Tamil Nadu · 1997 · Act 43
The Tamil Nadu Dr.Ambedkar Law University Act, 1996
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகச் சட்டம்.
சட்ட எண்.4371997
கூறுகளின் வரிசையமைப்பு.
அத்தியாயம் |.
முன்னுரை.
கூறுகள் :
1. குறுந்தலைப்பு, அளாவுகை, பொருந்துகை மற்றும் தொடக்கம்.
2. பொருள் வரையறைகள்.
அத்தியாயம் Il
பல்கலைக்கழகம்.
3. பல்கலைக்கழகத்தை நிறுவியமைத்தல்.
4. இப்பல்கலைக்கழகத்தின் குறிக்கோள்கள்.
5. இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரங்களும் அலுவற்பணிகளும்.
6. கல்லூரிகள் பிற பல்கலைக்கழகங்கள் எதனோடும்.
இணைக்கப்படுதலாகாது என்பதும் இப்பல்கலைக்கழகத்தால்
கல்லூரிகளுக்கு ஏற்பிசைவளிக்கப்படுதலும்.
7. இப்பல்கலைக்கழகத்தில் சேர்த்துக் கொள்வது பற்றி.
8. மேற்பார்வை.
அத்தியாயம் I,
இப்பல்கலைக்கழக அலுவலர்கள்.
9. இப்பல்கலைக்கழக அலுவலர்கள்.
10. வேந்தர்.
11. இணை வேந்தர்.
12. துணை வேந்தர்.
13. துணை வேந்தரை நீக்குதல்.
14. துணை வேந்தரின் அதிகாரங்களும் கடமைகளும்.
15. பதிவாளர்.
16. நிதி அலுவலர்.
17. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்.
அத்தியாயம் IV.
இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகள்.
18. இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகள்.
19. உறுப்பினர் பதவிக்கான தகுதிக்கேடு.
20. ஒரு சில நேர்வுகளில் ஆட்சிக்குழுவுக்கும் கல்வி ஆட்சிப் பேரவைக்கும்
தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அல்லது நியமனஞ்செய்யப்படுவதற்கான
தகுதிக்கேடு.
21. துணை வேந்தர் மற்றும் பிற அலுவலர்கள் முதலானோர் பொது
ஊழியர்களாக இருத்தல்.
22. ஆட்சிக்குழு.
23. ஆட்சிக்குழுவின் அதிகாரங்கள்.
24, ஆட்சிக்குழுவின் கூட்டங்கள்.
25. ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் ஊதியத்திற்கு (Remuneration)
உரிமையுடையவராகமாட்டார்கள் என்பது.
26. உறுப்பினர்களின் பதவி விலகல்.
27. ஆண்டறிக்கை.
28. ஆண்டு கணக்குகள்.
29. கல்வி ஆட் சிப்பேரவை.
30. இப்பல்கலைக்கழகத்தின் முக்கியமான கொள்கைகளையும் செயல்
திட்டங்களையும் கல்வி ஆட்சிப்பேரவை ஆய்வு செய்தல்.
31. கல்வி ஆட்சிப்பேரவையின் கூட்டங்கள்.
32. நிதிக்குழு.
33. திட்டமிடும் குழுமம்.
34. பாடத் திட்டக் குழுமம்.
35. பிற அதிகாரஅமைப்புகளை அமைத்துருவாக்குதல்.
36. குழுக்களை அமைத்துருவாக்குதலும் அதிகாரங்களை ஒப்படைவு
செய்தலும்.
37. புலங்களை அமைத்துருவாக்குதலும் அவற்றின் அலுவற்பணிகளும்.
அத்தியாயம் V.
நிலைமுறை விதிகள், துணைமுறை விதிகள், ஒழுங்குமுறை விதிகள் ஆகியவை.
38. நிலைமுறை விதிகள்.
39. நிலைமுறை விதிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பது.
40. துணைமுறை விதிகள்.
44. துணைமுறை விதிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பது.
42. ஒழுங்குமுறை விதிகள்.
அத்தியாயம் VI,
மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளுதலும் அவர்களின் தங்குமிடமும்.
43. இப்பல்கலைக்கழகத்தின் குறித்தகாலப் படிப்புப் பிரிவுகளுக்கு
மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளுதல்.
44. அரசு கல்லூரிகளுக்கும் நிலையங்களுக்கும் மாணவர்களைத் தெரிவு
செய்தலும் சேர்த்துக் கொள்ளுதலும்.
45. இப்பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளுதல்.
46. இப்பல்கலைக்கழகத் தேர்வுகளுக்குத் தகுதிதறா வருகைப்பதிவு.
47. தங்குமிடங்களும், மாணவர் விடுதிகளும்.
அத்தியாயம் VI,
பல்கலைக்கழக நிதியங்கள் முதலானவை.
48. பொது நிதியங்கள்.
49. பிற நிதியங்கள்.
50. நிதியங்களை நிருவகித்து வருதல்.
அத்தியாயம் VIl
பணி வரைகட்டுகள் (நிபந்தனைகள்).
51. ஓய்வூதியம், பணிக்கொடை முதலானவை.
52. பணி நிபந்தனைகள்.
53. தேர்வுக்குழு.
54. துறைத் தலைவர்களின் நியமனம் பற்றிய வரையறைகளும்
நிபந்தனைகளும்.
55. புலங்களின் முதன்மையர்கள்.
அத்தியாயம் IX.
பல்வகைப்பட்டவை.
56. தற்செயல் காலியிடங்களை நிரப்புதல்.
57. இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகளின் மற்றும் பிற
அமைப்புகளின் நடவடிக்கைகள் காலியிடங்கள் இருப்பதன் காரணமாக
செல்லாதவையாக ஆக்கப்படுதல் ஆகாது.
58. இப்பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குதல்.
59. இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளுக்கும், பிற அமைப்புகளுக்கும்
தேர்ந்தெடுத்தல் அல்லது பெயர் குறித்து நியமனம் செய்தல் பற்றிய
பூசல்கள்.
60. குழுக்களை அமைத்துருவாக்குதல்.
61. தகவல் பெறுவதற்கான அதிகாரம்.
62. பட்டதாரிகளைப் பதிவு செய்தல்.
63. முதல் துணை வேந்தரின் நியமனம்.
64. முதல் பதிவாளரின் நியமனம்.
65. முதல் துணை வேந்தரின் இடைப்படு கால அதிகாரங்கள்.
66. நூலகர்.
67. நியமிப்பதற்கான தணி முறை.
68. குறிப்பிட்ட ஒரு சில சட்டங்கள் குறித்த சில கூறுகளைப் பொறுத்து
பொருந்தா என்பது.
69. தற்போது இருந்து வருகிற சட்டக் கல்லூரிகளை
இணைக்கப்பட்டவையாக கொள்ளுதலும் சொத்தினையும்
பணியாளர்களையும் இடம் மாற்றுதலும்.
70. வருங்கால வைப்பு நிதி மற்றும் அதுபோன்ற நிதியங்களில் சேர்ந்துள்ள
தொகைகளை மாற்றுதல்.
71. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
இணைபப்புப்பட்டியல்..
1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகச் சட்டம்
சட்ட எண்.43/1997
இம்மாநிலக் கல்வி அமைப்பில் சட்டக் கல்வியையும் சட்ட அறிவையும்
மேம்படுத்தி வளர்ப்பதற்காக தமிழ்நாடு மாநிலத்தில் சட்டப் பல்கலைக்கழகம்
ஒன்றை உருவாக்கி நிறுவி அமைப்பதற்கு வகைசெய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் நாற்பத்து ஏழாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
அத்தியாயம் |
முன்னுரை.
1. குறுந்தலைப்பு, அளாவுகை, பொருந்துகை மற்றும் தொடக்கம்.- (1) இந்தச் சட்டம்,
1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகச் சட்டம்
என வழங்கப்பெறும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.
(3) இது.
(a) இந்தச் சட்டத்தின்படி இப்பல்கலைக்கழகத்தோடு
இணைக்கப்பட்டுள்ளவையாகக் கொள்ளப்பட்டுள்ளதும் இணைப்புப்பட்டியலில்
குறித்துரைக்கப்பட்டுள்ளதுமான சட்டக் கல்லூரி ஒவ்வொன்றுக்கும்;
(b) இப்பல்கலைக்கழகப் பரப்பிடத்திற்குள் அமைந்துள்ளவையும்,
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு அல்லது அதன்கீழ்ச் செய்யப்பட்ட
நிலைமுறை விதிகளுக்கோ துணைமுறை விதிகளுக்கோ அல்லது
ஒழுங்குமுறை விதிகளுக்கோ இணங்கிய வகையில் இப்பல்கலைக்கழகத்தோடு
இணைக்கப்பட்டுள்ள அல்லது அதனால் ஒப்புதலளிக்கப்பட்டுள்ள பிற சட்டக்
கல்லூரி அல்லது கல்வி நிலையம் ஒவ்வொன்றுக்கும்; மற்றும்
(௦9 இப்பல்கலைக்கழகப் பரப்பிடத்திற்குள் அமைந்துள்ளதும்
சட்டத்தில் பட்டம், பட்டயம் அல்லது பிற கல்விச் சிறப்புகள்:
இப்பல்கலைக்கழகத்தால் அளிக்கப்பெறுவதற்குத் தகுதியுடையதாகக் கூடிய
குறித்தகாலப் படிப்பு எதனையும் நடத்தி வருகிற அல்லது பயிற்சி எதனையும்
அளித்து வருகிற கல்லூரி அல்லது கல்வி நிலையம் ஒவ்வொன்றுக்கும்
பொருந்தும்.
(4) இந்தப் பிரிவும் 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 21, 48, 49,
50, 52, 61, 63, 64, 65, 68, 69, 71 ஆகிய பிரிவுகளும் உடனடியாக நடைமுறைக்கு
வருதல் வேண்டும்.
மற்றும் இந்தச் சட்டத்தின் எஞ்சிய பிரிவுகள், அரசு அறிவிக்கையின் மூலம்
குறிக்கக் கூடிய தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்பதோடு இந்தச்
சட்டத்தின். வெவ்வேறு வகைமுறைகளுக்காக வெவ்வேறு தேதிகள்
குறிக்கப்படலாம்.
2. பொருள் வரையறைகள்.- இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறு பொருள்
குறித்தாலன்றி.-
(a) "இணைக்கப்பட்ட கல்லூரி" என்றால் இப்பல்கலைக்கழகப்
பரப்பிடத்திற்குள் அமைந்து இப்பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு
கல்லூழி அல்லது நிலையம், இந்தச் சட்டத்தின்படி பல்கலைக்கழகத்தோடு
இணைக்கப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படும் ஒரு கல்லூரி மற்றும் ஒரு தன்னாட்சிக்
கல்லூரி என்று பொருள்படும்;
(b) "தன்னாட்சிக் கல்லூரி" என்றால், நிலைமுறை விதிகளாலோ,
அதனடியாகவோ ஒரு தன்னாட்சிக் கல்லூரி என பெயர் குறிக்கப்பட்டுள்ள கல்லூரி
எதுவும் என்று பொருள்படும்;
(6) "இந்திய வழக்குரைஞர் பதிவு மன்றம்" என்றால், 1961-ஆம் ஆண்டு
வழக்குரைஞர்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 251961)
அமைத்துருவாக்கப்பட்டுள்ள இந்திய வழக்குரைஞர் பதிவு மன்றம் என்று
பொருள்படும்;
(0) "தமிழ்நாடு வழக்குரைஞர் பதிவு மன்றம்" என்றால், தமிழ்நாடு
மாநிலத்திற்காகனவென அமைத்துருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வழக்குரைஞர்
பதிவு மன்றம் என்று பொருள்படும்;
(e) "கல்லூரி" என்றால், இப்பல்கலைக்கழகத்தால்
நிறுவியமைக்கப்பட்டுள்ளதான அல்லது பேணி வரப்படுவதான அல்லது அதனோடு
இணைக்கப்பட்டுள்ளதான மற்றும் இப்பல்கலைக்கழகத்துப் பட்டங்கள்,
பட்டயங்கள், அல்லது பிற கல்வி சிறப்புகளுக்கான தேர்வுகளுக்கு
ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக சட்டத்தில் குறித்தகாலப் படிப்புப் பிரிவு அல்லது
பயிற்சி எதற்கும் வகை செய்கின்றதுமானதொரு கல்லூரி அல்லது நிலையம்
எதுவும் என்று பொருள்படும்;
(f) இந்தச் சட்டத்தின் வகைமுறை எதன் தொடர்பாகவும் "இந்தச் சட்டத்தின்.
தொடக்கத் தேதி" என்றால், அந்த வகைமுறை நடைமுறைக்கு வருகின்ற தேதி
என்று பொருள்படும்;
(ஐ "புலம்" என்றால், இப்பல்கலைக்கழகத்தின் ஒரு புலம் என்று
பொருள்படும்;
(h) "அரசு" என்றால், மாநில அரசு என்று பொருள்படும்;
[0} "மாணவர் விடுதி” என்றால், இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்கிணங்க இப்பல்கலைக்கழகத்தால் பேணி வரப்படுகிற அல்லது
ஏற்பிசைவளிக்கப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகத்து மாணவர்கள்
தங்கியிருப்பதற்கான ஓரிடம் என்று பொருள்படுவதோடு இந்தச் சட்டத்தின்படி
இப்பல்கலைக்கழகத்தால் ஏற்பிசைவளிக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படும்
மாணவர் விடுதியொன்றையும் உள்ளடக்கும்;
() 'வகுத்துரைக்கப்பட்ட என்றால், இந்தச் சட்டத்தாலோ அல்லது
நிலைமுறை விதிகளாலோ, துணைமுறை விதிகளாலோ, ஒழுங்குமுறை
விதிகளாலோ வகுத்துரைக்கப்பட்ட என்று பொருள்படும்;
(k) "முதல்வர்" என்றால், கல்லூரியொன்றின் தலைவர் என்று பொருள்படும்;
) யதிவு பெற்ற பட்டதாரி" என்றால், இந்தச் சட்டத்தின்படி பதிவு
செய்யப்பட்ட ஒரு பட்டதாரி என்று பொருள்படும்;
(m) "நிலைமுறை விதிகள்", "நுணைமுறை விதிகள்" மற்றும் "ஒழுங்குமுறை
விதிகள்" என்றால், இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்டுள்ள அல்லது தொடர்ந்து
நடைமுறையில் இருந்துவருகிற முறையே இப்பல்கலைக்கழகத்தின் நிலைமுறை
விதிகள், துணைமுறை விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் என்று
பொருள்படும்;
(1) ஆசிரியர்கள்" என்றால், பல்கலைக்கழகக் கல்லூரிகளிலோ கல்வி
நிலையங்களிலோ இணைக்கப்பட்ட அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட
கல்லூரிகளிலோ அல்லது மாணவர் விடுதிகளிலோ மற்றும் நூலகங்களிலும்
பகுதிநேர அடிப்படையிலாயினும் சரி, முழுநேர அடிப்படையிலாயினும் சரி, கல்வி
கற்பிக்கின்ற பேராசிரியர்கள், சிறப்புப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அல்லது
விரிவுரையாளர்கள் (முதுநிலை), விரிவுரையாளர்கள் (தெரிவுநிலை) மற்றும் பிற
நபர்கள் என்ற வகையில் ஆசிரியர்களென நிலைமுறை விதிகளால்
விளம்பப்படக்கூடியவர்கள் என்றும் பொருள்படும்;
(௦) "பல்கலைக்கழக ஆசிரியர்கள்" என்றால், இப்பல்கலைக்கழகத்தின்
சார்பாகக் கல்வி கற்பிப்பதற்காக அதனால் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என்று
பொருள்படும்;
(ஐ "பல்கலைக்கழகம்" என்றால், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்
பல்கலைக கழகம் என்று பொருள்படும்;
Q) "பல்கலைக்கழகப் பரப்பிடம்" என்றால், 1928-ஆம் ஆண்டு
அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 171929) 2 ஆம்
பிரிவின் (ஐ) எனும் கூறில் பொருள் வரையறுக்கப்பட்டவாறான அண்ணாமலை
நகர் நீங்கலாக 1-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின்படி இந்தச் சட்டம் அளாவி
நிற்கிற பரப்பிடம் என்று பொருள்படும்;
(N "பல்கலைக்கழகக் கல்லூரி என்றால், இப்பல்கலைக்கழகத்தால்
நிறுவப்பட்டதாயினும். இல்லாவிடினும் இப்பல்கலைக்கழகத்தின்.
பட்டமேற்படிப்புகள் மற்றும் தொழில்முறைப் பட்டப்படிப்புகள் வரையில் படிக்க
வழிசெய்கின்ற குறித்தகாலப் படிப்புப் பிரிவுகளுக்கு வகைசெய்கின்ற
இப்பல்கலைக்கழகத்தால் பேணிவரப்படுகின்ற ஒரு கல்லூரி என்றோ ஆராய்ச்சி
நிலையமொன்றுடன் இணைந்த ஒரு கல்லூரி என்றோ பொருள்படும்;
(8) "பல்கலைக்கழக மானியக் குழு" என்றால், 1956-ஆம் ஆண்டு
பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தி (மையச் சட்டம் 371956) 4-ஆம்
பிரிவின்படி நிறுவப்பட்டுள்ள குழு என்று பொருள்படும்;
(1) பல்கலைக்கழக விரிவுரையாளர்", "பல்கலைக்கழகச் சிறப்புப் பேராசிரியர்"
அல்லது "பல்கலைக்கழகப் பேராசிரியர்" அல்லது "பல்கலைக்கழக ஆசிரியர்"
என்றால் முறையே இப்பல்கலைக்கழகத்தால் அத்தகையவராக நியமிக்கப்பட்டுள்ள
அல்லது நியமிக்கக்பட்டிருப்பதாகக் கருதப்படும் விரிவுரையாளர், சிறப்புப்
பேராசிரியர், பேராசிரியர் அல்லது ஆசிரியர் என்று பொருள்படும்;
(மு "பல்கலைக்கழக நூலகம்" என்றால், இப்பல்கலைக்கழகத்தால்
நிறுவப்பட்டதாயினும் இல்லாவிடினும் அதனால் பேணி வரப்படுகின்ற ஒரு நூலகம்
என்று பொருள்படும்.
அத்தியாயம் ॥.
பல்கலைக்கழகம்
3. பல்கலைக்கழகத்தை நிறுவியமைத்தல்- (1) சட்டக் கல்வி பெறுவதையும்
சட்ட அறிவையும் மேம்படுத்தி வளர்ப்பதற்காக "தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்
பல்கலைக்கழகம்" என்ற பெயரிலான ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்படுதல்
வேண்டும்.
(2) இப்பல்கலைக்கழகம் ஒரு கூட்டமைப்பாக இருக்க வேண்டும்
என்பதோடு நிலையான தொடர்பாட்டுரிமையையும் தனித்த ஓர் இலச்சினையையும்
பெற்றிருக்கும்; மேலும் மேற்சொன்ன பெயரில் வழக்கிடுதலும் வழக்கிடப்படுதலும்
வேண்டும்.
(3) இப்பல்கலைக் கழகத்தின் தலைமையகம் 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு
நகர் மற்றும் ஊரமைப்புத் திட்டச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 23(a)
எனும் கூறில் பொருள் வரையறுக்கப்பட்டவாறான சென்னைப் பெருநகர்
அமைப்புத் திட்டப் பரப்பிடத்தின் வரம்புகளுக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.
4. இப்பல்கலைக்கழகத்தின் குறிக்கோள்கள்.- இப்பல்கலைக்கழகம்
பின்வரும் குறிக்கோள்களைக் கொண்டதாயிருத்தல் வேண்டும்: அதாவது:-
(@) சட்டத்தில் கல்வியறிவை மேம்படுத்துவதற்கு மற்றும் அதனைப்
பரப்புவதற்கு மற்றும் இன்னமும் சிறந்த கல்வி மேம்பாட்டில் அவைகளின் பங்கு
என்ன என்பதற்கு வகை செய்தல்;
(b) சட்டக் கல்வியையும் மற்றும் பொதுவாக சமூகத்தின் நலனையும்
வளர்த்தல்;
(69) வழக்காடுதல், சட்டமுறைச் சேவைகள், சட்டமியற்றுதல், சட்டச்
சீர்திருத்தங்கள் மற்றும் அவை போன்றவை தொடர்பாக திறமையை வளர்ப்பதன்
மூலம் சட்டப் புலத்தில் சமூகத்திற்கு சேவை செய்வதற்கான பொறுப்புணர்வை
மாணவர்களிடமும் ஆராய்ச்சி அறிஞர்களிடமும் வளர்த்தல்;
(0) விரிவுரைகளுக்கும், கருத்தரங்குகளுக்கும், விவாதங்களுக்கும்,
மாநாடுகளுக்கும் ஏற்பாடு செய்தல்;
(6) சட்ட அறிவை வளர்த்தல் மற்றும் சட்டத்தை சமூக மேம்பாட்டிற்கான
திறம்பட்ட கருவியாக இருந்து வருமாறு செய்தல்;
(f) மக்கள் தொகையின் பெரும் பகுதியினருக்கு அதிலும் குறிப்பாக நீண்ட
தொலைவுகளிலும், ஊர்ப்புறங்களிலும் வசதியற்று வசித்து வருகின்றவர்களை
போன்றோர்க்கு சட்டக் கல்வி கிடைக்கச் செய்வதற்கு வகை செய்தல்;
(9) வேகமாக வளர்ந்து வருகின்ற மற்றும் மாறிவருகின்ற சமூகத்தில் சட்ட
அறிவு பெறப்படுவதை தளர்த்தல் மற்றும் மனித முயற்சிகளுக்கான அனைத்துப்
புலங்களிலும் புதுமைகளைப் புகுத்துதல், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு ஆகிய
சூழ்நிலைகளில் அறிவையும், பயிற்றுவிப்பையும் திறமைகளையும்
உயர்த்துவதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து அளித்து வருதல்;
0 சட்ட அறிவுக்கான புதிய புலங்களில் கல்வி கற்பதை வளர்க்கும்
நோக்குடனும் புலமையை ஊக்குவிக்கும் நோக்குடனும் கல்வி கற்பிப்பதற்கான
வழி முறைகள், கல்வி கற்பதற்கான வேகம், குறித்தகாலப் படிப்புப் பிரிவுகளின்
கூட்டிணைப்பு, சேருவதற்கான வயது வரம்பு, தேர்வினை நடத்துதல், திட்டங்களை
நடைமுறைப்படுத்துவது ஆகியவை சம்பந்தமாக வளைந்து
கொடுக்கக்கூடியதாகவும் எல்லோருக்கும் கிடைக்கத்தக்கதாகவுமான
பல்கலைக்கழக கல்வி மட்டத்திலான புதுமை முறைகளுக்கு வகைசெய்தல்;
(i) இம்மாநிலத்தில் சட்டம் பற்றிய பல்வேறு புலங்களில் கல்வி
கற்பிக்கப்படுதலின் மற்றும் பயிற்றுவிக்கப்படுதலின் தரத்தினை உயர்த்தி
மக்களுக்கு அவை கிடைக்கச் செய்வதை மேம்படுத்தி அவற்றிற்கு வகைசெய்தல்;
(J) சட்டம் பற்றிய பல்வேறு புலங்களில் பொருத்தமான குறித்தகாலப் பட்ட
மேற்படிப்புகளுக்கு வகைசெய்தல் மற்றும் அத்துறைகளில் ஆராய்ச்சியை
வளர்த்தல்;
(k) அதன் கொள்கைகள் மற்றும் செயல்முறைத் திட்டங்களின் மூலமாக
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் மணித ஆளுமையின் ஒருங்கிணந்த வளர்ச்சிக்கும்
வகைசெய்தல்;
5. இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரங்களும் அலுவற்பணிகளும்.-
இப்பல்கலைக்கழகமானது,
() இப்பல்கலைக்கழகத்தையும், சட்டக் கல்வியையும் சட்ட அறிவையும்
மேம்படுத்துவதற்காகவுமான ஆராய்ச்சி மையங்களையும் நிர்வகித்து மேலாண்மை
செய்து வருவதற்கும்;
(i) சட்டம் மற்றும் சட்டத் தொடர்பாக இப்பல்கலைக்கழகம் பொருத்மென
கருதக்கூடிய பிரிவுகளில் கற்பதற்கோ பயிற்சிக்கோ வகைசெய்வதற்கும்;
101] சட்டக் கல்வியில் ஆராய்ச்சிக்கோ அல்லது அறிவை
மேம்படுத்துவதற்கோ அல்லது பரப்புவதற்கோ வகைசெய்வதற்கும்;
(iv) கல்விச் சேவைகளின் விரிவாக்கத்திற்கு ஏற்பாடு செய்வதற்கும் அதனை
மேற்கொள்வதற்கும்;
) வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி கல்லூரிகளுக்கு
இணைப்பளிப்பதற்கும் அத்தகைய இணைப்பை விலக்கிக் கொள்வதற்கும்;
வரம்புரை: ஆனால் அத்தகைய கல்லூரி நிறுவியமைக்கப்படுவதற்கு அரசின்
அனுமதி பெறப்பட்டிருந்தாலன்றியும், அத்தகைய அனுமதிக்கான வரையறைகள்
மற்றும் நிபந்தனைகள் எவையேனுமிருப்பின். அவற்றிற்கு இணங்கி
நடக்கப்பட்டிருந்தாலன்றியும் கல்லூரி எதுவும் இப்பல்கலைக்கழகத்தோடு
இணைக்கப்படுதலாகாது;
(vi) பட்டங்கள், விருதுகள், பட்டயங்கள், பிற கல்விச் சிறப்புகள் ஆகியவற்றை
ஏற்படுத்துவதற்கும்;
(vii) இப்பல்கலைக்கழகத்திலோ இந்தச் சட்டத்தின்படி
இப்பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ள அல்லது
இணைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படும் கல்லூரி எதிலுமோ, ஒப்புதலளிக்கப்பட்ட
படிப்பொன்னறத் தொடர வேண்டியுள்ள நபர்களுக்கு தேர்வுகளை நடத்தி
இப்பல்கலைக்கழகம் தீர்மானிக்கக்கூடிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு
இப்பல்கலைக்கழகத்தின் வகுத்துரைக்கப்பட்ட அத்தேர்வுகளில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு பட்டங்கள், விருதுகள், பட்டயங்கள், பிற கல்விச் சிறப்புகள்
ஆகியவற்றை வழங்குவதற்கும்;
(viii) தன்னாட்சிக் கல்லூழியொன்றில் ஒப்புதலளிக்கப்பட்ட குறித்த காலப்
படிப்புப் பிரிவைத் தொடர்ந்துள்ளவர்களுக்கு பட்டங்கள், விருதுகள், பட்டயங்கள்,
பிற கல்விச் சிறப்புகள் ஆகியவற்றை வழங்குவதற்கும்;
00 வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி மதிப்புறு பட்டங்களையோ
பிற கல்விச் சிறப்புகளையோ வழங்குவதற்கும்;
(x) கட்டணங்களை நிர்ணயித்தலும் வகுத்துரைக்கப்படக்கூடிய
கட்டணங்களைக் கோரிப் பெறுவதற்கும்
00) மாணவர் விடுதிகளை நிறுவிப்பேணி நிருவகித்துவருதல் மற்றும்
இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான தங்குமிடங்களுக்கு
ஏற்பிசைவளிக்கப்படுதல் மற்றும் அத்தகைய தங்குமிடம் எதற்குமான ஏற்பிசைவை
விலக்கிக் கொள்ளுதல் ஆகியவற்றிற்கும்;
(xii) இப்பல்கலைக்கழகம் தன்: குறிக்கோள்களை இன்னமும்
மேம்படுத்துவறற்கு தேவை என கருதுகின்றதும் ஆராய்ச்சிக்கும் பயிற்று
வித்தலுக்குமானதும் தொலை தூரக் கல்வி மையத்தை வளர்ப்பதற்கானதுமான
அனைத்து சட்டக் கல்லூரிகளும் பார்த்துப் பின்பற்றுவதற்கான எடுத்துக்காட்டு
நிறுவனமொன்றாக அமையக்கூடிய சிறப்பு மையங்கள், சிறப்புப் படிப்பு மையங்கள்,
புலமைப் பள்ளி அல்லது பிற பிரிவுகளை நிறுவியமைப்பதற்கும்;
00) இப்பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடத்தை கண்காணித்து
கட்டுப்பாடு செய்துவருவதற்கும் அவர்களின் ஒழுக்கத்தை முறைப்படுத்துவதற்கும்
அவர்களின் உடல் நலத்தை வளர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதற்கும்;
(xiv) மாணவிகளின் தங்குமிடம், ஒழுக்கம், அவர்களுக்கு கல்வி கற்பித்தல்
ஆகியவை பொறுத்த ஏற்பாடுகளைச் செய்து வருவதற்கும்;
(xv) கல்விசார், தொழில் நுட்ப, நிருவாக எழுத்தருக்குரிய மற்றும் பிற
பதவியிடங்களை ஏற்படுத்தி அவற்றில் நியமனங்களைச் செய்து வருவதற்கும்;
ரி) மாணவர்களிடையே ஒழுக்கத்திற்கு வகைசெய்தல், அவற்றைக்
கட்டுப்பாடு செய்து பேணிவருவதற்கும் இப்பல்கலைக்கழகத்தின் அனைத்து
வகைப் பணியாளர்களுக்கிடையேயும் ஒழுக்கத்தை வலியுறுத்தி முறைப்படுத்தி
வருவதற்கும் அத்தகைய பணியாளர்கள் நடந்துகொள்ளவேண்டிய முறை
உள்ளிட்ட அவர்களின் பணி நிபந்தனைகளை விதிப்பதற்கும் மற்றும்
தேவையெனக் கருதப்படக்கூடிய ஒழுங்கு நடவடிக்கைகளை எடுப்பதற்கும்;
ரி) விரிவுரையாளர் பதவிகள், சிறப்புப் பேராசிரியர் பதவிகள், பேராசிரியர்
பதவிகள் மற்றும் இப்பல்கலைக்கழத்திற்குத் தேவைப்படும் பிற ஆசிரியர் பதவிகள்:
ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கும் அத்தகைய விரிவுரையாளர் பதவிகள், சிறப்புப்
பேராசிரியர் பதவிகள், பேராசிரியர் பதவிகள் மற்றும் ஆசிரியர் பதவிகள்:
ஆகியவற்றிற்கு நபர்களை நியமிப்பதற்கும்;
பரி) நிலைமுறை விதிகளுக்கிணங்க பட்டதாரி உதவித் தொகைகள்,
பயண உதவித் தொகைகள், படிப்புதவித் தொகைகள், மாணவ உதவித்
தொகைகள், உதவிச் சம்பளங்கள், பரிசுகள், பதக்கங்கள் ஆகியவற்றை
ஏற்படுத்துவதற்கும் வழங்குவதற்கும்;
(xix) ஆராய்ச்சி மற்றும் பிற நூற்பணிகள் அச்சிடப்படுவதற்கும் மீண்டும்
அச்சிடுவதற்கு மற்றும் வெளியிடு கைக்கு வகை: செய்வதற்கும்
கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்வதற்கும்;
(xx) சட்டம், நீதி மற்றும் சமூக மேம்பாட்டுக் கூறுகள் அனைத்திலும்
ஆராய்ச்சியைத் தொடங்கி அதைப் பொறுப்பேற்று மேற்கொள்ளுவதற்கும்;
(xxi) இப்பல்கலைக்கழகம் அவ்வப்போது தீர்மானிக்கக்கூடிய வரையறைகள்
மற்றும் நிபந்தனைகளின் பேரில் உடன்படக்கூடிய நோக்கங்களுக்காக சட்டம், நீதி,
சமூக மேம்பாடு அவை சார்ந்த பொருள்கள் ஆகியவற்றில் கல்வி கற்பித்தல்,
பயிற்சியளித்தல், ஆராய்ச்சி செய்தல் ஆகியவை சம்பந்தமாக பிற நிறுவனம்
எதனுடனும் ஒத்துழைப்பதற்கும்;
(xxii) பொதுவான குறிக்கோள்களுக்கு உகந்ததாயிருக்கக்கூடிய முறையில்
ஆசிரியர்களையும் அறிஞர்களையும் மாற்றிக் கொள்வதன். மூலம்
இப்பல்கலைக்கழகத்துடையதைப் போன்று அதேபோன்ற குறிக்கோள்களை
முழுவதுமாகவோ பகுதியாகவே பெற்றிருக்கின்றதும் உலகத்தின் எந்தப்
பகுதியிலுமுள்ளதுமான உயர்கல்வி நிலையங்களுடன் ஒத்துழைப்பதற்கும்;
00) இப்பல்கலைக்கழகத்தின் செலவினத்தை முறைப்படுத்துவதற்கும்
அதன் கணக்குகளை வைத்துப் பேணிவருவதற்கும்;
(xxiv) இப்பல்கலைக்கழகத்திற்குள்ளேயோ வேறெங்கேனுமோ
இப்பல்கலைக்கழகம் தேவையெனக் கருதக்கூடிய வகுப்பறைகளையும் படிப்புக்
கூடங்களையும் நிறுவிப் பேணிவருவதற்கும், அவற்றில் போதிய அளவு அறைக்
கலச் சாமான்களுக்கான வசதிகளைச் செய்தலும் மற்றும்
இப்பல்கலைக்கழகத்திற்கு உகந்ததாகவோ தேவையானதாகவோ தோன்றக்கூடிய
நூலகங்களையும் படிப்பதற்கான அறைகளையும் நிறுவிப் பேணிவருவதற்கும்;
[30] இப்பல்கலைக்கழகத்தின். நோக்கத்திற்காகவும், எந்தக்
குறிக்கோள்களுக்காக இப்பல்கலைக்கழகம் நிறுவியமைக்கப்பட்டுள்ளதோ,
அந்தக் குறிக்கோள்களுக்கு ஒவ்வுதலாகவும் மானியங்கள், உதவித் தொகைகள்
சந்தாக்கள், நன்கொடைகள், கொடைகள் ஆகியவற்றைப் பெறுவதற்கும்;
பர் இப்பல்கலைக்கழகத்தின் நோக்கத்திற்காக தேவையாயிருக்கக்கூடிய
அல்லது உகந்ததாயிருக்கக்கூடிய மற்றும் அது பொருத்தமெனவும்
முறையானதெனவும் கருதக்கக்கூடிய வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின்
பேரில், நிலம் அல்லது கட்டடம் எதனையுமோ அல்லது பணியமைப்புகள்
எவற்றையுமோ விலைக்கு வாங்குவதற்கும், குத்தகைக்கு எடுப்பதற்கும்
கொடைகளாக அல்லது மற்றப்படியாக அவற்றை ஏற்றுக்கொள்வதற்கும்; மற்றும்
அத்தகைய கட்டடம் அல்லது பணியமைப்பு எதனையும் கட்டுதல் அல்லது
மாற்றியமைத்தல், மற்றும் அதனைப் பேணிவருதல் ஆகியவற்றுக்கும்;
பரி) இப்பல்கலைக்கழத்தில் உரிமை நலன்களுக்கும்
செயற்பாடுகளுக்கும் குந்தகமின்றி அது பொருத்தமெனவும் முறையானதெனவும்
கருதக்கக்கூடிய வரையறைகளின் பேரில் இப்பல்கலைக்கழகத்தின் அசையும்
அல்லது அசையாச் சொத்துக்கள் அனைத்தையுமோ அவற்றின் பகுதி
எதனையுமோ விற்பனை செய்வதற்கு, பரிமாற்றம் செய்வதற்கும், குத்தகைக்கு
விடுதல் அல்லது மற்றப்படி அவற்றிற்கு ஒரு முடிவுசெய்வதற்கும்;
பரி) அரசு மற்றும் பிற கடனுறுதிச் சீட்டுகள், மாற்று முறிகள்,
காசோலைகள் அல்லது பிற செலாவணி முறையாவணங்களை எழுதுதல் மற்றும்
ஏற்றுக் கொள்ளுதல், தயாரித்தல் மற்றும் மேற்குறிப்பிடுதல், தள்ளுபடி செய்தல்
மற்றும் காசாக மாற்றுதல் ஆகியவற்றுக்கும்;
(xxix) இப்பல்கலைகழகத்திற்குச் சொந்தமான அல்லது
இப்பல்கலைக்கழகத்திற்காக ஈட்டப்படவுள்ள அரசு கடனீட்டுப் பத்திரங்கள்
உள்ளடங்கலாக அசையும் அல்லது அசையாச் சொத்தினைப் பொருத் உடைமை
மாற்றும், உரிமை மாற்றங்கள், மறு உடைமை மாற்றம், அடைமானங்கள்,
குத்தகைகள், உரிமங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவற்றை எழுதிக்
கொடுப்பதற்கும்;
(௦௦0 இப்பல்கலைக்கழத்தின் முறையாவணமொன்றை எழுதிக் கொடுக்கும்
பொருட்டோ அலுவல் எதனையும் நடத்தும் பொருட்டோ அது பொருத்தமானவர்
எனக் கருதக்கூடிய நபர் எவரையும் நியமிப்பதற்கும்;
(௦0௦0) இப்பல்கலைக்கழத்தின் வகுப்புகள் அல்லது துறைகள் எவற்றையும்
நடத்திவருவதை விட்டுவிடுவதற்கும் நிறுத்திவிடுவதற்கும்;
(0௦௦0) மானியங்களைப் பெறுவதற்காக மைய அரசுடனோ, மாநில
அரசுகளுடனோ, பல்கலைக்கழக மானியக்குழுவுடனோ பிற அதிகார
அமைப்புகளுடனோ ஒப்பந்தம் எதனையும் செய்துகொள்வதற்கும்;
(xxxiii) உகந்ததெனக் கருதக்கூடிய வரையறைகளின் பேரில்
பணமளிப்புகளை, கடனீட்டுப் பத்திரங்களை அல்லது எவ்வகையினதுமான
சொத்தினை ஏற்றுக்கொள்வதற்கும்;
(xxxiv) பிணை முறிகள், அடைமானங்கள், கடனுறுதிச் சீட்டுகள் அல்லது பிற
கடமைப் பொறுப்புகளின்: பேறிலோ பிணையங்களின் பேறிலோ
இப்பல்கலைழகத்தின் சொத்துகள் மற்றும் உடைமைகள் அனைத்தின் மீதும்
அல்லது அவற்றில் ஏதொன்றின் மீதும் அல்லது பிணையங்கள் எவையுமின்றி
மற்றும் அது பொருத்தமென கருதக்கக்கூடிய வரையறைகள் மற்றும்
நிபந்தனைகளின்பேரில் பணத்தினைப் பெறுதல் மற்றும் கடன் வாங்குதல் மற்றும்
இப்பல்கலைக்கழகத்தின் நிதியங்களிலிருந்து பணத்தினைப் பெறுவதன் இடை
விளைவான செலவுகள் அனைத்தையும் கொடுத்துத் தீர்ப்பதற்கு மற்றும் கடன்:
வாங்கப்பட்ட பணம் எதனையும் திருப்பிச் செலுத்துவதற்கும் மீட்டுக் கொள்வற்கும்;
(௦0௦0) இப்பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்ட இப்பல்ககைக்கழக
பணத்திற்கான நிதியங்களை அது பொருத்தமெனக் கருதக்கூடிய கடனீட்டுப்
பத்திரங்களில் அல்லது அவற்றின் மீது பொருத்தமெனக் கருதக்கூடிய முறையில்
முதலீடு செய்வதற்கும் அவ்வப்போது முதலீடு எதனையும் இடம் மாற்றுவதற்கும்;
0௦0௦00) இப்பல்கலைக்கழகத்தின் அலுவல்களையும் மேலாண்மையையும்
முறைப்படுத்துவதற்கு அப்போதைக்கப்போது தேவையெனக் கருதக்கூடிய
ஒழுங்குமுறை விதிகளைச் செய்வதற்கும் அவற்றை மாற்றுவதற்கும்
திருத்தியமைப்பதற்கும் தள்ளுபடி செய்வதற்கும்;
(xxxvi) கல்விசார், தொழில்நுட்ப நிருவாக மற்றும் பிற பணியாளர்
தொகுதியின். நலனுக்காகவென, ஒழுங்குமுறை விதிகளால்
வகுத்துரைக்கப்படக்கூடிய முறையிலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டும் அது
பொருத்தமெனக் கருதக்கூடிய ஓய்வூதியங்கள், காப்பீடு, எதிர்கால வைப்பு நிதியம்,
பணிக்கொடை ஆகியவற்றை நிறுவுதல் மற்றும் இப்பல்கலைக்கழகத்தின்
பணியாளர் எவர் நலனுக்காகவும் அது பொருத்தமென கருதக்கூடிய
மானியங்களை அளிப்பதற்கும் இப்பல்கலைக்கழகத்தின் பணியாளர் தொகுதி,
மாணவர்கள் ஆகியோர் நலனடைவதை கருத்தில் கொண்டு சங்கங்கள்,
நிறுவனங்கள், நிதியங்கள், பொறுப்பாட் சியமைப்புகள், உடைமை மாற்றங்கள்
ஆகியவற்றை நிறுவியமைப்பதில் மற்றும் அவற்றிற்கு ஆதரவாக உதவுவதற்கும்;
பேரி) அதன் அதிகாரங்கள் மற்றும் அலுவல்கள் அனைத்தையும் அல்லது
அவற்றில் எதனையும் இப்பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்பு எதனிடமும்
அல்லது குழு எதனிடமும் அல்லது உட்குழு எதனிடமும் அல்லது அதன் நிறுவன
அமைப்பின் ஓர் உறுப்பினறிடமோ அல்லது ஒருவருக்கு மேற்பட்ட
உறுப்பினர்களிடமோ அல்லது அதன் அலுவலர்களிடமோ ஒப்படைவு
செய்வதற்கும்;
0௦௦09) அதன். குறிக்கோள்கள், அதிகாரங்கள், அலுவற்பணிகள்
ஆகியவற்றை அல்லது அவற்றில் ஏதாகிலுமொன்றை அடைவதற்கு அல்லது
விரிவுபடுத்துவதற்குத் தேவையானதாகவோ, உதவியானதாகவோ
இடைவிளைவானதாகவோ இருப்பதாக இப்பல்கலைக்கழகம் கருதக்கூடிய பிற
செயல்கள் மற்றும் பிற அனைத்தையும் செய்வதற்கும்
அதிகாரம் பெற்றிருக்கும்.
6. கல்லூரிகள் பிற பல்கலைக்கழகம் எதனோடும்
இணைக்கப்படுதலாகாதென்பதும் இப்பக்கலைக்கழகத்தால் கல்லூரிக்கு
ஏற்பிசைவு அளிக்கப்படுதலும்.- (1) இப்பல்கலைக்கழகப் பரப்பிடத்திலுள்ள சட்டக்
கல்வியை அளித்து வருகின்ற சட்டக் கல்லூரி அல்லது கல்வி நிலையம் எதுவும்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகமல்லாத வேறு பிற
பல்கலைக்கழகம் எதனோடும் இணைக்கப்படுதலாகாது.
(2) தமிழ்நாடு மாநிலத்திற்குள்ளேயாயினும் சரி தமிழ்நாடு மாநிலத்திற்கு
வெளியேயாயினும் சரி பிற பல்கலைக்கழகம் எதனோடும் இணைக்கப்பெற்ற
அல்லது தொடர்புடைய அல்லது அதனால் பேணிவரப்படும் சட்டக் கல்வி அளித்து
வருகின்ற சட்டக் கல்லூழறி அல்லது நிலையம் எதுவும் அரசின் மற்றும்
சம்பந்தப்பட்ட அப்பல்லைக்கழத்தின் முன் ஒப்புதலளிப்பில்லாமல் எந்த
நோக்கத்திற்காகவும் இப்பல்கலைக்கழகத்தால் ஏற்பிசைவு அளிக்கப்படுதலாகாது.
7. இப்பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ளுதல் பற்றி.- (1)
இப்பல்கலைக்கழகமானது இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கும் நிலைமுறை
விதிகளுக்கும் உட்பட்டு அனைத்து நபர்களுக்கும் பொதுவானதாக இருக்கும்.
(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும்,-
() வகுத்துரைக்கப்பட்ட கல்வித் தகுதியையோ தரத்தையோ பெற்றிராத
நபர் எவரையும் குறித்தகாலப் படிப்பு எதற்கும் சேர்த்துக் கொள்ளுமாறு;
(b) பட்டம், பட்டயம் அல்லது பிற கல்விச் சிறப்பொன்று
அளிக்கப்படுவதற்குத் தேவையான குறைந்த அளவு தரத்திற்கும் கீழே கல்வித்
தகுதியைப் பெற்றிருக்கின்ற மாணவர் எவருடைய பெயரையும்
இப்பல்கலைக்கழகத்தின் பெயர்ப் பட்டியலில் வைத்திருக்குமாறு; அல்லது
(6) இப்பல்கலைக்கழகத்தின் நலன்களுக்கோ பிற மாணவர்களின்
மற்றும் ஆசிரியர்களின் உரிமைகளுக்கும் சிறப்புரிமைகளுக்குமோ குந்தகம்
விளைவிக்கத்தக்க நடத்தையை உடைய நபர் எவரையும்
சேர்த்துக்கொள்ளுமாறோ அல்லது மாணவர் எவரையும்
இருத்திவைத்துக்கொள்ளுமாறோ;
இப்பல்கலைக்கழகத்தைக் கோருதலாகாது.
(3) (2-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, அரசு
ஆணையின் மூலம் இப்பல்கலைக்கழத்திலுள்ள அந்த ஆணையில்
குறித்துரைக்கப்படக்கூடிய நூறு விழுக்காட்டளவு (Percentage) இடங்களை
சீர்மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளடங்கலாக பட்டியல் சாதிகள்,
பட்டியல் பழங்குடிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த
மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்தல் வேண்டும் எனப் பணிக்கலாம் மற்றும்
அத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்குமிடத்து இப்பல்கலைக்கழகம்
அதற்கிணங்க இட ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.
8. மேற்பார்வை.- (1) அரசு, தான் பணிக்கக்கூடிய நபர் அல்லது நபர்களால்
இப்பல்கலைக்கழகம், அதன் கட்டடங்கள், அருங்காட்சியகங்கள், பணிக் கூடங்கள்,
தளவாடம் ஆகியவையும், இப்பல்கலைக்கழகத்தால் பேணி வரப்படுகிற
ஏற்பிசையளிக்கப்பட்டுள்ள, அல்லது ஒப்புதலவக்கப்பட்டுள்ள நிலையம் எதுவும்
மற்றும் இப்பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் அல்லது செய்யப்படும், தேர்வுகள்,
கற்பித்தல் மற்றும் பிற பணி குறித்து ஆய்வு செய்யப்படுமாறு செய்விப்பதற்கான
மற்றும் இப்பல்கலைக்கழகம் தொடர்பான பொருட்பாடு எதனையும் பொறுத்து
விசாரணை செய்யப்படுமாறு செய்விப்பதற்கான உரிமை பெற்றதாகும். அரசு
ஒவ்வொரு நேர்விலும் அத்தகைய ஆய்வையோ விசாரணையையோ
செய்விப்பதற்கான தன் எண்ணம் பற்றிய அறிவிப்பை இப்பல்கலைக்கழகத்திற்குக்
கொடுத்தல் வேண்டும்; மேலும் இப்பல்கலைக்கழகம் அதில் தன் தரப்புக்
கருத்தினை எடுத்துரைப்பதற்கு உரிமையுடையதாகும்.
(2) அரசு அத்தகைய ஆய்வு அல்லது விசாரணையின் முடிவுகள் குறித்த
தன் கருத்துகளை ஆட்சிக் குழுவிற்குத் தெரியப்படுத்துதல் வேண்டும்; மற்றும்
அதன் மீதான ஆட்சிக் குழுவின் கருத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர்,
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இப்பல்கலைக்கழகத்திற்கு
ஆலோசனை கூறலாம் என்பதோடு அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான
காலவரம்பொனண்றையும் நிருணயிக்கலாம்.
(3) ஆட்சிக் குழு அத்தகைய ஆய்வு அல்லது விசாரணையின் விளைவாக
எடுக்கக் கருதியுள்ள அல்லது எடுக்கப்பட்டிருக்கிற நடவடிக்கை பற்றி துணை
வேந்தர் மூலமாக அரசுக்கு அறிக்கை அனுப்பதல் வேண்டும். அத்தகைய
அறிக்கையானது அரசு பணிக்கக்கூடிய காலத்திற்குள்ளாக பணிந்தனுப்பப்படுதல்
வேண்டும்.
(4) ஆட்சிக் குழு நியாயமானகதொரு கால அளவிற்குள் அரசு நிறைவு
கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்காதவிடத்து, அரசு ஆட்சிக் குழுவால்
அளிக்கப்பட்ட அல்லது எடுத்துரைக்கப்பட்ட விளக்கம் எதனையும் பரிச்லனை
செய்த பின்னர் தாம் பொருத்தமென நினைக்கிற பணிப்பாணைகளைப்
பிறப்பிக்கலாம்; மற்றும் ஆட்சிக்குழு அத்தகைய பணிப்பாணைகளுக்கு இணங்கி
நடத்தல் வேண்டும். அரசினால் இதன்பொருட்டு நிருணயிக்கப்படக்கூடிய
காலத்திற்குள் ஆட்சிக் குழு அத்தகைய பணிப்பாணைகளுக்கு இணங்கி நடக்காது
போகும் தருணத்தில் அத்தகைய பணிப்பாணைகளுக்கு இணங்கி நடக்கும்
பொருட்டு, நபர் எவரையுமோ அல்லது குழுமம் எதனையுமோ நியமிப்பதற்கும்
அதன் செலவுகளுக்காகத் தேவையாயிருக்கக்கூடிய ஆணைகளைப்
பிறப்பிப்பதற்கும் அரசு அதிகாரமுடையதாகும்.
அத்தியாயம். .
இப்பல்கலைக்கழக அலுவலர்கள்.
9. பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள்.- இப்பல்கலைக்கழகம் பின்வரும்
அலுவலர்களைக் கொண்டிருக்கும், அதாவது,-
(1) வேந்தர்;
(2) இணை வேந்தர்;
(3) துணை வேந்தர்;
(4) பதிவாளர்;
(5) நிதி அலுவலர்;
(6) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்; மற்றும்
(7) இப்பல்கலைக்கழகத்தின் அலுவலர்களென நிலைமுறை விதிகளால்
விளம்பப்படக்கூடிய பிற நபர்கள்.
10. வேந்தர்.- (1) தமிழ்நாடு ஆளுநர், இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக
இருந்து வருவார். அவர் தமது பதவியின் காரணத்தால் இப்பல்கலைக்கழகத்தின்
தலைவராகவும் கல்வி ஆட்சிப் பேரவையின் தலைவராகவும் இருப்பார் மற்றும்
ஆட்சிப் பேரவையின் கூட்டங்களுக்கும் இப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு
விழா எதற்கும் வந்திருக்கும்போது, அதற்குத் தலைமை வகித்தலும், பட்டங்கள்,
விருதுகள், பட்டயங்கள் அல்லது பிற கல்விச் சிறப்புகளை, அவற்றைப்
பெறுவதற்கு உரிமையுடையவர்களுக்கு வழங்குவார்.
(2) அதிகாரஅமைப்புகளுக்கு நபர்களைப் பெயர் குறித்து நியமிப்பதற்கான
அதிகாரம் வேந்தருக்கு வழங்கப்பட்டிருக்கிறவிடத்து வேந்தர், துணை
வேந்தருடன் கலந்தாய்வு செய்தும், தேவையான அளவுக்கும், மற்றப்படி போதிய
அளவு சார்பாண்மை பெற்றிராத பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் நலன்களுக்குச்
சார்பாளர்களாக அமையும் பொருட்டு அப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களைப் பெயர்
குறித்து நியமிப்பார்.
(3) வேந்தர், தாமே முற்பட்டோ, அல்லது விண்ணப்பத்தின் மீதோ
நடவடிக்கைகள் எவற்றையும் பொறுத்து, அத்தகைய நடவடிக்கைகளின்
முறைமை குறித்தோ, அவற்றில் எடுக்கப்பட்ட நடவடிக்கை முடிவு அல்லது
பிறப்பிக்கப்பட்ட ஆணை ஏதொன்றின் சீர்மை, சட்டமுறைமை, அல்லது
பொருத்தமுடைமை குறித்தோ, தான் தெளிவுற உறுதிபடுத்திக் கொள்ளும்.
பொருட்டு இப்பல்கலைக்கழகத்தின் அலுவலர் எவரின் அல்லது அதிகாரஅமைப்பு
ஏதொன்றின் பதிவுக்கட்டினையும் தருவித்து ஆய்வு செய்யலாம் மற்றும், எந்த
நேர்விலும் அத்தகைய முடிவு அல்லது ஆணை எதுவும் திருத்தி
அமைக்கப்படவோ, அறவு செய்யப்படவோ, எதிர்மாறாக்கப்படவோ, அல்லது
மறுபரிசீலனைக்காகத் திருப்பி அனுப்பி வைக்கப்படவோ வேண்டும் என்று
வேந்தருக்குத் தோன்றுமானால், அவர், அதன்படியே ஆணைகளைப்
பிறப்பிக்கலாம்:
முதலாம் வரம்புரை.- ஆனால், இந்த உட்பிரிவின்படியான அதிகாரங்கள்
செலுத்தப்படுவதற்காக வேந்தரிடம் செய்து கொள்ளப்படும் ஒவ்வொரு
விண்ணப்பமும் அந்த விண்ணப்பம் தொடர்புடையதாகவிருக்கிற நடவடிக்கை,
முடிவு அல்லது ஆணை எந்தத் தேதியில் அவ்விண்ணப்பதாரருக்கு
தெரிவிக்கப்பட்டதோ, அந்தத் தேதியிலிருந்து மூன்று திங்களுக்குள் செய்து
கொள்ளப்படுதல் வேண்டும்.
இரண்டாம் வரம்புரை.- மேலும், எவரொருவருக்கும்
ஊறுவிளைவிக்கத்தக்ககான ஆணை எதுவும் அத்தகைய ஆள் தன்
முறையீடுகளைச் செய்து கொள்வதற்கான வாய்ப்பொன்று அத்தகையவருக்குக்
கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, பிறப்பிக்கப்படுதலாகாது.
(4) வேந்தர், இந்தச் சட்டத்தினாலோ அல்லது அதனை அடியொற்றியோ
தமக்கு வழங்கப்படக்கூடிய அதிகாரங்களைச் செலுத்தி வருவார், பிற
கடமைகளைப் புரிந்து வருவார்.
11. இணை வேந்தர்.-- (1) தமிழ்நாடு மாநிலத்தில் சட்டத் துறையைப்
பொறுப்பில் கொண்டுள்ள அமைச்சர், இப்பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக
இருந்து வருவார்.
(2) வேந்தர், வாராதிருக்கையில், அல்லது வேந்தர் செயற்படுவதற்கு
இயலாதிருக்கும்போது இணை வேந்தர், வேந்தரின் அதிகாரங்கள் அனைத்தையும்
செலுத்தி வருவார்; மற்றும் அலுவற்பணிகள் அனைத்தையும் ஆற்றி வருவார்.
(3) இணை வேந்தரானவர், இந்தச் சட்டத்தின்படியாகவோ அல்லது
அதனடியாகவோ தமக்கு வழங்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச் செலுத்தி
வருதலும், பிற அலுவற்பணிகளை ஆற்றி வருதலும் வேண்டும்;
12. துணை வேந்தர்.- (1) துணை வேந்தரின் ஒவ்வொரு நியமனமும் (2) ஆம்
உட்பிரிவில் குறிப்பிடப்படும் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று
பெயர்களைக் கொண்ட பெயர் பட்டியல் ஒன்றிலிருந்து வேந்தரால் செய்யப்படுதல்
வேண்டும் மற்றும் அத்தகைய பெயர்ப் பட்டியலில் மேற்சொன்ன குழுவின்
உறுப்பினர் எவருடைய பெயரும் அடங்கியிருத்தல் ஆகாது.
வரம்புரை: ஆனால், வேந்தர் அக்குழுவினால் அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட
பெயர்ப் பட்டியலிலுள்ள நபர்களில் எவரையும் ஏற்கவில்லை எனில், வேறு மூன்று
பெயர்களைக் கொண்ட புதிய பெயர்ப் பட்டியல் ஒன்றை அளிப்பதற்காக, அவர் (2)-
ஆம் உட்பிரிவிற் இணங்க மற்றொரு குழுவினை அமைத்துருவாக்குவதற்கு
நடவடிக்கைகள் எடுக்கலாம்; மற்றும் அப்புதிய பெயர்ப் பட்டியலில் பெயர்
குறிப்பிடப்பட்டுள்ள நபர்களில் ஒருவரைத் துணை வேந்தராக அவர் நியமனம்
செய்தல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக அக்குழுவானது மூவரைக்
கொண்டிருக்கும் அவர்களில் ஒருவர் அரசால் பெயர் குறித்து நியமிக்கப்படுதல்
வேண்டும்; ஒருவர் கல்வி ஆட்சிப் பேரவையால் பெயர் குறித்து நியமிக்கப்படுதல்
வேண்டும்; ஒருவர் ஆட்சிக் குழுவால் பெயர் குறித்து நியமிக்கப்படுதல் வேண்டும்.
வரம்புரை: ஆனால், அவ்வாறு பெயர் குறித்து நியமிக்கப்பட்ட நபர்
இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகளுக்குள் ஏதொன்றின் உறுப்பினர்
ஒருவராகவும் இருத்தலாகாது.
(3) துணை வேந்தர் மூன்றாண்டு கால அளவுக்குப் பதவி வகிப்பார்
மேற்கொண்டு மூன்றாண்டு கால அளவுக்கு மீண்டும் நியமிக்கப்படுவதற்குத்
தகுதியுடையவராயிருப்பார்:
முதலாம் வரம்புரை.- ஆனால், எவரும் துணை வேந்தரின் பதவியை
மொத்தத்தில் ஆறாண்டிற்கு மேல் வகித்தல் ஆகாது.
இரண்டாம் வரம்புரை.- மேலும்
(ஐ தம் பதவிக்காலம் முடிவடைந்துள்ள துணை வேந்தர் ஒருவர்,
மொத்தத்தில் ஓராண்டுக்கு மேற்படாமல் பணிப்பாணையில்
குறித்துரைக்கப்படக்கூடிய கால அளவிற்குப் பதவியில் தொடர்ந்து
இருத்தல் வேண்டும் என வேந்தர் பணிக்கலாம்;
(b) துணை வேந்தர், வேந்தருக்கு முகவரியிட்டுத் தாம்
கையொப்பமிட்டு எழுத்து வாயிலாகவும் இரண்டு திங்கள் கால அளவு
முன்னறிவிப்பு கொடுத்ததற்குப் பின்பும் தமது பதவியை விட்டு விலகலாம்;
மூன்றாம் வரம்புரை.- மேலும் துணை வேந்தராக நியமிக்கப்பெற்ற ஒருவர்
தம்முடைய பதவிக் காலத்தின் போதோ அதன் நீட்டிப்பு எதனின் போதுமோ
அறுபத்தைந்து வயதினை அவர் நிறைவெய்துவரானால் பதவியிலிருந்து ஓய்வு
பெறுதல் வேண்டும்.
(4) துணை வேந்தரின் பதவியில் தற்காலிக காலியிடம் ஏதேனும் ஏற்படும்
போது அல்லது நோய், பணிக்கு வராமை என்கிற காரணத்தாலோ அல்லது ஏதேனும்
பிற காரணத்தாலோ, அத்துணை வேந்தர் தம்முடைய பதவியின் அதிகாரங்களைச்
செலுத்தி வரவும், கடமைகைளப் புரிந்து வரவும், இயலாதிருப்பாரானால்,
இப்பல்கலைக்கழகத்தின் மிக்க முதுநிலைப் பேராசிரியர், துணை வேந்தரின்
அதிகாரங்களைச் செலுத்தி வருவதற்கும் கடமைகளைப் புரிந்து வருவதற்கும்
தேவைப்படும் ஏற்பாடுகளை ஆட்சிக்குழு செய்கின்ற வரையிலும் அத்துணை
வேந்தரின் அதிகாரங்களைச் செலுத்தி வருவார், கடஉமைகைளைப் புரிந்து வருவார்.
(5) துணை வேந்தர், இப்பல்கலைக்கழகத்தின் ஒரு முழு நேர அலுவலராக
இருப்பார் மற்றும் அவருடைய ஊதியங்களும் பணி குறித்த வரையறைகள் மற்றும்.
வரைக்கட்டுகளும் பின்வருமாறு இருந்துவரும்.
(a) துணை வேந்தருக்கு திங்களொன்றுக்கு ஏழாயிரத்து அறுநூறு
ரூபாய் நிலையான சம்பளமோ அல்லது அவ்வப்போது அரசினால்
நிர்ணயிக்கப்படக்கூடிய அதிகப்படியான சம்பளமோ வழங்கப்படும்; மற்றும்
நிலைமுறை விதிகளால் நிர்ணயிக்கப்படக்கூடிய பிற கூடுதல்
சலுகைகளும் வழங்கப்படும்.
(b) துணை வேந்தர், அவ்வப்போது வேந்தரின் ஒப்புதலளிப்புடன்,
ஆட்சிக்குழுவால் தீர்மானிக்கப்படக்கூடிய பணி முடிவு நிலை
நன்மைகளுக்கும் ாணாம்கி Benefits) படித்தொகைகளுக்கும் உரிமைத்
தகுதியுடையவராவார்;
வரம்புரை: ஆனால்,
(ஐ) இப்பல்கலைக்கழகத்தின் அல்லது அப்பல்கலைக்கழகத்தால் பேணி
வரப்படுகிற அல்லது அதனோடு இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் அல்லது
நிலையங்களின்; அல்லது
(b) வேறேதேனும் பல்கலைக்கழகத்தின். அல்லது அந்தப்
பல்கலைக்கழகத்தால் பேணி வரப்படுகின்ற அல்லது அதனோடு
இணைக்கப்பட்டுள்ள கல்லூரி அல்லது நிலையத்தின் பணியாளரொருருவர்,
துணை வேந்தராக நியமிக்கப்படுமிடத்து, அவர் தொகையளிப்பு செய்பவராக உள்ள
வருங்கால வைப்பு நிதியத்திற்கு தொடர்ந்து கதொலகயளித்து வர அவர்
அனுமதிக்கப்படுவார்; மேலும் இப்பல்கலைக்கழகத்தின் பங்களிப்பானது, துணை
வேந்தராக அவர் நியமிக்கப்படுவதற்கு அடுத்து முன்பு அவர் பங்களித்ததிருந்த
அளவுக்கு மட்டுப்படுத்தப்படுதல் வேண்டும்;
(c) துணை வேந்தர், ஆட்சிக்குழுவினால் நிர்ணயிக்கப்படக்கூடிய
வீதத்தில் பயணப்படித் தொகைகளுக்கு உரிமையுடையவராவார்;
(d) துணை வேந்தர் செயற்படு பணியிலிருந்த போது அவரால்
கழிக்கப்பட்ட கால அளவுகளில் பதினொன்றில் ஒரு பங்கு வீதத்தில் முழுச்
சம்பளத்துடன் கூடிய ஈட்டிய விடுப்புக்கு உரிமையுடையவராவார்;
வரம்புரை: ஆனால், தம் பதவிக் கால அளவு முடிவடைகிற தேதிக்கு
முன்னரே போதுமான காலத்திற்குள், துணை வேந்தரால் விண்ணப்பித்துக்
கொள்ளப்பட்ட ஈட்டிய விடுப்பானது, இப்பல்கலைக்கழகத்தின் நலனை
முன்னிட்டு வேந்தரால் மறுக்கப்படும் போதும், தம் பதவிக் கால அளவு
முடிவடைகிற தேதிக்கு முன்னர் அவ்விடுப்பை அவர் பயன்படுத்திக்
கெள்ளாதபோதும், இருநூற்று நாற்பது நாட்கள் என்கின்ற பெரும அளவிற்கு
உட்பட்டு, தம் இருப்பில் உள்ள ஈட்டிய விடுப்பைப் பொறுத்து தம் பதவியை விட்டு
நீங்கியதற்குப் பின்பு விடுப்புச் சம்பளத்திற்கு நிகரான ரொக்கத்தைப் பெறுவதற்கு
அவர் தகுதியுடையவராவார்;
(6) துணை வேந்தர், தம் பதவிக் காலத்தின் போது, மருத்துவ
காரணங்களின் மீதோ மற்றப்படியோ, மூன்று திங்களுக்கு மேற்படாத ஒரு கால
அளவிற்கு சம்பளமில்லாத விடுப்புக்கு உரிமையுடையவராவார்:
வரம்புரை: ஆனால், எந்த அளவிற்கு, (0) எனும் கூறின்படி ஈட்டிய
விடுப்புக்கு அவர் உரிமையுடையவரோ அந்த அளவிற்கு அத்தகைய விடுப்பினை,
முழுச்சம்பளத்துடனான விடுப்பாக மாற்றிக் கொள்ளலாம்.
13. துணை வேந்தரை ந்க்குதல்.- (1) துணை வேந்தர், இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளை நிறைவேற்றுவதற்கு வேண்டுமென்றே விட்டு விடுகிறார்
அல்லது மறுக்கிராரென்றோ, அவரிடம் உற்றமைந்திருக்கும் அதிகாரங்களைத்
தவறாகப் பயன்படுத்துகிறாரென்றோ தவறாக நடக்கிறாரென்றோ தவறாக
நிருவகிக்கிறாரென்றோ அவரது நடத்தை ஒழுக்கக்கேட்டை உள்ளடக்கியதாக
இருக்கிறதென்றோ வேந்தர் கருதுவாராயின், அல்லது மற்றப்படி துணை வேந்தர்
அவரது பதவியில் தொடர்ந்திருப்பது இப்பல்கலைக்கழகத்தின் நலனுக்கு ஊறு
விளைவிக்குமென்று வேந்தருக்குத் தோன்றுமாயின், வேந்தர், அப்பொருட்பாடு
குறித்து விசாரணை செய்வதற்காக மூன்று உறுப்பினர்களுக்குக் குறையாமல்
கொண்டிருக்கின்ற குழுவொன்றை அமைத்துருவாக்கும்படியும், அக்குழுவின்
அறிக்கையினை வேந்தரின் முன் வைக்கும்படியும் இணை வேந்தரைப்
பணிக்கலாம்.
(2) வேந்தரானவர், அக்குழுவின் அறிக்கையினைப் பரிசீலனை செய்த
பின்பு, துணை வேந்தர் அவரது பதவியில் தொடர்ந்திருப்பது
இப்பல்கலைக்கழகத்தின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் என்று தாம் தெளிவுறக்
காண்பாராயின் அல்லது அவர் மீது சாட்டப்பட்ட குற்றச் சாட்டுகள் அனைத்தையும்
அல்லது அதில் ஏதொன்றையும் அவர் செய்துள்ள குற்றவாளியாகக்
காணப்படுவாராயின், துணை வேந்தரை ஆணையொன்றின் மூலமாக
பதவியிலிருந்து நீக்கலாம்:
வரம்புரை: ஆனால், கேட்கப்படுவதற்கு நியாயமான வாய்ப்பொன்று துணை
வேந்தருக்கு அளிக்கப்பட்டாலன்றி, இந்தப் பிரிவிண்படியான ஆணை எதுவும்
பிறப்பிக்கப்படுதல் ஆகாது.
14. துணை வேந்தரின் அதிகாரங்களும் கடமைகளும். (1) துணை வேந்தர்,
இப்பல்கலைக்கழகத்தின் கல்வித் தலைவராகவும் முதன்மை நிர்வாக
அதிகாரியாகவும் இருப்பார்.
(2) துணை வேந்தர், வேந்தரும் இணை வேந்தரும் வராத போது, கல்வி
ஆட்சிப் பேரவை கூட்டத்திலும், மற்றும் இப்பல்கலைக்கழகப் பட்டமளிப்பு
விழாவிலும் தலைமையேற்று, பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்விச்
சிறப்புகளைப் பெறுவதற்கு உரிமையுடைய நபர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
(3) துணை வேந்தர், இப்பல்கலைக்கழகத்தின் அலுவல்களின் மீது நிர்வாகக்
கட்டுப்பாட்டதிகாரத்தைச் செலுத்தி வருவார். மேலும், இப்பல்கலைக்கழகத்தில்
ஒழுங்குநெறி உரியவாறு பேணி வரப்படுவதற்குப் பொறுப்புடையவராவார்.
(4) துணை வேந்தர், இந்தச் சட்டத்தின் வகைமுறைகள், அவற்றின்படிச்
செய்யப்படும் நிலைமுறை விதிகள், துணைமுறை விதிகள், ஒழுங்குமுறை
விதிகள் ஆகியவை உண்மையாகக் கடைபிடிக்கப்படுமாறு செய்தல் வேண்டும்;
மற்றும் அந்நோக்கத்திற்காகத் தேவைப்படக்கூடிய அதிகாரங்களனைத்தையும்
அவர் செலுத்தி வரலாம்.
(5) துணை வேந்தர், இப்பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பிற
பணியாளர்களை நியமனம் செய்வது, தற்காலிகப் பணிநீக்கம் செய்வது, பணியறவு
செய்வது ஆகியவை தொடர்பான ஆட்சிக் குழுவின் ஆணைகளையும், ஆட்சிக்
குழுவின் பிற முடிவு எதனையும் செயற்படுத்துதல் வேண்டும்.
(6) உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது தேவையாகிறது என்று
துணை வேந்தர் கருதுகிற நெருக்கடி நிலை எதிலும், அவர், தாம் அவசியமெனக்
கருதுகிற நடவடிக்கையை எடுத்தல் வேண்டும்; மேலும், அவர், கிடைக்கின்ற மிக.
முந்தைய வாய்ப்பைப் பயன்படுத்தி, அப்பொருட்பாட்டின் மீது அதன் வழக்கமான
போக்கில் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடிய அலுவலருக்கு அதிகாரஅமைப்பிற்கு
அல்லது குழுமத்திற்கு எடுக்கப்பட்ட அந்நடவடிக்கை குறித்து அறிக்கை
அனுப்புதல் வேண்டும்;
வரம்புரை: ஆனால், அத்தகைய ஆணை எதுவும், அதனால் பெரும்பாலும்
பாதிக்கப்படக்கூடிய நபருக்குக் கேட்கப்படுவதற்கான நியாயமான வாய்ப்பொன்று
கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, பிறப்பிக்கப்படுதலாகாது.
(7) (6) ஆம் உட்பிரிவின்படி துணை வேந்தரின் ஆணை எதனாலும்
குறையுற்ற நபர் எவரும், அத்தகைய ஆணை பற்றி தமக்கு தெரிவிக்கப்பட்ட
தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்ளாக, ஆட்சிக் குழுவிடம்
மேல்முறையீட் டொன்றைத் தாக்கல் செய்து கொள்ளலாம்: மேலும், துணை
வேந்தர், அத்தகைய மேல்முறையீட்டின் மீது ஆட்சிக் குழுவால் பிறப்பிக்கப்பட்ட
ஆணைக்குச் செயல் வடிவம் கொடுத்தல் வேண்டும்.
(8) துணை வேந்தர், ஆட்சிக் குழுவின், திட்டமிடும் குழுமத்தின் மற்றும்
நிதிக் குழுவின் பதவி வழித் தலைவராவார். துணை வேந்தரானவர்,
இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்பு அல்லது பிற அமைப்பு ஏதொன்றின்
கூட்டமெதிலும் வந்திருப்பதற்கும் உரை நிகழ்த்துவதற்கும்
உரிமையுடையவராயிருப்பார் ஆனால், அத்தகைய அதிகாரஅமைப்பின்: அல்லது
குழுமத்தின் உறுப்பினரொருவராக அவர் இருந்தாலன்றி, அதில் வாக்களிக்க
உரிமையுடையவராகமாட்டார்.
(9) துணை வேந்தர், ஆட்சிக்குழு, கல்வி ஆட்சிப் பேரவை, திட்டமிடும்
குழுமம், நிதிக்குழு ஆகியவற்றின் கூட்டங்களைக் கூட்டுவதற்கான
அதிகாரங்களைப் பெற்றிருத்தல் வேண்டும்.
(10) துணை வேந்தர், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி விரிவாக்கக் கல்வி,
மற்றும் பாடத் திட்ட மேம்பாடு ஆகியவற்றுக்கான ஒருங்கிணைப்பிற்கும்
ஒத்திசைவிற்கும் பொறுப்புடையவராயிருப்பார்.
(14) துணை வேந்தரானவர், நிலைமுறை விதிகளால்
வகுத்துரைக்கப்படக்கூடிய பிற அதிகாரங்களைச் செலுத்தி வருவதோடு பிற
கடமைகளையும் ஆற்றி வருவார்.
15. பதிவாளர்.-- (1) பதிவாளர், ஆட்சிக் குழுவினால் நியமிக்கப்படும்
இப்பல்கலைக்கழகத்தின் சம்பளம் பெறும் முழு நேர அலுவலராக இருந்து வருவார்;
(2) பதிவாளரின் பணி குறித்த வரையறைகளும் நிபந்தனைகளும்
பின்வருமாறு இருக்கும்:-
(@) பதிவாளரின் பதவியை வகிப்பவர், சட்டக் கல்லூரி முதல்வரின்
படிநிலைக்குக் குறையாத சட்டம் பற்றிய துறையில் ஒரு கல்வியாளராக அல்லது
இப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்னும் தகுதியில் மூன்றாண்டுகளுக்குக்
குறையாமல் உள்ள ஒரு கால அளவிற்குப் பணி புரிந்துள்ளவராக அல்லது
சட்டத்துறை அரசு துணைச் செயலாளரின் படி நிலைக்குக் குறையாத அரசு
அலுவலராக இருத்தல் வேண்டும்;
(௦) பதிவாளர், மூன்றாண்டுக்கால அளவுக்குப் பதவி வகிப்பார்; மேலும் அவர்
மீண்டும் நியமிக்கப்படுவதற்குத் தகுதியுடையவராவார்;
வரம்புரை: ஆனால், பதிவாளர் ஐம்பத்தெட்டு வயதினை எய்தியதும் அல்லது
இந்தக் கூறில் குறித்துரைக்கப்பட்டுள்ள கால அளவு முடிவடைந்ததும் இவற்றில்
எது முந்தியதோ அதன்பேரில் ஓய்வு பெறுதல் வேண்டும்;
(6) பதிவாளரின் ஊதியங்களும் பணி குறித்த பிற வரையறைகளும்
நிபந்தனைகளும் வகுத்துரைக்கப்படக்கூடியவாறு இருக்கும்;
(d) பதிவாளரின் பதவி காலியாக இருக்கும்போது அல்லது நோய், பணிக்கு
வராமை என்கிற காரணத்தினால் அல்லது பிற காரணம் எதனாலேனும் பதிவாளர்
தம்முடைய பதவிக் கடமைகளை ஆற்றுதவற்கு இயலாதவராக இருக்கும்போது,
பதிவாளரின் பதவிக் கடமைகள் அந்த நோக்கத்திற்காகத் துணை வேந்தரால்
குறிப்பிடப்படக்கூடியவரால் ஆற்றி வரப்படுதல் வேண்டும்.
(3) (a) பதிவாளர் இப்பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறைப்
பணியாளர்கள். நீங்கலாக ஆட்சிக் குழுவின் ஆணைகளில்
குறித்துரைக்கப்படக்கூடிய பணியாளர்கள். ம்து ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்படுதவற்கும், விசாரணை நடத்தப்படுவதற்கிடையே அவர்களைத்
தற்காலிக வேலைநீக்கம் செய்துவைப்பதற்கும் மற்றும் அவர்களுக்கு எச்சரிக்கை
விடுப்பதற்கு அல்லது அவர்கள் மீது கண்டனத் தண்டனை விதிப்பதற்கு அல்லது
சம்பள உயர்வை நிறுத்தி வைப்பதற்குமான அதிகாரத்தைப் பெற்றிருப்பார்;
வரம்புரை: ஆனால், சம்பந்தப்பட்ட நபருக்கெதிராக எடுக்கக் கருதியுள்ள
நடவடிக்கைக்கு எதிராகக் காரணம் காட்டுதவற்கான நியாயமானதொரு வாய்ப்பு
அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, அத்தகைய தண்டனை எதுவும்
விதிக்கப்படுதலாகாது:
(b) (a) எனுங்கூறில், குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனைகளில்
எதையும் விதிக்கின்ற பதிவாளரின் ஆணை எதற்கும் எதிராகத் துணை
வேந்தரிடம் மேல்முறையீடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு உரிமை உண்டு.
(2 பதிவாளரின் அதிகாரங்களுக்கு மேற்பட்ட தண்டனை
தேவைப்படுகிறது என்று அந்த விசாரணை வெளிப்படுத்துகிற நேர்வு எதிலும்,
பதிவாளர் அந்த விசாரணை முடிவடைவதன்பேரில், அறிக்கை ஒன்றைத்,
தம்முடைய பரிந்துரைகளோடு சேர்த்து துணை வேந்தருக்குக் கொடுத்தல்
வேண்டும்; மற்றும் துணை வேந்தர் தாம் பொருத்தமெனக் கருதுகிற
ஆணைகளைப் பிறப்பித்தல் வேண்டும்:
வரம்புரை: ஆனால் தண்டனை எதையும் விதிக்கின்ற துணை வேந்தரின்
ஆணை ஒன்றுக்கு எதிராக, ஆட்சிக் குழுவிடம் மேல்முறையீடு ஒன்றைச் செய்து
கொள்வதற்கு உரிமை உண்டு.
(0) 0) எனும் கூறின்படி அல்லது (௦) எனும் கூறின்படியான மேல்முறையீடு
எதுவும் எந்த ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டதோ அந்த
ஆணையை மேல்முறையீட்டாளர் பெற்ற தேதியிலிருந்து அறுபது நாட்கள்
முடிவடைந்த பின்பு முன்னிடப்படுதலாகாது.
(4) இந்தச் சட்டத்தில் மற்றப்படி வகை செய்யப்பட்டுள்ளவாறு தவிர
பதிவாளரானவர் ஆட்சிக் குழு, கல்வி ஆட்சிப் பேரவை, புலங்கள், பாடத்
திட்டக்குழுமங்கள் ஆகியவற்றின் பதவிவழிச் செயலாளராக இருந்து வருவார்:
ஆனால் இந்த அதிகாரஅமைப்புகளில் ஏதொன்றின் உறுப்பினராக இருப்பதாகவும்
கருதப்படமாட்டார்.
(5) (a) தம்முடைய பொறுப்புக்கு ஆட்சிக் குழு விடுகின்ற
இப்பல்கலைக்கழகத்தின் பதிவு கட்டுகளுக்கும், தனித்த இலச்சினைக்கும் பிற
சொத்துக்கும் பாதுகாவலராக இருப்பது;
(௦) ஆட்சிக் குழுவின் கல்வி ஆட்சிப் பேரவை புலங்களின், பாடத்திட்டக்
குழுமங்களின், தேர்வாளர் குழுமங்களின் மற்றும் இப்பல்கலைக்கழகத்தின்
அதிகாரஅமைப்புகளினால் நியமிக்கப்படும் குழு ஏதொன்றின் கூட்டங்களையும்
கூட்டுகிற அறிவிப்புகள் அனைத்தையும் அனுப்புவது;
(6) ஆட்சிக் குழுவின் கல்வி ஆட்சிப் பேரவை புலங்களின், பாடத்திட்டக்
குழுமங்களின், தேர்வாளர் குழுமங்களின் மற்றும் இப்பல்கலைக்கழகத்தின்
அதிகாரஅமைப்புகளினால் நியமிக்கப்படும் குழு ஏதொன்றின் கூட்ட
நடவடிக்கைகள் அனைத்தையும் பற்றிய நடவடிக்கை குறிப்பேடுகளை வைத்து
வருவது;
(0) ஆட்சிக் குழுவின் அலுவலக கடிதத் தொடர்பை நடத்தி வருவது;
(ஐ) இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகளின் கூட்டப்பொருள்
நிரலின் படிகள் வெளியிடப்பட்டவுடன் அவற்றையும் அத்தகைய கூட்ட
நடவடிக்கை குறிப்புகளையும் வேந்தருக்கு வழங்குவது; மற்றும்
() நிலைமுறை விதிகளில், துணைமுறை விதிகளில் அல்லது
ஒழுங்குமுறை விதிகளில் குறித்துரைக்கப்படக்கூடிய அல்லது ஆட்சிக்
குழுவாலோ. துணை வேந்தராலோ அவ்வப்போது கோரப்படக்கூடிய பிற
அதிகாரங்களைச் செலுத்தி வருவதும் பிற கடமைகளை ஆற்றி வருவதும்,
பதிவாளரின் கடமையாக இருக்கும்.
(6) இப்பல்கலைக்கழகத்தினால் அல்லது அதற்கு எதிராகத் தொடரப்படும்
உரிமை வழக்குகள் மற்றும் எடுக்கப்படும் பிற சட்ட நடவடிக்கைகள்
அனைத்திலும், வாதுரைகள் பதிவாளரால் கையொப்பமிடப்பட்டு உண்மையென
உறுதிமொழி அளிக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அத்தகைய உரிமை
வழக்குகளிலும் நடவடிக்கைகளிலும் நீதிமுறைக் கட்டளைகள் அனைத்தும்
பதிவாளருக்குப் பிறப்பிக்கப்பட்டு அவருக்குச் சார்வு செய்யப்படுதல் வேண்டும்.
16. நிதி அலுவலர்.- (1) நிதி அலுவலர், இதன் பொருட்டு ஆட்சிக் குழுவால்
குறித்துரைக்கப்படக்கூடிய கால அளவுக்கு, அந்த ஆட்சிக் குழுவால்
நியமிக்கப்படும் இப்பல்கலைக்கழகத்தின் சம்பளம் பெறும் முழுநேர அலுவலராக
இருந்து வருவார்.
(2) நிதி அலுவலரின் நியமனம் அரசினால் பரிந்துரை செய்யப்படும் மூன்று
பெயர்களைக் கொண்ட பட்டியல் ஒன்றிலிருந்து ஆட்சிக் குழுவால் செய்யப்படுதல்
வேண்டும்.
(3) நிதி அலுவலரின் ஊதியங்களும், பணி குறித்த பிற வரையறைகளும்,
நிபந்தனைகளும், துணைமுறை விதிகளின் மூலம்
வகுத்துரைக்கப்படக்கூடியவையாக இருக்கும்.
(4) நிதி அலுவலர் ஐம்பத்தெட்டு வயதினை எய்தியதின்பேரில் அல்லது (1)-
ஆம் உட்பிரிவின்படி ஆட்சிக் குழுவினால் குறித்துரைக்கப்படும் கால அளவு
முடிவடைவதன்பேரில், இவற்றில் எது முந்தியதோ அதன் பேரில் ஓய்வு பெறுதல்
வேண்டும்:
வரம்புரை: ஆனால், நிதி அலுவலர் ஐம்பத்தெட்டு வயதினை
எய்தியிருந்தபோதிலும், பதவியில் அவருக்கு பின்வருபவர் நியமிக்கப்பட்டு, அவர்
தம்முடைய பதவியை மேற்கொள்கின்ற வரையில் அல்லது ஓராண்டு கால அளவு
முடிவடையும் வரையில், இவற்றில் எது முந்தியதோ அது வரையில் தொடர்ந்து
பதவியில் இருந்து வருவார்.
(5) நிதி அலுவலரின் பதவி காலியாக இருக்கும்போது அல்லது நிதி
அலுவலர் நோய், பணிக்கு வராமை என்கிற காரணத்தால் அல்லது பிற காரணம்
எதனாலேனும் தம்முடைய பதவிக் கடமைகளை ஆற்றுவதற்கு இயலாதவராக
இருக்கும்போது நிதி அலுவலரின் பதவிக் கடமைகள் அந்த நோக்கத்திற்காகத்
துணைவேந்தரால் நியமிக்கப்படக்கூடியவரால் ஆற்றிவரப்படுதல் வேண்டும்.
(6) நிதி அலுவலர், நிதிக் குழுவின் பதவிவழிச் செயலாளராக இருந்து
வருவார்: ஆனால் அத்தகைய குழுவின் உறுப்பினராக இருப்பதாகக்
கருதப்படமாட்டார்.
(7) நிதி அலுவலர்.-
(ஐ இப்பல்கலைக்கழகத்தின் நிதியங்களின்மீது பொதுவான கண்காணிப்பு
செலுத்துதல் வேண்டும்: மற்றும் இப்பல்கலைக்கழகத்தின் நிதிக்கொள்கை
சம்பந்தமாக அதற்கு ஆலோசனை வழங்குதலும் வேண்டும்; மற்றும்
(b) ஆட்சிக் குழுவினால் தமக்குக் குறித்தளிக்கப்படக்கூடிய அல்லது
நிலைமுறை விதிகளினாலோ, துணைமுறை விதிகளின்லோ
வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய அதிகாரங்களைச் செலுத்தி வருதலும், பிற
நிதி சார்ந்த அலுவற்பணிகளை ஆற்றி வருதலும் வேண்டும்:
வரம்புரை: ஆனால் நிதி அலுவலர், ஆட்சிக் குழுவின் முன்
ஒப்புதலளிப்பின்றி செலவு எதையும் செய்தலோ வகுத்துரைக்கப்படக்கூடிய
தொகைக்கு மேற்படும் முதலீடு எதையும் செய்தலோ ஆகாது.
(8) ஆட்சிக் குழுவின் கட்டுப்பாட்டு அதிகாரத்திற்குட்பட்டு, நிதி அலுவலர்,-
(ஐ) பொறுப்புக் கட்டளை மற்றும் நிலைக்கொடை சொத்து உள்ளடங்கலாக,
இப்பல்கலைக்கழகத்தின் சொத்தினையும் முதலீடுகளையும் வைத்துவருவதோடு
நிருவகித்துவருதலும் வேண்டும்;
(௦) ஓராண்டிற்கான தொடர் மற்றும் தொடராச் செலவினங்களுக்காக
ஆட்சிக்குழுவால் நிருணயிக்கப்பட்ட வரம்புகள் மேற்படாதவாறும் பணங்கள்.
அனைத்தும் அவை வழங்கப்பட்ட அல்லது குறித்தொதுக்கப்பட்ட
நோக்கங்களுக்காகச் செலவிடப்படு வதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்;
(6) இப்பல்கலைக்கழகத்தின் ஆண்டு கணக்குகள், நிதி மதிப்பீடுகள், வரவு-
செலவுத் திட்டம் ஆகியவற்றைத் தயாரிப்பதற்கும், ஆட்சிக் குழுவிடம் அவற்றை
அளிப்பதற்கும் பொறுப்புடையவராவார்;
(0) பணம் (ரொக்கம்) மற்றும் வங்கி இருப்புகளையும், முதலீடுகளையும்
இடைவிடாது கண்காணித்து வருதல் வேண்டும்;
(6) வருவாய் வசூலின் (தண்டலின்) முன்னேற்றத்தைக் கண்காணித்து,
வசூல் (தண்டல்) செய்வதற்குப் பயன்படுத்தப்படும் முறைகள் குறித்து
ஆலோசனை வழங்குதல் வேண்டும்;
() கட்டடங்கள், நிலங்கள், அறைகலன், சாதனங்கள் ஆகியவற்றின்
பதிவேடுகள் நாளதுவரை வைத்துப் பேணி வரப்படு வதையும்,
இப்பல்கலைக்கழகத்தால் பேணிவரப்படும் அலுவலகங்கள், சிறப்பு மையங்கள்.
கல்லூரிகள் ஆகிய அனைத்திலுமுள்ள சாதனங்கள் மற்றும் பிற நுகரத்தக்க
பொருள்களின் இருப்பு நிலையைச் சரிபார்க்கும் பணி நடத்தப்படுவதையும் உறுதி
செய்து கொள்ளுதல் வேண்டும்;
(9) அதிகாரமளிக்கப்படாத செலவினம் எதையும் பற்றி அல்லது பிற நிதிசார்
முறைகேடு பற்றித் துணை வேந்தரின் கவனத்திற்குக் கொண்டு வருதல்
வேண்டும்; மற்றும் தவறு செய்துள்ளவர் மீது எடுக்கப்பட வேண்டிய உரிய
நடவடிக்கை குறித்து யோசனை கூறுதலும் வேண்டும்; மற்றும்
(h) தம்முடைய கடமைகளை ஆற்றிவருவதற்காகத் தாம் தேவையெனக்
கருதக்கூடிய தகவல் அல்லது விவர அறிக்கை எதையும்,
இப்பல்கலைக்கழகத்தினால் பேணிவரப்படும் அலுவலகம், மையம், கல்லூரி ஆகிய
எதிலிருந்தும் தருவித்தல் வேண்டும்.
(9) இப்பல்கலைக்கழகத்திற்குச் செலுத்தப்படத்தக்க பணம் எதற்காகவும்
நிதி அலுவலரோ அல்லது ஆட்சிக் குழுவால் இதற்கென உரியவாறு
அதிகாரமளிக்கப்பட்ட நபர் அல்லது நபர்களோ அளிக்கும் பற்றுச் சீட்டானது,
அப்பணம் செலுத்தப்பட்டதற்கான போதிய நிறைவேற்றச் சான்றாகும்.
17. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்.- (1) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின்
பதவியை வகிப்பவர் ஒரு கல்லூரியின் விரிவுரையாளரின் (தெரிவு நிலை)
படிநிலைக்குக் கீழல்லாதவரும் சட்டம் பற்றிய துறையில் ஒரு கல்வியாளராக
இருப்பவருமாக இருத்தல் வேண்டும்.
(2) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், வகுத்துரைக்கப்படக்கூடிய கால
அளவுக்கும், வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரிலும், ஆட்சிக்குழுவால்
நியமிக்கப்படும், இப்பல்கலைக்கழகத்தின் ஒரு முழுநேர அலுவலராக இருப்பார்.
(3) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், வகுத்துரைக்கப்படக்கூடிய
அதிகாரங்களைச் செலுத்தி வருவார், கடமைகளைப் புரிந்து வருவார்.
அத்தியாயம் V.
இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகள்.
148. இப்பல்கைகழகத்தின் அதிகாரஅமைப்புகள்.-- ஆட்சிக் குழு, கல்வி
ஆட்சிப் பேரவை, பாடத்திட்டக் குழுமங்கள், நிதிக்குழு, திட்டமிடுங்குழுமம்,
புலங்கள் மற்றும் இப்பல்கலைக்கழகத்தில் அதிகாரஅமைப்புகளென நிலைமுறை
விதிகளின் மூலம் விளம்பப்படக்கூடிய பிற அதிகாரஅமைப்புகள் ஆகியவை
இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகளாக இருக்கும்.
19. உறுப்பினர் பதவிக்கான தகுதிக்கேடு- (1) நபர் எவரும்
இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளில் ஏதொன்றிற்கும் பெயர் குறித்து
நியமிக்கப்படும் அல்லது தேர்ந்தெடுக்கப்படும் தேதியன்று,
(a) அவர் மனச் சீர்கேடுற்றவராகவோ, அல்லது செவிட்டு
ஊமையராகவோ இருப்பாராயின்; அல்லது
(௦) ஒரு நொழிப்பு நிலையராக நீதிமுறையில் தீர்மானிக்கட்படுவதற்காக
விண்ணப்பித்துக் கொண்டுள்ளவராக இருப்பாராயின் அல்லது விடுவிக்கப்படாத
நொடிப்பு நிலையராக இருப்பாராயின்; அல்லது
(௦) ஒழுக்கக் கேட்டினை உள்ளடக்கிய குற்றச் செயலுக்காக
குற்றவழக்கு நதிமன்றமொன்றினால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளவராக
இருப்பாராயின்;
அவ்வாறு பெயர் குறித்து நியமிக்கப்படுவதற்கோ
தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ தகுதியுடையவராகமாட்டார்.
(2) நபரொருவர் (1)-ஆம் உட்பிரிவின்படி தகுதிக்கேடுற்றவரா என்பது
குறித்துப் பூசல் அல்லது ஐயம் ஏதேனும் இருக்கும் நேர்வில், ஆட்சிக் குழுவானது
அதை முடிவு செய்தல் வேண்டும்; அதன் முடிவே இறுதியானதாகும்.
20. ஒரு சில நேர்வுகளில் ஆட்சிக் குழுவுக்கும் கல்வி ஆட்சிப்
பேரவைக்கும். தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அல்லது நியமனஞ்
செய்யப்படுவதற்கான தகுதிக்கேடு.- (1) (ஐ 22-ஆம் பிரிவிலும் மற்றும் 29-ஆம்
பிரிவிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், இப்பல்கலைக்கழகத்தின் பின்வரும்
அதிகாரஅமைப்புகளில் அதாவது —
() ஆட்சிக் குழு மற்றும்
(i) கல்வி ஆட்சிப் பேரவை
ஆகியவற்றில் ஏதாவதொன்றில் அல்லது அதற்கு மேற்பட்டவற்றில்
மொத்தம் ஆறு ஆண்டு காலஅளவுக்கு உறுப்பினராகப் பதவி வகித்து வந்துள்ள
நபர் எவரும் மேற்சொன்ன இரண்டு அதிகாரஅமைப்புகளில் ஏதோன்றிற்கும்
தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது பெயர் குறித்து நியமிக்கப்படுவதற்கு
தகுதியுடையவராகமாட்டார்.
(b) (a) எனும் கூறில் என்ன அடங்கியிருந்தபோதிலும் இம்மாநிலச்
சட்டமன்றத்தின் சட்டம் எதன்படியும் நிறுவியமைக்கப்பட்டுள்ள பிற
பல்கலைக்கழகம் ஏதொன்றின் பின்வரும் அதிகாரஅமைப்புகளில் அதாவது:-
(0) ஆட்சிக் குழு
(i) ஆட்சிப் பேரவை
0) கல்வி அலுவல் நிலைக்குழு
(iv) ஆட்சி மன்றம்
(v) நிருவாகக் குழுமம்
(vi) செயலாட்சி மன்றம்
ரி) கல்விக் குழு
(viii) கல்வி மன்றம்
ஆகியவற்றில் ஏதேனுமொன்றிலோ அதற்கு மேற்பட்டவற்றிலோ மொத்தம்
ஆறு ஆண்டு கால அளவிற்கு உறுப்பினராகப் பதவி வகித்து வந்துள்ள நபர் எவரும்
இச்சட்டத்தின் கீழ் இப்பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவிற்கோ கல்வி ஆட்சிப்
பேரவைக்கோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ அல்லது பெயர் குறித்து
நியமிக்கப்படுவதற்கோ தகுதியுடையவராகமாட்டார்.
முதலாம் வரம்புரை: ஆனால் இந்த உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள மொத்த
ஆறு ஆண்டு கால அளவினைக் கணக்கிடும் நோக்கத்திற்காக
தேர்ந்தெடுக்கப்பட்டதன் அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்டதன் மூலமாகவோ
ஓர் அதிகார அமைப்பில் நபர் ஒருவர் பதவி வகித்த மூன்றாண்டுக்கால அளவும்,
தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலமாவோ அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்டதன்
மூலமாகவோ மற்றோர் அதிகார அமைப்பில் அவர் பதவி வகித்த மூன்றாண்டு கால
அளவும், கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்; மற்றும் அதற்கிணங்க
அத்தகைய நபர் (0 எனும் கூறில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு
அதிகாரஅமைப்புகளில் ஏதொன்றிற்கும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது பெயர்
குறித்து நியமிக்கப்படுவதற்குத் தகுதியுடையவராகமாட்டார்:
இரண்டாம் வரம்புரை: மற்றும் இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக (ஐ) எனும்
கூறில் அல்லது (b) எனும் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரஅமைப்புகளில் ஏதேனும்
ஒன்றில் தற்செயல் காலியிடமொன்றில் ஓர் ஆண்டிற்கு குறையாத
காலஅளவிற்கு பதவி வகித்து வந்துள்ள நபரொருவர் அந்த அதிகாரஅமைப்பில்
மூன்றாண்டு காலஅளவிற்கு பதவி வகித்து வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல்
வேண்டும்:
மூன்றாம் வரம்புரை: மேலும், இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, நபர்
ஒருவர் ஓர் அதிகாரஅமைப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்து அல்லது பெயர்
குறித்து நியமிக்கப்பட்டிருந்து அத்தகைய நபர் முதலில் குறிப்பிடப்பட்ட
அதிகாரஅமைப்பில் உறுப்பினராக இருந்த காரணத்தால் மற்றோர்
அதிகாரஅமைப்பில் உறுப்பினராக ஆகியிருப்பாராயின், முதலில் குறிப்பிடப்பட்ட
அதிகாரஅமைப்பில் அவர் பதவி வகித்த கால அளவு மட்டுமே கணக்கில் எடுத்துக்
கொள்ளப்படுதல் வேண்டும்.
(2) 0-ஆம் உட்பிரிவிலுள்ள எதுவும்,-
(i) 22-ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட பதவிவழி உறுப்பினர்கள் மற்றும்.
(i) மற்றப்படி கல்வி ஆட்சிப் பேரவையின் உறுப்பினர்களாக இல்லாத,
ஆட்சிக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்காமல், 29-ஆம் பிரிவில்
குறிப்பிடப்பட்ட பதவிவழி உறுப்பினர்கள்:
ஆகியோருக்குப் பொருந்தாது.
21. துணை வேந்தர் மற்றும் பிற அலுவலர்கள் முதலானோர் பொது
ஊழியர்களாக இருப்பாரென்பது.- துணை வேந்தர், பதிவாளர், நிதி அலுவலர்,
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் இப்பல்கலைக்கழகத்தின் பிற
பணியாளர்கள் இந்தச் சட்டத்தின் வகைமுறைகளில் எதனையும் ஒட்டி
செயற்படுகிறபோது அல்லது செயற்படுவதாகப் புலப்படுகின்றபோது, இந்தியத்
தண்டனை தொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம் XLV/1860) 21-ஆம் பிரிவின்
பொருளின்படி பொது ஊழியர்களாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
ஆட்சிக்குழு.
22. ஆட்சிக் குழு.- (1) வேந்தரானவர், 63-ஆம் பிரிவின்படி, முதல் துணை
வேந்தர் நியமிக்கப்பட்டதற்குப் பின்பு, கூடிய விரைவில், ஆட்சிக்குழுவை
அமைத்துருவாக்குதல் வேண்டும்.
(2) ஆட்சிக்குழுவானது, துணை வேந்தரோடுகூட பின்வரும்
உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். அதாவது:-
வகை |. பதவிவழி உறுப்பினர்கள்.
(ஐ) சட்டத் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;
(b) கல்வித் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;
(௦ சட்டக் கல்வி இயக்குநர்;
(0) தலைமை வழக்குரைஞர், தமிழ்நாடு; மற்றும்
வகை ॥. பிற உறுப்பினர்கள்.
(ஐ துணை வேந்தரால் பெயர் குறித்து நியமிக்கப்படும்
இணைக்கப்பட்ட கல்லூரிகளின் இரண்டு முதல்வர்கள்;
(b) கல்வி ஆட்சிப் பேரவையால் அதன்
உறுப்பினர்களுக்கிடையேயிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர்: அவர்
இணைக்கப்பட்ட கல்லூரியொன்றின் ஆசிரியராகவும் இருத்தல் வேண்டும்;
(c) பணி முதுநிலைக்கிணங்க சுற்றுமுறையின் மூலமாக துணை
வேந்தரால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட இப்பல்கலைக்கழக சிறப்புப் பேராசிரியர்
ஒருவர்;
(0) ஆழ்படிப்பு மற்றும் ஆராய்ச்சித் துறைகள், புலமைச் சிறப்புப்
பள்ளிகள் அல்லது உயர் படிப்பு மையங்கள். ஆகியவற்றின்.
தலைவர்களிடையேயிருந்து அத்தகைய துறைகள், பள்ளிகள் மற்றும்
மையங்களிடையே பணி முதுநிலைக்கிணங்க சுற்றுமுறையின் மூலமாக துணை
வேந்தரின் பரிந்துரையின் பேரில் அரசினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட
பல்கலைக்கழகப் பேராசிரியர் இருவர்;
(6) பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோரை
சார்பாற்றம் செய்வதை உறுதி செய்யும் பொருட்டு சட்டத் தொழிலாற்றுகின்ற
அத்தகைய உறுப்பினர்களுக்கிடையேயிருந்தோ சட்டக் கல்வி கற்பித்து வருகின்ற
அத்தகைய உறுப்பினர்களுக்கிடையேயிருந்தோ அரசினால் பெயர் குறித்து
நியமிக்கப்படும் ஓர் உறுப்பினர்;
() மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோரை
சார்பாற்றம் செய்வதை உறுதி செய்யும் பொருட்டு சட்டத் தொழிலாற்றுகின்ற
அத்தகைய உறுப்பினர்களுக்கிடையேயிருந்தோ சட்டக் கல்வி கற்பித்து வருகின்ற
அத்தகைய உறுப்பினர்களுக்கிடையேயிருந்தோ அரசினால் பெயர் குறித்து
நியமிக்கப்படும் ஓர் உறுப்பினர்;
(1) சென்னை உயர்ந்திமன்றத்தின் தலைமை நீதிபதியுடன்
கலந்தறிவதன் மூலம் அரசினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் சென்னை
உயர்ந்திமன்றத்தின் பணியிலுள்ள அல்லது ஓய்வு பெற்றுள்ள ஒரு நீதிபதி;
() இந்திய வழக்குரைஞர் பதிவு மன்றத்தினால் பெயர் குறித்து
நியமிக்கப்படும் ஓர் உறுப்பினர்;
() தமிழ்நாடு வழக்குரைஞர் பதிவு மன்றத்தின் தலைவர்;
ம் கல்வி ஆட்சிப் பேரவையால் அதன்
உறுப்பினர்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஓர் உறுப்பினர்;
(k) கல்வி ஆட்சிப் பேரவையின் உறுப்பினர்களுக்கிடையேயிருந்து
வேந்தரால் பெயர் குறித்து நியமிக்கப்படும் ஓர் உறுப்பினர்.
(3) துணை வேந்தர் ஆட்சிக் குழுவின் பதவி வழித் தலைவராக இருப்பார்.
(4) ஐ வேறுவிதமாக வகைசெய்யப்பட்டவாறல்லாமல், பதவிவழி
உறுப்பினர்கள் அல்லாத ஆட்சிக் குழுவின் பிற உறுப்பினர்கள் மூன்றாண்டு கால
அளவிற்கு பதவி வகித்து வருவர்; மற்றும் அத்தகைய உறுப்பினர்கள், மற்றொரு
மூன்றாண்டு கால அளவிற்கு மேற்படாத கால அளவிற்கு
தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது பெயர் குறித்து நியமிக்கப்படுவதற்குத்
தகுதியுடையவர்கள் ஆவர்.
(b) உறுப்பினர் ஒருவர், ஆட்சிக் குழுவிற்கு, தற்காலிகக்
காலியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறவிடத்து, அல்லது பெயர் குறித்து
நியமிக்கப்பட்டிருக்கிறவிடத்து அத்தகைய உறுப்பினர் எவராலும் ஓர் ஆண்டு கால
அளவிற்குக் குறையாமல் வகித்துவரப்பட்ட பதவியின் கால அளவு முழு
மூன்றாண்டு கால அளவாகக் கொள்ளப்படும்:
முதலாம் வரம்புரை: ஆனால் குறிப்பிட்ட வாக்காளர் தொகுதியின் அல்லது
அமைப்பின் உறுப்பினர் என்கிற அல்லது குறிப்பிட்ட நியமனம் ஒன்றை
வகிக்கிறவர் என்கிற தம் தகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அல்லது பெயர்
குறித்து நியமிக்கப்பட்டுள்ள ஆட்சிக் குழுவின் உறுப்பினரொருவர் அவர் அந்த
வாக்காளர் தொகுதியின் அல்லது அமைப்பின் உறுப்பினராக அல்லது
நேர்விற்கேற்ப அந்த நியமனத்தை வகித்து வருபவராக அஇருப்பதனின்று
அற்றுப்போகிற தேதியிலிருந்து, ஆட்சிக் குழுவின் உறுப்பினராக
இருப்பதனின்றும் அற்றுப்போவார்;
இரண்டாம் வரம்புரை: மேலும் ஆட்சிக்குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட
அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் ஆட்சிக்குழுவின்
உறுப்பினராக இருப்பதற்கு உரிமைத் தகுதியுடையவர் என்ற காரணத்தால்
பதவிகளில் எதற்கும் தற்காலிகமாக நியமிக்கப்படு கிறவிடத்து, தாம்
தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்டதன்
காரணமாக ஆட்சிக் குழுவின் உறுப்பினராகத் தாம் தொடர்ந்து இருப்பதற்கு
விரும்பு கிறாரா அல்லது அத்தகைய உறுப்பினராக இருக்கும் பதவியை விட்டு
நீங்கித் தாம் நியமிக்கப்பட்டதன் காரணமாகப் பதவிவழி உறுப்பினராக ஆவதற்கு
விரும்புகிறாரா என்பதை அவர் தன் நியமனப் பொறுப்பை மேற்கொள்கின்ற
தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள்ளாக தம்மால் கையொப்பமிட்டு துணை
வேந்தருக்குத் தெரிவிக்கப்பட்ட எழுத்து மூலமான அறிவிப்பின் வாயிலாகத்
தெரிவு செய்தல் வேண்டும்; மற்றும் அந்த விருப்பத்தெரிவே அறுதியானதாகும்.
அத்தகைய விருப்பத்தெரிவைச் செய்யத்தவறுவதன் பேரில், தேர்ந்தெடுக்கப்பட்ட
அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினராக உள்ள தம்முடைய பதவியை
விட்டு அவர் நீங்கியிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.
(5) ஒருவர் ஆட்சிக்குழுவின் உறுப்பினராக இருப்பது அற்றுப்போகும் போது,
அவர் ஆட்சிக்குழுவில் தாம் உறுப்பினராக இருப்பதன் காரணத்தால்
இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளில் எதிலேனும் உறுப்பினராக
இருந்திருக்கக் கூடிய நிலையும் அற்றுப்போகும்.
23. ஆட்சிக் குழுவின் அதிகாரங்கள்.- ஆட்சிக்குழுவானது,
1) நிலைமுறை விதிகளைச் செய்வதற்கு மற்றும் அந்நிலைமுறை
விதிகளைத் திருத்துவதற்கு அல்லது நீக்குவதற்கு;
(2) துணைமுறை விதிகளைச் செய்வதற்கு அவற்றைத் திருத்துவதற்கு
அல்லது நீக்குவதற்கு;
(3) இப்பல்லைக்கழகத்தின் சொத்துக்கள் மற்றும் நிதியங்களை வைத்து
வருவதற்கு; கட்டுப்பாடு செய்வதற்கு; நிருவகித்து வருவதற்கு;
(4) தான் பொருத்தமெனக் கருதக்கூடிய கல்விப் பிரிவுகளில் சட்டம் பற்றிய
பல்வேறு துறைகளில் கற்பிக்க பயிற்றுவிக்க வகைசெய்வதற்கு;
(5) இப்பல்கலைக்கழகத்தில் தான் பொருத்தமெனக் கருதக்கூடிய கல்விப்
பிரிவுகளில் சட்டம் பற்றிய பல்வேறு துறைகளில் படிப்புத் துறைகளை
ஏற்படுத்துவதற்கு;
(6) சட்டத்தின் பல்வேறு புலங்களில் ஆராய்ச்சி செய்வதற்கும்; மேம்பாடு
செய்வதற்கும் அறிவைப் பரப்புவதற்கும் வகைசெய்வதற்கும்;
உறுப்பினராக இருப்பதற்கு உரிமைத் தகுதியுடையவர் என்ற காரணத்தால்
பதவிகளில் எதற்கும் தற்காலிகமாக நியமிக்கப்படு கிறவிடத்து, தாம்
தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்டதன்
காரணமாக ஆட்சிக் குழுவின் உறுப்பினராகத் தாம் தொடர்ந்து இருப்பதற்கு
விரும்பு கிறாரா அல்லது அத்தகைய உறுப்பினராக இருக்கும் பதவியை விட்டு
நீங்கித் தாம் நியமிக்கப்பட்டதன் காரணமாகப் பதவிவழி உறுப்பினராக ஆவதற்கு
விரும்புகிறாரா என்பதை அவர் தன் நியமனப் பொறுப்பை மேற்கொள்கின்ற
தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள்ளாக தம்மால் கையொப்பமிட்டு துணை
வேந்தருக்குத் தெரிவிக்கப்பட்ட எழுத்து மூலமான அறிவிப்பின் வாயிலாகத்
தெரிவு செய்தல் வேண்டும்; மற்றும் அந்த விருப்பத்தெரிவே அறுதியானதாகும்.
அத்தகைய விருப்பத்தெரிவைச் செய்யத்தவறுவதன் பேரில், தேர்ந்தெடுக்கப்பட்ட
அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினராக உள்ள தம்முடைய பதவியை
விட்டு அவர் நீங்கியிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.
(5) ஒருவர் ஆட்சிக்குழுவின் உறுப்பினராக இருப்பது அற்றுப்போகும் போது,
அவர் ஆட்சிக்குழுவில் தாம் உறுப்பினராக இருப்பதன் காரணத்தால்
இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளில் எதிலேனும் உறுப்பினராக
இருந்திருக்கக் கூடிய நிலையும் அற்றுப்போகும்.
23. ஆட்சிக் குழுவின் அதிகாரங்கள்.- ஆட்சிக்குழுவானது,
1) நிலைமுறை விதிகளைச் செய்வதற்கு மற்றும் அந்நிலைமுறை
விதிகளைத் திருத்துவதற்கு அல்லது நீக்குவதற்கு;
(2) துணைமுறை விதிகளைச் செய்வதற்கு அவற்றைத் திருத்துவதற்கு
அல்லது நீக்குவதற்கு;
(3) இப்பல்லைக்கழகத்தின் சொத்துக்கள் மற்றும் நிதியங்களை வைத்து
வருவதற்கு; கட்டுப்பாடு செய்வதற்கு; நிருவகித்து வருவதற்கு;
(4) தான் பொருத்தமெனக் கருதக்கூடிய கல்விப் பிரிவுகளில் சட்டம் பற்றிய
பல்வேறு துறைகளில் கற்பிக்க பயிற்றுவிக்க வகைசெய்வதற்கு;
(5) இப்பல்கலைக்கழகத்தில் தான் பொருத்தமெனக் கருதக்கூடிய கல்விப்
பிரிவுகளில் சட்டம் பற்றிய பல்வேறு துறைகளில் படிப்புத் துறைகளை
ஏற்படுத்துவதற்கு;
(6) சட்டத்தின் பல்வேறு புலங்களில் ஆராய்ச்சி செய்வதற்கும்; மேம்பாடு
செய்வதற்கும் அறிவைப் பரப்புவதற்கும் வகைசெய்வதற்கும்;
(7) இப்பல்கலைக்கழகத்திற்கு தேவைப்படும் விரிவுரையாளர் பதவிகள்,
சிறப்புப் பேராசிரியர் பதவிகள், பேராசிரியர் மற்றும் பிற கற்பிப்புப் பதவிகளை
ஏற்படுத்துவதற்கும்;
(8) இப்பல்கலைக்கழகத்தோடு கல்லூழிகளை இணைப்பதற்கு அல்லது
இப்பல்கலைக்கழகத்தால் நிலையங்கள் ஒப்புதலளிக்கப்படுவதற்கான
நிபந்தனைகளை அந்த நோக்கத்திற்காக நியமிக்கப்படும் நிபுணர் குழுக்களுடன்
கலந்தாய்வு செய்து வகுத்துரைப்பதற்கும் மற்றும் அத்தகைய இணைப்பினை
அல்லது ஒப்புதலை விலக்கிக் கொள்வதற்கும்;
(9) பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் பிற கல்விச் சிறப்புகள் ஆகியவற்றை
ஏற்படுத்துவதற்கும்;
(10) (a) கல்லூரியொன்றில் அல்லது ஒப்புதலளிக்கப்பட்டுள்ள கல்வி
நிலையமொன்றில் ஒப்புதலளிக்கப்பட்ட குறித்தகாலப் படிப்பு அல்லது பயிற்சியைத்
தொடர வேண்டியிருப்பதனின்று நிலைமுறை விதிகளால்
வகுத்துரைக்கப்பட்டுள்ள முறையில் விலக்களிக்கப்பட்டிருந்தாலன்றி அவ்வாறு
தொடர வேண்டியிருந்து இப்பல்கலைக்கழகத்தால் வகுத்துரைக்கப்பட்டுள்ள
தேர்வுகளில் தேர்ச்சிபெற்றுள்ள நபர்களுக்கு; அல்லது
(b) நிலைமுறை விதிகளால் வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி
ஆராய்ச்சி செய்துவருகின்ற நபர்களுக்கு;
பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் பிற கல்விச் சிறப்புகள் ஆகியவற்றை
வழங்குவதற்கும்;
(11) ஆட்சிக்குழுவின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்குக்
குறையாதவர்களின் பரிந்துரையின்பேரில், மதிப்புறு பட்டங்கள் அல்லது பிற
மதிப்புறு சிறப்புகள் ஆகியவற்றை வழங்குவதற்கும்;
(12) ஆண்டு அறிக்கை, ஆண்டு கணக்குகள், நிதி மதிப்பீடுகள்
ஆகியவற்றைப் பரிசீலனை செய்வதற்கும் மற்றும் அவற்றின் மீது தக்கதெனக்
கருதும் நடவடிக்கையை எடுப்பதற்கும்;
(13) இப்பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும்
கல்லூரிகளில் உள்ள மற்றும் இணைப்புப்பெற்ற கல்லூரிகளில் உள்ள
ஆசிரியர்களின் தகுதிப்பாடுகளை நிலைமுறை விதிகளில் வகுத்துரைப்பதற்கும்;
(14) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்,
பல்கலைக்கழகச் சிறப்புப் பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள்.
ஆகியோரை நியமிக்கின்ற நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் தேர்வுக்
குழுவின் பரிந்துரையின் பேரில் அவர்களை நியமிப்பதற்கும் அவர்களுடைய
ஊதியங்களை நிர்ணயிப்பதற்கும் அவர்களுடைய கடமைகளையும், பணி
நிபந்தனைகளையும் வரையறுப்பதற்கும் தற்காலிகக் காலியிடங்களை நிரப்பும்
முறைக்கு வகை செய்வதற்கும்;
(15) நிருவாக மற்றும் அது போன்ற பிற பதவிகளுக்காவதற்கு நியமன
முறையைக் குறித்துரைக்கின்ற நிலைமுறை விதிகளைச் செய்வதற்கு
தற்காலிகக் காலியிடங்களை நிரப்புவதற்கு வகைசெய்வதற்கு அவற்றினுடைய
கடமைகளையும் மற்றும் பணி குறித்த வரையறைகளையும் நிபந்தனைகளையும்
வரையறுப்பதற்கும்;
(16) பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சிறப்புப் பேராசிரியர்கள்,
விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பிற பணியாளர்களுக்கு
எதிராக நிலைமுறை விதிகளால் வகுத்துரைக்கப்படும் முறையில் ஒழுங்குமுறை
நடவடிக்கை எடுப்பதற்கும் நிலைமுறை விதிகளில் குறித்துரைக்கப்படலாகும்
தண்டங்களை விதிக்கவும் விசாரணையைப் பின் வைத்துக்கொண்டு,
அவர்களைத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்வதற்கும்;
(17) பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அல்லது
இணைக்கப்படவிருக்கும் அனைத்துக் கல்லூரிகளையும் பிற கல்வி
நிலையங்களையும் ஆய்வு செய்வதற்கு அவசியமெனக் கருதப்படலாகும்.
நடவடிக்கையை எடுப்பதற்கும்;
(18) எந்த முறையிலும் எந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டும், ஒரு
கல்லூரியானது அல்லது நிலையமானது அது தன்னாட்சிக் கல்லூரி அல்லது
நிலையம் எனவும் பெயரிட்டு அழைக்கப்படலாம் என்பதற்கும் அவ்வாறு பெயர்
குறிப்பிட்டதை நீக்கலாம் என்பதையும் வகுத்துரைப்பதற்கும்;
(19) அரசின் ஒருங்கிசைவோடு, ஒரு கல்லூரியை தன்னாட்சிக் கல்லூரி என
பெயரிட்டு அழைப்பதற்கும் அவ்வாறு பெயரிட்டு அழைப்பதை நீக்குவதற்கும்;
(20) பல்கலைக்கழகப் பரப்பிடத்திற்கு வெளியிலுள்ள கல்லூரி அல்லது
நிலையம் எதனையும் அது பற்றிய ஆய்வு ஆணைய அறிக்கையின் பேரில்
ஏற்பிசைவு அளிப்பதற்கும்;
(21) மைய அல்லது மாநில அரசு எதனிடமிருந்தோ அல்லது மைய அல்லது
மாநில அரசு எதற்கேனும் சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டிலுள்ள
நிறுவனம் எதனிடமிருந்தோ அல்லது பொது மக்களிடமிருந்தோ
இப்பல்கலைக்கழகத்தின் சார்பாக கடன்கள் பெறுவதற்கும்;
(22) இப்பல்கலைக்கழகத்தின் நோக்கங்களுக்காக, இப்பல்கலைக்கழகச்
சொத்தினுடைய பிணையத்தின் பேரில், அரசின் ஒப்புதலளிப்புடன் பணத்தைக்
கடன் வாங்குவதற்கும்;
(23) பாடத்திட்டக் குழுமங்களின் பரிந்துரையின் பேரில், தேர்வாளர்களை
நியமிப்பதற்கும், அவர்களுடைய ஊதியங்களை நிர்ணயிப்பதற்கும்;
(24) நிலைமுறை விதிகளால் வகுத்துரைக்கக்கூடிய கட்டணங்களை
விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும்;
(25) இப்பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்துவதற்கும் அத்தேர்வுகளின்
முடிவுகளை ஏற்றுக் கொள்வதற்கும் வெளியிடுவதற்கும்;
(26) பாடத் திட்டக் குழுமங்களின் உறுப்பினர்களை நியமிப்பதற்கும்;
(27) இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது
தொடர்பாக அல்லது பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு சமமானதாய் இருப்பதற்கு
ஏற்பிசைவு அளிக்கப்பட வேண்டிய தேர்வுகளை வகுத்துரைக்கின்ற துணைமுறை
விதிகளைச் செய்வதற்கும்;
(28) மாணவர் விடுதிகளை நிறுவியமைத்து பேணி வருவதற்கும்;
(29) இப்பல்கலைக்கழகத்தால் பேணிவரப்படாத மாணவர் விடுதிகளுக்கு
ஏற்பிசைவு அளிப்பதற்கும் எந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதற்கு ஏற்பிசைவு
அளிக்கப்பட்டதோ அவற்றின்படி நடத்தப்பெறாத மாணவர் விடுதி எதனின்
ஏற்பிசைவையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு அல்லது. திரும்பப்
பெறுவதற்கு;
(30) இப்பல்கலைக்கழக மாணவர்களின் இருப்பிடத்தை
கண்காணிப்பதற்கும் அவர்களின் உடல் நலத்தையும் பொது நலத்தையும்
பேணுவதற்கும்;
(31) பட்டதாரி உதவித் தொகைகள், பட்டதாரி பண உதவித் தொகைகள்,
மாணவர் உதவித் தொகைகள், பதக்கங்கள், பரிசுகள் ஆகியவற்றை அளிப்பதற்கும்;
(32) பல்கலைக்கழகத்தால் நிறுவப்பட்ட நூல் வெளியீட்டுக் கழகம், வேலை
வாய்ப்புக் கழகம், பல்கலைக்கழக உடல் பயிற்சிக் கழகங்கள் அல்லது தடகள
சங்கங்கள் ஆகியவற்றை நிர்வகிப்பதற்கும்;
(33) இப்பல்கலைக்கழகத்தின் படிப்பையும் கற்பித்தலையும் மறுஆய்வு
செய்வதற்கும்;
(34) இப்பல்கலைக்கழகத்திற்குள் ஆராய்ச்சியை வளர்த்தலும் அத்தகைய
ஆராய்ச்சி பற்றி அவ்வப்போது அறிக்கைகளைக் கோருவதற்கும்;
(35) இப்பல்கலைக்கழகத்தின் பொறுப்பில் விடப்பட்டுள்ள சொத்துக்கள்,
நிதியங்கள். அனைத்தையும் அவை ஒதுக்கப்பட்ட திட்டவட்டமான
நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்காகவும்;
(36) இப்பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்படும் நிலைக் கொடைகள், உயில்
வழிக்கொடைகள், நன்கொடைகள், மானியங்கள் மற்றும் அதற்கு உரிமை
மாற்றங்கள் மூலமாக அளிக்கப்படும் அசையும், அசையாச் சொத்துக்களை
அவற்றை இப்பல்கலைக்கழகத்தின் சார்பாக ஏற்றுக்கொள்வதற்கும்;
(37) தன் அதிகாரங்களில் எதையும் துணை வேந்தருக்கோ, தன்
உறுப்பினர்களுக்கிடையே இருந்து அமைந்த குழு ஒன்றிற்கோ அல்லது
நிலைமுறை விதிகளுக்கு இணங்க நியமிக்கப்பட்ட குழு ஒன்றிற்கோ ஒப்படைவு
செய்வதற்கும் அதிகாரம் பெற்றிருக்கும்.
24. ஆட்சிக் குழுவின் கூட்டங்கள்.- (1) ஆட்சிக் குழு, அத்தகைய
காலத்திலும் இடங்களிலும், குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையேனும்
கூடுதல் வேண்டும் மற்றும் (2) மற்றும் (3)-ஆம் உட்பிரிவுகளின்
வகைமுறைகளுக்கு உட்பட்டு, நிலைமுறை விதிகளில்
வகுத்துரைக்கப்படக்கூடியவாறு அதன் கூட்டங்களின் குறைவெண்:
உள்ளடங்கலாக, அதன் கூட்டங்களின் அலுவல் நடத்துகை பொறுத்த நடைமுறை
விதிகளைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
(2) துணை வேந்தர் அல்லது அவர் வராததின் பேரில், வந்திருக்கும்
உறுப்பினர்களால் தெரிந்தெடுக்கப்படும் உறுப்பினர் எவரும் ஆட்சிக் குழுவின்
கூட்டத்தில் தலைமை வகித்தல் வேண்டும்.
(3) ஆட்சிக் குழுவின் கூட்டம் எதிலுமுள்ள பிரச்சினைகள் அனைத்தும்,
வந்திருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் பெரும்பாண்மையால் முடிவு
செய்யப்படுதல் வேண்டும்; மற்றும் வாக்குகள் சமமாக இருக்கும் நேர்வில், துணை
வேந்தர் அல்லது நேர்விற்கேற்ப தலைமை வகிக்கும் உறுப்பினர், இரண்டாம்
அல்லது அறுதி செய்வாக்கு ஒன்றைப் பெற்றிருப்பதோடு அதனைப் பயன்படுத்தல்
வேண்டும்.
(4) பதவிவழி உறுப்பினராக இருக்கிற அரசு செயலாளர் எந்த
காரணத்தாலேனும் ஆட்சிக் குழுவின் கூட்டத்திற்கு வருகை தருவதற்கு
இயலாதிருக்கின்ற நேர்வில், அரசுத் துணைச் செயலாளரின் படிநிலைக்குக்
கீழல்லாத அவருடைய துறையினைச் சேர்ந்த அலுவலர் ஒருவரை
அக்கூட்டத்திற்கு வருகை தர அனுப்பி வைக்கலாம்; அவ்வாறு அனுப்பி
வைக்கப்பட்ட அலுவலர், கூட்ட நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு உரிமை
கொண்டவராகவும், வாக்களிப்பதற்கும் உரிமை கொண்டவராகவும் இருப்பார்.
(5) (@ ஆட்சிக் குழு கலந்தாய்வு செய்யும் நோக்கத்திற்காகப்
பரிசீலனையிலுள்ள பொருள் எதிலும் சிறப்பறிவு அல்லது நடைமுறைப் பட்டறிவு
உடைய நபர் எவரையும் கூட்டம் எதிலும் வருகை தருமாறு அழைக்கலாம்.
அத்தகைய நபர் கூட்ட நடவடிக்கைகளில் பேசலாம் மற்றும் பிறவாறு பங்கெடுத்துக்
கொள்ளலாம்; ஆனால்,வாக்களிப்பதற்கு உரிமையுடையவராக மாட்டார்;
(b) அவ்வாறு அழைக்கப்பட்ட நபர் ஆட்சிக் குழுவின்
உறுப்யினரொருவருக்கு அனுமதிக்கப்படத்தக்க அத்தகைய நாட்படி மற்றும்
பயணப்படிகளுக்குத் தகுதியுடையவர் ஆவார்.
25. ஆட்சிக் குழுவின் உறுப்பினர்கள் ஊதியத்திற்கு (remuneration)
உரிமையுடையவராகமாட்டார்கள் என்பது.- ஆட்சிக் குழுவின் உறுப்பினர்கள்.
நிலைமுறை விதிகளால் வகுத்துரைக்கப்படக்கூடிய பயண மற்றும் அத்தகைய
நாட்படிகள் தவிர பல்கலைக்கழகத்திடமிருந்து ஊதியம் (remuneration) எதையும்
பெறுவதற்கு உரினமயுடையவராகமாட்டார்கள்.
வரம்புரை: ஆனால், இந்தப் பிரிவில் அடங்கியுள்ள எதுவும், உறுப்பினர்
எவரையும் தாம் வகிக்கின்ற பதவியின்: காரணமாக தாம்
உரிமையுடையவராயிருக்கின்ற தம்முடைய ஊதியங்களைப் பெறுவதை தடை
செய்தலாகாது.
26. உறுப்பினர்களின் பதவி விலகல்.- ஆட்சிக் குழுவின் பதவி வழி
உறுப்பினரல்லாத பிற உறுப்பினர் ஒருவர் தம்முடைய பதவிக்கால அளவு
முடிவடைவதற்கு முன்பு எந்தச் சமயத்திலும் தம்முடைய உறுப்பினர் பதவி
விலகலைக் கொடுக்கலாம். அத்தகைய பதவி விலகலானது வேந்தருக்கு
அவ்வுறுப்பினரால் எழுத்துதுருவிலான கடிதமொன்றின் மூலம் தெரிவிக்கப்படுதல்
வேண்டும்; மற்றும் அப்பதவி விலகலானது வேந்தரால், அது ஏற்கப்படும்
தேதியிலிருந்து நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
27. ஆண்டு அறிக்கை.- (1) பல்கலைக்கழகத்தின் ஆண்டு அறிக்கை,
ஆட்சிக் குழுவினால் தயாரிக்கப்படுதல் வேண்டும் மற்றும் நிலைமுறை விதி
களால் வகுத்துரைக்கப்படக் கூடிய தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ கல்வி
ஆட்சிப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் கல்வி ஆட்சிப்
பேரவையினால் அதன் அடுத்த ஆண்டு கூட்டத்தில் அது பரிசீலனை
செய்யப்படுதல் வேண்டும். கல்வி ஆட்சிப்பேரவை அதன் மீது தீர்மானங்களை
நிறைவேற்றி அதை ஆட்சிக் குழுவிற்கு தெரியப்படுத்தலம். ஆட்சி குழு
அதற்கிணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(2) ஆட்சிக் குழுவானது, கல்வி ஆட்சிப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட
தீர்மானத்தின் மீது தான் எடுத்த நடவடிக்கை பற்றி கல்வி ஆட்சிப் பேரவைக்குத்
தெரிவித்தல் வேண்டும்.
(3) ஆண்டறிக்கையின் படியொன்றையும் (2) ஆம் உட்பிரிவின்படி
எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய குறிப்புடன் சேர்த்து கல்வி ஆட்சிப் பேரவையால்
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படியொன்றையும் ஆட்சிக் குழுவானது
தகவலுக்காக அரசுக்குப் பணிந்தனுப்புதல் வேண்டும்.
28. ஆண்டு கணக்குகள்.- [1] ஆட்சிக் குழுவானது
இப்பல்கலைக்கழகத்தின் ஆண்டு கணக்குகளை, அரசு பணிக்கக்கூடிய
பரிசலனைக்கும் தணிக்கைக்கும் அனுப்புதல் வேண்டும் மற்றும் ஆண்டு
கணக்குகள், தணிக்கை அறிக்கை ஆகியவற்றின் படியொன்றினை அரசுக்குப்
பணிந்தனுப்புதல் வேண்டும்.
(2) ஆட்சிக்குழுவானது. அத்தகைய தணிக்கையில் எழுப்பப்பட்ட
மறுப்புரைகளைத் தீர்த்துவைப்பதோடு, அத்தணிக்கை அறிக்கையின் பேரில்
அரசினால் பிறப்பிக்கப்படக்கூடிய அறிவுறுத்தக் கட்டளைகளை
நிறைவேற்றுதலும் வேண்டும்.
(3) கணக்குகள், தணிக்கை செய்யப்படும்போது, துணைமுறை விதிகளின்
மூலம் வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில், ஆட்சிக் குழுவினால்
வெளியிடப்படுதல் வேண்டும்; மற்றும் அதன் படிகள், கல்வி ஆட்சிப் பேரவைக்கு
அதன் அடுத்தக் கூட்டத்திலும், அத்தகைய வெளியீட்டிலிருந்து மூன்று
திங்களுக்குள்ளாக அரசுக்கும் பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்.
29. கல்வி ஆட்சிப்பேரவை.- (1) கல்வி ஆட்சிப் பேரவையானது, பின்வரும்
பதவிவழி மற்றும் பிற உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும், அதாவது:-
வகை | - பதவிவழி உறுப்பினர்.
(8) வேந்தர்;
(b) கணை வேந்தர்;
(c) துணை வேந்தர்;
(0) தமிழ்நாடு அரசுத் தலைமை வழக்குரைஞர்;
(6) உயர்ந்திமன்றத் தலைமை குற்றவியல் வழக்குரைஞர்;
(f) இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சட்டக்
கல்லூரிகளின் முதல்வர்கள்;
(ஐ இப்பல்கலைக்கழகத்தின் படிப்பு மற்றும் ஆராய்ச்சித் துறைகளின்
தலைவர்கள்;
(h) சென்னை உயர்ந்திமன்ற மகளிர் வழக்குறைஞர் சங்கத்தின்.
தலைவர்;
(i) சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தின் தலைவர்;
(0) சென்னை உயர்ந்திமன்றத்தின் வழக்குறைஞர் குழாத்தின் (Bar
4560018001) தலைவர்;
(k) இப்பல்கலைக்கழக நூலகத்தின் நூலகர்; மற்றும்
0) பிறவாறு கல்வி ஆட்சிப் பேரவையின் உறுப்பினர்களல்லாத
ஆட்சிக் குழுவின் உறுப்பினர்கள்.
வகை | -பிற உறுப்பினர்கள்
(a) (i) வணிகர் கழகம்;
(ii) சமூக அறிவியல்கள்; மற்றும்
(1) பிற அறிவியல்கள்;
ஆகிய ஒவ்வொன்றையும் சார்பாற்றஞ் செய்கின்றவாறு,
வேந்தரால் பெயர் குறித்து நியமனஞ் செய்யப்பட்ட ஒவ்வொர் உறுப்பினர்;
(b) புகழ்வாய்ந்த முதுநிலை வழக்கறிஞர்களுக்கிடையேயிருந்து,
அரசினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள்;
அவர்களில் ஒருவர் பெண் வழக்குரைஞராக இருக்க வேண்டும்;
(c) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின்
உறுப்பினர்களுக்கிடையேயிருந்து அரசினால் பெயர் குறித்து
நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர்;
@) தமிழ்நாடு வழக்குரைஞர் பதிவு மன்றத்தால் பெயர் குறித்து
நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள்;
(8) சென்னை உயர்ந்திமன்றத்தின் தலைமை ந்திபதியால் பெயர்
குறித்து நியமிக்கப்பட்ட பதவியிலிருக்கின்ற அல்லது பதவி ஓய்வு பெற்ற
நீதிபதி ஒருவர்; மற்றும்
) இணைக்கப்பட்ட கல்லூரிகளின். ஆசிரியர்களால்
அவர்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வோர்
இணைக்கப்பட்ட கல்லூரியின் ஆசிரியரொருவர்.
(2) (a) வேறுவிதமாக வகைசெய்யப்பட்டவாறு அல்லாமல், கல்வி ஆட்சிப்
பேரவைக்கு தேந்தெடுக்கப்பட்டுள்ள மற்றும் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ள,
உறுப்பினர்கள் மூன்றாண்டு கால அளவிற்குப் பதவி வகித்தல் வேண்டும் மற்றும்
அத்தகைய உறுப்பினர்கள், மற்றொரு மூன்றாண்டு கால அளவிற்கு மேற்படாமல்
தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது பெயர் குறித்து நியமிக்கப்படுவதற்குத் தகுதி
உடையவர்கள் ஆவார்.
(b) உறுப்பினர் ஒருவர், கல்வி ஆட்சிப் பேரவையின் தற்காலிகக்
காலியிடம் ஒன்றிற்குத் தேர்ந்தெடுக்கப்படுமிடத்து, அல்லது பெயர் குறித்து
நியமிக்கப்படுமிடத்து அத்தகைய உறுப்பினர் எவராலேனும் ஓராண்டுக்குக்
குறையாத கால அளவிற்கு வகித்து வரப்படும் பதவிக் கால அளவான மூன்றாண்டு
மொத்தக் கால அளவாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.
முதலாம் வரம்புரை: ஆனால் குறிப்பிட்டதொரு வாக்காளர் தொகுதியின்
அல்லது அமைப்பின் உறுப்பினர் ஒருவரென்கிற அல்லது குறிப்பிட்டதொரு
நியமனத்தை வகித்து வருபவரென்கிற தம் தகுதியில் கல்வி ஆட்சிப் பேரவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்டிருக்கிற
உறுப்பினர் ஒருவர், அவர் எந்தத் தேதியில் இருந்து அந்த வாக்காளர் தொகுதியின்
அல்லது அமைப்பின் உறுப்பினராக இருப்பது அல்லது நேர்விற்கேற்ப, இந்த
நியமனத்தினை வகிப்பது அற்றுப் போகிறதோ, அந்தத் தேதியில் இருந்து, அவர்
கல்வி ஆட்சிப் பேரவையின் உறுப்பினராக இருப்பதும் அற்றுப்போகும்.
இரண்டாம் வரம்புரை: மேலும் கல்வி ஆட்சிப் பேரவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர்,
எந்தப் பதவியின் காரணமாக கல்வி ஆட்சிப் பேரவையின் பதவி வழி உறுப்பினராக
இருப்பதற்கு அவர் தகுதியுடையராயிருக்கின்றாரோ அந்தப் பதவிகளில்
எதற்கேனும். தற்காலிகமாக நியமிக்கப்படுகிறவிடத்து, தாம்
தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்டதன்
காரணமாக கல்வி ஆட்சிப் பேரவையின் உறுப்பினராக தொடர்ந்து இருப்பதற்கு
விரும்புகிறாரா அல்லது அத்தகைய உறுப்பினராக இருக்கும் பதவியை விட்டு
நீங்கி தாம் நியமிக்கப்பட்டதன் காரணமாகப் பதவிவழி உறுப்பினராக ஆவதற்கு
விரும்புகிறாரா என்பதை அவர் தம் நியமனப் பெறுப்பை மேற்கொள்கின்ற தேதியில்
இருந்து ஏழு நாட்களுக்குள்ளாக தம்மால் கையொப்பமிடப்பட்டுத் துணை
வேந்தருக்கு தெரிவிக்கப்பட்ட எழுத்து மூலமாக அறிவிப்பின் வாயிலாக தெரிவு
செய்தல் வேண்டும்; மற்றும் அந்த விருப்பத்தெரிவே அறுதியானதாகும். அத்தகைய
விருப்பத்தெரிவைச் செய்யத் தவறுவதன் பேரில், தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது
பெயர் குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினராகவுள்ள தம்முடைய பதவியை விட்டு
அவர் நீங்கிவிட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.
(3) நபர் ஒருவர், கல்வி ஆட்சிப் பேரவையின் உறுப்பினராக இருப்பது
அற்றுப்போகும்போது, அவர் கல்வி ஆட்சிப் பேரவையில் தாம் உறுப்பினராக
இருப்பதன் காரணத்தால், பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளில் எதிலேனும்.
உறுப்பினராக இருந்திருக்கக் கூடிய நிலையும் அற்றுப்போகும்.
(4) கல்வி ஆட்சிப் பேரவையின் உறுப்பினர்கள், வகுத்துரைக்கப்படக்கூடிய
அத்தகைய நாட்படி மற்றும் பயணப்படிகள் தவிர, பல்கலைக்கழகத்திடமிருந்து
ஊதியம் எதையும் பெறுவதற்கு உரிமையுடையவர்கள் ஆகமாட்டார்கள்.
வரம்புரை: ஆனால் இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும் உறுப்பினர்கள்.
எவரையும் தாம் வகிக்கின்ற பதவியின்: காரணமாகக் தாம்
உரிமையுடையவராயிருக்கிற தம்முடைய வழக்கமான ஊதியங்களைப்
பெறுவதைத் தடை செய்தல் ஆகாது.
(5 கல்வி ஆட்சிப் பேரவையின் பதவிவழி உறுப்பினர் அல்லாத பிற
உறுப்பினர் ஒருவர் தமது பதவி முடிவடைகிற கால அளவிற்கு முன்பு எந்தச்
சமயத்திலும் தம்முடைய உறுப்பினர் பதவியை விட்டு விலகலாம். அத்தகைய பதவி
விலகலானது அவ்வுறுப்பினரால் வேந்தருக்கு எழுத்து மூலமான கடிதம் ஒன்றின்
வாயிலாகத் தெரிவிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அப்பதவி விலகலானது
வேந்தரால் அது ஏற்கப்படும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.
30. பல்கலைக்கழகத்தின் முக்கியமான கொள்கைகளையும்,
செயற்திட்டங்களையும் கல்வி ஆட்சிப் பேரவை ஆய்வு செய்தல்.- இந்தச்
சட்டத்தின் பிற வகைமுறைகளுக்கு உட்பட்டு கல்வி ஆட்சிப் பேரவையானது
பின்வரும் அதிகாரங்களையும் அலுவற்பணிகளையும் கொண்டதாக இருக்கும்
அதாவது :-
(a) பல்கலைக்கழகத்தின். முக்கியமான கொள்கைகளையும்,
செயற்திட்டங்களையும், அவ்வப்போது ஆய்வு செய்தல், மற்றும்
பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்குமான நடவடிக்கைகளுக்கு
யோசனை கூறுதல்;
(b) அதனிடம் ஆலோசனைகாகக் குறித்தனுப்பப்படும் பொருட்கூறு எதன்
தொடர்பாகவும், வேந்தருக்கு ஆலோசனை வழங்குதல்; மற்றும்
(2) நிலைமுறை விதிகளினால் வகுத்துரைக்கப்படக்கூடிய பிற
அதிகாரங்களைச் செலுத்திவருதல்; மற்றும் அலுவற்பணிகளைப் புரிந்துவருதல்.
31. கல்வி ஆட்சிப் பேரவையின் கூட்டங்கள். (1) கல்வி ஆட்சிப் பேரவை
துணை வேந்தரால் நிருணயிக்கப்படும் தேதிகளன்று, ஆண்டு ஒவ்வொன்றிலும்
இருமுறையேனும் கூடுதல் வேண்டும். அத்தகைய கூட்டங்களில் ஒன்று ஆண்டு
கூட்டம் என்று வழங்கப்படுதல் வேண்டும். கல்வி ஆட்சிப் பேரவை அவ்வப்போது
அது தீர்மானிக்கக்கூடிய பிற நேரங்களிலும் கூடலாம்.
(2) கல்வி ஆட்சிப் பேரவையின் மொத்த உறுப்பினர்களின்.
எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி எண்ணிக்கை, கல்வி ஆட்சிப் பேரவைக்
கூட்டம் ஒன்றிற்குக் கோரப்படும் குறைவெண் வரம்பாக இருக்கும்.
வரம்புரை: ஆனால் பட்டங்கள் விருதுகள், பட்டயங்கள் அல்லது பிற கல்விச்
சிறப்புகள் ஆகியவற்றை வழங்கும் நோக்கத்திற்காக நடத்தப்படும் பல்கலைக்கழகப்
பட்டமளிப்பு விழா ஒன்றிற்கு அல்லது கல்வி ஆட்சிப் பேரவையின் கூட்டம்
ஒன்றிற்கு அத்தகைய குறைவெண்ணானது கோரப்படுதல் ஆகாது.
(3) துணை வேந்தர், தாம் பொருத்தமென நினைக்கும் போது, ஆட்சிப்
பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டலாம் மற்றும் கல்வி ஆட்சிப்
பேரவையின் மொத்த உறுப்பினர்களில் நூற்றுக்கு ஐம்பது விழுக்காட்டிற்குக்
குறையாத உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டுச் செய்யப்படும்
எழுத்துருவிலான வேண்டுகோள் ஒன்றின் பேரிலும், ஆட்சிப் பேரவையின் சிறப்புக்
கூட்டத்தை அவர் கூட்டுதல் வேண்டும்.
32. நிதிக்குழு- (1) நிதிக்குழு, பின்வரும் உறுப்பினர்களைக்
கொண்டதாயிருக்கும், அதாவது:-
(ஐ துணை வேந்தர்;
(b) நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;
(6) சட்டத்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;
(0) ஆட்சிக் குழுவினால், அதனுடைய உறுப்பினர்களுக்கிடையேயிருந்து
பெயர் குறித்து நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள்; அவர்களில் ஒருவர்
பல்கலைக்கழகப் பேராசிரியராக இருத்தல் வேண்டும், ஒருவர் அரசினால் ஆட்சிக்
குழுவிற்குப் பெயர் குறித்து நியமிக்கப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
(2 (1) ஆம் உட்பிரிவில் (௦) மற்றும் (ஐ) ஆகிய கூறுகளில்
குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர் எவரும் எக்காரணத்தினாலேனும் நிதிக்குழுக்
கூட்டத்திற்கு வருவதற்கு இயலாதிருப்பாராயின், அவர் அரசுத் துணைச்
செயலாளரின் படிநிலைக்குக் கீழல்லாத தம் துறையின் அலுவலர் எவரையும்
அத்தகைய கூட்டத்திற்கு வருகை தருவதற்கு அனுப்பி வைக்கலாம்; அவ்வாறு
அனுப்பி வைக்கப்படும் அலுவலர், நிதிக்குழுவின் விவாதங்களில் பங்கேற்க
உரிமை பெற்றிருப்பார், மற்றும் வாக்களிப்பதற்கும் உரிமை பெற்றிருப்பார்.
(3) துணை வேந்தர், நிதிக்குழுவில் பதவிவழித் தலைவராகயிருந்து வருவார்;
மற்றும் நிதி அலுவலர் நிதிக்குழுவின் பதவிவழிச் செயலாளராய் இருந்து வருவார்.
(4) (1) ஆம் உட்பிரிவின் (0) எனும் கூறின்படி ஆட்சிக் குழுவினால் நிதிக்
குழுவிற்கு பெயர் குறித்து நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் மூன்றாண்டு
கால அளவிற்கு பதவி வசகிப்பர்.
(5) நிதி அலுவலரால் தயாரிக்கப்பட்ட பல்கலைக்கழக ஆண்டு கணக்குகள்
பரிசீலனைக்காகவும், கருத்துரைகளுக்காகவுமென நிதிக்குழுவின் முன்பு
வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அதன் பின்பு ஒப்புதலளிப்பதற்காக ஆட்சிக்
குழுவிற்குப் பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்.
(6) நிதி அலுவலரால் தயாரிக்கப்பட்ட பல்கலைக்கழக நிதி மதிப்பீடுகள்.
பரிசீலனைக்காகவும் கருத்துரைகளுக்காகவுமென நிதிக் குழுவின் முன்பு
வைக்கப்படுதல் வேண்டும். நிதிக்குழுவினால் மாற்றியமைக்கப்பட்டபடியான
மேற்சொன்ன மதிப்பீடுகள், அதற்குப் பின்பு, பரிசலனைக்காக ஆட்சிக்குழுவின்
முன்பு வைக்கப்படுதல் வேண்டும். ஆட்சிக்குழு நிதி மதிப்பீடுகளுக்குத் தாம்
பொருத்தமெனக் கருதுகிற அத்தகைய மாற்றங்களுடன் ஒப்புதலளிக்கலாம்.
(7) நிதிக்குழுவானது, பல்கலைக்கழகத்தின் வருமானம் மற்றும் வள:
ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், ஆண்டிற்கான மொத்த தொடர்
செலவினம் மற்றும் மொத்த தொடராச் செலவினம் ஆகியவற்றின் வரம்புகளைப்
பரிந்துரைக்க வேண்டும். அத்தகைய வரம்புகள், ஆக்கப்பூர்வமான பணிகளைப்
பொறுத்த அளவில் கடன்களிலிருந்து பெறும் தொகையை உள்ளடக்கியனவாக
இருக்கலாம்.
(3) நிதிக் குழு-
(a) கணக்குகளைப் பரிச்லனை செய்வதற்கும் மற்றும்
செலவினத்திற்கான கருத்துக்களைக் கூர்ந்தாய்வு செய்வதற்கும் குறைந்தது
மூன்று திங்களுக்கு ஒரு முறையாவது கூடுதல் வேண்டும்;
(௦) அவ்வப்போது பல்கலைக்கழகத்தின் நிதி நிலையை ஆய்வு செய்தல்
வேண்டும்;
(©) ஆண்டு நிதி மதிப்பீடுகளில் வகைமுறை எதுவும் செய்யப்பட்டிராத
முதலீடு அல்லது செலவினத்தை உள்ளடக்குகிற அல்லது ஆண்டு நிதி
மதிப்பீடுகளில் வகைசெய்யப்பட்டுள்ள தொகைக்கு மேற்பட்ட செலவை
உள்ளடக்கியுள்ள கருத்துரு ஒவ்வொன்றின்பேரிலும், ஆட்சிக் குழுவுக்கு
பரிந்துரை செய்தல் வேண்டும்;
(0) பல்கலைக்கழகத்தின் கணக்குகளை வைத்துப் பேணி வருவதற்கான
முறையையும் நடைமுறையையும் படிவங்களையும் வகுத்துரைக்கும்;
(ஐ) பல்கலைக்கழக நிதிகள் தொடர்பான அனைத்துப் பொருள்களின்.
பேரிலும் ஆட்சிக் குழுவிற்குப் பரிந்துரை செய்யும்; மற்றும்
(0 நிலைமுறை விதிகளால் வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய பிற
அலுவற்பணிகளைப் புரிந்துவரும்.
33. திட்டமிடுங்குழுமம்.-- (1) பல்கலைக்கழகத் திட்டமிடுங்குழுமம் ஒன்று
அமைத்துருவாக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது பல்கலைக்கழகத்தின்
பொதுவாக திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்குதல் வேண்டும்;
மற்றும் பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தரத்தை ஆய்வு
செய்துவருதலும் வேண்டும்.
(2) திட்டமிடுங்குழுமம், பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டதாக
இருக்கும், அதாவது:-
(ஐ) துணை வேந்தர், அவர் திட்டக் குழுமத்தின் பதவிவழித் தலைவராக
இருப்பார்; மற்றும்
(௦) ஆட்சிக் குழுவால் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட உயர்கல்வித் தர
நிலையிலுள்ள எண்மருக்கு மேற்படாதவர்கள்.
(3) திட்டமிடுங்குழுமம், இந்தச் சட்டத்தால் அதனிடம் உற்றமையச்
செய்யப்பட்டுள்ள பிற அதிகாரங்கள் அனைத்தினோடும்கூட, கல்விப்பொருள்
எதனின் பேரிலும் ஆட்சிக் குழுவிற்கும் கல்வி ஆட்சிப் பேரவைக்கும்
ஆலோசனை கூறுவதற்கான உரிமையையும் உடையது ஆகும்.
(4) திட்டமிடும் குழுமத்தில் பெயர் குறித்து நியமனம் செய்யப்பட்ட
உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்றாண்டு ஆகும். தங்கள் பதவிக்காலம்
முடிவுற்ற பின், அவர்கள் மறுமுறை பெயர் குறித்து நியமனம் செய்யப்படுவதற்கு
உரிமையுடையவராவார்கள்.
34. பாடத்திட்டக் குழுமம்.- (1) கற்பிக்கின்ற அல்லது ஆய்வு செய்கிற துறை
ஒவ்வொன்றுடனும் இணைக்கப்பட்ட பாடத்திட்டக் குழுமமொன்று இருந்துவரும்.
(2) அப்பாடத் திட்டக்குழுமத்தை அமைத்துருவாக்குதலும், அவற்றின்.
அதிகாரங்களும் வகுத்துரைக்கப்படக்கூடியவாறு இருக்கும்.
35. பிற அதிகாரஅமைப்புகளை அமைத்துருவாக்குதல்.- ஆட்சிக்
குழுவானது, நிலைமுறை விதிகளால் வகுத்துரைக்கப்பட்ட முறையில்
தேவைப்படக்கூடியவாறு பல்கலைக்கழகத்தின். அத்தகைய பிற
அதிகாரஅமைப்புகளை அமைத்துருவாக்கலாம்.
36. குழுக்களை அமைத்துருவாக்குதலும் அதிகாரங்களை ஒப்படைவு
செய்தலும்.- பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகள் அனைத்தும், குழுக்களை
அமைத்துருவாக்குவதற்கும் அல்லது மாற்றியமைத்துருவாக்குவதற்கும் மற்றும்
அவை தக்கதெனக் கருதும் அத்தகைய அதிகாரங்களை அவற்றுக்கு ஒப்படைவு
செய்வதற்கும் அதிகாரம் உடையது ஆகும்; அத்தகைய குழுக்கள் வேறுவிதமாக
வகை செய்யப்பட்டவாறல்லாமல், தொடர்புடைய அதிகாரஅமைப்பின்.
உறுப்பினர்களையும் ஒவ்வொரு நேர்விலும் அதிகாரஅமைப்பு தக்கதெனக் கருதும்
பிற நபர்கள் எவரேனுமிருப்பின், அவர்களையும் கொண்டதாக இருக்கும்.
37. புலங்களை அமைத்துருவாக்குதலும் அவற்றின் அலுவற்பணிகளும்.-
(1) பல்கலைக்கழகமானது அதன் நோக்கங்களையும் அலுவற்பணிகளையும்
கருத்திற்கொண்டு நிலைமுறை விதிகளால், வகுத்துரைக்கப்படக்கூடிய
முறையில் அத்தகைய புலங்களை அமைத்துருவாக்கலாம்.
(2) இப்புலங்களை அமைத்துருவாக்குதலும் அவற்றின் அலுவற்பணிகளும்
பிற அனைத்து வகைகளிலும் நிலைமுறை விதிகளின் மூலம்
வகுத்துரைக்கப்படக்கூடியனவாக இருக்கும்.
(3) புலம் ஒவ்வொன்றும் நிலைமுறை விதிகளில்
வகுத்துரைக்கப்படக்கூடியவாறு கற்பிக்கின்ற துறைகளைக் கொண்டதாயிருக்கும்.
அத்தியாயம் V.
நிலைமுறை விதிகள், துணைமுறை விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள்.
38. நிலைமுறை விதிகள்.- இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு
உட்பட்டு நிலைமுறை விதிகள் பின்வரும் பொருள்கள் அனைத்திற்கும் அல்லது
அவற்றில் எதற்கும் வகை செய்யலாம், அதாவது:-
(1) பட்டங்களையும் பட்டயங்களையும் மற்றும் பிற கல்விச் சிறப்புகளையும்
வழங்குவதற்காகப் பட்டமளிப்பு விழாக்களை நடத்துதல்;
(2) மதிப்புறு பட்டங்களையும் பிற கல்விச் சிறப்புகளையும் வழங்குதல்;
(3) இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகளை அமைத்துருவாக்குதல்
அவற்றின் அதிகாரங்கள் மற்றும் அலுவற்பணிகள்;
(4) இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகளின்
உறுப்பினர்களுக்கிடையிலான காலியிடங்களை நிரப்புவதற்கான முறை;
(5) இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகளின் மற்றும் அவற்றின்
குழுக்களின் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய படித்தொகைகள்;
(6) இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகளின் கூட்டங்களின்
அலுவல் நடத்துவதற்கான குறைவெண்: உள்ளடங்கலாக அத்தகைய
கூட்டங்களின் நடைமுறை;
(7) இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகளின் ஆணைகள் அல்லது
முடிவுகளுக்கு உறுதியொப்பமிடுதல்;
(8) இப்பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிக்கான துறைகளை உருவாக்குதல்;
(9) வேந்தர் மற்றும் இணை வேந்தர் நீங்கலாக பல்கலைக்கழகத்தின் பிற
அலுவலர்களின் பதவிக்கான காலஅளவு மற்றும் பதவியமர்த்த முறைகள் மற்றும்
பணி பற்றிய நிபந்தனைகள்;
(10) இப்பல்கலைக்கழகத்தினால் இணைக்கப்பட்ட கல்லூரிகளால் அல்லது
நிலையங்களால் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள் மற்றும் பிற நபர்களின்
தகுதிப்பாடுகள்;
(11) இப்பல்கலைக்கழகத்தினால் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள்:
மற்றும் பிற நபர்களை வகைப்படுத்துதல்; அவர்களின் நியமனமுறை மற்றும்
அவர்களின் பணி பற்றிய வரையறைகளையும் நிபந்தனைகளையும் தீர்மானித்தல்;
(12) இப்பல்கலைக்கழகத்தினால் பணியிலமர்த்தப்படும் அலுவலர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் பிற நபர்களின் நண்மைக்காக ஓய்வூதியம், பணிக்கொடை,
காப்பீடு அல்லது வருங்கால வைப்பு நிதியத்தை ஏற்படுத்துதல்;
(13) பட்டதாரி உதவித் தொகைகள், பட்டதாரி பண உதவித் தொகைகள்,
படிப்புதவித் தொகைகள், மாணவ உதவித் தொகைகள், உதவிச் சம்பளங்கள்,
ஆதரவுப் படித்தொகைகள், பதக்கங்கள், பரிசுகள் ஆகியவற்றை ஏற்படுத்துதலும்
அவற்றை அளிப்பதற்கான நிபந்தனைகளும்;
(14) இப்பல்கலைக்கழகத்துடன் கல்லூரிகளை இணைப்பதற்கான
நிபந்தனைகள்;
(15) ஒரு கல்லூரி எந்த முறையிலும் எந்த நிபந்தனைகளுக்குட்பட்டும்
தன்னாட்சிக் கல்லூரறியெனக் குறிப்பிடப்படலாம் மற்றும் அவ்வாறு
குறிப்பிடப்பட்டதை எந்த நிபந்தனைகளுக்குட்பட்டு அழித்தறவு (இரத்து)
செய்யலாம் என்பதும் மற்றும் கல்லூரியில் பாடத் திட்டக் குழுக்கள் மற்றும்
தேர்வாளர் குழுக்கள் ஆகியவற்றை அமைத்தல், மாற்றியமைத்தல், அவற்றின்
அதிகாரங்கள் மற்றும் கடமைகள் ஆகியவை உள்ளடங்கலாக தன்னாட்சிக்
கல்லூரிகளின் நிருவாகம் சார்ந்த பொருள்களும் (விஷயங்களும்);
(16) கூடங்கள், மாணவர் இல்லங்கள் ஆகியவற்றை நிறுவுதலும் பேணி
வருதலும்;
(17) இப்பல்கலைக்கழகத்தினால் பேணி வரப்படுபவையல்லாத பிற மாணவர்
இல்லங்களுக்கு ஏற்பிசைவு அளிப்பதற்கான நிபந்தனைகள்;
(18) கூடங்களிலும் மாணவர் இல்லங்களிலும் இப்பல்கலைக்கழக
மாணவர்கள் தங்கியிருப்பதற்கான நிபந்தனைகளும் மற்றும் அவ்வாறு
தங்கியிருப்பதற்கான கட்டணங்கள் மற்றும் பிற தொகைகளை விதித்தலும்;
(19) பட்டதாரிகள் பதிவு செய்து கொள்வதற்கான நிபந்தனைகள் மற்றும்
அதற்கான பதிவேட்டைப் பேணி வருதல்;
(20) இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகளிடம் அல்லது
அலுவலர்களிடம் உற்றமைந்துள்ள அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்; மற்றும்
(21) நிலைமுறை விதிகளால் வகுத்துரைக்கப்படத் தேவைப்படுகின்ற
அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய பிற பொருள் எதுவும்.
39. நிலைமுறை விதிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பது. (1)
ஆட்சிக் குழு, அவ்வப்போது நிலைமுறை விதிகளைச் செய்யலாம் என்பதுடன்
இந்தப் பிரிவில், இதன்பின்பு வகைசெய்யப்பட்டுள்ள முறையில் அந்நிலைமுறை
விதிகளைத் திருத்தியமைக்கலாம் அல்லது நீக்கம் செய்யலாம்.
(2) கல்வி ஆட்சிப் பேரவை அல்லது துணை வேந்தர், ஆட்சிக் குழுவால்
நிறைவேற்றப்பட வேண்டிய நிலைமுறை விதி எதனின் அல்லது நிலைமுறை
விதியொன்றின் திருத்தம் அல்லது நீக்கம் எதனின் வரைவையும் ஆட்சிக்
குழுவிடம் முன்மொழியலாம் என்பதுடன், அத்தகைய வரைவானது ஆட்சிக்
குழுவால் அதன் அடுத்த கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படுதலும் வேண்டும்;
வரம்புரை: ஆனால், துணை வேந்தர், பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்பு
ஏதொன்றின் தகுநிலை அதிகாரங்கள், அமைப்பு ஆகியவற்றை பாதிக்கின்ற
நிலைமுறை விதி எதற்குமான திருத்தம் எனையும், அத்தகைய அதிகாரஅமைப்பு
தனது கருத்தை வெளியிடுவதற்கு நியாயமானதொரு வாய்ப்பு அதற்குக்
கொடுக்கப்படும் வரையில் முனண்மொழிதல் ஆகாது; மேலும் அவ்வாறு
வெளியிடப்படும் அதன் கருத்தானது, ஆட்சிக் குழுவால் பரிசீலனை செய்யப்படுதல்
வேண்டும்.
(3) ஆட்சிக்குழு, (2)-ஆம் உட்பிரிவின்படி கல்வி ஆட்சிப் பேரவையாலும்
துணை வேந்தராலும் முன்மொழியப்பட்ட வரைவைப் பரிச்லனை ுசய்யலாம்
என்பதுடன், அந்த வரைவை நிறைவேற்றலாம் அல்லது தள்ளிவிடலாம் அல்லது
திருத்தங்களுடனோ இல்லாமலோ அதனை மறுபரிசீலனைக்காக கல்வி ஆட்சிப்
பேரவைக்கு அல்லது துணை வேந்தருக்குத் திருப்பி அனுப்பிவைக்கலாம்.
(4) (ஐ) ஆட்சிக் குழுவின் உறுப்பினர் எவரும், நிலைமுறை விதியொன்றின்.
வரைவை அல்லது நிலைமுறை விதி எதனையும் திருத்தம் செய்வதற்கான
அல்லது நீக்கஞ் செய்வதற்கான வரைவை ஆட்சிக் குழுவிடம் முன்மொழியலாம்;
மற்றும் ஆட்சிக் குழு அதனை ஏற்கலாம் அல்லது அவ்வரைவானது கல்வி
மன்றத்தின் வீச்சிற்குள் வராத ஒரு பொருட்கூறினைப் பற்றியதாக
இருக்குமானால், அதனைத் தள்ளிவிடலாம்;
(௦) அத்தகைய வரைவானது கல்வி ஆட்சிப் பேரவையின் வீச்சிற்குள்:
வருகின்ற ஒரு பொருட்கூறினைப் பற்றியதாக இருக்கின்ற நேர்வில்,
ஆட்சிக்குழு அதனைக் கல்வி ஆட்சிப் பேரவையிடம் பரிசீலனைக்குக்
குறிப்பிட்டனுப்புதல் வேண்டும்; ஆட்சிப் கல்வி பேரவையானது அந்த வரைவிற்கு
தான் ஒப்புதலளிக்கவில்லையென்று ஆட்சிக் குழுவிடம் அறிவிக்கலாம், அல்லது
கல்வி ஆட்சிப்பேரவை ஒப்புதலளிக்கக்கூடிய வடிவத்தில் ஆட்சிக் குழுவிடம்
அவ்வரைவை அனுப்பிவைக்கலாம்; மேலும் ஆட்சிக் குழு திருத்தங்களுடனோ
இல்லாமலோ அதனை நிறைவேற்றலாம் அல்லது அவ்வரைவைத் தள்ளிவிடலாம்.
(5 ஆட்சிக் குழுவால் நிறைவேற்றப்பட்ட நிலைமுறை விதியொன்றோ
அல்லது ஒரு நிலைமுறை விதிக்கான திருத்தமொன்றோ அல்லது
நக்கமொன்றோ வேந்தருக்கு பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்; அவர் அதற்கு
ஏற்பிசைவை அளிக்கலாம் அல்லது தனது ஏற்பிசைவைக் கொடுக்காமல் நிறுத்திக்
கொள்ளலாம். ஆட்சிக் குழுவால் நிறைவேற்றப்பட்ட நிலைமுறை விதியொன்றோ
அல்லது ஒரு நிலைமுறை விதிக்கான திருத்தமொன்றோ அல்லது
நீக்கமொன்றோ வேந்தரால் ஏற்பிசைவு அளிக்கப்படுகின்ற வரையில்
செல்லுந்தன்மை எதுவும் பெற்றிருத்தலாகாது.
40. துணைமுறை விதிகள்.- (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கும்
நிலைமுறை விதிகளுக்கும் உட்பட்டு, துணைமுறை விதிகள், பின்வரும்
பொருள்கள் அனைத்திற்குமோ அவற்றில் எதற்குமோ வகை செய்யலாம்;
அதாவது:-
(ஐ பல்கலைக்கழகத்திலும் அதனுடன் இணைப்புப் பெற்ற கல்லூரிகளிலும்
மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளுதல் மற்றும் பல்கலைக்கழகத்திலும்,
கல்லூரிகளிலும் சேர்த்துக் கொள்வதற்குக் கட்டணம் விதித்தல் குறித்து;
(b) பல்கலைக்கழகத்துப் பட்டங்கள், பட்டயங்கள், பிற கல்விச் சிறப்புகள்
ஆகிய அனைத்திற்கும் வழிகோலுகின்ற ஒரு குறித்தகால படிப்புப் பிரிவுகள்:
குறித்து:
(௦9) பல்கலைக்கழகத்துப் பட்டங்கள், பட்டயங்கள், பிற கல்விச் சிறப்புகள்
ஆகியவற்றிற்கு வழிகோலுகின்ற ஒரு குறித்தகால படிப்புப் பிரிவுகளுக்கு எந்த
நிபந்தனைகளின்படி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது
குறித்து:
(0) பல்கலைக்கழகத்துத் தேர்வுகளை நடத்துதல்; மற்றும் அத்தகைய
தேர்வுகளுக்கு எந்த நிபந்தனைகளின்படி மாணவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட
வேண்டும் என்பது குறித்து;
(ஐ) தேர்வுகளுக்கு மாணவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவது தொடர்பாக
எம்முறையில் விலக்குகள் அளிக்கப்படலாம் என்பது குறித்து;
(1) தேர்வு செய்கின்ற அமைப்புகளின் மற்றும் தேர்வு செய்பவர்களின் நியமன
நிபந்தனைகளும், முறையும் எவை என்பது குறித்தும் கடமைகள் எவை என்பது
குறித்தும்;
(ஐ பல்கலைக்கழகத்தின். மாணவர்களுக்கிடையே ஒழுக்கநெறி
நடத்தையைப் பேணி வருதல் என்பது குறித்து;
(h) குறித்தகாலப் படிப்புப் பிரிவுகளுக்காக, ஆராய்ச்சிக்காக
பரிசோதனைக்காக மற்றும் செய்முறைப் பயிற்சிக்காக மற்றும் பல்கலைக்கழகத்துப்
பட்டங்கள், பட்டயங்கள், பிற கல்விச் சிறப்புகள் ஆகியவற்றிற்கான தேர்வுகளுக்கு
மாணவர்களை ஏற்றுக் கொள்வதற்காக விதிக்கப்படக்கூடிய கட்டணங்கள்
குறித்து; மற்றும்
(i) இந்தச் சட்டத்தாலோ நிலைமுறை விதிகளின்லோ செய்யப்பட
வேண்டுமென கோரப்படுகிற அல்லது துணைமுறை விதிகளால்
வகுத்துரைக்கப்படக்கூடிய பிற பொருட்கூறு எதுவும் குறித்து.
41. துணைமுறை விதிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பது.- (1)
துணைமுறை விதிகளைச் செய்கையில், ஆட்சிக் குழுவானது,
(ஐ அத்தகைய துணைமுறை விதிகள் தேர்வாளர்களின் நியமனத்தையும்
கடமைகளையும் பாதிக்கிறபோது, பாடத்திட்ட குழுமங்களையும்;
(௦) தேர்வுகள் நடத்தப்படுவதை அல்லது அவற்றின் தரத்தை அல்லது
மாணவர்களின் தங்குமிடம் குறித்து நிந்தனைகளை அவை பாதிக்கிறபோது,
கல்வி ஆட்சிப்பேரவையையும்;
கலந்தாய்வு செய்தல் வேண்டும்.
(2) ஆட்சிக்குழுவினால் செய்யப்படும் துணைமுறை விதிகள் அனைத்தும்,
ஆட்சிக்குழு பணிக்கக்கூடிய தேதியிலிருந்து நடைமுறைக்கு வருதல் வேண்டும்;
மற்றும் அவ்வாறு செய்யப்படும் ஒவ்வொரு துணைமுறை விதியும், அது
செய்யப்பட்ட பின்னர் கூடியவிரைவில் வேந்தருக்கும் கல்வி ஆட்சிப்
பேரவைக்கும் பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்; மற்றும் அதனைக் கல்வி ஆட்சிப்
பேரவை, தனது அடுத்துவரும் கூட்டத்தில் பரிசீலனை செய்தல் வேண்டும்.
(3) வேந்தர், துணைமுறை விதி ஏதொன்றின் செயற்பாடும், கல்வி
ஆட்சிப்பரவை அதனைப் பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பு ஒன்றினைப்
பெற்றிருக்கின்ற காலம் வரையிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும்
என்று பணிக்கலாம்.
42. ஒழுங்குமுறை விதிகள்.- (1) ஆட்சிக் குழு மற்றும் கல்வி ஆட்சிப்
பேரவை, இந்தச் சட்டத்தினாலும், நிலைமுறை விதிகளினாலும், துணைமுறை
விதிகளினாலும் ஒழுங்குமுறை விதிகளின் மூலமாக வகை செய்யப்பட வேண்டிய
பிற பொருள்கள் அனைத்திற்காகவும் அல்லது அவற்றில் எதற்காகவும், இந்தச்
சட்டத்தின் வகைமுறைகள் நிலைமுறை விதிகள், துணைமுறை விதிகள்.
ஆகியவற்றிற்கு இணங்கிய வகையில் ஒழுங்குமுறை விதிகளைச் செய்யலாம்.
(2) அத்தகைய ஒழுங்குமுறை விதிகள் அனைத்தும் ஆட்சிக் குழு அல்லது
நேற்விற்கேற்ப, கல்வி ஆட்சிப் பேரவை, இதன் பொருட்டுக் குறிக்கக்கூடிய
தேதியிலிருந்து நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
அத்தியாயம்-.
மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளுதலும் அவர்களின் தங்குமிடங்களும்.
43. இப்பல்கலைக்கழகத்தின் குறித்தகால படிப்புப் பிரிவுகளுக்கு
மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளுதல்.- (1) நபர் எவரும்,
(ஐ வகுத்துரைக்கப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்
என்றாலன்றி, மற்றும்
(b) பல்கலைக்கழகத்தினால் வகுத்துரைக்கப்படக்கூடிய பிற
நிபந்தனைகளை நிறைவு செய்கிறார் என்றாலன்றி,
அவர் பல்கலைக்கழகப் பட்டங்கள் அல்லது பட்டயங்கள் அல்லது பிற
கல்விச் சிறப்புகளுக்கான தேர்வுகளுக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக,
பல்கலைக்கழகத்தில் குறித்த கால படிப்புப் பிரிவு ஒன்றில் சேர்த்துக்
கொள்ளப்படுதல் ஆகாது.
(2) பல்கலைக்கழகத் தேர்வுக்கான தேர்வு நாடுநர் (Candidate)
ஒவ்வொருவரும் கல்வி ஆட்சிப் பேரவையின் பரிந்துரையின் பேரில் ஆட்சிக்
குழுவின் தனி ஆணையின் வாயிலாக இந்த உட்பிரிவின் வகைமுறைகளில்
இருந்து அவர் விலக்களிப்பட்டிருந்தாலன்றி பல்கலைக்கழக கல்லூரி
நேர்விற்கேற்ப இணைக்கப்பட்ட கல்லூரி ஒன்றின் ஓர் உறுப்பினராகப் பதிவு
செய்து கொள்ளப்படுதல் வேண்டும். அத்தகைய விலக்களிப்பு எதுவும், ஆட்சிக்குழு
பொருத்தமென கருதக்கக்கூடிய நிபந்தனைகளுக்கு உட்பட்டுச் செய்யப்படலாம்
(3) (2 ஆம் உட்பிரிவின் வகைமுறைகளில் இருந்து விலக்களிக்கப்பட்ட
மாணவர்களுக்கும், பட்டப் படிப்பிற்கான குறித்தகால படிப்புப் பிரிவு அல்லாத பிற
படிப்புப் பிரிவுகளுக்கு வகுத்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கிணங்க சேர்த்துக்
கொள்ளப்பட்ட மாணவர்களும், பல்கலைக்கழகத்தின் கல்லூரி சாரா மாணவர்களாக
இருந்துவருவர்.
44. அரசு கல்லூரிகளுக்கும் நிலையங்களுக்கும் மாணவர்களைத் தெரிவு
செய்தலும் சேர்த்துக் கொள்ளுதலும்.- 43-ஆம் பிரிவில் அல்லது இந்தச்
சட்டத்தின் பிற வகைமுறைகளில் எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும்,-
(ஐ அரசுக் கல்லூரிகளிலும் நிலையங்களிலும் உள்ள குறித்தகால படிப்புப்
பிரிவு ஒன்றுக்கு அல்லது பயிற்சிக்கு மற்றும் அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைப்
பொறுத்த அளவில் இந்தச் சட்டம் பொருந்துகிற அரசு உதவி பெறும் கல்லூரி
உள்ளடங்கலான தனியார் கல்லூரிகளிலும் நிலையங்களிலும் உள்ள குறித்த கால
படிப்புப் பிரிவு ஒன்றுக்கு அல்லது பயிற்சிக்குத் தேர்வு நாடுநர்களைத் தெரிவு
செய்வதற்கும் சேர்த்துக் கொள்வதற்கும் அரசு தகுதி வாய்ந்த அதிகாரஅமைப்பாக
இருக்கும்; மற்றும்
(b) அரசுக் கல்லூரிகளிலும் நிலையங்களிலுமுள்ள குறித்தகால
அளவிற்கான ஒரு படிப்பிற்கு அல்லது பயிற்சிக்கு மற்றும் அரசுக்கு ஒதுக்கப்பட்ட
இடங்களைப் பொறுத்த அளவில் இந்தச் சட்டம் பொருந்துகிற அரசு உதவி பெறும்
கல்லூரி உள்ளடங்கலான தனியார் கல்லூரிகளிலும் நிலையங்களிலுமுள்ள
குறித்த கால படிப்புப் பிரிவு ஒன்றுக்கு அல்லது பயிற்சிக்குத் தேர்வு நாடுநர்களைத்
தெரிவு செய்வதற்கும் சேர்த்துக் கொள்வதற்குமான கொள்கை, வழிகாட்டு
நெறிகள், முறை (Method), நடைமுறை (procedure) ஆகியவற்றைப் பொது அல்லது
தனி ஆணையின் வாயிலாக அரசு குறித்துரைக்கலாம்.
விளக்கம்.- இந்தப் பிரிவில், "அரசுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள்" என்னும்
சொற்றொடருக்கு, இந்தச் சட்டம் எந்தத் தணியார் கல்லூரிகள் அல்லது
நிலையங்களுக்குப் பொருந்துகிறதோ அந்தத் தனியார் கல்லூரிகளில் அல்லது
நிலையங்களில், குறித்தகால படிப்பிரிவு ஒன்றுக்கு அல்லது பயிற்சிக்கு சேர்த்துக்
கொள்ளப்படுவதற்காக தெரிவு செய்யப்பட்டு ஒப்புதலளிக்கப்பட்ட மாணவர் பெயர்ப்
பட்டியலில் இருந்து, அரசினால் நிரப்பப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள்
என்று பொருள்படும்.
45. இப்பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு ஏற்றுக் கொள்ளுதல்.- தேர்வு
நாடுநர் எவரும், அவர் பல்கலைக்கழகத்தின் கல்லூரி, ஒன்றின் அல்லது
இணைக்கப்பட்ட அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட கல்லூரி ஒன்றின் உறுப்பினர்
ஒருவராகத் தமது பெயரைப் பதிவு செய்து கொண்டிருந்தாலன்றி மற்றும்.
அதற்கான ஒழுங்குமுறை விதிகளின்படி கோரப்படும் வருகைப் பதிவு குறித்த
தேவைப்பாடுகளை நிறைவு செய்திருக்கிறார் என்றாலன்றி, அல்லது
வகுத்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறை விதிகளின்படி செய்யப்பட்ட கல்வி ஆட்சிப்
பேரவையின் பரிந்துரையின் மீது பிறப்பிக்கப்பட்ட, ஆட்சிக் குழுவின் ஆணை
ஒன்றின் வாயிலாக பெயர்ப் பட்டியலில் பதிவு செய்தலுக்கான தேவைப்பாடுகள்
அல்லது வருகைப்பதிவு அல்லது இரண்டிலுமிருந்தும் அவர்
விலக்களிக்கப்பட்டிருந்தாலன்றி, பல்கலைக்கழக தேர்வு எதற்கும் ஏற்றுக்
கொள்ளப்படுதல் ஆகாது. இந்தப் பிரிவின்படி வழங்கப்பட்ட விலக்களிப்புகள்
ஆட்சிக் குழு பொருத்தமென கருதும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவையாக
இருக்கும்.
46. இப்பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான தகுதிதரு வருகைப் பதிவு.-
இப்பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும், அல்லது பல்கலைக்கழகத்தோடு
இணைக்கப்பட்ட அல்லது அதனால் ஒப்புதலளிக்கப்பட்டதாக அல்லாத பிற
கல்லூரி அல்லது நிலையம் எதிலும் அளிக்கப்படும் பயிற்றுவித்தலில் வருகைப்
பதிவு எதுவும், பல்கலைக்கழகத் தேர்வு எதற்கும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தகுதி
வாய்ந்ததாக ஆக்காது.
47. தங்குமிடங்களும் விடுதிகளும்.-- கல்லூரி சாரா மாணவர் அல்லாத
பல்கலைக்கழகத்தின் பிற மாணவர் ஒவ்வொருவரும், விடுதி ஒன்றிலோ அல்லது
வகுத்துரைக்கப்படக்கூடிய பிற நிபந்தனைகளின்படியோ தங்க வேண்டுமென்று
கோரப்படுதல் வேண்டும்.
அத்தியாயம்-1.
பல்கலைக்கழக நிதியங்கள் முதலானவை.
48. பொது நிதியங்கள்.- பல்கலைக்கழகம், பொது நிதியமொன்றைப்
பெற்றிருக்கும்; அந்நிதியத்தில்,-
(ஐ கட்டணங்கள், மானியங்கள், நன்கொடைகள் மற்றும் கொடைகள்
ஆகியவற்றிலிருந்ததான வருமானம் எவையேனுமிருப்பின் அவற்றையும்;
(b) மைய அரசாலோ, மாநில அரசு எதனாலுமோ, உள்ளாட்சி
அதிகாரஅமைப்பு எதனாலுமோ பல்கலைக்கழக மாணிய குழுவாலோ, மைய
அரசுக்கு அல்லது மாநில அரசு ஏதொன்றுக்கும் சொந்தமான அல்லது அதனால்
கட்டுப்பாடு செய்யப்பட்டு வரும் அது போன்ற பிற அமைப்பு எதனாலும் அல்லது
கழகம் எதனாலுமோ அளிக்கப்படும் பங்களிப்புத் தொகை அல்லது மானியம்
எதனையும்;
(௦9) நிலைக்கொடைகளையும் பிற வரவுகளையும்; மற்றும்
(0) அதனால் கடன் வாங்கப்பட்ட பணத்தையும் வரவு வைத்தல் வேண்டும்.
49. பிற நிதியங்கள்.- பல்கலைக்கழகம், நிலைமுறை விதிகளால்
வகுத்துரைக்கப்படக்கூடிய பிற நிதியங்களைப் பெற்றிருக்கலாம்.
50. நிதியங்களை நிருவகித்து வருதல்.- பல்கலைக்கழகத்து
நிதியங்களையும் அனைத்துப் பணங்களையும் நிலைமுறை விதிகளால்
வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில் நிருவகித்து வருதல் வேண்டும்.
அத்தியாயம்-॥.
பணி நிபந்தனைகள்.
51. ஓய்வூதியம், பணிக்கொடை முதலானவை. (1) பல்கலைக்கழகமானது
தன் அலுவலர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகத்தால் பணியிலமர்த்தப்பட்டுள்ள
மற்றவர்கள் ஆகியோரின் நண்மைக்காக வகுத்துரைக்கப்படக்கூடிய முறையிலும்
நிபந்தனைகளுக்குட்பட்டும் தான் பொருத்தமெனக் கருதக்கூடிய ஓய்வூதியம்,
பணிக்கொடை, காப்பீடு, வருங்கால வைப்பு நிதியம் ஆகியவற்றை ஏற்படுத்துதல்
வேண்டும்.
(2) பல்கலைக்கழகம், (1)-ஆம் உட்பிரிவின்படி வருங்கால வைப்பு
நிதியமொன்றை அவ்வாறு ஏற்படுத்தியுள்ளவிடத்து, பல்கலைக்கழகம் ஓர்
உள்ளாட்சி அதிகாரஅமைப்பாகவும், அந்நிதியம் அரசின் வருங்கால வைப்பு
நிதியமாகவும் இருந்தாற்போன்றே, 1925-ஆம் ஆண்டு வருங்கால வைப்பு நிதியச்
சட்டத்தின் (மையச் சட்டம் XIX/1925) வகைமுறைகள் அத்தகைய நிதியத்திற்குப்
பொருந்துதல் வேண்டும் என அரசு விளம்பலாம்.
(3) பல்கலைக்கழகம், நிதிக் குழுவைக் கலந்தாய்வு செய்து, தான்
தீர்மானிக்கக்கூடிய முறையில் வருங்கால வைப்பு நிதியத் தொகையை முதலீடு
செய்யலாம்.
52. பணி நிபந்தனைகள்.- இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குட்பட்டு,
பல்கலைக்கழகத்தில் பணியிலமர்த்தப்பட்டுள்ள அலுவலர்கள், ஆசிரியர்கள்,
மற்றவர்கள் ஆகியோரின் நியமனம், அவர்களைத் தெரிவு செய்வதற்கான
நடைமுறை, அவர்களின் சம்பளம் மற்றும் படித்தொகைகள் மற்றும் பிற பணி
நிபந்தனைகள் ஆகியவை நிலைமுறை விதிகளால் வகுத்துரைக்கப்படக்
கூடியவாறு இருத்தல் வேண்டும்.
வரம்புரை: ஆனால், பல்கலைக்கழகத்தில் செய்யப்படும் நியமனங்களைப்
பொருத்தவரையில், அரசின் கீழ் வருகின்ற பணிகளில் செய்யப்படும்
நியமனங்களுக்கு பொருந்துவன போன்ற இடஒதுக்கீடு முறையே பின்பற்றப்படுதல்
வேண்டும்.
விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக, "அலுவலர்கள்" என்னுஞ்
சொல், வேந்தரையும் இணை வேந்தரையும் உள்ளடக்காது.
53. தேர்வுக் குழு.- (1) பல்கலைக்கழகத்தினால் பேணிவரப்படும்.
பல்கலைக்கழகக் கல்லூரிகள் மற்றும் நிலையங்களின் பேராசிரியர், உதவிப்
பேராசிரியர், சிறப்புப் பேராசிரியர், விரிவுரையாளர், நூலகர் ஆகிய பதவிகளுக்கு
நியமனஞ் செய்ய, ஆட்சிக் குழுவிற்குப் பரிந்துரைகளைச் செய்வதற்காகத் தேர்வுக்
குழு இருத்தல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு நியமனஞ்
செய்வதற்கான தேர்வுக் குழுவானது, துணை வேந்தரையும், வேந்தரின்
நியமனதாரர் ஒருவரையும், அரசின் நியமனதாரர் ஒருவரையும், நிலைமுறை
விதிகளால் வகுத்துரைககப்படக்கூடிய பிற நபர்களையும் கொண்டிருக்கும்.
வரம்புரை: மற்றும் அத்தகைய நியமனத்திற்காக தேர்வுக் குழுவினால்
செய்யப்படும் தேர்வானது, பல்கலைக்கழக மானியக் குழுவாலோ, அத்தகைய
நியமனம் தொடர்பான பிற முகவாண்மை அமைப்புகளினாலோ வழங்கப்படக்கூடிய
வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்கிய வகையில் செய்யப்படுதல் வேண்டும்.
54. துறைத் தலைவர்களின் நியமனம் பற்றிய வரைமுறைகளும்
நிபந்தனைகளும்.- (1) பல்கலைக்கழகத்தின் துறை ஒவ்வொன்றும், தலைவர்
ஒருவரைக் கொண்டிருக்கும்; அவர் பேராசிரியராக இருக்க வேண்டும்; அவரது
கடமைகளும் அலுவற்பணிகளும் மற்றும் நியமனத்திற்கான வரைமுறைகளும்
நிபந்தனைகளும் துணைமுறை விதிகளினால் வகுத்துரைக்கப்படக்கூடியவாறு
இருத்தல் வேண்டும்.
முதலாம் வரம்புரை.- ஆனால், துறை எதிலேனும் ஒன்றிற்கு மேற்பட்ட
பேராசிரியர்கள்: இருப்பார்களாயின், துணைமுறை விதிகளினால்
வகுத்துரைக்கப்பட்ட முறையில் அத்துறையின் தலைவர் நியமனம் செய்யப்படுதல்
வேண்டும்;
இரண்டாம் வரம்புரை.- மேலும், துறை ஒன்றில் பேராசிரியர் எவரும்
இல்லாதிருக்குமிடத்து, உதவிப் பேராசிரியர் அல்லது சிறப்புப் பேராசிரியர் ஒருவர்,
துணைமுறை விதிகளினால் வகுத்துரைக்கப்பட்டுள்ள முறையில் துறை
தலைவராக நியமனம் செய்யப்படலாம்.
(2) துறை தலைவராக நியமனம் செய்யப்படுவதற்கான உரிமையளிப்பினை
ஏற்கவியலாதென மறுப்பதற்கு பேராசிரியர் அல்லது உதவிப் பேராசிரியர் அல்லது
சிறப்புப் பேராசிரியருக்கு உரிமையுண்டு.
(3) துறை தலைவராக நியமனம் செய்யப்பட்ட நபர் ஒருவர், அத்தகையவராக
மூன்றாண்டு காலஅளவிற்குப் பதவி வகிப்பார், மற்றும் மறுநியமனத்திற்கு அவர்
தகுதியுடையவர் ஆவார்.
(4) துறை தலைவர் ஒருவர் தம் பதவிக் காலத்தின் போது எந்த நேரத்திலும்
பதவியை விட்டு விலகிக் கொள்ளலாம்.
5) துறை தலைவர் ஒருவர் துணைமுறை விதிகளால்
வகுத்துரைக்கப்படக்கூடிய அலுவற்பணிகளைப் புரிந்து வருதல் வேண்டும்.
55. புலங்களின் முதன்மையர்கள்.- (1) புலத்தின் முதன்மையர்
ஒவ்வொருவரும், அந்தப் புலத்தின் பேராசிரியர்களிடையேயிருந்து துணை
வேந்தரால் மூன்றாண்டு காலஅளவிற்கு நியமனம் செய்யப்படுதல் வேண்டும்;
மற்றும் அவர் மறுநியமனத்திற்கும் தகுதியுடையவர் ஆவார்.
முதலாம் வரம்புரை: ஆனால், முதன்மையர் ஒருவர் ஐம்பத்தெட்டு வயதை
எய்தியதன்பேரில் அவர் அவ்வாறு பதவி வகிப்பது அற்றுப்போகும்;
இரண்டாம் வரம்புரை: மேலும், புலம் ஒன்றில் பேராசிரியர் எவரும்
இல்லாதிருக்கிற எந்த நேரத்திலும், துணை வேந்தர், அப்புலத்தில்
முதன்மையருக்கான அதிகாரங்களைச் செலுத்தி வருவார்.
(2) முதனண்மையரின் பதவி காலியாக இருக்கிறபோது, அல்லது முதண்மையர்
நோய், வாராமை அல்லது பிற காரணம் எதன் காரணமாகவும் அல்லது பதவிக்கான
கடமைகளை ஆற்றுவதற்கு இயலாதிருக்கும்போது, அவரது பதவிக்கான
கடமைகளை துணை வேந்தரால் அந்நோக்கத்திற்கான நியமனம்
செய்யப்படக்கூடிய நபரால் ஆற்றிவரப்படுதல் வேண்டும்.
(3) முதன்மையர், புலத்தின் தலைவராக இருந்து வருவார் மற்றும் அதன்
அப்புலத்தில் கற்பித்தல் மற்றும் ஆய்வினை நடத்துவதற்கும் அதன்
தரநிலைகளைப் பேணி வருவதற்கும் அவர் பொறுப்பானவராக இருந்து வருவார்.
முதன்மையர் துணைமுறை விதிகளால் வகுத்துரைக்கப்படக்கூடிய பிற
அலுவற்பணிகளையும் கொண்டிருப்பார்.
(4) பாடத்திட்டக் குழுமம் அல்லது குழுக்களின் அல்லது நேர்வுக்கேற்ப
புலத்தின் கூட்டம் எதற்கும் முதன்மையர் வந்திருக்கவும், அவற்றில் பேசுவதற்கும்
உரிமை கொண்டவராக இருப்பார் ஆனால், அதன் உறுப்பினராக அவர்
இருந்தாலன்றி, அதில் வாக்களிப்பதற்கு அவர் உரிமையுடையவராகமாட்டார்.
அத்தியாயம் 1X.
பல்வகை.
56. தற்செயல் காலியிடங்களை நிரப்புதல்.- இப்பல்கலைக்கழகத்தின்
அதிகாரஅமைப்பு எதனின் அல்லது பிற குழுமம் எதனின் பதவிவழி உறுப்பினர்கள்
அல்லாத பிற உறுப்பினர்களிடையே எழும் தற்செயல் காலியிடங்கள் அனைத்தும்,
எந்த உறுப்பினருடைய பதவியிடம் காலியாக ஆகியுள்ளதோ அந்த உறுப்பினரைப்
பெயர் குறித்து நியமனம் செய்தவரால் அல்லது தேர்ந்தெடுத்தவரால் அல்லது
அமைப்பினால் எவ்வளவு விரைவில் கூடுமோ அவ்வளவு விரைவில்,
நிரப்பப்படுதல் வேண்டும், மற்றும் தற்செயல் காலியிடமொன்றுக்கு பெயர் குறித்து
நியமனம் செய்யப்பட்டவர் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர், எவருடைய
பதவியிடத்தை அவர் நிரப்புகிறாரோ அவர் ஓர் உறுப்பினராக இருந்திருக்கக்கூடிய
கால அளவின் எஞ்சிய பகுதிக்கு அத்தகைய அதிகாரஅமைப்பின் அல்லது
குழுவின் உறுப்பினராக இருப்பார்;
முதலாம் வரம்புரை.- ஆனால், பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்பு
எதற்கும் அல்லது பிற குழுமம் எதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு
இடையே காலக்கழிவினால் எழும் காலியிடங்கள், அந்தக் காலியிடங்கள் ஏற்படும்
தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முந்தியதாக இல்லாத துணை வேந்தர்
பொருத்தமென நினைக்கிற நாட்களில் நடைபெற வேண்டுமென அவரால் முடிவு
செய்யப்படக்கூடிய தேர்தல்கள் மூலம் நிரப்பப்படலாம்.
இரண்டாம் வரம்புரை.- மற்றும், பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்பு
எதனின் அல்லது பிற குழுமம் எதனின் உறுப்பினரின் பதவிக் காலம் முடிவடையும்
தேதிக்கு முந்திய ஆறு மாதங்களுக்குள், காலிப்பணியிடம் எதுவும் எழுமாயின்,
அத்தகைய காலியிடம் நிரப்பப்படுதல் ஆகாது.
57. இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகளின் மற்றும் பிற
அமைப்புகளின் நடவடிக்கைகள் காலியிடங்கள் இருப்பதன் காரணமாக
செல்லாதவையாக ஆக்கப்படுதல் ஆகா.- பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்பு
எதனின் அல்லது பிற அமைப்பு எதனின் செயல் அல்லது நடவடிக்கை எதுவும்
காலியிடம் எதுவும் இருக்கின்ற அல்லது பல்கலைக்கழகத்தின் அகிகாரஅமைப்பு
எதனின் அல்லது பிற அமைப்பு எதனின் உறுப்பினர் ஒருவர்
தேர்ந்தெடுக்கப்பட்டதில் அல்லது நியமனம் செய்யப்பட்டதில் குறைபாடு அல்லது
முறைகேடு எதுவும் இருக்கின்ற அல்லது நேர்வுக்குள் தகுதிகளைப் பாதிக்காத
வகையில், அத்தகைய செயல் அல்லது நடவடிக்கைகளில் குறைபாடு அல்லது
முறைகேடு எதுவும் இருக்கின்ற காரணத்தினால் மட்டுமே. அல்லது
பல்கலைக்கழகத்தில் அதிகாரஅமைப்பு அல்லது பிற அமைப்பானது இந்தச் சட்டம்
கோருகின்றபடி அத்தகைய இடைவெளிகளில் கூடவில்லை என்கின்ற
அடிப்படையில் மட்டுமே, செல்லாததாக ஆக்கப்படுதல் ஆகாது.
58. இப்பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுதல்.- (1)
ஆட்சிக் குழுவானது,
(ஐ ஆட்சிக் குழுவின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு
குறையாதவர்களால், செய்யப்படும் பறிந்துரைகளின்பேரில், இதன் பொருட்டுச்
செய்யப்படும் எழுத்து மூலமான ஆணையொன்றின் வாயிலாகப் பட்டதாரிகள்
பதிவேட்டிலிருந்து நபரெவரின் பெயரையும் நீக்கலாம்; அல்லது
(௦) இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு எதனின் உறுப்பினர் எவரும்
ஆட்சிக் குழுவின் கருத்தின்படி, ஒழுக்கக்கேட்டை உள்ளடக்கியதாக உள்ள ஒரு
குற்றச் செயலுக்காக குற்றவழக்கு நீதிமன்றம் ஒன்றினால் தண்டனைத் தர்ப்பு
வழங்கப்பட்டிருப்பாராயின், அல்லது கடுந்தவறான நடத்தைக் குற்றத்தை
இழைத்திருக்கும் குற்றவாளியாக இருப்பாராயின், ஆட்சிக் குழுவின் மொத்த
உறுப்பினர்களின் பெரும்பாண்மையினராலும் மற்றும் கூட்டத்திற்கு வருகை தந்து
வாக்களிக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின், மூன்றில் இரண்டு பங்குக்கு
குறையாத பெரும்பாண்மையினாலும் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின்.
மூலமாகவும் இதன் பொருட்டுப் பிறப்பிக்கப்பட்ட எழுத்து மூலமான
ஆணையொன்றின் வாயிலாகவும், அத்தகைய நபரைப் பல்கலைக்கழக
அதிகாரஅமைப்பு எதனின் உறுப்பினர் பதவியில் இருந்தும் ஆட்சிக் குழுவானது
நீக்கலாம்; மற்றும் அதே காரணத்திற்காக பல்கலைக்கழகத்தால் அந்த நபருக்கு
அளிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட பட்டம் அல்லது பட்டயம் அல்லது கல்விச்
சிறப்புகள் எதனையும் நீக்கித் திரும்பப் பெறலாம்.
(2) நபர் எவரும், மனச்சீர்கேடுற்றவராகவோ அல்லது ஒரு செவிட்டு
ஊமையராகவோ ஆகியிருக்கின்றாரெனில், அல்லது அவர் நொடிப்பு நிலை
அடைந்த ஒருவராக நீதிமுறையில் தீர்மானிக்கப்படுவதற்கு விண்ணப்பித்துக்
கொண்டிருந்தால், அல்லது நொடிப்பு நிலை அடைந்த ஒருவராக நீதிமுறையில்
தீர்மானிக்கப்பட்டிருந்தால், இதன் பொருட்டுப் பிறப்பிக்கப்பட்ட எழுத்து மூலமான
ஆணையொன்றின் வாயிலாக ஆட்சிக் குழுவானது, பல்கலைக்கழக
அதிகாரஅமைப்பு எதனின் உறுப்பினர் பதவியிலிருந்தும் அவரை நீக்கலாம்.
(3) நபர் எவர் மீதும் எடுக்கக் கருதியுள்ள நடவடிக்கைக்கு எதிராகக் காரணம்
காட்டுவதற்கு, அவருக்கு நியாயமான வாய்ப்பொன்று கொடுக்கப்பட்டிருந்தாலன்றி,
இந்தப் பிரிவின்படி நடவடிக்கை எதுவும் அவர்மீது எடுக்கப்படுதல் ஆகாது.
(4) 0-ஆம் உட்பிரிவு அல்லது, நேர்விற்கேற்ப, (2)-ஆம் உட்பிரிவின்படி
பிறப்பிக்கப்பட்ட ஆணையின் படியொன்று, அது அவ்வாறு பிறப்பிக்கப்பட்டதன்
பின்னர், கூடியவிரைவில், ஒழுங்குமுறை விதிகளால் வகுத்துரைக்கப்பட்டுள்ள
முறையில் தொடர்புடைய நபருக்கு அனுப்பி தெரிவிக்கப்படுதல் வேண்டும்.
59. இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளுக்கும் பிற அமைப்புகளுக்கும்
தேர்ந்தெடுத்தல் அல்லது பெயர் குறித்து நியமனம் செய்தல் பற்றிய பூசல்கள்.-
இப்பல்கலைக்கழக அதிகாரஅமைப்பு எதனின் அல்லது பல்கலைக்கழகத்தின் பிற
அமைப்பு எதனின் உறுப்பினர் ஒருவராக எவரும், உரியவாறு
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரா அல்லது பெயர் குறித்து நியமனம் செய்யப்பட்டுள்ளாரா
அல்லது உறுப்பினராக இருப்பதற்கு தகுதியுடையவராக இருக்கிறாரா என்பது
குறத்து பிரச்சனை எதுவும் எழுமாயின், அப்பிரச்சனை, வேந்தருக்குக்
குறித்தனுப்பப்படுதல் வேண்டும்; அதன். மீதான அவருடைய முடிவே
அறுதியானதாகும்.
60. குழுக்களை அமைத்துருவாக்குதல்.- பல்கலைக்கழக
அதிகாரஅமைப்புகள் அனைத்தும்; குழுக்களை அமைத்துருவாக்குவதற்கும்,
மாற்றியமைத்துருவாக்குவதற்கும் தங்களுடைய அதிகாரங்களில் தாங்கள்
பொருத்தமெனக் கருதுகிறவற்றை அவற்றிடம் ஒப்படைவு செய்வதற்கும்
அதிகாரம் உடையனவாயிருக்கும், அத்தகைய குழுக்கள், மற்றப்படி, வகை:
செய்யப்பட்டுள்ளவாறு தவிர, தொடர்புடைய அதிகாரஅமைப்பின்.
உறுப்பினர்களையும், அவ்வதிகாரஅமைப்பு, நேர்வு ஒவ்வொன்றிலும் தாம்
பொருத்தமெனக் கருதக்கூடிய பிற நபர்கள், எவரேனும் இருப்பின், அவர்களையும்
உள்ளடக்கியனவாக இருக்கும்.
61. தகவல் பெறுவதற்கான அதிகாரம்.- இந்தச் சட்டத்திலோ அல்லது
அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதிலுமோ என்ன
அடங்கியிருந்தபோதிலும், அரசு, எழுத்து மூலமான ஆணையின் வாயிலாக,
பல்கலைக்கழக அலுவல்கள் தொடர்பான பொருள் எதனையும் பற்றிய தகவல்
எதனையும் பல்கலைக்கழகத்திடமிருந்து கேட்டுப் பெறலாம் மற்றும்
பல்கலைக்கழகம், அத்தகைய தகவல் தன்னிடம் இருக்குமாயின், அத்தகைய
தகவலை நியாயமானதொரு காலஅளவிற்குள் அரசுக்கு அளித்தல் வேண்டும்:
வரம்புரை.- ஆனால், பல்கலைக்கழகம், மந்தணமானதெனக் கருதுகிற
தகவலைப் பொறுத்த அளவில், பல்கலைக்கழகமானது, அதனை வேந்தரின் முன்பு
அவர்தம் முடிவிற்காக வைக்கலாம்.
62. பட்டதாரிகளைப் பதிவு செய்தல்.- (1) இந்தச் சட்டம் தொடங்கிய
தேதியிலிருந்தும், அது முதற்கொண்டும்,-
() இந்தியாவின் பரப்பெல்லைக்குள் இருக்கின்ற பல்கலைக்கழகம்
எதனின் ஒரு சட்டப் பட்டதாரியாக குறைந்தது மூன்றாண்டிற்கேனும் இருந்து
வந்துள்ள; அல்லது
(i) இந்தியாவின் பரப்பெல்லைக்குள் இருக்கின்ற பல்கலைக்கழகம்
எதனின் பதிவுபெற்ற சட்டப் பட்டதாரியாக இருக்கின்ற
மற்றும் இப்பல்கலைக்கழகப் பரப்பிடத்திற்குள் வழக்கமாகக் குடியிருந்து
வருகின்ற ஒவ்வொருவரும்,
நிலைமுறை விதிகளால் வகுத்துரைக்கப்படக்கூடிய கட்டணத்தைச்
செலுத்துவதன். பேரிலும் நிபந்தனைகளுக்குட்பட்டும் ஐந்தாண்டுக்கால
அளவிற்கு, இந்தச் சட்டத்தின்படி பேணிவரப்படும் சட்டப் பட்டதாரிகள் பதிவேட்டில்
தனது பெயர் பதிவு செய்யப்படுவதற்குத் தகுதியுடையவராயிருப்பார்.
(2) ௬-ஆம் உட்பிரிவின்படி பதிவு செய்யப்படுவதற்கான அனைத்து
விண்ணப்பங்களும் வகுத்துரைக்கப்பட்ட கட்டணத்துடன், நிலைமுறை
விதிகளால் வகுத்துரைக்கப்படக்கூடிய, கல்வித் தகுதிகளுக்கான
நிரூபணங்களுடனும் சேர்த்து பதிவாளருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
(3) பதிவாளரானவர், (2)-ஆம் உட்பிரிவின்படி செய்து கொள்ளப்பட்ட
விண்ணப்பமொன்றைப் பெற்றதன் பேரிலும், தான் பொருத்தமெனக் கருதுகின்ற
விசாரணையைச் செய்த பின்னரும், அவ்விண்ணப்பதாரரின் பெயரைப்
பட்டதாரிகள் பதிவேட்டில் பதிவு செய்தல் வேண்டும்.
(4) (3-ஆம் உட்பிரிவின்படி, பட்டதாரிகள் பதிவேட்டில் தம் பெயர் பதிவு
செய்யப்பெற்றுள்ள நபர் ஒவ்வொருவரும், அப்பெயர்ப் பதிவினைப் புதுப்பிக்கும்
பொருட்டு, நிலைமுறை விதிகளால் வகுத்துரைக்கப்படக்கூடிய
காலத்திற்குள்ளும், முறையிலும் கட்டணங்களைச் செலுத்துவதன் பேரிலும்,
பதிவாளருக்கு விண்ணப்பஞ்செய்து கொள்வதன்பேறரில் ஒவ்வோர்
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அத்தகைய பெயர்ப் பதிவினைப் புதுப்பிக்கச்
செய்யப்பெறுவதற்கு உரிமையுடையவராயிருப்பார்.
63. முதல் துணை வேந்தரின் நியமனம்.- 12 ஆம் பிரிவின் (1) ஆம்
உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும் இந்தச் சட்டமானது தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து மூன்று திங்களுக்குள்ளாக, முதல்
துணை வேந்தரானவர் அரசினால், மூன்றாண்டிற்கு மேற்படாததொரு
காலஅளவிற்கு அதனால் நிர்ணயிக்கப்படும் சம்பளத்தின் பேரிலும் அது
பொருத்தமென கருதக்கூடிய பிற நிபந்தனைகளின் பேரிலும் நியமிக்கப்படுதல்
வேண்டும்.
வரம்புரை.- ஆனால், முதல் துணை வேந்தராக நியமிக்கப்பட்டவர்
அவருடைய பதவிக் காலத்தின்போது அறுபத்தைந்து வயதை எய்துவரானால்
பதவியிலிருந்து ஓய்வு பெறுதல் வேண்டும்.
64. முதல் பதிவாளரின் நியமனம்.- 15-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவில்
என்ன அடங்கியிருந்த போதிலும் இந்தச் சட்டமானது தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடப்படும் தேதியிலிருந்து மூன்று திங்களுக்குள்ளாக முதல்
பதிவாளரானவர் அரசினால் மூன்றாண்டிற்கு மேற்படாததொரு காலஅளவிற்கும்
அதனால் சம்பளத்தின் பேரிலும் அது பொருத்தமென கருதக்கூடிய பிற
நிபந்தனைகளின் பேரிலும் நியமிக்கப்படுதல் வேண்டும்.
வரம்புரை: ஆனால், முதல் பதிவாளராக நியமிக்கப்பட்டவர் அவருடைய
பதவிக் காலத்தின் போது ஐம்பத்தெட்டு வயதை அவர் எய்துவரானால்
பதவியிலிருந்து ஓய்வு பெறுதல் வேண்டும்.
65. முதல் துணை வேந்தரின் இடைப்படுகால அதிகாரங்கள்.- (1) துணை
வேந்தர் நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு திங்களுக்குள் அல்லது
அறிவிக்கையின் மூலம் அரசு பணிக்கக்கூடிய ஓராண்டுக்கு மேற்படாத மேலுமான
நீண்ட கால அளவிற்குள் ஆட்சிக்குழு கல்வி ஆட்சிப் பேரவை
இப்பல்கலைக்கழகத்தின் பிற அதிகாரஅமைப்புகள் ஆகியவற்றையும்
அமைத்துருவாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது முதல் துணை
வேந்தரின் கடமையாகும்.
(2) முதல் துணை வேந்தர் அரசைக் கலந்தறிந்து, இப்பல்கலைக்கழகம்
செயற்படுவதற்குத் தேவையாயிருக்கக்கூடிய விதிகளைச் செய்வார்.
(3) (1) ஆம் உட்பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட அதிகாரஅமைப்புகள்:
அரசு இதன்பொருட்டு அறிவிக்கையின் மூலம் குறித்துரைக்கக்கூடிய தேதியில்
அவற்றின் அலுவற்பணிகளைச் செலுத்தத் தொடங்குதல் வேண்டும்.
(4) தேவைப்படக்கூடிய நிலைமுறை விதிகள், துணைமுறை விதிகள்,
ஒழுங்குமுறை விதிகள் ஆகியவற்றை வரைந்து அவை பற்றி நடவடிக்கை
எடுக்கத் தகுதி வாய்ந்த அந்தந்த அதிகாரஅமைப்புகளுக்கு அவற்றை முடிவு
செய்தற்காக பணிந்தனுப்பபட வேண்டியது முதல் துணை வேந்தரின் கடமையாகும்.
அத்தகைய நிலைமுறை விதிகள், துணைமுறை விதிகள், ஒழுங்குமுறை விதிகள்:
ஆகியவை இயற்றப்பட்டவுடன் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும்.
(5) இந்தச் சட்டத்திலும் நிலைமுறை விதிகளிலும் எண்ன அடங்கியிருந்த
போதிலும் மற்றும் அதிகாரஅமைப்பு ஒன்று உரியவாறு அமைக்கப்படும் காலம்
வரையிலும் முதல் துணை வேந்தர் இந்தச் சட்டம் மற்றும் நிலைமுறை
விதிகளின்படி அத்தகைய அதிகாரஅமைப்பின் அதிகாரங்களைச் செலுத்திவரவும்
மற்றும் கடமைகள் எதனையும் ஆற்றி வரவும் தற்காலிகமாக அலுவலர் எவரையும்
நியமிக்கலாம் அல்லது குழு எதையும் அமைத்துருவாக்கலாம்.
66. நூலகர்.- (1) நூலகர் இந்நோக்கத்திற்காக அமைக்கப்படும் தேர்வுக்
குழுவின் பரிந்துரையின் பேரில் நிலைமுறை விதிகளால்
வகுத்துரைக்கப்படக்கூடிய கால அளவுக்கு அத்தகைய வரைகட்டுகள் மற்றும்
நிபந்தனைகளின் பேரிலும் ஆட்சிக்குழுவால் நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்
ஒரு முழு நேர அலுவலராக இருந்து வருவார்.
(2) நூலகர் ஆட்சிக்குழுவால் அவருக்குக் குறித்தளிக்கப்படக்கூடிய
அதிகாரங்களைச் செலுத்தி வருவதோடு கடமைகளையும் ஆற்றி வருவார்.
67. நியமிப்பதற்கான தனி முறை.- (1) உயர்கல்விச் சிறப்புகள் மற்றும்
தொழில் முறையில் சாதனைகளைச் செய்துள்ள நபர் ஒருவரை தான்
பொருத்தமெனக் கருதும் வரைகட்டுகள் மற்றும் நிபந்தனைகளின்பேரில்
பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பதவியினை ஏற்றுக்கொள்ளுமாறு ஆட்சிக்குழு
அழைக்கலாம்; மற்றும் அந்நபர் அவ்வாறு ஏற்றுக்கொண்டதன் பேரில் அவரை
அப்பதவியில் நியமிக்கலாம்.
(2) ஆட்சிக்குழு பிற பல்கலைக்கழகம் அல்லது அமைப்பு எதிலும்
பணியாற்றும் ஆசிரியரொருவரை அல்லது கல்வித்துறைப் பணியாளர் தொகுதியில்
பிற உறுப்பினர் எவரையும் துணைமுறை விதிகளில் வகுத்துரைக்கப்பட்ட
முறையில் கூட்டுச் செயற்திட்டத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கலாம்.
68. குறிப்பிட்ட ஒரு சில சட்டங்கள் குறித்தசில கூறுகளைப் பொறுத்து
பொருந்தா என்பது.- (1) (2) முதல் (7) வரையிலான உட்பிரிவுகளின்
வகைமுறைகளுக்குட்பட்டு 1923-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகச்
சட்டம் (தமிழ்நாடு சட்டம் VI 71923), 1965-ஆம் ஆண்டு மதுரை காமராசர்
பல்கலைக்கழகச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 3371965),1981-ஆம் ஆண்டு பாரதியார்
பல்கலைக்கழகச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 171982), 1984-ஆம் ஆண்டு
பாரதிதாசன் பல்கலைக்கழகச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 271982) (இதன் பின்பு
இந்தப் பிரிவில் மேற்சொல்லப்பட்ட சட்டங்கள் எனக் குறிப்பிடப்படுபவை)
ஆகியவை இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலும் அது முதற்கொண்டு இந்தச்
சட்டம் பொருந்துகிற கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களைப் பொறுத்துப்
பொருந்துவது அற்றுப்பொதல் வேண்டும்.
(2) அவ்வாறு அற்றுப் போவதானது (௦65801),-
@ (0-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும்
நிலையங்களைப் பொறுத்து மேற்சொல்லப்பட்ட பல்கலைக்கழகச் சட்டங்கள்
முன்னர் செயற்பாட்டில் இருந்ததையோ;
(b) மேற்சொல்லப்பட்ட பல்கலைக்கழகச் சட்டங்களுக்குப் புறம்பாக
செய்யப்பட்ட குற்றச்செயல் எதனின் தொடர்பாக அடைந்த தண்டம், தண்ட இழப்பு
அல்லது தண்டனை எதனையுமோ; அல்லது
(௦) அத்தகைய தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை தொடர்பான
புலனாய்வு, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி (பரிகாரம்) எதையும் பாதிக்கலாகாது;
மற்றும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படாதது போன்று அத்தகைய புலணாய்வு, சட்ட
நடவடிக்கைகள் அல்லது தீர்வழி (பரிகாரம்) எதுவும், தொடுக்கப்படலாம், தொடர்ந்து
நடத்தப்படலாம் அல்லது நிறைவேற்றப்படலாம்; மற்றும் அத்தகைய தண்டம், தண்ட
இழப்பு அல்லது தண்டனை எதுவும் விதிக்கப்படலாம்.
(3) (1-ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும்,
மேற்சொல்லப்பட்ட பல்கலைக்கழகச் சட்டங்களின் கீழ் செய்யப்பட்டவையும்
மற்றும் இந்தச் சட்டத்தின் தொடக்கக் தேதியில் நடைமுறையில் உள்ளவையுமான
நிலைமுறை விதிகள், துணைமுறை விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள்:
அனைத்தும், அவை எந்த அளவுக்கு இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு
ஒவ்வாதனவாக இல்லாதிருக்கின்றனவோ அந்த அளவுக்கு அவற்றிற்குப் பதிலாக
இந்தச் சட்டத்தின்கீழ் செய்யப்படும் நிலைமுறை விதிகள், துணைமுறை விதிகள்
மற்றும் ஒழுங்குமுறை விதிகள் ஆகியவை பதிலாக அமைகின்ற வரையிலும்
பல்கலைக்கழகப் பரப்பிடத்தில் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருதல்
வேண்டும்.
(4) இந்தச் சட்டத்தில் அல்லது 3-ஆம் உட்பிரிவின்படி தொடர்ந்து
நடைமுறையில் இருந்துவரச் செய்யப்பட்டுள்ள அல்லது இந்தச் சட்டத்தின்கீழ்
செய்யப்பட்ட நிலைமுறை விதிகள், துணைமுறை விதிகள் மற்றும் ஒழுங்குமுறை
விதிகளில் என்ன அடங்கியிருந்தபோதிலும், இந்தச் சட்டத்தின் தொடக்கத்
தேதிக்கு அடுத்து முன்னர் சென்னை பல்கலைக்கழகம், மதுரை-காமராசர்
பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன்
பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட அல்லது அவற்றால்
ஏற்பிசைவு அளிக்கப்பெற்று அல்லது அவற்றால் பேணி வரப்படுகின்ற
இப்பல்கலைக்கழகப் பரப்புக்குள் இருக்கின்ற கல்லூரி ஒன்றின் மற்றும்
மேற்சொன்ன பல்கலைக்கழகத் துறைகளின் மாணவராய் இருந்திருக்கின்ற
அல்லது மேற்சொல்லப்பட்ட பல்கலைக்கழகங்களின் சட்டத் தேர்வுகளில் எதையும்
எழுதுவதற்குத் தகுதி வாய்ந்தவராக இருந்திருக்கின்ற ஒவ்வொரு நபரும்
முறையே அந்தஅந்தப் பல்கலைக்கழகங்களில் தனது குறித்தகாலப் படிப்புப்
பிரிவினை முடிக்க அனுமதிக்கப்படுதல் வேண்டும் மற்றும் முறையே அந்தஅந்தப்
பல்கலைக்கழகங்களில் உள்ள குறிந்தகால படிப்புப் பிரிவிற்கிணங்க
படிப்பிற்கிணங்க தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தால்
தீர்மானிக்கக்கூடிய மாணவர்கட்கு தீர்மானிக்கப்படக்கூடிய காலஅளவுக்கு
தீர்மானிக்கப்படக்கூடிய முறையில் மற்றும் தீர்மானிக்கப்படக்கூடிய
பயிற்றுவித்தல், கற்பித்தல் மற்றும் பயிற்சிக்கு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்
பல்கலைக்கழகம் ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்; மேலும் அத்தகைய மாணவர்கள்
அந்தக் காலஅளவின் போது முறையே அந்தஅந்தப் பல்கலைக்கழகங்களால்
வைக்கப்படும் அல்லது நடத்தப்படும் தேர்வுகளுக்கு ஏற்றுக் கொள்ளப்படுதல்
வேண்டும் மற்றும் அத்தகைய தேர்வுகளின் முடிவின் பேரில் தகுதி பெற்ற
மாணவர்கட்கு நேரிணையான அப்பல்கலைக்கழகங்களின் பட்டம், பட்டயம்
அல்லது பிற கல்விச் சிறப்புகள் மேற்சொன்ன பல்கலைக்கழகங்களால்
அளிக்கப்படுதல் வேண்டும்.
(5) சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை-காமராசர் பல்கலைக்கழகம்,
பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன்
இணைக்கப்பட்டுள்ளதும் அல்லது அவற்றால் ஏற்பிசைவு
அளிக்கப்பட்டுள்ளவையும் மற்றும் மேற்சொன்ன பல்கலைக்கழகங்களின் பட்டப்
படிப்புப்பிற்கான தேர்வுக்கு ஏற்றுக் கொள்வதற்கான குறித்தகாலப் படிப்பு
பிரிவுகளை வழங்குகின்றவையுமா பல்கலைக்கழகப் பரப்பிடத்திற்குள்ளாக
அமைக்கின்ற கல்லூரிகளாக இணைபப்புப்பட்டியலில் குறிக்கரைக்கப்பட்ட
கல்லூரிகள் அனைத்தும் இந்தச் சட்டத்தின்படி இப்பல்கலைக்கழகத்துடன்
இணைக்கப்பட்ட கல்லூரிகளாகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் இந்தச்
சட்டத்தின் வகைமுறைகள் அதற்கிணங்கிய வகையில் இயன்றவரை
பொருந்துதல் வேண்டும்.
(6) (ஐ இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலும் அது முதற்கொண்டும்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தவிர, பிற பல்கலைக்கழகம்
எதுவும் பட்டப் படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு அளவிலோ அல்லது பிற ஏதேனும்
பட்டயமோ அல்லது சட்டவியலில் சான்றிதழோ வழங்குவதற்கோ சட்டவியலைக்
கற்பிக்கின்ற குறித்தகாலப் படிப்புப் பிரிவுகளை அளிக்கின்ற கல்லூரி எதனையும்
தொடங்குவதும் இணைப்பதும் கூடாது.
(b) அரசானது, இது குறித்து அறிவிக்கை செய்யப்படும் தேதியன்றும் அது
முதற்கொண்டும் மற்றும், நேர்விற்கேற்ப சென்னை பல்கலைக்கழகம், மதுரை
காமராசர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன்:
பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை வேந்தரைக் கலந்தாலோசித்து,
ஆணையயொன்றின் மூலமாக, அத்தகைய பல்கலைக்கழகம் எதிலும், செயல்புரிந்து
வருகின்ற சட்டவியலில் பட்டமேற்படிப்பு அளவில் கற்பதற்கு குறித்தகால படிப்புப்
பிரிவுகளை அளிக்கின்ற துறை எதனையும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்
பல்கலைக்கழகத்திற்கு மாற்றஞ் செய்யலாம்.
(7) இந்தச் சட்டம் தொடங்குகிற தேதிக்கு அடுத்து முன்னர், மேற்சொன்ன
பல்கலைக்கழகங்களால் தொடர்ந்து ஏற்பிசைவளிக்கப்பெற்று வருகின்ற,
இப்பல்கலைக்கழகப் பரப்பிடத்திற்குள் உள்ள விடுதிகள் அனைத்தும், இந்தச்
சட்டத்தின்படி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தால்
ஏற்பிசைவளிக்கப்பெற்ற விடுதிகளாகக் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் இந்தச்
சட்டத்தின் வகைமுறைகள், எந்த அளவுக்கு இயலுமோ அந்த அளவுக்கு
அதன்படியே பொருந்தும்.
(8) (2 ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்குட்பட்டு, ஆனால் (3) முதல்
(7) வரையிலான உட்பிரிவுகளின் வகைமுறைகளுக்கு ஊறில்லாமல், இந்தச்
சட்டத்தின் வகைமுறைகள் பொருந்துகின்ற பரப்பிடம் எதனையும் பொறுத்து,
மேற்சொன்ன பல்கலைக்கழகச் சட்டங்களின் வகைமுறை எதனின்படியும் இந்தச்
சட்டத்தின் தொடக்கத் தேதிக்கு முன்னர் செய்யப்பட்ட எதுவும் அல்லது
எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தின் நேறிணையான
வகைமுறையின்படி செய்யப்பட்டிருப்பதாகவோ அல்லது
எடுக்கப்பட்டிருப்பதாகவோ கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் இந்தச் சட்டத்தின்
நேரிணையான வகைமுறைகளின்படி செய்யப்பட்ட செயல் எதனாலும் அல்லது
எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனாலும் நீக்கப்பட்டாலன்றியும் மற்றும்
நீக்கப்படுகின்ற வரையிலும் அதன்படியே தொடர்ந்து நடைமுறையில்
இருந்துவருதலும் வேண்டும்.
69. தற்போது இருந்துவருகிற சட்டக்கல்லூழநிகளை
இணைக்கப்பட்டவையாகக் கொள்ளுதலும் சொத்தினையும் பணியாளர்களையும்
இடம் மாற்றுதலும்-- 1923-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகச் சட்டம்
(தமிழ்நாடு சட்டம் VI 71923), 1965-ஆம் ஆண்டு மதுரை காமராசர்
பல்கலைக்கழகச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 3371965),1981-ஆம் ஆண்டு பாரதியார்
பல்கலைக்கழகச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 171982), 1984-ஆம் ஆண்டு
பாரதிதாசன் பல்கலைக்கழகச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 2/1982)
ஆகியவற்றின்படிச் செய்யப்பட்ட நிலைமுறை விதிகள், துணணமுறை விதிகள்,
ஒழுங்குமுறை விதிகள், ஆணைகள் ஆகியவற்றில் என்ன
அடங்கியிருந்தபோதிலும், இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்றும் அது
முதற்கொண்டும், இணைப்புப் பட்டியலில் குறித்துரைக்கப்பட்ட சட்டக்
கல்லூரிகள், இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்கு உடனடி முன்னர், எந்தப்
பல்கலைக்கழகத்துடன் அவை இணைக்கப்பட்டிருந்தனவோ அந்தப்
பல்கலைக்கழகத்திலிருந்து, இணைப்பு நீக்கப்படுதல் வெண்டும்; மற்றும் அவை,
இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்று, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்
பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்;
மற்றும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அவ்வாறே பொருந்துதல் வேண்டும்.
வரம்புரை: சேலத்திலுள்ள மையச் சட்டக் கல்லூரி இணைப்புப் பெற்றதாகக்
கொள்ளப்பட்ட தகுதி நிலையானது, எந்த வரையறைகளுக்கும்
நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, அது சென்னைப் பல்கலைக்கழகத்துடன்
இணைக்கப்பட்டதோ, அதே வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும்
உட்பட்டதாயிருக்கும்.
(2) 68-ஆம் பிரிவின் (6)-ஆம் உட்பிரிவின் (௦) எனுங் கூறின்படி
அரசினால் அறிவிக்கை செய்யப்படலாகும் தேதியன்றும் அது முதற்கொண்டும்
மேற்சொன்ன துறைகளைப் பொறுத்தவரையில் மேற்சொன்ன
பல்கலைக்கழகங்கள். சொந்தமாய்ப் பெற்றிருந்த அல்லது அதனிடம்
ஒப்படைக்கப்பட்டு மேவியிருந்த அல்லது பொறுப்பாட்சி வகையில் அது
வைத்திருந்த நிலங்கள், கட்டடங்கள், தளவாடங்கள், புத்தகங்கள் மற்றும் நூலகம்.
உள்ளடங்கலாக, அசையும் அல்லது அசையாச் சொத்து அனைத்தையும்
மேற்சொன்ன துறைகளைப் பொறுத்தவரையில் மேற்சொன்ன
பல்கலைக்கழகங்களுக்கு எதிராக சட்டப்படியாக, அறிவிக்கை செய்யப்பட்ட
தேதிக்கு உடனடி முன்பான நிகழ்நிலையிலுள்ள கடப்பாடுகள்
அனைத்தினோடுங்கூட தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்
பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்படுதலும் மற்றும் அதனிடம் ஒப்படைக்கப்பட்டு
உற்றடைதலும் வேண்டும்.
(3) அரசானது, இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்குப் பின்பு எந்த
நேரத்திலும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு, அதன்
பயன்பாட்டிற்கென, அரசின் நிலங்கள் எவற்றையும், அது தக்கதென நினைக்கும்
அத்தகைய வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின்பேரில், மாற்றம் செய்யலாம்.
(4) 68-ஆம் பிரிவின் (6)-ஆம் உட்பிரிவின் (௦) எனுங் கூறின்படி.
அரசினால் அறிவிக்கை செய்யப்பட வேண்டிய தேதியன்றும் அது
முதற்கொண்டும், அரசானது, சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர்
பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை
வேந்தர்களைக் கலந்தாலோசித்த பின்னர், பொது அல்லது தணி ஆணையின்
மூலமாக, 68-ஆம் பிரிவின் (6)-ஆம் உட்பிரிவின் (b) எனுங் கூறில் அறிவிக்கை
செய்யப்பட்டவாறு சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர்
பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்
ஆகியவற்றின் துறைகளின், அந்த ஆணையில் குறித்துரைக்கப்பட்ட அத்தகைய
பணியாளர்கள், அத்தகைய ஆணையில் குறித்துரைக்கப்படக்கூடியவாறு
அத்தகைய தேதியன்றும் அது முதற்கொண்டும் செயல்விளைவு கொள்ளும்
வகையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் அலுவல்கள்
தொடர்பாகப் பணியாற்றுவதற்கு ஒதுக்கப்படுதல் வேண்டும்:
வரம்புரை: ஆனால், அத்தகைய பணியாளர் எவரையும் பொறுத்த அளவில்
அத்தகைய ஒதுக்கீட்டிற்கு அவர்தம் இசைவின்றி, அத்தகைய ஆணை எதுவும்
பிறப்பிக்கப்படுதல் கூடாது.
(5) (4) ஆம் உட்பிரிவின்படியான ஆணையில் குறித்துரைக்கப்பட்ட
தேதியிலிருந்தும் அது முதற்கொண்டும், அத்தகைய ஆணையில்
குறித்துரைக்கப்பட்ட நபர்கள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்
பல்கலைக்கழகத்தின் பணியாளர்களாதல் வேண்டும் மற்றும் நேர்விற்கேற்ப
சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாரதியார்
பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்
பணியாளர்களாய் இருப்பது அற்றுப்போதல் வேண்டும்.
(6) (4-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட நபர் ஒவ்வொருவரும், 68-ஆம்
பிரிவின் (6) ஆம் உட்பிரிவில் (b) எனுங் கூறின்படி அரசினால் குறிக்கப்பட்ட
தேதியன்றோ அல்லது (4) ஆம் உட்பிரிவின்படி குறித்துரைக்கப்பட்ட
தேதியன்றோ அவர் பதவி வகித்தவாறான அதே காலஅளவிற்கும் அதே
ஊதியத்திலும் அதே வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரிலும் மற்றும்
ஓய்வூதியம் அல்லது பணிக்கொடை ஏதேனுமிருப்பின், அது குறித்தும் பிற
பொருட்பாடுகள் குறித்தும் அவர் பெற்றிருந்திருக்கக்கூடிய அதே உரிமைகள்
மற்றும் சிறப்புநிமைகளுடனும் இந்தச் சட்டம் இயற்றப்படாதது போன்றே, தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பதவி வகித்து வருதல் வேண்டும்.
(7) (௫-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட நபர்களுக்கு, ஓய்வூதியத்தையும்
பணிக்கொடையையும் வழங்கும் கடப்பாடானது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்
பல்கலைக்கழத்தின் கடப்பாடாகும்.
70. வருங்கால வைப்புநிதி மற்றும் அதுபோன்ற நிதியங்களில் சேர்ந்துள்ள
தொகைகளை மாற்றுதல்.-- (1) 69-ஆம் பிரிவின் (4-ஆம் உட்பிரிவில்
குறிப்பிடப்பட்ட நபர்களின் வருங்கால வைப்பு நிதியத்தின் கணக்கில்
மேற்சொன்ன (4-ஆம் உட்பிரிவின்படியான ஆணையொன்றில்
குறித்துரைக்கப்பட்ட தேதியன்று வரையில் வரவு வைக்கப்பட்டுள்ள தொகைகள்
பல்கலைக்கழகத்திற்கு மாற்றீடு செய்யப்படுதல் வேண்டும் மற்றும் மேற்சொன்ன
வருங்கால வைப்பு நிதிக் கணக்கினைப் பொறுத்த வரையிலான கடப்பாடானது,
பல்கலைக்கழகத்தின் கடப்பாடாக இருக்கும்.
(2) சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்
பணிமூப்பு நிதியத்திலும் அதுபோன்ற நிதியங்கள் எவையேனுமிருப்பின்
அவற்றிலும் சேர்ந்துள்ள தொகைகளிலிருந்து, 69-ஆம் பிரிவின் (4)-ஆம்
உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள நபர்களின் சார்பாக, பணிமூப்பு நிதியத்திலும் மற்றும்
அதுபோன்ற நிதியங்கள் எவையேனுமிருப்பின் அவற்றிலும், வரவு
வைக்கப்பட்டுள்ள அத்தகைய தொகைகள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்
பல்கலைக்கழகத்திற்குச் செலுத்தப்படுதல் வேண்டும். அவ்வாறு செலுத்தப்பட்ட
தொகையானது, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தால், அதன்
பணியாளர்களின் நலனுக்கென, நிறுவப்படக்கூடிய, பணிமூப்பு நிதியம் அல்லது அது
போன்ற நிதியங்கள் எவையேனுமிருப்பின் அவற்றின் பகுதியாதல் வேண்டும்.
71. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.- (1) இந்தச் சட்டத்தின்.
தொடக்கத் தேதிக்குப் பிண்ணனர், பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்பு எதனையும்
முதன் முறையாக அமைத்துருவாக்குதல் அல்லது மாற்றி அமைத்துருவாக்குதல்
குறித்தோ, அல்லது மற்றப்படி இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச்
செயற்படுத்துவதிலோ இடர்ப்பாடு எதுவும் எழுமாயின், அரசு, அறிவிக்கை
வாயிலாக இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அந்த
இடர்ப்பாட்டினை நீக்குவதற்கு தேவையானதாகவோ உகந்ததாகவோ தமக்குத்
தோன்றக்கூடிய அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்.
வரம்புரை: ஆனால் அத்தகையை அறிவிக்கை எதுவும் 3 ஆம் பிரிவின்படி
பல்கலைக்கழகம் நிறுவியமைக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டு
முடிவடைந்ததற்குப் பின்பு வெளியிடப்படுதல் ஆகாது.
(2) ௫௬-ஆம் உட்பிரிவின்படி அல்லது இந்தச் சட்டத்தின் பிற
வகைமுறைகள் எதனின்படியும் வெளியிடப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும்
அது வெளியிடப்பட்ட பின்பு எவ்வளவு விரைவில் இயலுமோ அவ்வளவு விரைவாக
சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு
வைக்கப்படும் கூட்டத்தொடர் அல்லது அடுத்த கூட்டத் தொடர் முடிவடைவதற்கு
முன்பு அத்தகைய அறிவிக்கை எதிலும் மாற்றம் எதனையும் சட்டமன்றப் பேரவை
செய்யுமாயின் அல்லது அந்த அறிவிக்கை வெளியிடப்படுதல் ஆகாது என்று
சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமாயின் அந்த அறிவிக்கையானது, அதன்பின்பு
அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே செயல்வடிவம் பெறுதல்
வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப செயல்வடிவம் பெறாமலே போகும்; எனினும்
அவ்வாறு மாற்றியமைப்பது அல்லது அழித்தறவு செய்வதெதுவும்
அறிவிக்கையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட எதனின் செல்லுந்தன்மைக்கு
குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
இணைபப்புப்பட்டியல்.
[1(3), 68 (5), 69 (1) ஆகிய பிரிவுகளைக் காணவும்]
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன்
இணைக்கப்பட்ட கல்லூரிகளாகக் கொள்ளப்பட வேண்டிய சட்டக் கல்லூரிகள்.
அரசு சட்டக் கல்லூரிகள்.
1. டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை.
2. மதுரை சட்டக் கல்லூரி, மதுரை.
3. அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
4. அரசு சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர்.
தனியார் சட்டக் கல்லூரி.
மத்திய சட்டக் கல்லூரி, சேலம்.
Rules, notifications and orders under this Act
Listed from India Code. Each opens there.