Tamil Nadu · 1987 · Act 34
The Tamil Nadu Compulsory Censorship of Publicity Materials Act, 1987 Act 34 of 1987
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
1987ஆம் ஆண்டு தமிழ்நாடு விளம்பரப்
பொருள்களின் கட்டாயத் தணிக்கைச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 341987)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
The Tamil Nadu Compulsory Censorship of Publicity
Materials Act, 1987
(Tamil Nadu Act No. 34 of 1987)
(as on 31% October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
சென்னை
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
1987ஆம் ஆண்டு தமிழ்நாடு விளம்பரப் பொருள்களின்
பிரிவு
வ
ல
ஆ
க
ம
்
௭
e
[
13.
14.
15.
16.
17.
18.
கட்டாயத் தணிக்கைச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 341987)
பொருளடக்கம்
குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும்
தொடக்கம்.
பொருள்வரையறைகள்.
விளம்பரப் பொருளைக் காட்சிக்கு வைத்தல்.
தணிக்கைக்குழு.
தணிக்கை அலுவலரும் பிற பணியாளர்களும்.
தணிக்கைச் சான்றிதழுக்கான விண்ணப்பம்.
தணிக்கைச் சான்றிதழ் வழங்குதல்.
மேல்முறையீடு.
தண்டனை.
உடந்தைக் குற்றவாளிக்கான தண்டனை.
செல்லத்தக்கதாக்குதல்.
குற்றத்தை இணக்கமாகத் தீர்த்துக்
கொள்வதற்கான அதிகாரம்.
கைப்பற்றுவதற்கான அதிகாரம்.
தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொது
ஊழியர்களாக இருப்பர்.
சட்ட நடவடிக்கைக்குத் தடை.
நிறுமங்களால் செய்யப்படும் குற்றங்கள்.
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
காப்பு.
1
1987ஆம் ஆண்டு தமிழ்நாடு விளம்பரப் பொருள்களின்
கட்டாயத் தணிக்கைச் சட்டம்
தமிழ்நாடு சட்ட எண் 34,1987
[தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது
1987ஆம் ஆண்டு ஜுலை திங்கள் 27ஆம் நாளன்று ஆளுநரின்.
ஏற்பிசைவைப் பெற்று பொதுத் தகவலுக்காகத் தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடப்பட்டது]
விளம்பரப் பொருட்களின் கட்டாயத் தணிக்கைக்கு
வகைசெய்வதற்கான ஒரு சட்டம்:
இந்தியக் குடியரசின் முப்பத்தெட்டாவது ஆண்டில்
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால்
இயற்றப்பட்டச் சட்டம் பின்வருமாறு:-
1. குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும் தொடக்கம்.-
(1) இந்தச் சட்டம், 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு விளம்பரப்
பொருள்களின் கட்டாயத் தணிக்கைச் சட்டம் என
வழங்கப்படும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் பரவி
நிற்கும்.
(3) இது, அரசு அறிவிக்கையின் மூலம்
குறிப்பிடக்கூடிய பகுதிகளிலும். தேதிகளிலும்
நடைமுறைக்கு வருதல் வேண்டும்; மற்றும் வெவ்வேறு
பகுதிகளுக்காக வெவ்வேறு தேதிகள் குறிப்பிடப்படலாம்.
2. பொருள்வரையறைகள்.- இந்தச் சட்டத்தில்,
தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-
@ "குழு என்பது, பிரிவு 4இன்படி
அமைக்கப்பட்ட தமிழ்நாடு தணிக்கைக்குழு எனப்
பொருள்படும்;
2
(0) "தணிக்கைச் சான்றிதழ்" என்பது, பிரிவு
7இன்படி வழங்கப்படும் விளம்பரப் பொருளைப் பொறுத்த
ஒரு தணிக்கைச் சான்றிதழ் எனப் பொருள்படும்;
(9) "தலைவர்" என்பது, குழுவின் தலைவர்
எனப் பொருள்படும்;
(0) "அரசு" என்பது, மாநில அரசு எனப்
பொருள்படும்;
(6) உறுப்பினர்" என்பது, குழுவின் உறுப்பினர்
ஒருவர் எனப் பொருள்படும்;
(9). 'மறுப்புக்குரிய விளம்பரப் பொருள்"
என்பது,-
() ஆபாசமாக இருக்கிற; அல்லது
(i) பெரும்பாலும்-
(A) வன்முறையை உள்ளடக்குகின்ற
குற்றம் எதையேனும் புரிவதற்கு எந்த ஒரு
நபரையும் தூண்டக்கூடிய; அல்லது
(8) கண்ணியம் அல்லது அறநெறிக்கு
ஊறுவிளைவிக்கக்கூடிய; அல்லது
(C) சமயம், இனம், பிறப்பிடம்,
குடியிருப்பிடம், மொழி, சாதி அல்லது சமூகம்
என்கிற அடிப்படைகளின் பேரறிலோ அல்லது
பிற எந்தக் காரணத்தின் பேறிலோ வெவ்வேறு
சமய, இன, மொழி அல்லது வட்டாரப்பிரிவுகள்:
அல்லது சாதிகள்: அல்லது
சமூகங்களுக்கிடையே ஒற்றுமையின்-
மையையோ, பகைமை அல்லது
வெறுப்புணர்ச்சியையோ அல்லது கெட்ட
எண்ணத்தையோ வளர்க்கக்கூடியதாக
இருக்கிற விளம்பரப் பொருள் எதுவும்
எனப் பொருள்படும்:
3
விளக்கம் |1- விளம்பரப் பொருள் ஒன்று, அது
சிற்றின்பத்தைத் தூண்டக்கூடியதாகவோ கெட்ட
ஆசையை ஈர்க்கக்கூடியதாகவோ இருக்குமானால்
அல்லது அதன் விளைவானது (இரண்டு அல்லது அதற்கு
மேற்பட்ட தனித்தனி இனங்களை அது கொண்டிருக்கிற
நிலையில்) அதன் இனங்களில் ஏதேனும் ஒன்றின்
விளைவானது ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால்,
அதில் அடங்கியுள்ள அல்லது உட்பொதிந்துள்ள
விவரத்தை சம்பந்தப்பட்ட சூழ்நிலைகள் அனைத்தையும்
கவனத்தில்கொண்டு பார்க்கையில். படிக்கக்கூடிய
அல்லது காணக்கூடிய நபர்களை சீர்கெடச் செய்வதாகவும்
மனத்தூய்மை கெடச்செய்வதாகவும் இருக்குமானால்,
அல்லது எந்த வயதையும் சேர்ந்த பெண் ஒருவரின்
படத்தையோ, வரைபடத்தையோ, ஓவியத்தையோ அல்லது
உருவ அமைப்பையோ, உணர்வுகளைப்
புண்படுத்தக்கூடிய அல்லது பெரும்பாலும் படிக்கக்கூடிய
அல்லது காணக்கூடிய நபர்களின் மனங்களில்
கண்ணியமற்ற அல்லது மனத்தூய்மையற்ற அல்லது
ஒழுக்கக்கேடான எண்ணங்கள் எவற்றையேனும்.
பெரும்பாலும். தோற்றுவிக்கக்கூடியதாக இருக்கிற
தோற்றத்தில், விவரிக்குமானால், காட்சிக்கு
வைக்குமானால் அல்லது காட்டுமானால், அது
ஆபாசமானதாக இருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.
விளக்கம் ॥.- விளம்பரப் பொருள் ஒன்று, அது-
(1) ஏதேனும் சட்டம் ஒன்றையும் அல்லது அரசின்:
கொள்கை அல்லது ஏதேனும் நிருவாக நடவடிக்கை
ஒன்றையும் சட்ட வழிமுறை மூலமாக அதனை மாற்றச்
செய்யும் பொருட்டோ அல்லது அதற்குத் தீர்வு பெறும்
4
பொருட்டோ மறுப்பதை அல்லது குற்றம் காண்பதை
வெளிப்படுத்துகிறதாக மட்டுமே இருக்குமானால், அல்லது
(2) சமூக அல்லது சமய சீர்திருத்தத்தை அல்லது
சமூகந்தி நலனை ஆதரிக்கும் நேர்மையான நோக்குடன்,
தீய எண்ணமின்றி சமூக அல்லது சமய பழக்க வழக்கங்கள்
எவற்றையேனும். குறைகூறுவதாக மட்டுமே
இருக்குமானால்,
மறுப்புக்குரியதாகக் கொள்ளப்படுதல் கூடாது.
(ஓ "பொதுமக்கள் காணக்கூடிய இடம்" என்பது,
பொது இடம் ஏதொன்றிலும் உள்ள அல்லது அதன்
வழியாகக் கடந்து செல்கின்ற நபர் ஒருவருக்கு
காணத்தக்கதாக இருக்கின்ற தனியார் இடம் அல்லது
கட்டிடம், நினைவுச்சின்னம், சிலை, கம்பம், சுவர், வேலி,
மரம் அல்லது பிற பொருள் அல்லது சாதனம்
ஏதொன்றையும் உள்ளடக்கும்;
(h) "பொது இடம்" என்பது, பொதுமக்கள் வந்து
போவதை அனுமதித்திருக்கின்ற அல்லது அவர்கள்.
அணுகுஉரிமை பெற்றிருக்கின்ற அல்லது அவர்கள்
அதன்மீது கடந்து செல்வதற்கு உரிமை பெற்றிருக்கின்ற
(சாலை, தெரு அல்லது கடப்பு வழி, அது பொதுவழியாக
இருப்பினும் இல்லாவிடினும், மற்றும் ஓர் தங்குமிடம்
ஆகியவை உள்ளடங்கலான) இடம் எதுவும் எனப்
பொருள்படும்;
@) "விளம்பரப் பொருள்" என்பது, திரைப்படம்
சம்பந்தமான விளம்பரப் பொருள் அல்லாத பிற
ஏதொன்றுக்கும் விளம்பரம் தருவதற்காக, இந்தியாவிலோ,
இந்தியாவுக்கு வெளியேயுள்ள நாடு ஏதொன்றிலுமோ
தயாரிக்கப்படுகிற பொருள் எதுவும் எனப் பொருள்படும்;
மற்றும்
5
() விளம்பரச்சட்டம், காட்சி அட்டை,
செருகுப்படம், அச்சக வடிவமைப்பு,
பெரிதாக்கப்பட்ட படம் ஆகியவற்றை;
(0 விளம்பரத்தட்டியை;
0) இயங்கா நிலைப்படத்தை;
(iv) காட்சிப் படத்தட்டை;
) நாளேடுகளிலும் காலமுறை
இதழ்களிலும் வெளியிடப்படுவதற்கான
இயங்கா நிலைப்படத்தை; மற்றும்
(ற வகுத்துரைக்கப்படக்கூடிய பிற
எந்தப் பொருளையும்,
உள்ளடக்கும்.
3. விளம்பரப் பொருளை காட்சிக்கு வைத்தல்.- (1)
நபர் எவரும், தணிக்கைச் சான்றிதழ் இன்றி, விளம்பரப்
பொருள் எதனையும் பொதுமக்கள் காணக்கூடிய இடம்
எதிலும் ஒட்டுதலோ, காட்சிக்கு வைத்தலோ கூடாது.
(2) காட்சிக்கு வைக்கப்பட்ட விளம்பரப் பொருள்:
ஒவ்வொன்றும், அத்தகைய விளம்பரப் பொருள் குறித்து
வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழின் எண் மற்றும்
தேதியை வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில்
கொண்டிருத்தல் வேண்டும்.
4. தணிக்கைக்குழு.-- (1) விளம்பரப் பொருளைப்
பொறுத்து தணிக்கைச் சான்றிதழ் வழங்குகின்ற
நோக்கத்திற்காக அரசு அறிவிக்கையின் மூலமாக,
தமிழ்நாடு தணிக்கைக்குழு என வழங்கப்படும் குழு
ஒன்றினை அமைக்கலாம்; அது தலைவர் ஒருவரையும்,
அரசினால் நியமிக்கப்படும் பிற ஐந்துக்கு மேற்படாத
உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டும்.
6
(2) பிரிவு இன் உட்பிரிவு (இன்படி
நியமிக்கப்பட்ட தணிக்கை அலுவலர், குழுவுக்கு
உறுப்பினர் செயலாளராக இருத்தல் வேண்டும்.
(3) தலைவரும் உறுப்பினர்களும்.
வகுத்துரைக்கப்படக்கூடிய காலஅளவிற்குப் பதவி
வகித்தல் வேண்டும்.
(4) தலைவர், அரசினால் தீர்மானிக்கப்படக்கூடிய
ஊதியத்தை பெறுதல் வேண்டும்; மற்றும் தணிக்கை
அலுவலர் அல்லாத பிற உறுப்பினர்கள், குழுவின்
கூட்டங்களுக்கு வருகை தருவதற்காக
வகுத்துரைக்கப்படக்கூடிய படித்தொகைகளையோ
கட்டணங்களையோ பெறுதல் வேண்டும்.
(5 குழுவின் கூட்டங்கள். வகுத்துரைக்கப்
படக்கூடிய இடத்திலும் நேரத்திலும் முறையிலும்
நடத்தப்படுதல் வேண்டும்.
(6) நபர் எவரும், முப்பந்தைந்து வயதை அவர்
நிறைவு செய்திருந்தாலன்றி குழுவின் தலைவராகவோ
உறுப்பினராகவோ நியமிக்கப்படுவதற்கு
தகுதியுடையவராகமாட்டார்.
5. தணிக்கை அலுவலரும் பிற பணியாளர்களும்.-
(1) இந்தச் சட்டத்தின். நோக்கங்களை
நிறைவேற்றுவதற்காக அரசு, தணிக்கை அலுவலர்
ஒருவரை நியமித்தல் வேண்டும்; மேலும் அந்தத் தணிக்கை
அலுவலருக்கு உதவிபுரிவதற்காக அரசு பொருத்தமென
நினைக்கக்கூடிய எண்ணிக்கையுள்ள உதவித் தணிக்கை
அலுவலர்கள், ஆய்வாளர்கள், பிற அலுவலர்கள் மற்றும்
பணியாளர்கள் ஆகியோரையும் நியமிக்கலாம்.
(2) தணிக்கை அலுவலர், உதவித் தணிக்கை
அலுவலர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் எந்த இடத்தையும்
ஆய்வு செய்யலாம் மற்றும் விளம்பரப் பொருள் எதனையும்
7
காட்சிக்கு வைப்பதற்குப் பொறுப்பானவராக இருந்த நபர்
எவரிடமிருந்தும். அத்தகைய விளம்பரப் பொருள்:
சம்மந்தப்பட்ட ஆவணம் எதனையும் வரவழைக்கலாம்.
(3) தணிக்கை அலுவலர், உதவித் தணிக்கை
அலுவலர், ஆய்வாளர்கள் வகுத்துரைக்கப்படும்
அதிகாரங்களைச் செலுத்தி வருதலும் பிற அலுவல்களைப்
புரிந்து வருதலும் வேண்டும்.
6. தணிக்கைச் சான்றிதழுக்கான விண்ணப்பம்.-
(1) நபர் எவரும் விளம்பரப் பொருள் எதனையேனும்
பொதுமக்கள் காணக்கூடிய இடம் எதிலும் காட்சிக்கு
வைக்க விரும்பினால், அவர் தணிக்கைச் சான்றிதழ்
ஒன்றுக்காக வகுத்துரைக்கப்படும் படிவத்தில் குழுவிடம்
விண்ணப்பம் ஒன்றைச் செய்துகொள்ளுதல் வேண்டும்;
மற்றும் அந்தப் பொருளை அந்த விண்ணப்பத்தோடு
சேர்த்து வகுத்துரைக்கப்பட்ட முறையில் பணிந்தனுப்புதல்
வேண்டும்.
(2) உட்பிரிவு (1)இன்படியான விண்ணப்பம்
ஒவ்வொன்றும் வகுத்துரைக்கப்படும் கட்டணத்துடன்
சேர்த்து அளிக்கப்படுதல் வேண்டும்.
7. தணிக்கைச் சான்றிதழ் வழங்குதல்.- (1)
தணிக்கை அலுவலர், பிரிவு 6இன்படி பணிந்தனுப்பப்பட்ட
விளம்பரப் பொருளை பரிசீலனை செய்து அந்த விளம்பரப்
பொருளை தம்முடைய பறிந்துரைகள், எவையேனும்
இருப்பின் அவற்றோடு சேர்த்துக் குழுவின் முன்பு
பரிச்லனைக்கு வைத்தல் வேண்டும்.
(2) குழுவானது விளம்பரப் பொருளையும்,
விளம்பரப் பொருள்: தணிக்கை அலுவலரின்
பரிந்துரைகளையும் பரிசீலனை செய்த பின்னர், இரண்டு
வார காலஅளவுக்குள், வகுத்துரைக்கப்பட்ட முறையில்,
8
() வகுத்துரைக்கப்படும். படிவத்திலும்
முறையிலும் விளம்பரப் பொருளுக்கு
தணிக்கைச் சான்றிதழ் ஒன்றை
வழங்குதல் வேண்டும்; அல்லது
(i) அந்த விளம்பரப் பொருளை
பொதுமக்களின் காட்சிக்கு வைக்க
அனுமதிப்பதற்கு முன்னர், அந்த
விளம்பரப் பொருளில் தான்:
அவசியமென நினைக்கிற
மாறுதல்களையோ மாற்றங்களையோ
செய்யுமாறு அந்த விண்ணப்பதாரரை
பணித்தல் வேண்டும்; அல்லது
0 விளம்பரப் பொருளை பொதுமக்களின்.
காட்சிக்கு வைப்பதற்கான தணிக்கைச்
சான்றிதழ் வழங்க மறுத்தல் வேண்டும்.
(3) இந்த பொருட்பாட்டில் தம் கருத்துக்களை
எடுத்துக் கூறுவதற்காக விண்ணப்பதாரருக்கு
வாய்ப்பொன்று கொடுக்கப்படாமல் உட்பிரிவு (2)இன் (i)
மற்றும் (i) கூறின்படியுமான நடவடிக்கை எதுவும்
குழுவால் எடுக்கப்படுதல் கூடாது.
(4) தணிக்கைச் சான்றிதழ் ஒவ்வொன்றும்
தணிக்கை அலுவலரால் அல்லது அவர் இல்லாதபோது,
இதன்பொருட்டு குழுவால் அதிகாரம் அளிக்கப்படக்கூடிய
உதவித் தணிக்கை அலுவலரால் கையொப்பமிடப்படுதல்
வேண்டும்; மற்றும் அந்த விளம்பரப் பொருள் பின்பு,
அதனைப் பணிந்தனுப்பிய நபரிடம் திருப்பி அனுப்பப்படுதல்
வேண்டும்.
8. மேல்முறையீடு. (1) குழுவின். முடிவு
ஏதொன்றினாலும் குறையுற்ற நபர் எவரும், அத்தகைய
முடிவு வரப்பெற்ற தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்,
அரசு வகுத்துரைக்கக்கூடிய அதிகாரஅமைப்பிடம்
9
மேல்முறையீடு ஒன்றைச் செய்துகொள்ளலாம் மற்றும்
அத்தகைய அதிகாரஅமைப்பு, தான் அவசியம் என்று
கருதுகிற விசாரணையைச் செய்த பின்னரும், இந்தப்
பொருட்பாட்டில் விண்ணப்பதாரர் அவருடைய
கருத்துகளை எடுத்துச்சொல்வதற்கான வாய்ப்
பொன்றினை கொடுத்த பிண்னரும், தான் பொருத்தமென
நினைக்கிற ஆணையை அதன் தொடர்பாகப்
பிறப்பிக்கலாம்.
(2) உட்பிரிவு (1)இல் குறிப்பிடப்பட்ட அதிகார
அமைப்பின் ஆணையானது, இறுதியானதாகும்.
9. தண்டணை: (1) பொதுமக்கள் காணக்கூடிய
இடம் எதிலும் மறுப்புக்குரிய விளம்பரப் பொருள்
ஏதொன்றையும் ஒட்டுகிற அல்லது காட்சிக்கு வைக்கிற
எவரொருவரும், மூன்றாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய
காலஅளவிற்கு இருவகைச் சிறைத் தண்டனைகளில்
ஏதேனும் ஒன்றுமோ அல்லது மூவாயிரம் ரூபாய்வரை
நீடிக்கக்கூடிய பணத்தண்டமோ அல்லது இரண்டுமோ
விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
(2) பொதுமக்கள் காணக்கூடிய இடம் எதிலும்,
பிரிவு ?இன்படி தணிக்கைச் சான்றிதழ் ஒன்று குழுவால்
வழங்கப்பட்டிராத, அல்லது தணிக்கைச் சான்றிதழின் எண்
மற்றும் தேதியை வகுத்துரைக்கப்பட்ட முறைகளில்
கொண்டிராத விளம்பரப் பொருள் எதனையும் ஒட்டுகிற
அல்லது காட்சிக்கு வைக்கிற எவரொருவரும்
மூன்றாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய இருவகைச் சிறைத்
தண்டனைகளில் ஏதேனும் ஒன்றுமோ அல்லது மூவாயிரம்
ரூபாய்கள் வரை நீடிக்கக்கூடிய பணத்தண்டமோ அல்லது
இரண்டுமோ விதித்தும் மற்றும் தொடர்ந்து குற்றம் செய்கிற
நிகழ்வில், அக்குற்றம் தொடர்கிற ஒவ்வொரு நாளுக்கும்
நூறு ரூபாய் வரை நீடிக்கக்கூடிய பணத்தண்டம் விதித்தும்
தண்டிக்கப்படுதல் வேண்டும்.
10
(3) உட்பிரிவு (1)இன்படியோ, உட்பிரிவு
(2)இன்படியோ தண்டிக்கப்படத்தக்க குற்றம் ஒன்றுக்காக
நபர் எவருக்கும் தண்டனைத்தீர்ப்பு அளிக்கப்பட்டால்,
தண்டனைத்தீர்ப்பு அளிக்கின்ற நீதிமன்றம் எந்த விளம்பரப்
பொருளைப் பொறுத்து அக்குற்றம் செய்யப்
பட்டிருக்கின்றதோ அந்த விளம்பரப் பொருள் அரசுக்குப்
பறிமுதல் செய்யப்படுதல் வேண்டும் என்று மேலும்
பணிக்கலாம்.
10. உடந்தைக்குற்றவாளிக்கான தண்டனை.-
பிரிவு 9இன் உட்பிரிவு (1)இன்படியோ உட்பிரிவு
(2)இன்படியோ ஏதேனும் குற்றம் புரியப்படுமானால், எந்த
முறையிலேனும் அதனை செய்விக்கிற அதனை
முயன்றுபெறுகிற அதற்கு ஆலோசனை தருகிற,
உதவுகிற, உடந்தையாக இருக்கிற அல்லது அதற்குத்
துணைபோகிற எவரொருவரும், அக்குற்றத்திற்காக
வகைசெய்யப்பட்டுள்ள தண்டனை விதித்து
தண்டிக்கப்படுதல் வேண்டும்.
11. செல்லத்தக்கதாக்குதல்.-- குழுவின் செயல்
அல்லது நடவடிக்கை எதுவும், அக்குழுவில் உள்ள
காலியிடம் அல்லது அதன் அமைப்பிலுள்ள குறைபாடு
ஏதொன்றின் காரணத்தால் மட்டுமே செல்லத்தகாததாகக்
கருதப்படுதல் கூடாது.
12. குற்றத்தை இணக்கமாகத் தீர்த்துக்
கொள்வதற்கான அதிகாரம்.- (1) வகுத்துரைக்கப்படும்.
நிபந்தனைகளுக்குட்பட்டு, வகுத்துரைக்கப்பட்ட
அதிகாரஅமைப்பு இதன்பொருட்டு பொது அல்லது தனி
ஆணை ஒன்றின் மூலமாக, இந்தச் சட்டத்தின்படி
நடவடிக்கைகள் தொடங்கப்படுவதற்கு முன்னரோ அல்லது
அதன்பின்னரோ, இந்தச் சட்டத்தின்படி குற்றம் ஒன்றைப்
புரிந்துள்ள அல்லது புரிந்திருப்பதாக நியாயமாக
சந்தேகிக்கப்படுகின்ற நபரிடமிருந்து அத்தகைய
11
குற்றத்தை இணக்கமாகத் தீர்த்துக்கொள்வதன் வாயிலாக,
இரண்டாயிரம் ரூபாய்களுக்கு மேற்படாமல்
பணத்தொகைகயொன்றை ஏற்றுக்கொள்ளலாம்.
(2) அத்தகைய பணத்தொகை செலுத்தப்பட்டதன்.
பேரில் அத்தகைய நபர் விடுவிக்கப்படுதல் வேண்டும்;
மற்றும் அத்தகைய குற்றத்தைப் பொறுத்து
அவருக்கெதிராக மேற்கொண்டு நடவடிக்கை எதுவும்
எடுக்கப்படக் கூடாது.
13. கைப்பற்றுவதற்கான அதிகாரம்.- காவல்
நிலையம் ஒன்றைப் பொறுப்பில் கொண்டுள்ள அலுவலர்
ஒருவரின் படிநிலைக்குக் கீழல்லாத காவல் அலுவலர்
எவரும்,-
(@ மறுப்பிற்குரிய விளம்பரப் பொருட்கள்
எவற்றையேனும்; அல்லது
0௦) () இந்தச் சட்டத்தின்படி தணிக்கைச்
சான்றிதழ் எதுவும் பெறப்பட்டிராத,
அல்லது
0) தணிக்கைச் சான்றிதழின் எண் மற்றும்
தேதியைக் கொண்டிராத
விளம்பரப் பொருள் ஏதொன்றையும்,
கைப்பற்றுவது சட்டப்படியானதாகும்; மற்றும் அத்தகைய
காவல் அலுவலர், உடனடியாக அதிகாரவரம்பு
பெற்றிருக்கின்ற குற்றவியல் நடுவருக்கு அந்தக்
கைப்பற்றுகை குறித்து அறிக்கை கொடுத்தல் வேண்டும்;
மேலும், கைப்பற்றப்பட்ட விளம்பரப் பொருள்:
நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல வசதி இல்லாத
நிலையில் இருக்கும் போது, அவர், கோரப்பட்டவாறும்
கோரப்படும்போதும் நீதிமன்றத்தின் முன்பு அந்த விளம்பரப்
பொருளை தாக்கல் செய்வதற்கும் மற்றும் அந்த விளம்பரப்
பொருளை தீர்வு செய்வது குறித்து நீதிமன்றம் பிறப்பிக்கும்.
12
ஆணைகளை நிறைவேற்றுவதற்குமாகப் பிணைமுறி
ஒன்றை எழுதிக் கொடுக்கின்றதன். பேரில்,
கைப்பற்றப்பட்ட அந்த விளம்பரப் பொருளை நபர்
ஒருவரின் பாதுகாப்பிலும் கொடுத்து வைக்கலாம்.
14. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொது
ஊழியர்களாக இருப்பர்.- தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அல்லது அதன்கீழ்
செய்யப்பட்ட விதிகள் எதனின்படியும் செயற்படுகிறபோது
அல்லது செயற்படுவதாகப் புலப்படுகிண்றபோது, இந்தியத்
தண்டனைத் கதொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம்
XLV/1860) பிரிவு 21இன் பொருளின்படி பொது
ஊழியர்களாகக் கருதப்படுதல் வேண்டும்.
15. சட்ட நடவடிக்கைக்குத் தடை- இந்தச்
சட்டத்தின்படியோ அல்லது அதன்கீழ் இயற்றப்பட்ட
விதிகள் எதனின்படியோ நல்லெண்ணத்தில் செய்யப்படும்
அல்லது செய்வதாகக் கருதப்படும் எதற்காகவும், இந்தச்
சட்டத்தின்கீழ் நியமனம் செய்யப்பட்ட தலைவர்,
உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் மற்றும்
பணியாளர்களுக்கு எதிராக உரிமைவழக்கோ பிற சட்ட
நடவடிக்கையோ தொடரப்படுதல் கூடாது.
16. நிறுமங்களால் செய்யப்படும் குற்றங்கள்.- (1)
இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்க குற்றம் ஒன்று
நிறுமம் ஒன்றால் செய்யப்பட்டிருக்கின்ற நிலையில்,
அக்குற்றம் புரியப்பட்ட காலத்தில் அந்நிறுமத்தின் அலுவல்
நடப்பிற்காக அந்நிறுமத்தைத் தம்பொறுப்பில்.
கொண்டிருந்த மற்றும் அதற்குப் பொறுப்பாக இருந்த
ஒவ்வொரு நபரும் மற்றும் அந்த நிறுமமும்கூட
அக்குற்றத்தைப் புரிந்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.
என்பதோடு அதன்படியே எதிராக நடவடிக்கை
எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உள்ளதாலும்
வேண்டும்:
13
வரம்புரை: இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும்,
அத்தகைய நபர் எவரும், இக்குற்றமானது தமக்குத்
தெரியாமலேயே புரியப்பட்டது என்றோ அல்லது அத்தகைய
குற்றம் புரியப்படுவதை தடுப்பதற்கான உரிய முயற்சி
அனைத்தையும் தாம் மேற்கொண்டார் என்றோ அவர்
மெய்ப்பிப்பாரானால், தண்டனை எதற்கும் உள்ளாக்குதல்
கூடாது.
(2) உட்பிரிவு (1)இல் என்ன அடங்கியிருந்த
போதிலும், இந்தச் சட்டத்தின்படியான குற்றம் ஏதேனும்
ஒரு நிறுமத்தால் புரியப்பட்டிருந்து, அக்குற்றமானது
அந்நிறுமத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது
பிற அலுவலர் எவரின் இசைவுடனோ அல்லது மறைமுக
ஆதரவுடனோ புரியப்பட்டுள்ளது என்றோ அல்லது அவர்
மீதான கவனமின்மை எதற்கும் சாட்டத்தக்கதாக
இருக்கிறது என்றோ மெய்ப்பிக்கப்படும் நிலையில்,
அத்தகைய இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற
அலுவலரும்கூட அந்தக் குற்றத்தைப் புரிந்திருப்பதாகக்
கருதப்படுதல் வேண்டும் என்பதோடு, அதன்படி எதிராக
நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு
உள்ளாதலும் வேண்டும்.
விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக,
(௨) "நிறுமம்" என்பது, கூட்டமைப்பு எதுவும்
எனப் பொருள்படும் என்பதோடு நிறுவகம் ஒன்றையோ பிற
தனி நபர்களின் சங்கத்தையோ உள்ளடக்கும்; மற்றும்
0) ஒரு நிறுவகம் சம்பந்தமாக "இயக்குநர்"
என்பது, அந்நிறுவனத்திலுள்ள ஒரு கூட்டாளி எனப்
பொருள்படும்.
17. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.- (1)
இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது
அவற்றுள் எதையேனும் நிறைவேற்றுவதற்கு அரசு
விதிகளைச் செய்யலாம்.
14
(2) குறிப்பாகவும் முந்தைய அதிகாரத்தின்
பொதுத்தன்மைக்கு குந்தகமின்றியும் அத்தகைய
விதிகள்,
(8) இந்தச் சட்டத்தின்படி வகுத்துரைக்கப்பட
வேண்டுமென்று வெளிப்படையாகக் கோரப்படும் அல்லது
அனுமதிக்கப்படும் பொருட்கள் அனைத்திற்கும்;
(b) தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்
காலஅளவுக்கும்;
(c) தலைவருக்கு வழங்கப்படத்தக்க
ஊதியத்திற்கும்;
(0) உறுப்பினர்களுக்கு வழங்கப்படத்தக்க
படித்தொகைகள் அல்லது கட்டணங்களுக்கும்;
(6) குழுவின் கூட்டங்கள். நடத்தப்பட
வேண்டிய இடம், காலம் மற்றும் எந்த முறையில்
நடத்தப்படவேண்டியது என்பதற்கும்;
(9) தணிக்கை அலுவலர், உதவித் தணிக்கை
அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களின்.
அதிகாரங்களுக்கும் பணிகளுக்கும்;
(ஓ தணிக்கைச் சான்றிதழ் ஒன்றுக்கான
மனுவின் படிவத்திற்கும்;
(h) விளம்பரப் பொருட்களை
பணிந்தனுப்புவதற்கான முறைக்கும்;
(i) தணிக்கைச் சான்றிதழுக்காகச்
செலுத்தப்பட வேண்டிய கட்டணத்திற்கும்;
(j) தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்பட
வேண்டிய படிவம் மற்றும் முறைக்கும்;
09 பிரிவு 8இன் உட்பிரிவு (1)இன்கீழ் எந்த
அதிகாரஅமைப்பிற்கு மேல்முறையீடு செய்யப்படுதல்
வேண்டும் என்பதற்கும்; மற்றும்
15
0) பிரிவு 12இன்கீழ் குற்றங்களை
இணக்கமாகத் தீர்க்கும் அதிகார அமைப்புக்கும்,
வகைசெய்யலாம்.
(3) இந்தப் பிரிவின்படி விதி எதையும்
செய்கையில் அதன் மீறுகை எதுவும் ஐந்நூறு ரூபாய் வரை
நீட்டிக்கப்படக்கூடிய பணத்தண்டம் விதித்துத் தண்டிக்கப்
படத்தக்கது என்று அரசு வகைசெய்லாம்.
(4) (ஐ இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட
விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை ஒரு
குறிப்பிட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்
என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலன்றி அவை
எந்த நாளில் வெளியிடப்பட்டனவோ அந்த நாளில்
நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
0) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட
அறிவிக்கைகள் அனைத்தும், அவை ஒரு குறிப்பிட்ட
நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று
வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலன்றி அவை எந்த
நாளில் வெளியிடப்பட்டனவோ அந்த நாளில்
நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(5 இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும் விதி
ஒவ்வொன்றும் அல்லது பிறப்பிக்கப்படும் அறிவிக்கை:
ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட
பின்னர் கூடியவிரைவில், சட்டமன்றப்பேரவையின் முன்பு
வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு
வைக்கப்பட்ட கூட்டத்தொடரோ அல்லது அதற்கடுத்த
கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்னர் சட்டமன்றப்
பேரவை அத்தகையவிதி அல்லது அறிவிக்கையில்
மாறுதல் எதையேனும் செய்யுமானால் அல்லது அந்த
விதியோ அறிவிக்கையோ செய்யப்படுதலோ
16
பிறப்பிக்கப்படுதலோ கூடாது என்று சட்டமன்றப்பேரவை
முடிவு செய்யுமானால், அதன் பின்னர் அந்த விதியோ
அறிவிக்கையோ அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட
வடிவத்தில் மட்டுமே நடைமுறைக்கு வருதல் வேண்டும்;
அல்லது நிகழ்விற்கேற்ப நடைமுறைக்கு வராதுபோதல்
வேண்டும்; எனினும், அவ்வாறு மாறுதல் செய்வது அல்லது
அழித்தறவு செய்வது எதுவும், அந்த விதியின்படியோ
அறிவிக்கையின்படியோ முன்னதாகச் செய்யப்பட்ட
ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல்
வேண்டும்.
18. காப்பு-- இந்தச் சட்டத்தின் வகைமுறைகள்,
அப்போதைக்கு நடைமுறையில் உள்ள சட்டம்
ஏதொன்றுக்கும் கூடுதலாய் இருத்தல் வேண்டுமேயன்றி
அதைக் குன்றச் செய்வதாய் இருத்தல் ஆகாது; மற்றும்
இதில் அடங்கியுள்ள எதுவும், புலனாய்வு மூலமாகவோ
அல்லது மற்றப்படியோ நபர் எவருக்கும் எதிராகப் பிற
சட்டங்களின். கீழ் தொடுக்கக்கூடிய நடவடிக்கை
எதிலிருந்தும் அவருக்கு விலக்களிக்காது.