Tamil Nadu · 1983 · Act 8
Tamil Nadu Marine Fishing Regulation Act, 1983
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
தமிழ்நாடு சட்ட எண்.8/1983
தமிழ்நாடு 1983 ஆம் ஆண்டு மீன் பிடித்தலை முறைப்படுத்தல் சட்டம்
தமிழ்நாடு கடற்கரை முழுவதும் அல்லது அதன் ஒரு பகுதி நெடுக கடலில்
மீன்பிடி கலங்களைக் கொண்டு மீன் பிடிப்பதை முறைப்படுத்தல், கட்டுப்படுத்தல்,
தடை செய்தல் ஆகியவற்றிற்கு வகை செய்யும் சட்டம்.
இந்தியக் குடியரசின் முப்பத்து நான்காம் ஆண்டில் தமிழ்நாடு
சட்டமன்றத்தால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
அத்தியாயம் |
தொடக்கம்.
1. குறுந்தலைப்பும், பரப்பும், தொடக்கமும்.- (1) இச்சட்டம், தமிழ்நாடு 1983 ஆம்
ஆண்டு மீன் பிடித்தலை முறைப்படுத்தல் சட்டம் எனப் பெயர் பெறும்.
(2) இது தமிழ்நாடு முழுவதற்கும் பொருந்தும்.
(3) இது 1983 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 6 ஆம் நாளன்று செயலுக்கு
வந்துள்ளதாகக் கருதப்பட வேண்டும்.
2. விளம்புகை.- இந்தச் சட்டம், அரசமைப்பின் 39-ஆம் உறுப்பின் (0) மற்றும் (௦)
கூறுகளில் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளை எய்துவதற்கான அரசின்
கொள்கைகளைச் செயற்படுத்துவதற்காக என்று ஈங்கிதனால் விளம்பப்படு கின்றது.
3. பொருள் விளக்கங்கள். இச்சட்டத்தில், சந்தர்ப்பம் வேறுபொருள்
குறித்தாலன்றி மற்றப்படி;
(வ) "தீர்ப்பளிக்கும் அதிகாறி" என்பது, அரசு வெளியிடும் அறிவிக்கையில்
குறிப்பிடக்கூடிய பகுதிக்கு இச்சட்டத்தின்படி தீர்ப்பளிக்கும் அதிகாறிக்கு
வழங்கியுள்ள அதிகாரங்களைச் செலுத்தவும், அவருக்கு அளிக்கப்பட்டுள்ள
கடமைகளை ஆற்றவும் அறிவிக்கையின் மூலம் அரசு அதிகாரமளித்துள்ள
மீன்வளத்துறை உதவி இயக்குநரின் பதவி தரத்திற்குக் குறையாத மீன்வளத்
துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரி என்று பொருள்படும்;
(௦) "மேல் முறையீட்டு அதிகாரி" என்பது அரசு வெளியிடும் அறிவிக்கையில்
குறிப்பிடக்கூடிய பகுதிக்கு, இச்சட்டத்தின்படி மேல்முறையீட்டு அதிகாரிக்கு
வழங்கியுள்ள அதிகாரங்களைச் செலுத்தவும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள
கடமைகளை ஆற்றவும் அறிவிக்கையின் மூலம் அரசு அதிகாரமளித்துள்ள
மீன்வளத்துறை துணை இயக்குநரின் பதவி தரத்திற்குக் குறையாத மீன்வளத்
துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரி என்று பொருள்படும்;
(6) "அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி" என்பது 4 ஆம் பிரிவின்கீழ் உள்ள அரசு
அதிகாரமளித்துள்ள ஓர் அதிகாரி என்று பொருள்படும்;
(d) "மீன்" என்பதில் இறால், நண்டு, நத்தை, சிப்பிமன் ஆகியவையும்
அடங்கும்.
(6) "மீன்பிடி கலங்கள்" என்பது ஆதாயத்திற்காகக் கடலில் மீன் பிடிப்பதில்
ஈடுபட்டிருக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள அல்லது பொருத்தப்படாத கப்பல்
அல்லது படகு என்று பொருள்படும். இதில், கடலில் மீண் பிடிப்பதில் ஈடுபட்டுள்ள
பின்வருபவையும் அடங்கும்-
(i) ஆழ்கடல் மீன்பிடி கலங்கள்,
(i) இயந்திர மீன்பிடி கலங்கள்,
(iii) கட்டுமரம்,
(iv) வள்ளம் உட்பட நாட்டுப்படகு, அல்லது
(v) கடலில் மீன் பிடிப்பதில் ஈடுபட்டுள்ள தோணி,
(1) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;
(ஐ "இயந்திர மீன்பிடி கலம்" என்பது 15 பரித்திறனுக்கு குறையாமலும்
ஆனால் 120 பரித்திறனுக்கு மிகாமலுமுள்ள இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதும்,
எட்டு மீட்டருக்குக் குறையாமலும், 15 மீட்டருக்கு மேற்படாமலும், நீளமுள்ளதுமான
கப்பல் அல்லது படகு என்று பொருள்படும். இதில் ஆழ்கடல் மீன்பிடி கலம்
அடங்காது; "ஆழ்கடல் மீன்பிடி கலம்" என்பது 120 பரித்திறனுக்குக் குறையாத
இயந்திரம் பொருத்தப்பட்டதும் 15 மீட்டருக்குக் குறையாத நீளமுள்ளதுமான கப்பல்.
அல்லது படகு என்று பொருள்படும்.
(h) "ஒரு மீன் பிடி கலம் தொடர்பாக, "உரிமையாளர்" என்பதில் மீன்பிடி
கலத்தை விற்பதற்கு அல்லது மாற்றுவதற்கு அதிகாரமுள்ளவர் அல்லது அதனைப்
பாதுகாப்பில் வைத்திருப்பவர் அல்லது அம்மீன்பிடி கலத்திற்காக தானாகவோ,
மற்றவர் சார்பாகவோ வாடகை பெறுபவர் ஆகியோர் அடங்குவர்;
() "துறைமுகம்" என்பது, இச்சட்டத்தின் செயல் நோக்கத்திற்காக
அறிவிக்கையின் மூலம் அரசு அவ்வப்போது குறிப்பிடும் எல்லைகளுக்குள்.
அடங்கிய பகுதி என்று பொருள்படும்;
(J) பதிவு செய்யப்பட்ட மீன்பிடி கலம்" என்பது,-
001972 ஆம் ஆண்டு கடல்படு பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு அதிகார
மன்றச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 13,4972) 11 ஆம் பிரிவின்கீழ் பதிவு
செய்யப்பட்ட ஒரு மீன்பிடி கலம் என்றும்;
(1) 10 ஆம் பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு மீன்பிடி கலம் என்றும்
பொருள்படும்.
(k) "குறிப்பிடப்பட்ட பகுதி" என்பது, அவ்வப்போது அறிவிக்கையின் மூலம்
அரசு குறிப்பிடக்கூடியவாறான இம்மாநில கடற்கரை முழுவதும் அல்லது அதன்
ஒரு பகுதி நெடுக உள்ள, ஆனால் இந்திய ஆட்சி எல்லைக்கு அப்பாற்படாத கடல்
பகுதி என்று பொருள்படும்.
(1) "மாநிலம்" என்பது, தமிழ்நாடு மாநிலம் என்று பொருள்படும். இதில்,
இம்மாநிலத்தின் கடற்கரை நெடுக உள்ள இந்திய ஆட்சி எல்லைக்கு உட்பட்ட
கடல் பகுதி என்பதும் அடங்கும்.
4. இச்சட்டத்தைச் சேர்ந்த எந்த ஒரு விதித்துறையின் செயல் நோக்கங்களுக்காக
அதிகாரிகளுக்கு அதிகாரமளித்தல்.- அரசு அறிவிக்கையின் மூலம்
குறிப்பிடக்கூடிய பகுதிக்கு இச்சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியின்.
அதிகாரங்களைச் செலுத்தவும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை
ஆற்றவும், அவ்வறிக்கையின் மூலம்,-
(@) ஐ தொகுதி அதிகாரியின் பதவித் தரத்திற்குக் குறையாத அரசு
அதிகாரிக்கு; அல்லது
(௦) மத்திய அரசின் இசைவுடன் அவ்வரசைச் சேர்ந்த அதிகாரிக்கு அதிகாரம்
வழங்கலாம்.
அத்தியாயம் ॥
குறிப்பிடப்பட்ட பகுதியில் மீண்பிடிப்பதை முறைப்படுத்தல், கட்டுப்படுத்தல், தடை
செய்தல்.
5. குறிப்பிட்ட பகுதிக்குள் சில விவகாரங்களை முறைப்படுத்த, கட்டுப்படுத்த
அல்லது தடை செய்ய அதிகாரம்.- (1) அரசு, (2) உட்பிரிவில் குறிப்பிட்டுள்ள
விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, அறிவிக்கை வெளியிட்டு,
@ அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்படக்கூடிய வகை அல்லது
வகைகளைச் சேர்ந்த மீன்பிடி கலங்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மீன்
பிடிப்பதை முறைப்படுத்தலாம்; கட்டுப்படுத்தலாம் அல்லது தடை செய்யலாம்;
அல்லது
(௦) ஒரு குறிப்பிட்ட பகுதியில் மீன் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மீன்பிடி
கலங்களின் எண்ணிக்கையை முறைப்படுத்தலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்;
அல்லது
(2) அறிவிக்கையில் குறிப்பிடக்கூடிய மீன் வகைகளை, குறிப்பிட்ட
காலத்திற்கு குறிப்பிடப்பட்ட பகுதியில் பிடிப்பதை முறைப்படுத்தலாம்,
கட்டுப்படுத்தலாம் அல்லது தடை செய்யலாம்; அல்லது
(0) அறிவிக்கையில் குறிப்பிடக்கூடிய மீன்பிடி கருவியை ஒரு குறிப்பிட்ட
பகுதியில் பயன்படுத்துவதை முறைப்படுத்தலாம், கட்டுப்படுத்தலாம் அல்லது தடை
செய்யலாம்; அல்லது
(6) அறிவிக்கையில் குறிப்பிடக்கூடிய வகை அல்லது வகைகளைச் சேர்ந்த
மீன்பிடி கலங்களைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒருவர் ஒரு நாளில்
மீன் பிடிப்பதற்குரிய நேரத்தை நிர்ணயிக்கலாம்.
2 1 உட்பிரிவின்கீழ் அறிவிக்கை வெளியிடும்போது, அரசு
பின்வருவனவற்றைக் கருத்திற்கொள்ள வேண்டும்; அவையாவன-
(a) மீன் பிடிப்பதில் ஈடுபட்டுள்ள பல்வேறு பிரிவினரின், குறிப்பாக கட்டுமரம்,
நாட்டுப்படகு அல்லது தோணி முதலிய பழமையான மீன்பிடி கலங்களைப்
பயன்படுத்துவோரின் நலனைப் பாதுகாக்க வேண்டிய அவசியம்;
(௦) அறிவியல் முறையில் மீன்வளத்தைப் பாதுகாக்கவும், மீன்பிடித்தலை
முறைப்படுத்தவும் வேண்டிய அவசியம்;
(6) கடலில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய அவசியம்;
(0) வரையறுக்கப்படக்கூடிய ஏனையவை.
(3) (1), (2) உட்பிரிவுகளில் என்ன சொல்லியிருப்பினும், எந்திர மீன்பிடி
கலத்தின் உரிமையாளர் அல்லது தலைவர் இம்மாநிலத்தின் கடற்கரை
பகுதியிலிருந்து கடலில் மூன்று மைல் தொலைவுக்குள் மீன் பிடிப்பதற்கு அந்த
மீன் பிடி கலத்தைப் பயன்படுத்தவோ பயன்படுத்தச் செய்யவோ பயன்படுத்த
அனுமதிக்கவோ கூடாது. இயந்திர மீன்பிடி கலத்தின் உரிமையாளர் அல்லது
தலைவர் இம்மாநிலத்தின் கடற்கரைப் பகுதியிலிருந்து கடலில் மூன்று மைல்
தொலைவுக்கு அப்பால் மட்டுமே அந்த மீன்பிடி கலத்தைப் பயன்படுத்த வேண்டும்
அல்லது பயன்படுத்தச் செய்ய வேண்டும் அல்லது பயன்படுத்த அனுமதிக்க
வேண்டும். அவ்வாறு கடலில் மூன் மைலுக்கு அப்பால் மீன்பிடிப்பதாவது
இச்சட்டத்தின் விவர அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்கு
உட்பட்டே நடைபெற வேண்டும்
(4) (1), (2) உட்பிரிவுகளில் எண்ன சொல்லியிருப்பினும் ஆழ்கடல் மீன்பிடி
கலத்தின் உரிமையாளர் அல்லது தலைவர் இம்மாநிலத்தின் கடற்கரைப்
பகுதியிலிருந்து கடலில் மூன்று மைல் தொலைவுக்குள் மீன் பிடிப்பதற்கு அந்த
மீன்பிடி கலத்தை பயன்படுத்தவோ, பயன்படுத்த செய்யவோ, பயன்படுத்த
அனுமதிக்கவோ கூடாது. ஆழ்கடல் மீன்பிடி கலத்தின் உரிமையாளர் அல்லது
தலைவர் இம்மாநிலத்தின் கடற்கரைப் பகுதியிலிருந்து கடலில் மூன்று மைல்
தொலைவுக்கு அப்பால் அந்த மீன்பிடி கலத்தைப் பயன்படுத்த வேண்டும் அல்லது
பயன்படுத்தச் செய்ய வேண்டும் அல்லது பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு கடலில் மூன்று மைல் தொலைவுக்கு அப்பால் மீன்பிடிப்பதானது அரசு
அறிவிப்பு வெளியிட்டு அதில் குறிப்பிடக்கூடிய நிபந்தனைகளுக்கு உட்பட்டே
நடைபெற வேண்டும்.
6. 5-ஆம் பிரிவின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு முரணாக மீன்பிடி
கலத்தைப் பயன்படுத்துவதற்குத் தடை.- மீன்பிடி கலத்தின் உரிமையாளர் அல்லது
தலைவர் எவரும் 5-ஆம் பிரிவின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு முரணாக
எந்த வகையிலும் அம்மன் பிடிகலத்தை மீன் பிடிப்பதற்குப் பயண்படுத்தவோ,
பயன்படுத்தச் செய்யவோ, பயன்படுத்த அனுமதிக்கவோ கூடாது;
ஆனால், இந்த அறிவிக்கையில் கண்டுள்ளது எதுவும், குறிப்பிடப்பட்ட
பகுதியைத் தவிர வேறு ஒரு பகுதியில் மீன் பிடிப்பதற்காக அல்லது வேறு
நோக்கத்திற்காக அப்பகுதிக்கு அல்லது அப்பகுதியிலிருந்து குறிப்பிடப்பட்ட பகுதி
மூலமாக கடற்கரைப் பகுதியிலிருந்து அல்லது கடற்கரைப் பகுதிக்கு மின்பிடிகலம்
செல்வதைத் தடுப்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது.
மேலும், குறிப்பிடப்பட்ட பகுதி மூலமாக அத்தகைய மீன்பிடி கலம்
செல்வதாவது, கட்டுமரம், நாட்டுப்படகு அல்லது தோணி போன்ற பழமையான
மீன்பிடி கலங்களைப் பயன்படுத்தி குறிப்பிடப்பட்ட பகுதியில் மீன்பிடிக்கும்
ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடி வலைகளுக்கு அல்லது மீன்பிடி
கருவிகளுக்கு எந்த வகையிலும் சேதம் விளைவிக்கக் கூடாது.
7. மீன்பிடி கலங்களுக்கு உரிமம் வழங்குதல்.- (1) குறிப்பிடப்பட்ட பகுதி ஒன்றில்
மீன் பிடிப்பதற்கு அத்தகைய மீன்பிடி கலத்தைப் பயன்படுத்த உரிமம் வழங்குமாறு
கேட்டு, மீன்பிடி கலத்தின் உரிமையாளர் அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரிக்கு
விண்ணப்பம் ஒன்றைச் செய்து கொள்ளலாம்.
(2) () உட்பிரிவின்கீழ் செய்து கொள்ளப்படும் விண்ணப்பம் ஒவ்வொன்றும்
வரையறுக்கப்படக்கூடிய படிவத்திலும் வரையறுக்கப்படும் விவரங்களைக்
கொண்டதாகவும் இருக்க வேண்டும். இத்துடன் வரையறுக்கப்படக்கூடிய
கட்டணமும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
(3) அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரி தாம் தகுதியெனக் கருதக்கூடிய
விசாரணையைச் செய்த பின்னரும், (4) உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட
பொருள்களைக் கருத்தில் கொண்டும் குறிப்பிடப்பட்ட பகுதியில் அல்லது
பகுதிகளில் மீன் பிடிப்பதற்காக அத்தகைய மீன்பிடி கலத்தைப் பயன்படுத்த மீன்பிடி
கலத்தின் உரிமையாளருக்கு உரிமம் ஒன்றை வழங்கலாம் அல்லது உரிமம் வழங்க
மறுக்கலாம்.
(4) (௫) உட்பிரிவின் கீழ் உரிமத்தை வழங்கும்போது அல்லது மறுக்கும் போது
அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரி பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள
வேண்டும்; அவையாவன:-
(ஐ மீன்பிடிகலம் பதிவு பெற்ற மீண்பிடிகலமா;
(௦) மீன்பிடி கலத்தில் பொருத்தப்பட்டுள்ள துணைக் கருவிகள், மீன்பிடி
கருவி ஆகியன உட்பட அதன் நிலைமை;
(6) 5-ஆம் பிரிவின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கை;
(0) வரையறுக்கப்படக்கூடிய ஏனையவை.
(5) இப்பிரிவின்கீழ் வழங்கப்படும் உரிமம் ஒன்று, வரையறுக்கப்படும்.
படிவத்தில் இருப்பதோடு, கட்டணம் செலுத்துவது தொடர்பான நிபந்தனைகள்,
அந்த நிபந்தனைகளைப் பின்பற்றிச் செயல்படுத்துவதற்கான பிணையத் தொகை:
கொடுத்தல் உட்பட வரையறுக்கப்படக்கூடிய நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்க
வேண்டும்.
ஆனால், வெவ்வேறு வகை மீன்பிடி கலங்களுக்கான உரிமங்களைப்
பொறுத்தவரை வெவ்வேறு கட்டணங்கள், வெவ்வேறு பிணையத் தொகைகள்
வரையறுக்கப்படலாம்.
(6) இப்பிரிவின்கீழ் வழங்கப்படும் உரிமம் அதில் குறிப்பிடக்கூடிய கால
அளவுக்கு அல்லது அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரி அக்கால அளவை நீட்டிக்க
பொருத்தமெனக் கருதி அவ்வாறு நீட்டிக்கப்படக்கூடிய கால அளவுக்குச்
செல்திறனுடையதாக இருக்கும்.
8. உரிமம் பெறாத மீன்பிடி கலங்களைப் பயன்படுத்தி மீன் பிடிக்க தடை.-
இச்சட்டம் செயலுக்கு வரத் தொடங்கிய பின்னர், எவரும் இப்பிரிவின்கீழ் உரிமம்
பெற்றிருக்காத மீன்பிடி கலத்தைப் பயன்படுத்தி குறிப்பிடப்பட்ட பகுதியில் மீன்
பிடிக்கக் கூடாது.
ஆனால், இச்சட்டம் செயலுக்கு வரத் தொடங்கிய நாளுக்கு அடுத்து முன்னர்
மீன் பிடித்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த மீன்பிடி ஒன்றிற்கு இப்பிரிவில்
கண்டுள்ளதெதுவும் மூன்று மாத கால அளவுக்கு அல்லது அரசு அறிவிக்கை
வெளியிட்டு குறிப்பிடக்கூடிய கால அளவுக்கு பொருந்தாது.
9. உரிமங்களை இரத்து செய்தல், தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், மாற்றுதல்,
திருத்துதலும், பதிவுச் சான்றிதழை இரத்து செய்தல், தற்காலிகமாக நிறுத்தி
வைத்தலும்.- (1) அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரிக்கு இது தொடர்பாக குறிப்பு
அனுப்பப்படுவதன் பேரில் அல்லது வேறு வகையில்
(@) 7-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்ட உரிமம் ஒன்று, இன்றியமையாத
தகவலைத் தவறாக அளித்துப் பெறப்பட்டுள்ளதென்றோ:
(b) உரிமம் வைத்திருப்பவர், இந்த உரிமம் எந்த நிபந்தனைகளுக்குட்பட்டு
வழங்கப்பட்டுள்ளதோ அந்த நிபந்தனைகளை நியாயமான காரணமின்றி பின்பற்றத்
தவறிவிட்டார் அல்லது இச்சட்டத்தின் விதித்துறைகள் அல்லது அவற்றின்கீழ்
பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது இயற்றப்பட்ட விதிகள் ஆகியவற்றை
மீறியுள்ளார் என்றோ அவர் மனநிறைவடைந்தால், உரிமம் வைத்திருப்பவருக்கு
இச்சட்டத்தின்கீழ் விதிக்கத்தக்க வேறு எந்த அபராதத்திற்கும் பாதகமின்றி,
மேற்சொன்ன அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரி, உரிமம் வைத்திருப்பவருக்கு
தமது தரப்பை எடுத்துச் சொல்ல நியாயமான வாய்ப்பு அளித்த பிண்ணர், உரிமத்தை
இரத்து செய்யலாம் அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் அல்லது உரிமம்
எந்த நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கப்பட்டுள்ளதோ அந்த நிபந்தனைகளின்படி
செயல்படுவதற்காக கொடுக்கப்பட்ட பிணையத் தொகை முழுவதையும் அல்லது
அதன் ஒரு பகுதியைப் பறிமுதல் செய்யலாம்.
(2) இது தொடர்பாக இயற்றப்படக்கூடிய விதிகளுக்குட்பட்டு அதிகாரம்
அளிக்கப்பட்ட அதிகாரி, 7-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்ட உரிமத்தை மாற்றலாம்
அல்லது திருத்தலாம்.
(3) அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரிக்கு இது தொடர்பாக குறிப்பு
அனுப்பப்படுவதன் பேரில் அல்லது வேறு வகையில்,
(ஐ 10 ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் இன்றியமையாத
தகவலைத் தவறாக அளித்துப் பெறப்பட்டுள்ளதென்றோ;
(b) பதிவுச் சான்றிதழ் வைத்திருப்பவர், இந்தச் சான்றிதழ்
நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கப்பட்டுள்ளதோ அந்த நிபந்தனை நியாயமான
காரணமின்றி பின்பற்றத் தவறி விட்டார் அல்லது இச்சட்டத்தின் விதித்துறைகள்,
அல்லது அவற்றின்கீழ் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது இயற்றப்பட்ட
விதிகள் ஆகியவற்றை மீறியுள்ளார் என்றோ அவர் மனநிறைவடைந்தால், பதிவுச்
சான்றிதழ் வைத்திருப்பவருக்கு இச்சட்டத்தின்கீழ் விதிக்கத்தக்க வேறு எந்த
அபராதத்திற்கும் பாதகமின்றி அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி, பதிவுச் சான்றிதழ்
வைத்திருப்பவருக்கு தமது தரப்பை எடுத்துச் சொல்ல நியாயமான வாய்ப்பு அளித்த
பின்னர் பதிவுச் சான்றிதழை இரத்து செய்யலாம் அல்லது தற்காலிகமாக நிறுத்தி
வைக்கலாம்.
10. மீன்பிடி கலங்களைப் பதிவு செய்தல். (1) 1972 ஆம் ஆண்டு கடல் படு பொருள்
ஏற்றுமதி மேம்பாட்டு அதிகார மன்றச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 134972) 14-
ஆம் பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்ட மீன் கலமல்லாத பிற மீன்பிடி கலம்
ஒவ்வொன்றின் உரிமையாளரும் அந்த மீன்பிடி கலத்தை இச்சட்டத்தின் கீழ் பதிவு
செய்து கொள்ள வேண்டும்.
(2) அத்தகைய மீன்பிடி கலத்தைப் பதிவு செய்து கொள்வதற்கான
விண்ணப்பம் ஒவ்வொன்றையும் அதன் உரிமையாளர், அதிகாரம் அளிக்கப்பட்ட
அதிகாரிக்கு வரையறுக்கப்பட்ட படிவத்தில் செய்து கொள்ள வேண்டும். அத்துடன்
வரையறுக்கப்படக்கூடிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்,
(a) அவர் முதலில் மீன்பிடி கலத்தின் சொந்தக்காரராக ஆகும் நாளிலிருந்து
ஒரு திங்கள் முடிவடைவதற்கு முன்; அல்லது
(௦) இச்சட்டம் செயலுக்கு வரத் தொடங்கிய நாளிலிருந்து மூன்று திங்கள்:
முடிவடைவதற்கு முன் இவற்றில் எது பிந்தியதோ அந்த நாளுக்கு முன்
விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும்.
ஆனால், அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரி, எழுத்து மூலமாகப் பதிவு
செய்யப்பட வேண்டிய போதிய காரணத்திற்காக, தாம் தகுதியெனக் கருதும் கால
அளவுக்கு மீன்பிடி கலத்தைப் பதிவு செய்வதற்கான கால அளவை நீட்டிக்கலாம்.
(3) அவ்வாறு மீன்பிடிக் கலத்தைப் பதிவு செய்து கொண்ட
உரிமையாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரி வரையறுக்கப்பட்ட
படிவத்தில் பதிவுச் சான்றிதழ் ஒன்றை வழங்க வேண்டும். அச்சான்றிதழின்
விவரங்களை வரையறுக்கப்படக்கூடிய படிவத்தில் தாம் எழுதி வரவேண்டிய
பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
(4) ஒரு முறை வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ், அதிகாரம் அளிக்கப்பட்ட
அதிகாரியால் இரத்து செய்யப்பட்டால் அல்லது தற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்பட்டாலன்றி தொடர்ந்து செயலில் இருக்கும்.
(5) இப்பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி கலம் ஒவ்வொன்றிலும்,
அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரியால் அதற்கென ஒதுக்கப்படும் பதிவுக் குறி
பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். அக்குறி வரையறுக்கப்பட்ட முறையில் காட்டி
வைக்கப்பட வேண்டும்.
(6) பதிவு செய்யப்பட்ட மீன்பிடி கலம் நீங்கலான பிற மீன்பிடி கலம் எதுவும்
7-ஆம் பிரிவின்கீழ் உரிமம் பெறத் தகுதி உடையதாகாது.
11. மின்பிடிக் கலங்கள் செல்வது குறித்து அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாறிக்குத்
தகவல் கொடுக்க வேண்டும் என்பது.- பதிவு செய்துகொண்ட மீன்பிடி கலம் ஒன்று
ஒரு துறைமுகப் பகுதியிலிருந்து மற்றொரு துறைமுகப் பகுதிக்குச் செல்லும்போது
அந்த மீன்பிடி கலத்தின் உரிமையாளர், அந்த மீன்பிடி கலத்தைப் பதிவு செய்ய
அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரிக்கு, அந்த மீன்பிடி கலம் எப்பகுதிக்குப்
பயணமாகிறதோ, அப்பகுதியின் மீது அதிகார வரம்புடைய துறைமுக அதிகாரிக்கும்
வரையறுக்கப்படக்கூடிய முறையில் தகவல் கொடுக்க வேண்டும்.
12. பதிவு செய்து கொண்ட மீன்பிடி கலங்களின் உரிமையாளர்களின் விவரங்கள்
அளிக்க வேண்டும் என்பது.- (1) பதிவு செய்து கொண்ட மீன்பிடி கலங்களின்.
உரிமையாளர் ஒவ்வொருவரும், வரையறுக்கப்படும் கால அளவில்
வரையறுக்கப்படும் விவரங்களை வரையறுக்கப்படும் முறையில் அதிகாரம்
அளிக்கப்பட்ட அதிகாரிக்குக் கொடுக்க வேண்டும்.
(2) இப்பிரிவின் கீழ் கொடுக்கப்படும் விவரங்கள் சரியானவைதானா என்று
சரி பார்க்க, அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரி, பதிவு செய்து கொண்ட மீன்பிடி கலம்
எதனையும் பார்வையிடலாம்.
13. 7,940 பிரிவுகளின்கீழ் பிறப்பிக்கப்படும் ஆணைகளே முடிவானவை என்பது.-
மீன்பிடி கலம் ஒன்றிற்கு உரிமம் வழங்கி அல்லது உரிமம் வழங்க மறுத்து அல்லது
அத்தகைய உரிமத்தை இரத்து செய்து, தற்காலிகமாக நிறுத்தி வைத்து, மாற்றி
அல்லது திருத்தியமைத்து அல்லது மீன்பிடி கலத்தின் பதிவுச் சான்றிதழைப் பதிவு
செய்து அல்லது இரத்து செய்து அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைத்து 7, 9
அல்லது 10-ஆம் பிரிவுகளின்கீழ் அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரி எடுக்கும்
முடிவு ஒவ்வொன்றும், 14-ஆம் பிரிவின்கீழ் மேல்முறையீடு
செய்துகொள்வதற்கான உரிமைக்குட்பட்டு முடிவானதாகும்.
14. உரிமத்தை வழங்க மறுத்துப் பிறப்பிக்கும் ஆணைகள் முதலியனவற்றை
எதிர்த்து மேல்முறையீடு செய்து கொள்ளுதல்.- (1) மீன்பிடி கலம் ஒன்றிற்கு
உரிமம் வழங்க மறுத்து அல்லது அத்தகைய உரிமத்தை இரத்து செய்து
தற்காலிகமாக நிறுத்தி வைத்து அல்லது மாற்றி அல்லது திருத்தம் செய்து அல்லது
மீன்பிடி கலத்தைப் பதிவு செய்ய மறுத்து அல்லது அக்கலத்தின் பதிவுச்
சான்றிதழை இரத்து செய்து அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அதிகாரம்
அளிக்கப்பட்ட அதிகாரி பிறப்பிக்கும் ஆணை ஒன்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் அந்த
ஆணை அவருக்கு அனுப்பப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள்
மேல்முறையீட்டு அதிகார மன்றத்திற்கு மேல்முறையீடு செய்து கொள்ளலாம்;
ஆனால், மேல்முறையீட்டை உரிய கால அளவிற்குள் செய்து
கொள்வதினின்றும் மேல்முறையீடு செய்து கொள்பவர் தடுக்கப்பட்டார் என்று
அந்த அதிகார மன்றம் மனநிறைவடைந்தால், மேற்சொன்ன முப்பது நாட்கள்
முடிவடைந்த பின்னர், ஆனால் அறுபது நாட்கள் முடிவடையும் முன்னர்
மேல்முறையீட்டை ஏற்கலாம்.
(2 (1) உட்பிரிவின் கீழ் மேல்முறையீடு வரப்பெறுவதன் பேரில்
மேல்முறையீட்டு அதிகார மன்றம், மேல்முறையீடு செய்து கொள்பவர் தமது
தரப்பை எடுத்துச் சொல்ல நியாயமான வாய்ப்பு அளித்த பின்னர் தாம் தகுதியெனக்
கருதக்கூடியஆணைகளை இயன்ற விரைவில் பிறப்பிக்க வேண்டும்.
(3) மேல்முறையீட்டு அதிகார மன்றம் இப்பிரிவின்கீழ் பிறப்பிக்கும் ஆணை
ஒவ்வொன்றும் முடிவானதாகும்.
அத்தியாயம். ॥
அபராதங்கள்.
15. மீன்பிடி படகுகளில் நுழைந்து சோதனையிடுவதற்கு அதிகாரம்.- அதிகாரம்
பெற்ற அதிகாரி, இச்சட்டத்தில் எவையேனும் விதித்துறைகளுக்கு அல்லது
வெளியிடப்பெற்ற யாதொரு அறிவிக்கைக்கு அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட
விதிக்கு அல்லது இச்சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட உரிமத்தின் யாதொரு
நிபந்தனைகளுக்கு முரணாக மீன்பிடி படகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக
அல்லது பயன்படுத்தி வந்துள்ளதாக நம்புவதற்குக் காரணமிருந்தால், அவர்
அத்தகைய மீன்பிடி படகில் நுழைந்து சோதனையிடலாம். அதைப் பிடித்து
வைத்துக் கொள்ளலாம்; அதில் மீன் ஏதேனும் இருந்தால் அதைப் பறிமுதல்
செய்யலாம்.
16. பறிமுதல் செய்யப்பட்ட மீனை விற்பனை செய்தல்- (1) அதிகாரம் பெற்ற
அதிகாரி, இச்சட்டத்தில் 15 ஆவது பிரிவின்கீழ் பிடித்து வைத்த மீன்பிடி படகை
வரையறுக்கப்பட்ட இடத்தில் வரையறுக்கப்பட்ட முறையில் வைத்து வர
வேண்டும்.
(2) பறிமுதல் செய்த மீனைப் பாதுகாத்து வைக்க ஏற்ற வசதிகள்
இல்லையெனில், அதிகாரம் பெற்ற அதிகாரி, அந்த மனை விற்பனை செய்வது
அவசியமெனக் கருதினால், அவர் அதை அவ்வாறே விற்பனை செய்து
அத்தொகையை ந்தி விசாரணை அலுவலர் அலுவலகத்தில் வரையறுக்கப்பட்ட
நடைமுறையில் வைப்பீடு செய்ய வேண்டும்.
17. தீர்ப்பு அளித்தல்.- (1) 15 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்ட யாதொரு அதிகாரம்
பெற்ற அதிகாரி, இச்சட்டத்தில் எவையேனும் விதித்துறைகளுக்கு அல்லது
வெளியிடப்பெற்ற யாதொரு அறிவிக்கைக்கு அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட
விதிக்கு அல்லது இச்சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட உரிமத்தில் எந்த
நிபந்தனைகளுக்கேனும் முரணாக மீன்பிடி படகு பயன்படுத்தப்பட்டுள்ளதாக
அல்லது பயன்படுத்தப்பட்டு வருவதாக நம்புவதற்குரிய காரணமிருந்தால், அவர்
தீர்ப்பு அளிக்கும் அதிகாரிக்கு அது பற்றி புகார் ஒன்றைக் கொடுக்க வேண்டும்.
(2) சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவருக்கும் தங்கள் தரப்பில் உள்ளதை
எடுத்துரைக்கப் போதிய வாய்ப்பு அளித்த பின்னர், வரையறுத்த நடைமுறையில்
தீர்ப்பளிக்கும் அதிகாரி, அந்தப் புகாரில் கண்ட தகவல்களின் பேரில் விசாரணை
ஒன்றை மேற்கொள்வார்.
18. அபராதம்.- (1) 17 ஆவது பிரிவின்கீழ் விசாரணை செய்த பின்னர் தீர்ப்பளிக்கும்
அதிகாரி இச்சட்டத்தின் யாதொரு விதித்துறைகளுக்கு அல்லது வெளியிடப்பெற்ற
யாதொரு அறிவிக்கைக்கு அல்லது அதன்கீழ் செய்யப்பப்பட்ட விதிக்கு அல்லது
இச்சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட உரிமத்தின் யாதொரு நிபந்தனைகளுக்கு
முரணாக மீன்பிடிப் படகை யாதொரு நபர் பயன்படுத்தியதாக அல்லது பயன்படுத்தக்
காரணமாக இருந்ததாக அல்லது பயன்படுத்த அனுமதித்ததாகக் கருதி அவர்
குற்றவாளியென்று தீர்ப்பளிக்கும் அதிகாரி முடிவு செய்வதன்பேரில், அந்த
நபருக்கு நீதி விசாரணை அதிகாரி விதிக்கக்கூடிய கீழ்க்கண்ட தொகைக்கு
மேற்படாமல் அபராதம் விதிக்கலாம்; அதாவது,
(அ) மீனின் மதிப்பு ஆயிரம் ரூபாய் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால்
ஐயாயிரம் ரூபாயும்;
(ஆ) மீனின் மதிப்பு ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் மனி
மதிப்பைப் போல் ஐந்து மடங்குத் தொகையும்; அல்லது
(௫) எந்த மீனும் இல்லாது போகிற பிற நேர்வில் ஐயாயிரம் ரூபாயும்.
(2) (1) உட்பிரிவின் கீழ் விதிக்கப்படக்கூடிய யாதொரு அபராதத்துடன்
தீர்ப்பளிக்கும் அதிகாறி,-
(ஐ 1) உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் பயன்படுத்தப்பட்டு
வருகிற அல்லது பயன்படுத்தக் காரணமாக இருந்த அல்லது பயன்படுத்த
அனுமதிக்கப்பட்ட மீன்பிடி படகின் பதிவுச் சான்றிதழை அல்லது நிபந்தனை
மீறப்பட்டுள்ள உரிமத்தை- () நேர்விற்கேற்ப ரத்து செய்ய அல்லது
செல்திறனற்றதாக்க அல்லது (i) தீர்ப்பளிக்கும் அதிகாரி தகுதி என கருதுகிறகால
அளவிற்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆணை பிறப்பிக்கலாம்; அல்லது
(௦) 15 ஆம் பிரிவின் கீழ் கைப்பற்றப்பட்ட அல்லது பறிமுதல் செய்யப்பட்ட
மீன்பிடி படகு அல்லது மீன் அல்லது 16 ஆம் பிரிவின் (2) உட்பிரிவின்கீழ்
விற்பனை செய்யப்பட்டு தீர்ப்பளிக்கும் அதிகாரி அலுவலகத்தில் வைப்பிடு
செய்யப்பட்ட, மீன் விற்று முதல் தொகை அரசுக்கு பறிமுதலாகிவிடும்.
ஆனால் மீன்பிடி படகின் உரிமையாளரை அல்லது அந்த மீன்பிடி படகின்
பேரில் உரிமை பாராட்டும் ஒருவரை விசாரணை செய்த பின்பு அத்தகைய தவறு
நடப்பதைத் தவிர்க்க அத்தகைய உரிமையாளர் அல்லது உரிமை பாராட்டுபவர்
போதிய கவனம் செலுத்தியுள்ளாரென்று தீர்ப்பளிக்கும் அதிகாரி தெளிந்தால்,
மீன்பிடி படகு எதுவும் (b) பகுதியின்கீழ் பறிமுதல் செய்யப்படக்கூடாது.
19. மேல்முறையீடுகள்.- (1) தீர்ப்பளிக்கும் அதிகாரியின் ஆணையினால்
பாதிக்கப்பட்ட ஒருவர் அந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 3௦
நாட்களுக்குள், மேல்முறையீட்டு அதிகாரிக்கு மேல்முறையீடு ஒன்றைச் செய்து
கொள்ளலாம். ஆனால், மேல்முறையீடு செய்து கொள்பவர் மேல்முறையீடு உரிய
நேரத்தில் செய்து கொள்ளத் தவறியதற்குப் போதிய காரணம் இருந்ததென்று
தெளியவந்தால், மேற்சொன்ன 30 நாட்கள் முடிந்ததற்குப் பின்னர் ஆனால்,
மேற்சொன்ன கால அளவு முடிந்த நாளிலிருந்து 60 நாட்கள் முடிவதற்கு முன்பாக,
மேல்முறையீட்டு அதிகாரி யாதொரு முறையீட்டையும் பெற்றுக் கொள்ளலாம்;
(2) எந்த ஆணைக்கு எதிராக மேல் முறையீடு செய்து கொள்ளப்படுகிறதோ
அந்த ஆணையின் பேரில் செலுத்தத்தக்க அபராதத்தொகையை மேல்முறையீடு
செய்து கொள்பவர் அப்போது செலுத்தினாலொழிய மேல்முறையீட்டு அதிகாரி
இப்பிரிவின்கீழ் எந்த மேல்முறையீட்டையும் ஏற்க அனுமதிக்க மாட்டார்.
ஆனால், இது தொடர்பாக மேல் முறையீட்டாளர் செய்துகொள்கின்ற
விண்ணப்பத்தின் பேரில், மேல்முறையீட்டு அதிகாரி இந்த உட்பிரிவின்கீழ்
வைப்பீடு செய்வதனால் மேல்முறையீட்டாளருக்கு விரும்பத்தகாத இடர்ப்பாடுகள்.
நேருமென்று ஐயமறத் தெளிந்தால், நிபந்தனை ஏதுமின்றியே அல்லது அவர் தாம்
தகுதியெனக் கருதுகிற நிபந்தனைகளுடனோ அல்லது வைப்பீட்டு முறையைக்
கைவிடுமாறு எழுத்து மூலமாக ஆணை பிறப்பிக்கலாம்.
(3) (1) உட்பிரிவின் கீழ் மேல்முறையிடொன்றைப் பெற்றுக் கொள்வதன்.
பேரில், மேல்முறையீட்டு அதிகாரி, தாம் தகுதியெனக் கருதுகிற விசாரணையை
மேற்கொண்டும், சம்பந்தப்பட்ட நபர்களுக்குத் தங்கள் தரப்பை எடுத்துரைக்க
நியாயமான சந்தர்ப்பம் அளித்ததற்குப் பின்னரும் எந்த ஆணைக்கு எதிராக
மேல்முறையீடு செய்து கொள்ளப்பட்டதோ அந்த ஆணையை உறுதி செய்யலாம்,
திருத்தியமைக்கலாம் அல்லது இரத்து செய்யலாம். மேல்முறையீட்டு அதிகாரியின்
முடிவு இறுதியானதாகும்; மேலும்
@ (2) உட்பிரிவின்கீழ் அபராதத் தொகையாக வைப்பீடு செய்த
தொகையானது மேல்முறையீட்டு அதிகாரியால் செலுத்தப்பட வேண்டுமென்று
கட்டளையிடப்பட்ட தொகையை விட கூடுதலாக இருந்தால், அந்தக் கூடுதல்
தொகை அல்லது
(௦) அபராதத் தொகை விதித்துள்ள ஆணையை மேல்முறையீட்டு அதிகாரி
இரத்து செய்து விட்டால், அபராதத் தொகையாக வைப்பிடு செய்த தொகை
முழுவதும் மேல்முறையீட்டாளருக்குத் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.
20. மேல்முறையீட்டு அதிகாரியினால் செய்யப்படுகிற மறுஆய்வு.- 18 ஆம்
பிரிவின்கீழ் தீர்ப்பளிக்கும் அதிகாரி ஒருவர் பிறப்பித்ததும் 19 ஆவது பிரிவின்கீழ்
அந்த ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செய்து கொள்ளப்படாததுமான யாதொரு
ஆணை தொடர்பான பதிவேடுகளை அந்த ஆணை
சட்டத்தகவுடைமையுள்ளதுதானா அல்லது இது தொடர்பாகப் பின்பற்றப்பட்ட
முறை ஒழுங்கானதுதானா என்று அறிந்து கொள்ளும் காரியத்திற்காக
மேல்முறையீட்டு அதிகாரி அத்தகைய பதிவேடுகளைக் கேட்டுப் பெற்று ஆய்வு
செய்து தாம் தகுதியெனக் கருதுகிற வகையில் ஆணை பிறப்பிக்கலாம்;
ஆனால், எவரையும் பாதிக்கக் கூடிய ஆணை எதையும்,
பாதிக்கப்படக்கூடியவருக்கு இது குறித்து விசாரணை செய்யப்படுவதற்கு
நியாயமான சந்தர்ப்பம் கொடுக்காமல் பிறப்பிக்கக்கூடாது.
21. இச்சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொள்வது தொடர்பாக தீர்ப்பளிக்கும்
அதிகாரிக்கும் மேல்முறையீட்டு அதிகாரிக்கும் உள்ள அதிகாரங்கள்.- (1)
தீர்ப்பளிக்கும் அதிகாறியும் மேல்முறையீட்டு அதிகாரியும் விசாரணை ஒன்றை
மேற்கொள்கையில், 1908 ஆம் ஆண்டு சிவில் வழக்கு நடைமுறைச் சட்டத்தின்
(மத்தியச் சட்டம் 5/1908) கீழ், பின்வருபவை தொடர்பாக வழக்கு ஒன்றை
விசாரிக்கையில் சிவில் வழக்கு நீதிமன்றத்திற்குள்ள அதிகாரங்கள்
அனைத்தையும் பெறுவர்:
(ஐ சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுத்தல் மற்றும் அவர்களைக்
கண்டிப்பாகச் வரச் செய்தல்;
(b) யாதொரு ஆவணத்தைக் கண்டறிந்து தாக்கல் செய்யுமாறு கோருதல்;
(6) யாதொரு நீதிமன்றம் அல்லது அலுவலகத்திலிருந்து பொது பதிவேட்டை
அல்லது அதன் நகலைக் கேட்டுப் பெறுதல்;
(0) உறுதிமொழிப் பத்திரங்களுக்கான சாட்சியங்களை பெறுதல்;
(e) சாட்சிகளை விசாரிப்பதற்காக அல்லது ஆவணங்களைச்
சரிபார்ப்பதற்காக கமிஷன்களை நியமித்தல்;
(2) இச்சட்டத்தின் கீழ் அதிகாரம் செலுத்துகையில் தீர்ப்பளிக்கும் அதிகாரி
அல்லது மேல்முறையீட்டு அதிகாரி, 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச்
சட்டக் கோவையின் (மத்தியச் சட்டம் 271974) 345, 346 ஆகிய பிரிவுகளின்
செயல் நோக்கங்களுக்காக சிவில் நீதிமன்றமாகக் கருதப்பட வேண்டும்.
22. கம்பெனிகள் இழைக்கும் குற்றங்கள்.- (1) இச்சட்டத்தின்கீழ் கம்பெனி ஒன்று
குற்றமிழைத்திருந்தால், குற்றமிழைக்கப்பட்ட நேரத்தில் கம்பெனியின்
அலுவல்களைக் கவனிப்பதற்கும், கம்பெனிக்கும் பொறுப்புடைய ஒவ்வொரு
நபரும், அக்குற்றமிழைத்தவர் என்று கருதப்படுவார் அதன்படி அவர் மீது வழக்கு
நடவடிக்கை எடுத்துத் தண்டிப்பதற்கு உட்பட்டவராவார்.
ஆனால், அவருக்குத் தெரியாமலேயே குற்றம் இழைக்கப்பட்டது என்றோ
அல்லது அவ்வாறு குற்றம் நடவாமல் தடுப்பதற்கு எல்லாவித முயற்சிகளும்
மேற்கொள்ளப்பட்டதென்பதையோ அவர் நிரூபித்தால், இந்த உட்பிரிவில்
கண்டுள்ளபடி அவருக்குத் தண்டனை விதிக்கப்படமாட்டாது.
(2) (1) உட்பிரிவில் என்ன சொல்லியிருப்பினும், கம்பெனி ஒன்று
குற்றமிழைத்திருந்து, கம்பெனியின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது
ஏனைய அதிகாரியின் இசைவுடன் அல்லது மேற்கூறியவர்கள் உடந்தையாக
இருப்பதன் பேரில் அல்லது மேற்கூறியவர்களின் கவனக் குறைவினால்
அக்குற்றம் இழைக்கப்பட்டுள்ளதென்று நிரூபிக்கப்பட்டால், அந்த இயக்குநர்,
மேலாளர், செயலாளர் அல்லது ஏணைய அதிகாரி அக்குற்றமிழைத்தவராகக்
கருதப்படுவார்; அதன்படி அவர்மீது வழக்குத் தொடரப்பட்டு தண்டனை
விதிக்கப்படும்.
விளக்கம்: இப்பிரிவின் செயல் நோக்கங்களுக்காக-
(ஐ "கம்பெனி" என்பது கூட்டு நிறுவனம் எனப் பொருள்படும்; அதில்
நிறுவனம் அல்லது ஏனைய தனி நபர்கள் சங்கம் அடங்கும்;
(b) ஒரு நிறுவனம் தொடர்பாக "இயக்குநர்" என்பது, அந்த நிறுவனத்தின்
கூட்டாளி எனப் பொருள்படும்.
அத்தியாயம் 1V.
பல்வகை.
23. விலக்குகள்.- (1) இச்சட்டத்தில் கண்டுள்ளதெதுவும், மத்திய அரசு அல்லது
மாநில அரசு அல்லது அரசு நிறுவனத்துக்குச் சொந்தமான ஆய்வுப் படகுகளுக்குப்
பொருந்தாது.
விளக்கம்: இந்த உட்பிரிவின் செயல் நோக்கத்திற்காக, "அரசு நிறுவனம்"
என்பது மத்திய அல்லது மாநில அரசுக்குச் சொந்தமான அல்லது மத்திய அல்லது
மாநில அரசால் கட்டுப்படுத்தப்படுகிற நிறுவனம் அல்லது கழகம் எனப்
பொருள்படும்.
(2) இச்சட்டத்தின் செயல் நோக்கங்களைக் கருத்திற்கொண்டு, ஒரு
குறிப்பிட்ட பகுதியில் அல்லது பகுதிகளில், மீன் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும்
ஒரு குறிப்பிட்ட வகை அல்லது வகைகளைச் சேர்ந்த படகுகளுக்கு,
இச்சட்டத்தின் எல்லா விதித்துறைகளையும் அல்லது குறிப்பிட்ட சில
விதித்துறைகளைப் பொருந்துமாறு செய்வது பொது நலனுக்கு உகந்ததாகாது
என்று அரசு கருதினால், இச்சட்டத்தின் அனைத்து அல்லது ஏதேனும் சில
விதித்துறைகளைச் செயலாக்குவதற்கு அறிவிக்கையில் குறிப்பிடக்கூடிய
குறிப்பிட்ட பகுதியில் அல்லது பகுதிகளில் மீன் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும்
மேலே குறிப்பிட்ட அந்த வகை அல்லது வகைகளில் அமைந்த மீன்பிடி
படகுகளைப் பயன்படுத்துவதற்கு தாம் தகுதியெனக் கருதக்கூடிய
நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அரசு, அறிவிக்கை வெளியிடுவதன் மூலம்
விலக்களிக்கலாம்.
24. நல்லெண்ணத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குக் காப்பு.- (1) இச்சட்டம்
அல்லது வெளியிடப்பட்ட அறிவிக்கை அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட ஆணை
அல்லது விதியைத் தொடர்ந்து நல்லெண்ணத்துடன் செய்த அல்லது செய்யக்
கருதப்பட்ட ஒரு செயலுக்காக, அரசு அல்லது அதிகாரி அல்லது அதிகார
மன்றத்தின் மீது, வழக்கு, வழக்கு விசாரணை அல்லது ஏனைய சட்ட நடவடிக்கை
எதுவும் தொடரப்படக்கூடாது.
(2) இச்சட்டம் அல்லது வெளியிடப்பட்ட அறிவிக்கை அல்லது அதன்கீழ்ச்
செய்யப்பட்ட ஆணை அல்லது விதியைத் தொடர்ந்து நல்லெண்ணத்துடன் செய்த
அல்லது செய்யக் கருதப்பட்ட ஒரு செயலால் ஏற்பட்ட அல்லது ஏற்படக்கூடிய
சேதத்திற்கு அரசு அல்லது அதிகாரி அல்லது அதிகார மன்றத்தின் மீது வழக்கு
அல்லது ஏனைய சட்ட நடவடிக்கை எதுவும் தொடரப்படக்கூடாது.
25. இச்சட்டம் பிற சட்டங்கள், ஒப்பந்தம் முதலியவற்றை மேலோங்கி
நிற்குமென்பது.- நிகழ்காலத்தில் செயலிலுள்ள ஒரு சட்டம் அல்லது வழக்காறு,
வழக்கம் அல்லது ஒப்பந்தம் அல்லது யாதொரு அதிகார மன்றத்தின் ஆணை
எதிலும் அதற்கு முரணாக என்ன சொல்லியிருப்பினும், இச்சட்டத்தின்.
விதித்துறைகள் செல்திறனுடையவையாகும்.
26. விதிகள் இயற்ற அதிகாரம்.- (1) இச்சட்டத்தின் விதித்துறைகளைச் செயலாக்க
அரசு விதிகள் இயற்றலாம்.
(2) குறிப்பாகவும் முன்னர் கூறப்பட்ட அதிகாரங்களின் பொதுத்
தன்மைக்குப் பாதகமின்றியும், அவ்விதிகள் பின்வருவனவற்றிற்கு அல்லது
அவற்றில் சிலவற்றிற்கு வகை செய்யலாம்; அவையாவன:-
@ 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின்கீழ் அறிவிக்கை
வெளியிடுகையில் கருத்திற்கொள்ள வேண்டியவை;
(௦) 7 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின்கீழ் உரிமம் வழங்குவதற்கான
விண்ணப்பப் படிவங்கள்; இப்படிவங்களில் இடம்பெற வேண்டிய விவரங்களும்
அதனுடன் சேர்த்து அனுப்ப வேண்டிய கட்டணத் தொகையும்;
(6) 7 ஆம் பிரிவின் கீழ் உரிமம் வழங்குவதற்கு அல்லது வழங்க மறுப்பதற்கு
முன் கருத்தில் கொள்ள வேண்டியவை; இந்த உரிமத்திற்கு செலுத்த வேண்டிய
கட்டணம், இந்த உரிமத்தின் நிபந்தனைகளை உரியவாறு செயலாக்குவதற்குப்
பாதுகாப்பு:
(0) 7 ஆம் பிரிவின் கீழ் உரிமம் வழங்குவதில் அல்லது மறுப்பதில் 10 ஆம்
பிரிவின் கீழ் அந்த உரிமத்தை இரத்து செய்வதில், நிறுத்தி வைப்பதில், மாற்றி
அல்லது திருத்தி அமைப்பதில் அல்லது மீன்பிடி படகு ஒன்றினைப் பதிவு
செய்வதில் அல்லது பதிவுச் சான்றிதழை இரத்து செய்வதில் அல்லது
தற்காலிகமாக நிறுத்தி வைப்பதில் பின்பற்றப்படக்கூடிய நடைமுறை;
(6) 1௦ ஆம் பிரிவின் கீழ் மீன்பிடி படகு ஒன்றைப் பதிவு செய்வதற்கான
விண்ணப்பத்தின் படிவம், அந்த விண்ணப்பத்தில் அடங்கி இருக்க வேண்டிய
விவரங்கள், விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய கட்டணம், பதிவுச்
சான்றிதழின் படிவம், அப்பிரிவைச் சேர்ந்த (3) உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள
பதிவேடு, அப்பிரிவைச் சேர்ந்த (5) உட்பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி பதிவு
அடையாளம் எவ்வாறு காட்டி வைக்கப்பட வேண்டும் என்பது;
() 11 ஆம் பிரிவில் குறிப்பிட்டுள்ள தகவல் எவ்வாறு அளிக்கப்பட வேண்டும்
என்பது;
Q) 12 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின்கீழ் அதிகாரம் பெற்ற
அலுவலருக்குக் கொடுக்க வேண்டிய விவரக் கணக்குகள், அந்த விவரக்
கணக்குகளை எப்போது எப்படி அளிக்க வேண்டும் என்பது;
(h) 16 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் கீழ் கைப்பற்றப்பட்ட மீன்பிடி
படகுகள் எந்த இடத்தில் எவ்வாறு நிறுத்தி வைக்கப்பட வேண்டும்,
கைப்பற்றப்பட்டுள்ள படகில் உள்ள மீன்களை விற்றுக் கிடைக்க வேண்டிய
தொகையை, மேற்சொன்ன பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவின்கீழ் எவ்வாறு
தீர்ப்பளிக்கும் அதிகாரியிடம் வைப்பீடு செய்யப்படவேண்டும் என்பது;
()17 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவின் கீழ் தீர்ப்பளிக்கும் அதிகாரியால்
எவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது;
(0 கச்சட்டத்தின்கீழ் ஆவணங்களின் அல்லது ஆணைகளின் நகல்களை
வழங்குவதற்கு அல்லது யாதொரு அதிகாரி அல்லது அதிகார மன்றத்தின் பணி
தேவைப்படக்கூடிய யாதொரு காரியம் அல்லது செயலுக்குச் செலுத்தத்தக்கக்
கட்டணம்;
k) 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின்படி வெளியிடப்பட்ட
அறிவிக்கையில் விதிக்கப்படத்தக்க நிபந்தனை:
() இச்சட்டத்தின்கீழ் விதிகளின் மூலம் செய்யப்படவிருக்கிற அல்லது
வகை செய்யப்படக்கூடிய ஏனைய பொருள்;
(3) இச்சட்டத்தின்கீழ் இயற்றப்பட்ட ஒவ்வொரு விதியும் அல்லது 5 ஆம்
பிரிவின்கீழ் வெளியிடப்பட்ட ஒவ்வொரு அறிவிக்கையும் இயற்றப்பட்ட அல்லது
வெளியிடப்பட்ட பின்னர் இயன்ற விரைவில் மாநில சட்டமன்றத்தின் இர
அவைகள் முன்பு வைக்கப்பட வேண்டும் அல்லது வைக்கப்பட்டக் கூட்டத்தொடர்
அல்லது அடுத்தக் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அந்த விதியில்
அல்லது அறிவிக்கையில் மாற்றம் செய்வதற்கு இரு அவைகளும்
ஒப்புக்கொள்ளலாம் அல்லது மேற்படி விதி அல்லது அறிவிக்கை
செய்யப்படக்கூடாது அல்லது வெளியிடப்படக்கூடாது என்று இரு அவைகளும்
ஒப்புக்கொள்ளலாம். அப்போது சந்தர்ப்பத்திற்கேற்ப அந்த விதி அல்லது
அறிவிக்கை திருத்தியமைக்கப்பட்டவாறுதான் செயல்திறன் பெறும் அல்லது
இரத்தாகிவிடும். மேற்சொன்ன திருத்தம் அல்லது இரத்து காரணமாக
மேற்சொன்ன விதி அல்லது அறிவிக்கையின் கீழ் இதற்கு முன்னரே
செய்யப்பட்டுள்ள எதுவும் பாதிக்கப்படமாட்டாது.
27. இரத்தும் காப்பும்.- (1) தமிழ்நாடு 1983 ஆம் ஆண்டு கடலில் மீன்பிடித்தலை
முறைப்படுத்தல் அவசரச் சட்டம் (தமிழ்நாடு அவசரச் சட்டம் 271983) இதனால்
இரத்து செய்யப்படு கிறது.
(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்ட போதிலும், மேற்சொன்ன அவசரச்
சட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கை, விதிகள் அல்லது ஆணைகள்,
கொடுக்கப்பட்ட கணக்கு விவரங்கள், தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள் உள்பட
செய்யப்பட்ட செயல் எதுவும் அல்லது எடுக்குக்கப்பட்ட நடவடிக்கை எதுவும்,
இச்சட்டத்தின்கீழ் செய்யப்பட்டதாக, எடுக்கப்பட்டதாக, வெளியிடப்பட்டதாக,
அல்லது தாக்கல் செய்யப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.
விவர அட்டவணை.
(5 (3) பிரிவைக் காண்க).
மீன்பிடி விசைப்படகு ஒன்று 3 மைல்களுக்கு (கடற்பகுதி) அப்பாலும்
கடலுக்குள் சென்று மீன் பிடிப்பதற்கான நிபந்தனைகள்:
1) 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (3) உட்பிரிவில் குறிப்பிட்டுள்ள மீன்பிடி
விசைப்படகு நிறுத்துவதற்கு அறிக்கையிடப்பட்ட தளத்திலிருந்து அல்லது
நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து காலை 5-00 மணிக்கு பிறகு
புறப்பட வேண்டும். மீன்பிடி விசைப்படகுகள் இரவு 9-00 மணிக்குப் முன்னதாக
நிறுத்துமிடத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும். அந்த மீன்பிடி விசைப்படகுகள்,
அடுத்த நாள் காலை 5-00 மணி வரை அறிவிக்கப்பட்ட அந்தப் படகுத் தளத்தில்
அல்லது நங்கூரமிடப்பட்டு நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட
வேண்டும்.
விளக்கம்.- (மீன்பிடி விசைப்படகுகளைப் பொறுத்தமட்டில் "நிறுத்தி
வைப்பதற்கு அறிவிக்கப்பட்ட படகுத்தளம்" அல்லது "நங்கூரமிட்டு நிறுத்தி
வைக்கப்படுமிடம்" என்பது, அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி அந்த மீன்பிடி
விசைப்படகை நிறுத்தி வைப்பதற்கு அல்லது நங்கூரமிட்டு நிறுத்தி வைப்பதற்கு
குறிப்பிட்டுள்ள பகுதி எனப் பொருள்படும்.
(2) மீன்வளத்துறை இயக்குநரின் பரிந்துரையின்படி அரசு குறிப்பிடும்
ஏனைய யாதொரு நிபந்தனை.
Rules, notifications and orders under this Act
Listed from India Code. Each opens there.