Tamil Nadu · 1997 · Act 36
The Tamil Nadu Animals and Birds in Urban Areas (Control and Regulation) Act, 1997
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
1997ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்சார்ந்த
பரப்பிடங்களிலுள்ள விலங்குகள் மற்றும் பறவைகள்
(கட்டுப்பாடு செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்)
சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 461997)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
The Tamil Nadu Animals and Birds in Urban Areas
(Control and Regulation) Act, 1997
(Tamil Nadu Act No. 46 of 1997)
(as on 31 October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
சென்னை
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
i
1997ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்சார்ந்த
பரப்பிடங்களிலுள்ள விலங்குகள் மற்றும் பறவைகள்
(கட்டுப்பாடு செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்)
பிரிவு
10.
சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 461997)
பொருளடக்கம்
குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும்.
தொடக்கம்.
பொருள்வரையறைகள்.
நகர்சார்ந்த பரப்பிடங்களில் உரிம௰ின்றி
விலங்குகளையும் மற்றும் பறவைகளையும்
வைத்துக் கொள்ளக்கூடாது.
உரிமத்தை வழங்குதலும் புதுப்பித்தலும்.
உரிமம் செயற்படுவதைத் தற்காலிகமாக
நிறுத்தி வைப்பதற்கோ அல்லது அதனை
நீக்கிவிடுவதற்கோ உள்ள அதிகாரம்.
மேல்முறையீடு.
உரிமம் வழங்குகின்ற அலுவலர் மற்றும்
மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பின்
ஆணைகள் அறுதியானவை.
விலங்குகளையும் பறவைகளையும்
வைத்திருப்பதற்கோ அல்லது கொண்டு
வருவதற்கோ தடைசெய்யப்பட்டுள்ள
பரப்பிடங்கள்.
வளாகங்களுக்குள் நுழைந்து ஆய்வு
செய்வதற்கான அதிகாரம்.
திரிந்து கொண்டிருக்கிற விலங்குகள் அல்லது
பறவைகளை மற்றும் உரிமமின்றி வைத்து
வரப்படுகிற விலங்குகள் மற்றும் பறவைகளை
பறிமுதல் செய்தல்.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
ம்
குற்றச்செயல்களை விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளுதல்.
குற்றச்செயல்களும் தண்டவிதிப்புகளும்.
நிறுமங்களால் செய்யப்படும் குற்றச்செயல்கள்.
இந்தச் சட்டம் பிற சட்டங்களுக்கு மேலோங்கி
இருத்தல்.
குற்றச்செயல்களைச் சுருக்குமுறையில்
விசாரணை செய்வதற்கான அதிகாரம்.
நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
விலக்களிப்பு.
இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
இணைபப்புப்பட்டியல்:
1
1997ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்சார்ந்த
பரப்பிடங்களிலுள்ள விலங்குகள் மற்றும் பறவைகள்
(கட்டுப்பாடு செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்)
சட்டம்
தமிழ்நாடு சட்ட எண் 46/1997
[தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் பின்வரும் சட்டமானது
1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 11ஆம் நாளன்று.
குடியரசுத்தலைவரின். ஏற்பிசைவைப் பெற்று
பொதுத்தகவலுக்காகத் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது]
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நகர் சார்ந்த பரப்பிடங்களில்
பொதுநலனை முன்னிட்டு விலங்குகளையும்
பறவைகளையும் வைத்து வருவதற்கு உரிமம்
வழங்கி அதனை முறைப்படுத்துவதற்கோ அல்லது
அவ்வாறு வைத்து வருவதைத் தடைசெய்வதற்கோ
வகை சய்வதற்கான ஒரு சட்டம்.
மக்கள் நல்வாழ்வையும் உடல் நலனையும்
பேணிக்காப்பதை உறுதி செய்ய வேண்டியது
அவசியமானதாக இருப்பதாலும், கறவை கால்நடைகள்
மற்றும் பிற விலங்குகளை நகர் சார்ந்த பரப்பிடங்களில்
பெருமளவில் வைத்து வருவதானது மக்கள் நலத்திற்கு
ஆபத்தை விளைவிப்பதாக இருப்பதாலும்;
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நகர் சார்ந்த
பரப்பிடங்களில் பொதுமக்கள் நலனை முன்னிட்டு,
விலங்குகளையும் பறவைகளையும் வைத்து வருவதற்கு
உரிமம் வழங்கி அதனை முறைப்படுத்துவதற்கு அல்லது
அவ்வாறு வைத்து வருவதையும் அவைகளின்
நடமாட்டத்தை தடைசெய்வதற்கும் வகைசெய்வதோடு
தொடர்புடைய அல்லது அதன். விளைவான
விவரங்களுக்கு வகைசெய்வதும். உகந்ததாக
இருப்பதாலும்;
2
இந்தியக் குடியரசின் நாற்பத்து எட்டாம் ஆண்டில்
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் இயற்றப்பட்ட
சட்டம் பின்வருமாறு:-
1. குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும் தொடக்கம்.-
(1) இந்தச் சட்டம் 1997ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்
சார்ந்த பரப்பிடங்களிலுள்ள விலங்குகள் மற்றும்
பறவைகள் (கட்டுப்பாடு செய்தல் மற்றும்
முறைப்படுத்துதல்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் பரவி
நிற்கும்.
(3) 85~
(ஐ சென்னை மாநகரத்தில் உடனடியாகவும்;
மற்றும்
b பிற நகர் சார்ந்த பரப்பிடங்களில் அரசு
அறிவிக்கையின் வாயிலாகக் குறிப்பிடும் தேதியிலும்
நடைமுறைக்கு வருதல் வேண்டும்; மற்றும் வெவ்வேறு
நகர் சார்ந்த பரப்பிடங்களுக்கென வெவ்வேறு தேதிகள்
குறிக்கப்படலாம் என்பதோடு இந்தச் சட்டத்தின்
தொடக்கம் என்ற குறிப்பு எதுவும் ஒரு நகர் சார்ந்த
பரப்பிடம் தொடர்பாக அந்த நகர் சார்ந்த பரப்பிடத்தில் இந்தச்
சட்டம் நடைமுறைக்கு வருவதைக் குறிப்பதாகக் பொருள்
கொள்ளப்படுதல் வேண்டும்.
2. பொருள்வரையறைகள்.- இந்தச் சட்டத்தில்
தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-
(8) "விலங்கு" என்பது, இணைபப்புப்பட்டியலில்
குறிப்பிடப்பட்டுள்ள விலங்கு எதுவும் எனப் பொருள்படும்;
(b) "மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பு'
என்பது, இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கிற நகர்
சார்ந்த பரப்பிடம் எதற்காகவும் மேல்முறையீட்டு அதிகார
அமைப்பாக அறிவிக்கையின். மூலம் அரசினால்
3
நியமிக்கப்பட்டுள்ள அரசின் அல்லது உள்ளாட்சி அமைப்பு
ஒன்றின் அலுவலர் ஒருவர் எனப் பொருள்படும்;
(9) "பறவை என்பது, இணைபப்புப்பட்டியலில்
குறிப்பிடப்பட்டுள்ள பறவை எதுவும் எனப்
பொருள்படும்;
(0) "அரசு" என்பது, "மாநில அரசு" எனப்
பொருள்படும்;
(e) "ஆய்வாளர்" என்பது, இந்தச் சட்டமானது
நடைமுறையிலிருந்து வருகின்ற நகர் சார்ந்த பரப்பிடம்
எதையும் பொறுத்த அளவில் இந்தச் சட்டத்தின்
நோக்கங்களுக்காக ஆய்வாளர் என உரிமம் வழங்குகின்ற
அலுவலரால் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர் எவரும் எனப்
பொருள்படும்;
() "உரிமம்" என்பது, இந்தச் சட்டத்தின்படி
வழங்கப்பட்டுள்ள உரிமம் ஒன்று எனப் பொருள்படும்;
(@ "உரிமம் வழங்குகின்ற அலுவலர்" என்பது,
இந்தச் சட்டமானது நடைமுறையில் இருந்து வருகின்ற
நகர் சார்ந்த பரப்பிடம் எதனையும் பொறுத்த அளவில்
இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக உரிமம்
வழங்குகின்ற அலுவலர் அல்லது அலுவலர்கள் என
அறிவிக்கையின் மூலம் அரசினால் நியமிக்கப்பட்டுள்ள "8"
எனும் வகையைச்சார்ந்்த அலுவலரின் படிநிலைக்குக்
குறையாத அரசு அலுவலர் ஒருவர் அல்லது ஒருவருக்கு
மேற்பட்டவர்கள் அல்லது "॥" ஆம் வகை அலுவலரின்.
படிநிலைக்குக் குறையாத உள்ளாட்சி அதிகார அமைப்பு
ஒன்றின் அலுவலர் ஒருவர் அல்லது ஒருவருக்கு
மேற்பட்டவர்கள் எனப் பொருள்படும்.
(h) "தடைசெய்யப்பட்டுள்ள பரப்பிடம்" என்பது,
பிரிவு 8இன்படி தடைசெய்யப்பட்டுள்ள பரப்பிடமாக.
4
இருப்பதாக விளம்பப்பட்டு அறிவிக்கை செய்யப்பட்ட
பரப்பிடம் எனப் பொருள்படும்;
(i) நகர் சார்ந்த பரப்பிடம்" என்பது,-
(A) சென்னை மாநகரின் எல்லைகளுக்குள்
உள்ள பரப்பிடம்; மற்றும்
(8) இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக
நகர் சார்ந்த பரப்பிடமாக இருப்பதாக அரசினால்
அறிவிக்கையின் மூலம் விளம்பரப்பட்டிருக்கிறதும்,
அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம்
எதன்படியேனும் அமைத்துருவாக்கப்பட்டுள்ள பிற
மாநகராட்சி எதனின் அல்லது, நகராட்சி அல்லது
பேரூராட்சி அல்லது தொழிலியல் நகரியம் எதனின்:
எல்லைகளுக்குள் உள்ளதுமான பரப்பிடம் எதுவும்
என்பதோடு இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக அதே
நகர் சார்ந்த பரப்பிடத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கையின்:
மூலம் அரசினால் விளம்பப்படக்கூடிய அதனை
ஒட்டியுள்ள பரப்பிடம் எதுவும் எனப் பொருள்படும்:
வரம்புரை: ஆனால், 1924ஆம் ஆண்டு பாளையச்
சட்டத்தின் (மையச் சட்டம் 2/1924) படி
அமைத்துருவாக்கப்பட்ட பாளையம் எதனின்
எல்லைகளுக்குள் அமைந்துள்ள பரப்பிடம் எதுவும் இந்தச்
சட்டத்தின் நோக்கங்களுக்காக நகர் சார்ந்த
பரப்பிடமொன்றாக விளம்பப்படுதல் கூடாது.
3. நகர்சார்ந்த பரப்பிடங்களில் உரிம௰ின்றி
விலங்குகள் மற்றும் பறவைகள் வைத்துக்கொள்ளக்
கூடாது.-நபர் எவரும் அரசினால் இது குறித்து
அறிவிக்கையின் மூலம் குறிப்பிடப்படக்கூடிய, (இதன்
பின்பு அறிவிக்கப்பட்ட விலங்கு அல்லது பறவை எனக்
குறிப்பிடப்படும்) விலங்கினை அல்லது பறவையினை
அத்தகைய அறிக்கைத் தேதியிலிருந்து மூன்று மாத
காலஅளவு முடிவடைந்ததற்குப் பின்னர் இந்தச்
5
சட்டத்தின்படி அவருக்கு வழங்கப்பட்ட உரிமம்
ஒன்றின்படியும் அதற்கான நிபந்தனைகளுக்கு இணங்கிய
வகையிலும் அல்லாமல் நகர் சார்ந்த பரப்பிடம் எதிலும்
வைத்திருத்தலோ, வைத்திருக்கச் செய்தலோ அல்லது
வைத்திருக்க அனுமதித்தலோ கூடாது.
4. உரிமத்தை வழங்குதலும் புதுப்பித்தலும்.- (1)
உரிமம் ஒன்றைப் பெறுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்குக்
கருதுகின்ற நபர் எவரும் குறிப்பிடப்படும் படிவத்திலும்,
முறையிலும், குறிப்பிடப்படும். கட்டணத்தைச்
செலுத்துவதன் பேரிலும் விண்ணப்பித்துக் கொள்ளுதல்
வேண்டும்.
(2). உட்பிரிவு (1)இன்படி விண்ணப்பம் ஒன்று
வரப்பெற்றதன்பேரில், உரிமம் வழங்குகின்ற அலுவலர்
உரிமத்தை வழங்கலாம் அல்லது புதுப்பிக்கலாம் அல்லது
எழுத்துவடிவில் காரணங்களைப் பதிவுசெய்து
ஆணையின் மூலம் உரிமத்தை வழங்க அல்லது புதுப்பிக்க
மறுக்கலாம்:
வரம்புரை: உரிமம் வழங்குகின்ற அலுவலர்,
உரிமத்தை வழங்க அல்லது புதுப்பிக்க மறுக்கிற ஆணை
ஒன்றைப் பிறப்பிப்பதற்கு முன்னர் தொடர்புடைய நபருக்கு
அவர்தம் தரப்பினைக் கேட்பதற்கான நியாயமான ஒரு
வாய்ப்பினை வழங்குதல் வேண்டும்.
(3) உரிமம் வழங்குகின்ற அலுவலர், உரிமம்
ஒன்றை வழங்குவதில் அல்லது புதுப்பிப்பதில் அல்லது
வழங்க அல்லது புதுப்பிக்க மறுப்பதில் பின்வரும்
விவரங்களை, அதாவது:-
(ஐ) விலங்குகள் அல்லது பறவைகள் வைத்து
வரக் கருதப்படும் பரப்பிடத்தில், ஏற்கெனவே உரிமம்
வழங்கப்பட்டு வைத்துவரப்படுகின்ற அறிவிக்கப்பட்ட
விலங்குகளின்: அல்லது பறவைகளின்
எண்ணிக்கையை;
6
(௦) அறிவிக்கப்பட்ட விலங்குகள் அல்லது
பறவைகள் வைத்து வரக் கருதப்படும் வளாகத்தின்.
மற்றும் அதன். சுற்றுப்புறப் பகுதியின்:
பொருத்தமுடைமையை;
(6) பொது சுகாரத்தைக் கருத்திற் கொண்டு,
குறிப்பாக கொட்டிலின் அல்லது தொழுவத்தின்
பொருத்தமுடைமையையும், குடிப்பதற்கு, கழுவுவதற்கு,
தூய்மைப்படுத்துவதற்கு சாணக் கழிவுகளை
அகற்றுவதற்கும் நீர் வழங்குவதற்காகச்
செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் பிற துப்புரவு
ஏற்பாடுகளை;
(0) கன்றுகளையோ, குஞ்சுப் பறவைகளையோ
முறையாக வளர்த்து வருவதற்காகச் செய்யப்பட்டுள்ள
ஏற்பாடுகளை;
(6) அறிவிக்கப்பட்ட விலங்கையோ அல்லது
பறவையையோ வறண்ட காலத்தின்போது பேணி
வருவதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை;
() குறிப்பிடப்படும். பிற
விவரங்களை,
கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
4 அந்த உரிமமானது, குறிப்பிடப்படும்.
படிவத்திலும் குறிப்பிடப்படும் காலத்திற்கும் சட்டப்படி
செல்லத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும் என்பதோடு
குறிப்பிடப்படும் வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும்
உட்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.
5. உரிமம் செயற்படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி
வைப்பதற்கோ அல்லது அதனை நீக்கிவிடுவதற்கோ
உள்ள அதிகாரம்.- எந்த நபருக்கு உரிமம்
வழங்கப்பட்டுள்ளதோ அந்த நபர், இந்தச் சட்டத்தின்.
வகைமுறைகள் அல்லது அதன்படிச் செய்யப்பட்ட
விதிகள் எவற்றையும் மீறியுள்ளார் என்றோ, உரிமத்தின்.
வரையறைகளில் மற்றும் நிபந்தனைகளில்
7
ஏதொன்றின்படியும் இணங்கி நடக்கத் தவறியுள்ளார்
என்றோ, உரிமம் வழங்குகின்ற அலுவலர் நம்புவதற்குக்
காரணம் கொண்டிருக்கிற நிலையில், அந்த நபருக்கு
காரணம் காட்டுவதற்கு நியாயமான ஒரு வாய்ப்பை
வழங்கியதற்குப் பிண்னர், அவர் எழுத்து வடிவில்
காரணங்களைப் பதிவு செய்து ஆணையின் மூலம் அந்த
உரிமம் செயற்படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி
வைக்கலாம் அல்லது அதனை நீக்கிவிடலாம்.
6. மேல்முறையீடு.- (1) உரிமம் வழங்குகின்ற
அலுவலர்.
(ஐ பிரிவு 4இன்படி உரிமம் ஒன்றை
வழங்கவோ அல்லது புதுப்பிக்கவோ மறுக்கின்ற அல்லது
(௦) பிரிவு இன்படி உரிமம் ஒன்றை
தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்ற அல்லது அறவு
செய்கின்ற,
ஆணைஷஒன்றினால் நபர் எவரும் குறையுற்றால், அவர்
குறிப்பிடப்படும் படிவத்திலும், குறிப்பிடப்படும் முறையிலும்,
வகுந்துரைக்கப்படக்கூடிய கட்டணத்தைச் செலுத்துவதன்
பேரிலும் அத்தகைய ஆணைக்கு எதிராக மேல்முறையீட்டு
அதிகாரஅமைப்பிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.
(2) உட்பிரிவு (1) இன்படியான மேல்முறையீடு
ஒவ்வொன்றும், எந்த ஆணைக்கு எதிராக மேல்முறை
யீடானது முன்னிடப்பட்டுள்ளதோ அந்த ஆணையைப்
பற்றிய தகவல், மேல்முறையீட்டாளரால் பெறப்பட்ட
தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்ளாக செய்து
கொள்ளப்படுதல் வேண்டும்:
வரம்புரை: ஆனால், மேல்முறையீட்டு அதிகார
அமைப்பானது, மேல்முறையீட்டாளர், உரிய காலத்திற்குள்
மேல்முறையீடு செய்யாமல் இருந்ததற்குப் போதுமான
காரணம் பெற்றிருப்பதாக மனநிறைவடைந்தால்,
மேற்சொன்ன காலஅளவான முப்பது நாட்கள் கால அளவு
8
முடிவடைந்ததற்குப் பின்னரும் அம்மேல்முறையிட்டை
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
(3) அத்தகைய மேல்முறையீடு வரப்பெற்றதன்.
பேரில், மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பானது,
தேவைப்படும் விசாரணையைச் செய்த பின்னரும்,
மேல்முறையீட்டாளருக்கு தம் தரப்பினை
எடுத்துரைப்பதற்கு நியாயமான ஒரு வாய்ப்பினைக்
கொடுத்ததற்குப் பிண்ணரும், தான் தக்கதெனக் கருதுகிற
ஆணைகளைப் பிறப்பிக்கலாம்.
(4) உட்பிரிவு (1)இன்படி, மேல்முறையீடு ஒன்று
செய்யப்படும்போது, மேல்முறையீட்டு அதிகார
அமைப்பானது, தக்கதெனக் கருதும் காலஅளவிற்கும்,
தக்கதெனக் கருதுகிற நிபந்தனைகளின் பேரிலும் உரிமம்,
வழங்குகின்ற அலுவலரின்: ஆணை
நிறைவேற்றப்படுவதை நிறுத்தி வைக்கலாம்.
