Tamil Nadu · 2010 · Act 4
Tamil Nadu State Council for Technical Education Act, 2010
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
2010ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக்
கல்வி மன்றச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 472010)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
1௩௦ Tamil Nadu State Council for Technical Education
Act, 2010
(Tamil Nadu Act No. 4 of 2010)
(as on 31 October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
சென்னை
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
i
2010ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக்
பிரிவு
கல்வி மன்றச் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 4/2010)
பொருளடக்கம்
குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும் தொடக்கம்.
பொருள்வரையறைகள்.
மாநிலத் தொழில்நுட்பக் கல்வி மன்றத்தை
அமைத்தல்.
மன்றம் எவர் எவரைக் கொண்டிருக்கும் .
மன்றத்தின். உறுப்பினராக இருப்பதற்குத்
தகுதிக்கேடு.
துணைத்தலைவருக்கான மற்றும் பெயர் குறித்து
நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான மற்றும்.
இசைந்து தேர்வு செய்யப்பட்ட
உறுப்பினர்களுக்கான பணி வரையறைகளும்.
நிபந்தனைகளும்.
உறுப்பினர் செயலாளரின் பணி வரையறைகளும்.
நிபந்தனைகளும்.
மன்ற உறுப்பினரைப் பதவியிலிருந்து நீக்குதல்.
தற்செயல் காலியிடத்தை நிரப்புதல்.
மன்றத்தின் அதிகாரங்களும் பணிகளும்.
மன்றத்தின் கூட்டங்கள்.
மன்றத்தின் பணியாளர்கள்.
குறிப்பிட்ட நோக்கத்திற்காக மன்றத்துடன்
நபர்களைத் தற்காலிகமாக இணைத்துக்
கொள்ளுதல்.
27.
28.
i
மன்றத்தின் வரவு செலவுத் திட்டம்.
மன்றத்தின் நிதி.
பல்கலைக்கழகங்களுக்கும். கல்லூரிகளுக்கும்
மானிய உதவிகளை வழங்குதல்.
ஆண்டுக் கணக்குகளும் தணிக்கையும்.
ஆண்டறிக்கை.
பணிப்புரைகளைப் பிறப்பிப்பதற்கான அதிகாரம்.
ஆய்வு செய்தலும் விசாரணைச் செய்தலும்.
சீராய்வு.
குறைபாடுகளால்: மன்றத்தின். நடவடிக்கைகள்.
செல்லத்தகாதவையாக ஆக்கப்படுதல் கூடாது.
மன்றத்தின் உறுப்பினர்களும் பணியாளர்களும்.
பொது ஊழியர்களாக இருப்பர்.
நல்லெண்ணத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைக்குப்
பாதுகாப்பு.
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
ஒழுங்குவிதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
40/1992 எனும்: எண்ணிட்ட தமிழ்நாடு
சட்டத்திற்கான திருத்தங்கள்.
1
2010ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக்
கல்வி மன்றச் சட்டம்
தமிழ்நாடு சட்ட எண் 4/2010
[தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் பின்வரும் சட்டமானது,
2010ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 31ஆம் நாளன்று ஆளுநரின்
ஏற்பிசைவைப் பெற்று பொதுத் தகவலுக்காகத் தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்பட்டது.)
தமிழ்நாடு மாநிலத்தில் தொழில்நுட்பக் கல்விக்கான மாநில
மன்றம் ஒன்றை நிறுவுவதற்கும் அதனுடன்
தொடர்புடையவையும் அதன் இடைவிளைவாக
எழுகின்றவையுமான விவரங்களுக்கும் வகை:
செய்வதற்கான ஒரு சட்டம்.
1986ஆம் ஆண்டு தேசியக் கல்விக்
கொள்கையானது, மாநில அளவில் உயர்கல்விக்கு
திட்டமிடுவதையும் அதை ஒருங்கிணைப்பதையும் மாநில
உயர்கல்வி மன்றங்களின் மூலம் செய்தல் வேண்டும்
மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவும்
இம்மன்றங்களும் உயர்கல்விக்கான தரநிலைகளின் மீது
கண்காணிப்பினைச் செய்வதற்கு ஒருங்கிணைப்பு
முறைகளை மேம்படுத்துதல் வேண்டும் என்ற
பறிந்துரைகளைக் கொண்டுள்ளது என்பதாலும்;
மேற்சொன்ன தேசியக்கொள்கைக்கு இணங்க உயர்
கல்விக்கான மாநில மன்றங்களை அமைப்பது குறித்துப்
பறிந்துரைகளைச் செய்வதற்காக குழு ஒன்றை
பல்கலைக்கழக மானியக் குழுவானது
அமைத்துருவாக்கியிருப்பதாலும்;
மேற்சொன்ன குழுவானது, மாநில அளவில்
உயர்கல்வியை மேம்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்
பதற்கும் மாநில அளவிலான திட்டங்களைப்
பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டங்களுடன்
ஒருங்கிணைப்பதற்கும் திறன் வாய்ந்த அமைப்பு ஒன்றை
2
ஏற்படுத்துவது இன்றியமையாத ஒரு தேவையாக
இருக்கிறது என்று பரிந்துரை செய்துள்ளதாலும்;
மேற்சொன்ன குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட
உயர்கல்விக்கான மாநில மன்றங்களை அமைப்பதற்கான
வழிகாட்டு நெறிமுறைகளைப் பல்கலைக்கழக மானியக்
குழுவானது வகுத்துள்ளதாலும்;
மாநில அரசானது, 1992ஆம் ஆண்டு தமிழ்நாடு
மாநில உயர்கல்வி மன்றச் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம்
40/1992) இயற்றியதன் மூலம் தமிழ்நாடு மாநில
உயர்கல்வி மன்றத்தை அமைத்துள்ளதாலும்;
தமிழ்நாடு மாநிலத்தில் தொழில்நுட்பக் கல்வி
நிறுவனங்கள். அதிகமான எண்ணிக்கையில்
அமைக்கப்பட்டுள்ளதாலும் மற்றும் பல தொழில்நுட்பப்
பல்கலைக்கழகங்களும் அமைத்துருவாக்கப்
பட்டுள்ளதாலும்;
மாநில அரசானது இம்மாநிலத்தில் தொழில்நுட்பக்
கல்வி தொடர்பான விவரங்களில் அரசுக்கு ஆலோசனை
வழங்குவதற்கும் அதன் வளர்ச்சியைத் தொலைநோக்குத்
திட்டத்துடன் மேற்பார்வையிடுவதற்கும் தொழில்நுட்பக்
கல்விக்கான தனி மன்றம் ஒன்றை அமைப்பதென முடிவு
செய்துள்ளதாலும்,
இந்தியக் குடியரசின் அறுபதாம் ஆண்டில் தமிழ்நாடு
மாநிலச் சட்டமன்றப் பேரவையால் இயற்றப்பட்ட சட்டம்
பின்வருமாறு:-
1. குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும் தொடக்கம்.-
(1) இந்தச் சட்டம், 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு
மாநிலத் தொழில்நுட்பக் கல்வி மன்றச் சட்டம் என
வழங்கப்படும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் பரவி
நிற்கும்.
3
(3) இது, அரசு அறிவிக்கையின் வாயிலாகக்
குறிக்கக்கூடிய தேதியில் நடைமுறைக்கு வருதல்
வேண்டும்.
2. பொருள்வரையறைகள்.- இந்தச் சட்டத்தில்,
தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-
(@) "அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி
மன்றம்" என்பது, 1987ஆம் ஆண்டு அகில இந்தியத்
தொழில்நுட்பக் கல்வி மன்றச் சட்டத்தின் (மையச் சட்டம்
52/1987) பிரிவு 3இன்படி அமைக்கப்பட்ட அகில இந்தியத்
தொழில்நுட்பக் கல்வி மன்றம் எனப் பொருள்படும்;
(b) "கல்லூரி" என்பது, தொழில்நுட்பப்
பல்கலைக்கழகத்தால் அமைக்கப்படும் அல்லது
பேணிவரப்படும் அல்லது அதனால் ஒப்புதல் அளிக்கப்பட்ட
அல்லது அத்துடன் இணைக்கப்பட்டுள்ள அல்லது
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் ஒப்புதல்
அளிக்கப்பட்டுள்ள பட்டங்கள், பட்டயங்கள் அல்லது
நிகழ்விற்கேற்ப பிற கல்விச் சிறப்புகளுக்கான
தேர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான பொறியியல்,
தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்பான அறிவியல்கள்,
மேலாண்மை அல்லது உணவாக்கத் தொழில்நுட்பத்தில்
குறித்தகாலப் படிப்புப்பிரிவு அல்லது பயிற்சி எதற்கும்
வகை டசய்கின்ற கல்லூரி அல்லது நிறுவனம் எனப்
பொருள்படும்;
(9) "மன்றம்" என்பது, பிரிவு 3இன்படி
அமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக் கல்வி
மன்றம் எனப் பொருள்படும்;
(0) "பட்டம்" என்பது, தொழில்நுட்பப்
பல்கலைக்கழகம் ஒன்றினால் பொறியியல், தொழில்நுட்பம்
மற்றும் அது தொடர்பான அறிவியல்கள், மேலாண்மை
அல்லது உணவுத் தொழில்நுட்பத்தில் குறித்தகாலப்
4
படிப்புப்பிரிவு எதற்கும் வழங்கப்படும் பட்டம் எனப்
பொருள்படும்;
(6) "பட்டயம்" என்பது, இடைநிலைப்பள்ளி
நிறைவுச் சான்றிதழ் படிப்பிற்குப் பிண்ணர், பொறியியல்,
தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்பான அறிவியல்கள்,
மேலாண்மை அல்லது உணவுத் தொழில்நுட்பத்தில்
குறித்தகாலப் படிப்புப்பிரிவு எதற்கும் வழங்கப்படும் பட்டயம்
எனப் பொருள்படும்; ஆனால் அது சான்றிதழ் ஒன்றை
உள்ளடக்காது;
(9) "அரசு" என்பது, மாநில அரசு எனப்
பொருள்படும்;
@) "உறுப்பினர்" என்பது, இம்மன்றத்தின் ஜர்
உறுப்பினர் எனப் பொருள்படுவதோடு அது தலைவரையும்,
துணைத்தலைவரையும், உறுப்பினர் செயலாளரையும்,
இசைந்து சேர்த்துக்கொள்ளப்பட்ட உறுப்பினரையும்
உள்ளடக்கும்;
(h) "தனியார் கல்லூரி” என்பது, பதிவு
செய்யப்பட்டதாக இருந்தாலும், இல்லை என்றாலும், நபர்
எவராலுமோ அல்லது நபர்களின் கூட்டமைப்பு
எதனாலுமோ அமைக்கப்படும் மற்றும் நிர்வகிக்கப்படும்
அல்லது பேணிவரப்படும் கல்லூழி ஒன்று எனப்
பொருள்படும் ஆனால் மைய அரசினாலோ அல்லது
அரசினாலோ அல்லது சட்டப்படி அமைக்கப்பட்ட
தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் எதனாலுமோ
அமைக்கப்படும் மற்றும் நிர்வகிக்கப்படும் அல்லது
பேணிவரப்படும் கல்லூரி ஒன்றை உள்ளடக்காது;
) "ஒழுங்குவிதிகள்" என்பது, இந்தச்
சட்டத்தின்படி இம்மன்றத்தால் செய்யப்பட்ட
ஒழுங்குவிதிகள் எனப் பொருள்படும்;
5
() "தொழில்நுட்பக் கல்வி" என்பது,
பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்பான
அறிவியல்கள், மேலாண்மை அல்லது உணவுத்
தொழில்நுட்பத்தில் குறித்தகாலப் படிப்புப்பிரிவு எதுவும்
எனப் பொருள்படும்;
(k) "தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்" என்பது,
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி
அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் அண்ணா
பல்கலைக்கழகம், திருநெல்வேலி அண்ணா
பல்கலைக்கழகம் அல்லது பொறியியல், தொழில்நுட்பம்
மற்றும் அது தொடர்பான அறிவியல்கள், மேலாண்மை
அல்லது உணவுத் தொழில்நுட்பத்தில் பட்டங்கள்,
பட்டயங்கள்: மற்றும் பிற கல்விச்சிறப்புகளை
வழங்குவதற்கும் தேர்வுகளை நடத்துவதற்கும் தமிழ்நாடு
மாநிலச் சட்டப்பேரவையால் செய்யப்பட்ட சட்டம்
எதனின்படியும் இம்மாநிலத்தில் அமைக்கப்படக்கூடிய
அத்தகைய பிற பல்கலைக்கழகம் எனப் பொருள்படும்;
0) "பல்கலைக்கழக மானியக் குழு" என்பது,
1956ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுச்
சட்டத்தின் (மையச் சட்டம் 374956) பிரிவு 4இன்படி
அமைக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு எனப்
பொருள்படும்;
3. மாநிலத் தொழில்நுட்பக் கல்வி மன்றத்தை
அமைத்தல்.- (1) "தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக்
கல்வி மன்றம் என்ற பெயரில் மன்றம் ஒன்று
அமைக்கப்படுதல் வேண்டும்.
(2) இம்மன்றமானது தொடர் வழியுழிமை
பெற்றதாகவும் தணி இலச்சினை உடையதாகவும் உள்ள
ஒரு கூட்டமைப்பாக இருத்தல் வேண்டும் என்பதோடு
மேற்சொன்ன பெயரில் வழக்கிடுவதாகவும்
வழக்கிடப்படுவதாகவும் இருத்தல் வேண்டும்.
6
(3) இம்மன்றத்தின் தலைமையகம் சென்னையில்
அமைந்திருத்தல் வேண்டும்.
4. மன்றம் எவர் எவரைக் கொண்டிருக்கும்.-
இம்மன்றமானது பின்வரும் உறுப்பினர்களைக்
கொண்டதாய் இருத்தல் வேண்டும், அதாவது:-
(8) தொழில்நுட்பக் கல்வியைப் பொறுப்பில்
கொண்டுள்ள அமைச்சர், இம்மன்றத்தின் பதவி வழித்
தலைவராக இருப்பார்;
)கம்மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்களின்
துணைவேந்தர்களாய் இருந்திருக்கிற மற்றும்
தொழில்நுட்பக் கல்வித் துறையில் அனுபவ அறிவு
கொண்டிருக்கிற மற்றும் எழுபது வயது நிறைவடைந்திராத
நபர்களுக்கிடையேயிருந்து அரசினால் துணைத்தலைவர்
நியமிக்கப்படுதல் வேண்டும்;
(9) உயர்கல்வித் துறையைப் பொறுப்பில்
கொண்டுள்ள அரசு செயலாளர், பதவி வழி;
(0) நிதித் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள
அரசு செயலாளர், பதவி வழி;
(6) தொழில் துறையைப் பொறுப்பில்
கொண்டுள்ள அரசு செயலாளர், பதவி வழி;
(9) பல்கலைக்கழக மானியக் குழுவின்.
செயலாளர் அல்லது அவரால் பெயர் குறித்து
நியமிக்கப்படுபவர், பதவி வழி;
Q) அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி
மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் அல்லது அவரால்
பெயர் குறித்து நியமிக்கப்படுபவர், பதவி வழி;
(h) தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அல்லது
இயக்குநர், பதவி வழி;
7
0) தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களின்.
துணைவேந்தர்களுக்கு இடையேயிருந்து அரசினால்
பெயர் குறித்து நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள்;
(i) கல்லூரிகளின் முதல்வர்கள். மற்றும்
இயக்குநர்களுக்கு இடையேயிருந்து அரசினால்
நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள்; அவர்களில்
ஒருவர், அரசினால் அமைக்கப்பட்டு மற்றும்
நிருவகிக்கப்பட்டு அல்லது பேணிவரப்படும் கல்லூரி
ஒன்றிலிருந்தும். மற்றொருவர் தனியார் கல்லூரி
ஒன்றிலிருந்தும் நியமிக்கப்படுதல் வேண்டும்;
(k) பட்டயம் ஒன்று வழங்கப்படுகிற
குறித்தகாலப் படிப்புப்பிரிவு எதனையும் வழங்குகிற
கல்லூரிகளின் முதல்வர்களுக்கிடையே இருந்து
அரசினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் இரண்டு
உறுப்பினர்கள்; அவர்களில் ஒருவர் அரசினால்
அமைக்கப்பட்டு மற்றும் நிருவகிக்கப்பட்டு அல்லது
பேணிவரப்படும் கல்லூரி ஒன்றிலிருந்தும் மற்றொருவர்
தனியார் கல்லூரி ஒன்றிலிருந்தும் நியமிக்கப்படுதல்
வேண்டும்;
0) மேலாண்மையில் குறித்தகாலப் படிப்புப்
பிரிவுகளை வழங்குகிற கல்லூரிகளின் முதல்வர்கள்:
மற்றும் இயக்குநர்களுக்கு இடையேயிருந்து அரசினால்
பெயர் குறித்து நியமிக்கப்படும் உறுப்பினர் ஒருவர்;
(m) தொழில்நுட்பக் கல்வித் துறையில்
புகழ்வாய்ந்த கல்வியாளர்களுக்கு இடையேயிருந்து
அல்லது கல்வித் துறை நிருவாகிகளுக்கு
இடையேயிருந்து அரசினால் பெயர் குறித்து
நியமிக்கப்படும் உறுப்பினர் ஒருவர்;
(ஙு தொழில்நுட்பக் கல்வித் துறையிலிருந்து
புகழ்வாய்ந்த அறிவியலாளர்கள் அல்லது
8
பொறியாளர்களுக்கு இடையேயிருந்து அரசினால் பெயர்
குறித்து நியமிக்கப்படும் உறுப்பினர் ஒருவர்;
(0) தொழில்நுட்பக் கல்விக்காக தொண்டாற்றி,
பங்காற்றியுள்ள புகழ் பெற்ற நதொழிலதிபர்களுக்கு
இடையேயிருந்து அரசினால் பெயர்குறித்து நியமிக்கப்படும்
உறுப்பினர் ஒருவர்;
(2) மன்றத்தினால் இசைந்து சேர்த்துக்
கொள்ளப்படும் மூவருக்கு மேற்படாத தொழில் நுட்பக்
கல்வித் துறையில் புகழ் பெற்ற கல்வியாளர்கள்; மற்றும்
@ தொழில்நுட்பக் கல்வித் துறையில் அனுபவ
அறிவு கொண்டுள்ள பல்கலைக்கழகப் பேராசிரியர்
படிநிலைக்குக்கீழ் அல்லாத படிநிலையில் உள்ள
அரசினால் நியமிக்கப்படும் முழு நேர உறுப்பினர்
செயலாளர் ஒருவர்.
5. மன்றத்தின் உறுப்பினராக இருப்பதற்குத்
தகுதிக்கேடு.- நபர் ஒருவர்,
(a) மனச்சீர்கேடுற்றவராக இருப்பாரானால்;
(b) நொடித்தநிலையராக நீதிமுறையில்
தீர்மானிக்கப்படுவதற்கான விண்ணப்பதாரராகவோ அல்லது
விடுவிக்கப்படாததொரு நொடித்த நிலையராகவோ
இருப்பாரானால்;
(௦9) சட்டம் எதன்படியேனும் சிறைத்தண்டனை
விதித்துத் தண்டிக்கப்படத்தக்கதான ஒழுக்கக்கேடு
உள்ளிட்ட குற்றச்செயல் எதற்காகவேனும் அவருக்குத்
தண்டனை விதிக்கப்பட்டிருந்து, அத்தகைய தண்டனை
நீக்கப்பபாமலும் அந்தத் தண்டனை முடிவடைந்தத்
தேதியிலிருந்து ஐந்தாண்டு காலஅளவு முடிவடையாமலும்
இருக்குமானால்;
(0) மன்றத்தின்: ஊதியம் பெறும்
அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ
இருப்பாரானால்; அல்லது
(6) அரசினால் குறிப்பிடப்படும். பிற
தகுதிக்கேடுகளுக்கு உள்ளானவராக இருப்பாரானால்,
மன்றத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்படுவதற்கோ
உறுப்பினராகப் பெயர்குறித்து நியமிக்கப்படுவதற்கோ
அல்லது இசைந்து தேர்வு செய்யப்படுவதற்கோ அல்லது
அத்தகைய துணைத் தலைவராக அல்லது பெயர்குறித்து
நியமிக்கப்பட்ட அல்லது இசைந்து தேர்வு செய்யப்பட்ட
உறுப்பினராக இருப்பதற்கோ தகுதிக்கேடு உடையவராவார்.
6. துணைத்தலைவருக்கான மற்றும் பெயர் குறித்து
நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான மற்றும் இசைந்து
தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான பணி
வரையறைகளும் நிபந்தனைகளும்.-- (1) துணைத்
தலைவர், பெயர்குறித்து நியமிக்கப்பட்ட மற்றும் இசைந்து
தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மூன்றாண்டுக்
காலத்திற்குப் பதவி வகித்தல் வேண்டும்; மற்றும் மேலும்
ஒரு மூன்றாண்டுக் காலத்திற்கு நீண்டும்
நியமிக்கப்படுவதற்கு அல்லது மீண்டும் பெயர் குறித்து
நியமனம் செய்யப்படுவதற்கு அல்லது இசைந்து தேர்வு
செய்யப்படுவதற்குத் தகுதியுடையவர் ஆவார்:
வரம்புரை: இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக,
தற்செயல் காலியிடம் ஒன்றில் ஓர் ஆண்டிற்குக்
குறையாத காலஅளவிற்கு துணைத்தலைவராக அல்லது
பெயர் குறித்து நியமிக்கப்பட்டவராக அல்லது இசைந்து
தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவராக, அப்பதவியின்:
முழுமையான காலஅளவிற்கு பதவி
வகித்துள்ளவர்களாகக் கருதப்படுதல் வேண்டும்.
(2) துணைத்தலைவர் அல்லது பெயர்குறித்து
நியமிக்கப்பட்ட அல்லது இசைந்து தேர்வு செய்யப்பட்ட
10
உறுப்பினர், தன் கைப்பட எழுத்து வாயிலாக அரசுக்கு
அல்லது நிகழ்விற்கேற்ப மன்றத்திற்கு முகவரியிட்டுத்
தெரிவிப்பதன் வாயிலாகத் தனது பதவியிலிருந்து
விலகலாம்; ஆனால் அவரது பதவி விலகலானது
அரசினால் அல்லது நிகழ்விற்கேற்ப மன்றத்தினால்
ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் அவர் பதவியில்
தொடர்ந்து இருந்து வருதல் வேண்டும்.
(3) இந்தப் பிரிவின் வகைமுறைகளுக்குட்பட்டு,
துணைத்தலைவரின் மற்றும் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட
அல்லது இசைந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின்
பணிவரையறைகளும் நிபந்தனைகளும் வகுத்துரைக்கப்
படும் விதத்தில் இருத்தல் வேண்டும்.
(4) துணைத்தலைவர், குறிப்பிடப்படும் விதத்தில்
அதிகாரங்களைச் செலுத்துதலும், அலுவல்களை
ஆற்றுதலும் வேண்டும்.
7. உறுப்பினர் செயலாளரின் பணி வரையறைகளும்
நிபந்தனைகளும்.- [6] உறுப்பினர் செயலாளரின்
பதவிக்கான பணிவரையறைகளும் நிபந்தனைகளும்
குறிப்பிடப்படும் விதத்தில் இருத்தல் வேண்டும்.
(2) உறுப்பினர் செயலாளர், இந்தச் சட்டத்தின்படி
வழங்கப்பட்ட அதிகாரங்களையும் விதிக்கப்பட்ட
அலுவல்களையும் மற்றும் குறிப்பிடப்படும். பிற
அதிகாரங்களையும் அலுவல்களையும் செலுத்தி வருதலும்
புரிந்து வருதலும் வேண்டும்.
8. மன்ற உறுப்பினரைப் பதவியிலிருந்து நீக்குதல்.-
துணைத்தலைவர் அல்லது பெயர்குறித்து நியமிக்கப்பட்ட
அல்லது இசைந்து தேர்வு செய்யப்பட்ட ஒருவர், தம்மைப்
பதவியிலிருந்து நீக்குவதற்குத் தகுந்த அளவிற்குத்
தன்னுடைய பதவிக்குத் தான் பொருத்தமற்றவர் என்று
வெளிப்படுத்திக் கொள்கின்றார் என்றோ, தவறான
நடத்தை அல்லது அசட்டைக் குற்றம் எதையேனும் புரிந்த
11
குற்றவாளியாக இருக்கின்றார் என்றோ, அரசுக்கு எந்தச்
சமயத்திலாவது தோன்றுமானால், அரசு, நிகழ்விற்கேற்ப
துணைத்தலைவர் அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்ட
அல்லது இசைந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினருக்குக்
காரணம் காட்டக் கோருகின்ற நியாயமான வாய்ப்பு
ஒன்றினைக் கொடுத்த பின்பு, அறிவிக்கையின் வாயிலாக,
நிகழ்விற்கேற்ப துணைத்தலைவர் அல்லது பெயர்குறித்து
நியமிக்கப்பட்ட அல்லது இசைந்து தேர்வு செய்யப்பட்ட
உறுப்பினரைப் பதவியிலிருந்து நீக்கலாம்.
9. தற்செயல் காலியிடத்தை நிரப்புதல்.-- மரணம்,
பதவி விலகல், பதவி நீக்கம் என்கின்ற காரணத்தாலோ
அல்லது மற்றபடியோ, துணைத்தலைவர் அல்லது
பெயர்குறித்து நியமிக்கப்பட்ட அல்லது இசைந்து தேர்வு
செய்யப்பட்ட உறுப்பினரின் பதவியில் தற்செயல்
காலியிடம் ஒன்று ஏற்படுமானால், அத்தகைய
காலியிடமானது, கூடியவிரைவில் அரசினால் அல்லது
நிகழ்விற்கேற்ப மன்றத்தினால் நிரப்பப்படுதல் வேண்டும்;
மற்றும் அத்தகைய துணைத்தலைவர் அல்லது பெயர்
குறித்து நியமிக்கப்பட்ட அல்லது இசைந்து தேர்வு
செய்யப்பட்ட உறுப்பினர், எவருடைய இடத்தை அவர்
நிரப்புகிறாறோ, அவர் எஞ்சிய எவ்வளவு காலத்திற்கு
நிகழ்விற்கேற்ப துணைத்தலைவர் அல்லது பெயர்குறித்து
நியமிக்கப்பட்ட அல்லது இசைந்து தேர்வு செய்யப்பட்ட
உறுப்பினராக இருந்திருப்பாரோ அவ்வளவு காலத்திற்கு
மட்டுமே பதவி வகிப்பார்.
10. மன்றத்தின் அதிகாரங்களும் பணிகளும்.- (1)
கல்லூரிகளில் தரநிலைகளை ஒருங்கிணைத்துத்
தீர்மானிப்பதும் தொழில்நுட்பக் கல்வியில் அறிவியல்
ஆராய்ச்சிகளை ஒருங்கிணைப்பதும் மன்றத்தின்
பணிகளாக இருக்கும்.
12
(2) 1956ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்
குழுச் சட்டத்தின் (மையச் சட்டம் 31956) மற்றும்
1987ஆம் ஆண்டு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி
மன்றச் சட்டத்தின் (மையச் சட்டம் 52/1987)
வகைமுறைகளுக்கு உட்பட்டு, மன்றமானது,-
(8) மாநிலத்தின் தொழில்நுட்பக் கல்விக்கான
ஒட்டுமொத்தமான முன்னுரிமை அடிப்படையிலான
தேவைகளையும் தொலைநோக்கு வாய்ப்புகளையும்
பல்கலைக்கழக மானியக் குழுவாலும் அகில இந்திய
தொழில்நுட்பக் கல்வி மன்றத்தாலும் அவ்வப்போது
பிறப்பிக்கப்படக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு
இணங்கிய வகையில், இம்மாநிலத்தின் தொழில்நுட்பக்
கல்வித்துறையின் ஒருங்கிணைந்த செயல்திட்டங்களைத்
தயாரித்தலும் அவற்றை நிறைவேற்றுவதில் உதவுதலும்
வேண்டும்;
(b) கல்வித்தரங்களை முடிவு செய்வதையும்
பேணிவருவதையும் பொறுத்து, பல்கலைக்கழக மானியக்
குழுவிற்கும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி
மன்றத்திற்கும் உதவுதலும் மற்றும் தேவைப்படும்
போதெல்லாம் தீர்வு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு
யோசனை கூறுதலும் வேண்டும்;
(9). மாநிலத்தில் தொழில்நுட்பக் கல்வி
வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டங்களை
உருவாக்குதல் வேண்டும்;
(0) தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களின்
மற்றும் கல்லூரிகளின் வளர்ச்சி செயல் திட்டங்களை தன்
கருத்துரைகளுடனும் மற்றும் பரிந்துரைகளுடனும் சேர்த்து
பல்கலைக்கழக மானியக் குழுவிற்கும் அகில இந்தியத்
தொழில்நுட்பக் கல்வி மன்றத்திற்கும் அனுப்பி வைத்தல்
வேண்டும்;
13
(6) அத்தகைய வளர்ச்சி செயல் திட்டங்களை
நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக்
கண்காணித்து வருதல் வேண்டும்;
N கல்லூரிகளுக்கிடையே ஒத்துழைப்பையும்
ஒருங்கிணைப்பையும் வளர்த்தலும் தொழிற்பிரிவு மற்றும்
தொடர்புடைய பிற அமைப்புகளுக்கிடையே
ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுவதற்கான
வாய்ப்பினைக் கண்டறிதலும் வேண்டும்;
(ஓ அரசினாலும் பல்கலைக்கழக மானியக்
குழுவினாலும் அகில இந்தியத் தொழில் நுட்பக் கல்வி
மன்றத்தாலும் பிறப்பிக்கப்படும் வழிகாட்டு
நெறிமுறைகளுக்கு இணங்க புதிய கல்லூரிகளைத்
தொடங்குவதற்கான கொள்கை நெறிகளை
உருவாக்குதல் வேண்டும்;
(h) மாநிலத்தின் தொழில்நுட்பக் கல்விக்கான
கூடுதல் வளவசதிகளைப் பெருக்குவதற்கான
வழிவகைகளுக்கு யோசனை கூறுதல் வேண்டும்;
0) தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில்
குறித்தகால படிப்புப் பிரிவுகளைப் புனரமைத்து
பாடத்திட்டங்களை நவினப்படுத்தி கல்விசார் வளர்ச்சியில்
புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வளர்த்து வருதல்
வேண்டும்;
0) தண்ணாட்சி பெற்ற கல்லூரிகளின் செயல்
திட்டங்களை வளர்த்தலும் ஒருங்கிணைத்தலும் மற்றும்.
அது நிறைவேற்றப்படுதலைக் கண்காணித்து வருதலும்
வேண்டும்;
(k) தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களால்
நடத்தப்படும் தேர்வுகளின் தரங்களை
மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வகுத்தலும்
14
தேவையான சீர்திருத்தங்களுக்கு யோசனை கூறுதலும்
வேண்டும்;
0) தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களிலும்
கல்லூரிகளிலும் உள்ள ஆசிரியர்கள் பயிற்சிப் பெறுவதற்கு
வழிசெய்தலும் ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் மூலமாக
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் செயற்பட்டு வருதலைக்
கண்காணித்து வருதலும் மற்றும் தரமான பாடப்புத்தகங்கள்,
தனி வரைவு நூல்கள், பார்வைக் குறிப்பு நூல்கள்
ஆகியவை வெளியிடப்படுவதை ஊக்குவித்து வளர்த்தலும்
வேண்டும்;
(m) தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள்
மற்றும் கல்லூரிகளில் உள்ள புலங்களுக்கிடையே
பயனுள்ள வகையிலான கல்விப்பிரிவு ஒத்துழைப்பிற்கும்
ஒன்றுக்கொன்று இயைந்த செயற்பாட்டுக்குமான செயல்
திட்டங்களை மேம்படுத்துவதற்கு வகைசெய்வதோடு
இம்மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆசிரியர்களும்
மாணவர்களும் எளிதாக இடம் மாறுவதற்கும்கூட வகை:
செய்தலும் வேண்டும்;
(n) தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களிலும்
கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதை
முறைப்படுத்துதல் வேண்டும்;
(0) தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களிலும்,
கல்லூரிகளிலும், விளையாட்டுப் போட்டிகள்,
விளையாட்டுகள், உடற்பயிற்சிக் கல்வி, பண்பாட்டு
நடவடிக்கைகள் ஆகியவற்றை ஊக்குவித்தல் வேண்டும்;
() விரிவாக்க நடவடிக்கைகளை
ஊக்குவித்தலும் தொழில்நுட்பப் பல்கலைக்
கழகங்களுக்குத் தொடர்புடைய சிறப்புத் துறைகளிலுள்ள
திறன்வாய்ந்த ஆலோசனைப் பிரிவுகளின் மூலமாக
தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களும். தொழில்
பிரிவுகளும் தங்களுக்கிடையே ஒன்றோடு ஒன்று
15
இணைந்து செயற்படுவதையும் வட்டார வளர்ச்சியை
திட்டமிடுதலும் மேம்படுத்துதலும் வேண்டும்;
(@) மாநிலத்திலுள்ள தொழில்நுட்பப்
பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் செயற்பட்டு
வருவது குறித்து கண்காணிப்பு அறிக்கை ஒன்று
தயாரித்தலும் அந்த அறிக்கையின் நகல் ஒன்றை அரசுக்கு
அனுப்பி வைத்தலும் வேண்டும்;
() தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில்
உள்ள தனிச்சிறப்புமையங்களை அடையாளம் காணுதலும்.
முதன்மைப் பிரிவுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
வளர்ச்சிக்கு உள்நாட்டளவிலும் பன்னாட்டளவிலும்
இணைப்பிற்கு வகைசெய்தலும் வேண்டும்;
(s) வட்டார பராமரிப்பு மானியத்தைத்
தீர்மானிப்பதில் அரசுக்கு யோசனை கூறுதலும்
தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களுக்கும்
கல்லூரிகளுக்கும் அத்தகைய மானியங்களை
வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை
வகுத்தலும் வேண்டும்;
டு மாநிலத்தின் ஒட்டுமொத்த ஆராய்ச்சித்
தேவைகளைக் கருத்திற்கொண்டு, தொழில்நுட்பப்
பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி நடவடிக்கைகளை
ஆராய்ச்சி முகவாண்மைகள் மற்றும் தொழிற்பிரிவுகளின்:
ஆராய்ச்சி நடவடிக்கைகளுடன் இணைக்கும் வகையில்
மாநிலத் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் குழுமம் ஒன்றை
அமைத்தலும், உள்நாட்டளவிலும் பன்னாட்டளவிலும்
தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் அறிவியல்
ஆராய்ச்சிகளை வளர்ப்பதற்காக ஆராய்ச்சி நிதிகளை
ஒன்றிணைத்தலும் வேண்டும்;
(ம மாநிலத்திலுள்ள (மையப் பல்கலைக்
கழகங்கள் நங்கலான) தொழில்நுட்பப் பல்கலைக்
கழகங்களின் நிலையமைவிதிகள், அவசரவிதிகள்,
16
ஒழுங்குவிதிகள் மற்றும் இம்மாநிலத்திலுள்ள
தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களால்
முன்மொழியப்படும் நிலையமைவிதிகள் ஆகியவற்றைப்
பரிச்லனை செய்து கல்விசார் பயில்முயற்சிகளில்
சுதந்திரமாகச் செயல்படுவதற்கு ஊறின்றி, நிர்வாகத்தில்
ஒரு சீர்மையை பேணுவதற்கான மாறுதல்களுக்கு
யோசனை கூறுதல் வேண்டும்;
(v) மாநிலத்திலுள்ள திட்டங்களை
உருவாக்குவதில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி
மன்றத்துடன் இணைந்து செயல்படுதல் வேண்டும்;
(w) புதிய கல்லூரிகள் தன்னிறைவு
பெற்றவையாகவும் நிலைத்தன்மை பெற்றவையாகவும்
இருப்பதற்கான வழிமுறைகளுக்கு அரசுக்கு யோசனை
கூறுதல் வேண்டும்;
(x) "பயிலும்போதே ஊதியம் ஈட்டுதல்" என்னும்
கொள்கையின்பேரில் அரசுக்கு ஆலோசனை கூறுதல்
வேண்டும்;
0) தொழில்நுட்பப் பல்கலைக்கழக
அமைப்பிற்கு உள்ளே அல்லது வெளியே அணுமூலக்கூறு
சார்ந்த உயிரியியல், மரபணு பொறியியல், விண்வெளி
தொழில்நுட்ப பிரிவு, உயிரியல் தொழில்நுட்பம் மற்றும்
அவை போன்ற முதன்மை அறிவுசார் துறைகளில்
சிறப்புமிகு நிலையங்களைத் தோற்றுவித்தல் வேண்டும்;
(2) புதிய தொழில்நுட்பப்
பல்கலைக்கழகங்களை நிறுவுவது தொடர்பான சட்டங்கள்
உள்ளிட்ட, தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள்.
தொடர்பான சட்டங்களுக்கான மேம்பாடுகள் குறித்து
அரசிற்கு யோசனைகள் கூறுதல் வேண்டும்;
(aa) தலைசிறந்த அறிவியலாளர்கள்,
கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்.
17
ஆகியோருக்கு அவரவர் துறைகளில் ஆற்றியுள்ள
தொண்டிற்காக பெருமைக்குரிய விருதுகளை நிறுவுதல்
வேண்டும்;
(ம்) தொழிற்பிரிவுகள், கல்விநிலையங்கள்,
உள்நாட்டு அமைப்புகள், பன்னாட்டு அமைப்புகள்
ஆகியவற்றுக்கு ஆலோசனை வழங்குதல் போன்ற
பணிகளிலிருந்து தானாகவே பெருகுகின்ற நிதிகளின்:
மூலமாக தொடர் வளர்ச்சிக்கான புதிய செயல்திட்டங்களை
அடையாளம் கண்டு நிருவகித்து வருதல் வேண்டும்;
(ac) உள்நாட்டு நிதியளிப்பு மற்றும் பன்னாட்டு
நிதியளிப்பு நிறுவனங்களிடமிருந்து பெற்ற ஆராய்ச்சி
நிதிகளை நிருவகித்தலும் விடுவித்தலும் வேண்டும்;
(௧0) அரசுக்கோ தொழில்நுட்பப்
பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகள் எவற்றுக்குமோ
இம்மன்றத்திடம் அவை குறிப்பிட்டு அனுப்பக்கூடிய
தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பிற
விவரங்கள் எதன்மீதும் ஆலோசனை கூறுதல் வேண்டும்;
மற்றும்
(ae) தொழில்நுட்பக் கல்வியிலும் அறிவியல்
ஆராய்ச்சியிலும். மேன்மையை வளர்த்தலும்
வகுத்துரைக்கப்படும் பிற அலுவல்களைப் புரிந்து வருதலும்
வேண்டும்.
11. மன்றத்தின் கூட்டங்கள்.- மன்றமானது ஒழுங்கு
விதிகளில் வகைசெய்யப்படும் நேரத்திலும் இடத்திலும்
தேவையான போதெல்லாம் கூடுதல் வேண்டும் என்பதோடு
வகைசெய்யப்படும் நடைமுறை விதிகளை
பின்பற்றிவருதலும் வேண்டும்:
வரம்புரை: மன்றமானது. குறைந்தது மூன்று
மாதங்களுக்கு ஒருமுறையாவது கூடுதல் வேண்டும்.
18
12. மன்றத்தின் பணியாளர்கள்.- (1) மன்றமானது
தனது அலுவல்களைத் திறம்பட புரிந்துவரும் பொருட்டு
தேவையான எண்ணிக்கையில் பணியாளர்களை
நியமித்தல் வேண்டும். மன்றத்தின் பணியாளர்களின் பணி
பற்றிய வரையறைகளும் நிபந்தனைகளும்.
ஒழுங்குவிதிகளில் வகைசெய்யப்படும் விதத்தில் இருத்தல்
வேண்டும்.
(2) இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்ட அலுவலர்கள்
மற்றும் பிற பணியாளர்களைப் பொறுத்த அளவிலான
ஆட்சேர்ப்பு வகைகள் மற்றும் முறைகள், பணி பற்றிய
நிபந்தனைகள், சம்பளம் மற்றும் படிகள், ஒழுங்குமுறை
மற்றும் நடத்தை ஆகியன வகுத்துரைக்கப்படும் விதத்தில்
இருத்தல் வேண்டும்.
13. குறிப்பிட்ட நோக்கத்திற்காக மன்றத்துடன்
நபர்களைத் தற்காலிகமாக இணைத்துக் கொள்ளுதல்.- (1)
மன்றம், ஒழுங்குவிதிகளால் தீர்மானிக்கப்படக்கூடிய
அத்தகைய முறையிலும் அத்தகைய
நோக்கங்களுக்காகவும் அது விரும்புகிற உதவி அல்லது
ஆலோசனையைப் பெறுவதற்கு நபர் எவரையும்
அதனோடு இணைத்துக் கொள்ளலாம்.
(2) நோக்கம் எதற்காகவும், இணைத்துக்
கொள்ளப்பட்ட நபர் ஒருவர், அந்த நோக்கத்திற்குத்
தொடர்புடைய கலந்துரையாடல்களில் பங்கெடுத்துக்
கொள்ள உரிமை பெற்றிருத்தல் வேண்டும்; ஆனால்
மன்றத்தின் கூட்டம் ஒன்றில் வாக்களிப்பதற்கு உரிமை
பெற்றிருத்தல் கூடாது.
14. மன்றத்தின் வரவு-செலவுத் திட்டம்.-
மன்றமானது, மதிப்பிடப்பட்ட வரவு செலவைக்
காட்டுகின்ற அடுத்த நிதியாண்டைப் பொறுத்த
அளவிலான வரவு-செலவுத் திட்டமொன்றை
வகுத்துரைக்கப்படும் வடிவத்திலும் நேரத்திலும் தயாரித்தல்
19
வேண்டும் என்பதோடு அந்த வரவு-செலவுத் திட்டத்தின்.
நகல் ஒன்றை அரசுக்கு மேலனுப்பி வைத்தலும் வேண்டும்.
15. மன்றத்தின் நிதி.- (1) மன்றமானது, தனக்கெனச்
சொந்த நிதியைப் பெற்றிருத்தல் வேண்டும்; மற்றும்
அவ்வப்போது அரசினால் தனக்கு வழங்கி வரப்படக்கூடிய
தொகைகள் அனைத்தும் மற்றும் மன்றத்தின் வரவுகள்
அனைத்தும் (மைய அரசு, பல்கலைக்கழக மானியக் குழு
அல்லது பிற அதிகார அமைப்பு எதுவும் அல்லது நபர்
எவரும் மன்றத்திடம் கொடுக்கக்கூடிய தொகை எதுவும்
உள்ளிட்ட) அத்தகைய நிதி வரவில் சேர்க்கப்படுதல்
வேண்டும்.
(2) இந்தச் சட்டத்தின்படி மன்றத்தின்
அலுவல்களைப் புரிந்து வருவதற்காக, இந்தச் சட்டத்தின்.
தொடக்கத் தேதியிலிருந்து ஐந்தாண்டு காலஅளவிற்கு
அரசு தேவையெனக் கருதும் மானியங்கள், வளர்ச்சி
மானியங்கள், ஈடுசெய் மானியங்கள் ஆகியவற்றை
ஒவ்வொரு நிதியாண்டிலும் அரசானது மன்றத்திற்கு
வழங்குதல் வேண்டும்.
(3) மன்றத்தில் தமது நிறுவன உறுப்பினர்
நிலைக்காக ஆண்டுச் சந்தாவாக மன்றத்திற்கு
அனைத்துத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களும்
ஆண்டொன்றுக்கு ஓர் இலட்ச ரூபாயைப் பங்களிப்பாகச்
செலுத்துதல் வேண்டும்; பட்டம் வழங்கப்படுகிற
குறித்தகாலப் படிப்பினை வழங்குகிற கல்லூரிகள்
ஆண்டொன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாயைப் பங்களிப்பாகச்
செலுத்துதல் வேண்டும்; பட்டயம் வழங்கப்படுகிற
குறித்தகாலப் படிப்பு எதனையும் வழங்குகிற கல்லூரிகள்
ஆண்டொன்றுக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாயைப்
பங்களிப்பாகச் செலுத்துதல் வேண்டும்; அவை நிதியத்தின்.
கணக்கில் வரவு வைக்கப்படுதல் வேண்டும்.
20
(4) இந்தச் சட்டத்தின்படியோ அல்லது அதன்.
நோக்கங்களுக்காகவோ இம்மன்றத்திற்கு ஏற்படுகிற
செலவுகள் அனைத்தும் மேற்சொன்ன நிதியிலிருந்து
செலவிடப்படுதல் வேண்டும் என்பதோடு, அத்தகைய
செலவினைச் செய்த பின்னர் எஞ்சிய மிகுதி தொகை
எதுவும் வகுத்துரைக்கப்படும் முறையில் முதலீடு
செய்யப்படுதல் வேண்டும்.
(5) மன்றம், இந்தச் சட்டத்தின்படியான
செயற்பணிகளை ஆற்றுவதற்குத் தக்கது என அது
கருதுகிற தொகைகளைச் செலவு செய்யலாம்; மற்றும்
அத்தகைய தொகைகள் மன்றத்தின் நிதியிலிருந்து
செலுத்தத்தக்க செலவினமாகக் கருதப்படுதல் வேண்டும்.
16. பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும்
மானிய உதவிகளை வழங்குதல். மாநிலத்திலுள்ள
பல்வேறு தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களுக்கும்,
கல்லூரிகளுக்கும் மன்றத்தினால் பிரிவு 15இன் உட்பிரிவு
(1)இன்படி பெறப்பட்ட நிதியிலிருந்து மானியங்களை
ஒதுக்கீடு செய்வது மன்றத்தின் பணியாக இருத்தல்
வேண்டும்; மற்றும் மன்றமானது அதனைத் தொடர்புடைய
தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களுக்கும்.
கல்லூரிகளுக்கும் வழங்குதல் வேண்டும்.
17. ஆண்டுக் கணக்குகளும் தணிக்கையும்.- (1)
இம்மன்றத்தின் கணக்குகள், வகுத்துரைக்கப்படும்
முறையிலும் படிவத்திலும் பேணிவரப்படுதல் வேண்டும்.
மன்றம் வகுத்துரைக்கப்படும் படிவத்தில் ஆண்டுக்
கணக்கு விவர அறிக்கை ஒன்றைத் தயாரித்தல்
வேண்டும்.
(2) அரசு பணிக்கக்கூடிய ஆய்விற்கும்
தணிக்கைக்கும் மன்றத்தின் கணக்குகள் குறைந்தது ஜர்
ஆண்டிற்கு ஒரு முறை பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்.
21
(3) மன்றத்தின்: உறுப்பினர் செயலாளர்,
தணிக்கையாளரின் அறிக்கையினை அச்சிடுவதற்கு
ஆவன செய்தல் வேண்டும்; அச்சிடப்பட்ட நகல்
ஒன்றினை ஒவ்வொரு உறுப்பினருக்கும் அனுப்புதல்
வேண்டும்; மற்றும் மன்றத்தின் அடுத்தக் கூட்டத்தில்
பரிச்லனைக்காக அத்தகைய அறிக்கையை அதன் முன்பு
வைத்தல் வேண்டும்.
(4) மன்றம், தணிக்கை அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்ட குறை அல்லது முறைகேடு
எதனையும் தீர்வு செய்வதற்காக உரிய நடவடிக்கையை
உடனடியாக எடுத்தல் வேண்டும்.
(5) மன்றத்தின் கணக்குகள், தணிக்கை
அறிக்கையுடனும் அதன்மீதான மன்றத்தின்
குறிப்புரைகளுடனும். சேர்த்து, வகுத்துரைக்கப்படும்
காலத்திற்குள் அரசுக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
(6) அரசானது, எழுத்துவடிவிலான ஆணையின்
மூலம், அதில் குறித்துரைக்கப்பபடும் காலத்திற்குள்,
தணிக்கை அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட
குறைபாடுகள் எவையேனும் இருப்பின் அவற்றைத் தீர்வு
செய்ய, அந்த ஆணையில் குறிப்பிடப்பட்ட
நடவடிக்கையினை எடுக்குமாறு மன்றத்தினைப்
பணிக்கலாம்; மற்றும் மன்றம், அத்தகைய பணிப்புரைக்கு
இணங்கி நடத்தல் வேண்டும்.
18. ஆண்டறிக்கை. மன்றமானது, எவ்வளவு
விரைவில் இயலுமோ அவ்வளவு விரைவில் ஒவ்வொரு
நிதியாண்டின் இறுதிக்குப் பின்பும், முந்தைய ஆண்டின்
போதான தன்னுடைய நடவடிக்கைகளைப் பற்றிய
விவரங்களைத் தருகின்ற அறிக்கை ஒன்றை
வகுத்துரைக்கப்படும் தேதிக்கு முன்பாகவும் அத்தகைய
படிவத்திலும் தயாரித்து அரசுக்குப் பணிந்தனுப்புதல்
வேண்டும். மேலும் அந்த அறிக்கையானது, அடுத்த
22
நிதியாண்டில் மன்றத்தினால் பெரும்பாலும்.
மேற்கொள்ளப்பட இருக்கின்ற நடவடிக்கைகள்
எவையேனும் இருந்தால், அவற்றைப் பற்றிய
விவரங்களையும் தருதல் வேண்டும். அரசானது அத்தகைய
அறிக்கை ஒவ்வொன்றையும், அது வரப்பெற்றதற்குப்
பின்பு கூடியவிரைவில் சட்டமன்றப் பேரவையின் முன்பு
வைப்பதற்கு ஆவன செய்தல் வேண்டும். அந்த
ஆண்டறிக்கையின் நகல் ஒன்று பல்கலைக்கழக மானியக்
குழுவிற்கும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி
மன்றத்திற்கும் மேலனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
19. பணிப்புரைகளைப் பிறப்பிப்பதற்கான அதிகாரம்.-
அரசு, இந்தச் சட்டத்தின். நோக்கங்களை
நிறைவேற்றுவதற்குத் தேவையானவை அல்லது
உகந்தவை எனக் கருதும் அத்தகைய பணிப்புரைகளை
மன்றத்திற்குப் பிறப்பிக்கலாம்; மற்றும் மன்றமானது
அத்தகைய பணிப்புரைகள் அனைத்திற்கும் செயல்வடிவம்
கொடுத்தல் வேண்டும்.
20. ஆய்வு செய்தலும் விசாரணைச் செய்தலும்.- (1)
அரசு செயலாளரின் படிநிலைக்கு குறையாத அலுவலர்
ஒருவருக்கு அதிகாரமளித்து மன்றத்தை ஆய்வு செய்ய
அரசு உரிமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்; மற்றும்
அதனிடம் ஒப்படைக்கப்பட்ட விவரம் எதனையும் பொருத்த
அளவில் மன்றத்தினால் செய்யப்பட்ட பணிகள் குறித்த
விசாரணை ஒன்றையும் செய்யலாம். அரசானது,
ஒவ்வொரு நிகழ்விலும் அத்தகைய ஆய்வினைச்
செய்வதற்காக அல்லது விசாரணையைச் செய்வதற்காக
தனது உட்கருத்தை மன்றத்திற்கு அறிவிப்பின் மூலம்
தெரிவித்தல் வேண்டும்; மற்றும் மன்றமானது அதில்
தன்னை பிரிதிநிதித்துவம் செய்து கொள்வதற்கு உரிமை
உடையதாக இருத்தல் வேண்டும்; ஆய்வு அல்லது
விசாரணையைச் செய்யும் அலுவலர், அதன்மீதான
முடிவுகளைக் குறித்து அரசுக்குத் தெரிவித்தல் வேண்டும்.
23
(2) அரசானது அத்தகைய ஆய்வு அல்லது
விசாரணையின் பேரிலான முடிவுகள் தொடர்பான தனது
கருத்துக்களை மன்றத்திற்குத் தெரிவித்தல் வேண்டும்;
மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து
மன்றத்திற்கு ஆலோசனை வழங்கலாம்.
(3) மன்றமானது அரசு நிர்ணயிக்கக்கூடிய
காலத்திற்குள்ளாக ஆலோசனையின் பேரில் எடுக்கக்
கருதப்பட்டுள்ள அல்லது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
ஏதேனும் இருப்பின் அந்த நடவடிக்கை குறித்து
அரசுக்குத் தெரிவித்தல் வேண்டும்.
(4) மன்றத்தினால் அரசு மனநிறைவடையும்
வகையில் நியாயமான காலத்திற்குள்ளாக
நடவடிக்கையானது எடுக்கப்பட்டிராத நிலையில்,
அரசானது, அது தக்கது எனக் கருதுகிற அத்தகைய
பணிப்புரைகளைப் பிறப்பிக்கலாம்; மற்றும் மன்றமானது
அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி நடத்தல்
வேண்டும்.
21. சீராய்வு.- அரசானது, தாமாகவே முற்பட்டோ
அல்லது அதற்குச் செய்யப்பட்ட விண்ணப்பம் ஒன்றின்:
பேரிலோ, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்படி
மன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது
எடுக்கப்பட்ட முடிவின் சட்டமுறைமை அல்லது
தகுதியுடமை குறித்தோ அல்லது அத்தகைய
நடைமுறையின் ஒழுங்குமுறை குறித்தோ தாம்
நிறைவுறும் நோக்கத்திற்காக, அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட
ஆணை அல்லது எடுக்கப்பட்ட முடிவு எதனின்
பதிவுருக்களையும் கோரிப்பெற்று ஆய்வு செய்து அது
பொருத்தம் எனக் கருதுகிற ஆணையைப் பிறப்பிக்கலாம்:
வரம்புரை: மன்றத்திற்கு அல்லது அதனால்
பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடிய நபருக்குத் தமது
தரப்பினை எடுத்துரைப்பதற்கு நியாயமான ஒரு
24
வாய்ப்பினை கொடுத்தாலன்றி, அத்தகைய ஆணை
எதுவும் பிறப்பிக்கப்படுதல் கூடாது.
22. குறைபாடுகளால் மன்றத்தின் நடவடிக்கைகள்
செல்லத்தகாதவையாக ஆக்கப்படுதல் கூடாது.-
உறுப்பினர் பதவியில் காலியிடம் ஏதேனும்
இருந்தபோதிலும் அல்லது மன்றத்தின் அமைப்பு
உருவாக்கத்தில் குறைபாடு ஏதேனும் இருந்தபோதிலும்,
மன்றம். செயலாற்றுவதற்கான அதிகாரத்தைப்
பெற்றிருக்கும்; மற்றும் ஓர் உறுப்பினராக இருப்பதற்கு
உரிமைத்தகுதி உடையவராக இல்லாத எவரேனும் ஒருவர்
மன்றத்தின் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் அல்லது
வாக்களித்தார் அல்லது மற்றபடி பங்குபெற்றார் எனில்,
மன்றத்தின். நடவடிக்கைகள் செல்லத்தக்கனவாக
இருக்கும்.
23. மன்றத்தின் உறுப்பினர்களும் பணியாளர்களும்
பொது ஊழியர்களாக இருப்பர்.- மன்றத்தின் தலைவர்,
துணைத்தலைவர், உறுப்பினர்கள், உறுப்பினர் செயலாளர்,
பிற பணியாளர்கள் ஆகியோர் இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளில் ஏதொன்றையும் அல்லது இந்தச்
சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்டவிதி
அல்லது ஒழுங்குவிதி அல்லது ஆணை அல்லது
பணிப்புரை ஏதொன்றையும் தொடர்ந்து
செயற்படுத்தும்போது அல்லது செயற்படுத்துவதாகப்
புலப்படும்போது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (மையச்
சட்டம் XLV/1860) 21ஆம் பிரிவில் வரையறை
செய்யப்பட்ட பொருளின்படி பொது ஊளழியர்களாகக்
கருதப்படுதல் வேண்டும்.
24. நல்லெண்ணத்தில் எடுக்கப்படும்
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.- இந்தச் சட்டத்தையோ
அல்லது இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது
பிறப்பிக்கப்பட்ட விதி அல்லது ஒழுங்குவிதி, ஆணை
25
அல்லது பணிப்புரை ஏதொன்றையும் தொடர்ந்து
நல்லெண்ணத்துடன் செய்யப்படும் அல்லது செய்யக்
கருதப்படும் எதனைப் பொறுத்தும் அரசு, மன்றம் அல்லது
அதன் உறுப்பினர் எவருக்கும் எதிராகவுமோ அல்லது
அரசு அல்லது மன்றத்தின். பணிப்புரையின்படி
செயற்படுகின்ற பணியாளர்கள் அல்லது நபர் எவருக்கும்
எதிராகவுமோ, உரிமையியல் வழக்கு அல்லது பிற சட்ட
நடவடிக்கை எதுவும் தொடரப்படுதல் கூடாது.
25. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.-(1)
அரசானது, இந்தச் சட்டத்தின் நோக்கங்கள்.
அனைத்தையுமோ அல்லது அவற்றுள் எவற்றையுமோ
நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.
(2) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி
அல்லது ஆணை அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை
ஒவ்வொன்றும், அது செய்யப்பட்ட அல்லது
பிறப்பிக்கப்பட்ட பின்பு, கூடியவிரைவில் சட்டமன்றப்
பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது
அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடரோ அல்லது
அதற்கு அடுத்துவரும் கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு
முன்பு அப்பேரவை அத்தகைய விதி, ஆணை அல்லது
அறிவிக்கை எதிலும் மாறுதல் எதனையும் செய்யுமானால்
அல்லது அப்பேரவை, அந்த விதி அல்லது ஆணை
அல்லது அறிவிக்கை செய்யப்படுதல் கூடாது என்று
முடிவு செய்யுமானால் அந்தவிதி அல்லது அந்த ஆணை
அல்லது அந்த அறிவிக்கை அதற்குப்பின்னர் அவ்வாறு
மாறுதல் செய்யப்பட்ட வடிவத்தில் மட்டுமே
நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது
நிகழ்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல் வேண்டும்.
எனினும், அத்தகைய மாறுதலோ அல்லது நீக்கமோ அந்த
விதி, ஆணை அல்லது அறிவிக்கையின்படி முன்னர்
செய்யப்பட்ட ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும்.
ஊறின்றி இருத்தல் வேண்டும்.
26
26. ஒழுங்குவிதிகளைச் செய்வதற்கான
அதிகாரம்.- மன்றமானது, அரசினால் செய்யப்படும்
விதிகள் எவற்றுக்குட்பட்டும் அரசின் முன் ஒப்புதலுடனும்,
இந்தச் சட்டத்தின்படி மன்றத்திற்குள்ள
அதிகாரங்களையும் அலுவல்களையும்
நிறைவேற்றுவதற்கான ஒழுங்கு விதிகளைச் செய்யலாம்.
27. இர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.-
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில்
இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால், அரசு, ஆணையின்
மூலம் அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத்
தேவையானதாகவோ அல்லது உகந்ததாகவோ அதற்குத்
தோன்றுகிற, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு
முரணாக இல்லாத அத்தகைய வகைமுறையைச்
செய்யலாம்:
வரம்புரை: ஆனால் அத்தகைய ஆணை எதுவும்,
இந்தச் சட்டம் தொடங்கிய தேதியிலிருந்து இரண்டாண்டு
காலஅளவு முடிவடைந்ததற்குப் பிண்னர் செய்யப்படுதல்
கூடாது.
28. 40/1992 எனும் எண்ணிட்ட தமிழ்நாடு
சட்டத்திற்கான திருத்தங்கள்.- 1992ஆம் ஆண்டு
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றச் சட்டத்தில் (தமிழ்நாடு
சட்டம் 40/1992)-
@ பிரிவு 1இன், உட்பிரிவு (3)க்கு பதிலாக,
பின்வருவன மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்,
அதாவது:-
"(3) இது, 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்
தொழில்நுட்பக் கல்வி மன்றச் சட்டத்தில் பொருள்
வரையறை செய்யப்பட்டுள்ள தொழில்நுட்பப்
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி தவிர பிற அனைத்துப்
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி
நிறுவனங்களுக்குப் பொருந்தும்";
27
(2) 2ஆம் பிரிவில்,
0) (9) கூறில், "மேலாண்மை அறிவியல்,
கீழ்த்திசை மொழிகள், பொறியியல்,
தொழில்நுட்பவியல்" என்று வருகின்ற
சொற்றொடருக்குப் பதிலாக, "கீழ்த்திசை
மொழிகள்" என்னும் சொற்றொடரானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
0. () கூறில், "தொழில்நுட்பக் கல்வியாயினும்
(iif)
அல்லது வேறு கல்வியாயினும்" என்று
வருகின்ற சொற்றொடருக்குப் பதிலாக
"அல்லது வேறு கல்வியாயினும் (2010ஆம்
ஆண்டு தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக்
கல்வி மன்றச் சட்டத்தில் பொருள்
வரையறை சய்யப்பட்ட தொழில்நுட்பக்
கல்வி அல்லாத பிற)" என்னும்
சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
0) கூறில்
(ஐ "அண்ணா பல்கலைக்கழகம்" என்று
வருகின்ற சொற்றொடரானது
விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(b) "1956ஆம் ஆண்டு பல்கலைக்கழக
மானியக் குழுச் சட்டம் பொருந்துகிறதாய்
உள்ள" என்று வருகின்ற
சொற்றொடருக்குப் பின்னர் "ஆனால்,
2010ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்
தொழில்நுட்பக் கல்வி மன்றச் சட்டத்தில்
பொருள் வரையறை செய்யப்பட்டுள்ள
தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
ஒன்றை உள்ளடக்காது" என்னும்
28
சொற்றொடரானது சேர்க்கப்படுதல்
வேண்டும்;
(3) பிரிவு 4இன் (ஐ) கூறானது விட்டுவிடப்படுதல்
வேண்டும்;
(4) பிரிவு 40இல்,-
0)
0
உட்பிரிவு 1இல், "ஆராய்ச்சி மற்றும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
நிலையங்கள்" என்று வருகின்ற
சொற்றொடருக்குப் பதிலாக, "ஆராய்ச்சி
மற்றும் அறிவியல் நிலையங்கள்"
என்னும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
உட்பிரிவு (2)இல்,-
(@) (@ கூறில், "மற்றும் தொழில்நுட்பம்!
என்று வருகின்ற சொற்றொடரானது
விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(b) இ கூறுக்குப் பதிலாக, பின்வரும்
கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
(6) பல்கலைக்கழக அமைப்பிற்கு
உள்ளேயும் அல்லது வெளியே
முதன்மை அறிவுசார் துறைகளில்
சிறப்புமிகு நிலையங்களை
முன்னெடுத்தல் வேண்டும்";
(20% 0௦ கூறில், "அறிவியலாளர்கள்,
கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப
வல்லுநர்கள்" என்று வருகின்ற
சொற்றொடருக்குப் பதிலாக,
"அறிவியலாளர்கள் மற்றும்
கல்வியாளர்கள்" எனும்
29
சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(0 (ம்) கூறானது விட்டுவிடப்படுதல்
வேண்டும்.