Tamil Nadu · 2019 · Act 14

Tamil Nadu Private universities Act, 2019

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

2019 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தனியார்‌ பல்கலைக்கழகங்கள்‌ சட்டம்‌ சட்ட எண்‌. 17/2019 கல்வி மற்றும்‌ தொடர்புடையவற்றின்‌ வளர்ச்சித்‌ துறைகளுக்காக முனைப்பான தலைமை, ஆராய்ச்சி, அனுபவ அறிவு மற்றும்‌ கருத்துக்கள்‌ ஆகியவற்றின்‌ வளர்ச்சியின்‌ மூலமாக விதிமுறை மாற்றம்‌ ஒன்றை வளர்த்து, பொதுவியல்‌ கோட்பாட்டை உருவாக்கி நடைமுறைக்குக்‌ கொண்டுவரும்‌ பொருட்டு, தனியார்‌ துறையில்‌ பொறுப்புக்‌ கட்டளைகள்‌ அல்லது சங்கங்கள்‌ அல்லது லாப நோக்கில்லாத நிறுவனங்கள்‌ மூலமாக ஒருங்கிணைந்த புதிய பசுமை, பன்முக புலங்கள்‌ அடங்கிய, உலகத்‌ தரம்‌ வாய்ந்த பல்கலைக்கழகங்களை, தமிழ்நாடு மாநிலத்தில்‌ உருவாக்கி, நிறுவி அமைப்பதற்கு வகை செய்வதற்கானதொரு சட்டம்‌. இந்தியக்‌ குடியரசின்‌ எழுபதாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநில சட்டமன்றப்‌ பேரவையினால்‌ பின்வருமாறு சட்டம்‌ இயற்றப்படுவதாகுக:- 1. குறுந்தலைப்பு மற்றும்‌ தொடக்கம்‌.-- (1) இந்தச்‌ சட்டம்‌, 2019 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தனியார்‌ பல்கலைக்கழகங்கள்‌ சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. (2) இது, மாநில அரசால்‌ அறிவிக்கையின்‌ வாயிலாகக்‌ குறித்திடலாகும்‌, அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌.- இந்தச்சட்டத்தில்‌, தருவாய்‌ வேறு பொருள்‌ குறித்தாலன்றி.- (ஐ "கல்வி மன்றம்‌" என்பது, 27 ஆம்‌ பிரிவின்‌ படி அமைத்துருவாக்கப்பட்ட தனியார்‌ பல்கலைக்கழகமொன்றின்‌ கல்வி மன்றம்‌ என்று பொருள்படும்‌; (b) "AICTE" என்பது 1987 ஆம்‌ ஆண்டு அகில இந்திய தொழில்‌ நுட்பக்‌ கல்வி குழுமச்‌ சட்டம்‌ (மையச்‌ சட்டம்‌ 521987) 3 ஆம்‌ பிரிவின்படி ஏற்படுத்தப்பட்ட அகில இந்திய தொழில்‌ நுட்பக்‌ கல்வி குழுமம்‌ என்று பொருள்படும்‌; (c) "BCI" என்பது 1961 ஆம்‌ ஆண்டு வழக்கறிஞர்கள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 251961) 4ஆம்‌ பிரிவின்படி ஏற்படுத்தப்பட்ட இந்திய வழக்கறிஞர்‌ மன்றம்‌ என்று பொருள்படும்‌; (0) "வேந்தர்‌", "நுணை வேந்தர்‌" மற்றும்‌ "இணை- துணை வேந்தர்‌" என்பது, முறையே தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ வேந்தர்‌, துணை வேந்தர்‌ மற்றும்‌ இணை-துணை வேந்தர்‌ என்று பொருள்படும்‌; (6) "முதன்மையர்கள்‌ மற்றும்‌ இயக்குநர்கள்‌" என்பது, துறையின்‌ அல்லது ஒரு நிறுவனத்தின்‌, ஒரு மையத்தின்‌ அல்லது ஒரு பள்ளியின்‌ தலைமை அல்லது அவர்‌ வராமையால்‌ அத்தகைய செயலுக்கான நோக்கத்திற்காக அமர்த்தப்பட்ட அந்த நபர்‌ என்று பொருள்படும்‌; (f) "துறை என்பது, பயிற்சி மற்றும்‌ ஆராய்ச்சி மையம்‌ உள்ளடங்கலாக தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌, கல்வி பயிலும்‌ துறைகள்‌ என்று பொருள்படும்‌: (9) "பணியாளர்‌" என்பது, தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ ஆசிரியர்‌ அல்லது தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ பணியாளரின்‌ பிற உறுப்பினர்‌ எவரும்‌ உள்ளடங்கலாக தனியார்‌ பல்கலைக்கழகத்தினால்‌ அமர்த்தப்பட்ட நபர்‌ எவரும்‌ என்று பொருள்படும்‌; (h) "செயலாட்சி மன்றம்‌" என்பது. 26 ஆம்‌ பிரிவின்‌ படி அமைத்துருவாக்கப்பட்ட ஒரு தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ செயலாட்சி மன்றம்‌ என்று பொருள்படும்‌; (i) "நிபுணர்குழு என்பது 7ஆம்‌ பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட குழு என்று பொருள்படும்‌. (J) "புலம்‌" என்பது, தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ புலம்‌ என்று பொருள்படும்‌; (k) "நிர்வாக ஆட்சி மன்றம்‌" என்பது. 25 ஆம்‌ பிரிவின்‌ படி அமைத்துருவாக்கப்பட்ட நிர்வாக ஆட்சி மன்றம்‌ என்று பொருள்படும்‌; 0) "அரசு" என்பது, மாநில அரசு என்று பொருள்படும்‌; (M) "பசுமை பன்முக புலங்கள்‌ அடங்கிய பல்கலைக்கழகம்‌" என்பது தற்போதுள்ள கல்வி நிறுவனங்கள்‌ எதற்கும்‌ அல்லது அத்தகைய நிறுவனங்களுக்குத்‌ தொடர்பு இல்லாமல்‌ புதிய பல்கலைக்கழகமொன்றினை தொடங்குதல்‌ என்று பொருள்படும்‌; (n) "மாணவர்‌ விடுதி" என்பது, தனியார்‌ பல்கலைக்கழகத்தால்‌ பேணிவரப்பட்டு அல்லது ஏற்பிசைவு அளிக்கப்பட்டு தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ மாணவர்கள்‌. தங்கியிருப்பதற்கான ஓர்‌ இடம்‌ என்பது பொருள்படும்‌; (௦) "ICAR" என்பது 1860 ஆம்‌ ஆண்டு சங்கங்கள்‌ பதிவுச்‌ சட்டத்தின்படி (மையச்‌ சட்டம்‌ 211860) பதிவு செய்யப்பட்ட இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம்‌ என்று பொருள்படும்‌; (2) "கல்வி நிறுவனம்‌" என்பது, இந்தச்‌ சட்டத்திற்கிணங்க மற்றும்‌ நிலையமை விதிகள்‌ மூலம்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தால்‌ நிறுவப்பட்ட அல்லது பணிவரப்பட்ட அல்லது அதனுடன்‌ தொடர்புடைய அல்லது மூலப்‌ பகுதியாயுள்ள ஒரு கல்லூரி அல்லது ஒரு கல்வி நிறுவனம்‌ என்று பொருள்படும்‌; (1) "மேலாண்மைக்குழு" என்பது, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக முன்கொணர்பவர்‌ அமைப்பினால்‌ அமைத்துருவாக்கப்பட்ட குழு என்று பொருள்படும்‌; (r) "MCI" என்பது 1956 ஆம்‌ ஆண்டு மருத்துவ குழுமச்‌ சட்டத்தின்படி (மையச்‌ சட்டம்‌ 102/1956) அமைத்துருவாக்கப்பட்ட இந்திய மருத்துவ குழுமம்‌ என்று பொருள்படும்‌; (5) "பல பாடப்பிரிவு" என்பது மானுடவியல்‌ மற்றும்‌ சமூக அறிவியல்‌, அறிவியல்‌, பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பம்‌, கட்டிடக்‌ கலை, மருத்துவம்‌, பல்மருத்துவம்‌, செவிலியம்‌, மருந்தியல்‌, இயன்முறை சிகிச்சை, உடல்‌ சார்ந்த அறிவியல்‌, கல்வி, சட்டம்‌, வேளாண்மை, கால்நடை மருத்துவம்‌ மற்றும்‌ அறிவு சார்ந்த இதர கிளைகளின்‌ துறைகளிலுள்ள படிப்பு என்று பொருள்படும்‌; (t) "NCTE" என்பது 1993 ஆம்‌ ஆண்டு தேசிய ஆசிரியர்‌ கல்விக்‌ குழுமச்‌ சட்டத்தின்படி (மையச்‌ சட்டம்‌ 731993) ஏற்படுத்தப்பட்ட தேசிய ஆசிரியர்‌ கல்விக்‌ குழுமம்‌ என்று பொருள்படும்‌; (ம "PCI" என்பது 1948 ஆம்‌ ஆண்டு மருந்தகச்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 8/1948) 4 ஆம்‌ பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட இந்திய மருந்தக மன்றம்‌ என்று பொருள்படும்‌; (V) "வகுத்துரைக்கப்பட்ட" என்பது, நிலையமை விதிகளால்‌ மற்றும்‌ அவசர விதிகளால்‌ வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்‌; (w) தனியார்‌ பல்கலைக்கழகம்‌ என்பது 3 ஆம்‌ பிரிவின்படி ஏற்படுத்தப்பட்ட ஒரு பல்கலைக்கழகம்‌ என்று பொருள்படும்‌; (x) "பதிவாளர்‌, தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, நிதி அலுவலர்‌" என்பது, முறையே தனியார்‌ பல்கலைக்கழகத்தினுடைய பதிவாளர்‌, தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, நிதி அலுவலர்‌ என்று பொருள்படும்‌; (0) "ஒழுங்குமுறை அமைப்பு" என்பது உயர்கல்விக்கான தரங்களின்‌ 0௦௦, AICTE, NCTE, 100), PC, ICAR, 80 என்று பொருள்படும்‌ மற்றும்‌ உள்ளடங்கும்‌; (2) "விதிகள்‌" என்பது இந்தச்‌ சட்டத்தின்‌ 57 ஆம்‌ பிரிவின்படி வகுக்கப்பட்ட விதிகள்‌ என்று பொருள்படும்‌; (88) "இணைப்புப்‌ பட்டியல்‌" என்பது இந்தச்‌ சட்டத்திற்காக இணைக்கப்பட்ட இணைப்புப்‌ பட்டியல்‌ என்று பொருள்படும்‌; (ம்‌) "முன்கொணர்பவர்‌ அமைப்பு" என்பது:- 0)14882 ஆம்‌ ஆண்டு இந்திய பொறுப்புக்‌ கட்டளைச்‌ சட்டத்தின்படி (மையச்‌ சட்டம்‌ 271882) பதிவு செய்யப்பட்ட பொறுப்புக்‌ கட்டளை ஒன்று என்று பொருள்படும்‌; அல்லது 0 1975 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள்‌ பதிவுச்‌ சட்டத்தின்படி (மையச்‌ சட்டம்‌ 271975) பதிவு செய்யப்பட்ட சங்கம்‌ ஒன்று என்று பொருள்படும்‌; அல்லது 00 2013 ஆம்‌ ஆண்டு நிறுவனங்கள்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 13/2013) 8 ஆம்‌ பிரிவின்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனம்‌ ஒன்று என்று பொருள்படும்‌. (ac) நிலையமை விதிகள்‌ மற்றும்‌ அவசர விதிகள்‌" என்பது, முறையே தனியார்‌ பல்கலைக்கழகமொன்றின்‌ நிலையமை விதிகள்‌ மற்றும்‌ அவசர விதிகள்‌: என்று பொருள்படும்‌; (80) "மாணவர்‌" என்பது, தனியார்‌ பல்கலைக்கழகங்களின்‌ பதிவேட்டில்‌ பெயர்‌ பதிவு செய்யப்பட்ட ஒரு மாணவர்‌ என்று பொருள்படும்‌; (ae) "ஆசிரியர்கள்‌" என்பது. இதன்‌ பொருட்டு வழங்கப்பட்ட அறிவுரையின்‌ பேரில்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தால்‌ அமர்த்தப்பட்ட நபர்கள்‌ என்று பொருள்படும்‌; (வி) "பல்கலைக்கழக மானியக்‌ குழு" என்பது 1956 ஆம்‌ ஆண்டு பல்கலைக்கழக மானியக்‌ குழு சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 371956) நான்காம்‌ பிரிவின்‌ கீழ்‌ நிறுவப்பட்ட பல்கலைக்கழக மானியக்‌ குழு என்று பொருள்படும்‌. 3. பல்கலைக்கழகத்தை நிறுவுதல்‌.- (1) அரசு இணைப்புப்‌ பட்டியலில்‌ முன்கொணர்பவர்‌ அமைப்பின்மூலம்‌ நிறுவப்படவுள்ள தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ பெயர்‌, இடம்‌ மற்றும்‌ முன்கொணர்பவர்‌ அமைப்பின்‌ விபரங்கள்‌ சேர்ப்பதின்‌ மூலம்‌ தனியார்‌ பல்கலைக்கழகம்‌ ஒன்றை நிறுவுவதற்கு அனுமதிக்கலாம்‌; (2) தனியார்‌ பல்கலைக்கழகம்‌ என்பது ஒரு புதிய பசுமை, பன்முக புலங்கள்‌ அடங்கிய ஒருங்கிணைந்த பல்லைக்கழகம்‌ ஆகும்‌. இப்பல்கலைக்கழகம்‌ தமிழ்நாட்டிற்குள்‌ அமைந்திருக்க வேண்டும்‌; (3) தனியார்‌ பல்கலைக்கழகம்‌ ஒரு கூட்டமைப்பாக இருத்தல்‌ வேண்டும்‌, தொடர்ந்த நிலைப்பாடும்‌ ஓர்‌ பொது இலட்சினையும்‌ கொண்டு இருக்கும்‌ மற்றும்‌. மேற்சொன்ன பெயரில்‌ தான்‌ வழக்கிடுதலும்‌, வழக்கிடப்படுதலும்‌ வேண்டும்‌; (4) தனியார்‌ பல்கலைக்கழகம்‌ ஒருங்கிணைந்த மாதிரியாக இருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ கல்லூரி அல்லது கல்வி நிறுவனம்‌ எதற்கும்‌ ஏற்பளிப்பு வழங்குவதற்கு அதிகாரம்‌ கொண்டு இருக்காது; மற்றும்‌ (5) தனியார்‌ பல்கலைக்கழகம்‌, பல்கலைக்கழக மானிய குழுவின்‌ மற்றும்‌ பிற ஒழுங்குமுறை அமைப்புகளின்‌ கொள்கை நெறிகளுக்கு உட்பட்டு தான்‌ பொருத்தமெனக்‌ கருதலாகிறவாறு மாநிலத்தில்‌ அத்தகைய இடங்களில்‌ உறுப்பமை கல்லூரிகள்‌, மண்டல மையங்கள்‌, கூடுதல்‌ கல்வி வளாகப்‌ பணிகள்‌ மற்றும்‌ கல்வி மையங்கள்‌ ஆகியவற்றை நிறுவலாம்‌. 4. தனியார்‌ பல்கலைக்கழகத்தினை நிறுவுவதற்கான நிபந்தனைகள்‌.- இந்தச்‌ சட்டத்தின்படி, தனியார்‌ பல்கலைக்கழகம்‌ நிறுவப்படுவதன்‌ நோக்கமானது, பின்வரும்‌ நிபந்தனைகளை நிறைவேற்றுகின்ற முன்கொணர்பவர்‌ அமைப்பாக இருத்தல்‌ வேண்டும்‌ அவையாவன:- (ஐ) தனியார்‌ பல்கலைக்கழகத்திற்காக குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கிவைக்கப்பட்ட ஒரு நூறு ஏக்கருக்கு குறையாத நிலத்தை ஒட்டி உள்ளதை உரிமையைக்‌ கொள்ளுவது; (௦) கூற்று (-வில்‌ குறிப்பிட்ட நிலத்தின்‌ மீதான கட்டமைப்பு, கட்டடங்கள்‌: மற்றும்‌ உள்கட்டமைப்பை நிறுவுதல்‌ மற்றும்‌ அலுவலகங்களின்‌ மற்றும்‌ ஆய்வுக்கூடங்களின்‌. தேவையான சாதனங்கள்‌. நிறுவுவது ஆகியவை பல்கலைக்கழக மானிய குழு மற்றும்‌ பிற ஒழுங்குமுறை அமைப்புகளினால்‌ விதிக்கப்பட்டுள்ள தரங்களின்படி இருத்தல்‌; (6) பல்கலைக்கழக மானிய குழுவினால்‌ விதிக்கப்பட்ட தரங்களின்படி கற்பிக்கும்‌ நோக்கத்திற்காக ஆசிரியர்களை அமர்த்துவது; (0) தனியார்‌ பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு முன்னர்‌, அரசால்‌ வேண்டுறுத்தப்படலாகும்‌ அத்தகைய பிற நிபந்தனைகளை நிறைவேற்றபடுவது. 5. தனியார்‌ பல்கலைக்‌ கழகத்தை நிறுவுவதற்கான விண்ணப்பம்‌.- எந்த ஒரு முன்கொணர்பவர்‌ அமைப்பும்‌ சட்டமன்ற விதியின்படி ஒரு தனியார்‌ பல்கலைக்கழகம்‌ ஏற்படுத்த விருப்பப்படின்‌ ரூபாய்‌ இருபத்தைந்து இலட்சத்திற்கு மிகாத கட்டணத்துடன்‌ அத்தகைய விவரங்கள்‌ அடங்கியுள்ள அத்தகைய முறையில்‌ செய்முறை திட்ட அறிக்கையை தனியார்‌ பல்கலைக்கழகம்‌ கருதியுள்ள நோக்கத்தின்‌ மற்றும்‌ நோக்கத்தின்‌ கருத்தை உள்ளடக்கி அரசுக்கு விண்ணப்பம்‌ ஒன்றினைச்‌ செய்ய வேண்டும்‌. 6. செய்முறைதிட்ட அறிக்கை.- செய்முறைதிட்ட அறிக்கை 5 ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ எடுத்துரைக்கப்பட்டுள்ள விபரங்களுடன்‌ பின்‌ வருவனவற்றையும்‌ உள்ளடக்கியதாகி இருத்தல்‌ வேண்டும்‌ அதாவது:- (a) துவங்கப்பட எத்தனித்துள்ள தனியார்‌ பல்கலைக்கழகம்‌ உருவாக்கப்படுவதின்‌ தேவையை நியாயப்படுத்துதல்‌; (b) முன்கொணர்பவர்‌ அமைப்பின்‌ விபரங்கள்‌ மற்றும்‌ நேர்வுக்கேற்ப 1882 ஆம்‌ ஆண்டு இந்திய பொறுப்புக்‌ கட்டளைச்‌ சட்டம்‌ (மையச்‌ சட்டம்‌ 271882) அல்லது 1975 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள்‌ பதிவு சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌ 27/1975) அல்லது 2013 ஆம்‌ ஆண்டு நிறுவனங்கள்‌ சட்டத்தின்படி (மையச்‌ சட்டம்‌ 13,2013) பதிவு செய்யப்பட்ட சான்றிதழின்‌ நகல்கள்‌; (6) கருதப்பட்ட துறைகளில்‌ சாதனைகளின்‌ விபரங்கள்‌, அனுபவம்‌ மற்றும்‌ துறை வல்லமை; (0) துவங்கப்பட எத்தனித்துள்ள தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ பெயர்‌, இடம்‌ மற்றும்‌ தலைமையிடம்‌; (e) தனியர்‌ பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்கள்‌; (0). முன்கொணர்பவர்‌ அமைப்பின்‌ வசம்‌ உள்ள ஆசிரியர்‌ மற்றும்‌ ஆசிரியரல்லா பணியாளர்களின்‌ உள்ளடங்கிய கல்வி சார்ந்த வசதிகளின்‌ விபரங்கள்‌; (9) தனியார்‌ பல்கலைக்கழகம்‌ தொடங்குவதற்கு தேவையான கட்டடங்கள்‌, கட்டமைப்பு வசதிகள்‌, உள்‌ கட்டமைப்பு வசதிகள்‌ மற்றும்‌ கொள்முதல்‌ செய்யப்படவுள்ள உபகரணங்கள்‌ அடங்கிய வளாக மேம்பாட்டுத்‌ திட்டங்களின்‌ விபரங்கள்‌; (h) மூலதன செலவினங்கள்‌ மற்றும்‌ அதனுடைய நிதி ஆதாரங்கள்‌; () தனியார்‌ பல்கலைக்கழகத்தால்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌ என்று கருதப்படுகிற பாடத்‌ திட்டங்கள்‌, ஆராய்ச்சி மற்றும்‌ கண்டுபிடிப்பு அதன்‌ இயல்புளின்‌ மாதிரி மற்றும்‌ வகைப்பாடு ஆராய்ச்சி மற்றும்‌ புதுப்பிப்பு: (j) தொடங்குவதெனக்‌ கருதப்பட்ட வசதிகளின்‌ தன்மை; (k) ஆதாரங்களைப்‌ புரட்டுவதற்கான திட்டம்‌ மற்றும்‌ அதற்குரிய மூலதனச்‌ செலவு மற்றும்‌ திருப்பிச்‌ செலுத்தும்‌ முறை; () உள்ளிருந்து உருவாக்கப்படவுள்ள வருவாய்‌ மற்றும்‌ விரிவாக திட்டமிடப்பட்டுள்ள நிதி அறிக்கை, அதன்‌ முக்கிய விகிதங்களுடன்‌; (m) தனியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ பாடப்பிரிவுகளில்‌ மாணவர்‌ சேர்க்கைக்காக, தேர்வு செய்யப்படும்‌ பொருட்டு பின்பற்றப்படவுள்ள நடைமுறை; (1) தனியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பிற பணியாளர்கள்‌ பணி அமர்த்துவதற்காக பின்பற்றபடவுள்ள முறை; (0) தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ நோக்கத்தை நிறைவேற்றும்‌ வகையில்‌ தனியார்‌ பல்கலைக்கழகம்‌ சார்ந்த வட்டாரத்தின்‌ தேவைக்கேற்ப பின்பற்றபடவுள்ள சிறப்பு வாய்ந்த கற்பித்தல்‌ வழிமுறைகள்‌, ஆராய்ச்சிகள்‌ மற்றும்‌ பயிற்சி முறைகள்‌; (p) விளையாட்டு மைதானங்கள்‌ மற்றும்‌ இதர வசதிகளின்‌ விபரங்கள்‌: அல்லது விளையாட்டுகள்‌ மற்றும்‌ விளையாட்டுப்‌ போட்டிகள்‌, மேலும்‌ கூடுதல்‌ செயல்திறன்‌ நடவடிக்கைகளான தேசிய மாணவர்‌ படை மற்றும்‌ நாட்டு நலப்‌ பணித்‌ திட்டம்‌ இவைகளுக்காக உருவாக்கப்படவுள்ள வசதிகள்‌; (q) கல்வி மற்றும்‌ சிறப்பு ஆராய்ச்சிக்காக கருதப்பட்ட அணுகுமுறை மற்றும்‌ ஆரம்ப திட்டங்கள்‌, தேவைப்படுகிற அங்கீகாரம்‌ மற்றும்‌ கல்வி தணிக்கை; (N தாழ்த்தப்பட்ட வகுப்பினர்‌, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்‌, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளியாக இருக்கக்கூடிய மாணவர்கள்‌ உள்ளடங்கலாக, பொருளாதார அடிப்படையில்‌ அல்லது சமூகத்தில்‌ பிற்படுத்தப்பட்ட குடும்பங்களிலிருந்து வரும்‌ மாணவர்களுக்கு தனியார்‌ பல்கலைக்கழகத்தினால்‌ வழங்கப்படும்‌ கட்டணத்திலுள்ள சலுகைகள்‌ அல்லது தள்ளுபடிகள்‌ மற்றும்‌ கல்வி உதவித்‌ தொகைகள்‌ ஏதும்‌ வழங்க முன்வருதல்‌; மற்றும்‌ (5) ஒழுங்குமுறை அமைப்புகளின்‌ நெறிமுறைகளைப்‌ பின்பற்றவேண்டிய பொறுப்பு. 7. நிபுணர்‌ குழு- (1) அரசு, முன்கொணர்பவர்‌ அமைப்பிலிருந்து பெறப்படும்‌ நிபுணர்குழு விண்ணப்பத்தை ஆய்வு செய்வதற்கு நிபுணர்‌ குழு ஒன்றை அமைத்துருவாக்க வேண்டும்‌; (2) நிபுணர்‌ குழுவின்‌ அமைப்பு பின்வருமாறு இருத்தல்‌ வேண்டும்‌:- (i) அரசுச்‌ செயலாளர்‌ உயர்கல்வித்‌ துறை தலைவர்‌ (i) மாநிலப்‌ பல்கலைக்கழகத்தின்‌ முன்னாள்‌ உறுப்பினர்‌ அல்லது பணி செய்து கொண்டிருக்கும்‌ துணைவேந்தர்‌ (i) தொழில்‌ நுட்பக்‌ கல்வியின்‌ ஆணையர்‌ உறுப்பினர்‌ செயலர்‌ 0) கல்லூரிக்‌ கல்வி இயக்குநர்‌ உறுப்பினர்‌ 0). தனியார்‌ பல்கலைக்கழகம்‌ உறுப்பினர்‌ நிறுவப்படவுள்ள மாவட்டத்தின்‌ ஆட்சியர்‌ (3) தலைவர்‌ மற்றும்‌ உறுப்பினர்கள்‌ விதிகளில்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய அமர்வு கட்டணத்தை மற்றும்‌ படிகளைப்‌ பெறுவதற்குத்‌ தகுதியுடையவராக இருத்தல்‌ வேண்டும்‌; (4) நிபுணர்‌ குழு பின்வருவனவற்றிற்கான சுட்டுகையுடன்‌ கருத்துருவினை ஆய்வு செய்ய வேண்டும்‌:- (ஐ) முன்கொணர்பவர்‌ அமைப்பின்‌ நிதி ஆதாரம்‌ மற்றும்‌ சொத்து மற்றும்‌ கருதப்பட்ட தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ உள்‌ கட்டமைப்பை ஏற்படுத்தி அமைப்பதற்தானஅதனுடைய திறன்‌; (b) கல்வித்‌ துறையில்‌ அனுபவம்‌ முன்கொணர்பவர்‌ அமைப்பிற்கு பின்புலமாக அதனுடைய நம்பகத்தன்மை மற்றும்‌ பொதுவான நன்‌ மதிப்பு: (௦) அளிக்கப்படும்‌ படிப்புகளின்‌ தரம்‌ மரபுத்‌ தண்மையுடன்‌ மட்டும்‌ இல்லாமல்‌ புதிதாகத்‌ தோற்றுவிக்கப்படும்‌ பாடப்பிரிவுகள்‌ தற்காலத்‌ தேவைகளுக்கு ஏற்ப இருத்தல்‌ வேண்டும்‌; (0) மாநிலத்தின்‌ நோக்கங்கள்‌ மற்றும்‌ இலட்சியங்களுக்கு ஏற்ப கருதப்பட்ட தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ இலக்குகள்‌ இருத்தல்‌ வேண்டும்‌; (6) உரியவை என நிபுணர்குழுவிற்குத்‌ தோன்றலாகும்‌ பிற பொருண்மை எதுவும்‌; (5) நிபுணர்‌ குழு கருத்துருவினை மற்றும்‌ திட்ட அறிக்கையை பரிசீலிக்கும்‌ பொழுது முன்கொணர்பவர்‌ அமைப்பிடமிருந்து நோக்கத்திற்காக உரியது என தோன்றுகிறவாறான அத்தகைய பிற தகவலைக்‌ கேட்கலாம்‌; (6) நிபுணர்குழு, அரசிடம்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான பரிந்துரையை செய்ய வேண்டும்‌. 8. கருத்துரு கடிதம்‌.- (1) நிபுணர்‌ குழுவின்‌ பரிந்துரையினை கருத்தில்‌ கொள்வதன்‌ பேரில்‌ அரசு, கருத்துருவினை ஏற்பதன்‌ அல்லது மறுப்பதன்‌ பேரில்‌ அல்லது கருத்துருவில்‌ மாற்றமைவினை கோருதல்‌ அல்லது மேலுமான தகவலைப்‌ பெறுவதன்‌ பேரில்‌ முடிவு ஒன்றினை எடுத்தல்‌ வேண்டும்‌; (2) நிபுனர்‌ குழுவின்‌ மதிப்பிடு அறிக்கையினை ஏற்பது அல்லது ஏற்காமல்‌ இருப்பது குறித்த உரிமை அரசிடம்‌ மட்டுமே உள்ளது. இது குறித்த அரசின்‌ முடிவே இறுதியானது (3) அரசு நேர்வுக்கேற்ப முன்கொணர்பவர்‌ அமைப்பிற்கு கருத்துரு கடிதம்‌ வழியாக வருத்தத்தைத்‌ தெரிவிக்கும்‌ கடிதம்‌, மாற்றமைவு செய்யப்பட்ட கருத்துருவினை எதிர்பார்க்கும்‌ கடிதம்‌ அல்லது மேலுமான தகவல்‌ கோரும்‌ கடிதம்‌ ஒன்றின்‌ மூலம்‌ அதனுடைய முடிவினை தெரிவித்தல்‌. 9. விண்ணப்பப்‌ பட்டியலுக்கான திருத்தம்‌.- அரசு, கருத்துரு கடிதத்தின்‌ நிபந்தனைகளை முன்கொணர்பவர்‌ அமைப்பு முழுமையாக நிறைவேற்றிய இணைபப்புப்பட்டியலுக்குரிய திருத்தத்தின்‌ வாயிலாக கருதப்பட்ட தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ பெயர்‌ அமைவிடம்‌ குறித்த விபரங்களை இணைப்புப்‌ பட்டியலில்‌ சேர்த்தல்‌ வேண்டும்‌. 10. தனியார்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ தொடக்கம்‌.- (1) தனியார்‌ பல்கலைக்கழகம்‌ ஒவ்வொன்றும்‌ இது சம்பந்தமாக அரசு, அறிவிக்கையினால்‌ அத்தகைய தேதியன்று அதனுடைய செயற்பணிகளைச்‌ செயலுறுத்தத்‌ தொடங்க வேண்டும்‌; (2) அரசு, இந்தச்‌ சட்டத்தில்‌ கட்டப்பட்டுள்ள நிபந்தனைகள்‌ அனைத்தும்‌ நிறைவேற்றப்பட்டிருக்கின்றன மற்றும்‌ இது சம்பந்தமாக அரசு திருப்தியடைந்த பிறகு அச்செயல்‌ திறத்துடன்‌. முன்கொணர்பவர்‌ அமைப்பிடமிருந்து ஆவணங்களுடன்‌ சேர்ந்து ஆணை உறுதி ஆவணம்‌ ஒன்றினை பெற்ற பிறகு மட்டும்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்படி அறிவிக்கை ஒன்றினை வழங்க வேண்டும்‌. 11. மானியங்கள்‌ மற்றும்‌ நிதி உதவி.- ஒவ்வொரு தனியார்‌ பல்கலைக்கழகமும்‌ சுயநிதி பல்கலைக்கழகமாக இருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அரசிடமிருந்து, கோரிக்கை ஒன்று எதுவும்‌ செய்வதற்கோ பேணுதல்‌, பணித்துறை உதவித்தொகை அல்லது பிற நிதி உதவி எதற்குமோ உரிமை கொண்டது ஆகாது வரம்புரை: ஆனால்‌, தனியார்‌ பல்கலைக்கழகத்தை, ஆராய்ச்சிதிட்டங்களுக்காக அல்லது பிறவற்றின்‌ மூலம்‌ எதிலிருந்தும்‌ நிதிமானியங்கள்‌ அல்லது நிதி ஆதரவை சட்டப்படி வழங்கலாகும்‌ அல்லது, சட்டப்படி வழங்கலாகாத கல்விசார்‌ திட்டங்கள்‌. பிற எதற்காகவும்‌ விண்ணப்பிப்பதிலிருந்து தடைசெய்தல்‌ ஆகாது. 12. பல்கலைக்‌ கழகத்தின்‌ நோக்கங்கள்‌.- தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌. நோக்கங்கள்‌:- தனியார்‌ பல்கலைக்கழகம்‌ தான்‌ பொருத்தமெனக்‌ கருதலாகும்‌ அத்தகைய கற்பிக்கும்‌ பிரிவுகளில்‌ கற்பித்தல்‌, ஆராய்ச்சி மற்றும்‌ வசதிகளை நீட்டிப்பதற்கு வகை செய்வதற்கு முன்‌ அறிவு மற்றும்‌ திறமை ஆகியவற்றுடனும்‌ இருத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ வளர்ச்சிக்குத்‌ தேவையான சூழ்நிலை மற்றும்‌ வசதிகளை மாணவர்களுக்கும்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கும்‌ வழங்குவதற்கு பெருமுயற்சி எடுத்தல்‌ வேண்டும்‌:- (a) பாடத்திட்டத்தை மீண்டும்‌ அமைப்பதற்காக வழிகாட்டுகின்ற கல்வியில்‌ கல்வி கற்பிப்பதற்கான புதிய முறைகளில்‌ பயிற்சி மற்றும்‌ இணையவழியில்‌ கற்றுணர்தல்‌, கலந்து கற்றுணர்தல்‌ தொடர்கல்வி மற்றும்‌ அத்தகைய பிற முறைகள்‌ மற்றும்‌ ஒருங்கிணைந்த மற்றும்‌ ஆளுமை நலம்‌ தருகின்ற வளர்ச்சி உள்ளடங்கலான, கல்வியின்‌; (௦) பல்வகையான பாடப்பிரிவுகளில்‌ படிப்புகள்‌; (6) பல துறைகளில்‌ படிப்புகள்‌; (0) தேசிய ஒருமைப்பாடு, மதச்சார்பின்மை, சமூக நேர்மை நெறி மற்றும்‌ பொறியியலில்‌ பண்ணாட்டு உடன்பாடு மற்றும்‌ ஒழுக்கவியலின்‌; (6) கல்விச்‌ சார்ந்த பட்டயங்கள்‌, பட்டப்படிப்புகள்‌ மற்றும்‌ முதுநிலை பட்டப்‌ படிப்புகள்‌ முனைவர்‌ பட்டப்‌ படிப்புகள்‌ மற்றும்‌ முனைவர்‌ பட்ட மேற்படிப்புகள்‌ மற்றும்‌ கல்வியின்‌ உயர்‌ தரங்களை பேணுதல்‌; (7) தேசிய மற்றும்‌ உலக நிறுவனங்களுடன்‌ இணைந்து செயல்படுதல்‌ மற்றும்‌ பல்கலைக்கழக மானியக்‌ குழுவின்‌ மற்றும்‌ ஒழுங்குமுறை அமைப்புகளின்‌ வழிகாட்டி நெறிமுறைகளுக்குட்பட்டு உலகத்‌ தரங்களுக்கேற்ப திட்டங்களை மேம்படுத்துவதற்கான திறன்களை உருவாக்குதல்‌. 13. பல்கலைக்‌ கழகத்தின்‌ அதிகாரங்கள்‌.- தனியார்‌ பல்கலைக்கழகம்‌ ஒவ்வொன்றும்‌, பின்வரும்‌ அதிகாரங்களைக்‌ கொண்டிருக்கும்‌: அதாவது (ஐ தனியார்‌ பல்கலைக்கழகம்‌, அப்போதைக்கப்போது தீர்மானிக்கலாகும்‌. அத்தகைய கல்வி பிரிவுகளில்‌ பயிற்சியளிப்பதற்கான வகைசெய்வதற்கு மற்றும்‌ ஆராய்ச்சிக்காக மற்றும்‌ மேம்பாட்டிற்காக மற்றும்‌ எங்கும்‌ பரப்புவதற்கும்‌ வகைசெய்வதற்கு; மற்றும்‌ அறிவையும்‌ திறனையும்‌ பயன்படுத்தவும்‌ செய்வதற்கு; (௦) மானுடவியல்‌ மற்றும்‌ சமூக அறிவியல்‌, அறிவியல்‌, பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பம்‌, மேலாண்மை, சட்டம்‌, மருத்துவம்‌ மற்றும்‌ தொடர்பான அறிவியல்‌ மற்றும்‌ பிற தொழில்முறை படிப்புகள்‌ ஆகியவற்றை கல்விவளாகப்பணி, மறைவளாகப்‌ பணி அல்லது தொலைதூர கல்வி திட்டத்தின்‌ மூலமாக கற்பதற்கு, பங்களிப்பதற்கு மற்றும்‌ மேம்படுத்துவதற்கு; (6) _ கல்வி வல்லுனர்கள்‌ மற்றும்‌ பேராசிய மாண்பமைவை அணி செய்வதுடனான கல்விசார்‌ மேம்பாட்டிற்கான நபர்கள்‌ ஆகியோரின்‌ நன்மதிப்பிற்கு; (0) தனியார்‌ பல்கலைக்கழகம்‌ தீர்மானிக்கலாகும்‌ அத்தகைய வரைக்கட்டுகளுக்கு உட்பட்டு தேர்வுகளின்‌ அடிப்படையில்‌ பட்டயம்‌ அல்லது சான்றிதழ்களுக்கு மற்றும்‌ பட்டங்கள்‌ அளிப்பதற்கு அல்லது பொருத்தமான மற்றும்‌ போதிய காரணத்திற்காக இதர கல்வி சிறப்புப்பட்டங்கள்‌, சான்றிதழ்கள்‌, பட்டயங்கள்‌, வழங்குவதற்கு மற்றும்‌ அத்தகைய பட்டங்கள்‌, சான்றிதழ்கள்‌, பட்டயங்கள்‌ அல்லது பிறகல்விச்‌ சிறப்புகள்‌ ஆகியவற்றை திரும்ப பெறுவதற்கு: (6) வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ கெளரவ பட்டங்களையோ அல்லது பிற சிறப்புகளையோ வழங்குவதற்கு; (f) தான்‌, பொருத்தமென தீர்மானிக்கலாகும்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ உறுப்பினராகயில்லாத அத்தகைய நபர்களுக்கு கல்வி மற்றும்‌ அஞ்சல்‌ வழி உள்ளடங்கலான பயிற்சி வழங்குவதற்கு; (ஐ இயக்குநர்‌ பதவிகள்‌, பேராசிரியர்‌ பதவிகள்‌, இணைப்‌ பேராசிரியர்‌ பதவிகள்‌, சிறப்புப்‌ பேராசிரியர்‌ பதவிகள்‌, உதவிப்‌ பேராசிரியர்‌ பதவிகள்‌, விரிவுரையாளர்‌ பதவிகள்‌ மற்றும்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தால்‌ வேண்டுறுத்தப்பட்ட பிற ஆசிரியர்கள்‌ அல்லது கல்விசார்‌ பதவிகள்‌ மற்றும்‌ அது போன்ற அமர்த்தங்களைச்‌ செய்வதற்கு: (h) நிருவாகம்‌, அமைச்சகம்‌ மற்றும்‌ பிற பதவிகளை உருவாக்குவதற்கு மற்றும்‌ அதற்கான அமர்த்தங்களைச்‌ செய்வதற்கு: 0)... நிரந்தரமாகவோ அல்லது குறித்துரைக்கப்பட்ட ஒரு கால்‌ அளவிற்காகவோ பிற பல்கலைக்கழகம்‌ அல்லது நிறுவனம்‌ எதிலும்‌ சிறப்பாக பணிபுரிகின்ற நபர்களை அமர்த்துவதற்கு அல்லது ஈடுபடுத்துவதற்கு; 0 தனியார்‌ பல்கலைக்கழகம்‌ தீர்மானிக்கலாகும்‌ அத்தகைய முறையில்‌ மற்றும்‌ அத்தகைய நோக்கத்திற்காக இந்தியாவில்‌ மற்றும்‌ வெளிநாட்டில்‌ பல்கலைக்கழகம்‌ அல்லது அதிகார அமைப்பு அல்லது நிறுவனம்‌ எதனையும்‌ பிற எதனுடனும்‌ ஒத்துச்‌ செயலாற்ற, உடனுழைக்க அல்லது பங்குகொள்வதற்கு; k) அதன்‌ மேலுமான நோக்கத்திற்கு தேவையானதை தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ கருத்துரையில்‌ பள்ளிகள்‌, மையங்கள்‌, தணி சிறப்பு பெற்ற ஆய்வுக்‌ கூடங்கள்‌ அல்லது ஆராய்ச்சிக்கான பிற அலகுகள்‌ மற்றும்‌ கற்பித்தல்‌ ஆகியவற்றை நிறுவுவதற்கு மற்றும்‌ மேலாண்மை செய்வதற்கு; 0) பட்டதாரி உதவித்‌ தொகைகள்‌, படிப்புதவித்‌ தொகைகள்‌, மாணவர்‌ உதவித்தொகைகள்‌, பதக்கங்கள்‌ மற்றும்‌ பறிசுகள்‌ ஆகியவற்றை ஏற்படுத்தி வழங்குவதற்கு; (M) தனியார்‌ பல்கலைக்கழகத்திற்குள்‌ உள்ள குடியிருப்புகள்‌, மாணவர்‌ விடுதிகள்‌ ஆகியவற்றை நிறுவி மற்றும்‌ பேணி மற்றும்‌ மேற்பார்வையிடுவதற்கும்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ உடல்‌ நலன்‌ மற்றும்‌ பொது நலன்‌, நடவடிக்கை ஆகியவற்றை வளர்ப்பதற்கு: (ற ஆராய்ச்சி மற்றும்‌ கலந்தாய்வு செய்வதற்காக மற்றும்‌ அந்த நோக்கத்திற்காக தனியார்‌ பல்கலைக்கழகம்‌ தேவையெனக்‌ கருதலாகும்‌ பிற நிறுவனங்கள்‌ அல்லது குழுமங்களுடன்‌ அத்தகைய ஏற்பாடுகளைச்‌ செய்வதற்கான வகை முறைகளைச்‌ செய்வதற்கு: (௦) நிலை விதிகளுக்கு இணங்க, ஒரு மையம்‌, ஒரு நிறுவனம்‌, ஒரு துறை அல்லது, நேர்விற்கேற்ப, பள்ளி ஆகியவற்றை விளம்புகை செய்வதற்கு; (2) தேர்வு, மதிப்பாய்வு அல்லது சோதனை முறை பிற எதுவும்‌ உள்ளடங்கலான தனியார்‌ பல்கலைக்கழகத்திற்கு சேர்க்கைக்கான தரங்களைத்‌ தீர்மானிப்பதற்கு; (@ கட்டணங்கள்‌ மற்றும்‌ பிற செலவுகளின்‌ செலுத்தத்தை கோறிப்‌ பெறுதலை வகுத்துரைப்பதற்கு; () குடியிருப்பு, ஒழுங்குமுறை மற்றும்‌ பெண்களுக்கான கற்பித்தல்‌ மற்றும்‌ தனியார்‌ பல்கலைக்கழகம்‌ தான்‌ பொருத்தமெனக்‌ கருதலாகும்‌ பிற குறைபாடுடைய மாணவர்கள்‌ பொறுத்து, அத்தகைய ஏற்பாடுகளை செய்வதற்கு; (5) தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌. பணியாளர்கள்‌. மற்றும்‌ மாணவர்களுக்கிடையே ஒழுங்குமுறையை நெறிப்படுத்துவதற்கு மற்றும்‌ செயற்படுத்துவதற்கு மற்றும்‌ தணியார்‌ பல்கலைக்கழகத்தால்‌ இதன்‌ பொருட்டு தேவையெனக்‌ கருதலாகும்‌. அத்தகைய ஒழுங்கு நடவடிக்கைகள்‌ எடுப்பதற்கு: (1) தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ பணியாளர்களின்‌ உடல்‌ நலம்‌ மற்றும்‌ பொது நலத்தின்‌ வளர்ச்சிக்கான ஏற்பாடுகள்‌ செய்வதற்கு: (ம தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ நலத்திற்காக நன்கொடைகளைப்‌ பெறுவதற்கு மற்றும்‌ விற்பனை அல்லது குத்தகை அல்லது அசையும்‌ அல்லது அசையா சொத்து எதனின்‌ வாடகை ஆகியவற்றின்‌ மூலம்‌ பெறுவதற்கு, வைத்து வருவதற்கு, மேலாண்மை செய்வதற்கு மற்றும்‌ தீர்வு செய்வதற்கு; ) முன்கொணர்பவர்‌ அமைப்பின்‌ ஒப்புதலுடன்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ சொத்திற்கு எதிராக பிணையமில்லாமல்‌ அல்லது அடமானம்‌ ஆகியவற்றின்‌ மூலமாக கடன்‌ வாங்குவதற்கு; W) ஒப்பந்தத்தின்‌ பேரிலோ அல்லது பிறவாறான பார்வையிடும்‌ பேராசிரியர்கள்‌, தகைசால்‌ பேராசிரியர்கள்‌, கலந்துரையாளர்கள்‌, புத்தாய்வு மாணவர்கள்‌, வல்லுநர்கள்‌, ஒவியர்கள்‌, பாடத்திட்டத்தை எழுதுபவர்கள்‌ மற்றும்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்களை உயர்த்துவதற்கு பங்கு கொள்ளும்‌ அத்தகைய பிற நபர்களை அமர்த்துவற்கு; (x) மிகைப்படியான சுவரோவிய கல்விகள்‌ மற்றும்‌ களப்பணி ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கு மற்றும்‌ ஏற்றுக்கொள்வதற்கு; (y) தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ நோக்கங்கள்‌ அனைத்தையும்‌ அல்லது எதனையும்‌ அடைவதற்கு இடைவிளைவாக, எழுதுகின்ற அல்லது இணக்கமானதற்கு உகந்ததாய்‌ இருக்கலாகும்‌. அத்தகைய பிற செயல்கள்‌ மற்றும்‌ நடவடிக்கைகள்‌ அனைத்தையும்‌ செய்வதற்கு 14. மாணவர்‌ சேர்க்கை.- (1) தனியார்‌ பல்கலைக்கழகமானது. இந்தச்சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, பல்கலைக்கழக மானியக்குழு மற்றும்‌ பிற ஒழுங்குமுறை அமைப்புகளின்‌ தொடர்புடைய நிலையமை மற்றும்‌ ஒழுங்குமுறை விதிகள்‌ தேர்வுக்கேற்ப அனைத்து நபர்களுக்கும்‌ வெளிப்படையாக இருத்தல்‌ வேண்டும்‌; (2) உட்பிரிவு (1)-இல்‌ அடங்கியுள்ள எதுவும்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தைக்‌ கோருதல்‌ கூடாது.- (ஐ) வகுத்துரைக்கப்பட்ட கல்வித்‌ தகுதியை அல்லது தரத்தைப்‌ பெற்றிருக்காத நபர்‌ எவரையும்‌ படிப்பு பிரிவு எதிலும்‌ சேர்க்குமாறு; (௦) பட்டம்‌ அல்லது பிற கல்விசார்‌ சிறப்புகள்‌ வழங்குவதற்கு தேவையான குறைந்த அளவு தரத்திற்கும்‌ கீழே இருக்கின்ற கல்விசார்‌ பதிவேட்டில்‌ மாணவர்‌ எவரையும்‌ தனியார்‌ பல்கலைக்கழக பட்டியலில்‌ வைத்திருக்குமாறு: (6) தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ உரித்தத்திற்கு அல்லது பிற மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ ஆகியோரின்‌ உரிமைகள்‌ மற்றும்‌ சிறப்புநிமைகளுக்கு ஊறு விளைவிக்கும்‌ விதத்தில்‌ நடந்து கொள்ளும்‌ மாணவர்‌ எவரையும்‌ சேர்க்குமாறோ அல்லது வைத்திருக்குமாறு; (0) படிப்பிற்காக வகுத்துரைக்கப்பட்டவாறான தேவையான கட்டணங்களை செலுத்துவதற்கு தவறுகிற மாணவர்‌ எவரையும்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ பதிவேட்டின்‌ வரிசையில்‌ வைத்திருப்பதற்கு; (3) உட்பிரிவு (1) மற்றும்‌ (2) ஆம்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, வகுத்துரைக்கும்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ நிலையான சேர்க்கை முறைப்படி தனியார்‌ பல்கலைக்கழகம்‌, தமிழ்நாடு மாணவர்கள்‌ தங்குமிடத்திற்காக பாடத்திட்டக்‌ கல்வி ஒவ்வொன்றிலும்‌, முப்பத்தைந்து விழுக்காடு இடங்களை ஒதுக்கீடுச்‌ செய்தல்‌ வேண்டும்‌; (4) மாணவர்களின்‌ சேர்க்கைக்கு (3) ஆம்‌ உட்பிரிவின்படி தமிழ்நாட்டில்‌ தங்கியிருக்கும்‌ மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில்‌ முப்பத்தைந்து விழுக்காட்டை நடைமுறையில்‌ இருக்கும்‌ சட்டத்தின்‌ படி இடஒதுக்கீட்டினை செய்தல்‌ வேண்டும்‌. விளக்கம்‌:- இந்தப்‌ பிரிவின்‌ நோக்கத்திற்காக "தமிழ்நாடு மாணவர்‌ தங்குமிடம்‌" என்பது,- () முந்தைய தகுதிபெறு தேர்வில்‌ ஐந்தாண்டுகளுக்குக்‌ குறையாத ஒரு கால அளவிற்கு தமிழ்நாடு மாநிலத்தில்‌ தங்கியிருந்த மாணவர்‌ ஒருவரோ அல்லது அவருடைய பெற்றோர்களோ (i) தகுதி பொதுத்‌ தேர்வுக்கு முன்‌ செல்கிற ஐந்தாண்டுகளுக்குக்‌ குறையாத ஒரு கால அளவிற்கு தமிழ்நாடு மாநிலத்தில்‌ கல்வி நிறுவனங்கள்‌ ஏதொன்றிலும்‌ படித்த ஒரு மாணவர்‌ என்று பொருள்படும்‌. 15. தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்கள்‌.- இப்பல்கலைக்கழகம்‌ பின்வரும்‌. அலுவலர்களை கொண்டிருக்கும்‌, அதாவது:- (8) வேந்தர்‌; (b) துணை வேந்தர்‌; (c) இணை - துணை வேந்தர்‌; (0) பதிவாளர்‌; (8) முதண்மையர்கள்‌ மற்றும்‌ இயக்குநர்கள்‌; (0) நிதி அலுவலர்‌; (று தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌; மற்றும்‌ 0 தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்களுக்கென நிலையமை விதிகளால்‌ விளம்பப்படக்கூடிய பிற அலுவலர்‌. 16. வேந்தர்‌.- (1) வேந்தர்‌, வகுத்துரைக்கும்‌ மூன்றாண்டுகால அளவு ஒன்றிற்கு பொறுப்புக்‌ கட்டளையின்‌ மேலாண்மைக்‌ குழுவால்‌ அமர்த்தப்படுதல்‌ வேண்டும்‌; (2) வேந்தர்‌, அவர்‌ தமது பதவியின்‌ காரணத்தால்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ தலைவராக இருப்பார்‌ மற்றும்‌ ஒரு இடைக்கால செயலாட்சி மன்றம்‌ஒன்றை அமைத்துருவாக்குதல்வேண்டும்‌. அவ்வாறுஅமைத்துருவாக்கப்பட்ட இடைக்கால செயலாட்சி மன்றம்‌, 21 ஆம்‌ பிரிவின்படியான செயலாட்சி மன்றத்தின்‌ அமைப்பானது நிலைத்து இல்லாது போகும்‌; (3) வேந்தர்‌, தம்‌ பதவி விலகலை முகவரியிட்டு தாம்‌ கையொப்பமிட்டு எழுத்துவாயிலாக பொறுப்புக்‌ கட்டளை அல்லது மேலாண்மைக்‌ குழுவிற்கு அனுப்பலாம்‌. 17. துணை வேந்தர்‌.- (1) துணை வேந்தர்‌, மூன்றாண்டுகால அளவு ஒன்றிற்காக வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ வேந்தரால்‌ அமர்த்தப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ பதவி வகிக்க வேண்டும்‌; (2) துணை வேந்தர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய அதிகாரங்களைச்‌ செலுத்துதலும்‌ மற்றும்‌ அத்தகைய பிற செயற்பணிகளை ஆற்றுதலும்‌ வேண்டும்‌. 18. இணை- துணை வேந்தர்‌- (1) இணை - துணை வேந்தர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ செயலாட்சி மன்றத்தால்‌ அமர்த்தப்படுதல்‌ வேண்டும்‌; (2) இணை - துணை வேந்தர்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய அதிகாரங்களைச்‌ செலுத்துதலும்‌ மற்றும்‌ அத்தகைய பிற செயற்பணிகளை ஆற்றுதலும்‌ வேண்டும்‌. 19. பதிவாளர்‌.- (1) பதிவாளர்‌, தணியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ சம்பளம்‌ பெறும்‌ முழு நேர அலுவலராக இருத்தல்‌ வேண்டும்‌. பணிவரையறைகள்‌ மற்றும்‌ பணிவரைக்கட்டுகள்‌ வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌; (2) பதிவாளராக பதவி வகிப்பவர்‌ பல்கலைக்கழக மானியக்குழுவினால்‌ வகுத்துரைக்கப்பட்ட கல்வித்‌ தகுதிகளைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌; (3) பதிவாளர்‌, தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ சார்பாக உடன்படிக்கைகளும்‌ கையெழுத்திட்ட ஆவணங்கள்‌, உறுதியொப்பம்‌ இடப்பட்ட பதிவுருக்கள்‌ ஆகியவற்றைப்‌ பதிவு செய்வதற்கு அதிகாரம்‌ கொண்டிருப்பார்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய அதிகாரங்களைச்‌ செலுத்துதலும்‌ அத்தகைய பிற செயற்பணிகளை நிறைவேற்றுதலும்‌ வேண்டும்‌; (4) பதிவாளர்‌, செயலாட்சி மன்றம்‌ மற்றும்‌ கல்வி அலுவல்‌ குழு ஆகியவற்றின்‌ பதவி வழிச்‌ செயலாளராக இருந்து வருவார்‌. 20. முதன்மையர்கள்‌ மற்றும்‌ இயக்குநர்கள்‌.- முதண்மையர்‌ மற்றும்‌ இயக்குநர்‌ ஒவ்வொருவரும்‌, அத்தகைய முறையில்‌ அமர்த்தப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய அதிகாரங்களைச்‌ செலுத்துதலும்‌ அத்தகைய கடமைகளை ஆற்றுதலும்‌ வேண்டும்‌. 21. நிதி அலுவலர்‌.- (1) நிதி அலுவலர்‌, அத்தகைய முறையில்‌ அமர்த்தப்படுதல்‌ வேண்டும்‌ நிதி அலுவலர்‌. மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய அதிகாரங்களைச்‌ செலுத்துதலும்‌ அத்தகைய செயற்பணிகளை ஆற்றுதலும்‌ வேண்டும்‌; (2) நிதி அலுவலர்‌, நிதிக்குழுவின்‌ பதவி வழிச்‌ செயலராக இருத்தல்‌ வேண்டும்‌. 22. தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌.- (1) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ தேர்வுக்‌ அத்தகைய கால அளவுக்கும்‌ அத்தகைய வரையறைகள்‌ மற்றும்‌ வரைக்கட்டுகளின்‌ பேரிலும்‌, அமர்த்தப்படும்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ ஒரு முழு நேர அலுவலராக அலுவலர்‌. இருப்பார்‌; (2) தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய அதிகாரங்களைச்‌ செலுத்துதலும்‌ அத்தகைய கடமைகளைப்‌ புரிதலும்‌ வேண்டும்‌. 23. பிற அலுவலர்கள்‌.- தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ பிற அலுவலர்களைப்‌ பணியமர்த்தும்‌ முறையும்‌ அவர்களுக்குள்ள அதிகாரங்களும்‌ கடமைகளும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகையவாறு இருத்தல்‌ வேண்டும்‌. 24, தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌.- தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌ பின்வருவனவாகும்‌- (8) நிர்வாக ஆட்சி மன்றம்‌; (௦) செயலாட்சி மன்றம்‌; (6) கல்வி மன்றம்‌; (0) நிதிக்குழு: (6) திட்டவாரியம்‌; மற்றும்‌ () தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளென நிலையமை விதிகளினால்‌ விளம்புகை செய்யப்பட்டலாகும்‌ அத்தகையபிற அதிகார அமைப்புகள்‌. 25. நிர்வாக ஆட்சி மன்றம்‌.- (1) நிர்வாக ஆட்சி மன்றத்தின்‌ அமைப்பும்‌ அதன்‌ உறுப்பினர்களின்‌ பதவிக்காலமும்‌ வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌; (2) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, நிர்வாக ஆட்சி மன்றம்‌, பின்வரும்‌ அதிகாரங்களையும்‌ செயற்பணிகளையும்‌ உடையது ஆகும்‌. அவையாவன:- (a) அவ்வப்போது, தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌. விரிவான கொள்கைகளையும்‌ செயல்முறை திட்டங்களையும்‌ ஆய்வு செய்து தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ செயற்பணி, மேம்பாடு மற்றும்‌ வளர்ச்சி ஆகியவற்றிற்கான நடவடிக்கைகளை அறிவுறுத்துதல்‌; (b) தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ ஆண்டறிக்கை மற்றும்‌ ஆண்டுக்‌ கணக்குகள்‌ மற்றும்‌ அத்தகைய கணக்குகள்‌ பற்றிய ஆண்டறிக்கை ஆகியவற்றைக்‌ கருத்தில்‌ கொண்டு அவற்றின்‌ மீது தீர்மானங்கள்‌ நிறைவேற்றுதல்‌; (29) ஆலோசனைக்காக அதற்கு குறித்தனுப்பப்படும்‌ பொருட்பாடு எதனையும்‌ பொறுத்து வேந்தருக்கு ஆலோசனை வழங்குதல்‌; (0) வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற செயற்பணிகளைப்‌-புரிதல்‌. 26. செயலாட்சி மன்றம்‌- (1) செயலாட்சி மன்றமானது, தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ முதன்மை செயலாட்சி அமைப்பாகும்‌; (2) செயலாட்சி மன்றம்‌, பத்துக்கு மேற்படாத உறுப்பினர்களை கொண்டிருத்தல்‌ வேண்டும்‌, அவர்களில்‌ இரண்டு உறுப்பினர்கள்‌, -- (a) உயர்கல்வித்துறையை பொறுப்பில்‌ கொண்டுள்ள அரகச்‌ செயலாளர்‌- பதவி வழி உறுப்பினர்‌; (௦) கல்லூரிக்கல்வி இயக்குநர்‌- பதவி வழி உறுப்பினர்‌ ஆவார்‌. (3) செயலாட்சிமன்றத்தின்‌ மீதமுள்ள எட்டு உறுப்பினர்கள்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தால்‌ வகை செய்யப்பட்ட பாடப்‌ பிரிவுகளில்‌ திறமை வாய்ந்தவர்களிலிருந்து முன்கொண்பவர்‌ அமைப்பினால்‌ நியமனம்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌; (4) செயலாட்சி மன்றத்தின்‌ அதிகாரங்கள்‌ மற்றும்‌ செயற்பணிகள்‌ வகுத்துரைக்கப்படலாகதவாறு இருத்தல்‌ வேண்டும்‌. 27. கல்வி மன்றம்‌.- (1) கல்விமன்றமானது. தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ முதன்மைக்‌ கல்வி அமைப்பாகும்‌ மற்றும்‌ நிலையமை விதிகளின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, அவசர விதிகளும்‌ பொருந்தத்தக்க ஒழுங்குமுறை விதிகளும்‌, தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ கல்விக்‌ கொள்கைகள்‌ மீது பொதுவான கண்காணிப்பைச்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌; (2) கல்வி மன்றத்தின்‌ அமைப்பும்‌ அதன்‌ உறுப்பினர்களின்‌ பதவிக்‌ காலமும்‌ அதன்‌ அதிகாரங்களும்‌ செயற்பணிகளும்‌ வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌. 28. நிதிக்குழு (1) நிதிக்குழுவானது. தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ நிதியியல்‌ பொருட்பாடுகளைக்‌ கவனித்துக்‌ கொள்வதற்கான அதன்‌ முதன்மை நிதியியல்‌ அமைப்பாகும்‌; (2) நிதிக்குழுவின்‌ அமைப்பு அதன்‌ உறுப்பினர்களின்‌ பதவிக்காலம்‌ மற்றும்‌ அதன்‌ அதிகாரங்களும்‌ செயற்பணிகளும்‌, வகுத்துரைப்படலாகிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌. 29. திட்ட வாரியம்‌.- (1) திட்ட வாரியமானது, தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ முதன்மை திட்ட அமைப்பாகும்‌. திட்ட வாரியம்‌, உள்கட்டமைப்பும்‌ கல்வி ஆதார செயல்திட்டமும்‌ பொருந்தத்தக்க ஒழுங்குமுறை அதிகார அமைப்புகளின்‌ நியதிகளை நிறைவு செய்கிறது என்பதை உறுதி செய்தல்‌ வேண்டும்‌; (2) திட்டவாரியத்தின்‌ அமைப்பும்‌, அதன்‌ உறுப்பினர்களின்‌ பதவிக்காலமும்‌ அதன்‌ அதிகாரங்களும்‌ செயற்பணிகளும்‌ வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌. 30. தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ புலங்கள்‌, மாணவர்‌ சேர்ப்புக்குழு, தேர்வுக்‌ குழு மற்றும்‌ பிற அதிகார அமைப்புகள்‌.- தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகளென நிலையமை விதிகளினால்‌ விளம்புகை செய்யப்படலாகும்‌. தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ புலங்கள்‌, மாணவர்‌ சேர்ப்புக்குழு, தேர்வுக்‌ குழு மற்றும்‌ அத்தகைய பிற அதிகாரஅமைப்புகளின்‌ அமைப்பும்‌ அவற்றின்‌ அதிகாரங்களை செயற்பணிகளும்‌, வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல்‌ வேண்டும்‌. மற்றும்‌ 3. நிலையமை விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- (1) மேலாண்மைக்குழுவின்‌ ஒப்பேற்பளிப்புக்கு உட்பட்டு, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நிருவாகக்குழு நிலையமை விதிகளை வகுத்தல்‌ வேண்டும்‌; (2) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு உட்பட்டு, நிலையமை விதிகள்‌, பின்வரும்‌ பொருட்பாடுகள்‌ அனைத்திற்கும்‌ அல்லது அவற்றில்‌ எதற்கும்‌ வகை செய்யலாம்‌, அவையாவன:- (a) அவ்வப்போது அமைக்கப்படும்‌. தனியார்‌ பல்கலைக்கழக அதிகாரஅமைப்புகளின்‌ அமைப்பு, அதிகாரங்கள்‌ மற்றும்‌ செயற்பணிகள்‌; (b) மேற்சொன்ன அதிகாரஅமைப்புகளின்‌ உறுப்பினர்களின்‌ நியமனம்‌ மற்றும்‌ பதவியில்‌ தொடர்ந்து இருந்துவருதல்‌, காலியிடங்களை நிரப்புதல்‌ மற்றும்‌ வகை செய்வதற்குத்‌ தேவைப்படலாகும்‌ அந்த அதிகாரஅமைப்புகள்‌ தொடர்பான பிற பொருட்பாடுகள்‌ அனைத்தும்‌; (c) தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்களின்‌ பணியரமர்த்தம்‌, அதிகாரங்கள்‌ மற்றும்‌ கடமைகள்‌ மற்றும்‌ அவர்களுக்குள்ள பணியூதியங்கள்‌: (d) தனியார்‌ பல்கலைக்கழக ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பிற கல்விசார்‌ மற்றும்‌ நிருவாகப்‌ பணியாளர்‌ தொகுதியினர்‌ ஆகியோரைப்‌ பணியமர்த்துதல்‌ மற்றும்‌ அவர்களுக்குள்ள பணியூதியங்கள்‌; (6) கூட்டுசெயல்திட்டம்‌ ஒன்றை மேற்கொள்வதற்காக குறிப்பிட்டக்‌ கால அளவுக்கு, தனியார்‌ பல்கலைக்கழகத்திலோ அல்லது நிறுவனத்திலோ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பிற கல்வி மற்றும்‌ நிருவாகப்‌ பணியாளர்‌ தொகுதியினரைப்‌ பணியமர்த்துதல்‌; (7) ஓய்வு கால நலப்பயன்கள்‌ காப்பீடு மற்றும்‌ வருங்கால வைப்பு நிதியம்‌, பணி நீக்கம்‌ செய்யும்‌ மற்றும்‌ ஒழுங்கு நடவடிக்கைகள்‌ பற்றிய முறை உள்ளடங்கலான, பணியாளர்களின்‌ பணி நிபந்தனைகள்‌; (9) பணியாளர்களின்‌ பணி மூப்பினை நெறிப்படுத்தும்‌ நெறிகள்‌: (h) பணியாளர்களுக்கும்‌ அல்லது மாணவர்களுக்கும்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்திற்கும்‌ இடையேயான பூசல்களைத்‌ தீர்த்து வைப்பதற்கான நடைமுறை: (i) தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அலுவலர்‌ எவரின்‌ அல்லது பிற அதிகார அமைப்பின்‌ நடவடிக்கைக்கு எதிராக பணியாளர்‌ எவராலும்‌ அல்லது மாணவர்களால்‌ செயலாட்சி மன்றத்திற்கு மேல்முறையீடு செய்வதற்கான நடைமுறை: () மதிப்புறு பட்டங்கள்‌ அளித்தல்‌; (k) பட்டம்‌, பட்டயம்‌, உறுதிச்‌ சான்று மற்றும்‌ பிற கல்வி சிறப்புப்‌ பட்டங்கள்‌: ஆகியவற்றை திரும்பப்‌ பெறுதல்‌; 0) பட்டதாரி உதவித்‌ தொகைகள்‌, படிப்புதவித்தொகைகள்‌, மாணவர்‌ உதவித்தொகைகள்‌ பதக்கங்கள்‌ மற்றும்‌ பரிசுகள்‌ ஆகியவற்றை நிறுவுதல்‌; (m) மாணவர்களிடையே ஒழுங்குக்‌ கட்டுப்பாட்டைப்‌ பேணுதல்‌; (n) துறை, மையங்கள்‌ மற்றும்‌ பிற நிறுவனங்களை நிறுவுதல்‌ மற்றும்‌ நீக்குதல்‌; (௦9) தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌ அல்லது அலுவலர்கள்‌ ஆகியோரிடம்‌ உற்றமைந்திருக்கும்‌ அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்‌; மற்றும்‌ (ற இந்தச்‌ சட்டத்தால்‌ வகுத்துரைக்கப்பட வேண்டிய அல்லது வகுத்துரைக்கப்படலாகும்‌, பிறபொருட்பாடுகள்‌ அனைத்தும்‌. (3) தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌. அதிகாரஅமைப்பு எதனின்‌ அதிகாரங்களை அல்லது அமைப்பைப்‌ பாதிக்கும்‌ வகையில்‌ நிலையமை விதி எதனையும்‌ திருத்தமோ நீக்கறவோ செய்வதற்கு, உத்தேசிக்கப்பட்ட மாற்றங்கள்‌. மீது எழுத்து வடிவில்‌ கருத்து ஒன்றைத்‌ தெரிவிக்கும்‌ வாய்ப்பு ஒன்று அத்தகைய அதிகார அமைப்பிற்குக்‌ கொடுக்கப்பட்டிருக்கும்‌ வரையில்‌, செயலாட்சி மன்றம்‌ அத்திருத்தமோ ந்க்கறவோ செய்தல்‌ ஆகாது. மற்றும்‌ அவ்வாறு தெரிவிக்கப்படும்‌. கருத்து எதுவும்‌ செயலாட்சி மன்றத்தினால்‌ பரிசீலனை செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 32. நிலையமை விதிகள்‌, எவ்வாறு செய்யப்படுகிறது.- (1) செயலாட்சி மன்றம்‌, அவ்வப்போது, இந்தப்‌ பிரிவில்‌ இதன்‌ பின்பு வகை செய்யப்பட்டுள்ள முறையில்‌, நிலையமை விதிகளைச்‌ செய்யலாம்‌ அல்லது நிலையமை விதிகளைத்‌ திருத்தம்‌ செய்யலாம்‌ அல்லது நீக்கறவு செய்யலாம்‌; (2) செயலாட்சி மன்றத்தினால்‌ பிறப்பிக்கப்படும்‌ ஒரு நிலையமை விதியோ அல்லது ஒரு நிலையமை விதிக்கான ஒரு திருத்தமோ, அல்லது நீக்கறவோ மேலாண்மைக்குழு முன்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. அவர்‌ அதற்கு ஏற்பிசைவளிக்கலாம்‌ அல்லது அதனை ஏற்பிசைவளிக்க மறுக்கலாம்‌. செயலாட்சிமன்றத்தினால்‌ பிறப்பிக்கப்படும்‌ நிலையமை விதி ஒன்று அல்லது ஒரு நிலையமை விதிக்கான திருத்தம்‌ ஒன்று. அல்லது அதன்‌ நீக்கறவு ஒன்று, அது மேலாண்மைக்குழுவினால்‌ ஏற்பிசைவளிக்கப்படும்‌ வரையில்‌ செல்லுந்தன்‌மையுடையதாகாது. நிலையமை விதிகளின்‌ நகலொன்று தகவலுக்காக அரசுக்கு அனுப்பி வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. 33. அவசர விதிகள்‌ செய்வதற்கான அதிகாரம்‌.-- இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கும்‌ நிலையமை விதிகளுக்கும்‌ உட்பட்டு, அவசரச்‌ சட்டங்கள்‌ மேலாண்மைக்குழுவின்‌ ஒப்பேற்பளிப்பிற்கு உட்பட்டு, செயலாட்சிமன்றத்தினால்‌ செய்யப்படுதல்‌ வேண்டும்‌, அது, பின்வரும்‌ பொருட்பாடுகள்‌ அனைத்திற்கும்‌ அல்லது அவற்றில்‌ எதற்கும்‌ வகை செய்யலாம்‌, அவையாவன:- (ஐ தனியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ மாணவர்களைச்‌ சேர்த்தல்‌ மற்றும்‌ அவர்களை அவ்வாறாகப்‌ பதிவு செய்தல்‌; (b) தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அனைத்து பட்டங்கள்‌, பட்டயங்கள்‌ மற்றும்‌ உறுதிச்சான்றுகள்‌ ஆகியவற்றிற்காக விதிக்கப்பட வேண்டிய கல்விப்பாடத்திட்டங்கள்‌; (6) பயிற்றுவிக்கும்‌ மற்றும்‌ தேர்வுக்கான மொழி (0) பட்டம்‌, பட்டயம்‌, உறுதிச்‌ சான்று மற்றும்‌ பிற கல்வி சிறப்புப்பட்டங்கள்‌: வழங்குதல்‌, அதற்கான தகுதிப்பாடு மற்றும்‌ அதனை வழங்குதல்‌ மற்றும்‌ பெறுதல்‌ பொறுத்து எடுத்துக்‌ கொள்ளப்படும்‌ பொருட்பாடுகள்‌; (6) தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ கல்வி பாடத்திட்டங்களுக்காகவும்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்‌ தேர்வுகள்‌, பட்டங்கள்‌, பட்டயங்கள்‌ மற்றும்‌ உறுதிச்‌ சான்றுகள்‌ ஆகியவற்றிற்கு அனுமதித்தலுக்காகவும்‌ விதிக்கப்பட வேண்டிய கட்டணங்கள்‌; ) பட்டதாரி உதவித்தொகைகள்‌, படிப்பு உதவித்தொகைகள்‌, மாணவர்‌ உதவித்தொகைகள்‌, பதக்கங்கள்‌ மற்றும்‌ பரிசுகள்‌ வழங்குவதற்கான நிபந்தனைகள்‌; (று தேர்வு செய்யும்‌ அமைப்புகள்‌, தேர்வாளர்கள்‌ மற்றும்‌ மதிப்பீட்டாளர்கள்‌ ஆகியோரின்‌ பதவிக்காலம்‌ மற்றும்‌ பதவியமர்த்தும்‌ முறை மற்றும்‌ அவர்களின்‌. கடமைகள்‌ உள்ளடங்கலாக, தேர்வுகள்‌ நடத்துதல்‌; (h) தனியார்‌ பல்கலைக்கழக மாணவர்களின்‌ உறைவிடத்தின்‌ நிபந்தனைகள்‌; (i) மாணவிகளுக்கான உறைவிடம்‌, ஒழுங்குக்கட்டுபாடு மற்றும்‌ போதனைக்காக செய்யப்படும்‌ சிறப்பு ஏற்பாடுகள்‌, எவையேனுமிருப்பின்‌ அவை மற்றும்‌ அவர்களுக்காக தனியார்‌ பல்கலைக்கழகத்திற்குள்‌ சிறப்பு பாடப்பிரிவுகளுக்கான படிப்புகளை வகுத்துரைத்தல்‌; (j) நிலையமை விதிகளில்‌ வகைமுறை செய்யப்பட்டிராதவர்கள்‌ அல்லாத பிற பணியாளர்களைப்‌ பணியமர்த்தம்‌ செய்தல்‌ மற்றும்‌ அவர்களுக்குள்ள பணியூதியங்கள்‌; (k) கல்வி மையங்கள்‌, கல்வி வாரியங்கள்‌ பல்வகைப்‌ பயிற்சிக்‌ கல்விகள்‌, சிறப்பு மையங்கள்‌, தனித்துறை ஆய்வுக்கூடங்கள்‌ மற்றும்‌ பிற குழு ஆகியவற்றை நிறுவுதல்‌: () கற்றறிந்த அமைப்புகள்‌ அல்லது சங்கம்‌ உள்ளடங்கலான பிற பல்கலைக்கழகங்களுடனும்‌ அதிகார அமைப்புகளுடனும்‌ ஒத்துழைப்பின்‌ மற்றும்‌ சேர்ந்து செயலாற்றும்‌ முறை; (m) தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌. கல்வி பயணத்தூரத்தை மேம்படுத்துவதற்காகத்‌ தேவையெனக்‌ கருதப்படும்‌ பிற அமைப்பு எதனையும்‌ உருவாக்குதல்‌, இணைப்பாக்கம்‌ மற்றும்‌ செயல்பாடுகள்‌; (n) தேர்வாளர்கள்‌, மதிப்பீட்டாளர்கள்‌, மேற்பார்வையாளர்கள்‌ மற்றும்‌ பட்டியல்படுத்துபவர்கள்‌ ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய பணியூதியம்‌; (௦9) நிலையமை விதிகளினால்‌ வகுத்துரைக்கப்படாமல்‌ இருக்கின்ற ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பிற கல்வி பணியாளர்‌ தொகுதியினருக்கான அத்தகைய பிற பணி நிபந்தனைகள்‌. 34. அவசர விதிகள்‌ எவ்வாறு செய்யப்படுகின்றன.- (1) அவசர விதிகளைச்‌ செய்கையில்‌ செயலாட்சி மன்றம்‌, மேலாண்மைக்குழுவை கலந்தாய்வு செய்தல்‌ வேண்டும்‌. (2) செயலாட்சிமன்றத்தினால்‌ செய்யப்படும்‌ அவசரவிதிகள்‌ அனைத்தும்‌ அது பணிக்கிறவாறு அத்தகைய தேதியிலிருந்து நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 385. ஆண்டறிக்கை.- (1) தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ ஆண்டறிக்கையானது செயலாட்சி மன்றத்தின்‌ பணிப்புரையின்படி தயாரிக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌. அத்தகைய தேதி அன்றோ அதற்குப்‌ பின்போ நிர்வாக ஆட்சி மன்றம்‌ முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ நிர்வாக ஆட்சி மன்றம்‌, அந்த அறிக்கையினை அதன்‌ ஆண்டுக்‌ கூட்டத்தில்‌ ஆழ்ந்து ஆராய்தல்‌ வேண்டும்‌. (2) நிர்வாக ஆட்சி மன்றம்‌, அந்த ஆண்டறிக்கையினை, அதன்‌ கருத்துரை, ஏதேனுமிருப்பின்‌, அதனுடன்‌ சேர்த்து, வேந்தருக்கு பணிந்தனுப்புதல்‌ வேண்டும்‌. 36. ஆண்டுக்‌ கணக்குகள்‌.- (1) தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌. ஆண்டுக்கணக்குகளும்‌ஐந்தொகைக்‌ குறிப்பும்‌ செயலாட்சி மன்றத்தின்‌: பணிப்புரைகளின்படி தயாரிக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌, ஒவ்வோர்‌ ஆண்டும்‌ குறைந்தது ஒரு முறையேனும்‌ மற்றும்‌ பதினைந்து மாதங்களுக்கு மேற்படாத இடைவெளிகளில்‌, 1949 ஆம்‌ ஆண்டு பட்டயக்‌ கணக்கர்‌ சட்டத்தின்‌ (மையச்‌ சட்டம்‌ 9௦20019849) வகைமுறைகளின்படி தணிக்கை செய்வதற்காக, பட்டயக்‌ கணக்கர்‌ பட்டறிவுள்ள மற்றும்‌ தகுதிப்பாடுடைய நிறுவனத்தால்‌ தணிக்கை செய்யப்படுதல்‌ வேண்டும்‌; (2) ஆண்டுக்‌ கணக்குகளின்படியொன்று, அதன்‌ மீதான தணிக்கை அறிக்கையுடன்‌ செயலாட்சிமன்றத்தின்‌ குறிப்புரைகளுடன்‌: சேர்த்து, அவர்களுடைய ஒப்புதலுக்காக நிர்வாக ஆட்சி மன்றத்திற்கும்‌ வேந்தருக்கும்‌ பணிந்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 37. பணியாளர்களின்‌ பணி நிபந்தனைகள்‌.- (1) தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ பணியாளர்‌ ஒவ்வொருவரும்‌, நிலையமை விதிகளின்‌ வகைமுறைகளின்படி பணியமர்த்தம்‌ செய்யப்படுதலோ அல்லது ஈடுபடுத்திக்‌ கொள்ளப்படுதலோ வேண்டும்‌; (2) தனியார்‌ பல்கலைக்கழகத்துக்கும்‌ நிலைபேறுடன்‌ பணியமர்த்தம்‌ செய்யப்பெற்றுள்ள பணியாளர்களில்‌ எவருக்கும்‌ இடையே எழும்‌ பூசல்‌ எதுவும்‌, துணைவேந்தருக்குக்‌ குறித்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌ அவர்‌, அந்தப்‌ பூசலை, அது குறித்தனுப்பப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்‌, பணியாளருக்கு வாய்ப்பு ஒன்று வழங்கிய பின்பு, முடிவு செய்தல்‌ வேண்டும்‌; (3) குறையுற்றப்‌ பணியாளர்‌, துணை வேந்தரின்‌ முடிவுக்கு எதிராக வேந்தரிடம்‌ மேல்முறையீடு ஒன்றை முன்னிடலாம்‌. அத்தகைய மேல்முறையீட்டில்‌ வேந்தரின்‌ முடிவே இறுதியானதாகும்‌; (4) தற்காலிகமாகவோ அல்லது தணிநோக்கத்திற்காகவோ அல்லது பகுதி நேரத்திற்காகவோ அல்லது இடைவரவாகவோ ஈடுபடுத்தப்படும்‌ பணியாளர்‌ எவரையும்‌ பொறுத்த பூசல்‌ எதுவும்‌ தொடர்புடைய துறைத்‌ தலைவரால்‌ கேட்கப்பட்டு இறுதியாக முடிவு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. 38. தனியார்‌ பல்கலைக்கழக பாடப்‌ பிரிவுகளுக்கும்‌ தேர்வுகளுக்கும்‌ அனுமதித்தல்‌.- (1) (ஐ தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ பட்டங்கள்‌, விருதுகள்‌: அல்லது பட்டயங்கள்‌ ஆகியவற்றிற்கான தேர்வுகளுக்கு அனுமதிப்பதற்கான தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ படிப்புகளுக்கு எவரும்‌,- (i) அவர்‌, அதற்காக வகுத்துரைக்கப்படும்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்றிருந்தாலன்றியும்‌, மற்றும்‌ (i) அவர்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற கல்விசார்‌ நிபந்தனைகளை நிறைவு செய்தாலன்றியும்‌, அப்படிப்புகளுக்கு அவர்‌ அனுமதிக்கப்படுதல்‌ ஆகாது. (b) தனியார்‌ பல்கலைக்கழகத்‌ தேர்வு ஒன்றுக்கான தேர்வு நாடுபவர்‌ ஒவ்வொருவரும்‌, கல்விக்‌ குழுவின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ பிறப்பிக்கப்படும்‌ செயலாட்சி மன்றத்தின்‌ சிறப்பு ஆணை ஒன்றின்‌ வழி இந்த உட்பிரிவின்‌ வகைமுறைகளிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டாலன்றி, தனியார்‌ பல்கலைக்கழகம்‌ ஒன்றின்‌ ஓர்‌ உறுப்பினராக பதிவு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. அத்தகைய விதிவிலக்கு எதுவும்‌ செயலாட்சி மன்றம்‌ பொருத்தமானதாகக்‌ கருதும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு கொடுக்கப்படலாம்‌; (2) தேர்வு நாடுபவர்‌ எவரும்‌, அவர்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ ஓர்‌ உறுப்பினராகப்‌ பதிவு செய்யப்பெற்றிருந்தாலன்றியும்‌, மற்றும்‌ அதற்காகத்‌ தேவைப்படும்‌ வருகை பற்றிய வேண்டுதல்களை நிறைவு செய்திருந்தாலன்றியும்‌ மற்றும்‌ கல்விக்குழுவின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ பிறப்பிக்கப்பட்ட செயலாட்சி மன்றத்தின்‌ ஆணை ஒன்றினால்‌ பதிவு செய்வதற்கான அல்லது வருகைக்கான அல்லது அவை இரண்டுக்குமான அத்தகைய வேண்டுறுத்தங்களிலிருந்து அவர்‌ விதிவிலக்களிக்கப்‌ பட்டாலன்றியும்‌ அவர்‌, தனியார்‌ பல்கலைக்கழகத்‌ தேர்வு எதற்கும்‌ அனுமதிக்கப்படுதல்‌ ஆகாது. இந்தப்‌ பிரிவின்படி வழங்கப்படும்‌ விதிவிலக்குகள்‌ செயலாட்சி மன்றம்‌ பொருத்தமெனக்‌ கருதும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்‌; (3) கல்விக்குழுவின்‌ அல்லது நேர்வுக்கேற்ப தேர்வுகள்‌ கட்டுப்பாட்டாளரின்‌. ஆணைகளினால்‌ அல்லது பரிந்துரையினால்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ பெயர்ப்பட்டியலிலிருந்து பெயர்‌ நீக்கப்பட்டிருப்பவரும்‌, ஓர்‌ ஆண்டுக்கு மேல்‌ தேர்வுகள்‌ எழுதுவதிலிருந்து தடுக்கப்பட்டிருப்பவருமான ஓர்‌ தேர்வுக்கான மாணவர்‌ அல்லது தேர்வு நாடுபவர்‌ எவரும்‌, அத்தகைய ஆணையைப்‌ பெற்ற தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள்‌, மேற்சொன்ன அதிகார அமைப்புகளின்‌ முடிவை செல்லாநிலையதாக்குமாறு செய்யலாம்‌; துணை-வேந்தருக்கு மேல்முறையீடு (4) இது குறித்து துணை-வேந்தரால்‌ எடுக்கப்படும்‌ முடிவு எதுவும்‌ இறுதியானதாகும்‌. 39. தொழிலாளர்கள்‌ வருங்கால வைப்பு நிதியம்‌ மற்றும்‌ ஓய்வூதியங்கள்‌.- தனியார்‌ பல்கலைக்கழகம்‌ அதன்‌ பணியாளர்களின்‌ நலப்பயனுக்காக செயலாட்சி மன்றத்தினால்‌ முடிவு செய்யப்படலாகும்‌, அத்தகைய முறையில்‌ மற்றும்‌ அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு தாம்‌ பொருத்தமெனக்‌ கொள்ளும்‌ அத்தகைய ஓய்வூதிய அல்லது நலத்திட்டங்களை அல்லது வருங்கால வைப்பு நிதியத்தை அமைக்கலாம்‌ அல்லது அத்தகைய காப்பீட்டுத்‌ திட்டங்களுக்கு வகை: செய்யலாம்‌. 40. அதிகார அமைப்புகள்‌ மற்றும்‌ அமைப்புகளின்‌ அமைப்பு மற்றும்‌ அமைப்புகள்‌ பற்றிய பூசல்கள்‌.- தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு எதனின்‌ அல்லது பிற அமைப்பின்‌ ஓர்‌ உறுப்பினராக உரியவாறு நபர்‌ எவரும்‌ நியமனம்‌ செய்யப்பெற்றிருக்கிறாரா அல்லது அமர்த்தப்பெற்றிருக்கிறாரா அல்லது உறுப்பினராக இருப்பதற்கு உரிமை கொண்டிருக்கிறாரா என்பதைக்‌ குறித்து பிரச்சினை எதுவும்‌ எழுமாயின்‌, அந்தப்‌ பொருட்பாடு வேந்தருக்குக்‌ குறித்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. அதன்‌ ம்து அவருடைய முடிவே இறுதியானதாகும்‌. M. குழுக்களை அமைத்தல்‌.- இந்தச்‌ சட்டத்தின்படியோ அல்லது நிலையமை விதிகளின்படியோ குழுக்களை அமைப்பதற்கு தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌. அதிகார அமைப்பு எதுவும்‌ அதிகாரம்‌ கொடுக்கப்படுகிறவிடத்து. அத்தகைய குழுக்கள்‌, பிறவாறாக வகைசெய்யப்பட்டவாறு, தொடர்புடைய அதிகார அமைப்பின்‌ உறுப்பினர்களையும்‌ மற்றும்‌ ஒவ்வொரு நேர்விலும்‌ அதிகார அமைப்பு பொருத்தமெனக்‌ கருகிறவாறு அத்தகைய பிற நபர்களையும்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. 42. காலியிடங்களை நிரப்புதல்‌.- தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு அல்லது பிற அமைப்பு எதனின்‌ உறுப்பினர்களிடையேயுள்ள காலியிடங்கள்‌: அனைத்தும்‌ இயலக்‌ கூடிய விரைவில்‌, அவர்‌ எவருடைய இடம்‌ காலியானதோ அவர்‌ அமர்த்தப்‌ பெற்றிருக்கும்‌ அல்லது நியமனம்‌ செய்யப்பெற்றிருக்கும்‌ எஞ்சிய காலத்திற்கு உறுப்பினர்களை அமர்த்திய அல்லது நியமனம்‌ செய்த நபராலோ அல்லது அமைப்பாலோ நிரப்பப்படுதல்‌ வேண்டும்‌. 43. தனியார்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ அதிகார அமைப்புகள்‌ மற்றும்‌ பிற அமைப்புகளின்‌ நடவடிக்கைகள்‌ அவற்றின்‌ அமறியல்‌ காலியிடங்கள்‌ இருப்பதன்‌ காரணமாக செல்லாதவையாக ஆக்கப்படுதல்‌ ஆகாது.- தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு அல்லது பிற அமைப்பு எதனின்‌ செயல்‌ அல்லது நடவடிக்கை எதுவும்‌, தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு அல்லதுபிற அமைப்புஎதிலும்‌ உள்ள ஒரு காலியிடம்‌ அல்லது அதன்‌ உறுப்பினர்‌ ஒருவரை நியமனம்‌ செய்ததில்‌ உள்ள குறைபாடு அல்லது முறைகேடு எதனின்‌ அல்லது நேர்வின்‌ தகுதிகளைப்‌ பாதிக்காத அத்தகைய செயல்‌ அல்லது நடவடிக்கையிலுள்ள குறைபாடு அல்லது முறைகேடு எதனின்‌ காரணமாகவோ அல்லது தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு அல்லது பிற அமைப்பு, இந்தச்‌ சட்டத்தின்படி வேண்டுறுத்தப்பட்டுள்ள அத்தகைய இடைவெளிகளில்‌ கூடவில்லை என்ற காரணமாகவோ மட்டுமே செல்லாநிலையதாக்கப்படுதல்‌ ஆகாது. 44. தனியார்‌ பல்கலைக்கழக உறுப்பினர்‌ நிலையிலிருந்து நீக்குதல்‌- (1) செயலாட்சி மன்றமானது இதன்‌ பொருட்டு எழுத்து வடிவில்‌ செய்யப்பட்ட ஓர்‌ ஆணையினால்‌ எந்த ஒரு நபரையும்‌, அத்தகைய நபர்‌ ஒழுக்க நெறி தீயொழுக்கம்‌ உள்ளாகிறது என செயலாட்சி மன்றம்‌ கருதும்‌ குற்றச்செயல்‌ ஒன்றுக்காக நீதிமன்றத்தால்‌ குற்றத்‌ தீர்ப்பளிக்கப்பட்டிருப்பாராயின்‌, குற்றத்‌ ஒரு பெரும்பான்‌ மையினரால்‌ நிறைவேற்றப்படும்‌ தீர்மானம்‌ ஒன்றினாலும்‌ செயலாட்சி மன்றத்தின்‌ கூட்டத்தில்‌ வந்திருந்து வாக்களிக்கும்‌ உறுப்பினர்களில்‌ மூன்றில்‌ கரண்டு பங்குக்கும்‌ குறையாத ஒரு பெரும்பான்மையினராலும்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ நிலையிலிருந்து நீக்கலாம்‌; (2) செயலாட்சி மன்றம்‌, இதன்பொருட்டு எழுத்துவடிவில்‌ பிறப்பிக்கப்படும்‌ ஓர்‌ ஆணையினால்‌ கூட நபர்‌ எவரையும்‌, அவர்‌ மனநிலை சரியில்லாதவராக ஆகியிருப்பாராயின்‌ அல்லது ஒரு நொடித்துப்‌ போனவரென நீதிமுறையில்‌ தீர்மானிக்கப்‌ பட்டிருப்பாராயின்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு எதனின்‌ உறுப்பினர்‌ நிலையிலிருந்து நீக்கப்படலாம்‌; (3) இந்தப்‌ பிரிவின்படி நபர்‌ எவருக்கும்‌ எதிரான நடவடிக்கை எதுவும்‌ எடுக்கப்பட உத்தேசிக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராகக்‌ காரணம்‌ காட்டுவதற்கு அவருக்குத்‌ தகுவான வாய்ப்பு ஒன்று கொடுக்கப்பட்டிருந்தாலன்றி அவருக்கு எதிராக நடவடிக்கை எதுவும்‌ எடுக்கப்படுதல்‌ ஆகாது; (4) உட்பிரிவு (1)-ன்‌ படியோ அல்லது (2) ஆம்‌ உட்பிரிவின்படியோ நேர்வுக்கேற்பு பிறப்பிக்கப்படும்‌ ஒவ்வொரு ஆணையின்படி ஒன்று, அது, அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட பின்பு கூடிய விரைவில்‌, வகுத்துரைக்கப்பட்ட முறையில்‌ தொடர்புடைய நபருக்கு அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 45. தனியார்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ பதிவணங்களை மெய்ப்பிக்கும்‌ முறை.- தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ வசம்‌ இருக்கும்‌ தணியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு அல்லது குழு எதனின்‌ பற்றுச்சீட்டு, விண்ணப்பம்‌, அறிவிப்பு, நடவடிக்கை, தீர்மானம்‌ எதனின்‌ படி ஒன்று, பதிவாளரால்‌ உறுதிச்‌ சான்றளிக்கப்படுமானால்‌, அத்தகைய பற்றுச்சீட்டு, விண்ணப்பங்கள்‌, அறிவிப்பு, ஆணை, நடவடிக்கை அல்லது தீர்மானம்‌ ஆவணங்களுக்கான அல்லது பதிவேட்டிலுள்ள பதிவு இருப்பதற்கான முதல்‌ நோக்கிலான சான்றாகப்‌ பெறப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ மூல ஆவணங்கள்‌ முன்னிடப்படுமானால்‌ சான்றில்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படக்‌ கூடியவிடத்து, அதிலுள்ள பொருட்பாடுகளுக்கும்‌ நடவடிக்கைக்குச்‌ சான்றாக ஏற்றுக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. 46. நிலையான அறக்கட்டளை நிதியம்‌.- (1) முன்கொணறர்பவர்‌ அமைப்பு குறைந்தது ஐம்பது கோடி ரூபாய்க்கு நிலையான அறக்கட்டளை ஒன்றை நிறுவுதல்‌ வேண்டும்‌: (2) தனியார்‌ பல்கலைக்கழகம்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ நிலையான அறக்கட்டளை நிதியத்தை முதலீடு செய்வதற்கு அதிகாரமுடையதாகும்‌; (3) தனியார்‌ பல்கலைக்கழகம்‌ பணத்தொகை எதனையும்‌, பொது நிதியத்திலிருந்தோ அல்லது வளர்ச்சிநிதியத்திலிருந்தோ நிலையான அறக்கட்டளை நிதியத்திற்கு மாற்றலாம்‌; (4) உட்பிரிவு (1)-இல்‌ குறித்துரைக்கப்பட்ட குறைந்தபட்சத்‌ தொகைக்கு மேற்படும்‌ தொகை எதுவும்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ வளர்ச்சி நோக்கங்களுக்காக தனியார்‌ பல்கலைக்கழகத்தால்‌ நிலையான அறக்கட்டளை நிதியத்திலிருந்து எடுத்துக்‌ கொள்ளப்படலாம்‌. 47. பொது நிதியம்‌.- (1) தணியார்‌ பல்கலைக்கழகம்‌, ஒவ்வொன்றும்‌ பொது நிதியம்‌ ஒன்றை நிறுவுதல்‌ வேண்டும்‌. அதில்‌ பின்வரும்‌ தொகை வரவு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. அவையாவன:- (ஐ) தனியார்‌ பல்கலைக்கழகத்தால்‌ விதிக்கப்படலாகும்‌ கட்டணங்கள்‌: அனைத்தும்‌; (௦) பிற ஆதாரம்‌ எதிலிருந்தும்‌ பெறப்படும்‌ பணத்தொகைகள்‌ அனைத்தும்‌; (6) முன்கொணர்பவர்‌ அமைப்பினால்‌ செய்யப்படும்‌ பங்களிப்புகள்‌: அனைத்தும்‌; மற்றும்‌ (0) அப்போதைக்குச்‌ செல்லாற்றலிலுள்ள சட்டம்‌ எதனாலும்‌ தடைசெய்யப்படாத பிற நபர்‌ எவராலும்‌ அல்லது அமைப்பு எதனாலும்‌ இதன்‌ பொருட்டு செய்யப்படும்‌ பங்களிப்புகள்‌ அனைத்தும்‌ (2) பொது நிதியத்தில்‌ வரவு வைக்கப்படும்‌ பணங்கள்‌, தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ தொடர்‌ செலவினங்கள்‌ அனைத்தையும்‌ செய்வதற்குப்‌ பயன்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 48. வளர்ச்சி நிதியம்‌.- (1) தனியார்‌ பல்கலைக்கழகம்‌, ஒவ்வொன்றும்‌ வளர்ச்சி நிதியம்‌ ஒன்றையும்‌ நிறுவுதல்‌ வேண்டும்‌. அதில்‌ பின்வரும்‌ பணங்கள்‌ வரவு வைக்கப்படுதல்‌ அவையாவன:- (a) மாணவர்களிடமிருந்து விதிக்கப்படலாகும்‌ வளர்ச்சிக்‌ கட்டணங்கள்‌; (b) தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ வளர்ச்சி நோக்கத்திற்காக பிற ஆதாரங்களிலிருந்து பெறப்படும்‌ பணத்‌ தொகைகள்‌ அனைத்தும்‌; (6) முன்கொணர்பவர்‌ அமைப்பினால்‌ செய்யப்படும்‌ பங்களிப்புத்‌ தொகைள்‌ அனைத்தும்‌; (1) அப்போதைக்குச்‌ செல்லாற்றலிலுள்ள சட்டம்‌ எதனாலும்‌ தடை செய்யப்படாத பிற நபர்‌ எவராலும்‌ அல்லது அமைப்பு எதனாலும்‌ இதன்‌ பொருட்டு செய்யப்படும்‌ பங்களிப்புத்‌ தொகைகள்‌ அனைத்தும்‌; மற்றும்‌ (6) நிலையான அறக்கொடை நிதியத்திலிருந்து பெறப்படும்‌ வருமானங்கள்‌ அனைத்தும்‌ (2) அவ்வப்போது, வளர்ச்சி நிதியத்தில்‌ வரவு வைக்கப்படும்‌ பணங்கள்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ வளர்ச்சிக்காகப்‌ பயன்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌. 49. நிதியத்தைப்‌ பேணுதல்‌.- பிரிவு 46, 47 மற்றும்‌ 48 ஆகியவற்றின்‌ படி நிறுவப்பட்ட நிதியங்கள்‌ நிர்வாக ஆட்சி மன்றத்தின்‌ பொதுவான கண்காணிப்பு மற்றும்‌ கட்டளைக்கு உட்பட்டு, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ முறைப்படுத்தப்பட்டு பேணிவரப்படுதல்‌ வேண்டும்‌. 50. தகவலையும்‌ பதிவணங்களையும்‌ கோறரிப்பெறுவதற்கு அரசுக்குள்ள அதிகாரம்‌.- (1) அரசு அரசு கோருகிறவாறு, கோருகிறவாறு, தனியார்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ நிருவாகம்‌ அல்லது நிதி மற்றும்‌ பிற அலுவற்பாடுகள்‌ தொடர்பான அத்தகைய தகவலை அல்லது பதிவணங்களை அளிப்பது, தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அல்லது தனியார்‌ பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின்‌ அல்லது அலுவலர்‌ எவரின்‌ கடமையாகும்‌; (2) அரசு, இந்தச்‌ சட்டத்தின்‌ அல்லது அதன்படி செய்யப்பட்ட நிலையமை விதிகளின்‌ அல்லது அவசர விதிகளின்‌ மீறுகையொன்று இருக்கிறது என்ற என்று கருதுமாயின்‌, 49ஆம்‌ பிரிவின்படி தனியார்‌ பல்கலைக்கழகத்திற்குத்‌ தாம்‌ தேவையென கொள்கிறவாறு அத்தகைய பணிப்புரைகளை வழங்கலாம்‌. 51. தனியார்‌ பல்கலைக்‌ கழகத்தைக்‌ கலைத்தல்‌.- (1) தனியார்‌ பல்கலைக்கழகம்‌, எந்தக்‌ காரணமாகவும்‌ அதனைக்‌ கலைப்பதற்கு கருதுமாயின்‌, அது அரசுக்குக்‌ குறைந்தது ஆறு மாதங்களேனும்‌ எழுத்து வடிவில்‌ அறிவிப்பு கொடுத்தல்‌ வேண்டும்‌: (2) உட்பிரிவு (1)-இல்‌ குறிப்பிடப்பட்ட அறிவிப்பைப்‌ பெற்றுக்‌ கொள்வதன்‌ பேரில்‌, அரசு, தனியார்‌ பல்கலைக்கழகத்தைக்‌ கலைக்கும்‌ தேதியிலிருந்து தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ வழக்கமான கல்விப்‌ பயிற்சியில்‌ கடைசி மாணவர்களின்‌ தொகுதி வரையில்‌ அவர்களின்‌ பயிற்சியை அல்லது கல்விகளை முடிக்கும்‌ வரையில்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌. அத்தகைய முறையில்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தை நிருவகிப்பதற்கான அத்தகைய ஏற்பாடுகளைச்‌ செய்தல்‌ வேண்டும்‌. 52. கலைப்பின்‌ போது தனியார்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ செலவினம்‌.- (1) பிரிவு 51— ன்படி தனியார்‌ பல்கலைக்கழகத்தைக்‌ கலைக்கும்‌ நடவடிக்கையின்போது தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ தின்‌ நிருவாகச்‌ செலவினமானது நிலையான அறக்கொடை நிதியம்‌, பொது நிதியம்‌ மற்றும்‌ வளர்ச்சிநிதியம்‌ ஆகியவற்றிலிருந்து ஏற்கப்படுதல்‌ வேண்டும்‌; (2) உட்பிரிவு (1)-இல்‌ கட்டிக்காட்டப்பட்ட நிதியங்கள்‌, தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ செலவினத்தை எதிர்கொள்வதற்குப்‌ போதுமானவையாக இல்லாதிருக்குமானால்‌, அத்தகைய செலவினம்‌, அரசால்‌, தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ சொத்துக்களை அல்லது சொத்திருப்புகளை அயலடைவு செய்து எதிர்கொள்ளப்படலாம்‌. 53. தனியார்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ ஏற்பளிப்பு அரசால்‌ நீக்கப்படுதல்‌-- (1) தனியார்‌ பல்கலைக்கழகம்‌, எதுவும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ த்தின்‌ வகைமுறைகளின்படி செயல்படவில்லை என அரசு முக்கியமான மற்றும்‌ போதிய அளவிலான சாட்டுரைகளுடனான முறையீடு ஒன்றைப்‌ பெறுகிறவிடத்து, அது. அந்த முறையீட்டின்படி ஒன்றைச்‌ சுட்டிக்காட்டி தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ ஏற்பளிப்பு என்‌ நீக்கப்படுதல்‌ ஆகாது என்பதற்கு இரண்டு மாதங்களுக்குக்‌ குறைவாக இருக்கலாகாத, அத்தகைய காலத்திற்குள்‌ காரணம்‌ காட்டுமாறு தனியார்‌ பல்கலைக்கழகத்தை வேண்டுறுத்துதல்‌ வேண்டும்‌; (2) உட்பிரிவு (1)-ன்படி கொடுக்கப்பட்ட அறிவிப்புக்கு தனியார்‌ பல்கலைக்கழகத்தின்பதில்‌ பெறப்படுவதன்‌. பேரில்‌, பல்கலைக்கழகம்‌ செயல்படுவதில்‌ தனியார்‌ பல்கலைக்கழகம்‌ தவறாக நடத்தப்படுகிற அல்லது இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறை மீறுகிற முதல்‌ நோக்கிலான நிகழ்வு ஒன்று கண்டறியப்பட்டிருக்கிறது என்று அரசு தெளிவுறக்‌ காணுமாயின்‌, அது, தாம்‌ தேவையெனக்‌ கொள்ளலாகும்‌ அத்தகைய விசாரணைக்கு ஆணையிடுதல்‌ வேண்டும்‌; (3) உட்பிரிவு (2)-ன்படியான விசாரணை ஒன்றின்‌ நோக்கங்களுக்காக, அரசு, அறிவிக்கை வாயிலாக, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளை மீறியது பற்றிய சாட்டுரைகளை விசாரணை செய்வதற்கு விசாரணை அதிகாரஅமைப்பாக ஓர்‌ அலுவலர்‌ அல்லது அதிகார அமைப்பை அமர்த்துதல்‌ வேண்டும்‌; (4) உட்பிரிவு (3)-ன்படி அமர்த்தப்‌ பெற்ற விசாரணை அதிகார அமைப்பு ஒவ்வொன்றும்‌, இந்தச்‌ சட்டத்தின்படி தம்‌ செயற்பணிகளைப்‌ புரிகையில்‌, உரிமை வழக்கு ஒன்றை மற்றும்‌ குறிப்பாக பின்வரும்‌ பொருட்பாடுகள்‌ பொறுத்து விசாரணை செய்கையில்‌, 1908 ஆம்‌ ஆண்டு உரிமையியல்‌ நெறிமுறைத்‌ தொகுப்புச்‌ சட்டத்தின்படி (மையச்‌ சட்டம்‌ ௩719௦8) உரிமையியல்‌ நீதிமன்றத்தின்‌ அதிகாரங்கள்‌ அனைத்தும்‌ உடையது ஆகும்‌. அவையாவன:- (a) சான்றளிப்பவர்‌ எவருக்கும்‌ அழைப்பாணை விடுத்து அவர்‌ முன்னிலையாவதைக்‌ கட்டாயப்படுத்துதல்‌ மற்றும்‌ அவரை ஆணைமொழியின்‌ பேரில்‌ விசாரணை செய்தல்‌; (b) ஆவணம்‌ எதனையும்‌ வெளிக்‌ கொணர்தல்‌ மற்றும்‌ முன்னிடுதல்‌; (6) அலுவலகம்‌ எதிலிருந்தும்‌ பொது ஆவணம்‌ எதனையும்‌ அல்லது அதன்படி எதனையும்‌ வேண்டிப்‌ பெறுதல்‌; (0) ஆணைமொழி ஆவணங்களின்‌ மீது சான்றினைப்‌ பெறுதல்‌; (6) வகுத்துரைக்கப்படலாகும்‌ பிற பொருட்பாடு எதுவும்‌. (5) விசாரணை அறிக்கையினைப்‌ பெறுவதன்‌ பேரில்‌, தனியார்‌ பல்கலைக்கழகம்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌ எவற்றையும்‌ மீறியிருக்கிறது என்று அரசு தெளிவுறக்‌ காணுமானால்‌, அது, தேவையான செம்மையினைச்‌ செய்யுமாறு தனியார்‌ பல்கலைக்கழகத்திற்குப்‌ பணிப்புரை கொடுத்து இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளை முறையாகச்‌ செயல்படுத்துவதற்காக அறிவுறுத்துதல்‌ வேண்டும்‌; (6) தனியார்‌ பல்கலைக்கழகம்‌ தொடர்ந்து சட்ட வகைமுறைகளை ம்றி வருகிறது என்று கருதும்பட்சத்தில்‌ அத்தகைய மீளுகையானது நிதியைத்‌ தவறாக மேலாண்மை ய்தலுக்கு மற்றும்‌ தனியார்‌ பல்லைக்கழகத்தில்‌ தவறான வகையில்‌ நிர்வாகம்‌ நடைபெறும்‌ நிலையில்‌ இது தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ கல்வித்‌ தரங்களை பாதிக்கின்ற வகையில்‌ அமையும்‌ என்கின்ற அச்சத்தை ஏற்படுத்துகின்ற வகையிலான சூழ்நிலைக்கு செல்கின்றபோது அரசு நிர்வாகி ஒருவரை பணியமர்த்தம்‌ செய்யலாம்‌. (7) உட்பிரிவு (6)-ன்படி பணியமர்த்தம்‌ செய்யப்பட்ட நிர்வாகியானவர்‌, இந்தச்‌ சட்டத்தின்படி ஆட்சி மன்றத்தின்‌ மற்றும்‌ மேலாண்மைக்‌ குழுவின்‌ அதிகாரங்கள்‌. அனைத்தையும்‌ மற்றும்‌ கடமைகள்‌ அனைத்தையும்‌ செய்ய வேண்டும்‌ மற்றும்‌ முறையான பாடப்பிரிவுகளில்‌ பயிலும்‌ கடைசித்‌ தொகுதி மாணவர்களின்‌ படிப்புகளை அல்லது பாடத்திட்டத்தை முடிக்கும்‌ வரை மற்றும்‌ அவர்கள்‌ பட்டங்களைப்‌, பட்டயங்களை அல்லது நேர்வுக்கேற்ப பிற கல்விசார்‌ சிறப்புச்‌ சீர்மைகளைப்‌ பெறும்வரை தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அலுவல்களை நிர்வகிக்க வேண்டும்‌; (8) முறையான பாடப்பிரிவுகளில்‌ பயிலும்‌ கடைசித்‌ தொகுதி பட்டங்கள்‌, பட்டயங்கள்‌ அல்லது மாணவர்களுக்கு கல்வி சிறப்புச்‌ சீர்மைகள்‌ வழங்கப்‌ பட்டப்பிறகு நிர்வாகியானவர்‌ அரசுக்கு இதன்‌ தொடர்பாக அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க வேண்டும்‌; (9) உட்பிரிவு (8)-ன்படி அறிக்கை பெறப்பட்டதன்‌ பேரில்‌ அரசு உரிய முறையில்‌ கருத்தில்‌ கொண்ட பிறகு ஒரே மாதிரியான நோக்கங்களைக்‌ கொண்டிருக்கும்‌ ஏதேனும்‌ முன்கொணர்பவர்‌ அமைப்பின்‌ ஆட்சி மன்றத்திடம்‌ அதிகாரங்களை ஒப்பளிப்பதன்‌ மூலம்‌ தனியார்‌ பல்கலைக்கழகம்‌ தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம்‌ அல்லது பல்கலைக்கழக மானியக்‌ குழுவின்‌ மற்றும்‌ தொடர்புடைய பிற ஒழுங்குமுறை அமைப்புகளின்‌ முந்தைய ஒப்புதலுடன்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ ஏற்பளிப்பினை ரத்து செய்யலாம்‌; (10) உட்பிரிவு (9)-ன்படி ஏற்பளிப்பை நீக்கும்‌ நடைமுறையின்‌ போது, அரசு நிலையான அறக்கொடை நிதியம்‌, பொது நிதியம்‌ அல்லது வளர்ச்சி நிதியம்‌ ஆகியவற்றை தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அலுவற்பாடுகளை மேலாண்மை செய்யும்‌ நோக்கத்திற்காகப்‌ பயன்படுத்தலாம்‌. தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ நிதியங்கள்‌ தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அவசியமான செலவினத்தை எதிர்கொள்வதற்குப்‌ போதுமானவையாக இல்லையாயின்‌, அரசு, மேற்சொன்ன செலவினங்களை எதிர்‌ கொள்வதற்கு தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ சொத்திருப்புகளை அல்லது சொத்துக்களை அயலடைவு செய்யலாம்‌. 54. தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ கொள்கை பொருட்பாடுகள்‌ மீது பணிப்புரைகள்‌ வழங்குவதற்கு அரசுக்குள்ள அதிகாரம்‌.- அரசு, தாம்‌ தேவையென கருதுகிறவாறு இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு முரணாக இராத கொள்கை பொருட்பாடுகள்‌ மீது தனியார்‌ பல்கலைக்கழகத்திற்கு, அவ்வப்போது, அத்தகைய பணிப்புரைகளை வழங்கலாம்‌. அத்தகைய பணிப்புரைகள்‌, தனியார்‌ பல்கலைக்கழகத்தால்‌ இணங்கி நடக்கப்படுதல்‌ வேண்டும்‌. 55. கலைத்தல்‌ அல்லது ஏற்பளிப்பை நீக்குவதன்பேரில்‌ உடமைகள்‌, கடப்பாடுகளின்‌ தகுநிலைகள்‌.- தனியார்‌ பல்கலைக்கழகத்தை கலைக்கும்‌ அல்லது ஏற்பளிப்பை நீக்கும்‌ நேர்வில்‌, தணியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ நிலையான அறக்கட்டளை நிதியம்‌, பொதுநிதியம்‌, வளர்ச்சி நிதியம்‌ அல்லது பிற நிதியம்‌ எதுவும்‌ உள்ளடங்கலான உடைமைகள்‌ மற்றும்‌ சொத்துக்கள்‌ அனைத்தும்‌ மற்றும்‌ கடப்பாடுகளும்‌ கூட, முன்கொணர்பவர்‌ அமைப்புக்குச்‌ சொந்தமானதாக இருக்கும்‌. 56. ஒழுங்குமுறைபடுத்தும்‌ அமைப்பை அமைப்பதற்கு அரசுக்குள்ள அதிகாரங்கள்‌.- (1) அரசு, மாணவர்களுக்கு உலகத்தரம்‌ வாய்ந்த உயர்கல்வியை வழங்குவது குறித்த கற்பித்தல்‌, ஆராய்ச்சியை மேம்படுத்தல்‌ மற்றும்‌ பயிற்சி அளித்தல்‌ ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு ஒழுங்குமுறைப்படுத்தும்‌ அமைப்பு ஒன்றை அமைத்துருவாக்க வேண்டும்‌; (2) ஒழுங்குமுறைப்படுத்தும்‌ அமைப்பு, விதிகளில்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய உறுப்பினர்கள்‌ கொண்டிருக்க வேண்டும்‌ மற்றும்‌ அது விதிகளில்‌ வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய அதிகாரங்களை செலுத்த வேண்டும்‌ அத்தகைய செயற்பணிகளை செய்ய வேண்டும்‌; (3) இரண்டாம்‌ உட்பிரிவின்படி பிறப்பிக்கப்படும்‌ கருதப்பட்ட விதிகளின்‌: நகல்‌ ஒன்று தமிழ்நாடு மாநிலத்தின்‌ சட்டமன்ற பேரவையின்‌ முன்பு வரைவாக வைக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ சட்டமன்றப்‌ பேரவை, விதிகளை பிறப்பிப்பதற்கு ஒத்துக்கொள்ளாமல்‌ இருக்கிறதென்றால்‌ அல்லது சட்டமன்ற பேரவை, விதிகளில்‌ மாற்றமைவுகள்‌ எதனையும்‌ செய்வதற்கு ஒத்துக்‌ கொள்கிறதென்றால்‌, அந்த விதிகள்‌ பிறப்பிக்கப்படுதல்‌ ஆகாது அல்லது நேர்வுக்கேற்ப சட்டமன்ற பேரவையினால்‌ ஒத்துக்‌ கொள்ளப்படுவதற்கேற்ப அத்தகைய மாற்றமைசெய்யப்பட்ட வடிவத்தில்‌ மட்டுமே பிறப்பிக்கப்படுதல்‌ வேண்டும்‌. 57. விதிகளைச்‌ செய்வதற்கு அரசுக்குள்ள அதிகாரம்‌.- (1) அரசு, அறிவிக்கையினால்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்கள்‌ அனைத்தினையும்‌ அல்லது எதனையும்‌ நிறைவேற்றுவதற்கான விதிகளைச்‌ செய்யலாம்‌; (2) குறிப்பாக மற்றும்‌ முந்தைய அதிகாரங்களின்‌ பொதுப்பாங்கிற்குக்‌ குந்தகமின்றி பின்வரும்‌ பொருட்பாடுகளின்‌ அனைத்திற்காகவும்‌ அல்லது எதற்காகவும்‌ அத்தகைய விதிகளைச்‌ செய்யலாம்‌ அதாவது:- (ஐ) செயற்திட்ட அறிக்கையைச்‌ செய்யும்‌ முறை, அதிலடங்கியிருக்கும்‌ விபரங்கள்‌ மற்றும்‌ 5 ஆம்‌ பிரிவின்படி செலுத்தத்தக்க கட்டணம்‌; (௦) பிரிவு 7-ன்‌ உட்பிரிவு (3)-ன்‌ படி நிபுணர்குழுவின்‌ தலைவருக்கு மற்றும்‌ உறுப்பினர்களுக்கு செலுத்தத்தக்க அமர்வுக்‌ கட்டணங்கள்‌ மற்றும்‌ படிகள்‌: (3) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும்‌ அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர்‌ கூடிய விரைவில்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்பட்டக்‌ கூட்டத்‌ தொடர்‌ முடிவடைவதற்கு முன்னர்‌ அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதிலும்‌ மாறுதல்‌ எதனையும்‌ சட்டமன்றப்‌ பேரவையானது செய்யுமாயின்‌ அல்லது அத்தகைய விதியோ அல்லது அறிவிக்கையோ செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப்‌ பேரவை முடிவு செய்யுமாயின்‌ அதன்‌ பின்பு அந்த விதியானது அல்லது அறிவிக்கையானது அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ அல்லது நேர்விற்கேற்ப செயல்வடிவம்‌ பெறாதல்‌ போகும்‌ எனினும்‌ அவ்வாறான மாறுதல்‌ அல்லது செயல்வடிவம்‌ பெறாமை எதுவும்‌ அந்த விதியின்படி அல்லது அறிவிக்கையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல்‌ ஏதொன்றின்‌ செல்லுந்தண்மைக்கும்‌ ஊறின்றி இருத்தல்‌ வேண்டும்‌. 58. இடர்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌.- தனியார்‌ பல்கலைக்கழகத்தின்‌ அதிகார அமைப்பு எதையேனும்‌ இடர்பாடுகளை முதல்‌ முதலில்‌ அமைத்து உருவாக்குதல்‌ குறித்தோ அல்லது மீண்டும்‌ நீக்குவதற்கான அமைத்துருவாக்குதல்‌ குறித்தோ அல்லது பிறவாறு இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறை அதிகாரம்‌. செயல்படுத்துதல்‌ குறித்தும்‌ இடர்ப்பாடு எதுவும்‌ எழுமானால்‌ அரசு, அறிவிக்கையின்‌ மூலமாக அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்காக தேவையானது என்று அல்லது உகந்தது என்று தனக்கு தோன்றக்‌ கூடிய இந்தச்‌ சட்டத்தின்‌. வகைமுறைகளுக்கு ஒவ்வாதவையாயிராத அத்தகைய வகைமுறையைச்‌ செய்யலாம்‌: வரம்புரை: ஆனால்‌ அத்தகைய அறிவிக்கை எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்க தேதியில்‌ இருந்து இரண்டாண்டுகள்‌ முடிவடைந்த பின்பு பிறப்பிக்கப்படுதலாகாது. இணைப்புப்‌ பட்டியல்‌ 3 மற்றும்‌ 9 ஆம்‌ பிரிவுகளைக்‌ காண்க வரிசை எண்‌ தனியார்‌ முன்கொணர்பவர்‌ முன்கொணர்பவர்‌ பல்கலைக்கழகத்தின்‌ அமைப்பின்‌ அமைப்பின்‌ பதிவு பெயர்‌ மற்றும்‌ பெயர்‌ மற்றும்‌ விபரங்கள்‌: இருக்குமிடம்‌ விலாசம்‌ (விலாசம்‌) (1) (2) 3 (3)

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts