Tamil Nadu · 1947 · Act 36
Tamil Nadu Shops and Establishments Act
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947
(தமிழ்நாடு சட்ட எண். 36/1947)
[1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் நாளன்று
தலைமை ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்று 1948ஆம்
ஆண்டு பிப்ரவரி மாதம் 1௦ஆம் நாளன்று புணித ஜார்ஜ்
கோட்டை அரசிதழில் முதன் முதலில் வெளியிடப்பட்டது.]
கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள்,
திரையரங்குகள்: மற்றும் பிற நிறுவனங்களில், பணி
நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்காவும், பிற
நோக்கங்களுக்குமான ஒரு சட்டம்.
கடைகள், வணிக நிறுவனங்களில் பணி
நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் வேறு சில
நோக்கங்களுக்கும் பொருத்தமான இது பின்வருமாறு
இயற்றப்படுகிறது.
1. குறுந்தலைப்பு, பரப்பெல்லை மற்றும் தொடக்கம்:-
(1) இந்தச் சட்டம், தமிழ்நாடு கடைகள் மற்றும்
நிறுவனங்கள் சட்டம், 1947 என்று வழங்கப்படும்.
(2) இது தமிழ்நாடு மாநிலம் முழுவதும் பரவி நிற்கும்.
(3) (ஐ இது, மாநில அரசு, அறிவிக்கை வாயிலாகக்
குறிப்பிடக்கூடிய, தேதியன்று கீழ்க்கண்ட பகுதிகளுக்கு
செல்லாற்றல் பெறும்:
(i) மெட்ராஸ் மாநகரம்,
(மெட்ராஸ் சட்டம் (i) 1920 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட
5/1920)
மாநகராட்சிகள். சட்டத்தின் கழ் அமைக்கப்பட்ட
மாநகராட்சிகள் அனைத்தும், மற்றும்
(iii) 1950 ஆம் ஆண்டு மெட்ராஸ் கிராம பஞ்சாயத்துகள்
சட்டம் அட்டவணை Nl இன் விதி 2 - ன்படி
பஞ்சாயத்துகளின் அதிகாரவரம்பிற்குள் உள்ள அனைத்து
பகுதிகளும் அந்தச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டதாக
கருதப்படுதல் வேண்டும்; மற்றும் அவை அந்தச் சட்டத்தின்
தொடக்க நிலைக்கு உடன் முன்பு, அப்போதைக்கு மாநில
அரசால் அந்தச் சட்டத்தின் பிரிவு 5 (1) (ஐ - ன்படி தரம் |
ஆக வகைப்படுத்தப்பட்டுள்ள மாநில அரசால் பெரிய
பஞ்சாயத்துகளாக வகைப்படுத்தப்பட்ட மற்றும் அதே
சட்டத்தின்படி அமைக்கப்பட்ட அல்லது
மறுசீரமைக்கப்பட்ட பஞ்சாயத்துகளின் அதிகாரவரம்பிற்குள்:
உள்ள அனைத்து பகுதிகளும்.
(௦) அரசு அறிவிக்கை வாயிலாக, இந்தச் சட்டத்தின்
எந்த ஒரு வகைமுறைகளும் அல்லது அனைத்தும்
அத்தகைய அறிவிப்பில் குறிப்பிடப்படும் தேதியில் எந்த பிற
பகுதிக்கும் செயல்லாற்றலுக்கு வருதல் வேண்டும் என
பணிக்கலாம்.
அத்தியாயம்-।
முன்னுரை
2. பொருள்வரையறைகள்:- இந்தச் சட்டத்தில்,
பொருளுக்கு அல்லது தறுவாய்க்கு முரணானதாக எதுவும்
இருந்தாலான்றி,-
(1) குழந்தை: என்பது, பதினான்கு வயது
நிறைவடையாத ஒரு நபர் எனப் பொருள்படும்.
(2) 'மூடப்பட்டது' என்பது, எந்த ஒரு
வாடிக்கையாளரின்: சேவைக்காகவும் திறக்கப்படாத
அல்லது நிறுவனத்துடன் தொடர்புடைய எந்த ஒரு தொழில்
நடவடிக்கைக்கும் திறக்கப்படாத நிலை எனப்
பொருள்படும்.
(3) "வணிக நிறுவனம் என்பது, இந்தச்
சட்டத்தின் நோக்கங்களுக்காக, ஒரு கடையாக இல்லாத,
ஆனால் விளம்பரத் தொழில் செய்கிற, தரகு, அனுப்புகை:
அல்லது வணிக முகமை அல்லது காப்பிட்டு நிறுவனம்,
கூட்டு பங்கு நிறுவனம், வங்கி, தரகர்களின் அலுவலகம்
அல்லது பரிமாற்றம் எடுத்து நடத்தப்படும் தொழிற்சாலை
நிறுவனம் அல்லது ஒரு தொழிற்சாலையின் எழுத்தர்
துறை மற்றும் மாநில அரசு அறிவிக்கை வாயிலாக வணிக
நிறுவனம் என விளம்பக்கூடிய அத்தகைய பிற
நிறுவனங்களை உள்ளடக்கும்.
(4) நாள்'என்பது, நள்ளிரவில் தொடங்குகின்ற
இருபத்து நான்கு மணிநேரக் காலஅளவு எனப்
பொருள்படும்.
வரம்புரை: பணியமர்த்தப்பட்ட நபரின் நிகழ்வில்,
நாள் என்பது எவருடைய பணிக்காலம் நள்ளிரவிற்கு
மேலாக நீட்டிக்கப்படுகிறதோ அவருடைய பணி தொடங்கும்
காலத்திலிருந்து இருபத்து நான்கு மணி நேரம் எனப்
பொருள்படும்.
(5 "பணி அமர்த்துபவர்' என்பது, தன்:
உடைமையில் அல்லது பொறுப்பில் கொண்டுள்ள ஒரு
நிறுவனத்தின் தொழிலை நடத்துகிற நபர் எனப்
பொருள்படும்; மற்றும் ஒரு நிறுவனத்தை பொது நிர்வாகம்
அல்லது கட்டுப்பாடு செய்கிற மேலாளர், முகவர் அல்லது
பிற நபர்களையும் உள்ளடக்கும்;
(6) நிறுவனம் என்பது, இந்தச் சட்டத்தின்
நோக்கங்களுக்காக, ஒரு வணிக நிறுவனம், உணவகம்,
உணவுக் கூடம், தங்கும் விடுதி, திரையரங்கம், கேளிக்கை
அல்லது பொழுதுபோக்கு நடைபெறும் பொது இடம் மற்றும்
1[மாநில] அரசால் அறிவிக்கை வாயிலாக.
விளம்பப்படக்கூடிய எந்த ஒரு நிறுவனத்தையும்
உள்ளடக்கும்.
(7) "தொழிற்சாலை! என்பது, 1948 ஆம் ஆண்டு
தொழிற்சாலைகள் சட்டத்தின் பொருளின்படி
தொழிற்சாலை அமைந்துள்ள எந்த ஒரு வளாகமும் எனப்
பொருள்படும்.
(8) 'ஆய்வாளர்' என்பது, பிரிவு 42 - ன்படி
அமர்த்தப்பட்டுள்ள ஆய்வாளர் எனப் பொருள்படும்.
(9) 'அறிவிக்கை' என்பது, புனித ஜார்ஜ்
கோட்டையின் அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கை
எனப் பொருள்படும்.
(10) _ "திறக்கப்பட்ட என்பது எந்த ஒரு
வாடிக்கையாளருக்கும் சேவை புரிவதற்காக திறக்கப்பட்ட
எனப் பொருள்படும்.
(11) பணியின். காலஅளவுகள்' என்பது,
பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவர் வேலைதருபவரிடம்
வேலைக்கு இருக்கும் காலஅளவு எனப் பொருள்படும்.
(12) 'பணியமர்த்தப்பட்ட நபர் என்பது,
() கடையைப் பொறுத்த நிகழ்வில், கடையின்
அலுவல் தொடர்பாக முழுமையாக அல்லது முதண்மையாக
அதில் பணியமர்த்தப்பட்ட நபர் எனப் பொருள்படும்;
(00 தொழிற்சாலை அல்லது தொழில் நிறுவனமாக
இருக்கும் நிகழ்வில், அத்தகைய தொழிற்சாலை அல்லது
தொழில் நிறுவனத்தில் எழுத்தர் பணியாளர் தொகுதியின் ஓர்
உறுப்பினர் எனப் பொருள்படும்;
(i) ஒரு தொழிற்சாலை அல்லது எடுத்து
நடத்தப்படும் தொழில் நிறுவனத்தின் எழுத்துத் துறை
அல்லாத வர்த்தக நிறுவணதைப் பொறுத்த நிகழ்வில், அந்த
நிறுவனத்தின் அலுவல் தொடர்பாக முழுமையாக அல்லது
முதன்மையாக பணியமர்த்தப்பட்ட ஒரு நபர் எனப்
பொருள்படும்; மற்றும் ஒரு அலுவலக உதவியாளரையும்
உள்ளடக்கும்;
(iv) உணவகம், அல்லது உணவுக் கூடம்
பொறுத்த நிகழ்வில், உணவு அல்லது பானம் தயாரித்தல்
அல்லது பரிமாறுதல் அல்லது வாடிக்கையாளர்களை
வரவேற்றல் அல்லது வளாகத்தில் பயன்படுத்தப்பட்ட
பாத்திரங்களை சுத்தம் செய்தல் அல்லது எழுத்தராக
அல்லது காசாளராக முழுமையாக அல்லது முதன்மையாக
பணியமர்த்தப்பட்ட ஒரு நபர் எனப் பொருள்படும்;
(9) திரையரங்கைப் பொறுத்த நிகழ்வில், ஒரு
இயக்குநராக, எழுத்தராக, வாயிற்காப்பாளராக,
திரையரங்கத்திற்கு வருபவருக்கு இருக்கை காட்டுபவராக
அல்லது மாநில] அரசால் பொது அல்லது சிறப்பு ஆணை
மூலம் குறிப்பிடப்படும். அத்தகைய தகுதியில்
பணியமர்த்தப்பட்ட ஒரு நபர் எனப் பொருள்படும்;
() மேற்குறிப்பிட்ட (i) முதல் (v) - பத்திகளின்
கீழ் வராத ஒரு நிறுவனத்தைப் பொறுத்த நிகழ்வில், அந்த
நிறுவனத்தின் அலுவல் தொடர்பாக முழுமையாக அல்லது
1"மாகாணம்" என்பதற்கு மாற்றாக சட்டங்களின் தழுவமைவு
ஆணை 1950 ஆல் அமைக்கப்பட்டது.
முதன்மையாக பணியமர்த்தப்பட்ட ஒரு நபர் எனப்
பொருள்படும்; மற்றும் ஒரு அலுவலக உதவியாளரையும்
உள்ளடக்கும்;
ரி) நிறுவனங்கள் அனைத்தையும் பொறுத்த
நிகழ்வில், வளாகங்களின் எந்தப் பகுதியையும் சுத்தம்
செய்ய முழுமையாக அல்லது முதன்மையாக
பணியமர்த்தப்பட்ட ஒரு நபர் எனப் பொருள்படும்;
ஆனால் வேலை தருபவருடன் வாழ்கிற மற்றும்
அத்தகைய வேலைதருபவரைச் சார்ந்திருக்கிற
வேலைதருபவரின் கணவர், மனைவி, மகன், மகள், தந்தை,
தாய், சகோதரன் அல்லது சகோதரி ஆகியோரை
உள்ளடக்காது.
(13) 'வகுத்துரைக்கப்படும்' என்பது, இந்தச்
சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகளால்
வகுத்துரைக்கப்படும் எனப் பொருள்படும்;
(14) தங்கும் விடுதி! என்பது, நல்லெண்ணத்தின்
பேரில் பயணி அல்லது பொது மக்களில் ஒருவர் அல்லது
பொது மக்களின் ஒரு வகையினருக்கு பணம்
செலுத்துவதன் பேரில் தங்கும் வசதி மற்றும் உணவு
வழங்குகிற தொழில் மேற்கொள்ளப்படும் வளாகம் எதுவும்
எனப் பொருள்படும்;
(15) உணவகம்' அல்லது 'உணவுக் கூடம்'
என்பது, திரையரங்கத்துடன் இணைந்த உணவகம்
அல்லாத பொது மக்களுக்கு அல்லது பொது மக்களின் ஒரு
வகையினருக்கு சிற்றுண்டி அல்லது உணவு வழங்கும்
தொழிலை முழுமையாக அல்லது முதன்மையாக
மேற்கொள்ளும் வளாகம் எதுவும் எனப் பொருள்படும்;
(16) 'கடை' என்பது, அலுவலகங்கள், சேமிப்பு
அறைகள், கிடங்குகள் மற்றும் பண்டகச் சாலைகள்
ஆகியவை உள்ளிட்ட வியாபாரம் அல்லது தொழில்
மேற்கொள்ளப்படும் அல்லது வாடிக்கையாளர்களுக்கு
சேவைகள் வழங்கப்படுகின்ற அல்லது பிறவாறு அத்தகைய
தொழில் தொடர்பாக பயன்படுத்தப்படுகிற வளாகம் எதுவும்
என்று பொருள்படும்; ஆனால் உணவகம், உணவுக் கூடம்
அல்லது வணிக நிறுவனம் ஆகியவற்றை உள்ளடக்காது;
(17) திரையரங்கு என்பது, முதன்மையாக
அல்லது முழுவதுமாக இயங்கு படங்களின்
காட்சிப்படுத்தலுக்காக அல்லது நாடகம் சார்ந்த
செயல்பாடுகளுக்காகக் கருதப்பட்ட இடம் எதையும்
உள்ளடக்கும்.
[(17a) "நேரம்" என்பது இந்திய நிலையான நேரம்
அது கிரீன்விச் நேரத்தை விட ஐந்தரை மணி நேரம்
முந்தையது எனப் பொருள்படும்."]
(18) கூலி! என்பது, பணத்தால் மதிப்பிடத்தக்கதும்
அன்றாட வருகை, நல்ல பணி அல்லது நடத்தை அல்லது
பணியமர்த்தப்பட்ட நபரின் பிற பழக்கவழக்கத்தின் பேறிலான
நிபந்தனைக்குப்பட்டோ அல்லது பிறவாறாகவோ
பணியமர்த்தம் தொடர்பாக, வெளிப்படையான அல்லது
உட்கிடையான பணியமர்த்த ஒப்பந்த நிபந்தனைகள்
நிறைவேற்றப்பட்டால் பணியமர்த்தம் செய்யப்பட்ட நபருக்கு
அவரின் வேலை அல்லது செய்த பணிக்குச் செலுத்தத்தக்க
ஊதியம் எதுவும் எனப் பொருள்படும்; மற்றும்
ஊக்கத்தொகை அல்லது மேற்சொன்ன தன்மை கொண்ட
பிற கூடுதல் ஊதியம் மற்றும் அவரின் பணி முடிவுக்கு
கொண்டுவரப்பட்ட காரணத்தினால் அத்தகைய நபருக்கு
செலுத்தத்தக்க தொகை எதையும் உள்ளடக்கும், ஆனால்-
1. சட்ட எண் - 27/2018 இன் 2 ஆம் பிரிவினால் புகுத்தப்பட்டது.
(வ) வீட்டுவசதி, மின்வசதி, குடிநீர், மருத்துவ
கவனிப்பு அல்லது மாநில] அரசின் பொது அல்லது
சிறப்பு ஆணையால் விலக்களிக்கப்பட்ட பிற வசதி
அல்லது பிற சேவை எதையும்;
(௦) வேலைதருபவரால் ஓய்வூதிய நிதி அல்லது
சேமநல நிதி எவற்றிற்கும் செலுத்தப்பட்ட பங்களிப்புத்
தொகை எதையும்;
(௦9) பயணப்படித் தொகை அல்லது பயணச்
சலுகை தொகை எதையும்; அல்லது
(0) பணியின் தன்மையால் பணியமர்த்தப்பட்ட
நபருக்கு ஏற்பட்ட தனிச் செலவினங்களுக்காக
செலுத்தப்பட்ட தொகை எதையும்; அல்லது
(e) பணியிலிருந்து வெளியேறும்போது
செலுத்தத்தக்க பணிக்கொடை எதையும்
உள்ளடக்காது.
(19) 'வாரம்' என்பது, சனிக்கிழமை
நள்ளிரவிலிருந்து தொடங்குகிற ஏழு நாட்கள் கொண்ட
காலஅளவு எனப் பொருள்படும்;
(20) 'இளைஞர்! என்பது, குழந்தையாய் இல்லாத
பதினேழு வயது நிறைவடையாத நபர் எனப் பொருள்படும்;
1[3. கடைகள் மற்றும் நிறுவனங்களைப் பதிவு செய்தல்:-
1) 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும்
நிறுவனங்கள். (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத்
தேதியன்றும் அதிலிருந்தும் பத்து அல்லதுஅதற்கு
மேற்பட்ட வேலையாட்கள் பணிபுரிகின்ற ஒவ்வொரு
நிறுவனத்தின் வேலை தருபவர், தன்னுடைய வணிகம்
1."மாகாணம்" என்பதற்கு மாற்றாக சட்டங்களின் தழுவமைவு
ஆணை 1950 ஆல் அமைக்கப்பட்டது
2. சட்ட எண். 27/2018 இன் 3 ஆம் பிரிவினால் புகுத்தப்பட்டது.
தொடங்கிய தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள்
பதிவிற்காக விண்ணப்பித்து பதிவுச் சான்றிதழைப்
பெறுதல் வேண்டும்.
(2) பதிவு செய்தவற்கான விண்ணப்பம்
ஒவ்வொன்றும் உட்பிரிவு (1) - ன்படி வகுத்துரைக்கப்படும்
அத்தகைய படிவத்திலும் முறையிலும் இருத்தல் வேண்டும்.
(3) ஆய்வாளர் உட்பிரிவு (2) - ன்படியான
விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதன். பேரில்
நிறுவனங்களை பதிவு செய்தல் வேண்டும் மற்றும்
வகுத்துரைக்கப்படும் அத்தகைய படிவத்தில் வேலை
தருபவருக்குப் பதிவுச் சான்றிதழை வழங்குதல் வேண்டும்.
(4) ஆய்வாளர், நிறுவனங்களின் பதிவேட்டை
பராமரித்தல் வேண்டும் மற்றும் ஆய்வாளரால் வழங்கப்பட்ட
பதிவுச் சான்றிதழை வேலை தருபவர் நிறுவனத்தில்
முக்கிய இடங்களில் காட்சிக்கு வைத்தல் வேண்டும்.
(5. ஐ பதிவுச் சான்றிதழானது ஐந்து ஆண்டு
காலத்திற்கு செல்லத்தக்கதாகும் மற்றும்
வகுத்துரைக்கப்படும் கட்டணங்களைச் செலுத்துவதன்
பேரில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுதல்
வேண்டும் மற்றும் உட்பிரிவு (2) மற்றும் (3) - ன்
வகைமுறைகள் பதிவுச் சான்றிதழைப் புதுப்பித்தலுக்கும்
பொருந்தும்:
(b) வேலை தருபவர் ஒவ்வொருவரும் பதிவுச்
சான்றிதழின் செல்லும் காலம் முடிவடைவதற்கு முப்பது
நாட்களுக்கு முன்பாக அவருடைய பதிவுச் சான்றிதழை
புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்தல் வேண்டும்.
(6) ஆய்வாளரால் விண்ணப்பம்
பெற்றுக்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்கள்
10
காலத்திற்குள் பதிவு செய்தலுக்கான அல்லது பதிவைப்
புதுப்பித்தலுக்கான சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தால்,
இந்தச் சட்டத்தின்படி நிகழ்விற்கேற்ப பதிவுச் சான்றிதழ்
வழங்கப்பட்டதாகவோ அல்லது புதுப்பிக்கப்பட்டதாகவோ
கருதப்படுதல் வேண்டும்.
(7) உட்பிரிவு (2)-ன்படி தாக்கல் செய்யப்பட்ட
விண்ணப்ப படிவத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள்
எதிலும் வேலை தருபவர் மாற்றம் செய்தால் அத்தகைய
மாற்றம் செய்யப்பட்டதிலிருந்து முப்பது நாட்கள்
காலத்திற்குள்: ஆய்வாளருக்கு தகவல் அளித்தல்
வேண்டும்; அத்தகைய தகவலைப் பெற்றுக் கொண்டதன்
பேரில் ஆய்வாளர் பதிவுச் சான்றிதழை திருத்தம் செய்தல்
வேண்டும் அல்லது புதிய பதிவுச் சான்றிதழை வழங்குதல்
வேண்டும்.
(8) நிறுவனம் மூடப்பட்ட முப்பது நாட்கள்.
காலத்திற்குள் வேலை தருபவர் அத்தகைய மூடுதல்
குறித்த தகவலை ஆய்வாளருக்கு தெரிவித்தல் வேண்டும்
மற்றும் அத்தகைய தகவலைப் பெற்றுக் கொண்டதன்
பேரில், அவர் பதிவுச் சான்றிதழை இரத்து செய்தல்
வேண்டும்; ஆனால், தகவல் பெறப்படாத போதும் பிறவாறாக
நிறுவனம் மூடப்பட்டதாக ஆய்வாளர்
மனநிறைவடைகின்றபோது அவர் அத்தகைய பதிவுச்
சான்றிதழை இரத்து செய்தல் வேண்டும்.
(9) உட்பிரிவு (1) - ல் அடங்கிய எது எவ்வாறு
இருப்பினும், 2018 - ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள்
மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத்
தேதியன்று பத்து அல்லது அதற்கு மேற்பட்ட
தொழிலாளர்கள் வேலை செய்கிற நடைமுறையில் இருந்து
வரும் நிறுவனத்தின்: வேலை தருபவர்
11
வகுத்துரைக்கப்படும் அத்தகைய படிவத்தில் சுய
விளம்புகையுடன் 2018 - ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள்
மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத்
தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள் நிறுவனத்தின்.
விவரங்களை ஆய்வாளருக்குத் தெரிவித்தல் வேண்டும்;
ஆய்வாளர் வேலை தருபவரால் அளிக்கப்பட்ட தகவலைப்
பதிவேட்டில் பதிவு செய்துப் பதிவுச் சான்றிதழை
வழங்குதல் வேண்டும்.
3-௯ பத்துக்கும் குறைவான வேலையாட்களை
பணி அமர்த்தியுள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள்
குறித்த தகவல்,-
(1) பத்துக்கும் குறைவான வேலையாட்களை
பணி அமர்த்தியுள்ள நிறுவனத்தின் வேலை தருபவர்
ஒவ்வொருவருக்கும் 2018 - ஆம் ஆண்டு தமிழ்நாடு
கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின்
தொடக்கத் தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள்
அல்லது அவருடைய வணிகம் தொடங்கப்பட்ட
தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் அவருடைய
வணிகத்தை குறித்து வகுத்துரைக்கப்படும் அத்தகைய
படிவத்திலும் முறையிலும் தகவல் அளித்தல் வேண்டும்;
ஆய்வாளர், வகுத்துரைக்கப்படும் பதிவேட்டில் வேலை
தருபவரால் அளிக்கப்பட்ட தகவல்களை பதிவு செய்தல்
வேண்டும்.
வரம்புரை: எந்த நேரத்திலும் நிறுவனத்தில் பணி
செய்கிற தொழிலாளர்களின் எண்ணிக்கை பத்து அல்லது
அதற்கு அதிகமாக இருந்தால், இந்தச் சட்டத்தின்
வகைமுறைகள் அனைத்தும் அத்தகைய நிறுவனத்திற்கு
பொருந்துதல் வேண்டும் மற்றும் அத்தகைய நிறுவனத்தின்.
வேலை தருபவர் பதிவிற்காக விண்ணப்பித்தல் வேண்டும்
12
மற்றும் பிரிவு 3 - ன் வகைமுறைகளின்படி பதிவுச்
சான்றிதழை பெறுதல் வேண்டும்.
(2) பத்துக்கும் குறைவான நபர்கள் வேலை
செய்கிற நிறுவனத்தின் வேலை தருபவர் நிறுவனம்:
மூடப்பட்டதிலிருந்து முப்பது நாட்கள் காலத்திற்கும்,
அத்தகைய மூடுதல் குறித்து ஆய்வாளருக்கு தகவல்
அளித்தல் வேண்டும்; தகவலை பெற்றுக் கொண்டதன்
பேரில் ஆய்வாளர் தான்: பராமரித்து வரும்
பதிவேட்டிலிருந்து அத்தகைய நிறுவனத்தின் பதிவை
நீக்கிவிடுதல் வேண்டும்]
4. விலக்களிப்பு:-(1) இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள
எதுவும்,
ஐ) நிறுவனம் எதனின் நிருவாகப் பதவியில்
பணியமர்த்தப்பட்ட நபர்களுக்கு;
b) எந்த நபர்களின் பணியானது. பயணத்தில்
ஈடுபடுவதாக உள்ளதோ, அந்த நபர்களுக்கு; மற்றும்
நிறுவனத்திற்கு ஆதரவு திரட்டுபவராக அல்லது
பராமரிப்பவராக பணியமர்த்தப்பட்ட நபர்களுக்கு;
c) மத்திய மற்றும் மாநில] அரசுகள் உள்ளாட்சி
அதிகார அமைப்புகள், இந்தியச் சேம வங்கி,
“[அரசமைப்பின் 366 ஆம் அமைப்பு விதியின் (20) ஆம்
கூறில் வரையறுக்கப்பட்டவாறான இரயில்பாதை எதையும்
இயக்கும் இரயில்பாதை நிருவாகம்] மற்றும் இராணுவ
முகாம் அதிகார அமைப்புகளின் கீழ் வரும் நிறுவனங்கள்;
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக சட்டங்களின் தழுவமைவு ஆணை 1950 ஆல்
அமைக்கப்பட்டது.
2. "ஒரு கூட்டாட்சி இரயில்பாதையை இயக்கும் இரயில்பாதை நிருவாகம்"
என்பதற்கு மாற்றாக சட்டங்களின் தழுவமைவு (திருத்த) ஆணை 1950 ஆல்:
இந்த சொற்கள், அடைப்புக்குறிகள் மற்றும் எண்கள் அமைக்கப்பட்டன.
13
(0) சுரங்கங்கள் மற்றும் எண்ணெய் வயல்களில் உள்ள
நிறுவனங்களுக்கு;
(6) ஒரு நேரத்திற்கு பதினைந்து நாட்களுக்கு மிகாத
காலத்திற்கு தற்காலிக சந்தைகள் மற்றும் விழாக்கள்:
நடக்கும் இடங்களில் உள்ள கடைவீதிகளில் உள்ள
நிறுவனங்களுக்கு;
(f) 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின்.
பொருளின்படியான தொழிற்சாலைகள் அல்லாத பிற
நிறுவனங்களுக்கு அப்போது நடைமுறையில் உள்ள
சிறப்புச் சட்டம் ஒன்றினால் நிருவகிக்கப்படும், இந்தச்
சட்டம் தொடர்பான விவரங்கள் '[மாநிலத்தில்] பொருந்தாது;
(2). (a) நோய்வாய்ப்பட்டோர், பலவிீனமானோர்,
ஆதரவற்றோர் அல்லது மனச்சீர்கேடு உற்றோருக்கான
சிகிச்சை அல்லது நலனுக்கான
மருத்துவமனைகள் அல்லது பிற நிறுவனங்கள்;
(b) டாநில] அரசு, பொது அல்லது சிறப்பு ஆணையின்
மூலமாக குறிப்பிடும் இரசாயன மற்றும் மருந்துக்கடைகள்;
(௦) கேளிக்கைக் கூடங்கள் மற்றும் தங்கும்
விடுதிகள், பள்ளி அல்லது கல்லூரிகளுடன் இணைந்த
விடுதிகள் மற்றும் மாணவர்கள் மற்றும் உடன்தங்கும்
ஆசிரியர்களின் உணவு மற்றும் தங்கும் வசதிகளோடு
கூடிய உண்டு உறைவிடப்பள்ளிகளில் பேணப்பட்டு
வரும் நிறுவனங்கள்;
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக சட்டங்களின் தழுவமைவு ஆணை 1950 ஆல்
அமைக்கப்பட்டது.
14
(0) ரயில் நிலையங்கள், படகுத் துறைகள்,
துறைமுக மேடைகள் அல்லது துறைமுகங்களின்.
விற்பனையகங்கள் மற்றும் ஓய்வறைகள்,
ஆகிய எவற்றிற்கும் நிகழ்விற்கேற்ப பிரிவு 7 அல்லது பிரிவு
13 இல் அடங்கியுள்ள எதுவும் பொருந்தாது.
5. விலக்களிக்கப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு
சட்டத்தைச் செயல்படுத்தவதற்கான அரசின் அதிகாரம் :-
பிரிவு 4-ல் அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும்,
[மாநில] அரசானது அறிவிக்கை மூலம், இந்தச் சட்டத்தின்.
வகைமுறைகள் அனைத்தையும் அல்லது அவற்றுள்
எதையும், அந்தச் சட்டத்தின் உட்பிரிவு (1) -ன் (6) மற்றும்
(9) கூறுகளில் கூறப்பட்டுள்ளவற்றைத் தவிர பிற வகை:
நபர்கள் எவருக்கும் அல்லது நிறுவனங்கள் எதற்கும்
செயல்படுத்துமாறுச் செய்யலாம் மற்றும் அத்தகைய
அறிவிக்கையை மாற்றி அமைக்கலாம் அல்லது நீக்கலாம்.
6. விலக்களித்தல்:- '[மாநில] அரசானது, அறிவிக்கை
மூலம், நிறுவனம் அல்லது நிறுவனங்களின் வகை:
எதையும் அல்லது நபர்கள் அல்லது நபர்களின் வகையினர்
எவரையும், மாநில] அரசு பொருத்தமெனக் கருதும்
நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்தச் சட்டத்தின் வகை:
முறைகள் அனைத்தில் இருந்தும் அல்லது அவற்றில்
எதில் இருந்தும் நிரந்தரமாகவோ குறிப்பிட்ட காலத்திற்கோ
விலக்களிக்கலாம்.
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக சட்டங்களின் தழுவமைவு ஆணை:
1950 ஆல் அமைக்கப்பட்டது.
15
அத்தியாயம் -॥
கடைகள்
7. கடைகள் திறக்கும் மற்றும் மூடும் நேரங்கள்.
(1) அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற செய்
சட்டத்தினால் அல்லது அவற்றின். கீழ் வகை:
செய்யப்பட்டால் தவிர, கடை எதுவும், எந்த ஒரு நாளிலும்,
அதன் பொருட்டு செய்யப்பட்ட பொது அல்லது சிறப்பு
ஆணையினால், மாநில] அரசால், நிர்ணயிக்கப்படும்
நேரங்களுக்கு முன்னர் திறக்கப்படுதல் அல்லது அதற்கு
பின்னர் மூடப்படுதல் கூடாது.
வரம்புரை: கடை எதிலும், அதை மூடுவதற்காக
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சேவை செய்யப்பட்டுவரும்
அல்லது சேவைக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்
எவருக்கும் மூடப்பட வேண்டிய அந்த நேரத்திற்கு உடன்.
அடுத்து வரும் கால் மணி நேரத்திற்கு உள்ளாக
சேவை வழங்கப்படுதல் வேண்டும்.
2. உட்பிரிவு (1) -ன்படி ஆணை ஒன்றை பிறப்பிக்கும்
முன் மாநில] அரசானது வகுத்துரைக்கப்படும் முறையில்
விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
3. இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக மாநில]
அரசானது, வெவ்வேறு கடைகள் அல்லது கடைகளின்
வகைகளுக்காக அல்லது வெவ்வேறு பகுதிகளுக்காக
அல்லது ஆண்டின் வெவ்வேறு காலங்களுக்காக,
வெவ்வேறு நேரங்களை நிர்ணயிக்கலாம்.
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக சட்டங்களின் தழுவமைவு ஆணை:
1950 ஆல் அமைக்கப்பட்டது.
16
8. கடை மூடும் நேரத்திற்கு பின்பு கடைகளுக்கு வெளியே
விற்பனை செய்வதற்குத் தடை.- அப்போதைக்கு
நடைமுறையில் உள்ள பிற செய்சட்டம் எதிலும் அல்லது
எதன்படியும் வகை செய்யப்பட்டால் தவிர, பிரிவு 7 —
ன்படி அத்தகைய தெரு அல்லது பொது இடம்
அமைந்திருக்கும் வட்டாரத்தில் அதே வகையிலான
சரக்குகளை கையாளும் கடைகளை மூடுவதற்காக
நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு, எந்த ஒரு நபரும்,
எந்த சரக்குகளையும் ஒரு தெருவில் அல்லது தெருவின்
அருகாமையில் அல்லது பொது இடத்தில் விற்பனை
செய்தல் கூடாது.
வரம்புரை: செய்தித்தாள்கள் விற்பனைக்கு இந்த பிரிவு
பொருந்தாது.
9. கடைகளின் தினசரி மற்றும் வார வேலை நேரங்கள்:-
(1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு,
எந்த ஒரு கடையின் பணியாளர் எவரும் எந்த ஒரு
நாளிலும் எட்டு மணி நேரத்திற்கு மேலாகவும் எந்த ஒரு
வாரத்திலும் நாற்பத்து எட்டு மணி நேரத்திற்கு மேலாகவும்,
வேலை செய்ய கோரப்படுதலோ அல்லது
அனுமதிக்கப்படுதலோ கூடாது:
வரம்புரை: நபர் ஒருவருக்கு மிகைநேரக் கூலி
வழங்குதலுக்கு உட்பட்டு, மிகை வேலை நேரம் உள்ளிட்ட
வேலைக் காலஅளவானது, எந்த ஒரு நாளிலும் பத்தரை
மணி நேரத்திற்கு மற்றும் எந்த ஒரு வாரத்திலும் ஐம்பத்து
ஏழு மணி நேரத்திற்கு மிகாமலும் இருந்தால், அத்தகைய
கடையில், இந்த உட்பிரிவின்படி நிர்ணயிக்கப்பட்ட
காலவரம்பிற்கு அதிகமான கால அளவிற்கு அத்தகைய நபர்
வேலை செய்ய அனுமதிக்கப்படலாம்.
17
(2) எந்த ஒரு கடையிலும் பணியமர்த்தப்பட்ட எந்த
ஒரு நபரும், குறைந்தபட்சம், ஒரு மணி நேரம் ஓய்வு
இடைவெளி எடுத்துக்கொள்ளாமல், நான்கு மணி
நேரத்திற்கு அதிகமாக, தொடர்ந்து வேலை செய்ய
கோரப்படுதலோ அல்லது அனுமதிக்கப்படுதலோ கூடாது.
10. வேலைக் நேரத்தின் பரவல்:- கடையில் வேலை
செய்யும் நபர் ஒருவரின் வேலை நேரமானது, எந்த ஒரு
நாளிலும், அவரது ஓய்வு இடைவெளியுடன் சேர்த்து,
பன்னிரெண்டு மணி நேரத்திற்கு மேல் பரவாத விதத்தில்
வகை செய்யப்பட வேண்டும்.
11. கடைகளை மூடுதல் மற்றும் விடுமுறை வழங்குதல்:-
1) ஒவ்வொரு கடையும் வாரத்தில் ஒரு நாள்
முழுமையாக மூடப்படுதல் வேண்டும், அந்த நாளானது
கடையில் வெளிப்படையாக பார்வையில்படும் இடத்தில்
கடைக்காரரால் நிரந்தரமாக காட்சிப்படுத்தப்பட்ட
அறிவிக்கையில் குறிப்பிடப்படுதல் வேண்டும்; மற்றும்
அவ்வாறு குறிப்பிடப்பட்ட நாள் மூன்று மாதங்களுக்கு ஒரு
முறைக்கு மேல் மாற்றப்படுதல் கூடாது.
(2) கடை ஒன்றில் பணியமர்த்தப்பட்ட ஒவ்வொரு
நபருக்கும் ஒரு வாரத்திற்கு ஒரு முழுநாள் விடுமுறை
அனுமதிக்கப்படுதல் வேண்டும்.
வரம்புரை: இந்த உட்பிரிவில் உள்ள எதுவும், ஒரு
அனுமதிக்கப்பட்ட விடுப்பில் அவர் எடுத்துக்கொண்ட
நாட்கள் உட்பட, வாரத்தில் வேலை செய்யும் மொத்த
காலஅளவானது, ஆறு நாட்களுக்கு குறைவாக இருக்கும்
நபர் எவருக்கும் அல்லது உட்பிரிவு (1) - ன்படி கடை
18
மூடிவைக்கப்பட்ட அந்த நாளில் முழு விடுமுறை
அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவரை, ஒரு கூடுதல்
விடுமுறைக்கு உரிமை உடையவராக்குதல் கூடாது.
(3). (ஐ மாநில] அரசு அறிவிப்பின் மூலம், கடைகள்
அல்லது குறிப்பிட்ட வகைக் கடைகள் எதையும் அவை
உட்பிரிவு (1-ல் வகை செய்யப்பட்டுள்ள நாளுக்குக்
கூடுதலாக, '[மாநில] அரசால் நிர்ணயம் செய்யப்படும்
அத்தகைய நேரங்களில் ஒவ்வொரு வாரமும் வாரநாளின்:
பிற்பகல் வேளையில் மூடப்படுதல் வேண்டும் எனக்
கோரலாம்.
(b) கூறு (ஐ) - ண்படியான அறிவிப்பு பொருந்தும் கடை
எதிலும் பணியமர்த்தப்பட்ட நபர் ஒவ்வொருவருக்கும், கூறு
(@) - ன்படி கடையை மூடுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட
பிற்பகல் நேரம் தொடங்குவதிலிருந்து ஒரு அரைநாள்
கூடுதலாக ஒவ்வொரு வாரத்திற்கும் விடுமுறை
அளிக்கப்படுதல் வேண்டும்.
(3) மாநில] அரசானது உட்பிரிவு 3-ன்
நோக்கத்திற்காக, வெவ்வேறு கடைகளுக்கு அல்லது
வெவ்வேறு வகை கடைகளுக்கு அல்லது வெவ்வேறு
பகுதிகளுக்கு அல்லது ஆண்டின் வெவ்வேறு
காலத்திற்காக வெவ்வேறு நேரங்களை நிர்ணயிக்கலாம்.
(5 உட்பிரிவு (3)-ன்கீழ் தேவைப்படும் கடை மூடப்படும்
வாரநாள்: குறித்த அறிவிப்பானது, கடையின்
வெளிப்படையான இடத்தில் கடை வைத்திருப்பவரால்,
நிரந்தரமாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும், மேலும் அது,
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக சட்டங்களின் தழுவமைவு ஆணை:
1950 ஆல் அமைக்கப்பட்டது.
19
கடை வைத்திருப்பவரால் மூன்று மாதத்திற்கு ஒரு
முறைக்கு மேல் மாற்றப்படுதல் கூடாது.
(6) இந்தப் பிரிவிற்கு இணங்க, கடை ஒன்று ஒரு
நாள் அல்லது நாளின். ஒரு பொழுதில்
மூடப்பட்டிருந்ததன் அல்லது விடுமுறை
அனுமதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக. கடையில்
பணியமர்த்தப்பட்ட எந்த ஒரு நபரின் கூலியிலிருந்தும்
பிடித்தம் எதுவும் செய்யப்படுதல் கூடாது; அத்தகைய நபர்
அந்த நாளுக்கு அல்லது நாளின் ஒரு பொழுதிற்கு
சாதாரணமாக கூலி பெறமாட்டார் என்ற அடிப்படையில்
பணியமர்த்தம் செய்யப்பட்டிருந்தாலும், அவர் அந்த நாளில்
அல்லது நாளின் ஒரு பொழுதில் கடை மூடப்படாமல்
அல்லது விடுமுறை அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால்
அந்த நாள் அல்லது நாளின் ஒரு பொழுதில்
பெற்றிருந்திருக்கக்கூடிய கூலி அவருக்கு வழங்கப்படுதல்
வேண்டும்.
அத்தியாயம்- I
கடைகளை தவிர்த்த பிற நிறுவனங்கள்
12. கடைகளை தவிர்த்த பிற நிறுவனங்களுக்கு இந்த
அத்தியாயம் பொருந்துதல் இந்த அத்தியாயத்தின்
வகைமுறைகள் கடைகளை தவிர்த்த பிற
நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
13. திறக்கும் மற்றும் மூடும் நேரம்:- அப்போதைக்கு
நடைமுறையில் உள்ள பிற செய்சட்டம் அல்லது அதன் கீழ்
வகை செய்யப்பட்டால் தவிர, நிறுவனம் எதுவும், எந்த ஒரு
நாளிலும் மாநில] அரசால் அதன் பொருட்டு செய்யப்பட்ட
பொது அல்லது சிறப்பு ஆணை மூலம்
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக சட்டங்களின் தழுவமைவு ஆணை:
1950 ஆல் அமைக்கப்பட்டது.
20
நிர்ணயிக்கப்படக்கூடிய நேரங்களுக்கு முன்னர்
திறக்கப்படவோ அல்லது அதற்கு பின்னர் மூடப்படவோ
கூடாது.
வரம்புரை: ஒரு உணவகம் அல்லது உணவுக்கூடம்
பொறுத்த நிகழ்வில், அதில் மூடுவதற்தாக
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சேவை செய்யப்பட்டு வரும்
அல்லது சேவைக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்
எவருக்கும் மூடப்பட வேண்டிய அந்த நேரத்திற்கு உடன்.
அடுத்து வரும் கால் மணி நேரத்திற்கு உள்ளாக சேவை
வழங்கப்படுதல் வேண்டும்.
(2) உட்பிரிவு (1) - ன் கீழ் ஆணை ஒன்றை
பிறப்பிக்கும் முன்பு, 1மாநில] அரசானது
வகுத்துரைக்கப்படும் முறையில் விசாரணை மேற்கொள்ள
வேண்டும்.
(3)... மாநில அரசானது, இந்தப் பிரிவின்:
நோக்கங்களுக்காக, வெவ்வேறு நிறுவனங்களுக்கு
அல்லது வெவ்வேறு வகை நிறுவனங்களுக்கு அல்லது
வெவ்வேறு பகுதிகளுக்கு அல்லது ஆண்டின் வெவ்வேறு
காலங்களுக்கு வெவ்வேறு நேரங்களை நிர்ணயிக்கலாம்.
14. தினசரி மற்றும் வாராந்திர வேலை நேரம்: இந்தச்
சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, நிறுவனம்
எதிலும் பணியமர்த்தப்பட்ட நபர் எவரும், எந்த ஒரு
நாளிலும் எட்டு மணி நேரத்திற்கு மேலாகவும், எந்த ஒரு
வாரத்திலும் நாற்பத்து எட்டு மணிநேரத்திற்கு மேலாகவும்
பணி செய்ய கோரப்படுதலோ அல்லது
அனுமதிக்கப்படுதலோ கூடாது.
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக சட்டங்களின் தழுவமைவு ஆணை:
1950 ஆல் அமைக்கப்பட்டது.
21
வரம்புரை: நபர் ஒருவருக்கு மிகைநேரக் கூலி
வழங்குதலுக்கு உட்பட்டு, மிகை வேலை நேரம் உள்ளிட்ட
வேலைக் காலஅளவானது, எந்த ஒரு நாளிலும் பத்தரை
மணி நேரத்திற்கு மற்றும் எந்த ஒரு வாரத்திலும் ஐம்பத்து
ஏழு மணி நேரத்திற்கு மிகாமல் இருந்தால், அத்தகைய
நிறுவனத்தில், இந்த உட்பிரிவின்படி நிர்ணயிக்கப்பட்ட
காலவரம்பிற்கு அதிகமான காலஅளவு எதற்கும் அத்தகைய
நபர் வேலை செய்ய அனுமதிக்கப்படலாம்.
(2) எந்த ஒரு நிறுவனத்திலும், பணியமர்த்தப்பட்ட எந்த
ஒரு நபர் எவரும், குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஓய்வு
இடைவெளி எடுத்துக் கொள்ளாமல், நான்கு மணி
நேரத்திற்கு அதிகமாக அந்த நிறுவனத்தில் தொடர்ந்து
வேலை செய்ய கோரப்படுதலோ அல்லது
அனுமதிக்கப்படுதலோ கூடாது.
15. வேலை நேரத்தின் பரவல்: நிறுவனம் ஒன்றில் பணி
அமர்த்தப்பட்ட நபர் ஒருவரின் வேலை நேரமானது, எந்த
ஒரு நாளிலும் அவரது ஓய்வு இடைவெளியுடன் சேர்த்து,
பன்னிரெண்டு மணிநேரங்களுக்கு மேல் பரவாத விதத்தில்
வகை செய்யப்பட வேண்டும்.
16. விடுமுறை நாட்கள்: (1) நிறுவனம் ஒன்றில்
பணியமர்த்தப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் ஒரு வாரத்திற்கு
ஒரு முழு நாள் விடுமுறை அனுமதிக்கப்படுதல் வேண்டும்.
வரம்புரை: இந்த உட்பிரிவில் உள்ள எதுவும், எந்த ஒரு
அனுமதிக்கப்பட்ட விடுப்பில் அவர் எடுத்துக் கொண்ட
நாட்கள் உட்பட, வாரத்தில் பணிபுரியும் மொத்த
காலஅளவானது ஆறு நாட்களுக்குக் குறைவாக இருக்கும்
நபர் எவருக்கும் பொருந்தாது.
22
(2) 'lomblev] அரசு, அறிவிப்பின் மூலம், எந்த ஒரு
நிறுவனம் அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட வகை
நிறுவனங்கள். எதையும் பொறுத்து, அதில்
பணியமர்த்தப்பட்ட நபர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
வாரத்திலும் பிற்பகல் நேரத்திலிருந்து ஒரு அரை நாள்
கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும்.
(3) மாநில] அரசானது, உட்பிரிவு 2 - ன்
நோக்கத்திக்காக வெவ்வேறு நிறுவனங்களுக்கு அல்லது
வெவ்வேறு வகையான நிறுவனங்களுக்கு அல்லது
வெவ்வேறு பகுதிகளுக்கு அல்லது ஆண்டின் வெவ்வேறு
காலத்திற்காக வெவ்வேறு மணி நேரங்களை
நிர்ணயிக்கலாம்.
(4) அத்தகைய நபர் அந்த நாளுக்கு அல்லது நாளின்
ஒரு பொழுதிற்கு சாதாரணமாக கூலி பெற மாட்டார் என்ற,
அடிப்படையில் அவர் பணியமர்த்தம் செய்யப்பட்டிருந்தாலும்
அவர் அந்த நாளில் அல்லது நாளின் ஒரு பொழுதில்
நிறுவனம் மூடப்படாமல் அல்லது விடுமுறை
அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால், அந்த நாள் அல்லது
நாளின் ஒரு பொழுதில் பெற்றிருக்கக்கூடிய கூலி
அவருக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
அத்தியாயம் IV
குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பணியமர்த்துதல்
17. நிறுவனங்களில் குழந்தைகள் வேலை செய்தல்
கூடாது: எந்த ஒரு நிறுவனத்திலும் எந்த ஒரு
குழந்தையும் வேலை செய்ய கோரப்படவோ அல்லது
அனுமதிக்கப்படவோ கூடாது.
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக சட்டங்களின் தழுவமைவு ஆணை:
1950 ஆல் அமைக்கப்பட்டது.
23
18. இளைஞர்கள் முற்பகல் 6 மணி முதல் பிற்பகல் 7
மணிக்களுக்கிடையே மட்டும் வேலை செய்தல்
வேண்டும்: எந்த ஒரு இளைஞரும் எந்த ஒரு
நிறுவனத்திலும் முற்பகல் 6 மணிக்கு முன்னரும், பிற்பகல்
7 மணிக்கு பின்னரும் வேலை செய்ய கோரப்படுதல்
கூடாது.
19. இளைஞர்களுக்கான தினசரி மற்றும் வாராந்திர வேலை
நேரம்:- இந்தச் சட்டத்தில் எண்ன அடங்கியிருந்த
போதிலும், எந்த ஒரு இளைஞரும் எந்த ஒரு
நிறுவனத்திலும் எந்த ஒரு நாளிலும் ஏழு மணிநேரத்திற்கு
மேலாகவும், எந்த ஒரு வாரத்திலும் நாற்பத்து இரண்டு மணி
நேரத்திற்கு மேலாகவும் வேலை செய்ய கோரப்படுதலோ
அல்லது அனுமதிக்கப்படுதலோ கூடாது மேலும் அவர்
மிகை நேர வேலைக்கும் அனுமதிக்கப்படுதல் கூடாது.
அத்தியாயம் V
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு
20. தூய்மை: ஒவ்வொரு நிறுவனத்தின் வளாகமும்
சுத்தமாகவும் மற்றும் எந்த ஒரு வடிகால் அல்லது
தனிப்பட்ட அல்லது பிற தொல்லைகளிலிருந்து எழும்
நுண்ணிய அணுக்கள் இல்லாமலும் பராமரிக்கப்பட
வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படும் அத்தகைய
நேரங்களில் அத்தகைய முறைகளில் சுத்தம் செய்யப்படுதல்
வேண்டும்; மற்றும் இது சுண்ணாம்பு அடித்தல், வண்ணம்
அடித்தல், வண்ணம் பூசுதல், நெய் வண்ணம் பூசுதல்,
கிருமிந்ீக்கம் செய்தல் மற்றும் துர்நாற்றம் நீக்குதல் ஆகிய
முறைகளை உள்ளடக்கும்.
21. காற்றோட்டம்:- ஒவ்வொரு நிறுவனத்தின்.
வளாகங்களும் வகுத்துரைக்கப்படும் தரங்கள் மற்றும்
முறைகளுக்கு இணங்க காற்றோட்டமாக இருத்தல்
24
வேண்டும்.
22. வெளிச்சம்:- ஒவ்வொரு நிறுவனத்தின் வளாகங்களும்.
அனைத்து வேலை நேரங்களிலும் போதுமான அளவு
வெளிச்சமாக இருத்தல் வேண்டும்.
(2) தனது அதிகார வரம்பிற்குள் உள்ள எந்த ஒரு
நிறுவனத்தின் வளாகத்திலும் போதுமான வெளிச்சம்
அல்லது காற்றோட்டம் இல்லை என்று ஒரு
ஆய்வாளருக்குத் தோன்றினால், அவர் தன் கருத்தின்படி
மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை குறிப்பிட்டு
வேலை தருபவருக்கு எழுத்துமூலம் ஆணை ஒன்றை
சார்வு செய்யலாம் மற்றும் அதனை குறிப்பிட்ட தேதிக்கு
முன்னர் நடைமுறைப்படுத்தக் கோரலாம்.
22-A. இருக்கை வசதிகள்:- தங்களது வேலையின்
போது கிடைக்கும் அமரும் வாய்ப்பு எதையும் பயன்படுத்திக்
கொள்ளவும் வேலை நேரம் முழுவதும் அவர்கள்.
நின்றுகொண்டே இருக்கும் நிலைமையை தவிர்க்கவும்
அனைத்து வேலையாட்களுக்கும் தகுந்த இருக்கை
ஏற்பாடுகளை ஒவ்வொரு நிறுவனத்தின் வளாகங்களும்.
கொண்டிருத்தல் வேண்டும்.
1[22-8. குடிநீர்- வேலை தருபவர் ஒவ்வொருவரும்,
கடை அல்லது நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து
நபர்பளுக்கும், வசதியாக அமைந்துள்ள பொருத்தமான
டங்களில், போதிய அளவு சுகாதாரமான குடிந்ரை
வழங்குவதற்கும் பராமரிப்பதற்கும் திறமிக்க (சக்திவாய்ந்த)
ஏற்பாட்டினைச் செய்தல் வேண்டும்.
1. சட்ட எண் 25/2021 இன் 2 ஆம் பிரிவால் புகுத்தப்பட்டது.
2. சட்ட எண் 20/2023 இன் 2 ஆம் பிரிவால் புகுத்தப்பட்டது.
25
22-0. கழிப்பிடம் மற்றும் சிறுநீர் கழிப்பிடம்:- வேலை
தருபவர் ஒவ்வொருவரும், வகுத்துரைக்கப்படும் விதத்தில்,
பணிபுரியும் நபர்களுக்கு வேலை நேரத்தின் எந்தச்
சமயத்திலும் அணுகக்கூடியதாகவும் வசதியாகவும்
அமைந்த கழிப்பிடம் மற்றும் சிறுநீர் கழிப்பிடங்களை
போதிய எண்ணிக்கையில் ஏற்பாடு செய்து தருதல்
வேண்டும்.
22-D. ஓய்வறை மற்றும் உணவு அறை:
1) வேலை தருபவர் ஒவ்வொருவரும், பணிபுரியும்
நபர்களுக்காக, குடிநீர் வசதியுடன் கூடிய போதிய மற்றும்
தகுந்த ஓய்வறை மற்றும் உணவு அறையை ஏற்பாடு
செய்து தருதல் வேண்டும்.
(2) ஓய்வறை மற்றும் உணவு அறையானது, போதிய
காற்றோட்டத்துடனும் வெளிச்சத்துடனும் இருத்தல்
வேண்டும் மற்றும் அவை சுத்தமாகவும் சீராகவும்
பராமரிக்கப்படுதல் வேண்டும்.
(3) ஓய்வறை மற்றும் உணவு அறையானது, போதிய
நாற்காலிகள் அல்லது சாய்வு இருக்கைகளுடன்
அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
22-E. முதலுதவி:- வேலை தருபவர் ஒவ்வொருவரும்,
பணிபுரியும் இடத்தில், வகுத்துரைக்கப்படும் முதலுதவி
வசதிகளை ஏற்பாடு செய்து தருதல் வேண்டும்.]
23. தீப்பிடித்தலுக்கு எதிரான முன்னெச்சரிக்கைகள்:
ஒவ்வொரு நிறுவனத்திலும் வகுத்துரைக்கப்படும்படி
தீப்பிடித்தலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
24. மேல்முறையீடு: இந்த அத்தியாயத்தின்படியான
ஆய்வாளரின் எந்த ஒரு ஆணைக்கும் எதிரான
26
மேல்முறையீடானது வகுத்துரைக்கப்படும்
அதிகாரஅமைப்பிடம் அத்தகைய காலத்திற்குள்:
செய்யப்படுதல் வேண்டும்; மற்றும் மேல்முறையீட்டு
அதிகாரஅமைப்பின் முடிவு இறுதியானது.
அத்தியாயம் VI
கூலியுடன் கூடிய விடுமுறைகள்
25. விடுமுறைகள் மற்றும் நோய்க்கான விடுப்பு: (1) எந்த
ஒரு நிறுவனத்திலும் பன்னிரெண்டு மாதங்கள்
தொடர்ச்சியாக பணிபுரியும் ஒவ்வொரு நபரும், அதனைத்
தொடர்ந்து வரும் பன்னிரெண்டு மாதங்களுக்கு, 12
நாட்களுக்கு கூலியுடன் கூடிய விடுமுறையைப்
பெறுவதற்கு உரிமையுடையவர் ஆவார்.
வரம்புரை: கூலியுடன் கூடிய அத்தகைய
விடுமுறைகளை நாற்பத்து ஐந்து நாட்கள்] வரை சேர்த்து
வைத்துக்கொள்ளலாம்.
விளக்கம்:- இந்த உட்பிரிவின் நோக்கங்களுக்காக,
இந்தச் சட்டம் எந்த ஒரு நிறுவனத்திற்கும் பொருந்தும்
தேதிக்கு முந்தைய தொடர்ச்சியான பணிக்காலமும்,
அதிகபட்சமாக பன்னிரெண்டு மாதங்கள் வரையிலுமான
எந்த ஒரு நிறுவனத்திற்கும் கணக்கில்
எடுத்துக்கொள்ளப்படுதல் வேண்டும்.
(2) எந்த ஒரு நிறுவனத்திலும் பணிபுரியும் ஒவ்வொரு
நபரும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, தனது
தொடர்ச்சியான முதல் பண்ணிரெண்டு மாத பணியின்
போதும், மற்றும் பின்னிட்ட தொடர்ந்த ஒவ்வொரு
பன்னிரெண்டு மாத பணிகளின் போதும்,
1. 2018, நவம்பர் 14 ஆம் தேதியிட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
(k2) அரசாணை எண். 162 மூலம் மாற்றாக அமைக்கப்பட்டது.
27
(ஐ அவருக்கு ஏற்பட்ட எந்தவொரு நோய் அல்லது
விபத்து காரணமாக 12 நாட்களுக்கு மிகாத கூலியுடன்
கூடிய விடுப்பிற்கு உரறிமையுடையவர் ஆவார்; மற்றும்
(b) எந்த ஒரு நியாயமான காரணத்திற்காகவும் 12
நாட்களுக்கு மிகாத கூலியுடன் கூடிய தற்செயல்
விடுப்பிற்கு உரிமையுடையவர் ஆவார்; மற்றும்
(3) உட்பிரிவு (1) -ன் கீழ் ஏதேனும் விடுமுறைகளுக்கு
உரிமையுடைய ஒருவர், விடுமுறைகள்
அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே வேலை தருபவரால்
பணியிலிருந்து விடுவிப்பு செய்யப்பட்டிருந்தால் அல்லது
விடுமுறைகளுக்கு விண்ணப்பித்திருந்து அது
மறுக்கப்பட்டிருந்தால், அவர் விடுமுறைகளுக்கு
அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே தன் வேலையை
விட்டுவிடுவாரானால், வேலை தருபவர், இந்தச் சட்டத்தின்
கீழ், விடுமுறை நாட்களைப் பொறுத்து, பணியாளருக்குச்
செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்த வேண்டும்.
(4) உட்பிரிவு (2) -ன் கீழ் விடுப்பு எதற்கும்
உரிமையுடைய ஒருவர், அவர்
நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது விபத்தின்
விளைவாக பாதிக்கப்பட்டிருக்கும்போது வேலை
தருபவரால் பணிவிடு விப்பு செய்யப்படுவாரானால், உட்பிரிவு
(3)-ன் கீழ் அவருக்கு செலுத்தப்பட வேண்டிய
தொகையுடன் கூடுதலாக, இந்தச் சட்டத்தின் கீழ் அவரது
பணிவிடுவிப்பின் போதான அவருக்கு உரிமையுடைய
கூலியுடன் கூடிய விடுப்பு காலஅளவைப் பொறுத்த
தொகையையும் சேர்த்து வேலை தருபவர் செலுத்துதல்
வேண்டும்.
(5 பன்னிரண்டு மாத காலஅளவிற்குள் பின்வரும்
28
காரணங்களால். பணி இடையில் எடுக்கப்பட்ட
விடுப்புகளைப் பொருட்படுத்தாமல் பணியமர்த்தப்பட்ட நபர்
ஒருவர், இந்தப் பிரிவின் பொருளின்படி தொடர்ச்சியாக
பன்னிரெண்டு மாதக் காலஅளவு பணியை நிறைவு
செய்தவராகக் கருதப்படுவார்.
() நோய்வாய்ப்பட்ட நிலை, விபத்து அல்லது
அனுமதிக்கப்பட்ட விடுப்பு (அனுமதிக்கப்பட்ட
விடுமுறை உட்பட) ஆகிய மூன்றும் மொத்தமாகச்
சேர்த்து தொண்ணூறு நாட்களுக்கு மிகாமல்; அல்லது
(i) கதவடைப்பு; அல்லது
(0) சட்ட விரோதமற்ற வேலைநிறுத்தம் அல்லாத
பிற வேலை நிறுத்தம்; அல்லது
(iv) மொத்தம் முப்பது நாட்களுக்கு மிகாத தன்:
விருப்பு அற்ற இடையிடையே ஏற்படும்
வேலையின்மை காலங்கள்;
அந்த விடுப்பினால் ஏற்படும் இடையீட்டின் தொடக்கத்தில்
அல்லது முடிவில் நிகழ்கிற, இந்தச் சட்டத்தின்படி
அனுமதிக்கப்படும் வாராந்திர விடுமுறை அல்லது பாதி
விடுமுறை அனுமதிக்கப்பட்ட விடுப்பாகக் கருதப்படுதல்
கூடாது.
(6) ஒரு பள்ளி அல்லது கல்லூரியுடன்.
இணைக்கப்பட்ட விடுதி அல்லது மாணவர்கள் மற்றும்
உடன் தங்கும் ஆசிரியர்களுக்கான உண்டு உறையும்
பள்ளி ஒன்றால் பராமரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில்
பணியமர்த்தப்பட்ட நபர் உட்பிரிவுகள் (1) முதல் (5)
வரையில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்புரிமைகளுக்கு
அனுமதிக்கப்படுதல் வேண்டும்; மற்றும் நிகழ்விற்கேற்ப
29
முந்தைய ஆண்டில் அவர் தொடர்ச்சியாகப் பணிபுரிந்த
காலத்திற்கு அல்லது நடப்பு ஆண்டில் அவர் தொடர்ந்து
பணியாற்றும். காலத்தின் விகிதத்திற்கு ஏற்ப
குறைக்கப்படுதல் வேண்டும்; உட்பிரிவுகள் (1) மற்றும் (2) -
ல் கூறப்பட்டுள்ள விடுமுறை மற்றும் விடுப்பு காலங்களின்
குறிப்புகள்: அனைத்தும் அவ்வாறே பொருள்:
கொள்ளப்படுதல் வேண்டும்; ஒரு நாளைக்கும் குறைவான
பகுதி விட்டுவிடப்படுதல் வேண்டும்.
(7) உட்பிரிவு (6) ணன்: வகைமுறைகள்.
நடைமுறைபடுத்தப்பட வேண்டிய முறை குறித்து
அனைத்து அல்லது எந்த ஒரு வகையான நிகழ்வுகளிலும்
அல்லது எந்த குறிப்பிட்ட நிகழ்விலும் பணிப்புரைகளை
வழங்குவதற்கு மாநில] அரசு அதிகாரம் கொண்டிருக்கும்.
26. ஆண்டு விடுமுறை நாட்களுக்கான கூலி:-
பணியமர்த்தப்பட்ட நபர் ஒவ்வொருவரும், பிரிவு 25 - ன்
உட்பிரிவு (1) அல்லது (2) -ன்கீழ் அனுமதிக்கப்பட்ட
விடுமுறைகள் அல்லது விடுப்பு காலத்திற்கு, முந்தைய
மூன்று மாதங்களில் மிகைநேர பணி பொறுத்த வருமானம்
எதையும் தவிர்த்து உண்மையில் பணிபுரிந்த
நாட்களுக்கான தினசரி சராசரி கூலிக்குச் சமமான
விகிதத்தில் கூலி செலுத்தப்படுதல் வேண்டும்.
27. விடுமுறை நாட்களின். எண்ணிக்கையை
அதிகப்படுத்துவதற்கான அதிகாரம்: பிரிவு 25-ல்
அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும், 'மாநில] அரசு
அறிவிப்பின் மூலம், எந்த ஒரு நிறுவனம் அல்லது எந்த
ஒரு வகையிலான நிறுவனங்களைப் பொறுத்தும் ஆண்டு
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக ஆணைகளின் தழுவமைவு 1950
ஆல் அமைக்கப்பட்டது.
30
விடுமுறை நாட்களின் மொத்த எண்ணிக்கை மற்றும்
அத்தகைய விடுமுறை நாட்கள் சேர்த்து வைத்துக்
கொள்ளப்படக்கூடிய அதிகபட்ச நாட்களின்.
எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
28. பணியமர்த்தப்பட்ட நபருக்காக செயல்படுவதற்கான
ஆய்வாளரின் அதிகாரம்:- இந்த அத்தியாயத்தின் கீழ், எந்த
ஒரு பணியமர்த்தப்பட்ட நபருக்கும் வேலை தருபவரால்
செலுத்தப்பட வேண்டிய எந்த ஒரு பணத்தொகையையும்,
அது செலுத்தப்படாது இருக்குமானால், பணியமர்த்தப்பட்ட
நபர் சார்பாக ஆய்வாளர் அத்தொகையை
மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
அத்தியாயம் VI
கூலிகள்:
29. கூலி வழங்கும் பொறுப்பு:-- ஒவ்வொரு வேலை
தருபவரும் அவரால் பணியமர்த்தப்பட்ட நபர்களுக்கு இந்தச்
சட்டத்தின்கீழ் செலுத்த வேண்டிய அனைத்து கூலிகள்:
மற்றும் தொகைகளையும் செலுத்துவதற்குப்
பொறுப்புடையவர் ஆவர்.
30. கூலி காலத்தை நிருணயித்தல்:- (1) ஒவ்வொரு
வேலை தருபவரும் (இந்தச் சட்டத்தில் கூலி காலங்கள்
எனக் குறிப்பிடப்படுகிறது) அத்தகைய கூலிகளையும்
அவை செலுத்தப்பட வேண்டிய காலங்களையும்
நிருணயித்தல் வேண்டும்.
(2) எந்த ஒரு கூலி காலமும் ஒரு மாதத்திற்கு
மேற்படுதல் கூடாது.
31. மிகை நேர வேலைக்கான கூலி:- எந்த ஒரு
நிறுவனத்திலும் பணியமர்த்தப்பட்ட நபர் எவரும் மிகை நேர
வேலை செய்ய கோரப்படுவாரானால், அத்தகைய மிகை நேர
31
வேலையைப் பொறுத்து, சாதாரணக் கூலியின் இரு மடங்கு
ஊதியத்திற்கு உரிமை உடையவர் ஆவர்.
விளக்கம்: இந்தப் பிரிவின்: நோக்கத்திற்காக,
"சாதாரணக் கூலி விகிதம்" என்ற சொற்றொடர்
வகுத்துரைக்கப்படும் முறையில் கணக்கிடப்படும்
அத்தகைய கூலி எனப் பொருள்படும்.
32. கூலி செலுத்துவதற்கான நேரம்:- (1) பணியமர்த்தப்பட்ட
நபர் ஒவ்வொருவருக்கும் கூலியானது. வழங்கப்பட
வேண்டிய கூலிக் காலத்தின் கடைசி நாளுக்குப்
பின்னிட்ட ஐந்தாவது நாள் முடிவடைவதற்கு முன்
செலுத்தப்படுதல் வேண்டும்.
(2) வேலை தருபவரால் அல்லது அவர் சார்பாக நபர்
ஒருவரின் பணியமர்த்தமானது நிறுத்தம் செய்யப்படுமானால்,
அந்த நபர் சம்பாதித்த கூலி அவர் பணி நிறுத்தம்
செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டாவது வேலைநாள்
முடிவடைவதற்கு முன் செலுத்தப்படுதல் வேண்டும்.
(3) மாநில] அரசு பொது அல்லது சிறப்பு ஆணை
மூலம், பணியமர்த்தப்பட்ட எந்த ஒரு நபரின் அல்லது
பணியமர்த்தப்பட்ட வகையினரின் கூலியைப் பொறுத்து,
அந்த ஆணையில் குறிப்பிடப்படும் அளவுக்கும் மற்றும்
நிபந்தனைகளுக்கும். உட்பட்டு, இந்தப் பிரிவின்
செயல்பாட்டில் இருந்து வேலை தருபவருக்கு
விலக்களிக்கலாம்.
(4) அனைத்து கூலிகளும் வேலை நாளில்
செலுத்தப்படுதல் வேண்டும்.
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக தழுவமைவு ஆணை 1950 ஆல்
அமைக்கப்பட்டது.
32
33. நடப்பு நாணயம் அல்லது நாணயத்தாளில் கூலி
செலுத்தப்படுதல் வேண்டும்:- அனைத்து கூலிகளும் நடப்பு
நாணயம் அல்லது நாணயத்தாளில் அல்லது இரண்டிலும்
செலுத்தப்படுதல் வேண்டும்.
34. கூலியிலிருந்து செய்யப்படக்கூடிய பிடித்தங்கள்:-
(1) இந்தச் சட்டத்தினால் அல்லது அதன் கீழ்
அங்கீகரிக்கப்பட்ட எவ்வகையிலும் தவிர,
பணியமர்த்தப்பட்ட நபரிண்கூலியானது எந்த ஒரு
பிடித்தமும் இல்லாமல் அவருக்குச் செலுத்தப்படுதல்
வேண்டும்
விளக்கம்: இந்தச் சட்டத்தின். நோக்கத்திற்காக,
செய்யப்படும் ஒவ்வொரு செலுத்தமும், கூலியில் இருந்து
பணியமர்த்தப்பட்ட நபரால் வேலை தருபவருக்கு பிடித்தம்
செய்யப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.
(2) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு இணங்க
பின்வரும் வகைகள் போன்றவற்றிக்கு மட்டுமே,
பணியமர்த்தப்பட்ட நபரின் கூலியில் இருந்து பிடித்தங்கள்
செய்யப்படுதல் வேண்டும், அவையாவன:
(8) அபராதங்கள்;
(௦) பணிக்கு வராமல் இருந்ததற்கான பிடித்தங்கள்;
(9) பணியமர்த்தப்பட்ட நபரிடம் பாதுகாப்பிற்காக
வெளிப்படையாக ஒப்படைக்கப்பட்ட பொருள்களின் சேதம்
அல்லது இழப்பு அல்லது அவர் கணக்கு காட்ட வேண்டிய
பணத்தின் இழப்பிற்கான பிடித்தங்கள், அவரது அசட்டை
அல்லது தவறுகையின் நேரடிக் காரணத்தினால் ஏற்படும்
அத்தகைய சேதம் அல்லது இழப்பு;
(0) வேலை தருபவரால் வழங்கப்படும்.
விட்டுவசதிக்கான பிடித்தங்கள்;
33
(6) மாநில] அரசு பொது அல்லது சிறப்பு ஆணை
வாயிலாக அனுமதிக்கக்கூடிய அத்தகைய வசதிகள்
மற்றும் சேவைகளை வேலை தருபவர் வழங்குவதற்கான
பிடித்தங்கள்;
() முன்பணங்களை மீளப்பெறுதல் அல்லது
அதிகப்படியாக கொடுக்கப்பட்ட கூலியை
சரிகட்டுவதற்கான பிடித்தங்கள்;
(9) பணியமர்த்தப்பட்ட நபரால் செலுத்தப்பட வேண்டிய
வருமானவரிக்கான பிடித்தங்கள்;
(h) நீதிமன்ற ஆணை அல்லது அத்தகைய
ஆணையை வழங்குவதற்கு தகுதியுள்ள
அதிகாரஅமைப்பின். ஆணையின்பேரில் செய்யப்பட
வேண்டிய பிடித்தங்கள்;
() வருங்கால வைப்பு நிதிச் சட்டம், 1952
பொருந்தக்கூடிய வருங்கால வைப்பு நிதி எதற்கும் அல்லது
இந்திய வருமான வரிச் சட்டம் 1922 இன் பிரிவு 58
&- ல் வரையறுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பிற வருங்கால
வைப்பு நிதி எதற்கும், அல்லது மாநில] அரசால் இதன்
பொருட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட அத்தகைய ஒப்புதல்
செயல்பாட்டில் இருக்கும் வருங்கால வைப்பு நிதி
எதற்குமான பங்களிப்புத் தொகை மற்றும் அவற்றின்.
முன்பணத் திருப்பிச் செலுத்தத்திற்கான பிடித்தங்கள்;
) மாநில] அரசால் இதன் பொருட்டு ஒப்புதல்
அளிக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான
செலுத்தங்களுக்காக அல்லது இந்திய அஞ்சல் அலுவலகம்
அல்லது மாநில] அரசால், இதன் பொருட்டு ஒப்புதல்
அளிக்கப்பட்ட காப்பீட்டு நிறுமம் எதனாலும் பேணிவரப்படும்
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக தழுவமைவு ஆணை 1950 ஆல்
மாற்றாக அமைக்கப்பட்டது.
34
காப்பீட்டு திட்டம் ஒன்றுக்கான செலுத்தத்திற்கான
பிடித்தங்கள்;
(k) மத்திய அல்லது [மாநில] அரசால் பிணையம்
அளிக்கப்பட்ட மாநில அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட
சேமிப்புத் திட்டம் எதன் பொருட்டும் பணியமர்த்தப்பட்ட
நபரின் எழுத்துப் பூர்வமான ஒப்புதலுடன் செய்யப்பட்ட
பிடித்தங்கள்.
3௧. தண்டத்தொகைகள்:- (1) மாநில] அரசு அல்லது
குறிப்பிடப்பட்ட அதிகார அமைப்பு, உட்பிரிவு (2) - ன்படி
அறிவிப்பில் குறிப்பிடப்படக்கூடிய முன் அனுமதி இன்றி
பணியமர்த்தப்பட்ட நபரின் செயல்கள் அல்லது செய்யாது
விடுகைகளுக்காக வேலை தருபவர் தண்டம் எதையும்
விதித்தல் கூடாது.
(2) பணி மேற்கொள்ளப்படும் வளாகத்தில்
வகுத்துரைக்கப்படும் முறையில் அத்தகைய செய்கைகள்
மற்றும் செய்யாது விடுகைகளை குறித்த அறிவிப்பு ஒன்று
காட்சிப்படுத்தப்படுதல் வேண்டும்.
(3) தண்டம் விதிக்கப்படுவதற்கு எதிராக காரணம்
காட்டும் வாய்ப்பு ஒன்றை அளித்தாலன்றி அல்லது
வகுத்துரைக்கப்படும் அத்தகைய நடைமுறைகளுக்கு
இணங்காத வகையில் பணியமர்த்தப்பட்ட நபர் எவருக்கும்
தண்டம் விதிக்கப்படுதல் கூடாது.
(4) ஒரு கூலிக் கால அளவில் பணியமர்த்தப்பட்ட நபர்
எவர் மீதும் விதிக்கப்படும் மொத்த தண்டத்தொகையானது,
அந்த கூலிக் காலஅளவிற்கு அவருக்கு செலுத்தப்பட
வேண்டிய கூலியில் ஒரு ரூபாயில் அரை அணாவிற்கு
மேற்படுதல் கூடாது.
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக தழுவமைவு ஆணை 1950 ஆல்
மாற்றாக அமைக்கப்பட்டது.
35
(5) பதினைந்து வயது நிறைவு செய்திடாத
பணியமர்த்தப்பட்ட நபர் எவர் மீதும் தண்டம் விதிக்கப்படுதல்
கூடாது.
(6) பணியமர்த்தப்பட்ட நபர் எவர் மீதும் விதிக்கப்பட்ட
தண்டத்தொகை எதுவும், அது விதிக்கப்பட்ட நாளில்
இருந்து அறுபது நாட்கள் முடிவடைந்த பிறகு
அவரிடமிருந்து வசூலிக்கப்படுதல் கூடாது.
(7) தண்டத்தொகை ஒவ்வொன்றும் அது எந்த
செய்கை அல்லது செய்யாது விடுகை தொடர்பாக
விதிக்கப்பட்டதோ, அது நடைபெற்ற நாளில்
விதிக்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.
(8) அனைத்து தண்டத்தொகைகளும் அதன் வசூலும்
வகுத்துரைக்கப்படும் படிவத்தில் வேலை தருபவரிடம்
இருக்கும் ஒரு பதிவேட்டில் பதிவு செய்யப்படுதல்
வேண்டும்; மற்றும் அத்தகைய வரவுகள் அனைத்தும்
வகுத்துரைக்கப்படும் அதிகார அமைப்பினால் ஒப்புதல்
அளிக்கப்பட்டவிதத்தில், நிறுவனத்தில் பணிபுரியும்
பணியாளர்களின். நலனுக்கான நோக்கங்களுக்காக
செலவிடப்படுதல் வேண்டும்.
விளக்கம்: பணியிலுள்ள நபர்கள், ஒரே நிருவாகத்தின்
கீழ் பணியமர்த்தப்படட பணியாளர் தொகுதியின் ஒரு பகுதி
மட்டுமே என்றால், அத்தகைய அனைத்து வரவுகளும்,
முழுப் பணியாளர் தொகுதிக்காக பேணிவரப்படும் ஒரு
பொது நிதியில் வரவு வைக்கப்படுதல் வேண்டும், ஆனால்,
அந்த நிதி வகுத்துரைக்கப்படும் அதிகாரஅமைப்பினால்
ஒப்புதல் அளிக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே
செலவு செய்யப்படுதல் வேண்டும்.
36
36. பணிக்கு வராமைக்கான பிடித்தங்கள்:-
(1) பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவர், அவரின் பணி
வரைமுறைகளின்படி, அவர் வேலை ய்ய வேண்டிய
இடம் அல்லது இடங்களுக்கு அவர் வேலை செய்ய
வேண்டிய காலஅளவின் முழு அல்லது அதன் பகுதி
எதற்கும், வராமல் இருந்தால் அத்தகைய வராமை
காரணத்தினால் பிரிவு 34-ன் உட்பிரிவு (2)-ன் 0௦)
கூறின்படி பிடித்தங்கள் செய்யப்படலாம்.
(2) பணியமர்த்தப்பட்ட நபருக்கு செலுத்தப்பட
வேண்டிய கூலிகளை பொறுத்து, பிடித்தங்கள்
செய்யப்பட்ட கூலிக் காலஅளவு தொடர்பாக செய்யப்பட்ட
பிடித்தத் தொகை எந்த ஒரு நிகழ்விலும், அவரது
பணிக்காலத்தின் பணி வரைமுறைகளின்படி, அவர் வேலை
செய்யவேண்டிய மொத்த காலஅளவைப் பொறுத்து,
அத்தகைய கூலி காலஅளவிற்குள்ளாக அவர் வேலைக்கு
வராத காலஅளவை விட அதிகமாக இல்லாது இருத்தல்
வேண்டும்.
வரம்புரை: 1|1மாநில] அரசால் இதன் பொருட்டு
செய்யப்பட்ட விதிகள் எவற்றிற்கும் உட்பட்டு, உரிய
அறிவிப்பு இல்லாமல் (அதாவது, பணி ஒப்பந்த்த்தின்.
வரைமுறைகளின்படி கொடுக்கப்பட வேண்டிய
அறிவிப்பைக் கொடுக்காமல்) மற்றும் நியாயமான
காரணமின்றி பத்து அல்லது அதற்கு மேற்ப்பட்ட
பணியமர்த்தப்பட்ட நபர்கள் கூட்டாக பணிக்கு வராது
இருந்தால், அத்தகைய எந்த ஒரு நபரைப் பொறுத்தும்
அத்தகைய பிடித்தமானது முறைப்படியான அறிவிப்பிற்கும்
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக சட்டங்களின் தழுவமைவு ஆணை:
1950 ஆல் அமைக்கப்பட்டது.
37
பதிலாக, நிபந்தனைகளுக்கு உட்பட்டு எட்டு
நாட்களுக்கான கூலிகளுக்கு மிகாத தொகையை
உள்ளடக்கும்.
விளக்கம்- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக,
பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவர், அவர் வேலை செய்ய
வேண்டிய இடத்தில் இருந்த போதிலும், உள்ளிருப்பு
வேலை நிறுத்தம் அல்லது அந்த சூழ்நிலைக்கு நியாயமற்ற
பிற காரணம் எதற்காகவும், அவரது வேலையை சசய்ய
மறுப்பாரானால், அவர் வராமல் இருந்ததாகக் கருதப்படுதல்
வேண்டும்.
37. இழப்பு அல்லது சேதத்திற்கான பிடித்தங்கள்:- (1) பிரிவு
34 - ண் உட்பிரிவு (2) -ன், கூறு (9) -ன் கீழான
பிடித்தமானது, பணியமர்த்தப்பட்ட நபரின் கவனக்குறைவு
அல்லது தவறுகை காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது
சேதத்திற்கானத் தொகைக்கும் மிகுதியாக இருத்தல்
கூடாது; மற்றும் பிடித்தத்திற்கு எதிராக விளக்கம்
அளிப்பதற்கான வாய்ப்பு ஒன்று பணியமர்த்தப்பட்ட நபருக்கு
வழங்கப்படாத வரையிலும் அல்லது அத்தகைய
பிடித்தத்தைச் செய்வதற்கு வகுத்துரைக்கப்படும்
அத்தகைய பிற நடைமுறைக்கு இணங்காத விதத்திலும்
பிடித்தம் செய்யப்படுதல் கூடாது.
(2) அத்தகைய பிடித்தங்கள் அனைத்தும் மற்றும்
வசூலித்தல் அனைத்தும் வகுத்துரைக்கப்படும் படிவத்தில்
பதிவு செய்யப்பட்டு பணியமர்த்துபவரால் வைத்து வரப்பட
வேண்டும்.
38. வழங்கப்படும் சேவைகளுக்கான பிடித்தங்கள்:-
பணிநிபந்தனைகளின்படி அல்லது பிறவாறு
பணியமர்த்தப்பட்ட நபரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வீட்டு
38
வசதி, வசதி அல்லது சேவைகள் தவிர்த்து பிரிவு 34 - ன்,
உட்பிரிவு (2) - ன், கூறு (0) அல்லது (6) - ன் கீழான
பிடித்தமானது, அவரின் கூலியிலிருந்து செய்யப்படுதல்
கூடாது; மற்றும் மாநில] அரசால் விதிக்கப்படும் அத்தகைய
நிபந்தனைகளுக்கு உட்பட்டு மேற்சொன்ன கூறு(ஐ-ன்
படியான அத்தகைய பிடித்தமானது, வழங்கப்படும் வீட்டு
வசதி, அல்லது சேவையின் சரி சமமான மதிப்பு கொண்ட
தொகைக்கு மேற்படுதல் கூடாது.
39. முன்பணங்களை மீள பெறுவதற்கான பிடித்தங்கள்;-
பிரிவு 34-ன் உட்பிரிவு (2) - ன் கூறு 0) - ன்படியான
பிடித்தங்கள் பின்வரும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு
இருத்தல் வேண்டும்.
அதாவது:-
(a) பணியமர்த்தம். தொடங்குவதற்கு முன்பு
கொடுக்கப்பட்ட முன்பணத்தின். வசூலானது
மீளப்பெறுதலானது ஒரு முழுமையான கூலி
காலஅளவினை பொறுத்து கூலியின் முதல்
செலுத்ததிலிருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டும்; ஆனால்
பயணச் செலவிற்காக கொடுக்கப்பட்ட முன்பணம் மீள
பெறப்படுதல் கூடாது.
(௦) ஏற்கனவே ஈட்டப்படாத கூலிகளின் முன்பணம்
மீளபெறுதலானது, எந்த அளவிற்கு அத்தகைய முன்பணம்
கொடுக்கப்படலாம் மற்றும் அவை மீளப்பெறப்படக்கூடிய
தவணைகள் மாநில] அரசால் செய்யப்படும் ஒழுங்கு
விதிகள் எதற்கும் உட்பட்டு இருத்தல் வேண்டும்.
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக சட்டங்களின் தழுவமைவு ஆணை:
1950 ஆல் அமைக்கப்பட்டது.
39
40. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் காப்பிட்டு திட்டங்களின்
செலுத்தங்களுக்கான பிடித்தங்கள்:-
பிரிவு (34) -ன் உட்பிரிவு (2) -ன் () மற்றும் (k)
கூறுகளின் படியான பிடித்தங்கள் மாநில] அரசு
விதிக்கக்கூடிய அத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு
இருத்தல் வேண்டும்.
41. பதவி நீக்கத்திற்காண அறிவிப்பு:- (1) ஆறு மாதத்திற்கு
குறையாத காலஅளவு ஒன்றுக்கு தொடர்ச்சியாக
பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவரை நியாயமான காரணமின்றி
மற்றும் அந்நபருக்கு குறைந்தது ஒரு மாத கால அறிவிப்பு
அல்லது அந்த அறிவிப்பிற்குப் பதிலாக கூலி வழங்காமல்
பணி அமர்த்துபவர் எவரும் பணியிலிருந்து அகற்ற
முடியாது; எவ்வாறிருப்பினும். அத்தகைய நபரின்
பணியானது தவறான நடத்தை என்ற குற்றச்சாட்டிற்கு
ஆதரவாக இதன் பொருட்டு நடைபெற்ற விசாரணையில்
திருப்தியளிக்கத்தக்க சான்று பதிவு செய்யப்பட்டதன் பேரில்
பணியிலிருந்து அகற்றப்படும் போது அத்தகைய அறிவிப்பு
அவசியமானது அல்ல.
(2) பணியமர்த்தப்பட்ட நபர் அவரைப் பணியிலிருந்து
அகற்ற நியாயமான காரணம் இல்லை என்ற காரணத்தின்:
பேரிலோ அல்லது வேலை தருபவரால் சுமத்தப்பட்ட
தவறான நடத்தை என்ற குற்றச்சாட்டைப் பொறுத்து அவர்
குற்றவாளி இல்லை என்ற காரணத்தின் பேரிலோ
வகுத்துரைக்கப்படும் அத்தகைய அதிகாரஅமைப்பிடம்
மற்றும் அத்தகைய நேரத்திற்குள் மேல்முறையீடு செய்ய
உரிமை கொண்டிருக்கிறார்.
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக தழுவமைவு ஆணை 1950 ஆல்
அமைக்கப்பட்டது.
40
2 -A) மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பு இந்தச்
சட்டத்தின்படி, அதன் கடமைகளை செய்து முடிப்பதற்கு
நபர் எவரின் ஆவணம் அல்லது வாய்மொழி சாட்சியம்
எதுவும், தேவையானதாக இருக்கிறது என்று
மேல்முறையீட்டு அதிகார அமைப்பானது கருதினால்
அத்தகைய நபரை வரவழைத்து மற்றும் அத்தகைய
ஆவணத்தை ஆய்வு செய்து, அல்லது அழைப்பாணை
அனுப்பி விசாரணை செய்யலாம்; மேற்சொன்ன
நோக்கங்களுக்காக, அது 1908 ஆம் ஆண்டு உரிமையியல்
தொகுப்புச் சட்டத்தின்படி (மையச் சட்டம் V/1908) வழக்கு
விசாரணை பொறுத்த உரிமையியல் நீதிமன்றத்தின் அதே
அதிகாரங்களைக் கொண்டிருக்கும், அவையாவன:-
(i) நபர் எவரையும் அழைப்பாணை அனுப்பியும்
மற்றும் கட்டாயப்படுத்தியும் வரவழைக்கலாம் மற்றும்
பிரமாணத்தின் பேரில் அவரை விசாரணை செய்தல்.
(ii) ஆவணங்களை முன்னிடக் கோரி
கட்டாயப்படுத்துதல்.
0 சாட்சிகளை விசாரிப்பதற்காக.
ஆணையங்களை அமைத்தல்,
(2-8) வேலை தருபவருக்கும் பணியமர்த்தம்
செய்யப்பட்டவருக்கும் வகுத்துரைக்கப்பட்ட முறையில்
அறிவிப்பு கொடுத்த பின்பு மேல்முறையீட்டு
அதிகாரஅமைப்பு மேல்முறையீட்டைத் தள்ளுபடி
செய்யலாம் அல்லது பணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த
காலத்திற்கான ஊதியத்துடன் அல்லது ஊதியமில்லாமல்
பணியமர்த்தம் செய்யப்பட்ட நபரைத் திரும்பவும்
வேலையில் சேர்த்துக் கொள்ளுமாறு கட்டளையிடலாம்.
1. தமிழ்நாடு சட்ட எண் 9/2017 இன் 2 ஆம் பிரிவினால் (01.04.2017.
முதல் செல்திறம் பெறுமாறு) புகுத்தப்பட்டது.
41
அல்லது மறுபடியும் வேலையில் சேர்த்துக் கொள்ளாமல்
இழப்பீட்டை வழங்குமாறு கட்டளையிடலாம் அல்லது
சூழ்நிலைக்கேற்ப அது பொருத்தமென கருதும் பிற
நிவாரணத்தை வழங்கலாம்]
(3) மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பின் முடிவு
அறுதியானதாகும் மற்றும் அது வேலை தருபவர்
பணியமர்த்தப்பட்ட நபர் ஆகிய இருவரையும்.
கட்டுப்படுத்தும்.
41. (A உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள
நடவடிக்கைகளில் பணியமர்த்தப்பட்ட நபருக்கு முழுக்
கூலியைச் செலுத்துதல்;- பிரிவு 41 - ன்படி
மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பு பணியமர்த்தப்பட்ட நபர்
எவரையும் மீண்டும் பணியமர்த்துமாறு கட்டளையிடும்
போது அத்தகைய முடிவிற்கு எதிராக வேலைதருபவரால்
உயர் நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றத்தில் எந்த
ஒரு நடவடிக்கையும் முன்னிடப்படும் போது அத்தகைய
நடவடிக்கை உயர் நீதிமன்றத்தில் அல்லது உச்ச
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காலஅளவின் போது
பணியமர்த்தப்பட்ட நபர் தான் எந்த ஒரு நிறுவனத்திலும்
பணியாளராக இல்லை என அத்தகைய நீதிமன்றத்தில்
அத்தகைய பணியமர்த்தப்பட்ட நபரால் ஒரு உறுதிச்சான்று
தாக்கல் செய்யப்படும்போது எந்த ஒரு விதியின்படியும்
அவருக்கு அனுமதிக்கப்பட்ட பராமரிப்பு படித்தொகை
எதுவும் உள்ளிட்ட அவரால் கடைசியாக பெறப்பட்ட முழுக்
கூலியையும் அத்தகைய காலஅளவிற்கு வேலைதருபவர்
அத்தகைய பணியமர்த்தப்பட்ட நபருக்கு செலுத்த
பொறுப்புடையவராவர்.
வரம்புரை: அத்தகைய பணியமர்த்தப்பட்ட நபர்
அத்தகைய காலஅளவின் போது, அல்லது அதன் ஒரு
42
பகுதியில் பணியமர்த்தப்பட்டு போதுமான கூலியைப்
பெற்றுக் கொண்டிருக்கிறார் என உயர் நீதிமன்றம் அல்லது
உச்ச நீதிமன்றம் மனநிறைவடைகிற வகையில்
நிரூபிக்கப்படும் போது நீதிமன்றம் நிகழ்வுக்கேற்ப
அத்தகைய காலம் அல்லது அதன் பகுதிக்கு இந்தப்
பிரிவின்படி கூலி எதுவும் செலுத்தப்படத்தக்கதல்ல என
ஆணையிடலாம்.]
அத்தியாயம் VIl
ஆய்வாளர்களின் அமர்த்தம், அதிகாரங்கள் மற்றும்
கடமைகள்
42. ஆய்வாளர்களின் அமர்த்தம்:-மாநில] அரசு அறிவிக்கை
வாயிலாக ஆய்வாளராக இருப்பதற்கு தக்கவர் என கருதும்
மாநில] அரசு அல்லது உள்ளாட்சி அதிகாரஅமைப்பு
எதனின் அலுவலர்களை இந்தச் சட்டத்தின்
நோக்கங்களுக்காக மாநில அரசால் ஒதுக்கப்படும்
அத்தகைய வட்டார எல்லைக்குள் பணி அமர்த்தலாம்.
43. ஆய்வாளர்களின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள்:-
ஆய்வாளர் எவரும் நிறுவனமாக இருக்கிற அல்லது
அவ்வாறு நம்புவதற்கு காரணம் கொண்டிருக்கிற வளாகம்
எதிலும் அனைத்து நியாயமான நேரங்களிலும் அத்தகைய
உதவியாளருடன் நுழையலாம் மற்றும் வளாகத்தையும்
வகுத்துரைக்கப்பட்ட பதிவேடுகள் பதிவுறுக்கள் அல்லது
அறிவிப்புகளையும் சோதனை செய்யலாம்.
44, ஆய்வாளர்கள் பொதுப் பணியாளர்களாக இருத்தல்:-
ஒவ்வொரு ஆய்வாளரும் இந்தியத் தண்டனைச்
சட்டத்தொகுப்பு பிரிவு 21 - ன் பொருளின்படி ஒரு பொது
பணியாளராகக் கருதப்படுவார்.
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக தழுவமைவு ஆணை 1950 ஆல்
அமைக்கப்பட்டது.
43
அத்தியாயம் 16
குற்றச்செயல்களுக்கான பணதண்டம்
45. தண்டங்கள்:- 17 முதல் 11, 13 முதல் 23, 25, 26, 29
முதல் 41 மற்றும் 47 -ன் பிரிவிண்படியான வகைமுறைகள்
எதற்கும் நபர் எவரும் முரண்பட்டிருக்கிறார் என்றால் அது
முதல் குற்றமானால் ஐயாயிரம் ரூபாய் வரை பத்தாயிரம்
ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய தண்டத்துடன்
தண்டிக்கப்படுதல் வேண்டும்.]
45 &. பிரிவு 44 (A) -ன் வகைமுறைகளுக்கு
இணங்க தவறுகைக்கான பணதண்டம்:- பிரிவு 44&-ன்
வகைமுறைகளுடன் இணங்கத் தவறும் வேலை தருபவர்
எவரும் ஆறு மாதம் வரை ந்டிக்கப்படக்கூடிய ஒரு
காலத்திற்கானச் சிறைத்தண்டனை அல்லது
தண்டத்தொகை அல்லது இரண்டும் சேர்த்தும்
தண்டிக்கப்படத்தக்கவராவார் மற்றும் அத்தகைய தவறுகை.
தொடர்கின்ற போது முதல்முறை குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட
அதே தவறுகை தொடருகிற ஒவ்வொரு நாளுக்கும்
இருநூறு ரூபாய் வரை நீடிக்கப்படக்கூடிய கூடுதல்
தண்டத்தொகை விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார் மற்றும்
குற்றச்செயலை விசாரிக்கும் நீதிமன்றம் குற்றவாளிக்கு
தண்டத்தொகை விதித்தால், அவரிடமிருந்து பெறப்பட்ட
தண்டத்தொகையின் முழுப்பகுதியை அல்லது ஏதேனும்
ஒரு பகுதியை அதன் கருத்தில் அத்தகைய
தவறுகையினால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு நபருக்கும்
இழப்பீடாக செலுத்துமாறு உத்தரவிடலாம்.]
1. தமிழ்நாடு சட்டம் 9/2017 இன் 2 ஆம் பிரிவினால் (01.04.2017.
முதல் செல்திறம் பெறுமாறு) மாற்றாக அமைக்கப்பட்டது.
2. தமிழ்நாடு சட்டம் 44/2018 இன் 3 ஆம் பிரிவினால் (19.07.2008
முதல் செல்திறம் பெறுமாறு) புகுத்தப்பட்டது.
44
46. ஆய்வாளரை தடுப்பது முதலியவைக்கானத்
தண்டனை:- இந்தச் சட்டத்தின்படி, அவருக்கு
வழங்கப்பட்ட எந்தவித அதிகாரத்தையும் செலுத்துகையில்
ஓர் ஆய்வாளரை அல்லது அத்தகைய அதிகாரத்தைச்
செலுத்த ஓர் ஆய்வாளருக்கு சட்டப்பூர்வமாக உதவும் எந்த
ஒரு நபரையும் வேண்டுமென்றே தடுக்கும் எந்த நபரும்
அல்லது ஓர் ஆய்வாளரால் செய்யப்பட்ட சட்டப்பூர்வமான
பணிப்புரை எதற்கும் இணங்கத் தவறும் எவரும் இருநூற்று
ஐம்பது ரூபாய் வரை நீடிக்கப்படக்கூடிய
தண்டத்தொகையுடன் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
146 A இசைந்து தீர்க்கும் குற்றசெயல்கள்:- (1) பிரிவு
45 -ன்படி அல்லது பிரிவு 49-ன்படி செய்யப்பட்ட விதி
எதனின்படி தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயல் எதுவும்
குற்ற வழக்கை தொடங்குவதற்கு முன்போ அல்லது
பின்போ தொழிலாளர் ஆணையரால் அல்லது இதன்
பொருட்டு தொழிலாளர் ஆணையரால்
அதிகாரமளிக்கப்படக்கூடிய பிற அலுவலரால் மாநில
அரசுக்கு வரவு வைக்கப்படக்கூடிய, தொழிலாளர்
ஆணையரால் அல்லது அத்தகைய பிற அலுவலரால்
குறிப்பிடப்படக்கூடிய அத்தொகையைச் செலுத்துவதன்
மூலம் இசைந்து தீர்க்கப்படலாம்.
வரம்புரை: இந்தச் சட்டத்தின்படி,
விதிக்கப்படக்கூடிய அத்தகைய தொகையானது எந்த
நிகழ்விலும் அவ்வாறு இசைந்து தீர்க்கப்பட்ட
குற்றச்செயலுக்கான அதிகபட்ச தண்டத்தொகைக்கு
மேற்படுதல் கூடாது.
(2) உட்பிரிவு (1) - ல் அடங்கியுள்ள எதுவும், அவரால்
செய்யப்பட்ட முதல் குற்றம் இசைந்து தீர்க்கப்பட்ட
1. தமிழ்நாடு சட்ட எண் 18/1999 இன் 2 ஆம் பிரிவினால் (1௦.௦8.1999
முதல் செல்திறம் பெறுமாறு) புகுத்தப்பட்டது.
45
தேதியில் இருந்து மூன்றாண்டு காலஅளவிற்குள் அதே
அல்லது அது போன்ற குற்றத்தை செய்கிற நபர் எவருக்கும்
பொருந்தாது.
விளக்கம்: இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, முந்தைய
குற்றசெயல் இசைந்து தீர்க்கப்பட்ட தேதியிலிருந்து
மூன்றாண்டு காலஅளவு முடிவடைந்த பின்பு செய்யப்பட்ட
எந்த இரண்டாவது அல்லது பிந்தைய குற்றமும் முதல்
குற்றமாக கருதப்படுதல் வேண்டும்.
(3) உட்பிரிவு (1) -ன்படி ஒரு குற்றச்செயல் இசைந்து
தீர்க்கப்படும் போது, அவ்வாறாக இசைந்து தீர்க்கப்பட்டக்
குற்றச்செயலைப் பொறுத்து குற்றவாளிக்கு எதிராக
நடவடிக்கை அல்லது நிகழ்விற்கேற்ப கூடுதல்
நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுதல் கூடாது மற்றும்
குற்றவாளி, காவலில் இருந்தால் உடனடியாக
விடுவிக்கப்பட வேண்டும்.
(4) இந்த பிரிவால் வகை செய்யப்பட்டால் தவிர, இந்த
சட்டத்தின்படி தண்டிக்கப்படக்கூடிய குற்றசெயல்
இசைந்து தீர்க்கப்படுதல் கூடாது.]
அத்தியாயம் X
பல்வகை.
47. பதிவேடுகள் மற்றும் பதிவுறுக்களை வைத்துவருதல்
மற்றும் அறிவிப்பைக் காட்சிப்படுத்தல்.- ''மாநில] அரசின்
பொது அல்லது சிறப்பு ஆணைக்கு உட்பட்டு, வேலை
தருபவர் அத்தகைய பதிவேடு மற்றும் பதிவுறுக்களை
பராமரித்து வருதல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படும்
அத்தகைய அறிவிப்புகளைக் காட்சிப்படுத்துதல் வேண்டும்.
1"மாகாணம்" என்பதற்கு மாற்றாக சட்டங்களின் தழுவமைவு ஆணை:
1950 ஆல் அமைக்கப்பட்டது
46
48. அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்:- '[மாநில] அரசு,
அறிவிக்கையின் வாயிலாக பிரிவு 49 -ல் குறிப்பிட்டுள்ள
அதிகாரம் தவிர்த்து, அறிவிக்கையில் குறிப்பிடப்படக்கூடிய
கட்டுப்பாடுகள்: மற்றும் நிபந்தனைகள்
எவையேனுமிருப்பின் அவற்றிற்கு உட்பட்டு அலுவலர்
அல்லது அவர்கள் கீழமைந்துள்ள அதிகாரஅமைப்பு, இந்தச்
சட்டத்தின்படியான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
அதிகாரங்கள் எதையும் செலுத்தும்படி அதிகாரமளிக்கலாம்.
(2) மாநில] அரசின் அல்லது அதற்கென அவர்களால்
அதிகாரமளிக்கப்படும் அத்தகைய நபர்களின்
கட்டுப்பாட்டுக்கு அல்லது சீராய்வுக்கு உட்பட்டு உட்பிரிவு
1) - ன்படி ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள்
செலுத்தப்படுதல் வேண்டும்; '[மாநில] அரசு அவ்வாறு
அதிகாரமளிக்கப்பட்ட நபர் எவரின் செயல்கள்
அல்லது நடவடிக்கைகளை சீராய்வு செய்யவும் கூட
அதிகாரம் கொண்டிருக்கும்.
49. விதிகள் செய்வதற்கான அதிகாரம்:- (1) இந்த
சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு '[மாநில]
அரசு விதிகளை செய்யலாம்.
(2). உட்பிரிவு (1) - ன்படி விதிகளை செய்கையில்,
1[1மாநில] அரசு அவற்றின் மீறுகை ஒன்று ஐம்பது ரூபாய்
வரை நீடிக்கப்படக்கூடிய பணத்தண்டத்துடன்
தண்டிக்கப்பட வேண்டும் என வகை செய்யலாம்.
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக தழுவமைவு ஆணை 1950 ஆல்
அமைக்கப்பட்டது.
47
(3) இந்த பிரிவின்படி விதிகளை செய்வதற்கு
வழங்கப்பட்ட அதிகாரம் முந்தைய வெளியிீட்டிற்குப் பிறகு
செய்யப்படுகின்ற விதிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு
இருத்தல் வேண்டும்.
(4) இந்த பிரிவின்படி செய்யப்பட்ட அனைத்து
விதிகளும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அரசிதழில்
வெளியிடப்பட வேண்டும் மற்றும் அத்தகைய வெளியீடு
இந்தச் சட்டம் இயற்றப்பட்டதை போன்ற விளைவைக்
கொண்டிருக்கும்.
5௦. பிற சட்டங்களின்படியான உரிமைகள் மற்றும்
சலுகைகள் பாதிக்கபடாது:- நிறுவனம் எதிலும்.
பணியமர்த்தப்பட்ட நபர் எவரும் அந்நிறுவனத்தைப்
பொறுத்து இந்தச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்த தேதியில்
அந்நிறுவனத்திற்கு பொருந்தத்தக்க பிற சட்டம், ஒப்பந்தம்,
வழக்கம் அல்லது வழக்காறு எதனின்படியும் பெறத்தக்க
உரிமைகள் அல்லது சலுகைகள் இந்தச் சட்டத்தின்படி
அவர் பெறக்கூடிய உரிமைகளை விட அதிக
பயனுடையதாக இருந்தால் இந்த சட்டத்தில் அடங்கியுள்ள
எதுவும், அவற்றைப் பாதிக்காது.
150-A பெண் பணியாளருக்கு எதிராக வேறுப்படுத்திக்
காட்டுதலை தடை செய்தல்:- பணிக்கு தேர்ந்தெடுத்தல்,
பயிற்சி, பணி மாறுதல், பதவி உயர்வு அல்லது ஊதியங்கள்
தொடர்பான விவரங்களில் பெண் பணியாளரை
வேறுப்படுத்திக் காட்டுதல் கூடாது]
1. தமிழ்நாடு சட்ட எண் 9/2017 இன் 2 ஆம் பிரிவினால் (01.04.2017.
முதல் செல்திறம் பெறுமாறு) புகுத்தப்பட்டது.
48
51. தொழிலாளர் ஆணையர், சில வினாக்கள் குறித்து
முடிவெடுப்பார்:- இந்தச் சட்டத்தின் அனைத்து அல்லது
எந்த ஒரு வகைமுறையும் ஒரு நிறுவனத்திற்கு அல்லது
அதில் பணியமர்த்தப்பட்ட நபருக்கு பொருந்துமா அல்லது
பிரிவு 50 எந்த நிகழ்விற்கும் பொருந்துமா இல்லையா
என்று ஏதேனும் வினா எழுந்தால், அது தொழிலாளர்
ஆணையரால் முடிவு செய்யப்படும் மற்றும் அவரது முடிவே
அறுதியானது மற்றும் அது எந்த நீதிமன்றத்தாலும்
கேள்விக்கு உட்படுத்தப்படுதல் கூடாது.
52. சந்தைகள் மற்றும் திருவிழாக்களின் போது சட்டத்தின்
வகைமுறைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான
அரசின் அதிகாரம்:- ஒரு சந்தை அல்லது திருவிழா
அல்லது அடுத்தடுத்த பொது விடுமுறைகள் தொடர்பான
எந்த ஒரு சிறப்பு சூழ்நிலையின் போது மாநில] அரசு
அறிவிப்பின் வாயிலாக இந்தச் சட்டத்தின் அனைத்து
அல்லது ஏதேனும் வகைமுறைகளின் செயல்பாட்டை
குறிப்பிட்ட காலஅளவிற்கு தற்காலிகமாக
நிறுத்திவைக்கலாம்.
53. இந்தச் சட்டத்தால் நிருவகிக்கப்படும் நிறுவனத்திற்கு
மத்தியச்சட்டம் XVII/ 1942 பொருந்தாது:- ஒரு
நிறுவனத்தைப் பொறுத்து, இந்தச் சட்டம் செயல்பாட்டுக்கு
வரும் தேதியிலிருந்து அல்லது அது முதற்கொண்டு
வாராந்திர விடுமுறைகள் சட்டம், 1942 அத்தகைய
நிறுவனத்திற்கு பொருந்துதல் அற்றுப்போகும்.
1. "மாகாணம்" என்பதற்கு மாற்றாக தழுவமைவு ஆணை 1950 ஆல்
அமைக்கப்பட்டது.
Rules, notifications and orders under this Act
Listed from India Code. Each opens there.