Tamil Nadu · 1978 · Act 29
THE TAMIL NADU ELECTRICITY BOARD (RECOVERY OF DUES) ACT, 1978
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
தமிழ்நாடு சட்டம் எண். 29/1978.
1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் நிலுவைத் தொகையை வளுலித்தல்)
சட்டம்.
(1978 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 13 ஆம் நாளன்று குடியரசுத் தலைவரின்
ஏற்பிசைவைப் பெற்றது; முதன்முதலில், 1978 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 19 ஆம்
நாளன்று (ஆனி 05, காளயுக்தி, திருவள்ளுவர் ஆண்டு-2009) தமிழ்நாடு அரசு
சிறப்பிதழில் வெளியிடப்பட்டது.)
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்தவேண்டிய குறித்தசில நிலுவைத்
தொகையை துரிதமாக வசூலிப்பதற்கு வகைசெய்வதற்கானதெொொரு சட்டம்.
இந்திய குடியரசின் இருபத்தி ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. குறுந்தலைப்பு மற்றும் அளாவுகை.- (1) இந்தச் சட்டம், 1978 ஆம் ஆண்டு
தமிழ்நாடு மிண்சார வாரியம் (நிலுவைத் தொகையை வசூலித்தல்) சட்டம் என
வழங்கப்பெறும்.
(2) இது. தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.
2. பொருள் வரையறைகள்.-- இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறு பொருள்
குறித்தாலன்றி,-
(1) "வாரியம்" என்பது 1948 ஆம் ஆண்டு மின்சார (விநியோகச்) சட்டத்தின்
(மையச் சட்டம் LIV/1948) 5 ஆம் பிரிவின்கீழ் அமைக்கப்பட்ட தமிழ்நாடு மிண்சார
வாரியம் என்று பொருள்படும்;
(2 "நிலுவைத் தொகைகள்" என்பது, பின்வருவனவற்றின் காரணமாக
வாரியத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய ஏதேனும் தொகை என்று பொருள்படும்,
(i) வழங்கப்பட்ட மின்சாரத்தின் நுகர்வு; அல்லது
(i) மின்சார மீட்டர், மின்சார இயந்திரங்கள், கட்டுப்பாட்டு சாதனம்,
பொருத்துதல்கள், கம்பிகள் அல்லது விளக்குகள், வெப்பமாக்கல், குளிரூட்டும்
அல்லது உந்து சக்தி அல்லது மின்சாரத்தைப் பயன்படுத்தக்கூடிய அல்லது
பயன்படுத்தப்படும் வேறு எந்த நோக்கத்திற்காகவும், மின்சாரத்தால் இயக்கப்படும்
எந்தவொரு தொழில்துறை அல்லது விவசாய இயந்திரங்களின் வாடகை, ஆய்வு,
சோதனை, நிறுவல், இணைப்பு, பமழுதுபார்ப்பு, பராமரிப்பு அல்லது அகற்றுதல்
ஆகியவற்றிற்கான எந்தவொரு ஊதியம், வாடகை அல்லது பிற கட்டணங்கள்;
அல்லது
(0 கடனுக்காக எடுக்கப்பட்ட, ஆனால் திருப்பித் தரப்படாத மேற்கூறப்பட்ட
அத்தகைய ஏதேனும் பொருட்களின் விலை;
(3) "கடன் பெற்றவர்" என்பது ஏதேனும் நிலுவைத் தொகையை செலுத்த
வேண்டிய ஒரு நபர் என்று பொருள்படும்;
(4) "வகுத்துரைக்கப்பட்ட அதிகார அமைப்பு" என்பது, வாரியத்தின்
கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு மற்றும் அறிவிக்கையில் குறித்துரைக்கப்படலாகிறவாறு,
அத்தகைய பகுதியிலும் அத்தகைய பகுதிக்காகவும், இந்தச் சட்டத்தின்படி
வகுத்துரைக்கப்பட்ட அதிகார அமைப்பின் பணிகளை ஆற்றுவதற்கு, அறிவிக்கை
வாயிலாக, பதவி காரணமாகவோ அல்லது பிறவாறாகவோ, மாநில அரசால்
அறிவிக்கை வாயிலாக அதிகாரமளிக்கப்பட்ட நபரெவரும் அல்லது அதிகாரஅமைப்பு
என்று பொருள்படும்.
3. செலுத்தப்பட வேண்டிய தேதி மற்றும் செலுத்தாமைக்கான விளைவுகளை
பற்றுச்சீட்டில் அறிவித்தல்.-- (1) கடன்பெற்றவர் ஒருவரால் வாரியத்திற்குச்
செலுத்தப்பட வேண்டியதற்கான ஒவ்வொரு பற்றுச்சீட்டும், வாறியத்தினால்
வகுத்துரைக்கப்பட்ட படிவத்தில் இருத்தல் வேண்டும், மற்றும் அத்தகைய
செலுத்தப்பட வேண்டிய தேதியை வெளிப்படையாகக் குறிப்பிடப்படுதலும் வேண்டும்
மற்றும் விதிகளினால் வகுத்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய முறையில்
வழங்கப்படுதலும் வேண்டும்.
2 @ @O ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பற்றுச்சீட்டில்
குறிப்பிடப்பட்டுள்ள நிலுவைத் தொகைகள் முழுவதையும் அல்லது ஒரு பகுதி
எதனையும் செலுத்த வேண்டிய தனது பொறுப்பை கடன்பெற்றவர் மறுத்தால், அவர்
வகுத்துரைக்கப்படும் காலஅளவிற்குள் வாரியத்தால் குறித்துரைக்கப்பட வேண்டிய
மேல்முறையீட்டு அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
(௦) மேல்முறையீட்டு அலுவலர், மேல்முறையீட்டைத் தீர்மானிக்கும்போது,
விதிகளால் வகுத்துரைக்கப்படும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
(௦9) இந்த உட்பிரிவின்கீழ் செய்யப்படும் ஒரு மேல்முறையீட்டின் நேர்வில்,
மேல்முறையீட்டு அலுவலரால் தீர்மானிக்கப்பட்ட நிலுவைத் தொகைகள்,
மேல்முறையீட்டு அலுவலரால் குறிப்பிடப்படும் அத்தகைய தேதிக்குள் செலுத்தப்பட
வேண்டும்.
(3) (1) ஆம் உட்பிரிவின்கீழ் பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நிலுவைத்
தொகைகள் பற்றுச்சீட்டில் குறித்துரைக்கப்பட்ட தேதிக்குள் செலுத்தப்படாவிடில், (2)
ஆம் உட்பிரிவின் கீழ் மேல்முறையீடு செய்யப்படும் நேர்வில், மேல்முறையீட்டு
அலுவலரால் தீர்மானிக்கப்பட்ட நிலுவைத் தொகைகளை அத்தகைய அலுவலரால்
குறித்துரைக்கப்பட்ட தேதிக்குள் செலுத்தப்படாவிடில், அவற்றை கடன் பெற்றவர்
செலுத்த வேண்டியவராவார், மேலும் வாரியத்தினால் குறித்துரைக்கப்படக்கூடிய
அத்தகைய தண்டத்தொகையுடன், அத்தகைய நிலுவைத் தொகைகளும்
தண்டத்தொகையும், இச்சட்டத்தில் இதற்குப் பின்பு விதிக்கப்பட்ட முறையில்
அவ்வாறு வளுலிப்பதற்கு ஏற்பட்ட செலவுகளுடன் சேர்த்து வசூலிக்கப்படுதல்
வேண்டும்.
4. நிலுவைத் தொகை மற்றும் தண்டத்தொகை செலுத்தப்படாததற்கான கேட்பு
அறிவிப்பு- 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் பற்றுச்சீட்டில்
குறிப்பிடப்பட்டுள்ள நிலுவைத் தொகைகளை, பற்றுச்சீட்டில் குறித்துரைக்கப்பட்ட
தேதிக்குள் செலுத்தப்படாவிட்டால் மற்றும் 3 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்கீழ்
மேல்முறையீடு செய்யப்படும் நேரவில், மேல்முறையீட்டு அலுவலரால்
தீர்மானிக்கப்பட்ட நிலுவைகள் அத்தகைய அலுவலரால் குறிப்பிடப்பட்ட தேதிக்குள்
செலுத்தப்படவில்லையாயின், வகுத்துரைக்கப்பட்ட அலுவலர் எந்த நேரத்திலும்,
கடன் பெற்றவர் பெயர், பல்வேறு நிலுவைகளின் பேரில் அவரால்
செலுத்தபடவேண்டிய தொகை, அபராதம் மற்றும் வசூலிப்பதற்கான செலவுகள்
ஆகியவற்றைக் குறிப்பிட்டு வகுத்துரைக்கப்பட்ட படிவத்தில் ஒரு கேட்பு அறிவிப்பை
அவருக்கு வழங்கலாம் அல்லது வழங்கச் செய்யலாம்.
விளக்கம்.- பதிவுத் தபால் மூலம் அறிவிப்பை சார்வு செய்வது சம்பந்தப்பட்ட
நபருக்கு போதுமான கருதப்படும்.
5. செலுத்தும் பொறுப்பிற்கு எதிரான உரிமை வழக்கு.- 4 ஆம் பிரிவின்கீழ்
கடன் பெற்றவர் அல்லது அவரது அதிகாரமளிக்கப்பட்ட முகவருக்கு கேட்பு அறிவிப்பு
வழங்கப்பட்டிருந்தால், அவர் செலுத்த வேண்டிய தொகை, அபராதம் அல்லது செலவு
அல்லது அவைகளின் ஏதேனும் ஒரு பகுதிக்கு உண்டான பொறுப்பை மறுத்தால்,
அவர், கேட்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த தொகையை செலுத்திய பிறகு,
அவர் அதை டசலுத்த வேண்டிய பொறுப்பு தனக்கு இல்லை என்று எழுத்துப்பூர்வமாக
அதனை எதிர்த்து வகுத்துரைக்கப்பட்ட அலுவலரிடம் வைப்பீடு செய்த பிறகு, கேட்பு
அறிவிப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஒரு வழக்கைத்
தொடுக்கலாம். அத்தகைய வழக்கின் முடிவுக்கு உட்பட்டு, கேட்பு அறிவிப்பு அதில்
குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு நிலுவைத் தொகைகள், அபராதம் மற்றும்
செலவுகளுக்கான முடிவான ஆதாரமாக இருக்கும்.
6. நிலுவைத் தொகை முதலியன செலுத்தப்படாவிட்டால் வளசூலித்தல்.- (1)
4 ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்ட கேட்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட பல்வேறு
நிலுவைத் தொகைகள், தண்டத்தொகைகள் மற்றும் செலவுகள் ஆகியவற்றின்
மொத்தத் தொகை, அத்தகைய சார்வு தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்
அல்லது வாரியத்தின் தலைவர் அவ்வப்போது அனுமதிக்கக்கூடிய அத்தகைய
நீட்டிக்கப்பட்ட காலஅளவிற்குள் வகுத்துரைக்கப்பட்ட அலுவலரிடம் வைப்பிடு
செய்யப்படாவிட்டால், கடன் பெற்றவர் அத்தகைய தொகையை செலுத்தத்
தவறியவராகக் கருதப்படுதல் வேண்டும், மற்றும் வகஞூலிக்கப்படும் ஏதேனும் பிற
முறைகளுக்கு குந்தகமின்றி இருத்தல் வேண்டும், வேறு எந்த சட்டத்திலோ அல்லது
முறையாவணத்திலோ அல்லது ஒப்பந்தத்திலோ அடங்கியுள்ள எது
எவ்வாறிருப்பினும், நில வருவாய் நிலுவைத் தொகையாக வளுலிக்கப்படுதல்
வேண்டும்.
2 1) ஆம் உட்பிரிவில் நில வருவாய் நிலுவைத் தொகையாகக்
குறிப்பிடப்பட்டுள்ள தொகையை வளுலிக்கும் நோக்கத்திற்காக, 1864-ஆம் ஆண்டு
தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டத்தின்கீழ் (தமிழ்நாடு சட்டம் 271864) மாவட்ட
ஆட்சித் தலைவருக்குரிய அனைத்து அதிகாரங்களையும் குறித்துரைக்கப்பட்ட
அதிகார அமைப்பு பெற்றிருக்கும்.
6-&. கடன் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுதல்.- (1) 6 ஆம்
பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், எவரேனும் கடன்பெற்றவர்களின்
பெயர்களையும் வேறு விபரங்களையும் வெளியிடுவது பொது நலனுக்கு அல்லது
அதற்குச் செலுத்தப்பட வேண்டிய ஏதேனும் நிலுவைத் தொகையை வளுலிப்பதை
பாதுகாக்கும் நோக்கத்திற்காக அவசியமானது அல்லது உகந்தது என வாரியம்
கருதுமாயின், வாரியமானது, வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய
நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அத்தகைய கடன் பெற்றவர்களின் பெயர்கள் மற்றும்
பிற விவரங்களை அது பொருத்தமெனக் கருதும் முறையில் வெளியிடச் செய்தல்
வேண்டும்.
(2) 4 ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்ட கேட்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள
எந்தவொரு நிலுவைத் தொகைகள், அபராதம் மற்றும் செலவுகள் தொடர்பாகவும், ஓர்
உரிமை வழக்கை தாக்கல் செய்யப்படாமல் 5 ஆம் பிரிவின்கீழ் ஓர் உரிமை வழக்கை
தாக்கல் செய்வதற்கான காலம் முடிவுறும் வரை, அல்லது உரிமை வழக்கு,
தொடங்கப்பட்டால், முடிவு செய்யப்பட்டிருப்பது தொடர்பாகவும், இந்த பிரிவின் கீழ்
எந்த வெளியீடும் செய்யப்படக்கூடாது.
விளக்கம்.- ஒரு நிறுவகம், நிறுமம் அல்லது பிற நபர்களின் சங்கத்தின் நேர்வில்,
நேர்விற்கேற்ப, நிறுவனத்தின் பங்குதாரர்கள், இயக்குநர்கள், நிர்வாக முகவர்கள்,
செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள், அல்லது நிறுமத்தின் மேலாளர்கள் அல்லது
சங்கத்தின் உறுப்பினர்களின் பெயர்களானது, வழக்கின் சூழ்நிலைகள் அதை
நியாயப்படும் என வாரியம் கருதினால், வெளியிடப்படலாம்.
7. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.- (1) மாநில அரசானது, இந்தச்
சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.
(2) (ஐ) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிரற்தாடு
அரசிகழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில்
நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத்
தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே
நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையானது, அது
குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று
சொல்லப்பட்டிருந்தாலன்றி அது அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே
நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட
அறிவிக்கை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட
பின்னர், கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும்.
மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அதனையடுத்த
கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி அல்லது அறிவிக்கை
எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப் பேரவையானது செய்யுமாயின் அல்லது
அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதுவும் செய்யப்படுதலோ அல்லது
பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப்பேரவை முடிவு செய்யுமாயின், அந்த
விதி அல்லது அறிவிக்கையானது அதன்பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட
வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப,
நடைமுறைக்கு வராது போதல் வேண்டும்; எனினும் அவ்வாறான மாறுதல் அல்லது
நீக்கம் எதுவும், அந்த விதி அல்லது அறிவிக்கையின்படி முன்னரே செய்யப்பட்ட
செயல் ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
Rules, notifications and orders under this Act
Listed from India Code. Each opens there.