Tamil Nadu · 2013 · Act 3

Tamil Nadu Special Police Youth Brigade Act, 2013

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

2013ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்‌ இளைஞர்‌ படைச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌ 372013) (2023, அக்டோபர்‌ 31 அன்று இருந்தவாறு) The Tamil Nadu Special Police Youth Brigade Act, 2013 (Tamil Nadu Act No.3 of 2013) (as on 31* October, 2023) தமிழாக்கம்‌ : தமிழ்நாடு மாநிலச்‌ சட்ட ஆட்சிமொழி ஆணையம்‌ சென்னை தமிழ்நாடு அரசுக்காகத்‌ தமிழ்நாடு அரசு எழுதுபொருள்‌ அச்சுத்துறை ஆணையரால்‌ அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. 2023 2013 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்‌ பிரிவு இளைஞர்‌ படைச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌ 372013) பொருளடக்கம்‌ குறுந்தலைப்பு மற்றும்‌ தொடக்கம்‌. பொருள்‌ வரையறைகள்‌. காவல்‌ இளைஞர்‌ படையை அமைத்தல்‌. இளைஞர்‌ படையின்‌ செயற்பணிகள்‌ மற்றும்‌. கடமைகள்‌. கட்டுப்பாடு மற்றும்‌ கட்டளை. இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்களின்‌. தேர்வு. முனைப்புடன்‌ பணிபுரிவதற்கான பொறுப்பு. பயிற்சி. இடைந்க்கம்‌, நீக்கம்‌ முதலியவை. மேல்முறையீடு . இந்தச்‌ சட்டத்தின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப்‌ பாதுகாப்பு. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. 1 2013ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்‌ இளைஞர்‌ படைச்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌ 3/2013) [தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையின்‌ பின்வரும்‌ சட்டமானது, 2013 ஆம்‌ ஆண்டு பிப்ரவரி திங்கள்‌ 23 ஆம்‌ நாளன்று ஆளுநரின்‌. ஏற்பிசைவைப்‌ பெற்று பொதுத்‌ தகவலுக்காகத்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்பட்டது. தமிழ்நாடு மாநிலத்தில்‌ பயிற்சியளிக்கப்பட்ட காவல்‌ துறையினருக்கு ஒப்படைக்கப்பட்ட கீழ்மட்ட அளவிலான பணிகளைச்‌ செய்வதற்குத்‌ தனிப்பட்ட சிறப்புக்‌ காவல்‌ இளைஞர்‌ படை ஒன்றினை அமைப்பதற்கு வகைசெய்வதற்கான ஒரு சட்டம்‌. இந்தியக்‌ குடியரசின்‌ அறுபத்து நான்காம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையால்‌ இயற்றப்பட்ட சட்டம்‌ பின்வருமாறு:- 1. குறுந்தலைப்பு மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 2013ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்‌ இளைஞர்‌ படைச்‌ சட்டம்‌ என வழங்கப்படும்‌. (2) இது, மாநில அரசு, அறிவிக்கையின்‌ வாயிலாகக்‌ குறிப்பிடப்படும்‌ தேதியில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌ தறுவாய்‌ வேறு பொருள்‌ குறித்தாலன்றி,- (ஐ "அரசு" என்பது, மாநில அரசு எனப்‌ பொருள்படும்‌; (௦) "வகுத்துரைக்கப்பட்டா என்பது, விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்டது எனப்‌ பொருள்படும்‌; 2 (c) "இளைஞர்‌ படை என்பது, பிரிவு 3 இன்படி அமைத்துருவாக்கப்பட்ட சிறப்புக்‌ காவல்‌ இளைஞர்‌ படை எனப்‌ பொருள்படும்‌; 3. காவல்‌ இளைஞர்‌ படையை அமைத்தல்‌.- (1) தமிழ்நாடு மாநிலத்தில்‌ தனிப்பட்ட காவல்‌ இளைஞர்‌ படை ஒன்று இருக்கும்‌, அது தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்‌ இளைஞர்‌ படை என்று அழைக்கப்படும்‌. (2) இளைஞர்‌ படை உறுப்பினர்களின்‌. பணி நிபந்தனைகள்‌: மற்றும்‌ வரைக்கட்டுகள்‌ வகுத்துரைக்கப்படும்‌ முறையில்‌ இருத்தல்‌ வேண்டும்‌. 4. இளைஞர்‌ படையின்‌ செயற்பணிகள்‌ மற்றும்‌ கடமைகள்‌.- பின்வருபவை இளைஞர்‌ படையின்‌ செயற்பணிகளாக மற்றும்‌ கடமைகளாக இருத்தல்‌ வேண்டும்‌:- (ஐ) காவல்‌ துறையின்‌ வாகனங்களை ஓட்டுதல்‌ ; (b) தபால்‌ விநியோகம்‌ மற்றும்‌ கணினிப்‌ பதிவுகளை மேற்கொள்ளுதல்‌; (c) காவல்‌ குடியிருப்புகளைப்‌ பராமரித்தல்‌; மற்றும்‌ (0) விபத்திற்குள்ளான நபர்களின்‌. உயிரிழப்பைத்‌ தடுப்பதில்‌ காவல்‌ படைக்கு உதவுதல்‌. 5. கட்டுப்பாடு மற்றும்‌ கட்டளை.- (1) இளைஞர்‌ படையின்‌ பொதுக்‌ கண்காணிப்பு, பணிப்புரை மற்றும்‌ கட்டுப்பாடு அரசிடம்‌ இருக்கும்‌ மற்றும்‌ அரசால்‌ செயல்படுத்தப்படும்‌. மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌: வகைமுறைகள்‌ மற்றும்‌ விதிகளுக்கு உட்பட்டு இளைஞர்‌ படையினருக்கு இடப்படும்‌ கட்டளை மற்றும்‌ மேற்பார்வை அரசால்‌ அதிகாரமளிக்கப்படும்‌ அலுவலர்‌ ஒருவரிடம்‌ இருக்கும்‌. (2) அதிகாரம்‌ அளிக்கப்பட்ட அலுவலர்‌ இச்சட்டத்தின்படி அவருடைய கடமைகளை நிறைவேற்றுகையில்‌ அரசால்‌ பணிக்கப்படும்‌ பிற அலுவலர்கள்‌ அவருக்கு உதவி செய்வார்கள்‌. 6. இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்களின்‌ தேர்வு.- (1) இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்கள்‌. வகுத்துரைக்கப்படும்‌ முறையில்‌, பிரிவு 5860 குறிப்பிட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரால்‌ தேர்ந்தெடுக்கப்படுதல்‌ வேண்டும்‌. (2) வகுத்துரைக்கப்படும்‌ தகுதிகளைப்‌ பெற்றிருந்தாலன்றி நபர்‌ எவரும்‌, இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்‌ ஒருவராகத்‌ தேர்ந்தெடுக்கப்படுதல்‌ கூடாது. (3) இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்‌ ஒவ்வொருவரும்‌, வகுத்துரைக்கப்பட்ட அத்தகைய மதிப்பூதியம்‌ பெறுவர்‌. 7. முனைப்புடன்‌ பணிபுரிவதற்கான பொறுப்பு.- (1) இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்‌ ஒவ்வொருவரும்‌, தமிழ்நாடு மாநிலத்தில்‌ எந்தப்‌ பகுதியிலும்‌ பணியாற்றுவதற்கு பொறுப்புடையவராக இருத்தல்‌ வேண்டும்‌. (2) விடுப்பில்‌ அல்லது இடைநீக்கத்தில்‌ இல்லாத இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்‌ ஒவ்வொருவரும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கத்திற்காக, எப்போதும்‌ முனைப்புடன்‌ இருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ இந்தச்‌ சட்டத்தின்படியான இளைஞர்‌ படையின்‌ கடமைகள்‌ மற்றும்‌ பொறுப்புகளுக்கு ஏற்ற வகையில்‌, எந்த நேரத்திலும்‌, எந்த முறையிலும்‌ அவர்கள்‌ பணியில்‌ ஈடுபடுத்தப்படலாம்‌. அல்லது பணியிலிருந்து விலக்கப்படலாம்‌. 4 8. பயிற்சி-- (1) இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்‌ ஒவ்வொருவரும்‌. வகுத்துரைக்கப்படும்‌ காலத்தில்‌ அத்தகைய பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்‌. (2) பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும்‌ இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்‌ ஒவ்வொருவரும்‌, தமிழ்நாடு சீருடைப்‌ பணிகள்‌ தேர்வு வாரியத்தால்‌ காவலர்‌ பணியிடங்களுக்கு என இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்களுக்காக நடத்தப்பெறும்‌ சிறப்புத்‌ தேர்வை எழுதலாம்‌. 9. இடைந்க்கம்‌, நீக்கம்‌ முதலியவை.- (1) இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்‌ எவரும்‌, உரிய காரணமின்றி அவருடைய கடமையைச்‌ செய்யத்‌ தவறுதல்‌ அல்லது மறுத்தல்‌ அல்லது ஒழுக்கம்‌ மீறும்‌ செயல்‌ எதனையும்‌ செய்தல்‌ அல்லது நடத்தை தவறுதல்‌, தொடர்ந்து பணி செய்வதற்கு உடல்‌ தகுதி இல்லாதவராக இருத்தல்‌ அல்லது தொடர்ந்து இருப்பது படையின்‌ கட்டுக்கோப்பு, நலம்‌ அல்லது ஒழுக்கத்திற்குத்‌ தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருத்தல்‌ அல்லது மாநிலத்தின்‌ அல்லது அதனின்‌ பகுதி எதனின்‌ பாதுகாப்பிற்கும்‌ ஊறு விளைவித்தல்‌ போன்றவற்றிற்காக உட்பிரிவு (5)கல்‌ குறிப்பிட்டுள்ள அதிகாரம்‌ அளிக்கப்பட்டுள்ள அலுவலரால்‌ இடைந்க்கம்‌ செய்யப்படலாம்‌. (2) பிரிவு 5இன்படி அதிகாரமளிக்கப்பட்டுள்ள அலுவலர்‌ பொதுநலன்‌ கருதி இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்‌ எவரையும்‌ எழுத்து மூலமாகப்‌ பணியிலிருந்து நீக்கலாம்‌. (3) இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌ பிரிவு 5860 குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரம்‌ அளிக்கப்பட்டுள்ள அலுவலருக்கு முகவரியிட்டு அவர்‌ கைப்பட எழுதும்‌ விண்ணப்பத்தின்‌ அடிப்படையில்‌ இளைஞர்‌ படையிலிருந்து விலகலாம்‌. 5 10. மேல்முறையீடு.- (1)பிரிவு 9இன்‌, உட்பிரிவு (2) இன்படி ஆணை ஒன்றினால்‌ பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்‌ எவரும்‌ அத்தகைய ஆணையிடப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்‌ வகுத்துரைக்கப்படும்‌ அதிகாரஅமைப்பிற்கு மேல்முறையீடு செய்யலாம்‌. (2) மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பின்‌. முடிவே இறுதியானதாகும்‌ மற்றும்‌ நீதிமன்றம்‌ எதிலும்‌. கேள்வி எதுவும்‌ எழுப்பப்படுதல்‌ கூடாது. 11. இந்தச்‌ சட்டத்தின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப்‌ பாதுகாப்பு.- இந்தச்‌ சட்டத்திற்கு இணங்க, நல்லெண்ணத்தின்‌ அடிப்படையில்‌ செய்யப்பட்ட எதற்காகவும்‌ அல்லது செய்யக்‌ கருதப்பட்ட அல்லது செய்ய வேண்டியதை விட்டுவிடுதல்‌ போன்ற காரணங்களுக்காக இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்‌ எவருக்கும்‌ எதிராக உரிமைவழக்கு, குற்றவழக்கு எதுவும்‌ அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவும்‌ தொடுக்கப்படுதல்‌ கூடாது. 12. விதிகளைச்‌ செய்வதற்கன அதிகாரம்‌.- (1) அரசானது இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்கள்‌. அனைத்தையும்‌ அல்லது அவற்றுள்‌ எவற்றையும்‌ நிறைவேற்றுவதற்காக விதிகளைச்‌ செய்யலாம்‌. (2) குறிப்பாக முந்தைய அதிகாரத்தின்‌ பொதுத்தன்மைக்கு ஊறின்றி அத்தகைய விதிகள்‌: பின்வரும்‌ விவரங்கள்‌ அனைத்திற்கும்‌ அல்லது அவற்றில்‌ எவற்றிற்கும்‌ வகை செய்யலாம்‌, அதாவது:- (a) பிரிவு 3இன்படி தமிழ்நாடு சிறப்பு காவல்‌ இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்களின்‌ பணி வரையறைகள்‌ மற்றும்‌ வரைக்கட்டுகள்‌; 6 (b) எந்த முறையில்‌ இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்‌ ஒருவர்‌ தேர்ந்தெடுக்கப்படுதல்‌ வேண்டுமோ அந்த முறை: (c) இளைஞர்‌ படையின்‌ உறுப்பினர்‌ ஒருவராகத்‌ தேர்ந்தெடுப்பதற்கான தகுதிகள்‌; (0) இளைஞர்‌ படையின்‌ உறுப்பினருக்குக்‌ கொடுக்கக்கூடிய மதிப்பூதியம்‌; (6) பிரிவு 10இன்படி வகுத்துரைக்கப்படும்‌ அதிகாரஅமைப்பு; (0 பயிற்சியின்‌ வகை மற்றும்‌ அத்தகைய பயிற்சியின்‌ காலஅளவு: (ஐ தேவைப்படக்கூடிய அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய பிற விவரம்‌ எதுவும்‌; (3) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌ அனைத்தும்‌, தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவை குறிப்பிட்டதொரு நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ என்று வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்படும்‌ நாளன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (4) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்படும்‌ விதி ஒவ்வொன்றும்‌, அது செய்யப்பட்ட பின்பு, கூடியவிரைவில்‌, சட்டமன்றப்பேரவையின்‌ முன்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்படும்‌ கூட்டத்தொடரோ அதற்கு அடுத்துவரும்‌ கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்னர்‌ அத்தகைய விதி எதிலும்‌ மாறுதல்‌ எதனையும்‌ சட்டமன்றப்பேரவையானது செய்யுமானால்‌ அல்லது அந்த விதி செய்யப்படுதலாகாது எனச்‌ சட்டமன்றப்பேரவை முடிவு செய்யுமானால்‌ அதன்பின்பு அந்த விதி அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில்‌ மட்டுமே 7 நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ அல்லது நடைமுறைக்கு வராது போதல்‌ வேண்டும்‌. எனினும்‌ அத்தகைய மாற்றம்‌ அல்லது நீக்கம்‌ எதுவும்‌ அந்த விதியின்படி முன்னதாகச்‌. செய்யப்பட்ட எதனின்‌. செல்லுந்தன்மைக்கும்‌ ஊறின்றி இருத்தல்‌ வேண்டும்‌.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts