Tamil Nadu · 1980 · Act 43

Tamil Nadu Public Works Engineering Corporation Limited (acquisition and miscellaneous provisions)Act, 1980

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1980 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொதுப்பணிகள்‌ பொறியியல்‌ கழகம்‌ (கையகப்படுத்துதல்‌, பல்வகை விதித்துறைகள்‌) சட்டம்‌ சட்ட எண்‌.43/1980 தமிழ்நாடு பொதுப்பணிகள்‌ பொறியியல்‌ கழகத்தைச்‌ சேர்ந்த நிறுவனத்தின்‌. உரிமை, மூல உரிமை, பற்று ஆகியவற்றைக்‌ கையகப்படுத்துவதற்கும்‌ மாற்றுவதற்கும்‌ அவை தொடர்பானவற்றிற்கும்‌ வகைசெய்யும்‌ சட்டம்‌. இந்தியக்‌ குடியரசின்‌ . முப்பத்தோறாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு சட்டமன்றத்தால்‌ பின்வருமாறு சட்டம்‌ இயற்றப்படுவதாகுக:- அத்தியாயம்‌ 1. தோற்றுவாய்‌. 1. குறுந்தலைப்பும்‌ தொடக்கமும்‌.- (1) இச்சட்டம்‌, 1980 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொதுப்பணிகள்‌. பொறியியல்‌ கழகம்‌ (கையகப்படுத்துதல்‌, பல்வகை விதித்துறைகள்‌) சட்டம்‌ எனப்‌ பெயர்‌ பெறும்‌. (2) அரசு, அறிவிப்பு வெளியிட்டு குறிப்பிடக்கூடிய நாளன்று இது செயலுக்கு வரத்தொடங்கும்‌. 2. பொருள்‌ விளக்கம்‌.- இச்சட்டத்தில்‌ சந்தர்ப்பம்‌ வேறு பொருள்‌ குறித்தாலன்றி மற்றபடி, (a) "குறிப்பிடப்படும்‌ நாள்‌” என்பது, 1 ஆம்‌ பிரிவின்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அரசு குறிப்பிடும்‌ நாள்‌ என்று பொருள்படும்‌; (b) கம்பெனி! என்பது, 1956 ஆம்‌ ஆண்டு கம்பெனிகள்‌ சட்டத்தின்‌ (மத்தியச்‌ சட்டம்‌ 171956) கீழ்‌ ஒரு கம்பெனியாகச்‌ சட்டப்படி அமைக்கப்பட்டிருப்பதும்‌ இம்மாநிலத்தில்‌ பதிவு அலுவலகத்தை உடையதுமான தமிழ்நாடு பொதுப்பணிகள்‌ பொறியியல்‌ கழகம்‌ என்று பொருள்படும்‌; (6) 'அரசு' என்பது, மாநில அரசு என்று பொருள்படும்‌; (d) நிறுவனம்‌! என்பது, கம்பெனி விதிமுறைகளின்‌ Il ஆம்‌ பகுதியில்‌ குறிப்பிடப்பட்டிருக்கிற நோக்கங்களை நிறைவேற்ற வேண்டி செயல்படுகிற கம்பெனியைச்‌ சேர்ந்த நிறுவனம்‌ என்று பொருள்படும்‌; அத்தியாயம்‌ ॥. கம்பெனியின்‌ நிறுவனங்களைக்‌ கையகப்படுத்துதலும்‌ மாற்றுதலும்‌. 3. கம்பெனியின்‌ நிறுவனங்களை அரசுக்கு மாற்றுதலும்‌ அரசிடம்‌ நிலைபெறுச்‌ செய்தலும்‌.- குறிப்பிடப்பட்ட நாளன்று கம்பெனியின்‌ நிறுவனங்களும்‌ அந்த நிறுவனங்கள்‌ தொடர்பாக கம்பெனிக்குள்ள உரிமை, மூல உரிமை, பற்று ஆகியவையும்‌ இச்சட்டத்தின்‌ காரணமாக அரசுக்கு மாற்றப்பட வேண்டியதோடு அவை முழுமையாக அரசிடம்‌ நிலைபெற்றிருக்கவும்‌ வேண்டும்‌. 4. அவ்வாறு நிலைபெறுவதால்‌ ஏற்படும்‌ பொது விளைவு.- (1) கம்பெனியின்‌ நிறுவனங்களில்‌, இருப்புகள்‌, உரிமைகள்‌, குத்தகை உரிமைகள்‌, அதிகாரங்கள்‌, சட்டப்படிக்கான உரிமைகள்‌, சிறப்புரிமைகள்‌, அசையும்‌, அசையாச்‌ சொத்துக்கள்‌, நிலங்கள்‌, கட்டிடங்கள்‌, பட்டறைகள்‌, பண்டக சாலைகள்‌, இயந்திரம்‌, கருவி, சாதனம்‌, ரொக்க இருப்புகள்‌, கையிருப்பு, சேமநிதிகள்‌, முதலீடுகள்‌, புத்தகக்கடன்கள்‌ ஆகியவை அடங்கும்‌ எனக்‌ கருதப்பட வேண்டும்‌. மேலும்‌ குறிப்பிடப்பட்ட நாளுக்கு முன்பு கம்பெனிக்குச்‌ சொந்தமாயிருந்த அதன்‌ சுவாதீனத்திலும்‌ அதிகாரத்திலும்‌ அல்லது கட்டுப்பாட்டிலும்‌ இருந்த அந்தச்‌ சொத்தின்‌ மீதான அல்லது அந்தச்‌ சொத்தின்‌ மூலம்‌ கிடைக்கின்ற பிற உரிமைகளும்‌ பற்றுகளும்‌, எல்லாக்‌ கணக்குப்‌ புத்தகங்களும்‌, பதிவேடுகளும்‌, அவை தொடர்பாக உள்ள எந்தவிதமான பிற எல்லா ஆவணங்களும்‌ அடங்கும்‌. (2) 3 ஆம்‌ பிரிவின்படி கீழ்‌ அரசிடம்‌ நிலைபெற்றுள்ள மேற்சொன்ன எல்லாச்‌ சொத்துக்களும்‌, அவ்வாறு நிலைபெறச்‌ செய்வதன்‌ மூலம்‌ யாதொரு பொறுப்புக்‌ கழகத்திடமிருந்து, கடப்பாட்டிலிருந்து, அடைமானத்திலிருந்து, பொறுப்பிலிருந்து, மீள்‌ உரிமையிலிருந்து, சொத்துக்களைப்‌ பாதிக்கின்ற பிற எல்லா வில்லங்கங்களிலிருந்தும்‌ விடுவிக்கப்பட்டு, தீர்க்கப்பட வேண்டும்‌. அச்சொத்தினை எந்த விதத்திலும்‌ பயன்படுத்துவதை கட்டுப்படுத்தி நீதிமன்றம்‌ அல்லது நடுவர்‌ மன்றம்‌ எதுவும்‌ பிறப்பித்த ஜப்தி ஆணை, தடை ஆணை அல்லது டிக்நி அல்லது ஆணை எதுவும்‌ நீக்கப்பட்டிருப்பதாகக்‌ கருதப்படும்‌. (3) அந்த நிறுவனம்‌ தொடர்பாக உரிமம்‌ அல்லது பிற ஆவணம்‌ எதனையும்‌ குறிப்பிடப்பட்ட நாளுக்கு முன்பு எச்சமயத்திலும்‌ கம்பெனிக்கு மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது வேறொரு அதிகார மன்றம்‌ வழங்கியிருந்தால்‌ அந்நாளிலிருந்து அந்த உரிமம்‌ அல்லது பிற ஆவணம்‌ மாநில அரசுக்கு வழங்கப்பட்டிருந்தாற்போலவே அந்த உரிமத்தில்‌ அல்லது பிற ஆவணத்தில்‌, அதில்‌ குறிப்பிட்டுள்ள கம்பெனிக்குப்‌ பதிலாக அரசு இடம்‌ பெறுவதாகக்‌ கருதப்பட வேண்டும்‌. அந்த உரிமத்தை அல்லது பிற ஆவணத்தை அந்தக்‌ கம்பெனி இன்னும்‌ எவ்வளவு காலத்திற்கு வைத்திருக்குமோ அக்கால அளவுக்கு அந்த உரிமத்தை அல்லது பிற ஆவணத்தை அரசு வைத்திருக்க வேண்டும்‌. (4) குறிப்பிடப்பட்ட நாளன்று, நிறுவனத்தைப்‌ பொறுத்தவரையில்‌ 5 ஆம்‌ பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு பொருள்‌ தொடர்பாக வழக்கு, மேல்முறையீடு, எந்த விதமான பிற நடவடிக்கை எதனையும்‌ நிறுவனம்‌ தொடங்கியிருந்து அல்லது அந்த நிறுவனத்தின்‌ மீது தொடங்கப்பட்டு அல்லது தாக்கல்‌ செய்யப்பட்டு முடிவுறாமலிருந்தால்‌, அது தள்ளுபடி செய்யப்படமாட்டாது, கைவிடப்படமாட்டாது அல்லது அந்த நிறுவனத்தை அரசுக்கு மாற்றிய காரணத்தால்‌ அல்லது இச்சட்டத்தில்‌ சொல்லியுள்ள எதனாலும்‌, எவ்விதத்திலும்‌ பாதிக்கப்படமாட்டாது; ஆனால்‌, அரசினால்‌ அல்லது அரசின்‌ மீது வழக்கு மேல்முறையீடு அல்லது பிற நடவடிக்கை தொடர்ந்து நடத்தப்படலாம்‌, தொடரப்படலாம்‌, நிறைவேற்றப்படலாம்‌. 5. பொறுப்பை ஏற்றுக்‌ கொள்ளுதல்‌.- (8) மத்திய அரசோ, ஒரு மாநில அரசோ அல்லது இவை இவையிரண்டுமோ குறிப்பிடப்பட்ட நாளுக்கு முன்பு இந்நிறுவனத்திற்குக்‌ கொடுத்த கடன்கள்‌ (அவற்றின்‌ மீதான வட்டியுடன்‌) குறித்தும்‌; (௦) குறிப்பிடப்பட்ட நாளுக்கு முன்பு யாதொரு கால அளவிற்கு நிறுவனத்தின்‌ பணியாளர்களுக்குக்‌ கொடுக்க வேண்டிய ஊதியங்கள்‌, சம்பளங்கள்‌ பிற தொகைகள்‌ குறித்தும்‌; ஏற்படுகிற பொறுப்பு உட்பட நிறுவனத்தின்‌ கடன்‌ பொறுப்புயாவும்‌ குறிப்பிடப்பட்ட நாளிலிருந்து அரசின்‌ பொறுப்பாக இருக்க வேண்டியதோடு, அக்கடன்கள்‌ அல்லது தொகைகள்‌ திருப்பிச்‌ செலுத்த வேண்டிய காலம்‌ வரும்போது அல்லது அத்தகைய ஊதியங்கள்‌, சம்பளங்கள்‌ அல்லது பிற தொகைகள்‌ வழங்கப்பட வேண்டிய காலம்‌ வரும்போது அரசினால்‌ கொடுத்துத்‌ தீர்க்கப்பட வேண்டும்‌. 6. தொகை கொடுத்தல்‌.- (1) கம்பெனியின்‌ நிறுவனங்களை 3 ஆம்‌ பிரிவின்கீழ்‌ அரசுக்கு மாற்றி அதனிடம்‌ நிலைபெறச்‌ செய்வதற்காக ரூபாய்‌ பதினாறு லட்சத்து அறுபதாயிரத்து தொளாயிரத்து அறுப்பத்தாறுக்கு சமமான ஒரு தொகையை அக்கம்பெனிக்கு அரசு ரொக்கமாகக்‌ கொடுக்க வெண்டும்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ குறிப்பிட்ட தொகை, குறிப்பிடப்பட்ட நாளிலிருந்து ஆறு திங்களுக்குள்‌ கொடுக்கப்பட வேண்டும்‌. அத்தியாயம்‌ ॥ நிறுவனத்தை நிர்வகித்தல்‌ முதலியன. 7. நிறுவனத்தை நிர்வகித்தல்‌ முதலியன.- குறிப்பிடப்பட்ட நாளிலிருந்தும்‌ அந்நாள்‌. முதற்கொண்டும்‌ நிறுவனத்தின்‌ விவகாரங்களும்‌ அலுவல்களும்‌ அரசால்‌ நிர்வகிக்கப்பட வேண்டும்‌. 8. நிறுவனத்தின்‌ நிர்வாகப்‌ பொறுப்பு வகிப்பவர்கள்‌ சொத்துக்கள்‌ முதலிய அனைத்தையும்‌ ஒப்படைக்க வேண்டும்‌ என்பது.- நிறுவனம்‌ அரசிடம்‌ நிலைபெறுவதன்‌ மேல்‌ அவ்வாறு நிலை பெற்ற நாளுக்கு அடுத்து முன்னர்‌ மேற்சொன்ன நிர்வாகத்தின்‌ நிர்வாகப்‌ பொறுப்பு வகித்து வந்த அனைவரும்‌ அந்த நிறுவனம்‌ தொடர்பான தங்கள்‌ பொறுப்பிலிருந்த சொத்துக்கள்‌, கணக்குப்‌ புத்தகங்கள்‌, பதிவேடுகள்‌, அல்லது பிற ஆவணங்கள்‌ அனைத்தையும்‌ அரசிடம்‌ ஒப்படைக்க கடமைப்பட்டவராவார்கள்‌. அத்தியாயம்‌ 1V. நிறுவனத்தின்‌ பணியாளர்கள்‌ தொடர்பான விதிமுறைகள்‌. 9. அதிகாரிகள்‌ ஏனைய பணியாளரை அரசுப்‌ பணிக்கு மாற்றுதல்‌.- (1) குறிப்பிடப்பட்ட நாளுக்கு அடுத்து முன்பாக கம்பெனி நிறுவனம்‌ தொடர்பாக அக்கம்பெனியால்‌ வேலைக்கமர்த்தப்பட்டிருந்த எல்லா அதிகாரிகளும்‌ ஏனைய பணியாளர்களும்‌ குறிப்பிடப்பட்ட நாளிலிருந்தும்‌ அந்நாள்‌ முதற்கொண்டும்‌ அரசுப்‌ பணியாளராக ஆவர்‌. அவ்வாறு இந்நிறுவனம்‌ அரசிடம்‌ நிலைபெற்றிராவிடில்‌ எந்த ஊதியத்திலும்‌ எந்த நிபந்தனைகளின்படியும்‌ அரசின்‌ கீழ்‌ பதவியோ அல்லது பணியோ வகித்திருப்பாரோ அதே ஊதியத்திலும்‌ அதே நிபந்தனைகளிலும்‌ அப்பதவியை வகித்து வருவார்‌ மற்றும்‌ ஓய்வூதியம்‌, பணிக்கொடை, பிற பொருள்கள்‌ இவை குறித்து என்ன உரிமைகளும்‌ சிறப்புரிமைகளும்‌ பெற்றிருப்பாரோ அதே உரிமைகளும்‌ சிறப்புரிமைகளும்‌ பெறுவார்‌. அன்றியும்‌ அரசின்கீழ்‌ அவரது நியமனம்‌, முறையாக இறுதி செய்யப்பட்டாலன்றியும்‌ அவ்வாறு செய்யப்படும்‌ வரையிலும்‌, அல்லது அவரது ஊதியம்‌, பணி குறித்த நிபந்தனைகள்‌ வரையறைகள்‌ ஆகியவை அரசால்‌ முறையாக மாற்றப்பட்டாலன்றியும்‌, மாற்றப்படும்‌ வரையிலும்‌ அவர்‌ இந்த உரிமைகளையும்‌ சிறப்புரிமைகளையும்‌ தொடர்ந்து பெற்று வருவார்‌. ஆனால்‌, செய்த மாற்றம்‌ மேற்சொன்ன அதிகாரி அல்லது ஏனைய பணியாளர்‌ ஏற்கத்தக்கதாக இல்லாவிட்டால்‌, நிரந்தரப்‌ பணியாளர்களைப்‌ பொறுத்தவரை மூன்று மாத ஊதியத்திற்கு நிகரான தொகையை அவருக்கு கொடுப்பதன்‌ பேரிலும்‌, ஏனைய பணியாளர்களைப்‌ பொறுத்தவரை ஒரு மாத ஊதியத்திற்கு நிகரான தொகையைக்‌ கொடுப்பதன்‌ பேரிலும்‌ அவரது பணியை அரசு இறுதி செய்யலாம்‌. மேலும்‌ அரசின்‌ அதிகாரியாக அல்லது ஏனைய பணியாளராக பணியாற்ற விரும்பவில்லை என்ற தமது கருத்தை குறிப்பிடப்பட்ட நாளுக்கு அடுத்துப்‌ பின்னர்‌ வருகிற முப்பது நாட்களுக்குள்‌ எழுத்து மூலமாக தெரிவித்துள்ள ஒரு அதிகாரிக்கு அல்லது ஏனைய பணியாளருக்கு, இந்த உட்பிரிவில்‌ கண்டுள்ளதெதுவும்‌ பொருந்தாது. (2) 1947 ஆம்‌ ஆண்டு தொழில்‌ தகராறுகள்‌ சட்டத்தில்‌ (மத்திய சட்டம்‌ 141947) அல்லது நிகழ்காலத்தில்‌ செயலிலுள்ள வேறு ஒரு சட்டத்தில்‌ என்ன சொல்லியிருப்பினும்‌ நிறுவனத்தில்‌ வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள ஒரு அதிகாரியை அல்லது ஏனைய பணியாளரை அரசுப்‌ பணிக்கு மாற்றும்‌ போது, இச்சட்டத்தின்‌ கீழ்‌ அல்லது நிகழ்காலத்தில்‌ செயலிலுள்ள வேறொரு சட்டத்தின்கீழ்‌ இழப்பீடு எதனையும்‌ பெற மேற்சொன்ன அதிகாரி அல்லது ஏனைய பணியாளர்‌ உரிமையுடையவராக மாட்டார்‌. நீதி மன்றம்‌, நடுவர்‌ மன்றம்‌ அல்லது ஏனைய அதிகாரமன்றம்‌ எதுவும்‌ அத்தகைய உரிமைக்‌ கோரிக்கை எதையும்‌ ஏற்றுக்‌ கொள்ளக்கூடாது. 10. வருங்கால வைப்பு நிதியும்‌, ஏனைய நிதிகளும்‌.- (1) நிறுவனத்தின்‌ வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்களின்‌ பயனுக்காக வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதிய நிதி, நலநிதி அல்லது பிற நிதியை கம்பெனி ஏற்படுத்தியிருந்தால்‌, இச்சட்டத்தின்கீழ்‌ அல்லது இச்சட்டத்தின்‌ மூலம்‌ அரசுக்கு மாற்றப்பட்டுள்ள பணியாளர்களின்‌ கணக்கில்‌ குறிப்பிடப்பட்ட நாளன்று மேற்சொன்ன வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதிய நிதி, நலநிதி அல்லது ஏனைய நிதிக்கணக்கில்‌ உள்ள தொகைகள்‌ அரசுக்கு மாற்றப்பட்டு நிலை பெற வேண்டும்‌. 2 ௫ ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அரசுக்கு மாற்றப்படும்‌ தொகைகள்‌, வரையறுக்கப்படக்கூடிய முறையில்‌ அரசால்‌ வைத்துவரப்பட வேண்டும்‌. அத்தியாயம்‌ V பலவகை. 11. இச்சட்டம்‌ மற்றெல்லாச்‌ சட்டங்களையும்‌ விட மேலோங்கி நிற்கும்‌ என்பது.- இச்சட்டத்தின்‌ விதித்துறைகள்‌, நிகழ்காலத்தில்‌ செயலில்‌ உள்ள ஒரு சட்டத்தில்‌ அல்லது இச்சட்டத்தைத்‌ தவிர வேறு எந்த சட்டத்தின்‌ மூலம்‌ செயல்திறன்‌. பெறுகிற ஓர்‌ ஆவணத்தில்‌ அல்லது ஒரு நீதிமன்றத்தின்‌, நடுவர்‌ மன்றத்தின்‌ அல்லது அதிகார மன்றத்தின்‌ டிக்கிரியில்‌ அல்லது ஆணையில்‌ இச்சட்டத்திற்கு முரணாக என்ன சொல்லியிருப்பினும்‌ செயல்திறனுள்ளவையாக இருக்கும்‌. 12. ஒப்பந்தங்கள்‌ குறித்து அரசு பிண்னிசைவு அளித்தாலொழிய அவை செயல்‌ திறனற்றுப்‌ போகும்‌ என்பது.- எந்தப்‌ பணி, விற்பனை அல்லது வழங்கலுக்கான நிறுவனம்‌ ஓர்‌ ஒப்பந்தத்தைச்‌ செய்திருந்து அந்த ஒப்பந்தம்‌ குறிப்பிடப்பட்ட நாளுக்கு அடுத்து முன்னதாக செயலிலிருந்தால்‌ அத்தகைய ஒவ்வொரு ஒப்பந்தமும்‌ அந்த நாளிலிருந்து நூற்று எண்பது நாட்கள்‌ முடிவடைந்த அன்றிலிருந்து செயல்திறனற்றுப்போகும்‌. ஆனால்‌ அக்கால அளவு முடிவடைவதற்கு முன்‌ அரசு எழுத்து மூலமாக பின்னர்‌ இசைவளித்தால்‌ அந்த ஒப்பந்தம்‌ செயல்‌ திறனற்றுப்போகாது. அவ்வாறு அவ்வொப்பந்தத்திற்குப்‌ பின்னிசைவு அளிக்கும்‌ போது அரசு தகுதியெனக்‌ கருதும்‌ மாற்றங்களை அல்லது திருத்தங்களை அந்த ஒப்பந்தத்தில்‌ செய்யலாம்‌. ஆனால்‌, ஓர்‌ ஒப்பந்தம்‌ அளவிற்கு மேல்‌ பொறுப்புள்ளது அல்லது கெட்ட எண்ணத்துடன்‌ செய்துக்‌ கொள்ளப்பட்டது அல்லது நிறுவனத்தின்‌. நலன்களுக்குப்‌ பாதகமானது என்று ஐய மறத்‌ தெரிந்து கொண்டாலன்றி மற்றபடி அந்த ஒப்பந்தத்திற்கு அரசு பின்னிசைவு அளிக்காமலிருக்கக்கூடாது அல்லது அந்த ஒப்பந்தத்தில்‌ எந்த மாற்றம்‌ அல்லது திருத்தத்தைச்‌ செய்யக்கூடாது. (2) மற்றும்‌ ஒப்பந்தத்‌ தரப்பினர்களுக்குத்‌ தமது தரப்பை எடுத்துக்‌ கூற நியாயமான வாய்ப்பு அளிக்காமலும்‌, ஒப்பந்தத்தற்குப்‌ பின்னிசைவு அளிக்க மறுப்பதற்கான, அல்லது அதில்‌ எந்த மாற்றங்கள்‌ அல்லது திருத்தங்கள்‌ செய்வதற்கான காரணங்களை எழுதி வைக்காமலும்‌ அரசு அந்த ஒப்பந்தத்திற்குப்‌ பின்னிசைவு அளிக்காமல்‌ இருக்கக்கூடாது, மற்றும்‌ அதில்‌ எந்த மாற்றம்‌ அல்லது திருத்தத்தையும்‌ அதில்‌ செய்யக்கூடாது. 13. தண்டனை.- (8) யாதொரு நபர்‌ நிறுவனத்தைச்‌ சேர்ந்த ஒரு சொத்தின்‌ சுவாதீனம்‌ பொறுப்பு அல்லது கட்டுப்பாட்டினைத்‌ தம்மிடம்‌ வைத்துக்‌ கொண்டிருந்து அத்தகைய சொத்தை, அரசிடமிருந்தோ அல்லது அரசின்‌ அதிகாரம்‌ பெற்ற ஒருவரிடமிருந்தோ அல்லது இதற்காக அரசிடமிருந்து அதிகாரம்‌ பெற்ற ஒருவரிடமிருந்தோ தவறான முறையில்‌ நிறுத்தி வைத்துக்கொண்டால்‌; அல்லது (௦) நிறுவனத்தைச்‌ சேர்ந்த ஒரு சொத்தை தவறான முறையில்‌ தம்‌ சுவாதீனத்தில்‌ வைத்திருந்தால்‌, தம்மிடம்‌ வைத்திருந்தால்‌ அல்லது அந்நிறுவனம்‌ தொடர்பான ஓர்‌ ஆவணம்‌, தமது சுவாதீனத்தில்‌, பொறுப்பில்‌ அல்லது கட்டுப்பாட்டிலிருந்து அதை அரசுக்கு அல்லது அரசால்‌ குறிப்பிடப்பட்ட ஒரு நபருக்கு வேண்டுமென்றே கொடுக்காமல்‌ நிறுத்தி வைத்துக்‌ கொண்டாலும்‌ அல்லது கொடுக்கத்‌ தவறினாலும்‌ அல்லது நிறுவனத்திற்குத்‌ தொடர்பாக தம்‌ பொறுப்பிலுள்ள எந்தச்‌ சொத்துக்கள்‌, கணக்குப்‌ புத்தகங்கள்‌, பதிவேடுகள்‌ அல்லது இதர ஆவணங்களை அரசிடம்‌ அல்லது அரசு குறிப்பிடும்‌ நபருக்கு ஒப்படைக்கத்‌ தவறினாலும்‌; அல்லது (6) நிறுவனத்திற்குச்‌ சொந்தமான ஒரு சொத்தை தவறான முறையில்‌ அப்புறப்படுத்திணால்‌ அல்லது அழித்தால்‌ அல்லது இச்சட்டத்தின்படிக்கான உரிமைக்‌ கோரிக்கை ஒன்று பொய்‌ யானதென்று அல்லது பெரிதும்‌ தப்பானதென்று தமக்குத்‌ தெரிந்திருந்தும்‌ அல்லது அவ்வாறு நம்ப நியாயமிருந்தும்‌ அக்கோரிக்கையைச்‌ செய்து கொண்டால்‌; அவருக்கு இரண்டாண்டுகள்‌ வரையில்‌ சிறைத்தண்டனை அல்லது பத்தாயிரம்‌ ரூபாய்‌ வரையிலான அபராத தண்டனை அல்லது இவ்விரு தண்டனைகளும்‌ விதிக்கப்படத்தக்கவையாகும்‌. 14. கம்பெனிகள்‌ செய்கின்ற குற்றங்கள்‌.- (1) இச்சட்டத்தின்படிக்கான ஒரு குற்றத்தை ஒரு கம்பெனி செய்திருந்தால்‌ அக்குற்றத்தைச்‌ செய்தபோது அக்கம்பெனியின்‌ அலுவல்களை நடத்துவதற்குப்‌ பொறுப்பு வகித்து வந்த ஒவ்வொரு நபரும்‌, கம்பெனியும்‌ அக்குற்றம்‌ செய்ததாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்படும்‌. ஆனால்‌, ஒருவர்‌ தனக்குத்‌ தெரியாமல்‌ அக்குற்றம்‌ செய்யப்பட்டதாக அல்லது அக்குற்றம்‌ செய்யப்படுவதைத்‌ தடுக்க தாம்‌ உரிய கவனம்‌ அனைத்தையும்‌ செலுத்தியதாக நிரூபித்தால்‌ இந்த உட்பிரிவில்‌ கண்டுள்ள எதுவும்‌ அந்த நபரை தண்டனை எதற்கும்‌ உட்படுத்தாது. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன சொல்லியிருப்பினும்‌ இச்சட்டத்தின்‌ கீழ்‌ ஒரு குற்றத்தைக்‌ கம்பெனி ஒன்று செய்திருந்து, அக்குற்றம்‌ இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌ அல்லது ஏனைய அதிகாரியின்‌ இசைவோடு அல்லது உடந்தையோடு செய்யப்பட்டதாக அல்லது அசட்டை காரணமாக செய்யப்பட்டதாக நிருபிக்கப்பட்டால்‌, அந்த இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌ அல்லது பிற அதிகாரி அக்குற்றத்தைச்‌ செய்துள்ளதாக கருதப்பட வேண்டும்‌; மேலும்‌, அவர்‌ மீது நடவடிக்கை எடுத்து அதற்கிணங்க அவர்‌ தண்டிக்கப்படுவார்‌. விளக்கம்‌: இப்பிரிவின்‌ செயல்‌ நோக்கத்திற்காக, (8) 'கம்பெனி! என்பது சட்டப்படியமைந்த கூட்டமைப்பாகும்‌; அதில்‌ ஒரு நிறுவனம்‌ அல்லது தனிப்பட்ட பல நபர்கள்‌ சேர்ந்த ஓர்‌ அமைப்பு என்பதும்‌ அடங்கும்‌. (b) ஒரு நிறுவனம்‌ தொடர்பாக "இயக்குநர்‌ என்பது அந்நிறுவனத்தின்‌. கூட்டுப்‌ பங்குதாரர்‌ எனப்‌ பொருள்படும்‌. 15. நல்லெண்ணத்துடன்‌ எடுக்கப்படும்‌ நடவடிக்கைக்குக்‌ காப்பு.- இச்சட்டத்தின்கீழ்‌ நல்லெண்ணத்துடன்‌ செயல்படுகின்ற அல்லது செய்வதாகக்‌ கருதப்படுகிற எதற்காகவும்‌ அரசு மீது அல்லது அரசின்‌ யாதொரு அதிகாரி மீது வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள்‌ எதையும்‌ தொடர முடியாது. 16. அதிகாரங்களைப்‌ பிரித்துக்‌ கொடுத்தல்‌. 17 ஆம்‌ பிரிவின்கீழ்‌ செலுத்தத்தக்க அதிகாரம்‌ நீங்கலாக, இச்சட்டத்தின்கீழ்‌ அரசுக்குள்ள ஏனைய அதிகாரங்கள்‌ அனைத்தும்‌ அல்லது அவற்றில்‌ யாதொன்றும்‌, இந்த அறிவிப்பில்‌ குறிப்பிடக்கூடிய யாதொரு நபர்‌ அல்லது நபர்களாலும்‌ செலுத்தப்படத்தக்கதாகுமென அரசு அறிவிப்பு மூலம்‌ கட்டளையிடலாம்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அதிகாரங்கள்‌ பிரித்துக்‌ கொடுக்கும்‌ போது, எந்த நபருக்கு அதிகாரம்‌ பிரித்துக்‌ கொடுக்கப்பட்டுள்ளதோ அந்நபர்‌ அரசின்‌ கட்டளையின்‌ கீழும்‌ கட்டுப்பாட்டின்‌ கீழும்‌ மேற்பார்வையின்‌ கீழும்‌, செயல்பட வேண்டும்‌. 17. விதிகள்‌ இயற்ற அதிகாரம்‌. (1) இச்சட்டத்தின்‌ விதித்துறைகளை நிறைவேற்ற அரசு, விதிகள்‌ இயற்றலாம்‌. (2) குறிப்பாகவும்‌, மேற்சொல்லப்பட்ட அதிகாரத்தின்‌ பொதுத்தன்மைக்கு ஊறு இன்றியும்‌, மேற்சொன்ன விதிகள்‌, கீழ்க்காணும்‌ பொருள்கள்‌ அனைத்துக்கும்‌ அல்லது எவற்றிற்கேனும்‌ வகை செய்யலாம்‌; அவையாவன:- (a) வருங்கால வைப்புநிதி அல்லது 9 ஆம்‌ பிரிவில்‌ குறிப்பிடப்பட்ட ஏனைய நிதிகளில்‌ உள்ள தொகை எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டு மென்பது; (b) வரையறுக்கப்படவேண்டிய அல்லது வரையறுக்கப்படக்கூடிய வேறு யாதொரு விஷயம்‌. (3) இச்சட்டத்தின்‌ கீழ்‌ செய்யப்பட்ட எல்லா விதிகளும்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்பட வேண்டும்‌; மேலும்‌ அவ்விதிகள்‌ குறிப்பிட்ட நாளன்று செயலுக்கு வருமென்று திட்டவட்டமாக கூறப்பட்டிருந்தாலன்றி, மற்றப்படி அவை அவ்வாறு வெளியிடப்படும்‌ நாளன்று செயலுக்கு வரத்‌ தொடங்கும்‌. (4) இச்சட்டத்தின்கீழ்‌ வெளியிடப்பட்ட அறிவிப்புகள்‌ அனைத்தும்‌ குறிப்பிட்ட நாளன்று செயலுக்கு வருமென்று திட்டவட்டமாகக்‌ கூறப்பட்டடிருந்தாலன்றி மற்றபடி, அவை வெளியிடப்படும்‌ நாளன்றே, செயலுக்கு வரத்‌ தொடங்கும்‌. (5 இச்சட்டத்தின்‌ கீழ்‌ செய்யப்பட்ட ஒவ்வொரு விதியும்‌ அல்லது வெளியிடப்பட்ட ஒவ்வொரு அறிவிப்பும்‌ அவை செய்யப்பட்டவுடன்‌ அல்லது வெளியிடப்பட்டவுடன்‌ சட்டமன்றத்தின்‌ S5 அவைகள்‌ முன்பும்‌ வைக்கப்பட வேண்டும்‌. அவை அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர்‌ முடிவடைவதற்கு முன்பு அல்லது அடுத்தக்‌ கூட்டத்தொடரில்‌ இரு அவைகளும்‌ அந்த விதியில்‌ அல்லது அறிவிப்பில்‌ மாற்றம்‌ ஏதும்‌ வேண்டும்‌ என ஒப்புக்கொண்டால்‌ அல்லது அந்த விதி அல்லது அறிவிப்பு செய்யப்படக்கூடாது அல்லது வெளியிடப்படக்கூடாது என்று இரு அவைகளும்‌ ஒப்புக்கொண்டால்‌, அதன்‌ பின்னர்‌ அவ்விதி அல்லது அறிவிப்பு சூழ்நிலைக்கேற்ப மாற்றப்பட்ட வடிவத்தில்‌, செயல்திறன்‌ பெறும்‌ அல்லது செயல்திறன்‌ அற்றுப்போகும்‌ எனினும்‌, அத்தகைய மாற்றம்‌ அல்லது இரத்து அந்த விதி அல்லது அறிவிப்பின்‌ கீழ்‌ முன்னரே செய்யப்பட்ட யாதொன்றின்‌ செயல்திறனைப்‌ பாதிக்காது. 18. இடர்ப்பாடுகளை நீக்க அதிகாரம்‌.- இச்சட்டத்தின்‌ விதித்துறைகளுக்கு செயல்‌ வடிவம்‌ கொடுக்கும்‌ போது இடர்ப்பாடு ஏதேனும்‌ ஏற்பட்டால்‌ இச்சட்டத்தின்‌ விதித்துறைகளுக்கு முரண்பாடின்றி அரசு ஆணை பிறப்பிப்பதன்‌ மூலம்‌ அந்த இடர்ப்பாட்டை நீக்கலாம்‌. ஆனால்‌, குறிப்பிடப்பட்ட நாளிலிருந்து இரண்டாண்டுக்‌ காலம்‌ அளவு முடிவடைந்த பின்னர்‌, அத்தகைய ஆணை எதுவும்‌ பிறப்பிக்கப்படக்‌ கூடாது.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts