Tamil Nadu · 1993 · Act 20
The Parambikulam-Aliyar Project (Regulation of Water-Supply) Act, 1993
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது, 1993 ஆம்
ஆண்டு மே திங்கள் 19 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 20/1993.
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்திலிருந்து நீர் வழங்கலை
முறைப்படுத்துவதற்கும் மற்றும் அதனுடன் தொடர்புடைய
பொருட்பாடுகளுக்குமானதொரு சட்டம்.
இந்திய அரசமைப்பின் 48 ஆம் உறுப்பின்படி, வேளாண்மையை நவின
மற்றும் அறிவியல் வழிகளில் ஒழுங்கமைக்க அரசு முயற்சிக்க வேண்டும்
என்பதாலும்;
பொதுமக்களின் நலன் கருதியும், வேளாண் உற்பத்தியில் அதிகபட்ச
பயன் கிடைக்கும் வகையிலும், பின்தங்கிய மற்றும் வறட்சி பாதித்த
பகுதிகளுக்கு செழிப்பைக் கொண்டுவருவதற்காகவும், இந்திய அரசமைப்பின்
கூறப்பட்ட 48 ஆம் உறுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நெறிப்படுத்தும்
கோட்பாடுகளுக்கு இணங்க, விவசாய சீர்திருத்த நடவடிக்கையாக,
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் உள்ள நீர்ப்பாசன அமைப்பை
முறைப்படுத்தி, உகந்த பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம்,
கோயம்புத்தூர் மற்றும் பெறியார் மாவட்டங்களில் அதிக நிலங்களை
விளைச்சளுக்கு கொண்டு வருவது அவசியம் என்று கருதப்படுகிறது
என்பதாலும்;
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் மூலம், 1967 ஆம் ஆண்டு முதல்
சுழற்சி முறையில் பாசனத்திற்காக, நீர் பெறப்பட்டுவரும் மொத்த பரப்பிடமான
202152 ஏக்கர் நிலங்களில் உள்ள 2152 ஏக்கர் ஆயக்கட்டு முழுவதையும்
மூன்று மண்டலங்களாகப் பிரித்தும், ஒவ்வொரு மண்டலத்திற்கும் சுழற்சி
முறையில் 18 மாதங்களுக்கு ஒரு முறை நீர் வழங்கப்பட்டு வருகிறது
என்பதாலும்;
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து,
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் தற்போதுள்ள ஆயக்கட்டை நீட்டிக்க
வேண்டும் என்று வறட்சி பாதித்த பகுதிகள், பாசன வசதி பெறும் வகையில், பால்
1
அணை, தாராபுரம், உடுமலைப்பேட்டை மற்றும் பொள்ளாச்சி ஆகிய
வட்டங்களின் விவசாயிகளிடமிருந்து அடிக்கடி கோரிக்கைகள் வந்துள்ளன
என்பதாலும்;
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் கீழ் மேற்கண்ட வட்டங்களில்
175000 ஏக்கர் நிலங்கள் ஆயக்கட்டு செய்து முடிக்க அரசு ஒப்புதல்
அளித்துள்ளது என்பதாலும்;
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின்கீழ் வரும் 115,000 எக்கர் நிலத்தை
பாசன அமைப்புடன் சேர்த்து, 1976 ஜனவரி 29 ஆம் தேதியிட்ட பொதுப் பணித்
துறை அரசாணை நிலை எண் 126 இல் அரசு ஆணை பிறப்பித்துள்ளது
என்பதாலும்;
கூறப்பட்ட ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்
நீதிப்பரோாணை மனு எண்.575/78 மற்றும் 1309/78 ஆகிய வழக்குகளில்
இரண்டு நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விரிவுபடுத்தப்பட்ட
ஆயக்கட்டுப் பகுதியில் புதிய ஆயக்கட்டுதாரர்களுக்கு நீர் வழங்குவதற்கு
முன்பு, அசல் ஆயக்கட்டுதாரர்களுக்கு பதினெட்டு மாதங்களுக்கு ஒரு முறை
முடிந்தவரை அல்லது நடைமுறைக்கு சாத்தியமான முறையில் போதுமான நீர்
வழங்கப்படுவதை உறுதிசெய்ய உயர்ந்திமன்றம் ஆணையிட்டுள்ளது
என்பதாலும்;
சென்னை உயர்ந்திமன்றத்தின் மேற்கண்ட வழிகாட்டுதலின்படி, அரசு
தலைமைப் பொறியாளர் (நீர்ப்பாசனம்) அவர்களிடமிருந்து விரிவான அறிக்கை
ஒன்றைக் கோரியுள்ளது. அவர் தற்போதுள்ள நீர்வளத்தைக் கொண்டு முழு
ஆயக்கட்டுகளையும் நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு
மண்டலத்திற்கும் 4 1/2 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை
இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நீர் பெறலாம் என்றும், இத்திட்டத்திலிருந்து
1.75 இலட்சம் ஏக்கர் புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு வழங்கலாம் என்றும்
தெரிவித்திருந்தார் என்பதாலும்;
தலைமைப் பொறியாளர் (நீர்ப்பாசனம்) அவர்களின் அறிக்கையை
கவனமாகப் பரிசீலித்து. வல்லுநர்களின் கருத்தைப் பெற்று, பரம்பிக்குளம்-
ஆழியாறு திட்டத்தின்கீழ் வரும் ஆயக்கட்டுகளை சாத்தியமான நான்கு
2.
மண்டலங்களாக, மறுமண்டலமாக மாற்றுவதற்கான முன்மொழிவை அரசு
ஏற்றுக்கொண்டுள்ளது என்பதாலும்;
மேற்கூறிய காரணங்களைக் கருத்தில் கொண்டு, அரசு, பரம்பிக்குளம்-
ஆழியாறு திட்டத்தின்கீழ் இப்பகுதியின் வறட்சியால் பாதிக்கப்படும் தண்மை
கொண்டிருப்பதையும், இத்திட்டத்தில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட
உள்கட்டமைப்பு வசதிகள் பெரும் செலவினத்தை ஏற்படுத்தும் என்பதை
கருத்தில் கொண்டும், இப்பகுதி முழுவதையும் நான்கு மண்டலங்களாகப் பிரித்து,
ஒவ்வொரு மண்டலத்திற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பாசன
வசதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய குடியரசின் நாற்பத்து நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. குறுந்தலைப்பு, பொருந்துகை மற்றும் தொடக்கம்.- (1) இந்தச் சட்டம்,
1993 ஆம் ஆண்டு பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் (நீர் வழங்கலை
முறைப்படுத்துதல்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கோவை மற்றும் பெரியார்
மாவட்டங்களுக்கு பொருந்தும்.
(3) இது, உடனடியாக நடைமுறைக்கு வரும்.
2. பொருள் வரையறைகள்.- இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறுபொருள்
வேண்டப்பட்டாலன்றி, -
(a) "அரசு" என்பது மாநில அரசுகள் என்று பொருள்படும்;
(௦) ஏதேனும் நிலம் தொடர்பாக, "உரிமையாளர்! என்பது, அத்தகைய
நிலத்தில் அக்கறை கொண்டுள்ள நபர் எவரையும் உள்ளடக்கும்;
(௦) யபரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் என்பது பாலாறு வடிநிலத்தில்
பரம்பிக்குளம் பிரதானக் கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் மற்றும்
உயர்மட்டக் கால்வாய் மற்றும் ஆழியார் படுகையில் பொள்ளாச்சி கால்வாய்,
வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேத்துமடை கால்வாய் மற்றும் ஆழியாறு
ஊட்டுக் கால்வாய் ஆகியவற்றையும் அதன் கிளை வாய்க்கால்களையும்
உள்ளடக்கும்;
(0) 'இணைபப்புப் பட்டியல்' எண்பது இந்தச் சட்டத்துடன் இணைக்கப்பட்ட
இணைப்புப் பட்டியல் என்று பொருள்படும்.
3. பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்திலிருந்து வேளாண் பயன்பாட்டிற்கான
நீர் வழங்கலை முறைப்படுத்துதல்.-- (1) அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள
சட்டம் எதிலும் அல்லது ஏதேனும் நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது பிற அதிகார
அமைப்பின் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலும் அல்லது ஏதேனும்
வழக்கம், ஒப்பந்தம் அல்லது பயன்பாடு எதிலும் அடங்கியுள்ள எது
எவ்வாறிருப்பினும் அல்லது பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில்
ஆயக்கட்டுகளைச் சேர்ப்பது தொடர்பாக அரசால் செய்யப்பட்ட அல்லது
வெளியிடப்பட்ட விதி, அறிவிக்கை அல்லது ஆணை எதுவும், அத்திட்டம் அல்லது
அத்தகைய ஆயக்கட்டு அல்லது அதன் பகுதிகளுக்கு நீர் வழங்குதல் மற்றும்
அன்றைய தினத்தில் நடைமுறையில் உள்ள இச்சட்டத்தை தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடுவதற்கு, அரசானது, தலைமைப் பொறியாளர் (நீர்ப்பாசண) அல்லது
அவர்கள் அவசியமெனக் கருதக்கூடியவாறான அத்தகைய வேறு அலுவலரிடம்
அல்லது அதிகார அமைப்பிடம் கலந்தாலோசித்த பின்னர், அறிவிக்கை வாயிலாக,
இணைபப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான்கு மண்டலங்களில்
உள்ளடக்கிய பரம்பிக்குளம் - ஆழியாறில் மொத்தம் 3,77152 ஏக்கர் விவசாய
பயன்பாட்டிற்கு நீர் வழங்கலுக்கு, வகுத்துரைக்கப்படலாகும் விதிகளுக்கு இணங்க
சுழற்சி முறையில் ஒழுங்குபடுத்தலாம்.
(2 1) ஆம் உட்பிரிவின்கீழ் அறிவிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு
முன்பு அரசானது, பின்வரும் பொருட்பாடுகளை கருத்தில் கொள்ள வேண்டும்: -
(ஐ பொது மக்களின் நலன்:
(b) அதிக நிலங்களுக்கு நீர் வழங்கலை விரிவுபடுத்துவதன் மூலம்
விவசாய உற்பத்தியில் விளையக்கூடிய அதிகபட்ச சாத்தியமான நண்மை;
(௦9 பின்தங்கிய மற்றும் வறட்சியான பகுதிகளை ஆயக்கட்டுகளுக்குள்
கொண்டு வருவதன் மூலம், செழிப்பைக் கொண்டுவருவதன் நன்மை;
(0) தற்போதுள்ள ஆயக்கட்டுகளின் நீர் இருப்பு:
(8) கிடைக்கக்கூடிய நரை அதிக அளவிலான ஆயக்கட்டுகளுக்கு உகந்த
4
முறையில் பயன்படுத்துதல்; மற்றும்
(f) வகுத்துரைக்கப்படலாகும் பிற பொருட்பாடுகள்.
4. தடை உத்தரவுகளுக்கான உரிமை வழக்குகள் மற்றும் மனுக்களின்
தடை.- பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் அரசாலோ அல்லது 5 ஆம் பிரிவின்கீழ்
அதிகாரமளிக்கப்பட்ட எந்த அலுவலராலும் நீர் வழங்கலை ஒழுங்குறுத்துவதற்காக,
3 ஆம் பிரிவின்படி அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளின்படி எடுக்கப்பட்ட
அல்லது எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கை எதற்கும், தடை உத்தரவு அல்லது
இடைக்கால ஆணை எதனையும் பிறப்பிப்பதற்கான உரிமை வழக்கு அல்லது மணு
எதனையும் நீதிமன்றம் அனுமதித்தல் ஆகாது.
5. அதிகாரங்களை ஒப்படைத்தல். - (1) அரசு, அறிவிக்கை வாயிலாக,
தலைமைப் பொறியாளர் (நீர்ப்பாசனம்) படிநிலைக்குக் குறையாத எந்த
அலுவலருக்கும், 3 ஆம் பிரிவின்கீழ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள,
வேளாண் நோக்கங்களுக்கான நீர் வழங்கலை முறைப்படுத்துவதற்காண
அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு அதிகாரமளிக்கலாம்.
(2) 1) ஆம் உட்பிரிவின்கீழ் ஒப்படைக்கப்பட்ட எந்தவொரு
அதிகாரத்தையும் பயன்படுத்துவது, அறிவிக்கையில் குறிப்பிடப்படலாகும்
அத்தகைய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது மற்றும்
அரசின் கட்டுப்பாடு மற்றும் சீராய்விற்கு உட்பட்டது.
6. நல்லெண்ணத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைக்குப் பாதுகாப்பு-- (1) இந்தச்
சட்டத்தின்படி நல்லெண்ணத்தில் செய்த அல்லது செய்யக் கருதிய செயல்
எதற்காகவும் நபரெவருக்கும் எதிராக, உரிமை வழக்கு, குற்றவியல் வழக்கு அல்லது
பிற சட்ட நடவடிக்கைகள் எதுவும் தொடரப்படுதல் ஆகாது.
(2) இந்தச் சட்டத்தின்படி நல்லெண்ணத்தில் செய்த அல்லது செய்யக் கருதிய
செயல் எதனாலேனும் விளைவிக்கப்பட்ட அல்லது விளைவிக்கப்படக்கூடிய சேதம்
எதற்காகவும், அரசுக்கு எதிராக உரிமை வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை
எதுவும் தொடரப்படுதல் ஆகாது.
7. இடர்டுப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.- இந்த சட்டத்தின்
வகைமுறைகளைச் செயல்படுத்துவதில் இடர்பாடு ஏதேனும் எழுமானால், அரசானது,
தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணை மூலமாக, இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அந்த இடர்பாட்டை நீக்கும் நோக்கத்திற்குத்
5
தேவையானதென: அல்லது உகந்ததெனத் தோன்றும் அத்தகைய
வகைமுறைகளைச் செய்யலாம்:
வரம்புரையாக, ஆனால் அத்தகைய ஆணை எதுவும், இந்தச் சட்டம் தமிறற்நாடு
அரசிகழில் வெளியிடப்பட்டத் தேதியிலிருந்து இரண்டாண்டு கால அளவு
முடிவடைந்த பின்னர் செய்யப்படுதலாகாது.
8. இணைப்புப் பட்டியலை திருத்தம் செய்வதற்கான அதிகாரம்.- அரசு,
அறிவிக்கை மூலம், இணைப்புப் பட்டியலை முண்தேதியிட்டோ அல்லது
பின்தேதியிட்டோ திருத்தம் செய்யலாம்.
9. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.- (1) அரசானது, தமிநற்தாடு
அரசிகழில் அறிவிக்கையின் வாயிலாக, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை
நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.
(2) (8) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும், தமிறற்தாடு
அரசிகழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில்
நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத்
தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே
நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும்,
அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று
சொல்லப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே
நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது ஆணை அல்லது
பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது
பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல்
வேண்டும். மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது
அதனையடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி அல்லது
ஆணை அல்லது அறிவிக்கை எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப்
பேரவையானது செய்யுமாயின் அல்லது அத்தகைய விதி அல்லது அல்லது ஆணை
அறிவிக்கை எதுவும் செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது என
சட்டமன்றப்பேரவை முடிவு செய்யுமாயின், அந்த விதி அல்லது ஆணை அல்லது
அறிவிக்கையானது அதன்பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே
நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராது
போதல் வேண்டும்; எனினும் அவ்வாறான மாறுதல் அல்லது நீக்கம் எதுவும், அந்த
விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல்
ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
6
இணைப்புப் பட்டியல்.
(3 (1) மற்றும் 8 ஆம் பிரிவுகளைக் காண்க)
வறிசை | மண்டலம் வட்டம். நிலத்தில் அளவு
எண். ஏக்கரில்.
1) (2) 3) (4)
1 மண்டலம் | கோயம்புத்தூர் 98,558
மாவட்டத்தில்
பொள்ளாச்சி,
உடுமலைப்பேட்டை,
பல்லடம் மற்றும்
திருப்பூர் மற்றும்
பெரியார்
மாவட்டத்தில்
காங்கேயம் மற்றும்
தாராபுரம்.
2 மண்டலம் ॥ -மேற்படி- 98,418
3 மண்டலம் ॥ -மேற்படி- 94,024
4 மண்டலம் IV -மேற்படி- 86,152