Tamil Nadu · 2011 · Act 20

Tamil Nadu University Laws (Amendment and Repeal) Act, 2011

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

சட்ட எண்‌ 20/2011. 1978ஆம்‌ ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகச்‌ சட்டத்தை மேலும்‌ திருத்துவதற்கும்‌ குறித்த சில பல்கலைக்கழகச்‌ சட்டங்களை நீக்கம்‌ செய்வதற்குமானதொரு சட்டம்‌. கிண்டியிலுள்ள பொறியியல்‌ கல்லூரி, சென்னை கிண்டியிலுள்ள அழகப்ப செட்டியார்‌ தொழில்‌ நுட்பக்‌ கல்லூரியிலுள்ள சென்னைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ நான்கு துறைகள்‌, குரோம்பேட்டையிலுள்ள சென்னை தொழில்‌ நுட்ப நிறுவனம்‌ ஆகியவற்றைத்‌ தன்னகத்தே கொண்டு (தனித்த வகையினதான பல்கலைக்கழகமாக) 1978ஆம்‌ ஆண்டு பேரறிஞர்‌ அண்ணா தொழில்‌ நுட்ப பல்கலைக்கழகச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 30/1978) மூலம்‌ பேரறிஞர்‌ அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ 1978ஆம்‌ ஆண்டு அமைத்துருவாக்கப்பட்டது. 1982ஆம்‌ ஆண்டு பேரறிஞர்‌ அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ (திருத்தம்‌ மற்றும்‌ தனி வகைமுறைகள்‌) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 26/1982) மூலம்‌ மேற்சொன்ன 30/1978 எனும்‌ எண்ணிட்ட தமிழ்நாடு சட்டத்தைத்‌ திருத்தியதன்‌ வாயிலாக பேரறிஞர்‌ அண்ணா பல்கலைக்கழகம்‌ என்ற பெயரானது 1982ஆம்‌ ஆண்டில்‌ அண்ணா பல்கலைக்கழகம்‌ என மாற்றப்பட்டது என்பதாலும்‌; 2001-ஆம்‌ ஆண்டு அண்ணா பலகலைக்கழக நதிருத்தசி) சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 26/2001) மூலம்‌ 30/1978 எனும்‌ எண்ணிட்ட மேற்சொன்ன தமிழ்நாடு சட்டத்தைத்‌ திருத்தியதன்‌ வாயிலாக, அண்ணா பல்கலைக்கழகமானது 2001-ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ திங்கள்‌ 31-ஆம்‌ தேதியிலிருந்து செயல்விளைவு கொள்ளும்‌ வகையில்‌ இணைப்பு வகைப்‌ பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. இதன்விளைவாக, இம்மாநிலத்தின்‌ பல்வேறு பல்கலைக்கழகங்களுடன்‌ முன்னர்‌ இணைக்கப்பட்டிருந்த 237 பொறியில்‌ கல்லூரிகள்‌. அண்ணா பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்பட்டன என்பதாலும்‌; 2006-ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ திங்களில்‌ அண்ணா பல்கலைக்கழகமானது இணைப்பு வகைப்‌ பல்கலைக்கழகமாக ஆனதற்குப்‌ பின்பு சென்னையிலிருந்து மாநிலமெங்கிலும்‌ உள்ள 240-க்கும்‌ மேற்பட்ட பொறியியல்‌ கல்லூரிகளின்‌ அலுவல்களை மேலாண்மை 2 செய்வது கடினமானதாக உணரப்பட்டது. அதன்பின்பு, அரசானது 41/2006 எனும்‌ எண்ணிட்ட தமிழ்நாடு சட்டத்தின்‌ மூலம்‌ திருச்சிராப்பள்ளி, அண்ணா பல்கலைக்கழகம்‌, மற்றும்‌ 42/2006 எனும்‌ எண்ணிட்ட தமிழ்நாடு சட்டத்தின்‌ மூலம்‌ கோயம்புத்தூர்‌, அண்ணா பல்கலைக்கழகம்‌ ஆகியவற்றை 2007ஆம்‌ ஆண்டு பிப்ரவரித்‌ திங்கள்‌ 1ஆம்‌ நாளிலிருந்து செயல்‌ விளைவு கொள்ளும்‌ வகையிலும்‌, 28/2007 எனும்‌ எண்ணிட்ட தமிழ்நாடு சட்டத்தின்‌ மூலம்‌ திருநெல்வேலி, அண்ணா பல்கலைக்கழகத்தை 2007-ஆம்‌ ஆண்டு ஜூலை திங்கள்‌ 17ஆம்‌ நாள்‌ முதற்கொண்டும்‌, 26/2010 எனும்‌ எண்ணிட்ட தமிழ்நாடு சட்டத்தின்‌ மூலம்‌ சென்னை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழத்தையும்‌, 27/2010 எனும்‌ எண்ணிட்ட தமிழ்நாடு சட்டத்தின்‌ மூலம்‌ மதுரை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகத்தையும்‌ 2010ஆம்‌ ஆண்டு ஜூன்‌ திங்கள்‌ 19ஆம்‌ நாள்‌ முதற்கொண்டும்‌ செயல்விளைவு கொள்ளும்‌ வகையிலும்‌ தெளிவாகவும்‌ திட்டவட்டமாகவும்‌ வரையறை செய்யப்பட்ட பரப்பிடங்களைக்‌ கொண்ட மேலும்‌ ஐந்து தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகங்களை அமைத்துருவாக்கியது. அதன்பின்பு திருச்சிராப்பள்ளி, அண்ணா பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌, அண்ணா பல்கலைக்கழகம்‌, மற்றும்‌ திருநெல்வேலி, அண்ணா பல்கலைக்கழகம்‌ ஆகியவை முறையே திருச்சிராப்பள்ளி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌ அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, மற்றும்‌ திருநெல்வேலி அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ என மறுபெயரிடப்பட்டன என்பதாலும்‌; 2010ஆம்‌ ஆண்டில்‌, சென்னை, அண்ணா பல்கலைக்கழகம்‌ 2002ஆம்‌ ஆண்டிற்கு முன்பு இருந்தவாறு தனித்த வகையினதான பல்கலைக்கழகம்‌ ஒன்றாக, 2010ஆம்‌ ஆண்டு ஜூன்‌ திங்கள்‌ 19ஆம்‌ நாளிலிருந்து செயல்விளைவு கொள்ளும்‌ வகையில்‌ மீண்டும்‌ மாற்றப்பட்டுள்ளது என்பதாலும்‌; தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகங்களின்‌ செயற்பணிகளில்‌ கடந்த நான்காண்டுகளில்‌ அனுபவத்தின்‌ அடிப்படையில்‌ ஏற்பட்ட இடர்ப்பாடுகள்‌ பின்வருமாறு:- () அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ என்ற அதே பெயரில்‌ பல பல்கலைக்கழகங்கள்‌ அமைத்துருவாக்கப்பட்டதால்‌ குழப்பம்‌ ஏற்பட்டிருக்கிறது; (i) ஒவ்வொரு பல்கலைக்கழகமும்‌ அவைகளுக்கென சொந்தப்‌ பாடத்திட்டங்களைப்‌ பின்பற்றுவதால்‌ மாணவர்களுக்குப்‌ பாடத்திட்டம்‌ மற்றும்‌ கற்பிப்பதில்‌ ஒரு சீர்மை இல்லாதிருக்கிறது; 00) மாணவர்களின்‌ திறமையை மதிப்பீடு செய்வது குறித்து, ஒவ்வொரு பல்கலைக்கழகமும்‌ அதன்‌ சொந்த நடைமுறையினைப்‌ பின்பற்றுவதால்‌, மாணவர்களின்‌. திறமையை ஆய்வு செய்வதில்‌ பெருமளவிலான வேறுபாடு நிலவுகிறது. மேற்காணும்‌ பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட துணைவேந்தர்களை அடக்கியுள்ள பொதுவான வாரியத்தினால்‌ பொருத்தமான தீர்வுகளைக்கண்டறிய இயலவில்லை; 09) தனித்தனியான அண்ணா தொழில்நுட்பப்‌ பல்கலைக்கழகங்கள்‌ அமைத்துருவாக்கப்பட்டிருக்கிற போதிலும்‌, முழுமையான தகுதி பெற்ற பேராசிரியர்கள்‌ தனித்தவகை அண்ணா பல்கலைக்கழகத்திலேயே இருக்கிறார்கள்‌. இதன்காரணமாக அத்தகைய பேராசிரியர்களின்‌ தனித்திறமையின்‌ பயன்பாடு பிற அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகத்தின்‌ மாணவர்களுக்குக்‌ கிடைக்காமல்‌ போய்விடுகிறது; (6) அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகங்களில்‌ படிக்கும்‌ மாணவர்களின்‌. மனதில்‌ தமக்கு தனித்தவகை அண்ணா பல்கலைக்கழகத்தின்‌ மாணவர்களுக்குச்‌ சமமான அளவில்‌ வேலைவாய்ப்புக்‌ களங்களிலும்‌, பன்னாட்டுக்‌ கல்விச்‌ சூழலிலும்‌. அங்கீகாரம்‌ கிடைக்காமல்‌ போகலாம்‌ என்ற அச்சம்‌ இருக்கிறது; (ற திருச்சிராப்பள்ளி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகத்தைத்‌ தவிர, பிற அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகங்கள்‌ முழுமையான உள்கட்டமைப்பு வசதிகளைக்‌ கொண்டிருக்கவில்லை; Vi) அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகங்களின்‌ நிதி வளமானது அவைகளுடன்‌ இணைக்கப்பட்ட கல்லூரிகள்‌ போதிய அளவிலான எண்ணிக்கையில்‌ இல்லாததால்‌ கேள்விக்குறியாகவே இருக்கிறது; என்பதாலும்‌, தமிழ்நாடு சட்டம்‌ 30/1978) 3 அத்தகைய இடர்ப்பாடுகளையும்‌, குழப்பங்களையும்‌ அகற்றும்‌ பொருட்டு, அரசு, பல்வேறு அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டங்களின்படி அமைத்துருவாக்கப்பட்ட அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகங்களை முடிவுற்ற நிலைக்குக்‌ கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது மற்றும்‌ மாநிலத்திலுள்ள அனைத்துப்‌ பொறியியல்‌ கல்லூரிகளையும்‌, மேற்சொன்ன பல்கலைக்கழகத்தை இணைக்கப்பட்ட பல்கலைக்கழகமாக மாற்றுவதன்‌ மூலம்‌ அண்ணா பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ கொண்டு வருவதென முடிவு செய்துள்ளது என்பதாலும்‌; இந்தியக்‌ குடியரசின்‌ அறுபத்து இரண்டாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. () இந்தச்‌ சட்டம்‌, 2011ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகச்‌ சட்டங்கள்‌. (திருத்தம்‌ மற்றும்‌ நீக்கம்‌) சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. (2) இது, மாநில அரசு, அறிவிக்கையின்‌ வாயிலாகக்‌ குறிக்கக்கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 2. (இதன்பின்பு முதன்மைச்‌ சட்டம்‌ என குறிப்பிடப்படுவதான) 1978-ஆம்‌ ஆண்டு அண்ணா பல்கலைக்கழகச்‌ சட்டத்தின்‌ 1ஆம்‌ பிரிவுக்குப்பின்னர்‌ பின்வரும்‌ பிரிவானது புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- 1-A இந்தச்‌ சட்டமானது, (@) உறுப்பமைக்‌ கல்லூரிகள்‌ அனைத்திற்கும்‌; (9) இந்தச்‌ சட்டத்தின்படி பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்பட்டிருப்பனவாக அல்லது பல்கலைக்கழகத்தால்‌ ஒப்பேற்பளிக்கப்பட்டிருப்பனவாகக்‌ கொள்ளப்படும்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ நிறுவனங்கள்‌ அனைத்திற்கும்‌; (9 இப்பல்கலைக்கழகத்தின்‌ பரப்பிடத்திற்குள்‌ அமைந்துள்ளவையும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு அல்லது அதன்படி செய்யப்பட்ட நிலை விதிகள்‌, துணைமுறை விதிகள்‌ மற்றும்‌ ஒழுங்குழுறை விதிகள்‌ ஆகியவற்றுக்கு இணங்க இப்பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ள அல்லது பல்கலைக்கழகத்தால்‌ ஒப்பேற்பளிக்கப்பட்ட கல்லூரிகள்‌ மற்றும்‌ நிறுவனங்கள்‌ அனைத்திற்கும்‌ பொருந்தும்‌. 3. முதன்மைச்‌ சட்டத்தின்‌ 2-ஆம்‌ பிரிவில்‌- M @ ௫ ௫ @ ஆகிய கூறுகளுக்குப்‌ பதிலாக, பின்வரும்‌ கூறுகள்‌ அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌, அவையாவன:- “(9 “இணைக்கப்பட்ட கல்லூரி” என்பது, பல்கலைக்கழக பரப்பிடத்திற்ககுள்‌ அமைந்துள்ள மற்றும்‌ பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ள மற்றும்‌ பல்கலைக்கழகத்தின்‌ பட்டங்கள்‌, பட்டயங்கள்‌, அல்லது பிற கல்விச்‌ சிறப்புக்களுக்கான தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான பொறியியல்‌, தொழில்‌ நுட்பம்‌ மற்றும்‌ அதுதொடர்பான அறிவியலில்‌ குறித்த காலப்படிப்புப்‌ பிரிவுகளுக்கு வகை செய்கிற கல்லூரி அல்லது நிறுவனம்‌ எதுவும்‌ என்று பொருள்படும்‌; மற்றும்‌ இந்தச்சட்டத்தின்படி பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்பட்டிருப்பதாகக்‌ கொள்ளப்பட்ட கல்லூரி ஒன்றையும்‌, தன்னாட்சிக்‌ கல்லூரி ஒன்றையும்‌ உள்ளடக்கும்‌; (88) “குறிக்கப்பட்ட நாள்‌” என்பது, 1ஆம்‌ பிரிவின்‌ ஆம்‌ உட்பிரிவின்படி அரசு, அறிவிக்கை வாயிலாகக்‌ குறிக்கக்கூடிய அத்தகைய தேதி என்று பொருள்படும்‌; (ab) “ஒப்பேற்பளிக்கப்பட்ட கல்லூரி” என்பது, பல்கலைக்கழக பரப்பிடத்திற்குள்‌. அமைந்துள்ள மற்றும்‌ பல்கலைக்கழகத்தால்‌ ஒப்பேற்பளிக்கப்பட்ட மற்றும்‌ பல்கலைக்கழகத்தின்‌ விருதுகள்‌ மற்றும்‌ பட்டயங்களுக்கான தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான குறித்த காலப்படிப்புப்‌ பிரிவுகளுக்கு வகை செய்கிறதுமான: தலைப்பும்‌ தொடக்கமும்‌. 1-A எனும்‌ புதிய பிரிவு புகுத்தப்படுதல்‌... 2-ஆம்‌ பிரிவிற்கான. 3-ஆம்‌ பிரிவிற்கான. திருத்தம்‌. 5-ஆம்‌ பிரிவிற்கான. திருத்தம்‌. 4 கல்லூரி எதுவும்‌ என்று பொருள்படும்‌; மற்றும்‌ இந்தச்சட்டத்தின்படி பல்கலைக்கழத்தின்‌ ஒப்பேற்பளிக்கப்பட்டுள்ளதாகக்‌ கொள்ளப்படும்‌ கல்லூரி ஒன்றையும்‌ உள்ளடக்கும்‌; (80) “தன்னாட்சிக்‌ கல்லூரி” என்பது, நிலை விதிகளினால்‌ அல்லது நிலை விதிகளின்படி தன்னாட்சிக்‌ கல்லூரி என்று பெயர்‌ குறிப்பிடப்பட்ட கல்லூரி எதுவும்‌ என்று பொருள்படும்‌. (80) “தலைவர்‌” என்பது, புலத்தின்‌ தலைவர்‌ என்று பொருள்படும்‌. (99) “கல்லூரி” என்பது, பல்கலைக்கழகத்தால்‌ அமைத்துருவாக்கப்படும்‌ அல்லது பேணிவரப்படும்‌ அல்லது பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ள மற்றும்‌ பல்கலைக்கழகத்தின்‌ பட்டங்கள்‌, பட்டயங்கள்‌ மற்றும்‌ பிறகல்விச்‌ சிறப்புகளுக்கான தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான பொறியியல்‌, தொழில்‌ நுட்பம்‌ மற்றும்‌ அது தொடர்பான அறிவியல்களில்‌ குறித்தகால படிப்புப்‌ பிரிவுகளுக்கு அல்லது பயிற்சிக்கு வகை செய்கிறதுமான கல்லூரி அல்லது நிறுவனம்‌ ஒன்று என்று பொருள்படும்‌. (b) “உறுப்பமை கல்லூரி” என்பது, 1ஆம்‌ இணைப்புப்‌ பட்டியலில்‌ குறித்துரைக்கப்பட்டுள்ள கல்லூரி மற்றும்‌ நிறுவனம்‌ ஒவ்வொன்றும்‌ என்று பொருள்படும்‌, மற்றும்‌ பட்டங்கள்‌, பட்டயங்கள்‌ மற்றும்‌ பிற கல்விச்‌ சிறப்புக்களுக்கான தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான பொறியியல்‌, தொழில்‌ நுட்பம்‌ மற்றும்‌ அதுதொடர்பான அறிவியல்களில்‌ குறித்த காலப்படிப்புப்‌ பிரிவுகளுக்கு அல்லது பயிற்சிக்கு வகை: செய்கின்றதுமான, பல்கலைக்கழகத்தால்‌ நிறுவப்படும்‌ அல்லது பேணிவரப்படும்‌ கல்லூரி ஒன்றையும்‌ உள்ளடக்கும்‌; (9 “முதன்மையர்‌” என்றால்‌, உறுப்பமைக்‌ கல்லூரியின்‌ தலைவர்‌ என்று பொருள்படும்‌; (0) “இயக்குநர்‌” என்பது, வகுத்துரைக்கப்படக்கூடிய ஆராய்ச்சி மற்றும்‌ வளர்ச்சித்‌ தலைவர்‌ அல்லது மேற்படிப்பு மையம்‌ ஒவ்வொன்றின்‌ தலைவர்‌ என்று பொருள்படும்‌; @ () எனும்‌ கூறுக்குப்பின்பு, பின்வரும்‌ கூறானது புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- “ha) “முதல்வர்‌” என்றால்‌ இணைக்கப்பட்ட கல்லூரி ஒன்றின்‌ தலைவர்‌ என்று பொருள்படும்‌; @ ட எனும்‌ கூறுக்குப்பின்பு பின்வரும்‌ கூறானது சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது? “(m) “பல்கலைக்கழகப்‌ பரப்பிடம்‌” என்றால்‌, 1928-ஆம்‌ ஆண்டு அண்ணாமலைப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டத்தின்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 1/1929) 2-ஆம்‌ பிரிவின்‌ (9) எனும்‌ கூறில்‌ பொருள்‌ வரையறை செய்யப்பட்டவாறான அண்ணாமலை நகர்‌ நீங்கலாக தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதும்‌ என்று பொருள்படும்‌.”. 4. முதன்மைச்‌ சட்டத்தின்‌ 3ஆம்‌ பிரிவில்‌ (3) மற்றும்‌ @)y உட்பிரிவுகள்‌ விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌. 5. முதன்மைச்‌ சட்டத்தின்‌ 5-ஆம்‌ பிரிவில்‌ (8) எனும்‌ கூறுக்குப்‌ பின்பு, பின்வரும்‌ கூறுகள்‌ சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌, அவையாவன:- (80) வகுத்துரைக்கப்பட்ட வரைக்கட்டுகளின்படி பல்கலைக்கழகத்துடன்‌. கல்லூரிகளை இணைப்பதற்கு மற்றும்‌ அத்தகைய இணைப்பை விலக்கிக்‌ கொள்வதற்கு: வரம்புரை: ஆனால்‌, கல்லூரி எதுவும்‌, அத்தகைய கல்லூரியினை அமைத்துருவாக்குவதற்கு அரசின்‌ அனுமதி பெறப்பட்டிருந்தாலன்றி, மற்றும்‌ அத்தகைய அனுமதிக்கான வரையுரைகள்‌ மற்றும்‌ வரைக்கட்டுகள்‌ எவையேனுமிருப்பின்‌, அவற்றிற்கு இணங்கிய வகையில்‌, நடந்திருந்தாலன்றி, பல்கைலக்கழகத்துடன்‌ இணைக்கப்படுதல்‌ ஆகாது. 5 (80) வகுத்துரைக்கப்பட்ட வரைக்கட்டுகளின்படி பல்கலைக்கழகத்தின்‌ பட்டங்கள்‌, பட்டயங்கள்‌ மற்றும்‌ பிற கல்விச்‌ சிறப்புகளுக்கான தேர்வுகளுக்கு ஏற்றுக்‌ கொள்ளப்படுவதற்கான பயிற்சி வழங்கும்‌ நிறுவனங்களுக்கு ஒப்பேற்பளிப்பதற்கு மற்றும்‌. அத்தகைய ஒப்பேற்பினை திரும்ப பெறுவதற்கு: வரம்புரை: ஆனால்‌, நிறுவனம்‌ எதுவும்‌, அத்தகைய நிறுவனத்தினை அமைத்துருவாக்குவதற்கு அரசின்‌ அனுமதி பெறப்பட்டிருந்தாலன்றி, மற்றும்‌ அத்தகைய அனுமதிக்கான வரையுரைகள்‌ மற்றும்‌ வரைக்கட்டுகள்‌ எவையேனுமிருப்பின்‌, அவற்றுக்கு இணங்கிய நடந்திருந்தாலன்றி, பல்கைலக்கழகத்தினால்‌ ஒப்பேற்பளிக்கப்படுதலாகாது. (86) வகுத்துரைக்கப்பட்ட வரைக்கட்டுகளின்படி அரசின்‌ முன்‌ ஒருங்கிசைவுடன்‌. கல்லூரி எதனையும்‌ தன்னாட்சிக்‌ கல்லூரி ஒன்றாக பெயரிட்டுக்‌ குறிப்பிடுவதும்‌. மற்றும்‌ அவ்வாறு குறிப்பிட்டதை நீக்கி கொள்வதும்‌; (6) வேண்டுறுத்தப்பட்ட இடைவெளிகளில்‌ கல்லூரிகளை மதிப்பீடு செய்வதற்கு ஆய்வு செய்வதற்கு மற்றும்‌ கல்லூரிகளின்‌ கல்விசார்‌ சிறப்புக்களை வளர்ப்பதற்கான வகுத்துரைக்கப்பட்ட பொருத்தமான நடவடிக்கையினை எடுப்பதற்கு; (ag) கல்விசார்‌ சிறப்பினை எய்துவதற்கு கட்டுப்பாட்டு நுட்பத்தினை: வகுத்துரைக்கும்‌ பொருட்டு, இணைக்கப்பட்ட கல்லூரிகளை கல்விசார்‌ முறையிலும்‌, நிர்வாக முறையிலும்‌ கண்காணிப்பதற்கு; (ah) பல்கலைக்கழகத்தினால்‌ அவ்வப்போது தீர்மானிக்கப்படலாகும்‌ அத்தகைய மண்டல அலுவலகங்களை நிறுவுவதற்கும்‌, பேணிவருவதற்கும்‌; (@) பல்கலைக்கழகத்தினால்‌ முடிவு செய்யப்படலாகும்‌, அத்தகைய அதிகாரங்களையும்‌ கடமைகளையும்‌ மண்டல அலுவலகங்களிடம்‌ வழங்குவதற்கும்‌; 6. முதன்மைச்‌ சட்டத்தின்‌ 5ஆம்‌ பிரிவுக்குப்‌ பின்பு, பின்வரும்‌ பிரிவானது புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌ அதாவது:- “5-A. கல்லூரிகள்‌ பிற பல்கலைக்கழகம்‌ எதனுடனும்‌ இணைக்கப்படுதல்‌ கூடாது-- பல்கலைக்கழக பரப்பிடத்திற்குள்‌ உள்ள கல்லூரி எதுவும்‌, அண்ணா பல்கலைக்கழகத்துடன்‌ அல்லாமல்‌, பிற பல்கலைக்கழகம்‌ எதனுடனும்‌ இணைக்கப்படுதல்‌ ஆகாது.”. 7. முதன்மைச்‌ சட்டத்தின்‌ 8-ஆம்‌ பிரிவில்‌,- ) இ-ஆம்‌ கூறுக்கு பதிலாக பின்வரும்‌ கூறானது அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- “இ கல்விப்‌ புலங்களின்‌ தலைவர்கள்‌;” @ (9-ஆம்‌ கூறில்‌ “மற்றும்‌” என்னும்‌ சொல்லானது விட்டுவிடப்படுதல்‌ வேண்டும்‌; @ ௫-ஆம்‌ கூறுக்குப்‌ பின்பு, பின்வரும்‌ கூறானது புகுத்தப்படுத்தல்‌ வேண்டும்‌, அதாவது:- “ரஜ தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்‌; மற்றும்‌”. 8. முதன்மைச்‌ சட்டத்தின்‌ 11-ஆம்‌ பிரிவில்‌ (5), @), @-A), ஆகிய உட்பிரிவுகளுக்குப்‌ பதிலாக பின்வரும்‌ உட்பிரிவுகள்‌ அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- “௫ துணைவேந்தர்‌ மூன்றாண்டுக்கால அளவிற்குப்‌ பதவி வகித்தல்‌ வேண்டும்‌; 5-A என்னும்‌ புதிய பிரிவைப்‌ புகுத்துதல்‌. 8ஆம்‌ பிரிவிற்கான. 11-ஆம்‌ பிரிவிற்கான. 13-ஆம்‌ பிரிவிற்கான. திருத்தம்‌. 6 முதலாம்‌ வரம்புரை: ஆனால்‌, துணைவேந்தர்‌, வேந்தருக்கு முகவரியிட்டுத்‌ தமது கைப்பட எழுதுவதன்‌ வாயிலாகவும்‌, இரண்டு மாதகால அளவு அறிவிப்பு கொடுத்ததற்குப்‌ பின்னரும்‌, தமது பதவியை விட்டு விலகலாம்‌: இரண்டாம்‌ வரம்புரை: மேலும்‌, துணைவேந்தராக நியமிக்கப்பட்ட நபர்‌ ஒருவர்‌, அவருடைய பதவிக்‌ காலத்தின்‌ போது, அவர்‌ அறுபத்து ஐந்து வயதினை நிறைவெய்துவாராயின்‌, பதவியிலிருந்து ஒய்வு பெறுதல்‌ வேண்டும்‌. @ துணைவேந்தர்‌ பதவியில்‌, தற்காலிக காலியிடம்‌ எதுவும்‌ ஏற்படும்போது அல்லது துணைவேந்தர்‌, உடல்நலக்குறைவு காரணமாக, பணிக்கு வராமை அல்லது பிற காரணம்‌ எதனாலுமோ தமது பதவியின்‌ அதிகாரங்களைச்‌ செலுத்தி வரவும்‌, கடமைகளைப்‌ புரிந்து வரவும்‌ இயலாதிருக்கும்‌ போது, ஆட்சிக்‌ குழுவானது, துணைவேந்தரின்‌ அதிகாரங்களைச்‌ செலுத்தி வருவதற்கும்‌ கடமைகளைப்‌ புரிந்து வருவதற்கும்‌ தேவையான ஏற்பாடுகளைச்‌ செய்யும்‌ வரையில்‌, பல்கலைக்கழகத்தின்‌ மிக்க முதுநிலை பேராசிரியர்‌, துணைவேந்தரின்‌ அதிகாரங்களைச்‌ செலுத்தி வருதலும்‌, கடமைகளைப்‌ புரிந்து வருதலும்‌ வேண்டும்‌. @-A) துணைவேந்தர்‌, வேண்டுமென்றே தவறுகை செய்துள்ளார்‌ அல்லது இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளை நிறைவேற்றாமல்‌ வேண்டுமென்றே விட்டுவிடுகிறார்‌ அல்லது நிறைவேற்றுவதற்கு மறுக்கிறார்‌ அல்லது அவரிடம்‌ உற்றமைந்துள்ள அதிகாரங்களைத்‌ தவறாகப்‌ பயன்படுத்துகிறார்‌ என்ற காரணத்தின்‌ பேரில்‌, அரசால்‌, (4-8) எனும்‌ உட்பிரிவின்படி அதனால்‌ ஆணையிடப்பட்ட விசாரணையின்‌ அறிக்கையினைப்‌ பரிசீலனை செய்தபின்பு அரசினால்‌ வழங்கப்பட்ட ஆலோசனையின்‌ பேரில்‌ வேந்தரின்‌ ஆணை ஒன்றின்‌ மூலமாக அல்லாமல்‌ பதவியிலிருந்து அகற்றப்படுதல்‌ ஆகாது. (4-8) (4-௫ எனும்‌ உட்பிரிவின்படியான விசாரணை ஒன்றை நடத்தும்‌ நோக்கங்களுக்காக, அரசானது உயர்நீதிமன்றத்தின்‌ நீதிபதி ஒருவராக இருக்கிற அல்லது இருந்த நபர்‌ ஒருவரை அல்லது அரசு தலைமைச்‌ செயலாளர்‌ படிநிலைக்குக்‌ குறையாத, அரசின்‌ அலுவலராக இருக்கிற அல்லது இருந்த நபர்‌ ஒருவரை பதவி நியமனம்‌ செய்தல்‌ வேண்டும்‌. விசாரணை செய்யும்‌ அதிகார அமைப்பானது துணைவேந்தரால்‌. முறையீடு செய்து கொள்ளப்படுவதற்கு வாய்ப்பு ஒன்றை வழங்கிய பின்பு, விசாரணையை நடத்துதல்‌ வேண்டும்‌. மற்றும்‌ விதிக்கப்பட வேண்டிய பணத்தண்டம்‌ ஏதேனும்‌ இருப்பின்‌, அது உள்ளடங்கலாக, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையின்‌ பேரிலான அறிக்கை. ஒன்றை அரசுக்குப்‌ பணிந்தனுப்புதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அரசானது அறிக்கையினை பரிசீலனை செய்தபின்பு, வேந்தருக்கு ஆலோசனை வழங்குதல்‌ வேண்டும்‌. வேந்தர்‌, அத்தகைய ஆலோசனைக்கு இணங்கிய வகையில்‌ இயன்ற அளவுக்குக்‌ கூடிய விரைவில்‌, நேர்வு எதிலும்‌ மூன்று மாதங்களுக்குள்ளாக என்ற அளவில்‌ செயற்படுத்துதல்‌ வேண்டும்‌.” 9. முதன்மைச்‌ சட்டத்தின்‌ 13-ஆம்‌ பிரிவில்‌,- “() ஓத்தலைப்பில்‌ “இயக்குநர்கள்‌” என்னும்‌ சொல்லுக்குப்‌ பதிலாக “தலைவர்கள்‌” எனும்‌ சொல்‌ அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌; @ “இயக்குநர்‌” என்னும்‌ சொல்லுக்குப்‌ பதிலாக “ புலம்‌ ஒன்றின்‌ தலைவர்‌” எனும்‌ சொல்‌ அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌”. 10. முதன்மைச்‌ சட்டத்தின்‌ 15 ஆம்‌ பிரிவுக்கு பின்பு, பின்வரும்‌ பிரிவானது புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:-- “15-&. தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌.- () தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலரானவர்‌, பொறியியல்‌, தொழில்‌ நுட்பம்‌ மற்றும்‌ அதுதொடர்பான அறிவியல்கள்‌ துறையில்‌ கல்வியாளராகவும்‌, ஆட்சிக்குழுவினால்‌ நிர்ணயிக்கப்படலாகும்‌ வரையுரைகள்‌ மற்றும்‌ வரைக்கட்டுகளின்‌ பேரில்‌, ஆட்சிக்‌ குழுவினால்‌ பதவி நியமனம்‌ செய்யப்படும்‌ பல்கலைக்கழகத்தின்‌ முழுநேர அலுவலர்‌ ஒருவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. 7 @ தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, மூன்றாண்டுகளைக்‌ கொண்டதொரு கால அளவிற்குப்‌ பதவி வகிப்பார்‌ மற்றும்‌ மேலும்‌ மூன்றாண்டுகள்‌ கொண்டதொரு காலஅளவிற்கு மறுநியமனம்‌ செய்யப்படுவதற்குத்‌ தகுதியுடையவராவார்‌: வரம்புரை: ஆனால்‌, தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலராகப்‌ பதவி நியமனம்‌ செய்யப்பட்ட நபர்‌ எவரும்‌, வயது முதிர்வு ஒய்விற்கான வயதினை நிறைவெய்திய பின்பு பதவி வகித்தலாகாது. (௫) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, நிலை விதிகளில்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌, அத்தகைய அதிகாரங்களைச்‌ செலுத்துதலும்‌, அத்தகைய பணிகளைச்‌ செய்தலும்‌, கடமைகளை ஆற்றுதலும்‌ வேண்டும்‌. 11. முதன்மைச்‌ சட்டத்தின்‌ 17-ஆம்‌ பிரிவில்‌, (9-ஆம்‌ உட்பிரிவுக்குப்‌ பதிலாக, பின்வரும்‌ உட்பிரிவானது அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- “(ஐ ஆட்சிக்குழுவானது துணைவேந்தருக்கும்‌ கூடுதலாக, பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌, அதாவது:- வகை |-பதவி வழி உறுப்பினர்கள்‌. @ உயர்கல்வித்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (9) தொழில்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; (9 தகவல்‌ தொழில்‌ நுட்பத்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; @ சட்டத்‌ துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசுச்‌ செயலாளர்‌; மற்றும்‌ (6) தொழில்‌ நுட்பக்‌ கல்வி இயக்குநர்‌. வகை ॥11-பிற உறுப்பினர்கள்‌. (@) துணைவேந்தரின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌, புலங்களின்‌ தலைவர்களுக்கிடையேயிருந்து வேந்தரால்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌; (0) துணை வேந்தரின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌, அரசு பொறியியல்‌ கல்லூரிகளின்‌ பேராசியர்கள்‌ மற்றும்‌ துறைகளின்‌ தலைவர்களுக்கிடையேயிருந்து வேந்தரால்‌ நியமனம்‌: செய்யப்படும்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌; (9 தொழில்‌ துறை, பொது மற்றும்‌ தனியார்‌ துறைகளைச்‌ சார்பாற்றம்‌ செய்கின்ற அரசால்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌; (0) தொழில்‌, மற்றும்‌ வணிகத்தில்‌ சிறந்த தனியறிவும்‌ செயலுறு பட்டறிவும்‌ கொண்ட, ஆராய்ச்சி நிறுவனங்களைச்‌ சார்பாற்றம்‌ செய்கின்ற, அரசால்‌ நியமனம்‌: செய்யப்படும்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌; () இணைக்கப்பட்ட கல்லூரிகளின்‌ முதல்வர்களிலிருந்து, அரசால்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ உறுப்பினர்கள்‌ இருவர்‌; 0) (உதவி பெறும்‌ மற்றும்‌ சுயநிதியளிப்புச்‌ செய்யும்‌) இணைக்கப்பட்ட பொறியியல்‌ கல்லூரிகளின்‌ மேலாண்மையிலிருந்து, அரசால்‌ நியமனம்‌ செய்யப்படும்‌. உறுப்பினர்கள்‌ இருவர்‌; மற்றும்‌ (இ மாநிலத்தின்‌ சட்டமன்றப்‌ பேரவை உறுப்பினர்களால்‌. அவர்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்படும்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌.” 12. முதன்மைச்‌ சட்டத்தின்‌ 19ஆம்‌ பிரிவின்‌ (2)-ஆம்‌ உட்பிரிவின்‌ “முதன்மையர்‌” எனும்‌ சொல்லுக்குப்‌ பதிலாக “தலைவர்‌” எனும்‌ சொல்‌ அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌. 17-ஆம்‌ பிரிவிற்கான. 19-ஆம்‌ பிரிவிற்கான. 29-ஆம்‌. பிரிவிற்கான. திருத்தம்‌. 31-ஆம்‌ பிரிவிற்கான. திருத்தம்‌. '/0-எனும்‌ புதிய யத்தை புகுத்துதல்‌. 8 13. முதன்மைச்‌ சட்டத்தின்‌ 29 ஆம்‌ பிரிவில்‌,-- M 69 எனும்‌ கூறில்‌, பின்வரும்‌ சொற்றொடரானது அதன்‌ இறுதியில்‌ சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது :- “மற்றும்‌ இணைக்கப்பட்ட கல்லூரிகள்‌ அல்லது நிறுவனங்கள்‌;”; (2) (எனும்‌ கூறுக்குப்பின்பு, பின்வரும்‌ கூறுகள்‌ புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- “(வ பல்கலைக்கழகத்துடன்‌, கல்லூரிகளை இணைப்பதற்கான வரைக்கட்டுகள்‌; (xvi-b) எந்த முறையில்‌ மற்றும்‌ எந்த வரைக்கட்டுகளைப்‌ பொறுத்து, கல்லூரி ஒன்று தன்னாட்சிக்‌ கல்லூரி ஒன்றாக பெயர்‌ குறிக்கப்படலாம்‌ அல்லது அத்தகைய கல்லூரி பெயர்‌ குறிக்கப்பட்டது நீக்கம்‌ செய்யப்படலாம்‌ மற்றும்‌ கல்விசார்‌ செயற்பாடுகளின்‌. பேரிலான நிலைக்குழு, பணியாளர்‌ மன்றம்‌, பாடக்குழுக்கள்‌ மற்றும்‌ தேர்வுக்‌ குழுக்களின்‌ அமைப்பு அல்லது மறுஅமைப்பு, அதிகாரங்கள்‌ மற்றும்‌ கடமைகள்‌ உள்ளடங்கலாக, தன்னாட்சி கல்லூரிகளின்‌ நிர்வாகம்‌ தொடர்பான பொருட்பாடுகள்‌.”.. 14. முதன்மைச்‌ சட்டத்தின்‌ 31-ஆம்‌ பிரிவில்‌ ()ஆம்‌ உட்பிரிவில்‌ டு எனும்‌ கூறுக்குப்‌ பதிலாக பின்வரும்‌ கூறானது அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- “டு பல்கலைக்கழகத்திற்கு மற்றும்‌ அதனுடைய உறுப்பமைக்‌ கல்லூரிகளுக்கு மாணவர்களைச்‌ சேர்த்தல்‌ மற்றும்‌ இணைக்கப்பட்ட கல்லூரிகளில்‌ மாணவர்களின்‌: சேர்க்கையைக்‌ கண்காணித்தல்‌; 15. முதன்மைச்‌ சட்டத்தின்‌ 71ஆம்‌ அத்தியாயத்திற்குப்‌ பின்பு, பின்வரும்‌ அத்தியாயமானது புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- “அத்தியாயம்‌ VI குறித்த சில பல்கலைக்கழகச்‌ சட்டங்களை நீக்குதல்‌ மற்றும்‌ குறித்த சில கல்லூரிகளை மாற்றம்‌ செய்தல்‌. 33. () பல்கலைக்கழக சட்டங்களை நீக்கம்‌ செய்தல்‌.--இந்தப்‌ பிரிவில்‌ இதன்‌ பின்பு பல்கலைக்கழகச்‌ சட்டங்கள்‌ எனக்‌ குறிப்பிடப்படுவதான 2006 ஆம்‌ ஆண்டு திருச்சிராப்பள்ளி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ குமிழ்நாடு சட்டம்‌ 41/2006), 2006 ஆம்‌ ஆண்டு கோயம்புத்தூர்‌ அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 42/2006), 2007 ஆம்‌ ஆண்டு திருநெல்வேலி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 28/2007), 2010ஆம்‌ ஆண்டு சென்னை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ (குமிழ்நாடு சட்டம்‌ 26/2010), மற்றும்‌ 2010ஆம்‌ ஆண்டு மதுரை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 27/2010) ஆகிய சட்டங்கள்‌ இதன்‌: மூலம்‌ நீக்கம்‌ செய்யப்படுகின்றன. 2 அத்தகைய நீக்கமானது-- (6) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ நீட்டிக்கப்பட்டுள்ள பரப்பிடங்களைப்‌ பொறுத்து, பல்கலைக்கழகச்‌ சட்டங்களின்‌ முந்தைய செயற்பாட்டினைப்‌ பாதித்தலாகாது; (9) பல்கலைக்கழகச்‌ சட்டங்களுக்கு எதிராக புரியப்பட்ட குற்றச்செயல்‌ எதனையும்‌ பொறுத்து உள்ளான பணத்தண்டம்‌, தண்டஇழப்பு அல்லது தண்டனை எதனையும்‌ பாதித்தலாகாது; (6) அத்தகைய பணத்தண்டம்‌, தண்டஇழப்பு அல்லது தண்டனையைப்‌ பொறுத்து செய்யப்படும்‌ புலனாய்வு, சட்ட நடவடிக்கைகள்‌ அல்லது தீர்வழி, எதனையும்‌ 9 பாதித்தலாகாது; மற்றும்‌ அத்தகைய புலனாய்வு, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி எதுவும்‌ தொடங்கப்படலாம்‌, தொடரப்படலாம்‌ மற்றும்‌ நிறைவேற்றப்படலாம்‌ மற்றும்‌ அத்தகைய பணத்தண்டம்‌, தண்ட இழப்பு அல்லது தண்டனை எதுவும்‌ 2011-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகச்‌ சட்டங்கள்‌ (திருத்தம்‌ மற்றும்‌ நீக்கம்‌) சட்டம்‌ இயற்றப்படாதிருந்தாற்‌ போன்று விதிக்கப்படலாம்‌. @) 2011-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகச்‌ சட்டங்கள்‌ (திருத்தம்‌ மற்றும்‌ நீக்கம்‌) சட்டத்தின்‌ (இந்த அத்தியாயத்தில்‌ இதன்‌ பின்பு அறிவிக்கை செய்யப்பட்ட தேதி எனக்‌ குறிப்பிடப்படுவதான) தொடக்கத்‌ தேதியன்று இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட மற்றும்‌ நடைமுறையில்‌ இருக்கும்‌ நிலை விதிகள்‌, துணைமுறை விதிகள்‌ மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகள்‌ அனைத்தும்‌, பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்தில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. @ திருச்சிராப்பள்ளி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, திருநெல்வேலி, அண்ணா தொழில்நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, சென்னை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌. மதுரை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்பட்ட அல்லது ஒப்பேற்பளிக்கப்பட்ட அல்லது பேணி வரப்பட்ட பல்கலைக்கழக பரப்பிடத்தினுள்‌ உள்ள கல்லூரி அல்லது நிறுவனம்‌ ஒன்றில்‌, அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு அடுத்து முன்னர்‌ மாணவர்‌ ஒருவராக இருந்த அல்லது மேற்சொன்ன பல்கலைக்கழகங்களின்‌: பொறியியல்‌, தொழில்‌ நுட்பம்‌ மற்றும்‌ அது தொடர்பான அறிவியல்களுக்கான தேர்வுகள்‌ எவற்றையும்‌ எழுதுவதற்குத்‌ தகுதியுடையவராக இருந்த நபர்‌ ஒவ்வொருவரும்‌, அண்ணா பல்கலைக்கழகத்தில்‌ அவருடைய குறித்தகாலப்‌ படிப்புப்‌ பிரிவை முடிப்பதற்கு அனுமதிக்கப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அண்ணா பல்கலைக்கழகமானது அத்தகைய மாணவர்களுக்கு, அத்தகைய காலஅளவுக்கு மற்றும்‌ அண்ணா பல்கலைக்கழகத்தின்‌ குறித்தகாலப்‌ படிப்பு பிரிவிற்கிணங்க, அண்ணா பல்கலைக்கழகத்தினால்‌ தீர்மானிக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌, பயிற்றுவித்தல்‌, கற்பித்தல்‌ மற்றும்‌ பயிற்சிக்கான ஏற்பாடுகளைச்‌ செய்தல்‌ வேண்டும்‌, மற்றும்‌ அத்தகைய மாணவர்கள்‌, அத்தகைய காலஅளவின்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில்‌ நடைபெறும்‌ அல்லது அதனால்‌ நடத்தப்படும்‌ தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அண்ணா பல்கலைக்கழகத்தின்‌ நேரிணையான பட்டம்‌, பட்டயம்‌ அல்லது பிற கல்விச்‌ சிறப்புகளானவை, அத்தகைய தேர்வுகளின்‌ முடிவுகளின்‌ பேரில்‌ தகுதியுடைய மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தினால்‌ வழங்கப்படுதல்‌ வேண்டும்‌. (5) அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு அடுத்து முன்னர்‌ பல்கலைக்கழக பரப்பிடத்தினுள்‌ உள்ள,-- (@) திருச்சிராப்பள்ளி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, திருநெல்வேலி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, சென்னை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ மதுரை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகத்துடன்‌ தொடர்ந்து இணைக்கப்பட்டிருந்த அல்லது அங்கீகரிக்கப்பட்டிருந்த கல்லூரிகள்‌ அனைத்தும்‌. (0) திருச்சிராப்பள்ளி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, திருநெல்வேலி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, சென்னை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ மதுரை அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பட்டங்கள்‌, பட்டயங்கள்‌ அல்லது பிறகல்விச்‌ சிறப்புகளுக்கான தேர்வுக்கு ஏற்றுக்‌ கொள்வதற்கான குறித்தகாலப்‌ படிப்புப்‌ பிரிவை வழங்கும்‌ கல்லூரிகள்‌ அனைத்தும்‌ இந்தச்‌ சட்டத்தின்படி அண்ணா பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌, அதற்கிணங்கிய வகையில்‌ எந்த அளவிற்குக்‌ கூடுமோ, அந்த அளவிற்கு அவ்வாறே பொருந்துதல்‌ வேண்டும்‌. (6) திருச்சிராப்பள்ளி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, திருநெல்வேலி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, சென்னை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, மற்றும்‌ 10 மதுரை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ ஆகிய பல்கலைக்கழகங்களால்‌ தொடர்ந்து ஒப்பேற்பளிக்கப்பட்டு மற்றும்‌ விருதுகள்‌ மற்றும்‌ பட்டயங்களுக்காக மேற்சொன்ன பல்கலைக்கழகங்களின்‌ தேர்வுகளுக்கு ஏற்றுக்‌ கொள்வதற்கான குறித்தகாலப்‌ படிப்புப்‌ பாடப்பிரிவுகளை வழங்கும்‌, அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு அடுத்து முன்னர்‌ பல்கலைக்கழக பரப்பிடத்திற்குள்‌ உள்ள கல்லூரிகள்‌ அனைத்தும்‌, இந்தச்‌ சட்டத்தின்படி அண்ணா பல்கலைக்கழகத்தினால்‌ ஒப்பேற்பளிக்கப்பட்டுள்ளதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கிணங்கிய வகையில்‌ எந்த அளவுக்குக்‌ கூடுமோ அந்த அளவுக்கு அவ்வாறே பொருந்துதல்‌ வேண்டும்‌. (7) திருச்சிராப்பள்ளி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, கோயப்புத்தூர்‌, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, திருநெல்வேலி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, சென்னை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, மற்றும்‌ மதுரை, அண்ணா தொழில்நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ ஆகிய பல்கலைக்கழகங்களால்‌, அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு அடுத்து முன்னர்‌ தொடர்ந்து பேணி வரப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகப்‌ பரப்பிடத்தினுள்‌ உள்ள மாணவர்‌ விடுதிகள்‌ அனைத்தும்‌, இந்தச்‌ சட்டத்தின்படி அண்ணா பல்கலைக்கழத்தினால்‌ பேணிவரப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட மாணவர்‌ விடுதிகளாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. மற்றும்‌ அதற்கிணங்கிய வகையில்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌, எந்த அளவுக்குக்‌ கூடுமோ அந்த அளவுக்கு அவ்வாறே பொருந்துதல்‌ வேண்டும்‌. (இ அறிவிக்கை செய்யப்பட்ட தேதியன்றும்‌, அதுமுதற்கொண்டும்‌,-- (@ திருச்சிராப்பள்ளி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, திருநெல்வேலி, அண்ணா. தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, சென்னை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ மதுரை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ ஆகிய பல்கலைக்கழகங்களின்‌ உறுப்பமைக்‌ கல்லூரிகள்‌ அனைத்தும்‌ தொடர்புடைய பல்கலைக்கழகங்களின்‌ உறுப்பமைக்‌ கல்ஜூரிகளாக இருப்பது அற்றுப்போதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாற்றம்‌ செய்யப்படுவதோடு, அந்த பல்கலைக்கழகத்தின்‌ உறுப்பமைக்‌ கல்லூரிகளாக அதனால்‌ பேணி வரப்படுதலும்‌ வேண்டும்‌. (0) திருச்சிராப்பள்ளி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌, அண்ணா தொழில்நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, திருநெல்வேலி, அண்ணா: தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, சென்னை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ மதுரை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, மற்றும்‌ அவற்றின்‌ உறுப்பமைக்‌ கல்லூரிகளின்‌ சொத்துக்கள்‌, சொத்திருப்புகள்‌ மற்றும்‌ கடப்பாடுகள்‌: அனைத்தும்‌, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்படுதலும்‌, அதனிடம்‌ உற்றமைத்திருத்தலும்‌ வேண்டும்‌. © @ அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு அடுத்து முன்னர்‌, திருச்சிராப்பள்ளி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, கோயப்புத்தூர்‌, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, திருநெல்வேலி, அண்ணா தொழில்நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, சென்னை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ மதுரை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ அல்லது அந்தப்‌ பல்கலைக்‌ கழகங்களின்‌ உறுப்பமைக்‌ கல்லூரிகள்‌: எவற்றிலும்‌, பணியாற்றி வருகின்ற நபர்‌ ஒவ்வொருவரும்‌, அந்தப்‌ பல்கலைக்கழகங்களின்‌ அல்லது நேர்வுக்கேற்ப, உறுப்பமைக்‌ கல்லூரிகளின்‌ பணியாளர்களாக இருப்பதிலிருந்து அற்றுப்போதல்‌ வேண்டும்‌; (0) அரசானது அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்குப்பின்னர்‌ கூடியவிரைவில்‌, மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்களின்‌ துணைவேந்தர்களை மற்றும்‌ அது தக்கதெனக்‌ கருதுகிற அத்தகைய பிற அதிகார அமைப்புகளை கலந்தாலோசனை செய்த பின்பு, பொது அல்லது தனி ஆணையின்‌ வாயிலாக, (ஐ எனும்‌ கூறில்‌ சுட்டப்பட்டுள்ள பணியாளர்கள்‌, அத்தகைய ஆணையில்‌ குறித்துரைக்கப்பட்டவாறு, அத்தகைய ஆணையில்‌ குறித்துரைக்கப்படலாகும்‌ தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌ செயல்விளைவு கொள்ளும்‌ 11 வகையில்‌, பல்கலைக்கழகம்‌ ஒன்றின்‌ அல்லது கல்வி நிறுவனம்‌ ஒன்றின்‌ அல்லது அரசுத்துறை ஒன்றின்‌ அலுவல்கள்‌, தொடர்பாகப்‌ பணிபுரிவதற்கு ஒதுக்கீடு செய்யப்படுதல்‌ வேண்டும்‌ எனப்‌ பணிக்கலாம்‌. (00) (இ-ஆம்‌ உட்பிரிவின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, ஆனால்‌ (3) முதல்‌ (9) வரையிலான உட்பிரிவுகளின்‌ வகைமுறைகளுக்குக்‌ குந்தகமின்றி, இந்தச்‌ சட்டத்தின்‌. வகைமுறைகள்‌ பொருந்துகிற பரப்பிடம்‌ எதனையும்‌ பொறுத்து, பல்கலைக்கழகச்‌ சட்டங்களின்‌ வகைமுறைகள்‌ எதனின்படியும்‌, அறிவிக்கை செய்யப்பட்ட தேதிக்கு முன்னர்‌, செய்யப்பட்ட எதுவும்‌, அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ நேரிணையான வகைமுறைகளின்படி செய்யப்பட்டுள்ளதாக அல்லது எடுக்கப்பட்டுள்ளதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ நேரிணையான வகைமுறைகளின்படி செய்யப்பட்ட எதனாலும்‌ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனாலும்‌ கலைத்து கைக்கொள்ளப்பட்டிருந்தாலன்றி அல்லது கலைத்து கைக்கொள்ளப்படும்‌ வரையில்‌, அதற்கிணங்க தொடர்ந்து செயல்விளைவு கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. 34. வருங்கால வைப்பு நிதியம்‌ மற்றும்‌ அதேபோன்ற பிற நிதியங்களில்‌: சேர்ந்துள்ள தொகைகளை மாற்றம்‌ செய்தல்‌.-- () 38-ஆம்‌ பிரிவின்‌ ௫-ஆம்‌ உட்பிரிவின்‌ (9 எனும்‌ கூறின்படியான ஆணையில்‌ குறித்துரைக்கப்பட்ட தேதியன்று, 33-ஆம்‌ பிரிவின்‌ (9)-ஆம்‌ உட்பிரிவின்‌ (௦) எனும்‌ கூறில்‌ சுட்டப்பட்ட நபர்களின்‌ வருங்கால வைப்பு நிதியக்‌ கணக்கில்‌ வரவில்‌ உள்ள தொகைகள்‌, அத்தகைய நபர்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிற, நேர்வுக்கேற்ப பல்கலைக்கழகத்திற்கு அல்லது கல்வி நிறுவனத்திற்கு அல்லது அரசுத்துறைக்கு மாற்றம்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌, மற்றும்‌ மேற்சொன்ன வருங்கால வைப்பு நிதியங்கள்‌ பொறுத்த கடப்பாடு, அத்தகைய பல்கலைக்கழகத்தின்‌ அல்லது கல்வி நிறுவனத்தின்‌ அல்லது அரசுத்‌ துறையின்‌ கடப்பாடாக ஆதல்‌ வேண்டும்‌. (2) நேர்வுக்கேற்ப, திருச்சிராப்பள்ளி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, கோயப்புத்தூர்‌, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, திருநெல்வேலி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, சென்னை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ மதுரை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகத்தின்‌ வயதுமுதிர்வு ஒய்வூதிய நிதியம்‌ அல்லது அதுபோன்ற பிற நிதியங்கள்‌, எவையேனுமிருப்பின்‌, அவற்றில்‌, சேர்ந்துள்ள தொகையிலிருந்து 33-ஆம்‌ பிரிவின்‌ (9-ஆம்‌ உபட்பிரிவின்‌ (D) எனும்‌ கூறில்‌ சுட்டப்பட்டுள்ள நபர்கள்‌ சார்பாக, வயது முதிர்வு ஒய்வூதிய நிதியம்‌ அல்லது அதுபோன்ற நிதியங்கள்‌, எவையேனுமிருப்பின்‌, அவற்றில்‌ வரவு வைக்கப்பட்டுள்ள அத்தகைய தொகைகள்‌, (1-ஆம்‌ உட்பிரிவில்‌ சுட்டப்பட்டுள்ள பல்கலைக்கழகம்‌ அல்லது கல்வி நிறுவனம்‌ அல்லது அரசுத்‌ துறைக்குச்‌ செலுத்தப்படுதல்‌ வேண்டும்‌. அவ்வாறு செலுத்தப்பட்ட தொகைகள்‌, அதனுடைய பணியாளர்களின்‌ நலனுக்காக, நேர்வுக்கேற்ப, பல்கலைக்கழகத்தின்‌ அல்லது கல்வி நிறுவனத்தின்‌ அல்லது அரசுத்துறையின்‌ வயதுமுதிர்வு ஒய்வூதிய நிதியம்‌ அல்லது அதேபோன்ற பிற நிதியங்கள்‌, எவையேனுமிருப்பின்‌, அவற்றின்‌ பகுதியாக அமைத்தல்‌ வேண்டும்‌.” 16. முதன்மைச்‌ சட்டத்தின்‌ 1-ஆம்‌ இணைப்புப்‌ பட்டியலில்‌,- () 2) மற்றும்‌ 3௫-ஆம்‌ பிரிவுகளைப்‌ பார்க்கவும்‌” என்ற சொற்றொடருக்குப்‌ பதிலாக, “2(b) எனும்‌ பிரிவைப்‌ பார்க்கவும்‌” என்னும்‌ சொற்றொடரானது அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌; (2) இனம்‌ 1, இனம்‌ 1-& ஆக மறுஎண்ணிடப்படுதல்‌ வேண்டும்‌, அவ்வாறு மறுஎண்ணிடப்பட்ட 1--க்கு முன்பு பின்வரும்‌ இனமானது புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- |. பொறியியல்‌ கல்லூரி, கிண்டி, சென்னை.” அம்‌ இணைப்புப்‌ பட்டியலுக்கான. பட ஆம்‌ இணைப்புப்‌ பட்டியலுக்கான. திருத்தம்‌. 12 17. முதன்மைச்‌ சட்டத்தின்‌ ॥-ஆம்‌ இணைப்புப்‌ பட்டியலில்‌,- ) நிலை விதிகளில்‌, “முதன்மையர்கள்‌” மற்றும்‌ “முதன்மையர்‌” என்னும்‌ சொற்கள்‌ வருகின்ற இடங்களிலெல்லாம்‌ அதற்குப்‌ பதிலாக “தலைவர்கள்‌” மற்றும்‌. “தலைவர்‌” எனும்‌ சொற்கள்‌ அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌. @ 2-ஆம்‌ நிலை விதிக்குப்‌ பின்பு, பின்வரும்‌ நிலை விதியானது புகுத்தப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- “24, உறுப்பமைக்‌ கல்லூரிகளின்‌ முதன்மையர்கள்‌.- () முதன்மையர்‌ ஒவ்வொருவரும்‌, பல்கலைக்கழகத்தின்‌ பேராசிரியர்களிடையேயிருந்து துணைவேந்தரால்‌ மூன்றாண்டுகள்‌ கொண்டதொரு காலஅளவிற்கு நியமிக்கப்படுவார்‌' மற்றும்‌ அவர்‌ மறு நியமனத்திற்குத்‌ தகுதியுடையவர்‌ ஆவார்‌: வரம்புரை: ஆனால்‌, முதன்மையர்‌ ஒருவர்‌, வயதுமுதிர்வு ஒய்வு வயதினை எய்துவதன்‌. பேரில்‌, அவ்வாறு பதவி வகிப்பது அற்றுப்‌ போதல்‌ வேண்டும்‌. (2) முதன்மையர்‌ பதவி காலியாக இருக்கும்போது அல்லது முதன்மையரானவர்‌, உடல்‌ நலக்‌ குறைவு, பணிக்கு வராமை அல்லது பிறகாரணம்‌ எதனாலும்‌ அவருடைய பதவிக்‌ கடமைகளைப்‌ புரிவதற்கு இயலாதிருக்கும்‌ போது, அவருடைய பதவிக்கடமைகள்‌ இந்த நோக்கத்திற்காக துணைவேந்தர்‌ குறிக்கக்கூடிய அத்தகைய நபர்களால்‌ ஆற்றப்படுதல்‌ வேண்டும்‌. (69) முதன்மையர்‌, துணைமுறை விதிகளால்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய அதிகாரங்களையும்‌, செயற்பணிகளையும்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌.” (3) 9-ஆம்‌ நிலை விதியில்‌,- @ ௫-ஆம்‌ கூறுக்குப்‌ பதிலாக பின்வரும்‌ கூறுகள்‌ அமைக்கப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- “(1) கல்விமன்றமானது பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌, அதாவது:- வகை 1-பதவி வழி உறுப்பினர்கள்‌. (9) துணைவேந்தர்‌; (0) கல்விப்புலங்களின்‌ தலைவர்கள்‌; (9 பல்கலைக்கழக நூலகத்தின்‌ இயக்குநர்‌; A அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பொறியியல்‌ கல்லூரிகளின்‌ முதல்வர்கள்‌. வகை 1|-பிற உறுப்பினர்கள்‌. @ துணைவேந்தரின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ பல்கலைக்கழகப்‌ பேராசிரியர்களுக்கிடையேயிருந்து, வேந்தரால்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ எட்டு உறுப்பினர்கள்‌; (9) அரசின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ இணைக்கப்பட்ட கல்லூரிகளின்‌ முதல்வர்களுக்கிடையே இருந்து வேந்தரால்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ பதினைந்து உறுப்பினர்கள்‌; (9) அரசின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌, கல்வி, ஆராய்ச்சி மற்றும்‌ கல்வி நிருவாகம்‌, பொது மற்றும்‌ தொழில்‌ நுட்பம்‌ தொடர்பான பொருட்பாடுகளில்‌ செயல்‌ திறமை வாய்ந்தவர்களாக இருந்து வருகிற வேந்தரால்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ மூன்று கல்வியாளர்கள்‌; 13 @ அரசின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌, மாநில அரசுத்‌ துறைகள்‌, இருப்பூர்திகள்‌, இராணுவ பொறியியல்‌ பணிகள்‌, பாதுகாப்பு, அஞ்சல்‌ மற்றும்‌ தந்திகள்‌, தொலை பேசிகள்‌ மற்றும்‌ மாநிலத்திலுள்ள பிற தன்னாட்சி அமைப்புகள்‌ ஆகியவற்றின்‌ தலைமைப்‌ பொறியாளர்கள்‌ அல்லது பொது மேலாளர்களுக்கிடையேயிருந்து, வேந்தரால்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ மூன்று உறுப்பினர்கள்‌; (6) அரசின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌, தொழில்கள்‌ மற்றும்‌ ஆராய்ச்சி தொடர்பான பொருட்பாடுகளில்‌ செயல்திறமை வாய்ந்த தனியார்‌ தொழில்கள்‌ மற்றும்‌ ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து, வேந்தரால்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ மூன்று நபர்கள்‌; O அரசின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌, தொழில்கள்‌ மற்றும்‌ ஆராய்ச்சி தொடர்பான பொருட்பாட்டில்‌ செயல்‌ திறமைவாய்ந்த, மாநிலத்தில்‌ உள்ள மைய மற்றும்‌ மாநிலத்‌ துறைகளின்‌ பொதுத்‌ தொழில்‌ துறைகளுக்கிடையேயிருந்து வேந்தரால்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ மூன்று நபர்கள்‌; @ அரசின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌, தொழில்‌ சார்ந்த பொறியியல்‌ சங்கங்களிடமிருந்து அல்லது நிறுவனங்களிடமிருந்து அல்லது அமைப்புகளிடமிருந்து அல்லது சங்கங்களிடமிருந்து வேந்தரால்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ மூன்று நபர்கள்‌; () அரசின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌, மைய அரசு மற்றும்‌ மாநில அரசுகள்‌: ஆகிய இரண்டின்‌ சிறுதொழில்‌ நிறுவனங்களிலிருந்து அல்லது தொழில்‌ முனைவோர்‌ வளர்ச்சி வாரியத்திலிருந்து அல்லது தொழில்‌ பழகுநர்‌ வாரியத்திலிருந்து வேந்தரால்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ உயர்சிறப்பு வாய்ந்த மூன்று நபர்கள்‌; () துணை வேந்தரின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌, பின்வரும்‌ நிறுவனங்கள்‌ ஒவ்வொன்றின்‌ ஆசிரியர்களுக்கிடையேயிருந்து வேந்தரால்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ ஒரு நபர்‌; () இந்திய அறிவியல்‌ நிறுவனம்‌, பெங்களூரு; (i) இந்திய தொழில்‌ நுட்ப நிறுவனம்‌, சென்னை; (ii) இந்திய மேலாண்மை நிறுவனம்‌, பெங்களூரு ; மற்றும்‌ V) தேசிய தொழில்‌ நுட்ப நிறுவனம்‌, திருச்சிராப்பள்ளி; டு மேலே உள்ள இனங்கள்‌ எதிலும்‌ உள்ளடக்கப்படாத ஆட்சிக்‌ குழுவின்‌. உறுப்பினர்கள்‌: வரம்புரை: ஆனால்‌, பாடக்குழு ஒன்றின்‌ தலைவர்‌ எவரும்‌, அவருடைய சிறப்பு அறிவானது, கலந்துரையாடலுக்கான இனங்களுக்குத்‌ தொடர்புடையதாக இருக்கக்கூடியதாயின்‌, கூட்டம்‌ ஒன்றில்‌ கலந்து கொள்வதற்கு அழைக்கப்படலாம்‌.. 0-இ கல்விமன்றத்திற்கு, துணைவேந்தரானவர்‌ பதவிவழித்‌ தலைவராகவும்‌, பதிவாளரானவர்‌ பதவிவழிச்‌ செயலாளராகவும்‌ இருப்பர்‌,” 0) (9-ஆம்‌ கூறுக்குப்‌ பின்பு பின்வரும்‌ கூறானது சேர்க்கப்படுதல்‌ வேண்டும்‌, அதாவது:- “(7) வேந்தரானவர்‌, பதவிவழி உறுப்பினர்‌ ஒருவரல்லாத கல்வி மன்றத்தின்‌ உறுப்பினர்‌ எவரையும்‌, அவர்தம்‌ தரப்பினைக்‌ கேட்பதற்கான நியாயமான வாய்ப்பு ஒன்றைக்‌ கொடுத்த பின்பு, அத்தகைய உறுப்பினர்‌, வேந்தரின்‌. கருத்தில்‌, அவர்‌ தொடர்ந்து அத்தகைய உறுப்பினராக இருப்பது, பல்கலைக்கழகத்தின்‌ நலனுக்கு குந்தகம்‌ ஏற்படுத்தும்‌ வகையில்‌, உறுப்பினர்‌ ஒருவராகச்‌ செயலாற்றுவதற்குத்‌ தகுதிறமற்றவராக இருக்கிறார்‌ அல்லது உறுப்பினர்‌ ஒருவராக அவருடைய தகுதியைத்‌ தவறாகப்‌ பயன்படுத்தியுள்ளார்‌, என்று தோன்றுமாயின்‌, பதிவியிலிருந்து அகற்றலாம்‌,” இடர்பாடுகளை P அதிகாரம்‌. 14 18. (இந்தப்‌ பிரிவில்‌ இதன்‌ பின்பு பல்கலைக்கழகச்‌ சட்டங்கள்‌ எனப்படுவதான) 2006-ஆம்‌ ஆண்டு திருச்சிராப்பள்ளி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌, 2006-ஆம்‌ ஆண்டு கோயம்புத்தூர்‌, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌, 2007-ஆம்‌ ஆண்டு திருநெல்வேலி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌, 2010-ஆம்‌ ஆண்டு சென்னை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌, 2010-ஆம்‌ ஆண்டு மதுரை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகச்‌ சட்டம்‌ ஆகியவற்றில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌,- (@) பல்கலைக்கழகச்‌ சட்டங்களின்படி துணைவேந்தர்கள்‌, பதிவாளர்கள்‌, நிதி. அலுவலர்கள்‌, இயக்குநர்கள்‌, தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்கள்‌ மற்றும்‌ பிற புலங்களின்‌. அலுவலர்கள்‌ பதவி நியமனம்‌ செய்யப்பட்டு, 2011-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகச்‌ சட்டங்கள்‌ (திருத்தம்‌ மற்றும்‌ நீக்கம்‌) சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதிக்கு அடுத்து முன்னர்‌ அத்தகையவர்களாக பதவி வகித்துவருபவர்கள்‌, அத்தகைய தொடக்க தேதியன்றும்‌, அது முதற்கொண்டும்‌, அத்தகைய துணைவேந்தர்கள்‌, பதிவாளர்கள்‌, நிதி அலுவலர்கள்‌, இயக்குநர்கள்‌, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள்‌ அல்லது புலத்தின்‌. அலுவலர்கள்‌ பதவி வகிப்பது அற்றுப்‌ போதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ நேர்விற்கேற்ப துணைவேந்தர்கள்‌, பதிவாளர்கள்‌, நிதி அலுவலர்கள்‌, இயக்குநர்கள்‌, தேர்வுக்‌ கட்டுப்பாட்டு. அலுவலர்கள்‌ அல்லது புலத்தின்‌ அலுவலர்கள்‌ பதவிநியமனம்‌ செய்யப்படுவதற்கு அடுத்து முன்னர்‌ அவர்கள்‌ வகித்து வந்த பதவிக்கு, அந்த பதவியினை வகிப்பதற்கு அவர்கள்‌. பிறவாறாக தகுதியுடையவர்களாக இருப்பின்‌, திரும்ப அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌; (9) திருச்சிராப்பள்ளி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ திருநெல்வேலி, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ சென்னை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ மதுரை, அண்ணா தொழில்‌ நுட்பப்‌ பல்கலைக்கழகம்‌ ஆகிய பல்கலைக்கழங்களின்‌' அதிகார அமைப்புகளின்‌ உறுப்பினர்கள்‌, பல்கலைக்கழகச்‌ சட்டங்களின்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலோ அல்லது நியமனம்‌ செய்யப்பட்டிருந்தாலோ அல்லது பிறவாறாக அத்தகைய உறுப்பினர்களாக இருக்கிற, மற்றும்‌ 2011-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகச்‌ சட்டங்கள்‌ (திருத்தம்‌ மற்றும்‌ நீக்கம்‌) சட்டத்தின்‌ தொடக்க தேதிக்கு அடுத்து முன்னர்‌, அத்தகைய உறுப்பினராக பதவி வகித்து வரும்‌ ஒவ்வொருவரும்‌, அத்தகைய தொடக்க தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌ அதிகார அமைப்புகளின்‌: அத்தகைய உறுப்பினராக இருப்பது அற்றுப்போதல்‌ வேண்டும்‌. 19. இந்தச்‌ சட்டத்தினால்‌ திருத்தம்‌ செய்யப்பட்டவாறான முதன்மைச்‌ சட்டத்தில்‌ என்ன அடங்கியிருந்த போதிலும்‌, அண்ணா பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தரானவர்‌, 2011-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகச்‌ சட்டங்கள்‌ (திருத்தம்‌ மற்றும்‌ நீக்கம்‌) சட்டத்தின்‌ தொடக்க தேதிக்கு அடுத்து முன்னர்‌ அத்தகையவராக பதவி வகித்துவரும்‌, துணைவேந்தர்‌, அத்தகைய தொடக்க தேதியன்றும்‌ அது முதற்கொண்டும்‌ அத்தகைய துணைவேந்தராகப்‌ பதவி வகிப்பது அற்றுப்‌ போதல்‌ வேண்டும்‌. 20. இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு செயல்‌ விளைவு கொடுப்பதில்‌ இடர்ப்பாடு எதுவும்‌ எழுமாயின்‌, அரசானது தமிழ்நாடு அரசு அரசிதழில்‌ வெளியிடப்படும்‌ ஆணை ஒன்றின்‌ வாயிலாக, அத்தகைய இடர்ப்பாட்டினை அகற்றுவதற்குத்‌ தேவையானது. அல்லது உகந்தது என அதற்குத்‌ தோன்றுகிற இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அத்தகைய வகைமுறைகளைச்‌ செய்யலாம்‌; தமிழ்நாடு சட்டம்‌. 412006, சட்டம்‌ 42/2006. தமிழ்நாடு e 28/2007. தமிழ்நாடு. et 26/2010. தமிழ்நாடு. et 27/2010. 15 வரம்புரை: ஆனால்‌, அத்தகைய ஆணை எதுவும்‌, இந்தச்‌ சட்டமானது தமிழ்நாடு அரசு, அரசிதழில்‌ வெளியிடப்படும்‌ தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள்‌ கொண்டதொரு காலஅளவு முடிவுற்ற பின்பு செய்யப்படுதல்‌ ஆகாது.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts