Tamil Nadu · 2008 · Act 54
The Chennai City Police (Extension to the Chennai City Suburban Area) Act, 2008 Act 54 of 2008
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
தமிழ்நாடு சட்டம்
13
சட்ட எண் 54/2008.
1888-ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் சட்டத்தின் வகைமுறைகளை
சென்னை மாநகரப் புறநகர்ப் பகுதிக்கு நீட்டிப்பதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் ஐம்பத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:--
1 (0 இந்தச் சட்டம், 2008-ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் (சென்னை மாநகரப்
புறநகர்ப் பகுதிக்குச் செயற்பாடு நீட்டிப்பு சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, 2008-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18-ஆம் நாளன்று நடைமுறைக்கு
வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
2. இந்தச் சட்டத்தில் தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி--
(1) “சென்னை மாநகரப் புறநகர்ப் பகுதி” என்றால் இணைப்புப் பட்டியலில்
குறித்துரைக்கப்பட்ட காவல் நிலையங்களின் எல்லைகளைக் கொண்டிருக்கிற உள்ளாட்சிப்
பரப்பிடம் எனப் பொருள்படும்.
(ஐ) “மாநகரக் காவல் சட்டம்" என்றால் 1888-ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல்
சட்டம் எனப் பொருள்படும்.
(8) “அரசு” என்றால் மாநில அரசு எனப் பொருள்படும்.
@ நடைமுறையிலுள்ள சட்டம்” என்பது தமிழ்நாடு மாநிலம் முழுவதிலுமோ அல்லது
அதன் பகுதி எதிலுமோ நடைமுறையில் இருக்கிற செய் சட்டத்தை, அவசரச் சட்டத்தை,
ஒழுங்குமுறை விதியை, ஆணையை துணை விதியை, விதியை, திட்டத்தை அல்லது
அறிவிக்கையையோ அல்லது தமிழ்நாடு மாநிலம் முழுவதிலுமோ அதன் பகுதி எதிலுமோ
சட்டத்தின் ஆற்றல் பெற்றிருக்கிற முறையாவணம் எதனையுமோ உள்ளடக்கும்.
3. (1) 2008-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18-ஆம் நாளுக்கு உடனடி முன்னதாக
நடைமுறையில் இருந்தவாறான மாநகரக் காவல் சட்டமானது 2008-ஆம் ஆண்டு ஜூலைத்
திங்கள் 18-ஆம் நாளன்றும் அது முதற்கொண்டும் செயல் விளைவு கொள்ளும் வகையில்
சென்னை மாநகரப் புறநகர்ப் பகுதிக்கும் செயற்பாடு நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து
வருதல் வேண்டும்.
@) சென்னை மாநகரப் புறநகர்ப் பகுதிக்கு நீட்டிக்கபட்டவாறான மாநகரக் காவல்
சட்டத்தில்
(8) 3-ஆம் பிரிவில் குறிப்பிடப்படுகின்றவையல்லாத பிறவாறான சென்னை
மாநகரத்திற்கான சுட்டுகை எதுவும், இந்தச் சட்டத்தின் காரணமாக சென்னை மாநகரப் புறநகர்ப்
பகுதிக்கான ஒரு சுட்டுகையாகப் பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்.
(b) மாநகரக் குற்றவியல் நடுவர் என்று குறிப்பிடப்படுகின்ற சுட்டுகை எதுவும்
இந்தச் சட்டத்தின் காரணமாக நீதித் துறை குற்றவியல் நடுவர் என்று குறிப்பிடப்படும் ஒரு
சுட்டுகையாகப் பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்.
(9 ஆணையர் எனக் குறிப்பிடப்படும் சுட்டுகை எதுவும் இந்தச் சட்டத்தின்
காரணமாக சென்னை மாநகர்ப் புறநகர்ப் பகுதியின் காவல் நிருவாகம் உற்றடைந்துள்ள சென்னை
மாநகரப் புறநகர்ப் பகுதியின் காவல் துறை ஆணையர் என்று குறிப்பிடப்படும் சுட்டுகையாகப்
பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்.
குறுந்தலைப்பும்,
தொடக்கமும்.
பொருள்
வரையறைகள்.
1468 எனும்
எண்ணிட்ட
தமிழ்நாடு
சட்டத்தை
நீட்டித்தல்.
மாவட்ட
குற்றவியல்
நடுவர்கள் மற்றும்
நிர்வாகத் துறை
குற்றவியல்
நடுவர்கள்.
ஆகியோர்களின்
1973-ஆம் ஆண்டு
குற்ற வழக்கு
விசாரணை முறை
தொகுப்புச்
சட்டத்தின் படியான.
அதிகாரத்தைச்
செலுத்தி
வருவதற்கு.
சென்னை மாநகரப்
புறநகர்ப் பகுதியின்
ஆணையருக்கும்
சென்னை மாநகரப்
புறநகர்ப் பகுதியின்
ஒரு சில பிற
காவல்
அலுவலர்களுக்
கும் அதிகாரம்
அளிப்பதற்கு.
அரசுக்கு உள்ள.
அதிகாரம்.
சென்னை மாநகரப்
புறநகர்ப்
பகுதியில்.
2008-ஆம்
ஆண்டு ஜூலைத்
திங்கள் 18-ஆம்
நாளுக்கு அடுத்து
முந்தி செயல்பட்டு
வந்த காவற்
படையானது,
நீட்டிக்கப்பட்ட
படியான மாநகரக்.
காவல் சட்டத்தின்
படி அமைக்கப்
பட்டுள்ள
காவற்படையாகவே
கொள்ளப்படுதல்.
வேண்டும் எனல்.
4. () மாநகரக் காவல் சட்டத்தின் 7-ஆம் பிரிவில் அடங்கியுள்ள வகைமுறைகளுக்குப்
பாதகமின்றி அரசானது, அறிவிக்கை வாயிலாகவும் மற்றும் அதில் குறித்துரைக்கப்படக்கூடிய
நிபந்தனைகளுக்கும் வரம்புக்கும் உட்பட்டும்,-
(8) அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கப்படக்கூடியவாறு, (இதன் பின்பு இந்தப்
பிரிவில் மேற்சொன்ன தொகுப்புச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1973-ஆம் ஆண்டு குற்ற
வழக்கு விசாரணை முறைத் தொகுப்புச் சட்டத்தின் அத்தகைய வகைமுறைகளின்படியான
அல்லது எந்தப் பொருட்பாடுகளைப் பொறுத்து மாநிலச் சட்டமன்றம் மாநிலத்திற்காக சட்டமியற்ற
அதிகாரம் பெற்றிருக்கின்றதோ அந்தப் பொருட்பாடுகள் தொடர்பாக நடைமுறையில் உள்ள வேறு
சட்டம் எதனின் வகைமுறைகளின்படியான நிருவாகத்துறை குற்றவியல் நடுவர் ஒருவரின் மற்றும்
மாவட்ட குற்றவியல் நடுவர் ஒருவரின் அதிகாரங்களையும் கடமைகளையும், சென்னை மாநகரப்
புறநகர்ப் பகுதி தொடர்பாகச் செலுத்திவரவும், புரிந்துவரவும் சென்னை மாநகரப் புறநகர்ப் பகுதி
ஆணையருக்கு அதிகாரமளிக்கலாம்.
(0) அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கப்படக்கூடியவாறு மேற்சொன்ன
தொகுப்புச் சட்டத்தின் அத்தகைய வகைமுறைகளின்படியோ அல்லது எந்தப் பொருட்பாடு
குறித்து மாநிலச் சட்டமன்றம் மாநிலத்திற்காக சட்டமியற்ற அதிகாரம் பெற்றிருக்கின்றதோ அந்த.
பொருட்பாடு தொடர்பாக நடைமுறையில் உள்ள வேறு சட்டம் எதனின் வகைமுறைகளின்படியோ
நிருவாகத்துறை குற்றவியல் நடுவர் ஒருவரின் அதிகாரங்களையும் கடமைகளையும் அந்த
அறிவிக்கையில் குறித்துரைக்கப்படக் கூடியவாறு சென்னை மாநகரப் புறநகர்ப் பகுதி தொடர்பாக
அதிகாரங்களைச் செலுத்திவரவும், கடமைகளைப் புரிந்துவரவும் (காவல்துறை உதவி
ஆணையரின் படிநிலைக்குக் கீழுள்ள ஒர் அலுவலராக இல்லாத) சென்னை மாநகரப் புறநகர்ப்
பகுதியில் உள்ள காவல்துறை ஆணையருக்குக் கீழ் உள்ள அலுவலர் எவருக்கும் அதிகாரம்
அளிக்கலாம்.
(2) சென்னை மாநகரப் புறநகர்ப் பகுதியில் உள்ள காவல்துறை ஆணையருக்குக்
கீழுள்ள அலுவலர் ஒவ்வொருவரும், ()-ஆம் உட்பிரிவின்படி எந்த அதிகாரங்களை அவர்
செலுத்திவரவோ அல்லது கடமைகளை அவர் புரிந்து வரவோ அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளாரோ
அந்த அதிகாரங்களில் எவற்றையும் செலுத்தி வருகையில் மற்றும் கடமைகளில் எதனையும் புரிந்து
வருகையில், மேற்சொன்ன தொகுப்புச் சட்டத்தின் 20-ஆம் பிரிவின்படி நியமிக்கப்பட்டுள்ள
நிருவாகத்துறை குற்றவியல் நடுவரொருவர், அந்தப் பிரிவின்படி நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட
குற்றவியல் நடுவரின் பொதுவான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவராக இருப்பதைப்போன்ற
முறையிலும் அதே அளவுக்கும், மேற்சொன்ன காவல்துறை ஆணையரின் பொதுவான
கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருத்தல் வேண்டும்.
(6) சென்னை மாநகரப் புறநகர்ப் பகுதியின் காவல்துறை ஆணையர் அல்லது
அத்தகைய ஆணையருக்குக் கீழுள்ள அலுவலர் எவரும், ()-ஆம் உட்பிரிவின்படி எந்த
அதிகாரங்களை மற்றும் கடமைகளை அவர் செலுத்தி வரவோ அல்லது புரிந்து வரவோ
அதிகாரமளிக்கப்பட்டுள்ளாரோ அந்த அதிகாரங்கள் மற்றும் கடமைகளில் எவற்றையும் செலுத்தி
வருவதிலும், புரிந்து வருவதிலும், மேற்சொன்ன தொகுப்புச் சட்டத்தின் 20-ஆம் பிரிவின்படி
நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட குற்றவியல் நடுவரின் பொதுவான கட்டுப்பாட்டிற்கு அவர்
உட்பட்டவரல்லர்.
5. (1) சென்னை மாநகரப் புறநகர்ப் பகுதியில் (இதன்பின்பு இந்தப் பிரிவில், இருந்துவந்த
காவற்படை எனக் குறிப்பிடப்படுவதான) 2008-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18-ஆம் நாளுக்கு
அடுத்து முந்தி செயல்பட்டு வந்த காவற்படையானது, செயற்பாடு நீட்டிக்கப்பட்டபடியான மாநகர்க்
காவல் சட்டத்தின்படி 2008-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18-ஆம் நாளன்று இந்தச் சட்டத்தின்
மூலம் சென்னை மாநகரப் புறநகர்ப் பகுதிக்கென அமைக்கப்பட்டுள்ள காவற்படையாகக்
கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும், 2008-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18-ஆம் நாளுக்கு
அடுத்து முந்தி இருந்துவந்த காவற் படையில் பதவி வகித்து வந்த உறுப்பினர் ஒவ்வொருவரும்,
2008-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18-ஆம் நாளன்று சென்னை மாநகரப் புறநகர்ப்
பகுதிக்கான காவற்படையின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதாகக் கொள்ளப்படுதல்
வேண்டும்.
(2) 2008-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18-ஆம் நாளுக்கு அடுத்து முந்தி இருந்து
வந்த காவற்படையின் காவல் அலுவலர் எவரின் முன்பாகவும் முடிவுறாது நிலுவையிலிருந்த
(புலனாய்வுகள் வாயிலான நடவடிக்கைகள் உள்ளடங்கலான) நடவடிக்கைகள் அனைத்தும்,
மையச் சட்டம்
2/1974.
2008-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18-ஆம் நாளன்று (-ஆம் உட்பிரிவின்படி எந்தப் பதவிக்கு
அவர் நியமனம் செய்யப்படுவதாகக் கொள்ளப்படுகின்றாரோ அந்தப் பதவியை வகிப்பவர்
என்கின்ற தகுதியில் அவர் முன்பு நடப்பிலுள்ள நடவடிக்கைகளாகக் கொள்ளப்பட்டு அவ்வாறே
அவை மேற்கொண்டு நடத்தப்படுதலும் வேண்டும்.
(8) 2008-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18-ஆம் நாளுக்கு அடுத்து முந்தி மாவட்டக்
குற்றவியல் நடுவரொருவரால் அல்லது நிருவாகத் துறை குற்றவியல் நடுவரொருவரால் சட்டம்
எதன்படியும் செலுத்தப்படக்கூடியதான அதிகாரம் அல்லது ஆற்றப்படக்கூடியதான பணி எதுவும்,
நீட்டிக்கப்பட்டப்படியான மாநகரக் காவல் சட்டத்தினாலோ அல்லது அதன்படியாகவோ காவல்
துறை ஆணையருக்கோ அல்லது காவல் துறையில் உள்ள பிற அலுவலர் எவருக்குமோ
வழங்கப்பட்டிருக்குமிடத்து, அத்தகைய வழங்குகைக்கு அடுத்து முந்தி மாவட்ட குற்றவியல்:
நடுவர் அல்லது நேர்விற்கேற்ப நிருவாகத்துறை குற்றவியல் நடுவரின் முன்னர் நடப்பிலிருந்து,
அத்தகைய அதிகாரத்தைச் செலுத்துவது அல்லது அத்தகைய பணியை ஆற்றுவது தொடர்பான
அல்லது அதிலிருந்து எழுகின்ற நடவடிக்கைகள் அனைத்தும், காவல்துறை ஆணையருக்கு
அல்லது காவல் துறையின் பிற அலுவலருக்கு அத்தகைய அதிகாரம் அல்லது பணியானது.
வழங்கப்பட்டதன் காரணமாக சென்னை மாநகரப் புறநகருக்கான காவல் துறை ஆணையருக்கு
அல்லது நேர்விற்கேற்ப காவல் துறையின் பிற அலுவலருக்கு மாற்றப்பட்டதாயிருத்தல் வேண்டும்;
மற்றும் எந்த அலுவலருக்கு அவ்வாறு அத்தகைய நடவடிக்கைகள் மாற்றப்பட்டுள்ளனவோ அந்த
அலுவலர் அவற்றைப் புதிதாகவோ அல்லது மாற்றம் செய்யப்பட்டுள்ள அத்தகைய
நிலையிலிருந்தோ மேற்கொள்ளுதல் வேண்டும்.
6. () சென்னை மாநகரப் புறநகர்ப் பகுதி காவல் துறை ஆணையர், அப்பகுதிக்குச்
செயற்பாடு நீட்டிக்கப்பட்டபடியான மாநகரக் காவற்படைச் சட்டத்தில் என்ன.
அடங்கியிருந்தபோதிலும், அவ்வாறு நீட்டிக்கப் பட்டவாறான சென்னைக் காவல் சட்டத்தின்கீழ்
தமது பணியைச் செய்து வருகையில் (2-ஆம் உட்பிரிவின்படி செய்யப்படக்கூடிய விதிகள்
வற்றுக்கும் உட்பட்டு, தமிழ்நாடு மாநிலத்திற்கான காவல் துறை தலைமை இயக்குநரின்.
கட்டுப்பாட்டின் கீழும் செயலாட்சியின் கீழும் இருந்து வருவார்.
(2) சென்னை மாநகரப் புறநகர்ப் பகுதி காவல் துறை ஆணையரைப் பொறுத்து, ()-
ஆம் உட்பிரிவினால் காவல் துறை தலைமை இயக்குநருக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு
மற்றும் செயலாட்சி அதிகாரங்களைச் செலுத்தி வருவதை வரையறுப்பதற்கும்
முறைப்படுத்துவதற்குமான விதிகளைச் செய்வதற்கு அரசுக்கு உரிமையுண்டு.
(8) மாவட்டக் குற்றவியல் நடுவரொருவராகவோ அல்லது நிருவாகத் துறை குற்றவியல்
நடுவரொருவராகவோ சட்டம் எதன்படியும், சென்னை மாநகரப் புறநகர்ப் பகுதி காவல்துறை
ஆணையரால் செலுத்தப்படக்கூடிய அதிகாரங்கள் அல்லது ஆற்றப்படக்கூடிய பணிகள்
தொடர்பாக இந்தப் பிரிவிலுள்ள எதுவும் பொருந்துதலாகாது.
7. 2008-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18-ஆம் நாளன்று சென்னை மாநகரப் புறநகர்ப்
பகுதியில் நடைமுறையில் இல்லாத சட்டமொன்று குறித்து இந்தச் சட்டத்தினால் செயற்பாடு
நீட்டிக்கப்பட்டவாறான மாநகரக் காவல் சட்டத்தில் உள்ள சுட்டுகை எதுவும், மேற்சொன்ன பகுதி
தொடர்பாக மேற்சொன்ன பகுதியில் நடைமுறையில், நேரிணையான வேறு சட்டம்
ஏதேனுமிருப்பின், அதைக் குறிக்கும் ஒரு சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.
8. சென்னை மாநகரப் புறநகர்ப் பகுதியில் அதிகாரங்கள் எவற்றையும் செலுத்தி வருவதற்கு
அல்லது பணிகள் எவற்றையும் ஆற்றிவருவதற்கு, 2008-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள்:
18-ஆம் நாளுக்கு அடுத்து முந்திய தேதியன்று, தகுதியுடையதாயிருந்த அதிகார அமைப்பு என்று
நடைமுறையிலுள்ள சட்டம் எதிலும் எந்த அமைப்பு மூலமாகவுமோ சொற்களின் மூலமாகவுமோ
குறிப்பிடப்படும் சுட்டுகை எதுவும், அப்பகுதிக்கு நீட்டிக்கப்பட்டவாறான மாநகரக் காவல்.
சட்டத்தின் மூலமாகவோ அல்லது அதன்படியாகவோ அல்லது இந்தச் சட்டத்தின்படியாகவோ
மேற்சொன்ன பகுதிக்கு நேரிணையான புதிய அதிகார அமைப்பொன்று அமைத்துருவாக்கப்
பட்டிருக்கின்றவிடத்து, அது அந்தப் புதிய அதிகார அமைப்பைக் குறிப்பிடும் ஒரு சுட்டுகையாக
இருந்தாற்போன்று செயல்விளைவு கொள்ளுதல் வேண்டும்.
சென்னை மாநகரப்
புறநகர்ப் பகுதி
ஆணையரின்
மீது காவல்.
துறை தலைமை
இயக்குநரின்.
கட்டுப்பாடு.
சென்னை மாநகரப்
புறநகர்ப்
பகுதியில்
நடைமுறையில்
இல்லாத
சட்டங்களைக்
குறிப்பிடும் ' -
பொருள்
கொள்ளுதல்.
புதிய அதிகார
அமைப்புகள்
அமைத்து வாக்கப்பட்டிருக்-
கின்ற விடத்து,
அதிகார
அமைப்புகளைக்
குறிப்பிடும்
சுட்டுகைக்குப்
பொருள்
கொள்ளுதல்.
மாநகர் காவல்.
சட்டத்தைப்
பொருந்தச்
செய்வதற்கு
உதவுகின்ற
நோக்கங்
களுக்காக
நீதிமன்றங்கள்.
பிற அதிகார
அமைப்புகள்
ஆகியவற்றிற்
குள்ள அதிகாரங்கள்.
விதிகளைச்.
செய்வதற்கான.
அதிகாரம்.
இடர்ப்பாடுகளை
நீக்குவதற்கான
அதிகாரம்.
சென்னை P
பகுதியானது.
நீக்கப்படுதல்
நீக்கமும் காப்பும்.
9. சென்னை மாநகரப் புறநகர்ப் பகுதியில் அப்பகுதிக்குச் செயற்பாடு நீட்டிக்கப்பட்டபடியான
மாநகரக் காவல் சட்டத்தைப் பொருந்தச் செய்வதற்கு உதவுகின்ற நோக்கங்களுக்காக,
நீதிமன்றம் எதுவும் அல்லது பிற அதிகார அமைப்பு எதுவும் அந்த நீதிமன்றத்தின் அல்லது அந்த
அதிகார அமைப்பின் முன்பு உள்ள பொருட்பாடு எதற்கும் ஏற்றபடி அதன் சாராம்சத்தைப்
பாதிக்காமல் மேற்சொன்ன சட்டத்தைத் தழுவிப் பொருந்தச் செய்வதற்குத் தவையானதாகவோ
முறையானதாகவோ இருக்கக்கூடிய மாறுதல்களுடன் அதற்குப் பொருள் கொள்ளலாம்.
10. () அரசு இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது அவற்றின் எதையும்
நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.
(8) இந்தச் சட்டத்தின்படிச் செய்யப்படும் விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடப்படுதல் வேண்டும், மேலும், குறிப்பிட்டதொரு நாளன்று அவை நடைமுறைக்கு வருதல்
வேண்டும் என வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட
நாளன்றே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
@ இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும், குறிப்பிட்டதொரு
நாளன்று அவை நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று வெளிப்படையாகச்
சொல்லப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்படும் நாளன்றே நடைமுறைக்கு வருதல்
வண்டும்
@) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை
அல்லது ஆணை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய
விரைவில், சட்ட மன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும், மற்றும் அது அவ்வாறு
வைக்கப்பட்ட கூட்டத் தொடரோ அல்லது அதனை அடுத்துவரும் கூட்டத் தொடரோ
முடிவடைவதற்கு முன்னர் சட்ட மன்றப் பேரவை அந்த விதியில் அறிவிக்கையில் அல்லது
ஆணையில் மாறுதல் எதையும் செய்வதற்கு உடன்படுமானால் அல்லது அந்த விதி
செய்யப்படுதலோ அல்லது அறிவிக்கை அல்லது ஆணை பிறப்பிக்கப்படுதலோ ஆகாது என்று
உடன்படுமானால் அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை அத்தகைய
மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே நடைமுறைக்கு வருதல் வேண்டும். அல்லது
நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல் வேண்டும். எனினும் அவ்வாறு மாறுதல் செய்வது
அல்லது நடைமுறைக்கு வராமற்போனது எதுவும் அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது
ஆணையின்கீழ் முன்னதாகச் செய்யப்பட்டுள்ள செயல் ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும்
பாதகமின்றி இருத்தல் வேண்டும்.
11. இந்தச் சட்டத்தின்படி சென்னை மாநகரப் புறநகர்ப் பகுதிக்குச் செயற்பாடு
நீட்டிக்கப்பட்டபடியான மாநகரக் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில் இடர்ப்பாடு.
ஏதேனும் எழுமானால் அரசு, தறுவாய் கோருகிறவாறு, ஆணையின் மூலம் அந்த இடர்பாட்டை
நீக்குகின்ற நோக்கத்திற்காக தேவையானதென அதற்குத் தோன்றக் கூடிய எதனையும் செய்யலாம்:
வரம்புரை.- ஆனால், 2008-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18-ஆம் நாளிலிருந்து
இரண்டாண்டுகள் முடிவடைந்த பின்னர், இந்தப் பிரிவின்படியான ஆணை எதுவும்
பிறப்பிக்கப்படுதல் கூடாது.
12. 2008-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18-ஆம் நாளன்று இந்த இணைப்புப்பட்டியலில்
குறித்துரைக்கப்பட்ட காவல் நிலையங்களின் எல்லைகளைக் கொண்டிருக்கிற உள்ளாட்சிப்
பரப்பிடமானது, மாநகரக் காவல் சட்டத்தின் 3-ஆம் பிரிவின் நோக்கத்திற்காக சென்னை
மாநகரத்திலிருந்து நீக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
13, () 2008-ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் (சென்னை மாநகரப் புறநகர்ப் பகுதிக்கு
செயற்பாடு நீட்டிப்பு அவசரச் சட்டமானது இதன்மூலம் நீக்கம் செய்யப்படுகிறது.
(2) அவ்வாறு நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றபோதிலும், மேற்சொன்ன அவசரச்
சட்டத்தின்படி செய்யப்பட்ட செயல் எதுவுமோ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவுமோ
இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்டுள்ளதாகவோ அல்லது எடுக்கப்பட்டுள்ளதாகவோ
கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அவசரச்
சட்டம் 2/2008.
இணைப்பு பட்டியல்
[ 2 () எனும் பிரிவைக் காணவும்]
காவல் நிலையங்கள்:
1. பரங்கிமலை காவல் நிலையம்
2. மீனம்பாக்கம் காவல் நிலையம்
3. பல்லாவரம் காவல் நிலையம்
4. குரோம்பேட்டை காவல் நிலையம்.
5. சங்கர் நகர் காவல் நிலையம்
6. தாம்பரம் காவல் நிலையம்
7. மடிப்பாக்கம் காவல் நிலையம்
8. பழவந்தாங்கல் காவல் நிலையம்
9. ஆதம்பாக்கம் காவல் நிலையம்
10. பள்ளிக்கரணை காவல் நிலையம்
11. சிட்லப்பாக்கம் காவல் நிலையம்
12. பீர்க்கன்கரணை காவல் நிலையம்
13. சேலையூர் காவல் நிலையம்
14. விமான நிலைய காவல் நிலையம்
15. நந்தம்பாக்கம் காவல் நிலையம்
16. பூந்தமல்லி காவல் நிலையம்
17. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையம்
18. குன்றத்தூர் காவல் நிலையம்
19. மாங்காடு காவல் நிலையம்
20. அம்பத்தூர் காவல் நிலையம்
21. அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம்
22. கொரட்டூர் காவல் நிலையம்
23.மதுரவாயல் காவல் நிலையம்.
24. ஆவடி காவல் நிலையம்
25. ஆவடி டாங்க் பேக்டரி காவல் நிலையம்
26.பட்டாபிராம் காவல் நிலையம்
27. முத்துபுதுப்பேட்டை காவல் நிலையம்
28. திருநின்றவூர் காவல் நிலையம்
29.நசரத்பேட்டை காவல் நிலையம்.
30. திருமுல்லைவாயில் காவல் நிலையம்.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
26
திருவேற்காடு காவல் நிலையம்
மாதவரம் காவல் நிலையம்:
மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம்
செங்குன்றம் காவல் நிலையம்
எண்ணூர் காவல் நிலையம்
மணலி காவல் நிலையம்
மணலி புதுநகர் காவல் நிலையம்
சாத்தங்காடு காவல் நிலையம்
புழல் காவல் நிலையம்