‌ மாற்றம்‌ ஏற்பட்ட பின்பு அதற்கான விலைபட்டியல்‌ வழங்கப்படுமிடத்து, வழங்குகைக்‌ காலமானது செலுத்துகை பெறப்பட்ட தேதியாக இருக்கும்‌; (ஆ) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டும்‌, வரிவீதத்தில்‌ மாற்றம்‌ ஏற்பட்ட பின்பு வழங்கப்பட்டுள்ள நேர்வில்‌,- 0 வரிவிதத்தில்‌ மாற்றம்‌ ஏற்பட்ட பின்பு செலுத்துகையானது பெறப்படுகிறவிடத்து, ஆனால்‌, விலைப்பட்டியல்‌ வரி வீதத்தில்‌ மாற்றம்‌ ஏற்படும்‌ 39 முன்பு வழங்கப்பட்டுள்ளவிடத்து, வழங்குகைக்‌ காலமானது செலுத்துகை பெறப்பட்ட தேதியாக இருக்கும்‌; அல்லது (0) வரி வீதத்தில்‌ மாற்றம்‌ ஏற்படும்‌ முன்பு விலைப்பட்டியல்‌ வழங்கப்பட்டிருந்து மற்றும்‌ செலுத்துகை பெறப்படுகிறவிடத்து, வழங்குகைக்‌ காலமானது செலுத்துகை பெறப்பட்ட தேதி அல்லது விலைப்பட்டியல்‌ வழங்கப்பட்ட தேதி, இதில்‌ எது முந்தியதோ, அந்தத்‌ தேதி; அல்லது 00 வரிவீதத்தில்‌ மாற்றம்‌ ஏற்பட்ட பின்பு விலைப்பட்டியல்‌ வழங்கப்பட்டிருந்து, ஆனால்‌ வரிவிதத்தில்‌ மாற்றம்‌ ஏற்படும்‌ முன்பு செலுத்துகை பெறப்படுகிறவிடத்து, வழங்குகைக்‌ காலமானது விவரப்பட்டியல்‌ வழங்கப்பட்ட தேதியாக இருக்கும்‌: வரம்புரை: ஆனால்‌, செலுத்துகை பெறப்பட்ட தேதியானது, அத்தகைய வரவு வரிவீதத்தில்‌ மாற்றம்‌ ஏற்பட்ட தேதியிலிருந்து நான்கு பணி நாட்களுக்குப்‌ பின்பு வங்கிக்‌ கணக்கில்‌ வரவு வைக்கப்படுமானால்‌, வங்கிக்‌ கணக்கில்‌ வரவு வைக்கப்பட்ட தேதியாக இருக்கும்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, "செலுத்துகை பெற்றத்‌ தேதி" என்பது, வழங்குநரின்‌ கணக்குப்‌ புத்தகங்களில்‌ செலுத்துகை பதியப்பட்ட தேதி அல்லது தமது வங்கிக்‌ கணக்கில்‌ செலுத்துகை வரவு வைக்கப்பட்ட தேதி, இதில்‌ எது முந்தியதோ, அந்த தேதியாக இருக்கும்‌. 15. வரிவிதிக்கத்தக்க வழங்குகையின்‌ மதிப்பு-- (1) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகையின்‌ மதிப்பு, வழங்குநர்‌ மற்றும்‌ வழங்குகையைப்‌ பெறுநர்‌ இடையே தொடர்பு இல்லாதிருக்கிறவிடத்து, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ மேற்சொன்ன வழங்குகைக்காக உள்ளபடியான விலை செலுத்தப்பட்டுள்ள போது அல்லது செலுத்தக்கூடியதாகவுள்ளயிடத்து மற்றும்‌ அந்த விலையானது வழங்குகைக்கான முழு மறுபயனாக இருக்கிறபோது, பரிவர்த்தனையின்‌ மதிப்பாக இருக்கும்‌. (2) வழங்குகையின்‌ மதிப்பு கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கும்‌- (அ) இந்தச்‌ சட்டம்‌, மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டம்‌ மற்றும்‌ சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி (மாநிலங்களுக்குரிய நஷ்டஈடு) சட்டம்‌ அல்லாத பிற அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம்‌ எதன்படியும்‌, வழங்குநரால்‌ தணியாக விதிக்கப்படுமானால்‌, விதிக்கப்படும்‌ வரிகள்‌, தீர்‌்வைகள்‌, மேல்வரிகள்‌, கட்டணங்கள்‌ மற்றும்‌ செலவுக்‌ கட்டணங்கள்‌; (ஆ) அத்தகைய வழங்குகை தொடர்பாக வழங்குநர்‌ செலுத்துவதற்கு கடப்பாடுடைய ஆனால்‌ வழங்குகையைப்‌ பெறுநரால்‌ செலுத்த நேர்ந்துள்ள மற்றும்‌ உள்ளபடியே சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டிற்குமாக செலுத்தப்பட்ட அல்லது செலுத்தத்தக்க விலையில்‌ உள்ளடங்காமல்‌ உள்ள தொகை எதுவும்‌; 40 (இ) வழங்குகையைப்‌ பெற்றுக்‌ கொள்பவரிடம்‌ வழங்குநரால்‌ விதிக்கப்படும்‌, தரகு மற்றும்‌ சிப்பம்‌ கட்டுதல்‌ உள்ளடங்கலான இடைவிளைவான செலவினங்கள்‌ மற்றும்‌ சரக்குகள்‌ ஒப்படைக்கும்‌ அல்லது சேவைகள்‌ வழங்கும்‌ சமயத்தில்‌ அல்லது அதற்கு முன்பு சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகைப்‌ பொறுத்து வழங்குநரால்‌ செய்யப்படும்‌ எதற்காகவும்‌ விதிக்கப்படும்‌ தொகை எதுவும்‌; (F) வழங்குகை எதற்காகவுமான மறுபயன்‌ எதனின்மீது காலந்தாழ்வான செலுத்துகை செய்வதற்கான வட்டி அல்லது தாமதக்‌ கட்டணம்‌ அல்லது தண்டத்‌ தொகை; மற்றும்‌ (௨) மைய அரசால்‌ மற்றும்‌ மாநில அரசுகளால்‌ அளிக்கப்படும்‌ ஊக்க உதவித்தொகைகள்‌ நீங்கலாக, விலையுடன்‌ நேரடியாக இணைக்கப்பட்ட ஊக்க உதவித்தொகைகள்‌. விளக்கம்‌.- இந்த உட்பிரிவின்‌ நோக்கங்களுக்காக, ஊக்க உதவித்தொகை, ஊக்க உதவித்தொகை பெறுகிற வழங்குநரின்‌ வழங்குகையின்‌ மதிப்பில்‌ உள்ளடக்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) வழங்குகையின்‌ மதிப்பில்‌- (அ) வழங்குகைக்கு முன்பு அல்லது வழங்குகை சமயத்தில்‌ கொடுக்கப்படும்‌ கழிவு, அத்தகைய கழிவு அத்தகைய வழங்குகைப்‌ பொறுத்து வழங்கப்பட்ட விலைப்பட்டியலில்‌ உரியவாறு பதிவு செய்யப்பட்டிருந்தால்‌, உள்ளடங்காது; மற்றும்‌ (ஆ) வழங்குகை செய்யப்பட்ட பின்பு எனில்‌- (i) அத்தகைய கழிவு, அத்தகைய வழங்குகையின்‌ போதோ அல்லது முன்னரோ செய்யப்பட்ட உடன்பாட்டின்‌ நியதிகளில்‌ நிலைநாட்டப்படுமானால்‌ மற்றும்‌ தொடர்புடைய விலைப்பட்டியல்களுடன்‌ இணைக்கப்படுமானால்‌; மற்றும்‌ 0) வழங்குகையைப்‌ பெற்றுக்‌ கொள்பவரால்‌ எதிர்மாறாக்கப்‌-பட்டுள்ள வழங்குநரால்‌ வழங்கப்பட்ட ஆவணத்தின்‌ அடிப்படையில்‌, கழிவுக்‌- காட்டத்தக்க உள்ளிட்டு வரிவரவு, உள்ளடங்காது. (4) ௩-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகையின்‌ மதிப்பு தீர்மானம்‌ செய்யப்படாதவிடத்து, அது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ தீர்மானம்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (5. ௫-ஆம்‌ உட்பிரிவில்‌ அல்லது (4)-ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌ அரசால்‌ அறிவிக்கப்படலாகும்‌ அத்தகைய வழங்குகைகளின்‌ மதிப்பு, வகுத்துரைக்கப்‌- படலாகும்‌ அத்தகைய முறையில்‌ தீர்மானம்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, (அ) நபர்கள்‌- () அத்தகைய நபர்கள்‌, மற்றொருவருடைய வணிகங்களில்‌ அலுவலர்களாக அல்லது இயக்குநர்களாக இருப்பார்களானால்‌, 41 (i) அத்தகைய நபற்கள்‌, வணிகத்தில்‌ சட்டப்படி ஏற்பிசைவளிக்கப்பட்ட பங்குதாரர்களாக இருப்பார்களானால்‌, (i) அத்தகைய நபர்கள்‌, பணிக்கமர்த்துநர்‌ மற்றும்‌ பணிக்கமறந்த்தப்பட்டவராக இருப்பார்களானால்‌, 0) நபர்‌ எவரும்‌, நேரடியாக அல்லது மறைமுகமாக இருபத்தைந்து விழுக்காடு அல்லது அதற்கு மேலான நிலுவையிலுள்ள வாக்குரிமை பெற்ற இருப்புப்‌ பத்திரம்‌ அல்லது பங்குகள்‌ அல்லது இரண்டினையும்‌ சொந்தமாகக்‌ கொள்ளுதல்‌, கட்டுப்படுத்துதல்‌ அல்லது வைத்திருப்பாரானால்‌, (v) அவர்களில்‌ ஒருவர்‌ மற்றொருவரை நேரடியாக அல்லது மறைமுகமாக கட்டுப்படுத்துவாரானால்‌, (vi) அவர்கள்‌ இருவரும்‌, நேரடியாக அல்லது மறைமுகமாக மூன்றாம்‌ நபரால்‌ கட்டுப்படுத்தப்படுவார்களானால்‌, ரி) இருவரும்‌ சேர்ந்து மூன்றாம்‌ நபரைக்‌ கட்டுப்படுத்துவார்களானால்‌, ரி) அவர்கள்‌ ஒரே குடும்பத்தின்‌ உறுப்பினர்களாக இருப்பார்களானால்‌, அந்நபர்கள்‌ "தொடர்புடைய நபர்கள்‌" எனக்‌ கருதப்படுவார்கள்‌. (ஆ) "நபர்‌" என்ற சொல்‌, சட்டப்படியான நபர்களையும்‌ உள்ளடக்கும்‌. (க) ஒருவருக்கு ஒருவருடைய வணிகத்தில்‌ கூட்டு சேர்ந்துள்ள நபர்களில்‌, மற்றொருவருடைய முழு முகவராக அல்லது முழு விநியோகஸ்தராக அல்லது முழு சிறப்பு சலுகை பெற்ற ஒருவர்‌, எவ்வாறாயினும்‌ விவரிக்கப்பட்டிருப்பின்‌, அவர்கள்‌ தொடர்புடையவர்களாக கருதப்படுவர்‌. அத்தியாயம்‌ V உள்ளிட்டு வரி வரவு. 16. உள்ளீட்டு வரி வரவினை எடுப்பதற்கான தகுமை மற்றும்‌ நிபந்தனைகள்‌. (1) பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ நிபந்தனைகள்‌ மற்றும்‌ கட்டுபாடுகளுக்கு உட்பட்டு மற்றும்‌ 49-ஆம்‌ பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள முறையிலும்‌, அவரின்‌ வணிகத்தின்போது அல்லது மேல்நடத்தும்‌ வகையில்‌ பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்படுவதற்கு கருதப்பட்ட அவருக்கு செய்யப்படும்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது தண்டின்‌ வழங்குகை எதனின்‌ மீதும்‌ விதிக்கப்படும்‌ உள்ளீட்டு வரிக்கான வரவினை எடுத்துக்கொள்வதற்கு உரிமையுடையவராவார்‌, மற்றும்‌ மேற்சொன்ன தொகை அத்தகைய நபரின்‌ மிண்ணணு வரவு பேரேட்டில்‌ வரவு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) இந்தப்பிறிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, பதிவு பெற்ற நபர்‌ எவரும்‌, அவருக்கு செய்யப்படும்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ 42 வழங்குகை எதனையும்‌ பொறுத்த உள்ளிட்டு வரி எதனின்‌ வரவுக்கு பின்வருவனவற்றைப்‌ பொறுத்து தகுதியுடைவராகமாட்டார்‌.- (அ) அவர்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவு பெற்ற வழங்குநரால்‌ வழங்கப்பட்ட பற்றுக்‌ குறிப்பினை அல்லது வரி விலைப்பட்டியல்‌ ஒன்றினை, அல்லது வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற வரி செலுத்துகை ஆவணங்களை கொண்டிருந்தாலன்றி, (ஆ) அவர்‌, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ பெற்றிருந்தாலன்றி. விளக்கம்‌.- இந்தக்‌ கூறின்‌ நோக்கங்களுக்காக, அது, ஒன்று சரக்குகளின்‌ உரிமை மூல ஆவணத்தின்‌ உரிமை மாற்றம்‌ வாயிலாக அல்லது பிறவாறு, சரக்குகளின்‌ நகர்தலுக்கு முன்பு அல்லது நகர்தலின்‌்போது அத்தகைய பதிவு பெற்ற நபர்‌ முகவராக செயற்பட்டாலும்‌ அல்லது பிறவாறாக இருப்பினும்‌, அவருடைய அறிவுறுத்தலின்‌ பேரில்‌ வழங்குநரால்‌ பெறுநருக்கு அல்லது பிற நபர்‌ எவருக்கும்‌ சரக்குகள்‌ ஒப்படைக்கப்படுமிடத்து, பதிவு பெற்ற நபர்‌ சரக்குகளை பெற்றுக்கொண்டதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌; (இ) 44-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, அத்தகைய வழங்குகை பொறுத்து விதிக்கப்படும்‌ வரி, அரசுக்கு, ஒன்று ரொக்கமாகவோ அல்லது மேற்சொன்ன வழங்குகை பொறுத்து அனுமதிக்கத்தக்க உள்ளீட்டு வரிவரவைப்‌ பயன்படுத்துவதன்‌ மூலமாகவோ உள்ளபடியே செலுத்தப்பட்டாலன்றி) மற்றும்‌ () அவர்‌ 39-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அறிக்கை அளித்தாலன்றி: வரம்புரை: ஆனால்‌, விலைப்பட்டியல்படி சரக்குகள்‌ மொத்தமாக அல்லது தவணைகளில்‌ பெறப்படுமிடத்து, பதிவு பெற்ற நபர்‌ கடைசி பாகம்‌ அல்லது தவணை பெறப்பட்டதன்‌ பேரில்‌ வரவு எடுப்பதற்கு உரிமையுடையவராவார்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, பெறுநர்‌, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குநருக்கு, எதிரிடைக்‌ கட்டண அடிப்படையில்‌ வரி செலுத்தத்தக்க வழங்குகை நீங்கலாக, வழங்குகை மதிப்பு பொறுத்த தொகையுடன்‌ சேர்த்து அதன்‌ பேரில்‌ செலுத்தப்பட வேண்டிய வரியானது, வழங்குநரால்‌ விலைப்பட்டியல்‌ வழங்கப்பட்ட தேதியிலிருந்து நூற்றி எண்பது நாட்கள்‌ கால அளவிற்குள்‌ செலுத்தத்‌ தவறுகிறவிடத்து, பெறுநரால்‌ பயன்படுத்தப்பட்ட உள்ளீட்டு வரி வரவிற்கு சமமான தொகை, அவரது வெளியீட்டு வரி பொறுப்புடன்‌, அதன்‌ மீதான வட்டியையும்‌ சேர்த்து, வகுத்துரைக்கப்படலாகும்‌ முறையில்‌ சேர்த்துக்கொள்ளப்படும்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, பெறுநர்‌, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை மதிப்புடன்‌ அதன்பேரில்‌ செலுத்தத்தக்க வரியையும்‌ சேர்த்து அதன்‌ பொருட்டான தொகை அவரால்‌ செலுத்தப்படுவதன்‌ பேரிலான உள்ளிட்டு வரியின்‌ வரவைப்‌ பயன்படுத்துவதற்கு உரிமையுடையவராவார்‌. (3) பதிவு பெற்ற நபர்‌, 1961-ஆம்‌ ஆண்டு வருமான வரிச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 431961) வகைமுறைகளின்கீழ்‌ மூலதன சரக்குகள்‌ மற்றும்‌ தொழிற்சாலை 43 மற்றும்‌ இயந்திரத்‌ தொகுதியின்‌ செலவின்‌ வரி அம்சத்தின்‌ பேறிலான தேய்மானத்தைக்‌ கோருகிறவிடத்து, மேற்சொன்ன வரி அம்சத்தின்‌ பேரிலான உள்ளிட்டு வரி வரவு அனுமதிக்கப்படுதல்‌ ஆகாது. (4) பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌, எந்த நிதியாண்டின்‌ முடிவில்‌ அத்தகைய விலைப்பட்டியல்‌ அல்லது அத்தகைய பற்றுக்‌ குறிப்பு சார்ந்தது தொடர்பான விலைப்பட்டியல்‌ அல்லது தொடர்புடைய ஆண்டு அறிக்கையினை அளித்தல்‌, இதில்‌ எது முந்தியதோ, அதற்கான நிதியாண்டின்‌ முடிவினைத்‌ தொடர்ந்து வருகிற செப்டம்பர்‌ மாதத்திற்கான 39-ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ அறிக்கை அளிப்பதற்கான உரிய தேதிக்குப்‌ பின்பு சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகைக்கான விலைப்பட்டியல்‌ அல்லது பற்றுக்‌ குறிப்பு எதுவும்‌ பொறுத்து உள்ளிட்டு வரியை வரவு எடுக்க உரிமையுடையவராக மாட்டார்‌. 17. வரவு மற்றும்‌ முடக்கிய வரவுகளைப்‌ பகிர்ந்தளித்தல்‌.- (1) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டும்‌, பதிவு பெற்ற நபரால்‌ வணிகம்‌ எதன்‌ நோக்கத்திற்காக பகுதியாக மற்றும்‌ பிற நோக்கங்களுக்காகப்‌ பகுதியாக பயன்படுத்தப்படுகிறவிடத்து, வரவுத்‌ தொகையானது, தம்முடைய வணிக நோக்கங்களுக்காக உடைமையாக்கத்தக்க உள்ளிட்டு வரி அளவிற்கு கட்டுப்படுத்தப்படும்‌. (2) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டும்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ பூஜ்ஜிய வீத வழங்குகைகள்‌ உள்ளடங்கலான வரிவிதிக்கத்தக்க வழங்குகைகளைச்‌ செயற்படுத்துவதற்காக பகுதியாக, மற்றும்‌ மேற்சொன்ன சட்டங்களின்கீழ்‌ விலக்களிக்கப்பட்ட வழங்குகைகளை செயற்படுத்துவதற்காக பகுதியாக பயன்படுத்தப்படுகிறவிடத்து, வரவுத்‌ தொகையானது, பூஜ்ஜிய வீத வழங்குகைகள்‌ உள்ளடங்கலான மேற்சொன்ன வரிவிதிக்கத்தக்க வழங்குகைகளுக்கு உடைமையாக்கத்தக்க உள்ளிட்டு வரியின்‌ அளவிற்கு கட்டுப்படுத்தப்படும்‌. (3) (2-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ விலக்களிக்கப்பட்ட வழங்குகையின்‌ மதிப்பு வகுத்துரைக்கப்படலாகுமாறு இருக்கும்‌ மற்றும்‌ எதிரிடைக்‌ கட்டண அடிப்படையில்‌ வரி செலுத்துவதற்கு கடப்பாடுடைய பெறுநர்‌ பொறுத்த வழங்குகைகள்‌, காப்புறுதிகளின்‌ நடவடிக்கைகள்‌, நில விற்பனை மற்றும்‌ இரண்டாம்‌ இணைபப்புப்பட்டியலின்‌ 3-ஆம்‌ பத்தியின்‌ (ஆ)-கூறுக்கு உட்பட்ட கட்டட விற்பனை ஆகியவற்றை உள்ளடக்கும்‌. (4) வைப்பீடுகளை ஏற்றல்‌, கடன்களை அல்லது முன்‌ பணங்களை நீட்டித்தல்‌ வகையில்‌ சேவைகள்‌ வழங்குகையில்‌ ஈடுபட்டுள்ள வங்கியியல்‌ நிறுமம்‌ அல்லது வங்கி சாரா நிதியியல்‌ நிறுமம்‌ உள்ளடங்கலான நிதியியல்‌ நிறுவனம்‌ ஒன்று, (2-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கு இணங்கி நடப்பதற்கு, அல்லது, ஒவ்வொரு மாதமும்‌, அந்த மாதத்திலுள்ள உள்ளீடுகள்‌, மூலதன சரக்குகள்‌ மற்றும்‌ உள்ளிட்டு சேவைகள்‌ மீது தகுமையுடைய உள்ளிட்டு வரி வரவின்‌ ஐம்பது விழுக்காட்டிற்கு சமமான தொகையைப்‌ பயன்படுத்துவதற்கு தெரிவு செய்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ எஞ்சியது காலாவதியாகிவிடும்‌: 44 வரம்புரை: ஆனால்‌, ஒருமுறை பயன்படுத்தப்பட்ட தெரிவுரிமையானது, நிதியாண்டின்‌ எஞ்சிய பகுதியின்‌ போது திரும்பப்‌ பெற்றுக்கொள்ளுதல்‌ ஆகாது: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, ஐம்பது விழுக்காடு கட்டுப்பாடு, அதே நிரந்தர கணக்கு எண்‌ கொண்டிருக்கிற பதிவு பெற்ற ஒரு நபரால்‌ பதிவு பெற்ற மற்றொரு நபருக்கு செய்யப்படும்‌ வழங்குகைகளின்‌ பேரில்‌ செலுத்தப்பட்ட வரிக்குப்‌ பொருந்துதல்‌ ஆகாது. (5) 16-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ அல்லது 18-ஆம்‌ பிரிவின்‌ (1)- ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, உள்ளீட்டு வரி வரவு பின்வருவன பொறுத்து பயன்படுத்தக்கூடியதாகாது, அவையாவன:- (அ) இயக்கூர்திகள்‌, மற்றும்‌ பிற வாகனங்கள்‌ கீழ்க்கண்டவற்றுக்காக பயன்படுத்தப்படும்‌ போது தவிர-- i) பின்வரும்‌ வரிவிதிக்கத்தக்க வழங்குகைகளைச்‌ செய்வதற்காக, அவையாவன:-- (அ) அத்தகைய ஊளந்திகள்‌ அல்லது வாகனங்களை மேற்கொண்டும்‌ வழங்குகைக்காக; அல்லது (ஆ) பயணிகளின்‌ போக்குவரத்திற்‌-காக; அல்லது (இ) அத்தகைய ஊர்திகள்‌ அல்லது வாகனங்களை ஓட்டுதல்‌, பறத்தல்‌, கப்பலை கடலில்‌ செலுத்துதல்‌ ஆகியவற்றிற்கு பயிற்சி அளிப்பதற்காக; 0) சரக்குகள்‌ போக்குவரத்திற்காக; (ஆ) பின்வரும்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை,- (i) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ குறிப்பிட்ட வகையின்‌ உள்நோக்கிய வழங்குகை, பதிவு பெற்ற நபரால்‌, அதே வகை சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வெளிநோக்கிய வரிவிதிக்கத்தக்க வழங்குகை செய்வதற்காக அல்லத வரிவிதிக்கத்தக்க கூட்டு அல்லது கலப்பு வழங்குகையின்‌ கூறாகவுள்ளதற்காக பயன்படுத்தப்படுகிறவிடத்து தவிர, உணவு மற்றும்‌ பானங்கள்‌, வெளிப்புற உணவு விற்பனை, அழகு சிகிச்சை, உடல்‌ நல சேவைகள்‌, அழகு மற்றும்‌ உருவம்‌ அமைக்கத்தக்க அறுவை சிகிச்சை; 0) குழாம்‌, உடல்நலம்‌ மற்றும்‌ உடற்தகுதி மையத்தின்‌ உறுப்பினர்‌; 0) வாடகை வண்டி, உயிர்காப்பீடு மற்றும்‌ உடல்நல காப்பீடு- (அ) அரசு, அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம்‌ எதன்படியும்‌ பணிக்கமர்த்துநர்‌ தன்னுடைய பணிக்கமர்த்தப்‌-பட்டவர்களுக்கு அளிக்க கடப்பாடுடையதாக இருக்கும்‌ சேவைகளை அறிவிக்கை செய்கிறவிடத்து தவிர; அல்லது 45 (ஆ) வரிவிதிக்கத்தக்க கூட்டு அல்லது கலப்பு வழங்குகையின்‌ ஒரு பகுதியாக அல்லது அதே வகையான சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வெளிநோக்கிய வரிவிதிக்கத்தக்க வழங்குகையைச்‌ செய்வதற்காக பதிவு பெற்ற நபரால்‌ பயன்படுத்தப்பட்ட குறிப்பிட்ட வகையான சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ அத்தகைய உள்நோக்கிய வழங்குகை தவிர; மற்றும்‌ விடுப்பு அல்லது உள்ளூர்‌ பபண சலுகை போன்ற விடுமுறை காலங்களில்‌ பணிக்கமர்த்தப்பட்டவர்களுக்கு நீட்டிக்கப்படும்‌ பயணப்‌ பலன்கள்‌; (இ) பணி ஒப்பந்த சேவையை மேலும்‌ வழங்குவதற்காக உள்ளீட்டு சேவையாக அது இருக்கிறவிடத்து தவிர, (தொழிற்சாலை அல்லது இயந்திரத்‌ தொகுதி அல்லாத பிற) அசையாச்‌ சொத்தின்‌ கட்டுமானத்திற்காக வழங்கப்படும்போது பணி ஒப்பந்த சேவைகள்‌; (ஈ) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டும்‌ வணிகத்தின்போது அல்லது அதனை மேல்நடத்தும்‌ வகையில்‌ பயன்படுத்தப்படுகிறது உள்ளடங்கலாக தம்முடைய சொந்தக்‌ கணக்கின்‌ பேரில்‌ (தொழிற்சாலை அல்லது இயந்திரத்‌ தொகுதி அல்லாத பிற) அசையாச்‌ சொத்தின்‌ கட்டுமானத்திற்காக வரிவிதிக்கத்தக்க நபரால்‌ பெறப்படும்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டும்‌; விளக்கம்‌.- (&) மற்றும்‌ (ஈ) கூறுகளின்‌ நோக்கங்களுக்காக, "கட்டுமானம்‌" என்ற சொற்றொடர்‌, மேற்சொன்ன அசையாச்‌ சொத்துக்களுக்கு, மூலதனம்‌ அளவிற்கு, மறுகட்டுமானம்‌, புதுப்பித்தல்‌, கூடுதல்‌ கட்டுமானங்கள்‌ அல்லது மாற்றம்‌ செய்தல்‌ அல்லது பழுதுபார்த்தல்களை உள்ளடக்கும்‌; (௨) 10-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வரி செலுத்தப்பட்டுள்ள சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டும்‌; (ஊ) அவரால்‌ இறக்குமதி செய்யப்படும்‌ சரக்குகள்‌ தவிர, குடியிராத வரிவிதிக்கத்தக்க நபரால்‌ பெறப்படும்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டும்‌; (௭) தமது சொந்த நுகர்வுக்காகப்‌ பயன்படுத்தப்படும்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டும்‌; (ஏ) தொலைந்துபோன, திருடுபோன, அழிந்துபோன, தள்ளுபடியான அல்லது நன்கொடை அல்லது இலவச மாதிரியாக அனுப்பப்பட்ட சரக்குகள்‌; மற்றும்‌ (ஐ) 74,129 மற்றும்‌ 130 ஆகிய பிரிவுகளின்‌ வகைமுறைகளுக்கிணங்க செலுத்தப்பட்ட வரி எதுவும்‌. (6) அரசு, (1)-ஆம்‌ மற்றும்‌ (2)-ஆம்‌ உட்பிரிவுகளில்‌ சுட்டப்பட்டுள்ள வரவு உடைமையுடையதாகும்‌ முறை குறித்து வகுத்துரைக்கலாம்‌. 46 விளக்கம்‌.- இந்த அத்தியாயத்தின்‌ மற்றும்‌ 1-ஆம்‌ அத்தியாயத்தின்‌ நோக்கங்களுக்காக, "தொழிற்சாலை மற்றும்‌ இயந்திரத்‌ தொகுதி" என்பது, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வெளிநோக்கிய வழங்குகை செய்வதற்காகப்‌ பயன்படுத்தப்படுகிற, பூமியில்‌ கட்டடத்தின்‌ அஸ்திவாரம்‌ அல்லது கட்டுமான ஆதரவிற்காக நிலைநிறுத்தப்பட்ட கருவி, சாதனம்‌, மற்றும்‌ இயந்திரத்‌ தொகுதி மற்றும்‌ அத்தகைய அஸ்திவாரம்‌ மற்றும்‌ கட்டுமான ஆதரவுகளையும்‌ உள்ளடக்கும்‌, ஆனால்‌- (i) நிலம்‌, கட்டடம்‌, அல்லது பிற கட்டடத்திற்கான கட்டுமானங்கள்‌; 0) தொலைத்‌ தொடர்பு கோபுரங்கள்‌; மற்றும்‌ 00 தொழிற்சாலை வளாகத்திற்கு வெளியேயுள்ள குழாய்‌ பாதைகள்‌, நீங்கலாகும்‌. 18. சிறப்பு சூழ்நிலைகளில்‌ வாவு கிடைக்கத்தக்க தன்மை.- (@) வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகள்‌ மற்றும்‌ கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு- (அ) பதிவு செய்வதற்கு கடப்பாடாகும்‌ தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவுக்காக விண்ணப்பிக்கிற மற்றும்‌ அத்தகைய பதிவு வழங்கப்பட்டுள்ள நபர்‌ ஒருவர்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்கீழ்‌ வரி செலுத்துவதற்கு அவர்‌ கடப்பாடாகும்‌ தேதிக்கு முந்திய நாளன்று சரக்கு இருப்பில்‌ வைத்திருக்கும்‌ உள்ளீடுகள்‌ மற்றும்‌ சரக்கு இருப்பில்‌ வைத்திருக்கும்‌ பகுதி முடிக்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட சரக்குகளில்‌ அடங்கியுள்ள உள்ளிடுகளைப்‌ பொறுத்து, உள்ளீட்டு வரியை வரவாக எடுத்துக்கொள்வதற்கு உரிமையுடையவராவார்‌; (ஆ) 25-ஆம்‌ பிரிவின்‌ (3)-ஆம்‌ உட்பிரிவினண்கீழ்‌ பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌, பதிவு வழங்கல்‌ தேதிக்கு முந்தைய நாளன்று, சரக்கு இருப்பில்‌ வைத்திருக்கும்‌ உள்ளீடுகள்‌ மற்றும்‌ சரக்கு இருப்பிலுள்ள பகுதி முடிக்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட சரக்குகளில்‌ அடங்கியுள்ள உள்ளீடுகள்‌ பொறுத்து, உள்ளீட்டு வரியை வரவாக எடுத்துக்கொள்வதற்கு உரிமையுடையவராவார்‌; (இ) பதிவு பெறற நபர்‌ எவரும்‌, 40-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வரி செலுத்த அற்றுப்‌ போகிறவிடத்து, அவர்‌, 9-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வரி செலுத்துவதற்கு கடப்பாடாகிற தேதிக்கு முந்தைய நாளன்று, சரக்கு இருப்பில்‌ வைத்திருக்கும்‌ உள்ளீடுகள்‌, சரக்கு இருப்பிலுள்ள பகுதி முடிக்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட சரக்குகளில்‌ அடங்கியுள்ள உள்ளீடுகள்‌ மற்றும்‌ மூலதன சரக்குகள்‌ பொறுத்த உள்ளிட்டு வரியை வரவாக எடுத்துக்கொள்வதற்கு உரிமையுடையவராவார்‌: வரம்புரை: ஆனால்‌, மூலதன சரக்குகளின்‌ வரவு, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய சதவித புள்ளிகளால்‌ குறைக்கப்படும்‌; (ஈ) பதிவு பெற்ற நபரால்‌ செய்யப்படும்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ விலக்களிப்பு வழங்குகை வரிவிதிக்கத்தக்க வழங்குகையாகிறவிடத்து, 47 அத்தகைய நபர்‌ அத்தகைய வழங்குகை வரிவிதிக்கத்தக்கதாகிற தேதிக்கு முந்தைய நாளன்று சரக்கு இருப்பில்‌ வைத்திருக்கும்‌ உள்ளீடுகள்‌ மற்றும்‌ அத்தகைய விலக்களிப்பு வழங்குகை தொடர்பாக சரக்கு இருப்பில்‌ வைத்திருக்கும்‌ பகுதி முடிக்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட சரக்குகளில்‌ அடங்கியுள்ள உள்ளீடுகள்‌ மற்றும்‌ அத்தகைய விலக்களிப்பு வழங்குகைக்காக பயன்படுத்தப்படும்‌, மூலதன சரக்குகள்‌ பொறுத்த உள்ளீட்டு வரியை வரவாக எடுத்துக்கொள்வதற்கு உரிமையுடையவராவார்‌: வரம்புரை: ஆனால்‌, மூலதனச்‌ சரக்குகளின்‌ வரவு, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய சதவீதப்‌ புள்ளிகளால்‌ குறைக்கப்படும்‌. (2) பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌, அத்தகைய வழங்குகை தொடர்பான வரி விலைப்பட்டியல்‌ வழங்கிய தேதியிலிருந்து ஓர்‌ ஆண்டு கழிவுற்ற பின்பு தமக்கு வழங்கப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டையும்‌ பொறுத்து (1)-ஆம்‌ உட்பிரிவின்‌ கீழ்‌ உள்ளீட்டு வரி வரவு எடுத்துக்‌ கொள்வதற்கு உரிமையுடையவர்‌ ஆகமாட்டார்‌. (3) கடப்பாடுகளை மாற்றுவதற்கான குறிப்பிட்ட வகைமுறைகளுடன்‌, வணிகத்தை விற்பனை செய்தல்‌, இணைத்தல்‌, பிரித்தல்‌, ஒருங்கிணைத்தல்‌, குத்தகைக்கு விடுதல்‌ அல்லது உரிமை மாற்றம்‌ செய்தல்‌ காரணமாக பதிவு பெற்ற நபர்‌ ஒருவரின்‌ அமைப்பில்‌ மாற்றம்‌ ஒன்று இருக்கிறவிடத்து, மேற்சொன்ன பதிவு பெற்ற நபர்‌, தம்‌ மிண்ணணு வரவு பேரேட்டில்‌ பயன்படுத்தப்படாமல்‌ எஞ்சியிருக்கும்‌ உள்ளிட்டு வரி வரவினை அத்தகைய விற்பனை செய்யப்பட்ட இணைக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட, குத்தகைக்கு விடப்பட்ட அல்லது உரிமை மாற்றம்‌ செய்யப்பட்ட வணிகத்தை வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ மாற்றுவதற்கு அனுமதிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (4) உள்ளீட்டு வரி வரவினைப்‌ பயன்படுத்திக்‌ கொண்டுள்ள பதிவு பெற்ற நபர்‌ எவரும்‌ 1௦-ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ வரி செலுத்துவதற்குத்‌ தெரிவு செய்கிறவிடத்து அல்லது, தம்மால்‌ வழங்கப்பட்ட சரக்குகளோ அல்லது சேவைககளோ அல்லது இரண்டுமோ முழுவதுமாக விலக்காகிறவிடத்து, மூலதனச்‌ சரக்குகள்‌ மீதும்‌, மற்றும்‌ சரக்கிருப்பில்‌ வைத்திருக்கும்‌ பகுதி முடிக்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட சரக்குகளில்‌ அடங்கியுள்ள உள்ளீடுகளிலும்‌, மற்றும்‌ இருப்பில்‌ இருக்கும்‌ உள்ளீடுகள்‌ ஆகியவற்றைப்‌ பொறுத்து உள்ளீட்டு வரி வரவுக்குச்‌ சமமான, தொகை ஒன்றை, அத்தகைய தெரிவினை நடைமுறைப்படுத்தும்‌ தேதி அல்லது, நேர்விற்கேற்ப அத்தகைய விலக்கின்‌ தேதிக்கு முந்தி வரும்‌ நாளன்று, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய விழுக்காட்டுப்‌ புள்ளிகளில்‌ குறைக்கப்பட்டு, மின்னணு வரவு பேரேட்டிலோ அல்லது மின்னணு பண பேரேட்டிலோ பற்றுவைப்பதன்‌ மூலமாகச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌: 48 வரம்புரை: ஆனால்‌, அத்தகைய தொகையினைச்‌ செலுத்திய பின்‌, அவருடைய மின்னணு வரவு பேரேட்டில்‌ இருக்கும்‌ உள்ளீட்டு வரி வரவின்‌ மீதியானது காலாவதியாகுதல்‌ வேண்டும்‌. (5) 0-ஆம்‌ உட்பிரிவிண்கழான வரவுத்‌ தொகையும்‌ மற்றும்‌ (4)-ஆம்‌ உட்பிரிவின்கழ்‌ செலுத்த வேண்டிய தொகையும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ கணக்கிடப்படுதல்‌ வேண்டும்‌. (6) உள்ளீட்டு வரி வரவு எடுத்துக்‌ கொள்ளப்பட்டிருக்கும்‌ மூலதனச்‌ சரக்குகளை அல்லது தொழிற்சாலை மற்றும்‌ இயந்திரத்‌ தொகுதி வழங்குகையைப்‌ பொறுத்தவரை, பதிவு பெற்ற நபர்‌, மேற்சொன்ன மூலதனச்‌ சரக்குகள்‌ அல்லது தொழிற்சாலை மற்றும்‌ இயந்திரத்‌ தொகுதியின்‌ மீது எடுக்கப்பட்ட உள்ளீட்டு வரி வரவிற்குச்‌ சமமான தொகையை, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய விழுக்காட்டு புள்ளிகளில்‌ குறைக்கப்பட்டு அல்லது 15-ஆம்‌ பிரிவின்கீழ்‌ தீர்மானிக்கப்படும்‌ அத்தகைய மூலதனச்‌ சரக்குகளின்‌ அல்லது தொழிற்சாலை மற்றும்‌ இயந்திரத்‌ தொகுதியின்‌ பரிவர்த்தனையின்‌ மதிப்பின்‌ மீதான வரி, இவற்றில்‌ எது அதிகமோ, அந்தத்‌ தொகையினைச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, உயர்வெப்ப செங்கல்கள்‌, அச்சுகள்‌ மற்றும்‌ பொறிப்புக்‌ கட்டைகள்‌, துணைச்‌ சாதனங்கள்‌ மற்றும்‌ பொருத்தங்கள்‌ பயனற்ற பொருளாக வழங்கப்படுகிறவிடத்து, வரிவிதிக்கத்தக்க நபர்‌, 15-ஆம்‌ பிரிவின்கீழ்‌ தீர்மானிக்கப்பட்ட அத்தகைய சரக்குகளின்‌ பரிவர்த்தனையின்‌ மதிப்பின்‌ மீது வரி செலுத்தலாம்‌. 19. சில்லறை வேலைக்காக அனுப்பப்படும்‌ உள்ளீடுகளையும்‌ மற்றும்‌ மூலதனச்‌ சரக்குகளையும்‌ பொறுத்து உள்ளீட்டு வரி வரவு எடுத்தல்‌.- (1) முதல்வர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கும்‌ மற்றும்‌ கட்டுப்பாடுகளுக்கும்‌ உட்பட்டு, சில்லறை வேலைக்காக சில்லறை வேலையாள்‌ ஒருவருக்கு அனுப்பப்படும்‌ உள்ளீடுகள்‌ மீது உள்ளிட்டு வரி வரவு பெற அனுமதிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) 16-ஆம்‌ பிரிவின்‌ (2-ஆம்‌ உட்பிரிவின்‌ (ஆ)-கூறில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, முதல்வர்‌, உள்ளீடுகள்‌ தம்‌ வணிக இடத்திற்கு முதலில்‌ கொண்டுவரப்பபாமலேயே சில்லறை வேலைக்காக சில்லறை வேலையாள்‌ ஒருவருக்கு நேரடியாக அனுப்பப்பட்டாலும்‌, உள்ளீடுகள்‌ மீது உள்ளீட்டு வரி வரவு எடுத்துக்‌ கொள்வதற்கு உரிமையுடையவர்‌ ஆவார்‌. (3) சில்லறை வேலைக்காக அனுப்பப்படும்‌ உள்ளீடுகள்‌ சில்லறை வேலை முடிவடைந்த பின்போ அல்லது பிறவாறாகவோ முதல்வரால்‌ திரும்பப்‌ 49 பெறப்படாமலோ அல்லது அனுப்பியதிலிருந்து ஓர்‌ ஆண்டுக்குள்‌ 1443-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்‌ (அ)-கூறின்படியோ அல்லது (ஆ)- கூறின்படியோ சில்லறை வேலையாளின்‌ வணிக இடத்திலிருந்து வழங்கப்பபாமலோ இருக்கிறவிடத்து, அத்தகைய உள்ளீடுகள்‌ வெளியே அனுப்பப்பட்டபோதான அந்த நாளன்று, மேற்சொன்ன உள்ளீடுகள்‌ முதல்வரால்‌ சில்லறை வேலையாளுக்கு வழங்கப்பட்டிருந்தவையாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, உள்ளீடுகள்‌ சில்லறை வேலையாள்‌ ஒருவருக்கு நேரடியாக அனுப்பப்படுகிறவிடத்து, ஓர்‌ ஆண்டு கால அளவானது சில்லறை வேலையாளினால்‌ உள்ளீடுகள்‌ பெற்றுத்‌ கொள்ளப்பட்ட தேதியிலிருந்து கணக்கிடப்படுதல்‌ வேண்டும்‌. (4) முதல்வர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கும்‌ மற்றும்‌ கட்டுப்பாடுகளுக்கும்‌ உட்பட்டு, சில்லறை வேலைக்காக சில்லறை வேலையாள்‌ ஒருவருக்கு அனுப்பப்படும்‌ மூலதனச்‌ சரக்குகள்‌ மீது உள்ளீட்டு வரி வரவு பெற அனுமதிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (5) 16-ஆம்‌ பிரிவின்‌ (2-ஆம்‌ உட்பிரிவின்‌ (ஆ)-கூறில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, முதல்வர்‌, மூலதனச்‌ சரக்குகள்‌ தம்‌ வணிக இடத்திற்கு முதலில்‌ கொண்டுவரப்படாமலேயே சில்லறை வேலைக்காக சில்லறை வேலையாள்‌ ஒருவருக்கு நேரடியாக அனுப்பப்பட்டாலும்‌, மூலதனச்‌ சரக்குகள்‌ மீது உள்ளீட்டு வரி வரவு எடுத்துக்‌ கொள்வதற்கு உரிமையுடையவர்‌ ஆவார்‌. (6) சில்லறை வேலைக்காக அனுப்பப்படும்‌ மூலதனச்‌ சரக்குகள்‌, வெளியே அனுப்பியதிலிருந்து மூன்று ஆண்டுகள்‌ கால அளவுக்குள்‌ முதல்வரால்‌ திரும்பப்‌ பெறப்படாதவிடத்து, அத்தகைய மூலதனச்‌ சரக்குகள்‌ வெளியே அனுப்பப்பட்ட அந்த நாளன்று மேற்சொன்ன மூலதனச்‌ சரக்குகள்‌ சில்லறை வேலையாளுக்கு முதல்வரால்‌ வழங்கப்பட்டிருந்தவையாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, மூலதனச்‌ சரக்குகள்‌ சில்லறை வேலையாளுக்கு நேரடியாக அனுப்பப்படு கிறவிடத்து, மூன்று ஆண்டுகள்‌ கால அளவானது, சில்லறை வேலையாளால்‌ மூலதனச்‌ சரக்குகள்‌ பெற்றுக்‌ கொள்ளப்பட்ட தேதியிலிருந்து கணக்கிடப்படுதல்‌ வேண்டும்‌. (7) (3-ஆம்‌ உட்பிரிவிலோ அல்லது (6)-ஆம்‌ உட்பிரிவிலோ அடங்கியுள்ள எதுவும்‌, சில்லறை வேலைக்காக சில்லறை வேலையாள்‌ ஒருவருக்கு அனுப்பப்படும்‌ அச்சுகள்‌ மற்றும்‌ பொறிப்புக்‌ கட்டைகள்‌, துணை சாதனங்கள்‌ மற்றும்‌ பொருத்தங்கள்‌, அல்லது கருவிகள்‌ இவற்றிற்குப்‌ பொருந்தாது. 50 விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கத்திற்காக, "முதல்வர்‌" என்பது, 143-ஆம்‌ பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள நபர்‌ என்று பொருள்படும்‌. 20. உள்ளீட்டுச்‌ சேவை விநியோகிப்பவரால்‌ வரவினைப்‌ பகிர்ந்தளிக்கும்‌ முறை. (1) உள்ளிட்டு சேவை விநியோகிப்பவர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ பகிர்ந்தளிக்கப்படும்‌ உள்ளீட்டு வரி வரவுத்‌ தொகை அடங்கியிருக்கும்‌ ஆவணத்தை வழங்குவதன்‌ வாயிலாக, மாநில வரி வரவை மாநில வரி அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட வரியாகவும்‌ மற்றும்‌ ஒருங்கிணைக்கப்பட்ட வரியை ஒருங்கிணைக்கப்பட்ட வரி அல்லது மாநில வரியாகவும்‌ விநியோகித்தல்‌ வேண்டும்‌. (2) உள்ளீட்டு சேவை விநியோகிப்பவர்‌ பின்வரும்‌ நிபந்தனைகளுக்குட்பட்டு வரவினைப்‌ பகிர்ந்தளிக்கலாம்‌, அவையாவன:- (அ) வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய விவரங்கள்‌ அடங்கியிருக்கும்‌ ஓர்‌ ஆவணத்தின்‌ எதிராக வரவினைப்‌ பெற்றுக்‌ கொள்பவர்களுக்கு வரவினை விநியோகிக்க இயலும்‌; (ஆ) விநியோகிக்கப்படும்‌ வரவின்‌ தொகையானது, விநியோகிப்பதற்காக இருக்கும்‌ வரவின்‌ தொகைக்கு மேற்படுதல்‌ ஆகாது; (க) வரவினைப்‌ பெறுபவருக்கு உடைமையாகத்தக்க உள்ளீட்டு சேவைகள்‌ மீது செலுத்தப்பட்ட வரியின்‌ வரவானது அந்த பெறுநருக்கு மட்டுமே விநியோகிக்கப்படுதல்‌ வேண்டும்‌; (FF) வரவினை பெறும்‌ ஒன்றுக்கு மேற்படும்‌ பெறுநருக்கு உடைமையாக்கத்தக்க உள்ளீட்டுச்‌ சேவைகள்‌ மீது செலுத்தப்பட்ட வரி வரவானது, உள்ளிட்டுச்‌ சேவை உடைமையாக்கப்பட வேண்டிய அத்தகைய பெறுநர்களிடையே விநியோகிக்கப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அத்தகைய விநியோகிப்பானது, தொடர்புற்ற கால அளவின்‌ போது, அத்தகைய பெறுநரின்‌ மாநிலம்‌ ஒன்றின்‌ அல்லது யூனியன்‌ பிரதேசம்‌ ஒன்றின்‌ விற்பனை அளவின்‌ அடிப்படையில்‌, மேற்சொன்ன தொடர்புற்ற கால அளவின்‌ போது அத்தகைய உள்ளீட்டுச்‌ சேவைக்கு உடைமையாக்கத்தக்க அத்தகைய பெறுநர்கள்‌ அனைவரின்‌ மற்றும்‌ நடப்பு ஆண்டில்‌ செயற்பாட்டில்‌ உள்ள ஒட்டுமொத்த விற்பனை அளவிற்கும்‌, சரிசம வீதப்படி இருத்தல்‌ வேண்டும்‌; (௨) அனைத்து வரவு பெறுநர்களுக்கும்‌ உடைமையாக்கத்தக்க உள்ளீட்டுச்‌ சேவைகள்‌ மீது செலுத்தப்பட்ட வரியின்‌ வரவானது, அத்தகைய பெறுநர்களிடையே விநியோகிக்கப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அத்தகைய விநியோகிப்பானது, தொடர்புற்ற கால அளவின்‌ போது, அத்தகைய பெறுநரின்‌ மாநிலம்‌ ஒன்றின்‌ அல்லது யூனியன்‌ 51 பிரதேசம்‌ ஒன்றின்‌ விற்பனை அளவின்‌ அடிப்படையில்‌, மேற்சொன்ன தொடர்புற்ற கால அளவின்‌ போது பெறுநர்கள்‌ அனைவரின்‌ மற்றும்‌ நடப்பு ஆண்டில்‌ செயற்பாட்டில்‌ உள்ள ஒட்டுமொத்த விற்பனை அளவிற்கும்‌, சரிசம விதப்படி இருத்தல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, (அ) "தொடர்புற்ற கால அளவு" என்பது- (i) எந்த ஆண்டின்‌ போது வரவு விநியோகிக்கப்பட வேண்டுமோ அந்த ஆண்டுக்கு முந்தைய நிதியாண்டில்‌ வரவு பெறுநர்கள்‌ அவர்களுடைய மாநிலங்களில்‌ அல்லது யூனியன்‌ பிரதேசங்களில்‌ விற்பனை அளவு கொண்டிருப்பாராயின்‌, மேற்சொன்ன நிதியாண்டாகும்‌; அல்லது (i) எந்த ஆண்டின்‌ போது வரவு விநியோகிக்கப்பட வேண்டுமோ அந்த ஆண்டுக்கு முந்தைய நிதியாண்டில்‌ வரவு பெறுநர்கள்‌ சிலரோ அல்லது அனைவருமோ அவர்களுடைய மாநிலங்களில்‌ அல்லது யூணியன்‌ பிரதேசங்களில்‌ விற்பனை அளவு எதுவும்‌ கொண்டிருக்கவில்லையாயின்‌, எந்த மாதத்தின்‌ போது வரவு விநியோகிக்கப்படவுள்ளதோ அதற்கு முந்தையதாக, அனைத்து பெறுநர்களின்‌ அத்தகைய விற்பனை அளவு பற்றிய விவரங்கள்‌ எந்தக்‌ காலாண்டுக்கு உளதாயிருக்கிறதோ அந்தக்‌ கடைசி காலாண்டாகும்‌; (ஆ) "வரவு பெறுநர்‌" என்ற சொற்றொடர்‌, உள்ளீட்டு சேவை விநியோகிப்‌- பவருக்குள்ளது போன்று அதே நிரந்தரக்‌ கணக்கு எண்‌ கொண்டிருக்கும்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குநர்‌ என்று பொருள்படும்‌; (இ) "விற்பனை அளவு" என்ற சொல்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரிவிதிக்கத்தக்க சரக்குகளையும்‌ அத்துடன்‌ வரிவிதிக்கத்தக்கதாகாத சரக்குகளையும்‌ வழங்குவதில்‌ ஈடுபட்டுள்ள பதிவு பெற்ற நபர்‌ எவரையும்‌ பொறுத்தவரை, விற்பனை அளவில்‌, அரசியலமைப்பின்‌ ஏழாம்‌ இணைப்புப்‌ பட்டியலின்‌ 1-ஆம்‌ பட்டியலின்‌ 84-ஆம்‌ பதிவின்கீழும்‌ மேற்சொன்ன இணைப்புப்‌ பட்டியலின்‌ ॥-ஆம்‌ பட்டியலின்‌ 51 மற்றும்‌ 54 ஆகிய பதிவுகளின்கீழும்‌ விதிக்கப்படும்‌ தீர்வை அல்லது வரி எதனின்‌ தொகையினால்‌ குறைக்கப்பட்ட மதிப்பு என்று பொருள்படும்‌. 21. மிகையாகப்‌ விநியோகிக்கப்பட்ட வரவினை வளூலிக்கும்‌ முறை. உள்ளீட்டு சேவை விநியோகிப்பவர்‌, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரவு பெறுநர்களுக்கு, வாவு விநியோகம்‌ மிகையாக விளையக்கூடிய வகையில்‌ 20-ஆம்‌ பிரிவில்‌ அடங்கியுள்ள வகைமுறைகளை ம்றி வரவினைப்‌ விநியோகிக்கிறவிடத்து, அவ்வாறு விநியோகிக்கப்பட்ட மிகை வரவானது அத்தகைய 52 பெறுநர்களிடமிருந்து வட்டியுடன்‌ சேர்த்து வசூலிக்கப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ வசூலிக்கப்பட வேண்டிய தொகையினை தீர்மானிப்பதற்கு, 73-ஆம்‌ பிரிவின்‌ அல்லது, நேர்விற்கேற்ப 74-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகள்‌, தேவையான மாற்றங்களோடு, பொருந்துதல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ VI பதிவு பெறுதல்‌. 22. பதிவு பெறுவதற்கு கடப்பாடுடைய நபர்கள்‌.- (1) மாநிலத்திற்குள்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வரிவிதிக்கத்தக்க வழங்குகை ஒன்றைச்‌ செய்யும்‌ வழங்குநர்‌ ஒவ்வொருவரும்‌, நிதியாண்டு ஒன்றில்‌ அவருடைய ஒட்டுமொத்த விற்பனை அளவு இருபது லட்சம்‌ ரூபாய்க்கு மேற்படுமானால்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவு பெறுவதற்கு கடப்பாடுடையவராவார்‌: வரம்புரை: ஆனால்‌, அத்தகைய நபர்‌, சிறப்பு வகை மாநிலங்கள்‌ எதிலுமிருந்து, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வரிவிதிக்கத்தக்க வழங்குகைகள்‌ செய்கிறவிடத்து, நிதியாண்டு ஒன்றில்‌ அவருடைய ஒட்டுமொத்த விற்பனை அளவு பத்து லட்சம்‌ ரூபாய்க்கு மேற்படுமானால்‌, அவர்‌ பதிவு பெறுவதற்கு கடப்பாடுடையவராவார்‌. (2) குறித்திட்ட நாளை ஒட்டிய முந்தைய நாளன்று, நிலவிவரும்‌ சட்டம்‌ ஒன்றின்கீழ்‌ பதிவு பெற்றிருக்கும்‌ அல்லது உரிமம்‌ ஒன்று வைத்திருக்கும்‌ நபர்‌ ஒவ்வொருவரும்‌, குறித்திட்ட நாள்‌ முதற்கொண்டு நடைமுறைக்கு வருமாறு இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவு பெறுவதற்கு கடப்பாடுடையவராவார்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவு பெற்ற வரிவிதிக்கத்தக்க நபர்‌ ஒருவரால்‌ நடத்தி வரப்படும்‌ வணிகம்‌ ஒன்று, உரிமையிறக்கம்‌ காரணமாகவோ அல்லது பிறவாறாகவோ, ஓர்‌ இயங்கிவரும்‌ நிறுவனமாக பிறிதொரு நபருக்கு உரிமை மாற்றம்‌ செய்யப்படுகிறவிடத்து, உரிமை மாற்றம்‌ பெற்றவரோ அல்லது, நேர்விற்கேற்ப, உரிமையிறக்கம்‌ பெற்றவரோ, அத்தகைய உரிமை மாற்றத்தின்‌ அல்லது உரிமையிறக்கத்தின்‌ தேதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறு பதிவு பெறுவதற்கு கடப்பாடுடையவராவார்‌. (4) (1) மற்றும்‌ (3) ஆகிய உட்பிரிவுகளில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, உரிமை மாற்றம்‌ பொறுத்தவரையில்‌ திட்டம்‌ ஒன்றை ஒப்பளிப்பு செய்ததை அல்லது ஒருங்கிணைப்பிற்கான ஏற்பாடு ஒன்றைப்‌ பின்பற்றி அல்லது, நேர்விற்கேற்ப, ஓர்‌ உயர்‌ நீதிமன்றத்தின்‌, தீர்ப்பாயத்தின்‌ ஆணையைப்‌ பின்பற்றியோ அல்லது பிறவாறாகவோ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுமங்கள்‌ பிரிக்கப்படும்‌ 53 நேர்வில்‌, உயர்ந்திமன்றத்தின்‌ அல்லது தீர்ப்பாயத்தின்‌ அத்தகைய ஆணைக்கு செயல்திறம்‌ கொடுத்து நிறுமங்களின்‌ பதிவாளர்‌ எந்தத்‌ தேதியன்று கூட்டுருமமாக பதிவு செய்து சான்றிதழ்‌ ஒன்றை வழங்குகிறாரோ அந்தத்‌ தேதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறு, உரிமை மாற்றம்‌ பெற்றவர்‌ பதிவு பெறுவதற்கு கடப்பாடுடையவராவார்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, (i) "ஒட்டுமொத்த விற்பனை அளவு" என்ற சொற்றொடர்‌, வரிவிதிக்கத்தக்க நபரால்‌, அவர்‌ பொருட்டோ அல்லது அவருடைய முதல்வர்கள்‌ அனைவர்‌ சார்பாகவோ செய்யப்படும்‌ அனைத்து வழங்குகைகளும்‌ உள்ளடக்கும்‌; (i) பதிவு பெற்ற சில்லறை வேலையாள்‌ ஒருவரால்‌, சில்லறை வேலை முடிவடைந்த பின்பு, சரக்குகள்‌ வழங்குகையானது, 143-ஆம்‌ பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள முதல்வரால்‌ சரக்குகள்‌ வழங்கப்படுவதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அத்தகைய சரக்குகளின்‌ மதிப்பானது பதிவு பெற்ற சில்லறை வேலையாளின்‌ ஒட்டுமொத்த விற்பனை அளவில்‌ உள்ளடக்கப்படுதல்‌ ஆகாது; 0) "சிறப்பு வகை மாநிலங்கள்‌” என்ற சொற்றொடர்‌, அரசியலமைப்பின்‌ 279A உறுப்பின்‌ (4)-ஆம்‌ கூறின்‌ (ஓ-உட்கூறில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ளவாறான மாநிலங்கள்‌ என்று பொருள்படும்‌. 23. பதிவு பெறுவதற்கு கடப்பாடற்ற நபர்கள்‌.- (1) பின்வரும்‌ நபர்கள்‌ பதிவு பெறுவதற்கு கடப்பாடுடையவராதல்‌ ஆகாது, அவர்களாவர்‌:- (அ) இந்தச்‌ சட்டத்தின்‌8ழோ அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழோ வரிவிதிப்பிற்கு கடப்பாடாகாத அல்லது வரிவிதிப்பிலிருந்து முழுவதுமாக விலக்களிக்கப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ வழங்கும்‌ வணிகத்தில்‌ மட்டுமே ஈடுபட்டுள்ள நபர்‌ எவரும்‌; (ஆ) நிலத்தில்‌ பயிரிடூவதிலிருந்து கிடைக்கக்கூடிய விளைபொருளின்‌ வழங்குகை அளவிற்கு, விவசாயி ஒருவர்‌. (2) அரசானது, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, அறிவிக்கை வாயிலாக, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவு பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படலாகும்‌ நபர்களின்‌ வகையினரைக்‌ குறித்துரைக்கலாம்‌. 24. குறித்த சில நேர்வுகளில்‌ கட்டாயப்‌ பதிவு.-- 22-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, பின்வரும்‌ நபர்களின்‌ வகையினர்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவு பெறுவதற்கு வேண்டுறுத்தப்படுதல்‌ வேண்டும்‌,- 54 (i) மாநிலங்களுக்கிடையேயான வரிவிதிக்கத்தக்க வழங்குகை எதுவும்‌ செய்யும்‌ நபர்கள்‌; (i) வரிவிதிக்கத்தக்க வழங்குகையினைச்‌ செய்கிற தற்செயல்‌ வரிவிதிக்கத்தக்க நபர்கள்‌; 00 எதிரிடைக்‌ கட்டணத்தின்‌ கீழ்‌ வரி செலுத்தும்படி வேண்டுறுத்தப்படும்‌ நபர்கள்‌; 9) 9-ஆம்‌ பிரிவின்‌ (5)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வரி செலுத்தும்படி வேண்டுறுத்தப்படும்‌ நபர்‌; ) வரிவிதிக்கத்தக்க வழங்குகையினைச்‌ செய்கிற குடியிராத வரிவிதிக்கத்தக்க நபர்கள்‌; Vi) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ தனியாக பதிவு செய்யப்பட்டிருப்பினும்‌ அல்லது இல்லாவிடினும்‌, 51-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வரி பிடித்தம்‌ செய்ய வேண்டுறுத்தப்படுகிற நபர்கள்‌; ரி) பிற வரிவிதிக்கத்தக்க நபர்கள்‌ சார்பாக ஒரு முகவராகவோ அல்லது பிறவாறாகவோ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வரிவிதிக்கத்தக்க வழங்குகையினைச்‌ செய்கிற நபர்கள்‌; ர) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ தனியாக பதிவுச்‌ செய்யப்பட்டிருப்பினும்‌ அல்லது இல்லாவிடினும்‌, உள்ளீடு சேவை விநியோகிப்பவர்‌; (ix) 52-ஆம்‌ பிரிவின்கீழ்‌ மூலத்தில்‌ வரி வசூலிக்க வேண்டுறுத்தப்பட்டிருக்கும்‌ அத்தகைய மின்னணு வணிகம்‌ இயக்குபவர்‌ மூலமாக, 9-ஆம்‌ பிரிவின்‌ (5)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள வழங்குகைகள்‌ அல்லாத பிற சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினை வழங்கும்‌ நபர்கள்‌; (x) மின்னணு வணிகம்‌ இயக்குபவர்‌ ஒவ்வொருவரும்‌; (xi) பதிவு பெற்ற நபர்‌ அல்லாத, இந்தியாவுக்கு வெளியேயுள்ள ஜர்‌ இடத்திலிருந்து இந்தியாவிலுள்ள ஒரு நபருக்கு கணினி வழியான தகவல்கள்‌ மற்றும்‌ தகவல்‌ தள அணுகல்‌ அல்லது தகவல்‌ மீட்டுப்‌ பெறும்‌ பணிகளை வழங்கும்‌ நபர்‌ ஒவ்வொருவரும்‌; மற்றும்‌ 00). மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌ அரசினால்‌ அறிவிக்கை செய்யப்படலாகும்‌ அத்தகைய பிற நபர்‌ அல்லது நபர்களின்‌ வகையினர்‌. 55 25. பதிவு பெறுவதற்கான நடைமுறை. (1) 22-ஆம்‌ பிரிவின்கழோ அல்லது 24— ஆம்‌ பிரிவின்கழோ பதிவு பெற கடப்பாடுடைய நபர்‌ ஒவ்வொருவரும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையிலும்‌ மற்றும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டும்‌, அவர்‌ பதிவு பெறுவதற்கு கடப்பாடாகிற தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்‌ பதிவு பெறுவதற்காக விண்ணப்பித்தல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, ஒரு தற்செயல்‌ வரிவிதிக்கத்தக்க நபரோ அல்லது ஒரு குடியிராத வரிவிதிக்கத்தக்க நபரோ, வணிகம்‌ தொடங்கப்படுவதற்கு குறைந்தபட்சமாக ஐந்து நாட்களுக்கு முன்னர்‌ பதிவு செய்வதற்காக விண்ணப்பித்தல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்தியாவின்‌ ஆட்சிப்பரப்பு சார்ந்த கடற்பகுதிகளிலிருந்து வழங்குகை செய்கிற நபர்‌ ஒவ்வொருவரும்‌, உரிய எல்லைக்‌ கோட்டின்‌ அருகாமை முனை அமைந்திருக்கும்‌ கடற்கரை மாநிலத்தில்‌ பதிவு பெறுதல்‌ வேண்டும்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவு செய்ய நாடுகிற நபர்‌ ஒருவருக்கு, தனியொரு பதிவு வழங்கப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, மாநிலத்தில்‌ பன்முக செங்குத்து வணிகத்தைக்‌ கொண்டிருக்கும்‌ நபர்‌ ஒருவருக்கு, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டு, ஒவ்வொரு செங்குத்து வணிகத்திற்காக தனித்தனி பதிவு வழங்கப்படலாம்‌. (3) 22-ஆம்‌ பிரிவின்கழோ அல்லது 24-ஆம்‌ பிரிவின்கழோ பதிவு பெறுவதற்கு கடப்பாடற்ற போதிலும்‌, நபர்‌ ஒருவர்‌ தாமே தம்‌ விருப்பமாக பதிவு பெறலாம்‌, மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ அனைத்தும்‌, பதிவு பெற்ற நபர்‌ ஒருவருக்குப்‌ பொருந்துகிறவாறு, அத்தகைய நபருக்கும்‌ பொருந்துதல்‌ வேண்டும்‌. (4) ஒரு மாநிலத்திலோ அல்லது யூனியன்‌ பிரதேசத்திலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலத்திலோ அல்லது யூனியன்‌ பிரதேசத்திலோ ஒன்றுக்கு மேற்பட்ட பதிவினைப்‌ பெற்றிருக்கிற அல்லது பெறும்படி வேண்டுறுத்தப்பட்டிருக்கிற நபர்‌ ஒருவர்‌, அத்தகைய பதிவு ஒவ்வொன்றையும்‌ பொறுத்து, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக தனிவேறு நபர்களாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. (5) ஒரு தொழிலகம்‌ பொறுத்து ஒரு மாநிலத்திலோ அல்லது யூனியன்‌ பிரதேசத்திலோ பதிவினை பெற்றிருக்கிற அல்லது பெறும்படி வேண்டுறுத்தப்பட்டிருக்கிற நபர்‌ ஒருவர்‌, பிறிதொரு மாநிலத்திலோ யூணியன்‌ பிரதேசத்திலோ தொழிலகம்‌ ஒன்றைக்‌ கொண்டிருக்கிறவிடத்து, அப்போது அத்தகைய தொழிலகங்கள்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக தனிவேறு நபர்களாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 56 (6) ஒவ்வொரு நபரும்‌, பதிவு வழங்குவதற்காகத்‌ தகுதியாகும்‌ பொருட்டு, 1964-ஆம்‌ ஆண்டு வருமான வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ (மையச்‌ சட்டம்‌ 434961) நிரந்தரக்‌ கணக்கு எண்‌ ஒன்று பெற்றிருத்தல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, 51-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வரி பிடித்தம்‌ செய்ய வேண்டுறுத்தப்பட்டிருக்கும்‌ நபர்‌ ஒருவர்‌, பதிவு வழங்குவதற்காக தகுதியாகும்‌ பொருட்டு, ஒரு நிரந்தர கணக்கு எண்ணுக்குப்‌ பதிலாக, மேற்சொன்ன சட்டத்தின்கீழ்‌ வழங்கப்பட்ட ஒரு வரி பிடித்தம்‌ மற்றும்‌ வசூலிப்புக்‌ கணக்கு எண்‌: கொண்டிருக்கலாம்‌. (7) (6)-ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, ஒரு குடியிராத வரிவிதிக்கத்தக்க நபருக்கு. வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற ஆவணங்களின்‌ அடிப்படையில்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பதிவு வழங்கப்படலாம்‌. (8) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவு பெற கடப்பாடுள்ள நபர்‌ ஒருவர்‌ பதிவு பெறத்‌ தவறுகிறவிடத்து, உரிய அலுவலர்‌, இந்தச்‌ சட்டத்தின்&ழோ அல்லது அப்போதைக்கு நடைமுறையில்‌ உள்ள பிற சட்டம்‌ எதன்படியுமோ எடுக்கப்படலாகும்‌ நடவடிக்கை எதற்கும்‌ குந்தகமின்றி, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ அத்தகைய நபரைப்‌ பதிவு செய்ய முற்படலாம்‌. (9 0-ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌,- (அ) 1947-ஆம்‌ ஆண்டு ஐக்கிய நாடுகள்‌ (சிறப்புரிமைகள்‌ மற்றும்‌ காப்புரிமைகள்‌) சட்டத்தின்கீழ்‌ (மையச்‌ கட்டம்‌ 767947) அறிவிக்கை செய்யப்பட்ட ஐக்கிய நாடுகள்‌ அமைப்பின்‌ தனித்திற முகமை எதுவும்‌ அல்லது பன்முக நிதி நிறுவனம்‌ மற்றும்‌ அமைப்பு எதுவும்‌, அயல்‌ நாடுகளின்‌ தூதரகம்‌ அல்லது துணைத்‌ தூதரகம்‌ எதுவும்‌; (ஆ) ஆணையரால்‌ அறிவிக்கை செய்யப்படலாகும்‌, பிற நபர்‌ அல்லது நபர்களின்‌ வகையினர்‌ எவரும்‌, அவர்களால்‌ பெறப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ அறிவிக்கை செய்யப்பட்ட வழங்குகைகள்‌ மீது செலுத்தப்பட்ட வரிகளைத்‌ திருப்பிக்‌ கொடுப்பது உள்ளடங்கலாக, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையிலும்‌ மற்றும்‌ அத்தகைய நோக்கங்களுக்காகவும்‌, ஒரு தனித்த அடையாள எண்‌ வழங்கப்படுதல்‌ வேண்டும்‌. (10) பதிவோ அல்லது தனித்த அடையாள எண்ணோ, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையிலும்‌ மற்றும்‌ அத்தகைய கால 57 அளவிற்குள்ளும்‌ உரியவாறு சரிபார்க்கப்பட்ட பின்பு வழங்கப்படுதலோ அல்லது ஏற்க மறுக்கப்படுதலோ வேண்டும்‌. (11) பதிவுச்‌ சான்றிதழ்‌ ஒன்று, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ அத்தகைய தேதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறும்‌ வழங்கப்படுதல்‌ வேண்டும்‌. (12) பதிவு ஒன்றோ அல்லது தனித்த அடையாள எண்‌ ஒன்றோ, (10)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வகுத்துரைக்கப்பட்டுள்ள கால அளவு காலாவதியாகிய பின்பு, அந்த கால அளவிற்குள்‌ குறைப்பாடு எதுவும்‌ விண்ணப்பத்தாரருக்குத்‌ தெரிவிக்கப்படவில்லையாயின்‌, வழங்கப்பட்டிருப்பதாக கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 26. பதிவு பெற்றதாக கருதப்படுதல்‌.- (1) மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவோ அல்லது தனித்த அடையாள எண்ணோ வழங்குவதானது, பதிவுக்கான அல்லது தனித்த அடையாள எண்ணுக்கான விண்ணப்பம்‌ 25-ஆம்‌ பிரிவின்‌ (10)-ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள காலத்திற்குள்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ ஏற்க மறுக்கப்பட்டிருக்கவில்லை என்ற நிபந்தனைக்குட்பட்டு, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவோ அல்லது தனித்த அடையாள எண்ணோ வழங்கியதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (2) 25-ஆம்‌ பிரிவின்‌ (10)-ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவு பெறுவதற்கான அல்லது தனித்த அடையாள எண்ணுக்கான விண்ணப்பத்தை ஏற்க மறுக்கும்‌ எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவு பெறுவதற்கான விண்ணப்பத்தை ஏற்கமறுத்ததாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 27. தற்செயல்‌ வரிவிதிக்கத்தக்க நபர்‌ மற்றும்‌ குடியிராத வரிவிதிக்கத்தக்க நபர்‌ குறித்தான சிறப்பு வகைமுறைகள்‌.- (1) தற்செயல்‌ வரிவிதிக்கத்தக்க நபருக்கோ அல்லது குடியிராத வரிவிதிக்கத்தக்க நபருக்கோ வழங்கப்படும்‌ பதிவுச்‌ சான்றிதழானது, பதிவு பெறுவதற்கான விண்ணப்பத்தில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள கால அளவுக்கு அல்லது பதிவு நடைமுறைக்கு வரும்‌ தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்கு, இவற்றில்‌ எது முன்னதோ அந்தக்‌ கால அளவிற்குச்‌ செல்லுந்தன்மையுடையதாகும்‌, மற்றும்‌ அத்தகைய நபர்‌, பதிவுச்‌ சான்றிதழ்‌ வழங்கிய பின்பு மட்டுமே வரிவிதிக்கத்தக்க வழங்குகைகளைச்‌ செய்தல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, உரிய அலுவலர்‌, மேற்சொன்ன வரிவிதிக்கத்தக்க நபரால்‌ போதுமான காரணம்‌ காட்டப்படுவதன்‌ பேரில்‌, மேற்சொன்ன தொண்ணூறு நாட்கள்‌ 58 கால அளவினை தொண்ணூறு நாட்களுக்கு மேற்படாத மேலுமான கால அளவு ஒன்றுக்கு நீட்டிக்கலாம்‌. (2) ஒரு தற்செயல்‌ வரிவிதிக்கத்தக்க நபரோ அல்லது ஒரு குடியிராத வரிவிதிக்கத்தக்க நபரோ, 25-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பதிவு பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்‌ சமயத்தில்‌, எந்தக்‌ கால அளவிற்கு பதிவு செய்ய நாடப்படுகிறதோ அந்த கால அளவிற்கு அத்தகைய நபரின்‌ மதிப்பிடப்பட்ட வரி கடப்பாட்டுக்கு சமமான ஒரு தொகையினை முன்‌ வரி வைப்பிடு ஒன்றாக செய்தல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, (0-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ கால நீட்டிப்பு எதுவும்‌ நாடப்படுகிறவிடத்து, அத்தகைய வரிவிதிக்கத்தக்க நபர்‌, எந்தக்‌ கால அளவிற்கு நீட்டிப்பு நாடப்படுகிறதோ அந்தக்‌ கால அளவிற்கு அத்தகைய நபரின்‌ மதிப்பிடப்பட்ட வரி கடப்பாட்டிற்குச்‌ சமமாக கூடுதல்‌ வரித்தொகை ஒன்றை வைப்பீடு செய்தல்‌ வேண்டும்‌. (3) (2-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வைப்பிடு செய்யப்பட்ட தொகையானது, அத்தகைய நபரின்‌ மின்னணு பணப்‌ பேரேட்டில்‌ வரவு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ 49-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வகை செய்யப்பட்டுள்ள முறையில்‌ பயன்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 28. பதிவிற்கு திருத்தம்‌- (1) ஒவ்வொரு பதிவு பெற்ற நபரும்‌ மற்றும்‌ தனித்த அடையாள எண்‌ அளிக்கப்பட்டிருக்கும்‌ நபரும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ முறையிலும்‌ மற்றும்‌ அத்தகைய கால அளவிற்குள்ளும்‌, பதிவு பெற்ற சமயத்திலோ அல்லது அதற்குப்‌ பிண்ணதாகவோ அளிக்கப்பட்ட தகவலில்‌ உள்ள மாற்றங்கள்‌ எவற்றையும்‌ உரிய அலுவலருக்குத்‌ தெரிவித்தல்‌ வேண்டும்‌. (2) உரிய அலுவலர்‌, (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அளிக்கப்பட்ட அல்லது தம்மால்‌ உறுதி செய்யப்பட்டவாறான தகவலின்‌ அடிப்படையில்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையிலும்‌ மற்றும்‌ அத்தகைய கால அளவிற்குள்ளும்‌ பதிவு விவரங்களில்‌ உள்ள திருத்தங்களை ஒப்புதல்‌ அளிக்கலாம்‌ அல்லது ஒப்புதல்‌ அளிக்க மறுக்கலாம்‌: வரம்புரை: ஆனால்‌, உறிய அலுவலரின்‌ ஒப்புதல்‌ அளிப்பானது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய விவரங்களைத்‌ திருத்தம்‌ செய்வதைப்‌ பொறுத்து தேவைப்படாது: 59 மேலும்‌ வரம்புரை: மேலும்‌, உரிய அலுவலர்‌, பதிவு விவரங்களில்‌ திருத்தம்‌ செய்வதற்கான விண்ணப்பத்தை, நபருக்கு கேட்கப்படுவதற்கான வாய்ப்பு ஒன்றைக்‌ கொடுக்காமல்‌ ஒப்புதல்‌ அளிக்க மறுத்தல்‌ ஆகாது. (3) மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ திருத்தங்களுக்கு ஒப்புதல்‌ அளித்தல்‌ அல்லது ஒப்புதல்‌ அளிக்க மறுத்தல்‌ எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தின்கழாக ஒப்புதலாகவோ அல்லது ஒப்புதல்‌ அளிக்க மறுத்தலாகவோ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 29. பதிவினை ரத்து செய்தல்‌. (1) உரிய அலுவலர்‌, தாமே முற்பட்டோ அல்லது பதிவு பெற்ற நபரால்‌ அல்லது அத்தகைய நபரின்‌ இறப்பின்‌ நேர்வில்‌ அவருடைய சட்டப்படியான உரிமையுடையவரால்‌ முண்ணனிடப்படும்‌ விண்ணப்பம்‌ ஒன்றின்‌ பேரிலோ.- (அ) வணிகமானது, உரிமையாளரின்‌ இறப்பு, பிற சட்டமுறை நிறுவனத்துடன்‌ ஒருங்கிணைப்பு, பிரிப்பு அல்லது பிறவாறான தீர்வு உள்ளடங்கலான காரணம்‌ எதற்காகவும்‌ முழுவதுமாக நிறுத்தப்பட்டோ, மாற்றப்பட்டோ இருக்கிற; அல்லது (ஆ) வணிகத்தின்‌ அமைப்பில்‌ உள்ள மாற்றம்‌ எதுவும்‌ இருக்கிற; அல்லது (இ) 25-ஆம்‌ பிரிவின்‌ (3)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பதிவு பெற்ற நபராக அல்லாத பிற வரிவிதிக்கத்தக்க நபர்‌, 22-ஆம்‌ பிரிவின்‌கழோ அல்லது 24-ஆம்‌ பிரிவின்கழோ பதிவு பெறுவதற்கு இனிமேலும்‌ உள்ளாகாத, நேர்வுகளின்‌ சூழ்நிலைகளைக்‌ கருத்தில்‌ கொண்டு, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையிலும்‌ மற்றும்‌ அத்தகைய கால அளவிற்குள்ளும்‌, பதிவினை ரத்து செய்யலாம்‌. (2) உரிய அலுவலர்‌, (அ) பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளை அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளை ம்றியிருக்கிறார்‌ என்ற; அல்லது (ஆ) 10-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வரி செலுத்தும்‌ நபர்‌ ஒருவர்‌ தொடர்ச்சியாக மூன்று வரி காலங்களுக்கு அறிக்கைகள்‌ அளிக்காதிருக்கிறார்‌ என்ற; அல்லது (க) (ஆ)-கூறில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள ஒரு நபராக அல்லாத பிற, பதிவு பெற்ற நபர்‌ எவரும்‌, தொடர்ச்சியாக ஆறு மாதங்கள்‌ கால அளவிற்கு அறிக்கைகள்‌ அளிக்காமல்‌ இருக்கிறார்‌ என்ற; அல்லது 60 (F) 25-ஆம்‌ பிரிவின்‌ (3)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ தம்‌ விருப்பமாக பதிவு எடுத்திருக்கிற நபர்‌ எவரும்‌, பதிவு செய்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்‌ வணிகத்தினைத்‌ தொடங்காதிருக்கிறார்‌ என்ற; அல்லது (௨) பதிவானது, மோசடியான வழியில்‌, பொருண்மைகளை வேண்டுமென்றே தவறாகக்‌ கூறியோ அல்லது மறைத்தோ பதிவு பெற்றிருக்கிறார்‌ என்ற, நேர்வில்‌, தாம்‌ பொருத்தமெனக்‌ கருதுகிறவாறு, முன்மேவு தேதி எதுவும்‌ உள்ளடங்கலான, அத்தகைய தேதியிலிருந்து ஒரு நபரின்‌ பதிவினை ரத்து செய்யலாம்‌: வரம்புரை: ஆனால்‌, உரிய அலுவலர்‌, நபருக்கு கேட்கப்படுவதற்கான வாய்ப்பு ஒன்றைக்‌ கொடுக்காமல்‌ பதிவினை ரத்து செய்தல்‌ ஆகாது. (3) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவினை ரத்து செய்வதானது, அத்தகைய வரியும்‌ மற்றும்‌ பிற செலுத்த வேண்டிய நிலுவைகளும்‌ ரத்து செய்யப்பட்ட தேதிக்கு முன்போ அல்லது பின்போ தீர்மானிக்கப்பட்டிருப்பினும்‌ அல்லது இல்லாவிடினும்‌, ரத்து செய்யப்பட்ட தேதிக்கு முன்னர்‌ எந்தக்‌ கால அளவுக்கும்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரியையும்‌ மற்றும்‌ பிற நிலுவைகளையும்‌ செலுத்துவதற்கு அல்லது இந்தச்‌ சட்டத்தின்8௧ழோ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்படியோ கடமைப்‌ பொறுப்பு எதனையும்‌ ஆற்றுவதற்கு அந்த நபருக்கு உள்ள கடப்பாட்டினைப்‌ பாதித்தல்‌ ஆகாது. (4) மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவினை ரத்து செய்வதானது, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ ஒரு பதிவினை ரத்து செய்வதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (5) பதிவு ரத்து செய்யப்பட்டிருக்கும்‌ பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, அத்தகைய ரத்து செய்யப்பட்ட தேதியை ஒட்டிய முந்தைய நாளன்று இருப்புச்‌ சரக்கில்‌ வைத்திருக்கும்‌ உள்ளீடுகள்‌ பொறுத்தும்‌ மற்றும்‌ இருப்புச்‌ சரக்கிலோ அல்லது மூலதனச்‌ சரக்குகளிலோ அல்லது தொழிற்சாலை மற்றும்‌ இயந்திரத்‌ தொகுதியிலோ வைத்திருக்கும்‌ பகுதி முடிக்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட சரக்குகளில்‌ அடங்கியுள்ள உள்ளீடுகள்‌ பொறுத்தும்‌, உள்ளீட்டு வரி அல்லது அத்தகைய சரக்குகள்‌ மீது செலுத்த வேண்டிய வெளியீட்டு வரி, இவற்றில்‌ எது அதிகமோ, அந்த வரி, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ கணக்கிடப்பட்ட உள்ளீட்டு வரி வரவுக்குச்‌ சமமாக மின்னணு வரவு பேரேட்டில்‌, மின்னணு பணப்‌ பேரேட்டில்‌ பற்று வைப்பதன்‌ மூலமாக, தொகை ஒன்றை செலுத்துதல்‌ வேண்டும்‌: 61 வரம்புரை: ஆனால்‌, மூலதனச்‌ சரக்குகள்‌ அல்லது தொழிற்சாலை மற்றும்‌ இயந்திரத்‌ தொகுதியைப்‌ பொறுத்தவரை, வரிவிதிக்கத்தக்க நபர்‌, மேற்சொன்ன மூலதனச்‌ சரக்குகள்‌ அல்லது தொழிற்சாலை மற்றும்‌ இயந்திரத்‌ தொகுதி மீது எடுக்கப்பட்ட உள்ளிட்டு வரி வரவுக்குச்‌ சமமானதொரு தொகையிலிருந்து, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய விழுக்காட்டு புள்ளிகளை அல்லது 15-ஆம்‌ பிரிவின்கழ்‌ அத்தகைய மூலதனச்‌ சரக்குகள்‌ அல்லது தொழிற்சாலை மற்றும்‌ இயந்திரத்‌ தொகுதியின்‌ நடவடிக்கை மதிப்பின்‌ மீதான வரி, இவற்றில்‌ எது அதிகமோ, அந்தத்‌ தொகை ஒன்றைக்‌ கழித்து வரும்‌ தொகையைச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌. (6) (-ஆம்‌ உட்பிரிவின்கழ்‌ செலுத்த வேண்டிய தொகையானது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ கணக்கிடப்படுதல்‌ வேண்டும்‌. 30. பதிவு ரத்தினை திரும்பப்‌ பெறுதல்‌.-- (1) வகுத்துரைக்கப்படலாகும்‌ நிபந்தனைகளுக்குட்பட்டு, உரிய அலுவலர்‌ தாமே முற்பட்டு எந்தப்‌ பதிவு பெற்ற நபரின்‌ பதிவினை ரத்து செய்திருக்கிறாரோ அந்தப்‌ பதிவு பெற்ற நபர்‌ எவரும்‌, ரத்து ஆணை சார்வு செய்யப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்‌ வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ பதிவு ரத்தினை திரும்பப்‌ பெறுவதற்காக அத்தகைய அலுவலரிடம்‌ விண்ணப்பிக்கலாம்‌. (2) உரிய அலுவலர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையிலும்‌ மற்றும்‌ அத்தகைய கால அளவிற்குள்ளும்‌, ஆணை வழியாக, பதிவின்‌ ரத்தினை திரும்பப்‌ பெறலாம்‌ அல்லது விண்ணப்பத்தை மறுக்கலாம்‌: வரம்புரை: ஆனால்‌, பதிவு ரத்தினை திரும்பப்‌ பெறுவதற்கான விண்ணப்பமானது, விண்ணப்பத்தாரருக்கு கேட்கப்படுவதற்கான வாய்ப்பு ஒன்று கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, ஏற்க மறுக்கப்படுதல்‌ ஆகாது. (3) மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவு ரத்தினை திரும்ப பெறுவதானது, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவு ரத்தினை திரும்பப்‌ பெற்ற ஒன்றாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ VI வரி விலைப்பட்டியல்‌, வரவு மற்றும்‌ பற்றுக்‌ குறிப்புகள்‌. 31. வரி விலைப்பட்டியல்‌.- (1) வரிவிதிக்கத்தக்க சரக்குகளை வழங்கும்‌ பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌.- 62 (அ) வழங்குகையானது சரக்குகள்‌ இடம்‌ பெயர்தலுக்கு உள்ளாகிறவிடத்து, பெறுநருக்கு வழங்குவதற்காக சரக்குகளை அகற்றுவதற்கு முன்போ அல்லது அச்சமயத்திலோ, அல்லது (ஆ) பிற நேர்வு எதிலும்‌, பெறுநரிடம்‌ சரக்குகளை ஒப்படைப்பதற்கு அல்லது அவருக்குக்‌ கிடைக்கச்‌ செய்வதற்கு முன்போ அல்லது அச்சமயத்திலோ, வகுத்துரைக்கப்படலாகும்‌ சரக்குகளின்‌ விவரிப்பு, அளவு மற்றும்‌ மதிப்பு, அதன்‌ மீது விதிக்கப்பட்ட வரி மற்றும்‌ அத்தகைய பிற விவரங்களைக்‌ காட்டும்‌ வரி விலைப்பட்டியல்‌ ஒன்றை வழங்குதல்‌ வேண்டும்‌: வரம்புறை: ஆனால்‌, அரசு, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, அறிவிக்கை வாயிலாக, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய காலத்திற்குள்‌ மற்றும்‌ அத்தகைய முறையில்‌, வரி விலைப்பட்டியல்‌ வழங்கப்பட வேண்டிய வழங்குகைகள்‌ அல்லது சரக்குகளின்‌ வகைகளைக்‌ குறித்துரைக்கலாம்‌. (2) வரிவிதிக்கத்தக்க சேவைகள்‌ வழங்கும்‌ பதிவு பெற்ற நபர்‌, சேவையின்‌ வகைமுறைக்கு முன்போ அல்லது பின்போ ஆனால்‌ வகுத்துரைக்கப்பட்டுள்ள காலத்திற்குள்‌, சரக்குகளின்‌ விவரிப்பு, மதிப்பு, அதன்மீது விதிக்கப்பட்ட வரி மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற விவரங்களை காட்டும்‌ வரி விலைப்பட்டியல்‌ ஒன்றை வழங்குதல்‌ வேண்டும்‌: வரம்புறை: ஆனால்‌, அரசு, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, அறிவிக்கை வாயிலாக மற்றும்‌ அதனில்‌ குறிப்பிடப்படும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டு, எந்த சேவைகள்‌ பொறுத்து,- (அ) வழங்குகை தொடர்பாக வழங்கப்படும்‌ பிற ஆவணம்‌ எதுவும்‌ வரி விலைப்பட்டியலாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டுமோ, அல்லது (ஆ) வரி விலைப்பட்டியல்‌ வழங்கப்படலாகாதோ, அந்தச்‌ சேவைகளின்‌ வகைகளைக்‌ குறித்துரைக்கலாம்‌. (3) (1) மற்றும்‌ (2) ஆகிய உட்பிரிவுகளில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌- (அ) பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌, பதிவுச்‌ சான்றிதழ்‌ வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌, பதிவு செயல்திறம்‌ பெற்ற தேதி முதற்கொண்டு தொடங்கி அவருக்கு பதிவுச்‌ சான்றிதழ்‌ வழங்கும்‌ தேதி வரையிலான கால அளவின்‌ போது ஏற்கெனவே வழங்கப்பட்ட விலைப்பட்டியலுக்குப்‌ பதிலாக திருத்தியமைக்கப்பட்ட விலைப்பட்டியல்‌ ஒன்றை வழங்கலாம்‌; 63 (ஆ) பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டு மற்றும்‌ அத்தகைய முறையில்‌, வழங்கப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ மதிப்பு இருநூறு ரூபாய்க்கும்‌ குறைவாக இருக்குமானால்‌, வரி விலைப்பட்டியல்‌ வழங்காமல்‌ இருக்கலாம்‌; (க) வரிவிலக்களிக்கப்பட்ட சரக்குகளையோ அல்லது சேவைகளையோ அல்லது இரண்டையுமோ வழங்குகிற அல்லது 10-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளின்கீழ்‌ வரி செலுத்தி வரும்‌ பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌, ஒரு வரி விலைப்பட்டியலுக்குப்‌ பதிலாக, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய விவரங்களை அடக்கியிருக்கும்‌ வழங்குகைக்கான பட்டி ஒன்றை அத்தகைய முறையில்‌ வழங்குதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, பதிவு பெற்ற நபர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டு மற்றும்‌ அத்தகைய முறையில்‌, வழங்கப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ மதிப்பு இருநூறு ரூபாய்க்குக்‌ குறைவாக இருக்குமானால்‌, வழங்குகைக்கான பட்டி ஒன்றை வழங்காமல்‌ இருக்கலாம்‌; (ஈ) பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை எதனைப்‌ பொறுத்து முன்பணம்‌ பெற்றுக்‌ கொள்வதன்‌ பேரில்‌, அத்தகைய பணம்‌ பெற்றுக்கொண்டதற்கு சான்றாயிருப்பதான, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய விவரங்களை அடக்கியிருக்கும்‌ வரவு பற்றுச்சீட்டு ஒன்றையோ பிற ஆவணம்‌ எதனையுமோ வழங்குதல்‌ வேண்டும்‌; (உ) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை எதனைப்‌ பொறுத்து, முன்பணம்‌ பெற்றுக்‌ கொண்டதன்‌ பேரில்‌, பதிவு பெற்ற நபர்‌ வரவு பற்றுச்சீட்டு ஒன்றை வழங்கி, ஆனால்‌ பிந்தையதாக வழங்குகை எதுவும்‌ செய்யாமல்‌ மற்றும்‌ அதன்படி வரி விலைப்பட்டியல்‌ எதுவும்‌ வழங்காதவிடத்து, மேற்சொன்ன பதிவு பெற்ற நபர்‌, பணம்‌ செலுத்தியிருக்கிற நபருக்கு, அத்தகைய பணம்‌ செலுத்தம்‌ மீது திருப்பிக்‌ கொடுக்கும்‌ பற்றுச்சீட்டு ஒன்றை வழங்கலாம்‌; (ஊஊ) 9-ஆம்‌ பிரிவின்‌ (3)-ஆம்‌ உட்பிரிவின்&ழோ அல்லது (4)-ஆம்‌ உட்பிரிவின்கழோ வரி செலுத்துவதற்கு கடப்பாடூடைய பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌, அந்தச்‌ சரக்குகளை அல்லது சேவைகளை அல்லது இரண்டையும்‌ பெற்றுக்‌ கொண்ட தேதியன்று பதிவு செய்யப்பட்டிராத வழங்குநரிடமிருந்து தம்மால்‌ பெறப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டையும்‌ பொறுத்து விலைப்பட்டியல்‌ ஒன்றை வழங்குதல்‌ வேண்டும்‌; (எ) 9-ஆம்‌ பிரிவின்‌ (3)-ஆம்‌ உட்பிரிவின்‌8மோ அல்லது (4)-ஆம்‌ உட்பிரிவின்கழோ வரி செலுத்துவதற்கு கடப்பாடூடைய நபர்‌ ஒருவர்‌, 64 வழங்குநருக்குப்‌ பணம்‌ செலுத்தும்‌ சமயத்தில்‌ பணம்‌ செலுத்தும்‌ பற்றுச்சீட்டு ஒன்றை வழங்க வேண்டும்‌. (4) தொடர்ச்சியாக சரக்குகளை வழங்கும்‌ நேர்வில்‌, அடுத்தடுத்த கணக்குகள்‌ பற்றிய விவர அறிக்கைகளோ அல்லது அடுத்தடுத்த பணம்‌ செலுத்தங்களோ உள்ளாகிறவிடத்து, விலைப்பட்டியலானது, அத்தகைய விவர அறிக்கை ஒவ்வொன்றும்‌ வழங்குவதற்கு அல்லது, நேர்விற்கேற்ப அத்தகைய பண செலுத்தம்‌ ஒவ்வொன்றும்‌ பெறுவதற்கு முன்போ அல்லது அந்தச்‌ சமயத்திலோ வழங்கப்படுதல்‌ வேண்டும்‌. (5 (3-ஆம்‌ உட்பிரிவின்‌ (ஈ)-கூறின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, தொடர்ச்சியாக சேவைகள்‌ வழங்கும்‌ நேர்வில்‌,- (அ) பண செலுத்தத்திற்கான உரிய தேதியானது ஒப்பந்தத்திலிருந்து உறுதி செய்யத்தக்கதாக இருக்கிறவிடத்து, விலைப்பட்டியலானது, பணம்‌ செலுத்தியதற்கான உரிய தேதியன்றோ அதற்கு முன்போ வழங்கப்படுதல்‌ வேண்டும்‌; (ஆ) பணம்‌ செலுத்தியதற்கான உரிய தேதியானது ஒப்பந்தத்திலிருந்து உறுதி செய்யத்தக்கதாக இல்லாதவிடத்து, விலைப்பட்டியலானது, சேவை வழங்குநர்‌ பணம்‌ பெறுகிறபோது அதற்கு முன்போ அச்சமயத்திலோ வழங்கப்படுதல்‌ வேண்டும்‌; (ஐ) பணச்‌ செலுத்தமானது, நிகழ்வு ஒன்றின்‌ நிறைவுடன்‌ இணைக்கப்பட்டிருக்கிறவிடத்து, விலைப்பட்டியலானது, அந்த நிகழ்வு நிறைவடையும்‌ தேதியண்றோ அல்லது அதற்கு முன்போ வழங்கப்படுதல்‌ வேண்டும்‌. (6) சேவைகள்‌ வழங்குகையானது, ஒப்பந்தம்‌ ஒன்றின்கீழ்‌, வழங்குகை நிறைவடைவதற்கு முன்பு அற்றுப்போகும்‌ நேர்வில்‌, விலைப்பட்டியலானது, வழங்குகை அற்றுபோகும்‌ சமயத்தில்‌ வழங்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய விலைப்பட்டியலானது, அத்தகைய அற்று போதலுக்கு முன்பு செய்யப்பட்ட வழங்குகையின்‌ அளவிற்கு வழங்கப்படுதல்‌ வேண்டும்‌. (7) (1-ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, விற்பனைக்காகவோ அல்லது திருப்பியனுப்புவதற்காகவோ ஒப்புதல்‌ அளித்ததன்‌ பேரில்‌ அனுப்பிவைக்கப்படும்‌ அல்லது எடுத்துக்‌ கொள்ளப்படும்‌ சரக்குகள்‌ வழங்குகை நடப்பதற்கு முன்பு அகற்றப்படுகிறவிடத்து, விலைப்பட்டியலானது, வழங்குகைக்கு முன்பு அல்லது அச்சமயத்திலோ அல்லது அகற்றும்‌ தேதியிலிருந்து ஆறு மாதங்கள்‌, இவற்றில்‌ எது முன்னதோ, அன்று வழங்கப்படுதல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, "வரி விலைப்பட்டியல்‌" என்ற சொற்றொடர்‌, முந்தையதாகச்‌ செய்யப்பட்ட வழங்குகை ஒன்றைப்‌ பொறுத்து 65 வழங்குபவரால்‌ வழங்கப்படும்‌ திருத்தியமைக்கப்பட்ட விலைப்பட்டியல்‌ எதனையும்‌ உள்ளடக்குவதாகும்‌. 32. அனுமதியற்ற வரி வசூலிப்பைத்‌ தடை செய்தல்‌.- (1) பதிவு செய்யப்பட்டிராத நபராக உள்ள நபர்‌ ஒருவர்‌, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை எதனைப்‌ பொறுத்து, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரி என்ற வகையில்‌ தொகை எதுவும்‌ வசூலித்தல்‌ ஆகாது. (2) பதிவு செய்யப்பட்டிரத நபர்‌ எவரும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்படி அல்லாமல்‌ வரி வஞுலித்தல்‌ ஆகாது. 33. வரி விலைப்பட்டியலில்‌ மற்றும்‌ பிற ஆவணங்களில்‌ சுட்டிக்காட்டப்பட வேண்டிய வரித்‌ தொகை.- இந்தச்‌ சட்டத்தில்‌ அல்லது அந்த சமயத்தில்‌ நடைமுறையில்‌ உள்ள பிற சட்டம்‌ எதிலும்‌ என்ன அடங்கியிருப்பினும்‌, வழங்குகை எதுவும்‌ மறுபயன்‌ ஒன்றுக்காக செய்யப்படுகிறவிடத்து, அத்தகைய வழங்குகைக்காக வரி செலுத்துவதற்கு கடப்பாடுடைய ஒவ்வொரு நபரும்‌, வரிக்கணிப்புடன்‌ தொடர்புடைய அனைத்து ஆவணங்களிலும்‌, வரி விலைப்பட்டியலிலும்‌ மற்றும்‌ அது போன்ற பிற ஆவணங்களிலும்‌, அத்தகைய வழங்குகை எந்த விலையில்‌ செய்யப்படுகிறதோ அந்த விலையின்‌ பகுதியாக அமையும்‌ வரித்‌ தொகையினைத்‌ தெளிவாகச்‌ சுட்டிக்காட்டுதல்‌ வேண்டும்‌. 34. வரவு மற்றும்‌ பற்றுக்‌ குறிப்புகள்‌.- (1) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ எதனின்‌ வழங்குகைக்காக வரி விலைப்பட்டியல்‌ ஒன்று வழங்கப்பட்டு மற்றும்‌ அந்த வரி விலைப்பட்டியலில்‌ விதிக்கப்படும்‌ வரிவிதிக்கத்தக்க மதிப்போ அல்லது வரியோ, அத்தகைய வழங்குகை பொறுத்து செலுத்த வேண்டிய வரி விதிக்கத்தக்க மதிப்பிற்கு அல்லது வரிக்கு மேற்படுகிறது என காணப்படுகிறவிடத்து, அல்லது வழங்கப்பட்ட சரக்குகள்‌ பெறுநரால்‌ திருப்பியனுப்பப்படுகிறவிடத்து, அல்லது வழங்கப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டும்‌ குறைவாக இருப்பதாகக்‌ காணப்படுகிறவிடத்து, அத்தகைய சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டையும்‌ வழங்கிய பதிவு பெற்ற நபர்‌, பெறுநருக்கு வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய விவரங்கள்‌ அடங்கிய வரவுக்‌ குறிப்பு ஒன்றை வழங்கலாம்‌. (2) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை தொடர்பாக வரவுக்‌ குறிப்பு ஒன்றை வழங்கும்‌ பதிவு பெற்ற நபர்‌ எவரும்‌, அத்தகைய வரவுக்‌ குறிப்பு எந்த மாதத்தின்‌ போது வழங்கப்பட்டதோ அந்த மாதத்திற்கான அறிக்கையில்‌, ஆனால்‌ அத்தகைய வழங்குகை எந்த நிதியாண்டில்‌ செய்யப்பட்டதோ அந்த நிதியாண்டிற்கு அடுத்து வரும்‌ செப்டம்பர்‌ மாதத்திற்கு பிந்தாமல்‌, அல்லது தொடர்புற்ற ஆண்டறிக்கையை அளித்த தேதி, இவற்றில்‌ எது முன்னதோ, அந்தத்‌ 66 தேதியில்‌ அத்தகைய வரவுக்‌ குறிப்பின்‌ விவரங்களை விளம்புகை செய்தல்‌ வேண்டும்‌, மற்றும்‌ வரி கடப்பாடானது வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ சரிக்கட்டப்பட வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, அத்தகைய வழங்குகை மீதான வரி மற்றும்‌ வட்டியின்‌ நிகழ்வு பிற நபர்‌ எவருக்கும்‌ மாறிச்‌ சென்றிருக்கிறவிடத்து, வழங்குபவரின்‌ வெளியீட்டு வரி கடப்பாட்டில்‌ குறைப்பு எதுவும்‌ அனுமதிக்கப்படுதல்‌ ஆகாது. (3) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகைக்காக வரி விலைப்பட்டியல்‌ ஒன்று வழங்கப்பட்டிருந்து, அந்த வரி விலைப்பட்டியலில்‌ விதிக்கப்பட்ட வரி விதிக்கத்தக்க மதிப்போ அல்லது வரியோ அத்தகைய வழங்குகை பொறுத்து வரி விதிக்கத்தக்க மதிப்பை அல்லது வரியை விடக்‌ குறைவாக இருப்பது காணப்படுகிறவிடத்து, அத்தகைய சரக்குகளை அல்லது சேவைகளை அல்லது இரண்டையும்‌ வழங்கிய பதிவு பெற்ற நபர்‌, பெறுநருக்கு, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய விவரங்களை அடக்கியிருக்கும்‌ பற்றுக்‌ குறிப்பு ஒன்றை வழங்குதல்‌ வேண்டும்‌. (4) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை தொடர்பாக பற்றுக்‌ குறிப்பு ஒன்றை வழங்கும்‌ பதிவு பெற்ற நபர்‌ எவரும்‌, அத்தகைய பற்றுக்‌ குறிப்பு எந்த மாதத்தின்‌ போது வழங்கப்பட்டதோ அந்த மாதத்திற்கான அறிக்கையில்‌ அத்தகைய பற்றுக்‌ குறிப்பு பற்றிய விவரங்களை விளம்புகை செய்தல்‌ வேண்டும்‌, மற்றும்‌ வரி கடப்பாடானது வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ சரிக்கட்டப்பட வேண்டும்‌. விளக்கம்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, "பற்றுக்‌ குறிப்பு" என்ற சொற்றொடர்‌, ஒரு துணைநிலை விலைப்பட்டியலை உள்ளடக்கும்‌. அத்தியாயம்‌ Vi கணக்குகள்‌ மற்றும்‌ பதிவுருக்கள்‌. 35. கணக்குகளும்‌ பிற பதிவுருக்களும்‌.- (1) ஒவ்வொரு பதிவு பெற்ற நபரும்‌, பதிவுச்‌ சான்றிதழில்‌ குறிப்பிடப்பட்ட தம்‌ முதன்மை வணிக இடத்தில்‌, (அ) சரக்குகள்‌ தயாரிக்கப்பட்டது அல்லது உற்பத்தி செய்யப்பட்டது பற்றிய, (ஆ) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ உள்வரு மற்றும்‌ வெளிப்புற வழங்குகை பற்றிய, (க) சரக்குகள்‌ இருப்பு பற்றிய, (ஈ) துய்க்கப்பட்ட உள்ளீட்டு வரி வரவு பற்றிய, 67 (௨) செலுத்த வேண்டிய மற்றும்‌ செலுத்தப்பட்ட வெளியீட்டு வரி பற்றிய, மற்றும்‌ (ஊ) வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற விவரங்கள்‌ பற்றிய, ஓர்‌ உண்மையானதும்‌ மற்றும்‌ சரியானதுமான கணக்கை வைத்து வருதலும்‌ பேணிவருதலும்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, பதிவுச்‌ சான்றிதழில்‌ ஒன்றுக்கு மேற்பட்ட வணிக இடம்‌ குறித்துரைக்கப்பட்டிருக்கிறவிடத்து, ஒவ்வொரு வணிக இடம்‌ தொடர்பான கணக்குகளும்‌ அத்தகைய வணிக இடங்களில்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, பதிவு பெற்ற நபர்‌ அத்தகைய கணக்குகளையும்‌ பிற விவரங்களையும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ மின்னணு வடிவத்தில்‌ வைத்துப்‌ பேணி வரலாம்‌. (2) சரக்குகளை சேகரித்து வைப்பதற்காகப்‌ பயன்படும்‌ பண்டகசாலை அல்லது கிடங்கு அல்லது பிற இடம்‌ எதனின்‌ உரிமையாளர்‌ அல்லது இயக்குபவர்‌ ஒவ்வொருவரும்‌ மற்றும்‌ ஏற்றிச்‌ செல்பவர்‌ ஒவ்வொருவரும்‌, அவர்‌ ஒரு பதிவு பெற்ற நபராக இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதைப்‌ பொருட்படுத்தாமல்‌, சரக்கு அனுப்புபவர்‌, சரக்கு பெறுபவர்‌ மற்றும்‌ சரக்குகளின்‌ பிற தொடர்புற்ற விவரங்களின்‌ பதிவுருக்களை வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ பேணிவருதல்‌ வேண்டும்‌. (3) ஆணையர்‌, அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நோக்கத்திற்காக கூடுதல்‌ கணக்குகளை அல்லது ஆவணங்களைப்‌ பேணி வருவதற்கு வரிவிதிக்கத்தக்க நபர்களின்‌ வகையினை அறிவிக்கலாம்‌. (4) வரிவிதிக்கத்தக்க நபர்களின்‌ வகையினர்‌ எவரும்‌, இந்தப்‌ பிரிவின்‌ வகைமுறைகளின்படி கணக்குகளை வைத்துப்‌ பேணி வரும்‌ நிலையில்‌ இல்லை என்று ஆணையர்‌ கருதுகிறவிடத்து, அவர்‌ எழுத்து வடிவில்‌ பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக அத்தகைய வரிவிதிக்கத்தக்க நபர்களின்‌ வகையினரை வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ கணக்குகளைப்‌ பேணி வருவதற்கு அனுமதிக்கலாம்‌. (5) நிதியாண்டு ஒன்றின்‌ போது தம்‌ விற்பனை அளவு வகுத்துரைக்கப்பட்ட வரம்புக்கு மேற்படுகிற பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, தம்‌ கணக்குகள்‌ பட்டயக்‌ கணக்கர்‌ ஒருவராலோ அல்லது விலை மதிப்பீட்டுக்‌ கணக்கர்‌ ஒருவராலோ தணிக்கை செய்யப்பட்டு பெறுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ தணிக்கை செய்யப்பட்ட ஆண்டுக்‌ கணக்குகள்‌, 44-ஆம்‌ பிரிவின்‌ (2)-ஆம்‌ உட்பிரிவின்கழான இணக்க 68 விவர அறிக்கை மற்றும்‌ அத்தகைய பிற ஆவணங்கள்‌ ஆகியவற்றின்‌ நகலை வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ முறையிலும்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌. (6) 17-ஆம்‌ பிரிவின்‌ (5-ஆம்‌ உட்பிரிவின்‌ (ஏ)-கூறின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு, (1)-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளின்படி பதிவு பெற்ற நபர்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டிற்கான கணக்குக்‌ கொடுப்பதற்குத்‌ தவறுகிறவிடத்து, உரிய அலுவலர்‌, கணக்குக்‌ கொடுக்காத அந்த சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ மீது செலுத்த வேண்டிய வரித்‌ தொகையினை, அத்தகைய சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டும்‌ அத்தகைய நபரால்‌ வழங்கப்பட்டிருந்தாற்போன்று தீர்மானித்தல்‌ வேண்டும்‌, மற்றும்‌ 73-ஆம்‌ பிரிவின்‌ அல்லது, நேர்விற்கேற்ப, 74-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகள்‌, அத்தகைய வரியைத்‌ தீர்மானிப்பதற்கு, தேவையான மாற்றங்களோடு, பொருந்துதல்‌ வேண்டும்‌. 36. கணக்குகளை நிறுத்தி வைத்துக்‌ கொள்வதற்கான கால அளவு.-- 35-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளின்படி கணக்குப்‌ புத்தகங்களோ பிற பதிவுருக்களோ வைத்து பேணி வருவதற்கு வேண்டுறுத்தப்பட்டுள்ள பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, அத்தகைய கணக்குகளுக்கும்‌ பதிவுருக்களுக்கும்‌ தொடர்புடைய ஆண்டிற்கான ஆண்டறிக்கை வழங்குவதற்கான உரிய தேதியிலிருந்து எழுபத்திரண்டு மாதங்கள்‌ காலாவதியாகும்‌ வரையில்‌ அவற்றை நிறுத்தி வைத்துக்‌ கொள்ளுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அல்லது சீராய்வு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌ அல்லது நீதிமன்றம்‌ எதன்‌ முன்பும்‌ உள்ள மேல்முறையீடு அல்லது சீராய்வு அல்லது பிற நடவடிக்கைகள்‌ ஒன்றுக்குத்‌ தரப்பினராக இருக்கும்‌, பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌, தம்மாலோ அல்லது ஆணையராலோ தாக்கல்‌ செய்யப்பட்டிருப்பினும்‌, அல்லது அத்தியாயம்‌ XIX— இன்படியான குற்றச்செயல்‌ ஒன்றுக்காக புலனாய்வில்‌ இருப்பினும்‌, அத்தகைய மேல்முறையீடு அல்லது சீராய்வு அல்லது நடவடிக்கைகள்‌ அல்லது புலனாய்வு பற்றிய உறுபொருளுக்குத்‌ தொடர்புள்ள கணக்குப்‌ புத்தகங்களையும்‌ மற்றும்‌ பிற பதிவுருக்களையும்‌, அத்தகைய மேல்முறையீடு அல்லது சீராய்வு அல்லது நடவடிக்கைகள்‌ அல்லது புலனாய்வு இறுதியாகத்‌ தீர்வான பின்பு ஓர்‌ ஆண்டு கால அளவிற்கு அல்லது மேலே குறித்துரைக்கப்பட்டுள்ள கால அளவிற்கு, இவற்றில்‌ எது பிந்தையதோ, அந்தக்‌ கால அளவிற்கு நிறுத்தி வைத்தல்‌ வேண்டும்‌. 69 அத்தியாயம்‌ 1X அறிக்கைகள்‌. 37. வெளிப்புற வழங்குகைகள்‌ பற்றிய விவரங்களை அளித்தல்‌.- (1) ஓர்‌ உள்ளீட்டு சேவை விநியோகிப்பவராக, ஒரு குடியிராத வரிவிதிக்கத்தக்க நபரும்‌ மற்றும்‌ 1௦-ஆம்‌ பிரிவின்‌: அல்லது 51-ஆம்‌ பிரிவின்‌: அல்லது 52-ஆம்‌ பிரிவின்‌. வகைமுறைகளின்கீழ்‌ வரி செலுத்தும்‌ நபராக அல்லாத பிற பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, வரிவிதிப்புக்‌ கால அளவின்போது செயற்படுத்தப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வெளிப்புற வழங்குகைகள்‌ பற்றிய விவரங்களை மேற்சொன்ன வரிவிதிப்புக்‌ கால அளவுக்கு அடுத்துவரும்‌ மாதத்தின்‌ பத்தாம்‌ நாளன்றோ அதற்கு முன்போ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ முறையிலும்‌ மின்னணுவில்‌ அளித்தல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அத்தகைய விவரங்கள்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய காலத்திற்குள்ளும்‌ மற்றும்‌ அத்தகைய முறையிலும்‌ மேற்சொன்ன வழங்குகைகளைப்‌ பெறுபவருக்குத்‌ தெரிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, பதிவு பெற்ற நபர்‌, வரிவிதிப்புக்‌ கால அளவுக்கு அடுத்துவரும்‌ மாதத்தின்‌ பதினோராம்‌ நாளிலிருந்து பதினைந்தாம்‌ நாள்‌ வரையிலான கால அளவின்போது வெளிப்புற வழங்குகைகள்‌ பற்றிய விவரங்களை அளிப்பதற்கு அனுமதிக்கப்படுதல்‌ ஆகாது: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, ஆணையர்‌ எழுத்து வடிவில்‌ பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக, அறிவிக்கை வாயிலாக, அதில்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய வகை வரிவிதிக்கத்தக்க நபர்களுக்கு, அத்தகைய விவரங்களை அளிப்பதற்கான கால வரம்பினை நீட்டிக்கலாம்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, மைய வரி ஆணையரால்‌ அறிவிக்கை செய்யப்பட்ட கால வரம்பு நீட்டிப்பு எதுவும்‌ ஆணையரால்‌ அறிவிக்கை செய்யப்பட்டிருப்பதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (2) 38-ஆம்‌ பிரிவின்‌ 3-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ விவரங்களோ அல்லது 38- ஆம்‌ பிரிவின்‌ (4)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ உள்ளீட்டு சேவை விநியோகிப்பவரின்‌ உள்வரு வழங்குகைகள்‌ தொடர்பான விவரங்களோ தெரிவிக்கப்பட்டிருக்கும்‌ பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, வரிவிதிப்பு கால அளவுக்கு அடுத்துவரும்‌ மாதத்தின்‌ பதினேழாம்‌ நாளன்றோ அதற்கு முன்போ ஆனால்‌ பதினைந்தாம்‌ நாளுக்கு முன்பு அல்லாமல்‌, அவ்வாறு தெரிவிக்கப்பட்ட விவரங்களை ஏற்கவோ அல்லது மறுக்கவோ வேண்டும்‌, மற்றும்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அவரால்‌ அளிக்கப்பட்ட விவரங்கள்‌ அதன்படியே திருத்தம்‌ செய்யப்பட்டு இருக்கும்‌. (3) வரிவிதிப்புக்‌ காலஅளவு எதற்காகவும்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ விவரங்களை அளித்து, அவை 42-ஆம்‌ பிரிவின்௧ழோ அல்லது 43-ஆம்‌ பிரிவின்கழோ ஒத்திசைவு செய்யப்படாமல்‌ இருக்கும்‌ விவரங்களை அளித்திருக்கும்‌, பதிவு பெற்ற நபர்‌ எவரும்‌, அதனில்‌ பிழை அல்லது விடுகை எதுவும்‌ 70 கண்டுபிடிக்கப்படுவதன்‌ பேரில்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ அத்தகைய பிழையை அல்லது விடுகையை சரி செய்தல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அத்தகைய பிழை அல்லது விடுகையின்‌ காரணமாக வரி குறைத்து செலுத்தப்பட்டிருக்கும்‌ நேர்வில்‌, அத்தகைய வரிவிதிப்பு கால அளவுக்கு அளிக்கப்பட வேண்டிய அறிக்கையில்‌, வரி மற்றும்‌ வட்டி எதுவுமிருப்பின்‌ அதனைச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அளிக்கப்பட்ட விவரங்களைப்‌ பொறுத்த பிழை அல்லது விடுகையினை சரிசெய்வது எதுவும்‌, அத்தகைய விவரங்கள்‌ எந்த நிதியாண்டுக்கு தொடர்புடையதோ அந்த நிதியாண்டின்‌ முடிவினைத்‌ தொடர்ந்து வரும்‌ செப்டம்பர்‌ மாதத்திற்காக 39-ஆம்‌ பிரிவிண்கீழான அறிக்கையை அளித்த பின்பு அல்லது தொடர்புற்ற ஆண்டறிக்கையை அளித்த பின்பு, இவற்றில்‌ எது முண்னதோ அதற்குப்‌ பின்பு அனுமதிக்கப்படுதல்‌ ஆகாது. விளக்கம்‌.- இந்த அத்தியாயத்தின்‌ நோக்கங்களுக்காக, "வெளிப்புற வழங்குகைகளின்‌ விவரங்கள்‌" என்ற சொற்றொடர்‌, வரிவிதிப்புக்‌ கால அளவு எதன்‌ போதும்‌ செய்யப்பட்ட வெளிப்புற வழங்குகையைப்‌ பொறுத்து வழங்கப்படும்‌ விலைப்பட்டியல்கள்‌, பற்றுக்‌ குறிப்புகள்‌, வாவு குறிப்புகள்‌ மற்றும்‌ திருத்தியமைக்கப்பட்ட விலைப்பட்டியல்களின்‌ விவரங்களை உள்ளடக்கும்‌. 38. உள்வரு வழங்குகைகள்‌ பற்றிய விவரங்களை அளித்தல்‌. (1) ஓர்‌ உள்ளீட்டுச்‌ சேவை விநியோகிப்பவராக அல்லது ஒரு குடியிராத வரிவிதிக்கத்தக்க நபராக அல்லது 10-ஆம்‌ பிரிவின்‌ அல்லது 51-ஆம்‌ பிரிவின்‌ அல்லது 52-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளின்கீழ்‌ வரி செலுத்தும்‌ நபராக அல்லாத பிற பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, தம்‌ உள்வரு வழங்குகைகளின்‌ மற்றும்‌ வரவு அல்லது பற்றுக்‌ குறிப்புகளின்‌ விவரங்களைத்‌ தயாறிப்பதற்கு 37-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அனுப்பப்பட்டிருக்கும்‌ வெளிப்புற வழங்குகைகள்‌ மற்றும்‌ வரவு அல்லது பற்றுக்‌ குறிப்புகள்‌ தொடர்பான விவரங்களை, தேவைப்படுமானால்‌, சரிபார்த்தல்‌, செல்லுந்தன்மையாக்குதல்‌, மாற்றியமைத்தல்‌ அல்லது நீக்கியகற்றுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதில்‌, 37-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவினண்கீழ்‌ வழங்குபவரால்‌ விளம்புகை செய்யப்பட்டிராத அத்தகைய வழங்குகைகள்‌ பொறுத்து தம்மால்‌ பெறப்பட்ட உள்வரு வழங்குகைகள்‌ மற்றும்‌ வரவு அல்லது பற்றுக்‌ குறிப்புகளின்‌ விவரங்களை உள்ளடக்கலாம்‌. (2) ஓர்‌ உள்ளிட்டு சேவை விநியோகிப்பவராக அல்லது ஒரு குடியிராத வரிவிதிக்கத்தக்க நபராக அல்லது 10-ஆம்‌ பிரிவின்‌ அல்லது 51-ஆம்‌ பிரிவின்‌ அல்லது 52-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளின்கீழ்‌ வரி செலுத்தும்‌ ஒரு நபராக அல்லாத பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ எதிரிடைக்‌ கட்டண அடிப்படையில்‌ வரி செலுத்தப்பட வேண்டிய சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ உள்வரு வழங்குகைகள்‌ மற்றும்‌ ஒருங்கிணைக்கப்பட்ட 71 சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ வரிவிதிக்க வேண்டிய அல்லது 1975-ஆம்‌ ஆண்டு சுங்க வரிக்‌ கட்டணச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 51/1975) 3- ஆம்‌ பிரிவின்கீழ்‌ ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி செலுத்தப்பட வேண்டிய சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ உள்வரு வழங்குகைகள்‌ உள்ளடங்கலாக வரிவிதிக்கத்தக்க சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ உள்வரு வழங்குகைகளின்‌ விவரங்களையும்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ முறையிலும்‌ வரிவிதிப்புக்‌ கால அளவிற்கு அடுத்து வரும்‌ மாதத்தின்‌ பத்தாம்‌ நாளுக்குப்‌ பின்பு ஆனால்‌ பதினைந்தாம்‌ நாளின்‌ அல்லது அதற்கு முன்போ உள்ள வரிவிதிப்புக்‌ கால அளவு ஒன்றின்போது அத்தகைய வழங்குகைகள்‌ பொறுத்து பெறப்பட்ட வரவு அல்லது பற்றுக்‌ குறிப்புகளின்‌ விவரங்களையும்‌ மின்னணுவியலாக அளித்தல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, ஆணையர்‌, எழுத்து வடிவில்‌ பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக, அறிவிக்கை வாயிலாக, அதில்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய வகை வரிவிதிக்கத்தக்க நபர்களுக்கு அத்தகைய விவரங்களை அளிப்பதற்கான கால வரம்பினை நீட்டிக்கலாம்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, மைய வரி ஆணையரால்‌ அறிவிக்கை செய்யப்பட்ட கால வரம்பு நீட்டிப்பு எதுவும்‌ ஆணையரால்‌ அறிவிக்கை செய்யப்பட்டிருப்பதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (3) (2-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பெறுநரால்‌ மாற்றியமைக்கப்பட்ட, நீக்கியகற்றப்பட்ட அல்லது உள்ளடக்கப்பட்ட மற்றும்‌ அளிக்கப்பட்ட வழங்குகைகள்‌ பற்றிய விவரங்கள்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையிலும்‌ அத்தகைய காலத்திற்குள்ளும்‌ தொடர்புள்ள வழங்குநருக்குத்‌ தெரிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (4) 39-ஆம்‌ பிரிவின்‌ (2)-ஆம்‌ உட்பிரிவின்&ழோ அல்லது (4)-ஆம்‌ உட்பிரிவின்கழோ அளிக்கப்பட்ட அறிக்கையில்‌ பெறுநரால்‌ மாற்றியமைக்கப்பட்ட, நீக்கியகற்றப்பட்ட அல்லது உள்ளடக்கப்பட்ட வழங்குகைகள்‌ பற்றிய விவரங்கள்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையிலும்‌ அத்தகைய காலத்திற்குள்ளும்‌ தொடர்புள்ள வழங்குநருக்குத்‌ தெரிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (5) விவிதிப்புக்‌ கால அளவு எதற்காகவும்‌ (2)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ விவரங்களை அளித்து, அவை 42-ஆம்‌ பிரிவின்௧ழோ அல்லது 43-ஆம்‌ பிரிவின்கழோ ஒத்திசைவு செய்யப்படாமல்‌ இருந்திருக்கும்‌ விவரங்களை அளித்திருக்கும்‌, பதிவு பெற்ற நபர்‌ எவரும்‌, அதனில்‌ பிழை அல்லது விடுகை எதுவும்‌ கண்டுபிடிக்கப்படுவதன்‌ பேரில்‌, அத்தகைய பிழையோ அல்லது விடுகையோ எந்த வரிவிதிப்புக்‌ கால அளவின்போது அறியப்பட்டுள்ளதோ அந்த வரிவிதிப்புக்‌ கால அளவின்போது வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ அத்தகைய பிழை அல்லது விடுகையைச்‌ சரி செய்தல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அத்தகைய பிழை அல்லது 72 விடுகையின்‌ காரணமாக வரி குறைவாக செலுத்தப்பட்டிருக்கும்‌ நேர்வில்‌, அத்தகைய வரிவிதிப்புக்‌ கால அளவிற்காக அளிக்கப்பட வேண்டிய அறிக்கையில்‌, வரி மற்றும்‌ வட்டி எதுவுமிருப்பின்‌, அதனைச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, (2)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அளிக்கப்பட்ட விவரங்களைப்‌ பொறுத்து பிழை அல்லது விடுகையினை சரி செய்வது எதுவும்‌, அத்தகைய விவரங்கள்‌ எந்த நிதியாண்டுக்கு தொடர்புடையதோ அந்த நிதியாண்டின்‌ முடிவினைத்‌ தொடர்ந்து வரும்‌ செப்டம்பர்‌ மாதத்திற்கான 39-ஆம்‌ பிரிவின்கீழான அறிக்கையை அளித்த பின்பு, அல்லது தொடர்புற்ற ஆண்டறிக்கையினை அளித்த பின்பு, இவற்றில்‌ எது முண்னதோ, அதற்குப்‌ பின்பு அனுமதிக்கப்படுதல்‌ ஆகாது. 39. அறிக்கைகள்‌ அளித்தல்‌.-- (1) ஓர்‌ உள்ளிட்டுச்‌ சேவை விநியோகிப்பவராக அல்லது ஒரு குடியிராத வரிவிதிக்கத்தக்க நபராக அல்லது 10-ஆம்‌ பிரிவின்‌ அல்லது 51-ஆம்‌ பிரிவின்‌ அல்லது 52-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளின்கீழ்‌ வரி செலுத்துகிற நபராக அல்லாத, பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும்‌ அல்லது அதன்‌ பகுதிக்கும்‌, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது அவை இரண்டின்‌ உள்வரு மற்றும்‌ வெளிப்புற வழங்குகைகள்‌, துய்க்கப்பட்ட உள்ளீட்டு வரி வரவு, செலுத்த வேண்டிய வரி, செலுத்தப்பட்ட வரி மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற விவரங்கள்‌ ஆகியவற்றை, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்தில்‌ மற்றும்‌ முறையில்‌ அத்தகைய ஆங்கில மாதத்திற்கு அல்லது அதன்‌ பகுதிக்கு அடுத்து வரும்‌ மாதத்தின்‌ பன்னிரண்டாம்‌ நாளன்றோ அல்லது அதற்கு முன்போ, அறிக்கை ஒன்றை மின்னணுவியலாக அளித்தல்‌ வேண்டும்‌. (2) 10-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளின்கீழ்‌ வரி செலுத்தும்‌ பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌, ஒவ்வொரு காலாண்டிற்கும்‌ அல்லது அதன்‌ பகுதிக்கும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ முறையிலும்‌, மாநிலத்தில்‌ விற்பனை அளவு, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ உள்வரு வழங்குகைகள்‌, செலுத்த வேண்டிய வரி மற்றும்‌ செலுத்தப்பட்ட வரி விவரங்களை, மின்னணுவியலாக, அறிக்கை ஒன்றில்‌, அத்தகைய காலாண்டின்‌ முடிவுக்குப்‌ பின்பு பதினெட்டு நாட்களுக்குள்‌, அளித்தல்‌ வேண்டும்‌. (3) 54-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளின்கீழ்‌ ஆதாரத்திலிருந்து வரி பிடித்தம்‌ செய்ய வேண்டுறுத்தப்பட்டுள்ள பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ முறையிலும்‌, அத்தகைய பிடித்தம்‌ செய்தல்கள்‌ எந்த மாதத்தில்‌ செய்யப்பட்டிருக்கின்றனவோ அந்த மாதத்தின்‌ முடிவிற்குப்‌ பின்பு பத்து நாட்களுக்குள்‌, மின்ணணுவியலாக அறிக்கை ஒன்றை அளித்தல்‌ வேண்டும்‌. (4) ஓர்‌ உள்ளீட்டுச்‌ சேவை விநியோகிப்பவராகப்‌ பதிவு பெற்ற வரிவிதிப்பிற்கு உள்ளாகும்‌ நபர்‌ ஒவ்வொருவரும்‌, ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும்‌ அல்லது அதன்‌ 73 பகுதிக்கும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ முறையிலும்‌, அத்தகைய மாதத்தின்‌ முடிவுக்குப்‌ பின்பு பதிமூன்று நாட்களுக்குள்‌, மின்னணுவியலாக, அறிக்கை ஒன்றை அளித்தல்‌ வேண்டும்‌. (5) ஒவ்வொரு பதிவு பெற்ற குடியிராத வரிவிதிக்கத்தக்க நபரும்‌, ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும்‌ அல்லது அதன்‌ பகுதிக்கும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ முறையிலும்‌, ஆங்கில மாதம்‌ ஒன்றின்‌ முடிவுக்குப்‌ பின்பு இருபது நாட்களுக்குள்‌ அல்லது 27-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள பதிவுக்‌ கால அளவின்‌ கடைசி நாளுக்குப்‌ பின்பு ஏழு நாட்களுக்குள்‌, இவற்றில்‌ எது முண்னதோ அதற்குள்‌, மிண்ணணுவியலாக அறிக்கை ஒன்றை அளித்தல்‌ வேண்டும்‌. (6) ஆணையர்‌, எழுத்து வடிவில்‌ பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக, அறிவிக்கை வாயிலாக, அதில்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய வகை பதிவு பெற்ற நபர்களுக்கு, இந்தப்‌ பிரிவின்கீழ்‌ அறிக்கைகள்‌ அளிப்பதற்கான கால வரம்பினை நீட்டிக்கலாம்‌: வரம்புரை: ஆனால்‌, மைய வரி ஆணையரால்‌ அறிவிக்கையிடப்படும்‌ கால வரம்பு நீட்டிப்பு எதுவும்‌ ஆணையரால்‌ அறிவிக்கை செய்யப்பட்டிருப்பதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (7) (1-ஆம்‌ உட்பிரிவின்&கழோ அல்லது (2)-ஆம்‌ உட்பிரிவின்கழோ அல்லது (3-ஆம்‌ உட்பிரிவின்௧ழோ அல்லது (5)-ஆம்‌ உட்பிரிவின்௧ழோ அறிக்கை ஒன்றை அளிக்க வேண்டுறுத்தப்பட்டிருக்கும்‌ பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, அத்தகைய அறிக்கைக்கு இணங்க செலுத்த வேண்டிய வரியினை, அத்தகைய அறிக்கையை அளிப்பதற்கு அவர்‌ வேண்டுறுத்தப்பட்டுள்ள கடைசி தேதிக்கு முன்னர்‌, அரசுக்கு செலுத்துதல்‌ வேண்டும்‌. (8) (௫-ஆம்‌ உட்பிரிவின்£ழோ அல்லது (2)-ஆம்‌ உட்பிரிவின்கழோ அறிக்கை ஒன்றை அளிக்க வேண்டுறுத்தப்பட்டுள்ள பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, வரிவிதிப்புக்‌ கால அளவு ஒவ்வொன்றுக்கும்‌, அத்தகைய கால அளவின்போது சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகைகள்‌ எவையும்‌ செய்யப்பட்டிருப்பினும்‌ அல்லது இல்லாவிடினும்‌ அறிக்கை ஒன்றை அளித்தல்‌ வேண்டும்‌. (9) 37 மற்றும்‌ 38-ஆம்‌ பிரிவுகளின்‌ வகைமுறைகளுக்குட்பட்டு, (1)-ஆம்‌ உட்பிரிவின்கழோ அல்லது (2)-ஆம்‌ உட்பிரிவின்£௧ழோ அல்லது (3)-ஆம்‌ உட்பிரிவின்கழோ அல்லது (4)-ஆம்‌ உட்பிரிவின்£௧ழோ அல்லது (5)-ஆம்‌ உட்பிரிவின்கழோ அறிக்கை ஒன்றை அளித்த பின்பு பதிவு பெற்ற நபர்‌ எவரும்‌, அதில்‌ வரிவிதிப்பு அதிகார அமைப்புகளாலான நுண்ணாய்வு, தணிக்கை, ஆய்வு அல்லது அமலாக்க நடவடிக்கையினால்‌ அல்லாமல்‌ பிறவாறாக விடுகை அல்லது சரியில்லாத விவரங்கள்‌ எவையும்‌ கண்டுபிடிப்பாராயின்‌, அவர்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வட்டி செலுத்துவதற்குட்பட்டு, அத்தகைய விடுகை அல்லது சரியில்லாத விவரங்கள்‌ எந்த மாதத்தின்‌ போது அல்லது காலாண்டின்‌ போது அறியப்பட்டனவோ அந்த 74 மாதத்திற்கான அல்லது காலண்டிற்காக அளிக்கப்படவுள்ள அறிக்கையில்‌ விடுகையை அல்லது சரியில்லாத விவரங்களை சரிசெய்தல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, அத்தகைய விடுகை அல்லது சரியில்லாத விவரங்களை அவ்வாறு சரிசெய்வதானது செப்டம்பர்‌ மாதத்திற்கான அல்லது நிதியாண்டுக்கு அடுத்து வரும்‌ இரண்டாம்‌ காலாண்டுக்கான அறிக்கையை அளிப்பதற்கான உரிய தேதி, அல்லது தொடர்புள்ள ஆண்டறிக்கையை அளிப்பதற்கான உள்ளபடியேயான தேதி, இவற்றில்‌ எது முன்னதோ, அந்த தேதிக்குப்‌ பின்பு அனுமதிக்கப்படுதல்‌ ஆகாது. (1௦) பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌, முந்தைய வரிவிதிப்பு கால அளவில்‌ எதற்காகவும்‌ அவரால்‌ அறிக்கை அளிக்கப்படாமல்‌ இருக்குமாயின்‌, வரிவிதிப்புக்‌ கால அளவு ஒன்றுக்கு அறிக்கையளிப்பதற்கு அனுமதிக்கப்படுதல்‌ ஆகாது. 40. முதல்‌ அறிக்கை.- பதிவு செய்வதற்கு உள்ளான தேதி முதல்‌ பதிவு வழங்கப்பட்டிருக்கும்‌ தேதி வரையிலும்‌ உள்ள இடைப்பட்ட கால அளவில்‌ வெளிப்புற வழங்குகைகள்‌ செய்திருக்கும்‌ பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, பதிவு வழங்கிய பின்பு அவரால்‌ அளிக்கப்படும்‌ முதல்‌ அறிக்கையில்‌ அதனை விளம்புகை செய்தல்‌ வேண்டும்‌. 41. உள்ளீட்டு வரி வரவுக்கான கோரிக்கையும்‌ மற்றும்‌ அதனைத்‌ தற்காலிகமாக ஏற்றலும்‌.- (1) பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கும்‌ மற்றும்‌ கட்டுப்பாடுகளுக்கும்‌ உட்பட்டு, தம்‌ அறிக்கையில்‌ சுய வரிக்கணிப்பாக செய்யப்பட்ட, உள்ளிட்டு வரி வரவினை எடுத்துக்‌ கொள்வதற்கு உரிமையுடையவர்‌ ஆவார்‌, மற்றும்‌ அத்தகைய தொகையானது அவருடைய மின்னணு வரவுப்‌ பேரேட்டில்‌ தற்காலிகமானதொரு அடிப்படையில்‌ வரவு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2 ௫-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள வரவானது, மேற்சொன்ன உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள அறிக்கைக்கு இணங்க சுய வரிக்கணிப்பு செய்யப்பட்ட வெளியீட்டு வரி செலுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 42. உள்ளீட்டு வரி வரவினை ஒத்திசைவு செய்தல்‌, எதிர்மாறாக்குதல்‌ மற்றும்‌ மீளக்‌ கோருதல்‌.- (1) வரிவிதிப்பு கால அளவு ஒன்றுக்காக (இதன்பின்பு இந்தப்‌ பிரிவில்‌ "பெறுநர்‌" என குறிப்பிடப்படும்‌) பதிவு பெற்ற நபர்‌ ஒருவரால்‌ அளிக்கப்பட்ட உள்வரு வழங்குகை ஒவ்வொன்றின்‌ விவரங்களும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையிலும்‌ மற்றும்‌ அத்தகைய காலத்திற்குள்ளும்‌ பின்வருவனவற்றுக்கு ஒத்திசைவு செய்யப்படுதல்‌ வேண்டும்‌- (அ) அதே வரிவிதிப்பு கால அளவுக்கான அல்லது முந்தைய வரிவிதிப்புக்‌ கால அளவுக்கான தம்‌ செல்லுந்தன்மையுள்ள அறிக்கையில்‌ (இதன்பின்பு இந்தப்‌ பிரிவில்‌ "வழங்குநர்‌" என குறிப்பிடப்படும்‌) நேரிணையான பதிவு பெற்ற நபரால்‌ அளிக்கப்பட்ட வெளிப்புற வழங்குகையின்‌ நேரிணையான விவரங்களுடனும்‌; 75 (ஆ) தம்மால்‌ இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள்‌ பொறுத்து, 1975-ஆம்‌ ஆண்டு சுங்க வரிக்‌ கட்டணச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 511975) 3-ஆம்‌ பிரிவின்கீழ்‌ செலுத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரியுடனும்‌; மற்றும்‌ (க) கூட்டிப்பில்‌ கோரப்பட்ட உள்ளீட்டு வரி வரவுடன்‌. (2) இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள்‌ பொறுத்து நேரிணையான வெளிப்புற வழங்குகைகளின்‌ விவரங்களுடன்‌ அல்லது 1975-ஆம்‌ ஆண்டு சுங்க வரிக்‌ கட்டணச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 511975) 3-ஆம்‌ பிரிவின்கீழ்‌ செலுத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரியுடன்‌ ஒத்திசைவாகும்‌ உள்வரு வழங்கல்‌ தொடர்பான விலைப்பட்டியல்கள்‌ அல்லது பற்றுக்‌ குறிப்புகள்‌ பொறுத்த உள்ளீட்டு வரி வரவுக்கான கோரிக்கையானது இறுதியாக ஏற்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய ஏற்கப்படுதலானது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌, பெறுநருக்குத்‌ தெரிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) உள்வரு வழங்குகை ஒன்றைப்‌ பொறுத்து பெறுநரால்‌ கோரப்படும்‌ உள்ளிட்டு வரி வரவானது அதே வழங்குகைக்கு அல்லது வெளிப்புற வழங்குகை தம்‌ செல்லுந்தன்மையுள்ள அறிக்கையில்‌ வழங்குபவரால்‌ விளம்புகை செய்யப்படாத அந்த வழங்குகைக்கு மிகையாக இருக்கிறது என்று வழங்குநரால்‌ விளம்பப்படுகிறவிடத்து, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ அத்தகைய நபர்கள்‌ இருவருக்கும்‌ முரண்பாடானது தெரிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (4) இரட்டிப்பாக கோரப்பட்ட உள்ளீட்டு வரி வரவானது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ பெறுநருக்குத்‌ தெரிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (5) (3-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ முரண்பாடு எதுவும்‌ தொகை பொறுத்து தெரிவிக்கப்பட்டு. அது முரண்பாடு தெரிவிக்கப்பட்ட மாதத்திற்கான தம்‌ செல்லுந்தன்மையுள்ள அறிக்கையில்‌ வழங்குபவரால்‌ சரி செய்யப்படவில்லையானால்‌ அந்தத்‌ தொகையானது பெறுநரின்‌ வெளிப்புற வரி செலுத்தும்‌ கடப்பாடுடன்‌, அந்த முரண்பாடு எந்த மாதத்தில்‌ தெரிவிக்கப்படுகிறதோ அந்த மாதத்திற்கு அடுத்து வரும்‌ மாதத்திற்கான அறிக்கையில்‌, சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌. (6) கூட்டிப்பு கோரிக்கைகளின்‌ காரணமாக மிகைப்படுவதாகக்‌ காணப்படும்‌ உள்ளிட்டு வரிவரவாக கோரப்படும்‌ தொகையானது, அந்த இரட்டிப்பு எந்த மாதத்தில்‌ தெரிவிக்கப்படுகிறதோ அந்த மாதத்திற்கான அறிக்கையில்‌ பெறுநரின்‌ வெளிப்புற வரி செலுத்தும்‌ பொறுப்புடன்‌ சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌. (7) பெறுநர்‌, தம்‌ வெளிப்புற வரிவிதிப்புப்‌ கடப்பாடிலிருந்து, (5)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ சேர்க்கப்பட்ட தொகையினை வழங்குபவர்‌, 39-ஆம்‌ பிரிவின்‌ (9)- ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள்‌ தம்‌ செல்லுந்தண்மையுள்ள 76 அறிக்கையில்‌ விலைப்பட்டியலின்‌ அல்லது பற்றுக்‌ குறிப்பின்‌ விவரங்களை விளம்புகை செய்வாரானால்‌, கழித்துக்கொள்வதற்குத்‌ தகுதியுடையவர்‌ ஆவார்‌. (8) பெறுநரின்‌ வெளியீட்டு வரி கடப்பாட்டில்‌ (5-ஆம்‌ உட்பிரிவின்கழோ அல்லது (6)-ஆம்‌ உட்பிரிவின்௧ழோ தொகை எதுவும சேர்க்கப்பட்டிருந்தால்‌, அந்த பெறுநர்‌ வரவைப்‌ துய்த்துக்கொண்ட தேதியிலிருந்து மேற்சொன்ன உட்பிரிவுகளின்‌ நேரிணையான சேர்ப்புகள்‌ செய்யப்படும்‌ வரையில்‌ அவ்வாறு சேர்க்கப்பட்ட தொகை மீது 50-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள விதத்தில்‌ வட்டி செலுத்துவதற்கு உள்ளாதல்‌ வேண்டும்‌. (9) வெளியீட்டு வரிக்‌ கடப்பாட்டில்‌ குறைப்பு எதுவும்‌ (7)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ ஏற்றுக்கொள்ளப்படுகிறவிடத்து, (8)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ செலுத்தப்பட்ட வரியானது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ பெறுநரின்‌ மின்னணு பணப்‌ பேரேட்டின்‌ நேரிணையான தலைப்பில்‌ அந்தத்‌ தொகை வரவு வைக்கப்பட்டு பெறுநருக்குத்‌ திருப்பிக்‌ கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, எந்த நேர்விலும்‌ வரவு வைக்கப்பட வேண்டிய வட்டித்‌ தொகையானது வழங்குபவரால்‌ செலுத்தப்படும்‌ வட்டித்‌ தொகைக்கு மேற்படுதல்‌ ஆகாது. (1௦) (7-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளை மீறி வெளியீட்டு வரி கடப்பாடிலிருந்து குறைக்கப்படும்‌ தொகையானது, அத்தகைய மீறுகை எந்த மாதத்தில்‌ இடம்‌ பெறுகிறதோ அந்த மாதத்திற்கான பெறுநரின்‌ அறிக்கையில்‌ பெறுநரின்‌ வெளியீட்டு வரி கடப்பாட்டூடன்‌ சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய பெறுநர்‌, அவ்வாறு சேர்க்கப்பட்ட தொகை மீது 50-ஆம்‌ பிரிவின்‌ (3)-ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள வீதத்தில்‌ வரி செலுத்துவதற்கு உள்ளாதல்‌ வேண்டும்‌. 43. ஒத்திசைவு, திருப்புதல்‌ மற்றும்‌ வெளியீட்டு வரி கடப்பாட்டில்‌ குறைப்பிணை திரும்பப்‌ பெறுதல்‌.- (1) வரிவிதிப்புக்‌ காலஅளவு ஒன்றுக்காக (இதன்பின்பு இந்தப்‌ பிரிவில்‌ "வழங்குநர்‌" எனக்‌ குறிப்பிடப்படும்‌) பதிவு பெற்ற நபர்‌ ஒருவரால்‌ அளிக்கப்படும்‌ வெளிப்புற வழங்குகை தொடர்பான ஒவ்வொரு வரவுக்‌ குறிப்பின்‌ விவரங்களும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையிலும்‌ மற்றும்‌ அத்தகைய காலத்திற்குள்ளும்‌ பின்வருவனவற்றிற்கு ஒத்திசைவு செய்யப்படுதல்‌ வேண்டும்‌- (அ) அதே வரிவிதிப்புக்‌ கால அளவுக்காகவும்‌ அல்லது பிந்தையதான வரிவிதிப்புக்‌ கால அளவுக்காகவுமான தம்‌ செல்லுந்தண்மையுள்ள அறிக்கையில்‌ (இதன்பின்பு இந்தப்‌ பிரிவில்‌ "பெறுநர்‌" எனக்‌ குறிப்பிடப்படும்‌) நேறிணையான பதிவு பெற்ற நபரால்‌ உள்ளீட்டு வரி விதிப்பிற்கான கோரிக்கையில்‌ உள்ள நேரிணையான குறைப்புடனும்‌, மற்றும்‌ (ஆ) வெளியீட்டு வரி கடப்பாட்டில்‌ குறைப்பிற்கான இரட்டிப்புக்‌ கோரிக்கைகளுடன்‌, 77 (2) பெறுநரால்‌ உள்ளிட்டு வரிவரவுக்கான கோரிக்கையில்‌ செய்யப்படும்‌ நேரிணையான குறைப்புடன்‌ ஒத்திசைவாகும்‌ வழங்குநரால்‌ செய்யப்படும்‌ வெளியீட்டு வரி கடப்பாட்டில்‌ குறைப்புக்கான கோரிக்கையானது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌, இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படுதலும்‌, வழங்குபவருக்குத்‌ தெரிவிக்கப்படுதலும்‌ வேண்டும்‌. (3) வெளிப்புற வழங்குகைகள்‌ பொறுத்த வெளியீட்டு வரி கடப்பாட்டின்‌ குறைப்பானது, பெறுநரால்‌ தம்‌ செல்லுந்தண்மையுள்ள அறிக்கைகளில்‌ விளம்புகை செய்யப்படாத உள்ளிட்டு வரி வரவுக்கான அல்லது நேரிணையான வரவுக்‌ குறிப்புக்கான கோரிக்கையில்‌ உள்ள நேரிணையான குறைப்பிற்கு மிகைப்படுகிறவிடத்து, அந்த முரண்பாடானது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ அத்தகைய நபர்கள்‌ இருவருக்கும்‌ தெரிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (4) வெளியீட்டு வரி கடப்பாட்டில்‌ குறைப்புக்கான இரட்டிப்புக்‌ கோரிக்கைகள்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ வழங்குநருக்குத்‌ தெரிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (5) (3-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ முரண்பாடு தெரிவிக்கப்பட்டு மற்றும்‌ அந்த முரண்பாடு எந்த மாதத்தில்‌ தெரிவிக்கப்பட்டதோ அந்த மாதத்திற்கான தம்‌ செல்லுந்தன்மையுள்ள அறிக்கையில்‌ பெறுநரால்‌ சரி செய்யப்படாத முரண்பாடு எதனையும்‌ பொறுத்தத்‌ தொகையானது, அந்த முரண்பாடு தெரிவிக்கப்பட்ட மாதத்திற்கு அடுத்துவரும்‌ மாதத்திற்கான அவருடைய அறிக்கையில்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌, அத்தகைய முறையில்‌, வழங்குநரின்‌ வெளியீட்டு வரி கடப்பாட்டூடன்‌ சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌. (6) இரட்டிப்பு கோரிக்கைகளின்‌ காரணமானதெனக்‌ காணப்பட்ட வெளியீட்டு வரி கடப்பாட்டில்‌ உள்ள குறைப்பு எதனையும்‌ பொறுத்த தொகையானது, அத்தகைய இரட்டிப்பு தெரிவிக்கப்பட்ட மாதத்திற்கான அறிக்கையில்‌ வழங்குநரின்‌ வெளிப்புற வரி கடப்பாட்டூடன்‌ சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌. (7) பெறுநர்‌, 39-ஆம்‌ பிரிவின்‌ (9)-ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள காலத்திற்குள்‌ தம்‌ செல்லுந்தண்மையுள்ள அறிக்கையில்‌ வரவுக்‌ குறிப்பு பற்றிய விவரங்களை விளம்புகை செய்வாரானால்‌, வழங்குநர்‌, தம்‌ வெளிப்புற வரி செலுத்தும்‌ பொறுப்பிலிருந்து (5)-ஆம்‌ உட்பிரிவின்கழ்‌ சேர்க்கப்படும்‌ தொகையினைக்‌ குறைத்துக்‌ கொள்வதற்குத்‌ தகுதியுடையவர்‌ ஆவார்‌. (8) எந்த வழங்குநரின்‌ வெளிப்புற வரிவிதிப்புப்‌ பொறுப்பில்‌, (5)-ஆம்‌ உட்பிரிவின்கழோ அல்லது (6)-ஆம்‌ உட்பிரிவின்ஃழோ தொகை எதுவும்‌ சேர்க்கப்பட்டிருக்கிறதோ அந்த வழங்குநர்‌ ஒருவர்‌, அவ்வாறு சேர்க்கப்பட்ட தொகை பொறுத்து 50-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள வீதத்தில்‌ வெளியீட்டு வரி கடப்பாட்டில்‌ குறைப்புக்கான அத்தகைய கோரிக்கையின்‌ தேதியிலிருந்து மேற்சொன்ன உட்பிரிவுகளின்கீழ்‌ நேழிணையான சேர்ப்புகள்‌ செய்யப்படும்‌ வரையில்‌ வரி செலுத்துவதற்கு உள்ளாதல்‌ வேண்டும்‌. 78 (9) வெளிப்புற வரி கடப்பாட்டில்‌ குறைப்பு செய்வது எதுவும்‌ (7)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ ஏற்றுக்கொள்ளப்படுகிறவிடத்து, (8)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ செலுத்தப்படும்‌ வரியானது, வழங்குநருக்கு, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ அவருடைய மின்னணு பணப்‌ பேரேட்டின்‌ நேரிணையான தலைப்பில்‌ அந்தத்‌ தொகையினை வரவு வைத்து அவருக்குத்‌ திருப்பிக்‌ கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, எந்நேர்விலும்‌, வரவு வைக்கப்பட வேண்டிய வட்டித்‌ தொகையானது பெறுநரால்‌ செலுத்தப்பட்ட வட்டித்‌ தொகைக்கு மேற்படுதல்‌ ஆகாது. (1௦) 7-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளை மீறி வெளிப்புற வரி செலுத்தும்‌ பொறுப்பிலிருந்து குறைக்கப்பட்ட தொகையானது அத்தகைய மீறுகை இடம்‌ பெற்ற மாதத்திற்கான தம்‌ அறிக்கையில்‌ வழங்குநரின்‌ வெளியீட்டு வரிக்‌ கடப்பாட்டுடன்‌ சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய வழங்குநர்‌, 50-ஆம்‌ பிரிவின்‌ (3)-ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள விதத்தில்‌ அவ்வாறு சேர்க்கப்பட்ட தொகை மீது வட்டி செலுத்துவதற்கு உள்ளாதல்‌ வேண்டும்‌. 44. ஆண்டறிக்கை.-- (1) ஓர்‌ உள்ளிட்டு சேவை விநியோகிப்பவராகவோ, 51-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது 52-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வரி செலுத்தும்‌ ஒரு நபராகவோ, ஒரு தற்செயல்‌ வரி விதிக்கத்தக்க நபராகவோ மற்றும்‌ ஒரு குடியிராத வரிவிதிக்கத்தக்க நபராகவோ அல்லாத பிற பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, ஒவ்வொரு நிதியாண்டிற்கும்‌ அத்தகைய நிதியாண்டின்‌ முடிவைத்‌ தொடர்ந்து வரும்‌ டிசம்பர்‌ மாதத்தின்‌ முப்பத்தோறாம்‌ நாளன்றோ அதற்கு முன்போ, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ முறையிலும்‌, மின்னணுவியலாக ஆண்டறிக்கையொன்றை அளித்தல்‌ வேண்டும்‌. (2) 35-ஆம்‌ பிரிவின்‌ (5)-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளின்கீழ்‌ தம்‌ கணக்குகளைத்‌ தணிக்கை செய்யப்பட்டு பெற வேண்டுறுத்தப்பட்டிருக்கும்‌ பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, (1-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ ஆண்டறிக்கையினை, தணிக்கை செய்யப்பட்ட ஆண்டு கணக்குகளுடன்‌ மற்றும்‌ சரி செய்யும்‌ அறிக்கையுடன்‌, நிதியாண்டிற்கான அளிக்கப்பட்ட அறிக்கையில்‌ விளம்புகை செய்யப்பட்ட வழங்குகைகளின்‌ மதிப்பினை தணிக்கை செய்யப்பட்ட ஆண்டு நிதி அறிக்கையுடன்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற விவரங்களோடு சரி செய்து மிண்ணணு முறையில்‌ அளித்தல்‌ வேண்டும்‌. 45. இறுதி அறிக்கை.-- 39-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அறிக்கையொன்றை அளிக்க வேண்டுறுத்தப்பட்டிருப்பவரும்‌ மற்றும்‌ பதிவு ரத்து செய்யப்பட்டிருப்பவருமான பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, ரத்தான தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்‌ அல்லது ரத்ததான ஆணையின்‌ தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்‌, இவற்றில்‌ எது முன்னதோ அதற்குள்‌, 79 வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ முறையிலும்‌ இறுதியான அறிக்கையொன்றை அளித்தல்‌ வேண்டும்‌. 46. அறிக்கை அளிக்க தவறுபவருகளுக்கான அறிவிப்பு.- பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌, 39-ஆம்‌ பிரிவின்கழோ அல்லது 44-ஆம்‌ பிரிவின்கழோ அல்லது 45-ஆம்‌ பிரிவின்கழோ அறிக்கையொன்றை அளிக்கத்‌ தவறுகிறவிடத்து, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ முறையிலும்‌ பதினைந்து நாட்களுக்குள்‌ அத்தகைய அறிக்கையினை அளிக்கும்படி அவரை வேண்டுறுத்தி அறிவிப்பு ஒன்று வழங்கப்படுதல்‌ வேண்டும்‌. 47. தாமதக்‌ கட்டணம்‌ விதித்தல்‌.- (1) 37-ஆம்‌ பிரிவின்கழோ அல்லது 38-ஆம்‌ பிரிவின்கழோ வேண்டுறுத்தப்பட்டுள்ள வெளிப்புற அல்லது உள்வரு வழங்குகைகள்‌ பற்றிய விவரங்களை அல்லது 39-ஆம்‌ பிரிவின்௧ழோ அல்லது 45-ஆம்‌ பிரிவின்கழோ வேண்டுறுத்தப்பட்டுள்ள அறிக்கைகளை உரிய தேதியில்‌ அளிக்க தவறுபவரான பதிவு பெற்ற நபர்‌ எவரும்‌ அத்தகைய தவறுகை தொடர்கிறபோது நாள்‌ ஒவ்வொன்றுக்கும்‌ நூறு ரூபாய்‌ தாமதக்‌ கட்டணம்‌ ஒன்றை, ஐயாயிரம்‌ ரூபாய்‌ அதிகபட்சத்‌ தொகை ஒன்றுக்கு உட்பட்டு, செலுத்துதல்‌ வேண்டும்‌. (2) 44-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வேண்டுறுத்தப்பட்டுள்ள அறிக்கையினை உரிய தேதியில்‌ அளிக்கத்‌ தவறுகிற பதிவு பெற்ற நபர்‌ எவரும்‌ அத்தகைய தவறுகை தொடர்கிறபோது நாள்‌ ஒவ்வொன்றுக்கும்‌ நூறு ரூபாய்‌ தாமதக்‌ கட்டணம்‌ ஒன்றை, மாநிலத்தில்‌ அவருடைய விற்பனை அளவில்‌, கால்‌ விழுக்காட்டில்‌ கணக்கிடப்படும்‌ அதிகபட்சத்‌ தொகைக்கு உட்பட்டு, செலுத்துவதற்கு கடப்பாடுடையவராதல்‌ வேண்டும்‌. 48. சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி தொழிலாற்றுநர்கள்‌.- (1) சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி தொழிலாற்றுநர்களை ஒப்பேற்பளிக்கும்‌ முறை மற்றும்‌ அவர்களுடைய தகுமைப்பாட்டு நிபந்தனைகள்‌, கடமைகள்‌ மற்றும்‌ கடமைப்‌ பொறுப்புகள்‌, பணிநீக்கம்‌ செய்யும்‌ முறை மற்றும்‌ அவர்களுடைய செயல்பாடுகளுக்கான பிற தொடர்புற்ற நிபந்தனைகள்‌ ஆகியவை வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌. (2) பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ முறையில்‌, 37-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வெளிப்புற வழங்குகைகளின்‌ விவரங்கள்‌, 38-ஆம்‌ பிரிவின்கீழ்‌ உள்வரு வழங்குகைகளின்‌ விவரங்கள்‌ மற்றும்‌ 39-ஆம்‌ பிரிவின்கழோ அல்லது 44-ஆம்‌ பிரிவின்கழோ அல்லது 45-ஆம்‌ பிரிவின்கழோவான அறிக்கை ஆகியவற்றை அளிப்பதற்கு ஒப்பேற்பளிக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி தொழிலாற்றுநர்‌ ஒருவருக்கு அதிகாரமளிக்கலாம்‌. (3) (2-ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, அறிக்கையில்‌ அளிக்கப்படும்‌ விவரங்கள்‌ எவற்றின்‌ அல்லது சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி தொழிலாற்றுநர்களால்‌ முன்னிடப்படும்‌ பிற விவரங்களின்‌ சீர்மைக்கான 80 பொறுப்பானது, அத்தகைய அறிக்கையும்‌ விவரங்களும்‌ எந்தப்‌ பதிவு பெற்ற நபர்கள்‌ சார்பாக அளிக்கப்படுகின்றணவோ அந்தப்‌ பதிவு பெற்ற நபர்களிடமே தொடர்ந்து நிலைத்திருக்கும்‌. அத்தியாயம்‌ X வரி செலுத்தம்‌. 49. வரி, வட்டி, தண்டத்‌ தொகை மற்றும்‌ பிற தொகைகளின்‌ செலுத்தம்‌.- (1) நபர்‌ ஒருவரால்‌ இணையதள வங்கித்‌ தொழில்‌ மூலமாகவோ அல்லது வரவு அல்லது பற்று அட்டைகள்‌ பயன்படுத்தியோ அல்லது தேசிய மின்னணு நிதி மாற்றம்‌ அல்லது உடனடி நேர மொத்தப்‌ பண வழங்கல்‌ மூலமாகவோ அல்லது அத்தகைய பிற முறை மூலமாகவோ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கும்‌ மற்றும்‌ கட்டுப்பாடுகளுக்கும்‌ உட்பட்டு, வரி, வட்டி, தண்டத்‌ தொகை, கட்டணம்‌ அல்லது பிற தொகை எதன்‌ பொருட்டும்‌ செய்யப்படும்‌ வைப்பீடு ஒவ்வொன்றும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ பேணி வரப்பட வேண்டிய அத்தகைய நபரின்‌ மிண்ணணு பணப்‌ பேரேட்டில்‌ வரவு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) பதிவு பெற்ற நபர்‌ ஒருவரின்‌ அறிக்கையில்‌ சுயக்கணிப்பாக உள்ளிட்டு வரி வரவானது, 41-ஆம்‌ பிரிவின்கீழ்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ பேணிவரப்ப வேண்டிய அவருடைய மின்னணு வரவுப்‌ பேரேட்டில்‌ வரவு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) மின்னணு பணப்‌ பேரேட்டில்‌ உள்ள தொகையானது, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்கீழோ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்படியோ செலுத்த வேண்டிய வரி, வட்டி, தண்டத்‌ தொகை, கட்டணங்கள்‌ அல்லது பிற தொகை எதன்‌ பொருட்டும்‌ பணம்‌ வழங்கல்‌ எதுவும்‌ செய்வதற்காக, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையிலும்‌ மற்றும்‌ அத்தகைய வரையறைகளுக்கு உட்பட்டும்‌ மற்றும்‌ அத்தகைய காலத்திற்குள்ளும்‌ பயன்படுத்தப்படலாம்‌. (4) மின்னணு வரவுப்‌ பேரேட்டில்‌ உள்ள தொகையானது இந்தச்‌ சட்டத்தின்£ழோ, ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்8௧ழோ வெளியீட்டு வரியின்‌ பொருட்டு பணம்‌ வழங்கல்‌ எதுவும்‌ செய்வதற்காக, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையிலும்‌ மற்றும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டும்‌ மற்றும்‌ அத்தகைய காலத்திற்குள்ளும்‌ பயன்படுத்தப்படலாம்‌. (5) பதிவு பெற்ற நபரின்‌ மின்னணு வரவுப்‌ பேரேட்டில்‌- (அ) ஒருங்கிணைக்கப்பட்ட வரியின்‌ பொருட்டு உள்ள உள்ளிட்டு வரிவரவுத்‌ தொகையானது, முதலில்‌ ஒருங்கிணைக்கப்பட்ட வரியைச்‌ செலுத்துவதற்காகப்‌ பயன்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ எஞ்சியிருக்கும்‌ தொகை, ஏதேனுமிருப்பின்‌, 81 அது, மைய வரியையும்‌ மாநில வரியையும்‌ அல்லது, நேர்விற்கேற்ப, யூனியன்‌ பிரதேச வரியை, அதே வரிசையில்‌ செலுத்தும்‌ பொருட்டு, பயன்படுத்தப்படலாம்‌; (ஆ) மைய வரியின்‌ பொருட்டு உள்ள உள்ளிட்டு வரிவரவுத்‌ தொகையானது, முதலில்‌ மைய வரியைச்‌ செலுத்துவதற்காகப்‌ பயன்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ எஞ்சியிருக்கும்‌ தொகை, எதுவுமிருப்பின்‌, அது, ஒருங்கிணைக்கப்பட்ட வரியைச்‌ செலுத்தும்‌ பொருட்டு பயன்படுத்தப்படலாம்‌; (இ) மாநில வரியின்‌ பொருட்டு உள்ள உள்ளீட்டு வரிவரவுத்‌ தொகையானது, முதலில்‌ மாநில வரியைச்‌ செலுத்துவதற்காகப்‌ பயன்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ எஞ்சியிருக்கும்‌ தொகை, எதுவுமிருப்பின்‌, அது ஒருங்கிணைக்கப்பட்ட வரியைச்‌ செலுத்தும்‌ பொருட்டு பயன்படுத்தப்படலாம்‌; (") யூனியன்‌ பிரதேச வரியின்‌ பொருட்டு உள்ள உள்ளீட்டு வரிவரவுத்‌ தொகையானது, முதலில்‌ யூனியன்‌ பிரதேச வரியைச்‌ செலுத்துவதற்காகப்‌ பயன்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ எஞ்சியிருக்கும்‌ தொகை, எதுவுமிருப்பின்‌, அது, ஒருங்கிணைக்கப்பட்ட வரியைச்‌ செலுத்தும்‌ பொருட்டு பயன்படுத்தப்படலாம்‌; (௨) மைய வரியின்‌ பொருட்டு உள்ள உள்ளீட்டு வரிவரவுத்‌ தொகையானது, மாநில வரியையோ அல்லது யூணியன்‌ பிரதேச வரியையோ செலுத்துவதற்குப்‌ பயன்படுத்தப்படுதல்‌ ஆகாது; மற்றும்‌ (ஊ) மாநில வரி அல்லது யூணியன்‌ பிரதேச வரியின்‌ பொருட்டு உள்ள உள்ளிட்டு வரிவரவுத்‌ தொகையானது, மைய வரியைச்‌ செலுத்துவதற்குப்‌ பயன்படுத்தப்படுதல்‌ ஆகாது. (6) இந்தச்‌ சட்டத்தின்&ழோ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்படியோ செலுத்த வேண்டிய வரி, வட்டி, தண்டத்‌ தொகை, கட்டணம்‌ அல்லது பிற தொகை எதனையும்‌ செலுத்திய பின்பு மிண்ணணு பணப்‌ பேரேட்டிலோ அல்லது மின்னணு வரவுப்‌ பேரேட்டிலோ உள்ள இருப்புத்‌ தொகையானது, 54-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளின்படி திருப்பிக்‌ கொடுக்கப்படலாம்‌. (7) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரிவிதிக்கத்தக்க நபர்‌ ஒருவரின்‌ அனைத்துப்‌ கடப்பாடுகளும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ ஒரு மின்னணு கடப்பாடு பதிவேட்டில்‌ பதிவு செய்யப்பட்டு பேணிவரப்படுதல்‌ வேண்டும்‌. (8) வரிவிதிக்கத்தக்க நபர்‌ ஒவ்வொருவரும்‌ இந்தச்‌ சட்டத்தின்&£ழோ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்படியோவான வரியையும்‌ பிற கொடுபட வேண்டியவற்றையும்‌, பின்வரும்‌ வரிசைப்படி, செலுத்தி முடித்தல்‌ வேண்டும்‌, அவையாவன:- (அ) சுயமாக-கணிக்கப்பட்ட வரி, மற்றும்‌ முந்தைய வரிவிதிப்புக்‌ கால அளவுகளுக்கான அறிக்கைகளுக்குத்‌ தொடர்புடைய பிற கொடுபட வேண்டியவை; (ஆ) சுயமாக-கணிக்கப்பட்ட வரி, மற்றும்‌ நடப்பு வரிவிதிப்புக்‌ கால அளவுகளுக்கான அறிக்கைகளுக்குத்‌ தொடர்புடைய பிற கொடுபட வேண்டியவை; 82 (இ) இந்தச்‌ சட்டத்தின்கழோ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்படியோ செலுத்த வேண்டியதான 73-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது 74-ஆம்‌ பிரிவின்கீழ்‌ தீர்மானிக்கப்பட்ட கேட்புக்‌ கோரிக்கை உள்ளடங்கலான பிற தொகை எதுவும்‌. (9) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ மீதும்‌ வரி செலுத்தியிருக்கும்‌ நபர்‌ ஒவ்வொருவரும்‌, எதிர்மறையானதாக அவரால்‌ மெய்ப்பிக்கப்பட்டாலன்றி, அத்தகைய சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது அவை இரண்டின்‌ பெறுநருக்கு அத்தகைய வரியின்‌ முழு நிகழ்வினையும்‌ கடந்திருப்பவராகக்‌ கருதப்படுவார்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, (அ) அதிகாரமளிக்கப்பட்ட வங்கியில்‌ அரசின்‌ கணக்கில்‌ வரவு வைக்கும்‌ தேதியானது மின்னணு பணப்‌ பேரேட்டில்‌ வைப்பீடு செய்த தேதியாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌; (ஆ) டு "கொடுபட வேண்டிய வரி" என்ற சொற்றொடர்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செலுத்த வேண்டிய வரி என்று பொருள்படும்‌ மற்றும்‌ வட்டி, கட்டணம்‌ மற்றும்‌ தண்டத்‌ தொகை உள்ளடக்காது; மற்றும்‌ (i) "பிற கொடுபடவேண்டியவை என்ற சொற்றொடர்‌, இந்தச்‌ சட்டத்தின்8௧ழோ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்படியோ செலுத்த வேண்டிய வட்டி, தண்டத்‌ தொகை, கட்டணம்‌ அல்லது பிற தொகை எதுவும்‌ என்று பொருள்படும்‌. 50. தாமதமான வரி செலுத்தத்தின்‌ மீது வட்டி.-- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்படியோ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்படியோ வரி செலுத்துவதற்கு கடப்பாடுள்ள ஆனால்‌ வகுத்துரைக்கப்பட்ட கால அளவிற்குள்‌ அரசுக்கு வரியை அல்லது அதன்‌ பகுதி எதனையும்‌ செலுத்தத்‌ தவறுகிற நபர்‌ ஒவ்வொருவரும்‌, வரியோ அதன்‌ பகுதி எதுவுமோ எந்தக்‌ கால அளவுக்கு செலுத்தப்படாமல்‌ இருக்கிறதோ அந்தக்‌ கால அளவிற்கு, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌ அரசால்‌ அறிவிக்கை செய்யப்படலாகிறவாறு, பதினெட்டு விழுக்காட்டிற்கு மேற்படாத, அத்தகைய விதத்தில்‌, தாமாகவே, வட்டி செலுத்துதல்‌ வேண்டும்‌. (2) 0-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வட்டியானது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌, அத்தகைய வரி செலுத்தப்பட வேண்டியதான நாளுக்கு அடுத்துவரும்‌ நாளிலிருந்து, கணக்கிடப்படுதல்‌ வேண்டும்‌. (3) 42-ஆம்‌ பிரிவின்‌ (10)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ உள்ளீட்டு வரி வரவு தகாத அல்லது மிகையான கோரிக்கையோ அல்லது 43-ஆம்‌ பிரிவின்‌ (10)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வெளியீட்டு வரி கடப்பாட்டில்‌ தகாத அல்லது மிகையான குறைப்போ செய்கிற வரிவிதிக்கத்தக்க நபர்‌ ஒருவர்‌, அத்தகைய தகாத அல்லது மிகையான கோரிக்கை அல்லது அத்தகைய தகாத அல்லது மிகையான குறைப்பு மீது, 83 நேர்விற்கேற்ப மன்றத்தின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ அரசால்‌ அறிவிக்கை செய்யப்படலாகிறவாறு, இருபத்து நான்கு விழுக்காட்டிற்கு மேற்படாத, அத்தகைய வீதத்தில்‌, செலுத்துதல்‌ வேண்டும்‌. 51. ஆதாரத்தில்‌ வரி பிடித்தம்‌.- (1) இந்தச்‌ சட்டத்தில்‌ முரணாக என்ன அடங்கியிருந்த போதிலும்‌, அரசு.- (அ) மைய அரசின்‌ அல்லது மாநில அரசின்‌ துறை அல்லது நிறுவனம்‌ ஒன்று, அல்லது (ஆ) உள்ளாட்சி அதிகார அமைப்பிற்கு, அல்லது (இ) அரசுசார்‌ முகவாண்மைகளுக்கு, அல்லது (FF) மன்றத்தின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌, அரசால்‌ அறிவிக்கை செய்யப்படலாகிறவாறு அத்தகைய நபர்களுக்கு அல்லது நபர்களின்‌ வகையினருக்கு, (இதன்பின்பு இந்தப்‌ பிரிவில்‌ "பிடித்தம்‌ செய்பவர்‌" என குறிப்பிடப்படும்‌) வரிவிதிக்கத்தக்க சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டும்‌, அத்தகைய வழங்குகைகளின்‌ மொத்த மதிப்பு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம்‌ ரூபாய்க்கு மேற்படுகிறவிடத்து (இதன்‌ பின்பு இந்தப்‌ பிரிவில்‌ "பிடித்தம்‌ செய்யப்படுபவர்‌" எனக்‌ குறிப்பிடப்படும்‌) வழங்குநருக்கு செய்யப்பட்ட பணம்‌ செலுத்தங்களிலிருந்து அல்லது வரவிலிருந்து, ஒரு விழுக்காடு என்ற வீதத்தில்‌ வரி பிடித்தம்‌ செய்யும்படி கட்டளையிடலாம்‌: வரம்புரை: ஆனால்‌, வழங்குநரின்‌ அமைவிடம்‌ மற்றும்‌ வழங்குகை இடம்‌ உள்ள ஒரு மாநிலமும்‌ அல்லது யூணியன்‌ பிரதேசமும்‌ பெறுநரின்‌ மாநிலமும்‌ அல்லது, நேர்விற்கேற்ப, யூணியன்‌ பிரதேசமும்‌ வேறாக இருக்குமானால்‌, பிடித்தம்‌ செய்யப்படுதல்‌ ஆகாது. விளக்கம்‌.- மேலே குறித்துரைக்கப்பட்டுள்ள வரிப்‌ பிடித்தம்‌ நோக்கத்திற்காக, வழங்குகையின்‌ மதிப்பானது, விலைப்பட்டியலில்‌ சுட்டிக்காட்டப்பட்டுள்ள மைய வரி, மாநில வரி, ஒருங்கிணைக்கப்பட்ட வரி மற்றும்‌ மேல்வரி நீங்கலான தொகையாக எடுத்துக்கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (2) இந்தப்‌ பிரிவின்கீழ்‌ வரி என பிடிக்கப்படும்‌ தொகையானது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌, அத்தகைய பிடித்தம்‌ எந்த மாதத்தில்‌ செய்யப்படுகிறதோ அந்த மாதத்தின்‌ முடிவுக்குப்‌ பின்பு பத்து நாட்களுக்குள்‌ பிடித்தம்‌ செய்பவரால்‌ அரசுக்கு செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. (3) பிடித்தம்‌ செய்பவர்‌, பிடித்தம்‌ செய்யப்படுபவருக்கு, சான்றிதழ்‌ ஒன்றை, அதனில்‌, ஒப்பந்த மதிப்பு, பிடிப்பு வீதம்‌, பிடிக்கப்பட்ட தொகை, அரசுக்கு செலுத்தப்பட்ட தொகை மற்றும்‌ அத்தகைய பிற விவரங்களைக்‌ குறிப்பிட்டு வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ வழங்குதல்‌ வேண்டும்‌. (4) பிடித்தம்‌ செய்பவர்‌ எவரும்‌, ஆதாரத்திலிருந்து வரியை பிடித்த பின்பு, அவ்வாறு பிடிக்கப்பட்ட தொகையினை அரசுக்கு வரவு வைத்ததிலிருந்து ஐந்து 84 நாட்களுக்குள்‌ பிடித்தம்‌ செய்யப்படுபவருக்கு சான்றிதழை அளிக்கத்‌ தவறுவாரானால்‌, பிடித்தம்‌ செய்பவர்‌, அத்தகைய ஐந்து நாள்‌ கால அளவு காலாவதியான பின்பு அந்த நாளிலிருந்து தவறுகை சரி செய்யப்படும்‌ வரையில்‌, ஐயாயிரம்‌ ரூபாய்‌ அதிகபட்சத்‌ தொகை ஒன்றுக்கு உட்பட்டு, நாள்‌ ஒன்றுக்கு நூறு ரூபாய்‌ தொகைகயொன்றை, தாமதக்‌ கட்டணம்‌ என்ற வகையில்‌, செலுத்துதல்‌ வேண்டும்‌. (5) பிடித்தம்‌ செய்யப்படுபவர்‌, வரி பிடிக்கப்பட்டு, 39-ஆம்‌ பிரிவின்‌ (3)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அளிக்கப்பட்ட பிடித்தம்‌ செய்பவரின்‌ அறிக்கையில்‌ காணப்பட்ட வரவினை தம்‌ மின்னணு பணப்‌ பேரேட்டில்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌, கோருதல்‌ வேண்டும்‌. (6) பிடித்தம்‌ செய்பவர்‌ எவரும்‌, (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வரி என பிடிக்கப்படும்‌ தொகையினை அரசுக்கு செலுத்தத்‌ தவறுவாரானால்‌, அவர்‌, பிடிக்கப்பட்ட வரித்‌ தொகைக்குக்‌ கூடுதலாக, 50-ஆம்‌ பிரிவின்‌. (1)-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கிணங்க வட்டி செலுத்துதல்‌ வேண்டும்‌. (7) இந்தப்‌ பிரிவின்கீழ்‌ செலுத்தத்தவறிய தொகையினைத்‌ தீர்மானிப்பதானது, 73-ஆம்‌ பிரிவில்‌ அல்லது 74-ஆம்‌ பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள முறையில்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (8) மிகையான அல்லது பிழையான பிடித்தம்‌ காரணமாக எழும்‌, பிடித்தம்‌ செய்பவருக்கோ அல்லது பிடித்தம்‌ செய்யப்படுபவருக்கோவான பணம்‌ திருப்பிக்‌ கொடுத்தலானது, 54-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கிணங்க செயற்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌. வரம்புரை: ஆனால்‌, பிடிக்கப்பட்ட தொகையானது பிடித்தம்‌ செய்யப்படுபவரின்‌ மின்னணு பணப்‌ பேரேட்டில்‌ வரவு வைக்கப்பட்டிருக்குமாயின்‌, பிடித்தம்‌ செய்பவருக்கு பணம்‌ திருப்பிக்‌ கொடுத்தல்‌ எதுவும்‌ வழங்கப்படுதல்‌ ஆகாது. 52. ஆதாரத்தில்‌ வரி வளகுலித்தல்‌.-- (1) இந்தச்‌ சட்டத்தில்‌ முரணாக என்ன அடங்கியிருந்த போதிலும்‌, ஒரு முகவராக அல்லாத, (இதன்‌ பின்பு இந்தப்‌ பிரிவில்‌ "இயக்குபவர்‌" எனக்‌ குறிப்பிடப்படும்‌) மிண்ணணு வணிகம்‌ இயக்குபவர்‌ ஒவ்வொருவரும்‌, பிற வழங்குநரால்‌ அதன்‌ மூலமாக செய்யப்படும்‌ வரிவிதிக்கத்தக்க வழங்குகைகளின்‌ நிகர மதிப்பு அத்தகைய வழங்குகைகள்‌ பொறுத்து மறுபயனானது இயக்குபவரால்‌ வசூலிக்கப்படுகிறவிடத்து, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌ அரசால்‌ அறிவிக்கை செய்யப்படலாகிறவாறு, ஒரு விழுக்காட்டிற்கு மேற்படாத அத்தகைய வீதத்தில்‌ கணக்கிடப்பட்ட தொகையொன்றை வளுலித்தல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்த உட்பிரிவின்‌ நோக்கங்களுக்காக, "வரிவிதிக்கத்தக்க வழங்குகைகளின்‌ நிகர மதிப்பு என்ற சொற்றொடர்‌, இயக்குபவர்‌ மூலமாக பதிவு பெற்ற நபர்கள்‌ அனைவராலும்‌ எந்த மாதத்திலும்‌ செய்யப்பட்டதான, 9-ஆம்‌ பிரிவின்‌ (5-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அறிவிக்கை செய்யப்பட்ட சேவைகள்‌ அல்லாத பிற 85 சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வரிவிதிக்கத்தக்க வழங்குகைகளின்‌ முழுமொத்த மதிப்பை, மேற்சொன்ன மாதத்தின்‌ போது வழங்குநர்களுக்குத்‌ திருப்பியனுப்பப்பட்ட வரிவிதிக்கத்தக்க வழங்குகைகளின்‌ முழுமொத்த மதிப்பால்‌ குறைக்கப்பட்டு வரும்‌ மதிப்பு என்று பொருள்படும்‌. (2) (1-ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள தொகையை வசூலிப்பதற்கான அதிகாரமானது, இயக்குபவரிடமிருந்து வசூலிப்பதற்கான பிற முறை எதற்கும்‌ குந்தகமின்றி இருத்தல்‌ வேண்டும்‌. (3) (1-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வளுலிக்கப்படும்‌ தொகையானது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌, வசூலிப்பு எந்த மாதத்தில்‌ செய்யப்படுகிறதோ அந்த மாதத்தின்‌ முடிவுக்குப்‌ பின்பு பத்து நாட்களுக்குள்‌ இயக்குபவரால்‌ அரசுக்குச்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 4) ௫௬-ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள தொகையினை வசூலிக்கிற இயக்குபவர்‌ ஒவ்வொருவரும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ முறையிலும்‌, அதன்‌ மூலமாகத்‌ திருப்பியனுப்பப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகைகள்‌ உள்ளடங்கலான அதன்‌ மூலமாக செய்யப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வெளிப்புற வழங்குகைகள்‌, மற்றும்‌ ஒரு மாதத்தின்போது, (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வளுலிக்கப்பட்ட தொகை ஆகியவற்றின்‌ விவரங்கள்‌ அடங்கிய விவர அறிக்கை ஒன்றை, அத்தகைய மாதத்தின்‌ முடிவுக்குப்‌ பின்பு பத்து நாட்களுக்குள்‌, மின்னணுவியலாக, அளித்தல்‌ வேண்டும்‌. (5. ௫௬-ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள தொகையினை வசூலிக்கும்‌ இயக்குபவர்‌ ஒவ்வொருவரும்‌, அத்தகைய நிதியாண்டின்‌ முடிவினை அடுத்துவரும்‌ டிசம்பர்‌ மாதத்தின்‌ முப்பத்தோறாம்‌ நாளுக்கு முன்பு; வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ முறையிலும்‌, அதனால்‌ திருப்பியனுப்பப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகைகள்‌ உள்ளடங்கலான அதனால்‌ செய்யப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வெளிப்புற வழங்குகைகள்‌, மற்றும்‌ அந்த நிதியாண்டின்‌ போது மேற்சொன்ன உட்பிரிவின்கீழ்‌ வசூலிக்கப்பட்ட தொகை ஆகியவற்றின்‌ விவரங்கள்‌ அடங்கிய ஆண்டறிக்கையொன்றை, மின்னணுவியலாக, அளித்தல்‌ வேண்டும்‌. (6) (4)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ விவர அறிக்கையொன்றை அளித்த பின்பு இயக்குபவர்‌ எவரும்‌, வழி அதிகார அமைப்புகளால்‌ செய்யப்படும்‌ நுண்ணாய்வு, தணிக்கை, ஆய்வு அல்லது அமலாக்க நடவடிக்கையாக அல்லாத பிற காரணங்களால்‌, அதனில்‌ விடுகை அல்லது சரியில்லாத விவரங்களைக்‌ கண்டுபிடிப்பாரானால்‌, அவர்‌, அத்தகைய விடுகையோ அல்லது சரியில்லாத விவரங்களோ எந்த மாதத்தின்‌ போது அறியப்பட்டதோ அந்த மாதத்திற்காக அளிக்கப்பட வேண்டிய விவர அறிக்கையில்‌ அத்தகைய விடுகையை அல்லது சரியில்லாத விவரங்களை, 50-ஆம்‌ பிரிவின்‌. (1-ஆம்‌ உட்பிரிவில்‌ 86 குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு, வட்டி செலுத்துவதற்கு உட்பட்டு, சரி செய்தல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, அத்தகைய விடுகை அல்லது சரியில்லாத விவரங்களை சரி செய்வதானது, நிதியாண்டின்‌ முடிவைத்‌ தொடர்ந்து வரும்‌ செப்டம்பர்‌ மாதத்திற்கான விவர அறிக்கையை அளிப்பதற்கான உரிய தேதி அல்லது தொடர்புற்ற ஆண்டறிக்கையை அளிக்கும்‌ உண்மையான தேதி, இவற்றில்‌ எது முன்னதோ, அந்தத்‌ தேதிக்குப்‌ பின்பு அனுமதிக்கப்படுதல்‌ ஆகாது. (7) இயக்குபவர்‌ மூலமாக சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டையும்‌ வழங்கியிருக்கும்‌ வழங்குநர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌, வசூலிக்கப்பட்டு, (4-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அளிக்கப்பட்ட இயக்குபவரின்‌ விவர அறிக்கையில்‌ காணப்படும்‌ தொகைக்கு, அவருடைய மின்னணு பணப்‌ பேரேட்டில்‌, வரவினைக்‌ கோரலாம்‌. (8) (4-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ ஒவ்வொரு இயக்குபவராலும்‌ அளிக்கப்பட்ட வழங்குகைகள்‌ பற்றிய விவரங்கள்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையிலும்‌ மற்றும்‌ அத்தகைய காலத்திற்குள்ளும்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவு பெற்ற தொடர்புடைய வழங்குநரால்‌ அளிக்கப்பட்ட வெளிப்புற வழங்குகைகள்‌ பற்றிய நேரிணையான விவரங்களுடன்‌ ஒத்திசைவு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (9) (4௩-ஆம்‌ உட்பிரிவின்கழ்‌ இயக்குபவரால்‌ அளிக்கப்பட்ட வெளிப்புற வழங்குகைகள்‌ பற்றிய விவரங்கள்‌, 37-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வழங்குநரால்‌ அளிக்கப்பட்ட நேறரிணையான விவரங்களுடன்‌ ஒத்திசைவாகாதவிடத்து, அந்த முரண்பாடானது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையிலும்‌ மற்றும்‌ அத்தகைய காலத்திற்குள்ளும்‌ இரு நபர்களுக்கும்‌ தெரிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (10) (9-ஆம்‌ பிரிவின்கீழ்‌ எந்தத்‌ தொகை பொறுத்து முரண்பாடு தெரிவிக்கப்படுகிறதோ மற்றும்‌ அந்த முரண்பாடு தெரிவிக்கப்பட்ட மாதத்திற்கான தன்‌ செல்லுந்தண்மையுடைய அறிக்கையில்‌ வழங்குநராலோ அல்லது தம்‌ விவர அறிக்கையில்‌ இயக்குபவராலோ அந்த முரண்பாடு சரி செய்யப்படாத அந்தத்‌ தொகையானது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ முரண்பாடு எந்த மாதத்தில்‌ தெரிவிக்கப்படுகிறதோ அந்த மாதத்தை அடுத்து வரும்‌ மாதத்திற்கான தம்‌ அறிக்கையில்‌ இயக்குபவரால்‌ அளிக்கப்பட்ட வெளிப்புற வழங்குகைகளின்‌ மதிப்பானது வழங்குநரால்‌ அளிக்கப்பட்ட வெளிப்புற வழங்குகைகளின்‌ மதிப்பை விட அதிகமாக இருக்கிறவிடத்து, மேற்சொன்ன வழங்குநழின்‌ வெளியீட்டு வரி கடப்பாட்டூடன்‌ சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌. (11) எந்தத்‌ தொடர்புடைய வழங்குநரின்‌ வெளியீட்டு வரி கடப்பாட்டில்‌ (10)- ஆம்‌ உட்பிரிவின்கழ்‌ தொகை எதுவும்‌ சேர்க்கப்பட்டிருக்கிறதோ அந்த தொடர்புடைய வழங்குநர்‌, அத்தகைய வரி எந்தத்‌ தேதியிலிருந்து கொடுபட வேண்டியதாக இருந்ததோ அந்தத்‌ தேதியிலிருந்து அதனைச்‌ செலுத்திய தேதி வரையில்‌ அவ்வாறு சேர்க்கப்பட்ட தொகை ம்து 50-ஆம்‌ பிரிவின்‌. 87 (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள விதத்தில்‌ வட்டியுடன்‌ சேர்த்து அத்தகைய வழங்குகை பொறுத்து செலுத்த வேண்டிய வரியினைச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌. (12) துணை ஆணையர்‌ படிநிலைக்குக்‌ குறையாத அதிகாரி எவரும்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழான நடவடிக்கைகள்‌ எவற்றின்‌ முன்போ அல்லது அதன்‌ போதோ, அறிவிப்பில்‌ குறித்துரைக்கப்படலாகிறவாறு- (அ) எந்தக்‌ கால அளவின்‌ போதும்‌ அத்தகைய இயக்குபவர்‌ மூலமாக செய்யப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகைகள்‌ தொடர்பான, அல்லது (ஆ) அத்தகைய இயக்குபவர்‌ மூலமாக வழங்குகைகள்‌ செய்யும்‌ வழங்குநர்களால்‌, அத்தகைய இயக்குபவரால்‌ மேலாண்மை செய்யப்பட்டு மற்றும்‌ அத்தகைய வழங்குநர்களால்‌ கூடுதல்‌ வணிக இடங்கள்‌ என விளம்புகை செய்யப்பட்ட, எந்தப்‌ பெயராலும்‌ அழைக்கப்படும்‌, கிடங்குகளிலோ அல்லது பண்டக சாலைகளிலோ உள்ள சரக்குகளின்‌ இருப்பு தொடர்பான, அத்தகைய விவரங்களை அளிக்கும்படி இயக்குபவர்களை வேண்டுறுத்தி, அறிவிப்பு ஒன்றைச்‌ சார்வு செய்யலாம்‌. (13) (12)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அறிவிப்பு ஒன்று சார்வு செய்யப்பட்டிருக்கிற இயக்குபவர்‌ ஒவ்வொருவரும்‌, அத்தகைய அறிவிப்பை சார்வு செய்த தேதியிலிருந்து பதினைந்து வேலை நாட்களுக்குள்‌, வேண்டுறுத்தப்பட்டுள்ள தகவலை அளித்தல்‌ வேண்டும்‌. (14) (12)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ சார்வு செய்யப்பட்ட அறிவிப்பினால்‌ வேண்டுறுத்தப்பட்ட தகவலை அளிக்கத்‌ தவறுகிற நபர்‌ எவரும்‌, 122-ஆம்‌ பிரிவின்கீழ்‌ எடுக்கப்படலாகும்‌ நடவடிக்கை எதற்கும்‌ குந்தகமின்றி, இருபத்தைந்தாயிரம்‌ ரூபாய்‌ வரை நீடிக்கலாகும்‌ அபராதத்திற்கு உள்ளாதல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, "தொடர்புள்ள வழங்குநர்‌" என்ற சொற்றொடர்‌, இயக்குபவர்‌ மூலமாக சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகைகளைச்‌ செய்கிற வழங்குநர்‌ என்று பொருள்படும்‌. 53. உள்ளீட்டு வரி வரவு மாற்றம்‌.-- 39-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அளிக்கப்பட்ட செல்லுந்தன்மையுள்ள அறிக்கையில்‌ காணப்பட்டவாறு, 49-ஆம்‌ பிரிவின்‌ (5)-ஆம்‌ உட்பிரிவின்‌. வகைமுறைகளுக்கிணங்க ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ கொடுபடவேண்டிய வரியினைச்‌ செலுத்துவதற்காக இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பயன்படுத்தப்பட்ட உள்ளீட்டு வரி வரவினைப்‌ பயன்படுத்துவதன்‌ பேரில்‌, மாநில வரி என வளுலிக்கப்பட்ட தொகையானது, அவ்வாறு பயன்படுத்தப்பட்ட அத்தகைய வரவுக்குச்‌ சமமானதொரு தொகையினால்‌ குறைக்கப்பட்டு இருத்தல்‌ வேண்டும்‌, மற்றும்‌ மாநில அரசானது, மாநில வரிக்‌ கணக்கிலிருந்து அவ்வாறு குறைக்கப்பட்ட 88 தொகைக்குச்‌ சசமானதொரு தொகையினை, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையிலும்‌ மற்றும்‌ அத்தகைய காலத்திற்குள்ளும்‌ ஒருங்கிணைக்கப்பட்ட வரிக்‌ கணக்கிற்கு மாற்றுதல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ 30 திருப்பிக்கொடுத்தல்கள்‌. 54. வரித்‌ திருப்பிக்கொடுத்தல்‌.-- (1) வரி எதனையும்‌ மற்றும்‌ அத்தகைய வரி மீது செலுத்தப்பட்ட வட்டி, ஏதேனுமிருப்பின்‌ அதனையும்‌ அல்லது தம்மால்‌ செலுத்தப்பட்ட பிற தொகை எதனையும்‌ திருப்பிக்கொடுக்கக்‌ கோரும்‌ நபர்‌ எவரும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ முறையிலும்‌ தொடர்புற்ற தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள்‌ காலாவதியாவதற்கு முன்பு விண்ணப்பம்‌ செய்யலாம்‌: வரம்புரை: ஆனால்‌, 49-ஆம்‌ பிரிவின்‌ (6)-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கிணங்க, மின்னணு பணப்‌ பேரேட்டில்‌ மீதத்தொகை எதனையும்‌ திருப்பிக்‌ கொடுக்கக்‌ கோரும்‌ பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌, 39-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அளிக்கப்பட்ட அறிக்கையில்‌ அத்தகைய திருப்பிக்கொடுத்தலைக்‌ கோரலாம்‌. (2) 55-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அறிவிக்கப்பட்டவாறு, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ உள்வரு வழங்குகைகள்‌ மீது தம்மால்‌ செலுத்தப்பட்ட வரியினைத்‌ திருப்பிக்‌ கொடுத்தல்‌ ஒன்றுக்கு உரிமையுடைய, 1947- ஆம்‌ ஆண்டு ஐக்கிய நாடுகள்‌ (சிறப்புநிமைகள்‌ மற்றும்‌ காப்புரிமைகள்‌) சட்டத்தின்கீழ்‌ (மையச்‌ சட்டம்‌ 4671947) அறிவிக்கை செய்யப்பட்ட ஐக்கிய நாடுகள்‌ அமைப்பின்‌ தனித்திற முகமை ஒன்று அல்லது பன்முக நிதி நிறுவனம்‌ மற்றும்‌ அமைப்பு எதுவும்‌, அயல்நாட்டுத்‌ துணை தூதரகம்‌ அல்லது தூதரகம்‌ அல்லது பிற நபர்‌ அல்லது நபர்களின்‌ வகையினர்‌, அத்தகைய வழங்குகை எந்தக்‌ காலாண்டில்‌ பெறப்பட்டதோ அந்தக்‌ காலாண்டின்‌ கடைசி நாளிலிருந்து ஆறு மாதங்கள்‌ காலாவதியாவதற்கு முன்பு, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ முறையிலும்‌ அத்தகைய பணம்‌ திருப்பிக்‌ கொடுத்தலுக்கான விண்ணப்பம்‌ ஒன்றைச்‌ செய்யலாம்‌. (3) 40-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌, வரி கால அளவு எதனின்‌ முடிவில்‌ பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரி வரவு எதனையும்‌ திருப்பிக்கொடுத்தலுக்காகக்‌ கோரலாம்‌: வரம்புரை: ஆனால்‌, பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரி வரவினைத்‌ திருப்பிக்‌ கொடுத்தலானது- (i) வரி செலுத்தாமல்‌ செய்யப்பட்ட பூஜ்ஜிய வீதத்திலான வழங்குகைகள்‌; 89 (ii) மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌ அரசால்‌ அறிவிக்கை செய்யப்படலாகும்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகைகள்‌ தவிர, உள்ளீடுகள்‌ மீதான வரி வீதமானது (வரிவீதம்‌ ஒன்றுமில்லாத அல்லது முழுவதும்‌ விலக்களிக்கப்பட்ட வழங்குகைகள்‌ அல்லாத பிற) வெளிப்புற வழங்குகைகள்‌ மீதான வரி வீதத்தைவிட அதிகமாக இருக்கும்‌ காரணமாக வரவு திரண்டிருக்கிறவிடத்து, இவை அல்லாத பிற நேர்வுகளில்‌ அனுமதிக்கப்படுதல்‌ ஆகாது: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, பயன்படுத்தப்படாத உள்ளிட்டு வரி வரவினைத்‌ திருப்பிக்கொடுத்தல்‌, இந்தியாவுக்கு வெளியே ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகள்‌ ஏற்றுமதித்‌ தீர்வைக்கு உட்படுத்தப்படுகிறவிடத்து, அந்நேர்வுகளில்‌ அனுமதிக்கப்படுதல்‌ ஆகாது: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, உள்ளீட்டு வரி வரவினைத்‌ திருப்பிக்‌ கொடுத்தல்‌, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குநர்‌ அத்தகைய வழங்குகைகள்‌ மீது செலுத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட வரியைத்‌ திருப்பிக்‌ கொடுக்கக்‌ கோருவாரானால்‌, அனுமதிக்கப்படுதல்‌ ஆகாது. (4) விண்ணப்பமானது- (அ) விண்ணப்பதாரருக்கு திரும்ப கொடுத்தலானது நிலுவையாக உள்ளது என நிரூபிப்பதற்கு வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய ஆவணச்‌ சான்றுடன்‌ சேர்ந்து இருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (ஆ) வரித்தொகை மற்றும்‌ அத்தகைய வரி மீது செலுத்தப்பட்ட வட்டி, ஏதேனும்‌ இருப்பின்‌, அல்லது கோரப்பட்ட அத்தகைய திரும்ப கொடுத்தல்‌ தொடர்பாக செலுத்தப்பட்ட பிற தொகை எதற்கும்‌ அவரிடமிருந்து வசூலிக்கப்பட்ட, அல்லது அவரால்‌ செலுத்தப்பட்ட, மற்றும்‌ அத்தகைய வரி மற்றும்‌ வட்டியின்‌ நிகழ்வு பிற நபர்‌ எவருக்கும்‌ சென்றடையவில்லை என்பதை நிரூபிப்பதற்கு (33-ஆம்‌ பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள ஆவணங்கள்‌ உள்ளடங்கலாக) அத்தகைய ஆவணம்‌ அல்லது பிற சான்றினை விண்ணப்பத்தாரர்‌ அளிக்கலாம்‌: வரம்புரை: ஆனால்‌, கோரப்பட்ட திரும்ப கொடுத்தலானது இரண்டு இலட்சம்‌ ரூபாய்க்கு குறைவாக இருக்கிறவிடத்து, விண்ணப்பத்தாரர்‌ ஆவண சான்று மற்றும்‌ பிற சான்று எதனையும்‌ அளிக்கத்‌ தேவையில்லை, ஆனால்‌ பிற நபர்‌ எவருக்கும்‌ அத்தகைய வரி மற்றும்‌ வட்டி சென்று அடையாத நிகழ்வினை சான்றளிக்கப்பட்டு அவரிடம்‌ இருக்கக்கூடிய ஆவணச்‌ சான்றின்‌ அல்லது பிற சான்றுகளின்‌ அடிப்படையில்‌ அவர்‌ விளம்புகையை தாக்கல்‌ செய்யலாம்‌. (5) அத்தகைய விண்ணப்பம்‌ எதையும்‌ பெற்றுக்‌ கொண்டதன்பேரில்‌, திரும்ப கொடுத்தலாக கோரப்படும்‌ தொகையில்‌, முழுமையாக அல்லது பகுதியாக திரும்ப கொடுக்கக்கூடியதென உரிய அலுவலர்‌ கருதுவாரேயானால்‌, அவர்‌ அவ்வாறே 90 ஆணையைப்‌ பிறப்பிக்கலாம்‌ மற்றும்‌ அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட தொகையை 57- ஆம்‌ பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள நிதியத்தில்‌ வரவு வைத்தல்‌ வேண்டும்‌. (6) (5-ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, உரிய அலுவலர்‌, பதிவு பெற்ற நபர்களால்‌ செய்யப்படும்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ பூஜ்ஜிய வீத வழங்குகை காரணத்தால்‌ திரும்ப கொடுப்பதற்கான கோரிக்கை எதனின்‌ நேர்வில்‌, மன்றத்தின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ அரசால்‌ அறிவிக்கையிடலாகும்‌ பதிவு பெற்ற அத்தகைய வகை நபர்களைத்‌ தவிர்த்து, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ மற்றும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கு, வரம்புகளுக்கு மற்றும்‌ பாதுகாப்புகளுக்கு உட்பட்டு, தற்காலிகமாக ஏற்றுக்‌ கொண்ட உள்ளீட்டு வரிவரவுத்‌ தொகையைத்‌ தவிர்த்து, தற்காலிக அடிப்படையில்‌, அவ்வாறு கோரப்பட்டுள்ள மொத்தத்‌ தொகையில்‌, தொண்ணூறு சதவீதத்‌ தொகையைத்‌ திருப்பி கொடுத்தல்‌ வேண்டும்‌, மற்றும்‌ விண்ணப்பத்தாரரால்‌ அளிக்கப்பட்ட ஆவணங்களை உரியவாறு சரிபார்த்த பின்பு கோரப்பட்ட திரும்ப கொடுத்தல்‌ தொகையை இறுதியான தீர்வு செய்வதற்காக (5)- ஆம்‌ உட்பிரிவின்கழ்‌ ஆணை ஒன்றை அதன்பின்பு பிறப்பிக்கலாம்‌. (7) உரிய அலுவலர்‌, அனைத்தையும்‌ நிறைவு செய்து விண்ணப்பத்தை பெற்றுக்‌ கொண்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள்‌ (5)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ ஆணையைப்‌ பிறப்பித்தல்‌ வேண்டும்‌. (8) -ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, திரும்பி கொடுக்கப்படும்‌ தொகையை, நிதியத்தில்‌ வரவு வைப்பதற்கு பதிலாக, அத்தகைய தொகை- (அ) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ பூஜ்ஜிய வீத வழங்குகைகள்‌ அல்லது அத்தகைய பூஜ்ஜிய வீதத்திலான வழங்குகைகள்‌ செய்கையில்‌ பயன்படுத்தும்‌ உள்ளீடுகள்‌ அல்லது உள்ளீட்டு சேவைகள்‌ மீது செலுத்தப்பட்ட வரியின்‌ திரும்ப கொடுத்தல்‌ தொடர்பாக, (ஆ) (3-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரி வரவினைத்‌ திரும்பச்‌ கொடுத்தல்‌ தொடர்பாக, (இ) முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வழங்கப்படாத, மற்றும்‌ அதற்காக விலைப்பட்டியல்‌ வழங்காதிருந்த அல்லது திரும்ப கொடுத்தல்‌ சான்றுச்சீட்டு வழங்கப்பட்டிருக்கிற வழங்குகையின்‌ பேரில்‌ செலுத்தப்பட்ட வரியை திரும்ப கொடுத்தல்‌ தொடர்பாக, () 77-ஆம்‌ பிரிவினை ஒட்டிய வரியைத்‌ திரும்ப கொடுத்தல்‌ தொடர்பாக, 91 (௨) அத்தகைய வரி மற்றும்‌ வட்டியின்‌ நிகழ்வு பிற நபர்‌ எவருக்கும்‌ சென்றடையவில்லையென்றால்‌, விண்ணப்பத்தாரரால்‌ செலுத்தப்பட்ட வரி மற்றும்‌ வட்டி ஏதேனுமிருப்பின்‌, அல்லது செலுத்தப்பட்ட தொகை தொடர்பாக, அல்லது (ஊ) மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, அறிவிக்கையினால்‌, அரசு குறித்துரைக்கின்றவாறான அத்தகைய விண்ணப்பத்தாரர்களின்‌ பிற வகையினரால்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட்ட வரி அல்லது வட்டி தொடர்பாக இருந்தால்‌, அந்த தொகை விண்ணப்பதாரருக்கு செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. (9) மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தின்‌ அல்லது நீதிமன்றம்‌ எதனின்‌ தீர்ப்பில்‌, தீர்ப்பாணையில்‌, ஆணையில்‌ அல்லது பணிப்புரையில்‌ அல்லது இந்தச்‌ சட்டத்தின்‌ பிற வகைமுறைகள்‌ எதிலும்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகள்‌ எதிலும்‌ அல்லது அப்போதைக்கு நடைமுறையில்‌ உள்ள பிற சட்டம்‌ எதிலும்‌, முரணாக என்ன அடங்கியிருந்த போதிலும்‌, (8)-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கு இணங்கியவாறின்றி, திரும்பக்‌ கொடுத்தல்‌ ஆகாது. (10) அறிக்கை எதையும்‌ அளிப்பதற்கு தவறுகின்ற, அல்லது குறித்துரைக்கப்பட்டுள்ள தேதிக்குள்‌ நீதிமன்றத்தால்‌, தீர்ப்பாயத்தால்‌ அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பால்‌ தடை செய்யப்படாதிருக்கும்‌ வரியை, வட்டியை அல்லது தண்டத்‌ தொகையை செலுத்துவதற்கு கோரப்படுபவர்‌ பதிவு பெற்ற நபருக்கு (3)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ திரும்ப கொடுத்தல்‌ எதுவும்‌ நிலுவையில்‌ இருக்கிறவிடத்து, உரிய அலுவலர்‌- (அ) அத்தகைய நபர்‌ அறிக்கையை அளிக்கும்‌ வரையில்‌ அல்லது வரியை, வட்டியை அல்லது தண்டத்‌ தொகையை, நேர்விற்கேற்ப, செலுத்தும்‌ வரையில்‌ திரும்ப கொடுக்க வேண்டிய நிலுவைத்‌ தொகையை நிறுத்தி வைக்கலாம்‌; (ஆ) வரி செலுத்தத்தக்க நபரால்‌ செலுத்துவதற்கு கடப்பாடுடைய வரி, வட்டி, தண்டத்‌ தொகை, கட்டணம்‌ எதுவும்‌ அல்லது பிற தொகை எதுவும்‌, ஆனால்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது நடைமுறையிலுள்ள சட்டத்தின்கீழ்‌ செலுத்தப்படாமல்‌ இருக்குமானால்‌, நிலுவையாக உள்ள திரும்ப கொடுக்கும்‌ தொகையிலிருந்து கழிக்கலாம்‌. விளக்கம்‌.- இந்த உட்பிரிவின்‌ நோக்கங்களுக்காக, "குறித்துரைக்கப்பட்டுள்ள தேதி" எனும்‌ சொற்றொடரானது, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ மேல்முறையீடு தாக்கல்‌ செய்வதற்கான கடைசி தேதி என்று பொருள்படும்‌. (14) திரும்பக்‌ கொடுத்தலுக்கான ஆணையானது, மேல்முறையீட்டிற்கான அல்லது மேல்‌ நடவடிக்கைகளுக்கான பொருட்பாட்டிற்கு உட்பட்டு இருக்கிறவிடத்து அல்லது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பிற நடவடிக்கைகள்‌ எதுவும்‌ 92 நிலுவையில்‌ இருக்கிறவிடத்து மற்றும்‌ செய்யக்‌ கூடாததை செய்வதன்‌ அல்லது மோசடி செய்வதன்‌ காரணத்தால்‌ அத்தகைய திரும்ப கொடுத்தலினால்‌ அத்தகைய மேல்முறையீட்டில்‌ அல்லது பிற நடவடிக்கைகளில்‌ உள்ள வருவாயை பாதிக்கக்கூடுமென ஆணையர்‌ கருதுகிறவிடத்து, அவர்‌, வரிவிதிக்கத்தக்க நபருக்கு வாதங்களை கேட்பதற்கான வாய்ப்பினை அளித்த பின்பு, அவர்‌ தீர்மானிக்கலாகிறவாறான அத்தகைய காலத்திற்குள்‌ திரும்பக்‌ கொடுத்தலை நிறுத்தி வைக்கலாம்‌. (12) 4௩-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ திரும்பக்‌ கொடுத்தல்‌ நிறுத்திவைக்கிறவிடத்து, வரிவிதிக்கத்தக்க நபர்‌, மேல்முறையீடு அல்லது மேல்‌ நடவடிக்கைகளின்‌ காரணமாக அவர்‌ திரும்ப கொடுத்தலுக்கு உரறிமையுடையவராகையில்‌, 56-ஆம்‌ பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌ அறிவிக்கை செய்யப்படலாகிறவாறு, ஆறு விழுக்காட்டிற்கு மிகையாகாத அத்தகைய விதத்தில்‌ வட்டியைப்‌ பெறுவதற்கு உரிமையுடையவராவார்‌. (13) இந்தப்‌ பிரிவில்‌ முரணாக எண்ண அடங்கியிருந்த போதிலும்‌, 27-ஆம்‌ பிரிவின்‌ (2)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ தற்செயல்‌ வரிவிதிக்கத்தக்க நபரால்‌ அல்லது குடியிராத வரிவிதிக்கத்தக்க நபரால்‌ வைப்பீடு செய்யப்பட்டுள்ள முன்கூட்டியே செலுத்தும்‌ வரித்‌ தொகையை, அத்தகைய நபர்‌, அவருக்கு வழங்கப்பட்டுள்ள பதிவுச்‌ சான்றிதழ்‌ நடைமுறையில்‌ இருக்கும்‌ முழுமையான காலம்‌ பொறுத்து 39-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வேண்டுறுத்தப்படுகிற அனைத்து அறிக்கைகளும்‌ அளித்தாலன்றி, திரும்பக்‌ கொடுத்தல்‌ ஆகாது. (14) இந்தப்‌ பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, (5-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அல்லது (6)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ திரும்பக்‌ கொடுத்தல்‌ எதுவும்‌, தொகையானது ஆயிரம்‌ ரூபாய்க்கு குறைவாக இருக்குமேயானால்‌, விண்ணப்பத்தாரருக்கு கொடுக்கப்பட மாட்டாது. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, (1) "திரும்பக்‌ கொடுத்தல்‌" என்பது, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ பூஜ்ஜிய வீத வழங்குகை அல்லது அத்தகைய பூஜ்ஜிய வீத வழங்குகைகள்‌ செய்வதில்‌ பயன்படுத்தப்பட்ட உள்ளீடுகள்‌ அல்லது உள்ளீட்டு சேவைகள்‌ மீது செலுத்தப்பட்ட வரியின்‌ திரும்ப கொடுத்தல்‌, அல்லது ஏற்றுமதி செய்யப்பட்டது என கருதப்பட்ட சரக்குகளின்‌ வழங்குகையின்‌ மீது செலுத்தப்பட்ட வரியின்‌ திரும்ப கொடுத்தல்‌, அல்லது (3)-ஆம்‌ உட்பிரிவின்கழ்‌ வகை செய்துள்ளவாறு பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிவரவின்‌ திரும்பக்‌ கொடுத்தலும்‌ உள்ளடக்கும்‌. 93 (2) "தொடர்புடைய தேதி" என்பது கீழ்க்கண்டள்ளுவை என்று பொருள்படும்‌- (அ) சரக்குகள்‌ அவைகள்‌ தொடர்பாக செலுத்தப்பட்ட வரிக்கு திரும்பக்‌ கொடுக்கிறவிடத்து, இந்தியாவிற்கு வெளியே ஏற்றுமதி செய்யப்படும்‌ சரக்குகள்‌ அல்லது, நேர்விற்கேற்ப அத்தகைய சரக்குகளில்‌ பயன்படுத்தப்பட்ட உள்ளீடுகள்‌ அல்லது உள்ளீட்டு சேவைகள்‌ பொறுத்த நேர்வில்‌,- (i) கடல்‌ வழியாக அல்லது ஆகாயத்தின்‌ வழியாக சரக்குகள்‌ ஏற்றுமதி செய்யப்படுமேயானால்‌, எந்த தேதியில்‌ அத்தகைய சரக்குகள்‌ கப்பலின்‌ மீது அல்லது வானூர்தியின்‌ மீது ஏற்றப்பட்டு, இந்தியாவை விட்டுச்‌ செல்கிறதோ அந்த தேதி; அல்லது (i) நிலத்தின்‌ வழியாக சரக்குகள்‌ ஏற்றுமதி செய்யப்படுமேயானால்‌, எந்த தேதியில்‌ அத்தகைய சரக்குகள்‌ எல்லையைக்‌ கடக்கின்றதோ அந்த தேதி; அல்லது 0) அஞ்சல்‌ வழியாக சரக்குகள்‌ ஏற்றுமதி செய்யப்படுமேயானால்‌, தொடர்புடைய அஞ்சலகத்தின்‌ வழியாக இந்தியாவிற்கு வெளியே உள்ள இடத்திற்கு அனுப்பப்பட்ட தேதி; (ஆ) சரக்குகள்‌ பொறுத்து செலுத்தப்பட்ட வரிக்கு திரும்ப கொடுத்தல்‌ கிடைக்கிறவிடத்து, ஏற்றுமதி செய்யப்பட்டது என கருதப்பட்ட சரக்குகளின்‌ வழங்குகைப்‌ பொறுத்த நேர்வில்‌, அத்தகைய ஏற்றுமதிகள்‌ செய்யப்பட்டதாக கருதப்பட்டவை தொடர்பான அறிக்கை அளிப்பதற்கான அந்த தேதி; (க) சேவைகள்‌ தொடர்பாக செலுத்தப்பட்ட வரிக்கு திரும்ப கொடுத்தல்‌ கிடைக்கிறவிடத்து, இந்தியாவிற்கு வெளியே ஏற்றுமதி செய்யப்படும்‌ சேவைகள்‌ அல்லது, நேர்விற்கேற்ப அத்தகைய சேவைகளில்‌ பயன்படுத்தப்பட்ட உள்ளீடுகள்‌ அல்லது உள்ளீட்டு சேவைகள்‌ பொறுத்த நேர்வில்‌,- 0) அத்தகைய செலுத்தத்தை பெற்றுக்‌ கொள்வதற்கு முன்பு சேவைகள்‌ வழங்குகை நிறைவடைகிறவிடத்து, அயல்நாட்டு செலாவணியாக மாற்றக்கூடியவற்றில்‌ தொகையைப்‌ பெற்றுக்‌ கொண்ட தேதி; அல்லது (i) விலைப்பட்டியலை வழங்கும்‌ தேதிக்கு முன்பு முன்கூட்டியே சேவைகளுக்கான செலுத்தத்தை பெற்றுக்‌ கொண்டிருக்கிறவிடத்து வழங்கப்பட்ட விலைப்பட்டியலின்‌ தேதி; (௬) மேல்முறையீட்டு அதிகார அமைப்பின்‌, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்‌ அல்லது நீதிமன்றம்‌ எதனின்‌ தீர்ப்பின்‌, தீர்ப்பாணையின்‌, ஆணையின்‌ அல்லது பணிப்புரையின்‌ விளைவாக வரியை திரும்பக்‌ கொடுக்கக்கூடியதாய்‌ இருக்கும்‌ 94 நேர்வில்‌, அத்தகைய தீர்ப்பு, தீர்ப்பாணை, ஆணை அல்லது பணிப்புரை தெரிவிக்கப்பட்ட தேதி; (௨) (3-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வழி வரவினை திரும்பக்‌ கொடுக்கும்‌ நேர்வில்‌, திரும்ப கொடுப்பதற்காக அத்தகைய கோரிக்கை எழுகின்ற அந்த நிதி ஆண்டின்‌ இறுதி; (ஊ) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளின்படி தற்காலிகமாக வரியை செலுத்துகிற நேர்வில்‌, அதனுடைய இறுதி வரிக்கணிப்பிற்கு பின்பு வரியை சரிசெய்யும்‌ தேதி; (௭) வழங்குநர்‌ அல்லாத பிற நபரைப்‌ பொறுத்த நேர்வில்‌, அத்தகைய நபரால்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டும்‌ பெற்றுக்‌ கொள்ளப்பட்ட தேதி; மற்றும்‌ (ஏ) பிற நேர்வு எதிலும்‌, வரி செலுத்தத்‌ தேதி. 55. குறித்த சில நேர்வுகளில்‌ திருப்பிக்‌ கொடுத்தல்‌.-- அரசானது, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, அறிவிக்கையின்‌ வாயிலாக, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகள்‌ மற்றும்‌ கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, அவர்களால்‌ பெற்றுக்‌ கொள்ளப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ அறிவிக்கை செய்யப்பட்ட வழங்குகைகள்‌ மீது செலுத்தப்பட்ட வரிகளை திருப்பிக்‌ கொடுப்பதற்கு கோருவதற்கு உரிமையுடையவராவார்‌ என்று 1947-ஆம்‌ ஆண்டு ஐக்கிய நாடுகள்‌ (சிறப்புரிமைகள்‌ மற்றும்‌ காப்புறிமைகள்‌) சட்டத்தின்கீழ்‌ (மையச்‌ சட்டம்‌ 46/1947) அறிவிக்கை செய்யப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள்‌ அமைப்பின்‌ தனித்திற முகமை அல்லது பன்முக நிதி நிறுவனம்‌ அல்லது அமைப்பு எதுவும்‌, அயல்‌ நாடுகளின்‌ துணை தூதரகம்‌ அல்லது தூதரகம்‌ மற்றும்‌ இதன்‌ பொருட்டு குறித்துரைக்கப்பட்ட பிற நபர்‌ அல்லது நபர்களின்‌ வகுப்பினர்‌ எவரையும்‌ குறித்துரைக்கலாம்‌. 56. காலதாமத திருப்பிக்‌ கொடுத்தலுக்கு வட்டி.-- விண்ணப்பத்தாரர்‌ எவருக்கும்‌ 54- ஆம்‌ பிரிவின்‌ (5)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ திருப்பிக்‌ கொடுக்கும்படி ஆணையிடப்பட்ட வரி எதுவும்‌, அந்தப்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ விண்ணப்பத்தைப்‌ பெற்றுக்‌ கொண்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள்‌ திருப்பி கொடுக்கப்படாதிருக்குமேயானால்‌, மேற்சொன்ன உட்பிரிவின்கீழ்‌ விண்ணப்பத்தை பெற்றுக்‌ கொண்ட தேதியிலிருந்து அத்தகைய வரியை திருப்பி கொடுக்கும்‌ தேதி வரையில்‌ அறுபது நாட்கள்‌ முடிவடைந்த பின்பு உடனடியாக வரும்‌ தேதியிலிருந்து அத்தகைய திருப்பிக்‌ கொடுத்தல்‌ தொடர்பாக, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேறில்‌, 95 அரசால்‌ வெளியிடப்பட்ட அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள ஆறு விழுக்காட்டிற்கு மிகாத அத்தகைய விதத்தில்‌ வட்டியை செலுத்துதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, இறுதி முடிவிற்கு வந்த நீதிமுறையில்‌ தீர்மானிக்கும்‌ அதிகார அமைப்பால்‌ அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பால்‌ அல்லது மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தால்‌ அல்லது நீதிமன்றத்தால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணையிலிருந்து திருப்பிக்‌ கொடுத்தல்‌ கோரிக்கை எதுவும்‌ எழுகிறவிடத்து, மற்றும்‌ அத்தகைய ஆணையின்‌ விளைவாக தாக்கல்‌ செய்யப்பட்ட விண்ணப்பத்தை பெற்றுக்‌ கொண்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள்‌ அது திருப்பிக்‌ கொடுக்கப்படாதிருக்கிறவிடத்து, அத்தகைய திருப்பி கொடுத்தல்‌ தொடர்பாக விண்ணப்பத்தை பெற்றுக்‌ கொண்ட தேதியிலிருந்து திருப்பிக்‌ கொடுக்கும்‌ தேதி வரையில்‌ அறுபது நாட்கள்‌ முடிவடைந்த பின்பு உடனடியாக வரும்‌ தேதியிலிருந்து, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்பேரில்‌, அரசால்‌ அறிவிக்கை செய்யப்படலாகிறவாறான ஒன்பது விழுக்காட்டிற்கு மிகாத அத்தகைய வீதத்தில்‌ வட்டியை செலுத்துதல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, 54-ஆம்‌ பிரிவின்‌ (5)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ உரிய அலுவலரின்‌ ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு அதிகார அமைப்பால்‌, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தால்‌ அல்லது நீதிமன்றம்‌ எதனாலும்‌ திருப்பிக்‌ கொடுத்தல்‌ ஆணை பிறப்பிக்கப்படுகிறவிடத்து, மேல்முறையீட்டு அதிகார அமைப்பால்‌, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தால்‌ அல்லது நீதிமன்றத்தால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணை, மேற்சொன்ன (5)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணையாக கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 57. நுகர்வோர்‌ நல நிதியம்‌.- அரசானது, நுகர்வோர்‌ நல நிதியம்‌ என அழைக்கப்படுகின்ற ஒரு நிதியத்தை அமைத்துருவாக்குதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அந்த நிதியத்தில்‌ (அ) 54-ஆம்‌ பிரிவின்‌ (5)-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள தொகையை; (ஆ) நிதியத்தில்‌ வரவு வைக்கப்பட்டுள்ள முதலீடு செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து வருமானம்‌ எதையும்‌; மற்றும்‌ (8) அதனால்‌ பெற்றுக்‌ கொள்ளப்பட்ட அத்தகைய பிற பணங்களை, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ வரவு வைத்தல்‌ வேண்டும்‌. 58. நிதியத்தைப்‌ பயன்படுத்துதல்‌.-- (1) நிதியத்தில்‌ வரவு வைக்கப்படும்‌ பணங்கள்‌ அனைத்தும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌, நுகர்வோர்களின்‌ நலனுக்காக அரசால்‌ பயன்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌. (2) அதனால்‌ குறித்துரைக்கப்பட்ட அரசு அல்லது அதிகார அமைப்பானது, நிதியம்‌ தொடர்பாக உரிய மற்றும்‌ தனித்தனி கணக்கை மற்றும்‌ பிற தொடர்புடைய 96 பதிவுருக்களை பராமரித்து வருதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இந்திய தலைமைக்‌ கணக்காய்வர்‌ மற்றும்‌ தணிக்கையரை கலந்தாய்வு செய்து வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்தில்‌ கணக்குகளின்‌ ஆண்டறிக்கை ஒன்றை தயார்‌ செய்தல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ Xl வரிக்கணிப்பு. 59. சுய வரிக்கணிப்பு-- பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செலுத்தத்தக்க வரிகளை சுய வரிக்கணிப்பு செய்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ ஒவ்வொரு வரி காலத்திற்காகவும்‌ 39-ஆம்‌ பிரிவின்கீழ்‌ குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு அறிக்கையை அளித்தல்‌ வேண்டும்‌. 60. தற்காலிக வரிக்கணிப்பு.-- (1) (2-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, வரிவிதிக்கத்தக்க நபர்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ மதிப்பை தீர்மானிக்க முடியாதிருக்கிறவிடத்து அல்லது அவைகளுக்கு பொருந்தக்கூடிய வரிவிீதத்தை தீர்மானிக்கிறவிடத்து, அவர்‌ தற்காலிக அடிப்படையில்‌ வரியைச்‌ செலுத்துவதற்கான காரணங்களை எழுத்து வடிவில்‌ அளித்து உரிய அலுவலரின்‌ அனுமதி கோரலாம்‌ மற்றும்‌ உரிய அலுவலர்‌, அத்தகைய வேண்டுதலை பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்கு குறையாத காலத்திற்குள்‌ அவரால்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய விதத்தில்‌ அல்லது அத்தகைய மதிப்பின்‌ மீது தற்காலிக அடிப்படையின்‌ பேரில்‌ வரி செலுத்தத்தை அனுமதிப்பதற்கான ஆணையைப்‌ பிறப்பித்தல்‌ வேண்டும்‌. (2) வரிவிதிக்கத்தக்க நபர்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்தில்‌ பிணைமுறிவு, மற்றும்‌ உறிய அலுவலர்‌ தக்கதெனக்‌ கருதுகிறவாறான அத்தகைய பிணையதாரருடன்‌ அல்லது பிணையத்துடன்‌, இறுதியாக வரிக்கணிப்பு செய்யப்படலாகும்‌ வரித்‌ தொகைக்கும்‌ மற்றும்‌ தற்காலிகமாக வரிக்கணிப்பு செய்யப்பட்ட தொகைக்கும்‌ இடையிலான வித்தியாச தொகையைச்‌ செலுத்துவதற்கு வரிவிதிக்கத்தக்க நபரை கட்டுப்படுத்தும்‌ பத்திரத்தை எழுதிக்கொடுப்பாரானால்‌, தற்காலிக அடிப்படையில்‌ வரி செலுத்த அணுமதிக்கப்படுவார்‌. (3) உரிய அலுவலர்‌, (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வழங்கப்பட்ட ஆணை தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு மிகாத காலத்திற்குள்‌, வரிக்கணிப்பினை இறுதி செய்வதற்காக வேண்டப்படலாகும்‌ அத்தகைய தகவலை கருத்தில்‌ எடுத்துக்கொண்ட பின்பு இறுதி வரிக்கணிப்பு ஆணையினை வெளியீடு செய்தல்‌ வேண்டும்‌: 97 வரம்புரை: ஆனால்‌, இந்த உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள காலத்தை, போதிய காரணத்தை வெளிப்படுத்துவதன்பேரில்‌ மற்றும்‌ எழுத்து வடிவில்‌ பதிவு செய்யப்படவேண்டிய காரணங்களுக்காக இணை ஆணையரால்‌ அல்லது கூடுதல்‌ ஆணையரால்‌ ஆறு மாதங்களுக்கு மிகாத மேலுமான ஒரு காலத்திற்கு மற்றும்‌ ஆணையரால்‌ நான்கு ஆண்டுகளுக்கு மிகாத அத்தகைய மேலுமான ஒரு காலத்திற்கு நீட்டிக்கலாம்‌. (4) தற்காலிக வரிக்கணிப்பின்கீழ்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகையின்பேரில்‌ செலுத்தத்தக்க வரியானது, 39-ஆம்‌ பிரிவின்‌ (7)-ஆம்‌ உட்பிரிவின்கழ்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளின்படி குறித்துரைக்கப்பட்டுள்ள உரிய தேதியில்‌ செலுத்தாதிருக்கும்போது, இறுதி வரிக்கணிப்பிற்காக ஆணையைப்‌ பிறப்பிப்பதற்கு முண்போ அல்லது பின்போ, அத்தகைய தொகை செலுத்தப்பட்டிருக்கிறவிடத்து, மேற்சொன்ன சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை தொடர்பாக வரி செலுத்த வேண்டிய உரிய தேதிக்கு பின்பான முதல்‌ நாளிலிருந்து உள்ளபடியே செலுத்தப்பட்ட தேதிவரையில்‌, 50-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள விதத்தில்‌, பதிவு பெற்ற நபர்‌ வட்டியைச்‌ செலுத்துவதற்கு கடப்பாடு உடையவராதல்‌ வேண்டும்‌. (5) பதிவு பெற்ற நபர்‌, (3)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ இறுதி வரிக்கணிப்பு ஆணையின்‌ விளைவாக திருப்பிக்‌ கொடுப்பதற்கு உரிமையுடையவராகிறவிடத்து, 54-ஆம்‌ பிரிவின்‌ (8)-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, 56-ஆம்‌ பிரிவில்‌ வகை செய்துள்ளவாறு அத்தகைய திருப்பிக்‌ கொடுத்தலின்‌ மீது வட்டியை வழங்குதல்‌ வேண்டும்‌. 61. அறிக்கைகளை கூர்ந்தாய்வு செய்தல்‌.- (1) உரிய அலுவலர்‌, அறிக்கையினை சரிபார்ப்பதற்கு பதிவு பெற்ற நபரால்‌ அளிக்கப்பட்ட அறிக்கைகள்‌ மற்றும்‌ தொடர்புடைய விவரங்களை கூற்ந்தாய்வு செய்யலாம்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ கண்டறியப்பட்ட முரண்பாடுகள்‌ ஏதேனும்‌ இருப்பின்‌ அதனை அவருக்கு தெரிவித்து மற்றும்‌ அதற்கு அவருடைய விளக்கத்தைக்‌ கோரலாம்‌. (2) விளக்கம்‌ ஏற்ககூடியதாய்‌ காணப்படுகின்ற நேர்வில்‌, பதிவு பெற்ற நபருக்கு அவ்வாறே தகவல்‌ அளித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எதுவும்‌ எடுத்தல்‌ ஆகாது. (3) உரிய அலுவலரால்‌ தெரிவிக்கப்பட்ட முப்பது நாட்கள்‌ காலத்திற்குள்‌ அல்லது அவரால்‌ அனுமதிக்கப்படலாகும்‌ அத்தகைய மேலுமான காலத்திற்குள்‌ 98 மனநிறைவளிக்கும்‌ வகையில்‌ விளக்கம்‌ அளிக்காது இருக்கின்ற நேர்வில்‌ அல்லது பதிவு பெற்ற நபர்‌, முரண்பாடுகளை ஏற்றுக்கொண்ட பின்பு, முரண்பாடுகள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட்ட மாதத்திற்கான அவருடைய அறிக்கையில்‌ சீர்‌ செய்யும்‌ நடவடிக்கைகளை எடுக்க தவறுகிறவிடத்து, உரிய அலுவலர்‌, 65-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது 66-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது 67-ஆம்‌ பிரிவின்கீழுள்ளவைகள்‌ உள்ளடங்கலான உரிய நடவடிக்கையைத்‌ தொடங்கலாம்‌ அல்லது 73-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது 74-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வரி மற்றும்‌ நிலுவைத்‌ தொகைகளைத்‌ தீர்மானிப்பதற்கு முயலுதல்‌ வேண்டும்‌. 62. அறிக்கைகளை தாக்கல்‌ செய்யாதவர்களின்‌ வரிக்கணிப்பு-- (1) 73-ஆம்‌ பிரிவில்‌ அல்லது 74-ஆம்‌ பிரிவில்‌ முரணாக என்ன அடங்கியிருந்த போதிலும்‌, பதிவு பெற்ற நபர்‌ 46-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அறிவிப்பு சார்வு செய்யப்பட்ட பின்பும்‌, 39-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது 45-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அறிக்கை அளிக்கத்‌ தவறுகிறவிடத்து, உரிய அலுவலர்‌, கிடைக்கக்கூடிய அல்லது சேகரிக்கப்பட்ட தொடர்புடைய அனைத்து மூலப்பொருட்களை கணக்கில்‌ எடுத்துக்‌ கொண்டு தண்ணுடைய நியாயமான முறையில்‌ மேற்சொன்ன நபரின்‌ வரிக்‌ கடப்பாட்டினை மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கலாம்‌ மற்றும்‌ வரி செலுத்தப்படாத தொடர்புடைய அந்த நிதியாண்டிற்கான ஆண்டறிக்கையை அளிப்பதற்காக 44-ஆம்‌ பிரிவின்கீழ்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள்‌ காலத்திற்குள்‌ வரிக்கணிப்பு ஆணையைப்‌ பிறப்பிக்கலாம்‌. (2) பதிவு பெற்ற நபர்‌, (1-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வரிக்கணிப்பு ஆணையை சார்வு செய்த முப்பது நாட்களுக்குள்‌ செல்லுந்தன்மையுள்ள அறிக்கையை அளிக்கிறவிடத்து, மேற்சொன்ன வரிக்கணிப்பு ஆணையை திரும்ப பெற்றதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌, ஆனால்‌ 50-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வட்டியை அல்லது 47-ஆம்‌ பிரிவின்கீழ்‌ தாமதக்‌ கட்டணத்தை செலுத்துவதற்கான கடப்பாடு தொடருதல்‌ வேண்டும்‌. 63. பதிவு பெறாத நபர்களின்‌ வரிக்கணிப்பு.-- 73-ஆம்‌ பிரிவில்‌ அல்லது 74-ஆம்‌ பிரிவில்‌ முரணாக என்ன அடங்கியிருந்த போதிலும்‌, வரிவிதிக்கத்தக்க நபர்‌ அவ்வாறு செய்வதற்கு பொறுப்பாக இருந்தும்‌ பதிவு பெறுவதற்கு தவறுகிறவிடத்து அல்லது 29-ஆம்‌ பிரிவின்‌ (2)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அவருடைய பதிவானது ரத்து செய்யப்பட்டிருக்கிறவிடத்து, ஆனால்‌ வரி செலுத்த கடப்பாடுடையவராகிறவிடத்து, உரிய அலுவலர்‌, தொடர்புடைய வரி காலங்களுக்காக தன்னுடைய நியாயமான முறையில்‌ அத்தகைய வரிவிதிக்கத்தக்க நபறின்‌ வரி கடப்பாட்டினை கணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்‌ மற்றும்‌ வரி செலுத்தப்படாத தொடர்புடைய அந்த நிதியாண்டிற்காக ஆண்டறிக்கையை அளிப்பதற்காக 44-ஆம்‌ பிரிவில்‌: 99 குறித்துரைக்கப்பட்டுள்ள தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள்‌ காலத்திற்குள்‌ வரிக்கணிப்பு ஆணையைப்‌ பிறப்பிக்கலாம்‌: வரம்புரை: ஆனால்‌, அத்தகைய வரிக்கணிப்பு ஆணையானது, நபரின்‌ வாதத்தினை கேட்பதற்கான ஒரு வாய்ப்பினை அளிக்காமல்‌ பிறப்பிக்கப்படுதல்‌ ஆகாது. 64. குறித்த சில சிறப்பு நேர்வுகளில்‌ சுருக்கு முறை வரிக்கணிப்பு.-- (1) உரிய அலுவலர்‌, நபருடைய வரி கடப்பாட்டினை காட்டுகின்ற சான்று எதனின்‌ பேரிலும்‌, கூடுதல்‌ ஆணையரின்‌ அல்லது இணை ஆணையரின்‌ முன்‌ அனுமதியுடன்‌, வருவாயின்‌ உரிமத்தை பாதுகாப்பதற்கு அத்தகைய நபரின்‌ வரி கடப்பாட்டினை மதிப்பீடு செய்வதற்கு முற்படலாம்‌ மற்றும்‌ அவ்வாறு காலதாமதம்‌ செய்வது வருவாயின்‌ உரிமத்தை பாதிக்கும்‌ என நம்புவதற்கு போதிய காரணங்கள்‌ அவர்‌ பெற்றிருப்பாரேயானால்‌, வரிக்கணிப்பு ஆணையைப்‌ பிறப்பிக்கலாம்‌: வரம்புரை: ஆனால்‌, எந்த வரிவிதிக்கத்தக்க நபருக்கு கடப்பாடானது உறுதி செய்யப்பட முடியாதிருக்கிறவிடத்து மற்றும்‌ அத்தகைய கடப்பாடானது சரக்குகளின்‌ வழங்குகையை பொறுத்துள்ள போது, அத்தகைய சரக்குகளுக்கு பொறுப்பாய்‌ உள்ள நபர்‌, வரிக்கணிப்பு செய்யப்படுவதற்கு கடப்பாடுடைய வரிவிதிக்கத்தக்க நபராகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ இந்தப்‌ பிரிவின்கீழ்‌ வரி மற்றும்‌ பிற நிலுவைத்‌ தொகையைச்‌ செலுத்துவதற்கு கடப்பாடுடையவராவார்‌. (2) 0-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணையைப்‌ பெற்றுக்‌ கொண்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்‌ வரி விதிக்கத்தக்க நபரால்‌ செய்யப்பட்ட விண்ணப்பத்தின்பேரில்‌ அல்லது கூடுதல்‌ ஆணையர்‌ அல்லது இணை: ஆணையர்‌, அவர்‌ தாமாக முற்பட்டு அத்தகைய ஆணை தவறானது என்று கருதுவாரானால்‌, அவர்‌ அத்தகைய ஆணையை திரும்ப பெறலாம்‌ மற்றும்‌ 73-ஆம்‌ பிரிவில்‌ அல்லது 74-ஆம்‌ பிரிவில்‌ விதிக்கப்பட்டுள்ள நடைமுறையைப்‌ பின்பற்றலாம்‌. அத்தியாயம்‌ Xl தணிக்கை. 65. வரிவிதிக்கும்‌ அதிகார அமைப்புகளால்‌ தணிக்கை.- (1) ஆணையர்‌ அல்லது அவரால்‌ அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்‌ எவரும்‌, பொது அல்லது சிறப்பு ஆணையின்‌ வாயிலாக, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய காலத்திற்காக, அத்தகைய இடைவெளிகளில்‌ மற்றும்‌ அத்தகைய முறையில்‌, பதிவு பெற்ற நபர்‌ எவரையும்‌ தணிக்கை செய்யலாம்‌. 100 (2) ௫-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள அலுவலர்கள்‌, பதிவு பெற்ற நபரின்‌ வணிக இடத்தில்‌ அல்லது அவர்களுடைய அலுவலகத்தில்‌ தணிக்கையை செய்யலாம்‌. (3) பதிவு பெற்ற நபருக்கு, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌, தணிக்கை செய்வதற்கு முன்பாக பதினைந்து வேலை நாட்களுக்கு குறையாமல்‌, அறிவிப்பின்‌ மூலமாக தெரிவித்தல்‌ வேண்டும்‌. (4) ௩-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ தணிக்கையானது, தணிக்கை தொடங்கிய தேதியிலிருந்து மூன்று மாதங்கள்‌ காலத்திற்குள்‌ நிறைவு செய்யப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, அத்தகைய பதிவு பெற்ற நபர்‌ தொடர்பாக தணிக்கையானது மூன்று மாதங்களுக்குள்‌ நிறைவு செய்ய முடியவில்லையென ஆணையர்‌ மனநிறைவு கொள்கிறவிடத்து, அவர்‌, எழுத்து வடிவில்‌ பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக, ஆறு மாதங்களுக்கு மிகாத மேலுமான காலத்திற்கு கால நீட்டிப்பு செய்யலாம்‌. விளக்கம்‌.- இந்த உட்பிரிவின்‌ நோக்கங்களுக்காக "தணிக்கையின்‌ தொடக்கம்‌" எனும்‌ சொற்றொடரானது, வரிவிதிக்கும்‌ அதிகார அமைப்புகளால்‌ கோரப்பட்ட பதிவுருக்கள்‌ மற்றும்‌ பிற ஆவணங்கள்‌ பதிவு பெற்ற நபரால்‌ கிடைக்கத்தக்கதாகச்‌ செய்யப்பட்ட தேதி அல்லது வணிக இடத்தில்‌ தணிக்கை உள்ளபடியே நடைபெறும்‌ தேதி, இதில்‌ எது பிந்தையதோ, அந்த தேதி, என்று பொருள்படும்‌. (5) தணிக்கை நடவடிக்கையின்போது, அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்‌, பதிவு பெற்ற நபரை,- (i) அவர்‌ கோருகிற கணக்குப்‌ புத்தகங்களை அல்லது பிற ஆவணங்களை சரிபார்ப்பதற்கு அவருக்குத்‌ தேவையான வசதியை அளிப்பதற்கு கோரலாம்‌; (i) அவர்‌ கோருகிற அத்தகைய தகவலை அளிப்பதற்கு மற்றும்‌ உரிய நேரத்தில்‌ தணிக்கையை நிறைவு செய்வதற்கான உதவியை வழங்குமாறு கோரலாம்‌. (6) தணிக்கை முடிவுற்ற பின்‌, உரிய அலுவலர்‌, முப்பது நாட்களுக்குள்‌, எவருடைய பதிவுருக்கள்‌ தணிக்கை செய்யப்பட்டதோ, அந்த பதிவு பெற்ற நபருக்கு, அது பற்றிய முடிவுகள்‌, அவருடைய உரிமைகள்‌ மற்றும்‌ கடமைகள்‌ மற்றும்‌ அத்தகைய முடிவுகளுக்கான காரணங்களை தெரிவித்தல்‌ வேண்டும்‌. (7) வரி செலுத்தாதிருப்பது அல்லது குறைவாக செலுத்தியது அல்லது தவறுதலாக திருப்பிக்‌ கொடுக்கப்பட்டது அல்லது உள்ளீட்டு வறி வரவானது தவறுதலாக துய்க்கப்பட்டது அல்லது பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதன்‌ விளைவாக (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ தணிக்கை செய்யப்பட்டிருக்கிறவிடத்து, உரிய 101 அலுவலர்‌ 73-ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ அல்லது 74-ஆம்‌ பிரிவின்கீழ்‌ நடவடிக்கையை மேற்கொள்ளலாம்‌. 66. சிறப்புத்‌ தணிக்கை.-- (1) உதவி ஆணையரின்‌ கீழ்நிலைக்கு குறையாத அலுவலர்‌ எவரும்‌, தம்‌ முன்புள்ள கூர்ந்தாய்வின்‌, விசாரணையின்‌, புலன்விசாரணையின்‌ அல்லது பிற நடவடிக்கைகள்‌ எதனின்‌ எந்த நிலையிலும்‌, வழக்கின்‌ தண்மை மற்றும்‌ சிக்கலினை மற்றும்‌ வருவாயின்‌ தண்மையினை கவனத்தில்‌ கொண்டு மதிப்பானது சரியாக விளம்புகை செய்யப்படவில்லை அல்லது துய்க்கக்கூடிய வரவானது சாதாரண வரம்பிற்குள்‌ இல்லையென கருதுவாரேயானால்‌, அவர்‌, ஆணையரின்‌ முன்‌ ஒப்புதலளிப்புடன்‌, கணக்குப்‌ புத்தகங்கள்‌ உள்ளடங்கலாக அவருடைய பதிவுருக்கள்‌ ஆணையரால்‌ நியமிக்கப்படலாகும்‌ பட்டயக்‌ கணக்கரால்‌ அல்லது விலை மதிப்பீட்டுக்‌ கணக்கரால்‌ ஆய்வு செய்யப்படுவதற்கு மற்றும்‌ தணிக்கை செய்யப்படுவதற்கு அத்தகைய பதிவு பெற்ற நபருக்கு எழுத்து வடிவிலான தகவல்‌ மூலம்‌ பணிக்கலாம்‌. (2) அவ்வாறு நியமிக்கப்பட்ட பட்டயக்‌ கணக்கர்‌ அல்லது விலை மதிப்பீட்டுக்‌ கணக்கர்‌, தொண்ணூறு நாட்கள்‌ காலத்திற்குள்‌, அவரால்‌ உரியவாறு கையொப்பமிடப்பட்ட மற்றும்‌ சான்றளிக்கப்பட்ட அத்தகைய தணிக்கை அறிக்கையை குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற விவரங்களை அதில்‌ குறிப்பிட்டு, மேற்சொன்ன உதவி ஆணையரிடம்‌ சமர்ப்பித்தல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, உதவி ஆணையர்‌, பதிவு பெற்ற நபரால்‌ அல்லது பட்டயக்‌ கணக்கரால்‌ அல்லது விலை மதிப்பீட்டுக்‌ கணக்கரால்‌ இதன்‌ பொருட்டு செய்யப்பட்ட விண்ணப்பத்தின்‌ பேரிலும்‌ அல்லது மூலப்பொருள்‌ மற்றும்‌ போதிய காரணம்‌ எதற்காகவும்‌, மேற்கொண்டு தொண்ணூறு நாட்களுக்கு மேற்சொன்ன காலத்தை நீட்டிக்கலாம்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்‌ பிற வகைமுறைகள்‌ எதனின்கீழ்‌ அல்லது அப்போதைக்கு நடைமுறையில்‌ உள்ள பிற சட்டம்‌ எதனின்கீழ்‌ பதிவு பெற்ற நபரின்‌ கணக்குகளானது தணிக்கை செய்யப்பட்டிருப்பினும்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளானது செயல்விளைவினைக்‌ கொண்டிருக்கும்‌. (4) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்படி அவருக்கு எதிரான நடவடிக்கைகள்‌ எதிலும்‌ பயன்படுத்தப்பட கருதியுள்ள (1)-ஆம்‌ உட்பிரிவின்கழான சிறப்பு தணிக்கையின்‌ அடிப்படையில்‌ சேகரிக்கப்பட்ட மூலப்பொருள்‌ எதுவும்‌ தொடர்பாக, பதிவு பெற்ற நபருக்கு வாதத்தினை கேட்பதற்கான ஒரு வாய்ப்பினை அளித்தல்‌ வேண்டும்‌. 102 (5) அத்தகைய பட்டயக்‌ கணக்கரின்‌ அல்லது விலை மதிப்பீட்டுக்‌ கணக்கரின்‌ பணி ஊதியம்‌ உள்ளடங்கலான (1)-ஆம்‌ உட்பிரிவின்கீமழுள்ள பதிவுருக்களின்‌ ஆய்வு மற்றும்‌ தணிக்கை செலவுகள்‌ ஆணையரால்‌ முடிவு செய்யப்பட்டு செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய முடிவு இறுதியானதாகும்‌. (6) (0-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ சிறப்பு தணிக்கை செய்யப்படுகிறவிடத்து, வரி செலுத்தாதிருப்பது அல்லது வரிகுறைவாக செலுத்தியது அல்லது தவறுதலாக திரும்பக்‌ கொடுக்கப்பட்டது அல்லது உள்ளீட்டு வரிவரவானது தவறுதலாக துய்க்கப்பட்டது அல்லது பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதன்‌ விளைவாக, உரிய அலுவலர்‌, 73-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது 74-ஆம்‌ பிரிவின்கீழ்‌ நடவடிக்கையை மேற்கொள்ளலாம்‌. அத்தியாயம்‌ XIV ஆய்வு, தேடுதல்‌, கைப்பற்றுதல்‌ மற்றும்‌ கைது செய்தல்‌. 67. ஆய்வு, தேடுதல்‌ மற்றும்‌ கைப்பற்றுதலுக்கான அதிகாரம்‌.- (1) இணை ஆணையரின்‌ படிநிலைக்கு குறையாத உரிய அலுவலர்‌- (அ) வரிவிதிக்கத்தக்க நபர்‌, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ அல்லது தன்வசம்‌ கையிருப்பில்‌ உள்ள சரக்குகளின்‌ வழங்குகை தொடர்பான நடவடிக்கை எதையும்‌ மறைத்துள்ளார்‌, அல்லது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அவருடைய உரிமைக்கு அதிகமாக உள்ளீட்டு வரி வரவை கோரியுள்ளார்‌, அல்லது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளின்படி வரி செலுத்தத்தை தவிர்ப்பதற்கு இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ வகைமுறைகளில்‌ எதனையும்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரி ஏய்ப்பு செய்வதற்காக மீறியுள்ளார்‌; அல்லது (ஆ) சரக்குகளை ஏற்றிச்‌ செல்லும்‌ வணிகத்தில்‌ ஈடுபட்டுள்ள நபர்‌ எவரும்‌ அல்லது பண்டகசாலையின்‌ அல்லது சேமிப்பு கிடங்கின்‌ சரக்குகளை வைத்திருக்கிற பிற இடம்‌ எதனின்‌ சொந்தக்காரர்‌ அல்லது இயக்குபவர்‌ சரக்குகள்‌ எதுவும்‌ அது வரியைச்‌ செலுத்துவதிலிருந்து விடுபட்டிருப்பதாக அல்லது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செலுத்தத்தக்க வரி ஏய்ப்பு அநேகமாக நிகழக்கூடிய அத்தகைய முறையில்‌ சரக்குகள்‌ அல்லது கணக்குகளை வைத்துள்ளார்‌, என்று அவர்‌ நம்புவதற்கு காரணம்‌ பெற்றிருக்கிறவிடத்து, மாநில வரியின்‌ பிற அலுவலர்‌ எவருக்கும்‌, வரிவிதிக்கத்தக்க நபறின்‌ வணிக இடங்கள்‌ எவற்றையும்‌ அல்லது சரக்குகளை ஏற்றிச்‌ செல்லும்‌ வணிகத்தில்‌ ஈடுபட்டுள்ள நபர்களை அல்லது பண்டக சாலையின்‌ அல்லது கிடங்கின்‌ அல்லது பிற இடம்‌ எதனின்‌ சொந்தக்காரரை அல்லது இயக்குபவரை ஆய்வு செய்வதற்கு எழுத்து வடிவில்‌ அதிகாரம்‌ அளிக்கலாம்‌. 103 (2 இணை ஆணையரின்‌ படிநிலைக்கு குறையாத உரிய அலுவலர்‌, (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ ஆய்வு மேற்கொண்டதை ஒட்டி அல்லது பிறவாறாக, இந்தச்‌ சட்டத்தின்கழான நடவடிக்கைகள்‌ எவற்றிற்கும்‌ பயனுடையதாக அல்லது தொடர்புடையதாக இருப்பதாக அவர்‌ கருதினால்‌, பறிமுதல்‌ செய்வதற்கு கடப்பாடுடையதென கருதும்‌ சரக்குகள்‌ எவையும்‌ அல்லது ஆவணங்கள்‌ அல்லது புத்தகங்கள்‌ அல்லது பொருட்கள்‌ எவையும்‌ இடம்‌ எதிலும்‌ மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்புவதற்கான காரணங்களை பெற்றிருக்கிறவிடத்து, தேடுவதற்கு மற்றும்‌ கைப்பற்றுவதற்கு மாநில வரியின்‌ பிற அலுவலர்‌ எவருக்கும்‌ எழுத்து வடிவில்‌ அதிகாரமளிக்கலாம்‌ அல்லது அத்தகைய சரக்குகளை, ஆவணங்களை அல்லது புத்தகங்களை அல்லது பொருட்களை தாமே தேடலாம்‌ மற்றும்‌ கைப்பற்றலாம்‌: வரம்புரை: ஆனால்‌, அத்தகைய சரக்குகள்‌ எவற்றையும்‌ கைப்பற்றுவதற்கு இயலாததாக இருக்கிறவிடத்து, உரிய அலுவலர்‌, அல்லது அவரால்‌ அதிகாரமளிக்கப்பட்டுள்ள அலுவலர்‌ எவரும்‌, அத்தகைய அலுவலரின்‌ முன்‌ அனுமதியின்றி, சரக்குகளை அகற்றுதலோ, பாகம்‌ பிரித்தலோ அல்லது பிறவாறு சரக்குகளை கையாளுதலோ கூடாதென சரக்குகளின்‌ சொந்தக்காரருக்கோ அல்லது சரக்குகளின்‌ பாதுகாவலருக்கோ ஆணையை சார்வு செய்யலாம்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, அவ்வாறு பறிமுதல்‌ செய்யப்பட்ட ஆவணங்கள்‌ அல்லது புத்தகங்கள்‌ அல்லது பொருட்கள்‌, அவர்களுடைய சோதனைக்காக மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செய்யப்படும்‌ விசாரணை அல்லது நடவடிக்கைகள்‌ எவற்றிற்காகவும்‌ தேவைப்படுகிற எவ்வளவு காலத்திற்கு அவசியமோ அவ்வளவு காலத்திற்கு அத்தகைய அலுவலரால்‌ நிறுத்தி வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) (2-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள ஆவணங்கள்‌, புத்தகங்கள்‌ அல்லது பொருட்கள்‌ அல்லது வரிவிதிக்கத்தக்க நபரால்‌ அல்லது பிற நபர்‌ எவராலும்‌ முன்னிலைப்படுத்தப்பட்ட பிற ஆவணங்கள்‌, புத்தகங்கள்‌ அல்லது பொருட்கள்‌ எவையும்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளின்படி அறிவிப்பு வழங்குவதற்காக பொருத்தமாக இல்லாதிருப்பின்‌ அவைகளை மேற்சொன்ன அறிவிப்பை வழங்கிய முப்பது நாட்களுக்கு மேற்படாத கால அளவிற்குள்‌ அத்தகைய நபரிடம்‌ திருப்பிக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌. (4) (2-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்‌, அத்தகைய இடங்களுக்கு, அலமாரிக்கு, மிண்ணணு சாதனங்களுக்கு, பெட்டிக்கு அல்லது கொள்கலத்தினை அணுகக்கூடிய வாய்ப்பு மறுக்கப்படுகிறவிடத்து, சரக்குகள்‌, கணக்குகள்‌, பதிவேடுகள்‌ அல்லது ஆவணங்கள்‌ மறைத்து வைக்கப்படுவதாக சந்தேகப்படுகின்ற நபரின்‌ வளாகங்கள்‌ எவற்றின்‌ கதவை முத்திரையிடுவதற்கு அல்லது உடைப்பதற்கு அல்லது அலமாரியை, மின்னணு சாதனங்களை, பெட்டியை, கொள்கலனை உடைப்பதற்கு அதிகாரம்‌ உடையவராவார்‌. (5 (2-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ எந்த நபரின்‌ பொறுப்பிலிருந்து ஆவணங்கள்‌ எவையும்‌ கைப்பற்றப்பட்டதோ அந்த நபர்‌, உரிய படிகளை பெறுவது அல்லது 104 அத்தகைய எடுகுறிப்புகளை எடுப்பது புலன்விசாரணைக்கு குந்தகத்தை ஏற்படுத்துமென உரிய அலுவலர்‌ கருதுகிறவிடத்து அன்றி, இதன்‌ பொருட்டு அத்தகைய அலுவலர்‌ சட்டிக்காட்டுகின்ற அத்தகைய இடத்தில்‌ மற்றும்‌ காலத்தில்‌ அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரின்‌ முன்னிலையில்‌ அதிலிருந்து படிகளை தயார்‌ செய்வதற்கு அல்லது அதிலிருந்து எடுகுறிப்புகளை எடுப்பதற்கு உரிமை கொண்டவர்‌ ஆவார்‌. (6) (2-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அவ்வாறு கைப்பற்றப்பட்ட சரக்குகளை, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ மற்றும்‌ முறையே, அத்தகைய அளவில்‌, பிணைய பத்திரத்தை நிறைவேற்றுவதன்‌ மற்றும்‌ காப்புறுதியை அளிப்பதன்‌ பேரில்‌ அல்லது, நேர்விற்கேற்ப, பொருந்தக்‌ கூடிய வரியை, வட்டியை மற்றும்‌ செலுத்தத்தக்க தண்டத்‌ தொகையைச்‌ செலுத்துவதன்‌ பேரில்‌, தற்காலிக அடிப்படையில்‌ விடுவித்தல்‌ வேண்டும்‌. (7) (2-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ சரக்குகள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு மற்றும்‌ அந்த சரக்குகள்‌ தொடர்பாக, சரக்குகளை பறிமுதல்‌ செய்த ஆறு மாதங்களுக்குள்‌ அறிவிப்பை சார்வு செய்யப்படாதவிடத்து, அந்த சரக்குகள்‌ எந்த நபரின்‌ உடமையிலிருந்து பறிமுதல்‌ செய்யப்பட்டதோ அந்த நபரிடம்‌ சரக்குகளை திருப்பிக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, ஆறு மாதங்கள்‌ கால அளவு, போதிய காரணத்தை வெளிப்படுத்துவதன்‌ பேரில்‌, உரிய அலுவலரால்‌ ஆறு மாதங்களுக்கு மேற்படாத மேலுமான கால அளவிற்கு நீட்டிக்கப்படலாம்‌. (8) அரசு, அழியக்கூடிய அல்லது தீங்கு விளைவிக்கும்‌ தன்மையுடைய சரக்குகள்‌, காலக்கழிவினால்‌ சரக்குகளின்‌ மதிப்பு குறைதல்‌, சரக்குகளுக்கான இடசேமிப்பின்‌ கட்டுப்பாடுகள்‌, அல்லது தொடர்புடைய பிற எதனின்‌ மறுபயண்களைப்‌ பொறுத்து, (2)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அதனுடைய கைப்பற்றுகைக்குப்‌ பின்பு, கூடிய விரைவில்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ உரிய அலுவலரால்‌ ஒப்படைக்கப்பட்ட சரக்குகள்‌ அல்லது சரக்குகளின்‌ வகையினை, அறிவிக்கையின்‌ வாயிலாக, குறித்துரைக்கலாம்‌. (9) )-ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள சரக்குகளாக இருக்கின்ற சரக்குகள்‌ எவையும்‌ (2)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ உரிய அலுவலரால்‌ அல்லது அவரால்‌ அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்‌ எவராலும்‌, கைப்பற்றப்படுகிறவிடத்து, அவர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌, அத்தகைய சரக்குகளின்‌ சரக்கிருப்பை தயார்‌ செய்தல்‌ வேண்டும்‌. (10) தேடுதல்‌ மற்றும்‌ கைப்பற்றுதல்‌ தொடர்பான 1973-ஆம்‌ ஆண்டு குற்றவியல்‌ நெறிமுறை தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 271974) வகைமுறைகளானது, எங்கெல்லாம்‌ "நடுவர்‌" என்ற சொல்‌ காணப்படுகிறதோ அங்கெல்லாம்‌ அதற்கு பதிலாக "ஆணையர்‌" என்ற சொல்‌ அமைக்கப்பட்டாற்போன்றே செயல்‌ விளைவினைக்‌ கொண்டிருக்கும்‌. 105 மேற்சொன்ன தொகுப்புச்‌ சட்டத்தின்‌ 4165-ஆம்‌ பிரிவின்‌ (5)-ஆம்‌ உட்பிரிவின்‌ மாற்றமைவுக்கு உட்பட்டு எந்த அளவுக்கு கூடுமோ அந்த அளவிற்கு, இந்தப்‌ பிரிவின்கீழ்‌ தேடுதலுக்கு மற்றும்‌ கைப்பற்றுதலுக்கு பொருந்துதல்‌ வேண்டும்‌. (14) உரிய அலுவலர்‌, நபர்‌ எவரும்‌ வரி எதையும்‌ செலுத்துவதற்கு ஏய்ப்பதாக அல்லது ஏய்ப்பதற்கு முயற்சி செய்வதாக நம்புவதற்கு காரணங்களை கொண்டிருக்கிறவிடத்து, அவர்‌, எழுத்து வடிவில்‌ பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக, அவரிடம்‌ முன்னிலைப்படுத்தப்பட்ட அத்தகைய நபருடைய கணக்குகளை, பதிவேடுகளை அல்லது ஆவணங்களை கைப்பற்றலாம்‌ மற்றும்‌ அதற்காக ரசீதை வழங்குதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ குற்றவியல்‌ வழக்குத்‌ தொடருவதற்காக இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளின்படியான நடவடிக்கைகள்‌ தொடர்பாக எவ்வளவு காலத்திற்கு அவசியமோ அவ்வளவு காலத்திற்கு அவைகளை நிறுத்தி வைத்தல்‌ வேண்டும்‌. (12) ஆணையர்‌ அல்லது அவரால்‌ அதிகாரம்‌ அளிக்கப்பட்ட அலுவலர்‌, அத்தகைய வரிவிதிக்கத்தக்க நபரால்‌ வழங்கப்பட்ட வழங்குகைகளின்‌ வரி விலைப்பட்டியல்களை அல்லது செலவுப்பட்டிகளை சரிபார்ப்பதற்கு, வரிவிதிக்கத்தக்க நபர்‌ எவரின்‌ வணிக வளாகங்களிலிருந்து அவரால்‌ அதிகாரம்‌ அளிக்கப்பட்ட நபர்‌ எவராலும்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டையும்‌ விலைக்கு வாங்குமாறு செய்வித்தல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அத்தகைய அலுவலரால்‌ அவ்வாறு விலைக்கு வாங்கப்பட்ட சரக்குகளை திருப்பிக்‌ கொடுப்பதன்‌ பேறில்‌, அத்தகைய வரிவிதிக்கத்தக்க நபர்‌ அல்லது வணிக வளாகங்களுக்கு பொறுப்புடைய நபர்‌ எவரும்‌, முன்பு வழங்கப்பட்ட வழங்குகையின்‌ செலவுப்பட்டி அல்லது வரி விலைப்பட்டியலை ரத்து செய்த பின்பு சரக்குகளுக்காக அவ்வாறு செலுத்தப்பட்ட தொகையை திருப்பிக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌. 68. ஏற்றிச்செல்லப்படும்‌. சரக்குகளை ஆய்வு செய்தல்‌.-- (1) அரசானது, குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய கதொகைக்கு அதிகமான மதிப்புடைய ஒப்படைப்பு சரக்குகள்‌ எதையும்‌ ஏற்றிச்‌ செல்லும்‌ வாகனத்திற்கு பொறுப்புடைய நபரை, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய ஆவணங்கள்‌ மற்றும்‌ அத்தகைய சாதனங்களை அவருடன்‌ ஏற்றிச்‌ செல்லுமாறு வேண்டுறுத்தலாம்‌. (2) ௫-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ ஏற்றிச்‌ செல்லப்படுவதற்கு வேண்டுறுத்தப்படுகிற ஆவணங்களின்‌ விவரங்களை, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ செல்லுந்தன்மையுடையதாக்குதல்‌ வேண்டும்‌. (3) ௫-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள வாகனம்‌ எதையும்‌ உரிய அலுவலர்‌ எந்த இடத்திலும்‌ தடுக்கிறவிடத்து, மேற்சொன்ன வாகனத்திற்கு பொறுப்புடைய நபரை, சரிபார்ப்பதற்காக மேற்சொன்ன உட்பிரிவின்கீழ்‌ வகுத்துரைக்கப்பட்ட ஆவணங்களை மற்றும்‌ சாதனங்களை முன்னிலைப்படுத்துமாறு வேண்டுறுத்தலாம்‌ மற்றும்‌ அத்தகைய நபர்‌, ஆவணங்களை மற்றும்‌ கருவிகளை 106 முன்னிலைப்படுத்துவதற்கு மற்றும்‌ சரக்குகளை ஆய்வு செய்வதற்கு அனணுமதிப்பதற்கும்‌ கடப்பாடுடையவராதல்‌ வேண்டும்‌. 69. கைது செய்வதற்கு அதிகாரம்‌.- (1) நபர்‌ ஒருவர்‌ 4132-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்‌ (அ)-கூறில்‌ அல்லது (ஆ)-கூறில்‌ அல்லது (இ)-கூறில்‌ அல்லது (ஈ)- கூறில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள குற்றம்‌ எதையும்‌ செய்திருப்பதை நம்புவதற்கான காரணங்களை ஆணையர்‌ பெற்றிருக்கிறவிடத்து, அந்த குற்றங்கள்‌ மேற்சொன்ன பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்‌ 0)-ஆம்‌ கூறின்‌ அல்லது (09-ஆம்‌ கூறின்கீழ்‌ அல்லது (2)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ தண்டிக்கப்படத்தக்கதாக இருக்கிறவிடத்து, அவர்‌, அத்தகைய நபரை கைது செய்வதற்கு, மாநில வரி அலுவலர்‌ எவருக்கும்‌, ஆணையின்‌ வாயிலாக, அதிகாரமளிக்கலாம்‌. (2) 132-ஆம்‌ பிரிவின்‌ (5)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள குற்றத்திற்காக (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ நபரை கைது செய்கிறவிடத்து, நபரை கைது செய்வதற்கு அதிகாரம்‌ அளிக்கப்பட்டுள்ள அலுவலர்‌, கைது செய்ததற்கான காரணங்களை அத்தகைய நபருக்கு தெரிவித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இருபத்து நான்கு மணி நேரங்களுக்குள்‌ ஒரு குற்றவியல்‌ நடுவர்‌ முன்பு முன்னிலைப்படுத்துதல்‌ வேண்டும்‌. (3) 1973-ஆம்‌ ஆண்டு குற்றவியல்‌ நெறிமுறைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 21974) வகைமுறைகளுக்கு உட்பட்டு, (அ) 1322-ஆம்‌ பிரிவின்‌ (4)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள குற்றம்‌ எதற்காகவும்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ நபரை கைது செய்கிறவிடத்து, அவரை பிணையில்‌ விடுதல்‌ வேண்டும்‌ அல்லது பிணையில்‌ விடுவிக்க தவறுகிற போது குற்றவியல்‌ நடுவரின்‌ பாதுகாப்பிற்கு அனுப்புதல்‌ வேண்டும்‌; (ஆ) கைது செய்வதற்குரியதல்லாத மற்றும்‌ பிணையில்‌ விடக்கூடிய குற்றத்தைப்‌ பொறுத்த நேர்வில்‌, துணை ஆணையர்‌ அல்லது உதவி ஆணையர்‌ கைது செய்யப்பட்ட நபரை பிணையில்‌ அல்லது பிறவாறாக விடுவிக்கும்‌ நோக்கத்திற்காக, காவல்‌ நிலையத்தின்‌ பொறுப்பை உடைய அலுவலரைப்‌ போன்றே அதே அதிகாரங்கள்‌ உடையவராவார்‌ மற்றும்‌ அதே வகைமுறைகளுக்கு உட்பட்டு இருப்பார்‌. 70. சான்றினை அளிப்பதற்கு மற்றும்‌ ஆவணங்களை முன்னிலைப்படுத்துவதற்கு நபர்களுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு அதிகாரம்‌.- (1) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ உரிய அலுவலர்‌, 1908-ஆம்‌ ஆண்டு உரிமையியல்‌ நெறிமுறைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 571908) வகைமுறைகளின்கீழ்‌ உரிமையியல்‌ நீதிமன்ற வழக்கில்‌ வகை செய்துள்ள அதே முறையில்‌ விசாரணை எதிலும்‌ சான்றினை அளிப்பதற்கு அல்லது ஆவணத்தை அல்லது பிற பொருள்‌ எதையும்‌ முன்னிலைப்படுத்துவதற்காக அவருடைய வருகை அவசியமென அவர்‌ 107 கருதுவாரானால்‌, அந்த நபர்‌ எவருக்கும்‌ அழைப்பாணை விடுப்பதற்கான அதிகாரம்‌ உடையவராவார்‌. (2) ௩-ஆம்‌ உட்பிரிவில்‌ ச௬ட்டப்பட்டுள்ள அத்தகைய விசாரணை ஒவ்வொன்றையும்‌, இந்திய தண்டனை தெொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 451860) 4193-ஆம்‌ பிரிவின்‌ மற்றும்‌ 228-ஆம்‌ பிரிவின்‌ பொருளின்படி ஒரு "நீதிமுறை நடவடிக்கைகளாக" கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 71. வணிக வளாகங்களுக்குள்‌ நுழைதல்‌.-- (1) இணை ஆணையரின்‌ படிநிலைக்கு குறையாத உரிய அலுவலரால்‌ அதிகாரம்‌ அளிக்கப்பட்டுள்ள இந்தச்‌ சட்டத்தின்கீழான அலுவலர்‌ எவரும்‌, வருவாய்‌ நலனை பாதுகாப்பதற்கு அவசியமான தணிக்கை, கூர்ந்தாய்வு, சரிபார்த்தல்‌ மற்றும்‌ ஆய்வுகள்‌ எதையும்‌ மேற்கொள்ளும்‌ நோக்கங்களுக்காக, கணக்குப்‌ புத்தகங்களை, ஆவணங்களை, கணினிகளை, கணினி நிரல்களை, கணினியிலோ அல்லது பிறவாறாக பொருத்தப்பட்டுள்ள கணினி மென்பொருள்‌, மற்றும்‌ அவரால்‌ வேண்டுறுத்தப்படக்கூடிய மற்றும்‌ அத்தகைய இடத்தில்‌ கிடைக்கக்கூடிய அத்தகைய பிற பொருட்களை ஆய்வு செய்வதற்கு பதிவு பெற்ற நபரின்‌ வணிக இடம்‌ எதிலும்‌ நுழைவுரிமை உடையவராவார்‌. (2) 0-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள இடத்திற்கு பொறுப்புடைய நபர்‌ ஒவ்வொருவரும்‌, வேண்டுகோளின்பேரில்‌, (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அதிகாரம்‌ அளிக்கப்பட்டுள்ள அலுவலருக்கு அல்லது உரிய அலுவலரால்‌ அதிகாரம்‌ அளித்து அனுப்பப்பட்டுள்ள தணிக்கை தரப்பினருக்கு அல்லது 66-ஆம்‌ பிரிவின்கீழ்‌ நியமிக்கப்பட்டுள்ள விலை மதிப்பிட்டு கணக்கருக்கு அல்லது பட்டயக்கணக்கருக்கு- () வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌, பதிவு பெற்ற நபரால்‌ தயாரிக்கப்பட்டு அல்லது பராமரிக்கப்பட்டு மற்றும்‌ உரிய அலுவலருக்கு விளம்புகை செய்யப்பட்ட அத்தகைய பதிவுருக்களை; 0) ஐந்தொகை அதற்கு சமானவைகளை; 0) தேவைப்படுமிடத்தெல்லாம்‌, உரியவாறு தணிக்கை செய்யப்பட்ட ஆண்டு நிதி கணக்குகளின்‌ விவர அறிக்கைகளை; (iv) 2013-ஆம்‌ ஆண்டு நிறுமங்கள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 182013) 148- ஆம்‌ பிரிவின்கீழ்‌ விலை மதிப்பீட்டு தணிக்கை அறிக்கை ஏதேனும்‌ இருப்பின்‌, அதனை; (V) 1964-ஆம்‌ ஆண்டு வருமான வரிச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 431961) 448 பிரிவின்கீழ்‌ வருமான வரி தணிக்கை அறிக்கை ஏதேனும்‌ இருப்பின்‌, அதனை: மற்றும்‌ பற்‌ பிற தொடர்புடைய பதிவுரு எதையும்‌, 108 அலுவலரால்‌ அல்லது தணிக்கை தரப்பினரால்‌ அல்லது பட்டயக்‌ கணக்கரால்‌ அல்லது விலை மதிப்பீட்டு கணக்கரால்‌ கூர்ந்தாய்வு செய்வதற்காக அத்தகைய கேட்புத்‌ தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்கு மேற்படாத கால அளவிற்குள்‌, அல்லது மேற்சொன்ன அலுவலரால்‌ அல்லது தணிக்கை தரப்பினரால்‌ அல்லது பட்டயக்‌ கணக்கரால்‌ அல்லது விலை மதிப்பீட்டு கணக்கரால்‌ அனுமதிக்கக்கூடிய அத்தகைய மேலுமான கால அளவிற்குள்‌ கிடைக்குமாறு செய்தல்‌ வேண்டும்‌. 72. உரிய அலுவலர்களுக்கு உதவி செய்வதற்கான அலுவலர்கள்‌. (1) அனைத்து காவல்‌, இருப்பூர்தி, சுங்க அலுவலர்கள்‌ அனைவரும்‌, மற்றும்‌ கிராம அலுவலர்கள்‌, மைய வரி அலுவலர்கள்‌ மற்றும்‌ யூணியன்‌ பிரதேச வரி அலுவலர்கள்‌ உள்ளடங்கலாக நில வருவாயை வசூல்‌ செய்வதில்‌ ஈடுபட்டுள்ள அலுவலர்கள்‌ இந்தச்‌ சட்டத்தை நிறைவேற்றுவதில்‌ உரிய அலுவலர்களுக்கு உதவி செய்தல்‌ வேண்டும்‌. (2) அரசானது. ஆணையரால்‌ அவ்வாறு செய்வதற்கு அழைக்கப்படும்போது இந்த சட்டத்தை நிறைவேற்றுகையில்‌ உரிய அலுவலர்களுக்கு உதவி செய்வதற்கு, அறிவிக்கை வாயிலாக, அலுவலர்களின்‌ பிற வகையினருக்கு அதிகாரமளிக்கலாம்‌ மற்றும்‌ வேண்டுறுத்தலாம்‌. அத்தியாயம்‌ XV கேட்புகள்‌ மற்றும்‌ வசூலிப்பு. 73. மோசடியாக அல்லது வேண்டுமென்றே தவறான விவர அறிக்கை எதுவும்‌ அல்லது உண்மைகளை மறைப்பது அல்லாத பிற காரணம்‌ எதற்காகவும்‌ வரியை செலுத்தாதிருத்தல்‌ அல்லது குறைவாக செலுத்துதல்‌ அல்லது தவறுதலாக திருப்பிக்‌ கொடுத்தல்‌ அல்லது உள்ளிட்டு வரி வரவினை தவறுதலாக துய்த்தல்‌ அல்லது பயன்படுத்துதல்‌ ஆகியவற்றை தீர்மானித்தல்‌.-- (1) மோசடியாக அல்லது வேண்டுமென்றே தவறான விவர அறிக்கை எதுவும்‌ அல்லது உண்மைகளை மறைப்பது அல்லாத காரணம்‌ எதற்காகவும்‌, வரி எதையும்‌ செலுத்தாது இருப்பதாக அல்லது குறைவாக செலுத்தி இருப்பதாக அல்லது தவறுதலாக திருப்பிக்‌ கொடுத்திருப்பதாக, அல்லது உள்ளீட்டு வரி வரவு தவறுதலாக துய்க்கப்பட்டிருப்பதாக அல்லது பயன்படுத்தப்பட்டிருப்பதாக உரிய அலுவலருக்கு தோன்றுகிறவிடத்து, அவர்‌, எந்த நபர்‌ வரியை செலுத்தாமல்‌ அல்லது குறைவாக செலுத்தியுள்ளாரோ அந்த வரிவிதிப்பிற்குள்ளான நபர்‌ மீது, அல்லது எந்த நபருக்கு தவறுதலாக திருப்பிக்‌ கொடுக்கப்பட்டதோ அந்த நபருக்கு, அல்லது உள்ளீட்டு வரி வரவினை தவறுதலாக துய்த்த அல்லது பயன்படுத்திய நபருக்கு, 50-ஆம்‌ பிரிவின்கீழ்‌ செலுத்தக்கூடிய வட்டியுடன்‌ அறிவிப்பில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள தொகையை மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளின்படி விதிக்கக்கூடிய தண்டத்‌ தொகையை ஏன்‌ செலுத்தக்கூடாது என்பதற்கான 109 காரணத்தை தெரிவிக்குமாறு அவரை வேண்டி, அந்த நபருக்கு அறிவிப்பை சார்வு செய்தல்‌ வேண்டும்‌. (2) உறிய அலுவலர்‌, ஆணை பிறப்பிப்பதற்காக, (1௦)-ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள கால அளவிற்கு முன்பு குறைந்தபட்சமாக மூன்று மாதங்களுக்குள்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அறிவிப்பை வழங்குதல்‌ வேண்டும்‌. (3) ௩-ஆம்‌ உட்பிரிவின்கழ்‌ கால அளவு எதற்காகவும்‌ அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளவிடத்து (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ அடங்கியுள்ளவைகள்‌ அல்லாத பிற அத்தகைய கால அளவிற்கு வரிவிதிப்பிற்கு உள்ளான நபருக்கு, வரியை செலுத்தாத அல்லது குறைவாக செலுத்திய அல்லது தவறுதலாக திருப்பிக்‌ கொடுக்கப்பட்டதை அல்லது உள்ளீட்டு வரி வரவு தவறுதலாக துய்க்கப்பட்ட அல்லது பயன்படுத்திய விவரங்கள்‌ அடங்கிய விவர அறிக்கையை உரிய அலுவலர்‌ சார்வு செய்யலாம்‌. (4) அத்தகைய விவர அறிக்கையை சார்வு செய்தலானது, (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ அடங்கியவை அல்லாத பிற அத்தகைய வரி கால அளவுகளுக்காக அதனின்‌ இணங்கியிருக்கும்‌ காரணங்கள்‌, முந்தைய அறிவிப்பில்‌ குறிப்பிடப்பட்டுள்ளவைகளே என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, (1)-ஆம்‌ உட்பிரிவின்கழ்‌ அத்தகைய நபருக்கு அறிவிப்பு சார்வு செய்யப்பட்டிருப்பதாக கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (5) வரி விதிப்பிற்குள்ளான நபர்‌, (1-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அறிவிப்பை அல்லது, நேர்விற்கேற்ப, (3)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ விவர அறிக்கையை சார்வு செய்வதற்கு முன்பு, அத்தகைய வரியை அவருடைய சொந்த உறுதி செய்கையின்‌ பேரிலோ அல்லது வரியை உரிய அலுவலரால்‌ உறுதி செய்வதன்‌ பேரிலோ 50-ஆம்‌ பிரிவின்கீழ்‌ செலுத்தப்பட வேண்டிய வட்டியுடன்‌ சேர்த்து வரித்‌ தொகையினை செலுத்தலாம்‌ மற்றும்‌ அத்தகைய செலுத்துகைப்‌ பற்றி உரிய அலுவலருக்கு எழுத்து வடிவில்‌ தகவல்‌ தெரிவிக்கலாம்‌. (6) உரிய அலுவலர்‌, அத்தகைய தகவலை பெற்றுக்கொண்டதன்‌ பேரில்‌, அவ்வாறு செலுத்தப்பட்ட வரி அல்லது இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளின்படி செலுத்தப்பட வேண்டிய தண்டத்தொகை எதுவும்‌ பொறுத்து, (3)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ விவர அறிக்கை அல்லது (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அறிவிப்பு எதையும்‌ சார்வு செய்தல்‌ ஆகாது. (7) உரிய அலுவலர்‌, (5)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ செலுத்தப்பட்ட தொகையானது உள்ளபடியே செலுத்தப்பட வேண்டிய தொகைக்கு குறைவாக இருப்பதாக கருதுகிறவிடத்து, உள்ளபடியே செலுத்தப்பட வேண்டிய தொகைக்கு குறைவாக உள்ள அத்தகைய தொகை பொறுத்து (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ வகை செய்யப்பட்டவாறு அறிவிப்பு வழங்குவதற்கு முற்படுதல்‌ வேண்டும்‌. (8) ௫-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அல்லது (3)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வரிவிதிப்பிற்கு உள்ளான நபர்‌ எவரும்‌, காரணத்தை விளக்குவதற்கான அறிவிப்பு 110 வழங்கிய தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்‌, 50-ஆம்‌ பிரிவின்கீழ்‌ செலுத்தப்பட வேண்டிய வட்டியுடன்‌ சேர்த்து மேற்சொன்ன வரியை செலுத்துகிறவிடத்து, தண்டத்தொகை செலுத்தப்படத்‌ தேவையில்லை மற்றும்‌ மேற்சொன்ன அறிவிப்பு பொறுத்த அனைத்து நடவடிக்கைகளும்‌ முடிவுற்றதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (9) உரிய அலுவலர்‌, வரி விதிப்பிற்கு உள்ளான நபரால்‌ செய்யப்பட்ட விண்ணப்பம்‌ ஏதேனுமிருப்பின்‌, அதை பரிசீலனை செய்த பின்பு, அத்தகைய நபரால்‌ செலுத்தப்பட வேண்டிய வரித்‌ தொகை, வட்டி மற்றும்‌ வரியின்‌ பத்து சதவிதத்திற்கு சமமான தண்டத்தொகை அல்லது பத்தாயிரம்‌ ரூபாய்‌, இதில்‌ எது அதிகமோ, அதனை தீர்மானித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ ஆணை ஒன்றினைப்‌ பிறப்பித்தல்‌ வேண்டும்‌. (1௦) உரிய அலுவலர்‌, வரி செலுத்தாத அல்லது குறைவாக செலுத்தப்பட்ட அல்லது உள்ளீட்டு வரி வரவானது தவறுதலாக துய்க்கப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட நிதியாண்டிற்கான ஆண்டறிக்கை அளிப்பதற்கான உரிய தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள்‌ அல்லது தவறுதலாக திருப்பிக்‌ கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள்‌, (9-ஆம்‌ உட்பிரிவின்கழ்‌ ஆணையைப்‌ பிறப்பித்தல்‌ வேண்டும்‌. (11) (ஐ-ஆம்‌ உட்பிரிவில்‌ அல்லது (8)-ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, அத்தகைய வரி செலுத்த வேண்டிய உரிய தேதியிலிருந்து முப்பது நாட்கள்‌ கால அளவிற்குள்‌ சுய-வரிக்கணிப்பு செய்த வரித்தொகை எதையும்‌ அல்லது வரியாக வசூலிக்கப்பட்ட தொகை எதையும்‌ செலுத்தாதிருக்கிறவிடத்து, (9-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ தண்டத்தொகை செலுத்தத்தக்கதாகும்‌. 74. மோசடியாக அல்லது வேண்டுமென்றே தவறான விவர அறிக்கை எதையும்‌ அல்லது உண்மைகள்‌ மறைக்கப்பட்டிருப்‌- பதன்‌ காரணம்‌ எதற்காகவும்‌ வரி செலுத்தாதிருத்தல்‌ அல்லது குறைவாக செலுத்துதல்‌ அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுத்தல்‌ அல்லது உள்ளிட்டு வரி வரவிணை தவறுதலாக துய்த்தல்‌ அல்லது பயன்படுத்துதல்‌ ஆகியவற்றை தீர்மானித்தல்‌.- (1) மோசடி காரணமாக அல்லது வேண்டுமென்றே தவறான விவர அறிக்கை எதையும்‌ அல்லது வரி ஏய்ப்பிற்காக உண்மைகள்‌ மறைக்கப்பட்டிருப்பதன்‌ காரணமாக, வரி எதையும்‌ செலுத்தாது இருப்பதாக அல்லது குறைவாக செலுத்தி இருப்பதாக அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுத்திருப்பதாக, அல்லது உள்ளீட்டு வரி வரவு தவறுதலாக துய்க்கப்பட்டிருப்பதாக அல்லது பயன்படுத்தப்பட்டிருப்பதாக உரிய அலுவலருக்கு தோன்றுகிறவிடத்து, அவர்‌, வரியை செலுத்தாமலிருக்கிற அல்லது குறைவாக செலுத்தியுள்ள வரிவிதிப்பிற்குள்ளான நபருக்கு அல்லது எந்த நபருக்கு தவறுதலாக திருப்பிக்கொடுக்கப்பட்டதோ, அல்லது எந்நபர்‌ உள்ளீட்டு வரிவரவினை தவறுதலாக துய்த்தாரோ அல்லது பயன்படுத்தினாரோ அந்த நபருக்கு, 50-ஆம்‌ பிரிவின்கீழ்‌ செலுத்தப்பட வேண்டிய வட்டியுடன்‌ சேர்த்து அறிவிப்பில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள தொகையை மற்றும்‌ அறிவிப்பில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள வரிக்குச்‌ சமமான தண்டத்‌ தொகையை ஏன்‌ செலுத்தக்கூடாது என்பதற்கான காரணத்தை 111 தெரிவிக்குமாறு அவரை கோருகிற அறிவிப்பை அவருக்கு சார்வு செய்தல்‌ வேண்டும்‌. (2) உரிய அலுவலர்‌, ஆணை பிறப்பிப்பதற்காக (10)-ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள கால அளவிற்கு முன்பு குறைந்தபட்சமாக ஆறு மாதங்களுக்குள்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அறிவிப்பை வழங்குதல்‌ வேண்டும்‌. (3) ௩-ஆம்‌ உட்பிரிவின்கழ்‌ கால அளவு எதற்காகவும்‌ அறிவிப்பு வழங்கப்படுகிறவிடத்து (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ அடங்கியவைகள்‌ அல்லாத பிற அத்தகைய கால அளவுகளுக்கு, வரிவிதிப்பிற்கு உள்ளான நபருக்கு, வரி செலுத்தாத அல்லது குறைவாக செலுத்திய அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுக்கப்பட்டதை அல்லது உள்ளிட்டு வரிவரவு தவறுதலாக துய்க்கப்பட்ட அல்லது பயன்படுத்திய விவரங்கள்‌ அடங்கிய விவர அறிக்கையை உரிய அலுவலர்‌ சார்வு செய்யலாம்‌. (4) (௮-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அத்தகைய விவர அறிக்கையை சார்வு செய்தலானது (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ அடங்கியவை அல்லாத பிற அத்தகைய வரி கால அளவுகளுக்காக மோசடி காரணமாக அல்லது வேண்டுமென்றே தவறான விவர அறிக்கை எதையும்‌ அல்லது வரி ஏய்ப்பிற்காக உண்மைகள்‌ மறைக்கப்பட்டிருப்பதன்‌ காரணம்‌ நீங்கலாக முந்தைய அறிவிப்பில்‌ குறிப்பிடப்பட்டுள்ளவைகளே என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, 73-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அறிவிப்பு சார்வு செய்யப்பட்டிருப்பதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (5) வரிவிதிப்பிற்குள்ளான நபர்‌, (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அறிவிப்பை சார்வு செய்வதற்கு முன்பு அத்தகைய வரி அவருடைய சொந்த உறுதி செய்கையின்‌ பேரிலோ அல்லது வரியை உரிய அலுவலரால்‌ உறுதி செய்வதன்‌ பேரிலோ 50-ஆம்‌ பிரிவின்கீழ்‌ செலுத்தப்பட வேண்டிய வட்டி மற்றும்‌ அத்தகைய வரியின்‌ பதினைந்து விழுக்காட்டிற்கு சமமான தண்டத்தொகையுடன்‌ சேர்த்து வரித்ட தாகையினை செலுத்தலாம்‌ மற்றும்‌ அத்தகைய செலுத்துகை பற்றி எழுத்து வடிவில்‌ உரிய அலுவலருக்கு தகவல்‌ தெரிவிக்கலாம்‌. (6) உரிய அலுவலர்‌, அத்தகைய தகவலைப்‌ பெற்றுக்‌ கொண்டதன்‌ பேரில்‌, அவ்வாறு செலுத்தப்பட்ட வரி அல்லது இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளின்படி செலுத்தப்பட வேண்டிய தண்டத்தொகை எதுவும்‌ பொறுத்து, (1-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அறிவிப்பு எதையும்‌ சார்வு செய்தல்‌ ஆகாது. (7) உரிய அலுவலர்‌, (5)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ செலுத்தப்பட்ட தொகையானது உள்ளபடியே செலுத்தப்பட வேண்டிய தொகைக்கு குறைவாக இருப்பதாக கருதுகிறவிடத்து, உள்ளபடியே செலுத்தப்பட வேண்டிய தொகைக்கு குறைவாக உள்ள அத்தகைய தொகை பொறுத்து (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ வகை செய்யப்பட்டவாறு அறிவிப்பு வழங்குவதற்கு முற்படுதல்‌ வேண்டும்‌. (8) (1-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வரிவிதிப்பிற்குள்ளான நபர்‌ எவரும்‌, அறிவிப்பு வழங்கிய தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்‌, 50-ஆம்‌ பிரிவின்கீழ்‌ செலுத்தப்பட 112 வேண்டிய வட்டி மற்றும்‌ அத்தகைய வரியின்‌ இருபத்தைந்து விழுக்காட்டிற்கு சமமான தண்டத்‌ தொகையும்‌ சேர்த்து மேற்சொன்ன வரியை செலுத்துகிறவிடத்து, மேற்சொன்ன அறிவிப்பு பொறுத்த அனைத்து நடவடிக்கைகளும்‌ முடிவுற்றதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (9) உரிய அலுவலர்‌, வரிவிதிப்பிற்குள்ளான நபரால்‌ செய்யப்பட்ட விண்ணப்பம்‌ ஏதேனுமிருப்பின்‌, அதை பரிசீலனை செய்த பின்பு, அத்தகைய நபரால்‌ செலுத்தப்பட வேண்டிய வரித்‌ தொகை, வட்டி மற்றும்‌ தண்டத்தொகையை தீர்மானித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ ஆணை ஒன்றினைப்‌ பிறப்பித்தல்‌ வேண்டும்‌. (1௦) உரிய அலுவலர்‌, வரி செலுத்தாத அல்லது குறைவாக செலுத்தப்பட்ட அல்லது உள்ளீட்டு வரி வரவானது தவறுதலாக துய்க்கப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட நிதியாண்டிற்கான ஆண்டறிக்கை அளிப்பதற்கான உரிய தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள்‌ அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள்‌, (9)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ ஆணையைப்‌ பிறப்பித்தல்‌ வேண்டும்‌. (11) (ஐ-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணையை நபர்‌ எவருக்கும்‌ சார்வு செய்கிறவிடத்து, 50-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அதன்பேரில்‌ செலுத்தப்பட வேண்டிய வட்டி மற்றும்‌ அத்தகைய வரியின்‌ ஐம்பது விழுக்காட்டிற்கு சமமான தண்டத்தொகையை சேர்த்து வரியை, ஆணை தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்‌ செலுத்துகிறவிடத்து, மேற்சொன்ன அறிவிப்பு பொறுத்த அனைத்து நடவடிக்கைகளும்‌ முடிவுற்றதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. விளக்கம்‌ 1.-- 73-ஆம்‌ பிரிவின்‌ மற்றும்‌ இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, (i) "மேற்சொன்ன அறிவிப்பு தொடர்பாக நடவடிக்கைகள்‌ அனைத்தும்‌" எனும்‌ சொற்றொடரானது, 132-ஆம்‌ பிரிவின்கழான நடவடிக்கைகளை உள்ளடக்காது; (i) வரி செலுத்துவதற்கு கடப்பாடுடைய முக்கிய நபருக்கு மற்றும்‌ சில பிற நபர்களுக்கு அதே நடவடிக்கைகளின்கீழ்‌ அறிவிப்பை வழங்குகிறவிடத்து, மற்றும்‌ முக்கிய நபருக்கு எதிரான அத்தகைய நடவடிக்கைகள்‌ 73-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது 74-ஆம்‌ பிரிவின்கீழ்‌ முடிவுற்றிருக்கிறவிடத்து, 122, 125, 129 மற்றும்‌ 130- ஆம்‌ பிரிவுகளின்கீழ்‌ தண்டத்தொகை செலுத்துவதற்கு கடப்பாடுடைய அனைத்து நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளானது முடிவுற்றதாக கொள்ளப்படும்‌. விளக்கம்‌ 2.-- இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, "மறைத்தல்‌" எனும்‌ சொற்றொடரானது, அறிக்கையில்‌, விவர அறிக்கையில்‌, குறிப்புரையில்‌ அல்லது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளின்படி அளிக்கப்பட்ட பிற ஆவணம்‌ எதிலும்‌ விளம்புகை செய்வதற்கு வேண்டுறுத்தப்படுகிற வரிவிதிக்கத்தக்க நபர்‌ உண்மைகள்‌ அல்லது தகவலை விளம்புகை செய்யாதிருத்தல்‌ அல்லது உரிய அலுவலரால்‌ எழுத்து வடிவில்‌ அளிக்குமாறு கேட்கப்பட்ட தகவல்‌ எதையும்‌ அளிப்பதற்கு தவறுதல்‌ என்று பொருள்படும்‌. 113 75. வரியைத்‌ தீர்மாணிப்பது தொடர்பான பொது வகைமுறைகள்‌.- (1) சார்வு செய்யப்பட்ட அறிவிப்பு அல்லது வழங்கப்பட்ட ஆணை நீதிமன்றத்தின்‌ அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்‌ ஆணையால்‌ நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறவிடத்து, 73-ஆம்‌ பிரிவின்‌ (2) மற்றும்‌ (1௦)-ஆம்‌ உட்பிரிவுகளில்‌ அல்லது, நேர்விற்கேற்ப, 74-ஆம்‌ பிரிவின்‌ (2) மற்றும்‌ (10)-ஆம்‌ உட்பிரிவுகளில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள கால அளவைக்‌ கணக்கிடுகையில்‌, அத்தகைய நிறுத்தி வைக்கப்பட்ட கால அளவு விலக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயம்‌ அல்லது நீதிமன்றமானது, எந்த நபருக்கு எதிராக அறிவிப்பு வழங்கப்பட்டதோ அந்த நபருக்கு எதிராக வரி ஏய்ப்பு செய்வதற்காக மோசடி அல்லது வேண்டுமென்றே தவறான விவர அறிக்கை அல்லது உண்மைகளை மறைப்பதான குற்றச்சாட்டுகள்‌ நிரூபிக்கபடாத காரணத்திற்காக, 74-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வழங்கப்பட்ட அறிவிப்பானது. நிலைநிறுத்தக்கூடியதல்ல என்ற முடிவுக்கு வருகிறவிடத்து, உரிய அலுவலர்‌, 73-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அறிவிப்பு வழங்கப்பட்‌ டிருப்பது போல: கருதி அத்தகைய நபரால்‌ செலுத்தப்படவேண்டிய வரியை தீர்மானித்தல்‌ வேண்டும்‌. (3) மேல்முறையீட்டு அதிகார அமைப்பின்‌ மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்‌ அல்லது நீதிமன்றம்‌ ஒன்றின்‌ பணிப்புரையை ஒட்டி ஆணை எதுவும்‌ வழங்கப்படுவதற்கு கோரப்படுகிறவிடத்து, அத்தகைய ஆணை மேற்சொன்ன பணிப்புரை தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள்‌ பிறப்பிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (4) வரிவிதிப்பிற்கு அல்லது தண்டத்தொகைக்கு உள்ளான நபரிடமிருந்து, அல்லது அத்தகைய நபருக்கு எதிராக முடிவு எடுப்பதற்கு ஆழ்ந்து சிந்திக்கிறவிடத்து, எழுத்து வடிவிலான கோரிக்கை செய்யப்படுமிடத்து அவருடைய வாதம்‌ கேட்கப்படுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (5) உரிய அலுவலர்‌, வரி விதிப்பிற்கு உள்ளான நபரால்‌ போதிய காரணம்‌ காட்டப்படுமானால்‌ மேற்சொன்ன நபருக்கு நேரம்‌ அளித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ எழுத்து வடிவில்‌ பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக விசாரணையை ஒத்தி வைத்தல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, அத்தகைய ஒத்திவைப்பு நடவடிக்கைகளின்‌ போது நபருக்கு மூன்று முறைகளுக்கு மேல்‌ வாய்ப்பு வழங்கப்படுதல்‌ ஆகாது. (6) உரிய அலுவலர்‌, தம்முடைய ஆணையில்‌ தொடர்புடைய உண்மைகள்‌ மற்றும்‌ தம்முடைய முடிவின்‌ அடிப்படையினை விவரித்தல்‌ வேண்டும்‌. (7) ஆணையில்‌ கோரப்பட்டுள்ள வரித்‌ தொகை, வட்டி மற்றும்‌ தண்டத்‌ தொகையானது அறிவிப்பில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள தொகையை விட அதிகமாக இருத்தல்‌ ஆகாது மற்றும்‌ அறிவிப்பில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள காரணங்கள்‌ 114 அல்லாத பிற காரணங்களின்‌ பேரில்‌ கோரிக்கை எதுவும்‌ உறுதி செய்யப்படுதல்‌ ஆகாது. (8) உரிய அலுவலரால்‌ தீர்மானிக்கப்பட்ட வரித்‌ தொகையை மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயம்‌ அல்லது நீதிமன்றமானது மாற்றமைவு செய்கிறவிடத்து, அவ்வாறு மாற்றமைவு செய்யப்பட்ட வரித்‌ தொகையை கணக்கில்‌ எடுத்துக்‌ கொண்டு வட்டி மற்றும்‌ தண்டத்‌ தொகையை அவ்வாறே மாற்றமைவு செய்தல்‌ வேண்டும்‌. (9) வரியின்‌ மீது குறைவாக செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்படாத வட்டியை, வரி கடப்பாட்டை தீர்மானிக்கும்‌ ஆணையில்‌ குறித்துரைக்கப்பட்டி ௬ப்பினும்‌ அல்லது குறித்துரைக்கப்படாதிருப்பினும்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌. (1௦) 73-ஆம்‌ பிரிவின்‌ (10)-ஆம்‌ உட்பிரிவில்‌ வகை செய்துள்ளவாறு மூன்று ஆண்டுகளுக்குள்‌ அல்லது 74-ஆம்‌ பிரிவின்‌ (10)-ஆம்‌ உட்பிரிவில்‌ வகை: செய்யப்பட்டவாறு ஐந்து ஆண்டுகளுக்குள்‌ ஆணை பிறப்பிக்கப்படாமல்‌ இருக்குமேயானால்‌, நீதிமுறை நடவடிக்கைகளானது முடிவுற்றதாக கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (11) மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயம்‌ அல்லது உயர்ந்திமன்றமானது பிரச்சினை குறித்து தங்களுடைய முடிவினை வழங்கி அது பிற நடவடிக்கைகளில்‌ வருவாயின்‌ நலனை பாதிக்கும்‌ போது மற்றும்‌ மேல்முறையீட்டு அதிகார அமைப்பின்‌ அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்‌ அல்லது உயர்ந்திமன்றத்தின்‌ முடிவிற்கு எதிராக, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு அல்லது உயர்ந்திமன்றத்திற்கு அல்லது உச்சநீதிமன்றத்திற்கு செய்யப்பட்ட மேல்முறையீடானது நிலுவையில்‌ இருக்கும்‌ போது, மேற்சொன்ன பிரிவுகளின்படி காரணம்‌ காட்டுமாறு கோரும்‌ அறிவிப்பை வழங்குவதன்‌ மூலமாக நடவடிக்கைகள்‌ தொடரப்படுகிறவிடத்து, மேல்முறையீட்டு அதிகார அமைப்பின்‌ முடிவுத்‌ தேதி மற்றும்‌ மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தின்‌ முடிவுத்‌ தேதிக்கு அல்லது மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தின்‌ முடிவுத்‌ தேதிக்கு மற்றும்‌ உயர்ந்திமன்றத்தின்‌ முடிவுத்‌ தேதிக்கு இடையிலான அல்லது உயர்ந்ீதிமன்றத்தின்‌ மற்றும்‌ உச்சந்திமன்றத்தின்‌ முடிவுத்‌ தேதிக்கு இடையில்‌ செலவிடப்பட்ட கால அளவு, 73-ஆம்‌ பிரிவின்‌ (10)-ஆம்‌ உட்பிரிவில்‌ அல்லது 74-ஆம்‌ பிரிவின்‌(10)-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்ட கால அளவைக்‌ கணக்கிடுகையில்‌, விலக்கப்படுதல்‌, வேண்டும்‌. (12) 73-ஆம்‌ பிரிவில்‌ அல்லது 74-ஆம்‌ பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, 39-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அளிக்கப்பட்டுள்ள விவர அறிக்கைக்கு இணங்கியவாறு சுய-வரிக்கணிப்பு செய்யப்பட்ட தொகை எதுவும்‌ முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ தொடர்ந்து செலுத்தப்படாது இருக்கிறவிடத்து அல்லது அத்தகைய வரியின்‌ மீது செலுத்தப்பட வேண்டிய வட்டித்‌ தொகை எதுவும்‌ தொடர்ந்து செலுத்தப்படாது இருக்கிறவிடத்து அவை 79-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளின்படி வகுலிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 115 (13) 73-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது 74-ஆம்‌ பிரிவின்கீழ்‌ தண்டத்‌ தொகை விதிக்கப்படுகிறவிடத்து, இந்தச்‌ சட்டத்தின்‌ பிற வகைமுறை எதனின்படி அதே செயலுக்காக அல்லது விட்டுவிடுகைக்காக தண்டத்‌ தொகை விதித்தல்‌ ஆகாது. 76. வரி வசூலிக்கப்பட்டு, ஆனால்‌ அரசுக்கு செலுத்தப்படாமல்‌ இருத்தல்‌.- (1) மேல்முறையீட்டு அதிகார அமைப்பின்‌ அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்‌ அல்லது நீதிமன்றத்தின்‌ ஆணை அல்லது பணிப்புரை எதிலும்‌ அல்லது இந்தச்‌ சட்டத்தின்‌ பிற வகைமுறைகள்‌ எதிலும்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளில்‌ அல்லது அப்போதைக்கு நடைமுறையில்‌ உள்ள பிற சட்டம்‌ எதிலும்‌ முரணாக என்ன அடங்கியிருந்த போதிலும்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரியை வசூலிக்கும்‌ பொறுப்புடையவராய்‌ இருந்து பிற நபர்‌ எவரிடமிருந்தும்‌ தொகை எதையும்‌ வசூல்‌ செய்த நபர்‌ ஒவ்வொருவரும்‌, அவர்‌ மேற்சொன்ன தொகையை அரசுக்கு செலுத்தாதிருப்பின்‌, வசூலிக்கப்பட்ட அத்தகைய தொகையானது வரி செலுத்தக்‌ கூடியதாய்‌ இருப்பினும்‌ அல்லது இல்லாவிடினும்‌ மேற்சொன்ன தொகையை உடனடியாக அரசுக்கு செலுத்துதல்‌ வேண்டும்‌. (2) ௫-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அரசுக்கு செலுத்தப்படுமாறு வேண்டுறுத்தப்பட்ட தொகை எதையும்‌ மற்றும்‌ அதை அவ்வாறு செலுத்தாதவிடத்து, உரிய அலுவலர்‌ அறிவிப்பில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ளவாறான மேற்சொன்ன தொகையை அரசுக்கு ஏன்‌ செலுத்தக்கூடாது மற்றும்‌ அறிவிப்பில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள தொகைக்கு சமமான தண்டத்‌ தொகையை அவருக்கு இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்கீழ்‌ ஏன்‌ விதிக்கக்‌ கூடாது என்பதற்கான அறிவிப்பு குறித்த காரணத்தை கூறுவதற்கான அறிவிப்பை அத்தகைய தொகையைச்‌ செலுத்துவதற்கு கடப்பாடுடைய நபருக்கு சார்வு செய்யலாம்‌. (3 (2-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ எந்த நபருக்கு அறிவிப்பு சார்வு செய்யப்பட்டதோ அந்த நபரால்‌ செய்யப்பட்ட விண்ணப்பம்‌ ஏதேனும்‌ இருப்பின்‌, அதனைப்‌ பரிச்லனை செய்த பின்பு, உரிய அலுவலர்‌ அந்த நபரிடமிருந்து வரவேண்டிய தொகையை தீர்மானித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதன்பேரில்‌ அத்தகைய நபர்‌ அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட தொகையை செலுத்துதல்‌ வேண்டும்‌. (4) 0-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள நபர்‌ (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ அல்லது (3)-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள தொகை செலுத்துவதற்குக்‌ கூடுதலாக அவரால்‌ வளுலிக்கப்பட்ட தேதியிலிருந்து அவரால்‌ அரசுக்கு செலுத்திய தேதி வரைக்கும்‌ 50-ஆம்‌ பிரிவின்கீழ்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள அத்தகைய வீதத்தில்‌ வட்டியை செலுத்துவதற்கு கடப்பாடு உடையவர்‌ ஆவார்‌. (5) காரணம்‌ காட்டுவதற்கு எந்த நபருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டதோ அந்த நபரிடமிருந்து எழுத்து வடிவிலான வேண்டுகோள்‌ பெறப்படுமிடத்து வாதங்களை கேட்பதற்கான வாய்ப்பினை வழங்குதல்‌ வேண்டும்‌. (6) உரிய அலுவலர்‌ அறிவிப்பு வழங்கிய தேதியிலிருந்து ஜராண்டிற்குள்‌ ஆணையைப்‌ பிறப்பித்தல்‌ வேண்டும்‌. 116 (7) வழங்கப்பட்ட ஆணையானது, நீதிமன்ற அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்‌ ஆணையால்‌ நிறுத்திவைக்கப்படுகிறவிடத்து, ஓராண்டு கால அளவைக்‌ கணக்கிடுகையில்‌, அத்தகைய நிறுத்தி வைப்புக்‌ கால அளவு விலக்கப்படுதல்‌ வேண்டும்‌. (8) உரிய அலுவலர்‌ தன்னுடைய ஆணையில்‌ தொடர்புடைய உண்மைகளை மற்றும்‌ அவருடைய முடிவிற்கான அடிப்படையினை குறிப்பிடுதல்‌ வேண்டும்‌. (9 (0-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அல்லது (3)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அரசுக்கு செலுத்திய தொகையை (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள வழங்குகைகள்‌ தொடர்பாக நபரால்‌ செலுத்தப்பட வேண்டிய வரி ஏதேனும்‌ இருப்பின்‌, அதற்கு எதிராக சரிக்கட்டப்படுதல்‌ வேண்டும்‌. (10) (ஐ-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ சரிகட்டுதலுக்கு பின்பு எஞ்சிய தொகை, மிகைத்‌ தொகை எதுவும்‌ இருக்கிறவிடத்து, அத்தகைய மிகைத்‌ தொகையை நிதியத்தில்‌ வரவு வைத்தல்‌ வேண்டும்‌ அல்லது அத்தகைய தொகையினை உரிய நபருக்கு திருப்பிக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌. (14) தொகைக்கு உரிய நபர்‌ 54-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கு இணங்க அந்த தொகையைப்‌ திரும்பப்‌ பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்‌. 77. வரி தவறுதலாக வளுலிக்கப்பட்டு மைய அரசுக்கு அல்லது மாநில அரசுக்கு செலுத்தியிருத்தல்‌.- (1) பதிவு பெற்ற நபர்‌, அவருடைய வணிக நடவடிக்கையானது மாநிலத்திற்குள்ளோேயேயான வழங்குகை என கருதப்பட்டு மைய வரி அல்லது மாநில வரியை செலுத்தியிருந்து, ஆனால்‌ பின்னர்‌ அது மாநிலங்களுக்கு இடையிலான வழங்குகையாக இருக்கின்றவிடத்து, அத்தகைய முறையில்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவ்வாறு செலுத்தப்பட்ட வரித்‌ தொகையை திருப்பிக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌. (2) பதிவு பெற்ற நபர்‌ அவருடைய வணிக நடவடிக்கையானது மாநிலங்களுக்கு இடையிலான வழங்குகை என கருதப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட வரியை செலுத்தியிருந்து, ஆனால்‌ அது பின்னர்‌ மாநிலத்திற்குள்ளோேயேயான வழங்குகையாக இருக்கின்றவிடத்து, மாநில வரியாக செலுத்தத்தக்க தொகையின்‌ மீது வட்டி எதையும்‌ செலுத்துமாறு கோருதல்‌ ஆகாது. 78. வரி வசூல்‌ நடவடிக்கைகளை தொடங்குதல்‌.- இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பிறப்பிக்கப்பட ஆணையை ஓட்டி வரிவிதிக்கத்தக்க நபரால்‌ செலுத்தப்பட வேண்டிய தொகை எதையும்‌ அத்தகைய நபரால்‌ அத்தகைய ஆணையை சார்வு செய்த தேதியிலிருந்து மூன்று மாதங்கள்‌ காலத்திற்குள்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌, தவறுவாரானால்‌ வசூல்‌ நடவடிக்கைகளைத்‌ தொடங்குதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, உரிய அலுவலர்‌ வருவாயின்‌ நலனுக்கு உகந்ததென கருதுகிறவிடத்து, அவர்‌ எழுத்து வடிவில்‌ பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக மேற்சொன்ன வரி விதிக்கத்தக்க நபரை அவர்‌ 117 குறித்துரைக்கலாகும்‌ மூன்று மாதங்களுக்கு குறையாத அத்தகைய காலத்திற்குள்‌ அத்தகைய செலுத்துகை செய்யுமாறு கோரலாம்‌. 79. வரியை வசூலித்தல்‌.-- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ எதனின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளின்படி அரசுக்கு நபரால்‌ செலுத்தப்பட வேண்டிய தொகை எதுவும்‌ செலுத்தப்படாது இருக்கிறவிடத்து, உரிய அலுவலர்‌ பின்வரும்‌ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிவகைகளில்‌ தொகையை வசூலிப்பதற்கு முற்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- (அ) உரிய அலுவலரின்‌ அல்லது அத்தகைய பிற குறித்துரைக்கப்பட்ட அலுவலரின்‌ கட்டாளுகையின்‌ கீழுள்ள அத்தகைய நபருக்கு சொந்தமான பணத்திலிருந்து அவ்வாறு செலுத்த வேண்டிய தொகையை உரிய அலுவலர்‌ பிடித்தம்‌ செய்யலாம்‌ அல்லது பிடித்தம்‌ செய்யுமாறு பிற குறித்துரைக்கப்பட்ட அலுவலரைக்‌ கோரலாம்‌; (ஆ) உரிய அலுவலரின்‌ அல்லது அத்தகைய பிற குறித்துரைக்கப்பட்ட அலுவலரின்‌ கட்டாளுாகையின்‌ கீழுள்ள சரக்குகளை நிறுத்தி வைத்து மற்றும்‌ விற்பனை செய்து அவ்வாறு செலுத்த வேண்டிய தொகையை உரிய அலுவலர்‌ வசூலிக்கலாம்‌ அல்லது பிற குறித்துரைக்கப்பட்ட அலுவலரை வளுூலிக்குமாறு கோரலாம்‌; (க) டு உரிய அலுவலர்‌, எழுத்து வடிவிலான அறிவிப்பின்‌ வாயிலாக, எந்த நபரிடமிருந்து பணம்‌ கொடுபட வேண்டியதாக இருக்கிறதோ அந்த நபரிடமிருந்து அல்லது அத்தகைய நபரின்‌ கணக்கில்‌ வைத்திருக்கும்‌ பணத்தை அறிவிப்பில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள காலத்திற்குள்‌, அல்லது பணமானது கொடுபட வேண்டியதாக இருக்கின்றவிடத்து அல்லது வைத்திருக்கின்றவிடத்து, உடனடியாக அத்தகைய நபரிடமிருந்து நிலுவையில்‌ உள்ள போதிய பணத்தை அல்லது அந்த தொகைக்கு சமமாக அல்லது குறைவாகவுள்ளபோது, முழு அளவு பணத்தை அல்லது குறைந்தளவு பணத்தை பிற நபர்‌ எவரிடமிருந்தும்‌ செலுத்துமாறு கோரலாம்‌; (i) ௫-ஆம்‌ உட்கூறின்கீழ்‌ அறிவிப்பு வழங்கப்பட்ட ஒவ்வொரு நபரும்‌ அத்தகைய அறிவிப்பிற்கு இணங்கி நடத்தல்‌ வேண்டும்‌, குறிப்பாக, அஞ்சல்‌ அலுவலகத்திற்கு, வங்கித்‌ தொழில்‌ நிறுமத்திற்கு அல்லது காப்பீடுதாரர்களுக்கு அத்தகைய அறிவிப்பை வழங்குகிறவிடத்து, விதி, செயல்முறை அல்லது வேண்டுறுத்தம்‌ எதுவும்‌ முரணாக இருந்த போதிலும்‌, செலுத்தத்திற்கு முன்பு மேற்குறிப்பு அல்லது அது போன்ற நோக்கத்திற்காக வங்கி கணக்கு புத்தகத்தை, வைப்பீடு ரசீதை, காப்பீடு அல்லது பிற ஆவணம்‌ எதையும்‌ முன்னிலைப்படுத்த தேவையில்லை; 00 ௫-ஆம்‌ உட்கூறின்கீழ்‌ எந்த நபருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டதோ அந்த நபரைப்‌ பொறுத்த நேர்வில்‌, அரசுக்கு செலுத்துவதற்கு தவறுவாரானால்‌, அவர்‌ அறிவிப்பில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள பணம்‌ பொறுத்து பணம்‌ செலுத்தத்‌ தவறியவர்‌ 118 என கருதப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்படி இயற்றப்பட்ட விதிகளின்‌ விளைவுகள்‌ அனைத்தும்‌ தொடர்தல்‌ வேண்டும்‌. 09 ௫-ஆம்‌ உட்கூறின்கீழ்‌ அறிவிப்பை சார்வு செய்யும்‌ அலுவலர்‌, எந்த நேரத்திலும்‌, அத்தகைய அறிவிப்பை திருத்தம்‌ செய்யலாம்‌ அல்லது முறித்தறவு செய்யலாம்‌ அல்லது அறிவிப்பைத்‌ தொடர்ந்து செலுத்துகைக்கான காலத்தை நீட்டிக்கலாம்‌; (V) நபர்‌ எவரும்‌ ()-ஆம்‌ உட்கூறின்கீழ்‌ வழங்கப்பட்ட அறிவிப்பிற்கு இணங்கி பணத்தை செலுத்தும்‌ போது தவறுகை செய்த நபரின்‌ அதிகாரத்தின்‌ கீழ்‌ பணத்தை செலுத்தியதாக கருதப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய செலுத்தம்‌ அரசினுடைய கணக்கில்‌ செலுத்தப்படும்‌ போது அந்த பற்றுச்சீட்டில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள தவறுகை செய்த நபரின்‌ தொகையின்‌ அளவிற்கு கடப்பாட்டிலிருந்து அத்தகைய நபரின்‌ சிறந்த மற்றும்‌ போதிய விடுவிப்பாக கருதப்படுதல்‌ வேண்டும்‌; 0 0-ஆம்‌ உட்கூறின்கீழ்‌ அவருக்கு அறிவிப்பை சார்வு செய்த பின்பு, தவறுகை செய்த நபரை கடப்பாட்டிலிருந்து விடுவிக்கும்‌ நபர்‌ எவரும்‌, வரி, வட்டி மற்றும்‌ தண்டத்‌ தொகை செலுத்தத்‌ தவறுகை செய்த நபரின்‌ கடப்பாட்டின்‌ அளவிற்கு அல்லது கடப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட அளவிற்கு, இதில்‌ எது குறைந்ததோ, அதற்கு தனிப்பட்டமுறையில்‌ அரசுக்கு பொறுப்புடையவராவார்‌; (Vi) ௫-ஆம்‌ உட்கூறின்கீழ்‌ எந்த நபருக்கு அறிவிப்பு சார்வு செய்யப்பட்டதோ அந்த நபர்‌, அறிவிப்பு வழங்கும்‌ அலுவலருக்கு கேட்கப்பட்ட பணம்‌ அல்லது அதன்‌ பகுதி எதுவும்‌ தவறுகை செய்த நபருக்கு கொடுபட வேண்டியதாக இல்லை அல்லது, அவருக்கு அறிவிப்பு சார்வு செய்த போது, தவறுகை செய்த நபர்‌ பொருட்டு அல்லது, நபருக்காக அல்லது கேட்கப்பட்ட பணமானது அல்லது அதன்‌ பகுதியானது, மேற்சொன்ன நபருக்கு கொடுக்கவேண்டி அல்லது அவருக்காக அல்லது அத்தகைய நபர்‌ சார்பாக அவர்‌ பணம்‌ ஏதும்‌ வைத்திருக்கவில்லை என அறிவிப்பு வழங்கும்‌ அலுவலர்‌ மனநிறைவடையும்‌ வகையில்‌ நிரூபிக்கிறவிடத்து, இந்தப்‌ பிரிவில்‌ அடங்கியிருக்கும்‌ எதுவும்‌ அத்தகைய பணம்‌ அல்லது பணத்தின்‌ பகுதி எதையும்‌ அறிவிப்பு சார்வு செய்யப்பட்டுள்ள நபரை அரசுக்கு செலுத்துமாறு வேண்டுறுத்துதல்‌ என கொள்ளப்படுதல்‌ ஆகாது; () உரிய அலுவலர்‌, இதன்‌ பொருட்டு செய்யப்பட்ட விதிகளுக்கு இணங்க, அத்தகைய நபருக்குச்‌ சொந்தமான அல்லது அவரின்‌ கட்டாளுகையில்‌ உள்ள அசையும்‌ அல்லது அசையாச்‌ சொத்து எதையும்‌ கைப்பற்றலாம்‌, மற்றும்‌ செலுத்தப்பட வேண்டிய தொகை செலுத்தப்படும்‌ வரையில்‌, அத்தொகையை நிறுத்தி வைக்கலாம்‌, மற்றும்‌ ஒருவேளை மேற்சொன்ன செலுத்தப்பட வேண்டிய தொகையின்‌ பாகம்‌ எதுவும்‌ அல்லது சொத்தினை கைப்பற்றுவதனால்‌ அல்லது வைத்திருப்பதனால்‌ ஏற்படும்‌ செலவுத்‌ தொகைகள்‌, மீண்டும்‌ அத்தகைய பற்றுகை எதன்பின்பும்‌ முப்பது நாட்கள்‌ கால அளவிற்கு செலுத்தப்படாமல்‌ இருக்கும்‌ நேர்வில்‌, மேற்சொன்ன சொத்து விற்பனை செய்யப்படுமாறு செய்விக்கலாம்‌ மற்றும்‌ அத்தகைய செலுத்தப்பட வேண்டிய தொகையை மற்றும்‌ செலுத்தப்படாதிருக்கும்‌ விற்பனையின்‌ செலவுத்‌ 119 தொகைகள்‌ உள்ளடங்கலான செலவுத்‌ தொகைகளை செலுத்த வேண்டிய தொகையினை கொடுத்துத்‌ தீர்க்கலாம்‌ மற்றும்‌ உபரித்‌ தொகை ஏதேனும்‌ இருப்பின்‌, அதனை அத்தகைய நபருக்கு திருப்பிக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌; (௨) உரிய அலுவலர்‌, அத்தகைய நபரிடமிருந்து கொடுபட வேண்டிய தொகையை குறித்துரைத்து அவரால்‌ கையொப்பமிடப்பட்டு சான்றிதழை தயார்‌ செய்யலாம்‌ மற்றும்‌ அத்தகைய நபர்‌ சொத்து வைத்திருக்கும்‌ அல்லது குடியிருக்கும்‌ அல்லது வணிகம்‌ நடத்திவரும்‌ மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்கலாம்‌, மற்றும்‌ மேற்சொன்ன ஆட்சியர்‌ அல்லது மேற்சொன்ன அலுவலர்‌, அத்தகைய சான்றிதழை பெற்றுக்‌ கொண்டதன்‌ பேரில்‌, நில வருவாய்‌ நிலுவைத்‌ தொகையாக இ௯ருந்தாற்‌ போன்று, அதில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள தொகையை அத்தகைய நபரிடமிருந்து வசூல்‌ செய்வதற்கு முற்படுதல்‌ வேண்டும்‌; (ஊ) 1973-ஆம்‌ ஆண்டு குற்றவியல்‌ நெறிமுறை தொகுப்புச்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 271974) என்ன அடங்கியிருந்த போதிலும்‌, உரிய அலுவலர்‌, உரிய குற்றவியல்‌ நடுவரிடம்‌ விண்ணப்பத்தை தாக்கல்‌ செய்யலாம்‌ மற்றும்‌ அத்தகைய குற்றவியல்‌ நடுவர்‌ அத்தகைய நபரிடமிருந்து, குறித்துரைக்கப்பட்டுள்ள தொகையினை, அவரால்‌ சுமத்தப்பட்ட தண்டத்‌ தொகையாக இருந்தாற்‌ போன்று வசூல்‌ செய்வதற்கு முற்படுதல்‌ வேண்டும்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகள்‌ அல்லது ஒழுங்குமுறை விதிகள்‌ எதனின்‌ கீழ்‌ எழுதிக்கொடுக்கப்பட்ட பிணைப்‌ பத்திரம்‌ அல்லது பிற முறையாவணம்‌ எதின்‌ வரையறைகள்‌ அத்தகைய முறையாவணத்தின்படி கொடுபட வேண்டிய தொகை எதனையும்‌ (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள முறையில்‌ வசூல்‌ செய்வதற்கு வகை செய்திருக்கிறவிடத்து அந்த தொகை, பிற வளுலிக்கும்‌ முறை எதற்கும்‌ குந்தகமின்றி, அந்த உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கு இணங்க வளசூலிக்கப்படலாம்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ எதனின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளின்படி, அரசுக்கு, நபரால்‌ வரி, வட்டி அல்லது தண்டத்‌ தொகை எதையும்‌ செலுத்தப்பட வேண்டியதாக இருக்கிறவிடத்து மற்றும்‌ அவை செலுத்தப்படாது இருக்கிறவிடத்து, மேற்சொன்ன வரி நிலுவைத்‌ தொகைகளை வசூலிக்கும்‌ போது, மைய வரிக்கான உரிய அலுவலர்‌, அந்த தொகையை மேற்சொன்ன நபரிடமிருந்து மைய வரியின்‌ நிலுவைத்‌ தொகையாக இ௯ருந்தாற்‌ போன்று வசூல்‌ செய்யலாம்‌ மற்றும்‌ அரசின்‌ கணக்கில்‌ அவ்வாறு வசூலிக்கப்பட்ட தொகையை வரவு வைக்கலாம்‌. (4) (3-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வசூலிக்கப்பட்ட தொகையானது, மைய அரசுக்கு மற்றும்‌ மாநில அரசுக்கு கொடுபட வேண்டிய தொகையினை விட குறைவாக இருக்கிறவிடத்து, அந்தந்த அரசுகளின்‌ கணக்கில்‌ வரவு வைக்கப்பட வேண்டிய தொகையானது, அத்தகைய ஒவ்வொரு அரசுக்கும்‌ கொடுபட வேண்டிய தொகையின்‌ விகிதாச்சாரப்படி இருத்தல்‌ வேண்டும்‌. 120 80. தவணை முறைகளில்‌ வரியை மற்றும்‌ பிற தொகையைச்‌ செலுத்துதல்‌.- வரிவிதிக்கத்தக்க நபரால்‌ செய்யப்பட்ட விண்ணப்பத்தின்‌ பேரில்‌, ஆணையர்‌, எழுத்து வடிவில்‌ பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக, விவர அறிக்கை எதிலுமுள்ள சுய-வரிக்கணிப்பு கடப்பாட்டின்படி கொடுபட வேண்டிய தொகை அல்லாத பிற, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ கொடுபட வேண்டிய தொகை எதனையும்‌ 50— ஆம்‌ பிரிவின்கீழ்‌ வட்டி செலுத்துவதற்கு உட்பட்டும்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகள்‌ மற்றும்‌ வரைக்கட்டுகளுக்கு 2 1" பட்டும்‌, இருபத்து நான்கிற்கு மேற்படாத மாத தவணைகளில்‌, செலுத்துவதற்கான காலத்தை நீட்டிக்கலாம்‌ அல்லது செலுத்துவதற்கு அனுமதிக்கலாம்‌: வரம்புரை: ஆனால்‌, அதன்‌ உரிய தேதியில்‌ ஏதாவது ஒரு தவணை தவறுகிறவிடத்து, அத்தகைய தேதியில்‌ செலுத்தத்தக்க இன்னும்‌ கொடுபடாதிருக்கிற முழுமையான மீதித்தொகை கொடுபட வேண்டியதாகவும்‌ உடனடியாக செலுத்தப்பட வேண்டியதாகவும்‌ இருக்கும்‌ மற்றும்‌, நபருக்கு மேலுமான அறிவிப்பு எதையும்‌ சார்வு செய்யப்படாமல்‌, வளுலிப்பதற்கான கடப்பாடு உடையதாகும்‌. 81. குறித்த சில நேர்வுகளில்‌ சொத்து உரிமை மாற்றம்‌ இல்லாநிலையதாகும்‌.- நபரிடமிருந்து தொகை எதுவும்‌ கொடுபட வேண்டியதான பின்பு, அவருக்கு சொந்தமான அல்லது அவரின்‌ உடைமையில்‌ உள்ள சொத்தின்‌ மீது பொருட்பிணைப்‌ பொறுப்பு ஏற்படுத்துகிறவிடத்து அல்லது விற்பனை, அடமானம்‌, பறிமாற்றம்‌ அல்லது வேறெந்த உரிமை மாற்றத்தின்‌ மூலமாக தன்னுடைய சொத்துக்கள்‌ எதுவேயாயினும்‌, அவற்றை அரசு வருவாயை மோசடி செய்யும்‌ எண்ணத்துடன்‌ பிற நபர்‌ எவர்‌ சார்பாகவும்‌ பிற எந்த உரிமைமாற்ற முறையிலும்‌ உரிமை மாற்றம்‌ செய்கிறவிடத்து, மேற்சொன்ன நபரால்‌ செலுத்தப்பட வேண்டிய வரி அல்லது பிற தொகை எதுவும்‌ பொறுத்து உரிமைக்‌ கோரிக்கை எதற்கும்‌ எதிராக அத்தகைய பொருட்பிணைப்‌ பொறுப்பு அல்லது உரிமை மாற்றமானது இல்லா நிலையதாகும்‌: வரம்புரை: ஆனால்‌, அத்தகைய பொருட்பிணைப்‌ பொறுப்பு அல்லது உரிமை மாற்றமானது, அவைகள்‌ போதிய மறுபயனுக்காக, நல்லெண்ணத்தில்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழமுள்ள அத்தகைய நடவடிக்கைகள்‌ நிலுவையிலிருப்பது பற்றிய அறிவிப்பின்றி அல்லது அத்தகைய மேற்சொன்ன நபரால்‌ செலுத்தப்பட வேண்டிய அத்தகைய வரி அல்லது பிற தொகை பற்றிய அறிவிப்பின்றி அல்லது உரிய அலுவலரின்‌ முன்‌ அனுமதியுடன்‌ செய்யப்படுமானால்‌, அது இல்லா நிலையது ஆகாது. 82. வரியானது சொத்தின்‌ மீது முதல்‌ பொருட்பிணைப்‌ பொறுப்பாக இருக்கும்‌.- அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம்‌ எதிலும்‌ முரணாக என்ன அடங்கியிருந்த போதிலும்‌, 2016-ஆம்‌ ஆண்டு நொடிப்பு நிலை மற்றும்‌ வணிகர்‌ 121 நொடிப்பு நிலை தொகுப்புச்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 31/2016) பிறவாறு வகைசெய்யப்பட்டிருந்தாலன்றி, வரிவிதிக்கத்தக்க நபரால்‌ அல்லது எவரேனும்‌ பிற நபரால்‌ செலுத்தப்பட வேண்டிய வரி, வட்டி அல்லது தண்டத்‌ தொகையின்‌ பொருட்டு அரசுக்கு அவர்‌ செலுத்த கடப்பாடு உள்ளதாக இருக்கிற அந்த தொகை அத்தகைய வரி விதிக்கத்தக்க நபர்‌ அல்லது அத்தகைய நபரின்‌ சொத்தின்‌ மீது முதல்‌ பொருட்பிணைப்‌ பொறுப்பாக இருக்கும்‌ வட்டியை அல்லது தண்டத்‌ தொகையை அவர்‌ அரசுக்கு செலுத்துவதற்கு கடப்பாடுடைய அத்தகைய வரியைச்‌ செலுத்துபவரின்‌ அல்லது அத்தகைய நபரின்‌ சொத்தின்‌ மீது முதல்‌ பற்றுகையாக இருத்தல்‌ வேண்டும்‌. 83. குறித்த சில நேர்வுகளில்‌ வருவாயை பாதுகாப்பதற்கு தற்காலிக பற்றுகை.- (1) 62-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது 63-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது 64-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது 67-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது 73-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது 74-ஆம்‌ பிரிவின்கீழ்‌ நடவடிக்கைகள்‌ நிலுவையில்‌ இருக்கிறவிடத்து, ஆணையர்‌ அரசு வருவாயின்‌ நலனைப்‌ பாதுகாக்கும்‌ நோக்கத்திற்காக அவ்வாறு செய்வது அவசியமானதென கருதுவாரேயானால்‌, அவர்‌ எழுத்து வடிவிலான ஆணையின்‌ வாயிலாக வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ வரி விதிக்கத்தக்க நபருக்கு சொந்தமான கணக்கு புத்தகம்‌ உள்ளடங்கலான, சொத்து எதையும்‌ தற்காலிகமாக பற்றுகை செய்யலாம்‌. (2) அத்தகைய தற்காலிக பற்றுகை ஒவ்வொன்றும்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணையின்‌ தேதியிலிருந்து ஓராண்டு கால அளவு முடிவுற்ற பின்பு செயற்பாடு அற்றுப்போகும்‌. 84. குறித்த சில வசூல்‌ நடவடிக்கைகளின்‌ தொடர்ச்சி மற்றும்‌ செல்லுந்தன்மை.- (இதற்கு பின்பு இந்தப்‌ பிரிவில்‌ "அரசுக்கு கொடுபட வேண்டியவை" என சுட்டப்படும்‌) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செலுத்தப்பட வேண்டிய வரி, தண்டத்‌ தொகை, வட்டி அல்லது பிற தொகை எதுவும்‌ பொறுத்த கேட்பு அறிவிப்பு, வரிவிதிக்கத்தக்க நபர்‌ எவருக்கும்‌ அல்லது பிற நபர்‌ எவருக்கும்‌ சார்வு செய்யப்படுமிடத்து மற்றும்‌ மேல்முறையீடு அல்லது சீராய்வு விண்ணப்பம்‌ தாக்கல்‌ செய்கிறவிடத்து அல்லது அத்தகையவாறு அரசுக்கு கொடுபட வேண்டியவைகள்‌ பொறுத்து ஏதேனும்‌ நடவடிக்கைகள்‌ தொடருகிறவிடத்து, அப்போது- (அ) அத்தகைய அரசுக்குக்‌ கொடுபடவேண்டியவை அத்தகைய மேல்முறையீட்டில்‌, சீராய்வில்‌ அல்லது பிற நடவடிக்கைகளில்‌ அதிகரிப்பு செய்திருக்கிறவிடத்து, ஆணையர்‌, அரசுக்குக்‌ கொடுபட வேண்டிய அதிகரிக்கப்பட்ட அத்தகைய தொகை தொடர்பாக வரிவிதிக்கத்தக்க நபர்‌ அல்லது பிற நபர்‌ எவருக்கும்‌ மற்றொரு கேட்பு அறிவிப்பு சார்வு செய்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய மேல்முறையீட்டை, சீராய்வினை அல்லது பிற நடவடிக்கைகளை முடிவு 122 செய்வதற்கு முன்பு, அவருக்கு, சார்வு செய்யப்பட்ட கேட்பு அறிவிப்பில்‌ உள்ளடங்கியுள்ள அரசுக்குக்‌ கொடுபட வேண்டியவை தொடர்பான அத்தகைய வளுல்‌ நடவடிக்கைகள்‌ எவையும்‌ புதிய கேட்பு அறிவிப்பு எதையும்‌ சார்வு செய்யாமல்‌, அத்தகைய முடிவிற்கு அடுத்து முந்தைய நடவடிக்கைகளானது இருந்த அதே நிலையிலிருந்து தொடரலாம்‌; (ஆ) அத்தகைய அரசுக்குக்‌ கொடுபட வேண்டியவை அத்தகைய மேல்முறையீட்டில்‌, சீராய்வில்‌ அல்லது பிற நடவடிக்கைகளில்‌ குறைக்கப்பட்டிருக்கிறவிடத்து- (i) வரிவிதிக்கத்தக்க நபருக்கு புதிய கேட்பு அறிவிப்பு ஒன்றினை ஆணையர்‌ சார்வு செய்யத்‌ தேவையில்லை; 0) ஆணையர்‌, அத்தகைய குறைப்புத்‌ தவலை அவருக்கு மற்றும்‌ எந்த உரிய அதிகார அமைப்பிடம்‌ வசூல்‌ நடவடிக்கைகளானது நிலுவையில்‌ உள்ளதோ அந்த உரிய அதிகார அமைப்பிற்கு தகவல்‌ அளித்தல்‌ வேண்டும்‌; 0) அத்தகைய மேல்முறையீட்டை, சீராய்வை அல்லது பிற நடவடிக்கைகளை முடிவு செய்வதற்கு முன்பு அவருக்கு சார்வு செய்யப்பட்ட கேட்பின்‌ அடிப்படையில்‌ தொடங்கப்பட்ட வசூல்‌ நடவடிக்கைகள்‌ எவையும்‌, அத்தகைய முடிவிற்கு முந்தைய அத்தகைய நடவடிக்கைகள்‌ எந்த நிலையில்‌ இருந்ததோ அந்த நிலையிலிருந்து அல்லாது குறைக்கப்பட்ட தொகை தொடர்பாக தொடர்ந்து இருந்து வரலாம்‌. அத்தியாயம்‌ XVI குறித்த சில நேர்வுகளில்‌ செலுத்துவதற்கு கடப்பாடு. 85. வணிகத்தை உரிமை மாற்றம்‌ செய்யும்‌ நேர்வில்‌ கடப்பாடு- (1) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரி செலுத்துவதற்கு கடப்பாடுடைய வரிவிதிக்கத்தக்க நபர்‌, அவருடைய வணிகத்தை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ விற்பனை, பரிசு, குத்தகை, அனுமதி மற்றும்‌ உரிமம்‌, வாடகை அல்லது வேறு பிற எந்த முறையிலும்‌ உரிமை மாற்றம்‌ செய்திருக்கிறவிடத்து, அத்தகைய வரி, வட்டி அல்லது தண்டத்‌ தொகையானது அத்தகைய உரிமை மாற்றத்திற்கு முன்பு தீர்மானிக்கப்பட்டிருப்பினும்‌, ஆனால்‌ செலுத்தப்படாது தொடர்ந்திருக்கிறவிடத்து அல்லது அதற்கு பின்பு தீர்மானிக்கப்பட்டிருக்கிறவிடத்து, வரி விதிக்கத்தக்க நபர்‌ மற்றும்‌ வணிகம்‌ எந்த நபருக்கு அவ்வாறு உரிமை மாற்றம்‌ செய்யப்பட்டதோ அந்த நபர்‌, கூட்டாகவும்‌, தனித்தனியாகவும்‌, கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ அத்தகைய உரிமை மாற்றக்‌ காலம்‌ வரையில்‌ வரி விதிக்கத்தக்க நபரிடமிருந்து கொடுபட வேண்டிய வரியை, வட்டியை அல்லது தண்டத்‌ தொகை எதையும்‌ செலுத்துவதற்கு முழுமையாக அல்லது அத்தகைய உரிமை மாற்றத்தின்‌ அளவிற்கு கடப்பாடு உடையவர்‌ ஆதல்‌ வேண்டும்‌. 123 (2) ௫-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள வணிக உரிமை மாற்றம்‌ பெற்றவர்‌ ஒன்று தண்ணுடைய சொந்தப்‌ பெயரிலோ அல்லது பிற நபருடைய பெயரிலோ அத்தகைய வணிகத்தை நடத்தி வருகிறவிடத்து, அத்தகைய உரிமை மாற்றத்‌ தேதியிலிருந்து செயலுக்கு வருமாறு அவரால்‌ செயற்படுத்தப்பட்ட சரக்குகளின்‌ அல்லது சேவைகளின்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகையின்‌ பேரில்‌, அவர்‌ வரி செலுத்துவதற்கு கடப்பாடு உடையவராவார்‌ மற்றும்‌ அவர்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ ஒரு பதிவு பெற்றவராக இருப்பாரேயானால்‌, அவருடைய பதிவுச்‌ சான்றிதழை திருத்தம்‌ செய்வதற்காக வகுத்துரைக்கப்பட்ட காலத்திற்குள்‌ விண்ணப்பித்தல்‌ வேண்டும்‌. 86. முகவர்‌ மற்றும்‌ முதல்வரின்‌ கடப்பாடு.-- தண்ணுடைய முதல்வரின்‌ சார்பாக முகவர்‌ ஒருவர்‌ வரிவிதிக்கத்தக்க சரக்குகளை வழங்குகிறவிடத்து அல்லது பெற்றுக்‌ கொள்ளுகிறவிடத்து, அத்தகைய முகவர்‌ மற்றும்‌ அவருடைய முதல்வர்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அத்தகைய சரக்குகளின்‌ பேரில்‌ வரி செலுத்துவதற்கு கூட்டாகவும்‌ தனித்தனியாகவும்‌ கடப்பாடு உடையவர்‌ ஆதல்‌ வேண்டும்‌. 87. நிறுமங்களை ஒன்றாக சேர்க்கும்‌ அல்லது இணைக்கும்‌ நேர்வில்‌ கடப்பாடு-- (1) நதிமன்றத்தின்‌ அல்லது தீர்ப்பாயத்தின்‌ ஆணையைத்‌ தொடர்ந்து அல்லது பிறவாறாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுமங்கள்‌ ஒன்றாக சேர்க்கப்படும்போது அல்லது இணைக்கப்படும்போது மற்றும்‌ ஆணைத்‌ தேதிக்கு முந்தைய தேதியிலிருந்து ஆணையானது செயல்‌ விளைவு பெறும்போது மற்றும்‌ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுமங்கள்‌ ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு அல்லது ஒன்றோடொன்று ஆணை செயல்‌ விளைவு பெற்ற தேதியிலிருந்து ஆணைத்‌ தேதி வரை தொடங்கும்‌ கால அளவின்போது சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ எவற்றையும்‌ அல்லது இரண்டையும்‌ வழங்கியுள்ளபோது அல்லது பெற்றுள்ளபோது, அத்தகைய வழங்குகை மற்றும்‌ பெறுகை தொடர்பான நடவடிக்கைகள்‌ அந்தந்த நிறுமங்களின்‌ வழங்குகை மற்றும்‌ பெற்றுக்கொள்ளுதலின்‌ விற்பனை அளவில்‌ உள்ளடக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவை அவ்வாறே வரி செலுத்துவதற்கு கடப்பாடுடையனவாகும்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக மேற்சொன்ன ஆணையில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, மேற்சொன்ன ஆணை தேதி வரையிலான கால அளவிற்கு மேற்சொன்ன இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட நிறுமங்கள்‌ தனிவேறுபட்ட நிறுமங்களாக பாவிக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ மேற்சொன்ன நிறுமங்களின்‌ பதிவுச்‌ சான்றிதழ்கள்‌ மேற்சொன்ன ஆணைத்‌ தேதியிலிருந்து செயல்‌ விளைவு பெறுமாறு ரத்து செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 88. கலைப்பிலுள்ள நிறுமத்தை பொறுத்த நேர்வில்‌ கடப்பாடு-- (1) நீதிமன்றத்தின்‌ அல்லது தீர்ப்பாயத்தின்‌ ஆணைகளால்‌ அல்லது பிறவாறாக நிறுமம்‌ எதுவும்‌ கலைக்கப்படும்போது, (இதன்‌ பின்பு இந்தப்‌ பிரிவில்‌ "கலைப்பாளராக" சுட்டப்படும்‌) நிறுமத்தின்‌ சொத்திருப்புகள்‌ எவற்றின்‌ சொத்து பேணுநராக அமர்த்தப்பட்ட நபர்‌ 124 ஒவ்வொருவரும்‌ அவருடைய அமர்த்துகைக்கு பின்பு முப்பது நாட்களுக்குள்‌ அவருடைய அமர்த்துகை குறித்து ஆணையருக்கு தகவல்‌ தெரிவித்தல்‌ வேண்டும்‌. (2) ஆணையர்‌, அத்தகைய விசாரணையை மேற்கொண்ட பின்பு அல்லது அவருக்கு தக்கதெனக்‌ கருதலாகும்‌ அத்தகைய தகவலை கோரிய பின்பு, கலைப்பாளரின்‌ அமர்த்துகை குறித்த தகவலை அவர்‌ பெற்றுக்‌ கொண்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்‌, அப்போது அல்லது அநேகமாக நிறுமத்தால்‌ செலுத்தப்பட வேண்டியதாக ஆகிய பின்பு ஆணையரின்‌ கருத்துப்படியான தொகை, வரி, வட்டி அல்லது தண்டத்‌ தொகை செலுத்துவதற்கு போதுமானதாக இருப்பதாக அறிவிக்கை செய்தல்‌ வேண்டும்‌. (3) தனியார்‌ நிறுமம்‌ எதுவும்‌ கலைக்கப்படும்‌ போது மற்றும்‌ அதனுடைய கலைப்பிற்கு முன்பாயினும்‌ அல்லது அந்த சமயத்திலாயினும்‌ அல்லது பின்பாயினுமான கால அளவு எதற்காகவும்‌ நிறுமத்திற்கு தீர்மானிக்கப்பட்ட வரி, வட்டி அல்லது தண்டத்‌ தொகை எதையும்‌ வளகுலிக்க முடியாதிருக்கிறபோது, வரி கொடுபடவேண்டியதாக இருக்கும்‌ கால அளவின்‌ போது எந்த நேரத்திலும்‌ அத்தகைய நிறுமத்தின்‌ இயக்குநராக இருந்த நபர்‌ ஒவ்வொருவரும்‌, நிறுமத்தின்‌ நடவடிக்கைகள்‌ தொடர்பாக அத்தகைய வசூல்‌ செய்யப்பாமை தன்னுடைய ஒட்டுமொத்த கவனக்‌ குறைவால்‌, அதிகாரத்தைத்‌ தவறாகப்‌ பயன்படுத்தியதால்‌ அல்லது கடமை தவறியதால்‌ இல்லை என அவர்‌ ஆணையர்‌ மனநிறைவடையும்‌ வகையில்‌ நிரூபித்தாலன்றி, அத்தகைய வரி, வட்டி அல்லது தண்டத்‌ தொகை செலுத்துவதற்கு கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ, கடப்பாடு உடையவர்‌ ஆவார்‌. 89. தனியார்‌ நிறுமத்தின்‌ இயக்குநர்களின்‌ கடப்பாடு.- (1) 2013-ஆம்‌ ஆண்டு நிறுமங்கள்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 18/2013) என்ன அடங்கியிருந்தபோதிலும்‌ சரக்குகளை அல்லது சேவைகளை அல்லது இரண்டையும்‌ வழங்குவது பொறுத்து தனியார்‌ நிறுமத்திடமிருந்து வரி, வட்டி அல்லது தண்டத்‌ தொகையானது நிலுவையாக இருந்த கால அளவு எதற்காகவும்‌ வசூலிக்கப்பட முடியாது இருக்கிறவிடத்து, அப்போது தனியார்‌ நிறுமத்தின்‌ இயக்குநராக இருந்த நபர்‌ ஒவ்வொருவரும்‌, அவர்‌ நிறுமத்தின்‌ அலுவல்கள்‌ தொடர்பாக வசூலிக்கப்படாமல்‌ இருப்பதானது தண்ணுடைய தரப்பில்‌ ஒட்டுமொத்த கவனக்‌ குறைவு, அதிகாரத்தை தவறாகப்‌ பயன்படுத்துதல்‌, அல்லது கடமை தவறியதால்‌ சாட்டத்தக்கதாய்‌ இல்லையென்று அவர்‌ நிரூபித்தாலன்றி, அத்தகைய வரியை, வட்டியை அல்லது தண்டத்‌ தொகையை செலுத்துவதற்கு கூட்டாகவும்‌ தனித்தனியாகவும்‌ கடப்பாடு உடையவர்‌ ஆவார்‌. (2) தனியார்‌ நிறுமமானது பொது நிறுமமாக மாறுகிறவிடத்து, மற்றும்‌ அத்தகைய நிறுமமானது தனியார்‌ நிறுமமாக இருக்கும்‌ கால அளவு எதற்காகவும்‌, அத்தகையவாறு மாறியதற்கு முன்பு சரக்குகளை அல்லது சேவைகளை அல்லது இண்டையும்‌ வழங்குவது தொடர்பாக அத்தகையவாறு மாறியதற்கு முன்பு வசூலிக்க முடியாது இருக்கிறவிடத்து, அத்தகைய தனியார்‌ நிறுமத்தின்‌ சரக்குகளை 125 அல்லது சேவைகளை அல்லது இரண்டையும்‌ வழங்குவது தொடர்பாக வரி, வட்டி அல்லது தண்டத்‌ தொகை தொடர்பாக அத்தகைய தனியார்‌ நிறுமத்தின்‌ இயக்குநராக இருந்த நபர்‌ எவருக்கும்‌ (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌ பொருந்தாது: வரம்புரை: ஆனால்‌, இந்த உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌ அத்தகைய இயக்குநர்‌ மீது விதிக்கப்படும்‌ தனிப்பட்ட தண்டத்‌ தொகை எதற்கும்‌ பொருந்தாது. 90. வரியை செலுத்துவதற்கு நிறுவகத்தின்‌ கூட்டாளிக்கு உள்ள கடப்பாடு.-- ஒப்பந்தம்‌ எதிலும்‌ மற்றும்‌ அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம்‌ எதிலும்‌ முரணாக என்ன இருந்தபோதிலும்‌, நிறுவகம்‌ எதுவும்‌ இந்தச்‌ சட்டத்தின்படி வரி, வட்டி அல்லது தண்டத்தொகை செலுத்துவதற்கு கடப்பாடுடையதாக இருக்கிறவிடத்து, நிறுவகம்‌ மற்றும்‌ நிறுவகத்தின்‌ கூட்டாளிகள்‌ ஒவ்வொருவரும்‌ அத்தகைய செலுத்துகைக்காக கூட்டாகவும்‌ மற்றும்‌ தனித்தனியாகவும்‌ கடப்பாடு உடையவராவார்‌: வரம்புரை: ஆனால்‌, நிறுவகத்திலிருந்து கூட்டாளி எவரும்‌ ஓய்வு பெறுகிறவிடத்து, அவர்‌ அல்லது நிறுவகமானது, இதன்‌ பொருட்டு எழுத்து வடிவிலான அறிவிப்பு வாயிலாக மேற்சொன்ன கூட்டாளியின்‌ பணி ஓய்வு தேதியை ஆணையருக்கு தெரிவித்தல்‌ வேண்டும்‌, அத்தகைய கூட்டாளி அந்த தேதியில்‌ தீர்மானிக்கப்பட்டிருப்பினும்‌ அல்லது இல்லாவிடினும்‌ அவருடைய ஓய்வுத்‌ தேதி வரையிலும்‌ கொடுபடவேண்டிய வரி, வட்டி அல்லது தண்டத்தொகை செலுத்துவதற்கு கடப்பாடு உடையவராவார்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, ஓய்வு பெற்ற தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள்‌ அத்தகைய தகவலை தெரிவிக்காது இருப்பின்‌ ஆணையரால்‌ அத்தகைய தகவல்‌ பெறப்படுகிற தேதி வரையில்‌ முதல்‌ வரம்புரையின்படியான அத்தகைய கூட்டாளியின்‌ கடப்பாடானது தொடர்ந்து இருத்தல்‌ வேண்டும்‌. 91. காப்பாளர்கள்‌, பொறுப்புக்‌ கட்டளையர்கள்‌ முதலானவர்களின்‌ கடப்பாடு. இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செலுத்தப்பட வேண்டிய வரி, வட்டி அல்லது தண்டத்தொகை பொறுத்து வணிகம்‌, அத்தகைய வயதிற்கு வராதவர்‌ அல்லது பிற திறனற்ற நபரின்‌ நலப்பயனுக்காக காப்பாளரால்‌, பொறுப்புக்‌ கட்டளையரால்‌ அல்லது முகவரால்‌ நடத்தப்படுகிறவிடத்து, அத்தகைய வயதிற்கு வராதவரிடமிருந்து அல்லது பிற திறனற்ற நபரிடமிருந்து வஞூல்‌ செய்யும்‌ அதே அளவிற்கு அந்த வணிகத்தை அவரே நடத்தியிருந்தாற்‌ போன்று வரி, வட்டி அல்லது தண்டத்தொகை அத்தகைய காப்பாளரிடமிருந்து, பொறுப்புக்‌ கட்டளையரிடமிருந்து அல்லது முகவரிடமிருந்து அதே முறையில்‌ வசூல்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ அனைத்து வகைமுறைகள்‌ மற்றும்‌ அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளானது அவ்வாறே பொருந்தும்‌. 126 92. நீதிமன்ற காப்பாளர்கள்‌ முதலானவர்களின்‌ கடப்பாடு, ஆகியவை.- வரிவிதிப்பிற்கு உள்ளான நபரின்‌ சொத்து அல்லது சொத்தின்‌ பகுதி எதுவும்‌ அது பொறுத்து இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செலுத்தப்பட வேண்டிய வரி, வட்டி, தண்டத்தொகை எதுவும்‌ பொறுத்து அமர்த்தப்பட்ட நீதிமன்ற காப்பாளர்களின்‌, நிர்வாக தலையரின்‌, அலுவலக பொறுப்புக்‌ கட்டளையரின்‌ அல்லது சொத்து பேணுநரின்‌ அல்லது மேலாளரின்‌ (வணிகத்தை மேலாண்மை செய்கிற அவருடைய பதவிப்‌ பெயர்‌ எதுவாக இருப்பினும்‌, நபர்‌ எவரும்‌ உள்ளடங்கலாக) வரி, வட்டி அல்லது தண்டத்தொகை அதே முறையில்‌ நீதிமன்ற காப்பாளர்களிடமிருந்து, நிருவாக தலைவரிடமிருந்து அல்லது மேலாளரிடமிருந்து அதே அளவில்‌ வரி விதிக்கத்தக்க நபர்‌ தாமே வணிகத்தை நடத்துவதைப்‌ போன்றே வசூல்‌ செய்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ அனைத்து வகைமுறைகள்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட அனைத்து விதிகளும்‌ அவ்வாறே பொருந்துதல்‌ வேண்டும்‌. 93. குறித்த சில நேர்வுகளில்‌ வரி, வட்டி அல்லது தண்டத்‌ தொகை செலுத்துவது குறித்த கடப்பாடு தொடர்பான சிறப்பு வகைமுறைகள்‌.- (1) 2016-ஆம்‌ ஆண்டு நொடிப்பு நிலை மற்றும்‌ வணிக நொடுப்பு நிலை தொகுப்புச்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 312016) பிறவாறு வகை செய்யப்பட்டவாறல்லாமல்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரி, வட்டி அல்லது தண்டத்தொகை செலுத்தும்‌ கடப்பாடுடைய நபர்‌ இறந்துபோகிறவிடத்து,- (அ) நபரால்‌ நடத்திவரும்‌ வணிகமானது அவர்‌ இறப்பிற்கு பின்பு தொடர்ந்திருக்குமேயானால்‌, அவருடைய சட்டப்படியான பிரதிநிதியால்‌ அல்லது பிற நபர்‌ எவராலும்‌ தொடர்ந்திருக்குமேயானால்‌ அத்தகைய சட்டப்படியான பிரதிநிதி அல்லது பிற நபர்‌ இந்தச்‌ சட்டத்தின்படி அத்தகைய நபரிடமிருந்து வரவேண்டிய வரி, வட்டி அல்லது தண்டத்தொகை செலுத்துவதற்கு கடப்பாடுடையவர்‌ ஆவார்‌; மற்றும்‌ (ஆ) அவருடைய இறப்பிற்கு முன்பு அல்லது பின்பு நபரால்‌ நடத்திவரப்பட்ட வணிகமானது தொடராதிருக்குமேயானால்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அத்தகைய நபரிடமிருந்து கொடுபடவேண்டிய வரி, வட்டி அல்லது தண்டத்தொகை இறந்துபோனவருடைய சொத்தானது எதிர்கொள்ளக்‌ கூடிய அளவிற்கு இறந்துபோன நபரின்‌ சொத்திலிருந்து அவருடைய சட்டப்படியான பிரதிநிதி அவருடைய இறப்பிற்கு முன்பு அத்தகைய வரி, வட்டி அல்லது தண்டத்தொகை தீர்மானிக்கப்பட்டிருந்து ஆனால்‌ தொடர்ந்து செலுத்தாமல்‌ இருக்கிறவிடத்து அல்லது அவருடைய இறப்பிற்கு பின்பு தீர்மானிக்கப்பட்டிருப்பினும்‌ செலுத்துவதற்கு கடப்பாடுடையவர்‌ ஆவார்‌. (2) 2016-ஆம்‌ ஆண்டு நொடிப்பு நிலை மற்றும்‌ வணிக நொடுப்பு நிலை தொகுப்புச்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 31/2016) பிறவாறு வகைசெய்யப்பட்டவாறல்லாமல்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரி, வட்டி அல்லது தண்டத்தொகை செலுத்துவதற்கு கடப்பாடுடைய நபர்‌, வரி விதிக்கத்தக்க நபர்‌, இந்து கூட்டுக்‌ குடும்பமாக அல்லது நபர்களின்‌ குழுமமாக இருக்கிறவிடத்து மற்றும்‌ இந்துக்‌ 127 கூட்டுக்‌ குடும்பத்தின்‌ அல்லது நபர்களின்‌ குழுமத்தின்‌ சொத்தானது பல்வேறு உறுப்பினர்களிடையே அல்லது உறுப்பினர்களின்‌ வகுப்பினர்களுக்கிடையே பாகப்பிரிவினை செய்யப்பட்டிருக்கிறவிடத்து, உறுப்பினர்‌ ஒவ்வொருவரும்‌ அல்லது உறுப்பினர்களின்‌ வகுப்பினர்‌ பாகப்பிரிவினைக்கு முன்பு அத்தகைய வரி, தண்டத்தொகை அல்லது வட்டியானது தீர்மானிக்கப்பட்டிருந்து ஆனால்‌ மீண்டும்‌ செலுத்தாதிருப்பின்‌ அல்லது பாகப்பிரிவினைக்கு பின்பு தீர்மானிக்கப்பட்டிருந்தாலும்‌ பாகப்பிரிவினை செய்யப்படும்‌ காலம்‌ வரையில்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரி விதிக்கத்தக்க நபறிடமிருந்து வரவேண்டிய வரி, வட்டி அல்லது தண்டத்தொகை கூட்டாகவும்‌ அல்லது தனித்தனியாகவும்‌ செலுத்துவதற்கு கடப்பாடுடையவராவர்‌. (3) 2016-ஆம்‌ ஆண்டு நொடுப்பு நிலை மற்றும்‌ வணிக நொடுப்பு நிலை தொகுப்புச்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 31/2016) பிறவாறு வகை செய்யப்பட்டிருந்தவாறல்லாமல்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரி, வட்டி அல்லது தண்டத்தொகை செலுத்துவதற்கு வரி விதிக்கத்தக்க நபர்‌ ஒரு நிறுவகமாக இருக்கிறவிடத்து மற்றும்‌ நிறுவகமானது கலைக்கப்பட்டிருக்கிறவிடத்து பிறகு கலைக்கப்படுவதற்கு முன்பு அத்தகைய வரி, வட்டி அல்லது தண்டத்தொகை தீர்மானிக்கப்பட்டிருந்து ஆனால்‌ தொடர்ந்து செலுத்தப்படாமல்‌ இருக்கிறவிடத்து அல்லது கலைக்கப்பட்டதற்கு பின்பு தீர்மானிக்கப்பட்டிருக்கிறவிடத்து கலைக்கப்படும்‌ காலம்‌ வரையில்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ நிறுவகத்தினரிமிருந்து வரவேண்டிய வரி, வட்டி அல்லது தண்டத்தொகையை கூட்டாளியாக இருக்கின்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, கூட்டாகவும்‌ தனித்தனியாகவும்‌ செலுத்துவதற்கு கடப்பாடுடையவர்‌ ஆவார்‌. (4) 2016-ஆம்‌ ஆண்டு நொடுப்பு நிலை மற்றும்‌ வணிக நொடுப்பு நிலை தொகுப்புச்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 31/2016) பிறவாறு வகை செய்யப்பட்டவாறல்லாமல்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரி, வட்டி அல்லது தண்டத்தொகை செலுத்துவதற்கு வரி விதிக்கத்தக்க ஒரு நபர்‌, (அ) காப்பாளரால்‌ எவருடைய சார்பாக வணிகமாக நடத்தப்பட்டதோ அந்த காப்பில்‌ உள்ளோரின்‌ காப்பாளர்‌; அல்லது (ஆ) நலப்பயனுக்காக பொறுப்புக்‌ கட்டளையின்கீழ்‌ வணிகத்தை நடத்தும்‌ ஒரு பொறுப்புக்‌ கட்டளையர்‌, கடப்பாடுடையவராகிறவிடத்து, காப்பாளர்‌ நிலை மற்றும்‌ பொறுப்புக்‌ கட்டளையானது முடி வுறுத்தப்பட்டிருக்குமேயானால்‌, காப்பில்‌ உள்ளோர்‌ அல்லது நலப்பயணனைப்‌ பெறுவோர்‌ காப்பாளர்‌ நிலை அல்லது பொறுப்புக்‌ கட்டளையானது முடி வுறுத்தப்பட்டிருப்பதற்கு முன்பு அத்தகைய வரி, வட்டி அல்லது தண்டத்தொகை தீர்மானிக்கப்பட்டிருந்து அல்லது அதற்கு பின்பு தீர்மானிக்கப்பட்டிருப்பினும்‌ காப்பாளர்‌ நிலையில்‌ அல்லது பொறுப்புக்‌ கட்டளையை முடிவுறுத்தும்‌ காலம்‌ வரையில்‌ வரி விதிக்கத்தக்க நபரிடமிருந்து கொடுபடவேண்டிய வரி, வட்டி அல்லது தண்டத்தொகை செலுத்துவதற்கு கடப்பாடுடையவர்‌ ஆவார்‌. 128 94. பிற நேர்வுகளில்‌ கடப்பாடு- (1) வரி விதிக்கத்தக்க நபர்‌ ஒரு நிறுவகமாக அல்லது நபர்களின்‌ கழகமாக அல்லது இந்து கூட்டுக்‌ குடும்பமாக இருக்கிறவிடத்து மற்றும்‌ அத்தகைய நிறுவகம்‌, சங்கம்‌ அல்லது குடும்பமானது வணிகத்தை தொடராது இருக்கிறவிடத்து- (அ) அத்தகைய தொடர்ந்து இல்லாது இருக்கும்‌ தேதி வரையில்‌ அத்தகைய தொடர்ந்து இல்லாது இருப்பதைப்‌ போன்று அத்தகைய நிறுவகத்தால்‌, சங்கத்தால்‌ அல்லது குடும்பத்தால்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செலுத்தப்பட வேண்டிய வரி, வட்டி அல்லது தண்டத்தொகை; மற்றும்‌ (ஆ) அத்தகைய நிறுவகத்தின்‌ கூட்டாளியாக அல்லது அத்தகைய சங்கத்தின்‌ அல்லது குடும்பத்தின்‌ ஒரு உறுப்பினராக இருக்கின்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, தொடர்வதை நிறுத்தும்‌ நேரத்தில்‌ அவ்வாறு தொடர்வதை நிறுத்துதல்‌ இருந்த போதிலும்‌, அத்தகையவாறு தொடர்வதை நிறுத்துவதற்கு முன்போ அல்லது பின்போ அத்தகைய வரி மற்றும்‌ வட்டி தீர்மானிக்கப்பட்டிருப்பினும்‌ அல்லது தண்டத்தொகை விதிக்கப்பட்டிருப்பினும்‌ தீர்மானிக்கப்பட்ட வரி மற்றும்‌ வட்டி மற்றும்‌ விதிக்கப்பட்ட தண்டத்தொகை செலுத்துவதற்காக மற்றும்‌ மேற்சொன்னவற்றிற்கு உட்பட்டு, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளானது அத்தகைய நபர்‌ அல்லது கூட்டாளி அல்லது உறுப்பினர்‌ தாமே ஒரு வரி விதிக்கத்தக்க நபராக இருந்தாற்போன்று இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ கூடிய அளவிற்கு பொருந்தும்‌ மற்றும்‌ கூட்டாகவும்‌ மற்றும்‌ தனித்தனியாகவும்‌ கடப்பாடுடையவர்‌ ஆவார்‌. (2) நிறுவகம்‌ அல்லது நபர்களின்‌ கழகம்‌ ஒன்றினை அமைப்பதில்‌ மாற்றம்‌ ஏற்பட்டிருக்கின்றவிடத்து, நிறுவகத்தின்‌ கூட்டாளிகள்‌ அல்லது சங்கத்தின்‌ உறுப்பினர்கள்‌, மறு-அமைப்பிற்கு முன்பு அது இருக்கின்றவாறு மற்றும்‌ பின்பு அது இருக்கின்றவாறு, 90-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கு குந்தகமின்றி, கூட்டாகவும்‌ தனித்தனியாகவும்‌, அதனுடைய மறு-அமைப்பிற்கு முன்பான கால அளவு எதற்காகவும்‌ அத்தகைய நிறுவகம்‌ அல்லது கழகம்‌ சலுத்த வேண்டியதாயிருக்கிற வரியை, வட்டியை அல்லது தண்டத்தொகையைச்‌ செலுத்துவதற்கு கடப்பாடுடையவராக இருத்தல்‌ வேண்டும்‌. (3) (0-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகள்‌, வரிவிதிக்கத்தக்க நபருக்கு, ஒரு நிறுவகமாக அல்லது நபர்களின்‌ கழகமாக இருந்து கொண்டிருக்கிறவிடத்து கலைக்கப்பட்டாலோ அல்லது வரிவிதிக்கத்தக்க நபரால்‌, இந்து கூட்டு குடும்பமாக இருந்து கொண்டிருக்கிறவிடத்து, அதனால்‌ செய்யப்படும்‌ வணிகம்‌ தொடர்பாக பிரிவினை விளைவிக்கப்பட்டாலோ பொருந்தும்‌ மற்றும்‌ அதற்கிணங்க தொடர்ந்து செயல்படாமல்‌ போனதற்கு அந்த உட்பிரிவில்‌ அதன்படியான சுட்டுகைகள்‌, கலைக்கப்படுவதற்கான அல்லது பாகப்பிரிவினைக்கான சுட்டுகையாக பொருள்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்த அத்தியாயத்தின்‌ நோக்கங்களுக்காக, 129 0) 2008-ஆம்‌ ஆண்டு வரையறுக்கப்பட்ட கடப்பாட்டுக்‌ கூட்டாண்மைச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 672009) வகைமுறைகளின்கீழ்‌ அமைக்கப்பட்டு பதிவு பெற்ற "வரையறுக்கப்பட்ட கடப்பாட்டுக்‌ கூட்டாண்மை” ஒரு நிறுவகமாக கருதப்படுதல்‌ வேண்டும்‌. (i) "நீதிமன்றம்‌" என்பது மாவட்ட நீதிமன்றம்‌, உயர்ந்திமன்றம்‌ அல்லது உச்சநீதிமன்றம்‌ என்று பொருள்படும்‌. அத்தியாயம்‌ XVII முன்னதாகத்‌ தீர்மானித்தல்‌. 95. பொருள்‌ வரையறைகள்‌. இந்த அத்தியாயத்தில்‌, தறுவாயின்‌ தேவை வேறானாலன்றி- (அ) "முன்னதாக தீர்மானித்தல்‌" என்பது விண்ணப்பதாரரால்‌ மேற்கொள்ளப்பட்டிருக்கிற அல்லது மேற்கொள்ளக்‌ கருதப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை தொடர்பாக, 100௦-ஆம்‌ பிரிவின்‌ ()-ஆம்‌ உட்பிரிவில்‌ அல்லது 97-ஆம்‌ பிரிவின்‌ (2)-ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்ட பொருட்பாடுகளின்‌ பேரில்‌ அல்லது பிரச்சனைகளின்‌ பேரில்‌ ஒரு விண்ணப்பதாரருக்கு அதிகார அமைப்பால்‌ அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பால்‌ வகைசெய்யப்பட்ட முடிவு என்று பொருள்படும்‌; (ஆ) "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்பது 99-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அமைக்கப்பட்ட முன்னதாக தீர்மானிக்கும்‌ மேல்முறையீட்டு அதிகார அமைப்பு என்று பொருள்படும்‌; (8) "விண்ணப்பதாரர்‌" என்பது, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ பதிவு பெற்ற அல்லது பதிவினை பெற விரும்பும்‌ நபர்‌ எவரும்‌ என்று பொருள்படும்‌; () "விண்ணப்பம்‌" என்பது, 97-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அதிகார அமைப்பிற்கு செய்யப்பட்ட விண்ணப்பமொன்று என்று பொருள்படும்‌; (௨) "அதிகார அமைப்பு" என்பது 96-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அமைக்கப்பட்ட முன்னதாகத்‌ தீர்மானிக்கும்‌ அதிகார அமைப்பு என்று பொருள்படும்‌; 96. முன்னதாக தீர்மானிக்கும்‌ அதிகார அமைப்பினை அமைத்தல்‌. (1) அரசு, அறிவிக்கையினால்‌, தமிழ்நாடு மாநில முண்ணதாக தீர்மானிக்கும்‌ அதிகார அமைப்பு என கூறக்கூடிய அதிகார அமைப்பு ஒன்றினை அமைக்க வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, அரசு, மன்றத்தின்‌ பறிந்துரையின்‌ பேரில்‌, மற்றொரு மாநிலத்தில்‌ அமைந்துள்ள அதிகார அமைப்பு எதனையும்‌ இந்த மாநிலத்திற்கான அதிகார அமைப்பாக செயல்படுவதற்காக அறிவிப்பு செய்யலாம்‌. (2) அதிகார அமைப்பானது- 130 (i) மைய வரி அலுவலர்களிலிருந்து ஒரு உறுப்பினர்‌; மற்றும்‌ (ii) மாநில வரி அலுவலர்களிலிருந்து ஒரு உறுப்பினர்‌, என, முறையே, மைய அரசால்‌ மற்றும்‌ மாநில அரசால்‌ அமர்த்தப்படுபவரை கொண்டதாக இருக்கும்‌. (3) தகுதிகள்‌, உறுப்பினர்கள்‌ அமர்த்தப்படும்‌ முறை மற்றும்‌ அவர்களுடைய பணி வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகள்‌ வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌. 97. முன்னதாக தீர்மானிப்பதற்கான விண்ணப்பம்‌.- (1) இந்த அத்தியாயத்தின்கீழ்‌ முன்னதாக தீர்மானித்தலைப்‌ பெறுவதற்கு விரும்புகிற விண்ணப்பதாரர்‌ ஒருவர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்தில்‌ மற்றும்‌ முறையில்‌ மற்றும்‌ அத்தகைய கட்டணம்‌ ஒன்றை இணைத்து முன்னதாக தீர்மானிக்கும்‌ எதிர்‌ பிரச்சினை விவரித்து விண்ணப்பம்‌ ஒன்றினைச்‌ செய்யலாம்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ முண்னதாகத்‌ தீர்மானம்‌ கோருகிற பிரச்சினை கீழ்க்கண்டவற்றைப்‌ பொறுத்து இருத்தல்‌ வேண்டும்‌,- (அ) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வகைப்பாடுகள்‌; (ஆ) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையின்‌ பொருந்துகை; (இ) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது தண்டின்‌ வழங்குகைக்‌ காலம்‌ மற்றும்‌ மதிப்பைத்‌ தீர்மானித்தல்‌; (௬) செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்பட்டதாக கருதப்பட்ட வரியின்‌ உள்ளிட்டு வரி வரவினை அனுமதித்தல்‌; (௨) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ மீதான வரியை செலுத்துவதற்கான கடப்பாட்டினை தீர்மானித்தல்‌; (ஊ) விண்ணப்பதாரர்‌ பதிவு செய்யப்பெற வேண்டியவரா; (௭) அந்த சொல்லின்‌ பொருளின்படி சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினைப்‌ பொறுத்தமட்டில்‌ விண்ணப்பதாரரால்‌ செய்யப்பட்ட குறிப்பிட்ட செயல்‌ எதுவுமானது, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகையா அல்லது அதன்‌ விளைவா என்ற பிரச்சினை. 98. விண்ணப்பத்தைப்‌ பெற்றதன்‌ பேரில்‌ நடைமுறை.- (1) விண்ணப்பமொன்றிணை பெற்றதன்பேரில்‌, அதன்‌ நகல்‌ ஒன்று தொடர்புடைய அலுவலருக்கு அனுப்பப்படுமாறு அதிகார அமைப்பு செய்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌, தேவையெனில்‌, தொடர்புடைய பதிவுருக்களை அளிப்பதற்கு அவரை கோருதல்‌ வேண்டும்‌: 131 வரம்புரை: ஆனால்‌, நேர்வு எதிலும்‌ அதிகார அமைப்பினால்‌ பதிவுருக்கள்‌ எதுவும்‌ கோரப்பட்டுள்ளவிடத்து, அத்தகைய பதிவுருக்கள்‌ கூடிய விரைவில்‌ மேற்சொன்ன தொடர்புடைய அலுவலருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) அதிகார அமைப்பு, விண்ணப்பத்தை மற்றும்‌ கோரப்பட்ட பதிவுருக்களை ஆய்வு செய்த பின்பு மற்றும்‌ விண்ணப்பத்தாரரின்‌ அல்லது அவரால்‌ அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியின்‌ மற்றும்‌ தொடர்புடைய அலுவலரின்‌ அல்லது அவரால்‌ அதிகாரம்‌ அளிக்கப்பட்ட பிரதிநிதியின்‌ வாதத்தை கேட்டறிந்த பின்பு, ஆணையின்‌ மூலம்‌, விண்ணப்பத்தினை ஏற்கலாம்‌ அல்லது நிராகரிக்கலாம்‌: வரம்புரை: ஆனால்‌, அதிகார அமைப்பு, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளில்‌ எதனின்கீழ்‌ விண்ணப்பத்தாரரை பொறுத்தவரை ஏற்கெனவே நிலுவையிலுள்ள விண்ணப்பத்தில்‌ பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளவிடத்து அல்லது நடவடிக்கை எதனிலும்‌ முடிவு செய்யப்பட்டுள்ளவிடத்து, அந்த விண்ணப்பத்தை அனுமதித்தல்‌ ஆகாது: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, விண்ணப்பதாரருக்கு அவருடைய வாதத்தைக்‌ கேட்பதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலன்றி, இந்த உட்பிரிவின்கீழ்‌ விண்ணப்பம்‌ எதுவும்‌ நிராகரிக்கப்படுதலாகாது: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, விண்ணப்பம்‌ நிராகரிக்கப்பட்டிருக்கின்றவிடத்து, அவ்வாறு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள்‌ அந்த ஆணையில்‌ குறித்துரைக்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) (2-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ செய்யப்பட்ட ஒவ்வொரு ஆணையின்‌ நகல்‌, விண்ணப்பதாரருக்கு மற்றும்‌ தொடர்புடைய அலுவலருக்கு அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. (4) (2-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ விண்ணப்பம்‌ அனுமதிக்கப்பட்டிருக்கிறவிடத்து, அதிகார அமைப்பானது, விண்ணப்பதாரரால்‌ அதன்‌ முன்பு வைக்கப்படலாகும்‌ அல்லது அதிகார அமைப்பினால்‌ பெறப்பட்ட அத்தகைய கூடுதல்‌ பொருளை ஆய்வு செய்தபின்பு மற்றும்‌ விண்ணப்பத்தாரருக்கு அல்லது அவரால்‌ அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதிக்கு அதோடுகூட தொடர்புடைய அலுவலருக்கு அல்லது அவரால்‌ அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதிக்கு அவர்களுடைய வாதத்தினை கேட்பதற்கான வாய்ப்பொன்று வழங்கப்பட்ட பின்பு, விண்ணப்பத்தில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள பிரச்சினையின்‌ பேரில்‌ முன்‌ தீர்மானத்தை வழங்குதல்‌ வேண்டும்‌. (5) கேட்கப்பட்ட முன்‌ தீர்மானம்‌ பேறிலான பிரச்சினை எதன்பேரிலும்‌ அதிகார அமைப்பின்‌ உறுப்பினர்கள்‌ மாறுபடுகிறவிடத்து, அவர்கள்‌ எந்த கருத்தில்‌ அல்லது கருத்துக்களில்‌ மாறுபடுகிறார்கள்‌ என்பதை தெரிவித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய பிரச்சினையை கேட்பதற்காகவும்‌ முடிவு செய்வதற்காகவும்‌ மேல்முறையீட்டு அதிகார அமைப்புக்கு சுட்டியனுப்புதல்‌ வேண்டும்‌. 132 (6) அதிகார அமைப்பு, விண்ணப்பம்‌ பெறப்பட்ட தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள்‌ எழுத்து வடிவில்‌ அதனுடைய முன்‌ தீர்மானத்தை வழங்குதல்‌ வேண்டும்‌. (7) அதிகார அமைப்பினால்‌ வழங்கப்பட்ட முன்‌ தீர்மானத்தின்‌ நகல்‌ ஒன்று, உறுப்பினர்களால்‌ உரியவாறு கையொப்பமிடப்பட்டு மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ சான்றளிக்கப்பட்டு. அத்தகைய தீர்ப்புக்குப்‌ பின்பு விண்ணப்பதாரருக்கு, தொடர்புடைய அலுவலருக்கு மற்றும்‌ அதிகார வரம்பைக்‌ கொண்டுள்ள அலுவலருக்கு அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 99. முன்‌ தீர்மானத்திற்கான மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அமைக்கப்படுதல்‌.- அரசு, அறிவிக்கை வாயிலாக முன்‌ தீர்மானத்திற்கான அதிகார அமைப்பினால்‌ வழங்கப்பட்ட முன்‌ தீர்மானத்துக்கு எதிரான மேல்முறையீடுகளை கேட்பதற்கு சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி தொடர்பான தமிழ்நாடு முன்‌ தீர்மான மேல்முறையீட்டு அதிகார அமைப்பு என்று அழைக்கப்படும்‌, மற்றும்‌- (i) வாரியத்தினால்‌ பெயர்‌ குறிக்கப்பட்ட மைய வரி தலைமை ஆணையர்‌; மற்றும்‌ (ii) மாநில வரி ஆணையர்‌ ஆகியோரைக்‌ கொண்டதுமான அதிகார அமைப்பு ஒன்றை அமைத்தல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, அரசு, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, அந்த மாநிலத்திற்கான மேல்முறையீட்டு அதிகார அமைப்பாக செயல்படுத்துவதற்கு மற்றொரு மாநிலத்தில்‌ அல்லது யூனியன்‌ பிரதேசத்தில்‌ அமைந்துள்ள மேல்முறையீட்டு அதிகார அமைப்பு எதனையும்‌ அறிவிக்கை செய்யலாம்‌. 100. மேல்முறையீட்டு அதிகார அமைப்பிடம்‌ செய்யப்படும்‌ மேல்முறையீடு. (1) 98— ஆம்‌ பிரிவின்‌ (4)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வழங்கப்பட்ட முன்‌ தீர்மானம்‌ எதனாலும்‌ பாதிக்கப்பட்ட தொடர்புடைய அலுவலர்‌, அதிகார வரம்பு கொண்டுள்ள அலுவலர்‌ அல்லது விண்ணப்பதாரர்‌ மேல்முறையீட்டு அதிகார அமைப்பிடம்‌ மேல்முறையீடு செய்யலாம்‌. (2) இந்தப்‌ பிரிவின்கீழான மேல்முறையீடு ஒவ்வொன்றும்‌, தொடர்புடைய அலுவலருக்கு, அதிகார வரம்பு கொண்டுள்ள அலுவலருக்கு மற்றும்‌ விண்ணப்பதாரருக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படுவதற்கு நாடப்பட்ட தீர்மானம்‌ தெரிவிக்கப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்கள்‌ கால அளவிற்குள்‌ முன்‌ தீர்மானத்தை எதிர்த்து தாக்கல்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, கூறப்பட்ட முப்பது நாட்கள்‌ கால அளவிற்குள்‌ மேல்முறையீட்டினை செய்வதற்கு போதுமான காரணத்தினால்‌ தடுக்கப்பட்டிருந்தார்‌ என்று திருப்தியடைகிறவிடத்து, மேலுமான 133 முப்பது நாட்களுக்கு மேற்படாத கால அளவிற்குள்‌ மேல்முறையீடு செய்யப்படுவதற்கு அனுமதிக்கலாம்‌. (3) இந்தப்‌ பிரிவின்கீழான மேல்முறையீடு ஒவ்வொன்றும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ அத்தகைய கட்டணத்துடனும்‌ அத்தகைய முறையில்‌ சரிபார்க்கப்பட்டு இருத்தல்‌ வேண்டும்‌. 101. மேல்முறையீட்டு அதிகார அமைப்பின்‌ ஆணைகள்‌: (1) மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, மேல்முறையீடு அல்லது சுட்டுகைக்கு தொடர்புடைய தரப்பினர்களுக்கு அவர்களது வாதத்தை கேட்பதற்கு வாய்ப்பு ஒன்று வழங்கிய பின்பு, எதிராக அல்லது சுட்டியனுப்பப்பட்ட மேல்முறையீடு செய்யப்பட்ட தீர்மானத்தை உறுதி செய்யும்‌ அல்லது மாற்றியமைக்கும்‌ அது பொருத்தமெனக்‌ கருதும்‌ ஆணையினை பிறப்பிக்கலாம்‌. (2) (௫-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்ட ஆணை, 1௦00-ஆம்‌ பிரிவின்கீழ்‌ மேல்முறையீடு அல்லது 98-ஆம்‌ பிரிவின்‌ (5)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ சுட்டுகை ஒன்று தாக்கல்‌ செய்யப்பட்ட தேதியிலிருந்து தொண்ணூறு நாட்கள்‌ கால அளவிற்குள்‌ பிறப்பிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) மேல்முறையீட்டு அதிகார அமைப்பின்‌ உறுப்பினர்கள்‌ மேல்முறையீட்டில்‌ அல்லது சுட்டுகையில்‌ சுட்டப்பட்டுள்ள ஏதேனும்‌ கருத்தில்‌ அல்லது கருத்துகளில்‌ மாறுபடுகிறவிடத்து, மேல்முறையீடு அல்லது சுட்டுகையின்படியான பிரச்சினை பொறுத்து முன்‌ தீர்மானம்‌ எதுவும்‌ வழங்கப்படவில்லை என்று கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (4) மேல்முறையீட்டு அதிகார அமைப்பினால்‌ வழங்கப்பட்ட முன்‌ தீர்மானத்தின்‌ நகல்‌ ஒன்று உறுப்பினர்களால்‌ உரியவாறு கையொப்பமிடப்பட்டு மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ சான்றளிக்கப்பட்டு, விண்ணப்பதாரருக்கு, தொடர்புடைய அலுவலருக்கு, அதிகார வரம்பு கொண்டுள்ள அலுவலருக்கு மற்றும்‌ அந்த அதிகார அமைப்பிற்கு அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 102. முன்‌ தீர்மானத்தினை திருத்தி அமைத்தல்‌. அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, 98-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது 1௦01-ஆம்‌ பிரிவின்கழ்‌ ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத கால அளவிற்குள்‌, அத்தகைய பிழை, அதிகார அமைப்பினால்‌ அறியப்படுமானால்‌ அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பினால்‌ தானாகவே அறியப்படுமேயானால்‌ அல்லது தொடர்புடைய அலுவலரால்‌, அதிகார வரம்பு கொண்டுள்ள அலுவலரால்‌, அல்லது விண்ணப்பதாரரால்‌ அல்லது மேல்முறையீட்டாளரால்‌ அவர்களுடைய கவனத்திற்கு கொண்டுவரப்படுமேயானால்‌ அதைப்பார்த்த மாத்திரத்திலேயே தெளிவாக தெரிகின்ற பிழை எதனையும்‌ திருத்தம்‌ செய்வதற்கு அதனால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனையும்‌ திருத்தம்‌ செய்யலாம்‌: 134 வரம்புரை: ஆனால்‌, வரிக்‌ கடப்பாட்டினை அதிகரிக்கும்‌ அல்லது அனுமதிக்கப்பட்ட உள்ளீட்டு வரி வரவினை குறைக்கும்‌ விளைவு கொண்டிருக்கும்‌ திருத்தம்‌ எதுவும்‌, விண்ணப்பதாரர்‌ அல்லது மேல்முறையீட்டாளருக்கு அவர்களுடைய வாதத்தினை கேட்பதற்கான வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டிருந்தாலன்றி செய்யப்படலாகாது. 1403. முன்‌ தீர்மானத்தின்‌ பொருந்துகை.- (1) இந்த அத்தியாயத்திண்கீழ்‌ அதிகார அமைப்பால்‌ அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பால்‌ வழங்கப்பட்ட முன்‌: தீர்மானம்‌- (அ) 97-ஆம்‌ பிரிவின்‌ (2)-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்ட பொருட்பாடு எதனையும்‌ பொறுத்து முன்‌ தீர்மானத்திற்காக எதிர்பார்த்திருந்த விண்ணப்பதாரரை; (ஆ) விண்ணப்பதாரர்‌ பொறுத்து தொடர்புடைய அலுவலர்‌ அல்லது அதிகார வரம்பு கொண்டுள்ள அலுவலரை, மட்டுமே கட்டுப்படுத்துவதாக இருத்தல்‌ வேண்டும்‌. (2 ௫-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்ட முன்‌ தீர்மானம்‌, மூல முன்‌ தீர்மானம்‌ ஆதரவாகயிருக்கும்‌ சட்டம்‌, உண்மைகள்‌ அல்லது சூழ்நிலைகள்‌ மாறாமல்‌ இருந்தாலன்றி, மாற்றி கட்டுப்படுத்துவதாக இருத்தலாகாது. 104. குறித்த சில நேர்வுகளில்‌ முன்‌ தீர்மானம்‌ இல்லா நிலையதாகுதல்‌.- (1) 98-ஆம்‌ பிரிவின்‌ (4)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அல்லது 1401-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அவற்றால்‌ வழங்கப்பட்ட தீர்ப்பானது மோசடியினால்‌ அல்லது பொருண்மை குறித்த சில நேர்வுகளில்‌ முன்‌ உண்மையை மறைத்து அல்லது தவறாக விண்ணப்பதாரரால்‌ அல்லது மேல்முறையீட்டாளரால்‌ பெறப்பட்டிருக்கிறது என்று அதிகார அமைப்பினால்‌ அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பினால்‌ அறியப்படுகின்றவிடத்து, அது, ஆணையின்‌ மூலம்‌, அத்தகைய முன்தீர்மானம்‌ முதலிலிருந்தே இல்லா நிலையதாகும்‌ என்றும்‌ விளம்புகை செய்யலாம்‌ மற்றும்‌ அதன்‌ பின்பு இந்தச்‌ சட்டத்தின்‌ அனைத்து வகைமுறைகள்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகள்‌ அத்தகைய முன்தீர்மானம்‌ ஒருபோதும்‌ செய்யப்படவில்லை போன்று விண்ணப்பதாரருக்கு அல்லது மேல்முறையீட்டாளருக்கு பொருந்துவதாக இருக்க வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, விண்ணப்பதாரருக்கு அல்லது மேல்முறையீட்டாளருக்கு அவர்கள்‌ தரப்பு வாதத்தை கேட்கப்படுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலன்றி, இந்த உட்பிரிவின்கீழ்‌ ஆணை எதுவும்‌ பிறப்பித்தலாகாது. விளக்கம்‌.- 73-ஆம்‌ பிரிவின்‌ (2)-ஆம்‌ மற்றும்‌ (40)-ஆம்‌ உட்பிரிவுகளில்‌ அல்லது 74-ஆம்‌ பிரிவின்‌ (2)-ஆம்‌ மற்றும்‌ (109)-ஆம்‌ உட்பிரிவுகளில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள காலத்தைக்‌ கணக்கிடும்‌ போது, அத்தகைய முன்தீர்மானத்தின்‌ தேதியிலிருந்து தொடங்கி இந்த உட்பிரிவின்கீழான 135 ஆணையின்‌ தேதி வரையில்‌ முடிகிற காலத்தை கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளக்‌ கூடாது. (2) (0-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ செய்யப்பட்ட ஆணையின்‌ நகலொன்று விண்ணப்பதாரருக்கு, தொடர்புடைய அலுவலருக்கு மற்றும்‌ அதிகார வரம்பு கொண்டுள்ள அலுவலருக்கு அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 105. அதிகார அமைப்பின்‌ மற்றும்‌ மேல்முறையீட்டு அதிகார அமைப்பின்‌ அதிகாரங்கள்‌.- (1) அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பு- (அ) கண்டுபிடித்தல்‌ மற்றும்‌ ஆய்வு: (ஆ) நபர்‌ எவரையும்‌ வருகை தருமாறு கட்டாயப்படுத்துதல்‌ மற்றும்‌ ஆணை உறுதிமொழியின்‌ பேரில்‌ ஆய்வு செய்தல்‌; (இ) ஆணையங்களைப்‌ பிறப்பித்தல்‌ மற்றும்‌ கணக்கு புத்தகங்களை மற்றும்‌ பிற பதிவுருக்களை முன்னிலைப்படுத்துமாறு கட்டாயப்படுத்துதல்‌, தொடர்பாக அதனுடைய அதிகாரங்களைப்‌ பயன்படுத்தும்‌ நோக்கத்திற்காக, 1908— ஆம்‌ ஆண்டு உரிமையியல்‌ நெறிமுறை தொகுப்பு சட்டத்தின்கீழ்‌ (மையச்‌ சட்டம்‌ 51908) ஒரு உரிமையியல்‌ நீதிமன்றத்திற்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. (2) அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, 195-ஆம்‌ பிரிவின்‌ நோக்கத்திற்காக ஒரு உரிமையியல்‌ நீதிமன்றமாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌, ஆனால்‌ 1973-ஆம்‌ ஆண்டு குற்றவியல்‌ நெறிமுறைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 271974) XXV அத்தியாயத்தின்‌ நோக்கத்திற்காக இருக்கக்கூடாது மற்றும்‌ அதிகார அமைப்பின்‌ அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பின்‌ முன்பான ஒவ்வொரு நடவடிக்கையும்‌ 193 மற்றும்‌ 228 பிரிவுகளின்‌ பொருள்‌ வரையறைகளின்படி மற்றும்‌ இந்திய தண்டனைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 451860) 196-ஆம்‌ பிரிவின்‌ நோக்கத்திற்காக நீதிமன்ற நடவடிக்கைகளாகவே கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 106. அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பின்‌ நடைமுறை. அதிகார அமைப்பு மற்றும்‌ மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, இந்த அத்தியாயத்தின்‌. வகைமுறைகளுக்கு உட்பட்டு, அதனுடைய சொந்த நடைமுறையை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு அதிகாரம்‌ உடையதாகும்‌. அத்தியாயம்‌ XVl மேல்முறையீடுகள்‌ மற்றும்‌ சீராய்வு. 107. மேல்முறையீட்டு அதிகார அமைப்பிற்கு செய்யப்படும்‌ மேல்முறையீடுகள்‌.-- (1) இந்த சட்டத்தின்‌ அல்லது மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ 136 தீர்மானிக்கும்‌ அதிகார அமைப்பினால்‌ பிறப்பிக்கப்பட்ட முடிவு அல்லது ஆணை எதனாலும்‌ பாதிக்கப்பட்ட நபர்‌ எவரும்‌ அத்தகைய நபருக்கு மேற்சொன்ன முடிவு அல்லது ஆணை தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாத காலத்திற்குள்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய மேல்முறையீட்டு அதிகார அமைப்பிற்கு மேல்முறையீடு செய்யலாம்‌. (2) ஆணையர்‌, அவருடைய சொந்த நடவடிக்கையின்‌ பேரில்‌ அல்லது மைய வரி ஆணையரிடமிருந்து பெறப்பட்ட கோருதலின்‌ பேரில்‌, மேற்சொன்ன முடிவு அல்லது ஆணையின்‌ சட்டம்‌ முறைமை அல்லது தகைமை குறித்து அவர்‌ திருப்தியடையும்‌ நோக்கத்திற்காக, இந்தச்‌ சட்டம்‌ அல்லது மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ தீர்மானிக்கும்‌ அதிகார அமைப்பினால்‌ பிறப்பிக்கப்பட்ட முடிவு அல்லது ஆணையின்‌ நடவடிக்கை எதனின்‌ ஆவணத்தை கேட்டுப்‌ பெறலாம்‌ மற்றும்‌ ஆய்வு செய்யலாம்‌, மற்றும்‌ ஆணையரால்‌ அவருடைய ஆணையில்‌ குறித்துரைக்கப்பட்ட மேற்சொன்ன முடிவு அல்லது ஆணையின்‌ மூலமாக எழக்‌ கூடிய அத்தகைய குறிப்புகளை தீர்மானிப்பதற்காக மேற்சொன்ன முடிவு அல்லது ஆணை தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள்‌ அவருக்கு கீழேயுள்ள அலுவலர்‌ எவரையும்‌ மேல்முறையீட்டு அதிகார அமைப்பிற்கு விண்ணப்பம்‌ செய்யுமாறு ஆணை வாயிலாக, அறிவுறுத்தலாம்‌. (3 (2-ஆம்‌ உட்பிரிவின்கழான ஆணை ஒன்றினைத்‌ தொடர்ந்து, அதிகாரம்‌ அளிக்கப்பெற்ற அலுவலர்‌ மேல்முறையீட்டு அதிகார அமைப்பிற்கு விண்ணப்பம்‌ ஒன்றை செய்கின்றவிடத்து, தீர்மானிக்கும்‌ அதிகார அமைப்பின்‌ முடிவு அல்லது ஆணைக்கு எதிரான மேல்முறையீடாக அது இருந்து மற்றும்‌ அத்தகைய அதிகாரம்‌ அளிக்கப்பெற்ற அலுவலரே மேல்முறையீட்டாளராகும்போது அத்தகைய விண்ணப்பத்தை மேல்முறையீட்டு அதிகார அமைப்பு கையாள வேண்டும்‌, மற்றும்‌ மேல்முறையீடுகளுக்கு தொடர்புடைய இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ அத்தகைய விண்ணப்பத்திற்கு பொருந்துதல்‌ வேண்டும்‌. (4) மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, நேர்விற்கேற்ப, மேற்சொன்ன மூன்று மாதங்கள்‌ அல்லது ஆறு மாதங்கள்‌ கால அளவிற்குள்‌ மேல்முறையீடு செய்வதிலிருந்து போதுமான காரணத்தினால்‌ மேல்முறையீட்டாளர்‌ தடுக்கப்பட்டிருக்கிறார்‌ என்று அவர்‌ திருப்தியடைந்திருப்பாரானால்‌, மேலுமான ஒரு மாத கால அளவிற்குள்‌ அளிப்பதற்கு அனுமதிக்கலாம்‌. 5) இந்தப்‌ பிரிவின்கீழான மேல்முறையீடு ஒவ்வொன்றும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்தில்‌ இருக்க வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய முறையில்‌ சரிபார்க்கப்படுதல்‌ வேண்டும்‌. (6) மேல்முறையீட்டாளர்‌,- (அ) அவரால்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட்டிருக்கிறவாறான எதிர்ப்புக்குள்ளான ஆணையிலிருந்து எழும்‌ வரி, வட்டி, அபராதம்‌, கட்டணம்‌ மற்றும்‌ தண்டத்தொகையின்‌ அத்தகைய பகுதி முழுவதும்‌; மற்றும்‌ 137 (ஆ) தாக்கல்‌ செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு தொடர்புடைய மேற்சொன்ன ஆணையிலிருந்து எழும்‌ பூசலில்‌ உள்ள எஞ்சியிருக்கும்‌ வரித்‌ தொகையின்‌ பத்து விழுக்காட்டிற்கு சமமான தொகை ஒன்றை, செலுத்தியிருந்தாலன்றி, (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ மேல்முறையீடு எதுவும்‌ தாக்கல்‌ செய்யப்படுதல்‌ ஆகாது. @) ()-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ மேல்முறையீட்டாளர்‌ தொகையை செலுத்தியுள்ளவிடத்து, மீதித்தொகையை திரும்பப்‌ பெறுவதற்கான நடவடிக்கைகள்‌ நிறுத்தப்படுவதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (8) மேல்முறையீட்டு அதிகார அமைப்பு மேல்முறையீட்டாளருக்கு அவருடைய தரப்பு வாதத்தைக்‌ கேட்பதற்கான வாய்ப்பொன்றினை அளித்தல்‌ வேண்டும்‌. (9) மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, மேல்முறையிடொன்றினை விசாரிக்கையில்‌ எந்த நிலையிலும்‌ போதுமான காரணத்தை காட்டியிருக்குமானால்‌, தரப்பினர்களுக்கு அல்லது அவர்களுள்‌ எவருக்கும்‌ கால அவகாசம்‌ வழங்கலாம்‌ மற்றும்‌ எழுத்து வடிவில்‌ பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக மேல்முறையீட்டின்‌ விசாரணையை ஒத்திவைக்கலாம்‌: வரம்புரை: ஆனால்‌, அத்தகைய ஒத்திவைப்பு எதுவும்‌, மேல்முறையீட்டினை விசாரிக்கும்‌ போது தரப்பினர்‌ ஒருவருக்கு மூன்று முறைக்கு மேல்‌ வழங்கப்படுதலாகாது. (1௦) மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, மேல்முறையீடு கேட்கப்படும்‌ சமயத்தில்‌, மேல்முறையீட்டின்‌ காரணங்களில்‌ குறித்துரைக்கப்படாத மேல்முறையீட்டின்‌ காரணம்‌ எதனையும்‌ சேர்த்திட மேல்முறையீட்டின்‌ காரணங்களிலிருந்து அந்தக்‌ காரணமானது வேண்டுமென்றே அல்லது காரணம்‌ இல்லாமல்‌ விட்டுவிடப்படவில்லை என்று திருப்தியடைகிறவிடத்து, மேல்முறையீட்டாளருக்கு அனுமதியளிக்கலாம்‌. (14) மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, அவசியமானதாகும்‌ அத்தகைய மேலுமான விசாரணையைச்‌ செய்த பின்பு, எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட முடிவு அல்லது ஆணையை உறுதி செய்ய, மாற்றமைவு செய்ய அல்லது அழித்தரவு செய்ய நியாயமானதாகவும்‌ மற்றும்‌ தகுதியுடையதாகவும்‌ அது நினைக்கும்‌ அத்தகைய ஆணையினை வெளியிடலாம்‌, ஆனால்‌, மேற்சொன்ன முடிவு அல்லது ஆணையினை வழங்கிய தீர்மானிக்கும்‌ அதிகார அமைப்பிற்கு வழக்கினை திரும்ப சுட்டியனுப்பலாகாது: வரம்புரை: ஆனால்‌, அதிக மதிப்பிலான சரக்குகள்‌ பறிமுதல்‌ அல்லது பறிமுதல்‌ செய்வதற்குப்‌ பதிலாக கட்டணம்‌ அல்லது தண்டத்தொகை அல்லது அபராதம்‌ எதனையும்‌ அதிகரித்து அல்லது திருப்பித்‌ தரப்படும்‌ தொகையை அல்லது உள்ளீட்டு 138 வரிவரவினை குறைத்து ஆணையொன்று, வழங்கப்படவுள்ள ஆணைக்கு எதிராக காரணம்‌ காட்டுவதற்காக நியாயமான வாய்ப்பு ஒன்று மேல்முறையீட்டாளருக்கு அளிக்கப்பட்டிருந்தாலன்றி, வழங்கப்படுதல்‌ ஆகாது: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, வரி எதுவும்‌ செலுத்தப்படவில்லை அல்லது குறைவாக செலுத்தப்பட்டுள்ளது அல்லது தவறாக திருப்பிச்‌ செலுத்தப்பட்டிருக்கிறது என்று மேல்முறையீட்டு அதிகார அமைப்பு கருத்தில்‌ கொண்டிருக்கின்றவிடத்து, அல்லது உள்ளீட்டு வரிவரவு தவறாக துய்க்கப்பட்டிருக்கிறவிடத்து, அல்லது பயன்படுத்தப்பட்டிருக்கின்றவிடத்து, வழங்கப்படவுள்ள உத்தேசிக்கப்பட்ட ஆணைக்கு எதிராக காரணம்‌ காட்டுவதற்கான அறிவிப்பு மேல்முறையீட்டாளருக்கு அளிக்கப்பட்டிருந்தாலன்றி, மற்றும்‌ 73 அல்லது 74-ஆம்‌ பிரிவுகளின்கீழ்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள காலவரையறைக்குள்‌ ஆணை வழங்கப்பட்டிருந்தாலன்றி அத்தகைய வரி அல்லது உள்ளீட்டு வரி வரவை செலுத்துவதற்கு மேல்முறையீட்டாளரை வேண்டுறுத்தும்‌ ஆணை வழங்கப்படுதலாகாது. (12) மேல்முறையீட்டினை தீர்த்து வைக்கும்‌ மேல்முறையீட்டு அதிகார அமைப்பின்‌ ஆணை எழுத்து வடிவிலானதாக இருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ தீர்மானித்ததற்கான குறிப்புகளை, அதன்‌ பேரிலான முடிவை மற்றும்‌ அத்தகைய முடிவிற்கான காரணங்களை உரைத்தல்‌ வேண்டும்‌. (13) மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, அது அவ்வாறு செய்வதற்கு முடியும்‌ என்கின்றவிடத்து, மேல்முறையீடு தாக்கல்‌ செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருட காலம்‌ ஒன்றிற்குள்‌ மேல்முறையீடு ஒவ்வொன்றும்‌ கேட்கப்படவேண்டும்‌ மற்றும்‌ முடித்து வைக்கப்படவேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, நீதிமன்றம்‌ அல்லது தீர்ப்பாயம்‌ ஒன்றின்‌ ஆணையொன்றினால்‌ பிறப்பிக்கப்படும்‌ ஆணை நிறுத்தி வைக்கப்படுகிறவிடத்து, அத்தகைய நிறுத்திவைப்பு கால அளவானது ஒரு வருட கால அளவைக்‌ கணக்கிடுகையில்‌ நீக்கப்படுதல்‌ வேண்டும்‌. (14) மேல்முறையீட்டினை தீர்த்து வைப்பதன்‌ பேரில்‌, மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, மேல்முறையீட்டாளர்‌, எதிராளி மற்றும்‌ தீர்மானிக்கும்‌ அதிகார அமைப்பிற்கு அதனால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணையைத்‌ தெரிவித்தல்‌ வேண்டும்‌. (15) மேல்முறையீட்டு அதிகார அமைப்பினால்‌ வழங்கப்பட்ட ஆணையின்‌ நகலொன்று ஆணையருக்கு அல்லது இதன்பொருட்டு அவரால்‌ சுட்டியமர்த்தப்பட்ட அதிகார அமைப்பிற்கு அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ மைய வரி அதிகார வரம்புக்‌ கொண்டுள்ள ஆணையர்‌ அல்லது இதன்பொருட்டு அவரால்‌ சுட்டியமர்த்தப்பட்ட அதிகார அமைப்பொன்றுக்கும்‌ அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. (16) இந்தப்‌ பிரிவின்கீழ்‌ வழங்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றும்‌, 10௦8-ஆம்‌ பிரிவின்‌ அல்லது 1413-ஆம்‌ பிரிவின்‌ அல்லது 1177-ஆம்‌ பிரிவின்‌ அல்லது 1418-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு அது இறுதியானதாகவும்‌ மற்றும்‌ தரப்பினர்களைக்‌ கட்டுப்படுத்துவதாகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. 139 108. சீராய்வு அதிகார அமைப்பின்‌ அதிகாரங்கள்‌.-- (1) 121-ஆம்‌ பிரிவின்‌: வகைமுறைகளுக்கு மற்றும்‌ அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகள்‌ எதற்கும்‌ உட்பட்டு, சீராய்வு அதிகார அமைப்பு, தானாக முற்பட்டு, அல்லது அவரால்‌ பெறப்பட்ட தகவலின்‌ பேரில்‌ அல்லது மைய வறி ஆணையரிடமிருந்து வந்துள்ள கோரிக்கையின்‌ பேரில்‌, நடவடிக்கைகள்‌ எதனின்‌ பதிவுருவை கோரலாம்‌ மற்றும்‌ ஆய்வு செய்யலாம்‌, மற்றும்‌ அவருக்குக்‌ கழே உள்ள அலுவலர்‌ எவராலும்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ வழங்கப்பட்ட முடிவு அல்லது ஆணை எதுவும்‌, வருவாயின்‌ நலனுக்குக்‌ குந்தகமானதாக இருக்கும்‌ அளவுக்கு தவறானது என்றும்‌ மற்றும்‌ சட்ட விரோதமானது என்றும்‌ அல்லது முறையானதாக இல்லை என்றும்‌ அல்லது குறித்த சில முக்கியமான பொருண்மை, மேற்சொன்ன ஆணையை வழங்கும்‌ நேரத்தில்‌ கிடைக்கக்கூடியதாகவோ அல்லது இல்லாமலோ அல்லது இந்திய கணக்காய்வர்‌ மற்றும்‌ தலைமைத்‌ தணிக்கையரால்‌ கவனிக்கப்படுவதன்‌ பேரிலோ, கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளப்பட்டிருக்கவில்லை என்று கருதுகிறாரென்றால்‌, அவர்‌, தேவையெனில்‌, அவருக்குப்‌ பொருத்தமாகத்‌ தோன்றலாகியவாறான அத்தகைய காலத்திற்கு அத்தகைய முடிவின்‌ அல்லது ஆணையின்‌ செயல்பாட்டினை நிறுத்தலாம்‌ மற்றும்‌ தொடர்புடைய நபருக்கு அவருடைய தரப்பு வாதத்தைக்‌ கேட்பதற்கான வாய்ப்பொன்றினை அளித்த பிறகு மற்றும்‌ தேவைப்படுகின்றவாறான அத்தகைய மேலுமான விசாரணையை செய்த பிறகு, மேற்சொன்ன முடிவு அல்லது ஆணையை அதிகரித்தல்‌ அல்லது மாற்றமைவு செய்தல்‌ அல்லது அழித்தரவு செய்தல்‌ உள்ளடங்கலாக நியாயமானதாகவும்‌ மற்றும்‌ தகுதியுடையதாகவும்‌ அவர்‌ நினைக்கிறவாறு அத்தகைய ஆணையை வழங்கலாம்‌. (2) ௫-ஆம்‌ உட்பிரிவின்கழான அதிகாரம்‌ எதனையும்‌ கீழ்கண்டவற்றை பொறுத்து சீராய்வு அதிகார அமைப்பானது செலுத்துதல்‌ கூடாது- (அ) 1407-ஆம்‌ பிரிவு அல்லது 112-ஆம்‌ பிரிவு அல்லது 1417-ஆம்‌ பிரிவு அல்லது 1418-ஆம்‌ பிரிவின்‌. கீழான மேல்முறையீடொன்றிற்கு ஆணை உட்பட்டிருக்குமேயானால்‌; அல்லது (ஆ) 10௦7-ஆம்‌ பிரிவின்‌ (2)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள கால அளவு முடிந்திருக்காவிட்டால்‌ அல்லது சீராய்வுக்காக உள்ள ஆணை அல்லது முடிவு வழங்கப்பட்டதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல்‌ முடிந்திருந்தால்‌; அல்லது (இ) ஆணையானது ஏற்கனவே இந்தப்‌ பிரிவின்கீழ்‌ தொடக்க நிலையிலேயே சீராய்வுக்காக எடுக்கப்பட்டிருக்குமானால்‌; அல்லது ) (௩-ஆம்‌ உட்பிரிவின்கழான அதிகாரங்களைச்‌ செலுத்தி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்குமானால்‌: வரம்புரை: ஆனால்‌, (2)-ஆம்‌ உட்பிரிவின்‌ (அ)-கூறில்‌ சுட்டப்பட்ட மேல்முறையீடொன்றில்‌ எழுப்பப்பட்டிருக்காத மற்றும்‌ முடிவு செய்யப்பட்டிருக்காத 140 குறிப்பு எதன்‌ பேரிலும்‌, அத்தகைய மேல்முறையீட்டில்‌ ஆணை வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டு கால அளவு முடிவடைவதற்கு முன்பு, அல்லது அந்த உட்பிரிவின்‌ (ஆ)-கூறில்‌ சுட்டப்பட்ட மூன்று ஆண்டு கால அளவு முடிவடைவதற்கு முன்பு, இதில்‌ எது பிந்தையதோ, அதற்குள்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கழ்‌ ஆணையொன்றினை சீராய்வு அதிகார அமைப்பு வழங்கலாம்‌. (3) ()-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ சீராய்வில்‌ வழங்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றும்‌, 1143-ஆம்‌ பிரிவின்‌ அல்லது 1417-ஆம்‌ பிரிவின்‌ அல்லது 118-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு அதுவே இறுதியானதாகும்‌ மற்றும்‌ தரப்பினர்களைக்‌ கட்டுப்படுத்தும்‌. (4) மேற்சொன்ன முடிவு அல்லது ஆணையானது, மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌ அல்லது உயர்ந்திமன்றத்தால்‌ சில பிற நடவடிக்கைகளில்‌ அதனுடைய முடிவு வழங்கப்பட்டிருக்கும்‌ பிரச்சினையொன்றினை தொடர்புற்றிருக்குமானால்‌ மற்றும்‌ மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌ மற்றும்‌ உயர்ந்திமன்றத்தின்‌ அத்தகைய முடிவிற்கு எதிராக உயர்ந்திமன்றத்திலோ அல்லது உச்சந்திமன்றத்திலோ மேல்முறையீடு ஒன்று நிலுவையில்‌ இருக்கையில்‌, இந்தப்‌ பிரிவின்கீழ்‌ அறிவிப்பு வழங்குவதன்‌ வாயிலாக தொடங்கப்பட்டுள்ள சீராய்விற்கான நடவடிக்கைகளாக இருக்கின்றவிடத்து, (2)-ஆம்‌ உட்பிரிவின்‌ (ஆ)-கூறில்‌ சுட்டப்பட்டுள்ள கால வரையறையை கணக்கிடுகையில்‌, மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தின்‌ முடிவின்‌ தேதி மற்றும்‌ உயர்நீதிமன்றத்தின்‌ முடிவின்‌ தேதிக்கிடையேயான அல்லது உயர்ந்திமன்றத்தின்‌ முடிவின்‌ தேதி மற்றும்‌ உச்சந்திமன்றத்தின்‌ முடிவின்‌ தேதிக்கு இடையேயான கால அளவு சேர்க்கப்படுதலாகாது. (5 (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ ஆணைடுயான்று வழங்கப்பட்டிருக்கின்றவிடத்து நீதிமன்றத்தின்‌ அல்லது மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தின்‌ ஆணையினால்‌ நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறவிடத்து, அத்தகையவாறு நிறுத்தப்பட்ட கால அளவு (2)-ஆம்‌ உட்பிரிவின்‌ (ஆ)-கூறில்‌ சுட்டப்பட்ட காலவரையறையை கணக்கிடுகையில்‌ சேர்க்கப்படுதலாகாது. (6) இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக;- டு பதிவுரு" என்பது சீராய்வு அதிகார அமைப்பினால்‌ ஆய்வு செய்யப்படும்‌ சமயத்தில்‌ கிடைக்கக்கூடிய இந்தச்‌ சட்டத்தின்கழான நடவடிக்கைகள்‌ எவை தொடர்பான அனைத்து பதிவுருக்களையும்‌ உள்ளடக்கும்‌; (i) "முடிவு என்பது சீராய்வு அதிகார அமைப்பைவிட குறைந்த படிநிலையிலுள்ள அலுவலர்‌ எவராலும்‌ வழங்கப்பட்ட தகவலை உள்ளடக்கும்‌. 109. மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌ மற்றும்‌ அதன்‌ நீதியர்‌ ஆயங்கள்‌.- (1) இந்த அத்தியாயத்தின்‌ வகைமுறை-களுக்குட்பட்டு, மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ அமைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி தீர்ப்பாயம்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ மேல்முறையீட்டு அதிகார அமைப்பால்‌ அல்லது சீராய்வு 141 அதிகார அமைப்பால்‌ வழங்கப்பட்ட ஆணைகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்கான மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயமாக இருத்தல்‌ வேண்டும்‌. (2) மாநிலத்தில்‌ அமைந்துள்ள மாநில நீதியர்‌ ஆயம்‌ மற்றும்‌ வட்டார நீதியர்‌ ஆயங்களின்‌ அமைப்பு மற்றும்‌ அதிகார வரம்பு, மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்‌ 10௦9-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகள்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளுக்கிணங்க இருத்தல்‌ வேண்டும்‌. 110. மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தின்‌ தலைவர்‌ மற்றும்‌ உறுப்பினர்கள்‌, அவர்களுடைய தகுதி, அமர்த்துகை, பணி வரைக்கட்டுகள்‌, முதலியன.- மாநில நீதியர்‌ ஆயத்தின்‌ மற்றும்‌ வட்டார நீதியர்‌ ஆயங்களின்‌ தலைவர்‌ மற்றும்‌ உறுப்பினர்களின்‌ தகுதிகள்‌, அமர்த்துகை, ஊதியம்‌ மற்றும்‌ படிகள்‌, பதவிக்‌ காலம்‌, பதவி விலகல்‌ மற்றும்‌ நீக்குதல்‌ ஆகியவை மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்‌ 1409-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கிணங்க இருத்தல்‌ வேண்டும்‌. 114. மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தின்‌ முன்புள்ள நடைமுறை.- (1) மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌, தன்‌ முன்புள்ள நடவடிக்கைகள்‌ எவற்றையும்‌ அல்லது தன்‌ முன்புள்ள மேல்முறையீட்டை தீர்வு செய்கையில்‌, 1908-ஆம்‌ ஆண்டு உரிமையியல்‌ நடைமுறைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 571908) விதிக்கப்பட்டுள்ள நடைமுறையினால்‌ கட்டுப்படுத்தப்படுதல்‌ ஆகாது. ஆனால்‌, இயற்கை நீதியின்‌ கோட்பாடுகளின்படி வழி நடத்தப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ பிற வகைமுறைகளுக்கு உட்பட்டு, மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌ தன்னுடைய சொந்த நடைமுறையை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு அதிகாரம்‌ உடையது ஆகும்‌. (2) மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ தன்னுடைய அலுவற்பணிகளை ஆற்றும்‌ நோக்கங்களுக்காக, பின்வரும்‌ பொருட்பாடுகள்‌ பொறுத்து உரிமையியல்‌ வழக்கை விசாரணை செய்கையில்‌, 1908-ஆம்‌ ஆண்டு உரிமையியல்‌ நெறிமுறைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்கீழ்‌ (மையச்‌ சட்டம்‌ 577908) உரிமையியல்‌ நீதிமன்றத்திடம்‌ அளிக்கப்பெற்றிருக்கும்‌ அதே அதிகாரங்களை கொண்டது ஆகும்‌, அதாவது:- (அ) நபர்‌ எவரினையும்‌ அழைத்தல்‌ மற்றும்‌ வருகையினை கட்டாயப்படுத்துதல்‌ மற்றும்‌ ஆணை உறுதிமொழியின்‌ பேரில்‌ ஆய்வு செய்தல்‌; (ஆ) ஆவணங்களை கண்டறியுமாறும்‌ மற்றும்‌ முன்னிலைப்படுத்துமாறும்‌ வேண்டுறுத்தல்‌; (௫) பிரமாணப்‌ பத்திரங்களின்‌ பேரில்‌ சான்றினைப்‌ பெறுதல்‌; (FF) 1872-ஆம்‌ ஆண்டு இந்திய சான்றுச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 11872) 123 மற்றும்‌ 124-ஆம்‌ பிரிவுகளின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, பொதுப்‌ பதிவுரு 142 அல்லது ஆவணம்‌ அல்லது அத்தகைய பதிவுரு அல்லது ஆவணத்தின்‌ நகலினை எந்தவொரு அலுவலகத்திலிருந்து கோருதல்‌; (உ) சாட்சிளை அல்லது ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக ஆணையங்களை பிறப்பித்தல்‌; (ஊ) தவறுகைக்கான பிரதிநிதித்துவந்தை அல்லது எதிர்தரப்பினர்‌ இல்லாமலேயே முடிவு செய்தலை தள்ளுபடி செய்தல்‌; (௭) தவறுகைக்காக பிரதிநிதித்துவத்தை தள்ளுபடி செய்த ஆணை எதனையும்‌ அல்லது எதிர்‌ தரப்பினர்‌ இல்லாமலேயே வழங்கப்பட்ட ஆணை எதனையும்‌ அதனால்‌ நீக்கம்‌ செய்தல்‌; மற்றும்‌ (ஏ) வகுத்துரைக்கப்படலாகும்‌ பிற பொருட்பாடு எதுவும்‌. (3) மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணை எதுவும்‌ நீதிமன்றத்தில்‌ நடப்பிலிருக்கும்‌ உரிமை வழக்கு ஒன்றில்‌ நீதிமன்றத்தினரால்‌ தீர்ப்பாணை வழங்கப்பட்டிருப்பது போன்ற அதே முறையில்‌ அதனால்‌ நிறைவேற்றப்படலாம்‌, மற்றும்‌ மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌ அதனுடைய ஆணையினை செயல்படுத்திட, (அ) நிறுமம்‌ ஒன்றிற்கு எதிராக ஆணை ஒன்றைப்‌ பொறுத்தவரையில்‌, நிறுமத்தின்‌ பதிவுபெற்ற அலுவலகம்‌ அமைந்துள்ள இடம்‌; அல்லது (ஆ) பிற நபர்‌ எவருக்கும்‌ எதிரான ஆணை ஒன்றைப்‌ பொறுத்தவரையில்‌, தொடர்புடைய நபர்‌ தன்னிச்சையாக குடியிருந்து வருகிற அல்லது வணிகம்‌ செய்து வருகிற அல்லது லாபத்திற்காக வேலை செய்கிற, இடத்தில்‌ அதிகார வரம்பினை கொண்டுள்ள நீதிமன்றத்திற்கு அனுப்புதல்‌ சட்டப்படியானதாக இருக்கும்‌. (4) மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்‌ முன்புள்ள நடவடிக்கைகள்‌ அனைத்தும்‌, இந்தியத்‌ தண்டனைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 45/1860) 193 மற்றும்‌ 228-ஆம்‌ பிரிவுகளின்‌ பொருளின்படி மற்றும்‌ 1496-ஆம்‌ பிரிவின்‌: நோக்கங்களுக்காக நீதிமுறை நடவடிக்கைகளாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌, 1973-ஆம்‌ ஆண்டு குற்றவியல்‌ நடைமுறைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 271974) 195-ஆம்‌ பிரிவின்‌ மற்றும்‌ XXVI- ஆம்‌ அத்தியாயத்தின்‌ நோக்கங்களுக்காக உரிமையியல்‌ நீதிமன்றமாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 112. மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தில்‌ மேல்முறையீடு செய்தல்‌.- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி சட்டத்தின்‌ 1௦07-ஆம்‌ பிரிவின்‌ அல்லது 10௦8-ஆம்‌ பிரிவின்கீழ்‌ தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ஆணையினால்‌ பாதிக்கப்பட்ட நபர்‌ எவரும்‌, மேல்முறையீடு தாக்கல்‌ செய்யும்‌ நபருக்கு மேல்முறையீடு செய்ய கருதப்பட்டுள்ள ஆணை அனுப்பப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்‌ அத்தகைய ஆணைக்கு எதிராக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம்‌ மேல்முறையீடு செய்யலாம்‌. 143 (2) மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌, தன்னுடைய உளத்தேர்வின்படி, அத்தகைய ஆணையில்‌ தீர்மானிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட வரி அல்லது உள்ளீட்டு வரிவரவு அல்லது சம்பந்தப்பட்ட வரி அல்லது உள்ளீட்டு வரிவரவில்‌ உள்ள வித்தியாசம்‌ அல்லது அபராதம்‌, கட்டணம்‌ அல்லது தண்டத்தொகையானது ஐம்பதாயிரம்‌ ரூபாய்க்கு மேற்படாதிருக்கையில்‌ அத்தகைய மேல்முறையீடு எதனையும்‌ ஏற்பதற்கு மறுக்கலாம்‌. (3) ஆணையர்‌, தாமே முற்பட்டு அல்லது மைய வறி ஆணையரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின்பேரில்‌, மேற்சொன்ன ஆணையின்‌ சட்ட முறைமை அல்லது தகைமை குறித்து தாம்‌ திருப்தியடையும்‌ நோக்கத்திற்காக, இந்தச்‌ சட்டத்தின்கழான அல்லது மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கழான மேல்முறையீட்டு அதிகார அமைப்பால்‌ அல்லது சீராய்வு அதிகார அமைப்பினால்‌ வழங்கப்பட்ட ஆணை எதனின்‌ பதிவுருவை கேட்கலாம்‌ மற்றும்‌ ஆய்வு செய்யலாம்‌, மற்றும்‌ அவருக்கு குறைந்த படிநிலையில்‌ உள்ள அலுவலர்‌ எவரையும்‌ மேற்சொன்ன ஆணை வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதத்திற்குள்‌, மேற்சொன்ன ஆணையிலிருந்து எழும்‌ பிரச்சினைகளை தீர்மானிப்பதற்கு ஆணையர்‌ அவருடைய ஆணையில்‌ குறிப்பிட்ட மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்திற்கு விண்ணப்பிக்கும்படி ஆணை வாயிலாக, பணிக்கலாம்‌. (4) (3-ஆம்‌ உட்பிரிவின்கழான ஆணை ஒன்றைத்‌ தொடர்ந்து அதிகாரம்‌ அளிக்கப்பெற்ற அலுவலர்‌ மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்திற்கு விண்ணப்பம்‌ செய்கிறவிடத்து, 10௦8-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கழான அல்லது 10௦7-ஆம்‌ பிரிவின்‌ (11)-ஆம்‌ உட்பிரிவின்கழான ஆணைக்கு எதிரான ஒரு மேல்முறையீடு போன்று மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தால்‌ அத்தகைய விண்ணப்பமானது கையாளப்படவேண்டும்‌ மற்றும்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட மேல்முறையீடுகள்‌ தொடர்பாக அவை பொருந்துவது போல இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ அத்தகைய விண்ணப்பத்திற்கும்‌ பொருந்தும்‌. (5) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை பெற்றதன்பேரில்‌, எந்தத்‌ தரப்பினருக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதோ அந்தத்‌ தரப்பினர்‌, அத்தகைய ஆணை அல்லது அதன்‌ பகுதி எதற்கும்‌ எதிராக மேல்முறையீடு செய்யாதிருக்கிறார்‌ என்ற போதிலும்‌, அறிவிப்பு பெறப்பட்ட நாற்பத்தைந்து நாட்களுக்குள்‌, மேல்முறையீடு செய்யப்பட்ட ஆணையின்‌ பகுதி எதற்கும்‌ எதிராக, வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ சரிபார்க்கப்பட்ட, குறுக்கு விசாரணைகளின்‌. விவரக்குறிப்பு ஒன்றினை, (1-ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள காலத்திற்குள்‌ செய்யப்படும்‌ மேல்முறையீடு போன்று, தாக்கல்‌ செய்யலாம்‌. (6) மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌, (4)-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்ட கால அளவு முடிவடைந்த பின்பு மூன்று மாத காலத்திற்குள்‌ மேல்முறையீடு ஒன்றை அனுமதிக்கலாம்‌, அல்லது அது அந்தக்‌ கால அளவிற்குள்‌ வழங்கிட முடியாமல்‌ போனதற்கு போதுமான காரணம்‌ இருந்துள்ளது என்று அது திருப்தியடையுமானால்‌, 144 (5-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்ட கால அளவு முடிவடைந்த பின்பு நாற்பத்தைந்து நாட்களுக்குள்‌ குறுக்கு விசாரணைகளின்‌ விவரக்குறிப்பு ஒன்றினை தாக்கல்‌ செய்வதை அனுமதிக்கலாம்‌. (7) மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு செய்யப்பட்ட மேல்முறையீடானது வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்தில்‌ அத்தகைய முறையில்‌ சரிபார்க்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய கட்டணத்துடன்‌ இணை சேர்த்தல்‌ வேண்டும்‌. (8) மேல்முறையீட்டாளர்‌ பின்வருவனவற்றை செலுத்தியிருந்தாலன்றி, (1)- ஆம்‌ உட்பிரிவின்கழ்‌ மேல்முறையீடு எதுவும்‌ தாக்கல்‌ செய்யப்படுதல்‌ ஆகாது- (அ) அவரால்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட்டிருக்கிறவாறான எதிர்ப்புக்குள்ளான ஆணையிலிருந்து எழும்‌ வரி, வட்டி, அபராதம்‌, கட்டணம்‌ மற்றும்‌ தண்டத்தொகையின்‌ அத்தகைய பகுதி முழுவதும்‌; மற்றும்‌ (ஆ) மேல்முறையீடு தாக்கல்‌ செய்யப்பட்டது தொடர்பான மேற்சொன்ன ஆணையிலிருந்து எழும்‌, 1௦07-ஆம்‌ பிரிவின்‌ (6)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ செலுத்தப்பட்ட தொகைக்குக்‌ கூடுதலாக, பூசலிலுள்ள எஞ்சியிருக்கும்‌ வரித்தொகையின்‌ இருபது விழுக்காட்டிற்குச்‌ சமமான தொகை ஒன்றை. (9) மேல்முறையீட்டாளர்‌ (8)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ தொகை செலுத்தியுள்ளவிடத்து, மீதித்‌ தொகையை திரும்பப்‌ பெறுவதற்கான வசூல்‌ நடவடிக்கைகள்‌, மேல்முறையீடு முடிவு செய்யப்படும்‌ வரை தடை செய்யப்பட்டதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. (10) (அ) பிழையை திருத்தியமைப்பதற்கான அல்லது பிற நோக்கம்‌ எதற்காகவுமான மேல்முறையீடு ஒன்றும்‌; அல்லது (ஆ) மேல்முறையீடு அல்லது விண்ணப்பத்தை மீட்பதற்காக, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்‌ முன்பு செய்யப்பட்ட விண்ணப்பம்‌ ஒவ்வொன்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய கட்டணங்களுடன்‌ இணை சேர்த்தல்‌ வேண்டும்‌. 113. மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தின்‌ ஆணைகள்‌.- (1) மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌, மேல்முறையீட்டுத்‌ தரப்பினர்களுக்கு கேட்கப்படுவதற்கான வாய்ப்பு ஒன்றை வழங்கிய பின்பு, எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட முடிவு அல்லது ஆணையை உறுதி செய்யும்‌, மாற்றியமைக்கும்‌ அல்லது அழித்தரவு செய்யும்‌, அது தக்கதெனக்‌ கருதும்‌, அத்தகைய ஆணைகளைப்‌ பிறப்பிக்கலாம்‌ அல்லது, அவசியமானால்‌, கூடுதல்‌ சான்றினை எடுத்த பின்பு, புதிய நீதிமுறை தீர்மானிப்பு அல்லது முடிவிற்காக, அது தக்கதென நினைக்கலாகும்‌ அத்தகைய உத்தரவுகளுடன்‌, மேல்முறையீட்டு அதிகார அமைப்பிற்கு அல்லது சீராய்வு அதிகார அமைப்பிற்கு அல்லது மூல நீதிமுறையில்‌ தீர்மானிக்கும்‌ அதிகார அமைப்பிற்கு அந்த வழக்கை திரும்பவும்‌ சுட்டியனுப்பலாம்‌. 145 (2) மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌, போதிய காரணம்‌ காட்டப்படுமானால்‌, மேல்முறையீட்டின்‌ விசாரணையின்‌ எந்தக்‌ கட்டத்திலும்‌, தரப்பினர்களுக்கு அல்லது அவர்களில்‌ எவருக்கும்‌ கால அவகாசம்‌ அளிக்கலாம்‌ மற்றும்‌ எழுத்து வடிவில்‌ பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக மேல்முறையீட்டின்‌ விசாரணையை ஒத்தி வைக்கலாம்‌: வரம்புரை: அத்தகைய ஒத்திவைப்பு எதுவும்‌, மேல்முறையீட்டின்‌ விசாரணையின்போது தரப்பினருக்கு மூன்று முறைக்கு மேல்‌ அளிக்கப்படுதல்‌ ஆகாது. (3) மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌, ஆணையின்‌ தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்‌, தன்னுடைய சொந்த இசைவின்படி அல்லது ஆணையரால்‌ அல்லது மைய வரி ஆணையரால்‌ அல்லது மேல்முறையீட்டின்‌ பிற தரப்பினரால்‌ அதன்‌ கவனத்திற்கு கொண்டு வரப்படுமானால்‌, பதிவுருக்களில்‌ தெளிவாக தெரிகின்ற தவறினை சீர்செய்ய (1-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அதனால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனையும்‌, திருத்தம்‌ செய்யலாம்‌: வரம்புரை: ஆனால்‌, மதிப்பீட்டை அதிகப்படுத்தும்‌ அல்லது திருப்பிச்‌ செலுத்துகை அல்லது உள்ளீட்டு வரிவரவை குறைக்கும்‌ அல்லது மற்றவாறு பிற தரப்பினரின்‌ கடப்பாட்டை அதிகரிக்கும்‌ விளைவையுடைய திருத்தம்‌ எதுவும்‌, தரப்பினருக்குக்‌ கேட்கப்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலன்றி, இந்த உட்பிரிவின்கீழ்‌ செய்யப்படுதல்‌ ஆகாது. (4) மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌, சாத்தியமான அளவுக்கு, மேல்முறையீடு தாக்கல்‌ செய்யப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டு கால அளவிற்குள்‌ மேல்முறையீடு ஒவ்வொன்றையும்‌ விசாரித்து முடிவு செய்தல்‌ வேண்டும்‌. (5) மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌, இந்த பிரிவின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றின்‌ நகல்‌ ஒன்றை மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்திற்கு அல்லது சீராய்வு அதிகார அமைப்பிற்கு, அல்லது மூல நீதிமுறையில்‌ தீர்மானிக்கும்‌ அதிகார அமைப்பிற்கு, நேர்விற்கேற்ப, மேல்முறையீட்டினர்‌ மற்றும்‌ ஆணையர்‌ அல்லது மையவரி அதிகார வரம்பு கொண்டுள்ள ஆணையருக்கு அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. (6) 1147-ஆம்‌ பிரிவில்‌ அல்லது 1418-ஆம்‌ பிரிவில்‌ வகை செய்யப்பட்டவரல்லாமல்‌, மேல்முறையீட்டில்‌ மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தினால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணைகள்‌ இறுதியானதாகும்‌ மற்றும்‌ அந்தத்‌ தரப்பினர்களைக்‌ கட்டுப்படுத்தும்‌. 114. மாநிலத்‌ தலைவரின்‌ நிதி மற்றும்‌ நிர்வாக அதிகாரங்கள்‌.-- மாநிலத்‌ தலைவர்‌, வகுத்துரைக்கப்படலாகிறவாறு ஒரு மாநிலத்தில்‌ உள்ள மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தின்‌ மாநில நீதியர்‌ ஆயம்‌ மற்றும்‌ வட்டார நதியர்‌ ஆயங்களின்‌ நிதி மற்றும்‌ நிர்வாக அதிகாரங்களை செலுத்துதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, மாநில நீதியர்‌ ஆயம்‌ அல்லது வட்டார நீதியர்‌ ஆயங்களின்‌ பிற எந்த உறுப்பினர்‌ அல்லது எந்த அலுவலர்களுக்கும்‌ மாநில தலைவர்‌, அவர்‌ 146 தக்கதெனக்‌ கருதலாகும்‌ அவருடைய நிதி மற்றும்‌ நிர்வாக அதிகாரங்களை பகிர்ந்தளிக்க அத்தகைய பகிர்ந்தளிப்பு செய்யப்பட்ட அதிகாரங்களைச்‌ செலுத்துகையில்‌, அத்தகைய உறுப்பினர்‌ அல்லது அலுவலர்‌, மாநிலத்‌ தலைவரின்‌ மேற்பார்வை, கட்டுப்பாடு மற்றும்‌ கண்காணிப்பின்‌ கீழ்‌ தொடர்ந்து செயற்படுதல்‌ வேண்டும்‌ என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, அதிகாரம்‌ உடையவராவர்‌. 115. மேல்முறையீட்டை அனணுமதிப்பதற்காக செலுத்தப்பட்ட தொகையின்‌ திருப்பி செலுத்துகைக்கு வட்டி.- மேல்முறையீட்டு அதிகார அமைப்பின்‌ அல்லது மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தின்‌ ஏதேனும்‌ ஆணையின்‌ விளைவாக 1௦07-ஆம்‌ பிரிவின்‌ (6)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அல்லது 1412-ஆம்‌ பிரிவின்‌ (8)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ மேல்முறையீட்டாளரால்‌ செலுத்தப்பட்ட தொகையினை திருப்பி செலுத்துமாறு கோரப்படுகையில்‌, அத்தகைய திரும்ப செலுத்துகைக்கு, அத்தொகை செலுத்தப்பட்ட தேதியிலிருந்து அத்தகைய தொகையினை திரும்பப்பெறும்‌ தேதிவரையில்‌, 56-ஆம்‌ பிரிவின்கீழ்‌ குறித்துரைக்கப்பட்ட வீதத்தில்‌ வட்டியானது செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 116. அதிகாரம்‌ அளிக்கப்பட்ட பிரதிநிதி மூலம்‌ முன்ணிலையாதல்‌.- (1) இந்தச்‌ சட்டத்தின்கழான நடவடிக்கை எவையும்‌ தொடர்பாக இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அமர்த்தப்பட்ட அலுவலர்‌, அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்‌ முன்பு முன்னிலையாவதற்கு உரிமை கொண்ட அல்லது முன்னிலையாகுமாறு கோரப்பட்ட நபர்‌ எவரும்‌, பிரமாணம்‌ அல்லது உறுதியுரையின்‌ பேரில்‌ ஆய்வுக்காக நேரடியாக முன்னிலையாவதற்கு இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வேண்டுறுத்தப்பட்டாலன்றி, இந்தப்‌ பிரிவின்‌ பிற வகைமுறைகளுக்கு உட்பட்டு, அதிகாரம்‌ அளிக்கப்பட்ட பிரதிநிதி மூலம்‌ முன்னிலையாகலாம்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, "அதிகாரம்‌ அளிக்கப்பட்ட பிரதிநிதி” என்ற சொற்றொடர்‌ (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள நபரால்‌, அவர்‌ சார்பாக முண்னிலையாவதற்கு அதிகாரம்‌ அளிக்கப்பட்ட கீழ்க்கண்டவற்றில்‌ ஒரு நபர்‌ என்று பொருள்படும்‌- (அ) அவருடைய உறவினராக அல்லது முறையான பணியாளராக இருக்கின்ற; அல்லது (ஆ) இந்தியாவிலுள்ள நீதிமன்றம்‌ எதிலும்‌ தொழிலாற்றுவதற்கு உரிமை கொண்டவரும்‌, இந்தியாவிலுள்ள நீதிமன்றம்‌ எதன்‌ முன்பு தொழிலாற்றுவதிலிருந்து தடை செய்யப்பட்டிராதவருமான வழக்குரைஞராக இருக்கின்ற; அல்லது (க) தொழிலாற்றுவதற்கான சான்றிதழ்‌ வைத்திருக்கிறவரும்‌, தொழிலாற்றுவதிலிருந்து தடை செய்யப்பட்டிராதவருமான பட்டயக்கணக்கராக, விலை மதிப்பீட்டுக்‌ கணக்கராக அல்லது நிறுமச்‌ செயலராக இருக்கின்ற; அல்லது (ஈ) இரண்டாண்டுகளுக்குக்‌ குறையாத கால அளவிற்கு, அரசின்கீழ்‌ அவர்‌ பணியாற்றியபோது, அரசிதழ்‌ பதிவு பெற்ற தொகுதி-ஆ அதிகாரியின்‌ படிநிலைக்குக்‌ 147 குறையாத பதவியில்‌, வாரியம்‌ அல்லது யூணியன்‌ பிரதேசம்‌ அல்லது மாநில அரசின்‌ எதனின்‌ வணிகவரித்‌ துறையில்‌ பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலராக இருக்கின்ற: வரம்புரை: ஆனால்‌, அத்தகைய அலுவலர்‌, அவர்‌ ஓய்வுபெற்ற அல்லது பதவி விலகிய தேதியிலிருந்து ஓராண்டுக்‌ கால அளவிற்கு இந்தச்‌ சட்டத்தின்கழான நடவடிக்கைகள்‌ எதனின்‌ முன்பு முன்னிலையாவதற்கு உரிமை கொண்டவர்‌ ஆகார்‌; அல்லது (௨) தொடர்புடைய பதிவு பெற்ற நபர்‌ சார்பாக சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரித்‌ தொழிலாற்றுநராக செயற்படுவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள நபராக இருக்கின்றவர்‌. (3) (அ) அரசுப்‌ பணியிலிருந்து நீக்கப்பட்ட அல்லது விலக்கப்பட்ட நபர்‌ எவரும்‌; அல்லது (ஆ) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌, மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌, ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது யூனியன்‌ பிரதேச சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்கீழ்‌, அல்லது தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ அல்லது சரக்குகளின்‌. விற்பனை அல்லது சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை மீதான வரிவிதிப்பினை கையாளுகிற மாநிலச்‌ சட்டமன்றத்தினால்‌ பிறப்பிக்கப்பட்ட சட்டங்கள்‌ எவற்றின்கீழ்‌ நடவடிக்கை எதன்‌ தொடர்புடைய குற்றம்‌ ஒன்றில்‌ தண்டனைத்‌ தீர்ப்பு விதிக்கப்பட்டவர்‌; அல்லது (௫) வகுத்துரைக்கப்பட்ட அதிகார அமைப்பினால்‌ தவறான நடத்தைக்காக குற்றம்‌ சாட்டப்பட்டவர்‌; அல்லது () நொடிப்பு நிலையராக நீதிமுறையில்‌ தீர்மானிக்கப்பட்டவராகிய, நபர்‌ எவரும்‌,- ட (அ), (ஆ) மற்றும்‌ (இ) ஆகிய கூறுகளில்‌ சுட்டப்பட்ட நபர்கள்‌ பொறுத்தவரை அனைத்து நேரங்களிலும்‌; மற்றும்‌ (ii) ஈ)-கூறில்‌ சுட்டப்பட்ட நபரைப்‌ பொறுத்தவரை தொடர்ந்து நொயுப்பு நிலை தொடர்கிற கால அளவின்போது, (1)-ஆம்‌ உட்பிரிவின்கழான நபர்‌ எவருக்கும்‌ பிரதிநிதித்துவம்‌ செய்வதற்கு தகுதியுடைவராகமாட்டார்‌. (4) மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்‌ அல்லது பிற மாநில சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டம்‌ எதனின்‌ அல்லது யூணியன்‌ பிரதேச சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்கீழ்‌ தகுதியற்றவர்களாக உள்ள நபர்‌ எவரும்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ தகுதியற்றவராக கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 148 117. உயர்ந்திமன்றத்தில்‌ மேல்முறையீடு செய்தல்‌.-- (1) மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தின்‌ மாநில நீதியர்‌ ஆயம்‌ அல்லது வட்டார நீதியர்‌ ஆயங்களால்‌ ஏதேனும்‌ உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன்‌ மூலம்‌ தீங்குற்ற எந்த நபரும்‌ உயர்நீதிமன்றத்தில்‌ மேல்முறையீடு ஒன்று தாக்கல்‌ செய்யலாம்‌, மற்றும்‌ சாரமான சட்டப்பிரச்சனை இந்த வழக்கு உள்ளடக்கியுள்ளது என அது திருப்தி கொள்ளும்பட்சத்தில்‌, அத்தகைய மேல்முறையீட்டினை உயர்நீதிமன்றம்‌ ஏற்றுக்கொள்ளலாம்‌. (2) 0-ஆம்‌ உட்பிரிவின்கீழான மேல்முறையீடு ஒன்று, தீங்குற்ற நபரால்‌ எதிராக மேல்முறையீடு செய்யவுள்ள ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து நூற்றி எண்பது நாட்களுக்குள்‌ தாக்கல்‌ செய்யப்பட வேண்டும்‌ மற்றும்‌ அது வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ அத்தகைய முறையில்‌ சரிபார்க்கப்பட வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, உயர்ந்திமன்றம்‌ மேற்சொன்ன கால அளவு முடிவடைந்த பின்பு தாக்கல்‌ செய்யப்பட்ட மேல்முறையீட்டை அத்தகைய காலத்திற்குள்‌ அதணை தாக்கல்‌ செய்ய இயலவில்லை என்பதற்கு போதுமான காரணம்‌ இருக்குமேயானால்‌, அனுமதிக்கலாம்‌. (3) வழக்கு எதனிலும்‌ சாரமான சட்டப்‌ பிரச்சனை உள்ளடங்கியிருக்கிறது என உயர்ந்திமன்றம்‌ திருப்தி கொள்கிறவிடத்து, அது அந்தப்‌ பிரச்சினையை முறைப்படுத்தும்‌ மற்றும்‌ அவ்வாறு முறைப்படுத்தி கூறப்பட்ட பிரச்சினையின்மீது மட்டுமே மேல்முறையீடு கேட்கப்படும்‌, மற்றும்‌ மேல்முறையீட்டின்‌ விசாரணையின்போது, எதிர்‌ மனுதாரர்கள்‌ தரப்பிலிருந்து, அத்தகைய பிரச்சனையை வழக்கு உள்ளடக்கவில்லை என்பதை விவாதிக்க அனுமதிக்கப்படும்‌: வரம்புரை: ஆனால்‌, இந்த உட்பிரிவில்‌ அடங்கியுள்ளவை எதுவும்‌, பதிவு செய்யப்படவேண்டிய காரணங்களுக்காக, நீதிமன்றத்தால்‌ முறைப்படுத்தப்படாத சாரமான சட்டப்பிரச்சினை எதன்‌ மீதான மேல்முறையீட்டை கேட்பதற்கான நீதிமன்றத்தின்‌ அதிகாரத்தை, அந்த வழக்கு அத்தகைய பிரச்சினையை உள்ளடக்கியுள்ளது என்று அது திருப்தியடைகிறவிடத்து, சுருக்காது அல்லது அதனிடமிருந்து பறிக்காது என்று கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (4) நீதிமன்றம்‌, அவ்வாறு முறைப்படுத்தப்பட்ட சட்டப்பிரச்சினையை முடிவு செய்து மற்றும்‌ அத்தகைய முடிவிற்கான அடிப்படை அடங்கியுள்ள அத்தகைய தீர்ப்பினை வழங்க வேண்டும்‌ மற்றும்‌ பொருத்தமென கருதும்‌ அத்தகைய செலவுத்‌ தொகையினை வழங்கிடலாம்‌. (5 (அ) மாநில நீதியர்‌ ஆயம்‌ அல்லது வட்டார நீதியர்‌ ஆயங்களால்‌ தீர்மானிக்கப்படாத; அல்லது (ஆ) (3-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்ட அத்தகைய சட்ட பிரச்சனையின்‌ முடிவு ஒன்றின்‌ காரணங்களால்‌ மீது, மாநில நீதியர்‌ ஆயம்‌ அல்லது வட்டார நீதியர்‌ ஆயங்களால்‌ தவறாக தீர்மானிக்கப்பட்ட, 149 எந்த வழக்கினையும்‌ உயர்நீதிமன்றம்‌ தீர்மானிக்கலாம்‌. (6) உயர்ந்திமன்றத்தின்‌ முன்பு மேல்முறையீடு தாக்கல்‌ செய்யப்படுகின்றவிடத்து, உயர்ந்திமன்றத்தின்‌ இரண்டு நீதிபதிகளுக்கு குறையாத ஒரு நீதியர்‌ ஆயத்தின்‌ மூலம்‌ இது கேட்கப்பட வேண்டும்‌, மற்றும்‌ அந்த நீதிபதிகளின்‌ அல்லது அத்தகைய நீதிபதிகளின்‌ பெரும்பாண்மை, ஏதேனும்‌, கருத்திற்கிணங்க முடிவு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (7) அத்தகைய பெரும்பாண்மை எதுவும்‌ இல்லாதவிடத்தில்‌, நீதிபதிகள்‌, எந்த சட்டக்கூறின்‌ பேரில்‌ அவர்கள்‌ வேறுபடுகிறார்கள்‌ என்பதை உரைத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிற உயர்‌ நீதிமன்ற நீதிபதிகளால்‌ அந்த சட்டக்கூறினை மட்டும்‌ விசாரித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதை முதலில்‌ விசாரித்தவர்கள்‌ உட்பட இந்த வழக்கை விசாரணை செய்த பெரும்பாண்மையான நீதிபதிகளின்‌ கருத்திற்கிணங்க அத்தகைய பிரச்சினை முடிவு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (8) இந்தப்‌ பிரிவின்கீழ்‌ அதன்‌ முன்பு தாக்கல்‌ செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டில்‌ உயர்நீதிமன்றம்‌ தீர்ப்பை வழங்குகிறவிடத்து, நீதிமன்றத்தின்‌ சான்றளிக்கப்பட்ட நகலின்‌ அடிப்படையில்‌ இரண்டு பக்க தரப்பினர்களால்‌ அத்தகைய தீர்ப்புக்கு செயல்விளைவு அளித்தல்‌ வேண்டும்‌. (9) இந்த சட்டத்தில்‌ பிறவாறு வகை செய்யப்பட்டிருந்தாலன்றி, உயர்ந்திமன்றத்தில்‌ செய்யப்பட்டுள்ள மேல்முறையீடுகள்‌ தொடர்பான 1908-ஆம்‌ ஆண்டு உரிமையியல்‌ நடைமுறைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 51908) வகைமுறைகள்‌, எந்த அளவுக்கு கூடுமோ அந்த அளவுக்கு, இந்தப்‌ பிரிவின்கீழான மேல்முறையீடுகள்‌ பொறுத்தவரை பொருந்தும்‌. 118. உச்சந்திமன்றத்தில்‌ மேல்முறையீடு செய்தல்‌.- (1) கீழ்க்கண்டவை எதற்கும்‌ உச்சந்திமன்றத்தில்‌ மேல்முறையீடு செய்யலாம்‌- (அ) மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தின்‌ அல்லது தேசிய நீதியர்‌ ஆயம்‌ அல்லது மண்டல நீதியர்‌ ஆயங்களினால்‌ பிறப்பிக்கப்படும்‌ ஆணை எதற்கும்‌; அல்லது (ஆ) உயர்நீதிமன்றம்‌, தீர்ப்பு அல்லது ஆணை பிறப்பிக்கப்பட்டதன்‌ அடுத்து, தாமாகவே முன்வந்து அல்லது தீங்குற்ற தரப்பினரால்‌ அல்லது அவர்‌ சார்பாக செய்யப்படும்‌ விண்ணப்பத்தின்‌ பேரில்‌ இந்த வழக்கு உச்சந்திமன்றத்திற்கு மேல்முறையீடு செய்வதற்கு தகுந்தது என்று சான்றளித்த வழக்கு எதிலும்‌ 1417-ஆம்‌ பிரிவின்கீழ்‌ செய்யப்பட்ட மேல்முறையீட்டில்‌ உயர்ந்ீதிமன்றத்தால்‌ பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு அல்லது ஆணை எதற்கும்‌. (2) உச்சந்திமன்றத்திற்கு செய்யப்படும்‌ மேல்முறையீடுகள்‌ தொடர்பாக, 1908- ஆம்‌ ஆண்டு உரிமையியல்‌ நடைமுறைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 51908) வகைமுறைகள்‌, உயர்ந்திமன்றத்தின்‌ தீர்ப்பாணைகளிலிருந்து செய்யப்படும்‌ மேல்முறையீடுகளைப்‌ பொறுத்தவரை அவை பொருந்துவது போன்று, இந்தப்‌ 150 பிரிவின்கீழ்‌ செய்யப்படும்‌ மேல்முறையீடுகள்‌ பொறுத்தவரை எந்த அளவுக்குக்‌ கூடுமோ அந்த அளவுக்கு பொருந்தும்‌. (3) உயர்ந்திமன்றத்தின்‌ தீர்ப்பு மேல்முறையீட்டில்‌ மாற்றப்படுகிறவிடத்து அல்லது எதிர்மாறாக்கப்படுகிறவிடத்து, உயர்நீதிமன்றத்தின்‌ தீர்ப்பைப்‌ பொறுத்தவரை, 1417-ஆம்‌ பிரிவில்‌ வகைசெய்யப்பட்டுள்ள முறையில்‌ உச்சந்திமன்றத்தின்‌ ஆணைக்கு செயல்விளைவு அளிக்கப்படும்‌. 119. மேல்முறையீடுகள்‌ முதலியவை இருந்தபோதிலும்‌ செலுத்தப்பட வேண்டிய தொகைகள்‌, முதலியவை.- உயர்ந்திமன்றத்திற்கு அல்லது உச்சந்திமன்றத்திற்கு மேல்முறையீடு தாக்கல்‌ செய்யப்பட்டிருந்த போதிலும்‌, 1413-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயத்தின்‌ தேசிய அல்லது மண்டல நீதியர்‌ ஆயங்களால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணையின்‌ அல்லது, நேர்விற்கேற்ப, 1132-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ மேல்முறையீட்டுத்‌ தீர்பாயத்தின்‌ மாநில நீதியர்‌ ஆயம்‌ அல்லது வட்டார நீதியர்‌ ஆயங்களால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணையின்‌ அல்லது 1147-ஆம்‌ பிரிவின்கீழ்‌ உயர்ந்திமன்றத்தால்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணையின்‌ விளைவாக அரசுக்குக்‌ கொடுபட வேண்டிய தொகைகள்‌, அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கிணங்க செலுத்தப்படவேண்டும்‌. 120. ஒரு சில நேர்வுகளில்‌ தாக்கல்‌ செய்யப்பட வேண்டாத மேல்முறையீடு. (1) ஆணையர்‌, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, அவ்வப்போது, தாம்‌ பொருத்தமெனக்கருதும்‌, இந்த அத்தியாயத்தின்‌ வகைமுறைகளின்கீழ்‌ மாநில வரி அலுவலரால்‌ செய்யப்படும்‌ மேல்முறையீடு அல்லது விண்ணப்பத்தினை தாக்கல்‌ செய்வதை ஒழுங்குமுறைப்படுத்தும்‌ நோக்கங்களுக்காக பண வரம்புகளை நிருணயம்‌ செய்வதற்கு ஆணைகள்‌ அல்லது வழிமுறைகள்‌ அல்லது பணிப்புரைகள்‌ பிறப்பிக்கலாம்‌. (2) (0-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணைகள்‌ அல்லது வழிமுறைகள்‌ அல்லது பணிப்புரைகளைத்‌ பின்பற்றி, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு அல்லது ஆணை எதற்கும்‌ எதிராக மாநில வரி அலுவலர்‌ மேல்முறையீடு அல்லது விண்ணப்பத்தைத்‌ தாக்கல்‌ செய்யாதிருக்கிறவிடத்து, அது, அதே அல்லது அதே போன்ற பிரச்சினைகளை அல்லது சட்டப்‌ பிரச்சினைகளை உள்ளடக்கியுள்ள பிற வழக்கு எதிலும்‌, மேல்முறையீடு அல்லது விண்ணப்பம்‌ தாக்கல்‌ செய்வதிலிருந்து அத்தகைய மாநில வரி அலுவலரை தடுத்தல்‌ ஆகாது. (3) 0-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணைகள்‌ அல்லது வழிமுறைகள்‌ அல்லது பணிப்புரைகளைத்‌ தொடர்ந்து மாநில வழி அலுவலரால்‌ மேல்முறையீடு அல்லது விண்ணப்பம்‌ எதுவும்‌ தாக்கல்‌ செய்யப்படாதிருந்த போதிலும்‌, மேல்முறையீட்டில்‌ அல்லது விண்ணப்பத்தில்‌ தரப்பினராகயிருக்கும்‌ நபர்‌ எவரும்‌ மேல்முறையீடு அல்லது விண்ணப்பம்‌ தாக்கல்‌ செய்யாமல்‌ பூசலிலுள்ள 151 பிரச்சினையின்‌ பேரறிலான முடிவில்‌ மாநில வரி அலுவலர்‌ தடையின்றி இணங்கியுள்ளார்‌ என்று வாதிடுதல்‌ ஆகாது. (4) அத்தகைய மேல்முறையீடு அல்லது விண்ணப்பத்தை விசாரணை செய்யும்‌ மேல்முறையீட்டுத்‌ தீர்ப்பாயம்‌ அல்லது நீதிமன்றம்‌, (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணைகள்‌ அல்லது வழிமுறைகள்‌ அல்லது பணிப்புரைகளைத்‌ தொடர்ந்து மாநில வரி அலுவலரால்‌ மேல்முறையீடு அல்லது விண்ணப்பம்‌ தாக்கல்‌ செய்யப்படாத சூழ்நிலைகளைக்‌ கவனத்திற்கொள்ளுதல்‌ வேண்டும்‌. 121. மேல்முறையீடு செய்யத்தக்கவை அல்லாத முடிவுகள்‌ மற்றும்‌ ஆணைகள்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ எவற்றிலும்‌ முரணானது எதுவும்‌ இருந்தபோதிலும்‌, மாநில வரி அலுவலரால்‌ எடுக்கப்பட்ட முடிவுகள்‌ அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணைகளுக்கு எதிராக, பின்வரும்‌ பொருட்பாடுகளில்‌ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை எதன்‌ தொடர்பாகவும்‌ அத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்குமாணால்‌ அல்லது ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்குமானால்‌ மேல்முறையீடு ஏதும்‌ செய்யப்படுதலாகாது, அவையாவன:- (அ) ஆணையர்‌ அல்லது ஒரு அலுவலரிடமிருந்து மற்றொரு அலுவலருக்கு நடவடிக்கைகளை மாற்றுவதற்கு உத்தரவிடுவதற்கு அதிகாரம்‌ அளிக்கப்பட்ட பிற அமைப்பின்‌ ஆணை; அல்லது (ஆ) கணக்குப்‌ புத்தகங்கள்‌, பதிவேடு மற்றும்‌ பிற ஆவணங்களை கைப்பற்றுதல்‌ அல்லது நிறுத்திவைத்துக்‌ கொள்ளுதல்‌ தொடர்பான ஆணை; அல்லது (இ) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ குற்றவழக்குத்‌ தொடர்வதற்கான ஒப்பளிப்பு ஆணை; அல்லது () 80-ஆம்‌ பிரிவின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட ஆணை. அத்தியாயம்‌ XIX குற்றங்கள்‌ மற்றும்‌ தண்டனைகள்‌. 122. ஒரு சில குற்றச்சாட்டுகளுக்கான தண்டனை.- (1) பதிவுபெற்ற நபரானவர்‌- (i) விலைப்பட்டியல்‌ எதுவும்‌ அளிக்காமல்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ வழங்குகிற அல்லது அத்தகைய வழங்குகை பொறுத்து தவறான அல்லது பொய்யான விலைப்பட்டியல்‌ அளிக்கிற; 0) இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ வகைமுறைகளுக்கு மீறுகையாக சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ வழங்காமல்‌ விலைப்பட்டியல்‌ அல்லது பட்டி எதனையும்‌ அளித்தல்‌; 152 (i) வரி என்ற பேரில்‌ தொகை எதுவும்‌ வளுலித்து பின்‌ அத்தகைய செலுத்துவதற்கான தேதியிலிருந்து மூன்று மாதங்கள்‌ கால அளவிற்கு மேற்பட்டு அரசுக்கு அதனைச்‌ செலுத்தத்தவறுவாரேயெனில்‌; 0) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு முரணாக வரி எதனையும்‌ வசூலித்து பின்‌ அத்தகைய செலுத்துவதற்கான தேதியிலிருந்து மூன்று மாதங்கள்‌ கால அளவிற்கு மேற்பட்டு அரசுக்கு அதனைச்‌ செலுத்தத்தவறுவாரேயெனில்‌; 0) 8-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கிணங்க வரியைக்‌ பிடித்தம்‌ செய்யத்‌ தவறுதல்‌ அல்லது மேற்சொன்ன உட்பிரிவின்கீழ்‌ பிடித்தம்‌ செய்யப்படுவதற்கு வேண்டுறுத்தப்படும்‌ தொகையைவிட குறைவான தொகையை பிடித்தம்‌ செய்தல்‌ அல்லது (2)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அரசிற்கு அவர்‌ செலுத்தத்தவறுகிறவிடத்து, வரியாக பிடித்தம்‌ செய்யப்படும்‌ தொகை; 00. 52-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கிணங்க வரியைக்‌ வசூலிக்க தவறுதல்‌ அல்லது மேற்சொன்ன உட்பிரிவின்கீழ்‌ வசுலிக்கப்படுவதற்கு வேண்டுறுத்தப்படும்‌ தொகையைவிட குறைவான தொகையை வசூலித்தல்‌ அல்லது 52-ஆம்‌ பிரிவின்‌ (3)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வசூலிக்கப்பட்ட தொகையினை அரசிற்கு அவர்‌ செலுத்தத்தவறுகிறவிடத்து; Vi) இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ வகைமுறைகளுக்கு மீறுகையாக ஒன்று முழுவதுமாக அல்லது பகுதியாக சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ அப்படியே பெறாமல்‌ உள்ளீட்டு வரிவரவினை எடுத்தல்‌ அல்லது பயன்படுத்துகிறவிடத்து; ரி) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரியை மோசடியாக திரும்ப பெறுகின்றவிடத்து; 09 20-ஆம்‌ பிரிவிற்கு அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளுக்கு மீறுகையாக உள்ளீட்டு வரிவரவை எடுத்தல்‌ அல்லது பகிர்ந்தளிக்கிறவிடத்து; x) நிதி ஆவணங்களின்‌ பொய்ப்பதிவுரு அமைக்கிற அல்லது பதிலாக அமைத்தல்‌ அல்லது பொய்யான கணக்குகள்‌ அல்லது ஆவணங்களை முன்னிலைப்படுத்துதல்‌ அல்லது இச்சட்டத்தின்கீழ்‌ நிலுவையாக உள்ள வரிச்‌ செலுத்துகையை ஏய்ப்பு செய்யும்‌ எண்ணத்துடன்‌ தவறாக தகவல்‌ அல்லது அறிக்கை எதனையும்‌ அளிக்கிறவிடத்து; xi) இச்சட்டத்தின்கீழ்‌ பதிவு செய்யப்படுவதற்கு உள்ளாகிற ஆனால்‌, பதிவினைப்‌ பெறத்தவறுகிறவிடத்து; 0) ஒன்று பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும்‌ சமயத்தில்‌, அல்லது பிந்தையதாக பதிவு செய்தல்‌ விவரங்கள்‌ பொறுத்து தவறான தகவல்‌ எதனையும்‌ அளிக்கிறவிடத்து; 00 இச்சட்டத்தின்கழான தமது கடமைகளை ஆற்றுகையில்‌ அலுவலர்‌ எவரையும்‌ தடைசெய்கிற அல்லது தடுக்கிறவிடத்து; 153 (xiv) இதன்‌ பொருட்டு குறித்துரைக்கப்படலாகும்‌ ஆவணங்களில்‌ உள்ளடங்காத வரிவிதிக்கத்தக்க சரக்குகள்‌ எவற்றையும்‌ எடுத்துச்‌ செல்கிறவிடத்து; (xv) இச்சட்டத்தின்கீழ்‌ வரி எஏய்ப்புக்குக்‌ காரணமாக இருக்கிற தம்முடைய விற்பனை அளவை மறைக்கிறவிடத்து; பறி இச்சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ வகைமுறைகளுக்கிணங்க கணக்குப்‌ புத்தகங்களையும்‌ பிற ஆவணங்ளையும்‌ வைத்துவர, பராமரிக்க அல்லது இருத்திவைக்கத்‌ தவறுகிறவிடத்து: பரி) இச்சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ வகைமுறைகளுக்கிணங்க அலுவலர்‌ ஒருவரால்‌ கோரப்படும்‌ தகவல்‌ அல்லது ஆவணத்தை அளித்திட தவறுகிறவிடத்து, அல்லது இந்தச்‌ சட்டத்தின்கழான நடைமுறைகள்‌ எதனின்போது தவறான தகவல்‌ அல்லது ஆவணங்களை அளிக்கிறவிடத்து; பரி) இச்சட்டத்தின்கீழ்‌ பறிமுதலுக்கு உள்ளாவதற்கு நம்பக்‌ காரணம்‌ பெற்றிருக்கிற சரக்குகள்‌ எவற்றையும்‌ வழங்குகிற, எடுத்துச்செல்கிற அல்லது பண்டக சாலையில்‌ சேமித்துவைக்கிறவிடத்து; (xix) பதிவுபெற்ற இன்னொரு நபரின்‌ பதிவு எண்ணைப்‌ பயன்படுத்தி விலைப்பட்டியல்‌ அல்லது ஆவணம்‌ எதனையும்‌ அளிக்கிறவிடத்து; 0௦0 முக்கியமான சாட்சி அல்லது ஆவணங்கள்‌ எவற்றையும்‌ திரித்தல்‌ அல்லது அழிக்கிறவிடத்து; (xxi) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, கைப்பற்றப்பட்டுள்ள அல்லது இணைக்கப்பட்டுள்ள சரக்குகள்‌ எவற்றையும்‌ உடைமையிலிருந்து விட்டுவிடுகிற அல்லது திரிக்கிறவிடத்து, அவர்‌ பத்தாயிரம்‌ ரூபாய்‌ தண்டத்தொகை அல்லது எய்க்கப்பட்ட வரிக்கு சமமான தொகை அல்லது 51-ஆம்‌ பிரிவின்கீழ்‌ பிடித்தம்‌ செய்யப்படாத அல்லது குறைவாக பிடித்தம்‌ செய்யப்பட்ட அல்லது பிடித்தம்‌ செய்யப்பட்டு அரசுக்கு செலுத்தப்படாத வரி அல்லது 52-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வசூலிக்கப்படாத அல்லது குறைவாக வசூலிக்கப்பட்ட அல்லது வளுலிக்கப்பட்டு அரசுக்கு செலுத்தப்படாத வழி அல்லது உள்ளீட்டு வரிவரவினை முறைகேடாக துய்த்தல்‌ அல்லது பிறருக்கு வழங்குதல்‌ அல்லது பகிருதல்‌, அல்லது மோசடியாக திரும்பப்‌ பெறுதல்‌, இதில்‌ எது அதிகமோ அந்தத்‌ தொகையை செலுத்துவதற்கு கடப்பாடுடையவராவார்‌. (2) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை செய்யும்‌ பதிவு பெற்ற நபர்‌ எவரும்‌ அதன்மீது வரி எதுவும்‌ செலுத்தப்படவில்லை அல்லது குறைவாக செலுத்தப்பட்டுள்ளது அல்லது தவறாக திரும்பப்‌ பெறப்பட்டுள்ளது, அல்லது உள்ளீட்டு வரிவரவானது தவறாக துய்க்கப்பட்டுள்ளது அல்லது பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறவிடத்து,- 154 (அ) மோசடி அல்லது வரியை செலுத்தாது இருப்பதற்கு வேண்டுமென்றே தவறுதலாக விவர உரை எதையும்‌ அளித்தலை அல்லது பொருண்மைகளை மறைத்தலுக்கான காரணத்தை தவிர்த்து பிற காரணம்‌ எதற்காகவும்‌ பத்தாயிரம்‌ ரூபாய்‌ அல்லது அத்தகைய நபரிடமிருந்து வர வேண்டிய வரியிலிருந்து பத்து விழுக்காட்டிற்கான தண்டத்‌ தொகைக்கு, இதில்‌ எது அதிகமோ, அதற்கு கடப்பாடு உடையவராவார்‌; (ஆ) வரி ஏய்ப்பதற்கு மோசடியாக அல்லது வேண்டுமென்றே விவர உரையை தவறாக அளித்தல்‌ அல்லது பொருண்மைகளை மறைத்தல்‌ காரணத்திற்காக பத்தாயிரம்‌ ரூபாய்‌ அல்லது அத்தகைய நபரிடமிருந்து வரவேண்டிய தொகைக்கு, இதில்‌ எது அதிகமோ, அதற்கு சமமாக தண்டத்தொகைக்கு கடப்பாடு உடையவராவார்‌. (3) (அ) (1)-ஆம்‌ உட்பிரிவின்‌ @) முதல்‌ 0௦0-கூறுகளில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள குற்றங்கள்‌ எதற்கும்‌ உடந்தையாய்‌ இருக்கின்ற அல்லது தூண்டுகின்ற; (ஆ) தானே உடைமையாக்கிக்கொள்கின்ற, அல்லது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்படி பறிமுதலுக்கு உள்ளாக வேண்டியது என தான்‌ அறிந்தும்‌ அல்லது நம்புவதற்கான காரணத்தைப்‌ பெற்றிருந்தும்‌ சரக்குகள்‌ எதையும்‌ கொண்டு செல்லுதல்‌, அகற்றுதல்‌ சேகரித்து வைத்தல்‌, வைத்திருத்தல்‌, மறைத்து வைத்தல்‌, வழங்குதல்‌ அல்லது கொள்முதல்‌ செய்தல்‌ அல்லது பிறமுறை எதனாலும்‌ சரக்குகளை கையாளுகின்ற; (இ) பெற்றுக்கொள்கிற அல்லது எந்த முறையிலும்‌ வழங்குகையில்‌ சம்பந்தப்படுகிற அல்லது பிற எந்த விதத்திலும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகள்‌ எதற்கும்‌ முரணாக அறிந்திருந்து அல்லது அறிந்து கொள்வதற்கான காரணங்களை பெற்றிருந்தும்‌ சேவைகள்‌ எதையும்‌ வழங்குகின்ற; () விசாரணை ஒன்றில்‌ சான்றினை அளிப்பதற்கு அல்லது ஆவணங்களை முன்னிலைப்படுத்துவதற்கு முன்னிலையாவதற்காக அழைப்பாணை வழங்குகிறபோது, மாநில வரி அலுவலர்‌ முன்பு முன்னிலையாவதற்கு தவறுகின்ற; (௨) இச்சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ வகைமுறைகளுக்கிணங்க விலைப்பட்டியலை வழங்குவதற்கு தவறுகின்ற அல்லது அவருடைய கணக்குப்‌ புத்தகங்கள்‌ விலைப்பட்டியலுக்கான கணக்கினை வைத்துவர தவறுகின்ற, நபர்‌ எவரும்‌, இருபத்தைந்தாயிரம்‌ ரூபாய்‌ வரை நீட்டிக்கலாகும்‌ தண்டத்தொகைக்கு கடப்பாடு உடையவராதல்‌ வேண்டும்‌. 155 123. தகவல்‌ அறிக்கையை அளிப்பதற்கு தவறுவதற்கான தண்டத்‌ தொகை.- 150-ஆம்‌ பிரிவின்கீழ்‌ தகவல்‌ அறிக்கையை அளிப்பதற்கு வேண்டுறுத்தப்பட்ட நபர்‌ எவரும்‌ (3)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வழங்கப்பட்ட அறிவிப்பில்‌ குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள்‌ அவ்வாறு செய்யத்தவறுவாரானால்‌, அத்தகைய அறிக்கை அளிப்பதற்கு தொடர்ச்சியாக தவறுகின்ற ஒவ்வொரு நாளுக்கும்‌ நூறு ரூபாய்‌ வரை தண்டத்தொகையை அத்தகைய செலுத்துவதற்கு கடப்பாடுடையவராதல்‌ வேண்டும்‌ என உரிய அலுவலர்‌ பணிப்புரை பிறப்பிக்கலாம்‌: வரம்புரை: ஆனால்‌, இந்தப்‌ பிரிவின்கீழ்‌ விதிக்கப்பட்ட தண்டத்‌ தொகையானது ஐம்பதாயிரம்‌ ரூபாய்க்கு மிகாது இருத்தல்‌ வேண்டும்‌. 124. புள்ளி விவரங்களை அளிப்பதற்கு தவறுகைக்கான அபராதம்‌.- 1541-ஆம்‌ பிரிவின்கீழ்‌ தகவல்‌ அல்லது அறிக்கை எதையும்‌ அளிப்பதற்கு வேண்டுறுத்தப்பட்ட நபர்‌ எவரும்‌,- (அ) நியாயமான காரணமின்றி இச்சட்டத்தின்கீழ்‌ அளிக்கப்பட வேண்டிய தகவல்‌ அல்லது அறிக்கை அளிக்க தவறுவது; அல்லது (ஆ) தவறானது என அறிந்தே வேண்டுமென்றோ அல்லது ஏதோவொரு காரணத்திற்காகவோ அத்தகைய தகவல்‌ அல்லது அறிக்கை அளிக்கிறவிடத்து, அவருக்கு பத்தாயிரம்‌ ரூபாய்‌ வரையிலான நீட்டிக்கக்கூடிய தண்டனை வழங்க இயலும்‌ மற்றும்‌ அத்தவறினை தொடர்ந்து செய்கையில்‌ அத்தவறினை புரிந்த முதல்‌ நாளிலிருந்து தொடரும்‌ நாட்களுக்கு ரூபாய்‌ நூறு வீதம்‌ அதிகபட்சமாக இருபத்தைந்தாயிரம்‌ ரூபாய்‌ வரை அபராதம்‌ வழங்கலாம்‌. 125. பொதுவான தண்டத்தொகை.- இச்சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ வகைமுறைகளுக்கு முரணாக செயல்படும்‌ எந்த நபருக்கும்‌ தணியாக இச்சட்டத்தின்‌ கீழ்‌ தண்டத்தொகை விதிக்க வழிவகை செய்யப்படாமல்‌ இருக்கிறவிடத்து, அதிகபட்சமாக ரூபாய்‌ இருபத்தைந்தாயிரம்‌ வரை தண்டத்தொகை விதிக்கப்பெறும்‌. 126. அபராதம்‌ தொடர்பான பொது ஒழுங்கமைவு.-- (1) எந்த அலுவலரும்‌, வரி ஒழுங்குமுறைகள்‌ அல்லது நடைமுறைத்‌ தேவைகளில்‌ காணும்‌ சிறு தவறுகளுக்காக மற்றும்‌ குறிப்பாக. ஆவணங்களில்‌ எளிதாக சரி செய்யத்தக்க எந்த விடுபாடுக்காகவும்‌ அல்லது பிழைக்காகவும்‌ மற்றும்‌ ஏமாற்றும்‌ எண்ணம்‌ அல்லது மொத்தமாக புறக்கணிக்கும்‌ நோக்கம்‌ செய்யாதவற்றுக்கு இச்சட்டத்தின்கீழ்‌ அபராதம்‌ விதிக்க இயலாது. விளக்கம்‌.- இந்த உட்பிரிவின்‌ நோக்கத்திற்காக, (அ) வரித்தொகை ஐயாயிரம்‌ ரூபாய்க்கும்‌ குறைவாக இருந்தால்‌ அத்தவறு சிறு தவறாக' கருதப்பட வேண்டும்‌; 156 (ஆ) ஆவணத்தைக்‌ கண்டதுமே தெளிவாகத்‌ தெரியும்‌ வகையில்‌ இருந்தால்‌ அத்தகைய பூர்த்தி செய்யப்படாத) விடுபாடு அல்லது பிழையான விவரங்கள்‌ எளிதாக சரிசெய்யக்கூடியனவாக கருதப்பட வேண்டும்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ விதிக்கப்படும்‌ தண்டத்‌ தொகையானது வழக்கு ஒவ்வொன்றின்‌ பொருண்மை மற்றும்‌ சூழ்நிலையை பொறுத்து அமையும்‌ மற்றும்‌ தவறின்‌ தண்மை மற்றும்‌ கடுமைக்கு நிகராக இருத்தல்‌ வேண்டும்‌. (3) எந்தவொரு நபருக்கும்‌ கேட்கப்படுவதற்கான வாய்ப்பு ஒன்றினை கொடுக்காமல்‌ அபராதம்‌ விதித்தலாகாது. (4) இச்சட்டத்தின்கீழான அலுவலர்‌, ஆணையின்படி எந்தவொரு சட்டம்‌, ஒழுங்குமுறைகள்‌ அல்லது நடைமுறைத்‌ தேவைகளுக்கான தவறுக்காக தண்டத்தொகை விதிக்கும்‌ போது, தவறின்‌ தண்மையைக்‌ குறிப்பிட்டு மற்றும்‌ பொருத்தமான சட்டம்‌, விதிமுறை அல்லது நடைமுறையின்கீழ்‌ தவறுக்கான தண்டத்தொகை விதிக்கப்படுகிறது என்பதைக்‌ குறிப்பிட வேண்டும்‌. (5) இச்சட்டத்தின்கழான அலுவலரிடம்‌, வரிச்சட்டம்‌ ஒழுங்குமுறை அல்லது நடைமுறை தேவைகளில்‌ செய்யப்பட்ட தவறின்‌ சூழ்நிலையை, ஒரு நபர்‌ தாமாகவே முன்வந்து தனது தவறினை இச்சட்டத்தின்கழான அலுவலர்‌ அத்தவறினை கண்டறியும்‌ முன்பே தெரிவித்தால்‌, அந்த நபருக்கான தண்டத்தொகையினை கணக்கிடும்போது உரிய அலுவலர்‌ இதனையும்‌ ஒரு காரணியாக கொள்ளவேண்டும்‌. (6) குறிப்பிட்ட தொகை அல்லது குறிப்பிட்ட விழுக்காடு தெரிவிக்கப்பட்டிருப்பின்‌, அந்நேர்வுகளில்‌ இப்பிரிவின்கழ்‌ தண்டத்தொகை குறித்துரைக்கப்பட்டிருக்கிறவிடத்து அத்தகைய நேர்வுக்கு தண்டத்தொகை விதிப்பது பொருந்தாது. 127. குறிப்பிட்ட இனங்களில்‌ தண்டத்‌ தொகை விதிக்கும்‌ அதிகாரம்‌.- உரிய அலுவலர்‌, நபர்‌ ஒருவர்‌ அபராதம்‌ விதிக்கப்பட வேண்டியவர்‌ எனக்‌ கருதினால்‌, மற்றும்‌ அந்த தண்டத்தொகையானது இச்சட்டத்தின்கீழ்‌ பிரிவு 62(அ), பிரிவு 63(அ), பிரிவு 64(அ), பிரிவு 73(அ), பிரிவு 74(அ), பிரிவு 129(அ), பிரிவு 130 ஆகிய செயல்முறைகளின்கீழ்‌ வராத போது, அத்தகைய நபருக்கு கேட்பதற்கான நியாயமான ஒரு வாய்ப்பினை வழங்கிய பின்‌ அத்தகைய ஆணை ஒன்றினை அலுவலர்‌ வழங்கலாம்‌. 128. தண்டத்‌ தொகை அல்லது கட்டணம்‌ அல்லது இரண்டையும்‌ தள்ளுபடி செய்யும்‌ அதிகாரம்‌.-- அரசானது, அறிவிக்கை வாயிலாக, பிரிவு 122 அல்லது பிரிவு 123 அல்லது பிரிவு 1425-ல்‌ சுட்டப்பட்டுள்ள தண்டத்தொகை எதையும்‌ அல்லது பிரிவு 47-ல்‌ சுட்டப்பட்டுள்ள தாமதக்‌ கட்டணம்‌ எதையும்‌ அத்தகைய வரி செலுத்துவோர்கள்‌ வகையினருக்கு மற்றும்‌ சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ மன்றத்தின்‌ பரிந்துரையின்‌ அடிப்படையில்‌ அதில்‌ குறித்துரைக்கப்படக்கூடிய 157 அத்தகைய தணிக்கும்‌ சூழ்நிலைகளில்‌ முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ தள்ளுபடி செய்திடலாம்‌. 129. போக்குவரத்தில்‌ உள்ள சரக்குகள்‌ மற்றும்‌ வாகனங்களை நிறுத்தி வைத்தல்‌, கைப்பற்றுதல்‌ மற்றும்‌ விடுவித்தல்‌.-- (1) இச்சட்டத்தின்கீழ்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, நபர்‌ எவரும்‌, இச்சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ வகைமுறைகளுக்கு முரணாக சரக்குகள்‌ எதையும்‌ இடம்பெயரச்செய்தாலோ அல்லது போக்குவரத்தில்‌ உள்ள சரக்குகள்‌ எதையும்‌ சேகரித்து வைத்தாலோ, அத்தகைய சரக்குகள்‌ அனைத்தும்‌ மற்றும்‌ குறிப்பிட்ட சரக்குகளை எடுத்துச்செல்ல இடம்பெயருதலுக்காக பயன்படுத்தப்படும்‌ வாகனங்கள்‌ மற்றும்‌ அத்தகைய சரக்குகள்‌ மற்றும்‌ வாகனங்கள்‌ தொடர்பான ஆவணங்கள்‌ நிறுத்திவைக்கப்படட அல்லது கைப்பற்றப்பட கடப்பாடுடையதாகும்‌ மற்றும்‌ நிறுத்திவைக்கப்பட்டபின்‌ அல்லது கைப்பற்றப்பட்டபின்‌ கீழ்கண்ட நேர்வுகளில்‌ விடுவிக்கப்படவேண்டும்‌,- (அ) சரக்குகளின்‌ உரிமையாளர்‌ அத்தகைய வரி மற்றும்‌ தண்டத்தொகையை செலுத்த முன்வருவாரேயானால்‌, அத்தகைய சரக்குகள்‌ மீது செலுத்தப்படவேண்டிய வரிக்கு இணையாக நூற்றுப்பத்து விழுக்காட்டிற்கு பொறுத்தமான வரி மற்றும்‌ தண்டத்தொகை மற்றும்‌, விலக்களிக்கப்பட்ட பொருட்களின்‌ நேர்வில்‌, சரக்குகளின்‌ மதிப்பில்‌ இரண்டு விழுக்காட்டிற்கு இணையான ஒரு தொகை அல்லது ரூபாய்‌ இருபத்தைந்தாயிரம்‌, இதில்‌ எது குறைவோ, அதை செலுத்துகையில்‌; (ஆ) சரக்குகளின்‌ உரிமையாளர்‌ அத்தகைய வரி மற்றும்‌ தண்டத்தொகை செலுத்த முன்வரவில்லையெனில்‌, செலுத்தப்பட்ட வரித்தொகை குறைத்து சரக்குகளின்‌ மதிப்பிற்கு இணையான ஐம்பது விழுக்காட்டிற்கு பொறுத்தமான வரி மற்றும்‌ தண்டத்தொகை செலுத்துகையில்‌ மற்றும்‌, விலக்களிக்கப்பட்ட பொருட்களின்‌ நேர்வில்‌, சரக்குகளின்‌ மதிப்பில்‌ ஐந்து விழுக்காட்டிற்கு இணையான ஒரு தொகை அல்லது ரூபாய்‌ இருபத்தைந்தாயிரம்‌, இதில்‌ எது குறைவோ, அதை செலுத்துகையில்‌; (இ) (அ)-கூறு அல்லது (ஆ)-கூறின்கீழ்‌ செலுத்தத்தக்க தொகைக்கு இணையான பிணைத்தொகையினை குறித்துரைக்கப்பட்ட அத்தகைய படிவத்தில்‌ மற்றும்‌ முறையில்‌ வழங்குகையில்‌: வரம்புரை:- ஆனால்‌, சரக்குகளை இடம்பெயர்க்கும்‌ நபருக்கு நிறுத்திவைத்தல்‌ மற்றும்‌ கைப்பற்றுதல்‌ ஆணை ஒன்றினை வழங்காமல்‌, அத்தகைய சரக்குகள்‌ அல்லது வாகனமானது நிறுத்தி வைத்தல்‌ அல்லது கைப்பற்றுதல்‌ கூடாது. (2) 67-ஆம்‌ பிரிவின்‌ (6)-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகள்‌ அவசியமான மாறுதல்களோடு சரக்குகள்‌ மற்றும்‌ வாகனத்தை நிறுத்திவைத்தல்‌ மற்றும்‌ பறிமுதலுக்கு பொருந்தும்‌. (3) சரக்குகள்‌ அல்லது வாகனத்தை நிறுத்திவைக்கும்‌ அல்லது பறிமுதல்‌ செய்யும்‌ உரிய அலுவலர்‌, செலுத்தப்பட வேண்டிய வரி மற்றும்‌ தண்டத்தொகையை 158 குறிப்பிட்டு மற்றும்‌ அதன்‌ பின்பு வரி மற்றும்‌ தண்டத்தொகையை செலுத்தும்படி ஆணையினைப்‌ பிறப்பிக்க வேண்டும்‌. (4) கேட்பதற்கான ஒரு வாய்ப்பினை வழங்காமல்‌ (3)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ வரி, வட்டி அல்லது தண்டத்தொகை நிர்ணயிக்கப்படக்கூடாது. (5 ௫-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ சுட்டப்பட்ட தொகையினை செலுத்துகையில்‌, (3-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ குறிப்பிடப்பட்ட அறிவிக்கை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும்‌ முடிவுற்றதாக கருதப்படவேண்டும்‌. (6) சரக்குகள்‌ எதையும்‌ இடம்பெயர்வு செய்யும்‌ நபர்‌ அல்லது சரக்குகளின்‌ உரிமையாளர்‌ அத்தகைய நிறுத்திவைத்தல்‌ மற்றும்‌ கைப்பற்றுதல்‌ செய்யப்பட்ட ஏழு நாட்களுக்குள்‌ (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ வழங்கப்பட்டுள்ள வரி மற்றும்‌ தண்டத்‌ தொகையினை செலுத்தத்‌ தவறுகையில்‌, 1430-ஆம்‌ பிரிவின்‌: வகைமுறைகளுக்கிணங்க மேல்நடவடிக்கை துவங்கப்படும்‌: வரம்புரை: ஆனால்‌, நிறுத்திவைக்கப்பட்டுள்ள அல்லது பறிமுதல்‌ செய்யப்பட்டுள்ள சரக்குகள்‌ அழுகக்கூடியதாகவோ அல்லது ஆபத்து விளைவிக்கக்கூடியயாகவோ அல்லது காலம்‌ செல்ல மதிப்பில்‌ தேய்மானம்‌ அடையக்கூடியதாகவோ இருந்தால்‌, மேற்சொன்ன ஏழு நாள்‌ கால அளவை உரிய அலுவலர்‌ குறைத்திடலாம்‌. 130. சரக்குகள்‌ அல்லது வாகனங்களை பறிமுதல்‌ செய்தல்‌ மற்றும்‌ தண்டத்‌ தொகை விதித்தல்‌.- (1) இச்சட்டத்தில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, நபர்‌ எவரும்‌- () செலுத்தத்தக்க வரியினை ஏய்த்திடும்‌ எண்ணத்துடன்‌ இச்சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ வகைமுறைகள்‌ எதற்கும்‌ முரணாக சரக்குகள்‌ எதனையும்‌ அனுப்புவதோ அல்லது பெறுவதோ; அல்லது 0) இச்சட்டத்தின்கீழ்‌ அவர்‌ வரி செலுத்த கடப்பாடுடைய சரக்குகள்‌ எதையும்‌ கணக்கில்‌ காட்டாமல்‌ இருப்பதோ; அல்லது 00 இச்சட்டத்தின்கழ்‌ வரி செலுத்த கடப்பாடூடைய சரக்குகள்‌ எதையும்‌ பதிவுக்கு விண்ணப்பிக்காமல்‌ அனுப்புவதோ; அல்லது (iv) செலுத்தத்தக்க வரியினை ஏய்த்திடும்‌ எண்ணத்துடன்‌ இச்சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ வகைமுறைகளுக்கு முரணாக நடப்பதோ; அல்லது V) இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ வகைமுறைகளுக்கு முரணான, அந்த வாகனத்தின்‌ உரிமையாளர்‌ அவருடைய முகவர்‌, எவரேனும்‌, மற்றும்‌ அதற்குப்‌ பொறுப்பான நபர்‌ அறியாமல்‌ அல்லது உடந்தையுடன்‌ அது பயன்படுத்தப்பட்டது என அந்த வாகனத்தின்‌ உரிமையாளர்‌ நிரூபித்தாலன்றி, சரக்குகளை எடுத்துச்செல்லும்‌ வாகனங்கள்‌ எதுவும்‌ இடம்பெயர்தலுக்காக பயன்படுத்தப்பட்டதோ, 159 அத்தகைய சரக்குகள்‌ அல்லது வாகனங்கள்‌ அனைத்தும்‌ பறிமுதல்‌ செய்ய கடப்பாடுடையதாகும்‌ மற்றும்‌ 122-ஆம்‌ பிரிவின்கீழ்‌ தண்டத்தொகை விதித்திடவும்‌ கடப்பாடுடையதாகும்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்படி சரக்குகள்‌ அல்லது வாகனம்‌ எதனையும்‌ பறிமுதல்‌ செய்கையில்‌, தீர்ப்பு கூறும்‌ அலுவலர்‌ பறிமுதலுக்குப்‌ பதிலாக மேற்சொன்ன அதிகாரி தக்கதெனக்‌ கருதும்‌ அபராதத்தைச்‌ செலுத்துவதற்கு, சரக்குகளின்‌. உரிமையாளருக்கு தெரிவுரிமை அளிப்பார்‌: வரம்புரை: ஆனால்‌, விதிக்கத்தக்க அத்தகைய அபராதம்‌, பறிமுதல்‌ செய்யப்பட்ட சரக்குகளின்‌, அதன்மீது வசூலிக்கத்தக்க வரியினை கழித்து, சந்தை மதிப்பிற்கு மேற்படுதலாகாது: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, விதிக்கத்தக்க அத்தகைய அபராதம்‌ மற்றும்‌ தண்டத்தொகையின்‌ மொத்தமானது 129-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ விதிக்கத்தக்க தண்டத்தொகைக்கு குறைவாக இருத்தலாகாது: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, அத்தகைய வாகனம்‌ வாடகைக்கு சரக்குகள்‌ அல்லது பயணிகளை ஏற்றிச்செல்வதற்காகப்‌ பயன்படுத்தப்படுகிறவிடத்து, வாகனத்தின்‌ உரிமையாளர்‌, வாகனத்தை பறிமுதல்‌ செய்வதற்குப்பதிலாக அதில்‌ ஏற்றிச்செல்லப்பட்ட சரக்குகளின்‌ பேரில்‌ விதிக்கத்தக்க வரிக்குச்‌ சமமான அபராதம்‌ ஒன்றை செலுத்துவதற்கு தெரிவுரிமை அளித்தல்‌ வேண்டும்‌. (3) சரக்குகள்‌ அல்லது வாகனத்தை பறிமுதல்‌ செய்வதற்குப்‌ பதிலாக, (2)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அபராதம்‌ எதுவும்‌ விதிக்கப்படுமிடத்து, (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்ட அத்தகைய சரக்குகளின்‌ அல்லது வாகனத்தின்‌ உரிமையாளர்‌ அல்லது அந்த நபர்‌, அதற்குக்‌ கூடுதலாக, அத்தகைய சரக்குகள்‌ அல்லது வாகனம்‌ பொறுத்து செலுத்தத்தக்க வரி, தண்டத்தொகை மற்றும்‌ கட்டணங்கள்‌ எவற்றிற்கும்‌ கடப்பாடுடையவர்‌ ஆவார்‌. (4) சரக்குகள்‌ அல்லது வாகனத்தை பறிமுதல்‌ செய்வதற்கான அல்லது தண்டத்தொகை விதிப்பதற்கான ஆணை எதுவும்‌, அந்த நபருக்குக்‌ கேட்கப்படுவதற்கான வாய்ப்பு ஒன்று அளிக்காமல்‌ பிறப்பிக்கப்படுதல்‌ ஆகாது. (5) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ சரக்குகள்‌ அல்லது வாகனம்‌ எதுவும்‌ பறிமுதல்‌ செய்யப்படுகிறவிடத்து, அதன்பேரிலான அத்தகைய சரக்குகள்‌ அல்லது வாகனத்தின்‌ உரிமை அரசிடம்‌ அளிக்கப்பெறும்‌. (6) பறிமுதலை தீர்மானிக்கும்‌ உரிய அலுவலர்‌ பறிமுதல்‌ செய்யப்பட்ட சரக்குகளை உடைமையில்‌ எடுத்துவைத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌, அத்தகைய உரிய அலுவலரின்‌ கோரிக்கையின்‌ பேரில்‌, காவல்துறை அலுவலர்‌ ஒவ்வொருவரும்‌, அத்தகைய உடைமையில்‌ எடுத்து வைப்பதற்கு அவருக்கு உதவி செய்தல்‌ வேண்டும்‌. (7) உரிய அலுவலர்‌, இந்தச்‌ சட்டத்தின்கழான பிற நடவடிக்கைகள்‌ எதிலும்‌ பறிமுதல்‌ செய்யப்பட்ட சரக்குகள்‌ அல்லது வாகனம்‌ வேண்டுறுத்தப்படாதிருக்கிறது 160 என்று தாம்‌ திருப்தியடைந்த பின்பு, மற்றும்‌ பறிமுதல்‌ செய்வதற்குப்‌ பதிலாக அபராதம்‌ செலுத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு மேற்படாத நியாயமான காலம்‌ அளித்து பின்பு, அத்தகைய சரக்குகள்‌ அல்லது வாகனத்தை தீர்வு செய்து மற்றும்‌ அதன்‌ விற்றுமுதலை அரசிடம்‌ வைப்பிடு செய்யலாம்‌. 131. பறிமுதல்‌ அல்லது தண்டத்‌ தொகையானது பிற தண்டனையோடு குறுக்கீடு செய்யாதிருத்தல்‌.-- 1973-ஆம்‌ ஆண்டு குற்றவியல்‌ நடைமுறைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 271974) அடங்கியுள்ள வகைமுறைகளுக்கு பாதகமின்றி, இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ வகைமுறைகளின்கீழ்‌ செய்யப்படும்‌ பறிமுதல்‌ அல்லது விதிக்கப்படும்‌ தண்டத்தொகையானது, இந்த சட்டத்தின்‌ வகைமுறைகளின்கீழ்‌ அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம்‌ எதனின்கீழும்‌ பாதிக்கப்பட்ட நபருக்கு சுமத்தப்பட கடப்பாடுடைய பிற தண்டனை எதையும்‌ வழங்குவதை தடுத்தல்‌ ஆகாது. 132. ஒரு சில குற்றங்களுக்கான தண்டனை.- (1) பின்வரும்‌ குற்றங்கள்‌ எவற்றையும்‌ செய்கிற எவராயினும்‌, அவையாவன:- (அ) இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ வகைமுறைகளுக்கு மீறுகையாக, வரி ஏய்ப்பு செய்யும்‌ எண்ணத்துடன்‌, விலைப்பட்டி எதனையும்‌ அளிக்காமல்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டினையும்‌ வழங்குகிறவிடத்து; (ஆ) இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ வகைமுறைகளுக்கு மீறுகையாக, வரியை திரும்பப்பெறுதல்‌ அல்லது உள்ளீட்டு வரிவரவை தவறாகத்‌ துய்த்தல்‌ அல்லது பயன்படுத்துதல்‌ காரணமாக இருக்கிற சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை செய்யாமல்‌ விலைப்பட்டியல்‌ அல்லது பட்டியை அளிக்கிறவிடத்து; (க) (ஆ)-கூறில்‌ சுட்டப்பட்ட விலைப்பட்டியல்‌ அல்லது பட்டியை பயன்படுத்தி உள்ளீட்டு வரியை துய்க்கிறவிடத்து; () தொகை எதனையும்‌ வரியாக வசூலித்தல்‌ ஆனால்‌ அத்தகைய செலுத்துகை கொடுபட வேண்டியதாக இருக்கிற தேதியிலிருந்து மூன்று மாதங்கள்‌ கால அளவிற்கு மேற்பட்டு அரசுக்கு அதனைச்‌ செலுத்தத்தவறுகிறவிடத்து; (௨) வரி ஏய்த்தல்‌, உள்ளீட்டு வரிவரவை மோசடியாக பயன்படுத்துதல்‌, அல்லது மோசடியாக துய்த்தல்‌, திரும்பப்‌ பெறுதல்‌, மற்றும்‌ அத்தகைய குற்றம்‌ (அ) முதல்‌ (ஈ) வரையிலான கூறுகளின்கீழ்‌ உள்ளடக்கப்படாதிருக்கிறவிடத்து; (ஊ) நிதியியல்‌ ஆவணங்களை மோசடியாக மாற்றுதல்‌ அல்லது பதிலாக அமைத்தல்‌ அல்லது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ கொடுபட வேண்டிய வரி, செலுத்தத்தினை ஏய்க்கும்‌ எண்ணத்துடன்‌ பொய்க்கணக்குகளை அல்லது 161 ஆவணங்களை முன்னிலைப்படுத்துதல்‌ அல்லது தவறான தகவலை அளிக்கிறவிடத்து; (௭) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ தம்முடைய கடமைகளை ஆற்றுகையில்‌ அலுவலர்‌ எவரையும்‌ தடைசெய்தல்‌ அல்லது தடுத்திடுகிறவிடத்து; (ஏ) இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்படி அவர்‌ அறிந்தே அல்லது அவர்‌ நம்புவதற்கு காரணங்கள்‌ பெற்றிருந்து சரக்குகள்‌ எவற்றையும்‌ உடமையாக்குதல்‌, அல்லது இடம்பெயர்தலில்‌, அகற்றுதலில்‌, வைப்பீடுசெய்தலில்‌, வைத்துவருவதில்‌, மறைத்து வைத்தலில்‌, வழங்குகைகளில்‌, கொள்முதல்‌ செய்தலில்‌ அல்லது பிற எந்த வழியிலும்‌ தம்மை தொடர்புபடுத்திக்கொள்கிறவிடத்து; (ஐ) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ வகைமுறைகள்‌ எவற்றிற்கும்‌ மீறுகையாக அவர்‌ அறிந்தே அல்லது நம்புவதற்குக்‌ காரணங்கள்‌ பெற்றிருந்து சேவைகளின்‌ வழங்குகையை பெறுதல்‌ அல்லது எந்த வழியிலும்‌ வழங்குகையுடன்‌ தொடர்புற்று இருத்தல்‌ அல்லது பிற எந்த முறையிலும்‌ கையாளுகிறவிடத்து; (ஒ) முக்கியமான சாட்சியம்‌ அல்லது ஆவணங்கள்‌ எதனையும்‌ கலைத்தல்‌ அல்லது அழித்தல்‌; (ஓ) இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்படி வழங்குவதற்கு அவர்‌ வேண்டுறுத்தப்படுகிற தகவல்‌ எதனையும்‌ வழங்கத்‌ தவறுதல்‌ அல்லது (நியாயமான நம்பிக்கை, நிரூபிக்கும்‌ சுமை அவருக்கு இருந்து அவரால்‌ அளிக்கப்பட்ட தகவல்‌ உண்மையாக இருந்தாலன்றி) பொய்த்‌ தகவலை அளிக்கிறவிடத்து; அல்லது (ஒள) இந்தப்‌ பிரிவின்‌ (அ) முதல்‌ (ஓ) வரையிலான கூறுகளில்‌ குறிப்பிடப்பட்ட குற்றங்களில்‌ எதனையும்‌ செய்வதற்கு முயற்சித்தல்‌ அல்லது செய்யத்தூண்டுகிறவிடத்து, கீழ்கண்டவாறு தண்டிக்கப்படவேண்டும்‌- (i) வரித்‌ தொகை ஏய்ப்பு செய்யப்படும்‌ அல்லது உள்ளீட்டு வரிவரவுத்‌ தொகை தவறாகப்‌ துய்க்கப்படும்‌ அல்லது ஐந்நூறு லட்சம்‌ ரூபாய்க்கு மேற்படுகிற திரும்பப்பெறும்‌ தொகை தவறுதலாக எடுக்கப்படும்‌ நேர்வுகளில்‌, ஐந்தாண்டுகள்‌ கால அளவு வரை நீடிக்கலாகும்‌ சிறைத்தண்டனையும்‌ அபராதமும்‌ விதித்து தண்டிக்கத்தக்கவராவார்‌; (i) வரித்‌ தொகை ஏய்ப்பு செய்யப்படும்‌ அல்லது உள்ளிட்டு வரிவரவுத்‌ தொகை தவறுதலாக பெறப்படும்‌ மற்றும்‌ துய்க்கப்படும்‌ அல்லது இருநூறு லட்சம்‌ ரூபாய்க்கு மேற்படுகிற ஆனால்‌ ஐந்நுஈறு லட்சம்‌ ரூபாய்க்கு மேற்படாத திரும்பப்பெறும்‌ தொகை தவறுதலாக எடுக்கப்படும்‌ நேர்வுகளில்‌, மூன்றாண்டுகள்‌ கால அளவு வரை 162 நீடிக்கலாகும்‌ சிறைத்தண்டனையும்‌, அபராதமும்‌ விதித்து தண்டிக்கப்படத்தக்கவராவார்‌; 0) பிற குற்றம்‌ எதனையும்‌ பொறுத்தவரை, வரி ஏய்ப்பு செய்யப்படும்‌ தொகை அல்லது தவறாகப்‌ பெறப்பட்டு அல்லது பயன்படுத்தப்பட்ட உள்ளீட்டு வரிவரவுத்‌ தொகை அல்லது தவறுதலாக எடுக்கப்பட்ட திருப்பிக்கொடுக்கப்படும்‌ தொகை ஒரு நூறு லட்சம்‌ ரூபாய்க்கு மேற்பட்டு, இருநூறு லட்சம்‌ ரூபாய்க்கு மேற்படாதவிடத்து, ஓராண்டு வரை நீடிக்கலாகும்‌ கால அளவுக்குச்‌ சிறைத்தண்டனையும்‌, அல்லது அபராதமும்‌ விதித்து தண்டிக்கப்படத்தக்கவராவார்‌. (iv) அவர்‌ (ஊ)-கூறில்‌ அல்லது (௭)-கூறில்‌ அல்லது (ஒ)-கூறில்‌ குறித்துரைக்கப்பட்ட குற்றத்தைச்‌ செய்கிற அல்லது செய்வதற்கு தூண்டுகிறவிடத்து, அவர்‌ ஆறு மாதங்கள்‌ வரை ந்டிக்கலாகும்‌ கால அளவுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம்‌ அல்லது இரண்டும்‌ விதித்து தண்டிக்கப்படத்தக்கவராவார்‌. (2) இந்தப்‌ பிரிவின்கீழான குற்றத்திற்காக தண்டனையளிக்கப்பட்ட நபர்‌ எவரும்‌, மீண்டும்‌ இந்தச்‌ சட்டத்தின்கழான குற்றத்திற்காக தண்டனையளிக்கப்படுகிறவிடத்து, அவர்‌ இரண்டாவது மற்றும்‌ பிந்தைய குற்றம்‌ ஒவ்வொன்றுக்காகவும்‌, ஐந்தாண்டுகள்‌ வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறைத்தண்டனையும்‌ அபராதமும்‌ விதித்துத்‌ தண்டிக்கப்படத்தக்கவராவார்‌. (3) ௫-ஆம்‌ உட்பிரிவின்‌ மற்றும்‌ (2)-ஆம்‌ உட்பிரிவின்‌ (i), 00), (i) ஆகிய கூறுகளில்‌ சுட்டப்பட்ட சிறைத்தண்டனை, நீதிமன்றத்தின்‌ தீர்ப்பில்‌ பதிவு செய்யப்படுவதற்கு முரணாக எடுப்பதற்குண்டான சிறப்பு மற்றும்‌ போதிய காரணங்கள்‌ இல்லாதிருக்கையில்‌, ஆறு மாதங்களுக்குக்‌ குறையாத ஒரு கால அளவாக இருக்கும்‌. (4) 1973-ஆம்‌ ஆண்டு குற்றவியல்‌ நடைமுறைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 21974) என்ன அடங்கியிருந்த போதிலும்‌, இந்தச்‌ சட்டத்தின்கழான குற்றங்கள்‌ அனைத்தும்‌, (5)-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்ட குற்றங்கள்‌ தவிர, கைது செய்தற்குரியதல்லாத மற்றும்‌ பிணையில்‌ விடத்தக்கவையாக இருக்கும்‌. (5) (௫-ஆம்‌ உட்பிரிவின்‌ (அ)-கூறில்‌ அல்லது (ஆ)-கூறில்‌ அல்லது ()- கூறில்‌ அல்லது (ஈ)-கூறில்‌ குறித்துரைக்கப்பட்ட மற்றும்‌ அந்த உட்பிரிவின்‌ 0)-ஆம்‌ கூறின்கீழ்‌ தண்டிக்கப்படத்தக்க குற்றங்கள்‌, கைது செய்தற்குரியதாக மற்றும்‌ பிணையில்‌ விடாதவைகளாக இருக்கும்‌. (6) நபர்‌ ஒருவர்‌ ஆணையரின்‌ முன்‌ ஒப்பளிப்பின்றி, இந்தப்‌ பிரிவின்கழான குற்றம்‌ எதற்காகவும்‌ குற்றவழக்குத்‌ தொடரப்படுதல்‌ ஆகாது. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, "வரி என்ற சொல்‌, இந்தச்‌ சட்டத்தின்‌, மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவை வரிச்‌ சட்டத்தின்‌, ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்கீழ்‌ ஏய்ப்பு செய்யப்பட்ட வரித்தொகை அல்லது தவறாகத்‌ 163 துய்க்கப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட அல்லது தவறாக எடுக்கப்பட்ட திருப்பிக்கொடுத்தல்‌ தொகை மற்றும்‌ சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி (மாநிலங்களுக்குழிய நஷ்ட ஈடு) சட்டத்தின்கீழ்‌ விதிக்கப்படும்‌ மேல்வரியையும்‌ உள்ளடக்கும்‌. 133. அலுவலர்களின்‌ மற்றும்‌ ஒரு சில பிற நபர்களின்‌ கடப்பாடு (1) நபர்‌ எவரும்‌, 1451-ஆம்‌ பிரிவின்கீழ்‌ புள்ளி விவரம்‌ திரட்டுதல்‌ அல்லது அதனைத்‌ தொகுத்தல்‌ அல்லது கணினிம௰யமாக்குதல்‌ தொடர்பாக ஈடுபட்டுள்ளவிடத்து அல்லது 150௦-ஆம்‌ பிரிவின்‌. (1)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ குறித்துரைக்கப்பட்ட தகவல்‌ எதனையும்‌ அணுகிடும்‌ மாநில அலுவலர்‌ எவரேனும்‌ அல்லது நபர்‌ எவரும்‌ பொதுவான வாயில்‌ வழியாக சேவை வழங்குதல்‌ செய்தல்‌ தொடர்பாக ஈடுபட்டிருப்பாராணால்‌ அல்லது பொதுவான வாயிலின்‌ முகவர்‌, மேற்சொன்ன பிரிவுகளின்கீழ்‌ தமது கடமைகளை நிறைவேற்றுகையில்‌ அல்லாமல்‌ வேறு வகையில்‌ அல்லது இந்தச்‌ சட்டத்தின்கழான அல்லது எதன்படியுமான குற்ற வழக்கின்‌ நோக்கங்களுக்காக இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்படி அளிக்கப்பட்ட அறிக்கையின்‌ தகவல்‌ எதனையும்‌ அல்லது உள்ளடக்கங்களை வேண்டுமென்றே வெளியிடுவாரானால்‌, அவர்‌, ஆறு மாதங்கள்‌ வரை நீடிக்கலாகும்‌ ஒரு கால அளவுக்குச்‌ சிறைத்தண்டனையையோ அல்லது இருபத்தைந்தாயிரம்‌ ரூபாய்‌ வரை நீடிக்கலாகும்‌ அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்துத்‌ தண்டிக்கப்படத்தக்கவராவார்‌. (2) (அ) அரசுப்‌ பணியாளராக இருக்கிற நபர்‌ எவருக்கும்‌ எதிராக அரசின்‌ முன்‌ ஒப்பளிப்பின்றி, இந்தப்‌ பிரிவின்கீழான குற்றம்‌ எதற்காகவும்‌ குற்ற வழக்குத்‌ தொடருதல்‌ ஆகாது; (ஆ) அரசுப்‌ பணியாளராக இராத நபர்‌ எவரும்‌, ஆணையரின்‌ முன்‌ ஒப்பளிப்பின்றி, இந்தச்‌ சட்டத்தின்கழான குற்றம்‌ எதற்காகவும்‌ குற்ற வழக்குத்‌ தொடருதல்‌ ஆகாது. 134. குற்றங்களை விசாரணைக்கு எடுத்துக்‌ கொள்ளுதல்‌.-- நீதிமன்றம்‌ எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்படி தண்டிக்கப்படத்தக்க குற்றம்‌ எதனையும்‌, ஆணையரின்‌ முன்‌ ஒப்பளிப்பின்றி, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்‌ ஆகாது மற்றும்‌ முதல்‌ வகுப்பு குற்றவியல்‌ நடுவர்‌ நீதிபதிக்கு கழ்நிலையிலுள்ள நீதிமன்றம்‌ எதுவும்‌ அத்தகைய குற்றம்‌ எதனையும்‌ விசாரணை செய்தல்‌ ஆகாது. 135. குற்றமுறு மனநிலையை அனுமானித்தல்‌.-- இந்தச்‌ சட்டத்தின்கழான குற்றத்திற்காக குற்ற வழக்குத்‌ தொடருதல்‌ எதுவும்‌, குற்றம்‌ சுமத்தப்பட்டவரின்‌ பங்கில்‌ குற்றமுறு மனநிலையை வேண்டுறுத்துகையில்‌, அந்த நீதிமன்றம்‌, அத்தகைய குற்றமுறு மனநிலை இருக்கிறது என்று அனுமானித்தல்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, 164 (i) "குற்றமுறு மனநிலை" என்ற சொற்றொடரானது, நோக்கம்‌, உள்நோக்கம்‌, பொருண்மை பற்றிய அறிவு மற்றும்‌ பொருண்மையின்‌ நம்பிக்கை அல்லது நம்புவதற்குரிய காரணம்‌ ஆகியவற்றை உள்ளடக்கும்‌; (i) நீதிமன்றம்‌ நியாயமான ஐயத்தைக்கடந்து அது இருந்து வருகிறது என்று நம்புகிறபோது மற்றும்‌ நிகழ்தற்குரிய கூறுகள்‌ பெரிதும்‌ மிகுந்திருத்தலால்‌ இருந்து வருவதும்‌, நிறுவப்பட்டபோது மட்டுமே பொருண்மை மெய்பிக்கப்பட்டதாக சொல்லப்படும்‌. 136. ஒருசில சூழ்நிலைகளின்கீழ்‌ விவரவுரைகளின்‌ தொடர்புடைமை.- இந்த சட்டத்தின்கழான விசாரணை அல்லது நடவடிக்கைகளின்‌ போது 70-ஆம்‌ பிரிவின்கீழ்‌ பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணைகள்‌ எவற்றுக்கும்‌ இணங்க முன்னிலையாகும்‌ நபரால்‌ செய்யப்படும்‌ மற்றும்‌ கையொப்பமிடப்படும்‌ விவரவுரை, இந்தச்‌ சட்டத்தின்கீழான குற்றத்திற்கான குற்றவழக்கு எதிலும்‌ பொருண்மைகளின்‌ உண்மையில்‌ அடங்கியுள்ள. (அ) விவரவுரையைச்‌ செய்த நபர்‌ இறந்துவிடுகிறவிடத்து அல்லது கண்டுபிடிக்கிற முடியாதவிடத்து அல்லது சான்று அளிக்க முடியாதிருக்கிறவிடத்து அல்லது எதிர்தரப்பினரால்‌ முறைதவறி வைத்துவரப்படுகிறவிடத்து அல்லது காலந்தாழ்வு அல்லது செலவுத்தொகை இல்லாமல்‌ அவருடைய வந்திருக்கையை பெறமுடியாதபோது, வழக்கின்‌ சூழ்நிலைகளின்கீழ்‌, நீதிமன்றம்‌ நியாயமற்றதாகக்‌ கருதுகிறது; அல்லது (ஆ) விவரவுரையை செய்த நபர்‌ நீதிமன்றத்தின்‌ முன்புள்ள வழக்கில்‌ சாட்சியாக விசாரிக்கப்படும்போது மற்றும்‌ நீதிமன்றத்தின்‌ கருத்தில்‌, வழக்கின்‌ சூழ்நிலைகளைக்‌ கருத்தில்‌ கொண்டு, நீதியின்‌ நலன்கருதி அந்த விவரவுரை அணுமதிக்கப்படும்‌. 137. நிறுமங்களால்‌ செய்யப்படும்‌ குற்றங்கள்‌.- (1) இந்தச்‌ சட்டத்தின்கழான ஒரு குற்றத்தைச்‌ செய்கிற நபர்‌ ஒரு நிறுமமாக இருக்கிறவிடத்து, அந்தக்‌ குற்றம்‌ செய்யப்பட்ட நேரத்தில்‌ அந்த நிறுமத்தின்‌ அலுவலை நடத்தி வருவதற்கு அந்த நிறுமத்தின்‌ பொறுப்பைக்‌ கொண்டிருந்தவரும்‌, அதற்குப்‌ பொறுப்பாயிருந்துவருபவருமான ஒவ்வொரு நபரும்‌, அதோடு அந்த நிறுவனமும்‌ அந்தக்‌ குற்றத்தைச்‌ செய்ததாகக்‌ கொள்ளப்படுதலும்‌ மற்றும்‌ அதன்படியே எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுத்‌ தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதலும்‌ வேண்டும்‌. (2 ௫௬-ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, இந்தச்‌ சட்டத்தின்கழான ஒரு குற்றம்‌ ஒரு நிறுமத்தினால்‌ செய்யப்பட்டிருந்து, அந்த நிறுமத்தின்‌ எவரேனும்‌ இயக்குநரின்‌, மேலாளரின்‌, செயலாளரின்‌ அல்லது பிற அலுவலரின்‌ இசைவுடன்‌ அல்லது மறைமுக ஆதரவுடன்‌ அந்தக்‌ குற்றம்‌ செய்யப்பட்டிருக்கிறது அல்லது அவர்பாலுள்ள கவனக்குறைவு எதற்கும்‌ சாட்டத்தக்ககாக இருக்கிறது. என்று மெய்பிக்கப்படுகிறவிடத்து, அத்தகைய 165 இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌ அல்லது பிற அலுவலர்‌ அந்தக்‌ குற்றத்தைச்‌ செய்திருப்பதாகக்‌ கொள்ளப்படுதலும்‌ அதன்படியே எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுத்‌ தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதலும்‌ வேண்டும்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ கூட்டாண்மை நிறுமம்‌ அல்லது வரையறுக்கப்பட்ட கடப்பாடுடைய கூட்டாண்மை அல்லது இந்துக்கூட்டுக்‌ குடும்பம்‌ அல்லது அறக்கட்டளையாக இருக்கின்ற ஒரு வரிவிதிக்கத்தக்க நபரால்‌ ஒரு குற்றம்‌ செய்யப்பட்டிருக்கிறவிடத்து, கூட்டாளி அல்லது கர்த்தா அல்லது அறங்காவலர்‌ அந்தக்‌ குற்றத்தை செய்ததாக கொள்ளப்படுதலும்‌ மற்றும்‌ அதன்படியே எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதலும்‌ வேண்டும்‌, மற்றும்‌ 2-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகள்‌ அத்தகைய நபர்களுக்கு தேவையான மாற்றங்களோடு பொருந்தும்‌. (4) இந்தப்‌ பிரிவில்‌ அடங்கியுள்ளவை எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தில்‌ வழங்கப்பட்டுள்ள தண்டனை எதற்கும்‌ கடப்பாடுடைய நபர்‌ எவருக்கும்‌ அவருக்குத்‌ தெரியாமல்‌ அந்தக்‌ குற்றம்‌ நடந்துள்ளது அல்லது அத்தகைய குற்றம்‌ நடப்பதைத்‌ தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும்‌ செய்தார்‌ என்று அவர்‌ நிரூபித்தால்‌ அவை பொருந்தாது. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, (i) "நிறுமம்‌" என்பது, கூட்டு உரிமம்‌ என்று பொருள்படும்‌, மற்றும்‌ ஒரு நிறுவகத்தை அல்லது மற்ற தனிநபர்களின்‌ கழகத்தை உள்ளடக்கும்‌. (i) ஒரு நிறுவகம்‌ தொடர்பான "இயக்குநர்‌" என்பது நிறுவகத்திலுள்ள ஒரு கூட்டாளி என்று பொருள்படும்‌. 138. குற்றங்களை சமரசமாகத்‌ தீர்த்தல்‌.- (1) இந்தச்‌ சட்டத்தின்படியான குற்றம்‌ எதுவும்‌, குற்ற வழக்குத்‌ தொடர்வதற்கு முன்பு அல்லது அதற்கு பின்பு, குற்றத்திற்காகக்‌ குற்றம்‌ சுமத்தப்பட்ட நபரால்‌ மைய அரசுக்கு அல்லது, நேர்விற்கேற்ப, மாநில அரசுக்கு வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ அத்தகைய சமரசத்‌ தொகையைச்‌ செலுத்துவதன்பேரில்‌, ஆணையரால்‌ சமரசம்‌ செய்யப்படலாம்‌: வரம்புரை: ஆனால்‌, இந்தப்‌ பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌- (அ) 1432-ஆம்‌ பிரிவின்‌ (1-ஆம்‌ உட்பிரிவின்‌ (அ) முதல்‌ (2er) வரையுள்ள கூறுகளில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள குற்றங்களில்‌ எதனையும்‌ பொறுத்து மற்றும்‌ மேற்சொன்ன உட்பிரிவின்‌ (அ) முதல்‌ (ஓ) வரையுள்ள கூறுகளில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள குற்றங்களுக்கு தொடர்புடைய (ஒள) கூறில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள குற்றங்களைப்‌ பொறுத்தும்‌ ஒருமுறை சமரசம்‌ செய்ய அனணுமதிக்கப்பட்டுள்ள நபருக்குப்‌ பொருந்தாது: (ஆ) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது பிற மாநில சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி சட்டத்தின்‌ அல்லது மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்‌ 166 அல்லது யூணியன்‌ பிரதேச சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்‌ அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்கீழ்‌ வழங்குகைகளின்‌ மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேற்படுகிறவிடத்து, (அ) கூறில்‌ உள்ளவை அல்லாத பிற, குற்றம்‌ எதனையும்‌ பொறுத்து ஒருமுறை சமரசம்‌ செய்ய அனுமதிக்கப்பட்ட நபர்‌ ஒருவருக்கு பொருந்தாது; (இ) அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம்‌ எதன்படியுமான ஒரு குற்றமாக உள்ள குற்றத்தை இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செய்துள்ளதாக குற்றம்‌ சுமத்தப்பட்டுள்ள நபர்‌ ஒருவருக்கு பொருந்தாது; (") நீதிமன்றத்தினால்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ குற்றம்‌ ஒன்றிற்காக தண்டனையளிக்கப்பட்டுள்ள நபர்‌ ஒருவருக்குப்‌ பொருந்தாது; (௨) 132-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்‌ (௭)-கூறில்‌ அல்லது (ஒ)- கூறில்‌ அல்லது (ஓ)-கூறில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள குற்றத்தைச்‌ செய்து குற்றம்‌ சுமத்தப்பட்டுள்ள நபர்‌ ஒருவருக்குப்‌ பொருந்தாது; (ஊ) வகுத்துரைக்கப்படலாகும்‌ நபர்களின்‌ அல்லது குற்றங்களின்‌ பிறவகை எதற்கும்‌ பொருந்தாது: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, இந்தப்‌ பிரிவின்‌ வகைமுறைகளின்கீழ்‌ அனுமதிக்கப்பட்ட சமரசம்‌ எதனையும்‌, பிற சட்டம்‌ எதன்படியும்‌ தொடரப்பட்ட நடவடிக்கைகள்‌, எவையேனுமிருப்பின்‌, அதனைப்‌ பாதித்தல்‌ ஆகாது: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, அத்தகைய குற்றங்களில்‌ உள்ளடங்கியுள்ள வரி, வட்டி மற்றும்‌ தண்டத்தொகையை செலுத்திய பின்பு மட்டுமே சமரசம்‌ அனுமதிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) இந்தப்‌ பிரிவின்கீழ்‌ குற்றங்களின்‌ சமரசத்திற்கான தொகையானது, பத்தாயிரம்‌ ரூபாய்க்கு அல்லது உள்ளடங்கியுள்ள வரியின்‌ ஐம்பது விழுக்காடு, இதில்‌ எது அதிகமானதோ, அதற்கு குறையாத குறைந்தபட்ச தொகைக்கு உட்பட்டு, மற்றும்‌ முப்பதாயிரம்‌ ரூபாய்க்கு அல்லது வரியின்‌ நூற்றி ஐம்பது விழுக்காடு, இதில்‌ எது அதிகமோ, அதற்கு குறையாத அதிகபட்ச தொகைக்கு உட்பட்டு வகுத்துரைக்கப்படலாகுமாறு இருக்கும்‌. (3) ஆணையரால்‌ முடிவு செய்யப்படலாகும்‌ அத்தகைய சமரசத்‌ தொகையை செலுத்துவதன்பேரில்‌, மேலுமான நடவடிக்கைகள்‌ எவையும்‌ அதே குற்றம்‌ பொறுத்து குற்றம்‌ சுமத்தப்பட்ட நபருக்கு எதிராக இந்தச்‌ சட்டத்தின்படி தொடரப்படுதல்‌ ஆகாது மற்றும்‌ குற்றவியல்‌ நடவடிக்கைகள்‌ எவையும்‌, மேற்சொன்ன குற்றம்‌ பொறுத்து ஏற்கனவே தொடரப்பட்டிருக்குமானால்‌, அற்றுப்போகும்‌. அத்தியாயம்‌ XX மாறுதற்கால வகைமுறைகள்‌. 167 139. இருந்துவரும்‌ வரி செலுத்துநர்களின்‌ வலசை பெயர்தல்‌.- (1) குறித்திட்ட நாளன்றும்‌ அது முதற்கொண்டும்‌, இருந்துவரும்‌ சட்டங்களில்‌ எதன்படியும்‌ பதிவு பெற்ற மற்றும்‌ செல்லத்தக்க நிரந்தர கணக்கு எண்‌ கொண்டிருக்கிற நபர்‌ ஒவ்வொருவருக்கும்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு மற்றும்‌ அத்தகைய படிவத்திலும்‌ முறையிலும்‌, தற்காலிக அடிப்படையின்‌ பேரில்‌ பதிவுச்‌ சான்றிதழ்‌ பிறப்பிக்கப்படுதல்‌ வேண்டும்‌. அது, (2)-ஆம்‌ உட்பிரிவின்‌ இறுதி பதிவுச்‌ சான்றிதழால்‌ மாற்றி அமைக்கப்பட்டாலன்றி, அவ்வாறு வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகள்‌ அதனுடன்‌ இணங்கவில்லையானால்‌, ரத்து செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (2) இறுதி பதிவுச்‌ சான்றிதழை அத்தகைய படிவத்தில்‌ மற்றும்‌ முறையில்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்குதல்‌ வேண்டும்‌. (3) 0-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ நபருக்கு அளிக்கப்பட்ட பதிவுச்‌ சான்றிதழானது, அவர்‌ 22-ஆம்‌ பிரிவின்கீழ்‌ அல்லது 24-ஆம்‌ பிரிவின்கீழ்‌ பதிவு செய்வதற்கு கடப்பாடு உடையவராக இல்லை என்று அத்தகைய நபரால்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஒட்டி மேற்சொன்ன பதிவு ரத்து செய்யப்பட்டிருக்குமேயானால்‌, வழங்கப்படவில்லை என கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 140. உள்ளிட்டு வரி வரவுக்கான மாறுதற்கால ஏற்பாடுகள்‌.- (1) 10-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வரியைச்‌ செலுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்‌ அல்லாத பிற பதிவு பெற்ற நபர்‌, தன்னுடைய மின்னணு வரவு பேரேட்டில்‌, குறித்திட்ட நாளுக்கு உடனடியாக வரும்‌ முந்தைய நாளுடன்‌ முடிவடைகின்ற காலம்‌ தொடர்பான, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ தற்போதைய சட்டத்தின்படி அவரால்‌ அளிக்கப்பட்ட அறிக்கையில்‌ கொண்டுவரப்பட்ட மதிப்புக்கூட்டு வரி மற்றும்‌ நுழைவு வரி, ஏதேனும்‌ இருப்பினும்‌, அதன்‌ தொகையின்‌ வரவினை எடுத்துக்‌ கொள்ள தகுதியுடையவராக மாட்டார்‌: வரம்புரை: ஆனால்‌, பதிவு பெற்ற நபர்‌ பின்வரும்‌ சூழ்நிலைகளில்‌ வரவினை எடுத்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்படுதல்‌ கூடாது, அதாவது:- (i) மேற்சொன்ன வரவுத்‌ தொகையானது, இந்தச்சட்டத்தின்கீழ்‌ உள்ளிட்டு வரி வரவாக அனுமதிக்கப்படாது இருக்கிறவிடத்து; அல்லது (i) அவர்‌ குறித்திட்ட தேதிக்கு உடனடியாக வரும்‌ முந்தைய ஆறு மாதங்கள்‌ காலத்திற்கு தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ வேண்டப்பட்ட அனைத்து அறிக்கைகளையும்‌ அளிக்காது இருக்கிறவிடத்து: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, 1956-ஆம்‌ ஆண்டு மைய விற்பனை வரிச்‌ சட்டத்தின்‌ 3-ஆம்‌ பிரிவு, 5-ஆம்‌ பிரிவின்‌ (3)-ஆம்‌ உட்பிரிவு, 6-ஆம்‌ பிரிவு, பிரிவு 6& அல்லது 8-ஆம்‌ பிரிவின்‌ (8)-ஆம்‌ உட்பிரிவு தொடர்பான கோரிக்கை எதற்கும்‌ உடைமையாக்கத்தக்கதாக இருத்தல்‌ மற்றும்‌ 1957-ஆம்‌ ஆண்டு மைய விற்பனை வரி (பதிவு செய்தல்‌ மற்றும்‌ விற்பனை அளவு) விதிகளின்‌ 12-ஆம்‌ விதியில்‌ 168 வகுத்துரைக்கப்பட்டுள்ள காலத்திற்குள்‌ மற்றும்‌ முறையில்‌ உறுதிபடுத்தாதிருக்கும்‌ அந்த அளவிற்கான மேற்சொன்ன வரவானது மின்னணு வரவு பேரேட்டில்‌ வரவு வைக்கப்படுவதற்கு தகுதி உடையது ஆகாது: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, இரண்டாவது வரம்புரையில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள வரவுத்தொகைக்கு சமானதான தொகையை, 1957-ஆம்‌ ஆண்டு மைய விற்பனை வரி (பதிவு செய்தல்‌ மற்றும்‌ விற்பனை அளவு) விதிகளின்‌ 12-ஆம்‌ விதியில்‌ வகுத்துரைக்கப்பட்டுள்ள முறையில்‌ மேற்சொன்ன உரிமை கோரிக்கைகளை உறுதி செய்யும்போது, தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ திருப்பிக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌. (2) 19-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வரியை செலுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்‌ அல்லாத பிற பதிவுபெற்ற நபர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ குறித்திட்ட நாளுக்கு உடனடியாக வரும்‌ முந்தைய நாளில்‌ முடிவடைகின்ற காலத்திற்காக, அவரால்‌ தற்போதுள்ள சட்டத்தின்படி அளிக்கப்பட்ட அறிக்கையில்‌ முன்னோக்கி வரவு வைக்கப்படாத, முதலீட்டு சரக்குகள்‌ தொடர்பாக பயன்படுத்தாத உள்ளிட்டு வரி வரவினை தன்னுடைய மின்னணு வரவு பேரேட்டில்‌ வரவு வைப்பதற்கு உரறிமையுடையவர்‌ ஆவார்‌: வரம்புரை: ஆனால்‌, பதிவு பெற்ற நபர்‌, தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ மேற்சொன்ன வரவு உள்ளீட்டு வரி வரவாக அணுமதிக்கப்பட்டிருந்தாலன்றி மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ உள்ளீட்டு வரி வரவாக கூட அனுமதிக்கப்பட்டிருந்தாலன்றி, வரவினை மேற்கொள்வதற்கு அனுமதித்தல்‌ கூடாது. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, "துய்க்கப்படாத உள்ளீட்டு வரி வரவு" எனும்‌ சொற்றொடர்‌, தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ மேற்சொன்ன முதலீட்டு சரக்குகள்‌ தொடர்பாக மேற்சொன்ன நபர்‌ உரிமை கோருவதற்குரிய உள்ளீட்டு வரி வரவின்‌ மொத்த தொகையிலிருந்து தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ வரி விதிக்கத்தக்க நபரால்‌ முதலீட்டு சரக்குகள்‌ தொடர்பாக முன்பே துய்க்கப்பட்ட உள்ளிட்டு வரி வரவின்‌ தொகையை கழித்த பின்பு எஞ்சியுள்ள தொகை என்று பொருள்படும்‌. (3) தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ பதிவு செய்யப்படுவதற்கு கடப்பாடு இல்லாத அல்லது, எந்த பெயரால்‌ அழைக்கப்படினும்‌, விலக்களிக்கப்பட்ட சரக்குகளை அல்லது வரியில்லாத சரக்குகளை, அல்லது தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ மாநிலத்தில்‌ அதனுடைய விற்பனையின்‌ முதல்‌ முனையில்‌ வரி விதிப்புக்கு உள்ளான மற்றும்‌ மாநிலத்தில்‌ அடுத்தடுத்த விற்பனைகளில்‌ வரிக்கு உட்படுத்தப்படாத ஆனால்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரிக்கு கடப்பாடுடைய சரக்குகளை விற்பனை செய்வதற்கு ஈடுபட்டுள்ள அல்லது சரக்குகளை விற்பனை செய்யும்‌ நேரத்தில்‌ உள்ளீட்டு வரி வரவிற்கு தகுதியுடையவராக இருக்கும்‌ நபர்‌, பின்வரும்‌ நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறித்திட்ட நாளில்‌ வைத்து வரப்பட்ட பகுதி முடிக்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட சரக்குகளில்‌ அடங்கியுள்ள உள்ளீடுகள்‌ மற்றும்‌ இருப்பில்‌ இருக்கும்‌ உள்ளீடுகள்‌ தொடர்பாக மின்னணு வரவுப்‌ பேரேட்டில்‌, மதிப்புக்கூட்டு வரி மற்றும்‌ நுழைவு வரி, ஏதேனும்‌ இருப்பின்‌ அதன்‌ வரவினை வரவு வைப்பதற்கு தகுதியுடையவராவார்‌, அதாவது:- 169 (i) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரி விதிக்கத்தக்க வழங்குகைகளை செய்வதற்காக அத்தகைய உள்ளீடுகள்‌ அல்லது சரக்குகள்‌ பயன்படுத்தப்பட்டது அல்லது பயன்படுத்தப்படுவதற்கு கருதப்பட்டது; (i) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அத்தகைய உள்ளீடுகள்‌ மீது உள்ளிட்டு வரி வரவிற்கு தகுதியுடைய மேற்சொன்ன பதிவு பெற்ற நபர்‌; (i) பதிவு பெற்ற நபர்‌, அத்தகைய உள்ளீடுகள்‌ தொடர்பாக தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ வரி செலுத்தியதை நிரூபிக்கும்‌ சரக்குகளின்‌ விலைப்பட்டியல்‌ அல்லது பிற வகுத்துரைக்கப்பட்ட ஆவணங்கள்‌ வைத்திருத்தல்‌; மற்றும்‌ (iv) அத்தகைய சரக்குகளின்‌. விலைப்பட்டியலை அல்லது பிற வகுத்துரைக்கப்பட்ட ஆவணங்களை குறித்திட்ட நாளுக்கு உடனடியாக வரும்‌ முந்தைய பன்னிரெண்டு மாதங்களுக்கு முன்பாக வழங்கப்பட்டிருத்தல்‌ கூடாது: வரம்புரை: ஆனால்‌, உற்பத்தியாளர்‌ அல்லது சேவைகள்‌ வழங்குநர்‌ அல்லாத பிற பதிவு பெற்ற நபர்‌, உள்ளீடுகள்‌ தொடர்பாக வரியை செலுத்தியதற்கு சான்றாக சரக்குகளின்‌ விலைப்பட்டியலை அல்லது பிற ஆவணங்கள்‌ எதையும்‌ தன்வசம்‌ வைத்திருக்கிறாதவிடத்து, மேற்சொன்ன பதிவு பெற்ற நபர்‌, பெற்றுக்கொள்பவருக்கு குறைக்கப்பட்ட விலைகளின்‌ மூலமாக அத்தகைய வரவின்‌ நலப்பயணை கொண்டு செல்லுதல்‌ வேண்டும்‌ என்பது உள்ளடங்கலான வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கு, வரைதடைகளுக்கு மற்றும்‌ பாதுகாப்பிற்கு உட்பட்டு, அத்தகைய வீதத்தில்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்பட்ட அத்தகைய முறையில்‌ வரவிணை எடுத்துக்‌ கொள்வதற்கு அனுமதிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (4) எந்தப்பெயரால்‌ அழைக்கப்பட்டாலும்‌, வரிவிதிக்கத்தக்க சரக்குகளை மற்றும்‌ விலக்களிக்கப்பட்ட சரக்குகளை அல்லது தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ வரிக்கு உட்படாத, ஆனால்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரிக்கு கடப்பாடுடைய சரக்குகளை விற்பனை செய்வதற்கு ஈடுபட்டுள்ள பதிவுபெற்ற நபர்‌, தண்ணுடைய மின்னணு வரவு பேரேட்டில்‌, பின்வருவனவற்றைப்‌ பொறுத்து எடுத்துக்‌ கொள்வதற்கு தகுதியுடையவர்‌ ஆவார்‌- (அ) (1-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கு இணங்கியவாறு தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ அவரால்‌ அளிக்கப்பட்ட அறிக்கையில்‌ முன்னோக்கி கொண்டுவரப்பட்ட மதிப்புக்கூட்டு வரி மற்றும்‌ நுழைவு வரி, ஏதேனும்‌ இருப்பின்‌, அதன்‌ மதிப்பின்‌ வரவுத்‌ தொகை; மற்றும்‌ (ஆ) அத்தகைய விலக்களிக்கப்பட்ட சரக்குகள்‌ அல்லது வரிக்கு உட்படாத சரக்குகள்‌ தொடர்பாக, எந்தப்‌ பெயரால்‌ அழைக்கப்பட்டாலும்‌, (3)-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கு இணங்கி, குறித்திட்ட நாளில்‌ இருப்பில்‌ உள்ள உள்ளீடுகள்‌ மற்றும்‌ இருப்பில்‌ உள்ள பகுதி முடிக்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட சரக்குகளில்‌ உள்ள உள்ளீடுகள்‌ தொடர்பான மதிப்புக்கூட்டு வரி மற்றும்‌ நுழைவு வரியின்‌ வரவுத்‌ தொகை. 170 (5) பதிவு பெற்ற நபர்‌, குறித்திட்ட நாளன்று அல்லது அதற்கு பின்பு பெற்றுக்கொள்ளப்பட்ட ஆனால்‌ தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ வழங்குநரால்‌ வரி செலுத்தப்பட்ட உள்ளீடுகள்‌ தொடர்பாக, குறித்திட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள்‌ அத்தகைய நபரின்‌ கணக்கு புத்தகங்களில்‌ விலைப்பட்டியல்‌ அல்லது பிற வரி செலுத்தும்‌ விண்ணப்பம்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற நிபந்தனைக்குட்பட்டு, மதிப்புக்கூட்டு வரி மற்றும்‌ நுழைவு வரி, ஏதேனும்‌ இருப்பின்‌, அதன்‌ வரவினை தன்னுடைய மின்னணு வரவு பேரேட்டில்‌ எடுத்துக்‌ கொள்வதற்கு தகுதியுடையவர்‌ ஆவார்‌: வரம்புரை: ஆனால்‌, முப்பது நாட்கள்‌ காலத்தை, போதிய காரணத்தை வெளிப்படுத்துவதன்‌ பேரில்‌, முப்பது நாட்களுக்கு மேற்படாத மேலுமான காலத்திற்கு ஆணையர்‌ நீட்டிப்பு செய்யலாம்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, மேற்சொன்ன பதிவு பெற்ற நபர்‌, இந்த உட்பிரிவின்கீழ்‌ எடுக்கப்பட்ட வரவு தொடர்பாக வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ விவர உரையை அளித்தல்‌ வேண்டும்‌. (6) அறுதி செய்யப்பட்ட விதத்தில்‌ வரியை செலுத்துகிற அல்லது தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ செலுத்தக்‌ கூடிய வரிக்குப்‌ பதிலாக அறுதி செய்யப்பட்ட தொகையை செலுத்தும்‌ பதிவு பெற்ற நபர்‌, குறித்திட்ட நாளில்‌ இருப்பில்‌ உள்ள உள்ளீடுகள்‌ மற்றும்‌ பகுதி முடிக்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட சரக்குகளில்‌ உள்ள உள்ளீடுகள்‌ தொடர்பாக, பின்வரும்‌ நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மதிப்புக்கூட்டு வரியின்‌ வரவினை, அவருடைய மின்னணு வரவுப்‌ பேரேட்டில்‌, எடுத்துக்‌ கொள்வதற்கு தகுதியுடையவர்‌ ஆவார்‌, அதாவது:- (i) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரி விதிக்கத்தக்க வழங்குகைகளை செய்வதற்காக அத்தகைய உள்ளீடுகள்‌ அல்லது சரக்குகள்‌ பயன்படுத்தப்பட்டது அல்லது பயன்படுத்தப்படுவதற்கு கருதப்பட்டது; 0) மேற்சொன்ன பதிவு பெற்ற நபர்‌ 10-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வரியை செலுத்தாது இருத்தல்‌; 00 இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அத்தகைய உள்ளீடுகள்‌ மீது உள்ளீட்டு வரி வரவிற்கு தகுதியுடைய மேற்சொன்ன பதிவு பெற்ற நபர்‌; 0) பதிவு பெற்ற நபர்‌, அத்தகைய உள்ளீடுகள்‌ தொடர்பாக தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ வரி செலுத்தியதை நிரூபிக்கும்‌ சரக்குகளின்‌ விலைப்பட்டியல்‌ அல்லது பிற வகுத்துரைக்கப்பட்ட ஆவணங்கள்‌ வைத்திருத்தல்‌; மற்றும்‌ V) அத்தகைய சரக்குகளின்‌ விலைப்‌ பட்டியலை அல்லது பிற வகுத்துரைக்கப்பட்ட ஆவணங்களை குறித்திட்ட நாளுக்கு உடனடியாக வரும்‌ முந்தைய பன்னிரெண்டு மாதங்களுக்கு முன்பாக வழங்கப்பட்டிருத்தல்‌ கூடாது: (7) (3, (4) மற்றும்‌ (6)-ஆம்‌ உட்பிரிவுகளின்கீழ்‌ வரவுத்‌ தொகையை, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ கணக்கிடுதல்‌ வேண்டும்‌. 171 141. சில்லறைப்‌ பணிகள்‌ தொடர்பான மாறுதற்கால வகைமுறைகள்‌.- (1) வணிக இடத்தில்‌ பெறப்பட்ட உள்ளிட்டு சரக்குகள்‌ எதுவும்‌, குறித்திட்ட நாளுக்கு முன்பு தற்போதுள்ள சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு இணங்கியவாறு மேலுமான செயல்முறைக்காக, ஆய்விற்காக, பழுதுபாற்ப்பதற்காக, மீண்டும்‌ சரி செய்வதற்காக அல்லது பிற நோக்கம்‌ எதற்காகவும்‌, சில்லறை வேலையாளுக்கு அவ்வாறு அனுப்பி வைத்தல்‌ அல்லது பகுதியளவில்‌ செய்து முடித்த பின்பு அனுப்பி வைத்தல்‌ மற்றும்‌ குறித்திட்ட நாளன்று அல்லது அதற்கு பின்பு அத்தகைய உள்ளீட்டு சரக்குகளை மேற்சொன்ன இடத்திற்கு திருப்பி அனுப்புகிறவிடத்து, அத்தகைய உள்ளிட்டு சரக்குகள்‌, சில்லறை பணிகள்‌ முடிவுற்ற பின்பு அல்லது பிறவாறாக, மேற்சொன்ன இடத்திற்கு குறித்திட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள்‌ திருப்பி அனுப்பப்படுமேயானால்‌ வரியைச்‌ செலுத்தக்‌ கூடாது: வரம்புரை: ஆனால்‌, ஆறு மாதங்கள்‌ காலத்தை, உரிய காரணத்தை வெளிப்படுத்துவதன்பேரில்‌, இரண்டு மாதங்களுக்கு மிகாத மேலுமான காலத்திற்கு ஆணையர்‌ நீட்டிப்பு செய்யலாம்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, அத்தகைய உள்ளீடுகள்‌ இந்த உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள காலத்திற்குள்‌ திருப்பிக்‌ கொடுக்கப்படவில்லையென்றால்‌, 1442-ஆம்‌ பிரிவின்‌ (8)-ஆம்‌ உட்பிரிவின்‌ (அ)-கூறின்‌ வகைமுறைகளுக்கு இணங்கியவாறு உள்ளீட்டு வரிவரவினை வளூலிப்பதற்கு கடப்பாடு உடையதாய்‌ இருத்தல்‌ வேண்டும்‌. (2) குறித்திட்ட நாளுக்கு முன்பு தற்போதுள்ள சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு இணங்கியவாறு குறித்த சில உற்பத்தி நடவடிக்கைகளை எடுத்துச்‌ செல்வதற்காக பிற வளாகங்கள்‌ எதற்கும்‌ வணிக இடத்திலிருந்து பகுதி அளவில்‌ முடிக்கப்பட்ட சரக்குகளை அனுப்புகிறவிடத்து மற்றும்‌ அத்தகைய சரக்குகளை (இதன்பின்பு இந்த உட்பிரிவில்‌ "மேற்சொன்ன சரக்குகள்‌" என சுட்டப்பட்டவாறு) குறித்திட்ட நாளன்று அல்லது அதற்கு பின்பு மேற்சொன்ன இடத்திற்கு திருப்பியனுப்புகிறவிடத்து, மேற்சொன்ன சரக்குகளானது, உற்பத்தி நடவடிக்கைக்கு பின்பு அல்லது பிறவாறாக, குறித்திட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள்‌ மேற்சொன்ன இடத்திற்கு திருப்பி அனுப்பப்படுமேயானால்‌ வரி செலுத்தத்‌ தேவையில்லை: வரம்புரை: ஆனால்‌, ஆறு மாதங்கள்‌ காலத்தை, உரிய காரணத்தை வெளிப்படுத்துவதன்‌ பேரில்‌, இரண்டு மாதங்களுக்கு மிகாத மேலுமான காலத்திற்கு ஆணையர்‌ நீட்டிப்பு செய்யலாம்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, மேற்சொன்ன சரக்குகள்‌, இந்த உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள காலத்திற்குள்‌ திருப்பி ஒப்படைக்கப்படாது இருக்குமேயானால்‌, உள்ளீட்டு வரி வரவினை, 1442-ஆம்‌ பிரிவின்‌. (8)-ஆம்‌ உட்பிரிவின்‌ (அ)-கூறின்‌ வகைமுறைகளுக்கு இணங்கியவாறு வசூலிப்பதற்கு கடப்பாடுடையதாய்‌ இருத்தல்‌ வேண்டும்‌: 172 மேலும்‌ வரம்புரை: மேலும்‌, சரக்குகளை அனுப்பும்‌ நபர்‌, தற்போதுள்ள சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு இணங்கியவாறு, இந்த உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள காலத்திற்குள்‌ இந்தியாவில்‌ வரியை செலுத்துவதன்பேரில்‌ அல்லது ஏற்றுமதிகளுக்காக வரி செலுத்தாமல்‌ அவ்விடத்திலிருந்து வழங்கும்‌ நோக்கத்திற்காக பதிவு பெற்ற நபர்‌ எவரின்‌ வளாகங்களுக்கு மேற்சொன்ன சரக்குகளை உரிமை மாற்றம்‌ செய்யலாம்‌. (3) குறித்திட்ட நாளுக்கு முன்பு தற்போதுள்ள சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு இணங்கியவாறு, பதிவு செய்திருப்பினும்‌ அல்லது பதிவு செய்யாதிருப்பினும்‌, பிற வளாகங்கள்‌ எதற்கும்‌ சோதனை அல்லது பிற நடவடிக்கை எதையும்‌ மேற்கொள்வதற்காக வரி செலுத்தாமல்‌ வணிக இடத்திலிருந்து சரக்குகள்‌ எதையும்‌ அனுப்பப்பட்டிருக்கிறவிடத்து, மற்றும்‌ அத்தகைய சரக்குகள்‌ குறித்திட்ட நாளன்று அல்லது அதற்கு பின்பு மேற்சொன்ன வணிக இடத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளவிடத்து, மேற்சொன்ன சரக்குகளானது சோதனை அல்லது பிற நடவடிக்கை எதையும்‌ மேற்கொண்ட பிறகு குறித்திட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள்‌ அத்தகைய இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுமேயானால்‌, வரியை செலுத்தத்‌ தேவையில்லை: வாம்புரை: ஆனால்‌, ஆறு மாதங்கள்‌ காலத்தை, உரிய காரணத்தை வெளிப்படுத்துவதன்‌ பேரில்‌, இரண்டு மாதங்களுக்கு மிகாத மேலுமான காலத்திற்கு ஆணையர்‌ நீட்டிப்பு செய்யலாம்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, மேற்சொன்ன சரக்குகள்‌, இந்த உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள காலத்திற்குள்‌ திருப்பி கொடுக்கப்படவில்லையென்றால்‌, உள்ளிட்டு வரி வரவை, 142-ஆம்‌ பிரிவின்‌ (8)-ஆம்‌ உட்பிரிவின்‌ (அ)-கூறின்‌ வகைமுறைகளுக்கு இணங்கியவாறு, வசூலிப்பதற்கு கடப்பாடுடையதாய்‌ இருத்தல்‌ வேண்டும்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, சரக்குகளை அனுப்பும்‌ நபர்‌, தற்போதுள்ள சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு இணங்கியவாறு, மேற்சொன்ன சரக்குகளை இந்த உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள காலத்திற்குள்‌ இந்தியாவில்‌ வரியை செலுத்துவதன்பேரில்‌ அல்லது ஏற்றுமதிகளுக்காக வரி செலுத்தாமல்‌ மேற்சொன்ன பிற இடத்திலிருந்து உரிமை மாற்றம்‌ செய்யலாம்‌. @) (1) (2) மற்றும்‌ (3)-ஆம்‌ உட்பிரிவுகளின்கீழ்‌ வரியை, சரக்குகளை அனுப்பும்‌ நபர்‌ மற்றும்‌ சில்லறை வேலையாள்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்தில்‌ மற்றும்‌ முறையில்‌ மற்றும்‌ அத்தகைய காலத்திற்குள்‌ குறித்திட்ட தேதியில்‌ உள்ளிடுகளின்‌ மற்றும்‌ மேற்சொன்ன நபரின்‌ சார்பாக சில்லறை வேலையாளால்‌ இருப்பில்‌ வைத்து வரப்பட்ட சரக்குகளின்‌ விபரங்களை விளம்புகை செய்வாரேயானால்‌, செலுத்த தேவையில்லை. 142. பல்வகைப்பட்ட மாறுதற்கால வகைமுறைகள்‌.- (1) குறித்திட்ட தேதிக்கு முன்பு ஆறு மாதங்களுக்கு முன்னதாக இல்லாமல்‌ சரக்குகளின்‌ விற்பனையின்‌ தேதியில்‌ 173 தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ சரக்குகள்‌ எதனின்‌ ம்து வரி எதுவும்‌ செலுத்தியிருக்கிறவிடத்து, அந்த சரக்குகளை குறித்திட்ட நாளன்று அல்லது அதற்கு பின்பு வணிக இடம்‌ எதற்கும்‌ திருப்பிக்‌ கொடுக்கிறவிடத்து, பதிவு பெற்ற நபர்‌ அல்லாத பிற நபரால்‌ குறித்திட்ட நாளிலிருந்து ஆறு மாதங்கள்‌ காலத்திற்குள்‌ மேற்சொன்ன வணிக இடத்திற்கு திருப்பியனுப்பப்பட்டிருக்கிறவிடத்து மற்றும்‌ அத்தகைய சரக்குகளானது, உரிய அலுவலருக்கு மன நிறைவு அளிக்குமாறு அடையாளம்‌ காணப்பட்டிருக்கிறவிடத்து, பதிவு பெற்ற நபர்‌ தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ செலுத்தப்பட்ட வரியை திரும்ப பெறுவதற்கு தகுதியுடையவராவார்‌: வரம்புரை: ஆனால்‌, மேற்சொன்ன சரக்குகள்‌ பதிவு பெற்ற நபரால்‌ திரும்ப கொடுக்கப்படுமேயானால்‌, அத்தகைய சரக்குகளின்‌ திரும்ப ஒப்படைப்பு வழங்குகையாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (2) (அ) குறித்திட்ட நாளுக்கு முன்பு ஒப்பந்தம்‌ செய்திருந்ததை ஒட்டி குறித்திட்ட நாளன்று அல்லது அதற்கு பின்பு சரக்குகளின்‌ மதிப்பானது உயர்ந்து மாறியிருக்கிறவிடத்து, அத்தகைய சரக்குகளை விற்பனை செய்த பதிவு பெற்ற நபர்‌, அத்தகைய விலை திருத்தப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய விவரங்களை உள்ளடக்கிய துணை விலைப்பட்டியல்‌ அல்லது பற்றுக்‌ குறிப்பினை பெற்றுக்‌ கொள்பவருக்கு வழங்கலாம்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக அத்தகைய துணை விலைப்பட்டியல்‌ அல்லது பற்றுக்‌ குறிப்பானது, இந்தப்‌ சட்டத்தின்கீழ்‌ செய்யப்பட்ட வெளிப்புற வழங்குகை தொடர்பாக வழங்கப்பட்டதாக கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌; (ஆ) குறித்திட்ட நாளுக்கு முன்பு ஒப்பந்தம்‌ செய்திருந்ததையொட்டி, குறித்திட்ட நாளன்று அல்லது அதற்கு பின்பு சரக்குகள்‌ எதனின்‌ மதிப்பானது மாற்றியமைக்கப்பட்டு குறைகிறவிடத்து, அத்தகைய சரக்குகளை விற்பனை செய்த பதிவு பெற்ற நபர்‌ அத்தகைய விலை திருத்தப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய விவரங்களை உள்ளடக்கிய வரவு குறிப்பை பெற்றுக்‌ கொள்பவருக்கு வழங்கலாம்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக அத்தகைய வரவு குறிப்பானது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ செய்யப்பட்ட வெளிப்புற வழங்குகை தொடர்பாக வழங்கப்பட்டதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, பதிவு பெற்ற நபர்‌, வரவுக்‌ குறிப்பை பெற்று கொள்பவர்‌ அத்தகைய கடப்பாட்டு குறைப்பிற்கு தக்கவாறு அவருடைய உள்ளீட்டு வரி வரவானது குறைந்திருக்குமேயானால்‌ மட்டுமே, வரவு குறிப்பினை அளித்ததன்‌ காரணத்தின்பேரில்‌, அவருடைய வரிக்‌ கடப்பாட்டினை குறைப்பதற்கு அனுமதிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) குறித்திட்ட நாளுக்கு முன்பு, நாளன்று அல்லது அதற்கு பின்பு தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ உள்ளீட்டு வரிவரவுத்‌ தொகை, வரி, வட்டி அல்லது செலுத்தப்பட்ட பிற தொகை எதையும்‌ திரும்ப பெறுவதற்காக நபர்‌ எவராலும்‌ திரும்ப பெறுவதற்காக தாக்கல்‌ செய்யப்பட்ட உரிமை கோரிக்கை ஒவ்வொன்றையும்‌, 174 தற்போதுள்ள சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி முடிவு செய்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இறுதியாக சேர வேண்டிய தொகை எதையும்‌ மேற்சொன்ன சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு இணங்கியவாறு பணமாக அவருக்கு திருப்பி கொடுத்தல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, உள்ளீட்டு வரி வரவுத்‌ தொகையினைத்‌ திருப்பிக்‌ கொடுப்பதற்கான கோரிக்கை எதுவும்‌ முழுவதுமாகவோ அல்லது பகுதியளவிலோ ஏற்க மறுக்கப்படுகிறவிடத்து, அவ்வாறு ஏற்க மறுக்கப்பட்ட தொகையானது அற்றுப்‌ போகும்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, குறித்திட்ட நாளன்று இருக்கும்‌ உள்ளீட்டு வரி வரவுத்‌ தொகை எதனின்‌ மீதித்‌ தொகையானது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ முன்னுக்கு எடுத்துச்‌ செல்லப்பட்டிருக்கிறவிடத்து, உள்ளிட்டு வரி வரவுத்‌ தொகை எதனின்‌ திருப்பிக்‌ கொடுத்தலானது அனுமதிக்கப்படுதல்‌ ஆகாது. (4) குறித்திட்ட நாளுக்கு முன்போ அல்லது பின்போ ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகள்‌ பொறுத்து தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ செலுத்தப்பட்ட வரி எதனையும்‌ திரும்ப பெறுவதற்காக குறித்திட்ட நாளுக்குப்‌ பின்பு தாக்கல்‌ செய்யப்பட்ட திரும்ப பெறுவதற்கான கோரிக்கை ஒவ்வொன்றும்‌, தற்போதுள்ள சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி தீர்வு செய்யப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, உள்ளிட்டு வரி வரவினைத்‌ திருப்பிக்‌ கொடுப்பதற்கான கோரிக்கை எதுவும்‌ முழுவதுமாகவோ அல்லது பகுதியளவிலோ ஏற்க மறுக்கப்படுகிறவிடத்து, அவ்வாறு ஏற்க மறுக்கப்பட்ட தொகையானது அற்றுப்‌ போதல்‌ வேண்டும்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, குறித்திட்ட நாளன்று இருக்கும்‌ உள்ளீட்டு வரி வரவுத்‌ தொகை எதனின்‌ மீதித்‌ தொகையானது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ முன்னுக்கு எடுத்துச்‌ செல்லப்பட்டிருக்கிறவிடத்து, உள்ளிட்டு வரி வரவுத்‌ தொகை எதனின்‌ திருப்பிக்‌ கொடுத்தலானது அனுமதிக்கப்படுதல்‌ ஆகாது. (5) இந்தச்‌ சட்டத்தில்‌ முரணாக எண்ன அடங்கியிருந்த போதிலும்‌, குறித்திட்ட நாளுக்கு முன்னர்‌ எதிர்மாறாக்கப்பட்ட உள்ளீட்டு வரி வரவுத்‌ தொகை எதுவும்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ உள்ளிட்டு வரி வரவாக ஏற்றுக்‌ கொள்ளப்படுதல்‌ ஆகாது. (6) (அ) தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ குறித்திட்ட நாளுக்கு முன்போ, நாளன்றோ அல்லது அதற்குப்‌ பின்போ தொடங்கப்பட்ட உள்ளிட்டு வரி வரவுக்கான கோரிக்கை ஒன்று தொடர்பான மேல்முறையீடு, சீராய்வு, மறு ஆய்வு அல்லது முடிவுக்கு ஒப்புவிப்பு நடவடிக்கை ஒவ்வொன்றும்‌, தற்போதுள்ள சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி தீர்வு செய்யப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ கோரிக்கையாளருக்கு ஏற்புடையதாகக்‌ காணப்படும்‌ வரவுத்‌ தொகை எதுவும்‌ தற்போதுள்ள சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி பணமாக அவருக்குத்‌ திருப்பி கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ ஏற்க மறுக்கப்பட்ட தொகை, எதுவுமிருப்பின்‌, அது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ உள்ளிட்டு வரி வரவாக, ஏற்புடையதாகுதல்‌ ஆகாது: 175 வரம்புரை: ஆனால்‌, குறித்திட்ட நாளன்று இருக்கும்‌ உள்ளீட்டு வரி வரவுத்‌ தொகை எதனின்‌ மீதித்‌ தொகையானது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ முன்னுக்கு எடுத்துச்‌ செல்லப்பட்டிருக்கிறவிடத்து, உள்ளீட்டு வரி வரவுத்‌ தொகை எதனின்‌ திருப்பிக்‌ கொடுத்தலானது அனுமதிக்கப்படுதல்‌ ஆகாது; (ஆ) தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ குறித்திட்ட நாளுக்கு முண்போ, நாளன்றோ அல்லது அதற்குப்‌ பிண்போ தொடங்கப்பட்ட உள்ளீட்டு வரி வரவினை வளூலிப்பது தொடர்பான மேல்முறையீடு, சீராய்வு, மறு ஆய்வு அல்லது முடிவுக்கு ஒப்புவிப்பு நடவடிக்கை ஒவ்வொன்றும்‌, தற்போதுள்ள சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி தீர்வு செய்யப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அத்தகைய மேல்முறையீடு, சீராய்வு, மறு ஆய்வு அல்லது முடிவுக்கு ஒப்புவிப்பின்‌ விளைவாக வளுலிக்க வேண்டியதாகிற வரவுத்‌ தொகை எதுவும்‌ இருப்பின்‌, அது தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ வசூலிக்கப்பட்டாலன்றி, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரி நிலுவையாக வசூலிக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவ்வாறு வசூலிக்கப்படும்‌ தொகையானது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ உள்ளீட்டு வரி வரவாக ஏற்புடையதாகுதல்‌ ஆகாது. (7) (அ) தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ குறித்திட்ட நாளுக்கு முன்போ, நாளன்றோ அல்லது அதற்குப்‌ பின்போ தொடங்கப்பட்ட வெளியீட்டு வரி கடப்பாடு எதன்‌ தொடர்பான மேல்முறையீடு, சீராய்வு, மறு ஆய்வு அல்லது முடிவுக்கு ஒப்புவிப்பு நடவடிக்கை ஒவ்வொன்றும்‌, தற்போதுள்ள சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி தீர்வு செய்யப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அத்தகைய மேல்முறையீடு, சீராய்வு, மறு ஆய்வு அல்லது முடிவுக்கு ஒப்புவிப்பின்‌ விளைவாக வசூலிக்க வேண்டியதாகிற தொகை, எதுவுமிருப்பின்‌, அது தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ வசூலிக்கப்பட்டாலன்றி, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரி நிலுவையாக வசூலிக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவ்வாறு வசூலிக்கப்படும்‌ தொகையானது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ உள்ளீட்டு வரி வரவாக ஏற்புடையதாகுதல்‌ ஆகாது; (ஆ) தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ குறித்திட்ட நாளுக்கு முண்போ, நாளன்றோ அல்லது அதற்குப்‌ பிண்போ தொடங்கப்பட்ட வெளியீட்டு வரி கடப்பாடு எதற்கும்‌ தொடர்புடைய மேல்முறையீடு, சீராய்வு, மறு ஆய்வு அல்லது முடிவுக்கு ஒப்புவிப்பு நடவடிக்கை ஒவ்வொன்றும்‌, தற்போதுள்ள சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி தீர்வு செய்யப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ கோரிக்கையாளருக்கு ஏற்புடையதாகக்‌ காணப்படும்‌ தொகை எதுவும்‌ தற்போதுள்ள சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி பணமாக அவருக்குத்‌ திருப்பிக்‌ கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ ஏற்க மறுக்கப்பட்ட தொகை, எதுவுமிருப்பின்‌, அது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ உள்ளீட்டு வரி வரவாக ஏற்புடையதாகுதல்‌ ஆகாது. (8) (அ) தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ குறித்திட்ட நாளுக்கு முன்போ, நாளன்றோ அல்லது அதற்குப்‌ பிண்போ தொடங்கப்பட்ட வரிக்கணிப்பு அல்லது நீதிமுறைத்‌ தீர்வு நடவடிக்கைகளைப்‌ பின்பற்றி, நபரிடமிருந்து வகூலிக்க வேண்டியதாகிற வரி, வட்டி, அபராதம்‌ அல்லது தண்டத்‌ தொகை எதுவும்‌, அது, தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ வசூலிக்கப்பட்டாலன்றி, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரி 176 நிலுவையாக வளுலிக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவ்வாறு வளுலிக்கப்படும்‌ தொகையானது இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ உள்ளீட்டு வரி வரவாக ஏற்புடையதாகுதல்‌ ஆகாது; (ஆ) தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ குறித்திட்ட நாளுக்கு முண்போ, நாளன்றோ அல்லது அதற்குப்‌ பின்போ தொடங்கப்பட்ட வரிக்கணிப்பு அல்லது நீதிமுறை தீர்வு நடவடிக்கைகளைப்‌ பின்பற்றி, வரிவிதிக்கத்தக்க நபருக்கு, வரி, வட்டி, அபராதம்‌ அல்லது தண்டத்‌ தொகை எதுவும்‌ திருப்பிக்‌ கொடுக்க வேண்டியதாகிறவிடத்து, அது, மேற்சொன்ன சட்டத்தின்கீழ்‌ பணமாக அவருக்குத்‌ திருப்பிக்‌ கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ ஏற்க மறுக்கப்பட்ட தொகை, எதுவுமிருப்பின்‌, அது, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ உள்ளிட்டு வரி வரவாக ஏற்புடையதாகுதல்‌ ஆகாது. (9) (அ) தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ அளிக்கப்பட்ட அறிக்கை எதுவும்‌, குறித்திட்ட நாளுக்குப்‌ பின்பு திருத்தியமைக்கப்படுகிறவிடத்து மற்றும்‌, அத்தகைய திருத்தியமைத்தலைப்‌ பின்பற்றி, தொகை எதுவும்‌ வசூலிக்கப்பட வேண்டியதாகக்‌ காணப்படுமானால்‌ அல்லது உள்ளீட்டு வரி வரவுத்‌ தொகை எதுவும்‌ ஏற்பளிக்கத்தகாததாகக்‌ காணப்படுமானால்‌, அது, தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ வசூலிக்கப்பட்டாலன்றி, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரி நிலுவையாக வசூலிக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவ்வாறு வசூலிக்கப்படும்‌ தொகையானது, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ உள்ளீட்டு வரி வரவாக ஏற்புடையதாகுதல்‌ ஆகாது; (ஆ) தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ அளிக்கப்பட்ட அறிக்கை எதுவும்‌, குறித்திட்ட நாளுக்குப்‌ பின்பு ஆனால்‌ தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ அத்தகைய திருத்தியமைப்பதற்காகக்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள கால வரம்பிற்குள்‌ திருத்தியமைக்கப்‌-படுகிறவிடத்து, மற்றும்‌ அத்தகைய திருத்தியமைத்ததைப்‌ பின்பற்றி, எந்தத்‌ தொகையும்‌ வரிவிதிப்புக்குள்ளாகும்‌ நபர்‌ எவருக்கும்‌ திருப்பிக்‌ கொடுக்க வேண்டியதாகக்‌ காணப்படுமானால்‌ அல்லது உள்ளீட்டு வரி வரவு அனுமதிக்கத்‌ தக்கதாகக்‌ காணப்படுமானால்‌, அது, தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ பணமாக அவருக்குத்‌ திருப்பிக்‌ கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ ஏற்க மறுக்கப்பட்ட தொகை, எதுவுமிருப்பின்‌, அது, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ உள்ளிட்டு வரி வரவாக ஏற்கத்தக்கதாகுதல்‌ ஆகாது. (1௦) இந்த அத்தியாயத்தில்‌ பிறவாறாக வகை செய்யப்பட்டிருப்பது நீங்கலாக, குறித்திட்ட நாளுக்கு முன்னர்‌ செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்‌ ஒன்றைப்‌ பின்பற்றி குறித்திட்ட நாளன்றோ அல்லது அதற்குப்‌ பின்போ வழங்கப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்கீழ்‌ வரி செலுத்துவதற்கு கடப்பாடுடையதாகுதல்‌ வேண்டும்‌. (11) (அ) 12-ஆம்‌ பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, 2006-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 322006) வரிவிதிப்புக்குள்ளாகும்‌ சரக்குகள்‌ பொறுத்து, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ மேற்சொன்ன சரக்குகள்‌ மீது வரி எதுவும்‌ செலுத்த வேண்டியதாகாது; 177 (ஆ) 13-ஆம்‌ பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, 1994-ஆம்‌ ஆண்டு நிதிச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 321994) ॥-ஆம்‌ அத்தியாயத்தின்கீழ்‌ வரிவிதிப்புக்குள்ளாகும்‌ சேவைகள்‌ பொறுத்து, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ மேற்சொன்ன சேவைகள்‌ மீது வரி எதுவும்‌ செலுத்த வேண்டியதாகாது; (இ) எந்த ஒரு வழங்குகை மீதும்‌, 20௦6-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்‌ சட்டத்தின்கீழும்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 32/2006) மற்றும்‌ 1994- ஆம்‌ ஆண்டு நிதிச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 32/1994) ॥-ஆம்‌ அத்தியாயத்தின்கீழும்‌, வரி செலுத்தப்பட்டு இருக்கிறவிடத்து, இந்த சட்டத்தின்கீழ்‌ வரிவிதிக்க வேண்டும்‌ மற்றும்‌ வரி விதிக்கத்தக்க நபர்‌, குறித்திட்ட நாளுக்குப்‌ பின்பு செய்யப்பட்ட வழங்குகைகளின்‌ அளவுக்கு தற்போதுள்ள சட்டத்தின்கீழ்‌ செலுத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரியின்‌ அல்லது சேவை வரியின்‌ வரவிணை எடுத்துக்கொள்வதற்கு உரிமையுடையவர்‌ ஆவார்‌, மற்றும்‌ அத்தகைய வரவானது, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ கணக்கிடப்படுதல்‌ வேண்டும்‌. (12) குறித்திட்ட நாளுக்கு முன்பு ஆறு மாதங்களுக்கு முண்ணர்‌ அல்லாமல்‌ ஒப்பேற்பின்‌ அடிப்படையில்‌ அனுப்பப்பட்ட சரக்குகள்‌ எவையும்‌, விலைக்கு வாங்குபவரால்‌ ஏற்க மறுக்கப்பட்டோ அல்லது ஒப்பேற்பளிக்கப்படாமலோ, குறித்திட்ட நாளன்று அல்லது அதற்குப்‌ பின்பு விற்பனையாளருக்குத்‌ திருப்பியனுப்பப்படுகிறவிடத்து, அத்தகைய சரக்குகள்‌, குறித்திட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள்‌ திருப்பியனுப்பப்படுமானால்‌ அதன்‌ மீது வரி எதுவும்‌ செலுத்த வேண்டியதாகாது: வரம்புரை: ஆனால்‌, மேற்சொன்ன ஆறு மாதங்கள்‌ கால அளவானது, போதுமான காரணம்‌ காட்டப்படுவதன்‌ பேரில்‌ ஆணையரால்‌, தூண்டு மாதங்களுக்கு மேற்படாத மேலுமான கால அளவு ஒன்றுக்கு நீட்டிக்கப்படலாகும்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, திருப்பியனுப்பப்படும்‌ சரக்குகள்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரிவிதிப்பிற்கு உள்ளாகுமானால்‌ மற்றும்‌ இந்த உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள கால அளவிற்குப்‌ பின்பு திருப்பியனுப்பப்படுமானால்‌, சரக்குகளைத்‌ திருப்பியனுப்பும்‌ நபரால்‌ வரி செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, ஒப்பேற்பின்‌ அடிப்படையில்‌ சரக்குகளை அனுப்பியிருக்கிற நபர்‌, அத்தகைய சரக்குகள்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வரிவிதிப்பிற்கு கடப்பாடுடையதாக மற்றும்‌ இந்த உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள கால அளவிற்குள்‌ திருப்பியனுப்பப்படாதிருக்குமானால்‌, அவரால்‌ வரி செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. (13) வழங்குநர்‌ ஒருவர்‌, எந்தச்‌ சரக்குகள்‌ பொறுத்து 2006-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்‌ சட்டத்தின்கீழ்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 32/2006) வருமான ஆதாரத்தில்‌ வரி பிடித்தம்‌ செய்யப்பட வேண்டுறுத்தப்பட்டதோ அந்தச்‌ சரக்குகள்‌ எவற்றையும்‌ விற்பனை செய்து, மற்றும்‌ குறித்திட்ட நாளுக்கு முன்பு அதற்காக விலைப்பட்டியல்‌ ஒன்றையும்‌ கூட வழங்கியிருக்கிறவிடத்து, மேற்சொன்ன 178 வழங்குநருக்கு பணம்‌ வழங்கல்‌, குறித்திட்ட நாளன்றோ அல்லது அதற்கு பின்போ செய்யப்படுகிறவிடத்து, மேற்சொன்ன பிரிவின்கீழ்‌ பிடித்தம்‌ செய்பவரால்‌ 51-ஆம்‌ பிரிவின்கீழ்‌ வருமான ஆதாரத்தில்‌ வரி பிடித்தம்‌ செய்தல்‌ ஆகாது. (14) முதல்வருக்குச்‌ சொந்தமான சரக்குகள்‌ அல்லது மூலதனச்‌ சரக்குகள்‌ எவையும்‌ குறித்திட்ட நாளன்று முகவரின்‌ வளாகங்களில்‌ கிடக்கிறவிடத்து, முகவர்‌, பின்வரும்‌ நிபந்தனைகளை நிறைவு செய்வதற்கு உட்பட்டு அத்தகைய சரக்குகள்‌ அல்லது மூலதனச்‌ சரக்குகள்‌ மீது செலுத்தப்பட்ட வரியின்‌ வரவை எடுத்துக்கொள்வதற்கு உரிமையுடையவர்‌ ஆவார்‌: i) முகவர்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ ஒரு வரிவிதிப்புக்கு உள்ளாகும்‌ நபராக இருத்தல்‌; 0) முதல்வர்‌ மற்றும்‌ முகவர்‌ இருவரும்‌ இதற்கென வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்திலும்‌ மற்றும்‌ முறையிலும்‌ மற்றும்‌ அத்தகைய காலத்திற்குள்‌ குறித்திட்ட நாளை ஒட்டி உடனடியாக வரும்‌ முந்தைய நாளன்று அத்தகைய முகவரிடம்‌ கிடக்கும்‌ சரக்குகள்‌ அல்லது மூலதனச்‌ சரக்குகளின்‌ இருப்பு பற்றிய விவரங்களை விளம்புகை செய்தல்‌; 00 அத்தகைய சரக்குகள்‌ அல்லது மூலதனச்‌ சரக்குகளுக்கான விலைப்பட்டியல்கள்‌, குறித்திட்ட நாளை ஒட்டிய முந்தைய பன்னிரெண்டு மாதங்களுக்கு முன்னர்‌ அல்லாமல்‌ வழங்கப்பட்டிருத்தல்‌; மற்றும்‌ 09 முதல்வர்‌, கீழ்க்கண்டவற்றைப்‌ பொறுத்து உள்ளீட்டு வரிவரவினை எதிர்மாறாக்கியோ அல்லது பயன்படுத்திக்‌ கொள்ளாமலோ இருந்து, அல்லது அத்தகைய வரவு துய்க்கப்பட்ட பின்‌ அவரால்‌ துய்க்கப்பட்ட அளவிற்கு மேற்சொன்ன வரவினை எதிர்மாறாக்குதல்‌- (அ) சரக்குகள்‌; அல்லது (ஆ) மூலதனச்‌ சரக்குகள்‌. விளக்கம்‌.- இந்த அத்தியாயத்தின்‌ நோக்கங்களுக்காக, "மூலதனச்‌ சரக்குகள்‌" என்ற சொற்றொடர்‌, 2006-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்‌ சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 32/2006) அதற்குக்‌ குறித்தளிக்கப்பட்டவாறு அதே பொருளினை உடையதாகும்‌. அத்தியாயம்‌ XXI பல்வகைப்பட்டவை. 143. சில்லறை வேலை நடைமுறை. (1) பதிவு பெற்ற நபர்‌ ஒருவர்‌ (இதன்‌ பின்பு இந்தப்‌ பிரிவில்‌ "முதல்வர்‌" எனக்‌ குறிப்பிடப்படும்‌) தகவல்‌ தெரிவித்து, மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வரி செலுத்தாமல்‌, உள்ளீடுகள்‌ அல்லது மூலதனச்‌ சரக்குகள்‌ எவற்றையும்‌ சில்லறை வேலைக்காக சில்லறை வேலையாளுக்கு அனுப்பி, அதன்‌ பின்பு அங்கிருந்து 179 பிறிதொரு சில்லறை வேலையாளருக்கும்‌ மற்றும்‌ அது போலவும்‌ அனுப்பி வைக்கலாம்‌, மற்றும்‌- (அ) சில்லறை வேலை முடிவடைந்த பின்போ அல்லது பிறவாறாகவோ, உள்ளீடுகளை, அல்லது அச்சுகள்‌ மற்றும்‌ பொறிப்பு கட்டைகள்‌, துணைச்‌ சாதனங்கள்‌ மற்றும்‌ பொருத்தங்கள்‌ அல்லது கருவிகள்‌ அல்லாத பிற மூலதனச்‌ சரக்குகளை, வெளியே அனுப்பியதிலிருந்து முறையே ஓர்‌ ஆண்டுக்குள்‌ மற்றும்‌ மூன்று ஆண்டுகளுக்குள்‌ வரி செலுத்தாமல்‌ அவருடைய வணிக இடம்‌ எதற்கும்‌, திரும்பிக்‌ கொண்டுவருதல்‌ வேண்டும்‌; (ஆ) சில்லறை வேலை முடிவடைந்த பின்போ அல்லது பிறவாறாகவோ, அத்தகைய உள்ளீடுகளை, அச்சுகள்‌ மற்றும்‌ பொறிப்பு கட்டைகள்‌, துணைச்‌ சாதனங்கள்‌ மற்றும்‌ பொருத்தங்கள்‌, அல்லது கருவிகள்‌ அல்லாத பிற மூலதனச்‌ சரக்குகளை இந்தியாவிற்குள்‌ வரி செலுத்தியோ அல்லது நேர்விற்கேற்ப, ஏற்றுமதி செய்வதற்காக வரி செலுத்தியோ அல்லது செலுத்தாமலோ, சில்லறை வேலையாள்‌ ஒருவரின்‌ வணிக இடத்திலிருந்து அவற்றை அனுப்புவதிலிருந்து, முறையே, ஜர்‌ ஆண்டுக்குள்‌ மற்றும்‌ மூன்று ஆண்டுகளுக்குள்‌ வழங்குதல்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, (i) சில்லறை வேலையாள்‌, 25-ஆம்‌ பிரிவின்கீழ்‌ பதிவு செய்திருக்கிறவிடத்து; அல்லது (i) முதல்வர்‌, ஆணையரால்‌ அறிவிக்கை செய்யப்படலாகும்‌ அத்தகைய சரக்குகளின்‌ வழங்குகையில்‌ ஈடுபட்டிருக்கிறவிடத்து, ஆகியவை தவிர, மேற்சொன்ன முதல்வர்‌ சில்லறை வேலையாளின்‌ வணிக இடத்தை, தம்‌ கூடுதல்‌ வணிக இடமாக விளம்புகை செய்தாலன்றி இந்தக்‌ கூறின்‌ வகைமுறைகளின்படி சில்லறை வேலையாள்‌ ஒருவரின்‌ வணிக இடத்திலிருந்து சரக்குகளை முதல்வர்‌ வழங்குதல்‌ ஆகாது. (2) உள்ளீடுகளுக்காகவோ அல்லது மூலதனச்‌ சரக்குகளுக்காகவோ முறையான கணக்கு வைத்துவருவதற்கான பொறுப்பானது முதல்வரிடம்‌ உற்றமைதல்‌ வேண்டும்‌. (3) சில்லறை வேலைக்காக அனுப்பப்படும்‌ உள்ளீடுகள்‌, (1)-ஆம்‌ உட்பிரிவின்‌ (அ)-கூறின்‌ வகைமுறைகளின்படி சில்லறைப்‌ பணி முடிவடைந்த பின்போ அல்லது பிறவாறாகவோ முதல்வரால்‌ திரும்பப்‌ பெறப்பாமலோ அல்லது அவை வெளியே அனுப்பப்பட்டதிலிருந்து ஓர்‌ ஆண்டு கால அளவிற்குள்‌ (1-ஆம்‌ உட்பிரிவின்‌ (ஆ)-கூறின்‌ வகைமுறைகளின்படி சில்லறை வேலையாளரின்‌ வணிக இடத்திலிருந்து வழங்கப்பபாமலோ இருக்கிறவிடத்து, அது, அத்தகைய உள்ளீடுகள்‌ எந்த நாளின்போது வெளியே அனுப்பப்பட்டணவோ அந்த நாளன்று சில்லறை வேலையாளருக்கு முதல்வரால்‌ வழங்கப்பட்டிருப்பதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 180 (4) சில்லறை வேலைக்காக அனுப்பப்படும்‌ அச்சுகள்‌ மற்றும்‌ பொறிப்பு கட்டைகள்‌, துணை சாதனங்கள்‌ மற்றும்‌ பொருத்தங்கள்‌, அல்லது கருவிகள்‌ அல்லாத பிற மூலதனச்‌ சரக்குகள்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்‌ (அ)-கூறின்‌ வகைமுறைகளின்படி முதல்வரால்‌ திரும்பப்‌ பெறப்பாமலோ அல்லது அவை வெளியே அனுப்பப்பட்டதிலிருந்து மூன்று ஆண்டுகள்‌ கால அளவு ஒன்றுக்குள்‌ (1)- ஆம்‌ உட்பிரிவின்‌ (ஆ)-கூறின்‌ வகைமுறைகளின்படி சில்லறை வேலையாளரின்‌ வணிக இடத்திலிருந்து வழங்கப்படாமலோ இருக்கிறவிடத்து, அத்தகைய மூலதனச்‌ சரக்குகள்‌ எந்த நாளின்போது வெளியே அனுப்பப்பட்டணவோ அந்த நாளன்று முதல்வரால்‌ சில்லறை வேலையாளருக்கு வழங்கப்பட்டிருப்பதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (5) (1) மற்றும்‌ (2) ஆகிய உட்பிரிவுகளில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, சில்லறை வேலையின்போது உண்டான பயனற்றவையும்‌ மற்றும்‌ உடைசல்கள்‌ எவையும்‌, அத்தகைய சில்லறை வேலையாள்‌ பதிவு செய்யப்பட்டிருப்பாராணால்‌, சில்லறை வேலையாளால்‌ வரி செலுத்தி தம்‌ வணிக இடத்திலிருந்து நேரடியாக, அல்லது சில்லறை வேலையாள்‌ பதிவு செய்யப்பட்டிருக்கவில்லையானால்‌, முதல்வரால்‌, வழங்கப்படலாம்‌. விளக்கம்‌.-- சில்லறை வேலையின்‌ நோக்கங்களுக்காக, உள்ளீடு என்பது முதல்வராலோ அல்லது சில்லறை வேலையாளாலோ உள்ளீடுகள்‌ மீது நிறைவேற்றப்படும்‌ செயல்பாடுகள்‌ அல்லது செயல்முறை எதிலிருந்தும்‌ உண்டாகும்‌ இடைவரும்‌ சரக்குகளை உள்ளடக்கும்‌. 144. குறித்த சில நேர்வுகளில்‌ ஆவணங்கள்‌ பற்றிய அனுமானம்‌. ஆவணம்‌ எதுவும்‌- (i) இந்தச்‌ சட்டத்தின்படியோ அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம்‌ எதன்படியுமோ எந்த நபராலும்‌ முன்னிடப்பட்டிருந்து, அல்லது (i) இந்தச்‌ சட்டத்தின்படியோ அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம்‌ எதன்படியுமோ நபர்‌ ஒருவரின்‌ வசமிருந்து அல்லது கட்டுப்பாட்டிலிருந்து கைப்பற்றப்பட்டிருந்து, அல்லது (i) இந்தச்‌ சட்டத்தின்படியான அல்லது அப்போதைக்கு நடைமுறையில்‌ உள்ள பிற சட்டம்‌ எதன்படியுமான நடவடிக்கைகள்‌ எவற்றின்‌ நடப்பின்போது இந்தியாவுக்கு வெளியேயுள்ள இடம்‌ எதிலுமிருந்தும்‌ பெறப்பட்டிருந்து, அத்தகைய ஆவணம்‌, அவருக்கு எதிராகவோ அல்லது அவருடன்‌ கூட்டாக விசாரணை செய்யப்படும்‌ பிற நபர்‌ எவருக்கும்‌ எதிராகவோ சான்றாக குற்ற வழக்கில்‌ கொடுக்கப்படுகிறவிடத்து, நதிமணன்றமானது- (அ) அத்தகைய நபர்‌ முரணாக சான்றளித்தாலன்றி, (i) அத்தகைய ஆவணத்தின்‌ உள்ளடங்கல்களின்‌ உண்மையை; 181 (i) குறிப்பான நபர்‌ எவராலும்‌ கையெழுத்தில்‌ இருப்பதாகப்‌ புலப்படுகிற, அல்லது குறிப்பான நபர்‌ எவராலும்‌ கைடொப்பமிடப்பட்டிருப்பதாக அல்லது கையெழுத்தில்‌ இருப்பதாக நீதிமன்றம்‌ தகுவாக ஊகிக்கும்‌ அத்தகைய ஆவணத்தின்‌ கையொப்பமும்‌ மற்றும்‌ பிற பகுதி ஒவ்வொன்றும்‌, அந்த நபருடைய கையுயழுத்தில்‌ இருக்கிறதா என்று அனுமானிக்கலாம்‌, மற்றும்‌ எழுதப்பட்ட அல்லது உறுதிச்‌ சான்றளிக்கப்பட்ட ஆவணம்‌ ஒன்றைப்‌ பொறுத்தவரை, அது அவ்வாறு எந்த நபரால்‌ எழுதப்பட்டிருப்பதாக அல்லது உறுதிச்‌ சான்றிடப்பட்டிருப்பதாகப்‌ புலப்படுகிறதோ அந்த நபரால்‌ எழுதப்பட்டதாக அல்லது உறுதிச்‌ சான்றிடப்பட்டிருப்பதாக அனுமானிக்கலாம்‌; (ஆ) சான்றில்‌ உள்ள ஆவணத்தை, அது உரியவாறு முத்திரையிடப்படவில்லை என்ற போதிலும்‌, அத்தகைய ஆவணம்‌ பிறவாறாக சான்றில்‌ ஏற்புடையதாக இருக்குமானால்‌, அனுமதித்தல்‌ வேண்டும்‌. 145. நுண்ணிய படங்கள்‌, ஆவணங்களின்‌ உருவ நேர்படிகள்‌ மற்றும்‌ கணினி அச்சு வெளியீடுகள்‌ ஆவணங்களாக மற்றும்‌ சான்றாக ஏற்றுக்‌ கொள்ளக்கூடியவையாக இருத்தல்‌.- (1) அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம்‌ எதிலும்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌,- (அ) ஆவணம்‌ ஒன்றின்‌ நுண்ணிய படம்‌ ஒன்று அல்லது அத்தகைய நுண்ணிய படத்தில்‌ உள்ளடங்கிய உருவத்தின்‌ அல்லது உருவங்களின்‌ (பெரிது படுத்தியோ இல்லாமலோ) மறு படி; அல்லது (ஆ) ஆவணம்‌ ஒன்றின்‌ உருவ நேர்ப்படி ஒன்று; அல்லது (௫) வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆவணம்‌ ஒன்றில்‌ அடங்கியுள்ளதும்‌ கணினி ஒன்றினால்‌ உருவாக்கப்பட்டு அச்சிடப்பட்ட பொருளில்‌ உள்ளடக்கப்பட்டதுமான வாக்குமூலம்‌; அல்லது (FF) சாதனம்‌ அல்லது ஊடகம்‌ எதிலும்‌ மின்னணுவில்‌ சேமிக்கப்பட்ட தகவல்‌ எதுவும்‌, அத்தகைய தகவலால்‌ செய்யப்பட்ட உறுதியான நகல்கள்‌ எவையும்‌ உள்ளடங்கலாக, இந்தச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ நோக்கங்களுக்காக ஆவணமாக கொள்ளப்படுதல்‌, மற்றும்‌ மேற்கொண்டு மெய்ப்பிப்போ அல்லது முதன்மை ஆவணத்தை முன்னிருத்தவோ இல்லாமல்‌, நேரடிச்‌ சான்று ஏற்புடையதாகும்‌ மூல ஆவணத்தில்‌ உள்ளடங்கியுள்ளவை அல்லது அதில்‌ கூறப்பட்டுள்ள பொருண்மை எதனின்‌ சான்றாக எந்தவொரு நடவடிக்கைகள்‌ கீழும்‌ ஏற்புடையதாகும்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளினண்படியான நடவடிக்கைகள்‌ எவற்றிலும்‌, இந்தப்‌ பிரிவின்‌ வழி சான்றில்‌ வாக்குமூலம்‌ ஒன்று கொடுக்க விரும்புகிறவிடத்து,- 182. (அ) வாக்குமூலத்தை உள்ளடக்கியிருக்கும்‌ ஆவணத்தைக்‌ கண்டறியும்‌ மற்றும்‌ அது எந்த முறையில்‌ முன்னிலைப்படுத்தப்பட்டது என்பதை விவரிக்கும்‌; (ஆ) அந்த ஆவணம்‌ கணினி ஒன்றினால்‌ உருவாக்கப்பட்டது என்பதைக்‌ காட்டும்‌ நோக்கத்திற்காக உரியதாக இருக்கும்‌ அந்த ஆவணத்தை உருவாக்கியதில்‌ உள்ளான சாதனம்‌ எதனின்‌ அத்தகைய விவரங்களைக்‌ கொடுக்கும்‌, சான்றிதழானது, அந்த சான்றிதழில்‌ கூறப்பட்டுள்ள பொருட்பாடு எதற்குமான சான்றாக இருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இந்த உட்பிரிவின்‌ நோக்கங்களுக்காக, அதனைக்‌ கூறும்‌ நபரின்‌ அறிவுக்கும்‌ நம்பிக்கைக்கும்‌ தெரிவித்து கூறப்பட வேண்டிய பொருட்பாடு ஒன்றுக்குப்‌ போதுமானதாக இருத்தல்‌ வேண்டும்‌. 146. பொது வலைதள முகவரி.- அரசு, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, பதிவு செய்தல்‌, வரி செலுத்துதல்‌, அறிக்கைகள்‌ அளித்தல்‌, ஒருங்கிணைக்கப்பட்ட வரிக்‌ கணக்கீடு மற்றும்‌ தீர்வு செய்தல்‌, மின்னணு வழிப்பட்டி ஆகியவற்றிற்கு வசதி செய்வதற்காகவும்‌ மற்றும்‌ அத்தகைய பிற செயல்களை செய்வதற்காகவும்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நோக்கங்களுக்காகவும்‌ பொது சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி மின்னணு வலைதள முகவரியை அறிவிக்கை செய்யலாம்‌. 147. ஏற்றுமதிகள்‌ செய்யப்பட்டதாக கருதப்படுதல்‌.-- அரசு, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, குறித்த சில சரக்குகளின்‌ வழங்குகைகளை, அத்தகைய சரக்குகள்‌ இந்தியாவில்‌ உற்பத்தி செய்யப்பட்டிருக்குமானால்‌, வழங்கப்படும்‌ சரக்குகள்‌ இந்தியாவை விட்டுச்‌ செல்லாமல்‌ மற்றும்‌ அத்தகைய வழங்குகைகளுக்கான பணம்‌ வழங்கல்‌ இந்திய ரூபாயிலோ அல்லது மாற்றக்‌ கூடிய அந்நிய செலாவணியிலோ பெறப்படுகிறவிடத்து அவற்றை "ஏற்றுமதிகள்‌ செய்யப்பட்டதாக கருதப்பட்டவை" என அறிவிக்கை செய்யலாம்‌. 148. குறித்த சில செயல்முறைகளுக்கான சிறப்பு நடைமுறை.- அரசு, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கும்‌ பாதுகாப்புகளுக்கும்‌ உட்பட்டு, குறித்த சில பதிவு பெற்ற நபர்களை மற்றும்‌ பதிவு செய்தல்‌, அறிக்கை அளித்தல்‌, வரி செலுத்துதல்‌ மற்றும்‌ அத்தகைய நபர்களை நிர்வாகம்‌ செய்தல்‌ பொறுத்தவை உள்ளடங்கலாக, அத்தகைய நபர்களால்‌ பின்பற்றப்பட வேண்டிய சிறப்பு நெறிமுறைகளை அறிவிக்கை செய்யலாம்‌. 149. சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி இணக்க மதிப்பீடு (1) பதிவு பெற்ற நபர்‌ ஒவ்வொருவருக்கும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுடன்‌ இணங்கி நடப்பது பற்றிய அவருடைய பதிவின்‌ அடிப்படையில்‌ அரசால்‌ சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி இணக்க மதிப்பீட்டு புள்ளி ஒன்று குறித்தளிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி இணக்க மதிப்பீட்டு புள்ளியானது வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய சுட்டளவுகள்‌ அடிப்படையில்‌ தீர்மானிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 183 (3) சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி இணக்க மதிப்பீட்டு புள்ளி, கால இடைவெளிகளில்‌ மேம்படுத்தப்படுவதோடு மற்றும்‌ பதிவு பெற்ற நபருக்கு தெரிவிக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ பொதுவெளியில்‌ வெளியிடப்பட வேண்டும்‌. 150. தகவல்‌ அறிக்கையை அளிப்பதற்குரிய கடமைப்‌ பொறுப்பு.-- (1) (அ) வரி விதிக்கத்தக்க நபராக இருக்கின்ற; அல்லது (ஆ) உள்ளாட்சி அதிகார அமைப்பாக அல்லது பிற பொது குழுமமாக அல்லது சங்கமாக இருக்கின்ற; அல்லது (இ) மதிப்புக்கூட்டு வரியை அல்லது விற்பனைகள்‌ வரியை அல்லது மாநில ஆயத்தீர்வையை வளுலிப்பதற்கான பொறுப்புடைய மாநில அரசு அதிகார அமைப்பு எதுவும்‌ அல்லது ஆயத்தீர்வையை அல்லது சுங்கத்‌ தீர்வையை வளுலிப்பதற்கான பொறுப்பினை உடைய மைய அரசு அதிகார அமைப்பாக இருக்கின்ற; அல்லது (FF) 1961-ஆம்‌ ஆண்டு வருமான வரிச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 431961) வகைமுறைகளின்படி அமர்த்தப்பட்ட வருமானவரி அதிகார அமைப்பாக இருக்கின்ற; அல்லது (௨) 1934-ஆம்‌ ஆண்டு இந்திய ரிசர்வ்‌ வங்கிச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 2/1934) 45-& பிரிவின்‌ (ஐ)-கூறின்‌ பொருள்படி வங்கி நிறுமமாக இருக்கின்ற; அல்லது (ஊ) மாநில மின்சார வாரியம்‌ அல்லது 2003-ஆம்‌ ஆண்டு மின்சார சட்டத்தின்படி (மையச்‌ சட்டம்‌ 36/2003) மின்சாரத்தை பகிர்ந்தளிக்கும்‌ அல்லது கொண்டு செல்லும்‌ உரிமம்‌ பெற்றவரை அல்லது மைய அரசால்‌ அல்லது மாநில அரசால்‌ அத்தகைய செயற்பணிகள்‌ ஒப்படைக்கப்பட்ட பிற அமைப்பாக இருக்கின்ற; அல்லது (௭) 1908-ஆம்‌ ஆண்டு பதிவுச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 16/1908) 6-ஆம்‌ பிரிவின்படி அமர்த்தப்பட்ட ஒரு பதிவாளராக இருக்கின்ற அல்லது சார்பதிவாளராக இருக்கின்ற; அல்லது (ஏ) 2013-ஆம்‌ ஆண்டு நிறுமங்கள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 1872013) பொருளின்படி ஒரு பதிவாளராக இருக்கின்ற; அல்லது (ஐ) 1988-ஆம்‌ ஆண்டு வாகன ஊர்திகள்‌ சட்டத்தின்படி (மையச்‌ சட்டம்‌ 59/1988) வாகன ஊர்திகளை பதிவு செய்வதற்கு அதிகாரம்‌ பெற்றுள்ள பதிவு செய்யும்‌ அதிகார அமைப்பாக இருக்கின்ற; அல்லது (ஒ) 2013-ஆம்‌ ஆண்டு நியாயமான நஷ்ட ஈட்டை பெறுவதற்கான உரிமை மற்றும்‌ நிலத்தை கையகப்படுத்துவதில்‌ ஒளிவு மறைவினண்மை, மறுவாழ்வு மற்றும்‌ மறு குடியமர்த்தச்‌ சட்டத்தின்‌" (மையச்‌ சட்டம்‌ 30/2013) 3-ஆம்‌ பிரிவின்‌ (௦)-கூறில்‌ சுட்டப்பட்டுள்ள ஒரு ஆட்சியராக இருக்கின்ற; அல்லது 184 (ஓ) 1956-ஆம்‌ ஆண்டு காப்புறுதிகள்‌ ஒப்பந்தங்கள்‌ (ஒழுங்குமுறைப்படுத்துதல்‌) சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 421956) 2-ஆம்‌ பிரிவின்‌ (0-கூறில்‌ சுட்டப்பட்டுள்ள ஒரு ஏற்பளிக்கப்பட்ட பங்கு பரிமாற்றமாக இருக்கின்ற; அல்லது (ஒள) 1996-ஆம்‌ ஆண்டு வைப்புத்தொகையம்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 22/1996) 2-ஆம்‌ பிரிவின்‌ (1)-ஆம்‌ உட்பிரிவின்‌ (6)-கூறில்‌ சுட்டப்பட்டுள்ள ஒரு வைப்புத்தொகையமாக இருக்கின்ற; அல்லது (அஅ) 1934-ஆம்‌ ஆண்டு இந்திய ரிசர்வ்‌ வங்கிச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 2/1934) 3-ஆம்‌ பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்டவாறு இந்திய ரிசர்வ்‌ வங்கியின்‌ ஒரு அலுவலராக இருக்கின்ற; அல்லது (அஆ) 2013-ஆம்‌ ஆண்டு நிறுமங்கள்‌ சட்டத்தின்படி (மையச்‌ சட்டம்‌ 18/2013) பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுமமான சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி வலைதளமாக தொடரமைப்பாக இருக்கின்ற; அல்லது (அஇ) 25-ஆம்‌ பிரிவின்‌ (9)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ எந்த நபருக்கு தனிப்பட்ட அடையாள எண்‌ வழங்கப்பட்டதோ அந்த நபராக இருக்கின்ற; அல்லது (அ) அரசால்‌, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, குறித்துரைக்கப்பட்ட பிற நபர்‌ எவராகவும்‌ இருக்கின்ற, பதிவு ஆவணத்தை அல்லது கணக்குகளின்‌ விவரங்களை அல்லது கால முறை அறிக்கையை அல்லது வரி செலுத்திய விவரங்களை உள்ளடக்கிய மற்றும்‌ சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது அவைகள்‌ இரண்டின்‌ நடவடிக்கைகள்‌ அல்லது வங்கி கணக்குத்‌ தொடர்பான நடவடிக்கைகளை அல்லது மின்சார நுகர்வினை அல்லது சரக்குகளின்‌ அல்லது சொத்தின்‌ கொள்முதலின்‌, விற்பனையின்‌ அல்லது பரிமாற்ற நடவடிக்கையை அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம்‌ எதனின்படி சொத்தில்‌ உள்ள உரிமையை அல்லது உரிமத்தை உள்ளடக்கிய பிற விவரங்களை கொண்ட ஆவணத்தை பராமரிப்பதற்கான பொறுப்புடைய எந்த நபரும்‌, அத்தகைய காலங்கள்‌ தொடர்பாக, அத்தகைய காலத்திற்குள்‌ அத்தகைய படிவத்தில்‌ மற்றும்‌ முறையில்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய அதிகார அமைப்பிற்கு அல்லது முகவாண்மைக்கு அதன்‌ பொறுத்த தகவல்‌ அறிக்கையை அளித்தல்‌ வேண்டும்‌. (2) ஆணையர்‌ அல்லது இதன்‌ பொருட்டு அவரால்‌ அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்‌ தகவல்‌ அறிக்கையில்‌ அளிக்கப்பட்டுள்ள தகவலானது குறைவுடையதாக கருதுகிறவிடத்து, அத்தகைய தகவல்‌ அறிக்கையை அளித்த நபருக்கு அந்த குறையை தெரிவிக்கலாம்‌ மற்றும்‌ அத்தகைய தகவல்‌ தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்‌ அல்லது இதன்‌ பொருட்டு செய்யப்பட்ட விண்ணப்பத்தின்‌ பேரில்‌ மேற்சொன்ன அதிகார அமைப்பு அனுமதிக்கும்‌ அத்தகைய மேலுமான காலத்திற்குள்‌ குறைபாட்டினை சரி செய்வதற்கான வாய்ப்பினை அவருக்கு வழங்குதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ மேற்சொன்ன முப்பது நாட்கள்‌ காலத்திற்குள்‌ அல்லது அனுமதிக்கப்பட்ட 185 மேலுமான காலத்திற்குள்‌ குறைபாட்டினை சரிசெய்யாது இருப்பின்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ பிற வகைமுறைகள்‌ எதிலும்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, அத்தகைய தகவல்‌ அறிக்கையை அவ்வாறு வழங்காததாக பாவித்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளானது பொருந்துதல்‌ வேண்டும்‌. (3) ()-ஆம்‌ உட்பிரிவில்‌ அல்லது (2)-ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள்‌ தகவல்‌ அறிக்கையை அளிப்பதற்கு வேண்டப்பட்ட நபர்‌ அதை அளிக்காது இருக்கிறவிடத்து, மேற்சொன்ன அதிகார அமைப்பானது, அறிவிப்பை சார்வு செய்த தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்கு மிகாத காலத்திற்குள்‌ அத்தகைய தகவல்‌ அறிக்கையை அளிப்பதற்கு வேண்டுறுத்தும்‌ அறிவிப்பை அவருக்கு சார்வு செய்யலாம்‌ மற்றும்‌ அத்தகைய நபர்‌ தகவல்‌ அறிக்கையை அளித்தல்‌ வேண்டும்‌. 151. புள்ளி விவரங்களை திரட்டூுவதற்கான அதிகாரம்‌.-- (1) ஆணையர்‌, அவ்வாறு செய்வது அவசியமென அவர்‌ கருதுவாரேயானால்‌, விவரிக்கப்பட்ட பொருட்பாடு தொடர்பாக அல்லது இந்தச்‌ சட்டம்‌ தொடர்பாக புள்ளி விவரங்களை திரட்டுமாறு, அறிவிக்கையின்‌ வாயிலாக, பணிப்புரை பிறப்பிக்கலாம்‌. (2) அத்தகைய அறிவிக்கையை வழங்குவதன்‌ பேரில்‌, ஆணையர்‌ அல்லது இதன்‌ பொருட்டு அவரால்‌ அதிகாரமளிக்கப்பட்ட நபர்‌ எவரும்‌, எந்தப்‌ பொருட்பாடுகள்‌ தொடர்பாக புள்ளி விவரங்கள்‌ திரட்டப்பட வேண்டுமோ அந்த பொருட்பாடு எதுவும்‌ தொடர்பாக, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படிவத்தில்‌ மற்றும்‌ முறையில்‌ அத்தகைய தகவலை அல்லது அறிக்கைகளை அளிப்பதற்கு தொடர்புடைய நபர்களை வேண்டலாம்‌. 152. தகவலை தெரியப்படுத்துவதற்குத்‌ தடை.- (1) தொடர்புடைய நபரின்‌ அல்லது அவருடைய அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியின்‌ எழுத்து வடிவிலான முன்‌ இசைவின்றி, 15௦0-ஆம்‌ பிரிவின்‌ அல்லது 151-ஆம்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக அளிக்கப்பட்ட பொருட்பாடு எதனின்‌ தொடர்பாக தனிப்பட்ட நபரின்‌ அறிக்கையின்‌ அல்லது அதனுடைய பகுதி எதனின்‌ தகவலை குறிப்பிட்ட நபரை சுட்டி அடையாளம்‌ காட்டுவதற்கு அத்தகைய விவரங்களை இயல்விக்கும்‌ பொருட்டு அத்தகைய முறையில்‌ வெளியிடுதல்‌ ஆகாது, மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ நடவடிக்கைகள்‌ எதனின்‌ நோக்கங்களுக்காக அத்தகைய தகவல்‌ உபயோகப்படுத்தப்படக்கூடாது. (2) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம்‌ எதனின்கீழ்‌ வழக்கு தொடரும்‌ நோக்கங்களுக்காக அன்றி, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ புள்ளி விவரங்களை சேகரித்தலில்‌ அல்லது தொகுத்தலில்‌ அல்லது கணினிமயமாக்குவதில்‌ ஈடுபட்டிராத நபர்‌, 1541-ஆம்‌ பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள தகவலை அல்லது தனிப்பட்ட அறிக்கையை காண்பதற்கு அல்லது அணுகுதலுக்கு அனுமதித்தல்‌ ஆகாது. 186 (3) இந்தப்‌ பிரிவில்‌ உள்ள எதுவும்‌, ஆணையரின்‌ கருத்துப்படி அத்தகைய தகவலை பொது நலன்‌ கருதி வெளியிடுவது வேண்டத்தக்கதென அவர்‌ கருவாரேயானால்‌, வரிவிதிக்கத்தக்க நபர்களின்‌ வகை அல்லது நடவடிக்கைகளின்‌ வகை தொடர்பான தகவல்‌ எதையும்‌ வெளியிடுவதற்கு பொருந்தாது. 153. வல்லுநரிடமிருந்து உதவியைப்‌ பெறுதல்‌. உதவி ஆணையர்‌ படிநிலைக்கு குறையாத அலுவலர்‌ எவரும்‌, வழக்கின்‌ தன்மை மற்றும்‌ சிக்கலை மற்றும்‌ வருவாயின்‌ நலனைப்‌ பொறுத்து, கூர்ந்தாய்வின்‌, விசாரணையின்‌, புலன்‌ விசாரணையின்‌ அல்லது தன்னிடம்‌ உள்ள பிற நடவடிக்கைகளின்‌ எந்த நிலையிலும்‌ வல்லுநர்‌ எவரின்‌ உதவியைப்‌ பெறலாம்‌. 154. மாதிரிகளை எடுப்பதற்கு அதிகாரம்‌- ஆணையர்‌ அல்லது அவரால்‌ அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்‌, அவசியமென அவர்‌ கருதுகிறவிடத்து, வரி விதிப்பிற்கு உள்ளான நபர்‌ எவரின்‌ உடைமையிலிருந்து சரக்குகளின்‌ மாதிரிகளை எடுக்கலாம்‌ மற்றும்‌ அவ்வாறு எடுக்கப்பட்ட மாதிரிகள்‌ எதற்காகவும்‌ பற்றுச்சீட்டை வழங்கலாம்‌. 155. மெய்ப்பிக்கும்‌ சுமை.- இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ உள்ளீட்டு வரி வரவிற்கு தகுதி இருப்பதாக நபர்‌ எவரும்‌ உரிமை கோருகிறவிடத்து, அத்தகைய உரிமை கோரிக்கையை மெய்ப்பிக்கும்‌ சுமையானது அத்தகைய நபரைச்‌ சார்ந்ததாகும்‌. 156. அரசு ஊழியர்களாக கொள்ளப்பட வேண்டிய நபர்கள்‌.- இந்தச்‌ சட்டத்தின்படி செயற்பணிகளை ஆற்றுகின்ற நபர்கள்‌ அனைவரையும்‌ இந்திய தண்டனைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 457860) 21-ஆம்‌ பிரிவின்‌ பொருளின்படி அரசு ஊழியர்களாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 157. சட்டத்தின்‌ கீழ்‌ நடவடிக்கைகளின்‌ மீதான பாதுகாப்பு-- (1) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளின்படி நல்லெண்ணத்தில்‌ செய்யப்பட்ட அல்லது செய்யக்‌ கருதப்பட்ட எதற்காகவும்‌, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்‌ தலைவருக்கு, மாநில தலைவருக்கு, உறுப்பினர்களுக்கு, அலுவலர்களுக்கு அல்லது பிற பணியாளர்களுக்கு அல்லது மேற்சொன்ன மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தால்‌ அதிகாரம்‌ அளிக்கப்பட்டுள்ள பிற நபர்‌ எவருக்கும்‌ எதிராக உரிமை வழக்கோ, குற்றவியல்‌ வழக்கோ அல்லது பிற சட்ட நடவடிக்கைகளையோ தொடருதல்‌ ஆகாது. (2) இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அமர்த்தப்பட்ட அல்லது அதிகாரம்‌ அளிக்கப்பட்ட அலுவலர்‌ எவருக்கும்‌ எதிராக, இந்த சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ இயற்றப்பட்ட விதிகளின்படி நல்லெண்ணத்தில்‌ செய்யப்பட்ட அல்லது செய்யக்‌ கருதப்பட்ட எதற்காகவும்‌ உரிமை வழக்கோ, குற்றவியல்‌ நடவடிக்கையையோ அல்லது பிற சட்ட நடவடிக்கையையோ தொடருதல்‌ ஆகாது. 187 158. அரசு ஊழியர்‌ தகவலை வெளிப்படுத்துதல்‌.- (1) இந்தச்‌ சட்டத்திற்கு இணங்கிய விவர உரையில்‌, அளிக்கப்பட்ட அறிக்கையில்‌ அல்லது தாக்கல்‌ செய்யப்பட்ட கணக்குகளில்‌ அல்லது ஆவணங்களில்‌ அல்லது (குற்றவியல்‌ நீதிமன்றத்தின்‌ முன்புள்ள நடவடிக்கைகள்‌ அல்லாத பிற) இந்த சட்டத்தின்கழான நடவடிக்கைகளின்‌ போது அளிக்கப்பட்ட சாட்சியத்தின்‌ பதிவு எதிலும்‌, அல்லது இந்தச்‌ சட்டத்தின்கழான நடவடிக்கைகள்‌ எவற்றின்‌ பதிவு எதிலும்‌ அடங்கியுள்ள அனைத்து விவரங்களையும்‌ (3)-ஆம்‌ உட்பிரிவில்‌ வகைசெய்துள்ளவாறின்றி, வெளிப்படுத்துதல்‌ ஆகாது. (2) 1872-ஆம்‌ ஆண்டு இந்தியச்‌ சான்றுச்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 11872) என்ன அடங்கியிருந்த போதிலும்‌, (3)-ஆம்‌ உட்பிரிவில்‌ பிறவாறு வகை: செய்யப்பட்டவாறல்லாமல்‌, நீதிமன்றமானது இந்த சட்டத்தின்கீழ்‌ அமர்த்தப்பட்ட அல்லது அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்‌ எவரையும்‌ (1-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள விவரங்கள்‌ தொடர்பாக தன்‌ முன்‌ ஆஜராகுமாறு அல்லது தன்னிடம்‌ சான்றினை முன்னிலைப்படுத்துமாறு கோருதல்‌ ஆகாது. (3) இந்தப்‌ பிரிவில்‌ உள்ள எதுவும்‌, கழ்க்கண்டவற்றைப்‌ பொறுத்து வெளிப்படுத்துவதற்கு பொருந்தாது- (அ) இந்திய தண்டனைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்படி (மையச்‌ சட்டம்‌ 45,4860) அல்லது 1988-ஆம்‌ ஆண்டு ஊழல்‌ தடுப்புச்‌ சட்டத்தின்படி (மையச்‌ சட்டம்‌ 49/1988) அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி குற்ற வழக்கு எதனின்‌ நோக்கத்திற்காக விவரவுரை, அறிக்கை, கணக்குகள்‌, ஆவணங்கள்‌, சான்று, ஆணையுறுதி ஆவணம்‌ அல்லது வாக்குமூலம்‌ தொடர்பான விவரங்கள்‌ எவற்றிற்கும்‌; அல்லது (ஆ) இந்த சட்டத்தின்‌ நோக்கங்களை நிறைவேற்றும்‌ பொருட்டு, மைய அரசு அல்லது மாநில அரசு அல்லது இந்த சட்டத்தை நிறைவேற்றுகையில்‌ செயற்படும்‌ நபர்‌ எவருக்கும்‌ வழங்கப்படும்‌ விவரங்கள்‌ எவையும்‌; அல்லது (௫) அறிவிப்பு எதனையும்‌ சார்வு செய்வதற்கான அல்லது சேர வேண்டிய தொகை எதனையும்‌ வசூலிப்பதற்கான நடைமுறை எதனில்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ சட்டப்படியான நடைமுறையினால்‌ அத்தகைய வெளிப்படுத்துகை ஏற்படும்‌ போது விவரங்கள்‌ எவையும்‌; அல்லது (FF) அரசு அல்லது இந்த சட்டத்தின்படி அதிகார அமைப்பு எதுவும்‌ ஒரு தரப்பினராக இருக்கின்ற, அது இந்த சட்டத்தின்படியான அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம்‌ எதன்படியான அதிகப்படியான அதிகாரங்கள்‌ எதனையும்‌ பயன்படுத்துவதற்கு அத்தகைய அதிகார அமைப்பிற்கு அதிகாரமளிக்கப்படுகிற நடவடிக்கைகளில்‌ எழும்‌ பொருட்பாடு எதற்கும்‌ தொடர்புடையதாக இருக்கிற உரிமை வழக்கு அல்லது நடவடிக்கைகள்‌ எதிலும்‌ ஒரு உரிமையியல்‌ நீதிமன்றத்திற்குரிய விவரங்கள்‌ எதுவும்‌; அல்லது 188 (௨) இந்த சட்டத்தின்படி பெறப்படுகிற வரியினை தணிக்கை செய்யும்‌ அல்லது விதிக்கப்படும்‌ வரியை திருப்பித்தரும்‌ நோக்கத்திற்காக பணியமர்த்தம்‌ செய்யப்பட்ட அலுவலர்‌ எவருக்கும்‌ உரிய விவரங்கள்‌ எதுவும்‌; அல்லது (ஊ) அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம்‌ எதன்படியும்‌ விசாரணை அலுவலராக பணியமர்த்தம்‌ செய்யப்பட்ட நபர்‌ அல்லது நபர்கள்‌ எவருக்கும்‌ இந்த சட்டத்தின்படி பணியமர்த்தம்‌ செய்யப்பட்ட அல்லது அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்‌ எவரின்‌ நடத்துகைக்குரிய விசாரணை எதனின்‌ நோக்கங்களுக்காக தொடர்புடையதாக இருக்கின்ற அத்தகைய விவரங்கள்‌ எதுவும்‌; அல்லது (௭) வரி அல்லது தீர்வை எதுவும்‌ விதிக்கப்பட்டு அல்லது வளுலிப்பதற்கு அந்த அரசுக்கு போதுமானதாக இருக்கும்‌ நோக்கத்திற்காக தேவைப்படலாகிறவாறான, மைய அரசின்‌ அல்லது மாநில அரசு எதனின்‌ அலுவலர்‌ ஒருவருக்கான அத்தகைய விவரங்கள்‌ எதுவும்‌; அல்லது (ஏ) அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம்‌ எதன்கீழான அவருடைய அல்லது அதனுடைய அதிகாரங்கள்‌, ஒரு அரசுப்‌ ஊழியர்‌ அல்லது சட்டப்பூர்வமான அதிகார அமைப்பு எதனாலும்‌ சட்டப்படியான நடைமுறையினால்‌ அத்தகைய வெளிப்படுத்துகை நடைபெறும்போது விவரங்கள்‌ எதுவும்‌, அல்லது (ஐ) சட்டதொழிலாற்றுநராக விலை மதிப்பீட்டு கணக்கராக, பட்டயக்‌ கணக்கராகத அல்லது நிறுமச்‌ செயலராக தொழில்‌ பயிற்சி எடுக்கும்‌ உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரமுடைய அதிகார அமைப்பிற்கு, வழக்கறிஞராக பணிபுரியும்‌ ஒருவர்‌, வரி தொழிலாற்றுநர்‌, விலைமதிப்பீட்டு கணக்கராக பணிபுரியும்‌ ஒருவர்‌, பட்டயக்‌ கணக்காயராக பணிபுரியும்‌ ஒருவர்‌, நிறுமச்‌ செயலாளராக பணிபுரியும்‌ ஒருவர்‌ ஆகியோருக்கு எதிராக இந்தச்‌ சட்டத்தின்கழான நடவடிக்கைகள்‌ எதனுடனும்‌ தொடர்புடைய தவறான நடவடிக்கையின்‌ குற்றச்சாட்டு ஒன்றுடன்‌ விசாரணை எதற்கும்‌ தொடர்புடைய விவரங்கள்‌ எதுவும்‌; அல்லது (ஒ) தானியங்கி முறையில்‌ தகவல்‌ பதிவுகள்‌ நோக்கத்திற்காக அல்லது தானியங்கி முறையை இயக்க, மேம்படுத்த அல்லது பராமரிக்க பணியமர்த்தம்‌ செய்யப்பட்ட முகவாண்மை எதற்குமான விவரங்கள்‌ எதுவும்‌ மேற்சொன்ன நோக்கங்களுக்காக தவிரா அத்தகைய விவரங்களை வெளியிடவோ அல்லது பயன்படுத்தவோ அத்தகைய முகவாண்மை கூடாது; அல்லது (ஓ) அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம்‌ எதனின்‌ நோக்கங்களுக்காக தேவைப்படலாகிறவாறான அரசின்‌ அலுவலர்‌ ஒருவருக்கான அத்தகைய விவரங்கள்‌ எதுவும்‌; அல்லது (ஒள) ஆணையரின்‌ கருத்துப்படி, பொதுநண்மையைத்‌ தரக்கூடியதாய்‌ அது இருக்கிறதெனில்‌, அத்தகைய செய்தியை வெளியிடுவதற்கு வரி விதிக்கத்தக்க நபர்களின்‌ வகை அல்லது வெளியீட்டிற்கான நடவடிக்கைகளின்‌ வகை எதற்கும்‌ தொடர்பான தகவல்‌ எதுவும்‌, 189 159. குறித்த சில நேர்வுகளில்‌ நபர்கள்‌ பொறுத்த தகவல்‌ வெளியிடுதல்‌.-- (1) ஆணையர்‌ அல்லது அவரால்‌ அதிகாரம்‌ அளிக்கப்‌ பெற்ற பிற அலுவலர்‌ எவரும்‌ அத்தகைய நபர்‌ தொடர்பாக இந்தச்‌ சட்டத்தின்படியான நடவடிக்கைகள்‌ அல்லது குற்றவியல்‌ வழக்கு தொடர்பான நபர்‌ எவரின்‌ பெயரை அல்லது பிற விவரங்கள்‌ எதுவும்‌ பொது நலத்தின்‌ தேவையுடையதாக அல்லது உகந்ததாக அது இருக்கிறதால்‌ அதனை வெளியிடலாம்‌ என்று கருதுகிறாரென்றால்‌, அது பொருத்தமென நினைக்கலாகிறவாறான அத்தகைய முறையில்‌ அத்தகைய பெயரை மற்றும்‌ விவரங்களை வெளியிடுவதற்கு முயற்சிக்கலாம்‌. (2) மேல்முறையீடு செய்யப்படாமல்‌ 10௦7-ஆம்‌ பிரிவின்கீழ்‌ மேல்முறையீட்டு அதிகார அமைப்பிற்கு மேல்முறையீடு செய்வதற்கான காலம்‌ முடிவடையும்‌ வரை அல்லது மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தால்‌, தீர்வு செய்யப்படும்வரை இந்த சட்டத்தின்படி விதிக்கப்பட்ட தண்டனை எதன்‌ தொடர்பாகவும்‌ இந்த பிரிவின்படி வெளியீடு எதுவும்‌ செய்யப்படுதல்‌ ஆகாது. விளக்கம்‌.- நிறுவகம்‌, நிறுமம்‌ அல்லது பிற நபர்களின்‌ கழகம்‌, ஆகியவற்றைப்‌ பொறுத்தவரை, நேர்விற்கேற்ப நிறுவகத்தின்‌ கூட்டாளிகளின்‌ பெயர்கள்‌, நிறுமத்தின்‌ இயக்குநர்கள்‌, மேலாண்மை முகவர்கள்‌, செயலாளர்கள்‌ மற்றும்‌ பொருளாளர்கள்‌ அல்லது மேலாளர்கள்‌ அல்லது கழகத்தின்‌ உறுப்பினர்களின்‌ பெயர்கள்‌, ஆணையரின்‌ அல்லது இதன்பொருட்டு அவரால்‌ அதிகாரமளிக்கப்பட்ட பிற அலுவலர்‌ எவரின்‌ கருத்துப்படி நேர்வின்‌ சூழ்நிலைகள்‌ அதனை நியாயமென்று மெய்ப்பிக்குமானால்‌, வெளியிடப்படலாம்‌. 160. சில காரணங்களினால்‌ வரிக்கணிப்பு நடவடிக்கைகள்‌, முதலியவை செல்லாததாக இருத்தல்‌ கூடாது-- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ எதனையும்‌ தொடர்ந்து செய்யப்பட்ட, ஏற்கப்பட்ட, புரியப்பட்ட, பிறப்பிக்கப்பட்ட, தொடரப்பட்ட அல்லது செய்யப்பட்டதாக, ஏற்கப்பட்டதாக, புரியப்பட்டதாக, பிறப்பிக்கப்பட்டதாக, தொடரப்பட்டதாக புலப்படும்‌ வரிக்கணிப்பு, மறு வரிக்கணிப்பு, நீதிமுறையில்‌ தீர்மானித்தல்‌, மறு ஆய்வு, சீராய்வு, மேல்முறையீடு, சரி செய்தல்‌, அறிவிப்பு, அழைப்பாணை அல்லது பிற நடவடிக்கைகள்‌ எவையும்‌, அத்தகைய வரிக்கணிப்பு, மறுவரிக்கணிப்பு, நீதிமுறை தீர்மானிப்பு, மறு ஆய்வு, சீராய்வு, மேல்முறையீடு, சரிசெய்தல்‌, அறிவிப்பு, அழைப்பாணை அல்லது பிற நடவடிக்கைகள்‌ எதற்கும்‌ இந்த சட்டத்தின்‌ அல்லது இருந்து வரும்‌ சட்டத்தின்‌ உட்கருத்து, நோக்கங்கள்‌ மற்றும்‌ வேண்டுறுத்தங்களுக்கு இணங்க அல்லது ஏற்ப சாராம்சமும்‌ பொருளும்‌ இருக்குமானால்‌, அதிலுள்ள தவறு, குறைபாடு அல்லது விடுகை எதன்‌ காரணத்தினால்‌ மட்டுமே செல்லாததாக ஆகாது அல்லது செல்லாததாக கருதப்படுதல்‌ ஆகாது. (2) அறிவிப்பு ஆணை அல்லது தகவல்‌, நேர்விற்கேற்ப, யாருக்கு வழங்கப்பட்டதோ அந்த நபரால்‌ ஏற்கனவே செயல்படுத்தப்பட்டிருந்தால்‌ அல்லது அத்தகைய சார்வு செய்தல்‌ என்பது அத்தகைய அறிவிப்பு ஆணை அல்லது தகவலுக்கு தொடர்ச்சியாக தொடங்கப்பட்ட, தொடர்ந்து எடுக்கப்பட்ட அல்லது 190 முடித்து வைக்கப்பட்ட முன்னதான நடவடிக்கைகளில்‌ கேள்விக்குள்ளாக்கப்படாதபோது, தற்போது சார்வு செய்யப்படும்‌ அறிவிப்பு ஆணை அல்லது தகவல்‌ எதையும்‌ கேள்விக்குள்ளாக்க இயலாது. 161. பதிவுருவில்‌ தெளிவாகத்‌ தெரிகின்ற பிழைகளை ந்க்குதல்‌.- 160-ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்குக்‌ குந்தகமின்றி மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ பிற வகைமுறைகள்‌ எவற்றிலும்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, முடிவு அல்லது ஆணை அல்லது அறிவிப்பு அல்லது சான்றிதழ்‌ அல்லது பிற எந்த ஆவணத்தை எவர்‌ வழங்கியிருக்கிறாரோ அல்லது பிறப்பித்திருக்கிறாரோ அந்த அதிகார அமைப்பு, அத்தகைய முடிவு அல்லது ஆணை அல்லது அறிவிப்பு அல்லது சான்றிதழ்‌ அல்லது பிற ஆவணம்‌ எதுவும்‌, நேர்விற்கேற்ப வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாத காலத்திற்குள்‌ பாதிக்கப்பட்ட நபரால்‌ அல்லது இந்த சட்டத்தின்படி அமர்த்தப்பட்ட அலுவலர்‌ எவராலும்‌ அல்லது மைய சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரிச்‌ சட்டத்தின்படி அமர்த்தப்பட்ட அலுவலர்‌ ஒருவரால்‌ அதனுடைய கவனத்திற்கு அத்தகைய பிழை கொண்டுவரப்படுகின்றவிடத்து அல்லது அதனுடைய சொந்த முயற்சியாலோ, அத்தகைய முடிவு அல்லது ஆணை அல்லது அறிவிப்பு அல்லது சான்றிதழ்‌ அல்லது பிற ஆவணம்‌ எதிலும்‌ தெளிவாகத்‌ தெரிகின்ற பிழையை நீக்கலாம்‌: வரம்புரை: ஆனால்‌, அத்தகைய முடிவு அல்லது ஆணை அல்லது அறிவிப்பு அல்லது சான்றிதழ்‌ அல்லது பிற ஆவணம்‌ எதுவும்‌ வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குப்‌ பின்பு அத்தகைய சரிசெய்தல்‌ எதுவும்‌ செய்யப்படுதலாகாது: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, மேற்சொன்ன ஆறுமாத கால அளவு, தற்செயலான தவறுகை அல்லது விட்டுவிடப்பட்டது எதிலிருந்தும்‌ எழும்‌ எழுத்திலான அல்லது எண்ணிலான பிழை ஒன்றினை முழுவதுமாக திருத்தி சரி செய்வதாக இருக்கின்ற அத்தகைய நேர்வுகளில்‌ பொருந்தலாகாது: மேலும்‌ வரம்புரை: மேலும்‌, அத்தகைய சரி செய்தல்‌ நபர்‌ எவருக்கும்‌ எதிரிடையாக பாதிக்கிறவிடத்து, இயற்கை நீதி நெறிகள்‌, அத்தகைய சரி செய்தலை செயல்படுத்தும்போது, அதிகார அமைப்பினால்‌ பின்பற்றப்படுதல்‌ வேண்டும்‌. 162. உரிமையியல்‌ நீதிமன்றங்களின்‌ அதிகார வரம்பிற்குத்‌ தடை- 117 மற்றும்‌ 18— ஆம்‌ பிரிவுகளில்‌ வகை செய்யப்பட்டவாறல்லாமல்‌, உரிமையியல்‌ நீதிமன்றம்‌ எதுவும்‌, இந்த சட்டத்தின்கீழ்‌ செய்யப்பட்ட அல்லது செய்யப்பட்டதாக கருதப்பட்ட எதற்கும்‌ தொடர்பாக அல்லது அதிலிருந்து எழும்‌ கேள்வி எதையும்‌ கையாள்வதற்கு அல்லது முடிவு செய்வதற்கான அதிகார வரம்புடையதாகாது. 163. கட்டணம்‌ விதித்தல்‌- ஆணை அல்லது ஆவணம்‌ எதனின்‌ நகல்‌ ஒன்றை, அந்த நோக்கத்திற்காக அவரால்‌ செய்யப்பட்ட விண்ணப்பம்‌ ஒன்றின்‌ பேரில்‌ நபர்‌ எவருக்கும்‌ வழங்குகிறவிடத்தெல்லாம்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய கட்டணம்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 191 164. விதிகளை செய்வதற்கான அரசின்‌ அதிகாரம்‌.- (1) அரசு, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, அறிவிக்கையினால்‌, இந்த சட்டத்தின்‌ வகைமுறைகளை நிறைவேற்றுவதற்கான விதிகளைச்‌ செய்யலாம்‌. (2 0௫-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளின்‌ பொதுப்பாங்கிற்கு குந்தகமின்றி, வகுத்துரைக்கப்படக்கூடியவாறு அல்லது வகுத்துரைக்கப்படலாகுமாறு அல்லது விதிகளால்‌ செய்யப்படக்கூடிய அல்லது செய்யப்படலாகும்‌ வகைமுறைகள்‌ பொறுத்து, இந்த சட்டத்தினால்‌ வேண்டுறுத்தப்படும்‌ பொருட்பாடுகள்‌ அனைத்திற்காகவும்‌ அல்லது அவற்றில்‌ எதற்காகவும்‌, அரசு விதிகளைச்‌ செய்யலாம்‌. (3) இந்த பிரிவின்படி வழங்கப்பட்ட விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌, அல்லது இந்த சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ நடைமுறைக்கு வரும்‌ அந்த தேதிக்கு முந்தையதல்லாத தேதியிலிருந்து விதிகள்‌ அனைத்திற்கும்‌ அல்லது அவற்றில்‌ எதற்கும்‌ முன்தேதியிட்டு வழங்குவதற்குமான அதிகாரத்தை அடக்கியிருத்தல்‌ வேண்டும்‌. (4) 0-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அல்லது (2)-ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ செய்யப்பட்ட விதிகள்‌ எதுவும்‌, அதனின்‌ முரண்பாட்டிற்காக பத்தாயிரம்‌ ரூபாய்க்கு மிகாத தண்டத்தொகை ஒன்றிற்கு கடப்பாடுடையதாக கருதுதல்‌ வேண்டுமென்று வகை செய்யப்படலாம்‌. 165. ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.-- அரசு, அறிவிக்கையினால்‌, இந்த சட்டத்தின்‌ வகைமுறைகளை நிறைவேற்றுவதற்காக இந்த சட்டத்திற்கிணங்க மற்றும்‌ அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளுக்கிணங்க ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்யலாம்‌. 166. விதிகள்‌, ஒழுங்குமுறை விதிகள்‌ மற்றும்‌ அறிவிக்கைகளை முன்‌ வைத்தல்‌. இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌, அரசால்‌ செய்யப்பட்ட விதி ஒவ்வொன்றும்‌, அரசால்‌ செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதி ஒவ்வொன்றும்‌ மற்றும்‌ அரசால்‌ பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும்‌, செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்பு, கூடிய விரைவில்‌, மாநில சட்டமன்றத்தின்‌ முன்பு, அது ஒரு கூட்டத்‌ தொடராகவோ அல்லது இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட அடுத்தடுத்த கூட்டத்‌ தொடர்களாகவோ மொத்தம்‌ முப்பது நாட்கள்‌ கொண்ட கால அளவுக்கு அது அமர்வில்‌ இருக்கையில்‌, அதன்‌ முன்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ மேற்சொன்ன கூட்டத்தொடர்‌ அல்லது அடுத்தடுத்தக்‌ கூட்டத்‌ தொடர்களை உடனடியாகத்‌ தொடர்ந்துவரும்‌ கூட்டத்தொடர்‌ முடிவடைவதற்கு முன்பு, அந்த விதியில்‌ அல்லது ஒழுங்குமுறை விதியில்‌ அல்லது அறிவிக்கையில்‌, நேர்விற்கேற்ப மாற்றமைவு எதனையும்‌ செய்வதற்கு மாநில சட்டமன்றம்‌ ஒத்துக்கொள்ளுமாயின்‌ அல்லது, அந்த விதி, ஒழுங்குமுறை விதி அல்லது அறிவிக்கை செய்யப்படுதல்‌ ஆகாது என்பதை மாநிலச்‌ சட்டமன்றம்‌ ஒத்துக்கொள்ளுமாயின்‌, அதன்பின்பு, நேர்விற்கேற்ப அந்த விதி அல்லது 192 ஒழுங்குமுறை விதி அல்லது அறிவிக்கை அவ்வாறு மாற்றமைவு செய்யப்பட்ட வடிவத்தில்‌ மட்டுமே செயல்விளைவுடையதாகும்‌, அல்லது நேர்விற்கேற்ப, செயல்விளைவில்லாது போகும்‌; எனினும்‌, அத்தகைய மாற்றமைவு அல்லது அழித்தரவு எதுவும்‌, நேர்விற்கேற்ப, அந்த விதி அல்லது ஒழுங்குமுறை விதி அல்லது அறிவிக்கையின்படி முன்னதாகச்‌ செய்யப்பட்ட எதனுடைய செல்லுந்தன்மைக்கும்‌ குந்தகமின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 167. அதிகாரங்களின்‌ ஒப்படைவு.-- ஆணையர்‌, அறிவிக்கையினால்‌, அத்தகைய அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டு, எதுவுமிருக்கிறதென்றால்‌, இந்த சட்டத்தின்கீழ்‌ அதிகார அமைப்பு எதனாலும்‌ அல்லது அலுவலர்‌ எவராலும்‌ செயலுறுத்தத்தக்க அதிகாரம்‌ எதுவும்‌ அத்தகைய அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ பிற அதிகார அமைப்பால்‌ அல்லது அலுவலரால்‌ செயலுறுத்தப்படலாம்‌ என்று அறிவுறுத்தலாம்‌. 168. அறிவுறுத்தல்‌ அல்லது பணிப்புரைகளை வழங்குவதற்கான அதிகாரம்‌.- ஆணையர்‌, இந்த சட்டத்தினை செயல்முறைபடுத்துவதில்‌ சீராக இருக்க வேண்டும்‌ என்ற நோக்கத்திற்காக அவ்வாறு செய்வது தேவையானது அல்லது உகந்தது என்று கருதினால்‌ அது பொருந்துகிறவாறு அத்தகைய ஆணைகளை, அறிவுறுத்தங்களை அல்லது பணிப்புரைகளை மாநில வரி அலுவலர்களுக்கு வழங்கலாம்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தினை செயல்முறைப்படுத்துவதற்காக நியமனம்‌ செய்யப்பட்ட அனைத்து அலுவலர்கள்‌ மற்றும்‌ அனைத்து பிற நபர்கள்‌ அனைவரும்‌ அத்தகைய ஆணைகளை, அறிவுறுத்தல்களை அல்லது பணிப்புரைகளை கவனிக்க வேண்டும்‌ மற்றும்‌ பின்பற்ற வேண்டும்‌. 1469. குறித்த சில சூழ்நிலைகளில்‌ அறிவிப்பு சார்வு செய்தல்‌.-- (1) இந்த சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்படி முடிவு. ஆணை, அழைப்பாணைகள்‌, அறிவிப்பு மற்றும்‌ பிற தகவல்‌ எதுவும்‌ பின்வரும்‌ ஏதாவதொரு முறைகளில்‌ சார்வு செய்யப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- (அ) அதனை நேரடியாக அல்லது தூதஞ்சல்‌ ஒன்று உள்ளடங்கலாக தகவல்‌ தொகுப்பவர்‌ ஒருவர்‌ மூலமாக விலாசமுடையவருக்கு, வரிவிதிக்கத்தக்க நபர்‌ அல்லது அவருடைய மேலாளருக்கு அல்லது அதிகாரம்‌ அளிக்கப்பெற்ற பிரதிநிதிக்கு அல்லது வரி நடவடிக்கைகளில்‌ ஆஜராகும்‌ அதிகாரம்‌ பெற்றுள்ள வரி தொழிலாற்றுநர்கள்‌ அல்லது வழக்கறிஞருக்கு அல்லது வணிகத்துடன்‌ தொடர்புடைய அவரால்‌ தொடர்ந்து நியமனம்‌ செய்யப்பட்ட நபர்‌ ஒருவருக்கு அல்லது வரிவிதிக்கத்தக்க நபருடன்‌ குடியிருந்து வரும்‌ குடும்பத்தில்‌ வயதுக்கு வந்த உறுப்பினர்‌ எவருக்கும்‌ கொடுத்தல்‌ அல்லது அளித்தல்‌ மூலம்‌; அல்லது (ஆ) அது, பதிவு தபால்‌ மூலம்‌ அல்லது விரைவு தபால்‌ மூலம்‌ அல்லது தூதஞ்சல்‌ மூலம்‌ அனுப்புகை அட்டையுடன்‌, அனுப்ப உள்ளதாக கருதப்பட்டுள்ள 193 நபர்‌ எவருக்கு அல்லது அவருடைய அதிகாரம்‌ அளிக்கப்பட்ட பிரதிநிதிக்கு, அவர்‌ இறுதியாக வணிகம்‌ செய்த இடத்திற்கு அல்லது குடியிருந்த இடத்திற்கு; அல்லது (இ) பதிவு நேரத்தில்‌ கொடுக்கப்பட்ட அல்லது அவ்வப்போது திருத்தம்‌ செய்யப்பட்ட அவருடைய மின்னஞ்சல்‌ முகவரிக்கு தகவல்‌ ஒன்றினை அனுப்புவதன்‌ மூலம்‌; அல்லது (FF) பொது வலைதள முகவரியில்‌ அது கிடைக்கப்பெறுவதாக வகைசெய்வதன்‌ மூலம்‌; அல்லது (௨) வரிவிதிக்கத்தக்க நபர்‌ அல்லது அது வழங்கப்பட்ட நபர்‌ இறுதியாக எந்த இடத்தில்‌ வாழ்ந்து வந்துள்ளாரோ, வணிகம்‌ நடத்தியிருந்தாரோ அல்லது லாபத்திற்காக சொந்தமாக வேலை செய்துள்ளாரோ அந்த இடத்தில்‌ வெளியாகும்‌ ஒரு செய்தித்தாளில்‌ வெளியிடுவதன்‌ மூலம்‌; அல்லது (ஊ) மேற்சொன்ன முறைகளில்‌ எதுவும்‌ ஒத்துவராத போது, அவர்‌ இறுதியாக வணிகம்‌ செய்து வந்துள்ள அல்லது குடியிருந்து வந்துள்ள வெளிப்படையான மக்கள்‌ கூடும்‌ சில இடங்களில்‌ அதனை ஒட்டுவதன்‌ மூலம்‌ மற்றும்‌ காரணம்‌ எதனாலும்‌ அத்தகைய முறை ஒத்துவராமல்‌ இருக்கிறதென்றால்‌, அத்தகைய முடிவினை அல்லது ஆணையை பிறப்பித்த அல்லது அத்தகைய அழைப்பாணைகளை அல்லது அறிவிப்பை வெளியிட்ட தொடர்புடைய அலுவலர்‌ அல்லது அதிகார அமைப்பின்‌ அலுவலக அறிவிப்புப்‌ பலகையில்‌ அதனின்‌ நகலொன்றினை ஓட்டுவதன்‌ மூலம்‌. (2) முடிவு ஆணை, அழைப்பாணைகள்‌ அல்லது தகவல்‌ எதுவும்‌ (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ வகை செய்யப்பட்ட முறைகளில்‌ ஒட்டப்பட்டுள்ள அதனின்‌ மேலொப்பமிட்ட அல்லது வெளியிடப்பட்ட அதனின்‌ நகலொன்று அந்த தேதியன்று அனுப்பப்பட்டுள்ளதாக கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (3) அத்தகைய முடிவு. ஆணை, அழைப்பாணைகள்‌, அறிவிப்பு அல்லது தகவல்‌ எதுவும்‌ பதிவு அஞ்சலில்‌, விரைவு அஞ்சலில்‌ அனுப்பப்பட்டிருக்கும்‌ போது முரணானது மெய்ப்பிக்கப்பட்டிருந்தாலன்றி, அனுப்புகையிலுள்ள அத்தகைய அஞ்சல்‌ எடுத்துக்கொள்ளப்பட்ட காலம்‌ முடிவடைந்த பிறகு முகவரியாள்‌ பெறப்பட்டிருப்பதாக கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 170. வரி முதலியவற்றை முழு தொகையாக்கல்‌.- இந்த சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி வரித்தொகை, வட்டி, தண்டத்தொகை, அபராதம்‌ அல்லது செலுத்த வேண்டிய தொகை பிற எதுவும்‌ மற்றும்‌ திருப்பிக்‌ கொடுக்க வேண்டிய தொகை அல்லது கொடுக்க வேண்டிய பிற தொகை எதுவும்‌, மிக அருகிலுள்ள ரூபாய்க்கு முழு தொகையாக்குதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இதன்‌ நோக்கத்திற்காக, அத்தகைய தொகை ரூபாயின்‌ ஒரு பகுதியாகவுள்ளதாக அமைந்திருக்கிறவிடத்து, அத்தகைய பகுதி ஐம்பது காசு அல்லது அதற்கு மேல்‌ இருக்குமானால்‌, அது ஒரு ரூபாய்க்கு அதிகரிக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய பகுதி ஐம்பது காசுக்கு குறைவாக இருக்குமானால்‌, அதை புறக்கணித்தல்‌ வேண்டும்‌. 194 171. இலாப நோக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள்‌.- (1) சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ வழங்குகை எதன்‌ மீதான வரிவிதத்திலுள்ள குறைப்பு எதுவும்‌ அல்லது உள்ளிட்டு வரி வரவின்‌ சலுகையானது, விலைகளின்‌ ஏற்ற குறைப்பு வழியாக பெற்று கொள்பவருக்கு செல்லுதல்‌ வேண்டும்‌. (2) மைய அரசு, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, அறிவிக்கை வாயிலாக, பதிவு பெற்ற நபர்‌ எவராலும்‌ பயன்படுத்தப்பட்ட உள்ளிட்டு வரி வரவுகள்‌ அல்லது வரிவீதத்தின்‌ குறைப்பு, அவரால்‌ வழங்கப்பட்ட சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ விலையில்‌ குறைப்பு செய்துள்ளது என ஆய்வு செய்வதற்கு அதிகார அமைப்பினை அமைத்துருவாக்கலாம்‌ அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம்‌ எதன்படியும்‌ அமைத்துருவாக்கப்பட்டு இருந்து வரும்‌ அதிகார அமைப்பிற்கு அதிகாரமளிக்கலாம்‌. (3) (2-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்ட அதிகார அமைப்பு வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய அதிகாரங்களை செயல்படுத்துதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ பணிகளை ஆற்றுதல்‌ வேண்டும்‌. 172. இடர்பாடுகளை அகற்றுதல்‌. (1) இந்த சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ எவற்றையும்‌ செயற்படுத்துகையில்‌ இடர்பாடு எதுவும்‌ எழுமானால்‌, அரசு, மன்றத்தின்‌ பரிந்துரைகளின்‌ பேரில்‌, அதிகார முறை அரசிதழில்‌ வெளியிடப்பட்ட பொது அல்லது சிறப்பு ஆணை மூலம்‌, மேற்சொன்ன இடர்பாட்டை அகற்றும்‌ பொருட்டு அவசியமாகலாகும்‌ அல்லது உகந்ததாகலாகும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகள்‌ அல்லது ஒழுங்குமுறை விதிகளின்‌ வகைமுறைகளுக்கு மாறாக இராத அத்தகைய வகைமுறைகளைச்‌ செய்யலாம்‌: வரம்புரை: ஆனால்‌, அத்தகைய ஆணை எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதியிலிருந்து மூன்றாண்டுகள்‌ கால அளவு முடிவுற்ற பின்பு செய்யப்படுதல்‌ ஆகாது. (2) இந்த பிரிவின்கீழ்‌ செய்யப்பட்ட ஆணை ஒவ்வொன்றும்‌, அது பிறப்பிக்கப்பட்ட பின்பு, கூடிய விரைவில்‌, மாநில சட்டமன்றத்தின்‌ முன்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. 173. குறித்த சில சட்டங்களை திருத்தம்‌ செய்தல்‌.- இந்த சட்டத்தில்‌ பிறவாறு வகை செய்யப்பட்டவாறல்லாமல்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌.- (i) 1949-ஆம்‌ ஆண்டு சென்னை மாநகர மாநகராட்சி மன்றச்‌ சட்டத்திலுள்ள (தமிழ்நாடு சட்டம்‌ IV/1919),~ (அ) 98-ஆம்‌ பிரிவிலுள்ள (1)-கூறு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (ஆ) 129 மற்றும்‌ 129-& பிரிவுகள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (&) 129-B பிரிவில்‌,- 195 (1) (b உட்பிரிவில்‌, "129-& பிரிவின்கழான வரிவிதிப்பு, மன்றத்தினால்‌ தீர்மானம்‌ செய்யப்பட்ட பின்பு என்ற சொற்றொடர்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (2) (2-ஆம்‌ உட்பிரிவில்‌,- (அ) டு-கூறில்‌, கடைசியிலுள்ள "அல்லது" என்ற சொல்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (ஆ) 0-ஆம்‌ கூறு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (ஈ) 129-D மற்றும்‌ 129-E பிரிவுகளில்‌, "129-A பிரிவு அல்லது" என்ற சொற்றொடர்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (உ) 1429-1 மற்றும்‌ 326-006 பிரிவுகள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (ஊ) றரி-ஆம்‌ இணைப்புப்‌ பட்டியலில்‌, 129-ஆம்‌ பிரிவு தொடர்பான பதிவுகள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; 0) 1920-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்டம்‌ V/1920),— (அ) 78-ஆம்‌ பிரிவில்‌, (00)-கூறு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (ஆ) 107-A பிரிவு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (இ) 107-8 பிரிவில்‌,- (1) (௫-ஆம்‌ உட்பிரிவில்‌, "107-& பிரிவின்கழான வரிவிதிப்பு, நகராட்சி மன்றத்தினால்‌ தீர்மானம்‌ செய்யப்பட்ட பின்பு" என்ற சொற்றொடர்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (2 (2-ஆம்‌ உட்பிரிவில்‌, (0-ஆம்‌ கூறு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (/) 107-D மற்றும்‌ 107-D பிரிவுகளில்‌, "107-& பிரிவு அல்லது" என்ற சொற்றொடர்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (௨) 107-F மற்றும்‌ 285-066 பிரிவுகள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; 00 1971-ஆம்‌ ஆண்டு மதுரை மாநகர மாநகராட்சி மன்றச்‌ சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 15/1971),~ (அ) 4115-ஆம்‌ பிரிவில்‌, (6) கூறு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (ஆ) 1457-ஆம்‌ பிரிவு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (க) 158-ஆம்‌ பிரிவில்‌,- (1) ௩-ஆம்‌ உட்பிரிவில்‌ "157-ஆம்‌ பிரிவின்கீழான வரிவிதிப்பு, மன்றத்தினால்‌ தீர்மானம்‌ செய்யப்பட்ட பின்பு என்ற சொற்றொடர்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; 196 (2 (2-ஆம்‌ உட்பிரிவில்‌, (0-ஆம்‌ கூறு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (FF) 1460-ஆம்‌ மற்றும்‌ 1461-ஆம்‌ பிரிவுகளில்‌, "157-ஆம்‌ பிரிவு அல்லது" என்ற சொற்றொடர்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (௨) 162 மற்றும்‌ 4140-66 பிரிவுகள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (iv) 1981-ஆம்‌ ஆண்டு கோயம்புத்தூர்‌ மாநகர மாநகராட்சி மன்றச்‌ சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 25/1981),~ (அ) 17-ஆம்‌ பிரிவில்‌, (6)-கூறு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (ஆ) 1458-ஆம்‌ பிரிவு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (க) 159-ஆம்‌ பிரிவில்‌,- (1) (0-ஆம்‌ உட்பிரிவில்‌, "158-ஆம்‌ பிரிவின்கழான வரிவிதிப்பு, மன்றத்தினால்‌ தீர்மானம்‌ செய்யப்பட்ட பின்பு என்ற சொற்றொடர்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (2 (2-ஆம்‌ உட்பிரிவில்‌, (0-ஆம்‌ கூறு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (") 161 மற்றும்‌ 162 பிரிவுகளில்‌, 58-ஆம்‌ பிரிவு அல்லது" என்ற சொற்றொடர்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (௨) 163 மற்றும்‌ 410-CC பிரிவுகள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (V) 1994-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்‌ சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 217 1994)- (அ) 172-* பிரிவு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (ஆ) 172-8 பிரிவில்‌, "172-& பிரிவின்கீழான வரிவிதிப்பு, ஆட்சியரால்‌ தீர்மானம்‌ செய்யப்பட்ட பின்பு" என்ற சொற்றொடர்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; (இ) 174-ஆம்‌ பிரிவில்‌, "பிரிவுகள்‌ 171, 172 மற்றும்‌ 172-&" என்ற சொற்றொடருக்கு பதிலாக, "பிரிவுகள்‌ 171 மற்றும்‌ 172" என்ற சொற்றொடர்‌ அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌; (ஈ) 175-& பிரிவு விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. 174. நீக்கறவு மற்றும்‌ காப்பு- (1) இந்த சட்டத்தில்‌ பிறவாறு வகை செய்யப்பட்டவாறல்லாமல்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌.- (i) அரசியலமைப்பின்‌ ஏழாம்‌ இணைப்புப்‌ பட்டியலில்‌ மாநிலப்‌ பட்டியின்‌ 54- ஆம்‌ பதிவில்‌ உள்ளடக்கப்பட்ட சரக்குகள்‌ தவிர, 2006-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 32/2006); 197 0) 1935-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பந்தய வரிச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ XX/1935); 00 1939-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள்‌ வரிச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ X/1939); (iv) 1981-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஆடம்பரங்கள்‌ வரிச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 6/1981); (V) 1983-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு விளம்பர வரிச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 22/1983); (Vi) 4990-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி பகுதிகளுக்குள்‌ இயக்கூர்திகள்‌ நுழைவின்‌ மீது வரிச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 13,4990); 00) 2001-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி பகுதிகளுக்குள்‌ சரக்குகள்‌ நுழைவின்‌ மீது வரி சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 20/2001); (இதன்பின்பு நீக்கறவு செய்யப்பட்ட சட்டங்கள்‌ என்று சுட்டப்படும்‌ சட்டங்கள்‌) இதன்மூலம்‌ நீக்கறவு செய்யப்பட்டது. (2) (இதன்பின்பு "அத்தகைய திருத்தம்‌" அல்லது "திருத்தப்பட்ட சட்டம்‌" என்று, நேர்விற்கேற்ப, சுட்டப்படும்‌) மேற்சொன்ன சட்டங்களின்‌ நீக்கறவு மற்றும்‌ 173-ஆம்‌ பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்ட சட்டங்களின்‌ திருத்தம்‌, 1732-ஆம்‌ பிரிவின்‌ அல்லது (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்ட அளவுக்கு- (அ) அத்தகைய திருத்தம்‌ அல்லது நீக்கறவு சமயத்தில்‌ நடைமுறையில்‌ இராத அல்லது இருந்துவராத எதுவும்‌ உயிர்ப்புறுதல்‌ ஆகாது; அல்லது (ஆ) திருத்தம்‌ செய்யப்பட்ட சட்டங்களின்‌ அல்லது நீக்கறவு செய்யப்பட்ட சட்டங்களின்‌ மற்றும்‌ ஆணைகளின்‌ அல்லது உரியவாறு செய்யப்பட்ட அல்லது அதன்படி பாதிக்கப்பட்ட எதனின்‌ முந்தைய செயற்பாட்டினை பாதித்தல்‌ ஆகாது; அல்லது (இ) அத்தகைய நீக்கறவு செய்யப்பட்ட அல்லது திருத்தம்‌ செய்யப்பட்ட சட்டங்களின்படியான ஆணைகள்‌ அல்லது திருத்தம்‌ செய்யப்பட்ட சட்டங்களின்படி, நீக்கறவு செய்யப்பட்ட சட்டங்களின்படி ஈட்டப்பட்ட கிட்டய அல்லது மேற்கொள்ளப்பட்ட உரிமை, சிறப்புரிமை, கடமைப்‌ பொறுப்பு அல்லது கடப்பாடு எதனையும்‌ பாதித்தல்‌ ஆகாது: வரம்புரை: ஆனால்‌, அறிவிக்கை வாயிலாக முதலீட்டிற்கான ஊக்கத்‌ தொகையாக வழங்கப்பட்ட வரிவிலக்களிப்பு எதுவும்‌, குறித்திட்ட நாளன்று அல்லது அதற்குப்‌ பின்பு மேற்சொன்ன அறிவிக்கை ரத்து செய்யப்பட்டிருக்குமானால்‌, சிறப்புரிமையாகத்‌ தொடருதல்‌ ஆகாது; (௬) திருத்தம்‌ செய்யப்பட்ட சட்டங்களின்‌ அல்லது நீக்கறவு செய்யப்பட்ட சட்டங்களின்‌ வகைமுறைகளுக்கு எதிராக செய்யப்பட்ட குற்றம்‌ அல்லது மீறுகை எதனையும்‌ பொறுத்து கொடுபட வேண்டிய அல்லது கொடுபட வேண்டியதாக 198 ஆகலாகும்‌ வரி, மேல்வரி, தண்டத்தொகை, அபராதம்‌, வட்டி எதனையும்‌ அல்லது பொறுத்தப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட தண்ட இழப்பு அல்லது தண்டனை எதனையும்‌ பாதித்தல்‌ ஆகாது; அல்லது (௨) மேற்சொன்ன அத்தகைய வரி, மேல்வரி, தண்டத்தொகை, அபராதம்‌, வட்டி, உரிமை, சிறப்புரிமை, கடமைப்‌ பொறுப்பு, கடப்பாடு, தண்ட இழப்பு அல்லது தண்டனை எதனையும்‌ பொறுத்து, புலனாய்வு விசாரணை, விசாரணை, (கூர்ந்தாய்வு மற்றும்‌ தணிக்கை உள்ளடங்கலான) சரிபார்த்தல்‌, வரிக்கணிப்பு நடவடிக்கைகள்‌, நீதிமுறையில்‌ தீர்மானித்தல்‌ மற்றும்‌ பிற சட்ட நடவடிக்கைகள்‌ எவையும்‌ அல்லது நிலுவைத்‌ தொகைகளை வளுலித்தல்‌ அல்லது பரிகாரம்‌ எதனையும்‌ பாதித்தல்‌ ஆகாது, மற்றும்‌ அத்தகைய புலனாய்வு விசாரணை, விசாரணை, (கூர்ந்தாய்வு மற்றும்‌ தணிக்கை உள்ளடங்கலான) சரிபார்த்தல்‌, வரிக்கணிப்பு நடவடிக்கைகள்‌, நீதிமுறையில்‌ தீர்மானித்தல்‌ மற்றும்‌ பிற சட்ட நடவடிக்கைகள்‌, அல்லது நிலுவைத்‌ தொகைகள்‌ வளுலித்தல்‌ அல்லது பரிகாரம்‌ ஆகியவை ஆரம்பிக்கப்படலாம்‌, தொடரப்படலாம்‌ அல்லது செயற்படுத்தப்படலாம்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டங்கள்‌ அவ்வாறு திருத்தம்‌ செய்யப்படாது அல்லது நீக்கறவு செய்யப்படாது இருந்தாற்போன்று, அத்தகைய வரி, மேல்‌ வரி, தண்டத்‌ தொகை, அபராதம்‌, வட்டி, தண்ட இழப்பு அல்லது தண்டனை விதிக்கப்படலாம்‌ அல்லது சுமத்தப்படலாம்‌; அல்லது (ஊ)மேற்சொன்ன திருத்தம்‌ செய்யப்பட்ட சட்டங்கள்‌ அல்லது நீக்கறவு செய்யப்பட்ட சட்டங்களின்படி குறித்திட்ட நாளன்று அல்லது அதற்குபின்பு தொடரப்பட்ட மேல்முறையீடு, சீராய்வு, மறு ஆய்வு அல்லது மேல்முடிவுக்கு அனுப்புதல்‌ உள்ளடங்கலான நடவடிக்கைகள்‌ எவற்றையும்‌ பாதித்தல்‌ ஆகாது, மற்றும்‌ அத்தகைய நடவடிக்கைகள்‌, இந்தச்‌ சட்டம்‌ நடைமுறை வந்தராதது போன்றும்‌, மேற்சொன்ன சட்டங்கள்‌ திருத்தம்‌ செய்யப்படாதது போன்றும்‌ அல்லது நீக்கறவு செய்யப்படாதது போன்றும்‌, மேற்சொன்ன திருத்தம்‌ செய்யப்பட்ட சட்டங்களின்‌ அல்லது நீக்கறவு செய்யப்பட்ட சட்டங்களின்படி தொடருதல்‌ வேண்டும்‌. (3) 1732-ஆம்‌ பிரிவில்‌ மற்றும்‌ (1)-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்ட குறிப்பிடப்பட்ட பொருட்பாடுகள்‌ பற்றிய குறிப்பிடுகை, நீக்கறவின்‌ செயல்விளைவு குறித்து 1891-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது கூறுகள்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 1/1891) 8-ஆம்‌ பிரிவின்‌ பொதுவான பொருந்துகைக்கு குந்தகமாகவோ அல்லது அதனைப்‌ பாதிப்பதாகவோ இருத்தல்‌ ஆகாது. 199 இணைப்புப்‌ பட்டியல்‌ | (7-ஆம்‌ பிரிவைக்‌ காண்க) நடவடிக்கைகள்‌ மறுபயன்‌ இல்லாமல்‌ செய்யப்பட்டாலும்‌, அவை வழங்குகையாகப்‌ பாவிக்கப்படுதல்‌. உள்ளீட்டு வரிவரவு வணிக சொத்திருப்புகளின்‌ பேரில்‌ பயன்படுத்தப்பட்டுள்ளவிடத்து, வணிக சொத்திருப்புகளை நிரந்தர உரிமை மாற்றம்‌ அல்லது அவற்றை தீர்வு செய்தல்‌. வணிகத்தின்போது அல்லது வணிகத்தின்‌ மேலுமான நடவடிக்கையின்போது 25-ஆம்‌ பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்ட தொடர்புடைய நபர்களுக்கிடையேயான அல்லது தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகை: வரம்புரை: ஆனால்‌, பணிக்கமர்த்தப்பட்டவருக்கு பணிக்கு அமர்த்தியவரால்‌ ஒரு நிதியாண்டில்‌ வழங்கப்படும்‌ ஐம்பதாயிரம்‌ ரூபாய்‌ மதிப்பிற்கு மேற்படாத நன்கொடைகளானது, சரக்குகள்‌ அல்லது சேவைகள்‌ அல்லது இரண்டின்‌ வழங்குகையாக பாவிக்கப்படுதல்‌ ஆகாது. (அ) முகவர்‌, முதல்வர்‌ சார்பாக அத்தகைய சரக்குகள்‌ வழங்குகையை மேற்கொள்கிறவிடத்து முதல்வரால்‌ தம்முடைய முகவருக்கு, அல்லது (ஆ) முகவர்‌, முதல்வரின்‌ சார்பாக அத்தகைய சரக்குகளைப்‌ 200 பெற்றுக்கொள்கிறவிடத்து முகவரால்‌ தம்முடைய முதல்வருக்கு, சரக்குகளின்‌ வழங்குகை. வணிகத்தின்போது அல்லது அவ்வணிகத்தினை மேல்நடத்தும்‌ போது தொடர்புடைய நபரிடமிருந்து அல்லது இந்தியாவிற்கு வெளியேயுள்ள தம்முடைய பிற நிறுவனங்களில்‌ எதனிடமிருந்தும்‌ வரிவிதிக்கத்தக்க நபரால்‌ செய்யப்படும்‌ சேவைகளின்‌ இறக்குமதி. 201 இணைப்புப்‌ பட்டியல்‌ ॥ (7-ஆம்‌ சிறிவைக்‌ காண்க) சரக்குகள்‌ வழங்குகையாக அல்லது சேவைகள்‌ வழங்குகையாகப்‌ பாவிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்‌ 1. உரிமைமாற்றம்‌, (அ) சரக்குகளிலுள்ள உறிமை மூலத்தின்‌ உரிமைமாற்றம்‌ எதுவும்‌ சரக்குகளின்‌ வழங்குகையாகும்‌; (ஆ) சரக்குகளிலுள்ள உறிமையின்‌ அல்லது அதன்‌ உரிமை மூலத்தின்‌ உரிமைமாற்றம்‌ இல்லாமல்‌ சரக்குகளிலுள்ள பிரிக்கப்படாத பங்கின்‌ உரிமை மாற்றம்‌ எதுவும்‌ சேவைகளின்‌ வழங்குகையாகும்‌; (இ) சரக்குகளில்‌ உள்ள சொத்து உடன்பாடு செய்யப்பட்டவாறு முழு மறுபயனின்‌ செலுத்துகையின்பேரில்‌ எதிர்கால தேதியில்‌ ஏற்றுக்கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌ என்று நிர்ணயிக்கப்பட்ட உடன்பாட்டின்‌ கீழ்‌ சரக்குகளிலுள்ள உறிமை மூலத்தின்‌ உரிமைமாற்றம்‌ எதுவும்‌, சரக்குகளின்‌ வழங்குகையாகும்‌. 2. நிலம்‌ மற்றும்‌ கட்டடம்‌, (அ) நிலத்தை நேரடி அனுபோகத்தில்‌ வைத்திருப்பதற்குரிய குத்தகை, குத்தகையுரிமை, வசதியுரிமை, உரிமம்‌ எதுவும்‌ சேவைகள்‌ வழங்குகையாகும்‌; (ஆ) வணிகத்திற்கான அல்லது பெருவணிகத்திற்கான வணிக, தொழில்‌ அல்லது குடியிருப்பு வளாகம்‌ உள்ளடங்கலான கட்டடத்தை. முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ, 202 குத்தகைக்கு அல்லது வாடகைக்குவிடுதல்‌ எதுவும்‌ சேவைகள்‌ வழங்குகையாகும்‌. நடத்துமுறை அல்லது செய்முறை, மற்றொரு நபரின்‌. சரக்குகளுக்குப்‌ பொருந்தும்‌ நடத்துமுறை அல்லது செய்முறை எதுவும்‌ சேவைகள்‌ வழங்குகையாகும்‌. வணிகச்‌ சொத்திருப்புகளை உரிமைமாற்றம்‌ செய்தல்‌, (அ) சரக்குகள்‌ வணிகத்தின்‌ சொத்திருப்புகளாக அமைகிறவிடத்து, மறுபயனுக்காகவாயினும்‌ அல்லது இல்லாவிடினும்‌, வணிகம்‌ நடத்திவரும்‌ நபரின்‌ உத்தரவுகளின்படியாகவோ அல்லது அவராலோ உரிமைமாற்றம்‌ அல்லது தீர்வு செய்யப்பட்டிருக்கிறவிடத்து, அச்சொத்திருப்புகளுக்கு பகுதியாக அந்த வணிகம்‌ அதிக நாள்‌ அமையாத நிலையில்‌ அத்தகைய உரிமைமாற்றம்‌ அல்லது வகைசெய்தலாகாது அந்த நபரால்‌ செய்யப்படும்‌ சரக்குகள்‌ வழங்குகையாகும்‌. (ஆ) வணிகம்‌ செய்கிற நபரின்‌. உத்தரவின்படியாகவோ அல்லது அதன்படியாகவோ, மறுபயனுக்காகவாயினும்‌ அல்லது இல்லாவிடினும்‌, வணிக நோக்கம்‌ அல்லாத பிற நோக்கம்‌ எதற்காகவும்‌ பயன்படுத்துவதற்கு நபர்‌ எவரும்‌ தனிப்பட்ட பயன்பாடு அல்லது பயன்படுத்தப்படுகிற அல்லது கிடைக்கக்‌ கூடியதாகச்‌ செய்யப்படுகிற வணிக நோக்கங்களுக்காக சரக்குகள்‌ 203 வைக்கப்படுகிறவிடத்து அல்லது பயன்படுத்தப்படுகிறவிடத்து, அத்தகைய சரக்குகளின்‌ பயன்பாடு அல்லது கிடைக்கக்கூடியதாக வைத்தல்‌ சேவைகள்‌ வழங்குகையாகும்‌; ®) O அந்த வணிகம்‌, நடந்துகொண்டுருக்கும்‌ வணிகமாக மற்றொரு நபருக்கு உரிமைமாற்றம்‌ செய்யப்பட்டாலன்றி; அல்லது (i) அந்த வணிகம்‌ வரிவிதிக்கத்தக்க நபராக கொள்ளப்படும்‌ நேடி பிரதிநிதியால்‌ நடத்தப்பட்டு வந்தாலன்றி, நபர்‌ எவரும்‌ வரிவிதிக்கத்தக்க நபராக இருப்பதினின்றும்‌ நீங்கிவிடுகிறவிடத்து, அவரால்‌ நடத்தப்படும்‌ வணிகம்‌ எதனின்‌ சொத்திருப்புகளின்‌ பகுதியாக அமைகின்ற சரக்குகள்‌ எவையும்‌, அவர்‌ வரிவிதிக்கத்தக்க நபராக இருப்பதினின்றும்‌ நீக்கிவிடுவதற்கு அடுத்து முன்பு அவருடைய வணிகத்தின்போது அல்லது அவ்வணிகத்தின்‌ மேலுமான நடவடிக்கையின்போது அவரால்‌ வழங்கப்பட்டவையாக கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. சேவைகள்‌ வழங்குகை, பின்வருவன சேவைகள்‌ வழங்குகையாக பாவிக்கப்படவேண்டும்‌, அவையாவன:- (அ) அசையாச்‌ சொத்தினை வாடகைக்கு விடுதல்‌; (ஆ) தகுதிவாய்ந்த அதிகார அமைப்பினரால்‌ கோரப்படுகிற 204 மையச்‌ சட்டம்‌ 20/1972. பணிமுடிப்புச்‌ சான்றிதழ்‌ வழங்கப்பட்ட பின்பு அல்லது முதல்‌ உள்ளிருப்புக்கு பின்பு, இதில்‌ எது முன்னதோ, அதற்கு பின்பு பெறப்பட்டுள்ள முழு மறுபயன்‌ தவிர, முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ, விலைக்கு வாங்குபவருக்கு விற்பனை செய்வதற்காக உத்தேசிக்கப்பட்ட வளாகம்‌ அல்லது கட்டடம்‌ உள்ளடங்கலான வளாகம்‌, கட்டடம்‌, குடிமுறை கட்டுமானம்‌ அல்லது அதன்‌ பகுதியின்‌ கட்டுமானம்‌, விளக்கம்‌.- இந்தக்‌ கூறின்‌ நோக்கங்களுக்காக- (1) "தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு" என்ற சொற்றொடர்‌, அரசு அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம்‌ எதன்படியும்‌ பணிமுடுப்புச்‌ சான்றிதழ்‌ வழங்க அதிகாரம்‌ அளிக்கப்பட்ட அதிகார அமைப்பு எதுவும்‌ என்று பொருள்படும்‌ மற்றும்‌ அத்தகைய அதிகார அமைப்பிடமிருந்து அத்தகைய சான்றிதழ்‌ கோரப்படாத நேர்வில்‌, பின்வருவனவற்றில்‌ எதிலிருந்தும்‌, அதாவது:- (i) 1972-ஆம்‌ ஆண்டு கட்டடக்‌ கலைஞர்கள்‌ சட்டத்தின்படி அமைத்துருவாக்கப்பட்ட கட்டடக்‌ கலைஞர்கள்‌ மன்றத்தில்‌ பதிவு செய்யப்பட்ட கட்டடக்‌ 205 (இ) (ஈ) (௨) கலைஞர்‌; அல்லது (0 (இந்திய) பொறியாளர்கள்‌ நிறுவனத்தில்‌ பதிவு செய்யப்பட்ட தனியுரிமைச்‌ சான்று பெற்ற பொறியாளர்‌; அல்லது 00 மாநகர அல்லது நகர அல்லது கிராம அல்லது வளர்ச்சி அல்லது திட்டமிடும்‌ அதிகார அமைப்பின்‌ அந்தந்த உள்ளாட்சி அமைப்பின்‌ உரிமம்‌ பெற்ற நில அளவையர்‌; (2) "கட்டுமானம்‌" என்ற சொற்றொடர்‌, இருந்து வரும்‌ குடிமுறை கட்டுமானம்‌ எதனின்‌ கூடுதல்‌ சேர்வது, மாற்றங்கள்‌, திருத்தியமைத்தல்‌, அல்லது மாற்றியமைத்தல்‌ உள்ளடங்கலானவை என்று பொருள்படும்‌. அறிவுசார்‌ சொத்து உரிமை எதனின்‌ பயன்பாட்டை அல்லது தற்காலிக உரிமை புழக்கத்தை உரிமை மாற்றம்‌ செய்தல்‌ அல்லது பயன்படுத்த அனுமதித்தல்‌; தகவல்‌ தொழில்நுட்ப மென்பொருளின்‌ வளர்ச்சி, வடிவமைப்பு, திட்டமிடல்‌, செயல்‌ வழங்காது தழுவல்‌, ஏற்றுக்கொள்ளுதல்‌, தரநிலை உயர்த்தல்‌, அதிகரித்தல்‌, நிறைவேற்றுதல்‌; செயல்‌ செய்வதற்குரிய அல்லது 206 செயலை அல்லது நிலையை சகித்துக்கொள்வதற்குரிய அல்லது அச்செயலை செய்யாமல்‌ இருப்பதற்குரிய கடமைப்பொறுப்பை ஒத்துக்‌ கொள்ளுதல்‌; மற்றும்‌ (ஊ) (குறித்துரைக்கப்பட்ட கால: அளவிற்காயினும்‌ அல்லது இல்லாவிடினும்‌), ரொக்கப்பணச்‌ செலுத்துகை அல்லது காலந்தள்ளிச்‌ செலுத்தப்படுதல்‌ அல்லது பிற மதிப்புடைய மறுபயனுக்கான நோக்கம்‌ எதற்காகவும்‌ சரக்குகள்‌ எவற்றையும்‌ பயன்படுத்துவதற்குரிய உரிமை மாற்றம்‌. கூட்டு வழங்குகை, பின்வரும்‌ கூட்டு வழங்குகைகள்‌, சேவைகள்‌ வழங்குகையாகப்‌ பாவிக்கப்படுதல்‌ வேண்டும்‌, அவையாவன:- (அ) 2-ஆம்‌ பிரிவின்‌ (119)-ஆம்‌ கூறில்‌ பொருள்வரையறை செய்யப்பட்டவாறான பணி ஒப்பந்தம்‌; மற்றும்‌ (ஆ) உணவாக இருக்கிற அல்லது மனித நுகர்வுக்கான பிற பொருள்‌ எதுவுமாக அல்லது (மனித நுகர்வுக்கான மதுபானம்‌ அல்லாத பிற) பானம்‌ எதுவுமாக இருக்கிற, அத்தகைய வழங்குகை அல்லது சேவை ரொக்கப்‌ பணத்திற்கானதாக, காலந்தள்ளி செலுத்தப்படும்‌ செலுத்துகைக்காக அல்லது பிற மதிப்புமிக்க மறுபயணாக இருக்கிறவிடத்து, சேவை எதன்‌ வாயிலாக அல்லது 207 அதன்‌ பகுதியாக இருக்கிற அல்லது பிற எந்த முறையாயினும்‌ இருக்கிற சரக்குகளின்‌. வழங்குகை. சரக்குகளின்‌ வழங்குகை, பின்வருவன சரக்குகளின்‌. வழங்குகையாகப்‌ பாவிக்கப்படுதல்‌ வேண்டும்‌, அவையாவன:- ரொக்கப்பணத்திற்காக, காலந்தள்ளி செலுத்தப்படும்‌ செலுத்துகைக்காக, அல்லது பிற மதிப்புமிக்க மறுபயனுக்காக, கூட்டுருமமாகப்‌ பதிவு செய்யப்பட்ட கழகம்‌ அல்லது நபர்களின்‌ குழு எதனாலும்‌ உறுப்பினருக்கு செய்யப்படும்‌ சரக்குகளின்‌ வழங்குகை. 208 இணைணப்புப்‌ பட்டியல்‌ ॥॥ (7-ஆம்‌ சிறிவைக்‌ காண்க) சரக்குகளின்‌ வழங்குகையாக இல்லாததாக அல்லது சேவைகளின்‌ வழங்குகையாக இல்லாததாக பாவிக்கப்படும்‌ செயல்கள்‌ அல்லது நடவடிக்கைகள்‌ தம்முடைய பணியமர்த்தத்தின்போது அல்லது அது தொடர்பாக, பணிக்கமர்த்துநருக்கு பணிக்கமர்த்தப்பட்டவரால்‌ அளிக்கப்படும்‌ சேவைகள்‌. அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம்‌ எதன்படியும்‌ நிறுவப்பட்ட நதிமன்றம்‌ அல்லது தீர்ப்பாயம்‌ எதனாலும்‌ அளிக்கப்படும்‌ சேவைகள்‌. (அ) நாடாளுமன்ற உறுப்பினர்களால்‌, மாநிலச்‌ சட்டமன்ற உறுப்பினர்களால்‌, ஊராட்சிமன்ற உறுப்பினர்களால்‌, நகராட்சிகள்‌ மன்ற உறுப்பினர்களால்‌ மற்றும்‌ உள்ளாட்சி அதிகார அமைப்புகளால்‌ புரியப்படும்‌ பதவிப்பணிகள்‌; (ஆ) அந்த நிலைமுறையில்‌ அரசியலமைப்பின்‌. வகைமுறைகளைத்‌ தொடர்ந்து பதவி எதனையும்‌ வகித்துவரும்‌ நபர்‌ எவராலும்‌ புரியப்படும்‌ கடமைகள்‌; அல்லது (இ) மைய அரசால்‌ அல்லது மாநில அரசால்‌ அல்லது ஊராட்சி அதிகார அமைப்பால்‌ நிறுவப்பட்ட அமைப்பிலுள்ள மற்றும்‌ இந்தக்‌ கூறின்‌ தொடக்கத்திற்கு முன்பு பணியாளராக கருதப்படாத 209 தலைவர்‌ அல்லது உறுப்பினர்‌ அல்லது இயக்குநர்‌ என்ற முறையில்‌ நபர்‌ எவராலும்‌ புரியப்படும்‌ கடமைகள்‌. இறந்துபோனவரை எடுத்துச்‌ செல்லுதல்‌ உள்ளடங்கலான இறுதிச்‌ சடங்கு, இடுகாடு, சுடுகாடு அல்லது பிணவறை சேவைகள்‌. நில விற்பனை மற்றும்‌ ॥-ஆம்‌ இணைப்புப்‌ பட்டியலின்‌ 5-ஆம்‌ பத்தியின்‌ (ஆ) கூறுக்கு உட்பட்டு, கட்டட விற்பனை. பரிசுச்‌ சீட்டு, பந்தயம்‌ மற்றும்‌ சூதாட்டம்‌ அல்லாத பிற வழக்குத்‌ தொடரத்தக்க உரிமம்‌ கோரிக்கைகள்‌. விளக்கம்‌.- 2-ஆம்‌ பத்தியின்‌. நோக்கங்களுக்காக, நீதிமன்றம்‌" என்ற சொல்‌, மாவட்ட நீதிமன்றம்‌, உயர்‌ நீதிமன்றம்‌, உச்ச நீதிமன்றம்‌ ஆகியவற்றை உள்ளடக்கும்‌. 210

Rules, notifications and orders under this Act

Listed from India Code. Each opens there.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts