Tamil Nadu · 1981 · Act 43

Tamil Nadu Payment of Subsistence Allowance Act

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1981 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பிழைப்பூதியம்‌ வழங்கல்‌ சட்டம்‌. (சட்ட எண்‌ 43/1981) (1981 ஆம்‌ ஆண்டு ஜுலை திங்கள்‌ 21 ஆம்‌ நாளன்று குடியரசுத்‌ தலைவரின்‌ ஏற்பிசைவைப்‌ பெற்றது) பணியிடைந்க்க காலத்தின்‌ போது பணியாளர்களுக்கு பிழைப்பூதியம்‌ வழங்குவதற்கு வகைசெய்வதற்கானதொரு சட்டம்‌. இந்திய குடியரசின்‌ முப்பத்தி இரண்டாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றத்தால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. (1) குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌.- இச்சட்டம்‌, 1981 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பிழைப்பூதியம்‌ வழங்கல்‌ சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. (2) இது தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதும்‌ அளாவி நிற்கும்‌. (3) இது அரசு, அறிவிக்கை வாயிலாக, குறித்திடும்‌ அத்தகைய தேதியில்‌ நடைமுறைக்கு வரும்‌. 2. பொருள்‌ வரையறைகள்‌:- இந்தச்‌ சட்டத்தில்‌, தறுவாயின்‌ தேவை வேறுவிதமாகத்‌ வேண்டப்பட்டாலன்றி,- (ஐ "பணியாளர்‌" என்பது எந்தவொரு திறனுள்ள, அரை திறனுள்ள அல்லது திறனற்ற, உடலுழைப்பு, மேற்பார்வை, தொழில்நுட்பம்‌, எழுத்தர்‌ அல்லது வாடகைக்கு அல்லது வெகுமதிக்காக செய்வதற்காண வேறு பிற வகையான வேலை அல்லது நடவடிக்கைகளையும்‌, எந்தவொரு நிறுவனத்திலும்‌ பணியமர்த்தப்பட்ட அல்லது அதன்‌ வேலை அல்லது செயல்பாடுகள்‌ தொடர்பாக பணியமர்த்தப்பட்ட எந்தவொரு நபர்‌ என்று பொருள்படும்‌, ஆனால்‌- () முக்கியமான மேலாண்மை அல்லது நிர்வாகத்‌ திறனில்‌ பணிபுரிகிற; அல்லது (ii)) மேற்பார்வைப்‌ பொறுப்பில்‌ அமர்த்தப்பட்டிருப்பதால்‌, மாதமொன்றுக்கு பதினைந்தாயிரம்‌ ரூபாய்க்கு மேல்‌ ஊதியம்‌ பெறுபவர்‌ அல்லது அலுவலகத்துடன்‌ இணைக்கப்பட்ட பணிகளின்‌ தன்மை காரணமாகவோ அல்லது அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்‌ காரணமாகவோ, முக்கியமாக நிர்வாகத்‌ தன்மை கொண்ட பணிகளைச்‌ செய்கிற; அத்தகைய நபர்‌ எவரையும்‌ உள்ளடக்காது; (b) "வேலை வழங்குபவர்‌" என்பது ஒரு நிறுவனத்தின்‌ உரிமையாளர்‌ என்று பொருள்படும்‌ மற்றும்‌ அத்தகைய நிறுவனத்தின்‌ பணியாளர்களின்‌ மேற்பார்வை மற்றும்‌ கட்டுப்பாடுகள்‌ ஒப்படைக்கப்பட்ட எந்தவொரு நபரையும்‌ உள்ளடக்கும்‌; (29 நிறுவனம்‌" என்பது ஏதேனும்‌ தொழில்‌, வணிகம்‌, அலுவல்‌, பொறுப்பேற்பு, உற்பத்தி, பணி அல்லது சேவை நடத்தப்படும்‌ மற்றும்‌ அது தொடர்பாக அரசின்‌ நிர்வாக அதிகாரம்‌ நீட்டிக்கப்பட்ட எந்தவொரு இடமும்‌ என்று பொருள்படும்‌, ஆனால்‌ பின்வருவனவற்றை உள்ளடக்காது- (i) மைய அல்லது மாநில அரசின்‌ எந்தவொரு அலுவலகம்‌ அல்லது துறை; அல்லது (i) இருப்பூர்தி நிர்வாகம்‌; அல்லது (0) சுரங்கம்‌ அல்லது எண்‌ணெய்‌ வயல்‌ எதுவும்‌; அல்லது (iv) பெரிய துறைமுகம்‌; அல்லது (v) மைய அரசின்‌ எந்தவொரு பொதுத்துறை நிறுவனமும்‌. விளக்கம்‌.- இந்த கூறின்‌ நோக்கத்திற்காக, "மைய அரசின்‌ எந்தவொரு பொதுத்துறை நிறுவனம்‌" என்பது- (1) மைய அரசு அல்லது மைய அரசின்‌ துறை; (2) 1956 ஆம்‌ ஆண்டு நிறுவனங்கள்‌ சட்டத்தின்‌ (மைய சட்டம்‌ 1/1956) 617 ஆம்‌ பிரிவில்‌ வரையறுக்கப்பட்ட மற்றும்‌ மைய அரசுக்கு சொந்தமான அல்லது அதனால்‌ கட்டுப்படுத்தப்படும்‌ ஓர்‌ அரசு நிறுவனம்‌; (3) மைய அரசுக்கு சொந்தமான, அதனால்‌ கட்டுப்படுத்தப்படும்‌ அல்லது நிர்வகிக்கப்படும்‌, மைய சட்டத்தால்‌ அல்லது அதன்கீழ்‌ நிறுவப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு, சொந்தமான, அதனால்‌ கட்டுப்படுத்தப்படும்‌ அல்லது நிர்வகிக்கப்படும்‌ ஒரு நிறுவனம்‌ என்று பொருள்படும்‌. (0) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்‌; (e) "தொழிற்சாலை" என்பது, 1947 ஆம்‌ ஆண்டு தொழிற்துறை பூசல்கள்‌ சட்டத்தின்‌ (மைய சட்டம்‌ XIV1947) 2 0) பிரிவில்‌ வரையறுக்கப்பட்டவாறான ஒரு தொழிற்சாலை என்று பொருள்படும்‌ (f) "பணியிடைந்க்க காலம்‌" என்பது 1947 ஆம்‌ ஆண்டு தொழிற்துறை பூசல்கள்‌ சட்டத்தின்‌ (மைய சட்டம்‌ XIV1947) 33 ஆம்‌ பிரிவின்‌ (1) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ ஒரு பணியாளரின்‌ வேலைவாய்ப்பு செல்லுபடியாகும்‌ வகையில்‌ நீக்கப்படுவதற்கு முன்பு, தேவைப்படும்‌ அதிகார அமைப்பின்‌ அத்தகைய அனுமதி பெற எடுக்கப்பட்ட காலஅளவை உள்ளடக்கும்‌; (9) "பணியிடைந்க்கம்‌" என்பது- (1) அவர்‌ மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகள்‌ குறித்து விசாரணை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது அல்லது நிலுவையில்‌ உள்ளது அல்லது விசாரணை முடிந்த பிறகு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது; அல்லது (2) ஏதேனும்‌ குற்றமுறு குற்றத்திற்காக அவருக்கு எதிராண புகார்‌, விசாரணை அல்லது வழக்கு விசாரணையில்‌ உள்ளது அல்லது புகார்‌ இறுதியாக தீர்க்கப்படவுள்ளது, என்ற காரணத்திற்காக ஒரு பணியாளர்‌ தனது அலுவலகத்திற்குச்‌ செல்வதிலிருந்தும்‌ நிறுவனத்தில்‌ தனது செயல்பாடுகளைச்‌ செய்வதிலிருந்தும்‌ தற்காலிகமாக தடை செய்யப்படுவதன்‌ விளைவான ஒரு வேலை வழங்குபவரின்‌ இடைக்கால முடிவாகும்‌, 0) "ஊதியங்கள்‌" என்பது 1947 ஆம்‌ ஆண்டு தொழிற்துறை பூசல்கள்‌ சட்டத்தின்‌ (மைய சட்டம்‌ XIV1947) 2 ஆம்‌ பிரிவின்‌ (1) கூறில்‌ உள்ள அதே பொருளைக்‌ கொண்டிருக்கும்‌. 3. பிழைப்பூதியம்‌ வழங்குதல்‌.-- (1) பணியிடைந்க்கத்தின்கீழ்‌ உள்ள பணியாளர்‌, அத்தகைய பணியிடைந்க்கக்‌ காலத்தின்‌ போது, அத்தகைய பணியிடைந்க்கத்‌ தேதியிலிருந்து கணக்கிடப்பட்ட முதல்‌ தொண்ணூறு நாட்களுக்கு, பணியிடைந்க்கப்படுவதற்கு உடனடி முன்பு பணியாளர்‌ பெற்றுக்‌ கொண்டிருந்த ஊதியத்தின்‌ ஐம்பது சதவிதத்திற்கு சமமான தொகையை பிழைப்பூதியமாக வேலை வழங்குபவரிடமிருந்து பெறுவதற்கு உரிமை உடையவராவார்‌: வரம்புரையாக, பணியிடைந்க்கக்‌ காலம்‌ தொண்ணூறு நாட்களுக்கு மேற்பட்டு, ஆனால்‌ நூற்று எண்பது நாட்களுக்கு மேற்படாதபோது, மேற்கூறிய தொண்ணூறு நாட்களுக்குப்‌ பிறகு, பணியாளர்‌ பணியிடைந்க்கம்‌ செய்யப்படுவதற்கு உடனடி முன்பு பெற்றுக்‌ கொண்டிருந்த ஊதியத்தின்‌ எழுபத்தைந்து சதவிதத்திற்குச்‌ சமமான தொகையை பிழைப்பூதியமாக பெறுவதற்கு பணியாளர்‌ உரிமை உடையவராவார்‌: மேலும்‌ வரம்புரையாக, பணியாளருக்கு நேரடியாகக்‌ கூறத்தக்க காரணங்களுக்காக, விசாரணை அல்லது குற்றவியல்‌ நடவடிக்கை, தொண்ணூறு நாட்களுக்கு மேல்‌ நீட்டிக்கப்படுமிடத்து, தொண்ணூறு நாட்களுக்கு மேற்பட்ட காலத்திற்கு பிழைப்பூதியம்‌, பணியாளர்‌ பணியிடைந்க்கம்‌ செய்யப்படுவதற்கு உடனடி முன்பு பெற்று வந்த ஊதியத்தில்‌ ஐம்பது சதவீதமாகக்‌ குறைக்கப்படும்‌. (2) ஒரு பணியாளர்‌ பணியிடைந்க்கம்‌ செய்யப்பட்ட காலத்தில்‌, அவர்‌ பணியிடைந்க்கம்‌ செய்யப்படுவதற்கு முன்பு அவர்‌ பணிபுரிந்த நிறுவனத்தைத்‌ தவிர வேறு எந்த நிறுவனத்திலும்‌ வேறு எந்த வேலையையும்‌ ஏற்றுக்கொண்டால்‌, அவர்‌ எந்தவொரு பிழைப்பூதியமும்‌ பெற உரிமை இல்லை. (3) ஒரு பணியாளர்‌, எந்தவொரு நேர்விலும்‌, (1) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ அவருக்கு அனுமதிக்கத்தக்க பிழைப்பூதியத்தின்‌ எந்தப்‌ பகுதியையும்‌ திருப்பித்‌ தரவோ அல்லது பற்றுகை செய்யவோ பொறுப்பாக மாட்டார்‌: வரம்புரையாக, எந்த குற்றச்சாட்டின்‌ அடிப்படையில்‌ பணியாளர்‌ தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டாரோ அந்தக்‌ குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுமிடத்து, எந்த ஒரு காலஅளவுக்கும்‌ அவருக்கு வழங்கப்பட்ட பிழைப்பூதியம்‌, தற்காலிக பணிக்காலத்திற்கு அவருக்கு அனுமதிக்கத்தக்க முழு ஊதியத்துடன்‌ சரிக்கட்டப்படுதல்‌ வேண்டும்‌. (34) (1) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ பிழைப்பூதியமானது, பணியாளருக்கு செலுத்த வேண்டிய ஊதியம்‌ செலுத்தப்பட வேண்டிய தேதியில்‌ அல்லது தேதிகளில்‌ வேலை வழங்குபவரால்‌ பணியாளருக்கு செலுத்தப்படும்‌, ஆனால்‌ அவரது பணியிடைந்க்கத்திற்கு, அவை செலுத்தப்படலாம்‌ என்றாகிவிடும்‌. 4. வேலை வழங்குபவரால்‌ செலுத்தப்பட வேண்டிய பணத்தை வசூலித்தல்‌.-- இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வேலை வழங்குபவரிடமிருந்து ஒரு பணியாளருக்கு ஏதேனும்‌ பணம்‌ செலுத்த வேண்டியிருந்தால்‌, பணியாளர்‌ தானே அல்லது இது சார்பாக அவரால்‌ அதிகாரமளிக்கப்பட்ட வேறு எந்த நபரும்‌, அல்லது பணியாளர்‌ இறந்துவிட்டால்‌, சட்டப்படியான அவரது வாரிசுகள்‌, வேறு எந்த மீட்பு முறைக்கும்‌ குந்தகம்‌ இல்லாமல்‌, நிலுவைத்‌ தொகையை வசூலிப்பதற்காக பரிந்துரைக்கப்படும்‌ முறையில்‌ அரசிற்கு விண்ணப்பிக்கலாம்‌, அரசு, வேலை வழங்குபவரின்‌ விளக்கத்தைக்‌ கேட்க ஒரு வாய்ப்பை வழங்கிய பிறகு, வகுத்துரைக்கப்படலாகும்‌ விதத்தில்‌, ஏதேனும்‌ பணம்‌ அவ்வாறு செலுத்தப்பட வேண்டியுள்ளது என்று அரசு, மனநிறைவடைந்தால்‌, அந்தத்‌ தொகையுடன்‌ சேர்த்து, அரசு, பொருத்தமெனக்‌ கருதும்‌ இழப்பீட்டுத்‌ தொகைக்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம்‌ வழங்கும்‌, மேலும்‌ மாவட்ட ஆட்சியர்‌ நில வருவாய்‌ நிலுவைத்‌ தொகையைப்‌ போலவே அதை வசூலிக்க நடவடிக்கை எடுப்பார்‌: வரம்புரையாக அத்தகைய ஒவ்வொரு விண்ணப்பமும்‌, வேலை வழங்குபவரிடமிருந்து பணியாளருக்கு பணம்‌ செலுத்த வேண்டிய தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள்‌ செய்யப்பட வேண்டும்‌: மேலும்‌ வரம்புரையாக, அத்தகைய விண்ணப்பம்‌ எதனையும்‌, மேற்சொன்ன ஓராண்டுக்‌ காலஅளவினுள்‌ செய்யாமலிருப்பதற்குப்‌ போதிய காரணம்‌ இருந்தது என்று அரசு மனநிறைவடைந்தால்‌, மேற்சொன்ன ஓராண்டுக்‌ காலஅளவு கழிவுற்ற பின்பும்‌ ஏற்றுக்கொள்ளப்படலாம்‌. மேலும்‌ வரம்புரையாக, இந்தப்‌ பிரிவின்படியான இழப்பீட்டுத்‌ தொகை, பிழைப்பூதியத்‌ தொகையில்‌ ஐம்பது விழுக்காடு அல்லது இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு இவற்றில்‌ எது குறைவோ அத்தொகைக்கு மேற்படுதல்‌ ஆகாது. 5. குறித்தசில உரிமைகள்‌ மற்றும்‌ சிறப்புரிமைகளின்‌ காப்புரை.- இந்தச்‌ சட்டத்தில்‌ உள்ள எதுவும்‌, அப்போதைக்கு நடைமுறையில்‌ உள்ள எந்தவொரு சட்டத்தின்‌ கீழும்‌ அல்லது எந்தவொரு ஒப்பந்தம்‌, வழக்கம்‌ அல்லது பயன்பாட்டின்‌ கீழும்‌, இந்தச்‌ சட்டத்தால்‌ அவருக்கு வழங்கப்பட்ட எந்தவொரு உரிமையையும்‌ அல்லது சிறப்புரிமைகளையும்‌ விட அவருக்கு மிகவும்‌ சாதகமான எந்தவொரு உரிமையையும்‌ அல்லது சிறப்புரிமைகளையும்‌ பாதிக்காது. 6. விலக்களிப்பதற்கான அதிகாரம்‌.- அரசு, பொது நலன்‌ கருதி, அவ்வாறு செய்வது உகந்ததென கருதினால்‌, அறிவிக்கை வாயிலாக, அத்தகைய அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்படும்‌ நிபந்தனைகள்‌ ஏதேனும்‌ இருப்பின்‌, அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்தச்‌ சட்டத்தின்‌ அனைத்து அல்லது ஏதேனும்‌ விதிகள்‌, நிறுவனங்களின்‌ வகை அல்லது வகைகள்‌ எதனின்‌ செயல்பாட்டிலிருந்‌ , அத்தகைய காலத்திற்கு அல்லது காலங்களுக்கு மற்றும்‌ மேற்கூறிய அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்படும்‌ அத்தகைய காரணங்களுக்காக விலக்களிக்கலாம்‌. 7. அரசின்‌ அதிகாரங்களை ஒப்படைத்தல்‌.- (1) அரசு, அறிவிக்கை வாயிலாக, தமக்குக்‌ கீழமைந்துள்ள அதிகார அமைப்பு எதற்கும்‌ அல்லது அலுவலர்‌ எவருக்கும்‌ இச்சட்டத்தினால்‌ வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்‌ அனைத்தையும்‌ அல்லது அவற்றில்‌ எதனையும்‌ செலுத்துவதற்கு அதிகாரமளிக்கலாம்‌ மற்றும்‌, அதேபோன்று அத்தகைய அதிகாரத்தைத்‌ திரும்பப்‌ பெறலாம்‌. (2) (1) ஆம்‌ உட்பிரிவின்கீழ்‌ ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்கள்‌ எதனையும்‌ செலுத்துவது, வகுத்துரைக்கப்படக்கூடிய அல்லது அறிவிக்கையில்‌ குறித்துரைக்கப்படக்கூடிய அத்தகைய கட்டுப்பாடுகளுக்கும்‌ நிபந்தனைகளுக்கும்‌ உட்பட்டதாகும்‌, மேலும்‌ அரசு அல்லது இதன்பொருட்டு அரசால்‌ அதிகாரமளிக்கப்பட்ட அத்தகைய அலுவலரால்‌ கட்டுப்படுத்தவும்‌ சீராய்வு செய்யவும்‌ முடியும்‌. அவ்வாறு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரின்‌ செயல்‌ அல்லது நடவடிக்கைகளைக்‌ கட்டுப்படுத்துவதற்கும்‌ மாற்றியமைப்பதற்கும்‌ அரசுக்கு அதிகாரம்‌ உண்டு. 8. நல்லெண்ணத்தில்‌ எடுக்கப்படும்‌ நடவடிக்கைக்குப்‌ பாதுகாப்பு.- (1) இந்தச்‌ சட்டத்தின்படி அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்படி, நல்லெண்ணத்தில்‌ செய்த அல்லது செய்யக்‌ கருதிய செயல்‌ எதற்காகவும்‌ நபரெவருக்கும்‌ எதிராக, உரிமை வழக்கு, குற்றவியல்‌ வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள்‌ எதுவும்‌ தொடரப்படுதல்‌ ஆகாது. (2) இந்தச்‌ சட்டத்தின்படி அல்லது அதன்கீழ்‌ செய்யப்பட்ட விதிகளின்படி, நல்லெண்ணத்தில்‌ செய்த அல்லது செய்யக்‌ கருதிய செயல்‌ எதனாலேனும்‌ விளைவிக்கப்பட்ட அல்லது விளைவிக்கப்படக்கூடிய சேதம்‌ எதற்காகவும்‌, அரசுக்கு எதிராக உரிமை வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவும்‌ தொடரப்படுதல்‌ ஆகாது. 9. தண்டனைகள்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ எந்தவொரு வகைமுறையையும்‌ அல்லது அதன்‌ கீழ்‌ உருவாக்கப்பட்ட ஏதேனும்‌ விதியையும்‌ மீறும்‌ எவரும்‌, மூன்று மாதங்கள்‌ வரை நீடிக்கக்கூடிய ஒரு காலஅளவிற்கு சிறைத்தண்டனை அல்லது ஆயிரம்‌ ரூபாய்க்கு குறையாத அபராதம்‌ அல்லது இரண்டும்‌ விதித்துத்‌ தண்டிக்கப்படுவார்‌. 140. சில நேர்வுகளில்‌ பொறுப்பிலிருந்து உடைமையாளர்‌ அல்லது மேலாளருக்கு விலக்கு அளித்தல்‌.- ஒரு நிறுவனத்தின்‌ உடைமையாளர்‌ அல்லது மேலாளர்‌, இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ தண்டிக்கத்தக்க ஒரு குற்றத்திற்காக, குற்றஞ்சாட்டப்பட்டால்‌, அவர்‌ முறையாக செய்த புகாரின்‌ பேரிலும்‌, அவ்வாறு செய்ய விரும்புவதை எழுத்துப்பூர்வமாக மூன்று முழுமையான நாட்களுக்கு குறையாமல்‌ வழக்குரைஞருக்கு வழங்குவதன்‌. பேரிலும்‌, குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நேரத்தில்‌ உண்மையான குற்றவாளி என்று அவர்‌ குற்றம்‌ சாட்டும்‌ வேறு எந்த நபரையும்‌ நீதிமன்றத்தின்‌ முன்‌ கொண்டு வர அவர்‌ உரிமை கொண்டிருப்பார்‌ மேலும்‌ குற்றம்‌ இழைக்கப்பட்டது நிரூபிக்கப்பட்ட பிறகு, நேர்விற்கேற்ப, நிறுவனத்தின்‌ உடைமையாளர்‌ அல்லது மேலாளர்‌, - (ஐ இந்தச்‌ சட்டத்தை நடைமுறைப்படுத்த அவர்‌ உரிய முயற்சியைப்‌ பயன்படுத்தியுள்ளார்‌ என்றும்‌, மற்றும்‌ (௦) கூறப்பட்ட பிற நபர்‌ கேள்விக்குரிய குற்றத்தை, அவரது அறிவு, இசைவு அல்லது உடந்தை இல்லாமல்‌ செய்தார்‌ என்றும்‌,- நீதிமன்றத்தின்‌ மனநிறைவிற்கு நிரூபிக்கிறார்‌ எனில்‌, அந்த பிற நபர்‌ குற்றத்திற்காக குற்றவாளியாக்கப்படுவார்‌ மற்றும்‌ அவர்‌ நிறுவனத்தின்‌ உடைமையாளர்‌ அல்லது மேலாளராக இருந்தால்‌, அதே போன்ற தண்டனைக்கு பொறுப்பாவார்‌, மேலும்‌ உடைமையாளர்‌ அல்லது மேலாளர்‌, நேர்விற்கேற்ப, அத்தகைய குற்றம்‌ தொடர்பாக இந்த சட்டத்தின்‌ கீழ்‌ எந்தவொரு பொறுப்பிலிருந்தும்‌ விடுவிக்கப்படுவார்‌: வரம்புரையாக, மேற்கூறியவாறு நிரூபிக்க முற்படுகையில்‌, நிறுவனத்தின்‌. உடைமையாளர்‌ அல்லது மேலாளர்‌, நேர்விற்கேற்ப, சத்தியப்‌ பிரமாணத்தின்‌ பேரில்‌ விசாரிக்கப்படலாம்‌, மேலும்‌ அவரது சாட்சியமும்‌ அவருக்கு ஆதரவாக அவர்‌ அழைக்கும்‌ எந்த சாட்சியின்‌ சாட்சியமும்‌ உண்மையான குற்றவாளி என்று அவர்‌ குற்றம்‌ சாட்டும்‌ நபரின்‌ சார்பாகவும்‌ வழக்குரைஞராலும்‌ குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படும்‌: மேலும்‌ வரம்புரையாக, உடைமையாளரால்‌: அல்லது மேலாளரால்‌ உள்ளபடியான குற்றவாளியாகக்‌ குற்றஞ்சாட்டப்பட்ட நபர்‌, குற்றச்சாட்டை விசாரிப்பதற்காகக்‌ குறிக்கப்பட்ட காலத்தில்‌ நீதிமன்றத்தின்‌. முன்‌ கொண்டுவரப்பட இயலாதிருப்பின்‌, நீதிமன்றம்‌ விசாரணையை அவ்வப்போது மூன்று மாதங்களுக்கு மேற்படாத காலஅளவிற்குத்‌ தள்ளி வைக்கலாம்‌ மேலும்‌, மேற்சொன்ன காலஅளவு முடிவதற்குள்‌, உண்மையான குற்றவாளியாகக்‌ குற்றஞ்சாட்டப்பட்ட நபர்‌, அப்போதும்‌ நீதிமன்றத்தின்‌ முன்‌ கொண்டுவரப்பட இயலாவிடின்‌, உடைமையாளர்‌ அல்லது மேலாளருக்கு எதிரான குற்றச்சாட்டை நீதிமன்றம்‌ விசாரிக்க நடவடிக்கை எடுக்கும்‌, குற்றம்‌ நிளூபிக்கப்பட்டால்‌, உடைமையாளர்‌ அல்லது மேலாளரை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கும்‌. 11. குற்றங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்‌.- (1) இச்சட்டத்தின்படி தண்டிக்கத்தக்க குற்றங்கள்‌ எதனையும்‌, பொதுவாக அல்லது இதற்கென அரசால்‌ சிறப்பாக அதிகாரமளிக்கப்பட்ட ஓர்‌ அலுவலரால்‌ எழுத்து மூலம்‌ செய்யப்படும்‌ புகாரின்‌ பேரில்‌ அல்லாமல்‌ எந்த நீதிமன்றமும்‌ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்‌ ஆகாது. (2) பெருநகர குற்றவியல்‌ நடுவர்‌ அல்லது முதல்‌ வகுப்பு நீதித்துறை நடுவர்‌ ஆகியோருக்குக்‌ கீழமைந்த நீதிமன்றம்‌ எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தாலோ அதன்‌ வழியாலோ தண்டிக்கத்தக்க குற்றச்செயல்‌ எதனையும்‌ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்‌ ஆகாது. 12. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌.- (1) இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அரசு, அறிவிக்கை வாயிலாக, விதிகளைச்‌ செய்யலாம்‌. (2) குறிப்பாக, மேற்கூறிய அதிகாரத்தின்‌ பொதுப்பாங்கிற்கு எந்தவித குந்தகமுமின்றி, அத்தகைய விதிகளானது,- (ஐ) வகுத்துரைக்கபடவேண்டி, இந்தச்‌ சட்டத்தால்‌ வெளிப்படையாகத்‌ தேவைப்படும்‌ அல்லது அனுமதிக்கப்பட்ட அனைத்து பொருட்பாடுகளும்‌; 0) பிழைப்பூதியம்‌ செலுத்தப்பட வேண்டிய விதம்‌ மற்றும்‌ நிபந்தனைகள்‌; மற்றும்‌ (c) இச்சட்டத்தின்கீழ்‌ அதிகாரங்கள்‌ ஒப்படைக்கப்படக்கூடிய வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகள்‌, ஆகியவற்றிற்கு வகை செய்யலாம்‌. 13. சட்டமன்றத்தின்‌ முன்‌ வைக்கப்பட வேண்டிய விதிகள்‌ மற்றும்‌ அறிவிக்கைகள்‌.- (1) (ஐ இந்தச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ வகுக்கப்படும்‌ அனைத்து விதிகளும்‌ தமிழ்நாடு அரசிகழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌, அவை ஒரு குறிப்பிட்ட நாளில்‌ நடைமுறைக்கு வருவதாக வெளிப்படையாகக்‌ குறிப்பிடப்பட்டாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளன்றே நடைமுறைக்கு வரும்‌. (b) இந்தச்‌ சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள்‌ அனைத்தும்‌, அவை ஒரு குறிப்பிட்ட நாளில்‌ நடைமுறைக்கு வருவதாக வெளிப்படையாகக்‌ குறிப்பிடப்பட்டாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளன்றே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும்‌ அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர்‌, கூடிய விரைவில்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ வைக்கப்படுதல்‌ வேண்டும்‌. மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர்‌ அல்லது அதனையடுத்த கூட்டத்தொடர்‌ முடிவடைவதற்கு முன்னர்‌ அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதிலும்‌ மாறுதல்‌ எதனையும்‌ சட்டமன்றப்‌ பேரவையானது செய்யுமாயின்‌ அல்லது அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதுவும்‌ செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப்பேரவை முடிவு செய்யுமாயின்‌, அந்த விதி அல்லது அறிவிக்கையானது அதன்‌ பின்னர்‌ அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌ அல்லது நேர்விற்கேற்ப, நடைமுறைக்கு வராது போதல்‌ வேண்டும்‌; எனினும்‌ அவ்வாறான மாறுதல்‌ அல்லது நீக்கம்‌ எதுவும்‌, அந்த விதி அல்லது அறிவிக்கையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல்‌ ஏதொன்றின்‌ செல்லுந்தண்மைக்கும்‌ குந்தகமின்றி இருத்தல்‌ வேண்டும்‌.

Rules, notifications and orders under this Act

Listed from India Code. Each opens there.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts