Tamil Nadu · 1971 · Act 37
The Tamil Nadu Fleet Operators Stage Carriages (Acquisition) Act, 1971
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊர்தி தொகுதி இயக்குபவர்கள் நிலைப் பேருந்து
(கையகப்படுத்துதல்) சட்டம்.
தமிழ்நாடு சட்டம் 371971.
பொருளடக்கம்.
1. குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
2. பொருள் வரையறைகள்.
3. நிலைப்பேருந்துகள் முதலியன அரசிடம் உற்றமைந்திருத்தல்.
4. ஊர்தி தொகுதி இயக்குபவர்களின் விவரங்களை அளிக்கும் கடமை.
5. இழப்பீட்டைத் தீர்மானிப்பதற்கான கோட்பாடுகளும் முறையும்.
6. இழப்பீடு வழங்குதல்.
7. குறித்தசில நேர்வுகளில் இழப்பீடு மாற்றிட்டுப் பிணையமாக அமைதல்.
8. குறித்தசில நேர்வுகளில் பிடித்தத்திற்கு உள்ளான இழப்பீடு.
9. இழப்பீடு வழங்கும் முறை.
10. இழப்பீடு தொடர்பான இசைவுத்தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீடுகள்.
11. நடுவரும் மற்றும் அதிகாரம் பெற்ற அலுவலரும் உரிமையியல்
நீதிமன்றத்தின் குறித்தசில அதிகாரங்களைப் பெற்றிருத்தல்.
12. நேர்மையற்ற பறிவர்த்தனைகளின் விளைவு.
13. நிர்வாகிகளை நியமித்தல்.
14. அதிகாரம் பெற்ற அலுவலர்களின் நியமனம்.
15. கையகப்படுத்தப்பட்ட சொத்தை கழகம் அல்லது நிறுவனத்திற்கு மாற்றுதல்
மற்றும் தற்போதுள்ள பணியாளர்களுக்கான வகைமுறைகள்.
16. ஊர்தி தொகுதி இயக்குபவரால் பராமரிக்கப்படும் சொத்து மற்றும்
ஆவணங்கள் தொடர்பான தகவல்களின் விவரப் பட்டியல்.
17. தகவல் பெறும் அதிகாரம்.
18. உள்நுழைந்து ஆய்வு செய்யும் அதிகாரம்.
19.பூசல்களைத் தீர்த்தல்.
20.ஆணைகளைச் சார்வு செய்தல்.
21. அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்.
22.நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
23. உரிமையியல் நீதிமன்றங்களின் அதிகார வரம்பபிற்குத் தடை
24.குற்றங்களுக்கான தண்டனை.
25.குறித்த சில நபர்கள் பொது ஊழியர்களாகக் கருதப்படுதல்.
26.பிற சட்டங்களை விட மீதூர்ந்து இயங்கும் சட்டம்.
27.விதிகளைச் செய்யவதற்கான அதிகாரம்.
இணைபப்புப்பட்டியல்.
1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊர்தி தொகுதி இயக்குபவர்கள் நிலைப் பேருந்து
(கையகப்படுத்துதல்) சட்டம்.
தமிழ்நாடு சட்டம் 371971.
தமிழ்நாடு மாநிலத்தில், ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட நிலைப்பேருந்து
அனுமதிகளைக் கொண்டுள்ள ஊர்திதொகுதி இயக்குநர்களின்
நிலைப்பேருந்துகளைக் கையகப்படுத்துவதற்கும், அதுதொடர்பான பிற
பொருட்பாடுகளுக்கும் வகைசெய்வதற்கான ஒரு சட்டம்.
இந்திய அரசியலமைப்பின் 39-ஆம் உறுப்பின் (0) மற்றும் (௦) கூறுகளின்படி,
சமுதாயத்தின் பொருள் வளங்களின் உடைமையும் கட்டுப்பாடும், பொதுநலனுக்குச்
சிறந்த முறையில் பயன்படும் வகையில் பகிர்ந்தளிக்கப்படுவதையும்; பொருளாதார
அமைப்பின் செயல்பாடு, செல்வம் மற்றும் உற்பத்திச் சாதனங்கள்
பொதுநலனுக்குப் பாதகமான வகையில் ஒரு சிலரிடமே குவிந்துவிடாமல்
இருப்பதையும் உறுதிசெய்யும் நோக்கில், அரசு தனது கொள்கையைச் சிறப்பாகச்
செலுத்த வேண்டும் என்பதாலும்;
மேலும், அத்தகைய நோக்கத்தை அடைவதற்கு, பொருளாதாரத்தின்
முக்கியத் துறைகளைத் தேசியமயமாக்குவது உகந்ததாக இருப்பதாலும்;
மேலும், ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட வழித்தடப் பேருந்து
அனுமதிகளைக் கொண்டுள்ள ஊர்திதொகுதி இயக்குநர்களின் அனைத்துப்
நிலைப்பேருந்துப் பிரிவுகளையும் கையகப்படுத்துவது, பொதுநலன் கருதி
அவசியமாக இருப்பதாலும்;
1. குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.- (1) இந்தச் சட்டம் 1971 ஆம் ஆண்டு
தமிழ்நாடு ஊர்திதொகுதி இயக்குபவர்கள் நிலைப்பேருந்து (கையகப்படுத்துதல்)
சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. பொருள் வரையறைகள்:- இச்சட்டத்தில், தறுவாய் வேறுவிதமாகத்
தேவைப்பட்டாலன்றி,-
(a) "கையகப்படுத்தப்பட்ட சொத்து" என்பது, 3 ஆம் பிரிவின் கீழ் அரசிடம்
உற்றமைந்துள்ள நிலைப்பேருந்துகள் மற்றும் பிற சொத்துக்கள் என்று
பொருள்படும்;
(௦) "நிர்வாகி" என்பது, 13 ஆம் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட ஒரு நிர்வாகி
ஆவர்;
(6) "அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்" என்பது, 14 ஆம் பிரிவின் கீழ்
நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் ஆவர்;
(0) "கசைவுத்தீர்ப்பு என்பது, 5 ஆம் பிரிவின்கீழ் ஒரு நடுவரால் வழங்கப்பட்ட
இசைவுத்தீர்ப்பு எதுவும் என்று பொருள்படும்;
(e) "ஊர்திதொகுதி இயக்குபவர்கள்" (Fleet operator) என்பது, 1971-ஆம்
ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதியண்றோ அல்லது அத்தேதிக்குப் பின்னர்
வேறெந்தத் தேதியன்றோ, ஐம்பதோ அல்லது அதற்கு மேற்பட்டோ நிலைப்பேருந்து
அனுமதிகளை (8806 carriage permits) வைத்திருக்கும் ஒரு இயக்குபவர் என்று
பொருள்படும், அத்தகைய அனுமதிச் சீட்டுகளில் அனைத்தும் அல்லது ஏதேனும்
சில, மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின்பும், ஆனால் அறிவிக்கை செய்யப்பட்ட
தேதிக்கு முன்னரும் காலாவதியாகியிருந்த போதிலும், இக்குறிப்பிடல் பொருந்தும்:
வரம்புரையாக, இக்கூற்றின். நோக்கங்களுக்காக நிலைப்பேருந்து
அனுமதிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும்போது-
() சேவையைத் தொடர்ந்து நடத்துவதற்காக, இயக்குபவர்களால்
பராமரிக்கப்படும் மாற்று வாகனங்கள்! (reserve vehicles) தொடர்பான அனுமதிகளின்
எண்ணிக்கை; அல்லது
(0 மோட்டார் வாகனச் சட்டம், 62 ஆம் பிரிவின் (ஐகூறு, 0)கூறு அல்லது (6)
கூறின் கீழ் வழங்கப்பட்ட 'தற்காலிக அனுமதிகளின்' எண்ணிக்கை, ஆகியவை
கணக்கீட்டிலிருந்து நீக்கப்படுதல் வேண்டும்;
(1) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;
(9) "மோட்டார் வாகனச் சட்டம்" என்பது, 1939-ஆம் ஆண்டு மோட்டார்
வாகனச் சட்டம் (மையச் சட்டம் 71939) என்று பொருள்படும்;
0) எந்தவொரு ஊர்திதொகுதி இயக்குபவரைப் பொறுத்தவரையிலும்,
"அறிவிக்கப்பட்ட தேதி" என்பது, அத்தகைய ஊர்திதொகுதி இயக்குபவரைப் பற்றி,
3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ள தேதியைக் குறிக்கும்;
(i) "இயக்குபவர்" என்பது, ஒரு 'நிலைப்பேருந்து ' (stage carriage) அனுமதியில்,
அதன் உரிமையாளராகப் பெயர் பதியப்பட்டுள்ள நபர் எவரும் என்று பொருள்படும்;
0 "அனுமதி" என்பது, மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் ஒரு
வாகனத்தை 'நிலைப்பேருந்தாகப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் அளிக்கும்
வகையில், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனுமதி என்று
பொருள்படும்;
(k) கையகப்படுத்தப்பட்ட எந்தவொரு சொத்து தொடர்பாகவும்
"உறித்தமுடைய நபர்" என்பது வாகனக் குழும நடத்துநர் மற்றும் இந்தச் சட்டத்தின்
கழ் அத்தகைய சொத்தைக் கையகப்படுத்தியதன் காரணமாகச் செலுத்தப்பட
வேண்டிய இழப்பீட்டில் ஒரு நலனைக் கோரும் அல்லது கோர உரிமை உள்ள
வேறு எந்த நபரையும் உள்ளடக்கும்;
(1) நிலைப்பேருந்து என்பது மோட்டார் வாகனச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின்
(29) ஆம் உட்பிரிவில் உள்ள அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்
மற்றும் பின்வருவனவற்றை உள்ளடக்கும் -
0) அத்தகைய நிலைப்பேருந்தின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்குத்
துணைபுரியும் அல்லது அதனுடன் தொடர்புடைய எந்தவொரு அசையும் சொத்து;
00 அத்தகைய நிலைப்பேருந்து அல்லது அசையும் சொத்தில் அல்லது அதன்
மீதான எந்தவொரு உரிமை; மற்றும்
(i) எந்தவொரு காப்பு வாகனம் அல்லது தற்காலிக அனுமதிகளில்
இயக்கப்படும் வாகனங்கள்;
(m) இங்கு பயன்படுத்தப்பட்டு, வரையறுக்கப்படாத, ஆனால் மோட்டார்
வாகனச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள சொற்களும் சொற்றொடர்களும்,
அந்தச் சட்டத்தில் அவற்றுக்கு முறையே ஒதுக்கப்பட்டுள்ள பொருள்களைக்
கொண்டிருத்தல் வேண்டும்.
3. நிலைப்பேருந்துகள் முதலியன அரசிடம் உற்றமைந்திருத்தல்.- (1)
ஊர்திதொகுதி இயக்குபவர்கள் எவரையும் பொறுத்து, இதன்பொருட்டு அரசால்
அறிவிக்கை செய்யப்படக்கூடிய ஒரு குறிப்பிட்ட தேதியண்றோ அல்லது
அதுமுதற்கொண்டோ, அத்தகைய ஊர்திதொகுதி இயக்குபவருக்குச் சொந்தமான
அல்லது அவரால் இயக்கப்படும் ஒவ்வொரு நிலைப்பேருந்தும், எவ்விதச்
சுமையுமின்றி, முழுமையாக அரசிடம் உற்றமைந்திருத்தல் வேண்டும்.
(2) ஊர்திதொகுதி இயக்குபவர்கள் எவரையும் பொறுத்து, (1) ஆம்
உட்பிரிவின் கீழ் ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டதன் பேரில்,-
நிலைப்பேருந்துகளின் பராமரிப்பு அல்லது பழுதுபார்ப்பிற்காகவோ, அல்லது
அப்பேருந்துச் சேவையோடு தொடர்புடைய பிற நோக்கங்களுக்காகவோ
பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் அனைத்து நிலங்கள், கட்டிடங்கள்,
பணிமனைகள் மற்றும் பிற இடங்கள்; அத்துடன் அனைத்துப் பொருட்கள் இருப்பு
(௭5), கருவிகள், இயந்திரங்கள், உபகரணங்கள், ஆலை அமைப்புகள் மற்றும் பிற
சாதனங்கள்; மற்றும்
0 (1) ஆம் உட்பிரிவின் கீழ் அரசிடம் உற்றமைந்துள்ள நிலைப்பேருந்துகள்
குறித்தோ, அல்லது (i) கூறில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் குறித்தோ
அமைந்த, எத்தன்மையினதாயினும் அனைத்துக் கணக்குப் புத்தகங்கள்,
பதிவேடுகள், ஆவணங்கள் மற்றும் பிற ஆவணங்கள் அனைத்தும்;
எவ்வித வில்லங்கமுமின்றி, முழுமையாக அரசிடம் உற்றமைந்திருத்தல்
வேண்டும்.
(3) (1) ஆம் உட்பிரிவு மற்றும் (2) ஆம் உட்பிரிவின் கீழ் அரசிடம்
உற்றமைந்துள்ள நிலைப்பேருந்துகளும் பிற சொத்துக்களும், அறிவிக்கப்பட்ட
தேதியன்றும் அதுமுதற்கொண்டும் நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு பொது
நோக்கத்திற்காகக் கையகப்படுத்தப்பட்டவையாகக் கருதப்படுதல் வேண்டும்.
(4) (1) ஆம் உட்பிரிவின் கீழ் ஓர் அறிவிப்பினை வெளியிடுவதற்கு முன்னர்,
(1) மற்றும் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிலைப்பேருந்துகளையும் பிற
சொத்துக்களையும் ஏன் கையகப்படுத்தக்கூடாது என்பதற்கான காரணத்தை
விளக்குமாறு அரசானது அப்பேருந்துத் தொகுதி இயக்குநரைக் கோர வேண்டும்;
மேலும், ஊர்திதொகுதி இயக்குபவர்களால் ஏதேனும் காரணம்
தெரிவிக்கப்பட்டிருப்பின் அதனைப் பரிசீலித்த பின்பும், ஊர்திதொகுதி
இயக்குபவருக்குத் தனது தரப்பை எடுத்துரைப்பதற்கான ஓர் வாய்ப்பை வழங்கிய
பின்பும், அரசானது தான் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய
ஆணைகளைப் பிறப்பிக்கலாம்.
4. ஊர்தி தொகுதி இயக்குபவர்களின் விவரங்களை அளிக்கும் கடமை.-
ஊர்தி தொகுதி இயக்குபவர், அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது
நாட்களுக்குள்ளும், அல்லது இது தொடர்பாக அரசானது அனுமதிக்கக்கூடிய
கூடுதல் காலத்திற்குள்ளும், கையகப்படுத்தப்பட்ட சொத்தின் பிணையின் பேரில்
ஏற்கப்பட்டு, அறிவிக்கப்பட்ட தேதியில் நடைமுறையில் இருந்த அனைத்துப்
பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்த முழுமையான விவரங்களையும்; மேலும்,
கையகப்படுத்தப்பட்ட சொத்து தொடர்பான அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் பிற
ஆவணங்களையும் (கையகப்படுத்தப்பட்ட சொத்து தொடர்பாகவே பிரத்தியேகமாகப்
பணியமர்த்தப்பட்ட எந்தவொரு நபரின் விடுப்பு, ஓய்வூதியம், பணிக்கொடை,
வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற பணி நிபந்தனைகள் தொடர்பான ஒப்பந்தங்கள்,
நீதிமன்றத் தீர்ப்புகள், நடுவர் மன்றத் தீர்ப்புகள், நிலையாணை விதிகள் மற்றும் பிற
ஆவணங்கள் உட்பட) - அறிவிக்கப்பட்ட தேதிக்குச் சற்று முன்னதாகவே
நடைமுறையில் இருந்த நிலையில் - அரசிடமோ அல்லது இது தொடர்பாக
அவர்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அலுவலரிடமோ
சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்; மேலும், இம்முயற்சிக்காக அரசானது அவருக்குத்
தேவையான அனைத்து நியாயமான வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.
5. இழப்பிட்டைத் தீர்மானிப்பதற்கான கோட்பாடுகளும் முறையும்.-
கையகப்படுத்தப்பட்ட சொத்துக்கான இழப்பிடானது., இணைப்புப்பட்டியலில்
குறிப்பிடப்பட்டுள்ள கோட்பாடுகளுக்கு இணங்கவும், பின்வருமாறு
விவரிக்கப்பட்டுள்ள முறையிலும் தீர்மானிக்கப்பட வேண்டும்; அதாவது:
(a) இழப்பீட்டுத் தொகையை, ஒப்பந்தத்தின் மூலம் நிர்ணயிக்கலாம்;
(௦) அவ்வாறான ஒப்பந்தம் ஏதும் எட்டப்பட இயலாத நிலையில், உயர்
நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுபவர், பணியாற்றியவர் அல்லது நீதிபதியாக
நியமிக்கப்படத் தகுதி பெற்ற ஒருவரை, நடுவராக (Arbitrator) அரசானது நியமிக்க.
வேண்டும்;
(6) ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வழக்கில், கையகப்படுத்தப்பட்ட சொத்தின்.
தன்மை குறித்து நிபுணத்துவம் பெற்ற ஒருவரை, நடுவருக்கு உதவியளிப்பதற்காக
அரசானது பெயர்குறித்து நியமிக்கலாம் அவ்வாறு பெயர்குறித்து நியமிக்கும்
பட்சத்தில், அச்சொத்தில் உரித்தமுடைய நபரும் (interested person), அதே
நோக்கத்திற்காக ஒரு மதிப்பீட்டாளரைப் (assessor) பெயர்குறித்து நியமிக்கலாம்;
(0) நடுவர் முன்னிலையில் நடைபெறும் விசாரணை நடைமுறைகள்
தொடங்கும் வேளையில், அரசும், அச்சொத்தில் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட
நபரும், தங்கள் தனிப்பட்ட கருத்துப்படி எது நியாயமான இழப்பீட்டுத் தொகை:
என்பதைத் தெரிவிக்க வேண்டும்;
(6) நடுவர், பூசலை விசாரனை செய்த பின்பு, தனக்கு நியாயமானதாகத்
தோன்றும் இழப்பீட்டுத் தொகையைத் தீர்மானித்தும், அவ்விழப்பீடு எந்த நபருக்கோ
அல்லது நபர்களுக்கோ வழங்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியும்
ஒரு இசைவுத்தீர்ப்பை (Award) வழங்க வேண்டும்; அந்த இசைவுத்தீர்ப்பை
வழங்கும் போது, ஒவ்வொரு வழக்கின் சூழ்நிலைகளையும், பொருந்தும் வரையில்
இணைப்புப்பட்டியலில் உள்ள விதிகளையும் அவர் கருத்தில் கொள்ள வேண்டும்;
(1) இழப்பீட்டைப் பெறுவதற்கு யார் அல்லது யார் தகுதியுடையவர்கள் என்பது
குறித்து ஏதேனும் சர்ச்சை எழுந்தால், நடுவர் அப்பூசலைத் தீர்த்துவைக்க
வேண்டும்; இழப்பிட்டைப் பெறுவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள்
தகுதியுடையவர்கள் என்று நடுவர் கண்டறிந்தால், அவ்விழப்பீட்டுத் தொகையை
அந்நபர்களுக்கு இடையே அவர் பங்கிட்டு வழங்க வேண்டும்;
(9) நடுவர் மன்றச் சட்டம், 194 (மையச் சட்டம் X/1940) இல் உள்ள
எந்தவொரு விதியும், இச்சட்டத்தின் கீழ் நடைபெறும் நடுவர் மன்ற
நடைமுறைகளுக்குப் பொருந்தாது.
6. இழப்பீடு வழங்குதல்.- 5 ஆம் பிரிவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத்
தொகையானது [இந்நியதியின் கீழ் ஏதேனும் பிடித்தங்கள் செய்யப்பட்டிருப்பின்,
அவற்றை கழித்த பின்பு] உரித்தமுடைய அனைத்து நபர்களுக்கும் தகுந்த
முன்னறிவிப்பு அளித்த பின்னர், அதில் உரித்தமுடைய நபருக்கு வழங்கப்பட
வேண்டும்.
7. குறித்த சில நேர்வுகளில் இழப்பீடு மாற்றிட்டுப் பணையமாக அமைதல். -
கையகப்படுத்தப்பட்ட சொத்தின் மீது நிலவும் ஏதேனும் கடன், அடமானம்,
பற்றுநிமை அல்லது பிற சுமை, பொறுப்புறுதி (Trust) அல்லது அதுபோன்ற கடப்பாடு
ஏதேனும் இருப்பின் அத்தகையவை அனைத்தும், கையகப்படுத்தப்பட்ட
சொத்திற்கு மாற்றிடாக, இந்நியதியின் கீழ் வழங்கப்படக்கூடிய இழப்பிட்டுத்
தொகையின் மீது பற்றுரிமையாகத் தொடருதல் வேண்டும்.
8. குறித்த சில சில நேர்வுகளில் பிடித்தத்திற்கு உள்ளான இழப்பீடு. (1)
அறிவிக்கப்பட்ட தேதிக்குச் சற்று முன்னதாக, கையகப்படுத்தப்பட்ட சொத்துத்
தொடர்பாகவே பிரத்தியேகமாகப் பணியமர்த்தப்பட்டிருந்த எந்தவொரு நபரைப்
பொறுத்தவரையிலும்; அத்தகைய நபர் சார்ந்த, பணியமர்த்துநரின் பங்களிப்பு
அல்லது பணியமர்த்துநரால் வசூலிக்கப்பட்ட பணியாளர்களின் பங்களிப்பு அல்லது
1952 ஆம் ஆண்டு பணியாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் (மையச் சட்டம்
XIX/1952) அல்லது 1948 ஆம் ஆண்டு பணியாளர் மாநில ஈட்டுறுதிச் சட்டத்தின்
(மையச் சட்டம் XXXIV/1948) கீழ் பணியமர்த்துநரிடமிருந்து வசூலிக்கப்படக்கூடிய
பிற நிலுவைத் தொகைகள் எவையேனும் இருப்பின்; அவற்றை அந்தந்தச்
சட்டங்களின்படி பணியமர்த்துநர் செலுத்தத் தவறியிருக்கலாம் எனக் கருதி, அது
தொடர்பான ஒரு சான்றிதழை, பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையரோ
அல்லது பணியாளர் மாநில ஈட்டுறுதி நிறுவனமோ நடுவரிடம் (Arbitrator) அனுப்பி
வைக்கலாம்.
(2) (ஐ அறிவிக்கப்பட்ட தேதிக்குச் சற்று முன்னதாக, கையகப்படுத்தப்பட்ட
சொத்துத் தொடர்பாகவே பிரத்தியேகமாகப் பணியமர்த்தப்பட்டிருந்த எந்தவொரு
நபரும்; கையகப்படுத்தப்பட்ட சொத்துத் தொடர்பாகத் தாம் ஆற்றிய பணிக்காகத்
தமக்குச் சேரவேண்டிய சம்பளம், ஊதியம், விடுப்புக்காலச் சம்பளம், போனஸ்,
ஓய்வூதியம், பணிக்கொடை (Gratuity), வருங்கால வைப்பு நிதி அல்லது பிற
கொடுப்பனவுகள் எவையேனும் இருப்பின் அவை தொடர்பான முழுத்
தொகையையோ அல்லது அதன் விகிதாச்சாரத் தொகையையோ கோரி, நடுவரிடம்
விண்ணப்பிக்கலாம்.
(௦) எதேனும் ஒரு சட்டம், இசைவுத்தீர்ப்பு, ஒப்பந்தம், பணி ஒப்பந்தம் அல்லது
பிற வகைகளின் கீழ்; (ஐ கூறில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பளம், ஊதியம்,
விடுப்புக்காலச் சம்பளம், மீதூதியம், ஓய்வூதியம், பணிக்கொடை, வருங்கால வைப்பு
நிதி அல்லது பிற கொடுப்பனவுகள், கையகப்படுத்தப்பட்ட சொத்துத் தொடர்பாக
அந்த நபர் ஒரு குறிப்பிட்ட கால அளவு பணிபுரிந்த பின்னரே அவருக்குச்
செலுத்தப்படத்தக்ககாக அமையும் நேர்வுகளிலும்; மேலும், அக்குறிப்பிட்ட கால
அளவு முடிவடைவதற்கு முன்னரே, 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ்
கையகப்படுத்தப்பட்ட சொத்து அரசிடம் உற்றமைந்திருக்கும் (vests) நேர்வுகளிலும்,
அத்தகைய சம்பளம், ஊதியம், விடுப்புக்காலச் சம்பளம், மீதூதியம், ஓய்வூதியம்,
பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி அல்லது பிற கொடுப்பனவுகள் தொடர்பாக,
ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டிய பொறுப்பு ஊர்தி தொகுதி
8
இயக்குபவரைச் (Fleet Operator) சாரும். அத்தொகையானது, அக்குறிப்பிட்ட கால
அளவு முடிவடைந்த பின்னர் முழுமையாகச் செலுத்தப்படத்தக்க மொத்தத்
தொகைக்கு, பின்வரும் விகிதாச்சாரத்தில் அமைய வேண்டும்: அதாவது,
அறிவிக்கப்பட்ட தேதி வரையிலான பணிப்பருவம், அக்குறிப்பிட்ட மொத்தப்
பணிப்பருவத்திற்கு எத்தகைய விகிதாச்சாரத்தில் உள்ளதோ, அதே
விகிதாச்சாரத்தில் இத்தொகையும் அமைந்திருத்தல் வேண்டும்.
(3) (1) ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, பிணையம் பெற்ற
கடனாளர்களின் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்பு, ஊர்தி தொகுதி
இயக்குபவருக்குச் செலுத்தப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையிலிருந்து, ஒரு
குறிப்பிட்ட தொகையை கழித்துக்கொள்ள அரசிற்கு உரிமை உண்டு;
இத்தொகையானது, (1) மற்றும் (2) ஆம் உட்பிரிவுகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள
பொறுப்புகளை அல்லது 15 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் கீழ் கழகம் அல்லது
நிறுவனத்தின் ஊழியர்களாக மாறிய நபர்கள் தொடர்பான எவ்வகையான
கடப்பாடுகளையும் (அறிவிக்கப்பட்ட தேதியில் ஊர்தி தொகுதி இயக்குபவரிடம்
நிலுவையில் இருந்த வருங்கால வைப்பு நிதி, ஓய்வுக்கால நிதி அல்லது வேறு
ஏதேனும் நிதிகள் தொடர்பான பொறுப்புகள் உட்பட) நிறைவேற்றுவதற்குத்
தேவைப்படும் தொகைக்குச் சமமானதாக இருக்க வேண்டும்.
(4) (1) ஆம் உட்பிரிவு அல்லது (2) ஆம் உட்பிரிவின் கீழ் முன்வைக்கப்பட்ட
கோரிக்கைகள் மற்றும் (3) ஆம் உட்பிரிவின் கீழ் கழிக்கப்பட வேண்டிய தொகை:
தொடர்பான ஏதேனும் பூசல்கள் ஆகியவை, நடுவரால் (Arbitrator) முடிவு செய்யப்பட
வேண்டும்; இந்நோக்கத்திற்காக வகுத்துரைக்கப்படக்கூடிய நடைமுறைகளை
அந்நடுவர் பின்பற்ற வேண்டும்.
9. இழப்பீடு வழங்கும் முறை. (1) 5 ஆம் பிரிவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட
இழப்பீட்டுத் தொகையானது, இந்தச் சட்டத்தின் கீழ் ஏதேனும் பிடித்தங்கள்
செய்யப்பட்டிருப்பின் அவற்றை கழித்த பின்பு, உரித்தமுடைய நபரின்.
விருப்பத்தின் பேரில் அரசால் அவருக்குப் பின்வரும் முறைகளில் வழங்கப்படும்:
(ஐ) ரொக்கமாக (இந்திய ரிசர்வ் வங்கியின் மீது வரையப்பட்ட காசோலை
மூலம் செலுத்தப்பட வேண்டும்); இது மூன்று சமமான வருடாந்திரத் தவணைகளாக
வழங்கப்படும். ஒவ்வொரு தவணைத் தொகையும், அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து
ஆண்டுக்கு ஆறு சதவித வட்டி விகிதத்தில் வட்டியைக் கொண்டிருக்கும்;
அல்லது
(௦) அரசால் வெளியிடப்பட்ட விற்பனை செய்யத்தக்க அல்லது
வேறுவிதமாக மாற்றத்தக்க உறுதிமொழிச் சீட்டுகள் (Promissory notes) அல்லது
பங்குச் சான்றிதழ்களாக; இவை முகமதிப்பிலேயே (1 நள) திரும்பச்
செலுத்தப்படக்கூடியவையாகவும், பின்வரும் கால அளவின் இறுதியில்
முதிர்வடையக்கூடியவையாகவும் இருக்கும்:
(i) அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து பத்து ஆண்டுகள் மற்றும் இவற்றுக்கு
அத்தேதியிலிருந்து ஆண்டுக்கு ஆறரை சதவீத வட்டி விகிதத்தில் வட்டி
வழங்கப்படும்; அல்லது
(0 அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது ஆண்டுகள் மற்றும்
இவற்றுக்கு அத்தேதியிலிருந்து ஆண்டுக்கு ஏழரை சதவித வட்டி விகிதத்தில்
வட்டி வழங்கப்படும்; அல்லது
(6) ஒரு பகுதி ரொக்கமாகவும் (இந்திய ரிசர்வ் வங்கியின் பேரில்
வரையப்பட்ட காசோலை மூலம் செலுத்தப்பட வேண்டும்), மற்றொரு பகுதி, 0)
கூறின் () உட்கூறு அல்லது (i) உட்கூறில் (அல்லது இரண்டிலும்)
குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்புப் பத்திரங்களின் எண்ணிக்கையாகவும் வழங்கப்படும்;
இப்பத்திரங்களின்: எண்ணிக்கை உரித்தமுடைய நபரால் கோரப்படும்.
எண்ணிக்கையின்படி அமையும்; அல்லது
(0) ஒரு பகுதி, (௦) கூறின் () கூறில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்புப்
பத்திரங்களின் எண்ணிக்கையாகவும், மற்றொரு பகுதி, அதே பிரிவின் (i)
உட்கூறில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்புப் பத்திரங்களின் எண்ணிக்கையாகவும்
வழங்கப்படும்; இப்பத்திரங்களின் எண்ணிக்கை உரித்தமுடைய நபரால் கோரப்படும்
எண்ணிக்கையின்படி அமையும்.
(2) (1) ஆம் உட்பிரிவின் (௨) கூறில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சமமான
ஆண்டுத் தவணைகளில் முதலாவது தவணையானது, மற்றும் அந்த உட்பிரிவின்
(b) கூறில் குறிப்பிடப்பட்டுள்ள பிணையங்கள், அந்த உட்பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ள விருப்பத் தேர்வை அரசானது பெற்றுக்கொண்ட நாளிலிருந்து
அறுபது நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் மற்றும் வழங்கப்பட வேண்டும்;
அல்லது அத்தகைய விருப்பத் தேர்வு ஏதும் பயன்படுத்தப்படாத நிலையில்,
அத்தகைய விருப்பத் தேர்வு பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய காலக்கெடுவின்
இறுதி நாளிலிருந்து அறுபது நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் மற்றும்
வழங்கப்பட வேண்டும்.
(3) M) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விருப்பத் தேர்வானது,
உரித்தமுடைய நபரால் தெரிவிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதக் காலம்
முடிவடைவதற்குள் (அல்லது உரித்தமுடைய நபரின் விண்ணப்பத்தின் பேரில்,
அரசு அனுமதிக்கும், மூன்று மாதங்களுக்கு மிகாத கூடுதல் காலத்திற்குள்)
பயன்படுத்தப்பட வேண்டும்; அவ்வாறு பயன்படுத்தப்பட்ட விருப்பத் தேர்வானது
இறுதியானது ஆகும், மேலும் அது பயன்படுத்தப்பட்ட பிறகு மாற்றவோ அல்லது
ரத்து செய்யவோ இயலாது.
(4) (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விருப்பத் தேர்வை, (3)-ஆம்
உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் பயன்படுத்தத் தவறும் அல்லது
பயன்படுத்தாமல் விட்டுவிடும் தொடர்புடைய நபர் எவரும், (1) ஆம் உட்பிரிவின் (௦)
10
கூறின் டு உட்கூறில் குறிப்பிடப்பட்டுள்ள பிணையங்கள் வாயிலாகவே
இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தவராகக்
கருதப்படுவார்.
(5) இப்பிரிவில் வேறு எது எவ்வாறிருப்பினும், தொடர்புடைய நபர் எவரும்,
அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்கள் முடிவடைவதற்குள் (அல்லது
தொடர்புடைய நபரின் விண்ணப்பத்தின் பேரில், அரசு அனுமதிக்கும், மூன்று
மாதங்களுக்கு மிகாத கூடுதல் காலத்திற்குள்), பரிந்துரைக்கப்பட்ட முறையில்
தோராயமாக மதிப்பிடப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் இருபத்து ஐந்து
சதவிீதத்திற்குச் சமமான தொகையை இடைக்காலப் பணப்பட்டுவாடாவாகப்
பெறுவதற்கு, அரசிற்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்கலாம்;
அவ்விண்ணப்பத்தில், அத்தொகையை ரொக்கமாகப் பெற விரும்புகிறாரா, அல்லது
(1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பிணையங்கள் வாயிலாகப் பெற
விரும்புகிறாரா, அல்லது இவ்விரண்டின் வாயிலாகவும் பெற விரும்புகிறாரா
என்பதை அவர் குறிப்பிட வேண்டும்.
(69) (5) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து அறுபது நாட்களுக்குள், அவ்விண்ணப்பத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள விருப்பத் தேர்வுக்கு இணங்க, உரித்தமுடைய நபருக்கு
அரசானது இடைக்காலப் பணப்பட்டுவாடாவைச் செலுத்த வேண்டும்.
(7) (6) ஆம் உட்பிரிவின் கீழ் ஒரு உரித்தமுடைய நபருக்கு வழங்கப்படும்.
இடைக்காலத் தொகையானது, இந்தச் சட்டத்தின் கீழ் அந்நபருக்குச் செலுத்தப்பட
வேண்டிய மொத்த இழப்பீட்டுத் தொகையிலிருந்து ஈடுகட்டப்பட வேண்டும்;
அவ்வாறு ஈடுகட்டிய பிறகு எஞ்சியுள்ள இழப்பிட்டுத் தொகையானது, (3) ஆம்
உட்பிரிவு அல்லது (4) ஆம் உட்பிரிவின் கீழ் அந்நபரால் தேர்ந்தெடுக்கப்பட்ட
(அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கருதப்படும்) விருப்பத் தேர்வுக்கு இணங்க,
அந்நபருக்கு வழங்கப்பட வேண்டும்:
வரம்புரையாக, இடைக்காலத் தொகையின் ஏதேனும் ஒரு பகுதி ஒரு
நலன்சார்ந்த நபருக்குப் பணமாக வழங்கப்பட்டிருந்தால், அவ்வாறு பெறப்பட்ட
தொகையானது, முதலாவதாக, (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பண
இழப்பீட்டின் முதல் தவணைத் தொகையிலிருந்து ஈடுகட்டப்பட வேண்டும்;
அவ்வாறு பெறப்பட்ட தொகை முதல் தவணைத் தொகையை விட அதிகமாக
இருக்குமாயின், அந்த அதிகப்படியான தொகையானது இரண்டாவது
தவணையிலிருந்து ஈடுகட்டப்பட வேண்டும்; மேலும், அந்த அதிகப்படியான
தொகையில் ஏதேனும் மீதமிருப்பின் அது பண இழப்பீட்டின் மூன்றாவது
தவணையிலிருந்து ஈடுகட்டப்பட வேண்டும்.
11
10. இழப்பிடு தொடர்பான இசைவுத்தீர்ப்புகளுக்கு எதிரான
மேல்முறையீடுகள்.- ஒரு தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும், அத்தீர்ப்பு
வழங்கப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள், உயர் நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்யலாம்:
வரம்புரையாக, மேல்முறையீட்டாளர் உரிய காலத்திற்குள் மேல்முறையீடு
செய்ய இயலாதவாறு போதுமான காரணம் ஒன்றினால் தடுக்கப்பட்டிருந்தார் என்று
உயர் நீதிமன்றம் திருப்தியடைந்தால், மேற்குறிப்பிட்ட முப்பது நாட்கள்
காலாவதியான பின்னரும் அந்த மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம்
விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளலாம்.
11. நடுவரும் மற்றும் அதிகாரம் பெற்ற அலுவலரும் உரிமையியல்
நீதிமன்றத்தின் குறித்தசில அதிகாரங்களைப் பெற்றிருத்தல்.-- 5 ஆம் பிரிவின் கீழ்
நியமிக்கப்பட்ட நடுவர், இச்சட்டத்தின் கீழ் நடுவர் விசாரணை நடவடிக்கைகளை
மேற்கொள்ளும்போது மற்றும் 14 ஆம் பிரிவின் கீழ் ஒரு பூசலை முடிவு செய்யும்
அதிகாரம் பெற்ற அலுவலர் ஆகியோர், பின்வரும் பொருட்பாடுகள் தொடர்பாகப்
அந்த உரிமையியல் வழக்கை முடிவு செய்யும்போதும் 19௦8-ஆம் ஆண்டு
உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் (மையச் சட்டம் V/1908) கீழ் ஒரு வழக்கை
விசாரிக்கும்போது ஒரு சிவில் நீதிமன்றத்திற்குள்ள அனைத்து அதிகாரங்களையும்
பெற்றிருப்பர் அவையாவன:-
(a) எந்தவொரு நபருக்கும் அழைப்பாணை அனுப்பி, அவர்
முன்னிலையாவதை உறுதி செய்தலும், அவருக்குச் உறுதிமொழி செய்து வைத்து
அவரை விசாறித்தலும்;
(b) எந்தவொரு ஆவணத்தையும் கண்டறிந்து, அதனைச் சமர்ப்பிக்கவும்
கோருதல்;
(6) ஆணையுறுதி ஆவணம் வாயிலாகச் சாட்சியங்களை ஏற்றுக்கொள்வது;
(0) எந்தவொரு நீதிமன்றத்திலிருந்தோ அல்லது அலுவலகத்திலிருந்தோ
ஏதேனும் ஒரு பொது ஆவணத்தைக் கோரிப் பெறுதல்;
(e) சாட்சிகளை விசாரிப்பதற்காக ஆணையங்களை (Commissions)
அமைத்தல்.
12. நேர்மையற்ற பறிவர்த்தனைகளின் விளைவு.- 1971-ஆம் ஆண்டு ஜூன்
மாதம் 49-ஆம் தேதியன்றோ அல்லது அதற்குப் பிண்ணரோ, ஏதேனும் ஒரு
ஊர்திதொகுதி இயக்குபவர் (fleet operator), நிலைப் பேருந்து (stage carriages)
தொடர்பான அல்லது அவற்றின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு அல்லது அச்சேவையுடன்
தொடர்புடைய வேறு ஏதேனும் ஒரு சொத்தை, விற்பனை, பரிமாற்றம், நன்கொடை,
குத்தகை அல்லது வேறு ஏதேனும் வழியின் மூலம் கைமாற்றியுள்ளார் என்றோ
அல்லது மூலதனச் செலவு ஏதேனும் செய்துள்ளார் என்றோ அவ்வாறு செய்தவை
12
வழக்கமான நிகழ்வுகளின் போக்கிற்கு மாறாக, அந்த இயக்குபவருக்கோ அல்லது
வேறு ஏதேனும் ஒருவருக்கோ முறையற்ற வகையில் ஆதாயம் தேடித்தரும்
நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன என்றும் அதன். விளைவாக,
கையகப்படுத்தப்பட்ட சொத்தின் அடுத்தடுத்த உரிமையாளர்களாகிய அரசுக்கு
இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அரசு கருதுமானால், இந்தச் சட்டத்தின் கீழ் அந்த
இயக்குபவருக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையிலிருந்து,
தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு என அரசு கருதும் தொகையைக் கழித்துக்கொள்ள
அரசுக்கு உரிமை உண்டு:
வரம்புரையாக, அத்தகைய கழித்தலைச் செய்வதற்கான தனது
நோக்கத்தைக் குறித்த அறிவிப்பானது, அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு
வருட காலத்திற்குள் அந்த வாகனத் தொகுப்பு இயக்குபவருக்கு வழங்கப்பட
வேண்டும்.
13. நிர்வாகிகளை நியமித்தல்- கையகப்படுத்தப்பட்ட சொத்தை
ஏற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும், இந்தச் சட்டத்தின்
நோக்கங்களைச் செயல்படுத்துவதற்காக அரசால் தங்களுக்கு ஒதுக்கப்படக்கூடிய
பிற கடமைகளை நிறைவேற்றுவதற்கும், தேவையானதெனக் கருதப்படும்
எண்ணிக்கையிலான அலுவலர்களை, நிர்வாகிகளாக அரசானது நியமிக்கலாம்.
14. அதிகாரம் பெற்ற அலுவலர்களின் நியமனம்.- (1) இந்தச் சட்டத்தின்
நோக்கங்களுக்காக, அவசியமெனக் கருதப்படும் எண்ணிக்கையிலும்,
வகுத்துரைக்கப்படலாகும் தகுதிகளைக் கொண்டவராகவும் உள்ள
அலுவலர்களை, அதிகாரம் பெற்ற அலுவலர்களாக அரசானது நியமிக்கலாம்.
(2) 3 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு
சொத்து, அறிவிக்கப்பட்ட தேதியில், நிலைப் பேருந்துகளின் பராமரிப்பு அல்லது
பழுதுபார்ப்புக்காகவோ, அல்லது அச்சேவைகளுடன் தொடர்புடைய வேறு ஏதேனும்
நோக்கத்திற்காகவோ பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததா என்பது குறித்து
ஏதேனும் பூசல் எழுந்தால், அத்தகைய பூசலானது, வகுத்துரைக்கப்படலாகும்
அத்தகைய நடைமுறையின்படி அதிகாரம் பெற்ற அலுவலரால் தீர்த்து வைக்கப்பட
வேண்டும்.
(3) அதிகாரம் பெற்ற அலுவலரின் முடிவால் பாதிக்கப்பட்ட எந்தவொரு
நபரும், அத்தகைய முடிவு எடுக்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்,
அரசிடம் மேல்முறையீடு செய்யலாம்:
வரம்புரையாக, மேல்முறையீட்டாளர் உரிய காலத்திற்குள் மேல்முறையீடு
செய்ய இயலாதவாறு போதுமான காரணம் ஏதேனும் தடுத்திருந்தது என்று
அரசானது. மனநிறைவடையுமாயின், மேற்குறிப்பிட்ட முப்பது நாட்கள்
காலாவதியான பின்னரும் அந்த மேல்முறையீட்டை அரசானது ஏற்றுப்
பரிசீலிக்கலாம்.
13
15. கையகப்படுத்தப்பட்ட சொத்தை கழகம் அல்லது நிறுவனத்திற்கு
மாற்றுதல் மற்றும் தற்போதுள்ள பணியாளர்களுக்கான வகைமுறைகள்.- (1) 3 ஆம்
பிரிவின் கீழ் கையகப்படுத்தப்பட்ட சொத்து அரசிடம் ஒப்படைக்கப்பட்ட உடனேயே,
அத்தகைய சொத்து முழுவதையும், அந்த ஆணையில் அரசு குறிப்பிடலாகும்,
அரசுக்குச் சொந்தமான ஒரு கழகம் அல்லது நிறுவனத்திற்கு, ஓர் ஆணையின்
மூலம் அரசு மாற்றியளிக்க வேண்டும்.
(2) (0) ஆம் உட்பிரிவின் தொடர்ச்சியாக, ஏதேனும் ஒருநிலைப் பேருந்து
(stage carriage) வாகனம் அரசுக்குச் சொந்தமான ஒரு கழகம் அல்லது
நிறுவனத்திற்கு மாற்றியளிக்கப்படும் நேர்வில், மோட்டார் வாகனச் சட்டத்தில் எது
எவ்வாறிருப்பினும், அந்த வாகனத்திற்கான அனுமதிச்சீட்டு (permit) அத்தகைய
கழகம் அல்லது நிறுவனத்திற்கு மாற்றியளிக்கப்பட்டதாகவே கருதப்பட வேண்டும்;
மேலும், அந்த அனுமதிச்சீட்டு அதன் எஞ்சிய கால அளவிற்குச் செல்லுபடியாகும்.
குறிப்பிட்ட அந்தக் காலம் முடிவடைந்த பின்பு, அந்த அனுமதிச்சீட்டைப்
புதுப்பித்துக்கொள்ளும் பிரத்யேக உரிமை அத்தகைய கழகம் அல்லது
நிறுவனத்திற்கே உண்டு; மேலும், அந்த அனுமதிச்சீட்டின் காலம்
முடிவடைவதற்கு முன்னரே எக்காலத்திலும், அத்தகைய புதுப்பித்தலுக்கான
விண்ணப்பத்தை அந்தக் கழகம் அல்லது நிறுவனம் செய்துகொள்ளலாம்.
அத்தகைய விண்ணப்பத்திற்கு, மோட்டார் வாகனச் சட்டத்தின் 58 ஆம் பிரிவின்.
(2) ஆம் உட்பிரிவின் (ஐ கூறில் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறை பொருந்தாது.
(3) அறிவிக்கப்பட்ட தேதிக்கு உடனடி முன்னதாக, கையகப்படுத்தப்பட்ட
சொத்து தொடர்பாகவே பிரத்தியேகமாகப் பணியமர்த்தப்பட்டிருந்த, ஊர்திதொகுதி
இயக்குநரின் (1௦ operator) ஒவ்வொரு பணியாளரும், (1) ஆம் உட்பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ள கழகம் அல்லது நிறுவனத்தில், அதே விதிமுறைகள் மற்றும்
நிபந்தனைகளின்படியும், கையகப்படுத்தப்பட்ட சொத்து அரசிடம்
ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அக்கழகம் அல்லது நிறுவனத்திற்கு
மாற்றப்பட்டிருக்காவிடில் அப்பணியாளருக்குக் கிடைத்திருக்கக்கூடிய அதே
ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் பிற சலுகைகளுக்கான உரிமைகளுடனும்
தனது பதவியை அல்லது சேவையைத் தொடர்ந்து வகிப்பார்; அக்கழகம் அல்லது
நிறுவனத்தில் அப்பணியாளரின் பணி நீக்கம் செய்யப்படும் வரையில் அல்லது
அப்பணியாளரின் ஊதியம், விதிமுறைகள் அல்லது நிபந்தனைகள் அக்கழகம்
அல்லது நிறுவனத்தால் முறையாக மாற்றியமைக்கப்படும் வரையில் இப்பணித்
தொடரும்.
வரம்புரையாக, அப்போதைக்கு நடைமுறையிலுள்ள தொழிலாளர் சட்டங்கள்.
பொருந்தக்கூடிய பணியாளர்களின் பொருட்பாட்டில், அத்தகைய சட்டங்களுக்கு
இணங்காமல், பணி நீக்கம் செய்தல் அல்லது ஊதியம், பணி விதிமுறைகள் அல்லது
நிபந்தனைகளை மாற்றியமைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்படலாகாது.
14
(4) அறிவிக்கப்பட்ட தேதிக்கு உடனடி முன்னதாக, ஏதேனும் ஒரு நபர்
கையகப்படுத்தப்பட்ட சொத்து தொடர்பாகவே பிரத்தியேகமாகப்
பணியமர்த்தப்பட்டிருந்தாரா என்பது குறித்து ஏதேனும் கேள்வி எழுந்தால்,
அக்கேள்வி அங்கீகரிக்கப்பட்ட அலுவலரால் முடிவு செய்யப்படும்; மேலும், 14 ஆம்
பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் கீழ் அரசிடம் அதற்கான மேல்முறையீடு
செய்துகொள்ளலாம்.
(5) அறிவிக்கப்பட்ட தேதிக்கு உடனடி முண்ணனதாக, (3) ஆம் உட்பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர்களுக்காக அமைக்கப்பட்ட ஓய்வூதியம், வருங்கால
வைப்பு நிதி, பணிக்கொடை அல்லது அதுபோன்ற பிற நிதிகளுக்குப்
பொறுப்பாளர்களாக (£ப665) இருந்த நபர்களுக்குப் பதிலாக, ஏதேனும் ஒரு
சட்டத்தின் கீழ் அல்லது அச்சட்டத்தின் வாயிலாகப் பரிந்துரைக்கப்பட்ட
பொறுப்பாளர்களைத் தவிர்த்து, அரசானது பொது அல்லது சிறப்பு ஆணையின்.
வாயிலாகக் குறிப்பிடும் நபர்கள் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவர்.
(69) ல 8 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் கீழ் அரசால் பிடித்தம்
செய்யப்பட்ட அனைத்துத் தொகைகளும், (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள
கழகம் அல்லது நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாகக் கருதப்படும்.
(b) அத்தகைய கழகம் அல்லது நிறுவனம், அவ்வாறு மாற்றப்பட்ட
தொகைகளை உரிய நிதிக் கணக்குகளில் வரவு வைக்க வேண்டும்; அல்லது
அத்தொகையின் ஏதேனும் ஒரு பகுதி பணியாளருக்கு நேரடியாகச் செலுத்தப்பட
வேண்டியிருப்பின், அப்பகுதி அவருக்கு நேரடியாகச் செலுத்தப்பட வேண்டும்.
(7) (3) ஆம் உட்பிரிவின் கீழ் ஒரு பணியாளர் கழகம் அல்லது
நிறுவனத்திற்கு மாற்றப்படுவதானது, அத்தகைய பணியாளர் எவ்வித
இழப்பீட்டையும் பெறுவதற்கு உரிமையளிக்காது; மேலும், அத்தகைய கோரிக்கை
எதையும் எந்தவொரு நீதிமன்றமோ, தீர்ப்பாயமோ அல்லது பிற அதிகார அமைப்போ
விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளுதலாகாது.
16. ஊர்தி தொகுதி இயக்குபவரால் பராமரிக்கப்படும் சொத்து மற்றும்
ஆவணங்கள் தொடர்பான தகவல்களின் விவரப் பட்டியல்.- (1) ஒவ்வொரு ஊர்தி
தொகுதி இயக்குபவரும், 3 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழ் காரணம்
காட்டுமாறு கோரப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள், இந்தச்
சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்படக்கூடிய சொத்துக்களின் முழுமையான விவரப்
பட்டியலைத் தயாரித்து, அதனை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
(2) மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட அல்லது
கையகப்படுத்தப்படக்கூடிய சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் குறித்து,
அரசால் கோரப்படக்கூடிய தகவல்கள் மற்றும். விவரங்களை, அரசானது குறிப்பிடும்
கால அவகாசத்திற்குள் அந்த ஊர்தி தொகுதி இயக்குபவர் அரசிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.
15
(3) ஊர்தி தொகுதி இயக்குபவர், (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள
ஆவணங்கள் எதனையும் அழிக்கக்கூடாது; மாறாக, அறிவிக்கப்பட்ட தேதியில்,
அத்தகைய ஆவணங்கள் அனைத்தையும், அத்துடன் பணியாளர்களின் பணி
நியமன விதிமுறைகளை உறுதி செய்வதற்கும், இந்தச் சட்டத்தின் கீழ்
கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கான இழப்பீட்டுத் தொகையைத்
தீர்மானிப்பதற்கும் அவசியமான பிற ஆவணங்களையும் அரசிடம் ஒப்படைக்க
வேண்டும்.
17. தகவல் பெறும் அதிகாரம்.- இந்தச் சட்டத்தின் நோக்கங்களைச்
செயல்படுத்தும் பொருட்டு, இச்சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட அல்லது
கையகப்படுத்தப்படக்கூடிய ஏதேனும் ஒரு நிலைப் பேருந்து அல்லது பிற
சொத்துகள் தொடர்பாக, ஒரு நபரின் வசம் உள்ள குறிப்பிட்ட தகவல்களை, அந்த
ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரியிடம் சமர்ப்பிக்குமாறு, அரசு ஒரு
ஆணை மூலம் எவரையும் கோரலாம்.
18. உள்நுழைந்து ஆய்வு செய்யும் அதிகாரம்.- இந்தச் சட்டத்தின்
நோக்கங்களைச் செயல்படுத்தும் பொருட்டு, அரசு ஒரு பொது அல்லது சிறப்பு
ஆணை மூலம் இத்துறையில் அதிகாரம் அளிக்கப்பட்ட எந்தவொரு அதிகாரியும்,
எந்தவொரு வளாகத்திற்குள்ளும் உள்நுழைந்து, கையகப்படுத்தப்பட்ட
சொத்துகளை ஆய்வு செய்யலாம்.
19. பூசல்களைத் தீர்த்தல்.-- 1971-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம்
தேதியன்றோ அல்லது அதற்குப் பிந்தைய ஏதேனும் ஒரு தேதியன்றோ, ஏதேனும்
ஒரு ஊர்தி தொகுதி இயக்குபவரிடம் உள்ள நிலைப் பேருந்து அனுமதிகளின்
எண்ணிக்கை குறித்து ஏதேனும் பூசல் எழுந்தால், அதனை அரசானது தீர்த்து
வைத்தல் வேண்டும், அரசின் அத்தீர்மானமே இறுதியானது ஆகும்:
வரம்புரையாக, அத்தகைய தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக,
சம்பந்தப்பட்ட ஊர்தி தொகுதி இயக்குபவருக்குத் தனது தரப்பை
எடுத்துரைப்பதற்கான நியாயமான வாய்ப்பு வழங்கப்படுதல் வேண்டும்.
20. ஆணைகளைச் சார்வு செய்தல்.- (1) இப்பிரிவின் வகைமுறைகள்
மற்றும் இச்சட்டத்தின் கீழ் இயற்றப்படக்கூடிய விதிகளுக்கும் உட்பட்டு,
இச்சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்படும் ஒவ்வொரு ஆணையும்,
(a) பொதுவான தன்மையுடையதாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட வகுப்பைச்
சார்ந்த நபர்களைப் பாதிப்பதாகவோ இருப்பின், தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடப்படுதல் வேண்டும்; மற்றும்
(௦) ஒரு தனிநபர், கழகம் அல்லது நிறுவனத்தைப் பாதிப்பதாக இருப்பின்,
1908-ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறை தொகுப்பு ச் சட்டத்தின் (மையச்
சட்டம் V/1908) முதல் இணைப்புப்பட்டியலில் உள்ள, நேர்விற்கேற்ப ஆணை
இன் விதி 2-இலோ அல்லது ஆணை 300 இன் விதி 3-இலோ
16
ஆணைகளைச் சார்வு செய்வதற்கு வகை செய்யப்பட்டுள்ள முறையில் சார்வு
செய்யப்படுதல் வேண்டும்; மற்றும்
(6) ஒரு தனிப்பட்ட நபரைப் (கழகம் அல்லது நிறுவனம் அல்லாத) பாதிப்பதாக
இருப்பின், அத்தகைய நபருக்குப் பின்வரும் முறைகளில் சார்வு செய்யப்பட
வேண்டும், அதாவது:-
() அந்த நபரிடம் அதனை நேரில் ஒப்படைப்பதன் மூலமோ அல்லது
வழங்குவதன் மூலமோ, அல்லது
(0 அவ்வாறு ஒப்படைக்கவோ அல்லது வழங்கவோ இயலாத நிலையில்,
அந்த நபரின் அலுவலர் எவரிடமேனும் அல்லது அந்த நபரின் குடும்பத்தைச் சார்ந்த
வயதுவந்த ஆண் உறுப்பினர் எவரிடமேனும் அதனை ஒப்படைப்பதன் மூலமோ
அல்லது அந்த நபர் கடைசியாக வசித்ததாகவோ, தொழில் நடத்தியதாகவோ
அல்லது ஊதியத்திற்காகப் பணிபுரிந்ததாகவோ அறியப்படும் இடத்தின்
வெளிக்கதவின் மீதோ அல்லது அவ்விடத்தின் நன்கு புலப்படக்கூடிய ஏதேனும்
ஒரு பகுதியின் மீதோ அதன் நகல் ஒன்றை ஒட்டுவதன் மூலமோ; அல்லது
இம்மூலங்கள் வாயிலாகச் சார்வு செய்ய இயலாத நிலையில்,
(1) அஞ்சல் வாயிலாக சார்வு செய்யலாம்.
(2) கையகப்படுத்தப்பட்ட சொத்தின் உரிமையானது சர்ச்சைக்குரியதாக
இருக்கும்போதோ, அல்லது அச்சொத்தில் நலனண்சார்ந்த நபர்களை உடனடியாகக்
கண்டறிய இயலாததாலும், தேவையற்ற காலதாமதமின்றி ஆணையைச் சென்று
சேர்க்க இயலாத நிலையிலும், அவ்வாணையானது தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடுவதன் மூலமும், இயலுமிடத்து, கையகப்படுத்தப்பட்ட சொத்தின்.
ஏதேனும் ஒரு வெளிப்படையான பகுதியிலோ அல்லது சொத்துரிமை நிலைபெறும்
தேதிக்கு முன்னதாக அச்சொத்து வழக்கமாக வைக்கப்பட்டிருந்த இடத்திலோ
அவ்வாணையின் ஒரு நகலை ஒட்டுவதன் மூலமும் சென்று சேர்க்கப்படலாம்.
21. அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்.- இந்தச் சட்டத்தின் மூலமாகவோ
அல்லது அதன் கீழோ தங்களால் செலுத்தத்தக்க அதிகாரங்களை, அந்த
அறிவிக்கையில் குறிப்பிடப்படக்கூடிய சூழ்நிலைகளிலும், ஏதேனும் இருப்பின்,
அத்தகைய நிபந்தனைகளின் கீழும், அரசிற்குப் பணிந்துள்ள ஒரு அலுவலராலும்
செலுத்தலாம் என்று, அரசானது ஓர் அறிவிக்கையின் மூலம் இயற்றலாம்.
22. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.-- (1)
இந்தச் சட்டத்தை அல்லது அதன் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஏதேனும் ஓர் ஆணையைச்
செயல்படுத்துவதற்காக, நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்ய
உத்தேசிக்கப்பட்ட எச்செயலுக்காகவும், எந்தவொரு நபருக்கும் எதிராக வழக்கு,
குற்றவியல் நடவடிக்கை அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எதுவும்
தொடரப்படாது.
17
(2) இந்தச் சட்டத்தை அல்லது அதன் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஏதேனும் ஓர்
ஆணையைச் செயல்படுத்துவதற்காக நன்னம்பிக்கையின் அடிப்படையில்
செய்யப்பட்ட அல்லது செய்ய உத்தேசிக்கப்பட்ட எச்செயலினாலும் ஏற்பட்ட
அல்லது ஏற்படக்கூடிய எத்தகைய சேதத்திற்காகவும், அரசிற்கோ, நிர்வாகிக்கோ
அல்லது வேறு எந்த அலுவலருக்கோ எதிராக வழக்கு அல்லது பிற சட்ட
நடவடிக்கைகள் எதுவும் தொடரப்படாது.
23. உரிமையியல் நீதிமன்றங்களின் அதிகார வரம்பபிற்குத் தடை.-- இந்தச்
சட்டத்தில் வெளிப்படையாக வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி, இந்தச்
சட்டத்தின்படியோ அல்லது அதன் கீழோ அரசோ அல்லது ஒரு நடுவரோ அல்லது
அங்கீகரிக்கப்பட்ட அலுவலரோ தீர்மானிக்க அதிகாரம் பெற்ற எந்தவொரு
பொருட்பாடு தொடர்பாகவும் எந்தவொரு உரிமையியல் நீதிமன்றத்திற்கும் அதிகார
வரம்பு இருத்தலாகாது, மேலும் இந்தச் சட்டத்தின்படியோ அல்லது அதன் கீழோ
வழங்கப்பட்ட எந்தவொரு அதிகாரத்தின்படியோ எடுக்கப்பட்ட அல்லது
எடுக்கப்படவிருக்கும் எந்தவொரு நடவடிக்கை தொடர்பாகவும் எந்தவொரு
நீதிமன்றமோ அல்லது பிற அதிகார அமைப்போ தடை உத்தரவு வழங்குதலாகாது.
24, குற்றங்களுக்கான தண்டனை.- எவரேனும் இந்தச் சட்டத்தின்
எந்தவொரு வகைமுறையையோ அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட
எந்தவொரு விதியையோ அல்லது இந்தச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட
எந்தவொரு ஆணையையோ அல்லது வழங்கப்பட்ட எந்தவொரு
பணிப்புரைகளையோ மீறினால், அல்லது இந்தச் சட்டத்தின்படியோ அல்லது அதன்
கீழோ வழங்கப்பட்ட எந்தவொரு அதிகாரத்தையும் சட்டப்பூர்வமாகச்
செயல்படுத்துவதைத் தடுத்தால், அவர் ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும்
அபராதம் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
25. குறித்த சில நபர்கள் பொது ஊழியர்களாகக் கருதப்படுதல்.- இந்தச்
சட்டத்தின் கீழ் ஏதேனும் அதிகாரத்தைச் செயல்படுத்தும்போதோ அல்லது
ஏதேனும் கடமையை நிறைவேற்றும்போதோ, நடுவரும், நிர்வாகியும், அதிகாரம்
அளிக்கப்பட்ட அலுவலரும் மற்றும் அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட பிற
அலுவலர் ஒவ்வொருவரும், இந்திய தண்டனைச் சட்டத்தின் (மையச் சட்டம்
XLV/1860) 21 ஆம் பிரிவின் பொருளின்படி, ஒரு பொது ஊழியராகக் கருதப்படுதல்
வேண்டும்.
26. பிற சட்டங்களை விட மீதூர்ந்து இயங்கும் சட்டம்.- இந்தச் சட்டத்தில்
வேறுவிதமாக வகை செய்யப்பட்டிருந்தாலன்றி, மோட்டார் வாகனச் சட்டத்திலோ
அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள வேறு ஏதேனும் சட்டத்திலோ
இதற்கு முரணாக ஏதேனும் இருந்தபோதிலும், இந்தச் சட்டத்தின் விதிகள்
நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
27. விதிகளைச் செய்யவதற்கான அதிகாரம்.-- (1) இந்தச் சட்டத்தின்.
நோக்கங்களைச் செயல்படுத்துவதற்காக அரசானது விதிகளை இயற்றலாம்.
18
(2) குறிப்பாகவும், மேற்சொன்ன அதிகாரத்தின் பொதுப்பாங்கிற்குப் குந்தகம்
ஏற்படாதவாறும், அத்தகைய விதிகள்: பின்வரும் பொருட்பாடுகள்.
அனைத்திற்குமோ அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றிற்குமோ வகை செய்யலாம்,
அவையாவன:
(ஐ இந்தச் சட்டத்தின் கீழ் நடைபெறும் நடுவர் மன்ற நடவடிக்கைகளிலும்,
மேல்முறையீடுகளிலும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்;
(௦) நடுவர் மன்றத்தின் முன்னிலையிலும், இந்தச் சட்டத்தின் கீழ்
செய்யப்படும் மேல்முறையீடுகளிலும் ஏற்படும் நடவடிக்கைகளுக்கான
செலவுகளைப் பங்கிடுவதில் பின்பற்றப்பட வேண்டிய கோட்பாடுகள்;
(2) ஆணைகளைரச் சார்வு செய்யும் முறை;
(0) வகுத்துரைக்கப்பட வேண்டிய அல்லது வகுத்துரைக்கப்படலாகும் பிற
பொருட்பாடுகள் எதுவும்.
(3) இந்தச் சட்டத்தின் கீழ் இயற்றப்படும் அனைத்து விதிகளும் தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்பட வேண்டும்; மேலும், அவை ஒரு குறிப்பிட்ட நாளில்
நடைமுறைக்கு வரும் என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி,
அவ்வாறு வெளியிடப்படும் நாளிலேயே அவை நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(4) இந்தச் சட்டத்தின் கீழ் இயற்றப்படும் ஒவ்வொரு விதியும், இயற்றப்பட்ட
உடனேயே, கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல்
வேண்டும் அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் முடிவடைவதற்குள்ளாகவோ
அல்லது அடுத்த கூட்டத்தொடரின்போதோ, அத்தகைய விதியில் ஏதேனும்
மாற்றத்தைச் செய்யச் சட்டமன்றப் பேரவை ஒப்புக்கொண்டாலோ, அல்லது
அவ்விதி இயற்றப்படக்கூடாது என்று சட்டமன்றப் பேரவை ஒப்புக்கொண்டாலோ,
அதன்பின்னர் அவ்விதி, நேர்விற்கேற்ப, மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே
நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது எவ்விதச் செல்லுபடித்தண்மையும்
அற்றதாகிவிடும்; ஆயினும், அத்தகைய மாற்றம் அல்லது ரத்து செய்தல் எதுவும்,
அவ்விதியின் கீழ் முண்னரே செய்யப்பட்ட எச்செயலின் செல்லுபடித்தன்மைக்கும்
எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் அமைதல் வேண்டும்.
19
இணைபப்புப்பட்டியல்.
(5 ஆம் பிரிவைக் காண்க.)
இழப்பீட்டின் கோட்பாடுகள்.
1. கையகப்படுத்தப்பட்ட சொத்தினைப் பொறுத்து அரசால்
செலுத்தப்படக்கூடிய இழப்பீடானது, அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட சொத்தின்
அறிவிக்கப்பட்ட தேதியிலான சந்தை மதிப்பாக இருத்தல் வேண்டும்.
2. பத்தி 1-இன் கீழ் செலுத்தப்பட வேண்டிய தொகைக்கு கூடுதலாக,
இச்சட்டத்தின் கீழ் பெறப்படும் ஒவ்வொரு அனுமதிக்கும், பின்வரும் தொகைகள்
செலுத்தப்பட வேண்டும்:
(i) அனுமதியின் எஞ்சிய காலம் பதினைந்து நாட்களுக்கும் குறைவாக
இருக்கும் நேர்வில், நூறு ரூபாய்;
(i) பிற நேர்வுகளில், அனுமதியின் எஞ்சிய காலத்தில் உள்ள ஒவ்வொரு
முழு மாதத்திற்கும், அல்லது பதினைந்து நாட்களுக்கு மேற்பட்ட மாதத்தின்
பகுதிக்கும், இருநூறு ரூபாய்;
வரம்புரையாக, இப்பத்தியின் கீழ் செலுத்தப்பட வேண்டிய இமழப்பிட்டுத்
தொகையானது, எந்நேர்விலும், நானூறு ரூபாய்க்கும் குறைவாக இருத்தல் கூடாது.
20