Tamil Nadu · 1985 · Act 39

The Tamil Nadu Acquisition of Hoardings Act, 1985

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1985 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு விளம்பரப்பலகைகளைக்‌ கையகப்படுத்துதல்‌ சட்டம்‌. சட்ட எண்‌.39.1985 விளம்பரப்பலகைகளின்‌ (hoardings) மீதான உரிமை, பாத்தியதை (00௦), அக்கறைகள்‌ (interests) ஆகியவற்றைக்‌ கையகப்படுத்துவதற்கும்‌, விளம்பரப்பலகைகள்‌ ஒழுங்கற்ற வகையில்‌ பெருகி வருவதைத்‌ தடுப்பதற்கும்‌ மற்றும்‌ அவற்றின்‌ விளைவானவற்றிற்கும்‌ வகைசெய்வதற்கானதொரு சட்டம்‌. போக்குவரத்து இடர்களையும்‌ (௬௨௨05) எண்ணிறந்த விபத்துக்களையும்‌ விளைவிக்கின்ற வகையில்‌ வெவ்வேறு இடங்களில்‌ அண்மைக்காலத்தில்‌ ஒழுங்கற்ற வகையில்‌ விளம்பரப்பலகைகள்‌ பெருகி வந்திருப்பதாலும்‌; மேலும்‌, விளம்பரப்பலகைகள்‌ வசதியான மற்றும்‌ தெரிந்தெடுக்கப்பட்ட இடங்களில்‌ மட்டுமே வைக்கப்பட வேண்டியது தேவையானதாக இருப்பதாலும்‌; மேலும்‌, அந்த நோக்கத்தை எய்துவதற்காக, அரசு அல்லது அரசால்‌ அதிகாரமளிக்கப்பட்ட பிற அதிகார அமைப்புகள்‌ மட்டுமே அத்தகைய வசதியான மற்றும்‌ தெரிந்தெடுக்கப்பட்ட இடங்களில்‌ மட்டுந்தான்‌ அமைத்தல்‌ வேண்டும்‌ என்பது தேவையானதாக இருப்பதாலும்‌; மேலும்‌, மேற்சொன்ன நோக்கத்தை முழுமையாக எய்துவதற்காக, தற்போதுள்ள எல்லா விளம்பரப்பலகைகளும்‌ ஒரு பொது நோக்கத்திற்காக மாநில அரசால்‌ கையகப்படுத்தப்பட வேண்டியதாக இருப்பதாலும்‌; இந்தியக்‌ குடியரசின்‌ முப்பத்தாறாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையினால்‌ பின்வருமாறு சட்டம்‌ இயற்றப்படுவதாகுக:- 1. குறுந்தலைப்பும்‌ அளாவுகையும்‌ தொடக்கமும்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 1985-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு விளம்பரப்பலகைகளைக்‌ கையகப்படுத்துதல்‌ சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. (2) இது தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதையும்‌ அளாவி நிற்கும்‌. (3) இது,- (i) சென்னை மாநகரில்‌, 1985-ஆம்‌ ஆண்டு சூலை 10 ஆம்‌ நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (i) தமிழ்நாடு மாநிலத்திலுள்ள வேறேதேனும்‌ வட்டாரப்‌ பகுதியில்‌, அரசு, அறிவிக்கை வாயிலாக, குறிக்கக்கூடிய தேதியன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ வெவ்வேறு வட்டாரப்‌ பகுதிகளுக்கு வெவ்வேறு தேதிகள்‌ குறிக்கப்படலாம்‌. 2. அரசுக்‌ கொள்கை பற்றிய விளம்புகை (Declaration 88 1௦ the policy of the state).— இந்தச்‌ சட்டமானது, அரசமைப்பின்‌ 39-ஆம்‌ உறுப்பில்‌ (௦), (6) ஆகிய கூறுகளில்‌ குறித்துரைக்கப்பட்ட கொள்கை நெறிகளை நிலைநாட்டுவதற்கான அரசுக்‌ கொள்கையைச்‌ செயற்பாட்டுக்குக்‌ கொண்டுவருவதற்கானது என்று இதன்மூலம்‌. விளம்பப்படுகிறது. 3. பொருள்‌ வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌ சூழ்நிலை வேறுபொருள்‌ குறித்தாலன்றி,- (a) "தொகை" என்பது, விளம்பரப்பலகையைக்‌ கையகப்படுத்துவதற்காக இந்தச்‌ சட்டத்தின்படி கொடுக்கப்படத்தக்க தொகை என்று பொருள்படும்‌; (௦) "அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்‌" என்பது, 12-ஆம்‌ பிரிவின்படி நியமிக்கப்பெற்ற, அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்‌ ஒருவர்‌ என்று பொருள்படும்‌; (6) "இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதி" என்பது, சென்னை மாநகரத்தைப்‌ பொறுத்தமட்டில்‌, 1985-ஆம்‌ ஆண்டு சூலை 10 ஆம்‌ நாள்‌ என்றும்‌ வேறேதேனும்‌. வட்டாரப்‌ பகுதியைப்‌ பொறுத்தமட்டில்‌, அத்தகைய வேறு வட்டாரப்‌ பகுதியின்‌ தொடர்பாக 1-ஆம்‌ பிரிவின்‌ (3)-ஆம்‌ உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையால்‌, குறிப்பிடப்பட்ட தேதி என்றும்‌ பொருள்படும்‌; (0) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்‌; (6) "விளம்பரப்பலகை" (hoarding) என்பது,- () விளம்பரத்தைக்‌ காட்சிக்கு வைப்பதற்காகக்‌ கருதப்பட்டதான, அல்லது (i) நிலம்‌, கட்டடம்‌, சுவர்‌ அல்லது கட்டுமானம்‌ எதன்‌ மீதேனும்‌ முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ அமைக்கப்பட்டுள்ளதும்‌, பொது இடம்‌ அல்லது தனி இடம்‌ எதிலேனும்‌ ஏதாவதொரு முனையிலிருந்து அது அல்லது அதன்‌ பகுதி கண்ணுக்குப்‌ புலப்பட வேண்டியதும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ, அதன்மீது விளம்பரம்‌ ஏதேனும்‌ காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றதுமான பலகைத்‌ தட்டிகள்‌ (screen of boards) அல்லது சட்ட வேலைப்பாடு அல்லது பிற தாங்கிப்‌ பொருள்‌ (SUpports) எதுவும்‌ என்று பொருள்படும்‌; மற்றும்‌ அத்தகைய பலகைத்‌ தட்டிகள்‌ (screen of boards), சட்ட வேலைப்பாடு அல்லது பிற தாங்கிப்‌ பொருள்‌ (ஊற அனைத்தையும்‌ அதன்‌ பகுதி ஒவ்வொன்றினையும்‌ உள்ளடக்கும்‌; (f) "வட்டாரப்‌ பகுதி" என்பது சென்னை மாநகரம்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக ஒரு வட்டாரப்‌ பகுதியாக அறிவிக்கை வாயிலாக அரசினால்‌ விளம்பப்பட்ட, நகர்ப்புதத்தையோ அல்லது ஊரகத்தையோ சேர்ந்த பகுதி எதுவும்‌ என்று பொருள்படும்‌. (9) "அக்கறை கொண்டுள்ளவர்‌" என்பது, விளம்பரப்பலகை ஏதொன்றையும்‌ பொறுத்தமட்டில்‌, விளம்பரப்பலகையில்‌ அக்கறை கொண்டிருக்கின்ற எவரையும்‌ மற்றும்‌, விளம்பரப்பலகை ஒப்படைக்கப்படுவதால்‌ பாதிக்கப்பட்டுள்ளவரும்‌ அந்தத்‌ தொகையில்‌ பாத்தியதை கோருகின்ற அல்லது பாத்தியதை கோர உரிமை உடையவருமான வேறெவரையும்‌ உள்ளடக்கும்‌; (h) "தனியார்‌ இடம்‌" என்பது ஒரு பொதுவிடம்‌ அல்லாத வேறெந்த இடமும்‌ என்று பொருள்படும்‌; (i) "பொது இடம்‌" என்பது எந்த இடத்திற்கு பொதுமக்கள்‌ வந்துபோவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்களோ அல்லது எந்த இடத்தை நாடிச்‌ செல்வதற்கு அவர்கள்‌ உரிமை பெற்றிருக்கின்றார்களோ அல்லது (ஒரு சாலை, தெரு அல்லது வழி அது ஒரு பொது வழியானாலும்‌ அல்லது இல்லாவிட்டாலும்‌, மற்றும்‌ ஓர்‌ இறங்கும்‌ இடம்‌ உட்பட) எந்த இடத்தைக்‌ கடந்து செல்வதற்கு அவர்கள்‌ உரிமை பெற்றிருக்கின்றார்களோ அந்த இடம்‌ எதுவும்‌ என்று பொருள்படும்‌. 4. எல்லா விளம்பரப்பலகைகளும்‌ அரசுக்கு உரிமை மாற்றல்‌ ஆதலும்‌ அதனிடம்‌ ஒப்படைக்கப்பட்டு நிற்றலும்‌- (1) இந்தச்‌ சட்டத்தில்‌ வேறுவிதமாக வகைசெய்யப்பட்டுள்ளவாறு தவிர வட்டாரப்‌ பகுதி எதிலேனும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌, அத்தகைய வட்டார பகுதியில்‌ அத்தகைய தொடக்கத்‌ தேதியன்று இருந்து வரும்‌ எல்லா விளம்பரப்பலகைகளும்‌ அத்தகைய விளம்பரப்பலகைகள்‌ தொடர்பாக எவருக்கேனும்‌ உள்ள உரிமை, பாத்தியதை, அக்கறைகள்‌ ஆகியவையும்‌, எந்தவித வில்லங்கங்களும்‌ இன்றி ஒரு "பொது நோக்கத்திற்காக" அரசுக்கு உரிமை மாற்றல்‌ ஆகி, அதனிடம்‌ ஒப்படைக்கப்பட்டு நிற்றல்‌ வேண்டும்‌. (2) அக்கறை கொண்டுள்ள எவரும்‌, இந்தச்‌ சட்டத்தின்படி அத்தகைய விளம்பரப்பலகையைப்‌ பொறுத்துக்‌ கொடுக்கப்படத்தக்க தொகைக்கான கோரிக்கையைத்‌ தவிர, அத்தகைய விளம்பரப்பலகை மீதோ அல்லது அதன்‌ தொடர்பாகவோ எத்தகைய உரிமைக்‌ கோரிக்கையையும்‌ பெற்றிருத்தல்‌ ஆகாது. (3) வட்டாரப்‌ பகுதி எதிலேனும்‌ இந்தச்‌ சட்டத்தில்‌ தொடக்கத்‌ தேதியன்று விளம்பரப்பலகை ஏதேனும்‌ இருந்ததா என்பது பற்றி வினா எதுவும்‌ எழுமேயானால்‌, அத்தகைய வினாவை மெய்ப்பிக்கும்‌ பொறுப்பானது, அத்தகைய விளம்பரப்‌ பலகையைப்‌ பொறுத்து அக்கறை கொண்டுள்ளவராகக்‌ கோருகிறவரைச்‌ சார்தல்‌ வேண்டும்‌. 5. விளம்பரப்பலகைக்குக்‌ கொடுக்கப்படத்தக்க தொகையைத்‌ தீர்மானிப்பதற்கான நெறிகளும்‌ முறையும்‌.- (1) 4-ஆம்‌ பிரிவின்படி விளம்பரப்பலகைகளை ஒப்படைப்புச்‌ செய்து கொடுத்ததற்காக, அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரும்‌. இதற்குப்‌ பின்னர்‌ விவரிக்கப்பட்ட முறையில்‌ தீர்மானிக்கப்படக்கூடிய தொகையைச்‌ பெறுவதற்கு உரிமையுடையவர்‌ ஆவார்‌, அதாவது,- (ஐ அந்தத்‌ தொகையானது உடன்படிக்கை மூலமாகத்‌ தீர்மானிக்கப்பட முடியுமிடத்து, அது அத்தகைய உடன்படிக்கைக்கிணங்க தீர்மானிக்கப்படுதல்‌ வேண்டும்‌; (b) அத்தகைய உடன்படிக்கை எதற்கும்‌ வரமுடியாதவிடத்து, அரசு, துணை ஆட்சியரின்‌ படிநிலைக்குக்‌ குறையாத ஒருவரை பொதுவராக (Arbitrator) நியமித்தல்‌ வேண்டும்‌. (6) அரசு, குறிப்பிட்ட எந்த நேர்விலும்‌, விளம்பரப்பலகையின்‌ தன்மை குறித்து தேர்ந்த சிறப்பறிவு (expert knowledge) பெற்றுள்ள ஒருவரை பொதுவருக்கு உதவுவதற்காக நியமிக்கலாம்‌; மற்றும்‌ அத்தகைய நியமனம்‌ செய்யப்படுமிடத்து, அக்கறைகொண்டுள்ளவரும்‌ அதே நோக்கத்திற்காக, மதிப்பீட்டாளர்‌ (Assessor) ஒருவரை நியமிக்கலாம்‌; (0) பொதுவருக்கு முன்‌ நடவடிக்கைகள்‌ தொடங்கப்படும்‌ போது, அரசும்‌ அக்கறைகொண்டுள்ளவரும்‌, முறையே தத்தம்‌ கருத்தின்படி கொடுக்கப்பட வேண்டிய தொகை எவ்வளவு என்பதைக்‌ கூறுதல்‌ வேண்டும்‌; (6) பொதுவர்‌, தகராறை (ூசலைக்‌) கேட்டதற்குப்‌ பின்பு, அவருக்கு நேர்மையானதாகவும்‌, நியாயமானதாகவும்‌ தோன்றுகின்ற தொகையைத்‌ தீர்மானித்தும்‌ அத்தொகையானது எவருக்கு அல்லது எவர்களுக்குக்‌ கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌ என்பதைக்‌ குறித்துரைத்தும்‌ தீர்ப்பொனண்றை (award) வழங்குதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ தீர்ப்பை வழங்குகையில்‌, அவர்‌ ஒவ்வொரு நேர்வின்‌ சூழ்நிலைகளையும்‌, இணைப்புப்பட்டியலிலுள்ள வகைமுறைகள்‌ எந்த அளவிற்குப்‌ பொருந்துகின்றறவோ, அந்த அளவிற்கு அவ்வகைமுறைகளையும்‌ கவனத்தில்‌ கொள்ளுதல்‌ வேண்டும்‌; ) அந்தத்‌ தொகைக்கு உரிமைத்‌ தகுதியுடையவர்‌ யார்‌ அல்லது தகுதியுடையவர்கள்‌ எவர்‌ என்பது குறித்துத்‌ தகராறு பூசல்‌) ஏதேனும்‌ இருக்குமிடத்து, பொதுவர்‌ அத்தகைய தகராறை யூசலை) முடிவு செய்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌, பொதுவர்‌, அத்தொகைக்கு ஒருவருக்கு மேற்பட்டவர்கள்‌ உரிமைத்‌ தகுதி உடையவர்கள்‌ என்று கருதினால்‌, அவர்‌ அத்தொகையை அத்தகையவர்களுக்கிடையே பகுத்துக்கொடுத்தல்‌ (apportion) வேண்டும்‌; (9) 1940 ஆம்‌ ஆண்டு பொதுவர்‌ தீர்ப்புச்‌ சட்டத்தில்‌ (மையச்‌ சட்டம்‌ 371940) உள்ள எதுவும்‌, இந்தப்‌ பிரிவின்படியான பொதுவர்‌ தீர்ப்புகளுக்குப்‌ பொருந்துதல்‌ ஆகாது. (2) (0-ஆம்‌ உட்பிரிவின்‌ (6) கூறின்படி பொதுவரால்‌ அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒவ்வொன்றும்‌, அவர்‌ முன்‌ நடந்த நடவடிக்கைகளில்‌ ஏற்பட்ட செலவுத்‌ தொகை எவ்வளவு என்பதையும்‌ எவர்களால்‌ எந்த விகிதங்களில்‌ அத்தகைய தொகையானது கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌ என்பதையும்‌ கூடக்‌ கூறுதல்‌ வெண்டும்‌. 6. 5-ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ தொகையைத்‌ தீர்மானிக்கின்ற அறிவிப்பானது, அக்கறை கொண்டுள்ள எல்லாருக்கும்‌ கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌. (1) 5-ஆம்‌ பிரிவின்கீழ்‌ தீர்மானிக்கப்பட்ட தொகையைப்‌ பொறுத்து, நியாயமான அறிவிப்பு, அக்கறை கொண்டுள்ள எல்லாருக்கும்‌ கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌. 7. கையகப்படுத்தப்பட்ட விளம்பரப்பலகைக்கான தொகையைக்‌ கொடுக்கின்ற முறை.-- (1) 5-ஆம்‌ பிரிவின்படி தீர்மானிக்கப்பட்ட தொகையானது, அக்கறை கொண்டுள்ளவருக்கு அரசினால்‌ கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) தொகையானது உடன்படிக்கை மூலம்‌ நிர்ணயிக்கப்பட்டிருக்குமிடத்து, அது உடன்படிக்கையின்‌ வரையறைகளுக்கு (terms) ஏற்ப உடன்படிக்கைத்‌ தேதியிலிருந்து மூன்று மாத கால அளவிற்குள்ளாகக்‌ கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌. (3) தொகையானது 5-ஆம்‌ பிரிவின்படி பொதுவர்‌ தீர்ப்பு ஒன்றினால்‌ தீர்மானிக்கப்பட்டிருந்து, 8-ஆம்‌ பிரிவின்படி மேல்முறையீடு எதுவும்‌ முன்னிடப்பட்டிராதவிடத்து, அத்தொகையானது, தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாத கால அளவிற்குள்ளாகக்‌ கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌. (4) தீர்ப்பொன்றினால்‌ குறையுற்ற எவரேனும்‌ 8-ஆம்‌ பிரிவின்படி மேல்முறையிடொன்றைத்‌ தாக்கல்‌ செய்திருக்கிறவிடத்து, பொதுவர்‌ தீர்ப்பினால்‌ தீர்மானிக்கப்பட்ட தொகையின்‌ எண்பது விழுக்காடு, தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாத கால அளவிற்குள்ளாகக்‌ கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ 8 ஆம்‌ பிரிவின்படியான தீர்ப்பாயத்தின்‌ ஆணைக்கு இணங்க, கொடுபடவேண்டிய மீதித்தொகை ஏதேனுமிருப்பின்‌ அது, அத்தகைய ஆணையின்‌ தேதியிலிருந்து மூன்று மாத கால அளவிற்குள்‌ வழங்கப்படுதல்‌ வேண்டும்‌. 8. தொகையைப்‌ பொறுத்து, தீர்ப்புகளிலிருந்து எழும்‌ மேல்முறையீடு. (1) தீர்ப்பொன்றினால்‌ குறையுற்ற எவரும்‌ தீர்ப்பாயத்திற்கு மேல்முறையீடு ஒன்றை முன்னிடலாம்‌. (2) அரசு, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக எவ்வளவு தீர்ப்பாயங்கள்‌ தேவைப்படக்கூடுமோ அவ்வளவு தீர்ப்பாயங்களை அமைக்கலாம்‌: (3) தீர்ப்பாயமானது ஒரே ஒருவரை மட்டும்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌: அவர்‌, சார்நிலை நீதிபதியின்‌ படிநிலைக்கு குறையாத ஒரு நீதித்துறை அலுவலராக இருத்தல்‌ வேண்டும்‌. 9. தீர்ப்பாயத்தின்‌ அதிகாரங்கள்‌.- மேல்முறையீடு ஏதேனும்‌ வரப்பெற்றதன்பேரில்‌, தீர்ப்பாயமானது (i) தரப்பினர்கள்‌ தங்கள்‌ தரப்பு முறையீடுகளைத்‌ தெரிவிப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பு ஒன்றை நல்கியதற்குப்‌ பின்பும்‌; (0 தேவைப்பட்டால்‌, தான்‌ பொருத்தமென்று கருதுகிற விசாரணையைச்‌ செய்ததற்குப்‌ பின்பும்‌; 00% அந்த வழக்கின்‌ எல்லாச்‌ சூழ்நிலைகளையும்‌ பரிசீலனை செய்ததற்குப்‌ பின்பும்‌; நேர்மையானதும்‌, நியாயமானதும்‌ என்று தான்‌ கருதுகிற ஆணையைப்‌ பிறப்பித்தல்‌ வேண்டும்‌. 10. மேல்‌ முறையீட்டிற்கான அவகாசம்‌.- 8-ஆம்‌ பிரிவின்படி மேல்முறையீடு எதுவும்‌, எந்தத்‌ தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படுகிறதோ அந்தத்‌ தீர்ப்பை மேல்முறையீட்டாளர்‌ பெற்றதிலிருந்து முப்பது நாட்கள்‌ முடிவடைந்ததற்குப்‌ பின்பு முன்னிடப்படுதல்‌ ஆகாது: ஆனால்‌, தீர்ப்பாயமானது, உரிய காலத்திற்குள்‌ மேல்முறையீட்டை முன்னிடாததற்கு மேல்முறையீட்டாளர்‌ போதிய காரணம்‌ பெற்றிருந்தார்‌ என்று அது திருப்தி கொண்டால்‌, அதன்‌ உளத்தேர்வின்படி, அத்தகைய மேல்முறையீடு எதையும்‌ செய்வதற்கு முப்பது நாட்களுக்கு மிகாமல்‌ மேற்கொண்டு கால அவகாசத்தை அனுமதிக்கலாம்‌. 11. பொதுவர்‌, உரிமையியல்‌ நீதிமன்றத்தின்‌ சில அதிகாரங்களைப்‌ பெற்றிருத்தல்‌.- பொதுவர்‌, இந்தச்‌ சட்டத்தின்படி பொதுவர்‌ நடவடிக்கைகளை நடத்துகையில்‌, 1908 ஆம்‌ ஆண்டு உரிமையியல்‌ விசாரணை முறைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்படி (மையச்‌ சட்டம்‌ V/1908) உரிமை வழக்கை விசாரிக்கின்ற போது ஓர்‌ உரிமையியல்‌ நீதிமன்றம்‌ பெற்றிருக்கின்ற எல்லா அதிகாரங்களையும்‌ பின்வரும்‌ விஷயங்களைப்‌ பொறுத்து, பெற்றிருத்தல்‌ வேண்டும்‌, அதாவது:- (ஐ) எவருக்கும்‌ அழைப்பாணை விடுத்தலும்‌, அவரது வருகையை வலியுறுத்தலும்‌, ஆணையுறுதியின்‌ பேரில்‌ அவரை விசாரணை செய்தலும்‌; (b) சாட்சியமாகத்‌ தாக்கல்‌ செய்யத்தக்க ஆவணம்‌ அல்லது வேறு முக்கியமான பொருள்‌ (material ௦11660) எதையேனும்‌ வெளிப்படுத்துமாறும்‌ தாக்கல்‌ செய்யுமாறும்‌ கோருதல்‌; (29) ஆணையுறுதி ஆவணங்களின்‌ மீது சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளுதல்‌; (0) பொதுப்‌ பதிவுரு (Public recoder) எதையேனும்‌ அல்லது அதன்படி (நகல்‌) ஒன்றை நீதிமன்றம்‌ அல்லது அலுவலகம்‌ எதிலிருந்தும்‌ கோரிப்‌ பெறுதல்‌; (e) சாட்சிகளை விசாரிப்பதற்காக அல்லது ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக ஆணைகளைப்‌ பிறப்பித்தல்‌. 12. அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களை நியமித்தல்‌. (1) அரசு, இந்தச்‌ சட்டத்தின்‌. நோக்கங்களுக்காக தேவைப்படும்‌ என்று கருதக்கூடிய எண்ணிக்கை உடையது மற்றும்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய தகுதிகளைக்‌ கொண்டதுமான அலுவலர்களை அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களாக நியமிக்கலாம்‌. (2) அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்‌, இந்தச்‌ சட்டத்தி வகைமுறைகளைச்‌ செயற்படுத்துவதற்காக அரசால்‌ அவருக்கு குறித்தளிக்கப்படக்கூடிய அலுவல்களையும்‌ கடமைகளையும்‌ செயற்படுத்தி வருதல்‌ வேண்டும்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்படி அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரின்‌ வேறேதேனும்‌ ஆணையினால்‌ குறையுற்ற எவரும்‌, அத்தகைய ஆணையின்‌ தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்ளாக அரசிடமோ அல்லது இதன்பொருட்டு அரசால்‌ தனியாக அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்‌ எவரிடமோ மேல்முறையீடு ஒன்றை முன்னிடலாம்‌: ஆனால்‌, மேல்முறையீட்டாளர்‌ உரிய காலத்திற்குள்‌ மேல்முறையீட்டை தாக்கல்‌ செய்ய முடியாவண்ணம்‌ போதிய காரணத்தால்‌ தடுக்கப்பட்டார்‌ என்று அரசோ அல்லது அவ்வாறு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரோ தெளிவுறக்கண்டால்‌, அல்லது அவர்‌, மேற்சொன்ன முப்பது நாள்‌ கால அளவு முடிவடைந்த பின்பு மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்ளலாம்‌. 13. தகவலைப்‌ அல்லது பெறுவதற்கான அதிகாரம்‌.- அரசோ அல்லது அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரோ அல்லது அரசினால்‌ இதன்பொருட்டுத்‌ தனியாக அதிகாரமளிக்கப்பட்ட வேறெந்த அலுவலரோ இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களைச்‌ செயற்படுத்துவதற்காக வேண்டி, ஆணை மூலமாக, எவரையும்‌ விளம்பரப்பலகை ஏதொன்றின்‌ தொடர்பாக, குறித்துரைக்கப்படக்கூடிய அவர்‌ வசம்‌ உள்ள தகவலை, அந்த ஆணையில்‌ குறித்துரைக்கப்படக்கூடிய அலுவலருக்கு அளிக்குமாறு கோரலாம்‌. அத்தகைய தகவலானது, அத்தகைய ஆணையில்‌ குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள்‌, அத்தகையவரால்‌ அளிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 14. நுழைவதற்கும்‌ ஆய்வு செய்வதற்குமான அதிகாரம்‌.- அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்‌ அல்லது பொது அல்லது சிறப்பு ஆணை மூலமாக, அரசினால்‌ இதன்‌ பொருட்டு அதிகாரமளிக்கப்பட்டுள்ள அலுவலர்‌ எவரும்‌, நியாயமான அறிவிப்புக்குப்‌ பின்பு, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களைச்‌ செயற்படுத்துவதற்காக வேண்டி, எந்த வளாகத்திலும்‌ நுழைந்து விளம்பரப்பலகையை ஆய்வு செய்யலாம்‌. 15. ஆணைகளையும்‌ அறிவிப்புகளையும்‌ சார்வு செய்தல்‌.- (1) இந்தப்‌ பிரிவில்‌ வகைமுறைகளுக்கும்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்ச்‌ செய்யப்படக்கூடிய விதிகள்‌: எவற்றிற்கும்‌ உட்பட்டு, இந்தச்‌ சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அல்லது கொடுக்கப்பட்ட ஆணை அல்லது அறிவிப்பு ஒவ்வொன்றும்‌,- (8) ஒரு பொதுத்தன்மை வாய்ந்த அல்லது ஆட்களின்‌ ஒரு வகையினரைப்‌ பாதிக்கின்ற ஆணை அல்லது அறிவிப்பு எதையேனும்‌ பொறுத்தமட்டில்‌, தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌; (௦) ஒரு கூட்டு நிறுவனத்தையோ (Company) அல்லது நிறுவகத்தையோ (firm) பாதிக்கின்ற ஆணை அல்லது அறிவிப்பு எதையேனும்‌ பொறுத்தமட்டில்‌, 1908 ஆம்‌ ஆண்டு உரிமையியல்‌ விசாரணைமுறைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ ௩74908) முதலாவது இணைப்புப்பட்டியலின்‌ XXIX ஆம்‌ ஆணையின்‌ 2-ஆம்‌ விதியில்‌ அல்லது நேர்விற்கேற்ப XXX ஆம்‌ ஆணையின்‌ 3-ஆம்‌ விதியில்‌ உள்ள, அழைப்பாணைகள்‌ சார்வு செய்தலுக்காக (service 01 summons) வகை செய்யப்பட்ட முறையில்‌, சார்வு செய்யப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (௦ (ஒரு கூட்டு நிறுவனமாகவோ அல்லது நிறுவகமாகவோ இல்லாத) தனி ஆள்‌ ஒருவரை பாதிக்கின்ற ஆணை அல்லது அறிவிப்பு எதையேனும்‌ பொறுத்தமட்டில்‌, அத்தகையவருக்கு,- 0) அவருக்கு அதை ஒப்படைப்பதன்‌ மூலம்‌ அல்லது கொடுப்பதன்‌ மூலம்‌ (tendering) அல்லது (00 அது அவ்வாறு ஒப்படைவு செய்யப்படவோ அல்லது கொடுக்கப்படவோ முடியாதபோது அதை அத்தகைய ஆளின்‌ அலுவலர்‌ எவருக்கும்‌ அல்லது அத்தகைய ஆளின்‌ குடும்பத்தில்‌ உள்ள வயதுவந்த ஆண்‌ உறுப்பினர்‌ எவரிடமேனும்‌ ஒப்படைவு செய்வதன்‌ மூலம்‌ அல்லது கொடுப்பதன்‌ மூலமாகவோ அல்லது அதன்படி (நகல்‌ ஒன்றை அவர்‌ கடைசியாக குடியிருந்து வந்திருப்பதாக அல்லது தொழில்‌ நடத்தி வந்திருப்பதாக அல்லது ஆதாயத்திற்காகச்‌ சொந்தமாக வேலை செய்து வந்திருப்பதாக தெரியவருகிற வளாகத்தின்‌ வெளிக்கதவின்‌ மீது அல்லது எடுப்பானதொரு பகுதி மீது ஒட்டுவதன்‌ மூலமாகவோ அல்லது இந்த வழிகளின்‌ மூலமாக சார்வு செய்யத்தவறினால்‌, 00 அஞ்சல்‌ மூலமாகவோ, அவருக்குச்‌ சார்வு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. (2) அந்த விளம்பரப்பலகையின்‌ உடைமையானது தகராறில்‌ டூசலில்‌) இருக்கிறவிடத்து அல்லது மேற்சொன்ன விளம்பரப்பலகையில்‌ அக்கறை கொண்டுள்ளவர்களை உடனடியாக தேடிக்‌ காணவியலாததோடு, அந்த ஆணை அல்லது அறிவிப்பு மிதமிஞ்சிய காலதாமதமின்றி சார்வு செய்யப்படமுடியாதவிடத்து, அந்த ஆணை அல்லது அறிவிப்பானது தமிழ்நாடு அரசிகழில்‌ வெளியிடப்படுவதன்‌ மூலமாகவும்‌ இயலுமிடத்து அதன்படி (நகல்‌) ஒன்றை அந்த விளம்பரப்பலகையின்‌ எடுப்பான பகுதி ஏதொன்றின்மீதும்‌ ஒட்டுவதன்‌ மூலமாகவும்‌ சார்வு செய்யப்படலாம்‌. 16. நல்லெண்ணத்தில்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப்‌ பாதுகாப்பு.- (1) இந்தச்‌ சட்டத்தை அல்லது இதன்கீழ்ச்‌ செய்யப்பட்ட விதி அல்லது ஆணை எதையேனும்‌ ஒட்டி நல்லெண்ணத்துடன்‌ செய்யப்பட்டுள்ள அல்லது செய்யக்‌ கருதப்பட்டுள்ள எதற்காகவும்‌, எவருக்கும்‌ எதிராக, உரிமை வழக்கோ, குற்ற வழக்கோ அல்லது வேறு சட்ட நடவடிக்கை எதுவுமோ எடுக்கப்படுதல்‌ ஆகாது. (2) இந்தச்‌ சட்டத்தை அல்லது இதன்‌ கீழ்ச்‌ செய்யப்பட்ட விதி அல்லது ஆணை எதையேனும்‌ ஒட்டி நல்லெண்ணத்தில்‌ செய்யப்பட்டுள்ள அல்லது செய்யக்‌ கருதப்பட்டுள்ள எதிலேனும்‌ விளைவிக்கப்பட்ட அல்லது பெரும்பாலும்‌ விளைவிக்கப்படக்கூடிய சேதம்‌ எதற்காகவும்‌, அரசுக்கு எதிராகவோ அல்லது வேறு எந்த அலுவலருக்கும்‌ எதிராகவோ உரிமை வழக்கு அல்லது வேறு சட்ட நடவடிக்கை எதுவும்‌ தொடரப்படுதல்‌ ஆகாது. 17. உரிமையியல்‌ நீதிமன்றங்களின்‌ அதிகாரவரம்பிற்கு தடை.- இந்தச்‌ சட்டத்தில்‌ வேறுவிதமாக வெளிப்படையாக வகைசெய்யப்பட்டதைத்‌ தவிர, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்படி, அரசோ அல்லது பொதுவர்‌ ஒருவரோ அல்லது அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரோ தீர்மானிக்க வேண்டியது உள்ள எந்த விஷயத்தைப்‌ பொறுத்தும்‌, உரிமை வழக்கு நீதிமன்றம்‌ எதுவும்‌ அதிகாரவரம்பு பெற்றிருத்தல்‌ ஆகாது; மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அல்லது அதன்படி வழங்கப்பட்ட அதிகாரம்‌ எதையேனும்‌ ஒட்டி எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை எதையும்‌ பொறுத்து, நீதிமன்றம்‌ எதனாலுமோ அல்லது வேறு அதிகார ஆயத்தாலோ ஏவு கட்டளை (Injunction) எதுவும்‌ வழங்கப்படுதல்‌ ஆகாது. 18. அரசு முதலியவை அல்லாத வேறெவரும்‌ விளம்பரப்‌ பலகைகளை அமைப்பதற்குத்‌ தடை.- 1919-ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சிச்‌ சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 771919) அல்லது 1971-ஆம்‌ ஆண்டு மதுரை மாநகராட்சிச்‌ சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 154971) அல்லது 1981-ஆம்‌ ஆண்டு கோயம்புத்தூர்‌ மாநகராட்சிச்‌ சட்டத்தில்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 251981) அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள வேறு சட்டம்‌ எதிலும்‌ எண்ன அடங்கியிருந்தபோதிலும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதி அன்றும்‌ அது முதற்கொண்டும்‌ அரசோ அல்லது இதன்பொருட்டு அரசால்‌ தனியாக அதிகாரம்‌ அளிக்கப்பட்ட வேறு ஏதேனும்‌ அதிகார ஆயமோ அல்லது அலுவலரோ அல்லாத வேறு எவரும்‌, பொது இடம்‌ எதிலும்‌ அல்லது தனியார்‌ இடம்‌ எதிலும்‌, விளம்பரப்பலகை எதையும்‌ அமைத்தல்‌ ஆகாது. ஆனால்‌ எவரேனும்‌, சென்னை மாநகரத்திற்குள்ளாகப்‌ பொது இடம்‌ எதிலேனும்‌ 1985 ஜூலை 10 ஆம்‌ நாளன்றும்‌ இந்தச்‌ சட்டம்‌ தமிழ்நாடு அரசிகழில்‌ வெளியிடப்படும்‌ தேதிக்கு முன்னரும்‌ விளம்பரப்பலகை எதையேனும்‌ அமைக்குமிடத்து, இதன்பொருட்டு அரசினால்‌ தனியாக அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்‌ எவரும்‌, அக்கறை கொண்டுள்ளவர்களுக்கு வாய்ப்பொன்றை அளித்ததற்குப்பின்பு அத்தகைய விளம்பரப்‌ பலகைகள்‌ அனைத்தையும்‌ அகற்றுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அவ்வாறு அகற்றப்படும்‌ விளம்பரப்பலகைகள்‌ எவற்றைப்‌ பொறுத்தும்‌ தொகை எதுவும்‌ வழங்கப்படுதல்‌ ஆகாது. 19. குற்றங்களுக்கான தண்டனை (Penalty).— (ஐ இந்தச்‌ சட்டம்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்பட்ட தேதியன்றோ அல்லது அதன்பிறகோ, சென்னை மாநகரிலும்‌; (௦) வேறேதேனும்‌ வட்டாரத்தைப்‌ பொறுத்த அளவில்‌ 1 ஆம்‌ பிரிவின்‌ (3)- ஆம்‌ உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையால்‌ குறிக்கப்பட்ட தேதியன்றோ அல்லது அதன்‌ பிறகோ, அத்தகைய பிற வட்டாரப்‌ பகுதியிலும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறை எதையேனும்‌ அல்லது இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது ஆணை எதையேனும்‌ மீறுகிற, அல்லது இந்தச்‌ சட்டத்தினால்‌ அல்லது சட்டத்தின்படி வழங்கப்பட்ட அதிகாரம்‌ எதையும்‌ சட்டப்படி செலுத்துவதற்கு இடையூறு செய்கிற எவரொருவரும்‌, மூன்றாண்டுகள்‌ வரை நீட்டிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறைத்தண்டனையோ அல்லது பணத்தண்டமோ (அபராதமோ) அல்லது இரண்டுமோ விதித்துத்‌ தண்டிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 20. கூட்டு நிறுவனங்களால்‌ செய்யப்படும்‌ குற்றங்கள்‌.- (1) இந்தச்‌ சட்டத்திற்கெதிரான குற்றம்‌ ஒன்று ஒரு கூட்டு நிறுவனத்தால்‌ (Company) செய்யப்பட்டிருக்கின்றவிடத்து, அக்குற்றம்‌ செய்யப்பட்ட காலத்தில்‌ அந்தக்‌ கூட்டு நிறுவனத்தி அலுவலை நடத்துவதற்காக அந்தக்‌ கூட்டு நிறுவனத்தின்‌ பொறுப்பில்‌ இருந்தவரும்‌ (In—charge) அந்தக்‌ கூட்டு நிறுவனத்திற்குப்‌ பொறுப்பாளியாக இருந்தவருமான ஒவ்வொரும்‌ மற்றும்‌ அந்தக்‌ கூட்டு நிறுவனமும்‌ கூட அக்குற்றத்தை செய்ததாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுத்‌ தண்டிப்பதற்கு உள்ளாதலும்‌ வேண்டும்‌; ஆனால்‌, அத்தகைய குற்றமானது தமக்குத்‌ தெரியாமல்‌ நடந்தது என்றோ, அல்லது அவ்வாறு குற்றம்‌ செய்வதைத்‌ தடுப்பதற்கான உரிய முயற்சி எல்லாவற்றையும்‌, தாம்‌ எடுத்திருப்பதாகவோ அத்தகையவர்‌ மெய்ப்பிப்பாரானால்‌, இந்த உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌ அவரை எவ்வித தண்டனைக்கும்‌ உள்ளாக்குதல்‌ ஆகாது. (2) ௫-ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, இந்தச்‌ சட்டத்திற்கெதிரான குற்றம்‌ எதுவும்‌ ஒரு கூட்டு நிறுவனத்தால்‌ செய்யப்பட்டிருந்து, அக்குற்றமானது அந்நிறுவனத்தின்‌ இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌ அல்லது வேறு அலுவலர்‌ ஒருவரின்‌ இசைவுடன்‌ அல்லது மறைமுக ஆதரவுடன்‌ செய்யப்பட்டிருக்கிறது என்பதாகவோ அல்லது அவரது புறக்கணிப்பின்‌ மீது சாட்டத்தக்கதாக இருக்கிறது என்பதாகவோ மெய்ப்பிக்கப்படுமிடத்து, அத்தகைய இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌, அல்லது வேறு அலுவலர்‌ அந்தக்‌ குற்றத்தைச்‌ செய்திருப்பதாகக்‌ கொள்ளப்படுவதோடு, அதன்படியே தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதல்‌ வேண்டும்‌. விளக்கம்‌ :- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, (ஐ "கூட்டு நிறுவனம்‌" என்பது, கூட்டமைப்பு எதுவும்‌ என்று பொருள்படுவதோடு, ஒரு கூட்டுத்தொழில்‌ நிறுவகம்‌ (Firm) ஒன்றை அல்லது தனி ஆட்களைக்கொண்ட வேறு கழகத்தை உள்ளடக்கும்‌; மற்றும்‌ (b) ஒரு நிறுவகம்‌ (Firm) தொடர்பாக, "இயக்குநர்‌" என்பது அந்நிறுவகத்திலுள்ள ஒரு கூட்டாளி என்று பொருள்படும்‌. 21. சிலர்‌, பொது ஊழியர்களாகக்‌ கருதப்பட வேண்டும்‌ என்பது.-- பொதுவாக ஒவ்வொருவரும்‌, அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரும்‌ மற்றும்‌ அரசால்‌ அதிகாரமளிக்கப்பட்ட பிற அலுவலர்‌ ஒவ்வொருவரும்‌, இந்தச்‌ சட்டத்தின்படி அதிகாரம்‌ எதையேனும்‌ செலுத்துகிறபோது அல்லது கடமை எதையேனும்‌ புரிகின்றபோது, 1860-ஆம்‌ ஆண்டு இந்தியத்‌ தண்டனைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ XLV/1860) 21 ஆம்‌ பிரிவின்‌ பொருளின்படி ஒரு பொது ஊழியராகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 22. இச்சட்டம்‌ பிற சட்டங்கள்‌ முதலானவற்றின்‌ மீதூர்ந்து நிற்கும்‌ என்பது.- இந்தச்‌ சட்டத்தில்‌ வேறுவிதமாக வகைசெய்யப்பட்டவாறு தவிர, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌, அப்போதைக்கு நடைமுறையிலுள்ள வேறெந்தச்‌ சட்டத்திலும்‌ அடங்கியுள்ள எதுவும்‌ முரணாக இருக்குமாயினும்‌, செயற்பாட்டில்‌ இருந்துவருதல்‌ வேண்டும்‌. 23. கையகப்படுத்தப்பட்ட விளம்பரப்‌ பலகையைப்‌ பயன்படுத்துதல்‌.- இந்தச்‌ சட்டத்தின்படி கையகப்படுத்தப்பட்ட விளம்பரப்‌ பலகை எதையும்‌ அகற்றுவதற்கு அல்லது தான்‌ பொருத்தமெனக்‌ கருதக்கூடிய முறையில்‌ பொது நலனைக்‌ கருதி அத்தகைய விளம்பரப்‌ பலகையைப்‌ பயன்படுத்துவதற்கு அல்லது பயன்படுத்த அனுமதிப்பதற்கு அரசு உரிமையுடையது ஆகும்‌. 24. விலக்களிப்புகள்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌ அடங்கியுள்ள எதுவும்‌,- (3) (i) மைய அரசுக்கு; (i) மாநில அரசு எதற்கும்‌; பற மைய அரசுக்கோ அல்லது மாநில அரசு எதற்கேனுமோ சொந்தமானதான அல்லது அதன்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள நிறுவனம்‌ அல்லது வேறு அதிகார ஆதாயம்‌ எதற்கும்‌; அல்லது 0) இதன்‌ பொருட்டு அரசால்‌ அங்கீகரிக்கப்படக்கூடிய நிலையம்‌ (Institution) எதற்கும்‌ சொந்தமான விளம்பரப்பலகை எதற்கும்‌; அல்லது (b)— (i) எந்த நிலம்‌ அல்லது கட்டடத்தின்‌ மீது அத்தகை விளம்பரப்பலகை. அமைக்கப்பட்டிருக்கின்றதோ அந்த நிலம்‌ அல்லது கட்டடத்திற்குள்ளாக நடத்தப்படும்‌ வாணிகம்‌ அல்லது வியாபாரம்‌ பற்றிய அல்லது விற்பனை எதையேனும்‌ பற்றிய அல்லது அத்தகைய நிலத்தை அல்லது கட்டடத்தை அல்லது அதிலுள்ள பொருள்களை வாடகைக்கு விடுவது பற்றிய அல்லது அத்தகைய நிலம்‌ அல்லது கட்டடத்தின்‌ மீது அல்லது அதில்‌ நடத்தப்படவுள்ள விற்பனை, கேளிக்கை அல்லது கூட்டம்‌ எதையேனும்‌ பற்றிய விளம்பரம்‌ ஏதேனும்‌; அல்லது 0 எந்த நிலம்‌ அல்லது கட்டடத்தின்‌ மீது விளம்பரப்பலகை: அமைக்கப்பட்டிருக்கிறதோ, அந்த நிலம்‌ அல்லது கட்டடங்களின்‌ பெயரைப்‌ பற்றிய அல்லது அத்தகைய நிலம்‌ அல்லது கட்டடங்களின்‌ சொந்தக்காரர்‌ அல்லது அனுபோகதாரரின்‌ பெயரைப்‌ பற்றிய விளம்பரம்‌ ஏதேனும்‌, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள விளம்பரப்பலகை எதற்கும்‌ பொருந்துதல்‌ ஆகாது. 25. விலக்களிப்பதற்கான அதிகாரம்‌.- அரசு தானாக முற்பட்டோ அல்லது வேறுவகையிலோ, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளைப்‌ பொருந்தச்‌ செய்வதானது, விளம்பரப்‌ பலகைகளின்‌ சொந்தக்காரர்களின்‌ வகையினர்‌ எவருக்கேனும்‌ முறையற்ற இன்னலை விளைவிக்கும்‌ என்று தெளிவுறக்‌ கண்டால்‌ அரசு ஆணை மூலமாக பின்னுற (Prospectively) இயங்கும்‌ தண்மையிலோ அல்லது முன்னுற இயங்கும்‌ (௩௦56௦௦) தண்மையிலோ மற்றும்‌ அந்த ஆணையில்‌ குறித்துரைக்கப்படக்கூடிய நிபந்தனைகள்‌ எவையேனுமிருப்பின்‌ அவற்றுக்கு உட்பட்டும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ அனைத்திலிருந்துமோ அல்லது எதிலிருந்துமோ அத்தகைய விளம்பரப்பலகைகளுக்கு விலக்களிக்கலாம்‌. 26. எங்கே விளம்பரப்பலகைகள்‌ அமைக்கப்படபலாமென இடங்களைத்‌ தெரிந்தெடுப்பதற்கான குழு.-- (1) ஒவ்வொரு வட்டாரப்‌ பகுதிக்கும்‌ விளம்பரப்பலகைகளை அமைப்பதற்கான இடங்களைத்‌ தெரிந்தெடுப்பதைக்‌ கடமையாக கொண்டுள்ள ஒரு குழு அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌; (2) அத்தகைய குழு ஒவ்வொன்றும்‌ - (8) காவல்‌ துறைத்‌ துணை ஆணையர்‌ அல்லது காவல்‌ துறைக்‌ கண்காணிப்பாளரின்‌ படிநிலைக்குக்‌ குறையாத, காவல்‌ துறையைச்‌ சேர்ந்த அலுவலர்‌ ஒருவரை; (௦) சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகார அமைப்பின்‌ பிரதிநிதி (சார்பாளர்‌) ஒருவரை: (6) அரசால்‌ நியமிக்கப்பட வேண்டிய ஐந்து பேருக்கு மிகாத பிற அலுவல்முறை உறுப்பினர்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. (3) அரசு, (2)-ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்ட உறுப்பினர்களில்‌ ஒருவரை, குழுவின்‌ தலைவராக இருக்குமாறு நியமித்தல்‌ வேண்டும்‌. (4) ஒவ்வொரு குழுவும்‌, விளம்பரப்பலகைகளை அமைப்பதற்கான இடங்களைத்‌ தெரிந்தெடுக்கையில்‌, பின்வரும்‌ விஷயங்களைக்‌ கவனத்தில்‌ கொள்ளுதல்‌ வேண்டும்‌, அவையாவன:- (ஐ கருதியுள்ள விளம்பரப்பலகை அமைக்கப்படவுள்ள இட அமைப்பு (Location); (b) அத்தகைய விளம்பரப்பலகையை அமைப்பதால்‌, போக்குவரத்து நடமாட்டத்திற்கு (Moving Traffic) ஏற்படும்‌ விளைவு; மற்றும்‌ (6) வகுத்துரைக்கப்படக்கூடிய வேறு விஷயங்கள்‌. 27. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- (1) அரசு, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களைச்‌ செயற்படுத்துவதற்காக, விதிகளைச்‌ செய்யலாம்‌. (2) குறிப்பாகவும்‌, முன்சென்ற அதிகாரத்தின்‌ பொதுப்‌ பாங்கிற்கு ஊறின்றியும்‌, அத்தகைய விதிகள்‌ பின்வரும்‌ விஷயங்கள்‌ அனைத்திற்கும்‌ அல்லது அவற்றில்‌ எதற்கேனும்‌ வகை செய்யலாம்‌, அவையாவன:- (ஐ இந்தச்‌ சட்டத்தின்படி பொதுவர்‌ தீர்ப்பு நடவடிக்கைகளிலும்‌ மேல்முறையீடுகளிலும்‌ பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை; (௦) இந்தச்‌ சட்டத்தின்படி பொதுவருக்கு முன்பான நடவடிக்கைகளிலும்‌ மேல்முறையீட்டிலும்‌ ஏற்பட்ட செலவுத்‌ தொகைகளைப்‌ பகுப்பதற்குப்‌ பின்பற்றப்பட வேண்டிய கோட்பாடுகள்‌; (9) அறிவிப்புகளையும்‌ ஆணைகளையும்‌ சார்வு செய்யும்‌ முறை; (0) வகுத்துரைக்கப்பட வேண்டிய அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய வேறெந்த விஷயமும்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌ அனைத்தும்‌, தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌, ஒரு குறிப்பிட்ட நாளில்‌ அவை நடைமுறைக்கு வருவனவாக வெளிப்படையாகச்‌ சொல்லப்பட்டாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்படும்‌ நாளன்றே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (4) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்படும்‌ ஒவ்வொரு விதியும்‌, அது செய்யப்பட்ட பின்பு கூடிய விரைவில்‌ சட்டமன்றத்தின்‌ இரு அவைகளின்‌ முன்பும்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவ்வாறு வைக்கப்பட்ட அந்தக்‌ கூட்டத்‌ தொடர்‌ முடிவடைவதற்கு முன்பு அல்லது அடுத்த கூட்டத்தொடருக்கு முன்பு அந்த விதியில்‌ மாற்றம்‌ எதையேனும்‌ செய்வதற்கு இரண்டு அவைகளும்‌ இணங்கினால்‌ அல்லது அந்த விதி செய்யப்பட வேண்டியதில்லை என்று இரண்டு அவைகளும்‌ இணங்கினால்‌, அதன்‌ பின்பு அந்த விதி அவ்வாறு மாற்றம்‌ செய்யப்பட்ட வடிவத்தில்‌ மட்டுமே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌, அல்லது நிலவரத்திற்கேற்ப நடைமுறைக்கு வராதிருத்தல்‌ வேண்டும்‌; எனினும்‌ அத்தகைய மாற்றம்‌ செய்வது அல்லது பயனற்றதாக்குவது (Annuiment) எதுவும்‌ அந்த விதியின்கீழ்‌ முன்னதாக செய்யப்பட்ட எதனுடைய செல்லுந்தன்மைக்கும்‌ ஊறின்றி இருத்தல்‌ வேண்டும்‌. இணைபப்புப்பட்டியல்‌. (5 ஆம்‌ பிரிவைக்‌ காண்க.) தொகையைத்‌ தீர்மானிப்பதற்கான நெறிமுறைகள்‌. 1. ஒவ்வொரு விளம்பரப்‌ பலகையைப்‌ பொறுத்தும்‌, கொடுக்கப்பட வேண்டிய தொகையானது, இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதியன்று அத்தகைய விளம்பரப்‌ பலகைக்குள்ள சந்தை விலைமதிப்பாக (Market value) இருத்தல்‌ வேண்டும்‌. 2. எந்த இடத்தில்‌ விளம்பரப்பலகை அமைக்கப்பட்டிருக்கிறதோ அந்த இடத்தைப்‌ பொறுத்த அல்லது அந்த விளம்பரப்‌ லகையையே பொறுத்த, குத்தகை அல்லது உரிமம்‌ ஏதொன்றின்‌ நேர்வில்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ நடைமுறைக்கு வராமல்‌ இருந்திருந்தால்‌ அந்தக்‌ குத்தகை அல்லது உரிமத்தின்‌ முடிவடையாத கால அளவின்போது, அக்கறை கொண்டுள்ளவர்களால்‌ எந்த வருமானத்தைப்‌ பெற்றிருக்கலாமோ அந்த வருமானத்திற்குச்‌ சமமான ஒரு தொகையானது அவர்களுக்கு கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌; ஆனால்‌, அத்தகைய குத்தகை அல்லது உரிமம்‌ ஏதேனும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ முடிவடைந்திருக்கிறவிடத்து, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ நடைமுறைக்கு வராமலிருந்திருந்தால்‌ அக்கறை கொண்டுள்ளவர்கள்‌ ஒரு மாத கால அளவிற்கு எந்த வருமானத்தைப்‌ பெற்றிருக்கலாமோ அந்த வருமானத்திற்குச்‌ சமமான ஒரு தொகையானது அவர்களுக்குக்‌ கொடுக்கப்படுதல்‌ வேண்டும்‌.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts