Tamil Nadu · 1979 · Act 56

Tamil Nadu Prize Schemes (Prohibition) Act, 1979

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1979 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பரிசுத்‌ திட்டங்கள்‌ குடைசெய்தல்‌) சட்டம்‌, தமிழ்நாடு சட்டம்‌ எண்‌. 56 71979. பிரிவுகளின்‌ அமைப்பு 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌. 3. பரிசுத்‌ திட்டங்களைத்‌ தடைசெய்தல்‌. 4. 3 ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளை மீறுவதற்கான தண்டனை. 5. பரிசுத்‌ திட்டங்கள்‌ தொடர்பான பிற குற்றங்களுக்கு தண்டனை. 6. உடந்தையாக இருப்பவர்களுக்கு தண்டனை. ~ . நிறுமங்களால்‌ செய்யப்படும்‌ குற்றங்கள்‌. 8. உள்ளே நுழைந்து, சோதனையிடுதல்‌ மற்றும்‌ கைப்பற்றுதலுக்கான அதிகாரம்‌. 9. பரிசுத்‌ திட்டங்கள்‌ அடங்கிய செய்தித்தாள்கள்‌ மற்றும்‌ வெளியீடுகளை பறிமுதல்‌ செய்தல்‌. 10. குற்றங்களை விசாரிக்கும்‌ அதிகாரம்‌. 11. இச்சட்டத்தின்படியான குற்றங்கள்‌ பிடியாணை வேண்டாக்‌ குற்றங்களாக இருத்தல்‌. 12. விலக்களிப்பதற்கான அதிகாரம்‌. 13. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. 14. காப்புரை. 15. நீக்கறவு மற்றும்‌ காப்புரை. 1979 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பரிசுத்‌ திட்டங்கள்‌ தடைசெய்தல்‌) சட்டம்‌. தமிழ்நாடு சட்டம்‌ எண்‌. 56 71979. [1979, டிசம்பர்‌ 03] தமிழ்நாடு மாநிலத்தில்‌ பரிசுத்‌ திட்டங்களை ஊளக்குவிப்பதை அல்லது நடத்துவதை தடைசெய்வதற்கானதெொொரு சட்டம்‌. இந்திய குடியரசின்‌ முப்பதாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றத்தால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாக:- 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌.- (1) இந்தச்‌ சட்டம்‌, 1979 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பரிசுத்‌ திட்டங்கள்‌ (தடைசெய்தல்‌) சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. (2) இது, தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதும்‌ அளாவி நிற்கும்‌. (3) இது, 1979 அக்டோபர்‌ 13 ஆம்‌ தேதி நடைமுறைக்கு வந்ததாகக்‌ கருதப்படும்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌, தறுவாயின்‌ தேவை வேறானாலன்றி, — (a) "அரசு" என்பது, மாநில அரசு என்று பொருள்படும்‌; (b) "பரிசுத்‌ திட்டம்‌" என்பது, ஏதேனும்‌ பரிசு அல்லது கொடை (பணம்‌ மூலமாகவோ அல்லது அசையும்‌ அல்லது அசையாச்‌ சொத்து மூலமாகவோ) வழங்கப்படும்‌ அல்லது திட்டத்தின்‌ ஆதரவாளர்களால்‌ குறிப்பிடப்பட்டவை எதுவாயினும்‌, கடைகள்‌, மையங்கள்‌ அல்லது வேறு எந்த இடத்திலிருந்தும்‌ சரக்குகள்‌ அல்லது பிற