Tamil Nadu · 1987 · Act 27

THE TAMIL NADU AGRICULTURAL PRODUCE MARKETING REGULATION ACT, 1987

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1987ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள்‌ சந்தை (முறைப்படுத்துதல்‌) சட்டம்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌ 27/1989) பிரிவுகளின்‌ அமைப்பு பிரிவு அத்தியாயம்‌ -1 முன்னுரையாக 1. குறுந்தலைப்பும்‌, அளாவுகையும்‌, தொடக்கமும்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌. 3. வேளாண்மை விளைபொருளை குறித்துரைக்கப்பட்ட பகுதியில்‌ விற்பனை வாங்குதல்‌ செய்வதை முறைப்படுத்துதலின்‌ நோக்கத்தின்‌ அறிவிக்கை. 4. அறிவிக்கை செய்யப்படுகிற பகுதியினை விளம்பல்‌. அத்தியாயம்‌ | சந்தைக்‌ குழுக்கள்‌ 5. சந்தைக்‌ குழுக்களின்‌ அமைப்பு. 6. சந்தைகளின்‌ அமைப்பு. 7. சிறப்பு மற்றும்‌ துணைச்‌ சந்தைகளின்‌ அமைப்பு. 8. அறிவிக்கை செய்யப்பட்ட பகுதியில்‌ வேளாண்மை விளைபொருளில்‌ வாணிபஞ்‌ செய்தல்‌. 9. அறிவிக்கை செய்யப்பட்ட பகுதி முதலியவற்றை மாற்றுதல்‌. 10. சந்தைக்‌ குழுவின்‌ தோற்றுவிப்பு. 11. சந்தைக்‌ குழுக்களின்‌ உறுப்பினர்களின்‌ பெயர்களை வெளியிடுதல்‌. 12. சந்தைக்‌ குழுவின்‌ தலைவர்‌ மற்றும்‌ துணைத்‌ தலைவர்‌. 13. சந்தைக்‌ குழுவின்‌ உறுப்பினர்‌ பதவிக்கு தகுதியின்மை. 14. வோளாண்மை உதவி இயக்குநர்‌ பதவி-வழி உறுப்பினராக இருத்தல்‌. 15. உறுப்பினர்களின்‌ பதவிக்காலம்‌ முதலியன. 16. சந்தைக்‌ குழுவை கூட்டு நிறுவனமாக பதிவு செய்தல்‌. 17. சந்தைக்‌ குழு தல நிர்வாக அமைப்பாக இருத்தல்‌ வேண்டும்‌. 18. துணைக்‌ குழு, சிறப்புக்குழு மற்றும்‌ அதிகாரங்களின்‌ ஒப்படைப்பு. 19. பொதுக்கூட்டம்‌. 20. சந்தைக்‌ குழுவின்‌ நடவடிக்கைகள்‌ முறைப்படி அமையாத காரணத்தினால்‌ செல்லாதவையாக ஆக்கப்படுதல்‌ ஆகாது. 21. பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்பட்ட நபர்‌ ஒருசில நேர்வுகளில்‌ உறுப்பினராக இருப்பது அற்று போதல்‌ வேண்டும்‌. 22. சந்தைக்‌ குழுவின்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌. 23. சந்தைக்‌ குழுவினால்‌ ஒப்பந்தங்கள்‌ நிறைவேற்றப்படுதல்‌. 24. சந்தைக்‌ குழுவினால்‌ கட்டணம்‌ விதிக்கப்படுதல்‌. 25. தணிக்கைச்‌ சாவடி அல்லது எல்லையை அமைத்தல்‌. 26. சந்தைக்‌ குழுக்களினால்‌ ரசீதுகள்‌ வழங்கப்படுதல்‌. 27. குற்ற வழக்கில்‌ கட்டணம்‌ முதலியன தீர்மானித்தலை ஆட்சேபனை செய்தல்‌ ஆகாது. 28. சந்தை அறிக்கைகள்‌ முதலியவற்றிற்கு சந்தா விதிப்பு. 29. சந்தைக்‌ குழு நிதியம்‌. 30. சந்தைக்‌ குழுவின்‌ நிதியத்திலிருந்து செலவழிக்கத்‌ தகுந்த நோக்கங்கள்‌. 31. கடன்‌ வாங்க அதிகாரம்‌. 32. ஒரு சில நேர்வுகளில்‌ வணிகப்படி அனுமதிக்கத்தக்கது அன்று. 33. புதிய சந்தைக்‌ குழு முதலியன மறு அமைப்பில்‌ தாமதம்‌ இருக்கிறபோது சிறப்பு வகைமுறை. 34. சந்தைக்‌ குழுவின்‌ பதிவுருக்கள்‌ மற்றும்‌ சொத்துக்கள்‌ ஆகியவற்றின்‌. ஒப்படைப்பு. அத்தியாயம்‌ [Nl சந்தை வாரியம்‌ 35. தமிழ்நாடு மாநில விற்பனை வாரியத்தின்‌ அமைப்பு. 36. வாரியத்தி அமைப்பு. 37. 38. 39. 40. வாரியத்தின்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌. வாரியத்தின்‌ அதிகாரங்களும்‌ கடமைகளும்‌. குழுவினால்‌ ஒப்பந்தங்கள்‌ நிறைவேற்றுதல்‌. கடன்‌ வாங்க அதிகாரம்‌. 41. வாரியத்தின்‌ வருமானம்‌ மற்றும்‌ செலவின மதிப்பீடுகள்‌. 42. 43. 44 45. 46. 47. 48. 49. 50. கணக்குகளின்‌ ஆண்டுத்‌ தணிக்கை. அரசின்‌ மேற்பார்வையும்‌ கட்டுப்பாடும்‌. . சந்தை வாரிய நிதியம்‌. சந்தை மேம்பாட்டு நிதியம்‌. அத்தியாயம்‌ - IV பல்வகை வகைமுறைகள்‌ இயக்குநரின்‌ அதிகாரங்களும்‌ கடமைகளும்‌, அதிகாரங்கள்‌ ஒப்படைப்பு. தண்டங்கள்‌. கட்டணம்‌ அல்லது மற்றையத்‌ தொகையினை செலுத்துவதற்கான குற்றஞ்சாட்டப்பட்டவரின்‌ கடப்பாடு. குற்றங்களை இணக்கமாகத்‌ தீர்த்தல்‌, 51. சுருக்குமுறையாக கட்டணம்‌ அல்லது மற்றைய தொகையை வசூலிப்பதற்கு 52. 53. 54. 5௨. 56. 57. குற்றவியல்‌ நடுவரின்‌ அதிகாரம்‌. விதிகள்‌ செய்வதற்கான அதிகாரம்‌. ஒழுங்குமுறை விதிகள்‌ மற்றும்‌ துணை விதிகள்‌ செய்வதற்கான அதிகாரம்‌. வசூலிக்க முடியாத தொகை முதலியவற்றை தள்ளுபடி செய்தல்‌. ஒரு சில நடவடிக்கைகளின்‌ தடை. வாரியத்‌ தலைவர்‌ மற்றும்‌ துணைத்‌ தலைவர்‌ மற்றும்‌ சந்தைக்குழு தலைவர்‌ மற்றும்‌ துணைத்‌ தலைவர்‌ ஆகியோர்‌ பொது ஊழியர்களாக இருத்தல்‌. ஒரு சில உரிமையியல்‌ வழக்குகள்‌ மற்றும்‌ குற்ற வழக்குகள்‌. ஆகியவைக்கான கால வரம்பு. 58. குற்றங்களை விசாரணை செய்தல்‌. 59. தொகைகளை வளூலித்தல்‌. 60. மேலாய்வு. 61. வாரியம்‌ அல்லது சந்தைக்குழு சார்பாக எழுதிக்‌ கொடுக்கப்படுகிற ஆவணங்களைப்‌ பதிவு செய்தல்‌. 62. ஒரு சில நடவடிக்கைகள்‌ முதலியவற்றில்‌ ஏவு கட்டளை கொடுத்தல்‌ ஆகாது. 63. வாரியத்‌ தலைவர்‌, துணைத்‌ தலைவர்‌, சந்தைக்‌ குழுத்‌ தலைவர்‌, துணைத்‌ தலைவர்‌ மற்றும்‌ உறுப்பினர்‌ ஆகியோர்‌ இழப்பு, கழிவு அல்லது தவறான பயன்படுத்துகை ஆகியவற்றிற்கு கடப்பாடு. 64. விலக்கு. 64-A. சந்தைக்‌ குழுவிற்கு அல்லது வாரியத்திற்கு விலக்களிப்பதற்கான அதிகாரம்‌. 65. இணைப்புப்‌ பட்டியலை திருத்துவதற்கான அதிகாரம்‌. 66. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌. 67. நீக்கறவும்‌ காப்புகளும்‌. இணைபப்புப்பட்டியல்‌. 1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை வினைபொருள்‌ சந்தை (முறைப்படுத்துதல்‌) சட்டம்‌ (சட்ட எண்‌.27/1989) தமிழ்நாடு மாநிலத்தில்‌ வேளாண்மை விளைபொருள்‌ வாங்குதல்‌ மற்றும்‌ விற்பதை முறைப்படுத்துதல்‌ மற்றும்‌ வேளாண்மை விளைபொருளுக்காக சந்தைகளின்‌ அமைப்பு மற்றும்‌ உரிய நிருவாகம்‌ ஆகியவற்றிற்கு நல்ல வகைமுறைகள்‌ செய்வது சம்பந்தமான தொடர்பான சட்டத்தை திருத்தி ஒருங்கிணைப்பதற்கானதொரு சட்டம்‌. தமிழ்நாடு மாநிலத்தில்‌ வேளாண்மை விளைபொருளினை வாங்குதல்‌ மற்றும்‌ விற்றல்‌ ஆகியவற்றை மிக நல்ல முறையில்‌ முறைப்படுத்துவதற்கும்‌ வேளாண்மை விளைபொருளுக்காக சந்தைகளை அமைப்பது மற்றும்‌ அவற்றின்‌. உரிய நிருவாகம்‌ செய்வதற்கும்‌ வகை செய்வதற்கு உகந்ததாக இருப்பதால்‌, இந்தியக்‌ குடியரசின்‌ முப்பத்தெட்டாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையினால்‌ பின்வருமாறு சட்டம்‌ இயற்றப்படுவதாகுக:- அத்தியாயம்‌-| முன்னுரையாக 1. குறுந்தலைப்பும்‌, அளாவுகையும்‌, தொடக்கமும்‌. (1) இந்தச்‌ சட்டம்‌ 1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள்‌ சந்தை (முறைப்படுத்துதல்‌) சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. (2) இது தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதும்‌ அளாவி நிற்கும்‌. (3) 22 ஆம்‌ பிரிவின்‌ (2) மற்றும்‌ (4) உட்பிரிவுகள்‌ மற்றும்‌ 37 ஆம்‌ பிரிவின்‌. (5) மற்றும்‌ (7) உட்பிரிவுகள்‌ ஆகியவற்றின்‌ வகைமுறைகள்‌ உடனடியாக நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌: மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தில்‌ எஞ்சிய வகைமுறைகள்‌ அரசின்‌ அறிவிக்கை மூலமாக குறித்துரைக்கலாகும்‌ தேதியில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ வெவ்வேறு பகுதிகளுக்காகவும்‌ மற்றும்‌ இச்சட்டத்தின்‌ வெவ்வேறு வகைமுறைகளுக்காகவும்‌, வெவ்வேறு தேதிகள்‌ குறித்துரைக்கப்படலாம்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌ தறுவாய்‌ வேறுபொருள்‌ குறித்தாலன்றி,- (1) "வேளாண்மை விளைபொருள்‌" என்பது, இந்த இணைப்புப்பட்டியலில்‌ குறிப்பிடப்பட்டதும்‌, பக்குவம்‌ செய்யப்பட்ட அல்லது பக்குவம்‌ செய்யப்படாத வேளாண்மை விளைபொருள்‌ எதுவும்‌ எனப்‌ பொருள்படும்‌; (2) "வேளாண்மை" என்றால்‌, தோட்ட வேளாண்மை, பழம்‌ வளர்த்தல்‌, விதை விதைத்தல்‌, கால்நடை பராமரிப்பு கால்நடை இனப்பெருக்கம்‌ உள்ளடங்கலாக) தேனி வளர்த்தல்‌, மீன்‌ வளர்த்தல்‌, மற்றும்‌ பட்டுப்புழு வளர்த்தல்‌, ஆகியவற்றை உள்ளடக்கும்‌; மற்றும்‌ “வேளாண்மை செய்தல்‌" என்னும்‌ சொல்லுக்கு அவ்வாறே பொருள்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌; (3) "வாரியம்‌" என்றால்‌, 35 ஆம்‌ பிரிவின்படி அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில வேளாண்மை சந்தை வாரியம்‌ எனப்‌ பொருள்படும்‌; (4) "தரகர்‌" என்றால்‌, தரகுக்‌ கூலி, கட்டணம்‌ அல்லது ஊதியம்‌ ஒன்றுக்காக அவரது முதல்வரின்‌ பொருட்டு நலம்‌ தரும்‌ வாணிகம்‌ அல்லது ஒப்பந்தங்களை, வேளாண்மை விளைபொருள்‌ எதனையும்‌ கொள்முதல்‌ செய்வதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ திட்டமிடுவது, செய்துமுடிப்பது ஆகியவற்றை செய்கிற முகவர்‌ எனப்‌ பொருள்படும்‌; ஆனால்‌ வேளாண்மை விளைபொருளினை விற்பனை செய்வதற்காக தொகையினை பெறுகிறவரை, கொடுப்பவரை, அனுப்புபவரை, அல்லது செலுத்துபவரை அல்லது வசூலிப்பவரை உள்ளடக்காது; (5) "தலைவர்‌" என்றால்‌, ஒரு சந்தைக்‌ குழுவின்‌ தலைவர்‌ எனப்‌ பொருள்படும்‌; (6) "ஆட்சியர்‌" என்றால்‌, எந்த மாவட்டத்தில்‌ அறிவிக்கப்பட்ட பகுதி இருக்கின்றதோ அந்த மாவட்டத்தின்‌ ஆட்சியர்‌ என்றோ, அல்லது அந்த அறிவிக்கை செய்யப்பட்ட பகுதியானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில்‌ இருக்குமாயின்‌ இதன்பொருட்டு அரசினால்‌ குறிப்பிடப்படுகிற அம்மாவட்டங்களில்‌ ஏதேனும்‌ ஒரு மாவட்டத்தின்‌ ஆட்சியர்‌ எனப்‌ பொருள்படும்‌; (7) "தரகு முகவர்‌" என்றால்‌, வேளாண்மை விளைபொருளினை மற்ற நபருக்காக தாமாகவோ அல்லது தம்‌ வேலையாட்கள்‌ மூலமாகவோ வாங்குகிற மற்றும்‌ விற்கிற, தமது பொறுப்பில்‌ அதனை வைத்துக்கொள்கிற மற்றும்‌ அதன்‌. விற்பனை அல்லது கொள்முதல்‌ ஆகியவற்றிற்காக அதனை பக்குவப்படுத்துகிறபோது கட்டுப்பாடு செலுத்துகிற மற்றும்‌ விற்பனை செய்து அதற்கான தொகையை வாங்குபவரிடமிருந்து வசூலித்து அதனை விற்பவருக்கு செலுத்துகிற மற்றும்‌ ஒவ்வொரு வியாபார நடவடிக்கையிலும்‌ உள்ளடங்குகிற தொகையில்‌ தரகுக்‌ கூலியினை அல்லது ஒரு சதவிதத்தை ஊதியமாக பெறுகிற நபர்‌ ஒருவர்‌ எனப்‌ பொருள்படும்‌; (8) "இயக்குநர்‌" என்றால்‌, தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள்‌ விற்பனை இயக்குநர்‌ எனப்‌ பொருள்படும்‌; மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்படி அரசு அறிவிக்கை மூலமாக அவ்வறிவிக்கையில்‌ குறித்துரைக்கக்கூடிய பகுதிக்காக இந்த இயக்குநரின்‌ கடமைகள்‌ எதனையும்‌ ஆற்றுவதற்காக அதிகாரம்‌ அளிக்கப்பட்டுள்ள வேறு நபர்‌ அல்லது அதிகாரஅமைப்பு எதனையும்‌ உள்ளடக்கும்‌; (9) "அரசு" என்றால்‌, மாநில அரசு எனப்‌ பொருள்படும்‌; (10) "சந்தை என்றால்‌, 6 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி அமைக்கப்பட்ட சந்தை எதுவும்‌ என்று பொருள்படும்‌; மற்றும்‌ அப்பிரிவின்‌ (1), (2) ஆகிய உட்பிரிவுகளில்‌ உள்ளதைத்‌ தவிர ஒரு துணைச்‌ சந்தையினையும்‌ உள்ளடக்கும்‌; (11) "சந்தைக்‌ குழு” என்றால்‌ 5 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி அமைக்கப்பட்ட சந்தைக்‌ குழு எதுவும்‌ எனப்‌ பொருள்படும்‌; (12) "அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌" என்றால்‌, 3 ஆம்‌ பிரிவின்படியான அறிவிக்கையில்‌ குறிப்பிடப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதுவும்‌ என்று பொருள்படும்‌; (13) "அறிவிக்கை செய்யப்பட்ட பகுதி" என்றால்‌ 9 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி அறிவிக்கை எதன்‌ மூலமாக மாற்றப்படுகிற 4 ஆம்‌ பிரிவின்படி அறிவிக்கை செய்யப்படுகிற பகுதி எதுவும்‌ எனப்‌ பொருள்படும்‌; (14) "அறிவிக்கை செய்யப்பட்ட சந்தைப்‌ பகுதி" என்றால்‌, 9 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படியான அறிவிக்கை எதன்‌ மூலமாகவும்‌ மாற்றப்படுகிற 6 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்படி அறிவிக்கை செய்யப்படுகிற பகுதி ஏதேனும்‌ எனப்‌ பொருள்படும்‌; (15) "நபர்‌" என்றால்‌, தனி ஒருவர்‌ அல்லது நிறுவகம்‌ அல்லது நிறுமம்‌ அல்லது ஒரு கழகம்‌ அல்லது தனி நபர்கள்‌ அடங்கிய ஒரு குழு அது பதிவு செய்யப்பட்டிருந்தாலும்‌ படாவிட்டாலும்‌ அல்லது ஒரு தல நிர்வாகம்‌ எனப்‌ பொருள்படும்‌; விளக்கம்‌:- இக்கூறில்‌ "தல நிர்வாகம்‌" என்றால்‌, அதற்கு 1939 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொதுச்‌ சுகாதார (தமிழ்நாடு சட்டம்‌ ॥71939) சட்டத்தில்‌ 3 ஆம்‌ பிரிவின்‌. (20) ஆம்‌ கூறி கொடுக்கப்பட்டுள்ள அதே பொருளினை கொண்டிருத்தல்‌ வேண்டும்‌; (16) "லைவர்‌" என்றால்‌, வாரியத்தின்‌ தலைவர்‌ எனப்‌ பொருள்படும்‌, (17) "பக்குவப்படுத்துதல்‌" என்றால்‌, தூளாக்குதல்‌, அடித்தல்‌, கொட்டை நீக்குதல்‌, உமி நீக்குதல்‌, படிப்படியாக கொதிக்க வைத்தல்‌, மெருகிடுதல்‌, விதை நீக்குதல்‌, அமுக்குதல்‌, பதப்படுத்துதல்‌, கிருமி நீக்குதல்‌ அல்லது வேளாண்மை மூல விளைபொருள்‌ அல்லது அதனின்‌ உற்பத்திப்‌ பொருள்‌ எதுவும்‌ உட்‌ படுத்தப்படக்கூடிய கரங்களினால்‌, இயந்திரத்தால்‌, இரசாயன, பெளதிக அல்லது மற்றைய வேலை எதனையுமோ, அல்லது விற்பனைக்காக அல்லது இறுதியாக நுகருவதற்காக அதனை பொருத்தமுடையதாக செய்கிற வேறு வேலை ஏதேனும்‌ எனப்‌ பொருள்படும்‌; (18) "உற்பத்தியாளர்‌" என்றால்‌, தாமாகவோ அல்லது கட்டணக்‌ கூலியாள்‌: மூலமாகவோ அல்லது மற்றப்படியாகவோ அரை ஹெக்டேருக்கு குறையாத நிலம்‌ எதிலும்‌ வேளாண்மை விளைபொருள்‌ எதனையும்‌ பயிரிடு கிற, வளர்க்கிற அல்லது உற்பத்தி செய்கிற நபர்‌ எனப்‌ பொருள்படும்‌, ஆனால்‌ அந்த விளைபொருளின்‌ தரகர்‌ அல்லது வணிகர்‌ ஒருவரை அவர்‌ அந்த விளைபொருளை பயிரிட்டிருந்தாலும்‌, வளர்த்தாலும்‌ அல்லது உற்பத்தி செய்தாலும்‌ உள்ளடக்காது, வரம்புரை: ஆனால்‌ 10 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்‌ (ஐ) மற்றும்‌ (௦) ஆகிய கூறுகளின்‌ நோக்கங்களுக்காக, நபர்‌ ஒருவர்‌ மூன்று ஆண்டுகளுக்கு குறைவுபடாத ஒரு கால அளவிற்கு அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளை அவர்‌ பயிரிடுதல்‌, வளர்த்தல்‌, அல்லது உற்பத்தி செய்தல்‌ ஆகியவற்றை செய்தாலன்றி, உற்பத்தியாளராகக்‌ கருதப்படமாட்டார்‌. இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக நபர்‌ ஒருவர்‌ உற்பத்தியாளரா அல்லது இல்லையா என்றும்‌ பிரச்சனை எதுவும்‌ எழுமானால்‌, 60 ஆம்‌ பிரிவின்‌. வகைமுறைகளுக்கு உட்பட்டு ஆட்சியரின்‌ முடிவு இறுதியானதாக இருத்தல்‌ வேண்டும்‌. முடிவு ஒன்றை செய்யும்போது, அவ்வாட்சியர்‌ வகுத்துரைக்கக்கூடிய நடைமுறையினை பின்பற்ற வேண்டும்‌. விளக்கம்‌:- இக்கூறின்‌ நோக்கத்திற்காக, "உற்பத்தியாளர்‌" என்றால்‌, குடியானவர்‌ ஒருவரையும்‌ கூட உள்ளடக்கும்‌: (19) "பதிவாளர்‌" என்றால்‌, தமிழ்நாடு மாநிலத்தின்‌ கூட்டுறவு கழகங்களின்‌ பதிவாளர்‌ எனப்‌ பொருள்படும்‌; (20) "இணைபப்புப்பட்டியல்‌" என்றால்‌, இச்சட்டத்திற்கான இணைபப்புப்பட்டியல்‌ எனப்‌ பொருள்படும்‌; (21) "செயலாளர்‌" என்றால்‌, ஒரு சந்தைக்‌ குழுவின்‌ செயலாளர்‌ எனப்‌ பொருள்படும்‌ மற்றும்‌ இணைச்செயலாளர்‌, துணைச்செயலாளர்‌ அல்லது உதவிச்செயலாளர்‌ ஒருவரையும்‌ உள்ளடக்கும்‌; (22) "துணைச்‌ சந்தை" என்றால்‌, 7 ஆம்‌ பிரிவின்‌ (3) ஆம்‌ உட்பிரிவின்படி நிறுவப்பட்ட துணைச்சந்தை ஏதேனும்‌ எனப்‌ பொருள்படும்‌; (23) "வணிகர்‌" என்றால்‌, அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனையும்‌ தாமாகவோ, கூட்டாளியாகவோ, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின்‌ முகவராகவோ வாங்குகிற, விற்கிற, சேர்த்து வைக்கிற, பக்குவப்படுத்துகிற. நடவடிக்கை எடுக்கிற அல்லது வேறு எந்த குறையிலும்‌ செயல்‌ எதனையும்‌ புரிகிற நபர்‌ ஒருவர்‌ எனப்‌ பொருள்படும்‌; மற்றும்‌ ஒரு தரகு முகவர்‌, பிணை முகவர்‌ அல்லது மற்றைய வணிகத்துறை முகவர்‌ எவரையும்‌ உள்ளடக்கும்‌, 3. வேளாண்மை விளைபொருளை குறித்துரைக்கப்பட்ட பகுதியில்‌ விற்றல்‌ வாங்குதல்‌ செய்வதை முறைப்படுத்துதலின்‌ நோக்கத்தின்‌ அறிவிக்கை.- (1) அரசு அறிவிக்கை மூலமாக அவ்வறிவிக்கையில்‌ குறித்துரைக்கக்கூடிய பகுதியில்‌ வேளாண்மை விளைபொருளை விற்றல்‌, வாங்குதல்‌ ஆகியவற்றை முறைப்படுத்துதலுக்கான தனது நோக்கத்தை விளம்புகை செய்யலாம்‌. (2) அவ்வறிவிக்கையானது, அவ்வறிவிக்கையில்‌ குறித்துரைக்கக்கூடிய கால அளவுக்குள்‌ அரசினால்‌ பெறப்படுகிற ஆட்சேபணை அல்லது ஆலோசனை எதனையும்‌ தம்மால்‌ பரிசீலிக்கப்பட வேண்டும்‌ என்று உரைத்தல்‌ வேண்டும்‌. அவ்வறிவிக்கையின்படி ஒன்று வகுத்துரைக்கக்கூடிய முறையில்‌ வெளியிடப்படுதலும்‌ வேண்டும்‌. 4. அறிவிக்கை செய்யப்படுகிற பகுதியினை விளம்பல்‌.- (1) 3 ஆம்‌ பிரிவின்படியான அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள காலஅளவு முடிந்த பிறகும்‌ அத்தகைய காலஅளவு முடிவதற்கு முன்பு பெறக்கூடிய ஆட்சேபணை மற்றும்‌ ஆலோசனை மூலமாக 3 ஆம்‌ பிரிவின்படி குறித்துரைக்கப்பட்டுள்ள பகுதி அல்லது அதன்‌ பிரிவு, பாகம்‌ எதனையும்‌ அப்பிரிவின்படி அவ்வறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள வேளாண்மை விளைபொருள்‌ எதனையும்‌ பொறுத்து இச்சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக ஓர்‌ அறிவிக்கை செய்யப்பட்ட பகுதியாக விளம்பலாம்‌. அவ்வறிவிக்கையின்படி ஒன்று வகுத்துரைக்கக்கூடிய முறையில்‌ வெளியிடப்படுதலும்‌ வேண்டும்‌. (2) 3 ஆம்‌ பிரிவின்படியான அல்லது (1) ஆம்‌ உட்பிரிவின்படியான ஓர்‌ அறிவிக்கையானது அவ்வறிவிக்கையின்படி ஒன்றினை வெளியிடுவதில்‌ முறைகேடு அல்லது தவறு ஏதேனும்‌ இருந்தால்கூட முழு ஆற்றல்‌ மற்றும்‌ விளைவினைக்‌ கொண்டதாக இருத்தல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ | சந்தைக்‌ குழுக்கள்‌. 5. சந்தைக்‌ குழுக்களின்‌ அமைப்பு. (1) ஒவ்வொரு அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிக்கும்‌ ஒரு சந்தைக்‌ குழுவினை அரசு அமைத்தல்‌ வேண்டும்‌. அத்தகைய அறிவிக்கை செய்யப்பட்ட பகுதியில்‌ இச்சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ மற்றும்‌ இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌ மற்றும்‌ துணை விதிகள்‌ ஆகியவற்றை செயற்படுத்துதல்‌ இந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ கடமையாக இருத்தல்‌ வேண்டும்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவின்படி சந்தைக்‌ குழு ஒன்று அமைக்கப்பட்ட பிறகு அந்த சந்தைக்‌ குழுவானது எந்த அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிக்காக அமைக்கப்பட்டுள்ளதோ அந்த அறிவிக்கை செய்யப்பட்ட பகுதி சம்பந்தமாக வேளாண்மை விளைபொருள்‌ எதுவும்‌ அறிவிக்கை செய்யப்படுகிறபோது, அந்தச்‌ சந்தைக்‌ குழுவானது அந்த வேளாண்மை விளைபொருள்‌ சம்பந்தமாகவும்‌ அமைக்கப்பட்டிருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 6. சந்தைகளின்‌ அமைப்பு.- (1) ஒவ்வொரு சந்தைக்‌ குழுவும்‌ அறிவிக்கை செய்யப்பட்ட பகுதியில்‌, அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளை வாங்குதல்‌ மற்றும்‌ விற்றல்‌ ஆகியவற்றிற்காக அரசு அவ்வப்போது பணிக்கக்கூடிய வசதிகள்‌ செய்வதற்கு அரசு பணிக்கிற சந்தைகளை அமைத்தல்‌ வேண்டும்‌. (2) அரசு கூடிய விரைவில்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி ஒரு சந்தைக்‌ குழுவினால்‌ சந்தை ஒன்று அமைக்கப்பட்ட பிறகு, அறிவிக்கை மூலமாக அந்தச்‌ சந்தையின்‌ பரப்பினை விளம்பல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவ்வறிவிக்கையில்‌ குறித்துரைக்கக்கூடிய அந்த சந்தையை சுற்றியுள்ள பரப்பானது அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனையும்‌ பொறுத்து இச்சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக அறிவிக்கை செய்யப்பட்ட ஒரு சந்தைப்‌ பகுதியாக இருத்தல்‌ வேண்டும்‌. 7. சிறப்பு மற்றும்‌ துணைச்‌ சந்தைகளின்‌ அமைப்பு. (1) 6ஆம்‌ பிரிவில்‌ எண்ன அடங்கியிருந்தபோதிலும்‌, பகுதி எதிலும்‌ புதிய பழங்கள்‌, புதிய காய்கறிகள்‌, அல்லது கம்பளம்‌ போன்றதான வேளாண்மை விளைபொருள்‌ எதனின்‌ தனிப்பட்டத்‌ தன்மையதான விற்றல்‌, வாங்கல்‌ காரணங்கொண்டு அப்பகுதியில்‌ அத்தகைய வேளாண்மை விளைபொருளின்‌ விற்றல்‌, வாங்குதலை திறம்பட முறைப்படுத்துதலை உறுதிப்படுத்துவது உகந்தது என அரசு திருப்தி கொள்ளுமிடத்து, அரசு,- (ஐ அப்பகுதியில்‌ அந்த வேளாண்மை விளைபொருளுக்கென சிறப்புச்‌ சந்தையை, மற்றும்‌ (௦) அத்தகைய சிறப்புச்‌ சந்தையைப்‌ பொறுத்து, அப்பகுதியானது அந்தப்‌ பகுதியில்‌ ஏற்கெனவே இயங்கிவருகிற மற்றைய சந்தைக்குழுவின்‌ அல்லது குழுக்களின்‌ அதிகார வரம்பின்‌ வட்டார எல்லைகளுக்குள்‌ வருகிற போதிலும்‌, தனிப்பட்ட சந்தைக்‌ குழுவை அமைக்கலாம்‌; மற்றும்‌ அத்தகைய சிறப்புச்‌ சந்தை மற்றும்‌ தனிப்பட்ட சந்தைக்குழு ஆகியவை ஒவ்வொன்றும்‌ இச்சட்டத்தின்படி ஒரு சந்தை மற்றும்‌ ஒரு சந்தைக்குழு அமைக்கப்பட்டுத்‌ தோற்றுவிக்கப்படுகிற அதே முறையில்‌, அமைக்கப்பட்டுத்‌ தோற்றுவிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) ஒரு சிறப்புச்‌ சந்தை மற்றும்‌ தனிப்பட்ட சந்தைக்‌ குழு (1) ஆம்‌ உட்பிரிவின்படி அமைக்கப்படுகிறபோது, அரசு, அறிவிக்கை மூலமாக இச்சட்டத்தின்‌. இச்சட்டத்தின்‌. வகைமுறைகள்‌ அவ்வறிவிக்கையில்‌ குறித்துரைக்கக்கூடிய மாற்றங்கள்‌, கட்டுப்பாடுகள்‌ அல்லது வரையறைகள்‌ ஆகியவைகளோடு அத்தகைய சிறப்புச்‌ சந்தை மற்றும்‌ தனிப்பட்ட சந்தைக்‌ குழு ஆகியவற்றைப்‌ பொறுத்து பொருந்துதல்‌ வேண்டும்‌ என விளம்பலாம்‌. (3) அந்தச்‌ சந்தைக்‌ குழுவானது, அரசின்‌ எழுத்துருவிலான முன்‌ ஒப்புதலோடு அந்த அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதிக்குள்‌ அரசு, அவ்வப்போது பணிக்கக்கூடிய அந்த அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளின்‌ வாங்கல்‌ மற்றும்‌ விற்பனை ஆகியவற்றிற்கான வசதிகளை அளிப்பதற்கான தேவைக்கு, தக்க எண்ணிக்கை கொண்ட துணைச்‌ சந்தைகளை அமைக்கலாம்‌. (4) (a) அரசு, அறிவிக்கை மூலமாக அவ்வறிவிக்கையில்‌ குறித்துரைக்கக்கூடிய சிறப்புச்‌ சந்தையை அல்லது துணைச்‌ சந்தையை மூடுமாறு அந்தத்‌ தனிப்பட்ட சந்தைக்‌ குழுவை அல்லது நேர்விற்கேற்ப, சம்பந்தப்பட்ட அந்தச்‌ சந்தைக்‌ குழுவை பணிக்கும்‌ பொருட்டு தனது நோக்கத்தை விளம்பலாம்‌. அந்த அறிவிக்கையின்படியொன்று வகுத்துரைக்கலாகும்‌ முறையில்‌ வெளியிடப்படுதலும்‌ வேண்டும்‌. (b) கூறு (ஐ இதன்படியான அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்பட்ட கால அளவு முடிவடைந்த பிறகும்‌ அத்தகைய கால அளவு முடிவுக்கு முன்பு பெறப்படுகிற ஆட்சேபனை மற்றும்‌ ஆலோசனை ஆகியவற்றைப்‌ பரிசீலித்த பிறகும்‌, அரசு, (8) கூறின்படியான அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்பட்ட சிறப்புச்‌ சந்தையை அல்லது துணைச்‌ சந்தையை மூடுமாறு அந்த தனிப்பட்ட சந்தைக்குழு அல்லது, நேர்விற்கேற்ப, சம்பந்தப்பட்ட அந்தச்‌ சந்தைக்குழுவைப்‌ பணிக்கலாம்‌, மற்றும்‌ அந்தப்‌ பணிப்புரையானது அந்தப்‌ பணிப்புரையில்‌ குறித்துரைக்கக்கூடிய கால அளவுக்குள்‌ அந்தத்‌ தனிப்பட்ட சந்தைக்குழு அல்லது நேர்விற்கேற்ப, சம்பந்தப்பட்ட அந்தச்‌ சந்தைக்குழு, செயற்படுத்துதல்‌ வேண்டும்‌. 8. அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதியில்‌ வேளாண்மை விளைபொருளில்‌ வாணிபஞ்‌ செய்தல்‌.- (1) நபர்‌ எவரும்‌, அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதியில்‌,- (ஐ அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனின்‌ வாங்கல்‌ அல்லது விற்றல்‌, சேமித்து வைத்தல்‌, எடையிடுதல்‌, அளவிடுதல்‌ அல்லது பக்குவப்படுத்துதல்‌ ஆகியவற்றிற்காக இடம்‌ எதனையும்‌ ஏற்படுத்துதல்‌, அமைத்தல்‌, அல்லது பயன்படுத்துதல்‌ அல்லது (அதனைத்‌) தொடர்தல்‌ அல்லது தொடர்ந்திருக்கும்படி அனுமதித்தல்‌ ஆகியவற்றையோ, அல்லது (௦) அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனின்‌ வாங்கல்‌ அல்லது விற்றல்‌ பொறுத்து தரகராகவோ, எடையிடுபவராகவோ, அளவிடுபவராகவோ, வணிகராகவோ, பண்டகசாலை காப்பாளராகவோ அல்லது வேறெந்த முறையில்‌ செயற்படுவதோ, அந்தச்‌ சந்தைக்‌ குழுவினால்‌ அவருக்கு வழங்கப்பட்ட உரிமப்படியல்லாமல்‌ மற்றும்‌ அதன்‌ நிபந்தனைகளுக்கு இணங்கியவாறல்லாமல்‌ செய்யக்கூடாது. வரம்புரை: ஆனால்‌, அந்தக்‌ குழுவானது, வகுத்துரைக்கக்கூடிய அளவுக்கு மேற்படாத அளவு எதிலும்‌ அறிவிக்கைச்‌. செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனின்‌ வாங்கல்‌ மற்றும்‌ விற்றல்‌, சேமித்து வைத்தல்‌, எடையிடுதல்‌, அளவிடுதல்‌ அல்லது பக்குவப்படுத்துதல்‌ ஆகிய வியாபாரத்தினை நடத்திவருகிற நபர்‌ எவரையும்‌ இந்த உட்பிரிவின்‌ வகைமுறைகளிலிருந்து விலக்களிக்லாம்‌. மேலும்‌ தம்மால்‌ பயிரிடப்பட்ட, வளர்க்கப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்பட்ட அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனையும்‌ விற்கிற, சேமித்து வைக்கிற, எடையிடுகிற, அளவிடுகிற அல்லது பக்குவப்படுத்துகிற உற்பத்தியாளர்‌ ஒருவரும்‌ அல்லது தனது உறுப்பினர்களில்‌ எவராலும்‌ பயிரிடப்பட்ட, வளர்க்கப்பட்ட அல்லது உற்பத்திச்‌ செய்யப்பட்ட அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனையும்‌ விற்கிற, சேமித்து வைக்கிற எடையிடுகிற, அளவிடுகிற அல்லது பக்குவப்படுத்துகிற ஒரு கூட்டுறவு விற்பனைச்‌ சங்கமும்‌ இந்த உட்பிரிவின்‌. வகைமுறைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டவராக இருத்தல்‌ வேண்டும்‌; ஆனால்‌, அரசானது, அத்தகைய உற்பத்தியாளர்‌ எவரையும்‌ அல்லது கூட்டுறவு விற்பனைச்‌ சங்கம்‌ எதனையும்‌ அல்லது அவர்கள்‌ எல்லோரையும்‌ பொறுத்ததான அத்தகைய விலக்கினை வகுத்துரைக்கப்படலாகும்‌ கால அளவுக்கு, திரும்பப்‌ பெற்றுக்கொள்ளலாம்‌. விளக்கம்‌: "கூட்டுறவு விற்பனைச்‌ சங்கம்‌” என்பது தனது உறுப்பினர்களால்‌ பயிரிடப்பட்ட வளர்க்கப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளை விற்பனை செய்தலை ஊக்குவிப்பதை முதன்மை நோக்கமாகக்‌ கொண்டுள்ளதும்‌, 19641 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்‌ சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம்‌ 531961) பதிவுச்‌ செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்டுவிட்டதாகக்‌ கருதப்பட்ட கூட்டுறவுச்‌ சங்கம்‌ எதுவும்‌ எனப்‌ பொருள்படும்‌. (2) உட்பிரிவு (1) இல்‌ அடங்கிய எதுவும்‌- (8) வகுத்துரைக்கலாகும்‌ அளவுக்கு மேற்படாத அளவு எதிலும்‌ அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனையும்‌ தனது சொந்த நுகர்விற்கு வாங்குகிற நபர்‌ ஒருவருக்கு; (b) வகுத்துரைக்கப்படலாகும்‌ அளவுக்கு மேற்படாத அளவு எதிலும்‌ அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனையும்‌ தனது சொந்த விதைத்தல்‌ நோக்கங்களுக்காக வாங்குகிற நபர்‌ ஒருவருக்கு; (6)1951 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பண்டகசாலைகள்‌ சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம்‌ XV/1951) பண்டகசாலையில்‌ வைக்கப்படுவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனின்‌ சேமிப்பு, எடைபிடுதல்‌ அல்லது அளவிடுதல்‌ ஆகியவை பொறுத்து மாநில அல்லது மைய அரசினால்‌ அமைக்கப்பட்ட அல்லது பேணப்பட்டு வருகிற ஒரு பண்டகசாலை கூட்டுறவு நிறுவனத்திற்கு அல்லது உரிமம்‌ அளிக்கப்பட்ட ஒரு பண்டகசாலையாளருக்கு, பொருந்துதல்‌ ஆகாது. (3) உட்பிரிவு (1) இல்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌ நபர்‌ எவரும்‌, இதன்‌ பொருட்டு தமிழ்நாடு அரசிகழில்‌ அறிவிக்கைச்‌ செய்யப்படவிருக்கும்‌ தேதிக்குப்‌ பிறகு, அறிவிக்கை செய்யப்பட்ட பகுதியில்‌, அப்பகுதியில்‌ உள்ள சந்தைக்கு வெளியில்‌, அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனையும்‌ வாங்கவோ அல்லது விற்கவோ கூடாது. விளக்கம்‌: இந்த உட்பிரிவின்‌ நோக்கத்திற்காக, வாங்கல்‌ அல்லது விற்றல்‌ என்பது வேறுவிதமாக வகுத்துரைக்கப்பட்டாலன்றி, அந்த அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட சந்தைப்‌ பகுதியில்‌ முதல்‌ முனையில்‌ வாங்கல்‌ அல்லது விற்றல்‌ எனப்‌ பொருள்படும்‌. (4) உட்பிரிவு (1) இன்படியான உரிமமானது- (2) எந்த நபர்‌ ஒருவரது உரிமமானது இரத்து செய்யப்பட்டு அந்த இரத்து செய்யப்பட்ட தேதியிலிருந்து மூன்று வருடங்கள்‌ கொண்ட கால அளவு கழியாமலிருக்கிறதோ அந்த நபருக்கு, அல்லது (b) எந்த நபரானவர்‌ ஒரு குற்றத்திற்காக தண்டனைத்‌ தீர்ப்பு வழங்கப்பட்டு அத்தகைய குற்றமானது அவரது வியாபாரம்‌ சம்பந்தப்பட்டதாகவோ அல்லது வியாபாரம்‌ செய்கிற மணிதன்‌ என்ற முறையிலான அவரது நாணயம்‌ சம்பந்தப்பட்டதாகவோ இருக்கிறதோ அந்த நபருக்கு, அல்லது (6) எந்த நபரைப்‌ பொறுத்து சந்தைக்‌ குழுவானது அது போதுமானதென்று கருதுகிற விசாரணைக்குப்‌ பிறகு (௨) கூறின்படி அல்லது (b) கூறின்படி வேறெந்த நபர்‌ எவருக்கும்‌ உரிமம்‌ மறுக்கப்படலாமோ, அந்த வேறெந்த நபர்‌ எவருக்காக பினாமிதாரராகவோ அல்லது அந்த வேறெந்த நபர்‌ எவருடனும்‌ கூட்டாளியாகவோ இருக்கிறார்‌ என்று திருப்திக்‌ கொள்ளுகிறதோ, அந்த நபருக்கு, மறுக்கப்படுதல்‌ வேண்டும்‌. (5) சந்தைக்குழுவானது, இதன்பொருட்டு அதற்கு செய்யப்பட்ட சுட்டுகை ஒன்றின்‌ பேறிலோ அல்லது மற்றபடியோ- (ஐ உட்பிரிவு (1) இன்படி வழங்கப்பட்ட உரிமமானது திரித்துக்‌ கூறுதல்‌ மூலமாக அல்லது மோசடி மூலமாக பெறப்பட்டுள்ளது என்று; அல்லது (b) உரிமமுடையவர்‌ இச்சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ எதனையும்‌ அல்லது இச்சட்டத்தின்படிச்‌ செய்யப்பட்ட விதிகள்‌ அல்லது துணை விதிகள்‌ எதனையும்‌ அல்லது அந்த உரிமத்தின்‌ நிபந்தனைகள்‌ எதனையும்‌, மீறியிருக்கிறார்‌ அல்லது அதற்கு இணங்கத்‌ தவறிவிட்டார்‌ என்று, திருப்தி கொள்ளுமாயின்‌, இச்சட்டத்தின்படி அந்த உரிமமுடையவர்‌ உள்ளாகலாகும்‌ வேறெந்த தண்டத்திற்கு பாதகமின்றி, அந்தச்‌ சந்தைக்குழு. இதன்பொருட்டு செய்யப்படலாகும்‌ விதிகளுக்கு உட்பட்டு இந்த உரிமமுடையவருக்கு அறவு செய்தலுக்கு அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு எதிராக காரணங்காட்டுவதற்கு நியாயமான வாய்ப்பினைக்‌ கொடுத்த பிறகு அந்த உரிமத்தை அறவு செய்யவோ அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ, செய்யலாம்‌. (6) உரிமம்‌ ஒன்றினை- (8) வழங்குவதற்கு மறுக்கிற, அல்லது (௦) அறவு செய்கிற அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கிற, அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ முடிவினால்‌ குறையுற்ற நபர்‌ எவரும்‌, வகுத்துரைக்கக்கூடிய காலத்திற்குள்‌ வாரியத்திற்கு மேல்முறையீடு செய்யலாம்‌ மற்றும்‌ அந்த வாரியமானது தான்‌ பொருத்தமெனக்‌ கருதுகிற ஆணையினைச்‌ செய்யலாம்‌. (7) உட்பிரிவின்‌ (1) இன்படி வழங்கப்பட்ட உரிமமானது- (ஐ அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனின்‌ வாங்கல்‌ அல்லது விற்றல்‌ ஆகிய வியாபாரத்தை மொத்தமாக நடத்திவருகிற நபர்‌ ஒருவரைப்‌ பொறுத்து மூன்று வருட கால அளவுக்கு; (b) மற்றவர்களைப்‌ பொறுத்து ஓராண்டு கால அளவுக்கு; செல்லத்தக்கதாக இருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ (அந்த உரிமமானது) அவ்வப்போது புதுப்பிக்கப்படலாம்‌, மற்றும்‌ இச்சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ உரிமம்‌ ஒன்றை வழங்குவது பொறுத்து அவை எந்த அளவுக்கு பொருந்துகின்றதோ அந்த அளவுக்கு உரிமம்‌ ஒன்றைப்‌ புதுப்பிப்பதற்கும்‌ பொருந்துதல்‌ வேண்டும்‌ (8) அந்நபர்‌ ஒவ்வொருவருக்கும்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி உரிமம்‌ ஒன்று வழங்கப்படுகிறுதோ அந்த நபர்‌ ஒவ்வொருவரும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகளின்‌ மற்றும்‌ துணை விதிகளின்‌ வகைமுறைகள்‌ மற்றும்‌ அந்த உரிமத்தில்‌ குறித்துரைக்கப்பட்ட நிபந்தனைகள்‌ ஆகியவற்றுக்கு இணங்கி நடக்க வேண்டும்‌. (9) இச்சட்டத்தின்படி உரிமம்‌ வழங்கப்பட்ட அல்லது கட்டணம்‌ அல்லது வேறெந்த தொகை எதனையும்‌ செலுத்துவதற்கு கடப்பாடுடைய நபர்‌ ஒவ்வொருவரும்‌ ஒரு உண்மையானதும்‌ சரியானதுமான கணக்கினையும்‌ சந்தைக்‌ குழுவின்‌ விதிகளில்‌ குறித்துரைக்கப்படக்கூடிய விவரங்களைக்‌ காட்டுகிற வேறு பதிவுருக்களையும்‌ வைத்து பேணி வருதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ பக்குவப்படுத்துதல்‌ உள்ளடங்கிய அவரது வியாபார விவர அறிக்கைகளையும்‌ அந்தச்‌ சந்தைக்‌ குழுவுக்கு வகுந்துரைக்கக்கூடிய முறையிலும்‌ கால அளவுக்குள்ளும்‌ அந்த விவர அறிக்கையின்‌ அடிப்படையில்‌ கொடுபட வேண்டிய கட்டணம்‌ அல்லது மற்றைய தொகையோடு பணிந்தனுப்ப வேண்டும்‌. 9. அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதி முதலியவற்றை மாற்றுதல்‌.-- (1) அரசு, அறிவிக்கை மூலமாக அவ்வறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்படக்கூடிய தேதியிலிருந்தும்‌ அது முதற்கொண்டும்‌ செயற்படுமாறு,- (ஐ) அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதி எதிலுமிருந்து அல்லது அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட சந்தைப்‌ பகுதி எதிலுமிருந்து, பகுதி எதனையும்‌ சேர்க்கவோ அல்லது பகுதி எதனையும்‌ நீக்கவோ செய்யலாம்‌; (௦) அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதி எதனையும்‌ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிப்பட்ட அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதிகளாகப்‌ பிரிக்கலாம்‌; (6) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதிகளை ஓர்‌ அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதியாக இணைக்கலாம்‌; (0) அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதி எதிலும்‌ அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனின்‌ விற்றல்‌, வாங்கலின்‌ முறைப்படுத்துதலானது அற்றுப்போதல்‌ வேண்டும்‌ என்றோ இதுகாறும்‌ முறைப்படுத்தப்பபாத வேளாண்மை விளைபொருள்‌ எதனின்‌ விற்றல்‌ வாங்குதல்‌ ஆனது அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதி எதிலும்‌ முறைப்படுத்தப்படல்‌ வேண்டும்‌ என்றோ, விளம்பலாம்‌: வரம்புரை: ஆனால்‌, அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதி அல்லது வேளாண்மை விளைபொருள்‌ தொடர்பாக, இந்தப்‌ பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள 3 ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு இருத்தல்‌ வேண்டும்‌. (2) உட்பிரிவு (1) இன்படி அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதிக்கென அமைக்கப்பட்ட ஒரு சந்தைக்குழுவின்‌ எல்லைகள்‌ மாற்றப்படுகிறபோது, பின்வரும்‌ விளைவுகள்‌, அந்த அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்படக்கூடிய தேதியிலிருந்தும்‌ அது முதற்கொண்டும்‌ செயற்படுமாறும்‌, ஏற்படுதல்‌ வேண்டும்‌, அதாவது- (ஐ அந்தச்‌ சந்தைக்‌ குழுவானது கலைக்கப்பட்டுவிட வேண்டும்‌; மற்றும்‌ அதன்‌ உறுப்பினர்கள்‌ அந்த உறுப்பினர்கள்‌ என்ற முறையிலான அவர்களது பதவிகளை காலி செய்ய வேண்டும்‌; (௦) பிரிவு 5 மற்றும்‌ பிரிவு 10 ஆகியவற்றின்‌ வகைமுறைகளுக்கு இணங்கிய வகையில்‌ புது அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதிக்காக ஒரு புது சந்தைக்‌ குழுவானது அமைக்கப்பட்டு தோற்றுவிக்கப்படல்‌ வேண்டும்‌; (6) கலைக்கப்பட்ட சந்தைக்‌ குழுவினால்‌ வழங்கப்பட்ட உரிமம்‌ ஏதேனுமிருப்பின்‌, அதிகார வரம்பினையுடைய அந்தப்‌ புது சந்தைக்‌ குழுவினால்‌ வழங்கப்பட்டிருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ எந்தக்‌ காலஅளவுக்கு வழங்கப்பட்டதோ அந்தக்‌ கால அளவின்‌ எஞ்சிய கால அளவுக்கு அவ்வண்ணமே தொடர்ந்து செயல்பட்டு வருதல்‌ வேண்டும்‌; (0) அந்தப்‌ புது சந்தைக்‌ குழுவுக்கு, அரசு ஆணை மூலமாக பணிக்கலாகும்‌ கலைக்கப்பட்ட சந்தைக்‌ குழுவின்‌ நிதியங்களின்‌ பணம்‌ மற்றும்‌ கடப்பாடுகள்‌: ஆகியவைகள்‌ மாற்றப்படல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அந்தப்‌ புதிய சந்தைக்‌ குழுவின்‌ அதிகார வரம்புக்குள்‌ உள்ள அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதி எதனின்‌ பாகம்‌ எதிலும்‌ எழுகிற அல்லது அதனைப்‌ பொறுத்து உள்ள மற்றைய விஷயம்‌ அல்லது பொருள்‌ மற்றும்‌ உரிமையியல்‌ மற்றும்‌ குற்றவியல்‌ நடவடிக்கைகள்‌, ஒப்பந்தங்கள்‌, உடன்படிக்கைகள்‌ ஆகியவை பொறுத்தும்‌ கலைக்கப்பட்ட அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ உரிமைகள்‌ மற்றும்‌ கடப்பாடுகள்‌ ஆகியவைகள்‌, அந்தப்‌ புதியச்‌ சந்தைக்‌ குழுவிடம்‌ மேவி நிற்றல்‌ வேண்டும்‌. 10. சந்தைக்‌ குழுவின்‌ தோற்றுவிப்பு-- (1) ஒவ்வொரு சந்தைக்‌ குழுவும்‌, பதினாறு உறுப்பினர்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ இதனடியிற்‌ குறிக்கப்பட்ட முறையில்‌ தோற்றுவிக்கப்படுதலும்‌ வேண்டும்‌. (2) ஒவ்வொரு சந்தைக்‌ குழுவும்‌- (ஐ அரசினால்‌ இயக்குநரோடு ஆலோசனை செய்த பின்‌, பெயர்‌ குறித்து நியமிக்கப்படுகிற அறிவிக்கைச்‌. செய்யப்பட்ட பகுதியில்‌ அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளின்‌ எட்டு உற்பத்தியாளர்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌; அவர்களில்‌, குறைந்தபட்சம்‌, மூன்று பேர்கள்‌ சிறு குடியானவர்களாக இருந்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ மற்றைய மூன்று பேர்கள்‌ மிசச்சிறிய (Marginal) குடியானவர்களாக இருந்தல்‌ வேண்டும்‌; வரம்புரை: ஆனால்‌ அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதி எதனைப்‌ பொறுத்தும்‌ ஒன்றுக்கு மேற்பட்ட வேளாண்மை விளைபொருளானது அறிவிக்கைச்‌ செய்யப்பட்டுள்ளபோது அத்தகைய பெயர்‌ குறித்து நியமனஞ்‌ செய்யப்பட்ட பகுதியில்‌ உள்ள எல்லா அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்களின்‌ உற்பத்தியாளர்களின்‌ நலன்களைப்‌ பாதுகாக்கும்‌ வகையில்‌ இருக்கவேண்டும்‌. (௦) அரசினால்‌ இயக்குநரோடு ஆலோசனை செய்த பின்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படு கிற அந்த அறிவிக்கைச்‌ செய்யப்படுகிற வேளாண்மை விளைபொருள்‌ பொறுத்து, அந்த அறிவிக்கை செய்யப்பட்டப்‌ பகுதியில்‌ உள்ள 8 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி உரிமம்‌ அளிக்கப்பட்டுள்ள மூன்று நபர்களையும்‌ கொண்டிருந்தல்‌ வேண்டும்‌. (6) பதிவாளருடன்‌ கலந்தாலோசித்த பின்‌ அரசினால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படுகிற அந்த அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதியில்‌ குடியிருக்கும்‌ அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனின்‌ உற்பத்தியாளர்‌ ஒருவரையும்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌: மற்றும்‌ (1) இயக்குநரோடு கலந்தாலோசித்த பின்‌ அரசினால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்படுகிற மூன்று அலுவலர்களையும்‌ கொண்டிருந்தல்‌ வேண்டும்‌; அவர்களில்‌ ஒருவர்‌, அரசு வேளாண்மைத்‌ துறையைச்‌ சார்ந்த மாவட்டத்தின்‌ பொறுப்பைய]ுடைய அலவலராக இருத்தல்‌ வேண்டும்‌. மற்றைய இருவர்‌ அரசுத்துறைகளான கால்நடைப்‌ பராமரிப்புத்துறை, வனத்துறை, மீன்துறை, தோட்ட கலைத்துறை, பட்டுப்புழு வளர்ப்புத்துறை ஏதேனும்‌ இரண்டு துறைகளைச்‌ சார்ந்த அம்மாவட்டத்தின்‌ பொறுப்பையுடையவர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. (3) அரசு எந்த நேரத்திலும்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்படி தம்மால்‌ பெயர்‌ குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்‌ அல்லது உறுப்பினர்கள்‌. எவரையும்‌ (பதவியிலிருந்து) திரும்ப அழைத்துக்கொள்ளலாம்‌; மற்றும்‌ காலியிடம்‌ அல்லது காலியிடங்களை பெயர்‌ குறித்து புதிய நியமனம்‌ மூலமாக நிரப்பலாம்‌. (ஐ கூறின்‌ நோக்கங்களுக்காக- (i) "சிறு குடியானவர்‌ என்றால்‌ வேளாண்மை நிலத்திலிருந்து வருகிற வருமானத்தை தனது முக்கியமான வாழ்க்கைத்‌ தொழில்‌ வருமான மூலதனமாக உள்ளவரும்‌ மற்றும்‌ அரை ஹெக்டேருக்கு மேல்‌ பாசன வசதியில்லாத நிலத்தினை அல்லது இரண்டு ஹெக்டேர்‌ பாசன வசதியில்லாத நிலத்தினை உரிமையாளராக குடியானவராக அல்லது அனுபோக ஒத்திதாரராக அல்லது ஒரு முறையில்‌ பாதியும்‌ மற்றொரு முறையில்‌ பாதியுமாக வைத்திருக்கிற நபர்‌ ஒருவர்‌ எனப்‌ பொருள்படும்‌; (i) மிகச்சிறிய குடியானவர்‌ (Marginal farmer) என்றால்‌ வேளாண்மை நிலத்திலிருந்து வருகிற வருமானத்தை தனது முக்கியான வாழ்க்கைத்‌ தொழில்‌ வருமான மூலதனமாக உள்ளவரும்‌ மற்றும்‌ அரை ஹெக்டேருக்கு மேற்படாத பாசன வசதியுடைய நிலத்தினை அவ்வது ஒரு ஹெக்டேர்‌ பாசன வசதியில்லா நிலத்தினை உரிமையாளராக குடியானவராக அல்லது அனுபோக ஒத்திதாரராக, அல்லது ஒரு முறையில்‌ பாதியும்‌ மற்றொரு முறையில்‌ பாதியுமாக வைத்திருக்கிற நபர்‌ ஒருவர்‌ எனப்‌ பொருள்படும்‌, மற்றும்‌ அத்தகைய நபர்‌ பாசன வசதியுள்ள மற்றும்‌ பாசன வசதியில்லா நிலத்தினை வைத்திருக்கிறபோது, ஒரு ஹெக்டேர்‌ பாசன வசதியில்லா நிலமானது இரண்டு ஹெக்டேர்‌ பாசன வசதியில்லா நிலத்திற்கு சமமானதாகக்‌ கருதப்படல்‌ வேண்டும்‌. 11. சந்தைக்‌ குழுக்களின்‌ உறுப்பினர்களின்‌ பெயர்களை வெளியிடுதல்‌.- பிரிவு 10 இன்படி பெயர்‌ குறித்து நியமனஞ்செய்யப்பட்ட சந்தைக்‌ குழுவின்‌ உறுப்பினர்களின்‌ பெயர்களை தமிழ்நாடு அரசிதழில்‌ அரசினால்‌ அறிவிக்கைச்‌ செய்யப்பட வேண்டும்‌. 12. சந்தைக்‌ குழுவின்‌ தலைவர்‌ மற்றும்‌ துணைத்‌ தலைவர்‌.- ஒவ்வொரு சந்தைக்‌ குழுவும்‌ வகுத்துரைக்கக்கூடிய முறையில்‌ தேர்ந்தெடுக்கப்படுதல்‌ வேண்டும்‌,- (a) பிரிவு 10 இன்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்‌ கூறு (ஐ) அல்லது கூறு (௦) இன்படி பெயர்‌ குறித்து நியமனஞ்‌ செய்யப்பட்ட அதன்‌ உறுப்பினர்களில்‌ ஒருவர்‌ அதன்‌ தலைவராக இருக்க வேண்டும்‌, மற்றும்‌ (௦) மற்றொரு உறுப்பினர்‌ அதன்‌ துணைத்‌ தலைவராக இருக்க வேண்டும்‌. 13. சந்தைக்குழுவின்‌ உறுப்பினர்‌ பதவிக்கு தகுதியிண்மை.- ஒரு சந்தைக்‌ குழுவுக்கு உறுப்பினராக பெயர்‌ குறித்து நியமனஞ்‌ செய்யப்படுவதற்கோ மற்றும்‌ உறுப்பினராக இருப்பதற்கோ நபர்‌ ஒருவர்‌,- (ஐ அவர்‌ இள வயதினராக (Minor) அல்லது புத்தி சுவாதீனமில்லாதவராக இருப்பாராயின்‌, (௦) அவர்‌ நொடிப்பு நிலையராக (Insolvent) அல்லது விடுவிக்கப்படாத நொடிப்பு (Undischarged insolvent) தீர்மானிக்கப்படுவதற்கு விண்ணப்பதாரராக இருப்பராயின்‌, (6) சட்டம்‌ எதிலும்‌ ஓராண்டும்‌ அதற்கு மேலும்‌ தண்டிக்கப்படத்தக்க ஒழுக்கமின்மை உள்ளடங்குகிற குற்றம்‌ எதற்கும்‌ அவர்‌ தண்டிக்கப்பட்டிருந்து அத்தகைய தண்டனையானது அறவு செய்யப்படாமலிருந்து ஐந்து ஆண்டுகள்‌ கொண்ட ஒரு கால அளவானது கழியாமலிருக்குமாயின்‌, (0) சந்தைக்‌ குழுவோடு அவரது வாணிக அல்லது வியாபார நடவடிக்கையின்‌ போக்கில்‌ அந்தச்‌ சந்தைக்‌ குழுவுக்கு சரக்குகள்‌ வழங்குவதற்கோ அந்தக்‌ குழுவினால்‌ மேற்கொள்ளப்பட்ட பணிகள்‌ எதனையும்‌ நிறைவேற்றுதலுக்காக அவரால்‌ செய்யப்பட்டுள்ள ஓர்‌ ஒப்பந்தம்‌ நிகழ்வில்‌ இருக்குமாயின்‌ மற்றும்‌ அது நிகழ்வில்‌ இருக்கிற வரையிலும்‌; விளக்கம்‌:- இந்தக்‌ கூறின்‌ நோக்கங்களுக்காக, எந்த நபரால்‌ அந்தச்‌ சந்தைக்‌ குழுவோடு ஓர்‌ ஒப்பந்தம்‌ செய்யப்பட்டுள்ளதோ அந்த நடரால்‌ அந்த ஒப்பந்தம்‌ அந்த நபரால்‌ முழுமையாக செய்து முடிக்கப்படுகிறபோது, அந்த ஒப்பந்தமானது, அந்தச்‌ சந்தைக்குழுவானது அந்த ஒப்பந்தத்தின்‌ பகுதியினை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செய்து முடிக்கவில்லை என்ற காரணம்‌ மட்டுமே கொண்டு, (e) அந்தச்‌ சந்தைக்‌ குழுவுக்கு கொடுபட வேண்டிய கட்டணம்‌ எதனையும்‌ அல்லது மற்றைய தொகை எதனையும்‌ அது குறித்து அவருக்கு கேட்புக்‌ கோரிக்கை அல்லது அறிவிப்பு சார்புச்‌ செய்யப்பட்டத்‌ தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்கு மேற்பட்ட ஒரு கால அளவுக்கு அவர்‌ செலுத்தத்‌ தவறியதால்‌ தவறியவராக அவர்‌ இருப்பாராயின்‌, ) சந்தைக்‌ குழுவுக்கு சார்பாகவோ அதற்கு எதிராகவோ சட்டத்‌ தொழிலாற்றுபவராகவோ அவர்‌ வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பாராயின்‌, அல்லது (ஐ சந்தைக்‌ குழு எதனின்‌ சம்பளம்‌ வாங்குகிற அலுவலர்‌ அல்லது பணியாளராக அவர்‌ இருப்பாராயின்‌, தகுதியின்மையுடையவராவார்‌. 14. வேளாண்மை உதவி இயக்குநர்‌ பதவி வழி உறுப்பினராக இருத்தல்‌.- அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதியின்‌ மீது அதிகார வரம்பினைக்‌ கொண்டிருக்கிற விற்பனை சம்பந்தப்பட்ட பொறுப்புடைய வேளாண்மை உதவி இயக்குநர்‌ அத்தகைய பகுதிக்கு அமைக்கப்பட்டுள்ள அந்த சந்தைக்குழுவின்‌ பதவி வழி உறுப்பினராக இருத்தல்‌ வேண்டும்‌; அல்லது ஓர்‌ அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதியின்‌ வெவ்வேறு பகுதிப்‌ பிரிவுகளின்‌ மீது அதிகார வரம்பினைக்‌ கொண்டிருக்கிற விற்பனை சம்பந்தப்பட்ட பொறுப்புடைய இரண்டு அல்லது அதற்கு மேல்‌ வேளாண்மை உதவி இயக்குநர்கள்‌ இருப்பார்களாயின்‌, இதன்‌: பொருட்டு அரசு குறித்துரைக்கக்கூடிய வேளாண்மை உதவி இயக்குநர்களில்‌ ஒருவர்‌ அதன்‌ பதவி வழி உறுப்பினராக இருத்தல்‌ வேண்டும்‌. 15. உறுப்பினர்களின்‌ பதவிக்காலம்‌, முதலியன.- (1) பதவி வழி உறுப்பினர்‌ அல்லது பிரிவு 10 இன்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்‌ (0) கூறின்படி பெயர்‌ குறித்து நியமனஞ்‌ செய்யப்பட்ட உறுப்பினர்கள்‌ ஆகியோர்களைத்‌ தவிர, ஒரு சந்தைக்குழுவின்‌ மற்றைய உறுப்பினர்களின்‌ அலுவலகப்‌ பதவிக்காலமானது, 11 ஆம்‌ பிரிவின்படி தமிழ்நாடு அரசிதழில்‌ அந்த அறிவிக்கை வெளியிடப்பட்டத்‌ தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளாக இருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அத்தகைய உறுப்பினர்கள்‌ மற்றொரு மூன்று ஆண்டுகள்‌ காலத்திற்கு மேற்படாத பதவிக்காலத்திற்கு தகுதியுடையவராக இருத்தல்‌ வேண்டும்‌; வரம்புரை: ஆனால்‌, இந்த உட்பிரிவின்‌ நோக்கங்களுக்காக, பதவியில்‌ ஒரு தற்செயல்‌ காலியிடத்தில்‌ ஓராண்டுக்கு குறைவுபடாத ஒரு கால அளவுக்கு பதவி வகித்திருந்த நபர்‌ ஒருவர்‌ அந்தப்‌ பதவியில்‌ மூன்று ஆண்டுகள்‌ கொண்ட ஒரு முழுப்‌ பதவி காலத்திற்கு பதவி வகித்திருந்ததாகக்‌ கருதப்படல்‌ வேண்டும்‌: மேலும்‌, ஓர்‌ உறுப்பினர்‌, அவரது பதவிக்காலம்‌ முடிவற்றிருந்த போதிலும்‌ அவரது பின்னவரை (50௦௦688501) பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்படும்‌ வரை அல்லது மூன்று மாதங்கள்‌ கொண்ட ஒரு கால அளவுக்கு, இவற்றில்‌ எது முந்தியதோ அதுவரை தொடர்ந்து பதவி வகித்து அந்தச்‌ சந்தைக்குழுவின்‌ உறுப்பினராக கடமையினை ஆற்றுதல்‌ வேண்டும்‌: மேலும்‌, அரசு அறிவிக்கை மூலமாக, ஒரு சந்தைக்‌ குழுவின்‌ பதவிக்காலம்‌ முடிவடைந்த காலத்தில்‌ அல்லது முடிவுறுவதற்கு முன்பு, போதுமான காரணத்திற்காக அந்தச்‌ சந்தைக்குழுவின்‌ உறுப்பினர்களின்‌ பதவிக்காலத்தை முழுமையாக ஒரே நேரத்தில்‌ ஆறு மாதங்களுக்கு மேற்படாத ஆனால்‌ மொத்தத்தில்‌ ஓராண்டுக்கு மேற்படாத ஒரு கால அளவுக்கு நீட்டிக்கப்படல்‌ வேண்டும்‌ என பணிக்கலாம்‌. (2) (ஐ.பதவி வழி உறுப்பினர்‌ அல்லது 10 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்‌ (0) கூறின்படி பெயர்‌ குறித்து நியமனஞ்‌ செய்யப்பட்ட உறுப்பினர்கள்‌ ஆகியோரைத்‌ தவிர, ஒவ்வொரு சந்தைக்குழுவின்‌ உறுப்பினரொருவர்‌, அந்தச்‌ சந்தைக்குழுவின்‌ குறைவெண்‌ இல்லாத காரணத்தால்‌ நடத்தப்படமுடியாத கூட்டங்கள்‌ உள்ளடங்கலான மூன்று தொடர்‌ கூட்டங்களிலிருந்து அவர்‌ வராமலிருந்துவிடுவாராயின்‌, அவரது பதவியை வகித்து வருதல்‌ அற்றுப்‌ போதல்‌ வேண்டும்‌. (b) கூறு (ஐ இன்‌ நோக்கங்களுக்காக, உறுப்பினர்‌ ஒருவர்‌ எந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ கூட்டத்திலிருந்து அவர்‌ வராமலிருக்கிறாரோ அந்தக்‌ கூட்டமானது, அவருக்கு அந்தக்‌ கூட்டத்தைப்‌ பற்றியதான உரிய அறிவிப்புக்‌ கொடுக்கப்படவில்லை எனில்‌, அவருக்கு எதிராகக்‌ கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளப்படுதல்‌ ஆகாது. (3) உட்பிரிவு (2) இன்படி ஒரு நபர்‌ உறுப்பினராக இருப்பது அற்றுப்போயிருக்கிற போது, தலைவரானவர்‌, அந்த விவரத்தை அத்தகைய நபருக்கு எழுத்துருவில்‌ உடனடியாக தெரிவிக்கவேண்டும்‌; மற்றும்‌ அதணை அந்தச்‌ சந்தைக்‌ குழுவுக்கு அதன்‌ அடுத்தக்‌ கூட்டத்தில்‌ அறிக்கை செய்யப்பட வேண்டும்‌; அந்தச்‌ சந்தைக்‌ குழுவானது அந்தக்‌ கூட்டத்தில்‌ தானாகவே அத்தகைய நபரை மீண்டும்‌ அவரது பதவியில்‌ உறுப்பினராக எடுத்துக்‌ கொள்ளலாம்‌; மற்றும்‌ அத்தகைய தெரிவிப்பு அவரால்‌ பெறப்பட்ட தேதியிட்ட ஒரு விண்ணப்பத்தின்‌ பேரில்‌, அவரை அவரது பதவியில்‌ உறுப்பினராக எடுத்துக்‌ கொள்ளுதல்‌ வேண்டும்‌: ஆனால்‌, உறுப்பினர்‌ ஒருவரை அவரது பதவிக்‌ காலத்தின்‌ போது இரண்டு தடவைகளுக்கு மேல்‌ அவ்வாறு பதவியில்‌ மீண்டும்‌ உறுப்பினராக எடுத்துக்‌ கொள்ளுதல்‌ ஆகாது. (4) அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ உறுப்பினர்‌ பதவி எதிலும்‌ உள்ள ஒவ்வொரு தற்செயல்‌ காலியிடமானது, அந்தக்‌ காலியிடம்‌ ஏற்பட்டத்‌ தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு மேற்படாத காலத்திற்குள்‌, வகுத்துரைக்கலாகும்‌ முறையில்‌ புதிய பெயர்‌ குறித்து நியமனம்‌ மூலமாக சாதாரணமாக நிரப்பப்படுதல்‌ வேண்டும்‌: ஆனால்‌, எந்த உறுப்பினரின்‌ பதவியில்‌ அந்தத்‌ தற்செயல்‌ காலியிடம்‌ அந்த உறுப்பினரின்‌ பதவிக்காலம்‌ முடிவுறுவதற்கு முன்‌ ஏற்பட்டுள்ளதோ, அந்தப்‌ பதவிக்காலம்‌ முடிவுறுவதற்கு முன்பு நான்கு மாதங்களுக்குள்‌ தற்செயல்‌ காலியிடம்‌ எதுவும்‌ நிரப்பப்படுதல்‌ ஆகாது. (5) உட்பிரிவு (4) இன்படியான ஒரு தற்செயல்‌ காலியிடத்தில்‌ நிரப்புவதற்காக பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்பட்டாரோ அந்த உறுப்பினர்‌, அந்த காலியிடம்‌ ஏற்படாமலிருந்திருக்குமாயின்‌, அதில்‌ உள்ள உறுப்பினர்‌ அப்பதவியை எந்தக்காலம்‌ வரை வகிப்பதற்கு உரிமையுடையவராக இருந்திருப்பாரோ அந்தக்‌ காலத்திற்கு மட்டுமே அவர்‌ பதவி வகிக்க வேண்டும்‌. விளக்கம்‌:- இப்பிரிவின்‌ நோக்கங்களுக்காக "தற்செயல்‌ காலியிடம்‌" என்றால்‌ காலக்கழிவு மூலம்‌ அல்லாமல்‌ மற்றப்படி ஏற்படுகிற ஒரு காலியிடம்‌ எனப்‌ பொருள்படும்‌. (6) அரசுக்கு, தம்மால்‌ பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்பட்ட நபர்‌ எவரும்‌, அவரது பதவிக்கு அவர்‌ பொருத்தமற்றதாக அவரே காட்டிக்‌ கொண்டு விட்டார்‌ அல்லது அவரது பதவி நீக்கத்தை உகந்ததாக ஆக்குகிற தவறான நடத்தை அல்லது கவனமின்மை எதற்கும்‌ அவர்‌ குற்றவாளியாகிவிட்டார்‌ என்று, அரசுக்கு எந்நேரத்திலும்‌ தோன்றினால்‌, அரசு அறிவிக்கை மூலமாக அத்தகைய நபரை அவரது பதவியிலிருந்து நீக்கம்‌ செய்யலாம்‌. 16. சந்தைக்‌ குழுவை கூட்டு நிறுவனமாக பதிவு செய்தல்‌.- ஒவ்வொரு சந்தைக்குழுவும்‌ அரசு குறித்துரைக்கக்கூடிய பெயரில்‌ ஒரு கூட்டு நிறுவனமாக இருத்தல்‌ வேண்டும்‌. அது நிலையான தொடர்பாட்டையும்‌ பொது முத்திரை ஒன்றையும்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. அது அதன்‌ பதிவு செய்யப்பட்ட பேரிலே வழக்கிடுதலும்‌ வழக்கிடப்படுதலும்‌ வேண்டும்‌, மற்றும்‌ அது இச்சட்டத்தின்‌ அல்லது அதன்படியாக விதிக்கப்படுகிற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு சொத்தினை அசையும்‌ அசையா சொத்துக்கள்‌ இரண்டும்‌ உள்ளடங்கலாக கையகப்படுத்துதல்‌ மற்றும்‌ வைத்திருப்பதற்கு விற்பதற்கு குத்தகை விடுப்பதற்கு அல்லது அதனிடம்‌ மேவியிருக்கலாம்‌ அல்லது அதனால்‌ கையகப்படுத்துகிற அசையும்‌ அல்லது அசையா சொத்து எதனையும்‌ மற்றபடி உரிமை மாற்றம்‌ செய்வதற்கு மற்றும்‌ ஒப்பந்தம்‌ செய்வதற்கு மற்றும்‌ அது எந்த நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கங்களுக்காக மற்றைய தேவையான காரியங்கள்‌ எல்லாவற்றையும்‌ செய்வதற்கும்‌ தகுதி உடையதாக இருத்தல்‌ வேண்டும்‌; ஆனால்‌, அசையா சொத்து எதுவும்‌ அரசின்‌ முன்‌ அனுமதி இல்லாமல்‌ விற்பனை, குத்தகை அல்லது மற்றைய வழி மூலமாக உரிமை மாற்றம்‌ செய்யப்படுதல்‌ ஆகாது. 17. சந்தைக்‌ குழு தல நிர்வாக அமைப்பாக இருத்தல்‌ வேண்டும்‌.- ஒவ்வொரு சந்தைக்‌ குழுவும்‌ 1894 ஆம்‌ ஆண்டு நில கையகப்படுத்துதல்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 1/1894) நோக்கங்களுக்காகவும்‌ மற்றும்‌ 1914 ஆம்‌ ஆண்டு தல நிர்வாக அமைப்புகள்‌ கடன்கள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 171914) நோக்கங்களுக்காக ஒரு தல நிர்வாக அமைப்பாக கருதப்படல்‌ வேண்டும்‌. 18. துணைக்‌ குழு, சிறப்புக்‌ குழு மற்றும்‌ அதிகாரங்களின்‌ ஒப்படைப்பு. அந்தச்‌ சந்தைக்‌ குழுவானது பணி எதனையும்‌ செய்வதற்கு அல்லது இச்சட்டத்தின்படி மற்றும்‌ இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌ மற்றும்‌ துணைவிதிகள்‌: ஆகியவற்றின்படியான அதன்‌ கடமைகள்‌ அல்லது அலுவல்களைச்‌ சார்ந்த விஷயம்‌ எதனையும்‌ பற்றி அறிக்கை செய்வதற்கும்‌ அதன்‌ ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை ஒரு துணைக்‌ குழுவாக அல்லது ஒரு சிறப்புக்‌ குழுவாக இருப்பதற்காக நியமிக்கலாம்‌. மற்றும்‌ அதன்‌ ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள்‌ எவருக்கும்‌ அது பொருத்தம்‌ என கருதக்கூடிய அதன்‌ சொந்த அதிகாரங்கள்‌ அல்லது கடமைகள்‌ ஆகியவற்றை ஒப்படைக்கலாம்‌. 19. பொதுக்கூட்டம்‌.- (1) அந்தச்‌ சந்தைக்‌ குழு எந்த நேரத்திலும்‌ அறிவிக்கை செய்யப்பட்ட பகுதியில்‌ அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளின்‌ உற்பத்தியாளர்கள்‌ மற்றும்‌ 8 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி உரிமம்‌ வழங்கப்பட்ட நபர்கள்‌ ஆகியோர்களின்‌. பொதுக்கூட்டத்தைக்‌ கோரலாம்‌ மற்றும்‌ அத்தகைய கூட்டத்தை இயக்குநர்‌ அல்லது 8 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி உரிமம்‌ வழங்கப்பட்ட நபர்கள்‌. அல்லது அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ துணை விதிகளில்‌ குறித்துரைக்கக்கூடிய உற்பத்தியாளர்களின்‌ மொத்த எண்ணிக்கையில்‌ ஒரு பகுதியினர்‌ மற்றும்‌ அவ்வாறு உரிமம்‌ வழங்கப்பட்ட நபர்கள்‌ ஆகியோரின்‌ எழுத்துருவில்‌ ஆன கோரிக்கை ஒன்றை பெற்ற பிறகு கோருதல்‌ வேண்டும்‌. (2) அத்தகைய கோரிக்கைக்கு இணங்க பொதுக்கூட்டம்‌ எதுவும்‌ கோரப்படாவிடின்‌, இயக்குநர்‌ தாமாகவே ஒரு பொதுக்கூட்டத்தை கோருவதற்கு அதிகாரம்‌ உடையவர்‌ ஆவார்‌. 20. சந்தைக்‌ குழுவின்‌ நடவடிக்கைகள்‌ முறைப்படி அமையாத காரணத்தினால்‌ செல்லாதவையாக ஆக்கப்படுதல்‌ ஆகாது.-- சந்தைக்‌ குழுவானது அதன்‌ உறுப்பினர்களில்‌ காலியிடம்‌ அல்லது அதன்‌ அமைப்பில்‌ குறைபாடு ஏதேனும்‌ இருந்திருந்த போதிலும்‌ செயற்படுவதற்கு அதிகாரம்‌ உடையதாய்‌ இருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ ஒரு சந்தைக்‌ குழுவின்‌ நடவடிக்கைகளானது சில நபர்‌ உறுப்பினராக இருப்பதற்கு தகுதி உடையவராக இல்லாமல்‌ இருந்து அத்தகைய குழு எதனின்‌ நடவடிக்கைகளில்‌ வாக்களித்து விட்டார்‌ அல்லது மற்றபடி பங்கு கொண்டுள்ளார்‌ என்றபோதிலும்‌ செல்லத்தக்கதாக இருத்தல்‌ வேண்டும்‌. 21. பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்பட்ட நபர்‌ ஒரு சில நேர்வுகளில்‌ உறுப்பினராக இருப்பது அற்றுபோதல்‌ வேண்டும்‌.- நபர்‌ எவரும்‌ ஒரு தனிப்பட்ட குழுவின்‌ உறுப்பினராக இருக்கிற முறையில்‌ அல்லது 8 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி ஓர்‌ உரிமத்தை வைத்திருப்பவர்‌ என்ற முறையில்‌ 10 ஆம்‌ பிரிவின்‌. (2) ஆம்‌ உட்பிரிவின்‌ (8), (b) அல்லது (௦) ஆகிய கூறுகளின்படி பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்பட்ட அத்தகைய நபர்‌, அந்தக்‌ குழுவின்‌ உறுப்பினராகவோ அல்லது, நேர்விற்கேற்ப அந்த உரிமத்தை உடையவராகவோ இருப்பது மூன்று மாதங்களுக்கு மேல்‌ உள்ள ஒரு கால அளவிற்கு அற்றுப்‌ போகுமாயின்‌ அவர்‌ அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ உறுப்பினராக இருப்பது அற்றுப்போதல்‌ வேண்டும்‌. 22. சந்தைக்‌ குழுவின்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌.- (1). (2), (3) மற்றும்‌ (4) ஆகிய உட்பிரிவுகளின்‌ வகைமுறைகள்‌ மற்றும்‌ இதன்‌ பொருட்டு செய்யப்பட்ட விதிகள்‌ ஆகியவற்றிற்கு உட்பட்டு சந்தைக்‌ குழுவானது ஒரு செயலாளர்‌ மற்றும்‌ அதன்‌ அலுவல்களை திறம்பட புரிவதற்கு தேவையாக இருக்கின்ற மற்றைய சம்பளம்‌ பெறுகிற அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ ஆகியோரை நியமிக்கலாம்‌. அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ செயலாளர்‌ மற்றும்‌ மற்றைய சம்பளம்‌ பெறுகிற அலவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ ஆகியோர்கள்‌ முழு நேர அரசுப்‌ பணியாளர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. (2) அவ்வப்போது நடைமுறையில்‌ உள்ள சட்டம்‌ எதிலும்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌ 1981 நவம்பர்‌ 17 ஆம்‌ தேதியன்றும்‌ அதுமுதற்கொண்டும்‌, 1959 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள்‌ சந்தைகள்‌ சட்டத்தின்படி, (தமிழ்நாடு சட்டம்‌ 23/1959) அமைக்கப்பட்ட ஒவ்வொரு சந்தைக்‌ குழுவின்‌ செயலாளர்‌ மற்றும்‌ மற்றைய சம்பளம்‌ பெறுகிற அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ ஆகியோர்‌ முழு நேர அரசுப்‌ பணியாளர்களாக ஆகுதல்‌ வேண்டும்‌. (3) அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ செயலாளர்‌ மற்றும்‌ மற்றைய சம்பளம்‌ பெறுகிற அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ ஆகியோர்களின்‌ சம்பளங்கள்‌, படிகள்‌, ஓய்வூதியங்கள்‌, மற்றைய ஊதியங்கள்‌ ஆகியவைகள்‌ முதலில்‌ மாநில திரள்‌ நிதியத்திலிருந்தும்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அந்தச்‌ சந்தைக்‌ குழு, அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ நிதியத்திலிருந்து இந்த உட்பிரிவின்படி அரசினால்‌ செலுத்தப்பட்ட தொகைகளை அரசுக்கு திரும்பிச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌. (4) இச்சட்டத்தில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌ அரசமைப்பின்‌ 311 ஆம்‌ உறுப்பின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டும்‌, அரசு, அந்த சந்தைக்‌ குழுவின்‌ செயலாளர்‌ மற்றைய சம்பளம்‌ பெறுகிற அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ ஆகியோரின்‌ பணி நிபந்தனைகளை முறைப்படுத்துகிற விதிகளைச்‌ செய்யலாம்‌. (5 (4) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ எந்தவொரு விதியும்‌ 1981 நவம்பர்‌ 17 தேதியிலிருந்து முன்மேவுகிற தன்மை கொண்டதாக செய்யப்படலாம்‌. 23. சந்தைக்‌ குழுவினால்‌ ஒப்பந்தங்கள்‌ நிறைவேற்றப்படுதல்‌.- (1) சந்தைக்‌ குழுவினால்‌ செய்யப்படுகிற ஒவ்வோர்‌ ஒப்பந்தமும்‌, எழுத்துருவில்‌ இருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ சார்பாக அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ தலைவரால்‌, செயலாளர்‌ மற்றும்‌ மற்றைய உறுப்பினர்‌ ஒருவரால்‌ அல்லது ஒரு சந்தைக்‌ குழு குழுவைப்‌ பொறுத்து 33 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி ஒரு தனி அலுவலர்‌ நியமிக்கப்பட்டிருக்கிறபோது அத்தகைய தனி அலுவலர்‌ மற்றும்‌ செயலாளரால்‌ கையெழுத்திடப்படுதல்‌ வேண்டும்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ வகைசெய்யப்பட்டவாறு நிறைவேற்றப்பட்ட ஓர்‌ ஒப்பந்தத்தைத்‌ தவிர மற்றைய ஒப்பந்தம்‌ எதுவும்‌ அந்த சந்தைக்‌ குழுவைக்‌ கட்டுப்படுத்துதல்‌ ஆகாது. 24. சந்தைக்குழுவினால்‌ கட்டணம்‌ விதிக்கப்படுதல்‌.-- (1) சந்தைக்‌ குழுவானது அறிக்கை செய்யப்பட்ட சந்தைப்‌ பகுதியில்‌ வாங்கப்படுகிற அல்லது விற்கப்படுகிற அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதன்மீதும்‌ அந்த அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எந்த மொத்தத்‌ தொகைக்காக ரொக்கமாகவோ காலந்தள்ளிக்‌ கொடுக்கப்படுகிற தொகைக்காகவோ மற்றைய மதிப்பு வாய்ந்த மறு பயனுக்காகவோ வாங்கப்பட்டதோ அல்லது விற்கப்பட்டதோ அந்த மொத்தத்‌ தொகையில்‌ ஒவ்வொரு நூறு ரூபாய்களுக்கு ஒரு ரூபாய்க்கு குறைவுபடாத ஆனால்‌ இரண்டு ரூபாய்களுக்கு மேற்படாத விதத்தில்‌ கட்டணம்‌ ஒன்றை விதிக்க வேண்டும்‌; ஆனால்‌, வேளாண்மை விளைபொருள்‌ எதுவும்‌ அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட சந்தைப்பகுதி எதிலும்‌ பக்குவப்படுத்தும்‌ நோக்கத்திற்கு மட்டுமே அல்லது ஏற்றுமதி செய்வதற்கு கொண்டுவரப்படுகிறபோது அதில்‌ அதன்‌ வருகைத்‌ தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்‌ பக்குவப்படுத்தபடவில்லை என்றால்‌ அல்லது அதிலிருந்து ஏற்றுமதி செய்யப்படாவிடின்‌, இதற்கு மாறானது நிரூபிக்கப்படும்‌ வரையிலும்‌ அத்தகைய அறிவிக்கை செய்யப்பட்ட சந்தைப்பகுதியில்‌ வாங்குதல்‌ மற்றும்‌ விற்றல்‌ ஆகியவற்றிற்காக அது கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று அனுமானிக்கப்படுதல்‌ வேண்டும்‌. மற்றும்‌ அது இந்த உட்பிரிவின்படி அந்த வேளாண்மை விளைபொருளின்‌ மதிப்பின்மீது அதில்‌ கொண்டுவரப்பட்டு மற்றும்‌ விற்கப்பட்டது போன்றவாறு கட்டணம்‌ விதிக்கப்படுதலுக்கு உட்பட்டிருத்தல்‌ வேண்டும்‌. விளக்கம்‌ |. இந்த உட்பிரிவின்‌ நோக்கங்களுக்காக, அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட சந்தைப்‌ பகுதியிலிருந்து வெளியே எடுத்துச்‌ செல்லப்பட்ட, அல்லது வெளியே எடுத்துச்செல்லப்படுவதற்கு கருதப்படுகிற அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்கள்‌ எல்லாம்‌ இதற்கு மாறானது நிரூபிக்கப்படும்‌ வரையிலும்‌. அத்தகைய பகுதிக்குள்‌ வாங்கப்பட்டிருக்கிறது அல்லது விற்கப்பட்டிருக்கிறது என்று அனுமானிக்கப்படுதல்‌ வேண்டும்‌. விளக்கம்‌ I இச்சட்டத்தின்படி செலுத்தத்தக்க கட்டணத்தின்‌ தொகையினைக்‌ கணக்கிடும்போது ஐந்து பைசாவுக்கு குறைவாகவுள்ள பத்து பைசாவின்‌ பின்னம்‌ எதுவும்‌ புறக்கணிக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ ஐந்து பைசாவுக்கு சமமாகவுள்ள அல்லது அதற்கு மேற்படுகிற பத்து பைசாவின்‌ பின்னம்‌ எதுவும்‌ பத்து பைசாவாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. (2) ௫ ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள கட்டணமானது சம்பந்தப்பட்ட அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளின்‌ வாங்குபவரால்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. (3) உட்பிரிவு (1) இன்படி கட்டணம்‌ செலுத்துதலுக்கு உள்ளாகிற அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதுவும்‌ அந்த விளைபொருள்‌ பொறுத்து செலுத்தத்தக்க கட்டணம்‌ செலுத்துகையில்லாமல்‌ பக்குவப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று தெரியவருமானால்‌ அந்த அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளின்‌ சம மதிப்புள்ள அளவின்மீது அத்தகைய பக்குவப்படுத்துதல்‌ இருந்தபோதிலும்‌ கட்டணங்கள்‌ விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (4) (ஐ) உட்பிரிவு (1) இன்படி செலுத்தத்தக்க கட்டணம்‌ வகுத்துரைக்கலாகும்‌ முறையில்‌ தீர்மானிக்கப்பட்டு வசூலிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (௦) அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதுவும்‌ கட்டணம்‌ விதிக்கப்படுவதற்கு உள்ளாகவில்லை என்றோ அல்லது செலுத்தத்தக்க கட்டணமானது இப்பிரிவின்படி ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டது என்றோ நிரூபிக்கும்‌ சுமையானது அத்தகைய விதிவிலக்கு அல்லது பொறுப்பில்லாமையைக்‌ கோருகிற நபரின்‌ மீது இருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ கட்டணப்‌ பொறுப்பிற்கு ஏற்கெனவே உள்ளாகிவிட்டது என்பதை போதுமான பதிவுருக்கள்‌ மூலமாக சந்தைக்‌ குழுவிற்கு மனநிறைவு அளிக்கும்‌ முறையில்‌ நிரூபிக்கப்படும்‌ வரையிலும்‌ அத்தகைய விளைபொருளின்‌ மீது கொடுபட வேண்டிய கட்டணமானது செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. (5) வகுந்துரைக்கப்படக்கூடிய அளவுக்கு மேற்பட்டு ஓர்‌ அறிவிக்கை செய்யப்பட்ட சந்தைப்‌ பகுதிக்கு வெளியே எடுத்துச்‌ செல்லப்பட்ட அல்லது எடுத்துச்‌ செல்லப்படுவதற்கு கருதப்படுகிற அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதுவும்‌ சந்தைக்‌ குழுவின்‌ செயலாளரால்‌ அந்த சந்தைக்குழுவினால்‌ இதன்பொருட்டு செய்யப்படுகிற துணை விதிகளுக்கு உட்பட்டு, வழங்கப்பட்ட அனுமதிச்‌ சீட்டோடு எடுத்துச்‌ செல்லப்படுதல்‌ வேண்டும்‌. 25. தணிக்கைச்‌ சாவடி அல்லது எல்லையை அமைத்தல்‌.- (1) இச்சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி சந்தைக்குழுவிற்கு கொடுபட வேண்டிய கட்டணங்கள்‌. செலுத்துதலை அல்லது மற்றைய தொகையினைச்‌ செலுத்துதலை ஏய்ப்பதைத்‌ தடுக்கும்‌ பொருட்டு அல்லது சோதிக்கும்பொருட்டு அவ்வாறு செய்வது தேவையானது என்று அரசு கருதுமாயின்‌, அவ்வறிவிக்கையில்‌ குறித்துரைக்கக்கூடிய இடம்‌ அல்லது இடங்களில்‌ சந்தைக்குழு தணிக்கைச்‌ சாவடியினை அமைப்பதற்கு அல்லது தணிக்கை எல்லையை நிறுவுவதற்கு அல்லது இரண்டையும்‌ செய்வதற்குப்‌ பணிக்கலாம்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள தணிக்கைச்‌ சாவடி அல்லது தணிக்கை எல்லை ஆகியவை ஒவ்வொன்றிலும்‌ அல்லது அரசினால்‌ இதன்‌ பொருட்டு அதிகாரம்‌ அளிக்கப்பட்டுள்ள சந்தைக்‌ குழுவின்‌ அலுவலர்‌ அல்லது பணியாளர்‌ எவராலும்‌ கோரப்படுகிற மற்றைய இடம்‌ எதிலும்‌, விலங்கு, கலம்‌, வண்டி அல்லது நேர்விற்கேற்ப, மற்றைய ஊர்தி ஆகியவை எதனின்‌ பொறுப்பை உடைய ஓட்டுநர்‌ அல்லது மற்றைய நபர்‌ எவரும்‌ அந்த விலங்கு, கலம்‌, வண்டி அல்லது நேர்விற்கேற்ப மற்றைய ஊர்தியினை நியாயமான அவசியமாக இருக்கிற காலத்திற்கு நிறுத்தி அந்த இடத்தில்‌ நிலையாக இருக்குமாறு செய்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ மேற்சொல்லப்பட்ட அதிகாரம்‌ அளிக்கப்பட்ட அலுவலர்‌ அல்லது பணியாளரை அத்தகைய விலங்கு, கலம்‌, வண்டி அல்லது மற்றைய ஊர்தி ஆகியவற்றினால்‌ எடுத்துச்‌ செல்லப்பட்ட சரக்குகளை சோதிப்பதற்கும்‌ அத்தகைய விலங்கு, கலம்‌, வண்டி அல்லது ஊர்தி ஆகியவற்றின்‌ பொறுப்பையுடைய அத்தகைய ஓட்டுநர்‌ அல்லது மற்றைய நபர்‌ அனுமதித்தல்‌ வேண்டும்‌. (3) (2) ஆம்‌ உட்பிரிவின்படியான அத்தகைய சோதனை மற்றும்‌ ஆய்வின்‌ போது- (ஐ) அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளை பொறுத்து செலுத்தத்தக்க கட்டணம்‌ அல்லது மற்றைய தொகை செலுத்தப்பட்டுவிட்டது என்று அல்லது இச்சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ மற்றும்‌ இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌ அல்லது இச்சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை அல்லது உரிமம்‌ அல்லது அதன்படி வழங்கப்பட்ட உரிமம்‌ ஆகியவைகள்‌ நிறைவேற்றப்பட்டன என்று தோன்றினால்‌ சொல்லப்பட்ட அந்த அலுவலர்‌ அல்லது பணியாளர்‌ அந்த அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளோடு அந்த விலங்கு, கலம்‌, வண்டி அல்லது மற்றைய ஊர்தி ஆகியவற்றை விடுவித்தல்‌ வேண்டும்‌; அல்லது (௦) அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ பொறுத்து இச்சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி செலுத்தத்தக்க கட்டணம்‌ அல்லது மற்றைய தொகை செலுத்தப்படவில்லை என்றோ அல்லது இச்சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ ஏதேனும்‌ அல்லது இதன்படி செய்யப்பட்ட விதிகள்‌ ஏதேனும்‌ அல்லது இச்சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது உரிமம்‌ அல்லது அறிவிக்கை எதனின்‌ வரையறைகள்‌ எதுவும்‌ அந்த எடுத்துச்செல்லப்பட்ட அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ பொறுத்து நிறைவேற்றப்படவில்லை என்றோ தோன்றுமாயின்‌, சொல்லப்பட்ட அந்த அலுவலர்‌ அல்லது பணியாளர்‌ தாம்‌, பொருத்தம்‌ என கருதுகிற விசாரணையை செய்த பிறகும்‌, அத்தகைய கட்டணம்‌ செலுத்தாமை அல்லது, நேர்விற்கேற்ப வகைமுறைகள்‌ நிறைவேற்றாமை என்பது குறித்து தாமே திருப்தி கொண்ட பிறகும்‌ அத்தகைய அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளை பறிமுதல்‌ செய்தல்‌ வேண்டும்‌. (4) உட்பிரிவு (3) இன்படி செய்யப்பட்ட பறிமுதல்‌ எதுவும்‌ செல்லப்பட்ட அந்த அலுவலரால்‌ அல்லது பணியாளரால்‌ உடனடியாக இச்சட்டத்தின்படி குற்றம்‌ ஒன்றினை விசாரணை செய்வதற்கு அதிகார வரம்பினை பெற்றிருக்கிற குற்றவியல்‌ நடுவருக்கு அறிக்கை செய்யப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ 1973 ஆம்‌ ஆண்டு குற்ற விசாரணை முறைச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 271974) 457, 458 459 ஆகிய பிரிவுகளின்‌ வகைமுறைகளானது கூடுமான அளவிற்கு அவை ஒரு காவல்துறை அலுவலரால்‌ பறிமுதல்‌ செய்யப்படுகிற சொத்து பொறுத்து பொருந்துகிறவாறு மூன்றாம்‌ உட்பிரிவின்படி பறிமுதல்‌ செய்யப்படுகிற அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ பொறுத்து பொருந்துதல்‌ வேண்டும்‌. 26. சந்தைக்‌ குழுக்களினால்‌ இரசீதுகள்‌ வழங்கப்படுதல்‌.- (1) ஒவ்வொரு சந்தைக்குழுவும்‌ அதனிடம்‌ கொடுக்கப்பட்டுள்ள அறிவிக்கை செய்யப்பட்டுள்ள வேளாண்மை விளைபொருள்‌ பொறுத்து ஒரு இரசீதினை வழங்குதல்‌ வேண்டும்‌. அது அவ்வாறு கொடுக்கப்பட்டுள்ள அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளின்‌ முழு விவரங்களை கொண்டிருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அது வகுத்துரைக்கப்படக்கூடிய படிவத்தில்‌ இருத்தல்‌ வேண்டும்‌. (2) சந்தைக்குழுவினால்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி வழங்கப்பட்ட இரசீதானது அதில்‌ வேறுவிதமாக குறிப்பிடப்பட்டாலன்றி, மேற்குறிப்பு மூலமாக மாற்றப்படத்தக்கதாகும்‌ மற்றும்‌ அது அதன்‌ சட்டப்படியாக வைத்திருப்பவரை அதில்‌ குறித்துரைக்கப்பட்ட அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளினை அதன்‌ தோற்றுவாய்‌ வைப்பாளருக்குரிய அதே வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளின்‌ பேரில்‌ பெறுவதற்கு உரிமை உடையவராக ஆக்கும்‌. 27. குற்ற வழக்கில்‌ கட்டணம்‌ முதலியன தீர்மானித்தலை ஆட்சேபணை செய்தல்‌ ஆகாது. (1) இச்சட்டத்தின்படி செலுத்தத்தக்க கட்டணம்‌ அல்லது மற்றைய தொகையை தீர்மானிக்கிற ஆணையானது குற்ற வழக்கு அல்லது மற்றைய நடவடிக்கை எதிலும்‌ அறுதியான சாட்சியமாக இருத்தல்‌ வேண்டும்‌. (2) இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட கட்டணம்‌ எதனின்‌ விதிப்பு அல்லது வசூலிப்பின்‌ செல்லும்‌ தன்மையானது அல்லது அவ்வாறு கணிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட கட்டணம்‌ அல்லது தொகை எதற்குமான நபர்‌ எவரின்‌ பொறுப்பானது இச்சட்டத்தின்படியோ மற்றபடியோ உள்ள குற்றவியல்‌ நீதிமன்றத்தில்‌ உள்ள குற்ற வழக்கிலோ மற்றைய நடவடிக்கையிலோ ஆட்‌ சேபிக்கப்படுதலாகாது. 28. சந்தை அறிக்கைகள்‌ முதலியவற்றிற்கு சந்தா விதிப்பு-- சந்தைக்‌ குழுவானது இச்சட்டத்தின்படி செய்யப்படக்கூடிய விதிகளுக்குட்பட்டு சந்தாதாரர்களிடமிருந்து அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ குறித்து புள்ளி விவரம்‌ அல்லது விற்பனை தொடர்பான பொருட்பாடு எதனையும்‌ குறித்து தகவலை சேகரித்து பரப்புவதற்கு ஒரு சந்தா தொகையினை விதிக்கலாம்‌. 29. சந்தைக்‌ குழு நிதியம்‌.- (1) சந்தைக்‌ குழுவினால்‌ பெறப்படுகிற எல்லா பணங்களையும்‌ "சந்தைக்‌ குழு நிதியம்‌" என அழைக்கப்படவேண்டிய ஒரு நிதியத்தில்‌ செலுத்தப்பட வேண்டும்‌. சந்தைக்‌ குழுவினால்‌ இச்சட்டத்தின்படி அல்லது அதன்‌ நோக்கங்களுக்காக செலவழிக்கப்படுகிற எல்லா செலவினமும்‌ சொல்லப்பட்ட அந்த நிதியத்திலிருந்து கொடுத்துத்‌ தீர்க்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய செலவினத்தை தீர்த்தப்‌ பிறகு எஞ்சியுள்ள மிகை நிதியினை வகுத்துரைக்கக்கூடிய முறையில்‌ முதலீடு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (2) () ஒவ்வொரு சந்தைக்‌ குழுவும்‌ 32 ஆம்‌ பிரிவின்‌ (3) ஆம்‌ உட்பிரிவின்படி செலுத்தத்தக்க தொகைகளோடுகூட அறிவிக்கை செய்யப்பட்ட பகுதியில்‌ இச்சட்டத்தின்‌ வகைமுறைகளை செயற்படுத்துவதற்கு அந்தச்‌ சந்தைக்‌ குழுவோடு கலந்தாலோசித்தபின்‌ அரசினால்‌ வேலைக்கு அமர்த்தப்படுகிற சிறப்பு அல்லது கூடுதல்‌ பணியாளர்களின்‌ செலவினை அரசுக்கு அந்தச்‌ சந்தைக்‌ குழு நிதியத்திலிருந்து கொடுக்க வேண்டும்‌. (௦) சிறப்பு அல்லது கூடுதல்‌ பணியாளர்களின்‌ செலவினை அரசு தீர்மானிக்க வேண்டும்‌ மற்றும்‌ ஒன்றுக்கு மேற்பட்ட சந்தைக்‌ குழுவின்‌ நோக்கங்களுக்காக அந்தப்‌ பணியாளர்கள்‌ வேலைக்கு அமர்த்தப்படுகிறபோது அத்தகைய செலவை தாம்‌ பொருத்தமெனக்‌ கருதக்கூடிய முறையில்‌ பங்கீடு செய்தல்‌ வேண்டும்‌. சந்தைக்‌ குழு எதனால்‌ செலுத்தத்தக்க தொகையினை தீர்மானிக்கிற அரசின்‌ முடிவானது இறுதியானதாகும்‌. 30. சந்தைக்‌ குழுவின்‌ நிதியத்திலிருந்து செலவழிக்கத்‌ தகுந்த நோக்கங்கள்‌.- 29 ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு சந்தைக்‌ குழு நிதியத்தின்‌ கணக்கில்‌ இருக்கும்‌ தொகையினை கீழ்க்கண்ட நோக்கங்கள்‌ எல்லாவற்றிற்கும்‌ அல்லது அவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்றுக்காக செலவழிக்கலாம்‌; அதாவது- (ஐ சந்தைக்‌ குழு எந்த நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கங்களை செயற்படுத்துவதற்கு சந்தைக்குழுவிற்காக மனை அல்லது கட்டிடம்‌ அல்லது மற்றைய சொத்துக்கள்‌ ஆகியவை எதனையும்‌ கையகப்படுத்துதல்‌ அல்லது கோருதல்‌; (b) சந்தைகளை அமைத்தல்‌, பேணுதல்‌ மற்றும்‌ மேம்பாடு செய்தல்‌ மற்றும்‌ சந்தையில்‌ அரசு 6 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி பணிக்கக்கூடிய வசதிகளை அளித்தல்‌; (9) அத்தகைய சந்தைகளில்‌ நோக்கங்களுக்காகவும்‌ அவற்றை பயன்படுத்துகிற நபர்களின்‌ ஆரோக்கியம்‌ வசதி மற்றும்‌ பாதுகாப்பு ஆகியவற்றிற்குத்‌ தேவையாக இருக்கின்ற கட்டிடங்களை கட்டுதல்‌ மற்றும்‌ பழுதுபார்த்தல்‌; (0) தரப்படுத்தப்பட்ட எடைகள்‌ மற்றும்‌ அளவைகளுக்கு வகை செய்தல்‌ மற்றும்‌ பேணுதல்‌; (6) 22 ஆம்‌ பிரிவின்‌ (3) ஆம்‌ உட்பிரிவின்படி அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய தொகைகள்‌; (f) 33 ஆம்‌ பிரிவின்‌ (6) ஆம்‌ உட்பிரிவின்படி செலுத்தப்பட வேண்டிய தொகை; (9) சந்தைக்குழுவானது எந்த நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக சந்தைக்குழுவினால்‌ எழுப்பபபடுகிற கடன்களின்‌ மீதான வட்டியினை செலுத்துதல்‌ மற்றும்‌ அத்தகைய கடன்களைப்‌ பொறுத்து ஒரு கடன்‌ அடைப்பு நிதியத்தை ஏற்படுத்துதல்‌; (h) அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ பொறுத்து புள்ளியியல்‌ மற்றும்‌ விற்பனை ஆகியவை சம்பந்தப்பட்ட எல்லா பொருட்பாடுகளைப்‌ பற்றி தகவலை சேகரித்தல்‌ மற்றும்‌ பரப்புதல்‌; () அரசின்‌ ஒப்புதலுக்கு உட்பட்டு அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிக்குள்‌: அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளின்‌ விரிவாக்கம்‌ அல்லது பயிர்‌ முன்னேற்றம்‌ ஆகியவைக்கான திட்டங்கள்‌, மற்றைய குழுக்கள்‌ அல்லது தனிப்பட்ட நபர்களால்‌ மேற்கொள்ளப்படுகிற அத்தகைய பகுதிக்குள்‌ உள்ள அத்தகைய விரிவாக்கம்‌ அல்லது முன்னேற்றத்‌ திட்டங்களுக்கு நிதி உதவி; 0) அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளை அதன்‌ விற்பனைக்காக பொருத்தம்‌ ஆக்கும்‌ பொருட்டு அதனை உலர்த்துதல்‌, சுத்தப்படுத்துதல்‌, தரப்படுத்துதல்‌, மாதிரி தயாரித்தல்‌ மற்றும்‌ வகைப்படுத்துதல்‌; (k) சந்தைக்‌ குழுவின்‌ நடவடிக்கைகளின்‌ விளம்பரம்‌, பிரச்சாரம்‌ ஆகியவற்றிற்காக பணம்‌ செலுத்துகை; () சந்தை வாரிய நிதியத்திற்கு பங்களிப்புகள்‌; (m) கிடங்குகளில்‌ வைக்கப்பட்டுள்ள அல்லது கையாளப்பட்டுள்ள சரக்கு இருப்புகளின்‌ ஈட்டுறுதி ஆவணத்தின்‌ மீதான ஈட்டுறுதி தவணைக்‌ கட்டணத்தை செலுத்துதல்‌ மற்றும்‌ சந்தைகளில்‌ செய்யப்படுகிற நடவடிக்கைகளுக்கு நெருப்பு, களவு, வெள்ளம்‌ அது போன்றவைகளுக்கும்‌ மற்றும்‌ சந்தைக்‌ குழுவினால்‌ பயன்படுத்தப்படுகிற ஊர்திகள்‌ ஆகியவற்றின்‌ ஈட்டூறுதி ஆவணத்தின்‌ மீதான ஈட்டுறுதி ததணைத்‌ தொகையை செலுத்துதல்‌; அல்லது (1) இதன்‌ பொருட்டு பொதுவான அல்லது தனிப்பட்ட ஆணையின்‌ மூலமாக அரசினால்‌ அதிகாரம்‌ அளிக்கப்படுகிற மற்றைய நோக்கங்கள்‌. 31. கடன்‌ வாங்க அதிகாரம்‌.- (1) ஒவ்வொரு சந்தைக்‌ குழுவும்‌ அது எந்த நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கங்களை செயல்படுத்துவதற்கு தேவையாக உள்ள பணங்களை அரசின்‌ முன்‌ ஒப்பளிப்புடன்‌ அந்தச்‌ சந்தைக்‌ குழுவிடம்‌ மேவியுள்ள அல்லது அதற்குரிய சொத்து எதனின்‌ பிணையத்தின்‌ பேரில்‌ மற்றும்‌ இச்சட்டத்தின்படியாகவோ அல்லது அடியாகவோ சந்தைக்‌ குழுவினால்‌ விதிக்கப்படத்தக்க கட்டணம்‌ அல்லது மற்றைய தொகை எதனின்‌ பிணையத்தின்‌ பேரில்‌ பணத்தை கடனாக எடுக்கலாம்‌. (2) சந்தைக்‌ குழுவானது சந்தையை அமைப்பதற்குத்‌ தேவைப்படுகிற நிலங்கள்‌, கட்டிடங்கள்‌ மற்றும்‌ தளவாடங்கள்‌ ஆகியவற்றின்‌ மீதான செலவினத்தை தீர்த்துக்‌ கட்டும்‌ நோக்கத்திற்காக அரசிடமிருந்தோ, வாரியத்திடமிருந்தோ கடன்‌ பெறலாம்‌. 32. ஒரு சில நேர்வுகளில்‌ வணிகப்படி அனுமதிக்கத்தக்கது அன்று.- வணிக கழிவுரிமை எதுவும்‌ (பொருள்‌) வாங்குதல்‌ ஆனது மாதிரி பார்த்து அதன்‌ மூலமாக வாங்குவதாக இருக்கிறபோது அந்த மாதிரியிலிருந்து மாறுபடுகிற காரணத்தால்‌ கழிவு மூலமாக கொடுக்கப்படுகிற கழிவுரிமை, அல்லது (பொருள்‌) வாங்குதலானது தெரியப்பட்ட ஒரு தரத்தினை காட்டி அதன்‌ மூலமாக செய்யப்படுகிறபோது அந்தத்‌ தரத்திலிருந்தும்‌ மாறுபடுகிற காரணத்தால்‌ அல்லது (பொருளினை) சிப்பம்‌ கட்டுதலிலுள்ள உள்ளபடியான எடைக்கும்‌ தரமான எடைக்கும்‌ வேறுபாடு இருக்கிற காரணத்தால்‌ அல்லது தொடர்பற்ற பொருளானது கலக்கப்பட்ட காரணத்தினால்‌ கொடுக்கப்படுகிற கழிவுரிமைகள்‌ அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய மற்றைய கழிவுரிமை ஆகியவற்றைத்‌ தவிர அறிவிக்கை செய்யப்பட்ட பகுதியின்‌ அறிவிக்கை பொறுத்து நபர்‌ எவராலும்‌ செய்யப்படுகிற நடவடிக்கை எதிலும்‌ கொடுக்கப்படுதலோ அல்லது பெறப்படுதலோ கூடாது, மற்றும்‌ அத்தகைய நடவடிக்கை எதிலுருந்தும்‌ எழுகிற உரிமை வழக்கு அல்லது நடவடிக்கையில்‌ உரிமையியல்‌ நீதிமன்றம்‌ எதுவும்‌ மற்றைய கழிவுரிமை எதனையும்‌ கணக்கில்‌ எடுத்துக்கொள்ளக்கூடாது. 33. புதிய சந்தைக்‌ குழு முதலியன மறு அமைப்பில்‌ தாமதம்‌ இருக்கிற போது சிறப்பு வகைமுறை.- (1) (8) சந்தைக்‌ குழு எதனின்‌ உறுப்பினர்களின்‌ பதவிக்‌ காலம்‌ முடிவுற்று இச்சட்டத்தின்‌ வகைமுறைகள்‌, விதிகள்‌ மற்றும்‌ துணை விதிகள்‌. ஆகியவற்றிற்கு இணங்க ஒரு புதிய சந்தைக்‌ குழு அமைக்கப்பட முடியாதவிடத்து, அல்லது (1-8). இந்தச்‌ சட்டத்தில்‌ அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம்‌ எதிலும்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌ 1959 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள்‌ சந்தைகள்‌ சட்டத்தின்‌ 24 ஆம்‌ பிரிவின்‌ (3) ஆம்‌ உட்பிரிவின்படி நியமிக்கப்பட்ட நபர்‌ மற்றும்‌ 1978 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள்‌ சந்தைகள்‌ (திருத்தம்‌ மற்றும்‌ சிறப்பு வகைமுறைகள்‌) சட்டத்தின்‌ 5 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி, அதனுடன்‌ இணைந்த 1989 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள்‌ சந்தைகள்‌ (திருத்தம்‌) மற்றும்‌ தணி அலுவலர்கள்‌ நியமன செல்லுந்தன்மை சட்டத்தின்‌ 3 ஆம்‌ பிரிவின்படி நியமிக்கப்பட்ட மற்றும்‌ 1991 ஆம்‌ ஆண்டு பிப்ரவரி திங்கள்‌ 1 ஆம்‌ நாளினை ஒட்டி முன்பு அத்தகைய பதவியை வகித்து வரும்‌ தணி அலுவலர்கள்‌. 1991 ஆம்‌ ஆண்டு பிப்ரவரி திங்கள்‌ 1 ஆம்‌ நாளன்றும்‌ அது முதற்கொண்டும்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி தனி அலுவலர்களாக நியமிக்கப்பட்டதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய தனி அலுவலர்கள்‌, அரசால்‌ இதன்‌ பொருட்டு அறிவிக்கை மூலம்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய ஓராண்டுக்‌ காலத்திற்கு மிகாத அத்தகைய கால அளவிற்கு தொடர்ந்து பதவி வகித்து வருதல்‌ வேண்டும்‌. (b) அமைக்கப்பட்ட புதிய சந்தைக்‌ குழுவின்‌ உறுப்பினர்கள்‌, ஒட்டு மொத்தமாக பதவி விலக்கப்படுகிறவிடத்து, அல்லது (6) தற்போதுள்ள சந்தைக்‌ குழுவின்‌ உறுப்பினர்கள்‌, ஒட்டு மொத்தமாசு பதவி விலக்கப்படுகிறவிடத்து, அல்லது (0) வேறெந்த காரணங்கொண்டு காலியிடங்கள்‌ ஏற்படுகிறவிடத்து அல்லது சந்தைக்‌ குழுவின்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள்‌ பதவி விலகலைக்‌ கொடுத்திருந்து மற்றும்‌ எஞ்சிய உறுப்பினர்களால்‌ அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ கூட்டத்திற்கு வேண்டிய குறைவெண்ணை அடைய முடியாது போகிறவிடத்து, அரசு, தாமாகவே முற்பட்டு அல்லது அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதியிலுள்ள அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனின்‌ உற்பத்தியாளர்‌ எவரின்‌ அல்லது 8 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி உரிமம்‌ அளிக்கப்பட்ட நபர்‌ எவரின்‌, விண்ணப்பத்தின்‌ பேரில்‌ மற்றும்‌ புதிய சந்தைக்‌ குழுவானது பதவி ஏற்கிற, தவறுகிற அல்லது தடுக்கப்படுகிற நேர்வில்‌ சொல்லப்பட்ட அந்தப்‌ புதிய சந்தைக்‌ குழுவின்‌ உறுப்பினர்களுக்கு தங்கள்‌ முறையீடுகளைச்‌ செய்வதற்கான வாய்ப்பினைக்‌ கொடுத்தபிறகு, ஆணை மூலமாக ஓராண்டுக்கு மேற்படாத ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ விவகாரங்களை ஒரு புதிய சந்தைக்‌ குழு அமைக்கப்படுகிற வரையில்‌, சந்தைக்‌ குழு பதவி ஏற்கிற வரையில்‌, ஒரு தனி அலுவலரை நியமிக்கலாம்‌: வரம்புரை: ஆனால்‌, அத்தகைய ஆணையில்‌ குறிப்பிடப்பட்ட கால அளவானது அரசினால்‌ பதிவு செய்யப்பட வேண்டிய சிறப்புக்‌ காரணங்களுக்காக அவ்வப்போது நீட்டிக்கப்படலாம்‌; ஆனால்‌ அத்தகைய ஆணையானது மொத்தத்தில்‌ மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்டு நடைமுறையில்‌ இருத்தல்‌ ஆகாது. (2) உட்பிரிவு (1) இன்படி ஒரு தணி அலுவலர்‌, அரசு, ஆணை மூலமாக, குறித்துரைக்கக்கூடிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்தைக்‌ குழுக்களுக்காக நியமிக்கப்படலாம்‌. (3) (1) ஆம்‌ உட்பிரிவின்படி ஒரு தனி அலுவலரை நியமிக்கிற ஆணை பிறப்பிக்கப்பட்டதன்‌ பேரில்‌, பின்வரும்‌ விளைவுகள்‌ நிகழ்தல்‌ வேண்டும்‌:- (ஐ இச்சட்டத்தின்படி அமைக்கப்பட்ட சந்தைக்‌ குழுவின்‌ தலைவர்‌, துணைத்‌ தலைவர்‌ ஆகியோர்‌ உள்ளடங்கலாக, அனைத்து உறுப்பினர்களும்‌ அத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து தங்கள்‌ பதவியினை காலி செய்துவிட்டதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (௦) அந்தச்‌ சந்தைக்‌ குழுவில்‌ மேவி நிற்கிற எல்லா சொத்துக்களும்‌, எல்லா கடப்பாடுகளுக்கும்‌ உட்பட்டு, அரசிடம்‌ மேவி நிற்க வேண்டும்‌. (4) அரசு, ஆணை மூலமாக, (1) ஆம்‌ உட்பிரிவின்படி நியமிக்கப்பட்ட தனி அலுவலருக்கு அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ சொத்துக்கள்‌ மற்றும்‌ கடப்பாடுகளை அத்தகைய உரிமை மாற்ற தேதியிலிருந்து, உரிமை மாற்றம்‌ செய்யலாம்‌. (5) உட்பிரிவு (1) இன்படி ஒரு தனி அலுவலர்‌ நியமிக்கப்படு கிறவிடத்து, அரசு, அந்தத்‌ தனி அலுவலருக்கு அரசினால்‌ குறிப்பிடப்படலாகும்‌ பொருட்பாடுகளில்‌ ஆலோசனை கூறுவதற்காக ஓர்‌ ஆலோசனைக்‌ குழுவை நியமிக்கலாம்‌. மற்றும்‌ அந்த ஆலோசனைக்‌ குழுவானது பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்டிருக்க வேண்டும்‌, அதாவது:- (@) அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதியிலுள்ள அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளின்‌ உற்பத்தியாளர்களுக்கிடையேயிருந்து மூன்று நபர்கள்‌; (௦) அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனையும்‌ பொறுத்து அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதியிலுள்ள 8 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படியான உரிமம்‌ அளிக்கப்பட்ட மூன்று நபர்கள்‌; (6) அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதியின்‌ மீது அதிகார வரம்பினைக்‌ கொண்டிருக்கிற விற்பனை பொறுப்புடைய வேளாண்மை சார்பு இயக்குநர்‌; (0) அரசினால்‌ பெயர்‌ குறித்து நியமனம்‌ செய்யப்படலாகும்‌ அரசின்‌: மற்றைய அலுவலர்கள்‌. (6) 1) ஆம்‌ உட்பிரிவின்படி நியமிக்கப்பட்ட தனி அலுவலருக்கு செலுத்தத்தக்க ஊதியத்தை அரசு நிர்ணயிக்கலாம்‌, மற்றும்‌ அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்‌ தொகை மற்றும்‌ அரசால்‌ ஒப்புதல்‌ அளிக்கலாகும்‌ அந்தத்‌ தனி அலுவலர்‌ நியமன கால அளவின்போது, அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ மேலாண்மைக்கு இடைவிளைவாக உள்ள மற்றைய செலவினம்‌ ஆகியவற்றை சந்தைக்‌ குழு நிதியத்திலிருந்து செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. (7) உட்பிரிவு (1) இல்‌ குறிப்பிடப்பட்ட கால அளவு முடிவடைகிறதற்கு முன்பு எந்த நேரத்திலும்‌, அரசு,- () புதிய சந்தைக்‌ குழு பதவி ஏற்கத்‌ தவறிவிட்ட அல்லது பதவியேற்பதில்‌ தடுக்கப்பட்டுவிட்ட காரணங்கொண்டு அந்தத்‌ தனி அலவலர்‌ நியமனஞ்‌ செய்யப்பட்ட நேர்வில்‌, அத்தகைய புதிய சந்தைக்‌ குழுவை பதவி ஏற்பதற்கு இயல்விக்கலாம்‌, மற்றும்‌ (௦) மற்றைய நேர்வுகளில்‌, 10 ஆம்‌ பிரிவுக்கு இணங்கி ஒரு புதிய சந்தைக்‌ குழுவை அமைத்து அதற்கு உரிமை மாற்றத்‌ தேதியிலிருந்து அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ எல்லா சொத்துக்களையும்‌, கடப்பாடுகளையும்‌ உரிமை மாற்றம்‌ செய்யலாம்‌. 34. சந்தைக்‌ குழுவின்‌ பதிவுருக்கள்‌ மற்றும்‌ சொத்துக்கள்‌ ஆகியவற்றின்‌ ஒப்படைப்பு.- (1) 33 ஆம்‌ பிரிவின்படி ஒரு தணி அலுவலர்‌ நியமிக்கப்பட்டு அத்தகைய தனி அலுவலர்‌, அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ புத்தகங்கள்‌, கணக்குகள்‌, ஆவணங்கள்‌, பிணையங்கள்‌, ரொக்கம்‌ மற்றும்‌ மற்றைய சொத்துக்கள்‌, அசையும்‌ அல்லது அசையா சொத்தாயினு (இப்பிரிவில்‌ இதற்குப்‌ பிறகு சந்தைக்‌ குழுவின்‌ பதிவுருக்கள்‌ மற்றும்‌ சொத்துக்கள்‌ எனக்‌ குறிப்பிடப்படுவது) அவற்றின்‌ அனுபோகத்தினைப்‌ பெறுவதிலிருந்து, அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ பதிவுருக்கள்‌ மற்றும்‌ சொத்துக்கள்‌ ஆகியவற்றின்‌ அனுபோகத்திற்கு உரிமையுடையவராக இல்லாத நபர்‌ எவராலும்‌ எதிர்க்கப்படுகிற அல்லது தடுக்கப்படுகிறவிடத்து, அந்த சந்தைக்‌ குழுவின்‌ அலுவலகமானது புறநகர்‌ குற்றவியல்‌ நடுவர்‌ எவருடைய அமைப்பில்‌ முதல்‌ வகுப்பு நீதித்துறை நடுவர்‌ எவருடைய அதிகார வரம்பினில்‌ அமைகிறதோ அல்லது அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ பதிவுருக்கள்‌ மற்றும்‌ சொத்துக்கள்‌ வைக்கப்பட்டிருக்கின்றனவோ அந்தப்‌ புறநகர்‌ குற்றவியல்‌ நடுவர்‌ அல்லது முதல்‌ வகுப்பு நீதித்துறை நடுவர்‌, அந்தத்‌ தனி அலுவலரால்‌ செய்யப்படுகிற விண்ணப்பத்தின்‌ பேரிலும்‌, நியமன ஆணையைத்‌ தாக்கல்‌ செய்ததின்‌ பேரிலும்‌, அந்தச்‌ சந்தைக்‌ குழுவுக்கு அந்தப்‌ பதிவுருக்கள்‌ மற்றும்‌ சொத்துக்கள்‌ அனுபோகத்தினை அந்தத்‌ தனி அலுவலருக்கு ஒப்படைப்புச்‌ செய்யுமாறு பணிக்கலாம்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவின்படியான ஒவ்வொரு விண்ணப்பமும்‌ 33 ஆம்‌ பிரிவின்படி செய்யப்பட்ட ஆணையின்படியோடு உடன்‌ அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. (3) ௫ ஆம்‌ உட்பிரிவின்படி விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டதன்‌ பேரில்‌, அந்தப்‌ புறநகர்‌ குற்றவியல்‌ நடுவர்‌ அல்லது, நேர்விற்கேற்ப, முதல்‌ வகுப்பு நீதித்துறை நடுவர்‌ ஒரு கட்டளை மூலமாக காவல்‌ துறை உதவி ஆய்வாளரின்‌ பதவி நிலைக்குக்‌ குறையாத காவல்‌ துறை அலுவலர்‌ எவரையும்‌ எந்த இடத்தில்‌ அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ பதிவுருக்கள்‌, சொத்துக்கள்‌ ஆகியவை வைக்கப்பட்டிருக்கின்றனவோ அல்லது வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறதோ அந்த இடம்‌ எதிலும்‌ நுழைந்து சோதனையிடுவதற்கும்‌ அத்தகைய பதிவுருக்கள்‌ சொத்துக்களைக்‌ கைப்பற்றுவதற்கும்‌ அதிகாரம்‌ அளிக்க வேண்டும்‌; மற்றும்‌ அவ்வாறு கைப்பற்றப்பட்ட பதிவுருக்கள்‌ மற்றும்‌ சொத்துக்கள்‌ ஆகியவை அந்தத்‌ தனி அலுவலருக்கு கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌. (4) இப்பிரிவின்படிச்‌ செய்யப்படு கிற எல்லாச்‌ சோதனைகள்‌ கைப்பற்றுகைகள்‌ ஆகியவைகள்‌ ஒரு குற்றவியல்‌ நடுவரால்‌ பிறப்பிக்கப்பட்ட ஒரு கட்டளையின்‌ அதிகாரத்தின்படிச்‌ செய்யப்படுகிற சோதனை அல்லது கைப்பற்றுகை சம்பந்தப்பட்ட 1973 ஆம்‌ ஆண்டு குற்ற விசாரணை முறைச்சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 2/1974) வகைமுறைகளுக்கு இணங்கியவாறு நிறைவேற்றப்படுதல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌-॥ சந்தை வாரியம்‌ 35. தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின்‌ அமைப்பு.- (1) இச்சட்டத்தின்படி தனக்கு வழங்கப்பட்ட அதிகாங்களைச்‌ செலுத்துவதற்கும்‌ அளிக்கப்பட்ட அலுவல்களை ஆற்றுவதற்கும்‌ சுமத்தப்பட்ட கடமைகளைச்‌ செய்வதற்கும்‌ தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதின்‌ மீதும்‌ அதிகார வரம்பினைக்‌ கொண்டுள்ள தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம்‌ என அழைக்கப்பட வேண்‌ டிய ஒரு வாரியத்தை அரசு அமைத்தல்‌ வேண்டும்‌. (2) (@) அந்த வாரியமானது மேற்சொன்ன பெயரால்‌ ஒரு கூட்டமைப்பாக இருத்தல்‌ வேண்டும்‌. அது நிலையான கதொடர்பாட்டினையும்‌ ஒரு பொது இலச்சினையும்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அது அதன்‌ கூட்டமைப்பின்‌. பெயரிலே வழக்காடுதலும்‌ வழக்கிடப்படுதலும்‌ வேண்டும்‌ மற்றும்‌ இச்சட்டத்தின்படியாகவோ அதன்படியாகவோ விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு சொத்தினை அசையும்‌ சொத்து, அசையாச்‌ சொத்து ஆகிய இரண்டையும்‌ கையகப்படுத்துவதற்கு மற்றும்‌ வைத்திருப்பதற்கு அதனிடம்‌ மேனிநிற்கக்கூடிய அல்லது அதனால்‌ கையகப்படுத்தப்படக்கூடிய அசையும்‌ சொத்து அல்லது அசையாச்‌ சொத்து எதனையும்‌ விற்பனை செய்யவோ குத்தகைக்கு விடவோ அல்லது மற்றப்படி உரிமை மாற்றம்‌ செய்யவோ மற்றும்‌ ஒப்பந்தம்‌ செய்யவோ மற்றும்‌ அது எந்த நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளதோ அந்த நோக்கங்களுக்காக தேவையாக இருக்கிற மற்ற காரியங்கள்‌ எல்லாவற்றையும்‌ செய்யவோ தகுதியுடையதாக இருத்தல்‌ வேண்டும்‌. ஆனால்‌, அசையாச்‌ சொத்து எதுவும்‌ அரசின்‌ முன்‌ அனுமதி இல்லாமல்‌ விற்பனை, குத்தகை அல்லது மற்றைய வழி மூலமாக உரிமைமாற்றம்‌ செய்பப்படுதல்‌ ஆகாது. (௦) அந்த வாரியமானது, 1894 ஆம்‌ ஆண்டு நில கையகப்படுத்துதல்‌ சட்டம்‌ (மையச்‌ சட்டம்‌ 1/1894) மற்றும்‌ தல நிர்வாக அமைப்புகள்‌ கடன்கள்‌ சட்டம்‌ 1914 (மையச்‌ சட்டம்‌ 11914) ஆகியவற்றின்‌ நோக்கங்களுக்காக ஒரு தல நிர்வாக அமைப்பாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 36. வாரியத்தின்‌ அமைப்பு-- (1) (ஐ அந்த வாரியமானது அரசினால்‌ நியமிக்கப்பட்டுள்ள ஒரு தலைவரையும்‌ மற்றும்‌ கீழ்கண்ட உறுப்பினர்களையும்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. அதாவது- (i) ஒவ்வொரு சந்தைக்‌ குழுவின்‌ தலைவர்‌; (i) இயக்குநர்‌: 00 பதிவாளர்‌; 0) இயக்குநர்‌, மாநில பண்டகசாலை இணையம்‌, சென்னை; (V) இந்திய அரசு, வேளாண்மை விற்பனை அறிவுரையாளர்‌; (vi) தலைவர்‌, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம்‌; ரி) வேளாண்மை விற்பனை பொருளினை கையாண்டு வருகிற அரசு துணைச்‌ செயலாளர்‌ பதவி நிலைக்கு குறையாத செயலகத்திலுள்ள வேளாண்மை துறை அலுவலர்‌ ஒருவர்‌, (௦) வாரியமானது வகுத்துரைக்கக்கூடிய முறையிலும்‌ நிபந்தனைகள்‌ மற்றும்‌ நோக்கங்கள்‌ ஆகியவைகளுக்கு உட்பட்டும்‌ அதனோடு இணைந்து செயற்படுவதற்காக இந்திய பருத்தி இணையத்தின்‌ நியமனமதாரர்‌ மற்றும்‌ இச்சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ எதனையும்‌ நிறைவேற்றுவதில்‌ அது மற்றைய நபர்‌ எவரின்‌ உதவி அல்லது ஆலோசனை விரும்பலாகிறதோ அந்த நபர்‌ ஆகியோரைக்‌ கலந்து செயற்படலாம்‌ மற்றும்‌ அவ்வாறு இணைந்து செயற்படுகிற நபர்‌ ஒவ்வொருவரும்‌ அரசினால்‌ நிர்ணயிக்கப்படக்கூடிய படிகளை அல்லது கட்டணங்களைப்‌ பெறுவதற்கு உரிமையுடையவராவார்‌ மற்றும்‌ அவர்‌ எந்த நோக்கத்திற்காக வாரியத்துடன்‌ இணைந்து செயற்படுகிறாரோ அந்த நோக்கத்திற்கு தொடர்புடைய வாரியத்தின்‌ நடவடிக்கைகளில்‌ கலந்து பங்கு கொள்வதற்கு உரிமையுண்டு, ஆனால்‌ வாக்களிப்பதற்கு உரிமை கிடையாது. (6) வகுத்துரைக்கக்கூடிய நடைமுறைக்கு இணங்க உறுப்பினர்களால்‌ அவர்களுக்கிடையே தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒரு துணைத்‌ தலைவர்‌ இருத்தல்‌ வேண்டும்‌. (0) வாரியத்தின்‌ கூட்டம்‌ எதற்கும்‌ கூறு (ஐ) இன்‌ இடம்‌ (i), (i), (i), (iv), (v) அல்லது (Vi) இல்‌ குறிப்பிடப்பட்ட அலுவலர்‌ எக்காரணங்கொண்டும்‌ வர இயலாதிருக்குமாயின்‌ அவர்‌ தமக்கு கீழமைந்துள்ள அலுவலர்‌ எவரையும்‌ அவர்‌ சார்பாக அத்தகைய கூட்டத்திற்கு வருவதற்கு அனுப்பலாம்‌. அவ்வாறு அனுப்பப்பட்ட அலுவலர்‌ வாரியத்தின்‌ நடவடிக்கைகளில்‌ கலந்து பங்கு கொள்வதற்கு உரிமையுண்‌ ஆனால்‌ வாக்களிப்பதற்கு உரிமை கிடையாது. வரம்புரை: ஆனால்‌ சந்தைக்‌ குழுவின்‌ தலைவராக இருப்பதற்கு இல்லாதுபோகிற நபர்‌ ஒருவர்‌ எந்தத்‌ தேதியில்‌ அவர்‌ அத்தகைய தலைவராக இருப்பதற்கு அற்றுப்போகிறாரோ அந்தத்‌ தேதியிலிருந்து அந்த வாரியத்தின்‌ உறுப்பினராக இருப்பதற்கு அற்றுப்போதல்‌ வேண்டும்‌. மேலும்‌ சந்தைக்குழு எதிலும்‌ தலைவராக உள்ளவர்‌ வாரியத்தின்‌ உறுப்பினராக உள்ளாரோ அந்த சந்தைக்‌ குழுவைப்‌ பொறுத்து 33 ஆம்‌ பிரிவின்படி ஒரு தனி அலுவலர்‌ நியமிக்கப்பட்டுள்ளாரோ அந்தச்‌ சந்தைக்‌ குழுவின்‌ தலைவர்‌ அந்த வாரியத்தின்‌ உறுப்பினராக இருப்பதற்கு அற்றுப்போதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவ்வாறு நியமிக்கப்பட்ட தணி அலுவலர்‌ அந்த வாரியத்தில்‌ அத்தகைய தலைவருக்குப்‌ பதிலாக உறுப்பினராக இருத்தல்‌ வேண்டும்‌. (2) தலைவரின்‌ பதவிக்‌ காலம்‌ வாரியத்தின்‌ முதல்‌ கூட்டத்‌ தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளாக இருத்தல்‌ வேண்டும்‌. (3) ஐ வாரியமானது தேவைப்படும்‌ போதெல்லாம்‌ இதன்‌ பொருட்டு வாரியத்தினால்‌ அரசு ஒப்புதலுடன்‌ வகுக்கக்கூடிய நேரத்திலும்‌ இடத்திலும்‌ கூடி வகுக்கக்கூடிய நடைமுறை விதிகளை அனுசரிக்க வேண்டும்‌. ஆனால்‌ அதன்‌ கடைசி கூட்டத்திற்கும்‌ அடுத்த கூட்டத்திற்கும்‌ மூன்று மாத இடைவெளி இருத்தல்‌ ஆகாது. (b) தலைவர்‌ அல்லது அவர்‌ இல்லாதபோது துணைத்தலைவர்‌ அல்லது தலைவர்‌ மற்றும்‌ துணைத்‌ தலைவர்‌, இந்த இருவரும்‌ இல்லாதபோது உறுப்பினர்களால்‌ அவர்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிற உறுப்பினர்‌ எவரும்‌ வாரியத்தின்‌ கூட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டும்‌. (4) வாரியத்தின்‌ அலுவல்‌ சாரா உறுப்பினர்கள்‌ வாரியத்தின்‌ கூட்டங்களுக்கு வருவதற்கு அரசினால்‌ நிர்ணயிக்கப்படலாகும்‌ படிகளை அல்லது கட்டணங்களைப்‌ பெறுவதற்கு உரிமையுடைவராவார்கள்‌. (5 வாரியமானது அலுவல்‌ எதனையும்‌ புரிவதற்கு அல்லது இச்சட்டத்தின்படி மற்றும்‌ இச்சட்டத்தின்படிச்‌ செய்யப்பட்ட விதிகள்‌ அல்லது ஒழுங்குமுறை விதிகள்‌ ஆகியவற்றில்‌ உள்ள அதன்‌ அலுவல்கள்‌ அல்லது கடமைகள்‌ தொடர்பான பொருட்பாடு எதன்மீதும்‌ அறிக்கைச்‌ செய்வதற்கு அதன்‌ உறுப்பினர்களில்‌ ஒருவர்‌ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை ஒரு துணைக்‌ குழுவாக அல்லது ஒரு சிறப்புக்‌ குழுவாக நியமிக்கலாம்‌ மற்றும்‌ 47 ஆம்‌ பிரிவின்‌ (3) ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு அத்தகைய குழுவுக்கு தான்‌ பொருத்தமெனக்‌ கருதக்கூடிய அதன்‌ அதிகாரங்களை அல்லது கடமைகளை ஒப்படைப்புச்‌ செய்யலாம்‌. 37. வாரியத்தின்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌.- (1) இதன்‌ பொருட்டு செய்யப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு, வாரியத்திற்கு அரசு ஒரு தலைமை நிருவாக அலுவலரை நியமித்தல்‌ வேண்டும்‌. (2) உட்பிரிவு (1) இன்‌ வகைமுறைகள்‌ மற்றும்‌ இதன்‌ பொருட்டு செய்யப்பட்ட விதிகள்‌ ஆகியவற்றிற்கு உட்பட்டு, வாரியமானது. அதன்‌. கடமைகளைத்‌ திறம்பட புரிவதற்கு தேவையாக இருக்கிற மற்றைய சம்பளம்‌ பெறும்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ ஆகியோரை நியமிக்கலாம்‌. (3) தலைமை நிருவாக அலுவலர்‌ மற்றும்‌ மற்றைய சம்பளம்‌ பெறும்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ ஆகியோர்‌ முழு நேர அரசுப்‌ பணியாளர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. (4) வாரியத்தின்‌ மேற்பார்வைக்கு உட்பட்டு, வாரியத்தின்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ ஆகியோர்‌ மீதான பொதுக்கட்டுப்பாடு மற்றும்‌ மேற்பார்வை ஆகியவை தலைமை நிருவாக அலுவலரிடம்‌ மேவி நிற்றல்‌ வேண்டும்‌. (5) அவ்வப்போது நடைமுறையிலுள்ள சட்டம்‌ எதிலும்‌ என்ன அடங்கியிருந்தாலும்‌, 1981 நவம்பர்‌ 17 தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌ வாரியத்தில்‌ வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சம்பளம்‌ பெறும்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ ஆகியோர்‌ முழு நேர அரசுப்‌ பணியாளர்களாக ஆதல்‌ வேண்டும்‌. (6) வாரியத்தின்‌ மற்றைய சம்பளம்‌ பெறும்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ ஆகியோரது சம்பளங்கள்‌, படிகள்‌, ஓய்வூதியங்கள்‌ மற்றைய ஊதியங்கள்‌ ஆகியவைகள்‌ முதலில்‌ மாநிலத்‌ திரள்‌ நிதியத்திலிருந்து செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. வாரியமானது, சந்தை வாரிய நிதியத்திலிருந்து அரசுக்கு, அரசினால்‌ (5) ஆம்‌ உட்பிரிவின்படி செலுத்தப்பட்ட தொகைகளை திரும்பச்‌ செலுத்த வேண்டும்‌. (7) இச்சட்டத்தில்‌ எண்ன அடங்கியிருந்தபோதிலும்‌ மற்றும்‌ அரசமைப்பின்‌ 314 ஆம்‌ உறுப்பின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, அரசு, வாரியத்தின்‌. அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ ஆகியோரது பணி நிபந்தனைகளை முறைப்படுத்த விதிகளைச்‌ செய்யலாம்‌. 38. வாரியத்தின்‌ அதிகாரிகளும்‌ கடமைகளும்‌. வாரியத்தின்‌ அதிகாரங்கள்‌ மற்றும்‌. கடமைகள்‌ பின்வருமாறு இருக்க வேண்டும்‌. (i) சந்தைகள்‌ மற்றும்‌ சந்தைப்‌ பகுதிகள்‌ ஆகியவற்றின்‌ மேம்பாட்டிற்காக சந்தைக்‌ குழுக்களால்‌ மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள்‌ உள்ளடங்கலான சந்தைக்‌ குழுக்களின்‌ பணி மற்றும்‌ மற்றைய விவகாரங்கள்‌ ஆகியவற்றை ஒத்திசைவு செய்தல்‌ (Co-ordination); (0 வேளாண்மை விளைபொருள்‌, சந்தைகள்‌ ஆகியவற்றின்‌ மேம்பாட்டின்‌ மாநில கட்டத்‌ திட்டத்தினை மேற்கொள்வது; 00% சந்தை வாரிய நிதியம்‌ மற்றும்‌ சந்தை மேம்பாட்டு நிதியம்‌ ஆகியவற்றை நிருவகித்தல்‌; (iv) பொதுவாக சந்தைக்‌ குழுக்களுக்கும்‌ அல்லது தனிப்பட்ட முறையில்‌ சந்தைக்‌ குழு எதற்கும்‌ அதன்‌ முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்‌ பொருட்டு, பணிப்புரை நல்குதல்‌; (v) சந்தைக்‌ குழுக்களால்‌ மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள்‌ தயாரிப்பு மற்றும்‌ கட்டுமான நடவடிக்கைகளின்‌ மதிப்பீடுகள்‌ ஆகியவற்றை சந்தைக்‌ குழுக்களே கண்காணித்து வழிகாட்டுதல்‌; (vi) சந்தை வாரிய நிதிக்கு பொறுப்புரிமையாக்கத்தக்க எல்லா பணிகளையும்‌ நிறைவேற்றுதல்‌; (ரி) வகுத்துரைக்கக்கூடிய படிவங்களில்‌ கணக்குகளைப்‌ பேணி வருதல்‌; ரி) ஆண்டு முடிவில்‌, அதன்‌ முன்னேற்ற அறிக்கை ஐந்தொகைக்‌ குறிப்பு மற்றும்‌ சொத்துக்கள்‌ மற்றும்‌ கடப்பாடுகளின்‌ விவர அறிக்கை ஆகியவற்றை வருடந்தோறும்‌ வெளியிடுதல்‌ மற்றும்‌ அவற்றின்‌ படிகளை வாரியத்தின்‌ ஒவ்வொரு உறுப்பினருக்கும்‌ அரசுக்கும்‌ அனுப்புதல்‌; (ix) வேளாண்மை விளைபொருளின்‌ முறைப்படுத்தப்பட்ட விற்பனைத்‌ தொடர்பான பொருட்பாடுகள்‌ குறித்து பரப்புதல்‌ மற்றம்‌ வெளியிடுதல்‌ ஆகியவற்றிற்காக தேவையான ஏற்பாடுகளைச்‌ செய்தல்‌; (0) மாநிலத்திலுள்ள சந்தைக்‌ குழுக்கள்‌, வாரியம்‌, வேளாண்மை விற்பனைத்துறை ஆகியவற்றின்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ உற்பத்தியாளர்கள்‌ மற்றும்‌ வணிகர்கள்‌ ஆகியோரின்‌ பயிற்சிக்கான வசதிகளை நல்குதல்‌; 00) அடுத்து வருகிற ஆண்டின்‌ வரவு-செலவுத்‌ திட்டத்தை தயாரித்து ஏற்றுக்கொள்ளுதல்‌; 00) வாரியம்‌ தீர்மாணிக்கலாகும்‌ ஷரத்துகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளுக்கு உட்பட்டு இச்சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக சந்தைக்‌ குழுக்களுக்கு நிதி உதவிகள்‌ அல்லது கடன்கள்‌ அளித்தல்‌; (xiii) வேளாண்மை விற்பனை தொடர்பான பொருள்களில்‌ கருத்தரங்குகள்‌, பணிமனைகள்‌ பொருட்காட்சிகள்‌ முதலியன ஏற்பாடு செய்தல்‌ அல்லது அமைத்தல்‌; (xiv) வேளாண்மை விளைபொருளின்‌ முறைப்படுத்தப்பட்ட விற்பனை பற்றி அறிவு புகட்டுதல்‌; (xv) வேளாண்மை விளைபொருளைப்‌ பக்குவப்படுத்துதல்‌, வகைப்படுத்துதல்‌, தரப்படுத்துதல்‌ ஆகியவற்றிற்கான திட்டங்களை ஊக்குவித்தல்‌; (xvi) விற்பனை சம்பந்தப்பட்ட தகவலை சேகரித்தல்‌ மற்றும்‌ பரப்புதல்‌; ரி) விற்பனை புள்ளியியல்‌ விவரங்கள்‌ மற்றும்‌ ஆராய்ச்சிகள்‌: ஆகியவற்றை வெளியிடுதல்‌; பரி) வேளாண்மை விற்பனை தொடர்பான தகவலை சேகரித்து பரப்புவதற்கு சந்தா வசூலித்தல்‌; (xix) விற்பனை ஆராய்ச்சி மற்றும்‌ விற்பனை ஆய்வுகள்‌ ஆகியவற்றை நடத்துதல்‌; (௦0) சந்தைக்‌ குழுக்களுக்கு பொதுவான முக்கித்துவம்‌ இருக்கலாகிற அல்லது வாரியத்தின்‌ திறமையான நடப்புக்கு தேவையாகக்‌ கருதப்படுகிற மற்றைய காரியங்களைச்‌ செய்தல்‌; (xxi) இச்சட்டத்தினால்‌ அதற்கு குறிப்பிடப்பட்ட முறையில்‌ ஒப்படைக்கப்பட்டுள்ள மற்றைய கடமைகளைச்‌ செய்தல்‌; (xxii) அரசினால்‌ வாரியத்திற்கு ஒப்படைக்கக்கூடிய அதே போன்ற மற்றைய கடமைகளைச்‌ செய்தல்‌. 39. குழுவினால்‌ ஒப்பந்தங்கள்‌ நிறைவேற்றுதல்‌.- (1) வாரியமானது அது எந்த நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளதோ அந்த நோக்கங்கள்‌ எல்லாவற்றையும்‌ அல்லது அவற்றுள்‌ எதனையும்‌ நிறைவேற்றுவதற்கு தேவையென அல்லது உகந்ததென அது கருதக்கூடிய ஒப்பந்தங்கள்‌ எல்லாவற்றையும்‌ நிறைவேற்றி முடிக்கலாம்‌. (2) வாரியத்தினால்‌ செய்யப்பட்ட ஒவ்வோர்‌ ஒப்பந்தமும்‌ எழுத்துருவில்‌ இருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ வாரியத்தின்‌ சார்பாக தலைவர்‌ மற்றும்‌ தலைமை நிருவாக அலுவலரால்‌ நிறைவேற்றி முடிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) உட்பிரிவு (2) இல்‌ வகைச்செய்யப்பட்டவாறான நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்தைத்‌ தவிர மற்றைய ஒப்பந்தம்‌ எதுவும்‌ வாரியத்தைக்‌ கட்டுப்படுத்தாது. 40. கடன்‌ வாங்க அதிகாரம்‌.- (1) வாரறியமானது, எந்த நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளதோ அந்த நோக்கங்கள்‌ எல்லாவற்றையும்‌ அல்லது அவற்றுள்‌ எதனையும்‌ நிறைவேற்றுவதற்காக, அரசிடமிருந்து, அரசு குறித்துரைக்கக்கூடிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன்‌ பெறலாம்‌. (2) வாரியமானது, அரசின்‌ முன்‌ ஒப்புதலுடன்‌, அது எந்த நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளதோ அந்த நோக்கங்களுக்காக தேவையான பணங்களை அதனிடம்‌ மேவியுள்ள அல்லது அதற்குரிய சொத்து எதனின்‌ பிணையத்தின்‌. பேரிலும்‌ மற்றும்‌ இச்சட்டத்தின்படியாக அல்லது அதன்படியாக வாரியத்தினால்‌ பெறப்படுகிற பணங்களின்‌ பிணையத்தின்‌ பேரிலும்‌ அல்லது அரசினால்‌ கொடுக்கப்படுகிற உத்திரவாதத்தின்‌ பேரிலும்‌ திரட்ட வேண்டும்‌ மற்றும்‌ குறிப்பாக, அவ்வப்போது,- (ஐ பொதுமக்களிடமிருந்து அல்லது வங்கி எதிலுமிருந்து அல்லது மைய அல்லது மாநில அரசுக்குச்‌ சொந்தமான அல்லது அதன்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள இணையம்‌ எதிலுமிருந்து கடன்‌ வாங்கலாம்‌; அல்லது (b) வங்கி எதனோடும்‌ அல்லது மற்றைய நிதி நிறுவனம்‌ அல்லது 1956 ஆம்‌ ஆண்டு ஆயுள்‌ காப்பீடு நிறுவனச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 31,1956) 3 ஆம்‌ பிரிவின்படி அமைக்கப்பட்ட இந்திய ஆயுள்‌ காப்பீடு நிறுவனம்‌ ஆகியவற்றோடு நிதி சம்பந்தமான ஏற்பாடுகளைச்‌ செய்து கொள்ளலாம்‌. 41. வாரியத்தின்‌ வருமானம்‌ மற்றும்‌ செலவின மதிப்பிடுகள்‌.- இதன்‌ பொருட்டு செய்யப்படக்கூடிய விதிகளுக்கு உட்பட்டு, அடுத்து வருகிற நிதியாண்டிற்கான, வாரியத்தின்‌ ஆண்டு வருமான மற்றும்‌ செலவின மதிப்பீட்டை வாரியத்தினால்‌ தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்‌ மற்றும்‌ (அதனை) அரசுக்கு அதன்‌ ஒப்புதலுக்காக பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 42. கணக்குகளின்‌ ஆண்டுத்‌ தணிக்கை.- (1) வாரியத்தின்‌ கணக்குகள்‌ ஒவ்வொரு நிதி ஆண்டிலும்‌ குறைந்தபட்சம்‌ ஒரு தடவை தல நிர்வாக நிதிக்‌ கணக்கு ஆய்வாளரால்‌ ஆய்வு செய்யப்பட்டு தணிக்கை செய்யப்படல்‌ வேண்டும்‌. (2) தல நிர்வாக நிதிக்‌ கணக்கு ஆய்வாளரால்‌ சான்றிடப்பட்டவாறான வாரிவத்தின்‌ கணக்குகள்‌, தணிக்கை அறிக்கை மற்றும்‌ அதன்‌ மீதான வாரியத்தின்‌ கருத்துரை ஆகியவற்றோடு அரசுக்கு வகுத்துரைக்கக்ககூடிய காலஅளவுக்குள்‌ அனுப்பப்பட வேண்டும்‌. (3) அரசு எழுத்துருவிலான ஆணை மூலமாக வாரியத்தை தணிக்கையின்‌ விளைவாக வெளிக்‌ கொணரப்பட்ட குறைபாடுகள்‌, ஏதேனுமிருப்பின்‌, அவற்றைச்‌ சரிப்படுத்துவதற்கான அவ்வாணையில்‌ குறித்துரைக்கக்கூடிய நடவடிக்கையை அதில்‌ குறித்துரைக்கக்கூடிய காலஅளவுக்குள்‌ எடுப்பதற்கு பணிக்கலாம்‌ மற்றும்‌ அந்த வாரியமானது அத்தகைய பணிப்புரைகளை நிறைவேற்ற வேண்டும்‌. 43. அரசின்‌ மேற்பார்வையும்‌ கட்டுப்பாடும்‌.-- வாரியம்‌ மற்றும்‌ அதன்‌ அலுவலர்கள்‌ மீது அரசு மேற்பார்வை மற்றும்‌ கட்டுப்பாட்டினைச்‌ செலுத்த வேண்டும்‌ மற்றும்‌ தாம்‌ தேவையெனக்‌ கருதக்கூடிய தகவலைக்‌ கோரலாம்‌ மற்றும்‌ அந்த வாறியமானது முறையாகச்‌ செயற்படவில்லையென்று தாம்‌ திருப்தி கொள்ளும்‌ நேர்வில்‌, அந்த வாரியத்தை கலைத்து மாற்றலாம்‌ (Supersede) மற்றும்‌ ஒரு புதிய வாரியம்‌ அமைக்கப்படும்‌ வரையில்‌ வாரியத்தின்‌ கடமைகளை ஆற்றுவதற்கு தாம்‌ பொருத்தமெனக்‌ கருதக்கூடிய ஏற்பாடுகளைச்‌ செய்யலாம்‌: வரம்புரை: ஆனால்‌, அந்த வாரியமானது அதன்‌ கலைப்பு மாற்றுத்‌ தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்‌ அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌. 44. சந்தை வாரிய நிதியம்‌.- (1) வாரியத்தினால்‌ பெறப்படுகிற எல்லாப்‌ பணங்களையும்‌ "சந்தை வாரிய நிதியம்‌" என அழைக்கப்பட வேண்டிய ஒரு நிதியத்தில்‌ செலுத்தப்பட வேண்டும்‌. இச்சட்டத்தின்படி அல்லது அதன்‌ நோக்கங்களுக்காக செலவழிக்கப்படுகிற எல்லா செலவினமும்‌ அத்தகைய நிதியத்திலிருந்து கொடுத்து தீர்க்க வேண்டும்‌ மற்றும்‌ அத்தகைய செலவினத்தைக்‌ கொடுத்து தீர்த்த பிறகு மிகை நிதி ஏதேனும்‌ எஞ்சியிருப்பின்‌ அதனை வகுத்துரைக்கக்கூடிய முறையில்‌ முதலீடு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (2) ஒவ்வொரு சந்தைக்‌ குழுவும்‌ வாரியத்திற்கு பங்களிப்பாக 24 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி விதிக்கப்படுகிற உரிமக்‌ கட்டணங்கள்‌ மற்றும்‌ கட்டணங்கள்‌. ஆகியவற்றிலிருந்து வருகிற அதன்‌ வரவுகளின்‌ வகுத்துரைக்கக்கூடிய சதவிதத்தில்‌ வகுத்துரைக்கக்கூடிய முறையில்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌. (3) வாரியமானது, சந்தை வாரிய நிதியத்திலிருந்து 37 ஆம்‌ பிரிவின்‌ (6) ஆம்‌ உட்பிரிவின்படி செலுத்தத்தக்க தொகைகளோடு இச்சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ மற்றும்‌ இச்சட்டத்தின்படிச்‌ செய்யப்பட்ட விதிகள்‌ ஆகியவற்றை நிறைவேற்ற அரசு வாரியத்துடன்‌ கலந்தாலோசித்தபின்‌ வேலைக்கு அமர்த்தப்படுகிற சிறப்பு அல்லது கூடுதல்‌ பணியாளர்களின்‌ எதனின்‌ செலவுத்‌ தொகையையும்‌, அரசுக்குச்‌ செலுத்த வேண்டும்‌. (4) சந்தை வாரிய நிதியமானது கீழ்க்கண்ட மற்றைய நோக்கங்களுக்காக செலவிடப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது- (ஐ வாரியத்தின்‌ நிருவாகச்‌ செலவினம்‌; (௦) வகுத்துரைக்கக்கூடிய பயணப்படிகள்‌ மற்றும்‌ மற்றைய படிகள்‌ ஆகியவற்றை வாரியத்தின்‌ தலைவர்‌, துணைத்‌ தலைவர்‌ மற்றும்‌ உறுப்பினர்கள்‌. ஆகியோருக்கு செலுத்துதல்‌; (2) வாரியத்தின்‌ ஊழியத்தில்‌ உள்ள அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கு கடன்கள்‌ மற்றும்‌ முன்பணங்கள்‌; (0) ஈட்டுறுதி தவணைத்‌ தொகைக்காகச்‌ செலுத்துகை; (e) 37 ஆம்‌ பிரிவின்‌ (6) ஆம்‌ உட்பிரிவின்படி அரசுக்கு தொகைகள்‌ செலுத்துதல்‌; (7) கடன்‌ அடைப்பு நிதியம்‌ மற்றும்‌ காப்பு நிதியம்‌ ஆகியவற்றின்‌ ஏற்பாடு; (ஐ சந்தை மேம்பாட்டு நிதியத்திற்காக பங்களிப்புகள்‌ மற்றும்‌ நிதியங்களை மாற்றுதல்‌; மற்றும்‌ 0) இதன்‌ பொருட்டு அரசு பொதுவான அல்லது தனிப்பட்ட ஆணை மூலமாக குறிப்பிடுகிற மற்றைய நோக்கங்கள்‌. 45. சந்தை மேம்பாட்டு நிதியம்‌.- (1) "சந்தை மேம்பாட்டு நிதியம்‌ என அழைக்கப்பட வேண்டிய ஒரு தனிப்பட்ட நிதியமானது இருத்தல்‌ வேண்டும்‌. (2) வாறியமானது அதன்‌ ஆண்டு வருவாய்களில்‌ வகுத்துரைக்கக்கூடிய சதவீதத்தை அந்தச்‌ சந்தை மேம்பாட்டு நிதியத்திற்கு பங்களிப்புச்‌ செய்தல்‌ வேண்டும்‌. (3) வாரியமானது 40 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்படி கடன்‌ வாங்கப்பட்ட பணம்‌ முழுவதையும்‌ அல்லது பெறப்பட்ட மற்றையத்‌ தொகை: எதனையும்‌ சந்தை மேம்பாட்டு நிதியத்திற்கு மாற்றல்‌ செய்தல்‌ வேண்டும்‌. (4) சந்தை மேம்பாட்டு நிதியத்திற்காக வாறியமானது, மைய அரசு அல்லது மாநில அரசு அல்லது தல நிருவாக அமைப்பு அல்லது தனிப்பட்ட நபர்‌ அல்லது குழு, பதிவுச்‌ செய்யப்பட்டிருந்தாலும்‌ இல்லாவிட்டாலும்‌ சரி, ஆகியோர்களிடமிருந்து மானியம்‌, நிதியுதவி, நன்கொடை அல்லது கொடை எதனையும்‌ சொல்லப்பட்ட அந்த நிதியத்திலிருந்து செலவழிக்கத்‌ தகுந்த எல்லா நோக்கங்களுக்காக அல்லது அவற்றுள்‌ அதற்காகவும்‌, ஏற்றக்கொள்ளலாம்‌. (5) பெறப்பட்ட எல்லாப்‌ பணங்களும்‌ மற்றும்‌ சந்தை மேம்பாட்டு நிதியத்திற்குரியதுமான எல்லாப்‌ பணங்களும்‌ சொல்லப்பட்ட அந்த நிதியத்தில்‌ வரவு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. (7) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள எல்லா நோக்கங்களையும்‌ அல்லது அவற்றுள்‌ எதனையும்‌ நிறைவேற்றுவதற்கான எல்லாச்‌ செலவினத்தையும்‌ சொல்லப்பட்ட அந்த நிதியத்திலிருந்து கொடுத்து தீர்க்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அத்தகையச்‌ செலவினத்தைத்‌ தீர்த்த பிறகு எஞ்சியுள்ள மிகை நிதியானது வகுத்துரைக்கக்கூடிய முறையில்‌ முதலீடு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (6) சந்தை மேம்பாட்டு நிதியமானது கீழ்க்கண்ட எல்லா நோக்கங்களுக்காக அல்லது அவற்றுள்‌ எதற்காகவும்‌ செலவழிக்கப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது- (ஐ வாரியத்திற்காக மனை அல்லது மனைகளை கையகப்படுத்துதல்‌; (௦) வாரியத்தின்‌ நோக்கங்களுக்காக தேவையான கட்டிடங்களைக்‌ கட்டுதல்‌ மற்றும்‌ அவற்றினை பழுதுபார்த்தல்‌; (6) வேளாண்மை விளைபொருளுக்காக முறைப்படுத்தப்பட்ட சந்தைகளை ஊக்குவிப்பதற்காக பிரசாரம்‌ செய்தல்‌ ஆகியவற்றிற்காக பணம்‌ செலுத்துகை; (d) வேளாண்மை விற்பனை தொடர்பான விற்பனை ஆராய்ச்சி, சிறப்பு ஆய்வுகள்‌, திட்ட அறிக்கைகள்‌ தயாறித்தல்‌; (6) பயிர்‌ புள்ளியியல்‌ தொடர்பான விவரங்கள்‌ குறித்து தகவலைச்‌ சேகரித்துப்‌ பரப்புதல்‌ மற்றும்‌ அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ பொறுத்த விற்பனை; () வேளாண்மை விளைபொருளினை பக்குவப்படுத்துதல்‌, வகைப்படுத்துதல்‌, தரப்படுத்துதல்‌ ஆகியவற்றிற்காக திட்டங்கள்‌; (ஐ சந்தைக்‌ குழுக்களுக்கு கடன்‌, மானியம்‌ அல்லது நிதி உதவி என்ற முறையில்‌ நிதி உதவி அளித்தல்‌; (h) எழுப்பப்பட்ட கடன்கள்‌ அல்லது கடன்‌ வாங்குதல்‌ ஆகியவற்றிற்கு வட்டி செலுத்துகை; (i) வாரியத்தினால்‌ செலவழிக்கப்பட்ட சட்டச்‌ செலவுகளின்‌ செலுத்துகை; 0 சந்தைக்‌ குழுக்கள்‌ மற்றும்‌ வாரியத்தின்‌ சம்பளம்‌ பெறும்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ பயிற்சி; (k) வேளாண்மை விளைபொருளின்‌ விற்பனை குறித்து அறிவுரை புகட்டுதல்‌; ) விற்பனை மேம்பாட்டிற்காக பணிமனைகள்‌, கருத்தரங்குகள்‌, பொருட்காட்சிகள்‌ முதலியவற்றை அமைத்தல்‌ மற்றும்‌ ஏற்பாடுகள்‌ செய்தல்‌; m) அறிவிக்கை செய்யப்பட்ட சந்தைப்பகுதியில்‌ உள்‌அமைப்பு சாதனங்களை அமைத்தல்‌; (n) மாநிலத்தில்‌ முறைப்படுத்தப்பட்ட விற்பனையின்‌ பொது மேம்பாடு; (௦) சந்தைக்குழுக்களுக்கு தொழில்நுட்ப உதவியினை நல்குதல்‌; (ஐ இச்சட்டத்தின்படி அல்லது அரசினால்‌ பணிக்கப்பட்டவாறான, வாரியத்திற்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்குத்‌ தேவையெனக்‌ கருதப்படுகிற மற்றைய நோக்கங்கள்‌ எதற்காகவும்‌. அத்தியாயம்‌ - IV பல்வகை வகைமுறைகள்‌. 46. இயக்குநரின்‌ அதிகாரங்களும்‌ கடமைகளும்‌.- இச்சட்டத்தின்‌ மற்றைய வகைமுறைகளுக்கு உட்பட்டு, இயக்குநரின்‌ அதிகாரங்களும்‌ கடமைகளும்‌ கீழ்க்கண்டவாறு இருத்தல்‌ வேண்டும்‌. (1) சந்தைக்‌ குழுக்களின்‌ தலைவர்கள்‌ மற்றும்‌ துணைத்‌ தலைவர்கள்‌ மற்றும்‌ வாரியத்தின்‌ துணைத்‌ தலைவர்‌ ஆகியோரின்‌ தேர்தலை உரிய காலத்திலும்‌ உரிய முறையிலும்‌ நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்‌; (2) சந்தைக்‌ குழுக்கள்‌ வாழியம்‌ ஆகிய அலுவலகங்கள்‌ ஆகியவற்றை ஆய்வு செய்தல்‌ அல்லது ஆய்வு செய்விக்க ஏற்பாடு செய்தல்‌; (3) சந்தைக்‌ குழுக்களின்‌ வரவு-செலவுத்‌ திட்டத்தை கூர்ந்தாய்வு செய்து அதனை அரசுக்கு தமது பரிந்துரையோடு அனுப்புதல்‌; (4) அறிவிக்கை செய்யப்பட்ட எல்லா வேளாண்மை விளைபொருள்களையும்‌ வகைப்படுத்துதல்‌ மற்றும்‌ தரப்படுத்துதல்‌; மற்றும்‌ (5) இச்சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ மற்றம்‌ அதன்படிச்‌ செய்யப்பட்ட விதிகள்‌ ஆகியவற்றின்‌ திறமையான செயற்பாட்டுக்காக சந்தைக்குழுக்களை மேற்பார்வையிடுதல்‌. 47. அதிகாரங்கள்‌ ஒப்படைப்பு.- (1) (ஐ அரசு, அறிவிக்கை மூலமாக, சந்தைக்குழு எதனையும்‌ பொறுத்து தம்மிடம்‌ 33 ஆம்‌ பிரிவின்படி மேவியுள்ள அதிகாரங்களை இயக்குநருக்கு அல்லது வேறெந்த அலுவலருக்கும்‌ ஒப்படைக்கலாம்‌. (b) (a) கூறின்படி ஒப்படைக்கப்பட்ட அதிகாரம்‌ எதனையும்‌ செலுத்துதலானது, அந்த அறிவிக்கையில்‌ குறிக்கக்கூடிய கட்டுப்பாடுகள்‌ மற்றும்‌ நிபந்தனைகள்‌ ஆகியவற்றிற்கு உட்பட்டும்‌ மற்றும்‌ அரசினால்‌ செய்யப்படக்கூடிய கட்டுப்பாடு மேலாய்வு ஆகியவற்றிற்கு உட்பட்டும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. (2) உட்பிரிவு (1) இல்‌ வேறுவிதமாக வகை செய்யப்பட்டாலன்றி, அரசு, அறிவிக்கை மூலமாக வாரியத்திற்கு அல்லது அதன்‌ தலைவருக்கு- (வ பிரிவு 52, 65 அல்லது 66 பிரிவுகளின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களைத்‌ தவிர இச்சட்டத்தின்படியாகவோ அதன்படியாகவோ தம்மிடம்‌ மேவியுள்ள அதிகாரங்கள்‌ எதனையும்‌; (௦) சட்டத்தின்படியாகவோ அதன்படியாகவோ இயக்குநர்‌ அல்லது வேறெந்த அதிகார அமைப்பிடம்‌ வழங்கப்பட்ட அதிகாரங்கள்‌ எதனையும்‌, ஒப்படைக்கலாம்‌. (3) அரசின்‌ ஒப்புதலோடு, வாரியமானது, தனது அதிகாரங்கள்‌ எதனையும்‌ தனது தலைவர்‌, தலைமை நிருவாக அலுவலர்‌ அல்லது தனது அலுவலர்கள்‌ எவருக்கும்‌, ஒப்படைக்கலாம்‌: ஆனால்‌ வாரியமானது தனக்கு அரசினால்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்படி ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்கள்‌ எதனையும்‌ ஒப்படைக்கக்கூடாது. (4) தலைவர்‌, அரசின்‌ ஒப்புதலோடு தமக்கு இச்சட்டத்தின்படியாகவோ அதன்படியாகவோ வழங்கப்பட்ட அதிகாரங்கள்‌ எதனையும்‌ வாரியத்தின்‌ அலுவலர்‌ எவருக்கும்‌ ஒப்படைக்கலாம்‌; ஆனால்‌, தலைவரானவர்‌ தனக்கு அரசு மற்றும்‌ வாரியத்தினால்‌ (2) ஆம்‌ மற்றும்‌ (3) ஆம்‌ உட்பிரிவுகளின்படி ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்கள்‌ எதனையும்‌ ஒப்படைக்கக்கூடாது. 48. தண்டங்கள்‌.- (1) (8) இச்சட்டத்தின்படியாகவோ, அதன்படியாகவோ தம்மால்‌ கொடுபடவேண்டிய கட்டணம்‌ எதனையும்‌ அல்லது மற்றைய தொகை எதனையும்‌. செலுத்தாது ஏய்க்கிற; அல்லது (b) கச்சட்டத்தின்படி ஓர்‌ உரிமதாரராகயிருந்து, சந்தைக்‌ குழுவுக்கு அதன்‌ துணை விதிகளில்‌ குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கைகள்‌ மற்றும்‌ விவர அறிக்கைகளை பணிந்தனுப்ப தவறுகிற அல்லது உரியவாறு அதிகாரமளிக்கப்பட்ட சந்தைக்‌ குழுவின்‌ அலுவலர்‌ அல்லது பணியாளர்‌ ஆகியோர்‌ எவராலும்‌ கோரப்படுகிற கணக்குகள்‌, பதிவுருக்கள்‌ முதலியவற்றை தாக்கல்‌ செய்யத்‌ தவறுகிற அல்லது (2 () சட்டத்தின்படியாகவோ அதன்படியாகவோ வாக்குமூலம்‌ எதனையும்‌ செய்வதற்கு அல்லது தகவல்‌ எதனையும்‌ கொடுப்பதற்கு கோரப்பட்ட, முக்கியமான அம்சம்‌ எதிலும்‌ பொய்‌ அல்லது உண்மையானதன்று என்று அவர்‌ அறிந்து அல்லது நம்புவதற்கு நியாயமான காரணம்‌ இருந்து, அத்தகைய வாக்குமூலத்தைச்‌ செய்கிற அல்லது தகவலைக்‌ கொடுக்கிற, அல்லது (i) இச்சட்டத்தின்படியாகவோ அதன்படியாகவோ அவர்‌ அளிக்க வேண்டும்‌ எனக்‌ கோருகிற கணக்கு, விளம்புகை, மதிப்பிடு, மற்றைய ஆவணத்தின்‌ விவர அறிக்கை ஆகியவை எதிலும்‌ மேற்சொன்ன அத்தகைய வாக்குமூலத்தைச்‌ செய்கிற, அல்லது (0) அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளினை எடுத்துச்‌ செல்கிற அல்லது எடுத்துச்‌ செல்வதாக நம்பப்படுகிற ஊர்தி, படகு அல்லது மற்றைய வாகனம்‌ ஆகியவற்றை ஆய்வு செய்வதைத்‌ தடுக்கின்ற அல்லது எதிர்க்கிற அல்லது இதன்‌ பொருட்டு இயக்குநரால்‌ அதிகாரமளிக்கப்பட்ட சந்தைக்குழுவின்‌ அலுவலர்‌ அல்லது பணியாளர்‌ எவராலும்‌ பரிசோதனை, சோதனை அல்லது கைப்பற்றுகை ஆகியவை செய்வதைத்‌ தடுக்கின்ற அல்லது எதிர்க்கின்ற, அல்லது (6) இதன்‌ பொருட்டு இயக்குநரால்‌ அதிகாரமளிக்கப்பட்ட சந்தைக்குழுவின்‌ அலுவலர்‌ அல்லது பணியாளர்‌ எவராலும்‌ அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனையும்‌, அத்தகைய விளைபொருள்‌ தொடர்பான நடவடிக்கைகள்‌ தொடர்பான எடைகள்‌, அளவுகள்‌ மற்றும்‌ கணக்குகள்‌ எதனையும்‌ இச்சட்டத்தின்படி உரிமம்‌ அளிக்கப்பட்ட அல்லது உரிமம்‌ அளிப்பதற்கு உள்ளாகிற வளாகங்கள்‌ எதிலும்‌, நுழைவு செய்தல்‌, ஆய்வு செய்தல்‌ மற்றும்‌ பரிசோதித்தல்‌ ஆகியவற்றைத்‌ தடுக்கின்ற அல்லது எதிர்க்கின்ற அல்லது (f) 32 ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகள்‌ எதனையும்‌ மீறுகிற அல்லது இச்சட்டத்தின்படியாகவோ அதன்படியாகவோ அல்லது அணுமதிச்சீட்டு எதனில்‌ ஷரத்துக்கள்‌ மற்றும்‌ நிபந்தனைகளால்‌ கோரப்பட்ட அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளின்‌ கொண்டு செல்வதற்கான அனுமதிச்‌ சீட்டினை பெறத்‌ தவறுகிற, நபர்‌ எவரும்‌, தண்டிக்கப்பட்டதன்‌ பேரில்‌ ஐநூறு ரூபாய்க்கு குறைவுபடாத ஆனால்‌ இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்‌ வரை நீடிக்கலாகும்‌ அபராதம்‌ விதித்து தண்டிக்கப்படத்தக்கவராவார்‌. (2) இச்சட்டத்தின்‌ வகைமுறை எதனையும்‌ அல்லது இச்சட்டத்தின்படிச்‌ செய்யப்பட்ட விதி எதனையும்‌ அல்லது ஒழுங்குமுறை விதி எதனையும்‌ அல்லது துணை விதி எதனையும்‌ மீறுகிற எவரும்‌, அத்தகைய மீறுகைக்காக, இச்சட்டத்தில்‌ அல்லது விதிகள்‌ அல்லது ஒழுங்குமுறை விதிகள்‌ அல்லது துணை விதிகள்‌: ஆகியவற்றில்‌ வேறெங்கிலும்‌ தண்டம்‌ எதுவும்‌ வகைச்செய்யப்படாவிட்டால்‌, தண்டிக்கப்பட்டதன்‌ பேரில்‌ ஓராயிரத்து ஐநூறு ரூபாய்கள்‌ வரையிலும்‌ நீடிக்கலாகும்‌ அபராதம்‌ விதித்து, தண்டிக்கப்படத்தக்கவராவார்‌. 49. கட்டணம்‌ அல்லது மற்றையத்‌ தொகையினை செலுத்துவதற்கான குற்றஞ்சாட்டப்பட்டவரின்‌ கடப்பாடு.- 48 ஆம்‌ பிரிவின்படித்‌ தண்டனைத்‌ தீர்ப்பு அளிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும்‌, இச்சட்டத்தின்படி அல்லது இச்சட்டத்தின்படிச்‌ செய்யப்பட்ட விதிகள்‌ அல்லது துணைவிதிகளின்படி அவரால்‌ கொடுபட வேண்டிய கட்டணம்‌ அல்லது மற்றைய தொகையை அவர்‌ செலுத்தாமலிருந்து விட்டார்‌ என குற்றவியல்‌ நடுவருக்கு மன நிறைவு அளிக்கும்‌ வகையில்‌ நிரூபிக்கப்படுவதன்‌ பேறில்‌, சந்தைக்குழுவிற்கு அவரால்‌ அத்தகைய கட்டணம்‌ அல்லது மற்றைய தொகை பொருட்டு கொடுபடலாகும்‌ தொகையினைச்‌ செலுத்துவதற்கு கடப்பாடு உடையவராவார்‌. 50. குற்றங்களை இணக்கமாகத்‌ தீர்த்தல்‌.- சந்தைக்‌ குழுவானது. இச்சட்டத்திற்கு எதிராக அல்லது இச்சட்டத்தின்படிச்‌ செய்யப்பட்ட விதிகள்‌ அல்லது துணைவிதிகளுக்கு எதிராக குற்றமொன்றை செய்துள்ள அல்லது செய்திருப்பதாக நியாயமாக சந்தேகப்படக்கூடிய நபர்‌ எவரிடமிருந்தும்‌ அத்தகைய குற்றத்தினை இணக்கமாக தீர்க்கப்படும்‌ முறையில்‌ (ஐ அந்தக்‌ குற்றமானது இச்சட்டத்தின்படி அல்லது இச்சட்டத்தின்படிச்‌ செய்யப்பட்ட விதிகள்‌ அல்லது துணை விதிகள்‌ ஆகியவற்றின்படி வசூலிக்கப்படத்தக்க கட்டணம்‌ அல்லது மற்றைய தொகை எதனையும்‌ செலுத்தத்‌ தவறுதல்‌ அல்லது ஏய்த்தல்‌ உள்ளடங்கியதாக இருக்கிறவிடத்து, அவ்வாறு வசூலிக்கப்படத்தக்க கட்டணம்‌ அல்லது மற்றைய தொகையோடு கூட ஓராயிரம்‌ ரூபாய்களுக்கு மேற்படாத ஒரு பணத்தொகை அல்லது அந்தக்‌ கட்டணத்தின்‌ அல்லது மற்றையத்‌ தொகையின்‌ இரண்டு மடங்கு, இவற்றில்‌ எது குறைவானதோ, அந்தத்‌ தொகையை; மற்றும்‌ (௦) மற்றைய நேர்வுகளில்‌, ஓராயிரத்து ஐநூறு ரூபாய்களுக்கு மேற்படாத ஒரு பணத்தொகையை, ஏற்றுக்கொள்ளலாம்‌. 51. சுருக்குமுறையாக கட்டம்‌ அல்லது மற்றைய தொகையை வனூலிப்பதற்கு குற்றவியல்‌ நடுவரின்‌. அதிகாரம்‌.- (1) இச்சட்டத்தின்படி அல்லது இச்சட்டத்தின்படிச்‌ செய்யப்பட்ட விதிகள்‌ அல்லது ஒழுங்குமுறை விதிகள்‌ அல்லது துணை விதிகளின்படி, குற்றமொன்றுக்காக, நபர்‌ எவரும்‌ தண்டனை தீர்ப்பளிக்கப்படு கிறவிடத்து, குற்றவியல்‌ நடுவரானவர்‌ விதிக்கப்படலாகும்‌ அபராதம்‌ எதனோடும்‌ கூட, இச்சட்டத்தின்படி அல்லது இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌ அல்லது ஒழுங்குமுறை விதிகள்‌ அல்லது துணைவிதிகளின்படி அவரிடமிருந்து கொடுபட வேண்டிய கட்டணத்‌ தொகையினை அல்லது மற்றையத்‌ தொகையினை சுருக்குமுறையில்‌ வசூலித்தலும்‌ மற்றும்‌ அதனைச்‌ சந்தைக்குழுவிற்கு செலுத்துதலும்‌ வேண்டும்‌. (2) இச்சட்டத்தின்படி ஒரு நீதிமன்றத்தினால்‌ விதிக்கப்படுகிற எல்லா அபராதங்களையும்‌, வசூலிக்கப்பட்டதன்‌ பேரில்‌ அரசின்‌ வருவாய்க்‌ கணக்கில்‌ வரவு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ நிதியாண்டு எதனின்‌ போதும்‌ அவ்வாறு வரவு வைக்கப்பட்ட மொத்தத்‌ தொகையானது அரசினால்‌ சந்தைக்குழு நிதியத்திற்கு பங்களிப்பாகச்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 52. விதிகள்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- (1) அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதி அல்லது பகுதிகளுக்கு பொதுவாகவோ தனிப்பட்ட முறையிலோ, இச்சட்டத்தின்‌ நோக்கங்கள்‌ எல்லாவற்றையுமோ அவற்றுள்‌ எதனையுமோ செயற்படுத்துவதற்காக விதிகளை அரசு செய்யலாம்‌. (2) குறிப்பாக மற்றும்‌ மேற்சொன்ன அதிகாரத்தின்‌ பொதுப்பாங்கிற்கு பாதகமின்றியும்‌, அத்தகைய விதிகள்‌ கீழ்க்கண்டவற்றிற்கு வகை செய்யலாம்‌ அல்லது முறைப்படுத்தலாம்‌, அதாவது (a) சந்தைக்‌ குழுவின்‌ உறுப்பினர்களை பெயர்‌ குறித்து நியமனஞ்‌ செய்தல்‌ மற்றும்‌ திரும்பப்பெறுதல்‌ அல்லது நிலவரத்திற்கேற்ப அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதியில்‌ உள்ள உற்பத்தியாளர்‌ மற்றும்‌ சந்தைக்‌ குழுவினால்‌ 8 ஆம்‌ பிரிவின்படி உரிமம்‌ அளிக்கப்பட்ட நபர்கள்‌ பட்டியல்களை தயாரித்தல்‌ மற்றும்‌ வெளியிடுதல்‌ மற்றும்‌ அதனை சீராய்வு செய்தல்‌; (b) சந்தைக்குழுவின்‌ தலைவர்‌ மற்றும்‌ துணைத்‌ தலைவர்‌ ஆகியோரின்‌ அதிகாரங்கள்‌, அவர்களது கடமைகள்‌ மற்றும்‌ பதவிக்காலம்‌; (6) சந்தைக்குழுவின்‌ தலைவர்‌ பதவி, துணைத்‌ தலைவர்‌ பதவி அல்லது உறுப்பினர்‌ பதவி ஆகியவற்றிலுள்ள தற்செயல்‌ காலியிடங்களை நிரப்புதல்‌; (0) சந்தைக்‌ குழுவின்‌ பொதுக்‌ கூட்டத்தை கோருதல்‌; (6) 8 ஆம்‌ பிரிவின்படி வழங்கப்பட்ட உரிமங்களைப்‌ பொறுத்து சந்தைக்குழுவினால்‌ பதவி ஆகியவற்றிலுள்ள தற்செயல்‌ காலியிடங்களை நிரப்புதல்‌; () வாரியத்தினால்‌ அல்லது சந்தைக்குழுவினால்‌ விதிக்கப்படலாகும்‌ உயர்ந்த அளவு சந்தா விதங்கள்‌ மற்றும்‌ அத்தகைய சந்தாக்களை வசூலித்தல்‌; (9) கட்டணங்களைத்‌ தீர்மானிப்பதற்கான நடைமுறை மற்றும்‌ அதனை வசூலிப்பதற்கான முறை; (h) 8 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி உரிமங்கள்‌ வழங்கப்படுவதற்கு அல்லது புதுப்பிக்கப்படுவதற்கான படிவம்‌ மற்றும்‌ அதற்கான நிபந்தனை மற்றும்‌ அதற்கு விதிக்கப்பட வேண்டிய கட்டணம்‌; (i) அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதியிலுள்ள சம்பந்தப்பட்ட அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளுக்கான நடவடிக்கைகளில்‌ எந்தத்‌ தராசுகள்‌, எடைகள்‌ மற்றும்‌ அளவைகள்‌ மட்டுமே பயன்படுத்த வேண்டுமோ அந்தத்‌ தராசுகள்‌, எடைகள்‌ மற்றும்‌ அளவைகளின்‌ வகை மற்றும்‌ விவரம்‌; () அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதியில்‌ உள்ள அனைத்து தராசுகள்‌, எடைகள்‌ மற்றும்‌ அளவைகள்‌ ஆகியவற்றின்‌ காலாந்திர ஆய்வு, பரிசோதிப்பு மற்றும்‌ மாற்றம்‌ மற்றும்‌ தவறாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட தராசுகள்‌, எடைகள்‌ மற்றும்‌ அளவைகள்‌ ஆகியவற்றை கைப்பற்றுகை; (k) அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதியில்‌ அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ சம்பந்தமான நடவடிக்கை எதிலும்‌ நபர்‌ எவராலும்‌ செய்யப்படக்கூடிய அல்லது பெறக்கூடிய வணிகக்‌ கழிவுரிமைகள்‌; ) அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளின்‌ தரம்‌ அல்லது எடை, உறைகள்‌, அழுக்கு அல்லது சுத்தமின்மை அல்லது காரணம்‌ எதற்காகவும்‌ கழித்தல்கள்‌ ஆகியவைகள்‌ பற்றியதான தகராறுகள்‌ உள்ளடங்கலான அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ வாங்குபவர்‌ மற்றும்‌ விற்பவர்‌ அல்லது அவர்களது முகவர்கள்‌ ஆகியோருக்குள்‌ உள்ள தகராறு எதனையும்‌ தீர்ப்பதற்கு வசதிகள்‌ வகைமுறை; (m) அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனின்‌ வாங்குபவர்‌ மற்றும்‌ விற்பவர்‌ ஆகிய இருவர்கள்‌ பொருட்டு உள்ள நடவடிக்கை எதிலும்‌ தரகு முகவர்கள்‌ மற்றும்‌ தரகர்கள்‌ ஆகியோர்‌ செயற்படுவதை தடை செய்தல்‌; (n) சந்தைக்குள்‌ கொண்டுவரப்பட்ட அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதையும்‌ சேமித்து வைப்பதற்கு இடவசதிக்காக வகைமுறை; (௦) வாரியத்தில்‌ அல்லது சந்தைக்குழுவின்‌ செலவில்‌ பகுதியாக அல்லது முழுவதுமாக கட்டப்படுவதற்கு கருதப்படுகிற பணிகளின்‌ திட்டங்கள்‌ அல்லது மதிப்பீடுகளை தயாரித்தல்‌; (2) சந்தைக்குழுவின்‌ செலவினமானது எந்த முறையில்‌ மற்றும்‌ எந்தக்‌ கட்டுப்பாடுகள்‌ மற்றும்‌ நிபந்தனைகள்‌ ஆகியவற்றிற்கு உட்பட்டு செலவழிக்கக்கூடியது என்பது உள்ளடங்கலான பொதுவாக நிதி சம்பந்தமாக வாரியம்‌ அல்லது சந்தைக்குழுவினால்‌ பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை; (@) வாரியம்‌ மற்றும்‌ சந்தைக்குழுக்களின்‌ கணக்குகள்‌ வைத்து வரப்பட வேண்டிய படிவம்‌, அத்தகைய கணக்குகளில்‌ தணிக்கை மற்றும்‌ வெளியீடு மற்றும்‌ அத்தகைய தணிக்கைக்கு செய்யப்பட வேண்டிய, கட்டணங்கள்‌ ஏதேனுமிருப்பின்‌. அவை; (r) (i) சந்தைக்குழுக்கள்‌ பொறுத்து இனங்களை (செலவு) மறுத்து வசூலிப்பு நடவடிக்கை (Surcharge) எடுப்பதற்கான தணிக்கையாளர்கள்‌ மற்றும்‌ வாரியங்களின்‌ அதிகாரங்கள்‌ மற்றும்‌ அவ்வாறு மறுக்கப்பட்டு வசூலிப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிற தொகைகளை வனளுலித்தல்‌; (i) வாரியத்தை பொறுத்து இனங்களை (செலவு) மற்றும்‌ வசூலிப்பு நடவடிக்கை (Surcharge) எடுப்பதற்கான தணிக்கையாளர்கள்‌ மற்றும்‌ அரசின்‌ அதிகாரங்கள்‌ மற்றும்‌ அவ்வாறு மறுக்கப்பட்டு வசூலிப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிற தொகைகளை வனளுலித்தல்‌; (5) வாரியத்தினால்‌ அல்லது சந்தைக்குழுவினால்‌ தயாரித்து ஏற்புக்காக பணிந்தனுப்ப வேண்டிய ஆண்டு வரவு செலவுத்‌ திட்டம்‌ மற்றும்‌ கொடுக்கப்பட வேண்டிய அறிக்கைகள்‌ மற்றும்‌ விவர அறிக்கைகள்‌; 1) வாரியத்தின்‌ அல்லது சந்தைக்குழுவின்‌ மிகை நிதியினை முதலீடு செய்தல்‌ மற்றும்‌ பயன்படுத்துதல்‌; (மு அறிவிக்கைச்‌. செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளின்‌ கலப்படத்தை தடுத்தல்‌; (v) அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளின்‌ தரங்களை பேணுதல்‌, W) அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருளின்‌ மீது பொறுப்பு சுமத்தப்பட்ட கடன்களைத்‌ தீர்ப்பதற்கான வசதிகளை நல்குவதற்கான வகைமுறை; (x) உரிமதாரர்களால்‌ கொடுக்கப்பட வேண்‌ டிய விவர அறிக்கைகள்‌ மற்றும்‌ கணக்குகள்‌ ஆகியவற்றின்‌ படிவம்‌ மற்றும்‌ அவர்களது கணக்குகள்‌ மற்றும்‌ சரக்கு இருப்புகளை ஆய்வு செய்தல்‌; (y) வாரியம்‌ மற்றும்‌ சந்தைக்‌ குழுவின்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ மற்றைய பணியாளர்கள்‌ ஆளெடுப்பு மற்றும்‌ பணி நிபந்தனைகள்‌; (2) வாரியத்தின்‌ மற்றும்‌ சந்தைக்குழுவின்‌ உறுப்பினர்கள்‌, அலுவலர்கள்‌. மற்றும்‌ பணியாளர்கள்‌ ஆகியோருக்கு கொடுபடலாகும்‌ பயண மற்றும்‌ மற்றைய படிகள்‌; (aa) சந்தைக்‌ குழுவின்‌ மற்றும்‌ வாரியத்தின்‌ ஆய்வு நடத்தப்பட வேண்டிய முறை: (bb) சந்தை வாரிய நிதியம்‌, சந்தை மேம்பாடு நிதியம்‌ ஆகியவற்றின்‌ வரவுகள்‌ மற்றும்‌ செலவுகளைப்‌ பொறுத்து பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை; (60) வகுத்துரைக்கப்பட வேண்டிய அல்லது வகுத்துரைக்கக்கூடிய மற்றைய பொருட்பாடு எதுவும்‌, இப்பிரிவின்படிச்‌ செய்யப்பட்ட விதி எதுவும்‌ அதன்‌ மீறுகை எதற்கும்‌ அல்லது இச்சட்டத்தின்படி வழங்கப்பட்ட உரிமம்‌ எதனின்‌ நிபந்தனைகள்‌ எதனின்‌ ம்றுகை எதற்கும்‌ ஓராயிரத்து ஐநாறு ரூபாய்கள்‌ வரை நீடிக்கலாகும்‌ அபராதத்தை விதித்து தண்டிக்கப்படத்தக்கது என்று வகை செய்யலாம்‌. (4) (ஐ இச்சட்டத்தின்படிச்‌ செய்யப்பட்ட எல்லா விதிகளும்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவைகள்‌ ஒரு குறிப்பிட்ட நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ என்று வெளிப்படையாகச்‌ சொல்லப்பட்டாலன்றி, அவை எந்த நாளில்‌ வெளியிடப்பட்டனவோ அந்த நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (௦) இச்சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட எல்லா அறிவிக்கைகளும்‌ அவை ஒரு குறிப்பிட்ட நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ என்று வெளிப்படையாகச்‌ சொல்லப்பட்டாலன்றி, அவை எந்த நாளில்‌ வெளியிடப்பட்டனவோ அந்த நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (6) இச்சட்டத்தின்படிச்‌ செய்யப்பட்ட ஒவ்வொரு விதியும்‌ அல்லது பிறப்பிக்கப்பட்ட ஒவ்வோர்‌ அறிவிக்கையும்‌, அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பிறகு, கூடிய விரைவில்‌, சட்டமன்றப்‌ பேரவை முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர்‌ அல்லது அடுத்த கூட்டத்தொடர்‌ முடிவடைவதற்கு முன்பு, அத்தகைய விதி அல்லது அறிவிக்கையில்‌ சட்டமன்றப்‌ பேரவையானது மாற்றம்‌ எதனையும்‌ செய்யுமாயின்‌ அந்த விதி அல்லது அறிவிக்கை செய்யப்படக்கூடாது அல்லது பிறப்பிக்கப்படக்கூடாது என முடிவு செய்யுமாயின்‌, அந்த விதி அல்லது அறிவிக்கை அதற்குப்‌ பிறகு அத்தகைய மாற்றப்பட்ட வடிவத்தில்‌ செயற்படல்‌ வேண்டும்‌ அல்லது, நேர்விற்கேற்ப, செயற்படாது இருத்தல்‌ வேண்டும்‌. எனினும்‌ அத்தகைய மாற்றம்‌ அல்லது பயனற்றதாக்குதல்‌ அந்த விதி அல்லது அறிவிக்கையின்படி முன்னதாகச்‌ செய்யப்பட்ட எதனின்‌ செல்லுந்தன்மைக்கும்‌ குந்தகமின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 53. ஒழுங்குமுறை விதிகள்‌ மற்றும்‌ துணை விதிகள்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- (1) 52 ஆம்‌ பிரிவின்படி அரசினால்‌ செய்யப்பட்ட விதிகள்‌ எதற்கும்‌ உட்பட்டு, வாரியமானது, அரசின்‌ முன்‌ ஒப்பளிப்புடன்‌, அதன்‌ அலுவல்‌ மற்றும்‌ சந்தைகளின்‌ முறைப்படுத்துகிற ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்யலாம்‌. வரம்புரை: ஆனால்‌, வாரியமானது அது அமைக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள்‌ இந்த உட்பிரிவின்படி ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்யத்‌ தவறுகிறவிடத்து, அரசு தாம்‌ பொருத்தமெனக்‌ கருதக்கூடிய ஒழுங்குமுறை விதிகளைச்‌ செய்யலாம்‌ மற்றும்‌ அவ்வாறு செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதிகள்‌: வாரியத்தினால்‌ செய்யப்பட்ட ஒழுங்கு முறைகளாகக்‌ கருதப்படல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அரசினால்‌ அல்லது அரசின்‌ முன்‌ ஒப்பளிப்புடன்‌, வாரியத்தினால்‌ திருத்தப்படவோ மாற்றப்படவோ செய்யலாம்‌. (2) குறிப்பாகவும்‌ மேற்சொன்ன அதிகாரத்தின்‌ பொதுப்பாங்கிற்கு பாதகமின்றியும்‌, அத்தகைய ஒழுங்குமுறை விதிகள்‌ பின்வரும்‌ பொருட்பாடுகள்‌ எல்லாவற்றிற்கும்‌ அல்லது அவைகளில்‌ எவற்றிற்கும்‌ வகை செய்யலாம்‌, அதாவது (ஐ வாரியத்தின்‌ கூட்டங்களைக்‌ கூட்டி நடத்துதல்‌ எந்த நேரத்திலும்‌ தேதியிலும்‌ அத்தகைய கூட்டங்கள்‌ நடத்தப்பட வேண்டும்‌, அத்தகைய கூட்டங்களில்‌ அலுவல்‌ நடத்துவது மற்றும்‌ அதற்குத்‌ தேவையான உறுப்பினர்களின்‌ குறைவெண்‌: (b) வாரியத்தின்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ அதிகாரங்கள்‌ மற்றும்‌ கடமைகள்‌; (6) வாரியத்தின்‌ சொத்தினை மேலாண்மை செய்தல்‌; (0) வாரியத்தின்‌ சார்பாக ஒப்பந்தங்கள்‌ மற்றும்‌ சொத்தின்‌ காப்பீட்டு நடவடிக்கைகள்‌ ஆகியவற்றை நிறைவேற்றுதல்‌; (8) வாரியத்தினால்‌ கணக்குகள்‌ பேணப்பட்டு வருதல்‌ மற்றும்‌ ஐந்தொகைக்‌ குறிப்புத்‌ தயாரிக்கப்படுதல்‌; () இச்சட்டத்தின்படி வாரியத்தின்‌ கடமைகளை நிறைவேற்றுவதற்கான நடைமுறை; (ஐ ஒழுங்குமுறை விதியில்‌ வகைமுறை செய்யப்பட வேண்டிய வேறு பொருட்பாடு ஏதேனும்‌. (3) 52 ஆம்‌ பிரிவின்படி செய்யப்பட்ட விதிகள்‌ எதற்கும்‌ உட்பட்டு, சந்தைக்‌ குழுவானது அரசின்‌ முன்‌ ஒப்பளிப்புடன்‌, அது எந்த அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளதோ, அந்த அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதிகளைப்‌ பொறுத்து, அவற்றில்‌ அலுவல்‌ வாணிகஞ்‌ செய்தலுக்கான நிபந்தனைகள்‌ மற்றும்‌ சந்தை மற்றும்‌ மற்றைய பொறுப்புகள்‌ உள்ளடங்கலான சந்தைகளின்‌ அன்றாட முறைப்படுத்துதல்‌ மற்றும்‌ நிருவாகம்‌ தொடர்பான மற்றைய பொருட்பாடுகள்‌ ஆகியவை குறித்து துணை விதிகள்‌ செய்யலாம்‌: ஆனால்‌ சந்தைக்‌ குழுவானது அது அமைக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள்‌ இந்த உட்பிரிவின்படி துணை விதிகளைச்‌ செய்யத்‌ தவறுகிறவிடத்து, வாரியம்‌ தான்‌ பொருத்தமெனக்‌ கருதலாகும்‌ துணை விதிகளைச்‌ செய்யலாம்‌. ஆனால்‌ சந்தைக்‌ குழுவினால்‌ செய்யப்பட்ட துணைவிதிகளாகக்‌ கருதப்படல்‌ வேண்டும்‌ மற்றும்‌ வாரியத்தினால்‌ அல்லது வாரியத்தின்‌ முன்‌ ஒப்பளிப்புடன்‌, சந்தைக்‌ குழுவினால்‌ திருத்தப்படவோ மாற்றப்படவோ செய்யலாம்‌. (4) இந்த உட்பிரிவின்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதி அல்லது துணை விதி எதிலும்‌, அதன்‌ மீறுகை எதுவும்‌ முன்னூறு ரூபாய்‌ வரை நீடிக்கக்கூடிய அபராதம்‌ விதித்துத்‌ தண்டிக்கப்படத்தக்கதாகும்‌ என்று வகை செய்யலாம்‌. 54. வசூலிக்க முடியாத தொகை முதலியவற்றை தள்ளுபடி செய்தல்‌.- சந்தைக்குழு அல்லது வாரியமானது அதற்கு ஒப்பந்தத்தின்‌ படியோ, மற்றப்படியோ கொடுபட வேண்டிய தொகை ஏதேனும்‌ இருப்பின்‌ அல்லது அது தொடர்பாக செலுத்தத்தக்க பணம்‌ எதனையும்‌, அதன்‌ கருத்தில்‌ அத்தகைய தொகை அல்லது பணம்‌ வசூலிக்க முடியாது எனில்‌, அந்தொகை எதனையும்‌ தள்ளுபடி செய்யலாம்‌; ஆனால்‌- (8) சந்தைக்‌ குழுவானது. () அந்தத்‌ தள்ளுபடி செய்ய வேண்டிய தொகை அல்லது பணம்‌ ஐயாயிரம்‌ ரூபாய்களுக்கு மேற்பட்டு ஆனால்‌ பத்தாயிரம்‌ ரூபாய்களுக்கு மேற்படாத நேர்விலும்‌ இயக்குநரின்‌, மற்றும்‌ (i) அந்தத்‌ தள்ளுபடி செய்யவேண்டிய தொகை அல்லது பணம்‌ பத்தாயிரம்‌ ரூபாய்களுக்கு மேற்பட்டு உள்ள ஒவ்வொரு நேர்விலும்‌, அரசின்‌, முன்‌ ஒப்பளிப்பினை பெறுதல்‌ வேண்டும்‌; (b) தள்ளுபடி செய்ய வேண்டிய அந்தத்‌ தொகை அல்லது பணம்‌ இருபதாயிரம்‌ ரூபாய்க்கு மேற்படுகிற ஒவ்வொரு நேர்விலும்‌, அந்த வாரியமானது அரசின்‌ முன்‌ ஒப்பளிப்பினை பெறுதல்‌ வேண்டும்‌. 55. ஒரு சில நடவடிக்கைகளின்‌ தடை.- (1) இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது செய்யப்படுவதாகத்‌ தென்படுகிற செயல்‌ எதற்கும்‌, சந்தைக்குழு அல்லது வாரியத்திற்கு எதிராக உரிமையியல்‌ வழக்கு அல்லது மற்றைய நடவடிக்கை எதுவும்‌ தொடுக்கப்படுதல்‌ ஆகாது. (2) (a) இச்சட்டத்தின்படி, அல்லது இச்சட்டத்தின்படிச்‌ செய்யப்பட்ட விதி, ஒழுங்குமுறை விதி, துணை விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை, எதனின்படி நல்லெண்ணத்துடன்‌ செய்யப்படுகிற அல்லது செய்வதற்கு கருதப்படுகிற செயல்‌ எதற்கும்‌, வாரியத்தின்‌ தலைவர்‌ அல்லது துணைத்‌ தலைவர்‌ அல்லது தலைமை நிருவாக அலுவலர்‌ அல்லது அலுவலர்‌ அல்லது பணியாளர்‌ அல்லது சந்தைக்குழுவின்‌ தலைவர்‌ அல்லது துணைத்‌ தலைவர்‌ அல்லது செயலாளர்‌ அல்லது அலுவலர்‌ அல்லது பணியாளர்‌ ஆகியோருக்கு எதிராக உரிமையியல்‌ வழக்கு அல்லது மற்றைய நடவடிக்கை எதுவும்‌ தொடுக்கப்படுதல்‌ ஆகாது. (௦) சந்தைக்‌ குழுவின்‌ தலைவர்‌ அல்லது துணைத்‌ தலைவர்‌ அல்லது செயலாளர்‌ அல்லது அலுவலர்‌ அல்லது பணியாளர்‌ அல்லது வாரியத்தின்‌ தலைவர்‌, துணைத்‌ தலைவர்‌ அல்லது தலைமை நிருவாக அலுவலர்‌ அல்லது அலுவலர்‌ அல்லது பணியாளர்‌, ஆகிய எவரும்‌ உரிமையியல்‌ அல்லது குற்றவியல்‌ நடவடிக்கை எதிலும்‌ அத்தகைய செயல்‌ எதனைப்‌ பொறுத்தும்‌ அச்செயலானது நல்லெண்ணத்துடன்‌, அவரால்‌, இச்சட்டத்தின்படியாகவோ, அதன்படியாகவோ அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அலுவல்களைப்‌ புரியும்போது அல்லது கடமைகளை நிறைவேற்றப்படும்போது, செய்யப்படுமாயின்‌, அச்செயல்‌ எதனையும்‌ பொறுத்து பொறுப்புடையவராகார்‌. 56. (வாரிய) தலைவர்‌ மற்றும்‌ துணைத்‌ தலைவர்‌ மற்றும்‌ (சந்தைக்குழு) தலைவர்‌ மற்றும்‌ துணைத்‌ தலைவர்‌ ஆகியோர்‌ பொது ஊழியர்களாக இருத்தல்‌.- வாரியத்தின்‌ தலைவர்‌ மற்றும்‌ துணைத்‌ தலைவர்‌ மற்றும்‌ சந்தைக்‌ குழுவின்‌ தலைவர்‌ மற்றும்‌ துணைத்‌ தலைவர்‌ ஆகியோர்‌ இந்தியத்‌ தண்டனைச்‌ சட்டம்‌ (மையச்‌ சட்டம்‌ XLV/1860) 21 ஆம்‌ பிரிவின்‌ பொருளின்படி பொது ஊழியர்களாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌. 57. ஒரு சில உரிமையியல்‌ வழக்குகள்‌ மற்றும்‌ குற்ற வழக்குகள்‌ ஆகியவைக்கான கால வரம்பு.-- இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது செய்யப்படுவதாகத்‌ தென்படுகிற செயல்‌ எதற்காகவும்‌, சந்தைக்குழுவின்‌ தலைவர்‌ அல்லது துணைத்‌ தலைவர்‌ அல்லது செயலாளர்‌ அல்லது அலுவலர்‌ அல்லது பணியாளர்‌ அல்லது வாரியத்தின்‌ தலைவர்‌ அல்லது துணைத்‌ தலைவர்‌ அல்லது தலைமை நிருவாக அலுவலர்‌ அல்லது அலுவலர்‌ அல்லது பணியாளர்‌ ஆகியோருக்கு எதிராக, உரிமையியல்‌ வழக்கு, குற்ற வழக்கு அல்லது மற்றைய நடவடிக்கை எதுவும்‌, அத்தகைய உரிமையியல்‌ வழக்கு, குற்ற வழக்கு அல்லது மற்றைய நடவடிக்கை, அச்செயலுக்கு முறையிடப்பட்ட தேதியில்‌ இருந்து ஆறு மாதங்களுக்குள்‌: தொடுக்கப்பட்டாலன்றி, தொடுக்கப்படுதல்‌ ஆகாது. 58. குற்றங்களை விசாரணை செய்தல்‌.- இச்சட்டத்தினால்‌ அல்லது இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி, ஒழுங்குமுறை விதி அல்லது துணை விதி எதன்படியும்‌ தண்டிக்கத்தக்க குற்றம்‌ எதுவும்‌, புறநகர்‌ குற்றவியல்‌ நடுவர்‌ அல்லது முதல்‌ வகுப்பு குற்றவியல்‌ நீதித்துறை நடுவர்‌ நீதிமன்றத்திற்கு கழமைந்த நீதிமன்றம்‌ எதனாலும்‌ விசாரணை செய்யப்படத்தக்கதல்ல. 59. தொகைகளை வளூலித்தல்‌.- வாரியத்திலிருந்து அரசுக்கு கொடுபட வேண்டிய எல்லாத்‌ தொகைகளும்‌ சந்தைக்‌ குழுவிலிருந்து அரசுக்கோ வாரியத்திற்கோ கொடுபட வேண்டிய எல்லா தொகைகளும்‌ மற்றும்‌ இச்சட்டம்‌, விதிகள்‌ ஒழுங்குமுறை விதிகள்‌ அல்லது துணை விதிகள்‌ ஆகியவற்றின்படி கட்டணங்களாகவோ, அல்லது மற்றபடியோ வாரியத்திற்கோ அல்லது சந்தைக்‌ குழுவிற்கோ கொடுபட வேண்டிய எல்லா கதொகைகளும்‌ நில வருவாய்‌ நிலுவைகள்‌ போன்றவாறு அதே முறையில்‌ வசூலிக்கப்படலாம்‌. 60. மேலாய்வு.-- (1) சந்தைக்குழு எதனின்‌ அல்லது வாரியம்‌ அல்லது இயக்குநர்‌ அல்லது ஆட்சியரின்‌ பதிவுருவை எந்த நடவடிக்கை பொறுத்தும்‌ கோரி தருவித்து அத்தகைய நடவடிக்கையின்‌ முறைமையினை குறித்து அல்லது அதில்‌ செய்யப்பட்ட முடிவு அல்லது ஆணை எதனின்‌ சீர்மை, சட்ட சீலம்‌ அல்லது பொருத்தமுடைமை குறித்து தாம்‌ மனநிறைவு கொள்ளும்‌ பொருட்டு அரசு ஆய்வு செய்யலாம்‌, மற்றும்‌ நேர்வு எதிலும்‌ அத்தகைய முடிவு அல்லது ஆணையானது மாற்றப்படவோ பயனற்றதாக்கப்படவோ மாறாக்கப்படுவதற்கோ மறு பரிசீலனைக்காக திருப்பி அனுப்பப்படுவதற்கோ வேண்டுமென அரசுக்கு தோன்றுமாயின்‌, அதன்பின்பு அரசு அவ்வண்ணமே ஆணைகளை பிறப்பிக்கலாம்‌: ஆனால்‌ இப்பிரிவின்படி ஆணை எதுவும்‌ பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு, அரசு,- (ஐ) அத்தகைய ஆணையானது நபர்‌ எவருக்கும்‌ பாதகமாக இருக்குமாயின்‌, அத்தகைய நபருக்கு அவரது முறையீடுகளைச்‌ செய்வதற்கான நியாயமான வாய்ப்பினைக்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (b) தாம்‌ பொருத்தமெனக்‌ கருதக்கூடிய அதிகார அமைப்பைக்‌ கலந்தாலோசிக்கலாம்‌. (2) அரசு அத்தகைய முடிவு அல்லது ஆணையை நிறைவேற்றுவதை அதனைப்‌ பொறுத்த (1) ஆம்‌ உட்பிரிவின்படியான தனது அதிகாரங்களைச்‌ செலுத்துகின்ற வரையில்‌ நிறுத்தி வைக்கலாம்‌. 61. வாரியம்‌ அல்லது சந்தைக்குழு சார்பாக எழுதி கொடுக்கப்படுகிற ஆவணங்களைப்‌ பதிவு செய்தல்‌.- (1) 1908 ஆம்‌ ஆண்டு பதிவுச்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 314908) என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, வாரியத்தின்‌ அல்லது சந்தைக்குழுவின்‌ தலைவர்‌ அல்லது அலுவலர்‌ அல்லது பணியாளர்‌ அல்லது தம்மால்‌ அச்சட்டத்தின்‌ 5௦ வது பிரிவில்‌ வகை செய்யப்பட்டவாறு கையெழுத்திடுவதற்கு, பதிவு அலுவலகம்‌ எதிலும்‌ நேரிலோ முகவர்‌ மூலமாகவோ வர வேண்டிய அவசியம்‌ இல்லை. (2) ஆவணம்‌ எதுவும்‌ அவ்வாறு எழுதிக்‌ கொடுக்கப்படுகிறவிடத்து, பதிவு செய்வதற்காக அந்த ஆவணம்‌ எந்தப்‌ பதிவு செய்யும்‌ அலுவலருக்கு தாக்கல்‌ செய்யப்பட்டதோ அந்தப்‌ பதிவு அலுவலர்‌ தாம்‌ பொருத்தமெனக்‌ கருதினால்‌ அதனைப்பொறுத்து, அத்தகைய தலைவர்‌, உறுப்பினர்‌, அலுவலர்‌, பணியாளர்‌ அல்லது தனி அலுவலருக்கு தகவலுக்கு சுட்டியனுப்பலாம்‌ மற்றும்‌ அதனை எழுதி கொடுக்கப்பட்டது குறித்து மனநிறைவு கொள்வதன்‌ பேரில்‌ அந்த ஆவணத்தை பதிவு செய்தல்‌ வேண்டும்‌. 62. ஒரு சில நடவடிக்கைகள்‌ முதலியவற்றில்‌ ஏவுகட்டளை கொடுத்தல்‌ ஆகாது.- 1908 ஆம்‌ ஆண்டு உரிமையியல்‌ விசாரணை முறைச்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ ௩74908) அல்லது அவ்வப்போது நடைமுறையிலுள்ள வேறு எந்தச்‌ சட்டத்தில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, பெயர்‌ குறித்து நியமனஞ்‌ செய்யப்படுகிற நோக்கங்களுக்கு 8 ஆம்‌ பிரிவின்படி உரிமம்‌ அளிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள்‌. அல்லது நபர்களின்‌ பட்டியல்‌ எதனையும்‌ தயாரித்தல்‌ அல்லது வெளியிடுதல்‌ உள்ளடங்கலான இச்சட்டத்தின்படியான பெயர்‌ குறித்து நியமனஞ்‌ செய்தல்‌ அல்லது நியமனம்‌ தொடர்பாக நீதிமன்றம்‌ எதுவும்‌ நிலையான அல்லது தற்காலிக ஏவுகட்டளை எதனையும்‌ வழங்கவோ அல்லது எவ்வகையிலும்‌ இடைக்கால கட்டளை எதனையும்‌ செய்யவோ கூடாது. 63. வாரியத்தலைவர்‌, துணைத்தலைவர்‌, சந்தைக்குழுத்‌ தலைவர்‌, துணைத்‌ தலைவர்‌ மற்றும்‌ உறுப்பினர்‌ ஆகியோர்‌ இழப்பு, கழிவு அல்லது தவறான பயன்படுத்துகை ஆகியவற்றுக்கு கடப்பாடு.- (1) வாரியத்தலைவர்‌, துணைத்தலைவர்‌ மற்றும்‌ ஒவ்வொரு உறுப்பினர்‌ மற்றும்‌ சந்தைக்குழுத்‌ தலைவர்‌, துணைத்தலைவர்‌ மற்றும்‌ ஒவ்வொரு உறுப்பினர்‌ ஆகியோர்‌ அந்த வாரியம்‌ அல்லது நிலவரத்திற்கேற்ப அந்த சந்தைக்குழுவிற்குச்‌ சொந்தமான அல்லது அதனிடம்‌ மேவியுள்ள பணம்‌ அல்லது மற்றையச்‌ சொத்து எதனின்‌ இழப்பு, கழிவு அல்லது தவறாகப்‌ பயன்படுத்துகைக்கு, அத்தகைய இழப்பு, கழிவு அல்லது தவறாக பயன்படுத்துகையானது அவரது கவனமின்மை அல்லது கெட்ட நடத்தையின்‌ நேரடி விளைவாக இருக்குமாயின்‌ கடப்பாடுடையவராக இருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அவர்‌ மீது இழப்பீடுக்காக உரிமையியல்‌ வழக்கு தகுதி வாய்ந்த அதிகார வரம்பினையுடைய நீதிமன்றம்‌ எதிலும்‌ இயக்குநரால்‌ தொடுக்கப்படலாம்‌. (2) அத்தகைய ஒவ்வொரு உரிமையியல்‌ வழக்கும்‌ அந்த வழக்கு மூலம்‌ எழுந்த தேதிக்குப்‌ பிறகு மூன்று ஆண்டுகளுக்குள்‌ தொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌. 64. விலக்கு.- இச்சட்டத்திலுள்ள எதுவும்‌ அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை விளைபொருள்‌ எதனையும்‌ மைய அரசு அல்லது மாநில அரசு எதனாலும்‌, வாங்கல்‌ அல்லது விற்றலுக்கு பொருந்துதல்‌ ஆகாது. 64-A. சந்தைக்குழுவிற்கு அல்லது வாரியத்திற்கு விலக்களிப்பதற்காண அதிகாரம்‌.- அரசு பொது நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு, பொது அல்லது சிறப்பு ஆணையின்‌ மூலம்‌, ஒரு முன்தேதியிலிருந்து அல்லது இனிவரும்‌ தேதியிலிருந்து. (ஐ 33 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவு அல்லாத, இந்தச்‌ சட்டத்தின்‌ பிற வகைமுறைகளில்‌ அல்லது விதிகளில்‌ ஏதொன்றிலுமிருந்தும்‌ குறித்துரைக்கப்படக்கூடிய நிபந்தனைகளுக்குட்பட்டு சந்தைக்குழு அல்லது வாரியம்‌ எதற்கும்‌ விலக்களிக்கலாம்‌; அல்லது (0௦) அந்த ஆணையில்‌ குறித்துரைக்கப்படக்கூடிய விதிகளின்‌ வகைமுறைகள்‌, அதில்‌ குறித்துரைக்கப்படக்கூடிய மாறுதல்களுடன்‌: பொருந்துதல்‌ வேண்டும்‌ எனப்‌ பணிக்கலாம்‌. 65. இணைப்புப்‌ பட்டியலைத்‌ திருத்துவதற்கான அதிகாரம்‌. (1) அரசு, அறிவிக்கை மூலமாக, இந்த இணைப்புப்பட்டியலை அதில்‌ வேளாண்மை விளைபொருள்‌ எதனையும்‌ சேர்ப்பதற்கு அல்லது அதிலிருந்து வேளாண்மை விளைபொருள்‌ எதனையும்‌ நீக்குவதற்கு அல்லது அதிலுள்ள வேளாண்மை விளைபொருள்‌ எதனின்‌ விவரிப்பினை மாற்றுவதற்கு, திருத்தலாம்‌. (2) இந்த இணைப்புப்பட்டியலானது அவ்வாறு, திருத்தப்படுகிற போது, இச்சட்டத்தில்‌ இந்த இணைப்புப்பட்டியலைக்‌ குறித்தான குறிப்பு எதுவும்‌ அவ்வாறு திருத்தப்பட்டவாறான இந்த இணைப்புப்பட்டியல்‌ குறித்தான குறிப்பாகப்‌ பொருள்கோள்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 66. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌.- இச்சட்டத்தின்‌ வகைமுறைகளைச்‌ செயற்படுத்துவதில்‌ இடர்ப்பாடு ஏதேனும்‌ எழுமாயின்‌ அரசு, நேர்விற்கேற்ப ஆணை மூலமாக இச்சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு முரண்பாடு இல்லாத முறையில்‌ இந்த இடர்ப்பாட்டினை நீக்குவதற்கு அவசியமாக அல்லது உகந்ததாகத்‌ தோன்றுகிற செயல்‌ எதனையும்‌ செய்யலாம்‌. ஆனால்‌ அத்தகைய ஆணை எதுவும்‌ இச்சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதியில்‌ இருந்து இரண்டு ஆண்டுகள்‌ முடிவடைந்த பிறகு செய்யப்படுதல்‌ ஆகாது. 67. நீக்கறவும்‌ காப்புகளும்‌-- (1) 1959 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள்‌ சந்தைகள்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 23,1959) (இப்பிரிவில்‌ இதன்‌. பின்பு சொல்லப்பட்ட சட்டம்‌ எனக்‌ குறிப்பிடப்படுவது) இதன்‌ மூலம்‌ நீக்கறவு செய்யப்படுகிறது. 2 1) ஆம்‌ உட்பிரிவின்படியாகச்‌ சொல்லப்பட்டச்‌ சட்டத்தின்‌. அழித்தறவானது, (8) சொல்லப்பட்டச்‌ சட்டத்தின்‌ முன்‌ செயற்பாடு அல்லது அதன்படிச்‌ செய்யப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட எதனையும்‌ பாதித்தலாகாது; அல்லது (௦) சொல்லப்பட்டச்‌ சட்டத்தின்படி கையகப்படுத்தப்பட்ட வந்தடைந்த அல்லது உள்ளாகிற உரிமை, சிறப்பு, உரிமை கடப்பாடு அல்லது பொறுப்பு எதனையும்‌ பாதித்தலாகாது;: அல்லது (6) சொல்லப்பட்டச்‌ சட்டத்திற்கு எதிராக செய்யப்பட்ட குற்றம்‌ எதையும்‌ பொறுத்து உள்ளாகிற தண்டம்‌, தண்ட இழப்பு அல்லது தண்டனை எதனையும்‌ பாதித்தலாகாது; அல்லது (d) மேற்சொன்னவாறான அத்தகைய உரிமை, சிறப்புரிமை, கடப்பாடு, பொறுப்பு, தண்டம்‌, தண்ட இழப்பு அல்லது தண்டனை பொறுத்ததான, புலனாய்வு, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி (Remedy), எதனையும்‌ பாதித்தலாகாது; மற்றும்‌ அத்தகைய புலனாய்வு, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி எதுவும்‌ தொடுக்கப்படவோ தொடரப்படவோ அல்லது செயற்படுத்தப்பவோ, செய்யலாம்‌; மற்றும்‌ அத்தகைய தண்டம்‌, தண்ட இழப்பு அல்லது தண்டனையானது இச்சட்டமானது நிறைவேற்றப்படாதவாறு போன்று விதிக்கப்படலாம்‌. (3) உட்பிரிவு (2) இன்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு சொல்லப்பட்ட சட்டத்தின்படிச்‌ செய்யப்பட்ட நியமனம்‌ அல்லது அதிகார ஒப்படைப்பு எதுவும்‌, பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை, ஆணை, அறிவுறுத்தல்‌ அல்லது பணிப்புரை எதுவும்‌, அல்லது வரையப்பட்ட விதி, ஒழுங்குமுறை அல்லது படிவம்‌ எதுவும்‌ வழங்கப்பட்ட சான்றிதழ்‌ அல்லது செய்யப்பட்ட பதிவு ஆகியவை உள்ளடங்கலான, செய்யப்பட்ட எதுவும்‌ அல்லது எடுக்கப்பட்ட செயல்‌ எதுவும்‌, இச்சட்டத்தின்படிச்‌ செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட எதனாலும்‌ அல்லது எடுக்கப்பட்ட செயல்‌ எதனாலும்‌ இரத்துச்‌ செய்யப்பட்டாலன்றி அவ்வண்ணமே தொடர்ந்து செயற்படுதல்‌ வேண்டும்‌. (4) சொல்லப்பட்ட சட்டத்தை நீக்கறவு செய்த போதிலும்‌, சொல்லப்பட்டச்‌ சட்டத்தின்படி அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதியாக விளம்பப்படுகிற பகுதி எதுவும்‌ இச்சட்டத்தின்படியான ஓர்‌ அறிவிக்கைச்‌ செய்யப்பட்ட பகுதியாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌; சொல்லப்பட்டச்‌ சட்டத்தின்படி மேற்சொன்ன அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிக்கு அமைக்கப்பட்ட சந்தைக்‌ குழு மற்றும்‌ இச்சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதிக்கு அடுத்து முன்பு அதிகார வரம்பினை உடையதாக இருக்கிற எதுவும்‌ இச்சட்டத்தின்படி மேற்சொன்ன அறிவிக்கை செய்பப்பட்ட பகுதிக்காக அமைக்கப்பட்ட சந்தைக்‌ குழுவாகக்‌ கருதப்படல்‌ வேண்டும்‌ அத்தகைய சந்தைக்குழுவின்‌ எல்லா உறுப்பினர்களும்‌ இச்சட்டத்தின்படி பெயர்‌ குறித்து நியமனஞ்‌ செய்யப்பட்ட சட்டத்தின்படி அமைக்கப்பட்ட சந்தை எதுவும்‌ இச்சட்டத்தின்படி அமைக்கப்பட்ட சந்தையாக கருதப்படல்‌ வேண்டும்‌. இணைபப்புப்பட்டியல்‌ (2(20) மற்றும்‌ 65 பிரிவுகளைக்‌ காண்க.) வேளாண்மை விளைபொருளின்‌ பிரிவு (1) 1. தானியங்கள்‌. ॥. பருப்புகள்‌. வேளாண்மை விளைபொருளின்‌ பெயர்‌ (2) 1. நெல்‌. 2. எல்லா வடிவங்களிலும்‌ உள்ள அரிசி. 3. எல்லா வடிவங்களிலும்‌ உள்ள கோதுமை. 4. எல்லா வடிவங்களிலும்‌ உள்ள சோளம்‌ (Jowar). 5. எல்லா வடிவங்களிலும்‌ உள்ள கம்பு. 6. எல்லா வடிவங்களிலும்‌ உள்ள ராகி. 7. எல்லா வடிவங்களிலும்‌ உள்ள மக்காச்சோளம்‌. 8. தினை. 9. குதிரைவாலி. 10. வரகு. 11. சாமை. 1. எல்லா வடிவங்களிலும்‌ உள்ள துவரை. 2. எல்லா வடிவங்களிலும்‌ உள்ள உளுந்து. 3. எல்லா வடிவங்களிலும்‌ உள்ள பச்சைப்பயிறு. 4. எல்லா வடிவங்களிலும்‌ உள்ள கொண்டைக்கடலை. 5. எல்லா வடிவங்களிலும்‌ உள்ள பட்டாணி. ॥. எண்ணை வித்துக்கள்‌. V. நூலிழைகள்‌. V. காய்கறிகள்‌. 6. எல்லா வடிவங்களிலும்‌ உள்ள மொச்சை. 7. எல்லா வடிவங்களிலும்‌ உள்ள காராமணி. 8. எல்லா வடிவங்களிலும்‌ உள்ள சோயா பருப்பு. 9. எல்லா வடிவங்களிலும்‌ உள்ள கொள்ளு. 1. முழு அல்லது உடைக்கப்பட்ட வேர்க்கடலை (தோலோடு உள்ள மற்றும்‌ தோல்‌ நீக்கப்பட்ட) 2. நல்லெண்ணை அல்லது நல்லெண்ணை விதை அல்லது எள்‌. 3. ஆமணக்கு (தோலோடு உள்ள மற்றும்‌ தோல்‌ நீக்கப்பட்ட) 4. சூர்யகாந்தி விதைகள்‌ அல்லது கொட்டைகள்‌. 5. தேங்காய்‌ (உரிக்காமல்‌ அல்லது உரிக்கப்பட்ட அல்லது கொப்பரை). 6. பருத்தி விதை 7. கடுகு. 8. நிகார்‌ விதைகள்‌. 9. சூரியகாந்தி விதைகள்‌ 10. வேப்ப விதைகள்‌. 1. பருத்தி (கபாஸ்‌, லின்ட்‌, கழிவு). 2. தேங்காய்‌ நார்‌. 1. கத்திரிக்காய்‌. 2. வெண்டைக்காய்‌. 3. உருளைக்கிழங்கு. 4. வெங்காயம்‌. 5. கொடிக்காய்கள்‌ (புடலங்காய்‌ அல்லது புடலை) பாகற்காய்‌ அல்லது பாகை, சுரைக்காய்‌ அல்லது சுரை, பூசணிக்காய்‌ அல்லது பரங்கிக்காய்‌, பீர்க்கங்காய்‌. 6. தக்காளி. 7. முருங்கைக்காய்‌ (முருங்கை). 8. கீரைகள்‌. 9. பச்சை மிளகாய்‌. ஙி. பழங்கள்‌. ஙு. மருந்துகளும்‌ மயக்க மருந்து பொருள்களும்‌. ஙி கிழங்குகள்‌. 10. கிழங்குகள்‌ (அனைத்து வகையும்‌). 41. அவரை. 12. முட்டைகோஸ்‌. 13. காலிபிளவர்‌. 14. முள்ளங்கி வகைகளும்‌). 15. காரட்‌. 16. பீன்ஸ்‌ (அனைத்து வகைகளும்‌). 17. சர்க்கரை வள்ளிக்கிழங்கு. 18. வாழைக்காய்‌ (வாழக்காய்‌). (அனைத்து 19. செள செள: (பெங்களூர்‌ கத்திரிக்காய்‌). 20. கரிவேப்பிலை. 21. நூல்கோல்‌. 22. டர்னிப்ஸ்‌. 23. பச்சைப்பட்டாணி. 24. கொத்தவரை. 25. பீட்ரூட்‌. 26. அகத்தி. 1. வாழைப்பழம்‌. 2. மாம்பழம்‌. 3. கொய்யாபழம்‌. 4. திராட்சை (கொடிமுந்திரி). 5. எலுமிச்சை (சாத்துகுடி, கமலாப்பழம்‌, ஆரஞ்சு, எலுமிச்சம்பழம்‌, திராட்சை). 6. மாதுளை. 7. பலா. 8. முலாம்பழம்‌. 9. அன்னாசி. 10. ஆப்பிள்‌. 11. பேரியினக்காய்‌ வகை. 12. பிளம்ஸ்‌. 13. பப்பாளி. 14. சப்போட்டா (Chikoo). 15. வெள்ளரி. அனைத்து வகையிலான புகையிலை. மரவள்ளிக்‌ கிழங்குகள்‌, மரவள்ளிப்‌ பட்டைகள்‌, மரவள்ளி மாவு, மரவள்ளி மாவுச்சத்து. 06... சுவையூட்டும்‌ பொருள்களும்‌ 1. மிளகாய்‌ அல்லது சிவப்பு மிளகாய்‌. நறுமணப்‌ பொருள்களும்‌. X. கால்நடைப்‌ பொருட்கள்‌. 34. தேனி வளர்ப்பு. XII. Bedr வளர்ப்பு. 2டவனப்பொருட்கள்‌. XIV. பட்டுப்பூச்சி வளர்ப்பு. 2. பூண்டு. 3. அனைத்து வகை மஞ்சள்‌ (விரலி மஞ்சள்‌). 4. கொத்துமல்லி விதைகள்‌ (Dhania 5௦605). 5. ஏலக்காய்‌. 6. பாக்கு (முழுமையானது அல்லது உடைக்கப்பட்டதும்‌). 7. அனைத்து வகை புளி. 8. அனைத்து வகை முந்திரிப்‌ பருப்புகள்‌. 9. அனைத்து வகை இஞ்சி (இஞ்சி, சுக்கு முதலியன). 10. கொழுந்து வெற்றிலை அல்லது வெற்றிலை. 1. வெண்ணெய்‌. 2. கால்நடை. 3. முட்டைகள்‌. 4. நெய்‌. 5. வெள்ளாடு. 6. விலங்கின்‌ பதனிடப்பட்ட தோல்களும்‌, தோல்களும்‌. 7. பால்‌. 8. பன்றி. 9. வளர்ப்பு பறவைகள்‌. 10. ஆடுகள்‌. 11. கம்பளி. தேன்‌. மீன்‌ 1. மூங்கில்‌. 2. புகையிலை. 3. பிசின்‌. 4. கோந்து. 5. கடுக்காய்‌ (Myrobalan (விபர). 1. பட்டுப்பூச்சி கூடு. 2. பட்டு இழை. XV. பல்வகை. 1. அனைத்து வகை கரும்பு வெல்லம்‌ (வெல்லப்பொடி, பழுப்புச்‌ சர்க்கரை). 2. அனைத்து வகை பனைவெல்லம்‌.

Rules, notifications and orders under this Act

Listed from India Code. Each opens there.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts