Tamil Nadu · 1995 · Act 33
The Tamil Nadu Compulsory Elementary Education Act, 1994
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
1994ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டாயத் தொடக்கக்
கல்விச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 33/1995)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
The Tamil Nadu Compulsory Elementary
Education Act, 1994
(Tamil Nadu Act No. 33 of 1995)
(as on 31% October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
சென்னை.
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
1994ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டாயத் தொடக்கக்
பிரிவு
ஐ
வ
ல
த
ற
10.
11.
12.
13.
14.
கல்விச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 331995)
பொருளடக்கம்
குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும்
தொடக்கம்.
பொருள்வரையறைகள்.
தொடக்கக்கல்வி கட்டாயமாக்கப்படுதல்
வேண்டும்.
பள்ளிசெல்லும் வயதடைந்த குழந்தை
ஒன்றின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்
ஒவ்வொருவரின் கடமை.
விலக்களிப்புகள்.
தகுதிவாய்ந்த அதிகாரஅமைப்பு.
பணத்தண்டம்.
குற்றச்செயல்களை விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளுதல்.
தகுதிவாய்ந்த அலுவலர் முதலானோர் பொது
ஊழியர்களாக இருப்பர்.
பணிப்புரை வழங்க அரசுக்குள்ள அதிகாரம்.
நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்
நீக்கமும் காப்பும்.
1
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டாயத் தொடக்கக்
கல்விச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 33/1995)
[தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 1995ஆம்
ஆண்டு நவம்பர் திங்கள் 21ஆம் நாளன்று குடியரசுத் தலைவரின்
ஏற்பிசைவைப் பெற்று பொதுத் தகவலுக்காகத் தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்பட்டது.)
தமிழ்நாடு மாநிலத்தில், கட்டாயத் தொடக்கக்கல்வி
தொடர்பான சட்டத்தைத். திருத்தி
ஒருங்கிணைப்பதற்காகவும் அதற்கெனச் சிறந்த
வகைமுறைகளைச் செய்வதற்காகவுமான ஒரு
சட்டம்.
இந்திய அரசமைப்பின்: 45ஆம்
அமைப்புவிதியின்படி, அரசானது, அரசமைப்பின்.
தொடக்கத்திலிருந்து பத்தாண்டுக் காலத்திற்குள்ளாக,
அனைத்துக் குழந்தைகளுக்கும், அவர்கள் பதினான்கு
வயதினை நிறைவடைகின்ற வரையில், இலவசமாக
கட்டாயக் கல்வியினை வழங்குவதற்கு முயற்சித்தல்
வேண்டும் என்பதாலும்:
இந்த மாநிலத்தில் பள்ளி செல்லும் வயதினை
அடைந்த குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயத்
தொடக்கக் கல்வியை வழங்குவது எனக் கொள்கை
அளவிலான முடிவு ஒன்று தமிழ்நாடு அரசினால்
எடுக்கப்பட்டிருப்பதாலும்;
அந்தக் கொள்கை அளவிலான முடிவிற்குச்
செயல்வடிவம் கொடுப்பதற்கு, அத்தகைய அனைத்துக்
குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வியை
கட்டாயமாக்குவது தேவையாக இருப்பதாலும்;
குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்
ஒவ்வொருவரின் பேரிலும், தொடக்கப் பள்ளி ஒன்றில்
குழந்தையைப் பயிலச் செய்வதை கட்டாயமான
கடமையாக்குவதும் கூட தேவையானதாக இருப்பதாலும்;
இந்தியக் குடியரசின் நாற்பத்து ஐந்தாம் ஆண்டில்
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் இயற்றப்பட்ட
சட்டம் பின்வருமாறு:-
1. குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும்
தொடக்கம்.- (1) இந்தச் சட்டம், 1994ஆம் ஆண்டு
தமிழ்நாடு கட்டாய தொடக்கக் கல்விச் சட்டம் என
வழங்கப்படும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் பரவி
நிற்கும்.
(3) இது, அரசு அறிவிக்கையின்.
வாயிலாகக் குறிப்பிடப்படும் தேதியில் நடைமுறைக்கு
வருதல் வேண்டும்; மற்றும் இந்தச் சட்டத்தின் வேறுபட்ட
வகைமுறைகளுக்கு வேறுபட்ட தேதிகள்
குறிப்பிடப்படலாம்.
2. பொருள்வரையறைகள்.- இந்தச் சட்டத்தின்.
தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி.-
(1) "தொடக்கப்பள்ளி ஒன்றில் வருகைப்பதிவு"
என்பது, வகுத்துரைக்கப்படும் நாட்களின் எண்ணிக்கை
மற்றும் ஓராண்டில் அத்தகைய நாட்கள் மற்றும் ஒவ்வொரு
நாளுக்குமான வகையில் கால அளவில் அல்லது கால
அளவுகளில் தொடக்கப் பள்ளி ஒன்றில் பயில்வதற்கான
வருகைப் பதிவு எனப் பொருள்படும்;
(2) "தகுதிவாய்ந்த அதிகாரஅமைப்பு" என்பது,
அரசினால் பிரிவு 6இன்படி நியமிக்கப்பட்ட தகுதிவாய்ந்த
அலுவலர் எனப் பொருள்படும்;
(3) "தொடக்கக்கல்வி" என்பது,
வகுத்துரைக்கப்படும் பாடத் திட்டங்களில் அத்தகைய
வகுப்பு வரையிலான கல்வி எனப் பொருள்படும்;
3
(4) "தொடக்கப் பள்ளி" என்பது, தகுதிவாய்ந்த,
அதிகாரஅமைப்பினால், தொடக்கப் பள்ளி என
அங்கீகரிக்கப்பட்ட பள்ளி எனப் பொருள்படும், மற்றும்.
தொடக்கக் கல்வி இயக்குநரால்: அல்லது
கல்வித்துறையின் அலுவலர் எவராலும் அவ்வாறு
அனுமதிக்கப்பட்டு, இந்தச் சட்டத்தின் தொடக்கத்
தேதியன்று இருந்து வருகின்ற தொடக்கப் பள்ளி
எதனையும் உள்ளடக்கும்;
(5) "அரசு" என்பது, மாநில அரசு எனப்
பொருள்படும்;
(6) "பாதுகாவலர்" என்பது, சட்டப்படி அல்லது
இயற்கையான உரிமைப்படி அல்லது ஏற்கப்பட்ட
வழக்காறின்படி குழந்தை எதனையும் கவனிப்பதோ,
பேணிவளர்ப்பதோ அல்லது பாதுகாப்பதோ செய்கின்ற நபர்
எவருமோ அல்லது குழந்தை எதனையும்
கவனிப்பதையோ, பேணிவளர்ப்பதையோ அல்லது
பாதுகாப்பதையோ ஏற்றுக்கொண்டுள்ள அல்லது
மேற்கொண்டுள்ள நபர் எவருமோ அல்லது சட்டப்படியான
அதிகாரஅமைப்பு எதனாலும் குழந்தை எதனையும்
கவனிப்பதோ, பேணிவளர்ப்பதோ அல்லது பாதுகாப்பதோ
ஒப்படைக்கப்பட்டுள்ள நபர் எவருமோ எனப் பொருள்படும்;
(7) "பெற்றோர்" என்பது, குழந்தை ஒன்றின்:
தந்தை அல்லது தாய் எனப் பொருள்படும்; மற்றும் அது
மகவேற்புச் செய்த தந்தையையோ அல்லது தாயையோ
உள்ளடக்கும்;
(8) "பள்ளி செல்லும் வயது" என்பது குழந்தை
ஒன்றைப் பொறுத்தவரையில் வகுத்துரைக்கப்படக்கூடிய
அத்தகைய வயது எனப் பொருள்படும்;
(9) "ஆண்டு" என்பது, ஜூன் திங்கள் 1ஆம்
நாளில் தொடங்குகின்ற கல்வியாண்டு எனப் பொருள்படும்.
4
3. தொடக்கக்கல்வி கட்டாயமாக்கப்படுதல்
வேண்டும்.-(1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு
உட்பட்டு, பள்ளிசெல்லும் வயதை அடைந்த குழந்தை
ஒவ்வொன்றுக்கும் தொடக்கக் கல்வியானது
கட்டாயமாக்கப்படுதல் வேண்டும்.
(2) உட்பிரிவு (NS வகைமுறைகளுக்குச்
செயல்வடிவம் கொடுப்பதற்காக, அரசானது,
இம்மாநிலத்தில் தேவையானது எனக் கருதும் பயிற்சி
பெற்ற ஆசிரியர்களுடன் கூடிய அத்தகைய
எண்ணிக்கையிலான தொடக்கப்பள்ளிகளுக்கு வகை
செய்தல் வேண்டும்.
4. பள்ளி செல்லும் வயதடைந்த குழந்தை
ஒன்றின். பெற்றோர் அல்லது பாதுகாவலர்
ஒவ்வொருவரின் கடமை.-தொடக்கப்பள்ளி ஒன்றில்,
குழந்தை ஒன்றைப் பயிலச் செய்வது, பள்ளி செல்லும்
வயதடைந்த ஒரு குழந்தையின் பெற்றோரின் அல்லது
பாதுகாவலரின் கடமையாகும்.
5. விலக்களிப்புகள்.- பள்ளி செல்லும் வயதடைந்த
ஒரு குழந்தையின் வருகைப் பதிவானது,
(111௦0
(2) நோய், பலவினம் அல்லது
வகுத்துரைக்கப்படும் பிற காரணத்திற்காக, குழந்தையானது
தொடக்கப்பள்ளிக்கு வந்து பயில்வதற்குத் தடையாக
இருக்குமானால்;
(3) பயிற்றுவிக்கப்படும். கல்வியானது,
மனநிறைவளிக்கும் வகையில் இருக்கிறது எனத்
தகுதிவாய்ந்த அலுவலரால் விளம்பப்படுகிற நிலையில்
அங்கீகாரம் பெறாத பள்ளி எதிலும் குழந்தையானது வந்து
பயில்கின்றது என்றால்;
14997ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டாய தொடக்கக் கல்வி (திருத்தச்)
சட்டத்தின் (சட்ட எண். 49/1997) 2ஆம் பிரிவினால்
விட்டுவிடப்பட்டது.
5
(4) மனநிறைவளிக்கின்ற வகையில்
இருக்கின்றது எனத் தகுதிவாய்ந்த அலுவலரால்
விளம்பப்படக்கூடிய பிற முறை எதிலும் குழந்தையானது
பயிற்றுவிக்கப்படுமானால்;
(5) தொடக்கக்கல்விக்கு என
வகுத்துரைக்கப்பட்ட வகுப்பு வரையில், தொடக்கப்
பள்ளியொன்றிலோ அல்லது பிறவாறாகவோ அத்தகைய
குழந்தையானது ஏற்கனவே பயிற்றுவிக்கப்
பட்டிருக்குமானால்; அல்லது
(6) வகுத்துரைக்கப்படும் பிற காரணம் எதனின்
பேரிலும், குழந்தையானது பள்ளிக்கு வந்து பயில்வதில்
இருந்து விலக்களிக்கப்படுமானால்,
கட்டாயம் ஆக்கப்படுதல் கூடாது.
6. தகுதிவாய்ந்த அதிகாரஅமைப்பு.-- (1) அரசு
அறிவிக்கையின். வாயிலாக, இந்தச் சட்டத்தின்.
வகைமுறைகளையும் அதன்படிச் செய்யப்பட்ட
விதிகளையும் நிறைவேற்றிச் செயற்பாட்டிற்குக் கொண்டு
வரும் நோக்கத்திற்காக, மாவட்டக் கல்வி அலுவலரின்:
படிநிலைக்குக் குறையாத கல்வித் துறையின் அலுவலர்
எவரையும் தகுதிவாய்ந்த அலுவலராக நியமிக்கலாம்
மற்றும் வெவ்வேறு பகுதிகளுக்கு தனித்தனியாக தகுதி
வாய்ந்த அலுவலர்கள் நியமிக்கப்படலாம்.
(2) தகுதிவாய்ந்த அலுவலர்கள்,
வகுத்துரைக்கப்படும் அதிகாரங்களைச் செலுத்துதலும்,
அலுவல் பணிகளை ஆற்றுதலும் வேண்டும்.
7. பணத்தண்டம்- பிரிவு 4இன்படி, தம் கடமையை
ஆற்றுவதற்குத் தவறுகிற, பள்ளி செல்லும் வயதடைந்த
குழந்தை ஒன்றின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்
6
ஒவ்வொருவரும் நூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய
பணத்தண்டம் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
8. குற்றச்செயல்களை விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளுதல்.- நீதிமன்றம் எதுவும் இந்தச் சட்டத்தின்படி
தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயல் எதனையும், இது
குறித்து பொது அல்லது தனி ஆணையின் மூலமாக
அரசினால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் ஒருவரால்
எழுத்து வடிவில் செய்யப்பட்ட முறையீடு ஒன்றின் பேரில்
தவிர, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல் கூடாது.
9. தகுதிவாய்ந்த அலுவலர் முதலானோர் பொது
ஊழியர்களாக இருப்பர்.- பிரிவு 6இன்படி நியமிக்கப்பட்ட
தகுதிவாய்ந்த அலுவலரும், பிரிவு 8இன்படி
அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரும், 1860ஆம் ஆண்டு
இந்திய தண்டனைச் சட்டத்தின் (மையச் சட்டம்
XLV/1860) பிரிவு 21இன் பொருளின்படி, பொது
ஊழியர்களாகக் கருதப்படுதல் வேண்டும்.
10. பணிப்புரை வழங்க அரசுக்குள்ள அதிகாரம்.-
அரசானது, பொது நலனில் அக்கறை கொண்டு,
ஆணையின் வாயிலாக, தகுதிவாய்ந்த அலுவலரை
ஆணையில் குறிப்பிடப்பட்ட எந்த நிகழ்விலும் இந்தச்
சட்டத்தின்படி விசாரணை செய்யுமாறோ அல்லது தக்க
நடவடிக்கைகளை எடுக்குமாறோ பணிக்கலாம் மற்றும்
தகுதிவாய்ந்த அலுவலரானவர், வகுத்துரைக்கப்படும்
காலஅளவிற்குள் அவரால் செய்யப்பட்ட விசாரணை
அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முடிவினை
அரசுக்கு அறிக்கையளித்தல் வேண்டும்.
11. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பு.- இந்தச் சட்டத்திற்கு
அல்லது அதன்படிச் செய்யப்பட்ட விதி அல்லது ஆணை
எதற்கும் இணங்கிய வகையில், நல்லெண்ணத்துடன்,
செய்யப்பட்டுள்ள அல்லது செய்யக் கருதப்பட்டுள்ள செயல்
7
எதற்காகவும், அரசுக்கு அல்லது அரசு அலுவலர்
எவருக்கும் எதிராக, உரிமைவழக்கோ, குற்றவழக்கோ
அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவுமோ தொடுத்தல்
கூடாது.
12. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.- (1)
அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும்
அல்லது அவற்றுள் எதையேனும் நிறைவேற்றுவதற்கு
விதிகளைச் செய்யலாம்.
(2) இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும் விதி
அல்லது ஆணை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்டதற்குப்
பின்னர், கூடியவிரைவில், சட்டமன்றப் பேரவையின்
முன்பு வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு
வைக்கப்படும். கூட்டத்தொடரோ அல்லது
அதனையடுத்துவரும் கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு
முன்னர், அப்பேரவையானது, அத்தகைய விதி அல்லது
ஆணை எதிலும் மாறுதல் எதையும் செய்யுமானால்
அல்லது அவ்விதி அல்லது ஆணை எதுவும்
செய்யப்படுதல் ஆகாது என அப்பேரவையானது முடிவு
செய்யுமானால், அவ்விதியோ அல்லது ஆணையோ
அதன்பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில்
மட்டுமே செயல்விளைவு பெற்றிருத்தல் வேண்டும்;
அல்லது செயல்விளைவு பெறாது போதல் வேண்டும்:
எனினும் அத்தகைய மாற்றம் அல்லது நீக்கம் எதுவும்,
அந்த விதி அல்லது ஆணையின்படி இதற்கு முன்னதாகச்
செய்யப்பட்ட ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும்.
ஊறின்றி இருத்தல் வேண்டும்.
13. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.-
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குச் செயல்வடிவம்
கொடுப்பதில் இடர்ப்பாடு எதுவும் எழுமானால், அரசானது,
தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணை ஒன்றின்
மூலமாக, அந்த இடர்ப்பாட்டினை அகற்றும் பொருட்டு
8
சூழல் கோருகிறவாறு, தேவையானவை என்றோ அல்லது
உகந்தவை என்றோ, தமக்குத் தோன்றக் கூடிய, ஆனால்
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக
இல்லாத அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்:
வரம்புரை: ஆனால், இந்தச் சட்டத்தின் தொடக்கத்
தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் காலஅளவு
முடிவுற்ற பின்பு ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல்
கூடாது.
194. நீக்கமும் காப்பும்- (1) (இதன்பின்பு இந்தப்
பிரிவில் கூறப்பட்ட சட்டம் என்று குறிப்பிடப்படுவதான)
1920ஆம் ஆண்டு தமிழ்நாடு தொடக்கக் கல்விச்
சட்டத்தின் (சட்ட எண்.1॥1920)
32,33,34,35.36,37,38,39 மற்றும் 40 ஆகிய பிரிவுகள்.
மற்றும் அதன்படிச் செய்யப்பட்ட விதிகள் தவிர, மற்றவை
இதனால் நீக்கம் செய்யப்படு கிறது.
(2) கல்விக்கான வரிவிதிப்பு, தீர்வை, கணிப்பு
மற்றும் வசூலிப்பு மற்றும் நகராட்சிகளைப் பொறுத்த
தொடக்கக்கல்விக்கான நிதிக்கு அரசின் பங்களிப்பு
ஆகியவை, மேற்சொன்ன சட்டத்தின் பிரிவுகள்
32,33,34,35,36,37,38,39 மற்றும் 40இன்
வகையங்களுக்கு இணங்கியவாறும். கூறப்பட்ட
பிரிவுுளானவை இந்தச் சட்டத்தில் எப்போதும்
இணைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுவது போன்றும்
தீர்மானிக்கப்படுதல் வேண்டும்!
1. 4997ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டாயத் தொடக்கக் கல்வி (திருத்தச்)
சட்டத்தின் (சட்ட எண். 49/1997) 3ஆம் பிரிவினால் மாற்றாக
அமைக்கப்பட்டது.
Rules, notifications and orders under this Act
Listed from India Code. Each opens there.