பொருட்களை வாங்கும்‌ அல்லது வாங்கிய நபர்களிடையே சீட்டு, குலுக்கல்‌ அல்லது வேறு எந்த முறையிலும்‌ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு வழங்க அல்லது ஒப்படைக்க முண்மொழியப்பட்டுள்ள அல்லது அத்தகைய விலைக்கு வாங்குபவர்கள்‌ தொடர்பாக ஏதேனும்‌ ஏற்புச்சீட்டு, சீட்டு, எண்‌: அல்லது இலக்கம்‌ எதனின்‌ குலுக்களுடன்‌ தொடர்புடைய அல்லது பொருந்தக்கூடிய நிகழ்வு அல்லது தற்செயல்‌ எதுவும்‌ எந்தப்‌ பெயரில்‌ அழைக்கப்பட்டாலும்‌, ஏதேனும்‌ திட்டம்‌ என்று பொருள்படும்‌; விளக்கம்‌ - இந்தக்‌ கூறின்‌ நோக்கங்களுக்காக, — () "கொள்முதல்‌" என்பது, ஒரு மொத்தத்‌ தொகையாகவோ அல்லது தவணையாகவோ செலுத்துவதன்‌ மூலம்‌ இருக்கலாம்‌; (ii) "பணம்‌" என்பது காசோலை, அஞ்சல்‌ ஆணை, கேட்பு வரைவோலை, தந்தி பறிமாற்றம்‌ அல்லது பண அஞ்சல்‌ ஆகியவற்றை உள்ளடக்கும்‌. 3. பரிசுத்‌ திட்டங்களைத்‌ தடைசெய்தல்‌.- நபரெவரும்‌, பரிசுத்‌ திட்டம்‌ எதையும்‌ ஊக்குவிக்கவோ அல்லது நடத்தவோ கூடாது. 4. 3 ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளை மீறுவதற்கான தண்டனை.- 3 ஆம்‌ பிரிவின்‌ வகைமுறைகளை மீறும்‌ நபரெவரும்‌, மூன்று ஆண்டுகள்‌ வரை நீடிக்கக்கூடிய காலஅளவிற்கு கடுங்காவல்‌ சிறைத்தண்டனையுடன்‌ தண்டிக்கப்படுவார்‌; வரம்புரையாக, அத்தகைய கடுங்காவல்‌ சிறைத்தண்டனை, மூன்று மாதங்களுக்குக்‌ குறையாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌. 5. பரிசுத்‌ திட்டங்கள்‌ தொடர்பான பிற குற்றங்களுக்கு தண்டனை.- இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு முரணாக ஏதேனும்‌ பரிசுத்‌ திட்டத்தை ஊக்குவிப்பதற்காக அல்லது நடத்தும்‌ நோக்கத்துடன்‌ அல்லது ஊக்குவிக்கப்பட்ட அல்லது நடத்தப்பட்ட அத்தகைய பரிசுத்‌ திட்டம்‌ எதனுடனும்‌ தொடர்புடைய நபரெவரும்‌- (a) பரிசுத்‌ திட்டத்தில்‌ பயன்படுத்த ஏதேனும்‌ ஏற்புச்சீட்டு, பெறுகைச்சீட்டு அல்லது பிற ஆவணத்தை அச்சிடுதல்‌, வெளியிடுதல்‌ அல்லது விநியோகித்தல்‌; அல்லது (௦) பரிசுத்‌ திட்டத்தில்‌ பயன்படுத்த ஏதேனும்‌ ஏற்புச்சீட்டு, பெறுகைச்சீட்டு அல்லது பிற ஆவணத்தை விநியோகிக்கும்‌ நோக்கத்திற்காக, விநியோகிக்கும்‌ அல்லது வழங்கும்‌ அல்லது விநியோகிக்க விளம்பரம்‌ செய்தல்‌ அல்லது அவரது உடைமையில்‌ வைத்திருத்தல்‌; (௦) டு பரிசுத்‌ திட்டத்தின்‌ விளம்பரம்‌ எதுவும்‌; அல்லது (00 பரிசுத்‌ திட்டத்தில்‌ கொள்முதல்‌ செய்பவர்களின்‌ எந்தவொரு பட்டியலும்‌, முழுமையானதாக இருந்தாலும்‌ இல்லாவிட்டாலும்‌; அல்லது (iii) பரிசுத்‌ திட்டம்‌ அல்லது வேறு ஏதேனும்‌ பரிசுத்‌ திட்டங்களில்‌ பங்கேற்க நபர்களைத்‌ தூண்டுவதற்காக கணக்கிடப்பட்ட பரிசுத்‌ திட்டத்தை விவரிக்கும்‌ அல்லது வேறுவிதமாக தொடர்புடைய எந்தவொரு பொருட்பாட்டிலும்‌, வெளியிடும்‌ அல்லது விநியோகிக்கும்‌ நோக்கத்திற்காக, அச்சிடுதல்‌, வெளியிடுதல்‌ அல்லது விநியோகித்தல்‌ அல்லது அவரது உடைமையில்‌ வைத்திருத்தல்‌; அல்லது (6) விநியோக நோக்கத்திற்காக, எந்தவொரு ஏற்புச்சீட்டு, பெறுகைச்சீட்டு அல்லது பிற ஆவணத்தையும்‌ அல்லது பரிசுத்‌ திட்டத்தில்‌ பயன்படுத்துவதற்காகவும்‌ அல்லது எந்தவொரு விளம்பரத்திற்காகவும்‌ அனுப்ப எந்தவொரு நபரையும்‌ கொண்டுவருதல்‌ அல்லது அழைத்தல்‌; அல்லது (ஐ பரிசுத்‌ திட்டத்தின்‌ ஊக்குவிப்பு அல்லது நடத்துதலுடன்‌ தொடர்புடைய நோக்கங்களுக்காக, எந்தவொரு வள௱ாகத்தையும்‌ பயன்படுத்துதல்‌, அல்லது எந்தவொரு வளாகத்தையும்‌ பயன்படுத்த அல்லது தெரிந்தே அனுமதித்தல்‌; அல்லது (0 மேற்கூறிய செயல்களில்‌ ஏதேனும்‌ ஒன்றைச்‌ செய்ய எந்தவொரு நபரையும்‌ பெற அல்லது பெற முயற்சிக்கச்‌ செய்வித்தல்‌; ஆகியவற்றிற்கு மூன்று ஆண்டுகள்‌ வரை ந்டிக்கக்கூடிய காலஅளவிற்கு கடுங்காவல்‌ சிறைத்தண்டனை விதிக்கப்படும்‌. வரம்புரையாக, அத்தகைய கடுங்காவல்‌ றைத்தண்டனை, மூன்று மாதங்களுக்குக்‌ குறையாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌: 6. உடந்தையாக இருப்பவர்களுக்கு தண்டனை.- 4 ஆம்‌ பிரிவு அல்லது 5 ஆம்‌ பிரிவின்படி தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயல்‌ எதனையும்‌ எவ்வகையிலும்‌ ஏற்படுத்துகிற, கொள்முதல்‌ செய்கிற ஆலோசனை வழங்குகிற, உதவி செய்கிற, உடந்தையாக இருக்கிற அல்லது அதற்கு துணைபோகிற எவரும்‌, அக்குற்றத்திற்கென்‌ வகைசெய்யப்பட்ட தண்டனையுடன்‌ தண்டிக்கப்படுவார்‌. 7. நிறுமங்களால்‌ செய்யப்படும்‌ குற்றங்கள்‌.- (1) இச்சட்டத்தின்‌ வகைமுறைகளின்கீழ்‌ குற்றம்‌ எதுவும்‌ நிறுமத்தால்‌ செய்யப்பட்டிருப்பின்‌, அக்குற்றத்தின்போது, அந்நிறுமத்தின்‌ அலுவல்‌ நடைபெறுவதற்கு அந்நிறுமத்தின்‌ பொறுப்பிலிருந்த மற்றும்‌ பொறுப்பைக்‌ கொண்டிருந்த நபர்‌ ஒவ்வொருவரும்‌, மற்றும்‌ அந்நிறுமமும்‌ அக்குற்றத்தைச்‌ செய்திருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவும்‌ அதற்கிணங்க தண்டிக்கப்படவும்‌ வேண்டும்‌. வரம்புரையாக, இந்த உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌, அத்தகைய நபர்‌ எவரும்‌, அக்குற்றம்‌ தமக்குத்‌ தெரியாமலேயே செய்யப்பட்டிருப்பதாக அல்லது அத்தகைய குற்றத்தை தடுக்க தம்மால்‌ இயன்ற அனைத்தையும்‌ செய்ததாக மெய்ப்பித்தால்‌, அத்தகைய நபருக்கு தண்டனை எதுவும்‌ விதித்தல்‌ ஆகாது. (2) (1) ஆம்‌ உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, இச்சட்டத்தின்‌ கழ்‌ குற்றம்‌ எதனையும்‌ நிறுமமொன்று செய்திருக்கிறவிடத்து, அந்த குற்றமானது, அந்நிறுமத்தின்‌ இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌ அல்லது பிற அலுவலர்‌ எவரின்‌ அனுமதியுடன்‌ அல்லது உடந்தையுடன்‌ அல்லது அவருடைய கவனமின்மை காரணமாக செய்யப்பட்டிருப்பதாக மெய்ப்பிக்கப்பட்டால்‌, அத்தகைய இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌, அல்லது பிற அலுவலர்‌ அந்த குற்றத்தைச்‌ செய்திருப்பதாகக்‌ கருதப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவும்‌ அதற்கிணங்க தண்டிக்கப்படவும்‌ வேண்டும்‌. விளக்கம்‌.- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, (வ "நிறுமம்‌" என்பது, எந்தவொரு கூட்டு நிறுவனம்‌ என்று பொருள்படும்‌ மற்றும்‌ ஒரு நிறுவகம்‌ அல்லது பிற தனி நபர்களின்‌ கழகத்தையும்‌ உள்ளடக்கும்‌; மற்றும்‌ (b) "இயக்குநர்‌" என்பவர்‌, ஒரு நிறுவகத்தைப்‌ பொறுத்தவரையில்‌, நிறுவகத்தில்‌ ஒரு பங்குதாரர்‌ ஆவார்‌. ட ஒரு நிறுவகம்‌ என்பது நிறுவகத்தில்‌ ஒரு பங்குதாரர்‌ என்று பொருள்படும்‌, (i) ஒரு சங்கம்‌ அல்லது தனிநபர்களின்‌ பிற கழகம்‌ என்பது, நேர்விற்கேற்ப, சங்கத்தின்‌ அல்லது தனிநபர்களின்‌ பிற கழகத்தின்‌ அலுவல்களை நிர்வகிக்கும்‌ பொறுப்பை சங்கத்தின்‌ அல்லது தனிநபர்களின்‌ பிற கழகத்தின்‌ விதிகளின்படி ஒப்படைக்கப்பட்ட நபர்‌ என்று பொருள்படும்‌. 8. உள்ளே நுழைந்து, சோதனையிடுதல்‌ மற்றும்‌ கைப்பற்றுதலுக்கான அதிகாரம்‌.- (1) காவல்‌ நிலையமொன்றின்‌ பொறுப்பிலுள்ள அலுவலரின்‌ படிநிலைக்குக்‌ குறையாத எந்தவொரு காவல்‌ அலுவலரும்‌, (ஐ) இச்சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு முரணாக உள்ள ஏதேனும்‌ பரிசுத்‌ திட்டத்தை ஊக்குவிப்பதற்காக அல்லது நடத்துவதுடன்‌ தொடர்புடைய நோக்கங்களுக்காக, அவர்‌ சந்தேகிக்கக்‌ காரணமுள்ள எந்தவொரு வளாகமும்‌, அவசியமானதாகக்‌ கருதும்‌ அத்தகைய உதவியாளர்களுடன்‌ பகலிலோ இரவிலோ வலிந்து நுழைவது; (b) வளாகம்‌ மற்றும்‌ அதில்‌ அவர்‌ காணக்கூடிய நபர்களை சோதனையிடுவது; (௦ எந்தவொரு பரிசுத்‌ திட்டத்திலும்‌ அதனை ஊளக்குவிப்பதற்காக அல்லது நடத்துவதுடன்‌ சம்பந்தப்பட்ட அல்லது அவர்களுக்கு எதிராக ஒரு நியாயமான புகார்‌ செய்யப்பட்ட அல்லது நம்பகமான தகவல்‌ பெறப்பட்ட அல்லது நியாயமான சந்தேகம்‌ உள்ள அனைத்து நபர்களையும்‌ காவலில்‌ எடுத்து நீதித்துறை நடுவர்‌ முன்‌ ஆஜர்படுத்துதல்‌; மற்றும்‌ (0) அத்தகைய பரிசுத்‌ திட்டம்‌ தொடர்பாக பயன்படுத்தப்படும்‌ அல்லது நியாயமாக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்‌ அனைத்து பொருட்களையும்‌ பறிமுதல்‌ செய்தல்‌, ஆகியவை சட்டபூர்வமானதாக இருக்கும்‌. (2) இந்தப்‌ பிரிவின்கீழ்‌ உள்ள அனைத்து சோதனையிடுதலும்‌ 1973 ஆம்‌ ஆண்டு குற்றவியல்‌ நடைமுறை தொகுப்புச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 271974) வகைமுறைகளின்படி செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 9. பரிசுத்‌ திட்டங்கள்‌ அடங்கிய செய்தித்தாள்கள்‌ மற்றும்‌ வெளியீடுகளை பறிமுதல்‌ செய்தல்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு முரணாக, ஊக்குவிக்கப்பட்ட அல்லது நடத்தப்பட்ட பரிசுத்‌ திட்டம்‌ எதனையும்‌ அல்லது அது தொடர்பான விளம்பரம்‌ எதனையும்‌ செய்தித்தாள்‌ அல்லது பிற வெளியீடு எதுவும்‌ கொண்டிருந்தால்‌, அரசு, அறிவிக்கை வாயிலாக, செய்தித்தாளின்‌ நகலையும்‌, பரிசுத்‌ திட்ட விளம்பரம்‌ அடங்கிய வெளியீட்டின்‌ ஒவ்வொரு நகலையும்கூட அரசிடம்‌ பறிமுதல்‌ செய்யும்படி அறிவிக்கலாம்‌. 10. குற்றங்களை விசாரிக்கும்‌ அதிகாரம்‌.- பெருநகர குற்றவியல்‌ நடுவர்‌ அல்லது முதல்‌ வகுப்பு நீதித்துறை நடுவர்‌ ஆகியோருக்குக்‌ கீழமைந்த நீதிமன்றம்‌ எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தின்படி தண்டிக்கத்தக்க குற்றம்‌ எதனையும்‌ விசாரித்தல்‌ ஆகாது. 11. இச்சட்டத்தின்படியான குற்றங்கள்‌ பிடியாணை வேண்டாக்‌ குற்றங்களாக இருத்தல்‌.- இச்சட்டத்தின்கீழ்‌ தண்டிக்கத்தக்க குற்றங்கள்‌ எவையும்‌, 1973 ஆம்‌ ஆண்டு குற்றவியல்‌ நடைமுறை தொகுப்புச்சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 271974) பொருளுக்கு இணங்க பிடியாணை வேண்டாக்‌ குற்றங்களாகும்‌. 12. விலக்களிப்பதற்கான அதிகாரம்‌.- இந்தச்‌ சட்டத்தில்‌ அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்‌, அவ்வாறு செய்வது பொது நலனுக்கு அவசியமானது அல்லது உகந்தது என்று அரசு மனநிறைவடைந்தால்‌, அவர்கள்‌ அறிவிக்கை வாயிலாக, பரிசுத்‌ திட்டம்‌ அல்லது பரிசுத்‌ திட்டங்களின்‌ வகை எதனையும்‌ பொருத்தமெனக்‌ கருதும்‌ வரைக்கட்டுகளுக்கு உட்பட்டு, இச்சட்டத்தின்‌ வகைமுறைகளிலிருந்து விலக்களிக்கலாம்‌. 13. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.-- (1) அரசு, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்கள்‌ அனைத்தையும்‌ அல்லது அவற்றில்‌ எதையும்‌ நிறைவேற்றுவதற்கான விதிகளைச்‌ செய்யலாம்‌. (2) (ஐ) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌ அனைத்தும்‌ தமிர்ற்தாடு அரசிகழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவை குறிப்பிட்டதொரு நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டுமென வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (b) இந்தச்‌ சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள்‌ அனைத்தும்‌, அவை குறிப்பிட்டதொரு நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ என்று சொல்லப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (3) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும்‌ அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர்‌, கூடிய விரைவில்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர்‌ அல்லது அதனையடுத்த கூட்டத்தொடர்‌ முடிவடைவதற்கு முன்னர்‌ அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதிலும்‌ மாறுதல்‌ எதனையும்‌ சட்டமன்றப்‌ பேரவையானது செய்யுமாயின்‌ அல்லது அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதுவும்‌ செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப்பேரவை முடிவு செய்யுமாயின்‌, அந்த விதி அல்லது அறிவிக்கையானது அதன்பின்னர்‌ அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ அல்லது நேர்விற்கேற்ப, நடைமுறைக்கு வராது போதல்‌ வேண்டும்‌; எனினும்‌ அவ்வாறான மாறுதல்‌ அல்லது நீக்கம்‌ எதுவும்‌, அந்த விதி அல்லது அறிவிக்கையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல்‌ ஏதொன்றின்‌ செல்லுந்தன்மைக்கும்‌ குந்தகமின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 14. காப்புரை.- இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌, அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம்‌ ஏதொன்றுக்கும்‌ கூடுதலாக இருக்குமேயன்றி, அதனைக்‌ குன்றச்‌ செய்வனவாக இருத்தல்‌ ஆகாது, மேலும்‌, இதில்‌ அடங்கியுள்ள எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தை தவிர, புலனாய்வு மூலமாகவோ பிறவாறாகவோ எவருக்கும்‌ எதிராக தொடுக்கப்படக்கூடிய எந்த நடவடிக்கையிலிருந்தும்‌ விலக்களித்தல்‌ ஆகாது. 15. நீக்கறவு மற்றும்‌ காப்புரை-- (1) 1979 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பரிசுத்‌ திட்டங்கள்‌ (தடைசெய்தல்‌) அவசரச்‌ சட்டமானது (தமிழ்நாடு அவசரச்‌ சட்டம்‌ 184979) இதன்மூலம்‌ நீக்கறவு செய்யப்படுகிறது. (2 அத்தகைய நீக்கறவு எவ்வாறிருப்பினும்‌, கூறப்பட்ட அவசரச்சட்டத்தின்படி, பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை, செய்யப்பட்ட ஆணை எதுவும்‌ உள்ளடங்கலாக செய்யப்பட்ட எதுவும்‌ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும்‌, அவை இந்தச்‌ சட்டத்திற்கு முரணாக இல்லாத அளவிற்கு, இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்டதாக அல்லது எடுக்கப்பட்டதாக கருதப்படுதல்‌ வேண்டும்‌, மேலும்‌ இச்சட்டத்தின்கீழ்‌ செய்யப்பட்ட எதனாலும்‌ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனாலும்‌ மாற்றமைத்தாலன்றி மற்றும்‌ அதுவரையிலும்‌ அதன்படியே தொடர்ந்து நடைமுறையில்‌ இருந்துவருதலும்‌ வேண்டும்‌. 10

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts