Tamil Nadu · 1999 · Act 25
The Tamil Nadu Advocates' Clerks Welfare Fund Act, 1999
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
1999ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்
எழுத்தர்களின் நலநிதிச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 25/1999)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
The Tamil Nadu Advocates’ Clerks Welfare Fund
Act, 1999
(Tamil Nadu Act No.25 of 1999)
(as on 31 October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
சென்னை
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
i
1999ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்
எழுத்தர்களின் நலநிதிச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 251999)
பிரிவு பொருளடக்கம்
1. குறுந்தலைப்பும் தொடக்கமும்.
2. பொருள்வரையறைகள்.
3. வழக்குரைஞர் எழுத்தர்களின் நலநிதி.
4. நலநிதிக் குழுவை நிறுவுதல்.
5. குழுவின். நியமன உறுப்பினர்களின்
தகுதிக்கேடும் நீக்கமும்.
6. குழுவின் நியமன உறுப்பினர்கள் பதவி
விலகுதலும் தற்காலிகக் காலிப்பணியிடங்கள்
நிரப்பப்படுதலும்.
7. காலியிடம், குறைபாடு முதலானவற்றின்
காரணமாகக் குழுவின் செயல் செல்லத்தகாதது
ஆகாது.
8. நிதி ஒப்படைப்பும் பயன்பாடும்.
9. குழுவின் அலுவல்கள்.
10. நிதி கடன் வாங்குதலும் முதலீடு செய்தலும்.
11. ஓசயலாளரின் அதிகாரங்களும் கடமைகளும்.
12. தமிழ்நாடு வழக்குரைஞர் எழுத்தர்களின்
நலநிதி முத்திரைவில்லை.
13. வழக்குரைஞர் எழுத்தர் சங்கத்தின்:
அனுமதியும் பதிவும்.
14. வழக்குரைஞர் எழுத்தர் சங்கங்களின்
கடமைகள்.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
ம்
நிதியின் உறுப்பினர் பதவி.
தொழில் நடத்துவது நிறுத்தப்படுவதன்பேரில்
நிதியிலிருந்து தொகை வழங்குதல்.
உறுப்பினர்களின் உரிமை நலனை
அயலடைவு, பற்றுகைச் செய்வதற்கான
கட்டுப்பாடு
உறுப்பினர்களுக்கான
கூட்டுக்காப்பிட்டுத்திட்டமும் பிற நன்மைகளும்.
குழுவின் கூட்டங்கள்.
குழு உறுப்பினர்களுக்கான பயணப்படியும்
நாள்படியும்.
மறுஆய்வு.
நல்லெண்ணத்தில் எடுக்கப்படும்
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
உரிமையியல் நீதிமன்றங்களின்.
அதிகாரவரம்பிற்குத் தடை.
சாட்சிகளைத் தருவிப்பதற்கும் சான்றுகளை
எடுப்பதற்குமான அதிகாரம்.
இணைப்புப்பட்டியலைத் திருத்துவதற்கான
அதிகாரம்.
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
இணைபப்புப்பட்டியல்
1
1999ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்
எழுத்தர்களின் நலநிதிச் சட்டம்
தமிழ்நாடு சட்ட எண் 25/1999
[தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் பின்வரும் சட்டமானது
1999ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 17ஆம் நாளன்று ஆளுநரின்
ஏற்பிசைவைப் பெற்று பொதுத்தகவலுக்காகத் தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு மாநிலத்தில் வழக்குரைஞர் எழுத்தர்களின்
நலனுக்கான நலநிதி ஒன்றை அமைப்பதற்கும்
மற்றும் அதனோடு தொடர்புடையனவற்றிற்கும்
அல்லது அதைச் சார்ந்தவற்றிற்கும்
வகைசெய்வதற்கான ஒரு சட்டம்.
இந்தியக் குடியரசின் ஐம்பதாம் ஆண்டில் தமிழ்நாடு
மாநிலச் சட்டமன்றப் பேரவையால் இயற்றப்பட்ட சட்டம்
பின்வருமாறு:-
1. குறுந்தலைப்பும் தொடக்கமும்.- (1) இந்தச் சட்டம்,
1999ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்
எழுத்தர்களின் நலநிதிச் சட்டம் என வழங்கப்படும் .
(2) இது, மாநில அரசு அறிவிக்கையின் மூலம்
குறிப்பிடக்கூடிய நாளன்று நடைமுறைக்கு வருதல்
வேண்டும்.
2. பொருள்வரையறைகள்.- இந்தச் சட்டத்தில்,
தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-
(2) "வழக்குரைஞர்" என்பது, 1961ஆம் ஆண்டு
வழக்குரைஞர்கள் சட்டத்தின் (மையச் சட்டம் 251961)
பிரிவு 17இன்படி, வழக்குரைஞர் சபையால்
தயாரிக்கப்பட்டுப் பேணிவரப்படும். வழக்குரைஞர்
பட்டியலில் தம்பெயரை பதிவு செய்திருக்கிறவரும்,
வழக்குரைஞர் குழாம் ஒன்றில் அல்லது வழக்குரைஞர்
2
சங்கம் ஒன்றில் உறுப்பினராக உள்ள நபர் ஒருவரும் எனப்
பொருள்படும்;
(b) "வழக்குறைஞர் சங்கம்" என்பது, 1987ஆம்
ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர் நலநிதிச் சட்டத்தின்
(தமிழ்நாடு சட்டம் 49/1987)
பிரிவு 13இன்படி வழக்குரைஞர் சபையினால்.
அங்கீகரிக்கப்பட்டுள்ள வழக்குரைஞர்களின் சங்கம்
ஒன்று எனப் பொருள்படும்;
(9) "வழக்குரைஞர் எழுத்தர்" என்பது,
வகுத்துரைக்கப்படும் முறையில் வழக்குரைஞர் ஒருவரால்
வேலைக்கு அமர்த்தப்பட்டு, அத்தகைய
அதிகாரஅமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவரும்
வழக்குரைஞர் எழுத்தர்களின் சங்கத்தில் உறுப்பினராக
உள்ள நபர் ஒருவரும் எனப் பொருள்படும்;
(0) "வழக்குரைஞர் எழுத்தர்களின் சங்கம்"
என்பது, பிரிவு 13இன்படி பதிவு செய்யப்பட்டு
அங்கீகரிக்கப்பட்ட வழக்குரைஞர் எழுத்தர்களின் ஒரு
சங்கம் எனப் பொருள்படும்;
(6) "வழக்குரைஞர் குழாம்" என்பது, 1987 ஆம்
ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நலநிதிச் சட்டத்தின்
பிரிவு 13இன்படி வழக்குரைஞர் சபையினால்
அங்கீகரிக்கப்பட்டுள்ள மற்றும் பதிவுசெய்யப்பட்டுள்ள
வழக்குரைஞர்கள் சங்கம் ஒன்று எனப்பொருள்படும்;
(7) "வழக்குரைஞர் சபை என்பது,
1961ஆம் ஆண்டு வழக்குரைஞர்கள் சட்டத்தின் (மையச்
சட்டம் 251961) பிரிவு 3இன்படி அமைக்கப்பட்டுள்ள
தமிழ்நாடு வழக்குரைஞர் சபை எனப் பொருள்படும்;
(ஐ) "வழக்குறைஞர் எழுத்தர் தொழில்
நடத்துவது நிறுத்தப்படுதல்" என்பது, குழுவால் பேணி
வரப்படும் மாநிலப் பெயர்ப்பட்டியலிலிருந்து வழக்குரைஞர்
3
எழுத்தர் ஒருவரது பெயரை நீக்கிவிடுதல் எனப்
பொருள்படும்;
0 குழு என்பது, பிரிவு 4இன்படி
அமைக்கப்பட்ட தமிழ்நாடு வழக்குரைஞர் எழுத்தர்களின்.
நலநிதிக் குழு எனப் பொருள்படும்;
(i) "சார்ந்திருப்பவர்கள்" என்பது, இறந்துபோன
நலநிதி உறுப்பினர் ஒருவரின் பின்வரும் உறுப்பினர்கள்
எனப் பொருள்படும்;
() ஒரு விதவை, உரிய வயது அடையாத
சட்டப்படியான மகன், திருமணமாகாத
சட்டப்படியான மகள் அல்லது விதவைத்
தாய்;
(i) உறுப்பினர் இறந்தபோதும், அவர் தளர்ந்த
நிலையிலும் அவ்வுறுப்பினரை முழுக்க
சார்ந்து வாழ்ந்து வரும் பதினெட்டு வயதை
அடைந்த மகன் அல்லது திருமணமான
மகள் ஆகிய உறுப்பினர்கள்;
0. "நிதி என்பது, பிரிவு 3 இன்படி
அமைக்கப்பட்ட தமிழ்நாடு வழக்குரைஞர் எழுத்தர் நலநிதி
எனப் பொருள்படும்;
(k) "அரசு" என்பது, மாநில: அரசு
எனப்பொருள்படும்;
0) "நலநிதி உறுப்பினர்" என்பது, இந்தச்
சட்டத்தின் வகைமுறைகளின்கீழ் நிதிகளைப் பெற
அனுமதிக்கப்பட்டு அதன் உறுப்பினராகத் தொடர்ந்து
இருந்து வருகின்ற ஒரு வழக்குரைஞர் எழுத்தர் எனப்
பொருள்படும்;
(m) "அறிவிக்கை என்பது, தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கை என்று
பொருள்படும் மற்றும் "அறிவிக்கை செய்யப்பட்டா, என்ற
4
சொல்லானது, அதற்கேற்ப பொருள் கொள்ளப்படுதல்
வேண்டும்;
(n) "ஓய்வு பெறுதல்" என்பது பணியில் சேர்வது
அல்லது வருவாய் (ஆதாயம்) தரத்தக்க வேறு எந்தத்
தொழிலையும் நடத்துவது நீங்கலான பிற காரணம்
எதற்காகவும், வகுத்துரைக்கப்பட்ட முறையில்
தெரிவிக்கப்பட்டும் பதிவு செய்தும் வழக்குறைஞர்
எழுத்தராக பணியிலிருந்து நின்று விடுதல் எனப்
பொருள்படும்;
(௦) "முத்திரைவில்லை" என்பது, பிரிவு 12 இன்:
கீழ் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படு கிற தமிழ்நாடு
வழக்குரைஞர் எழுத்தர் நலநிதி முத்திரை வில்லை எனப்
பொருள்படும்;
(2) வழக்கேற்பிதழ் (வக்காலத்து) கட்சிக்காரரின்
சார்பாக வருகை தருவதற்கான வக்காலத்து நாமா என்பது,
நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது பிற அதிகாரஅமைப்பு
எதனின் முன்பும் ஆஜராகி வாதுரைப்பதற்கு
வழக்குரைஞர் ஒருவருக்கு அதிகாரமளிக்கின்ற ஆவணம்
அல்லது பிற ஆவணம் எதனையும் உள்ளடக்கும்.
3. வழக்குரைஞர் எழுத்தர்களின். நலநிதி.-
(1) அரசு, தமிழ்நாடு வழக்குரைஞர் எழுத்தர்களின் நல நிதி
என்று அழைக்கப்பெறும் நிதி ஒன்றை அமைத்தல்
வேண்டும்.
(2) அந்த நலநிதியில் பின்வருவன வரவு
வைக்கப்படுதல் வேண்டும்,-
(a) பிரிவு 12இன் கீழ் முத்திரை வில்லைகளை
விற்பதன் வாயிலாக வசூலிக்கப்படும் தொகைகள்
அனைத்தும்;
(௦) வழக்குரைஞர் சபையினால், வழக்குரைஞர்
குழாத்தினால், வழக்குரைஞர் சங்கத்தினால், பிற சங்கம்
5
அல்லது நிறுவனம் எதனாலும் அல்லது வழக்குரைஞர்
அல்லது பிற நபர் எவராலும் தன்னிச்சையாக அந்தநிதிக்கு
அளிக்கப்படும் நன்கொடை தொகை எதுவும்;
(6) பிரிவு 10இன் கீழ் கடன் வாங்கப்படும் தொகை
எதுவும்;
(0) வழக்குரைஞர் ஒருவரது இறப்பின் பேரில்,
கூட்டுக்காப்பிட்டு ஒப்பந்தம் ஒன்றின்கீழ் இந்திய ஆயுள்
காப்பீட்டுக் கழகத்திடமிருந்து பெறப்படும் தொகைகள்
அனைத்தும்;
(e) நலநிதி உறிப்பினர்களின்
கூட்டுக்காப்பிட்டைப் பொறுத்து இந்தியக் காப்பீட்டுக்
கழகத்திடமிருந்து பெறப்பட்ட ஆதாயம் அல்லது
ஆதாயப்பங்கு எதுவும்;
() நலநிதி பகுதி எதனிலிருந்தும் செய்யப்படும்
முதலீடு எதனின் பேரிலான வட்டி அல்லது ஆதாயப்பங்கு
அல்லது திருப்பிக் கொடுக்கப்பட்ட தொகை அல்லது பிற
வருமானம் எதுவும்; மற்றும்
(ஐ பிரிவு 15இன் கீழ் வசூலிக்கப்படும்
தொகைகள் அனைத்தும்.
4. நலநிதிக் குழுவை நிறுவுதல்.- (1) அரசு, இதன்
பொருட்டு அறிவிக்கையின் மூலம் குறிப்பிடக்கூடிய
தேதியிலும் அது முதற்கொண்டும் தமிழ்நாடு வழக்குரைஞர்
எழுத்தர்களின் நல நலநிதிக்குழு என்கிற பெயரில் குழு
ஒன்றை நிறுவுதல் வேண்டும்.
(2) அக்குழுவானது நிலையான தொடர் வழியுரியும்
பொது இலச்சினை ஒன்றையும் பெற்றிருப்பதோடு,
சொத்தினை ஈட்டுவதற்கும், வைத்திருப்பதற்கும்,
உரிமைமாற்றம் செய்வதற்குமான அதிகாரத்துடன்கூடிய
ஒரு கூட்டமைப்பாக இருத்தல் வேண்டும்; மற்றும்
மேற்சொன்ன அதன் பெயரில் வழக்கிடுதலும்,
வழக்கிடப்படுதலும் வேண்டும்.
(3) அக்குழுவில் பின்வருபவர்கள் அடங்கியிருத்தல்
வேண்டும்,-
(8) வழக்குரைஞர் சபையின் தலைவர்;
(b) சட்டத்துறைப் பொறுப்பில் கொண்டுள்ள
அரசு செயலாளர்;
(c) உள்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள
அரசு செயலாளர்;
(0) நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள
அரசு செயலாளர்;
(6) சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர்;
(0 வகுத்துரைக்கப்படும் முறையில் அத்தகைய
அதிகாரஅமைப்பால் வழக்குரைஞர் எழுதர்கள்
இடையேயிருந்து, பெயர் குறித்து நியமிக்கப்படக்கூடிய
மூன்று உறுப்பினர்களில் ஒருவர், நிதியின் பொருளாதாரக்
குழுவால் பெயர்குறித்து நியமிக்கப்படுதல் வேண்டும்;
(ஓ குழுவால் செய்யப்படும் ஒழுங்குவிதிகளுக்கு
இணங்க தலைவரால், செயலாளர் ஒருவர் நியமிக்கப்படுதல்
வேண்டும். அத்தகைய செயலாளர் பதவிக்கு நியமித்தல்
பற்றியும் அதற்கான பணி நிபந்தனைகள் பற்றியும்
ஒழுங்குவிதிகளைச் செய்யும் செயலாளருக்கு
நிதியிலிருந்து சம்பளம் கொடுக்கப்படுதல் வேண்டும்:
வரம்புரை: இக்கூறின்படி நியமிக்கப்பட்ட செயலாளர்,
குழுவின். கூட்டங்களில் வாக்களிக்கும் உரிமை
பெற்றிருக்கமாட்டார்.
(4) வழக்குரைஞர் சபையின் தலைவர், பதவி
வழியாகக் குழுவிற்குத் தலைவராக இருத்தல் வேண்டும்.
7
(5 சட்டத்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள
அரசு செயலாளரும், உள்துறையைப் பொறுப்பில்
கொண்டுள்ள அரசு செயலாளரும், நிதித்துறையைப்
பொறுப்பில் கொண்டுள்ள அரசு செயலாளரும், சென்னை
உயர்நீதிமன்றப் பதிவாளரும் பதவி வழியாகக் குழுவின்:
உறுப்பினர்கள் ஆவார்கள்.
(6) சட்டத்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள
அரசு செயலாளரும், உள்துறையைப் பொறுப்பில்
கொண்டுள்ள அரசு செயலாளரும், நிதித்துறையைப்
பொறுப்பில் கொண்டுள்ள அரசு செயலாளரும் ஏதேனும்
காரணத்தால் குழுவின் கூட்டங்களில் கலந்துகொள்ள
முடியாமல்போகும்போது, அவர், அரசு துணைச் செயலாளர்
படிநிலைக்குக் குறையாத அவரது துறை அலுவலர்
எவரையும் அக்கூட்டங்களில் கலந்துகொள்ள
அனுப்பலாம்.
(7) உயர்நீதிமன்றப் பதிவாளர் ஏதேனும்
காரணத்தால் குழுவின் கூட்டங்களில் கலந்து கொள்ள
முடியாமல் போகும்போது, அவர் துணை பதிவாளர்
படிநிலைக்குக் குறையாத அவரது துறை அலுவலர்
எவரையும் அக்கூட்டங்களில் கலந்து கொள்ள
அனுப்பலாம்.
(8) உட்பிரிவு (3)இன் (f) எனும் கூறின்படி
பெயர்குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர்,
மூன்றாண்டுகள் கொண்ட ஒரு காலஅளவிற்கு அல்லது
வழக்குரைஞர் எழுத்தர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவராக
இருப்பது அற்றுப்போகும் வரையில் இதில் எது
முந்தையதோ அதுவரையில், பதவி வகித்தல் வேண்டும்.
5. குழுவின் நியமன உறுப்பினர்களின் தகுதிக்கேடும்
நீக்கமும்.- (1) பின்வருகின்ற சூழ்நிலைகளில் பிரிவு 4
இன் உட்பிரிவு (3) இன் கூறு () இன்கீழ் குழுவின்
உறுப்பினராகப் பெயர்குறித்து நியமிக்கப்படுவதற்கும்
8
அவ்வாறு உறுப்பினராக இருந்துவருவதற்கும்
தகுதிக்கேடுற்றவராதல் வேண்டும், அதாவது அவர்,-
(@) மனச்சீர்கேடுற்றவராக ஆவார் என்றால்;
அல்லது
(b) நொடித்துப் போனவராகத்
தீர்மானிக்கப்பட்டவர் என்றால்;
(9) குழுவின் அனுமதியின்றி குழுவின்
தொடர்ச்சியான மூன்று கூட்டங்களுக்கும் அதிகமாக
வராது இருப்பார் என்றால்;
வரம்புரை: இந்தக் கூறின்கீழ் பதவி வகிப்பது
அற்றுப்போகின்ற உறுப்பினர், தாம் வராமல் இருந்ததைப்
பொருட்படுத்தாது விட்டுவிடக்கோரி விண்ணப்பம்
ஒன்றைச் செய்து கொண்டால், அத்தகைய உறுப்பினரைக்
குழு மீண்டும் பதவியில் இருக்கச் செய்யலாம்; அல்லது
(0) நிதி உறுப்பினர் ஒருவராக அவர் இருந்து
அந்நிதிக்குப் பணம் செலுத்தத் தவறியவராக இருப்பார்
என்றால்; அல்லது
(6) ஒழுக்கக்கேட்டை உள்ளடக்குகின்ற குற்றம்
ஒன்றிற்காகக் குற்றவியல் நீதிமன்றத்தினால் தண்டனைத்
தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்து, அந்தத் தண்டனைத் தீர்ப்பு
நீக்கம் செய்யப்படாமல் இருப்பவர் என்றால்.
(2) அரசு, உட்பிரிவு (1)இன்கீழ்
தகுதிக்கேடுற்றவராக உள்ள அல்லது அவ்வாறு
ஆகியிருக்கின்ற உறுப்பினர் எவரையும் குழுவின்
உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிடலாம்:
வரம்புரை: உறுப்பினர் எவரையும் நீக்கிவிடுகின்ற
ஆணை எதுவும், அவ்வுறுப்பினருக்குக்
கேட்கப்படுவதற்கான வாய்ப்பொன்று
கொடுக்கப்பட்டாலன்றி பிறப்பிக்கப்படுதல் கூடாது.
9
6. குழுவின் நியமன உறுப்பினர்கள் பதவி
விலகுதலும் தற்காலிகக் காலிப்பணியிடங்கள்
நிரப்பப்படுதலும்.-(1) பிரிவு 4இன் உட்பிரிவு (3)இன் (0)
எனும் கூறின்கீழ் பெயர்குறித்து நியமனம் செய்யப்படும்
உறுப்பினர் எவரும், குழுவின் தலைவருக்கு எழுத்து
வடிவில் மூன்றுமாத காலஅளவிற்குள் அறிவிப்புக்
கொடுப்பதன் மூலம் தமது பதவியை விட்டு விலகலாம்.
என்பதோடு, அத்தகைய பதவிவிலகல் அத்தலைவரால்
ஏற்றுக்கொள்ளப்படுவதன் பேரில், அத்தகைய உறுப்பினர்
பதவியைவிட்டு நீங்குதல் வேண்டும்.
(2) உட்பிரிவு (இல் குறிப்பிடப்பட்ட உறுப்பினர்
ஒருவரின் பதவியில் ஏற்பட்ட தற்செயற் காலிப்பணியிடம்.
ஒன்று, எவ்வளவு விரைவில் கூடுமோ அவ்வளவு
விரைவில் நிரப்பப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு
பெயர்குறித்து நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்,
எவருடைய இடத்தில் நியமனம் செய்யப்படுகின்றாரோ
அவர் அக்காலிப்பணியிடம் ஏற்படாமலிருந்தால், எந்தக்
காலஅளவிற்குப் பதவி வகிக்க உரிமைத் தகுதி
உடையவராக இருந்திருப்பாரோ, அந்தக் காலஅளவிற்குப்
பதவி வகித்தல் வேண்டும்.
7. காலியிடம், குறைபாடு முதலானவற்றின்
காரணமாகக் குழுவின் செயல் எதுவும் செல்லத்தகாதது
ஆகாது:- குழுவினால் இந்தச் சட்டத்தின்படியோ அல்லது
அதன்கீழ்ச் செய்யப்பட்ட விதிகளின்படியோ செய்யப்பட்ட
செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை
எதுவும்,-
@ அக்குழுவில் உள்ள காலிப்பணியிடம்.
அல்லது அமைப்பில் ஏற்படும் குறைபாடு எதனின்:
காரணத்தாலோ;அல்லது
10
(b) அதன். உறிப்பினராக எவரையும்
தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் குறைபாடு அல்லது முறைகேடு
எதனின் காரணத்தினால் மட்டுமோ;அல்லது
©) நிகழ்வின் தகுதிகளைப் பாதிக்காத,
அத்தகைய செயல் அல்லது நடவடிக்கையில் நேர்கின்ற
குறைபாடு அல்லது முறைகேடு எதனின் காரணத்தாலும்.
மட்டுமோ,
செல்லாததாக ஆக்கப்படுதல் கூடாது,
8. நிதி ஒப்படைப்பும் பயன்பாடும்.- இந்தச்
சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டும்,
நோக்கங்களுக்காகவும், நிதியானது குழுவிடம்
ஒப்படைக்கப்பட்டு வைத்து வரப்பட்டுப்
பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
9. குழுவின் அலுவல்கள்.- (1) நிதியைப் நிருவகித்து
வருவது குழுவின் பணியாகும்.
(2) நிதியை நிருவகித்து வருவதில் குழு, இந்தச் சட்ட
வகைமுறைகளுக்கும், அதன்கீழ்ச் செய்யப்படும்
விதிகளுக்கும் உட்பட்டு.
(ஐ அந்த நிதியைச் சேர்ந்த தொகைகளையும்,
சொத்திருப்புகளையும் வைத்திருத்தல் வேண்டும்;
(0) அந்த நிதியில் சேர்த்துக்
கொள்ளப்படுவதற்கான அல்லது மீண்டும் சேர்த்துக்
கொள்ளப்படுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்
கொள்ளுதலும். அவற்றைப் பெற்றுக்கொண்ட
தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் அத்தகைய
விண்ணப்பங்களை தீர்வு செய்தலும் வேண்டும்;
(9) அந்த நிதியிலிருந்து பணம்
வழங்கப்படுவதற்காக அந்த நிதி உறுப்பினர்களிடமிருந்து
அல்லது அவர்களால் பெயர் குறிக்கப்படுபவர்களிடமிருந்து,
விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டு, தான் தேவை
11
என்று கருதுகின்ற விசாரணையைச் செய்து, அந்த
விண்ணப்பங்கள் பெறப்பட்ட தேதியிலிருந்து ஐந்து
மாதங்களுக்குள்ளாக அவற்றை தீர்வு செய்தல் வேண்டும்;
(0) அந்த விண்ணப்பங்களின் மீதான தமது
தீர்வுகளைக் குழுவின் நடவடிக்கைக் குறிப்பேட்டில் பதிவு
செய்தல் வேண்டும்;
(6) இணைபப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
விண்ணப்பதாரர்களுக்கு தொகைகளை வழங்குதல்
வேண்டும்;
(9) வகுத்துரைக்கப்படும் விதத்தில்
கணக்குகளையும் புத்தகங்களையும் பேணி வருவதோடு,
காலமுறை மற்றும் ஆண்டு அறிக்கைகளை
வழக்குரைஞர் சபைக்கு அனுப்புதல் வேண்டும்;
(@ அந்த நிதியில் அல்லது நிதி நலனுக்கான
உரிமைக் கோரிக்கைகளில் சேர்த்துக்கொள்ளப்
படுவதற்கான அல்லது மீண்டும் சேர்த்துக்கொள்ளப்
படுவதற்கான ஒரு விண்ணப்பத்தைப் பொறுத்து குழுவின்:
தீர்வுகளை ஒப்புகைப் பதிவஞ்சலின் மூலம்
அவ்விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவித்தல் வேண்டும்.
(0) இந்தச் சட்டத்தின் படியும் அதன்கீழ்ச்
செய்யப்பட்ட விதிகளின்படியும் செய்யப்படலாகும்.
அத்தகைய செயல்களைச் செய்தல் வேண்டும்.
10. நிதி கடன் வாங்குதலும் முதலீடு செய்தலும் .~ (1)
குழுவானது, வழக்குரைஞர் சபையின் முன் அனுமதியுடன்
அவ்வப்போது, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை
நிறைவேற்றுவதற்காகத் தேவைப்படும் தொகை எதையும்
கடன் வாங்கலாம்.
(2) குழுவானது, 1934ஆம் ஆண்டு இந்திய சேம
வங்கிச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட அட்டவணை வங்கி
எதிலும், அந்தநிதியின் பகுதியாக அமைகின்ற பணங்கள்.
மற்றும் வருமானங்கள் அனைத்தையும் வைப்பிடு செய்தல்
12
வேண்டும் அல்லது மைய அரசுக்கு அல்லது மாநில
அரசுக்குச் சொந்தமான அல்லது அதனால் கட்டுப்பாடு
செய்யப்படும் நிறுவனம் எதற்குமான கடன்களில் அல்லது
மைய அரசால் அல்லது மாநில அரசால் எழுப்பப்படும்
கடன்களில் அல்லது அரசின் முன் அனுமதியுடன்
வழக்குரைஞர் சபை அவ்வப்போது பணிக்கலாகும்.
பிறமுறை எதிலும் அவற்றை முதலீடு செய்தல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின்கீழ் கொடுக்கப்பட வேண்டிய
செலுத்தப்பட வேண்டிய தொகைகள் அனைத்தும் மற்றும்
அந்தநிதியை மேலாண்மை செய்வது, நிருவகிப்பது
ஆகியவை தொடர்பான செலவுகள் அனைத்தும் அந்த
நலநிதியிலிருந்து செலுத்தப்படுதல் வேண்டும்.
(4) குழுவின் கணக்குகள் அதனால் நியமிக்கப்படும்
பட்டயக் கணக்கர் ஒருவரால் ஆண்டுதோறும் தணிக்கை
செய்யப்படுதல் வேண்டும்.
(5) அத்தணிக்கையாளரால் உறுதிச்
சான்றளிக்கப்பட்ட குழுவின் கணக்குகள், அதன் மீதான
தணிக்கை அறிக்கையுடன் சேர்ந்து வழக்குரைஞர்
சபைக்கு குழுவினால் அனுப்பப்படுதல் வேண்டும்; மற்றும்
சபை அது பொறுத்து குழுவுக்கு உட்பிரிவு (5)இன் கீழ்
உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம்.
(6) அக்குழு உட்பிரிவு (5) இன் கீழ் வழக்குரைஞர்
சபையினால் பிறப்பிக்கப்படும் பணிப்புரைகளுக்கு இணங்கி
நடத்தல் வேண்டும்.
11. செயலாளரின் அதிகாரங்களும் கடமைகளும்.- (௧)
குழுவின் செயலாளர் குழுவின் தலைமை நிருவாக
அதிகாரியாக இருத்தல் வேண்டும் என்பதோடு அதன்.
தீர்வுகளை நிறைவேற்றுவதற்குப் பொறுப்புடையவராக.
இருத்தலும் வேண்டும்;
13
(௦) குழுவினாலும் அதற்கு எதிராகவும்
தொடரப்படும் உரிமை வழக்குகள், நடவடிக்கைகள்
அனைத்திலும் அக்குழு சார்பாக இயங்குதல் வேண்டும்;
(9). குழுவின் தீர்வுகள் மற்றும்
அறிவுறுத்தல்கள் அனைத்திற்கும் தன்:
கையொப்பத்தினை இடுதல் வேண்டும்;
(0) குழுவின் வங்கிக் கணக்குகளைப்
பொருளாளருடன் சேர்ந்து கூட்டாக வைத்து வருதல்
வேண்டும்;
(6) குழுவின் கூட்டங்களைக் கூட்டுவதோடு
அதன் நடவடிக்கைக் குறிப்பினைத் தயாரித்தலும்
வேண்டும்;
(9) அக்குழுவின் கூட்டங்களுக்குத்
தேவையான எல்லாப் பதிவேடுகளுடனும் தகவலுடனும்.
வருகை தருதல் வேண்டும்;
(@) அவ்வப்போது வகுத்துரைக்கப்படும்
படிவங்கள், பதிவேடுகள், பிற பதிவுக் கட்டுகள்
ஆகியவற்றைப் பேணி வருதலோடு, குழு சம்பந்தப்பட்ட
கடிதத் தொடர்பு அனைத்தையும் கவனித்து வருதல்
வேண்டும்;
(0) ஒவ்வொரு நிதி ஆண்டின்போதும்,
குழுவினால் நடத்தப்பட்ட ஆண்டு அலுவல் விவர
அறிக்கை ஒன்றைத் தயாரித்தல் வேண்டும்; மற்றும்
(i) குழுவினால் பணிக்கப்படும் அத்தகைய பிற
செயல்களைச் செய்தல் வேண்டும்.
14
12. தமிழ்நாடு வழக்குறைஞர் எழுத்தர்களின் நலநிதி
முத்திரைவில்லை.- (1) விதிகளால் வகுத்துரைக்கப்படும்
படிவத்திலும் முறையிலும், "தமிழ்நாடு வழக்குரைஞர்
எழுத்தர் நல நிதி முத்திரை வில்லை, என ஒவ்வொரு
முத்திரை வில்லையும் பத்து ரூபாய்] மதிப்பிணை
உடையதாக பொறிக்கப்பட்டுஅதனை வழக்குரைஞர் சபை
தாமே அச்சிடுதலோ அல்லது அச்சிடப்படுமாறு
செய்வித்தலோ வேண்டும்.
(2) உட்பிரிவு (1)இல் குறிப்பிடப்படும், நீதிமன்றக்
கட்டண முத்திரை வில்லைஏதேனும் இருந்தால், அதோடு
சேர்த்தும் வேறெந்தச் சட்டத்தின்படி முத்திரை வில்லை
ஒட்டப்பட வேண்டுமானால் அதோடு சேர்த்தும்
நீதிமன்றம், அதிகாரஅமைப்பு அல்லது தீர்ப்பாயம் எதன்:
முன்பாக தாக்கல் செய்யப்படும். வழக்கேற்பிதழ்
(வக்காலத்து) அல்லது (வழக்குரைஞர்) வருகை ஆவணம்
ஒவ்வொன்றின் மீதும் முத்திரைவில்லை ஒட்டப்படுதல்
வேண்டும். வழக்கேற்பிதழ்(வக்காலத்து) அல்லது
(வழக்குறைஞர்) வருகை ஆவணம் எதுவும் அவ்வாறு
முத்திரைவில்லை ஒட்டப்பட்டாலன்றி அது
செல்லத்தக்கது ஆகாது:
வரம்புரை: இந்த உட்பிரிவு, மைய அல்லது மாநில
அரசு சார்பாக தாக்கல் செய்யப்படும் வழக்கேற்பிதழ்
(வக்காலத்து) அல்லது வருகை ஆவணம் எதற்கும்
பொருந்தாது.
1. 2020ஆம் ஆண்டு வழக்குரைஞர் எழுத்தர்களின் நல நலஙநிதிச்
திருத்தச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்ட எண். 39/2020) 2ஆம்
பிரிவினால் மாற்றாக அமைக்கப்பட்டது.
15
(3) அத்தகைய முத்திரைவில்லையுடன்.
வழக்கேற்பிதழ் (வக்காலத்து) பெறும் நபர் அல்லது
அதிகாரஅமைப்பு அதன்முன் தாக்கல் செய்யப்படும்.
வழக்கேற்பிதழ் (வக்காலத்தின்) ம்து ஒட்டப்படும்
ஒவ்வொரு முத்திரைவில்லையும் உடனடியாக
துளையிட்டு தள்ளுபடி செய்யப்படுதல் வேண்டும்.
(4) இந்த உட்பிரிவின்படி அச்சிடப்படும்
முத்திரைவில்லைகளின். பாதுகாப்பும் பொறுப்பும்
வழக்குரைஞர் சபையிடம் இருத்தல் வேண்டும். முத்திரை
வில்லைகளை வழங்குதலும் விற்பனைசெய்தலும்
வகுத்துரைக்கப்படும் முறையில் இருத்தல் வேண்டும்.
13. வழக்குரைஞர் எழுத்தர் சங்கத்தின் அனுமதியும்
பதிவும்--(1). (ஐ குழுவினால் இதன். பொருட்டு
அறிவிக்கை செய்யப்படவேண்டிய தேதிக்கு முன்னர்,
நீதிமன்றத் தலைமையகம் எதிலும் செயல்பட்டு வரும்
வழக்குரைஞர் எழுத்தர் சங்கங்கள் அனைத்தும்;
(௦) இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்குப்
பின்னர் அமைக்கப்பட்ட வழக்குரைஞர் எழுத்தர் சங்கம்
எதுவும்;
இந்தச் சட்டத்தின்படி வகுத்துரைக்கப்படும் படிவத்திலும்
முறையிலும் வழக்குரைஞர் எழுத்தர்களின் சங்கம் என
அங்கீகரிக்கப்பட்டுப் பதிவு செய்வதற்காகக் குழுவிற்கு
விண்ணப்பிக்கலாம்.
(2) அனுமதிக்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும்,
சங்கத்தின் விதிகள் அல்லது துணை விதிகள், சங்கத்தில்
பதவி வகிப்பவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள்
மற்றும் ஒவ்வோர் உறுப்பினரின் முகவரி, வயது, பதிவு
செய்யப்பட்ட தேதி, வழக்கமாகத் தொழில் நடத்துகின்ற
இடம் ஆகியவற்றைக் காட்டுகின்ற அச்சங்கத்தின் நாளது
16
தேதி வரையிலான உறுப்பினர் பட்டியல் ஆகியவற்றுடன்
இணைத்து அனுப்பப்படுதல் வேண்டும்.
(3) குழுவானது, அவசியமெனத்தான் கருதுகின்ற
விசாரணையைச் செய்த பின்பு, வழக்குரைஞர் எழுத்தர்
சங்கத்திற்கு ஒப்புதல் அளிக்கலாம். மற்றும்
வகுத்துரைக்கப்படும் படிவத்தில் ஏற்பிசைவுப் பதிவு
சான்றிதழ் ஒன்றை வழங்கலாம்.
(4) சங்கத்தின் அங்கீகாரம் மற்றும் பதிவு குறித்த
குழுவின் தீர்வு இறுதியானதாகும்.
14. வழக்குரைஞர் எழுத்தர் சங்கங்களின்.
கடமைகள்.- (1) வழக்குரைஞர் எழுத்தர்களின் சங்கம்
ஒவ்வொன்றும் ஒவ்வோர் ஆண்டிலும் ஏப்ரல் 15ஆம்
நாளிலோ, அதற்கு முன்னரோ அந்த ஆண்டின் மார்ச்சு
31ஆம் நாளன்று உள்ளவாறு தன்னுடைய
உறுப்பினர்களின் பட்டியல் ஒன்றை குழுவிற்கு அளித்தல்
வேண்டும்.
(2) வழக்குரைஞர் எழுத்தர் சங்கம் ஒவ்வொன்றும்,
குழுவிற்கு
(2) வழக்குரைஞர் எழுத்தர் சங்கத்தின்
பதவிகளில் ஏற்பட்ட மாற்றம் எதையும் அத்தகைய மாற்றம்
செய்யப்பட்டதிலிருந்து பதினைந்துநாட்களுக்குள்ளாகவும்;
(௦) சேர்த்துக்கொள்ளப்படுதல் மற்றும் மீண்டும்
சேர்த்துக்கொள்ளப்படுதல் உள்ளிட்ட உறுப்பினர்
பதவியிலுள்ள மாற்றம் எதனையும் பற்றி, அத்தகைய
மாற்றம் செய்யப்பட்டதிலிருந்து முப்பது
நாட்களுக்குள்ளாகவும்;
(6) தன்னுடைய உறுப்பினர் ஒருவரின் இறப்பு
அல்லது ஓய்வு பெற்றுத் தொழில் நடத்துவது
நிறுத்தப்படுதல் ஆகியவை குறித்துஅவை நிகழ்ந்த
தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்ளாகவும்; மற்றும்
17
(0) அவ்வப்போது குழுவினால்
கோரப்படக்கூடிய செய்திகளையும்,
தெரிவித்தல் வேண்டும்.
15. நிதியின் உறுப்பினர் பதவி. - (1) இம்மாநிலத்தில்
உள்ள வழக்குரைஞர் எழுத்தர் ஒவ்வொருவரும், அந்த
நிதியிலும் உறுப்பினராகக் கொள்ளப்படுவதற்காக
வகுத்துரைக்கப்படும் படிவத்திலும் முறையிலும்
குழுவிற்கு விண்ணப்பிக்கலாம்.
(2) உட்பிரிவு ()இன்கீழ் விண்ணப்பம் ஒன்று
வரப்பெற்றதன்பேரில், குழுவானது, தான் பொருத்தமெனக்
கருதுகிற விசாரணையைச் செய்து,
அவ்விண்ணப்பதாரரை நிதியில் சேர்த்துக்கொள்ளுதல்
வேண்டும் அல்லது எழுத்து வடிவில் காரணங்களைப் பதிவு
செய்து அவ்விண்ணப்பத்தை ஏற்காமல் மறுத்து விடுதல்
வேண்டும்:
வரம்புரை: கேட்கப்படுவதற்கான வாய்ப்பு ஒன்றினை
விண்ணப்பதாரருக்குக் கொடுத்திருந்தாலன்றி,
விண்ணப்பம் ஒன்றை ஏற்க மறுக்கும் ஆணை எதுவும்
பிறப்பிக்கப்படுதல் கூடாது.
(3) விண்ணப்பதாரர் ஒவ்வொருவரும்,
அவ்விண்ணப்பத்தோடு குழுவின் கணக்கிற்கு '[ஐநூறு
ரூபாய்] விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல் வேண்டும்.
(4) விண்ணப்பதாரர் ஒவ்வொருவரும்
நலநிதியில் உறுப்பினராகச் சேரும் போதோ அல்லது
மீண்டும் சேரும் போதோ நிதிக்கு'[ஐநூறுளூபாய்] சேர்க்கைக்
கட்டணம் ஒன்றைச் செலுத்துதல் வேண்டும்.
1. 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர் எழுத்தர்களின் நலநிதித்
திருத்தச் சட்டத்தின் (சட்ட எண்.38/2020) 3ஆம் பிரிவினால்
மாற்றாக அமைக்கப்பட்டது.
18
(5 நிதியின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்ட உறுப்பினர்
ஒவ்வொருவரும்,உறுப்பினர் பதவிக்கட்டணமாக
ஐந்தாயிரம் ரூபாய்] ஒன்றைச் செலுத்துதல் வேண்டும்.
இது சமமான இரண்டு அரையாண்டுத் தவணைகளில்
செலுத்தப்படத்தகதாகும்.
(6) நிதிஉறுப்பினர் ஒவ்வொருவரும், தாம்
இறக்கும் நிலையில், இந்தச் சட்டத்தின்கீழ்
உறுப்பினருக்கு வழங்கப்படத்தக்க தொகை எதையும்
பெற்றுக் கொள்வதற்கான உரிமையைச்
சார்ந்திருப்பவர்களில் ஒருவருக்கு அல்லது அதற்கும்
மேற்பட்டவர்களுக்கு அளிக்கின்ற பெயர் குறிப்பிட்டுப்
பத்திரத்தை அந்நிதியின் உறுப்பினர் பதவிக்குச் சேர்த்துக்
கொள்ளும் காலத்தில் அளித்தல் வேண்டும்.
(7) நிதி உறுப்பினர் ஒருவருக்கு
மேற்பட்டவர்களைக் குறிப்பிடுவாரானால், பெயர்க்
குறிப்பிடப்பட்டவர்களில் ஒவ்வொருவருக்கும்
வழங்கப்படத்தக்க தொகை அல்லது பங்கு எவ்வளவு என
பெயர்க் குறிப்பிட்டுப் பத்திரத்தில் அவர் கூறுதல் வேண்டும்.
(௫ நிதி. உறுப்பினர் எந்தச் சமயத்திலும்,
குழுவிற்கு எழுத்து வடிவிலான அறிவிப்பு ஒன்றினை
அனுப்புவதன் மூலமாகப் பெயர்க் குறிப்பிட்டுப் பத்திரம்
ஒன்றை ரத்து செய்யலாம். ஆனால் அவர் அத்தகைய
அறிவிப்போடு கூடப் புதிய பெயர்க் குறிப்பிட்டுப் பத்திரம்
ஒன்றை அனுப்புதல் வேண்டும்.
(9) குழுவானது, வழக்குரைஞர் எழுத்தர் தவறாகக்
கூறியோ, மோசடியாகவோ அல்லது தகாத
செல்வாக்கினாலோ நிதியின் உறுப்பினர் பதவியைப்
பெற்றுள்ளார் என்ற முறையீட்டின் பேறிலோ அல்லது
1. 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர் எழுத்தர்களின் நலநிதித்
திருத்தச் சட்டத்தின் (சட்ட எண்.38/2020) 3ஆம் பிரிவினால்
மாற்றாக அமைக்கப்பட்டது.
19
பிறவறோ தகவல் பெற்ற நிலையில்,
அந்த நிதியின் உறுப்பினர் பதவியிலிருந்து அத்தகைய
வழக்குரைஞர் எழுத்தரின் பெயரை நீக்குவதற்குக் குழு
தகுதியுடையதாகும்:
வரம்புரை: இந்த உட்பிரிவிண் படியான ஆணை
எதுவும் அதனால் பாதிக்கப்படக்கூடிய நபருக்குக்
கேட்பதற்கான வாய்ப்பு ஒன்றினைக் கொடுத்தாலன்றி
பிறப்பிக்கப்படுதல் கூடாது.
16. தொழில் நடத்துவது நிறுத்தப்படுவதன்பேரில்
நிதியிலிருந்து தொகை வழங்குதல்.- (1) நிதி உறுப்பினர்
ஒருவர், தொழில் நடத்துவதை நிறுத்தியதன் பேரில்,
நிதியிலிருந்து இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
தொகை ஒன்றைப் பெறுவதற்கு உரிமை உடையவர்
ஆவார்.
(2) உறுப்பினர் ஒருவர் இறந்துவிடுகின்ற
நிலையில், அவரால் பெயர் குறிப்பிடப்பட்டவருக்கோ
அல்லது எவர் பெயரும் குறிக்கப்படாதபோது அவரைச்
சார்ந்திருப்பவர்களுக்குத் தொகுப்பு நிதியாக [நான்கு
இலட்ச ரூபாய்] வழங்கப்படுதல் வேண்டும்.
(3) நிதியின் உறுப்பினர் ஒருவர், அவர் நிதியின்.
உறுப்பினராகச் சேர்ந்த ஐந்தாண்டுகள் கழிந்தபின்னர்
எந்தநேரத்திலும் அவரது உறுப்பினர் பதவியைத் திரும்பப்
பெறலாம். அவ்வாறு பதவியைத் திரும்பப் பெற்றுக்
கொள்ளுகையில், இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட
விகிதத்தில் நிதியிலிருந்து ஒரு தொகையைப் பெறும்
உரிமையுடையவராகிறார். அத்தகைய நபர்,
வகுத்துரைக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒரு
புதிய உறுப்பினராக நிதியில் மீண்டும் சேர்வதற்குத்
தகுதியுடைவர் ஆவார்:
1. 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர் எழுத்தர்களின் நலநிதித்
திருத்தச் சட்டத்தின் (சட்ட எண். 38/2020) 4ஆம் பிரிவினால் மாற்றாக.
அமைக்கப்பட்டது.
20
வரம்புரை: நிரந்தர இயலாமைக்கு உள்ளானவர், அவர்
நிதியின் உறுப்பினராகச் சேர்ந்த ஐந்து ஆண்டுகளுக்குள்
அவரது உறுப்பினர் பதவியைத் திரும்பப் பெறலாம்.
(4) இந்தச் சட்டத்தின்படி தொகை செலுத்தும்
நோக்கத்திற்காக, நிதியில் உறுப்பினராகச் சேர்வதற்கு
முன்னர் வழக்குரைஞர் யாரிடமாவது பணியில் இருந்த
நான்கு ஆண்டுகளைக் கொண்ட ஒவ்வொரு
காலஅளவையும், ஓராண்டுத் தொழில் செய்ததாகக்
கணக்கிட்டு, அவர் உறுப்பினராகப் பதவியில் சேர்ந்த பின்பு
பணியில் இருந்த ஆண்டுகளை அதனுடன்
சேர்த்துத்தொழில் நடத்தி முடித்த கால அளவைக்
கணக்கிடுதல் வேண்டும்.
(5) நலநிதியிலிருந்து தொகை செலுத்தப்
படுவதற்காக வகுத்து அத்தகைய படிவத்தில் குழுவிற்கு
விண்ணப்பம் ஒன்றைச் செய்தல் வேண்டும்.
(6). உட்பிரிவு (5 இன்படி பெறப்பட்ட
விண்ணப்பத்தின் பேரில் குழுவால், தேவை எனக் கருதும்
விசாரணையைச் செய்த பின்னர் குழுவால்
முடிவெடுக்கப்படுதல் வேண்டும்.
17. நிதிஉறுப்பினருக்குள்ள உரிமை நலனை
அயலடைவு, பற்றுகை செய்வதற்கான கட்டுப்பாடு.-
(1) நிதி உறுப்பினர் எவருக்கும் உள்ள
உரிமை அல்லது அந்நிதியிலிருந்து அவரால் பெயர்
குறிப்பிடப்பட்டவருக்கு அல்லது அவருடைய சட்டமுறை
வாரிசுகளுக்கு உள்ள உரிமை அளிக்கப்படுதலோ,
அயலடைவு செய்யப்படுதலோ, பொறுப்பாக்கப்படுதலோ
கூடாது; மற்றும் நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது பிற
அதிகாரஅமைப்புகளின் தீர்ப்பாணை அல்லது எதனின்:
கீழும் பற்றுகை செய்யப்படுதலும் கூடாது.
21
(2) கடன் கொடுத்தவர் எவரும்,
அந்த நிதிக்கு எதிராகவோ அல்லது அதன் உறுப்பினர்
எவரும் அல்லது அவரால் பெயர் குறிப்பிடப்பட்டவருக்கு
அல்லது அவருடைய சட்டமுறை, வாரிசுக்கு உள்ள
உரிமை நலனுக்கு எதிராகவோ, நடவடிக்கை எடுப்பதற்கு
உரிமையுடையவர் இல்லை.
விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காகக்
"கடன் கொடுத்தவர்" என்பது, அரசை, அப்போதைக்குச்
செல்லாற்றலிலுள்ள நொடிப்புநிலை சட்டத்தின்கீழ்
நியமிக்கப்பட்ட அலுவல்முறை ஒப்படைவு பெறுபவரை
அல்லது அலுவல்முறை சொத்தாட்சியர் ஒருவரை
உள்ளடக்கும்.
18. உறுப்பினர்களுக்கான கூட்டுக் காப்பிட்டுத்
திட்டமும் பிற நன்மைகளும்-நிதிக் குழு
உறுப்பினர்களின் நலனுக்காக,
(a) நிதி உறுப்பினர்களின் ஆயுளின்மீது கூட்டுக்
காப்பீட்டு ஆவணங்களை இந்திய ஆயுள் காப்பீட்டுக்
கழகத்திடமிருந்து பெறலாம்; மற்றும்.
(b) நிதி உறுப்பினர்களுக்காகவும், அவர்களைச்
சார்ந்துள்ளவர்களுக்காகவும் வகுத்துரைக்கப்படும்
முறையில் மருத்துவம் மற்றும் கல்வி வசதிகளுக்கு வகை
செய்யலாம்.
19. குழுவின் கூட்டங்கள்.- (1) குழு அலுவல்
நடத்துவதற்குத் தேவை எனத் கருதினால் குறைந்தது
மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் அல்லது
அதற்கு அதிகமாகவேனும் கூடுதல் வேண்டும்.
(2) குழுவின் ஐந்து உறுப்பினர்கள், அக்குழு
கூட்டம் ஒன்றுக்கான குறைவெண் வரம்பெல்லையாக
அமைதல் வேண்டும்.
22
(3) தலைவரோ, அவர் வராதபோது, வந்திருக்கின்ற
உறுப்பினர்களுக்கு இடையே இருந்து தேர்ந்தெடுக்கப்படும்
ஓர் உறுப்பினரோ, குழுவின் கூட்டம் ஒன்றுக்குத்
தலைமை வகித்தல் வேண்டும்.
(4) குழுவின் கூட்டம் ஒன்றில் வருகின்ற பொருள்
எதுவும், அக்கூட்டத்தில் வந்திருந்து வாக்களிக்கின்ற
உறுப்பினர்களின் பெரும்பாண்மையினரால் தீர்வு
செய்யப்படுதல் வேண்டும்; வாக்குகள் சமமாக அமைகின்ற
நிலையில், தலைவரோ, அக்கூட்டத்திற்குத் தலைமை
வகிக்கின்றவரோ, அறுதிவாக்கு ஒன்றினை அளித்தல்
வேண்டும்.
20. குழு உறுப்பினர்களுக்கான பயணப்படியும்
நாள்படியும்-குழுவின் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட
உறுப்பினர்கள், வகுத்துரைக்கப்படும் அத்தகைய
பயணப்படியும் நாள்படியும் பெறுவதற்குத்
தகுதியுடையராவார்கள்.
21. மறுஆய்வு.--குழு எந்நேரத்திலும் தாமாகவோ
அல்லது உரிமையுள்ள நபர் எவரிடமிருந்தும் பெறப்பட்ட
விண்ணப்பத்தின்: பேரிலோ, அதனால் ஆணை
பிறப்பிக்கப்பட்ட தொண்ணூறு நாட்களுக்குள், அத்தகைய
ஆணை எதனையும் மறு ஆய்வு செய்யலாம்.
வரம்புரை: குழு, பாதிக்கப்பட்ட நபர் எவருக்கும்
அவரது தரப்பினை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பு
ஒன்றைவழங்கினால் தவிர, அந்நபரைப் பாதிக்கின்ற
ஆணை எதையும் பிறப்பித்தல் கூடாது.
22. நல்லெண்ணத்தில் எடுக்கப்படும்
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.-- (1) இந்தச் சட்டத்தின்படி
அல்லது அதன் கீழ்ச் செய்யப்படும் விதி எதனின் படியும்
நல்லெண்ணத்தில் செய்த அல்லது செய்யக் கருதிய
செயல் எதற்காகவும் எவருக்கும் எதிராகவும்
23
உரிமைவழக்கோ, குற்றவழக்கோ அல்லது பிற சட்ட
நடவடிக்கை எதுவுமோ தொடுக்கப்படுதல் கூடாது.
(2) இந்தச் சட்டத்தை அல்லது அதன்கீழ்
செய்யப்பட்ட விதி எதனின் படியும் நல்லெண்ணத்தில்
செய்த அல்லது செய்யக் கருதிய செயல் எதனாலேனும்
விளைவிக்கப்பட்ட அல்லது பெரும்பாலும்.
விளைவிக்கப்படக்கூடிய சேதம் எதற்காகவும், குழு
அல்லது வழக்குரைஞர் சபைக்கு எதிராகவோ
உரிமைவழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவும்
தொடுக்கப்படுதல் கூடாது.
23. உரிமையியல் நீதிமன்றங்களின்: அதிகார
வரம்பிற்குத் தடை. எந்தப் பிரச்சினை குழுவினால்
தீர்க்கப்படவோ முடிவு செய்யவோ அல்லது அதன்மீது
நடவடிக்கை எடுக்கப்படவோ அல்லது தீர்ப்பளிக்கப்படவோ
வேண்டும் என இச்சட்டத்தினால் அல்லது அதன் படிக்
கோரப்பட்டுள்ளதோ, அந்தப் பிரச்சினை எதையும் தீர்வு
செய்யவோ அல்லது அதன்மீது நடவடிக்கை எடுக்கவோ
அல்லது அந்த கருத்துக் குறித்துத் தீர்மானிக்கவோ
உரிமையியல் நீதிமன்றம் எதுவும் அதிகாரம் பெற்றிருத்தல்
கூடாது.
24. சாட்சிகளைத் தருவிப்பதற்கும் சான்றுகளை
எடுப்பதற்குமான அதிகாரம். குழு, இந்தச்
சட்டத்திண்படியான விசாரணை 618601 651
நோக்கங்களுக்காக, உரிமையியல் வழக்கு நீதிமன்றம்
ஒன்று உரிமைவழக்கு ஒன்றை விசாரணை செய்கையில்,
1908ஆம் ஆண்டு உரிமைவழக்கு
விசாரணைமுறைத்தொகுப்புச் சட்டத்தின்கீழ்மையச்
சட்டம் V/1908) பெற்றுள்ளதைப் போன்ற அதே
அதிகாரங்களைப் பின்வரும் விவரங்களைப் பொறுத்துப்
பெற்றிருத்தல் வேண்டும், அதாவது:-
24
(ஐ) எவர் ஒருவரின் வருகையையும்
வலியுறுத்துதல் அல்லது ஆணையுறுதியின்பேரில் அவரை
விசாரணை செய்தல்;
(b) ஆவணங்களை வெளிக்கொணர வேண்டும்
என்றும், தாக்கல் செய்தல் வேண்டும் என்றும் கோருதல்;
(9) ஆணையுறுதி ஆவணத்தின் பேரில்
சாட்சியம் பெறுதல்;
(0) சாட்சிகளை விசாரணை செய்வதற்காக
ஆணையர் நியமன ஆணைகள் பிறப்பித்தல்.
285. இணைப்புப்பட்டியலைத் திருத்துவதற்கான
அதிகாரம்.-அரசு, அறிவிக்கை வாயிலாகக் குழுவின்
பரிந்துரையின் பேரில், நிதியில் இருக்கக்கூடிய
தொகையைக் கவனத்தில்கொண்டு
இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட விகிதங்களைத்
திருத்தலாம்.
26. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.-
(1) அரசு, அறிவிக்கை வாயிலாக, இந்தச் சட்டத்தின்.
நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக. விதிகளைச்
செய்யலாம்.
(2) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி
அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும்,
அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பிண்ணர், கூடிய
விரைவில், சட்டமன்றப் பேரவையின் முன்பு
வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு
வைக்கப்பட்டக்கூட்டத்தொடரோ அல்லது அதை
அடுத்துவரும் கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு
முன்னர், சட்டமன்றப் பேரவை, அத்தகைய விதி அல்லது
அறிவிக்கை ஏதொன்றிலும் மாறுதல் எதனையும்
செய்யுமானால் அல்லது அந்த விதியோ, அறிவிக்கையோ
செய்யப்படவோ அல்லது பிறப்பிக்கப்படவோ கூடாது என்று
சட்டமன்றப் பேரவை தீர்வு செய்யுமானால், அந்த விதியோ
25
அல்லது அறிவிக்கையோ அதன் பின்னர், அத்தகைய
மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே
நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது
நடைமுறைக்கு வராது போதல் வேண்டும்; எனினும்
அவ்வாறு மாற்றியமைப்பது அல்லது அழித்தறவு செய்வது
எதுவும், அந்த விதியின்படியோ அல்லது
அறிவிக்கையின்படியோ முன்னதாகச் செய்யப்பட்ட
ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல்
வேண்டும்.
26
இணைபப்புப்பட்டியல்:
[9(2Xe), 16 (1) மற்றும் 25ஆம் பிரிவுகளைக் காண்க]
நிதியின் உறுப்பினராக 30 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 29 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 28 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 27 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 26 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 25 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 24 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 23 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 22 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 21 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 20 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 19 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 18 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 17 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 16 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 15 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 14 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 13 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 12 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 11 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 10 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 9 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 8 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 7 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 6 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 5 ஆண்டுகள் :
ரூ
: 30,000
: 29,000.
: 28,000
: 27,000
: 26,000
: 25,000.
: 24,000
23,000.
: 22,000.
21,000
20,000
19,000
18,000
17,000.
16,000
15,000
14,000
13,000
12,000
11,000
10,000
9,000
8,000
7,000
6,000
5,000
27
நிதியின் உறுப்பினராக 4 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 3 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 2 ஆண்டுகள் :
நிதியின் உறுப்பினராக 1 ஆண்டுகள் :
4,000
3000
2,000
1,000