7. உரிமம் வழங்குகின்ற அலுவலர் மற்றும்
மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பின் ஆணைகள்
அறுதியானவை.- மேல்முறையீட்டு அதிகார அமைப்பிடம்
மேல்முறையீடு செய்து கொள்வதற்கு உட்பட்டு உரிமம்
வழங்குகின்ற அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை
ஒவ்வொன்றும் மற்றும் அத்தகைய மேல்முறையீடு
எதன்பேரிலும் மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பினால்
பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றும்
அறுதியானதாகும் என்பதோடு உரிமைவழக்கு எதிலுமோ
அல்லது பிற நடவடிக்கைகள் எவற்றிலுமோ
எதிர்க்கப்படுதல் கூடாது; மற்றும் இந்தச்
சட்டத்தின்படியாகவோ அதன் விதிகளின் படியாகவோ
வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, உரிமம்
வழங்குகின்ற அலுவலராலோ அல்லது மேல்முறையீட்டு
அதிகாரஅமைப்பினாலோ பிறப்பிக்கப்பட்ட அல்லது
பிறப்பிக்கப்படவிருக்கிற ஆணை எதனையுமோ அல்லது
9
எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்படவிருக்கிற நடவடிக்கை
எதனையுமோ பொறுத்த அளவில், நீதிமன்றம், தீர்ப்பாயம்
அல்லது பிற அதிகாரஅமைப்பு எதனாலும் தடையாணை
அல்லது உறுத்துக்கட்டளை எதுவும் வழங்கப்படுதல்
கூடாது.
8. விலங்குகளையும் பறவைகளையும்
வைத்திருப்பதற்கோ அல்லது கொண்டு வருவதற்கோ
தடைசெய்யப்பட்டுள்ள பரப்பிடங்கள்.- [©) இந்தச்
சட்டத்தின் முன்சொன்ன வகைமுறைகளில் என்ன
அடங்கியிருந்தபோதிலும், அரசானது, அறிவிக்கையின்:
மூலம் நகர் சார்ந்த பரப்பிடம் ஒன்று முழுவதுமோ அல்லது
அதன் பகுதி எதுவுமோ தடை செய்யப்பட்டுள்ள பரப்பிடமாக
இருப்பதாக விளம்புவது பொது நலனுக்கு உகந்தது எனக்
கருதுமானால், எந்த நேரத்திலும் அவ்வாறே செய்யலாம்.
(2) அவ்வாறு விளம்புகை: செய்யப்பட்ட
தேதியன்றோ அல்லது அதற்குப் பின்னரோ,
(8) தடைசெய்யப்பட்டுள்ள பரப்பிடத்தில் உரிமம்
எதுவும் வழங்கப்படுதல் கூடாது என்பதோடு தடை
செய்யப்பட்டுள்ள பரப்பிடத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டு
நடைமுறையில் இருந்து வருகின்ற உரிமம்
ஒவ்வொன்றும் மேற்சொன்ன தேதியிலிருந்து ஒன்பது
மாதங்கள்] முடிவடைந்ததன்பேரில் அல்லது உரிமக் கால
அளவில் எஞ்சிய காலஅளவு முடிவடைந்ததன் பேரில்,
இவற்றுள் எது முந்தியதோ அந்த காலஅளவின் பேரில்,
நீக்கப்பட்டதாகிவிடும்; மற்றும் சம்பந்தப்பட்ட நபரானவர்
தடைசெய்யப்பட்டுள்ள பரப்பிடத்திடத்திலிருந்து
அவருக்குச் சொந்தமான அறிவிக்கப்பட்ட விலங்கு
மற்றும் பறவைகள் அனைத்தையும் மேற்சொன்ன
1. 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் சார்ந்த பரப்பிடங்களிலுள்ள.
விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு செய்தல் மற்றும்
முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டத்தின் (சட்ட எண் 33,4999) 2ஆம்
பிரிவினால் மாற்றியமைக்கப்பட்டது.
10
ஒன்பது] மாத காலஅளவிற்குள் அல்லது, நிகழ்விற்கேற்ப,
மேற்சொன்ன எஞ்சிய காலஅளவிற்குள்ளாக
அகற்றிவிடுதல் வேண்டும்; மற்றும்
0) தடை செய்யப்பட்டுள்ள பரப்பிடத்திற்குள்,
அறிவிக்கப்பட்ட விலங்கை அல்லது பறவையை கொண்டு
வருதலோ அல்லது வைத்திருத்தலோ கூடாது:
வரம்புரை: ஆனால், அறிவிக்கப்பட்ட விலங்கை
அல்லது பறவையை,-
(i) அவற்றின் பயண் வழியில் தடை
செய்யப்பட்டுள்ள பரப்பிடத்தின் வழியாக
வெளியே உள்ள பரப்பிடம் எதற்கும்
கடந்து செல்வதை அனுமதிக்கலாம்;
0) வகுத்துரைக்கப்படும் படிவத்திலும்
முறையிலும் மற்றும்
வகுத்துரைக்கப்படும் நிபந்தனைகளுக்கு
உட்பட்டும் உரிமம் வழங்குகின்ற
அலுவலரால் வழங்கப்பட்ட
அனுமதிக்கிணங்கிய வகையில்
வகுத்துரைக்கப்படும் பிற
நோக்கங்களுக்காக தடை
செய்யப்பட்டுள்ள பரப்பிடத்திற்குள்:
கொண்டு வரலாம்.
(3) உட்பிரிவுகள் (1) மற்றும் (2)இல் என்ன
அடங்கியிருந்தபோதிலும், அரசானது, பொதுமக்கள்
நலனை முன்னிட்டு எந்நேரத்திலும், அறிவிக்கையின்
மூலம் அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்ட பரப்பிடம்
முழுவதையுமோ அல்லது அதன் பகுதி எஈனையுமோ
1. 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் சார்ந்த பரப்பிடங்களிலுள்ள
விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு செய்தல் மற்றும்
முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டத்தின் (சட்ட எண் 33,4999) 2ஆம்
பிரிவினால் மாற்றியமைக்கப்பட்டது.
11
பொறுத்த அளவில், உட்பிரிவு (1)இன்படி வெளியிடப்பட்ட
அறிவிக்கை எதனையும் அழித்தறவு செய்யலாம்; மற்றும்
எந்நேரத்திலும் உட்பிரிவு (1)இன்படி வெளியிடப்பட்ட
இதுபோன்ற அறிவிக்கையின் மூலம் அத்தகைய பிந்தைய
அறிவிக்கையில் குறிப்பிடப்பட்ட ஒரு தேதியிலிருந்து
அந்தப் பரப்பிடத்தை அல்லது அதன் பகுதி எதனையும்
தடைசெய்யப்பட்டுள்ள பரப்பிடமாக மறு விளம்புகை
செய்யலாம்.
9. வளாகங்களுக்குள் நுழைந்து ஆய்வு
செய்வதற்கான அதிகாரம்.- ஆய்வாளர் அல்லது உரிமம்
வழங்குகின்ற அலுவலர் எவருமோ அல்லது
மேல்முறையீட்டு அதிகார அமைப்போ அல்லது அரசினால்
அதிகாரமளிக்கப்பட்ட பிற அலுவலர் எவருமோ,-
(@) விலங்கு அல்லது பறவை எதனையும்
பொறுத்த அளவில், உரிமம் ஒன்றை வழங்குவதற்காக
அல்லது புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் ஒன்று செய்து
கொள்ளப்பட்டிருக்கின்றதோ அல்லது உரிமம்
வழங்கப்பட்டிருக்கின்றதோ அந்த விலங்கை அல்லது
பறவையை வைத்திருப்பதற்காகச் செய்யப்பட்டுள்ள
ஏற்பாடுகள் குறித்து மனநிறைவு கொள்ளும் பொருட்டு;
அல்லது,
(b) உரிமம் ஒன்று இல்லாமல், அறிவிக்கப்பட்ட
விலங்கு அல்லது பறவையானது வைத்து வரப்படுகிறதா
என்பதைக் கண்டறிந்து கொள்ளும்பொருட்டு அல்லது
மற்றபடி இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு அல்லது
அதன்படிச் செய்யப்பட்ட விதிகளுக்கு அல்லது உரிமம்
எதனின் வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும்
முரணானவகையில் வைத்து வரப்படுகின்றனவா
என்பதைக் கண்டறிந்து கொள்ளும்பொருட்டு,
நியாயமான எல்லா நேரங்களிலும் அறிவிக்கப்பட்ட பறவை
அல்லது விலங்கு எதுவும் வைக்கப்பட்டிருக்கிற அல்லது
12
வைக்கக் கருதப்பட்டிருக்கிற தொழுவம், கொட்டகை
அல்லது பிற வளாகம் எதிலும் நுழைந்து ஆய்வு
செய்யலாம்.
140. திரிந்துகொண்டிருக்கிற விலங்குகள் அல்லது
பறவைகளை மற்றும் உரிமமின்றி வைத்து வரப்படுகிற
விலங்குகள் மற்றும் பறவைகளை பறிமுதல் செய்தல்.- (1)
(@) உரிமம் வழங்குகின்ற அலுவலர் அல்லது
ஆய்வாளர்,
() நகர் சார்ந்த பரப்பிடம் ஒன்றில் அல்லது
தடை செய்யப்பட்டுள்ள பரப்பிடம்
ஒன்றில் திரிந்துகொண்டிருப்பதாகக்
காணப்படுகிற, அறிவிக்கப்பட்ட விலங்கு
அல்லது பறவை எதனையும்,
(1) நகர் சார்ந்த பரப்பிடம் ஒன்றில் சட்டப்படி
செல்லத்தக்கதான உரிமம்
ஒன்றில்லாமல்: அல்லது
உரிமமொன்றின் வரையறைகளையும்
நிபந்தனைகளையும் மீறிய வகையில்
வைத்து வருவதாகக் காணப்படுகிற
அறிவிக்கப்பட்ட விலங்கு அல்லது
பறவை எதனையும், அல்லது,-
0) தடை செய்யப்பட்டுள்ள பரப்பிடம்
ஒன்றில் வைத்துவருவதாகக்
காணப்படும் அறிவிக்கப்பட்ட விலங்கு
அல்லது பறவை எதனையும்,
பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகார
அமைப்பினால் பேணிவரப்படும் கால்நடைப்பட்டி எதிலும்
அத்தகைய விலங்கினை அல்லது பறவையை அடைத்து
வைக்கலாம்.
13
(b) உதவி ஆய்வாளர் ஒருவரின் படிநிலைக்குக்
குறையாத காவல் அலுவலர் எவரும், நகர் சார்ந்த பரப்பிடம்
ஒன்றில் திரிந்து கொண்டிருப்பதாகக் காணப்படும்
அறிவிக்கப்பட்ட விலங்கு அல்லது பறவை எதனையும்
பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட உள்ளாட்சி
அதிகாரஅமைப்பினால் பேணி வரப்படும் கால்நடைப்பட்டி
எதிலும் அத்தகைய விலங்கினை அல்லது பறவையை
அடைத்து வைக்கலாம்.
(2) அறிவிக்கப்பட்ட விலங்கு அல்லது
பறவைக்கான உரிமமானது, உரிமையாளர் ஒருவரால்
பெறப்பட்டிருந்து, அத்தகைய விலங்கு அல்லது
பறவையானது நகர் சார்ந்த பரப்பிடம் ஒன்றில் திரிந்து
கொண்டிருப்பதாகக் காணப்பட்டு, உட்பிரிவு (1)இன்படி
பறிமுதல் செய்யப்பட்டிருக்குமானால், அவ்வுரிமையாளர்
அது பறிமுதல் செய்யப்பட்டதற்குப் பின்பு நாற்பத்தெட்டு
மணி நேர காலஅளவிற்குள்ளாக, உள்ளாட்சி அதிகார
அமைப்பிடம் வகுத்துரைக்கப்படும் பணத்
தண்டனையையும் உணவுக் கட்டணங்களையும்
செலுத்துவதன் மூலம் அவ்விலங்கையோ அல்லது
பறவையையோ மீட்டுக்கொள்ளலாம்.
(3) அறிவிக்கப்பட்ட விலங்கு அல்லது பறவை
எதனையும். பொறுத்தவரையில், உரிமம் எதுவும்
பெறப்படாதிருந்து அந்த விலங்கு அல்லது பறவையானது
நகர் சார்ந்த பரப்பிடம் ஒன்றில் திரிந்து கொண்டிருப்பதாகக்
காணப்பட்டு அல்லது வைத்து வரப்படுவதாகக் காணப்பட்டு,
அவை உட்பிரிவு (1)இன்படி பறிமுதல்
செய்யப்பட்டிருக்குமானால், உரிமையாளர் அத்தகைய
பறிமுதல் செய்யப்பட்டதற்குப் பின்பு நாற்பத்தெட்டு மணி
நேர காலஅளவிற்குள்ளாக அத்தகைய விலங்கு அல்லது
பறவையைப் பொறுத்த அளவில் சட்டப்படி செல்லத்தக்க
உரிமம் ஒன்றுக்கு விண்ணப்பம் செய்து அதனைப்
பெறுதல் வேண்டும் என்பதோடு உள்ளாட்சி
14
அதிகாரஅமைப்பிடம் வகுத்துரைக்கப்படும் பணத்
தண்டனையையும் உணவுக் கட்டணங்களையும்
செலுத்தியதற்குப் பின்பு அவ்விலங்கு அல்லது பறவையை
மீட்டுக்கொள்ளலாம்:
வரம்புரை: ஆனால், இந்த உட்பிரிவு (1)இன்படியோ,
உட்பிரிவு (2)இன்படியோ வகுத்துரைக்கப்படும் பணத்
தண்டனையானது, பறிமுதல் செய்யப்பட்டுள்ள விலங்கின்:
அல்லது பறவையின் தொகையில் நான்கிலொரு பங்கிற்கு
மேற்படுதல் கூடாது.
(4) உட்பிரிவுகள். [6] மற்றும் (3)இன்
வகைமுறைகளுக்கு உட்பட்டு, உட்பிரிவு (1)இன்படி
பறிமுதல் செய்யப்பட்டுள்ள அறிவிக்கப்பட்ட விலங்கு
அல்லது பறவை எதுவும், வெளிப்படையாக பொதுவில்
விற்கப்படுதல் வேண்டும் என்பதோடு அத்தகைய
விற்பனையின் மூலமாகக் கிடைத்த விற்பனைத்
தொகையானது சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அதிகார
அமைப்பு நிதியின் வரவுக் கணக்கில் சேர்த்து விடுதலும்
வேண்டும்:
வரம்புரை: ஆனால், உட்பிரிவு(2), உட்பிரிவு(3)இல்
குறிப்பிடப்பட்ட ஒரு விலங்கை அல்லது பறவையைப்
பொறுத்தவகையில், அத்தகைய விற்பனையில் கிடைத்த
விற்பனைத் தொகைகளை உட்பிரிவு (2)இல் அல்லது
நிகழ்விற்கேற்ப , உட்பிரிவு (3)இல் குறிப்பிடப்பட்ட பணத்
தண்டனையையும் உணவுக் கட்டணங்களையும் கழித்துக்
கொண்டதற்குப் பின்னர் அந்த விலங்கின் அல்லது
பறவையின் உரிமையாளரிடம் கொடுத்து விடுதல்
வேண்டும்; மற்றும் விலங்கின் அல்லது பறவையின்
உரிமையாளர் விற்பனைத் தொகைகளை, விற்பனைக்குப்
பின்னர் மூன்று மாத காலஅளவிற்குள்ளாக உரிமை
கோருவதற்குத் தவறினால், அந்த முழுத் தொகையையும்
15
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகார அமைப்பு நிதியின்.
வரவுக் கணக்கில் சேர்த்து விடுதல் வேண்டும்.
11. குற்றச்செயல்களை விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளுதல். உரிமம் வழங்குகின்ற அலுவலரால்
எழுத்துவடிவில் செய்து கொள்ளப்பட்ட முறையீடு
ஒன்றின் பேரில் அல்லாமல், இந்தச் சட்டத்தின்படி
தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயல் எதனையும் நீதிமன்றம்
எதுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல் கூடாது:
முதலாம் வரம்புரை: ஆனால், பிரிவு 10இன் உட்பிரிவு
(1)இன் (8) எனும் கூறின்படி, காவல் அலுவலர் ஒருவரால்
விலங்கு அல்லது பறவை எதுவும் பறிமுதல்
செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம், அத்தகைய
காவல் அலுவலரால் நேரடியாக எழுத்து வடிவில்
செய்துகொள்ளப்பட்ட முறையீடு ஒன்றின் பேரில், அந்தக்
குற்றச்செயலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம்:
இரண்டாம் வரம்புரை: மேலும் முதன்முறை செய்த
குற்றச்செயல் எதனின் தொடர்பாகவும், பிரிவு 1௦இன்:
உட்பிரிவு (2) மற்றும் (3)இன்படி தண்டனைத்தொகை
எதுவும் வசூலிக்கப்பட்டுள்ளது அல்லது பிரிவு 10இன்
உட்பிரிவு (4)இன்படி அறிவிக்கப்பட்டதொரு விலங்கோ
பறவையோ விற்பனை செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில்
முறையீடு எதுவும் தாக்கல் செய்து கொள்ளக்கூடாது.
12. குற்றச் செயல்களும் தண்ட விதிப்புகளும்.-
(8) பிரிவு 3இன் வகைமுறைகளை ம்றுகிற;
(b) தடைசெய்யப்பட்டுள்ள பரப்பிடம் ஒன்றாக
விளம்பப்பட்டுள்ள பரப்பிடம் அல்லது அதன் பகுதி எதிலும்
அறிவிக்கப்பட்ட விலங்கினை அல்லது பறவையினை
வைத்து வருகிற அல்லது கொண்டு வருகிற அல்லது
பிரிவு 8இன் உட்பிரிவு (2)இல் கோரப்படுகிறவாறு
மேற்சொன்ன விலங்கினை அல்லது பறவையினை
அகற்றுவதற்குத் தவறுகிற;
16
(6௦) பிரிவு 19இன் உட்பிரிவு (2)இன் (a)
கூறில் அல்லது அதன்படிச் செய்யப்பட்ட விதிகளில்
உள்ள வகைமுறை எதனையும் மீறுகிற, நபர் எவரும்,
தண்டனைத் தீர்ப்பின் பேரில், மூன்று ஆண்டுகள் வரை
நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலஅளவுக்கு
சிறைத்தண்டனை விதித்து அல்லது ஐந்தாயிரம் ரூபாய்
வரை நீட்டிக்கப்படக்கூடிய பணத் தண்டம் விதித்து
அல்லது அவை இரண்டையும் விதித்துத்
தண்டிக்கப்படுதல் வேண்டும்:
வரம்புரை: ஆனால், நீதிமன்றத்திண் தீர்ப்பில் பதிவு
செய்யப்படவேண்டிய, அதற்குமாறான தனிப்பட்ட அல்லது
போதிய காரணங்கள்: இல்லாத நிலையில்,
சிறைத்தண்டனை மூன்று மாதங்களுக்குக் குறைவாக
இருத்தலும் அல்லது பணத் தண்டம் இரண்டாயிரம்
ரூபாய்க்குக் குறைவாக இருத்தலும் கூடாது.
13. நிறுமங்களால் செய்யப்படும் குற்றச்செயல்கள்.
(1) இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச் செயல்
ஒன்று நிறுமமொன்றால் செய்யப்பட்டுள்ள நிலையில்,
அக்குற்றச்செயல்: செய்யப்பட்ட காலத்தில்
அந்நிறுமத்தைத் தம் கைவசம் கொண்டிருந்த மற்றும்
அந்நிறுமத்தின் செயல்களுக்கு பொறுப்புடையவராக
இருந்த நபர் ஒவ்வொருவரும், அந்நிறுமமும்
அக்குற்றச்செயலை செய்திருப்பதாகக் கருதப்பட்டு,
எதிராக மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கு
இணங்கிய வகையில் தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதல்
வேண்டும்:
வரம்புரை: ஆனால், இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள
எதுவும், அத்தகைய நபர் எவரும், அக்குற்றச்செயலானது
தமக்கு தெரியாமலேயே செய்யப்பட்டிருக்கின்றது என்றோ
அல்லது அக்குற்றச்செயல் செய்யப்படுவதைத்
தடுப்பதற்கான உரிய முயற்சிகள் அனைத்தையும் தாம்
17
மேற்கொண்டார் என்றோ மெய்ப்பிப்பாராணால், அவரைத்
தண்டனை எதற்கும் உள்ளாக்காது.
(2) உட்பிரிவு (1)இல் என்ன அடங்கியிருந்த
போதிலும், இந்தச் சட்டத்தின்படி குற்றச்செயல் எதுவும்
நிறுமம் ஒன்றால் செய்யப்பட்டிருந்து, அக்குற்றச்
செயலானது அந்நிறுமத்தின் இயக்குநர், மேலாளர்,
செயலாளர் அல்லது பிற அலுவலர் எவரொருவரின்:
இசைவுடனோ, மறைமுக ஆதரவுடனோ
செய்யப்பட்டிருக்கிறது அல்லது அவர்பாலுள்ள
கவனக்குறைவு எதற்கும் சாட்டத்தக்கதாக இருக்கின்றது
என மெயிப்பிக்கப்படும் நிலையில், அத்தகைய இயக்குநர்,
மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர்
அக்குற்றச்செயலை செய்திருப்பதாகக் கருதப்படுதல்
வேண்டும் என்பதோடு, மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு
அதன்படியே அவர் தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதலும்
வேண்டும்.
விளக்கம்: இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக,-
(ஐ "நிறுமம்" என்பது, ஏதேனும் கூட்டு நிறுவனம்
எனப் பொருள்படும் மற்றும் ஒரு நிறுவனம், சங்கம்
அல்லது பிற தணி நபர்களின் குழுவையும் உள்ளடக்கும்;
மற்றும்
(0) "இயக்குநர்" என்பது,-
0) ஒரு "நிறுவகம்" என்பது, நிறுவகத்தில்
உள்ள கூட்டாளி ஒருவர் எனப்
பொருள்படும்,
(0 "சங்கம் அல்லாத தனி நபர்களின் பிற
குழு" என்பது, சங்கத்தின் அல்லது
அந்தப் பிற குழுவின் விதிகளின்படி
நிகழ்விற்கேற்ப, சங்க அல்லது பிற குழு
விவகாரங்களின் மேலாண்மை எந்த
18
நபரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதோ,
அந்த நபர் எனப் பொருள்படும்.
14. இந்தச் சட்டம் பிற சட்டங்களுக்கு மேலோங்கி
இருத்தல்.-- (1) அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற
சட்டம் எதிலும். அதற்கு முரணாக என்ன
அடங்கியிருந்தபோதிலும், இச்சட்டத்தின் வகைமுறைகள்
செயல்விளைவு கொண்டிருத்தல் வேண்டும்.
(2) உட்பிரிவு (இல் பிறவாறு
வகைசெய்யப்பட்டாலன்றி, இந்தச் சட்டத்தின்.
வகைமுறைகள் பிற சட்டம் எதற்கும் கூடுதலாக இருக்க
வேண்டுமே தவிர அதற்கு ஊறு விளைவிப்பதாக
இருத்தல் கூடாது.
15. குற்றச்செயல்களை சுருக்குமுறையில்
விசாரணை செய்வதற்கான அதிகாரம்.- 1973ஆம் ஆண்டு
குற்றவழக்கு விசாரணைமுறைத் தொகுப்புச் சட்டத்தின்.
(மையச் சட்டம் 271974) பிரிவு 260இன் உட்பிரிவு (1)கல்
குறித்துரைக்கப்பட்ட குற்றச்செயல்களை
சுருக்குமுறையில் விசாரணை செய்வதற்காக
அப்போதைக்கு அதிகாரமளிக்கப் பெற்றுள்ள குற்றவியல்
நடுவர் எவரும், இந்த விசாரணைச் சட்டத்தின்படி
தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயல் எதனையும்,
குற்றவழக்கைத் தொடர்கின்ற தரப்பினரால்
இதன்பொருட்டுச் செய்து கொள்ளப்பட்ட விண்ணப்பம்
ஒன்றின் பேரில், மேற்சொன்ன சட்டத்தொகுப்பின் 262
முதல் 265 வரையிலான பிரிவுகளில் அடங்கியுள்ள
வகைமுறைகளுக்கு இணங்கியவாறு விசாரணை
செய்யலாம்.
16. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.-- இந்தச் சட்டத்தின்படி
நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக்
கருதப்பட்ட செயல் எதற்காகவும் அரசுக்கு அல்லது அரசு
19
அலுவலர் எவருக்கும் அல்லது இந்தச் சட்டத்தின்படி
நியமிக்கப்பட்ட உள்ளாட்சி அதிகாரஅமைப்பு எதற்கும்
எதிராக உரிமைவழக்கு, குற்றவழக்கு அல்லது பிற சட்ட
நடவடிக்கை எதுவும் தொடுக்கப்படுதல் கூடாது.
17. விலக்களிப்பு. (1) இந்தச் சட்டத்தில்
அறிவிக்கப்பட்ட விலங்கு அல்லது பறவை எதனையும்,
கல்வி அல்லது ஆராய்ச்சி நோக்கங்களுக்காகத்
தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டுவர அல்லது
வைத்து வரப்படுவதற்கு விலக்களிக்கப்படுகிறது.
(2) அரசானது, பொது அல்லது தனி ஆணையின்
வாயிலாக, இந்தச் சட்டத்தின் அல்லது அதன்படிச்
செய்யப்பட்ட விதிகளின். வகைமுறைகள்
அனைத்திலிருந்தும். அல்லது அவற்றுள்
ஏதொன்றிலிருந்தும் அதன்பொருட்டுக் குறிப்பிடப்படும்.
நிபந்தனைகளுக்கு உட்பட்டு அறிவிக்கப்பட்ட
விலங்குகளின் அல்லது பறவைகளின் அனைத்து
வகைகளையோ அல்லது வகை எதனையுமோ பொறுத்த
அளவில், மைய அரசு அல்லது மாநில அரசு அல்லது
ஏதேனும் உள்ளாட்சி அதிகாரஅமைப்பு அல்லது நகர்
சார்ந்த பரப்பிடம் எதிலும் உள்ள நபர் எவருக்குமோ
அல்லது நபர்களின் எந்த வகையினருக்குமோ அல்லது
பொதுவாக பொது மக்களுக்கோ விலக்களிப்பது பொது
நலனுக்குத் தேவையானதாக உள்ளது எனக்
கருதுமானால், அது அவ்வாறே செய்யலாம்; மற்றும்
எந்நேரத்திலும் அத்தகைய விலக்களிப்பை அதேபோன்ற
ஆணையின் மூலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்,
மாற்றியமைக்கலாம் அல்லது அதனை அறவு செய்யலாம்.
18. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.-
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில்
இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால், அரசு, தமிழ்நாடு
அரசிதழில் ஆணை ஒன்றை வெளியிடுவதன் மூலம்
20
அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவையானதாகவோ
உகந்ததாகவோ தனக்குத் தோன்றுகின்ற இந்தச்
சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத
அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்:
வரம்புரை: ஆனால், நகர் சார்ந்த பரப்பிடம் எதன்:
தொடர்பாகவும் இந்தச் சட்டம் தொடங்கிய தேதியிலிருந்து
மூன்றாண்டு காலஅளவு முடிவடைந்த பிறகு அத்தகைய
ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதலாகாது.
19. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.- (1) அரசு,
இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது
அவற்றுள் எதனையும் நிறைவேற்றுவதற்கான
விதிகளைச் செய்யலாம்.
(2) குறிப்பாகவும் முன்சொல்லப்பட்ட அதிகாரத்தின்:
பொதுப்பாங்கிற்கு ஊறின்றியும், அத்தகைய விதிகள்:
பின்வரும் விவரங்கள் அனைத்திற்கும் அல்லது
அவற்றின் ஏதோன்றுக்கும், அதாவது:-
(வ) பிரிவு 4இன்படி உரிமம் ஒன்று எந்தப்
படிவத்தின்படியும், எந்த வரையறைகளுக்கும்,
நிபந்தனைகளுக்கும் உட்பட்டும் எந்தக் காலஅளவிற்கும்
வழங்கப்படலாம் என்பதற்கும்;
௦) இந்தச் சட்டத்தின்படி, உரிமம் ஒன்றை
வழங்குவதற்கான அல்லது புதுப்பிப்பதற்கான மற்றும்
மேல்முறையீடு செய்துகொள்வதற்கான விண்ணப்பம்
எதனையும் பொறுத்த அளவில் செலுத்தப்பட வேண்டிய
கட்டணம் எவ்வளவு என்பதற்கும்,
(9) பிரிவு 1௦இன்படி பறிமுதல் செய்யப்பட்ட
விலங்குகளையோ அல்லது பறவைகளையோ மீட்டுக்
கொள்வதற்காக உரிமையாளரால் செலுத்தப்படவேண்டிய
தண்டனைத் தொகைகளும் உணவுக் கட்டணங்களும்
21
(0) இந்தச் சட்டத்தின்படி தேவையான அல்லது
வகுத்துரைக்கப்படும் பிற விவரம் எதற்கும்,
வகைசெய்யலாம்.
(3) (8) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்.
அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல்
வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்ட ஒரு நாளில்
நடைமுறைக்கு வரும் என்று வெளிப்படையாகக்
கூறப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்படும்
நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
௦) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட
அறிவிக்கைகள் அனைத்தும், அவை குறிப்பிட்டதொரு
நாளில் நடைமுறைக்கு வரும் என்று வெளிப்படையாகக்
கூறப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்படும்
நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(4) இந்தச் சட்டத்திண்படி செய்யப்பட்ட விதி
அல்லது வெளியிடப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும்
மற்றும் பிரிவு 18இன்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை
ஒவ்வொன்றும், அது செய்யப்பட்டதற்கு அல்லது
வெளியிடப்பட்டதற்கு அல்லது பிறப்பிக்கப்பட்டதற்குப்
பின்பு, கூடியவிரைவில், சட்டமன்றப்பேரவையில்
வைக்கப்படுதல் வேண்டும்; அது அவ்வாறு வைக்கப்படும்
கூட்டத்தொடரோ அல்லது அதற்கு அடுத்துவரும் கூட்டத்
தொடரோ முடிவடைவதற்கு முன்பு, அப்பேரவை அந்த
விதியில், அறிவிக்கையில் அல்லது ஆணையில் மாறுதல்
எதையேனும் செய்யுமானால், அவ்விதி, அறிவிக்கை
அல்லது ஆணையானது, அதற்குப் பிண்ணர், அவ்வாறு
மாறுதல் செய்யப்பட்ட வடிவத்தில் மட்டுமே
நடைமுறைக்கு வரும் அல்லது நிகழ்விற்கேற்ப
அப்பேரவை அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது
ஆணை செய்யப்படக்கூடாது அல்லது
வெளியிடப்படக்கூடாது அல்லது பிறப்பிக்கப்படக்கூடாது
22
என்று முடிவு செய்யுமானால், அது நடைமுறைக்கு
வராமலே போகும். எனினும், அவ்வாறு மாறுதல் செய்தது
அல்லது நடைமுறைக்கு வராதுபோகச் செய்தது எதுவும்,
அந்த விதியின்படியோ, அறிவிக்கையின்படியோ
ஆணையின் படியோ முன்னதாகச் செய்யப்பட்ட ஏதேனும்
செயல் ஒன்றின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி
இருத்தல் வேண்டும்.
23
இணைபப்புப்பட்டியல்:
[ பிரிவு 2 இல் கூறு (ஐ) மற்றும் யைக் காண்க]
1. விலங்குகள்:
1. கால்நடை
2. எருமைகள்
. வெள்ளாடுகள்
. செம்மறியாடுகள்
. பன்றிகள்
. குழிமுயல்கள் மற்றும் முயல்கள்
. குதிரைகள், கழுதைகள், கோவேறு கழுதைகள்
மற்றும் மட்டக் குதிரைகள்
8. வீட்டு வளர்ப்பு விலங்குகளாக அல்லாத நாய்கள்
மற்றும் பூனைகள்
9. வீட்டில் வளர்க்கப்படும் வன விலங்கு எதுவும்.
வ
ஓ
ர
க
॥ பறவைகள்:
1. வளர்ப்புப் பறவை இன கோழிகள்
2. வான்கோழிகள்
3. புறாக்கள்:
4. கவுதாரிப் பறவைகள்
5. வீட்டில் வளர்க்கப்படும் வனப்பறவை எதுவும்