Tamil Nadu · 2010 · Act 40
Tamil Nadu Persons Studied in Tamil Medium Act 2010
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
மையே வி்
2010ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்மொழி மூலமாகப்
படித்த நபர்களை அரசின்கீழ் வரும் பணிகளில்
முன்னுரிமை அடிப்படையில் நியமனம்
செய்தல் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 40/2010)
(2023, அக்டோபர் 31 அன்று இருந்தவாறு)
The Tamil Nadu Appointment on preferential basis in
the Services under the State of Persons Studied in Tamil
Medium Act, 2010
(Tamil Nadu Act No.40 of 2010)
(as on 31% October, 2023)
தமிழாக்கம் :
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
சென்னை
தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு அரசு எழுதுபொருள்
அச்சுத்துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
2023
2010ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்மொழி மூலமாகப் படித்த
நபர்களை அரசின்கீழ் வரும் பணிகளில் முன்னுரிமை
அடிப்படையில் நியமனம் செய்தல் சட்டம்
(தமிழ்நாடு சட்ட எண் 40/2010)
பிரிவு பொருளடக்கம்
குறுந்தலைப்பும் தொடக்கமும்.
பொருள்வரையறைகள்.
நியமன முன்னுரிமை.
A
0
N
பிற காலியிடங்களுக்குப் போட்டியிடுவதற்கான
உரிமையானது பாதிக்கப்படுதல் கூடாது.
5. இடஒதுக்கீடு பொருந்துதல்.
6. முன்னுரிமை ஒதுக்கீட்டில் காலியிடங்களை
நிரப்புதல்.
விலக்களிப்பதற்கான அதிகாரம்.
8. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
9. இடர்ப்பாட்டினை நீக்குவதற்கான அதிகாரம்.
10. நீக்கமும் காப்பும்.
1
2010ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்மொழி மூலமாகப் படித்த
நபர்களை அரசின்கீழ் வரும் பணிகளில் முன்னுரிமை
அடிப்படையில் நியமனம் செய்தல் சட்டம்
தமிழ்நாடு சட்ட எண் 40/2010
[தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது, 2010ஆம்.
ஆண்டு நவம்பர் திங்கள் 27ஆம் நாளன்று ஆளுநரின்:
ஏற்பிசைவைப்பெற்று அது பொதுத்தகவலுக்காகத் தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்பட்டது.
அரசின்கீழ் வரும் பணிகளுக்கான நியமனங்களில் நேரடி
ஆட் சேர்ப்புக்காக வகுத்துரைக்கப்பட்ட கல்வித்
தகுதியைத் தமிழ் வழிக்கல்வி மூலமாகப் பெற்றிருக்கிற
நபர்களுக்கு முன்னுரிமை வழங்க வகை:
செய்வதற்கான ஒரு சட்டம்.
அரசமைப்பின் 345ஆம் அமைப்புவிதியின்படி,
மாநிலச் சட்டமன்றத்திற்கு அம்மாநிலத்தில் பயன்பாட்டில்
உள்ள மொழிகளுள் ஏதேனும் ஒன்றை அல்லது அதற்கு
மேற்பட்டவற்றை அந்த மாநிலத்தின் அரசு அலுவல்
நோக்கங்களுக்காக ஏற்றுக்கொள்வதற்கு அதிகாரம்
வழங்கப்பட்டிருப்பதாலும்;
தமிழ்நாடு மாநிலமானது, 1956ஆம் ஆண்டு
தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம்
XXXIX/1956) இயற்றி, அரசமைப்பின்: 345௧ஆம்
அமைப்புவிதியின்படி இம்மாநிலத்தின் அரசு
ஆட்சிமொழியாகத் தமிழ்மொழியை
ஏற்றுக்கொண்டிருப்பதாலும்;
1963ஆம் ஆண்டு ஆட்சிமொழிகள் சட்டமானது
(மையச் சட்டம் 191963) ஒன்றியத்தின் அனைத்து அரசு
அலுவல் நோக்கங்களுக்காகவும் நாடாளுமன்றத்தின்:
அலுவல் நடவடிக்கைகளை நடத்துவதற்காகவும் ஆங்கில
மொழியானது தொடர்ந்து இருப்பதற்கு வகை
செய்வதாலும்;
2
மையச் சட்டம் 1974963இன் பிரிவு 3(1)(b) இன்
முதலாம் வரம்புரையானது ஒன்றியத்திற்கும்
மாநிலங்களுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு
ஆங்கிலமொழி பயன்படுத்தப்படுதல் வேண்டும் என வகை
செய்கிறது என்பதாலும்;
அரசமைப்பின் 36 எனும் பகுதியின் ॥॥ஆம்
அத்தியாயத்தில் உள்ள அரசமைப்பின்: 348ஆம்
அமைப்புவிதியானது, அந்தப் பகுதியின் வகைமுறைகள்
எவ்வாறு இருந்தபோதிலும், நாடாளுமன்றம் சட்டத்தினால்
பிறவாறு வகைசெய்யும் வரையில், உச்சநீதிமன்றத்தின்.
மற்றும் ஒவ்வோர் உயர்நதிமன்றத்தின் அனைத்து
நடவடிக்கைகளும் ஆங்கில மொழியில் இருத்தல்
வேண்டும் என வகை செய்வதாலும்;
தரப்பினர்களின். வாதுரைகளைத் தயாரிப்பது,
சாட்சியம் எடுப்பது, முறையே தரப்பினர்களின்.
வழக்குரைஞர்கள் வாதம் செய்வது, தீர்ப்புரைகளை
எழுதுவது உள்ளடங்கலாக, மாவட்ட நிலை வரையிலான
நீதிமன்றங்களின்: மொழியாகத் தமிழ்மொழியானது
பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதாலும்;
தமிழ்வழிக்கல்வி மூலமாகப் படித்தவர்கள், மைய
அரசின், பிற மாநில அரசுகளின் அல்லது தனியார் துறை
நிறுவனங்களின் பணிக்குத் தெரிவு பெறுவதற்கு மிகமிகக்
குறைந்த வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்பதாலும்.
மாநில அரசின் பணிகளில் அவர்களுக்கு முன்னுரிமை
கொடுப்பது தேவையாகிறது என்பதாலும்;
அரசமைப்பின் 14ஆம் அமைப்புவிதியின்படி,
வெறும் வேறுபடுத்துதல் அல்லது சமமின்றி நடத்துதல்
என்பது, சமத்துவத்தைப் பாதுகாக்கும் விதியின்:
தடைசெய்யும் எல்லைக்குள்ளான வேறுபாடு என்பதாகாது
என்பதாலும், இந்தப் பிரிவின் செயற்பாட்டினை
ஈர்ப்பதற்குத் தெரிவு அல்லது வேறுபாடானது நியாயமற்றது
3
அல்லது தன்னிச்சையானது என்பதாகவும் சட்டமன்றம்
கருதியுள்ள நோக்கத்தைக் கருத்திற்கொண்டால்
பகுத்தறிவுக்கு உகந்த அடிப்படை எதன்மீதும் அது
அமையவில்லை என்பதாகவும் காட்டப்படுதல்:
தேவையானதாகும் என்பதாலும்;
நேரடி ஆட் சேர்ப்புக்காக வகுத்துரைக்கப்பட்ட
கல்வித்தகுதியைத் தமிழ்வழிக்கல்வி மூலமாகப் பெற்ற
நபர்களுக்கும் பிற மொழிவழியில் படித்த நபர்களுக்கும்
இடையேயான வகைப்பாடானது. அடைய விரும்பும்
நோக்கத்துடன் நியாயமான தொடர்பினைக் கொண்டுள்ளது
என்பதாலும்;
அத்தகைய வகைப்பாடானது, அரசமைப்பின்.
16ஆம் அமைப்புவிதியின் எல்லைகளை மீறவில்லை
என்பதோடு அதன்படியான இம்மாநிலத்தின்
இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஊறு
விளைவிக்கவில்லை என்பதாலும்;
அத்தகைய வகைப்பாட்டின் காரணமாக, அரசின்:
கீழ்வரும் பணிகள் எதற்குமான நியமனம் தொடர்பாக, ஒரே
மாதிரியான தகுதிப்பாடுகளைக் கொண்டிருக்கிற
அனைத்துக் குடிமக்களின் வாய்ப்பினைப் பொறுத்த
வரையிலான சமநிலையானது மாற்றத்துக்கு
உள்ளாகவில்லை என்பதாலும்;
1993ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர்களுக்கும் பட்டியல் சாதிகளையும், பட்டியல்
பழங்குடிகளையும் சேர்ந்தவர்களுக்கும் (கல்வி
நிலையங்களில் இடங்களையும் அரசின்கீழ் வருகின்ற
பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை ஒதுக்கீடு
செய்தல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 451994)
வகைமுறைகள் மீறப்படவில்லை என்பதாலும்;
தமிழ்வழிக்கல்வி மூலம் படித்த நபர்களுக்கு
வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லையானால், இம்மாநில
4
மக்கள், பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழ்வழிக்கல்வி
மூலமாகக் கல்வி கற்பனைத் தொடர்வதற்கு வாய்ப்பு
எதுவும் இருக்காது என்பதாலும்;
கல்வியின் நிலைகள் அனைத்திலும் மக்கள்
தமிழ்வழிக்கல்வி மூலமாகக் கல்வி கற்றுக்கொள்வதை
விரும்பி ஏற்றுக்கொள்வதற்கோர் இணக்கமான
சூழ்நிலையை நிலவச்செய்வதன் பொருட்டுத் தமிழ்மொழி
வழிக்கல்வி மூலமாகப் படித்த நபர்களுக்கு முன்னுரிமை
அடிப்படையில் அரசின் கீழ்வரும் பணிகள் எவற்றுக்கும்
நியமனம் வழங்குவதானது பகுத்தறிவிற்கு உகந்ததொரு
வகைப்பாடு என்பதாலும்;
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்றாம் ஆண்டில்
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்பேரவையால் இயற்றப்பட்ட
சட்டம் பின்வருமாறு:-
1. குறுந்தலைப்பும் தொடக்கமும்.- (1) இந்தச்
சட்டம், 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்மொழி மூலமாகப்
படித்த நபர்களை அரசின் கீழ்வரும் பணிகளில்
முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்தல் சட்டம்
என வழங்கப்படும்.
(2) இது, 2010ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள்:
7 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக்
கருதப்படுதல் வேண்டும்.
2. பொருள்வரையறைகள்,;- இந்தச் சட்டத்தில்,
தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-
@) "நேரடி ஆட் சேர்ப்பு" என்பது,
நடைமுறையில் உள்ள விதிகளுக்கு அல்லது
ஒழுங்குமுறைவிதிகளுக்கு அல்லது ஆணைகளுக்கு
இணங்கிய வகையில் அரசின் கீழ்வரும் பணி எதற்கும்.
நபர் ஒருவரை முதல் நியமனம் செய்தல் எனப்
பொருள்படும்;
5
(b) "அரசு" என்பது, மாநில அரசு எனப்
பொருள்படும்.
(2). பிற மொழிகளின் மூலமாகப் படித்த
நபர்கள்" என்பது, அரசின் கீழ்வரும் பணிகளில் நியமனம்:
எதற்கும் பொருந்தக்கூடிய விதிகளில் அல்லது
ஒழுங்குவிதிகளில் அல்லது ஆணைகளில் நேரடி
ஆட்சேர்ப்புக்காக வகுத்துரைக்கப்பட்ட கல்வித்தகுதி
அல்லது கல்வித்தகுதிகளைத் தமிழ் அல்லாத பிறமொழி
எதனின் மூலமாகப் படித்த நபர்கள் எனப் பொருள்படும்.
11 "தமிழ்வழியில் கல்வி பயின்ற நபர்"
என்பது, அரசின் கீழ்வரும் பணிகளில் உள்ள பணிநியமனம்
எவற்றிற்கும் பொருந்தக்கூடிய விதிகள் அல்லது
ஒழுங்குவிதிகள் அல்லது ஆணைகளில் நேரடி
ஆட்சேர்ப்புக்கு வகுத்துரைக்கப்பட்ட கல்வித்தகுதி வரை
தமிழ்வழியின்மூலம் கல்வி பயின்ற நபர் எனப்
பொருள்படும்.
விளக்கம்.- இந்தக் கூறின் நோக்கத்திற்காக,
(0)... எஸ்.எஸ்.எல்.சி. ஆனது
வகுத்துரைக்கப்பட்ட கல்வித்தகுதியாக
இருக்கும்போது ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி.
வரை தமிழ்வழிக் கல்விமூலம்.
பயின்றிருத்தல் வேண்டும்;
1. 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்மொழி மூலமாகப் படித்த
நபர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமை
அடிப்படையில் நியமனம் செய்தல் (திருத்தச்) சட்டத்தின்
(தமிழ்நாடு சட்டம் 35/2020) பிரிவு 2ஆல்
மாற்றியமைக்கப்பட்டது.
6
(i) மேல்நிலைக் கல்வியானது
வகுத்துரைக்கப்பட்ட கல்வித்தகுதியாக.
இருக்கும்போது ஒருவர்
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும்
மேல்நிலைக்கல்வியைத்
தமிழ்வழிக்கல்வி மூலம்
பயின்றிருத்தல் வேண்டும்;
(19 பட்டயப்படிப்பானது
வகுத்துரைக்கப்பட்ட கல்வித்தகுதியாக
இருக்கும்போது ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி.
மற்றும் பட்டயப்படிப்பைத் தமிழ்வழிக்
கல்வி மூலம் பயின்றிருத்தல் வேண்டும்
அல்லது பட்டயப்படிப்பானது
மேல்நிலைக்கல்வி பயின்ற பிறகு
பெற்றிருந்தால் ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி,
மேல்நிலைக்கல்வி மற்றும்
பட்டயப்படிப்பை தமிழ்வழிக் கல்வி
மூலம் பயின்றிருத்தல் வேண்டும்.
(iv) பட்டப்படிப்பானது
வகுத்துரைக்கப்பட்ட கல்வித்தகுதியாக
இருக்கும்போது ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி.
மேல்நிலைக்கல்வி மற்றும்
பட்டப்படிப்பைத் தமிழ்வழிக்கல்வி மூலம்
பயின்றிருத்தல் வேண்டும்;
0) பட்ட மேற்படிப்பானது
வகுத்துரைக்கப்பட்ட கல்வித்தகுதியாக
இருக்கும்போது ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி,
மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பு மற்றும்
பட்டமேற்படிப்பைத் தமிழ்வழிக்கல்வி
மூலம் பயின்றிருத்தல் வேண்டும்.
7
(e) "முன்னுநிமைக்கான காலியிடங்கள்"
என்பது, பிரிவு 3இன் உட்பிரிவு (1)இன் கீழ்
தமிழ்மொழி மூலமாகப் படித்த நபர்களுக்குக்
கிடைக்கக்கூடிய காலியிடங்கள் எனப் பொருள்படும்;
N அரசின்கீழ் வருகின்ற பணிகள் என்பது-
() அரசின் கீழும்;
(i) இம்மாநிலத்திலுள்ள சட்டமன்றத்தின்
கீழும்;
(iii) உள்ளாட்சி அதிகாரஅமைப்பு எதனின்
கீழும்;
(V) அரசுக்குச் சொந்தமான அல்லது
அதன் கட்டுப்பாட்டிலுள்ள கழகம்
அல்லது நிறுமம் எதிலும்; மற்றும்
(v) இம்மாநிலச் சட்டமன்றமானது,
சட்டங்களை இயற்றுவதற்கு
அதிகாரம் பெற்றிருக்கிற பிற
அதிகாரஅமைப்பு எதனின் கீழும்,
வருகின்ற பணிகளை உள்ளடக்கும்.
3. நியமன முன்னுரிமை.- (1) அப்போதைக்கு
நடைமுறையிலுள்ள சட்டம் எதிலும். என்ன
அடங்கியிருந்தபோதிலும் மற்றும் பிரிவு 5கக்கு உட்பட்டு,
நேரடி ஆட்சேர்ப்பின் மூலமாக நிரப்பப்படவேண்டியதாக
உள்ள, அரசின் கீழ்வரும் பணிகளுக்கான
நியமனங்களுக்கான அனைத்துக் காலியிடங்களிலும்
தமிழ்மொழியின்: மூலமாகப் படித்த நபர்களுக்கு
முன்னுரிமை அடிப்படையில் நூற்றுக்கு இருபது
விழுக்காடு என்ற அளவிலான காலியிடங்கள் தனியே
ஒதுக்கப்படுதல் வேண்டும்.
8
(2) உட்பிரிவு (1) இன்படி நியமனங்களுக்கான
தெரிவானது வகுத்துரைக்கப்படும் அத்தகைய முறையில்
செய்யப்படு தல் வேண்டும்.
(3) அரசின் கீழ்வரும் பணிகளுக்கான
பதவிகளுக்கு நியமனம் செய்யும்போது அந்தப் பதவிக்குப்
பொருந்தக்கூடிய விதிகளில் அல்லது
ஒழுங்குமுறைவிதிகளில் அல்லது ஆணைகளில்
வகுத்துரைக்கப்பட்ட கல்வித்தகுதியானது மொழி ஒன்றில்
ஒரு பட்டம் அல்லது பட்டயம் அல்லது கல்விச்சிறப்பு
எதுவும் என்பதாக இருக்கிறநிலையில், உட்பிரிவு (1)இல்
அடங்கியுள்ள எதுவும் பொருந்துதல் கூடாது.
4. பிற காலியிடங்களுக்குப் போட்டியிடுவதற்காண
உரிமையானது பாதிக்கப்படுதல் கூடாது.- தமிழ்
மொழிமூலமாகப் படித்த நபர்கள், அரசின் கீழ்வரும்
பணிகளுக்கான பிற காலியிட நியமனங்களில் பிற மொழி
மூலமாகப் படித்த நபர்களுடன் முன்னுரிமைக்கான
காலியிடங்கள் அல்லாத பிற காலியிடங்களுக்கும்
போட்டியிடுவதற்குத் தகுதியுடையவராதல் வேண்டும்.
5. இடஒதுக்கீடு பொருந்துதல்.- பிரிவு 3இன்கீழ்
தமிழ்மொழி மூலமாகப் படித்த நபர்களுக்கு முன்னுரிமை
அடிப்படையிலான நியமனமானது., நடைமுறையிலுள்ள
சட்டத்தின்படியான இடஒதுக்கீட்டினைப் பின்பற்றிச்
செய்யப்படுதல் வேண்டும்.
6. முன்னுரிமை ஒதுக்கீட்டில் காலியிடங்களை
நிரப்புதல்.-- பிரிவு 3இல் எண்ண அடங்கியிருந்த போதிலும்,
முன்னுரிமைக் காலியிடங்களில் நியமிப்பதற்குத்
தமிழ்மொழிமூலம் படித்த தகுதி வாய்ந்த மற்றும்
பொருத்தமான நபர்கள். போதுமான அளவிற்கு
இல்லையானால், அவ்வாறு நிரப்பப்படாத காலியிடங்கள்
அவர்தம் வகைப்பாட்டிற்குள் பிறமொழிகள் மூலமாகப்
படித்த நபர்களைக் கொண்டு நிரப்பப்படுதல் வேண்டும்.
9
7. விலக்களிப்பதற்கான அதிகாரம்.- அரசானது,
நியாயமான மற்றும் நேர்மையான காரணங்களுக்காகப்
பொது அல்லது தணி ஆணையின் மூலமாக அரசின்
கீழ்வரும் பணிகளுக்கான நியமனம் அல்லது பதவி
எதையும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகளிலிருந்து
விலக்களிக்கலாம்.
8. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம். -
1) அரசானது, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை
நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.
(2) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்.
அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல்
வேண்டும்; மற்றும் ஒரு குறிப்பிட்ட நாளன்று
நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத்
தெரிவிக்கப்பட்டாலன்றி அவை அவ்வாறு
வெளியிடப்பட்ட நாளன்றே நடைமுறைக்கு வருதல்
வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி
அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை
ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட
பின்பு கூடியவிரைவில். சட்டமன்றப்பேரவையில்
வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு
வைக்கப்படும் கூட்டத்தொடரோ அல்லது அதற்கு
அடுத்துவரும் கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்பு
அப்பேரவை அத்தகைய விதி, அறிவிக்கை அல்லது
ஆணை எதிலும் மாறுதல் எதனையும் செய்யுமானால்
அல்லது அப்பேரவை அந்த விதி, அறிவிக்கை அல்லது
ஆணை செய்யப்படுதல் கூடாது அல்லது பிறப்பிக்கப்படுதல்
கூடாது என்று முடிவு செய்யுமானால் அவ்விதி அல்லது
அந்த அறிவிக்கை அல்லது அவ்வாணை அதற்குப்
பின்னர் அவ்வாறு மாறுதல் செய்யப்பட்ட வடிவத்தில்
மட்டுமே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது
10
நிகழ்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல் வேண்டும்.
எனினும், அத்தகைய மாறுதலோ, நீக்கமோ அந்த விதி,
அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னரே
செய்யப்பட்ட எதனின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி
இருத்தல் வேண்டும்.
9. இடர்ப்பாட்டினை நீக்குவதற்கான அதிகாரம்.-
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில்
இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால், அரசானது, தமிழ்நாடு
அரசிதழில் ஆணை ஒன்றை வெளியிடுவதன் மூலம்
அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவையானதாகவோ
அல்லது உகந்ததாகவோ தனக்குத் தோன்றக்கூடிய இந்தச்
சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத
வகைமுறைகளைச் செய்யலாம்:
வரம்புரை: ஆனால், அத்தகைய ஆணை எதுவும்,
இந்தச் சட்டமானது தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட
தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததற்குப்
பின்னர் செய்யப்படுதல் கூடாது.
10. நீக்கமும் காப்பும்- (1) 2010ஆம் ஆண்டு
தமிழ்நாடு தமிழ்மொழி மூலமாகப் படித்த நபர்களை அரசின்:
கீழ்வரும் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில்
நியமனம் செய்தல் அவசரச் சட்டமானது (தமிழ்நாடு
அவசரச் சட்டம் 3/2010) இதன்மூலம் நீக்கம்
செய்யப்படுகின்றது.
(2) அவ்வாறு நீக்கம் செய்யப்பட்டிருக்கின்ற
போதிலும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தின்படி
செய்யப்பட்ட செயல் எதுவுமோ அல்லது எடுக்கப்பட்ட
நடவடிக்கை எதுவுமோ இந்தச் சட்டத்தின்படி
செய்யப்பட்டுள்ளதாகவோ அல்லது
எடுக்கப்பட்டுள்ளதாகவோ கருதப்படுதல் வேண்டும்.