Tamil Nadu · 1997 · Act 34
Tamil Nadu Siddha System of Medicine (Development and Registration of Practitioners) Act, 1997
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
1997ஆம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவ முறை
(மேம்படுத்துதல் மற்றும் மருத்துவத்
தொழிலாற்றுநர்கள் பதிவு செய்து கொள்ளுதல்)
சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 34 7 1997)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
The Tamil Nadu Siddha System of Medicine
(Development and Registration of Practitioners) Act, 1997
(Tamil Nadu Act No. 34 of 1997)
(as on 31 October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
சென்னை
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
1997ஆம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவ முறை
(மேம்படுத்துதல் மற்றும் மருத்துவத்
தொழிலாற்றுநர்கள் பதிவு செய்து கொள்ளுதல்)
பிரிவு
o
o
N
10.
சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 34 7 1997)
பொருளடக்கம்
அத்தியாயம் |
முன்னுரை
குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும்
கொடக்கம்.
பொருள்வரையறைகள்.
அத்தியாயம் ॥
சித்த மருத்துவக் கல்வி நிலையம் நிறுவுதல்
மருத்துவ மன்றத்தின் மற்றும் அரசின் ஒப்புதல்
இன்றி புதிய சித்த மருத்துவக் கல்வி நிலையம்
நிறுவப்படுதல் கூடாது.
அத்தியாயம் 1l
மருத்துவ மன்றம் நிறுவப்படுதல்
மருத்துவ மன்றம் நிறுவப்படுதல்.
மருத்துவ மன்றத்தின் அமைப்பு.
தலைவர்.
அரசினால் பெயர் குறித்து நியமிக்கப்படுவதன்
மூலம் முதல் மருத்துவ மன்றம் அமைத்து
ருவாக்கப்படுதல்.
உறுப்பினர் பதவிக்கான தகுதிக்கேடு.
உறுப்பினர் பதவி இல்லாது போதல்.
உறுப்பினரை நீக்குதல்.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
ர்
தற்காலிகக் காலியிடங்களை நிரப்புதல்.
செயலாட்சிக் குழு.
மருத்துவ மன்றத்தின் அதிகாரங்கள்.
மருத்துவ மன்றத்தின் மற்றும் செயலாட்சிக்
மருத்துவ மன்றத்தின் அலுவலர்களும் பிற
பணியாளர்களும்.
அரசினால் கட்டுப்பாடு செய்யப்படுதல்.
தனி அலுவலரால் விசாரணை செய்யப்படுதல்.
அத்தியாயம் IV
மருத்துவத் தொழிலாற்றுநர்கள் பதிவு
செய்யப்படு தல்.
மருத்துவத் தொழிலாற்றுநர்கள் பதிவு
செய்யப்படுதல்.
மருத்துவத் தொழிலாற்றுநர் பதிவேடும்
அவற்றின் பராமரிப்பும்.
பதிவேட்டில் மாற்றம் செய்தல்.
பதிவு செய்து கொண்டதற்குச் சான்றளித்தல்.
பதிவேட்டிலிருந்து பெயரை நீக்குதல்.
மேல்முறையீடு.
விசாரணை செய்வதற்கான நடைமுறை.
பதிவு பெற்ற மருத்துவத் தொழிலாற்றுநர்களின்
சிறப்புநிமைகள்.
அத்தியாயம் V
தண்டனைகள்
பதிவு பெறாத நபர்கள் சித்த மருத்துவத்தில்
தொழிலாற்றுவது தடை செய்யப்படுதல்.
27.
28.
29.
30.
34.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
ரர்
பட்டங்கள், பட்டயங்கள் முதலானவற்றின்
அசலையொத்த போலிகள் வழங்குவதோ,
அனுமதிப்பதோ, அளிப்பதோ குற்றச் செயல்
நபரின் பெயரோடு விருது, விவரிப்பு முதலான
எவற்றையும் சேர்ப்பதற்கு எதிரான தடை.
பதிவுபெற்ற மருத்துவத் தொழிலாற்றுநராகப்
பொய்யாகத் தொழில் பகட்டுக் காட்டுவதற்கான
தண்டனை.
அத்தியாயம் VI
பல்வகை
குற்றவியல் நீதிமன்றங்களின் அதிகார வரம்பு.
உரிமையியல் நீதிமன்றங்களின் அதிகார
வரம்பிற்கான தடை.
நிறுமங்களால் செய்யப்படும் குற்றச் செயல்கள்.
மருத்துவ மன்றம், குழு முதலானவற்றின்
செயல்கள் ஒரு சில குறைபாடுகளினால்
செல்லத்தகாததாக ஆக்கப்படுதல் கூடாது.
இணைபப்புப்பட்டியலில்: சொல்லப்பட்டுள்ள
தகுதிப் பட்டியலில் மாற்றம் செய்தல்.
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
ஒழுங்குவிதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
காப்பு.
மருத்துவ மன்றக் கருத்துருவினை அரசு
முடிவு செய்வதற்காக ஒதுக்கி வைத்தல்.
அரசினால் கொடுக்கப்படும் பணிப்புரைகள்.
நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்.
இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
இணைபப்புப்பட் டியல்..
1
1997ஆம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவ முறை
(மேம்படுத்துதல் மற்றும் மருத்துவத்
தொழிலாற்றுநர்கள் பதிவு செய்து கொள்ளுதல்)
சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 34,1997)
[தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது, 1997ஆம்
ஆண்டு மே திங்கள் 1௦ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப்
பெற்று பொதுத் தகவலுக்காகத் தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடப்பட்டது!
சித்த மருத்துவ முறையை மேம்படுத்துவதற்கும் தமிழ்நாடு
மாநிலத்தில் சித்த மருத்துவத் தொழிலாற்றுநர்கள் பதிவு
செய்து கொள்வதற்கும் அதனோடு தொடர்புடையதும்
அதன் விளைவானதுமான விவரங்களுக்கும் வகை:
செய்வதற்கான ஒரு சட்டம்.
இந்தியக் குடியரசின் நாற்பத்து எட்டாம் ஆண்டில்
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் இயற்றப்பட்ட
சட்டம் பின்வருமாறு:-
அத்தியாயம் |
முன்னுரை
1. குறுந்தலைப்பு பரப்பெல்லை மற்றும் தொடக்கம்.-
(1) இந்தச் சட்டம், 1997ஆம் ஆண்டு தமிழ்நாடு சித்த
மருத்துவ முறை (மேம்படுத்துதல் மற்றும் மருத்துவத்
தொழிலாற்றுநர்கள் பதிவு செய்து கொள்ளுதல்) சட்டம்
என வழங்கப்படும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் பரவி
நிற்கும்.
(3) இது, அரசு, அறிவிக்கையின் மூலம்
குறிக்கக்கூடிய தேதியில் நடைமுறைக்கு வருதல்
வேண்டும்; மேலும், இந்தச் சட்டத்தின் வெவ்வேறு வகை:
முறைகளுக்கென வெவ்வேறு தேதிகள் குறிக்கப்படலாம்.
2
2. பொருள்வரையறைகள்.- இந்தச் சட்டத்தில்
தறுவாய் வேறுபொருள் குறித்தலான்றி,-
1) இந்தச் சட்டத்தின் வகைமுறை எதன்
தொடர்பாகவும், "இந்தச் சட்டத்தின் தொடக்கம்" என்பது,
அந்த வகைமுறை நடைமுறைக்கு வருகின்ற தேதி எனப்
பொருள்படும்;
(2) "மருத்துவ மன்றம்" என்பது, பிரிவு 4இன்படி
நிறுவப்பட்டுள்ள தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் எனப்
பொருள்படும்;
(3) "அரசு" என்பது, மாநில அரசு எனப்
பொருள்படும்;
(4) "மருத்துவமனை", "காப்பகம்", "நோயுற்றோர்
இல்லம்", மருந்தகம்" "மகப்பேறு மருத்துவமனை" அல்லது
"நல்லாக்க நிலையம்" என்பது, சித்த மருத்துவ சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகின்றதும் மருத்துவ மன்றத்தினால்
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுமான ஒரு நிலையம் எனப்
பொருள்படும்;
(5 "உறுப்பினர்" என்பது, மருத்துவ மன்றத்தின்
ஓர் உறுப்பினர் எனப் பொருள்படும்; மேலும் அதன்
தலைவரையும் உள்ளடக்கும்;
(6) "நவின மருத்துவம்" என்பது ஆங்கிலமுறை
மருத்துவம் என (Allopathic medicine) சாதாரணமாக
வழங்கப்படும் அதன் அனைத்துப் பிரிவுகளிலுமான நவின
அறிவியல்சார் மருத்துவம் என்று பொருள்படுவதோடு,
அறுவை மருத்துவத்தையும் மகப்பேறு மருத்துவத்தையும்
உள்ளடக்கும்; ஆனால், கால்நடை மருத்துவத்தையும்
அதற்கான அறுவை சிகிச்சையையும் உள்ளடக்காது;
(7) "மருத்துவத் தொழிலாற்றுபவர்" என்பது, சித்த
மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுள்ள நபர் எவரும் எனப்
பொருள்படும்;
3
(8) "தலைவர்" என்பது, பிரிவு 6இன் உட்பிரிவு
(1)இன்படி பெயர் குறித்து நியமிக்கப்பட்ட மருத்துவ
மன்றத் தலைவர் எனப் பொருள்படும்;
(9) "பதிவேடு" என்பது, பிரிவு 19இன் உட்பிரிவு
(1)இன்படி பேணிவரப்படும் மருத்துவத் தொழிலாற்றுநர்
பதிவேடு எனப் பொருள்படும்;
(10) "பதிவுபெற்ற மருத்துவத் தொழிலாற்றுநர்”
என்பது, பதிவேட்டில் அப்போதைக்கு பெயர் பதிவாகியுள்ள
மருத்துவத் தொழிலாற்றுநர் ஒருவர் எனப் பொருள்படும்;
(1) "பதிவாளர்" என்பது, பிரிவு 15இன் உட்பிரிவு
(1)இன்படி நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ மன்றப் பதிவாளர்
எனப் பொருள்படும்;
(12) "ஒழுங்குவிதிகள்" என்பது, இந்தச்
சட்டத்தின்படி மருத்துவ மன்றத்தால் செய்யப்பட்டுள்ள
ஒழுங்குவிதிகள் எனப் பொருள்படும்;
(13) "விதிகள்" என்பது, இந்தச் சட்டத்தின்படி
அரசால் செய்யப்பட்டுள்ள விதிகள் எனப் பொருள்படும்;
(14) " இணைப்புப்பட்டியல்" என்பது, இந்தச்
சட்டத்திற்கான இணைப்புப்பட்டியல் எனப் பொருள்படும்;
(15) "சித்த மருத்துவக் கல்வி நிலையம்" என்பது,
இணைபப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட பட்டப் படிப்புகள்:
(Degrees) பட்டயப்படிப்புகள் (Diplomas). விருதுகள் (11065)
அல்லது சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகளுக்கு
அனுமதிக்கப்படுவதற்காக சித்த மருத்துவ முறையிலான
குறித்தகால படிப்புப் பிரிவுகளுக்கு அல்லது பயிற்சிப்
பிரிவுகளுக்கு வகை செய்கின்ற கல்லூரி அல்லது கல்வி
நிலையம் எதுவும் எனப் பொருள்படும்;
(16) "சித்த மருத்துவம்" என்பது, சித்தர்களால்
கண்டறியப்பட்ட மருத்துவ முறை எனப் பொருள்படும்;
4
(17) "பல்கலைக்கழகம்" என்பது, சட்டத்தின்.
மூலம் நிறுவப்பட்டுள்ளதும் சித்த மருத்துவப் படிப்புப்
பிரிவைக் கொண்டிருப்பதுமான இந்தியாவிலுள்ள
பல்கலைக்கழகம் எதுவும் எனப் பொருள்படும்;
அத்தியாயம் ॥
சித்த மருத்துவக் கல்வி நிலையம் நிறுவப்படுதல்
3. மருத்துவ மன்றத்தின் மற்றும் அரசின் ஒப்புதல்
இன்றி புதிய சித்த மருத்துவக் கல்வி நிலையம்
நிறுவப்படுதல் கூடாது.-- (1) நபர் எவரும் மருத்துவ
மன்றத்தின் மற்றும் அரசின் முன் ஒப்புதல் இல்லாமல்
சித்த மருத்துவக் கல்வி நிலையம் எதனையும் நிறுவுதல்
கூடாது:
வரம்புரை: ஆனால், இந்த உட்பிரிவின்படியான
அரசின் ஒப்புதலானது, மருத்துவ மன்றம் தனது ஒப்புதலை
அளித்த பின்னர் மட்டுமே அளிக்கப்படுதல் வேண்டும்.
(2) அரசால் நிறுவப்பட்டுள்ள சித்த மருத்துவக்
கல்வி நிலையத்திற்கு உட்பிரிவு (1) இல் அடங்கியுள்ள
எதுவும் பொருந்தாது.
(3 (@) மருத்துவ மன்றத்தின் ஒப்புதலுக்கான
உட்பிரிவு (1)இன்படியான விண்ணப்பம் ஒவ்வொன்றும்
ஒழுங்குவிதிகளில் வகுத்துரைக்கப்படும் படிவத்திலும்,
விவரங்களுடனும், முறையிலும் செய்யப்படுதல் வேண்டும்.
(b) அரசின் ஒப்புதலுக்கான உட்பிரிவு
(1)இன்படியான விண்ணப்பம் ஒவ்வொன்றும்
வகுத்துரைக்கப்படும் படிவத்திலும், விவரங்களுடனும்,
அத்தகைய முறையிலும் செய்யப்படுதல் வேண்டும்.
(4) இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்கு
முன்னர் நிறுவப்பட்டுள்ளதும், தொடக்கத் தேதியில்
இருந்து வருகின்றதுமான சித்த மருத்துவக் கல்வி
நிலையம் எதுவும் உட்பிரிவு (இல் என்ன
5
அடங்கியிருந்தபோதிலும், இந்தப் பிரிவின்படி மருத்துவ
மன்றத்தாலும், அரசாலும் ஒப்புதல்
அளிக்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுதல் வேண்டும்.
அத்தியாயம் 1l
மருத்துவ மன்றம் நிறுவப்படுதல்
4. மருத்துவ மன்றம் நிறுவப்படுதல்.-
(1) அரசு அறிவிக்கையின் மூலமாக தமிழ்நாடு
மாநிலத்திற்கு என தமிழ்நாடு சித்த மருத்துவ மண்றம் என
அழைக்கப்படும் ஒரு மன்றத்தினை நிறுவுதல் வேண்டும்.
(2) மருத்துவ மன்றமானது ஒரு கூட்டமைப்பாக
இருந்து வருதல் வேண்டும் என்பதோடு நிலையான
வழியுரிமையையும் பொது இலச்சினை ஒன்றையும்
பெற்றிருத்தலும் வேண்டும். அது, மேற்சொன்ன பெயரில்
(அசையும் மற்றும் அசையாச் சொத்து ஆகிய
இரண்டினையும்) ஈட்டுவதற்கும், வைத்திருப்பதற்கும்
உரிமைமாற்றம். செய்வதற்கும், ஒப்பந்தம் செய்து
கொள்வதற்குமான அதிகாரம் பெற்றதாகும்; மேலும், அது
மேற்சொன்ன பெயரில் வழக்கிடுதலும் வழக்கிடப்படுதலும்.
வேண்டும்.
5. மருத்துவ மன்றத்தின் அமைப்பு.- (1) மருத்துவ
மன்றம், பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருத்தல்
வேண்டும், அதாவது:-
(ஐ) மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்
துறையைத் தம் பொறுப்பில் கொண்டுள்ள அரசு
செயலாளர், பதவிவழியாக;
(௦) இந்திய மருத்துவ மற்றும் இயல்முறை
(ஹோமியோபதி) மருத்துவ இயக்குநர், பதவிவழியாக;
(௦9) அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளின்.
தலைவர்கள், பதவிவழியாக;
6
(d) சென்னையிலுள்ள மைய ஆராய்ச்சி
நிலைய (சித்தா) தலைவர், பதவிவழியாக;
(6) இணைப்புப்பட்டியலின் |ஆம் பகுதியில்
குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப்
பெற்றிருக்கிற பதிவுபெற்ற மருத்துவத்
தொழிலாற்றுநர்களால் தங்களுக்கிடையேயிருந்து
தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்,ஒருவர்;
(0) இணைப்புப்பட்டியலின் ॥ஆம் பகுதியில்
குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளில்
ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்கிற பதிவுபெற்ற
மருத்துவத் தொழிலாற்றுநர்களால்
தங்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்படும்.
உறுப்பினர்கள், இருவர்;
(ஐ இணைப்புப்பட்டியலின் ॥॥ஆம் பகுதியில்
குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப்
பெற்றிருக்கிற பதிவுபெற்ற மருத்துவத்
தொழிலாற்றுநர்களால் தங்களுக்கிடையேயிருந்து
தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், நால்வர்;
0) இணைப்புப்பட்டியலின் ஆம் பகுதியில்
குறிப்பிடப்பட்டுள்ள தகுதியினை பெற்றிருக்கிற
பதிவுபெற்ற மருத்துவத் தொழிலாற்றுநர்களால்
தங்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்படும்.
உறுப்பினர்கள், அறுவர்;
0) இணைப்புப்பட்டியலின் ஆம் பகுதியில்
குறிப்பிடப்பட்டுள்ள தகுதியைப் பெற்றிருக்கிற பதிவுபெற்ற
மருத்துவத் தொழிலாற்றுநர்களால்
தங்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்படும்.
உறுப்பினர், ஒருவர்;
0). பதிவுபெற்ற மருத்துவத்
தொழிலாற்றுநர்களாக உள்ள சித்த மருத்துவ
7
நிலையத்தின்: ஆசிரியர் தொகுதியினரால்
தங்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்படும்.
உறுப்பினர், ஒருவர்;
k) பதிவுபெற்ற மருத்துவத் தொழிலாற்றுநர்
களுக்கிடையேயிருந்து அரசினால் பெயர் குறித்து
நியமிக்கப்படும் உறுப்பினர்கள், மூவர்; மற்றும்
0 சித்த மருத்துவமுறை மேம்பாட்டிற்காகச்
சேவை புரிந்துள்ள புகழ்பெற்ற தமிழ்
அறிஞர்களுக்கிடையேயிருந்து அரசினால் பெயர் குறித்து
நியமிக்கப்படும் உறுப்பினர், ஒருவர்.
(2) இந்தச் சட்டத்தில் பிறவாறு வகை
செய்யப்பட்டிருந்தாலன்றி, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
மற்றும் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ள
உறுப்பினர்களின் பதவிக் காலஅளவானது, அவர்
தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நிகழ்விற்கேற்ப பெயர்
குறித்து நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டுகளாக
இருத்தல் வேண்டும்; மேலும் அவர் மீண்டும்
தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ பெயர் குறித்து
நியமிக்கப்படுவதற்கோ தகுதி உடையவராவார்.
(3) காரணம் எதனாலும் மக்கள் நல்வாழ்வு
மற்றும் குடும்ப நலத்துறையைத் தம் பொறுப்பில்
கொண்டுள்ள அரசு செயலாளரோ இந்திய மருத்துவ
மற்றும் இயல்முறை மருத்துவ (ஹோமியோபதி)
இயக்குநரோ மருத்துவ மன்றக் கூட்டம் எதிலும் கலந்து
கொள்ள இயலவில்லையானால், அவர் அரசுத் துணைச்
செயலாளரின் படிநிலைக்குக் குறையாத, தம் துறையைச்
சேர்ந்த அலுவலர் எவரையும் அல்லது நிகழ்வுக்கேற்ப,
மருத்துவ அலுவலரை அத்தகைய கூட்டத்தில்
கலந்துகொள்ள அதிகாரமளித்து அனுப்பலாம். அவ்வாறு
அதிகாரமளித்து அனுப்பப்பட்ட அலுவலர் மருத்துவ
மன்றக் கூட்ட நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு
8
தகுதியுடையவராவார் என்பதோடு வாக்களிக்கவும் உரிமை
பெற்றவராவார்.
6. தலைவர்.- (1) மருத்துவ மன்றத்திற்கென
தலைவ௫ரொருவர் இருப்பார் அவரை மருத்துவ மன்ற
உறுப்பினர்களுக்கிடையேயிருந்து அரசு பெயர்குறித்து
நியமித்தல் வேண்டும்.
(2) தலைவர் மருத்துவ மன்ற
உறுப்பினரொருவராக தொடர்ந்து இருக்கின்ற வரையில்
அவர் அந்த பதவியை வகிப்பார்.
(3) தலைவர் வகுத்துரைக்கப்படும்
அதிகாரங்களைச் செலுத்தி வருதலும் கடமைகளைப்
புரிந்து வருதலும் வேண்டும்.
7. அரசினால் பெயர் குறித்து நியமிக்கப்படுவதன்
மூலம் முதல் மருத்துவ மன்றம்
அமைத்துருவாக்கப்படுதல்.- இந்த அத்தியாயத்தில் என்ன
அடங்கியிருந்தபோதிலும், முதல் மருத்துவ மன்றத்தினை
தலைவர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்களை பெயர்
குறித்து நியமிப்பதன் மூலம் அரசு அமைத்துருவாக்குதல்
வேண்டும்; மேலும், அவ்வாறு அமைத்துருவாக்கப்பட்ட
மருத்துவ மன்றமானது அது அமைத்துருவாக்கப்பட்ட
தேதியிலிருந்து ஓராண்டிற்கு மேற்படாமல் அரசால்
குறிப்பிடப்படும் காலஅளவிற்குப் பதவி வகிக்கும்:
வரம்புரை: ஆனால், இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்கும் விதிகளுக்கும் இணங்க மருத்துவ
மன்றம். ஒன்று அமைத்துருவாக்கப்பட்ட
உடனேயே இந்தப் பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட
முதல் மருத்துவ மன்றம் செயல்படாது போதல் வேண்டும்.
8. உறுப்பினர் பதவிக்கான தகுதிக்கேடு.- நபர்
எவரும், அவர்,.-
9
(1) பொதுவாக தமிழ்நாடு மாநிலத்தில் வசித்து
வருகின்ற ஒருவராக இல்லை என்றால்;
(2) பிரிவு 5இல் உட்பிரிவு (1)இல் கூறு (1)இன்
கீழ் வருகின்ற நிகழ்வில் தவிர, பதிவு பெற்ற ஒரு
தொழிலாற்றுநராக இல்லை என்றால்;
(3) நொடிப்பு நிலையராகத்
தீர்மானிக்கப்படவேண்டி விண்ணப்பித்துக் கொண்டுள்ள
ஒருவராக அல்லது விடுவிப்புபெறாத நொடிப்பு நிலையராக
இருப்பார் என்றால்;
(4) மனச் சீர்கேடுற்றவராக இருந்து,
தகுதிவாய்ந்த நதிமன்றமொன்றினால் அவ்வாறு
விளம்பப்பட்டவராக இருப்பார் என்றால்;
(5) ஒழுக்கக்கேட்டை உள்ளடக்குகின்ற
குற்றச்செயல் எதற்காகவும் குற்றவியல் நீதிமன்றம்
ஒன்றினால் சிறைத்தண்டனை விதித்துத்
தீர்ப்பளிக்கப்பட்டவராக இருப்பார் என்றால்;
(6) மருத்துவ மன்றத்தின் சம்பளம் பெறும்
பணியாளர் ஒருவராக இருப்பார் என்றால்; அல்லது
_ (7) இருபத்தைந்து வயது நிறைவு எய்தாதிருப்பார்
என்றால்;
உறுப்பினர் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ
பெயர்குறித்து நியமிக்கப்படுவதற்கோ தகுதியுடையவர்
ஆகமாட்டார்.
9. உறுப்பினர் பதவி இல்லாது போதல்.-
உறுப்பினரொருவர்,-
(1) எழுத்து வடிவில் தமது பதவி விலகலைத்
தலைவருக்கு அனுப்பி வைப்பதன் மூலம்;
(2) மருத்துவ மன்றம் போதுமானதாகக் கருதுகிற
காரணமில்லாமல், மருத்துவ மன்றத்தின் தொடர்ச்சியான
மூன்று கூட்டங்களுக்கு அவர் வராமலிருப்பதன் பேரில்;
10
(3) தொடர்ச்சியான பன்னிரெண்டு மாத
காலத்திற்கு தமிழ்நாடு மாநிலத்தில் பொதுவாக அவர்
வசித்து வருவது நின்று போவதன் பேரில்;
(4) பதிவேட்டிலிருந்து அவர் பெயர்
நீக்கப்படுவதன்பேரில்;
(5) நொடிப்புநிலையர் ஒருவராக தீர்மானிக்கப்பட
வேண்டி அவர் விண்ணப்பித்துக் கொள்வதன்பேரில்
அல்லது நொடுப்பு நிலையர் ஒருவராக
தீர்மானிக்கப்பட்டிருப்பதன் பேரில்;
(6) மனச்சீர்கேடுற்றவராக தகுதி வாய்ந்த
நீதிமன்றம் ஒன்றினால் அவர் விளம்பப்பட்டிருப்பதன்
பேரில்;
(7) பிரிவு இன் உட்பிரிவு(2)இல்
சொல்லப்பட்டுள்ள பதவிக் காலஅளவு முடிவடைவதன்
பேரில்;
(8) ஒழுக்கக்கேட்டினை உள்ளடக்குகின்ற
குற்றச்செயல் எதற்காகவும் குற்றவியல் நீதிமன்றம்
ஒன்றினால் சிறைத்தண்டனை விதித்து
தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதன் பேரில்; அல்லது
(9) மருத்துவ மன்றத்தின் சம்பளம் பெறும்
பணியாளர் ஒருவராக அவர் ஆவதன் பேரில்,
தமது பதவியிலிருந்து விலகிக் கொண்டதாகக் கருதப்படுதல்
வேண்டும்.
140. உறுப்பினரை ந்க்குதல்.- (1) உறுப்பினர்
எவரையும் தொழில் முறையிலோ, பிறவாறோ எந்த
வகையிலாயினும், உறுப்பினர் ஒருவராக இருப்பதற்கு
அவரைத் தகுதியற்றவராக ஆக்குகின்ற மோசமான
ஒழுக்கக்கேடு எனும் குற்றத்தைப் புரிந்திருப்பவராக அரசு
கருதுமானால், அது எழுத்து வடிவிலான ஆணையின்
மூலம் அவரைப் பதவியிலிருந்து நீக்கலாம்.
11
(2) தமது தரப்பினை எடுத்துரைப்பதற்கான
வாய்ப்பு ஒன்றினை உறுப்பினர் எவருக்கும் கொடுக்காமல்
உட்பிரிவு (1)இன்படி அவரைப் பதவியிலிருந்து நீக்குதல்
கூடாது. அவரைப் பதவி நீக்கம் செய்கின்ற ஆணையின்
படி (நகல்) ஒன்று அவருக்கு அனுப்பித்
தெரிவிக்கப்படுதல் வேண்டும்.
11. தற்காலிகக் காலியிடங்களை நிரப்புதல்.-
(1) தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பெயர்குறித்து
நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரின் பதவியிலுள்ள
தற்காலிகக் காலியிடம் எதுவும் தேர்ந்தெடுக்கப்படுவதன்:
மூலமாகவோ அல்லது நிகழ்விற்கேற்ப பெயர் குறித்து
நியமிப்பதன்: மூலமாகவோ, பிரிவு 5கன்
வகைமுறைகளுக்கு இணங்க நிரப்பப்படுதல் வேண்டும்:
முதலாம் வரம்புரை.- ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர் ஒருவரின் பதவிக்காலம் முடிவடையும்
தேதிக்கு முன்னர் உள்ள ஆறு மாதங்களுக்குள் அவர்
பதவியில் ஏற்படுகின்ற தற்காலிகக் காலியிடம் எதுவும்
அரசின் முந்திய ஒப்புதல் இல்லாமல் நிரப்பப்படுதல் ஆகாது;
இரண்டாம் வரம்புரை.- மேலும், பெயர் குறித்து
நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரின் பதவிக்காலம்
முடிவடையும் தேதிக்கு முன்னர் உள்ள ஆறு
மாதங்களுக்குள் அவர் பதவியில் ஏற்படுகின்ற தற்காலிகக்
காலியிடம் எதுவும் நிரப்பப்படாமல் வைத்திருப்பது
பொருத்தமானது என அரசு கருதினால், அது அவ்வாறே
செய்யலாம்.
(2) தற்செயல் காலியிடமொன்றில் பதவியிடம்
பெற்று அமர்கின்ற உறுப்பினர் ஒருவர், எவரது இடத்தில்
தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ அல்லது பெயர் குறித்து
நியமிக்கப்படுகிறாரோ அவர் அக்காலியிடம்
ஏற்படாதிருந்தால் எவ்வளவு காலம் வரையில் பதவி
12
வகித்திருப்பாரோ அவ்வளவு காலம் வரையில் மட்டுமே
பதவி வகிப்பார்.
12. செயலாட்சிக் குழு.- (1) பின்வருபவர்களைக்
கொண்டிருக்கின்ற மருத்துவ மன்ற செயலாட்சிக் குழு
ஒன்று இருத்தல் வேண்டும், அதாவது,-
(a) தலைவர் பதவி வழியாக; மற்றும்
(௦) மருத்துவ மன்றத்தின் முதற் கூட்டத்தில்
வகுத்துரைக்கப்பட்ட முறையில் மருத்துவ மன்ற
உறுப்பினர்களால் தங்களுக்கிடையேயிருந்து
தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் நால்வர்.
(2) செயலாட்சிக் குழு உறுப்பினர்
ஒவ்வொருவரும், மருத்துவமன்ற உறுப்பினர் ஒருவராக
அவர் தொடர்ந்து இருந்து வருகின்ற வரையில் பதவி
வகிப்பார்.
(3) செயலாட்சிக் குழு உறுப்பினர் ஒருவரின்
பதவியிலுள்ள தற்காலிகக் காலியிடம் எதுவும்
மன்றத்தினால் அம்மன்ற உறுப்பினர் ஒருவரைத்
தேர்ந்தெடுப்பதன் மூலம் நிரப்பப்படுதல் வேண்டும்; மற்றும்.
தற்காலிகக் காலியிடத்திற்கு. அவ்வாறு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், எந்த நபரின் இடத்திற்கு
அவர் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரோ அந்த
நபர் செயலாட்சிக் குழுவின் உறுப்பினராக எஞ்சியுள்ள
எவ்வளவு காலத்திற்கு இருந்திருக்கக்கூடுமோ அவ்வளவு
காலத்திற்கு மட்டுமே பதவி வகிப்பார்.
(4) மருத்துவ மன்றம் விதிகளுக்கு இணங்கவும்
அரசின் முந்திய ஒப்பளிப்புடனும் தனது அதிகாரங்களில்
அல்லது அலுவல்களில் எதனையும் செயலாட்சிக்
குழுவிடம் ஒப்படைக்கலாம்.
13. மருத்துவ மன்றத்தின் அதிகாரங்கள்.-
(1) மருத்துவ மன்றம்,-
13
(ஐ அரசின் ஒப்பளிப்புடன் சித்த மருத்துவக்
கல்வி நிலையத்தை நிறுவலாம்;
(b) சித்த மருத்துவக் கல்வி நிலையத்தை
நிறுவுவதற்கு ஒப்புதல் அளிக்கலாம் மற்றும் அரசின் முன்
ஒப்புதலுடனும் அவ்வாறு அளித்த ஒப்புதலை விலக்கிக்
கொள்ளலாம்;
(6) சித்த மருத்துவக் கல்வி நிலையத்திற்கு
மானிய உதவி அளிக்கலாம்;
@ மருத்துவ மன்றத்தினால் ஒப்புதல்
அளிக்கப் பெற்றுள்ள நிறுவன அமைப்பினையுடைய சித்த
மருத்துவக்கல்வி நிலையம் எதனையும் தம் பொறுப்பில்
கொண்டுள்ள ஆளுகைக் குழுவையோ
அதிகாரஅமைப்பையோ அத்தகைய கல்வி நிலையத்தின்:
திறமையை தீர்மானிக்கும்பொருட்டு மருத்துவ
மன்றத்திற்குத் தேவைப்படக்கூடிய அறிக்கைகளையோ,
விவர உரைகளையோ, பிற தகவல்களையோ,
பணிப்புரையில் குறிப்பிடப்படும் காலஅளவுக்குள்ளாக
அளிக்குமாறு பணிக்கலாம்;
(6) சித்த மருத்துவக் கல்வி நிலையத்தையும்;
மருத்துவமனைகள், மருந்தகங்கள், காப்பகங்கள்,
நோயுற்றோர் இல்லங்கள், மகப்பேறு மருத்துவ மனைகள்,
நல்லாக்க நிலையங்கள் ஆகியவற்றையும் கூட ஆய்வு
செய்யலாம்;
) usdw மருத்துவ மனைகளையும்
மருந்தகங்களையும் திறப்பதற்கு அரசிடம்
பரிந்துரைக்கலாம்;
@ சித்த மருத்துவக் கல்வி நிலையம்
வகை செய்துள்ள பாடப்பிரிவுகளுக்கான பாட நூல்களை
வகுத்துரைத்து வெளியிடலாம்;
14
(h) சித்த மருந்துகளின் தர அளவுக்கான
நெறிகளை உருவாக்கலாம்;
O சித்த மருந்துகளை தயாரித்து
விற்பதற்கான ஒழுங்கு விதிகளைச் செய்யலாம்;
O வழிவழியாக மருத்துவத்
தொழிலாற்றுநர்களால் மறை பொருளாக வைத்து வரப்பட்ட
பல்வேறு சித்த மருந்துகளையும் மருந்துமுறைப் பட்டியல்
குறிப்புகளையும் ஆராய்ந்து கண்டு அவற்றை
மக்களிடையே நன்கறியச்செய்யலாம்;
09. சித்த மருத்துவத்தில் அறிவியல்
வழிகளிலான ஆராய்சிக்கான இலக்குகளையும்
முன்மாதிரிகளையும் வகுத்தமைக்கலாம்;
) ஆராய்ச்சி எசனையுமோ ஆராய்ச்சி
நோக்கோடு கூடிய திட்டம் எதனையுமோ
மேற்கொள்ளலாம்;
m) சித்த மருத்துவத்தில் தேசிய அளவு
மற்றும் பன்னாட்டளவு ஆக இரண்டு நிலைகளிலும்.
ஆராய்ச்சி நடவடிக்கைகளையும் அவற்றின்.
விளைவுகளையும் பரப்பலாம்;
n சித்த மருத்துவத்தில் உள்ள
அரியதான மற்றும் மந்தண நிலையில் பேணி வரப்பட்ட
ஓலைச் சுவடி களையும், பழைய கையெழுத்துப்
பிரதிகளையும் மற்றும் அரியதான அச்சுப் புத்தகங்களையும்
முயன்று பெற்று, அவற்றை வெளியிடச் செய்வதையும்
ஆவணமாகப் பாதுகாத்து வைப்பதையும் மேற்கொள்ளலாம்;
(0) அதன் கூட்டங்களை நடத்துவதற்கான
ஒழுங்குவிதிகளைச் செய்யலாம்;
(2) புதிய படிப்புப் பிரிவுகள் தொடங்குவது
குறித்து யோசனை கூறலாம் என்பதோடு அத்தகைய
படிப்புப் பிரிவுகளுக்கான ஒழுங்குவிதிகளைச் செய்யலாம்;
15
(@ மானியங்கள் , நன்கொடைகள்,
கொடைகள், நிலைக்கொடைகள் ஆகியவற்றைப் பெற்றுக்
கொள்ளலாம்;
[மு] இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ள
அதிகாரங்களையும் அலுவல்களையும்
நிறைவேற்றுவதற்குத் தேவையாயிருக்கக் கூடிய
செலவுகளைச் செய்யலாம், நடவடிக்கைகளை ஏற்கலாம்
மற்றும் செயல்களைச் செய்யலாம்;
(5) பதிவுபெற்ற மருத்துவத் தொழிலாற்றுநர்
ஒருவரால் பின்பற்றப்பட வேண்டிய தொழில்முறை
நடத்தை, சமுதாய ஒழுங்குமுறை, ஒழுக்கக்கோட்பாடுகள்
ஆகியவற்றின் தரநிலைகளை ஒழுங்குவிதிகளின் மூலம்
வகுத்துரைக்கலாம்;
00 மருந்து மூலிகைகளையும் தாது
உப்புக்களையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளையும்
ஆராய்ச்சிகளையும் ஊக்குவிக்கலாம்.
(2) இந்தச் சட்டத்தின் நோக்கங்களை
நிறைவேற்றி வருவதற்காக அரசு பணிக்கக்கூடிய பிற
அலுவல்களை மருத்துவ மன்றம் புரிந்து வருதல்
வேண்டும்.
14. மருத்துவ மன்றத்தின் மற்றும் செயலாட்சிக்
குழுவின் கூட்டங்கள்.- (1) மருத்துவ மன்றமும்
செயலாட்சிக் குழுவும் ஒழுங்குவிதிகளால்
வகுத்துரைக்கப்படக்கூடிய நேரத்திலும். இடத்திலும்
கூடுதல் வேண்டும் மற்றும் மருத்துவ மன்றத்தின் அல்லது
செயலாட்சிக் குழுவின்: ஒவ்வொரு கூட்டமும்
ஒழுங்குவிதிகளில் வகுத்துரைக்கப்படும் நபரினாலும்.
அவ்விதிகளால் வகுத்துரைக்கப்படும் முறையிலும்
கூட்டப்படுதல் வேண்டும்:
16
வரம்புரை: ஆனால், அத்தகைய ஒழுங்குவிதிகள்.
செய்யப்படுகிற வரையில், மருத்துவ மன்றத்தின் அல்லது
செயலாட்சிக்குழுவின் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும்
முகவரியிட்டு கடிதத்தின் மூலம் தாம் உகந்ததென கருதக்
கூடிய நேரத்திலும் இடத்திலும், தலைவர்,
மருத்துவமன்றத்தின் அல்லது செயலாட்சிக் குழுவின்
கூட்டத்தினைக் கூட்டுவது சட்டப் படியானதாகும்.
(2) வினாக்கள் அனைத்தும், மருத்துவ
மன்றத்தின் அல்லது செயலாட்சிக்குழுவின் கூட்டம்
எதிலும் வந்திருந்து வாக்களிக்கின்ற உறுப்பினர்களின்
பெரும்பாண்மையால் முடிவு செய்யப்படுதல் வேண்டும்,
மற்றும் வாக்குகள் சமமாக இருக்கின்ற நிகழ்வில்,
தலைவரோ தலைமை வகிக்கின்ற உறுப்பினரோ
இரண்டாவது அல்லது அறுதி வாக்கொன்றை
கொண்டிருப்பார் மற்றும் அதனை அளிப்பதன் மூலம்
முடிவுசெய்தல் வேண்டும்:
வரம்புரை: ஆனால், தேர்தல் ஒன்றில் வாக்குகள்:
சமமாக இருக்கும் போது குலுக்குச் சீட்டின் மூலம் தெரிவு
செய்யப்படுதல் வேண்டும்.
(3) மருத்துவ மன்றத்தின் உறுப்பினர்களுக்கும்
செயலாட்சிக் குழுவின். உறுப்பினர்களுக்கும்
வகுத்துரைக்கப்படக்கூடிய நாள்படிகளும் பயணப்படிகளும்
அளிக்கப்படுதல் வேண்டும்.
15. மருத்துவ மன்றத்தின் அலுவலர்களும் பிற
பணியாளர்களும்.- (1) (8) மருத்துவ மன்றம், பதிவாளர்
ஒருவரை நியமித்தல் வேண்டும்; அவர்,-
() மருத்துவ மன்றத்தின் செயலாளராக;
(i) வேறொரு நபரை பொருளாளராக
மருத்துவ மன்றம் நியமிக்கிண்றவரையில்
17
மருத்துவ மன்றத்தின் பொருளாளராக;
மற்றும்
0 செயலாட்சிக் குழுவின் செயலாளராக;
இருந்துவருவார்.
(௦) மருத்துவ மன்றம் எப்பொழுது
வேண்டுமானாலும் இதற்கென கூட்டப்பட்ட சிறப்புக்
கூட்டம் ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட தீர்மானம் ஒன்றின்:
மூலமாகவும் வந்திருந்து வாக்களிக்கின்ற
உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத
பெரும்பான்மையாலும் பதிவாளரைப் பதவியிலிருந்து
நீக்கம் செய்யலாம்.
வரம்புரை: ஆனால், பதிவாளரைப் பதவியிலிருந்து
நீக்கம் செய்ய இந்தக் கூறின்படி நடவடிக்கை எதுவும்
எடுப்பதற்கு முன்னர், அவரது தரப்பினை
எடுத்துரைப்பதற்கான வாய்ப்பு ஒன்று அவருக்கு
வழங்கப்படுதல் வேண்டும்.
(6) (@) எனும் கூறின்படியான பதிவாளரின்.
நியமனமோ (௦) எனும் கூறின்படியான அவரது பதவி
நீக்கமோ அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டிருத்தல் வேண்டும்,
மேலும் அத்தகைய ஒப்பதல் அளிக்கப்படுகின்ற வரையில்
நடைமுறைக்கு வருதல் கூடாது.
(2) பதிவாளரின் பதவியில் தற்காலிகக்
காலியிடம் எதுவும் ஏற்படுகிறபோது அல்லது வாராமை,
நோய் எனும் காரணத்தினாலோ பிற காரணம் எதற்காகவோ
பதிவாளர் தமது பதவி அதிகாரங்களைச் செலுத்திவரவும்,
கடமைகளை ஆற்றிவரவும் இயலாதபோது, அவருடைய
அதிகாரங்களும் கடமைகளும், தலைவர் பணிக்கக்கூடிய
அத்தகைய நபரால் அத்தகைய முறையிலும் மூன்று
மாதங்களுக்கு மேற்படாத அத்தகைய காலஅளவுக்கும்
செலுத்தி வரப்படவும் ஆற்றிவரப்படவும் வேண்டும்.
18
(3) மருத்துவ மன்றம் இந்தச் சட்டத்திண்படியான
தனது அலுவலைப் புரிந்துவருவதற்குத் தேவை என அது
கருதக் கூடிய பிற அதிகாரிகளையும், பணியாளர்களையும்
கூட நியமிக்கலாம்.
(4) மருத்துவ மன்றத்தின் பதிவாளர் மற்றும் பிற
அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோரின் ஊதியமும் பணி
குறித்த பிற பணி நிபந்தனைகளும் ஒழுங்குவிதிகளால்
குறிப்பிடப்படும் விதத்தில் இருத்தல் வேண்டும்.
(ஐ இந்தப் பிரிவின்படி நியமிக்கப்பட்டுள்ள
பதிவாளர் உள்ளிட்ட மருத்துவ மன்றத்தின் அனைத்து
அலுவலர்களும் பணியாளர்களும் இந்திய தண்டனைத்
தொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம் XLV/1860) பிரிவு
21இன்: பொருளின்படி பொது ஊழியர்களாகக்
கருதப்படுதல் வேண்டும்.
16. அரசினால் கட்டுப்பாடு செய்யப்படுதல்.-
மருத்துவ மன்றம் இந்தச் சட்டத்தின்படியாகவோ,
சட்டத்தினாலோ தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்
எதனையும் செலுத்துவதைப் புறக்கணித்துள்ளது என்றோ,
அதனை மீறியுள்ளது என்றோ, தவறாகப்
பயன்படுத்தியுள்ளது என்றோ, அல்லது இந்தச்
சட்டத்தின்படியாகவோ சட்டத்தினாலோ தன் மீது
சுமத்தப்பட்டுள்ள கடமை எதனையும் ஆற்றுவதைப்
புறக்கணித்துள்ளது என்றோ, எப்பொழுதேனும் அரசுக்குத்
தோன்றுமானால், அவ்வாறு புறக்கணித்தது, மீறியது
அல்லது தவறாகப் பயன்படுத்தியது குறித்த விவரங்களைப்
பற்றி மருத்துவமன்றத்திற்கு அறிக்கை அளிக்கலாம்;
மேலும் இதன்பொருட்டுக் குறிப்பிடப்படும்.
காலத்திற்குள்ளாக அத்தகைய புறக்கணிப்பை, மறுகையை
அல்லது தவறான பயன்படுத்துகையை சரிசெய்வதற்குத்
தேவையாக இருக்கக்கூடிய பணிப்புரைகளைப் (directions)
பிறப்பிக்கலாம். குறிப்பிடப்பட்ட காலஅளவுக்குள்ளாக
19
அத்தகைய புறக்கணிப்பை, மறுகையை அல்லது தவறான
பயன்படுத்துகையை சரிசெய்ய மருத்துவ மன்றம்.
தவறுமானால், அரசு அத்தகைய புறக்கணிப்பை,
மறுகையை அல்லது தவறான பயன்படுத்துகையை சரி
செய்கின்ற நோக்கத்திற்காக அது பொருத்தமெனக்
கருதக்கூடிய காலஅளவுக்கு, பொருத்தமெனக்
கருதக்கூடிய நபரறினாலோ அதிகாரஅமைப்பினாலோ
மருத்துவமன்றத்தின் அதிகாரங்களில் எதனையும்
செலுத்திவருமாறு அல்லது கடமைகளில் எதனையும்
ஆற்றிவருமாறு செய்விக்கலாம்.
17. தனி அலுவலரால் விசாரணை
செய்யப்படுதல்.- [6] பிரிவு 16இல் என்ன
அடங்கியிருந்தபோதிலும் அரசு, ஒரு மாவட்ட நீதிபதியாக
இருக்கிற அல்லது இருந்திருக்கின்ற அவ்வாறாக
நியமிக்கப்படுவதற்குத் தகுதியுடையவராயிருக்கிற, தனி
அலுவலர் ஒருவரை, பிரிவு 16இல் குறிப்பிடப்பட்டுள்ள
புறக்கணிப்பு, மறுகை அல்லது தவறான பயன்படுத்துகை
குறித்து விசாரணை செய்யும் பொருட்டு நியமிக்கலாம்
என்பதோடு அத்தகையை புறக்கணிப்பு, மறுகை அல்லது
தவறான பயன்படுத்துகை குறித்த விவரங்களை
விசாரணை செய்வதற்காக அவருக்கு குறிப்பிட்டு
அனுப்பலாம். தனி அலுவலர் சுருக்குமுறையில்
விசாரணையை நடத்தி முடித்து அவருக்கு குறிப்பிட்டு
அனுப்பிய விவரங்களின் உண்மை குறித்து அரசுக்கு
அறிக்கை கொடுத்தல் வேண்டும். மேலும், அத்தகைய
புறக்கணிப்பு, மறுகை அல்லது தவறான பயன்படுத்துகை
எதுவும் நிலைநாட்டப்பட்டிருப்பதாக தணி அலுவலர்,
கண்டறிகிற நிகழ்வில், அந்தத் தனி அலுவலர்,
தேவையெனத் தாம் கருதுகின்ற தீர்வு நடவடிக்கைகளைப்
பறிந்துரைத்தல் வேண்டும்.
(2) அரசானது, தான்: வழங்குகின்ற
பணிப்புரையில் குறிப்பிடப்படக்கூடிய காலஅளவுக்குள்:
20
தனி அலுவலர் பரிந்துரைத்துள்ள தீர்வு நடவடிக்கைகளை
நிறைவேற்றுமாறு மருத்துவ மன்றத்தைப் பணிக்கலாம்.
மருத்துவ மன்றம் அத்தகைய பணிப்புரை எதற்கும்
இணங்கி நடக்கத் தவறுமானால், அரசு, தனி அலுவலரின்
பரிந்துரைக்கு செயல்வடிவம் கொடுக்கத் தேவையானது
என அது கருதுகின்ற ஆணைகளைப் பிறப்பிக்கலாம்.
அல்லது நடவடிக்கைககளை எடுக்கலாம்.
(3) தனி அலுவலர், அவரால் நடத்தப்பட
வேண்டியுள்ள விசாரணை ஏதொன்றின்:
நோக்கத்திற்காகவும், 1908ஆம் ஆண்டு உரிமையியல்
வழக்கு விசாரணைமுறை தொகுப்புச் சட்டத்தின்படி
(மையச் சட்டம் 71908) உரிமையியல் நீதிமன்றம்
ஒன்றால் செலுத்தப்படுவதைப் போன்றே உறுதிமொழி
செய்து வைப்பதற்கும் சாட்சிகள் முன்னிலையாவதை
மற்றும் ஆவணங்கள். தாக்கல் செய்யப்படுவதை
வலியுறுத்துவதற்குமான அதிகாரத்தையும்
தேவையாயிருக்கின்ற பிற அதிகாரங்களையும்
பெற்றிருப்பார்.
அத்தியாயம் -1V
மருத்துவத் தொழிலாற்றுநர்கள் பதிவு செய்யப்படுதல்
18. மருத்துவத் தொழிலாற்றுநர்கள் பதிவு
செய்யப்படுதல். - 1) இந்தச் சட்டத்தின் பிற
வகைமுறைகளுக்கு உட்பட்டு,
(8) இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
தகுதிகளில் எதனையும் பெற்றிருக்கிற நபர்
ஒவ்வொருவரும் ; அல்லது
(b) இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
தகுதிகளில் எதனையும் பெற்றிராமல், ஆனால் மருத்துவ
மன்றத்தினால் ஏற்பிசைவளிக்கப்பட்டுள்ள தகுதிகளில்
எதனையும் பெற்றிருக்கிற நபர் ஒவ்வொருவரும்,
21
பிரிவு 19இன் உட்பிரிவு (1)இன்படி பேணிவரப்படும்.
பதிவேட்டில் தமது பெயர் பதிவு செய்யப்படுவதற்குத்
தகுதியுடையவர் ஆவார்.
2 இந்தப் பிரிவின்படி பதிவு செய்து
கொள்ளப்படுவதற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும்,
இருநூற்று ஐம்பது ரூபாய்களுக்கு மேற்படாமல் விதிகளில்
வகுத்துரைக்கப்படும் கட்டணத்துடனும்,
ஒழுங்குவிதிகளின் மூலம் மருத்துவ மன்றத்தினால்
வகுத்துரைக்கப்படும் பதிவு செய்து கொள்வதற்கான
தகுதிச்சான்றுடனும் பதிவாளருக்கு அனுப்பப்படுதல்:
வேண்டும்.
(3. உட்பிரிவு (1)இல் என்ன அடங்கியிருந்த
போதிலும், பதிவு செய்துகொள்வதற்கு நபர் ஒருவரை தகுதி
இழக்கச் செய்கின்ற அளவுக்கு குணநலனில் குறைபாடாக
இருப்பதாக மருத்துவ மன்றம் கருதுகிற, குற்றச்செயல்
எதற்காகவும் தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்ற நபர்
எவரையும் நேர்முகமாகவோ அல்லது வழக்கறிஞர்
மூலமாகவோ கேட்கப்படுவதற்கான வாய்பொன்று
விசாரணையில் அளிக்கப்பட்டு ஏதேனும் தொழில்
முறையிலான அளவில் மோசமான நடத்தை எனும்
குற்றத்தினைப் புரிந்திருப்பதாக மருத்துவ மன்றத்தினால்
அவ்விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்ற
நபர் எவரையுமோ மருத்துவ மன்றம் பதிவு செய்ய
மறுக்கலாம்,
(4. உட்பிரிவு (1)இன்படியான பதிவு
ஒவ்வொன்றும் ஐந்தாண்டு காலஅளவுக்கு
நடைமுறையில் இருக்கும்; மேலும் உட்பிரிவு (5)இன்
வகைமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில்,
ஐந்தாண்டு காலஅளவுக்குப் புதுப்பிக்கப்படலாம்.
(௪. உட்பிரிவு (4)இன்படி பதிவைப்
புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும்,
22
வகுத்துரைக்கப்படும் காலத்திற்குள்ளாகவும் இருபத்தைந்து
ரூபாய்களுக்கு மேற்படாமல் வகுத்துரைக்கப்படும்
கட்டணத்துடனும் செய்துக் கொள்ளப்படுதல் வேண்டும்;
மற்றும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் பதிவு செய்தல்
தொடர்பாக அவை பொருந்துவன போன்றே கூடிய
அளவுக்கு பதிவுவொன்றைப் புதுப்பிப்பது தொடர்பாகவும்
பொருந்துதல் வேண்டும்.
19. மருத்துவத் தொழிலாற்றுநர் பதிவேடும்
அவற்றின்: பேணுகையும்.- (1) மருத்துவத்
தொழிலாற்றுநர்களின். பின்வரும் ஒவ்வொரு
வகையினருக்காகவும் தனித்தனி பகுதியுடன் பதிவேடு
ஒன்று பேணிவரப்படுதல் வேண்டும்; அதாவது:-
() இணைப்புப்பட்டியலின் |ஆம் பகுதியில்
குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளில்
எதனையும் பெற்றிருக்கிறவர்களும்
இந்தச் சட்டத்தின்படி பதிவு
செய்யப்பட்டுள்ளவர்களுமான மருத்துவத்
தொழிலாற்றுநர்கள்;
(0) இணைப்புப்பட்டியலின் ॥ஆம் பகுதியில்
குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளில்
எதனையும் பெற்றிருக்கிறவர்களும்
இந்தச் சட்டத்தின்படி
பதிவு செய்யப்பட்டுள்ளவர்களுமான
மருத்துவத் தொழிலாற்றுநர்கள்;
(0) இணைப்புப்பட்டியலின் ॥॥ஆம் பகுதியில்
குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளில்
எதனையும் பெற்றிருக்கின்றவர்களும்
இந்தச் சட்டத்தின்படி
பதிவு செய்யப்பட்டுள்ளவர்களுமான
மருத்துவத் தொழிலாற்றுநர்கள்;
23
(iv) இணைப்புப்பட்டியலின் ஆம் பகுதியில்
குறிப்பிடப்பட்டுள்ள தகுதியினைப்
பெற்றிருக்கிறவர்களும் இந்தச்
சட்டத்தின்படி பதிவு
செய்யப்பட்டுள்ளவர்களுமான மருத்துவத்
தொழிலாற்றுநர்கள்;
(v) இணைப்புப்பட்டியலின் ॥ஆம் பகுதியில்
குறிப்பிடப்பட்டுள்ள தகுதியினைப்
பெற்றிருக்கிறவர்களும் இந்தச்
சட்டத்தின்படி பதிவு
செய்யப்பட்டுள்ளவர்களுமான மருத்துவத்
தொழிலாற்றுநர்கள்; மற்றும்.
(Vi) இணைப்புப்பட்டியலின் 1ஆம் பகுதியில்
குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளில்
எதனையும் பெற்றிருக்கிறவர்களும்
இந்தச் சட்டத்தின்படி
பதிவு செய்யப்பட்டுள்ளவர்களுமான
மருத்துவத் தொழிலாற்றுநர்கள்;
(2). உட்பிரிவு (1)இன்படி பேணி வரப்படும்
பதிவேடானது, வகுத்துரைக்கப்படும் படிவத்தில் இருத்தலும்
வகுத்துரைக்கப்படும் விவரங்களைக் கொண்டிருத்தலும்
வேண்டும்.
(3). உட்பிரிவு (1)இல் குறிப்பிடப்பட்ட
பதிவேட்டினை, பதிவாளர், இந்தச் சட்டத்தின் மற்றும்
விதிகளின் வகைமுறைகளுக்கு இணங்கவும் மருத்துவ
மன்றத்தின். ஆணைக்கு இணங்கவும் வைத்துப்
பேணிவருதலும் அவ்வப்போது பதிவேட்டினை மறு ஆய்வு
செய்து வகுத்துரைக்கப்படும் முறையில் வெளியிடுதலும்
வேண்டும்.
(4). உட்பிரிவு (1)இன்படி பேணி வரப்படும்
பதிவேடானது, 1872ஆம் ஆண்டு இந்திய சாட்சியச்
24
சட்டத்தின் (மையச் சட்டம் 11872) பொருளின்படி பொது
ஆவணம் ஒன்றாகக் கருதப்படுதல் வேண்டும்.
20. பதிவேட்டினில் மாற்றம் செய்தல்.- (1) புதிய
பெயரிலோ, இந்தச் சட்டத்தின்படி பதிவு செய்து
கொண்டதற்குப் பின்னர் பெறப்பட்ட கூடுதல் தகுதி
எதனையும் பொறுத்தோ, பதிவு பெற்ற மருத்துவத்
தொழிலாற்றுநர் எவரும், வகுத்துரைக்கப்படும்
முறையிலும் நூறு ரூபாய்க்கு மேற்படாமல்
வகுத்துரைக்கப்படும் கட்டணத்துடனும் பதிவாளரிடம் பதிவு
செய்து கொள்ளப்படுவதற்காக விண்ணப்பம் செய்து
கொள்ளலாம்.
(2) உட்பிரிவு (1)இன்படி செய்து கொள்ளப்பட்ட
விண்ணப்பம் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படும்
முறையில் பரிச்லனை செய்யப்படுதலும்,
அவ்விண்ணப்பதாரரைப் பொறுத்து பதிவேட்டில்
செய்துள்ள பதிவில் திருத்தம் செய்யப்பட்டு அல்லது
நிகழ்வுக்கேற்ப, நீக்கம் செய்யப்பட்டு பதிவேட்டின் உரிய
பகுதிகளில் புதிய பதிவு செய்யப்படுதலும் வேண்டும்.
21. பதிவு செய்து கொண்டமைக்குச்
சான்றளித்தல்.- (1) பதிவேட்டில் பெயர் பதிவு செய்து
கொண்டிருக்கின்ற நபர் ஒவ்வொருவருக்கும்,
வகுத்துரைக்கப்படும் படிவத்தில் பதிவுச் சான்றிதழ்
ஒன்றை வழங்குதல் வேண்டும்.
(2) உட்பிரிவு (1)இன்படி வழங்கப்பட்ட பதிவுச்
சான்றிதழ் தொலைந்தோ, அழிந்தோ அல்லது
சிதைக்கப்பட்டோ இருக்கிறது என்று பதிவாளர் மன
நிறைவடையுமாறு மெய்பித்துக் காட்டப்படும்போது, ஐம்பது
ரூபாய்க்கு மேற்படாமல், வகுத்துரைக்கப்படும் கட்டணம்
செலுத்தப்படுவதன் பேரில், பதிவாளர், அதன் மாற்றுப் படி
(நகல்) ஒன்றினை (duplicate) வழங்கலாம்.
25
22. பதிவேட்டிலிருந்து பெயரை அகற்றுதல்.-
(1) பதிவேட்டில் பதிவு எதுவும் மோசடியாகவோ
தவறாகவோ செய்யப்பட்டிருக்கின்றது என்று மருத்துவ
மன்றம் மனநிறைவடைந்தால், விதிகளுக்குட்பட்டு,
சம்மந்தப்பட்ட நபருக்கு அறிவிப்புக் கொடுத்து அவரது
ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் அவற்றைக்
கேட்டறிந்த பின்னர் பதிவேட்டில் உள்ள அத்தகைய பதிவு
நீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது, நிகழ்வுக்கேற்ப,
திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஆணையிடலாம்.
2. @ பதிவு பெற்ற மருத்துவத்
தொழிலாற்றுநர்.-
() குணநலனில் குறைபாடாக இருப்பதாக
மருத்துவ மன்றம் கருதுகிற
குற்றச்செயல் எதற்காகவும்,
தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டு
இருக்கின்றவர் என்றால்; அல்லது
(i) ஏதேனும் தொழில் முறையிலான
அளவில் அவப்பெயர் தரக்கூடிய
நடத்தை எனும் குற்றத்தைப்
புரிந்திருப்பதாக மருத்துவ
மன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பவர்
என்றால்; அல்லது
(i) பிரிவு 18இன் உட்பிரிவு (4)இன்படி
தமது பதிவைப் புதுப்பித்துக் கொள்ளாமல்
இருப்பவர் என்றால்;
மருத்துவ மன்றமானது அவரது தரப்பினை
எடுத்துரைப்பதற்கான வாய்ப்பு ஒன்றினை அவருக்குக்
கொடுத்த பின்னர் அவரது பெயரைப் பதிவேட்டிலிருந்து
ஒட்டுமொத்தமாகவோ அல்லது குறிப்பிடப்பட்ட ஒரு
காலஅளவிற்கோ நீக்கம் செய்து வைக்குமாறு பணிக்கலாம்.
26
() சம்மந்தப்பட்ட நபரின் விண்ணப்பம்
ஒன்றின் பேரில், விதிகளுக்கு உட்பட்டு, அவ்வாறு நீக்கம்
செய்துவைக்கப்பட்ட பெயர் எதுவும் மீண்டும் பதிவில்
இருத்திவைக்கப்பட வேண்டும் என்று மருத்துவ மன்றம்
பணிக்கலாம்.
(3) (ஐ மருத்துவ மன்றமானது, விதிகளுக்கு
உட்பட்டு,
0) பதிவு பெற்ற மருத்துவத்
தொழிலாற்றுநர் எவரும் கறந்து
விடுவாரானால், அவரது பெயரை
பதிவேட்டிலிருந்து விட்டுவிடும்படிப்
பணிக்கலாம்:
வரம்புரை: ஆனால், அந்த இறப்பு சம்பந்தப்பட்ட
தகவலானது வகுத்துரைக்கப்படும் அலுவலரால்
வகுத்துரைக்கப்படும் படிவத்தில் வகுத்துரைக்கப்படும்.
முறையில் அளிக்கப்படுதல் வேண்டும்.
(i) பதிவுபெற்ற மருத்துவத்
தொழிலாற்றுநர் பதிவேட்டிலிருந்து
தமது பெயரை விட்டுவிடுவதற்கான
விண்ணப்பம் ஒன்றைச் செய்து
கொண்டிருப்பரானால், அவரது
பெயரை பதிவேட்டிலிருந்து
விட்டுவிடும்படிப் பணிக்கலாம்.
(b) பதிவேட்டிலிருந்து (ஐ) 0) எனும் கூறின்படி
தமது பெயர் விட்டுவிடப்பட்டிருக்கின்ற மருத்துவத்
தொழிலாற்றுநர் எவரும், பிரிவு 18இன் உட்பிரிவு
(1)இன்படி புதிதாக மீண்டும் பதிவு செய்துகொள்ள
விண்ணப்பம் செய்துகொள்ளலாம்.
(4) மருத்துவத் தொழிலாற்றுநர் எவரது பெயரும்
பதிவேட்டிலிருந்து நீக்கப்படுமாறோ விட்டுவிடப்படுமாறோ
27
மருத்துவ மன்றத்தால் பணிக்கப்படுகிற போதெல்லாம், அது
பொருத்தமெனக் கருதுகிற முறையில் அத்தகைய நீக்கம்
அல்லது விட்டுவிடுகை பற்றிய செய்தியை அது
வெளியிடலாம் அல்லது வெளியிடச் செய்விக்கலாம்.
23. மேல்முறையீடு.- (1) பிரிவு 18இன் உட்பிரிவு
(3) இன்படியான அல்லது பிரிவு 22இன்படியான மருத்துவ
மன்றத்தின் ஆணை ஒன்றினால் குறையுற்ற நபர் எவரும்
அரசிடம் மேல்முறையீடு செய்துகொள்ளலாம்.
(2) உட்பிரிவு (1)இன்படியான மேல்முறையீடு
ஒவ்வொன்றும் எந்த ஆணைக்கெதிராக மேல்முறையீடு
செய்து கொள்ளப்படுகிறதோ அந்த ஆணை பெறப்பட்ட
தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாக தாக்கல்
செய்து கொள்ளப்படுதல் வேண்டும்:
வரம்புரை: ஆனால், மேல்முறையீட்டாளர் உரிய
காலத்தில் மேல்முறையீடு எதனையும் தாக்கல்
செய்யாததற்குப் போதிய காரணமிருந்தது என்று அரசு
மனநிறைவடைந்தால், அம்மேல்முறையீட்டைத் தாக்கல்
செய்து கொள்வதற்காக மூன்று மாதங்களுக்கு மேற்படாத
கூடுதல் காலத்தை அனுமதிக்கலாம்.
(3) இந்தப் பிரிவிண்படியான மேல்முறையீடு
ஒன்றை முடிவு செய்வதில். மேல்முறையீட்டாளருக்கு
அவர் தரப்பை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பு
ஒன்றினைக் கொடுத்த பிண்ணர் அதன் மீது தான்
பொருத்தமெனக் கருதக்கூடிய ஆணையை அரசு
பிறப்பிக்கலாம்.
(4) அத்தகைய மேல்முறையீட்டின் மீது அரசு
பிறப்பித்த ஆணையானது அறுதியானதாகும்.
(5 அரசு இந்தப் பிரிவின்படியான தமது
அதிகாரங்களைச் செலுத்துவதற்கு உட்பட்டு, தான்:
28
பொருத்தமெனக் கருதக்கூடிய இடைநிலை ஆணையைப்
(Interlocutory Order) பிறப்பிக்கலாம்.
24. விசாரணை செய்வதற்கான நடைமுறை.-
(1) பிரிவு 148இன் உட்பிரிவு (3)இன்படியான விசாரணை
எதுவும், மருத்துவ மன்றத்தினாலோ இந்த
நோக்கத்திற்காக மருத்துவ மன்றத்தின்
உறுப்பினர்களுக்கிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட
அம்மன்றத்தின் மூன்று உறுப்பினர்களைக்
கொண்டிருக்கின்ற குழு ஒன்றினாலோ நடத்தப்படலாம்.
மருத்துவ மன்றமோ அல்லது நிகழ்வுக்கேற்ப குழுவோ
தனது உளத்தேர்வின்படி தனி அறையில் (InCamera)
அத்தகைய விசாரணையை நடத்தலாம். விசாரணையானது
குழு ஒன்றினால் நடத்தப்படுகிறபோது அது மருத்துவ
மன்றத்திடம் அறிக்கை ஒன்றைக் கொடுத்தல் வேண்டும்.
அம்மன்றம் பிரிவு 18இன்: உட்பிரிவு (3)இன்படி
ஆணைகளைப் பிறப்பித்தல் வேண்டும்.
(2) பிரிவு 18இன்படியான விசாரணை எதனின்
நோக்கத்திற்காகவும் மருத்துவ மன்றமோ உட்பிரிவு (1)இல்
குறிப்பிடப்பட்டுள்ள குழுவோ, 1872ஆம் ஆண்டு இந்திய
சாட்சியச் சட்டத்தின் (மையச் சட்டம் 11872)
பொருளின்படி ஒரு நீதிமன்றமாகக் கொள்ளப்படுதல்
வேண்டும்; மேலும், 1850ஆம் ஆண்டு பொது ஊழியர்
(விசாரணை) சட்டத்தின்படி (மையச் சட்டம் XXVI/1850)
நியமிக்கப்பட்ட ஆணையர் ஒருவரின் அதிகாரங்கள்
அனைத்தையும் செலுத்திவருதல் வேண்டும் மற்றும்
அத்தகைய விசாரணைகள் கூடுமான அளவுக்கு
1850ஆம் ஆண்டு பொது ஊழியர் (விசாரணை)
சட்டத்தின் (மையச் சட்டம் XXVI/1850) பிரிவு 5 மற்றும்
பிரிவுகள் 8 முதல் 20இன் வகைமுறைகளுக்கு இணங்க
நடத்தப்படுதல் வேண்டும்.
29
25. பதிவுபெற்ற மருத்துவத் தொழிலாற்றுநர்களின்
சிறப்புரிமைகள்.- அப்போதைக்கு நடைமுறையிலுள்ள
சட்டம் எதிலும் எண்ன அடங்கியிருந்தபோதிலும்.-
(1) சட்டப்படி மருத்துவத் தொழிலாற்றுநர் ஒருவர்
கொடுக்க வேண்டியதாக இருக்கின்ற சான்றிதழ் ஒன்று,
அவ்வப்போது அரசு குறிப்பிடப்படக்கூடிய பதிவு பெற்ற
மருத்துவத் தொழிலாற்றுநர்களின் வகையினைச் சேர்ந்த
பதிவு பெற்ற மருத்துவத் தொழிலாற்றுநர் எவராலும்
கையொப்பம் இடப்படுமானால் செல்லத்தக்கதாகும்; மற்றும்
(2) "சட்டப்படி தகுதி வாய்ந்த மருத்துவத்
தொழிலாற்றுநர்" அல்லது "உரிய தகுதி வாய்ந்த மருத்துவத்
தொழிலாற்றுநர்" என்னும் சொற்றொடரோ மருத்துவத்
தொழிலாற்றுநர் ஒருவராக அல்லது மருத்துவத் தொழில்
உறுப்பினர் ஒருவராக, சட்டத்தினால் ஏற்றுக்
கொள்ளப்பட்டுள்ள நபர் ஒருவரைக் குறிப்பிடப்படக்கூடிய
பொருள் தருகின்ற சொல் அல்லது சொற்றொடர்
எதுவுமோ, 1897ஆம் ஆண்டு பொதுவகை முறைகள்
சட்டத்தின் (மையச் சட்டம் X/1897) பிரிவு 3இன் கூறு
(46)இல் பொருள் வரையறுக்கப்பட்ட மாநிலச் சட்டம்
அல்லது மேற் சொன்ன பிரிவிடுன் கூறு (59)இல்
பொருள் வரையறுக்கப்பட்டவாறான மாநிலச் சட்டம்
எதிலும் அல்லது தமிழ்நாடு மாநிலத்திற்குப்
பொருந்துவதைப் பொறுத்த அளவில் மையச் சட்டம்
எதுவும் எந்த அளவுக்கு அரசமைப்புச் சட்டத்தின் ஏழாம்
இணைப்புப் பட்டியலில் உள்ள ॥ஆம் பட்டியலிலோ ॥ஆம்
பட்டியலிலோ குறித்துரைக்கப்பட்ட விவரங்கள் எதற்கும்
தொடர்புடையதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு
அத்தகைய மையச் சட்டம் எதிலும், பிரிவு 18இன்படி பதிவு
செய்யப் பெற்ற மருத்துவத் தொழிலாற்றுர் ஒருவரை
உள்ளடக்குவதாகக் கருதப்படுதல் வேண்டும்.
30
அத்தியாயம் V
தண்டனைகள்:
26. பதிவுபெறாத நபர்கள் சித்த மருத்துவத்தில்
தொழிலாற்றுவது தடை செய்யப்படுதல்.
(1) அப்போதைக்கு நடை முறையிலுள்ள சட்டம் எதிலும்
என்ன அடங்கியிருந்தபோதிலும்,-
(a) பிரிவு 18இன்படி பதிவு
செய்யப்பெற்றுள்ள நபரொருவரல்லாத பிற நபர் எவரும்
சித்த மருத்துவத்தில் தொழிலாற்றுதல் கூடாது.
விளக்கம்:- இந்தக் கூறின் நோக்கத்திற்காக-
0) (ஐ சித்த மருத்துவத்திற்கு இணங்க,
நோயினைக் கண்டறிய, சிகிச்சையளிக்க அல்லது
அறுவை மருத்துவம் செய்ய இயலும் என தன்னைக்
காட்டிகொள்கின்ற அல்லது விளம்பரம், செயல் விளக்கம்,
காட்சிக்கு வைத்தல் அல்லது பயிற்றுவித்தல் எதன்:
மூலமாகவும் அல்லது எப்படிப்பட்ட முறை அல்லது வழி
எதன் மூலமாகவும் அவ்வாறு செய்ய முன்வருகின்ற
அல்லது செய்வதை மேற்கொள்ளுகின்ற அல்லது உடல்
நலிவு, நோய், காயம், வலி, உடற்குறை அல்லது உடல்
சார்ந்த நிலைமை எதற்காகவும் சித்த மருந்தினைக்
கொடுக்கிற அல்லது சித்த மருத்துவ முறைக்கிணங்க
சித்த மருந்திணையோ பிற தீர் வழியினையோ வகுத்துக்
கூறுகின்ற நபர் ஒருவர் சித்த மருத்துவத்
தொழிலாற்றுவதாகக் கருதப்படுதல் வேண்டும்;
(8) "விளம்பரம் என்பது, சொல்,
எழுத்து, அறிவிப்பு, சுற்றறிக்கை, படம், விளக்கப்படம்,
உருமாதிரி, குறியீட்டு விளம்பரப் பலகை மற்றும் பலகை
அல்லது பிற ஆவணம் எதனையும் மற்றும்
வாய்மொழியாகவோ ஒளி, ஒலி, புகை அல்லது பிற
ஒலிக்கத்தக்க அல்லது காணத்தக்க அறிவிப்புகளை
உண்டாக்குகின்ற அல்லது பரப்புகின்ற வழிகள் எவற்றின்.
31
மூலமாகவுமோ செய்யப்படும் அறிவிப்பு எதனையும்
உள்ளடக்கும்;
(i) ஐ ஆடிகள், செயற்கைக் கண்கள்,
உடலுறுப்புக்கள் அல்லது பிற கருவிகள், அல்லது
சாதனங்களை இயந்திரங்களைக்கொண்டு பொருத்துகிற
அல்லது அவற்றை விற்பனை செய்கிற; அல்லது
(8) மூக்குக் கண்ணாடிகளை, விழி
பாதுகாப்புக் கண்ணாடிகளை அல்லது ஆடிகளை
தயாரிக்கின்ற அல்லது அவற்றை சரி செய்கின்ற
நோக்கத்திற்காகக் கண்களை இயந்திரத்தைக் கொண்டு
பரிசோதிப்பதில் ஈடுபட்டிருக்கிற; அல்லது
(௦) உடற்பயிற்சி மருத்துவத்தில்
அல்லது மின் அதிர்வு மருத்துவத்தில் அல்லது பாதவியல்
மருத்துவத்தில் அல்லது இயற்கை மருத்துவத்தில் அல்லது
நீர் வழி மருத்துவத்தில் அல்லது யோக முறை
சிகிச்சையளிப்பில் தொழிலாற்றி வருகிற; அல்லது
(0) கை மருந்துகளை பாரம்பரிய வழியில்
கொடுத்து வருகிற; அல்லது
(2) 4948ஆம் ஆண்டு பல்
மருத்துவர்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் XV/1948)
பதிவு செய்யப்பட்டிருந்து, பல் மருத்துவத்திற்கு மட்டும்
தம்முடைய தொழிலை மட்டுப்படுத்துகிற; அல்லது
(F) 1926ஆம் ஆண்டு தமிழ்நாடு
செவிலியர்கள் மற்றும் பேறுகாலப் பணி மகளிர்
சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் ॥ 7 1926) பதிவு
செய்யப்பட்டுள்ள செவிலியர் ஒருவராக, பேறு கால
உதவியாளராக, சுகாதாரப் பார்வையாளராக அல்லது
துணைச் செவிலியர் அல்லது பேறு காலம் பார்த்திருக்கிற,
பேறு காலம் பார்க்கும் பெண்ணாக இருந்துவருகின்ற நபர்
32
ஒருவர், சித்த மருத்துவத் தொழிலாற்றுவதாகக்
கொள்ளப்படுதல் கூடாது.
(b) இதன் பொருட்டு அரசினால்
அதிகாரமளிக்கப்பட்டிருந்தால் அன்றி பதிவு பெற்ற
மருத்துவத் தொழிலாற்றுநர் ஒருவர் அல்லாத பிற நபர்
எவரும்,-
() பிறப்பு அல்லது இறப்புச் சான்றிதழ்
ஒன்றில் அல்லது உடற்தகுதிச்
சான்றிதழ் ஒன்றில் அல்லது உரிய
தகுதி வாய்ந்த மருத்துவத்
தொழிலாற்றுர் ஒருவரின்
கையொப்பமோ, உறுதியொப்பமோ
சட்டம் எதன்படியும் தேவைப்படுகிற
பிற சான்றிதழ் எதிலும்
கையொப்பமிடூதலோ
உறுதியொப்பமிடூுதலோ கூடாது.
(00 பொது மருத்துவம், அறுவை மருத்துவம்
அல்லது பேறு கால மருத்துவ உதவி
தொடர்பான பொருட்பாடு
எதன்பேரிலும் 1872ஆம் ஆண்டு
இந்திய சாட்சியச் சட்டத்தின் (மையச்
சட்டம் 171872) 45ஆம் பிரிவின்படி
ஒரு வல்லுநர் என்கிற வகையில்
விசாரணை எதிலும் அல்லது
நீதிமன்றம் எதிலும் சாட்சியமளித்தல்
கூடாது.
(௦) மருத்துவமனை, காப்பகம் நோயுற்றோரில்லம்,
மருந்தகம், மகப்பேறு மருத்துவமனை, நல்லாக்க நிலையம்
அல்லது சித்த மருத்துவ அல்லது சித்த மருத்துவ மற்றும்
நவீன மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்ற
அதுபோன்ற பிற மருத்துவ நிலையங்களில் அரசின் சிறப்பு
33
ஒப்புதல் இல்லாமல் நபர் எவரும் உடல் நல
மருத்துவராகவோ அறுவை சிகிச்சை மருத்துவராகவோ
அல்லது (எப்பெயரில் அழைக்கப்படுவதாயினுமான) பிற
பணியாளர் எவருமாகவோ நியமனப் பதவி எதையும் வகித்து
வருதல் கூடாது.
(2) உட்பிரிவு (1)இன் வகைமுறைகளை ம்றுகிற
எவர் ஒருவரும், ஓராண்டு வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு
கால அளவுக்குச் சிறைத்தண்டனையோ ஆயிரம் ரூபாய்வரை
நீட்டிக்கப்படக்கூடிய பணத் தண்டமோ (அபராதம்) அல்லது
இரண்டுமோ விதித்துத் தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.
27. பட்டங்கள், பட்டயங்கள் முதலானவற்றின்
அசலையொத்த போலிகள் வழங்குவதோ அனுமதிப்பதோ
அளிப்பதோ குற்றச் செயல் ஒன்றாக இருத்தல்.-
(1) (ஐ) பல்கலைக் கழகம் ஒன்றோ; அல்லது
மருத்துவ மன்றத்தினால் நிறுவப்பட்டுள்ள
கல்விநிலையம் ஒன்றோ; அல்லது
(©) பட்டம், பட்டயம், உரிமம், சான்றிதழ்
எதனையும் அல்லது அதைப் போன்ற பிற விருது
எதனையும் அதனை வைத்திருப்பவரை சித்த
மருத்துவத்தில் தொழிலாற்றி வரச் செய்வதற்கு
தகுதியுடையவராக்குகின்ற வகையில் வழங்கவோ,
அனுமதிக்கவோ அல்லது அளிக்கவோ தகுதியுடையது
என அரசினால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள அல்லது ஏற்றுக்
கொள்ளப்பட்டுள்ள அதிகாரஅமைப்பு ஒன்றோ,
அல்லாத பிற நபர் எவரும் பல்கலைக்கழகம் ஒன்றாலோ, கல்வி
நிலையம் ஒன்றாலோ அல்லது (8), (௦) அல்லது (௦) எனும்
கூறுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரஅமைப்பொன்றாலோ
வழங்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட அல்லது அளிக்கப்பட்ட
பட்டம், பட்டயம், உரிமம், சான்றிதழ் அல்லது விருது
எதனுடனும் ஒத்திருக்கின்ற அல்லது அதனைப் போன்ற
34
போலியான மற்றும் சித்த மருத்துவத்தில் தொழிலாற்றுவதற்கு
அதனை வைத்திருப்பவரை தகுதியுடையவராக
இருப்பதற்குத் தோன்றச் செய்கிற பட்டம், பட்டயம், உரிமம்,
சான்றிதழ் அல்லது அதைப் போன்ற பிற விருது
எதனையும் வழங்குதலோ, அனுமதித்தலோ அல்லது
அளித்தலோ வழங்குவதற்கு, அனுமதிப்பதற்கு அல்லது
அளிப்பதற்கு தம்மைத் தகுதி உடையவராகக் காட்டுதலோ
கூடாது.
(2. உட்பிரிவு (1)இன்படியான வகை:
முறைகளை மீறுகிற எவரொருவரும்.-
0) முதன்முறையான குற்றச்செயலுக்காக.
ஆயிரம் ரூபாய் வரையில் நீட்டிக்கப்படக்
கூடிய பணத்தண்டம்; மற்றும்
0) இரண்டாவது முறையான அல்லது பிந்திய
குற்றச் செயல் எதற்காகவும் ஆறு
மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு
காலஅளவுக்குச் சிறைத் தண்டனையோ
இரண்டாயிரம் ரூபாய் வரை
நீட்டிக்கப்படக்கூடிய பணத் தண்டமோ
அல்லது இரண்டுமோ விதித்து
தண்டிக்கப்படத் தக்கவர் ஆவார்.
28. நபர் எவருடைய பெயரோடு விருது, பட்டம்
விவரிப்பு முதலான எவற்றையும் சேர்ப்பதற்கெதிராண
தடை- (1) நபர் எவரும் சித்த மருத்துவத்
தொழிலாற்றுவதற்கான தகுதியாக பட்டம், பட்டயம், உரிமம்
அல்லது சான்றிதழ் ஒன்றையோ அதைப்போன்ற பிற
விருது எதனையுமோ வைத்திருக்கிறார் என்று குறிப்பாகச்
சுட்டுகிற வகையில் விருது, பட்டம், விவரிப்பு, எழுத்து
அல்லது சுருக்கக்குறியீடு எதனையும்,
(a) உள்ளபடியே அவர் அத்தகைய பட்டம்,
பட்டயம், உரிமம், சான்றிதழ் அல்லது அதைப் போன்ற பிற
35
விருது எதனையும் வைத்திருப்பவராக இருந்தாலன்றி;
மற்றும்
(b) அத்தகைய பட்டம், பட்டயம், உரிமம்
அல்லது சான்றிதழோ அல்லது அதைப் போன்ற பிற
விருதோ,-
(i) இந்தியாவிலோ அதன். பகுதி
எதிலுமோ அப்போதைக்கு
நடைமுறையிலுள்ள சட்டம் எதனாலும்
ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் அன்றி;
அல்லது
(பிரிவு 27இன் உட்பிரிவு (1)இன்படி
வழங்கப்பட்டதாகவோ,
அனுமதிக்கப்பட்டதாகவோ அல்லது
அளிக்கப்பட்டதாகவோ இருந்தால்
அன்றி;
தனது பெயரோடு சேர்த்துக் கொள்ளுதல் கூடாது.
(2) உட்பிரிவு (1)இன்படியான வகைமுறையை
மீறுகிற எவரொருவரும்,-
(i) முதன் முறையான குற்றச்செயலுக்காக.
ஐந்நூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படக்-
கூடிய பணத் தண்டம்; மற்றும்
(i) இரண்டாவது முறையான அல்லது
பிந்திய குற்றச் செயல் எதற்காகவும்
ஆறுமாதங்கள் வரை நீட்டிக்கப்படக்-
கூடிய ஒரு கால அளவிற்குச் சிறைத்
தண்டனையோ ஆயிரம் ரூபாய்கள்
வரை நீட்டிக்கப்படக்கூடிய பணத்
தண்டனை அல்லது இரண்டும்,
விதித்துத் தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.
36
29. பதிவுபெற்ற மருத்துவத் தொழிலாற்றுநராகப்
பொய்யாக தொழில் பகட்டு காட்டுவதற்கான தண்டனை.-
பதிவு பெற்ற மருத்துவத் தொழிலாற்றுநர் ஒருவராகப்
பொய்யாகத் தொழிலில் பகட்டுக் காட்டுகிற நபர் எவரும்,
அத்தகைய தொழில் பகட்டினால் பிற நபர் எவரும்
உள்ளபடியே ஏமாற்றப்பட்டிருந்தாலும் சரி இல்லை
என்றாலும், சரி,-
() முதன் முறையான குற்றச்செயலுக்காக
முந்நூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படக்-
கூடிய பணத்தண்டம்; மற்றும்
(i) இரண்டாவது முறையான அல்லது
பிந்திய குற்றச் செயல் எதற்காகவும்
ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்
கூடிய ஒரு காலஅளவிற்குச் சிறைத்
தண்டனையோ ஆயிரம் ரூபாய் வரை
நீட்டிக்கப்படக் கூடிய பணத் தண்டமோ
அல்லது இரண்டுமோ,
விதித்துத் தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.
அத்தியாயம் VI
பல்வகை
30. குற்றவியல் நீதிமன்றங்களின் அதிகாரவரம்பு.-
(1) பதிவாளராலோ இதன் பொருட்டு அவரால்
அதிகாரமளிக்கப்பட்டுள்ள அலுவலர் எவராலுமோ எழுத்து
வடிவில் செய்து கொள்ளப்படும் முறையீடு ஒன்றின் பேரில்
அல்லாமல் இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்க
குற்றச்செயல் எதனையும் நீதிமன்றம் எதுவும்,
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுதல் கூடாது.
(2) பெருநகர் குற்றவியல் நடுவர் ஒருவரின்
அல்லது முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் ஒருவரின்:
நீதிமன்றத்திற்குக் கீழான நீதிமன்றம் எதுவும் இந்தச்
37
சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்ககான குற்றச்செயல்
எதனையும் விசாரணை செய்தல் கூடாது.
31. உரிமையியல் நீதிமன்றங்களின்.
அதிகாரவரம்பிற்கான தடை.- இந்தச் சட்டத்தின்படியோ,
விதிகளின்படியோ, ஒழங்குவிதிகளின்படியோ, மருத்துவ
மன்றத்தினாலோ குழு எதனாலுமோ அதன் அலுவலர்
அல்லது பணியாளர் எவராலுமோ அரசினாலோ அதற்குச்
சார்நிலை அலுவலர் எவராலுமோ பிறப்பிக்கப்பட்ட ஆணை
எதுவும், எடுக்கப்பட்ட முடிவு அல்லது நடவடிக்கை எதுவும்
அல்லது பிறப்பிக்கப்பட்ட பணிப்புரை எதுவும் உரிமையியல்
நீதிமன்றம் எதிலும் ஆட்சேபனை செய்யப்படுவதற்கு
உள்ளாதல் கூடாது.
32. நிறுமங்களால் செய்யப்படும் குற்றச்
செயல்கள்.- (1) இந்தச் சட்டத்தின் அல்லது அதன்படிச்
செய்யப்பட்டுள்ள விதியின் வகைமுறைகளில் எதற்கும்
எதிரான குற்றச் செயல் ஒன்று நிறுமம் ஒன்றால்
செய்யப்பட்டிருக்கும். போது, அக்குற்றச்செயல்:
செய்யப்பட்ட காலத்தில் அந்நிறுமத்தின் அலுவலை
நடத்தும்பொருட்டு, அந்நிறுமத்தைத் தம் பொறுப்பில்
கொண்டிருந்த நபரும் அதற்குப் பொறுப்பாயிருந்த நபரும்
அவர்களோடு கூட அந் நிறுமமும் அக்குற்றச்செயலைச்
செய்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் என்பதோடு
மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன்படியே
தண்டிக்கப்படுவதற்கு உள்ளதாலும் வேண்டும்:
வரம்புரை: ஆனால், இந்த உட்பிரிவில்
அடங்கியுள்ள எதுவும், அக்குற்றச்செயலானது தமக்குத்
தெரியாமலேயே செய்யப்பட்டிருக்கின்றது என்றோ
அல்லது அக்குற்றச் செயல் செயல்படுவதைத்
தடுப்பதற்கான உரிய முயற்சி அனைத்தையும் தாம்
மேற்கொண்டார் என்றோ அத்தகைய நபர் எவரும்
38
மெய்பிப்பாரானால் அவரைத் தண்டனை எதற்கும்
உள்ளாக்குதல் கூடாது.
(2) உட்பிரிவு (1)இல் என்ன அடங்கியிருந்த
போதிலும் குற்றச்செயல் எதுவும் நிறுமம் ஒன்றால்
செய்யப்பட்டிருக்கும். போது, அக்குற்றச்செயலானது,
அந்நிறுமத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது
பிற அலுவலர் எவரின் இசைவுடனோ மறைமுக
ஆதரவுடனோ செய்யப்பட்டிருக்கின்றறு அல்லது அவரது
கவனக் குறைவு எதுவும் காரணமாக இருக்கிறது என
மெய்ப்பிக்கப்படுமானால், அத்தகைய இயக்குநர், மேலாளர்,
செயலாளர் அல்லது பிற அலுவலர் அக்குற்றச் செயலைச்
செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதோடு,
மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன்படியே அவர்
தண்டிக்கப்படுவதற்கு உள்ளதாலும் வேண்டும்.
விளக்கம்:- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக,
(a) "நிறுமம் என்பது, கூட்டு நிறுவனம்
எதுவும் எனப் பொருள்படும் மற்றும் ஒரு நிறுவகம், சங்கம்
அல்லது பிற தணி நபர்களின் குழுவையும் உள்ளடக்கும்;
மற்றும்
(0) "இயக்குநர்" என்பது,-
() ஒரு நிறுவகம் தொடர்பாக
நிறுவனத்திலுள்ள கூட்டாளி ஒருவர்
என்றும்,
(1) சங்கம் அல்லது பிற தனி நபர்களின்.
குழு தொடர்பாக, அச்சங்கத்தின்:
அல்லது பிற குழுவின் விதிகளின்படி
எந்த நபரிடம் அச்சங்கத்தின் அல்லது
பிற குழுவின் விவகாரங்களின்
மேலாண்மை
39
ஒப்படைக்கப்பட்டிருக்கிறதோ அந்த
நபர் என்றும்,
பொருள்படும்.
33. மருத்துவ மன்றம், குழு முதலானவற்றின்
செயல்கள் ஒருசில குறைபாடுகளினால் செல்லத்தகாததாக
ஆக்கப்படுதல் கூடாது.- மருத்துவ மன்றத்தின் அல்லது
அதன் குழு எதனின் அல்லது மருத்துவ மன்றத்தின்
அல்லது குழுவின் தலைவராகவோ, உறுப்பினராகவோ
செயற்பட்டு வருகின்ற நபர் எவரின் செயல் எதுவும்,
(a) மருத்துவ மன்றத்தின் அல்லது குழுவின்
அமைப்பில் உள்ள காலியிடம் அல்லது குறைபாடு எதன்
காரணத்தால் மட்டுமே;
(௦) மருத்துவ மன்றத்தின் அல்லது குழுவின்
தலைவரோ உறுப்பினர் எவருமோ, தாம்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதில் அல்லது, நிகழ்விற்க்கேற்ப,
பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளதில் உள்ள தகுதிக்கேடு
எதன் காரணத்தாலோ குறைபாடு அல்லது முறைகேடு
எதன் காரணத்தாலோ பதவியை வகித்து வருவதற்கு
அல்லது தொடர்வதற்கு தகுதியுடையவராக
இல்லாதிருக்கின்ற காரணத்தால் மட்டுமே; அல்லது
(9) அத்தகைய செயலில் உள்ள குறைபாடு
அல்லது முறைகேடு எதுவும் வழக்கின் தகுதிக்குக்
கேடுவிளைவிக்காதிருக்கின்ற காரணத்தால் மட்டுமே,
செல்லாததாக ஆகியிருப்பதாகக் கருதப்படுதல் கூடாது.
34. இணைப்புப்பட்டியலில் சொல்லப்பட்டுள்ள
தகுதிகள் பற்றி பட்டியலில் மாற்றம் செய்தல்.-- அரசானது,
பட்டம், பட்டயம், உரிமம், சான்றிதழ் எதனையுமோ,
அதனைப்போன்ற பிற விருது எதனையுமோ
வழங்குகின்றதான, அனுமதிக்கின்ற அல்லது
அளிக்கின்ற, பிரிவு 27இன்: உட்பிரிவு (இல்
40
குறிப்பிடப்பட்டுள்ள பல்கலைக்கழகம் அல்லது ஒரு கல்வி
நிலையம் அல்லது அதிகார அமைப்பு எதனாலும்
குறிப்பிடப்பட்டுள்ள, குறித்த காலப் படிப்புப் பிரிவும், தேர்வும்
மருத்துவ மன்றத்தின் அறிக்கையின் பேரறிலோ
மற்றப்படியோ,
(1) இணைபப்புப்பட்டியலில் உள்ளடக்கப்
பட்டுள்ளவை சித்த மருத்துவத்தில் திறம்பட தொழிவாற்றி
வருவதற்கான தேவையான அறிவும், திறமையும்,
அத்தகைய பட்டத்தினை, பட்டயத்தினை, உரிமத்தினை,
சான்றிதழை அல்லது அதைப் போன்ற பிற விருதினைப்
பெறுகின்ற நபர்களால் பெறப்படுவதை உறுதி செய்கின்ற
வகையில் அமைந்திருக்கவில்லை என்றோ;
(2)இணைப்புப்பட்டியலில் உள்ளடக்கப்படாதவை
அத்தகைய அறிவும் திறமையும் மேற்சொல்லப்பட்ட
நபர்களால் பெறப்படுவதை உறுதி செய்கின்ற வகையில்
அமைந்துள்ளது என்றோ;
அது தெளிவுறக் காணுமானால் அறிக்கையின் மூலமாக
அத்தகைய பட்டம், பட்டயம், உரிமம், சான்றிதழ் அல்லது
பிற அதைப்போன்ற விருது எதுவும்.-
(@) கூறு (1)இன்படி வருகின்ற நிகழ்வில்,
இணைப்புப்பட்டியலிருந்து நீக்கப்படுமாறு, அல்லது
(b) கூறு (2)இன்படி வருகின்ற நிகழ்வில்,
இணைப்புப்பட்டியலில் சேர்க்கப்படுமாறு;
பணிக்கலாம் மற்றும் அத்தகைய அறிவிக்கை
வெளியிடப்பட்டதன் பேரில் இணைபப்புப்பட்டியலானது
அதன்படியே திருத்தி அமைக்கப்பட்டிருப்பதாகக்
கருதப்படுதல் வேண்டும்.
35. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.-
(1) அரசு, அறிவிக்கையின் மூலமாக இந்தச்
41
சட்டத்தின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதற்கான
விதிகளைச் செய்யலாம்.
(2) குறிப்பாகவும் முண்சொன்ன அதிகாரத்தின்
பொதுத்தண்மைக்கு ஊறின்றி அத்தகைய விதிகள்,
(ஐ சித்த மருத்துவக் கல்வி நிலையம் ஒன்று
நிறுவப்படுவதற்காக அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கான
விண்ணப்பம் ஒன்று எந்தப்படி வத்திலும், எந்த
விவரங்களுடனும், எந்தமுறையிலும் செய்து கொள்ளப்பட
வேண்டும் என்பதற்கும்;
(௦) தலைவரின் அதிகாரங்களுக்கும்
கடமைகளுக்கும்;
(௦) மருத்துவ மன்றத்தின் தலைவர் உட்பட
உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், பெயர் குறித்து
நியமிக்கப்படுவதற்கும்;
(0) செயலாட்சிக் குழு உறுப்பினர்கள்.
எம்முறையில் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதற்கும்;
(6) மருத்துவ மன்றத்தின் அதிகாரங்களும்
அலுவல்களும் செயலாட்சிக் குழுவிடம் ஒப்படைவு
செய்யப்படுவதற்கும்;
(0) மருத்துவ மன்றத்தின் மற்றும்
செயலாட்சிக் குழுவின்: உறுப்பினர்களுக்கு
கொடுக்கப்படத்தக்க. நாட்படிகளுக்கும் பயணப்
படிகளுக்கும்;
(9) இந்தச் சட்டத்தின்படி பதிவு செய்து
கொள்வதற்கான கட்டணங்கள் எவ்வளவு என்பதற்கும்;
(h) பதிவு செய்து கொண்டதை
புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் ஒன்று எவ்வளவு
காலத்திற்குள்ளாக செய்து கொள்ளப்பட வேண்டும்
என்பதற்கும் அதற்கான கட்டணம் எவ்வளவு என்பதற்கும்;
42
0) பிரிவு 19இன் உட்பிரிவு (1)இன்படி
பதிவேடு எந்தப் படிவத்தில் பேணிவரப்பட வேண்டும்.
என்பதற்கும் அதில் அடங்கியிருக்க வேண்டிய
விவரங்களுக்கும் அப்பதிவேடு எந்த முறையில்
வெளியிடப்பட வேண்டும் என்பதற்கும்;
() புதிய பெயரில் அல்லது இந்தச்
சட்டத்தின்படி பதிவு செய்து கொண்டதற்குப் பின்னர்
பெறப்பட்ட கூடுதல் தகுதி எதனையும் பொறுத்து பதிவு
செய்து கொள்வதற்கான கட்டணங்கள் எவ்வளவு
என்பதற்கும் அத்தகைய பதிவு செய்து கொள்ளுதலுக்கான
விண்ணப்பம் எந்த முறையில் பரிசீலனை செய்யப்பட
வேண்டும் என்பதற்கும்;
(k) பதிவுச்சான்று ஒன்று எந்தப் படிவத்தில்
வழங்கப்பட வேண்டும் என்பதற்கும் பதிவுச் சான்றை ஒத்த
மாற்றுப்படி வழங்கப்படுவதற்கான கட்டணங்கள் எவ்வளவு
என்பதற்கும்;
() இந்தச் சட்டத்தின்படி வெளிப்படையாகத்
தேவைப்படும் அல்லது அதனால் அனுமதிக்கப்படும்.
அனைத்து விவரங்களும் வகுத்துரைக்கப்படுவதற்கும்,
வகை செய்யலாம்.
(3) (ஐ இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும்
அனைத்து விதிகளும் குறிப்பிட்டதொரு நாளில்
நடைமுறைக்கு வருதல் வேண்டும் என
வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, எந்த
நாளில் அவை வெளியிடப்படுகின்றனவோ அந்த நாளில்
நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(௦) இந்தச் சட்டத்தின்படி வெளியிடப்படும்
அறிவிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்டதொரு நாளில்
நடைமுறைக்கு வருதல் வேண்டும் என
வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, எந்த
43
நாளில் அவை வெளியிடப்படுகின்றனவோ அந்த நாளில்
நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(4) இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும் விதி
ஒவ்வொன்றும் பிரிவு 34இன்படி வெளியிடப்படும்.
அறிவிக்கை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்டதற்கு
அல்லது வெளியிடப்பட்டதற்குப் பிண்னர் கூடிய விரைவில்
சட்டமன்றப்பேரவையின்: முன்பு வைக்கப்படுதல்
வேண்டும், மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும்
கூட்டத்தொடரோ அதற்கடுத்த கூட்டத்தொடரோ
முடிவடைவதற்கு முன்னர், சட்டமன்றப் பேரவை
அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதிலும் மாறுதல்
எதையும் செய்யுமானால் அல்லது அவ்விதி செய்யப்படவோ
அல்லது அந்த அறிவிக்கை வெளியிடப்படவோ கூடாது
என்று சட்டமன்றப்பேரவை முடிவு செய்யுமானால்
அவ்விதியோ அந்த அறிவிக்கையோ அதன் பின்னர்
அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே
நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது
நிகழ்விற்கேற்ப நடைமுறைக்கே வராதுபோகும், எனினும்,
அத்தகைய மாற்றம் அல்லது நீக்கம் (Annuiment) எதுவும்,
அவ்விதியின்படியோ அந்த அறிவிக்கையின்படியோ
முன்னரே செய்யப்பட்டுள்ள செயல் ஏதோன்றின்.
செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.
36. ஒழுங்குவிதிகளைச் செய்வதற்கான
அதிகாரம்,- (1) மருத்துவ மன்றம், இந்தச் சட்டத்தின்.
படியான தனது அலுவல்களை ஆற்றிவர தனக்கு
இயலும்படிச் செய்யும் பொருட்டு இந்தச் சட்டத்தின் வகை
முறைகளுக்கும் விதிமுறைகளுக்கும் முரணாக இல்லாத
அரசின் முன் அனுமதியுடன் அறிவிக்கையின் மூலம்
ஒழுங்கு விதிகளைச் செய்யலாம்.
44
(2) குறிப்பாகவும் முன்சொன்ன அதிகாரத்தின்:
பொதுப்பாங்கிற்கு ஊறின்றியும், அத்தகைய
ஒழுங்குவிதிகள்,-
(ஐ சித்த மருத்துவக் கல்வி நிலையம் ஒன்று
நிறுவப்படுவதற்காக மருத்துவ மன்றத்தின் ஒப்புதல்
பெறுவதற்கான விண்ணப்பம் ஒன்று எந்தப் படிவத்திலும்
எந்த விவரங்களுடனும். எந்த முறையிலும்
செய்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்கும்;
(௦) சித்த மருந்துகள் தயாரிக்கப்படுவதற்கும்.
விற்பனை செய்யப்படுவதற்கும்;
(9) மருத்துவ மன்றத்தின் மற்றும்
செயலாட்சிக் குழுவின் கூட்டங்கள் கூட்டப்படுவதற்கும்.
அத்தகைய கூட்டங்களில் அலுவல் நடத்தப்படுவதற்கும்;
(6) பதிவு பெற்ற மருத்துவத் தொழிலாற்றுநர்
ஒருவரால் பின்பற்றப்பட வேண்டிய தொழில்முறை
நடத்தை, சமுதாய ஒழுங்குமுறை, ஒழுக்கக்கோட்பாடுகள்
ஆகியவற்றின் தரநிலைகள் எவை என்பதற்கும்;
(6) பதிவாளரின்: மற்றும் மருத்துவ
மன்றத்தின் பிற அலுவலர்களின் மற்றும் பணியாளர்களின்:
ஊதியமும் பிற பணி வரைக்கட்டுகளும் என்ன
என்பதற்கும்;
N இந்தச் சட்டத்தின்படி பதிவு செய்து
கொள்ளப்படுவதற்கான விண்ணப்பத்துடன் சேர்த்து
அனுப்பப்படவேண்டிய தகுதிச்சான்று என்ன என்பதற்கும்;
(ஐ எந்தப் பிற விவரம் குறித்து
ஒழுங்கு விதிகளில் வகைமுறை செய்யப்பட
வேண்டியதாக அல்லது செய்யப்படக் கூடியதாக உள்ளதோ
அந்தப் பிற விவரம் எதற்கும்,
வகை செய்யலாம்.
45
37. காப்பு.- இந்தச் சட்டத்தில் என்ன
அடங்கியிருந்தபோதிலும், 1990ஆம் ஆண்டு அக்டோபர்
மாதம் 31ஆம் தேதியிட்ட, மக்கள் நல்வாழ்வு, இந்திய
மருத்துவம், இயல்முறை மருத்துவம் (ஹோமியோபதி)
மற்றும் குடும்ப நலத்துறையின் 1868 எனும் எண்ணிட்ட
அரசாணை(பல்வகை) உடன் பிறப்பிக்கப்பட்ட இந்திய
மருத்துவத் தொழிலாற்றுநர்கள் பதிவு செய்து
கொள்வதற்கான விதிகளின்படி தமது பெயரைப் பதிவு
செய்து கொண்டுள்ளவரும் இந்தச் சட்டத்தின்
தொடக்கத்திற்கு அடுத்து முன்பிருந்தே சித்த
மருத்துவத்தில் தொழிலாற்றி வருகின்றவருமான நபர்
எவரும், ஆறு மாத காலஅளவுக்குள்ளாக இந்தச்
சட்டத்தின்படி பதிவு செய்துகொள்வதற்கான விண்ணப்பம்
ஒன்றை அவர் செய்து கொண்டிருப்பாரானால், மருத்துவ
மன்றத்தினால் அவ்விண்ணப்பம் முடிவு செய்யப்படும்
வரையில், அவ்வாறு தொடர்ந்து தொழிலாற்றி வருவதற்கு
உரிமையுடையவர் ஆவார்.
38. மருத்துவ மன்றக் கருத்துருவினை அரசு
முடிவு செய்வதற்காக ஒதுக்கி வைத்தல்.- மருத்துவ
மன்றம் அரசு முடிவு செய்வதற்கு ஒதுக்கி வைக்கப்பட
வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக தாம்
கருதுகின்ற விவரம் எதன் பேரிலுமான கருத்துரு
எதனையும் அரசின்: அத்தகைய முடிவிற்காக
ஒதுக்கிவைக்கலாம் மற்றும் அத்தகைய கருத்துருவானது
அரசினால் முடிவு செய்யப்படும் வரையில் அது பொறுத்து
எந்த நடவடிக்கையும் மருத்துவ மன்றத்தினால்
எடுக்கப்படுதல் கூடாது.
39. அரசினால் கொடுக்கப்படும் பணிப்புரைகள்.-
கணிசமான பொது நலனை உள்ளடக்குகின்ற
விவரங்களில் மருத்துவ மன்றம் அதிகாரங்களைச்
செலுத்தி வருவது மற்றும் அலுவல்களைப் புரிந்து வருவது
தொடர்பாக, அரசு இந்தச் சட்டத்தின் வகை முறைகளுக்கு
46
முரணாக இல்லாத தேவையெனக் கருதக்கூடிய
பணிப்புரைகளை (directions) அவ்வப்போது பிறப்பிக்கலாம்
என்பதோடு அதே போன்று அத்தகைய பணிப்புரை எதிலும்
மாறுதல் செய்யலாம் அல்லது அதனை நீக்கம் செய்யலாம்.
மருத்துவ மன்றம் அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட
பணிப்புரைகளுக்கு உரியவாறு இணங்கி நடத்தலும்
உடனடியாகச் செயல்வடிவம் கொடுத்தலும் வேண்டும்.
40. நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.- இந்தச் சட்டத்தின்படியோ
இந்தச் சட்டத்தின்படிச் செய்யப்பட்ட விதி அல்லது
ஆணை அல்லது ஒழுங்குவிதி எதனின்படியோ
நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக்
கருதப்பட்ட செயல் எதற்காகவும் அரசுக்கெதிராகவோ,
அரசின் அதிகாரஅமைப்பு எதற்கும் அல்லது அலுவலர்
எவருக்கும் எதிராகவோ, மருத்துவ மன்றத்திற்கு அல்லது
அதன் குழு எதற்கும் எதிராகவோ, மருத்துவ மன்றத்தின்
அலுவலர் அல்லது பணியாளர் எவருக்கும் எதிராகவோ,
உரிமையியல்வழக்கு, குற்றவியல்வழக்கு அல்லது பிற
சட்ட நடவடிக்கை எதுவும் தொடரப்படுதல் கூடாது.
41. அதிகாரங்களை ஒப்படைவு செய்தல் .-
(1) அதிகாரஅமைப்பு எதனிடமும் அல்லது
அலுவலர் எவரிடமும், அரசு இந்தச் சட்டத்தின் கீழ்
தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை
அறிவிக்கையின் மூலமாக ஒப்படைவு செய்யலாம்.
(2) உட்பிரிவு (இன்படி ஒப்படைவு
செய்யப்பட்டுள்ள அதிகாரம் எதனையும் செலுத்தி
வருவதானது அறிவிக்கையில் குறிப்பிடப்படக்கூடிய
கட்டுப்பாடுகளுக்கு மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டும்
அரசினால் கட்டுப்பாடு செய்யப்படுவதற்கு மற்றும்
மேலாய்வு செய்யப்படுவதற்கு உட்பட்டும் இருத்தல்
வேண்டும்.
47
42. இர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.-
(1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு செயல் வடிவம்
கொடுப்பதில் இடர்ப்பாடு எதுவும் எழுமானால், அரசு,
தறுவாய்கேற்ப ஆணையின் மூலமாக, இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அந்த
இடர்ப்பாட்டினை நீக்குகின்ற நோக்கத்திற்காக
தேவையானது அல்லது உகந்தது எனத் தனக்குத்
தோன்றுகிற செயல் எதனையும் செய்யலாம்:
வரம்புரை: ஆனால், இந்தச் சட்டத்தின் தொடக்கத்
தேதியிலிருந்து இரண்டாண்டுகள் முடிவடைந்த பின்னர்
இந்த உட்பிரிவின்படியான ஆணை எதுவும்
பிறப்பிக்கப்படுதல் கூடாது.
(2) இந்த உட்பிரிவின்படி, பிறப்பிக்கப்படும்
ஆணை ஒவ்வொன்றும் அது பிறப்பிக்கப்பட்ட பின்னர்
கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவை முன்பு
வைக்கப்படுதல் வேண்டும்.
48
இணைப்புப் பட்டியல்
சித்த மருத்துவத் தகுதிகள்.
(2 (14) ஆம் மற்றும் 34 ஆம் பிரிவுகளைக் காண்க)
வரிசை | பல்கலைக்- ஏற்றுக்கொள்-| பதிவு
எண் | கழகத்தின், ளப்பட்ட செய்துகொள்-|
குழுமத்தின், | மருத்துவத் | வதற்கான
மருத்துவக் தகுதிகள் சுருக்கக்
கல்வி குறியீடு
நிலையத்தின்:
பெயர்
0) (2) (3) (3)
பகுதி - |
1. தமிழ்நாடு இந்திய இ.ம.த.சா.ம
இந்திய மருத்துவத்தில்) பர
மருத்துவ (உள்நாட்டு
உள்நாட்டு (மருத்துவத்தில்
மருத்துவ/ _ [ஒருங்கிணைந்த
ஒருங்கிணைந்த வக்கில்
மருத்துவ மருத்துவத்தில்)
தேர்வாளர் தகுதிச்சான்று
முல் S
49
இந்திய க.ம.கெள.ம
மருத்துவத்தில்)
(உள்நாட்டு
மருத்துவத்தில்] HPIM
ஒருங்கிணைந்த
மருத்துவத்தில்
கெளரவப்-
பட்டம் பெற்ற
மருத்துவர்
பகுதி - ॥
அரசு இந்திய | (இந்திய அ.,ஒம.க.ப
மருத்துவ/ மருத்துவ G.CIM
உள்நாட்டு உள்நாட்டு
மருத்துவ மருத்துவ)
ஒருங்கிணைந்த | அரசு
மருத்துவக் ஒருங்கிணைந்த।
கல்லூரி, மருத்துவத்தில்
சென்னை இளங்கலைப்-
பட்டம்
பெற்றவர்
பகுதி - ॥॥
(8) இந்திய இ.ம.க.ப
சென்னைப் மருத்துவ 810
பல்கலைக்கழ- இளநிலைப்
கம் பட்டம் (சித்தா)
50
மதுரை இந்திய .ம.க.ப
காமராசர் மருத்துவ B.IM
பல்கலைக் இளநிலைப்
கழகம் பட்டம் (சித்தா)
மதுரை முதுகலை மு.சி.ம.அ
காமராசர் சித்த 14.0. (Sidda)
பல்கலைக் மருத்துவ
கழகம் அறிஞர்
மதுரை இளங்கலை க.சிம.அ
காமராசர் சித்த B.SM& S
பல்கலைக் மருத்துவ
கழகம் அறிஞர்
(6) தமிழ்நாடு | இளங்கலை இ.சி.ம.அ
டாக்டர் சித்த B.SM& S
எம்.ஜி.ஆர் | மருத்துவ
மருத்துவப் அறிஞர்
பல்கலைக்
கழகம்,
சென்னை
பகுதி - IV
மைய (இந்திய ப.சிம
உள்நாட்டு மருத்துவத்தில்| R.S.MP
மருத்துவக் வழிவழியாகப்-
குழுமம், பயிற்றுவிக்கப்
சென்னை பட்டவர்
அல்லது அல்லது
தமிழ்நாடு
51
இந்திய மரபுவழி
மருத்துவக் மருத்துவர்கள்)
குழுமம் பதிவு பெற்ற
சித்த
மருத்துவர்
(இந்திய ப.கு.சி.ம
மருத்துவத்தில்! E.S.M.P
வழிவழியாகப்
பயிற்றுவிக்கப்
பட்டவர்
அல்லது
மரபுவழி
மருத்துவர்கள்
)
பட்டியலிடப்ப-
ட்டூள்ள சித்த
மருத்துவர்
பகுதி -V
இந்திய நாட்டு | கிராம வைத்தியச் | கி.வை.சா
மருத்துவத் சான்றிதழ் ஙு.
தேர்வாளர்கள்:
குழுமம்,
தமிழ்நாடு
52
பகுதி - Vi
(எந்த நாடுகளுக்கு இடையே மாற்றிக் கொள்வதற்கான
திட்டமொன்று இருக்கின்றதோ அந்த நாடுகளில் உள்ள
மருத்துவக் கல்வி நிலையங்களில் வழங்கப்படும்
தகுதிகள்)
6. | அரசு உள்நாட்டு | உள்நாட்டு உ.ம.ப.ப
மருத்துவக் மருத்துவப் பட்டயப் | 0.1.5
கல்லூரி, படிப்பு (சித்தா)
கொழும்பு,
இலங்கை.
ஆயுர்வேத ஆஃம.ப.ப
மருத்துவப் பட்டயப் | DAMS
படிப்பு
7. | உள்நாட்டு ஆயுர்வேத ஆஃம.ப.ப
மருத்துவக் மருத்துவப் பட்டயப் | DAMS
கல்வி நிறுவனம், | படிப்பு
கொழும்பு
பல்கலைக்
கழகம்,
இலங்கை
8. | யாழ்ப்பாணப் ஆயுர்வேத ஆஃம.ப.ப
பல்கலைக் மருத்துவப் பட்டயப் | DAMS
கழகம், படிப்பு
இலங்கை