Tamil Nadu · 2013 · Act 25

The Dindigul City Municipal Corporation Act, 2013

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

2013 ஆம்‌ ஆண்டு திண்டுக்கல்‌ மாநகராட்சி சட்டம்‌. (தமிழ்நாடு சட்ட எண்‌ 25/2013) பொருளடக்கம்‌. பிரிவுகள்‌. 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌. 3. திண்டுக்கல்‌ மாநகரத்திற்கென மாநகராட்சியை அமைத்தல்‌. 4. நகராட்சிய அதிகார அமைப்புகள்‌. 5. மன்றத்தை அமைததுருவாக்குதல்‌. 6. மாநகராட்சியின்‌ காலஅளவு. 7. 1920 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ சட்டம்‌ பொருந்தாது எனல்‌. 8. 1981 ஆம்‌ ஆண்டுச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ மாநகராட்சிக்குப்‌ பொருந்துதல்‌. 9. மாறுதல்கால வகைமுறைகள்‌. 10. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. 11. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌. 2013 ஆம்‌ ஆண்டு திண்டுக்கல்‌ மாநகராட்சி சட்டம்‌. (தமிழ்நாடு சட்ட எண்‌ 25/2013) இந்தியக்‌ குடியரசின்‌, அறுபத்து நான்காம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 2013 ஆம்‌ ஆண்டு திண்டுக்கல்‌ மாநகராட்சி சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. (2) இது திண்டுக்கல்‌ நகரம்‌ முழுவதையும்‌ அளாவி நிற்கும்‌. (3) இது, மாநில அரசு அறிவிக்கையில்‌ வாயிலாக குறித்துரைக்கக்‌ கூடிய அத்தகைய நாளன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌.- (1) இந்தச்‌ சட்டத்தில்‌ தறுவாய்‌ வேறு பொருள்‌ குறித்தாலன்றி.- (வ) "திண்டுக்கல்‌ மாநகரம்‌” அல்லது "மாநகரம்‌" என்றால்‌ திண்டுக்கல்‌ நகராட்சியில்‌ அடங்கியுள்ள உள்ளாட்சிப்‌ பகுதி எனப்‌ பொருள்படும்‌; மற்றும்‌ இந்தச்‌ சட்டம்‌ தொடங்கிய தேதிக்கு பின்னர்‌ அம்‌ மாநகரத்துடன்‌ சேர்க்கப்படுகிற உள்ளாட்சிப்‌ பரப்பிடம்‌ எதனையும்‌ உள்ளடக்கும்‌; ஆனால்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ அத்தகைய தொடக்கத்‌ தேதிக்குப்‌ பின்னர்‌ அம்‌ மாநகரத்திலிருந்து விட்டுவிடப்பட்ட பகுதி எதனையும்‌ உள்ளடக்காது. (௦) "மாநகராட்சி" என்றால்‌, 3 ஆம்‌ பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட திண்டுக்கல்‌ மாநகராட்சி எனப்‌ பொருள்படும்‌; (6) "மன்றம்‌" என்றால்‌, திண்டுக்கல்‌ மாநகராட்சி மன்றம்‌ எனப்‌ பொருள்படும்‌; (0) "இந்தச்‌ சட்டம்‌ தொடங்கிய தேதி" என்றால்‌, 1 ஆம்‌ பிரிவின்‌ (3) ஆம்‌ உட்பிரிவின்படி குறித்துரைக்கப்பட்ட தேதி எனப்‌ பொருள்படும்‌: (e) "அரசு" என்றால்‌, மாநில அரசு எனப்‌ பொருள்படும்‌: (7) "நகராட்சி மன்றம்‌" என்றால்‌ திண்டுக்கல்‌ நகராட்சி மன்றம்‌ எனப்‌ பொருள்படும்‌: (று நகராட்சி" என்றால்‌, திண்டுக்கல்‌ நகராட்சி எனப்‌ பொருள்படும்‌: (h) "தாழ்த்தப்பட்ட வகுப்பினர்‌ மற்றும்‌ தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்‌" என்றால்‌, அரசமைப்புச்‌ சட்டத்தின்‌ 366 ஆம்‌ உறுப்பின்‌ (24) மற்றும்‌ (25) ஆம்‌ கூறுகளில்‌ அவற்றுக்கு முறையே குறித்தளிக்கப்பட்டுள்ள பொருள்களையே கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. (2) இந்தச்‌ சட்டத்தில்‌ பயன்படுத்தப்பட்டு பொருள்‌ வரையறை செய்யப்படாத ஆனால்‌, (இதன்‌ பின்பு இதில்‌ 1981 ஆம்‌ ஆண்டு சட்டம்‌ எனக குறிப்பிடப்படுவதான 1981 ஆம்‌ ஆண்டு கோயம்புத்தூர்‌ மாநகராட்சி சட்டத்தில்‌ (குமிழ்நாடு சட்டம்‌ 251981) பொருள்‌ வரையறை செய்யப்பட்டுள்ள சொற்களும்‌, சொற்றொடர்களும்‌ 1981 ஆம்‌ ஆண்டுச்‌ சட்டத்தில்‌ அவற்றுக்கு முறையே குறித்துரைக்கப்பட்டுள்ள அதே பொருள்களையே கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. 3. திண்டுக்கல்‌ மாநகரத்திற்கென மாநகராட்சியை அமைத்தல்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌ தொடங்கிய தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌ செயல்விளைவு கொள்ளும்‌ வகையில்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, திண்டுக்கல்‌ நகராட்சியில்‌ உள்ளடங்கியுள்ள உள்ளாட்சி பரப்பிடமானது திண்டுக்கல்‌ மாநகரமாக அமைதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ இந்தச்‌ சட்டம்‌ தொடங்கிய அத்தகைய தேதியிலிருந்து மேற்சொன்ன மாநகரத்திற்கென திண்டுக்கல்‌ மாநகராட்சி என்ற பெயரில்‌ மாநகராட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. முதலாம்‌ வரம்புறை: ஆனால்‌ அரசு. அவ்வப்போது மாநகராட்சியுடன்‌ கலந்தாலோசித்த பின்னர்‌ அறிவிக்கையின்‌ வாயிலாக, அந்த அறிவிக்கையில்‌ குறித்துரைககப்பட்டுள்ள பரப்பிடங்களை அதில்‌ உள்ளடக்கும்‌ வகையிலோ அல்லது அதிலிருந்து விலக்கும்‌ வகையிலோ இந்த உட்பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட மாநகரத்தின்‌ எல்லை வரம்புகளை மாற்றியமைக்கலாம்‌: இரண்டாம்‌ வழம்புறை: மேலும்‌ இந்த உட்பிரிவின்படியான அறிவிக்கையொன்றைப்‌ பிறப்பிப்பதற்கான அதிகாரமானது முந்தைய வெளியீட்டிற்கு உட்பட்டிருத்தல்‌ வேண்டும்‌. (2) இம்மாநகராட்சியானது. மேற்சொன்ன பெயருடன்‌ தொடர்‌ வழியுரிமையையும்‌ பொதுவான இலச்சினையையும்‌ பெற்றிருக்கக்‌ கூடியதாகவும்‌, சொத்துகளைக்‌ கையகப்படுத்துவதற்கு, வைத்திருப்பதற்கு மற்றும்‌ அதனை தீர்வு செய்வதற்கு மற்றும்‌ ஒப்பந்தங்களில்‌ ஈடுபடுவதற்கான அதிகாரத்தைக்‌ கொண்டிருக்கும்‌ ஒரு கூட்டுருமமாக இருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அதனுடைய கூட்டுருமத்தின்‌ பெயரில்‌ வழக்கிடலாம்‌ மற்றும்‌ வழக்கிடப்படலாம்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதிக்கு உடனடி முன்னதாகச்‌ செயற்பட்டுக்‌ கொண்டிருந்த திண்டுக்கல்‌ நகராட்சியானது, இந்தச்‌ சட்டம்‌ தொடங்கப்பட்ட அத்தகைய தேதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 4. நகராட்சிய அதிகார அமைப்புகள்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளை நிறைவேற்றுவதற்குப்‌ பின்வரும்‌ நகராட்சிய அதிகார அமைப்புகள்‌ பொறுப்புடையனவாக இருத்தல்‌ வேண்டும்‌.- (1) ஒரு மேயர்‌; (2) ஒரு மன்றம்‌; (3) ஒரு நிலைக்குழு: (4) ஒரு சிற்றொகுதிகள்‌ குழு; மற்றும்‌ (5) ஓர்‌ ஆணையர்‌. 5. மன்றத்தை அமைத்துருவாக்குதல்‌.- (1) (2) ஆம்‌ உப்பிரிவில்‌ பிறவாறாக வகைசெய்யப்பட்டுள்ளவாறு தவிர, அரசினால்‌ அவ்வப்போது அறிவிக்கையின்‌ மூலமாக நிரணயிக்கப்படலாகும்‌ , இந்தச்‌ சட்டத்தில்தொகுக்கப்பட்டுள்ள முறையில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தகைய எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. எனவே எவ்வாறிருப்பினும்‌ மன்ற உறுப்பினர்களின்‌ மொத்த எண்ணிக்கையானது எழுபத்து இரண்டிற்கு மேற்படாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌. (2) மன்றத்தில்‌ பின்வரும்‌ நபர்களும்‌ சார்பாற்றம்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌. அதாவது.- (ஐ) மாநகராட்சியின்‌ பரப்பிடத்தை முழுமையாக அல்லது பகுதியாகக்‌ கொண்டிருக்கிற தொகுதிகளைச்‌ சார்பாற்றம்‌ செய்கின்ற மக்களவை உறுப்பினர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சியின்‌ பரப்பிடத்திற்குள்ளாக வாக்காளர்களாகப்‌ பதிவு செய்துள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள்‌: (௦) மாநகராட்சியின்‌ பரப்பிடத்தை முழுமையாக அல்லது பகுதியாகக்‌ கொண்டிருக்கிற தொகுதிகளைச்‌ சார்பாற்றம்‌ செய்கின்ற தமிழ்நாடு சட்டமன்ப்‌ பேரவையின்‌ அனைதது உறுப்பினர்கள்‌. (3) (2) ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள நபர்கள்‌ மன்றத்தின்‌. நடவடிக்கைகளில்‌ பங்கெடுத்துக்‌ கொள்ள உரிமை பெற்றிருப்பார்‌ ஆனால்‌ மன்றக்‌ கூட்டங்களில்‌ வாக்களிப்பதற்கு உரிமை பெற்றிருக்க மாட்டார்கள்‌. (4) மன்றத்தில்‌, தாழ்த்தப்பட்ட வகுப்பினை, தாழ்த்தப்பட்ட பழங்குடியினைச்‌ சார்ந்த நபர்களுக்கு பதவியிடங்கள்‌ ஒதுக்கீடு செய்யப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும்‌ பதவியிடங்களின்‌ எண்ணிக்கையானது, அம்மாநகரத்திலுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது அம்மாநகரத்தில்‌ உள்ள தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள்‌ தொகையானது அம்மாநகரத்தின்‌ மொத்த மக்கள்‌ தொகைக்கு எந்த வீதத்தில்‌ அமைந்திருக்கின்றதோ அதே வீதத்தில்‌ கிட்டத்தட்ட இருக்கலாகிறவாறு மன்றத்தில்‌ நேரடித்‌ தேர்தலின்‌ மூலம்‌ நிரப்பப்பட வேண்டிய மொத்த பதவியிடங்களின்‌ எண்ணிக்கைக்கேற்ப அமைந்திருத்தல்‌ வேண்டும்‌. (5) தாழ்த்தப்பட்ட வகுப்பினை, தாழ்த்தப்பட்ட பழங்குடியினைச்‌ சார்ந்த நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவியிடங்களிலிருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினை, தாழ்த்தப்பட்ட பழங்குடியினைச்‌ சார்ந்த பெண்களுக்காக பதவியிடங்கள்‌ ஒதுக்கீடு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. அது தாழ்த்தப்பட்ட வகுப்பினை, தாழ்த்தப்பட்ட பழங்குடியினைச்‌ சார்ந்த நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவியிடங்களின்‌ மொத்த எண்ணிக்கையில்‌ மூன்றில்‌ ஒரு பங்கிற்குக குறைவாக இருத்தல்‌ கூடாது. (6) மன்றத்தில்‌ பெண்களுக்கென பதவியிடங்கள்‌ ஒதுக்கீடு செய்யப்படுதல்‌ வேண்டும்‌: மற்றும்‌ பெண்களுக்கென ஒதுக்கீடு செய்யப்படும்‌ இடங்களின்‌ எண்ணிக்கையானது, மன்றத்தில்‌ உள்ள பதவி இடங்களின்‌ மொத்த எண்ணிக்கையில்‌, பட்டியலில்‌ கண்ட சாதிகள்‌ மற்றும்‌ பட்டியலில்‌ கண்ட பழங்குடிகளைச்‌ சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும்‌ பதவியிடங்களின்‌ எண்ணிக்கை உள்ளடங்கலாக, மூன்றில்‌ ஒரு பங்கிற்குக குறைவாக இருத்தல்‌ கூடாது. (7) (க ஆம்‌ மற்றும்‌ (5) ஆம்‌ உட்பிரிவுகளின்படி ஒதுக்கீடு செய்யப்படும்‌ பதவியிடங்களானவை அரசமைப்புச்‌ சட்டத்தின்‌ 334 ஆம்‌ உறுப்பில்‌ குறித்துரைக்கப்பட்ட கால அளவு முடிவடைவதன்‌ பேரில்‌ செயல்விளைவு கொள்வது அற்றுப்போதல்‌ வேண்டும்‌. 6. மாநகராட்சியின்‌ காலஅளவு.-- (1) மாநகராட்சி, குறித்த காலத்திற்கு முன்னரே கலைக்கப்பட்டாலன்றி, வழக்கமான ஒவ்வொரு தேர்தலுக்குப்‌ பின்பும்‌ அதனுடைய முதல்‌ கூட்டத்திற்கென குறிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுக்‌ கால அளவு வரையில்‌ தொடர்ந்திருத்தல்‌ வேண்டும்‌, ஆனால்‌ அதற்கு மேலாக தொடர்ந்திருத்தல்‌ ஆகாது: மற்றும்‌ மேற்சொன்ன ஐந்தாண்டுக்‌ காலம்‌ என்பது மாநகராட்சியைக்‌ கலைக்கக்‌ கூடியதாய்‌ இருக்கும்‌. (2) மாநகராட்சியை அமைததுருவாக்குவதற்கான தேர்தல்‌ ஒன்று.- (ஐ (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள அதனுடைய கால அளவு முடிவடைவதற்கு முன்பு; அல்லது 0௦) அது கலைக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத கால அளவு முடிவடைவதற்கு முன்பு நடத்தி முடிக்கப்படுதல்‌ வேண்டும்‌: வரம்புரை: கலைக்கப்பட்ட மாநகராட்சி தொடர்ந்திருக்கக்கூடிய எஞ்சிய கால அளவானது ஆறு மாத காலத்திற்குக்‌ குறைவாக இருநதிருக்குமிடத்து, அத்தகைய கால அளவிற்கென மாநகராட்சியை அமைத்துருவாக்குவதற்காக இந்த உட்பிரிவின்படி தேர்தல்‌ எதனையும்‌ நடத்துவது தேவையானதாக இருத்தல்‌ கூடாது. 7. 1920 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ சட்டம்‌ பொருந்தாது எனல்‌.- (1) (2) ஆம்‌ மற்றும்‌ (3) ஆம்‌ உட்பிரிவுகளின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு (இதன்‌ பின்பு மாவட்ட நகராட்சிகள்‌ சட்டம்‌ எனக்‌ குறிப்பிடப்படுவதான) 1920 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ சட்டமானது (தமிழ்நாடு சட்டம்‌ ௩74920), இந்தச்‌ சட்டம்‌ தொடங்கிய தேதியிலிருந்தும்‌ அது முதற்கொண்டும்‌ திண்டுக்கல்‌ மாநகரத்திற்குள்‌ அடங்கியிருக்கும்‌ உள்ளாட்சிப்‌ பரப்பிடங்களுக்குப்‌ பொருந்துவது அற்றுப்போதல்‌ வேண்டும்‌. (2) அவ்வாறு அற்றுப்போதலானது.- (a) திண்டுக்கல்‌ மாநகரத்திற்குள்‌ அடங்கியிருக்கிற உள்ளாட்சிப்பரப்பிடம்‌ எதனையும்‌ பொறுத்த அளவில்‌ மாவட்ட நகராட்சிகள்‌ சட்டத்தின்‌ முந்தைய செயற்பாட்டினை; (௦) மாவட்ட நகராட்சிகள்‌ சட்டத்திற்கு எதிராகப்‌ புரியப்பட்ட குற்றச்செயல்‌ எதனையும்‌ பொறுத்து உள்ளான தண்டம்‌, பறிமுதல்‌ அல்லது தண்டனை எதனையும்‌; அல்லது (€) அத்தகைய தண்டம்‌, பறிமுதல்‌ அல்லது தண்டனை தொடர்பான புலணாய்வு, சட்ட நடவடிக்கைகள்‌ அல்லது தீர்‌ வழி எதனையும்‌ பாதித்தல்‌ ஆகாது: மற்றும்‌ இந்தச்‌ சட்டம்‌ நிறைவேற்றப்படாதிருந்தாற்‌ போன்று அத்தகைய தண்டம்‌, பறிமுதல்‌ அல்லது தண்டனை எதுவும்‌ விதிக்கப்படலாம்‌. (3) ௩-ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, மாவட்ட நகராட்சிகள்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட மற்றும்‌ இந்தச்‌ சட்டம்‌ தொடங்கிய தேதியன்று நடைமுறையிலுள்ள அனைத்து பணிஅமர்த்தங்கள்‌, அறிவிக்கைகள்‌, அறிவிப்புகள்‌, விதிகள்‌, துணைவிதிகள்‌, ஒழுங்குமுறைவிதிகள்‌, ஆணைகள்‌, பணிப்பாணைகள்‌, உரிமங்கள்‌, அனுமதிகள்‌, திட்டங்கள்‌, படிவங்கள்‌, அதிகாரங்கள்‌ ஆகியன எந்த அளவிற்கு இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு முரணாக இல்லாமல்‌ இருக்கின்றனவோ அந்த அளவுக்கு இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட வேண்டிய, பிறப்பிக்கப்பட வேண்டிய அல்லது வழங்கப்பட வேண்டிய பணி அமர்த்தங்களால்‌, அறிவிக்கைகளால்‌, அறிவிப்புகளால்‌, விதிகளால்‌, துணை விதிகளால்‌, ஒழுங்குமுறை விதிகளால்‌, ஆணைகளால்‌, பணிப்பாணைகளால்‌, உரிமங்களால்‌, அனுமதிகளால்‌, திட்டங்களால்‌, படிவங்களால்‌ மற்றும்‌ அதிகாரங்களால்‌ அவை பதிலாக அமைக்கப்படும்‌ வரை, திண்டுக்கல்‌ மாநகரத்திற்குள்‌ அடங்கியுள்ள உள்ளாட்சிப்‌ பரப்பிடத்தில்‌ நடைமுறையில்‌ தொடர்ந்திருத்தல்‌ வேண்டும்‌. 8. 1981 ஆம்‌ ஆண்டுச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ மாநகராட்சிக்குப்‌ பொருந்துதல்‌.- (1) மற்றபடி இதில்‌ வெளிப்படையாக வகை செய்யப்பட்டுள்ளவாறு தவிர, வரி அல்லது கட்டணம்‌ விதிப்பது மற்றும்‌ வசூலிப்பது தொடர்பான 6 வகைமுறைகள்‌ உள்ளடங்கலாக 1984 ஆம்‌ ஆண்டுச்சட்டத்தின்‌ அனைத்து வகைமுறைகளும்‌ இதன்மூலம்‌ மாநகராட்சிக்கு நீட்டிக்கப்பட்டு தேவையான மாறுதலுடன்‌ பொருந்துதல்‌ வேண்டும்‌: மற்றும்‌ 1981 ஆம்‌ ஆண்டுச்‌ சட்டத்தின்‌ பகுதியாக இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ அமைககப்பட்டிருந்தாற்போன்று 1981 ஆம்‌ ஆண்டுச்‌ சட்டமானது மாநகராட்சியைப்‌ பொறுத்த அளவில்‌ படிக்கப்பட்டுப்‌ பொருள்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (2) மாநகராட்சிக்கு, 1981 ஆம்‌ ஆண்டுச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளைப்‌ பொருந்தச்‌ செய்வதை எளிதாக்கும்‌ நோக்கத்திற்காக அரசு, அறிவிக்கையின்‌ வாயிலாக, தேவைப்படக்கூடிய அல்லது உகந்ததாக இருக்கக்கூடிய வகைமுறைகள்‌ எவற்றையும்‌ நீக்குதல்‌, திருத்துதல்‌ அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்‌ மூலமாக 1981 ஆம்‌ ஆண்டு சட்டம்‌ மற்றும்‌ அதன்படிச்‌ செய்யப்பட்ட விதிகள்‌, துணைவிதிகள்‌ ஆகியவற்றுக்குத்‌ தழமுவமைவுகளை அல்லது மாற்றங்களைச்‌ செய்யலாம்‌, மற்றும்‌ அதன்பேரில்‌ 1981 ஆம்‌ ஆண்டுச்‌ சட்டமும்‌ அதன்படிச்‌ செய்யப்பட்ட விதிகளும்‌ அவ்வாறு செய்யப்பட்ட தழுவமைவுகளுக்கும்‌, மாற்றங்களுக்கும்‌ உட்பட்டு மாநகராட்சிக்குப்‌ பொருந்துதல்‌ வேண்டும்‌. (3) 1981 ஆம்‌ ஆண்டுச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்படிச்‌ செய்யப்பட்ட விதிகளின்‌ அல்லது துணைவிதிகளின்‌ வகைமுறைகளைத்‌ தழுவியமைகிற முறையில்‌ வகைமுறை செய்யப்படாமல்‌ அல்லது (2) ஆம்‌ உட்பிரிவின்படி செய்யப்பட்டிருக்கிற வகைமுறை போதுமானதாக இல்லாத நிலையில்‌ இருந்த போதிலும்‌, இந்த வகைமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரப்பட்ட அல்லது நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட நீதிமன்றம்‌, தீர்ப்பாயம்‌ அல்லது அதிகார அமைப்பு எதுவும்‌, மாநகராட்சிக்கு அவற்றை பொருந்த செய்வதை எளிமையாக்கும்‌ நோக்கத்திற்காக இந்த வகைமுறைகளை ந்திமன்றம்‌, தீர்ப்பாயம்‌ அல்லது அதிகார அமைப்பின்‌ முன்பாக உள்ள பொருட்பாட்டினைக்‌ கருத்திற்கொண்டு அதன்‌ பொருள்‌ பாதிக்காத வகையில்‌ தேவைப்படக்கூடிய அல்லது தக்கதென இருக்கக்கூடிய அத்தகைய முறையில்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. (4) திண்டுக்கல்‌ மாநகரத்திற்கு நீட்டிக்கப்பட்டு பொருந்துமாறு செய்யப்படும்‌ 1981 ஆம்‌ ஆண்டுச்‌ சட்டத்தில்‌.- (ஐ) கோயம்புத்தூர்‌ மாநகருக்கும்‌, கோயம்புத்தூர்‌ நகராட்சிக்குமான சுட்டுகை எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ காரணமாக முறையில்‌ திண்டுக்கல்‌ மாநகருக்கும்‌. திண்டுக்கல்‌ நகராட்சிக்குமான சுட்டுகையாகப்‌ பொருள்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (b) கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, கோயம்புத்தூரின்‌ மாநகராட்சி, கோயம்புத்தார்‌ நகராட்சிய மாநகராட்சி ஆகியவற்றுக்கான சுட்டுகை எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ காரணமாக முறையே திண்டுக்கல்‌ மாநகராட்சி, திண்டுக்கல்‌ யின்‌ மாநகராட்சி மற்றும்‌ திண்டுக்கல்‌ நகராட்சிய மாநகராட்சிக்கான சுட்டுகையாகப்‌ பொருள்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 9. மாறுதல்கால வகைமுறைகள்‌.- (1) அனைத்துச்‌ சொத்துக்களும்‌, நகராட்சி மன்றத்தால்‌ அல்லது மன்றத்திற்குப்‌ பயன்படுத்தப்பட்ட அனுபவிக்கப்பட்ட அல்லது உடைமையில்‌ வைத்துவரப்பட்ட அனைத்து உரிமைகளும்‌ அது எந்த வகையினதாக இருந்தாலும்‌ மற்றும்‌ நகராட்சி மன்றத்திற்குச்‌ சொந்தமான அல்லது அதனிடம்‌ உற்றமைந்துள்ள அல்லது பொறுப்பாட்சி என்ற வகையில்‌ அதனால்‌ அல்லது அதற்காக வைத்துவரப்பட்ட அனைத்து நலன்கள்‌ அது எந்த வகையினதாக இருந்தாலும்‌, மேற்சொன்ன நகராட்சி மன்றத்தினால்‌ எந்த வகையிலும்‌ பயன்படுத்தப்பட்ட அனுபவிக்கப்பட்ட அல்லது உடைமையில்‌ வைத்துவரப்பட்ட அனைத்து உரிமைகளுடன்‌ மேற்சொன்ன நகராட்சி மன்றத்திற்கு எதிராகச்‌ சட்ட முறையில்‌ இருந்து வரும்‌ அனைத்துக்‌ கடப்பாடுகளும்‌ இந்தச்‌ சட்டம்‌ தொடங்கிய தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌, இது குறித்து பொது அல்லது தனி ஆணையின்‌ மூலமாக அரசானது வழங்கக்கூடிய அத்தகைய பணிப்பாணைகளுக்குட்பட்டு மாநகராட்சியிடம்‌ உற்றமைந்திருத்தல்‌ வேண்டும்‌. (2) அத்தகைய தொடக்கத்‌ தேதியன்று உள்ளவாறான அனைத்து வரிபாக்கிகள்‌ அல்லது வரி ஒன்றிற்காக ஒருங்கமைவின்‌ மூலமான பிற செலுத்தங்கள்‌ அல்லது செலவுகளுக்கான பாக்கி அல்லது இழப்பீடு அல்லது பிறவாறு நகராட்சி மன்றத்திற்குக்‌ கொடுபட வேண்டிய தொகையை அத்தகைய மாநகராட்சிக்குச்‌ சேர்ந்து வரவேண்டிய தொகையாகக்‌ கருதி மேற்சொன்ன நிலுவைகளோ அல்லது செலுத்தங்களோ இந்தச்‌ சட்டத்தின்‌. வகைமுறைகளின்படி கொடுபட வேண்டிய தொகைகளாகியிருப்பது போன்று வசூலிக்கப்படலாம்‌. (3) இந்தச்‌ சட்டம்‌ தொடங்கிய தேதிக்கு உடனடி முன்பாக மேற்சொன்ன நகராட்சி மன்றத்தால்‌ விதிக்கப்பட்டு வந்த அனைத்து வரிகளும்‌, கட்டணங்களும்‌, தீர்வைகளும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி மாநகராட்சியால்‌ விதிக்கப்பட்டு வந்திருப்பதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அத்தகைய வரிகள்‌, கட்டணங்கள்‌ மற்றும்‌ தீர்வைகள்‌ இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட எதனாலும்‌ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனாலும்‌ மாற்றியமைக்கப்படுவது, நீக்கப்படுவது அல்லது கலைத்து கைக்கொள்ளப்படுவது வரையிலும்‌ அதற்கிணங்கிய வகையில்‌ நடைமுறையில்‌ தொடர்ந்து இருக்க வேண்டும்‌. (4) மாவட்ட நகராட்சிகள்‌ சட்டத்தின்படி நகராட்சி மன்றத்தால்‌ அல்லது நகராட்சி மன்றத்திற்கு எதிராக அல்லது அதிகார அமைப்பால்‌ அல்லது அதிகார அமைப்பிற்கு எதிராக அல்லது நபரெவராலும்‌ அல்லது நபரெவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்‌ அனைத்தும்‌, மேற்சொன்ன நடவடிக்கைகள்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளின்படி தொடங்கியிருந்தாற்‌ போன்று மாநகராட்சியால்‌, அதிகார அமைப்பால்‌ அல்லது நபரால்‌ அல்லது அதற்கு அல்லது அவருக்கு எதிராகத்‌ தொடரலாம்‌. (5) அத்தகைய தொடக்கத்‌ தேதிக்கு முன்பு அதிகார அமைப்பு எதனாலும்‌ மாவட்ட நகராட்சிகள்‌ சட்டத்தின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும்‌, இந்தச்‌ சட்டம்‌ நடைமுறையில்‌ இருந்திருந்தாற்போன்று இந்தச்‌ சட்டத்தின்படி அத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்குரிய அதிகார அமைப்பால்‌ எடுக்கப்பட்டிருப்பதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (6) இந்தச்‌ சட்டத்தில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்தேதிக்கு உடனடி முன்பாக நகராட்சியில்‌ பணியில்‌ இருந்த அலுவலர்‌ அல்லது பணியாளர்‌ ஒவ்வொருவரும்‌ அத்தகைய தொடக்கத்தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌ மாநகராட்சியின்‌. அலுவலரொருவராக அல்லது பணியாளரொருவராகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. வழம்புறை: ஆனால்‌ (a) மாநகராட்சியின்‌. பணியில்‌ அவர்கள்‌: சேர்த்துக்கொள்ளப்பட்டதன்‌ விளைவாக அத்தகைய அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கு பொருந்தத்தக்க வரையுரைகளும்‌, வரைக்கட்டுகளும்‌ அத்தகைய தொடக்கத்‌ தேதிக்கு உடனடி முன்பாக அத்தகைய பணியாளர்களுக்கு அடிப்படைச்‌ சம்பளம்‌ மற்றும்‌ படிகள்‌, விடுப்பு, ஓய்வூதியம்‌, பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, ஒய்வுபெறும்‌ வயது வரம்பு ஆகியவற்றைப்‌ பொறுத்தவரையில்‌ பொருந்தக்கூடிய அத்தகைய வரையுரைகளுக்கும்‌, வரைக்கட்டுகளுக்கும்‌ குறைவுபடாது இருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ (b) அத்தகைய தொடக்கத்‌ தேதி வரையிலும்‌ நகராட்சியின்‌ கழ்‌ அத்தகைய அலுவலர்‌ அல்லது பிற பணியாளர்‌ எவராலும்‌ செய்யயப்பட்ட பணியானது, மாநகராட்சியின்‌ கீழ்‌ செய்யப்பட்ட பணியாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அவர்‌ ஊதிய உயர்வுகள்‌, விடுப்பு, ஓய்வூதியம்‌, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை ஆகியவற்றின்‌ நோக்கத்திற்காக அந்தப்‌ பணியைக்‌ கணக்கிலெடுத்துக்கொள்ளும்‌ உரிமைத்தகுதி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌: இரண்டாம்‌ வரம்புறை: ஆனால்‌, நகராட்சியில்‌ பணிபுரிந்து கொண்டிருக்கும்‌ அலுவலர்‌ அல்லது பிற பணியாளர்‌ எவரும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய காலத்திற்குள்ளும்‌ அத்தகைய முறையிலும்‌ மாநகராட்சிப்‌ பணியில்‌ எடுத்துக்கொள்ளும்படியாகவோ அல்லது மாவட்ட நகராட்சிகள்‌ சட்டத்தின்‌ 73-& எனும்‌ பிரிவில்‌ சுட்டப்பட்ட பணிக்கு மாறுதல்‌ செய்யும்‌ படியாகவோ அல்லது வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய ஆட்‌ குறைப்புப்‌ பலன்களின்பேறில்‌ நகராட்சியின்‌ பணியிலிருந்து நீக்கும்‌ படியாகவோ தமது விருப்பத்தைத்‌ தெரிவிக்க விருப்பத்‌ தெரிவு ஒன்று அளிக்கப்படுதல்‌ வேண்டும்‌. (7) மாவட்ட நகராட்சிகள்‌ சட்டத்தின்படி திண்டுக்கல்‌ நகராட்சியில்‌ சிற்றொகுதிகளாகப்‌ பிரிக்கப்பட்ட மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்தேதியன்று நடைமுறையில்‌ உள்ள சிற்றொகுதி எதுவும்‌ அது மாற்றியமைக்கப்படாதவரையிலும்‌ மாநகராட்சியின்‌. கோட்டமாகவே கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (8) மாவட்ட நகராட்சிகள்‌ சட்டத்தின்படி திண்டுக்கல்‌ நகராட்சிக்காகத்‌ தயாரிக்கப்பட்டு இந்தச்‌ சட்டம்‌ தொடங்கிய தேதியன்று நடைமுறையில்‌ இருக்கும்‌ வாக்காளர்‌ பட்டியலானது. புதிய வாக்களார்‌ பட்டியல்‌ தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்‌ வரையிலும்‌, மாநகராட்சிக்குரிய வாக்காளர்‌ பட்டியலாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ நகராட்சியின்‌ ஒவ்வொரு சிற்றொகுதி தொடர்பான மேற்சொன்ன வாக்காளர்‌ பட்டியலின்‌ பகுதியானது, மாநகராட்சியின்‌. நேரிணையான கோட்டத்திற்கான வாக்காளர்‌ பட்டியலின்‌: பட்டியலாகக்கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (9) இந்தச்‌ சட்டத்தில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதிக்கு உடனடி முன்பாக அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகிக்கிற திண்டுக்கல்‌ நகராட்சியின்‌ தலைமையாளர்‌, துணைத்‌ தலைமையாளர்‌ மற்றும்‌ மன்ற உறுப்பினர்கள்‌ இந்தச்‌ சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திண்டுக்கல்‌ மாநகராட்சியின்‌ மேயராக, துணை மேயராக மற்றும்‌ மன்ற உறுப்பினர்களாகக்‌ கொள்ளப்படுதல்வேண்டும்‌; மற்றும்‌ அத்தகைய மேயர்‌, துணை மேயர்‌ மற்றும்‌ மன்ற உறுப்பினர்கள்‌ இது குறித்து அரசினால்‌ அறிவிக்கையின்‌ வாயிலாக நிர்ணயிக்கக்கூடிய அத்தகைய தேதிவரையிலும்‌ பதவியைத்‌ தொடர்ந்து வகித்தல்‌ வேண்டும்‌. அல்லது அத்தகைய தேதி எதுவும்‌ நிர்ணயிக்கப்படாமலிருக்கும்‌ நேர்வில்‌, மாவட்ட நகராட்சிகள்‌ சட்டத்தின்படி அவர்களுடைய பதவிக்காலம்‌ முடிவடையும்‌ தேதி வரையிலும்‌ பதவி வகித்தல்‌ வேண்டும்‌. மற்றும்‌ அத்தகைய மேயர்‌, துணைமேயர்‌ மற்றும்‌ மன்ற உறுப்பினர்கள்‌ இந்தச்‌ சட்டத்தினால்‌ அல்லது இந்தச்‌ சட்டத்தின்படி மேயருக்கு, துணைமேயருக்கு மற்றும்‌ மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அனைத்துக்‌ கடமைகளையும்‌ ஆற்றுதல்‌ வேண்டும்‌. 10. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.-- (1) அரசானது, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக விதிகளைச்‌ செய்யலாம்‌. (2) ௮9) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌ அனைத்தும்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவை குறிப்பிட்டதொரு நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டுமென வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 10 (௦) இந்தச்‌ சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள்‌ அனைத்தும்‌, அவை குறிப்பிட்டதொரு நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ என்று சொல்லப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும்‌, அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பிண்னர்‌ கூடிய விரைவில்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர்‌ அல்லது அதனையடுத்த கூட்டத்தொடர்‌ முடிவடைவதற்கு முன்னர்‌ அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதிலும்‌ மாறுதல்‌ எதனையும்‌ சட்டமன்றப்‌ பேரவையானது செய்யுமாயின்‌ அல்லது அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதுவும்‌ செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப்‌ பேரவை முடிவு செய்யுமாயின்‌, அந்த விதியானது அல்லது அறிவிக்கையானது அல்லது ஆணையானது அதன்‌ பின்னர்‌ அவ்வாறு மாற்றியமைககப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ அல்லது நேரவிற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல்‌ வேண்டும்‌; எனினும்‌ அவ்வாறான மாறுதல்‌ அல்லது நீக்கம்‌ எதுவும்‌, அந்த விதியின்படி அல்லது அறிவிக்கையின்படி அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல்‌ ஏதொன்றின்‌ செல்லுந்தன்மைக்கும்‌ குந்தகமின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 11. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌. வகைமுறைகளைச்‌ செயற்படுத்துவதில்‌ இடர்ப்பாடு ஏதேனும்‌ எழுமானால்‌ அரசு, தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படும்‌ ஆணையின்‌ வாயிலாக அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத தேவையானதாகவோ அல்லது உகந்ததாகவோ அதற்குத்‌ தோன்றுகிற, இந்தச்‌ சட்டத்திற்கு முரணாக இல்லாத அத்தகைய வகைமுறைகளைச்‌ செய்யலாம்‌: வரம்புரை: ஆனால்‌ இந்தச்‌ சட்டம்‌ தொடங்கிய தேதியிலிருந்து இரண்டாண்டுக்‌ கால அளவு முடிவடைந்த பின்னர்‌ அத்தகைய ஆணை எதுவும்‌ செய்யப்படுதலாகாது. 11

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts